Archive for the ‘திரு வாய் மொழி’ Category

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –வார் கடா அருவி -8–4-

April 2, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கள்வனை-பெரு வயிற்றாளனை–பெரும்கிறியானை-மூன்றுமே கள்ளத்தனம் தானே நெஞ்சத்தையும் என்னை அறியாமல் கள்ளத்தனமாகத் திருடிய அவனைத் தவிர வேறே ஒருவரையும் பேணாதே-கோபிகள் மனசைத் திருடவே வெண்ணெயைத் திருடினான் அன்றோ–கற்பு நிலை உரைக்கிறாள் -தோழிக்குத் தலைமகள் பாசுரம் –வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)–இம் மூன்று இடங்களிலும் காணலாம்-சரீரம் தள்ளி ஆத்மாவை-பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே
-8-4-5-

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது –குறுகா நின்றது என்னா –ஆழங்கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும் ஸூகித்துத் திரிகிறோம் –அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்-அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை-அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன–ஆஸ்ரித வ்யாமுக்தனாய்-ஆபத் சகனாய்-ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – –
-91 –தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெயை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமன வடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக் கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒரு சேர விடாமல் உட் கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க அவர்களும் குழைச் சரக்காம் படி-பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

சுருந்குறி வெண்ணெய்--சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே -வெண்ணெயை  களவு கண்டு அமுது செய்தான் கள்வனை –களவு தன்னை யாயிற்று களவு கண்டது –ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல –தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ  -என்னும்படி யாயிற்று களவு கண்டது –வையம் இத்யாதி –இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-
அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது –இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் – ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –மாவலி இத்யாதி –தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –மாவலி மாட்டு – ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று – தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –இரும் குறளாகி –பெரிய குறளாகி –அதாவது-லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –இசைய –இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும்-ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து – இரண்டு அடியும் அளந்து விடாதே- ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் – தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் – நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –பெரும் கிறியான் –பெரு விரகன் –அடியேன் –மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –-இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –-அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –நெஞ்சம் பேணலதே –பரத்வதையும் கொள்ளாது –பாவோ நான் யத்ர கச்சதிஒருங்கற –பிறி கதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

ஸுலப்ய பரத்வ பசும் கூட்டம் அன்றோ அவன் -சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்பதனால் ஸௌலப்ப குணமும் ‘வையம் முற்றும் ஒருங்குறவுண்ட பெருவயிற்றாளன்’ என்றதனால் பரத்வ குணமும், மாவலி மாட்டிருங்குறளாகி யிசையவோர் மூவடி வேண்டிச்சென்று பெருஙகிறியான்’ என்றதனால் பரத்வ ஸௌலப்யங்களிரண்டுங் கூடின கூட்டாவும் குறிப்பிடப்பட்டன.–-சுருந்குறி-கள்ளக் கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப் பட்ட உறி-இருங்குறளாகி-மிகக் குறுகிய வடிவம் -பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறிய வடிவம் – மஹிமை யுடைய வடிவம் – கரிய குறள் வடிவம்-பெரும்கிறி யானை–வடிவு அழகு பேச்சின் இனிமையாலே மாயையை மயக்கி -சுக்கிராதிகள் விலக்கினாலும்-உடன் படாதே மூவடி நிலம் பெற்ற சமர்த்தன்-சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை -உடம்பாகிய சிக்கத்திலே கட்டுப் பட்டுள்ள வெண்ணெயின் தன்மையதான முமுஷுவாகிய ஆத்மாவை யாவரும் அறியாத படி விரும்பிக் கைக்கு கொண்டு அனுபவிப்பவன் –-மா வலி மாட்டு -மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு –தோழிக்குத் தலைவி தன் கற்பு உணர்ச்சி அறத்தோடு நிற்றல் இது பாரங்குச நாயகியாகிய தலைமகள் களவொழுக்கத்தால்-ஸர்வேச்வரனாகிய தலைமகனைக் கூடி நிற்க, அந்நிலையை யறியாத பெற்றோர் அவளைப் பிறர்க்கு விவாஹஞ் செய்விக்க முயற்சி கொள்ள,
அதனை யறிந்த நாயகி தனது களவைத் தோழிமூலமாக செவிலிக்கும் அவள் மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அத்திருமாலுக்கே விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பி அத்தலைமகள் தன் கருத்தை தோழிக்கு வெளிப்படுத்தியது இது’. இங்ஙனம் களவை வெளிப்படுத்தல் ‘அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்றதனால் இவ்வுடம்பாகிய சிக்கத்திலே கட்டுப்பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுக்ஷுவாகிய ஆத்மாவை எவரும் அறியாதபடி விரும்பிக் கைக்கொண்டு அநுபவிப்பவன் எம்பெருமான் என்பது தோன்றுமென்ப.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை-கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு அமுத செய்த க்ருத்ரிமனானவனை-இத்தால்-இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப் பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை-இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல் பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்-மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்-அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய–பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்–இத்தால் தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கைஅடியேன் நெஞ்சம் பேணலதே –இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது–தொடு உண்ட கள்வன்-என்கையாலே புணர்ச்சி தோற்றிற்று–வையம் இத்யாதியாலே – நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )-மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று-

தாத்பர்யம்-இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள் நீர் இவ் விஷயத்தை விட்டு எங்களைப் போலே சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூகித்து இரும் என்று சொல்ல நான் அப்படி செய்யினும் என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைத் திருடி கோபிகள் மனம் கவர்ந்த கள்வன் அன்றோ-கள்ளக்கயிற்றை உருவி மோர் விற்கப் போக அந்தக் குறிகள் மாறாதே -அப்படியே தெய்வம் கொண்டு போனது என்று சொல்லும்படி அன்றோ இவனது களவு வியாபாரம்-பிரளய காலத்தில் ஸமஸ்த லோகத்தையும் திருவயிற்றிலே உண்டு -மேலும் இடம் உள்ளபடி-ரக்ஷகத்வ பாரிப்பு மிக்க உபகார ஆபத் சகத் வத்தையும்-மிக குறளாகி -இரண்டு அடி யாசித்தால் சிறை வைக்க உபாயம் இல்லை என்று மூன்று அடி யாசித்து பூமி அந்தரஷிம் இவற்றை எல்லாம் அளந்து மகாபலியை சிறை வைத்த-நடை அழகிலும்-புத்தி சாமர்த்தியத்திலும்-ஈடுபட்ட நெஞ்சு வேறே ஒன்றைப் பேணாதே-பாவோ நான்யத்ர கச்சதி போல்-இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –

8-4-வார்கடா வருவி யானை மா மலையின்மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-ப்ரவேஸம்-

வார் கடா அருவி -பிரவேசம்
சர்வேஸ்வரன் சம்சாரிகள் உடைய விருப்பையே பற்றுக் கோடாகக் கொண்டு
சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தாங்கள் தாங்கள் விரும்பினவற்றை பெறுமதற்கு கிட்டுமது ஒழிய
இவன் வாசி அறிந்து பரியக் கூடிய சம்சாரிகள் இலர் –
என் புகுகிறதோ -என்று அஞ்சின இவர்க்கு அச்சம் தீரும்படி நமக்கு பரிவர் உளர் –
ஒருவர் பரிய வேண்டாதபடியான மிடுக்கும் நமக்கு உண்டு –
என்று தன் படிகளைக் காட்டி சமாதானம் செய்ய-சமாதானத்தை அடைந்தவராய் நின்றார் மேல் –

இத் திருவாய்மொழியில் –
இவர் ஆகிறார் காதலையே இயல்பாக உடையவராய் இருப்பர்-
காதல் மையல் ஏறி கலங்கி-முத்தரும் நித்தியரும் இங்கு இலரே-
சனகன் முதலான முமுஷுக்கள் -நல்ல தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விட மாட்டார்கள்-
கடல் கடைந்தது தெய்வப் பிறப்பில் அன்றோ -என்று கலங்குவர்-

இன்னம் இவருக்கு இது மறுவல் இடக்கூடும் என்று பார்த்து–மறுவல் இடாதபடி தன்னுடைய சூரத்தன்மை-
வீரத் தன்மை முதலான குணங்களையும் -சீர்கொள் சிற்றாயன்-பாசுரத்தில் –
படைத்தல் முதலான ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் -படைத்து அளித்து அழிக்கும் –
எதிரிட்ட பகைவர்களை கூட்டத்தோடு வேரோடே வாங்கிப் பொகட வல்ல ஆற்றலையும் காட்டிக் கொடுத்து -கஞ்சனைத் தகர்த்த –
அதுக்கு மேலே
மேம்பட்ட ஞானத்தையும் சக்தியும் உடையவர்களாய்-தனக்கு பரிவராய் இருப்பர் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் -மனக்கொள் சீர் மூவாயிரவர் –
மூவாயிரம் பிராமணர் உளர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு கிருதார்த்தராய்
அவன் வடிவு அழகிலும்-திருச் செய்ய கமலக் கண்ணனும் –நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது
சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14
மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று
இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று

நாயந்தே
ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன

இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர்
பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை
விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால்
தன மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து

கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36-
தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்

மல் போரில்
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் -என்றபடியே –
கூறிய பக்கத்தில் உள்ளவர்கள் உடைய அச்சத்தை அவர்கள் முன்னிலையிலே-
மல்லர்களை அழியச் செய்து தீர்த்து அருளினாப் போலேயும்

தம்முடைய அச்சத்தை போக்கி அருள–அதனால் கிருத்தாரத்தராய்-
நம்முடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்-எல்லாம் இவன் அல்லது இல்லை -என்று ப்ரீதராய்
முன்பு அழகினைக் கண்டு பரிவாலே அஞ்சினவர்
அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து கிருத்தார்தராய்த் தலைக் கட்டுகிறார்-

செங்கணாஞ்சேரி -ஆரம் உளா -ஆறு திவ்ய தேசங்கள் சேர்ந்த இடம் -நவ திருப்பதிகள் சேர்ந்த திரு நகரி போல் -ஸப்த ரிஷிகளுக்கு சேவை திருவாழ் மார்பன்
இமையவர் அப்பன் -தர்ம புத்ரன் –புனர் நிர்வாணம் செய்த திவ்யதேசம் சிற்றாறு –
மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -விது ரஸ்ய மஹா மதி —
ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் -குணவான் -வீர்யவான் -அடுத்து -பெருமாள் குணங்கள்
எதிரிகள் சேனை கண்டு கலங்காமல் வீரன் –
உள்ளே புகுந்து கலக்குபவன் – ஸூரன்-
தனக்கு விகாரம் இல்லாமல் கலக்குபவன் பராக்ரமன் –

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே-
தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-

எங்கள் செல் சார்வே-கேசவன் தர்மருக்கு பின் தமியர் அல்லர் -வம்ச பூமிகளை உத்தரிக்க வராக கோபாலர்

எங்கள் –
மகா ராஜர் -பெரியாழ்வார்- ஸ்ரீ விதுரர் –தாம்-பிள்ளை உறங்கா வல்லி தாசர்–இன்னோர் அன்ன பரிவர்-

செல் சார்வே –அச்சம் இல்லாத இடம் என்று புகும் புகல்-
மேல் இவர்க்கு ஓடின அச்சம் நீங்கிற்று என்னும் இடம் இயல் தழைப்பிலே தெளிந்து இருக்கிறபடி கண்டதே-
இயல் ஓசையிலே தெளிய வேண்டுமே –

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

உலகத்தை படைத்தல் முதலாயின வற்றில் வல்லவனாய்–திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவன்–
அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்–

எங்கள் செல் சார்வு –
அனுகூல்யராய் இருப்பார்க்கு எல்லாம் அஞ்ச வேண்டாத புகல்-

யாமுடை யமுதம் –
புகல் மாத்ரமேயாய் இனிய பொருள் வேறே தேட வேண்டாதபடி இருக்கை-அனுபாவ்ய போக்ய வஸ்து -ப்ராப்யமும் ப்ராபகமும் இவனே

எம்மருவன் –
மற்று எல்லார் உடைய காரியமும் நம் புத்தி அதீனமாய் இருக்கும் அல்லது
நம் கார்யம் அல்லாதார் நினைவின் படி அல்ல காணும் இருப்பது-என்று எனக்கு அறிவித்து
என் அச்சத்தை நீக்கி–எனக்கு தாரகன் ஆனவன்-

அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே –இவனை ஒழிய எனக்கு சேர்ந்த துணை இல்லை-
அல்லாதார் கழுத்து கட்டியாதல்-துணை என்ற பேராய் ஆபத்தில் கூட அழுதல் செய்வர் இத்தனை-

—-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணி கொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

வராஹ ரூபி -பிரளய ஆபத்தில் ரஷித்தவன் திருவடிகளே சார்வு -கிருஷ்ணன் -விஷ்ணு -முதல் இரண்டாலும் சொல்லி-ஏனத்துருவாய் கிடந்த பிரான் – ஞானப் பிரானை அல்லால் இல்லை-நான் கண்ட நல்லதுவே-அவன் திருவடிகளை ஒழிய மற்று புகலிடமாய் இருப்பது–ஒரு பொருள் மநோ ரத திசையிலும் எண்ணத்திலும் இல்லை

——–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

ஆஸ்ரித அர்த்தமாக -த்ரிவிக்ரம -சமுத்திர மதன ரூபமான –அதிதன்-திருநாமம் –பிறிதில்லை எனக்கு-வேறு ரக்ஷகன் அல்ல

கோல மாணிக்கம் –பெரிய விலையதான இரத்தினம் போலே இருக்கின்ற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது –

மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும் மறைக்க வேண்டாதபடி பத்தம் பத்துமாக நின்ற என் ஸ்வாமி-
பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –

——–

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே–8-4-5-

அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் -அவனை ஒழிந்து இராது இருக்க -இங்கு நிலை ஒழிய -அடியேனுக்கு பொருந்துகிறது இல்லை

நல்ல நான் மறையோர்-அநந்ய ப்ரயோஜனர் -ப்ரேம பூயிஷ்டர்–எம்பெருமானாரைப் போலே ஆயிற்று அவ் ஊரில் பிராமணர்களும் –

——–

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளி யம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

சர்வ பிரகார உபகாரகன்- ஷீராப்தி நாதன் -பரிவர் நிறைந்த திவ்ய தேசம் –

வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் –
மூவர் செய்யும் கார்யங்களும் ஓர் ஒருவரே செய்ய வல்லராய் இருப்பார்கள் –
அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

——

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

அதிசயித அவயவ ஆபரண ஆயுத சோபை -உடன் உள்ளத்தில் இருப்பதால் பயம் தீர்ந்தேன் -நித்ய சந்நிஹிதன் ஆகா நின்றான் –

நான்கு செய்ய -இரண்டு செம்மை

திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன்
தன் அழகோடு என் நெஞ்சிலே வந்து புகுந்தான் -என்கிறார்-
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு வந்தான் -முன்பு இங்கு அனைத்துடன் வந்து மறக்க முடியாமல் புகுந்து உள்ளான் –

திருச் செய்ய கமலக் கண்ணும் –
அழகியதாய் சிவந்து இருப்பதாய் மலர்த்தி செவ்வி முதலானவற்றாலே தாமரை போலே இருக்கிற திருக் கண்களும் –
தூது செய் கண்கள் பிரதம கடாக்ஷம் முதல் உறவு பண்ணி அருளும் –

செவ் வாயும் –
நோக்காலே பிறந்த முதல் உறவைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும் புன்முறுவலும்-

செவ் வடியும் –
புன்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகளும் –

செய்ய கையும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக்கைகளும் –

திருச் செய்ய கமல வுந்தியும் –
அணைத்தார்க்கு எப்பொழுதும் அனுபவிக்கத் தக்கதாய் –
அழகுக்கு எல்லையாய் –
எல்லா பொருள்கட்கும் பிறப்பிடம் என்று தோன்றும் படி இருக்கிற திரு நாபியும் –

செய்ய கமல மார்பும் –
பகவான் உடைய சம்பந்தம் இல்லார்க்கும் -சம்பந்த ஞானம் -இல்லாதார்க்கும் -பற்றாசான-பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையாலே
சிவந்த திரு மார்பும்
கமலை -என்றுமாம் –நீல மேனி -மாற்றி சிவந்ததாக ஆக்கி அருளும் செய்யாள் இருப்பதால் –

செய்ய வுடையும் –
திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –

திருச் செய்ய முடியும் –
அப்படி திரு மேனிக்கு பரபாகமாய்-அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –

ஆரமும் –
பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே-திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –

படையும் –
வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்– இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –

என்றும் வென்ன சிந்தை யுளானே –
அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே-அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –
அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்-ந ச புநரா வ்ருத்தி போல் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

இப்படி நிறைவாக அனுபவித்த சீர் கொள் சிற்றாயன் உடைய– விலஷணமான குணங்களிலும் கீழ்ப் பாசுரத்தில் அருளிச் செய்த அழகிலும் அழுந்தி-
அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் -புகழாது ஒழியவும் மாட்டுகின்றிலன்-என்கிறார் –

திகழ என் சிந்தையுள் இருந்தானைச்
இதுவும் இவருக்கு ஓர் அச்சம் நீங்குவதற்கு காரணம் –
தம் நெஞ்சிலே இருக்கையாலே ஒரு அரணுக்கு உள்ளே இருக்கிறாப் போலே இருக்கிறது ஆயிற்று –
திகழ சிந்தையுள் இருந்தானை-என்றுஉகவாதார் நெஞ்சிலே இருக்கிற அச்சமும் போயிற்று –என் சிந்தையுள்-என்பதால்
இனிப் போய் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் -பெரிய திருமொழி -7-2-7-என்னுமவர்களே அன்றோ

பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே –
தனக்கு வசப் பட்டு இருக்கின்ற எல்லா உலகத்தின் உடைய-படைத்தல் முதலானவற்றை செய்யுமவன்
என்று திரளச் செய்யும் அத்தனை-பொருந்து-அப்ருதக் ஸித்தம் அன்றோ ஸமஸ்தமும் -பிரகாரம் சரீர பூதம் –
பிரித்து வகை இட்டு சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -என்றது
சுருங்க சொல்லுதலே சொல்லுவது அத்தனை -என்றபடி-

தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே –
விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே –
ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே

ஏ பாவம்! பரமே! ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மா பாவம் விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி ஏறு அன்றீயே?–2-2-2-

———-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே-8-4-9-

யாவையும் தானே –
இங்கன் பிரித்து சொல்லுகிறது என் –சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு அற அவனுக்கு உரிமை ஆகும் –
சர்வ சப்த வாச்யன் அவனே -சர்வம் கல் இதம் ப்ரஹ்ம -வேதம் தமிழ் செய்த மாறன் -பிரகார பிரகாரி பாவம் —

கொடைப் பெரும் புகழார் –
அவ் ஊரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை உடையார் -என்றது –
எதிரிகளையும் கொடையால் வசீகரிக்க வல்லராய் இருக்கையைத் தெரிவித்த படி –
தானமும் சாமம் முதலானவைகளில் ஓன்று அன்றோ –பெரும் புகழாவது-ஞானத்தை கொடுத்ததால் உண்டாகும் புகழ் –

———–

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி
அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக் கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே--8-4-10-

சர்வேஸ்வரனாய் வைத்து-எல்லாப் பொருட்கட்கும் பற்றப் படுமவன் ஆகைக்காக-
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை-அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார்

நிருபாதிக சேஷி -அவாந்தர சேஷிகள் ப்ரஹ்மாதிகள் -சத்தையும் -தான் இட்ட வழக்கு -தத் பிரயோஜனம் தனக்காம் படி –
அந்தராத்மாவாக இருப்பதும்

அமர்ந்த நாதனை யவரவராகி-பொருத்தமாக ஸ்வாமி -சகல சேதன நிர்வாகம் என்றால் இவனுக்கே பொருந்தும் -நிருபாதிக சேஷி

யவரவராகி
இரவலர் கிட்டினால் அவர்கள் தம் தாமுக்கு நல்லவர் ஆம்போலே அவர்களுக்கும் நல்லனாய் இருக்குமவன் -என்றது
அவர்கள் -இது நமக்கு வேண்டும் -என்று இருக்குமாறு போலே
இவர்களுக்கு இது வேண்டும் -என்று இவன் இருக்கையைத் தெரிவித்தபடி –

அங்கன் அன்றிக்கே –
அவர்களுக்கு பெறுகையிலே விருப்பம்
கொடுக்க கொடுக்க அவர்கள் கொள்ளுகையிலே அர்தித்வம் விருப்பம் இவனுக்கு -என்றது
பெற்றோம் என்ற உவகை அவர்களுக்கு-கொடுக்கப் பெற்றோம் -என்ற உவகை இவனுக்கு -என்றபடி –

அவர்க்கு அருள் அருளும் –
அவர்கள் விரும்பினவற்றைத் தன் பேறாகக் கொடுக்கை
கொள்ளுகிறவனுடைய இரப்பை தான் உடையனாய் கொடுக்கை –

அம்மான் -பூர்த்தி -பகவானுக்கு பூர்த்தி அர்த்தித்தவத்துக்கு ஹேதுவாகும்
அம்மான் -சம்பந்தம் -இழவும் பேறும் தனது பேறாக இருக்குமே

முக்கண் அம்மானை நான்முகனை
பிரமன் சிவன் இவர்களுடைய இருப்பு முதலானவற்றுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
பிரமன் சிவன் -இவர்களை பலகால் சொல்லுகிறது–
இவனுடைய நிர்வாஹகத் தன்மை தோற்றுகைக்காகவும்
நிர்வஹிக்கப்படும் பொருள்களில் ஒன்றால் நலிவு உண்டாகை கூடாது என்கைக்கும்

அன்றிக்கே
அமர்ந்த மாயோன் -என்று வைத்து இவர்களைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே
சாமாநாதி கரணத்தைக் காட்டுகிற சொற்கள் விசேடியத்தில் சென்று சேரக் கடவை ஆகையாலே
சரீரியாய் இருக்கிறவனை என்றுமாம் –

——–

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

நிகமத்தில்
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே-இத் திருவாய்மொழியை கற்றவர்கட்கு இது தானே முதலில் பரமபதத்து ஏறக் கொடுபோய்-பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன-
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே- சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –குரவை ஆய்ச்சியர் -6–4–

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

பிரபத்தி -பக்திக்கு அங்கமாகவும் ஸ்வயம் சாத்யமாகவும் உண்டே-ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி அதுக்குப் பின்பும் உண்டு-ஸம்ஸார ஸ்வ பாவம் கண்டு அஞ்சி -கால விளம்பம் பொறாமல் ஆற்றாமை துடிக்க – அருளிச் செய்கிறார்-தொல்லை யூழி சுருங்கலதே – காலம் நெடுகிக் கொண்டே போகிறதே –
இம் மாயம் -ஆச்சர்யம் –திருவடியைத் தலையிலே சூட -தலை வேணுமே -அதுக்கு நோன்பு நோற்றுப் பெற வேண்டுமே –சரீரம் இதனால் உபாதேயம் ஆகுமே -ஆக்கைக்கு நோற்றது-சரீரம் நிலையாதே -32-திரு நக்ஷத்ரம் தானே இங்கே இருந்தார் –-பக்தி பெற நோன்பு என்று கொண்டு -தகைமைக்கு நோற்றது -சம்சாரத்தில் பக்தியும் நிலை நில்லாமல் -ரஜோ தமஸ் மூடுமே –முக்குண மய ப்ரக்ருதி அன்றோ –
நிலைப் பெய்யாத -இது ஆக்கைக்கும்-பக்திக்கும் – தன்மைக்கும் -பிரபாக ப்ராப்ய பரமாக இரண்டு நிர்வாஹங்கள்-குரவை ஆய்ச்சியர் -6–4–விவரணம்-குறைவில்லாமல் அருளிச் செய்து-மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிராமல் -அங்கும் உண்டே–நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-மகிழ்ந்து அருளிச் செய்த திருவாய் மொழி அங்கு –

அவதாரிகை –-என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது –-என்றாகில் என் –
பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன்  ஆகில் எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் –
அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் –அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –
அன்றிக்கே-உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றான படியையும் –(ஸ்வ பாவம் -பக்தி -இது பெற சரீரம் வேண்டும் இங்கு அது இரண்டாம் பக்ஷம் )இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே –இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால்
இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –(மண் பற்று போல் -ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்-மங்க ஒட்டு உன் மா மாயை என்று உபதேசிக்க வேண்டிற்று-இத்தைத் தள்ளியே அழைத்துப் போவார்-விமல சரம திருமேனி -ஸ்ரீ வைகுந்ததில் உள்ளாருக்குக் காட்ட அபிநிவேசம் அவனுக்கு –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ-ஆகவே சரீரத்துக்கு முக்கியம்-ப்ரக்ருதி கார்யமான பிராகிருதம் -அஞ்சு சேர் ஆக்கை-இது தான் -ஸ்வ பாவம் இங்கு -ஏக ரூபமாக இருக்காதே)

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக-நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான-விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்-நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று-முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க-இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்-இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே
– 90–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்-பெய்தி பாட பேதம்-

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக் குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும்
காண் தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள்
 —54–மாசறு சோதி-5-3–மானேய் நோக்கு -5-9–பிறந்தவாறு–5-10-என்கிற திருவாய் மொழிகளிலே-சேணுயர் வானத்து இருக்கும் –5-3-9- நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் –5-9-10–உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–-5-10-10-என்று தூரஸ்தன் என்றும்-நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் –அமுத மென் மொழி யாகையாலும்–தேனே இன்னமுதே -5-1-2–என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்-தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

தலைப் பெய்து –உன்னை வந்து கிட்டி –நான் – அறக் கை கழிந்த நான்-உன் திருவடி இத்யாதி –
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கை ஆகிற  இஸ் ஸ்வ பாவத்தாலே தரிப்பதான சரீரத்தைப் பெறும்படி –
ஜன்மாந்த்ரத்திலே ஸூஹ்ருதத்தை பண்ணின ஆச்சர்யம் –மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும் —மாயம் உண்டு –இப் பிரகிருதி –இது என்றும் ஒக்க ஒரு படிப்பட்டு இராதே இருக்கிற இஸ் ஸ்வபாவத்தையும் காண்டோறும் –அன்றிக்கே –தலைப் பெய்து -இத்யாதி –நான் உன்னை வந்து கிட்டி உன் திருவடிகள் ஒழிய வேறு ஒன்றால்-தரியாத படியான இஸ் ஸ்வ பாவத்தை உடையேனாய் கொண்டு – நான் இதிலே நிலை நின்ற ஆச்சர்யத்தையும்- ஆக்கைக்கு நோன்ற இம் மாயமும் –ஜன்மாந்தர சகஸ்ரேஷூ -என்று நோற்றால் இறே-இஸ் ஸ்வ பாவம்-பிறப்பது –ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இருக்கச் செய்தே -இறே-இஸ் ஸ்வ பாவம்  தான் உண்டாவது –ஆகையால் தாத்ருச சரீர பரிக்ரஹமும் -அந்த பக்திக்கு உறுப்பாம் இறே –இந்த யோஜனையிலும்-க்ரியாகாரக பாவேன அன்வயிக்கும் இடத்தில் –ஆக்கைக்கு நோற்ற -என்கிற இதுவே விசேஷ்யமாய் கொண்டு-பிரதானமாய் -தோற்றிற்றே யாகிலும் –திருவடி சூடும் தகைமையினால் -நிலைப் பெய்க -என்கிற இஸ் ஸ்வபாவ பரமான விசேஷணாம்சத்திலே   வாக்யத்துக்கு தாத்பர்யமாய் – அதுவே பிரதானமாகக் கடவது –மாயம் செவ்வே யித்யாதி –அச்  சரீரம் தான் குண த்ரய உக்தமாய் இருக்கையாலே ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை எடுத்த போது –இஸ் ஸ்வ பாவம் (இப்பக்தி- தகைமை )இன்றிக்கே -சத்வம் தலையான போது உண்டாமது ஆகையாலே –என்றும் ஒக்க ஒருபடிப் பட நிலை இல்லாதே இருக்கிற இந்த ஆச்சர்யத்தையும் –காண்டோறு –அனுசந்திக்கும் தோறு எல்லாம் –இத்தையே முடிய அனுசந்தித்துப் போந்தார் என்று-தோற்றுகிறது –அசுரர் இத்யாதி –அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடைய என் ஸ்வாமி யானவனே –இத்தால் –நீ -அசக்தனாய் ஆதல் —அப்ராப்தனாய் ஆதல் —
நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –தொல்லை இத்யாதி –
பழையதான கல்பம் சுருங்குகிறது இல்லை -நெடிதாக நின்றது –அன்றிக்கே இந்த ஆச்சர்யத்தை அனுசந்திக்கப் புக்கால் –தொல்லை ஊழி யானது சுருங்கலை-உடைத்தாய் இரா நின்றது –காலம் போருகிறது இல்லை –இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது பொறுக்கப் போகிறது இல்லை -என்று சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –

ஆற்றாமையால் காலம் மிக தோன்றுகிறதே –சுருங்கலதே-சுருங்குகிறது இல்லை -இப்படியே என் காலம் கழிந்து விடுகிறதே-நோற்ற விம்மாயமும்-பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் –உன் திருவடிகளில் அடிமையால் அல்லது செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும் அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்-மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே-இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
திருவடிச் சூடும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலேஅசுரர் குழாம்-தொலைப் பெய்த நேமி எந்தாய் -என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களைப் பாற்றுதல் உமக்கு ஒரு கார்யமோ –நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது-என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே‘சுருங்குதலை யுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம்.-பூர்வ ஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால் ‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும், அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லை யென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை.–ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும் பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.–‘மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமை’ என்பதற்கு- இவ்வுடம்பு நிலையில்லாத தாயிருக்குந் தன்மையென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடியிருக்கையில் உண்டான அடிமைக்குணம் ரஜோகுண தமோகுண ஸம்பந்தத்தால் நிலைப்படாது சலிக்கக்கூடியதன்மை என்றும் உரைப்பர்.-‘திருவடி’ என்றதற்கு ‘திருவடித் தாமரை மலர்’ எனப் பொருளுரைத்தது ‘சூடும்’ என்றதற்கேற்ப.“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்ற திருவாய் மொழி காண்க.-ஆயிரம் ஜந்மஙக்ளிற் செய்த நோன்பின் பயனாகவே ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜன்மம் கிடைப்பதாக ப்ராப்திப்ரதிபந்தகங்களைப் பாற்றுதல் உனக்கொரு பெருங்கார்யமோ? என்பதற்காக ‘அசுரர்குழாந் தொலைப்பெய்தநேமி யெந்தாய்!’ என விளிக்கப்பட்டது.–தலைப்பெய்து + யான், தலைப்பெய்தியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல். தலைப்பெய்தலென்பது ஒரு முழுச்சொல்.

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்-(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்-தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்-கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று நடத்தித் தாராதே நிற்கிற படியையும்–காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின திருவாழியை யுடைய என் ஸ்வாமி யானவனே–தொல்லை யூழி சுருங்கலதே –விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும் பரிகரம் தேட வேண்டாமையாலும் பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால் முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

இதில் இங்கனே அந்வயம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால்-நிலைப்பெய்த யான் தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே
–என்று–உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது-இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்-பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று தொடங்கி அருளிச் செய்தபடி-ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ பர ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய் உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி–இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு-மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்–இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்-ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி-இம்மூன்றையும்-காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே என்னை ஆண்டு கொண்டவனே-தொல்லை யூழி சுருங்கலதே-உன்னையே அனுபவித்தும்-உனக்கே அடிமை செய்தும் கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே-ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

தாத்பர்யம்
இதில் சர்வேஸ்வரன் தன்னுடைய கைங்கர்யத்துக்கு உபயோகியான சரீரத்தையும்-தன்னிடம் உள்ள பக்தியும் அருளிய பின்பு பேறு தப்பாது என்று விஸ்வசித்து இல்லாமல் இவற்றின் அஸ்திரம் பார்த்து அலமந்து கூப்பிடுகிறார்-இங்கு தகைமைக்கும் ஆக்கைக்கும் முக்யத்வம் கொண்டு இரண்டு நிர்வாஹங்கள்-பக்திக்கு ஆக்கை எதுக்கு-ஆக்கை சரீரம் பக்தி எதுக்கு-ஒன்றுக்கு முக்கியம் கொடுக்க அடுத்தது அமுக்கியம்-இரண்டுமே வேண்டுமே -சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் போல்
நான் உன்னைக் கிட்டி உனது திருவடிகளை தலையில் வைத்து கொண்டால் அல்லது தரிப்பது அரிது ஆற்றாமையுடைய இந்த சரீரத்தை அநேக பிறவிகளில் அநேக தவம் செய்து பெற்றும்-இனி வரையில் உன்னைக் காணப் பெற்றிலேன்-இனி காணும் அளவும் இவை ஸ்திரமாக இருக்காவே-சரீரம் மின்னின நிலையில -மன்னுயிர் ஆக்கை-இனி மறு பிறவியில் உன்னை ஆஸ்ரயிப்போம் என்னில்-அங்கு பக்தி நிலைக்க வேண்டுமே -அதுவும் சங்கை உண்டே-அதி துர்லபமான மானுஷ்ய தேஹம் -க்ஷண பங்கி
அது பெற்றாலும் முக்குண மயமான இங்கு சத்வகுண கார்யமான பக்தி இருக்க வேண்டுமே அவ்வளவு துர்லபம்-இப்பிறவியில் இப்போதே பெற வேண்டும்-இவ்விதமாக பாதங்களை நினைத்துப் பார்க்க
உன்னைப்பெறாத இக்காலம் கல்பமாக நெடுகி உள்ளதே-நாதனான நீயோ ஆஸ்ரித விரோதி நிரசன நீயும் ரக்ஷண தீஷிதனாயும் உள்ளாய்-இப்படி இருக்க வீணாக காலம் பெருகுவது பொறுக்கப் போவது இல்லை என்று சர்வேஸ்வரன் இடம் முறை இடுகிறார் –

6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-ப்ரவேஸம்

இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.

அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.

“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.

“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )

“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.

சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –

சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே
.–6-4-1-

பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே, அது முன்னாகப் பேசுகிறார்.-நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!-அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் -திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.-ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.-குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.-திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,

பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.-இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.-அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.

உள் பட மற்றும் பல –-இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;-இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!

அரவில் பள்ளிப் பிரான் –-மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;-இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.-போகம் -பாம்பு -இனிமை-பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.-இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;-அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.

அரவில் பள்ளிப் பிரான்-அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;-அன்றியே,“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.

அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,

என்ன குறைவு எனக்கே –-“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?-ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;-அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,-பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;-சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )

—————-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
.–6-4-2-

கேயம் தீம் குழல் ஊதிற்றும் – தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.-கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.-இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.–குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்-சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.-இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-

பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.-“தோளி”சேர் பின்னை-இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.-

சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,-இவனுக்கு-பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.

மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய-கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து

எனக்கு எவ் வுலகம் நிகர் – ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?-ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

——————

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே
–6-4-3-

மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச் செய்தே, சாத்தின சாந்து குறி அழிந்தது இல்லை காணும்.
கூனி சாத்தி விட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ.
இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ.
இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள்.-இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே.

க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்;-ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.-பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருத போதும் உள்ளது

சிகர மாகளிறு அட்டதும்-பர்வத சிகரம் போலே உரத்து பெருத்து இருக்கிற குவலயா பீடத்தை நிரசித்ததும்-இவை போல்வனவும் பிறவும்-இவை போலே மற்றும் உண்டான கேசி நிரசன நாதிகளும்-புகர்கொள் சோதிப் பிரான்-விரோதி நிரசன த்தாலே ஒளி பெற்ற தேஜஸ் ஸூ –உபகார சீலன்

எனக்கு என் இனி நோவதுவே –‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.
இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு – ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.-உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.-

—————-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?
–6-4-4-

ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் –-சீயர், இத் திருப் பாசுரத்தை இயல் அருளிச் செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச் செய்யும் அழகு காணும்.
‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திரு மேனியிலே கயிறு உறுத்தினாற் போலே.’
ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே
சிநேகமுள்ள அளவும் இடை நிற்கும் -சத்ருசமாக -அன்றோ கோபமும்.
தாய் எடுத்த சிறு கோலுக்கு -8-3-5-உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்;-வாய் விட்டு அழ மாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை” என்கிறபடியே,-ஒரு மத்த யானையைத் தறியோடே சேர்த்தாற் போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.
ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக் கொண்டு போக மாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி.-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.
(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

யசோதைப் பிராட்டியின் முலை உண்ணும் போதும் தான் உயிர் பெற உண்ணுமாறு போலே காணும், இவள் முலை உண்கிற போதும் தான் உயிர் பெற முலை யுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்.(அவள் உயிரை தான் பெரும் படி இங்கு )

தேவக் கோலப் பிரான் – மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே.
அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.-தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு
வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.-

—————-

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?
–6-4-5-

தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பி-இச்சையாலே-இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கை யன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது.-தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்க மாட்டானே யன்றோ.

இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.-இனி, இந்த இருளைச் சரணம் புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளை யுறங்கா வில்லி தாசர் பணிப்பாராம்.
“ஊர் எல்லாம் துஞ்சி” -5-4-என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ.

அங்கு ஓர் ஆய்க் குலம் புக்கதும் – அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். ‘குடி வாய் உடன் பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லை யாகில் உழக் கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள்.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன்.-கம்சனை முடித்த படியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை-எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்ட பின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ?-இகல் – பகை.-பகவத் விமுகர்களே சத்ருக்கள் -அவர் ஆணைக்கு எதிராக செயல் படுபவர்கள் எனக்கு சத்ரு –

————-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே
.–6-4-6-

பகல் இராப் பரவப் பெற்றேன் – நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும்-இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு,
இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ?
பரிவு – துக்கம்.-அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக் கடவது.பரிவு என்கிறதை சந்தஸ்ஸூ க்குச் சேர பரிப்பு என்கிறது-

————

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
–6-4-7-

நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன் தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்;-குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே-குற்றங்களுக் கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான் பிறந்து’ என்கிறது.
அன்றிக்கே,-பிறப்பதற்குக் கர்மம் செய்து வைத்தவரும் கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர்-கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல்.
இதற்கு அடி பரம கிருபை அன்றோ.-அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! இரண்டு தோள்களுடையவனா? நான்கு தோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் –
அடியார்கள் வேண்டிய உருவம் என்றுமாம் –இச்சையால் எடுத்தவை-

அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.-புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம் செய்து ஒப்பித்து,
திருமேனியின் பரிசத்தாலே தன் நிலத்தில் நின்றாற் போலே செவ்வி பெற்று இருக்கின்ற
திருத்துழாய் மாலையினைத் திரு முடியிலும் திருமார்பிலுமுடையவனாய்,
அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக் கொண்டவன்.-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.

எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்--பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?-பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-

————–

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?
–6-4-8-

சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி.
‘இவன் கர பாதை ஆற்ற மாட்டாமல் கண்டார் கால்களில் எல்லாம் குனிந்து திரியா நின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்து விட்டான்.
‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கர பாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு -திரு ஆழிக்கு –-அடைத்து விட்டான். –இவர் கை சக்கரம் கழிய போய் அவன் கைகளை கழித்தான்–வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்று விட்டான்.
பகவானைப் பற்றுவதற்குக் கைம் முதல் இல்லாமை விட்டான் அன்றே.
(கை முதல் -மூல தனம் இல்லை -ஆயிரம் கை கொடுத்தான்-அஞ்சலி பண்ணாததால் -கை தப்பிற்று -கைகள் போனது )

கண்ணழிவற்ற அழகாலும்,-வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும்,
அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும்,-செய்யும் ஆனைத் தொழில்களாலும்
கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார்.

நிலம் கொண்ட மாயன் என் அப்பன் –-திரு உலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்து கொண்டது தம்மை என்று இருக்கிறார்.-மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –

அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களை யுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சு தானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே,
நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக் கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும்
உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –-‘இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ?
அன்றிக்கே,-வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும்,
ஈஸ்வரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும்,
‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து-கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

———-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?
–6-4-9-

வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டு போருகையும், போன செவ்வியிலே கொடு வந்து கொடுக்கையும், காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும்.

வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டுவரைப் பெருமாள் என்பவர்,-மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச் செய்தார்.-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.-“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”-“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார்.

மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.-இம் மண்ணின் மிசை மாறு உளதோ –-பரம பதத்தில் அநுபவம் வாய் புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர்.-இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.-தரித்து நின்று அனுபவம் இங்கே தானே –
அன்றிக்கே,-‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால், ‘இம் மண்ணின் மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

———–

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
-6-4-10-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க –-‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களை யுடைத்தாய்த் தாங்கக் கூடியதான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர் வர்க்கம் திரண்டபடி,
பரமபதத்தில்-“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷ ஸூக்தம்.
இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.-தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள்

பகைவர்களை அழித்ததற்கு மேலே அன்றோ-இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரம பதத்திலே போய்ப் புகப் பெற்றபடி என்று உகக்கிறார்.-பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரம பதத்து ஏறப் போகப் பெறுவதே!

ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறு -அஸ்தமன காலம் -போது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து,-“யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக் கோடி பேர் நடுவே,-அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்து நாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச் செய்வர்.

எனக்கு நாயகர் பிறர் ஆர் – அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தே போய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார்.“பயிலும் திருவுடையார் யவரேலும்” என்றதனை மறந்தார் போலே இருந்தது.
அன்றிக்கே,-அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.-

————————–

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.
–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன – கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே. “மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும், – இத் திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர்.–நாயகன் —6-3 சுருக்கம் –கேசவன் -6-4- சுருக்கம்-
‘நாயகன் முழுவேழ் உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல் குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேஸ்வரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக் கட்டுகிறார் என்றபடி.

அன்றிக்கே,-எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,,“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்” என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.

இப் பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.-துவள் இன்றியே பத்தர் ஆவர் –
துவள் – குற்றம்.-அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை-குற்றம் இல்லாமையாவது, -அத்தை தவிர்ந்து-வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.-திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -89-தீ வினைக்கு அரு நஞ்சை –அங்கும் இங்கும் -8-3-

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அடைவதில் சம்சயம் இல்லையே ஆழ்வாருக்கு-எஞ்ஞான்று தலைப்பெய்வன்-(நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-) -என்று என்பதே –உலகம் அளந்த பொன்னடி திரிவிக்ரமன்-ஊராகத் தொட்ட கண்ணன் ஆவினை மேய்க்கும்-வல்லாயன் -சஜாதீயத்தில் மெய்ப்பாடு-அன்று தப்பினேன்-அகாரம் ஆகாரம் தீ வினைக்கு அரு நஞ்சு ஆறு நஞ்சு -தளை தப்பாமல் -தமிழர் –ஆர்ஷ பிரயோகம் போல் ஆழ்வார் -மாற்ற வேண்டாம்-ஆரும் -போக்குவதற்கு போருமதான நஞ்சு–அங்கும் இங்கும் -8-3-இதன் விவரணம்-

அவதாரிகை –-சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப்      பெற்றோம் –இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு  நாம் சஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார் –(சம்சாரிகளில் வியாவருத்தரானதால் மகிழலாம்-நித்யர்கள் உடன் சேரப்பெறாமல் துக்கம்-ஆரூரோஹ-ரதம் ஏறி -அனிஷ்டம் தொலையப் பெற்று மகிழ்ந்த பரதன் -அதே சமயம் கூடப் பெறாமல் துக்கம் போல் இங்கும் -)

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும் பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய் ஸூலபனான இவனை என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்-இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே
– – 89-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும் வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக-பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்-எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட-நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்-நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

தீ வினைக்கரு நஞ்சே –பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை–நல் வினைக்கு –பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )-இன்னமுதினை –நிரதிசய போக்யனாய் – பரம ப்ராப்யனாய் உள்ளவனை –இப்படி பாபங்களை போக்குகைக்கும் –தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –பூவினை மேவிய இத்யாதி –பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு–புன்மை இத்யாதி –அம் மேன்மை  உடையனாய்  இருக்கச் செய்தே –அவளோட்டை சேர்த்தியாலே- ஆஸ்ரிதர்க்கு ஸூலபனாய் உள்ளவனை –புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் –ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ –இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –வல்லாயினை –மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –ஏற்றை –லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால் மேணானித்து இருக்கிறவனை –-இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி–எம்மானை –அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று- இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –எஞ்ஞான்று தலைப் பெய்வனே
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே – அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ) அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

பேற்றுக்கு விரைந்து பேசுகிற படி-தீய கருமங்களை ஒழித்து கைங்கர்யம் செய்பவர்க்கு இன்ப மயமாய் இருந்து -பக்தியை வளர்ச்சி செய்பவன்-நல் வினை-என்றது முக்திக்கு வியாஜ்ய காரணமான பிரபத்தியை புன்மை எள்காது-ஆவினை மேய்க்கும் வல்லாயனை -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய்-எங்கள் ஆயர் தேவே– எள்காது-பெறாப் பேறு பெற்றால் போன்று அன்றோ உகப்பான் –நாயகனுடைய ஸம்ச்லேஷத்துக்கு விரைகின்ற நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. கொடிய துன்பத்தை விளைக்கின்ற தீக் கருமங்களை எளிதில் ஒழிப்பவனும், தன் பக்கல் அடிமை செய்வார்க்கு நிகரற்ற இன்பமூர்த்தியாயிருப்பவனும், தாமரையைத் தனது சிறப்புக்கும் ஸௌகுமார்யத்துக்கும் அழகுக்கும் தக்க இடமாகக் கருதி அதில் வீற்றிருப்பவளாய்ப் புருஷகார பூதையான பிராட்டிக்கு நாயகனும், திருவுள்ளத்தில் சிறிதும் வெறுப்பின்றியே உகப்புடனே பசுக்களை மேய்க்கப்பிறந்து, வேஷம் கொண்டவன் போலன்றிச் சாதி குணந்த தொழிகளில் உறைந்து நிலைநின்ற இடையனும் இரண்டடிகளாலே ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட மேம்பாடுடையனுமான எமது தலைவனை எப்பொழுது சேரப்பெறுவேன் என்கிறாள்.
அடியார்கட்குப் பகை தீர்ப்பவனும் அடிமைக்கு இனியனும் புருஷகாரமான திருமகளுக்குக் கணவனும் அனபர்க்கு எளியனும் எல்லாவுலகையும் கீழ்ப்படுத்தியவனுமான எம்பெருமானை எப்பொழுது சேர்ந்து அநுபவிக்கப் பெறுவேனென்று ஆழ்வார் பேற்றுக்கு விரைந்து பேசுகிறபடி.–‘தீவினைக்கு அரு நஞ்சு’ என்றது- கொடிய துன்பத்தை விளைக்கிற தீய கருமங்களை எம்பெருமான் எளிதில் ஒழிப்பவன் என்றவாறு.‘நல்வினைக்கு இன்ன முதம்’ என்றது- தன் விஷயத்தில் கைங்கரியம் செய்பவர்கட்கு இன்பமயமாயிருப்பவன் எம்பெருமான் என்றவாறு;-அவர்கள் பக்தியை அழியாது வளரச் செய்பவன் என்க. முக்திக்க வ்யாஜ காரணமான ப்ரபத்தியை இங்க நல்வினை என்றது.புன்மை யெள்காது ஆவினை மேய்க்கும் = மகிவும் நீச ஜாதியாகிய பசுக்கையோ நாம் மேய்ப்பது’ என்று ஜுகுப்ஸை கொள்ளாமல்“ திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே!” (திருவாய்மொழி 10-3-10). என்கிறபடியே ‘பசுமேய்க்கும் பாக்யம் பெற்றோமே!’ என உவந்து மேய்ப்பவனென்றவாறு.–‘தாவின வேற்றை’ என்றவிடத்து ‘ஏறு’ என்றது விளக்கவந்த உபசார வழக்கு; ஏறு காளை சிங்கம் இச்சொற்கள் ஆண்பாற்கு வருகையில் சிறப்புப் பொருளுணர்த்துவனவாம்; இது வடமொழி மரியாதை.

தீ வினைக்கரு நஞ்சை-கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை–ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல-அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்நல் வினைக்கின்ன முதத்தினை-ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை-பூவினை மேவிய தேவி மணாளனை-அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்-நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற-பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை-(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபணம் பட்டர்) புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை-இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே சிறுமை என்று இகழாதே பசுக்களை மேய்க்கக் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-அன்றுலகீரடியால் தாவின வேற்றை-இப்படி இனியனானாலும் தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில் தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை–எம்மானை-கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை–எஞ்ஜான்று தலைப் பெய்வனே –இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை-அது எக்காலம் என்றதாயிற்று –

தாத்பர்யம்--இப்படி பகவத் விலக்ஷண பக்தி உக்தராய் இருக்க சம்சாரி வ்யாவருத்தராய்
அதே சமயம் நித்ய ஸூரிகளுடன் சேரப் பெறாமையால் ஆற்றாமை மிக்கு அத்யந்த வல்லபையான – கமல வாஸினியான பெரிய பிராட்டியார் யுடைய -புருஷகாரம் இருக்க ஆஸ்ரிதருக்கு அத்யந்த துக்க ஜனகமாய் உள்ள பாபங்களைப் போக்கி பிரபத்திக்கு -நல்வினைகள் -அவனே பலம் -அவன் முக விலாசத்துக்குச் செய்ய வேண்டுமே-கர்மமும் கைங்கர்யத்தில் புகுமே-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-மேன்மையைப் பாராதே இடைக்குலத்தில் பிறந்து பசு மேய்த்தும்
மஹாபலி அபஹரிக்க தனது உடைமையை -கால் கீழ் இட்டுக் கொண்ட விசித்திர சரிதங்களால் புகர் பெற்று-இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –

8-3-அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-ப்ரவேஸம்-

அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக

நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –

அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி

சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர் என்னும் அளவும் செல்ல அறிகை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —

இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –

மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அபிமதம் அவன் -அபிமத சாதனம் இல்லை -இதுவே ஆழ்வார் கொள்கை –இவர் நெஞ்சில் அவன் சௌகுமார்யமே ஆயிற்று உறைத்து இருப்பது

எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதே-நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று

கருமுகை மாலை போலே இருக்கிற உன் படி அறியாதே –போக்ய பூதன் என்று அனுபவியாதே-புருஷகார பூதன் அபீஷ்ட பல பிரதன் என்பர்

ஸ்வரூப அனுரூபம் மங்களா சாசனம் என்றவாறு

சரணமாகிய நான் மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

க்ஷேமம் கரமான-சேஷ பூதராக–சேஷிக்கு அதிசயம் பண்ணி பரியாமல்-ஆத்தும லாபத்துக்காக வணங்குகிற  கேவலரை நிந்திக்கிறார்

தாதர்த்தம் ஸ்வரூபமாக இருக்க ஸ்வார்த்ததா -தங்கள் பிரயோஜனத்துக்காக இருப்பதே

ஈஸ்வரன் விடினும் அடியார்களை விடாத திண்மையை உடைய படை ஆதலின் திண் படை

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலி யோடே ருசிர சானுக்களின் கூவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண்
என்று வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –சூர்ணிகை -127 –

விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் -சஹாயாந்தர ராஹித்யம் -சஹாயாந்தர நிரபேஷ்யம் இத்தை கொண்டே பிர பத்திக்கு ஏற்றம்-அதுவே குறையாகப் படுகிறதே பரிந்து இருக்கும் ஆழ்வாருக்கு

ஆளுமாளார் –
விபூதி த்வயத்திலும் புரிவதற்கு ஆள் இல்லை -தனியே ஒருவரே ஆள வேண்டும் என்று இருக்கிறார்
நித்ய ஸூரிகள் பகவத் அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-சம்சாரிகள் ப்ரயோஜனாந்தரங்களிலே அந்ய பரர்

தொழக் காணேன்
தொழுகையும்-பரிதலும்-பர்யாயம் போலே காணும்–தொழக் காணப் பெறுகின்றிலேன்

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

ஞாலத்தே-
பரம பதத்தில் இருந்து அஸ்தானே பய சங்கை பண்ணுகிறேனா-
பிரம்மாஸ்திரம் விடுவார் நாக பாசத்தை இட்டுக் கட்டுவார்
அழைத்து வைத்து மல்லரை இட்டு வஞ்சிக்க தேடுவர்
பொய்யாசனம் இடுவார்
ஆகிய இவர்கள் இருக்கிற தேசத்தில் வாழா நின்றால் நான் அஞ்சாது செய்வது என் –

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே--8-3-4-

ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-ஆலிலை பேர் சொல்லும் படி -வயிற்றில் இடம் இருக்கும்
இலையில் இடம் இல்லையே-இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து -திருப் பாற் கடல் போலே திரு உள்ளம்

பேரிலை-பெயருகிற இலை-அதாவது-முகிழ் விரிகிற இலை -என்றபடி –ஆலிலை என்ற ஓர் பெயர் மாத்ரமான இலை-பெரிய இலை என்று விபரீத லஷணையாய்-சிற்றிலை -என்னுதல் –

கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே-உலக பயத்துக்கு உம்மைப் பற்றி போக்குவேன்
உம்மைப் பற்றிய பயம் போக்க முடியாத பாவி அன்றோ -ஆழ்ந்து போன கொடியேன் -எல்லாரையும் இரட்சிக்கின்ற வஸ்து அன்றோ பிரளயத்தில் அகப்படப் புக்கது -என்று அதற்கும் அஞ்சுகிறார்-அகடிதகடநா சாமர்த்தியமும் -ரக்ஷகத்வம் சக்தியும் அன்றோ என்னில் இவையே இவருக்கு அஞ்ச ஹேதுக்கள் ஆனதே-

1-தனக்கு ஜீரணம் ஆகாத பூமியை உண்டலும்
2-ஜீரணம் ஆகாது -என்று அறியாத இளைஞன் ஆகியும் –
3-பிரளயத்தில் சிறிய இடத்தை உடைய ஆல் இலையிலே திருக் கண் வளர்ந்து அருளுகையும் –
4-அதிலே கிடந்த இடத்தில் கிடக்காமல் விளையாடுகையும் –
இவை எல்லாம் பயத்துக்கு இடங்களாய் இருக்கிற தாயிற்று இவருக்கு –

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடிக்கு பயப்பட வல்லார் இவரைப் போன்றார் இலர் –கொடி இடை மடவாருக்கு பயப்படுவார் –

அளந்த திருவடி பிடிக்கவோ -எய்த்த திருத் தோள்களை பிடிக்கவோ இவருக்கு உத்தேச்யம்

உகந்து அருளின இடங்களிலும் செய்ய முடியாதன இல்லை-
சொல்ல நினையாமல் இருக்கிறான் இத்தனை -என்று இருக்கிறார்

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

திரு நீல மணியார் மேனியோடு –
நீல மணி போலே ஸ்ரமத்தை போக்கக் கூடியதாய் சுகுமாரமான வடிவோடு-
இங்கே வர வேண்டுமானால் அவ்வடிவோடே வர வேண்டுமோ-
அத்தை கழற்றி வைத்து வரக் கூடாதோ -இச்சா க்ருஹீதாம் அன்றோ -வடக்கே அதனால் வெள்ளை திருமேனி பரிவு அதிகம் என்பதால்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –சூர்ணிகை -173-மனம் சூழும் படி ஸூ குமார்யம் பிரகாசிப்பித்தானே
ஒரே பாசுரம் -மங்களா சாசனம்

மாயக் கூத்தன் -சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் சூர்ணிகை -173-அங்கேயும் ஒரே பாசுரம் –

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா-
ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –

உம் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலை ஆளாக என்னைக் கொள்வது என்று–அவனைக் கேட்கிறார்-
சர்வஞ்ஞன் -மடி பிடித்துக் கேட்க்கிறார் –

வண் பரிசாரத்து இருந்த -என்ற எழுந்தருளி இருக்கிற இருப்பு தனக்கு பரிய வேண்டி இருக்க–
அதி மானுஷ  செயல்களுக்கு –மங்களா சாசனம் செய்து நிற்க வேண்டாவோ -என்கிறார் மேல்-
இருந்த திருக் கோலம் -ஈரடிக்கு பாடினால் மூவடிக்கு -பாட வேண்டாவோ –இருந்தவனுக்கு பாடினால் நடந்தவனுக்கு பாட வேண்டாவோ

திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கரு மா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

நம்மிடத்தில் பரிவு கொள்ளுவதற்காக பிரமன் முதலானோர் இருக்க-நீர் இங்கன் அஞ்சுகிறது என் -என்ன
அவர்கள் உன் சௌகுமார்யத்தை அறிவார்களோ -என்கிறார்-

திருமால்-திருமால் என்று பிரித்து விளிக்கிறார்-நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களா சாசனம் செய்வார்களோ அவர்கள்-

ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரேமாந்தகனான அடியேனாலும் உனக்கு சத்ருசமாக பரிய ஒண்ணாதே

காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-

ஸுகுமார்யம் பாராமல் மதுரமான -உபகாரகனாய் வியாபாரித்து -என் போல்வாரை அங்கீ கரிக்க
திவ்ய மேனிகள் உடன் வந்து -என்ன பாசுரம் இட்டு சொல்ல முடியும் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

இவருடைய அச்சத்தைப் போக்குகைக்காக–
நம்மிடையே சனகன் முதலான முனிவர்கள் -முக்தர்கள் -நித்யஸூரிகள் –இவர்கள் கிட்டி நின்று அபிமத சாதனமாக இல்லாமல் அபிமதமாகவே பரிமாறுகிறார்கள் -தொழுகின்றார்கள்-
நாம் தான் அரிய செயல்களும் செய்ய வல்லோம்-ஆன பின்பு நீர் நம் பொருட்டு அஞ்ச வேண்டாம் காணும் -என்ன-
முன்பு அச்சங்களுக்கு காரணங்களாக இருந்தவை தாமே-அச்சம் நீங்குவதற்கு காரணமாக
அதனை நினைத்து இனியர் ஆகிறார்-முக்தர் கரை ஏறி -ஆப்நோதி என்பதின் தமிழ் ஆக்கம் –
இவர் தமக்கு இன்ன போது இன்னது அச்சத்துக்கு காரணமாம்-இன்ன போது இன்னது பரிகாரமாம் என்று தெரியாதே அன்றோ-

முன்பு தன் மிடுக்கைக் காட்டின இடங்களில் அதனை நினையாதே-அதனையே சொல்ல இப்போது
சமாதானத்தை அடைந்தவர் ஆயினர்-இது –
இப் பிரபந்தம் தலைக் கட்டக் கடவது ஆகையாலே யாதல்-
ஈஸ்வரனுடைய ஜீவன அதிர்ஷடத்தாலே யாதல்-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி கற்பவர்கள்-அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –
பயம் ஊட்ட வல்ல சம்சாரம் -என்றபடி –ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

உரையா வெந்நோய் –
சொல்லுதற்கு முடியாததாய் -மிகக் கொடியதான நோய்–
தம் அளவில் பொறுத்தல் அன்றிக்கே–உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ

தவிர அருள் நீண் முடியானை –கிரீடம் விபூதி பூர்த்தி -சக்தி பூர்த்தி-சர்வாதிக சேஷி
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை-சிரக்கம்பனம் பண்ணினான் -துலுக்கினான் போலே காண் –
என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்-
கிரீடம் தாழ்ந்தே –தொழுது எழும் நீண் முடி இவருக்கு — அவனுக்கு அருள் நீண் முடி

அன்றிக்கே-
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
இரட்ஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நீங்கின வாறே நிறைவு பெற்றதுமாய் நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்–

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –புகழும் நல் ஒருவன் -3-4-

March 31, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – களிப்புடனும் -வருத்தத்துடனும் பேசலாம்-ஸ்ரீ மத் பாகவத -உபதேசம் -காரணந்து த்யேய -கேட்டு -நினைத்து -இடைவிடாமல் எப்போதும் -கண்டு-ஸ்ரோதவ்ய –மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -த்ரஷ்டவ்ய-விராட் ஸ்வரூபம் -பாதாள லோகம் பாதம் -ஸத்ய லோகம் சிரஸ் – ஜெகதாகாரம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் த்யானம் -கை வராதே –கோல நீள கொடி மூக்கும் –திவ்ய மங்கள விக்ரஹம்-அந்தாமத்து அன்பு செய்து – கண்ணுக்கு அடங்கும் படி தன்னை அமைத்து -பிடித்துக் கொள்ளப் பண்ணுவான் -அவனே-நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய் -வேதாந்தம் கோஷிக்கும்-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் –உலகும் மகிழவே –-அதே போல் இங்கும் மேரு -ஸூர்யன் -போலி கண்டு திருப்தி அடைய மாட்டாரே –அன்ன கண்டும் -ஓக்க கண்டு திருப்தி இல்லாமல்-திருமால் உரு -அவன் ரூபம் –-திருமால் தலைக்கொண்ட -நல்ல அபிநிவேசம் தலைக் கொண்ட –ஞானாதிகம் அடியாக வந்த பித்து -பக்தியின் உச்சநிலையில் உள்ள எங்களுக்கு எப்படி தீ வினை வரும் –இவ்வளவு பக்தி மேலிட்டு இருந்தும் -பிரிந்து உள்ளதால் -தீ வினை இதுவே – பிரிவு ஆற்றாமை- மிக்கு புலம்புவதாகவும் கொள்ளலாம் –சிஹ்னமே பிதற்றி -மறக்காமல் இருக்கிறாள் அன்றோ –இரண்டுக்கும் முரண்பட்டு இல்லையே-பக்தர்கள் பக்கம் பாபம் அண்டாது-பாபம் தொலைந்தால் தானே பக்தி பிறக்கும் –பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பக்தி செய்ய -க்ஷணம் விஸ்லேஷமும் பொறுக்காத துன்பம் வருமே –-இரண்டு துன்பமும் வேறு வகைகள்-இங்கே உள்ளவரை இவை இருக்குமே –புகழும் நல் ஒருவன் -3-4-இதன் விவரணம் –கூவுமாறு அறிய மாட்டேன்,-குன்றங்கள் அனைத்தும் என்கோ!-மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!-3-4-2-இங்கும் குன்றமும் தாரகைகளும் உண்டே –

அவதாரிகை–இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள்–இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் – திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு உபமானத்தைக் கண்டால் –உபமான ரஹிதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும்-இங்கனே ஒரு உபமானமாக உண்டாகப் பெற்றோம் -என்று –-இது ஆஸுவாச-ஹேது  வாகை யன்றிக்கே –அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –அன்றிக்கே-(ஜெகதாகாரம் கீழ்-சரீர ஆத்ம பாவம் -மலையே திரு உடம்பு -ஜகத் சரீரம் சர்வம் தே -இனி) அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்தால் – அவ்வளவிலே பர்யசியாதே –அவனுடைய-அசாதாரண விக்ரஹத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு- ஒரு குறை உண்டோ -என்னுதல் –போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர் பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
– – -88-போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அம் மேருவில் செம் சுடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியை யுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத் தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

புகழ் ஓன்றும்மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —
——24-கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக ஒருப்பட்ட சர்வேஸ்வரனுக்கு
உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும் வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற புகழு நல ஒருவனில் -அர்த்தத்தை புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

திருமால் உரு ஒக்கும் மேரு –ஸ்ரீ ய பதி உடைய வடிவோடு ஒத்திரா நின்றது மேரு வானது –வடிவாலும் –புகாராலும் -(மேரு சிகரி யாணாமாம் அஹம் -கீதை )-அம் மேரு இத்யாதி-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும் –அன்ன கண்டும் –இப்படியே அவனுக்கு போலியானவற்றைக் கண்டு வைத்தும் –திருமால் -இத்யாதி –ஸ்ரீயபதி உடைய -அந்த மேருவோடே ஒத்த திரு மேனியையும் –வலக்கை ஆழி இடக்கை சங்கம் -என்கிறபடியே –
அசாதாராண சிஹ்னத்தையும் காண வேண்டும்-என்று ஆசைப்பட்டு பிதற்றா நின்றுள்ள –அன்றிக்கே –
திருமால் உரு ஒக்கும் இத்யாதி-சர்வேஸ்வரன் திரு மேனியோடு ஒத்து இருந்தது மேரு –அதிலே சஞ்சரிக்கிற ஆதித்யன் அவன் கையில் திரு ஆழியோடு ஒத்து இருந்தான் –இவை இரண்டும் ஜகத் ஆகாரதைக்கு பல ஷணமாய் இருந்தது –அன்ன கண்டும்- ப்ருதக் ஸ்திதித்ய அநர்ஹ ஆதார ஆதேய பாவ -நியந்தரு நியாம்ய பாவ-சேஷ சேஷி பாவாதிகளாலே –இவை அவனுக்கு சரீரமாய் இருக்கிற படியை கண்டு வைத்தும் –(நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சரீர லக்ஷணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம்-விஸிஷ்ட ப்ரஹ்மமாகவே தானே இருக்கும்)த்வைதி தனித்தனியாகவே இருக்கும்
அத்வைதி ஒன்றாகவே இருக்கும்-விசிஷ்டாத்வைதி -பிரிந்து இருக்க யோக்யதை இல்லாமல் தனித் தனியாகவே இருக்கும்-(அன்ன கண்டும் -வேதாந்த அர்த்த-மதிநலம் அருள பெற்றதாலும் –-பிரணயிதவம் மிகுதியாலும் திருப்பதி அடைய மாட்டாரே ) திருமால் இத்யாதி –இப்படி ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் –அசாதாராணமான  சிஹ்னங்களையும் காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி –திருமால் –அடிக் கழஞ்சு பெற்ற பிச்சு –நிதித்யா ஸி தவ்ய-என்று விதேயமானது தான் இவருக்கு பிரகிருதி ஆயிற்று –(விதேயம்- விதிக்கப்பட்ட சாதனம் -ஸ்ருதி-இவருக்கு ஸஹஜ பக்தி -இவை ஸ்வ பாவம் இவருக்கு)-தலைக் கொண்ட –தலைக் கொள்கை யாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி-முறுகு-கொளுந்துகை –நங்கட்கு இத்யாதி –இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை- அவஸ்யம் அநு போக்யத்வம்  -என்கிற வசனத்தைக் கொண்டு நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ –என்கிறார் –முறுகு  – கொளுந்துகை -வயிரம் பற்றினது என்றபடி –முறுகு -வயிரம் -நெருப்பானது வயிரத்தில் பற்றினால்-அவிக்கப் போகாதது போல் –ஒருத்தராலும் மீட்க்கப் போகாது என்றபடி –த்ருடமாகை -என்றது ஆயிற்று –அவனைக் காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம் நமக்கு பிறந்த பின்பு-பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார்-

இடைவிடாமல் நாம உச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு தீவினை எங்கிருந்து வந்தது என்று தலைவி வெறுத்து பேசும் பாசுரம்-திருமாலுரு வொக்கும் மேரு-அவளது பொன்னிறமான திருமேனி கலப்பதால் தானும் பொன்னிறம் பொலியப் பெற்று-எம்பெருமான் பெரிய திரு மேனி பொன்னிறமான மேருவை ஒக்கும்-அன்ன கண்டும்-நேரில் கண்டால் போலே -அன்பு மிகுதியால் பரவசம் அடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்ற நமக்கு பிரிவுக்கு அடியான பாவம் எங்கனே உண்டாயிற்றோ – செய்யதோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி இது என்னும் -போல அன்றோ வாய் பிதற்றுகிறாள் – ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –என்கிறபடி பாபம் கழிந்தால் தானே பக்தியே பிறக்கும் -பக்தியின் மேல் எல்லையில் இருந்தும் – பேறு பெறாமைக்கு காரணமான பாபங்கள் வர வழி என்னவோ -என்று வருந்தி உரைக்கிறார் –போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில் மாத்திரமே யல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.-திருமாலுரு வொக்கும் மேரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,-பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.–அம்மேருருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் = அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்.(அன்ன கண்டும் இத்யாதி.) அப்பெருமானுடைய திவ்ய ரூபத்தையும், திவ்யாயுதத்தையும் நேரில் காணப் பெறாமல் அவற்றிற்குப் போலியாக வுள்ளவறறையே கண்டிக்கச் செய்தேயும் அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையுமே நேரிற் கண்டாற்போல
அன்பு மிகுதியாற் பவசமடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்றிருக்கிற எமக்கு, பிரிவுக்கு அடியான பாவம் எங்ஙனே உண்டாயிற்றோ தெரியவில்லையே! என்கிறாள்.
மால் தலைக்கொண்ட – ஆசையின் மேலெல்லையிலே நிற்கிற என்னவுமாம். நாயகனைப் பிரிந்த நாயகி நாயகன் போலிகளை அவனாகவே பாவித்து வாய் பிதற்றுவதை!
(திருவாய்மொழி 4-4-4) “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா வென்று கூவும்”
(திருவாய்மொழி 4-4-2). “செய்யதோர் நாயிற்றைக் காட்டிக் கிரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பவற்றிலும் காண்க.
ஜந்மாந்தஸஹஸ்ரேஷு தபோஜஞாநஸமாதிபி:- நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே.”-பாபங்கழியப் பெற்றவர்களுக்கே பகவத பக்தி பிறக்குமென்றும், பகவத் பக்தியுடையாரைப்பாவம் அணுகாதென்றும் சாஸ்திரமிருக்க, அந்தப் பக்தியின் மெலெல்லையிலே நிற்கிற நமக்குப் பேறு பெறாமைக்குக் காரணமான பாவம் வருவதற்கு வழியுண்டோ? என்று
ஆழ்வார் வருந்தியுரைத்தாராயிற்று. எம்பெருமான் பக்கலில் மாத்திரமேயன்றி எம்பெருமான் வடிவத்தை யொத்திருக்கும் பொருளிலும் ஈடுபடுதலே பக்தியின் மேலெல்லையாம்.–மூன்றாமடியில், சிஹ்நம் என்றும் வடசொல் சின்ன மெனத்திரிந்தது

திருமாலுரு வொக்கும் மேரு-மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்-பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே-ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி-அம் மேருவில் செஞ்சுடரோன்-அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்–திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்-ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்–மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை-அன்ன கண்டும்–அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்-திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது-ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே அக்ரமமாகச் சொல்லும்படியான-ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு-அத்விதீயமாய் சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு-எங்கே வரும் தீ வினையே –விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று-ஏவம் ஹ்வா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது–ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே-பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று-கிளவியிலும்-நாயகன் ஈஸ்வரனாகையாலே நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

தாத்பர்யம்--இதில் சர்வேஸ்வரன் உடன் போலியான வஸ்துக்களைக் கண்டும் திருப்தி- நேராக குறை வராது-சர்வ சாம்யமான வாஸ்து இல்லையே-ஆயினும் ஆராய்ந்தால்-தனக்கு மேல் உத்க்ருஷ்டம் இல்லாத மகத்தான மேரு படர்வதமே-‘மிக்க உன்னதமாய் தங்க மயம் அது -கரு=மாய் இவன்
உன்னதமாய் உயரம்-ஒளி புகர்-அவன் திருவாளிக்கு ஆயிரம் சூரியனை சொல்லில் சொல்லலாம்
அப்படி நீர் உபமானமான அத்திருமேனிக்கு சத்ருசமான பதார்த்தம் ஆராயும் இடத்தில் இப்படி சொல்லப் பெற்றோமே என்று திருப்தி அடையாமல் ஆசைக்குத் தக்க இவை சத்ருசம் இல்லையே-வஸ்து அந்தரமும் இல்லையே-அவரையே கண்டு திருப்தி அடைவதே வழி காண வேணும் என்று வைர ஊருக்கு போல் அபிநிவேசம் பெற்ற பின்பு பல ப்ராப்திக்கு குறை இல்லை என்று நிச்சயித்து ஹ்ருஷ்டராகிறார் –

3-4-புகழும் நல் ஒருவன் என்கோ!-பிரவேசம்

கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்;
இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய சர்வாத்தும பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்;
அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

சர்வ பிரகாரத்வம் சொல்லும் திருவாய் மொழிகள் -புகழு நல் ஒருவன் என்கோ 3-4/–நல் குரவும் செல்வமும் -6-3/மாயா வாமனனே -7-8-
‘பேதம் -தது தது பிரகரணங்களுக்கு சேர –இங்கே அனைத்து கைங்கர்யங்களையும் கொள்வதற்கு
சர்வாத்மா பாவம் -இங்கு -சரீரம் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை -புஷ்பம் -மணம் -பிரகாரம்-சரீரம் இல்லை
இங்கே இரண்டு சப்தங்களையும் வைத்து அருளிச் செய்கிறார் -அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
ஸூ வியதிரிக்த -தான் அந்தராத்மா பாவம் இருப்பதைக் காட்டிக் கொடுத்தான் -என்கோ-சொல்லுவேனா -வாசிக கைங்கர்யம் –
சகலவித கைங்கர்யம் கேட்டு இதுதானா –

“உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு
அடிமை செய்வான் என்?’ எனின், இருவரும் இலையகலப் படுக்குமித்தனை போக்கி–ந ச இச்ச்யதி மாதவ- அவனும் அடிமை கொள்ளமாட்டான்; –
‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.-இவரும் செய்ய மாட்டார் –
இலையகலப்படுக்குமித்தனை’ என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’ என்றபடி.
அகலப்படுத்தல் – விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல் வேண்டும்’ என்றபடி.
இவரும் அடிமை செய்யமாட்டார்; ‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே,
-அந்ய குசல பிரச்னம் -ந ச இச்ச்யதி மாதவ -விதுரன் -சஞ்சயன் -சொன்னதாகவும் உள்ளது–இரண்டு வித மஹா பாரதம் மா முனிகள் காலத்திலேயே –
விதுரன் சொல்வதாக இவர் இடம் உள்ள மஹா பாரதம் -பூர்வர்கள் சஞ்சயன் சொன்னதாக சொல்வார்கள் என்கிறார் -அவரே
எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றது கொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்;-பூர்தியைப் பற்ற –
‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே;-திரு வாய் மொழியே – வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற
இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனே யன்றோ அவ்விறைவன்-உக்தி மாதரத்தை எல்லாவாகமாகவே கொள்பவன் அவன் –
இவருடைய காதல்தானே ‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன்
சர்வாத்தும பாவத்தைக் காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து
நிலை குலைந்த அந்தக் கரணங்களை உடையராய் ‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.

நான் ஷூத்ர சம்சாரி -அவாப்த சமஸ்த காமன் -என்னுடைய பாரிப்பு ஏற்று -எங்கும் பரந்து வியாபித்து –
தனக்காக இப்பொழுது தான் -சர்வாத்மா பாவம் கொண்டதாக -எண்ணி காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்’
அப்படி என்றால் வாசிக கைங்கர்யம் எவ்வாறு பண்ணினார் –மனஸ் நினைத்து தானே வாய் பாட வேண்டும் -மநோ பூர்வோ வாக் உத்தர –
முடியானாலே -கரணங்கள் அனைத்தையும் விரும்புமே –
ஸூ வாரதனே யாகிலும் -இவர் பக்கல் சிறிதாகிலும் வேண்டுமே -இவர் கிஞ்சிதவாறே எல்லாமாகவே கொண்டான் அவன்
-தாய் குழந்தை மழலை சொல் போலே -அவன் ப்ரீதியைக் கண்டு இவரும் எல்லாம் செய்ததாக இவரும் மகிழ்ந்தார்
அதீத காதல் கொண்டவன் இவர் கிஞ்சித் செய்ததையும் பெரியதாக கொண்டு மேலே செய்ய விடாமல் இருப்பானே
அதனால் அனைத்து கைங்கர்யங்களையும் பாரித்தபடியே செய்து முடித்தார் என்றவாறு –
இத் திருவாய்மொழியில் -பிரதிபாதிக்கப்படும் -விபூதி யோகமும் -சமா நாதி கரண்யமும் -அலமாப்பும் சம்சயமும் –
பொருவில் சீர் பூமி -விபூதி -சமா நாதி கரண்யம் -என்கோ -அலமாப்பும் சம்சயமும் —

அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு;
‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து.
அவனைச் சார்ந்து விட்டுப் பிரியாமல் -அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – என்பதால் இவற்றுக்கு சாம்யம் உண்டே –
அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் -தனித்தனி -வையதிரண்யத்தில் -அனுபவிக்கை யன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும்
முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே-சமா நாதி கரண்யத்தில் – சேர்த்து அனுபவிக்கிறார்.
அன்றியே,
‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய
நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்;
அன்றியே,
‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகா நின்றதே யன்றோ?
அத் தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல்.
‘ஆயின், முத்தன் ‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின்,
அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம்.
ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள்
என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு
வேற்றுமை அற அனுபவிக்கப்படும் பொருளாகும்படியன்றோ மயர்வற மதிநலம் அருளிற்று?
கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?-வெளிச்சிறப்பு – ஞானம்.

‘நன்று; இவ்விபூதிதன்னிலே ‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லா நின்றதே?’ எனின்,
ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது; பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க
அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப்
‘பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது?
இங்ஙனம், அவ்வந்நிலைகள் காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி
பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க வேண்டி வருமேயன்றோ?

இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்கள் முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு,
விபூதி காரணமான பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள்
செவிக்கு இனிய இசை முதலானவைகள் மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்
இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே
அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்,
’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு
வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே
அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்துமாவையும்
காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான
சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றன வாயிருக்கிறபடியையும்,
இவ் விபூதிதான் புறம்பாய் விஞ்சிக் காட்டுகையன்றிக்கே தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப்போன்று தகுதியாய்
அனுபவிக்கப்படும் பொருள்களிலே அடங்கியிருக்கிறபடியையும் அநுசந்தித்துப் பேறு பெற்றாராய்ப் பாரித்தபடியே
எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் ‘கோவை வாயாள்’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே,
ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும், சொற்களைக் கொண்டு செய்கிற அடிமையிலே இறங்கியவராய்,
மஹா வாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று ‘அத்தைச் சொல்லுவேனோ, இத்தைச் சொல்லுவேனோ!’ என்று இங்ஙனம் அலமருகிறார்.

‘என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால் விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’என்று.
மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச் சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும் கீழே விழுந்து
சிதறிக்கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனைஎடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவதுபோன்று’ என்றபடி.

இத்திருவாய்மொழியில், முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான பூதங்கள்’ என்கிறார்.
இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப்‘பௌதிகங்கள்’ என்கிறார்.
நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’ என்கிறார்.
ஐந்தாம் பாசுரத்தில் ‘நலங்கடல் அமுதம்’ என்பதுமுதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.பாசுரத்தில் ‘நுடங்கு கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார்.
ஏழாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்’ என்கிறார்.
‘தோய்விலன்’என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்’ என்கிறார்.
‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன் பொருள் ஆற்றலால் போந்த பொருள்.
‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச் சாமாநாதி கரண்யம்
சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார்,
‘விபூதியில் அவ்வப் பொருள்கட்கு’ என்று தொடங்கி. வாசகமான சொற்கள் – தேவர்கள், மனிதர்கள் முதலான சொற்கள். பதினோராம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றித் ‘தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப் போன்று’ என்கிறார்.

ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.
முன்னர்க்கூறிய ‘புனையுங் கண்ணி எனதுடைய வாசகஞ் செய்மாலையே’ என்றதனையும், ‘இவருடைய காதல்தானே ஆராத காதலேயன்றோ?’
என்றதனையும் மீண்டும் அநுவதிக்கிறார், ‘பாரித்தபடியே’ என்று தொடங்கி.

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி சகல சேதன அசேதன விசிஷ்டனான நாராயணன் ஆகையாலே-
அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே-அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே-தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில், முதற்பாட்டில் சொன்ன ஐம்பெரும்பூதங்களினுடைய காரியத்தை முறையே பேசினார்;
மூன்றாம் பாட்டில், உலகமே உருவமாய் நின்ற நிலையோடே அசாதாரண விக்கிரகத்தைச் சேர்த்து அனுபவித்தார்;
நான்காம் பாட்டில், ‘ஒளி பொருந்திய மாணிக்கம் முதலிய பொருள்களை விபூதியாகவுடையவன்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘சுவைப்பொருள்களை விபூதியாக உடையவன் என்றார்;
ஆறாம் பாட்டில், ‘வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையவன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘செல்வம் முதலான புருஷார்த்தங்களை விபூதியாக உடையவன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘உலகத்தில் பிரதானரான பிரமன் சிவன் முதலியோரை விபூதியாக உடையவன் என்றார்;
ஒன்பதாம் பாட்டில், அவனுடைய விபூதியின் விரிவைத் தனித்தனியே பேசமுடியாமையாலே
‘சேதன அசேதனங்களை விபூதியாகவுடையவன்’ என்று சுருங்க அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், ‘இவற்றுக்கும் உள்ளுயிராய்ப் பரந்து நின்றாலும் அவற்றினுடைய தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்-

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே
.—————–3-4-1-

அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து,
இத்திருவாய் மொழியில் மேல் விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.

புகழும் நல் ஒருவன் என்கோ 
1–‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களை யடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார்.
2– இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம்
கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்;
3– இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி,
‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ!-சமாயப்திக தரித்திரன் –ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல்.
ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்:-குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்-

1-குணம் ஜாதி -வியக்தி விட்டு பிரியாது –கோத்வம் போலே -/ குண்டலம் -த்ரவ்யம் -பிரியுமே -பிரித்து ஸ்திதி உண்டே இதற்கு-சௌலப்யம் -குணம் பிரியாது அறிவோம் –பிருத்வி -த்ரவ்யம் -பிரியாமல் இருக்குமோ சங்கை வருமே -இவற்றின் ஸ்திதி அவனாலே தானே
2-சமா நாதி கரண்யம் இருப்பதால்
3-ஸ்வரூப ருப குண விபூதி -சேர்த்து படிப்பதால்
4-சேர்த்தி -ஆஸ்ரயித்து பெருமை சேர்க்கும் –
5-ஜன்ய ஜனக பாவம் -குணங்கள் -தாய் -படைக்கப் பட்டதால் தானே விபூதி -காருணிகன் நீர்மையால் அருள் செய்தான் -யௌகபத்யம் அனுக்ரகத்தால்
6-ததீயத்வ ஆகாரத்தால் இனிமையாய் எல்லாம் இருக்குமே-

பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ!-இனி, ‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார்.-நீள் சுடர் இரண்டும் என்கோ –காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார்.-இகழ்வில்’ என்பதற்கு, ‘ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –  ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது
முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக.-அருச்சுனன், ‘ஹே கிருஷ்ண ஹே யாதவ’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.

———-

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே
.–3-4-2-

உக்தமான பூதங்கள் உடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார்-மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.-‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.அன்றிக்கே,-‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது ‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், சாமா நாதி கரண்யம் இல்லாமல் அவற்றை நிர்வகிப்பவர் வையதி கரண்யம் -கொண்டு –நிர்வகிப்பது போலே -இவற்றை நிர்வகிப்பவர் –

———

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!
–3-4-3-

உலகமே உருவமாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்கிரகத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.-தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.-ஜிதந்தே புண்டரீகாஷன் -தூது செய் கண்கள்-அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.-நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.-அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அனுபவிக்கக் கூடியதான வடிவைச் சொல்லுகிறது.-இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடி யன்றோ?-திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?-‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ -திரு மறுவைப் பீடமாக கொண்டு இருப்பவள் என்றுமாம் –‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே-நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?-போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.-இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –

———

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.
–3-4-4-

‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்;-நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம்.–குருகைக் காவல் அப்பன்-பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவே யன்றோ-எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது-எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.-

எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாக வுடையவன் என்பேனோ!-லீலா விபூதியைச் சொல்லுகிற இடத்தில் நித்திய விபூதியைச் சொல்லுவான் என்?’ என்னில்,‘ஆதி அம் சோதி என்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கம் என்கோ!’ என்றது போலே இருக்கிறது.-ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே 1–சமுசார காலத்திலே; என்றது, எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
அன்றியே,
2–‘யாதுமில்லாத பிரளயகாலத்தில் காரியமாக மாறின இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ என்ற நிலையாய்க் கிடக்கிற அன்று, தான் ஸ்வாமியான சம்பந்தத்தைக்கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச் சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.

‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரிய நின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு; இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற
போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ 
என்று அருளிச் செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.-இங்கே அமலன் -காரண -பிரளய – அவஸ்தையில் -ஸ்தூலம்–தோய்விலன் -எனபது -கார்ய அவஸ்தையில் -சூஷ்ம –

———

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!
–3-4-5—

ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால் கல்யாணகுணங்களும் புகுமாதலின்,-‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.-அடியார்கள் இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன்

1-நாம் ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். -சஞ்சீவி -ஔஷதி நச்சிக் கொண்டு போக வேண்டாத படி நச்சு மா மருந்தம் -2-‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து-மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. –வாட்டம் தணிய வீசீரே — நமனும் முத்கலனும் பேச -நரகில் நின்றார்கள் கேட்க -நரகமே ஸ்வர்க்கமே நாமங்கள் உடைய நம்பி –
3- இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.-ஏக மூலிகை -சஹாயாந்திர நைரபேஷ்யம் -பக்க விளைவு போக்க வேறே மருந்து தேவை இல்லாத -சக்ருத் சேவய்யையாய் இருக்குமே-4- இனி, ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது, இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.-பார்க்காத தன்மையன் என்றபடி -காவலில் புலனை வைத்து -கட்டுக்காவல் இல்லாமலும் –பலன் கொடுக்கும் -பத்தியமே வேண்டாம் –கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்-

——–

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.
–3-4-6-

வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் –வினையில் மிக்க பயன் என்கோ –-கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக் கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத் தன்மையேயாய் அதற்கு -மித்ர பாவமே சம்ப்ராப்தம் -’நத்யஜேயம்-நான் விட மாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.-உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!-‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’-

இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று பதண் பதண் என்றான் காணும்,’ என்று அருளிச் செய்தார்.

வானவர் ஆதியையே.–ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –-தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –

——————

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!
–3-4-7-

அதனுடைய நித்தியத்துவம் (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்;-அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். –திருமந்த்ரார்த்தம் -மூன்றையும் சேஷித்வம் -சரண்யத்வம் பிராப்யத்வம் மூன்றும் -ஆதி -தெய்வம் -போகம் -என்கிறார் -நம்மாழ்வார் பத த்ரயம்

ஒளி மணி வண்ணனை – விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது;-இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று -மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.

—————-

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே
.–3-4-8-

உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.-கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

———-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே
.–3-4-9-

அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று -பிரயோஜகத்திலே -சேர பிடித்து -கோவையாக -சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.யாவையும் எவரும் தானே – அறிவுடைப் பொருள் அறிவில் பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.

———–

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே
.–3-4-10-

‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.-சரீரத்தினுடைய பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களையும் நினைக்கிறது-தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும், அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான்.-ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக் கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போக ரூபமாயிருந்தது.

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் –
1–உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும்-ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு,-அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.-பாவனை -அநுசந்தான பர அனுசந்தானம்-
அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு,
2– ‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ -பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத-பத்தி பரமாக அருளிச் செய்தது;-என்றும்,
3–‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’-‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’-பிரபத்தி பரமாக அருளிச்செய்தது;- என்றும்,
4–‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ -வேறுபட்ட விஷயங்களில்
சங்கமில்லாத’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர்.
இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச் செய்வர்.

———–

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.
–3-4-11-

மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். நித்திய கைங்கரியத்தைப் பெற்று, அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’ என்பார், ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்திய ஸூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -86-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன்-வள வேழ்வுலகு -1-5-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

என்ன என்று சொல்லி புலம்புவேன்-நீக்கியை -ஏந்தியை-கிரியை அல்ல -இரண்டாம் வேற்றுமை உருவு சேர்த்து –சோறாக்கி -சோறை ஆக்குபவன் -சோறாக்கியை போல்-தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –துறை–கீழ் மகள் -தாய் பாசுரம்-இரண்டுக்கும் சேர்ந்து இங்குள்ள பதங்கள் நிர்வாகங்கள் உண்டு-வள வேழ்வுலகு -1-5-இதன் விவரணம் -நினைவு நைந்து பாடும் –திருவாய் மொழி–அடைக்காய் -வெற்றிலையும் பாக்கும் –அடை இலை -திருமேனி பச்சிலை –அதில் உள்ள பூ நாபி கமலம் –அதில் அலர்ந்த அயன்-அடைக்கலம் -ரஷ்ய வஸ்துவாய் -ரக்ஷிக்கிறவனையும் சொல்லலாம்-சிவன் துயரை நீக்கியவன்-அடியார் ரக்ஷிக்க திவ்ய ஆயுதங்கள் ஏந்தி உள்ளவனே-ஆஸ்ரிதர்களுக்கு அடங்கி -அடிக்கப்பட்டு அத்தாலே அலர்ந்து இருந்தவன்-அவன் இடம் குறை இல்லை–ஓங்கு -அடைக்கமலத்து ஓங்கும் கமலம் -பச்சை மா மலை போல் மேனி -அதில் உள்ள நாபி கமலம்-அடைக்கலத்து அரன் -சரண் அடைந்த ருத்ரன்-அடைக்கலத்து நீக்கி -ரக்ஷகமான பெருமாள் -துயரம் போக்குபவன்-அடைக்கலத்து அயன் -தான் வளரும் ஆதாரமாகக் கொண்ட -கர்ப்ப ஸ்தானம் என்றும் கொள்ளலாம் 

அவதாரிகை –எத்தனை ஏனும்  இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் – அத் தலையில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படி இறே–அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –மகள் நொந்த படியும்
தாயார் அவன் இடம் குறை இல்லை என்றும் கொள்ளலாம்-

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர் ஆபத் சகன் அல்லாமையும் ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும் உதவாது ஒழிகிறானோ இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-இது நாயகி வார்த்தை யாகவுமாம்-

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே
– – 86-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக்கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந்நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—5–அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த அநந்தரம் அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-உம்முடைய பொல்லாமையைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி தம்மை அவன் சேர்த்துக் கொள்ள அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே நிஷேபம் போலே யாயிற்று ப்ரஹ்மா வளருவது-(வைத்த மா நிதி அன்றோ)-கமலத்தல ரயன் –நிஷேபம் போலே என்ற இடம் –ஒரு  குறை பிறவாதபடி உணர்ந்து – நோக்குகிற படியை சொன்ன இத்தனை –-அவ்வளவு அன்றிக்கே – நேரே சர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜன்மத்தால் வந்த ப்ராப்தியை உடையவன் –(அஜன் யோனி சம்பந்தம் இல்லாதவன் –அயன் -அவன் இடம் நேராகப் பிறந்த புத்ரன்)-சென்னி -இத்யாதி –லோக குருவுமாய் -பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் -ஒருவன் –தலை அறுப்புண்டு எளிவரவு பட்டு நின்றான் ஒருவன் –இவருடைய துக்கத்தையும் போக்கினான் ஆயிற்று இவன் –அயன் சென்னி என்னும் முடைக்கலம் –பிரம்ம சிரஸ் என்றொரு நாமம் மாத்ரமேயாய் –தான் முடைக்கலமாயிற்று –பூதி கந்த பஹூளம் (துர்நாற்றம் மிக்கு )ஆகையாலே கழுகும் பருந்துமாய் தொடர்ந்து திரியும்படி யாயிற்று சஞ்சரிப்பது –முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை –அதிலே உண்டு திரிகிற இத்தை முன் அரனுக்கு-நீக்கினவனை –சம்ஹர்த்தாவாய் தன் அதிகாரத்தோடு இருக்கச் செய்தே –இவ் எளிவரவு வர-
நாம் ஒருவன் ஆக்கிக் கார்யம் கொள்வான் ஒருவன் -நோவு பட விட்டு இருக்க ஒண்ணாது -என்று
அவனுடைய துக்கத்தைப் போக்கினவனை –இத்தால் –ஸ்ருஜ்யத்வ கர்ம வஸ்யத்வ ஷேத்ரஞ்சத்வங்கள் இருவருக்கும் அவிசிஷ்டம் என்றபடி –ஒருவன் தலை அறுப்புண்டு நின்றான் –ஒருவன் பாதகியாய் நின்றான் –இவன்-அவர்கள் இருவருக்கும் வந்த துக்கத்தைப் போக்கிக் கொண்டு நின்றான்

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை –இவர்கள் இப்படி அலைந்து கொண்டு கிடந்தால் – ரஷிக்க வேண்டும் போதாக கருவி எடுக்க பார்த்து இருக்க ஒண்ணாது -என்று திவ்ய ஆயுதங்களை எப்போதும் கையிலே தரித்துக் கொண்டு நிற்கிறவனை –திருவாழி உள்ளிட்ட திவ்ய ஆயுதங்கள் ஆகிற திவ்ய ஆபரணங்களை ரஷிக்க வேண்டும்படியாக- தரித்து கொண்டு இருக்கும் ஸ்வபாவன் ஆனவனை –வெண்ணெய் இத்யாதி –பிரம்மா ருத்ராதிகளுக்கும் கூட துக்க நிவர்த்தகனாய் –அதுக்கு ஈடான பரிகரத்தையும்  உடையவனாய் -இருக்கச் செய்தே –ஆஸ்ரிதரால் தனக்கு வந்த கிலேசத்தை-பரிஹரித்து கொள்ள மாட்டாதே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகளுக்கும் கூட நிர்வாஹனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிறவன் தன்னுடைய விபூதி யில் ஏக தேசத்தில் – சில அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது செல்லாதே -அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவனுக்கு -ஓன்று குறையாய் அது தான் நேர் கொடு நேர் கிடையாதே களவு காணப் புக்கு- வாயது கையதாக அகப்பட்டு -அதுக்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே நிற்கிறவனை –அன்று –அவன் வந்து கட்டுண்டு எளியனாவது ஒரு நாள் உண்டே – அதுவும் ஒரு நாளே -(கீழ் தாய் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) தானே வந்து கட்டுண்டு எளியனாய் இருக்கிற அன்று கிட்டப் பெறாதே -இன்று பெறுகைக்கு பிரார்த்தித்து இருப்பதே -நான் (கீழ் மகள் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) ஆய்ச்சி –ஓர் இடைச்சியால் வந்த நலிவு பரிஹரிக்க மாட்டாதே இருப்பதே –வன் தாம்புகளால் –உரவியவை எல்லாம் அற்று அற்றுப் போக மேலே மேலே சிலவற்றை எடுத்து அடித்தாள் ஆயிற்று –-ஸ்நேஹம் (அன்புக்கும் வெண்ணெய்க்கும் ஸ்நேஹம்  )எவ்வளவு உண்டு -அவ்வளவு நிலை நிற்கும் இறே-சீற்றமும் –இடைச்சி குமைத் திறங்கள் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே –புடைக்கலந்தானை –அலந்து இருக்கும் இதுக்கு மேற்பட இதுக்கு ஒரு பிரதி கிரியை இல்லை பண்ணலாவது –-அலந்தானை -அலவென்று மலர்வாய் –இவள் அடிக்க அடிக்க முகம் மலர்ந்து-இருந்த படியாகவும் –கண்ணியால் -குறும் கயிற்றால் கட்ட வெட்ட என்று இருந்தவனை (பெரிய திருமொழி)  -என்று இருந்தவன் இறே–எம்மானை –கட்டுண்டு அடியுண்டு கண்ணும் கண்ண நீருமாய் உடம்பு வெளுத்து இருந்த இருப்பைக் காட்டி என்னை அனந்யார்ஹமாக எழுதிக் கொண்டவனை –-பையவே நிலை (திருவாய் -5-10 )இறே ஈடு அழிப்பது –என் சொல்லிப் புலம்புவனே –இப்போது ஆசைப் பட்டு பெறாமையாலே புலம்ப வேண்டா நின்றது-முன்பு செய்து வைத்த  தொரு குறை -இல்லாதபடி யாலே சொல்லுகைக்கு ஒரு பாசுரம் காண்கிறிலேன் –நாம் இப்போது பெறாது ஒழிகிறது நம்முடைய க்ரம ப்ராப்தி பற்றாமை-என்று இத் தலையிலே கை வாங்கலாய் இருந்தது –அங்கனம் சொல்லலாவது ஓன்று இல்லை இறே-அத் தலைக்கு –மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்–அயன் -அஜன் -யோனி ஜன்மாவான் அன்று –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயும் இருந்து -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரமும் கொண்டு -ஆஸ்ரித ஸூலபனாயும்- பிரம்மா ருத்ராதிகள் துயரங்களையும் தீர்த்து அருளிய சர்வ ஸ்மாத் பரனாயும் இருந்து வைத்து –-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் –என்று தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்-புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை -பட்டர் திருகி கோஷ்ட்டியூரில் இருக்கும் பொழுது நஞ்சீயர் -பொருள் உரைக்க-ஆழ்வார் திரு உள்ளத்துக்கு உகந்த அர்த்தம் என்று புகழ்ந்தார் -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்-ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் – என் சொல்லிப் புலம்புவனே அவனது குண சேஷ்டிதங்களில் ஒன்றும் குறை இல்லாமல் எனது குறையே–வல் வினையேன் -என்றே சொல்லக் கடவேன் –

நாயகனைப் பிரிந்த நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. ஆபத்துக்கு உதவுந் தன்மையும் அடியார்களுடைய விரோதிகளை நிக்ரஹித்தற்கு ஏற்ற கருவிகளையுடையவனாருக்குந் தன்மையும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையும் எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ளன;
இத்தன்மைகள் தன் பக்கலில் உதவாமையைக் குறித்துப் பராங்குசநாயகி இறங்குகிறானென்க.
அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும் முடைக்கதை தூண் முன்னரனுக்கு நீக்கியை” என்றதனால் ஆபத்துக்கு உதவுந் தன்மையும்,-“ஆழிசங்க படைக்கலமேந்தியை” என்றதனால் ஆச்ரித விரோதிகளை நிக்ரஹிப்பதற்கு ஏற்ற கருதியுடைமையும்
“வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானே.– என்றதனால் அடியார்க் கெளிமையும் தெரிவிக்கப்பட்டனவாம்.(என் சொல்லிப் புலம்புவனே.) சிவனுக்குத் துயரந் தீர்க்க ஆயுதமேந்தியுள்ளவனை நோக்கி என் துயரந்தீர்க்கக் கையில் கருவி கொள்ள வேணுமென்று சொல்வேனோ? ஆய்ச்சியர்க்குக் கட்டவு மடிக்கவும் எளியனானவனை நோக்கி எனக்கெளியனாக வேணுமென்று சொல்வேறோ?-யாது சொல்லிக் கூப்பிடுவே னென்கிறான். அந்தோ இத்தன்மைகள் பாவியேன் பக்கலில் உதவக் காணவில்லையே! என இரங்கியவாறு.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கின்றதெனக் கருதி, அவனது சிரமொன்றைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக்கொள்ள ‘இதற்கு என்ன செய்வது? என்று கவலைப்பட, தேவர்களும், முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்” என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும் என்று சொல்ல, சிவபிரான் பலகாலம்
பல தலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
ஒருநாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ஏற்றபோது அப்பெருமான் அக்ஷயமென்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டகன்றது என்பது, அயன் சென்னிகலத்து ஊண் அரனுக்கு நீக்கிய கதை.

தாமரைப்பூப் பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலத் திருநாபித் தாமரை மலர் எம்பெருமானது பசிய திருமேனியின் மீது எழுந்து தோன்றினமை “அடைக்கலத்தோங்கு கமலம்” என்றதனால் விளங்கும்.-இனி, அடைக்கலமென்பதை அரனுக்கு விசேஷணமாக்கி, அடைக்கலமாகப் புகுந்த சிவனுக்கு, என்றும்,-நீக்கி என்பதற்கு விசேஷணமாக்கி ரக்ஷகமாக இருந்து நீக்கினவனென்றும் பொருள் கொள்ளலாம். அன்றி, ‘அடைக்கலத்தோங்கு அயன்’ என் அந்வயித்து (தன் பக்கலிலே) அடைக்கலமாக வளர்கிற பிரமன் என்று உரைப்பாருமுளர்.
அடைக்கலமென்பது ரக்ஷிப்பதற்கு உரிய பொருளையும் ரக்ஷகனையுங் குறிக்கும்
‘கமலத்து அலர்’ என்பதற்கு தாமரைப்பூ எனப்பொருள் கொண்டால், தோன்றின’ என்று வருவித்துக் கொள்ளவேணும். முடை– கெட்டநாற்றம்.-படைக்கலம் – போர்க்கருவி: எம்பெருமானுக்குச் சங்குச் சக்கரங்கள் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அமையும்.-படைக்கலம் ஏந்தி = படையும் கலமுமாக (ஆயுத ஆபரணங்களாக)த் தரித்தவன் என்றலும் பொருந்தும். திருவாழியாழ்வன் ஆயுத மாகலாம்;-திருச்சங்காழ்வான் எங்ஙனே ஆயுதமாகும் வகையென்னில்; ஸ்ரீபஞ்சஜக்யம் தனது பெரு முழக்கத்தால் பகைவரை அஞ்சுவித்து அழித்தலால் ஆயுதவர்க்கத்தின் பாற்படும்.அன்று ஆராய்ச்சி வன்தாம்புகளால் புடைக்க அலந்தானை= வெண்ணெய் திருடின குற்றத்திற்காக யசோதைப் பிராட்டி உரலோடு பிணைத்துத் தாம்பினால் கட்டியடிக்க வருந்திருந்தவனை என்றபடி; வருந்தி நின்றது அடிப்பதனாலுண்டான துன்பம் பொறுக்கமாட்டாமையாலன்று;-திருவாய்ப்பாடி யெங்கும் துருதுருக்கையாய்த் திரிந்து பெண்களையும் தயிர் பால் நெய் வெண்ணெண் முதலியவற்றையும்
கொள்ளைப் பெறாதபடி இங்ஙனே கட்டிப்போட்டு வைத்திருக்கிறாளே யென வருந்தியவாறு பெரிய திருவிழாக்களில் கள்ளப் பயல்களை அரசாங்கச்சேவகர்கள் சிறைபடுத்தி வைத்தாலி, ‘வேண்டினபடி திரிந்து களவு முதலிய செய்யப்பெறாமை நம்மையிப்படி சிறைப்படுதுதிவைப்பதே!’ என்று அப்பயல்கள் வருந்துவது போல.

பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை;-நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில்
இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க,
பட்டம் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம்
ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம்.
-ஆய்சச்சி அடிக்க அடிக்க முகமலர்ந்தானாம் கண்ணபிரான். (இதனை விவரிப்போம்.)
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திடுவான்; அவற்றை அவன் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறுவடிவமாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்டுவள்; அப்படி கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான
அக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும் தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஆச்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச் செய்து கொள்ள வேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று
சுற்றுக்கு போரும்படி உம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்” என்னும்படி அவன்; ‘இங்ஙனே நம்முடையய ஸௌசீல்ய ஸௌல்ப்ய குணங்கள் விளங்கப் பெற்றோமே;-அவதார ப்ரயோஜநம் நன்கு நிறைவேறப் பெற்றதன்றோ’ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்க.-எம்பெருமான் பக்கல் ஈடுபட்டு ஆற்றாமை கொண்ட ஆழ்வார் அவனது திருக்கல்யாண குணங்களையும், திரு நாமங்களையுஞ் சொல்லி முறையிடுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள்.-(என்சொல்லிப் புலம்புவனே?) அவனது குணசேஷ்டிதங்களில் குறையொன்றுங் காணாமையால் எனது குறையையே நான் சொல்லக்கடலே னென்பதாம்.

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை-(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)-இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது-அரனுக்கு நீக்கிவை -என்கையாலே ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி-ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும் விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை-படைக்கலம் -ஆயுதம்-(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-கலன் -ஆபரணம் என்றுமாம்)-நீக்கி ஏந்தி என்று சொல்லாய் இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத் தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை–எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ-அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ-எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று–இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற படியைப் பற்றச் சொன்னது அத்தனை–கமலத்தல ரயன்-அவ்வளவு அன்றிக்கே -ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-லோக குருவுமாய் பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன் இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்–அயன் சென்னி என்னும் முடைக்கலம்-ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று-பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது-முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்-கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும் ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன் அவனுடைய–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்ம ஹத்தியைப் போக்கினவனை–ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை-திருக் கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே ஒளி விகஸநத்தை யுள்ளவனை–எம்மானை-இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை–என் சொல்லிப் புலம்புவனே – எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரன் நம்மை ரக்ஷிக்க அவதரித்த போது ஒதுங்கிப் போன தம்மை வெறுத்து பேசுகிறார்-உமக்கு புத்ரன் சரண்யன் -நான்முகன்-ருத்ரனுடைய ப்ரஹ்மஹத்தி போக்கியும்
அங்க ஹீனனான ப்ரஹ்மாவை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்காதே தொடர்ந்தும் தங்களையே ஈஸ்வர் என்று அபிமானம் கொண்ட அவர்களுக்கு ரக்ஷகனாய் ரக்ஷண பரிகரங்களை எப்போதும் கையிலே ஏந்தி வெண்ணெய் உண்டு அபவாதம் பொறாமல் தாயான யசோதை உனது மேல் பரிவினால் கைக்கு எட்டிய தாம்பினால் உன்னை அடிக்க அத்தைத் தப்பித் போக மாட்டாமல் அலர்ந்து இருந்த உன்னை சேவிக்கப் பெறாமல் இருந்தது எனது குற்றமே என்கிறாள்

1-5-வள வேழ் உலகின் பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால், அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால், பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால் ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்; இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.அகலுவான் என்?’ என்னில்,- சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? -நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று பின்னையும் அகலப்புக,-உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,கரிஷ்யே வசனம் தவ-என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-

இப்படி கடக முகத்தால் இவ் வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான -1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–2-சர்வ
காரணத்வத்தையும் –3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் -4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் -7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் -8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும் அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.-‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து,  ‘அருவினையேன்’ என்கிறார்.-அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்

இளஏறு ஏழும் தழுவிய – ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் – ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!-நினைந்து நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ நைந்தே – பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;-‘எத்திறம்’ என்றேன்;-பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும்

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;-ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!-தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;

அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,-பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும்  ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு,  ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து  ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச் செய்கிறார்.

————-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் ஓருவனே 
–1-5-3-

‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே; சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.-கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்-அசேஷ ஜன சம்ஸ்லேஷ ரூபமான லோக விக்ரமண ஸ்வ பாவத்தை ஈஸ்வரன் காட்டக் கண்டு விஸ்மிதராகிறார் –.தான் ஓர் ஓருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –ப்ரீதி அதிசயத்தாலே –ஒருவனே தானோர் ஒருவன் –என்று அவனைக் கொண்டாடுகிறார் –

—————–

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –
1-5-4-

இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று – ஸமாஹிதராகிறார்- ‘தான் ஓர் தனி’ என்னும் மூன்று பதங்கள் -அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.-இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –இந்த ஸுசீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஸ்லேஷியா விடில் அவனுக்கு சித்தியாது -ஆதலால் ஸுசீல்ய குண சித்யர்த்தமாக இனி அவனுக்கு ஆத்மாந்தமாக சகல சேஷ வ்ருத்தியும் பண்ணுவேன் -என்கிறார் –

———-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே 
–1-5-5-

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே  ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார்

அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.-தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

இத்தால் -1–ப்ரார்த்த நீயனுடைய நித்ய புருஷகார யோகத்தையும் – -2-ஆஸ்ரித வக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவ ஆபாதகத்வத்தையும் -3-க்ஷண அபி நிவேசத்தையும்
-4-ப்ராப்யமான தேச விக்ரஹ வை லக்ஷண்யத்தையும் -5-பிரதிபந்தக நிவர்த்ததையும் –சொல்லிற்று ஆயிற்று –

————-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –
1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.-இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன் வினை’என்கிறார்.

இனையாய்- ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.-இனைய பெயரினாய்– அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.-என்று நைவன் – ‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன். அடியேனே –யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

இத்தால் -1-அனுபவ விரோதி நிவர்த்தகமும் –-2-அனுபாவ்ய விபூதி யோகமும் –-3-ஆஸ்ரித சத்தாதி ஹேதத்வமும்–4- தத் விஷய ஸுலப்யாதிகளும் -5-அத்தாலே வந்த உன்மேஷமும்
-6-தத் ஹேதுவான ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் -7-விசுவாச ஜனகத்வமும் –-8-தன் நிபந்தந உஜ்ஜ்வல்ய அதிசயமும் –தோற்றுகிறது –

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

அடியேன் சிறிய ஞானத்தன் – சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்-கண்ணனை- அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;-அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.கைவல்யாதி ப்ரயோஜனங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ –

அடியேன் காண்பான் அலற்றுவன்- அடியேன்’ என்று அலற்றுவன், காண வேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே – உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில் அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இறே இது அவனை அழிக்குமது இறே –

————————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
 –1-5-8-

நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.மாயோனே – ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான- ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே?-மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;-வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.-மண்ணை உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இறே உமிழ்கிற போதும் சேஷிப்பது-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே 
–1-5-9-

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன -பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன-ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார்-‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,

என் அம்மான் –mநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மா மூர்த்தியைச் சார்ந்து- விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம் – இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.-இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம்.

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.-எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், –வானோர் தனித் தலைவன் – அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.-மலராள் மைந்தன்-‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, -அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் – அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

————–

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே 
–1-5-10-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.-இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால் வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)நெடுமால்- இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு – புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்-நெடுமாலே-‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். -அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.என்னைத் திருத்தி -பின்னை எனக்குத் திரு நாட்டையும் தந்து அருளுகைக்காக ஆகுவதே -எம்பெருமானுடைய சர்வஞ்ஞத்வ சர்வசக்திதவ
பரம காருணிகத்வ ஆஸ்ரித வத்சலத்வம் என்ற இப்படி அபர்யந்த குணங்கள் எல்லாம் 
என்கிறார் –

————–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –
-1-5-11-

பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை  ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –எம்மா வீடு -2-9-

March 27, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதில் சரணாகதி அனுஷ்டானம் செய்கிறார்-ஆத்ம நிஷேபம்-ஷட் விதா சரணாகதி-சேஷத்வ ஞானம் -அடியேன் சேஷ பூதன் -திருவடிகளே அடைக்கலம் என்று சமர்ப்பித்து -தேவரீர் ரக்ஷித்து அருள வேணும்
பிரார்த்தனா கர்ப்பமான ஞானம் -மதி சரணாகதி-மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் – எம்மா வீடு -2-9-இதன் விவரணம்-அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே – இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை -கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால் அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிப் பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
ஆணிப் பொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியை யுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப் பெற்ற
மாலை–மாலைப் பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –19-பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8–முதல்நடுவுஇறுதிஇவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து – பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்-எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை-தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார்–கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல் மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

மாணிக்கம் கொண்டு குரங்கை விரட்ட-சூர்யன் மாணிக்கம் -மாலை குரங்கு – வீண் ஆகும் த்ருஷ்டாந்தம்-தூங்க முடியாத இரவு —மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –குரங்கானது மாணிக்கத்தைக் கொண்டு எறியுமா போலே —பெரு விலயனான மாணிக்கத்தை குரங்கானது -அதன் சீர்மையை அறியாதே எடுத்து –கார்யம் கொள்ள ஒண்ணாதார் இடத்தே மங்கிப் போம்படி எறியுமா போலே -என்னுதல் –அன்றிக்கே –குரங்கு என்று விலங்குதலாய் –அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள-ஒண்ணாதார் இடத்தே-மங்கிப் போம்படி எறியுமா போலே என்னுதல் –-அப்போது எறிவாரை அழைத்து கொள்ளும் இத்தனை –(அசாத்திய சாத்தியமான இடத்தில் எடுக்க முடியாத இடத்தில் எறிந்தால் போல் என்ற-அர்த்தம் கொண்டு குரங்கு என்று எறிவாரை -கர்த்தாவை -அத்யாஹாரம் பண்ணிக் கொள்ள வேண்டுமே)இருளோடு -இத்யாதி –இருளோடு வந்து -சந்தித்து -மாற்றற்ற செம்பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை ஆயிற்று முடித்துக் கொண்டு மாலை வந்து தோற்றிற்று – குரங்கு கையில் புக்கு மாணிக்கம் நசித்தால் போல் ஆயிற்று – ராத்ரிக்கு அவயவமான இருளின் கையிலே புக்கு ஆதித்யன் மாய்ந்தபடி –இனி வெறும் மாலையே யாய்ச் சொல்லும் இத்தனை ஆகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி ஆயிற்று அவன் படி –உலகு அளந்த மாணிக்கமே –
ரஷகரான இந்த்ராதிகளும் (இந்திரன் கிழக்கு திக்பலர் தானே )தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் –தான் வந்து கைக் கொண்டு -தாமச பிரக்ருதிகளை( மஹா பலியை -நமுசி பிரக்ருதிகளை )தள்ளி நோக்குமவன் இறே –காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை இட்டு காணும் –மாணிக்கமே –பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே அழிய மாறின படி –என் மரகதமே – உடம்பிலே அணைத்தால் ஸ்ரமஹரமாய் இருக்கை-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே –முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு- மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே –அடியேன்- போக்யதையில் தோற்று- அடியேன் -என்கிறார் –அடியாவி –
தலை மகள் வார்த்தை யான போது –உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்ம வஸ்து -என்கை –ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்  மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது –சமர்ப்பித்த வநந்தர ஷணம்  -என்னத்தை எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி தன்னோடு  தான் தொற்று அற்று இறே-இருப்பது –அதவா-கிந்து சமர்ப்பயாமி தே -(ஸ்தோத்ர ரத்னம் )-உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -(திருவாய் மொழி )என்னக் கடவது இறே –ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே –ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் –அன்றிக்கே-ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச் செய்தார் -என்னவுமாம் –அடியேன் அடி யாவி –
பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –

காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்–திருக்குறள் -ஆற்றாமை மிக்கு தலைவி தலைவனை உனக்கே என் உயிர் தஞ்சம் -நீயே சடக்கென வந்து அருள வேணும் -என்கிறாள்
அடியேன் அடி யாவி -திருத் தாயார் வார்த்தை என்பற்கு என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்-அடியேனுடையாவி -பாட பேதம் –ஒருவரால் எறிய பட்டு குரங்கு மேல் விழுந்த மாணிக்கம் அதன் கையில் அகப்பட்டு அழிந்து திரும்ப மாட்டாது போலே இருளை அளிக்க அதன் மேல் விழுந்த சூ ரியான் மீலாது இரவே யாக நீண்டு போனதே –சூர்ய மண்டலம் -மாணிக்கம் -இருள் -குரங்கு மாணிக்கம் -செந்நிறமான -கரு மாணிக்கம் அபூத உவமை – இங்கு குரங்கு -இருள் என்பதால் கருங்குரங்கு என்றவாறு-அன்றியே மாணிக்கம் கொண்டு குரங்க எறிந்தால் போலே என்றுமாம் குரங்க-என்றது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னன படி – ஆற்றாமை மிக்கு ஆத்மாவை சமர்ப்பிப்பதும் -மோஹ அந்தகாரம் விவேகம் -மாறி மாறி வர -சமர்ப்பித்தது அவனது அன்றோ சர்வ ரக்ஷகன் நீயே அன்றோ -வந்து காத்து அருள் என்கிறார்

மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது.
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே-காம நோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப் பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்;-ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள்.-இப் பாட்டைத் தாய் வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள் கொள்ள வேணும்.-ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம்.-ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல, இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது.-ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை.-மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க. இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.-இனி, மிகச் சிறந்த மாணிக்கத்தை அதன் சீர்மையை யறியாத குரங்கு எடுத்து எங்கேனும் மங்கிப் போம்படி எறிந்து மாய்த்துப் போக்கி விட்டாற் போல, ஸூர்யனை இருளிலேயெறிந்து போக்கின மாலைப்பொழுது என்றும் உரைக்கலாம்;
இவ்வுரையில், மாலைக்குக் குரங்கும்,ஸூர்யனுக்கு மாணிக்கமும், அதன் வீழ்தற்கு அது எறியப்படுதலும், இருளுக்கு எறியப்படுமிடமும் உவமையாம்.-அழகியமணவாள சீயருரை காண்மின்;-“அன்றியே, மாணிகக்த்தைக் கொண்டு குரங்க எறிந்தாற்போலே யென்றுமாம்.
குரங்கதலாவது வளைதலாய், உதித்த ஆதித்யன் உயர் எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னபடி” என்று இவ்வுரைக்கு, குரங்க’ என்னும் செயவெனெச்சம் தொக்க தென்க.-ஆணிப்பொன்- மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்குமேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்த பொன் என்றும் உரைப்பர்.-மற்று ஒப்பாரையில்லா– தனக்குத்தானே உவமையாவதன்றி ஒருபடியாலும் வேறு நிகரில்லாத என்றபடி, “தனக்குவமையில்லாதான்” என்ற திருக்குறளும் அறிக.-இதனால், தன்னையொழிந்தார் யாவரினும் தான் மேற்பட்டவனென்பது விளங்கும். “ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது– எம்பெருமானை யநுபவிப்பதற்கு உரிய காலம் வந்திருக்க, அவ்வநுபவம் கிடையாமையாலாகிய ஆற்றாமையின் மிகுதியால் வருந்திய ஆழ்வார், அவ்வருத்தம் தீரும்பொருட்டு ஸ்வாமயான எம்பெருமானை பக்கலிலே ஸொத்தாகிய தன் உயிரை அடைக்கலமாக ஸமர்ப்பித்தலாம். மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹாந்தகாரத்திலே விழுந்து அகப்படும்படியான
இந் நிலையில் உன்னைச் சரணமடைந்த இவ்வுயிருக்கு நீயேயன்றோ ரக்ஷகனென்று உரைத்தனரென்க.

