..Thaniyan..Thaaraniyin thuyar thera..Thirumazlisai valam pathiyey..”kanndiyur arangam meyyam katchi per mallai yentru manninaar vuyyal allaal mattraiyaarkku vuyallaamey” pola..”pathiyey paravi thozlum thondar thamakku kadiyey”pola..thiru avadara sthalam paadukiraar..Vulahum mazlisaiyum..valithu..ethuvum Thirumazlisaiyin ananya asadaranamana yetram sollitru..Maheesara shedram..
.தனியன் ..தாரணியின் துயர் தீர ..திருமழிசை வளம் பதியே
..”கண்டியூர் அரங்கம் மெய்யம் கட்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே போல .
“பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே போல
.திரு அவதார ஸ்தலம் பாடுகிறார் .உலகம் மழிசையும் ..வலிது .
திருமழிசையின் அநந்ய அசாதாரணமான ஏற்றம் சொல்லிற்று ..மகீசார ஷேத்ரம்
———————————
..1.”.Boo nilaaya einthu.”.pragruda srushti arulukiraar ..boomiku einthu gunnangalum(mannam,rasam, roobam, sparsam,sabdam),punal=neerukku naangum,the-dejas moontrum,vaay(sirantha kaal=sava prannikalukkum jevana hethu)eranndum,aahasathukku(meenilaayathu)ontrum-sabdam mattum..eppadi pancha boothangalum gunnangalum avan etta vallakkaha erukkum..”veru veru thanmaiyaay neer nilaya vannam ninnai “yentru vilakshanamaay erukkum yaavatrukkum atmavaha erukira padiyaiyum vunnaiyum “yaar ninaika vallar”yaaraaley svaprayadinaal ninaikka mudiyum yenkiraar.
பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-
.பூ நிலாய ஐந்து .”பிராக்ருத சிருஷ்டி அருளுகிறார் ..பூமிக்கு ஐந்து குணங்களும்(மணம் ரசம் , ரூபம் ,ஸ்பர்சம் சப்தம் ),
புனல் =நீருக்கு நான்கும் ,தீ -தேஜஸ் மூன்றும் ,வாயு (சிறந்த கால் =சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது )இரண்டும்
,ஆகாசத்துக்கு மீநிலாயது )ஒன்றும் -சப்தம் மட்டும் ..இப்படி பஞ்ச பூதங்களும் குணங்களும் அவன் இட்ட வழக்காக இருக்கும் .
.”வேறு வேறு தன்மையாய் நீர் நிலய வண்ணம் நின்னை “என்று விலஷணமாய் இருக்கும் யாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற
படியையும் உன்னையும் “யார் நினைக்க வல்லார் யாராலே ஸ்வ பிரயத்தனத்தால் நினைக்க முடியும் என்கிறார்
——————————————————————
..2..”Aarum aarum aarumaay”..mudal aaru andanarakal aaru karmakkallai—adyayanam(thaan othuthal),adyaabanam(othuvithal),yajanam(thaan vellvi seythal),yaajanam(pirarai vellvi seyvithal),daanam(thaan kodupathu),pradigraham(pirar tharuvathai vaangi kolluthal)..entha karumamgalukku avan nirvaahan..aduthu rudu aaru—vasandam,kreeshmam,varsha,sarad,hemandam,sisiram–entha rudukalluum avan pravarthahan..adutha aru yagjam–aagneyam,agneeshomeeyam,vubaamsuyaajam,einthram,eranndu einthraagnam–aduthu einthuyagjam-deva,pithru,bootha,manusha,brahma–pancha maha yagjam arulukiraar..adutha einthu..pranna,apaana,vyaana,vudaana,samaana..pancha aahuthikal..adutha einthu pancha agnikal–kaarha badyam,aahavaneeyam,dashinaakni,sabyam,aavasadyam…evatrai sareeramaha konndavan..”eru seer eranndumaay”=mikka adisayathai vudaiya gjanam, virakthi eranndaiyum thara vallavan..avanai mattum nokkum gjanamum, kadaiara pasangal viduhaiyahiya vrakthiyum..”moontrum”-parabakthi,paragjana,parama bakthi–allathu eisvarya,kaivalya,bagavath praapthi kallaiyum..aduthu”ezlum” yentru vivehaadikal ezlaiyum..viveham,(kaaya sudhi)vimoham(kaamam,krodam ellaamai),apyasam,kriyai,kaklyaanam,anavasadam (soha nimitham,manasdai mazlunkathiruthal)and anudarsham (santhoshathaal thallai kaal theriyaamal pongaathu erukkai)….emberumaanai sinthikka venndiya mana thellivukku ethellam thevai..adutha”aarum”-gjana,bala,eisvaryam,veeryam,sakthi,dejas..gunnangal evatrukkum nivaahan avan..”ettum” yentru abahadapaapmaa(paapam sambandam attravan),vijaraha(kizla thanmai atru nithya yuvaha eruppavan),vimrudyaha(marannam attravan),visoka(soham attravan),vijikadsaha(pasi attravan),abipaasaha(daaham attravan),sadya kaama,sadya sankalpa,…aahiya ettu gunnangalum thammai thozlum adiyaarkku thara vallavan..”veru veru gjanamahi”=vannangum thuraikal pala pala vaakki,”kalla vedathaikonndu poey puram pukka vaarum” yentru budha avadaramum avaney..”meyyinodu poyumaay”=”meyyarkkey meyyanaahum vidi ella yennai pola poyarkkey poeyanahum pud kodi vudaiya komaan”-pola asthiharkalukku thanathu meyy aana roobam kaatti,nasthikarakalukku kaatti tharamalum..mumushukkulalukku avanaiyey thanthu mattravarkalukkum sootra palan thanthu thalli nirpavan ..”vurrodu osaiaaya einthum aaya aaya ninai yaar ninaikka vallaar”..sparsam, sabdam matrum rooba,rasa,gandam -evaiyum avanavathu.”vunnum soru paruhum neer thinnum vettrillaiyum ellaam kannan”pola..”kanndu kettu vutru monthu vunndu vuzlalum eimkaruvi kannda enbam embetrumaan aayirey mey porul kanndaarkku..”aayamaayaney”-namidaiyey vanthu pirantha aachariyam..
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-
“ஆறும் ஆறும் ஆறு மாய “..முதல் ஆறு அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல் ),அத்யாபனம் (ஓதுவித்தல் )
,யஜனம் தான் வேள்வி செய்தல் ),யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல் ),தானம் (தான் கொடுப்பது )
,ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல் ) ..இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன் .
.அடுத்து ருது ஆறு —வசந்தம் ,க்ரீஷ்மம் ,வர்ஷ ,சரத் ,ஹேமந்தம் ,சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன்.
.அடுத்த ஆறு யக்ஜம் –ஆக்ஞேயம் ,அக்நீஷோமீயம் ,வுபாம்சுயாஜம் ,ஐந்தரம் ,இரண்டு ஐந்த்ராஞ்ஞம் —
அடுத்து ஐந்து யஜ்ஞம் தேவ ,பித்ரு ,பூத ,மனுஷ ,ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார்
..அடுத்த ஐந்து ..பிராணன ,அபான ,வ்யான ,வுதான ,சமான .பஞ்ச ஆஹுதிகள் ..
அடுத்த ஐந்து பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம் ,ஆஹஅவநீயம் ,தஷினாக்னி ,சப்யம் ,ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன் .
.”இரு சீர் இரண்டுமாய் “=மிக்க அதிசயத்தை வுடைய ஞானம் , விரக்தி இரண்டையும் தர வல்லவன் .
.அவனை மட்டும் நோக்கும் ஞானமும் , கடைஅற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும் ..
“மூன்றும் “-பரபக்தி பரஞான ,பரம பக்தி -அல்லது ஐஸ்வர்ய ,கைவல்ய ,பகவத் ப்ராப்தி களையும் .
.அடுத்து “ஏழும் ” என்று விவேகாதிகள் ஏழையும் ..விவேகம் (காய சுத்தி விமோஹம் காமம் ,க்ரோதம் இல்லாமை ),
அப்யாசம் கரியை கல்யாணம் ,அனவசடம் (சோக நிமித்தம் ,-மனசை மழுங்காது இருத்தல் )
அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை i).எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இது எல்லாம் தேவை –அடுத்த ஆறும் -..-ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் ,நிர்வாஹகன் அவன் ”
எட்டும் “ என்று -அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன்
விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன்
,சத்ய காம சத்ய சங்கல்ப ,ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன்
வேறு வேறு ஞானமாகி -வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் .”என்று புத்த அவதாரமும் ஆனவனே மெய்யினோடு பொய்யுமாய் -மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் .
“புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும்
முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து ,தள்ளி நிற்பவன்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே –ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது
-உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே ..
“கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி .கண்ட .இன்பம் எம்பெருமான்
ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து பிறந்த ஆச்சர்யம்
——————————————–
..3..”einthum einthum “..mun eranndu adikallal leelaa viboothiyaiyum adutha nitha viboothiyaiyum solli..thanakku nirheduha krubaiyaal katti aruliyathai sollukiraar..mudal einthu pancha boothangal.. aduthu gjana eindraiyangal aduthu karma endariyangal ..alla vattra vaayillum nintru=eppadi sonna achit mattum ellamal,chit ellavatrilum anadaryaamiyaay erukkum..”moontrum ontrum aahi”-prakruthi, ahangaram, mahangaram moontrum mannasahiya ontrum einthum than maathiraikal einthum. aahi=eppadi 24 thathuvangalukum nirvahanaay.. aahi..”aadi devaney”=muzlu mudal kadavulley..andarathu annai nintru=parama padathil porunthi erunthu..aduthu einthum=aprakruda pancha sakthi kallaiyum..,bogha sthanam, boga vubakarannangal,vaikunthathu amarar, munivar,muktar yenkira einthu vahuppukullum nyahamanaay ezlunthu aruli erukira vunnai..yaar ninaikka vallavar yenkiraar..
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே —3-
ஐந்தும் ஐந்தும் -முன் இரண்டு அடிகளால் லீலா விபூதியையும் -அடுத்து நித்ய விபூதியையும் சொல்லி
தனக்கு நிர்ஹேதுக கிருபையைக் காட்டி அருளியதைச் சொல்கிறார்
முதல் ஐந்து –பஞ்ச பூதங்கள் / அடுத்த ஐந்து –ஞான இந்திரியங்கள் /அடுத்த ஐந்து கர்மா இந்திரியங்கள் –அல்லாவற்றுள் நின்று -இப்படிச் சொன்ன அசித் மற்றும் இல்லாமல் சித் எல்லா வற்றிலும் அந்தர்யாமியாய் இருக்கும்
மூன்றும் ஒன்றும் ஆகி -பிரகிருதி அஹங்காரம் மமகாரம் மனசாகிய ஒன்றும்
ஐந்தும் -தன மாத்ரைகள் ஐந்தும் ஆகி -இப்படி 24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய் ஆகி
ஆதி தேவனாய் -முழு முதல் கடவுளாய்
அந்தரத்து அணைந்து நின்று -பரமபதத்தில் பொருந்தி இருந்து –
அடுத்த ஐந்தும் -அப்ராக்ருத பஞ்ச சக்திகளையும் -போக ஸ்தானம் போக உப கரணங்கள் -வைகுந்தத்தது அமரரரும் முனிவரும் முக்தர் என்கிற ஐந்து வகுப்புக்களும் -நியாமகனாய் எழுந்து அருளி இருக்கிற உன்னை யார் நினைக்க வல்லவர் என்கிறார்
—————————————————————————————-
..4..”moontru muppathaarinodu”..33 hl ezluthu “moontru muppathu.”.16 achezluthukkal “aarinodu oer einthum einthum “einthu lla karaathi panchaadsharam..”moontru moorthy aahi nintru”=rik,yajur,sama veda veda traya svaroobamaay..”moontru moontru moontru moontrum aay”=dvadasa asharee prithi paadyanaay..”ohm namo vasudevaya”…”thontru sodhi moontrumaay”ethai moontru thontru sodhiyaay yentru moontru asharam-prannavam-thontrum jothi..’thullakam ell villakkam”=azlivatra villakkahiya-“a” haram ..ohmkakarathil thikazlkintra jothi mayan..”ohmkaro bagavan vishnu”pola..sahalathukkum kaarannam, thanakku attravan athallaal thullakkamil villakku yentraar..”yem easaney”=yenakku nirubaadiha seshiyanavaney..”yentru”-yenathu kaariyangallai neeyey erittu konndu..”yen aaviyul puhunthathu yen kol”..yenna neermai !..
மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4
“மூன்று முப்பதாறினோடு “..33 ஹல் எழ்த்து “மூன்று முப்பது “.16 அச்சு எழுத்துகள்
“ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் “ஐந்து ள்ள கராதி பஞ்சாட்ஷரம் ..
“மூன்று மூர்த்தி ஆகி நின்று “=ரிக் ,யஜுர் ,சம வேத வேத திரைய ஸ்வரூபமாய் .
.”மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய “=த்வாதச அஷரீ பரதி பாட்யனாய் ..”ஒம் நமோ வாசுதேவாய “.
..”தோன்று சோதி மூன்றுமாய் ” மூன்று தோன்று சோதியாய் என்று மூன்று அஷரம்-
பிரணவம் -தோன்றும் ஜோதி ..’துளக்கம் இல்லா விளக்கம் “=அழிவற்ற விளக்காக -“அ ” காரம் ..ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்
.”ஓம்கரோ பகவன் விஷ்ணு “போல ..சகலத்துக்கும் காரணம் தனக்கு காரணம் அற்றவன் ஆதலால் துளக்கமில்லா விளக்கு என்றார் .
“எம் ஈசனே “=எனக்கு நிருபாதிஹ சேஷியனவானே .”என்று -எனது காரியங்களை நீயே ஏறிட்டு கொண்டு .
.”என் ஆவியுள் புகுந்தது என் கொல் “..என்ன நீர்மை
——————————————————————————————-
..5..”nintru eyangum ontru elaa vurukkal thorum”.vedangallum mandra rahasyangallum erukka “yaavar kanna valerey “yentru embiraan kettkka,andaratmaa vaahavum,jaga deha kaarannathvathaalum sahala aadanayurukkum svaabathai ,smudaya roobennamaha ariyalllam thavira,devareer yanakku katta naan alahu alahaha kanndaar pola oruvarukkum kaanna mudiyaathu yenkiraar..”nintru”..mallai mudaliya sthavara padarthangallaiyum,”eyangum’ yentru asaiya koodiya pasu,patchi mudaliya jangama jaadhikallaiyum..”ontru alaa’ ontru alada pala pala yenkiraar..ellarum azlinthu kidantha kaalathil ,vunnudaiya thiru naabi kamalathil Naan muhanai padaitheetrey ..”aadi devanallaiyey”=muzlu mudal kadasvul ellaiyaa yenkiraar..
நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே “.–5
வேதங்களும் மந்திர ரஹச்யங்களும் இருக்க -யாவர் காண வல்லரே -என்று எம்பிரான் கேட்க
-அந்தராத்மாவாக வும் ஜகத் காரணதவத்தாலும் -சகல ஆதாரமாய் இருக்கும் ஸ்வ பாவத்தை -சமுதாய ரூபமாக அறியலாமே தவிர
தேவரீர் எனக்கு காட்ட நான் அலகு அலகாக கண்டால் போலே ஒருவருக்கும் காண முடியாதே என்கிறார்
நின்று -மலை முதலிய ஸ்தாவர பதார்த்தங்களையும் இயங்கும் என்று அசையக் கூடிய பசு பட்ஷி முதலிய ஜங்கம ஜாதிகளையும்
ஓன்று அல்லாத பல என்கிறார்
எல்லாரும் அழிந்து கிடந்த காலத்தில் உன்னுடைய திரு நாபி கமலத்தில் நான் முகனைப் படைத்திட்டாயே
–ஆதி தேவன் அல்லையோ முழு முதல் கடவுள் இல்லையா என்கிறார்
————————————————————————————————————
..6″nagam yenthum aaha”..vulahathil ontrukku ontru darahamaay erukkum porulkallukkum evan daraham yenkirar ethaal..aravannai mel palli konndua perumaaney yentru villikiraar..”maa kam”=parama padathaiyum..”maakam yenthuvaar punal”=aahasathil tharikka patta siranda gangaiyum..”maa kam yenthu mankul”=aahasthial tharikka patta meha manndallathaiyum..”oer thee”=vaisvaanara agniyaiyum..”einthu vaayu”=pancha vruthi praannan”kallaiyum..amainthu kaathu”=porunthi, rashithu..”eham yenthi nintra neermai’=yellavatraiyum tharithu konndu erukkum svaabam”nin kanney eyantrathu”-vunnidathil than erukirathu..
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-
நாகம் ஏந்து மாக--உலகத்தில் ஒன்றுக்கு ஓன்று தாரகமாய் இருக்கும் பொருள்களுக்கும் இவனே தாரகம் என்கிறார்
-இத்தால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமானே என்று விளிக்கிறார் .
மாகம் -பரம பதத்தையும் .-மாகம் ஏந்து வார் புனல்-ஆகாசத்தில் தரிக்கப் பட்ட சிறந்த கங்கையும் “”
மாகம் ஏந்து மங்குல்-ஆகாசத்தில் தரிக்கப் பட்ட மகா மண்டலத்தையும்
ஓர் தீ -வைஸ்வனார அக்னியும்
ஐந்து வாயு -பஞ்ச வருத்தி பிராணங்களையும்
அமைந்து காத்து –-பொருந்தி ரஷித்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை-எல்லாவற்றையும் தரித்துக் கொண்டு இருக்கும் ஸ்வ பாவம்
நின் கணேயியன்றதே-உன்னிடத்திலே தான் என்கிறது
—————————————–
..7..”ontru eranndu moorthiyaay”..brahma, rudrar evarkallai sareeramaha konndu avarkalukku nyaamahan”muniyey naanmuhaney mukkan appa’pola “vurakkam “-yentrathu agjanathai..agjanam,anyadaa gjanam,vibareeda gjanam,samsayam, maruppu ellaam vurakkam thaan..”ontru eranndu kaalamaay”-erantha,nigazl,ethir kaalam sadarana artham..Saadviha,raajasa,daamasa kaalathukkum kadavan ..”vellai gjalam aayinaay”=kadal soozlntha boomandalathukku pravarthakanaay..”ontru eranndu theeyinaay”=aahavaneeyam,kaarha badyam,dashinaagni yentra moontru agnikalukkum nirvaahan..”aayan aaya”=gopala sajadeeyanaay avadaritha..”ontru eranndu kanninaanum vunnai yetha vallaney”=rudarun thuthikka vallavan alla..
ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-
ஓன்று இரண்டு மூர்த்தியாய் -பிரம்மா ருத்ரன் இவர்களை சரீரமாகக் கொண்டு அவர்களுக்கும் நிர்வாஹகன் –
முனியே நான் முகனே முக்கண் அப்பா போலே
உறக்கம் -என்றது அஜ்ஞ்ஞானத்தை -அஜ்ஞ்ஞானம் அன்ய்ச்தா ஜ்ஞானம் விபரீத ஜ்ஞானம் சம்சயம் .மறப்பு எல்லாம் -உறக்கம் தானே ,
ஓன்று இரண்டு காலமாகி-இறந்த நிகழ எதிர் காலங்கள் -சாதாரண அர்த்தம் -சாத்விக ரஜஸ் தமஸ் காலங்களுக்கும் கடவன் என்றபடி
வேலை ஞாலமாயினாய் -கடல் சூழ்ந்த பூ மண்டலத்துக்கு ப்ரவர்த்தனாகி
ஓன்று இரண்டு தீயுமாகி –ஆஹவநீயம் -கார்த்தபத்யம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளுக்கும் நிர்வாஹகன் .
ஆயனாய-கோபால சஜாதீயனாய் திருவவதரித்த
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே -ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் என்கிறார் .
———————————————————————–
..8..”aadiyana vaanavarkkum.”rudran mattum ellai ..vubaya vibootheil yaavaraalum mudiyaathu yenkiraar..”aadiaana vaanavarkkum”=Brahma, dasha prathabathikal,saptha rishikal,aadityarkal srushti karthaakkal…endran, sadur dasa manukkal sththi karthaakkal..rudran,agni,yaman evarkal samhaara karthaakkal..evarkallai ethaal sollitru..”anndam aaya appurathu aadi aana vaanavar=nithya soorikal.”aadi aana vaanam vaannar antha kaalam nee vuraithee”=jagadukku kadavarkalaha yerpaduthi erukum melvulahathavarin mudivu kaalathai nee aruli seykiraay..”aadi aana kalam ninnai”=aadi kaalam aana ninnai yentru maatri aadi kaalathukku nirvaahanana vunnai yaavar kanna vallar yenkiraar..
ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-
ஆதியான வானவர்க்கும்-ருத்ரனுக்கு மட்டும் இல்லை -உபய விபூதியில் உள்ளார் அனைவருக்கும் முடியாது என்கிறார் ர
ஆதியான வானவர்க்கும் -பிரம்ம -தட்ஷ பிரஜாபதிகள்- சப்த ரிஷிகள்- த்வாசதச ஆதித்யர்கள் -சிருஷ்டி கர்த்தாக்கள் -இந்த்ரன் -சதுர்தச மனுக்கள்-
ஸ்திதி கர்த்தாக்கள் -ருத்ரன் -அக்னி- எமன் இவர்கள் போன்ற சம்ஹார கர்த்தாக்கள் போன்றறோரை இத்தால் சொல்லிற்று .
அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்க்கும் -நித்ய ஸூ ரிகளுக்கும்
ஆதியான வான வாணர் –அந்த கால நீ யுரைத்தி-ஜகத்துக்கு கடவார்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளிச் செய்கிறாய்
ஆதியான கால நின்னை--ஆதி காலம் ஆன நின்னை என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை யாவர் காண வல்லரே –என்கிறார்
—————————————————
..9.”daadu vulaavu kontrai maallai”..prayojanarkallil mudalvanana sivanum, ananya prayojanarana vaithiha vudamarkallum vunnaiyey aasriyarikiraarkal..neeyey sarva samaasriyan yenkiraar..”nilaaya seer vedam vaannar=nirambiya gunnangal vudaiya vaithiharkal..”geetham vellviyaar”=sama gaanam muhunda yagja yaagangal nadathubavarkal..”needi aana kellviyaar”=gramapadi sravanna manangallai seybavar
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-
தாதுலாவு கொன்றை மாலை-பிரயோஜனாந்தரர்களில் முதல்வரான சிவனும்
நீதியால் வணங்கு பாத நின்மலா--அநந்ய பிரயோஜனரான வைதிக உடம்பர்களும் உன்னையே ஆஸ்ரயிக்கிறார்கள்
-நீயே சர்வ சமாஸ்ரயணீயன் என்கிறார்
நிலாய சீர் வேத வாணர்..-நிரம்பிய கல்யாண குணங்கள் உடைய வைதிகர்கள்
கீத வேள்வி யார் -சாம வேத ஞானம் உடையவர் முகுந்த யாக யஜ்ஞங்கள் நடத்துபவர்கள் .
நீதியான கேள்வியார்-க்ரமப்படி ஸ்ரவண மனன நாதிகளை செய்பவர்கள் ”
—————————————————-
..10..”thannulley thiraithu ezlum”..Bagavath sankalpathaal thontriuthalum pinbu azlivathum..avanathu svaroobathil piranthu layipathu –kadalil allaikal thontri azliyumaa pola-“nirpavum thiribavum’=nirpanavum thirubanavum..sthavara jangama roobamana prapancham ellaam..”tharangam”=allaikal..
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-
தன்னுளே திரைத்து எழும்-பகவத் சங்கல்பத்தால் தோன்றி உள்ளதும் பின்பு அழிவதும் அவனது ஸ்வரூபத்தில் பிறந்து லயிப்பது
கடலில் அலைகள் தோன்றி அழிவது போலேவே .
நிற்பவும் திரியவும்–நிற்பனவும் திரிவனவும் -ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம் எல்லாம்
தரங்கம் -அலைகள்
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply