Archive for the ‘இரண்டாம் திருவந்தாதி’ Category

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே -அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே-நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை
உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்-நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்-

————

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே -அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று –இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே – அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –
இப்படி நினைக்குமவர்கள் -இவ்வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-

———————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய
விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய பரம உத்தேச்யமாக
பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல-

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய
லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று சஞ்சிதமான தனம் யுண்டு
என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர் முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –
சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –
இத்தை அன்றோ-உண்ணும் சோற்றில் முற் கூறும்-துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்ன நோற்ற விதி கொலோ-முகில் வண்ணன் மாயம் கொலோ –
நான் பண்ணின ஸூ க்ருதமோ -இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –

————–

இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டா இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
சர்வேஸ்வரன் –தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-
மால்-சர்வாதிகன் -பிச்சன்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே -இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –

———

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47–

ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

————-

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் -கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –
எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

வேதங்களையும் யுண்டாக்கினாய்- அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும்
எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்
மாலே-திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று-

—————–

நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு-அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம்-

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில்
புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –
அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை பாகனாபிமன்னராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கொண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

————

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

——————————

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ்வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

——————

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-
தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

————–

அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும்
ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –
இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இறே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு
அறிய ஒண்ணாது இருக்கும் படி என்பர் –இவர் இந்த நாட்டிலும் இல்லையே-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-
இதுக்கு மித்ர பாவம் அமையும் –இவ்விஷயத்தில் ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்-

—————–

நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

அனவரதம் அனுசந்தித்து ஸ்வீகார மாத்ரத்தையே பற்றி – மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே
நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————–

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37–

ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இறே –
அதற்குப் புறம்பான பின்பு அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –

————-

ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும்
நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார்

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –
நமக்கு என்றும் ஸ்ரீ யபதியானவனே ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லுகையே ஒத்து ஆவது

—————–

விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே-சகல வேத சஙக்ரஹமான
திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு பற்றப் பாருங்கோள்-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு
அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத் பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-

————-

இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக்
கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே
அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும்
அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்-அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி

———–

சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்-
ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –விலக்காமை-

—————–

ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும்

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள்-
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது- உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————–

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ -அடியே துடங்கி
இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய வேறு புண்ய பாபங்கள் இல்லை
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன்

————-

அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன்-தானே கோபத்தின் வழக்காய் முடித்து வில் இருக்கச் செய்தேயும் கோபத்தால் கொன்றான் –
நின்றதும் வேங்கடமே –அவதாரத்துக்கு பிற்பாடர் ஆனவர்கள் இழக்க ஒண்ணாது என்று அவர்கள் விரோதியைப்
போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –
வந்து –தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –

——-

கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26-

படி யமரர் வாழும் பதி –பூஸூரரான வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற திரு மலை –அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை-

———————-

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்—-27-

கரை கட்டா காவேரி போலே சர்வாதிகான-சர்வேஸ்வரனை
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் தேடி ஓடா நின்ற நெஞ்சு-

————-

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப்
போவது வருவதாக ஒண்ணாது என்று திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே -அது தன்னிலும்
திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே

————————

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி-கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 15, 2020

இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூ த்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே-
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் –

————

அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப்
போகா நின்ற பின்பு இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

ஆஸ்ரய ணீயராக பிரசித்தரான தேவர்களோடு -அவர்களை ஆஸ்ரயித்த மனுஷ்யரோடு வாசி அற-
பெற்ற தாய்க்கு ஆகாத பிரஜை யுண்டோ –
இது வகுத்தது என்று இராதே -பிரயோஜனங்களைக் கொண்டு இழப்பதே –
பலத்தைக் கூலியாக்கி த்யாஜ்யமான ஐஸ்வர் யத்தைப் பலமாகக் கொள்வதே -என்ன தர்ம ஹாநி-

————-

ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு————–13–

இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்கிற நியதி யுண்டோ –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் சர்வாதிகாரம் அன்றோ

———-

அவன் படி இதுவான பின்பு -சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூ த்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

ஜங்கம விமானம் காண் என்று சொல்லித் திரியும் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஈஸ்வரனையும் ஆத்மாவையும் அழிய மாறி உடம்பை வளர்ப்பதே
ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –
தீர்த்த கரராமின் திரிந்து-ஜகத்துக்கு அடங்க ஸூ பாவ ஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
பிள்ளானுக்கு மூத்த தேவப்பிள்ளை பட்டரைக் கண்டு -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க ஆர் முகத்திலே விழிக்க
மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
பட்டர் -தருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -குசலவர்களுக்கு –
திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே-
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத் தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –

————————

தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-
அதி ஸூ குமாரமான திரு மேனியோடு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை
நினைத்து அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—————–15-

இஃது ஒரு ஆஸ்ரித ரஷணம் இருக்கும்படியே
முதல் அழியவோ ஆஸ்ரித ரஷணம் பண்ணுவது -என்று நோவு படுகிறார் —

—————

அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால் இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –
எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ
அகர்ம வச்யனானவன் கர்ம வச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ -ஆனபின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-

அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால் அப்போது இடம் கொடுப்பது
இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது- இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –
வடுக நம்பி -எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –
அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திரு நாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –
நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின
இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –
இத்தால் -ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி-

அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் –
இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ -இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ
அவன் தானே ருசி ஜனகனாயும் பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ

மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும்
ருசி மாத்ரமே உடையானாகை என்றும்
ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்
ஓன்று பட்டரது
ஓன்று திருமலை நம்பியது
ஓன்று ஆழ்வானது-

மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை யடுவித்து மழை பெய்விப்பானும்-அவன் தானே யன்றோ என்கிறார் –
அப்படியே மனத்திடரில்-அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி -ருசி உண்டாக்குவானும் –
தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும் அவனே யன்றோ

——————

செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே தொழும் தகையார் —12-சேஷிகள் இல்லை என்கிறார்-
இங்கு இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-

துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து -அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை
தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆன பின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாச்ரயணீயனாய் இருப்பர்

—————

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீ யனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

அபரிச்சேத்யனானவன்- நித்ய சூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்–ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –

—————–

அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

திரு மாலே- பிராட்டியும் நீயுமாய் இருந்து போது போக்கை அன்றோ உன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த செயல்
இவை யுனக்குப் போருமோ–அன்றிக்கே பிராட்டி பரிய இருக்கும் விஷயம் படும் பாடே -என்றுமாம்-
அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் -விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –

————-

கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து -இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

நாரணன் தன் நாமங்கள் – தாய் பேர் சொல்லுமா போலே – நன்குணர்ந்து –பக்தியாலே உணர்ந்து
நன்கேத்தும்-ஏத்தினால் அல்லது செல்லாமை –காரணங்கள் –ஹேதுக்கள்-அவை யாவன –
இதுக்கடியான பக்தியை யுடையராய் -அதுக்கடியான ருசியை யுடையராய் -அதுக்கடியான ஸூ க்ருதத்தை யுடையராய் –
அதுக்கடியான பகவத் கடாஷத்தை யுடையவர் ஆனவர்களும்
பழி பாவம் கை யகற்றி -பலகாலும் நின்னை வழி வாழ்வார் ஆனவர்களும் வாழப் பெறுவார்-இவ்விரண்டு அதிகாரிகளும்
அழகியதாக அனுசந்திக்கப் பெறுவர்கள்-இத்தால் -உனக்குப்பரியப் பிறந்தார் உன் பிரசாதம் உடையார் அன்றோ –
பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியத் தலைக் கட்டப் பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 15, 2020

ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –கோயில் திருமலை திருக்கடல்மலை திருக்கோவலூர்-

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே-குருக்கத்திப் பூவில் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்-
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்–திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன்

பூதம் -சத்தை பெற்றவர் -எம்பெருமான் திருக் கல்யாண குணங்களை அனுபவித்தே சத்தை பெற்றவர்
கடல் வண்ணன் பூதம் -திருவாய் மொழி -5-2-1–
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது

————

அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-

————

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

பரபக்தி யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–
சூடுதற்கவா -என்று பர பக்தி–பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் –

————–

இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் -அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாகிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு
சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி -நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

நன்கு உணர்ந்து-உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் -அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும் ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
தானத்தால் –பக்தியினுடைய ஸ்தானத்திலே –பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு பூஷணமாக-நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணும்
இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே-அடைவு கெட்டுக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும்

———–

ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என்-

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆஸ்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால் அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-

———-

அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளியும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை-ஒரு புஷ்பமாக ரூபித்து -இதழும் -அல்லியும்-தளமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்-அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பைங்கமலம் -பரந்த பூ ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்
இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ஸ்நேஹத்தை–மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை
நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே-
நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான விலக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –
நெஞ்சை நகரமாக நிரூபிக்கிறது -கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக –

————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் -நகரம் கோயிலாகப் பேசினார் -இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –
அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது-சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

நீரோத மேனி நெடுமாலே –அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது-

———–

இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

————

நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

உகப்பைக் கொண்டே ஓர் –தேவைக்காக ஒண்ணாது –ஓர் –ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-

————

ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க -அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்–இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்-
பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது –
உனக்கு மித்ர பாவமும் அமைந்து இருக்கச் செய்தே அவளை முடித்து உன்னை தந்தது
ஆஸ்ரிதர் பக்கல் உண்டான ஓரம் இறே

————-

பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பூமியை அளந்தது இந் நீர்மைக்கு ஒக்குமோ -அவளுடைய நீர்மைக்கு பூமி சத்ருசமோ –
உன்னுடைய அளந்த வியாபாரம் தான் ஒக்குமோ-

————-

யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண வி றே எடுப்பது –
அந்த ச்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி
தேவர் நோக்கி யருள வேணும்

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
அடியேன் பட்ட கடை – உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம்
அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 21, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —
அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –
அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது
கீழில் திருவந்தாதியில் அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-இவர்
தம் மனசின் யுள்ளே அனுசந்தித்து அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது
ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –
உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் -இப்படியாகக் கூடுமோ என்னில்
சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-

சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால் அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-
சாதனம் தம் தலையில் இன்றியிலே அவனே யாகையாலே இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ
ஸ்ரீ குருகைக் காவலப்பன் பக்கலிலே ஸ்ரீ பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்
த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஸ்ரீ ஜைமினியும் -ஸ்ரீ வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம் ஸ்ரீ ஜைமினியும்
ஸ்ரீ வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே -அப்படியேயாய் இருக்கிறது –

அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –
ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –
அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் -எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

————————————————————————–

ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து -பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –
அதாவது -வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ஸ்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது -பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –
கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-

ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பை அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய் அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க
ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –
அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –
ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-

இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய் அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் -குணாதிக விஷயம் ஆகையாலும் -த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –

நன்புருகி-
நன்பு என்கிறது ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-
அன்றிக்கே
நன்பு -என்கிறது ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-நித்தியமாய் -ஸ்ரீ ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –

உருகி என்கிறது –
அசேத்யமாய்-அதாஹ்யமாய் -அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவத்ரவ்யம் பட்டது பட்டது –
நித்யவஸ்து உருகுகையாவது என் என்னில் அவ்விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
ஸ்ரீ பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல் ஸ்ரீ எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –
ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து -விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரமபக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ்வளவிலே ஸ்ரீ பகவத் பிரசாத லப்தமான பரஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –
விளக்கேற்றினேன் –
அவ்வழியாலே அடிமை செய்கிறேன்-
நாரணற்கு-
சர்வ சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான் –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் -காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக் கடவது இறே
என்னளவிலேயாய்ப் போகை அன்றியே -நாட்டார்க்கும் எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப்பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –

இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரஸ்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

———————–

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் கீழ் பாசுரத்தில் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-

விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –
பண்டு கன்றாலே விளவின் காயை விழ விட்டவனே –
கன்றையும் விளாவாயும் வந்த அஸூரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –

என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
இன்று ஆஸ்ரயித்த அளவன்று உன் பக்கல் ஸ்நேஹம் –இத்தை அகம் சுரிப்படுத்த வேணும் -தரமி அழியப் புகா நின்றது –
ஸ்நேஹோ மே பரம -உத்தர -40-16-
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே -ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையில் குருக்கத்திப் பூவில் திரு அவதாரம் -அயோநிஜர்
பூதம் -உண்மை -ஆத்மா -ஞாநீத் ஆத்மைவ மே மதம் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்
ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –ஸ்ரீ கோயில்–ஸ்ரீ திருமலை-ஸ்ரீ திருக்கடல்மலை -ஸ்ரீ திருக்கோவலூர்

————————————————————————–

அன்பே தகழி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக்கடல் மலை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கன் புகழ் உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலதில் வாழியே

————————————————————————–

ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்-
என் பிறவி தீர இறைஞ்சினேன் –
என் பிறவியாவது –இவர் தாம் -இது கண்டால் நல் நெஞ்சே -இப்பிறவி யாவது -66–என்று அருளிச் செய்த படியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -பல் பிறவியில் படிந்து -பிறவிப் பெரும் கடலிலே -உடலாழி பிறவியிலே புக்கு ஒழிகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள் தீரும் படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னங்கழலை இறைஞ்சினேன் -என்கிறது
இறைஞ்சுகை -பஜிக்கை –அதாவது சேவிக்கை-என்றபடி –
பொன்னங்கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -என்னுமா போலே
ஸ்ரீ பூதத் திருவடிகளுடைய பொன்னங்கழலுக்கு ஆன ஜென்மம் கழலும் இறே
இனி அவர் உபகாரகத்வ வைபவம் சொல்லுகிறது –

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் –நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை

அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான
ஸ்ரீ கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் ஸ்ரீ பூதத்தாரையும்-உடைத்தாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இறே
ஸ்ரீ மா மயிலை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
ஸ்ரீ கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இ றே

கடல் மலை பூதத்தார் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு –கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -ஸ்ரீ கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் ஸ்ரீ பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று

————————————————————————–

அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி உக்தனானவன் ஜகத்துக்கு சேஷி என்றார் –
இவர் அவ் உபய விபூதியையும் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து பக்தி பரவசராய் கவி பாடுகிறார் –
அவருக்கு இந்த பக்தி இல்லையோ என்னில் -உண்டு
காரண கார்ய ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்து பிறந்த ஞானம் அவரது-அது பக்வமாய்
பக்தி ரூபாபன்ன மான படி இவரது-
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஞ்ஞராய் இறே பரிமாறுவது –

அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-

————————————————————————–

ஜகத் வைசித்ரி யினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று அனுசந்திக்கிறார் -விசித்ரம் ஆக்கினான்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

வியாக்யானம் –

அன்பே தகளியா –
வையம் தகளியா என்று வையத்தை தம்முடைய
பக்தியிலே அனுசந்தித்து பக்தியை தகளியாக கொள்ளுகிறார் –
தைல வர்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணுமே –

ஆர்வமே நெய்யாக –
அதடியாக பிறந்த அபிநிவேசமே நெய்யாக –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –

இன்புருகு சிந்தை இடு திரியா –
விஷயத்தின் உடைய ரஸ்யதையாலே சிதிலமான ஹ்ருதயம் திரியாக –
நன்புருகி –
நன்பு என்று ஞானம்
தத் குண சாரத்வாத் -என்கிறபடி ஞாதாவைக் காட்டுகிறது –
அதாஹ்ய என்கிற ஆத்மா
இந்த பக்திக்கு அனுரூபமான சம்பந்தத்தை உடையவருக்கு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
பர பக்தி ஆகிற விளக்கு ஏற்றினேன்
நாரணற்கு-ஞானத் தமிழ் புரிந்தேன் நான் –
பரபக்தி பரவசனாய் கவி பாடுகிற நான் –

———————-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே
ஸ்ரீ சர்வாதிகனே
நெடியானே
அபரிச்சேத்யனானவனே
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே-
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய்
ஐஸ்வர்ய சூசகமான திருத் துழாய் மாலையை உடையையாய்

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே
பண்டு கன்றாலே விளங்காயை வீழ விட்டவனே
கண்ணனே
என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
என் ஆஸ்ரயத்தின் அளவன்று
உன் பக்கல் ஸ்நேஹம்
இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்

ஆல்-ஆச்சர்யம் –

—————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே –ஐப்பசி -அவிட்டத்தில்-
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

——————————————————————————————

ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற ஸ்ரீ பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி பஜித்தேன் என்கிறது –
இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தா ருமாய் -நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை ஸ்ரீ பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் -நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான ஸ்ரீ கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் ஸ்ரீ பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இறே
ஸ்ரீ மா மயிலை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
ஸ்ரீ கச்சிக் கிடந்தவனூர் ஸ்ரீ கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே-

கடல் மலை பூதத்தார் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு -ஸ்ரீ கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -ஸ்ரீ கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் ஸ்ரீ பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்
அவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை
நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –
பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் ஸ்ரீ பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை
தலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் -பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே
பரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு -பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு
பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –
பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஸ்ரீ ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –
சம்ஸ்லேஷத்தில் ஸூ கித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பரபக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –
நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணி கருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஸ்ரீ ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –
இனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –
ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –
ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யன் வார்த்தை
சம்ஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே பராசர வசனம் –

———————————–

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன்
என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பரபக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது -மேல் சொல்லுகிற
நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் –
அந்த விஷய வைலக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது
மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு உறுப்பான நெய்யாகவும் –
விஷய வைலக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த
ப்ரேம அவஸ்தைகளுக்கு வாய்த்தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பரஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –
ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணகமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால் அத்யந்த விலக்ஷணமான
ஆத்ம வஸ்துவானது பகவத் குணாஸ்வாத ரசத்தாலே-த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
ஸ்ரீ பகவத் தத்வ யாதாம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை லோக உபகாரகமாகப் பண்ணின நான்-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஸ்ரீ ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் -பேசித் தலைக் கட்டி யல்லது
தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் -சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –
அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஸ்ரீ ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் -சூடுதற்கவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று பர பக்தியால்
உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இறே –

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது –
ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் –
ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்
பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே -அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை –
சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யனும் அருளிச் செய்தது –
காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இறே அதுக்கு பாஷ்யம் –
ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இறே ஸ்ரீ திருவடியும் –
ஆகையால் பார்ப்பக்த்யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –
உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று பர பக்த் யவஸ்தையில் காரணமான நெஞ்சும் உருகும்
பர ஞான அவஸ்தையில் கரணமான நெஞ்சும் -கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

——————-

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் கீழ் பாசுரத்தில் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய் –
ஸ்ரீ பரமபத வாசிகளான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –
இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அஸூரா விஷ்டமாய் நின்ற
விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே
உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –
அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் -அந்த வியாமோஹம் ப்ரேரிக்க
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யாநாய இருக்குமவனாய்
இந்நிலையில் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே -எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

——————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 21, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி —அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –
அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது
கீழில் திருவந்தாதியில் அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-இவர்
தம் மனசின் யுள்ளே அனுசந்தித்து அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது
ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று
பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –
உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் -இப்படியாகக் கூடுமோ என்னில்
சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-

சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால் அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-
சாதனம் தம் தலையில் இன்றியிலே அவனே யாகையாலே இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ
ஸ்ரீ குருகைக் காவலப்பன் பக்கலிலே ஸ்ரீ பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -பதிம் விஸ்வஸ்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத் ஸ்ரீ திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத் ஸ்ரீ திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்
த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஸ்ரீ ஜைமினியும் -ஸ்ரீ வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம் ஸ்ரீ ஜைமினியும்
ஸ்ரீ வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக்யத்தாலே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே -அப்படியேயாய் இருக்கிறது –

அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –
ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –
அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் -எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

—————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி உக்தனானவன் ஜகத்துக்கு சேஷி என்றார் –
இவர் அவ் உபய விபூதியையும் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து பக்தி பரவசராய் கவி பாடுகிறார் –
அவருக்கு இந்த பக்தி இல்லையோ என்னில் -உண்டு
காரண கார்ய ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்து பிறந்த ஞானம் அவரது-அது பக்வமாய்
பக்தி ரூபாபன்ன மான படி இவரது-
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஞ்ஞராய் இ றே பரிமாறுவது –

அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-

—————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்
அவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை
நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் ஸ்ரீ பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
ஸ்ரீ இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை
தலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் –
பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே பரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு –
பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு
பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –
பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஸ்ரீ ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –

பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –
சம்ஸ்லேஷத்தில் ஸூகித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பரபக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –
நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணிகருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –
இனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வ பாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –
ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –
ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யன் வார்த்தை
சம்ஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே ஸ்ரீ பராசர வசனம் –

————————————————————————–

ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –

ஜகத் வைசித்ரி யினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று அனுசந்திக்கிறார் –
விசித்ரம் ஆக்கினான்

ஸ்ரீ பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி
அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

——————

இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் -அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக்
கூப்பிடுமவர்களுக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி –
நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

பக்தி பரவசராய் கவி பாடினார்க்கு அவன் கொடுக்கும் பரிசு சொல்லுகிறது –

பக்தி பரவசர்களாய்க் கொண்டு -அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய ஸூரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார்

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

———————-

கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே –
அவ்வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு
ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-
இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் –
அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் –
அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் –

அவன் செய்ததிலே தாம் ஈடுபடுகிறார்-

அடுத்து அணித்தாகத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை
ஆஸ்ரயிக்குமவர்கள் ஸ்ரீ பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

—————————————

கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் –
அன்றிக்கே -இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்-
இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

அன்பே தகளியா -என்று ஒரு விளக்கு ரூபித்தால் போலே
ஒரு புஷ்பமாக ரூபித்து-அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்-

அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4–

——————————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் -நகரம் கோயிலாகப் பேசினார் -இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –
அன்றிக்கே-பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாகவுமாம் –
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே –
ஸ்ரீ ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன-ஒன்றைச் சொன்னேன் அத்தனை –
இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று
கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் –
பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் –

அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது
சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறது –

ஸ்ரீ ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி
ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

——————————

அறியப் போமோ -என்றாரே -ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று –
இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் –
ஆகில் பின்னை இங்கனே எல்லோரும் அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் -அது வேண்டா
இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

ஞானத்துக்கு விஷயம் அன்றாகில்-சூன்யம் ஆகிறதோ என்னில்
அபிநிவேசத்தை உடையராய் ஆஸ்ரயிக்க வல்ல-பாக்யவான்கள் அறிவர் -என்கிறது –

ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று
அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் –

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

——————————-

இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் –என்று அறிந்து நீயும் விடாதே
அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

அவனை உகந்தார் காண்பரான பின்பு-நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி என்று
திரு உள்ளத்தைப் பார்த்து சொல்லுகிறார் –
பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்-நமுசி பட்டது படும் அத்தனை –

இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே –
நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

————————————————-

ஆனபின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் –
அதாவது -பொய்யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது -ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க -அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –
நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்-

பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது –

இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் –பூதனையை முடித்தால் போலே
அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

—————————————

வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் –
இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை-
பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

ஸ்ரீ யசோதை பிராட்டி உடைய-சிநேகத்துக்கு உபமானம் உண்டோ-என்கிறது –

பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ்விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய
ஸ்ரீ யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

————————————–

ஆக -இருந்தபடி இதுவாகையால் இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே
தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது –
அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும்
வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் –

உன்னுடையேனாய் இருந்து வைத்து நான் முன்பு தேவதாந்தரங்களை அனுவர்த்தித்துப் பட்ட
பொல்லாங்கு இனி படாதபடி காத்தருள வேணும்

அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் -ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –
அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட
என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

———————————————–

கா என்று கொண்டு வெறுமனே தலையிலே ஏறிடுகிறது ஏன் -தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூ த்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் –
தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன -இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-

தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன
இப்படி செய்வார் உண்டோ என்னில்-அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார்

நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

———————————-

ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ -அவர்களை ஷேபிக்கிறது ஏன் என்னில் –
அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு
இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –
மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் -அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்-

சிறியார் பெரியார் என்னாதே-ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாதார் எவர் –

ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும்
அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12–

——————————————-

ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ –
அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்-அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே உள்ளது ஓன்று அன்றோ –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி-அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார்
ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது-

விலஷண அதிகாரம் ஆகில் கிடையாதோ என்னில்-ஓர் ஆனைக்கன்றோ எளிதாய் தோன்றுகிறது –

இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும்
கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

———————————————

இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே
பகவத் பஜனத்தைப் பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் –
அவன் படி இதுவான பின்பு -சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –

அவன் படி இதுவான பின்பு-சம்சாரிகளை ஏற்றித் திரியாதே
அவன் திருவடிகளிலே பணிந்து-திரு நாமங்களைச் சொல்லி
உங்களுடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை-சுத்தமாக்கிக் கொள்ளுங்கோள்-என்கிறார்
அன்றிக்கே
வயிறாகிய பெரும் பதியை உண்டாக்கி என்னவுமாம்

இப்படி அவன் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனபின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

——————————————-

ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் -அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து
அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –
இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-

திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும்
ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-இறுக்குகளை நினைத்து வெறுக்கிறார்

இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணனாவது -ஸ்ரீ ராமன் ஆவதாகக் கொண்டு
அதி ஸூகுமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் –

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

————————————–

அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால் இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் –
அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ -ஆனபின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-

ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை ஒழிய
ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று –
அன்றிக்கே
ஏரியாம் வண்ணம் இயற்றுமது-மற்று வர்ஷிப்பிக்குமது இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம்
ருசி உத்பாதகனும் தானே-பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம்

இப்படி நம்மை பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க –
சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு
யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார்-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-

————————————–

இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு
இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரய ணீ யன் அவனே அன்றோ என்கிறார்
ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி
இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ லப்த ச்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று –
பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே
ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு
இங்கு ஆஸ்ரய ணீ யர் இல்லை என்கிறது
அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது
பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்-

இவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் என்னில்-வேறு ஒருவர் இல்லாமை என்கிறது

இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-

—————————————–

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –
அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் –
அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது-

இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது-

இப்படி ஸமாச்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

———————————

அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –

நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது –

நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க
இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்-

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

———————————————

ஸ்ரீ பகவத் பஜனத்திலே அடி இட்டாரோடு -தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அறஎல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் –
கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து -இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –

ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயிதவர்கள் அன்றோ ஆழ்வார்கள் -என்கிறது –

ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியத்
தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

————————————

இவர்களுடைய பரிகர சம்பத்தி இருந்தபடி -கண்டோமுக்கு நேர் கொடு நேர் நரகத்தில் புக வழி அற்று இருந்தது
இங்கனே இருக்கும் இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி என் என்று விஸ்மயப் படுகிறார் –
நன்கு ஏத்தும் போது தாம் தாம் உண்டாக வேணுமே -என்னில்-

இப்படி உபகரணங்கள் குறை வற்று இருக்கச் செய்தே-நரகத்துக்கு நேர் வழி கிடையாது-

ஸ்ரீ எம்பெருமானை பஜிக்கைக்கு ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி
தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மாயப் படுகிறார் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

——————–

இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது-
இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே –
எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் –
சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் –
சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில் எளிதாம் வழி சொல்லுகிறார் –
சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால் எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு-சமாஸ்ரயணீயனைப் பெற்றால்-எல்லாம் சுலபம் இறே என்கிறது –

தங்களுக்கு ஒரு பரிகர சம்பாத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு
எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார்

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

—————————————

இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூலபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –
ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் –
கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் –
ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்-

தன்னை ஆஸ்ரயிப்பாருக்கு–பிரதிபந்தகதையும் போக்கி-தானும் சுலபனாம் என்கிறது

தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத்
தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

——————————

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ –
அடியே துடங்கி இவன் சத்தியை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

சம்சார ப்ரவர்தகனும் அவனே என்கிறது–அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன்

இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ –
அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

——————————-

அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

உத்பத்தி யாதிகளேயோ -உதபன்னங்கள் ஆனால் பிரதிபந்தங்களைப் போக்குவானும் அவன் என்கிறது –

இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் –
அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

——————————–

கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
ஸ்ரீ திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –

ஸ்ரீ திருமலை பிரஸ்துதம் ஆகையாலே-பின்னையும் ஸ்ரீ திருமலைக்கு உள்ளே ப்ரஸ்துதம் சொல்லுகிறது

கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே
திரு உள்ளம் சென்று ஸ்ரீ திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26-

———————————

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் –

கீழ் ஸ்ரீ திருமலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த பரிமாற்றம் கிடையாமையாலே-
நினைத்த படி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்தில் இருக்கிறஸ்ரீ சர்வேஸ்வரனை தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

இப்படி ஸ்ரீ திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி
பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்திலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்————-27-

——————————————

இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்தவாறே -பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே
அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது –
இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது –
இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பப்புக்கவாறே-அவன் இவருடைய மனசையே விரும்பா நின்றான் என்கிறது

தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு
ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் –

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

—————————————–

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே –
அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே-அதிலே சுழி யாறு படுகிறார்-

மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

—————————–

கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் –
அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்-

எல்லார் தலையிலும் ஒக்க திருவடிகளை–வைத்த அவதாரத்தை சொல்லுகிறது

இப்படி ஸ்ரீ கிருஷ்ண விஷயமும் ஸ்ரீ ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—————-30-

—————————————–

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்-

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

————————————-

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

இவ்விஷயத்தில் நீர் செய்தது என் என்னில்-மநோ வாக் காயங்கள் அங்கே பிரவணம் ஆயிற்று என்கிறார்

இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

————————————–

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள்
அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

மகிழ்ந்த மாத்ரமேயோ–வேறொரு இடத்துக்கு ஆகாத படி யாயிற்று -என்கிறார்

கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று –
இதில் அவனை அனுபவிக்கையாலே
மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

——————————-

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –

உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது

ஏவம் விதமான இப்பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் –

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

———————————

அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே
சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே
அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும்
ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –
இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இவ்விஷயம் கிடக்க-சப்தாதி விஷயங்கள் இனிது என்று இருப்பதே என்று வெறுக்கிறார் –

இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும்
உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35-

—————————————–

நாட்டார் செய்கிறபடி செய்கிறார்கள் -நெஞ்சே நீ முன்னம் அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்துக் கொண்டு
ஸூகமே இருக்கப் பார் -என்கிறார்
பூமிப்பார் பூமிக்கிறார்கள்-நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

பிரமிப்பார் பிரமிக்கிறார் -விஷயங்களிலும் தேவதாந்தரங்களிலும்
நீ இவ்வர்த்தத்தை புத்தி பண்ணி இரு -என்கிறார்

நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே -நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை
அனுசந்தித்திக் கொண்டு ஸூ கமே இருக்கப் பார்–என்கிறார் –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

———————————–

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் –
சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் –
நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் -என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்-

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் –

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

————————————

இனி எந்த ஜன்ம பலமாகி யாகிறது -எங்கனே செய்தால் என்னில் பிறர்க்கு ஆனவற்றைத் தனக்காக அபிமானித்து இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும் நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார்
அர்த்தத்தை புருஷார்த்தம் என்று புத்தி பண்ணி இராதே ஸ்ரீ யபதியை அனுபவிக்குமதுவே எல்லார்க்கும் செய்யப் படுவது -என்கிறார்-

எமக்கு என்று அர்த்தத்தை புருஷார்த்தமாக புத்தி பண்ணி இராதே ஸ்ரீயபதியை ஆஸ்ரயித்து இரு என்கிறார்-

அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது –
ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் –

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

—————————————

நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் -சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது –
அது மாட்டாதவர்கள் அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம் ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே –
ஆனபின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் –
இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயாராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே -நீரும் ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று
சொல்லுகிற படி எங்கனே என்னில் உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்-
தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்
ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார் –

இந்த்ராதிகளையும் ஆஸ்ரய ணீ யாராகச் சொல்லா நிற்கச் செய்தே-நீரும் பிரமாணிகராய் இருந்து-
ஸ்ரீ லஷ்மி பதியே சமாஸ்ரயணீயன் என்று சொல்லுகிறபடி-எங்கனே என்னில்
உங்களுக்கு அபிதான வ்ருத்தியேயாய்-தாத்பர்ய ஞானம் இல்லாமையாலே சொல்லுகிறிகோள்-
தாத்பர்ய ஞானம் உண்டாகில்-அவர்களைச் சொல்லுகிறது விபூதித்வேந –
விபூதிமானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்-லஷ்மி பதியே என்று இருங்கோள் என்கிறார்-

நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும்
அது மாட்டாதார் -ஸ்ரீ த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும்
இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-அதிகார அநு குணம் விதிக்கிறார் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

——————————————

கீழே வேதாந்தத்தால் நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே –
இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –
அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது -ஆனபின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது –
அதுதானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள் -என்கிறார்-

நீங்கள் நிற்கிற நிலை பொல்லாது-கடுக ஸ்ரீயபதியினுடைய திருவடிகளை நினையுங்கோள்-

இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச்
சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

———————————–

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே –
அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-

தன் கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன் திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை

கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே -தம் வைஸ்யத்துக்கு உடலாய்த்
தம் திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் –

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

——————————————

புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் –

அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்-
சம்சார சுகத்தை துறந்தவர்கள்-அத் தோளைத் தொழப் பெறுவார்கள்-

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

————————————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய விரோதிகளைப் போக்கும்
ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும் இத்தனை என்கிறார் –

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் –
அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

———————————————–

இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் –
ஸ்ரீ பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே
ஸ்ரீ பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் ஸ்ரீ எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –

திருநாமத்தை சொன்னவர்களுக்கு-பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து
உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் –

இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

———————————

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள்
அர்த்தத்தின் யுடைய லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

நித்ய சூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயமானவனுடைய-திருவடிகளை பயிலுமவர்கள் அர்த்ததினுடைய
லாப அலாபங்களுக்கு ஈடுபடார்

இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும்
ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் –

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

——————————————

இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
ஸ்ரீ எம்பெருமானுக்குப் புறம்பு லாபாலாபம் இன்றிக்கே இருக்கிறபடி –
இவன் -பரித்யக்தா மயா லங்கா -என்றால் –
அவனும் -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்று இவனை எல்லாமாகப் பற்றும் அத்தனை இறே –
அவன் பயிற்றி இறே இவனைப் பயிலப் பண்ணுவது –
சர்வேஷாம் ஹி ச தர்மாத்மா வர்ணா நாம் குருதே தபாம் சதுர்ணாம் ஹி வயஸ்தானாம் தேன தே தம நுவ்ரதா-அயோத்யா -17-18-என்றபடி –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் -இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டாக் இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

இவர்களை இப்படி பயிலப் பண்ணுகைக்கு-இவர்கள் பட்டது அன்று-அவன் படுவது –

இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத் தன்னைச் செறிந்து
அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி பல ஸ்ரீ திருப்பதிகளிலும்
அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

———————————

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

அவன் ஸ்வ பாவம் இப்படி யானபின்பு-எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறது –

அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல ஸ்ரீ திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும்
ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

————————————

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் –
கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –

எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான்
ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

—————————————-

நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆனபின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

ஸ்ரீ திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார்

நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே சந்நிஹிதன் ஆனபின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று
அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

———————————————

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-
திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத் தளர்ந்து
தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை அனுசந்திக்கப் புக்கால் பிழைக்க அரிதாய்
அத்தாலே அரை ஷணம் விடப் போகாத திரு நாமங்களைச் சொல்லி ஸ்ரீ ய பதியை அழைப்பன்-

இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லி –
உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீயபதியான
அந்த ஸ்ரீ சர்வேஸ்வரனை -அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் –

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

—————————————–

இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே
அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் –
பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் –

ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நிறத்தை அனுசந்தி-

இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் -நெஞ்சே நீ முந்துற முன்னம்
என்னைப்போல் கலங்கி தளராதே அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்-

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51-

——————————–

திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும்
ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்-

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் நீல மேகத்திலே மின்னற் போலே ஸ்ரீ பிராட்டியை திரு மார்பிலே உடையானாய்
அவளோட்டை கலவியாலே ஆந்ரு சம்சய பிரதானனான் ஆனபடியை யார் அறிவார்

திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய வடிவு அழகையும்
ஸ்ரீ பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து – இது ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார்

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-

—————————————

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

ஸ்ரீ திருவேங்கடமே நாம் ஆசைப்படும் ஸ்ரீ திருமலை -ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் –

இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி
வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

————————————-

இவனுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருமலை அளவும் அவர் விரும்பினவாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக
நினைத்து இருக்கும் ஸ்ரீ திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை
இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே பண்ணினானாய் இருக்கிறது –

இவன் ஸ்ரீ திருமலையை விரும்பிப் புக்கவாறே-அவன் இவருடைய ஹிருதயத்தை விரும்ப
பிரானே -அவற்றை கை விடாத ஒண்ணாதே என்கிறார்

இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு
ஸ்ரீ திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத் தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு
மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

————————————-

இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-

உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய்
இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் –

இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன்
தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

—————————————-

இப்படிப் பேறு அவனாலே என்று கொண்டு நிச்சயித்தாராகில் -அவன் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை போக்கி
நெடும் காலம் சம்சரித்துப் போந்த நீர் அருள் என்று வடிம்பிடக் கடவதோ என்ன –
அப்படியே அது செய்யலாவது -ஸ்வரூப ஞானம் யுடையாருக்கு அன்றோ –
முன்னடி தோற்றாதபடியான ப்ரேமம் அடியாக வந்த இருட்சி யுடையாருக்கும் பற்றாசும் அங்கே யுண்டாகையாலே
அத்தனை கார்யப் பாடு பார்த்துத் தானே தன்னைத் தருகிறான் என்று ஆறி இருக்க வேணுமோ என்கிறார் –
நீர் சேஷ பூதர் ஆனாலும் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாக இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் –
அது வைதமான படி இறே -ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் –

நீர் சேஷபூதர் ஆனால் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாய் இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நியமிக்கக் கடவதோ -என்னில்-
அது விதேயமான போது இறே-ஆசை மிக்கால் செய்யல் ஆவது உண்டோ என்கிறார் –

இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் என்று கொண்டு வடிம்பிட்டு நிர்பந்திக்கக் கடவதோ என்ன
ப்ரேமம் அடியாக வந்த இருட்சி உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

——————————-

இப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்-

நாங்கள் அவனுடைய பேரையும் திருவடிகளையும் சேஷபூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம்

இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாச்ரயணீயன் -என்கிறது –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

———————————

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–ஸ்ரீ சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து
என்னை ஓதி வைத்தது என்கிறார் –

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

———————————

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

ஆராய்ந்து பார்த்து பரதந்த்ரமாய் இருக்கையாலே என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்
அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து
எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம்

இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண் குற்றவப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

—————————

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர்யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பூமியை முறை குலையாமல் காப்பார் -தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே-

இப்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே –
நிரங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

—————————————–

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று – அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

—————————————–

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி –
என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் –
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே-
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது –

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

—————————————

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது
ஆபத்து ஒரு தலையானால் -ஸ்ரீ பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசியறத் தானே போக்கும் என்கிறார் –
இத்தால் ஸ்ரீ எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் –
அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் -தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

————————————–

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

இதிகாச புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில்
நிர்ணீதமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களை
சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

—————————-

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன்பக்கல் ருசி -என்கிறார் –

ஸ்ரீ பெருமாள் புக்கு அருளினால் பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும்
பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன்

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

—————————————-

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –
ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று-

பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை-
ஏத்துகையில் துணிகை அன்று –

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

—————————————–

ஸ்ரீ எம்பெருமானுடைய அழகிய திரு மேனியைக் காணப் பெற்றேன் –
ஸ்ரீ ஆழ்வார்கள் பஷத்தால் குணாதிகள் ஆநுஷங்கிதம்-தன்னடையே வருவது-

அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்
வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

———————————-

பிரயோஜ நாந்தர பரரே யாகிலும் தன் பகலிலே வந்து அர்த்தித்தால் பொறுக்க மாட்டாமை -ஆளிட்டு அந்தி தொழாதே
உடம்பு நோவத் தான் ஆயாசித்தே யாகிலும் அவர்களுக்கு கார்யம் செய்து கொடுக்குமவன் -என்கிறார் –
இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச்சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –
இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை –

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே உப்புச் சாறு கொள்ளுமவர்களை சொல்லுகிறது-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் -அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

———————————

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை
ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

ராஜாக்களும் அழகிய தாமரைப் பூவை திரு நாபியில் உடையவனானவனுடைய
திருவடிகளிலே குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த தமர்கள் இறே

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தாங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

——————————————-

இப்படி இருக்கிறவர்கள் தன்னை அனுகூலித்த அன்று அவர்களுடைய ஹ்ருதயங்களுக்கும்
உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் ஒரு வாசி வைத்து பரிமாறான் அவன் என்கிறார் –
அன்றிக்கே -தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது
ஆக -அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-

தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -அநந்ய பிரயோஜனராய் தன்னை
ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின ஸ்ரீ திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி
அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

———————————

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய சூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –
ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –
அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –
கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –
அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –
சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ்
சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்-

கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

——————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு
யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க-
அது வேண்டா காண்-திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் –
ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது-

அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து -திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு
நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

——————————————–

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

அவன் பிரதிபந்தகம் போக்க-நான் அடிமை செய்தேன் என்கிறார்

சர்வ ஸமாச்ரயணீயன் ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யாவசித்த படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

—————————————-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9- என்றாப் போலே
யாய்த்து இவர்க்கும் இது –

விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் –
ஆகையால் –பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

————————————————-

நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி –
ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து –
இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக ஸ்ரீ திருமலை யிடையாட்டம் நேர் பட்டபடி-

பெரிய தமிழன் மிகவும் நல்லேன் என்று சொன்னீர்-ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார்

பெருகு நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

—————————–

கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு
இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்-

இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது-

இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

———————————————

இப்படி ஆஸ்ரயணத்தை அடைவுபட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து
அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்-

ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும் ஆஸ்ரயணயம் தானே உறும்

இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

——————————————–

இப்படிப்பட்ட தபஸ் சை அனுசந்தித்து ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான்
சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-

ஆஸ்ரய ணீயவஸ்து கை புகுந்த பின்பு-ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது –

இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

——————————————–

ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது –
தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்-

திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது –

ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன ஸ்ரீ சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் என்கிறார்

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

———————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆன படியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு-முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம்
என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது –

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆனபடியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

————————————————

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச் சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார்

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

————————————————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான ஸ்ரீ நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -ஸ்ரீ நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் ஸ்ரீ நாராயணனை அல்ல -ஸ்ரீ திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

கீழே ஸ்ரீ நாரணனைக் கண்டேன் என்றார்–இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் –

வெறும் ஸ்ரீ நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

—————————————————-

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன் பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே ஸ்ரீ நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி –
நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது -என்ன சாஹசிகனோ -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –
அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ சநாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு விசத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-
நல்லேன் பெரிது -என்றார் ஐஸ்வர் யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் –
பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

முன்பு சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன்
பெரிய நல்லேன் என்று சொன்னார் –
இப்போது அவ்வஸ்து தன்னை ஸ்ரீ லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு
விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார்

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே முன்பு செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது ஸ்ரீ நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி –
நாம் இவ்விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று
கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

——————————————

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் –
அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய் அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய
சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத அமிர்தம்

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

———————————————-

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

இவருடைய அமிர்தம் அவனைப் பேசும் சொல்லும் –

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

———————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் –

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ -சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

—————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –
இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-

சாதன அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார்

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

———————————————–

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை –வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

———————————-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற மாணியாய் அன்றோ கொண்டது-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மை பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன –
விரோதியைப் போக்கியும் விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

—————————————–

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று
நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன –
எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம்
என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ –
உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் –

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் –
உமக்குப்பெற வேண்டுவது சொல்லீர் என்ன –
உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

—————————————————

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –

அர்த்தஸ் சமய ப்ராப்தா -என்கிறபடியே-ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
பிரகிருதி வச்யரான பின்பு நரகம் ஒருவனைத் தப்பாது -அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கோள்-

பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது –
ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

——————————

அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் –

ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை-ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களை ஏத்துங்கோள் –

அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்-

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

—————————————-

கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்-
பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் –

ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது-

குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே -நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை
விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

—————————————

என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்துகிறபடி -அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் –
ஜகத் ரஷண ஸ்வபாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே -சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே-

என்னுடைய நெஞ்சு ஏத்துகிறாற் போலே-நீங்களும் ஏத்துங்கோள் என்கிறார் –
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாரைப் போலே

என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய்
நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார்

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

———————————–

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் ஸ்ரீ திரு வத்தியூரிலே நின்றருளி
என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –
அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

காலோ பலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கினவன் – எல்லாரும் ஏத்தும்படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன் – ஸ்ரீ திரு அத்தியூரில் வசிக்கிறவன் –

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

——————————

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

இரண்டாலும் -ஸ்ரீ கருட வாகனத்வம் -ஸ்ரீ சேஷ சாயித்வம் -ஸ்ரீ சர்வேஸ்வரன் என்றபடி –

உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர் என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

—————————–

என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்-ஸ்ரீ திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு ஸ்ரீ பாம்பணை மேல் சேர்ந்தாய்

என்னை விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ திருக் குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

————————————-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி -அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் –

இடையனாய் ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இரங்கப் பண்ணி
என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஸ்ரீ ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-

தம்மை விஷயீ கரித்த ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை
முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

——————————–

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியைச் சொல்லுகிறார் –

ஆஸ்ரித அர்த்தமாக சுருக்கின வடிவை உடையவனாய் மகாபலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன்-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

—————————————

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

என் ஆஸ்ரயத்தின் அளவன்று உன் பக்கல் ச்நேஹம்-இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் ஆழ்வார்கள் அனுபவம் / அருளிச் செயல்களில் அண்ணல் அப்பன் அண்ணன் அத்தன் -பத பிரயோகங்களின் தொகுப்பு —

January 29, 2018

பர பக்தி பர ஞானம் பரம பக்தி -மூன்றுக்கும் மூவரும்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையுமே இம் மூன்று சப்தங்கள்
ஞான தரிசன பிராப்தி நிலைகள் மூன்றையும் காட்டவே
உக்கமும் தட்டொளியும் நப்பின்னை மணாளனும் போலே இம் மூன்றும்
அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை அர்ச்சிராதி கதி இம் மூன்றும்
வையம் தகளியா -அன்பே தகளியா-திருக் கண்டேன் இம் மூன்றும் இவற்றையே காட்டி அருளும் அருளிச் செயல்கள்

பூதத்தாழ்வார் என் நெஞ்சமே யான் -நெஞ்சிலே திருக் கைகள் வைத்து நம் ஆழ்வார் போலே சேவை –
ஆழ்வார்கள் அனைவரும் உடையவர் சந்நிதியில் சேவை திருக் காஞ்சியில் /
மூவரும் மூன்று நாளும் -நடுவில் அந்த ஆழ்வார் திரு நக்ஷத்ரம் -அவருக்கு மட்டும் கிரீடம் மற்றவர்க்கு கொண்டை – /
ஸ்ரீ ரெங்கத்தில் சதயம் அன்று மட்டும் /

பூதத்தாழ்வார் -முதலில் பாகவத சேஷத்வம் -சரம் துரந்தான் தாழ் இரண்டும் யார் தொழுவார் அவர் பாதம்
தொழுவது என் தோளுக்கு சிறப்பு என்று காட்டி அருளி –
அதனால் தான் பாகவத சேஷத்வம் -இவரே முதலில் அருளிச் செய்தார் –

திருக் கடல் மல்லை பதிகம் -விசேஷமாக காட்டி அருளி திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
சிஷ்யர் ஸ்ரீ கூரத் தாழ்வான்–பெரியவர் /- ஆச்சார்யர் திருவரங்க பெருமாள் அரையர் -வைகாசி திருவதாரம் -1000-இவருக்கும் –சின்னவர்

ஆகஸ்த்யமும் அநாதி -செந்தமிழ் பாடுவார் என்று முதல் ஆழ்வார்களையே அருளிச் செய்கிறார் -என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை /-அஷ்ட புஜ பதிகம் –
சர்வாதிகம் -அருளிச் செயல் -எளிதில் -மான மேய சரமங்களில் -மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகாவே அளிக்கும் வீடு -/
தமிழ் ஆழ்வார்களுக்கு தொண்டு புரியுமே /
வரலாற்று மாற்றம் -ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சை / சம்சரிதம் தமிழ் -எல்லாருக்கும் -எப்போதும்–மோக்ஷம் எளிதில் கிடைக்குமே -சொல்வதே
செம்மை இது தானே / இவர்களை வைத்தே -வித்து பீஜம் –
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் -வெந்திறல் வீரரின் வீரம் ஒப்பார் -ராமனாக —
ராவண வத அனந்தரம் -தேவர்கள் வணங்க -பவான் -நாராயணோ தேவா
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ராமனா தேவனா -தெரிக்க மாட்டேன் —
திரு வேங்கடமுடையானோ -என்ற அர்த்தம் பெரியவாச்சான் பிள்ளை –
அனு கூலர் -கலப்பற்ற -பசும் தமிழ்-/ பெருமை வீரம் -எளிமை மூன்றும் கண்டார் கலியன் இவன் இடம் -/எளிமையும் பெருமையே –
பவான் -நாராயணோ தேவா -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-இங்கே -உள்ளான் -/
அந்தணர் கொல் திருவிக்ரமன் -வாமனன் -குறள் உருவாய் நிமிர்ந்து -மண் அளந்த அந்தணர் —
வந்து நிமிர்ந்து -திரு விக்ரமன் -ஒரே இடத்தில் எளிமையும் பெருமையும் –
முதல் ஆழ்வார்களை சொல்லும் ஸூ சகம் -இவை இரண்டும் -/

247-பாசுரம் வாங்கிக் கொண்ட தமிழ் கடவுள் அரங்கன் –
மா பிடிக்கு முன் நின்று -பெருகு மத வேழம்-இரு கண் /தூய தமிழ் – நல் தமிழ்- செந்தமிழ் -/
அட்டபுயகரத்தேன் -கழஞ்சு மண் கேட்ட அவதாரம் இல்லை -பெண்ணை கேட்டவன் -/
எனக்காக பிச்சை -இந்திரனுக்காக இல்லையே /
திருக்கண்ண மங்கை -பெரும் புறக்கடல் –தெள்ளியார் வணங்க்கப்படும் தேவன்-7-10-4- —
இங்கும் -முதல் ஆழ்வார்களால் -மாயனை மதில் கோவல் இடை கழி மைந்தனை மிடுக்கனை
மாயனாகவும் ஆயனாகவும் –கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /இவர்கள் தொடக்கம் தானே தெளிந்த ஞானம் –
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானம் உடையவர்கள் -/
இன்கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -திருவாய்மொழி-7-
இன்கவி தமிழையும் – பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் என்னப்படும் முதல் ஆழ்வார் -நம்பிள்ளை
மாலே- மாயப் பெருமானே -மா மாயனே என்று என்று –மாலே ஏறி -மயர்வற மதிநலம் அருளியது –
பாலேய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்து பாலே பட்ட இவை பத்தும் —
அபரியாப்தமருதன் -ஆராவமுதன் -இரண்டுக்கும் வாசி உண்டே –
பராங்குச தாசர் -/ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் / பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கூரத் தாழ்வான
முதல் ஆழ்வார்/ திருப் பாண் ஆழ்வார் / பெரியாழ்வார் -ஒரு நிர்வாகம்
அக இருள் போக்க பொய்கை பிரான் -அன்று எரித்த திரு விளக்கு – செந்தமிழ் தன்னையும் கூட்டி -திரி -அமுதனார் -/
தத்வ ஹித புருஷார்த்தம் -மாறாமல் / தமிழ்த்தலைவன் பேயாழ்வார் -திராவிட சாஸ்த்ர ப்ரவர்த்தகர் மூலம் –
வித்திட்டவர்கள் -திருக் கண்டேன் -நமக்கு சொல்லி அருளிய நம்மாழ்வார் அன்றோ –
இசைகாரர்-சீரிய நான் மறை செம் பொருள் செந்தமிழால் அளித்த பாண் பெருமாள் –
பழ மறையின் பொருள் என்றே பரவுகின்றோம் –

——————————————-

சாது கோஷ்டியுள் கொள்ளப் படுபவரே -பரம புருஷார்த்த ம் –
ரிஷ்ய சிங்கர் -அங்க தேசம் நுழையும் பொழுது மழை பெய்தால் போலே தபோ பலம் –
கொம்பு முளைத்ததா -கேட்டார்கள் -ரிஷ்ய சிங்கர் -தலை கோட்டு முனிவர் -நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பொழியும் மழை
பரத ஆழ்வானுக்கு விசனம் தீர -முற்ற முற்ற அயோத்யா மக்கள் மகிழ்ந்து -பெருமாள் கட்டாயம் சீக்கிரம் வருவாரே –
இவர்களும் கிருஷ்ணன் உடன் கூடினால் -சம்ச்லேஷம் -மழை பொழியுமே விச்லேஷம் அனாவருத்தி

ஓங்கி -பிறர் கார்யம் செய்ய உடம்பு பணைக்குமே -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து – –அண்டம் -அளந்த நீண் முடியன் -பனி பட்ட மூங்கில் போலே
பையத் துயின்ற பரமன் -பிறர் கார்யம் செய்வது சத்தா பிரத்யுக்தம் -ஆர்த்த நாதம் இவனுக்கு ஓங்க காரணம் -வளர்ந்த சடக்கு -கையில் விழுந்த நீரும்
பிரம்மா விட்ட நீரும் ஒக்க விழுந்ததே -சென்னி மேற ஏறக் கழுவிய நீரும் –
உலகளந்த -இருந்ததே குடியாக குணாகுணம் நிரூபணம் பாராமல் -ஏக் தேசம் இன்றிக்கே -ரஷித்து-
அகவாயில் வியாப்தி -ஸ்வரூப வியாப்தி -உயிர் மிசை எங்கும் கரந்து-விக்ரஹமும் அப்படியே வியாப்தி -அனைவர் உடன் கலந்து
தாரகமாக நின்றான் -இங்கு -அனச்னன்- அந்ய -அங்கு -இரண்டு பறவை -உண்ணாமல் ஸ்புஷ்டியாக இருப்பான் –
ந தே ரூபம் நிஷேதம் தன்னது என்பதை தவிர்ந்து -பக்தாநாம் – நாம் அஹம் அபி என் உடைமையும் உன் சக்கரப்படை ஒற்றிக் கொண்டு போலே
அவனும் ந தே ரூபம்
சர்வாதிகன் உத்தமன் -ஈஸ்வரர் காலில் -அடங்கப் பெற்றதால் உத்தமன் -திருவடி சேர்த்து மத்யமன் –
ஆசார்யர் -திருவடி வையாமல் அன்றோ நாம் கைங்கர்யங்கள் செய்ய முடியாமல் -அந்தராத்யாமா உடன் ஒக்கும்

பேர் -அம்மா என்னுமா போலே –
சித்தி -அஹங்காரம் -துரபிமானம் -அகலப் பண்ணும் —அவன் பண்ணும் சித்தி தான் சுத்து –
தானும் தன்னை விட்டு பிறரும் கை விட்டு எம்பெருமான் கைக் கொள்ள அர்ஹனாவான்-
புண்டரீகாஷன் -திருக்கண் நோக்காலே சுத்தி –த்வயம் உத்தர வாக்கியம் சொல்லி சுத்தி பண்ணனும் –
தங்கம் ஜலத்தால் -வெள்ளி திருதீயம் மூணாவது போட்டு -சுத்தி -பித்தளை
புளியால் -மரத்துக்கு மஞ்சளால் மண் பாத்ரம் புதிதாகவே -ஊறுகாய் -இரவில் தொட மாட்டார்கள் –
எவர்சில்வர் கூடவே கூடாது –
பேர் -பெரிய -திரு நாமம் பெரியது எம்பெருமானை விட -பேய் ஆழ்வார் -மஹத்-மஹதாவ்யஹ -மகான் என்று அழைக்கப் படுகிறவர் -பட்டர் –
பெரிய மழை பேய் மழை போலே
பாடி -அன்புடன் பாடி –
உத்தமன் பேர் பாடி -நாங்கள் நம் பாவைக்கு -பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாயாம்சம் அவனே -தாரகமும் திரு நாமம் சொல்வதே
நம் பாவை –அனுஷ்டானமும் அனநுஷ்டாமனும்-விகல்பிதமாக -சாதனம் என்று கொள்ளாமல் பிராப்ய ருசிக்காக செய்பவை –
அவனே உபாயம் என்ற போதுஅனுஷ்டிக்கா விடிலும் பலன் கிட்டும் –
பொறி வண்டு -ரசாயன சேவை பண்ணுவாரை போலே இளகிப் பறித்து -உள்ளது எல்லாம் உத்தேச்யம்-

உத்தமன் -நீ பண்ணின ஓரம் பஷபாதம் -பிரமாணித்தார் பெற்ற பேறு ஆஸ்ரித்தார் விஸ்வசிக்க –கரு மாணியாய் உலகு அளந்தாய் –
தார்மிகன் -துர்பலனான கோவிந்த நாம கீர்த்தனம் -கோவிந்த புண்டரீகாஷன் -த்ரௌபதி -பிரபலனை அண்டை கொண்டு நிர்பரனாய் –
வியாசர் -அர்ஜுனனும் விச்வசித்து -துப்புடையாரை -அடைவது சோர்வுக்கு துணை -ஆனைக்கு நீ அருள் செய்தது போலே அரியது எளிதாகும் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரை மால் யானை -ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் —
கழுத்திலே ஓலை கட்டி தூது போயும் மார்பிலே அம்பு ஏற்றி சாரத்தியம் பகலை இரவாக்கி சத்தியமும் செய்தும் அசத்தியம் ஆயுதம் எடுத்தும்
பொய் சொல்லியும் மெய் சொல்லியும் வார் கொத்து -எல்லை நடந்தும் -கார்யமே நிர்வாகியா நிற்கும்
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரை போலே கரை காணும் காலத்தை எண்ணி இருப்பார் -உத்தமர் பேர் பாடி நன்மை –
மந்திரத்தால் –திருவிக்கிரம -ஓங்கி -உத்தமன் -வாசகம் பேர் -மந்த்ரம் சொல்லி அர்த்தம் சொல்வது -நாரணன் திண் கழல் சேர் எண் பெறுக்கு அந்நலம்
ஈறில வண் புகழ் -நாராயணன் நங்கள் பிரான் பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் –

———————————————————————

நான் கண்ட நல்லதுவே –உபக்ரமித்து -மதியத்தில் ஸ்ரீ வானமா மலை பதிகத்திலும் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எம்மான் -உபஸம்ஹாரம் –
பன்றியாய் பாழியான்—திருமங்கை ஆழ்வாரும் உபக்ரமித்து -மேலே திருவிடவெந்தை பதிகம் முழுவதும்
பட்டர் இத்தை கொண்டே ஸ்ரீ வராஹாவதார மகிமை அருளினார்

———————————————-

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்

வெண்ணெய் கடையும் பொழுது பார்க்க வில்லையே / கடை வெண்ணெய் களவு -கடைகின்ற காலத்திலேயே வெண்ணெய் ஆனந்தம்
கும் கும் இதி கிம் ப்ரமதி–அம்பா ததி மத்ய
டிம்பா நஙு பூதம் இஹ தூரம்
அம்பா நவ நீதம் இதி -கிருஷ்ண
மந்த ஹஸிதம் மாதரம்-தொல்லை இன்பத்து இறுதி –
மிடறு மழு மழுத்தோட -கையிலும் வாயிலும் வைத்து ஒட வெண்ணெய் ஓன்று மட்டுமே
இப்படி ஸ்ருஷ்டித்த பின்பே அவதரித்தான் –
தேன் குழல் நாழியில் மாவை அடைப்பது போலே வெண்ணெய் வாயில் வைத்துக் கொண்டு போடலாமே

————————————————————-

அண்ணல் அண்ணன் –திருவேங்கடம் / அண்ணன் கோயில் / திரு விண்ணகர் மேயவனே -இராமானுஜர் -நால்வரும் –
உபாயம் உபேயம் -இடர் நீக்கி கைங்கர்யம் -இரண்டுக்கும் இரண்டு சப்த பிரயோகங்கள்

குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
வெண்ணெயும் மெத்தத் திருவயிறாற விழுங்கிய அத்தன்
பாலும் தயிரும் விழுங்கிய அப்பன்
கோபால கோளரி அத்தன்
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல்
புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணல்
அம்மா-அப்பா -அத்தா – உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
ஆழி மழைக்கு அண்ணா / பூவைப் பூ அண்ணா /
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
வித்துவக்கோட்டு அம்மா -வித்துவக்கோட்டு அம்மானே
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராயே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான்
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
ஆதியை அமுதை என்னை யாளுடை அப்பனை
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
அலை கடல் துயின்ற அம்மானை
திரு வெள்ளத்துக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றனர் பிறர் என்னை
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நறையூர் நம்பீ
கண் துயிலும் தண் சேறை எம்மான் தன்னை
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
அண்டத்துப் புறத்து உய்த்திடும் ஐயனை
அரியைப் பரி கீறிய அப்பனை
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பில்லா என்னப்பா என்கின்றாளால்
ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அணியுருவில் திருமாலை அம்மானை அமுதத்தை
வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேன்
அத்த எம்பெருமான் –அஞ்சினோம் தடம் பொங்கத் தம்பொங்கோ
மா மழை அன்று காத்த அம்மான்
ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக் கேணியான்
என்றும் இறவாத வெந்தை இணை யடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய்
பொங்கி அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே
வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த அம்மானை ஏத்தாது அயர்த்து
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை அம்மான்
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா
பொழில் ஏழும் உண்ட எந்தாய்
ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தன்னை
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யான் உன்னை அங்கு வந்து அணுகிற்பனே
உலகம் எல்லாம் தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அநந்தனை
அரவம் ஏறி அலை கடல் அரும் துயில் கொண்ட அண்ணலை
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார்
தூவி யம் புள்ளுடையான் அடலாழி யம்மான் தன்னை
ஆற்ற நல் வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
அப்பனே அடலாழி யானே
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
அலை கடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான் தன்னை
நிலம் கீண்ட அம்மானே
கை தவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்டு அழு கூத்த வப்பன் தன்னை
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
என் வாய் முதல் அப்பனை என்று
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் யமர்ந்து உறையும்
யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே
பெரிய வப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன்
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கருள் அருளும் அம்மானை
தேனை நன்பாலைக் கன்னளை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
அல்லி யம் தண்ணம் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக் கடித் தானமே
வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மானே
கூத்தவம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மதுஸூத வம்மான்
ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான்
திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே
அரியாய அம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே
ஈன் தண் துழாயின் அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நிச்சயித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிதுடையன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
என் மாய வாக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்
என் கொல் அம்மான் திருவருள்கள்
அலி வண்ணன் என்னம்மான்
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ் புகழ் நாரணன்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர்
உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர்
ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

நான்கு பாசுரங்கள் பர உபதேசம் -இதில் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அடுத்ததில் இஷ்ட ப்ராப்திக்கும் உபதேசம்

இவை இரண்டும் ஆஸ்திக புத்தி உள்ளவர்
அடுத்ததில் நாஸ்திகர் சாரு வாகர் -லோகாயுதம் -உபதேசம்
அடுத்ததில் தம்மை ஒத்த முமுஷுக்களுக்கு உபதேசம்

அடுத்த ஆறும் தான் பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

————–

பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது –
ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!-இதனால் ஆஸ்திக புத்தி உள்ளவர்களே என்றவாறு
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்-வேதைக சமைதி கம்யன் அன்றோ
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியை யெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சி செய்யுங்கள்.-உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்மின் என்றவாறு

ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான பல வகைப் பட்ட சாஸ்த்ரங்களாலும் யதாவாக அறுதியிடப் பட்டு இருக்குமவனாய்
கறுத்த கடலாலே சூழப் பட்டு இருக்கிற இந்த பூமியை எல்லாம் அளந்து கொண்ட ஸுலப்யத்தை யுடையவனுடைய
சிவந்த திருவடிகளை சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு பொறுக்க ஒண்ணாத நரகங்களில் சென்று கிட்டாத படி யாக
பாப பலமான நரகம் வரில் செய்வது என் -என்று அஞ்சி அறிவு கலங்குகிற நீங்கள் பின்னைச் செய்கிறோம் என்று
ஆறி இராமல் ஒரு க்ஷணம் ஆகிலும் முற்பட ஆஸ்ரயிக்க உத்ஸாஹியுங்கோள்-

(பரம காருணிகர் ஆகையாலே ஸம்ஸாரிகள் இழந்து போகலாகாது என்று நான்கு பாட்டால அவர்களுக்கு உபதேசிக்கிறார்
அளந்தான் –யாதோ வாஸோ நிவர்த்தந்தே -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஒரு மிடறாக அளத்ததற்கு அரியவன் என்று அளக்கப்பட்டவன்
யஸ்யா மதம் தஸ்ய மதம்
வேதா ஹமேதம் புருஷம் மஹாந்தம்
ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
இவனை வணங்குவதே தக்கது என்று உபதேசிக்கிறார் இதில் -)

————————————————————————————————

சேவடி வணங்கி அநிஷ்ட நிவ்ருத்தி கீழ்
இதில் திரு நாமம் ஏத்தி இஷ்ட பிராப்தி பெற உபதேசம்

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட ப்ராப்திக்கும் இது தானே –ரக்ஷணத்துக்கும்- இதற்காகவே கொடி கட்டி சேவை சாதிக்கிறான்

திரு நாம சங்கீர்த்தனம் -உபாயமாக சொல்லி ப்ரயோஜனாந்தரங்களைப் பெற சாமான்ய ஆஸ்ரிதர்களைக் கூட்டி மேலே உயர்த்தி
மேல் 94- பாசுரத்தில் தம்மைப் போன்றவர்களுக்கு உபதேசம்

அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் –
ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்-

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேஸ்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று
என் போல்வார் பிரார்த்திக்குக் கிடக்குமதாய்-நிரதிசய ஸூ குமாரமான திருவடிகளாலே(பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளாலே )
அவன் நினைத்த வஞ்சனம் அவனோடேயாம்படி ஏற்கவே கம்சனை உதைத்து முடித்து அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று
ப்ரஹ்மாதி தேவர்கள் -தேவராலே எங்கள் குடியிருப்புப் பெற்றோம் -என்று
வாய் விட்டுப் புகழும் படியான ஸ்வ பாவத்தை யுடையனாய்

ரக்ஷணத்துக்கு கட்டின கொடி மேல் -கருடத்வஜன் என்னும் படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய்
தன் பக்கல் ஓரடி வர நின்றவர்களை நெடுக நினைத்து நினைத்து கொண்டு இருக்கும்
ஸ்வபாவனுடைய திரு நாமங்களையே சொல்லி வாய் விட்டுப் புகழுங்கோள் –

இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற
சகல புருஷார்த்தங்களையும் ஏத்தின வாய் மூடுவதுக்கு முன்னே சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

(படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் -9-2-2-
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் அளித்து ரக்ஷிப்பவன் இவனே என்று
ஸூ பர்ணோ அஸி கருத்மான் -வேதாத்மா விஹகேஸ்வரனை கொடி கட்டிக் கொண்டு இருப்பவன்
சேவல் அம் கொடியோய்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோனே
புள்ளின் நிவந்து ஓங்கி உயர் கொடிச் சேவலோய்
அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும்–என்று பரிபாடல் கோஷிக்குமே
ஆசிய ஜா நந்தோ நாம சித்த விவக்தந
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்
கைவல்யம் பகவந்தம் ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி
ப்ரயோஜனாந்தர பரர்களும் இவனையே ஸ்துதிக்க வேண்டும் என்கிறார் ஆயிற்று–)

—————————————————————————————————–

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருக்கிறோம் நீங்கள் நம்பினாலும் இல்லா விட்டாலும்
உண்மை நிலை -நரகமும் போவீர்கள் -அங்கு யமபடர் நலிவர்கள் என்ன
எங்களுக்கோ -பிரதிபந்தகங்கள் மிக்கு உள்ளனவே என்ன
அவற்றைப் போக்க பரிகரம் உள்ளவன் –
முன்னமே சிறு பாலகனாய் இருக்கச் செய்தே பூதனா தொடக்கமாக கேசி பர்யந்தமாக
ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினவன் அன்றோ
அவனை ஏத்துங்கோள் -என்று உபதேசிக்கிறார் இதில்

குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே –
நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடு நரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காண வொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்கு மேலும்
செய்கை–(அங்கு யம படர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரக வேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியை யுடைய சங்கைத் திருக் கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின் வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவி யிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

குரூரமான நரகம் முதலிலே கண் கொண்டு காண ஒண்ணாத படி சால வெவ்விதாக இருக்கும் –
பின்னும் கர்ம அனுகுணமாக -சேவதக்குவார் போலே புகுந்து -என்கிறபடியே –
யம படர் பண்ணைக் கடவ நெளிவுகள் மிகவும் துஸ் ஸஹமாய் இருக்கும் -என்று
அவற்றை அனுசந்தித்து நரக தரிசனமும் -அவர்கள் பண்ணும் நலிவும் வந்து கிட்டு வதுக்கு முன்னே எதிரிகளை முடிக்கும்
கூரிய த்வனியை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய்

கேசியினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டவனாய்
பூதனையினுடைய முலையில் நச்சுப் பாலை யுண்டு அவளை முடித்துப் பொகட்டவனை -மேல் எழ அன்றிக்கே
ச மனசமாக உறைத்து நின்று ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

வடி சங்கம் -அழகிய சங்கம் -என்றுமாம் –

(தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவதக்குவார்(சே தாக்குவார் -காளைக்கு காயடிப்பார் ) போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திருமொழி -1-6-3-
நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு என மொழிவதற்கு அங்கி -1-6-4-
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்
வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த –விரி புகழான் -திருவாய் -4-8-8-
கூந்தல் -கேசி
கூந்தல் எரி சினம் கொன்றாய் –பரிபாடல்
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய் படுத்திட்டு -கலித்தொகை
கூந்தன் மா கொன்று குடமாடிக் கோவலனாய் -முத்தொள்ளாயிரம்
இப்படி விரோதிகளை நிரஸனம் பண்ணி அருளியது போல் உங்கள் நரக பயத்தையும் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்
நாஸ்திகர்கள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவதற்கு உபாயம் நரக பயத்தை அனுசந்திக்கை என்றபடி -)

——————————————————————————————–

தம் போல்வார் -அர்ச்சாவதாரங்களில் மண்டி இருப்பதற்குத் தக்க
திருப்பாடகம் ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்தி இருப்பவர்கள் அன்றோ
பாடு பெருமை -அகம் -பெருமை தோற்ற வீற்று இருப்பவன் –
இவர் படியைக் காட்டி முமுஷுக்களுக்கு உபதேசம்

என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய்
நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் –

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆஸ்ரயியுங்கோள்.

பூமியாதிகளான சகல லோகங்களையும் ஒன்றும் பிரி கதிர் படாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கும் ஸ்வ பாவனாய்
அத்தாலே வந்த ஹர்ஷம் நிழலிட்டுத் தோற்றும் படி இருக்கிற வர்ஷூகவலாஹகம் போன்ற வடிவை யுடையவனாய்
பிடித்த பிடியே பிணமாம் படி பிடித்துத் தன்னுடன் பொருந்தாத ஹிரண்யனுடைய மார்பை இரண்டு கூறாகப் பிளந்து பொகட்டு
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான (பூம்)திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
(இந்திரன் சிறுவன் அன்றோ )எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

(தான் நமஸ்கரித்துக் காட்டிக் குழந்தைகளை பழக்கி வைக்கும் தாய் போல் முமுஷுக்களாய் இருப்பவருக்கு நமஸ்கரித்துக் காட்டி அருளுகிறார் –
வள வேழ் உலகில் போல் அகலாமல் தொழுமின்
ஒரு பொருள் புறப்பாடு இன்றி திரு வயிற்றில் வைத்து ரஷித்த சர்வாதிகன் இவனே
உளம் தொட்டு –பெரியாழ்வார் -1-6-9- அவனுக்கும் நெஞ்சில் ஈரப்பசை உண்டோ என்று தேடுமவன் –
பாடகம் –பாடு அகம் -பெருமை தோற்ற வீற்று இருக்கும் திவ்ய தேசம்
பூம் பாடகம் -இனிமை
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -ஸர்வ ரக்ஷகத்வம்
பொருந்தாதான் மார்பு இடந்து -ஸ்வா பாவிக -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் )

—————————————————————————————————

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் சேய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்-கால உபலஷிதமான சகல -சேதன அசேதனங்களை ஸூஷ்ம மாகக் கொண்டவன்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையும் உண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்தி கிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்-பூதத்தாழ்வார் இன்றும் இவ்வாறே சேவை காஞ்சியில்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

முன்னம் சேய் ஊழியான்
ஊழி பெயர்த்தான்
உலகு ஏத்தும் ஆழியான்
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்
அத்தி ஊரான்
என் நெஞ்சமேயான் –
என் சென்னியான் -என்று அந்வய க்ரமம்

சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்கிறபடியே
ஸ்ருஷ்டே பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகக் கால உபலஷிதமான
ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவனாய் இப்படி ஸ்ருஷ்டித்த அளவிலே
தன்னை வழி படாதே இவை அதி பிரவ்ருத்தமானவாறே கால சேஷமாம் படி இவற்றை சம்ஹரித்தவனாய்
(பெரியவாச்சான் பிள்ளை ஸ்ருஷ்ட்டி பரமாக மட்டுமே அருளிச் செய்கிறார்)

ஸ்ருஷ்டமான ஜகத்தை ரஷிக்கைக்காக -லோகத்தில் உள்ளவர்கள் இருந்ததே குடியாக ஏத்தி ஆஸ்ரயிக்கும் படி –

திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளினவனாய் -அங்கு நின்றும்
நரசிம்ஹ ரூபியாய் வந்து அவதரித்து -ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய -தன் உக்ரமான வடிவைக் கண்டும் இளகாத படி
கடினமான ஹிருதயத்தைக் கிழித்துப் பொகட்டவனாய் -சிறுக்கன் விரோதி போகப் பெறுகையாலே -நீல மணி போலே இருந்து
குளிர்ந்த வடிவை யுடையனாய் –

அக் காலத்தின் பிற்பாடாரையும் ரஷிக்கைக்காகத் திருவத்தி யூரிலே வந்து நின்று அருளின
நீர்மையில் ஏற்றத்தை யுடையவன் —

(தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்ட ராமானுஜன் அடியார்களான நம் போல்வாரை அருளவே )

இடவகைகள் இகழ்ந்திட்டு என்கிறபடியே
இந்தத் திருப் பாற் கடல் திரு வத்தியூர் ஆகிற இடங்களை உபேக்ஷித்து –
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி
என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

(ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்)

(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
பஹுஸ்யாம் ப்ரஜாயேயத்
த்ரி பாதூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யேஹாபவாத் புந
ததோ விஷ்வங் வயக்ராமத் சாஸநா நஸேந அபி
ந ச ராக்ஷஸ சேஷ்டித
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத் பரன் மிகத் தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் -)

ஆழ்வார் திருவடி என்று அனுசந்திக்கவே நம்முள்ளும் இருப்பதை உணர்வோம் -அவன் வியாப்தி எங்கும் உண்டே –

அத்தை நாம் உணர்ந்து ஆஸ்ரயிக்கவே நமக்கும் பேறு ஸித்தம் என்று

——————————————————————————————————

உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர்
என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப் பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

(எங்கள் பிரான் ஆகைக்காக அவன் சாதிக்கும் பட்டியல்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்– தேவாதி தேவன் ஆனவன்
முத்தீ மறையாவான் -வேதைக சமைதி காம்யன் ஆனான்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -வ்யூஹ வாஸூ தேவன் ஆனான்
புள்ளை யூர்வான் -கருட வாஹனானான்
அத்தி யூரான் -திவ்ய தேசங்கள் தோறும் சேவை சாதிக்கிறான்
தத் -அவ்வளவு பெரியவன்
த்வம் -இவ்வளவு எளியன்
அஸி -ஆகிறான்
ஸ்ரீ ரெங்க நாதன் மம நாதன்
அரங்கமாளி என்னை ஆளி
ஆஸி)

பெரிய திருவடியை -மேற்கொண்டு -நடத்துமவனாய் -அணிய பட்ட மாணிக்கங்களும்-அழகிய பொறிகளும் சேர்ந்து இருக்கிற
திரு வனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -மோக்ஷ ப்ரதிபாதங்களான வேதாந்த பாகங்களாலே
பிரதி பாதிக்கப் படுமவனாய் -பெரிய கடலில் பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை
ஈஸ்வரனாக அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரனான எம்பருமான் இப்படி உபய விபூதி உக்தனாய்
வேதாந்த வேத்யனான தன் பெருமை பாராதே எங்களுக்கு உபகாரம் பண்ணுமவனாய்க் கொண்டு திருவத்தியூரிலே வந்து அருளினான் –

(முத்தீ மறை -கர்ம காண்டம் சர்வ கர்ம ஆராதணீயன் –
வேதாந்தம் -முத்தி மறை -மோக்ஷ பிரதன் வேதாந்த சித்தம் அன்றோ
ஆக இரண்டையும் சொன்னவாறு -இரண்டும் சேர்ந்தே வேதங்கள்)

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று -என்கை

முத்தீ மறையாவான் -என்ற பாடமான போது
த்ரேதாக்னியைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே
ஸமாராத்யத்தயா ப்ரதிபாதிக்கப் படுமவன் என்று பொருளாகக் கடவது –

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-
ஓடும் புள்ளேறி -திருவாய் -1-8-1-
நாகத்தின் மேல் துயில்வான் -அமி தவ்ஜா பர்யங்க தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே –கௌஷீதகி
முத்தீ மறை யாவான் -என்று முத்தி மறையாவான் என்றும் –
வேதத்து மறை நீ -பரிபாடல்
கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேண அபிபத் ஸஹ -ருக் மண்டலம் -இவன் உள்ளே இருந்ததாலே நீல கண்டன் ஆலஹால விஷம் உண்ண முடிந்தது பாத்திரம் போல் அன்றோ ருத்ரனும் –
எங்கள் பிரான் அத்தியூரான் -எங்கள் என்று -கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் -2-7-1- -சம்பந்த சம்பந்திகளையும் கூட்டிச் சொல்கிறார்
அனைவரையும் உபகரித்து அருளவே ஸ்ரீ ஹஸ்தகிரியில் நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்கிறார் – )

———————————————————————————————–

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திரு குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் –

(எங்கள் பிரான் ஆவதற்காகவே -நின்ற திருக்கோலம் –
பரத்வமும் சயன திருக்கோலம் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸுலப்ய சவுந்தர்யங்களையும் காட்டி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று உள்ளான்-

அங்கு நின்று எழுதி வாங்கிக் கொண்டு அத்தை திடப்படுத்த இங்கே சயனம் என்றுமாம் )

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே யுடையவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அவர்களுக்கு போக்யமான சிவந்த திருக் கண்களை யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனாய்
ஆஸ்திரிதரான எங்களுக்கு ஸ்வாமி யான நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களையும்-திரு மூக்கையும் யுடையவனாய் அனுபவ ஜெனித ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு
ஏத்துகைக்கு ஆயிரம் வாயையும் யுடையனுமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளினாய் –

(நீ ஒவ்வொன்றிலும் சேர்த்து வியாக்யானம்
எங்கள் பெருமான்நீ
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் நீ
திரு மார்பா நீ –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் நீ
குட மூக்கில் கோயிலாகக் கொண்டாய் நீ

(திருமார்பா-பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் -புருஷகாரம் நமக்கு உபாய உபேயங்களுக்கு -நித்ய முக்தர்களுக்கு கைங்கர்ய விருத்திக்கே)

(எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக்குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ
திரு மார்பா -வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி -ஸ்ரீ குணரத்ன கோசம் -44-
ஹ்ரீஸ் ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ )

——————————————————————————————————-

தம்மை விஷயீ கரித்த சர்வேஸ்வரனுடைய அகடி தகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை
முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

(அர்ச்சை நிலைகளால் அடிமை கொண்டது கீழ் இரண்டு பாசுரங்களில்
விபவ சேஷ்டிதங்களைக் காட்டி அடிமை கொண்டான் என்கிறார் இதில்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸ ஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும் படியான
குழவி ஆய்–சிறு குழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப் பட்ட மிகச் சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட் கொண்டது (என்ன ஆச்சரியம்)

இடையனாய் வந்து பிறந்து அருளி -ஜாதி உசிதமாக ஐஸ்வர்ய செருக்காலே குடம் எடுத்துக் கூத்தாடி –
அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப் பொருந்திக் கொண்டு
என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் –
சிலர் எடுத்துக் கொண்டு சீராட்டி வளர்க்க வேண்டி இருக்கிற முக்த சிஸூவான வடிவை யுடையனாய்க் கொண்டு
தான் வளர்ந்து -அத் தசையிலே திரு வயிற்றுக்கு உள்ளே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்தது சகல லோகங்களையும் –
கொண்ட வடிவின் சிறுமையையும் -உண்ட லோகத்தின் பெருமையையும் -அது தான் திரு வயிற்றிலே
ஒரு புடையில் அடங்கின படியையும் -இது ஒரு ஆச்சர்யம் இருக்கும் படியே என்று விஸ்மிதராய் அனுபவிக்கிறார் –

(ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச ராக்ஷஸ
அஹம் வோ பாந்தவ ஜாத நைதச் சிந்த யமிதோன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
பாலனாய் ஏழு உலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் -திருவாய் -4-2-1-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் படி யாதுமில் குழவி -8-7-10-
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)

——————————————————————————————-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கார்யம் செய்து -இவற்றை பெற்று பின் ஒரு காலமாவது
அநந்ய ப்ரயோஜனர் ஆவார் என்னும் நப்பாசையில் அன்றோ செய்து அருளுகிறார்)

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–சேஷத்வ ஞானத்தால் -அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும் படியாக,(வாசிகம் -காயிகம் இரண்டாலும் )
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக் கழலை யுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

ஈஸ்வரோஹம் என்று காளமூதித் திரிகிற துர்மானிகளான ப்ரஹ்மாதி தேவர்கள் தாங்கள் துர்மானத்தையும் –
ஊதின காளத்தையும் பொகட்டு – எங்களுக்கு வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரனே –
எங்கள் பக்கல் கிருபை பண்ணி அருள வேணும் -என்று அர்த்தித்துக் கொண்டு
அவன் சேஷியாயும் தங்கள் சேஷ பூதருமான முறையிலே நின்று –
அழகிய புஷ்பங்களை அக்ரமமாகப் பணி மாறிக் கொண்டு ஆஸ்ரயிக்க –

த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தான சிவந்த திருவடிகளை யுடையனாய் -ஐஸ்வர்ய ஸூசகமான
சிவந்த திருக் கண்களை யுடையனான சர்வாதிகனான சர்வேஸ்வரன் –

அந்த தேவர்கள் விஷயத்தை மதகு திறந்து பாய்கிற வியாமோஹத்தை யுடையனாய்க் கொண்டு –
ஸ்ரீ வாமன ரூபியாய் வந்து திரு அவதரித்து அருளி லோகம் அடங்க விழுங்கும் படி
முசிவற வளர்ந்த வடிவை யுடையனாய்க் கொண்டு பூமியை அளந்து கொண்டான் —

முறை நின்று –
பர்யாயமாய் நின்று என்றுமாம் –

(இந்திரன் இடம் மால் -மகாபலி இடமும் மால் நம் அனைவர் இடமும் மால் -எங்கும் மால்

இதனால் தான் அடுத்த பாசுரத்தில் -என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –அவன் அன்பால் இவர் அன்பு பெருக்கெடுக்குமே –
வ்யாமோஹம் -தப்புக்களைப் பார்க்காமல் ஓத்தே இல்லாத அதிகாரிகள் கொண்ட காதல்)

(அகில ஜகத் ஸ்வாமிந் -அஸ்மத் ஸ்வாமின்
கள்வா எம்மையும் ஏழு உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா–வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் –திருவாய் -2-2-10-
ஈஸ்வரோஹம் –
தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம்
பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர –
மா வலியை மண் கொண்டான் மால் என்று கொண்டு தாழ விட்டு வாத்சல்யம் காட்டி அருளினான் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும்
மா வடிவில் மண் கொண்டான் என்று கொண்டு மிகப்பெரிய வடிவைக் கொண்டு உலகு அனைத்தையும் தீண்டினான் என்பர் ஸ்ரீ அப்பிள்ளை
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெரும்மம் எய்து பெற்றியோய் -திருச்சந்த -109-)

———————————————————————————–

(சுருக்குவாரை இன்றி சுருக்கினாயே –
ஓங்கி உலகு அளந்தவன் போல் மிகப் பெரியதான அன்பை
வாமன் போல் சுருக்கி அருள வேணும் என்கிறார்)

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வ ஸ்மாத் பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத் தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில் அடங்கி நிற்பதன்று.

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் -விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய்(கண்ணன் ரக்ஷகன் )-

பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –

இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
அஸூரா விஷ்டமாய் நின்ற விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே

உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –

(இது வரை ஆறும் பரத்வ பரமான வியாக்யானம்
இனி ஆறும் ஸுலப்ய பரமான வியாக்யானம்)

அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் –
அந்த வியாமோஹம் ப்ரேரிக்க ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யனாய் இருக்குமவனாய்

இந்நிலையில் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

(விபுவான ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தையும் விஞ்சிற்று)

(பிரார்த்தனை அவ்யக்தம் -பிரார்த்தனா கர்ப்ப பிரபத்தி
தேவரீர் அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும் -திருமந்திரம் ஓம் நமோ நாராயனுக்காக -மட்டுமே உள்ளது
பிரார்த்தனாய சதுர்த்தி போல் இங்கும்)

(கொள் கொம்பு மூடப் படர்ந்தது போலே என்னுடைய அன்பானது என் ஸ்வரூபத்தையும் விஞ்சி பெருகி
தளர்ச்சியை யுண்டாக்கி உன்னை அனுபவிக்க ஒட்டாமல் தடுக்கிறதே
அவ்வன்பை அடியேன் பொறுக்கும் அளவு சுருக்கி அருள வேண்டும் -என்கிறார் –
அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே கண்ணனே -என்றும் அந்வயம் கொள்ளலாம்
தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம்
மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்-

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
ரக்ஷணத்துக்கு அசாதாரண தனி மாலை சாத்திக்கொண்டு இருப்பானே
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
சித்தமும் செவ்வை நில்லாது–பத்திமைக்கு அன்பு யுடையனாவதே பணியாய் எந்தாய் -திருக்குறும் தாண்டகம் -10-

ஆக அன்பே தகளியாக -என்று தொடங்கி
மேன் மேலாகப் பெருகி வந்த அன்பை அளவு படுத்தித் தந்து
அனுபவிப்பிக்க அருள வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் தலைக் கட்டி அருளுகிறார் -)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று
பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –
இப்போது -ஸூப்ரபாதா ச மே நிசா –என்னும்படி –
இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –
பகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –
ஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி
சர்வத்தையும் நியமித்துக் கொண்டு
உபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –

இந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்ன தீ கம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே
காணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்
இந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –

வடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய
பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான
வடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்

வான் திகழும் -என்றது
மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –

ஊன் திகழும் என்றது
சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் —
சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

—————————————————————————————-

வெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக் கண்களை யுடையவளும்
மா மலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டு வைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

(அடிக் கோலி–இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து_

நாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –
வடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான
பெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே
செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு
அனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே –

அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு
இறையும் அகலகில்லேன் -என்னும் படி
கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-

ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான
அவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும்
அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற அனுபவிக்கைக்கு அநு குணமாக –
இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி
போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள் போல் அன்றிக்கே
திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இறே –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

——————————————————————————————-

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே
முன்பு (74-பாசுரத்தில் )செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி –
நாம் இவ் விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று
கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன்  எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

அவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி
(யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ )இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை

அபரி பூர்ணானமாம் படியாக ப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே –
கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –
இப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க –

அது செய்யாத அளவன்றிக்கே-
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது
பண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து –
நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும் சிறிதாகிலும் தாராதோ -என்று
அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –

1-விஷய கௌரவத்தையும்-2- சொல்லின் பொல்லாங்கையும் -3-பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து
என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –

பின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் –
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் –
அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

சென்ற வரம் –
அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை (அருள் கீழ் இங்கு சிறப்பான சொல் மா ஸூச வார்த்தை )- அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –
மறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே
சொல்லுகிற வார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்

இத்தால்
அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ –
சர்வஜ்ஞனை இறே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

——————————————————————————–

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய் கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து –
அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை
ந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் –
அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட
மிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –
அத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை –

சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை யுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் –
பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே –
சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே
அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி நிரதிசய போக்யமான அம்ருதம் –

மூர்க்கத்தவனை என்ற பாடமான போது –
மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

——————————————————————————————-

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திரு வாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நித்ய போக்யமான அம்ருதம் என்றும் –
சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் –
நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –
அஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை
அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து
இதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் –
ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்
மத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட விலஷணனான சர்வேஸ்வரனை

ஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே
அமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்
இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர் மமனாய் விழுந்தேன் –

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

——————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ –
சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால் (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநாநுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

அவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு –
சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல பிரயோஜனாந்தர பரரான கவிகள் –
செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க
அத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ –

இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின
தபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும்
ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை
அதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த்தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று ஏத்தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

—————————————————————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக  கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

ஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் –
கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு
நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்

அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்
ஆன பின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று
அளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-
பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் -)

——————————————————————————————–

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை —
வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் -(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை
சர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு
அழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற
என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ)

மற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய
அனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித் தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி
தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று
கிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத
அரணை யுடைத்தான கலங்காப் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –
இத்தால்
பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று என்ற படி –

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

—————————————————————————————————-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மைப் பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்
விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம்

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

மிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து
தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு

இப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் (குண லேசம் என்றது இது இவன் சொத்து அல்லவே )கிடக்கையாலே நீர்மையை
யுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்
தீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்
நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –

உன்னை ஆஸ்ரயித்த வாஸூதேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்
கார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு –

கதவுகை -சீறுகை
அதவுகை – நெருக்குகை –

கதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது –
கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது

பதவி என்றது –
பதவி என்று வழியாய்
கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————————————–

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது
சொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

ஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் –
ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி
ஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று
இருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி –

அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
பூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில்
கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-

உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.