ஸ்ரீ குலசேகர பெருமாள்– ஸ்ரீ ராமன் பெயரை கொண்டார்-ஸ்ரீ ராமனுக்கே என்று இருந்தவர்—-
பெரிய பெருமாள்- கைங்கர்ய பாரிப்பு- ஒழிவில் காலம் எல்லாம் -ஏதேனும் ஆவேனே —
நாம் சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒரு கால்–குட பாம்பில் கை இட்டவர்–
ஞானம் கனிந்த நலம் கொண்ட பக்தி–ஸ்ரீ ராமாயணம் கேட்டு உதவிக்கு சேனைகளை கொண்டு போனார்–கர தூஷணர் விருத்தாந்தம் —
தோலாத தனி வீரர் தொழுத கோவில் -சீதை பிராட்டி ஆலிங்கனம் -சேர்த்தி சேவை காட்டி –வென்றான் சொல்லி மீட்டாரே —
ஸ்ரீ அனந்தாழ்வான் திரு முக் குளத்தில் மஞ்சள் கிழங்கு தேடினது போல–அவன் மேல் ஆசை– இதர விஷயத்தில் வைராக்கியம்–
அடியார் ஈட்டம் கண்டிட கூடுமேல்-அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை–
யதிவா ராவணச்யம் – ராவணனே வந்தாலும் கூட்டி வா என்றானே சுக்ரீவன்–மேல் விழுந்து ரட்ஷிப்பான் –
தேவர்கள் குரங்கு தன்மை அடைந்தார்கள்–அவனுக்கு கைங்கர்யம் பண்ண —
ருசி வளர்க்க இந்த ஷத்ரிய மனுஷ பிறவி மாற்றி ஏதேனும் ஆவதற்கு பாரித்தார்–
உரி அடி உத்சவம்-பட்டர் வித்வான் கோஷ்ட்டி விட்டு இடையர் உடன் சேர்ந்து அனுபவித்தார்–கிருஷ்ணா அனுக்ரகம் தான் எனக்கு முக்கியம்–
பகவத் சம்பந்தம் இருப்பதே சிறந்த ஜன்மம்–பிறப்பால் இல்லை-ப்ரக்ம ஞானமே வேண்டும்–
அணைய- ஊர புனைய–ஆசை பட்டவர்–திரு அனந்தாழ்வான் அணைந்து -நித்யர் இதற்கே பாம்பு ஜன்மம்–ஊர்ந்து
புனைந்த கண்ணியாக ஆசை பட்டார்களே -அசித் ஆக இருக்கலாம்–அவனுக்கு என்று இருப்பதே குறிக் கொள் —
அடியும் பொடியும் பட–காழியன் கதம்பம் -சுகர் உத்தவர்-யமுனை தீரத்தில் பூத்த நீள் கதம்பு ஏறி-இந்த மரமாக பிறக்க ஆசை–
காமரு சீர் அவுணன்–மா பலியை கொண்டாடுகிறார்-வாமனனை நேராக பார்க்க பெற்றானே–திருவடி பட–போடி-சரண ரேணு-
ராச கிரீடை பொழுதும் கோபிமார்கள் உடன் -பர்வத பவனங்களில் பிறக்க ஆசை பட்டார்களே–
தவ தாஸ்ய ரசம் தெரிந்த அடியார்களின் வீட்டில் புழுவாக பிறக்க ஆசை–எதேனுமாக ஜனிக்க பெறுகிற —
சொல்லி சொல்லி பார்த்து அதுவும் நீயே -முடிவு செய்து கொள்–
உயர்ந்த பிறவி எடுத்த ஷத்ர்ய ராஜா -சொன்னால் தானே புரியும் என்று இவரை இப்படி அருள வைத்தார்–
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே– 4-1
கோனேரி வாழும் குருகு-நாரை-சுவாமி புஷ்கரணி -விரஜை போல்–கோன்=சுவாமி –புஷ்கரினிகளுக்கு ஸ்வாமினி –தலைவி–
அவனுக்கு புஷ்கரணி– தீர்த்தம் ஆடுபவரை சுவாமி ஆக்கும் –ஊன் ஏறு செல்வம் -மாம்சம் ஏறும் உடல் பிறவி வேண்டாம்–
புஜ பலம் ஷத்ரியன்-வேண்டாம்–தேகம்-பேருக்கும் -வளரும்- சரீரம்-இளைக்கும் சுருங்கி கொண்டே வரும்–ஒரு படி பட இருக்காது–
யான் வேண்டேன்–யான் சொன்னது–பட்ட பாடு எனக்கு தெரியும்–ஷத்ரியன்-யான்-உசத்தி தெரியும் படி- நாவினால் நவிற்று —
வாயால் தான் மனசு சகாயம் இன்றி –நாக்கு மட்டும் சொல்லி –ஆண் -ரிஷபங்கள்– வென்றான் நப்பின்னைக்கு —
நம் விரோதிகளையும் முடித்து ஆட் கொள்வான்–கூன் வளைந்த -சங்கம்–விநயம்-அடிமை திறம் தெரிந்து கொண்டு–இடத்தான் வேம்கடத்தான்-
தனியாக இடம் சொன்னது–அத்வீதியம்—வல கை ஆழி திரு மார்பில் இருக்கும் மாதுக்கு பல்லாண்டு–
கோனேரி வாழும் குருகு– இருக்கும் இல்லை– இருப்பதே வாழ்வு–
அடுத்து சொர்க்க அனுபவமும் வேண்டாம்-தொழுது எழு -தொழுதாலே எழுந்து விடலாம்–
சிறகு முளைத்து பறக்குமே தோன்ற–பிறவி வேண்டாம் என்று ஆரம்பித்து குருகாய் பிறப்பேனே –
நாலாவது வரியில்–குலசேகர ஆழ்வார் ராஜ்ய பிறவி வேண்டாம்-கைங்கர்ய-சரீரமே நான் நினைக்க கூடாது தேக ஆத்மா விவேகம்..
நானே சரீரம் -ஜீவாத்மா ஆகிய நான் பகவானுக்கு சரீரம் சொல்லலாம்அடுத்து மீன்-சிறகு இல்லையே -பிறவி வளர்த்தல் இறப்பு எல்லாம் இங்கு தானே —
சொர்க்கமும் வேண்டாம் –தலை குப்புற தள்ள -இன்று இல்லை புண்ணியம் தீர்ந்ததும் -ஆனாத செல்வம்-இளமை –தன்னை சூழ-வேண்டாம் என்று
சொன்னாலும் சூழ்ந்து கொள்ளும் -ஐஸ்வர்யம் வைராக்கியம் இன்றி கொஞ்சம் ஆசை -கொள் என்று பெரும் செல்வம்–
வந்தாய் போல் வாராதாய் வாராதாய் போல் வருவானே –இவனும் கொள் என்று மூடும் இவை என்ன உலகு இயற்க்கை–வைராக்கியம் வேண்டும் —
திருவடி விலகாமல்–வானை ஆளும் செல்வமும் மண்ணகமும் வேண்டாம்–குற்றம் சொல்ல வில்லை ஈஸ்வரன் படித்தவை-
எனக்கு வேண்டாம் சொரூபத்துக்கு விருத்தம் -என்கிறார்
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே — 4-2
-தேன் ஓடும் —சுனையில் மீன் –விதி என்கிறார் – பிறவி கூட வேண்டாம் -அடுத்த பிறவியில் கிட்டும் என்று விதித்தாலே போரும்
சுனையில் தண்ணீர் வற்றினால்-மீன் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே –படிக்கம்–கைங்கர பரராக–தூய பேரு நீர் யமுனை–
அதர அம்ர்தம் பெற்ற தூய்மை–பின் இட்ட -பிரமனுக்கு பின் /சடையும் பின்-/வைகுண்ட வாசல் வழியாக போகிறோம்–
இந்த பாசுரம் தான்- வைகுண்ட நீள் வாசல் பெயரை கொடுத்தது –பணிக்கு போகிறார் உள்ளே புக விட என்பார்கள்–
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3
ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே– 4-4
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
நம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே 4-5
மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே 4-6
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே 4-7
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே 4-8
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே 4-10
மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11
திரு பாற் கடல் போக ஆசை–வேலை-சமுத்ரம்-பவளம் கொண்டு போடும்–கண் துயிலும் மாயோன்–ஆயோன்–
காண்பதற்கு –நாயனம் ஒத்து ஊதுவது ஆலத்தி வைத்தல் போதல் சுருதி போட்டி போல –
வண்டுகள்–ஆழ்வார் பாட –செண்பகமாய் நிற்க ஆசை–ச்தாவரமாய் நிற்கவும் அமையும்–முன் குருகு மீன் சொல்லி–
செண்பகம்–வாசனை உடன் தலையில் வைத்து கொள்வார்- தம்பகம்-கள்ளி செடி போல –தவம் உடைவேன்–
ம்ப மத யானை -மேல் ராஜா போல -இவர் உண்மையாவே ராஜா–இது வேண்டேன்–எம்பெருமான் ஈசன்–
ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி என் ஆளி போல–அகில ஜகத் சுவாமி அசமத் சுவாமி—
வெந்நீருக்கு விறகு உபயோகிப்பார்களே -மாற்றி-போர் குவடு- உச்சி -ஒரு பகுதி ஆனால் -நித்யம் ஆக இருக்கலாமே –
மேனகை போல்வார் -ஆடல் பாடல் ஆதரியாமல்—வண்டினங்கள் பாட்டு வேண்டும்–அதை போன்ற பொற் குவடி–
எதை போல அத்வீதியம்–சிகரம் ஆகி இருந்தால் ஏறுவார் பாத ஸ்பர்சம் கிட்டாதே– கானாறு ஆகலாம் என்றார் அடுத்து —
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் போல்- வேண்டாம்–கோன் போல வீட்டரு இருந்து கொண்டாடும் செல்வம் வேண்டாம் —
அருவி ஓடி வரும் -நிலத்தில் இருக்கும் காட்டு ஆறு–வெள்ளம் வடிந்தால் நின்று போகும் –திரு வாடி பட்டு கிளம்புவார்களே –
வழியாகவே இருந்து விட்டால் அடியார் பாதம் கிட்டுமே –அதை பாரித்தார் –வெறி ஆர்ந்த -மணம் -வழியாக ஆக வேண்டும்–
செடியாய –படியாய் கிடந்தது உன் பவள வாய் பார்த்து இருக்க வேண்டும்–பாபம்-சம்சாரம்- திரு மாலே -புருஷகாரம் உண்டே–
நெடியானே-நினைமின் நெடியானே–நினைவு நீண்ட காலம் வைத்து கொள்வான்–என் அடியார் அது செய்யார்–செய்தாலும் நன்றே செய்தார் –
சேர்ப்பித்தார் கூட வந்தாலும் பிரிக்க முடியாது —
பிரயோஜனாந்த அநந்ய அனைவரும் கிடந்தது -படியாக- அசித் போல பர தந்த்ரர்–
உன் ஆனந்தம் பட்ட உடன் சிரிக்கவும் வேண்டும் –இரண்டையும் கேட்கிறார்
செம் பவள வாயான்–நித்யன்-எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும்–ஆவேனே–
அனந்தாழ்வான்-திரு வேம்கடம் உடையானாக இருந்து –எது என்று எனக்கும் அவனுக்கும் பக்தர்களுக்கும்
தெரியாமல் ரகஸ்யமாக இருக்கட்டும்– தெரிவது முக்கியம் இல்லை –அனுபவமே முக்கியம் –பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–
எடுத்து ஆளும் படி-பாங்காய பக்தர்கள்– கஷ்டம் இன்றி கைங்கர்யம் பெறுவார்கள் –பிராப்ய பிரதானம் ஸ்ரீமன் நாராயணனே –
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.