ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – களிப்புடனும் -வருத்தத்துடனும் பேசலாம்-ஸ்ரீ மத் பாகவத -உபதேசம் -காரணந்து த்யேய -கேட்டு -நினைத்து -இடைவிடாமல் எப்போதும் -கண்டு-ஸ்ரோதவ்ய –மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -த்ரஷ்டவ்ய-விராட் ஸ்வரூபம் -பாதாள லோகம் பாதம் -ஸத்ய லோகம் சிரஸ் – ஜெகதாகாரம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் த்யானம் -கை வராதே –கோல நீள கொடி மூக்கும் –திவ்ய மங்கள விக்ரஹம்-அந்தாமத்து அன்பு செய்து – கண்ணுக்கு அடங்கும் படி தன்னை அமைத்து -பிடித்துக் கொள்ளப் பண்ணுவான் -அவனே-நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய் -வேதாந்தம் கோஷிக்கும்-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் –உலகும் மகிழவே –-அதே போல் இங்கும் மேரு -ஸூர்யன் -போலி கண்டு திருப்தி அடைய மாட்டாரே –அன்ன கண்டும் -ஓக்க கண்டு திருப்தி இல்லாமல்-திருமால் உரு -அவன் ரூபம் –-திருமால் தலைக்கொண்ட -நல்ல அபிநிவேசம் தலைக் கொண்ட –ஞானாதிகம் அடியாக வந்த பித்து -பக்தியின் உச்சநிலையில் உள்ள எங்களுக்கு எப்படி தீ வினை வரும் –இவ்வளவு பக்தி மேலிட்டு இருந்தும் -பிரிந்து உள்ளதால் -தீ வினை இதுவே – பிரிவு ஆற்றாமை- மிக்கு புலம்புவதாகவும் கொள்ளலாம் –சிஹ்னமே பிதற்றி -மறக்காமல் இருக்கிறாள் அன்றோ –இரண்டுக்கும் முரண்பட்டு இல்லையே-பக்தர்கள் பக்கம் பாபம் அண்டாது-பாபம் தொலைந்தால் தானே பக்தி பிறக்கும் –பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பக்தி செய்ய -க்ஷணம் விஸ்லேஷமும் பொறுக்காத துன்பம் வருமே –-இரண்டு துன்பமும் வேறு வகைகள்-இங்கே உள்ளவரை இவை இருக்குமே –புகழும் நல் ஒருவன் -3-4-இதன் விவரணம் –கூவுமாறு அறிய மாட்டேன்,-குன்றங்கள் அனைத்தும் என்கோ!-மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!-3-4-2-இங்கும் குன்றமும் தாரகைகளும் உண்டே –
அவதாரிகை–இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள்–இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் – திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு உபமானத்தைக் கண்டால் –உபமான ரஹிதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும்-இங்கனே ஒரு உபமானமாக உண்டாகப் பெற்றோம் -என்று –-இது ஆஸுவாச-ஹேது வாகை யன்றிக்கே –அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –அன்றிக்கே-(ஜெகதாகாரம் கீழ்-சரீர ஆத்ம பாவம் -மலையே திரு உடம்பு -ஜகத் சரீரம் சர்வம் தே -இனி) அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்தால் – அவ்வளவிலே பர்யசியாதே –அவனுடைய-அசாதாரண விக்ரஹத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு- ஒரு குறை உண்டோ -என்னுதல் –போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —
இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர் பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அம் மேருவில் செம் சுடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியை யுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத் தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)
புகழ் ஓன்றும்மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக ஒருப்பட்ட சர்வேஸ்வரனுக்கு
உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும் வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற புகழு நல ஒருவனில் -அர்த்தத்தை புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –
திருமால் உரு ஒக்கும் மேரு –ஸ்ரீ ய பதி உடைய வடிவோடு ஒத்திரா நின்றது மேரு வானது –வடிவாலும் –புகாராலும் -(மேரு சிகரி யாணாமாம் அஹம் -கீதை )-அம் மேரு இத்யாதி-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும் –அன்ன கண்டும் –இப்படியே அவனுக்கு போலியானவற்றைக் கண்டு வைத்தும் –திருமால் -இத்யாதி –ஸ்ரீயபதி உடைய -அந்த மேருவோடே ஒத்த திரு மேனியையும் –வலக்கை ஆழி இடக்கை சங்கம் -என்கிறபடியே –
அசாதாராண சிஹ்னத்தையும் காண வேண்டும்-என்று ஆசைப்பட்டு பிதற்றா நின்றுள்ள –அன்றிக்கே –
திருமால் உரு ஒக்கும் இத்யாதி-சர்வேஸ்வரன் திரு மேனியோடு ஒத்து இருந்தது மேரு –அதிலே சஞ்சரிக்கிற ஆதித்யன் அவன் கையில் திரு ஆழியோடு ஒத்து இருந்தான் –இவை இரண்டும் ஜகத் ஆகாரதைக்கு பல ஷணமாய் இருந்தது –அன்ன கண்டும்- ப்ருதக் ஸ்திதித்ய அநர்ஹ ஆதார ஆதேய பாவ -நியந்தரு நியாம்ய பாவ-சேஷ சேஷி பாவாதிகளாலே –இவை அவனுக்கு சரீரமாய் இருக்கிற படியை கண்டு வைத்தும் –(நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சரீர லக்ஷணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம்-விஸிஷ்ட ப்ரஹ்மமாகவே தானே இருக்கும்)த்வைதி தனித்தனியாகவே இருக்கும்
அத்வைதி ஒன்றாகவே இருக்கும்-விசிஷ்டாத்வைதி -பிரிந்து இருக்க யோக்யதை இல்லாமல் தனித் தனியாகவே இருக்கும்-(அன்ன கண்டும் -வேதாந்த அர்த்த-மதிநலம் அருள பெற்றதாலும் –-பிரணயிதவம் மிகுதியாலும் திருப்பதி அடைய மாட்டாரே ) திருமால் இத்யாதி –இப்படி ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் –அசாதாராணமான சிஹ்னங்களையும் காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி –திருமால் –அடிக் கழஞ்சு பெற்ற பிச்சு –நிதித்யா ஸி தவ்ய-என்று விதேயமானது தான் இவருக்கு பிரகிருதி ஆயிற்று –(விதேயம்- விதிக்கப்பட்ட சாதனம் -ஸ்ருதி-இவருக்கு ஸஹஜ பக்தி -இவை ஸ்வ பாவம் இவருக்கு)-தலைக் கொண்ட –தலைக் கொள்கை யாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி-முறுகு-கொளுந்துகை –நங்கட்கு இத்யாதி –இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை- அவஸ்யம் அநு போக்யத்வம் -என்கிற வசனத்தைக் கொண்டு நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ –என்கிறார் –முறுகு – கொளுந்துகை -வயிரம் பற்றினது என்றபடி –முறுகு -வயிரம் -நெருப்பானது வயிரத்தில் பற்றினால்-அவிக்கப் போகாதது போல் –ஒருத்தராலும் மீட்க்கப் போகாது என்றபடி –த்ருடமாகை -என்றது ஆயிற்று –அவனைக் காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம் நமக்கு பிறந்த பின்பு-பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார்-
இடைவிடாமல் நாம உச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு தீவினை எங்கிருந்து வந்தது என்று தலைவி வெறுத்து பேசும் பாசுரம்-திருமாலுரு வொக்கும் மேரு-அவளது பொன்னிறமான திருமேனி கலப்பதால் தானும் பொன்னிறம் பொலியப் பெற்று-எம்பெருமான் பெரிய திரு மேனி பொன்னிறமான மேருவை ஒக்கும்-அன்ன கண்டும்-நேரில் கண்டால் போலே -அன்பு மிகுதியால் பரவசம் அடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்ற நமக்கு பிரிவுக்கு அடியான பாவம் எங்கனே உண்டாயிற்றோ – செய்யதோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி இது என்னும் -போல அன்றோ வாய் பிதற்றுகிறாள் – ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –என்கிறபடி பாபம் கழிந்தால் தானே பக்தியே பிறக்கும் -பக்தியின் மேல் எல்லையில் இருந்தும் – பேறு பெறாமைக்கு காரணமான பாபங்கள் வர வழி என்னவோ -என்று வருந்தி உரைக்கிறார் –போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில் மாத்திரமே யல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.-திருமாலுரு வொக்கும் மேரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,-பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.–அம்மேருருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் = அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்.(அன்ன கண்டும் இத்யாதி.) அப்பெருமானுடைய திவ்ய ரூபத்தையும், திவ்யாயுதத்தையும் நேரில் காணப் பெறாமல் அவற்றிற்குப் போலியாக வுள்ளவறறையே கண்டிக்கச் செய்தேயும் அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையுமே நேரிற் கண்டாற்போல
அன்பு மிகுதியாற் பவசமடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்றிருக்கிற எமக்கு, பிரிவுக்கு அடியான பாவம் எங்ஙனே உண்டாயிற்றோ தெரியவில்லையே! என்கிறாள்.
மால் தலைக்கொண்ட – ஆசையின் மேலெல்லையிலே நிற்கிற என்னவுமாம். நாயகனைப் பிரிந்த நாயகி நாயகன் போலிகளை அவனாகவே பாவித்து வாய் பிதற்றுவதை!
(திருவாய்மொழி 4-4-4) “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா வென்று கூவும்”
(திருவாய்மொழி 4-4-2). “செய்யதோர் நாயிற்றைக் காட்டிக் கிரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பவற்றிலும் காண்க.—ஜந்மாந்தஸஹஸ்ரேஷு தபோஜஞாநஸமாதிபி:- நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே.”-பாபங்கழியப் பெற்றவர்களுக்கே பகவத பக்தி பிறக்குமென்றும், பகவத் பக்தியுடையாரைப்பாவம் அணுகாதென்றும் சாஸ்திரமிருக்க, அந்தப் பக்தியின் மெலெல்லையிலே நிற்கிற நமக்குப் பேறு பெறாமைக்குக் காரணமான பாவம் வருவதற்கு வழியுண்டோ? என்று
ஆழ்வார் வருந்தியுரைத்தாராயிற்று. எம்பெருமான் பக்கலில் மாத்திரமேயன்றி எம்பெருமான் வடிவத்தை யொத்திருக்கும் பொருளிலும் ஈடுபடுதலே பக்தியின் மேலெல்லையாம்.–மூன்றாமடியில், சிஹ்நம் என்றும் வடசொல் சின்ன மெனத்திரிந்தது
திருமாலுரு வொக்கும் மேரு-மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்-பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே-ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி-அம் மேருவில் செஞ்சுடரோன்-அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்–திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்-ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்–மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை-அன்ன கண்டும்–அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்-திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது-ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே அக்ரமமாகச் சொல்லும்படியான-ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு-அத்விதீயமாய் சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு-எங்கே வரும் தீ வினையே –விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று-ஏவம் ஹ்வா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது–ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே-பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று-கிளவியிலும்-நாயகன் ஈஸ்வரனாகையாலே நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று
தாத்பர்யம்--இதில் சர்வேஸ்வரன் உடன் போலியான வஸ்துக்களைக் கண்டும் திருப்தி- நேராக குறை வராது-சர்வ சாம்யமான வாஸ்து இல்லையே-ஆயினும் ஆராய்ந்தால்-தனக்கு மேல் உத்க்ருஷ்டம் இல்லாத மகத்தான மேரு படர்வதமே-‘மிக்க உன்னதமாய் தங்க மயம் அது -கரு=மாய் இவன்
உன்னதமாய் உயரம்-ஒளி புகர்-அவன் திருவாளிக்கு ஆயிரம் சூரியனை சொல்லில் சொல்லலாம்
அப்படி நீர் உபமானமான அத்திருமேனிக்கு சத்ருசமான பதார்த்தம் ஆராயும் இடத்தில் இப்படி சொல்லப் பெற்றோமே என்று திருப்தி அடையாமல் ஆசைக்குத் தக்க இவை சத்ருசம் இல்லையே-வஸ்து அந்தரமும் இல்லையே-அவரையே கண்டு திருப்தி அடைவதே வழி காண வேணும் என்று வைர ஊருக்கு போல் அபிநிவேசம் பெற்ற பின்பு பல ப்ராப்திக்கு குறை இல்லை என்று நிச்சயித்து ஹ்ருஷ்டராகிறார் –
3-4-புகழும் நல் ஒருவன் என்கோ!-பிரவேசம்
கீழே – ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்;
இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய சர்வாத்தும பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்;
அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
சர்வ பிரகாரத்வம் சொல்லும் திருவாய் மொழிகள் -புகழு நல் ஒருவன் என்கோ 3-4/–நல் குரவும் செல்வமும் -6-3/மாயா வாமனனே -7-8-
‘பேதம் -தது தது பிரகரணங்களுக்கு சேர –இங்கே அனைத்து கைங்கர்யங்களையும் கொள்வதற்கு
சர்வாத்மா பாவம் -இங்கு -சரீரம் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை -புஷ்பம் -மணம் -பிரகாரம்-சரீரம் இல்லை
இங்கே இரண்டு சப்தங்களையும் வைத்து அருளிச் செய்கிறார் -அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
ஸூ வியதிரிக்த -தான் அந்தராத்மா பாவம் இருப்பதைக் காட்டிக் கொடுத்தான் -என்கோ-சொல்லுவேனா -வாசிக கைங்கர்யம் –
சகலவித கைங்கர்யம் கேட்டு இதுதானா –
“உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு
அடிமை செய்வான் என்?’ எனின், இருவரும் இலையகலப் படுக்குமித்தனை போக்கி–ந ச இச்ச்யதி மாதவ- அவனும் அடிமை கொள்ளமாட்டான்; –
‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.-இவரும் செய்ய மாட்டார் –
இலையகலப்படுக்குமித்தனை’ என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’ என்றபடி.
அகலப்படுத்தல் – விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல் வேண்டும்’ என்றபடி.
இவரும் அடிமை செய்யமாட்டார்; ‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே,
-அந்ய குசல பிரச்னம் -ந ச இச்ச்யதி மாதவ -விதுரன் -சஞ்சயன் -சொன்னதாகவும் உள்ளது–இரண்டு வித மஹா பாரதம் மா முனிகள் காலத்திலேயே –
விதுரன் சொல்வதாக இவர் இடம் உள்ள மஹா பாரதம் -பூர்வர்கள் சஞ்சயன் சொன்னதாக சொல்வார்கள் என்கிறார் -அவரே
எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றது கொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்;-பூர்தியைப் பற்ற –
‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே;-திரு வாய் மொழியே – வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற
இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனே யன்றோ அவ்விறைவன்-உக்தி மாதரத்தை எல்லாவாகமாகவே கொள்பவன் அவன் –
இவருடைய காதல்தானே ‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன்
சர்வாத்தும பாவத்தைக் காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து
நிலை குலைந்த அந்தக் கரணங்களை உடையராய் ‘கேட்டேயும் -காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையராய் இவரும்.
நான் ஷூத்ர சம்சாரி -அவாப்த சமஸ்த காமன் -என்னுடைய பாரிப்பு ஏற்று -எங்கும் பரந்து வியாபித்து –
தனக்காக இப்பொழுது தான் -சர்வாத்மா பாவம் கொண்டதாக -எண்ணி காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்’
அப்படி என்றால் வாசிக கைங்கர்யம் எவ்வாறு பண்ணினார் –மனஸ் நினைத்து தானே வாய் பாட வேண்டும் -மநோ பூர்வோ வாக் உத்தர –
முடியானாலே -கரணங்கள் அனைத்தையும் விரும்புமே –
ஸூ வாரதனே யாகிலும் -இவர் பக்கல் சிறிதாகிலும் வேண்டுமே -இவர் கிஞ்சிதவாறே எல்லாமாகவே கொண்டான் அவன்
-தாய் குழந்தை மழலை சொல் போலே -அவன் ப்ரீதியைக் கண்டு இவரும் எல்லாம் செய்ததாக இவரும் மகிழ்ந்தார்
அதீத காதல் கொண்டவன் இவர் கிஞ்சித் செய்ததையும் பெரியதாக கொண்டு மேலே செய்ய விடாமல் இருப்பானே
அதனால் அனைத்து கைங்கர்யங்களையும் பாரித்தபடியே செய்து முடித்தார் என்றவாறு –
இத் திருவாய்மொழியில் -பிரதிபாதிக்கப்படும் -விபூதி யோகமும் -சமா நாதி கரண்யமும் -அலமாப்பும் சம்சயமும் –
பொருவில் சீர் பூமி -விபூதி -சமா நாதி கரண்யம் -என்கோ -அலமாப்பும் சம்சயமும் —
அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு;
‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து.
அவனைச் சார்ந்து விட்டுப் பிரியாமல் -அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – என்பதால் இவற்றுக்கு சாம்யம் உண்டே –
அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் -தனித்தனி -வையதிரண்யத்தில் -அனுபவிக்கை யன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும்
முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே-சமா நாதி கரண்யத்தில் – சேர்த்து அனுபவிக்கிறார்.
அன்றியே,
‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய
நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்;
அன்றியே,
‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகா நின்றதே யன்றோ?
அத் தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல்.
‘ஆயின், முத்தன் ‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின்,
அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம்.
ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள்
என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு
வேற்றுமை அற அனுபவிக்கப்படும் பொருளாகும்படியன்றோ மயர்வற மதிநலம் அருளிற்று?
கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?-வெளிச்சிறப்பு – ஞானம்.
‘நன்று; இவ்விபூதிதன்னிலே ‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லா நின்றதே?’ எனின்,
ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது; பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க
அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப்
‘பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது?
இங்ஙனம், அவ்வந்நிலைகள் காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி
பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க வேண்டி வருமேயன்றோ?
இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்கள் முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு,
விபூதி காரணமான பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள்
செவிக்கு இனிய இசை முதலானவைகள் மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்
இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே
அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்,
’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு
வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே
அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்துமாவையும்
காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான
சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றன வாயிருக்கிறபடியையும்,
இவ் விபூதிதான் புறம்பாய் விஞ்சிக் காட்டுகையன்றிக்கே தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப்போன்று தகுதியாய்
அனுபவிக்கப்படும் பொருள்களிலே அடங்கியிருக்கிறபடியையும் அநுசந்தித்துப் பேறு பெற்றாராய்ப் பாரித்தபடியே
எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் ‘கோவை வாயாள்’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே,
ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும், சொற்களைக் கொண்டு செய்கிற அடிமையிலே இறங்கியவராய்,
மஹா வாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று ‘அத்தைச் சொல்லுவேனோ, இத்தைச் சொல்லுவேனோ!’ என்று இங்ஙனம் அலமருகிறார்.
‘என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால் விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’என்று.
மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச் சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும் கீழே விழுந்து
சிதறிக்கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனைஎடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவதுபோன்று’ என்றபடி.
இத்திருவாய்மொழியில், முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான பூதங்கள்’ என்கிறார்.
இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப்‘பௌதிகங்கள்’ என்கிறார்.
நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’ என்கிறார்.
ஐந்தாம் பாசுரத்தில் ‘நலங்கடல் அமுதம்’ என்பதுமுதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.பாசுரத்தில் ‘நுடங்கு கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார்.
ஏழாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்’ என்கிறார்.
‘தோய்விலன்’என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய்’ என்கிறார்.
‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன் பொருள் ஆற்றலால் போந்த பொருள்.
‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச் சாமாநாதி கரண்யம்
சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார்,
‘விபூதியில் அவ்வப் பொருள்கட்கு’ என்று தொடங்கி. வாசகமான சொற்கள் – தேவர்கள், மனிதர்கள் முதலான சொற்கள். பதினோராம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றித் ‘தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப் போன்று’ என்கிறார்.
ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.
முன்னர்க்கூறிய ‘புனையுங் கண்ணி எனதுடைய வாசகஞ் செய்மாலையே’ என்றதனையும், ‘இவருடைய காதல்தானே ஆராத காதலேயன்றோ?’
என்றதனையும் மீண்டும் அநுவதிக்கிறார், ‘பாரித்தபடியே’ என்று தொடங்கி.
நாலாம் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி சகல சேதன அசேதன விசிஷ்டனான நாராயணன் ஆகையாலே-
அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே-அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே-தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –
முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில், முதற்பாட்டில் சொன்ன ஐம்பெரும்பூதங்களினுடைய காரியத்தை முறையே பேசினார்;
மூன்றாம் பாட்டில், உலகமே உருவமாய் நின்ற நிலையோடே அசாதாரண விக்கிரகத்தைச் சேர்த்து அனுபவித்தார்;
நான்காம் பாட்டில், ‘ஒளி பொருந்திய மாணிக்கம் முதலிய பொருள்களை விபூதியாகவுடையவன்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘சுவைப்பொருள்களை விபூதியாக உடையவன் என்றார்;
ஆறாம் பாட்டில், ‘வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையவன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘செல்வம் முதலான புருஷார்த்தங்களை விபூதியாக உடையவன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘உலகத்தில் பிரதானரான பிரமன் சிவன் முதலியோரை விபூதியாக உடையவன் என்றார்;
ஒன்பதாம் பாட்டில், அவனுடைய விபூதியின் விரிவைத் தனித்தனியே பேசமுடியாமையாலே
‘சேதன அசேதனங்களை விபூதியாகவுடையவன்’ என்று சுருங்க அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், ‘இவற்றுக்கும் உள்ளுயிராய்ப் பரந்து நின்றாலும் அவற்றினுடைய தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்-
புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1-
அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து,
இத்திருவாய் மொழியில் மேல் விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.
புகழும் நல் ஒருவன் என்கோ –
1–‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களை யடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார்.
2– இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம்
கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்;
3– இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி,
‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ!-சமாயப்திக தரித்திரன் –ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல்.
ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்:-குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்-
1-குணம் ஜாதி -வியக்தி விட்டு பிரியாது –கோத்வம் போலே -/ குண்டலம் -த்ரவ்யம் -பிரியுமே -பிரித்து ஸ்திதி உண்டே இதற்கு-சௌலப்யம் -குணம் பிரியாது அறிவோம் –பிருத்வி -த்ரவ்யம் -பிரியாமல் இருக்குமோ சங்கை வருமே -இவற்றின் ஸ்திதி அவனாலே தானே
2-சமா நாதி கரண்யம் இருப்பதால்
3-ஸ்வரூப ருப குண விபூதி -சேர்த்து படிப்பதால்
4-சேர்த்தி -ஆஸ்ரயித்து பெருமை சேர்க்கும் –
5-ஜன்ய ஜனக பாவம் -குணங்கள் -தாய் -படைக்கப் பட்டதால் தானே விபூதி -காருணிகன் நீர்மையால் அருள் செய்தான் -யௌகபத்யம் அனுக்ரகத்தால்
6-ததீயத்வ ஆகாரத்தால் இனிமையாய் எல்லாம் இருக்குமே-
பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ!-இனி, ‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார்.-நீள் சுடர் இரண்டும் என்கோ –காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார்.-இகழ்வில்’ என்பதற்கு, ‘ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் – ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது
முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக.-அருச்சுனன், ‘ஹே கிருஷ்ண ஹே யாதவ’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.
———-
கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-
உக்தமான பூதங்கள் உடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார்-மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.-‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.அன்றிக்கே,-‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது ‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், சாமா நாதி கரண்யம் இல்லாமல் அவற்றை நிர்வகிப்பவர் வையதி கரண்யம் -கொண்டு –நிர்வகிப்பது போலே -இவற்றை நிர்வகிப்பவர் –
———
பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-
உலகமே உருவமாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்கிரகத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.-தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.-ஜிதந்தே புண்டரீகாஷன் -தூது செய் கண்கள்-அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.-நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.-அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அனுபவிக்கக் கூடியதான வடிவைச் சொல்லுகிறது.-இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடி யன்றோ?-திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?-‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ -திரு மறுவைப் பீடமாக கொண்டு இருப்பவள் என்றுமாம் –‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே-நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?-போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.-இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –
———
சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-
‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்;-நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம்.–குருகைக் காவல் அப்பன்-பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவே யன்றோ-எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது-எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.-
எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாக வுடையவன் என்பேனோ!-லீலா விபூதியைச் சொல்லுகிற இடத்தில் நித்திய விபூதியைச் சொல்லுவான் என்?’ என்னில்,‘ஆதி அம் சோதி என்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கம் என்கோ!’ என்றது போலே இருக்கிறது.-ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே 1–சமுசார காலத்திலே; என்றது, எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
அன்றியே,
2–‘யாதுமில்லாத பிரளயகாலத்தில் காரியமாக மாறின இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ என்ற நிலையாய்க் கிடக்கிற அன்று, தான் ஸ்வாமியான சம்பந்தத்தைக்கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச் சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.
‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரிய நின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு; இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற
போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ என்று அருளிச் செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.-இங்கே அமலன் -காரண -பிரளய – அவஸ்தையில் -ஸ்தூலம்–தோய்விலன் -எனபது -கார்ய அவஸ்தையில் -சூஷ்ம –
———
அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—
ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால் கல்யாணகுணங்களும் புகுமாதலின்,-‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.-அடியார்கள் இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன்
1-நாம் ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். -சஞ்சீவி -ஔஷதி நச்சிக் கொண்டு போக வேண்டாத படி நச்சு மா மருந்தம் -2-‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து-மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. –வாட்டம் தணிய வீசீரே — நமனும் முத்கலனும் பேச -நரகில் நின்றார்கள் கேட்க -நரகமே ஸ்வர்க்கமே நாமங்கள் உடைய நம்பி –
3- இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.-ஏக மூலிகை -சஹாயாந்திர நைரபேஷ்யம் -பக்க விளைவு போக்க வேறே மருந்து தேவை இல்லாத -சக்ருத் சேவய்யையாய் இருக்குமே-4- இனி, ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது, இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.-பார்க்காத தன்மையன் என்றபடி -காவலில் புலனை வைத்து -கட்டுக்காவல் இல்லாமலும் –பலன் கொடுக்கும் -பத்தியமே வேண்டாம் –கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்-
——–
பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-
வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் –வினையில் மிக்க பயன் என்கோ –-கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக் கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத் தன்மையேயாய் அதற்கு -மித்ர பாவமே சம்ப்ராப்தம் -’நத்யஜேயம்-நான் விட மாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.-உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!-‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’-
இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று பதண் பதண் என்றான் காணும்,’ என்று அருளிச் செய்தார்.
வானவர் ஆதியையே.–ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –-தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –
——————
வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-
அதனுடைய நித்தியத்துவம் (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்;-அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். –திருமந்த்ரார்த்தம் -மூன்றையும் சேஷித்வம் -சரண்யத்வம் பிராப்யத்வம் மூன்றும் -ஆதி -தெய்வம் -போகம் -என்கிறார் -நம்மாழ்வார் பத த்ரயம்
ஒளி மணி வண்ணனை – விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது;-இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று -மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.
—————-
ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-
உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.-கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –
———-
கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-
அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று -பிரயோஜகத்திலே -சேர பிடித்து -கோவையாக -சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.யாவையும் எவரும் தானே – அறிவுடைப் பொருள் அறிவில் பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.
———–
யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-
‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.-சரீரத்தினுடைய பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களையும் நினைக்கிறது-தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும், அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான்.-ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக் கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போக ரூபமாயிருந்தது.
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் –
1–உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும்-ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு,-அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.-பாவனை -அநுசந்தான பர அனுசந்தானம்-
அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு,
2– ‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ -பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத-பத்தி பரமாக அருளிச் செய்தது;-என்றும்,
3–‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’-‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’-பிரபத்தி பரமாக அருளிச்செய்தது;- என்றும்,
4–‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ -வேறுபட்ட விஷயங்களில்
சங்கமில்லாத’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர்.
இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச் செய்வர்.
———–
கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-
மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். நித்திய கைங்கரியத்தைப் பெற்று, அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’ என்பார், ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்திய ஸூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
April 4, 2026 at 3:49 pm |
ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -52 is missing from the posts pls. request to post the same