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-உலகு அளந்த மாணிக்கமே-உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே-என் மரகதமே-அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –அடியேன் அடி யாவி-சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது-யடைக்கலமே-உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ-ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று-இத்தால் மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது-(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)-விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து-குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே-அன்றிக்கே-குரங்கு என்று
விலங்குதலாய் அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்-அப்போது எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்-இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை-இருளோடே வந்து சந்தித்து-மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று-எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது-குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி-இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படிஉலகு அளந்த மாணிக்கமே–ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே காடும் மலையான இந்த பூமியை அளந்தது ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்–மாணிக்கமே-பெறு விலையன் என்கை-தன்னைப் பாராதே அழிய மாறின படி–என் மரகதமே-உடம்பிலே அணைத்தால் ஸ்ரம ஹரமாய் இருக்கை–மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே-அடியேன்-போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்அடி யாவி-தலை மகள் வார்த்தை யானபோது உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும் வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும் சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை–திருத்தாயார் வார்த்தையான போது –அடியேன் அடி-நாய்க்குட்டி என்னுமா போலே–யடைக்கலமே- இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி–பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது-ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம் என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது-அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே-ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே-பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே-அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–மாணிக்கம் கொண்டு-மாணிக்கத்தைக் கைக்கொண்டு-குரங்கு எறிவு ஒத்து-குரங்கு எறிந்தால் போலே–இருளோடு முட்டி-முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்-ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே-இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்–மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்–உலகு அளந்த மாணிக்கமே-அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே-என் மரகதமே-நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய் மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே-அடி யாவி-உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்-அடியேன்-யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்-அதுக்கும் மேலே-உன் யடைக்கலமே-த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு படவோ –

தாத்பர்யம்-இரவுக்கு அஞ்சின நாயகியாய்க் கொண்டு அடிக்கடி இரவும் இருளும் வந்து என்னை நலியாதபடி ரஷித்து அருள வேணும் என்று நாயகனான சர்வேஸ்வரனைச் சரணம் புகுகிறார்-விவேக சூன்யசமான குரங்கானது மாணிக்கத்தை பாழான இடத்தில் எறியுமா போல் சூர்யன் இருளை விட்டு நலிய தனக்கு ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அபரிச்சின்ன மரின்மை உடையவன் சர்வ ஜகத் ஸ்வாமி எனக்கு நாதன் உனக்கு சேஷமாய் உனது கையையே திருவடியையே எதிர்பார்த்து இருக்கும் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் என்கறார்

2-9-எம்மா வீடு பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
 –2-9-1-

1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்

செப்பம் –செப்போம் –சொல்லோம்-நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்-

அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்-1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம் –இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்--5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது

சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே

————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே 
–2-9-2-

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன-ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்-அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம் –-ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன-ஞானக் கை தா – அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற வேணும் -செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

————-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே
 –2-9-3-

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார்-பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –

———-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
 –2-9-4-

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள்-அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் – -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள் –இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்- திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே–அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-

எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ  வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –-ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக- ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது-க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது-புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்-அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே-ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே-அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –

பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –-ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே

பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்

வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –

எனக்கே கண்ணனை-தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும்-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

சிறப்பே —பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்-அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி-சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே-தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர்-

———–

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே
 –2-9-5-

ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –

என்றும் மகிழ்வேனே –மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் – ஆக -1-இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் –பெருமான் -என்கையாலே -2- சேஷித்வமும்மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -3–ஜ்ஞாத்ருத்வமும்என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –

கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
 –2-9-6-

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் ஸ்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –

என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்-என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –

———–

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே 
–2-9-7-

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–வாராய்-வர வேணும்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்-

————-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே 
–2-9-8-

இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும் நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில் மற்று எக்காலத்திலும்-இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –பின்னை இது தானும் வேண்டேன்-இத்தை எம்பெருமானார் கேட்டருளி-இது பொருள் அழகியது – இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது-நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –-பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –-எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்-எக்காலத்திலும்-இக்காலம் எல்லாவற்றிலும்-மற்று யாதொன்றும் வேண்டேன் பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –

அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –

———–

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே 
–2-9-9-

யானே –என் இழவு பகவத் க்ருதமல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் –இருந்தேன் –இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்தீ வினையேன் வாளா விருந்தேன் 

எம் வானவர் ஏறே —நித்ய ஸூரிகள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு-எம் -என்றது-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் –

—————

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
 –2-9-10-

அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் –உன் பொன்னடி சேர்த்து ஒல்லைநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்-தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு–நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —-இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது-நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்-என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —

————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
 –2-9-11-

நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-

இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும் வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே- தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-மையார் கருங்கண்ணி -9–4-

March 26, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அடுத்த பாசுரம் சரணாகதி பாசுரம்-இதில் கண்ணாலே கண்டது போல் கூப்பிடுகிறாள்-துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–-எங்கே காண்பேன் -இந்தக்கூட்டத்திலா -கோபிமார்கள் -ரிஷிகள் -அரசர்கள் ராஜஸூய யாகம் -தானம் கொடுக்கும் குழுவிலா –-நேராக ஏகாந்தமாக ஸேவை சாதிப்பான் என்று அறிவிலியாக நினைந்து -காணாமல்-மையார் கருங்கண்ணி -9–4-இதன் விவரணம்-இங்கும் திருவாழி திருக்கையுடன் சேவிக்க ஆசை உண்டே–வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-
கரு மாணிக்கம் இல் பொருள் உவமை மாணிக்கமே -சிவந்தே தானே இருக்கும்-முத்து போல் குளிர்ந்தும் இருப்பானே –

அவதாரிகை –-இவள் மோஹித்த அநந்தரம் -அரத்தியாய் ஓர் இடத்தில் தரியாதே –பகவத் அலாபத்தாலே-அங்கே இங்கே தடுமாறி கூப்பிட்டு கொண்டு திரிகிறபடியை சொல்கிறது –
க்வசிதுத் பரமதேவகாத் க்வசித் விப்ரமதே பலாத் ச்வசின்மத்தஇவாபாதி காந்தான் வேஷணதத்பர –முகில் வண்ணன் பேர் கிளறிக்கிளறிப் பேசி நைந்து போனாள் கீழே மூவாறு மாதம் மோஹித்தவர் அன்றோ-தமோ குணத்தால் வந்த மோஹம் அல்லவே-அதே போல் இங்கும்-உப ரதி ஒய்வு-அரதி -பரபரத்து ஓர் இடத்தில் இருக்க ஒட்டாமல்-அங்கே இங்கே -ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம்-சீதாப் பிராட்டி எங்கே எங்கே என்று விப்ரமதே மயங்கி -பித்துப் பிடித்தால் போல் காந்தையைத் தேடித் தரியாமல் இருந்தது போல் –

இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர் போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத் தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை நாயகி யானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும் காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை–இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய் கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் – அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும் திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும் மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும் காண அவாவைப் பெற்று அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே
– -84-தலைவி தலைவனைக் காண விரைதல்–

மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–
84–கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே விலஷணமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் –

தையல் நல்லார் இத்யாதி –தையல் நல்லார் உண்டு -ஸ்திரீ ரத்னங்கள் —அவர்கள் குழாம் உண்டு -திரள்–அத் திரள்கள் திரண்ட திரளினுள்ளும்     –-பெண்கள் திரள்களைக் கண்டவாறே -திருக் குரவை-என்று இருப்பாராய் -ஆயிற்று இவர் –ஐய நல்லார் இத்யாதி —அறவோர் அரும் தவத்தோரையர்-என்று பண்டித வாசகங்கள் –ஐய நல்லார் உண்டு –பண்டிதரில் நல்லாராய் இருக்குமவர்கள் –அவர்கள் குழிய விழவிலும் -தீர்க்க சத்ரங்கள் -மற்றையில் -அவற்றுக்காக திரள இருப்பர்கள் இறே –தீர்க்க சத்திரம் -என்றது யாகாதிகளை–அவற்றிலும்-ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும் –சமாஜேஷூ மஹத் ஸூச -என்னுமா போலே –அங்கு அங்கு எல்லாம் –-அவற்றோடு போலியான விடங்கள் எல்லாவற்றிலும் –கைய இத்யாதி –திரு ஆழி இன்றிக்கே -மனிச்சேயான அவதாரத்தோடு- அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசி யற திவ்ய ஆயுதங்களோடு காண ஆசை பட்டாய்-இற்றே இருப்பது –-ஆசூர பிரக்ரதிகளுக்கு அன்றோ மறைத்தது – எனக்கு காணத் தட்டு என் என்று-இருப்பாராயிற்று –ஜாநாது மாவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13–)சத் ப்ரக்ருதி யானவன் -தேனைவ ரூபேண சதுர் புஜேன சஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே -என்றான் இறே –அவாவுவன் நான் –ஆசைக்கு கண் உண்டோ -(யுக்த அயுக்த விவேக ஞானம் இருக்காதே ஆசைக்கு ) காண வேணும் -என்று ஆசைப்படும் இத்தனை போக்கி – காண அரிது -என்று அறிய மாட்டேன் –காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –மைய வண்ணா -இத்யாதி –
விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –மைய வண்ணா -கண்டார் கண்ணிலே அஞ்சனம் எளிதினால் போல் குளிர்ந்து இருக்கும்படி –மைப்படி மேனியான் அஞ்சன வண்ணன் அன்றோ அவன் –மணியே –அப்படியே இருக்கச் செய்தே -முடிந்து ஆளலாய் இருக்கிறபடி –முத்தமே -உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி இருக்கை –என் தன் மாணிக்கமே -பெரு விலையனாய் இருக்கை ––மைய வண்ணா குளிர்ச்சி – கண்ணுக்கு மட்டும் இது-முத்தமே -குளிர்ச்சி -உடம்பிலே ஏறிட்டுக் கொள்ளும்படி அன்றோ–இவ் வாழ்வாருக்கு மோஹம் ஆவது  –எத்திறம் -என்ற இடத்தில் சௌலப்யம் குணம் மாத்ரம் அனுபவம்–முகில் வண்ணன் விஷயத்தில் அழுந்தின அனுபவம் மாத்ரமே – அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே-கிளப்பி விட -தேடிக் கூப்பிடுகிறார் –அபரிச்சின்ன வைபாவனாய் இருக்கச் செய்தேயும் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த சுலபனாய் கண்டார் கண் குளிரும்படி -சம்சார தாபம் ஆறும்படி –அஞ்சன கிரி போல் திரு மேனி உடைய-சௌலப்யம் அனுபவித்து –அவனைக் காண வேணும் த்வரையில் அருளிச் செய்கிறார் –சௌலப்யம் அழகையும் காட்டி -கோபிமார் திரளில் ரசக் கிரீடை பண்ணின படியையும் தண்ட காரண்யத்தில்   ருஷிகள் கோஷ்டியில் வீற்று இருந்த படியையும் – சகல திவ்ய ஆயுத சோபை உடன் – காண ஆசை கொண்டு அருளுகிறார் –

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே–அவனையே முன்னிலை படுத்தி பேசி -நாயகனையே இடையூறாக நினைத்து பேசி குரவைக் கூத்தாடும் மகளிர் கூட்டத்திலும் -தர்ம புத்திரர் ராஜ ஸூய யாகம் செய்யும் மஹா புருஷர்கள் குழாங்களிலும் இருப்பவன் ஆகையால் தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-என்கிறார் – பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –
காந்தள் முகிழ் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன வேள்வியில் கண்டார் உளர் -பெரியாழ்வார் பாசுரங்கள் –மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – –முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே -திருமங்கை ஆழ்வார்-தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு-பரதந்த்ரராய் இருக்கும் -பிரபன்ன கோஷ்ட்டி
ஐய நல்லார்கள் குழு-யாகம் பல செய்யும் கைங்கர்ய கோஷ்ட்டி புறம்பே திரள்களில் ஆகிலும் காண ஆசைப்பட்ட நாயகி பாசுரம் –குழாங்கள் குழிய குழு-என்கையாலே சமூகம் பலவாய்ச் சேர்ந்த சமுதாயம் -நாயகி நாயகனைக் காண விரைந்து பேசும் பாசுரம் இது. நாயகனுடைய விரஹத்தை ஆற்றாத நாயகி, அவனை என் காதலின்படி தனியே ஏகாந்தத்திற் கண்டு கூடிக் குலவி இன்புற கிடையாதாயினும் ஆண்களும் பெண்களும் பலர் கூடிய கூட்டத்தினிடையில் எங்கேனுங் காணக் கிடக்குமாயினும் அது கொண்டு ஆறியிருப்பேனென்று கருதிச் சொல்லுகிறாளென்க.-“மையவண்ணா மணியே முத்தமே என்றன் மாணிக்கமே!” என்று முன்னிலையாகக் கூறியிருப்பது எங்ஙனே எனின்;-நாயகனையே இடையறாது நினைத்துக் கொண்டிருந்து நினைப்பு மிகுதியால் அவனை எதிரில் நிற்கிறாய் போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறினபடி,–திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர் மங்கையர் கூடியாடுங் குரலைக் கூத்துப் போன்ற மகளிர் குழாத்திலும், தருமபுத்திரர் செய்த ராஜஸூய யாகம் போன்ற மஹா புருஷர்களின் குழாத்திலும் எழுந்தருளி யிருப்பதற்குத் தகுதியுடைமைபற்றி“கையனல்லார்கள் குழாங்கள் நான்” என்றது. எம்பெருமான் பெண்களின் திரளிலும் மஹாபுருஷர்களின் கோஷ்டிகளிலும்
ஸேவிக்கத் தகுந்தவனென்பதை ‘பல்லாயிரம் பெருந்தேவிமாரோடு பௌவமேற்துவரை,
எல்லாருஞ் சூழச் சிங்காசனத்தே யிருந்தாளைக் கண்டாருளர்” “காந்தள் முகிழ்விரல்ருளர்”
என்ற பெரியாழ்வார் பாசுரங்களாலு முணர்க.–தையல் நல்லார்கள்- ஸ்திரீகளுட் சிறந்தவர் என்றும், ஐயநல்லார்கள்- ஆர்ய ச்ரேஷ்டர் என்றுங் கொள்க.-தையல் நல்லார்கள் நல்- தையலார்கள் என மாறுதலுமாம். ‘குழிய’ என்றது குழுவிய என்றவாறு.-(தழுவிய என்பது தழிய என்றும், கெழுவிய என்பது கெழிய என்றும் வருதல்போல. (சீவக சிந்தாமணி-சுரமஞ்சரியாரிலம்பகம் 32.) “தமிழ் கழியசாலவர்” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்) ‘தனது மாடே, தழிய காவலரை நோக்கி” ” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்)“கெழிய ராகுவுங் கேதுவும்” என்ற இடங்களில் ‘தழிய’ ‘கெழிய’ என்ற பிரயோகங்கள் காண்க.)கைய’ என்பதும் ‘மைய’ என்பதும் குறிப்புப் பெயரெச்சங்கள். மணியே முத்தமே மாணிக்கமே யென உபமானத்தை உபமேயமாகவே சொன்னது உபசார வழக்கு.-“முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச், சென்று விண்ணகர்க் காண்டுமே” எனத் திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
இம்மூன்று உவமைகள் ஒருங்கே கூறப்படுதல் காண்க.
-நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானை ஸேவிக்கப் பெற்ற ஆழ்வார் அப்பெருமானை மீண்டும் எங்கேனும் காண ஆசைப்பட்டு அவனை நோக்கித் தன்னிலே யுரைத்த வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள்.–‘தையனல்லர்கள் குழாங்கள் குழிய குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- பரதந்திரராயிருக்குந் தன்மையையே ப்ரதானமாகவுடைய
ப்ரபந்தர்களின் கோஷ்டி எனவும் ‘ஐயநல்லார்கள் குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- யாகம் முதலிய தொழில்களை நடத்து மியல்புடைய கைங்கர்ய ப்ரவ்ருத்தி ‘சீலர்களின் கோஷ்டி எனவும் கொள்வர்.
-இப் பாட்டின் அழகிய மணவாள சீயருரையில்- நாயகியானவள் நாயகனுடைய ஸர்வேச்வரனைப் புறம்பே திரளிடையாகிலுங்காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரம்’ என்றதும் ‘துழாங்கள் குழிய குழு’ என்கையாலே ‘அந்த’ ஸமூஹந்தான் பலவாய்ச்சேர்ந்த ஸமுதாயத்தைச் சொல்லுகிறது’ என்றதும்,‘இந்தக்கிளவி, “மள்ளர் குழீஇய விழவினாலும், மகளிர் தழீஇய துணங்கையானும், யாண்டுங்கணேன் மாண்டக்கோனை” என்ற அகந்தமிழிலுஞ் சொல்லப்பட்டது’ என்றதும் இங்கு அறியத்தக்கன.-மேலெடுத்துக் காட்டிய மேற்கோள் குறுந்தொகை. இது நச்சினார்க் கிளியராலும் “உயிரினுஞ் சிறந்ததன்று” என்ற தொல்விழவினாலும், மகளிர் தழீஇய துணக்கையாலும் யாண்டுங்காணேன் மாண்டக்கோனை, யானுமோராடுகள மகளே யென்கைக் கோடீரிலங்குவளை ஞெகிழ்ந்த, பீடுகெழுகுரிசிலுமாடுகள மகனே’ என்பது நொதுமலர்வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது; ஆதிமந்தி

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்-குழாங்கள் குழிய குழு-என்கையாலே அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது-ஐய நல்லார்கள் குழிய விழவினும்-பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்–அங்கங்கெல்லாம்-அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு ஸூசகமாய் கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும் அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்–வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்மைய வண்ணா-ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்–மணியே-துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே-முத்தமே-நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே-என் தன் மாணிக்கமே-பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே அகப்படுத்திக் கொண்டவனே -என்று அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று-இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )இத்தால் நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை கோபீ ஜன மத்யத்திலும் வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும் அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று
-அன்றிக்கே பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும் கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்-(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)அன்றியே இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய் வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்-அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்-நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்-ஐய நல்லார்கள் குழிய விழவினும்– ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்-அங்கங்கெல்லாம்-இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும் திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்-மைய வண்ணா -கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே-மணியே ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே-முத்தமே-கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே-என் தன் மாணிக்கமே–எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —

தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரனுடைய ஸுலப்ய அதிசயத்தை அனுசந்தித்து அவனைக் காண வேணும் என்னும் த்வரையால்-ஓ ஸ்வாமியே நீயோ அபரிச்சின்ன வைபவம் -மேன்மை கொண்டவனாய் இருந்தும் -அளவில்லா முடியாத பெருமை -இருந்தாலும்-ஆஸ்ரிதருக்கு ஸூலபனாய்
கண்ணுக்கு குளிர்த்தியாய் கண்டவர் சம்சார தாபம் தீரும்படி அஞ்சன வண்ணனே ஸுலப்யம் அழகைக் காட்டி என்னை நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் பண்ணி திவ்ய ஆயுதங்கள் தரித்து ராஸக்ரீடை பண்ணிய இடங்களிலும் தண்டகாரண்யத்தில் ரிஷிகள் குழுவில் வீற்று இருந்த படியிலும் காண ஆசைப்பட்ட எனக்கு அப்பொழுது உள்ளாருக்கு சேவை சாதித்தால் போல திவ்ய ஆயுதங்கள் தரித்து
என்னை க்ருதார்த்தனாக ஆக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

9-4-மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்செய்யாள்-ப்ரவேஸம்-

இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்-
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –

சீலம் முதலான குணங்கள் வந்தவாறே-ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்-நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று-இவளுடைய சேர்த்தி-நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து-ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்-
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீய பதி என்றாரே அன்றோ –கீதா பாஷ்யத்தில் –

ஸ்ரீய பதி – நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப ––இத்யாராப்ய –ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய-அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப

இப்படி இருக்கிறவனுடைய-சீல குணத்தையும்(சீலம் எல்லை இலான் அடிமேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்)
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -(அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் )
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –

கடுக பெற வேண்டும்படி-குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –அப்போதே பெறக் காணாமையாலே-விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்-
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகே உளராய்- இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –

ஆகையாலே-
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே-அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்-
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-பாசுரங்களில்-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-பாசுரத்தில்
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10-பாசுரத்தில்
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது-கலம்பகம் மாலை போலே –

முடியானே /வீற்று இருந்து ஏழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி-

இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -(கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –)இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாக்க(பேதுறுவன்-)
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின-அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்-தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –தோற்ற வேண்டும் படி ஆயிற்று –

இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும் நினைத்து உவகையினராய்-(என் உள்ளம் உகந்தே)
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்-(கண்டு கொண்டேனே)
அடிமை செய்யப் பெற்றேன்-(தொண்டர்க்கு அமுது உண்ண)
வாழ்ந்தேன்-(உய்ந்தவாறே)
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து இனியராய் அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார்-

நாலாம் திருவாய் மொழியில் கீழே அவன் ஸீலாதிசயத்தை அனுபவித்து சிதிலரானவர் –
ஸீலவானாய் ஸ்ரீ யபதியானவனை அனுபவிக்க வேணும் என்று அபி நிவேசித்து அந்த அபி நிவேச அனுரூபமான
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டத்வத்தையும்
அத்ய அபி நிவேச விஷயத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
அசேஷ பிரதி சம்பந்தித்வத்தையும்
காரணத்தவாதி குண யோகத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஹ்ருஷ்ட யதிசயத்தையும்
சர்வ அந்தராத்மாதிகளையும்
கிஞ்சித்க்கார விஷயத்வத்தையும்
நிருபாதிக சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பூதனானவனை அனுபவிக்க வேணும் என்கிற ஆகாங்ஷையாலே தம்மோடு கரணங்களோடு வாசியற
ஈடுபட்ட இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி முகம் காட்ட அனுபவித்து ஸந்துஷ்டராய்
ஆஸ்ரித அனுபாவ்யமான திருவாய் மொழியை அவன் திருவடிகளில் பாடி உஜ்ஜீவிக்கப் பெற்றேன் என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

விஷய த்ரயம் -விசிஷ்ட த்ரயம் -பிராட்டி -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய விக்ரக விசிஷ்டன்

மையார் கருங்கண்ணி – வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி-இயல்பான அழகினை உடையதாய்-ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்-
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே –மையார் -என்னும் போது-மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –

திரு மார்வினில் சேர் திருமாலே – தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்- உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி-மார்வு படைத்தவனே-
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்-
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே-அவ்வருகு போக வேண்டாவே– அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-

திருமாலே-இவள் -மார்பில் படும் பாட்டினை – இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –- அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே- இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து-அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –

இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை-அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது-

காணக் கருதும் என் கண்ணே-அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று-காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ —காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோ – சதா பஸ்யந்தி ஸூரைய-நித்ய ஸூரிகளும் இத்தனை -அன்றோ

என் கண்ணே–நமக்கு நேத்ர பூதரான இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு-முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவர் நேத்ரத்துக்கு

——-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

ஆழ்வார் என்னைப் பார்க்கட்டும் என்று நீ தானே சங்கல்பம் கொள்ள வேண்டும் -கரணியும் நீயே -கரணங்களும் நீயே -உபாய மும் உபேயமும் நீயே -என்றபடி –

தமக்கும்-தம்முடைய மனதுக்கும் உண்டான-சாபல்யத்தை-காதல் பெருக்கை-அருளிச் செய்கிறார்-

கண்ணே உன்னைக் காணக் கருதி-அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்-கண்ணே –எனக்கு கண் ஆனவனே–பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய-வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –

கண்ணே -என்கையாலே – வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு-இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று- இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –
ஆத்மா யோசித்து -மனஸ் சிந்தித்து -கையால் செய்வதை -மூன்றும் மனஸ் செய்யும் ஆழ்வாருக்கு –
உபாயமும் அவனே உபேயமும் அவனே –இத்தை உணர்ந்து – ப்ரீத்தி காரித கைங்கர்யம் அவன் கொடுக்க -விருப்பம் ஆசை ஒன்றே நமக்கு க்ருத்யம் -அதிகாரி ஸ்வரூபம் இதுவே –

எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்–பஹு சங்க்யாதம் -மநோ ரதம் -கொண்டு -ஐந்து வேலைக்கு காரர்கள் உண்டே
ஐந்து விருப்பங்களும் மனஸ் கொள்ளலாமே -காண்கையிலும் பிரதி பந்தம் போகையிலும் -அடிமை செய்வதிலும் -அபி நிவேசம்

நண்ணாது ஒழியேன் -என்பதற்கு-
1-அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
அங்கன் அன்றிக்கே-
2-நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது-
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்-
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது-
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –எடுக்க வேண்டும் என்று இருந்தேன்-
எடுப்பான் தானாய் இருந்தான்-எடுத்தால் பெறுவது தன்னையாய் இருந்தது–ஆன பின்பு-எனக்கு என்ன கண் அழிவு உண்டு –

—————-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

ஆர்த்தியே பற்றாசாக -ஆஸ்ரித ரக்ஷகனான உன்னுடைய -கிருபை பொழிவது பகவான் ஆனபடியால் -நிர்ஹேதுக -காரணம் –
ஆர்த்தி இருந்தால் தான் பொழிவார் -ஆர்த்திக்காக பொழிய வில்லை -ஆர்த்தி -அதிகாரி ஸ்வரூபம் -உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –என்கிறார்-

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று- பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு
நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

————–

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்-சேஷத்வமே ஏற்புடைத்து -பிரதி சம்பந்தி -உனக்கு தாஸ்ய அனுமதியைப் பண்ணி
இசைந்து –இசைவித்து உன் தாழ் இணைக்க கீழ் இருத்தும் அம்மானே

நின் கண் பெறுவது எது கொல் என்று –ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்-கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்-
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து-சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ-
அன்றி-என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –
கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ

மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்—அறிவது அரிய அரியாய அம்மானே-அசாதாரண சம்பந்தம் உண்டே -அனைவருக்கும்
சாமான்யம் அதி தைவதம் -யாராலும் அறிய முடியாத போது நின்ற பொன் அம் கழல்-ஆஸ்ரித சுலபன் சர்வேஸ்வரன் இரண்டு ஆகாரங்களை
எவராலும் அறிய முடியாமல் – -வாசாம் அகோசரம் –அரியாய அம்மானே —ஸ்வாமி -நரசிம்மம் –

பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது-எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்-
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்-உமக்கு இனி-நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி-
நரசிம்கனாய் வந்ததால் எளியவன் -பிரகலாதன் போலே எளியவனாய் இருக்க கை புகுந்தோம் என்று அன்றோ இருக்கக் கடவது –

——-

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

கழல் காணக் கருதும் கருத்தே-என் மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது-கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள இரண்டு பாசுரங்கள்
படுக்கைக்கு பரபாகமான வடிவும்-அதற்கு பரபாகமான திருவடிகளும்-ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது

எளியோமான கோஷ்டி பேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன-நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்

———

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

காண ஆசைப் பட்ட அளவிலே-அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள தம்முடைய மனம் உகந்து-அனுபவிக்கிறபடியை-அருளிச் செய்கிறார் —

கருத்தே உன்னைக் காண கருதி-எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே-முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்-கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி

என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்-இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்-பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –

———-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

ஆர்த்தி சாந்தி அடைந்து அனுபவிக்கப் பெற்றதை இது முதல் நான்கு பாசுரங்களால் -அருளிச் செய்கிறார்

தூணிலே தோற்றி-பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து-ஏத்துகிறார்

அடியார்கள் ஸூளுறவு செய்த காலத்தில் வந்து-தோற்றுமவன் ஆகையால்-
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி-மனத்தின் இடம் எல்லாம் புகுந்து-
கமர் பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே-நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –என்கிறார் என்பது –

நரசிம்ம ராகவா யாதவ ரெங்கேந்திர ஸிம்ஹம் உபாஸ்ம ஹே -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன்
திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்

———-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

சர்வ அந்தராத்மா -சர்வ காரணன் -சர்வ சுலபனான -உன்னைக் காணப் பெற்றேன் -கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க-கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்-எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு-எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து-அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்-காணப் பெற்றேன் -என்கிறார்

———–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

நிதான பாசுரம் -பக்தாம்ருதம் -ஒரே பாசுரத்தில் திருமந்த்ரரார்த்தம் அனைத்தும் அருளிச் செய்து-வாயால் கைங்கர்யம் -வாசிக கிஞ்சித் காரம்

பிரதம பதம் -அநந்யார்ஹ சேஷ பூதன் -நம-விரோதி போக்கி -பிரதி சம்பந்தித்தவம் -நாராயணா-அடியேன்-மந்த்ர தாத்பர்யம் ததீய சேஷத்வம் சொல்லிற்று ஆயிற்று

என் கண்ணினை–பக்தி ரூபாபன்ன ஞானம் -இரண்டு கண்கள்

சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்–அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –

————

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

நிருபாதிக சம்பந்தம் உடையவனைக் கிட்டி -சேஷத்வத்துக்கு குடல் துவக்கே உபாதி-கிருதார்த்தன் ஆனேன்-என்கிறார் –

எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே-தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –

குன்றாமல் உலகம் அளந்த அடியானை –குணத்தையும் குணம் இல்லாமையையும்-நிரூபணம் செய்யாதே -உலகம் அளந்த பொன்னடி –திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹேதுகமாக —அம் சிறைப் புள்ளின் கொடியானை-பெரிய திருவடியை அங்கீ கரித்தால் போலே என்னை அங்கீ கரித்தான்

———-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

ஏறே தரும்-ஏற்றினைத் தரும்–இத் திருவாய்மொழி-தன் இனிமையினால்-நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -ஏறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-என்கிறார்

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-உண்ணிலாய ஐவரால் -7–1-

March 21, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

விளரி -உச்ச ஸ்வர கண்ட த்வநி-ஸப்த ஸ்வரங்களில் ஓன்று -தைவதம் -ஒலி -உச்ச ஸ்தாயீ
குரல்-துத்தம் கைக்கிளை உழை-இனி விளரி தாரம் -என்று ஷட்ஜ ருஷப காந்தார மத்யம பஞ்சம
தைவத நிஷாதங்கள் ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது-அன்றில் -கிரௌஞ்ச மிதுனம் -வாய் அலகு விட்டால் ஒலிக்கும்-சிந்தனை- பசலை-மெலிவு -அழுந்தல் -மொழி பிதற்றல் -மரணம் -காமம் -ஷட்பாவம் -இருந்து பிழைக்க முடியாத தசை -இறந்தே –முடிந்ததே பிழைக்கும் மரண தசையை நெருங்கி உள்ளவள் -வீட்டில் உள்ள பனை மரம் -இல் பொருள் உவமை அதில் தாமரை இதழ்கள் வைத்துக் கட்டிய கூடு அதுக்கு உள்ள அன்பு இவருக்கு இல்லையே

உரு வெளிப்பாட்டாவே நோவு படா நிற்கச் செய்தே –அதுக்கு மேலே –முற்றத்திலே ஒரு பனையாய் –
அப் பனையில் தொங்கிற்று ஒரு அன்றில் –தான் வாய் அலகை பேடையோடு கோத்து கொண்டு இருக்கிற இத்தை நெகிழ்ந்தவாறே  கூப்பிட கடவதாய் – அதனுடைய ஆர்த்த த்வனியில் இவள் மோஹித்து கிடக்க –இத்தைக் கண்டு –இதன் த்வனி இருக்கிற படி இது –இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இது –இவளுடைய மார்த்வம் இருக்கிறபடி இது –இவை எல்லாம் இருந்தபடியாலே இவள் உளளாக அபிமதம் கை புகுந்து –இவள் ப்ரீதையாய் இருக்கக் காண மாட்டோம் ஆகாதே -என்று
இங்கனே தாயார் உடைய வார்த்தையாய் இருக்கிறது -பட்டர் –இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -நஞ்சீயர் – ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்கு  போலியாக சொல்லலாம் இடம் உண்டோ -என்று கேட்க –இளைய பெருமாள் காட்டிலே கொண்டு போய் பிராட்டியை விட்டுப் போந்த அநந்தரம்- அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு திருத் தாயார் படி உண்டாக சொல்லலாம் -என்று அருளிச் செய்தார் –

இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர் ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு-இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – –
-83 –அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –

விளரி–விளரியென்னும் இசையை யுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனை மரத்திலுள்ளதும் முட்களை யரிந்து செய்யப்பட்டதுமான கூடு-முன்றில்  பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்-முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்
—61-உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்- பூர்ண பிரபத்தி பண்ணினவர்-தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும் நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய ஸூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-
ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும் அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது–கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸ்ஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்-இது நிச்சயம் –குன்றுதல் -குறைதல்-ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

விளரிக் குரல் அன்றில்–விளரி என்று உச்சமான த்வனிக்கு பெயர் – -உயர்ந்த த்வனியை  உடைத்தாம் படி கார்யப்பாட்டால் கூப்பிடுகிற அன்றிலினுடைய-மென்பெடை-கலக்கும் போதும் பூ தொடுமா போலே தீண்டும்படி யாயிற்று மார்த்வம் –இம் மார்த்வத்திலே விரஹமுமானால் பாடாற்றப் போகாது இறே-மேகின்ற –மேவா நிற்கிற –நித்ய சம்ஸ்லேஷமாய் செல்லா நிற்கும் இறே – அநபாயினிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –முன்றில் பெண்ணை –முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்-முற்றத்துப் பனை நடலாமோ என்று இவ் விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தேவங்கி புரத்து நம்பியை சிலர் கேட்க –   அதுவோ இவள் கார்யம்  தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் –(அநர்த்தப்பட்டுப் போனதுக்கு இதுவே ஹேது என்றவாறு ) முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந் தீர்கின்ற வன்றிலின் கூட்டை- பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- –அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே –(நம்மாழ்வார் அங்கி பாசுரம் போல் அங்க பேசுறதுக்கு இதுவும் )அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடித் திரிகிறாள் அன்றே இவள்-முளரிக் குரம்பை –-இதனுடைய சௌகுமார்யத்துக்கு ஈடாக – தாமரை இலைகளையும் பூக்களையும்-கொடு வந்து – கூடாக பண்ணிவிக்கும் இறே –அன்றிக்கே –முளரி -என்று முள்ளாய் –முள்ளாலே செய்த-கூடு என்னவுமாம் –இது இதுவாக –இக் கூடு கூடாக –இது இப்படி குடில் கட்டி கொண்டு போந்து – பாதகமாய் அற்ற பின்பு-மென் பெடையோடே மேவா நின்றுள்ள விளரி குரல் அன்றிலினுடைய முன்றில் பெண்ணை–முளரிக் குரம்பை இது இதுவாக –முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் –
முகில் வண்ணன் திரு நாமத்தை கிளர்ந்து கிளர்ந்து-ஜல்ப்பிக்கிற ஜல்பமும்-மெல்லாவியும் – சிறுது போதும் இஜ் ஜல்பத்துடன் தான் செல்லுகிறதோ என்று இருக்க – அதுவும் இல்லாதபடி-ஹிருதயத்தில் உண்டான தளர்த்தியும் –நைவும் –அதுக்கு மேலே–இவளுடைய சைதில்யமும்-எல்லாம் – இவை எல்லாம் மிகுந்தபடியால் –தளர்வு இத்யாதி-இத் தையலுக்கு  உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே –முடியிலாகாதே -இவளுக்கு   பிழைக்கல்  ஆவது -அறிகிறிலேன்-

அன்றில் -கிரௌஞ்சம் -காம உத்தீபகமாய் -விரக வேதனையை வளர்ச்சி செய்யுமே-காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் -என்றும் –பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பெடை வாய்ச் சிறு குரல் –என்றும் திருமங்கை ஆழ்வார் –சமஸ்க்ருதம் -சப்த ஸ்வரங்கள் -ஷட்ஜம் -ரிஷபம் -காந்தாரம் -மத்தியமம் -பஞ்சமம் -தைவதம் -நிஷாதம் -போலெ-தமிழில் குரல் -துத்தம் -கைக்கிழை-உழை-இளி-விளரி -தாரம் -என்னும் ஏழு இசை-விளரி -தைவதம் -என்பர் -கிரௌஞ்சம் -க்வணதி -மத்யமம் -என்பதால் -விளரி -மத்யமம் ஸ்வரம் என்றும் சொல்வர்-விளரி என்னும் ஒரு பண்ணும் உண்டு-மென் பெடை-பிரிவு பொறாத ஸுகுமார்யத்தை யுடைய பெடை –முளரிக் குரம்பை-முட்களை அரிந்து செய்யப்பட கூடு -தாமரை இலை பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்றுமாம்
இது இது -கட்புலனாகும் பலவற்றை சொன்னபடி –-விளரிக் குரலன்றில் மென்பெடை மேகின்ற முன்றிற் பெண்ணை-முளரிக் குரம்பை யிதுயிதுவாக-என்றதை பின் பற்றியே திரு மங்கை ஆழ்வாரும் –முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே -பெரிய திரு மொழி -11-1-6–ஆவியின் நைவும் –பாகவதர்கள் எம்பெருமான் திரு நாமங்களை சொல்லி புலம்ப ஆழ்வார் நெஞ்சம் தளர்ந்து நைந்த தன்மையைக் கண்டு – இவருக்கு தேஹ விநியோகம் ஆன பின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது -என்று வெறுத்து கூறுகிறார்கள் –பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறம் பாசுரம் இது. காம விரஹத்தாலுண்டாகும் வேதனைகளுள் சிந்தனை பசலை மேனி மெலிவு அழுங்கல் மொழி பல பிதற்றல் முதலிய பலவும் இவளுக்கு நிகழ்ந்தாய் விட்டன;-இது வரையிலும் இவளுடைய தலைவன் இவளை வந்துகூடி உய்யச் செய்யக் காண்கின்றிலேன்;-இனி மரணமொன்றே நிகழாது நிற்பது; அதுவும் நிகழ்ந்த பின்பு தான் இவளை வந்து கூடி உய்யச் செய்வதாகவிருக்கிறானோ? என்று தோழி இரங்குகின்றாள்.-இதனால்,இனி இவளுக்கு ஜீவித்திருத்தல் அரிதாம் என்றவாறு.–வடநூலார் க்ரௌஞ்ச மென்று கூறுவதே அன்றிற்பறவையாகாது; இது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்கும்;
கணநேரம் ஒன்றை ஒன்று விட்டுப் பிர்ந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திவிட்டு அதன் பின்பும் தன் துணையைக் கூடா விட்டால் உடனே இறந்து படும். (பகல் முழுவதும் புணர்ந்திருந்து இரவிற் பிரிந்து வருந்துவதாகிய சக்கரவாகப் பறவையும் அன்றிலெனப்படுவது உண்டு.) அன்றிலும் அதன் குரலும் காமாத் தீபகமாய்ப் பிரிந்தார்க்கு
விரஹ வேதனையை வளரச் செய்யுமென்க. இப் பறவையைப் பனைமரத்தில் வாழ்வதாகவே பலரும் பலவிடத்துங் கூறுவர்;-“காவார்மடற் பெண்ணையன்றி லரிகுரலும்” “பெண்ணைமேற் பின்னுமவ்வன்றிற் பெடை வாய்ச் சிறுகுரல்” என்பன திருமங்கையாழ்வார் பாசுரஙகள்.-ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வரங்கள்-தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி யிளரிதாரம் என்னும் ஏழிசை யெனப்படுதலால் விளரி யென்றது.-தைவத மென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழி நிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால் அன்றில் மத்யம்மென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு.மென்பெடை = பிரிவுபொறாத ஸௌகுமார்யத்தையுடைய பேடை. ‘முளிரிக்குரம்பை’ என்பதற்கு- தாமரையிலைகளையும் பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்று உரைப்பாருமுளர். ‘இது வலிது- நட்புலனாகும் பலவற்றைச் சுடடியது.
* மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த வீறுடைய திருமங்கையாழ்வார், இங்கு,
“அன்றில் மென்பெடைமேகின்ற முன்றில் பெண்ணை முளரிக் குரம்பையிது” என்றதையடியொற்றி (பெரியதிருமொழி 11-1-6) “முள்நிற் பெண்ணைமேல் முளிரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடருமென்னையே” என அருளிச் செய்திருத்தல் காண்க.
மேகின்ற- மேவுகின்ற. குரம்பை- குடம்பை. மூன்றில்- இல்முன் என்பது முன்பின்னாகமாறித் தொக்க மரூஉமுடிபு;-தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியலில் (60)“முன்னென்கிளவி முள்ளர்த்தோன்றும், இல்லென்கிளறி மிசை றகர மொற்றல், கொல்லின் மருங்கின் மரீஇய மரபே” என்றது காண்க:-இதனை இலக்கணப் போலியில் அடக்குவர் இக்காலத்தார். தையல்- அழகு; அதனையுடையவளுக்கு ஆகுபெயர்.-‘பிதற்றும்’ என்பதற்கு முதனிலைத் தொழிற்பெயராக, பிதற்றுதலும், என்றுரைக்கவுமாம்.-‘ஆவியும் நையும்,’ ‘ஆவியின் நையும்’ என்பட பாட பேதங்கள்.இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பாகவதநுபவம் பெறாமையால் ஆழ்வார் தளர்தலைக்கண்ட அன்பர்-‘பாதகமான லௌதிக பதார்த்தங்கள் அருகிலிருத்தலால் இவர் ஆறியிருப்பது அரிதாயிந்தது’ என்று கூறுதலாம்.-இவர் தம் இருக்கிற விடத்திலே அருகிலுள்ளார் சிலர் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறுதலைக்கண்டு தமக்கு
அத்தன்மை கிடைத்திடாமையாலே ஆற்றாமைமிக்கு எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறி புலம்பி, நெஞ்சந்தளர்ந்து நைகிற தன்மையைக் கண்டு ‘இங்ஙனம் மெலிகிற இவர்க்கு தேஹவியோகம் ஆனபின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது!’ என்ற வெறுக்கக் கூறினரென்க

ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறதுவிளரி என்று-ஒரு பண் என்றும் சொல்வர்-மென் பெடை மேகின்ற-புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற-முன்றிற் பெண்ணை-முற்றத்திலே பனையிலே-முளரிக் குரம்பை யிதுயிதுவாக-முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக–முளரிக் குரம்பை என்று -தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்-முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்-இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து ஸ்யாமளமாய் ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை பல ஹானியாலே வருந்தி எடுத்து எடுத்து அக்ரமாகச் சொல்லும்படியான-மெல்லாவியும்-மெலிந்து சென்று அற்ற பிராணனும்-நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்-எல்லாம் தளரிற் கொலோ-ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ–அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே-இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்–அறிகிறிலேன் -என்கையாலே-முடியவுமாம் -அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து–இத்தால் தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள் இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

முளரிக் குரம்பை என்று யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம் தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே

ஸ்வா பதேசம் –இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்களுக்கு யாதநா சரீரம் போலே   க்லேசமே யாகாதே இவர்க்கு உள்ளது –இச் சரீரத்தோடு பகவல் லாபம் உண்டாய் இவர் தரித்து இருக்க காண மாட்டோம் ஆகாதே- இஸ் சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு ஆகாதே இவர்க்கு ஆஸ்வாசம் உள்ளது -என்று தோற்ற-இருக்கிறபடியைச் சொல்கிறது –விளரிக் குரல் –இது வேதார்த்த அர்த்தம் என்பதால் ஸ்ரீ இராமாயண போலி கேட்டாராம் ஜீயர் –-தூ நிலா முற்றத்தில் ஒரு பனை இருக்க பிரசக்தி உண்டோ -என்பதற்கு ஐதிகம் –தளிரும் முறிவும் –நாயகன் அடிக்கடி வருகையும் முற்றத்தில் படுக்கையும் நிலவுமாய் போகம் நடக்கிறதோ- இரவும் பகலும் பாதகமாய் செல்ல -அனைவரும் கிலேசித்து இருக்க —
பனையை வெட்டி முற்றத்தை-அழகாய் பேணுவாரும் உண்டோ-

தாத்பர்யம்–கீழே உரு வெளிப்பாட்டுக்கு தளர்ந்ததுக்கு மேல் அன்றிலும் உச்ச ஸ்வர ஒலியால் கூப்பிட
மோஹித்த திருத்தாயார் பாசுரம்–முற்றத்தில் பனை மரத்தில் நன்றாக கூடு கட்டி நித்ய சம்ஸ்லேஷம் நடவா நிற்க பிரிய நேரிடுமோ என்று அதி சங்கை பண்ணி கூப்பிட்டது போல் இவளும் நாயகன் உடன் கூடி இருக்கவே விஸ்லேஷத்தில் அதி சங்கை பண்ணி உன்னை விட்டு ஒரு ஷணமும் இருக்க வல்லேன் என்று அவன் சொன்னவற்றை நினைத்து முகில் வண்ணன் வாசகமான திரு நாமங்களை மீண்டும் மீண்டும் அக்ரமமாக பிதற்றி அனுசந்திக்க – இவளது நெஞ்சும் தளர்ந்து உடலும் மெலிய
மறு சரீரம் எடுத்து ஸூகப்படுமது ஒழிய இந்த சரீரத்துடன் அனுபவிக்க மாட்டாள் போல் உள்ளதே என்கிறாள் திருத்தாயார்

அரும் பதம்-இது -உச்ச ஸ்தாயீ-பேர் பிதற்றுவது -வேதாந்தம் அர்த்தம் இப்படி சொல்லலாமோ என்னில்
பிராட்டி இரண்டாம் பிரிவில் ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரீய பரராய் உதவினது போல் என்று பட்டர் ஜீயருக்குக் காட்டி அருளினார்-இனி அவதார சமாப்தி அநந்தரம் தான் சீதா பிராட்டி கூடினாள் அன்றோ
அதே போல் இவளும் இவ்விடம்புடன் கூட மாட்டாள் என்று அத்தைக் காட்டி அருளிய படி –

7-1-உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி-ப்ரவேஸம்

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அர்த்த பஞ்சக பரமாக அருளிச் செய்வார் முன்பே பார்த்தோம்

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

சர்வ சக்தித்வம் அருளிச் செய்கிறார் ஏழாம் பத்தில்

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்;

இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புக்க விடத்திலும்,
தக்தப் பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.

தக்தபடம் – எரிந்து போன வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்:
காற்று அடித்தவாறே பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,2-ஆம் பிரகரணம், சூ. 191.

‘அமர்ந்து புகுந்தேன்’ என்று தம்மால் ஆன அளவும் புகுர நின்றார்.
பின்பு அவனைப் புகுர நிற்கக் கண்டிலர்.
‘இனிக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்.
விளம்பத்திற்குக் காரணம் இல்லாத சாதனத்தைப் பற்றி நின்றவன்,
அது பலத்தைக் கொடுக்குந்தனையும் கிடந்து கூப்பிடுவானத்தனை அன்றோ?

இவர்தாம் மேலே செய்ததாயிற்றது, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய
ஆகிஞ்சந்யத்தை விண்ணப்பஞ்செய்து கொண்டு சரணம் புக்காராயன்றோ இருக்கிறது?
அது, ‘மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
‘என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையினைத்தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
கடுகப் பலித்துக் கொடு நிற்கக் கண்டிலர்.
இனி, ‘நம்மைக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று இன்னாதாகிறார்.

பக்தி-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
பிரபத்தி -ஸ்வ தந்த்ர பிரபத்தி -ஆர்த்தன் திருப்தன் இரண்டு வகை –
ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி –பாப சப்தம் கீதைப்படி –வேற ரகஸ்ய த்ரயப்படி வேறே –
இங்கு மோக்ஷ விரோதி பாபங்கள் விவஷிதம்

—–

கீழே சுருக்கமான பிரவேசம்
இனி அத்தையே விரித்து அருளிச் செய்கிறார்

‘சர்வேஸ்வரன் திருவருள் செய்வதற்கு வேண்டுவன,
1-சம்சாரத்தினுடைய தண்ணிமை நெஞ்சிலே படுதல்
2-சர்வேஸ்வரனுடைய வைலக்ஷண்யத்தை நினைத்தல்,
3-சரணாகதி செய்தல் என்னும் இவற்றிற்கு மேற்பட இல்லை அன்றோ?’ என்று

சம்சாரத்தின் ஸ்வபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்;
புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே,
சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும்
அருளற்றவரைப் போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய்,

இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, -இந்திரியங்கள்-வேல் என்றபடி –
‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது காண்! என்று கூப்பிடுகிறார்.

‘இனித்தான், ஷிபாமி -‘தள்ளுகிறேன்’ என்பதும். -தாதாமி ‘கொடுக்கிறேன்’ என்பதும். இரண்டே யன்றோ?-
அவற்றுள், ‘தள்ளுகிறேன்’ என்னுமளவிலே யன்றோ நாம்’ என்றிருந்தார்.
‘அது என்? இவர்க்குக் ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகத்தைச் செய்து கொடுத்தானே?’ என்னில்,
‘அதுவும் நோவு படுகைக்கு உடலாகத் தந்தான்’ என்றிருக்கிறார்.

தம்முடைய சத்தி கொண்டு பெற இருந்தார் அல்லர்;
அவனுக்குச் சத்தி இல்லாமல் இழக்கிறார் அல்லர்; பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்;
‘ஆன பின்பு,இவர்க்கு இப்போது இழக்க வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயின், பலியாது ஒழிவான் என்?’ என்னில்,
‘இவர் குறையால் வைத்தாலன்றோ பலித்தது இல்லையாவது?
நமக்காக இருக்கிற பின்பு இவர் இங்கே இருந்தால் நல்லது,’ என்றிருந்தான்.

அவனும் இவரைக் கொண்டு ஒரு காரியம் கொள்ள அன்றோ எண்ணி இருக்கிறது?
அதுவும் ஒழிய, இவருடைய திருமேனி இறுதியானதாகையாலே, இவர் சரணாகதி செய்த இடத்திலும்,
இவர் திருமேனியில் தனக்குப் பிராவண்யத்தாலே காரியம் செய்திலன்.
இவர் திருமேனியில் அவனுக்கு உண்டான பிராவண்யத்தைக் கண்டே அன்றோ
‘மங்க ஒட்டு’10. 7 : 10. என்று அவனைக் காற்கட்டிற்றும்?
மெய்யான பிரேமம் உண்டானால் இங்ஙன் அல்லது இராதே. -மெய் சரீரம் உண்மை -சாடு

இது பிரகிருதி ஆயிற்றே அவனுக்கு. -சாடு– ஸ்வபாவம் -மூல பிரகிருதி

அவன் தம்மைக் கொண்டு கொள்ள இருக்கிற காரியத்தை இதில் பொருந்துவாரைக் கொண்டு
கொண்டால் ஆகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது.
இதில் பொருந்துவாரை’ என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-
‘செய்து கொடுத்த ஞான லாபம் இவர் தரித்திருப்பதற்குக் காரணமாம்,’ என்றிருந்தான் அவன்;
அதுதானே விரைவதற்குக் காரணமாயிற்று இவர்க்கு. ‘கிரமத்திலே காரியம் செய்கிறோம்’ என்றிருந்தான் அவன்;
அதுத ன்னையே கொண்டு ‘நம்மைக் கைவிட நினைத்தான்’ என்றிருக்கிறார் இவர்.

நித்திய விபூதியையும் திவ்விய மங்கள விக்கிரஹத்தையும் கண்ணாற்கண்டு,
‘அங்கே போய் அப்படியே அநுபவிக்க வேணும்’ என்னும் பதற்றத்தை யுடைய இவர்க்கு.
சம்சாரம் ததீயமாயிருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு’ என்னும் ஞான மாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாதே.
‘யானும் நீ தானாய்த் தெளிதோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்’திருவாய்மொழி. 8. 1 : 9.–
என்றே அன்றோ இவர் இருப்பது?

1-இப்படி இருக்கிற தம்மையும்,
2-‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் குறைவற்று இருக்கிறபடியையும்,
3-காக்கும் தன்மை ஸ்வரூபமாயிருக்கிறபடியையும்,
4-காத்தற்குத் தொடர்பு இருக்கிறபடியையும்,
5-தமக்கு இவற்றில் தொடர்பு அற்று இருக்கிறபடியையும்,

1-ஆர்த்தி உடன் பிரபத்தி பண்ணிய தம்மையும்
2-உலகம் மூன்று உடையாய்
3-கடல் ஞாலம் காக்கின்ற
4-அண்ணலே
5-வல முதல் கெடுக்கும் வரமே தந்து –

சத்துவம் முதலான குணங்கள் அவற்றிற்கு அடியான
கர்ம தேஹ இந்திரியங்கள் இவற்றிற்கு அடியான மூலப்பகுதி மஹான் அஹங்காரம் அதன் காரியமான விஷயங்கள்
அவித்யை கருமம் வாசனை ருசி ஆகிய இவை எல்லாம் அவனுக்கு வசப்பட்டவைகளாய் இருக்கிறபடியையும் நினைத்து,
‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்தே வைத்த போதே
இவற்றுக்கு நம்மை இரையாக்கிப் போகட நினைத்தானித்தனை:
‘தள்ளுகிறேன்’ என்கிற கூட்டத்திலே புக்கோம்.

‘இனித்தான், இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மை அகற்றுகைக்கு உறுப்பாக.
அவற்றுள், நித்திய விபூதியில் ஓலக்கம் இருக்கிறது, நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு;
லீலாவிபூதி கண்டது நமக்குச் சிறைக் கூடமாக.
மயர்வற மதிநலம் அருளிற்றும், அல்லாதாரைப் போன்று சுகமே இராமல் துடித்து நோவு படுகைக்காக’ என்று அறுதியிட்டு,
அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டார் அடங்கலும் நீராம்படி கிடந்து கூப்பிடுகிறார்.

‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியில், ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தாராய்ப் பிரணய ரோஷம்
தலை எடுத்துச் சொன்னவை எல்லாம் பிறர் வாயாலே சொன்னாற்போலே இருக்கையாலே,
ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு.
இவர். எல்லா அளவிலும் ஸ்ரீஜனகராஜன் திருமகளாரோடு ஒப்பார் ஒருவராயிற்று. என்றது,
அத்தலையில் குறை இடுவார் ஒருவர் அன்றிக்கே ‘இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்’ என்றிருப்பார் ஒருவர் என்றபடி.

இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே?
‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில்,
சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ?

குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னக கடவாதாயிருக்கும். என்றது.
‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ?
இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி.

உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே,
பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப் போமோ?’ என்றாற்போலே
வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி,
‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லை காண் என்ன,
‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?

பல நீ காட்டிப் படுப்பாயோ?’,
‘கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?’ திருவாய். 6. 9. 9. ஷ 6 9 : 8.-என்று சொல்லுகிறபடியே
அவற்றின் அண்மையும் சகிக்க முடியாதபடியாய், இனி, தாம் அறியாதிருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்தில் பிரவணமான ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறப்பட்ட உறுப்புகளையுடைய
இவர்க்கு இந்திரியங்கட்கு வசப்படுதல் உண்டு என்னுமிடம் மேலே கூறியதோடு முரணாகாதோ?’ என்னில்,
பக்கத்து வீடு நெருப்புப் பற்றி வேவா நின்றால், தமது தமது வீடுகளைப் பாதுகாத்துக் கொள்ளாமல் இருப்பவர் இலர் அன்றோ?
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் ‘பாம்பு’ என்று நினைத்து மயங்கக் கூடியதாய் இருக்கும் அன்றே?
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே இருக்கிறபடியைக் கண்டார்:
உலகத்தார் முழுதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவராய்க் கிடந்து நோவுபடுகிற படியையும் கண்டார்:
‘இது நம்மளவும் வரின் செய்வது என்?’ என்று அஞ்சிக் கூப்பிடுகிறார்.

ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும்
நாய்க் கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே,
ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’-என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.
பிள்ளை திருநறையூர் அரையர் ‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை
தாய் முகத்திலே விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்.
‘தாவத் ஆர்த்தி:’ என்ற ஸ்லோகத்திற்படியே, சரணம் புக்கால் தம்மை இன்னாதாகச் சம்பந்தம் இல்லையே:
அவனை இன்னாதாமித்தனை அன்றோ?
திருமலையிலே புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்குக் காரணமாதல் தவிர்ந்து
கூப்பிடுகைக்குக் காரணமாயிற்றித்தனை அன்றோ?

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

ஏழாம் பத்தில் — கீழ் இரண்டு பத்தாலே உபாய ஸ்வரூப சோநத்தையும் -தத் ஸ்வீ காரத்தையும் அருளிச் செய்து –
மேலே ஏழாம் பத்தாலும் எட்டாம் பத்தாலும்-உபாய நிவர்த்யமான விரோதி ஸ்வரூபத்தையும் –
தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்கிறார் -அதில் விரோதி ஸ்வரூப பரமான இப்பத்தாலே –

நிவர்த்யமான விரோதியாயுள்ள சரீர இந்திரியாதிகள் நிவர்த்தகனான ஈஸ்வரன் இட்ட வழக்கு என்னுமத்தையும்
விரோதி நிவ்ருத்தி பிறவாத போது ப்ராப்ய கத ப்ராவண்யம் ஆர்த்தி ஜனகம் என்னுமத்தையும்
ஆர்த்தி சமிப்பது அபி நிவிஷ்டனான ஈஸ்வரனுடைய தேச ப்ராப்தியாலே என்னுமத்தையும்
ஆர்த்தி ஹேதுவான விரோதியானது ஜகத் ரக்ஷண ஹேதுவான விஜய அபதானங்களை யுடைய சர்வ சக்திக்கே நிவர்த்த நீயம் என்னுமத்தையும்
ரக்ஷகனான அவனை ஒழிய வேறு நிவர்த்தகர் இல்லை என்னும் இடம் சம்மதம் என்னும்படியையும்
சர்வ ஸ்ரஷ்டாவான அவனுடைய காலைக் கட்டிக் கூப்பிட்டு விரோதியைக் கழித்துக் கொள்ள வேணும் என்னுமத்தையும்
உரு வெளிப்பாடான அனுபவம் நடக்கச் செய்தேயும் அலாப ஜெனிதையான ஆர்த்தி விரோதி கார்யம் என்னுமத்தையும்
விசித்ர விரோதி நிவர்த்தனத்தில் விசித்ர விபூதி விசிஷ்டனான விசித்ர சக்தி யுக்தனே வேணும் என்னுமத்தையும்
விரோதி விஸிஷ்ட வேஷத்தில் வாசிக்க கைங்கர்யம் கொண்ட ப்ரீதி அதிசயத்தாலே விரோதியை விஹஸ்தமாக்கின ஹர்ஷத்தையும்
ப்ராப்ய விஷயத்தில் ப்ராவண்யம் அதிசயித்தால் பிரதிபந்தகம் உபாய பூதன் போக்கும் என்னுமத்தையும் –

அருளிச் செய்து
விரோதியினுடைய ஸ்வரூபத்தை சோதித்து அருளினார் –

இதில் முதல் திருவாய் மொழியில் -கீழே -ப்ராப்த்யர்த்தமாக -சரணாகதியை யனுஷ்டித்த இவர்க்கு
பிராப்தி விரோதி நிவ்ருத்யர்த்தமாக பிரதிபந்தக ப்ராபல்யத்தைப் பிரகாசிப்பிக்க –
காட்டிப் படுப்பாயோ –இன்னம் கெடுப்பாயோ -என்று பாண்டே அஞ்சி இருக்கிற இவர் பிரதிபந்தகமான தேஹ இந்திரியாதிகளுடைய
அதி ப்ரவ்ருத்தியை அபரோக்ஷித்து-அதிசயித ஆர்த்தியை யுடையராய் -விரோதி நிவர்த்தகனான ஈஸ்வரனுடைய
சம்பந்தாதி குண பவ்ஷ் கல்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
ரக்ஷணார்த்த வியாபாரத்தையும்
அகடிதகடநா சாமர்த்த்யத்தையும்
விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
சர்வ பிரகார சந்நிதியையும்
யரும் தொழில் செய்தும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும்
அசாதாரண சிஹ்நாதி யோகத்தையும்
சகல ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வாதிகளையும்
சாரா ஸங்க்ரஹண சாமர்த்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான நீ உனக்கு விதேயமான சரீர இந்திரியாதிகள் என்னை நலியக் கண்டு
நிவர்த்திப்பியாதிருந்தாய் -என்று அந்நிய விசேஷம் அடியாகப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிடுகிறார் –

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!
–7-1-1-

சுக அனுபவத்திற்கு உரியனவான திருவடிகளையுடைய உன்னை நீ அறிதி அன்றோ?’ என்பார், ‘உன் பாத பங்கயம்’ என்கிறார்.-என்றது, ‘அடி அறியாமல் தான் அகற்றுகிறாய் அன்றே-சம்சாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விட ஒண்ணாதபடி போக்கியமான திருவடிகளை.-நலிவான் –நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;
திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ் வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே இந்தக் கொடுமையான வகையே நலிவான்.-‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.

பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லா நிற்கச் செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.-‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதானபிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே!
அன்றிக்கே,-‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களை யுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி. ‘இப்படிக் குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்தி உண்டு?’ விடு நகங்கட்டி நலியா நிற்கச் செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப் போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி.

உலக மூன்றுடை-அண்ணலே!-சர்வ லோகங்களையும் உடைய ஸர்வேஸ்வரனே -சர்வ ரக்ஷகத்வத்தைக் காட்டிற்றும் நம்மைக் கை விடான் என்று இருக்கைக்காக வன்றோ
அமுதே!-போக்யதையை அறிவித்ததும் மேல் விழுகைக்காக அல்லவோ-அமுதே – அவன் தன்னுடைய இனிமையைக் காட்டிற்றும் தம்மை அனுபவிப்பிக்கைக்கு அன்று; புறம்பு ஒன்று பொருந்தாதே நோவு பட என்றிருக்கிறார்.-அப்பனே –உபகாரகனே -உபகாரத்தை காட்டிற்றும் இவ்வளவு உபகரித்தவன் இனி கை விடுமோ என்று இருக்கைக்காக–‘இப்படி உபகாரகனானவன் நலியா நின்றானோ?’ என்று நம்பும்படி செய்து பின்பு அபகரித்தற்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.-என்னை ஆள்வானே – ன் இசைவு இன்றிக்கே இருக்க என் கார்யம் உனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டதுவும் நான் கை விடான் என்று இருக்கைக்காக அன்றோ–பிராங் நியாயம் பலிக்கும் என்றிருக்கைக்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.
‘இதற்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக் கொண்டு போந்தது நாமும் சில செய்தோ?
அப்படியே மேலும் நம் காரியம் அவன் செய்யும்,’ என்றிருக்கைக்காகச் செய்தானத்தனை;
நினைவு வேறே என்றிருக்கிறார். ‘என்னை ஆள்வானே! நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்கிறார்.-

—————

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!
–7-1-2-

என்னை ஆளும் வன் கோ – என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண்.-ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய்,
அவனுக்கு ஆத்துமா சேஷமாய்,-அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய்,
அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!-வன்கோ – பிரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன்.-எல்லா நற்குணங்களையுமுடைய சர்வேஸ்வரன் சேஷியாகை தவிர்ந்து, குணம் இல்லாதவர்கள் சேஷிகள் ஆவதே?’-ஒருவனுக்குச் சேஷமாதல் தவிர்ந்தது’ என்பார், ‘ஐந்து’ என்கிறார்.-ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறது காணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது.

உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாய மானைக் காட்டிப் பிரித்து,
ஒற்றைக் கண்ணன், ஒற்றைக் காதள் இவர்களை கைகளிலே காட்டிக் கொடுத்து
உன்னைக் கொண்டு அகன்றாற்போலே காண் இதுவும்!

கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் – ‘போதி கண்டாய்’ என்று யார் கால் கட்ட நீ அன்று நோக்கிற்று!-‘இந்திரியங்களாலே நோவுபட்டோம்’ என்று இவர்கள் அபேக்ஷித்த போதோ நீ நோக்கிற்று! நீ இனியன் என்று அறியாதரையுங்கூட நோக்குமவன் அல்லையோ? கடலோடு கூடின பூமியைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்கும் தன்மையன் அல்லையோ? ‘காத்தல் தான் காதாசித்கமோ உனக்கு?’ என்பார், ‘காக்கின்ற’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றார்.-மின்னு நேமியனாய் –-இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ?-ஆசிலே வைத்த கையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்-உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது? விளங்கா நின்றுள்ள திருவாழி. –-கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி

வினையேனுடை வேதியனே –-ஊர்ப் பொதுவாயிருக்கிற நீ. என்னளவிலே வந்தவாறே வேதங்களாலேயே அறியப்படுகின்றவனானாய். இன்று இருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைச் செய்வதே நான்!- சிசுபாலனுக்கு சஷூவுக்கு விஷயம் ஆனாயே-

————

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே
 –7-1-3-

வேதியா நிற்கும் – வேதனையே செய்யா நிற்கும்.-அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.-‘உடனாய் மன்னி’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே!-எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்ன எல்லாம் இவற்றின் பக்கலிலே ஆனபடியைத் தெரிவித்தபடி.

என்ன உறவின் கனந்தான்! தம்முடைய குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படி காணும் சம்பந்தம் இருக்கிறபடி.-சாதநாநுஷ்டானம் செய்து பலத்துக்குத் தடை செய்வாரைச் சொல்லுமாறு போலே சொன்னபடி பாரீர். உன் திருவடிகளைச் சாராதபடி தகைந்து,

என் பெறுதி – என் சொரூபம் அழியுமித்தனையோ வேண்டுவது?
நான் படுகிற வியசனத்தால் உனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாகில் எனக்கு அதுவே அமையும்; உனக்காக இருக்குமதன்றோ எனக்கு வேண்டுவது?-துர்வாசர் வர, ‘பெருமாளுக்கு ஒரு துன்பம் வர ஒண்ணாது’ என்று தம் நோவு பாராதே விடை கொண்டார் அன்றோ?-என் பெறுதி –-நீ, சொன்ன சொல் தவறாதவன் ஆகைக்காக ஸ்ரீபரதாழ்வானைப் பிரித்து வைத்தாய், என் இருப்புக்கு உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?

தொண்டனேன் மதுசூதனனே – இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ? மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?-

——–

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!
–7-1-4-

நான் உறுவது அறியாதபடி –சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களைக் காட்டி மயங்கச் செய்து-‘உன்மத்தங்காய் தின்னப்பண்ணி’ –உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து –உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது,
‘மயிர் கழுவி-பிரபத்தி செய்த பின்பு- இருக்கிறவனைச் செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’-வினையேன் வினைதீர் மருந்தே – பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே! என்னுடைய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஈடுபாட்டினைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?-

————-

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–
7-1-5-

இந்திரியங்கள் பாதகம் ஞானம் கொடுத்தேன் -இத்துடன் காலம் போனால் -என் செய்கேன் -திருவடி கிடைக்காமல் –‘ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொண்டாலோ?’ என்றான்;-ஆர்மருந்து இனி ஆகுவார்–என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.-நீ கை வாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?-நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?-நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?-நித்திய ஸூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரம பதத்திலே இருக்கிறபடியே நினைத்து
விண்ணுளார் பெருமானேயோ–அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். -பகல் ஓலக்கம் -சாம கானம் கேட்டு ரசிக்கவோ –-ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே, பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.

————-

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே
.–7-1-6-

சம்சாரத்திலே முமுக்ஷூக்களாய்க் கைங்கரியத்திலே மூழ்கி இருக்கக் கடவரானவர்களையும் செறும்-பெரிய திருவடியையும் அகப்பட ‘எனக்கு’ என்னப் பண்ணிற்றே அன்றோ? -அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.-இவர்தாம் விண்ணுளாரில் ஒருவரே அன்றோ?
இவற்றுக்குத் தந்நிலமாவது, நான் இவை இருந்த இடம் தேடிச் சென்று கழுத்திலே கயிறு இட்டுக் கொடு நிற்கவல்லேன் ஒருவனாவது;-இங்ஙனே இருக்கிற என்னைப் பெற்றால் இவை என் செய்யா?-காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’-இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று அருளிச் செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம்.

உனக்குச் சக்தி இல்லாமையினாலேயோ நான் இழக்கிறது?’-பண்ணுளாய் –
என் துன்ப ஒலியைக் கேளாதிருக்கிறாய் அல்லையே.-கவி தன்னுளாய்-
என்னுடைய ஆர்த்தியை உட்கொண்ட சொற்களைக் கேளாதிருக்கிறாய் அல்லையே?-பத்தியினுள்ளாய்-இப்படிச் சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாதிருக்கிறாய் அல்லையே?-பரம் ஈசனே–உனக்கு முடியாதது ஒன்று உண்டாக அதனைச் செய்யாமாட்டாது இருக்கிறாய் அல்லையே?-உன் சேஷித்துவம் ஏறிப் பாயாத இடம் உண்டோ?

உன் இருப்பில் எனக்கு ஐயம் உண்டோ?-என் கண் காண வந்து ஒன்று சொல்லுகை அன்றோ எனக்குத் தேட்டம்? செய்த காரியத்தில் குறை உண்டு என்கிறேன் அல்லேன்;-நீ செய்யாத காரியத்தை அன்றோ சொல்லுகிறது-எனக்காக நாலடி நடந்து வந்து, ‘நீ அஞ்சாதே கொள்’ என்று, என்னை,-மாஸூச:- துக்கப்படாதே என்ன வேணும்.-

————

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!
–7-1-7-

கொடியேன் பருகு இன்னமுதே--தேவர்களை போலே நித்யத்வத்தைக் கொள்ளாதே உன்னையே ஆசைப்படுகிற எனக்கு நிரதிசய போக்யனானவனே -தேவர்களை போலே உப்புச் சாற்றில் திருப்தனாகப் பெற்றிலேன் -தோளும் தோள் மாலையுமாய் கடலைக் கடைந்த போதை அழகாயிற்று இவருக்கு அம்ருதம் -இவருடைய அமிருதம் விசஜாதீயமாய் இருக்கிற படி –கடைந்தனையே ஆசைப்படப் பெற்றிலேன்.
அன்றிக்கே,-நீ செய்தது கொண்டு திருப்தனாக வேண்டி இருக்க, ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்று-உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னுதலுமாம்.-நீ உபேஷித்தால் அதி பலமான இந்த்ரியங்களை என்னால் வெல்ல முடியுமோ என்கிறார் –

————–

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–
7-1-8-

தொடக்கித்தில் அமிர்தம் போலாம்;பரிணாம நிலையில் விஷத்தைப் போலாம்-ஓர் ஐவர்-
தனித்தனியே பிரபலமாய் ஒப்பற்றவையாய் இருக்கிற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்கள் ஐந்தும்.-அநாதியான சம்சாரத்தை எல்லாம்.வாசனையோடே போக்கி உன் சின்னமும் திருமூர்த்தியும்--தவள ஒண்சங்கு சக்கரம் என்றும்,-‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்’ என்றும்,-‘அரவிந்தலோசனன்’ என்றும் சொல்லுகிறபடியே,
திவ்விய ஆயுதங்களையும் அவற்றுக்கு ஒப்பாயிருக்கிற திருமேனியையும்.-சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு- இவற்றை நெஞ்சாலே நினைத்து’ உள்ளடங்காமல் வாய் விட்டுத் துதி செய்து, பின்னைத் திருவடிகளில் விழுகைக்குத் தகுதியாக எனக்கு அருளவேணும்.-என் அம்மா–எனக்குத் தாய் போல் பரிவன் ஆனவனே!-என் கண்ணா
அந்தப் பரிவை அநுஷ்டான பரியந்தமாக்கினவனே!-இமையோர்தம் குலமுதலே--மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் ஒருங்கி உன் பக்கலிலே பிரவணமாம்படி-ஒரு நாட்டுக்குச் செய்து கொடுத்த நீ, அதனை என் ஒருவனுக்கும் செய்யத் தட்டு என்?

————-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!
–7-1-9-

பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ-இந்த்ரியங்களுடைய பலத்தை வாசனையோடு போக்க வல்லேனாம் படி பிரசாதங்களை பண்ணி அருள வேணும்-என்கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

———–

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ
–7-1-10-!–

என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ;-அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று.-இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக் கொண்டு போமாறு போலே யாயிற்று,-பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய் விட்டது.-வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே இழுத்துக் கொண்டுபோகத் தேடுமாறு போலே காணும் இவையும்.-பெரிய தோள்களை யுடையவனே! (மூர்த்தி -தோள்களைச் சொன்னவாறு )என்னுடைய இந்திரியங்களைப் பாற அடித்துப் பொகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவினைக் காட்ட வல்லையே!

————-

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே
.–7-1-11-

படைத்து அளித்துக் கெடுக்கும் –-ரஜோ குணத்தையுடையனாய்க் கொண்டு படைத்து,
தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு அழித்து,-சத்துவ குணத்தை யுடையனாய்க் கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.-‘அப்புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே,-பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,-அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று. –தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;-தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.-கண்டு பாட வல்லார் –இவருடைய நிலையை நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?-கண்டு –-நமக்குத் தஞ்சம் என்று நினைத்து.-வினை போம் கங்குலுப் பகலே –இரவு பகலில் வினை போம்.-இராப்பகல் மோதுவித்திட்டு’ என்ற துயரம் போம்.-திவா ராத்திரி இந்திரிய வச ஹேதுவான பாபங்கள் போகும் –-நம்மை அறியாமலே இரவிலே பாபங்கள் போகுமே -கனவில் படும் சுகம் துக்கம் புண்ய பாப பயன் என்பர் –திவா ராத்ரம் இந்திரிய வஸ்யத்தைக்கு ஹேதுவான பாபம் போம்-திவா ராத்ரம் அடிமை செய்கைக்கு விரோதியான பாபம் போம்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -82-எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-உருகுமால் நெஞ்சு -9–6-

March 19, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இல் பொருள் உவமை -இரண்டு ஸூர்யர்கள் உதய கிரியில்-இணைக் கூற்றம் கொல் அறியேன் போல் இங்கும்-வெப்பம் உமிழும் திருக்கண்கள்-மந்தேஹர்கள் ராக்ஷஸர்கள் -ஸூர்யன் ரதத்தைத் தடுக்க
அர்க்க தீர்த்தம் வஜ்ராயுத வலிமை கொண்டு -செந்தீ போல் ஸூர்யனை ஆக்கி அவர்கள் விழுந்து மடிவார்கள் -மீண்டும் மாலை தோறும் உயிர் பெறுவார்-இப்பாசுரத்திலும் மீண்டு -பத பிரயோகம்
அதே போல் அபலைகளான நங்களும் கண்களின் வெப்பக் கொழுந்தில் அழுந்துவதோ – வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
ஹரி -ஹரி ப்ரஹ்ம மூர்த்தத்தில் கூக்குரல்-துறையடைவு–உருவு வெளிப்பட்டால் -தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —அவனையே சிந்தித்து –மீனாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -இவற்றைப் பார்த்து இப்படி சொல்லும்படி ஆர்த்தி விஞ்சி–உருகுமால் நெஞ்சு -9–6-இதன் விவரணம்

ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை சொல்லுகிறது இது இறே – இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப் பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது – தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –

அரும்பதம்-உயிருக்கு எல்லாம் தாயாய் இருக்கும் கண்கள்-தூது செய்யும் கண்கள்-காருண்யம் தயை பொழியும் கண்கள்-தெற்கு நோக்கி பெரிய பெருமாள் -துயிலுமா கண்டு –என் செய்கேன் உலகத்தீரே ‘
கிருபா ப்ரவாஹம் -தாங்க முடியாதே -கால் தள்ளாட -திரு மணத்தூண்கள் பிடித்து -ஆலம்பனம்
அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே-அமலங்களால் விளிக்கும்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ –நமஸ்தே பூர்வஜ-ஆழ்வார் பாவம் -தவிப்பு -ஆர்த்தி இருந்தால் தானே இப்படி பாதகமாக வார்த்தை சொல்ல முடியும் –ஆற்றாமை உண்டானால் தானே இவ்வாறு சொல்லலாம் -இல்லாமல் கொடுமை என்று நம்மால் சொல்லப் போகாதே 

இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர் தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான் நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய திருக் கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே
– – – 82–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —

எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதய மலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம் போன்றவர்களுக்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு
—86-என்னால் -என் நா என்றுமாம்-ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க-அத்தாலே-பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

எரி இத்யாதி –நெருப்பை உமிழா நிற்பனவாய் –சிவந்து இருந்துள்ள நாயிறு இரண்டு உதய கிரியிலே உடனே விரிக்கின்ற –-எரி போலே உதய காலத்திலே -பரம்புகிற அவற்றின் படியை உடைத்தாய் இரா நின்றன-சர்வேஸ்வரன் உடைய இரண்டு திருக் கண்கள் –மீண்டு இத்யாதி –(மீண்டும் மீண்டும் என்றும்
பாதிப்பில் இருந்து மீண்டும் என்று இரண்டு நிர்வாகங்கள் ) ஆதித்யன் உதிக்கும் அளவிலே -மந்தேகர் என்பார்  -சில அசுரர்கள் ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு போக ஒட்டாதே நிரோதிப்பார்களாய் –
பிராமணர் நீர் பொகடுகிற இத்தாலே -ஆதித்யனுக்கு ஒரு தேஜஸ் பிறந்து – அதிலே அவர்கள் புக்கு முடிந்து-போகையாய் இருப்பது உண்டு இறே – அப்படியே புறம்பு போக்கற்று திரியட்டும் அவ் வாதித்யர்களுடைய அந்த நெருப்பிலே விழுந்து முடிந்து போகிற அசுரர்களைப் போலே-எம் போலியர்க்கும் விரிவ — என்னைப் போலே ஆசைப் பட்டு நோவு படுகிற அவர்களுக்கு-எல்லாம்
அசுரர்களை போலே இவை பாதகமாய் கொண்டு பிரகாசமாகா நின்றது –சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே–லோகமாக கை எடுத்து கூப்பிடுகிற வதுக்குமடி இதுவோ சொல்லி கோள்-
இவை பாதகமாயோ லோகமாக கூப்பிடுகிறது என்கிறாள் –(மெல்ல எழுந்து ஹரி என்ற பேர் அரவம் இதுக்காகவோ )வாயும் திரை உகளும் படியே –(தம்மைப் போலவே நோவு படுகின்றன என்று நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயோ )அன்றிக்கே –மீண்டவற்று -எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே   -எம் போலியர்க்கும்– அவ் வாதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற
ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என் போல்வார்களுக்கும்  இக் கண்கள் பாதகமாம் ஆகிறபடி –விரிவ சொல்லீர் –இவ் வளவில் எனக்கு ஒரு புகலிடம் சொல்லீர் –விரிகையாவது -பரம்புகையாய் –
அத்தாலே போய் புகுகையாய் –புகலிடம் என்று வருகிறது –கீழ் விரிவ- விஸ்தரிக்க அர்த்தம்
இனி விரிவ சொல்லீர் -எம் போல்வாருக்கு விரிவ -புகலிடம் புகுகை சொல்லீர்
-கீழ் மூதறிவுவாட்டி
வேங்கடம் ஆட்டவும் இத்யாதி சொன்னதே ஹேதுவாக மோஹம் தெளிந்து தரித்து கண் முன்னே அவன் கண்கள் முன்னே தோன்றி நலியத் தொடங்கிற்றே உருவ வெளிப்பாட்டில் –

உரு வெளிப்பட்டால் -நாயகி நாயகன் கண் அழகுக்கு இரங்கி உரைக்கும் பாசுரம்-ஏக காலத்திலே இரண்டு சூரியன்கள் போலே -அபூத உவமை – தாப ஹேதுவாய் -சர்வ லோக ரக்ஷகராய் விரும்பி
தன் பேறாக காத்து அருளும் தன்மைக்கு இப்படி உதவாமை ஒவ்வுமோ –மந்தேஹாருணம் த்வீபத்தில் உள்ள அசுரர்கள் தவம் செய்து பிரமன் இடம் வரம் பெற்று ஸூர்யனை வளைத்து போர் செய்ய சந்த்யா காலத்தில் மந்த்ர பூர்வகமாக விடும் தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலே ஆகி அவர்களை தள்ளியது போலே – விளக்கில் விட்டில் போலே -அர்க்ய நீரால் எழுந்த செந்தீயில் விழுந்து மாண்டனர் -என்பர் –
இதையே மீண்டு -சூர்யன் அவர்கள் தீய சக்திகளில் இருந்தும் மீண்டு என்றும் -இப்படி அசுரர்கள் மீண்டும் மீண்டும் மாய்ந்து போவதையும் குறிக்கும் பூர்ண அனுபவம் பெறாமல் மானஸ அனுபவ மாத்திரமே வருந்தும் அளவு பரிதாப ஹேதுவானதே திருமேனி மைப்படி மலை போலே சோதி மயமாய் இருந்து அனுபவம் கொடுக்காமல் இருப்பதே –எம்போலியர்க்கும்-விரிவ சொல்லீர்-அநு கூலரான எம் போல்வாருக்கும் தாபம் செய்வனவாய் பரவுகின்றன –-இதுவோ வையமுற்றும் விளரியதே- உலகம் முற்றும் விருப்பத்தோடு ரஷிக்கும் விதம் இதுவோ – ஆழ்வார் ஆற்றாமை அவன் ரக்ஷகத்வத்திலும் அதி சங்கை பண்ணும் படி பண்ணிற்றே-உருவெளிப்பாடுகண்ட நாயகி நாயகனது கண்ணழகுக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-உருவெளிப்பாடாவது- பிரிந்து சென்ற நாயகனிடத்தில் இடைவிடாது கருத்தை ஊன்றவைத்த மனத்தின் நினைப்பு மிகுதியால் அவனது வடிவம் வெளிப்பாடாய்க் கண்ணுக்கெதிரே காணப்படுதல். அங்ஙனம் காணப்பட, அவ்வடிவத்தின் கண்ணழகிலேயீடுபட்ட நாயகி, அவ் வடிவம் கைக்கு எட்டாது மறைந்த பின்பு, அக்கண்ணழகு தன் காதல்நோயை மிக வளர்த்தித் தன்னை மிக வருத்துகின்றமையைத் தோழியரை நோக்கிச் சொன்னது இது. வெவ்விய இரண்டு ஸூர்ய மண்டலங்கள் உதயகிரியில் ஏக காலத்தில் தோன்றி விளங்குகின்ற தன்மை போன்ற தன்மையை யுடையனவான எம்பெருமானது திருக்கண்களானவை எமக்குத் தாபஹேதுவாயிரா நின்றன.
அந்த ஸூர்ய வடிவங்களிலே ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற சிவந்த நெருப்பிலே வேறு கதியற்று விழுந்து சாகின்ற மந்தேஹரென்னும் அசுரர்களுக்கு அவை எப்படி தாபகரங்களாயிருகின்றனவோ அப்படியே அநுகூலரான எம்போன்றவர்களுக்கும் தாபஞ் செய்வனவாய்ப் பரவுகின்றன; எம்பெருமான் உலக முழுவதையும் விரும்பிக் காத்தருள்கிறானென்று புகழ்பெற்றிருக்குந் தன்மைக்கு இதுவோ ஏற்றது! என்றாளாயிற்று.–தைத்திரீய ஆரண்யகம் என்னும் வேத பாகத்தில் இரண்டாவது ப்ரச்நத்தில் இரண்டாவது அநுவாகத்தில் ஓதப்பட்டுள்ள ஒரு வரலாறு-இப் பாட்டின் மூன்றாமடியில் கொள்ளப் பட்டுள்ளது; மந்தேஹாருண மென்னும் த்வீபத்தில் வாழும் மந்தேஹ ரென்னும் அசுரர்கள்
உக்ரமான தவத்தைச் செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கடைந்து எப்பொழுதும் ஸூர்யனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப் போர் செய்கின்றனரென்றும், அந்தணர் முதலியோர் ஸர்த்யா காலங்களில் மந்த்ரபூர்வகமாகக் கையிலெடுத்துவிடும் அரக்கிய தீர்த்தங்கள்
வஜ்யராயுதம் போலாகி அவர்கள் மேல் விழுந்து அவர்களை அப்பால் தள்ளி ஸூர்யனுடைய ஸஞ்சலத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றன வென்றும், அந்தணர் முதலியோர் செலுத்தும் அர்க்கியத்தின் ஆற்றலால் ஸூர்யமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து ஜ்வலிக்க (விளக்கில் விட்டில்போல்) அத் தீயில் அசுரர்கள் விழுந்து மாண்டு போகின்றனரென்றும் ஓதப்பட்டுள்ளது.-இரண்டு ஸூர்யமண்டலம் ஏககாலத்திலே ஓருதயகிரியில் உதித்தெழுந்து விளங்கினாற் போன்ற எம்பெருமான் கண்கள், வல்லியலாரான அவ்வசுரர்களுக்குப்போல, மெல்லியலாரான எமக்கும் தாபஞ் செய்கின்றவே; வலியாரை யழித்து மெலியாரைக் காத்தருள்கின்ற னென்பது இவ் வண்ணமேயோ? என்று பராங்குச நாயகி வருந்திக் கூறுகின்றாள்.-‘ஏக காலத்தில் இரண்டு ஸூர்ய மண்டலம் உதித்தாற்போல்” என்றது இல்பொருளுவமை (அபூதோபமை) அரக்கராகிய மந்தேஹரை அசுரரென்றது- கொடுமையில் ஒற்றுமையால். அசுரர¬- உருபுமயக்கம்; அசுரர்க்கு எனப் பொருள் படுதலால்.‘உதயம்மலை’ = மகாவொற்றுதலைபற்றிய விரித்தல் விகாரம்.–மந்தேஹர்கள் எரிகொள் செந்தீயில் வீழ்ந்து அழிதல் எப்பொழுதும் நிகழ்தலால் அத்தன்மையை ‘மீண்டு’ என்பதனாற் குறித்ததென்னலாம்;-மீண்டும் மீண்டும் என்றவாறு. அன்றியே,மீண்டு = (ஸூர்யனை வருத்துதலாகிய தம்தொழிலில் நின்றும்) நீங்கி என்னவுமாம்-‘விர்வ’ என்பது வினைமுற்று. ‘விளரியது’ என்பதை ‘விளரி’ என்பதன் மேற்பிறந்த ஒன்றனபாற் குறிப்பு முற்றென்று கொண்டால் அகரம் சாரியையாம்;
‘விளர்’ என்பதற்மேற் பிறந்ததென்றுகொண்டால் இகர அகரம் இரண்டும் சாரியையாம்;
விளரியென்றசொல் – மிக்க விருப்பமென்னும் பொருளதாதலை (சூடாமணி நிகண்டு-ளகரவெதுகை-15).-விளரியே யிளமை யாழிலோர் நரம்பு யாழ் நீள்வேட்கை” என்றதனாலும்,
விளர் என்பத செழிப்பென்னும் பொருளாதலை “விளரென்பிகிளமைதானே வெளுப்போடு கொழுப்புமாகும்” என்றதனாலும் உணர்க.

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த-சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய் உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு ஏக காலத்திலே ஸஹ சரிதமாய் உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின–எம்பெருமான் கண்கள்-அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக் கண்கள்-மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே-அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே (மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் ) எம்போலியர்க்கும் விரிவ-ஆனுகூல்யம் யுடையவராய்-அபலைகளான நம் போல்வாருக்கும் தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன-சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது-இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –இத்தால்-ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன-இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று
-விளரி என்று வெளுப்பாய் வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும் ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால் அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது என்னைப் போன்ற வரீலுமாய்-இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்-இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது-இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்-மீண்டவற்றுன் என்றதுகச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று பெருமாள் அருளிச் செய்தும் மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமான் முதலில் அகக்கண்ணுக்கு இலக்கான பொழுது தம்பக்கல் வைத்த கடாக்ஷந்தானே பின்பு பூர்ணாநுபவம் பெறாமையால் வருந்துமளவில் தமக்குப் பரிதாப ஹேதுவாகத் தோன்றும் விதத்தை ஆழ்வார் அன்பரோடு கூறுதலாம். எம்பெருமானது மைம்மலை போல விளங்குந் திருமேனியிற் சோதிவடிவமாய்க் காணப்படுகிற கண்களின் நோக்கம் அநுபவத்தைக் கொடாமையால் பிரதிகூலர்க்குத் துயர் விளைத்தல்போல அடியவரான எமக்கும் வருத்தம் விளைவிக்கின்றன! இப்படிப்பட்ட எம்பெருமான் லோகத்துக்கு ரக்ஷகனாகுந் தன்மை எங்ஙனே? என்கிறார்.-தம்மை விரைவிற் சேர்த்துக் கொள்ளாமையா லுண்டான ஆற்றாமை அவனுடைய ரக்ஷகத்வத்திலும் சங்கை செய்யும்படியாயிற்று என்க.

தாத்பர்யம்-கீழே ஞான வ்ருத்தைகள் திருவேங்கடம் சொல்ல-உணர்ந்து அவனது திருக்கண்கள் முன்னே தோற்ற நிரந்தரம் அனுபவிக்கப் பெறாமல் பாதகம் ஆகும்படியை தோழிக்கு சொல்லும் பாசுரம்
சூர்யன் உதிக்கும் பொழுது மந்தேகர் தடுக்க ப்ராஹ்மணர் காயத்ரி அர்க்யம் விட சூர்யன் தேஜஸ் மிக்கு அதில் விழுந்து மடிவது போல் உதய கிரியில் உள்ள இரண்டு சூர்யன் போல் இரண்டு திருக்கண்கள்
எம்முன்னே தோற்றி -என்னைப் போலவே பிரேம பரவசராய் உள்ளோர் முன்னும் தோற்றி மிகவும் பாதியா நின்றது-மந்தேஹா கூட்டம் போல் ஆழ்வார் தமர் உலகோர் ஹரி ஹரி சொல்வதும் இந்த பாதகம் பொறுக்க மாட்டாமல் தானோ-தண் தாமரைக் கண்களை இப்படி அக்னி போல் சொல்வது
ஆற்றாமை மிக்கு — குண அனுபவம் -கொடுத்த ப்ரீதி அனுபவம் தலைக் கட்டாமையால் வெறுத்துச் சொன்ன படி

9-6-உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி-ப்ரவேஸம்-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் -என்று-தம் இருப்பில் நசை அற்றுச் சொன்ன வார்த்தை அன்றோ -மேல்
இவ்வளவில் வந்து முகம் காட்டி இவரைப் பெறுதல் –இல்லையாகில் இழத்தல் –செய்ய வேண்டும்படி யான நிலை ஆயிற்று –
இந்நிலையிலே திருவடி சென்று கிட்டின போது-முன்பு பல நாள் பட்ட துக்கமும் கிடக்கச் செய்தே-பெருமாளும் வாராது இருக்க
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -36-11-
பன்னிரண்டு ஆண்டு பெருமாளும் தானும் ஒருபடிப்பட கலந்த கலவி வந்து
பிராட்டியின் நினைவுக்கு விஷயம் ஆனால் போலே –
இருத்தும் வியந்து -என்ற 8-6-திருவாய் மொழியிலே -தலைதடுமாறாக பிறந்த கலவி வந்து-நினைவுக்கு விஷயம் ஆயிற்று
இங்கு திருவடி போல்வார் வர வில்லை -ஸத்ருச அத்ருஷ்ட-ஸத்ருச -சம்பந்த பதார்த்தம் –அத்ருஷ்ட வசத்தால் என்றுமாம் –

அதற்கடி-
இவர் மேற்கொண்ட கைங்கர்யத்தை முடியச் செய்து-தலைக் கட்டுகைக்கு தகுதியான ஜீவன அதிர்ஷ்டமாவது –
அன்றிக்கே –-
இவர் சொல்லக் கேட்கையிலே பாரித்துக் கொண்டு இருக்கின்ற ஈஸ்வரனுடைய பாக்யமாவது –
அன்றிக்கே –
பகவானை அனுபவிக்கிற அனுபவத்தால் உண்டான ப்ரீதி-உள் அடங்காமை வழிந்து புறப்பட
இவர் சொற்களைக் கேட்டு பகவத் விஷயத்திலே ருசி பிறக்க இருக்கிற மக்கள் உடைய பாக்கியமாவது –
நின் கண் வேடிக்கை எழுவிப்பேன் -இது அன்றோ ஆழ்வார் செய்த கைங்கர்யம் —
இராமர் பாக்யம் சீதை பாக்யம் -தரணி செய்த பாக்யம் -தவம் உடைத்து தரணி -கம்பர் –
சேர்த்தி சேவை இன்றும் நமக்கு அதிருஷ்டம் -நாம் தான் பாக்கியவான்கள் -மூன்றும் என்றால் போலே –

இப்படி -இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் பேசப்பட்ட கலவி வந்து நினைவுக்கு விஷயம் ஆயிற்று-
சமாத்வாதச -பிள்ளாய் -இன்று இங்கு வெறும் தரையாய் இருக்கிற நான்-
எங்கள் மாமனார் மாளிகையிலே பன்னிரண்டு ஆண்டு ஒருபடிப்பட இராம குணங்களை விளை நீர் அடைத்துக் கொண்டேன் காண்
என்றாள் அன்றோ –

வீற்று இருந்து ஏழு உலகம் -கலவி என்றாலும் இருந்தும் வியந்து -என்பதில் தான் நெறி மாறி அனுபவம் –
இங்கு -இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியிலே-மூ வுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்ட
சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தான் -என்கிறபடியே
புறம்பு எங்கும் முறையிலே கார்யம் செய்தவன்-இவர் ஒருவர் அளவிலும் அன்றே -முறை கெடக் கார்யம் செய்தது
–8-7/9-6 ஏகார்த்தம் -இரண்டிலும் -சிறிய என் ஆருயிர் உண்ட -இங்கும்
அப்படிப் பட்ட அக்கலவி தான் இப்பொழுது-ஒரு நினைவின் அளவில் இருக்கை அன்றிக்கே-நினைதொறும் -ஸ்ம்ருதி விஷயம் –
அப்பொழுது உண்டான அக்கலவி இன்பத்தை-இப்பொழுதும் அனுபவிப்பதாக ஒரு புத்தி பிறந்தது -என்றது
அப்படியே மேன்மை உடையவன்-அம்மேன்மையும் கிடக்கச் செய்தே-
தாழ நின்று கலந்த குணத்தையும்-வடிவு அழகையும் சொல்லி-அது தான் இப்பொழுதைய அனுபவமே யென்னும்படியாய்
இருப்பது ஒரு புத்தி பிறந்து –
அவனுடைய சீல குணத்தை நினைக்கும் நினைவாலே-உருகுகிறார் -என்றபடி –

விஸ்வரூபம் ரூபம் அத்புதம் ஹரே -நினைத்து -இன்பம் இல்லை -கண் முன்னால் சஞ்சயன் -இன்றும் கண்டால் போலே –
ஆச்சார்ய அனுக்கிரகத்தால் – -நினைவு மாத்திரம் அன்றிக்கே –
நேராக காண்பது போன்ற இன்பம்
மேன்மை -இருத்தும் வியந்த -வாமனன் த்ரிவிக்ரமன் -சொன்னபடி -கார் முகில் வண்ணன் -அழகையும் -சொல்லி –

கடலைத் தரை காண்பாரைப் போலே-இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியின் அனுபவத்தை-
இதிலே கொண்ட வந்து சேர்ப்பதே நம் முதலிகள் -என்று ஈடுபட்டு அருளிச் செய்வர் நஞ்சீயர்–
அப்ராப்தியும் கிடக்கச் செய்தே-சீல குணத்தை நினைக்கும் நினைவாலே உருகுகிறார் ஆயிற்று
ப்ரீதி இன்மையை உட்கொண்ட குண அனுசந்தானம் காண்-என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை-
ஸ்ம்ருதி மாத்ர வியசனம் இருக்கச் செய்தெ -பிரத்யக்ஷ சாமானாகாரம் தர்சனம் இல்லையே -அதனால் அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் –

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின-
இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து

சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே-
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம்
ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

எர்ணா குளம் பக்கம் திருக் காட்கரை -பெரிய கோயில் –
போகத்திலே தட்டு மாறும் சீலம் காட்கரையிலே -கரை அழிக்கும் –
ஞானம் -தர்சன் பிராப்தி -ப்ரீதி காரித கைங்கர்யம் வரை -மூன்று தசைகள் உண்டு –
மயர்வறமதி நலம் அருள பெற்று அந்தாமத்து அன்பத்து-அனுபவம் கலந்து –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்து -உகந்து பெற்றார் ஆழ்வார்-

ஆறாம் திருவாய்மொழியில் கீழ் இவர் ஸ்மாரக தர்சனத்தாலே அத்யந்தம் அவசன்னரான அளவிலே
ஆஸ்வாச கரமாம்படி ஈஸ்வரன் தன் குணங்களை பிரகாசிப்பிக்க -அவனுடைய
ஆச்சர்ய பிரகாரத்தையும்
அனுபஹித பந்யத்தையும்
உதார குண ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலத்தையும்
ஆஸ்ரித பவ்யதையையும்
அத்யந்த வ்யாமோஹத்தையும்
வ்யாமோஹ பர்யவசானத்தையும்
அபேஷா நிரபேஷமான நித்யாதரத்தையும்
அனுபாவ்ய ஸுந்தர்யத்தையும்
அபி நிவேச ஸைக்ர்யத்தையும்
அனுசந்தித்து இந்த குணங்களினுடைய வைலக்ஷண்ய அனுபவத்தால் பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே
மிகவும் சிதிலராகிறார் –

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

திருக் காட்கரையிலே எம்பெருமானுடைய-ஆச்சர்யமான செயல்களை நினைதொறும் என் மனம் உருகா நின்றது –என்கிறார்-

மனசு ஸைதில்யாம் மாற்றவோ -அபி நிவேசம் அகம் சுரிப்படுத்தவோ -அனுபாவ்ய குணாதிகனை விலக்கவோ-ஆஸ்ரய கரமான சாபல்யத்தை தவிர்க்கவோ –

போகம் -தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -சேஷி சேஷ பாவம் -ஆராவமுத ஆழ்வான் -திரு மழிசைப்பிரான் -ஏதோத்த காரி போலவும் –

நினைதொறே–ஊரை நினையும் தோறும்-அழகினை நினையும் தோறும்-ஒரு ஊரும் வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத் தன்மையை நினையும் தோறும் –

———

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்– வினை கொள் சீர் பாடிலும்-எனது ஆர் உயிர்–வேம்-
பாபங்களை விழுங்கும் -அபகரிக்கும் –பாவங்களைப் போக்குகின்ற கல்யாண குணங்கள்-என் ஒருவனையும் அழியா நின்றன –

அன்றியே
சீர் -என்று சீலமாய்-வினை -என்று செயலாய் –அதாவது சீலத்தின் கார்யமாய் தாழ நின்ற செயல்கள் -என்னுதல்

உனக்கு நான் ஆள் செய்யும் நீர்மை -நினைக்க -உருகி விட்டால் முடியாதே -முதல் அர்த்தம்
பகவானுக்கு ஆள் செய்கை நீர்மை இல்லையே -ஸ்வ பாவம் தானே –இங்கே அவன் ஆழ்வாரை மேலே இருத்தி கைங்கர்யம் செய்யும் நீர்மை -என்றவாறு –
நான் எனது -என்பதை நீர் நுமது வேர் முதல் -சொன்னால் போலே வார்த்தைப் பாட்டில் ஆவது இப்படி
நான் உனக்கு ஆள் செய்வது சொல்லி வைப்போம் -பரம பிரமாதா அன்றோ ஆழ்வார்-புரிந்த அந்தரங்கள் ஈடு மூலம் அறிவார்கள் -எம்பார் நிர்வாகம்

நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –நான் உனக்கு அடிமை செய்யும் வகை-நினைக்க மாட்டு கின்றிலேன்
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்று இருந்தமையைத் தெரிவிப்பார் –நான் -என்கிறார்
வகுத்த சேஷி யானவன் இறைவன் ஆதலின் –உனக்கு -என்கிறார் –
அவன் தாழ நின்று புரிந்த செயல்களை விநயத்தாலே-ஆள் செய்யும் நீர்மை -என்கிறார்-
அவன் தமக்கு ஆள் செய்யும் நீர்மையை –தாம் ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன் -என்கிறார் –
இச் சொலவையும் இழக்க ஒண்ணாது என்று-நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மை என்பான் என்-
நீ எனக்கு ஆள் செய்யும் நீர்மை என்னாமல்-என்ன-இச் சொலவையும் இழப்பரோ பாவியார் -என்று பணிப்பர் எம்பார்-
நம் விதி வகையே வாட்டாற்றான் -ஆழ்வார் ஆசைப் பட்டதையே தனது விதி ஆக்கி வைத்தான் அவனும்

———

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

அடிமை கொள்ள என்று புகுந்து-தன் படிகளைக் காட்டி-எல்லா வற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை
நினைக்க முடியாதவனாக இருக்கிறேன் –என்கிறார் –

என் உயிராய் என் உயிர் உண்டான் –போக்தாச்ச பிரபுரேவச -எனக்குத் தாரகன் போலே புகுந்து என்னை அழித்தான் –அழிக்குமவனாகப் புகுரில் இவர் இசையாரே –
இருவரும் கூட உண்ணப் புகுந்து உண்பவன் தானே ஆனான் –

அன்றிக்கே
என் உயிராய் என் உயிர் உண்டான் -என்பதற்கு-தன்னால் அல்லது சொல்லலாதபடி என்னைச் செய்து என்னை உண்பதும் செய்தான் -என்றுமாம் –

கார் முகில் வண்ணன்-
என்னுடைய சேர்க்கையாலே–பக்தி பூமா அன்றோ இவர் -கடலை முழுக்கப் பருகின காளமேகம் போலே ஆயிற்று அவன் வடிவில் செவ்வி இருப்பது –
தூ நீர் முகில் போலே தோன்றாயே-8-5-3-என்று இவர் ஆசைப்பட்ட படியே தோற்றி அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு-அத் தலையில் செவ்வி இருந்த படி –

——–

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

முறை தவறாமல் சர்வ ஆதார பூதன் -சர்வாந்தராத்மா -ஆனவன் -அதி ஸூத்ரனான என்னுடன் கலந்து அனுபவித்த
சீல அதிசயத்தை அளவிட்டு சொல்ல அறியேன்–சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தார் -8-7-8- என்றதனைச் சொல்லுகிறார் –

சிறிய என் ஆர் உயிர் உண்ட- சிறியேனுடை நல் உயிரை -என்றது-மிக்க அற்பனான என்னுடைய ஆத்துமாவை -என்றபடி –
அவனுடைய மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாததைப் போன்று- தம்முடைய சிறுமைக்கும் எல்லை இல்லையாக நினைத்து இருக்கிறார் –

ஆர் உயிர் – இவர் தம்மை சிறுக நினைத்திரா நின்றார்-அவன் இவரை நித்ய ஸூரிகட்கும் அவ்வருகாக நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை சிறுக நினைத்தால் பயன் என் –இவர் தம்மைத் தாம் அறிந்தாரோ -என்று-மேல் விழா நின்றான் – யானே என்னை அறிய கிலாத என்று அன்றோ இவர் இருந்தார் –

சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே அறிகிலேன் – இது முன்னம் ஸ்வரூப ஞானத்தால் செய்தது ஓன்று அன்றே –
ஸ்வரூப ஞானத்தால் விரும்பினால் அன்றோ ஸ்வரூபத்து அளவு நிற்பது –கழி பெரும் காதல் –முறையை அழிக்கும் அன்றோ –

———

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-(எம் கண்ணன் கள்வங்களே-பாட பேதம் )

என்னை அடிமை கொள்பவனைப் போல் புகுந்து-என் உடலையும்-உயிரையும் கொண்டான் –எனக்கும் ஹேயமான சரீரமும் –அத்துடன் வியாப்தமான ஆத்மாவையும் –
ஹேய உபாதேய விபாகம் அற – ஒருவனுடைய-கழி பெரும் காதல் -இருந்தபடி என் –என்று ஆச்சர்யப் படுகிறார்-திருவருள் தான் பெற்றானாய் இரா நின்றான்-
ஆதலின் –திருவருள் செய்பவன் போலே -என்கிறார் –

கள்வங்களே– முகப்பில் ஒன்றாய்-முடிவில் ஒன்றாய் -இருக்கும் செயல்கள் –
1-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-தான் ஏவப் படுகிறவனாய் -தாழ நிற்கையும் –
2-விரோதியான சரீரத்தை -கழித்து தர என்று புகுந்து- உடலையும் உயிரையும் வேறு படுத்து உணர்தலை-செய்யாது ஒழிகையும்-
3-இனிய பொருளாக புகுந்து தான் அனுபவிக்கின்றவன் ஆகையும்
4-என் பேறாகப் புகுவானாகப் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும்
5-இவை முழுதும் வடிவில் வேறுபாட்டால் தோற்றி இருக்கையும் ஆம் –க-ருவளர் மேனி
இத்தலையில் ஆத்தும அபகாரத்தை தவிர்த்தது-தன் ஆத்தும அபகாரத்தாலே ஆயிற்று –

————

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அவன் வஞ்சகன் என்று அறிந்தால்-அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்-நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே–அதி வியாமுக்தன் வியாபாரங்கள்-ருஜுவாய் நேர்மையாய் இருக்கும் -அவ் வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –

எனக்குச் செம்மாய் இருக்கும் -என்றதற்கு-எனக்கு சேமமாய் இருக்கும் என்று ஒரு தமிழ் புலவர் பொருள் கூறினார் –

புன் கண்மை – பேகணிப்பு-தீனம் -சிறிய ஞானம் இரண்டு அர்த்தங்கள் –பொல்லா நோக்கை உடைத்தாய் என்கை–புன் கண் -புல்லிய அறிவு-கண் -அறிவு-
பட்டர் -இதற்கு-புன் கண்மை எய்தி--மீளவும் அறிவை அடைந்து-மீள உயிர்ப் பெய்து -என்று ஆயிற்று நிர்வஹித்து போவது
இது தானே சொல்லோடு சேர்ந்து இருக்கிறது இல்லை–கேட்கப்பட்ட இந்த பொருளோடு -சொல்லும் சேரப் பொருந்தி வழக்காறாம் படி எங்கனே-
என்று ஆராயா நிற்கச் செய்தே -நஞ்சீயர் நம்பிள்ளை உடன் ஆராயா நிற்கச் செய்தே –
கோதான இது மீளவும் புன் கண்மை எய்தும் போது (சிறிது ஞானம் பெற்று) மீளவும்-உயிர்ப் பெய்தது ஆக வேண்டும் அன்றோ –
பொருளின் தன்மையாலே தன்னடையே வரும் என்று-நான் -நம்பிள்ளை -சொன்னேன்–சீயர் போர உகந்து அருளினார் -என்று அருளிச் செய்வர் –

————-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7–உயிரான பாசுரங்கள் இது முதல் மூன்றும் –

திவ்ய தேசம் -பிரதானம் -இங்கே நித்ய வாசம் செய்வதால் அவனுக்கும் கும்பீடு -அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என் உயிரை நேராக உண்டு-
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது–பின்னையும் உண்ணாதாரைப் போலே-இருக்கும் -என்கிறார் –

ஈஸ்வரன் தனக்கேயாய் இருக்கும் -அசித்துப் பிறக்கேயாய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கும் —
என்ற முற்பட்ட நினைவு -அங்கண் இன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமசாலே
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் -(பிரணவத்திலும் -நாராயணாயா என்றத்திலும்) —சூர்ணிகை -91-93-
அகாரம் இல்லாத பிரணவம் இல்லையே -அவன் விருப்பம் செய்வதே அடிமைத் தன்மை -திரு உள்ளம் படியே வேதம் சொல்லும் –
எதிர் விழி கொடுக்கும் பார தந்தர்யம் -அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் –
அசித்து போலே பாரதந்தர்யம் -அவனுக்கே என்ற நினைவால் -அவன் அனுபவம் வளர்க்க -இதுவும் வேண்டுமே -அவன் போகம் அழிக்க கூடாதே –

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே –திருவருள் -என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் – கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து -மாயனால் -என்கிறார் –

——

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

அபேஷா நிரபேஷமாக -இவருக்கு என் ஆத்மா பட்ட பாடே —ஆட் -பட்ட பாடே–ஹர்ஷத்தாலே -இதில் -ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –தரைப் பட்டு முன்பு பேசினார்

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்-பெறாப் பேறு பெற்றால் போலே அனுபவிக்கிற இவனுடைய-குணத்தின் தன்மையை-பொறுக்க ஒண்ணுகிறது இல்லை-என்கிறார்

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-(இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –)வெறிதே அருள் செய்வர் -8-7-5- எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் –பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும் என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க-தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –

நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் – ஒரு நாள் அனுபவித்து-இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று-கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து – அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –முற்றவும் தானுண்டான் –
அணு அளவிதான இவ் உயிரை-எங்கும் பரந்து இருக்கிற தான்- விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது-தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து-இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –

காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு – கறுத்த நீர் கொண்டு எழுந்த-காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே-திருக் காட் கரையிலே வந்து-அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற-நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான் –

———–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

நீரேயோ இப்படிப் பட்டீர்-குண அனுபவத்தையே பொழுது போக்காக உடைய
நித்ய ஸூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன-அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ –என்கிறார் –

அபி நவ அபிமத  விஷய ஈடுபாடு-அன்றோ ஆழ்வாரது -மூத்தவர் நித்ய ஸூரிகள் -யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா –

பகவான் உடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாய் இருக்கிற-இவ் உலகத்திலே நான் பட்ட பாட்டினை-நித்ய விபூதியில் உள்ளவர்கள் தான் பட்டார்களோ -என்கிறார் –
இங்கு எனது உயிர் பட்டது-அங்கு ஆர் உயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்-எல்லார் செய்வதும் குண அனுபவம் தானே –
அங்கனம் இருக்க இவர்க்கு இவ்வாசி கூறினபடி என் -என்று நான் -நம்பிள்ளை -கேட்க
திருமணம் ஆன புதுப் பெண்ணுக்கு கணவனுடைய கைகள்-அவள் மேலே பட்டவாறே வேர்ப்பது விடுவது ஆமாறு போலே
இவர் அனுபவத்தில் புதியர் ஆகையாலே வருகிறது காணும் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

———

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

ஆச்சார்ய சம்பந்தம் ஹேது எனக்கு வேணுமே -அவனுக்கு அது தேவை இல்லை -அநாதி காலமாக அன்றோ -சொத்தை அடைய ஸ்வாமி

பசித்தவன் சோறு கண்டால் போல என்னை போல் அன்றிக்கே தாஹித்தவன் தண்ணீர் கண்டால் போலே-அன்றோ அவன் -பூர்ணமாக பருகினான்

முற்றப் பருகினான் –தன் குணங்களையும்-செயல்களையும்-காட்டி-என்னை நீராக்கி-குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்த்வயித்வா ஏனம் லோசநாப்யம் பிபந்நிவ-யுத்தம் -16-65-
ஸ்ரீ ராமர் -அந்த விபீஷணன் உடைய அந்த வார்த்தையைக் கேட்டு-அவனை வார்த்தையால் சமாதானம் பண்ணி-கண்களால் பருகுவார் போலே

அத்யந்த அல்பன் -அவன் அபரிச்சின்ன ஸ்வ பாவன்-கோனாரை அடியேன் -அஹம் த்வா-சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அஞ்ஞான அசக்தன் -தான் என்னை

கார் ஒக்கும் காட் கரை அப்பன்-ஆழ்வார் திரு மேனி உட்க்கொண்ட –கரு வளர் -ஸ்வாமி பெற்ற புகராலே திவ்ய தேசமும் சோலைகளும்-திருவளர் சோலை ஆயிற்றே

ஆழ்வாருடையது திருக்கோளூர் போல் பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி அன்றோ இத் திருவாய் மொழி

———

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

நிகமத்தில்- இத் திருவாய் மொழியைக் கற்பார்க்கு-பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கொடி மதிள் தென் குருகூர்ச் –கம்சனை வென்ற வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று–ஸ்வாமியின் வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே-அன்றோ கொடி கட்டுவது-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -81-உறுகின்ற கன்மங்கள் மேலன-வீடுமின் முற்றவும் -1-2-

March 19, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –-இவள் குழலில் திருத்துழாய் சூட்டவும் -பகவத் ப்ரசாதம் தருவதும் –திவ்ய தேச வாசமோ தானே பரிகாரம் இவளுக்கு பற்று அற்று புல்க வேண்டுமே-வீடுமின் முற்றவும் -1-2-இதன் விவரணம்-பற்றிலையாய் அவன் முற்றில் அடங்க வேண்டுமே –முன்னிலை படர்க்கையாய் -ஓர்ப்பிலராய் பண்ணுகிறீர்களே -வ்ருத்த ஸ்த்ரீ தோழி சொல்லும் பாசுரம்-விரஹ அக்னியால் தளர்ந்து உள்ள தலைவி –ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-அடிக்கீழ் அமர்ந்து புகுந்து இருக்க வேண்டுமே-திருவேங்கடம் குளம் -திருவடி -சரணம் -நீராடப்போதுவீர் -ப்ரஹ்ம அனுபவம்-ஆட்டவும் -அவஹாகிக்கப் பண்ண வேண்டும்-இவளை -வைலக்ஷண்யம் -விசேஷணம் இல்லாமல் )

இருளும் போய் முடிகி இவளும் மோஹித்து கிடக்க – இவள் தசையையும் காணா நிற்கச் செய்தே பந்து வர்க்கத்தில் உள்ளார் –க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் -என்று ஆறி இருக்க-இத்தைக் கண்டு இவளுடைய அவசாதம் இருந்த படி இது – ஸ்லாக்யதை இருந்தபடி இது – இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு
இவர்கள் நேர் கொடு நேரே இவளைப் பெற்றவர்கள்-அன்றோ -என்று இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள் தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை-தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை ) அருளிச் செய்கிறார் –

உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர்  மெய்ந்நொந்து  பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே
– – -81 –வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல் —

ஓர்ப்பு இலர் ஆய்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அதனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
உறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகிறவளவாகா நின்றது.

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து--2-கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று பரோபதேச பிரவ்ருத்தராய் பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும் பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–வீடுமின் –என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதய -சூர்ணிகை -219–பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்- பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216

உறு கின்ற இத்யாதி –இவர்கள் நிரூபித்து செய்யக் கடவது ஒரு கார்யம்  இல்லையோ -என்கிறாள் –உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய்-மேலே வரக் கடவனவாய் – அவை தான் வர்த்தமானம் போலே-இருக்க வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஓரக் கடவார் இன்றிக்கே –இவளைப் பெறுகின்ற தாயர்  –இவளைப் பெற்றவர்களுக்கு எப்போதும் ஒக்க வயிறு எரிந்தபடி இருக்க வேண்டாவோ –ஒரு லாபாலாபங்கள்  வேணுமோ –இவள் தானாக அமையாதோ –மெய்ந் நொந்து  பெறார் கொல் –இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது-வளர்த்துக் கொண்ட இத்தனையோ –(தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -பெரியாழ்வார் )-என் தான் இவள் இப்படி சொல்லுகைக்கு இவர்கள் செய்தது என் என்ன –துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர் –
மண்ணாயினும் கொண்டு வீசுமினே  -என்ற அளவும் போய் –அது கடக்க நின்று வீசுமளவும் போராதே –
அது தன்னையே கொண்டு வந்து குழலிலே -நிரம்ப-துறுக்க வேண்டும்படி யாயிற்று தசை முடிகின படி –தொல்லை இத்யாதி –இக் குடிக்கு பழையதாக செய்து போரும் பரிஹாரத்தையும் செய்கிறிலர்கள்-வேங்கடமாட்டவும்–கல்லும் காடுமாய் இருக்கிறது அடைய ஒரு தடாகம் போலே காணும் இவளுக்குத் தோற்றுகிறது –ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஸ்மி (பாரதம் )-போலே–சூழ் கின்றிலர் –அது தான் செய்யவும் வேண்டா –உபக்ரமிப்பதும் செய்கிறிலர்கள் –மந்த்ரிப்பதும் (ஆலோசனையும் )செய்கிறிலர்கள்- பகவத் விஷயம் ஸ்பர்ச வேதி யாகையாலே -அடி இட்ட போதே தொடங்கி பலிக்கும் இறே-நோவையும் அறிந்து பரிஹாரம் இன்னது என்று அறிந்து -செய்ய வேண்டாவோ என்ன –இறு கின்றது  இவளதாகம் –இத்தனை க்ரமம் பொறுக்குமோ -இவள் பிரகிருதி –இற்றிற்று அழிந்து போகா நின்றது–மெல்லாவி எரி கொள்ளவே –மிருதுவான ஆத்ம விரஹ அக்னி கொளுத்தி வேவா நிற்க க்ரமம் பார்த்து இருக்கக் கடவதோ –

வெறி விலக்கு-ஒர்ப்பிலராய் -இனி இவளுக்கு ஆகக் கடவது-நிலைமைகளை ஆராயத்தவர்களாய்
வேங்கடமாட்டவும் -திவ்ய தேசமே இவள் தாபம் தீர்க்கும் தடாகம் என்றவாறு-வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-திருவேங்கடமலை யாத்திரை கூட்டிச் செல்ல பிரார்த்தித்து அத்தை நிறைவேற்றாமல் உள்ளீர்களே-திருவேங்கடத்தில் இவளை நடையாடச் செய்ய எண்ணு கின்றிலரே- இவர் ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளில் இழியாமல் -வேறு வழிகளில் இழிவதே – பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாஸமுமே இவர் ஆற்றாமைக்கு பரிஹாரம் இவை செய்யாமல் இவர் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது -என்றவாறு–வெறி விலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக வேட்கை நோய் கொண்டு மேனி மெலிந்து வடிவு வேறுபட, அது நோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல், இறைச்சி தூவல், கருஞ்சோறு, செஞ்சோறு வைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன் மேலொன்றாகச் செய்யத் தொடங்க, நோயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட
முன்னிலைப் படர்க்கையாகக் கூறியதாயிது.

இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும்
அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும், வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும் வழியிலே முயலாது இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும். எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே இந் நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே! ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.-“ஓர்ப்பு இலராய்” என்பதற்கு– ‘இவளுக்கு இனி ஆகக் கடவனவாய நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப- ‘இவளுக்கு இனி ஆகக் கடவனான நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப. எம்பெருமானுகந்தருளின திவ்யதேசத்தை
இவள் தாபந் தீர்ப்பதற்கு உரியதொரு பொய்கையாக நினைத்தனளாதலால் ‘வேங்கடம் ஆட்டவும்’ என்றது.அன்றி ‘வேங்கடமாட்டவும் சூழ்கின்றலர்’ என்பதற்கு- திருவேங்கடமலைக்கு இவளை யழைத்துக்கொண்டு வருகிறேனென்று பிரார்த்தனை பண்ணிக் கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றேனென்று பிரார்தனை பண்ணிக் கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றாரில்லை என்றாவது, திருவேங்கடத்திலே இவளை நடையாடச் செய்தற்கு எண்ணுகின்றிலர் என்றாவது உரையிடலாம். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை
திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்விக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே.-அது செய்யக் காணோமே; வீண் செயல்களே செய்து நோயை வளர்த்திக் காலங்கழிக்கின்றனரே! என்று இரங்கிக் கூறியவாறு.

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் -இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன–இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்-இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும் வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே-பிழைக்கும் வழி இல்லை இறே–துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்-திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்–தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும் விரகு பண்ணு கிறிலர்–ஆட்டுதல் –-அங்கே நடையாடப் பண்ணுதல்–சூழ்தல் –-விரகு செய்தல்-அன்றியே – திரளுதல் ஆகவுமாம்–இறுகின்ற தாலிவாளகம்-இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –மெய் நொந்து பெறார் கோல்-என்று அந்வயம்இத்தால்-பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப் பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்-பகவத் ப்ரஸாதமும்-தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது – இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது

இப் பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரை ஆற்று விக்கவேணுமென்று ஞானிகள் தங்கள் பரிவால் வேறுசிலவிதமான பரிஹாரங்களைச் செய்யப்புக, இவரது தன்மையையயறிந்த அன்பவர்கள் இவராற்றாமையைத் தணிக்கும் வழிகளயில் இழியாமல் வேறு வழிகளில் இழிந்து என்னபயனென்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம். பகவத் ப்ரஸாதமும் திவ்யதேச ஸரஸமுமே இவராற்றாமைக்குப் பரிஹாரம்; அவை செய்யாமையான் இவர்க்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது என்கை.

ஸ்வா பதேசம்-இப் பாட்டால் தரிப்பிப்பார்க்கும் ரஷகனுக்கும் இடமறும்படி இவர் பகவத் விஷயத்திலே
அவஹாகித்த படியாய் சொல்கிறது – (பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாசமும் பரிகாரம் )உறுகின்ற இவளை -என்கையால் ஸ்லாக்கியதை
தொல்லை மார்க்கம்–திருவேங்கடமுடையான் திருவடி சேர்க்கும் பிரபத்தி மார்க்கம்–இவள் அருமை அறியாதவர்களாய் இருக்கிறார்களே –

தாத்பர்யம்--மோஹித்து கிடந்த நாயகியைக் கண்ட ஞான விருத்தை -மூதாட்டி – நோயை அறியாத பந்துக்களை வெறுக்கிறாள்-உடல் பிராணன் வருந்தி இருக்க இவளை உபேக்ஷித்தால் உத்தர -மேல் வரப்போகும் -ஆபத்தை ஆலோசிக்காமல்-திருத்துழாய் முடியில் சேர்க்காமலும்-திவ்ய தேச வாசம் சேர்க்கும் முறையையும் மெய் வருந்தி பெற்ற தாய் வயிறு எரியாமல் ஏதாவது ஒருபரிகாரம் செய்து மீட்கப் பார்க்காமல் இவர்கள் உபேக்ஷித்தார்கள்

1-2-வீடுமின் முற்றவும் -அவதாரிகை –

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே-
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-

இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்’ அன்றே?-‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’ என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்–இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும்,  ‘மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,  ‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .

இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண் வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று  பலகாலும் அருளிச் செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

1- சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
2-இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
3-பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
4-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
5-பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
6-அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
7-இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

தத்வ ஹிதங்கள் இறே சாஸ்திரங்களில் ப்ரதிபாதிக்கிறது –
ஹிதமாவது அலவ்கிக புருஷார்த்த சாதனம் என்பதால் புருஷார்த்தம் ஹித்துக்குள்ளே சொருகி இறே இருப்பது
பூர்வ த்விகம் -தத்வம் நிரூபணம் -உத்தர த்விகம் -ஹித நிரூபணம் –
அந்த சாயையிலே முதல் திருவாய் மொழி தத்வ நிரூபணம் -இரண்டாம் திருவாய் மொழி ஹித நிரூபணம்
வீடுமின் முற்றவும் -1-சம தமாத் யுபேத ஸ்யாத் -ஸூ த்ரார்த்தம்
மின்னின் நிலை 2– வைராக்ய பாத அர்த்தம்
புல்கு-4 -என்று பகவத் அனுசந்தானத்துக்கு ப்ரீதி ரூபத்வம்
அற்றது பற்று எனில் –உற்றது வீடு உயிர் -ஞான யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டினால் அங்கே தாழாமல் இருக்க உபதேசம்

முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல் ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே 1-ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான தத் இதர சகல தியாகத்தையும் -2-பஜன பிரகாரத்தையும் 3-அஸ்தைர்யத்தையும் 4-தியாக பிரகாரத்தையும் -5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும் -7-சர்வ ஸமத்வத்தையும் -8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும் -9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –

இந்த லோகத்தில் ஆத்மாக்களில் பகவத் ஏக போகராய் இருப்பார் இல்லாமையால் இவர்களை பகவத் ஏக போகராக்கிக் கொண்டாகிலும் அனுபவிக்க வேணும் என்று இந்த ஆத்மாக்களைக் குறித்து பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை பகவத் வியதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார் –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1-

சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.

வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி

உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ ) என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்-4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்

உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’  என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ உம் உயிர்’ என்றும் அருளிச் செய்கிறார்.
உடையானிடை-பொதுவில் உடையான் என்கிறார்  என்கிறார்;– சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.-நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.

இத் திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்-முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –

——-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

மன் உயிர் ஆக்கைகள் –உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்ம வஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,-அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு- ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம் 

இறை உன்னுமின் –இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.-நீரே –இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.-சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.-இவ்வாத்மா சம்பந்தியான சரீராதி பிராகிருத விஷயங்களினுடைய
அஸ்திரத்வாதி தோஷங்களை நீங்களே ஆராய்ந்து உணருங்கோள் -உணரவே எளிதாக விடலாம் -என்கிறார் –

————

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–
1-2-3-

த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

நீர் நுமது – அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.-ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.

இறை சேர்மின் – அப்ராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.-சேர்மின் சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு, முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்– உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.

—————-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.

துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.உள்ளதும் –அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம்

எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய
:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.

புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் – அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.

பற்று அற்றே –அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.-இறைவன் ‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.

சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் 

ஸ்ரீ பன்னீராயிரப்படியில் மட்டும் உள்ள விலக்ஷண ஸ்ரீ ஸூக்திகள்-கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் –
பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –

————–

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –அருளிச் செய்கிறார்.(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை-உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது;-அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.-அற்ற இறை பற்று – ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்–‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே-

இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –

—————–

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் –அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்-பற்றிலன் –பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;-அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.

முற்றவும் நின்றனன் –ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.–பற்றிலையாய் – நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்-அவன் முற்றில் அடங்கு – அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே, அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘முற்றவும் நின்றனன் –அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான் –முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-;பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?அவன் முற்றில் அடங்கு –அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:

—————-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே 
–1-2-7-

சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;-தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்-அந்த சம்பத் எல்லாம் என் ஸ்வாமியினுடைய சம்பத் என்று அனுசந்திக்கவே கூசாதே சென்று அணுகலாம் –அப்படி அனுசந்தித்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார் –.சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம்-இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர் –பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –

————–

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே 
–1-2-8-

அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச் செய்கிறார்.
-இப் பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா-முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்-

—————–

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9-

நீங்கள் அவனைக் கிட்டவே விரோதிகள் அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.எல்லாம் விடும் – அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.-பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து -பின்னையும் அந்திம தசையில் நினை என்று அந்திம ஸ்ம்ருதியை விதிக்கிறது என்பாரும் உளர் –

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.

அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

—————-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள்-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து –நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது
 –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி ––பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப் பாட்டு பிரமேயம்

————–

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-

உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால், ‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் – கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –