துலா -சத்யம் -ஐப்பசி-மயூர புரி-மயிலை-மகாந்தர் -ஸ்ரீ நந்தகம் அம்சம்–
அடையார் கமலத்து -பஞ்ச ஆயுத அம்சம் சுவாமி ராமானுஜர்-
17 பாசுரங்கள்–
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் நால் பால்
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து—14
இதர விஷய வைராக்கியம்–அவன் பால் மனம் வைத்து -வேத வேதாங்கள் –இந்த்ரியங்கள் பயம்-ஆழ்வார்கள் நிறைய உபதேசிகிரார்கள்–
விண்ணோர் பெருவானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன்–கருடன்-சுமுகன்–ஐவர் திசை திசை வலித்து எத்து கின்றனர்–
ஐவரால் குமை தீர்த்தி–அளவில்லா சிற்று இன்பம் ஒழிந்தேன்–பகவத் கார்ய ப்ரீத்தி கார்ய கைங்கர்யம்–
பண்ணின் மொழியார் பைய நடமின் எண்ணா முன்-விண்ணும் மலையும் வேதமும் ஆகி நின்றான் நறையூர் சென்று சேர்மினே –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் ஆசன பத்மத்தில் அழுந்திய திரு வடிகள் அஞ்சேல் என்ற திரு கைகள் மந்த ஸ்மிதம் கொண்டு சொல்லவும் –
பிறந்தான் என்று அறிந்தும் பிறக்க வேண்டுமா –பிராப்தம் ஆன அழகு இது –நித்யம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –கரியான் ஒரு காளை வந்து –வெள்ளி வளை கை பற்ற -அழகன்-அலங்காரன் –
செல்வர் நாகரிகர்-அச்சோ ஒருவர் அழகியவா -மங்கையர் தோளை கை விட -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கண் அழகை காட்டி திருதினாரே —
மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார்-மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை–போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கன்–ஐயப்பாடு அறுத்து -ஓம் நமோ நாராயணஆய -முன் சொல்லி–
வீடு முன் முற்றவும் வீடு செய்து -புல்கு பற்று அற்றே –அறுத்து புல்க வேண்டும் —
இங்கு மால் பால் மனம் சுழிப்ப முதலில் –பெருமை காட்டி–கை விட வைக்கிறார் ஆழ்வார்–
ஆழ்வான் ஆண்டான் சம்வாதம்-சவாசனமாக விட்டே பற்ற வேண்டும் என்றால் நீர் ஒருவரே அதிகாரி–
கொஞ்சம் விட்டு பற்றினால் அவன் பலத்தால் மீதி எல்லாம் விடலாம்–வேதம் எளிதாகும்–பகவத் விஷயம் புரியும்–
வேதத்தால் ஓத பட்டவன்-ஓலை புரத்திலே மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்க வேம்கடத்தான்-பெரியவன் வேதம் சொல்வதால்–
எளியவன்-இங்கு சேவை-பண்டரி புரம் பெருமாளை தொட்டு சேவிக்கலாம்–குற்றம் தோஷம் ஏறாது- விண்ணோர் முடி தோயும் பாதத்தான் —
பாதம் பணிந்து -கண் முன் தெரிகிறதே -விதிக்க மதம்- உருவ வழிபாடு -சித்த ஆலம்பன சௌகர்யம்-உளன் இரு தகைமை உடன்-
உருவம் அருவம்-ஒழிவிலன் பரந்தே–உருவினன் அருவினன்-ஆகாசம் -விச்வமே அவன்-
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி வுள்ளும் உறைந்ததும்
வேம்கடமும் வெக்காவும் வேளுக்கை பாடியுமே
தாம் கடவார் தன் துழாயார்–26-
சிறந்த என் சிந்தையும் –சிறப்பு இல்லா மல் இருந்தது அவன் உள் புகுந்ததும்– முன்பு இருந்த இடங்கள்–
செம் கண் அரவு-கரு மணியை கோமளத்தை -நாகம் அனந்தன் சர்ப்பம்-பல தலை பாம்பு- வாசுகி ஒரு தலை பாம்பு–
ஆரவாரம் அது கேட்டு அல்ல உமிழும்-உறகல் உறகல் -பொங்கும் பரிவு- பகவானை அனுபவித்து சிவந்த /கைங்கர்யம்
சென்றால் குடையாம்-இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மர வடியாம்–புல்கும் அணையாம் பூம் பட்டாம் ..விளக்காம்- பண்ணி சிவந்த கண்கள்-
திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கு -பட்டர் -நிறைந்த சீர் கச்சி வுள்ளும்–எல்லா திவ்ய தேசங்களும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி-கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்-
இமையோர் தலைவா -இதுவும் அவனுக்கு தான்–நிறைந்த -பல திவ்ய தேசங்கள் கொண்ட கச்சி–நீள் கச்சி–பக்தன் முதலில் சொல்லி
அரவு-நித்யர் அடுத்து –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-ஆழ்வார்–ஞாலத்தார் தமக்கும் வானதவருக்கும் பெருமான் —
இங்கு தான் ஆதரவு-பிரதம பரிகிரதுக்கு செம் கண் சீரை வைப்பாரை போல–வேங்கடமும் வெக்காவும் கிடந்தது –
சொன்ன வண்ணம் செய்த பிரான்-வேளுக்கை- தண் துழாய் –பிரணவாகார விமானம்- ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ ரங்கத்திலே–பார்க்கலாம் போல
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேம்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி
இறை பாடியாய இவை–30
அனுமானம் பிரத்யட்ஷம்–விளக்கு திரி என்னே- சந்தரன் சூர்யன் நாமும் சுத்தி வருவோம்–
ஆகாச தாமரை -அனுமானம்- ஒவ் ஒன்றும் மற்று ஒன்றால் அடி படும் -இது போலவேதம் பாதிக்காது –
சுடர் மிகு சுருதி–வாய்ந்த மறை என்கிறார் இதனால்-
பாற்கடலும் வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் னுலா தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும் இடமாக கொண்டான்
குந்து ஒசித்த கோபாலகன்–32
சதுர்முக ஷன்முக பஞ்ச முக பிரமுக அகில தெய்வத மௌலி மணி -ரத்னம்-தரிக்க -வணக்குடை தவ நெறி கொண்டவன்–
சரணா கத வத்சல சார நிதி–பரி பாலயமாம் –விருஷ சைல பதி- அனாலோசித அசேஷ விசேஷ லோக சரண்யன்–
கரியான் ஒரு காளை வந்து -கண்ணன் என்னும் கரும் தெய்வம் -முடி சோதியாய் உன் முக சோதி அலர்ந்ததுவோ —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது –ஆசன பத்மம் தோற்று அவனை தூக்கி கொண்டு–
வந்து இறைஞ்சும் மலர் அடி- அம் கண் மா ஞாலத்து அரசர் சங்க இருப்பார் போல் –திரு வடி சிவக்க–
தெய்வங்கள் சேவிக்க ரத்னம் சிவப்பு- செய்யாள் திரு கை பட்டு- பராங்குசர் காதலால் சிவந்து –எல்லாம் ஏறி சிவந்தன —
நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம்- இங்கு உஜ்வலம் -நிகரில் புகழாய்-குருந்த மரம்- ஒசித்தவன் -கோ பாலகன்–
நூல் கடல்-சுருதி சாகரம்–நுண் நூல தாமரை -ஹிருதய கமலம்-பத்ம கோச பிரதீகாசம்-அதோ முகம்-தலை கீழே வைத்தால் போல–
யோகிகள் மனசில்-இருக்கிறான்-இடமாக கொண்டவன்–ஐந்து நிலையம் இதில் -பனி விசும்பு -பரன் திரு பாற் கடல்–
குரும்பு ஒசித்தவன்-விபவம் -பாட்டு கேட்க்கும் இடம் -சாம கானம்–கூப்பீடு கேட்க்கும் இடம்-வரம் கொடுத்து தவித்தவர் குரல் கொடுக்க- —
குதித்த இடம் -அவதாரம்–வளைத்த இடம் -நான்கு யானைகள்- அர்ச்சை -ஊட்டும் இடம் -இரா மேடம் ஊட்டுவாரை போல -அந்தர்யாமி–ஸ்ரீ வசன பூஷணம்-
ஐந்தும் வகுத்த இடமே- ஆச்சார்யர் திருவடியே தான்–விண் மீது இருப்பாய் –எங்கும் மறைந்து உறைவாய் –பனி தோய்ந்த விசும்பு
பெய்கிற பனி இல்லை-குளிர்ந்த -தாப த்ரயங்கள் இன்றி இருக்கும் தெளி விசும்பு–நூல் கடல்- சுருதி சாகரம்–பெரும் புற கடல்- குண கடல் அவன் –
இறையாய் நிலனாகி எண் திசையும் தானாய்
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளன்கொலி நீர் வேம்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்–39-
ஜகதாகாரன்-எல்லாமாகவும் இருந்தது தனக்கு என்று–சுவாமி -இறை-நிலனாகி-அந்தர்யாமி-வானத்தில் உள்ளாரை செலுத்துபவன்-
சொத்தை அடைய சுவாமி ஆகி நிற்கிறான்–ஒன்றும் இல்லை-ஸ்ரீனிவாச சாஸ்த்ரி-இந்திய தேசம் விட்டால் ஆங்கிலேயருக்கு ஒன்றுமே இல்லை-
அது போல ஆழ்வாரை அடைய தான் இப்படி எல்லாமுமாகி இருக்கிறான்–நிலனாகி- அந்தர்யாமி-இரா மடம் ஊட்ட-உள்ளே பதி கிடந்தது சத்தை நோக்கி கொண்டு–
ஆட்சியில் தொடர்ச்சி நன்று–விலக்கினாலும்-அவதரித்து -காட்டி- அடைய -வத்சலையான மாதாவை போல —
மண் தின்ன விட்டு பிள்ளை பேகணியாத தாய் பிரதி ஒவ்ஷதம் இடுமா போல–அம்பரமும் –திசைகள் எட்டும்–பவ நீர் உடை ஆடையாக சுற்றி-
பாற் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்வி திசைகளும் தோளா அண்டம் திரு முடியாக -ஜகதாகாரன்–எங்கும் போக விடாமல் எண் திசையாய்–
யாதானும் பற்றி நீங்கும் விரதம்-கொண்டு விலகுவோம் என்று சூழ்ந்து-மறையாய்-நல்லது தீயது -சாசனாது சாஸ்திரம்-பகுத்து அறிவு
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான்
மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40-
கதா புனா–மதியம் மூர்தன அலங்க்ருஷ்யதே–படிகளவாக பாத பங்கயமே -தலைக்கு அணியாய்–விலக்கவில்லை-
உளன் கண்டாய் நல நெஞ்சே –தன் சொத்தை அடைய -அகவையில் அனைத்து கொண்டும் தாயை போல–
எவ் உயர்க்கும் தாய்-திரு வடியால் தலை தீண்டி–திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தாய்-
பாண்டியன் மீன் கொடி நாட்டினது போல- -கேட்க்காமல் இருக்கும் பொழுதே நாட்டினான்- விலக்கவும் இல்லை –அதுவே காரணமாக
புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டு கொண்டான் மலை–45-
மண் கோட்டு கொண்டான் மலை-ஆதி வராக பெருமாள்– ஊடல் கோபத்துடன்-மத வேழம் -கோட்டு கொண்டு குத்த முத்து உதிர்கிறதாம்-
கூடி -பிரிந்து-மறுபடியும் கூடி-அப்புளை வியாக்யானம்- களிப்பால்-செருக்கால்-பரிதி பிம்பம் பார்த்து -பழிங்கு கல்லில் பார்த்து -பொருது-
பாசி தூர்த்து கிடந்த பாற் மகட்கு —நில மடந்தை –கோட்டு இடை கொண்ட எந்தாய் –நீல வரை இரண்டு பிறை —
ஞான பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே–வராக ஷேத்ரம் இது–போனகம் எல்லாம் முதலில் வராக பெருமாளுக்கு தானே–
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–அங்கு உள்ள எல்லாம் ஆழ்வாருக்கு உத்தேசம்–
பூமி பிராட்டி-நப்பின்னை/வராக பெருமாள் பற்ற ஆண்டாள்-பூமிபிராட்டி-மண் கொண்டான்-ஆதரவு அதில்
தெளிந்த சிலா தலத்தின் மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு–58-
புத்தி சாதுர்யத்தால்-மதி-மண் கொண்டு உகந்தானே-வாமனன்–கடுவன்-ஆண் குரங்கு மந்தி -பெண் குரங்கு–
யானை அணில் குரங்கு-பகவத் கைங்கர்யம்–ஸ்படிக கல் மேல் இருந்து –என்ன சொல்வாய் செய்து தருவோம் என்று பார்க்க–
பார்வை இரண்டும்–சந்தரன் -விளங்கிய வெண் மதியம் தா -கேட்டதாம்–தெளிவே இல்லை-சிலா தலம்–சந்திரனுக்கு மேல் முகடு இருக்கிறதாம் —
அதனால் மேல் பக்கம் பார்க்கும் பொழுது வெளுத்து இருக்குமாம்–கீழ் பக்கம் தான் அழுக்கு இருக்கும்–
அலர்மேல் மங்கை தாயார் திரு மார்பில் இருந்து கேட்கிறாள்– யாரோ கேட்டு பல பண்ணினேன்– உனக்கு பண்ண வேண்டும்–
கண் பார்வைக்கு பார்த்து இருக்க –பராத்பரன்-பிரனியத்வம்-தளும்ப-தன் பெண்மை-அவனையே எதிர் பார்த்து அவன் ஆனந்தம் ஒன்றே நோக்கி-
தாயார் கீழே பார்த்து தெளிந்த ஜீவாத்மா பற்றி நினைகிராளாம்-கை பிடித்து தூக்க-அவளுக்கு என்று -பிள்ளையை மேல் தூக்கி விட–
தாயாருக்கு தோஷம் கண்ணில் படாது–தோஷமே இல்லை தூக்கி விட சொல்கிறாள்–குரங்கால் முடியாது -இவனோ சர்வ சக்தன்–
ஒரு காலத்தில் இரந்து கூட சொத்தை கொண்டானே- -அதை நினைவு கூறுகிறாள்–மூவடி மண்ணை -முகம் பார்க்க கண்ணாடி கேட்டது–
தன் பிரதி பலிப்பு–உம்மை சொத்தை சேர்க்க தான் படுகிறாள்–நித்ய அனபாயிநீம் நிரவத்யாம் அசரண்யா சரணாம்–
பிரியாமல் இருப்பது நம்மை வாழ்விக்க தான்–புருஷகாரம் -பிரணத பார தந்த்ரம் இரண்டையும் காட்ட இந்த பாசுரம் –
சீதை ராமன்-கோதாவரி நதியில்- போட்டி –அஸ்மின் மயா சார்த்தம்-சிலா பாறை மேல் -புன்னகை பார்த்து -இன்றே பார்த்தேன் —
அதை கேட்க்க முடியவில்லை -ராமன் வருந்த -இங்கு இறையும் அகலகில்லேன் என்று சேர்ந்தே இருந்து ரட்ஷிகிரார்கள்–
பண்டெல்லாம் வேம்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை
இளம் குமரன் தன் விண்ணகர்–61-
பண்டு–முன்பு –இன்று என் மனசில் வந்து விட்டான்–அது எல்லாம் பழம் கதை–வைகுந்தம் பாற்கடல் வேம்கடம் –
இருப்பிடமாக-கடிகை தடம் குன்றின் இருந்த அக்கார கனி-கடிகாசலம்- ஒரு நாழிகை பொழுதில் இங்கு நின்றால் அனைத்து பாபங்கள் எரிக்க படும் —
வண்மை படைத்த பூம் கடிகை–நரசிம்கர்-அனுபவம் ஆசை தோன்ற -ரட்ஷகமும் போக்யமும் சேர்ந்த -யுவ குமரர்–
விண்ணகர்- திரு விண்ணகரும்–தனக்கு விண்ணகரமான கீழ் சொன்னவை என்றும் கொண்டு–பண்டு என்றதால் இன்று ஆழ்வார் மனம் வந்தமை தோற்ற —
காழி சீராம விண்ணகரம் /பரமேஸ்வர விண்ணகரம் –அரி மேய விண்ணகரம்– நந்தி புர விண்ணகரம் –இளம் குமரன் என்பதால் திரு விண்ணகரம் –
திரு வில்லா தேவன்-ஒப்பிலாத -தன் ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–காளை பருவத்தில் ஒப்பு இல்லை என்று சொல்வதே இங்கு ஆழ்வாருக்கு நோக்கு
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேம்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடம் கை நீர் ஏற்றான் தாழ்வு–62
தன் குடம் கை-குவிந்த கையால்-நீர் ஏற்றான்-தாழ்வு பார்க்க இந்த திவ்ய தேசங்கள்—தாழ விட்டு கொண்ட தன்மை—
திரு விண்ணகரம்-வெக்கா வெக்கா சேது -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- வேகவதியில் அணை- மருவி- வெக்ணை -மருவி-வெக்கா—
விசேஷணம்-விரி திரை நீர் வேம்கடம்– -இட்டதால் இந்த பாசுரம் திரு வேம்கடத்துக்கு –மண்ணகம்-பூ மண்டலத்தில் சிறப்பு பெற்ற வேளுக்கை-
ஆள் அரியாக சேவை- நரசிம்க வகுபு ஸ்ரீமான்- அழகியான் தானே அரி உருவம் தானே–அடுத்து தென் திரு குடந்தை —
தேனார் திரு அரங்கம்–தென் கோட்டியூர்- கோஷ்டி புரம்-எம்பெருமானார் திரு நாமம் பெற்ற திவ்ய தேசம்–
ராமானுஜ-காயத்ரி-சாவித்திரி பிரபன்னர்களுக்கு -ராமானுச நூற்று அந்தாதி- சாதுர்யமான நான்கு எழுத்துகள்-இவை-கூரத் ஆழ்வான் –
மோஷம் ஒன்றுக்கே ஹேது–வாமன மூர்த்தி சௌசீல்யம் காடும் இந்த திவ்ய தேசங்கள் என்று அருளுகிறார்–
பின்னானாரும் வணங்கும் சோதி – -தேங்கிய மடுக்கள் போல -அர்ச்சை -ஆவரண ஜலம்-போல பரத்வம்–ஸ்ரீவைகுண்டம்–
திரு பாற்கடல்-வியூகம்–அந்தர்யாமி-பூ கத ஜலம்–அந்தர்வாகினி சரஸ்வதி போல–விபவம்-காட்டாறு போல–தீர்த்தம் பிரசாதித்து போன அவதாரங்கள்–
மண்ணை கைவிட மாட்டான்– சொவ்சீல்யத்தால்- நம்மை விட மாட்டான்
தாழ் சடையும் நீள் முடியும் ஒள மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பின் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து–63-
சங்கர நாராயண உருவம்-அந்த குணத்தை திரு வேங்கடம் உடையான் இடம் காணலாம்– முன்பு வாமனன் காட்டிய சௌசீல்யம்
மற்ற கோவிலில் காட்டியது போல–தாழ் சடை முடி-நீள் முடி/தபஸ் பண்ணுபவன்/ தபஸ் பலன் கொடுப்பவன்–ஈச்வரேச்வரன்-சுவாமி–
மழு சக்கரம்—மழு சங்கம் இல்லை- வல கை தானே சக்கரம்–வல பகுதி பிரதானம்–ஒரு பால் உலகு அளந்த மாயவனாம் மற்றை
ஒரு பால் உமையவளாம்-காரை கால் அம்மையார்–மற்றை–அப் பிரதானம்–ஒண் மழு பிருகு முனிவரை பிள்ளையாரை வெட்டித்து–
சக்கரம் அடியவரை ரட்ஷித்தாம்/ பொன் நாண்- சுந்தர ராஜன்-இடது காதில் ஒற்றை தோடு தொங்கும் கரு நீலமோ கரு பச்சை யாகவோ-எல்லா ராஜன்-
அரவு -ருத்ரன் இடம்–தோன்றுமால்- ஆச்சர்யம்–பேரனான சிவனுக்கு தன் உடம்பில் பாதி கொடுத்தானே -என்ன சௌசீல்யம்-சூழும் திரண்டு அருவி–
சங்கர நாராயண -சாதக சித்த உருவம்–அந்த சௌசீல்ய குணம் இங்கு காணலாம் என்கிறார்- வானத்துக்கும் வேடருக்கும் காட்டு வாசிகளுக்கும் காட்டுகிறானே-
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் என பேர்ந்து – கார்த்த
களம் கனிக்கு கை நீட்டும் வேம்கடமே மேல் நாள்
விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு –68-
வரிசையாக ஆறு பாசுரங்கள்அருளி இருக்கிறார்–விலங்குகளுக்கும் அனுக்ரகம் பண்ணி இருக்கிறான் —
மலையில் மிருகங்கள் இருக்குமே–விளாம் பழம்-வச்த அசுரன்-குஞ்சித பாதனாக கன்று எரிந்து -கன்று குணிலா எரிந்து கழல் போற்றி–
பார்த்த கடுவன்-நிழலை பார்த்து -வேறு குரங்கு என்று நினைத்து -களா காய்க்கு கை நீட்டும்–இதன் பக்கம் உள்ளது தான் –
நிழல் பார்த்து கை நீட்டு கேட்கிறதாம்–நப்பாசை-சபலம்-அறியாத்தனம்-கண்ணன் -இது போல- விளாம் பழம் கொள்ள கன்று குட்டி வைத்து எறிந்தானே–
வெற்பு என்று வேம்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்–69-
நாயகி பாவம் போல் இருக்கும் -இல்லை என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை– இது தான் முன்னோடி–வாசனை தான் இது–
தாய் பேச்சு போல் பாடுகிறாள்–சூடுகிறாள்-வியன் துழாய் மாலை–திரு பாற் கடலில் நீராட போகிறாள்-
பாடும்-சூடும்-புகும்-தாய் பாசுரம் போல்–முன்னும் பின்னும் இல்லை என்று –உபதேசமாக அருளுகிறார் என்கிறார்–
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேம்கடவனையே
கண்டு வணங்கும் களிறு–70-
களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஓசி கையாளி பிளிறு
விழ கொன்று நின்று அதிரும் வேம்கடமே மேல் நாள்
குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
குன்றின் ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளை யாடும் தீம் கழை போய் –வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேம்கடமே மேலை
இளம் குமரர் கோமான் இடம்–72
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஒட்டி
வட முக வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம்–73
சார்ந்த கடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதி யின் ஒண் முயலை– சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திரு மலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொறுப்பு–75
முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழுசால் பைம் தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேயம் கழை போய் விண் திறக்கும் வேம்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-
———————————————
14 -26–30 –32—40–45—58–61–68–69-70-71-72-73-74–75–89—ஆக -17-பாசுரங்கள்
இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40-
இவனே ஸ்ரீ வராஹன்
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-
இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply