Archive for the ‘தனியன் வ்யாக்யானம்’ Category

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—

November 5, 2020

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.

ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டா ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் பெருமை -ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் —

November 5, 2020

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும்,
ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான
ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

——-

தெய்வ வாக்கில் வந்த மஹிமை உண்டே –
இந்த ஸ்லோகம் அருளிச் செய்த ஸ்ரீ பெரிய பெருமாளே பண்டு
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாகவும் ஸ்ரீ கண்ணபிரானாகவும் திரு அவதாரம் செய்து அருளினவன் –

மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா -என்றும்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணி அரங்கன் -என்றும்
மதுரை மா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -என்றும்
திரு அவதரித்த காலத்திலும் சில வியக்திகள் இடம் ஆஸ்ரயித்து திரு உள்ளத்தில் வெறுப்புடன் இருக்க

அது தீரும் படி ஸதாச்சார்ய லக்ஷண பூர்த்தியுடன் இவரை ஆஸ்ரயிக்கப் பெற்றோமே
என்று ஹ்ருஷ்டராய் இருந்தமை
இந்த ஸ்லோகத்தில் ஒவ் ஒரு விசேஷணத்தாலும் ஸ்புடமாகக் காட்டப்படுவதைக் காணலாம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் ஒரு ஸ்ரீ சைல தயாபாத்ரமான ஒரு வியக்தியை –சைலம் ரிஸ்யமுக பர்வதம் –
அதுக்கு ஈசர் மதங்க முனிவர் -அவருக்கு தயா பாத்திரம் சுக்ரீவன் –
ஸூ க்ரீவம் சரணம் கத-ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்று இருந்த பெருமாள் மனஸ்தாபம் பட
நேர்ந்த குறை தீர திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளுக்கு
இலக்கான நம் ஸ்வாமியை அடைந்து குறை தீரப் பெற்றான்

அங்கு சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி-என்ற விபீஷணன் வாக்கின் படி சரண் அடைந்தும்
சாபமாநயா ஸுமித்ரே சராம்ச்ச ஆஸீ விஷாபமான் சாகரம் சோக்ஷயிஷ்யாமி -என்று முடிந்த குறை தீர
இந்த ஞான பக்தி வைராக்யக்யம் மிக்குள்ள ஆர்ணவம் பற்றி குறை தீரப் பெற்றான்

அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமாள் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜர் -இதில்
மந்திபாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்று அருளிய
அரங்கத்து அரவின் அணையானுக்கு மனஸ்தாபம் இல்லை என்றாலும் –
தன்னை யுற்று ஆட் செய்வதில் காட்டிலும் தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோரை யுற்று
ஆட் செய்வாரையே சிறந்தவர் என்று பாடக் கேட்டவர் ஆகையால்
யதீந்த்ரை விட யதீந்த்ர ப்ரவணரை இறைஞ்சி மகிழ்ந்தான்

விச்வாமித்ர சாந்தீப முனிகளை அடைந்து பட்ட குறைகள் தீர ஸமஸ்த கல்யாணக் குணக் கடலான
வைராக்ய நீதியான ரம்யஜா மாத்ரு முனியை ஆஸ்ரயித்து ஹ்ருஷ்டர் ஆனான்

மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளே தஞ்சம் எனத் தாம் கொண்ட மின்னு புகழ்
வேதியர்கள் தாள் அன்றி வேறு அறியாதார்
மேதினியில் விண்ணவருக்கும் மேல் அன்றோ –

———————————–

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-–6-

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

பிரமாதீச வருஷம் -ஆனி -பவுர்ணமி -மூலம் -12-6-1433-அன்று தனியன் அவதாரம்

ஸ்ரீ குரு பரம்பரை அனுசந்தானம் லஷ்மீ நாத -தனியன்
ஸ்ரீ ராமானுஜர் -யோ நித்யம் அச்யுதா -தனியன்
ஸ்ரீ நம்மாழ்வார் -மாதா பிதா -தனியன்
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்துதி -பூதம் சரஸ் ஸ-தனியன்

மா முனிகளுக்கு முன்பு உள்ள தனியன் அனுசந்தான க்ரமம் இப்படியே இருக்க –
அவற்றுக்கும் முன்பு இந்தத் தனியனை அனுசந்திக்க ஆணை பிறந்தது
இதுவே குரு பரம்பரைக்கும் பொருந்தும் –
ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் உள்ள ஆச்சார்யர்கள் அனைவருக்கும் பொருந்தும் படியை மேல் பார்ப்போம்

ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ சைலம் -திருமலை –
திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் வெற்பு -என்றும்
திருமலை மேல் எந்தைக்கு -என்றும் ஸ்ரீ பேயாழ்வார்
அந்த ஸ்ரீ சைலத்துக்கு ஈசன் திருவேங்கடவன் -அங்கு இன்றும் ஸ்ரீ ரெங்க மண்டபம் உண்டே –
நம் பெருமாள் பல ஆண்டுகள் அங்கே எழுந்து அருளினது நாம் அறிந்ததே

ஸ்ரீ சைலத்தைத் தனக்குப் பாத்திரம் ஆக்கிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் என்றும் கொள்ளலாம் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடமான -உலகுக்கு எல்லாம் தேசமாய் திகழும் மலையைத்
தன்னுடைய தயைக்குப் பாத்திரம் ஆக்கி
தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் -நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -விட்டு
பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்தான் அன்றோ –
திருவரங்கன் தீ பக்த்யாதி குண ஆர்ணவன்
யஸ் ஸர்வஞ்ஞ-ஸர்வ வித் -என்றபடி ஞானக்கடல்
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -ப்ரீதி -அடியவர்கள் இடம் அளவற்ற ப்ரீதி கொண்டவன் -அன்றோ

யதீந்த்ரர் இடம் இவன் கொண்ட ப்ராவண்யம் லோக ப்ரஸித்தம் –
அவரும் மயலே பெருகும் படி ப்ராவண்யம் அரங்கன் மேலே கொண்டவர்

ரம்யஜா மாதா -அழகிய மணவாளன் தானே –

முனி -மனந சீலன் -உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான் அன்றோ

—————-

2-ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
ஸ்ரீ திருமலையைத் தனக்குப் பாத்திரமாகி பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்த நம்பெருமாள்
ஸ்ரீ சைலன் என்று கொண்டு அவன் தயைக்குப் பாத்திரம் அன்றோ இவளும்
இவளே ஸ்ரீ பத்மாவதிப் பிராட்டியாக ஸ்ரீ சைலனான திரு வேங்கடம் உடையானுக்குப் பாத்ரம் ஆனாள் –
திருவேங்கடத்தைத் தனது தயைக்குப் பாத்திரம் ஆக்கி ஐஸ்வர்யம் பொலிய ஆக்கி அருளினாள் என்றுமாம் –

அவன் ஸ்வரூபத்தாலே விபு -இவள் ஞானத்தால் விபு –
அகலகில்லேன் இறையும் -என்று தண்ணீர் தண்ணீர் என்னுமவள் ஆகையால் பக்தி ஆர்ணவம் அன்றோ

விந்த்ய மலை அடிவாரத்தில் இருந்து யதீந்த்ரரை மீட்டு -வேடுவச்சியாக தண்ணீர் கேட்டு –
ப்ராவண்யம் காட்டி அருளினாள் அன்றோ –
அவரது ப்ராவண்யம்-ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே –ஸ்ரீ பாஷ்யத்திலும் ஸ்ரீ கத்யத்திலும் காணலாமே –

ரம்யஜா மாதரம் -அழகே வடிவு எடுத்தவள் -உலகுக்கு எல்லாம் தாய் அன்றோ
முனி -சேதனர் உஜ்ஜீவனத்துக்காகவே அவனை அழகாலும் இவர்களை அருளாலும் திருத்துபவள் அன்றோ –

———–

3-ஸ்ரீ சேனை முதலியார்
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -என்றும்
வானவர் வானவர் கோன் உடன் நமன்று எழும் திருவேங்கடம் -என்றும்
அவன் தயைக்குப் பாத்திரமானவர் அன்றோ –

த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா த்வயா நிஸ் ருஷ்டாத்மப ரேண-ஸ்ரீ ஆளவந்தார் வாக்கின் படி
உலகையே நிர்வகிக்கும் ஞானத்தையும்
அவன் அமுது செய்து அருளிய ப்ரஸாதத்தையே அமுது செய்கின்ற பக்தியும் உடையவர் அன்றோ

விஸ்வக்சேனோ யதிபதிரபூத் –சப்தாதி –32-என்றபடி யதீந்த்ர அவதார பிரவணர் அன்றோ இவர்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம் த்யானம் செய்பவர் அன்றோ –

——————————-

4- ஸ்ரீ நம்மாழ்வார்
ஒழிவில் காலம் எல்லாம் -3-3-
உலகம் உண்ட பெரு வாயா –6-10-
ஸ்ரீ த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இரண்டுமே திருவேங்கடப் பதிகங்களே –
அவனுடைய பரிபூர்ண தயைக்குப் பாத்ரம் ஆனவர்

மதி நலம் அருளப் பெற்றவர் -தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பராங்குச பாத பக்தம்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம்-
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் என்று வாய் வெருவும்படி இருப்பவர் அன்றோ –

—————-

5-ஸ்ரீ நாத யாமுனர் தொடக்கமாக ஸ்ரீ எம்பெருமானார் ஆச்சார்ய குரு பரம்பரை –
அனைவருமே ஸ்ரீ சைல நாத பாத்ர பூதர்களே
ஞான வைராக்ய ராஸயே
அகாத பக்தி சிந்தவே

அனைவரும் எம்பெருமானார் ப்ராவண்யத்துக்கு இலக்கு ஆனவர்களே

ஸ்ரீ எம்பெருமானார் பரமாகும் பொழுது ஸ்ரீ ஆளவந்தாரே யதீந்த்ரர் என்று கொள்ளலாமே

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி என்றபடி அழகிய மணவாளனையே –
ஸர்வ காலம்- சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள் தானே அனைவரும் –

————————-

ஸ்ரீ வைஷ்ணவ வேர் பற்று ஸ்ரீ ரெங்கமே
ஸ்ரீ மா முனிகள் ஒருவரே சகல பூர்வாச்சார்யர்கள் வடிவமாக -embodiment -திகழும் ஸ்வாமி
மா முனிகளின் அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில்
சர்வ பூர்வோத்தர ஆச்சார்ய ஸூதா சாகர ஸந்த்ரமா -என்பது உண்டே

இந்த தனியன் மற்றவைகளைப் போல் வேறே ஸ்தோத்ர பாடங்களில் இருந்து எடுக்கப்படாமல்
ஸ்ரீ பெரிய பெருமாளே திருச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து முதல் முதல் அனுசந்திக்க ஆஜ்ஜை செலுத்தி
இதன் மூலம் நாம் அனைவரையும் அநுஸந்திக்க வைத்து அருளினான் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று அனுசந்திக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மூவரையும் குறிக்கும்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

——————-———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் —

November 4, 2020

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

ஸ்ரீ பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

ஸ்ரீ பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

ஸ்ரீ நஞ்சீயர் (பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆழ்வார்களும் நம் குரு பரம்பரையில் உள்ளனர்.
வரிசைக் கிரமத்தில் ஸ்ரீ ஆழ்வார்கள்:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்)
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் |
கலயே ய: ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத் ||

ஸ்ரீ காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத் தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால்
ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட ஸ்ரீ பொய்கை ஆழ்வாரைத் துதிக்கிறேன்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்)
மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் |
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத ||

ஸ்ரீ திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால்
ஸ்ரீ நாராயணனைக் கண்டு களிக்க ஞான தீபம் ஏற்றியவரான ஸ்ரீ பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பேயாழ்வார் (ஐப்பசி சதயம்)
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||

ஸ்ரீ திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட
திவ்ய சக்ஷுஸ் பெற்ற ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் (தை மகம்)
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே |
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: ||

ஸ்ரீ எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும்,
பஞ்சோபநிஷத்மய திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது.
ஸ்ரீ எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது)
ஸ்ரீ எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான ஸ்ரீ திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள்.
ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை)
அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: |
அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து ||

ஸ்ரீ நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்
தவிர வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு)
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன்.

ஸ்ரீ பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி)
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை
சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஸ்ரீ ஆண்டாளின் தமப்பனார்,
ஸ்ரீ திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய ஸ்ரீ பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ ஆண்டாள் (ஆடி பூரம்)
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்நம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

ஸ்ரீ நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் ஸ்ரீ கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில்
துயிலுணர்த்துபவள் , ஸ்ரீ எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள்
திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை)
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஸ்ரீ ரங்கநாதனைப் ஸ்ரீ பர வாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனை போல் மிகவும் நளினமாகத்
துயிலெழுப்பிய ஸ்ரீதொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருப்பாணாழ்வார் (கார்த்திகை ரோஹிணி )
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

இரண்டு ஆறுகளின் நடுவே அறி துயில் கொண்ட ஸ்ரீ அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய,
ஸ்ரீ லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால்
இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த ஸ்ரீ திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை)
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத்
தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

————————————-

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
ஸ்ரீ உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
ஸ்ரீ மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஸ்ரீ ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
ஸ்ரீ கூரத்தாழ்வான் (1009-1133AD)
ஸ்ரீ உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
ஸ்ரீ முதலி ஆண்டான் (1027-1132)
ஸ்ரீ எம்பார் (1021-1140)
ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
ஸ்ரீ அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
ஸ்ரீ பராசர பட்டர் ( b 1074 AD )
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
ஸ்ரீ நஞ்சீயர் (1113-1208 AD)
ஸ்ரீ நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
ஸ்ரீ நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

ஸ்ரீ மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD
உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில்
தோன்றிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான ஸ்ரீ வரதாசார்யரும், ஸ்ரீ ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
ஸ்ரீ குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ஸ்ரீ ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.- தேசிகப் பிரபந்தம்

’ஸ்ரீ திவ்யஸூரி சரிதம்’, ‘ஸ்ரீ யதிராஜ வைபவம்’ போன்ற நூல்கள் நாம் ஆசார்யர்களை அறிந்து
கொள்வதற்கு உதவுகின்றன. இவை ஸ்ரீ உடையவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை; ‘
ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதி’ உடையவரின் பெருமைகளைக் கூறுவது.

‘ஸ்ரீ பெரிய திருமுடி அடைவு’ என்னும் நூல் ஆசார்ய புருஷர்களின் வரலாற்றுக் குறிப்பைத் தெரிவிப்பது.
ஸ்ரீ ஆளவந்தாரின் சீடரான ஸ்ரீ மாறநேர் நம்பி அவதரித்தது பாண்டிய நாட்டின் ’பராந்தகபுரம்’ என்ற ஊர் என்பது
இந்நூல் தெரிவிக்கும் செய்தி.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ சைல வைபவ பாசுரங்கள் —

October 25, 2020

ஆனி திரு மூலம் -தனியன் அவதார நாள்
ஸ்ரீ சைல அஷ்டகத்தின் தமிழ் ஆக்கம்
15 பாசுரங்கள் -அந்தாதி –

கூறுகேன் உலகீரே குங்குமத் தோள் அரங்கேசர்
மாறன் மறைப் பொருள் கேட்க மணவாள மா முனியை
ஏறும் மனை தனில் இருத்தி இரு நிலத்தில் தாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி –1-

ஆறு இரண்டு புரம் சூழும் அரங்க முதல் நூற்று எட்டும்
கூறிய ஸ்ரீ சயிலத்தைக் கொண்டாடி உரைக்க என
ஊறிய தேன் பெருக்கு என்ன உன்னி அத்தை உகந்து உரைத்தான்
சேறு வளர் கமலை மைந்தன் சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே -2-

ஆறு இரண்டு-பன்னிரண்டு மாதங்களும் -இரண்டு ஆற்றுக்கு நடுவில் என்றும்-

பட்டர் பிரான் முதலான பதின்மர் கலை படிச்சலினும்
சிட்டர்களாய் தினம் தோறும் திருமண் இடு வேளையிலும்
இட்டமுற உணும் பொழுதத்து ஒண் சுர நீர் ஏற்கையிலும்
அட்ட திக்கும் விளங்க உரைத்தார் ஆரியர்கள் அனைவருமே –3-
(பழிச்சலினும் -பாட பேதம்-அநுஸந்திக்கும் புகழும் போது எல்லாம் )

ஆரியர்கள் கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்
பேர் இயலும் தொண்டர் குழாம் பெரும் பேறாகக் கொண்டனரால்
சீரியராய் வாழ எண்ணில் ஜகத்தலத்தீர் கற்று உணர்மின்
தார் இயலும் அரங்கருக்கும் தமிழ் மறைக்கும் மணமாமே -4–

மணவாள மா முனியை வழுத்துரவோர் பயன் பெறுவர்
குணமாகக் கொண்மின் இதைக் கொடும் பிறபிப் பிணி அகல்வீர்
பண வாள் அரவு இவராம் பகைத்தாரோ உய்வு இலர்
மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர் தனியனையே –5-

தனியன் என்று பேர் சாற்றித் தண் அரங்கர் முன்னர்
இனிய திருப்பவளத்தாலே முனி வரனார்
மாறன் மறை முப்பாதாறாயிரத்தின் மாண் பொருளை
கூற உபதேசித்தார் கொண்டு –6-

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறும் உரைக்க
நேசமுற அரங்கர் நேமித்தார் ஏசுமவர்
பாதகராய் எரி வாய் பாழ் நரகில் துய்ப்பர் இன்னல்
வேதனார் உள்ள மட்டும் எய்த்து –7-

எய்யத் துணிய இராவணியைக் கொன்றவன் தான்
செய்ய நெறி விளங்கும் சேடன் அவன் வையம்
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்
வினை அறுத்து வீடு அருளும் வேந்து –8-

வேந்தராய் மண் ஆண்டு விண் ஏறலாம் எளிதாய்த்
தோய்ந்த உறவாய் இருக்கில் தொல் உலகீர் ஓர்ந்து உய்ய
ஏதி கொடு காலன் இருந்தமர் மேவார் விண்ணோர்
நாதனும் வந்தே வணங்கு நன்று – 9-

வணங்கினார் சீர் பெற்றார் வான் முறையால் வீடணர் போல்
இணங்கினார் ஓர் ஒருவர் இரு நிலத்தில் சிறப்புற்றார்
பிணங்கினார் பேய்ப் பிறவி பேதையர் கடமைத் தண்டே
உணங்கினார் தாமதராய் உட் சினந்தார் சென்ற வாறே –10-

தென் கலையாம் தமிழ் வேதச் சீ சயிலத் தனியன் எனும்
நன் கலையை உள் கனிந்து நவிற்று பெரும் தகை மாந்தர்
மின் களையும் புரி நூலும் மேல் நோக்கு புண்டரமும்
தென் கலையும் வட கலையும் திகழ் நா வீரர் ஆகுவரே –11-

ஆகுதல் என் இனி எனக்கோர் ஆராவமுதாய் என்
சோக மற உளத் தடத்துத் துலங்கு வர வர யோகி
சேகறு செம்மலர்த் தாளும் சீ சயிலத் தனியனும் இன்று
ஓகை யறப் பெற்றேனால் ஒலி கடல் தாரணீயீரே -12-

தாராணியோர் வாழ்வு எண்ணித் தானே திரு வனந்தன்
பேர் அணியும் குருகை நகர் பிறந்த தனிப் பேர் அருளால்
சீர் அணியும் மணவாள மா முனியாய்ச் செனித்தனனால்
தார் அணியும் அரங்கருக்குத் தமிழ் மறை தேசிகன் எனவே -13-

தமிழ் மறையோர் ஓதுவரேல் தனியன் இது மற்று இல்லை
திமிர மற மெய்ஞ்ஞானச் செழும் சுடர் சேர் மனமுடையீர்
அமிழாமல் சம்சாரத்து ஆழ் கடலை கடத்தி ஓர்
நிமிடத்தில் நித்தியராய் நிறுத்தும் பேர் இன்பத்தே –14-

பத்துத் திசைகளிலும் பண மணிகள் சுடர் எறிப்ப
முத்தி தரும் அரங்கருக்கு மூ வணையாய் சூழ்ந்து இலங்கும்
எத்திசையும் பணிந்து ஏத்தும் எம் பெரிய முனி யாகும்
அத்தன் எழில் வர யோகி ஆயிர வாய் அரவரசே –15-

அரவம் ஏறு மேவி அறி துயில் கொள்ளும் அரங்கர் உரை
வர யோகி சி சைலத்தின் பெரும் புகழ் வைபவத்தை
விரகால் இசை மறையோர் திலகன் தமிழ் வீறு உடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே –16-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்–ஶ்ரீ அரங்கன் அருளிய தனியன் திரு நாள்: ஆனி மூலம்

October 22, 2020

ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்–ஸ்ரீ அரங்கன் அருளிய தனியன்
தனியன் திரு நாள்: ஸ்ரீ ஆனி மூலம்

ஶ்ரீ மணவாள மாமுனிகள் தனியன் சமர்பித்து, ஶ்ரீ மணவாள மாமுனிகளை குருவாய்க் கொண்ட
ஶ்ரீ அழகிய மணவாளன்-அரங்கநாதன்.

ஶ்ரீ அரங்கன் கேட்ட ஶ்ரீ மணவாள மாமுனிகளின் உபன்யாசம்
ஶ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீரங்க கோயில் நிர்வாகத்தை ஏற்று, ஶ்ரீ ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.
தன் ஆச்சாரியார் ஶ்ரீ திருவாய் மொழி பிள்ளையின் ஆணையின் பேரில் ஶ்ரீ ஆழ்வார் திருநகரியில்
ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட ஶ்ரீ யதிராஜ விம்சதி இயற்றினார் –
அதனால் இவரை யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டார் .

ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டு காலம் (1430 AD)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய ஸ்ரீ திருவாய்மொழிக்கு உபன்யாசம் நிகழ்த்தினார் .
அந்த ஓராண்டு காலத்திற்கும் உபன்யாசம் தடைபடாமல் இருக்க ஸ்ரீ கோயில் உத்சவங்கள் அனைத்தும் நிறுத்தப் பட்டிருந்தன.
ஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே ஓர் சிறுவன், வடிவில் வந்து ஸ்ரீ மா முனிகளின் திறமையை பாராட்டி
“ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்ற புகழ் பெற்ற தனியனை வழங்கினார்.
இந்த தனியனே ஸ்ரீ கோயில்களிலும், கோஷ்டிகளிலும் சேவிக்கப்படுகின்றது.

தனியன்
தனியன் என்பது ஸ்ரீ ஆழ்வார்கள்-ஸ்ரீ ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம்.
ஸ்ரீ ஆழ்வார்கள், ஸ்ரீ ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களை சேவிக்கும் முன், இந்த ஸ்தோத்ரத்தைச் சேவித்தே
தொடங்க வேண்டும் என்பதால் தனியன் எனப்படுகிறது.

ஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்→

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்–விளக்கம்-1
“ஶ்ரீசைலேசர், என்ற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை, ஆசார்யர்யின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்,……………
பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்……….
யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான,……………..
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்”

தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே.

5. ஶ்ரீசைலேச தயா பாத்ரம்-விளக்கம்-2

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீசைல மலையான, ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு அதிபதியாக, விளங்கிய
ஸ்ரீ மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமாக விளங்கியவன் சுக்ரீவன்.
ஆனால் அந்தச் சுக்ரீவனும், தகுந்த நேரத்தில் ஶ்ரீராமருக்கு உதவ வராததால், ஶ்ரீராமன் அவன் மேல் கோபப்பட நேர்ந்தது.
அந்தக் குறை தீர, இப்போது ஒரு சைலர் (ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் ஸ்ரீ திரு”மலை”ஆழ்வார்)
என்னும் ஆச்சாரியர் கருணைக்குப் பாத்திரமான ஸ்ரீ மணவாளமாமுனிகளின் மேல் அன்பு கொண்டான்..

தீபக்யாதி குணார்ணவம்
ஸ்ரீ ராமராக அவதரித்து, தீபம்-சமுத்திர ராஜனிடம், இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற வேண்டிய போது
ஸ்ரீ திருப்புல்லாணிக் கரையில், ஸ்ரீ தர்பசயண ராமராக, மூன்று நாட்களாகியும் அவன் வரவில்லை யாகியதால்
ஸ்ரீ ராமருக்குக் கோபம் வந்து வில்லெடுத்ததும் ஓடோடி வந்து, ஸ்ரீ ராமரிடம் சரணடைந்தான்.
ஆனால் எவ்விதக் குறையும் இல்லாத, நிறைகளே நிறைந்த ஸ்ரீ மணவாள மாமுநிகளைச் சரணடைந்தான்.

யதீந்திர ப்ரவணம்
ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ திருவேங்கடவனுக்கு, சங்கு, சக்கரம் வழங்கி, “அப்பனுக்குச் சங்காழி அளித்தர பெருமான்” என்று
ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தார். அவர் ஐந்து ஆசார்யர்களின் பொங்கும் பரிவுடையவர்,
குணங்கள் நிறைந்த மகாசமுத்திரம். அப்படியிருக்க அவரை, ஆசார்யராக அரங்கன் வரிக்கவில்லை.
ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதியைச் செவிமடுத்த ஸ்ரீ அரங்கன், ஸ்ரீ ராமானுஜர் காலத்திலேயே,
“தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோர்” என்ற பாசுரத்தின்படி, அவரை உற்று ஆட் செய்யும் தன்மையில்
மிகச் சிறந்தவரான ஸ்ரீ மாமுநிகளுக்காகக் காத்திருந்தார்.

வந்தே ரம்ய ஜாமாதர முநிம்-
எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவரை வணங்குகிறேன்

ஆதலால், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் குண விசேஷங்கள். அப்படிப் பாடும் பொழுது
ஸ்ரீ அரங்கன் முற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில ஏமாற்றங்களையும்,
இப்போது ஏற்பட்ட குறையொன்றுமில்லாத ஏற்றத்தையும் கூட்டிப் பாடியுள்ளார்:

ஸ்ரீ ராமவதாரத்தில் ஸ்ரீ விஸ்வாமித்திர முனிவரை குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய முழு வரலாறைக்
கேள்வியுற்ற ஸ்ரீ ராமருக்கு, அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ சாந்தீபினி முனிவரிடம், பயின்ற பின் அவர் குரு தட்சணையாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்
உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத் தர வேண்டுமென்ற
ஒரு சாதாரண பலனைக் கேட்டுப் பெற்றார். எனவே ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.

ஆனால் எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத மாமுனிவர் ஒருவர் உண்டேல்,
அவர் ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவர் மட்டுமே; என்வே அவரை வணங்குகிறேன்

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்-விளக்கம்-3:ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்யானம்
ஸ்ரீசைலேச தயா பாத்ரம்–சுக்ரீவன்
ஸ்ரீ இராமாவதாரத்தின்போது “சைலேச தயா பாத்ரன்” என்பவனிடம் ஸ்ரீ இராமன் புகுந்தான்.
சைலம்=ரிஷ்யமுக மலை. அதன் அதிபதி மாதங்க மஹரிஷி. அவரது கருணையைப் பெற்றவன் சுக்ரீவன்.
தனக்கு உதவும்படி ஸ்ரீ இராமன் சுக்ரீவனிடம் புகுந்தாலும், சுக்ரீவன் தான் ஸ்ரீ இராமனுக்குப் பட்ட கடனை
அடைக்கவில்லை என்பதால், அவனை ஸ்ரீ இராமன் கண்டிக்க வேண்டியதாயிற்று.
இது சரணாகதிக்கு விரோதமாக ஆனதால், சரணாகதி தவறியது என்று ஸ்ரீ இராமன் வருத்தம் கொண்டான்.
இக்குறை தீர உயர்ந்த ஒரு ஆசார்யனிடம் சிஷ்யனாக இருப்பதே சிறந்தது என்று எண்ணினான்.

தீபக்யாதி குணார்ணவம்– ஸமுத்ர ராஜன்
ஸமுத்ர ராஜனிடம் ஸ்ரீ இராமன் அடைந்தான். ஆனால், அவன் இராமனின் சொற்களுக்கு ஏற்ற மதிப்பு
அளிக்கவில்லை என்பதால், அவன் மீதும் இராமன் சீற்றம் கொள்ள வேண்டியதானது.

யதீந்த்ர ப்ரணவம்–இராமாநுசர்
ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதியின் 97-ஆவது பாசுரமான – தன்னை உற்றச் செய்யும் தன்மையின் ஓர் – என்பதை
ஸ்ரீ திருவரங்கன் கேட்டான். இந்தப் பாசுரத்தில் ஸ்ரீ எம்பெருமானாரின் சிஷ்யர்களின் மேன்மை கூறப்பட்டுள்ளது.
இதனைக் கேட்டவுடன், ஸ்ரீ எம்பெருமானாருக்கு சிஷ்யனாக இருப்பதைக் காட்டிலும்,
அவரது சிஷ்யனுக்கு சிஷ்யனாக இருப்பது மேலானது என்று முடிவு செய்தான்.

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்–
ஸ்வாமி, ஸ்ரீ மணவாளமாமுனிகள் விஷயத்தில் கடல் போன்ற ஞானம், அறிவு, பக்தி கொண்ட
ஸ்வாமியிடம் சரணம் அடைந்தான்.

ஸ்ரீ இராமனின் குருவான ஸ்ரீ விச்வாமித்ரரின் குறைகளை நாம் அறிவோம்.
ஸ்ரீ கண்ணனின் குருவான ஸாந்தீபநி முனிவரும், குரு தக்ஷிணையாக தனது பிள்ளையைக் கேட்டாரே அன்றி,
மோக்ஷம் கேட்கவில்லை.
ஆக தனது இரு குருவிடமும் எம்பெருமானுக்கு அந்த அளவு பிடிப்பு உண்டாகவில்லை.
எனவே குருவுக்கு இலக்கணமான ஒருவரைத் (ஸ்ரீ மணவாள மா முனிகள்) தேர்ந்தெடுத்தான்.

ஸ்ரீ அரங்கனின் சிஷ்ய-லட்சணம்
சீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்ய-லட்சணமான ஐந்து கடமைகளைச்
செம்மையாக நடத்தி-நடத்தும் அரங்கன்:

(i) தனியன் சமர்ப்பித்தல்

(ii) ஆசார்யன் கீர்த்தியை வையமெங்கும் பரப்புதல்:
எல்லா ஸ்ரீ திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன்னும்,
சாறறு முறை முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ‘ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்” சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்,
மடங்கள், கூடங்கள், ஶ்ரீ வைஷ்ணவர்கள், பாகவதர்களின் இல்லங்களிலும் தினம் தோறும்
முதலிலும், முடிவிலும் இந்தத் தனியன் சேவிக்கப் பட்டு வருகிறது.

(iii) சீடனுக்கு தனக்கென்று இல்லை
எந்த உடமையும் (சொத்தும்) தனக்கென்று இல்லையென்றும், எல்லாம் ஆசார்யனுடையவே,
தாம் அனுபவிப்பது அவர் கருணயால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும்.
எனவே தம் உடமைகளையெல்லாம் நிர்வகிக்கும், ஸ்ரீ ஆதி சேஷனையே ஸ்ரீ மா முநிகளுக்குக் கொடுத்துவிட்டார் ஸ்ரீ அரங்கன்.
அதனால் தான் ஸ்ரீ மணவாள மாமுனிகள் எங்கும், எப்பொழுதும் ஸ்ரீ சேஷ பீடத்திலேயே எழுந்தருளி யிருக்கிறார்.
ஸ்ரீ ஆதி சேஷ அவதாரமாகிய ஸ்ரீ ராமானுஜருக்கே இல்லாத சேஷாச-ஆசனத்தை ஸ்ரீ மாமுநிகளுக்குக் கொடுத்தருளினார்.

(iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும்.
ஸ்ரீ அரங்கனின் பெயரான ஸ்ரீ அழகிய மணவாளன் என்னும் பெயரே,
ஸ்ரீ மாமுநிகளுக்கு அவர் பெற்றோரால் சூடப்பட்டது.
ஸ்ரீ மாமுநிகள் துறவறம் மேற்கொண்ட போது, ஸ்ரீ சடகோப ஜீயர் என்னும் திருநாமத்தை ஏற்க விரும்பி
ஸ்ரீ அரங்கனிடம் வேண்ட, ஸ்ரீ அரங்கன் அதை ஏற்காமல், பழைய நாமத்துடனே இருக்கும்படி அருளினார்.
தம் ஆசார்யர் நாமம் அப்படியே இருந்தால் தான்,தாமும் ஆசார்யன் நாமத்துடன்(ஸ்ரீ அழகிய மணவாளன்)
என்று இருக்கு முடியும் என்று கருதியே இவ்வாறு ஸ்ரீ அரங்கன் நியமனம் ஆயிற்று

(v) ஆசார்யன் அவதார-திருநட்சித்திரத்தையும், ஸ்ரீ பரமபத-திதியையும் சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.
ஸ்ரீ அரங்கன் இவ்விரண்டையும் செவ்வனே நடத்தி வருகிறார்.
இரண்டு நாட்களிலும் அரங்கன் பிரசாதங்கள், மாலை, மரியாதைகள் மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீர்த்த திதியன்று, ஸ்ரீ அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, ஸ்ரீ மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார்.
ஸ்ரீ மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே, ஸ்ரீ அரங்கனுக்கு உச்சி கால நைவேத்யம்.அன்று
ஸ்ரீ அரங்கன் சுருளமுது (வெற்றிலை) கண்டருளுவதில்லை.

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி – /திரு நாரணன் தாள் /ஸ்ரீ பெரியாழ்வாரின் ஸ்ரீ கிருஷ்ண -ஸ்ரீ பலராமாநுஜ அனுபவம்– —

August 31, 2020

ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி –

1-ஓம் நமோ ராமாநுஜாய

2-ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம

3-சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம –

———

ஸ்ரீ திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய

இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு
சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு
இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்-வைத்துக் கொண்டு இருக்குமே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது-எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்-பிராட்டிமார் பூர்த்தியும்-நித்ய ஸூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்-ஆச்சார்யர்கள் உடைய
சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு –

———

ஸ்ரீ த்வய பிரகரணம்

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –

இந்த த்வய மந்த்ரம்-–மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–
ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்

———

ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம்

சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம –

இவ்வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்-இரவு காலத்தில்
முதலியாண்டான்-எம்பார்-திரு நாராயண புரத்து அரையர்-மாருதி யாண்டான்-உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள-மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து-மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –

————–

திரு நாரணன் தாள்

தக்ஷிண பதரி
திரு நாராயணன் -ஸநத்குமாரனால் பிரதிஷ்டை முதலில்
ஹ்ருத உத்பவன் -ராமபிரியனாகி -செல்வப் பிள்ளை
ராமானுஜரால் வணங்கப்பட்டவன் -ராமன் சகோதரர்கள் பலராமானுஜராலும் நம் ஸ்வாமியாலும்
ராமன் பேத்திக்கு -கனக மாலினி -யது சேகரன் உடன் கல்யாணம் -சீதனம்
ராமர் கிருஷ்ணர் இருவராலும் ஆராதனம் கொண்ட பெருமாள் –
ஆனந்தமய விமானம்
வேதாத்ரி நாராயணாத்ரி -யாதவாத்ரி யதி சைலம்
ஆகமம் படியே தாயார் திருவடியில்
ஸ்ரீ தேவி பூ தேவி வலது திருக்கையில் பத்மம்
திரு நாரணன் தாள் -வளர்த்த இதத்தாய்
சேர்த்தி உத்சவம் -மூலவரும் உத்சவம் ஒரு நாள்
தை புனர்வசு உத்சவம்
தை புனர்வசு சாயங்காலம் திருமஞ்சனம் -முக்காடு பூட்டு கல்யாணி புஷ்காரணிக்கு விரைந்து புறப்பாடு
அங்கு சாத்தி ஸ்தோத்ர ரத்னம் சாதித்து கோஷ்ட்டி மெதுவாக -இரவு வரை மங்களா சாசனம் 10 மணிக்கு கத்ய த்ரய கோஷ்ட்டி
வைரமுடி உத்சவம்
ஸ்வாமி திரு நக்ஷத்ரம் உத்சவம் விசேஷம்

தாயாரும் அங்கே கிடைக்க -அவரையும் பிரதிஷ்டை –
யதுகிரி தாயார் -திருவாடிப்பூரம் -இயற்பா கோஷ்ட்டி –
ஆண்டாள் சந்நிதி திருக்கச்சி நம்பிக்கு சமர்ப்பித்து
தானே ஸ்வாமிக்கு காட்டிக் கொடுத்து அருளி
மூலவரும் உத்சவம் தாம் இருந்த இடத்தை தாமே காட்டிக் கொடுத்து அருளினான்
84 திரு நக்ஷத்ரம் ஸ்வாமி டில்லி பாதுஷா இடம் சென்று
வாராய் செல்வப்பிள்ளை -இதுவே வேத வாக்கியம் அவனைப்பெற -உடனே பலம் கையிலே
ஸமஸ்த பய வாரணம் -செல்வப்பிள்ளை தேசிகன் சங்கல்ப சூரியோதயம்
அத்யந்த பக்தி உத்சத்ய-பிள்ளை ஊட்ட உண்ட ஸுலப்யம்
சபரி பெருமாள் -விதுரன் கண்ணன் போல் செல்லப்பிள்ளை
ஸமாஸ்ரயணம் இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபம் –
தாயார் திருவடியை ஆஸ்ரயிக்கக் கேட்க வேண்டுமோ
மூன்று விளக்கு அடி ஜோதி கடி ஜோதி முடி ஜோதி சேவிக்க கர்ப்ப க்ரஹம் இன்றும் சேவை
திண் கழல் –
கார்த்திகை தசமி பரிக்ரமம் சூசந்த்ரனுக்கு மோக்ஷம் அஷ்ட தீர்த்தமும் ஏறி அருளி
12 வருஷம் தொண்டனூர்
12 வருஷம் திருநாராயணபுரம்
த்வயம் தாயார்
அபய ஹஸ்தம்
ரஹஸ்ய த்ரயமும் சேவை
சர்வ ஸ்வயம் இங்கு

———-

ஸ்ரீ பெரியாழ்வாரின் ஸ்ரீ கிருஷ்ண -ஸ்ரீ பலராமாநுஜ அனுபவம்

உரலிடை ஆப்புண்டான் ஏச்சுக் கொலோ -ஒரே பாசுரம் ஆண்டாள் -யவ்வனப் பருவத்தில் ஊன்றி இருந்தாள்
நம்மாழ்வார் நின்று அனுபவிக்க சக்தி இல்லாமல் மோஹிப்பார்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -நின்று பரிபூர்ணமாக அனுபவிக்க
கண்ணன் பிறந்த இனி இல் -வண்ண மாடங்கள் -மல்லாண்ட திண் தோள் -அனுபவத்தில் தொடங்கி
கருடாரூடனாக சேவை சாதிக்க கிருஷ்ணனாகவே அனுபவம்
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை சாவத் தகர்த்தான் சாந்தணி தோள் சதுரன் -பின்பு அருளிச் செய்து
மல்லரை சாவத் தகர்த்த பின்பும் சாந்தணி கலையாமல் இருக்கும் சாதுர்யம்
அத்தைக் காட்டி சமாதானம் பண்ணப் பார்க்க அதுக்கும் அதிசங்கை பண்ணி பல்லாண்டு
சூரனான புத்திரனுக்கு காற்று அசைந்தாலும் என்ன வருமோ என்று இருக்கும் தாயார் பாவம் –

திருப் பல்லாண்டும் தாயார் யசோதை பாவம் உள்ளீடாக இருக்குமே
வண்ண மாடங்கள் –முதல் எட்டு பாசுரங்கள் தானான பாசுரமாய் இருந்தாலும் –
கையும் காலும் நிமிர்த்து -கடார நீர் -குளியல் அறை கடாரம் இன்றும் திருநாராயண புரத்தில் பிரசித்தம் –
பைய -வாட்டி –பசும் சிறு மஞ்சளால் –
ஒன்பதாவது பாசுரம் -கிடங்கில் தொட்டில் –மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
யசோதை உரைத்த -சொல்லாமல் விஷ்ணு சித்தன் விரித்த -நிகமன பாசுரத்தில் சொன்னாலும் நான் வார்த்தை வெளிப்படுத்தினார்
காப்பாறும் இல்லை கடல் வண்ணா -சர்வ ரக்ஷகன் காக்கும் இயல்பினனைப் பார்த்து சொல்லும் தாய்
புழுதி காணப் பெரிதும் உகப்பன் -ஆகிலும் கண்டார் பழிப்பர் -நாண் இத்தனையும் இலாதாய் –
நப்பின்னை காணில் சிரிக்கும் -ப்ரஹ்மாஸ்திரம்

உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னுடைய நெஞ்சகம் பால் -ஓன்று தப்பாமல் -எல்லாவற்றையும் சொல்லி
எல்லாம் புராணங்களில் சொன்னதையும் -அதில் இல்லாததையும்
சீமாலி -சரித்திரம் -போல்வனவும் -நப்பின்னை பிராட்டி உடன் பிறந்தவன் என்பர் இவனை சி மாலிகன் –
பற்று மஞ்சள் பூசி –கன்றுகள் மறித்து நீரூட் டி –மிடறு மெழு மெழுத்து ஓடி பாடி எங்கும் திரியாமே –
கப்பாக –காம்பாகக் கொடுத்து –கவிழ்த்த மலை -அருவிகள் முத்து மாலை போல் –
குப்பாயம் -என நின்று காட்சி தரும் முத்துசாட்டை அணிந்தால் போல் -கபாய் -இதுவே மருவி இன்றும் –
அனிமிஷரைப் பார்த்து உறகல் –

26 பதிகங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் –
விஷ்ணு சித்தர் மனத்தே கோயிலாகக் கொண்டு –ஸூ ரக்ஷணமாக -திவ்ய தேசங்களையும் விட்டு
ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என்றாலே விஷ்ணு சித்தர் மனமே

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்–

August 12, 2020

சர்க்கம் -பிரதி சர்க்கம் -வம்சம்-மன் வந்த்ரங்கள் -வம்ச அநு -கிளைக் கதைகள் -புராண பஞ்ச லக்ஷணங்கள்
புராதனம் -அபி நவம் -புராணம்

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்னம் சதுர்புஜம்
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

ரமாபதி பதாம் போஜ பரிஸ்புரித மானஸம்
ஸேநாபதிம் அஹம் வந்தே விச்வக்ஷேனம் நிரந்தரம்
ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸர்வமங்களா!!
ஜனக: சங்கரோ தேவ: தம்வந்தே குஞ்ஜராரனனம்

பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்ய விக்ரஹம்
ஸ்ரீமத் போதேந்த்ர யோகேந்த்ர தேஸீகேந்த்ரம் உபாஸ்மஹே!
ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ ஸுக ஸௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத அர்ஜுன வஷிஷ்ட விபீஷனாதீன் புன்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி!!

ஜந்மாத்யஸ்ய யதோன்வயா திதரத ச்சார்தேஷ் ஸ்வபிந்ஞ: ஸ்வராட்
தேநே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஷூரய:
தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்நா ஸ்வேத ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி

தர்ம ப்ரோஜ்ஜித கைதவோ த்ர பரமோ நிர்மத்ஸராநாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவ மத்ர வஸ்து ஸிவதம் தாபத்ர யோன்மூலனம்
ஸ்ரீமத் பாகவதே மஹா முனிக்ருதே கிம் வா பரைரீஸ்வர:
ஸத்யோ ஹ்ருத் ய வ்ருத்யதே (அ)த்ரக்ருதிபி: ஶூஶ்ரூஷிபி ஸ்தத்க்ஷ்ணாத்

நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:

யம் பிரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம் த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவ
புத்ரேதி தன்மய தயா தரவோ பிநேது ஸ்தம் சர்வ பூதஹ்ருதயம் முநிமானதோஸ்மி!!

ய:ஸ்வாது பாவ மகில ஸ்ருதிசாரம் ஏகமத்யாத்ம தீப மதி திதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயா(ஆ)ஹ புராண குஹ்யம் தம் வ்யாஸ ஶூநும் உபயாமி குரூம் முனீநாம்

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்

கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தநாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

நம: பங்கஜ நாபாய நம : பங்கஜ மாலினே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே

ஸ்ரீமத் பாகவதாக்யோ யம் பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி
ஸ்வீக்ருதோ ஸி மயாநாத முக்தை யர்தம் பவசாகரே

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதி கஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காம வர்ஷத்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நிஸ்ஸேஷ தாபான் பிரதிஷது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீ

நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரநாஸநம்
ப்ரணாமோ துக்க ஸமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்!!

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

ஸ்ரீ ஹரயே நம: ஸ்ரீ ஹரயே நம: ஸ்ரீ ஹரயே நம:

—————————

கடன், சத்ரு பயம், வியாதி முதலிய கஷ்டங்களைப் போக்கி, பிரிந்த சொந்தங்களைத் திரும்பவும்
ஒன்று சேர்க்கவைக்கும் அற்புத ஸ்லோகம் இது…

காயந்தி தே விசதகர்ம க்ருஹேஷு தேவ்யோ
ராக்ஞாம் ஸ்வ சத்ருவதமாத்ம விமோக்ஷணம் ச
கோப்யஸ்ச குஞ்சரபதேர் ஜனகாத்மஜாயா:
பித்ரோஸ்ச லப்த சரணா முனயோ வயம் ச–உத்தவர் ஸ்ரீபகவானை வேண்டுவதாக அமைகிறது இந்த ஸ்லோகம்.

சங்கசூடன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றப் பட்ட கோபிகைகள் தங்களை எப்படி கானம் செய் கின்றனரோ
மேலும், கஜேந்திரன் எனும் யானையைத் தாங்கள் காத்தது,
ஸ்ரீராமாவதாரத்தில் சீதையைக் காப்பாற்றியது,
வசுதேவர்- தேவகியை கம்சனின் கொடுமையில் இருந்து காப்பாற்றியது ஆகியவற்றைச் சொல்லி,
தங்களைச் சரணடைந்த நாங்களும் முனிவர்களும் எப்படித் துதிக்கிறோமோ…
அதே போன்று, ஜராசந்தனால் சிறையில் அடைக்கப் பட்ட அரசர்களின் மனைவிகள் தங்களின் குழந்தைகளை
(கண்ணனின் புகழ் பாடி) சீராட்டும்போது, அவர்களின் தந்தையரை ஸ்ரீபகவான் விடுவித்துக் காப்பாற்றுவார்.

—————–

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும்.
அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால், அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
இதையே பாகவதத்தில்
நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:
என்ற ஸ்லோகத்தில் காணலாம். ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும்.

ப்ரம்மாவும் நாரதரும், விதுரரும் மைத்ரேயரும் யுதிஷ்டிரனும் நாரதரும், கிருஷ்ணனும் உத்தவரும், பரிமாறிக்கொண்ட
சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன்.
பாக்யவான் நான். சாஸ்வதமான ஹரியை எனக்குக் காட்டிவிட்டீர்களே. வேறு என்ன வேண்டும்?
என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த தக்ஷகன் என்கிற சர்ப்பம் தீண்டி மரணம் அடைந்தாலும்
துளியும் வருத்தமோ, கவலையோ இல்லை என்றான்.. அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார்.
அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து
கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.

thiruvonum.wordpress.com/2019/09/08/——ஸ்ரீ பாகவத புராண ஏற்றம் —

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்–ஸ்ரீ நாரதர் சதுஸ் ஸ்லோகி —

August 11, 2020

ஸ்ரீ வேத வியாசர் அனைத்து வேத புராணங்களையும் அருளிச் செய்த பின்பும் திரு உள்ளம் சோகமாய் இருக்கக் கண்ட ஸ்ரீ நாரதர்
நான்கு ஸ்லோகங்களால்-2.9.33-36- வேத சாரங்களை அருளிச் செய்து
ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியே முழுவதுமாக ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்யச் சொல்ல பிறந்த கிரந்தம்

ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ பாதாரயனர் -உடைய திருக் குமாரார்
ஸ்ரீ ஸூகர் ஸ்ரீ பரிஷித்துக்கு அருளிச் செய்த ஸ்ரீ மத் பாகவதம்

யாவன் அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –2-9-33-

யாவன்-எங்கும் பரந்து உள்ள
அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –
நிர்ஹேதுக அனுக்ரஹத்தால் அறியக் கடவீர்

அஹம் ஏவ சம் ஏவ அக்ரே நான்யத் யத் சத் அசத் பரம் பஸ்சத் அஹம் யத் ஏதக் ச யோ அவசிஸ்யேத சோஸ்மை அஹம் –34-

ருதே அர்த்தம் எது பிரதியேத ந பிரதியேத ச ஆத்மனி தத் வித்யாத் ஆத்மனோ மயாம் யத அபாஷஹ யத தமஸ்–35-

ப்ரஹ்மாத்மகம் இல்லா ஓன்று இல்லை -இருப்பது போல் -தமஸாகவே தோன்றும்

யதா மஹந்தி பூதாநி பூதேஸூ உச்ச அவஸேஸூ அனுப் பிரவிஸ்தானி அப் பிரவிஸ்தானி ததா தேசு ந தேசு அஹம் -36
உள்ளே உறைந்து நியமிக்கிறேன் -வியாப்த கத தோஷம் தட்டாமல்

ஸ்ரீ வாஸூ தேவன் இந்த நான்கு ஸ்லோகங்களையே விவரித்து ஸ்ரீ மத் பாகவாதமாக-வேத சாரமாக
ஸ்ரீ கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை விவரித்து
கிருஷ்ண ஸ்வ தமோபகதே தர்ம ஞான திபீ ஸஹ கலவ் நஸ்தத் ரசம் ஏச புராணர்கோ துணோதித்

ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதி எழுந்து அருள -தமஸில் ஆழ்ந்த உலகம் ஸ்ரீ மத் பாகவத புராணம்
மூலமாகவே கலியில் நாம் ஒளி பெறுகிறோம்

—-

சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்சோ மன்வந்தராணி ச வம்சய அனுசரிதச் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் –மத்ஸ்ய புராணம்

வைஷ்ணவம் நாரதீயஞ்ச ததா பாகவதம் ஸூபம் கருடாஞ்ச ததா பத்மம் வராஹம் ஸூப தர்சனே சாத்விகானி புராணி
விஜ்நேயனி ஸூபாநீவை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்தம் மார்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ராஜசானி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் ததா லைங்கம் சிவம் ஸ்கந்தம் ததைவ ச அக்னேயம் ச சதேதானி தமஸானி நிபோதமே

யத்ர அதிக்ருத்ய காயத்ரீம் வர்ணயதே தர்ம விஸ்தாரா வ்ருத்தாஸூர வதோ பேதேம் தத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ ததியாத் தேம ஸிம்ஹாஸ மன்விதம் ப்ரவ் க்ஷ தபத்யம் பவுர்ணமாஸ்யாம் ச யதி பரமாம் கதிம்
அஷ்டாக்ஷ சஹஸ்ராணி புராணம் ப்ரகீர்திதம் -மத்ஸ்ய புராண ஸ்லோகம் –53-20-22-
யாவன் ஒருவன் உயர்ந்த வேதாந்த கருத்துக்களை அளிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் எழுதி பொன்னால் செய்த
சிம்ஹாசனத்தில் வைத்து பத்ர–ஆவணி – மாச பவுர்ணமி அன்று தானமாக அளிக்கிறார்களோ அவர்கள் பரம கதி அடைகிறார்கள்

அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூ த் ராணாம் பரதர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ் வேதார்த்த பரிபிரும்ஹத புராணம்
சாம ரூபா சாஷாத் பகவதோதித துவாதச ஸ்கந்த யுக்தோயம் சதா விச்சேத சம்யுத கிரந்த
அஷ்டாதச சஹஸ்ர ஸ்ரீ மத் பாகவாதபிதம் –கருட புராணம் -ஹரி பக்த விலாசம் –10-394-395-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விவரணம் -மஹா பாரத சாரம் -காயத்ரி பாஷ்யம் -வேத விவரணம் –
புராண ஸ்ரேஷ்டம் –12 ஸ்கந்தங்கள் –100 அதிகாரங்கள் –18000 ஸ்லோகங்கள்

பதவ் யதியவ் பிரதம த்வித்யவ் த்ரிதியதுர்யவ் கதிதவ் யதுரு நாபிஸ் தத பஞ்சம ஏவ சாஸ்தோ புஜாந்தரம்
தோரயுக லம் யதன்யவ் முகாரவிந்தம் தசமம் பிரபுல்லம்
ஏகாதஸவ் யஸ்ய லலத பதகம் சிரோ பி யத் துவாதச ஏவ பதி தமதி தேவம் கருண நிதானம் தமல வர்ணம்
சுஹித வதரம் அபரஸம்ஸார சமுத்ர சேதும் பஜ மே ஹே பாகவத ஸ்வரூபம்

முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு
ஐந்தாவது -திரு நாபி
ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம்
ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம்
ஒன்பதாவது -திருக்கண்டம்
பத்தாவது திரு முகாரவிந்தம்
பதினொன்றாவது -லலாட பதக்கம்
பன்னிரண்டாவது சிரஸ்ஸூ

————–

அஹம் வேத்மி சுகோ வேத்தி வ்யாசோ வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ரஹ்யம் ந புத்தியா ந ச திகய –சிவன் சொல்வது -பக்தி ஒன்றாலே பாகவதம் அறியலாம்

ஸ்வயம்புர் நாரத சம்பூ குமாரவ் கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்

நாரதர் சம்பு வையாஸகிர் என்னும் சுகதேவர் -ஸ்ரீ பிருந்தாவன் மதுர ரசம் அனுபவித்தவர்
சுகதேவரே பிராட்டி கையில் கிளி
நாரதர் சிவன் கோபி ஸ்வரூபம் பெற்றவர்கள்

——————

12 ஸ்கந்தங்கள் –18000-ஸ்லோகங்கள் –

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -தனியன் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்- வியாக்யானம் –

July 26, 2020

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )

அவதாரிகை –
இதில் சப்த அவஸ்தாவஸ்திரரான சம்சாரிகளைக் குறித்து –
சம்சார துக்கம் அனுவர்த்தியாமல் ஸூகோத்தரமான திருநாட்டை பிராபிக்கையின் இடையாட்டமாக-
திரு விருத்தம் -என்கிற திவ்ய பிரபந்தத்தில் ஒரு பாதத்தை அப்யசித்து இருங்கோள்  -என்கிறது
அதாவது –
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்  இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றத்தை நினைக்கிறது
பொய் -1-/ யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு –திருமாலை வணங்குவனே -95
அழுந்தார் பிறப்பாம் -100-என்றார் இறே தாத்பர்யம்-
பொய் -யாதானும் -அழுந்தார் -என்று விரோதி நிவ்ருதியையும் என்றார் இறே-ஆச்சார்ய ஹிருதயம்-
எல்லாம் கூட ஏக வாக்கியம் -என்றபடி

அடியேன் செய்யும் விண்ணப்பம் -1-/ மாறன் விண்ணப்பம் செய்த -100-/
பிரபந்தம் எல்லாம் கூட வ்ருத்த விஞ்ஞாபனம் –

கருவிருத்தக்  குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே  –

கருவிருத்தக் குழி–கர்ப்ப ஸ்தானம் ஆகிற ஹேயமான பள்ளத் தில் நின்றும்
நீத்த பின் -நழுவிய பின்
காமக் கடும் குழி வீழ்ந்து-காமம் என்னும் குரூரமான பள்ளத்தில் விழுந்து
ஒரு விருத்தம் புக்கு -ஒரு காரியத்துக்கும் யோக்யதை இல்லாத கிழத்தனத்தை அடைந்து
உழலுருவீர் -திரிகிற பிராணிகளே
உயிரின் பொருள்கட்கு-ஜீவாத்மாவாகிற வஸ்துக்களுக்கு
ஒருவிருத்தம் புகுதாமல் -ஒரு துர் நடத்தையும் சேராமல் படிக்கு
குருகையர் கோன் உரைத்ததிரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –ஒரு பாதத்தை அப்யஸித்து
ஸ்ரீ வைகுண்டத்தில் நிஸ் சிந்தையராய் இருங்கோள்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

வியாக்யானம் –
சம்சார தோஷத்தை தர்சிப்பிக்கையாய் இறே முதல் அடி தான் இருப்பது
கருவிருத்தக்  குழி நீத்த பின் –
கர்ப்ப
ஜன்ம
பால்ய
யௌவன
ஜரா
மரண
நரகங்கள்
ஆகிற அவஸ்தா சப்தகங்களில் முந்தின அவஸ்தையைச் சொல்லுகிறது –

கருவிருத்த குழி –என்று
கரு -என்று கர்ப்பமாய்
இருத்தக் குழி என்று இருத்தப் பட்ட குழி -வைக்கப்பட்ட குழி
மாதா பஸ்த் ரா -என்று இட்டு வைக்கும் பையோபாதியாய் இறே மாதா இருப்பது –
மக்கள் தோற்ற குழி -வயிற்ருக் குழி -பெரிய திருமொழி –
அது தான் அத்யந்தம் கர்ஹையாய் இறே இருப்பது –
புறக் கருவாய் விருத்தமான குழி என்றுமாம்
மாதுர் ஜடரக உல்பக –
இதன் தோஷத்தை பஞ்சாக்னி வித்யையில் பரக்க பேசிற்றே –
அங்கன் அன்றிக்கே –
வ்ருத்தமாய் வளைவாய் -சூழ் பிறப்பு வளைய வளைய வருகிற –
கழற்றப் போகாதே இருக்குமே –

குழி நீத்த பின்காமக் கடும் குழி வீழ்ந்துஒரு விருத்தம்புக்கு உழலுருவீர்
-தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
வெம் காமம் கடும் குழி வீழ்ந்து
துயரம் செய் காமம்
சாந்தேந்து மென்முலையார் தடம் தோள் புணர் இன்பம் வெள்ளத்துள்   ஆழ்ந்தேன்
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
முற்ற மூத்து
அம்மை வயிற்றோடு யமன் கழுவோடு வளைய வளைய உழன்று திரிந்து
ஒரு விருத்தம் புக்கு -பொல்லா ஒழுக்கத்தில் விழுந்து –

உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு –
இப்படி உழலாத படி
அந் நலத்து   ஒண் பொருள் -திருவாய் -1-2-10-என்றபடி
பகவத் அனுபவ யோக்யமான ஆத்மவஸ்து க்களுக்கு –
ஆத்மா பிரயோஜனத்துக்கு –

ஒருவிருத்தம் புகுதாமல் –
ஏவம்விதமான வ்ருத்தங்கள்-ஏக தேசமும் பிரவேசியாமல் –
துர்  வ்ருத்தங்கள் ஒன்றும் சென்று அணுகாமல்
நடாவிய கூற்றம் -திரு விருத்தம் 6-இ றே
இப்பிறப்பு அறுக்கும் -திருவாய் மொழி-10-2-5-
அழித்தாய் யுன் திருவடியால் -திருவாய் -4-2-6-
அடியரை வல்வினைத்துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்  -திருவாய் -1-7-2-

இப்படி நிவர்த்தங்கள் ஆனவை பிரவர்த்தியாமல்
குருகையர் கோன் உரைத்த
குருகையர் கோன் சடகோபன்
நல்லார் நவில் குருகூர் நகராரான ஆழ்வார் அருளிச் செய்த

திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர்
பிரதம பிரபந்தமான திரு விருத்தத்திலே ஒரு பாதத்தை ஓதி இருங்கோள்
உங்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு ஓர் அடியே போதும்
கலித்துறை விருத்தம்
தம்முடைய வ்ருத்த விஞ்ஞாபனம்
ஆச்சார்ய உச்சாராண அனுச்சாராண முகத்தாலே ஓர் அடி கற்று தன் நிஷ்டராய் இருங்கோள்
திருமாலவன் கவி யாது கற்றேன் -48-என்றார் இறே

இத்தை அப்யசிக்கிற எதுக்காக என்னில்
திரு நாட்டகத்தே
திருநாட்டு இடையாட்டமாக -அத்தைப் பிராபிக்கைக்காக

இருள் தரும்  மா ஞாலத்தில் அவித்யாதி தோஷங்களை அனுசந்தித்தால் இறே திரு நாடு  சித்திப்பது
உயிர் கட்கு ஒருவிருத்தம் புகுதாமல் திரு நாட்டகத்தே திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் -என்றுமாம்

ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவில்ல தரம் உடையவர் ஸ்ரீ ஸூக்தி இறே

திருநாடு
திரு நகரியோடு அணித்தான திருவழுதி நாடு -என்றபடி

பவத் விஷய வாஸி ந -என்று இருந்தால் ஒரு விருத்தம் புகுதாது
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி இதி
திரு அஷ்டாக்ஷர சம்சித்தர் இறே ஆழ்வார்
ஆகையால் சம்சார நிவர்த்தகராய் மோக்ஷ பிரதான தீக்ஷிதருமாய் இருப்பவர்
திரு நாட்டுக்குள்ளே என்னுதல் திரு நாட்டு இடத்திலே என்னுதல் –
இரண்டு இடத்திலும் அவர் விஷய வாசம் உண்டு என்றபடி

ஆழ்வாருக்கு அவஸ்தா சப்தகங்களும் பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
கண்ணன்  நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்றவர் -திரு விருத்தம் -37-இறே
உடைய நங்கையார் திரு வயிற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அடிமை செய்யலுற்று இருப்பர்
அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் –பெரியாழ்வார் -5–9
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
ஆழியங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு -திரு அவதரிக்கும் போதே சடகோபராக அவதரித்து
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜென்மமாய்
ஸூ ஜ்ஞான கந பூரணராய்
பின்பு அவன் முகத்தன்றி  விழியேன் -என்று முலைப்பால் அருந்தாதராய்

அருளான் மன்னு குருகூர் சடகோபன் -அருளே தாரகமாய்
அவ் ஊர் திரு நாமம் கற்ற பின்
என்ன வார்த்தையும் கேட்குறாதே
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்–கைக் கண்டத்தையும் நடுக் கிடந்தத்தையும் சொல்லி
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாதே
யாவையும் திருமால் திரு நாமங்களேயாய்
ஸ்ரீ கிருஷ்ண கிரீடாம் ய ஆததே -என்று தத் சேஷ்டித அநு சாரியாய்

பதினாறு திரு நஷத்ரம் நிரம்பினவாறே
அமுத மென் மொழியான திரு வாய் மொழி பாடி  அடிமை செய்து
எல்லாம் கண்ணன் -என்று
பின்பு
பால் போல் சீரில் பழுத்து
அநந்தரம்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலை யுடையராய்
ஐயார் கண்டம் அடக்கிலும்  நின் கழல் எய்யாது  ஏத்த அருள் செய் -என்னும் மநோரதத்தை யுடையராய்
போம் வழியைப் பெற்று
அவா அற்று வீடு பெற்று –
திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக் கண் கூடி
வழு  விலா அடிமை செய்து வாழுமவர் இறே –

ஆகையால் அல்லாதார் ஸ்ரீ ஸூக்தி பந்த ஹேது
ஆழ்வார் திவ்ய ஸூக்தி முக்தி ஹேது-என்றது ஆயிற்று

இத்தால்
இழக்கிறது ஹேயமான சம்சாரம்
பெறுகிறது விலஷணமான பரம பதம்
இதுக்கு உடலாக சதாச்சார்யன் அருளிச்செய்த ஒரு நல்  வார்த்தையை
சத்துக்கள் இடத்திலே  அப்யசித்து
நிர்ப்பரனாய் இருக்கக் கடவன்-
என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று  –

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ மா முனிகள் வாழித் திரு நாம பாசுர வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் —

June 19, 2020

ஸ்ரீ மதே ரம்ய ஜா மாத்ரு முநயே விததே நம
யஸ் சுருதி ஸ்ம்ருதிஸ் சர்வ சித்தீ நாம் அந்தராய நிவாரணி –

ஸ்ரீ சைல தயா பாத்திரம் என்று தொடங்கி அருளிச் செய்த சேனை முதலியார் நாயனார்
ஜீயருடைய கல்யாண குணங்களில் தோற்று அடிமை புக்க படியை பிரகாசிப்பிக்கிறாராய் நின்றார் –
அவர் தம் அடியரான இவரும்-அக்குணங்களுக்கும் ஸுவ்ந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான
திவ்ய மங்கள விக்ரகத்தில் ஈடுபட்டு பாதாதி கேசாந்தமாக அனுபவித்து தம்முடைய பரிவின் மிகுதியால்
மங்களா சாசனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்
செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் என்று இறே இவருக்கு நிரூபகம்
இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர் தம்முடைய சேஷத்வ அனுகுணமாக
உன் பொன்னடி வாழ்க என்னுமா போலே
பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையில் ப்ரவ்ருத்தர் ஆகிறார்

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே —

பாதாதி கேசம் பரிவுடன் மங்களாசாசனம் செய்து அருளுகிறார் செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன்

செய்ய தாமரை தாளிணை வாழியே
பொன்னடியாம் செங்கமலப் போதுகள் அன்றோ இவர் திருவடி இணை –
பிரஜை முலையிலே வாய் வைக்கும்
நாண் மலராம் அடித் தாமரை
இவை யாய்த்து-உன் இணைத் தாமரை கட்கு அன்புருகி நிற்குமது -என்கிறபடி இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -ஏத்துவதே நிலை நின்ற ஸ்வரூபம்

செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும் படி இவருக்கு -ராக மௌமனஸ்ய-பத ஸுவ் ப்ராத்ரங்கள் உண்டாயிற்று
அழகும் நிறமும் கொண்டு ஸேவ்யமாய் போக்யமாய் உபாய பூர்த்தியை உடைய திருவடிகள் அன்றோ
ராகம் -சிகப்பு
பதம் -திருவடிகள்
ஸுவ் ப்ராத்ரம் –அவற்றின் சேர்த்தி –

அதாவது
அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமரைப் பூ போலே தர்ச நீயமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து
வைத்தால் போலே சேர்த்தி அழகையும் உடைத்தாய் உபாய பூர்த்தியையும் உடைத்தாய் யாய்த்து திருவடிகள் இருப்பது
இணை அடிகளின் இணை இல்லா அழகுக்கு ஏற்ற அன்பு கூர்ந்த மங்களா சாசனம்

உந் மீலத் பத்ம கர்பேத் யாதி
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீரேறவோட்டி -என்றும்
சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே என்றும் இறே அடி அறிவார் வார்த்தை
இப்படி இதனுடைய ஸுவ்ந்தர்யத்தையும் போக்யதா பிரகர்ஷத்தையும் அனுபவித்த இவர் மங்களா சாசனம்
பண்ணி அல்லது நிற்க மாட்டாரே -உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்னுமா போலே
அன்றியே
செய்ய -என்கிற இத்தால் திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய் ஆஸ்ரிதர் அளவும் வந்து
செல்லுகிற வாத்சல்யத்தை உடைத்து என்கை –
இது அந்நாராய சக்கரவர்த்திக்கு ப்ரத்யக்ஷம் -முதல் அடியிலே இறே எழுந்து ரஷித்து அருளிற்று
வந்து அருளி என்னை எடுத்த மலர்த் தாள்கள் வாழியே என்கிறபடி தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்து திருவடிகள் யாயிற்று
திருக்கமல பாதம் வந்து
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -என்னக் கடவது இறே
இவர் இப்படி தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது அளவாக இருக்கிற
பொற் காலானது நம் சென்னித் திடரிலே ஏறும்படி வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய
பாவனத்வத்தையும் போக்யத்வங்களையும் அனுபவித்தகு அவற்றுக்கு தம்மோடு உள்ள சம்பந்தத்தால் ஒரு அவத்யமும் வாராது
ஒழிய வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் ஆகவுமாம்
ஆகையால் இவருக்கு ப்ராப்ய பிராப்பகங்கள் இரண்டும் அடி தானேயாய் இருக்கை-

———-

இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையால் மேலே திரு வரையோடே சேர்த்து சிவந்து நிற்பதான
திருப்பரிவட்டத்தில் அழகில் சென்று அச்சேர்த்திக்கு மங்களா சாசனம் -மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி என்று –
கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே
சேலை வாழி திரு நாபி வாழியே
திருவரையில் பாங்காக ஆஜங்கம்-முழங்கால்-தழைத்து உடுத்த திருப்பரிவட்டத்தில் அழகில் திரு உள்ளம் சென்று
மங்களா சாசனம்
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி என்று திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது –
சந்திரனைச் சூழ்ந்த பரிவேஷம் போலே யாயிற்றுத் திருவரைக்கு திருப்பரியட்டத்தோடே சேர்த்தி
ஸூதா நிதி மிவஸ்வைர ஸ்வீ க்ருதோதக்ர விக்ரஹம் -என்னக் கடவது இறே–
சந்திரனைச் சுற்றி ஓளி வட்டம் போலே சுற்றும் ஓளி வட்டம் சூழ்ந்து ஜோதி எங்கும் பரந்து உள்ளது
ஈனமில்லாத இள நாயிறாரும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -என்றும்
ஆதாம்ர விமல அம்பரம் -என்றும் அத்யாச்சர்யமாய் இறே இருப்பது
இத்தால் பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தமை தோற்றுகிறது

அதுக்கு மேலே கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து
அவ்வழகுக்கு போற்றி என்கிறார் -திரு நாபி -வாழியே என்று
திருப் பரியட்டத்தோடே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது
அந்தி போல் நிறத்தாடை என்ற அநந்தரம் உந்தி மேலதன்றோ-என்று
ஸ்ரீ ஆழ்வார் ஈடுபட்டது போலே ஸுவ்ந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற
திரு நாபியின் வைலக்ஷண்யத்தைக் கண்டு சேலை வாழி திரு நாபி வாழியே என்கிறார்
அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய் -அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே உந்திச் சுழி இருப்பது
ஸுவ்ந்தர்ய சாகரம் இட்டளப்பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதனுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு
வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே -இது தான்
மடவார்களின் உந்திச் சூழலில் சுழலும் மனசை மீட்டு தன்னிடத்தில் ஆழங்கால் படுத்த வல்ல வற்றாயும் இருக்குமே-

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூந்தரமாய் இருக்கும் திரு மார்பையும்
அத்துடன் சேர்ந்த திரு யஜ்ஜோபவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் –
திரு மார்புக்குத் தூய்மை யாவது –
ஹ்ருத்யேந உத்வஹத் ஹரீம்-என்று-நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானைக் கொண்டு இருப்பது –
அத்தாலே ஹ்ருதயம் ஸுவ்ம்ய ரூபமாய் இருக்குமே
அவ்வளவும் அன்றியிலே-
இவர் திரு உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு
அரவிந்தப் பாவையும் தானும் சேர்த்தியுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது
விசேஷித்து வக்ஷஸ்தலசம் மாதவ ஸ்தானம் ஆகையால்
உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து
கேசவாதி பன்னிரு திரு நாமங்களில் மாதவன் இடம் அன்றோ திரு மார்பு
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி என்றபடி
திருவுக்கு இடமாய்த்து பெருமானின் திரு மார்பு
திருமாலுக்கு இடமாய்த்து ஆச்சார்யரின் திரு மார்பு
மங்களம் மாதாவாராம் மனஸ் பத்மாய மங்களம்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மாநச வாசிந ஸ்ரீ நிவாஸாய -என்றும் சொல்லக் கடவது இறே
ஆஸ்ரிதர்களின் உஜ்ஜீவனத்தையே நினைக்கும் திரு மார்பு –

அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆச்சார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களிலுமாயிற்று
அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –
விண்ணாட்டில் சால விரும்பும் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு
தன்னாரியன் பொருட்டாச் சங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -என்னக் கடவது இறே
அந்த அநந்ய ப்ரயோஜனத்தையும் ஆச்சார்ய பாரதந்தர்யத்தையும் யாய்த்து இங்குத் தூய்மையாக சொல்லுகிறது –
அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் என்னும்படி
இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே
இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -என்கிறபடி
பரம ஹம்சரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்மாசனத்தையும் உடைத்தாய் இருக்கும் –

ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே அங்க ராக ரஞ்சிதமான இவருடைய
ஹ்ருதயத்திலும் ஆஸ் பதியாய் அன்று இரான் ஆய்த்து
இப்படிபை இவன் எழுந்து அருளி இருக்கையாலே ஸுவ்ம்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம்
அத்யந்த ஸுவ்ம்ய ரூபமாய் இருக்கும் என்கை
ஆகையால் -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்கிறபடி இருவருமான சேர்த்திக்கு
இருப்பிடமான திரு மார்பை துய்ய மார்பும் புரி நூலும் வாழி என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் ஆகவுமாம்

இவர் மானஸ வாசியாய் இருக்கிறவனும்
புலம் புரி நூலவன் இறே
அலர் மேல் மங்கை உறை மார்பன் ஆகையால் அம் மா ஒருத்திக்கு இடமுடைத்தாய்த்து அம்மார்பு
இம்மார்பு இருவருக்கும் இடமுடைத்தாய்த்து இருக்கும்
திரு மாற்கு அரவு –இத்யாதி
மங்களம் பன்னகேந்த்ராயா –
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்னக் கடவது இறே

அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மநசாத் யாதம்-என்கிறபடியே ஆஸ்ரிதர்களுடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு
எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுவ்ஹார்யத்தை யுடைத்தாகை-
உரசா தாரயாமாச -என்றும்
நல் நெஞ்சம் அன்னம்-என்றும் சொல்லுகிறபடியே இவை இரண்டும் தானேயாய் இருக்கை
துய்ய மார்வும்
ஏராரும் செய்ய வடிவு என்னுமா போலே இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்
மந்தர கிரி மதித்த மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பண்டார ஸூந்தர ஸூகுமார திவ்ய விக்ரஹ என்று இறே இருப்பது
ஆக இவற்றால் சொல்லிற்று யாய்த்து
பாஹ்ய அப்யந்தர ஸூஸி-என்கை

இனித் திரு மார்போடு சேர்ந்து இறே திரு யஜ்ஜோபவீதம் இருப்பது
தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும்
அப்படி யோடே சேர்ந்த திரு யஜ்ஜோபவீதம்–படி -விக்ரஹம்
துய்ய மார்வும் புரி நூலும்
துஷார கரகர நிகர விசத தர விமல உபவீத பரி சோபித விசால வக்ஷஸ்தல -என்கிறபடியே
சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரமானால் போலே யாய்த்து திரு மார்புக்கு திரு யஜ்ஜோபவீதம் இருப்பது
சோபிதம் யஜ்ஜ ஸூத்ரேண -என்னக் கடவது இறே —
முந்நூல் மெய் நூல் -திரு மார்புடன் உள்ள சேர்த்தி அழகுக்கு பல்லாண்டு

அன்றிக்கே
இம் முந் நூலான மெய் நூலால் இறே பொய் நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம் அன்று என்று கழிப்பது –
வகுளதர தவள மாலா வஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர சமய வாதச் சேதநம் –என்னக் கடவது இறே
தம்முடைய ப்ரஹ்ம ஸூத் ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத் ரங்களைக் கழிப்பது
ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தால் சிகா யஜ்ஜோபவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன்
ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன்
ஆழ்வானைக் கண்டாய் ஆகாதே என்றான் இறே

சுந்தரத் திருத் தோளிணை வாழியே
இனி திரு மார்போடு சேர்ந்த திருத் தோள்களுக்கு அரண் செய்கிறார்
திருத் தோளிணை வாழியே –

மல்லாண்ட திண் தோளுக்கு பல்லாண்டு என்னுமா போலே -ஸூந்தர தோளிணை
புஜ த்வய வித்ருத விசத தர சங்க சக்ர லாஞ்சனங்களை உடைத்தாய் யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
தோளார் சுடர்த் திகிரி சங்குடைய ஸூந்தரன் இறே
சிங்கார மாலைத் திரு தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும்-என்று அநு பாவ்யமாய் இறே இருப்பது
தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான்–என்கிறபடியே இவருக்கு திருத் தோள்களானவை எப்பொழுதும்
சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே வலத்து உறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும்
இங்கும் உண்டாய் இருக்கை –
அன்றிக்கே
திருத் தோள்கள் தான் பகவல் லாஞ்சனத்தில் ப்ரமாணமுமாய்
அபவித்ரரை ஸூப வித்ரர் ஆக்கியும்
துர் விருத்தரை விருத்தவான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும்

மந்தரம் நாட்டி மதுரக் கொழுஞ்சாறு கொண்ட ஸூந்தர தோளுடையான்-என்று
ஆண்டாள் அழகரின் திருத் தோள்களில் ஈடுபாடு
மறைப்பால் கடைந்து மெய்ப்பொருள் உணர்த்தி தத்வப் பொருள் காட்டும் மா முனிகள்
தோளிணையில் இவர் ஈடுபாடு-
தோள் கண்டார் தோளே கண்டார் என்னும்படி கண்டவர் தம் மனம் கவரும்
காண் தகு தோள் அண்ணல் அன்றோ மா முனிகள்

அநந்தரம் திருத் தோள்களில் ஏக தேசமான திருக் கையையும் –
அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார்
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
அவ்வோ காலங்களில் ஸாஸ்த்ர ப்ரமாணங்களால் உபய விபூதி நாயகனான சர்வ ரக்ஷகனையும்
ரஷிக்கும் திருத் தோள்கள் –
வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு -அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டாமே –
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத் தாமரையில் சேர்ந்து இருந்த தண்டும்-என்று இறே சேர்த்தி இருப்பது
இக்கை கண்ட இவரை கை விட்டு இருக்க மாட்டாரே
அன்றிக்கே
முந்தை மறை தமிழ் விளக்கும் முத்திரக் கை வாழியே என்கிறபடி தனது தொண்டைக் குலம் சூழ இருக்க
அவர்களுக்கு தமிழ் வேதமான திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை ஹஸ்த முத்திரையால்
உபதேசித்து அருளுவதும் அநு பாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு –
உந் நித்ர பத்ம ஸூபகாம் உபதேச முத்ராம் என்ற உபதேச முத்திரையுடன் கூடிய திருக்கையும்
பாஷண்டிகளுக்கு வஜ்ர தண்டமாயும்–வேதாந்த சார ஸூக தரிசன தீப தண்டமாயும் இருக்கும்
தத்வ த்ரயத்தை விளக்கும் திரி தண்டம் திருக்கையில் ஏந்தி அருளும் அழகுக்கு பல்லாண்டு –
எழில் ஞான முத்திரை வாழியே -என்று சொல்லக் கடவது இறே
ஏந்திய
பூ ஏந்தினால் போலே இருக்கை
கையில் ஏந்திய முக்கோலும் வாழியே
நின் கையில் வேல் போற்றி என்னுமா போலே
அன்றிக்கே
கமல கரதல வித்ருத த்ரிதண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரி ஹ்ருத நிஜா வசத-என்று
ஒருக் கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும் –

கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்-
கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே -என்று திருக் கைக்கு அனந்த பாவியாய்ப்
பேசுவது திருக் கண்களை இறே
திருக் கைகளால் ஸ்பரிசித்து அருளின பின்பு இறே திருக் கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது

கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் இருக்கிற படி
நிரந்தர கருணை அம்ருத தரங்கிணி பிரார்த்ரிதா பாங்கைர் அநு கூலம் அபி ஷிஞ்ச-என்றார் இறே
இவரைப் போன்ற கண் உடையார் ஒருவரும் இல்லையே
இவருடைய கண் இறே எல்லாருக்கும் களை கண்
கண் அருளால் இறே எல்லாரையும் ரஷித்து அருளுவது

கண்ணிணை
கருணை பொழியும் திருக்கண்கள் –
அலர்ந்த தாமரைப் பூவில் இரண்டு வண்டுகள் அமர்ந்து இருப்பது போல்
திருக் கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி –
புன் முறுவலோடு கூடின தாமரை போன்ற முகத்தில் திரு உள்ளத்தில் பொங்கும்
கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள் –
இதற்கு தோற்று ஜிதந்தே புண்டரீகாஷா -என்கிறார்-
நேத்ரேன ஞானேனா -ஸ்வரூப வை லக்ஷண்யமும் ஞான வைலக்ஷண்யமும் சொல்லிற்று ஆயிற்று
ஸ்மயமாந முகாம் போஜாம் தயா மாந த்ருகஞ்சலம்–என்கிறபடி இறே சேர்த்தி இருப்பது
திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்திலே அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்
வாழி செவ்வாய் -என்றும்
வார் காதும் திரு நாம மணி நுதலும் வாழியே என்றும் அவற்றையும் திரு நாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்
அத்தாலே அவை இரண்டையும் மங்களா சாசனம் பண்ணி அருளினார்
இவர் ஜீயர் திருக் கண் மலரில் யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –

பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே
இவ்வளவும் ஸூ ரூப வை லக்ஷண்யம் அனுபவித்து மங்களா சாசனம் பண்ணின இவர்
இனி ஸ்வரூப குணமான ஞான வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா சாசனம்
பண்ணுபவராக அதிலே இழிகிறார்
கட் கண் என்றும் உட் கண் என்றும்
நேத்ரேண ஞாநேந -என்றும் ஞான சஷுஸ் ஸூக் கள் இரண்டுக்கும் தர்சனத்தவம் ஒத்து இருக்கையாலே
ஒரு சேர்த்தி உண்டு இறே

அத்தாலே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி–என்று ஞானத்தைப் பேசுகிறார்
புலன் -புந்தி -ஞானம்
பொய்யிலாத
இவர் விஷயத்தில் சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக உண்டு என்கை –
இனிச் சொல்ல மாட்டாதார் குறையே உள்ளது –
அன்றிக்கே
ஆஸ்ரிதரானவர்களுக்கு அசைத்தவாதி தோஷங்கள் வாராமல் நோக்கிப் போருமவர் என்றுமாம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிநாதாம்–கடாஷத்தாலே தோஷங்களைப் போக்கி அருளுபவர்
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பாரே-

மணவாள மா முனி
ரக்ஷகர் இன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையும் திரு நாம வைலஷண்யமும் விட ஒண்ணாததாய் இருக்கை
பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது ராமானுஜன் மெய் மதிக் கடல் –என்கிறபடி
அதி விலக்ஷண ஞானம் -உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை உடையவர் என்கை –

அதாவது
மெய் ஞானமும் இன்றியே -வினையியல் பிறப்பு அழுந்தி என்கிறபடி
சம்சார ஆர்னவ மக்நரானவர்களை ஞானக் கையால் யுத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால் கையாளும் காலாலும் இறே இவர் எடுத்து ரக்ஷிப்பது-
ஞானக்கை தந்து வந்து அருளி எடுத்த புந்தி வாழியே
ஞான பிரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது
தீ பக்த்யாதி குண ஆர்ணவம் என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே
ஞானம் சார பூத குணமாகையாலே அத்தை பிரதானமாகச் சொல்லக் கடவது
தத்ர சத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் –என்கிறபடியே சுத்த சத்வமயமான விக்ரஹ மாகையாலே
உள்ளில் பிரகாஸித்வம் என்ன-உள்ளில் உள்ளவற்றை பிரகாசிப்பிக்கக் கடவது இறே
புந்தி என்று ஞான மாத்ரத்தைச் சொன்னது பக்தியாதிகளுக்கும் உப லக்ஷணம்
மங்களம் நிர்மல ஞான பக்தி வைராக்ய ராசியே -என்னக் கடவது இறே

வாழி –
மங்களா சாசனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம்-என்பது போலே
அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானம் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையவனான குரு -என்றும் இறே
ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்வது
ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி சம்பந்த ஞானத்தை விளைவித்து
கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போவது எல்லாம் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே-என்கை –

மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தைக் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ர்யம்-அலகு அலகாய் காண வல்லதாய்- ஆழ்ந்த பொருள்களை உபதேசித்து அருளியவர்
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -தாமரையாள் கேள்வன் ஒருவனையே-ஸ்ரீ யபதியை விஷயமாக உடைத்தாய் உடைய ஞானம்
அது தான் ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்தில் நிலை நின்று போவதாய் இருக்குமே
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட சகல ஸாஸ்த்ர ஆச்சார்யர் என்னக் கடவது இறே
நித்ய ஸ்ரீ நித்ய மங்களமாகச் செல்ல மங்களா சாசனம்

ஆக
இவை எல்லாவற்றாலும்
ஸ்ரீ கீதையை அருளிச் செய்த கண்ணன் என்னும்படி நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனுடன் விகல்பிக்கலாம் படி ஞான நீதியாய் இருக்கும் இவருடைய ஞானமானது
கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அருளினார் -என்கை
கலி தோஷத்தால் இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போவது-
இவர் பல்லவ ராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே என்னக் கடவது இறே
கலி கன்றியான் அருளால் உயர்ந்தவர் இறே இவர் தான் –

இனி இவர் இப்படித் தம் ஞான அனுஷ்டானங்களால் ஞான விபாகமற சகல சேதனர்களையும்
ரஷித்துக் கொண்டு போவதால் வந்த புகழைச் சொல்கிறது
ஞாலம் உண்ட புகழ் போல் இருபத்தொரு புகழாய்த்து இது
தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி
அதாவது
ஞான வைபவத்த்தாலே வந்த புகழானது -தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்ததே -என்கிறபடியே –
நிரவதிக தேஜோ ரூபமாய் அப்ரதிஹதமாய் வாழ வேணும் என்கை –
புகழ் வாழி -என்ற அநந்தரம் -வாழி –
என்று இரட்டிப்பாய் இருப்பதற்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்
அன்றிக்கே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே–என்று கீழ்ச் சொன்ன யசஸ்ஸூக்கு ஆதாரமாய்
அநுக்தமான ஆத்ம குண வைலக்ஷண்யமும் அனவ்ரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம்
அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை

இத்தால்
சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாசனம் அநு கூலரானவர்க்கு அனவ்ரத கர்தவ்யம் என்று
அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ் வாழி
முந்நூல் உறை மார்பு முக்கோல் அங்கை வாழி
திண் தோள் வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாமம் மருவு நுதல் வாழி
பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே

மணவாள மா முனிகள் திருவடிகள் வாழியே
துவராடை வாழியே
இடை வாழியே
திரு நாபி வாழியே
யஜ்ஜோபவீதம் விளங்கும் திரு மார்பு வாழியே
முக்கோல் ஏந்திய திருக்கைகள் வாழியே
திருத்தோள்கள் வாழியே
பவளச் செவ்வாய் வாழியே
திருக்கண்கள் வாழியே
ராமானுஜ திவ்ய ஊர்த்வ புண்ட்ரம் வாழியே
திரு நெற்றி வாழியே
பொன் அரங்கின் மணவாள மா முனி வாழியே

—————————

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்