ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )
அவதாரிகை –
இதில் சப்த அவஸ்தாவஸ்திரரான சம்சாரிகளைக் குறித்து –
சம்சார துக்கம் அனுவர்த்தியாமல் ஸூகோத்தரமான திருநாட்டை பிராபிக்கையின் இடையாட்டமாக-
திரு விருத்தம் -என்கிற திவ்ய பிரபந்தத்தில் ஒரு பாதத்தை அப்யசித்து இருங்கோள் -என்கிறது
அதாவது –
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றத்தை நினைக்கிறது
பொய் -1-/ யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு –திருமாலை வணங்குவனே -95
அழுந்தார் பிறப்பாம் -100-என்றார் இறே தாத்பர்யம்-
பொய் -யாதானும் -அழுந்தார் -என்று விரோதி நிவ்ருதியையும் என்றார் இறே-ஆச்சார்ய ஹிருதயம்-
எல்லாம் கூட ஏக வாக்கியம் -என்றபடி
அடியேன் செய்யும் விண்ணப்பம் -1-/ மாறன் விண்ணப்பம் செய்த -100-/
பிரபந்தம் எல்லாம் கூட வ்ருத்த விஞ்ஞாபனம் –
கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –
கருவிருத்தக் குழி–கர்ப்ப ஸ்தானம் ஆகிற ஹேயமான பள்ளத் தில் நின்றும்
நீத்த பின் -நழுவிய பின்
காமக் கடும் குழி வீழ்ந்து-காமம் என்னும் குரூரமான பள்ளத்தில் விழுந்து
ஒரு விருத்தம் புக்கு -ஒரு காரியத்துக்கும் யோக்யதை இல்லாத கிழத்தனத்தை அடைந்து
உழலுருவீர் -திரிகிற பிராணிகளே
உயிரின் பொருள்கட்கு-ஜீவாத்மாவாகிற வஸ்துக்களுக்கு
ஒருவிருத்தம் புகுதாமல் -ஒரு துர் நடத்தையும் சேராமல் படிக்கு
குருகையர் கோன் உரைத்ததிரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –ஒரு பாதத்தை அப்யஸித்து
ஸ்ரீ வைகுண்டத்தில் நிஸ் சிந்தையராய் இருங்கோள்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
வியாக்யானம் –
சம்சார தோஷத்தை தர்சிப்பிக்கையாய் இறே முதல் அடி தான் இருப்பது
கருவிருத்தக் குழி நீத்த பின் –
கர்ப்ப
ஜன்ம
பால்ய
யௌவன
ஜரா
மரண
நரகங்கள்
ஆகிற அவஸ்தா சப்தகங்களில் முந்தின அவஸ்தையைச் சொல்லுகிறது –
கருவிருத்த குழி –என்று
கரு -என்று கர்ப்பமாய்
இருத்தக் குழி என்று இருத்தப் பட்ட குழி -வைக்கப்பட்ட குழி
மாதா பஸ்த் ரா -என்று இட்டு வைக்கும் பையோபாதியாய் இறே மாதா இருப்பது –
மக்கள் தோற்ற குழி -வயிற்ருக் குழி -பெரிய திருமொழி –
அது தான் அத்யந்தம் கர்ஹையாய் இறே இருப்பது –
புறக் கருவாய் விருத்தமான குழி என்றுமாம்
மாதுர் ஜடரக உல்பக –
இதன் தோஷத்தை பஞ்சாக்னி வித்யையில் பரக்க பேசிற்றே –
அங்கன் அன்றிக்கே –
வ்ருத்தமாய் வளைவாய் -சூழ் பிறப்பு வளைய வளைய வருகிற –
கழற்றப் போகாதே இருக்குமே –
குழி நீத்த பின் –காமக் கடும் குழி வீழ்ந்து –ஒரு விருத்தம்புக்கு உழலுருவீர்
-தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
வெம் காமம் கடும் குழி வீழ்ந்து
துயரம் செய் காமம்
சாந்தேந்து மென்முலையார் தடம் தோள் புணர் இன்பம் வெள்ளத்துள் ஆழ்ந்தேன்
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
முற்ற மூத்து
அம்மை வயிற்றோடு யமன் கழுவோடு வளைய வளைய உழன்று திரிந்து
ஒரு விருத்தம் புக்கு -பொல்லா ஒழுக்கத்தில் விழுந்து –
உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு –
இப்படி உழலாத படி
அந் நலத்து ஒண் பொருள் -திருவாய் -1-2-10-என்றபடி
பகவத் அனுபவ யோக்யமான ஆத்மவஸ்து க்களுக்கு –
ஆத்மா பிரயோஜனத்துக்கு –
ஒருவிருத்தம் புகுதாமல் –
ஏவம்விதமான வ்ருத்தங்கள்-ஏக தேசமும் பிரவேசியாமல் –
துர் வ்ருத்தங்கள் ஒன்றும் சென்று அணுகாமல்
நடாவிய கூற்றம் -திரு விருத்தம் 6-இ றே
இப்பிறப்பு அறுக்கும் -திருவாய் மொழி-10-2-5-
அழித்தாய் யுன் திருவடியால் -திருவாய் -4-2-6-
அடியரை வல்வினைத்துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய் -1-7-2-
இப்படி நிவர்த்தங்கள் ஆனவை பிரவர்த்தியாமல்
குருகையர் கோன் உரைத்த
குருகையர் கோன் சடகோபன்
நல்லார் நவில் குருகூர் நகராரான ஆழ்வார் அருளிச் செய்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர்
பிரதம பிரபந்தமான திரு விருத்தத்திலே ஒரு பாதத்தை ஓதி இருங்கோள்
உங்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு ஓர் அடியே போதும்
கலித்துறை விருத்தம்
தம்முடைய வ்ருத்த விஞ்ஞாபனம்
ஆச்சார்ய உச்சாராண அனுச்சாராண முகத்தாலே ஓர் அடி கற்று தன் நிஷ்டராய் இருங்கோள்
திருமாலவன் கவி யாது கற்றேன் -48-என்றார் இறே
இத்தை அப்யசிக்கிற எதுக்காக என்னில்
திரு நாட்டகத்தே
திருநாட்டு இடையாட்டமாக -அத்தைப் பிராபிக்கைக்காக
இருள் தரும் மா ஞாலத்தில் அவித்யாதி தோஷங்களை அனுசந்தித்தால் இறே திரு நாடு சித்திப்பது
உயிர் கட்கு ஒருவிருத்தம் புகுதாமல் திரு நாட்டகத்தே திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் -என்றுமாம்
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவில்ல தரம் உடையவர் ஸ்ரீ ஸூக்தி இறே
திருநாடு
திரு நகரியோடு அணித்தான திருவழுதி நாடு -என்றபடி
பவத் விஷய வாஸி ந -என்று இருந்தால் ஒரு விருத்தம் புகுதாது
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி இதி
திரு அஷ்டாக்ஷர சம்சித்தர் இறே ஆழ்வார்
ஆகையால் சம்சார நிவர்த்தகராய் மோக்ஷ பிரதான தீக்ஷிதருமாய் இருப்பவர்
திரு நாட்டுக்குள்ளே என்னுதல் திரு நாட்டு இடத்திலே என்னுதல் –
இரண்டு இடத்திலும் அவர் விஷய வாசம் உண்டு என்றபடி
ஆழ்வாருக்கு அவஸ்தா சப்தகங்களும் பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்றவர் -திரு விருத்தம் -37-இறே
உடைய நங்கையார் திரு வயிற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அடிமை செய்யலுற்று இருப்பர்
அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் –பெரியாழ்வார் -5–9
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
ஆழியங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு -திரு அவதரிக்கும் போதே சடகோபராக அவதரித்து
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜென்மமாய்
ஸூ ஜ்ஞான கந பூரணராய்
பின்பு அவன் முகத்தன்றி விழியேன் -என்று முலைப்பால் அருந்தாதராய்
அருளான் மன்னு குருகூர் சடகோபன் -அருளே தாரகமாய்
அவ் ஊர் திரு நாமம் கற்ற பின்
என்ன வார்த்தையும் கேட்குறாதே
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்–கைக் கண்டத்தையும் நடுக் கிடந்தத்தையும் சொல்லி
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாதே
யாவையும் திருமால் திரு நாமங்களேயாய்
ஸ்ரீ கிருஷ்ண கிரீடாம் ய ஆததே -என்று தத் சேஷ்டித அநு சாரியாய்
பதினாறு திரு நஷத்ரம் நிரம்பினவாறே
அமுத மென் மொழியான திரு வாய் மொழி பாடி அடிமை செய்து
எல்லாம் கண்ணன் -என்று
பின்பு
பால் போல் சீரில் பழுத்து
அநந்தரம்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலை யுடையராய்
ஐயார் கண்டம் அடக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் -என்னும் மநோரதத்தை யுடையராய்
போம் வழியைப் பெற்று
அவா அற்று வீடு பெற்று –
திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக் கண் கூடி
வழு விலா அடிமை செய்து வாழுமவர் இறே –
ஆகையால் அல்லாதார் ஸ்ரீ ஸூக்தி பந்த ஹேது
ஆழ்வார் திவ்ய ஸூக்தி முக்தி ஹேது-என்றது ஆயிற்று
இத்தால்
இழக்கிறது ஹேயமான சம்சாரம்
பெறுகிறது விலஷணமான பரம பதம்
இதுக்கு உடலாக சதாச்சார்யன் அருளிச்செய்த ஒரு நல் வார்த்தையை
சத்துக்கள் இடத்திலே அப்யசித்து
நிர்ப்பரனாய் இருக்கக் கடவன்-
என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று –
——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply