ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –எம்மா வீடு -2-9-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதில் சரணாகதி அனுஷ்டானம் செய்கிறார்-ஆத்ம நிஷேபம்-ஷட் விதா சரணாகதி-சேஷத்வ ஞானம் -அடியேன் சேஷ பூதன் -திருவடிகளே அடைக்கலம் என்று சமர்ப்பித்து -தேவரீர் ரக்ஷித்து அருள வேணும்
பிரார்த்தனா கர்ப்பமான ஞானம் -மதி சரணாகதி-மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் – எம்மா வீடு -2-9-இதன் விவரணம்-அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே – இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை -கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால் அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிப் பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
ஆணிப் பொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியை யுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப் பெற்ற
மாலை–மாலைப் பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –19-பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8–முதல்நடுவுஇறுதிஇவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து – பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்-எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை-தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார்–கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல் மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

மாணிக்கம் கொண்டு குரங்கை விரட்ட-சூர்யன் மாணிக்கம் -மாலை குரங்கு – வீண் ஆகும் த்ருஷ்டாந்தம்-தூங்க முடியாத இரவு —மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –குரங்கானது மாணிக்கத்தைக் கொண்டு எறியுமா போலே —பெரு விலயனான மாணிக்கத்தை குரங்கானது -அதன் சீர்மையை அறியாதே எடுத்து –கார்யம் கொள்ள ஒண்ணாதார் இடத்தே மங்கிப் போம்படி எறியுமா போலே -என்னுதல் –அன்றிக்கே –குரங்கு என்று விலங்குதலாய் –அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள-ஒண்ணாதார் இடத்தே-மங்கிப் போம்படி எறியுமா போலே என்னுதல் –-அப்போது எறிவாரை அழைத்து கொள்ளும் இத்தனை –(அசாத்திய சாத்தியமான இடத்தில் எடுக்க முடியாத இடத்தில் எறிந்தால் போல் என்ற-அர்த்தம் கொண்டு குரங்கு என்று எறிவாரை -கர்த்தாவை -அத்யாஹாரம் பண்ணிக் கொள்ள வேண்டுமே)இருளோடு -இத்யாதி –இருளோடு வந்து -சந்தித்து -மாற்றற்ற செம்பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை ஆயிற்று முடித்துக் கொண்டு மாலை வந்து தோற்றிற்று – குரங்கு கையில் புக்கு மாணிக்கம் நசித்தால் போல் ஆயிற்று – ராத்ரிக்கு அவயவமான இருளின் கையிலே புக்கு ஆதித்யன் மாய்ந்தபடி –இனி வெறும் மாலையே யாய்ச் சொல்லும் இத்தனை ஆகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி ஆயிற்று அவன் படி –உலகு அளந்த மாணிக்கமே –
ரஷகரான இந்த்ராதிகளும் (இந்திரன் கிழக்கு திக்பலர் தானே )தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் –தான் வந்து கைக் கொண்டு -தாமச பிரக்ருதிகளை( மஹா பலியை -நமுசி பிரக்ருதிகளை )தள்ளி நோக்குமவன் இறே –காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை இட்டு காணும் –மாணிக்கமே –பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே அழிய மாறின படி –என் மரகதமே – உடம்பிலே அணைத்தால் ஸ்ரமஹரமாய் இருக்கை-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே –முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு- மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே –அடியேன்- போக்யதையில் தோற்று- அடியேன் -என்கிறார் –அடியாவி –
தலை மகள் வார்த்தை யான போது –உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்ம வஸ்து -என்கை –ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்  மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது –சமர்ப்பித்த வநந்தர ஷணம்  -என்னத்தை எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி தன்னோடு  தான் தொற்று அற்று இறே-இருப்பது –அதவா-கிந்து சமர்ப்பயாமி தே -(ஸ்தோத்ர ரத்னம் )-உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -(திருவாய் மொழி )என்னக் கடவது இறே –ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே –ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் –அன்றிக்கே-ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச் செய்தார் -என்னவுமாம் –அடியேன் அடி யாவி –
பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –

காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்–திருக்குறள் -ஆற்றாமை மிக்கு தலைவி தலைவனை உனக்கே என் உயிர் தஞ்சம் -நீயே சடக்கென வந்து அருள வேணும் -என்கிறாள்
அடியேன் அடி யாவி -திருத் தாயார் வார்த்தை என்பற்கு என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்-அடியேனுடையாவி -பாட பேதம் –ஒருவரால் எறிய பட்டு குரங்கு மேல் விழுந்த மாணிக்கம் அதன் கையில் அகப்பட்டு அழிந்து திரும்ப மாட்டாது போலே இருளை அளிக்க அதன் மேல் விழுந்த சூ ரியான் மீலாது இரவே யாக நீண்டு போனதே –சூர்ய மண்டலம் -மாணிக்கம் -இருள் -குரங்கு மாணிக்கம் -செந்நிறமான -கரு மாணிக்கம் அபூத உவமை – இங்கு குரங்கு -இருள் என்பதால் கருங்குரங்கு என்றவாறு-அன்றியே மாணிக்கம் கொண்டு குரங்க எறிந்தால் போலே என்றுமாம் குரங்க-என்றது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னன படி – ஆற்றாமை மிக்கு ஆத்மாவை சமர்ப்பிப்பதும் -மோஹ அந்தகாரம் விவேகம் -மாறி மாறி வர -சமர்ப்பித்தது அவனது அன்றோ சர்வ ரக்ஷகன் நீயே அன்றோ -வந்து காத்து அருள் என்கிறார்

மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது.
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே-காம நோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப் பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்;-ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள்.-இப் பாட்டைத் தாய் வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள் கொள்ள வேணும்.-ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம்.-ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல, இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது.-ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை.-மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க. இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.-இனி, மிகச் சிறந்த மாணிக்கத்தை அதன் சீர்மையை யறியாத குரங்கு எடுத்து எங்கேனும் மங்கிப் போம்படி எறிந்து மாய்த்துப் போக்கி விட்டாற் போல, ஸூர்யனை இருளிலேயெறிந்து போக்கின மாலைப்பொழுது என்றும் உரைக்கலாம்;
இவ்வுரையில், மாலைக்குக் குரங்கும்,ஸூர்யனுக்கு மாணிக்கமும், அதன் வீழ்தற்கு அது எறியப்படுதலும், இருளுக்கு எறியப்படுமிடமும் உவமையாம்.-அழகியமணவாள சீயருரை காண்மின்;-“அன்றியே, மாணிகக்த்தைக் கொண்டு குரங்க எறிந்தாற்போலே யென்றுமாம்.
குரங்கதலாவது வளைதலாய், உதித்த ஆதித்யன் உயர் எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னபடி” என்று இவ்வுரைக்கு, குரங்க’ என்னும் செயவெனெச்சம் தொக்க தென்க.-ஆணிப்பொன்- மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்குமேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்த பொன் என்றும் உரைப்பர்.-மற்று ஒப்பாரையில்லா– தனக்குத்தானே உவமையாவதன்றி ஒருபடியாலும் வேறு நிகரில்லாத என்றபடி, “தனக்குவமையில்லாதான்” என்ற திருக்குறளும் அறிக.-இதனால், தன்னையொழிந்தார் யாவரினும் தான் மேற்பட்டவனென்பது விளங்கும். “ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது– எம்பெருமானை யநுபவிப்பதற்கு உரிய காலம் வந்திருக்க, அவ்வநுபவம் கிடையாமையாலாகிய ஆற்றாமையின் மிகுதியால் வருந்திய ஆழ்வார், அவ்வருத்தம் தீரும்பொருட்டு ஸ்வாமயான எம்பெருமானை பக்கலிலே ஸொத்தாகிய தன் உயிரை அடைக்கலமாக ஸமர்ப்பித்தலாம். மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹாந்தகாரத்திலே விழுந்து அகப்படும்படியான
இந் நிலையில் உன்னைச் சரணமடைந்த இவ்வுயிருக்கு நீயேயன்றோ ரக்ஷகனென்று உரைத்தனரென்க.

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-உலகு அளந்த மாணிக்கமே-உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே-என் மரகதமே-அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –அடியேன் அடி யாவி-சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது-யடைக்கலமே-உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ-ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று-இத்தால் மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது-(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)-விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து-குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே-அன்றிக்கே-குரங்கு என்று
விலங்குதலாய் அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்-அப்போது எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்-இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை-இருளோடே வந்து சந்தித்து-மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று-எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது-குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி-இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படிஉலகு அளந்த மாணிக்கமே–ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே காடும் மலையான இந்த பூமியை அளந்தது ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்–மாணிக்கமே-பெறு விலையன் என்கை-தன்னைப் பாராதே அழிய மாறின படி–என் மரகதமே-உடம்பிலே அணைத்தால் ஸ்ரம ஹரமாய் இருக்கை–மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே-அடியேன்-போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்அடி யாவி-தலை மகள் வார்த்தை யானபோது உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும் வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும் சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை–திருத்தாயார் வார்த்தையான போது –அடியேன் அடி-நாய்க்குட்டி என்னுமா போலே–யடைக்கலமே- இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி–பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது-ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம் என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது-அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே-ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே-பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே-அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–மாணிக்கம் கொண்டு-மாணிக்கத்தைக் கைக்கொண்டு-குரங்கு எறிவு ஒத்து-குரங்கு எறிந்தால் போலே–இருளோடு முட்டி-முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்-ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே-இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்–மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்–உலகு அளந்த மாணிக்கமே-அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே-என் மரகதமே-நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய் மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே-மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே-பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே-அடி யாவி-உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்-அடியேன்-யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்-அதுக்கும் மேலே-உன் யடைக்கலமே-த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு படவோ –

தாத்பர்யம்-இரவுக்கு அஞ்சின நாயகியாய்க் கொண்டு அடிக்கடி இரவும் இருளும் வந்து என்னை நலியாதபடி ரஷித்து அருள வேணும் என்று நாயகனான சர்வேஸ்வரனைச் சரணம் புகுகிறார்-விவேக சூன்யசமான குரங்கானது மாணிக்கத்தை பாழான இடத்தில் எறியுமா போல் சூர்யன் இருளை விட்டு நலிய தனக்கு ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அபரிச்சின்ன மரின்மை உடையவன் சர்வ ஜகத் ஸ்வாமி எனக்கு நாதன் உனக்கு சேஷமாய் உனது கையையே திருவடியையே எதிர்பார்த்து இருக்கும் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் என்கறார்

2-9-எம்மா வீடு பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
 –2-9-1-

1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்

செப்பம் –செப்போம் –சொல்லோம்-நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்-

அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்-1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம் –இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்--5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது

சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே

————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே 
–2-9-2-

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன-ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்-அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம் –-ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன-ஞானக் கை தா – அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற வேணும் -செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

————-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே
 –2-9-3-

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார்-பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –

———-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
 –2-9-4-

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள்-அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் – -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள் –இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்- திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே–அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-

எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ  வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –-ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக- ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது-க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது-புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்-அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே-ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே-அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –

பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –-ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே

பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்

வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –

எனக்கே கண்ணனை-தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும்-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

சிறப்பே —பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்-அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி-சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே-தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர்-

———–

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே
 –2-9-5-

ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –

என்றும் மகிழ்வேனே –மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் – ஆக -1-இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் –பெருமான் -என்கையாலே -2- சேஷித்வமும்மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -3–ஜ்ஞாத்ருத்வமும்என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –

கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
 –2-9-6-

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் ஸ்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –

என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்-என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –

———–

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே 
–2-9-7-

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–வாராய்-வர வேணும்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்-

————-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே 
–2-9-8-

இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும் நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில் மற்று எக்காலத்திலும்-இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –பின்னை இது தானும் வேண்டேன்-இத்தை எம்பெருமானார் கேட்டருளி-இது பொருள் அழகியது – இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது-நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –-பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –-எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்-எக்காலத்திலும்-இக்காலம் எல்லாவற்றிலும்-மற்று யாதொன்றும் வேண்டேன் பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –

அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –

———–

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே 
–2-9-9-

யானே –என் இழவு பகவத் க்ருதமல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் –இருந்தேன் –இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்தீ வினையேன் வாளா விருந்தேன் 

எம் வானவர் ஏறே —நித்ய ஸூரிகள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு-எம் -என்றது-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் –

—————

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
 –2-9-10-

அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் –உன் பொன்னடி சேர்த்து ஒல்லைநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்-தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு–நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —-இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது-நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்-என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —

————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
 –2-9-11-

நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-

இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும் வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே- தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading