ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –-இவள் குழலில் திருத்துழாய் சூட்டவும் -பகவத் ப்ரசாதம் தருவதும் –திவ்ய தேச வாசமோ தானே பரிகாரம் இவளுக்கு பற்று அற்று புல்க வேண்டுமே-வீடுமின் முற்றவும் -1-2-இதன் விவரணம்-பற்றிலையாய் அவன் முற்றில் அடங்க வேண்டுமே –முன்னிலை படர்க்கையாய் -ஓர்ப்பிலராய் பண்ணுகிறீர்களே -வ்ருத்த ஸ்த்ரீ தோழி சொல்லும் பாசுரம்-விரஹ அக்னியால் தளர்ந்து உள்ள தலைவி –ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-அடிக்கீழ் அமர்ந்து புகுந்து இருக்க வேண்டுமே-திருவேங்கடம் குளம் -திருவடி -சரணம் -நீராடப்போதுவீர் -ப்ரஹ்ம அனுபவம்-ஆட்டவும் -அவஹாகிக்கப் பண்ண வேண்டும்-இவளை -வைலக்ஷண்யம் -விசேஷணம் இல்லாமல் )
இருளும் போய் முடிகி இவளும் மோஹித்து கிடக்க – இவள் தசையையும் காணா நிற்கச் செய்தே பந்து வர்க்கத்தில் உள்ளார் –க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் -என்று ஆறி இருக்க-இத்தைக் கண்டு இவளுடைய அவசாதம் இருந்த படி இது – ஸ்லாக்யதை இருந்தபடி இது – இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு
இவர்கள் நேர் கொடு நேரே இவளைப் பெற்றவர்கள்-அன்றோ -என்று இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –
இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள் தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை-தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை ) அருளிச் செய்கிறார் –
உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல் —
ஓர்ப்பு இலர் ஆய்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அதனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
உறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகிறவளவாகா நின்றது.
வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து--2-கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று பரோபதேச பிரவ்ருத்தராய் பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும் பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–வீடுமின் –என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதய -சூர்ணிகை -219–பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்- பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216
உறு கின்ற இத்யாதி –இவர்கள் நிரூபித்து செய்யக் கடவது ஒரு கார்யம் இல்லையோ -என்கிறாள் –உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்-மேலே வரக் கடவனவாய் – அவை தான் வர்த்தமானம் போலே-இருக்க வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஓரக் கடவார் இன்றிக்கே –இவளைப் பெறுகின்ற தாயர் –இவளைப் பெற்றவர்களுக்கு எப்போதும் ஒக்க வயிறு எரிந்தபடி இருக்க வேண்டாவோ –ஒரு லாபாலாபங்கள் வேணுமோ –இவள் தானாக அமையாதோ –மெய்ந் நொந்து பெறார் கொல் –இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது-வளர்த்துக் கொண்ட இத்தனையோ –(தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -பெரியாழ்வார் )-என் தான் இவள் இப்படி சொல்லுகைக்கு இவர்கள் செய்தது என் என்ன –துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர் –
மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்ற அளவும் போய் –அது கடக்க நின்று வீசுமளவும் போராதே –
அது தன்னையே கொண்டு வந்து குழலிலே -நிரம்ப-துறுக்க வேண்டும்படி யாயிற்று தசை முடிகின படி –தொல்லை இத்யாதி –இக் குடிக்கு பழையதாக செய்து போரும் பரிஹாரத்தையும் செய்கிறிலர்கள்-வேங்கடமாட்டவும்–கல்லும் காடுமாய் இருக்கிறது அடைய ஒரு தடாகம் போலே காணும் இவளுக்குத் தோற்றுகிறது –ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஸ்மி (பாரதம் )-போலே–சூழ் கின்றிலர் –அது தான் செய்யவும் வேண்டா –உபக்ரமிப்பதும் செய்கிறிலர்கள் –மந்த்ரிப்பதும் (ஆலோசனையும் )செய்கிறிலர்கள்- பகவத் விஷயம் ஸ்பர்ச வேதி யாகையாலே -அடி இட்ட போதே தொடங்கி பலிக்கும் இறே-நோவையும் அறிந்து பரிஹாரம் இன்னது என்று அறிந்து -செய்ய வேண்டாவோ என்ன –இறு கின்றது இவளதாகம் –இத்தனை க்ரமம் பொறுக்குமோ -இவள் பிரகிருதி –இற்றிற்று அழிந்து போகா நின்றது–மெல்லாவி எரி கொள்ளவே –மிருதுவான ஆத்ம விரஹ அக்னி கொளுத்தி வேவா நிற்க க்ரமம் பார்த்து இருக்கக் கடவதோ –
வெறி விலக்கு-ஒர்ப்பிலராய் -இனி இவளுக்கு ஆகக் கடவது-நிலைமைகளை ஆராயத்தவர்களாய்
வேங்கடமாட்டவும் -திவ்ய தேசமே இவள் தாபம் தீர்க்கும் தடாகம் என்றவாறு-வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-திருவேங்கடமலை யாத்திரை கூட்டிச் செல்ல பிரார்த்தித்து அத்தை நிறைவேற்றாமல் உள்ளீர்களே-திருவேங்கடத்தில் இவளை நடையாடச் செய்ய எண்ணு கின்றிலரே- இவர் ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளில் இழியாமல் -வேறு வழிகளில் இழிவதே – பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாஸமுமே இவர் ஆற்றாமைக்கு பரிஹாரம் இவை செய்யாமல் இவர் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது -என்றவாறு–வெறி விலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக வேட்கை நோய் கொண்டு மேனி மெலிந்து வடிவு வேறுபட, அது நோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல், இறைச்சி தூவல், கருஞ்சோறு, செஞ்சோறு வைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன் மேலொன்றாகச் செய்யத் தொடங்க, நோயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட
முன்னிலைப் படர்க்கையாகக் கூறியதாயிது.
இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும்
அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும், வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும் வழியிலே முயலாது இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும். எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே இந் நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே! ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.-“ஓர்ப்பு இலராய்” என்பதற்கு– ‘இவளுக்கு இனி ஆகக் கடவனவாய நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப- ‘இவளுக்கு இனி ஆகக் கடவனான நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப. எம்பெருமானுகந்தருளின திவ்யதேசத்தை
இவள் தாபந் தீர்ப்பதற்கு உரியதொரு பொய்கையாக நினைத்தனளாதலால் ‘வேங்கடம் ஆட்டவும்’ என்றது.அன்றி ‘வேங்கடமாட்டவும் சூழ்கின்றலர்’ என்பதற்கு- திருவேங்கடமலைக்கு இவளை யழைத்துக்கொண்டு வருகிறேனென்று பிரார்த்தனை பண்ணிக் கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றேனென்று பிரார்தனை பண்ணிக் கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றாரில்லை என்றாவது, திருவேங்கடத்திலே இவளை நடையாடச் செய்தற்கு எண்ணுகின்றிலர் என்றாவது உரையிடலாம். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை
திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்விக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே.-அது செய்யக் காணோமே; வீண் செயல்களே செய்து நோயை வளர்த்திக் காலங்கழிக்கின்றனரே! என்று இரங்கிக் கூறியவாறு.
உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் -இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன–இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்-இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும் வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே-பிழைக்கும் வழி இல்லை இறே–துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்-திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்–தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும் விரகு பண்ணு கிறிலர்–ஆட்டுதல் –-அங்கே நடையாடப் பண்ணுதல்–சூழ்தல் –-விரகு செய்தல்-அன்றியே – திரளுதல் ஆகவுமாம்–இறுகின்ற தாலிவாளகம்-இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –மெய் நொந்து பெறார் கோல்-என்று அந்வயம்—இத்தால்-பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப் பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்-பகவத் ப்ரஸாதமும்-தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது – இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது
இப் பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரை ஆற்று விக்கவேணுமென்று ஞானிகள் தங்கள் பரிவால் வேறுசிலவிதமான பரிஹாரங்களைச் செய்யப்புக, இவரது தன்மையையயறிந்த அன்பவர்கள் இவராற்றாமையைத் தணிக்கும் வழிகளயில் இழியாமல் வேறு வழிகளில் இழிந்து என்னபயனென்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம். பகவத் ப்ரஸாதமும் திவ்யதேச ஸரஸமுமே இவராற்றாமைக்குப் பரிஹாரம்; அவை செய்யாமையான் இவர்க்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது என்கை.
ஸ்வா பதேசம்-இப் பாட்டால் தரிப்பிப்பார்க்கும் ரஷகனுக்கும் இடமறும்படி இவர் பகவத் விஷயத்திலே
அவஹாகித்த படியாய் சொல்கிறது – (பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாசமும் பரிகாரம் )உறுகின்ற இவளை -என்கையால் ஸ்லாக்கியதை–தொல்லை மார்க்கம்–திருவேங்கடமுடையான் திருவடி சேர்க்கும் பிரபத்தி மார்க்கம்–இவள் அருமை அறியாதவர்களாய் இருக்கிறார்களே –
தாத்பர்யம்--மோஹித்து கிடந்த நாயகியைக் கண்ட ஞான விருத்தை -மூதாட்டி – நோயை அறியாத பந்துக்களை வெறுக்கிறாள்-உடல் பிராணன் வருந்தி இருக்க இவளை உபேக்ஷித்தால் உத்தர -மேல் வரப்போகும் -ஆபத்தை ஆலோசிக்காமல்-திருத்துழாய் முடியில் சேர்க்காமலும்-திவ்ய தேச வாசம் சேர்க்கும் முறையையும் மெய் வருந்தி பெற்ற தாய் வயிறு எரியாமல் ஏதாவது ஒருபரிகாரம் செய்து மீட்கப் பார்க்காமல் இவர்கள் உபேக்ஷித்தார்கள்
1-2-வீடுமின் முற்றவும் -அவதாரிகை –
தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே-
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-
இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.
‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்’ அன்றே?-‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’ என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்–இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், ‘மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும், ‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண் வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று பலகாலும் அருளிச் செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.
1- சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
2-இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
3-பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
4-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
5-பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
6-அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
7-இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –
தத்வ ஹிதங்கள் இறே சாஸ்திரங்களில் ப்ரதிபாதிக்கிறது –
ஹிதமாவது அலவ்கிக புருஷார்த்த சாதனம் என்பதால் புருஷார்த்தம் ஹித்துக்குள்ளே சொருகி இறே இருப்பது
பூர்வ த்விகம் -தத்வம் நிரூபணம் -உத்தர த்விகம் -ஹித நிரூபணம் –
அந்த சாயையிலே முதல் திருவாய் மொழி தத்வ நிரூபணம் -இரண்டாம் திருவாய் மொழி ஹித நிரூபணம்
வீடுமின் முற்றவும் -1-சம தமாத் யுபேத ஸ்யாத் -ஸூ த்ரார்த்தம்
மின்னின் நிலை 2– வைராக்ய பாத அர்த்தம்
புல்கு-4 -என்று பகவத் அனுசந்தானத்துக்கு ப்ரீதி ரூபத்வம்
அற்றது பற்று எனில் –உற்றது வீடு உயிர் -ஞான யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டினால் அங்கே தாழாமல் இருக்க உபதேசம்
முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல் ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.
இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே 1-ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான தத் இதர சகல தியாகத்தையும் -2-பஜன பிரகாரத்தையும் 3-அஸ்தைர்யத்தையும் 4-தியாக பிரகாரத்தையும் -5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும் -7-சர்வ ஸமத்வத்தையும் -8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும் -9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –
இந்த லோகத்தில் ஆத்மாக்களில் பகவத் ஏக போகராய் இருப்பார் இல்லாமையால் இவர்களை பகவத் ஏக போகராக்கிக் கொண்டாகிலும் அனுபவிக்க வேணும் என்று இந்த ஆத்மாக்களைக் குறித்து பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை பகவத் வியதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-
சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.
வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி
உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ ) என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்-4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்
உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ உம் உயிர்’ என்றும் அருளிச் செய்கிறார்.
உடையானிடை-பொதுவில் உடையான் என்கிறார் என்கிறார்;– சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.-நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.
இத் திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்-முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –
——-
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-
-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.
மன் உயிர் ஆக்கைகள் –உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்ம வஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,-அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு- ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம்
இறை உன்னுமின் –இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.-நீரே –இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.-சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.-இவ்வாத்மா சம்பந்தியான சரீராதி பிராகிருத விஷயங்களினுடைய
அஸ்திரத்வாதி தோஷங்களை நீங்களே ஆராய்ந்து உணருங்கோள் -உணரவே எளிதாக விடலாம் -என்கிறார் –
————
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-
த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்
நீர் நுமது – அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.-ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.
இறை சேர்மின் – அப்ராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.-சேர்மின் சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.
உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு, முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்– உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.
—————-
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-
பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.
துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.உள்ளதும் –அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம்
எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.
புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் – அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.
பற்று அற்றே –அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.-இறைவன் ‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.
சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் –
ஸ்ரீ பன்னீராயிரப்படியில் மட்டும் உள்ள விலக்ஷண ஸ்ரீ ஸூக்திகள்-கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் –
பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –
————–
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-
இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –அருளிச் செய்கிறார்.(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை-உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது;-அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.–அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.-அற்ற இறை பற்று – ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்–‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே-
இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –
—————–
பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-
ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் ––அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்-பற்றிலன் –பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;-அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.
முற்றவும் நின்றனன் –ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.–பற்றிலையாய் – நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்-அவன் முற்றில் அடங்கு – அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே, அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.
இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘முற்றவும் நின்றனன் –அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான் –முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-;பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?அவன் முற்றில் அடங்கு –அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:
—————-
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-
சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;-தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்-அந்த சம்பத் எல்லாம் என் ஸ்வாமியினுடைய சம்பத் என்று அனுசந்திக்கவே கூசாதே சென்று அணுகலாம் –அப்படி அனுசந்தித்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார் –.சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம்-இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர் –பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –
————–
உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச் செய்கிறார்.-இப் பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா-முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்-
—————–
ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-
நீங்கள் அவனைக் கிட்டவே விரோதிகள் அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.–எல்லாம் விடும் – அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.-பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து -பின்னையும் அந்திம தசையில் நினை என்று அந்திம ஸ்ம்ருதியை விதிக்கிறது என்பாரும் உளர் –
ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.
அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.
—————-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள்-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து –நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி ––பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப் பாட்டு பிரமேயம்–
————–
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-
உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால், ‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் – கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply