Archive for July, 2025

ஸ்ரீ எம்பெருமானாருடைய திருமேனி சம்பந்தம் பெற்ற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள்-

July 31, 2025

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருகம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ ராமானுஜஸ்ய சரெணௌ சரணம் ப்ரபத்யே
-கூரத்தாழ்வான்-அருளிச் செய்த தனியன்
யார் எப்போதும் அச்சுதனின் தாமரை பாதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, அவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் புல்லைப் போல கருதுகிறாரோ-அந்த எங்கள் குருவும், கருணைக்கடலுமான பகவான் ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகளில் நான் சரணடைகிறேன்.

லஷ்மீ நாதாக்க்ய சிந்தவ்-சடரிபூஜலத -ப்ராப்ய காருண்ய நீரம்
நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் நாயக்க ரத்னம்-லஷ்மீ நாத சிந்தவ் இத்யாதி – –கருணைக்கடல் -நம்மாழ்வார் மேகம் -நாதமுனி மலையில் பொழிந்து இரண்டு அருவிகள் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -காட்டாறு ஆளவந்தார் -ஐந்து ஆச்சார்யர் முகமாக-ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனபதிகள் -மூலம் நம்மை அடையும்படி அருளி –

சடரிபு கலிஜித் சரோ பூத வேதாள கோதா குரூன் முனி வஹ குலசேகரௌ பக்த பத்ரேணு பக்த்யர்ணவௌ
மதுரகவி மாதோ யதீந்த்ரம் ததா அன்யான சேஷான் குரூன் ஸ்ரீ யம்பி வஸூ தாஞ்ச நீளாஞ்ச வைகுண்ட நாதம் ஸ்ரேயே-
என்று இறே ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் க்ரமம் இருப்பது –

(1. பூதம் (பூதத்தாழ்வார்) -ஆழ்வார் திருமுடி
2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) -ஆழ்வாருடைய திருக்கண்கள்
4. பட்டநாதர் (பெரியாழ்வார்) -ஆழ்வாருடைய திரு வாய்
5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் -ஆழ்வாருடைய திருக்கழுத்து
6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) –ஆழ்வாருடைய திருக்கரங்கள்
8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) -ஆழ்வாருடைய திருவயிறு
9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) – 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) -ஆழ்வாருடைய திருவடி இணைகள்
11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

பக்தி பாரவச்ய பிரபன்னரான ஆழ்வார்களும் அவர்களோடு விகல்ப்பிக்கும் படியான ஸ்ரீ பாஷ்ய காரரும் சர்வதா பஜ நீயர்

—————-

மாதுலர் மாமா – பெரிய திருமலை நம்பி -இவர் பத்னி கிடாம்பி ஆச்சானின் அத்தை -இவர்க்கு மூன்று சகோதரிகள் -மூன்று குமாரர்கள் -இரண்டு மகள்கள் -நான்கு – மருமகன்கள் -ஒரு பேரன்-
மூத்த சகோதரி -பூதேவி என்னும் காந்திமதி –அவர் கணவர் -கேசவ சோமயாஜியார்-இவர் திருக்குமாரர் ராமானுஜர்

இரண்டாம் சகோதரி –ஸ்ரீ தேவி என்னும் த்யுதிமதி -இவர் கணவர் மதுரமங்கலம் கமல நயன பட்டர் –குமாரர்கள் -மூத்தவர் கோவிந்தர் எனப்படும் எம்பார்-ராமானுஜ பதச் சாயா எனப்படுபவர் -இவர் விஞ்ஞான ஸ்துதி என்னும் கிரந்தம் அருளிச் செய்தார் – இளையவர் –சிறிய கோவிந்த பட்டர் –
சிறிய கோவிந்த பட்டரின் குமாரர் பராங்குச நம்பி -ஆளவந்தாருடைய மூன்றாவது குறையை அடியோடு நிறைவேற்ற உடையவர் நியமனப்படி எம்பார் சாத்தி அருளிய திருநாமம் -கூரத்தாழ்வான் தமிழில் வல்லவரான இவரையே பாலேய் தமிழர் என்பாராம்

மூன்றாவது சகோதரியின் பெயர் தெரியவில்லை -இவர் குமாரர் பால தந்வி என்னும் இளைய வில்லி ஆச்சான் -இளைய பெருமாளைப்போல் உடையவருக்கு கைங்கர்யங்கள் செய்தமையால் சாத்தப்பட்ட திரு நாமம் எம்பெருமானார் திருநாடு அலங்கரிப்பதாக கனவில் கண்ட அளவிலே எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றும் சொல்லி மூச்சடங்கப் பெற்றவர் –

பெரிய திருமலை நம்பிக்கை மூன்று திருக்குமாரர்கள்
மூத்தவர் -பிள்ளைத் திருமலை நம்பி-அவரது தனியன்
வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாச்ரிதம்
ஸ்ரீசைலபூர்ண சத்புத்ரம் ஸ்ரீசைலார்யமஹம் பஜே
அடுத்தவர் -ராமானுஜன்
மூன்றாமவர் -பிள்ளான் -திருக்குருகைப்பிரான் பிள்ளான்
-என்று பின்னர் திருநாம சாற்றப் பெற்றவர் -கோவிந்தரை யாசித்துப் பெற்ற உடையவருக்கு இவரையே அபிமான புத்திரராகக் கொள்ளும்படி கொடுத்து அருளினார்-தனியன்
“ஸிம்ஹே ம்ருகலிரோத்பூதம் ராமானுஜபதாச்ரிதம் |
த்ராவிடாம்நாய தத்வக்ஞம் குருகாதிப மாஸ்ரயே I
த்ராவிடஸாரக்ஞ்ம் ராமானுஜ பதாச்ரிதம் 1
ஸுதியம் குருகேஸார்யம் நமாமி ஸ்மிரஸாந்வஹம் |

இவர் ஆவணி மாதம் மிருக சீர்ஷ நட்சத்ரத்தில் அவதரித்தார். இவர் பெரிய திருமலை நம்பியின் மூன்றாவது குமாரர். (பிள்ளை திருமலை நம்பி -ராமானுஜன் -முதல் இருவர்)பெரிய திருமலை நம்பி இவரை ராமானுஜருக்கு அபிமாந புத்ரராக கொடுத்தார். இவர் ராமானுஜர் திக்விஜய யாத்ரையாக திருக்குருகூர் சென்றிருந்த பொழுது இவரும் அவர் கூடவே சென்றிருந்தார். நம்மாழ்வார் செய்தருளின பேருபகாரத்துக்காக அவர் திருநாமம் சாத்துகைக்கு அர்ஹமாக ஒருவரைத் தேடிய பொழுது “பிள்ளான்” என்ற பெயர் கொண்ட இவரை தேர்ந்தெடுத்தார். இவருக்கு ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்று திருநாமம் சாத்தியருளினார்.

பெரிய திருமலை நம்பிக்கை இரண்டு திருக்குமாரத்திகள்
மூத்தவர் -அலர்மேல் மங்கை நாச்சியார்-
இவர் கணவர் -எம்பெருமானாருடைய சிஷ்யரான அலங்கார வேங்கடவர் என்னும் திருவேங்கட மூர்த்தி -இவர் அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய பூர்வாஸ்ரம –யஜ்ஞமூர்த்தியுடைய திருக்குமார்
இந்த தம்பதிகளுக்கு திருக்குமாரார் தாத்தாச்சாரியார் -இவரே விஞ்சிமூர் தாத்தாச்சாரியார் என்னும் பிரசித்தி பெற்றவர் –

இரண்டாம் திருக்குமாரத்தி திருநாமம் தெரியவில்லை -இவர் கணவர் சுந்தர தேசிகன் என்னும் அழகப்பிரான் -இவர் ஆளவந்தாருடைய சிஷ்யர் -அவரது நியமனப்படியே திருமலையில் கைங்கர்யம் செய்து வந்தார் -இவருடைய திருக்குமாரர்கள் ஈச்சம்பாடி ஆச்சான் -ஈச்சம்பாடி ஜீயர் -எம்பெருமானார் திருமலைக்கு எழுந்த அருளின சமயத்தில் பெரிய திருமலை நம்பியுடைய நியமநப்படி-தாபனீய உபநிஷத் ந்ருஸிம்ஹ மந்த்ரம் உபதேசித்து அருளினவர்

பெரிய திருமலையின் பத்னி -கிடாம்பி ஆச்சானுடைய அத்தை -பெயர் தெரியவில்லை -கிடாம்பி ஆச்சானுடைய இயல் பெயர் ப்ரணதார்த்தி ஹரர் -இவர் நம்பியின் மைத்துனன் திருகுமாரர் -கட அம்பு -கடாம்பு -கிடாம்பு மருவு -தீர்த்த கைங்கர்யம் பண்ணிய வம்சத்தில் அவதரித்தவர் –பெரிய திருமலை நம்பிக்கு தீர்த்த கைங்கர்யத்தில் உதவி செய்தவர் -இவர் தமையனார் பெயர் விஷ்ணவாச்சார்யர் –கிடாம்பி ஆச்சார்யன் எம்பெருமானாருக்கும் திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணியவர் -ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து முடித்த பின்பு இவற்றையும் கிடாம்பிப்பெருமாளையும் காஷ்மீர் தேசம் அனுப்பி சாரதா பீட அங்கீகாரம் பெறச்செய்தவர் –கிடாம்பி ஆச்சான் வழி வந்த கிடாம்பி அப்புள்ளார் மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரே

எம்பெருமானாருக்கு மூன்று சகோதரிகள்
முதல்வர் -நாச்சியார் அம்மன்
-இவர் கணவர் ஆனந்த தீக்ஷிதர் -இவர்கள் திருக்குமாரர் தாசாரதி எனப்படும் முதலியாண்டான் -எம்பெருமானார் சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராய் இருந்ததால் இந்தத்திருநாமம் -த்ரிதண்ட அம்சம் –
இரண்டாம் சகோதரியின் பெயர் தெரியவில்லை -இவர் கணவர் முடும்பை நம்பி என்னும் ஸ்ரீ வரதாச்சார்யர் –இவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ நம்பி -இவர் திருக்குமாரர் முடும்பை ஆண்டான் –இவர் ஸ்ரீ ரெங்கத்துக்குக் குடி பெயர்ந்தார் –வடக்குத்திருவீதிப்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் நாயனார் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எறும்பி அப்பா ராமானுஜம் பிள்ளை ஆத்தான் ஸ்வாமி போல்வாரும் முடம்பை வம்சத்தவர்களே

மூன்றாவது சகோதரியின் பெயரும் அவர் கணவர் பெயரும் தெரியவில்லை -இவர்கள் திருக்குமாரர் வரதவிஷ்ணு எனப்படும் நடாதூர் ஆழ்வான் -ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -இவரது திருப்பேரானார் வாத்ஸ வரதாச்சார்யர் எனப்படும் நடாதூர் அம்மாள் -இவரே எங்கள் ஆழ்வானுடைய பிரதான சிஷ்யர் -ஆகவே எங்கள் ஆழ்வான் -அம்மாள் ஆச்சார்யர் என்றே அழைக்கப்பட்டார்

எம்பெருமானாருடைய பத்னி தஞ்சமாம்பாள் -இவர்களுக்கு இரண்டு திருக்குமாரர்கள் –எம்மான் -பெம்மான் -இரட்டையர்கள் -பெம்மானே ஆஸூரிப்பெருமாள் என்பவர் -இவர் வம்சத்தில் ஆயி ஜநன்யார்ச்சார்யார் திருஅவதாரம்

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எழுபத்தி நாலு சிம்மாசனாதிபதிகள் வைபவ சுருக்கம்

July 31, 2025

1-ஆளவந்தார் .குமாரர் சொட்டை நம்பி

2-பெரிய நம்பி குமாரர் புண்டரீகர்

3-திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்

4-திருமலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையான்

5-பெரிய திருமலை நம்பி குமாரர்கள் ராமானுஜன் மற்றும் பிள்ளைத் திருமலை நம்பி

6-கூரத்தாழ்வான்

7-முதலியாண்டான்

8-நடுவிலாழ்வான்

9-கோமடத்தாழ்வான்

10-திருக்கோவலூராழ்வான்

11-திருமோகூராழ்வான்

12-பிள்ளைப் பிள்ளையாழ்வான்

13-நடாதூராழ்வான்

14-எங்களாழ்வான்

15-அநந்தாழ்வான்

16-மிளகாழ்வான்

17-நெய்யுண்டாழ்வான்

19-சேட்டலூர் சிறியாழ்வான்

20-கோயிலாழ்வான்

21-உக்கலாழ்வான்

22-அரணபுரத்தாழ்வான்

23-எம்பார்

24-கிடாம்பி ஆச்சான்

25-கணியனூர் சிறியாச்சான்

26-கொங்கிலாச்சான்

27-ஈச்சம்பாடியாச்சான்

28-திருமலை நல்லான்

29-சட்டம் பள்ளி ஜீயர்

30-ஈச்சம்பாடி ஜீயர்

31-திருவெள்ளறை ஜீயர்

32-ஆட்கொண்ட வில்லி ஜீயர்

33-திருநகரிப் பிள்ளான்

34-காராஞ்சி சோமயாஜியார்

35-அலங்கார வேடவர்

36-நம்பி கருந்தேவர்

37-செருப்புள்ளி தேவராஜ பட்டர்

38-பிள்ளையுறந்தையுடையார்

39-திருக்குருகைப்பிரான் பிள்ளான்

40-பெரிய கோவில் வள்ளலார்

41-திருக்கண்ணபுரத்தெச்சான்

42-ஆசூரிப் பெருமாள்

43-முனிப் பெருமாள்

44-அம்மங்கிப் பெருமாள்

45-மாருதிப் பெரியாண்டான்

46-மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்

47-சோமாசியாண்டான்

48-ஜீயராண்டான்

49-ஈஸ்வராண்டான்

50-ஈயுண்ணிப் பிள்ளையாண்டான்

51-பெரியாண்டான்

52-சிறியாண்டான்

53-குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்

54-அம்மங்கியாண்டான்

55-ஆளவந்தராண்டான்

56-அருளாளப்பெருமானார் எம்பெருமானார்

58-தொண்டனூர் நம்பி

59-மருதூர் நம்பி

60-திருக்குறுங்குடி நம்பி

61-குரவை நம்பி

62-முடும்பை நம்பி

63-வடுக நம்பி

64-வங்கிபுரத்து நம்பி

65-ஸ்ரீ பராங்குச நம்பி

66-அம்மங்கியம்மாள்

67-பருத்திக்கொல்லையம்மாள்

68-உக்கலம்மாள்

60-சொட்டையம்மாள்

70-முடும்பையம்மாள்

71-குமாண்டூர் பிள்ளை

72-குமாண்டூர் இளைய வில்லி

73-கிடாம்பிப் பெருமாள்

74-ஆற்காட்டுப் பிள்ளான்

——————————

சொட்டை நம்பி
தனியன்
மகரே சைகபாத்யேச யாமுனாசார்ய நந்தநம்
கூரநாதகுரோ: பிஷ்யம் ஸேவே பகுணார்ணவம் |

இவர் ஆளவந்தார் குமாரர். தை மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் கூரத்தாழ்வான்-சிஷ்யர்.-‘என்னாச்சான்‘ என்பவருக்குத் தமப்பனார் இவர் ஒரு சமயம் திருக்கோட்டியூர் நம்பியிடம் கடுமையாகப் பேசி நடந்து கொண்டார். அவர்இவரை”நீ இங்கு இருக்காதே போ” என்று சொல்லி விட்டார்.இவர் தலைநகர் சென்று அரசாங்க உத்யோகம் பார்த்தார்.கடைசி காலத்தில் இவருடைய ஈடுபாட்டை சோதிக்க ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இவரிடம் “தற்சமயம் தேவரீர் என்ன நினைக்கிறீர்” என்று கேட்டதற்கு இவர் சொன்ன பதில் ”ஆளவந்தார் சம்பந்தத்தால் எனக்கு பரமபத ப்ராப்தி உண்டு. அங்கு ஸ்ரீ வைகுண்டநாதன் திருமுகம் நம்பெருமாள் திருமுகம் போல் குளிர்ந்திரா விட்டால் பரமபதத்தில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே வந்து விடுவேன்.ஆனால் பரமபதம் போனவர்கள் திரும்பி வரமுடியாதே” என்பதுதான்.திருவாய் மொழி 4-5-7 பாசுரத்தில் “தன் தனக்கு இன்றி நின்றானை” என்ற சொல் தொடருக்கு ஒரு வித்யாஸமான விளக்கம் சொல்லி எல்லாரையும் வியக்க வைத்தார்.தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார்சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம். அதாவது “ஆத்மாநம் மாநுஷம் மந்யே”’ என்று சொன்ன ராமபிரானுக்கே இந்தப் பெருமை சேரும்” என்றார்.இவருடைய குமாரர் “என்னாச்சான்”. என்னாச்சானுடைய குமாரர் “பிள்ளையப்பன்”

ஸ்ரீ ஆளவந்தாருக்கு நான்கு குமாரர்கள். திருவரங்கப் பெருமாள் அரையர்,தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையாரசு நம்பி, சொட்டை நம்பி. -நாதமுனிகளின் வம்சத்துப் பெயரான ‘சொட்டை’ குலமே இவருடைய திருநாமம்.-பெருமாளுக்கு அலங்காரம் செய்யும்போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்துத் தைக்கும்போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல்-code word-. ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள்.-நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளும்போது அவருடைய திருவடிகளை இணைக்கும் கம்பிகளுக்குச் சொட்டை என்று பெயர்.-நம்பெருமாள் புறப்பாட்டுக்குண்டான சாமான்கள் அனைத்தும் ஓர் அறையிலிருக்கும். ஆனால் இந்தச் சொட்டை கம்பி, பாசக் கயிறு போன்றவை எல்லாம் நம்பெருமாள் கைலியினால் மூட்டைப் போலக் கட்டி அவை பெரிய பெருமாளின் திருவடிக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும். இந்த மூட்டைக்குப் பெயர் சொட்டை மெத்தை. -நம்பெருமாளைத் தழுவி நிற்கும் இந்தக் கம்பிகளையும், பெரிய பெருமாளின் திருவடிக்கருகில் இருக்கும் சொட்டை மெத்தையையும்  அவன் எப்போதும் சொட்டைக்குலமாகவே கருதுகிறான்.

——————-

புண்டரீகர்
தனியன்
ஸூசௌ மாஸ் யுத்தராஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸுதம் |
யதிராஜாங்க்ரி ஸத்பக்தம் புண்டரீகாக்ஷ மாச்ரயே

இவர் பெரிய நம்பிகள் குமாரர். அத்துழாயின் சகோதரர். இவர் ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர்ராமானுஜரின் சிஷ்யர். இவர் ஒரு சமயம் சேரக் கூடாத ஸஹவாஸத்தினால் போகக் கூடாத இடத்திற்குப் போய் விட்டார். உடையவர் இவரைத் தேடிக் கண்டுபிடித்து திருத்திப் பணி கொண்டார்.

—————

தெற்காழ்வான்
தனியன்
கர்கடே பரவணே ஜாதம் ராமானுஜ பதாசரிதம்
காயபாந்வய ஸம்பூதம் நாராயண குரும் பஜே

இவர் திருக்கோட்டியூர் நம்பியின் குமாரர். ஆடித் திருவோணத்தில் அவதரித்தவர். காச்யப கோத்ரம்.-தேவகிப் பிராட்டியின் சகோதரர். இவருடைய பேரன் தெற்காழ்வான். பட்டருடைய சிஷ்யர். இந்தப் பேரன் பற்றி ஒரு சிறு குறிப்பு உண்டு. திருக்கோட்டியூரில்
கோளரி ஆழ்வான் என்று ஒருவர் இவருடைய நண்பர். ஆசார சீலர். தெற்காழ்வானுக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது. ஒரு புண்ய தினத்தன்று தெற்காழ்வான் குளிக்காமல் இருந்தார். இதைப் பார்த்த கோளரி ஆழ்வான் இவரைப் பார்த்து “இன்றாவது குளித்து பாபத்தைப் போக்கிக் கொள்ளக் கூடாதோ” என்று சொன்னார். இதற்கு தெற்காழ்வான் “நம்முடைய பாபங்கள் குளிப்பதனால் போய் விடாது. சிங்கப்பிரானின் சக்ராயுதத்தால் மட்டுமே நம் பாபம் தொலையும்”-என்று பதில் சொன்னார். திருக்கோட்டியூரில் எழுந்தருளி
யிருந்த பொழுது இதைக் கேட்ட பட்டர் தெற்காழ்வானின் ஞானத்தையும் நம்பிக்கையையும் பாராட்டினார்.

சுந்தரத் தோளுடையான்
தனியன்
மாலாதாரகுரோ: புத்ரம் ஸௌந்தர்யபுஜதே மிகம்
ராமானுஜார்ய ஸத்சிஷ்யம் வந்தே வர கருணாநிதிம் I

இவர் திருமலையாண்டான் குமாரர். இவருக்கு பெரியாண்டான் என்று மற்றொரு திருநாமம் உண்டு.-காச்யப கோத்ரம். இவர் சித்திரை மாதம் சித்ரை நட்சத்திரத்தில் அவதரித்தார். திருமாலிருஞ்சோலை அழகர் சன்னிதியில் புரோகிதர். இவருடைய மூதாதையர்களில் ஒருவர் “கண்ணுக்கினியான்” திருமாலிருஞ்சோலை அழகரை ஒரு சமயம் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். அதனால் இந்த வம்சத்திற்கு ”ஆண்டான்”என்று பட்டப் பெயர் உண்டு. இவருடைய வம்சத்தில்“யாமுநாசார்யர்” என்ற மஹா வித்வான் வாதிகேசரி ஜீயரின் சிஷ்யர். யோக சாஸ்த்ரத்தில் மேதாவி.

————-

பிள்ளைத் திருமலை நம்பி
தனியன்
வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாச்ரிதம்
ஸ்ரீசைலபூர்ண சத்புத்ரம் ஸ்ரீசைலார்யமஹம் பஜே

இவர் பெரியதிருமலை நம்பி குமாரர். வைகாசி விசாகத்தில் அவதரித்தவர். இவருக்கு ராமானுஜன் என்ற சகோதரர் உண்டு. இவருடைய சகோதரியின் கணவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர் என்ற 74 சிம்மாசனாதிபதி
களில் ஒருவர் (வ.எண். 35). இவருடைய மருமகன் புகழ் பெற்ற “விஞ்சிமூர் தாதாசார்யர்.

நடுவிலாழ்வான்
தனியன்
யேந ப்ரோல்லஸதே நித்யம் கார்க்யவம் மஹாம்புதி:
மந்மஹே தம் ஸதா சித்தே மத்யமார்யம் கலாநிதிம் II

இவர் கண்ணபிரான் குலமாகிய யதுவம்ச புரோகித ராகிய கர்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். திருநாராயணபுரத்தில் உடையவர்இருந்த காலத்தில் இவர்அவர்கூடவே இருந்தார். இவர்ஸ்ரீபாஷ்யம் சாதித்த காலத்தில் வங்கிபுரத்து ஆச்சியும் சொட்டை அம்மாளும் ஸ்ரீபாஷ்யம்கேட்டு இது அற்புதமாக இருந்தது என்று சொன்னார்கள். அவர்களிடம் இவர் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள் என்று அருளிச் செய்தார்.
மணவாள மாமுநியின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான்ஜீயர் இவர் வம்சத்தில் தோன்றியவர்.-எம்பெருமானாருடைய சரம தசையிலே இவர் திருவரங்கம் எழுந்தருளினார். எம்பெருமானார் தன்னை ஆச்ரயித்த மாருதியாண்டான் மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான், அரணபுரத்தாழ்வான், ஆஸூரிப் பெருமாள், முனிப்பெருமாள், அம்மங்கிப் பெருமாள் முதலானோரை இவரை ஆச்ரயிக்கச் செய்தார்.
இவர்கள் அனைவரும் 74 சிம்மாசனாதிகளாக உடையவரால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவருடைய வம்ச பரம்பரை: – நடுவிலாழ்வான்ஆழ்வான் – வைத்த மாநிதி – அழகிய மணவாளர் -வரதாசார்யர் – வேங்கடத் துறைவார் – சடகோபாசாரியார் – போரேற்று நாயனார் – கோவிந்தாசார்யர் – கிருஷ்ணமாசார்யர் – ராமானுஜாசார்யர் – கோவிந்த தாஸரப்பர்என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்.

கோமடத்தாழ்வான்கோமடத்துப் பிள்ளான் என்றும் இவர்அழைக்கப்படுவார். இவருடைய சிஷ்யர் காக்கைப் பாடியாச்சான் பிள்ளை. இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யம் வாசித்தார்.
இவருடைய வம்ஸத்தில் பிறந்தவர் மணவாள மாமுநிகள். மணவாள மாமுநியின் தகப்பனார் “திகழக் கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணர். மணவாள மாமுநிகளின் பூர்வாஸ்ரம் பேரரான ஜீயர் நாயனார்-கோவில் கந்தாடை அண்ணனின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்.

பிள்ளைப் பிள்ளையாழ்வான்
இவர் உயர் குடியில் பிறந்த ஒரு வித்வான். கூரத்தாழ்வானுடைய சிஷ்யர். பாகவதர்களிடத்திலே கடுமையாகப் பேசி அபசாரப்படுபவர். ஒரு புண்ய தினத்தன்று இவர் தீர்த்தமாடி கரை ஏறுகையில் இவரிடம் கூரத்தாழ்வான் ஒரு தானம் கேட்டார். புண்ய தின
மானதால் இவரும் சம்மதித்தார். “மனம், மொழி,மெய் எதனாலும் பாகவத அபசாரப்படாமல் வாழக் கடவேன்” என்று சத்யம் பண்ணித் தருவதே அந்த தானம். இவரும் தண்ணீர் வார்த்து தானம் பண்ணிக் கொடுத்தார். இருந்தாலும் ஒரு சமயம் பாகவத அபசாரப்பட்டு மனம் வருந்தினார். கூரத்தாழ்வானை சந்திக்க மனம் கூசினார். இதை அறிந்து கூரத்தாழ்வான் இவர் வீடு சென்று மன்னித்து இவரை மனம் தேற்றினார்.
பராசர பட்டர் காலத்தில் இவருடைய திருமாளிகையை இடிக்கும்படி வீரசுந்தரப்ரும்மராயர் என்ற அரசு அதிகாரி கட்டளையிட்டார். பட்டர் தடுத்தார். இருந்தும் இவர் திருமாளிகை இடிக்கப்பட்டதால் பட்டர் திருக்கோஷ்டியூர் சென்று விட்டார்.
“புள்ளும் சிலம்பின காண்” – விளக்கம் – எம் பெருமானை நினைப்பதற்கு விடியற்காலை வேளையில் பறவைகளின் ஒலி மிகவும் உத்தேசயம் என்பதை இவர் தெரிவிப்பார்.
திருவிருத்தம் வ்யாக்யானத்தில் – “குழந்தை தாய்ப்பால் பருகி விட்டு தாய் முகம் நோக்குவது போல் அடியார்கள் எம்பெருமான் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு அவன் திருமேனி, குணங்களில் ஈடுபடுவார்கள்”’ என்பதை அடிக்கடி தெரிவிப்பார்.

நடாதூராழ்வான்
தனியன்
யஸ்மிந்பதம் யதிவரஸ்ய முகாத்ப்ரணேதுர், நிஷ்க்ராம தேவநிததே நிகமாந்த பாஷ்யம் |
தஸ்யைவ தம் பகவத: ப்ரிய பாகிநேயம், வந்தே குரும் வரதவிஷ்ணு பதாபிதாநம்

இவர் ராமானுஜருக்கு நித்ய அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்பவர். இவர் காஞ்சீ புரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தார். இவருக்கு வரத விஷ்ணு”என்ற பெயருண்டு. உடையவர் இவருக்கு ஸ்ரீபாஷ்ய சிம்மாசனாதிபதி என்ற விருது வழங்கினார். எங்களாழ்வான் இவருடைய சிஷ்யர். நடாதூரம்மாள் என்னும் வாத்ஸ்ய வரதாசார் இவருடைய பேரர். இவர் ராமானுஜரின் சகோதரியின் குமாரர். இவர் “மாநயாதாத்ம்ய
நிர்ணயம்” என்ற நூலை அருளியுள்ளார். இவருடைய அர்ச்சா விக்ரகம் திருவெள்ளறை கோவிலில் உள்ளது. இவரிடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் ஸ்ரீபாஷ்யம் கேட்டு மகிழ்ந்தனர்.

எங்களாழ்வான்
தனியன்
ஸ்ரீ விஷ்ணு சித்த பதபங்கஜ ஸங்கமாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண Iநோ சேத் மமாபி யதிசேகர பாரதீநாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: 1
வாழித் திருநாமம்

சீராரும் வெள்ளரையில் சிறந்துதித்தோன் வாழியே சித்திரை ரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே பார்புகழும் எதிராஜன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே தீதிலா பாடியத்தை தேர்ந்துரைப்போன் வாழியே தாரணியின் விட்ணுமதம் தழைக்க வந்தோன் வாழியே தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

இவர் திருவெள்ளறையில் சித்திரை மாதம் ரோஹிணி நட்சத்ரத்தில் அவதரித்தார். நடாதூர் அம்மாள் இவருடைய சிஷ்யர். ஸ்ரீபாஷ்ய உபந்யாஸத்தில் வல்லவர். விஷ்ணு புராணத்துக்கு “விஷ்ணு சித்தீயம்” என்னும் வ்யாக்யானத்தை அருளிச் செய்தவர். நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளாகிய ”ஆயர் தேவு” இவர் கனவில் வந்து நாவல் பழம் கேட்டு அடிக்கடி தூக்கத்தைக் கெடுக்க இவர் இது பற்றி நஞ்சீயரிடம் முறையிட்டார். திருநாராயண புரத்திலிருந்து ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்தபின் 7-8 வருடங்கள் கழிந்த பின் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவர் ஸ்ரீபாஷ்யம் எழுத உசாத் துணையாக இருந்தார். அதனால் இவருக்கு உடையவர்” எங்களாழ்வான்” என்று பெயரிட்டார். உடையவரை விட இவர் 80 வயது சிறியவர். “ப்ரமேய சங்க்ரஹம்”, “ஸங்கதி மாலா’, ”கத்ய வ்யாக்யானம்”. இவை இவர் அருளிய நூல்கள். நடாதூரம்மாள் இவருடைய சிஷ்யர். நடாதூர் ஆழ்வான் நடாதூரம்மாளை இவரிடம் ஆச்ரயிக்கும் படி அனுப்பினார். நஞ்சீயர், நம்பிள்ளை காலங்களில் இவர் வாழ்ந்துள்ளார். இவர் திருக்குருகைப் பிள்ளான் திருவடிகளில் திவ்யப்ரபந்த காலக்ஷேபம் கேட்டார். இவருடைய பெண் செங்கமல நாச்சியார். இவருடைய மாப்பிள்ளை வரதாசார்யர்.

மிளகாழ்வான்
இவருடைய தேசத்து அரசன் வித்வான்களுக்கு ஒரு பரீட்சை வைத்தான். இவர் அதற்காக அரச சபைக்கு சென்றார். வாயிற் காப்போன் உள்ளே விடவில்லை.நான் பண்டிதனாயிற்றே. ஏன் என்னை உள்ளே விட வில்லை என்று கேட்டார். “நீர் வைஷ்ணவராயிற்றே.- அதனால்தான்” என்று பதில் கிடைத்தது இவர் ஆனந்தக் கூத்தாடினார். தன்னைப் பிறர் வைஷ்ணவராக மதித்தது இவருக்கு மகிழ்ச்சியை தந்தது.
இவர் வித்வானாகையால் முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்தார். “தோற்றவர் மற்றவரை தோளில் சுமக்க வேண்டும்” என்பது நிபந்தனை. மிளகாழ்வான் தோற்றார். ஆகையால் முதலியாண்டானுடைய பாதங்களை தலையில் ஏற்றார். அவர் இவரை ராமானுஜரிடம் ஆச்ரயிக்கச் செய்தார். ராமானுஜரும் இவரை ஏற்று நல்ல கௌரவம் கொடுத்தார்.
முதலியாண்டான் மிளகாழ்வானை “நீர் ஏன் அடிக்கடி திருவானைக்காவுக்கு (சிவஸ்தலம்) செல்கிறீர்” என்று கேட்டார். அதற்கு இவர் சொன்ன பதில் “நான் அவர்களுக்கு பகவத் சம்பந்தமான வார்த்தைகள் சொல்வேன். அதனால் அவர்களைத் திருத்தி பணி கொள்வேன்”. “‘அப்படி யாராகிலும் திருந்தினார்களா?” என்ற கேள்விக்கு “நான் எல்லோரையும் நாராயண சம்பந்திகளாக நினைக்கிறேன். ப்ரக்ருதி சம்பந்திகளாக காணவில்லை. ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாக இராதே” என்று பதிலளித்தார்.

உக்கலாழ்வான்
இவர் ராமானுஜர் மடத்தில் பிரஸாத கலம் எடுக் கும் கைங்கர்யம் செய்வார்.

கணியனூர் சிறியாச்சான்
இவர் வங்கி புரத்து நம்பியின் சிஷ்யர். போசள நாட்டிலிருந்து இங்கு வந்தவர். மிகவும் சாது. பசும் புல்லைக் கூட மிதிக்க மாட்டார். நாச்சியார் திரு மொழியில் “ஈட்டீரிட்டு விளையாடி” என்ற சொல் தொடரை மிகவும் ரஸிப்பார். எல்லாம் வல்ல எம் பெருமான் தன்னுடைய எளிமையை காட்டி ரஸிப்ப தற்காக பிறவி எடுத்து ஆயர்களுடனும் மாடு கன்றுகளுடனும் எளிமையுடன் பழகி விளையாடுவதைக் கண்டு பரவசப்படுவார். இவர் சிறந்த அனுஷ்டானங்களை உடையவர். உடம்பெல்லாம் தழும்பாகும்படி எம்பெருமானைத் தொழுவார்.இவர் பற்றி கூரத்தாழ்வான் பட்டரிடம் “இவர் மேனி சிறுத்து ஞானம் பெருத்த சிறுமாமனிசர்” என்று கூறுவார்.ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இவர் அடிக்கடி சொல்லும் ஸ்லோகம் பின்வருமாறு:
ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ய: II
“ராம பிரானுக்கு எல்லாப் பெருமைகளும் இருந்தாலும் கண்ணனைப் போல தன் அடியார்களுக்காக தூது சென்ற பெருமை இல்லையே” என்று இவர் பட்டரிடம் கேட்டார். “இது ராமபிரானுக்கு குறை இல்லை.அவர் அரச குலத்தில் பிறந்ததாலும் நாட்டிலும் குறை இல்லாததாலும் இவரை தூது அனுப்புவார் யாரும் இல்லை” என்று பட்டர் பதிலளித்தார்.“ராமபிரானுடைய அழகுக்கு சுப்ரமண்யனையோ மன்மதனையோ ஒப்பாகச் சொல்லக் கூடாது” என்று இவர் ஒரு சந்தர்பத்தில் பட்டரிடம் தெரிவித்தார்.”வால்மீகி ரிஷி ராமாயணத்தில் ராமருக்கு கண் எச்சில் பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவருடைய அழகை கொஞ்சம் குறைத்து “தேவ குமார ரூபம்” என்று எழுதி விட்டார்” என்று பட்டரிடமிருந்து சாமர்த்யமான பதிலைப் பெற்றார்.

ஆட்கொண்ட வில்லி ஜீயர்
தனியன்
ஞான வைராக்ய ஸம்பந்தம் ராமானுஜ பதாசரிதம்
சதுர்த்தா ரம ஸம்பந்நம் ஸம்யமீந்தரம் நமாம்யஹம் |
இவர்சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். எம்பெருமானார் நியமனத்தால் முதலியாண்டானின் குமாரர் கந்தாடையாண்டான் இவரை ஆச்ரயித்தார்.
இவர் ஒருநாள் வெளியில் சென்று கொண்டிருந்த பொழுது நஞ்சீயர் இவரை தண்டனிட்டு வணங்கினார். இவர் அவரிடத்தில் “தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும் பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்றுதான்
பகவத் ருசி ஏற்பட்டது என்று அர்த்தம்” என்றும் தெரிவித்தார்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான்
தனியன்
“ஸிம்ஹே ம்ருகலிரோத்பூதம் ராமானுஜபதாச்ரிதம் |
த்ராவிடாம்நாய தத்வக்ஞம் குருகாதிப மாஸ்ரயே I
த்ராவிடஸாரக்ஞ்ம் ராமானுஜ பதாச்ரிதம் 1
ஸுதியம் குருகேஸார்யம் நமாமி ஸ்மிரஸாந்வஹம் |

இவர் ஆவணி மாதம் மிருக சீர்ஷ நட்சத்ரத்தில் அவதரித்தார். இவர் பெரிய திருமலை நம்பியின் மூன்றாவது குமாரர். (பிள்ளை திருமலை நம்பி -ராமானுஜன் -முதல் இருவர்)பெரிய திருமலை நம்பி இவரை ராமானுஜருக்கு அபிமாந புத்ரராக கொடுத்தார். இவர் ராமானுஜர் திக்விஜய யாத்ரையாக திருக்குருகூர் சென்றிருந்த பொழுது இவரும் அவர் கூடவே சென்றிருந்தார். நம்மாழ்வார் செய்தருளின பேருபகாரத்துக்காக அவர் திருநாமம் சாத்துகைக்கு அர்ஹமாக ஒருவரைத்
தேடிய பொழுது “பிள்ளான்” என்ற பெயர் கொண்ட இவரை தேர்ந்தெடுத்தார். இவருக்கு ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்று திருநாமம் சாத்தியருளினார்.
“திருக்குருகைப்பிரான்” என்று திருக்கோட்டியூர் நம்பிக்கு ஒரு பெயர் உண்டு. அவருடைய திருநாமமும் இவருக்குச் சேர்ந்திருப்பதைக் கண்டு எல்லா வித்வான்களும் மகிழ்ந்து இவரை கௌரவப்படுத்தினார்கள்.
இவர்சிறுபுத்தூரிலே எழுந்தருளியிருக்கும் பொழுது சோமாசியாண்டான் இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யம் வாசித்தார். அவர் இவரிடம் “தனக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று கேட்ட பொழுது இவர் “நீர் பாட்டம், ப்ரபாகரம், மீமாம்ஸை
இவையத்தனைக்கும் கர்த்தா, பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மையடித்திராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்று அருளிச் செய்தார்.
ராமானுஜர் கட்டளையின் பேரில் ஆறாயிரப்படி வ்யாக்யானம் எழுதியவர். (உபதேச ரத்னமாலை 41ம்பாசுரம்)-இவரிடம் எங்களாழ்வான் திவ்ய ப்ரபந்தத்துக்கு
அர்த்தம் கேட்டார். இவர் ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்தார்.
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்தருளிய பொழுது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யன் திருநாமத்தைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களையே சொல்லிக்
கொண்டிருந்தார்கள். அதனால் இவர் அந்தஇல்லத்தை விட்டு வெளியேறி விட்டார்.
“வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று உடையவர் சொல்லும் அளவுக்கு உடையவர், இவர்மீது அன்பு கொண்டிருந்தார்.
இவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் “கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ” என்று சொல்வதைக் கண்ட நஞ்சீயர், அழத் தொடங்கினார். அப்போது இவர் “சீயரே நீர்கிடந்து அழுகிறதென்? அங்குபோய் பெறுகிற பேறு இதிலும் தண்ணிது (தாழ்ந்தது)
என்று தோற்றி இருந்ததோ?” என்று அருளிச் செய்தாராம்.

திருக்கண்ணபுரத்தெச்சான்
ஒரு சமயம் திருக்கண்ணபுரம் கோவிலைச் சுற்றி விரோதிகள் சூழ்ந்து கொண்டனர். இவர் உடனே திருமங்கையாழ்வார் பாசுரமான “செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ கைத்தலத்தது” பாசுரத்தைப் பாடினார். உடனே எம்பெருமான் “இதோ ஒரு நொடியிலே
எதிரிகளை அழித்து விடுகிறேன்” என்று சொன்னாராம்.

17. அம்மங்கிப் பெருமாள்
இவர் ராமானுஜருக்கு பாலமுது காய்ச்சிக் கொடுப்பார்.

18. மாருதிப் பெரியாண்டான்
இவர் ராமானுஜருக்கு திருக்கைச் செம்பு பிடிப்பார்

19. மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
தனியன்
ஞாதும் கூரகுலாதிபம் க்ருமிகளாத் ப்ராப்தாபதம் ப்ரேஷித: 1
ஸ்ரீராமாவரஜேந கோஸலபதாத் த்ருஷ்ட்வா ததீயாம் ஸ்திதிம் |
ஸம்ப்ராதஸ்த்வரயா புராந்தகபுராத் கல்யாண வாபீதடே
யோ :ஸௌ மாருதிரித்ய ம்ஸத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே I
இவர் மடத்திற்கு அமுதுபடி, கனியமுது பால்,நெய் முதலானவை வாங்க ஏற்பாடு செய்வார்.
உடையவர் திருநாராயணபுரம் சென்ற பொழுது ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வான் பெரிய நம்பி ஆகியோர்களுடைய நிலமையை அறிந்து வர ராமானுஜர் இவரையும் சிறியாண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீரங்கத்தக்கு அனுப்பினார். இவர் அங்கு சென்று வந்து பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளியதையும் கூரத்தாழ்வான் கண்களிழந்ததையும் உடையவருக்கு தெரிவித்தார்.

சோமாசியாண்டான்
தனியன்
நௌமி லக்ஷ்மணயோகீந்த்ர பாதஸேனவக தாரகம் |
ஸ்ரீராமக்ரது நாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் |
இவர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ராமமிஸ்ரர்.-இவர் ஸோம யாகம் செய்ததால் சோமாசியாண்டன் என்று பெயர் வந்தது.
“எம்பெருமானாரே சரணம்” என்று சொல்வதில் இவருக்கு மிகவும் ஆர்வம்.-இவர் திருநாராயணபுரம் பெருமாள் செல்வப் பிள்ளைக்கு மிகவும் அந்தரங்கர். அவரைப் பாட்டுப்
பாடி மகிழ்விப்பார். ஒரு நாள் “தனக்கு மோக்ஷம் உண்டா” என்று செல்வப் பிள்ளையை கேட்டார். கிடையாது” என்று பதில் வந்தது. “நான் பாட்டுப் பாடி உம்மை மகிழ்வித்தேனே. அதற்கு பலன் கிடையாதா” என்று இவர் கேட்டார். “நீர் பாடினதுக்கு நான் ஆடினது சரியாகப் போய் விட்டது” என்று செல்வப்பிள்ளை பதில் சொன்னார். மேலும் “ராமானுஜரைப்
போல் அபிமானத்துடன் இருந்தால் மோக்ஷம் நிச்சயம்”. என்றும் சொன்னார். அது முதல் இவர் ராமானுஜரிடத்தில் மிகவும் ப்ரீதி விச்வாசமாக இருந்தார். ஸ்ரீரங்கத்தில் இவர் குலத்தைச் சேர்ந்தவர்களே வாக்ய பஞ்சாங்க மிராசு பெற்றவர்கள். இவர் “ஸ்ரீபாஷ்ய விவரணம்”,”குருகுணாவளி” ஆகிய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.

21. சிறியாண்டான்
இவர் மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானுடன் திருநாராயண புரத்திலிருந்து ஸ்ரீரங்கம் சென்று பெரிய நம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருடைய நிலையை அறிந்து வரச் சென்றார்.

22. தொண்டனூர் நம்பி
இவர் தொண்டனூரில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்வதையே இயல்பாகக் கொண்டவர். ஒரு சைவப் பண்டாரம் வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பான். ஒரு நாள் அவனுக்கு சோறு கிடைக்கவில்லை.ஒருவர் அவனை நோக்கி “நீ தொண்டனூர் நம்பி வீடு
சென்று “ஸ்ரீமதே ராமானுஜாய நம:” என்று சொல்லு.உனக்கு பிச்சை கிடைக்கும்” என்று சொன்னார். அவனும் அப்படியே பல முறை சொன்னான். நம்பி வெளியே வந்து பார்த்து “நீ சைவனாயிற்றே. ஏன் ராமானுஜர் நாமம் சொன்னாய்” என்று கேட்டார். அவன் நடந்த உண்மையை அப்படியே சொன்னான். நம்பி அவனுக்கு உணவு அளித்தார். இதற்காக ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பியை குறை கூறினார்கள். அவர்களுக்கு நம்பி ஆசார்யன் திருநாம மஹிமை பற்றி எடுத்துச் சொன்னார்.அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர் அந்த சைவப் பண்டாரம் ஸ்ரீவைஷ்ணவனாக மாறி கைங்கர்யங்களில் ஈடுபட்டான்.
“திருக்கோட்டியூரில் செல்வநம்பி தம்பதியர் போல் தொண்டனூர் நம்பி பாகவத சேஷத்வமே
யாத்ரையாய் போந்தார்” என்று திருவாய் மொழி-8-10-11 பாசுர வ்யாக்யானத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தொண்டனூர் நம்பி அநந்தாழ்வானுடன் ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜரை சந்தித்தார். ராமானுஜர் அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் ஆச்ரயிக்கும்படி கட்டளையிட்டார்.-இவர் ராமானுஜரிடம் விண்ணப்பித்து அந்த தேச அரசன் விட்டல தேவராயனுடைய மகளின் பிசாச பீடையைப் போக்கி அரசனை ஆச்ரயிக்கச் செய்தார்.

23. மருதூர் நம்பி
இவர் மைசூர் பிராந்தியத்திலிருந்து அநந்தாழ்வா னுடன் ஸ்ரீரங்கம் வந்து அருளாளப் பெருமாள் எம் பெருமானாரிடம் ஆச்ரயித்தார்.

24- மழுவூர் நம்பி
இவர் மைசூர் பிராந்தியத்திலிருந்து அநந்தாழ்வா னுடன் ஸ்ரீரங்கம் வந்து அருளாளப் பெருமாள் எம் பெருமானாரிடம் ஆச்ரயித்தார்.

25. முடும்பை நம்பி
தனியன்
ஸ்ரீராமானுஜ ஸம்யதீந்த்ரசரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்நப்ரியம் |
ஸேவே:ஹம் வரதார்ய நாமகமமும் ஸூக்த்யா ப்ரிஸித்தம் முதா 1
பால்யாத் பரிபூர்ண போத ஸடஜித் காதா ராகோஜ்வலம் 1
வாத்ஸ்யம் பூர்ணமுதாரம் ஆச்ரிதநிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம்
ஸ்ரீராமானுஜ யோகீந்த்ர பதபங்கஜ ஷட்பதம் |
முடும்பை பூர்ணமநகம் வந்தே வரதஸம் கஞ்கம்

இவர் காஞ்சிபுரத்துக்கருகில் முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர்.-இவருடைய இயற்பெயர் ஸ்ரீவரதாசார்யர். இவர் ராமானுஜரின் ஸஹோதரியின் கணவர். ராமானுஜரை ஆச்ரயித்தார். கூரத்தாழ்வானின் அன்புக்கு பாத்ரமானவர். நல்ல ஞான அனுஷ்டானங்களை உடையவர்.-இவர் குமாரர் ராமானுஜ நம்பி. ராமானுஜ நம்பியின் குமாரர் முடும்பையாண்டான் என்னும் தாசரதி.-தாசரதி முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்தார். இவருடைய வம்ச பரம்பரை கீழ்கண்டவாறு:

தாசரதி –தேவப்பெருமாள் என்னும் வரதாச்சார்யார் -இளையாழ்வார் என்னும் லஷ்மணாச்சார்யார் –
இங்கிருந்து இரண்டு கிளைகள் -முதலில் -ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் -அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் –
அடுத்தது -ராமானுஜ குரு -அழகப்பயங்கார் -தேவராஜ குரு என்னும் பேரருளாள ஸ்வாமி–ராமானுஜம் பிள்ளை -இவர் மா முனிகளின் சிஷ்யர் பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் -இவர் திருக்குமாரர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் ஸ்வாமி-

“காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” வம்ஸத் தினரும் முடும்பை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்களே.
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகா சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் யோரும் நாயனார் ஆகி முடும்பை நம்பி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆழ்வார் திருநகரியில் கீழ்த் திருமாளிகை, மேலத்திரு மாளிகை, வடக்குத் திருமாளிகைகளைச் சேர்ந்த ஆசார்யர்கள் முடும்பை நம்பி வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர். 

26. வடுக நம்பி
தனியன்
“சைத்ரேத்வஸ்விநி ஸஞ்ஜாதம் ஸம்ஸாரார்ணவ தாரகம் 
ராமானுஜார்ய ஸ்த்சிஷ்யம் ஆந்த்ரபூர்ணமஹம் பஜே
ராமாநுஜார்ய ஸத்சிஷ்யம் ஸாலக்ராம நிவாஸிநம்
பஞ்சமோ பாய ஸம்பந்தம் ஆந்த்ரபூர்ணமஹம் பஜே
இவர் கி.பி. 1047 சித்திரை மாதம் அஸ்வதி நட்சத்ரத்தில் திருநாராயணபுரம் அருகிலுள்ள “ஸாலிக்கிராமம்” என்ற ஊரில் அவதரித்தார். இவருக்கு ஆந்த்ரபூர்ணர் என்று மற்றொரு திருநாமம் உண்டு. ராமானுஜருக்கு பாலமுது கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு உத்ஸவ நாள் இரவு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி உடையவர் மடத்து வாசலில் எழுந்தருளும் போது உடையவர் பெருமாளை ஸேவிக்கப் போனார். அப்பொழுது வடுக நம்பியை பெருமாள் ஸேவிக்க அழைத்தார். “எனக்கு நீரே பெருமாள். உமக்காக பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். பால் பொங்கி விடும். ஆகையால் பெருமாள் ஸேவிக்க வரவில்லை” என்று சொன்னார். “தேவுமற்றறியேன்” என்பது இவர் நிலை.-கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் பெருமாளிடத்திலும் ஈடுபாடு, ராமானுஜரிடத்திலும்
ஈடுபாடு. அதனால் அவர்களை “இருகரையர்” என்று இவர் சொல்லுவர்.

தினந்தோறும் உடையவர் திருவடி நிலைகளை தண்டனிட்டு உடையவர்வெளியிடங்களுக்கு புறப்படும் பொழுது அவர் திருமுன்பே கொண்டு வைப்பார்.
இவர் உடையவருக்கு எண்ணைக் காப்பு சாத்தி அருளுவார்.தினந்தோறும் இரவு உடையவர்பாலமுது செய்தருளும் போது அவரை பள்ளிக் கட்டிலில் ஏறியருளப்
பணணி அவரிடம் சந்தை சொல்லிக் கொள்வார்.-பசுக்களுக்கு புல் கொண்டு போடுவார்.
ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர். இவர் பக்கத்தில் இருந்த பொழுது “ஓம் நமோ நாராயணாய” என்று சொன்னார். “ஸ்ரீமதே ராமானுஜாய நம: ‘ என்று சொல்ல வில்லையே என்று சொல்லி அவர் இருந்த இடத்திலிருந்து இவர் வெளியேறி விட்டார்.
இவர் உடையவருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைக் கொண்டு கீழ் நாட்டில் பஞ்சத்தைப் போக்கினார்.-இவர் உடையவரின் திருவடிச் சுவடுகளை திரு வாராதனம் செய்வார். ஒரு நாள் யாத்ரைக்கு புறப்படும் பொழுது உடையவர் திருவாராதநப் பெருமாளையும், உடையவர் திருவடிச் சுவடுகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தார். இதைக் கண்டு உடையவர் “‘வடுகா! இதென் செய்தாய்” என்ன. வடுக நம்பியும் “உங்கள் தேவரில் என் தேவருக்கு என்ன குறை?” என்று சொல்லி விட்டார்.-உடையவர் பெருமாளை ஸேவிக்கும் பொழுது”வடுகா; பெருமாள் கண்ணழகைப் பார்” என்று சொன்னார். வடுக நம்பி “என்னமுதனை (ராமானுஜரை)க்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று
சொன்னார்.-இவருடைய மடியிலே முடியை வைத்து எம்பார் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
“ராமானுஜ அஷ்டோத்தர ப தநாம ஸ்தோத்ரம்”, “யதிராஜ வைபவம்” (114 ஸ்லோகங்கள்) “யதிராஜ மங்களம்” (21 சுலோகம்) இவர் அருளியவை.
“வடுக நம்பி திருநாட்டுக்குப் போனார்” என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட அருளாளப் பெருமாள் எம்பெருமானார் “இவர் உடையவர் ஸ்ரீபாதத்துக்குப் போனார்” என்று சொல்ல வேண்டும் என்று திருத்தி யருளினார்.

27. வங்கி புரத்து நம்பி
தனியன்
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாசரிதம் |
வந்தே வங்கிபுராதீயம் ஸம்பூர்ணார்யம் க்ருபாநிதிம் |1
இவர் திருவாய் மொழியின் சாரம் “அர்த்தபஞ்சகம்” என்று அருளிச் செய்வார்.
பிராட்டிக்கு பதி என்பதே (ஸ்ரீயப்பதி) எம்பெருமானின் பெருமை. வைஷ்ணவ மதத்தின் பெருமையும்-அதுவே என்று அடித்துக் கூறுவார்.-இவருக்கு “திருவாராதநக்ரமம்” பற்றி சொல்லி கொடுப்பதில் ராமானுஜருக்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. அது பற்றி ராமானுஜர் இவரிடம் வருத்தம் தெரிவித்தார்.
எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்தார் என்பது இவர் கருத்து..
இவர்ஒரு சமயம்வீதியில் நம்பெருமாளைஸேவிக்க இடைச்சிகள் நின்ற பக்கம் சென்று ஸேவித்தார். அவர்கள் ஸேவிக்கும் பொழுது தமிழில் “பால் உண்பீர்! பழம் உண்பீர்” என்று சொன்னார்கள். இவர் “விஜயீபவ” என்று சொல்லி ஸேவித்தார். இது தெரிந்து கொண்ட முதலியாண்டான் இவரிடம் இவருடைய முரட்டு ஸம்ஸ்க்ருதத்திற்காக குறை சொல்லி விட்டு
“நாம் நாம்தான். அவர்கள் அவர்கள்தான்” என்று ஆய்ச்சியர்களின் பக்தியை மெச்சினார்.
எம்பெருமானாரும் வங்கி புரத்து நம்பியும் எழுந் தருளியிருந்த சமயத்தில் எம்பெருமானாரை ஸேவிக்க வந்தவர்களிடையே ஒரு விசாரம் ஏற்பட்டது. நமக்கு
தஞ்சமாக நினைத்திருக்கப்படுவது “க்ஷத்ரபந்துவின் வார்த்தை” என்று வங்கி புரத்து நம்பி சொன்னார்.-இல்லை காளியன் வார்த்தை” என்று எம்பெருமானார் சொன்னார். க்ஷத்ரபந்து சொன்னது “உன்னை வணங்குகின்ற எனக்கு அருள் புரிய வேண்டும்” என்பது. காளியன் சொன்னது “‘உன்னை வணங்கத் தெரியாத எனக்கு க்ருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும்”-என்பது. நிர்ஹேதுக க்ருபையின் பெருமையை எடுத்துரைக்க இந்த ஸம்வாதம் உதவியது. மணக்கால் நம்பியின் சிஷ்யரான வங்கி புரத்தாச்சியின் குமாரர் வங்கி புரத்து நம்பி.-74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான ‘சிறியாத்தான்” இவருடைய சிஷ்யர்.

28. பராங்குச நம்பி
தனியன்
கோவிந்த ராஜாவயஜோ மநீஷி பராங்குஸோ யாமுநவைமநஸ்யம் I
அபாசகார ப்ரஸபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்தமணி ப்ரதீப: ||
இவர் எம்பெருமாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டருடைய குமாரர். இவருடைய குமாரரான “கூரநாராயண ஜீயர்” பராசர பட்டருடைய சிஷ்யர்.
உடையவர் எம்பாரைப் பார்த்து “இந்தக் குழந்தைக்கு நம்மாழ்வார் திருநாமத்தைச் சாத்தும்” என்று கேட்டுக் கொண்டபடி இவருக்கு பராங்குச நம்பி என்று பெயர் சூட்டப்பட்டது.
தமிழில் வல்லவரான இவரை கூரத்தாழ்வான் “பாலேய் தமிழர்” என்று கூறுவார்.

29. அம்மங்கியம்மாள்
இவர் ஒருசமயம் நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்த்ரிக்கப்பட்ட யந்த்ரத்தை அவர் கையில் வைக்க முற்பட்டார். நம்பிள்ளை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
உடையவர் திருநாராயணபுரம் சென்ற பொழுது ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வான், பெரிய நம்பி இவர்களுடைய நிலைமையை அறிந்துவர மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானுடன் இவரும் சென்று வந்தார்.-இவர் நீதிப் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விப்பார்.
இவர் மரணத் தறுவாயில் இருக்கும் பொழுது இவர் படும் துன்பத்தைக் கண்டு நஞ்சீயர் வருத்தப்பட்டார். அப்பொழுது இவர்பெரிய திருமொழி 3.6.9 பாசுரத்தைச் சொல்லி நீயாள வளையாள மாட்டோமே “என்றார். நஞ்சீயரும் நம்பிள்ளையும் இவருடையநம்பிக்கைத் திறனைப் பாராட்டிப் பேசினார்கள். இவர்பல பாசுரங்களுக்கு ரஸமாக வ்யாக்யானம் செய்வார்.

30. பருத்திக் கொல்லையம்மாள்
உடையவர் திருமலைக்கு எழுந்தருளும் போது திருக்கோவலூர் சென்று அங்கிருந்து காஞ்சீபுரம் நோக்கி நடந்தார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு வழிகள் பிரிந்தன. அவை எங்கு போகும் வழிகள் என்று அங்கிருந்த இடையர்களைக் கேட்டார். அவர்கள்
“ஒன்று ராஜஸராயிருக்கும் எச்சான் இருப்பிடத்திற்குப் போகும் வழி. மற்றொன்று சாத்விகரான பருத்திக் கொல்லையம்மாள் இருப்பிடத்துக்குப் போகும் வழி என்று சொன்னார்கள். உடையவர் சாத்விகரான “பருத்திக் கொல்லை யம்மாள் குடிசைக்கு சென்றார். அவருடைய குடிசையில் அவர் இல்லை. அவருடைய தேவி சரியான புடவை இல்லாததால் கிழிந்த புடவையுடன் வெளியில் வர விரும்பவில்லை. இதை எப்படியோ
உணர்ந்த உடையவர் தனது உத்தரியத்தை எடுத்து குடிசைக்குள் எறிந்தார். பருத்திக் கொல்லையம்மாள் தேவி அதை உடுத்திக் கொண்டு வெளியில் வந்து உடையவரை தண்டம் சமர்ப்பித்தார். உடையவர் அவளை தளிகை பண்ணும்படி சொன்னார். தேவிகள் தளிகை பண்ணி முடித்தார். அவளுடைய கணவர் பருத்திக் கொல்லை யம்மாள் வந்து சேர்ந்து உடையவரை தண்டம் சமர்ப்பித்து விநயமாக ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ரீதராய் எழுந்தருளியிருந்தார். உடையவரும் அவருடைய ஞான, பக்தி, வைராக்யங்களைக் கண்டு
சந்தோஷப்பட்டு அவருடன் எல்லாருமாகச் சேர்ந்து அமுது செய்தருளினார்கள்.
இவருடைய தேவிக்கு தீங்கு நினைத்த வைஸ்யன் ஒருவனை உடையவருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தால் இவர் திருத்திப் பணி கொண்டார்.

31. உக்கலம்மாள்
இவர் உடையவருக்கு திருவால பட்டம் கைங்கர்யம் செய்வார்.

32. சொட்டையம்மார்
இவர் திருநாராயண புரத்தில் உடையவர் சந்நிதியில் நடுவிலாழ்வானிடத்தில் ஸ்ரீபாஷ்யம் கேட்டார்.-இவருடன் வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீபாஷ்யம் கேட்டு மகிழ்ந்தார். நடுவிலாழ்வான் இவர்களை ஆசீர்வதித்து“எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்றிருங்கோள்” என்று அருளுரை வழங்கினார்.

33. கிடாம்பிப் பெருமாள்
இவர் கிடாம்பி ஆச்சானுடன் சேர்ந்து திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்வார். அறுசுவை உணவு தயாரிப்பார்.-உடையவர் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தவுடன் இவரையும் கிடாம்பி ஆச்சானையும் ஸ்ரீபாஷ்ய ஸ்ரீகோசத்துடன் காஷ்மீர தேசத்துக்குச் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெறச் செய்தார்.

34. ஈச்சம்பாடி ஆச்சான்
ஈச்சம்பாடி என்னும் ஊர் திருமலைக்கு அருகில் உள்ளது. இவருடைய தகப்பனார் சுந்தரதேசிகர் அல்லது அழகப்பிரான். தாயார் திருமலை நம்பியின் குமாரத்தி. இருவரும் ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்கள். ராமானுஜர் திருமலைக்கு எழுந்தருளிய போது அவருக்கு சுந்தர தேசிகர் தாபநீய உபநிஷத்”, “ந்ருஸிம்ஹ மந்த்ரம்” இவைகளை உபதேசித்தார். திருமலை திருவேங்கடவ னுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த காலத்தில் சுந்தர தேசிகருக்கு கி.பி. 1026 தை மாதம் ஹஸ்த நட்சத் திரத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆச்சான் ஸ்ரீநிவாஸாசார்யர் என்று பெயர் சூட்டப்பட்டது.-பின்னர் இவருக்கு சௌளம், உபநயநம், விவாஹம் நடந்தன. பின்னர் இவருடைய தகப்பனார் சுந்தரதேசிகருடைய நியமனப்படி இவர் ராமானுஜரை ஆச்ரயித்து எல்லா சாஸ்த்ரங்களையும் கற்று புத்ர, பௌத்ர சிஷ்யாதிகளுடன் தர்சன ப்ரவர்த்தநம் செய்தருளினார்.

ஏராரும் தையத்தம் இங்குதித்தோன் வாழியே
சுந்தரேசன் திருமகனாய் துலங்குமவன் வாழியே
பார்புகழும் யதிராஜன் பதம்பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல்புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டுகக்கும் தொல்புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடிவாழ் நம்மாச்சான் வாழியே-வாழித் திருநாமம்

35.ஈச்சம்பாடி ஜீயர்
இவர் ஈச்சம்பாடி ஆச்சானின் இளைய சகோதரர்.-இவர் கி.பி. 1030 ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவெங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. செளள, உபநயந, விவாஹாதிகளுக்குப் பின் தந்தையின் நியமநப்படி ராமானுஜரை ஆச்ரயித்து
அவரிடம் எல்லா சாஸ்த்ரங்களையும் கற்று புத்ர, பௌத்ர சிஷ்யாதிகளுடன் தர்சந ப்ரவர்த்தநம் செய்து கொண்டிருந்தார். பின்னர் ராமானுஜரிடமே ஸந்யாஸாஸ்ரம
ஸ்வீகாரம் பெற்று அதுமுதல் ஈச்சம்பாடி ஜீயர் என்று பெயர் விளங்கி அதிவிரக்தராய் சிஷ்ய, ப்ரசிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய, திவ்ய ப்ரபந்த, ரஹஸ்ய, மந்த்ரார்த்தங்கள் ஸாதித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார்.

ஆனிதனில் ஓணத்தில் அவதரித்தோன் வாழியே
வேங்கடத்தை பதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர்கலை உட்பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரியுருவன் அடிதொழுவான் வாழியே
எப்பொழுதும் யதிபதியை ஏத்துமவன் வாழியே
முத்திதரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம்பாடி உறை ஜீயர்தாள் வாழியே-வாழித் திருநாமம்

36. காராஞ்சி சோமயாஜியார்
இவர் உடையவரை ஆச்ரயித்தவர். உடையவர் இருக்குமிடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால் தான் இருக்கும் இடத்திலேயே உடையவர் விக்ரஹத்தைப் பண்ணி பூஜை செய்ய விரும்பினார். விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறு ஒரு விக்ரகம் பண்ணினார். ஒரு நாள் இரவு ஸ்வப்நத்தில் உடையவர் தோன்றி “ஏன் இப்படிச் செய்கிறீர்” என்று கேட்டார். இவர் கண் விழித்து எழுந்து நேரே ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று உடையவரை தண்டம் சமர்ப்பித்து நடந்ததை சொன்னார்.
உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளை தீர்த்தார்.

37.ஆசூரிப்பெருமாள்
இவருக்கு ஆசூரி தேவர், ஆசூரி புண்டரீகாக்ஷர் என்ற திருநாமங்கள் உண்டு. இவர்ஹாரித கோத்ரத்தைச் சேர்ந்தவர். இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான நடுவிலாழ்வானின் சிஷ்யர். எம்பெருமானாரின் ஆறு உபதேசங்களில் நாலாவது உபதேசமான திருநாராயண
புரம் வாஸத்தை ஆதரித்து, அங்கு சென்று தர்சன நிர்வாஹம் செய்தார். இவர் வம்சத்தில் அவதரித்தவர் “ஆய்”,“ஜநந்யாசார்யர்” – திருவாய் மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுநிகள் காலத்தில் எழுந்தருளி யிருந்த ப்ரஸித்தி பெற்ற வித்வானாவார்.

37.ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வைபவ சுருக்கம்
தனியன்
ராமானுஜ பதாம்போஜயுகளீயஸ்ய தீமத: |
ப்ராப்யம் சப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும்
ஆஸ்திகாக்ரேஸரம் வந்தே பரிவ்ராட் குரு பாசகம்
யாசிதம் குருகே ந ப்ரணதார்த்திஹரம் குரும் 1
இவர் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்.-ஒரு சமயம் உடையவருக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் உஞ்சவிருத்தி பிக்ஷை சமர்ப்பிக்கும் பொழுது உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்து கொல்ல நினைத்தார். பகவத் கிருபையினால் உடையவர் உயிர் தப்பினார். இந்தச் செய்தி கேட்டு திருக்கோட்டியூர் நம்பி.கோட்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தார். அவரை எதிர்கொண்டு அழைக்க உடையவர் சென்றார். காவிரி ஆற்று மணலில் அவரை சந்தித்தார். கொதிக்கும் வெயிலில் ஆற்று மணலும் கொதித்தது. உடையவர் நம்பியை ஸேவிக்க ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்தார். நம்பி அவரை எழுந்திருக்கும்படி சொல்லவில்லை. அதனால் உடையவர் எழுந்திருக்கவில்லை. கொதிக்கும் மணலில் உடையவர் திருமேனி வாடி வதங்கியது. அருகிலிருந்த கிடாம்பி ஆச்சான் இதைக் கண்டு பொறுக்காமல் இது என்ன சிஷ்ய ஆசார்ய க்ரமம்? விஷம் வைத்தவர் செயலை விட இது மிகக் கொடுமை” என்று திருக்கோட்டியூர்
நம்பிக்குச் சொல்லி உடையவருடைய திருமேனியை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார். இதை எதிர்பார்த்த திருக்கோட்டியூர் நம்பி இவருடைய பரிவைக்கண்டு மெச்சி இவரை உடையவருக்கு தளிகைக் கைங்கர்யம் செய்ய நியமித்தார்.
ஒரு சமயம் கிடாம்பி ஆச்சான் திருமாலிருஞ்சோலை அழகரை ஸேவிக்கும் பொழுது ஆளவந்தாரின் “ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து”, “அபராத ஸஹஸ்ர பாஜநம்”’ என்னும் ஸ்லோகத்தைச் சொன்னார். அதில்-”அகதிம்” என்ற சொல்லைக் கேட்டு அழகர் கிடாம்பி ஆச்சானை கடாக்ஷித்து “நீ ராமானுஜரின் அடியவனாக இருக்கும் பொழுது “அகதி” என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் மடத்தில் ஸ்ரீவைஷ்ணவ ததி யாராதனம் நடந்து கொண்டிருந்த பொழுது கிடாம்பி ஆச்சான் ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்கு தாகத்திற்கு தீர்த்தம்
சாதித்தார். பக்கவாட்டில் நின்று கொண்டு தீர்த்தம் சாதித்தார். இதைப் பார்த்த உடையவர் இவர் முதுகில் அடித்து நேராக இருந்து கொண்டு தீர்த்தம் சாதிக்கச் சொன்னார். உடனே கிடாம்பி ஆச்சான் “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட” என்ற
பாசுரத்தைச் சொல்லி உடையவருக்கு நன்றி தெரிவித்தார்.
இளையாழ்வார் என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆச்சானிடம் “எம்பெருமானாருடைய சிஷ்யரான வயது முதிர்ந்த நீர் வயது குறைவான பட்டரிடம் தாழ நின்று பழகுவது ஏன்” என்று கேட்டார். ஆச்சான் “ஒரு சமயம் எம்பெருமானார் “நம்முடைய அடங்கலும் நம்மை
நினைத்திருக்குமாப் போலே இவனை (பட்டரை) நினைத்திருங்கோள்’ என்று சொல்லியிருக்கிறார்-என்று பதில் சொன்னார்.
உடையவர் ஸ்ரீபாஷ்யம் எழுதி முடித்தவுடன் அந்த ஸ்ரீகோசத்தை இவரிடம் கொடுத்து காஷ்மீரத்தில் ஸ்ரீசாரதா பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற்று வரும்படி சொன்னார். இவரும் அங்கு சென்று அங்கீகாரம் பெற்ற பொழுது சரஸ்வதி தேவி உடையவருக்கு “பாஷ்யகாரர்” என்ற பட்டம் வழங்கினார்.
காஷ்மீரம் போய் விட்டு திரும்பும் வழியில் ஒரு தயிர் விற்கும் கோபிகை தயிரை விலைக்குக் கொடுத் தாள். பணத்திற்கு பதில் மோக்ஷம் கொடுக்கும்படி கேட்டாள். மோக்ஷம் கொடுக்க திருவேங்கடவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் இவர் சொன்னார் -அந்த கோபிகை “அப்படியானால் திருவேங்கடவனுக்கு நீர் ஒரு சீட்டு கொடும்” என்று கேட்டு வாங்கி திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் சமர்ப்பித்தார்.-திருவேங்கடவனும் அவளுக்கு மோக்ஷம் கொடுத்தார்.-இவருக்கு “வேதாந்த உதயநன்” என்ற விருதுப்பெயரை ராமானுஜர் அனுக்ரஹித்தார். (ந்யாய சாஸ்த்ரத்தில் உதயநன் என்பவர் ஒரு சிறந்த நிபுணர்)இவர் குமாரர் கிடாம்பி ராமானுஜாசார்யர். அவருடைய குமாரர் கிடாம்பி ரங்க ராஜாசாரியர். அவருடைய குமாரர் கிடாம்பி அப்புள்ளார். கிடாம்பி அப்புள்ளாருடைய சகோதரி தோதாத்ரி அம்மையார் தோதாத்ரி அம்மையார் குமாரர் உலகம் புகழும் வேதாந்த தேசிகன்.-கிடாம்பி ஆச்சான் வம்சத்தில் பிறந்தவர். சமீப காலத்தில் இருந்த உ.வே. சிங்கப் பெருமாள் ஸ்வாமி யும் அவருடைய ஸ்வீகார புத்ரர் “காரப்பங்காடு வெங்கடாசார்யர் ஸ்வாமியும்” (1906-1971) தற்சமயம் திருமலை – திருப்பதி பெரிய ஜீயராக உள்ள “ஸ்ரீரங்க ராமானுஜ ஜீயர் ஸ்வாமி” கிடாம்பி யாச்சான் வம் த்தைச் சேர்ந்தவர்.
ராமானுஜருக்கு மாமாவான பெரிய திருமலை நம்பி கிடாம்பி ஆச்சானுடைய அத்தையின் கணவர். பெரிய திருமலை நம்பி கிடாம்பி ஆச்சானை ராமானுஜ ரிடம் ஆச்ரயிக்கச் செய்தார்.-நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள “திருவிருத்தத்திற்கு” கிடாம்பி ஆச்சான் தனியன் அருளிச் செய்துள்ளார்.

38.ஸ்ரீ அலங்கார வேங்கடவர் வைபவச் சுருக்கம்
தனியன்
ஸ்ரீமத் தயாபால முநேஸ்தநூஜம் தத்பாத ஸேவாதிகதப்ரபோதம் 1
ஸ்ரீமத் யதீந்த்ராங்க்ரி நிவிஷ்ட சித்தம், ஸ்ரீகௌஸிகம் வேங்கட சூரிமீடேII
ஸ்ரீராமாநுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத்கோஷ்டி 1
ப்ரேம்ணாலங்க்ருத வேங்கடே குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவாந்
யோஸௌ கௌஸிக தேரிகோ குணநிதி: ஸ்ரீவிஞ்சபுர்யாம் ஸ்தித:
தத்பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார ஸந்தாரகம்||

திருமருவும் விஞ்சைநகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாடியகாரரடி சேர்ந்துய்ந்தோன் வாழியே
அருளாள மாமுனிவனருள் மைந்தன் வாழியே
அருமறைநூல் மாறனுரை ஆய்ந்துரைப்போன்வாழியே
மருளில் திருமலைநம்பி மணவாளன் வாழியே–மார்கழியில் ஆதிரைநாள் மகிழ்ந்துதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணையின்றம் பகர்வோன் வாழியே
திருவேங்கடா சிரியன் திருவடிகள் வாழியே–வாழித் திருநாமம்

இவர் அருளாளப் பெருமாளெம்பெருமானாரின் குமாரர். கௌசிக கோத்ரம். இவர் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்ரத்தில் அவதரித்தார். உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தார். 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் உடையவரின் மாமாவான பெரிய திருமலை
நம்பியின் புதல்வியை மணந்தார். இவருடைய குமாரர் பிற்காலத்தில் விஞ்சிமூர் தாதாசார்யர் என்ற பிரஸித்தி பெற்ற மஹாவித்வான் ஆனார்.

40. ஸ்ரீ அருளாளப் பெருமாளெம்பெருமானார் வைபவச் சுருக்கம்
தனியன்
கார்த்திகே பர ஜாதம் யதீந்த்ராப்ரிதமாரயே |
ஞானப்பரமேய ஸாராபிவத்தாரம் வரதம் மும்
ஞாந பக்த்யாத்த வைராக்யம் ராமாநுஜபதா ரிதம் 1
பஞ்சமோபாய ஸம்பந்தம் ஸம்யமீந்த்ரம் நமாம்யஹம்!!
தயாபாலந்தேவாய ஞாநஸாரப்ரதாயிநே
ப்ரமேயஸாரம் தததே நமோஸ்து ப்ரேமஹாலிநே

திருவாழும் தென்னரங்கம் சிறக்கவந்தோன் வாழியே
தென்னருளாளரன்பால் திருந்தினான் வாழியே
தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே
தமிழ் ஞாநப்பிரமேயசாரம் தமர்க்குரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவிநிலை தெளிந்தோன் வாழியே
தேசுபொலி மடந்தன்னை சிதைத்திட்டான் வாழியே
அருளாளமாமுநியாம் ஆரியன்தாள் வாழீயே
அருள்கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே-வாழித் திருநாமம்

அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்ற நம் பூர்வாசார்யர் முன்னால் யக்ஞ மூர்த்தி என்ற பெயரோடு அத்வைத ஸந்யாஸியாய் வித்வான்களை வாதத்தில் வென்று விருதுகள் பல பெற்று ப்ரகடநப்படுத்தி வந்தார்.-அவர் உடையவரையும் வாதத்தில் வெல்ல வேண்டும்
என்று ஸ்ரீரங்கம் வந்து அவருடன் வாதம் செய்தார். 17நாட்கள் வாதம் நடந்தது. இருவரும் அவரவர் தரப்பிற்கு ப்ரமாணங்களை அள்ளி வழங்கினார்கள். யக்ஞமூர்த்தி அத்வைதமாகிய மாயாவாத சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயன்றார். உடையவர்விஷ்டாத்வைத சித்தாந் தத்தை நிலைநிறுத்த முயன்றார். 17வது நாள் வாதப்
போர் முடிவில் இருவருக்குமே வாதப் போரில் வெல்ல முடியாது என்ற அவநம்பிக்கை வந்து கலங்கினார்கள்.-உடையவர் தனது ஆராதநப் பெருமாளாகிய “அருளாளப் பெருமாளை” த்யானம் செய்து வணங்கி நின்றார்.-அன்று இரவு அருளாளப் பெருமாள் “எம்பெருமானாரே, உமக்கு ஸமர்த்தனாயிருப்பதொரு சிஷ்யனை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. நீர் ஆளவந்தாருடைய மாயாவாத கண்டனம் என்ற நூலில் உள்ள யுக்தியை சொல்லி யக்ஞ மூர்த்தியை வெல்வீராக” என்று அருளிச் செய்தார். 18வது நாள் வாதத்தில் உடையவர் தேவப்பெருமாளின் ஆணைப்படி வாதத்தில் வென்றார்.-வாதத்திற்கு முன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைப்படி யக்ஞ மூர்த்தி தன் ஸித்தாந்தத்தை விட்டு விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை ஏற்று ஏக தண்டத்தை முறித்துப் போட்டு சௌள (குடுமி) உபநயந, பஞ்சஸம்ஸ்கார, காஷாய த்ரிதண்டங்களை ஏற்றார். உடையவர் தன்னுடைய திருவாராதநப் பெருமாள் பெயரையும் தன்னுடைய பெயரையும் சேர்த்து. “அருளாளப் பெருமாள் எம்பெருமானார்” என்று திருநாமமிட்டு அவருக்கு ஒரு மடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து சிஷ்ய சம்பத்களையும் ஏற்படுத்தினார்.
உடையவர் தம்மிடம் ஆச்ரயிக்க வந்த அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி, மழுவூர் நம்பி ஆகியவர்களை இவரிடம் ஆச்ரயிக்கச்செய்தார். மேலும் தம்முடை ஆராதனப் பெருமாளுக்கு நித்திய ஆராதனம் செய்யும்படியும் நியமித்தார்.
இவர் ”ஞானசாரம்”, “‘பிரமேயாசாரம்” என்ற இரண்டு அற்புத நூல்களை அருளிச் செய்தார். பிள்ளைலோகாசார்யரும் வேதாந்த தேசிகனும் இந்த நூல்களில்உள்ள பாசுரங்களை மேற்கோள்களாகக் கையாண்டார்கள். மணவாள மாமுநிகள் இந்த இரண்டு நூல்களுக்
கும் உரை எழுதியுள்ளார்.
இவர் எம்பெருமானார் மடத்துக்கு சமமாக இன்னொரு மடம் இருக்கக் கூடாது என்று நினைத்து தன்னுடைய மடத்தை இடித்து விட்டார்.
கூரத்தாழ்வான் தமது குமாரரான பட்டருக்கு உபதேசம் செய்கையில் “இவரை சிறுமாமனிசர்” என்றுதெரிவித்து திருவாய் மொழி 8-10-3பாசுரத்தில் சொல்லப்பட்டபடி, “மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்தவர்” என்பதைச் சுட்டிக் காட்டினார்.
வடுக நம்பி “திருநாட்டுக்கெழுந்தருளியதாக ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து சொன்ன பொழுது. “அப்படிச் சொல்லக் கூடாது உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இவர் கடைசி காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த பொழுது இவரைப் பார்க்க கூரத்தாழ்வானும் உறங்காவில்லி தாஸரும் வந்தார்கள். கூரத்தாழ்வானுக்கு தாம்
விரும்பியவருக்கு பரமபதம் ஸாதிக்கும் சக்தி உண்டு.-இருந்தாலும் அவர் தனக்கு ஸாதிக்காமல் கஷ்டப்பட விடுகிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. ஆகையால்
அவரிடம் ‘தான் சீக்கிரம் ஆளவந்தார் திருவடியடைய வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
இவர்கௌஸிக கோத்ரத்தைசேர்ந்தவர். இவருடைய பூர்வாஸ்ரமத்தில் இவருக்கு “அலங்கார வேங்கடவர்”என்று ஒரு குமாரர் உண்டு. அவர் உடையவரை ஆச்ரயித்து 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரானார்.-அவர் பெரிய திருமலை நம்பியின் குமாரத்தியை திருமணம் செய்து கொண்டார். விஞ்சிமூர் தாதாசார்யர் இவருடைய பேரர்.

41.ஸ்ரீ குமாண்டூர் இளையவில்லி வைபவச் சுருக்கம்
தனியன்
ஸ்ரீகௌசிகா ந்வய மஹாம்புதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீபாஷ்யகார ஜ நீஸஹஜா தூநூஜம் 1
ஸ்ரீ சைலபூர்ண பதபங்கஜ ஸக்தசித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்ய மஹம் பஜாமி ||
ஸ்ரீயதீந்த்ர மாத்ஷ்வ ரீய: ப்ரதிதார்யபதே ஸ்தித: 11
மூலபூத: கௌசிகாநாம் தம் வந்தே பாலதந்விநம் II
இவர் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார். இவர் கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்தவர்.-ராமானுஜருடைய சிறிய தாயாரின் குமாரர். இவர்-பெரிய திருமலை நம்பியின் மருமகன். ஆகையால் அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் வட மொழியில்பாலதந்வி என்று அழைக்கப்பட்டார்.-இவருடைய வம்ச பரம்பரை கீழ்க்கண்டவாறு.”

————–

74 சிம்மாசனாதிபதிகளும் அஷ்டத்திக் கஜங்களும்
74 சிம்மாசனாதிபதிகளும் ராமானுஜரால் நியமிக்கப்பட்டவர்கள் (1017-1138). பிற்பட்ட 300 ஆண்டுகளில் கால மாறுபாட்டால் ஏற்பட்ட நிலைமைகளாலும் துருஷ்கருடைய படையெடுப்பால் ஏற்பட்ட விபரீதங்களாலும் 74 சிம்மாசனாதிபதிகளின் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டு ஸ்ரீவைஷ்ணவ மதம் நலிந்து காணப்பட்டது.
ஸ்ரீவைஷ்ணவ மதத்தின் ராஜதானியாகிய ஸ்ரீரங்கம் கோவிலில் கி.பி. 1310 முதல் 1371 வரை நம்பெருமாள் அங்கு எழுந்தருளியிருக்க முடியாமல் தெற்கு, மேற்கு, வடக்கு பிராந்தியங்களில் பாதுகாப்புக்காக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தெற்கே திருமாலிருஞ்சோலை மலை, ஜோதிஷ்குடி, மதுரை, மேற்கே கேரளம், கோழிக் கோடு, வடக்கே திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி ஆகிய இடங்களில் எழுந்தருளி, கி.பி. 1371ல்
தான் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடிந்தது. ஸ்ரீவைஷ்ணவ மதத்தை மீண்டும் உத்தாரணம் செய்ய 1370ல் மணவாள மாமுநி அவதரித்தார். அவர்கி.பி. 1414ல் ஸ்ரீரங்கம் எழுந்தருளி கோவில் நிர்வாகத்தையும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயங்களையும் மீண்டும் ஸ்தாபித்தார். அதற்காக, தானே அஷ்டதிக் கஜங்களை நியமித்து, மேலும் அவர்களில் ப்ரதானமானவர்களான வானமாமலை ஜீயருக்கும் கோவில் கந்தாடை அண்ணனுக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமிக்க அடிகோலினார். அவர்களில் பெரும்பாலோர் 74 சிம்மாசனாதிபதிகளின் வம்சங்களில் வழிவந்தவர்கள். இவர்கள் ஸ்ரீவைஷ்ணவமத புநருத்தாரணத்திற்கு செய்த சேவைகள் மிகவும் மதிக்கத் தக்கவை.

மணவாள மாமுநியின் அஷ்டதிக் கஜங்கள் விவரம்

1. வானமாமலை ராமானுஜ ஜீயர்

2. திருவேங்கடம் ஜீயர்

3. பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்– நடுவிலாழ்வான் வம்சம்

4-கோவில் கந்தாடை அண்ணன்–முதலியாண்டான் வம்சம்

5. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா–முடும்பைநம்பி வம்சம்
6. எறும்பியப்பா-

7.அப்பிள்ளார்
8. அப்பிள்ளை

வானமாமலை ராமானுஜ ஜீயரின் அஷ்டதிக் கஜங்கள்
1. அப்பாச்சியாரண்ணா முதலியாண்டான் வம்சம்
2. போரேற்று நாயனார் முதலியாண்டான் வம்சம்
3. சுத்தசத்வம் அண்ணா இளையவில்லி வம்சம்

4. ராமானுஜம் பிள்ளை முடும்பை நம்பி வம்சம்
5. சண்டமாருதம் மஹாசார்யர் இளையவில்லி வம்சம்
6. ஞானக்கண் ஆத்தான் முடும்பை நம்பி வம்சம்
7. திருக்கோட்டியூர் அரையர்
8. பள்ளக்கால் சித்தர்


கோவிலண்ணனின் அஷ்டதிக் கஜங்கள்
1. கந்தாடையப்பன் முதலியாண்டான் வம்சம்
2. திருக்கோபுரத்து நாயனார் முதலியாண்டான் வம்சம்
3. கந்தாடை நாயன் முதலியாண்டான் வம்சம்
4. சுத்த சத்வம் அண்ணன் இளையவில்லி வம்சம்
5. திருவாழி ஆழ்வார் பிள்ளை இளையவில்லி வம்சம்
6. ஜீயர் நாயனார் கோமடத்தாழ்வான் வம்சம்
7. ஆண்டபெருமாள் நாயனார்
8.ஐயன் அப்பா

—————-

அஷ்டதிக்கஜம் – திருவேங்கட ராமானுஜ ஜீயர் வைபவச் சுருக்கம்
தனியன்
ரம்யஜாமாத்ரு யோகீந்த்ர பதபங்கே ருஹா ரிதம்
ஸ்ரீவேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநவை முநிம் |
ராமானுஜர் திருமலையில் கி.பி. 1119ல் “ஜீயர்” மடத்தை ஸ்தாபித்து ஜீயரைக் கொண்டு கோவில் நிர்வாகம் சிறப்புற நடக்க ஏற்பாடு செய்தார். அப்பொழுது அந்த ஜீயருக்கு அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் என்று பெயர். அவர் 1119லிருந்து 1173 வரை பட்
டத்தில் எழுந்தருளி இருந்தார். அவருக்குப் பின் கி.பி. 1428 முதல் 1431 வரை மணவாள மாமுநிகளே 12வது பட்டமாக அந்த ஸ்தானத்தை அலங்கரித்தார். ஒரு ஜீயர் பரமபதம் எழுந்தருளிய பின் அடுத்த ஸ்வாமியை நியமிக்கத் தவறும் பொழுது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக மணவாள மாமுநியே தனக்குப் பின் ஒரு பெரிய ஜீயரையும் அவருக்குப் பின் பட்டம் ஏற்க ஒரு சின்ன ஜீயரையும் நியமிக்க ஏற்பாடு செய்தார். அதன்
படி 1431ல், அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயரை நியமித்து அவரைக் கொண்டே அடுத்த ஜீயர் “அப்பன் சடகோப ராமானுஜ ஜீயரையும்” நியமிக்கச் செய்தார்.-அது முதல் திருமலையில் பெரிய கேள்வி ஜீயர், சின்ன கேள்வி ஜீயர் என்று இரண்டு ஜீயர்கள் இருந்து வருகின்றனர்.

2. அஷ்டதிக்கஜம் – பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் வைபவச் சுருக்கம்
தனியன்
1. ரம்யாஜாமாத்ரு யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் :
பட்டநாத முநிம்வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் !
2-வ்ரு சிகே 5திதிபேஜாதம் பரவஸ்த்வம் பூஷணம் |
வரயோகி பதாதாரம் பட்டநாதமுநிம் பஜேI
3. வரயோகி பதாதாரம் பரவஸ்த்வம் பூஷணம் 1
பட்டநாதமுநிம் வந்தே தீபக்த்யாதி குணார்ணவம்
4. வ்ரு சிகே திதிபேஜாதாம் வரயோகி பதாச்ரிதம் |
கார்க்ய வம் ஸமுத்பூதம் பட்டநாதமுநிம் பஜோ
இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான நடுவிலாழ்வான் வம்பலத்தில் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்ரத்தில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் பெயர் ராமாநுஜாசார்யர். இவருடைய திருநாமம் கோவிந்த தாஸரப்பன்.
இவர் மணவாள மாமுநியையே தெய்வமாக கொண்டாடி அவரிடம் 30 ஆண்டுகள் விடாமல் தொண்டு செய்தார். இவருக்கு மாமுநிகள் ‘அழகிய மணவாளப் பெருமாளை” திருவாராதனப் பெருமாளாகக் கொடுத்தார். மேலும் ஒரு முக்யமான ரகஸ்யத்தையும் அருளிச்செய்தார். இவர் ஒரு திருவாடிப் பூரத்திலே “சூடிக்கொடுத்த நாச்சியார்” ப்ரஸாதங்களைக் கொண்டு வந்து ஆதரத்துடன் மாமுநியிடம் கொடுத்தார். அதனால்
மாமுநி இவருக்கு “பரவஸ்து பட்டர் பிரான் தாஸர்” என்று திருநாமமிட்டார். இவர் மாமுநியிடம் ஸந்யாஸ ஆஸ்ரம ஸ்வீகாரம் பெற்று “பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்” என்று திருநாமமிடப்பட்டார். இவர் “அந்திமோபாய நிஷ்டை’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
“பிள்ளை லோகம் ஜீயர்” என்ற ப்ரசித்தி பெற்ற ஸந்யாஸி, இவருடைய வம்ஸத்தில் பிறந்தவர். (கி.பி.1525) இவருடைய வம் பரம்பரை விவரம்:

இன்னுலகில் கச்சிதனில் வந்துதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர்பூசத்திங்குற்றான் வாழியே-மன்னுமறைத் தண்டமிழை மகிழ்ந்துரைத்தான்.வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன்அனுட்டானம் அறிவித்தான் வாழியே
பாரில் அட்டதிக்கயத்தில் பேர்பெற்றான் வாழியே
சொன்னநெறி மதுரகவி போலுமவன் வாழியே
தூய்மைமிகு பட்டர்பிரான் துணையடிகள் வாழியே–வாழித் திருநாமம்

————–

3.அஷ்டதிக்கஜம் ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் வைபவச் சுருக்கம்
தனியன்
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் 1
ருசிரஜாமாத்ரு யோகீந்த்ர பதாரயம்
வரத நாராயண மத்குரும் ஸம்ஸ்ரயோ

தேனமருமலர் முளரித் திருத்தாள்கள் வாழியே
திருச்சேலை யிடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்குதொங்கு முபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுநி சீர்பேசும்
மலர்ப்பவளம் வாய்வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந் திருநாம மணிநுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடையண்ணன் என்றும் வாழியே-வாழித் திருநாமம்

இவர் வாதூல கோத்ரத்தில் முதலியாண்டான் வம்சத்தில் கி.பி. 1389 புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் தேவராஜ தோழப்பர். இவருக்கு 7 சகோதரர்கள். இவருடைய இயற்பெயர் வரத நாராயணகுரு. இவருடைய பால்யத்திலேயே இவருடைய தகப்பனார் பரமபதம் அடைந்தார். அதனால் கோவிலில் இவர் வம்சத்தாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் கிடைக்காமல் போயிற்று. ராமானுஜர் இவருடைய கனவில் தோன்றி மணவாள மாமுநியை ஆச்ரயிக்கும்
படி தெரிவித்தார்.
கி.பி. 1310ல் முகம்மதியர் படையெடுப்பால் ஏற்பட்ட குழப்பத்தில் இவருடைய வம்சத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் நின்று போயிற்று. கி.பி. 1371ல் நம்பெருமாள் மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்த போதிலும் கி.பி. 1415 வரை இவர் வம்சத்திற்கு
அந்த மரியாதைகள் கிடைக்கவில்லை. மணவாள மாமுநி இந்த வம்சத்தாருக்கு மீண்டும் மரியாதைகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.-மாமுநிகள் இவருக்கு தம்மிடம் இருந்த அழகிய
சிங்கர் விக்ரஹத்தை திருவாராதநப் பெருமாளாக அளித்தார். மேலும் கீழ உத்தர வீதியில் 16 கால் மண்டபத்தை மடமாகக் கொடுத்தார். வேண்டும் பொழுது பண உதவிகளையும் செய்தார்.இவர் மணவாள மாமுநிகளிடம் மிகுந்த பக்தி விஸ்வாஸம் கொண்டிருந்தார். இவர் உத்தம நம்பியையும், அப்பிள்ளார், அப்பிள்ளை, எறும்பியப்பா (தேவராஜ குரு) ஆகியோரையும் மாமுநிகளிடம் ஆச்ரயிக்கச் செய்தார். மணவாள மாமுநிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியாரண்ணாவையும் தமையனார் போரேற்று நாயனாரையும் வான மாமலை ராமானுஜ ஜீயரிடம் ஆச்ரயிக்கச் செய்தார்.
இவர் மாமுநிகளின் பெருமையைக் கூறும் “கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலை இயற்றியுள்ளார். மேலும் ”வரவரமுநி அஷ்டகம்”,
“ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா” என்னும் நூல்களையும் அருளிச் செய்துள்ளார். மணவாள மாமுநியின் “உபதேசரத்ன மாலைக்கு” முன்னம் “திருவாய் மொழிப் பிள்ளை”
என்ற தனியனை அருளிச் செய்தார்.-மாமுநிகள் இவருடைய ஆசார்யனுக்குரிய நியம
நிஷ்டைகளைக் கண்டு இவருக்கு “பகவத் சம்பந்தாசார்யர்” என்று விருதுகொடுத்து அழைத்தார். தன்னுடைய-8 அஷ்டதிக் கஜங்களில் ஒருவராக நியமித்தார்.
எறும்பியப்பாவும், ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவும் தங்களுடைய ப்ரபந்தங்களான வரவரமுநி சதகங்களில்” இவருடைய பெருமையை எடுத்துக் கூறி யுள்ளனர்.
நம்பெருமாள் இவருக்கு “ஜீயர் அண்ணன்”என்று அருளப் பாடிட்டார்.
காஞ்சி பேரருளாளர் இவருக்கு “ஸ்வாமி அண்ணன்” என்று அருளப் பாடிட்டார்.

மாமுநிகள் இறுதிக் காலத்தில் இவர் திருக்கையினால் தளிகை சமைக்கச் செய்து விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்வார்.-இவருடைய வம்சத்தின் பெருமைகளைக் கண்டு
மாமுநிகள் இவர் வம்சத்தாரை கீழ்கண்ட 7 கோத்ரக்காரர்களிடமே சம்பந்தம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.
1. முதலியாண்டான் வம்சம் வாதூல கோத்ரம்
2. முடும்பை நம்பி வம்சம் ஸ்ரீவத்ஸ கோத்ரம்
3. முடும்பையம்மாள் வம்சம் கௌண்டின்ய கோத்ரம்
4. ஆசூரிப் பெருமாள் வம்சம் ஹாரித கோத்ரம்
5. கிடாம்பி ஆச்சான் வம்சம் ஆத்ரேய கோத்ரம்
6. குமாண்டூர் இளையவில்லி வம்சம் கெளசிக கோத்ரம்
7. வங்கி புரத்து நம்பி வம்சம் பாரத்வாஜ கோத்ரம்
இவர் வைணவ மதத்தையும் எம்பெருமானார் தர்சனத்தையும் நிலைநாட்ட கீழ்கண்ட 8 அஷ்டதிக் கஜங்களை நியமித்தார்.
1. கந்தாடையப்பன் தம்பி
2. திருக்கோபுரத்து நாயனார் அழகிய சிங்கர் தம்பி
3. சுத்தசத்வம் அண்ணன் மருமகன்
4. திருவாழி ஆழ்வார் பிள்ளை மருமகன்
5. கந்தாடை நாயன் குமாரர்- 6-ஜீயர் நாயனார்-மாமுநிகள் குமாரர்-
7. ஆண்ட பெருமாள் நாயனார்–குமாண்டூர் ஆச்சான் பிள்ளை பௌத்ரர்
8. ஐயன் அப்பா


இவருடைய குமாரர் கந்தாடை நாயன் கி.பி. 1408 மார்கழி மாதம் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.-இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியாரண்ணா காஞ்சீபுரம் கோவில் நிர்வாகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இவர்காஞ்சீபுரம் சென்றிருந்த பொழுது
அப்பாச்சியாரண்ணாவை தேவப் பெருமாளுக்கு நித்ய திருமஞ்சன கைங்கர்யம் செய்து வரும்படி அறிவுரை வழங்கினார்.
திருமலை அநந்தாழ்வான் வம்சத்தில் பிறந்த குன்னத்தூர் ஐயன் என்ற மகாவித்வான். இவரிடத்திலும் இவர் குமாரர் பேரர்களிடத்திலும் மிக்க அன்பு பூண்டு கைங்கர்யங்கள் பல செய்தார். இவர் விபவ வருஷம் (கி.பி. 1448) சித்திரை மாதம் கிருஷ்ணபக்ஷ திருதியை யன்று ஆசார்யன் திருவடிஅடைந்தார்.

4. அஷ்டதிக்கஜம் ஸ்ரீ ப்ரத்வாதி பயங்கரம் அண்ணா’ வைபவச் சுருக்கம்
தனியன்
கர்கடே புஷ்ய ஸஞ்ஜாத் வாதிபீகரமாச்ரயே 1
வேதாந்தாசார்ய ஸத்சிஷ்யம் வரயோகிபதாசரிதம் |

வேதாந்த தேரிக கடாக்ஷவிவ்ருத்த போதம்
காந்தோபயந்த்ருயமிந: கருணைக பாத்ரம்|
வத்ஸாந்வய மநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் 11
இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான முடும்பை நம்பி வம்சத்தில் அவதரித்தார். கி.பி. 1361ம் வருஷம் ஆடி மாதம் பூச நட்சத்ரத்தில் காஞ்சீபுரத்தில் அவதரித்தார். இவர் கோத்ரம் ஸ்ரீவத்ஸம். இவருடைய பெயர் “ஹஸ்தகிரிநாதரண்ணா”. இவருடைய தகப்பனார்
அனந்தாசார்யர். தாயார் ஆண்டாள். இவர் வேதாந்த தேசிகனின் குமாரரான நயநவரதா சார்யரிடம் ஸ்ரீபாஷ்யம் பயின்றார்.
இவர் க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீகரித்துக் கொண்டு பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றினின்றும் திரு மஞ்சன தீர்த்தம் கொணர்ந்து சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ப்ரதிவாதி பயங்கரர் என்ற திருநாமம் –நரஸிம்ம மிஸ்ரன் என்னும் மாயாவாதி ஒருவன்
இவருடைய குருவான நயநவரதாசார்யரை வாதப்போருக்கு அழைத்தான். அவர் இவரை தேர்ந்தெடுத்து வாதப் போருக்கு அனுப்பினார். நரசிம்ம மிஸ்ரனை இவர் வென்றார். இதைப் பாராட்டி இவருடைய குரு இவருக்கு “ப்ரதிவாதி பயங்கரர்” என்ற விருதை வழங்கி
கௌரவித்தார். மேலும் இவரை ஸ்ரீபாஷ்யத்தை இவ்வுலகில் விசேஷமாக ப்ரசாரம் செய்ய அறிவுறுத்தி விட்டு சில நாட்களில் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
குமாரர்கள் பிறந்தனர்
இவருக்கு ஸ்ரீனிவாஸாசார்யர், அநந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் என்று மூன்று குமாரர்கள் பிறந்தனர்.
அரசன் சிஷ்யரானான்
ஆந்த்ர தேசத்து அரசனான வீர நரஸிம்மராயன்” என்பவர் இவருடைய சிஷ்யனாகி பொன்களையும் பொருள்களையும் கொடுத்தான். இவர் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
திருமலை வாசம்
இவர்திருமலைக்குச் சென்று அங்கு நாள்தோறும் திருவேங்கடமுடையானுக்கு ஆகாச கங்கையிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்து ஏலாலவங்காதி ஸுகந்த த்ரவ்யங்களை சேர்ந்து சமர்ப்பிக்கும் கைங்கர்யத்தை செய்து வந்தார். இப்படிஇருக்கையில் ஒரு நாள் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்த பிறகு, அதில் பரிமள த்ரவ்யங்கள் சேர்ப்பதற்கு முன்னர், பக்தர் ஒருவர் மணவாள மாமுநியின் பெருமைகளைப் பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்த பொழுது அதையே கேட்டுக் கொண்டிருந்து விட்டார். திருமஞ்சனத் தீர்த்தத்தில் பரிமள த்ரவ்யங்களை சேர்ப்பதற்கு தவறி விட்டார். அர்ச்சகர் பரிமள த்ரவ்யங்கள் இல்லாத தீர்த்தத்தை எடுத்து பெரு மாளுக்கு திருமஞ்சனம் செய்து விட்டார். இது தெரிந்து”அண்ணா” மிகுந்த வருத்தத்தில் இருந்தார். ஆனால் திருவேங்கடமுடையான் “இன்று திருமஞ்சன தீர்த்தம் மிகவும் ருசியுடனும் வாசனையுடனும் இருந்தது”’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட அண்ணாவும் மற்றவர்களும் “மணவாள மாமுநியின் ப்ரபாவங்களை கேட்டபொழுது அந்த ப்ரபாவங்கள் திருமஞ்சன தீர்த்தத்தில்
கலந்தது தான் இதற்குகாரணம்” என்று தெரிந்து கொண்டனர். அது முதல் மாமுநியை ஸ்ரீரங்கம் சென்றுஸேவிக்கவேண்டும் என்று அண்ணாவுக்கு ஆவல் ஏற்பட்டது..
அண்ணாவின் சேவை அரங்கத்திற்கு தேவை
இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் மாயாவாதி ஒருவன் மாமுநியுடன் வாதப் போர் செய்ய விரும்பி அவருக்கு செய்தியனுப்பினான். மாமுநி தன்னுடைய சிஷ்யரான வேடலப்பை என்பவரைக் கொண்டு அவனை அடக்கினார். வேடலப்பை ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யமுடி
யாமல் தன் சொந்த ஊருக்குதிரும்பி விட்டார். மாமுநிக்கு வேடலப்பை போன்ற தர்க்க சாஸ்திர வித்வான் தேவைப்பட்டார். இதற்கு எல்லாத் தகுதிகளையும் உடையவர் ‘ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” தான் என்று தெரிந்து அவரை ஸ்ரீரங்கத்திற்கு வரவழைக்க மாமுநிகள் ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீரங்கத்தில் அண்ணா
அண்ணாவும் திருமலையிலிருந்து காஞ்சீபுரம் வந்து அங்கும் மாமுநிகளின் சிறப்பையும் விருப்பத்தையும்அறிந்து ஸ்ரீரங்கம் வந்தார். மாமுநிகளை ஆச்ரயித்து சிஷ்யரானார். ராமானுஜருக்கு கூரத்தாழ்வான் போலே மாமுநி க்கு “ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” உசாத் துணையாக இருந்தார்.
வெங்கடேச சுப்ரபாதம்
பின்னர் மாமுநி திருமலைக்கு எழுந்தருளினார். “அண்ணாவும் உடன் சென்றார். மாமுநி “அண்ணா”வைக் கொண்டு திருவேங்கடவனுக்கு சுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி மங்களா சாஸநம் இவைகளை அருளிச் செய்யும்படி செய்து அவைகளை தினந்தோறும் காலையில் அனுஸத்திக்கும்படி ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாடு இன்று வரை தொடர்ந்து வருகிறது.
ஸ்ரீபாஷ்ய சக்ரவர்த்தி
மாமுநிகள் ஸ்ரீரங்கம் திரும்பிய பிறகு அங்கே கந்தாடையண்ணன் முதலிய சிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதிக்கும்படி செய்து “அண்ணாவை” ஸ்ரீபாஷ்ய சிம்மாசனத்தில் அபிஷேகம் செய்து “ஸ்ரீ பாஷ்யாசார்யர்” என்ற பட்டம் வழங்கினார்.
திருமலையில் ஒரு வாதப் போர்
வடநாட்டிலிருந்து வந்த ஒரு அத்வைதவாதி ஸ்ரீவைஷ்ணவர்களை வாதப் போருக்கு அழைத்த போது மாமுநி ‘அண்ணாவை” திருமலைக்கு அனுப்பினார். ”அண்ணா” அந்த அத்வைதவாதியை வாதத்தில் வென்று அவனைத் தன் சிஷ்யனாக ஆகச் செய்தார்.மாமுநி திருநாட்டுக்கெழுந்தருளியது மீண்டும் “அண்ணா” ஸ்ரீரங்கம் திரும்பியபின் சில
நாட்களில் மாமுநி திருநாட்டுக்கெழுந்தருளினார். மாமுநி யின் பிரிவைத் தாங்க முடியாமல் ஆறுதலுக்காக இவர் பல திவ்ய தேசங்களுக்கு எழுந்தருளினார். திருநாராயணபுரத்தில் உபய வேதாந்த ப்ரவசனம் செய்தார். பின்னர் காஞ்சீபுரம் எழுந்தருளி அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கு ப்ரதான தர்ஸந நிர்வாகராய் இருந்து காலக்ஷேபங்கள் ஸாதித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் திருமலை வாசம்
“தெழிகுரல் அருவி திருவேங்கடத்தில் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யத்” திருவுள்ளம் பற்றி திருமலை சென்று “பரவஸ்து ஸ்ரீனிவாஸாசார்யர்” முதலான மகான்களுக்கு சாஸ்த்ரங்களை அதிகரித்துக் கொண்டிருந்தார்.
இயற்றிய நூல்கள்
ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீபாகவதம், சுபலோபநிஷத், அஷ்டஸ்லோகி, யதிராஜவிம்சதி ஆகிய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானமும், வரவரமுநி சதகம், வரவரமுநி சுப்ரபாதம், ராமானுஜ சுப்ரபாதம், ரங்கராஜ சுப்ரபாதம், 108திருப்பதி எம்பெருமான்கள் விஷயமாக சுப்ரபாதம்
ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களம், ஸ்ரீக்ருஷ்ணமங்களம்,ப்ரபத்தி யோக காரிகை, ப்ராசார்ய சப்ததி ரத்ந மாலை,நித்யாராதன விதி, விஜயத்வஜம், ஜீயர் வாழித் திருநாமம், இருபது வார்த்தை, பெரிய ஜீயர் பாதாதி கேசாந்தமாலை, வ்ருத்தி ஸ்தவம் ஆகியவை இவர் இயற்றியநூல்கள்.
திருநாடு எழுந்தருளல்
இவர் 92 ஆண்டுகள்வாழ்ந்து கி.பி. 1453 பங்குனி சுக்ல நவமி புஷ்ய நக்ஷத்ரத்தில் திருநாடு அலங்கரித்தார்.
20வது நூற்றாண்டில் புகழுடன் விளங்கிய “ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமிய இந்த வம்ஸத்தைச் சேர்ந்தவர்.

5. அஷ்டதிக்கஜம் – எறும்பியப்பா வைபவச் சுருக்கம்
தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகிபதாசரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாசார்ய மஹம்ஜே II
இவர் ஸ்ரீவத்ஸ் கோத்ரத்தில் முடும்பை நம்பி வம்சத்தில் ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையிலுள்ள எறும்பி என்னும் ஊரில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் பெயர் – பெரிய சரண்யாசார்யர். ஐயை என்றும் ஸ்ரீரங்கராஜர் என்றும் மேலும் இரண்டு திருநாமங்களும் உண்டு.
எறும்பியப்பாவிற்கு பெற்றோர் இட்ட திருநாமம் தேவராஜர்.

இவருடைய திருவாராதனப் பெருமாள் சக்ரவர்த்தித் திருமகன்.-மாமுநிகளின் பெருமைகளை இவர் தெரிந்திருந்த போதிலும் அவரை ஆச்ரயிக்க இவர் முதலில் விரும்ப
வில்லை. ஒரு சமயம் இவருடைய திருவாராதனப் பெருமாள் கோவிலாழ்வார் கதவு திறக்கப்பட முடியாமல் திருவாராதனம் செய்ய முடியாமல் போனது.
சக்ரவத்த்தித் திருமகன் இவர் கனவில் தோன்றி மணவாள மாமுநிகளை ஆச்ரயிக்கும்படி கட்டளை யிட்டார். கோவில் கந்தாடை அண்ணனும் இவரை மாமுநிகளை ஆச்ரயிக்கும்படி அறிவுறுத்தினார். அதனால் இவர்ஸ்ரீரங்கம் வந்து மாமுநிகளை ஆச்ரயித்தார்.
மணவாள மாமுநிகளிடம் ஈடுபாடு
மாமுநிகளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் விஷயமாக பூர்வதிநசரி, உத்தர திநசரி, ஸ்ரீபைலேசாஷ்டகம், வரவரமுநி சதகம் என்ற க்ரந்தங்கள் எழுதி யுள்ளார். மணவாள மாமுநிகள் அருளிச் செய்த உபதேசரத்ந மாலையின் கடைசியில் சொல்லப்படும் “மன்னுயிர்
காளிங்கே” என்னும் பாசுரம் இவர் இயற்றியது.-இவர் மேலும் 10 க்ரந்தங்களை இயற்றியுள்ளார்.

6. அஷ்டதிக்கஜம் – அப்பிள்ளார் வைபவச் சுருக்கம்
இவருடைய இயற்பெயர் ராமானுஜன்.-இவர் “சம்ப்ரதாய சந்த்ரிகை” என்னும் தமிழ்ப்
பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார். இது 11 பாசுரங்களைக் கொண்டது. இவை மணவாள மாமுநியைப் பற்றிய முக்கியச் செய்திகள் ஆண்டுகள் இவைகளைத் தெரிவிக்கிறது.
கோவில் கந்தாடையண்ணன் மணவாள மாமுநியை ஆச்ரயித்த பின்னர் அவருடைய பெருமைகளை தெரிந்து கொண்டு இவரும் மாமுநியை ஆச்ரயித்தார். “அந்திமோ பாய நிஷ்டை’யின் எல்லை நிலம் என்று சொல்லுமளவுக்கு மாமுநியிடம் பக்தி கொண்டு அவரையே இறைவனாகக் கருதி வாழ்ந்து வந்தார்.
இவருடைய மரபில் தோன்றியவர்கள் இன்றும் காட்டு மன்னார் கோவிலில் முதல் தீர்த்த மரியாதை களைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந்நாதமுனி சன்னிதியில் கைங்கர்யம் செய்து வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் பல்லவராயன் மடத்திலுள்ள (மணவாளமாமுநி சந்நிதி) மாமுநிகள் விக்ரகம், மாமுநிகள் உபயோகித்த திருக்கைச் செம்பைக் கொண்டு உருக்கி, இவரால் செய்யப்பட்டு திருவாராதனம் செய்யப்பட்டுவந்தது.

7. அஷ்டதிக்கஜம் – அப்பிள்ளை வைபவச் சுருக்கம்
இவருடைய இயற்பெயர் ப்ரணதார்த்திஹரர்”.-இவர்கோவில் கந்தாடையண்ணன்மூலம் மணவாள மாமுநிகளின் பெருமைகளை அறிந்து அவரை ஆச்ரயித்தார்.-இவர் 5 திருவந்தாதிகளுக்கும் யதிராஜ விம்சதிக்கும் உரை எழுதியுள்ளார்.
பத்து ஆழ்வார்கள், ஆண்டாள், மதுரகவி ஆகியோருக்கு வாழித் திருநாமங்கள் எழுதியுள்ளார். மேலும் 3பாடல்கள் சேர்த்து மொத்தம் 15 பாடல்கள் எழுதியுள்ளார்.
மணவாள மாமுநிகள் பற்றிய “செய்ய தாமரைத்தாளிணை வாழியே” என்று தொடங்கும் வாழித் திருநாமம் இவரால் அருளிச் செய்யப்பட்டது என்று சிலர் கருத்து.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு -ஸ்ரீ திருவாய்மொழி அவதாரிகை”– பாகம்-15-

July 30, 2025
முதற்பத்தில்‌ முதற்பதிகம்‌--உயர்வறவுயர்‌ நலம்‌ -இதில்‌, மஹோபகாரங்களைத்‌ தமக்குச்‌ செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத்‌ தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்‌! 
புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான்‌ நிர்க்‌ குணனல்லன்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகன்‌ என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார்‌. இதனால்‌, எம்பெருமான்‌ தனது திருக்கல்யாண குணங்களைக்‌ காட்டி இவ்வாழ்‌வாரை ஈடுபடுத்திக்‌ கொண்டமை விளங்கும்‌,
குணங்களுக்குத்‌ தோற்று அடிமைப்படுதல்‌ என்றும்‌ ஸ்வரூப மாகவே அடிமைப் பட்டிருத்தல்‌ என்றும்‌ இருவகைப்பட்டுள்ள தான அடிமையில்‌ குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும்‌ ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும்‌, ஆழ்வார்‌ தம்மை எம்பெருமான்‌ அகப்படுத்திக்‌ கொண்டது திருக்குணங்களைக்‌ கொண்டாதலால்‌. தாம்‌ இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும்‌ ஆழ்வார்க்குக்‌ குறைவற்ற தென்னுமிடம்‌ “ஆகிலுங்‌ சொடியவென்னெஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே என்ற
பாசுரத்தால்‌ வெளியிடப்படுகின்றமை
காண்க, மற்றும்‌ எம்பெருமானுடைய பரத்துவத்துக்கேற்ற பல தன்மைகளையும்‌, சரிதைகளையும்‌ அருளிச்‌ செய்து தலைக்கட்டுகிறார்‌ இப்பதிகத்தை. ஆகவே இப்பதிகம்‌ எம்பெருமானுடைய பரத்துவத்தை வெளியிடுவதாகும்‌,
முதற்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌--வீடுமின்‌ முற்றவும்‌ -ஆழ்வார்‌ தாம்‌ அநுபவிக்கும்‌ பகவத் விஷயம்‌ தனியே அநுபவிக்கக்கூடிய தல்லாமையாலே *மச்சித்தா மத்கதப்ராணா : போதயந்த : பரஸ்பரம்‌* என்று கீதாசார்யன்‌ பணித்தபடியே பிறரோடு உசாவியே போதுபோக்கித்‌ தரிக்க வேண்டியவரான தாம்‌ அப்படிப்பட்ட அதிகாரிகளைப்‌ பெறுதற்காக நாற்புறமும்‌ கண்வைத்துப்‌ பார்த்தார்‌; எல்லாரும்‌ஸம்ஸாரிகளாயிருந்தனர்‌ தாம்‌ பகவத்‌ விஷயத்திலே ஊன்றியிருக்கிரிப்போலே அவர்கள்‌ விஷயாந்தரங்களிலே ஊன்‌றியிருக்கக்‌ கண்டார்‌ ஆழ்வார்‌, அன்னவர்களுடைய அர்த்தத்தைத்‌ தவிர்க்காமல்‌ நிற்கமாட்டிற்றிலர்‌. -அவர்களை எப்படி. மீட்கலாமென்று பார்த்தார்‌. “இவர்களோ சேதநராயிருந்தார்கள்‌ ; விஷயாந்தரங்களிலே வாசியறிந்து தீயவற்றைக்‌ கழித்து நல்லவற்றைக்‌ கைக்கொள்பவராயிரா நின்றார்‌கள்‌ ; காய்கறி முதலானவற்றிலும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லவற்றைப்‌ பரிக்ரஹிக்கவும்‌ தீயவற்றைப்‌ பரிஹரிக்கவும்‌ வல்லவரான இவர்கள்‌ இன்னமும்‌ சிறிது ஆராய்ச்சியைச்‌ செலுத்த மாட்டாதே யிராறின்றார்கள்‌ ; பகவத்‌ விஷயத்தின்‌ நன்மையையும்‌ விஷயாந்தரங்களின்‌ தீமையையும்‌ நாம்‌ எடுத்துக்‌ காட்டினால்‌ உண்மையை ஆராய்ந்து பார்த்து ஹேய விஷயங்களை விட்டு உபாதேய விஷயத்தைப்‌ பற்றக்‌ கூடுமே; ஆதலால்‌ அதை உபதேசித்துப்‌ பார்ப்போம்‌ '' என்று திருவுள்ளம்‌ பற்றி, எம்பெருமானுடைய நன்மையையும்‌, ஸம்ஸாரிகள்‌ பற்றிக்‌ கிடக்கிற விஷயாந்தரங்களின்‌ அற்பத்தன்மை, அஸ்த்ரத் தன்மை முதலிய வற்றையும்‌ அருளிச்‌ செய்யா நின்று கொண்டு விஷயாந்தரங்களில்‌ நசையற்று பகவத்‌ பக்தியைப்‌ பண்ணுங்கோளென்று உபதேசிக்க இழிகிறார்‌. 
முதற்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌--பத்துடையடியவர்‌ -முதற்றிருவாய்‌ மொழியில்‌ எம்பெருமானுடைய பரத்துவத்தைப்‌ பேசினார்‌. அங்ஙனம்‌ பரனான அப்பெருமானைப்‌ பஜியுங்கோளென்று இரண்டாந்‌ திருவாய்‌ மொழியில்‌ உபதேச ரூபமாக அருளிச்‌ செய்‌தார்‌. அங்ஙனம்‌ உபதேசித்த ஆழ்வாரை நோக்கி ஸம்ஸாரிகள்‌ “ஸ்வாமிந்‌! பஜியுங்கோள்‌, பஜியுங்கோள்‌ என்று பலகாலும்‌ அருளிச்‌ செய்கின்‌றீர்‌ ; இருகை முடவனை நோக்கி *ஆனையேறு, ஆனையேறு என்றால்‌ அவனால்‌ ஏறப்போமோ? அப்படியே, ஸர்வேச்வரனாய்‌. **நாகணை மிசை நம்பரர்‌ செல்வர்‌ பெரியர்‌!” என்னும்படி மிகப்‌.பெரியனாயிருக்கின்ற அவனை நீசரான ஸம்ஸாரிகளாலே பற்றப்‌ போமோ? என்ன, அவ்வானை தானே அவ் விருகை முடவனுக்கும்‌ ஏறலாம்படி படிந்து கொடுக்குங்கால்‌ ஏறத்‌ தட்டில்லையன்றோ | அப்படியே ஸம்ஸாரிகளுக்குப்‌ பஜிக்கலாம்படி அவன்‌ தன்னைத்‌ தாழவிட்டு எளியனாமாகில்‌ பஜிக்கத்‌ தட்டில்லையே," யென்கிறார்‌. எம்பெருமானுடைய: பரத்வத்தை எவ்வளவும்‌ பேசலாம்‌; எளிமையைப்‌ பேசுவதென்பது அரிது; அப்படிப்பட்ட பெரியவன்‌ இப்படித்‌ தாழ நின்றானே !' என்று *உள்ளெலாமுருகிக்‌ குரல்‌ தழுத்தொழிந்து உடம்பெலாங்‌ கண்ண நீர்‌ சோரப்‌ பேசவேண்டிய விஷயமாகையாலே தெளிந்திருந்து பேசப்போகாதே! ஆழ்வாரை ஆறு மாதம்‌ மோஹிக்கப்‌ பண்ணின விஷயமாயிற்று இது. 
முதற்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌--அஞ்சிறைய -எம்பெருமானை அநுபவித்தல்‌ பலவகைப்பட்டிருக்கும்‌; அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லியநுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி யநுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அநுபவித்தல்‌, அவனுகக்தருளின திவ்யதேசங்களின்‌ வளங்களைப்‌ பேசியநுபவித்தல்‌, அங்கே அபிமானமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசியநுபவித்தல்‌, -- என்‌ இப்படி பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதநுபவம்‌, இவ்வகைகளில்‌ பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது - ஆழ்வார்‌ தாமான தன்மையை விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்‌ கொண்டு வேற்று வாயாலே பேசியநுபவித்தல்‌. இப்படி அதுபவிக்‌குந் திறத்தில்‌, தாய்பாசுரம்‌, தோழி பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு, அப்போது ஆழ்வாருக்குப்‌. “பராங்குசர்‌' என்ற ஆண்மைப்‌ பெயர்‌ நீங்கி. *பராங்குசநாயகி' என்று பெண்மைப்‌ பெயர்‌ வழங்கப்பட்டு வரும்‌, தாய் சொல்வது போலவும்‌, தலைமகள்‌ சொல்வது போலவும்‌, தோழி சொல்வது போலவும்‌ பாசுரங்கள்‌ வெளி வந்தாலும்‌ பாசுரம்‌ பேசுகிறவர்‌ ஆழ்‌வாரே யாவர்‌, ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப்‌ பெருகினாலும்‌ அவற்றுக்குப்‌ பிரதானமான பெயர்‌ ஒன்றேயா யிருக்குமா போலே, இம்மூன்று. நிலைமைகளாகச்‌ சொல்மாலை வழிந்து புறப்பட்டாலும்‌ “அமர்‌ பொழில்‌ வளங்குருகூர்ச்‌ சடகோபன்‌ குற்றேவல்கள்‌"' என்று ஆழ்வார்‌ பாசுரமாகவே தலைக்கட்டும்‌. ஆழ்வார்‌ தரமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீ பாவனையை ஏறிட்டுக்‌ கொள்ளுதல்‌ ஏதுக்காக வென்னில்‌ ஆழ்வார்‌ தாமாக, ஏறிட்டுக்‌ கொள்கிறாரல்லர்‌; அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது. புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்‌மைக்கு முன்‌ உலகமடங்கப்‌ பெண்‌ தன்மையதா யிருக்கையாலும்‌, ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமே யின்‌றிப்‌ பாரதந்திரியமே. வடிவாயிருக்கையாலும்‌ இவ்வகைகளுக்கேற்ப ஸ்த்ரீ பாவனை வந்தேறியன்று என்றே கொள்ளலாம்‌. நாயகி பாசுரமாகச்‌ செல்லுகிற இத்திருவாய்‌ மொழியில்‌ சில பறவைகள்‌ தூது விடப்படுகின்றன. அப்பறவைகள்‌ ஞானமும்‌ அனுட்டானமும்‌ நிரம்பிய ஆசாரியர்கள்‌ என்பதை வியாக்கியானங்‌களில்‌ விளங்கக்‌ காண்க. 

முதற்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌--வளவேழுலகு -ஆழ்வார்‌ ஒவ்வொரு திருவாய்‌ மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஒவ்வொரு குணத்தை வெளியிட்டுக்‌ கொண்டு வருகின்றாரன்றோ. -முதல்‌ திருவாய்மொழியில்‌ பரத்துவத்தைப்‌ பேசினார்‌. இரண்டாம்‌ திருவாய்மொழியில்‌ பஜநீயத்வத்தையருளிச்‌ செய்தார்‌. மூன்றாந்‌
திருவாய்மொழியில்‌ ஸெளலப்யத்தை வெளியிட்டார்‌. கீழத் திருவாய்மொழியில்‌ அபராத ஸஹத்வத்தை ஆவிஷ்கரித்தார்‌. இத் திருவாய்மொழியில்‌ சீல குணத்தை விளக்கி யருளுகிறார்‌. எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களெல்லாவற்றினுள்ளும்‌ சீலகுணமென்பது மிகச்‌ சிறக்கும்‌, பராத்பரனான தான்‌: -நம் போல்வாருடைய அற்பத்தனத்தைச்‌ சிறிதுங்‌ கணிசியாது -தன்னைத்‌ தாழவிட்டுக்கொண்டு நம்மோடு புரையறக்‌ கலந்து, பழகுந்தன்மையே சீலமெனப்படும்‌, இது ஸெளசீல்யமென்றும்‌
வழங்கப்பெறும்‌. “'மஹதோ மந்தைஸ்ஸஹ நீரந்த்ரேண ஸம்ச்லேஷ: ஸெளசீல்யம்‌' என வடமொழியாளர்‌ இக்குணத்திற்கு லக்ஷ்ணாங்‌கூறுவர்‌. மஹானாயிருப்பவன்‌ மந்தர்களோடு நெருங்கிப்‌ பழகுவதே சீலம்‌ என்றவாறு. அத்திருக்குணம்‌ இப்பதிகத்தில்‌ தம்முடைய அனுபவ முகத்தாலே விவரிக்கப்படுகிறது.

முதற்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌--பரிவதிலீசனை ஒவ்வொரு திருவாய்மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஒவ்‌வொரு திருக்குணத்தை அநுபவித்து வெளியிட்டுவருகிற முறைமையில்‌, இத்திருவாய்‌ மொழியில்‌ “ஆராதனைக்கெளியன்‌' என்கிற ஒரு திருக்குணத்தை வெளியிட்டருள்கிறார்‌. இக்குணம்‌ வடமொழியில்‌ “ஸ்வாராதத்வம்‌' எனப்படும்‌, சிரமமின்றி எளிதாகவே ஆராதிக்க உரியனாயிருக்குந் தன்மை என்றவாறு. இதர தெய்வங்களிற் காட்டில்‌ எம்பெருமான்‌ எத்தனையோ விதங்களால்‌ நெடு வாசி பெற்றிருப்பது போலே இவ் வகையாலும்‌ நெடு வாசி பெற்றிருப்பன்‌-“ஆடு பலிகொடு, கோழி பலிகொடு' என்று அருந் தேவைகளை யிட்டு மஹா பரிச்ரம ஸாத்யங்களான ஆராதனைகளை அபேக்ஷித்‌திருக்கும்‌ தேவதாந்தரங்கள்‌; எம்பெருமான் படியோ அப்படியன்‌று; -நாம்‌ இட்டது கொண்டு த்ருப்தி யடைவதே அவனது ஸ்வரூபம்‌, என்பது சாஸ்த்ரங்களில்‌ தேர்ந்த விஷயம்‌. அதுவே இத்திருவாய்‌மொழிக்கு ப்ரமேயம்‌.
முதற்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--பிறவித் துயரற -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ எம்பெருமான்‌ ஆராதனைக்கு அரியனல்லன்‌, மிகவும்‌ எளியன்‌ என்பதை அருளிச்‌ செய்தார்‌, ஆராதனம்‌ எளிதாயிருந்தாலும்‌ ஆச்ரயணம்‌ இனிதாயிருந்‌தா லன்றோே நெஞ்சு பொருந்தும்‌; உலகில்‌ பல பேர்கள்‌ நரம்‌ இட்டது கொண்டு பரம திருப்தி யடையுமவர்களாய்‌ ஆராதனைக்கு எளியரா யிருக்கக் கூடும்‌; இருந்தாலும்‌ அவர்களுடைய ஆச்ரயணம்‌ நமக்கு இனிமை மிக்கதாயிருந்தா லன்‌றிப்‌ பயனில்லை யன்றோ : அப்படியே எம்பெருமானும்‌ ஆராதிக்க எளியனானாலும்‌ ஆச்ரயணத்தில்‌ ஸாரஸ்ய முடையனாயிருக்க வேண்டுவதொன்று உண்டாதலால்‌ அஃது அப்படியே உண்டென்பதை இத்திருவாய்மொழியிலருளிச்‌ செய்கிறார்‌. பகவத்‌ ஸமாச்ரயணமாகிறது தான்‌ இதுக்கு இட்டுப்‌ பிறவாத ஸர்வேச்வரனும்‌ ஆசைப்படும்படி போக ரூபமாயிருப்பதொன்றிறே” என்பது நம்பிள்ளை யருளிச் செயல்‌. தன்‌னுடைய வைலக்ஷண்யத்தை எம்பெருமான்‌ தானும்‌ பார்த்துத்‌ தனக்குத் தானே அடிமை செய்து கொள்ள விரும்பும்படியாயிருக்கு மென்று ஒரு அதிசயோக்தியாக இது அருளிச்‌ செய்தபடி. “இப்படியும்‌ இருக்குமா ? எம்பெருமான்‌ அவ்வளவு உன்மத்தனா?” என்று சிலர்‌ நினைத்துவிடக்கூடும்‌ ; “எம்பெருமானுடைய இனிமை ஒப்புயர்‌ வற்றது' என்று காட்டுவதில்‌ மட்டுமே இந்த ஸ்ரீஸூக்தி நோக்குடையதென்று கொள்க. 
முதற்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌--ஒடும்புள்ளேறி -ஒவ்வொரு திருவாய்மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஒவ்வொரு குணத்தை அநுபவித்துப்‌ பேசிவருகின்ற * ஆழ்வார்‌; 
கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ அவனது இனிமைக்குணமென்கிற பரம போக்யதையை அநுபவித்துப்‌ பேசினார்‌; இத்திருவாய்மொழியில்‌ அவனது ஆர்‌ஜவ குணத்தை அநுபவித்துப்‌ பேசுகிறார்‌. ஆர்ஜவமாவது- ௬ுஜுவாயிருக்குந்தன்மை. மனத்தி
லுள்ளது ஒன்றும்‌, வாயாற்சொல்லுவது வேறொன்றும்‌, காரியத்தில்‌ நடத்துவது பிறிதொன்றுமாயிருக்கை யன்றியே மன மொழி மெய்கள்‌ மூன்றும்‌ ஒருபடிப்பட்டிருத்தல்‌ ஆர்ஜவமெனப்‌படும்‌. இதற்குத்‌ தமிழில்‌ செம்மை. என்று பெயர்‌, இக்குணம்‌ இத்திருவாய்மொழியில்‌ அநுபவிக்கப்படுகிறது. ஸம்ஸாரிகள்‌, நினைவும்‌ சொல்லும்‌ செயலும்‌ ஒருபடிப்பட்டிராமல்‌ பல வகைப்‌ பட்டிருத்தலால்‌, அன்னவர்களோடு எம்பெருமான்‌ தான்‌ பரிமாறுமிடத்தில்‌ அவர்கள்‌ போனவழியே தனக்கு வழியாம்படித்‌ தான்‌ அவர்கட்குச்‌ செவ்வியனாய்ப்‌ பரிமாறுகை இங்குச்‌ செம்மை எனப்‌ படுகின்றது,
முதற்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌-இவையுமவையும்‌ -எம்பெருமானிடத்தில்‌ [ஸாத்ம்ய போக ப்ரதத்வம்‌] என்றொரு குணமுண்டு ; அதாவது, அடியார்‌களுக்குத்‌ தன்னை அநுபவிப்பிக்குமிடத்தில்‌ ஏககாலத்திலேயே பூர்ணாநுபவங்‌ கொடுத்‌துவிடுகையன்றியே பொறுக்கப்‌ பொறுக்கச்‌ சிறிது சிறியதாகக்‌ கொடுத்தலாம்‌, அங்ஙனங்‌ கொடாமல்‌ ஒரடியிலேயே பூர்ணாநுபவத்தைத்‌ தற்தருளினால்‌ அது தாங்கமுடியாதே போகும்‌, சிறு குழந்தைகட்கு. முதல்தன்னிலேயே சோறும்‌ சாறும்‌ கறியுமிடுவாரில்லையே ; பால்‌, கஞ்சி, சோறு என்று வரிசைக் கிரமமாக ஊட்டுகை யன்றோ வுள்ளது: அது போலவே மாணாக்கர்களுக்கும்‌ சிறு சிறு பாடங்‌களாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு போய்ப்‌ பெரும்‌ பாடங்கள்‌ கற்பிக்கும்‌ முறை காணா நின்றோம்‌. இங்ஙனமே எம்பெருமானும்‌ பொறுக்கப்‌ பொறுக்கப்‌ பரிமாறும் வகை யொன்றுண்டு: அஃது இத்திருவாய்‌ மொழியில்‌ விளங்கும்‌. அதாவது, ஆழ்வாருடைய திருமுடியிலே வந்து வீற்றிருக்க வேணுமென நினைத்த எம்பெருமான்‌ முதலடியிலே அது செய்தால்‌, நிதிகண்ட ஜன்ம தரித்ரன்‌ போலே ஸந்தோஷாதிசயம்‌ தாங்க மாட்டமே தளர்ற்திடுவர்‌ ; ஆதலால்‌, சற்றுப்‌ பக்கத்திலே நின்று, அருகே நின்று, கூட நின்று, ஒக்கலையிலே. வந்திருந்து, ஹ்ருதய ப்ரதேசத்திலே வந்திருந்து, தோளிலே வந்திருந்து, நாவிலே வந்து புகுந்து, கண்ணுள்ளே நின்று, நெற்றியிலே நின்று பிறகு உச்சியிலே நின்றான்‌ ; ஆக விங்ஙனே பொறுக்கச்‌ பொறுக்கக்‌ செய்த செயலை யநுபவித்து ஈடுபடுகிறாராழ்வார்‌ இத் திருவாய்மொழியில்‌,
முதற்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌--பெருமாநீள்படை-எம்பெருமானுடைய அநுக்ரஹம்‌ நிர்ஹேதுகம்‌ என்பது இத்‌ திருவாய்மொழியில்‌ அநுபவித்தருளிச்‌ செய்யப்படுகிறது. கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ எம்பெருமான்‌ தம்மோடே அவயவங்கள்‌ தோறுங்‌ கலந்த கலவியை அருளிச்‌ செய்த ஆழ்வார்‌ அந்தத்‌ கலவியால்‌ தமக்குப்‌ பிறந்த அளவிலாத ஆனந்தத்தை இத்திருவாய்மொழி முகத்தால்‌ வெளியிடுகிறார்‌ என்று இங்ஙனே சில ஆசார்யர்கள்‌ நிர்வஹிப்பதுண்டு. பட்டர்‌ விசேஷித்து நிர்வஹிப்‌பராம்‌--எங்ஙனே யென்னில்‌ ; கீழ்த்‌ திருவாய்‌ மொழியில்‌ “வந்து எனதுச்சி யுளானே” என்றும்‌ “உச்சி யுள்ளேறிற்குந்‌ தேவதேவற்கு?! என்றும்‌ தலைக் கொண்ட அநுபவம்‌ தமக்குக்‌ கிடைத்ததாக ஆழ்வாரருளிச்‌ செய்தார்‌. இனி அவ் வநுபவத்திற் காட்டிலும்‌ ஏற்றமாகச்‌ செய்து. கொடுக்கக் ௯டிய வேறு அநுபவம்‌ என்ன இருக்கிறது ? ஒன்றுமில்லை. அவ்வநுபவம்‌ இடையறாது தொடர்ந்து செல்லுமாறு செய்து கொடுக்க வேண்டுமத்தனையே யுள்ளது. அது எம்பெருமான்‌ திருவுள்ளத்தைப்‌ பொறுத்த விஷயம்‌. அது நிற்க. ஆழ்வார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ தமக்குப்‌ பிறந்த பேற்றை ஆராய்ந்து பார்த்து இப்போது நமக்குக்‌ கிடைத்த பேறோமிகவுங்‌ கனத்திருக்கின்‌றது- இதிற் காட்டிலும்‌ உத்தமமான பேறு வேறொன்‌ றில்லை: இத்தகைய பேறு நமக்கு வந்த வழி என்ன ? என்று விமர்சிக்கத்‌ தொடங்கினார்‌. இப்‌ பேற்றிற்குத்‌ தகுதியா யிருப்பதொரு நன்மை, அதாவது *இதற்குத்‌ தக்க [ஸாதநாநுஷ்டாநம்‌] தம்மிடத்தில்‌ ஒன்றுமில்லை யென்பதைத்‌ தெரிந்து கொண்டார்‌; தம்‌ தலையில்‌ ஏதேனுமிருந்தாலும்‌, அத்வேஷமோ ஆபிமுக்யமோ இருக்குமே யன்‌றி வேறொன்‌றிருப்பதாகக்‌ காணவிடமில்லை, அவை ஸாதனமாக நினைக்க வொண்ணாதவை। இத்‌ தலையிலே பரமபக்தியளவும்‌ பிறந்தாலும்‌ தம்மிடத்திலே ஸாதனமாக மதிக்கலாவதொன்‌றில்லையே, ஆகவே இவ் வனுக்ரஹம்‌ றிர்ஹேதுகம்‌ என்று தலைக்கட்டுகிறார்‌. 
இரண்டாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌ வாயுந்திரையுகளும்‌ ஸம்ஸாரிகள்‌ உலகத்திலுள்ளாரெல்லாரையும்‌ தங்களைப்‌ போலவே உண்டியே உடையே உகற்தோடுபவர்களாக நினைத்தல்‌ போலே ஆழ்வாரும்‌ உலகிலுள்ள ஸகல பதார்த்தங்களும்‌ தம்மைப்‌ போலவே எம்பெருமானைப்‌ பிரிந்த வருத்தத்தினால்‌ நோவு படுகின்‌்றனவாகக்‌ கொண்டு,-நாரை, அன்‌ றில்‌, கடல்‌, காற்று, சந்திரன்‌ முதலிய பதார்த்தங்களை நோக்கி அவற்றுக்குண்டான சில தன்மைகளை இயற்கையாகக்‌ கருதாது பகவத்‌ விச்லேஷ வ்யஸநத்‌தினா லுண்டானவையாகக்‌ கொண்டு அவற்றுக்குமாகத்‌ தாம்‌ அனுசோகிக்கிறார்‌. நாரை முதலியவற்றையும்‌ தம்மியல்வினவாக வெண்ணி ஒவ்வொன்றையும்‌ நோக்கி “நீயும்‌ என்னைப் போலே பகவத்‌ விஷயத்தில்‌ ஆசை வைத்து விருப்பத்தின்படி கிடைக்கப்‌ பெறாமையினாலே நோவுபட்டாயோ ? என்று பேசுகிறபடியாய்ச்‌ செல்லுகின்றது. இத்திருவாய்மொழி. அடியவர்களை இங்ஙனம்‌ பிச்சேறப்‌ பண்ணுமவன்‌ எம்பெருமானென்று இதனால்‌ அவனுடைய உன்மாதாவஹத்வமென்கிற குணம்‌ (பித்தேற்றுகை) சொல்லப்‌ பட்டதாகும்‌
இரண்டாம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌ -திண்ணன்வீடு -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்கு உண்டான நிலைமை லோக விலக்ஷணமாக விருந்தது. பேச்சுக்கு நிலமல்லாத ஆற்றாமையிலே இருந்தார்‌; ஆற்றாமை கரை புரண்டதாகுங்‌ காலத்திலே எம்பெருமான்‌ வந்து முகங்காட்டி ஆச்வஸிப்பித்தல்‌ முறைமையாதலால்‌ அவன்‌ அங்ஙனமே வந்து முகங்காட்டினன்‌1 உடனே அந்த ஆற்றாமை போனவிடந்‌ தெரியாமே போயிற்று. உடனே தேறுதலடைந்த ஆழ்வார்‌, எம்பெருமானுடைய பரத்வம்‌ ஸெளலப்யம்‌ என்கிற இரண்டு குணங்களிலே ஸெளலப்யமானது பேசப்‌ பேச உருகப் பண்ணுமாதலால்‌, “இப்போதுதான்‌ சிறிது தேறுதலடைந்த நாம்‌ அந்த ஸெளலப்ய குணத்தைப்‌ பேசி நெஞ்சழிய வொண்ணாது ; *நெஞ்சால்‌ நினைப்பரிதால்‌ வெண்ணெ யூணென்னு மீனச்சொல்லே *என்கிறபடி யல்லாமல்‌ தரித்து நின்று பேசலாம்‌ படியான பரத்வத்தைப்‌ பற்றிப்‌ பேசுவோம்‌! என்றெண்ணி! அதனைப்‌ பேசுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, *உயர்வறவுயர்றலம்‌ என்கிற முதல்‌ திருவாய்மொழியிலும்‌ பரத்வம்‌ பேசப்பட்டிருந்தாலும்‌ இங்குப்‌ பேசுகிறபடியில்‌ வைலக்ஷண்யமுண்டு. அங்கு ஸ்வாநுபவரூபமாகவே சென்றது; இங்கு உபதேச ரூபமாகவுமுள்ளது. அங்கு அந்வய முகத்தால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது ; இங்கு அந்வய வ்யதிரேகங்களிரண்டினாலும்‌ அருளிச்‌ செய்யப்படுகிறது. [எம்பெருமானே பரத்வமுடையவன்‌ என்று சொல்லுதல்‌ அந்வய முகத்தாலே சொல்லுதல்‌, எம்பெருமானைத்‌ தவிர்த்து மற்றை யோர்க்குப்‌ பரத்வம்‌ அஸம்பாவிதமென்று. நிரூபித்தல்‌ வ்யதிரேக முகத்தாலே சொல்லுதல்‌ அங்குப்‌ பெரும்பாலும்‌ உபஙிஷத்துக்களை அடியொற்றி அருளிச்‌ செய்தார்‌; இங்கு இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அருளிச்‌ செய்கிறார்‌. அங்குப்‌ பரத்வத்திலே பரத்வமருளிச்‌ செய்தார்‌; இங்கு அவதாரத்தில்‌ பரத்வமருளிச்‌ செய்கிறார்‌-என்று இங்ஙனம்‌ பல வாசிகள்‌ காண்க,
இரண்டாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌--ஊனில்‌ வாழுயிரே -இந்த மூன்றாம்‌ திருவாய்மொழியானது இரண்டாம்‌ திருவாய்‌ மொழியாக இருந்திருக்க வேண்டும்‌. முதல்‌ திருவாய்மொழியில்‌ [வாயுந்திரையுகளில்‌] பட்ட ஆர்த்தி தீர எம்பெருமான்‌ வந்து ஸேவை ஸாதித்து ஸம்ச்லேஷ ரஸாநுபவத்தையும்‌ கொடுத்தருள, அந்த ஆனந்தத்தைத்‌ தெரிவிப்பதான இந்தத்‌ திருவாய்மொழி முன்னமே அமைந்திருக்க வேண்டியதாயினும்‌, எம்பெருமானுடைய பரத்வாநுபவம்‌ இடையில்‌ ப்ராஸங்கிகமாக ப்ராப்தமாயிற்று. இப்படிப்பட்ட பராத்பரனன்றோ நம்மோடு இங்ஙனே கலந்தருளினானென்று முந்துறப்‌ பரத்வம்‌ அநுஸந்தான விஷயமானபடியாலே அது சொல்லிற்றாயிற்று கீழ்த்திருவாய்மொழியில்‌. அது பேசியானவாறே *வாயுந்திரையுகளில்‌ ஆர்த்தி தீர வந்து ஸம்ச்லேஷித்ததனா லுண்டான இன்பம்‌ இத்திருவாய்மொழியில்‌ அருளிச்‌ செய்யப்‌ படுகிறது. இந்தப்‌ பேரின்பத்தை யநுபவிப்பதற்கு உசாத் துணை யாவார்‌ இந்நிலத்தில்‌ ஆரேனுமுளரோ? என்று பார்க்கையில்‌ *உண்டியே உடையே உகந்தோடுமிம்‌ மண்டலத்திலே அப்படிப்‌ பட்டாரொருவருங்‌ கிடையாமையாலே எம்பெருமானை நித்யாநுபவம்‌ பண்ணுகிற நித்ய ஸூரிகளின்‌ திரளிலே போய்ப் புகுந்து அவர்‌களோடு ஒரு 'கோவையாக அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிற குறையோடே. இத்திருவாய்மொழி தலைகட்டுகின்‌றது. 
இரண்டாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌- ஆடியாடி -கீழ்த் திருவரய்மொழியில்‌ “பரமன்‌ பவித்திரன்‌ சீர்‌ அடியேன்‌ வாய் மடுத்துப்‌ பருகிக் களித்தேனே” என்று ஆழ்வார் தாம்‌ பரமானமந்தமடைந்ததாக அருளிச்‌ செய்து, அந்த குணாநுபவம்‌ பாகவதர்‌களோடே கூடிப்‌ பெரிய கோஷ்டியாக இருந்து செய்ய வேண்டியதாகையாலே அப்படிப்பட்ட அதிகாரிகள்‌ இந் நிலத்தில்‌ விசேஷமாகக்‌ கிடையாமையாலே திருநாட்டிலே நித்ய ஸூரிகளின்‌ திரளிலே சென்று புகுந்து அநுபவிக்க வேணுமென்று பாரித்து அந்தப்‌ பாரிப்பைக்‌* களிப்புங்‌ கவர்வுமற்று* என்ற பாசுரத்திலே காட்டினார்‌. நினைத்த போதே அந்த நித்ய ஸூரிகளின்‌ திரளிலே போய்ச்‌ சேர்ந்து அநுபவிக்கப்‌ பெறாமையினாலே மிகவும்‌ வருத்தமடைந்‌தார்‌. அந்த வருத்தத்தைத்‌ தம்முடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ எம்பெருமானுக்கு அறிவிக்கிற வகையாக இத்திருவாய்‌ மொழியை அருளிச்‌ செய்கிறார்‌. ஆழ்வார்‌ இப்போது தாமான தன்மையை யிழந்து நாயகீ ஸமாதியிலே நிற்கிறார்‌. பராங்குச நாயகியான இவளுடைய நிலைமையைத்‌ தாய்மார்‌ முதலான அன்பர்கள்‌ பேசுகிற பேச்சாக இத்திருவாய்மொழி அமைந்திருக்‌கின்றது. நாயகீ ஸமாதியாலே அருளிச் செய்த திருவாய்மொழிகள்‌ கீழே இரண்டு சென்றன -- *அஞ்சிறைய மடநாராய்‌ என்பதும்‌ *வாயுந்திரையுகளும்‌ என்பதும்‌, அவை யிரண்டும்‌ நாயகி தானே பேசின பேச்சாக இருக்கின்றன. அஞ்சிறைய மட நாராயில்‌ தானே தூது விட்டாள்‌ ; வாயுந்திரையுகளில்‌--கண்ணாற் கண்ட பொருள்‌களெல்லாம்‌ எம்பெருமானைப்‌ பெறாமையினாவே நோவு படுகின்றனவாகக் கொண்டு அவற்றுக்குமாகத்‌ தான்‌ நோவுபட்டாள்‌, இத்திருவாய்மொழியிலோ வென்னில்‌ அங்ஙனம்‌ தன்‌ வாயினால்‌ பேச மாட்டாதபடி வேற்று வாயாலே பேசக் காண்கையாலே ஆற்றாமை கரை புரண்டமை விளங்குகின்றது. “ஸ்ரீராம க்ருஷ்ணாதிஅவதாரங்களைப் பண்ணி எல்லாருடைய ஆர்த்தியையும்‌ (போக்குவதையே இயல்வாக வுடையீராயிருந்த நீர்‌ உம்மிடத்திலே பெரும் பித்துக்‌ கொண்டிருக்கின்ற இப் பெண்பிள்ளை இப்படி நோவுபடுமாறு பார்த்‌திருத்தல்‌ தகுதியோ? இவள்‌ திறத்திலே நீர்‌ செய்ய நினைத்திருப்பது, என்ன ?” என்று எம்பெருமானை நோக்கித்‌ தாய்‌ கேட்கிற பாசுரமாக இத் திருவாய்மொழியுள்ளது. தாய்ப்‌ பேச்சாக இருந்தாலும்‌ பேசுகிறவர்‌ ஆழ்வாரே யன்றோ ; அவர்‌ ஏன்‌ இப்படிப் பேச வேண்டும்‌? என்று கேட்கலாகாது. வேணுமென்று ஆழ்வார்‌ இங்ஙனே பேசு கின்றாரல்லர்‌; அவருடைய அளவுகடந்த ஆற்றாமை உள்ளிருந்து வெளியே பேசும் போது இவ் வகையான பாசுரங்களாக வடிவு கொண்டதத்தனை. காவிரியாறு பெரு வெள்ளமாகப்‌ பெருகி வரும்‌ போது வெள்ளத்தின்‌ மிகுதியினால்‌ இடையிடையே உடைந்து வேறு சில வாய்க்கால்‌ வழியாகவும்‌ பெருகுவதுண்டு : அவையும்‌ திருக் காவேரித்‌ தீர்த்தமாகவே யிருக்கச்‌ செய்தேயும்‌ முடி கொண்டான்‌ முதலான வேறு சில பெயர்களைப்‌ பெற்று வழங்கா நிற்கக்‌ காண்கிறோம்‌. அதுபோலவே எல்லாம்‌ ஆழ்வார்‌ பாசுரமாகவே யிருக்கச்‌ செய்தேயும்‌ தாய் பாசுரம்‌, தோழி பாசுரம்‌ என்னும்‌ வேற்றுமைகள்‌ விளைகின்‌றன. 
இரண்டாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌--அந்தாமத்‌ தன்பு கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்குண்டான துயரம்‌ முதலையின்‌ வாயிலே யகப்பட்டுத்‌ துடித்த கஜேந்திராழ்வானுடைய துயரத்தோடு ஒப்பிடலாயிருந்தது. அந்த கஜேர்திராழ்வான்‌. “ஆதிமூலமே!” என்று கதறினபோது அக்‌ கூக்குரல்‌ கேட்ட வளவிலே **அதந்த்ரித சமூபதிப்ரஹிதஹஸ்‌ தம்‌ அஸ்வீக்ருதப்ரணீ த மணிபாதுகம்‌ கிமிதி சாகுலாந்த:புரம்‌ அவாஹறநபரிஷ்க்ரியம்‌ பதக ராஜ மாரோஹத: கரிப்ரவரப்ர்ம்ணதே பகவதஸ்த்வராயை நம: [ீரங்ராஜஸ்தவம்‌. ] என்னும்படியாகக்‌ கனவேகத்தோடே மடுவின்‌ கரையிலே அரை குலையத்‌ தலை குலைய ஓடி வந்து காட்சி தந்து தானும்‌ மகிழ்ந்து அவனையும்‌ மகிழ்வித்தவாறு போல, ஆழ்வாருடையவும்‌ “வலங்கொள்‌ புள்ளுயர்த்தாய்‌'? என்ற கூக்குரலைக்‌ கேட்டவுடனே (அந்தோ! நாம்‌ ஜகத்தை நிர்வஹித்தபடி வெகு அழகியதாச்சுது ! நாம்‌ ஆரானோம்‌!? என்று நொந்து, தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள்‌ அலங்காரம்‌ திவ்யாயுதங்கள்‌ சேர்ந்த சேர்த்தி இவை யெல்லாவற்றோடும்‌ வந்து கலவி தந்து அதனாலே அவன்‌ பரம ஸந்துஷ்டனாய்‌ க்ருதக்ருத்யனா யிருக்கிற இருப்பை ஆழ்வார்‌ அநுபவித்து அவ்வநுபவத்தி னாலுண்டான மகிழ்ச்சியின்‌ மிகுதி யினால்‌ இத்திருவாய்மொழியில்‌, தாம் பெற்ற பேற்றைப்‌ பேசி யநுபவிக்கிறார்‌.
இரண்டாம் பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌--வைகுந்தா --ஆடியாடி யென்னுந்‌ 'திருவாய்மொழியில்‌ ஆழ்வார் பட்ட ஆர்த்தி யெல்லாம்‌ தீர எம்பெருமான் வந்து ஸம்ச்லேஷித்தமை, கீழ்த் திருவாய்மொழியில்‌ சொல்லிற்று. அந்த ஸம்ச்லேஷத்தினால்‌ எம்பெருமான்‌ அளவு கடந்த த்ருப்தியை யடைந்தவனாய்‌ *இவ்வாழ்‌வார்க்கு என்னவுதவி செய்வேன்‌ றான்‌ !, இவர்க்கு என்ன கொடுப்‌பேன்‌ என்று தடுமாறி நிற்பவனாய்‌, இவ்வாழ்வார்‌ நைச்சியாநுஸந்தானம்‌ பண்ணி “இப்‌ பரமபுருஷனையா நாம்‌ அணுகுவது ? நம்மால்‌ இவனுக்கு நிறக் கேடு உண்டாகுமே! அஃது உண்டாகலாமோ? நாம்‌ இவனை விட்டு ஒதுங்கி நிற்பதே நன்று? என்று 
நினைத்து, ஒருகால்‌ அகன்று போய்விடுவாராயின்‌, அலப்ய லாபமான இதனை நாம்‌ இழந்து விடுவோமே! இவ்வாழ்வார்க்கும்‌ நமக்கு முண்டான இக் கலவி நித்யமாயிருக்க வேணுமே! என்று அதி சங்கை கொண்டிருக்கையில்‌, அதைத்‌ தெரிந்து கொண்ட ஆழ்வார்‌ பிரானே ! இங்ஙனம்‌ அதிசங்கை கொள்ளவேண்டா ; உன்னை நான்‌ பிடித்த பிடி ஸாமான்யமன்று; இனி ஒரு நாளும்‌
உன்னை நான்‌ விடமாட்டேனாம்படி திடமாகப்‌ பற்றிக்‌ கொண்டேன்‌ காண்‌? என்று கூறி எம்பெருமானைத்‌ தேற்றுகிறார்‌
இத்திருவாய்‌ மொழியில்‌,
இரண்டாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--கேசவன் தமர்‌ --கீழ்த்‌ திருவாய்மொழியில்‌, ““எமர்‌ கீழ் மேலெழு பிறப்பும்‌ விடியா வெந்ரரகத்து என்றுஞ்‌ சேர்தல்‌ மாறினர்‌?” என்று--எம்பெருமான்‌ தம்மிடதது வைத்த காதல்‌ முன்னும்‌ பின்னும்‌ வெள்ளங்கோத்த படியைச்‌ சிறிதளவாக ப்ரஸ்தாபித்தார்‌ ; அந்த மஹோபகாரத்தைப்‌ பெருக்கப்‌ பேச வேணுமென்று ஆழ்வார்க்கு அபிநிவேச முண்டாயிற்று. அஃது இத்திருவாய்மொழிக்கு முக்கியமான ப்ரமேயமாக எடுத்துக்‌ கொள்ளப்படுகிறது. எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களில்‌, இது வொரு மிகச்‌ சிறந்த குணம்‌: அதாவது-- ஒருவனை விஷயீகரிக்கத்‌ திருவுள்ளம்‌ பற்றினால்‌, அந்த விஷயிகாரம்‌ அவ்வொருதனளவிலே நில்லாமல்‌, அவனோடு ஸம்பந்த ஸம்பந்தம்‌ பெற்றாரளவிலும்‌ கொந்தளிக்குமது. இவ்விஷயத்திற்குச்‌ சார்பாக நம்பிள்ளே “மரணாந்தாஙி வைராணி நிர்வ்ருத்தம்‌ ௩: ப்ரயோஜறம்‌, க்ரியதாம்‌ அஸ்ய ஸம்ஸ்காரோ மமாப்யேஷ யதா தவ!” என்கிற ராமாயண ச்லோகத்தை யெடுத்துப்‌ பரம ரஸமாக வியாக்யானித்‌து அருளியுள்ளார்‌. அதன்‌ சாரமாவது: விபீஷணாழ்வானிடத்தில்‌ பெருமாளுக்கு உண்டான அன்பு ராவணனிடத்திலும்‌ பெருகிச்‌ சென்று, “இவனுக்கு நீ ஈமக்‌ கடன்‌ செய்தே யாக வேண்டும்‌' என்று வற்புறுத்தியது. இத்திருவாய்மொழியில்‌ இவ்விஷயம்‌ முக்கியமாகப்‌ பேசப்படுகிறது, அன்றியும்‌ இத்திருவாய்மொழியில்‌ மற்றொரு விசேஷமுண்டு: அதாவது-கேசவன்‌ முதலாகத்‌ தாமோதரனளவாகவுள்ள துவாதச  நாமங்களும்‌ பாட்‌ டுத்தோறும்‌ வரிசைக் கிரமமாகத்‌ தொடுக்கப்பட்டிருக்கின்‌றன வென்பதாம்‌, ஆனது பற்றியே, இப் பதிகம்‌ மாத்திரம்‌, மற்றைப்‌ பதிகங்கள் போல்‌ பதினொரு பாசுரங்கள்‌ கொண்டதன்‌றியே பதின்மூன்று பாசுரங்கள்‌ கொண்டதாயிருக்கின்றது. 
இரண்டாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- அணைவதரவணை மேல்‌ எம்பெருமானுக்குத்‌ தம் பக்கலில்‌ உண்டான வ்யாமோஹம்‌ தம்‌முடைய ஸம்பந்த ஸம்பந்திகளளவிலும்‌ ஏறிப் பாய்ந்து அனைவரையும்‌ விஷயீகரித்த படியைக்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ அருளிச்‌ செய்தார்‌. அவ்வளவிலும்‌ எம்பெருமான்‌ பர்யாப்தி பெறாமல்‌, நித்ய முக்தர்களுடையதான ஐச்வர்யத்தையும்‌ தமக்கும்‌ தம்மைச்‌ சேர்ந்தவர்கட்கும்‌ தருவதாக அவன்‌ முயற்சி கொண்டிருக்கு மிருப்பை ஆழ்வார்‌ கண்டு மிகவுமுகந்து, “நம்மோடுண்டான ஸம்பந்தமே ஹேதுவாக எம்பெருமான்‌ இப்படி விஷயீகரிப்பவனா யிருக்கும் போது ஸம்ஸாரிகள்‌ இழக்கலாமோ? அவர்களுக்கும்‌ நம்மோடே ஒரு ஸம்பந்தத்தை யுண்டாக்கி, அவனுடைய விஷமீகாரத்திற்கு இலக்காக்குவோம்‌' என்று பார்த்து, அந்த ஸம்ஸாரிகளுக்கு உபதேசம்‌ செய்தருள 'இழிகிறார்‌, இத்திருவாய்மொழியில்‌, 
எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை இதில்‌ உபதேசிக்‌கிறதாகச்‌ சில ஆசார்யர்கள்‌ நிர்வஹிப்பர்கள்‌, அவனுடைய மோக்ஷ ப்ரதத்வத்தை உபதேசிக்கிறதாக பட்டர்‌ அருளிச்‌ செய்யும்‌ படி, இந்த நிர்வாஹ பேதத்தில்‌ விசேஷமான வ்யத்யாஸம்‌யாதொன்றுமில்ல; ஸர்வேச்வரனாயிருந்கால்தான்‌ மோஷ ப்ரதனாக முடியும்‌; மோக்ஷ ப்ரதனுக்கே ஸர்வேச்வரத்வம்‌ கூடும்‌, -ஆதலால்‌ இவை யிரண்டும்‌ ஒன்றையொன்று விட்டிராவாகையால்‌, எங்ஙனே நிர்வஹித்தாலும்‌ குறையில்லை, ஆனாலும்‌ “திண்ணன்‌ வீடு* என்கிற திருவாய்மொழியில்‌ ஸர்வேச்வரத்வம்‌ பிரதிபாதிக்‌க்‌ப்பட்டபடியால்‌, இத்திருவாய்மொழியில்‌ பிரதிபாதிக்கப்படுவது,மோக்ஷ ப்ரதத்வமா யிருக்க வடுக்கும்‌-என்று போலும்‌ பட்டர்‌ திருவுள்ளம்‌, **புணைவன்‌ பிறவிக்கடல்‌ நீந்துவார்க்கே”” என்றும்‌ *- வீடு முதலாம்‌?” என்றும்‌ ***நலமந்த மில்லதோர்‌ நாடு புகுவீர்‌”" என்றுமுள்ள ஸ்ரீஸூக்திகளில்‌ அதிக நோக்காக பட்டர்‌ நிர்வஹிக்‌கும்படி யென்று கொள்க.
இரண்டாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌ எம்மாவீட்டு -புருஷார்த்த நிஷ்கர்ஷம்‌ பண்ணுகிற திருவாய்மொழியாமிது -அதாவது, கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ **நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌” இத்யாதிகளாலே ஆழ்வார்‌ திரு நாட்டைப் பற்றி ப்ரஸ்‌தாவஞ்‌ செய்தது கண்ட எம்பெருமான்‌, “இவர்க்கு மோக்ஷத்திலே ருசியாகில்‌ அதை இவர்க்குக்‌ கொடுத்து விடுவோமே! என்று திருவுள்ளம் பற்றி, *ஆழ்வீர்‌! நீர்‌ அபேஷிக்கிற மோக்ஷத்தைக்‌ கொள்ளும்‌' என்று அருளிச்‌ செய்ய, அதுகண்ட ஆழ்வார்‌, “எம்பெருமான்‌ இங்ஙனே 'சொல்லிக்‌ கொடுக்கிற மோக்ஷம்‌ நமக்கு ஏதுக்கு? நம்முடைய அபேஷிக்கிறத்தை நிறைவேற்ற வேணுமென்கிற திருவுள்ளத்தோடே அவன்‌ தந்தருளும்‌ மோக்ஷம்‌ நமக்குப்‌ புருஷார்த்தமாகுமோ? அவன்றன்னுடைய ருசிக்கீடாகக்‌ கொடுத்தருளினால்‌ அது பாங்கேயல்லது நம்முடைய ருசிக்காகக்‌ கொடுக்குமது நமக்கு நரகத்தோடொக்குமத்தனை? என்று திரு வுள்ளம்‌ பற்றி, “பிரானே! நான்‌ முக்தனாகி எல்லையிலின்பம்‌ அநுபவிக்கவுமாம்‌ ; கைவல்யாநுபவத்தைப்‌ பெறவுமாம்‌; ஆத்ம விநாசமே யாகவுமாம்‌ ; நரகாநுபவம்‌ பண்ணவுமாம்‌ ; இவற்றில்‌ எனக்கு ஒரு நிர்ப்பந்தமில்லை ; உன்னுடைய ருசிக்கீடாக வருமதாகில்‌ இவை யித்தனையும்‌ வரவுமாம்‌; எனக்காக வருமதாகில்‌ மோக்ஷமும்‌ வேண்டா ; ஆனபின்பு, தேவரீருடைய ருசிக்கு ஏற்றது எதுவோ, அதுவே எனக்கு ப்ராப்யமாம்படி பண்ணி யருள வேணும்‌,” என்கிறாராயிற்று. “எம்பார்‌ இத்திருவாய்மொழி அருளிச்‌ செய்‌யப் புக்கால்‌, இருந்தவர்களை யார்‌ என்று கேட்டுக்‌ கதவுகளையும்‌ அடைப்பித்து, குஹ்யமாகவாம்‌ அருளிச்‌ செய்வது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி யறிக.  இத்திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயத்திற்கு அதிகாரிகள்‌ துர்லபர்‌ என்று காட்டின படி, 
இரண்டாம்‌ பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌- கிளரொளி -கீழ்த் திருவாய்மொழியில்‌ நிஷ்கர்ஷிக்கப்பட்ட பேற்றைப்‌ பெறுதற்குத்‌ திருமாலிருஞ்‌ சோலை மலையை ஆச்ரயிக்கிறார்‌ என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள்‌ அருளிச்‌ செய்யும்படி,எம்பெருமானார்‌ அதை இன்னமும்‌ இனிமைப்படுத்தி யருளிச்செய்வர்‌. -அதாவது-கீழ்த் திருவாய்மொழியில்‌ “ஒல்லை, ஒல்லை! என்றும்‌ 'காலக்கழிவு செய்யேல்‌! என்றும்‌, பகவத்‌ கைங்கரியத்திலே தமக்குண்டான பதற்றத்தை ஆழ்வார்‌ வெளியிட, அதுகண்ட எம்பெருமான்‌, ஆழ்வார்‌ இப்படிப்‌ பதறுவது இந்த சரீரத்தோடேயே கைங்கரியம்‌ செய்யவேணு மென்கிற விருப்பத்தாலே போலும்‌! என்றெண்ணி, இவர்க்கு நாம்‌ நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான ஸ்தலம்‌ ஏதோவென்று இந் நிலவுலகத்தில்‌ கடாக்ஷித்து வருகையில்‌, *வளரிளம் பொழில்‌ சூழ் மாலிருஞ்சோலையைக்‌ கண்டு, இது சாலவும்‌ பாங்கான இடமாயிரா நின்றது. என்று திருவுள்ளம்‌ பற்றி, அங்கே ஸந்நிதி பண்ணியருளி, “ஆழ்வீர்‌! நாம்‌ உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம்‌ ; நீர்‌ இங்கே வற்து நினைத்தபடி யெல்லாம்‌ பரிமாறி யநுபவிக்கலாம்‌! என்று தெற்குத்‌ 'திருமலையிலே தானிருக்கிற படியைக்‌, காட்டிக் கொடுக்க, ஆழ்வாரும்‌ அதை அநுஸந்தித்து எம்பெருமான்‌. நமக்கு உபேயனானால்‌ அவன்‌ எழுந்தருளியிருக்குமிடமும்‌ நமக்கு உபேயந்தானே; ஆகவே, திருமலையோடு அதனோடு சேர்ந்ததொரு மலையோடு, . திருப்பதியோடு, போம் வழியோடு, போவோமென்கிற அத்யவஸாயத்தோடு வாசியற, எல்லாம்‌ நமக்கு ப்ராப்யமே' என்று கொண்டு அநுபவித்து இனியராகிறார்‌- என்பதாக,  
மூன்றாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌--முடிச்சோதியாய்‌ கீழ்த்‌ திருவாய்மொழியைத்‌ | தலைக் கட்டுமிடத்தில்‌ ஆழ்வார்‌ “பொருளென்‌ றிவ்வுலகம்‌ படைத்தவன்‌. புகழ் மேல்‌ மருளில்‌ வண்‌ குருகூர்‌ வண் சடகோபன்‌”' என்று தம்மைப் பற்றிச்‌ சொல்லிக்‌ கொண்டார்‌ | அஃதாவது எம்பெருமான்‌ விஷயத்தில்‌ தமக்கு அஜ்ஞானம்‌ ஒன்றுமில்லை யென்பதாகச்‌ சொல்லிக்‌ கொண்டார்‌--இப்போது பாசுரம்‌ தொடங்கும் போதே. தமக்கு ஒரு அஜ்ஞானம்‌ உள்ளதென்று காட்டுகிறார்‌. அஜ்ஞானம்‌ நான்கு வகைப்படும்‌ ;ஒரு வஸ்துவைப் பற்றி அடியோடு தெரிந்து கொள்ளாமையும்‌, நிச்சயமாகத்‌ தெரிந்து கொள்ளாமல்‌ ஸந்தேஹமாகத்‌: தெரிந்து கொள்ளுதலும்‌, விபரீதமாகவே நிச்சயித்துத்‌ தெரிந்து கொள்ளுதலும்‌, உள்ளபடி தெரிந்து கொண்டதை மறந்து போதலும்‌--ஆக நால்வகைப்பட்ட அஜ்ஞானங்களுள்‌ ஸந்தேஹ ரூபமான அஜ்‌ஞானம்‌ தமக்குளதென்பதை இங்குக்‌ காட்டிக்‌ கொள்கிறாராழ்வார்‌. கீழே தமக்கு மருள்‌ இல்லை யென்று சொல்லி விட்டு இப்போது மருள்‌ உள்ளதாகச்‌ சொல்லுவது பொருந்துமோ எனின்‌ ; நம் போல்‌வார்க்குக்‌ கருமம்‌ காரணமாக வுண்‌டாகின்‌ற மருள்‌ ஆழ்வார்‌ தமக்கு இல்லை என்றார்‌த்தனை யொழிய, விஷய வைலக்ஷண்யத்தால்‌ வருகிற அஜ்ஞானமும்‌ இல்லை யென்றதன்று,  எம்யெருமானுடைய வடிவழகிலே யீடுபட்டு “பிரானே! உனது முகச் சோதியே முடிச்‌ சோதியாய்‌ மலர்ந்ததுவோ? திருவடியின்‌ சோதியே நீ. நின்ற தாமரையாய்‌ அலர்ந்ததுவோ ?' என்று. கேட்பதற்குறுப்பான ஸந்தேஹம்‌ ஆழ்வார்க்கு விளைந்ததென்றால்‌ இந்த அஜ்ஞானம்‌ புருஷார்த்த கோடியில்‌ சேருவதாகுமன்றோ. ஜ்ஞான . விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம்‌ அடிக்கழஞ்சு பெறும்‌” என்கிற ஸ்ரீவசந பூஷண ஸ்ரீஸூக்தியுங்‌காண்க, நம்முடைய அஜ்ஞானம் போலன்றிக்கே இப்படி மிகவும்‌ விலக்ஷணமான அஜ்ஞானம்‌  ஆழ்வார்களுக்கு உண்டாவதே. அவர்‌களுடைய சிறப்புக்குக்‌ காரணமாக நிற்கும்‌, விலக்ஷண விஷயத்திலே கலக்கங்கொள்ளாதே தெளிந்தே நிற்பர்களாகில்‌ அவர்‌களுக்கொரு ஏற்றமில்லே யாகுமே. கீழ்த்திருவாய்மொழியில்‌ திருமாலிருஞ்சோலைமலையை அனுபவித்த ஆழ்வார்‌ அந்தத்‌ திருமலையில்‌ ஏகதேசமென்னலாம்படியாய்‌, கருபகத்தரு கப்புங்கிளயுமாகப்‌ பணைத்துப்‌ பூத்தாற்போலே நிற்பவரான அழகருடைய வடிவழகை யனுபவித்து, வேதங்களும்‌ வைதிகர்களும்‌ ப்ரஹ்‌ம ருத்ராதி தேவர்களுங்கூட நிலையிட மாட்டாதபடி யிருக்கிற விருப்பை அநுஸந்தித்து இனியராகிறார்‌ இத் திருவாய் மொழியில்‌.
மூன்றாம்பத்தில்‌ இரண்டாம்பதிகம்‌- முந்நீர்‌ ஞாலம் படைத்த --மிக்க தாஹங்கொண்டவன்‌, நல்ல. தீர்த்தம்‌ ஸமீபித்திருக்கச்‌ செய்தே வாய் முடிக் கிடந்தால்‌ . துடிக்குமா போலே, ஆழ்வாரும்‌, தமக்குப்‌ பரம போக்யமான விஷயம்‌ ஸமீபித்ததாய்த்‌ தமக்கு ஆசையும்‌ மிக்கிருக்கச் செய்தே, விஷயத்தின்‌ பெருமையாலே அது தம்மால்‌ அநுபவிக்க அஸாத்யமாகவே, “ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ காரணமாக நம்முடைய கரணங்கள்‌ ஸங்குசிதங்களா யிருக்கையா லன்றோ பகவத்‌ விஷயத்தை நாம்‌ பரிபூர்ணமாக அநுபவிக்க முடியாமல்‌ துவள்கிறோம்‌? என்று கொண்டு வருத்த முற்றவராய்‌, “எம்பெருமான்‌ விசாலமான திருவுள்ளங்‌ கொண்டு செய்தருளின கரண களேபர ப்ரதானமும்‌,  ஜகத்தில்‌ அப்பெருமான்‌ பண்ணின பலபல திருவவதாரங்களும்‌ என்னளவில்‌ பயன்படவில்லையே! நான்‌ ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ கழிந்து எம்பெருமானைப்‌ பெற்று முற்றூட்டாக அநுபவித்து ஆனந்திக்க அவகாசமில்லை யாகிறதே!” என்று நினைந்து நைந்து உள்‌ கரைந்துருகி யிருக்க, அவ்வளவிலே எம்பெருமான்‌, அவதாரங்களுக்குப்‌ பிற்பட்டவர்களும்‌ இழக்க வேண்டாதபடி நான்‌ திருவேங்கட மலையில்‌ நின்‌றருளின படியைக்‌ காட்டி ஆழ்வாரை ஒருவாறு ஸமாதானப்படுத்தத்‌ திருவுள்ளங்‌.கொண்டு, “ஆழ்வீர்‌! நீர்‌ ஏன்‌ துவள்கின்றீர்‌? நம்மைப்‌ பூர்ணமாக அநுபவிக்க முடியாமைக்குக்‌ காரணம்‌ கரண ஸங்கோச மென்று நீர்‌ நினைக்கின்‌றீர் போலும்‌ ; அங்ஙனம்‌ நினைக்க வேண்டா ; கரண ஸங்கோசமில்லாதவர்களான. அமரர்களும்‌ நம்மை அநுபவிக்குமிடத்து, அவர்களும்‌ உம்மைப்‌ போலவே யன்றோ துவள்வது ; விஷயம்‌ அளவிட முடியாததாகையாலே பரிபூர்ணாநுபவம்‌ செய்ய முடியவில்லையே யென்கிற தளர்ச்சி உம்மோடு அமரர்களோடு வாசியற அனைவர்க்கும்‌ பொதுவானதே காணும்‌; அது பற்றி நீர்‌ தளரவேண்டா ; நீர்‌ நினைத்தபடி யெல்லாம்‌ நம்மோடு. பரிமாறலாம்படி நாம்‌ வடக்குத்‌ திருமலையிலே நின்ற நிலையில்‌ கிட்டி யநுபவித்து மகிழ்வீர்‌ என்ன ; ஆழ்வாரும்‌ ஒருவாறு ஸமாதானமடைந்தவராய்‌ இனிமையோடே தலைக்கட்டுகிறார்‌. (பத்தாம்‌ பாட்டில்‌ இனிமை காணத் தக்கது.)  
மூன்றாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌--ஒழிவில்காலம்‌ -“எம்பெருமானே ! உன்னை யநுபவிப்பதற்கு இடையூறான பிரகிருதியைப்‌ போக்கித்தர வேணும்‌' என்று கீழ்த்திருவாய்மொழியில்‌ பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்‌ “ஆழ்வீர்‌ ! 
நம்மோடு பரிமாறுவதற்கு அந்தப்‌ பிரகிருதி உமக்கு இடையூறன்று காணும்‌; அநுகூலமேயாகும்‌. இந்தப்‌ பிரகிருதியோடே கூட உம்மை அடிமைகொள்ள வேணுமென்று விரும்பியன்றோ நாம்‌ திருமலையிலே நிற்கிறது; நீர்‌ இங்கேறப்‌ போந்து அடிமை செய்து வாழலாமே என்று தான்‌ திருவேங்கடமலையில்‌ நின்‌றருளுகிற. படியைக்‌ காட்டி யருளக் கண்டு ஸமாதானமடைந்தவராய்‌ அத்திரு மலையப்பன்‌ திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட வடிமைகளுஞ்‌ செய்ய வேணுமென்று பாரிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌,
மூன்றாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌--புகழு நல்‌-கீழ்த்திருவாய்மொழியில்‌ “*ஓழிவில்‌. காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டு நாம்‌!” என்று எம்பெருமானுக்கு ஸர்வதேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ ஸகலவிதமான கைங்கர்யங்களையும்‌ செய்யப்பெற வேணுமென்று மநோரதங்‌ கொண்ட ஆழ்வாருடைய பாரிப்பைக் கண்ட எம்பெருமான்‌ ஆழ்வார்க்குத்‌. தான்‌ அவர்‌ விருப்பத்தின்படியே செய்வதற்கு அநுகூலமாக எல்லாப்‌ பொருள்களிலும்‌ பிரவேசித்து எங்கும்‌ நிற்கிற நிலையைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. அதுகண்ட ஆழ்வார்‌, பெருங்காற்றில்‌ வீழ்ந்த பழங்களைப்‌ பொறுக்கி யெடுத்துக்‌ கொள்ளக்‌ கருதுமவர்கள்‌ “அந்தப்‌ பழத்தை எடுப்போமா? இந்தப்‌ பழத்தை யெடுப்போமா?' என்று அலமந்து கிடப்பதுபோல்‌ அத்தைச்‌ சொல்லுவேனோ? இத்தைச்‌ சொல்லுவேனோ ? என்று அலமந்து, எங்கும்‌ எல்லா வகைப்‌ பொருளாயும்‌ தோன்றுகின்‌ற. அம்பெருமானுக்கு வாசிகமான கைங்கர்யத்தைச்‌ செய்ய நினைத்து “ஸகல கல்யாண குணங்களுக்கும்‌ கடலான அவ்வெம்பெருமானுடைய தன்மையை யான்‌ என்னவென்று சொல்லுவேன்‌?" என்று நிர்வேதத்துடனே அவனது ஸர்வாத்மத்வத்தைப்‌ பேசுகிறார்‌-
இத்திருவாய்மொழியில்‌

மூன்றாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌--பொய்ம்மாம்‌ பூம்பொழில்‌ -ஆழ்வார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ எம்பெருமானை மிகவும்‌ அற்புதமாக அநுபவித்தார்‌. அந்த அநுபவத்தினால்‌ அபரிமிதமான ஆனந்தத்தை யடைந்தார்‌. திருவுள்ளத்திலுண்டான ஆனந்தம்‌ வடிவிலே தொடை கொண்டது ; அதனால்‌ ஆடுவதும்‌ பாடுவதுமாகத்தாம்‌ ஆயினர்‌; இந்நிலவுலகத்திலே இங்ஙனே பகவத்‌ குணங்களில்‌ ஈடுபட்டுக்‌ களித்துப்‌ பரவச சரீரர்களாக இருப்‌பவர்கள்‌ எத்தனை பேருண்டு? என்று ஆராயத்‌ தொடங்கினர்‌ அன்னவர்‌ மிகச்‌ சிறுபான்மையராய்‌, பகவத்‌ குணங்களில்‌ ஈடுபடாத பாவிகளே பெரும்பான்மையராய்‌ இருப்பதைக்‌ கண்டு திருவுள்ளம்‌ மிக நொந்து, ஈடுபாடுடையாரைக்‌ கொண்டாடியும்‌ அஃது இல்லாதாரை நிந்தீத்தும்‌ செல்லுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, எம்பெருமானுடைய குணாதுபவம்‌ விஞ்சினால்‌, நின்றவிடத்தில்‌ நிற்க முடியாமல்‌ ஆடுவதும்‌ பாடுவதுமான நிலைமை பரவசமாக
உண்டாகியே தீரும்‌. முக்தர்களும்‌ திருநாட்டில்‌ களித்துப்பாடுவர்‌களென்றது. நாரதமுனிவர்‌ முதலானாரும்‌ பகவத்‌ ஸந்நிதியிலே வந்தவாறே ஆடுவது பாடுவதாக நிற்பர்களென்று சொல்லப்‌ பட்டுளது. இதுவன்றோ நம்முடைய கர சரணாதி அவயவங்‌
களுக்குப்‌ பயன்‌, இப் பயன் பெறாத பாவிகளைப்‌ பழிப்பதும்‌ இது பெற்ற பெரியாரைப்‌ புகழ்வதும்‌ பகவதநுபவத்திலே ஒருவகை யாதலால்‌ அவை இத்திருவாய்மொழியிற்‌ செல்லுகின்றன.
மூன்றாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌--செய்யதாமரை -கீழ்த்திருவாய்மொழியில்‌, எம்பெருமானுடைய குணசேஷ்டிதங்களை நினைந்து கரைந்துருகி, நின்‌றவிடத்தில்‌ நிற்கமாட்டாமே நர்த்தனம்‌ முதலியன செய்து இதுவே போதுபோக்காக இருக்கும்‌ மஹான்களைக்‌ கொண்டாடியும்‌, இந்நிலைக்கு மாறாக இருக்கின்றவர்களை நிந்தித்தும்‌ பேசினார்‌. அங்ஙனம்‌ தம்மால்‌ நிந்திக்கப்பட்ட பாபிகளையும்‌ கைவிடமாட்டாத மிக்க கருணை வாய்ந்தவரன்றோ ஆழ்வார்‌. அக்கருணையினாலே அந்தப்‌ பாபிகளையும்‌ வழிப்படுத்துக்‌ கொள்ள வேணுமென்று திருவுள்ளம் பற்றி, அன்னவர்களுடைய கல்றெஞ்சிலும்‌ நன்கு பதியுமாறு எம்பெருமானுடைய சிறந்த திருக்குணங்களை எடுத்துக்கூற விரும்பிய ஆழ்வார்‌. இத்திருவாய்‌ மொழியில்‌ அப்பெருமானது ஸெளலப்ய குணத்தை யெடுத்‌துரைக்கின்றார்‌. 'முதற்பத்தில்‌ *பத்துடையடியவர்க் கெளியவன்‌ என்ற திருவாய்மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஸெளலப்ய குணம்‌ பேசப்பட்டிருற்தாலும்‌ இப்போது இங்குப்‌ பேசும்‌ ஸெளலப்ய குணம்‌ அதனிலும்‌ விலக்ஷணமானது.। அங்குச்‌ சொன்னது விபவாவதார ஸெளலப்யம்‌; இங்குச்‌ சொல்வது அர்ச்சாவதார ஸெளலப்யம்‌ * இந்த வாசியை மணவாளமாமுனிகளும்‌ நூற்றந்தாதியில்‌ விளக்கி யுள்ளார்‌; “பத்துடையோர்க்கென்றும்‌ பரனெளியனாம்‌ பிறப்பால்‌” என்றதையும்‌, **செய்ய பரத்துவமாய்‌... இந்நிலத்தில்‌ அர்ச்சாவதார மெளிதென்றான்‌'” ' என்றதையும்‌' நோக்குக... இப்பதிகத்திற்கு உயிரான பாசுரம்‌ - *தஞ்சமாகிய 'தந்தை தாயொடு” என்பதாம்‌, அர்ச்சாவதார வெளிமையை நிரூபிக்கும்‌ பாசுரம்‌ அதுவேயாம்‌. 
மூன்றாம்‌ பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌. பயிலுஞ்சுடரொளி -கீழ்த்திருவாய்மொழியில்‌ - அர்ச்சாவதார ஸெளலப்யத்தை அருளிச்‌ செய்தவிடத்திலும்‌ நெஞ்சில்‌ ' நிகழ்ச்சி யின்‌றியே விஷய ப்ரவணராயிருக்கின்‌ற ஸம்ஸாரிகளின்‌ இயல்வைக் கண்டு வெறுத்து -அவ்‌ வெறுப்புக்குப்‌ பரிஹாரமாகத்‌ தாம்‌ ஒரு மஹாநந்தத்தை அநுபவிக்க விரும்பி ஸ்வ ஸ்வரூப காஷ்டையான பாகவத சேஷத்‌வத்தை 'அநுஸந்தித்து அம்முகத்தாலே தாம்‌ இனியராகிறார்‌. 
ஒருவன்‌ ஒரு. வஸ்துவினிடத்தில்‌ அன்பு வைத்தால்‌ அவ்வன்பு அளவற்றதுமாயிருந்தால்‌ அஃது அவ்வஸ்துவோடே நின்று விடாமல்‌ அதனோடு ஸம்பந்த ஸம்பந்தம்பெற்ற வஸ்துக்களிலும்‌ பெருகிச்‌ செல்லுமென்பதை அனைவரும்‌ தம்தம்‌ அநுபவத்‌ தாலறிவர்‌. அப்படியே பாகவத்‌ பக்தியென்பது பகவத்‌ பக்தியின்‌ எல்லை. நிலமாக உண்டாமது. பகவத்‌ பக்தியின்‌ உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும்‌: ஸ்வாமியினுடைய பாதுகை களிலே நாம்‌ ஆதரம்‌ வைத்து அவற்றைக்‌ கண்களில்‌ ஒற்றிக்‌ கொள்வதும்‌ தலைமீது அணிந்து கொள்வதும்‌ அலம்பித்‌ தீர்த்தம்‌ பருகுவதும்‌. செய்கிறோம்‌ ; இதனால்‌ ௩மக்கு ஸ்வாமியிடத்திலுள்ள பக்தி அபாரமானது என்பதன்றோ வெளியாகின்‌றது; அதுபோலவே இங்கும்‌. '“அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌. தமக்கடியாரடியார்தம்‌ அடியாரடியோங்களே?? . இத்யாதிகளால்‌ பாகவத - சேஷத்வாதிசயத்தைப்‌. பேசுவதெல்லாம்‌ பகவச்‌ சேஷத்வத்தின்‌ உறைப்பையே பேசின படியாகும்‌-
மூன்றாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- முடியானே, -கீழ்‌ ஆறாந்திருவாய்மொழியான *செய்யதாமரைக்‌ கண்ணனில்‌ “அன்று தேர் கடவிய பெருமான்‌ கனை கழல்‌. காண்பதென்று கொல்‌ கண்களே” என்று பகவத்‌ விஷயத்திலே தமக்கு உண்டான 
விடாயை வெளியிட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான்‌. ஸ்ரீவைஷ்ணவர்களைக்‌ காட்டிக்‌ கொடுத்து. ஒருவாறு ஸமாதானம்‌ பண்ணினபடி -கீழ்த்திருவாய்மொழியில்‌ சொல்லிற்று, அதில்‌ ஸ்ரீவைஷ்ணவர்களை அநுபவித்துப்‌ போந்த ஆழ்வார்‌ அவர்களுகந்த விஷயமான பகவத்‌ விஷயத்தின்‌ சிர்மையையும்‌. பாசுரந்தோறும்‌ முன்னடிகளால்‌ அநுபவித்து. வந்தாராகையாலே. அவ்வநுபவம்‌ பழைய விடாயை அதிகரிக்கச்‌ செய்தது. . “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே!!
என்னும்படி கண்களுக்கு, மாத்திரம்‌. உண்டாகியிருந்த விடாய்‌ மற்றை யிந்திரியங்களெல்லா வற்றுக்குமாயிற்று. அதுதானும்‌ ஒரு விலக்ஷணமான படியிலே யாயிற்று. அதாவது. என்‌ னென்னில்‌; ஒரு. இந்திரியத்தினுடைய வ்ருத்தியை மற்றோர் இந்திரியம்‌ ஆசைப்படும்படியாயும்‌. நேர்ந்து, தம்மிலும்‌ விடாய்த்த கரணங்களும்‌ கரணங்களில்‌. காட்டிலும்‌ விடாய்த்த . தாமுமாய்‌ இப்படியொரு. விலக்ஷணமான நிலைமையைப்‌ பெறும்படியாயிற்று. -பஹுகுடும்பியான .. வொருவன்‌ க்ஷாமகாலத்திலே. . தன்பசிக்கு ஆற்றமாட்டாதே மக்கள்‌. பசிக்கு. ஆற்றமாட்டாதே அவற்றின்‌ வாயில்‌ சோற்றைத்தான்‌ பறித்து உண்பது, தன்‌.வாயில்‌ சோற்றை அவை பறித்துண்பதாய்‌ என்‌ பசிக்கு, என்‌ செய்வேன்‌? என்‌ மக்கள்‌. பசிக்கு என்‌ செய்வேன்‌”... என்னுமாபோலே. தாமும்‌ தம்முடைய. கரணக்ராமமுமாக நோவுபட்டுக்‌. கூப்பிடுகிறபடியை இத்திருவாய்மொழி பேசுகின்றது. இப்பதிகத்தினால்‌ ஆழ்வாருடைய பக்தி பரம விலக்ஷணம்‌ என்பது பெறப்படும்‌,
மூன்றாமபத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌- சொன்னால்‌ விரோதம்‌ -ஆழ்வார்‌ சில ஸமயங்களில்‌ தம்முடைய இழவுக்கு வருந்துவர்‌ ; சில சமயங்களில்‌ ஸம்ஸாரிகளின்‌ இழவுக்கு வருந்துவர்‌. கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ தம்முடைய கிலேசங்களுக்குக்‌ கதறினார்‌ ; இத்திருவாய்மொழியில்‌' ஸம்ஸாரிகளின்‌ கிலேசங்களுக்குக்‌ கதறுகிறார்‌. கவி பாடும்படியான திறமையைப்‌ பெற்று வைத்து அந்தத்‌ திறமையைப்‌ பகவத்‌ விஷயத்திலே செலுத்தாமல்‌ க்ஷுத்ர பலன்களை விரும்பி அற்ப மனிதர்‌ விஷயத்திலே செலுத்தி “நரஸ்துதி செய்பவர்கள்‌” என்று இழிவான டெயரைப் பெற்று உலாவுவாரைக் கண்டு வருந்தி, அவர்களையும்‌ உபதேசத்தாலே . திருத்தி பகவத்‌ விஷயத்தில்‌ கவி பாடுகின்‌றவர்களாக ஆக்கி உய்விப்பான்‌ வேண்டி அவர்களை விளித்து இப்படி நிங்கள்‌ உங்களது வாக்கை நிஹிந விஷயங்களில்‌ உபயோகித்து அதோகதி யடைவது தகுதியன்று ; உயர்வற வுயர்நல முடையவனான எம்பெருமான்‌ விஷயத்திலே உங்கள்‌ கவன சாதுரியத்தைச்‌ செலுத்துவதே நன்று என்று உபதேசித்தருளுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌. உலகத்தில்‌ ஜஞாதாக்களாக இருப்பது அரிது; அது வாய்த்தாலும்‌ கவிபாடும்‌ படியான ஸாமர்த்தியம்‌ பெறுவது மிகவும்‌ அரிது. அந்த ஸாமர்த்தியம்‌ பெற்றவர்கள்‌ வகுத்த விஷயத்தில்‌ தங்கள்‌ வாக்கை 
விநியோகப்படுத்தாமல்‌ க்ஷுத்ர ஈரஸ்துதிகளிலே விநியோகிப்பது மிகவும்‌ அருவருக்கத்தக்கதாகும்‌. வடமொழியில்‌ ப்ரதாப்‌ ருத்ரீயம்‌ என்கிற ஒரு க்ரந்தம்‌ மிகவும்‌ ப்ரஸித்தமானது. இதை இயற்றிய கவியின்‌ பாண்டித்யமும்‌ கவித்திறமும்‌ மிக வியக்கத்தக்கதே. ஆயினும்‌ இந்த க்ரந்தம்‌ எம்பெருமானுடைய குண கீர்த்தனத்தில்‌ அமைந்திருந்தால்‌ அழகிதாயிருக்கும்‌. அங்ஙனன்றியே, அல்ப ப்ரயோஜனத்தைக்‌ கணிசித்து ஒரு க்ஷுத்ர ப்ரபுவை விஷயீகரித்து இந்த நூல்‌ பிறந்ததாதலால்‌ பகவத்‌ பக்தர்கள்‌ ஜுகுப்ஸைப்படும்‌ படியாகவுள்ளது. இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க க்ரந்தங்கள்‌ உலகிற்‌ பலபலவுள்ளன. இத்தகைய நூல்களை இயற்றும்‌ கவிகள்‌ பக்கலில்‌ ஆழ்வாருக்குண்டாகும்‌ சீற்றம்‌ அபாரம்‌. ஆழ்வார்‌, தம்முடைய திருவாக்கு பகவத்‌ விஷயத்திலே உபயோகப்படுகின்‌ற வளவுக்கு உகந்து, மற்றையோர்‌ எக்கேடு கெட்டாலும்‌ அதைப்‌ பற்றிச்‌ சிந்தியாமல்‌ *ஆரானுமாதானுஞ்‌ செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று பெரிய திருவந்தாதியில்‌ தாமே அருளிச்செய்தபடி ஸம்ஸாரிகளைப்‌ பற்றிக்‌ கவலை கொள்‌ளாமல்‌ இருக்கலாம்‌; அப்படியிருக்கும்‌ ப்ரக்ருதியன்‌று ஆம்வாரது, ஆகவே நர ஸ்துதி செய்து கவி பாடும்‌ கவிகளை நோக்கி உபதேசிக்‌கிறார்‌ இப்பதிகத்தில்‌.
மூன்றாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌ சன்மம்‌ பலபல -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌--துதிப்பதற்கு வாய்த்த ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டி தங்களையுடையனான எம்பெருமானைத்‌ துதிப்பது தவிர்ந்து க்ஷுத்ர நர ஸ்துதிகளிலே வாய் செலுத்தித்‌ திரியுமவர்களை உபதேசத்தாலே திருத்தப்‌ பார்த்தும்‌ அவர்கள்‌ திருந்தக் காணாமையாலே, இவர்களைப் போலே நாமும்‌ நர ஸ்துதியிலே யிழிந்து அநர்த்தப்படாதிருக்கப்‌ பெற்றோமே! என்று தம்‌ உகப்போடே தலைக்கட்டினார்‌. அந்தவுகப்பே விசேஷித்துப்‌ பெருகுகிறது இத்திருவாய்மொழியில்‌. நரஸ்துதிகளிலே செல்லப்பெறாத மாத்திரமே யன்றியே எம்பெருமான்‌ விஷயத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்துத்‌ தாம்‌ அநுபவிக்கப்பெற்ற பரிசைப்‌ பரக்கப்பேசி, குறை முட்டு பரிவு இடர்‌ துயர்‌ துன்பம்‌ அல்லல்‌. துக்கம்‌ தளர்வு கேடு ஒன்றும்‌ தமக்கில்லாமையை 'உள்குழைந்து பேசுகிறார்‌. 
நான்காம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌ -ஒருநாயகம்‌ -கீழ்‌ மூன்றாம்பத்தின்‌ முடிந்த திருவாய்மொழி ஆழ்வார்க்கு அளவு கடந்த ஆனந்த மயமாய்ச்‌ சென்றது. தமக்கு. யாதொரு குறையுமில்லை யென்பதைப்‌ பன்னிப்‌ பன்னிப்‌ பகர்ந்தருளினார்‌. 
மற்றுமுள்ள ஸம்ஸாரிகளையும்‌ தம்மைப்‌ போலவே குறையற்ற வர்களாக ஆக்குவதில்‌ மிக்க குதூஹலமுடையரான ஆழ்வார்‌ அவர்களையும்‌ திருத்திப்‌ பணிகொள்ள விரும்பி உபதேசம்‌ செய்யப்‌ புகுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌. ஒவ்வொரு பத்திலும்‌ பரோபதேச ரூபமாக ஒவ்வொரு திருவாய்மொழி அவதரிக்கும்‌. முதற்‌ பத்திலே *வீடுமின்‌ முற்றவும்‌* என்கிற திருவாய்மொழியும்‌, இரண்டாம்‌ பத்தில்‌ *அணைவதரவணைமேல்‌* என்கிற திருவாய்‌ மொழியும்‌, மூன்றாம்பத்தில்‌ *செய்ய தாமரைக்‌ கண்ணன்‌, *சொன்னால்‌ விரோதமிது* என்கிற திருவாய்மொழிகளும்‌ போலே இந்த நான்காம்பத்தில்‌ இத்திருவாய்மொழி உபதேசபரமாய்ச்‌ செல்லா நின்றது. *சொன்னால்‌ விரோதத்தில்‌ அற்பர்களான மனிதர்களைத்‌ துதிப்பது பெருங்கேடு என்று உபதேசித்தார்‌. உலகில்‌ பலர்‌ நர ஸ்துதி செய்யப் புகுவது சில பிரயோஜனங்களுக்காகவாதலால்‌ அந்த ப்ரயோஜனங்கள்‌ அற்பமாயும்‌ அஸ்திரமாயுமிருக்கும்படியை நன்கு எடுத்துக் காட்டவே அவிவேகிகளும்‌ உணர்ந்து திருந்தக்‌ கூடும்‌ என்று பார்த்து, பகவத்‌ ப்ராப்தி தவிர மற்ற ப்ரயோஜனங்கள்‌ யாவும்‌ அல்பத்வம்‌ அஸ்திரத்வம்‌ முதலிய தோஷங்‌களினால்‌ துஷ்டங்களா யிருக்குமாற்றை விரித்‌துரைக்கின்றார்‌ இத்‌ திருவாய்மொழியில்‌.
 நான்காம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌ --பாலனாய்‌ --கீழ்‌ முன்றாம்பத்தில்‌ *முடியானே  திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்கு உண்டான அவஸ்தை ப்ராஸங்கிகமான மூன்று திருவாய்மொழிகளாலே. ஒருவாறு தலை மடிந்து கிடந்தது. இப்‌போது அது தலையெடுத்து நிற்கின்றது. ஸ்ரீவிபீஷணாழ்வான்‌ ராவணனுக்குச்‌ சொன்ன ஹிதம்‌ அவனுக்கு. உபயோகப்படாமல்‌ தனக்குப்‌ பெருமாளைப்‌ பற்றுகைக்கு்‌ உறுப்பானாப் போலவும்‌, ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான்‌ இரணியனுக்குச்‌ சொன்ன ஹிதம்‌ அவனது நெஞ்சிற் படாதே தனக்கு பகவத்‌ பக்தி மிகுதற்கு உறுப்பானாப்‌ போலவும்‌ ஆழ்வார்‌ செய்தருளும்‌  பரோபதேசங்கள்‌ பிறர்க்கு. உறுப்பன்றிக்கே தமக்கு எம்பெருமான்‌ பக்கலிலே அபிநிவேசம்‌ மீதூர்ந்து செல்வதற்கே. ஹேதுவாயிற்று. ஆகவே என்றைக்கோ கழிந்துபோன  எம்பெருமான் படிகளை அக்காலத்திற் போலவே இன்று அனுபவிக்கப் பெற வேணும்‌ என்கிற விடாய்‌ பிறந்தது ; ஆசைப்பட்டபடியே கிடையாமையாலே, எம்பெருமானோடு கலந்து பிரிந்தாளொரு பிராட்டியின்‌. நிலமையை யடைந்து தான்‌ மோஹித்துக்‌ கிடக்க, அவள் படியை அநுஸந்தித்த திருத்தாயார்‌ பெண் பிள்ளையின்‌ நிலைமையைப்‌ பேசுகிற முகத்தாலே தமது தசையை வெளியிடுவதாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி, 

நான்காம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌- -கோவைவாயாள்‌ -கீழ்த் திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ ஆசைப்பட்டபடியே எல்லாம்‌ பெறும்படி. எம்பெருமான்‌ இவரோடே கலந்து, தன்னுடைய பரம ப்ரணயித்வத்தை வெளியிட்டுக்‌ கொண்டான்‌ ; அது கண்டு மிகவும்‌ உவந்த ஆழ்வார்‌ அந்த பிரணயித்வ குணத்தை இத்திருவாய்‌மொழியிலே பேசுகிறார்‌. இத்திருவாய்மொழியை நம்‌ பூருவாசாரியர்கள்‌ மூன்றுபடியாக நிர்வஹிப்பர்கள்‌. 1. சந்திரனைப்‌ பிடித்துத்‌ தரவேணுமென்று அழுகின்ற குழந்தைக்குத்‌ தேங்காயைக்‌ கொடுத்து. அழுகையை. மாற்றுவதுண்டே ; அது போல, கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ தேச கால விப்ரக்ருஷ்டங்களைப்‌ பெறவேணு மென்று ஆசைப்பட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான்‌ ஒரு குணாநுபவத்தைப்‌ பண்ணி வைக்க அத்தாலே, கீழ்ப்‌ பிறந்த இழவை யெல்லாம்‌ மறந்து அந்த. குணத்தையே அனுபவிக்கிறார்‌ என்று எம்பார்‌ அருளிச்‌, செய்யும்படி, 2, காலத்தால்‌ தேசத்தால்‌ கை கழிந்தவற்றை யநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வாருடைய திருமுக மண்டலத்தை நோக்கி எம்பெருமான்‌ *ஆழ்வீர்‌ ! நீர்‌ அபேச்ஷித்த படியே செய்யக் கடவோம்‌” என்று ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்டுக்‌ களித்துக்‌ கீழிழவை மறந்து க்ருதார்த்தராகிறார்‌-என்று திருமலைநம்பி அருளிச்‌ செய்யும்படி, 3- எம்பெருமான்‌, ஆழ்வார்‌ அபேக்ஷித்தபடியே செய்து தலைக்கட்ட வல்லவனாகையாலே, (அதாவது) தானிட்ட வழக்காம்படி' கால நிர்வாஹகனாகையாலே, காலோபாதியைக்‌ கழித்து, அதீதகாலத்திற்‌ போகங்களையும்‌ நிகழ்‌ காலத்திற் போலே  ஒரு போகியாக்கிக்‌ கொடுக்க அவற்றை யநுபவித்து மகிழ்கிறார்‌-என்று பட்டர்‌ அருளிச்‌ செய்யும்படி -அபேக்ஷித்த. போகங்களைத்‌ தாராமல்‌ ஏதோவொரு குணத்தை யநுபவிப்பிக்க அதனாலே களித்துப்‌ பேசுகிறாரென்பது, எம்பாருடைய நிர்வாஹம்‌. அபேக்ஷித்த போகங்களைத்‌ தாரா விட்டாலும்‌ தருவதாக மூகம்‌ நோக்கி வாயினாற்‌ சொல்லி மாகிழ்வித்தானெம்‌பெருமான்‌ என்பது, திருமலை நம்பியின்‌ நிர்வாஹம்‌. அபேக்ஷித்த படியே அநுபவிப்பித்தருளினனென்பது, பட்டருடைய நிர்வாஹம்‌. -இங்ஙனே மூன்றுபடியாகவும்‌ நிர்வஹிக்க ஒளசித்யமுண்டு என்று. தெரிவித்தவாறு.  
-----------------------
நான்காம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌-- மண்ணையிருந்துதுழாவி ஆழ்வாருடைய பரம வைஷ்ணவத்வத்தை வெளியிடுவதாயிற்று இத்திருவாய்மொழி. எம்பெருமானுடைய ஸம்பந்தம்‌ பெற்ற பொருள்களையும்‌ எம்பெருமானுக்குப்‌ போலியான பொருள்களையுங்‌ கண்டு. அப்பெருமான்‌ றன்னையே கண்டதாகக்‌ கொண்டு களிதக்‌கையே பரம வைஷ்ணவத்வமாகும்‌; அந்த நிலைமையே ஆழ்வார்க்கு இத்திருவாய்மொழியில்‌ உண்டாயது. கீழ்த் திருவாய்மொழியில்‌ எம்பெருமானுடைய ப்ரணமித்வ குணத்தைப்‌, பேசிப்‌ பரமானந்தம்‌ பொலிய நின்றாராழ்வார்‌ ;அந்த நிலைமையைக்‌ கண்ட எம்பெருமான்‌ அந்த ரஸத்தை. அரையாறுபடுத்தி ஸாத்மிப்‌பிக்கைக்காக அந்த ஸம்ச்லேஷத்தைச்‌  சிறிது, குறைத்து நின்றான்‌- அதனால்‌ ஆழ்வார்க்கு ஆற்றாமை மீதூர்ந்தது. பணமுடிப்பைப்‌ போக்கடித்‌ தானொருவன்‌ அத்தோடு, போலியான முடிப்புகளெல்லாவற்றையும்‌ அவிழ்த்தவிழ்த்துப்‌ பார்க்குமா போலே அவனோடொத்த பதார்த்‌தங்களையும்‌. அவனோடு ஸம்பந்தமுள்ள. பதார்த்தங்களையுமெல்லாம்‌ அவனாகக்‌ கொண்டு ப்ரமித்துக்‌ கிட்டிப்‌ பார்த்துப்‌ பிச்சேறுகிற படியாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி. இது தாய்‌ப் பாசுரமாகச்‌ செல்லும்‌ பதிகம்‌. 
நான்காம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- வீற்றிருந்தேழுலகும்‌ -கீழ்த்திருவாய்மொழி பெரு விடாயோடே சென்றது. இங்ஙனே ஆழ்வார்‌ விடாய்க்க வேணுமென்பதுதானே எம்பெருமானுடைய திருவுள்ளம்‌! சோறு உண்பதற்குப்‌ பசி உபகரணமாப்போலே எம்பெருமானை யநுபவிப்பதற்கு அளவு கடந்த ஆசை யன்றோ உப கரணமாவது. அந்த ஆசை யுண்டானாலன்றித்‌ தன்னுடைய பரிபூர்ணாநுபவத்தைத்‌ தந்தருள எம்பெருமான்‌ திருவுள்ளம்‌! பற்றுவதில்லை. அத்தகைய ஆசை *முனியே நான்முகனில்‌ உண்டாகின்றது. ' “முடிந்த அவா? என்பது அங்குத்தான்‌. அதற்குக்‌ கீழுள்ளதெல்லாம்‌ அந்த அளவுக்குப்‌ பண்ணுகிற க்ருஷியாயிருக்கும்‌, எம்பெருமான்‌ இடையிடையே வந்து காட்சிதாராதொழியில்‌ ஆழ்வாரை இழக்க நேருமே,-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொன்னேன்‌ ” என்னும்படி பகவத்‌ குண ரஸிகர்‌களுக்குத்‌ தண்ணீர்‌ பந்தல்‌ வைக்கைக்காகவன்றோ ஆழ்வாரை இங்கு வைத்திருப்பது. ஸம்ச்லேஷ விச்லேஷங்கள்‌ மாறிமாறி நடந்தாலல்லது எம்பெருமானுடைய திருவுள்ளம்‌ நிறைவேற வழி யில்லை; றம்‌ போலியர்களின்‌ பாக்கியமும்‌ பரிபக்குவமாக வழி யில்லை, இத்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்குச்‌ செல்லுகிற. ஆனந்தம்‌ பேச்சுக்கு நிலமன்று. “இனி யென்ன குறை யெழுமையுமே?” என்றும்‌ “இனி யாவர்‌ நிகரகல்‌ வானத்தே” என்றும்‌ மார்பு தட்டிப்‌ பேசலாம்படி யாக்கி யருளினான்‌ எம்பெருமான்‌. இத்திருவாய்‌ மொழியின்‌ அமைப்பை நோக்குமிடத்து இதற்கு மேற்பட்ட பரிபூர்ணாநுபவம்‌ வேறில்லையென்றே சொல்லலாம்படி யிரா நின்றது , ஆனது பற்றியே இத்திருவாய்மொழி *தழ்விசும்பணி முகிலுக்கு அடுத்த திருவாய்மொழியாக இருந்திருக்கலாம்‌ என்று நஞ்சீயர்‌ ரஸோக்தியாக அருளிச் செய்வராம்‌. கீழ்த்திருவாய்மொழியில்‌ போலி கண்டு ப்ரமித்து மயங்கி ஆற்றாமை மீதூர்ந்த ஆழ்வாருக்கு எம்பெருமான்‌ உபயவிபூதி நாதனாயிருக்கிற தன்‌ படிகளில்‌ ஒன்றுங்‌ குறையாதபடி முற்றூட்டாகக்‌ காட்டிக்கொடுத்து “ஆழ்வீர்‌! நம்முடைய படிகளெல்லாங்‌ கண்டீரே; நமது இந்த ஐச்வர்ய மெல்லாம்‌ நிறம்பெற்றதாவது உம்முடைய திருவாக்காலே ஒழுங்கு படப்‌ பாடினாலாயிற்று, ஆகவே பாடிக்‌ காணீர்‌” என்று செல்லி ஆழ்வார்‌ திருக்கையிலே தாளத்தைக்‌ கொடுக்க, அவ்விருப்புக்குப்‌ பல்லாண்டு பாடி மசிழ்கிறாராய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி.
 நான்காம்பத்தில்‌ ஆறும்‌ பதிகம்‌-- தீர்ப்பாரையாமினி -கீழில்‌ சென்ற திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக இந்தத்‌ திருவாய்மொழி இருக்கத்‌ தகுதியில்லை யென்று நம்முதலிகள்‌ கூறுவர்களாம்‌, கீழ்த்திருவாய்மொழி எல்லை கடந்த ப்ரிதியோடே சென்றது; அதற்கு எதிர்த்தட்டாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்‌மொழி, கீழ்ப்பதிகத்திற்கும்‌ இப்‌ பதிகத்திற்கும்‌ ஸங்கதி அருளிச்‌ செய்யவேணுமென்று எம்பாரைச்‌ சிலர்‌ கேட்டார்களாம்‌; அதற்கு எம்பார்‌ “இதற்கு நான்‌ என்ன சொல்லுவேன்‌ ? அஸங்கதிரேவ ஸங்கதி: என்று கொள்ளுங்கோள்‌ ” என்றாராம்‌; இது இன்‌: சுவையே வடிவெடுத்த வார்த்தையாகும்‌. ஸங்கதி சொல்ல முடியாதென்று ஆபாத ப்ரதீதியிலே பொருளாம்‌ ; அஸங்கதி : என்றது அஸம்ச்லேஷ மென்றபடியாய்‌ விச்லேஷத்தைச்‌ சொல்லிற்றாய்‌, விச்லேஷந்தான்‌ இதற்கு ஸங்கதி என்கை பரமார்த்தம்‌, *மண்ணையிருந்து துழாவியில்‌ ஆழ்வார்க்கு உண்டான வியாமோஹத்தைத்‌ தணிப்பதற்காக வந்து கிட்டின வைகுந்தநாதன்‌ மறைய நிற்க, அந்தப்‌ பிரிவை ஆற்றமாட்டாமல்‌ இத்திருவாய்மொழி விஷாதத்‌திலேயாய்ச்‌ செல்லுகின்றது. வெறி விலக்குத்‌ துறையிலே அவதரித்ததாம்‌ இத்திருவாய்மொழி. ஆழ்வார்‌ தரமான தன்மையை யிழந்து ஒரு தலைமகளாம்‌ நிலைமையை எய்தி, அது தன்னிலும்‌ தம்‌ வாயாலே சொல்ல மாட்டாமல்‌ வேற்று வாயாலே சொல்லவேண்டித்‌ தோழியின்‌ பேச்சாகச்‌ செல்லுகின்றது. பிரிவாற்றாது மிக வருந்திய தலைமகளது வடிவு வேறுபாட்டினைக்‌ கண்ட தாய்மார்‌ “இவள்‌ இங்ஙனம்‌ மெலிதற்குக்‌ காரணம்‌ என்னோ ?' என்று கவலைப்பட்டுக்‌ கட்டுவிச்சியைக்‌ குறிகேட்க, அவளும்‌ தன்‌ மரபின்படி ஆராய்ந்து இவளுக்கு முருகக்‌ கடவுள்‌ ஆவேசித்ததொழியப்‌ பிறிதொன்றுமில்லை! என்று கூற, அது கேட்ட தாயர்‌ உடனே வெறியாட்‌டாளனை அழைப்பித்து அவனைக்‌ கொண்டு ஆவேசமாடு விப்பதும்‌ க்ஷுத்ர தெய்வங்களுக்கு உரிய ஸந்தர்ப்பணைகளை யிடுவிப்பதும்‌ செய்ய, அதற்குத்‌ தலைமகள்‌ மிக வருந்தாரிற்க அச்சமயத்தில்‌ அவளது. துன்பத்தின்‌ உண்மையான காரணமுணர்ந்த தோழி அந்தப்‌  ப்ரவ்ருத்திகளைக்‌ கண்டித்துக்‌ கூறுகிற பாசுரமாய்ச்‌ செல்லுகிறது. 
நான்காம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌-- சீலமில்லாச்சிறியன்‌ -உலர்ந்து தரைப்பட்டுக்கிடந்த கொடியானது மழைத்துளி பட்டவாறே செழிப்புறுமாபோலே, கீழே மோஹித்துத்‌ தரைப்‌ பட்டிருந்த ஆழ்வார்‌, தோழிமார்‌ வாக்கில்‌ நின்றும்‌. வெளிவந்த சில திருநாமங்களைக்‌ கேட்கப்பெற்ற ப்ரஸக்தியாலே உணர்த்தி பெற்றார்‌. அத்தனையே யல்லது விரும்பினபடி எம்பெருமானோடே ஸம்ச்ிலேஷிக்கப் பெற்றிலர்‌ மோஹித்திருந்த நிலமை தானே நன்றாய்  யிருந்தது ஏனென்னில்‌, அப்போது உணர்த்தி யில்லாமையாலே துயரம்‌ தெரியாது: உறக்கத்தில்‌ பசி பொறுக்கலாம்‌ ; விழித்துக் கொண்டால்‌ உண்டாலல்லது தரிக்கப்‌ போகாதே. அப்படியே ஆழ்வாரும்‌ மோஹித்திருந்த நிலைமையிலே ஒருவாறு ஆறியிருந்து உணர்த்தி யுண்டான விப்போது துடிக்க வேண்டியவராயினார்‌. துடித்துக்‌ கூப்பிடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌. உலகத்திலே. நோயாளிகள்‌ மயக்கமுற்றிருக்கும்‌ போதுகளிலே பாதை தெரியாது யிருற்து, மயக்கம்‌ தெளிந்தவாறே பாடாற்ற வொண்ணாமல்‌ துடிப்பர்களே, அறத நிலைமையே யாயிற்று : ஆழ்வார்க்கு இப்போது--அவனோ ஆபத்துக்கு. உதவுமியல்வினன்‌ ; ஆபத்துக்கு: நிதானமறிந்து பரிஹரிக்கவும்‌ வல்லன்‌; பிரிந்தால்‌ பொறுத்திருக்க வொண்ணாத படியான அழகு படைத்தவன்‌) ஆபத்துக்களிலே விரோதியைப்‌ போக்கி உதவுகைக்குப்‌ போதுமான சக்திபடைத்தவன்‌ ; இப்படி யிருந்தும்‌ நம்‌ ஆற்றாமைக்கு. உதவவில்லையே, - என்று கன்த்த ஆர்த்தியோடே,  கேட்டாரெல்லாரும்‌ நீராய்க் கரையும்படி கூப்‌பிடுகிறார்‌..
நான்காம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌ -ஏறாளுமிறையோனும்‌-கேட்டாரெல்லாரும்‌ நீராம்படியாகக்‌ கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ கூப்பிடச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்‌ காட்டிற்றிலன்‌. அதனால்‌ எம்பெருமான்‌ தம்மை வேண்டாவென்று வெறுத்திருப்பதாக நிச்சயித்தார்‌. அவனுடைய வெறுப்புக்கு இலக்கான இந்த ஆத்மாவும்‌ ஆத்மீயங்களும்‌ நமக்கு ஏதுக்கு? அவனுக்கு வேண்டாதவை நமக்குத்தான்‌ வேணுமோவென்று ஆத்மாத்மீயங்களையெல்லாம்‌ உபேசுவிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, ஆழ்வார்‌ ஜநககுலஸுந்தரியோடே யொத்திருப்பர்‌ என்றாயிற்று நம்முதலிகள்‌ அறுதியிட்டிருக்கும்படி... அப்பிராட்டி அசோக வனத்திலிருந்தபோது *ந ஹி மே ஜீவிதேறார்த்த : நைவார்த்தைர்‌  பூஷணை : வஸந்த்யா ரக்ஷஸீமத்யே விறாராமம்‌ மஹாரதம்ர்‌, என்று ஆத்மாத்மீயங்களை யெல்லாம்‌ வெறுத்தாள்‌. பெருமாள்‌ விரும்பாதே ராக்ஷ்ஸிகள்‌ நடுவே சிறையிருக்கின்‌ற வெனக்கு உயிர்‌ உடைமை முதலியவற்றால்‌ என்ன பலன்‌? என்றாள்‌. அந்த நிலைமை தானே இப்போது ஆழ்வார்க்கு முண்டாயது, இந்தத்‌ திருவாய்மொழி ஆழ்வார்‌ தாமான தன்மையிலே நின்று. அருளிச்‌ செய்வத்ன்று; நாயகீ ஸமாதியாலே. அருளிச்செய்த தென்னுமிடம்‌ “மணிமாமை குறைவிலமே” “மேகலையால்‌ குறைவிலமே” “வரி வளையால்‌ குறைவிலமே” என்பவற்றால்‌ விளங்கும்‌. திருமங்கை யாழ்வாரும்‌ பெரிய திருமடலில்‌ “கன்னவிலுங்‌ காட்டகத்தோர்‌ வல்லிக்கடிமலரின்‌ நன்னறு வாசம்‌ மற்றாரானு மெய்தாமே மன்னும்‌ வறுகிலத்து வாளாங்குகுத்ததுபோல்‌, என்னுடைய பெண்மையும்‌ என்னலனு மென்முலையும்‌, மன்னுமலர்‌ மங்கைமைந்தன்‌, கண் புரத்துப்‌ பொன்மலைபோல்‌ நின்றவன்‌ றன்‌ பொன்னகலம்‌ தோயாவேல்‌, என்னிவைதான்‌ வாளா வெனக்கே பொறையாகி, முன்னிரது. முக்கின்று மூவாமைக்‌ காப்பதோர்‌ மன்னுமருந்தறிவீரில்லையே* என்‌றருளிச்‌ செய்தது காண்க. 
நான்காம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌-- நண்ணாதார் முறுவலிப்ப --கீழ்த்திருவாய்மொழியில்‌, உடம்பு வேண்டா, உயிர்‌ வேண்டா, அது வேண்டா, இது வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை யெல்லாம்‌ வெறுத்து உதறித்‌ தள்ளப் பார்த்தார்‌. தள்ளினால்‌ தள்ளுண்டு போமவையோ அவை? பேறு பெறுவதற்கு எப்படி. அவன்‌ கை பார்த்திருக்க வேணுமோ, அப்படியே முடிகைக்கும்‌ அவன்‌ கை பார்த்திருக்க வேண்டுகையாலே “எம்பிரானே ! என்னை நீதானே முடித்திடாய்‌! என்கிறார்‌.  ஆழ்வாருடைய ஆர்த்தி பேச்சுக்கு நிலமல்லாதபடி பெருகினமை இத்திருவாய்மொழியிலே விளங்கா நின்றது. ஆழ்வாருடைய ஆர்த்திக்கு முன்று ஹேதுக்‌களுண்டு; எம்பெருமானோடு கலவி பெறாமல்‌ பிரிந்து படும்‌ ஆர்த்தி ஒன்று ; ஸம்ஸாரிகளோடு ஸஹவாஸம்‌ பொறுக்க வொண்ணாதாய்‌ அத்தாலே வரும்‌ ஆர்த்தி ஒன்று; இந்திரியங்கள்‌ விஷயங்களிலே கொண்டுபோய்‌ மூட்டி அரர்த்தங்ககா விளைக்கையாலே அத்தாலே வரும்‌ ஆர்த்தி ஒன்று. இவற்றுள்‌ எம்பெருமானுடைய பிரிவினால்‌ வந்த ஆர்த்தி கீழ்த்திருவாய்‌ மொழியிலே கண்டது. இந்திரியங்‌களால்‌ வரும்‌ ஆர்த்தி மேலே *உண்ணிலாவிய வைவரால்‌* என்கிற திருவாய்மொழியிலே காணலாகும்‌. ஸம்ஸாரிகளினிடையே ஸஹவாஸம்‌ பொறுக்க வொண்ணாமை யாலாகும்‌ ஆர்த்தி இத்திருவாய்மொழியில்‌ காண்பதாகும்‌, 
நான்காம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌ ஒன்றுந்தேவுமுலகும்‌ --கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ தமக்கு ஸம்ஸாரிகளினிடையே ஸஹவாஸம்‌ பொறுக்கமுடியாமல்‌ பலவாறாகக்‌ கதற, ஒருவிதமாக அவருடைய ஆர்த்தியை மாற்றவேணுமென்று திருவுள்ளம்‌ பற்றின எம்பெருமான்‌, திருநாட்டிலே திருமகளும்‌ தானுமாக இருக்கிற இருப்பை இங்கே இவர்க்குக்‌ காட்டிக்‌ கொடுத்‌தருள, இவரும்‌ கண்டு ஒருவாறு களிக்கப் பெற்றார்‌. *கண்ணாளா கடல்‌ கடைந்தாய்‌ உனகழற்கே வரும்‌ பரிசு, தண்ணாவா தடியேனைப்‌ பணிகண்டாய்‌ சாமாறே* என்றும்‌ *ஆமாறொன்‌றறியேன்‌ நான்‌ அரவணையாயம்மானே !, கூமாறே விரைகண்டாய்‌. அடியேனைக்‌ குறிக்கொண்டே* என்றும்‌ கல்லும்‌ கரையும்படி ஆழ்வார்‌ கூப்பிடா நிற்கச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ இவரை இந்நிலத்திலேயே வைத்திருப்பதற்குப்‌ பலஹேதுக்கள்‌ உண்டு -ஆழ்வாரைக்‌ கொண்டு உபதேசங்கள்‌ பண்ணுவித்து நாட்டைத்‌, திருத்த வேணுமென்பது ஒரு ஹேதுவாகையாலே, அதனை எம்‌பெருமான்‌ ஆழ்வார்க்கு ஒருவாறு நினைப்பூட்டினன்‌ போலும்‌ ; ஆழ்வாரும்‌ எம்பெருமானுடைய நியமனத்தை நிறைவேற்றக்‌ கருதி, பிரகிருதத்தில்‌ எவ்விதமான உபதேசத்தைப்‌ பண்ணலாமென்று பார்த்தார்‌. உலகர்‌ பெரும்பாலும்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அறியப்‌ பெறாதவர்களாயும்‌ தேவதாந்தரங்கள்‌ பக்கலிலே வியாமோஹம்‌ கொண்டவர்களாயும்‌ காணப்படுகையாலே இவர்களுக்கு எம்பெருமானுடைய பரத்வத்தையும்‌ இதர தெய்வங்களின்‌ நிஹீநத்வத்தையும்‌ நன்கு உணர்த்தினோமாகில்‌ இவர்கள்‌ திருந்தி ஸம்ஸாரம்‌ அடியறக்‌ கூடும்‌ என்று திருவுள்ளம்‌ பற்றி அங்ஙனே உபதேசித்தருளுகிறார்‌ இத்திருவாய்மொழியாலே. கீழே *உயர்வற வுயர்நலம்‌ *திண்ணன்வீடு* முதலான திருவாய்மொழிகளிலும்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அருளிச்செய்திருந்தாலும்‌, இத்‌ திருவாய்மொழி அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை மூதலிக்கிற தாகையாலே வீறுபெற்றிருக்கும்‌. திருக்குருகூர்‌ என்கிற ஆழ்வார்‌ திருநகரியில்‌ கோயில்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமானுக்கு ஆதிநாத பெருமாள்‌ என்று திருநாமமாகையாலே, ஸகலஜகத்காரணபூதன்‌ என்கிற. அத்திருநாமத்தை வஹித்திருக்கின்ற இப்பெருமான்‌ பக்கலிலே பரத்வத்தை எடுத்துரைக்கப்‌  பாங்காயிருக்குமென்று திருவுள்ளம்‌ பற்றினாராயிற்று. 
ஐந்தாம்பத்தில்‌ முதல்பதிகம்‌-— கையார்‌ சக்கரத்து --கீழ்‌ நாலாம்பத்தில்‌ *நண்ணாதார்‌ முறுவலிப்பவென்னும்‌ பதிகத்திலே ஸம்ஸாரிகள்‌ படுகிற வருத்தங்களை நினைத்து, அவ்‌ வருத்தங்கள்‌ அவர்களுக்குத்‌ தொலையும்படி எம்பெருமானுடைய பெருமையை உணர்த்துவோ மென்று பார்த்து அதனை யுணர்த்‌தினார்‌ கீழே *ஒன்றுந்தேவுமென்கிற திருவாய்‌ மொழியிலே. அவ்‌ வுபதேசம்‌ கேட்டுத் திருந்தினவர்கள்‌ இந்நிலத்திலே நிரம்பியிருக்கிற. படியைக்‌ கண்டவாழ்வார்‌ “பொலிக பொலிக?” வென்று அவர்கட்கு மங்களாசாஸக௩ம்‌ பண்ணுவதாக இருக்குமளவிலே தம்மைப்‌ பற்றிச்‌ சிறிது நினைத்துக்‌ கொண்டார்‌: *நாமும்‌ இவர்களைப் போலே ஸம்ஸாரத்திலே தோள்‌ மாறிக்கிடவாதே இவர்களுக்கு உபதேசம்‌ பண்ணும்படியாகவும்‌, இவர்களைத்‌ திருந்தும்படியாகவும்‌ எம்பெருமான்‌ நமக்கு அருள் புரிந்திருக்கின்றானே. இவ்வருளுக்கு நிதானம்‌ எதேனுமுண்டோ?”? என்று ஆராய்ந்து பார்த்தார்‌; அவ்வருள்‌ நிர்ஹேதுக மென்பதை நன்கறிந்தார்‌; உள் குழைந்து அதனைப்‌ பேசி யநுபவிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, சப்தாதி விஷயங்‌களிலேயே நான்‌ மண்டிக்கிடக்க, பகவத்‌ விஷயத்தையும்‌ வாயாலே.சொல்லுபவன்‌ போல்‌ பாவனை செய்தவனே யல்லது உள்‌ கனிந்த ப்ரேமம்‌ சிறிதுமுடையேனல்லேன்‌ ; அப்படியிருந்தும்‌ க்ருத்ரிமமான அந்த உக்தி தன்னையே பற்றாசாகக்‌ கொண்டு எம்பெருமான்‌ என்னை விஷயீகரித்தவாறு என்னே ! என்று ஆச்சரியப்படுகிறாராயிற்று. 
ஐந்தாம்பத்தில்‌ இரண்டாம்பதிகம்‌- பொலிக பொலிக பொலிக --இவ்விபூதியிலுண்டான ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்திக்கு மங்களா சாஸநம்‌ பண்ணுகிறது இத்திருவாய்மொழி, இப்போது இந்த மங்களாசாஸனத்திற்கு ப்ரஸக்தி ஏதென்னில்‌; கீழே நாலாம்‌ பத்தில்‌ *நண்ணாதார்‌ முறுவலிப்ப வென்னும்‌ பதிகத்திலே ஆழ்வார்‌ ஸம்ஸாரிகளின்‌ கிலேசங்களை அனுஸந்தித்து, அதற்குப்‌ பரிஹாரமாக *ஒன்றுந்தேவு மென்கிற பதிகத்திலே எம்பெருமானுடைய பரத்துவத்தைப்‌ பரக்கப் பேசித்திருத்த, அத்தாலே திருந்தி, ஸம்ஸாரம்‌ பரமபதம்‌ என்கிற வேற்றுமையற்று அங்குள்‌ளாரும்‌ இங்கே வரலாம்படி யிருக்குமிருப்பைக்‌ கண்டு மங்களா சாஸனம்‌ பண்ணுகிறாராயிற்று, ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயைக்‌ காண்பதற்காக நித்யஸூரிகள்‌ நித்ய விபூதியில்‌ நின்றும்‌ இந்நிலத்திலே. யெழுந்தருள அவர்களுக்கு மங்களாசாஸநம்‌ பண்ணுகிறார்‌ என்றும்‌ சில ஆசார்யர்கள்‌ நிர்வஹிப்பர்களாம்‌, 
ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயாவது ஆழ்வாருடைய உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களின்‌ ஸம்ருத்தியாகிற ஸ்ரீயாம்‌. இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸாக்ஷாத்தாக இத்திரு வாய்மொழியால்‌ மங்களாசாஸநம்‌ செய்வதாக ஒரு நிர்வாஹம்‌. இந்த ஸ்ரீவைஷ்ணவர்களைக்‌ காண்கைக்காக லோகார்தரத்தில்‌ நின்றும்‌ வந்தவர்கட்த மங்களாசாஸநம்‌ செய்வதாக மற்றொரு நிர்வாஹம்‌. ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ “அடிமை புக்கரரையும்‌ ஆட்செய்வாரையுங்‌ காண வோக த்வீபாந்தரங்களில்‌ நின்றும்‌ போந்த தேவர்‌ குழாங்களைக்‌ கண்டு காப்பிட்டு” என்றருளிச்‌ செய்ததும்‌ இங்கு அநுஸந்தேயம்‌.
ஐந்தாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌-மாசறுசோதி -இத்திருவாய்மொழி மடலூர வொருப்படுவதாயிருக்கும்‌. கீழ்‌ நாலாம்பத்திலே *ஏருளுமிறையோனு மென்கிற திருவாய்மொழியில்‌ உண்டாயிருந்த காதலே மீண்டும்‌ கிளர்ந்து எம்பெருமானோடு ஸம்ச்லேஷிக்க விரும்பி அந்த விருப்பம்‌ நிறைவேறப்‌ பெருமையினாலே மடலூர்வேனென்று அச்சமுறுத்திக்‌ காரியம்‌ கொள்ளப்‌ பார்க்கிறார்‌. சக்ரவர்த்தி திருமகன்‌ ஸமுத்ரராஜனைச்‌ சரணம்‌-புகுந்து வழிவிட வேண்டின விடத்தும்‌ அக்கடலரையன்‌ இறுமாப்‌பையே பாராட்டி முகங்காட்டாமல்‌ அலக்ஷியஞ்‌ செய்துகிடக்க, பெருமாள்‌ சீறிச்‌ சிவந்த கண்ணினராய்‌-ஸாகரம்‌ ஸோஷமிஷ்யாமி, சாபமாநய ஸெளமித்ரே! பத்ப்யாம்‌ யாந்து ப்லவங்கமா : *' இதோ இக்கடலை வற்றச்‌ செய்துவிடப்போகிறேன்‌; லக்ஷ்மணா! சார்ங்க வில்லைக்‌ கொண்டு வா; வானர முதலிகள்‌ காலாலே நடந்து! செல்லட்டும்‌; ஒரு க்ஷணத்திலே இக்கடல்‌ படுகிறபாடு பாராய்‌” என்‌றருளிச் செய்து ஸமுத்ர ராஜனை அழிக்க முயன்றாப்‌ போலே இவவாழ்வாரும்‌. நமது அபேஷிதத்தை நிறைவேற்றாத எம்பெருமான்‌ ஏதுக்கு?” என்று பகவத்‌ தத்துவத்தை இல்லை செய்துவிடப்‌ பார்க்கிறார்‌. மடலெடுக்கையென்று தமிழிலே ஒரு முறைமையுண்டு, நாயகன்‌ வேட்டைக்குப்‌ புறப்பட்டானாய்‌, நாயகியும்‌ தோழியும்‌ பூக்கொய்து விளையாடவென்று புறப்பட்டவளவிலே ஒரு வியாஜத்‌தாலே தோழியும்‌ பிரிந்த ஸமயத்திலே நாயகனும்‌ தெய்வவசமாக அங்கே வந்து சேர, அங்கே அவனோடு கண்கலவியே கூட்டக்‌ கூடி ஊழ்வினை பிரித்தலால்‌ உடனே பிரியவும்‌ சேர்ந்திட, 'அந்தப்‌ பிரிவைப்‌ பொறுக்கமாட்டாத நாயகி அவனோடு கூடுதற்காகச்‌ செய்யும்‌ ஸாஹஸ ப்ரவ்ருத்திதான்‌ மடலூர்தல்‌ எனப்படுவது. நாயகனை ஒரு படத்திலேயெழுதி வைத்தகண்வாங்காமல்‌ அதனைப்‌ பார்த்துக்கொண்டு, புஷ்பம்‌ சந்தனம்‌ முதலிய போக்ய வஸ்துக்‌களையும்‌ விஷமாக உதறித்‌ தள்ளி, ஊணும்‌ உறக்கமும்‌ உடம்பு குளிப்பதுமின்‌ றியே, பனைமடலைக்‌ கையிலே ஏந்திக்கொண்டு அதனால்‌ உடம்பை மோதிக்கொண்டு, தலைமயிரை விரித்துக்கொண்டு. “இன்னபடுபாவி என்னைக்‌ காக்கமாட்டாதே கைவிட்டான்‌; அவன்‌ கண்ணற்றவன்‌; அவனிலும்‌ விஞ்சிய கொடியன்‌ இல்லை! என்று தெருவேறக்‌ கதறிக்கொண்டே கேட்டாரெல்லாரும்‌ நடுங்கும்‌ படியும்‌ இரங்கும்படியும்‌ திரிந்துழல்வதுதான்‌ மடலூருகையாவது: இங்ஙனம்‌. கதறிக்கொண்டு தெருவிலே புறப்படுவதற்கு ப்ரயோஜனம்‌ யாதெனில்‌; இந்த ஸாஹஸ ப்ரவ்ருத்தியைக்‌ கண்டு ராஜாக்‌களாயுள்ளவர்கள்‌ இவ்வார்த்தியைப்‌ பொறுக்க மாட்டாத கருணையாலே இருவரையும்‌ கூட்டிவைப்பர்கள்‌; உறவு முறையாராவது கூட்டி வைப்பர்கள்‌ ; தோழிமாராவது கூட்டி வைப்பர்கள்‌ ; பழிக்கு அஞ்சி நாயகனேயாவது வந்து கூடுவன்‌ ; இவையொன்றுமில்லை யாகில்‌ நாயகிதான்‌ முடிந்து பிழைத்துப்போவள்‌ ; இவையாயிற்று மடலூர்தற்குப்‌ பிரயோஜனங்கள்‌. ஆழ்வார்‌ இப்படி எம்பெருமானைப்‌ பழித்துக் கொண்டு ஸாஹஸம்‌ தோற்றத்‌ தெருவிலே கிளம்பினாரோ? எனில்‌, இல்லை; மடலூர்வன்‌ என்று சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதை முடிய நடத்தினபாடில்லை. “தோழி! உலகு தோறலர்‌ தூற்றி ஆம்‌ கோணைகள்‌ செய்து குதிரியாம்‌ மடலூர்துமே” என்றும்‌, “யாம் மடமின்றித்‌ தெருவுதோறயல்‌ தையலார்‌. நாமடங்காப்‌ பழிதூற்றி நாடுமிரைக்கவேயாம்‌ மடலூர்ந்தும்‌ எம்மாழியங்கைப்‌ பிரானுடைத்‌ தூமடல்‌ தண்ணர்‌ துழாய்‌ மலர்கொண்டு சூடுவோம்‌'! என்றுமுள்ள பாசுரங்கள்‌ காண்க, 
ஐந்தாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌-- 
* ஊரெல்லாந்துஞ்சி --கீழ்த் திருவாய்மொழியிலே மடலூரும்‌ முயற்சி வலிதாய்ச்‌ சென்றது. மடலூரவேண்டுமானால்‌ நாயகனை ஒரு படத்திலே எழுத வேணுமே; அப்படி எழுதுவதற்கு அவகாசமில்லாதபடி கங்குலிருள்‌ வந்து புகுந்தது. *ஆழியாலன்றங்காழியை மறைத்‌தான்‌* என்றும்‌ *ஆழிகொண்டன்று இரவிமறைப்ப* என்றும்‌ சொல்லுகிறபடியே பண்டு பாரதப்‌ போரிலே ஜயத்ரதனுடைய வதத்திற்காக ஸூரியனை அஸ்தமிக்கச்‌ செய்ததுபோல இப்போதும்‌ அப்பெருமான்‌ தானே ஸூர்யனை அஸ்தமிக்கும்படி பண்ணினான்‌ போலும்‌. இவள்‌ மடலெடுத்தால்‌ அது தனக்கு அவத்யமாகுமென்று நினைத்து அதற்கு இடையூறு செய்யவொருப்படுவனே யெம்‌பெருமான்‌. அல்லது தைவயோகத்தாலே அஸ்தமித்ததாகவும்‌ இருக்கலாம்‌, இரவு வந்து புகுர்தது. அதுதான்‌ அந்தியம்போதன்றிக்கே சராசரங்களெல்லாம்‌ ஒடுங்கும்படி ஈடுறிசியாயிருந்தது. -பழி சொல்லுவாரோடு ஹிதஞ் சொல்லுவாரோடு வாசியற எல்லாரும்‌ உறங்கிப்போய்‌ உசாத்துணை யற்றிருந்தது. இவ்வளவிலே ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானுடைய திருக்குணங்களை யநுஸந்தித்தாராழ்வார்‌.-இவ்வநுஸந்தானம்‌ ஸம்ச்லேஷ திசையிலன்‌றிக்கே விச்லேஷ தசையிலே யாகையாலே மிகவும்‌ ஆற்றாமைக்கு உறுப்பாயிற்று. அசோக வனத்திலே முடியத் தேடின பிராட்டியைப் போலே இவர்க்கும்‌ முடியவேண்டிய வளவாயிற்று. அந்த அவஸாதமெல்‌லாம்‌ இத்திருவாய்மொழியாய்‌ வெளிவருகின்றது. கிழ்த்திருவாய்மொழிபோலே இத்திருவாய்மொழியும்‌ நாயகி ஸமாதியாலே
அருளிச் செய்கிறபடி..
ஐந்தாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-எங்ஙனேயோ-கீழ்த்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ இருளுக்கும்‌ பனிக்கும்‌ வருந்தினபடி சொல்லிற்று. இது தான்‌ இருள் தருமா ஞாலமாகையாலே தமோ குணம்‌ மேலிட்டு நலிந்தபடியைச்‌ சொன்னதாக ஸ்வாபதேசப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஆளவந்தார்‌ ஸ்தோத்ர ரத்‌நத்தில்‌ *அவிவேககராந்ததிங்முகே பஹுதர ஸந்ததது: க்கவர்ஷிணி, பகவந்‌ பவதுர்தினே* என்‌றருளிச்‌ செய்ததும்‌ கீழ்த் திருவாய்‌மொழியின்‌ ஸ்வாபதேசார்த்தரூபம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. இருட்போது கழிந்து பகற்போது காண்கிறாப்போலே தமோ குணத்தின்‌ மேலீடுகழிந்து ஸத்வகுணத்தின்‌ தலையெடுப்பு காணத்‌ தொடங்கிற்று, அதனால்‌ நெஞ்சு தரிப்புற்றுத்‌ திருக்குறுங்குடி யெம்பெருமானுடைய வடிவழகையும்‌ திவ்யாயுத திவ்யாபரணச்‌ சேர்த்தியழகையும்‌ வாய்வெருவும்‌ படியாயிற்று, உருவெளிப்பாடு என்‌பதொன்றுண்டு ; அதாவது மாநஸ ஸாக்ஷரத்காரம்‌. கண்‌ணுக்கு ப்ரத்யக்ஷமாகத்‌ தோற்றாமே நெஞ்சுக்கு ஸாக்ஷாத்கார விஷயமாகை, அது இத்‌: திருவாய்மொழியில்‌ செல்லா நின்‌றது, இது பிராட்டி நிலைமையிலே நின்று பேசுந்‌ திருவாய்மொழி. தாய்மார்‌ தலைமகட்கு அடைவு சொல்லி மீட்கப்‌ பார்க்க, தலைமகள்‌ “எனக்கோ நீங்கள்‌ அடைவு சொல்லுவது? திருக்குறுங்குடி நம்பியின்‌ வடிவழகிலே நெஞ்சு பறியுண்டு கிடக்குமென்னை நிங்கள்‌ அடக்கப்‌ பார்ப்பது முறையல்ல? என்று சொல்லுகிறபடியைச்‌ சொல்லுகிறது, ‌
ஐந்தாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌-கடல்ஞாலம்‌ --பிரிற்து வருந்துங்காலத்திலே “அநுகரித்துத்‌ தரித்தல்‌' என்று முறையுண்டு. அதாவது, எம்பெருமான்‌ தானாகவே தன்னை யநுகரித்துப்‌ பேசி இங்ஙனேயொரு போது போக்காலே தரித்‌திருக்கையாம்‌. திருவாய்ப்பாடியில்‌ திருக்குரவை கோத்தவன்று ப்ரிதிரஸம்‌ தலைமண்டை கொண்டு செல்ல, அது ஸாத்மிக்கைக்காகக்‌ கண்ணபிரான்‌ பிரிந்து தன்னை மறைத்திட, அப்போது திருவாய்ப்‌பாடியிற்‌ பெண்களெல்லாரும்‌ அநுகரித்துத்‌ தரித்தார்களென்னுமிடம்‌ ஸ்ரீவிஷ்ணுபுராண ப்ரஸித்தம்‌. அதில்‌ (5-18-99) “க்ருஷ்ணே நிபத்தஹ்ருதயா இதமுசு : பரஸ்பரம்‌ க்ருஷ்ணோஹமேஷ ஸலிதம்‌ வ்ரஜாம்யாலோக்யதாம்‌ கதி; அற்யாப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதிர்‌ நிசம்யதாம்‌ துஷ்ட காளிய திஷ்டாத்ர க்ருஷ்ணோ ஹமிதி சாபரா”? -பாஹுமாஸ்போட்ய க்ருஷ்ஸஸ்ய ஸீலாஸர்வஸ்வமாததே அந்யா ப்ரவீதி ஹே கோபா: நிச்சங்கை: ஸ்தியதாமிஹ அலம்‌ வருஷ்டிபயேகாத்ர த்ருதோ கோவர்த்தநோ டீயா தேநுகோயம்‌ மயா க்ஷிப்தோ விசரந்து யதேச்சயா''என்றிவை முதலான சுலோகங்கள்‌ காண்க. (இந்த சுலோகங்‌களின்‌ கருத்தாவது-) கண்ணபிரான்‌ பிரிந்து சென்ற காலத்தில்‌ கோபிகள்‌ விருந்தாவனத்தில்‌ திரள்திரளாகக்‌ கூடி ஒருவர்க்‌கொருவர்‌ இங்ஙனே ' பேசிக் கொண்டார்கள்‌ ; * நான்‌ கண்ணன்‌, இதோ அழகாக நடை டைக்கிறேன்‌ பார்‌! என்றாள்‌ ஒருத்தி ; *நான்‌ கண்ணன்‌, செவிக்கினிதாகக்‌ குழலூதுகின்றேன்‌ கேள்‌! என்றாள்‌. மற்றொருத்தி; நான்‌ கண்ணன்‌, கொடிய காளிய நாகமே! நில்‌” என்றாள்‌ இன்னொருத்தி, தோளைத்‌ தட்டிக் கொண்டு கண்ண பிரான்‌ செய்யும்‌ லீலைகளையெல்லாஞ்‌ செய்தாள்‌ வேறொருத்தி, *கோபாலர்களே! நீங்கள்‌ மழைக்கு அஞ்சாதே நில்லுங்கள்‌, இதோ: நான்‌ கோவர்த்தனமென்னுங்‌ கொற்றக்குடையைத்‌ தூக்கிவிட்‌டேன்‌ பாருங்கள்‌” என்றாள்‌ ஒருத்தி. * தேனுகாசுரனை இதோ நான்‌ மாய்த்து விட்டேனாகையால்‌ இணி மாடுகளெல்லாம்‌ நிர்ப்பயமாக உலாவலாம்‌” என்றாள்‌ ஒருத்தி என்கை. அங்ஙனே அநுகரித்துத்‌ தரிக்கும்‌ விதம்‌ ஆண்டாள்‌ பக்கலிலுங்‌ கண்டதொன்றாகும்‌. நோன்பு நோற்பதாகக்‌ கொண்டு திருப்பாவை பாடியது ஆய்ச்சியர்களின்‌ அனுட்டானத்தை அநுகரித்த படியத்தனையிறே. இத்தகைய அநுகார ப்ரகாரங்கள்‌ உபநிஷத்துக்களிலும்‌ காண்பனவாகும்‌, ஆழ்வார்க்கு அந்த அநுகார ப்ரகாரமே இத்திருவாய்‌ மொழியில்‌ செல்லா நின்றது. அதுதானும்‌. தாய் பாசுரத்தாலே வெளிவருகின்றது. மகளின்‌ அநுகாரத்தைத்‌ தாய்‌ முறையிடுகின்றாளென்க. பராங்குச நாயகியானவள்‌ ஜ்ஞான முத்திரையும்‌ தானுமாய்‌ கீதாசார்யனைப்‌ போலே யிருந்து கொண்டு. *'கடல்ஞாலஞ்‌செய்தேனும்‌ யானே, கடல்ஞாலமா வேனும்‌ யானே, மலையெடுத்‌தேனும்‌ யானே, இனத்தேவர்‌ தலைவனும்‌ யானே” என்றாற்போலே பாசுரங்களைச்‌ சொல்லியிருக்கக்‌ கண்ட திருத்தாயார்‌ “இது என்ன நிலைமை!” என்று ஆராயத்‌ தொடங்கினாள்‌ : எம்பெருமானைப்‌ பிரிகையாலுண்டான ஆற்றாமையினாலே அநுகரித்துத்‌ தரிக்கிறாள்‌” என்று அறியமாட்டாதவளாய்க்‌ சுலங்கிக்‌ கிடந்தாள்‌ ; அப்போது! சில பந்து வர்க்கங்கள்‌ அங்கே வந்து சேர்ந்து, இது என்னென்று. வினவ, ஸர்வேச்வரன்‌ இவள்‌ பக்கலிலே ஆவேசித்தான்‌ போலே யிருக்கிறது! என்று விடை கூறுகிறபடியாய்‌ இத்திருவாய்மொழி செல்லுகின்‌றது. 
ஐந்தாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--நோற்றதோன்பு --கீழ்த்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானாகவே' தம்மை அதுகரித்துப்‌ பேசினது ஒருவாறு தரிக்கைக்காகவன்றோ. அவ்வளவிலும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்‌ காட்டாமையாலே பழைய ஆர்த்தியே தலையெடுத்தது. “சிறிது ஆர்த்தியுண்டானாலும்‌ கடுக வந்து முகங்காட்டி அருள்செய்வதையே இயற்கையாகவுடைய எம்பெருமான்‌ நம்மளவிலே இப்படி உபேகைஷயாயிருக்க யாது காரணமோ?! என்று பார்த்தார்‌ ஆழ்வார்‌ ; கருமயோகம்‌; ஞான யோகம்‌ முதலானவற்றிலே நமக்கு அந்வயம்‌ வேணுமென்று இருந்தானோ? அல்லது, அந்த உபாயாந்தரங்களில்‌ நாம்‌ அந்வயித்‌திருக்கிறாமென்று திருவுள்ளம்பற்றிக்‌ கைவிடப்‌ பார்த்தானோ? அவனது திருவுள்ளம்‌ இன்னதென்று தெரியவில்லையே? என்று தடுமாறின ஆழ்வார்‌ தம்முடைய உண்மையான நிலைமையை எம்பெருமான்‌ திருவடிகளிலே விண்ணப்பஞ் செய்ய வேணுமென்று கருதி வானமாமலைப்‌ பெருமாள்‌ திருவடிகளிலே தம்முடைய அநந்யோபாயத்வம்‌ முதலானவற்றை விண்ணப்பஞ்செய்து வேரற்ற மரம்‌ போலே விழுந்து சரணம்‌ புகுகிறாராயிற்று இத்திருவாய்மொழியில்‌, சிரீவர மங்கை என்றும்‌, சிரீவர மங்கலம்‌ என்றும்‌ வானமாமலை சேஷத்திரத்தின்‌ திருநாமம்‌, இது பாண்டி றாட்டுத்‌ திருப்பதிகள்‌ பதினெட்டினுள்‌ ஒன்று. இத்திருவாய்மொழியில்‌ ஆறாம்பாட்டில்‌ “'வானமாமலையே! அடியேன்‌ தொழவந்தருளே!” என்கிற ஸ்ரீஸூக்தியை நோக்குமிடத்தில்‌ 'வானமாமலை' என்கிற திருநாமம்‌ எம்பெருமானுக்கே உள்ளதென்றும்‌, அந்தத்‌ திரு நாமத்தையிட்டு திவ்யதேசம்‌ வழங்கப்பட்டு வருகிறதென்‌றும்‌ சொல்லும்படி யிராரின்றது. 
ஐந்தாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- ஆராவமுதே --கீழ்த்‌ திருவாய்மொழியிலே வானமாமலை யெம்பெருமான்‌ திருவடிகளிலே வேரற்ற மரம்போலே விழுந்து மிகப்‌ பெரிய ஆர்த்தியோடே. சரணம்‌ புகச்‌ செய்தேயும்‌ அப்பெருமான்‌ முகங்‌ காட்டிற்றிலன்‌; இன்னார்க்கு இன்னவிடத்திலே முகங்காட்டுவது என்றொரு நினைப்பு உண்டே எம்பெருமானுக்கு; அதனாலே இவர்க்குத்‌ திருக்குடந்தையிலே முகங்காட்டுவதாக அவன்‌ நினைப்‌பிட்டிருக்கவுங்‌ கூடுமே, ஆழ்வார்‌ அப்படியே கருதினார்‌. நமக்குத்‌ திருக்குடந்தையிலே காட்சி தந்தருள்வதாக எம்பெருமான்‌ ஸங்கல்‌பித்திருக்கக்‌ கூடுமென்று எண்ணினார்‌. எண்ணி “அங்குச்‌ சென்று புகவே நம்‌ அபேஷிதம்‌ தலைக்கட்டும்‌; குறைகளெல்லரம்‌ தீரும்‌” என்று கனக்கப்‌ பாரித்துக்‌ கொண்டு திருக்குடந்தையிலே சென்று புகுந்தார்‌. சித்திரகூட மலைச்சாரலிலே வந்து சேர்ந்த பரதாழ்வான்‌ தான்‌ நினைத்தபடியான பரிமாற்றம்‌ ஒன்றும்‌ பெறாதாப்போலே, ஆழ்வாரும்‌ புக்க விடத்தில்‌ திருக்கண்களை அலர விழித்துக்‌ குளிர நோக்கி யருளுதல்‌, திருப்பவளத்தைத்‌ திறந்து ஒரு வார்த்தை யருளிச்‌ செய்தல்‌, அணைத்தல்‌ முதலானவற்றிலே ஒன்றுஞ்‌ செய்யக்‌ கண்டிலர்‌. அக்ரூரன்‌ கண்ணபிரானிடத்து வரச்செய்தே “மாம்‌ அக்ரூரேதி வக்ஷ்யதி* என்று கனக்கப்‌ பாரித்துக்‌ கொண்டு வந்து மனோ ரதித்தபடியே பெற்றானென்று கேட்டிருந்தோம்‌ ; அங்ஙனே ஒன்றும்‌ தாம்‌ பெறாமையாலே மிக வருந்தி, ஸ்தந்தய ப்ரஜையானது தாய்‌ பக்கலிலே கிட்டி முகம்‌ பெறாவிட்டால்‌ அலமந்து நோவுபடுமாபோலே அவன்‌ ஸந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு இன்னும்‌ எத்தனை திருவாசல்‌ தட்டித் திரியக்‌ கடவேன்‌! என்னு மார்த்தியோடே தலைக்கட்டுகிறார்‌. 
ஐந்தாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌-- -மானேய் நோக்கு நல்லீர்‌ -கீழ்த்திருவாய்மொழியில்‌ திருக்குடந்தையிலே தளர்ந்தார்‌. அங்கு நின்றும்‌ திருவல்லவாழென்கிற மலைநாட்டுத்‌ திருப்பதி யேறப்‌ போக வொருப்பட்டு, அங்குப்‌ போகவும்‌ முடியாமே அவ்வூர்க்கு அருகிலிருந்த ஊரில்‌ சோலைகளும்‌, அங்குள்ள பரிமளத்தைக்‌ கொய்து கொண்டு புறப்படுகிற தென்றலும்‌, வண்டுகளின்‌ இனிதான மிடற்றோசைகளும்‌, வைதிகாநுஷ்டான கோலா ஹலங்களும்‌, மற்றுமுண்டான ஸம்ப்ரமங்களுமெல்லாம்‌ தம்மை மிகவும்‌ நலிய, அவற்றாலுண்டான நோவுபாட்டைத்‌ தோழிமாரைக்‌ குறித்துத்‌ தலைவி சொல்லும்‌ பாசுரமாகப்‌ பேசுகிறது இத்திருவாய்‌ மொழி, 
ஐந்தாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌-பிறந்தவாறும்‌ -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌--திருவல்லவாழிலே சென்று சேர்ந்து. அங்குறையும்‌ பெருமானோடே பரிமாற வேணுமென்று மநோரதித்துக்‌ கொண்டு சென்று கால்நடை தாராமல்‌ ஈடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்‌. *கோவிந்தன்‌ குணம்பாடி....ஆவி  காத்திருப்பேனே*என்கிறபடியே குணாநுபவம்‌ பண்ணித்‌ தரிப்ப தென்று ஒன்றுண்டே; அப்படியாகிலும்‌ தரிப்போமென்று பார்க்கையில்‌ அது தானும்‌ அரிதாய்‌ சைதில்யத்தை விளைப்பிக்க, “பிரானே ! உன்னைப்‌ பிரிந்து நோவு பட்டாலும்‌ தரித்து நின்று குணாநுபவம்‌ பண்ணவல்லேனாம்படி பண்ணியருள வேணும்‌" என்று அவன்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, அர்ச்சாவதாரங்களிலே தம்‌ அபேஷிதம்‌ பெற ஆசைப்பட்டவர்‌ அவ்வாசை நிறைவேறப்‌ பெறாமையாலே விபவாவதாரங்களிலே செல்லுகிறார்‌. இது பொருந்துமோ? விபவாவதாரங்களை மிழந்‌தார்க்கும்‌ இழவு தீரவன்றோ அர்ச்சாவதாரம்‌ அமைந்திராநின்றது; இங்கே யிழந்து வைத்து அங்கே செல்லுகையாகிறவிது என்னே! என்னில்‌; கேண்மின்‌; ; அர்ச்சாவதாரத்தில்‌ குளிர நோக்குதல்‌, வினவுதல்‌, அணைத்தல்‌ செய்யலாகாதென்று ஸங்கல்பித்திருக்‌கையாலே “ஸத்ய ஸங்கல்பனுடைய ஸங்கல்பம்‌ குலையும்படி அதிக நிர்ப்பந்தம்‌ பண்ணக் கடவோமல்லோம்‌! என்று அர்ச்சாவதாரத்திலே கையொழிந்தார்‌. விபவாவதாரத்தில்‌ அப்படியொரு நிர்ப்பந்த மில்லாமையாலும்‌ *ஸம்ஸ்ப்ருச்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸாகாடம்‌ பரிஷஸ்வஜே* என்னும்படி அக்ரூரன்‌ முதலானார்க்கு ஸர்வஸ்வதானம்‌ பண்ணினபடியை அநுஸந்திக்கையாலும்‌ அது கால விப்‌ரக்ருஷ்ட மென்பதிலே புத்தி செலுத்தாமல்‌ அங்கே போருகிறார்‌. 
ஆறாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌-வைகல்‌ பூங்கழிவாய்‌ -கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ *நோற்ற நோன்பு என்கிற திருவாய்மொழி தொடங்கி நான்கு திருவாய்‌ மொழிகளிலே ஆழ்வார்‌ அடுத்தடுத்து எம்பெருமான்‌ திருவடிகளிலே சரணாகதி செய்த பலன்‌ 
கொடுத்தே தீரக்கடவதான அந்த சரணாகதியும்‌ பலிக்கவில்லை. -அதற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌ நம்முடைய பாக்கியமேயாகும்‌. -ஆழ்வாருடைய திருவாக்கில்‌ நின்றும்‌ இன்னமும்‌” பாசுரங்களை வெளியிடுவித்து உலகத்தை வாழ்விக்கத்‌ திருவுள்ளம்‌ பற்றின எம்பெருமான்‌, நமக்காகவே ஆழ்வாருடைய சரணாகதியையும்‌ நிஷ்ப்பல மாக்கினான்‌. கீழே *பிறந்தவாறும்‌ என்கிற திருவாய்‌ மொழியிலே *என்னையென்று கொல்‌ சேர்வதுவே* என்றும்‌ *உன்னையென்று தலைப்பெய்வனே* என்றும்‌ *உன்னையென்று கொல்கூடுவதே- என்றும்‌ இங்ஙனே பலவாறு கதறி எம்பெருமான்‌ பக்கலிலே கடுகச்‌ சேரவேணுமென்று பாரித்த ஆழ்வார்‌, அவ்வெம்‌பெருமான்‌ திருவண்வண்டூர்‌ என்கிற மலைநாட்டுத்‌ திருப்பதியிலே ஸந்நிதி பண்ணியிருக்கும்‌ படியை நோக்கி அங்கே தாம்‌ சென்று சேரமாட்டாதே தம்முடைய தசையை அப்பெருமானுக்குத்‌ தெரிவிக்‌கும்படி தூது விடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌.. அதாவது ஆழ்வார்‌ தாமான தன்மையை யிழந்து பெண்‌ பாவனை பெற்றுச்‌ சில பக்ஷிகளை எம்பெருமான்‌ பக்கலிலே போகவிடுகிறார்‌. பகவத்‌ விஷயத்தில்‌ அந்வயிப்பிக்குமவர்களைப்‌ பக்ஷிகளாக ப்ரதிபத்தி பண்ணுகிறதென்று ஸ்வாபதேசார்த்த மறிவது. பறவையானது இரண்டு சிறகுகளாலே எப்படி உயர்‌ கதியை அடைகின்றதோ அப்படியே ஞான அனுட்டானங்களினால்‌ உயர்கதியை அடைகின்றவர்களான மஹான்களே பக்ஷிகளாக மறைத்துப்‌ பேசப்படுகின்றார்கள்‌.
ஆறாம் பத்தில்‌, இரண்டாம்‌ பதிகம்‌ --மின்னிடை மடவார்கள்‌ ஆழ்வாருடையபடி பலவகைப்பட்டிருக்கும்‌. இத்திருவாய்‌ மொழியின்படி. விலக்ஷணமாயிருக்கும்‌. *என்று மொருகாளொழியாமை யானிரந்தால்‌, ஒன்று மிரங்கார்‌ உருக்காட்டார்‌* என்றும்‌ *ஒரு நாள்‌ காண வாராயே* என்றும்‌ இங்ஙனே பலகாலும்‌ கூப்பிடாநின்ற ஆழ்வார்க்கு இப்போது உண்டான நிலைமை மிக வேறுபட்டிராநின்றது, , எம்பெருமான்‌ வந்து நிற்க, “இங்கே ஏதுக்கு வந்தாய்‌? உனது அந்தரங்க விருப்பத்திற்கு இலக்கானவர்கள்‌ பக்கலிலே எழுந்தருளலாம்‌ ; இங்கே என்ன காரியமிருக்கிறது? கடுகச்‌ செல்வாயாக" என்று சொல்லிக்‌ கதவடைத்துத்‌ தள்ளுகிற. படியாயிருக்கிறது இத்திருவாய்மொழி. வடமொழியில்‌ ப்ரணய கலஹமென்றும்‌, தென்மொழியில்‌ ஊட லென்றும்‌ சொல்லப்படுவது! இது. தம்பதிகள்‌ பரிமாறா நின்றால்‌ இங்ஙனே ப்ரணய கலஹம்‌ நிகழ்ந்தே தீரும்‌. எம்பெருமானோடு நமக்குள்ள ஸம்பந்தங்கள்‌ ஒன்பது வகையென்று சொல்லப்படும்‌, *பிதா ச ரக்ஷகச்‌ சேஷி பர்த்தா ஜஜேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்‌தா ச ஆத்யமநூதிதர என்கிற ஸ்லோகத்தில்‌ அந்த நவலித ஸம்பந்தங்களும்‌ காணத்தக்கன. அந்த ஸம்பந்தங்களுள்‌ பர்த்ரு பார்யா ஸம்பந்தமும்‌ ஒன்றாகையாலே, எம்பெருமான்‌ பர்த்தா வாகவும்‌ ஆழ்வார்‌ பார்யையாகவும்‌ பரிமாறுகிற முறை ஸ்வரூபாநுரூபமே யாதலால்‌ இநத ப்ரணய கலஹமும்‌ அவர்ஜநீயமாயிற்று. கீழ்த்திருவாய்மொழியில்‌, ஆழ்வார்‌ எம்பெருமானுடைய பிரிவுக்கு ஆற்றமாட்டாது தூதுவிட்டார்‌. அந்த வ்யஸநத்தை யறிந்த எம்பெருமான்‌ ஆனைக்கு உதவ வந்தாப் போல அரை குலையத்‌ தலை குலைய ஓடிவந்து ஆழ்வார்க்குக்‌ காட்சி தரப்‌ பார்த்தான்‌ ; அவ்வளவிலே ஆழ்வார்‌ ப்ரணய ரோஷம்‌ தலை யெடுக்கப் பெற்று “ஸ்வாமிந்‌! இங்கே உமக்குப்‌ பணியில்லை; பணி போரு மிடத்தேற எழு்தருளிர்‌”' என்று கதவடைத்துத்‌ தள்ளுகிறார்‌ இத்திருவாய்‌ மொழியில்‌. கருஷ்ணாவதாரத்திலே கண்ணபிரானோடு பரிமாறின' கோபஸ்த்ரிகள்‌ இங்ஙனே ப்ரணய ரோஷத்தாலே ஊடல்‌ செய்தமை யுண்டு, அவர்களுடைய பாவபந்தமே இப்போது ஆழ்வார்க்கும்‌ ஆகி அவ்வநுகாரமே முற்றியிருக்கிறதாயிற்று. பெருமாள்‌ திருமொழியிலே *ஏர் மலர்ப்‌ பூங்குழல்‌* என்கிற திருமொழியும்‌, பெரிய திருமொழியிலே *காதில்‌ கடிப்பிட்டு* என்கிற திருமொழியும்‌ இந்த நடையிலே அவதரித்தவை யென்றுணர்க, 
ஆறாம் பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌ - நல்குரவுஞ்செல்வும்‌ --*வைகல்‌ பூங்கழிவரயில்‌ தூதுவிட்டும்‌ தாமதித்து வந்த எம்‌பெருமான்‌ பக்கலிலே பராங்குச நாயகிக்கு ப்ரணய ரோஷம்‌ தலையெடுத்து “எங்கள்‌ கோஷ்டியிலே நீ வந்து புகவேண்டா? என்று தள்ளிக்‌ கதவடைப்பதாய்ச்‌ சென்றது கீழ்‌; அதுதான்‌ ஊடல்‌ என்பது. ஊடலுக்கு அடுத்த படியாகக்‌ கூடல்‌ நேர்ந்தே தீருமாதலால்‌, அந்தக்‌ கூடல்‌ நேர்ந்தபடியும்‌ ஒருவாறு கீழ் திருவாய்‌ மொழியிலே *நின்‌ நிலங்கு முடியினாய்‌* என்கிற பாசுரத்தினால்‌ ஸூசிப்பிக்கப்பட்டதாயிற்று. எவ்விதத்திலும்‌ இவனோடு கூடலாகாது! என்று மிக்க வுறுதியுடனிருந்த நம்மைக்‌ கூடும்படி யாக்கிக்‌ கொண்ட இவனுடைய வலிமை என்னே! என்று விஸ்மயப்‌பட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான்‌ தன்னுடைய அகடித கடநா ஸாமர்த்தியத்தை நன்கு காட்டிக்கொடுத்து அத்தன்மையனா।ன தான்‌ திருவிண்ணகரிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கிறபடியையும்‌ காட்டிக்கொடுக்க, ஆழ்வார்‌ அது தன்னைப்‌ பேசி இனியராகிறார்‌ 
ஆறாம் பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌-- -குரவையாய்ச்சியரோடு -கீழ்‌ ஐந்தரம்பத்தில்‌ *பிறந்தவாறும்‌ என்கிற திருவாய்மொழியில்‌ எம்பெருமானுடைய சேஷ்டித விசேஷங்களைச்‌ சிந்தித்து உருகி உள்குழைந்து அந்தோ! அநுபவிக்க முடிய வில்லையே யென்று தளர்ந்து பேசினார்‌; அக்குறை தீர்கின்றது இத்திருவாய்மொழியில்‌. எம்பெருமானுடைய பலபல சேஷ்டித் விசேஷங்களை வாயாரச்‌ சொல்லி நன்றாக அநுபவித்து அதனால்‌ தமக்குண்டான பூரிப்பைப்‌ பெரு மிடறு செய்து வெளியிடுகின்றாராழ்வார்‌ இத்திருவாய்‌ மொழியில்‌- இதில்‌ ஒவ்வொரு பாசுரங்களிலும்‌ முன்னடிகள்‌ பகவானுடைய சேஷ்டித விசேஷங்களைப்‌ பேசுவனவாகவும்‌ பின்னடிகள்‌ அந்த சேஷ்டிதாநுபவத்தில்‌ தமக்குண்டான களிப்பைக்‌ கனக்கக்‌ கூறுவனவாகவும்‌ அமைந்திருக்கின்றன. *நீசனேன்‌ நிறையொன்றுமிலேன்‌* என்று நைச்சியாநுஸந்தானத்தின்‌ பரம காஷ்டையிலே நிற்கின்ற ஆழ்வார்‌ இங்கு “எனக்கினியார்‌ நிகர்‌ நீணிலத்தே' என்றும்‌, “எனக்கார்‌ பிறர் நாயகரே'! என்றும்‌ “மாறுளதோ விம்‌ மண்ணின்‌ மிசையே” என்றும்‌ இங்ஙனே ஆவலிப்புடைமை தோற்றக்‌ கூறுவது பரம ஸாத்விகத்வத்திற்குக்‌ குறையன்றோ என்று சங்கிக்க வேண்டா, குணாநுபவத்தாலுண்டான ஆனந்தம்‌ தலை மண்டை கொண்டு அதன்‌ பரீவாஹ ரூபமாக இங்ஙனே பேசுவது ஸ்வப்ரயத்ந பூர்வகமன்று, குணாநுபவம்‌ பரவசமாக்கிப்‌ பேசுவிக்கிறபடி. *நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள் மீதே மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்னாமங்கற்ற ஆவலிப்புடைமை கண்டாய்‌ அரங்கமா நகருளனே” என்பன போன்ற பாசுரங்கள்‌ ஸாத்விகாஹங்கார ரீதியிலே அவதரித்தன வென்று கொள்க. உலகில்‌ மதுபானம்‌ பண்ணினார்‌ தம்மை யறியாமல்‌ சொல்லுகிறபடியும்‌ காணா நின்றோம்‌, *எனக்குத்‌ தேனே பாலே கன்னலே யமுதே* என்ற பரம விலக்ஷண மதுவைப்‌ பானம்‌ பண்ணினார்க்குச்‌ சொல்ல வேணுமோ? 
ஆறாம் பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- -துவளில் மா மணி மாடம்‌ -ஆழ்வார்க்கு எம்பெருமானுடைய தன்மைகளை வருணிப்பதில்‌ எவ்வளவு குதூஹலமோ அவ்வளவு குதூஹலம்‌ தம்முடைய தன்மைகளை வருணிப்பதிலுமுண்டு. எம்பெருமானுக்கே மங்களாசாஸநம்‌ பண்ணப் புகுந்த பெரியாழ்வார்‌ *அடியோமோடும்‌ நின்‌னோடும்‌ பிரிவின்றி ஆயிரம்‌ பல்லாண்டு* என்று தமக்கும்‌ தாமே மங்களாசாஸநம்‌ செய்து கொண்டார்‌; எம்பெருமானுடைய பெருமையைப்‌ பாங்காக ,அநுபவிக்கவல்ல அடியார்கள்‌ இல்லையாயின்‌ எம்பெருமானிருந்து யாது பயன்‌? நிலா தென்றல்‌ முதலானவை பரம போக்யமேயானாலும்‌ அவை அநுபோக்தாக்‌களுக்கு உபயோகப்படாதவளவில்‌ *காட்டிலெறித்த நிலாப்போலே” என்னும்படி அவத்யம்‌ பெறுகின்‌றன வன்றோ. அப்படியே, எம்‌பெருமானுடைய பெருமையும்‌ அவனை நன்றாக அநுபவிக்க வல்லவர்‌களுடைய பெருமையிலே சொருகி நிற்கும்‌. பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுவதும்‌ பகவானுடைய பெருமையைப்‌ பேசுவதேயாகும்‌. ஆனது பற்றியே *திருமாலவன்கவி* என்று பகவத்‌ கீர்த்தனமாகக் கொண்ட இத்திவ்யப்‌ பிரபந்தத்திலே *பயிலுஞ்‌ சுடரொளி *நெடுமாற்கடிமை* முதலான பதிகங்கள்‌ பாகவத ய்ரபாவ கீர்த்தத பரங்களாகவும்‌ அமைந்தன. பாகவதர்களுள்‌ ஆழ்வார்‌ சிறந்தவரன்றோ. ஆத்ம ப்ரசம்ஸை [அதாவது தற்‌ புகழ்ச்சி அவத்யமானாலும்‌ பகவத்‌ விஷயத்திலுண்டான தமது ஈடுபாட்டைத்‌ தாமே பேசிக்கொள்வது தகுதியேயாகும்‌. இது அவத்யமன்று, ஆனால்‌ “எம்பெருமான்‌ விஷயத்தில்‌ நான்‌ இப்படி யிப்படி யீடுபட்டிருக்கிறேன்‌' என்று வ்யக்தமாகச்‌ சொல்லிக்‌ கொள்வதில்‌ ஆழ்வார்க்குச்‌ சிறிது ஸங்கோசமுண்டாயிற்றுப்‌ போலும்‌, எம்பெருமானும்‌ தன்னுடைய பெருமையைத்‌ தானே ஒரு பெரிய பிரபந்தமாக வெளியிட்டுக்கொள்ள வேணுமென்று ஆசைப்‌பட்டு, அப்படி நாமே நம்பெருமையைப்‌ பேசிக்கொண்டால்‌ அது சுவை மிக்கதாகாது என்று பார்த்து நம்மாழ்வார்மீது ஆவேசித்து அவர்‌ வாக்காலே தானே தன்‌ பெருமைகளைப்‌ பேசிவிட்டுக்‌ “குருகூர்ச்சடகோபன்‌ சொன்ன” என்று ஆழ்வார் மேலே ஆரோபணம்‌ செய்தான்‌ என்று சொல்லுவதொன்றுண்டு; இவ்விஷயத்தை ஆழ்வார்‌ தாமே மேலே ஏழாம்பத்தில்‌ *என்றைக்குமென்னை* என்கிற திருவாய்மொழியிலே நன்கு. வெளியிடக்‌ காண்கிறோம்‌. அதுவேபோல இப்போது ஆழ்வார்‌ தாமும்‌ தம்‌ பெருமையைத்‌ தாமே வெளியிட்டுக் கொள்ள வேணுமென்று ஆசைப்பட்டு அது சுவையுடைத்  தாவதற்காக அதை வேறொருவர்‌ தலையில்‌ ஏற்றப்‌ பார்த்துத்‌ தோழிமார்‌ பாசுரமாக வைத்து இத்திருவாய்மொழியை அமைத்தருளுகின்றார்‌; ஆழ்வார்‌ பகவத்‌ விஷயத்தி லீடுபட்டிருக்கும்‌ பெருமையை வேறு சில பாகவதர்கள்‌ எடுத்துக்‌ கூறுவதாக உள்ளுறை பொருள்‌ காண்க. 
ஆறாம் பத்தில்‌ ஆறாம் பதிகம்‌-மாலுக்கு வையமளந்த. -கீழ்த்‌ திருவாய்மொழி தோழி பாசுரமாகச்‌ சென்றது; இத்திரு வாய்மொழி தாய் பாசுரமாகச்‌ செல்லா நின்றது. இதில்‌ பாசுரம்‌ தோறும்‌ “இழந்தது' என்று வாரா நின்றது. சங்கை யிழந்தாள்‌, 
மாமைநிறமிழந்தாள்‌, சாயை யிழந்தாள்‌, மாண்பிழந்தாள்‌, கற்பிழங்‌ தாள்‌, கட்டிழந்தாள்‌
என்றிப்படிப் பலவும்‌ இழந்ததாகச்‌ சொல்லப்‌ படுகிறது. இதனால்‌, பகவத்‌ விஷயத்தில்‌ ப்ராவண்யம்‌ அதிகரித்தமையும்‌, அபேக்ஷிதமானபடி ஸம்ச்லேஷம்‌ கிடையாமையாலே மேனி மெலிந்தமையும்‌, கட்டுக்கு அடங்காமையுமாகிற விவை சொல்லப்‌ படுகின்றன வென்றுணர்க. கீழ்‌ நாலாம்பத்தில்‌ *ஏறாளுமிறையோனும்‌* என்கிற. திருவாய்மொழியில்‌ “மாறாளன் கவராத மணி மாமை குறைவிலமே?”. “மணிமாயன் கவராத மடநெஞ்சால்‌ குறை விலமே” என்றிப்படித்‌ தாமே வேண்டாவென்று உபேக்ஷித்த ஆத்மாத்மியங்களெல்லாம்‌ இப்போது தன்னடையே கழிந்து செல்லுகிறபடி. சொல்லுகிறது. எம்பெருமானுடைய ஒரோ அவதார சேஷ்டிதங்களையும்‌ ஒரோ திவ்ய குணங்களையும்‌ நினைக்க நினைக்க, தாம்‌ பரவசராய்‌ மேனிமெலிந்து ஆவி நீராயுருகுகின்‌றமையை ஆழ்வார்‌ அர்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறாராயிற்று.
ஆறாம் பத்தில்‌ ஏழாம் பதிகம்‌- உண்ணுஞ்சோறு-கீழ்த்திருவாய்மொழி போலே இத்திருவாய்மொழியும்‌ தாய்‌ பாசுரமாகவே செல்லுகிறது.  படுக்கைத்‌ தலையிலே பாரங்குச நாயகியாகிய மகளுடன்‌ கூடவே படுத்துக்‌ கொண்டிருந்து மகளின்‌ விரஹ தாபத்துக்கு. உபசாரங்கள்‌ பண்ணிக் கொண்டிருந்த. திருத்‌ தாயார்‌ படுக்கையைத்‌ தடவிப் பார்த்தாள்‌; எங்கும்‌ தேடிப்பார்த்‌தாள்‌; மகளைக்‌ கண்டிலள்‌ (பேய்‌கொண்டதோ? பிசாசு கொண்டதோ?” என்று சங்கிக்கலாமாயினும்‌ இவளுக்குத்‌ திருக்‌கோளூ ரெம்பெருமானிடத் திலிருந்த ஆவலின்‌ மிகுதியை நன்கு அறிந்தவளாகையாலே அத் திருப்பதிக்கே சென்‌றிருக்க வேணு மென்று அறுதியிட்டு அதை வெளியிட்டுரைக்கும்‌ பாசுரமாகச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி, திருக்கோளூர்‌ சென்று அவ்‌ விடத்து எம்பெருமானோடே நித்ய ஸம்ச்லேஷம்‌ பண்ண வேணுமென்றிருந்த ஆழ்வாருடைய விருப்பம்‌ இத்திருவாய்மொழியாகப்‌ பரிணமித்து விட்டது போலும்‌,
ஆறாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌ -பொன்னுலகாளீரோ -தூதுவிடும் பதிகம்‌ இது, இதில்‌ *வானவர்கோனைக்‌ கண்டு யாமிதுவோ தக்கவாறென்ன வேண்டும்‌* என்ற பாசுரத்தையும்‌ *எங்குச்‌ சென்றாகிலுங்‌ கண்டு இதுவோ தக்கவாறென்மின்‌*' 
என்கிற பாசுரத்தையும்‌ உயிராகக்‌ கொண்டு இத்திருவாய்மொழி பரத்வத்திலும்‌ அந்தர்யாமித்வத்திலும்‌ தூது விட்டயடியாமென்பர்‌,
ஆறாம் பத்து ஒன்பதாம்‌ பதிகம்‌--நீராய்‌ நிலனாய்‌ -இப்படி தூத ப்ரேஷணம்‌ பண்ணியும்‌ எம்பெருமான்‌ வரக்‌ காணாமையாலே அவனைத்‌ தம்முடைய பெரிய ஆர்த்தியோடே கூடத்‌ திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைக்கிறார்‌. தூது விடுவதிற்காட்டிலும்‌ தமது ஆர்த்த நாதமே கார்ய கரமாமென்று கொண்டார்‌,  இப்பதிகத்தின்‌ ஸாரத்தை கூறுகின்ற மணவாள மாமுனிகள்‌ நூற்றந்தாதியில்‌, “நீராகிக்‌ கேட்டவர்கள்‌ நெஞ்சழிய மாலுக்கும்‌ ஏரார்‌ விசும்பில்‌ இருப்பு அரிதாம்‌* என்று அருளிச்‌ செய்கையாலே இப்பதிகத்தில்‌ ஆழ்வாருடைய ஆர்த்தியின்‌ கனம்‌ மிக்கதாய் இருக்கிறது என்பது விளங்கும்‌,
ஆறாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌--உலகமுண்ட பெருவாயா --கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ அபரிமிதமான ஆர்த்தியோடே பரம பதத்தளவும்‌ கேட்கும்படி கூப்பிட்டார்‌. அங்ஙனே கூப்பிடச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்‌ காட்டாமையாலே மிகவும்‌. 
தளர்ந்து நோவுபட்ட ஆழ்வார்‌, அப்பெருமான்‌ ஸ்ரீவைகுண்டத்தி லிருந்து நில வுலகத்தே வந்து ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்‌ பண்ணி! அக்காலத்திலே யிழந்தார்க்கும்‌ இழக்க வேண்டாமல்‌. திருவேங்கட மலையிலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குக்‌களோடு வாசியற எல்லாரும்‌ வந்து ஒருமிடறாக ஆச்ரயிக்கலாம்படி நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை யநுஸந்தித்து அத்திரு வேங்கடமுடையான்‌ திருவடிகளிலே பெரிய பிராட்டியார்‌ முன்னிலையாகத்‌ தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பஞ்‌ செய்து சரணம்‌ புகுகிறார்‌ இத் திருவாய்மொழியில்‌,
ஏழாம் பத்தில்‌ முதல்‌ பதிகம்‌--உண்ணிலாவிய -எம்பெருமான்‌ கீதையிலே *தைவீ ஹ்யேஷா குணம௰ீ மம மாயா துரத்யயா* என்று சொல்லி வைத்து, உடனே *மாமேவயே ப்ரபத்யந்தே மாயாம்‌ ஏதாம்‌ தரந்தி தேர என்றும்‌ சொல்லி வைத்தான்‌. அதாவது--ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால்‌. விழ்க்க வொண்ணாதாப் போலே தான்‌ பிணைத்த மாயப்‌ பிறவிப்‌ பிணையானது ஒருவராலும்‌ கழற்ற வொண்ணாதது என்று முன்னம்‌ சொல்லி வைத்து, என்‌ திருவடிகளையே தஞ்சமாகம்‌ பற்றுவார்‌ யாவரோ, அவர்கள்‌ அந்தப்‌ பிணையை எளிதாகக்‌ கழற்றிக்‌ கொள்ள வல்லார்கள்‌ என்று பின்னைச்‌ சொன்னான்‌. அந்தத்‌ திருமுகப்‌ பாசுர நம்பிக்கையாலே ஆழ்வார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ பெரிய பிராட்டியாரைப்‌ புருஷகாரமாக முன்னிட்டுத்‌ திருவேங்கட முடையான்‌ திருவடிகளிலே ஆர்த்தராய்ச்‌ சரணம்‌ புகுந்தார்‌ மாயப்‌ பிறவி மயர்வறுத்து நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யம்‌ பெறவேணு மென்று. அந்த சரணாகதி பலித்ததில்லை. பரதாழ்வானுடைய சரணாகதிக்கு முன்னே தேவதைகளின்‌ சரணாகதி கிடந்ததாய்‌ அதற்குப்‌ பலன்‌ அளித்த பின்னரே பரத சரணாகதிக்குப்‌ பலன்‌ தர. வேண்டினாப்போலே - இங்கும்‌ ஆழ்வாருடைய சரணாகதிக்கு முன்னே இவ்வுலகில்‌ சில ஸம்ஸாரிகள்‌ சரணாகதி செய்திருப்பர்கள்‌ போலும்‌; நாங்கள்‌ வாழலாம்படி. ஸர்வோத்துங்கமானதொரு பிரபந்தத்தை உபகரித்தருள வேணுமென்று சிலர்‌ சரணாகதி செய்திருந்தார்களாக வேணும்‌) அதுதான்‌ முந்தின சரணாகதி யாகையாலே அதற்குப்‌ பலனளித்த பின்னரே ஆழ்வாருடைய சரணாகதிக்குப்‌ பலனளிக்க வேண்டி எம்பெருமான்‌ தாழ்த்தான்‌. -எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைக்‌ குறையறப்‌ பேசவல்லதொரு பிரபந்தம்‌ திருவவதரிக்கவேணு. மென்று ஏற்கெனவே சிலர்‌ சரணாகதி செய்திருக்க வேண்டுகையாலே முந்துற முன்னம்‌ அதற்குப்‌ பலனளிக்க வேண்டி எம்பெருமான்‌ ஆழ்வாருடைய சரணாகதியைப்‌ பழுதாக்கினனென்னலாம்‌. இவருடைய சரணாகதிக்கு இப்போதே பலன்‌ தந்தால்‌ திருவாய்மொழி அரைகுறையா யன்றோ போயிருக்கும்‌. முந்தின சரணாகதிக்குப்‌ பலன்‌ முற்றிற்றாகாதே. திருவாய்மொழி தலைக்கட்ட வேண்டி ஆழ்வாரை இன்னமும்‌ இவ்விபூதியிலே வைத்தானாயிற்று. -முன்னமே இவர்‌ பாவியேனைப்‌ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ? என்று வயிறெறிந்திருக்கிரரே; அந்த வயிற்றெரிச்சல் தானே  மேலும்‌ தலையெடுத்து *அந்தோ வடியேனுன பாத மகலகில்லே னிறையுமே யென்று சொன்ன வடியேனை, அகற்றுமவற்றின்‌  நடுவே யிருத்தித்‌ துடிக்க வைப்பது தருமமோ வென்று கூப்பிடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌.
ஏழாம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌-- --கங்குலும்‌ பகலும்‌ --கீழே ஆறாம்பத்தின்‌ ஈற்றுத்‌ திருவாய்மொழியில்‌ -- பெரிய பிராட்டியார்‌ முன்னிலையாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே விழுந்து சரணம்‌ புகுந்தவிடத்திலும்‌ ஆழ்வார்‌ தாம்‌ 
எம்பெருமானுடைய திருவடி வாரத்திலே சென்று நிற்கக்‌ கண்டிலர்‌. -இன்னமும்‌ இந்த ப்ரக்ருதி மண்டலத்திலேயே தம்மைக்‌ கண்டார்‌. -சப்தாதி விஷயங்களும்‌ இந்திரியங்களும்‌ நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைத்த போதே தன்‌ பக்கலில்‌ நின்றும்‌ நம்மை அகற்றப்‌ பார்த்தானன்றோ வென்று கருதிப்‌ புலியின்‌ வாயிலே அகப்பட்டாற்‌ போலே கூப்பிட்டார்‌ கீழ்த்‌ திருவாய்மொழியிலே. இந்த ஆர்த்தியை எம்பெருமான்‌ அறியாதவனல்லன்‌; “எப்படியும்‌ இவர்க்கு நாம்‌ பேறு பெறுவிப்பது திண்ணம்‌; இவர்‌ அங்கே போந்து செய்யும்‌ காரியத்தை இங்கே யிருந்து தான்‌ செய்யட்டுமே என்றிருந்‌தான்வன்‌. மக்களைப்‌ பட்டினியிட்டு வைத்தும்‌ வந்த விருந்‌தினரைப்‌ பேணுவாரைப்போலே -இவ்வாழ்வார்‌ தாம்‌ நாலுநாள்‌ நோவுபட்டாராகில்‌ படுகிறார்‌; இவருடைய திவ்வியப்‌ பிரபந்தத்தைக்‌
கொண்டு நாட்டை வாழ்விப்போம்‌' என்றிருந்தான்‌.
இவர்‌ ஒரு நொடிப்பொழுது இங்கிருந்தாலும்‌ எம்பெருமான்‌ றன்னாலும்‌ திருத்த வொண்ணாத ஸம்ஸாரம்‌ எவ்வளவோ திருந்தி வாழும்படியாயன்றோ விருப்பது. அதற்காகவே இவரை இங்கு வைத்தான்‌ அவன்‌. அந்தோ! இக்கொடு வுலகத்தில்‌ இருப்புப்‌ பொருந்தாத நம்மைக்‌ கொண்டா இவன்‌ காரியம்‌ நிர்வஹிக்கப்‌ பார்ப்பது! இந்நிலத்தில்‌ இருப்புப்‌ பொருந்துவார்‌ பலருண்டே; அன்னவர்களில்‌ ஆரேனு மொருவரைக்கொண்டு காரியம்‌ பார்க்கலாகாதோ!”! என்று துடிக்‌கிறார்‌ ஆழ்வார்‌. இங்கு இருப்புப்‌ பொருந்தாதாரைக் கொண்டே காரியம்‌ பார்க்கவேணும்‌ என்பதே எம்பெருமானுடைய பிடிவாத
மாயிற்று. இப்படி எம்பெருமானைப்‌ பிரிந்து துடிக்கவேண்டிய தாயிற்றேயென்று நிலைகலங்கின ஆழ்வார்‌ தாமான தன்மையை யிழந்து தமது பரிதாபத்தைத்‌ தம்‌ வாயாலே சொல்லகில்லா தாராய்‌ தாய்‌ சொல்லவேண்டும்படியான தளர்த்தியுண்டாக, திருத்தாயார்‌ பாசுரமாகச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி. திருத்தாயார்‌ இப்பராங்குச நாயகியைப்‌ பெரிய பெருமாள்‌ [ஸ்ரீரங்கநாதர்‌] திருவடிகளிலே யிட்டு வைத்துக்கொண்டிருந்து இவள்‌ அழுவது தொழுவது மோஹிப்பது பிரலாபிப்பது அடைவுகெடப்‌ பேசுவது நெடுமுச்‌செறிவது அதுவும்‌ மாட்டாதொழிவது ஸ்தப்தையாயிருப்பது முதலியவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச்‌ சொல்லி, இவள்‌.
திறத்திலே நீர்‌ என்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றியிருக்கிறீர்‌?” என்று கேட்கிறபடியாய்ச்‌ செல்லுகிறதாயிற்று.

ஏழாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌ -வெள்ளைச்சுரிசங்கு -கீழ்த்‌ திருவாய்மொழியிலே ஆழ்வாருடைய துயர்‌ பேச்சுக்கு நிலமல்லாமேயிருந்தது, பெரிய பெருமாளூடைய திருக்குணங்களையும்‌ வடிவழகு முதலானவற்றையும்‌ பராங்குசநாயகியான தான்‌ வாய்‌ வெருவியும்‌ திருத்தாயார்‌ சொல்லக்கேட்டும்‌ சிறிது தரிக்கும்படி யாயிற்று, மோஹமும்‌ தெளிந்தது. பின்பு அவனைச்‌ சென்று கிட்டியே தீர்வேன்‌ என்னுமாற்றாமை பிறந்து, *தென்திருப்பே ரெயில்‌ வீற்றிருந்த மகரநெடுங்குழைக்‌ காதணிடம்‌ போகவேணு மென்று புறப்பட, பழையபடியே தோழிமாரும்‌ தாய்மாரும்‌ சூழ்ந்து கொண்டு உனக்கு இத்தனை ப்ராவண்யமாகாது: நமக்கு இது பழியாய்‌ விளையும்‌! என்ன, “நீங்கள்‌ தடை சொல்லுகிறவற்றால்‌ ஒரு பயனுமுண்டாகமாட்டாது. நான்‌ மகர நெடுங்குழைக்காதனாலே நெஞ்சு பறியுண்டேன்‌ ; ஆனபின்பு நானே போனதாகாமே நீங்கள்‌ என்னோடு உடன்பட்டு அங்கே கொண்டுபோய்ச்‌ சேர்க்கப் பாருங்கள்‌? 
என்று, பராங்குச நாயகி தனக்குப்‌ பிறந்த துணிவை அவர்‌களுக்குச்‌ சொல்லுகிறதாகச்‌ செல்லுகிறது இத்திருவரய்மொழி
ஏழாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌- ஆழியெழ -கீழ்த் திருவாய்மொழியிலே ஆழ்வாருடைய பதற்றம்‌ அளவு கடந்திருந்தது. *மண்ரதிணி ஞாலமுமேழ்கடலும்‌ நீள்‌ விசும்புங்‌ ஊழியப்‌ பெரிதாகத்‌ தாங்கொண்ட காதலை வெளியிட்டு, இப்படி 
கரைபுரண்ட, காதலையுடைய நரன்‌ இங்கே யிருக்ககில்லேன்‌, தென்‌ திருப்பேரையில்‌ சென்று சேர்வேனத்தனையென்று சொல்ல, தோழிமார்‌ தாய்மார்‌ முதலானார்‌ இது ஸ்வருபஹானியென்று சொல்லித்‌ தடுத்தவளவிலும்‌ கேட்கமாட்டாதவராய்ப்‌ பதறியே நின்ற ஆழ்வார்‌ புறப்பட்டுச்‌ செல்லப் பார்த்தார்‌. *காலாழும்‌ நெஞ்சழியுங்‌ கண்‌ சுழலும்‌* என்னும்படியான நிலைமையிலே நின்‌றிருந்தாராகையாலே புறப்பட்டுச்‌ செல்ல வலிமை யற்றிருந்தார்‌. வாய் கொண்டு பேசவும்‌ முடியாதபடி பலமழிந்து கிடந்த விவர்க்கு ஒரு வழியாலே பலமுண்டாக்க வேணுமென்று பார்த்தான்‌. எம்பெருமான்‌ தன்னுடைய விஜயாபதான பரம்பரைகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தால்‌ அவற்றைக்‌ கண்டு பலம்‌ மிக்குத்‌ தரித்திருப்பர்‌ என்று கருதி, உலகளந்தது, கடல்‌ கடைந்தது, நிலமிடந்தது, பிரளயத்திலே உலகமுண்டது முதலான அபதானங்களைக்‌ காட்டிக்கொடுத்து, “ஆழ்வீர்‌! இவற்றை யநுஸந்தித்துத்‌ தரித்து வாழும்‌' என்ன, ஆழ்வாரும்‌ அவ்வபதானங்களை ஸமகாலத்திற்போலே கண்டு பாசுரந்தோறும்‌ ஒவ்வொரு அபதானமாகப்‌ பேசித் தரிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, ்‌
ஏழாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- -கற்பாரிராமபிரானை -கீழ்த்திருவாய்மொழியில்‌ எம்பெருமானுடைய சில விஜய சேஷ்டிதங்களைக்‌ காணப்பெற்று அநுபவித்தவாழ்வார்‌ அப்படிப்பட்ட மற்றுஞ்‌ சில சரிதைகளையும்‌ வாயாரப் பேசி, *அந்தோ! இப்படிப்பட்ட பகவத்‌ குணங்களை யநுபவிக்க இட்டுப்‌ பிறந்தும்‌ ஸம்ஸாரிகள்‌ அந்ய பரராயிருப்பது என்னோ வென்று வியந்தும்‌ திருவுள்ளம்‌  நொந்தும்‌ பேசுகிறதாய்த்து இத்திருவாய்மொழி,
ஏழாம்பத்தில்‌ ஆறாம்பதிகம்‌--பாமருமுவுலகும்‌ -கீழ்த்திருவாய்மொழியில்‌ பரோபதேசம்‌ ஸ்பஷ்டமாக இல்லை யாயினும்‌ பரோபதேசத்திலேயே முழுநோக்காயிருக்கும்‌, *கற்பாரிராமபிரானையல்லால்‌ மற்றுங்‌ கற்பரோ *நாரணற்காளன்‌ நியாவரோ 
*கண்ணற்காளன்‌ றியாவரோ*
என்று இங்ஙனே பாட்டுத்தோறும்‌ படர்க்கையாகவே அருளிச்‌ செய்திருந்தாலும்‌ முன்னிலையாக அருளிச்செய்வதிலேயே ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ ஊன்றி யிருக்கும்‌. பாவிகாள்‌! இழந்து போகிறீர்களே!” என்று ஸம்ஸாரிகளை நோக்கிப்‌ பரிதபித்துக்‌ கூறுதலும்‌, *அப்படி இழவாதே கொள்ளுங்‌கள்‌* என்று உபதேசித்ததுமே கீழ்த்திருவாய்மொழிக்கு ப்ரமேயமாயிருக்கும்‌. அங்ஙனே பிறருடைய இழவுக்கு நொந்து பேசின ஆழ்வார்‌ தம்மை நிரூபித்துப்‌ பார்த்தார்‌. பிறர்‌ இழந்திருப்பது நாஸ்திக்யத்தாலே; அப்படிப்பட்ட இழவு தமக்கு இல்லையானாலும்‌,
எம்பெருமானைப்‌ பரிபூர்ணமாக அநுபவிக்கவேணுமென்கிற விருப்பம்‌ தமக்குக்‌ குறையற உண்டாயிருக்கச்‌ செய்தேயும்‌. அவ்வநுபவம்‌ பெறாமையினலேயான இழவு பொறுக்க வொண்ணா திருந்ததனால்‌, தம்முடைய ஆர்த்தியெல்லாம்‌ தோற்றப்‌ பரமபத நாதனுடைய திருச்செவியளவும்‌ படும்படியாகப்‌ பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, அம்மங்கியம்மாள்‌ என்னு மாசிரியர்‌ “இத்திருவாய்மொழியின்‌ சப்த ராசிகளை நாம்‌ வாயாற்‌ சொல்லவும்‌ காதாம்‌ கேட்கவும்‌ அதிகாரிகளே தவிர, இதில்‌ ஆழ்வார்க்குச்‌ செல்லுகின்ற ஆர்த்தி இப்படிப்பட்டதென்று எடுத்‌ துரைக்க நாம்‌ அதிகாரிகளல்லோம்‌”' என்பராம்‌.
 ஏழாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--ஏழையராவி --கீழ்த்‌ திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ கூப்பிட்ட கூப்பீடு பரம பதத்தளவுஞ்‌ சென்று பரவாஸுதேவனுடைய திருச்செவியில்‌ விழுந்திருக்குமே. அது கேட்ட அப்பெருமான்‌ ஆழ்வாரை ஒருவாறு தேற்றுவிக்க  உருவெளிப்பாடு தோன்றச்‌ செய்தருளினன்‌. அதாவது அவனுடைய திவ்யாவயங்களை மாநஸ ஸாஷாத்கார விஷயமாகப்‌ பெற்றாராழ்வார்‌. கண்ணுக்கு ப்ரத்யக்ஷமாகத்‌ தோற்றாமே நெஞ்சுக்கு மாத்திரம்‌ ஸாக்ஷாத்கார விஷயமாகை உருவெளிப்பாடாம்‌. அது இத்திருவாய்மொழியில்‌ செல்லா நின்றது. இது பிராட்டி நிலைமையிலே நின்று பேசும்‌ திருவாய்மொழி. தாய்‌மார்களையும்‌ தோழிமார்களையும்‌ நோக்கி “எம்பெருமானுடைய வடிவழகு எனக்கு ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமாய்த்‌ தோற்றித்‌ தனித்‌தனியும்‌ திரளவும்‌ ஒரு முகஞ்செய்து நலியா நின்றதே! இந்த நலிவுக்கு ஆற்றுவேனா? உங்கள்‌ பேச்சுக்கு அஞ்சுவேனா?” என்று அலமந்து பேசுகிறாளாயிற்று பராங்குச நாயகி, கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ *எங்ஙனேயோ வன்னைமீர்காள்‌* என்கிற திருக்குறுங்குடிப்‌ பதிகமும்‌ உருவெளிப்பாடாய்ச்‌ சென்றது; அதிற்காட்டில்‌ இத்திருவாய்மொழிக்கு வாசி யென்னென்னில்‌; அங்கு பரிதியும்‌ அப்ரீதியும்‌ ஒரு நிகராயிருக்கும்‌; இங்கு அப்ரிதி தலையெடுத்திருக்கும்‌. தொடங்கும்போதே '*இணைக்  கூற்றங்‌ கொலோ!” என்கையாலே பாதகத்வத்தினுறைப்பு தெரியவரும்‌. 
ஏழாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌--மாயா வாமனனே -கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ உருவெளிப்பாட்டாலே நோவுபட்டார்‌, அந்த நோவைப்‌ பரிஹரிக்கு எம்பெருமானால்‌' ஆகாததன்றே. ஆனாலும்‌ சில காரணங்களாலே அவன்‌ திருவுள்ளம்‌ ஒரு ஸமய விசேஷத்தை எதிர்பார்த்திருந்தபடியாலே தாமதிக்கலாயிற்று. அந்தத்‌ திருவுள்ளத்தை ஆழ்வார்‌ தாம்‌ அறியாதவரல்லரே. அறிந்து வைத்தும்‌ ஆறியிருக்கு மியல்வின ரல்லரே. உயிர்‌ துறந்து, முடியவேண்டும்படியான நிலைமை நேர்ந்‌ திருக்கச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ தம்மை முடியவொட்டாதே கடத்துகிறபடியைக்‌ கண்டு மிகவும்‌ ஆச்சரியப்பட்டார்‌. “இப்படி யொரு ஆச்சரியமிருந்தபடியென்‌!' என்று எம்பெருமானையே நோக்கிக் கூற, “ஆழ்வீர்‌! இந்தவொரு ஆச்சரியந்தானோ என்னிடத்தில்‌ நீர்‌ அறிந்தது? என்‌ விசித்திரங்களையெல்லாம்‌ காட்டு 
கிறேன்‌ பாரும்‌' என்று சொல்லி எம்பெருமான்‌ தன்னுடைய விருத்த விபூதித்வத்தைக்‌ காட்டியருள, அது கண்டு ஆழ்வார்‌ விஸ்மிதராய்ப்‌ பேசுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌.
ஏழாம்பத்தீல்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌--என்றைக்கும்‌. -கீழ்த்திருவாய்மொழி சென்றது. எம்பெருமானுடைய ஒரு ஆச்சர்ய சாதுரியத்தாலேயாயிற்று, ஆழ்வார்‌ ஒன்று கேட்க, எம்பெருமான்‌ ஒன்றைச்‌ சொல்லி அவர்‌ கேட்டதை மறப்பிக்குமியல்‌ வினனாகையாலே ஒவ்வொரு. ஸமயத்திலே ஒவ்வொரு குணாவிஷ்காரத்தைப்‌ பண்ணுவதும்‌ அதை ஆழ்வார்‌. அணுபவிக்குமாறு செய்வதும்‌ அத்தாலே சிறிது போது கழியும்படியாகச்‌ செய்வதும்‌ ஆக இப்படியே நடந்து வாராறின்றது. இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று மடிபிடித்துக்‌ கேட்டு உத்தரம்‌ பெற்றேயாக வேணு மென்கிற தீவிரமான ருசி ஆழ்வார்க்கு உண்டாயிற்று, அதனால்‌ எம்பெருமானை வலியப்‌ பிடித்துக் கொண்டு பிரானே! என்னுடைய ஆற்றாமையில்‌ குறை கண்டாயோ? உன்னுடைய சக்தியில்‌ குறை கண்டாயோ? ஏதுக்கு இப்படி யென்னை நலியுமவற்றின்‌ நடுவே வைத்து நலியா நின்றாய்‌? *பொய் நின்ற ஞானமும்‌ பொல்லா வொழுக்குமழுக்குடம்புமாய்‌ இந்நின்ற நீர்மைமிலே மிக்க அருவருப்புக்‌ கொண்ட வென்னை இக்கொடிய நிலத்திலே வைத்துக்‌ குமைப்பது பரம காருணிகனான உனக்குப்‌ பொருந்துமோ? என்ன திருவுள்ளங்கொண்டு என்னையிங்கு இட்டு வைத்திரா நின்ருய்‌? இது தன்னை இன்று நீர் சொல்லியே யாக வேணும்‌' என்றாராழ்வார்‌-அதுகேட்ட எம்பெருமான்‌ *ஆழ்வீர்‌! என்‌ கருத்தை நீர்‌ தாம்‌  அறியீரோ? அறிந்து வைத்தும்‌ அறியாதவர்‌ போலக்‌ கேட்‌கின்றீரே; நமக்கும்‌ நம்‌முடையவர்கட்கும்‌ போது போக்குக்கு உரித்தான செவிக்கினிய செஞ்சொற்களைப்‌ பாடித் தருகைக்காக வன்றோ  நாம்‌ உம்மை இந்நிலத்திலே வைத்திருப்பது; அப்படி யிருக்க ஏன்‌ பதறுகிறீர்‌? என்ன, அதுகேட்ட ஆழ்வார்‌ 'பிரானே; இதுவோ உன்‌ கருத்து? ஸர்வேச்வரனாய்‌ அவாப்த ஸமஸ்த காமனு யிருந்துள்ள உனக்கும்‌ ஒரு குறை யுண்டாகி அக்குறையை என்னாலே தீர்த்துக் கொள்ளப்‌ பார்ப்பதாகிறவிது நன்றாயிருக்கிறது  -உனக்குச்‌ சில ப்ரபந்தங்கள்‌ வேண்டினால்‌ அவையியற்றுவற்கு ஆற்றல்‌ முதலியவை நிரம்பிய வ்யாஸ பராசர வால்மீகி முதலானாரைக்‌ கொண்டும்‌ *இன் கவி பாடும்‌ பரம கவிகளான முதலாழ்வாரைக்‌ கொண்டும்‌ பாடுவித்துக்‌ கொள்ளலாகாதா? நீசனேன்‌ நிறையொன்றுமிலேணைக்‌ கொண்டு பாடுவித்துக்‌ கொள்ளத்‌ திருவுள்ளம்‌ கொண்டபடி என்னே! இது என்ன நீர்மை! இது என்ன வாத்ஸல்யம்‌! “என்று பெரு நன்‌றி பாராட்டி, “ இதற்கீடாக நான்‌ செய்வதொரு கைம்மாறு கண்‌டிலேனே!' எண்று தடுமாறுவதாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி. 
ஏழாம்பத்தல்‌ பத்தாம்‌ பதிகம்‌--இன்பம்‌ பயக்க எம்பெருமான்‌ தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவிததுக கொண்ட பேருதவிக்குக்‌ கைம்மாறு ஒன்றுங்‌. காணாமே தடுமாறுகிறார் கீழ்த்திருவாய்மொழியில்‌. இப்படிப்பட்ட இவருடைய தடுமாற்றத்தை யாற்றுதற்காக எம்பெருமான்‌, *ஆழ்விர்‌! நீர்‌ ஏன்‌ தடுமாறுகின்‌றீர்‌? நீரும்‌ ஒன்று செய்து நெஞ்சார்ல்‌ திர்ந்தவராம்படி பண்ண நாம்‌. கருதியிருக்கின்றோம்‌; பண்டு திருவயோத்யையிலே நாம்‌ குசலவர்கள்‌ வாயாலே ஸ்ரீராமாயணம்‌ செவி சாத்தினோமென்று கேள்விப்பட்டிருப்பீரே; அப்படியே திருவாறன்விளையிலே திருவாய்‌ மொழி கேட்பதாகப்‌ பாரித்திருக்கின்றோம்‌. ஆனால்‌ ஸ்ரீராமாயணம்‌ கேட்டபோது நாம்‌ பிராட்டியைப்‌ பிரிந்திருந்தோமாதலால்‌ தனியே யிருந்து கேட்டோமென்று ஒரு குறையுண்டு. இப்போது அப்படி யன்றிக்கே நாமும்‌ நம்‌ பெண்டுகளுமாயிருந்து கேட்க அறுதி யிட்டிருக்கின்றோம்‌; நீர்‌ அங்கே வந்து திருவாய்மொழி கேட்பித்து ஒருவாறு நெஞ்சாறல்‌ தீரப்பெறலாமே' யென்று பணிக்க, அது கேட்ட ஆழ்வார்‌, “என்னைக்‌ கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்‌ கொண்ட உபகாரத்தளவோடு நில்லாமல்‌ அது கேட்கவும்‌ பாரியா நின்றானே! இது என்ன மஹோபகாரம்‌!' என்று உவகை தலை மண்டை கொண்டு அந்தத்‌ திருவாறன்விளைத்‌ திருப்பதியிற்‌ சென்று திருவாய்மொழி கேட்பித்தலாகிற கைங்கர்யத்தைச்‌ செய்யப்‌ பாரிக்கிறார்‌ இத்திருவாய்மொழியினாலே. 
எட்டாம் பத்தில்‌ முதல் பதிகம்‌ - தேவிமாராவார்‌ -கீழ்ச் சென்ற பதிகத்தில்‌, திருவாறன்விளை யென்னு்‌ம்‌ திருப்பதியிலே சென்று அங்கு எம்பெருமான்‌ பெரிய பிராட்டியாரும்‌ தானுமாகத்‌ திருவாய்மொழி கேட்கைக்கு விருப்பத்தோடிருக்கிற விருப்பிலே நாம்‌ திருவாய்மொழி கேட்பித்து மற்றுஞ் சில கைங்கரியங்களையும்‌ பண்ணி யநுபவிப்போமென்று பாரித்தார்‌ : அது பாரிப்பளவில்  நின்‌றதத்தனையொழிய நினைத்தபடி நிறைவேறப்‌ பெற்றதில்லை. அதனால்‌ ஆழ்வார்க்கு எம்பெருமானுடைய சில திருக் குணங்களில்‌ அதிசங்கை தோன்ற, அதனை வெளியிடுவது இத்திருவாய்மொழி, பிராட்டிமார்‌ அருகே யெழுந்தருளியிருக்க, நித்யஸூரிகளுமுண்டா யிருக்க, நினைத்தபடி காரியஞ்செய்து தலைக்கட்டவல்ல சக்தியும்‌ அவனுக்குண்டாயிருக்க, அடியார்கள்‌ விரும்பினபடி திருமேனிகளைப்‌ பரிக்ரஹித்து வந்து உதவுமியல்வினனாயுமிருக்க, தமக்கும்‌ அபிறிவேசத்தில்‌ குறையில்லாதிருக்க, நினைத்த பரிமாற்றம்‌ பெறாதொழியவே ஆழ்வார்க்கு வெறுப்பு உண்டாயிற்று : அதனால்‌, எம்‌பெருமானையே நோக்கி * பிரானே ! நான்‌ நினைத்திருப்பது மருள்‌ கொல்‌ ? அடியார்களுக்கு நீ வசப்பட்டவனென்றும்‌ எல்லாப்‌ பொருள்‌களும்‌ நீ யிட்ட வழக்கென்றும்‌ இப்படிச்‌ சில குணங்களை நான்‌ உன்னிடத்தில்‌ இருப்பனவாகக்‌ கொண்டிருந்தேன்‌ : அக் கொள்கை உண்மை யன்றோ வென்று இப்போது அதிசங்கிக்க நேர்கின்‌றது : நானொருவன்‌ தோன்றி உனக்கு இவை பொய்யாய்ப்‌ போகின்‌றன போலும்‌ ! என்று விண்ணப்பஞ்‌ செய்கிறார்‌. அசோகவனத்திலலே  எம்பெருமானுடைய திருக் குணங்களைச்‌ சிந்தனை செய்தே தரித்‌திருக்க வேண்டியவர்கள்‌ அவற்றில்‌ அதி சங்கை பண்ணினால்‌ பிறகு ஜீவித்திருக்க வழியில்லாமையாலே-பிராட்டி * க்யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராசுவ:, ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோச: சங்கே மத்பாக்ய ஸம்க்ஷயாத்‌ ” என்று பெருமாளுடைய குணங்களிலே. அதிசங்கை பண்ணினாற்போலுமிது. “ கோவிந்தன்‌ குணம்பாடி -- ஆவிகாத்திருப்பேனே ” என்கிறபடி  * இங்ஙனே அதிசங்கை கொண்ட ஆழ்வாரை இனி நாம்‌ இழக்க நேருமோ ? என்று எம்பெருமான்‌ அதிசங்கை பண்ணி * ஆழ்வீர்‌ ! இப்படியும்‌ நீர்‌ அதிசங்கை கொள்ளத்‌ தகுமோ ? நாம்‌ உமக்கு ஒன்றும்‌ செய்யவில்லையா ? எவ்வளவு செய்‌திருக்கிறாமென்பதை நீர்‌ தாமே ஆலோசித்துப் பாரும்‌ : இவ்வளவு செய்த நாம்‌ மேற்‌ செய்ய வேண்டியதையும்‌ அடைவே செய்வோங்‌ காணும்‌ : வீணாக அதிசங்கை கொள்ள வேண்டா என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ண, ஆழ்வாரும்‌ தேறி நின்று அவற்றை யநுஸந்தித்து இனியராகிறார்‌. 
எட்டாம்பத்தில்‌ இரண்டாம் பதிகம்‌-நங்கள்‌ வரிவனளை -எம்பெருமான்‌ ஆச்ரித பரதந்திரன்‌, ஸர்வ நிர்வாஹகன்‌ என்றிருந்தோம்‌ ; இவையும்‌ நம்மைத் தோற்றிப்‌ பொய்யாகிறதோவென்று அவன்‌ குணத்திலும்‌, ஸ்வரூபத்திலும்‌ அதிசங்கை பண்ணின ஆழ்வாரை ஒருவாறு தேற்றித்‌ தெளிவித்தானெம்பெருமான்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌, உண்டான அதிசங்கை தீர்ந்தவளவே யல்லது தமக்கு அபேஷிதமான பாஷ்ய ஸம்ச்லேஷத்தைப்‌ பெற்றாரல்லரே ஆழ்வார்‌, -அதனால்‌ ஆழ்வார்க்கு மற்றோர்‌ அதிசங்கையுண்டாயிற்று ; அதாவது ஸம்ஸாரத்திலே நமக்கு நசையில்லையென்று நாம்‌ எண்ணி யிருக்கின்றோமானாலும்‌ *உள்ளுவாருள்ளிற்றெல்லா முடனிருந்தறியும்‌ ஸர்வவேச்வரனுடைய திருவுள்ளமறிய நமக்கு ஸம்ஸார ருசி யிருக்கின்றது போலும்‌. இல்லையாகில்‌ எம்பெருமான்‌ நம்மை உபேஷிக்க ப்ரஸக்தியிராதே; உபேஷிக்கக்‌ காண்கிறோமாதலால்‌,  நமக்கு ஸம்ஸார ருசி இன்னமும்‌ அறவில்லையென்‌று எம்பெருமான்‌ திருவுள்‌ளம்‌ பற்றியிருக்கக்கூடும்‌. ஸர்வஜ்குமன அவன்‌ அங்ஙனே திரு வுள்ளம்‌ பற்றினால்‌ அது பொய்யாக இருக்கமாட்டாதே. நம்மையுமறியாமல்‌ நமக்கு ஸம்ஸாரருசி உள்ளத்தினுள்ளே உறைகின்‌ றதோ என்னவோ ? என்கிற சங்கை உண்டாயிற்று. அதனால்‌ ஆத்மாத்‌மீயங்களில்‌ தாம்‌ நசையற்றபடியை எம்பெருமான்‌ திருவுள்ளத்திலே படுத்த நினைத்தாராழ்வார்‌ ; அதை நேராக விண்ணப்பஞ்‌ செய்யாதே தோழியோடு ஸம்வாதமாகிற அந்யாபதேச முகத்தாலே அறிவிக்கிற படியாயிற்று இத்திருவாய்மொழி. *காலம்‌ பல சென்றுங்‌ காண்பதாணை உங்களோடெங்க எரிடையில்லையே என்றும்‌ *பாதமடை வதன்‌ பாசத்தாலே மற்ற வன்பாரங்கள்‌ முற்றவிட்டு* என்றுமுள்ள பாசுரங்கள்‌ இத்திருவாய்‌ மொழிக்கு உயிரானவை. இத்திருவாய்‌ மொழியில்‌ அந்யாபதேச ப்ரகாரமிருக்கிறபடி யென்னென்னில்‌;- ஸர்வேச்வரனோடு கலந்து மிரிந்தாளொரு பிராட்டி, மறுபடியும்‌ அவன்‌ தானே வரக்கண்டிருக்கை தவிர்ந்து தானே புறப்படுவாளாய்‌ அவனிருந்த தேசத்தேறப்‌ போகமுயல், இது கண்ட தோழிமார்‌ முதலானோர்  * உனக்குப்‌ படி கடந்து புறப்படுகையாகிறவிது ஆகாது காண்‌ ' என்று ஹிதஞ்‌ சொல்லி மீட்கப் பார்க்க; அவளைக்‌ குறித்து, ப்கவத்‌ விஷயமொன்று தவிர மற்ற எதிலும்‌ தனக்கு நசையில்லாத படியைச்‌ சொல்லி அவர்களது பேச்சுக்கு இணங்க முடியாமை கூறுகிறது. 
எட்டாம்பத்தில்‌ முன்றாம்பதிகம்‌ - அங்குமிங்கும்‌ -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ பத்தாம்‌ பாட்டில்‌ *ஓர்‌ கோலரில நன்‌னெடுங்குன்றம்‌. வருவதொப்பான்‌* என்று எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலக்ஷண்யத்தை யநுஸந்தித்தாரே ; அவ்வநுஸந்தானம்‌ திருவுள்ளத்திலே மிக ஊன்‌றியிருக்க- இப்படிப்பட்ட ஸெளற்தர்ய ஸெளகுமார்யங்களுக்குக்‌ கொள்கலமான இவ்வடிவுடனே ப்ரயோஜறாந்தர பரரான ப்ரதிகூலர் வர்த்திக்கிற இந்த நிலத்திலே தனியே வந்து உலாவுகின்றானே?” பரிவர்‌ ஒருவருமில்லையே, -என்ன தீங்கு நேரிடுமோ ! என்று ஆழ்வார்‌ வயிறெரிற்து பயப்பட, -அதற்கு எம்பெருமான்‌ “* ஆழ்வீர்‌ ! நமக்குப்‌ பரிகைக்கு முழுஷுக்‌களும்‌ முக்தரும்‌ நித்யரும்‌ உண்டு ; ஒரு குறையுமில்லை; வீணாக ஏதுக்கு அஞ்சுகின்றீர்‌ - அஞ்சவேண்டா  என்றருளிச்செய்ய, ஆழ்வார்‌ தாம்‌ ஒருவாறு அச்சம்‌ திர்ந்தவரான படியை இத்திருவாய்மொழியிலே அருளிச்‌ செய்கிறார்‌. இதில்‌, முதலில்‌ *ஆளுமாளாராழியுஞ்‌ சங்குஞ்‌ சுமப்பார்தாம்‌, வாளும்‌ வில்லுங்கொண்டு பின்‌ செல்வார்‌ மற்றில்லை* என்ற பாசுரத்தை நோக்குமிடத்து ஆழ்வார்‌ பரிந்து அஞ்சினமை தெரியும்‌ ; மேலே *கலக்கமில்லா நல் தவ முனிவர்‌ கரை கண்டோர்‌ துளக்கமில்லா வானவரெல்லாந்‌ தொழுவார்கள்‌* என்ற பாசுரத்தை நோக்குமிடத்து ஒருவாறு மனம்‌ தேறினமை தெரியவரும்‌. 
எட்டாம்பத்தில்‌ நான்காம்பதிகம்‌ - வார் கடா வருவி --எம்பெருமானோ ஸம்ஸார மண்டலத்திலேவந்து அவதரித்துத்‌ தனியே உலாவா நின்றான்‌ ; ஸம்ஸாரிகள்‌ தங்கள்‌ தங்கள்‌ அபேஷிதம்‌ பெற்று அகன்று போமவர்களே யொழிய இவனுக்கு ரகைஷ தேடிப்‌ பரிகிறவர்களாக இல்லையே!, இவனுக்கு என்‌ வருகிறதோ  என்று. அஞ்சின ஆழ்வாருடைய அச்சம்‌ கீழ்த் திருவாய்மொழியில்‌ ஒருவாறு தீர்ந்திருக்கச்‌ செய்தேயும்‌ இன்னமும்‌ இவர்க்கு நம்பக்கல்‌ பரிவின்‌ கனத்தாலே அச்சம்‌ மறுவலிடக் கூடுமென்றெண்ணின எம்‌பெருமான்‌ * ஆழ்வீர்‌ ! பிரதிகூலர்க்குக்‌ கணிசிக்க வொண்ணாதபடி அரணுடைத்தான திருச்செங்குன்றூர்த்‌ திருச்சிற்றாற்றிலே மஹா சத்திமான்களான மூவாயிரம்‌ வேதியர்கள்‌ பரிந்து கோக்க அவர்களுடன்‌ நாம்‌ சேர்ந்து வாழ்கிறபடி பாரீர்‌ ; நமக்கு அஸாதாரணமான வீர்ய பராக்ரமாதி குண ஸம்ருத்தியையும்‌ பாரீர்‌ என்று அவற்றைக்‌ காட்டிக்கொடுக்க, அதனால்‌ அச்சம்‌ நன்றாகக்‌ கெட்டு அவனது வடிவழகிலே நெஞ்சை வைத்து அநுபவித்து உகந்தபடியைத்‌ தெரிவிப்‌பதாம்‌ இத்திருவாய்மொழி, ஸ்ரீ விபீஷணாழ்வான்‌ பெருமாள்‌ திருவடிகளிலே வந்து சரணம்‌ புக, இவனைச்‌ சேர்த்துக்கொண்டால்‌ பெருமாளுக்கு என்ன அவத்யம்‌ வருமோவென்று கலங்கின ஸுக்ரிவ மஹாராஜாதிகளுக்கு அச்சந்தீருமாறு பெருமாள்‌ *பிசாசாந்‌ தாஈவாந்‌ யக்ஷாந்‌ ப்ருதிவ்யாஞ்சைவ ராக்ஷஸாம்‌, அங்குல்யக்ரேண தாந்‌ ஹர்‌யாம்‌ இச்சந்‌ ஹரிகணேச்வர* என்று தம்முடைய மிடுக்கைக்‌ காட்டினது போலாமிது. அப்படி மிடுக்கைக்‌ காட்ட. அச்சந்தீர்ந்து *கிமத்ர சித்ரம்‌ தர்மஜ்ஞு லோகறாத ஸுகாவஹ* என்று மஹாராஜர்‌ இனியரானாப் போலே ஆழ்வாருமினியராகிறாரிங்கு, 
எட்டாம்பத்தில்‌ ஐந்தாம்பதிகம்‌ - மாயக்கூத்தா -கீழே *அங்குமிங்கும்‌, *வார்கடாவருவி என்கிற இரண்டு திரு வாய்மொழிகளாலும்‌ எம்பெருமானுக்கு ரகைஷதேடி ஸமாஹிதராய்‌ச்‌ நின்றார்‌. *வார்கடாவருவியில்‌, -திருச்செய்ய கமலக்கண்ணும்‌. செவ்வாயும்‌ செவ்வடியும்‌ செய்யகையும்‌ திருச்செய்ய கமலவுந்தியும்‌ செய்ய கமலை மார்பும்‌ செய்யவுடையும்‌ திருச்செய்ய முடியுமாரமும்‌ படையும்‌ திகழ என்‌ சிந்தையுளானே ” என்று உள்ளம்‌ பூரித்து உடல்‌ பூரித்து அறுஸந்தித்த வடிவழகு திருவுள்‌ளத்திலே வேருன்‌றி யிருந்தபடியாலே அவ்வடிவழகைக்‌ கண்ணாரக்‌ கண்டு பாஹ்யஸம்சலேஷம்‌ பண்ணவேணுமென்று அபேகைஷ. பிறந்து, அது பெறாமையாலே * கீழ்ப்‌ பல திருவாய்மொழிகளிலும்‌ பட்ட கலசங்களும்‌ இதற்கு ஈடல்ல ; ஆழ்வாருடைய கலேசங்களிலே இது நிகரற்ற க்லேசம்‌' என்னும்படியாக நொந்து காட்டுத்தீ கதுவினாரைப்போலே தப்தராய்‌, தம்மிற்காட்டிலும்‌ ஆகுலங்களான கரணங்களை யுடையராய்‌ “என்‌ விடாயெல்லாம்‌ தீரும்படி திவ்யாவயவங்களோடே வரவேணும்‌, அழகிய திருவபிஷேகத்தோடே வர வேணும்‌, அகிழய வடிவோடே வரவேணும்‌, மேகம்‌ போலே வர வேணும்‌, உதய காலத்து ஆதித்யனைப்‌ போலே பெரிய புகரோடே வரவேணும்‌ ' என்றிப்படி ௯ப்பிட்டு, பின்னையும்‌ அவன்‌ வந்து, முசுங்காட்டக்‌ காணாமையாலே * நாம்‌ இந்த க்லேசத்தோடே முடிந்து போமித்தனை யன்றோ ? என்று இழவோடே தலைக்கட்டுகிறது இத்‌ திருவாய்மொழி, 
எட்டாம்பத்தில்‌ ஆறாம்பதிகம்‌ - எல்லியுங்காலையும்‌ -கீழே *மாயக்கூத்தா வென்கிற பதிகத்திலே ஆழ்வார்க்குண்‌டான விடாய் பேச்சுக்கு நிலமன்று என்‌று நினைப்போம்‌ நாம்‌ ; உண்மையில்‌, ஆழ்வார்‌ விஷயத்தில்‌ எம்பெருமானுக்குண்டான விடாய் தான்‌ 
அபரிமிதமானது.
“இப்படி கூப்பிடுகிற ஆழ்வார்க்கு உதவப்‌ பெற்றிலோமே!” என்று மிகவும்‌ தபித்‌து ஆகுலனாய்‌ லஜ்ஜையுமுடையனாய்‌ இனி நாம்‌ என்ன செய்வதென்று ஆலோசித்தான்‌ ; உடனே சென்று நாம்‌ கடுக முகங்காட்டினோமாகில்‌ ஆழ்வார்‌ ஸந்தோஷாதிசயத்தாலே உடலுமுயிருமுக்கி சிதிலராய்ப்போவர்‌ ; ஆகவே ஸந்தோஷத்தைப்‌ பொறுப்பித்து உளராக்கிப்‌ பரிமாறவேணும்‌' என்று
துணிந்து, பதினாலாண்டு பிரிவாலே நொந்த பரதாழ்வானைத்‌ தரிப்‌பித்து முகங்காட்டுகைக்காகத்‌ திருவடியை முன்னே செல்லவிட்டுத்‌ தான்‌ பரத்வாஜ மஹர்ஷியின்‌ ஆச்ரமத்திலே யிருந்தாப்‌ போலவும்‌ பாண்டவர்களுக்காகத்‌ தூது போகிற போது ப்ரேம பரவசர்களான விதுரர்‌ முதலானோருடைய பரிதியை ஸாத்மிப்பிக்கைக்காக *குசஸ்‌ தலே நிவஸதி ஸச ப்ராதரிஹேஷ்யதி* என்‌றபடியே குசஸ்தலத்திலே தங்கியிருந்து மறுநாள்‌ ஹுஸ்திநாபுரத்திலே யெழுந்தருளினாப்‌ போலவும்‌, ஆழ்வார் தம்மோடே ஸம்ச்லேஷிக்க விரும்பிய ஸர்வேச்வரன்‌ தம்முடைய ப்ரீதியை ஸாத்மிப்பித்துத்‌ தம்மோடே கலக்கைக்காகத்‌ திருக்கடித்தான மென்னும்‌ மலைநாட்டுத்‌ திருப்பதியிலே யெழுந்தருளி யிருந்தான்‌ ; இதனை யறிந்த ஆழ்வார்‌ இப்படியாக எம்பெருமான்‌ தம் பக்கலில்‌ பண்ணுகிற வ்யாமோஹத்தை அநுசந்தித்‌து இனியராய் அத்தைப்‌ பேசி யநுபவிக்கிறார்‌ இத்திருவாய்‌ மொழியில்‌.
எட்டரம்பத்தில்‌ ஏழாம்பதிகம்‌ - இருத்தும்‌ வியந்து. -இத்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ பேறு பெற்றுக்‌ களிக்கும்‌ விதம்‌ பரம விலக்ஷணமாகவுள்ளது. இவ்விஷயத்தில்‌ இப்பதிகத்‌தோடொத்த பதிகம்‌ இத்திருவாய்மொழி யாயிரத்தினுள்‌ வேறில்லை யென்று சொல்லலாம்‌. எம்பெருமானைப்‌ பெறுவதில்‌ ஆழ்வாருடைய விருப்பம்‌ அதிகமா ? ஆழ்வாரைப்‌ பெறுவதில்‌ எம்பெருமானுடைய விருப்பம்‌ அதிகமா ? என்று ஆராய்ந்து பார்க்குங்கால்‌, எம்பெருமானுடைய விருப்பமே அதிகமென்று தேறி நிற்கும்‌. *ஜ்ஞாரீது ஆத்‌மைவ மே மதம்‌* என்றும்‌ *வாஸுதேவஸ்‌ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:* என்றும்‌ சொல்லி வைத்திருக்கிற எம்பெருமான்‌ படியைப்‌' பார்த்தால்‌, ஒரு சேதநனைப் பெறுகை எம்பெருமானுக்குப்‌ பரம லாபமாகக்‌ காணாரின்றதன்றோ. ஆகவே ஆழ்வாரைப்‌ பெறுகையே எம்பெருமானுக்குப்‌ பரம லாபமாகையாலும்‌, அதற்குரிய கருவி பண்ணுவானும்‌ அவனே யாகையாலும்‌, அவன்‌ தானும்‌ ஆர்த்தியே செப்பேடாக வந்து உதவுமவனாகையாலும்‌ தானே அர்த்தியாய்த்‌ தன் பேறாக வந்து கலந்தான்‌. அதனைக்‌ கண்ட ஆழ்வார்‌ * அந்தோ! நம்மோடு கலப்பதற்கு எம்பெருமான்‌ இரப்பாளனாயிருக்க, நாம்‌ இரப்‌பாளராய்க்‌ கூப்பிட்டோமே!” என்று வருந்தி  ஒரு ஸம்ஸாரி சேதநன் பக்கலிலே ஸர்வேச்வரன்‌ தான்‌ செய்தருளும்‌ விஷயீகாரம்‌ என்னே!” என்று ஈடுபடுகிறாராய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்‌மொழி. 
எட்டாம்பத்தில்‌ எட்டாம்பதிகம்‌ - கண்கள்‌ சிவந்து -*மாயக்கூத்தாவென்கிற திருவாய்மொழியில்‌ ஆழ்வாருடைய விடாய்‌ அபரிமிதமாகவன்றோ இருந்தது; அந்த விடாயெல்லாம்‌ ஆறும்படி எம்பெருமான்‌ வந்து கலந்து தன்‌ விடாயுந்‌ தீர்ந்து 
இவரைப்பெற்ற பேற்றாலே பரமப்ரீதனாயிருந்தான்‌. கீழ்த்திருவாய்‌ மொழியில்‌ ஆழ்வார்‌ தம்முடைய பரமானந்தத்தைப்‌ பேசும்போது “ சிறியேனுடைச்‌ சிந்தையுள்‌ ” என்றாரே ; அந்தச்‌ சொல்லை எம்‌ பெருமான்‌ மிகவும்‌! ஆராய்ந்தான்‌. * அந்தோ! இவர்‌ சிறியேனென்று தம்முடைய நைச்சியத்தை யநுஸந்திக்கத்‌ தொடங்கி விட்டார்‌. ஏற்‌கெனவே *வளவேமுலகு பதிகம்‌ முதலானவற்றில்‌ தலைகாட்டி ஒருவாறு மடிந்த நைச்யாநுஸந்தானம்‌ மறுபடியும்‌ தலைகாட்டத்‌ தொடங்‌கிற்றுப்போலும்‌ ; இன்னமும்‌ இது முற்றிவிட்டால்‌ பிறகு பரிஹரிப்‌பது அரிதாகுமே ; ஆதலால்‌ இப்போதே அதனை வேரறக்‌ களைந்திடுதல்‌ நன்று * என்றெண்ணி இவர்‌ நைச்யத்திற்கு ஆஸ்பதமாக நினைத்திருக்கிற ஆத்ம வஸ்‌துவினுடைய பெருமையை இவர்‌ நெஞ்சிலே படுத்த வேணுமென்று பார்த்து அது செய்தருளுகிறான்‌ ; அது செய்யுமிடத்தில்‌ * உம்முடைய ஆத்ம ஸ்வரூபமிருக்கும்படி காட்டுகிறேன்‌ வாரீர்‌ என்றால்‌ * மின்மினி போலே யிருக்கிறவிதனை நீ காட்டிடவும்‌ நான்‌ காணவும்‌ வேணுமோ ? என்று சொல்லி இசையாதொழிவரிவர்‌ ; மேலும்‌ *அவ்வாயன்றி யானறியேன்‌ மற்றருளே* என்று இவர்‌ நம்‌ வடிவழகிலே துவக்குண்டிருக்கிறாராகையாலே -நம்மை முன்னிட்டு அவ்வாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக்‌ காட்டிக்‌ கொடுப்போம்‌ என்று பார்த்து வாரீர்‌ ஆழ்வீர்‌ ! நம்முடைய வடிவழகிருக்கிறபடி. கண்டீரே ; நம்மைக் காணுங்‌ காட்சியிலே உம்மையும்‌ காணலாம்‌ படியிருக்கின்‌றது காணும்‌ ' என்று சொல்லித்‌ தன்னுடைய வடிவழகை முந்துற முன்னம்‌ அநுபவிப்பித்து, தனக்குத்‌ திருவாபரணங்கள் போலே மிகவும்‌ போக்யமுமாய்‌ அத்யந்த சேஷமுமாயிருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக்‌ காட்டிக் கொடுக்க, அதனை யநுபவித்துப்‌ பேசுகிற தாயிற்று இத்திருவாய்மொழி,
எட்டாம்பத்தில்‌ ஒன்பதாம் பதிகம்‌-கருமாணிக்கமலை -இத்திருவாய்மொழி தோழி பாசுரமாய்ச்‌ செல்லுகிறது. திருவாய்‌ மொழியாயிரத்தில்‌ தோழி பாசுரமாக வரும்‌ பதிகங்கள்‌ மூன்று ; தீர்ப்பாரை யாமினியும்‌ * துவளில்‌ மாமணி மாடமும்‌ * இக்கருமாணிக்க மலையும்‌, இம்மூன்று பதிகங்களிலும்‌ ப்ரணவத்தில்‌ உகாரத்தின்‌ பொருளான அநந்யார்ஹத்வம்‌ வெளியிடப்படுகிறது. *தீர்ப்பாரை யாமினியில்‌ வெறியாடலை விலக்கின முகத்தாலே அது வெளியிடப்‌பட்டது, *துவளில்‌ மாமணிமாடத்தில்‌ * இனியுமக்காசையில்லை விடுமினோ “ என்று பலகாலும்‌ தாய்மாரை நோக்கிச்‌ சொல்லுகிற முகத்தாலே அது வெளியிடப்பட்டது ; இப்போது இத்திருவாய்‌ மொழியில்‌ அது தன்னை வெளியிடுகிறவிதம்‌ கேண்மின்‌ ; பராங்குச நாயகியாகிற தலைமகள்‌ பதிஸம்யோகத்திற்குரிய வயது முதிர்ந்து 
நின்‌ற வளவிலே தாய்‌ தந்தையர்‌ ஸ்வயம்வரம்‌ கோடித்து நகரத்திலே மணமுரசு அறைவிக்க, அஃதறிந்த தோழியானவள்‌ *: மானிடவர்க்‌கென்று பேச்சுப்படில்‌ வாழகில்லேன்‌ " என்றும்‌, “ அன்றிப்பின்‌ மற்றொருவர்க்‌ கென்னைப்‌ பேசலொட்டேன்‌ மாலிருஞ்சோலை யெம்மாயற் கல்லால்‌ * என்றும்‌ திண்ணிய அத்யவஸாயங் கொண்டிருக்கிற இப்பெண்பிள்ளை, இப்படி தாய்‌ தந்தையர்‌ கோடிக்கிறபடியை யறிந்தால்‌ கிலேசப் படுவளே யென்று துடித்து, இப்பெண் பிள்ளைக்குக்‌
குட்ட நாட்டுத்‌ திருப்புலியூர்ப்‌ பெருமானோடே ஸம்ச்லேஷம்‌ பிரவ்ருத்த மானபடியைத்‌ தோழி தானறிந்திருந்தும்‌ அதை வெட்டவெளிச்சமாகத்‌ தாய்மார்க்குத்‌ தெரிவித்தால்‌ நம்மேல்‌ சீற்ற முண்டாகும்‌; தெரியாதிருந்தால்‌, தலைவியும்‌ லஜ்ஜையாலே வாளரவிருப்பளாகையாலே விபரிதமான கோடிப்பு நிறைவேறி அனர்த்தமாகும்‌ ; ஆகவே இப்போதொரு ஸதுபாயம்‌ செய்யவேண்டும்‌ ; நமக்கும்‌ ஏற்கெனவே இது தெரியாதுபோலே காட்டிக்கொண்டு அப்போது தான்‌ நிரூபித்து
அறிந்து கொள்வது போல்‌ அபிநயித்து ஒருவாறு உண்மையை வெளியிட்டுவிடுவோம்‌ என்று துணிந்து, 'அம்மனைமீர்‌ ! நம்‌ பெண்‌ பிள்ளையின்‌ நிலைமைகளைக்‌ காணுமிடத்து இவளுக்குத்‌ திருப்புலியூர்ப் பெருமானோடே ஸம்ச்லேஷம்‌ கேர்ந்து விட்டதுபோல்‌ தெரிகிறதே, உங்களுடைய கோடிப்புக்கு ப்ரஸக்தியில்லை போல்‌ காண்கிறதே, என்று மத்யஸ்தோக்தியாகச்‌ சொல்லி நிற்கிறாள்‌ ; இவ்வழியாலே ஆழ்வாருடைய அநந்யார்ஹத்வம்‌ வெளியிடப்படுகிறதாயிற்று. கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யம்‌ சோதிக்கப்பட்ட தாகையாலே அதை நன்கு வடிக் கட்டுகிறது இத்திருவாய்மொழி
எட்டாம்பத்தில்‌ பத்தாம்பதிகம்‌ - நெடுமாற்கடிமை -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ அநர்யார்ஹசேஷத்வம்‌ அறுதியிடப்‌ பட்டதன்றோ ; இந்த ப்ரஸங்கத்திலே பாகவத சேஷத்வம்‌ வடிக்கட்‌டின வேஷமாகச்‌ செல்லப்படவேண்டியதுண்டே ; அது, சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்‌,  கீழ்ப்பதிகத்தின்‌ முடிவு பாட்டில்‌ தொண்டன்‌ சடகோபன்‌* *தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன் என்றாரே; அது தன்னை விசதமாக்குகிறது இங்கு, ஒருவன்‌ ஒரு வஸ்துவினிடத்தில்‌ அன்பு வைத்தால்‌ அவ்வன்பு அளவற்றதுமாயிருந்தால்‌ அவ்வன்பு அவ்வஸ்துவோடே நின்று விடாமல்‌ அதனோடு ஸம்பந்த ஸம்பந்தம்‌ பெற்ற வஸ்துக்‌களிலும்‌ பெருகிச்‌ செல்லுமென்பைத அனைவரும்‌ தம்‌ தம்‌ அநுபவத்தாலறிவர்‌, அப்படியே பாகவத பக்தியென்பது பகவத்‌ பக்தியின்‌ எல்லை நிலமாக வுண்டாமது, பகவத் பக்தியின்‌ உறைப்‌ பையே பாகவதபக்தி வெளிப்படுத்தும்‌. ஸ்வாமியினுடைய பாதுகைகளிலே நாம்‌ ஆதரம்‌ வைத்து அவற்றைக்‌ கண்களில்‌ ஒற்றிக்‌ கொள்வதும்‌, தலைமீது அணிந்து கொள்வதும்‌, அலம்பித்‌ தீர்த்தம்‌ பருகுவதும்‌ செய்கிறோம்‌ ; இதனால்‌ நமக்கு ஸ்வாமியிடத்துள்ள பக்தி அபாரமானது என்பதன்றோ வெளியாகின்றது. அதுபோலவே இங்‌கும்‌ * அவனடியாரடியே கூடுமிது வல்லால்‌ ' இத்யாதிகளாலே பாகவத சேஷத்வாதிசயத்தைப்‌ பேசுவதெல்லாம்‌ பகவச்‌ சேஷத்வத்‌தின்‌ உறைப்பையே பேசினபடியாகும்‌. திருமந்திரத்தில்‌, அஹங்‌காரமும்‌ மமதாரமும்‌ நீங்கப் பெற்று பகவச் சேஷத்வம்‌, உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவச்‌ சேஷத்வத்தின்‌ எல்லை நிலத்வம்‌ அநுஸந்திக்கப்பட வேணுமென்பது சாஸ்தரார்த்தம்‌, திருமந்திரத்திற்கு முக்யமான பொருள்‌ பாகவத சேஷத்வமே யென்பதை *மாறன்‌ பணித்த தமிழ்‌ மனக்கு ஆறங்கங்‌ கூற அவதரித்த மங்கையர்கோன்‌ தமது திருமொழியில்‌ *மற்றெல்‌லாம்‌ பேசிலும்‌ நின்திருவெட்டெழுத்துங்கற்று நான்‌ - உற்றது. முன்னடியராக்கடிமை- என்ற பாசுரத்தில்‌ தெளிய வைத்தார்‌. கீழ்‌ மூன்றாம்பத்தில்‌ ஏழாவது பதிகமான *பயிலுஞ்சுடரொளி ஸ்வ ஸ்வரூப ப்ரதிபாத பரமென்றும்‌, *நெடுமாற்கடிமை. புருஷார்த்த ஸ்வரூப ப்ரதிபாதக பரமென்றும்‌ வகையிட்டுக்‌ காட்டப்பட்டது:அங்கு வியாக்கியானத்தில்‌ மணவாள மாமுனிகள்‌-“பகவச்‌ சேஷத்‌வத்திலும்‌ தத்தரஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யமென்று ப்ரதி பாதித்த *பயிலுஞ்சுடரொளியும்‌....பாகவத் கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த *றெடுமாற்கடிமையும்‌ ”' என்றருளிச்செய்திருப்பது காண்க, இதனால்‌, பாகவத சேஷத்வம்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ என்பதிலே *பயிலும்சுட்ரொளிக்கு நோக்கு ; பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்பதிலே நோக்கு இத்திருவாய்மொழிக்கு என்றதாயிற்று, இத்திருவாய்மொழியின்‌' ஈட்டவதாரிகையில்‌ ஓர்‌ ஐதிஹ்யமுள்ளது ; அதாவது அம்முணி யாழ்வான்‌ போசள ராஜ்யத்தில்‌ நின்றும்‌ வந்த நாளிலே பட்டர்‌ கண்‌டருளி “நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப்‌ போர வடிமைசெய்து போந்தா யென்று கேட்டோம்‌ ; உன் ப்ரக்ருதிக்குச்‌ சேர *நெடுமாற்கடிமையைக்‌ கேள்‌” என்றருளிச்‌ செய்தாராம்‌ ” என்று, 
ஒன்பதாம்‌ பத்தில்‌ முதல்பதிகம்‌-கொண்ட பெண்டிர்‌ -கீழே *நெடுமாற்கடிமை யென்கிற திருவாய்மொழியிலே எம்பெருமானடியார்களையே உபாயோபேயங்களான எல்லாமுமாகப்‌ பற்றி யிருக்கையாகிற தம்முடைய சிழந்த அத்யவஸாயத்தை வெளியிட்ட ஆழ்வார்‌ அவ்வடியார்களின்‌ திருவுள்ள முகக்கும்படியான அர்த்தத்‌தையே இத்திருவாய்மொழியில்‌ அருளிச்‌ செய்கிறார்‌. பாகவதர்களே எல்லா வுறவுமென்‌றது-கீழ்த்திருவாய்மொழி; பகவானே எல்லாவுறவு மென்கிறது இத்திருவாய்மொழி ; இவை ஒன்றோடொன்று முரண்‌ பட்டவை யென்று நினைக்க வேண்டா ; பகவத்‌ பக்தியின்‌ எல்லை நிலமாக பாகவத பத்தியும்‌, பாகவத பக்தியின்‌ எல்லை நிலமாக பகவத்‌ பக்தியும்‌ கொள்ளத்தக்கது, உலகில்‌ ஒரு வ்ய்க்தியினிடத்திலே நாம்‌ வைக்கும்‌ அன்பு அந்த ஒரு வ்யக்தியளவிலே முடிந்து நிற்காமல்‌ தத் ஸம்பந்தி ஸம்பந்திகளிடத்தும்‌ பெருகிச்‌ செல்வது போல, பகவான்‌ பக்கலிலே வைக்குமன்‌பு அவனளவிலே நில்லாது அவனுடைய ஸம்பந்த ஸம்பந்தம்‌ பெற்ற பாகவதர்களிடத்தும்‌ வளர்ந்து செல்லுமாயிற்று. அப்படியே பாகவதர்களிடத்தே வைக்குமன்பும்‌ அவர்களோடு ஸம்பந்தம்‌ பெற்றவனென்கிற காரணத்தினாலேயே பகவானிடத்திலும்‌ பெருகும்‌, பட்டர்‌ ஸ்ரீகுணரத்ந கோசத்திலே -*ஜாமாதா தயிதஸ்‌ தவேதி பவதீஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்‌ பகயேம* என்றருளிச்‌ செய்தது இங்கே அநுஸந்தேயம்‌, பெரிய பிராட்டியாருடைய மணவாளன்‌ என்கிற காரணத்தையிட்டே எம்‌பெருமானை யுகப்பதாக இங்குச்‌ சொல்லி நின்றது, *அஸ்யேசாகா ஜகதோ விஷ்ணுபத்நி* என்று ஓதின படியே தேவதேவ திவ்யமஹிஷி யென்கிற காரணத்தையிட்டுப்‌ பெரிய பிராட்டியாரை யுகப்பதாகச்‌ சொல்லுவதுமுண்டே, இவை பரஸ்பரம்‌ முரண்பட்ட பொருள்‌களல்ல ; இரண்டும்‌ பரமார்த்தமே. இது போலவே, பகவத்‌ ஸம்பந்தத்தையிட்டுப்‌ பாகவதர்களை யுகப்பதும்‌, பாகவத ஸம்பந்தத்தை யிட்டுப்‌ பகவானை யுகப்பதம்‌ பொருந்தியதே யாதலால்‌ கீழ்த்‌ திரு வாய்மொழியிற்‌ சொன்ன அர்த்தத்திற்கு அவிருத்தமாகவே இத்திருவாய்மொழி செல்லுகின்றதென்று கொள்க. உலகில்‌ ப்ராக்ருதர்‌களான ஆபாஸ பந்துக்களையே நம்பியிருப்பாருடைய ப்ரமம்‌ நீங்குமாறு உபபத்திகளுடன்‌ அருளிச்செய்வது இத்திருவாய்மொழி* எந்த நிலைமையிலும்‌ எம்பெருமானொருவனே நிருபாதிக ரக்ஷகனென்‌றும்‌, நாம்‌ பந்துக்களென்று நினைக்கும்படியுள்ளவர்கள்‌ பக்ஷகர்களே யொழிய ரக்ஷகர்களல்லரென்றும்‌ விரிவாக அருளிச்செய்கிறார்‌. கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ *சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ்‌ செல்வமும்‌ நன்மக்களும்‌ மேலாத்‌ தாய்‌ தந்தையும்‌ அவரேயினியாவாரேர்‌ என்கிற பாசுரத்திற்சொன்ன பொருளை விவரிக்க வந்ததாயிற்று இத்திருவாய்‌ மொழி, * ஈச்வரனை யொழிந்தவர்கள்‌ ரக்ஷகரல்லரென்னுமிடம்‌ ப்ரபந்ந் பரித்ராணத்திலே சொன்னோம்‌? என்று முமுக்ஷஃப்படியில்‌ அருளிச்செய்தபடியே ப்ரபந்ந பரித்ராணமென்னும்‌ ரஹஸ்யத்திலே விரிவாகக்‌ காண்கிற விஷயங்களுக்கு இத்திருவாய்மொழியே மூலமமாகும்‌. இத்திருவாய்மொழியில்‌ பல பாசுரங்களில்‌ ** வடமதுரைப்‌ பிறந்த ” என்று வருவதால்‌ வடதிசை மதுரையை மங்களாசாஸனம்‌ செய்கிற பதிகமிது-என்றும்‌ கொள்ளலாம்‌. பரோபதேச ரூபமாகச்‌ சொல்‌வது இது
ஒன்பதாம்பத்தில்‌ இரண்டாம்பதிகம்‌- பண்டைநாளாலே, ஸர்வேச்வரனைத்‌ தவிர்ந்தவர்களனைவரும்‌ ஆபாஸ பந்துக்களென்றும்‌ ஸர்வேச்வரனொருவனே நிருபாதிக பந்துவென்று மருளிச்‌ செய்தார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌. இவரருளிச்செய்தவளவேயன்‌றே; உண்மையில்‌ அவன்‌ தான்‌ பரம பந்துவாயிற்றே. *மாதா பிதா ப்ரதா நிவாஸச்‌ சரணம்‌ ஸுஃஹ்ருத் கதிர்‌ நாராயணர்‌ என்று சுருதி சொன்னது உண்மை யல்லதில்லையே, அப்படி பரம்‌ பந்துவானவன்‌ பந்துக்கள்‌ செய்யவேண்டிய செயலைச்‌ செய்யாதிருக்கமாட்டனே. அது செய்கைக்‌ குறுப்பாகத்‌ திருப்புளிங்குடியிலே திருக்கண்‌ வளர்ந்தருளா நின்றான்‌ : நாமும்‌ அங்கே சென்று கிட்டினால்‌ நமக்கு பந்துக்ருத்யமெல்லாம்‌ பண்ணுவன்‌ என்று அநுஸந்தித்து ஆழ்வார்‌ அங்கே சென்று கிட்டினார்‌. இப்படி பரம பந்துவானவன்‌ ஸன்னிதி பண்ணி யருளுகிற திருப்புளிங்குடியிலே எல்லாவகையான பரிமாற்‌றங்களை யுமாசைப்பட்டுச்‌ சென்று கிட்டினவிடத்தும்‌, இவரை என்‌னென்று வினவுதல்‌, குளிர நோக்குதல்‌, ஒரு வார்த்தை சொல்லுதல்‌ ஒன்றுஞ்‌ செய்திலன்‌. ஆனாலும்‌, *இன்றாக நாளையேயாக இனிச்‌ சிறிது நின்றாக நின்னருள்‌ என்பாலதே* என்று திண்ணிய அத்யவஸாயம்‌ கொண்டிருக்குமவர்களிலே ஒருவரான ஆழ்வார்‌ * அவனும்‌  பந்து க்ருத்யம்‌ செய்யத்‌ தவறமாட்டான்‌ ; சிறிது தாமதித்தால்‌ என்ன குறை?” என்று ஒருவாறுதேறுதலடைந்து, வேறொன்றுக்காக மிகவும்‌ ஆர்த்தி யடைந்தார்‌ ; அதாவதென்னென்னில்‌ ; இங்கே என்றைக்குத்‌ திருக்கண்வளர்ந்தருளப்‌ புகுந்தானோ அன்றுமுதல்‌ இன்றளவாக ஏக ரிதியாய்‌ ஆடாதே அசையாதே சயனித்திருக்கின்றானே ! இது என்ன சிரமமோ?' என்று இவ்‌ வாற்றாமை திருவுள்ளக்திலே குடி புகுந்தது. கீழ்‌ எட்டாம்பத்தில்‌ *கொடியார்மாடக்‌ கோளூரகத்தும்‌ புளியங்குடியும்‌ மடியா தின்னே நீ துயில்மேவி மகிழ்ந்தது தான்‌, அடியாரல்லல்‌ தவிர்த்த வசவோ அன்‌றேலிப்படி தான்‌ நீண்டு தாவிய வசவோ பணியாயே* என்ற பாசுரத்‌திலுண்டான வயிறுபிடியே மீண்டும்‌ தலையெடுத்தது, அப்பெரிய வாற்றாமையோடே *தேவரிரும்‌ பிராட்டிமாருங்கூட எழுந்தருளி யிருக்குமிருப்பை எனக்குக் காட்டி யருளவேணும்‌ ; என்னைக்‌ கண்ட காட்சியிலே விகாரமடைந்து என்முன்னே நாலடியுலாவி யருள வேணும்‌; புன்முறுவல்‌ காட்டியருள வேணும்‌; ஒரு வார்த்தை நீ யருளிச்செய்யவேணும்‌! என்றிங்ஙனே தாமுமவனுமே யறிந்ததாகத்‌  திருவாசலைத்‌ திருக்காப்பிட்டுக்கொண்டு ஏகாந்தத்திலே தம்முடைய மநோ ரதங்களையெல்லாம்‌. விண்ணப்பஞ்‌ செய்கிற இத்திருவாய்‌ மொழியில்‌. இப்பதிகத்தின்‌ பொருட்சுவை ஒருபுறமிருக்க சொற்‌ சுவை கல் நெஞ்சையும்‌ கரையப் பண்ணும்‌, ஸம்ஸாரத்தில்‌ ஆர்த்தி விசேஷங்களுணடாகி நெஞ்சு தடுமாறிக்‌ கிடக்கும்போது இப்பதிகத்திற்‌ பாசுரங்களை வாய் வெருவினால்‌ நெஞ்சு குளிரும்‌. நாற்பதாண்டு களுக்குக்‌ கீழே திருவரங்கம்‌ பெரிய கோயிலில்‌ பெரிய திருவத்யயநத்‌ திருநாளில்‌ இத்திருவாய்மொழியை அரையர்‌ இசைபாடாறிற்க, அஸ்‌மதாசார்யரான அழகியமணவாளச்‌ சியர்‌ கண்‌ணுங்‌ கண்ணீருமா யிருந்த விருப்பு இன்று தோன்றிக்‌ கண்ணுள்‌ நீங்கா நெஞ்சுள்ளும்‌ நீங்காவே.
ஒன்பதாம் பத்தில்‌ முன்றாம் பதிகம்‌ - ஓராயிரமாய்‌ --கீழ்த்திருவாய்மொழியில்‌ 'தொண்டரோர்க்கருளிச்‌ சோதி வாய்‌  திறந்து உன்‌ தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌* என்றும்‌ “இடங்‌  கொள்‌ மூவுலகும்‌ தொழ இருந்தருள்வாய்‌* என்றும்‌ ; *மெல்லடியைக்‌ கொடுவினையேன்‌ பிடிக்க நீ யொருநாள்‌ கூவுதல்‌ வருதல்‌ செய்யாய்” என்றும்‌ பலவாறு பிரார்த்தித்தார்‌, இப்படிப்‌ பிரார்த்திக்கக்‌ கேட்ட எம்பெருமான்‌ ஆழ்வாரை நோக்கி * ஆழ்வீர்‌ ! நமக்கு நாராயணனென்று திருநாமமிருப்பது அறியீரோ ? நாராயணனென்‌பதற்கு. -நாரங்களுக்கு அயனமாயிருப்பவன் என்கிற பொருள்‌ தவிர, நாரங்களை அயனமாக வுடையவனென்கிற பொருளுமுண்டென்பதை அறிவீரன்றோ, அப்பொருளில்‌ ஸகல சேதநா சேதங்களும்‌ சரீரமாய்‌  நான்‌ சரீரியாயிருக்கையாகிற அம்சம்‌ தேறுகின்‌றதென்பறையும்‌ அறிவீரே ; சரீரத்திற்கு ஆகும்பேறு சரீரிக்கேயாதலால்‌ சரீர பூதரான  உமக்கென்று ஒரு பேறு உண்டோ? சரீரியான என்னுடையதன்றோ பேறு என்‌ பேற்றுக்கு நீர்‌ பிரார்த்திப்பது பொருந்துமோ? எல்லாம்‌ நானே செய்து போரக்கடவேன்‌ ; உமக்கும்‌ நமக்குமுண்டான குடல்‌ துடக்கை யறிந்துவைக்து! நீர்‌ இப்படி ப்ரார்த்திப்பதும்‌ கிலேசிப்பதும்‌ தகுதியன்று * என்று ஸமாதானம்பண்ண, அது கேட்டு ஆழ்வார்‌ ஒருவாறு தாம்‌ ஸமாஹீதரானபடியை வெளியிட்டுக்‌ கொண்டும்‌ “இது என்ன சீலகுணம்‌!” என்று ஈடுபட்டுக்கொண்டும்‌. அருளிச்‌ செய்வதாம்‌ இத்திருவாய்மொழி, இப்பதிகத்திற்கு மற்றொருபடியாகவும்‌ ஈட்டில்‌ அவதாரிகை அருளிச்‌ செய்யப்படுகிறது ; அது நடுவில்‌ திரு வீதிப்பிள்ளையின்‌ நிர்வாஹமாகவுங்காண்கிறது. அதன்‌ சாரமாவது, கீழ்‌ எட்டாம்பத்தில்‌ *கண்கள்‌ சிவந்து* என்கிற பதிகம்‌ தொடங்கி முறையே திருமந்திரார்த்தம்‌ அருளிச்‌ செய்யப்பட்டு வந்து, கீழ்‌ *பண்டை நாளாலே* என்கிற பதிகத்தில்‌ கைங்கர்ய ப்ரார்த்‌தனை பண்ணுகிற முகத்தால்‌ வ்யக்த சதுர்த்தியளவாக அர்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டுத்‌ தலைக்கட்டிற்று.  அர்த்தாநுஸந்தானம்‌ பண்ணினவர்‌, அந்த அர்த்தத்தைக்‌ கொண்ட மந்த்ரம்‌ திரு வஷ்டாக்ஷர மஹா மந்த்ரம்‌ யென்று வெளியிடவேண்டி. இப்பதிகமருளிச்‌ செய்கிராரென்பதாம்‌. இப்பதிகத்தின்‌ முதற்பாட்டில்‌ “ நாராயணன்‌ நங்கள்‌ பிரானவனே ” என்றதில்‌ முழு நோக்காக இந்த நிர்வாஹம்‌ தோன்‌றியதென்க. 
ஒன்பதாம்பத்தில்‌ நான்காம்பதிகம்‌-- மையார்கருங்கண்ணி --எம்பெருமான்‌, சாஸ்த்ரங்களில்‌ ஒரு பக்கத்திலே ஸ்வதங்த்ரினன் என்று போற்றப்படுவதுபோல, மற்றொரு பக்கத்தில்‌ சீலாதி குண கண பூஷிதனென்றும்‌ கொண்டாடப்படுகிறான்‌.  ஸ்வாதந்திரியம் என்பது அவனுக்கு ஸ்வரூபமாயிருக்கும்‌, சீலாதி குணமுடைமையும்‌ அவனுக்கு ஸ்வருபமாயிருக்கச்‌ செய்தேயும்‌ ஸ்வாதந்திரியத்தின்‌ கீழே அத்திருக்குணங்கள்‌ தலையெடுக்கமாட்டாமல்‌ அமுங்கிக்‌ கிடக்‌கும்‌. அவை எப்போது தலையெடுக்குமென்னில்‌ ; பிராட்டி புருஷகாரம்‌ செய்யும்‌ போதுகளில்‌ தலையெடுக்குமென்று நம்‌ ஆசாரியர்கள்‌ கண்டறிந்து கூறுகிறார்கள்‌. முமுக்ஷுப்படியில்‌ த்வய ப்ரகரணத்தில்‌-புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம்‌ தலைசாய்ந்தால்‌ தலை யெடுக்கும்‌ குணங்களைச்‌ சொல்லுகிறது நாராயண பதம்‌” என்ற திவ்ய ஸுூக்தியை இங்கு அநுஸந்திப்பது, ஆக, கீழ்த்திருவாய்‌மொழியில்‌ அநுஸந்திக்கப்பட்ட சீலகுணத்திற்கு. ஊற்றுவாயான பிராட்டியின்‌ ஸம்பந்தத்தையும்‌ அநுஸந்தித்தார்‌ ஆழ்வார்‌. *மாக வைகுந்தங்‌ காண்பதற்கு என்மனமேகமெண்ணு மிராப்பகலின்‌றியே* என்று கீழ்த்திருவாய்மொழியில்‌ வெளியிட்ட ஆசையும்‌ விஞ்சிப்‌ பெருகிற்று. அவன்‌ சீலாதிகனுமாய்த்‌ திருமகள்‌ கொழுநனுமாயிருந்து வைத்து இப்படி நம்மை துடிக்கவிட்டு உபேஷித்து இருக்கிறானே யென்று மிகவருந்தினாராழ்வார்‌. கஜேந்திராழ்வானுக்கு அருள்செய்ய அரைகுலையத்‌ தலைகுலைய மடுவின்‌ கரையிலே ஓடி.  வந்தாப்போலவு மன்றிக்கே ப்ரஹ்லாதாழ்வானுக்கருள்‌ செய்யத்‌ தூணிலே வந்து சடக்கெனத்‌ தோன்‌றினாப் போலே தோன்றி யருள்‌ செய்ய வேண்டும்படியான நிலைமையாயிற்று ஆழ்வாரது, இப்படிப்பட்ட நிலைமையிலும்‌ அவன்‌ வந்து முகங்காட்டிற்றில னென்றால்‌ அவனைக்‌ குறித்துச்‌ சொல்லும்‌ குணங்கள்‌ கடலோசை போலே நிரர்த்தகமாமத்தனையன்றோ. அப்படி தன்‌ திருக்குணங்‌களைப்‌ பழுதாக்கிக்‌ கொள்ளமாட்டானே அவன்‌ ஆழ்வாருடைய விடாயையறிக்து உதவவந்து முகங்காட்டினான்‌. அதற்கு மிக மகிழ்ந்து “நான்‌ க்ருதக்ருத்யனனேன்‌, அடிமை செய்யப்பெற்றேன்‌, வாழ்ந்தேன்‌, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கெல்லாம்‌ சொல்லமுதளித்து உபகாரம்‌ செய்யப்பெற்றவனானேன்‌ ; இம்பேறுகள்‌ ஒருவன்‌ பெறத்‌ தகுமா?! என்று சொல்லித்‌ தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டுத்‌ தலைக்கட்டுகிறார்‌ இப்பதிகத்தை. 
ஒன்பதாம்பத்தில்‌ ஐந்தாம்பதிகம்‌-- இன்னுயிர்ச்‌ சேவலும்‌ கீழ்‌ பண்டை நாளாலே என்கிற பதிகத்திலே ஆழ்வார்க்கு ஒரு கிலேசம்‌ நிகழ்ந்தது, அதை ஒருவாறு ஸமாதானப்படுத்தப்‌ புகுந்த ஸர்வேச்வரன்‌ * ஆழ்வீர்‌! நான்‌ நாராயணனன்றோ ; உமக்கு எல்லா வுறவின்‌ காரியமும்‌ குறையறச்‌ செய்து தருவேன்‌” என்று சொல்ல, அவனுடைய சீலத்தில்‌ கால்‌ தாழ்ந்து ஒரு படியாய்ச்‌ சென்றது மூன்றாம்‌ பதிகம்- *தொண்டர்க்கு அமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொல்லும்படி உம்மையாக்கினேனே, இது உமக்கு ஸமான்யமாகக்‌ கிடைக்கக்கூடியபேறோ? இதனை நினை! என்று எம்பெருமான்‌ அதனால்‌ ஒருவாறு களிப்படைந்து தரித்து நின்றார்‌ கீழ்ப்‌ பதிகத்திலே. அங்கு “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக்‌ கண்டு கொண்டேனே ” என்றருளிச்‌ செய்தவர்க்கு பாஹ்யஸம்ச்லேஷத்திலே அபேகைஷ பிறந்தது.  இவர்க்கு இன்னமும்‌ விடாயைப்‌ பிறப்‌பித்து முகங்‌ காட்டவேணும்‌ ” என்று எம்பெருமானிருக்கையாலே அவன்‌ தாமதிக்கிறான்‌. ஆழ்வார்க்கோ தளர்ச்சி மிகுகிறது. தளர்ந்‌தவர்கள்‌ தரிப்பதற்குப்‌ பல வழிகளுண்டே ; லெளகிக பதார்த்தங்‌களிலே நெஞ்சைச் செல்ல விட்டு அந்த அந்ய பரதையாலே ஒருவாறு” தரிப்போம்‌ என்றும்‌, அவனோடு போலியான பொருள்களைக்‌ கண்டாகிலும்‌ தரிப்போமென்றும்‌ நினைத்து லெளகித பதார்த்தங்களிலே கண்வைத்தார்‌. ஒருவாறு தரிப்பதற்குச்‌ செய்த அச்செயல்‌ ஆச்‌வாஸ ஹேதுவாகாமல்‌ ஸ்மாரகமாய்‌ பாதிக்கத்‌ தொடங்கிற்று, உலகில்‌ எந்தப்‌ பொருளைக்‌ கண்டாலும்‌, அவனாயிருக்கிற படியை நினைத்‌தோ, அவனோடு ஸம்பந்தம்‌ பெற்றிருக்கிறபடியை நினைத்தோ, அவனுக்குப்‌ போலியாயிருக்கிறபடியை நினைத்தோ தளருமவ ரன்றோ ஆழ்வார்‌. கீழ்‌ நாலாம்பத்தில்‌ மண்ணை யிருந்து துழாவி* என்‌னும்‌ பதிகத்திலே பட்டபாடு தெரியுமே. ஆக லெளகிக பதார்த்தங்‌கள்‌, அவனை நினைப்பூட்டி ஈலிய அவற்றால்‌ நோவுபடுகிற படியை அந்யாபதேச்த்தாலே யருளிச்‌ செய்வது இப்பதிகம்‌, எம்பெருமானோடே கலந்து பிரிந்த வொரு பிராட்டி, தன்னாற்றுமையாலே அவனோடு போலியான பதார்த்தங்களைக கண்டாகிலும்‌ தரிப்போமென்று கொண்டு ஒரு பூஞ்சோலைக்குப்‌ புறப்பட, அங்குண்டான குயில்‌ மயில்‌ முதலானவை அவனுடைய பேச்சையும்‌ வடிவையும்‌ நினைப்பூட்டி நலிய, * இவை தாமாக நலிதின்றனவல்ல ; நம்மை முடிக்க வேணு மென்று பார்த்த எம்பெருமானாலே ஏவப்பட்டு நலிகின்‌றன வித்தனை? என்றெண்ணி, அக்குயில்‌ முதலானவற்றை நோக்கி * உங்களுக்கு என்னை  நலிய நினைவாகில்‌ இவ்வளவு பாரிப்பு வேணுமோ? என்னுயிரை நானே கொடுக்கச்‌ சித்தமாயிருக்கின்றேனே' என்று சொல்லியும்‌, அவனுடைய திருக்குணங்களை ஒருவாறு நினைத்துத்‌ தரித்தும்‌ போருகிறது இத்திருவாய்மொழி, 
 ஒன்பதாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌ -உருகுமால்நெஞ்சம்‌ கீழ்ப்பதிகத்தின்‌ முடிவிலே.  *எண்ணி நாமும்‌ நம் வான நாடனோடொன்றிலோம்‌* என்றருளிச் செய்த பாசுரத்தைக்‌ காணுமிடத்து ஆழ்வார்‌ அந்தப்‌ பாசுரத்தோடு திருவாய்மொழியைத்‌ தலைக்கட்டி விட்ட தாகவும்‌, இனிப் பாசுரங்களருளிச்செய்ய ஆழ்வார்‌ இந்நிலத்தில்‌ இல்லையாகவும்‌ தோன்றா நின்றது. ஆனாலும்‌ ஆழ்வார்‌. இன்னமும்‌ இந் நிலத்திலேயே திருப்புளியாழ்வாரடி யிலேயே யெழுந்தருளியிருந்து மேலே பாசுரங்களருளிச்செய்ய ப்ராப்தமாகிறது. எம்பெருமான்‌ வந்து முகங்காட்டி ஆழ்வாரைத்‌ த்ரிக்கச்‌ செய்தானோ? அதனால்‌ தரித்து நின்று பேசுகிறாரோ <வென்னில்‌; இல்லை; எம்பெருமான்‌ வந்து முகங்காட்டி இவரைப்‌ பெறுவது, இல்லையாகில்‌ இழப்பது என்னும்படியான நிலைமையா யிருக்கச்‌ செய்தேயும்‌ அவன்‌ வந்து முகங்காட்டாமலே ஒருவிரகு செய்தானாயிற்று, அந்த விரகுதான்‌ ஏதென்னில்‌; கீழ்‌ எட்டாம்‌ பத்தில்‌ *இருத்தும்‌ வியந்தென்னை* என்கிற பதிகத்திலே ஒரு விலக்ஷணமான ஸம்ச்லேஷம்‌ நடந்திருந்ததே- அதை நினைப்பூட்டி. ஒருவாறு தரிக்கச்செய்தானாமிற்று எம்பெருமான்‌; அதுதான்‌ அவன்‌ செய்த விரகு. அதனால்‌ ஆழ்வார்‌ ஒருவாறு தரித்திருந்து இப்பதிகமருளிச்‌ செய்கிறபடி. இதற்கு மூன்றுவிதமான காரணங்களை யருளிச் செய்கிறார்‌ ஆழ்வார்‌. 1-முதற்பதிகமே தொடங்கி *குருகூர்ச் சடகோபன்‌ சொல் ஆயிரம்‌* என்று, எம்பெருமானுக்கு ஒரு ஆயிரம்‌ பாசுரம்‌ அருளிச் செய்து  தலைக்கட்டவேணுமென்று ஸங்கல்பித்துக்‌ கொண்டாராகையாலே அப்படி அவர்‌ தாம்‌ அதிகரித்த கைங்கரியத்தை முற்றமுடிய நடத்துகைக்கீடான அத்ருஷ்டராயிருந்தார்‌. (2) ஆழ்வாருடைய ஈரச்சொற்களை இன்னமுங்‌ கேட்கவேணு மென்று பாரித்துக் கொண்டிருக்கிற எம்பெருமானுடைய பாக்கியமுமொன்றுண்டு-(3) *தொண்டர்க்கு அமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொன்‌னேன்‌* என்று ஆழ்வார் தாமே பணித்தபடி இப் பாசுரங்கொண்டு போதுபோக்க விருக்கிற ஸம்ஸாரி சேதநர்களின்‌ பாக்கியமொன்‌றுண்டே--ஆக மூன்று காரணங்களினாலும்‌ ஆழ்வார்‌ இன்னமும்‌ இந் நிலத்தில்‌ தரித்து நிற்க ப்ராப்தமாகி, போனவுயிர்‌ மீளும்படி *இருத்தும்வியந்தென்கிற வொருபதிகத்திலே நடந்த கலவி நினைவுக்கு விஷயமாயிற்று, அசோகவனத்திலே திருவடி சென்று கிட்டின போது முன்பு நெடுநாள்பட்ட கிலேசமெல்லாம்‌ கிடக்கச்செய்தே, பெருமாளும்‌ வந்து முகங்காட்டாதிருக்கச்‌ செய்தேயும்‌, வனவாஸத்திற்கு முன்பு திருவயோத்யையிலே பன்னிரண்டாண்டு பெருமாளும்‌ தானும்‌ ஏகபோகமாகவிருந்து பேரின்பம்‌ நுகர்த்த நுகர்ச்சி நினைவுக்கு விஷயமாகி *ஸமா த்வாதச தத்ராஹம்‌ ராகவஸ்ய நிவேசநே புஜ்ஞாறா அமாநுஷாந்‌ போகாந்‌ ஸர்வகாமஸம்ருக்தி* என்று அதைச்சொல்லிப்‌ போது போக்கினாப்போலே, *இருத்தும்வியந்‌து பதிகததிலே “மூவுலகும்‌ தன்னெறியாவயிற்றிற்‌ கொண்டு சிறியேனுடைச்சிந்தையுள்‌-—றின்றொழிந்தான்‌”' என்னும்படி முறை கெடப் பரிமாறின பரிமாற்றம்‌ நினைவுக்கு விஜயமாகி, அது கேவலம்‌ ஸ்மிருதி மாத்திரமே யல்லாமல்‌ இப்போதைய அநுபவமேயென்றே கொள்ளலாம்படியாகி அந்த சீல குணத்தைப்‌ பேசி சிதிலராகிறார்‌. இப்படி. பழைய கலவியை நினைப்பூட்டி ஒருவாறு தரித்து நிற்கச்‌ செய்து பேசுவிக்கிறவன்‌ திருக்காட்கரை யெம்பெருமான்‌ போலும்‌. ஆகவே திருக்காட்கரைப் பெருமான்‌ விஷயமாக இப்பதிகம்‌, மலைநாட்டுத்‌ திருப்பதிகளுள்‌ ஒன்றாயிற்று திருக்காட்‌கரை யென்னும்‌ தலம்‌,  
ஒன்பதாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌ -எங்கானலகங்கழிவாய்‌ --கீழ்த்திருவாய்மொழியில்‌, ஒருவாறு தரிக்கும்படி செய்து வைத்தானெம்பெருமான்‌; குணங்களை ஸ்மரிக்க ஸ்மரிக்க அப் பெருமானை நேரே காணவேண்டும்படியான விடாய்‌ மிக்கது. அதனாலே தூது விடுவதாயிற்று இப்பதிகம்‌. திருவாய்‌ மொழியாயிரத்திலும்‌ தூதுவிடும்‌ பதிகங்கள்‌ நான்கு: (1)* அஞ்‌சிறைய மடநாராய்‌. (2) *வைகல்‌ பூங்கழிவாய்‌. (3) *பொன்னுலகாளீரோ. (4) இத்திருவாய்மொழி, *அஞ்சிறைய மடநாரையில்‌ அபராதஸஹத்வமாகிற க்ஷமாகுணம்‌ பற்றாசாக வியூஹத்திலே தூது விட்டார்‌ *வைகல்பூங்கழிவாயில்‌ ஆச்ரித ஜந ரக்ஷண தீக்ஷிதத்வம்‌ பற்றாசாக விபவத்திலே தூதுவிட்டார்‌; *பொன்னுலகாளீரில்‌ ஐகரஸ்யம்‌ பற்றாசாகப்‌ பரத்வத்திலும்‌ அந்தர்யாமித்‌வத்திலும்‌ தூது விட்டார்‌. இனி இத்திருவாய்மொழியில்‌, அவனுடைய வடிவழகு பற்றாசாக அர்ச்சையிலே தூது விடுகிறார்‌. மேலிரண்டாம்பாட்டில்‌  “திருமூழிக்களத்து--தமரோடு அங்குறைவார்க்கு! என்கையாலே, *பின்னானார்‌ வணங்குஞ்‌ சோதியான திருமூழிக்களத்தில்‌ தம்‌ பரிஐந பரிவாரங்களோடே கூடிக்‌ குலாவா நின்றாரவர்‌; அதனாலே நம்மை மறந்தார்‌ போலும்‌; *செங்கமலத்‌ தலர்போலுங்‌ கண்கைகால்‌ செங்கனிவாய்‌ அக்கமலத்திலை போலுந்‌ திருமேனி யழகை நினைப்பூட்டி “இப்படிப்பட்ட வடிவழகிலே யீடுபட்ட பராங்குச நாயகி உம்மைப் பிரிந்து தரித்திருக்க வல்லளோ வென்று சொல்லுங்கோள்‌” என்று சில பறவைகளைக்‌ குறித்துக்‌ கூறித்‌ தூது விடுவதாய்ச்‌ சொல்லுகிறது இத்திருவாய்மொழி, 
 ஒன்பதாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- அறுக்கும் வினையாயின --கீழ்த் திருவாய்மொழியில்‌ திருமூழிக்களத்‌ தெம்பெருமான்‌ பக்கலில்‌ தூதுவிட்டார்‌. தூது சென்றவர்கள்‌ மீண்டு வந்து செய்தி சொல்லுமளவும்‌ ஆறியிருக்கவேணுமே; எங்ஙனே ஆறி யிருப்பர்‌, திரு நாவாயிலே சென்று கிட்டுவோமென்று பார்த்தார்‌ 
*காலாழும்‌ நெஞ்சழியும்‌. கண் சுழலும்‌* என்ன வேண்டும்‌ நிலைமையிலிருக்கு மிவர்தாம்‌ எங்ஙனே திருநாவாய்க்குச்‌ செல்வர்‌?
இருந்த விடத்திலே யிருந்து மநோ ரதிக்கக்‌ குறையில்லையே, அந்த மநோ ரதமே இத்திருவாய்மொழியாகப்‌ பரிணமிக்கிறதாயிற்று. “திருவடி சென்று பிராட்டியைத்‌ திருவடி தொழுது மீண்டவனந்தரம்‌ பெருமாளைக் கிட்டுவதற்கு முன்பு பிராட்டிக்குப்‌ பிறந்த மநோரதம்‌
போலே, கீழ்விட்ட தூதர்‌ அத்தலைப்பட்டு அவனைக்‌ கொண்டு வருவதற்கு” முன்னே நடுவு இவர்க்குப்‌ பிறந்த மநோரதத்தைச்‌ சொல்லுகிறது
,” என்பது ஈடு, திருமூழிக்களம்போலே திருநாவாயும்‌ மலைநாட்டுத்‌ திருப்பதிகள்‌ பதின்மூன்றில்‌ ஒன்று, அங்கே புகவல்லேனோ? புகும் கொல் என்றோ? அங்கே புக்கு என்‌ கண்ணாரக்‌ கண்டு அடிமை செய்யவல்லேனோ? என்றிப்படி பல மநோ ரதங்‌களைப்‌ பண்ணுகிறாராய்ச்‌ சொல்லுகிறது இத் திருவாய்மொழி,
ஒன்பதாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌ --மல்லிகை  கமழ்‌,--நம்முடைய முதலிகள்‌ இத்திருவாய்‌ மொழியை “மாலைப்‌ பூசல்‌' என்று வழங்குவர்‌. (இப்பதிகத்தின்‌ முடிவு பாசுரங்‌ காண்க.) மேல்‌ பத்தாம்‌ பத்தில்‌ மூன்றாம்‌ பதிகமான *வேய்மருதோளிணை 
மெலியுமாலோ* என்கிற திருவாய்மொழிக்குக்‌ காலைப்பூசல்‌”
என்று ஸங்கேதம்‌, கண்ணபிரான்‌. விடியற்‌ காலத்திலே பசு மேய்க்கப்‌ போனானாக அதிசங்கை பண்ணி அவன்‌ முகத்தைப்‌ பார்த்து, நீ பசு மேய்க்கப் போனால்‌ நலியக்கடவ பதார்த்தங்கள்‌ நலியா நின்றனவென்று முறையிடுவது, காலைப்பூசலான அத்திரு வாய்மொழியிலே, மாலைப்பூசலான இப்பதிகத்திலோவென்னில்‌, *காடுகளுடுபோய்க்‌ கன்றுகள்‌ மேய்த்து மறியோடிக்‌ கார்க்கோடல்‌ பூச்சூடி வருகின்ற தாமோதரன்‌ மாலைப்பொழுதிலே திருவாய்ப்‌ பாடி யேறத்‌ திரும்பி வரும்போது சில்‌ நாட்களில்‌ பசுக்களை எல்லாம்‌ பின்னே வரவிட்டுத்‌ தான்‌ முன்னே குழலூதிக்கொண்டு வருவன்‌ ; சில நாட்களில்‌ பசுக்களை யெல்லாம்‌ முன்னே போக விட்டுத்‌ தான்‌ பின்னே வருவதுமுண்டு; அப்படி வருகின்ற நாளில்‌ அப்பெருமானைப்‌ பசுக்களின்‌ முற்கொழுந்தில்‌ காணாமல்‌
திருவாய்ப்பாடியிற்‌ பெண்கள்‌ பட்ட பாட்டை ஆழ்வார்‌ தாம்‌ ஏறிட்டுக்கொண்டு பேசுகிறதா யிரா நின்‌றது இத்திருவாய்மொழி,
ஒன்பதாம் பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌--மாலை நண்ணி -கீழ்‌ *அறுக்கும்‌ வினைப் பதிகத்திலே அவனைப்‌ பெறவேணு' மென்கிற மநோ ரதமாய்ச்‌ சென்றது, அந்த மநோரதம்‌ நிறை வேறாமையாலே மிகவும்‌ கிலேசித்தபடி சொல்லிற்று கீழ்த்‌ திருவாய்‌ மொழியிலே, இப்படி நோவுபடுகிற விவருடைய கிலேசத்தை யறிந்த எம்பெருமான்‌ “ஆழ்வீர்‌! என்னைப்‌ பெறாமையாலை நீர்‌ நோவுபடுகிறது. கிடக்கட்டும்‌; உம்மைப் பெறாமை இழவுபட்டுக்‌ கிடப்போம்‌ நாமன்றோ? உமக்கொரு குறையுண்டோ? திரு நாட்டை விட்டுத்‌ -திருக்கண்ணபுரத்திலே நாம்‌ ஸன்னிதி பண்ணியிருப்பது உமக்காகவன்றோ; இந்த சரீரத்தின்‌ முடிவிலே உம்முடைய அபேக்ஷிதம்‌ நிறைவேற்றக் கடவோம்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ண, ஆழ்வாரும்‌ ஸமாதானமடைந்து அதனைச் சொல்லி இத்திருவாய்மொழியில்‌, “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌.-என்கிற பாசுரம்‌ இப்பதிகத்திற்கு உயிராய்க்‌ கொண்டு ஸர்வேச்வரன்‌ ஸர்வ ஸமாச்ரயணியனாய்  கோயில்‌ கொண்டிரா நின்றான்‌; அவனைச்‌ சென்று ஆச்ரயுங்கோள்‌; ஆச்ரயிக்குமிடத்தில்‌ அவன்‌ திருவடிகளிலே பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌; பக்திக்கு உபகரண மில்லாதார்‌ ப்ரபத்தியைப்‌ பண்ணுங்கோள்‌ ; அதற்குரிய அத்யவஸாயமில்லாதார்‌ உக்தி மாத்ரத்தை யாகிலும்‌ சொல்லுங்கோள்‌ ; அவ்வளவே கொண்டு அவன்றான்‌ கைவிடான்‌; ஆனபின்பு எல்லாருமொக்க அவனை ஆச்ரயியுங்கோள்‌ என்று பரோபதேசரூபமாய்‌ நிகழ்கின்றது இப்பதிகம்‌, “மோஹித்துக் கிடந்தாராகில்‌ கிடக்குமித்தனை போக்கி உணர்ந்தாராகில்‌ பிறர்க்கு ஹிதஞ்‌ சொல்லி 
யல்லது நிற்க மாட்டார்‌”' என்பர்‌ நம்பிள்ளை,
பத்தாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌--தாளதாமரை-கீழ்த்திருவாய்மொழியில்‌ *மரணமானால்‌ வைகுந்தங்‌ கொடுக்கும்‌ பிரான்‌* என்‌றருளிச்‌ செய்ததானது எம்பெருமானுடைய திருவுள்ளக்‌ கருத்தை அநுவாதம்‌ செய்தபடியன்றோ. தேஹாவஸானத்திலே பேறு” என்று எம்பெருமான்‌ ஆழ்வார்க்கு நாளிட்டுக்‌ கொடுத்ததாகத்‌ தேறி நின்றது. தேஹத்தின்‌ முடிவு என்றைக்கு ஆகுமென்று ஆழ்வார்‌ ஆலோசிக்க வேண்டுமோ. *இழை றல்லவாக்கையும்‌ பையவே புயக்கற்றது* என்றும்‌ "என்னுயிர்‌ கூவிக்‌ கொடுப்பார்க்கு மித்தனை வேண்டுமோ?* என்றும்‌ கீழே யருளிச்‌ செய்தவராகையாலே மிகவும்‌ கட்டுக்குலைந்த தம்‌ திருமேனியின்‌ முடிவு அணித்தென்று தாமே அறுதியிட்டுக்‌ கொண்டார்‌. திருநாட்டுககுப்‌ பயணம்‌ குறித்து ஸற்றாஹம்‌ செய்ய வேணுமென்று கொண்டு முந்துற முன்னம்‌ வழித்துணை யாகத்‌  திருமோகூர்க்‌ காளமேகப்‌ பெருமாளைப்‌ பற்றுகிறதாகச்‌ செல்லுகிறது இததிருவாய்மொழி. பரமபதத்திற்குச்‌ செல்ல வழித்‌ துணை வேணுமோ? “அர்ச்சிர்‌ திரபூர்வபக்ஷஷடு தங்மாஸாப்து வாதாம்சுமத்‌ க்லெளவித்யுத்‌ வருணேந்த்ர தாத்ரு மஹித என்று நடாதூரம்மாள்‌ பணித்தபடியே அர்ச்சிராதிகள்‌ வழிநடத்தவன்றோ போகிறது' வேறு வழித்துணை ஏதுக்கு? என்று ஒரு கேள்வி பிறக்கும்‌, வராஹ சரமச்லோகத்திலே *ததஸ்‌ தம்‌ ம்ரியமாணம்‌ து..அஹம்‌ ஸ்மராமி மத்பக்தம்‌ நயாமி பரமாம்‌ குதிம்‌* என்று எம்பெருமான்‌ தானே வழி நடத்திக்கொண்டு போவதாகச்‌ சொல்லி யிருக்கையாலே  திருநாடு செல்வார்க்கெல்லாம்‌ அவனே வழித்‌துணையாகிறானென்னுமிடம்‌, சாஸ்த்ர ஸித்தமாயிருந்தது. அப்படி வழித்துணையாகும்‌ பெருமான்‌ திருமோகூரிலே வந்து ஸந்நிதி பண்ணியிருக்கிறானாகக்‌ கொண்டு அப்பெருமானையே வழித்துணையாகப்‌ பற்றுகிறார்‌. வழித்துணையாமிடத்து ஞானத்‌தாலும்‌ சக்தியாலும்‌ குறையற்திருப்பானொருவனே யன்றோ ஆக வேணும்‌; அவன்தான்‌ விரோதி நிரசன ஸமர்த்தனாகவும்‌. இருக்க வேணுமே; இப்படிப்பட்ட வாய்ப்பெல்லாம்‌ திருமோகூரெம்‌பெருமான்‌ பக்கலிலே குறையற்திருக்கிறபடியை அநுஸந்தித்துக்‌ கொண்டு அப்பெருமானையே வழித் துணையாகப்‌ பற்றுகிறாராயிற்று
பத்தாம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌--கெடுமிடர்‌ -கீழ்த்திருவாய்மொழியில்‌ திருமோகூரை யநுபவித்தார்‌; இத்‌ திருவாய்மொழியில்‌ திருவனந்தபுரத்தை யநுபவிக்கிறார்‌; மேலே 'திருவாட்டாறு, திருமாலிருஞ்சோலை, திருப்பேர்‌ நகர்‌ என்கிற 
-திருப்பதிகளையும்‌ பேசப்போகிறார்‌.
கீழே ஒன்பதாம்‌ பத்திலும்‌ பல திருப்பதிகளைப்‌ பேசினார்‌. இப்படி அடுத்‌த்‌டுத்துத்‌ திருப்பதிகளிலே யீடுபடுவதற்கு என்ன காரணமென்று ஆராய்ச்சி செய்ய ப்ராப்தம்‌. -திருமங்கையாழ்வாரும்‌ பெரிய திருமொழியில்‌ (10-1) *ஒரு நற் சுற்றம்‌* என்னும்‌ பதிகத்தில்‌ ஒவ்வொரு பாட்டிலும்‌ இரண்டிரண்டு திருப்பதிகளைப்‌ பேசியிருக்கிறார்‌; அதற்கு என்ன காரண மென்று ஆராய்ச்சி செய்த ஆசாரியர்கள்‌ வெகு ஆச்சரியமாகக்‌ கருத்தறிந்து கூறியுள்ளார்கள்‌; பிறந்தகத்தில்‌ நின்றும்‌ புக்ககஞ்‌ செல்லப்‌ புறப்படுகின்‌ற பெண்பிள்ளை தான்‌ நெடுநாள்‌ வஸித்த விடத்திலே தன்னோடு மிகவும்‌ முகம் பழகியிருந்த பரம ப்ரேமா ஸ்பதர்களான சில. 'பெண் பிள்ளைகளைச்‌ சென்று பணிந்து நங்காய்‌! நான்‌ போய் வருகிறேன்‌; மாதே! நான்‌ சென்று வருகிறேன்‌' என்று சொல்லி விடை பெற்றுக்கொள்வதற்காகச்‌ சில குழடுகள்‌ ஏறியிறங்குமாபோலே, இவ்வாழ்வாரும்‌ தம்‌ புக்ககமாகிய பரமபதத்தின்‌ பயணத்திற்குப்‌ பூர்வாங்கமாக, தமது மிக்க. ஈடுபாட்டிற்கிடமான சில திருப்பதி யெம்பெருமான்கள்‌ பக்கலிலே. சொல்லிக் கொள்வதாக நுழைந்து புறப்படுகிறார்‌ *ஒரு நல்சுற்றத்திலே- நம்மாழ்வாருமப்படியே *மாலை நண்ணிக்குப்‌ பிறகு பரமபத ப்ராப்தி அணித்தென்று துணிந்தவராகையாலே பல திவ்ய தேசங்களிலே புகுவதாகிறார்‌. இப்போது திருவனந்தபுரத்தை ப்ராப்யமாகத்‌ துணிந்து அவ்விடத்திலே யீடுபட்டுப்‌ பேசுவதாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி
பத்தாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌-- வேய் மரு தோளிணை -கீழ்த் திருவாய்மொழியில்‌, ஆழ்வார்‌ தாமும்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌களுமாய்த்‌ திருவனந்தபுரத்தே புக்கு அடிமை செய்யப்‌ பாரித்தவர்‌' அப்போதே அவ்விடத்தே புக்கு அடிமை செய்யப்‌ பெறாமையாலே கலங்கினார்‌; பழையபடியே நமக்கு ஸம்ஸாரத்திலிருப்பே சேஷித்து விடுகிறதோ” என்று அதிசங்கை தோன்றப்‌ பெற்றார்‌; இவ்வதிசங்கைக்கு நிதான மென்னென்னில்‌; ப்ரக்ருதி ஸம்பதத்தின்‌ கொடுமையாலும்‌ எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியத்தைப்‌ பற்றவும்‌ இங்ஙனே அதிசங்கையுண்டாகக்‌ குறையில்லையன்றோ, இப்படி தமக்குண்டான அதிசங்கையை நேர் கொடு நேரே விண்ணப்பஞ்‌ செய்யாமல்‌ முகபேதத்தாலே விண்ணப்பஞ்‌ செய்‌கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌; எங்ஙனேயென்னில்‌, இடைப்‌ பெண்களுக்குக்‌ கண்ணபிரான்‌ மீது ஒரு அதிசங்கை யுணடாகி அவர்கள்‌ கதறினபடியை வெளியிடும்‌ முகத்தாலே தம்முடைய அதிசங்கையை வெளியிடுபவராகிறார்‌; அதாவது - ஒரு படுக்‌கையிலே கூடவிருக்கச்‌ செய்தே பசுமேய்க்கப்போகிற விடியற்‌ காலம்‌ வந்து, அக்காலத்திற்கேற்ற குயில்‌ மயில்‌ முதலானவற்றினுடைய பாடலாடல்‌ முதலான அடையாளங்களையுங்‌ காண்‌கையாலே அவற்றையே கொண்டு கண்ணபிரான்‌ பசுமேய்க்கப்‌ போனான்‌" என்று 'அதிசங்கை பண்ணி நோவுபடுகிற இடைப்‌ பெண்களது பேச்சை அநுவதிக்கும்‌ முகத்தாலே ஆழ்வார்‌ தமக்‌குண்டான அதிசங்கையை வெளியிடுகிறாரென்றவாறு. இத்திருவாய்மொழிக்கான நூற்றந்தாதிப்‌ பாசுரத்தில்‌ மணவாளமா முனிகள்‌ ஆய்ச்சிகளுக்குண்டான அதிசங்கையைம்‌ பற்றிச்‌ சிறிதும்‌ ப்ரஸ்தாவியாமல்‌ **தன்னை யின்னம்‌ பூமியிலே வைக்கு மெனச்‌  சங்கித்து ” என்று ஆழ்வாருடைய அதிசங்கை யொன்றையே இப்பதிகத்திற்கு ப்ரமேயமாக அருளிச்‌ செய்திருப்பது இங்குக்‌ குறிக்கொள்ள த்தக்கது, அந்யாபதேசத்தை விட்டு ஸ்வாபதேசத்தையே கொண்டருளினபடி, அதற்குமேல்‌ “மால்‌ தெளிவிக்கத்‌ தெளிந்த!” என்றுமருளிச்‌ செய்துள்ளார்‌; ஆழ்வாருடைய அதிசங்கையைக்‌ கண்ட எம்பெருமான்‌ ஆழ்வாரைத்‌ தெளிவு பெறுத்தியதாக இதன்‌ பொருள்‌ தேறுகின்றது; இப்பதிகத்தில்‌ பத்தாம்‌ பாட்டில்‌ “செங்கனிவாயெங்களாயர்தேவே” என்றதின்‌' சுவடறிந்து பூருவர்கள்‌ நிர்வஹித்தருளினபடியைத்‌ தழுவி “மால்‌ தெளிவிக்கத்‌ தெளிந்த?” என்றருளிச்‌ செய்யப்பட்டதென்க. இத்திருவாய்மொழிக்குக்‌ காலைப்பூசல்‌ என்று நம்‌ ஆசாரியர்கள்‌ வழங்கும்‌ திருநாமம்‌, (மல்லிகை கமழ் தென்‌றற்பதிகம்‌-மாலைப்‌ பூசல்‌). 
பத்தாம்பத்தில்‌ நான்‌காம் பதிகம்‌- சார்வே தவ நெறி --ஆழ்வார்‌ தாமான தன்மையை விட்டுப்‌ பெண் தன்மை யெய்திப்‌ பேசும்‌ பரிசு முதற் பத்தில்‌ நான்காம்‌ பதிகமான *அஞ்சிறைய மட நாரையிலே தொடக்கமாயிற்று; அது கீழ்ப் பதிகத்தோடு தலைக்‌ கட்டிற்று. இனி மேலுள்ள பதிகங்களிற்‌ பெண்மை தலைகாட்டா தென்க. கீழ்த்‌ திருவாய்மொழியின்‌ ப்ரமேயததை அநுவதித்துக்‌ கொண்டு இங்கே நம்பிள்ளை யருளிச்‌ செய்யுமது காண்மின்‌ - “தம்மைப்‌ பிரிய நினைவின்றிக்கே யிருக்க அதிசங்கையாலே பிரிந்தார் படும்‌ வ்யஸநத்தைப் பட்டு அத்தாலே அவஸந்‌நரானவரை  “உம்மை யொரு நாளும்‌ பிரியேன்‌? என்று அவன்‌ ஆச்வஸிப்பிக்க அத்தாலே தரித்து மிகவும்‌ ப்ரிதரானார்‌ கீழ்‌” என்று, நூற்றந்‌தாதியிலே மணவாள மாமுனிகள்‌ “தன்னை யின்னம்‌ பூமியிலே வைக்குமெனச்‌ சங்கித்து மால் தெளிவிக்கத்‌ தெளிந்த மாறன்‌!” என்றருளிச்‌ செய்தபடியே ஆழ்வார்‌ தம்முடைய அதிசங்கை தொலையப் பெற்று இனி நமக்குப்‌ பரமபத ப்ராப்தியில்‌ ஸந்தேஹ மில்லை யென்று துணிந்து, திருவாய்மொழியாகிற இந்த மஹா சாஸ்திரத்திற்குச்‌ செய்ய  வேண்டுவதெல்லாம்‌ செய்து தலைக்கட்டத்‌ தொடங்குகிறார்‌ இனி; '“பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தியின்படியே ஆதியிலே பிறர்க்கு உபதேசித்த பக்தி பலத்தோடே சேர்ந்தபடியைச்‌ சொல்லி நிகமிக்‌கிறார்‌ இதில்‌, விபிஷணாழ்வான்‌ இராவணனைக்‌ குறித்து  உபதேசிக்க, அவ்வுபதேசம்‌ அவனுக்குப்‌ பலியாதொழிந்தாலும்‌ உபதேசித்தவற்குப்‌ பெருமாள்‌ பக்கலிலே ப்ராவண்யம்‌ கனத்துத்‌  "தன்‌ பேற்றுக்கு உறுப்பானாப் போலே இவர்க்கும்‌ பரோபதேசம்‌  தம்முடைய ப்ராவண்யம்‌ கனக்கைக்கு உடலாகி ஸபலமானபடியைச்‌ சொல்லி நிகமிக்கிறாரென்க, பிள்ளானுடைய நிர்வாஹமாக ஒரு ஸங்கதி ஈட்டிலருளிச்‌ செய்யப்படுகிறது; நீ பசு மேய்க்கப்‌ போக வேண்டா வென்றவாறே அதில்‌ தவிர்ந்தேனென்றான்‌ எம்பெருமான்‌; அந்த பெருங்குணத்திலே யீடுபட்டு இவன்‌ பக்தி ஸுலபனென்பதை நிச்சயித்து அது தன்னை யருளிச்‌ செய்வது இத்திரு வாய்மொழி என்று. 
பத்தாம் பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- கண்ணன்‌ கழலிணை -முதற்பத்தில்‌ *வீடுமுன்‌ முற்றவுமென்கிற பதிகத்திலே பரோபதேசம்‌ பண்ணத்‌ தொடங்கின வாழ்வார்‌ பத்துத்தோறும்‌ உபதேசபரமான பதிகம்‌ அருளிச்செய்துவந்து, இப்பதிகத்தோடே பரோபதேசத்‌தைத்‌ தலைகட்டுகிறாராயிற்று, பெரியார்கள்‌ தாங்கள்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளும்‌ சரம ஸமயத்திலே அந்தரங்கரானார்க்கு அருமையான சில வுபதேசங்களைச்‌ செய்து போவதுண்டு. அதற்குச்‌ சரம ஸந்தேசமென்று பெயர்‌, இப்பதிகமும்‌ அதுவாயிரா நின்றது. எம்பெருமானோ ஆழ்வாரைத்‌ திருநாட்டுக்குக்‌ கொண்டுபோக விரையா  நின்றான்‌ ; ஆழ்வாரும்‌ இனி நமக்கு ப்ராப்தி தப்பாதென்று துணிவு கொண்டார்‌. இவர்தாம்‌ ஸம்ஸாரிகள்‌ பக்கலிலே பரம கருணைய வடிவெடுத்தவராசையாலே, ஸம்ஸாரிகளுக்கு இதுகாறும்‌ வேண்டிய  படி உபதேசங்கள்‌ செய்தருளியிருந்தாலும்‌, விபீஷணாழ்வான்‌ ராவண பவனத்தை விட்டுப்‌ பெருமாள்‌ திருவடியேறப்‌ போவதாகக்‌ கிளம்‌பின பின்பும்‌ ** நறச்யந்தமுபேச்ஷேயம்‌ ப்ரதீப்தம்‌ சரணம்‌ யதா?” என்று சொல்லிப்‌ பின்னையும்‌ உபதேசிக்க வொருப்பட்டாப்போலே இவரும்‌ சரமோபதேசம்‌ செய்து நிகமித்தருளுகிறார்‌. இவர்தாம்‌ பெரிய திருவந்தாதியில்‌ *ஆரானுமாதானுஞ்‌ செய்க அகலிடத்தை பபஇருவது ஆரானுமாதானு யாராய்ந்து அது திருத்தலாவதே!* என்று “ஸம்ஸாரிகளுக்கு உபதேசிப்பது கஷ்டம்‌ கஷ்டம்‌. இது நம்மாலாகாது”” என்று சொல்லி யிருந்தும்‌ *பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணி கொள்ளவே தாம்‌ அவதரித்தபடியைத்‌ திருவுள்ளம்‌ பற்றி *சொன்னால்‌ விரோதமிதுவாகிலுஞ்‌ சொல்லுவன்கேண்மினோ வென்று உபதேசத்தில்‌ ருசி குலயாமே போந்தவர்‌ *மண்ணர்க்குத்‌ தானுபதேசிக்கை தலைக்கட்டினான்‌ மாறன்‌* என்று நூற்றந்தாதியில்‌ மணவாள மாமுனிகளருளிச்‌ செய்தபடியே அவ்வுபதேசத்தை இப்பதிகத்தோடு தலைக்கட்டுகிறாராயிற்று. 
 பத்தாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிதம்‌-- அருள்‌ பெறுவாரடியார்‌ --இத்திருவாய்மொழிக்கு அவதாரிகையிடத்‌ தொடங்கும்‌ போதே நம்பிள்ளை மருளிச்‌ செய்வது பாரிர்‌--* *பொய்ந்‌ நின்ற ஞானம்‌ தொடங்கி இவ்வளவும்‌ வர ஈச்வரனை ஆழ்வார்‌ பின்‌ தொடர்ந்தபடி சொல்லிற்று; இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்வரன்‌ பின்‌ தொடருகிறபடி சொல்லுகிறது”! என்று, அதாவது, இதுவரையில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானிடத்தில்‌ யாசகராய்‌ நின்றார்‌ ; இனி- முனியே நான்முகனென்னும்‌ பதிகத்தளவும்‌ எம்பெருமான்‌ ஆழ்வார்‌ பக்கலிலே யாசகனாய்‌ நிற்கிறானென்கை, இத்திருவாய்‌ மொழியில்‌ முன்றாம்‌ பாட்டில்‌ *இன்று விண்ணுலகந்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌* என்றருளிச்‌ செய்கையாலே ஆழ்வாரைப்‌ பரமபதத்‌தேறக்‌ கொண்டு போகையிலே எம்பெருமான்‌ தான்‌ விரைந்து *ஆழ்வாரே! வாரீர்‌, வாரீர்‌ என்று வேண்டுகின்றமை தெரிகின்றது. அவ்வளவேயுமன்‌றிக்கே சரம சரீரமாகையாலே ஆழ்வாருடைய திருமேனியில்‌ தனக்குண்டான வியாமோஹத்தாலே கொண்டுபோக விரைந்ததையுங்கூட மறந்து இத்திருமேனி யநுபவத்திலே மிகவும்‌ சபலனாய்‌, முன்பு ஆய்ச்சியரோடு குரவை கோத்த போது அநேக விக்ரஹ பரிக்ரஹம்‌ பண்ணி யநுபவித்தாப்‌ போலவும்‌, நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறாயிரம்‌ தேவிமார்களை' த்வாரகையில்‌ பதினாறாயிரம்‌ விக்ரஹங்கள்‌ கொண்டு அநுபவித்தாப்போலவும்‌ அநேக விக்ரஹங்‌ கொண்டு ஆழ்வாருடைய அவயவங்கள்‌ தோறுமநுபவிக்கவும்‌ விரும்பி அதற்கு அநுமதி பண்ணுமாறு வேண்டிக்கொண்டான்‌. அதை ஆழ்வார்‌ வெகு சிரமப்பட்டு விடுவித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும்‌ எம்பெருமானுடைய அநுவர்த்தனத்தில்‌ குறைவில்லையே. இதையெல்லாம்‌ திரு வுள்ளம் பற்றியே நம்பிள்ளை * இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்‌வரன்‌ பின்‌ தொடருகிறபடி சொல்லுகிறது ”' என்று மருமமறிந்து அருளிச்செய்தார்‌. எம்பெருமானைப்‌ பெறவேணுமென்று ஆழ்‌வார்க்கு விடாய்‌ அதிகமா ? ஆழ்வாரைப்‌ பெற வேணுமென்று எம்‌பெருமானுக்கு விடாய்‌ அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்குமளவில்‌ ஆழ்வாருடைய விடாய்‌ சிறிது ; எம்பெருமானுடைய விடாய்‌ தானே பெரிது என்று ஸித்தாந்தம்‌ செய்ய வேண்டியதாகிறது. இவ்விஷயம்‌ கீழேயே (9-6.10)* வாரிக்‌ கொண்டுன்னை விழுங்குவன்‌ காணிலென்று, ஆர்வுற்றவென்னை யொழிய என்னின்‌ முன்னம்‌ பாரித்துத்‌ தானென்னை முற்றப்‌ பருகினான்‌* என்னும்‌ பாசுரத்தினால்‌ ஆழ்வார்‌ தம்மாலேயே வெளியிடப்பட்டுள்ளது. எம்பெருமான்‌ அப்படி பெரு விடாயனாயிருந்து வைத்தும்‌, ஆழ்வாரைக்‌ கொண்டு இவ்வுலகுக்கு *தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொன்னேன்‌ என்னும்‌ படியாக உணவளிக்க விரும்பியிருந்ததனால்‌ தன்‌ விடாயையடக்கிக்‌ கொண்டு ஸமய மெதிர்ப்பார்த்திருக்க வேண்டியதாயிற்று, அக்‌ காரியமும்‌ ஒருவாறு தலைக்கட்டுமளவானவாறே இனி யெம்பெருமான்‌ ஆறியிருக்கமாட்டானே, திருவாட்டாற்றிலே தங்கு வேட்டையாக வந்து நிற்கிறவனாகையாலே ஆழ்வாரைக்‌ கொண்டு போகையிலே அவனுக்கு விரைவுமிக்கது, ஏன்‌? திருநாட்டிலே கொண்டுபோய்‌ அநுபவிக்கவேணுமென்று என்ன நிர்ப்பந்தம்‌? இங்கேதான்‌ அநுபவிக்கலாகாதோ ? என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌ ; *பாவியேனைப்‌ பல நீ காட்டிப்படுப்பாயோ* என்னும்படியான இருள்‌ தருமா ஞாலத்‌திலே அவிச்சிந்நமான அநுபவம்‌ வாய்க்கமாட்டாதே ; “* ஒரு விச்‌ சேதமும்‌ வாராதபடி. ஏகாந்தமாயிருப்பதொரு தேச விசேஷத்திலே கொண்டுபோய்‌ வைத்து அநுபவிக்க வேணும்‌” என்று பாரித்‌தான்‌. அது தானும்‌ கிடந்தானை கண்டேறுமா போலன்‌றிக்கே ஆழ்வார்‌ நியமித்தருளுகிறபடியே செய்தோமாகவேணும்‌ என்று பாரதந்திரியத்திலும்‌ ருசி யுண்டாகப்‌ பெற்றான்‌. ஆழ்வாரோ பாரதந்திரியத்தின்‌ எல்லையிலே நிற்பவர்‌. ஸர்வேச்வரனைத்‌ தாம்‌. நியமிக்கமாட்டாரே ! ' அவனோ கையுமஞ்ஜலியுமாய்‌ நின்று “ஆழ்வாரே ! நியமித்தருளிர்‌ ;”' என்கிறான்‌. ஆழ்வார்க்கோ நியமிக்க வாய்‌ எழவிலலை, “பராத்பரனாயிருந்து வைத்து இப்படி நம்பக்கலில்‌ பரதந்திரனாய்த் தாழ நிற்கிறானே ! இதுவென்‌ ?”” என்று அந்த சீல குணத்தை யநுபவிக்க விழிந்தாராழ்வார்‌. அநுபவிக்குமிடத்துக்‌ கைவல்யாநுபவம்‌ போலே தனியநுபவம்‌ ரஸிக்கமாட்டாதாதைகையாலே நால்வரோடே கூடி யநுபவிப்போமென்று நாட்டார்‌ பக்கலிலே கண்‌ வைத்தார்‌. அவர்கள்‌ உண்டியே உடையே உகந்தோடுபவாராய்‌ சப்தாதி விஷயங்களிலே அந்யபரராய்‌ அவற்றோடே பணி போந்திருக்கார்கள்‌. அவர்களை விட்டு, பரம ரஸிகனான ஸர்வேச்வரனோடு தான்‌ கூடி இக்குணத்தை யநுபவிப்போமே யென்று அவன்‌ மேலும்‌ கண்‌ செலுத்தினார்‌. அவனோ ஆழ்வாரைக்‌ கொண்டு போகையிலே விரைந்திருப்பானொருவனாகையாலே அதிலே அந்ய பரனாம்‌ ஆழ்வாருடைய அநுபவத்திற்கு உசாத்துணையாக மாட்டிற்‌றிலன்‌. இப்படி ஸம்ஸாரிகளும்‌ துணையன்‌ றிக்கே ஸர்வேச்வரனும்‌ துணையன்றிக்கே யானவிடத்து *யானுமென்னெஞ்சு மிசைந்‌ தொழிந்தோம்‌* என்று முன்னமே சொல்லியிருக்கிறாரே யாழ்வார்‌, “தம்மோடு உடன்‌ கேடான நெஞ்சிருக்க இனி என்ன குறையென்று தேறி அந்த நெஞ்சோடே யநுபவிக்கிறுர்‌--நெஞ்சே ! அவனுடைய மேன்மையிருந்தபடி கண்டாயே; அப்படி மேன்மையுடையவன்‌ நம்பக்கல்‌ இப்போது தாழநிற்கும்நிலை கண்டாயே; நாம்‌ பெற்ற பேற்றின்‌ கனமிருந்தபடி கண்டாயே ! என்று சொல்லிச்‌ சொல்லி உள்குழைகிறார்‌. ஸர்வேச்வரனாகிறான்‌ ஸர்வ நியாமகனாய்‌ ஸ்வதந்‌தரனாயிருப்பானொறுவன்‌ என்று இதுவரை நினைத்திருந்‌தாராழ்வார்‌ ; ஆச்ரித பாரதந்திரியமே அவனுக்கு ஸ்வரூபமென்கிற உண்மையை இப்போதறிந்து “இஃது என்ன சிலம்‌ !!' என்று வியக்கிறாராயிற்று. | 
பத்தாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌--திருமாலிருஞ்‌ சோலைமலை -ஆழ்வாரைத்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளப்‌ பண்ணிக்கொண்டு. போக எம்பெருமான்‌ விரைந்தமை சொல்லிற்று *அருள்‌ பெறுவாரடியாரென்னுக்‌ திருவாய்‌ மொழியிலே, அதற்குச்‌ சிறிது 
இடையூறு விளைந்தது கீழ்த்‌ திருவாய்‌ மொழியில்‌--ஆழ்வாருடைய திருமேனியிலே எம்பெருமான்‌ அளவுகடந்த அபிநிவேசம்‌. பண்ணி இத்திருமேனியோடே ஆழ்வாரைத்‌ திருநாட்டுக்குக்‌ கொண்டு போவதாக முயல, ஆழ்வார்‌ தம்முடலின்‌ தண்மையை அப்பெருமானுக்கு அறிவித்துத்‌ தடுக்க இவ்வழியாலே எம்பெருமானுடைய விரைதல்‌ சிறிது தடைபட்ட,தாயிற்று, எம்பெருமானும்‌ ஆழ்வாருடைய நிஷேதத்திற்கு இணங்கி நின்று இவர்க்கு விண்‌ணுலகம்‌ தர விரைந்தானாகி வானேறும்‌ வழியிலே கொண்டு போவதாக முயன்‌றவளவிலே ஆழ்வார்‌ அவனை மடிபிடித்து ஒரு கேள்வி கேட்கத்‌ தொடங்கினார்‌; அதாவது, “இன்று இப்படி பதறுகின்ற நீ அநாதிகாலம்‌ என்னை இவ்விருள்‌ தருமா ஞாலப் படுகுழியிலே தள்ளியிட்டு வைத்து ஆறியிருந்தமை எங்ஙனே? இன்று இப்படி ஆதரிக்க வைக்கும்‌ அநாதிகாலம்‌ அநாதரித்திருந்தமைக்கும்‌ ஹேது சொல்லியருளவேணும்‌”” என்றார்‌; அவனும்‌ என்ன ஹேது சொல்லலாமென்று பலவாறு சிந்தித்துப்‌ பார்த்தான்‌. எதற்கும்‌ ஆழ்வார்‌ பிரதிகோடி சொல்ல வல்லலர்‌ என்பதைத்‌ தன்னில்‌ தாணுணர்ந்து, *நிரங்குச ஸ்வாதந்திரியத்தாலே செய்யுமதுக்கு ஹேதுவுண்டோ” வென்று ஆழ்வார்‌ தாமே ஸமாதானமடைந்திடுக வென்றும்‌ கருதி, ஒரு மறுமாற்றமுங்‌ காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக்‌ கீறி நின்றான்‌. இது ஒரு நிர்ஹேதுக வீஷயீகாரமென்று ஆழ்வாரறிந்து விஸ்மிதராய்க்‌ களித்துப்‌ பேசுகிறதாயிரா நின்றது--இத்திருவாய்மொழி..
பத்தாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌ -சூழ்விசும்‌ பணி முகில்‌ -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ *இன்றென்னைப்‌ பொருளாக்கித்‌ தன்னை யென்னுள்‌ வைத்தான்‌, அன்றென்னைப்‌ புறம்போகப்‌ புணர்த்ததென்‌ செய்வான்‌?* என்று எம்பெருமானை மடி பிடித்துக்‌ கேள்வி கேட்டாராழ்வார்‌; அதற்கு ஹேது தன்னுடைய நிரங்குச ஸ்வாதந்திரியமொழிய வேறொன்றில்லையென்று ஆழ்வாரும்‌ நன்‌கறிந்தவர்‌, எம்பெருமானும்‌ நன்கறிந்தவன்‌: ஆகவே *ஆழ்வீர்‌! அன்று உபேசுஷித்திருற்ததற்கும்‌ ஸ்வாதர்திரியமே காரணம்‌, இன்று ஆதரிப்பதற்கும்‌ ஸ்வாதந்தரியமேதான்‌ காரணம்‌” என்று பதில்‌ சொல்லவேண்டும்‌. தான்‌ பரம காருணிகனாய் இருந்து வைத்து இங்ஙனே பதில்‌ சொல்லத்‌ தகாதாதலால்‌ ஒரு வகையான உத்தரமுஞ்‌ சொல்லாதே தலைகுனிந்து நின்றான்‌. ஆழ்வாரைப்‌ பரம பதத்தேறக்‌ கொண்டுபோக விரைவு கொண்ட தான்‌ இப்படி ஆழ்வாருடைய கேள்விக்கு பதில்‌ சொல்ல மாட்டாமல்‌ ,வெள்கி நிற்கிற நிலையை மறைப்பதற்காக ஒருவழி பண்ணினான்‌; கலியாணங்களில்‌ சடங்கு காட்டும்‌ உயாத்யாயர்கள்‌ சொல்லவேண்டிய மந்த்ரம்‌ தோன்றாவிட்டால்‌, மேள தாளங்களைக்‌ கொட்டச்சொல்லி வாத்ய கோஷத்தாலே அத்தை மறைத்து விடுமாபோலே, இப்போது நிருத்‌தரனான தானும்‌ மேக ஸமூத்ர பேரி கீத காஹள சங்க ஆசீஸ்‌ ஸ்துதி கோலாஹலங்களைச்‌ செய்தான்‌. அதாவது. *சூழ்விசும்பணி முகில்‌ தூரியம்‌ முழக்கின, ஆழ்‌ கடலலைதிரை கையெடுத்தாடின, என்று ராஜகுமாரர்‌ போம்போது மங்களவாத்ய கோஷம்‌ பண்ணு வாரைப்போலே பரமபதத்துக்குப்‌ போமவர்களைக் கண்ட  ப்ரீதியாலே முழங்குவது கோஷிப்பதாகா நிற்கும்‌ மேக ஸமுத்ரங்களாகிற பேரிகளின்‌ கோலாஹலத்தை யுண்டு பண்ணினான்‌. *கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கெருடர்கள்‌* என்கிற  கீதங்களைச்‌ செவிப்படுத்தினான்‌; *காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்‌* என்கிற காஹளசங்கங்களினுடைய முழக்கத்தை முட்டினான்‌; *வாளொண்கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌? என்கிற ஆசிஸ்ஸின்‌ ஆரவாரத்கைக்‌ கிளப்பினான்‌; *தொடர்ந்தெங்கும்‌ தோத்திரஞ்‌ சொல்லினர்‌* என்கிற ஸ்தோத்ர கோலாஹலங்களைப்‌ பிறப்பித்தான்‌.  ஆக இப்படிப்பட்ட கோலாஹலங்களை விளைவித்த மாத்திரமே யன்‌றிக்கே, அர்ச்சிராதி கதியையும்‌, ஆதிவாஹிக ஸத்காரத்தையும்‌ (பரமபத) திவ்ய தேச ப்ராப்தியையும்‌ அங்குள்ளாருடைய பஹுமானத்தையும்‌ ஆனந்த மயமான ஆஸ்தானத்திலிருப்பையும்‌ ஸ்வ சரண கமல ப்ராப்தியையும்‌ பெற்றாராகப்‌ பேசும்படியும்‌ பண்ணி வைத்தான்‌. அதெல்லாம்‌ பேசப்படுகிறது இத்திருவாய்மொழியில்‌. 
பத்தாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌ முனியே நான்முகனே --கீழே அர்ச்சிராதிமார்க்க கதியைப்‌ பறக்கப்பேசி *அந்த மில்‌ பேரின்பத்து அடியரோடிருந்தமை* என்றார்‌. திருக்கண்களைத்‌ திறந்து பார்த்தவாறே திருப்புளியாழ்வாரடியிலேயே தாம்‌ விற்‌றிருக்கக்கண்டார்‌. நித்ய முக்தர்களின்‌ திரளிலே யிருந்ததாகச்‌ சொன்ன இருப்பு, ஜ்ஞாநாநுஸந்தான மாத்திரமாயிருந்தது. ப்ரக்ருதி யிலேயே தாம்‌ சிக்குண்டிருக்கிறபடியை கண்டு போர நொந்தார்‌.தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்யகதித்வத்தையும்‌ நன்‌குணர்ந்த எம்பெருமான்‌ இன்னமும்‌ தம்மை இப்படி நோவுபட விட்‌டிருப்பது என்னே! என்று மிகவும்‌ கிலேசித்து மாதா பிதாக்கள்‌ அருகேயிருக்க பசியாலும்‌ தாஹத்தாலும்‌ நோவு படுகிற ஸ்நந்தயப்‌ பிரஜை ஆர்த்தியின்‌ மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக்‌ கூப்பிடுமா போலே. ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாதாருடைய ஹ்ருதயங்‌களுங்கூட இரங்கும்படியாகவும்‌, அவனுக்கு, நம்மை ரஷித்தல்லது. பரம பதத்திலும்‌ இருப்பு அரிதாம்படியாகவும்‌ காட்டுத்‌ தீயிலே அகப்பட்டாரைப்‌ போலே ஆர்த்த த்வநியோடே பெருமிடறு செய்து கூப்பிட்டு அவனும்‌ வந்து தோற்றி இவருடைய ப்ரக்ருதிஸம்பந்‌தத்தை யறுத்து அடியார்‌ தம்‌ திரளிலே கொண்டு சேர்க்க, தாம்‌ க்ருத க்ருத்யராய்‌ அவாவற்று வீடுபெற்ற படியைப்‌ பேசுகிறார்‌ இத்‌ திருவாய்மொழியில்‌, -பரம போக்யமான நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்‌ :- “இப்ப்ரபந்தத்துக்கு ப்ரமேயமான வஸ்து ஸர்வேச்வரன்‌; இப்‌ ப்ரபந்தம்‌ - அவாவிலந்தாதி, மயர்வறமதிநலம்‌ மருளப்‌ பெற்றவர்‌ கவி பாடினார்‌! இனி இவருடைய அவதாரம்‌ தான்‌ ஸர்வேச்வரனுடைய அவதாரத்தோபாதி ஸாதுக்களுடைய ஸுூக்ருத பலம்‌.”,




—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ ராமாயணம்

July 29, 2025

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-
22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து –
24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,-மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை-வாழ —-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி உலகினில்–லௌகிகர் இடங்களில்-சார்ங்கம் உதைத்த சர மழை போல்-இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்–சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று –எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சார்ங்கம் உதைத்த –அகம்படியர் –சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இறே-அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும்-விலக்க ஒண்ணாதாய் இருக்கை-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே-சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-வாழ உலகினில் பெய்திடாய் –த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது-அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

————–

பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே–ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –-கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –உறக்கத்தில் தலையானவனும்-உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ -ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே –நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ ––அவனது -துயில்-உன்னது -பெரும் துயில்–அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்-ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே-அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு – நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு-அவன் ஒருத்தியை இறே பிரித்தது-நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-கூற்றத்தின் வாய் வீழ்ந்த-தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே- வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த-பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின -எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் -விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –

இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு-இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை 

—————

சினத்தினால் –உண்ணாது உறங்காது –அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே-பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழியபெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்-இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே –விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –சினத்தினால் மனத்துக்கு இனியான் –அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று-(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப்புரக் காரியமும் செய்வார் பெருமாள் ) தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

தென்னிலங்கை-பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –-ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி கொலைக் காரன் இருக்கிற இடம் இறே-அத் திக்குக்கும் அஸஹ்யமான படி-தென்னிலங்கை கோமானைச் செற்ற-யத்ய தர்மோ ந பலவான்-என்றும் –அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் –திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே-ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –படையைக் கொன்று –புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து ஆயுதங்களை முறித்து –அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –கோபத்தினாலே-யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து-அத ஏவ மனத்துக்கு இனியானை –சக்கரவர்த்தி திருமகனை –மனத்துக் கினியானைப் –வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக-பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே-ஏகதார வ்ரதனாய் இருக்கை –கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று-நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு-இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

———–

பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே-தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –-முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே-கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி– திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே-ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது–அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய-கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.-ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க-ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் –தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில் –

கீர்த்திமை –-எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம்-உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்-தங்கை அழகிலே கண் கலங்கினாள்-தம்பி சீலத்துக்கு இலக்கானான் –-பாடிப் போய் –இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி –வழிக்கு தாரகம் இறே திரு நாமம்-தன் தாள் பாடி -என்னக் கடவது இறே –தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –கீர்த்திமை பாடிப் போய்-கல்யாண குணங்களை-ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி-அதுவே தாரகமாய் போய் –விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தநத்தைப் பாதேயமாகக் கொண்டு வழி கடந்தன ரென்றவாறு

————–

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே-பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை-எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை இவர்களுக்கு குடிப் பிறப்பு –தென்னிலங்கை-அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய் குழவிக் கூடு கொண்டாப் போலே-ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –செற்றாய் –ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை-திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே-மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும் அவர்கள் ஆகையாலே-குடிப் பிறப்பாலே வந்தது –இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்-ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்-சென்று அங்குத்-அங்கே சென்று –நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –கொடிய காட்டிலே பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள் –எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே- உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

————-
உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் –
அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
” என்பது பிராட்டியின் திருவாக்கு.-
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.”
என்றார்.- பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அவிநாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவிநா பாவமேயாம்.

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை–நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது –ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உன் தன்னோடு-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்-(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்-எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் –(பராங்குச நாயகி )

உனக்கே நாம் ஆட்செய்வோம்
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே-நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

———————

வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயினனென்றதாகக் கொள்க.
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்‘-பிராட்டியே தான் மதுரக் கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான் ஸுந்தர பாஹு – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே!” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்-கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் –என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை-அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது-அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

மாதவனை
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்-லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து-அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

மேலே கேசவனென்றதனால் பரசு ராம பங்க கதை ஸூசிதமாகிறது- கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே யாதலால் அது கேசவனை யென்பதனால் ஸூசிதமென்னக் குறையில்லை.-

கேசவனை
விரோதி நிரசன ஸ்வ பாவனை –பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை –
பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே
போக்க வல்லவன் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது--அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற நிலையைச் சொல்லிற்று

மாதவனை கேசவனை
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான்
என்று பட்டர் அருளிச் செய்வர் –

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸூ சனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;
சேயிழையார்
என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்விய இழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால் சொல்லப்பட்ட
தாகிறது
. ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே- பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று- அடுத்தபடியாக ஸீதாபிராட்டி மங்களாசாஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.

இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம் செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களாங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூப ஸம்ஹநம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ருர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்ற பாடமும் பல ஸ்ரீகோஸங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “
ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!
” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப் பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில் கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷிகளையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்து கொள்ளக் குறையில்லை.

தருணவ் மஹாபலெள,புண்டரீக விசாலாக்ஷள சீர க்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை — அதன் பிறகு தாரையின் புகழுரை.-நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-
த்வமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தம தார்மிகச்ச, அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச் ச க்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள்
ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-
வயத்தமேஷ மஹாயோ …. தம : பரமோயாதர சங்க சக்ர கதாதர , ஸ்ரீவத் வக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் ஸாச்வதோ த்ருவ:”இத்யாதி
யாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வாக்கிலும் வந்ததல்ல.-

சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே-ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே-கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –ஸ்வரூப குணங்களாலும்
ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –(நேரிழையீர் அது நேர்மை -ஆஸ்ரயணீய தசை-சேயிழையீர் இது செம்மை -இது அனுபவ தசை )

திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறை கொண்டவர் சக்ரவர்த்தி திருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்று சொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்க வேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றது தான் அங்குப் பறை கொண்டவாறு.

குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”

பெருமாள் திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹித ஸித்தி யாதலால் இதனையே பறை கொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சால விணங்கும்.

இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து –அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி 

அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –-எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-தங்கள் வெறுமையையும்-அவன் பூர்த்தியையும்-பந்தத்தையும் முன்னிட்டுத் தப்புக்கு பொறை கொண்டு-ருசியையும் த்வரையையும் காட்டி-வளைப்பிட்டு-அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –கொண்ட-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-ஆற்றை –கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி  -சேதன லாபம் பகவானுக்கே -பேற்றுக்கு சாதனங்களும் செய்து பெற்று உகப்பானும் அவனே

“அணி புதுவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த விசேஷணமும் ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி உபபாதிப்போம். ஆண்டாளுக்கும வான்மீகி முனிவர்க்கும் அபலபிக்க வொண்ணாத வொரு உத் கர்ஷம் கோதாஸ்தியில்-ः –
வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: | கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7): என்கிற ஸ்லோகத்திற்கு —நிலததில் தென்படும் புற்றானது பூமி தேவியின் காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமாதலால் பூமி என்றே கொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில் நின்றும் தோன்றிய வால்மீகி முனிவர்-ஆண்டாளுடைய காதில் நின்றும் தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்தி ஏற்பட்டு விட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும் தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில் நின்று உண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோக விலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவானால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஸஹஜமே யாதலால்
மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில் நின்றும் தோன்ற
வென்பதில் வியப்பு ஒன்றுமில்லை கிடீர்  -ஸ்ரீராமாயணத்திற்கு ஏற்பட்டிருக்கும் ப்ரஸித்தையைப் பற்றிச் சிறிது வியக்க வேண்டுமே யல்லது உம்முடைய திவ்ய ப்ரந்தங்ளுக்கு ஏற்பட்டிருக்கின்ற போக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
ஸக்தியில்லை என்பது உள்ளுறை –இதனால்,வால்மீமி கோகிலத்தின் சொற்களில்
கிளி மொழிக் கோதையின் சொற்களே விலக்ஷணமாயுள்ளது.

ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன்.
அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,
தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்-உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்!-திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ஸ்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.-அதுபோல உன்னுடைய ஸ்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.-உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?-உன் “ஸ்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது

அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் –தனக்கு-பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேஸ்யமாய் அவர் அபிமானித்த தேசம் என்று ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் திரு அயோத்யையும் போலவும்-நப்பின்னைப் பிராட்டிக்கு கும்ப குலமும் திருவாய்ப்பாடியும் போலவும் அன்றிக்கே-ஆண்டாளுக்கு-பிறவியும் புக்க இடமும் ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இறே உள்ளது –பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே-நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற அலங்காரம் உள்ள தேசம் இறே
(அகாரம் உகாரம் மகாரமும் என்றுமாம்-ரெங்க மன்னாரும் ஆண்டாளும் பெரிய திருவடி-சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்-ஓங்காரமே காட்சி கொடுத்து ஸேவை சாதித்து அருளும் திவ்ய தேசம் )

‘கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்று காட்டினாப் போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவை மிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹல்யா சாப விமோசனம் .4.வில் வளைத்து வைதேஹியை மணம் புணர்ந்தது. 5.பரசு ராம பங்கம்.(ஆக 5) அயோத்யா காண்டத்தில்,1.யுவ ராஜ பட்டாபிஷேக ப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டது. 4. பாதுகா பட்டாபிஷேகம்.5-அத்திரி பகவானாச்ரமத்தில் அநஸூய தேவிக்கும் மீதா ஸீதேவிக்கும் ஸம்வாதம். (ஆக 5)இங்ஙனே காண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை ஐயைந்தாக வகுத்தாள்வது.-
இப் பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக
உரைப்பார்-உபந்யஸிக்க ல்லவர்கள்.

———————————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-14-

July 26, 2025
1-காலக்ஷேபமென்பதுபற்றிய விளக்கம்‌-“முன்னவராம்‌ நம்‌ குரவர்‌ மொழிகளுள்ளப்‌ பெற்றோம்‌, முழு துமக்கவைபொழுது போக்காகப்‌ பெற்றோம்‌” என்று மணவாளமாமுனிகள்‌ பணித்தபடியே பெரியோர்‌ 
களுடைய ஸ்ரீஸூக்திகளைக்கொண்டு போது போக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப்பயன்‌. * “கரவ்ய சாஸ்த்ரவிநோதே௩ காலோ கச்சதி தீமதாம்‌, அந்யேஷாம்‌ து மநுஷ்யாணாம்‌ நித்ரயா நிந்தயா வா? * என்கிற ச்லோகமொன்று யாவருமறிந்ததே,
திருமழிசையாழ்வார்‌ நான்முகன்‌ திருவற்‌ தாதியில்‌ (69) * தரித்திருர்தேனாகவே ர... தெரித்தெழுதி, வாசித்துங்‌ கேட்டும்‌ வணங்கி வழிபட்டும்‌, பூசித்தும்‌ போக்கினேன்‌
போது”
* என்‌றருளிய பாசுரம்‌ ஒவ்வொருவரும்‌ ஙிச்சலும்‌ நினைக்கத்‌ தக்கது. போதுபோக்கும்‌ விதத்தை இவரைப்போல்‌ எடுத்துரைத்‌ தவர்‌ மற்றுயாருமில்லை. தெரித்தல்‌, எழுதுதல்‌, வாசித்தல்‌, கேட்டல்‌ வணங்குதல்‌, வழிபடல்‌, பூசித்தல்‌ ஆகிய இவற்றினாலேயே தாம்‌ போதைப்‌ போக்கினதாகவும்‌ இவையில்லையாயின்‌ தம்மால்‌ உயிர்‌ தரிக்க முடியாதாகவும்‌ வ்யக்தமாக விளம்பியுள்ளார்‌. நம்மாழ்வார்‌. அருளிச்‌ செய்வதோ இதனிலும்‌ விலகஷணமானது) அதாவது
பெரிய திருவந்தாதியின்‌ முடிவில்‌ (பா. 86)* கார்‌ கலந்த மேனியான்‌. கைகலந்தவாழியான்‌, பார்கலந்த வல்வயிற்றான்‌ பாம்பணையான்‌,
சீர்கலந்த சொல்‌ நினைந்து போக்காரேல்‌ சூழ்வினையினாழ்‌ துயரை,
“என்னினைந்து போக்குவரிப்போது,”
* என்றுள்ள யாசுரம்‌ சுவை மிக்க பொருளுடைத்து-ஸ்ரீராமாயண
பாரதாதி இதிஹாஸங்களைக்கொண்டும்‌, ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ முதலிய புராணங்களைக்கொண்டும்‌, அருளிச்‌ செயல்களைக்கொண்டும்‌ பாவத்தைப்‌ போக்கிக்கொள்ளார்களாகில்‌ அதுபற்றி விசாரமில்லை; போதைப்‌ போக்குவதற்கு இவையொழிய வேறு என்ன ஸாதனமுள்ளது! என்று கூறின ஆழ்வாரை வழிபடுகின்ற நாம்‌ நம்முடைய போதை எப்படிப்‌ போக்க ஆசைப்பட வேணுமென்று இன்னமும்‌ விவரிக்கவேணுமோ ? அது நிறைவேறாவிடிலும்‌ அதனை ஆசைப்பட்டாலே போதும்‌.

வேம்புக்குள்ள கசப்பும்‌ மாதுளைக்குள்ள புளிப்பும்‌, கரும்புக்குள்ள தித்திப்பும்‌ முதலியன எப்படி ஒரு நாளும்‌ மாறுவதில்லையோ, அப்‌ படியே மனிதர்களுக்கும்‌ ஜன்மஸித்தங்களான குணங்கள்‌ (நல்லவையோ தீயவையோ) பேர்க்கவும்‌ பேரா என்றே பெரியார்‌ கூறுவர்‌.

திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ அற்புதமாக ஒரு பாசுரம்‌ அருளிச்‌ செய்கிறார்‌; அதாவது (5--9--5) *கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகங்கொண்டவடியன்‌, அறிவருமேனி மாயத்தன்‌*2- -இத்யாதி--*கடியன்‌”'--தன்காரியத்தை ஸாதித்துக்கொள்வதிலேகனவேக முடையவன்‌. அதாவது, தனக்கு விருப்பமுண்டானால்‌ தானேவக்து மேல்‌ விழுந்து விரைந்து கலக்குமவன்‌ என்கை, “கொடியன்‌” எதிர்த்தலைபடுகிற கஷ்டங்களைப்‌ பாராதே கல்நெஞ்சனாய்ப்‌ பிரிந்து,போமவன்‌; ““நெடியமால்‌” மிகவும்‌ பெரியவன்‌ என்பது இச்‌ சொல்லின்‌ பொருள்‌. இதன்‌ கருத்தாவது, மேல்விழுந்து கலக்கும்‌ போது பிரிய வேணுமென்று நினைப்பன்‌, அப்படி அவன்‌ நினைத்ததை யறிந்து “என்னாயனே! பிரியலாகாது பிரியலாகாது” என்று கால்கட்டி விலக்கப் பார்க்கலாமே, அப்படி விலக்குவதற்குக்‌ கூசி நடுங்கி அஞ்சியிருக்க வேண்டும்படி திடீரென்று பரத்துவம்‌ பாராட்டி நிற்பவனென்கை.' உலகங்கொண்ட வடியன்‌”-பிறருடைமையைத்‌ தனக்காக்கிக்‌ கொள்ள நினைத்தால்‌ பின்னை அவர்களுக்கு ஒன்றும்‌ மிச்சப்படாதபடி பண்ணி அவர்களைப்‌ பாதாளத்திலே கள்ளுமவன்‌. “அறிவருமேனிமாயத்தன்‌ *வடிவைக்கண்டால்‌ ஸர்வஸ்வதானம்‌ பண்ணவிருக்கிருனோ? அன்றி ஸர்ஸ்வத்தையும்‌ கொள்ளைகொள்ள விருக்கிருனோவென்று தெரிந்து கொள்ளமுடியா தபடி ஆச்சரியமான தன்மையையுடையவன்‌, அடியேன்‌ சிறியேன்‌ குடியேனென்று சில சொல்லி மயக்கிக்‌ கண்ணிலே மணலைத்தூவி யோடிப்போவன்‌. “ஆகிலும்‌ கொடியவென்னெஞ்சம்‌ அவனென்றே கிடக்குமெல்லே” என்கிற மூன்றாமடி அமைந்தது. -ஆக இதனால்‌ பெரியார்‌ திறத்தில்‌ நமது பக்தி. ஸ்வருப ப்ராப்தமா
யிருக்க வேணுமேயல்லது குணப்ரயுக்தமன்று
என்றதாயிற்று.
நிறையப்‌ பழங்கள்‌ பழுத்துத்‌ தொங்கப்பெற்ற மரங்களின்மீது கல்லடியும்‌ தடியடியும்‌ விழுமேயல்லது மொட்டை மரத்தையும்‌ மலட்டு மரத்தையும்‌ அடிப்பாரார்‌? அதுபோல்‌, ஞானானுட்டானங்கள்‌' நிரம்பியும்‌, பலவகைகளில்‌ 'புகழ்பெற்றும்‌, பலரால்‌ வணங்கப்பட்டும்‌ விளங்குகின்‌ற மஹான்கள்‌ பேரில்தான்‌ தூஷணைகள்‌ ஏற்படுமே

ஸ்ரீராமாயணத்தில்‌ யுத்தகாண்ட த்தில்‌-
**மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம்‌ ௩: ப்ரயோஜறம்‌, க்ரியதாமஸ்ய ஸம்ஸ்கார : மமாப்யேஷ யதா தவ? -என்பது, ஸ்ரீவிபீஷ்ணாழ்வானை நோக்கிப்‌ பெருமாளருளிச்‌ செய்த தொரு சுலோகம்‌-பெருமாள்மீது இராவணன்‌ பகைபாராட்டி யிருந்தானே யல்லது இராவணன்மீது பெருமாள்‌ சிறிதும்‌ பகை பாராட்டியீருந்த தில்லை.
“ஜிபீஷணோ வா ஸுக்ரீவ! யதிவா ராவணஸ்‌ ஸ்வயம்‌!” என்‌ றருளிச்‌ செய்த பெருமாளுடைய திருவுள்ளத்திற்கும்‌ இணங்கவல்லதான பொருளன்றோ பணிக்கவேணும்‌. அதை நம்பிள்ளைதானே பணிக்க வல்லவர்‌.-[“மரணாந்தாநி வைராணி”] ரிஷிகளின்‌ குடியிருப்பை யழித்து மைதிலியைப்‌ பிரித்து, ஈம்‌. உயிர்நிலையிலே நலிந்தாப்போலே ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தவிவையெல்லாம்‌ செய்ய மாட்டானே இவன்‌ இனி.-[“நிர்வ்ருத்தம்‌ ந: ப்ரயோஜாம்‌.?] இவன்‌ ஜீவிக்கிற நாளிலே நாம்‌ செய்யும்‌ நன்மை இவன்‌ விலக்காதொழிய வேணுமென்று,
இத்தனையே எண்ணியிருந்தோம்‌ ; அது அந்நாளில்‌ பெற்றிலோம்‌. நாம்‌ தேடியிருந்த அது முந்துறமுன்னம்‌ ஸித்திக்கப்‌ பெற்றோமிறே. [“க்ரியதாம்‌ அஸ்ய ஸம்ஸ்கார :!] இவன்‌, நாம்‌ செய்யும்‌ நன்மை விலக்காதவனானவளவு பிறந்தவின்றும்‌ நாம்‌ இழக்க
வேணுமோ? வேண்டுவன செய்யப்‌ பாரும்‌. [“மமாபி ஏஷ யதா தவ.)':] நீர்‌ இருய்த்திருந்தீராகில்‌, குடல்‌ துடக்குடையாரிலே ஒருவன்‌ செய்யுமித்தனை யன்றோ; நாம்‌ இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர்‌ பின்னைக்‌ கடக்க நில்லீர்‌.” என்று -“£வைரம்‌”” என்று ஏக வசனமாக அன்றிக்கே “வைராணி”' என்று பஹுவசனமாக இருப்பதையே முக்கியமாக நம்பிள்ளை குறிக்கொண்டு ரஸமயமான வியாக்கியானம்‌
செய்தருளினா ரென்றுணர்க. '*வைராணி” என்‌றது-வைரகார்யாணி என்றபடி

எம்பெருமானுடைய அவதாரங்களுக்கு என்ன என்ன ப்ரயோஜனங்களோ அவையெல்லாம்‌ திருவாய்மொழியின்‌ திருவவதாரத்தினாலும்‌ ஈன்கு தேறுகின்‌றன-ஸாதுபரித்ராண துஷ்க்ருத விநாசனங்கள்‌-*சாதுசனத்தை றலியுங்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஆதியஞ்‌ சோதியுருவை அங்குவைத்திங்குப்‌ பிறந்த வேத முதல்வன்‌* *நண்ணாவசுரர்‌ நவிவெய்த ஈல்லவமரர்‌ பொலிவெய்த-பண்ணார்‌ பாடல்‌ இன்கவிகள்‌
யானாய்த்‌ தன்னைத்‌ தான்‌ பாடி
” *நண்ணாவசுரர்‌ நவிவெய்த ஈல்லவமரர்‌ பொலிவெய்த வாய்த்து திருவாய்மொழி தான்‌ அவதரித்தது. ஸ்துத்யனுடைய அவதாரம்‌ போலேயாயிற்று ஸ்துதியினுடைய அவதாரமும்‌.” -திருவாய்மொழி யென்றும்‌ ஸ்ரீராமாயண மென்றும்‌ இரண்டு வலிய மதிள்கள்‌ என்றுமழியமாட்டா தபடி.
யன்றோ வுள்ளன, அந்த மதிள்‌ களை இவன்‌ அசைக்கவும்‌ முடியாதவனன்றோ, என்று சொன்னானாம்‌. ஆகவே

1. அஜ்ஞாற நிவர்த்தகத்வம்‌, 2. ஜ்ஞாஈப்ரதத்வம்‌. 3. பக்தி ப்ரதத்வம்‌ ஆகிற. இம்மூன்றும்‌ திருவாய்மொழிக்குமுண்டு. எங்ஙனேயென்னில்‌ : தோரிமாறன்‌ சடகோபன்‌ ஒலி புகழாயிரத்திப்‌ பத்து உள்ளத்தை மாசறுக்குமே என்கிற பாசுரத்தினால்‌ அஜ்ஞா௩ நிவர்த்தகத்வமும்‌வண்சடகோபன்‌ தெருள்கொள்ளச்‌ சொன்னவோராயிரம்‌!” என்ற பாசுரத்தினால்‌ ஜ்ஞா௩ ப்ரதத்வமும்‌,குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன, தூயவாயிரத்திப்பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்‌றியே”' என்ற பாசுரத்தினால்‌ பக்தி ப்ரதத்வமும்‌ திருவாய்‌ மொழிக்கு முண்டென்பது அறியத்தக்கது,

எம்பெருமான்‌ நம்மைத்‌ தனக்கு அநந்யார்ஹற சேஷமாக அங்கீகரிப்பவன்‌ என்பது “வெறித்துளப முடியானே ! வினையேனை உனக்கடிமை அறக்கொண்டாய்‌'' என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. -திருவாய்மொழியும்‌ ஈம்மை எம்பெருமானுக்கு அநந்யார்ஹ
சேஷமாக்கு மென்னுமிடம்‌ “தொண்டன்‌ சடகோபன்‌ தெரியச்‌ சொன்ன ஓராயிரத் துளிப்பத்து உரிய தொண்டராக்கு முலக முண்டாற்கே” என்ற பாசுரத்தினால்‌விளங்கும்‌.

எம்பெருமான்‌ ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தாயிருப்பவன்‌ என்னுமிடம்‌ அறிக்தனரெல்லாம்‌ அரியை வணங்கி அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌ -திருவாய்மொழியும்‌ ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும்‌ உகுமாய்ந்து போம்படி பண்ணு மென்னுமிடம்‌ *தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ மிடைந்த சொல்தொடை ஆயிரத்துளிப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌

எம்பெருமான்‌ பக்தர்கட்குப்‌ பரமப தத்தை யளிப்பன்‌ என்னுமிடம்‌ “ஏுற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு-ஆற்றல்‌ மிக்கான்‌ பெரிய பரஞ்சோதி புக்கவரியே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ பரமபத ப்ராப்தியைப்‌ பண்ணிவைக்கு மென்னுமிடம்‌ “கோனை வண்குருகூர்‌ வண்சடகோபன்‌ சொன்னவாயிரத்‌ துளிப்பத்தும்‌ வானின்மீதேற்றி யருள்செய்து'” என்ற பாசுரத்தினால்‌
விளங்கும்‌.

எம்பெருமான்‌ நம்மைத்‌ திருவடிகளின்கீழ்ச்‌ சேர்த்துக்‌ கொள்ளுமென்னுமிடம்‌ “பெருந்துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன்தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன்செய்யும்‌ சேமம்‌” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ அவன்‌ திருவடிகளின்கீழே சேர்த்து
வைக்குமென்னுமிடம்‌ £“திருமாலாலருளப்பட்டசடகோபன் சொல்லாயிரத் துளிப்‌பத்தால்‌ அருளியடிக்கீழிருத்தும்‌'? என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

எம்பெருமான்‌ தன்னோடு அந்வயித்தவர்களுக்குத்‌ தன்னுடைய அநுபவமாகிற நிரதிசயாறந்த யுக்தமான ப்ராப்யத்தைக்‌ கொடுப்பன்‌ என்னுமிடம்‌ “தெளிவுற்று விவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்‌ தெளிவு ற்ற கண்ணன்‌”? என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்பால்‌ அங்வயித்தார்க்கு
பகவதநுபவ ஆனந்தத்தை யுண்டாக்கு. மென்னுமிடம்‌ **வண்குரு. கூர்ச்சடகோபன்‌ இங்ஙனே சொன்னவோராயிரத்துளிப்‌ பத்து எங்ஙனே சொல்லிலுமின்‌ பம்‌ பயக்குமே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌

எம்பெருமான்‌ தன்னை யனுபவிக்க இழிந்தவர்களை த்ரவத்ரவ்யமாம்படி உருக்குவனென்னுமிடம்‌ ““ஊடுபுக்கு எனதாவியை யுருக்கியுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்னை யநுபவிக்க இழிந்தாரை நீர்ப்பண்டமாக உருக்குமென்னுமிடம்‌ “தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லாயிரத்துள்ளிவை ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகுமுருகுமே” என்கிற பாசுரத்தினாலும்‌' ““டூதா ற்றங்களாயிரத்துள்‌' இவையுமொருபத்தும்‌ வல்லார்‌ ஊற்றின்கண்‌ நுண்மணல்போல்‌ உருகாநிற்பர்‌ நீராயே!” என்கிற பாசுரத்தினாலும்‌ விளங்கும்‌,

ஆக இப்படி பத்து ப்ரகாரங்களாலே எம்பெருமானோடு ஸாம்யத்தை யுடைத்தாகையாலே, வாச்யனான அந்த ஸர்வேச்வரனுடைய *பத்தினாய தோற்றம்‌!” என்கிற பத்து அவதாரம்போலே “டூதாற்றங்களாயிரம்‌'! என்கிற இதனுடைய பத்துப்பத்தான ஆவிர்ப்பாவமும்‌-என்று அறியத்தக்கது. எம்பெருமான்‌ லோக ரக்ஷணார்த்தமாக அவதரித்தது போலே திருவாய்மொழியும்‌ லோக ரக்ஷணார்த்தமாகவே அவதரித்த தென்‌றதாயிற்று.

ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள்‌ உண்டாகின்றன. (1) அற்ப விலைக்கு மாறுதல்‌ (2) உள்ள விலைக்கு மாறுதல்‌ (8) விலைக்கு ஆட்படாமல்‌ ஸ்வயம்‌ போக்யமாகக்‌
கொள்ளப்படுதல்‌ என மூன்று வகைகள்‌
. ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால்‌ கூடுகின்ற படியை பிரபத்தி விஷயத்திலும்‌ தெளிவாகக்‌ காணவேணும்‌. ரத்னத்தின்‌ மதிப்பை அறியமாட்டா து அதனை அற்ப விலைக்கு விற்கும்‌ செம்படவனைப்போல்‌ பிரபத்தியின்‌ சீர்மையை அறிய மாட்டாத சிற்றறிவாளர்‌ ப்ரபத்தியை ஐச்வர்யகைவல்யாதி க்ஷுத்ர பலன்களுக்கு ஸாதனமாக்கினால்‌ அது ஆகியே தீரும்‌. ரத்னத்‌தைக்‌ குறைந்த விலைக்குக்‌ கொடாதே தகுந்த விலைக்குக்‌ கொடுக்கும்‌
வியாபாரியைப்‌ போன்ற மத்யமாதிகாரிகள்‌ ப்ரபத்தியை மோக்ஷ ஸாதனமாக அபிமானித்து க்ஷுத்ர பலன்களைக்‌ கொள்ளாதே உயர்ந்த மோக்ஷ பலனையே கொண்டால்‌ உபாயத்வாபிமானம்‌ அவ்யாஹதமா யிருக்கும்‌, ரத்னத்தை ஒன்றுக்கும்‌ ஸாதனமாக்‌காதே ஸ்வயம்‌ போக்யமாகக்‌ கொள்ளும்‌ மஹாராஜனைப்‌ போன்ற
உத்தமாதிகாரிகள்‌ ப்ரபத்தியை ஒன்றுக்கும்‌ ஸாதனமாகக்‌ கோலாதே ஸ்வயம்‌ புருஷார்த்தமாகக்‌ கொண்டு வர்த்திப்பர்கள்‌
.

ரோமசரென்பவர்‌ சரிரமுழுவதும்‌ கரடிபோல்‌ அடர்ந்த ரோமங்‌களையுடைய ஒரு மாமுனிவர்‌ தவம்‌ புரிந்தார்‌, “உள்ளுவா ருள்ளிற்றெல்லா முடனிருந்தறியு மெம்பெருமான்‌” இவருடைய அபிலாஷையை மோக்கி மிகவும்‌ மகிழ்ந்து இவர்‌ முன்னே வந்து ஸேவை தந்தருளி “உம்முடைய விருப்பத்தைக்‌ கூசாதே வேண்டிக்‌
கொள்ளும்‌”? என்று சோதிவாய்‌ திறந்து அருளிச்‌ செய்தான்‌. அது கேட்டு உவந்த மாமுனிவர்‌ “பரந்தாமா! பரஞ்சோதி! பரம புருஷா! இவ்வுடம்போடே உன்னை வெகு காலம்‌ வழிபடவேணுமென்று பேராசை கொண்டிருக்கிறேன்‌ கான்‌; அனேகமாயிரம்‌ ப்ரஹ்மாக்க ூடைய ஆயுளை என்னொருவனுக்குக்‌ கல்பித்தருளினால்‌ மஹா
ப்ரஸாதமாகும்‌!? என்று ' கைகூப்பி விண்ணப்பஞ்‌ செய்ய, எம்‌பெருமான்‌ அப்படியே திருவுள்ளமுவந்து “முனிவரே! ப்ரஹ்மாவினுடைய ஆயுளின்‌ அவதி உமக்குத தெரிந்ததே; ஒரு பிரமன்‌ காலஞ்சென்றால்‌ உம்முடைய உடம்பினின்றும்‌ ஒரு ரோமம்‌ இற்று விழக்கடவது; இப்படி ஒவ்வொரு ப்ரஹ்மாவின்‌ முடிவிலும்‌ ஒவ்வொரு மயிராக இற்று விழுந்து “இனி உம்முடைய உடம்பில்‌ ஒரு ரோமமும்‌ இல்லை' என்று சொல்லத்தக்க நிலைமை நேருமளவும்‌ நீர்‌ ஜீவித்திருந்து வழிபாடு செய்வீர்‌” என்று வரம்‌ தந்தருளி மறைக்‌திட்டனன்‌. அவர்‌ காழிச்சிராம விண்ணகரம்‌ [சீர்காழி] என்னும்‌
க்ஷேக்திரத்தில்‌ அவ்வண்ணமா கவே நெடுக ஜீவித்திராந்து வழிபாடு செய்து வருகிறார்‌. இக்கதை மேற்குறித்த திருப்பதியின்‌ பதிகத்தில்‌ இரண்டாவது பாசுரத்தில்‌ “ான்முகனாள்‌ மிகைத்தருக்கை யிருக்கு. வாய்மை நலமிகுசிர்‌ உரோமசனால்‌ (அவித்து) நவிற்றி?! என்று திருமங்கையாழ்வாரால்‌ அறநுஸந்திக்கப்பட்டுள்ளது.

பெரிய திருமொழியில்‌ (6-6-6) “தன்னாலே தன்னுருவம்‌ பயந்த தானாய்‌!” என்கிற பாசுரத்தின்‌ மூன்றாமடியில்‌ “*மின்னாடு வேலேந்து விளைந்த வேளை?” என்றே பலரும்‌ ஓதிவரக்‌ காண்கிறோம்‌;“விளந்தை வேளை" என்று திருத்தி ஓதவேணுமென்று பெரியார்‌ சிக்ஷிக்கிறார்கள்‌.. குடந்தை, அழுந்தை, அயிந்தை என்னுமாபோலே விளந்தை என்‌பது ஒரு ஊர்‌, அவ்வூரரசனுக்கு “விளந்தைவேள்‌ என்று பெயர்‌.
வேற்படை. வல்லவனான அவ்வரசனை வென்று உலகமாண்டவனான ஒரு சோழன்‌ சேர்ந்தகோயில்‌ திருநறையூர்‌ என்பது பொருள்‌.

பெரிய திருமொழியில்‌ (7-4-9) *கள்ளத்தேன்‌ பொய்யகத்‌தேன்‌ என்கிற பாசுரத்தில்‌ “ஆதலால்‌ போதொருகால்‌” என்றே ஓதிவருகின்‌ றனர்‌; பழைய புத்தகப்‌ பதிப்பும்‌ அங்ஙனே காண்கிறது -“போதொருகால்‌! என்பதற்கு இங்கு அர்த்தம்‌ புலப்படவில்லை. போதருகால்‌” எனத்‌ திருத்தவேணும்‌. “போதருகால்‌-நிகமுங்கால
மெல்லாம்‌”
என்றபடி

“இராவணன்‌ கையிற்‌ கொலை யுண்பதைவிட இராம பாணத்தாற்‌ கொலையுண்டு
முடிதல்‌ கன்று! என்கிற எண்ணத்தோடு வந்த மாரிசனுக்கு இராவணன்திறத்தில்‌ உபகாரம்‌ செய்ய வேணுமென்கிற எண்ணமுண்டாக ப்ரஸக்தியில்லை ; நாம்‌ மாண்டொழிவதுபோல்‌ அவனையும்‌ மாண்டொழியச்‌ செய்து விடவேண்டும்‌' என்‌ற எண்ணங்‌ கொண்டே இராகவனைப்போல்‌ கூச்சலிட்டிருக்கவேண்டும்‌, மாரிசன்‌ இப்படி.
கூச்சலிடாமல்‌ வெறுமனே செத்திருப்பானாகில்‌ பிராட்டி லக்ஷ்மணனை வெருட்டியனுப்ப நேர்ந்திராது; இராவணன்‌ பிராட்டியைக்‌ கவர்ந்து போகவும்‌ அது நிமித்தமாக அவன்‌ மாண்டு போகவும்‌ நேர்ந்திராது. தேவர்களின்‌ வேண்டுகோள்‌ ஈடேறவும்‌ வழியிராது. மரணகாலத்தில்‌ மாரீசன்‌ போட்ட கூச்சலே ராவண
ஸம்ஹாரத்திற்கு மூலகாரணமாக நின்றமையால்‌ ஸ்ரீராம விஷயத்‌ திலே மாரீசன்‌ உபகாரகனேயன்றி அபகாரகனல்லன்‌ என்று நினைக்கலாமல்லவா ? “அப்ரமேயம்‌ ஹி தத்‌ தேஜோ யஸ்ய ஸா ஐுகாத்மஜா'” என்று வேதாந்த விழுப்பொருளை நிலையிட்டவனுன மாரீசனைப்‌ பரமபாகவதனென்று கொள்ளுவது அநுசிதமுமாகாது.

கம்பராமாயணத்தில்‌ அயோத்தியா காண்டம்‌-கங்கைப்‌ படலத்தில்‌ ஆறாவது செய்யுள்‌--*அருப்பேந்திய கலசத்துணை” என்று தொடங்குவது, இதில்‌ மூன்றாமடி. “*கருப்பேந்திர முதலாயின. கண்டாளிடர்‌ காணாள்‌” என்பது. இராமனோடு காட்டிற்‌ சென்ற பிராட்டி எதைக்‌ கண்டும்‌ அஞ்சவில்லையென்று சொல்லும்‌ பிரகாணத்திலுள்ள செய்யுள்‌ இது, இங்குக்‌ *கருப்பேந்திரம்‌' என்பதற்குப்‌ பொருள்‌ யாது? என்று ஆராயவேணும்‌. *கரும்பு ஏந்திரம்‌! என்று பிரித்து “கரும்பாலை” என்று பொருள்‌ எழுதியுள்ளார்கள்‌; வால்மீகி ராமாயணத்தில்‌--*கஜம்‌ வா வீக்ஷ்ய ஸிம்ஹம்‌ வா வ்யாக்ரம்‌ வாபி வராங்கநா, நாஹாாயதி ஸம்த்ராஸம்‌ பாஹூ ராமஸ்ய ஸம்ச்ரிதா*” என்றுள்ள ச்லோகத்தை யடியொற்றியே கம்பர்‌ இச்செய்யுளை இயற்றியுள்ளார்‌ என்று பெரியோர்‌ கூறுவர்‌. ஸீதாபிராட்டி காட்டிலே செல்லும்போது யானை, சிங்கம்‌, புலி முதலிய கொடிய விலங்குகளைக்‌ கண்டவிடத்தும்‌ சிறிதும்‌ அஞ்ச வில்லை! புதிய வஸ்துக்களைக்‌ கண்டதனாலுண்டாகும்‌ வியப்பே அவளுக்குத்‌ தோன்றியது; இராமபிரானுடைய திருத்தோள்களை அண்டைகொண்ட மிடுக்குத்‌ தான்‌ இதற்குக்‌ காரணம்‌--என்பது மேற்குறித்த ச்லோகத்தைக்‌ கூறின வால்மீகி முனிவரின்‌ கருத்‌தாகும்‌, இக்கருத்துப்‌ படவே கம்பர்‌ இச்செய்யுள்‌ இயற்றினா ரென்றால்‌ மிக்க பொருத்தமா யிருக்கின்றது. வடமொழி நிகண்டு ஒன்‌றில்‌ “கர்ப்பேந்த்ரஸ்‌ ஸிம்ஹபக்ஷக:? என்று காணப்படுதலால்‌, சிங்கத்தைக் கொன்‌று தின்ன வல்ல யாளியே இங்குக்‌ கருப்பேந்திர மெனப்பட்டது என்றால்‌ பொருத்தமல்லவா?. கரும்பாலையைக்‌ கண்‌டால்‌ இடர் காண்கைக்கு [அஞ்சுதற்கு] ப்ரஸக்தி யிருந்தாலன்றோ அதைக்‌ கண்டு இடர்காணாளென்னத்‌ தகுவது.

தர்ப்போதக்ரதசேந்தரியாநநமநோகக்தஞ்சராதிஷ்டிதே
தேஹேஸ்மிக்‌ பவஸிந்துநா பரிகதே தீரம்‌ தசாமாஸ்தித !
அத்யத்வே ஹநுமத்ஸமேஈ குருணா ஸம்போதிதார்த்தஸ்ஸுதீ 3
லங்காருத்தவிதேஹராஜதநயாக்யாயேஈ லாலப்யதே
*-என்கிற ச்லோகத்தை முதலியாண்டானது வார்த்தைகள்‌ யடியொற்றி ஸங்கல்பஸூர்யோதயத்திலே பணித்தருளினார்‌, எம்பெருமானோடு இணை பிரியாமல்‌ கூடி.வாழ்வதற்கு இட்டுப்‌ பிறந்த சேதநன்‌ அவனைவிட்டு விலகி ஸம்ஸாரஸாகர த்தினிடையே கிடந்தலற்ற, ஞானமனுட்டான மிவை ஈன்றாகவே உடையனான வொரு ஆசாரியன்‌ வந்து பகவத்‌
விஷயத்தையுணர்த்தி இருவரையும்‌ ஒன்று சேர்ப்பதான ஸம்பிரதாய விருத்தாந்தம்‌ நினைவுக்கு வரும்‌. திருவடிக்கு ஸ்ரீ ராமாயணத்தில்‌ ஆசாரிய ஸ்தானம்‌ கிடைத்திருக்கின்றது
. அந்தத்‌ திருவடியின்‌ தன்மையும்‌ ஆசாரிய லக்ஷணாமும்‌ பக்ஷ ௪ சாகாநிலய: ப்ரஹ்ருஷ்ட : புற : புறச்சோத்தமஸாந்த்வவாதீ ஸுஸ்வாகதாம்‌ வாசமுதீரயா௩ ; புற: புகச்‌ சோதயதீவ ஹ்ருஷ்ட :-இருபத்தேழாவது ஸர்க்கத்தின்‌ முடிவிலுள்ள சுலோகம்‌ -சாகாநிலய: என்பதன்‌ உள்ளுறை --ஞான மனுட்டானமென்னும்‌ இரண்டு ஸாதனங்களினால்‌ உச்சைர்‌ கதியை யடையவல்லவன்‌
ஆசாரியன்‌;-'*உபாப்யாமேவ பக்ஷாப்யாம்‌;ஆகாசே பக்ஷிணாம்‌ கதி:, ததைவ ஜ்ஞாரகர்மப்யாம்‌ ப்ராப்யதே புருஷோத்தம: என்கிற. ப்ரமாண வசனமும்‌, இதையநுஸரித்து அவதரித்த “*சேர்ப்பாரைப்‌: பக்ஷிகளாக்கி ஜ்ஞானகர்மங்களைச்‌ சிறகென்று குருஸப்ரஹ்மசாரி புத்ர சிஷ்யஸ்தாறே பேசும்‌!” என்கிற ஆசார்யஹ்ருதய சூர்ணையும்‌ இங்கே அநுஸந்தேயம்‌.-சாகரநிலய:] சாகையென்று கிளைக்குப்‌ பெயராயிருப்பது போலே வேதத்திற்கும்‌ பெயராயிருக்கும்‌. *யஜாச்சாகாத்யாமீ,
ஸாமசாகாத்யாயீ” என்று வழங்கி வருகிறோமல்லவா-ப்ரஹ்ருஷ்ட :] மிக்க மகிழ்ச்சியையுடையவனென்று பொருள்‌. ஆசாரியன்‌ எப்போதும்‌ ஸந்தோஷமே வடிவெடுத்த சிந்தையை யுடையனாயிருப்பன்‌. ஆறந்தமயனான எம்பெருமானையே அனவரதம்‌ சிந்தை செய்வதனால்‌ இவனும்‌ ஆனந்தமயனாகவே ஆய்விடுவன்‌.
“திருமாலுருவோடு அவன்‌ சின்னமே பிதற்றாறிற்பதோர்‌ திருமால்‌. தலைக் கொண்டாங்கட்கு எங்கே வரும்‌ தீவினையே” என்கிற திருவிருத்தப்‌ பாசுரமே நித்யாநு ஸ்தானமாக இருக்கப்பெற்றவர்‌களிடத்தில்‌ ஹர்ஷ ப்ரகர்ஷம்தவிர வேறொன்றுக்கு அவகாச முண்டோ? தேஹ யாத்திரையிலும்‌ ஆத்ம யாத்திரையிலும்‌ கவலை
யற்றிருப்பவர்களே ஆசார்ய பதவிக்கு அர்ஹர்களாதலால்‌ அன்னவர்கட்கு ப்ரஹர்ஷமொழிய வேறில்லை,

உத்தமஸாந்த்வவாதி என்பதன்‌ உள்ளுறை -மிகச்சிறந்த ஹிதோபதேசங்‌களுக்கு ஸாந்த்வ வாதமென்று பெயர்‌. சிஷ்யர்களின்‌ நிர்ப்பந்தத்திற்‌காக வன்றிக்கே தன்பேறாக அடுத்தடுத்து ஹிதோயதேசம்‌ பண்ணுமவர்‌ எவரோ அவரே உத்தமரான ஆசாரியர்‌. திருக்கோட்டியூர்‌ நம்பியைவிட எம்பெருமானார்க்குண்டான ஏற்றம்‌ இங்கு அநுஸந்‌திக்கத்தக்கது. திருத்திப்‌ பணி கொள்ள வல்லாரைச்‌ சொல்லுகிறது, ஸ்வாகதாம்‌ என்றது -ஸ்வஸ்மை ஆகதாம்‌ என்றபடி, ஸுஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்‌-
ஸ்வாகதாம்‌.
ஸ்வகபோல கல்பிதமான அர்த்தங்களை மனம்போனபடியே சொல்லுகையன்‌றிக்கே முன்னோர்‌ மொழிந்த முறை தப்பாமல்‌ கேட்டுப்‌ பின்னோர்ந்து. தாமதனைப்‌ பேசுமவரே உத்தமரான ஆசாரியராதலால்‌ அதைத்‌ தெரிவித்தபடி.
“பணிமானம்‌ பிழைய।மே அடியேனைப்பணிகொண்ட” என்ற திருவாய்‌ மொழிப்‌ பாசுரப்‌
படிக்கும்‌, “ஸ்காலித்யே சாஸிதாரம்‌” என்ற ந்யாஸ விம்சதிஸஃத்திப்‌ படிக்கும்‌ தவறுகள்‌ நேருங்‌ காலங்களில்‌ நிர்‌ தாக்ஷிண்யமாக சிக்ஷிப்‌ பவரே உத்தமாசார்யராவர்‌;அதுவே இங்குப்‌ பொருளாக விவஷிதம்‌,
ஆக இந்த ச்லோகம்‌ உத்தமாசார்யருடைய படியையே தெரிவிப்ப தாயிற்று, இனி இதற்குச்‌ சார்பான கம்பர்‌ பாசுரங்கேண்மின்‌,
அஞ்சிலே யொன்று பெற்றான்‌ அஞ்சிலேயொன்றைத்தாவி
அஞ்சிலே யொன்றாறாக ஆரியர்க்காக வேகி
அஞ்சிலே யொன்று பெற்ற அணங்குகண்டயலாருரில்‌
அஞ்சிலே யொன்று வைத்தானவன்‌ நம்மையளித்துக்‌ காப்பான்‌
.” அஞ்சிலே” என்கிற சொல்‌ ஐந்து தடவை வந்துள்ளதன்றோ. அவ்வைக்து தடவைகளிலும்‌ பஞ்ச பூதங்களாகிற ஐந்து தான்‌ பொருளாகக்‌ கொள்ளப்பட்டது முன்னம்‌ ; உள்ளுறை
பொருளில்‌ அப்படியல்ல;முதலான அஞ்சு-பஞ்சஸம்ஸ்காரம்‌. இரண்டாவதான அஞ்சு-அர்த்தபஞ்சகம்‌, மூன்றாவதான அஞ்சு--உபாயபஞ்சகம்‌. நான்காவதான அஞ்சு--பரத்வாதிபஞ்சகம்‌, ஐந்தாவதான அஞ்சு--லோகபஞ்சகம்‌,-அஞ்சிலே யொன்று பெற்றான்‌-பஞ்சஸம்ஸ்காரங்களில்‌ ஒன்றான மந்த்ர ஸம்ஸ்காரத்தினாலே பிறவி பெற்றவனென்ற தாயிற்று. *அர்த்தபஞ்சகம்‌-அறியவேண்டுமர்த்தமெல்லாம்‌ இதுக குள்ளே யுண்டு; அதாவது அஞ்சர்த்தம்‌”-ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துச்‌ ௪ ப்ரத்யகாத்மஈ:.. ப்ராப்த்யுபாயம்‌ பலம்‌ ப்ராப்தேஸ்‌ ததா ப்ராப்தி விரோதி ௪. வதந்தி ஸகலாவேதா : ஸேதிஹாஸபுராணகா -மிக்க இறநிலையும்‌ மெய்யாமுயிர்கிலையும்‌ தக்கமெறியும்‌ தடையாகித்‌ தொக்கி யலுமுழ்வினையும்‌ வாழ்வினையுமோதுங்‌ குருகையர்கோன்‌ யாழி னிசை வேதத்தியல்‌:இவற்றுள்‌ ஒன்றைத்‌ தாவுகையாவது -- அர்த்த பஞ்சகத்தில்‌ ஒன்றான விரோதி ஸ்வரூபத்தைக்‌ கடத்தலாம்‌.
முமுக்ஷுப்படியில்‌ “விரோதிதான்‌ மூன்று; ஸ்வரூப விரோதியும்‌ உபாய விரோதியும்‌ ப்ராப்ய விரோதியும்‌!? என்றருளிச்‌ செய்த படியும்‌, பட்டர்‌ அஷ்டச்லோகியில்‌, “மந்த்ரப்ரஹ்மணி மத்யமேஈ ஈமஸா?? என்கிற இரண்டாம்‌ ச்லோகத்திலே நிரூபித்தருளின படியும்‌ அவசியம்‌ களையவேண்டியவையாகத்‌ தேறுகின்ற பிரதிபந்தகங்‌களைக்‌ களைந்து என்றதாயிற்று. அஹங்காரமமகாரஸ்பர்ச மற்றவராய்‌, ஸ்வரக்ஷணே ஸ்வாற்வயரஹிதராய்‌, எம்பெருமானுடைய போகத்திற்கு ஹாநியை விளைவியாதவராய்‌ இருக்குமிருப்பைச்‌ சொல்லிற்றாயிற்று.
அஞ்சிலே ஒன்று ஆறாக என்றதன்‌ உள்ளுறை உபாய பஞ்சகத்திலே ஆசார்யாபிமானமாகிற ஒன்றையே உபாயமாகக்கொண்டு என்றபடி. ஐந்து உபாயங்கள்‌ எவை யெனில்‌, கருமயோகம்‌, ஞானயோகம்‌, பக்தியோகம்‌, ப்ரபத்தி யோகம்‌, ஆசார்யாபிமானம்‌ என்னுமிவையேயாம்‌-ரச்வரனைப்‌ பற்றுகை கையைப்‌ பிடித்துக்‌ காரியம்‌ கொள்ளுமோ பாதி; ஆசார்யனைப்‌ பற்றுகை காலைப்‌ பிடித்துக்‌ காரியம்‌ கொள்‌ளுமோபாதி”-ஸ்‌ வாபிமாநத்தாலே ஈச்வராபி மாநத்தைக்‌ குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லையென்று பிள்ளை பலகாலுமரு ளிச்செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌!” “பெருவிலையனான ஆபரணத்துக்கு நாயகக்‌ கல்‌ போலேயாயிற்று ஸ்ரீ வச௩ பூஷண த்துக்கு இப்‌ ப்ரதேசம்‌ நாயக ரத்னமாயிருக்கும்படி, இதனையருளிச்‌ செய்கைக்காக அதிஷ்டிகையிட்டுக் கொண்டு வந்தது. கீழடங்கலும்‌; மேலடங்கலும்‌ இதில்‌ நிஷ்டையை ஸ்தாபிக்கிறது'” என்று: மாமுனிகளருளிச்‌. செய்‌திருப்பது. குறிக்கொள்ளத்தக்கது-அஞ்சிலே யொன்று பெற்ற அணங்கு-யரம்‌ வியூஹம்‌ விபவம்‌ அந்தர்யாமி அர்ச்சை என்னும்படியான
எம்பெருமானது நிலைகள்‌ ஐந்தினுள்ளே ஒன்றாயிருக்கப்‌ பெற்ற அர்ச்சாவதாரத்தைக்‌ காட்டிக்கொடுத்து என்றபடி, (கண்டு? என்றது பிறவினையில்‌ வந்த தன்வினை; காணச்செய்து என்று பொருளாம்‌. *அணங்கு' என்று தெய்வத்திற்குப்‌ பெயர்‌; பரமபத
நிலனாயிருக்குமிருப்பாகிய பரத்வமும்‌, திருப்பாற்கடலில்‌ ஸங்கர்‌ஷணாதி ரூபேண வ்யூஹீபவித்து நிற்கும்‌ நிலையாகிய வ்யூஹமும்‌ தேச விப்ரக்ருஷ்டமாகையாலே இப்போது நமக்குப்‌ பயன்பட, மாட்டா. மத்ஸய கூர்ம வராஹ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாகிற வியவாவதாரம்‌. காலவிப்ரக்ருஷ்ட மாகையாலே.
இதுவும்‌ இப்போது நமக்குப்‌ பயன்பட மாட்டா. “அந்த: ப்ரவிஷ்டச்‌ சாஸ்தா ஜநாறரம்‌ ஸர்வாத்மா” இத்யாதிகளிற்‌ சொல்லுகிறபடியே உள்ளே ப்ரவேசித்து ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும்‌ நியாமகளாயிருக்கு மிருப்பாகிய அந்தர்யாமித்வம்‌ கரண விப்ரக்ருஷ்டமாகையாலே நமக்குப்‌ பயன்பட மாட்டா. *தமருகந்த தெவ்வுருவ
மவ்வுருவமாய்க்‌ கொண்டு கோவில்களிலும்‌ க்ருஹங்களிலு மெழுந்தருளி நிற்கும்‌ நிலையாகிய அர்ச்சாவதாரமொன்றே
. இப்போது நம்போல்வார்க்கு உபஜீவ்யமாகையாலே இது தன்னைக்‌ காட்டிக்‌ கொடுப்பதே ஆசார்ய க்ருத்யமாயிருக்குமென்க. அயலாரூரிலஞ்சிலே யொன்று வைத்தான்‌ -ஊரஞ்சிலே ஒன்றில்‌ வைப்பது ஆசார்ய க்ருத்யம்‌. இம்மண்ணுலகம்‌, பாபங்களின்‌ பலாநுபவத்திற்கான நரகலோகம்‌, புண்ய பலாநுபவத்திற்கான ஸ்வர்க்கலோகம்‌, ஆத்மாநுபவ ஸ்தானமாகச்‌ சொல்லப்படுகிற கைவல்யலோகம்‌. *நலமந்தமில்லதோர்‌ நாடெனப்படுகிற பரமபதம்‌ ஆகிய ஐந்து லோகங்களில்‌ ஒன்றான பரம பதத்திற்கு ஆளாக்கித்‌ தீருத்திப்‌ பணிகொள்வது ஆசார்ய க்ருத்யமென்க,
ஆக, பஞ்ச ஸம்ஸ்காரம்‌ பெறுவித்து, ப்ரதிபந்தகங்களைக் கடத்தி, சரமோபா
யத்தை உபதேசித்து, அர்ச்சாவதாரத்தைக்‌ காட்டிக் கொடுத்து ஸம்ஸாராத்‌ உத்தீர்ணனாக்கும்‌ ஸதாசார்யனுடைய படிகளை இச்‌ செய்யுளிலே
வெளியிட்டாராயிற்று





———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-16-

July 26, 2025

https://archive.org/details/sri-ramanujan–6/26/28/30/33/34/35/37/40/42/43/51/59–61/63–109-/111/112/163-164-/186/189–192/199/223/ 267 incomplete-/319-320/322/324-326/335/-372-/375-377/381-387/390-396/

—————

ஒழுக்கமுடையோம்‌; அதனால்‌ எங்களுக்கு ஒருவிதமான பிணியும்‌ வருவதில்லை ; 
சுகமாக இருந்து வருகிறோம்‌” என்றார்கள்‌. அந்த உபதேசம்‌ என்ன வென்றுகேட்க, (1) தினம்‌ இரண்டு, (2) வாரம்‌ இரண்டு. (9) பக்ஷம்‌ இரண்டு, (4) மாதம்‌ இரண்டு. (5) ௬௫ இரண்டு. (6) அயனம்‌ இரண்டு. (7) வருடம்‌ இரண்டு என்று சொல்லி விவரித்தார்கள்‌.
தினம்‌ இரண்டு-பகலில்‌ ஒரு வேளையும்‌ இரவில்‌ ஒரு வேளையுமாக தினப்படி. இருமுறை மட்டும்‌ உணவு கொள்வது-“தஸ்மாத்‌ த்விரஹ்நோ மநுஷ்யேப்ய உபஹ்ரியதே; ப்ராதச்ச ஸாயஞ்ச'' என்று வேதமும்‌ இருமுறையுணவையே விதித்தது-உண்பதும்‌ உறங்குவதுமான இரண்டும்‌ தினந்தோறும்‌ கட்‌டளைப் பட்டிருக்க வேணுமென்பதாம்‌
வாரம்‌ இரண்டு -வாரத்தில்‌ சனிக்கிழமையும்‌ புதன்கிழமையுமாகிற இரண்டுநாள்‌
எண்ணெய்‌ தேய்த்துக் கொள்ள வேணும்‌-வாரத்தில்‌ இரண்டு நாளாவது ஆலயம்‌ சென்று பகவானைத்‌ தொழுவது என்றுமாம்‌
பக்ஷம்‌ இரண்டு -வாரம்‌ தோறும்‌ தலைசிரைத்துக்‌ கொள்ள வேணும்‌ என்றபடி
மாதம்‌ இரண்டு-ஏகாதசி தோறும்‌ உணவு கொள்ளாமல்‌ உபவாச மிருக்க வேண்டு மென்‌றபடி.
ருது இரண்டு -மாதம்‌ தோறும்‌ (அதாவது மாதத்திற்கு ஒருமுறை) வபனம்‌ செய்வித்துக்‌ கொள்ளவேண்டும்‌ ; தலை சிரைத்துக்‌ கொள்ள வேண்டு மென்‌றபடி.
அயனம்‌ இரண்டு -முன்று மாதங்களுக்கு ஒருமுறை விரேசனங்கொள்ள வேணுமென்‌ றபடி--தேஹத்திலுள்ள கசடுகள்‌ தீர்வதற்காக இதை நியமமாகக்‌ கொள்வர்‌. -விரேசனமாவது எண்ணெய்‌ முதலியன அருந்துதல்‌.
வருடம்‌ இரண்டு -ஆறுமாதங்களுக்கொருமுறை இரண்டொரு, வாரமாவது ச்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும்‌

கும்குமிதி கிம்‌ ப்ரமதி அம்ப ததிமத்யே
டிம்ப நநு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப! நவரிதமிதி ஸம்கததி க்ருஷ்ணே
மந்தஹஸிதம்‌ ஜயதி மாதுரதிரம்யம்‌.

தயிர்த்தாழியில்‌ வெண்ணெய்‌ திரளத் தொடங்கிற்று. அப்போது கண்ணன்‌ கேட்கிறான்‌ “கும்‌ குமிதி கிம்‌ ப்ரமதி அம்ப! ததிமத்யே” அம்மா! தயிரினிடையே குழு குமூ குமுகுமூவென்று ஏதோ சுழல்‌கின்றதே, இது என்ன அம்மா! என்றான்‌. அதற்கு யசோதை சொன்னாள்‌ “டிம்ப! நு பூதமிஹ தூரமபயாஹி” பையா! இதில்‌ பூதமொன்று கிளம்புகின்றது; அது அருகேயிருக்கிற சிறுவர்களை விழுங்கிவிடும்‌; சடக்கென அப்பால்‌ சென்றுவிடு என்றாள்‌, இது கேட்ட கண்ணன்‌ “அம்மா! அந்த பூதம்‌ என்னை விழுங்குவதற்கு முன்னே அதை நான்‌ விழுங்கிவிட்டாலோ? என்று சொல்லிக்‌ கொண்டே அதை யெடுத்து விழுங்கிவிட்டு “அம்மா! பூதமென்று
பொய்‌ சொன்னாயே, இது வெண்ணெயல்லவா ?” என்றான்‌. அது கேட்ட யசோதை நம்‌ குழந்தைக்கு இது வெண்ணெயென்று தெரிந்துவிட்டதே!! என்று மகிழ்ந்து புன்னகை செய்து “என்‌ குட்டனே ! முத்தம்‌ தா” என்றாள்‌.

மாவலிபக்கல்‌ சென்ற வாமனன்‌ வேஷம்‌
கெளபீனம்‌ கடிஸூத்ரஸீம்ஙி கடயம்‌ மெளஞ்ஜீமபிவ்யஞ்ஜயம்‌
க்ருத்திம்‌ க்ருஷ்ணம்ருகஸ்ய வக்ஷஸி வஹற்‌ ஆஷாடமம்ஸேர்ப்பயற்‌..
ஸ்வாத்யாயஸ்வரஸம்பதா பரிஷதாம்‌ ப்ரீதிம்‌ ஸமுத்பாதயற்‌
யாச்ஞாயை பலியத்ஞவாடநிகடம்‌ ப்ராப்தோ வடு: பாது வ:

குறட்பிரமசாரியாய்ச்‌ சென்றதனால்‌ அவ்வாச்ரம லக்ஷணம்‌ வழுவாதபடி. கடிஸூத்ர த்தில்‌ கெளபீனம்‌ விளங்கவும்‌, முஞ்சி ஸுவர்ண மேகலைபோல்‌ திகழவும்‌, திருமார்பில்‌ க்ருஷ்ணாஜினம்‌ பொலியவும்‌, தோள்மேல்‌ பலாச தண்டம்‌ திகழவும்‌ பெற்று, “இவன்‌ மெய்யான யாசக ப்ராஹ்மணன்‌” என்று தெரியுமாறு வேத வாக்யங்களை ஸூஸ்வரமாக ஓதிக்கொண்டு யாகசாலையிலுள்ளவர்களை யெல்லாம்‌ மகிழச்செய்‌துகொண்டு யாசனைக்காக மாவலி வேள்வியில்‌ புக்க மாணிக்குறளன்‌ உம்மைச்‌ காத்தருள்க.

மாவலிக்கும்‌ வாமனனுக்கும்‌ ஸம்பாஷணை
கஸ்த்வம்‌ ப்ரஹ்மந்‌? அபூர்வ, க்வ ௪ தவ வஸதி:? யாகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி,
கஸ்‌ தே த்ராதாஸ்தி? அநாத;:, க்வ ச தவ ஜ௩க:? றைவ தாதம்‌ ஸ்மராமி
கிம்‌ தேபீஷ்டம்‌ ததாநி? த்ரிபதபரிமி தா பூமி;, அத்யல்பமேதத்‌
த்ரைலோக்யம்‌ பாவகர்ப்பம்‌ பலிமிதி நிகதந்‌ வாமநோ வஸ்‌ ஸ. பாயாத்‌.

தன்னை ஸாமாந்ய மனிதனாகக்‌ காட்டும்‌ ஒரு பொருளும்‌ பரமாத்மாவாகக்‌ காட்டும்‌ மற்றொரு பொருளும்‌ அமைய விடை கூறுவது நோக்கத்தக்கது. மாவலி:--*கஸ்‌ த்வம்‌ ப்ரஹ்மந்!* அந்தணனே, நீயார்‌ ? வாமனன்‌ “அபூர்வ” (1) முன்னே பின்னே
நான்‌ யாசணைக்கு வந்தவனல்லேன்‌. (2) எனக்கு முற்பட்டவர்‌ யாரு மில்லை; எல்லார்க்கும்‌ நானே முற்பட்டவன்‌. “க்வ ச தவ வஸதி;?”” உன்‌ இருப்பிடம்‌ யாது? “யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி” (1) எனக்கு இருப்பிடம்‌ ஒருகேடு; எங்கும்‌. தட்டி. த்திரிபவன்‌. (2) *எங்குமுளன்‌' கண்ணனென்றபடி ஸர்வவ்யாபிகாண்‌ நான்‌. “கஸ்‌ தே த்ராதாஸ்தி?” நீ யாருடைய ஸம்ரக்ஷணையிலிருக்கிறாய்‌? “அநாத:” (1) எனக்கு
நாதனேது?' அநாதையாய்க்கிடக்கிறேன்‌, (2) எனக்கு மேற்பட்ட நாதன்‌ உலகத்திலேயே கிடையாது. “'க்வ ௪ தவ ஜ௩க;” உன்னுடைய தகப்பனார்‌ எங்கிருக்கிறார்‌ ? “நைவ தா தம்‌ ஸ்மராமி” இளமையிலேயே தகப்பனார்‌ போய்விட்டார்‌; அவரைப்‌ பற்றின நினைவே எனக்கில்லை. (2) ஸகல ஜகத்பிதாவான எனக்குத்‌ தகப்பனாருரிக்க ப்ரஸக்தியேது ? “கிம்‌ தே அபீஷ்டம்‌ ததாறி?? உனக்கு என்ன விருப்பம்‌? என்ன கொடுக்கவேணும்‌ நான்‌ ? “த்ரிபத பரிமிதா பூமி???
முவடிமண்‌ வேணுமத்தனை, “*அத்யல்பம்‌ ஏதத்‌” என்னிடம்‌ வந்து மிக அற்பமான பொருளைக்‌ கேட்கிறாயே. “த்ரைலோக்யமித்யா தி”, மூவுலகங்களையும்‌ திருவுள்ளத்திலே கொண்டு இங்ஙனே மூவடிமண்‌ வேணுமென்று பேசின வாமனன்‌ காத்தருள்க.

ஸ்வஸ்தி ஸ்வாகதம்‌ அர்த்த்யஹம்‌, வத வடோ! கிம்‌ தீயதாம்‌, மேதிநீ,
கா மாத்ரா ? மம விக்ரம த்ரய பதம்‌, தத்தம்‌ ஜலம்‌, தீயதாம்‌,
மா தேஹீத்யுசநா;, குதோ நு? பகவாந்‌, பாத்ரம்‌ கிமஸ்மாத்‌ பரஞ்‌
சேத்யேவம்‌ பலிநார்ச்சிதோ மகமுகே பாயாத்‌ ஸ வோ வாம;

இதுவும்‌ மாவலிவேள்வியில்‌ நிகழ்ந்த நிகழ்ச்சியைக்‌ கூறுவது.
[ஸ்வஸ்தி] இது மாவலிக்கு வாமனனுடைய மங்களாசாஸனம்‌.
[ஸ்வாகதம்‌] வருகவருகவென்று மாவலி வரமனனை கெளரவிக்கிற படி. [அர்த்தீ அஹம்‌] “நான்‌ ஒரு பிச்சைக்காரனாதலால்‌ என்னை இவ்வளவு கெளரவிக்கத்‌ தகாது! என்று வாமனன்‌ விநயமாகக்‌ கூறுகிறபடி, [வத வடோ ! கிம்தீயதாம்‌] *மாணி! என்ன தேவை?!
[மேதிநீ] பூமிதானம்‌ தேவை.” [கா மாத்ரா] “எவ்வளவு பூமிதேவை??
[மம விக்ரம த்ரய பதம்‌] என்னுடைய பாதத்தால்‌ யானளப்ப மூவடி. மண்‌... [தத்தம்‌ ஜலம்‌] (இதோ தாரைவார்த்துத்‌ தருகிறேன்‌.” [தீய தாம்‌] தாராய்‌ மன்னவனே !' [மா தேஹீதி உசநா:] “இவ்வளவில்‌ தைத்ய குருவான சுக்கிரன்‌ வந்து தடைசெய்தான்‌.” [குதோ நு?] “கொடுக்கவேண்டாமென்று ஏன்‌ தடை செய்கிறீர்‌?” என்றான்‌ மாவலி.
[பகவான்‌ ] (இவன்‌ ஸாமாந்ய யாசகனல்லன்‌; உன்னிடத்து ஸர்வஸ்‌வாபஹாரம்‌ பண்ணவந்த பகவான்‌ கிடாய்‌! என்றான்‌ சுக்கிரன்‌. [பாத்ரம்‌ கிமஸ்மாத்‌ பரம்‌] நாராயணனே என்னிடம்‌ யாசகனாக வந்தானாகில்‌ வேறு ஸத்பாத்ரமுண்டோ ? நான்‌ மஹாபாக்யசாலி யன்றோ?” வென்று தன்னைக்‌ கொண்டாடி. வாமனனை ஆராதித்தானாயிற்று,
மஹாலக்ஷ்மிக்கும்‌ பார்வதிக்கும்‌ ஸம்பாஷணையாக வைத்து இயற்றிய சுலோகமிது. விஷ்ணுபக்தர்கள்‌ சிவபெருமானிடத்தில்‌ வெறுப்புக்கொள்ளலாகாது என்பதற்கு இந்தச்லோகம்‌ பொருத்தமானது, ஸ்ரீ மஹாலக்ஷ்மி பார்வதியை நோக்கிக்கேட்டாள்‌ “தோழீ! அந்த பிச்சையாண்டி எங்குப்‌ போனான்‌ ?? என்று. பரமசிவன்‌ 
*பிண்டியார்‌ மண்டையேந்திப்‌ பிறர்மனை திரிதந்துண்ணு முண்டியானாகையாலே அதனைப்‌ பரிஹஸித்துக்‌ கூறினபடி, இங்ஙனம்‌ வினவப்பட்ட பார்வதி விடை கூறினாள்‌ “ஸுதநு பலிமகே?” அம்மா! அந்த பிச்சையாண்டி மஹாபலியின்‌ வேள்வியிலே சென்றாரென்றாள்‌. என்‌ பர்த்தாமட்டும்‌ பிச்சைக்காரரல்லர்‌ ; உன்‌ பர்த்தாவும்‌ பிச்சைக்‌ காரரே யென்று காட்டினபடி, பிறகு லக்ஷ்மி அதை விட்டிட்டு
வேறொரு கேள்வி “பதரே! அத்ய தாண்டவம்‌ க்வ” நங்காய்‌ ! இன்று கூத்து எங்கே? என்று கேட்டாள்‌. பரமசிவன்‌ நடராஜனாகையாலே அதைப்‌ பரிஹஸித்தபடி. அதற்குப்‌ பார்வதியின்‌ விடை “மந்யே ப்ருந்தாவறாந்த;” அம்மா! லக்ஷ்மீ! இன்று கூத்து ப்ருந்தாவனத்திலிருக்குமென்று நினைக்கிறேனென்றாள்‌. *கன்றப்‌ பறை கறங்கக்‌
கண்டவர்தம்‌ கண்களிப்ப மன்றில்‌ மரக்கால்‌ கூத்தாடினான்‌ -காணேடீ*
குடங்களெடுத்‌ தேறவிட்டுக்‌ கூத்தாடவல்ல வெங்‌கோவே! இத்யாதிப்படியே உனது கணவனும்‌ கூத்தாடியேயென்று காட்டினபடி. அதன்‌ பிறகு லக்ஷ்மியின்‌ வினா “'க்வ நுஸ ம்ருக சிசு;”” அம்மா பார்வதீ! அந்த மான்‌ குட்டி எங்கே? என்றாள்‌. பரமசிவன்‌ மான்‌ குட்டியை வைத்துக்‌ கொண்டிருப்பதாக ஐதிஹ்யமாகையாலே அதைப்‌ பரிஹஸித்தபடி, அதற்குப்‌ பார்வதியின்‌ விடை “நைவ ஜாநே வராஹம்‌” அந்தப்‌ பன்றி எங்கே போயிற்றோ அறியேன்‌ என்றாள்‌. என்பார்த்தா மான்‌ குட்டியை வைத்துக்கொண்டிருப்பது பரிஹாஸ்யமன்று; உன்‌ பர்த்தா *பண்டொருநாள்‌ மாசுடம்பில்‌ நீர்‌ வாரா மானமிலாப்பன்‌றி* என்கிறபடியே தாமே பன்றியாக வடிவெடுத்தாரே, அது தான்‌ பரிஹாஸ்ய மென்‌ றவாறு. அதற்குமேல்‌
லக்ஷ்மியின்‌ வினா “பாலே! கச்சிங்‌ ௩ த்ருஷ்டோ ஐரடவ்ருஷபதி:” அந்தக்‌ கிழ எருது எங்கே? பார்த்தாயா? என்றாள்‌, பரமசிவன்‌ வ்ருஷபவாஹனனாகையாலே அதைப்பரிஹஸித்தபடி, பார்வதியின்‌ விடை “கோப ஏவ அஸ்ய வேத்தா”-எருதைப் பற்றி இடையனுக்குத்‌ தான்‌ தெரியுமென்றாள்‌. என்பர்த்தா ஒரு எருதை வைத்துக் கொண்டிருப்பது ஹேயமன்று; உன்பர்த்தா எண்ணிறந்த மாடுகளை மேய்க்க இடையனான துதான்‌ ஹேயம்‌ என்று காட்டினபடி, இவ்‌வாறாக மலர்‌ மகளுக்கும்‌ மலை மகளுக்கும்‌ விரோதமான ஸம்பாஷணை நடந்த தென்கை.

கோபால இதி க்ருஷ்ண ! த்வம்‌ ப்ரசுரக்ஷீரவாஞ்சயா,
ச்ரிதோ மாத்ருஸ்தாக்ஷிரமப்யலப்யம்‌ த்வயா க்ருதம்‌.

ஸ்ரீ கருஷ்ணபகவானைப்‌ பற்றினவர்களுக்குப்‌ புறர்ஜன்மமில்லை யென்பது ஒரு சமத்காரமாக த்தெரிவிக்கப்படுகிறது இதில்‌. “கண்ணா! நீ இடையனாகையாலே உன்னைப்‌ பற்றினால்‌ விசேஷமாகப்‌ பால்‌ கிடைக்குமென்றாசைப்பட்டு வந்தடைந்தேன்‌. என்னெண்ணம்‌ விபரீதமாயிற்று, ஏற்கெனவே நெடுகாளாகக்‌ கிடைத்துக் கொண்டிருந்த தாய்‌ முலைப்பாலும்‌ அரிதாம்படி. செய்துவிட்டாயே” யென்‌கிறான்‌. புநர்ஜன்‌ம முண்டானாலன்றோ தாய்‌ முலைப்பால்‌ கிடைக்கும்‌? அஃது இல்லை யாயிற்றென்கை,

பவித்ரீ ரம்போரு ! த்ரி தசவதறக்லாநிரது௩ா
ஸதே ராமஸ்‌ ஸ்தாதா ௩ யுதி புரதோ லக்ஷ்மஸக:.
இயம்‌ யாஸ்யத்யுச்சைர்‌ விபதமது௩ா வாநரசமூ:
லகிஷ்டேதம்‌ ஷஷ்டாக்ஷரபரவிலோபாத்‌ பட புற.
-(இந்தச்லோகம்‌ ஸம்ஸ்க்ருதஜ் ஞர்களுக்கே மிகவும்‌ ரஸிக்கத்தக்கதாகும்‌, ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள்‌ வானர ஸேனையுடன்‌ இலங்கையிற்‌புகுந்த பின்பு இராவணன்‌ ஸீதையிடம்‌ வந்து முன்று வார்த்தைகள்‌ சொல்ல; அவற்றை உடனே ஸீதை வெகு சாதுரியமாகக்‌ கிள்ளிக்‌ களைந்தமை இதில்‌ தெரிவிக்கப்படுகிறது. கவி புத்தியின்‌ சமத்காராதிசயம்‌ கொண்டாடத்தக்கது.) ஸீதையை நோக்கி. ராவணன்‌ சொன்ன மூன்று வார்த்தைகளாவன : [1, “பவித்ர ரம்போரு! த்ரித. சவதரக்லாநிரது௩ா”] ஸீதே! பார்‌. இப்போது தேவதைகளின்‌ முகம்‌ வாட்டமடையப்‌ போகிறது. [2. “ஸ தேராமஸ்‌ ஸ்தாதா ௩ யுதிபுரதோ லக்ஷ்மணஸக:”] ராம லக்ஷ்மணர்கள்‌ போர்க்களத்தில்‌ என்னெதிரே நிற்கவல்லவர்களல்லர்‌. [8. “இயம்‌ யாஸ்யதி உச்சைர்விபதமது௩ா
வாரரச்மூ:]
இங்கே வந்து சேர்ந்திருக்கிற வானர சேனையெல்லாம்‌ மிகவும்‌ விபத்தையடையப்‌ போகிறது காண்‌, ஆக இம்‌ மூன்று வார்த்தைகளையும்‌ கேட்ட ஸீதை சிறிதும்‌ ஆலோசியாமல்‌ உடனே சொன்னாள்‌ [லகிஷ்ட,! இதம்‌ ஷஷ்டாக்ஷரபரவிலோபாத்‌ பட புஈ:] அடா அற்பனே! இப்போது நீ சொன்ன மூன்று வார்த்தைகளில்‌ ஒவ்வொன்றிலும்‌ ஏழாவது எழுத்தை ரீக்கிவிட்டுப்பார்‌;) அப்போது
என்னபொருள்‌ தேறுகிறதோ, அதுதான்‌ நடக்கப்போகிறதென்பது திண்ணம்‌ என்றாள்‌. இனி இதன்‌ விவரணம்‌, முதல்‌ வார்த்தையில்‌ ஏழாவது எழுத்து “த்ரி? என்பது. அதை நீக்கிவிட்டு வாசித்தால்‌ “தசவதறக்லாறி:! அதுநா பவித்ரீ” என்றதாகும்‌, *இராவணனாகிய உனக்கு இப்போது வாட்ட முண்டாகப்‌ போகிறது பார்‌” என்றதாம்‌.
இரண்டாவது வார்த்தையில்‌ ஏழாவது எழுத்து “ந” என்பது! அதை நீக்கிவிட்டு வாசித்தால்‌ ராமலக்ஷ்மணர்கள்‌ போர்க்களத்தில்‌ முன்‌னிற்கப்‌ போகிறார்களென்‌றதாம்‌. மூன்றாவது வார்த்தையில்‌ ஏழாவது எழுத்து “வி” என்பது, அதை நீக்கிவிட்டு வாசித்தால்‌ “இயம்‌ வாரரசமூ: உச்சை: பதம்‌ யாஸ்யதி' என்றதாகத்‌ தேறும்‌, இந்த
வானர சேனை வெற்றி பெற்று உயர்பதவியையடையப்‌ போகின்றதென்றதாம்‌. பிறகு இப்படியேயாயிற்று

குற்றங்கள்‌ கழியும்‌ வழி
அநுதாபாத்‌ உபரமாத்‌ ப்ராயச்சித்தோற்முகத்வத;,
தத்பூரணாச்‌ சாபராதாஸ்‌ ஸர்வே ஈச்யந்தி பாதச:,

ஒவ்வொருவனும்‌ தான்‌ செய்த பாபங்களை நான்கு காரியங்‌ களினால்‌ போக்கிக்கொள்ள வேணும்‌ ; ஐயோ ! பாபம்‌ செய்தோமே யென்று அநுதாபங்கொண்டானாகில்‌ செய்த பாபத்தில்‌ கால்பங்கு. தொலையும்‌. இனிமேல்‌ செய்வதில்லையென்று ஸங்கல்பித்துக்‌ கொண்‌டானாகில்‌ பாதிபங்கு பாபம்‌ தொலையும்‌. செய்த பாபத்திற்கு என்ன ப்ராயச்சித்தமென்று விசாரித்துத்‌ தெரிந்துகொண்டு அதையனுட்‌டிக்க விரும்புவானாயின்‌ முக்கால்பங்கு பாபம்‌ தொலையும்‌. அந்த ப்ராயச்சித்தத்தை யனுட்டித்துத்‌ தலைக்கட்டினானாகில்‌ முழுப்பாபமும்‌ தொலைந்திடும்‌.

உபாஸநாபலத்தினால்‌ விளைகின்ற. ஞானம்‌ பயனற்றது; குருமுக மாகக்‌ கற்பதால்‌ விளையும்‌ ஞானமே மிகச்‌ சிறந்ததென்பது பற்றி முராரிகவி பணித்த பத்யமிது. பலர்‌ வாக்தேவதையை உபாஸித்துப்‌ ப்ண்டிதர்களாகிறார்கள்‌. அன்னவர்களைப்‌ பண்டிகர்களென்று செரல்லலாமாயினும்‌ ஸாரஸ்வத ஸாரத்தை அவர்கள்‌ அறிந்தவர்‌
களாகார்கள்‌; ஆசார்ய குலத்தில்‌ குட்டுபட்டுக்‌ கல்விபயின்‌ற முராரியே [நானே] ஸாரஸ்வத ஸாரஜ்ஞனாவன்‌. வானரவீரர்களெல்‌லாரும்‌ [இலங்கை செல்வதற்குக்‌] கடலைக்‌ கடந்துவிட்டார்களெனினும்‌ கடலின்‌ ஆழத்தை ஒரு வானரமுமறியாது. திருவடியைக்‌ கேட்டால்‌ *ஆகாச வழியாய்‌ சென்ற நான்‌ கடலாழத்தை என்ன றி
மேவன்‌” என்பர்‌, மற்ற வானரவீரர்களைக்‌ கேட்டாலோ அணை கட்டிச்‌ சென்ற வெமக்குக்‌ கடலாழமென்ன தெரியும்‌” என்பார்கள்‌. ஆகவே ஒரு வானரவீரனும்‌ கடலாழமறியான்‌; *மந்தரம்‌ நாட்டியன்று மதுரக்‌ கொழுஞ்சாறு கொண்ட* என்கிறபடியே கடல்‌ கடையும்போது. மத்தாக நாட்டப்பட்ட மந்தரமலை பாதாளலோக மளவும்‌ மூழ்கி யிருந்ததாதலால்‌ அஃதொன்றையே கேட்டுக்‌ கடலாழ முணரலகும்‌.
இவ்வாறாக உபாஸறபலத்தினால்‌ பண்டிதரானவர்கள்‌ ஸரஸ்வதியின்‌
உள்மருமமறியவல்லரல்லர்‌. குருகுலத்திலிருந்து நெடுநாள்‌ சிரமப்‌
பட்டவர்களே அஃதறியவல்லார்களென்‌ தாயிற்று,
ரத்ரைகரஸ்‌ தவ க்ருஹம்‌ க்ருஹிணி ௪ லக்ஷ்மீ: 
கிம்‌ தேயமஸ்தி பவதே புருஷோத்தமாய,
ஆபீரவாமுயகாஹ்ரு தமாஈஸாய
துப்யம்‌ ப்ரதத்தமிதமஸ்து மநோ மதீயம்‌
, -பெருமாள்‌ வாசலிலெழுந்தருளும்போது நியமே உபஹாரம்‌ ஸமர்ப்பிக்கும்‌ விரதமுடையவரொருவர்‌, ஒருநாள்‌ திடீரென்று வாசலில்‌ பெருமாளெழுந்தருளியாயிற்று, முன்னாடி உபஹாரம்‌ ஸித்தப்படுத்தி வைக்கவில்லை. இன்ன து செய்வதென்று தோன்றாமல்‌ அவர்‌ பெருமாளருகே வந்துரின்று ஆசுகவிதையாக இந்த ச்லோ கத்தைக்‌ கூறினர்‌, “எம்பெருமானே! **மாகடல்‌ நீருள்ளான்‌' என்கிற படியே உனக்கு வாஸஸ்தானமோ ரத்நாகரம்‌ ; மனைவியோ ஸ்ரீமஹா லக்ஷ்மி ; ஸ்வயம்‌ புருஷோத்தமனென்று பேர்பெற்றிருக்கின்‌ றணை, இப்படிப்பட்டவுனக்கு ரீசனேன்‌ நிறையொன்றுமிலேன்‌ என்ன ஸமர்ப்பிக்க வல்லேன்‌. எதுவுமில்லை. ஏதாவது அடியேன்‌ கொடுப்ப தானால்‌ உனக்கு இல்லாத வஸ்து இன்னதென்று தெரிந்துகொண்டு அதை ஸமர்ப்பிக்கவேணும்‌. நீ அவாப்த ஸமஸ்தகாமனாயிருந்தாலும்‌ உனக்கு இல்லாதது ஒன்றுண்டு ; அது ஏதென்னில்‌ ; உன்னுடைய நெஞ்சைத்‌ திருவாய்ப்பாடியாயர்‌ மங்கைகள்‌ கொள்ளை கொண்டு
போய்விட்டதனால்‌ உனக்கு நெஞ்சு இல்லாமலிருக்கிறது, இதோ எனது நெஞ்சை ஸமர்ப்பிக்கிறேன்‌ ; இதனைப்‌ பெற்றுக்கொண்டு ம௩ஸ்வியாவாய்‌.” இங்கு உக்தி சமத்காரமும்‌ பொருட்‌ சுவையும்‌ ரஸிக்கத்தக்கது.

இராவணனுக்கும்‌ அங்கதனுக்கும்‌ ஸம்வாதம்‌
கஸ்‌ த்வம்‌ வாநர ! ராமராஜபவநே லேகார்த்தஸம்வாஹக:
யாத: குத்ர புராகதஸ்‌ ஸ ஹநுமார்‌ நிர்தக்தலங்காபுர;,
பத்தோ ராக்ஷஸஸூநுநேதி கபிபிஸ்‌ ஸந்தாடிதஸ்‌ தர்ஜித:
ஸ வ்ரீடாத்தபராபவோ வறம்ருக: குத்ரேதி ௩ ஜ்ஞாயதே.


இராவணனிடம்‌ அங்கதன்‌ தூது சென்றான்‌; அங்கு இருவர்க்கும்‌ ஸம்பாஷணை. இராவணன்‌ கேட்கிறான்‌ [கஸ்‌ த்வம்‌ வார] குரங்கே நீயார்‌?? அங்கதன்‌ [ராமராஜபவநே லேகார்‌ த்தஸம்வாஹக: ] *இராம பிரான்‌ திருமாளிகையில்‌ நான்‌ குற்றேவல்‌ செய்பவனொருவன்‌”, இராவணன்‌ [யாத குத்ர புராகதஸ்ஸ ] “இங்கு முன்னே ஒரு குரங்கு வந்ததே, அது எங்கே போயிற்று ?' இராவணன்‌ ஹனுமா
ணைப்பற்றிக கேட்கிறானென்பது அங்கதனுக்குத்‌ தெரிந்தும்‌ ஹனுமானென்று அவன்‌ வாயில்‌ வரவேணுமென்பதற்காகவும்‌ அனுமன்‌ இங்குச்செய்த செயலை இவன்‌ தன்‌ வாயினால்‌ சொல்ல வேணுமென்பதற்காகவும்‌, “அப்படியா? முன்னே இங்கு ஒரு குரங்கு வந்ததா என்ன? எனக்குத்‌ தெரியாதே; அதன்‌ பெயரைச்‌ சொன்‌ னால்‌ ஆலோசிக்கிறேன்‌,' என்றான்‌ அங்கதன்‌. அதன்‌ பிறகு இராவணன்‌ [ஹநுமான்‌] என்றான்‌. அதற்கு அங்கதன்‌ “எங்கள்‌ கோஷ்டியில்‌ ஹநுமானென்று யாரையுங்‌ காணோமே; அவன்‌ இங்கு வந்து செய்தசெயலைச்‌ சொன்னால்‌ ஆலோசிக்கிறேனென்றான்‌ அங்கதன்‌. அதன்மேல்‌ இராவணன்‌ [நிர்தக்த லங்காபுர:] என்றான்‌. -இங்கு வந்து லங்காபுரியை முழுவதும்‌ கொளுத்திவிட்டுப்போன
குரங்கைப்பற்றிக்‌ கேட்கிறேனென்றான்‌. அதன்மேல்‌ அங்கதன்‌ சிறிது ஆலோசிப்பதுபோல்‌ பாவனை காட்டி [பத்தோ ராக்ஷஸ ஸூநுநேதி...] ஓஹோ! அந்தக்‌ குரங்கைப்பற்றிக்‌ கேட்கிறாயோ ? அது இங்கே வந்து ராக்ஷஸப்‌ பையலால்‌ கட்டுண்டு நலிவுபட்ட தென்று எங்களுக்குத்‌ தெரியவந்ததனால்‌ அதை அடித்துப்‌ புடைத்து வெருட்டியோட்டிவிட்டோம்‌; அது வெட்கத்தினால்‌ தலைகுனிந்து ஓடிப்போயிற்று; அந்த வறம்ருகம்‌ எங்கே புக்கொளித்ததோ அறியேன்‌ என்றான்‌. இதனால்‌ அனுமானுக்கும்‌ மேற்பட்ட குரங்குகள்‌ நாங்கள்‌ வந்திருக்கிரோங்காண்‌ என்று தெரிவித்தவாறு.

———————————

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -(367/378)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீராமா நூஜன்-367-காளயுக்தி கார்த்திகை-12-1978-

எம்பெருமானார் தம்முடைய முப்பத்தைந்தாவது திருநக்ஷத்திரத்தில் திருமலையில்ஒரு மடத்தைஏற்படுத்தியருளினார் : சகம் 974. கி. பி. 1032ல் நாலைந்து வருடங்கள் ஏகாங்கிகள்
மூலமாகவே திருவேங்கடமுடையான் கைங்கர்யத்தை நடத்திவைத்து. கி.பி. 1057ல் அப்பன்
சடகோப ராமாநுஜஜீயரை நியமித்தார்.எம்பெருமானாரே இம்மடத்திற்கு முதல் ஜீயர். இரண்டாமவர் – அப்பன் சடகோப ஜீயராவர். பிறகு முறையாக வந்த- IIவது ஜியரான அப்பன் ஸ்ரீரங்கராமாநுஜ பெரிய ஜீயரிடத்தில் ஆச்ரயித்துச் சிறிய ஜீயராய்க் கைங்கர்யம் செய்துவந்த அப்பன் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி திருவேங்கடமுடையான் நியமனத் தால் (பெரிய ஜீயர் ஜீவதசையில எழுந்தருளியிருக்கும்போதே) யதிபதிபுநவதாரமான மண வாளமாமுனிகளிடத்தில் திருவிலக்கினை பெற்று அஷ்டதிக்கஜாந்தர்ப்பூதரான ஷ பெரிய ஜீயர் பரமபதித்தவுடன் கி பி. 1506ல் பெரிய ஜீயராய் அபிஷிக்தரானார் .-சிறிய ஜீயருக்கு ஆசா யாரானமையால் மணவாளமாமுனிகள் இப்பெரிய ஜீயர் மடத்தில் பன்னிரண்டாவது பெரிய ஜீயராகப் பரிகணிதரானார் )

ஆழ்வார்கள் கண்ட பஞ்சாமிருதம் கேளீர்; * சீரார் செந்நெற் கவரிவீசுஞ் செழுநீர்த் தீருக்குடந்தையில் ஆராவமுதே!என்றும், ஆராவமுதாயடியேனாவியக
மே தித்திப்பாய்
என்றும் நம்மாழ்வாராலழைக்கப்பட்ட அமுதம் * கொண்டல்வண்ணன்
கோவலனாய்வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங்கவர்ந்தவன் அண்டர்நேனணியரங்கனென் னமுது
என்று திருப்பாணாழ்வார் கண்ட வமுதம் அடியேன்மேவியமர்கின்ற வமுதே திருவேங்கடத் தெம்பெருமானே! என்றுநம்மாழ்வார் திருவேங்கடத்திற் கண்ட வமுதம்.-எனக்குத்தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக்கோனே ; என்று நம்மாழ்வார் தாமே தெற்குத் திருமலையிற் கண்ட வமுதம் மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூ சோலைமலைக்கரசே! கண்ணபரத்தழுதே! என்று திருக் கண்ணபுரத்திலே கண்ட வமுதம்.-ஆக இவ்வம்ருதங்கள் ஆழ்வார்களுடைய பஞ்சாம்ருதாகும்.

நம்முடைய ஸித்தாந்தமோ வென்னில்; அபூர்வமாக வொரு மஹானந்த மனுபவிப்பதே
மோ மென்பதாம்.
ஆளவந்தார் “கதாஹமைகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி”
என்றகுளிச் செய்தார் – ஒழிவில் காலமெல்லா முடனாம்மன்னி வழுவிலாவடிமை செயது
அனுபவிக்கிற ஆனந்தம் அவரவர்களுக்கு ஆத்மைக வேத்யம். .
வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்துமைந்தும்” என்னப் பட்ட திருப்பாவையில் ஒருத்தி மகனாய்ப்பாசுரத்தில் வருத்தமுந் தீர்ந்து மகிழந்தேலோ ரெம்பாவாய் என்றது உயிரான வார்த்தை;-வருத்தம் தீர்ந்ததோடு நில்லாமல் மகிழ்ந்து என்னும்படியான வொரு நிலைமையுண்மை காட டப்பட்டது, நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் (7-5-10) வார்த்தையறிபவர் என்ற பாட்டில்-போர்த்தபிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துள்பம் வேரற நிக்கி என்றிவ்வளவு சொன்னதற்கும் மேற்பட “தன் தாளின்” கீழ்ச்சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை யெண்ணி என்றருளிச் செய்திருப்பது நோக்கத் தக்கது.-“சேஷக்வம் துக்கரூபமாகவன்றா நாட்டில் காண்கிற தென்னில். சு த நியமமில்லை; உகந்த விஷயத்துக்கு சேஷமாயிருக்கு ருப்பு ஸு கமாகக் காண்கையாலே”

ஸ்ரீவசனபூஷணம் நான்காம் பிரகரணத்தில் “த்ரிபாத் விபூ யிலே” இத்யாதி ப்ரதம
சூர்ணைக்கு அடுத்தபடி லலிதா சரிததிகளிலே இவ்வர்த்தம் சுருக்கமொழியக் காணலாம்”
என்கிற சூர்ணையின் வியாக்கியானத்துலே மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள்ள-அதாவது – விதர்ப்பராஜஸ தையாய் காசீரால மஹிஷியான லலிகை ஸபத்ங்களான முந்நூறு ஸ்த்ரீகளிலுங்காட்டில் ஆபிருப்யம் அகிவ ய பர்த்ருமக்தை தேஹதேஜஸ்- ஸர்வகுண ஸம்ப ந்தை இவை யுடையளாய்அஹோராக்ரவிபாகமற பகவத் ஸநியிலே அநேகந் கிருவிளக்கேற்றி அதிலேநிரதையாய்ப் போருகித படியைக் கண்டு, “உனக் கிவ்வாபிருப்யாதி களுக்கும் தீபாரோபண கைங்கர்ய ப்ராவண்யத்துக்குங் காரணமென்” என்று ஸபக்கள் கேட்க அவள்ஜாகி ஸ்கியோடே பிறங்கவளாகையலே ததேஷா கதயாம் யேகத் பத்வ் த்தம் மம சோபநா என்று தொடங்கி, *ஸௌவீர ராஜஸ்ய புரா மைத் ரேயோபூக் பரோஹித : கோ சாயக ம் விஷ்ணே காரிதம் தேவிகாதடே. அ யஹநிசுச்ரூஷாம் புஷப தூபாம்பலைபகை தீபாதநா கிபிச்சைவசக்ரே தத்ரவ ஸந்த்விஜ ” என்று ஸெ வீரராாஜ புரோஹிதனான மைத்ரேயன்.தேவியாற்றங்கரையிலே ஓரெம்பெருமான் கோயிலை யுண்டாக்கி, அங்கே நாள்தோறும் ஸகல கைங்காயங்களையும் பண்ணவர்த்தித்தபடியையும் *கார்த்திகே தீபிதோதீப உபாத்தஸ்கே சைகதா. அ ந் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நி , தேவதாயகநே சாஸம் தத்ராஹமபி மூஷிகா, ப்ரதீபவர்த் திக்ரஹணே க்ரு புத்ர் வராநநா :, கரு தாச மயாவர்த்தீ ப்ருஷதம்சோ ரராவச. நஷ்டா சாஹம் கதஸ் தஸ்ய மார்ஜாலஸ்ய பயாநுநா.வக் ர ப்ராந்தே நச்யந்த்யா ஸதீப ப்ரேரிதோ மயா, ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா தஸ்மிநாயதநே பு : என்று. கார்த்தி மாஸத்கிலே அவனந்த எம்பெருமான் ஸந்நிதியிலேற்றின அத் திருவிளக்கு அவியத்தேடுகிற வளவிலே யொரு பெண்ணெலியாய்க்கொண்டு வர்த்திக்கிறதான் அத்கிருவிளக்கில் திரியைக் கல்விக்கொண்டு போவதாக நினைத்துச்சென்றா வ்வினவளவிலே ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டஞ் மரணத்தையடையா நிற்க அப்போது பயத்தாலே நடுங்ககிற ன் மூஞ்சியாலே அந்தக்திரி தூண்டப்பட்டு முன்போல அத்திருவிளக்குப் பளபளத்தெரிந்த படியையும் தம்ருதா சாஹம் ததோ ஜாதா பரா குணை என்று அநந்தரம் தான்மரித்து விதர்ப்பராஜனுக்குப்புத்ரியாய் ஜாதி ஸ்ம்ருத்யாதிகளோடே பிறந்தபடியை யும்;” ஏஷப்ரபாவோ தீபஸ்ப ததோஜாதிஸ்ம்ருதிர் ஐந்ம தீபதாயிநாம் என்று அந்த அஜ்ஞாத க்ருதபலமாக தனக்கிந்தவேற்றங்களெல்லா முண்டானபடியையும் சொன்னாளென்று, ஸ் விஷ்ணுதர்மத்திலே லலிதாசரிதம் விஸ்தரேண சொல்லப்பட்டதிறே.”

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.

ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)

ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )

ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.

கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்

ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை

ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.

ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி

உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,

கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்

ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.

அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)

புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.

கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.

பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி

கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்

ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்

அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,

குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)

குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.

இல் எத்தனை?-அன்பில்.

தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.

கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’

ஸ்ரீராமா நூஜன்-378–சித்தார்த்தி தைமீ 1980 வ-

1931ஆம் ஆண்டுதொடங்கி சித்தார்த்தி ஆண்டு மார்கழித் திங்களில்-(1979 80 டிசம்பர், ஜனவரி) ஐம்பதாம் (பொன்விழா) திருப்பாவை-பைங்கூகள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்! என்கின்ற கணக்கிலே.-திருப்பாவைக் காலட்சேப விழாவினை எதிர்பார்த்திருப்பார்கள்.-மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல், அதுகாணும் கண்பயன் ஆவதே!எனப்பாரித்திருப்பர்.-ராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்பாவைபலவும் பாடத் துடித்துக் கொண்டிருப்பர்!

அத்தகிரிக் கண்ணனான அருளாளனிடம் ஸ்ரீ ஆண்டாள் தன் மனத்தைப் பறிகொடுத்து திருப்பாவையிலே ஐந்து பாசுரங்களாலே அருளாளனை மங்களாசாசனம் செய்தருள்வது வியக்கத் தக்கதாகும்.-அர்த்த பஞ்சக ஞானத்தையும் வெளியிட்டருள்வ து மேலும் வியக்கத்
தக்கதாகும். தேவர், உம்பர். அமரர் என்பவை ஒரே பொருளைத் தரும்சொற்களே.-1-கீழ் வானம் -தேவாதி தேவன்-சுவாமித்துவமும் வாத்சல்யமும் ஆ! ஆ! என்று ஆராய்ந் அருள்வான் என்பதால் சௌசீல்யமும் இவ்விதம் அருளும் அருளாளன்-அத்தியூரான் என்று கொண்டால் கெளலப்பியமும் பெறப்படுவதால் மிக்க-இறை நிலையை ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்கிறாள்-2-அம்பரமே என்னும் பாசுரத்தாலே உம்பர் கோமானேஉறங்காது எழுந்திராய் என்று தேவாதி தேவனைத் துயில் உணர்த் துகையில்,-எம்பெருமான் நந்தகோபாலனையும் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாம்.குலவிளக்காம் எம்பெருமாட்டி யசோதையையும் மெய்யாம் உயிர் நிலையின்–அறம் செய்யும் நந்தகோபாலனின் ஞானமும்,கண்ணனின் அழுகையும்அஞ்சி நோக்கும் அந்நோக்கும். அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்தொழுகையும் கண்ட அசோதையின் ஆனந்தமும் இவர்களின் ஆத்மலட்சணத்திற்தப் புறப்பொருள்களே. இவர்கள் கண்ணன்பால் கொண்டுஒழுகிய அடிமைத் திறமே அந்தரங்க நிரூபகம்–3-சென்று கப்பம் தவிக்கும் கலியைத் துயிலெழுப்ப அதிபதியைத் துயிலெழுப்புவதேயாகும்.துவய மந்திர உபதேசப்படிபிராட்டியைக் கொண்டே பெருமாளைச் சரண் அடைய வேண்டும் என்னும்தக்க நெறியைக் காட்டியருளும் முகத்தாலே செப்பன்ன மென் முலைச்செவ்வாய்ச் று மருங்குவ நப்பின்னை நங்காய் திருவே! துயில் எழாய்!என்றுபிராட்டியை முன்னிடுகிறாள்!-4-ஏற்ற கலங்கள் பாசுரத்தாலே, அத்தியூரில் பிரமனதுவேதிகையில்தோற்றமாய் நின்ற சுடரே எனத் துயில் எழுப்புகையில்,இறைவனை அடைவதற்குத் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையைமாற்றார்‘ சொரூபத்தில் அமைத்தருள்கிறாள்.-5-ஐந்தாவதாக ஒருத்தி மகனாய் பாசுரத்திலே. (நான்முகனின்கச்சி யாகவேதியிலே) நெருப்பென்ன ன்ற நெடுமாலே என அருளாளனைவிளித்து அவனிடம் அருத்தித்து வந்த நல்வாழ்வாக வைணவர் தம்பேறாகபுருஷார்த்தமாக வேண்டுவது திருத்தக்க செல்வமும். சேவகமும் பாடிவருத்தமும் தீர்ந்து மகிழும் பேறுதான்

பரகாலநாயகி கொல்லியம்பாவை* எனப்படுகிறாள். இங்கு உவமைக் குறி இல்லையாயினும் கொல்லிப்பாவை போன்றவள்’ என்றே பொருள்படுதலால் உபமா கர்ப்பமேயாகுமிது. வல்வில்ஓரி என்னும் சிற்றரசனுக்கு உரியதாய்க் கொல்லி
யென்னும் பெயர் கொண்டதான மலையின்கணுள்ள ஒரு பெண்பாற்பிரதிமை கொல்லிப்பாவையென்று பிரசித்திபெற்றது. இது தேவசிற்பியால் அமைக்கப்பட்ட அழகிற்சிறந்த பதுமையாகும். அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அப்பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்
களாம். அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களதுவாடைபட்டவுடன் இது தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப் பட்டதென்பர். இது நகைத்துக் கொல்லுமென்பது “திரிபுரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்கக். கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ?” என்ற சித்திரமடற் பாடலினால் விளங்குகின்றது இப்பாவை கண்டாருள்ளமும் விழியும் கவர்ந்து பெருங்காமவேட்கையுறுவித்து இறுதியில் கொல்லுமென்றுங் கூறுவர்.-ஒரு காலத்தில் திருமகள் தன்முன் போர்க் கெழுந்த அ ணர் மோஹித்து விழும்படி இக்கொல்லிப்பாவையுருக்கொண்டு ஆடினள் என்று சிலப்பதிகாரம் கூறும். “செருவெங்கோலமவுணர்நீங்கத் திருவின் செய்யோளாடிய பாவையும்” (கடடலாடு காதை60,61) என்றது காண்க.

*நீண்ட மலைகளும் மாமணி யும் மலர்மேல்மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் “என்று மூலமுள்ளது. கடலின் நிறம்போன்ற நிறமுடையவன் என்பத
னாலாகும் ஸாம்யமொன்று உண்டானாலும் இங்குச் சொல்லுகிறது-அதுவன்று கடலிலுள்ள வஸ்துக்களெல்லாம் எம்பெருமானிடத்துமுள்ளமைப்பற்றின உவமை சொல்லப்படுகிறது. முன்னொருகாலத்தில்மலைகளெல்லாம் சிறகுடனே பறந்து நாடு நகரங்களுக்குத் துன்பம்
விளைவித்துக்கொண்டிருக்கையில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தினால்அவற்றின் சிறகுகளைத் துணித்துக்கொண்டுவர. அப்போது மைனாகம் முதலிய பலமலைகள் கடலினுட்சென்று ஒளிந்து கொண்டு இற்றைக்கும் அவ்விடத்திலேயே தங்கிக்கிடக்கின்றனவென்று நூல்கள் கூறும்-எம்பெருமானுடைய திருத்தோள்கள் ஈரிரண்டுமால்வரைத் தோள் என்றும் குன்றருந்திரடோளன் என்று -எம்பெருமானும் மலை
களையுடையன் என்னலாயிருந்தது. க ட ல்ரத்னாகரமாகையாலேமாமணிகளை யுடையது; எம்பெருமானும் குருமாமணிப்பூண்’ எனப்பட்டஸ்ரீகௌஸ்துபத்தையுடையவன். கடலைக்கடைந்தபோது அதில்நின்றும் பிராட்டி பிறந்தனளென்று புராண வரலாருதலால் மலர்மேல்மங்கை தங்கப்பெற்றது கடல். எம்பெருமான் அகலகில்லே னிறையுமென்று அலர்மேல்மங்கை உறைமார்பன். சங்குக்கு உறைவிடம் கடல்.
எம்பெருமான் இடங்கைச்சங்கமுடையான்..

பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதியில் உரைமேற்கொண்டு என்னுள்ள மோவாதென்கிற அறுபத்தைந்தாம் பாட்டில் “வரைமேல் மாகதமே போலத்திரைமேல் கிடந்தானை” என்றவிதுஅதோபமை திருப்பாற்கடலிலே எம்பெருமான் ப ள்ளி கொண்
டிருப்பது – வெண்ணிறமான தொரு மலையில் மரகதக் கல்லைப் பதித்தாற் போன்றி ருப்பதாகக் கூறினவிது இல்பொருளுவமை.

ஒண்முத்தும் பைம்பொன்னும் – கெண்டைக்.குலம் ‘என்கிற இம்மூன்று சொற்களும் உபமேயத்தைமறைத்து உபமானத்தை மட்டுமே சொன்னவை. முத்து என்றது முத்துப்போன்றகண்ணீரரும்பைச் சொல்லும். பைம் பொள் என்றது பொன் குலாம்
பயலை’ எனப்படும் பசலை நிறத்தைச் சொல்லும். கெண்டை யென்றதுகயல்போன்ற கண்ணைச்சொல்லும். இங்கு இப்பாசுரத்தின் சுவைப்பொருளையறிவது நன்று. பொருள் படைப்பதற்காக நாயகியைப்பிரிந்துபோகவேணுமென்றெண்ணிய நாயகன் அவளோடு சொல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும், அல்லது தேசாந்தரம்போய்வருவதா யிருக்கிறே னென்று பிரிவை ப்ரஸங்கித்தாலும் அவள் மரணபர்யந்தமான கஷ்டத்தை யடைந்திடுவளென்று கருதி அவள் ஆற்றுமாறுமெதுவாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி லோகாபிராமமாகப்பலப்ரஸ்தாவங்கள் பண்ணுமடைவிலே உலகத்திலே பொருளீட்டுவதற்காகப் பிரிந்து தேசாந்தரம் போவதென்கிறவொரு விஷயமுண்டு
எனப் பொதுப்படையானவொரு ரஸ்தாவமெடுத்துக்கூற,அவள்.அது கேட்டவுடன் இப்போது இவர் இவ்விஷயம். ப்ரஸ்தாவித்ததுனெல்ல. இது லோகாபிராழவார்க்தைகளிற் சேர்ந்ததல்ல,-நம்மைப் பிரிந்து போவதற்காகவே இது அவதாரிகையாகக் கூறின
கூற்றாயிருக்கவேண்டும் என நினைத்து, பிரிவு உண்டாய்விட்டதா கவே நினைத்து வருந்திப் பிரிவாற்றாமையாலுண்டாகும் பசப்பென்கிறநிறவேறுபாட்டை யடைந்து கண்ணுங் கண்ணீருமாயிருக்க, அதைக்கண்டகாதலன் ‘நாம் பிரிந்து போவதாகச் சொல்லாதிருக்கவும் வெறும்வார்த்தையிலே நமது உட்கருத்தைத் தெரிந்துகொண்டஇவளது நிலைமை இப்படியாயிற்றே யென்று வியந்து தோழியை நோக்கி- பிரிவின் ப்ரஸ்தாவமும் அ ஹ்யமாகித் திருமேனி பாடுற்றுக் கண்ணீர் பெருக நிற்கும் தன்மை இதனால் சொல்லப் பட்டதாயிற்று.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கலியனுக்கும்‌ ஸ்ரீ கண்ணனுக்கும்‌ 12 வகைகளால் ஓற்றுமை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

July 26, 2025
1-[ஸூர்யத்வாத்‌] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கண்ணபிரானுடைய திருவவதாரத்தைக்‌ கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை ; *ததோகிலஜஐக த்பத்மபோதாய அச்யுதபாநுநா, தேவகீபூர்வஸந்த்யாயாம்‌ ஆவிர்ப்பூதம்‌ மஹா த்மநா* என்கிற ச்லோகம்‌ க்ருஷ்ணாவதாரத்தைக்‌ கூறுமது. இதில்‌, தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றது. இதனால்‌ க்ருஷ்ணன்‌ ஸுூர்யனென்னுமிடம்‌ ஸித்தித்தது. 
கலியனும்‌ ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை “கலயாமி கலித்‌வம்ஸம்‌ கவிம்‌ லோக திவாகரம்‌” என்கிற அவருடைய ஸ்துதிபத்யத்‌தினால்‌ உணரலாம்‌, ஆக இருவரும்‌ ஸூர்யர்களென்னு மத்தாலே ஸாம்யம்‌.

2-[ஸூசிதத்வாத்‌] ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன்‌ பொருள்‌. கண்ணனுடைய அவதாரமும்‌ கலியனுடைய அவதாரமும்‌: இவர்கள்‌ அவதரிப்பதற்கு வெகுநாள்‌ முன்னமே ஸசஃசிப்பிக்கப்‌' பட்டிருந்தது. எங்ஙனே யென்னில்‌ ; கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்‌ அக்கம்ஸன்‌- தேவகிக்கு. மிகச்‌ சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்தி வத்துப்‌ பரமப்ரீதியுடன்‌ தம்பதிகளை ரதத்தில்‌ வீற்றிருக்கச்‌ செய்து அதனைத்‌ தானே ஓட்டிக்கொண்டு போகையில்‌ ஆகாசவாணி யொன்று செவிப்பட்டது! “இத்‌ தேவகியின்‌ எட்டாவது குழந்தையினால்‌ உனக்கு ம்ருத்யு விளையும்‌' என்று, அந்த வாக்கு அப்படியே பலித்தது. இதனால்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்‌
முன்னமே ஸுசிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை யாழ்வாருடைய திருவவதாரமும்‌ முன்னமே ஸூசிதமாகி யுள்ளது. திருவாய்மொழியில்‌ (5-௨-1) “'கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌” என்கிற பாசுரத்தை ஆகாசவாணி யென்றே கொள்க. -தவறாமல்‌ பலிப்பது ஆகாசவாணி. இந்தப்‌ பாசுரமும்‌ தவறாமல்‌
பலித்திருக்கின்‌றது. ஆசார்யஹ்ருதயத்தில்‌ “கலியுங்‌ கெடும்‌ போலே ஸுசிதம்‌'” என்றவிடத்து வியாக்கியானத்தில்‌ மணவாளமாமுனிகள்‌ -“இவர்‌ தாம்‌ மயர்வற மதிநலம்‌ பெற்றவராகையாலே “கலியுங்‌ கெடும்‌' என்று-திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ அவதரித்துக்‌ கலியுக ஸ்வபாவமும்‌ கழியுமென்று மேல்‌ வரும்‌ அம்சத்தை தர்சித்து அருளிச் செய்தாப் போலே” என்று திருவாய்மலர்ந்தருளியுள்ள திவ்ய உக்தி இங்கே அநுஸந்தேயம்‌, கண்ணன்‌ கம்ஸ வதம்‌ செய்தவன்‌ ;இவ் வாழ்வார்‌ கலி புருஷவதம்‌ செய்தவர்‌.

3-[அபஹ்ருதிகரணாத்‌] கண்ணன்‌ கள்வனென்று ப்ரஸித்தி பெற்றதுபோல இவ்வாழ்வாரும்‌ கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர்‌. “வெண்ணெய்‌ களவுசெய்தான்‌, பெண்களைக்‌ களவுசெய்தான்‌! என்று ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்‌. இவருடைய சரித்திரத்‌திலும்‌ திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ கோபுர ப்ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப்‌ பலபல களவுகள்‌ செய்த செய்திகளை வாசிக்‌கின்றோம்‌. ஆக இத்தகைய கள்வத்தினாலும்‌ ஸாம்யம்‌.

4-[கோகுலோத்தாரகத்வாத்‌] *ஆயர்பாடிக்கணிவிளக்கே' என்‌றும்‌, “'ஆயர்குலத்தினில்‌ தோன்று மணிவிளக்கை” ' என்றும்‌ சொல்லுகிறபடியே கண்ணன்‌ திருவாய்ப்பாடியில்‌ திருவவதரித்துக்‌ கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்‌, இவ்வாழ்வாரும்‌
கோகுலோத்தாரணம்‌ செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்‌; *ந்ருபசு;” என்று ஆளவந்தாரும்‌, “வ்ருத்த்யா பசுர்‌ ஈரவபு:” என்று மணவாள மாமுனிகளும்‌ அருளிச்செய்தபடி நாமெல்லாரும்‌ பசுக்களேயன்றோ.
“ஜ்ஞாநறேற ஹீந : பசுபிஸ்‌ ஸமா௩ :”” என்றும்‌ ப்ரஸித்தமாகவுள்ளது.
ஞானமும்‌ நன்னடத்தையும்‌ ஒன்றுமின்றிக்கே யிருப்பதனால்‌ கோக்களா யிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார்‌ வந்து அவதரித்து உத்தாரகராயினர்‌.

5-[பத்தத்வாத்‌] கண்ணன்‌ “மத்துறு கடை வெண்ணெய்‌ களவினிலுரவிடையாப்‌ புண்டு” என்றும்‌ “கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌?' என்றும்‌ சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்‌தம்‌, இவ்வாழ்வாரும்‌, பகவதாராதனத்திற் காட்டிலும்‌ பரமபாவனமான பாகவதாராதனத்தில்‌ ஊன்‌றியிருந்த காலத்தில்‌ தாம்‌ அரசுக்‌குச்‌ செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச்‌ செல்வம்‌ முழுதையும்‌ செலவிட்டுவர, அச்செய்தியைச்‌ சிலர்‌ சொல்லக்கேட்ட கொற்றவன்‌ கோபங்‌ கொண்டு। இவரை ஒரு தேவாலயத்தில்‌ சிறைவைக்கச்‌ செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில்‌ பிரஸித்தம்‌. -ஆக, கட்டுண்டமையினால்‌ இருவர்க்கும்‌ ஸாம்யம்‌.

6-[சாஸ்த்ரதத்வாத்‌] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சரஸ்‌திரத்தைக்‌ கொடுத்ததனாலே என்று பொருள்‌. கண்ணபிரான்‌ “அறிவினால்‌ குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்‌ தொருமுர்‌த்தி என்கிறபடியே-ஸகலார்த்தப்ரகாசகமாய்‌ ஸகலசேதரோஜ்ஜீவரஸாதனமான கீதா சாஸ்த்‌ரத்தை யருளிச்செய்தான்‌. திருமங்கையாழ்வாரும்‌ “நெஞ்சுக்கிருள்‌ கடி திபம்‌ அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம்‌, தமிழ நன்னூல்‌ துறைகளஞ்சுக் கிலக்கிய மாரண சாரம்‌, பர சமயப் பஞ்சுக்‌ கனலின்‌ பொறி பரகாலன்‌ பனுவல்களே! என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற்காட்டிலும்‌ பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹா
சாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார்‌. கண்ணன்‌ தந்த சாஸ்திரத்தை *கீதோப நிஷத்து” என்னுமாபோலே இதையும்‌ “பொங்கு புகழ்‌ மங்கையர்கோனிந்த மறையாயிரம்‌” என்பர்கள்‌. : ஆக, சாஸ்த்ர ப்ரதாநத்தாலே இருவர்க்கும்‌ ஸாம்யம்‌ பொருந்தும்‌.

7-படுஜநஸஹயோகாத்‌ -கண்ணபிரான்‌ “ தன்னேராயிரம்‌ பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்‌?” என்கிறபடியே 'கொந்தளமாக்கிப்‌ பரக்கழித்துக்‌ குறும்பு செய்வானோர்மகனான தான்‌ செய்யும்‌ திமைகளுக்குத்‌ துணைவராகப்‌ பல சதுரர்களை உடன்‌ கொண்டிருக்‌தான்‌. திருமங்கையாழ்வாரும்‌, நீர்மேல்‌ நடப்பான்‌, நிழலிலொதுங்குவான்‌, தாளூதுவான்‌, தோலாவழக்கன்‌ முதலான சதுரர்களைத்‌
தமது செய்கைகளுக்குத்‌ துணைவராகக்‌ கொண்டிருந்தார்‌.

8-லக்ஷ்மீபதித்வாத்‌ -கண்ணபிரான்‌ ஸாக்ஷாத்‌ நாராயணமூர்த்தி யாதலால்‌ லக்ஷ்மீபதியாவன்‌. திருமங்கையாழ்வாரும்‌ லக்ஷமீபதி யாவர்‌. எங்ஙனே யென்னில்‌ : இவர்‌ வளர்ந்து வருகையில்‌ அற்‌மாட்டில்‌ அண்ணன்கோயில்‌ என்று வழங்குகின்‌ற திருவெள்ளக்குளமென்னும்‌ திருப்பதியில்‌ மிகச்‌ சிறர்ததொரு தாமரைப்‌ பொய்கையில்‌
ீதவலோகத்து அப்ஸர ஸ்த்ரீகள்‌ பலர்‌ வந்து ஜலக்ரிடைசெய்து செல்ல, அவர்களுள்‌ திருமாமகளென்பாள்‌ தன்‌ இச்சையால்‌ தெய்வ வடிவத்தைவிட்டுமானுடவடிவங்கொண்டு தனியே குழுதமலர்‌ கொய்து நின்றாளாக, அங்கு அநுஷ்டாஈத்திற்காக வந்த ஒரு
வைஷ்ணவ வைத்யன்‌ அவளைக்‌ கண்டு செய்தி விசாரிக்க, அவள்‌ என்னோடு கூடவந்த மாதர்கள்‌ என்னைவிட்டுப்‌ போய்விட்டார்கள்‌, தனியிருந்து அலைகின்ற என்னை நீர்‌ பாதுகாத்தருளவேணும்‌” என்று வேண்டிக்கொள்ள, மலடனான அம்மருத்துவன்‌ மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத்‌ தன்‌ மாளிகைக்கு அழைத்துப்‌ போய்‌ மனையாள்‌ வசம்‌. ஒப்பித்து, குமுதமலர்‌ கொண்டு நின்றது
காரணமாகக்‌ குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து வருகையில்‌ அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய, பிராயம்‌ வந்தவளவிலே அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு “மஹா குணவதியான இப்‌ பெண்ணுக்கு ஏற்ற கணவன்‌ உலகத்திலுளனோ' என்ற கவலையுண்டாக, அப்பொழுது அவளுடைய ரூப
லாவண்ய ஸெளந்தரியங்களையும்‌ குணாதிசயங்களையும்‌ சாரர்கள்‌ திருமங்கை மன்னனிடம்‌ கொண்டாடிக்‌ கூற, உடனே அவர்‌ அங்கு வந்து அந்த வைத்தியனிருக்கும்‌ வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷை செய்து அப்பெண்ணின்‌ வரலாற்றை வினாவி அதைத்‌ தந்தையார்வாயில்‌ அறிந்த வளவில்‌ “இவளை எனக்குத்‌ தாரைவார்த்துக்‌
கொடுக்கவேணும்‌” என்று அவரை வணங்கிக்கேட்டார்‌, அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு **திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கேயன்றிப்‌ பிறர்க்கு வாழ்க்கைப்பட மாட்டேன்‌” என்று தன்‌ உறுதியைத்‌ தெரிவித்தாள்‌. -அதுகேட்ட திருமங்கை மன்னன்‌ உடன்‌ திருநறையூர்க்குச்‌ சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு மெம்பெருமானுடைய திருமுன்‌
பேஙின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்‌ திருவிலச்சினை பெற்றுப்‌ பன்னிரண்டு திருமண்‌ காப்புகளும்‌ சாத்திக்‌ கொண்டு விவாஹார்த்தமாக விரைவில்‌ வந்துசேரக்‌ கண்டு மீண்டும்‌ குமுதவல்லி “நீர்‌ ஓராண்டளவும்‌ நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்‌ போனகஞ்‌ செய்த சேஷத்தையும்‌ உட்கொண்டாலன்றி உம்மை நான்‌பாணிக்கிரஹணஞ்‌ செய்து கொள்ளமாட்டேன்‌”! என்ன, அவளிடத்‌தில்‌ கொண்ட ஆசையின்‌ கனத்தால்‌ அவர்‌ இவ்வரிய விரதத்தைச்‌ செய்து முடிப்பதற்கும்‌ உடன்பட்டு அங்ஙனமேசெய்வதாகச்‌ சபதஞ்‌ செய்து கொடுக்க, அதன்பின்‌ இருவர்க்கும்‌ திருமணம்‌ நடை பெற்றது. லக்ஷ்மீபதித்வமானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும்‌ லக்ஷ்மியின்‌ பெயரைத்‌ தரித்திருந்த குமுதவல்லித்‌ தாயாருக்குப்‌ பதியென்னுங்‌ காரணத்தினால்‌ ஆழ்வாரும்‌ லக்ஷ்மீபதி யாயினர்‌. ஸ்ரீ வைஷ்ணவலக்ஷ்மிக்குப்‌ பதியென்றுங்‌ கொள்ளலாம்‌.

9-நீலத்வாத்‌ -கண்ணபிரான்‌ “கண்ணனென்னுங்‌ கருந்தெய்வம்‌” என்றும்‌ “கானகமெல்லாக்‌ திரிந்து உன்‌ கரிய திருமேனிவாட” என்றும்‌ சொல்லுகிறபடியே நீலநிறத்தழகார்ந்தவன்‌. திருமங்கை யாழ்வாரோவென்னில்‌ நீலனென்னுக்‌ திருநாமமுடையவர்‌. இராமானுச நூற்றந்தாதியில்‌ “தண்டமிழ்‌ செய்த நீலன்‌ தனக்கு” என்னுமிடத்தில்‌ நீலனென்ற சொல்லால்‌ திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்பதறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

10-நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்‌ -கண்ணபிரானுடைய சரித்திரங்‌களை நோக்குமிடத்து “மச்சொடுமாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்குக்‌ கச்சொடுபட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலுற்‌ தீமைகள்‌ செய்வாய்‌” என்றும்‌ “பிறர்‌ மக்களை மையன்மை செய்து தோளாலிட்டவரோடு திளைத்து. நீ சொல்லப்படாதன செய்தாய்‌” என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டி தங்களைச்‌ செய்த விவன்‌ நீதிநெறியில்‌ நின்றும்‌ நழுவினவனல்லவா என்று நினைப்பதற்கு இலக்காயிருப்பன்‌ கண்ணபிரான்‌. திருமங்கையாழ்‌வாரும்‌ அப்படியேயன்றோ. இத்‌ தன்மையினால்‌ ஒரு ஸாம்யம்‌. நீதி
நெறியில்‌ ஈழுவின தாக நினைக்கலாமத்தனையன்‌றி உண்மையில்‌ இருவரும்‌ நீதிநெறிவழுவாதவர்களே, மது: ச்லோகத்தில்‌ “நீதி மார்க்கச்யுதிமதிபஜநாத்‌” என்றது ச்யுதிமதிவிஷயத்வாத்‌' என்றபடி கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த தேசிகன்‌ யாதவாப்யுதயத்தில்‌ (4-64) “விமோஹரே வல்லவகேஹிநீநாம்‌
நப்ரஹ்மசர்யம்‌ பிபிதே ததீயம்‌, ஸம்பத்ஸ்யதே பரலகஜீவரம்‌ தத்‌ ஸத்யேக யேறைவ ஸதாம்‌. ஸமக்ஷம்‌?
என்னும்‌ ச்லோகத்தினால்‌ தெளிவித்தார்‌. அதாவது,பாரதப்போரில்‌ அச்வத்தாமா பிரயோகித்த அபாண்டவாஸ்த்ரத்தினால்‌ உத்தரையின்‌ கருப்பிண்டம்‌ கரிக்கட்டையாக, அப்போது கண்ணபிரான்‌ “யதி மே ப்ரஹ்மசர்யம்‌ ஸ்யாத்‌ ஸத்‌
யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம்‌ மமைச்வர்மம்‌ த ஜீவது பாலக!
” (நான்‌ ப்ரஹ்மசர்யமும்‌ ஸத்யமும்‌ வழுவா தவனாயிருந்தேனாகில்‌ இது உயிர்பெற்றெழுக) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால்‌ கண்ணன்‌ நீதிநெறிவமுவாதவனென்‌பது விளங்கிற்று, திருமங்கையாழ்வார்‌ நீதிறெறிவமுவா தவரென்‌பதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்‌தவதத்தில்‌ “ஜிதபாஹ்யஜிநா தி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமண்டபவப்ரகணாக்‌ வித்தே பரகாலகவி: ப்ரணமேமஹி தாக்‌” என்னும்‌ ச்லோக ரத்நத்தினால்‌ வெளியிட்டருளினர்‌.

11-[அந்ததச்ச அவதாராத்‌] பகவானது விபவாவதாரங்களில்‌ க்ருஷ்ணாவதாரமே முடிவானது. கல்கியவதாரம்‌ பவிஷ்யத்தென்‌கிறார்கள்‌. அது வந்தபோது பார்த்துக் கொள்வோம்‌. இதுகாறும்‌ முடிந்துள்ள அவதாரம்‌ க்‌ருஷ்ணாவதாரமே. திருமங்கையாழ்வாரும்‌ ஆழ்வார்களுக்குள்‌ கடைப்பட்டவர்‌. “பொய்கையார்‌ பூதத்தார்‌
பேயார்‌ புகழ்‌ மழிசையையனருள் மாறன்‌ சேரலர்கோன்‌, துய்யபட்ட நாதன்‌ அன்பர்தாள்தூளி நற்பாணன்‌ *நன்கலியன்‌', ஈதிவர்தோற்‌ றத்து அடைவாமிங்கு”
என்ற உபதேசரத்தினமாலைப்‌ பாசுரமுங்‌ காண்க. ஆக இருவரும்‌ சரமாவதாரபூதர்‌ என்பதனால்‌ ஸாம்யம்‌ பெற்றனர்‌.

12-சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ -கண்ணபிரான்‌ '*தேனுகன்‌ பிலம்‌பன்‌ காளியனென்னும்‌ தீப்பப்பூடுகளடங்கவுழக்கி” என்றும்‌ “மலை புரைதோள்‌ மன்னவரும்‌ மாரதரும்‌ மற்றும்‌ பலர்‌ குலைய, நூற்றுவரும்‌ பட்டழிய” என்றும்‌ சொல்லுகிறபடியே பகைவர்களை யெல்லாம்‌ வேரோடு களைந்கொழிப்பதில்‌ பேர்‌ பெற்றவன்‌. ஆழ்வாரும்‌ “அருள்‌ மாரி அரட்டமுக்கி அடையார்‌ சீயம்‌” என்றும்‌ '*ஒற்றலர்‌ தங்களை வெல்லு மாடல்மாவலவன்‌ கலிகன்றி” என்றும்‌ தாமே யருளிச்‌ செய்தபடியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக்‌ களைக்தொழித்து இதனாலேயே பரகாலனென்று பேர்பெற்றவர்‌.

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும்‌ கலியனுக்கும்‌ ஒற்றுமை நிர்வஹிக்கப்‌ பட்ட தாயிற்று. இந்த 12 அர்த்தங்களைக்‌ காட்டுவதொரு சுலோகம்‌--
ஸூர்யத்வாத்‌ ஸூசிதத்வாத்‌ அபஹ்ருதிகரணாத்‌ கோகுலோத்தாரகத்வாத்‌
பத்தத்வாத்‌ சாஸ்த்ரதத்வாத்படுஜஸஹயோகாச்ச லக்ஷ்மீபதித்வாத்‌
நீலத்வாத்‌ நீதிமார்க்கச்யுதி மதிபஜநாத்‌ அந்ததச்சாவதாராத்‌
சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ கலிரிபுமுநிராட்‌ க்ருஷ்ணதுல்யோ விபாதி.


———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ராமானுஜ வைபவம்-ஸ்ரீ அமுதனின் அமுதம்-ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ருங்க ராஜம்-

July 26, 2025

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்.

அரங்கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றிப் பெறுத்தும் இரர்மாநுசன்

அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமன் இராமாநுசன்.

அருமுனிவர் தொழுந்தவத்தோன் இராமாநுசன்

அருள்சுரந்தெல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந்த இராமா நுசன்.

அற்புதன் செம்மை இராமாநுசன்.

அறம்சீறும் உறுகலியைத்துரக்கும் பெருமை இராமாதுசன்

அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவந்து
இப்படியைத்தொடரும் இராமாநுசன்.

இராமாயணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமாநுசன்.

இருள்கொண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்த இராமாநுசன்

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து அறஞ்செப்பும்
அண்ணல் இராமாநுசன்

இன்புற்ற சீலத்து இராமாநுசன்.

ஈட்டிய சீலத்து இராமா நுசன்.

ஈன்கவிகளன் பால் மயல்கொண்டுவாழ்த்தும் இராமாநுசன்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல்
இராமா நுசன்.

உணீர்வின் மிக்கோர் தெரியும் வண்கீர்த்திஇராமாநுசன்.

உண்மைநன் ஞானமுரைத்த இராமாநுசன்.

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்ற இராமாநுசன்.

உலகோர்களெல்லாம் நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காமாறுவந்த
அண்ணல் இராமாநுசன்.

ஊழி முதல்வனையே பன்னப்பணித்த இராமாநுசன்

எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமாநுசன்.

எனக்குற்ற செல்வம் இராமாநுசன்.

ஒள்ளிய நுல் கற்றார் பரவும் இராமாநுசன்.

காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்படருங்குணன் இராமாநுசன்.

கார்கொண்ட வண்மை இராமாநுசன்.

காரேய்கருணை இராமாநுசன்.

கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்னஇராமாநுசன்.

கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்.

குறையல் பிரானடிக்கீழ்விள்ளாத அன்பன் இராமாநுசன்.

கொண்டலனையவண்மை ஏரார்குணத்து இராமாநுசன்.

கொல்லிகாவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன்.

கொள்ளக்குறைவற்றிலங்கிக் கொழுந்துவிட்டோங்கிய வள்ளல் இராமாநுசன்.

சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குஉதவும் இராமாநுசன்

சலியாப்பிறவிப் பவம்தரும் தீவினைபாற்றித்தரும் இராமாநுசன்.

சீரரங்கத்து ஐயன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியாமெய்யன் இராமாநுசன்.

சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் இராமாநுசன்

செம்மைநூற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி இராமாநுசன்.

செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் இராமாநுசன்.

ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறையவைத்தாளும் இராமாநுசன்,

தண்டமிழ்செய்தநீலன்தனக்கு உலகில் இனியான் இராமாநுசன்.

தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசன்,

தவம்தரும் செல்வும்தகவும்தரும் தீதிலிராமாநுசன்.

தன்னை எய்தினர்க்குத் தன்தகவென்னும் சரண்கொடுத்து வானம் கொடுக்கும்

திக்குற்ற கீர்த்தி இராமா நுசன்.இராமாநுசன்.

திசையனைத்தும் ஏறும்குணன் இராமாநுசன்.

திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும்
புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் இராமாநுசன்.

துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுசன்.

தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன்

தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமாநுசன்.

தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்பூண்ட அன்பாளன் இராமாநுசன்.

தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமாநுசன்

தென்னரங்கள் தொண்டர் குலாவும் இராமாநுசன்

நம் தலைமிசையே பொங்கிய கீர்த்திஇராமாநுசன்.

நல்தவர் போற்றும் இராமாநுசன்.

நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசன்.

நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமாநுசன்.

நினைவார் பிறவியை நீக்கும் பிரான் இராமாநுசன்.

பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாயமதமாய் விண்டிட
மெய்ம்மைகொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டிவந்தேன்ற இராமாநுசன்.

பரந்தாம மென்னும் திவந்தரும் தீதில் இராமாநுன்,

பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமாநுசன்.

பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதஉள்ளத்து இராமாநுசன்.

பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்று வீடளிப்பான் இராமாநுசன்

பழியைக்கடத்தும் இராமாநுசன்

பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடுங்கோனை முழு துணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன்.

பாவு தொல்ர் எதித்தலை நாதன் இராமாநுசன்.

ின்னைதன் காதலன்பாதம் நண்ணாவஞ்சர்க்கரிய இராமாநுசன்

புகழ்ப்பாண்பெருமாள் சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமாநுசன்

புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமாநுசன்.

புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமாநுசன்.

புன்மையிலோர் பகரும்பெருமை இராமாநுசன்

பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமனது
மாறன் அடிபணிந்துய்ந்த இராமாநுசன்.

பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருளென்றும் ஒள்வாளுருவி வெட்டிக்களைத்த இராமாநுசன்.

பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே இருந்தும் பரமன் இராமாநுசன்

பொய்தவம்போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞானத்து இராமா நுசன்.

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துறந்து இந்தப்பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன்.

பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசன்.

பொன்னரங்க மென்னில் மயலேபெருகும் இராமாநுசன் .

போற்றரும் சீலத்து இராமாநுசன்

மழிசைக்கிறைவன் இணையடிப்போது அடங்குமிதயத்து இராமாநுசன்

மன்பல்லுயிர்கட்சிறைவன் மாயனெனமொழிந்தஅன்பன் அனகன் இராமாநுசன்.

மாமலரான்புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் இராமாநுசன்

மாயவன் தன்னை வணங்கவைத்தகரணம் உமக்கன்றென்று
உயிர்கட்கு அரணமைத்த இராமாநுசன்.

மிக்கநான்மறையின் சுடரொளியால் கலியிருளைத்துறந்த இராமாநுசன்.

யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமா நுசன்.

வலிமிக்கசீயம் இராமாநுசன் கலிமிக்க செந்நெல் கழளிக்
குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்கப்பாடலை உண்டு உள்ளந் தடித்து அதனால் வலிமிக்கசீயம் இராமாநுசன்.

வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் இராமாநுசன்.

வாமனன் சீலன் (வாமன துல்ய சீலன்)

வேதத்தின் உச்சிமிக்கசோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்பேதமை தீர்த்த இராமா நுசன்.

வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை தன்னொம்
மாயன் வந்திருப்பிடம் இராமாநுசன்.

——————————————-

மணவாளமாமுன்களின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவரான எறும்பியப்பாவின் பெருமையைச் சொல்லவந்த ஒரு ச்லோகம் உலகில் ப்ரஸித்தமானது; அதாவது -“சடரிபுரேக ஏவ கமலாபதிதிவ்ய கவி: மதுரகவிர் யதா ச சடஜிந்முநிமுக்க்யகவி:, யதிகுலபுங்கவஸ்ய புவி ரங்கஸுதா கவிராட் வரவரயோகிநோ வரதராஜகவிச் ச ததா.’ என்பதாம். இதன் பொருள் யாதெனில், திருமகள் கொழு னான ஸர்வேச்வரனைக் கலிபாடித் துதித்தவர்களுள் நம்மாழ்வார் எப்படி சிறப்புப் பெற்றவரோ, அந்த நம்மாழ்வாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ, எம்பெருமானாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப்பெற்றவரோ, அப்படியே மணவாளமாமுனிகளைக் கவிபாடித் துதித்தவர்களுள் எறும்பியப்பா சிறப்புப் பெற்றவர் என்பதாம். உண்மையில், எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசப்பிறந்த நூல்களுள் திருவரங்கத்தமுதனார் திருவாய்மலர்ந்தருளிய இராமானுச நூற்றந்தாதிக்கு இணையானது எதுவுமில்லையென்று சபதமிட்டுரைப்பர் பெரியோர். சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்குமாகிய எந்நோக்கும் மிக அற்புதமாக வன்றோ நூற்றந்தாதியில் அமைந்துள்ளது.

ஆழ்வான் ஆண்டான் எம்பார்முதலான அந்தரங்கசிஷ்யர்கள் யாவரும் அப்பிரபந்தத்தை
உற்று நோக்கி, அதில் ஸ்வாமியின் திருவுள்ளவுகப்பையும் விசேஷித்தறிந்து மிக்க குதூஹலங்கொண்டு. “இப்பிரபந்தம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களோடொக்கப் பரிக்ராஹ்யமாம்படி நியமித்தருளவேணும்” என்று திருவடிகனப் பிடித்துக்கொண்டு பிரார்த்திக்க, ஸ்வாமி அதற்கு ஸஹஸா இசைந்தருளவில்லை. குசலவர்கள் பாடினதை ஸ்ரீராமபிரான் கேட்டருளி மிகவுமுகந்து “மமாபி தத் பூதிகரம்” என்று கொண்டாடின வரலாற்றை எடுத்துரைத்து அனைவரும் நிர்ப்பந்திக்க, இத்தனை பேருடைய குதூஹலத்திற்கு நாம் பங்கம் விளைக்கலாகாதென்று ஸ்வாமி திருவுள்ளம்பற்றி, அழகியமணவாளனுடைய நியமனத்தையும் பெற்று அப்படியே நியமித்தருளினார். ஸ்வாமி எழுந்தருளியிருந்த காலத்திலேயே இப்பிரபந்தம் ஸன்னிதிகளிலும் திருமாளிகைகளிலும் ஸேவிக்க உபக்ரமமாயிற்று. திருக்கார்த்திகைக்குப் பிறகு அநத்யயநக்ரமம் திவ்யப்பிரபந்தங்களுக்குப் போலவே இந்த நூற்றந்தாதிக்கும் அன்றுதொட்டு எங்கும் நிகழ்ந்து வரக் காண்கையாலே இதற்கு திவ்யப்ரபந்தத்தோடு ஸர்வாத்மநா ஸாம்யம் பூர்வாசார்ய ஸம்மதமாயிற்றென்பது அறியத்தக்கது.-மணவாளமாமுனிகள் இராமானுச நுற்றந்தாதியைப்பற்றி ஒன்றுமருளிச் செய்யாததேன்? திருவரங்கத்தமுதனார்க்கு நாள் பாட்டும் பணிக்கவில்லையே, ஏன்? என்று சிலர் கேட்பதுண்டு. ஸன்னிதிகளில் விக்ரஹப்ரதிஷ்டை பெற்றிருந்தவர்களுக்கே நாள் பாட்டு அருளிச்செய்யலாயிற்றென்பது ஸாரமான ஸமாதானம்.நூற்றந்தாதிக்கும் அமுதனார்க்குமாகவே உபதேச ரத்தினமாலையில் +இன்றுலகீர் சித்திரையிலேய்ந்த திருவாதிரை நாள்* என்று தொடங்கி மூன்று பாசுரங்கள் அருளிச் செய்தது. திருக்குருகைப்பிரான்பிள்ளான்,நஞ்சீயர், பெரியவச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் முதலான ஆசார்யர்களைப் பற்றியும் உபதேசரத்தினமாலையில் ப்ரசம்ஸையிருந்தாலும் அவர்கள் அவதரித்தமாதமோ நக்ஷத்ரமோ அதில் பேசப்படவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் பணித்தவர்களுக்கு மாத்திரமே*மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர்தாமறிய ஈதென்று சொல்லியுள்ளார். அந்த வரிசையில் ”சித்திரையில் செய்ய திருவாதிரை” என்று நாள் பாட்டு அமைத்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். திவ்யப்பிரபந்தமருளிச்செய்யாத எம்பெருமானார்க்கு மதுரகவிகட்கடுத்தபடியாக நாள் பாட்டு அமைத்தது இராமானுச நூற்றந்தாதிக்காகவேயென்பது சொல்லவும் வேண்டுமா? எம்பெருமானார்க்கேயிறே விக்ரஹப்ரதிஷ்டையுள்ளது.நாலாயிரத்திற்கும் வியாக்கியானஞ் செய்தருளின் பெரியவாச்சான் பிள்ளை நூற்றந்தாதிக்கு ஏன் வியாக்யானஞ் செய்தருளவில்லையென்று சிலர் விமர்சிப்பதுண்டு.ஸ்தோத்ரரத்த்திற்கு வியாக்யானஞ் செய்தருளினவர் பஞ்சஸ்தவாதிகளுக்கு வியாக்கியானஞ் செய்தருளவில்லையென்பதனால் ஒரு குறையில்லையே, அதுபோலவே யிங்குமென்று ஸமாஹிதராகலாம். அமுதனாருடைய திருவம்சத்திலோருவர் நுற்றந்தாதிக்கு வியாக்கியான மிட்டிருந்தாரென்றும், அது லோபித்ததனால் மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினரென்றும் கேட்டிருந்ததுண்டு.-ஸ்வாமி காலத்திலே ஸ்வாமி நியமனங்கொண்டே கருட வாஹன பண்டிதர்பணித்த திவ்ய ரிசரிதத்தில் பதினெட்டாம் ஸர்க்கத்தில் (51)“ஸ்ரீரங்காம்ருதகவிராஹ ரங்கிப்ருத்ய; தச்சிஷ்யோ யதிபதிவைபவாநுபந்தம்,அந்தாதித்ரமிடகிரா மஹாப்ரபந்தம் காதாநாம் அம்ருதமுசாம் யுதம் சதேந.“என்னும் ச்லோக தில் இப்பிரபந்தத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இதன்பொருளாவது, திருவரங்கத்தமுதனார் அழுதப்பெருக்கான தமிழ் மொழிபாலே எம்பெருமானாருடைய வைபவங்களைப் பேசுகிற் நூற்றந்தாதி ப்ரபந்தத்தை யருளிச்செய்தாரென்பதாம்.(19.) உறுபெருஞ் செல்வமும் (29.) *கூட்டும் விதியென்று கூடுங்கொலோ ” (46.) கூறுஞ்சமயங்களாறுங்குலைய (54.) *நாட்டிய நீசச்சமயங்கள் மாண்டன* (64.) பண்டருமாறன் பசுந்தமிழ்* (88) * கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* என்கிற பாசுரங்கள் விசேஷித்து நோக்கத் தக்கன ஸ்ரீமந்நாதமுனிகள்,ஆளவந்தார் முதலான பரமாசார்யர்கள் திறத்தில் ஸ்வாமிக்கிருந்த பத்திப் பெருங்காதல்20, 21 முதலான சில பாசுரங்களில் பேசப்பட்டது. கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திவ்ய தேசங்களிலுண்டான ஆதராதிசயம் 31,35, 42, 47. 49,76, 81, 91, 106 முதலான பாசுரங்களில் பேசப்பட்டடுள்ளது.

—————–

அத்வைத, விசிஷ்டாத்துவைதக் கோட்பாடுகளுக்குள்ளவேறுபாட்டை எடுத்துக் காட்டும் மாக்ஸ்முல்லர்-The Brahman of Sankara is itself impersonal.
Sri Ramanuja’s brahman is essentially a personal God-the all-powerful and all-wise ruler of the real world permeated and animated by his spirit, the brahman is endowed with all auspicious qualities-Saguna Brahman.-என்றெழுதுவார்.

ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே”
-என்கிறஅலுஸந்தானத்தால் நம்மை உடையவருடைமை என்று காட்டியருளுகிறார் ஸ்வாமி தேசிகன் அப்படியே யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள்மன்னியதே’ என்று தம் வாசகங்களுக்கெல்லாம் உடையவர் ஸம்பந்தமுண்டென்று மகிழ்ந்து பேசுகிறார். ‘ப்ரணாமம் லக்ஷ்மணமுனி: பாதிக்ருஹ்ணாது மாமகம்’ என்று
காயிகமாக வணங்கி வாழ்த்துகிறார். இப்படியாகக் கரண த்ரய சரூப்யம் தமக்கு எம்பெருமானார் விஷயத்தில் ஏற்பட்டதை அநுஸந்தித்து இனியராகிறார்.

———–

ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜப்ருங்கராஜம்*-நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வண்டுகளை விளிக்கும்போது வீசுஞ்சிறகால் பறத்தீர் ” என்னும் பாசுரத்தில் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சோவிக்கும் வண்டுகளே என்றருளிச்செய்துள்ளார். எம்பெருமான் திருவடிகளிலே அஸ்.மதாதிகளைக்கொண்டு சேர்க்குந்திறமை எம்பெருமானார்க்கேயுள்ளது.-வண்டுகள் சிறகால் பறப்பது போல ஸ்வாமி யெம்பெருமானார் ஞானமனுட்டான மென்னுமிவற்றால் உயர்கதியடை பவர். *உபாப்யாமேவ பக்ஷாப்யாமித்யாதி-வீ சுஞ்சிறகால் பறத்தீர் * என்றவுடனே “விண்ணாடும் நுங்கட்கு எளிது என்றமையால் பரமபதமும் ஸ்வாமி யெம்பெருமானார்க்கு அதீனமான பொருள் என்பது காட்டப்பட்டது. ஸ்வாமியின் திருவடி ஸம்பந்தம் பெழுதவர்கள-்-வண்டுகளோ வம்மின், நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூவுண்டுகளித்துழல்வீர் “ என்பது. பூக்களானவை நீரிலும் நிலத்திலும் மரங்களிலும் புஷ்பிக்குமவை. தாமரை செங்கழுநீர் முதலானவை நீர்ப்பூக்களாம். மல்லிகை முல்லை முதலானவை நிலப்பூக்களாம். வகுளம் பாதிரி பாரிஜாதம் முதலானவை மரப்பூக்களாம். இவற்றில் தேனைப்பருகும் வண்டுகள்.
எம்பெருமானார்பக்ஷத்திலோ வென்னில்; நீர்ப்பூ என்பது வீராப்திசாயியான வ்யூஹபகவானைச் சொல்லி அவனிடத்துத் தோன்றிய பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களைக் கூறும்;
நிலப்பூ என்பது நிலத்திலவதரித்திருந்த ஸ்ரீராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களையும், நிலத்தில் நித்யமாக அமர்ந்திருக்கின்ற அர்ச்சாவதாரங்களையுஞ் சொல்லி, வி வாவதாரபரங்களான இதிஹாஸ புராணங்களையும் அர்ச்சாவதாரபரங்களான திவ்ய ப்ரபந்தங்களையும் அநுபவித்துக் களிப்பவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்றவாறாம் * மரத்திலொண்பூ வென்று எட்டாநிலத்திலுள்ள பரமபதநாதனைச் சொல்லி வேதவேத்யே பரே பும்ஸி என்கிறபடியே பரம புருஷ ப்ரதிபாதகமான வேதங்களைச் சொல்லி அவற்றையநுபவிப் பவரெம்பெருமானார் என்று காட்டும்.-வண்டுக்கு சஞ்சரீக மென்று. பெயர்; எப்போதும் திரிந்து கொண்டே யிருப்பது என்று பொருள், ஸ்வாமி யெம்பெருமானாரும் *ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜ
கிரிம் தார்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீநாராயணம்
நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீ ப்ரயாக மதுராயோத்யாகயாபுஷ்கரம் ஸாலக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமாதே ராமா நு ஜோயம் முனி
: என்கிறபடியே * உலகமேத்துங்கண்டியூரரங்கம்
மெய்யம் கச்சி பேர்மல்லை யென்றுமண்டி பதியேபரவித் தொழுந்தொண்டராயிருந்தவர்.

வண்டினங்கள் காமரங்களிசைபாடும் * என்றும், யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்* என்றும், வரிவண்டுதேதென வென்றிசைபாடும் என்றும் பணித்தபடியே வண்டுகள் யாழினிசைபோன்ற இசைகளைப் பாடுவதுபோல் *பண்ணார்பாடல் * யாழினிசைவேதம். என்னப்பட்ட திருவாய்மொழியின் கானத்தையே போது போக்காக வுடையராயிருந்தவர் ஸ்வாமி.”தமிழ்மறைகளாயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” பண்டருமாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனிவேழம்’ என்றவை காண்க-வண்டு எந்த ஸமயத்தில் எங்குச் செல்லவேணுமென்று நினைத்தாலும் தட்டுத் தடங்கலின்றியே புகுந்து ரமிக்கும்: ஸன்னிதியில் கர்ப்பக்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திருமுடிமீதும் தாராளமாகப்
புகக் காணுகின்றோம். அதுபோல, பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டுப் புகலரிய என்னும்படி திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து
தலை நுழைக்கவொண்ணாதபடி நெருக்க, மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்” என்னும்படியவதரித்தருளின எம்பெருமானார் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான எந்த திவ்யதேசங்களிலும் தடையும் சங்கையுமின்றிக்கே அதிகாரச் செல்வத்துடனே உள்ளே புகுந்து ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்து வாழ்ந்தவர்
. வண்டு சோலைகளிலேயே சுழலமிடும்; எம்பெருமானார் தாமும் *ஆராமஞ் சூழ்ந்தவரங்கம்* சிந்து பூ மகிழுந்திருவேங்கடம் விரையார்பொழில் வேங்கடம் என்னும்படியாகச் சோலைகள் மிக்க தலங்களிலேயே சுழலமிட்டவர்.-இப்படி மற்றும் பல பொருத்தங்களும் காண்க.வண்டுக்கு த்விரேப மென்று பெயர்: இரண்டு ரேபங்களையுடையது என்றபடி. ரேபமாவது ரகரம். வண்டுக்கு வாசகமான (ப்ரமர) சப்தத்தில் இரண்டு ரேபமிருப்பதால் இது பற்றியே (வண்டு) தவிரேபமெனப்பட்டது, ஸ்ரீ ராமாநுஜராகிற வண்டானது தன்னிடத்தில் இரண்டு ரேபமில்லையேயென்கிற குறையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே வாவர முனிகளாக மற்றோரவதாரம் செய்தருளின்படி ராமா நுஜத்திருநாமத்தில் ஒரு ரேபமேயாய், வரவர முனிதிருநாமத்தில் இரண்டு ரேபமிருக்கும்படி கண்டுகொள்வது.

வரிவண்டு தேதெனவென்றிசைபாடும் என்றும்,தென்னாதெனாவென்று வண்டுமுரல் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்தபடியே தே, தே என்று முரலும்
வண்டுகள். (அஹங்கார) மமகாரமுள்ளவர்கள் மே மே என்பர்கள். அது நீங்கினவர்கள்
தே தே என்பவர்கள். தவ, தவ. என்றபடி வெண்பல் தவத்தவர்
” என்ற திருப்பாவைப்
பாசுரத்தில் (தவ, தவ) என்பவர்கள் தவத்தவர்களாக விவக்ஷிதர்களாதலால் அங்ஙனே
மமகாரமற்றவர்களில் தலைவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்க.

திருமங்கையாழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் *வம்பவிழும் சண்பகத்தின்
வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் பலர்மேல்வைகு’
என்கிற பாசுரத்தினால் வண்டு
மகிழமலர்மேல் வைகியிருப்பதாகப் பாடினர். ஸ்வாமி யெம்பெருமானாரோவென்னில்;
*யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோதவாஸிதம் (யதிராஜஸப்ததி] என்கிற
படியே மகிழமலரின் நறுமணங்கமழும் திருவாய்மொழியில் வைகியிருப்பவர். நூற்றந்தாதியயில் *உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும், திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் புக்குநிற்குமிராமானுசன்’ என்ற பாசுரம் இங்கு
அநுஸந்திக்கவுரியது.வண்டுகள் சோலைகளிலும் தடாகத்திலும் மொய்த்துக்கொண்டிருக்கும். எம்பெருமானாராகிற வண்டு *வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினங்கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை யணிதிருவரங்கத்திலும், தாமரைநீள் வாசக்கடமென்றும், தயரதன்பெற்றமரதகமணித் தடமென்றும் ப்ரஸித்தமான ஹரிஸரஸ்ஸிலும் மொய்த்துக்கொண்டிருந்தமை ப்ரஸித்தம்.வண்டு எங்குப் புகவேணுமானாலும் தடையொன்றுமின்றியே புகும்.
எம்பெருமானுடைய கர்ப்பக்ருஹத்தினுள்ளும் திருமேனியின் மேலும் தட்டுத்
தடங்கலின்றியே புகும். எம்பெருமானாராகிற வண்டும் அப்பனுக்குச் சங்காழி
யளித்தருளும் பெருமாள்* என்னும் மூதுரையின்படியே திருவேங்கடமுடையானுக்குத்
திருவாழி திருச்சங்கு அளித்தருள நுட்பமானவழியாலும் நுழைந்தமை
ப்ரஸித்தம்.

ஸ்வாமி ராமாநுஜர் விஷயமாக அருளிச்செய்யப்பட்ட கிரந்தங்கள்:

1. ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி

2. ஸ்வாமி திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ராமாநுஜ நூற்றந்தாதி

3. ஸ்வாமி வேதந்தாச்சார்யர் அருளிச்செய்த யதிராஜ சப்ததி

4. ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ அதிமாநுஷ ஸ்தவம்

5. ஸ்ரீ முதலியாண்டான் அருளிச்செய்த தாடீபஞ்சகம்

6 ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ சது: ஸ்லோகி

7. ஸ்ருதப்ரகாஸிகாசார்யர் அருளிச்செய்த ப்ரார்த்தநா பஞ்சகம்

8 ஸ்ரீ வடுகநம்பி அருளிய ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸத நாமாவளி

9 ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய ஸ்ரீ ராமாநுஜ ஸுப்ரபாதம் மற்றும் ஸ்ரீபாஷ்யகார மங்களம்

10. பகவத் ராமாநுஜ அவயவ ப்ரபாவம்

11. ஸ்ரீ எம்பார் அருளிய உடையவர் வடிவழகு பாசுரம்

12 பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிய எம்பெருமானார் வாழி திருநாமங்கள்

13 ஸ்ரீ காஞ்சி மஹாவித்வான் மஹாமஹிமோபாத்யாய ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமி, எம்பெருமானாருடைய பலவகைப் பெருமைகளை தெரிவிக்கும் விதமாக எழுதியருளிய
எம்பெருமானார் அறுபத்து இரண்டு-ஆகியவை ஆகும்.

 ஸ்ரீ ராமானுஜரது காலம், கலியுகம் பிறந்து 4118 வருஷங்களுக்குப் பின் பிங்கள வருஷம் சித்திரை மாஸம் சுக்ல பக்ஷம் குருவார பஞ்சமி ஆருத்திரா நக்ஷத்திரம் கர்க்கடக லக்னம் ஆயுஷ்மான யோகத்தில் ஆபஸ்தம்ப ஸூத்திரத்தை சேர்ந்தவராய் (பொது ஆண்டுக்கு 1017-1137) ஆதிசங்கரருக்கு (பொ.ஆ.பி. 788 – 820) பின்னால் ஸ்ரீபெரும்புதூரில்  அவதரித்தவர்- இவரது தாயார் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராகிய ஸ்ரீசைலபூர்ணரின் மூத்த சகோதரி காந்திமதி. இவர் தந்தையார் ஸ்ரீ பெரும்புதூரில் வசித்து வந்த ஆசூரி கேசவ ஸோமயாஜி. லக்ஷ்மணன் என்னும் பெயரினை குறிக்கும் வகையில் இளையாழ்வார் என இயற்பெயர் கொண்டார்.  16 வயதில் தங்கம்மாள் என்னும் பெண்ணுடன் விவாஹம்.
பாரதிதாசன் ஸ்ரீ ராமானுஜர் பற்றி …முக்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்இராமா நுசனை ஈன்ற தன்றோ?எனப்பாடுகிறார்.

கஜினி படையெடுப்பு பொ.ஆ.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1941), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59,  இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.

1097-1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய  கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்திரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia  Ghazanavit என பதிவுசெய்தால்  உறுதி செய்கிறது. 

      எனவே, டில்லியில் முஸ்லீம் சுல்தான்களின் ஆட்சி ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இல்லை என மறுப்பவர்களின் கருத்து உடைபடுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் உள்ள தகவல் உண்மையே, சரித்திரபூர்வமானதே. ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் டில்லி சுல்தான்களின் ஆட்சியில்தான் இருந்தது. 1097 க்கு முன், முஸ்லீம்களின் படையெடுப்பு மைசூர் வரை வந்து சென்றதை தொண்டனூர் கல்வெட்டு ஆதாரத்துடன் காட்டுகிறது.  (The life of Ramanuja by A. Govindacharya) இஸ்லாமிய படையெடுப்பில் திருநாராயணபுரம் பெருமாள் திருமேனி கொள்ளையடிக்கப்பட்டதும், பின் பெருமாள் விக்ரஹம் மூன்றாம் மசூத் அரண்மனையில் அவனது பெண் பீபியின் அன்புக்கு ஆளானதும் உடையவர் பெருமாள் விக்ரஹத்தினை மீட்டெடுக்க சென்றதும் வரலாறு..

ஸ்ருத்யர்த்த தத்துவ விஜ் ஞாத்ரே பக்தி மார்க்க ப்ரதர்சிநே I
இராமாநுஜாய முநயே மங்களம் புவி ஸாஸ்வதம் II

தேசமெலாம் உகந்திடதே பெரும்பூதூரில் ,
சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி *
காசினி மேல் வாதியரை வென்று ,அரங்கர்-
கதியாக வாழ்ந்தருளும் எதிராசா ** முன்
பூசுரர் கோன் திருவரங்கத்தமுதனார் , உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும் ,
பிழையறவே எனக்கருள் செய் பேணி நீயே .-பிரபந்த ஸாரம்

ராமானுஜரின்216 அடி சிலை பிரதமர் மோடி பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைத்துள்ளார் 45 ஏக்கர் வளாகத்துக்கு மத்தியில் அலமக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்துக்கான சிலை’ (Statue of Equality)என வர்ணிக்கப்பட்டுள்ளது . சிறப்பம்சங்கள்: இந்த சிலை முழுக்க முழுக்க பக்தர்களின் நன் கொடைகளைப் பெற்று சுமார் ரூ.1,000 கோடி செலவில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்த பூமியில் 120 வருடங்கள்
வாழ்ந்ததை நிலனவு கூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு இந்த
சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.-கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, தாமிரம் பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான
‘பஞ்ச லோக ‘ சிலைைாக நிறுவப்பட்டுள்ளது.உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாக இருந்து வருகிறது.சிலை அலமக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் இந்த வளாகத்தில்108 திவ்ய தேசங்கள், இடம் பெற்றுள்ளன.-ராமானுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது –

“அனந்த: ப்ரதமம் ரூபம் த்விதீயம் லக்ஷ் மணஸ் ததா
பலபத்ர: த்ருதீயஸ் து கலௌ கஸ்சித் பவிஷ்யதி||”
காரேய் கருணை ராமானுசா என்பர் அமுதனார். மேகத்தை ஒத்த கருணையுள்ள மஹான்
மேகம் கடல்நீரை முகந்து வர்ஷிக்கும் -ஸ்வாமி ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் -உபய வேத ரஹஸ்யங்களை வர்ஷித்து அருளினார் ‘உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து சிஷ்யர்கள் உள்ள இடங்களிலே எல்லாம் சென்று உபதேசித்து அருளினார் -மும்மாரி தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய பேத அபேத கடக ஸ்ருதிகள் பரபக்தி பரஞான பரம பக்தி
ஹம்ஸோ யதா க்ஷீரமிவ அம்புரமிச்ரம் என்கிறபடி -நம் ஸ்வாமி
சாஸ்த்ரங்கள் ஸார அஸாரங்களைப் பிரித்து உபதேசித்து அருளினார்
சங்கமவை முரலச் செங்கமல மலர் ஏறி அன்னமலி பெடையோடு அமரும்
என்றபடி ஹம்ஸமானது சங்குகளில் முழக்கத்தை இனிமையாகக் கேட்குமா போலே ஸ்வாமியும் சிஷ்யர்கள் செய்யும் ஸ்துதிகளைக் கேட்டு எழுந்தருளியிருந்தார்.

என்ன செய்யப் போகிறோம் என்று அறியாமல் தவிக்கும் பொழுது வேடுவ
வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந் தேவி தாயாரும் ஆட்க்கொண்டதை
நினைத்து புலம்பி அழுதார்.பின்பு தம்மைத் தேற்றிக் கொண்டு பெரு மகிழ்ச்சி யுடன் கீழே யுள்ள ஸ்லோகங்களால் தொழுதார்.
‘‘ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்ரம் ஹே க்ருஷ்ண, ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி
யச்சாப ஹா ஸாந்த மஸக்ருதோஸி விஹாரம்ய்யாசன போஜனேஷு
ஏகோதவாய் யச்யுத தத்ஸமகவும் தத்ஷா மயே த்வாமஹம ப்ரமேயம்’’

‘‘அச்சுதனே ! உன்னுடைய இந்த மஹிமையை அறியாத நான்,
கவனமின்மையாலும், அன்பினாலும் உன்னை நண்பன் என எண்ணி, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, நண்பா! என்று விளையாடும் போதும், படுத்திருக்கும் போதும்,உட்கார்ந்திருக்கும் போதும், உண்ணும் போதும், பலர் முன்னிலையிலும் உன்னை
அவமதித்திருக்கிறேனே , அவை அனைத்தையும் பொறுத்தருளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று அர்ஜுனனைப் போல் வேண்டிக் கொண்டார்.

முன்னே பிறந்து இறந்து மூது உலகில் பட்ட வெல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே -சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி
-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

ராமானுஜன் என் தன் மா நிதி -என்றும் ராமானுஜன் என் தன் சேம வைப்பு -அரங்கன் தந்தது சந்நிதிக்குள்ளே யதிசம்ஸ்கார விதியின் படியே அந்தப்புரத்திலேயே தம் பெண்டிரை வைப்பாரைப் போலவே வைத்து அருளினான்

————–

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா – வியாசர் எப்ப உபநிஷத் கடலை கடைவதற்காக பார்த்தாலும், தன்னுடைய மதி, ஞானத்தையே மத்தாக நாட்டிடுவர். தன்னுடைய ஞானத்தை மத்தாக நாட்டி, உபநிஷத்துக்களாகிய கடலைக் கடைந்து, ‘பாராசார்ய வசஸ்ஸுதாம் உபநிஷது துக்தாத்பி மத்யோத்க்ருதாம், சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி’, இப்பேர்ப்பட்ட அமிர்தத்த கடைஞ்சு குடுத்துட்டார்

“புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி-எதிராஜரை நடுநாயகக் கல்லாக வைத்துத்தான் இந்த அட்டியல்,-தேகழி தீபந் நியாயம்’னு பேரு. தேகழி – இடைகழி, தேகழி தீபம்-னா, இடைகழியிலே வைக்கப்பட்ட தீபம். அப்படின்னா என்னன்னா, இராமானுஜரோடே சம்பந்தத்தினாலேதான் அவருக்கு முற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம். அவரோட சம்பந்தத்தினாலேதான் அவருக்கு பிற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம்

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை. சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ? प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545. அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி
ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு

நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா
தேசிகர் தன்னுடைய எதிராஜ சப்ததியிலே சொல்லும்போது, இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.

இராமானுசருடைய விக்கிரகத்தை ஏற்படுத்தி, மதுரகவி ஆழ்வார் மூலமாக, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி, அதுல இராமானுசர் விக்ரகம் வர, அத நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகக் கொடுத்ததே, நம்மாழ்வார்தான். ‘பவிஷ்யதாச்சார்ய வரசொரூபம் தம்காரீசூணு சரணம் ப்ரபத்யே’-ன்னு, ‘காரீசூணு’ன்னு நம்மாழ்வாருக்குப் பெயர். அவர்தான் இந்த பவிஷ்யதாச்சார்ய விக்கிரகத்தயே கொடுத்தார்

பூ மன்னு மாது – புஷ்பத்திலே எப்போதும் எழுந்தருளியிருக்கக்கூடிய மகாலக்ஷ்மி, மாது பொருந்திய மார்பன் – மகாலக்ஷ்மியை திருமார்பிலே கொண்டிருக்கிற ஸ்ரீமந் நாராயணன். மார்பன் புகழ் மலிந்த பா – ஸ்ரீமந் நாரயணனோட வைபவத்தைச் சொல்ற திருவாய்மொழி, பா மன்னு மாறன் – அந்த திருவாய்மொழியைப் பாடின நம்மாழ்வார், மாறன் அடி – நம்மாழ்வாருடைய திருவடி, அடிபணிந்துய்ந்தவர் – அந்தத் திருவடியைப் பற்றியே வாழ்ந்த இராமானுசர்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து * அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன்

பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

அவர் எழுதினவை ஒன்பது கிரந்தங்கள், நவரத்தினங்கள்ன்னு சொல்லுவர்கள். வேதார்த்த சங்க்ரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபாஷ்யம், சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், கீதாபாஷ்யம், நித்யக்ரந்தம், என்று ஒன்பது கிரந்தங்களைச் சுவாமி சாதித்தார். ஒன்பதுமே ஒன்பது இரத்தினங்கள்தான். இரத்தின இரத்தினமான கிரந்தங்களை, இரத்தினத்திலே நாயக இரத்தினமான இராமானுசர், இரத்தினமான, இராம இரத்தினமாய், கோபால இரத்தினமாய், ரங்க இரத்தினமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கரத்தினத்திலே எப்போதும் சேவை சாதிக்கக்கூடிய எம்பெருமானுடைய திருவடிகளுக்கு, இரத்தின ஹாரமாகவே சமர்ப்பித்தார். அந்த இரத்தினமான இராமானுசரை நாம் பற்றினோமென்னால், நாம் வெறும் கண்ணாடிக்கல்லாக இருந்தாலும், நாமும் ஸ்ரீவைஷ்ணவ இரத்தினமாக ஆக்கப்படுகிறோம், என்பது நம் சம்ப்ரதாயத்திலே தேறிய உண்மை.

அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே

அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே

சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வானமாமலை முதலாவது ஸ்வாமி விஷயமான மங்களாசாஸநம்‌, ப்ரபத்தி–ஸ்ரீ மஹார்யர்‌ என்ற ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளியவை-பண்டித ரத்னம்‌, ஸ்ரீ திருக் கண்ணபுரம்‌ ஸ்ரீ செள. ஸ்ரீநிவாஸாசார்யர்‌ (சிரோமணி) இயற்றிய உரையுடன்‌-

July 25, 2025

ஸ்ரீ வர மங்கா ஸமேத தேவ நாயக ஸ்வாமி நம :
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –
ஸ்ரீ மத்‌ வரவரமுநயே நம :
ஸ்ரீ மத் வாசாசல முநயே நம :

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌, தீபக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்ரப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முதிம்‌ |

ஸ்ரீ ஆதி சேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் பகவத் கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
முதல் பிரதான சிஷ்யர் -அஷ்ட திக் கஜங்களில் பிரதானம்

பாதுகா சில சமயம் பிரியலாம் –
பாதுகா சாயா -சில சமயம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம் –
பாத ரேகா இவர் என்பர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே–பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

இவர் கால் வைத்த காரணத்தால் சிஷ்ய ஸம்பத் பெருகியதால் பொன்னடிக்கால் ஜீயர் -செம் பொன் கழல் அடி -பொன்னடிக்கால் ஜீயர்
இவருக்கு அஷ்ட திக் கஜங்கள்
ஸ்ரீ சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
ஸ்ரீ சமரபுங்கவாசார்யர்,
ஸ்ரீ சுத்தசத்வம் அண்ணா,
ஸ்ரீ ஞானக்கண்ணாத்தான்,
ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை ,
ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்,
ஸ்ரீ கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா.

—————-

அவதாரிகை
ஸ்ரீமத்‌ வாதூலகுல திலகராய்‌ ஸ்ரீநிவாஸார்யர்‌ என்ற அபர நாமத்தை யுடைய மஹார்யர்‌, கோயிலில்‌ அழகிய மா முனிகளை ஆஸ்ரயிக்க விருப்பமுற்று எழுந்தருள, மா முனிகளும்‌ இவரைத்‌ தமது ப்ரதம சிஷ்யரான வானமாமலை ராமாநுஐ ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்து மந்த்ர மந்த்ரார்த்த ரஹஸ்யாதி கிரந்தங்களையும்‌ ஸ்ரீபாஷ்ய பகவத்‌ விஷயாதிகளையும்‌ அவரிடம்‌ அதிகரித்துச்‌ சிறந்த ஞானமுடையராய்‌ ஸ்வாசார்ய சுச்ரூஷா பரராய்‌ எழுந்தருளி
யிருந்தார்‌. பிறகு மா முனிகள்‌ தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உண்டாக வேண்டுமென்று இருக்குமவராகையாலே, தம்மைப்‌ போலவே அவருக்கும்‌, அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து முதிர்ந்த ஞானமுடையவர்களில்‌ சிறந்த சிலரை ௮ஷ்ட திக்‌ கஜங்களாகக்‌ கல்பித்தருளினார்‌. அவ் வெண்மர்‌ திருநாமங்களும்‌ “:ஸ்ரீமந் மஹார்ய ரண புங்கவ” என்ற ஸ்லோகத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது. மாமுனிகள்‌ ஒரு நாள்‌ தமது திக்கஜங்களோடு’ தம்மை ஸேவித்து நிற்கும்‌ வானமாமலை ஜீயரையும்‌ அவருடைய ஸம்ருத்தியையும்‌ கடாக்ஷித்து அதி ஸந்துஷ்டராய்‌ எழுந்தருளியிருந்து, மஹார்யரைக்‌ குறித்து,-உமது ஆசார்‌யன்‌ விஷயமாய்‌ ஒரு ச்லோகம்‌ சொல்லிக்‌ காணும்‌” என்ன,
அவரும்‌ அவசராய்‌, “* ரம்ய ஜாமத்ரு…முநிம் பஜே ” என்று அருளிச் செய்ய அது தமது அபிமதத்திற்கு இசைகந்திருந்தபடியாலே ஸந்தோஷிக்க, மற்ற சிஷ்யர்களும்‌ இந்த ஸ்லோகத்தைக்‌ கேட்டு மா முனிகளைப்‌ பார்த்து, அடியோங்‌களுக்கு இற்றைக்கு ஓர்‌ மஹா நிதி ப்ராப்தமாயிற்று”’ என்று கொண்டாட, மாமுனிகளும்‌ தமது ஸ்ரீ சைலேச தயா பாத்‌ரத்‌ தனியனோடு இந்த ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர”” என்‌னும்‌ தனியனையும்‌ நியதமாகச்‌ சேர்த்து அநுஸந்திக்கும்படி. நியமித்துத்‌ தமது அம்சாவதாரமே வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ என்று அவர்‌ வைபவத்தை ப்ரகாசப் படுத்தினார்‌.

பிறகு அந்த மஹார்யர்‌, மணவாள முனிகளால்‌ அநேக ஸமயங்‌களில்‌ ஸூஸிப்பிக்கப்பட்ட தமது ஆசார்யன்‌ வைபவத்தையும்‌, உபய வேதாந்த மந்த்ர ரஹஸ்யாதி விஷயமான
ஸுஷ்ம ஞானத்தையும்‌, ஸெளலப்யம்‌, ஸெளஸீல்யம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலிய அவரது குண கணங்களையும்‌கண்டு அதிசயித்து, அக் குணங்களில்‌ ஆழ்ந்து பக்திபரவசராய்‌, மெய் மறந்து பல்லாண்டு பாடி யல்லது நிற்க வொண்ணாத நிலையை எய்தி, அவரது மங்களாசாஸநத்திலே ப்ரவ்‌ருத்தராகிறார்‌ இந்த கிரந்தத்திலே.. இந்த ராமாநுஜ முனி
விஷயமான ப்ரபத்தி கிரந்தத்தை ‘ அருளிச் செய்தவரும்‌ இவரேயாவர்‌. இவருக்குத்‌ தொட்டை அய்யங்கார்‌ அப்பை என்ற திருநாமமும்‌ உண்டு.

ரம்யோ பயந்த்ரு முநி வர்ய தயா நிவாஸம்‌,ராமாநுஜம்‌ யதிபதம்‌ கருணாம்ருதாப்‌திம்‌ வந்தே மநோஜ்ஞ வரதாஹ்வயம்‌ ஆத்மவந்தம்‌ ஆ ஜந்ம ஸித்த பரிபூத சரித்ர போதம்‌ –1-

பதவுரை:–
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய–அழகிய மணவாள மாமுனிகளது,
தயா நிவாஸம்‌-கருணைக்கு இருப்பிடமாயும்‌,
கருணாம்ருதாப்‌திம்‌-கருணை யென்னும்‌ அம்ருதத்திற்கு உறை விடமான கடல் போன்றவரும்‌,
ஆத்மவந்தம்‌-தைர்யத்தை.யுடையவரும்‌, (ஆஜந்ம ஸித்த…போதம்‌)
ஆ ஜந்ம ஸித்த – பிறப்பு முதலே யுண்டாகிய,
பரிபூத – மிகவும்‌ புனிதமான,
சரித்ர-ஆசரணையையும்‌,
போதம்‌-ஞானத்தையும்‌ உடையவரும்‌,
மநோஜ்ஞ வரதாஹ்வயம்‌-தமது பிதாவினால்‌ அழகிய வரதர்‌ என்ற திருநாமம்‌ சாற்றப் பெற்றவரும்‌,
யதிபதம்‌-யதிகட்டு இறைவருமான,
ராமாநுஜம்‌ – வாநாசல ராமாநுஜ முனி வரரை,
வந்தே – வணங்குகின்றேன்‌.

இந்த வாநாசல ராமாநுஜ முநிவர்‌, ஸ்ரீமணவாள மாமுனிகள்‌ கிரஹஸ்த தர்மத்தை அருஷ்டித்துத்‌ திருக்குருகூரில்‌ எழுந்தருளியிருந்த காலத்திலேயே அவரது
திருவடி.களில்‌ முதலில்‌ ஆஸ்ரயித்த முதலாவது சிஷ்யராவார்‌.-ஆகையால்‌ அவரது தயைக்கு இவரேஉறைவிடமாயினர்‌. இவர்‌ ஆத்மவானும்‌ ஆவர்‌. அதாவது ஓரிடத்திலும்‌ மழுங்‌காத தைர்யமென்னும்‌ குணத்தை உடையவர்‌. இத்தால்‌-தம்மை ஆஸ்ரயித்தவர்களை உய்விக்க இவர்‌ யத்னம்‌ செய்‌தால்‌ அது விஷயத்தில்‌ தளர்வை எய்தார்‌ ‘எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌.

ஸ்ரீ ராமாயணத்தில்‌ ‘* ஆத்மவாந் கோ ஜித க்ரோத: ” என்னுமிடத்தில்‌ இப் பதத்திற்ரு தைர்யவான்‌-என்ற அர்த்தமே கோவிந்தராஜரால்‌ கூறப்பட்டுள்ளது காண்க. அல்லது ஆத்ம சப்தம்‌ ஸ்வபாவத்தைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அபிமுகனான சேதநனை ரக்ஷிக்கும்‌
ஆசார்ய ஸ்வபாவத்தைக்‌ கூறி, அத்தகைய ரக்ஷண ஸ்வபாவம்‌ வாய்ந்தவர்‌ என்றுமாம்‌. அல்லது ஆத்ம சப்தம்‌ மனதைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அதீநமாய்‌ தம்‌ வசத்திலாய மனத்தை யுடையவர்‌ என்றுமாம்‌. இத்தால்‌ இவரது வைராக்ய முடைமை கூறப்பட்டதாகும்‌.

இவர்‌ கருணையாகிய அம்ருதம்‌ நிறைந்த கடல்‌ போன்றவர் இவரைக்‌ கடலாகக்‌ கூறியதால்‌ கடலில்‌ தண்ணீரை ஒருவராலும்‌ வற்றச்செய்ய முடியாதாப்‌ போலவே இவர்‌ கருணையையும்‌ வற்றச்‌ செய்ய இயலாது என்பது ஸூசிதமாம்‌. கருணையை
அம்ருதமாகக் கூறியதால்‌, அம்ருதம்‌ தன்னை அருந்தியவருக்கு அமரத்‌ தன்மை யளிப்பது போலவே, இவரது கருணையும்‌ தமக்கு விஷயமானவர்களுக்கு அமரத்வத்தை
(நித்பத்வத்தை) அளிக்குமென்பது தேறுகிறது
. நிற்க இப்‌பொழுது இவர்‌ நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸத்தை எய்தி ராமாநுஜ முனி என்று திருநாமம்‌ உடையராயினும்‌,
தமது பால்யத்தில்‌ தமது பிதாவால்‌ மிகுந்த அழகு வாய்ந்திருந்தமை காரணமாக, இவர்‌ அழகிய வரதரென்று அழைக்‌கப் பட்டவராயிருப்பர்‌. பிறப்புடனே கூட உண்டாகிய மிகப்‌ பரிசுத்தமான அநுஷ்டானங்களையும்‌ ஞானத்தையும்‌ உடையவர்‌ இவர்‌. இத்தகைய பெருமை வாய்ந்த யதித்‌ தலைவரான ராமாநுஜ முனியை வணங்குகின்றேன்‌.

——-

அவதாரிகை.–
முதல்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜமுநிவர்‌ மணவாள மா முனிகளின்‌ தயைக்குப்‌ பாத்ரமானவர்‌ என்றார்‌. இதில்‌ இவருக்கு உண்டாகிய வாத்ஸல்ய ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களுக்கு ஊற்றுவாய்‌ மாமுனிகள்‌ எனக்‌ கூறி, இவரே எனது குலத்திற்கு நாதன்‌” எனவும்‌ கூறி வணங்குகின்றார்‌.

ரம்யோ பயந்த்ரு முநிவர்ய தயாநுபாவ ஸம் ஸித்த ஸத் குண கணஓக மஹார்ணவாய ராமாநுஜாய முநயே யமிநாம்‌ வராய மாமக நாதாய குலஸ்ய நம அஸ்து நித்யம் –2-

பதவுரை:–(ரம்யோ பயந்த்ரு…மஹார்ணவாய)
ரம்யோ பயந்த்ரு- அழகிய மணவாள னென்னும்‌,
முநிவர்ய – யதித்‌ தலைவனது,
தயாநுபாவ -.கருணையின்‌ ப்ரபாவத்தினால்‌,
ஸம் ஸித்த-நன்றாய்‌ ஸித்‌திக்கப் பெற்ற, ஸத் குண கண-சிறந்த குணங்களின்‌ திரளாகிற,
ஓக-ப்ரவாஹத்திற்கு,
மஹார்ணவாய – புகலிடமாகிய ஸமுத்ரம்‌ போன்றவரும்‌,
யமிநாம்‌-மனதை அடக்கியாளும்‌ யோகிகளுள்‌
வராய – தலை சிறந்தவரும்‌,
மாமக குலஸ்ய-எனது குலத்திற்கு,
நாதாய-யஜமானரும்‌,
ராமாநுஜாய – இராமாநுசன்‌ எனப்‌ பெயர் பூண்ட வருமான;
முநயே – முநிவரின்‌ பொருட்டு,
நம: – எனது நமஸ்காரம்‌,
அஸ்து – ஆயிடுக.

இந்த வாநாத்ரி முநிவர்‌ பிறப்பே தொடங்கி உண்டாகிய ஸதாசாரம்‌, ஞானம்‌ இவைகளை யுடையராயினும்‌ மணவாள மா முனிகளை ஆஸ்ரயித்த பின்னர்‌, அவரது கருணையின்‌ மஹிமையால்‌ உண்டாகிய வாத்ஸல்ய ஸவ்ஸீல்ய ஸவ்லப்யாதி குணத்‌ திரள்‌ ப்ரவாஹமாகச்‌ சென்று சேரும்‌ பெருங்கடலாயினர்‌. இவரை குணக்‌ கட.லாகக்‌ கூறியதால்‌, குணங்கள்‌ வற்றாத ஆகரம்‌ இவர்‌ என்றததாயிற்று. இவர்‌ இந்த்ரியங்களை அடக்கி மனதைத்‌ தம்‌ நிலையிலே நிறுத்தும்‌ யோகிகளுள்‌ சிறந்த தலைவர்‌. எனது குலத்தை நிர்வஹித்து நடத்திப் போரும்‌ நாதனுமாவார்‌-இப்‌ பெருமை வாய்ந்த இவ் வாநாசல முனிவருக்கு நித்யமாக எனது நமஸ்காரம்‌ உரித்தாகுக.

—————-

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவருக்கு உண்டாகிய ஸத் குணங்கள்‌ மணவாள மாமுனிகளின்‌ தயா ப்ரபாவத்தாலென்றார்‌. இதில்‌ இவருக்கு தாரக போஷகாதிகளும்‌ மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளே எனக்‌ கூறி, இவர்‌ தமது குலத்திற்கு நாதனானமையை விளக்‌கிக்‌ கூறுகிறார்‌.

ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர பாத கம்ஜாத ப்ருங்கம்‌ கருணாந்தரங்கம்‌ ராமாநுஜம்‌ முநிம்‌ நவ்மி மதீய ஹ்ருத்‌ சந்த்ர காந்தோ பல பூர்ண சந்தரம்‌ –3-

பதவுரை:–(ஸ்ரீரம்ய ஜாமாத்ரு…… ப்ருங்‌ தம்‌) ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
பாத – திருவடிகளாகிற,
கம்ஜாத – தாமரை மலர்களில்‌ படியும்‌,
ப்ருங்கம்‌ – வண்டு போன்றவரும்‌,
கருணாந்தரங்கம்‌-கருணையுடன்‌ கூடிய மனதை உடையவரும்‌,
மதீய- என்னுடையதான,
ஹ்ருத்‌ – மனதாகிற,
சந்த்ர காந்தோ பல – சந்த்ரகாந்தக்‌ கல்லுக்கு,
பூர்ண சந்தரம்‌ – கலைகள்‌ நிறைந்த சந்த்ரன்‌ போன்றவருமான,
ராமாநுஜம்‌ முநிம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ முநிவரை,
நவ்மி – துதிக்‌கின்றேன்‌.

இவ் விராமாநுஜ முநிவர்‌ மணவாள மாமுனிகளினுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ படிந்த வண்டு போன்றவர்‌ என்பதால்‌ அத் திருவடி மலர்களையே . தமக்கு தாரக போஷகங்களாகக்‌ கொண்டவர்‌ எனக்‌ கூறியவாறாம்‌.-வண்டுகளுக்கு மலரே தாரக போஷகங்களல்‌லவா? இவர்‌ கருணையோடு கூடிய மனது வாய்ந்தவர்‌, மேலும்‌ எனது மனதாகிற சந்த்ர காந்தக்‌ கல்‌லுக்கு கலா பூர்ணனான சந்திரன்‌ போன்றவர்‌. இவரைச்‌ சந்திரனாகவும்‌ மனதைக்‌ கல்லாகவும்‌ கூறியதால்‌, கல்லையும்‌ உருகச் செய்யும்‌ சக்தி வாய்ந்தவர்‌ இம்‌ முனிவர்‌ என்றும்‌, அக் கல்‌ சந்திரனுக்கன்றி மற்றொன்றைக்‌ கண்டு உருக மாட்டாதது போலவே, எனது கல் நெஞ்சம்‌ அவருக்கன்றி மற்றையோருக்குக்‌ கரையாது என்றும்‌, கலா பூர்ணனான சந்த்ரனென்று ரூபகமாகக்‌ கூறியதால்‌ இவரும்‌ ௮ச் சந்த்ரனைப் போலவே கலா பூர்ணர்‌ (வித்யைகள்‌ நிரம்பியவர்‌ ) என்றும்‌ கூறப்பட்டதாகும்‌. இதனால்‌ இவர்‌ கல்வியின்‌ பெருமை காரணமாகத்‌ தம்‌ நெஞ்சம்‌ உருகியதாகக்‌ கூறப்‌ பட்டதாகும்‌. கல்வி காரணமாகத்‌ தமது குலத்துக்கு நாதர்‌ என்று கீழில்‌ ஸ்லோகத்திற்கு இது விவரணமுமாகும்‌. இவ்‌வாறு சிறப்பு வாய்ந்த இராமாநுச முநியைத்‌ துதிக்‌கின்றேன்‌.

——————

அவதாரிகை:–இந்த ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கல்யாண குணங்களில்‌ சிலவற்றைக்‌ கூறி, இவர்‌ அழகிய மணவாள மாமுனிகளுக்கு அந்தரங்கராய்‌ -பஹி: சர:ப்ராண: என்னுமா போலே அம் முனிவரின்‌ ப்ராண ஸ்தாநீயருமாவார்‌ என்கிறார்‌.

வந்தே வாத்ஸல்ய ஸெளசீல்ய ஞாநாதி குண ஸாகரம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி ஜீவிதம்‌
ராமாநுஜ முநிம்‌ –
4-

பதவுரை :–
வாத்ஸல்ய -வாத்ஸல்ய குணமென்ன,
ஸெளசீல்ய – ஸெளசீல்ய குணமென்ன,
ஞான- ஞானமென்ன,
ஆதி – இவை முதலாய,

குண – குணங்கட்கு,
ஸாகரம்‌ – கடல்‌ போன்‌றவரும்‌
ரம்ய ஜாமாத்ரு முநி – அழகிய மணவாள மாமுனிகட்கு,
ஜீவிதம்‌ – ப்ராணன்‌ போன்‌றவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ முனியை, வந்தே – வணங்குகின்றேன்‌-

வாத்ஸல்யமென்பது – தன்னை ஆஸ்ரயித்தவர்‌கள்‌ இழைத்த குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌ மிகப்‌ பெரியோரின்‌ ௮ற்புத குணமாம்‌. இக்‌ குணம்‌ நமது குற்றங்‌களைக்‌ கண்டும்‌ அஞ்சாது அப் பெரியோரை நாம்‌ அணுகுவதற்கு உறுப்பாகும்‌. செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்ளுதல்‌ பெரியோரின்‌ இயல்பு.-ஸெளசீல்யமென்பது–தான்‌ எவ்வளவு பெருமை யுடையவனாயினும்‌ தன்‌ மேன்மையைக்‌ கொஞ்சமும்‌ தன்‌ மனத்தால்‌ நினையாது மிகத்‌ தாழ்ந்தோருடனும்‌ புரையறக்‌ கலக்கும்‌ குண விசேஷமாகும்‌.
இஃது நாம்‌ கட்ட விரும்பும்‌ பெரியோரின்‌ பெருமையைக்‌ கண்டு நாம்‌ அகல வேண்டாமைக்கு உரித்தாய குணம்‌-ஞானமென்பது தன்னை ஆஸ்ரயித்தவர்களின்‌ அபேக்ஷையை அறிய ஏதுவாய குணம்‌. ஆதி சப்தத்தால்‌ ஸ்வாமித்வம்‌, ப்ராப்தி பூர்த்தி முதலிய குணங்களும்‌ கூறப்‌பட்டனவாகும்‌. இக் குணங்கட்கு இவரைக்‌ கடலெனக்‌
கூறியதால்‌ இவைகள்‌ வற்றாது நிரம்பி இருக்குமிடமென்று கூறியதாகும்‌-
நிற்க -இம் முனிவரை மா முனிகளுக்கு ப்ராணன்‌ எனக்‌ கூறியதால்‌ இவரை க்ஷண காலமும்‌ விட்டுப் பிரிந்து மா முனிகள்‌ தரிக்க வல்லரல்லர்‌ என்றதும்‌, (ஸ்ரீராமபிரானுக்கு இளைய பெருமாள்‌ போல்‌ ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்‌ எல்லா விதக்‌ கைங்கர்யங்களையும்‌
செய்யும்‌ அந்தரங்கர்‌
என்ற அம்சமும்‌ தோற்றுகின்றன-இத்தகைய பெருமை வாய்ந்தவரை வணங்குகின்றேன்‌.

————

கீழ்‌ ஸ்லோகத்தில்‌ வாச்ஸல்ய ஸெளசீல்யாதி குணங்களுக்குக்‌ கடலென்றும்‌, மாமுனிகளை்‌ விட்‌டகலாதவர்‌ என்றும்‌ இவரது பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய வைராக்கியமென்னும்‌ முக்‌கிய குணம்‌ கூறப்படுகிறது.

வந்தே வாந மஹாசைல ராமாநுஜ மஹாமுமிம்‌ யத்‌ அநாதர ஸம் வ்ரீடம்‌ அந்தராளாஸ்ரம த்வயம்‌-5-

பதவுரை:–
அந்தராளாஸ்ரம த்வயம்‌ – ப்ரும்ஹசர்யத்‌திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ மத்தியிலுள்ள கார்ஹஸ்த்யம்‌,வாநப்ரஸதம்‌ என்னும்‌ ஆஸ்ரமங்களிரண்டும்‌,
யத்‌-எந்த முனிவரது,
அநாதர – ஆதரவின்மையாலே,
ஸம் வ்ரீடம்‌ – மிகுந்த லஜ்ஜையை உடையதாக, (ஆயிற்றோ);
வாந மஹாசைல-(அந்த) வானமாமாலை,
ராமாநுஜ மஹா முமிம்‌ – ராமானுஜனென்னும்‌ மா முனியை,
வந்தே-நமஸ்கரிக்கின்றேன்‌-.

இங்கு “வாந மஹாசைல ‘ எனக்‌ கூறியது-எம்பெருமானை. ** வானமாமலையே அடியேன்‌ தொழ வந்‌தருளே ‘* என்று நம்மாழ்வார்‌ அவனையே கூறியுள்ளார்‌,
அந்த வானமாமலை என்ற தழிழ்ப்‌ பதமே ஸம்ஸ்க்ருத பதமாக ** வாந மஹா சைல ”? என்று மஹார்யரால்‌ கூறப்பட்டதாகும்‌. எனவே அவ்வெம்பெருமானுக்கு உரிமை பூண்டவராய்‌ அவருடைய கல்யாண குணங்களையே அநவரதம்‌ அநு ஸந்தாநம்‌ செய்யுமவராகையாலே, **மஹாமுநிம்‌’” என்றார்‌–இந்த ஸ்லோகத்தின்‌ பிற்‌ பகுதியால்‌ இவரது சிறந்த வைராக்‌யம்‌ என்னும்‌ குணம்‌, மிகுந்த சமத்காரத்துடன்‌ கூறப்படுவது காணலாகும் -அதாவது, இந்த ராமாநுஜ முநிவர்‌ தமது பிதாவால்‌ உபநயன ஸம்ஸ்காரம்‌ பெற்று ப்ரும்ஹசர்‌யத்துடன்‌ வேத வேதாங்கங்களை நன்கு கற்றறிந்து வைராக்‌யத்தை எய்தி, அதன்‌ மேலீட்டால்‌ ப்ரும்‌ஹசர்யத்திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ நடுவிலுள்‌ள கார்‌ஹஸ்‌யம்‌, வானப்ரஸ்‌தம்‌ என்ற இரண்டு ஆஸ்ரமங்களையும்‌ கண்ணெடுத்தும்‌ பாராது இவர்‌ அநாதரவு செய்ததால்‌ அவைகள்‌ மிகுந்த வெட்கத்தை எய்தின என்‌கிறார்‌, மஹார்யர்‌ ரஸோக்‌தியாலே,-வைகுண்ட என்றும்‌ சப்தம்‌ எம்பெருமானையும்‌, அவருக்கு வாஸ ஸ்தானமான பரம பதத்தையும்‌ கூறுவதுபோல இங்‌கும்‌ வாநாசல என்ற பதம்‌ எம்பெருமானையும்‌ அவருடைய
திருப்பதியான ஸ்ரீ வரமங்கல நகரையும்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. தற்காலத்தில்‌ வ்யவஹாராமும்‌ இவ்வாறே உண்டாயிருக்கலாம்‌. “தேசிக சிகா மணிகளான எம்பெருமானார்‌ மணவாள மா முனிகள்‌ போன்‌றவரும்‌ சிறிது காலம்‌ க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்து நம்மை ஆதரித்திருக்க,-அந்தோ-நம்மை இவர்‌ கண்ணெடுத்து ஏற இறங்கவும்‌ பார்க்கவில்லையே” என்று இவரால்‌ ஏற்கப்படாத கிருஹஸ்‌தாஸ்ரமம்‌ வெட்கமுற்றதாம்‌. இது வாநப்ரஸ்தத்‌திற்கும்‌-உப லஷணம்‌. இத்தால்‌ அவ்விருவரிலும்‌ காட்டிலும்‌ வைராக்ய விஷயத்தில்‌ இவர்‌ சிறப்புற்றவர்‌ எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌. மணவாள மாமுனி கிருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்து வரும்‌ காலத்திலேயே அவரது ஸம்பந்தம்‌
பெற்ற இவர்‌, தமது வைராக்யத்தின்‌ மேலீட்டால்‌ . ஸந்யாஸாஸ்ரமத்தை எய்தினார்‌ என்பதை யதிந்தர ப்ரவண ப்ரபாவம்‌, ககநகிரிமுநி சரிதம்‌ முதலியவற்றில்‌ காணலாம்‌. இச்‌ சிறந்த வைராக்யம்‌ பூண்ட இராமாநுஐ முநியை வணங்குகின்றேன்

———

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ அழகிய மணவாள மா முனிகளின் திருவடிகளில்‌ முதலிலேயே இவர்‌ ஆஸ்ரயித்து, அவருடைய கருணை பாயும்‌ முதல்‌ மடையுமாவர்‌ இவர்‌ என்று கூறுகிறார்‌. அதாவது இவரே அவரது முதல்‌ சிஷ்யர்‌. இவரது கால்‌ நலத்தாலே மற்றெல்லா சிஷ்யர்‌களும்‌ தம்மை ஆச்ரயித்துத்‌ தாம்‌ பெருமை எய்தியதாக மாமுனிகளும்‌ நினைத்தன்றோ இவருக்கு “*பொன்னடிக்கால்‌ ஜீயர்‌ ‘” என்று திருநாமம்‌ சாற்றியதும்‌. எனவே அவர்‌ கருணைக்கு முதல்‌ இலக்கு இவர்‌. மேலும்‌ காமம்‌, கரோதம்‌ என்ற தீக்குணங்கள்‌ தம்மிடம்‌ இல்லாததோடு தம்மை அடுத்த மற்றையாரின்‌ அத் தீய குணங்களையும்‌ அகற்றுமவர்‌ இவர்‌ என்ற பெருமையையும்‌ கூறுகிறார்‌.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர ப்ரஸாத ப்ரதமாஸ்பதம்‌
ராமாநுஜமுநிம்‌ வந்தே காமாதி துரிதாபஹம்‌-6-

பதவுரை :-
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌, :
ப்ரஸாத -அருளுக்கு,
ப்ரதமாஸ்பதம்‌ – முதலாவது ஸ்தானமாகியவரும்‌,
காமாதி துரிதாபஹம்‌ – காமம்‌ முதலான பாபங்‌களை அகற்றுமவருமான, ராமாநுஜமுநிம்‌ – வாநாத்ரி-ராமாநுஜ முநிவரை,
வந்தே-வணங்குகின்றேன்‌.

மற்றைய சிஷ்யர்கள்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ பெருமையை உணர்ந்து அவரை ஆஸ்ரயிப்பதற்கு வெகு காலம்‌ முன்னமேயே அவர்‌ கிருஹஸ்தாஸ்ரமத்தை யுடையராய்‌ திருநகரியில்‌ எழுந்தருளியிருந்த போதே, இந்த ராமாநுஜ முனிவர்‌ அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து அவரது கருணைக்கு முதல்‌ பாத்திரமாய்‌ அவர்‌ பாத ரேகா ஸமராயிருந்து, பின்பு (மா முனிகளை) ஆஸ்ரயித்த அண்ணன்‌, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌ முதலியோருக்கு ஆஸ்ரயணத்தில்‌ இவர்‌ புருஷகாரமா யிருந்தமையாலும்‌ அவருடைய கருணைக்கு முதல்‌ விஷயம்‌ இவரே. மேலும்‌ இவர்‌ வைராக்ய சாலியாகையால்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று சொல்லப்படும்‌ உடன்‌ பிறந்த சத்ருக்‌களாகிய ஆறு தீய குணங்களையும்‌ தாம்‌ அகற்றியதோடு தம்மைச்‌ சார்ந்தோரையும்‌ அத் தீய குணங்கள்‌ சாரா வண்ணம்‌ நீக்கும்‌ சக்தி வாய்க்தவர்‌. **காமாத்‌ க்ரோதோபி ஜாயதே க்ரோதாத்‌ பவதி ஸம்மோஹ :’”இத்யாதிகளாலே காமாதிகளின்‌ கொடுமை ஸ்ரீ கீதையில்‌ கண்ணனால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது. இவைகளைப்‌ பாப வாசகமான துரித சப்தத்தாலே கூறியது, அப் பாபத்துக்கு இத்‌ தீய குணங்கள்‌ காரணமாகையாலே. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ராமானுஜ முநியை வணங்குகின்றேன்‌.

————-

கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவர்‌ ராக த்வேஷாதிகள்‌ அற்றவரெனக்‌ கூறினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ராக த்வேஷங்களே, “இவர் நமக்கு நிலமன்று; நாம்‌ இங்‌கிருக்க இயலாது?” என்று இவரை விட்டுத்‌ தாங்களே கை வாங்கின’ என்றும்‌, இவர்‌ அழகிய குணங்களுக்கு உறைவிடமென்றும்‌, உத்தம புருஷ லக்ஷணம்‌ வாய்ந்தவரென்றும்‌ கூறுகிறார்

ராமாநுஜ முநிம்‌ வந்தே ரமணிய குணாகரம்‌
ராக த்வேஷ விநிர்முக்தம்‌ ராஜீ வதல லோசனம்‌-7-

பதவுரை:–
ரமணிய குணாகரம்‌ – அழகிய குணங்களுக்கு உற்பத்தி ஸ்தாநமாயும்‌, ராக த்வேஷ விநிர்முக்தம்‌ – ராக த்வேஷங்களால்‌ விடப் பெற்றவரும்‌,
ராஜீ வதல லோசனம்‌ – தாமரைப்‌ பூவின்‌ இதழ் போல்‌ அழகிய நீண்ட கண்களை யுடையவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ யோகியை,
வந்தே – வணங்குகிறேன்‌.

இம்‌ முனிவர்‌ அழகிய நற்குணங்கள்‌ உற்‌பவிக்கும்‌ கனியாவார்‌. ராக த்வேஷங்களால்‌ விடப்பெற்றவர்‌. அதாவது ௮வை இவரிடம்‌ முன்பிருந்து இவருடைய முயற்சியால்‌ அகற்றப் பட்டவையல்ல; அவைகளே இவரைக்‌ கண்டு பயந்து ஓடுங்க, **இவர்‌ ஈமக்கு நிலமன்று” என்று இவரை விட்டு நீங்க. இத்தால்‌ இவர்‌ ராக த்வேஷங்களின்‌ வாஸனையும்‌ அற்றவர்‌ எனக்‌ கூறப்பட்ட.தாகும்‌. தாமரை இதழ் போன்ற நீண்ட திருக்கண்களை யுடையவர்‌ எனக்‌ கூறியதால்‌ இவரது மஹா புருஷ லக்ஷணமும்‌, அழகிய வரதர்‌ என்ற திருநாமத்துக்குக்‌ காரணமான இவரது அழகும்‌ கூறப்பட்டனவாகும்‌. இத்தகைய ராமாநுஜ முநியை:
வணங்குகின்றேன்‌.

—————–

அவதாரிகை:-
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது தோஷமின்மையும்‌ கல்யாண குணங்களும்‌ ஸெளந்தர்யமுமாகியவை கூறப்பட்டன. இதில்‌ இவரது வைராக்யத்தின்‌
பெருமை
விஸ்தரிக்கப்படுகிறது.

உத்பத்திம்‌ பவநாத்மஜே அலபத யா வைராக்ய ஸம்பத்‌ புரா
சாந்தே சாந்தநவே நிரந்தரம்‌ அகாத்‌ வ்ருத்திம்‌ ஸம்ருத்தாம்‌ தத
ஸா இயம்‌ ஸம் ப்ரதி யம்‌ ஸமேத்ய புவநே வித்யோததே நைகதா
தம்‌ ராமாநுஐ யோகிநம்‌ குருவரம்‌ பஸ்யேம ஸஸ்வத்‌ வயம்‌
-8-

பதவுரை:–
யா – எந்த,
வைராக்ய ஸம்பத்‌ – வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
பவநாத்மஜே – வாயுவின்‌ புத்திரனான
அநுமானிடம்‌,
புரா – முற்காலத்தில்‌,
உத்பத்திம்‌ – உற்பத்‌தியை,
அலபத – அடைந்ததோ,
தத: – அதன் பிறகு,
(யா)எந்த வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
சாந்தே – அடக்கப்‌ பட்ட மனதையுடைய,
சாந்தநவே – சந்தநு மஹாராஜனின்‌
புதல்வனான பீஷ்மரிடம்‌,
ஸம்ருத்தாம்‌ – பூர்ணமான,
ருத்திம்‌ – ஸம்ருத்தியை,
நிரந்தரம்‌ – இடைவிடாது, நித்யமாக-என்றபடி,
அகாத்‌ – அடைந்ததோ,
ஸா – அப்படிப்‌ பட்ட,
இயம்‌ – இந்த வைராக்யம்‌ என்னும்‌ ஐஸ்வர்யம்‌,
யம்‌ -எந்த ராமானுஜ முநியை,
ஸமேத்ய – அடைந்து,
புவநே -உலகில்‌,
நைகதா- அநேக விதமாக,
வித்யோததே – ப்ரகாசிக்‌கின்றதோ,
குருவரம்‌ – ஆசார்யர்களுள்‌ சிறந்தவரான,
தம்‌ -அந்த,
ராமாநுஐ யோகிநம்‌ – இராமானுஜ முநியை,
வயம்‌ -நாம்‌,
சச்வத்‌ – அடிக்கடி,
பஸ்யேம-பார்க்கக் கடவோம்‌-கண்டு
களிக்கக் கடவோம்‌ என்றவாறு.

வைராக்யம்‌ என்பது உலகில்‌ மிகச்‌ சிறந்த ஓர்‌ ஐஸ்வர்யமாகும்‌ ; அது எல்லோருக்கும்‌ கிடைத்தலரிது. அவ்வைஸ்வர்யம்‌ முதலில்‌ வாயு புத்ரனாகிய அநுமானிடமே உண்டாயிற்று- அதன்‌ பிறகு மனச்‌ சாந்தி பெற்ற சந்தநு மஹாராஜனின்‌ குமாரனாகிய பீஷ்மரிடம்‌ நிரந்தரமாக மிக விருத்தியைப்‌ பெற்றது. இவ்‌ விருவரை யொழிந்த மற்றையோருக்கு இவ்வைஸ்வர்யம்‌ இருந்ததில்லை என்பதை *:௮ந்யத்ர பீஷ்மாத்‌ காங்கேயா தந்யத்ர ச ஹ.நூமத: | ஹறிணீ குர மாத்ரேண சர்மண மோஹிதம்‌: ஐகத்‌ ‘” என்ற வசனத்தால்‌ அறிகிறோம்‌. : இந்த ஸ்லோகத்‌தின்‌ கருத்து ** கங்கா புத்திரனான பீஷ்மனையும்‌ அநுமானையும்‌ தவிர்த்து மற்றைய உலகம்‌ மானின்‌ குளப்படி போன்ற ஸ்திரீகளின்‌ அவய விசேஷத்தாலே மோஹமுற்றதேயாகும்‌”’ என்பதாம்‌. பீஷ்மரின்‌ வைராக்யம்‌ அநுமானது வைராக்யத்தை விடச்‌ சிறந்ததாகும்‌. ஏனெனில்‌, மிகுந்த வீர்யத்தையும்‌ ஐஸ்வர்யத்தையும்‌ உடையராய்‌ எல்லா போக்‌யங்களையும்‌ அனுபவிக்கத்‌ தகுதி வாய்ந்த அரசிளங்‌ குமாரரல்லவா அவர்‌? அத்தகையவர்‌ தமது பிதாவின்‌ விருப்‌பத்தை உணர்ந்து மேலும்‌ பிதா காம போகங்களை அநுபவிக்க வேண்டியதற்காகவே தமது யெளவனப்‌ பருவத்திலும்‌ தமது போகத்தை சபத பூர்வமாகத்‌ துறந்து உலகறியச் செய்து உயிருள்ளளவும்‌ ப்ரும்ஹசர்யத்தையே அநுஷ்‌டித்துப்‌ போந்த மஹா வைராக்யசாலி யாயிற்றே அவர்‌,-மேலும்‌ தமது ப்ராதாவான விசித்ர வீர்யன்‌ நிமித்தமாக ஸ்வயம்வரத்தில்‌ பலாத்காரத்தால்‌ கொண்டு வரப்பட்ட காசி ராஜன்‌ மகள்‌ அம்பா என்பவள்‌, தான்‌ ஏற்கனவே ஸால்வராஜனை வரித்திருப்பதாயும்‌ தனது மனம்‌ அவனையே விரும்புவதாகவும்‌ சொல்ல, பீஷ்மரும்‌ விசித்ர வீர்யனும்‌ அவளை அவள்‌ விருப்பப்படி செய்ய அநுமதித்தார்கள்‌.ஆனால்‌ அவள்‌ ஸால்வனைச்‌ சந்தித்து தன்னை மணக்கும்படி கேட்க பிஷ்மரால்‌ பலாத்கரித்து வீர்யத்தால்‌ கொண்டு போகப்பட்ட உன்னை நான்‌ விவாஹம்‌ செய்து கொள்ள மாட்டேன்‌ என்று திரஸ்கரித்து விட்டான்‌. பிறகு அவள்‌ பீஷ்மரிடம்‌ வந்து, “*“ஸால்வன்‌ நிராகரித்து விட்டபடியாலும்‌ நீரே வீர்யத்தால்‌ என்னைக்‌ கொண்டு வந்த படியாலும்‌ நீராவது என்னை விவாகம்‌ செய்து கொள்ள வேண்டும்‌; இல்லையேல்‌ தவம்‌ செய்தாவது உமது உயிரை மாய்க்கும்‌ உபா யத்தைக்‌ கைக் கொள்வேன்‌”” என்று சபதம்‌ பண்ணின விடத்‌திலும்‌ உயிரையும்‌ மதியாது தாம்‌ முன்‌ பண்ணிய சபதத்‌தின்படி ப்ரும்ஹசர்யத்தைப்‌ பேணிப்‌ போந்த மஹாநுபாவருமாவர்‌ அவர்‌. இப்படி அவ்விருவரிடமும்‌ காணப்பட்ட வைராக்யம்‌, இக்‌ கலிகாலத்திலும்‌ விரக்தர்களில்‌ தலைவரான இவரிடம்‌ காணப்படுவதால்‌ மிகவும்‌ ப்ரகாசிக்கிறது என்‌றார்‌. காம க்ரோதாதி தோஷமே நிறைந்த இக்‌ கலியிலும்‌ ஒருவரிட.ம்‌ அந்த வைராக்ய மிருந்ததால்‌ அது அபிவருத்‌தியை யடைந்து ப்ரகாசிக்கின்றது எனக்‌ கூறப்பட்டது.அத்தகைய வைராக்யம்‌ பூண்ட ராமாநுஐ முநிவரை அடிக்கடி காணக்கடவோம்‌; கண்டு களிப்பெய்தக்‌ கடவோம்‌ -என ப்ரார்த்தக்கிறார்‌. இக்காலத்தில்‌ அத்தகைய வைராக்யம்‌ வாய்ந்தவரை தர்சிப்பதும்‌, அதிலும்‌ அடிக்கடி தர்சிப்பதும்‌ கிடைக்கக் கூடியன வல்லவாகையால்‌ அதைப் ப்ரார்த்திக்கிறார்‌ மஹார்யர்‌.

—————

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது வைராக்‌யத்தின்‌ பெருமை கூறப் பெற்றது. இதில்‌ சிறந்த பண்டிதர்‌களாலும்‌ மெச்சப்படும்‌ இவரது கிரந்த வ்யாக்யான சக்தியும்‌ மிகவும்‌ தூய்மையான ஆசாரமும்‌ கூறப்படுகின்‌றன.

வ்யாக்யா யஸ்ய விதக்த ஸூரிபரிஷச் சித்த அபஹார க்ஷமா
யத்‌ தைநந்தின ஸத்க்ரியா யதிவராதி ஆசார ஸந் மாத்ருகா
தம்‌ ராமாநுஜயோ வர்யம்‌ அமலம்‌ ஞாநாதி பூர்ண ஆஸ்ரயம்‌
வந்தே ஸெளம்ய வரேச யோகி சரண த்வந்த அரவிந்த ஆஸ்ரயம்‌ -9-

பதவுரை:–
யஸ்ய – எந்த ராமாநுஜ முனிவருடைய,
வ்யாக்யா – உபய வேதாந்த கிரந்தங்களுக்கும்‌ மந்த்ர மந்த்‌ரார்த்தங்களுக்கும்‌ கூறப்படும்‌ தெளிவுரை வ்யாக்யானம்‌,
விதக்த – மிகவும்‌ ஸமர்த்தர்களான,
ஸூரிபரிஷத்‌ – பண்டித கோஷ்டியின்‌,
சித்த – மனத்தை,
அபஹார – கவர்வதில்‌,
க்ஷமா – தகுதி வாய்ந்ததாக ஆகிறதோ,
யத்‌ – எவரது,
தைநந்தின – ப்ரதிதினம்‌ அநுஷ்டிக்கப்பட வேண்டிய,
ஸத்க்ரியா-சிறந்த அநுஷ்டாநங்கள்‌, யதிவராதி- எம்‌பெருமானார்‌ முதலானாருடைய,
ஆசார-அநுஷ்டானங்களை
ஸந் மாத்ருகா:- ஸ்லாக்யமான மூல ப்‌ரமாணமாகக்‌ கொண்‌டனவாக,
பவந்தி-ஆகின்‌றனவோ,
ஸெளம்ய வரேச யோகி – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
சரண த்வந்த – இரு திருவடிகளாகிற,
அரவிந்த – தாமரை மலரை,
ஆஸ்ரயம்‌ – தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவரும்‌,
அமலம்‌-தோஷங்களற்றவரும்‌,
ஞாநாதி -ஞாநம்‌ பக்தி முதலியவற்றால்‌,
பூர்ண – நிறைந்த,
(ஆசயம்‌)-மனத்தை யுடையவருமான,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜயோ வர்யம்‌ – ராமானுஜ முனிவரை,
வந்தே – நமஸ்கரிக்கின்றேன்‌.

ஸ்ரீ பாஷ்ய, ‘ பகவத் விஷய, மந்த்ரார்த்த ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு இம்‌ முனிவர்‌ அருளிச்‌ செய்யும்‌ தெளி பொருள்‌ விளக்கம்‌ (வ்யாகீயானம்‌) மிகவும்‌ பாண்டித்‌யம்‌ பெற்ற பண்டித ஸமூகங்களின்‌ மனத்தையும்‌ கொள்ளை கொள்ளும்‌ தன்மை வாய்ந்தது. இது இந்த கிரந்தகாரருக்‌கும்‌ மற்றும்‌ இவரைப் போன்ற மற்ற மஹா வித்வான்‌௧ளான அஷ்ட திக் கஜங்களுக்கும்‌ நேரே அநுபவ விஷயமாதலால்‌ இவ்வாறு கூறினார்‌.-இவரது ஆசரணைகள்‌,
யதிகட்கிறைவனான ஸ்ரீ ராமானுஜமுநி முதலிய பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களைத்‌ தமக்கு மூல ப்ரமாண(க்ரந்த) மாகக்‌ கொண்டவை யாகும்‌. மாத்ருகா என்பது முதலில்‌ ஒருவரால்‌ எழுதப்பட்ட (மூல பூதமான) முதலாவதான சுவடி; அதுவே பின்னர்‌ பல சுவடிகளாக வெளி வருவதற்குக்‌ காரணமா யிருப்பதால்‌ அது அவ்வாறு மாத்ருகா
எனக்‌ கூறப்படும்‌. அது போலவே முன்னர்‌ எம்பெருமானார்‌ முதலிய யதிகள்‌ அனுஷ்டித்த அநுஷ்டானங்களே இவரது ஸத் கர்மாநுஷ்டாகங்களுக்கு மூலங்களாகும்‌. எனவே இவர்‌
பெரியோர்களின்‌ அநுஷ்டானங்களில்‌ எள்ளளவும்‌ பிறழாதவர்‌. ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருப்பாத மலர்களையே தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவர்‌. எனவே தோஷங்களற்றவர்‌. ஞானம்‌, பக்தி, விரக்தி என்னும்‌ குணங்கள்‌ நிறைந்த மனதை யுடையவர்‌. இப்படிப்‌ பெருமை வாய்ந்த ப்ரஸித்தி பெற்ற ராமாநுஐ முநிவரை வணங்குகின்றேன்‌.

—————-

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ எல்லா க்ரந்தங்‌களுக்கும்‌ இவர்‌ அருளிச்‌ செய்யும்‌ பொருள்‌ விளக்கம்‌ பண்டிதர்களின்‌ மனதையும்‌ கவரும்‌ தன்மையது;-அநுஷ்டானமும்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களில்‌ நின்றும்‌ கொஞ்சமும்‌ நழுவாதது என்றார்‌. இதில்‌ இவரது தெளி பொருள்‌ விளக்கத்‌தால்‌ இவரது கோஷ்டியின்‌ பக்கத்திலிருந்து இதைக்‌ கேட்‌டுக்‌ கொண்டிருக்கும்‌ பக்ஷிகளும்‌, ** பர தத்வம்‌ ஸ்ரீமந் நாராயணனே ” என்று விளங்கச்‌ சொல்லும்‌ சக்தி வாய்ந்தனவாகின்றன என்று தாம்‌ ஆச்சர்யமுறுகிறார்‌.

யத்‌ கோஷ்டி ஸவித ஸ்திதா:சகுநா:ச தத்வம்‌ பரம்‌ ஸாஸ்வதம்
ஜ்யோதிர் வேத ரஹஸ்ய ஸார படிதம்‌ பரம்ஜ்யோதி: நாராயண: ஸ்ரீபதி:
கிம் சாந்யே சதுராநநாதி விபுதா:தத் சேஷபூதா:இதி
வ்யாகுர்வந்தி பரஸ்பரம்‌ யதிவரம் ராமாநுஜம்‌ தம்‌ பஜே –10-

பதவுரை:–
யத்‌ – எந்த ராமாநுஜ முனிவருடைய,
கோஷ்டி – காலக்ஷேப கோஷ்டியின்‌,
ஸவித – பக்கங்களிலே,
ஸ்திதா:- இருக்கின்ற,
சகுநா:ச -பக்ஷிகளும்‌,
பரம்ஜ்யோதி: – பரஞ்சோதியென்றும்‌,
பரம்‌ தத்வம்‌-பர தத்வமென்றும்‌,
வேத–வேத ரஹஸ்ய வேதங்களில்‌ ரஹஸ்யங்களான உ.பநிஷத்துக்களின்‌
ஸார – ஸாரமான நாராயணாநுவாகத்தில்‌,
படிதம்‌ -**நாராயண பர ப்ரஹ்ம’” என்றும்‌, ** நாராயண பரோஜ்‌யோதி என்றும்‌, : Bb. **தத்வம்‌ த்வம்‌ நாராயண பர:? என்றும்‌, *, ஸாஸ்வதம் சிவமச்யுதம்‌?” என்றும்‌ படிக்‌கப்பட்ட பொருள்‌,
ஸ்ரீபதி:- லக்ஷ்மீ வல்லபனான,
நாராயண:- நாராயணனே ஆவான்‌,
கிம் ச — மேலும்‌
சதுராநநாதி-பிரமன்‌ முதலிய,
விபுதா:- தேவர்கள்‌
தத் -அந்த நாராயணனுக்கு,
சேஷபூதா:- சரீரமாய்க் கொண்டுசேஷப் பட்டவர்கள்‌,
இதி – என்று,
பரஸ்பரம்‌ – ஒன்றுக்‌கொன்று, வ்யாகுர்வந்தி – வ்யாக்யானம்‌ செய்கின்றனவோ,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனியை,
பஜே – ஸேவிக்‌கிறேன்‌-

இந்த ராமாநுஜ முநிவர்‌ வைதிக வாக்யங்களில்‌
*ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்‌”, ஆத்மா வா இதமக்ர ஆஸீத்‌”, ““ப்ரம்ஹவா இதமக்ர ஆஸீத்‌” என்று ஸாதாரணங்களான “ஸத்‌, ஆத்ம, ப்ருஹ்ம’‘ சப்தங்களாலும்‌-விசேஷமான நாராயண சப்தத்தாலும்‌ ஜகத் காரண வஸ்துவைக் கூறிக்‌, “காரணந்து த்யேய:” என்று அதையே உபாஸ்ய தத்வம்‌ எனக்‌ கூறுவதால்‌, இவை வெவ்வேறு தத்வங்‌களா? அல்லது ஓன்றேயா? . என விசாரிக்கும் போது-வேதங்களின்‌ ஸாரங்களான உபநிஷத்துக்களிலும்‌ ஸாரமாகக்‌ கொள்ளப்படும்‌ நாராயணாநுவாகத்தில்‌ ** ஆத்ம, ப்ரஹ்ம, ஜ்யோதி’‘ முதலான சப்தங்களை நாராயண பதத்‌தோடு ஸமாந விபக்தி (வேற்றுமை) கமாய்‌ ** நாராயண பரம்‌
ப்ருஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:””
இத்யாதி வாக்யங்களால்‌ படிக்கப்பட்டிருப்பதால்‌ ஸாமாந்ய விசேஷ ந்யாயத்தாலே ஐகத்துக்‌குக் காரணமான பர தத்வம்‌ லக்ஷ்மீ பதியாகிய நாராயணனே;-மற்றய ப்ரும்ஹ ருத்ராதிகள்‌ பர தத்வமன்று; அவர்கள்‌ ஸ்ரீம்ந் நாராயணனிடமிருந்து உண்டானவர்கள்‌, அவனுக்கு
சரீரமாய்க்‌ கொண்டு சேஷ பூதர்கள்‌ என்று உபநிஷத்து வாக்கியங்களை விளங்கக்‌ கூறி பர தத்வ ஸ்தாபனம்‌ செய்வது:அவரது வழக்கமாகலால்‌, அவரது கோஷ்டியின்‌ பக்கங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்‌, ஞானத்திற்கு அடைவில்லாத பக்ஷி ஜாதிகளும்‌, அந்த வாக்கியங்களைச்‌ சொல்லி பர தத்வ’ஸ்தாபனம்‌ பண்ணா நின்‌றன” என்கிறார்‌. இதனால்‌ ஞானத்திற்கு இட்டுப்‌ பிறவாத பஷிகளும்‌ நன்கு அறிந்து
கொள்ளும்படி விஷயங்களைக்‌ கற்பிக்கும்‌ விஷயத்தில்‌ இவருக்குள்ள ஆற்றல்‌ நன்கு . வெளியிடப்பட்டது. இங்கு * பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி ” எனக்‌ கூறியதால்‌ அப் பஷிகளிலும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஞானத்தில்‌ குறைந்தவர்கள்‌ இல்லை;-ஆயினும்‌ ‘*போதயந்த: பரஸ்பரம்‌” என்ற’ கணக்கிலே’-“ஒன்றுக்கொன்று போதிக்கின்றன என்று கூறப்பட்டதாகும்‌.
ஸாமாந்ய விசேஷ நியாயமாவது *நிர் விசேஷம்‌ ந ஸாமாந்யம்‌ ‘” என்கிறபடியே ஒரு ஸாமான்ய பதத்தை விசேஷ போதக சப்தத்தைக்‌ கொண்டு விசேஷ விஷயமாக்கி இப்‌பொருள் கொள்வது. ** பசு நா யஜேத ”‘ என்று விதி வாக்‌யத்தில்‌ நாற்கால்‌ ஐந்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ கூறும்‌-பசு சப்தத்திற்கு **ச்சாகஸ்ய வபாயா:”” என்ற மந்த்ரத்தைக்‌ கொண்டு ௮ப் பசு என்பது **ஆடு” என நிர்த்தாரணம்‌ செய்வதாகும்‌.
இவ்வாறு ஞான ஹீநர்களையும்‌ ஞாந வான்களாக்கும்‌ ராமாநுஜ முனிவரை வணங்குகின்றேன்‌.

————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸமீபத்தில்‌ இருக்கும்‌ பக்ஷிகளுக்கும்‌ வ்யாக்யானம்‌ செய்யும்படி, சக்தியை விளைவிக்கும்‌ இவரது ஞானத்தின்‌ பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய உபந்யாஸ கோஷ்டியில்‌ ‘சேரவும்‌ வேண்டா; பக்கத்‌ திலிருக்கவும்‌ வேண்டா. இவரது கருணை அலை யெறியும்‌ கடைக்‌ கண்ணால்‌’கடாக்ஷிக்கப் பெற்றவர்களே அர்த்த பஞ்சக ஞானம்‌ பெற்றவருள்‌ சிறந்தவர்களாவர் என்ற அதிசயத்தைக்‌ கூறி, வானமாமலை எம்பெருமானுக்கு இவர்‌ செய்த ஸாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌
இவர்‌ அதிகம்‌ பெருமை வாய்ந்தவர்‌
என்று கூறுகிறார்-

யத்‌ காருண்ய ஸுதா தரங்க விலஸத்‌ நேத்ராஞ்சல ப்ரேக்ஷிதா:
யேகேசித்‌த இமே அர்த்த பஞ்சக விதாம்‌ முக்யாஸ் து ஸங்கீயாவதாம்‌
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய மஹிதை:கைங்கர்ய ஜாதை:த்ருவை:
பூயாந் ஆஸ்ரித கல்பக: விஜயதே ராமாநுஜ: அயம்‌ முநி
-11-

பதவுரை:–
யேகேசித்‌ – எந்தச்‌ சில மனிதர்கள்‌,
யத்‌ – எந்த முனிவரின்‌,
காருண்ய – கருணையாகிற,
ஸுதா – அம்ருதத்தின்‌,
தரங்க – அலைகளாலே,
விலஸத்‌ – விளங்குகின்ற,
நேத்ராஞ்சல – கண்ணின்‌ கடை யினாலே,
ப்ரேக்ஷிதா: – பார்க்கப் பட்டனரோ,
தே – அப்படி பாக்யம்‌ பெற்ற,
இமே- இம்‌ மனிதர்கள்‌,
அர்த்த பஞ்சக விதாம்‌-ஐந்து அர்த்தங்களையும்‌ நன்கறிந்த,
ஸங்கீயாவதாம்‌ -பண்டிதர்களுள்‌,
முக்யா: – தலை சிறந்தவர்கள்‌ ஆகிறார்கள்‌,
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய – ஸ்ரீ வான மா மலை எம்பெருமானுக்குச்‌ செய்தவையும்‌,
மஹிதை:-கொண்டாடத்தக்கவையும்‌,
த்ருவை:-ஸாஸ்வதங்களுமான,
கைங்கர்ய ஜாதை:-கைங்கர்‌யங்களின்‌ ஸமூகத்‌தினால்‌,
பூயாந் -சிறப்பு வாய்ந்தவரும்‌,
ஆஸ்ரிதகல்பக: – தன்னை ஆஸ்யரயித்தவருக்கு கல்பக வ்ருக்ஷம்‌
போல்‌ அபேக்ஷிதங்களைக்‌ கொடுக்குமவருமான,
அயம்‌-இந்த,.
ராமாநுஜ: – ராமானுஜன்‌ என்னும்‌,
முநி -முனிவர்‌,
விஜயதே – மற்றெல்லோரிலும்‌ சிறந்து விளங்குகின்றார்‌.

அர்த்த பஞ்சகமாவது:- (1) ஸ்வ ஸ்வரூபம்‌ எனப்படுவது, ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌, (2) பர ஸ்வரூபம்‌ எனப்படுவது, பரமாத்மாவின்‌ ஸ்வரூபம்‌, (3) புருஷார்த்த ஸ்வரூப மெனப்படுவது, முமுக்ஷுக்களின்‌ விருப்பத்திற்கு விஷயமான மோக் ஷஸ்வரூபம்‌, (4) உபாய ஸ்வரூபமெனப்‌படுவது, அம் மோஷத்தை அடைய சாஸ்த்ரங்களால்‌ ஸாதனமாகக்‌ கூறப்பட்டவை, (5) விரோதி ஸ்வரூபமெனப்படுவது ,மோக்ஷத்தைப்‌. பெற விரோதியாய்‌ இடைமறித்து நிற்‌கின்ற அவித்யை,ருசி வாஸநா ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்‌ முதலியனவாகும்‌. இவ் வர்த்த பஞ்சகத்தையே ஸகல வேத சாஸ்த்ர புராணங்களும்‌ கூறுகின்றன. இவ்வர்த்த பஞ்சக ஞானமின்றி உஜ்ஜீவனமில்லை. இத்தகைய அர்த்த பஞ்சக ஞாநமும்‌ வெகு கிலேசப்பட்டு சாஸ்த்ராப்யாஸங்களால்‌ ஸாதிக்கப்படவேண்டி யிருக்க, இந்த ராமாநுஜ முனிவருடைய கருணா பூர்ணமான கடாக்ஷ லேசத்தினாலே உண்டாகிறது. நிற்க- இவரது கருணா பூர்ணமான கடாக்ஷம்‌ தனக்கு விஷயமானவர்களை அர்த்த பஞ்சகங்களை நன்குணர்ந்த பண்டிதர்களுள்‌ ப்ரதாநர்களாகவும்‌ ஆக்குகிறது என்று இவருடைய பெருமை கூறப்பட்டது. (த இமே முக்யா:)இங்கு தாம்‌ நேரில்‌. கண்டறிந்ததுடன்‌ மற்றவருக்கும்‌
ப்ரத்யக்ஷிக்கலாம்‌ எனத்‌ தோற்றும்படி “*இமே”” எனக்‌ கூறுவதால்‌, இதில்‌ அர்த்தவாதமில்லை என்கிறார்‌. மேலும்‌ இந்த ஸ்வாமி ஸ்ரீ வானமாமலை எம்பெருமானுக்குச்‌ செய்‌துள்ள பல ஸாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌ போற்றத்‌ தக்கவர்‌. தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு கல்பக விருக்ஷம்‌ போல்‌ அபேக்ஷிதங்களை அளிக்கவல்ல பெரியவர்‌. எனவே இந்த வானமாமலை ராமாநுஐ முனிவர்‌ மற்றையோர்களில்‌
சிறப்புடையராய்‌ விளங்குகின்றார்‌.

—————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரின்‌ கடாக்ஷம்‌ முக்தி ஸாதநமான அர்த்தபஞ்சக ஞானத்தை எல்லோருக்கும்‌ அளிக்க வல்லதென்று பொதுவாகக்‌ கூறியவர்‌, இதில்‌ மிகவும்‌ தண்ணியனாய்‌, அஹங்கார மமகாரங்கள்‌ நிறைந்தவனான என்னை. உஜ்ஜீவிப்பிக்க முயற்சிக்கும்‌ பெரியோரிடித்திலும்‌ விமுகனாய்த்‌ திரிகன்ற மேட்டு மடையான என்னிடமும்‌ இக்‌ கருணை பாலிபாயா நின்றது என்கிறார்‌.-

அஸ்தி ஸ்நாயு வஸா ௮ஸ்ர மாம்ஸ நிசிதே அநித்யே விகாராஸ்பதே அநஹமி
தேஹே அஸ்மிந் நஹம் யஹம்மதிகரே சப்தாதி ஸேவாப்ரே
ஸ்ரீமத்‌ வைஷ்ணவ மத்பர ஆர்ய விமுகே மயி அபி அகார்ஷீத்‌ தயாம்‌
யஸ்தம் வ்யோம மஹாகிரே:பரிபணம்‌ ராமாநுஜம்‌ தம்‌ பஜே
–12-

பதவுரை:–
அஸ்தி – எலும்பு என்ன,
ஸ்நாயு – சிறு நரம்புகள்‌ என்ன,
வஸா-வபை என்ன,
௮ஸ்ர-ரக்தமென்ன
மாம்ஸ – மாம்ஸமென்ன,
நிசிதே – இவைகள்‌ செறிந்ததும்‌,
அநித்யே – அநித்யமானதும்‌, விகாராஸ்பதே – பால்யம்‌ யவ்வனம்‌,பருப்பது,இளைப்பது முதலிய வேறுபாடுகளுக்கு உறைவிடமாயும்‌, அநஹமி – உண்மையில்‌ அஹம்‌ என்னும்‌
பதத்திற்கு அர்த்தமல்லாததுமான,
தேஹே – சரீரத்திலே,
அஹம்மதிகரே – நானென்று அஹம் புத்தியைப்‌ பண்ணுமவனும்‌, (ஆதலால்‌) சப்தாதி ஸேவாப்ரே-சப்தாதி விஷயங்‌களில்‌ ப்ராவண்யத்தால்‌ அவைகளை அனுபவித்துப்‌ போருமவனும்‌, (ஸ்ரீமத்‌ விமுகே) ஸ்ரீமத்‌ வைஷ்ணவ – பரம ஸாத்‌விகர்களாய்‌ பகவத்‌ ஸம்பந்தத்திலே மூட்டும்‌ அடியார்களிடத்திலும்‌,
மத்பர – ஆர்ய – என்னை உஜ்ஜீவிப்ப திலேயே நோக்குள்ள ஆசார்யர்களிடத்திலும்‌,
விமுகே – வைமுக்‌யத்தை யுடையனான,
மயி அபி- என்னிடத்திலும்‌,
ய:-எந்த முனிவர்‌,
தயாம்‌-தயையை,
அகார்ஷீத்‌ – செய்தாரோ”
வ்யோமமஹாகிரே: – வானமாமலை அப்பனுக்கு,
பரிபணம்‌-மூலத்ரவ்யம்‌,
முதல்‌- போன்ற,
தம்‌ ராமாநுஜம்‌ – அந்த ராமாநுஜ முனிவரை,
பஜே – ஸேவிக்கின்றேன்‌.

இந்த ஸ்லோகத்தின்‌ மூன்று பாதங்களாலும்‌ தமது தண்மையைக்‌ கூறி, நான்காவதால்‌. தம்மிடமும்‌ இம்‌முனிவரது கருணை ஏறிப்‌ பாய்ந்தது என்கிறார்‌. அதாவது நான்‌ எலும்பும்‌ சிறிய நரம்புகளும்‌ வபையும்‌ ரத்தமும்‌ மாம்ஸமுமாய்ச்‌ செறிந்தும்‌, அநித்யமாயும்‌, அடிக்கடி பருப்பது இளைப்பது முதலிய வேறுபாட்டுக்கு உறைவிடமாயும்‌, அஹம்‌ என்ற பதத்திற்கு அர்த்தமான ஆத்மா வல்லாததுமான சரீரத்தில்‌ ஆத்ம புத்தியைப்‌ பண்ணும்‌
ப்ரமத்தை யுடையவன்‌. நிற்க- இத்தகைய ப்ராந்த்தியால்‌ இந்த்ரியங்களுக்கு எப்பொழுதும்‌ இரை யிட்டுக்கொண்டு ஹேயமான சப்தாதி விஷயங்களைக்‌ கொண்டே பொழுது போக்குமவன்‌. ஸ்ரீ. வைஷ்ணவ ஸம்பத்து நித்யமாய்ச்‌ செல்‌லும் பரமபாகவதர்களைக் கண்டால்‌ முகத்தை மாற வைத்துச்‌ செல்‌லுமவன்‌. அதிகம்‌ சொல்லி என்‌? என்னை அங்கீ கரித்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று ப்ரயத்நம்‌ செய்யும்‌ ஆசார்‌யர்களைக்‌ காணிலும்‌ அவர்களைக்‌ கண்ணெடுத்தும்‌ ஸேவிக்‌கப்‌ பெறாத பாக்ய ஹீநனான தண்ணியன்‌. இப்படிப்பட்ட என்னிடத்தும்‌ இவர்‌ தயையைச்‌ செய்து என்னைத்‌ திருத்தி
ஆட்கொண்டவர்‌. இவரை வானமாமலை எம்பெருமானது மூலதனம்‌ (முதல்‌) எனக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌ ? மூல தனம்‌ உடையவன்‌ அந்த தநத்தைக்‌ கொண்டு தொழில்‌ வியாபாரம்‌ முதலியவற்றைச்‌ செய்து தனத்தைப்‌ பெருக்கிக்‌ கொள்ளுவது வழக்கமல்லவா? அதுபோலவே எம்பெருமானும்‌ இவரை அவதரிப்பித்து அம்முனிவராகிற மூல
தனத்தைக்‌ கொண்டு அநேக ஜீவாத்மாக்களை நல்வழிப்‌படுத்தி அவர்களைப்‌ பெறுகிறானாகையால்‌, அவ்வீசனது(பரிபணம்‌) ‘* மூலதனம்‌ ‘*, இம்‌ முனி வரர்‌ என்று கூறக்‌ குறையில்லை. இப்படிக்‌ கூறியதால்‌ **சேதந லாபம்‌ ஈஸ்வரனுக்கு” எனப்படும்‌ ஸார தமமான ஸம்ப்ரதாயார்த்தம்‌வெளியிடப் பட்டதாகும்‌. இப்படி ஈஸ்வரனுடைய லாபத்திற்‌கும்‌ காரணமான இம்‌ முனிவரை ஸேவிக்கின்றேன்‌.

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கருணை தம்மிடமும்‌ ஏறிப்‌ பாய்ந்தது எனக்‌ கூறினார்‌.-இதில்‌ இம்முனிவரிடம்‌ காணப்படும்‌ சிறந்த கல்வி, விரக்தி,மற்றுமுள்ள ஸெளலப்ய ஸெளசில்யாதிகள்‌, பெரியோர்‌ வகுத்த வழியைப்‌ பேணிக்‌ காக்கும்‌ தன்மை, பகவத்‌ விஷயத்‌திலுள்ள ப்ராவண்யம்‌, இவைகளை விரித்துக்‌ கூறுகிறார்

வித்யாகேலிக்குஹம்‌ விரக்தி லதிகா விஸ்ராந்தி கல்பத்ருமம்‌
ப்ரோந்மீலத்‌ குண திவ்ய ரத்ன படலீ நிக்ஷேப மஞ்ஜுஷிகாம்‌
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய பதவீ ரக்ஷைக தீக்ஷா குரும்‌
ஸ்ரீமத் வ்யோம மஹாசலே ச நிரதம்‌ ராமாநுஜார்யம்‌ ஸ்ரயே
-13

பதவுரை:–
வித்யாகேலிக்குஹம்‌, வித்யைகளுக்கு (சாஸ்‌திரங்களுக்கு ) விளையாடு மிடமானவரும்‌,
விரக்தி-வைராக்யமாகிற,
லதிகா-கொடிக்கு,
விஸ்ராந்தி – விஸ்ராந்தியைக்‌ கொடுக்கும்‌,
கல்பத்ருமம்‌ – கல்பக வ்ருக்ஷமானவரும்‌,
ப்ரோந்மீலத்‌ – ந ன்றாக – ப்ரகாசிக்கிற, குண – கல்யாண குணங்களாகிற,
திவ்ய ரத்ன – ஸ்லாக்யமான ரத்நங்களுடைய,
படலீ – ஸமூஹத்திற்கு,
நிக்ஷேப மஞ்ஜுஷிகாம்‌-வைத்துக்‌
காப்பாற்றும்‌ பெட்டியாயும்‌,
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய – ஸ்ரீராமாநுஜ முனிவரது,
பதவீ – மார்க்கமாகிற விசிஷ்டாத்வைத ஸித்தாந்த மார்க்‌கத்தை,
ரக்ஷைக தீக்ஷா – ரக்ஷிப்பதாகிற முக்ய தீக்ஷையில்‌,
குரும்‌ – ஆசார்யனாயும்‌,
ஸ்ரீமத் வான மஹாசலேச – லக்ஷ்மீ வல்லபனான வான மா மலை எம்பெருமானிடத்து,
நிரதம்‌ – மிகுந்த அன்பு பூண்டவருமான, ராமாநுஜார்யம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ ஆசார்யனை,
ஸ்ரயே -ஆஸ்ரயிக்கின்றேன்‌.

தன்னைப்‌ பேணி ஆதரித்த முனிவரின்‌ ப்ரபாவத்தைச்‌ சுருங்கக்‌ கூறுகின்றார்‌ இதில்‌. இந்த ராமாநுஜமுனிவர்‌ *வித்யாஹ்யேதா: சதுர்தச” என்ற பதினான்கு வித்யைகளையும்‌ கரை கண்டவராகையாலே, அவைகள்‌ இவரிடம்‌ களிநடம்‌ புரிகின்றன என்கிறார்‌. இவர்‌ அவைகளுக்கு ரங்கஸ்தலம்‌ (நடனமாடுமிடம்‌) போலும்‌, மிகுந்தவைராக்ய முடையவராதலால்‌ கொடி. மரத்தை மூடப்‌ படர்வது போல்‌ இவரது வைராக்யமென்னும்‌ கொடி தன்னிஷ்டப்படி மூடப்‌ படர்ந்து விஸ்ராந்தியைப்‌ பெற்று இளைப்பாறும்‌ கற்பக வருக்ஷம்‌ போன்றவர்‌ இவர்‌. மேலும்‌ ஆத்ம குணங்களாகிற இந்த ரத்நக்‌ குவியலை வைத்துப்‌ பூட்டிக்‌ காப்பாற்றும்‌ பேழை போன்றவர்‌. இத்தால்‌ இவர்‌ எண்ணிறந்த குணங்களுக்கு உறைவிடமென்பது கூறப்‌பட்டது. எம்பெருமானாராலே ஸ்தாபிக்கப்பட்ட விசிஷ்‌டாத்வைத ஸித்தாந்தத்தை ரக்ஷிக்கையாகிற முக்ய தீக்ஷையில்‌ ஆசார்யனாய்‌ வழிகாட்டுமவர்‌ இவர்‌. இப்படி இந்த தர்சனத்திற்கு வழிகாட்டியா யிருப்பது மாத்திரமன்றி
அவ்வழியே ஒழுகி எப்பொழுதும்‌ வானமாமலை தெய்வ நாயகனிடம்‌ நிரதிசய ப்ரீதி ரூபாபந்நமான பக்தி பூண்டவருமாவர்‌. இத்தகைய குணக்‌ கடலான ராமாநுஜ முனிவரெனப்படும்‌ எனது ஆசார்யனை ஸேவிக்கின்றேன்‌.

————–

அவதாரிகை :–
வாந மஹாத்திரி ராமாநுஜ யோகி மங்களாசாஸமென்னும்‌ ப்ரபந்தத்தின்‌ கடைசியான இந்த ஸ்லோகத்தில்‌ வாநாசல ராமாநுஜ முனிவரின்‌ பெருமைகள்‌
கீழ்க்‌ கூறியவை எல்லாம்‌ திரட்டிக்‌ கூறப்படுகின்‌றன-

காந்தோ பயந்த்ரு முநி வர்ய தயா நிவாஸம்‌ வைராக்யமுக்ய மஹநீய குண ௮ம்புராசிம்‌
ஸ்ரீதேவராயக பத ப்ரணய ப்ரவீணம்‌ ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி நித்யம்‌-14-

பதவுரை:–
காந்தோ பயந்த்ரு முநி வர்ய – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
தயா-கருணைக்கு,
நிவாஸம்‌ – உறைவிடமாயும்‌,
வைராக்யமுக்ய- வைராக்யம்‌ முதலிய,
மஹநீய-கொண்டாடத்‌ தகுந்த,
குண – குணங்கட்கு,
௮ம்புராசிம்‌ – கடலாயும்‌,
ஸ்ரீதேவராயக – வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகனுடைய,
பத – திருவடிகளில்‌,
ப்ரணய – ப்ரீதி செய்யும்‌ விஷயத்தில்‌,
ப்ரவீணம்‌ – சிறந்தவரும்‌,
யதிபதிம்‌ – யதித் தலைவருமாகிய, ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனிவரை, .
நித்யம்‌- எப்‌பொழுதும்‌,
ப்ரணமாமி – நன்கு வணங்குகின்றேன்‌. ‘

இந்த ஸ்லோகத்தின்‌ முதல்‌ பாதத்தால்‌ ஸ்ரீமத்‌ வரவரமுநிகளின்‌ கருணைக்கு வாஸஸ்தான மென்று இவரது பெருமையை யறிவித்தார்‌. அவ்வாசார்யனுடைய கடாக்ஷத்‌தால்‌ இவர்‌ வைராக்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ ஒருங்குகேரும்‌ குணக்கடலாயினர்‌ என்றார்‌; இரண்டாம்‌ பாதத்‌தால்‌. ‘ கடலாக ரூபித்ததால்‌ வைராக்யாதி குணங்கள்‌ ஒரு.நாளும்‌ இவரிடம்‌ குறைந்து காட்டியதில்லை என்பது தேறும்‌…-மூன்றாமடியால்‌ இவ்வாத்ம குணங்களடியாக உண்டாகும்‌
ஸர்வேஸ்வரன்‌ விஷயமான இவரது நிரதிசய ப்ரீதியை நிரூபித்தார்‌. நான்காமடியால்‌ கீழ்க்‌ கூறியபடி மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌ அதடியாக உண்டாகிய வைராக்‌யாதி குணங்களை யுடையராய்‌, அதடியாக உண்டாகிய பகவத்‌ ப்ரேமத்தை யுடையராகையாலே யதிகட்கிறைவரானார்‌ என்று இவரது ப்ரபாவங்களைப்‌ பணித்து, இத்தகைய பெருமை வாய்ந்த வானமஹாத்ரி யோகியாகிய ராமானுஜ.முனியை ப்ரதி தினம்‌ வணங்குகின்றேன்‌ எனக்‌ கூறி மங்களாசாஸநத்தை முடிக்கிறார்‌. இங்கு **ப்ரணமாமி’” என்ற வர்த்தமானத்தால்‌ தமது அதிகார மாந்த்யத்தைப்‌ பார்த்துத்‌ தான்‌ கலங்கிய போதெல்லாம்‌ ஆசார்யன்‌ திருவடிகளை இவர்‌:வணங்குகின்றார்‌ என்று தேறுகிறது. “ப்ர’? என்ற உபஸர்க்‌கத்தால்‌ வணக்கத்தில்‌ மநோ வாக் காயம்‌ என்ற கரணங்களின்‌பூர்த்தி கூறப்பட்டது. நித்யம்‌ என்பது ப்ரதி தினமும்‌ என்பதாகும்‌. இதில்‌ *’ஸ்வஸ்தி- பத்ரம்‌-மங்‌களம் என்பவை போன்ற பதங்கள்‌ காணப்படவில்லையே யென்று சிலர்‌ ஐயமுறலாம்‌.-எனினும்‌ “*நம:- ஜிதம்தே,தோற்றோம்‌, போற்‌றி, பல்லாண்டு ” என்னும்‌ இவை -பர்‌யாயம்‌ என்ற பெரியவாச்சான்‌ பிள்ளை ஸ்ரீஸூக்தியை நன்கு உற்று அநுஸந்திக்குமவர்கள்‌ இந்த நூல்‌ மங்களாசாஸந ரூபந்தான்‌ என்று எளிதில்‌ உணரலாகும்‌. இக் கிரந்தத்திலும்‌இம்‌ முனிவரது குணங்கட்கு தோற்று, வந்தே, நமோஸ்து,நவ்மி, விஜயதே என்ற ஸ்வரூப வாசியான பதங்களை
மஹார்யர்‌ ப்ரயோகித்திருப்பதும்‌ காணத் தக்கது.

——————-

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி

முதல் 11 ஸ்லோகங்களில் சரண் அடைந்து
அடுத்து 3 ஸ்லோகங்கள் இவரே சரண் அடையத்தக்கவர்

அவதாரிகை:–
ஸ்ரீமத்‌ வானமாமலை ராமாநுஐ முனிவரின்‌ அஷ்ட திக் கஜங்களில்‌ ஒருவராகிய தொட்டையங்கார்‌’அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌, தமது ஆசார்யராகிய ராமாநுஜ முனிவரது கல்யாண குணங்களிலும்‌ விக்ரஹ ஸெளந்தர்‌யத்திலும்‌ ஆழ்ந்தார்‌. அவர்‌ பூர்வாஸ்ரமத்தில்‌ அழகிய வரதரிறே; எனவே முந்துற மங்களாசாஸநத்‌தில்‌ இழிந்தார்‌..
தற்பொழுது தாம்‌ ஸ்வாமியின்‌ கடாக்ஷ விஷயீகாரத்தைப்‌ பெற அவர்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌, இப்ரபந்தத்தில்‌,

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–1-

பதவுரை :–
‘ ஸத்ய: – அப்‌பொழுதே,
ப்ரபுத்த- நன்றாக மலர்ந்த,
ஸரஸீருஹ – தாமரைப்பூவோடு,
துல்ய – ஒப்பான,
சோபெள – காந்தியையுடையதுகளும்‌, ஸம்பச்யதாம்‌ – நன்றாய்‌ ஸேவிப்பவர்களுடைய,
நயநயோ: – கண்களுக்கு,
முதம்‌-சந்தோஷத்தை,
ஆததாகெள -உண்டு பண்ணுமவைகளாயும்‌,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
ஸாகர-ஸமுத்ரத்திலிருந்து,
ஸமுத்தரண – கரையேற்றுவதில்‌,
ப்ரவீணெள-மிக சாமர்த்யம்‌ வாய்ந்தவைகளுமான,
வாநாத்ரியோகி சரணெள -வானமாமலை ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வாநாத்ரி ராமாநுஐ முனிவரின்‌ திருவடிகளைப்‌ பற்றும்‌ மஹார்யர்‌ அதன்‌ பெருமைகளை விளக்குகிறார்‌ மூன்று பாதங்களாலே. முதல்‌ பாதத்தில்‌ அப்‌பொழுதே முழுதும்‌ அலர்ந்த செவ்வித்‌ தாமரை மலர்களோடொத்த சோபையை உடையன அத்திருவடிகள்‌ என்கிறார்‌-
இதனால்‌ ம்ருதுத்‌ தன்மை, ஸூகந்தம்‌, குளிர்த்தி இவைகளையுடையது அத்திருவடிகள்‌ என்று அதன்‌ போக்யதை உணர்த்தப்பட்டது. இரண்டாம்‌ பாதத்தில்‌ அத்‌திருவடி௧ளை நன்கு ஸேவிக்குமவர்களின்‌ கண்களுக்குக்‌ களிப்பூட்டுமவை அவை யென்கிறார்‌. இதனால்‌ அவற்றின்‌ அழகு கூறப்‌ பட்டதாகும்‌. மூன்றாவது பாதத்தில்‌ அவை ஸம்ஸாரமென்‌னும்‌ ஸமுத்ரத்தில்‌ ஆழ்ந்து கடக்கும்‌ ஸம்ஸாரிகளை அவற்‌றில்‌ நின்றும்‌ கரையேற்றுவதில்‌ மிகுந்த ஸாமர்த்ய்ம்‌ பெற்‌றவை என்கிறார் . இத்தால்‌ மென்மை, குளிர்த்தி, நாற்றம்‌,
அழகு போன்‌ற குணங்களை யுடையனவாய்‌ இம்மையில்‌ போக்யதையால்‌ களிப்பூட்டுவது மாத்திரமின்றி மறுமையிலும் மோக்ஷத்தையும்‌ அளிக்கும்‌ பெருமை வாய்ந்தவைஅவை யெனக்‌ கூறி, அவைகளைத்‌ தமக்கு உபாயமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌. இங்குக்‌ கூறப்பட்ட பற்றுதல்‌ யாயினும்‌ அமையும்‌ கார்ய கரமா கைக்கு.

——–

அவதாரிகை:–
முன்‌ ஸ்லோகத்தில்‌ ராமாநுஜ:முனிவரது ஸம்ஸார உத்தாரகத்வம்‌ கூறப்பட்டது. இந்த ஸ்லோகத்தில்‌ அதற்குக்‌ காரணமாகிய காம குரோதாதி: துஷ்ட குணங்களில்லாமை, நற்குணங்களுக்கு உறைவிடமாயிருத்தல்‌ முதலிய பெருமையையும்‌, ஸ்ரீ மணவாள மாமுனிவரின்‌ இன்னருளால்‌ அப்பெருமையை இவர்‌ பெற்றமையையும்‌ கூறி, இத்தகைய ப்ரபாவம்‌ வாய்ந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகள்‌, தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கல்பக வ்ருஷம்‌ போன்றவை எனக்‌ கூறி அவைகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வாநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே–2-

பதவுரை:–
காந்தோ பயந்தரு முநிவர்ய – அழகிய மணவாள மாமுனிவரின்‌,
தயா – கருணையினால்‌,
ஆத்த- பெறப்‌ பட்ட
பூம் ந – பெருமையை யுடையவரும்‌, காமாதி- காமம்‌ க்ரோதம்‌ முதலியவற்றை, நிக்ரஹகரஸ்ய- அடக்குமவரும்‌, குணாம்புராசே: – நற்குணங்களுக்‌குக்‌ கடல் போன்றவருமான,
வநாத்ரி லக்ஷ்மண முநே : – வானமாமலை ராமாநுஜ முனிவரது
நதலோக–தன்னை வணங்கிய ஜனங்களுக்கு,
கல்பவ்ருஷாயமாண் -கற்பக வ்ருக்ஷம் போல்‌ ஆசரிக்கின்‌ற,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்‌.

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதலடியில்‌ -இம்முனிவர்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌ அதனால்‌ பெற்ற அதிசயத்தை உடையவர்‌ என்றார்‌. இரண்‌டாமடியில்‌ காமம்‌, குரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌,மாத்ஸர்யம்‌ என்று கூறப்படும்‌ ஸஹஜ சத்ருக்களையும்‌
அடக்குமவரென்றும்‌, நற்குணங்கள்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌ எனவும்‌ கூறினார்‌. இங்கு காமாதிகள்‌ சாரா வண்ணம்‌ துறத்துமவர்‌ என பொதுவாசுக்‌ கூறியதனால்‌ -தம்மை ஆஸ்ரயித்த பிறருடைய காமாதிகளையும்‌ துறத்தும்‌ ஆற்றல்‌ வாய்ந்தவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌. நற்குணங்‌களுக்குக்‌ கடலென்றதனால்‌ ஒருநாளும்‌ வற்றாத நற்குண ஸம்பந்நர்‌ இவர்‌ என்றதாயிற்று. இனி ஸ்லோகத்தின்‌ பிற்‌பகுதியால்‌ இப்படிப்‌ பெருமை வாய்க்த வாநாசல ராமாநுஜ முனிவரது, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கற்பக வ்ருக்ஷம்‌
போன்றதான திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌. இதில்‌ **நதலோக”’ **தம்மை வணங்கிய ஜனங்களுக்கு”’ எனப்‌ பொதுவாகக்‌ கூறியதால்‌ தம்மை வணங்கியவரின்‌ பெருமை சிறுமைகளைப்‌ பார்த்துக்‌ கொடுக்கும்‌ புன்மை திருவடிகளுக்கில்‌லாமை கூறப்பட்டதாகும்‌. கற்பக வ்ருஷமென அவைகளைக்‌ கூறியதால்‌ நினைத்த மாத்திரத்திலே இம்மை மறுமைப்‌ பயன்களை அர்த்தித்தார்‌ அர்த்தித்தபடியே கொடுக்கும்‌ பெருமையும்‌ கூறப்பட்ட தாகும்‌.

—————–

அவதாரிகை:–
இம்முனிவர்‌ மாமுனிகளின்‌ கருணைக்‌குப்‌ பாத்திரமாய்‌, அதனால்‌ இவர்‌ பெற்ற மிகச்‌ சிறந்த வைராக்ய குணத்தை விரித்துக்‌ கூறுகிறார்‌ இந்த ஸ்லோகத்தில்‌.

தாராத்மஜாதி ஜநிதம் ஸூகமை ஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–3–

பதவுரை:–
தாராத்மஜாதி -பெண்‌டிர்‌ மக்கள்‌ முதலியோரால்‌,
ஐநிதம்‌-உண்டு பண்ணப் பெற்றதும்‌; ஐஹிகம்‌ – இம்மையில்‌ அநுபவிக்க வேண்டுமதான,
ஸுகம்‌ – சுகத்தை,
ய:-எந்த ராமாநுஜ முனிவர்‌
காராக்ருஹ – சிறைக்‌ கூடத்தில்‌,
ப்ரபவ – உண்‌டாகிய,
து:கஸமம்‌-துக்கத்தோடு ஓத்ததாக,
விசார்ய-நிர்ணயம்‌ செய்து,
ஸெளம்யோ பயந்த்ரு முநி -அழகிய மணவாள முனிவரின்‌,
பாதயுகம்‌-திருப் பா தங்களையும்‌,
ஸ்ரித: – ஆஸ்ரயித்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வாநாசல ராமாநுஐ முனிவரது திருவடி.களை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

இவ்வுலகில்‌ மற்றையோர்‌ ஸுகங்களென ப்ரமித்துக்‌ களிக்கும்‌, மனைவி மக்கள்‌ முதலியோரால்‌ உண்டாகக் கூடிய ஸுகங்கள்‌ சிறைக் கூடத்திலனுபவிக்கும்‌
துன்பத்தோ டொப்பானவை ** என இம் முனிவர்‌ தீர்மானித்து, மா முனிகளின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புக்கார்‌ என்கிறார்‌. அது எவ்வாறு எனில்‌ ? சிறைக்‌கூடமென்பது
ஓருவன்‌ செய்த தீச் செயலுக்குத்‌ தக்கவாறு அரசனால்‌ சிக்ஷை விதிக்கப் பெற்று அடைத்து வைத்திருக்கு மிடமாகும்‌. அது போலவே ஸம்ஸாரமமும்‌ சிறைக்கூடமே யென்‌னத்‌ தட்டில்லை. எப்படி எனில்‌ அவ்வவ ஜீவன்‌ முன் பிறவிகளில்‌ செய்த கன்ம பலங்களை யநுபவிக்க வேண்டியே ஈஸ்வரனால் ஸம்ஸாரத்தில்‌ பிறக்கும்படி. செய்யப்படுவதால்‌ அதுவும்‌ சிறைக்கூடமே. ஸம்ஸாரத்திலும்‌ சிலர்‌ நெடுநாள்‌ சுகவான்களாயும்‌ ஆரோக்யாதிகளை யுடையராயும்‌ ஸ்வதந்தரர்களாயும்‌ காணப்படவில்லையா ? எனவே எவ்வாறு இது சிறையாகுமெனில்‌, நன்கு ஆராய்ந்தால்‌ அதன்‌ உண்மை புலனாகும்‌. நாம்‌ ஸம்ஸாரத்தில்‌ சிறிது சுகம்‌ பெற்றாலும்‌ அது அற்பமும்‌ அஸ்திரமுமாகையாலும்‌, அதுவே மேலும்‌ பல பிறகளாகிய சிறைகளுக்குக்‌ காரணமாவதாலும்‌, அது மேலெழப்‌ பார்ப்பவர்களுக்கு ஸுகமாகத்‌ தோன்றினாலும்‌ உண்மையில்‌ துக்கமேயாகும்‌. எனவே தான்‌ நிரூபணத்தில்‌ இழிந்த ஆழ்வார்கள்‌ “*பெண்டிரால்‌ சுகங்களுய்ப்பான்‌ பெரியதோரி டும்பை பூண்டு” என்றும்‌, * ஒரு நாயகமாய்‌ ஒட உலகுடனாண்டவர்‌…பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ ‘” என்றும்‌ ஸம்ஸார ஸுகம்‌ துக்கமென்‌பதையும்‌, ஐஸ்வர்யம்‌ ௮ஸ்‌ திரமாகையால்‌ துக்காஸ்பதமென்‌பதையும்‌ கூறியுள்ளனர்‌. சிறைக்கூடத்திலும்‌ அரசன்‌ உதாரனாயிருந்தால்‌ சிறிது ஸுகமெய்தலா மல்லவா? அது போலவே தான்‌ ஸம்ஸார ஸுகமும்‌ என்னத்‌ தட்டில்லை.-இப்படித்‌ தீர்மானித்த இம் முனிவர்‌ செய்தது என்‌ என்னில்‌?’ஸாஸ்வதமான சுகத்தைப்‌ பெற அழகிய மணவாள முனிவரின்‌ திருவடியைச்‌ சரணமாகப்‌ பற்றினார்‌. அது போலவே யானும்‌ மாமுனியைச் சரணம்‌ புக்க, இம் முனிவரது திருவடிகளிலே:எனது தலையை மடுக்கிறேன்‌ என்‌கிறார்‌.

——–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தில்‌ இவருக்கு உண்டாகிய விரக்தி கூறப்பட்டதல்லவா ? இந்த ஸ்லோகத்தில்‌ அந்த விரக்தி என்னும்‌ குணமானது கிளைத்‌துத்‌ தழைத்துப்‌ படர்ந்ததும்‌,இம் முனிவரிடமே எனக்‌ கூறப்‌படுகிறது.

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–4–

பதவுரை :–
ஆதெள – முதலிலே,
ஹநூமதி – ஆஞ்ச நேயரிடத்தல்‌,
ப்ரஸுூதா – உண்டானதும்‌,
பச்சாத்‌ -பிறகு,
குருப்ரவரம்‌ – குரு வம்சத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரான பிஷ்மரை ,
ஏத்ய- அடைந்து,
விவ்ருத்திம்‌ – மிகுந்த வ்ருத்தியை ,
அப்தா – ௮டைந்ததுமான,
விரக்தி லதா -விரக்தி யென்னும் கொடியானது,
யம்‌-எந்த ராமாநுஜ முனிவரை,
உபேத்ய – கட்டியடைந்து,
சாகாஸஹஸ்ர – ஆயிரக்கணக்கான அநேகம்‌ கிளைகளால் மனதைக்‌ கவர்வதாக இருக்கிறதோ,
தாத்ருக்‌ – அப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி – வானகிரி முநி வரின்‌,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,.
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

விரக்தி என்பது: செவி, வாய்‌, கண்‌, மூக்கு உடலெனப்படும்‌ இந்திரியங்களுக்கு விஷயங்களாகிய, சப்த ரஸ ரூப கந்த ஸ்பர்சங்களில்‌, அவ் விந்த்ரியங்கள்‌ புகாமல்‌ காத்தலே யாகும்‌. இந்த விரக்தியை ஓர்‌ கொடியாக நிரூபணம்‌ செய்கிறார்‌ மஹார்யர்‌. ஓரு கொடி முதலில்‌ விரையிவிருந்து உண்டாகிக்‌ கொள்‌ கொம்பில்‌ படர்ந்து பின்‌ பெரிய மரத்தைச்‌ சார்ந்து பூர்ணமாகப்‌ படர்வது போல்‌, இந்த விரக்திக் கொடியும்‌ இம்‌ முநிவரைப்‌ பற்றி அநேகக்‌ கிளைகளுடன்‌ பூர்ணமாகப்‌ படர்ந்து இலங்குகின்‌றது என்கிறார்‌. இக் கொடி
முன்பு த்ரேதாயுகத்தில்‌ அநுமானிடம்‌ முளைத்தது; பின்னர்‌ குருவம்சத்‌ தரசனாகிய பீஷ்மரிடம்‌ விருத்தியை யடைந்தது.
இக் கலியுகத்தில்‌ இந்த ராமானுஜ முனியிடம்‌ நன்கு படர்ந்து அநேகம்‌ கிளைகளோடு கூடியதாய்‌ கண்டவர்‌ மனதையும்‌ ஆகர்ஷிக்குமதாய்‌ இருக்கிறது என்கிறார்‌. அனுமானையும் காட்டில்‌ பீஷ்மரிடம்‌ வைராக்யம்‌ அதிகம்‌ என்பது, தமது உயிரையும்‌ த்ருணமாக மதித்து அவர்‌ ப்ரும்ஹசர்யத்தைப்‌ போற்றி வந்ததாலாகு மென்பது கீழ்‌ மங்களாசாஸந உரையில்‌ விரிவாய்க்‌ கூறப்பட்டி ருக்கிறது. அந்த பீஷ்மரைக் காட்‌டிலும்‌ ஸ்வாமி ராமாநுஐ முனிவரிடம்‌ ௮ந்த வைராக்யம்‌ அதிகம்‌ என்பது எவ்வாறு என்னில்‌? காம க்ரோதாதிகளே நிறைந்த இக்கலி காலத்திலும்‌ காமப்‌ பயனைப்‌ பெறுவிக்கும்‌
கிரஹஸ்தாஸ்ரமத்தை பீஷ்மர்‌ தமது தந்தையின்‌ சுகாநுபவத்துக்காகத்‌ துறந்தது போலல்லாமல்‌, **இல்லறம்‌ தமது ஆசார்யாநுவர்த்தன கைங்கர்யாதிகளுக்கு விரோதி ‘? என்று ஒரு நிர்ப்பந்தமுமின்றி தாமே அதைத்‌ துறந்து விரக்த்தியை ஏற்றுக் கொண்டதாலாகும்‌. இங்கு “சாகா ஸஹஸ்ர ருசரா ”’ என்று பல கிளைகளாய்க்‌ கிளைத்‌ததாலும்‌ இங்கு அது பூர்ணம்‌. அதாவது இவரது விரக்தியின்‌ ‘பெருமையைக்‌ கண்டு கிரஹஸ்தர்களான இவரது சிஷ்யர்களும்‌ மிகுந்த வைராக்யசாலி களானார்கள்‌
என்பது வர மங்கை முனி வைபவத்தில்‌ காணலாம்‌. ஸ்வாமியின்‌ ஞான புத்ரனான ராமானுஜம்‌ பிள்ளான்‌ மிகுந்த வைராக்ய முள்ளவராதலால்‌ ஓரு நாள்‌ அவருடைய பத்னீ ஸர்வபூஷணா லங்க்ருதையாய்‌ எதிரில்‌ நிற்க, **நீ எனக்கு ப்ரதி கூலையாகா நின்றாய்‌; பதி வ்ரதைக்குச்‌ சீலமன்றோபூஷணம்‌. இந்த பூஷணங்களால்‌ ஆவது என்‌?’” என்று
க்ஷேபிக்க, அவளும்‌ நடுநடுங்கி தனது ஆபரணங்களை யெல்லாம்‌ களைந்து பர்த்தாவிடம்‌ கொடுத்தாள்‌. அவரும்‌ எல்லாவற்றையும்‌ வாங்கி உருக்கி வானமாமலை தெய்வ நாயகப்‌ பெருமாளுக்குத்‌ திருமார்பு லக்ஷ்மியாய்‌ ஏறியருளப்‌ பண்ணி, தமது ஸ்வாமியின்‌ அநுமதியின்‌ பேரில்‌ ப்ரதிஷ்‌டிப்பித்துச்‌ சாத்தி யருளினர்‌” என்‌றதனால்‌ பல சிஷ்யர்கள்‌ இவரது வைராக்யத்தையே கடைப் பிடித்தனர்‌ என்பதற்குத்‌ தக்க சான்றாகுமல்லவா ? ஆதலால்‌ அநேகங்‌ கிளைகளுடன்‌ படர்ந்தது எனக்‌ கூறினர்‌. நிற்க ௮ந்த வானமாமலை
ராமாநுஜ முனிவரிடம்‌ அக் காலத்தில்‌ ஸந்யாஸம்‌ பெற்ற: வைராக்யசாலிகள்‌ சிலரும்‌, பிறகு நாளதுவரையில்‌ அந்தப்‌ பட்டத்தை அலங்கரித்து வரும்‌ ஸ்வாமிகள்‌ பலரும்‌ வைராக்ய பூர்ணராய்‌ ஸந்யஸித்து அவரது கைங்கர்யங்களை அநுஷ்டித்து வருவது அவர்‌ மூலமே யாகையாலும்‌ அவ்‌ வைராக்யம்‌ அவரை யாஸ்ரயித்துப்‌ பல கிளைகளுடன்‌ படர்ந்தது என்னக்‌ குறையில்லை. இத்தகைய வைராக்யம்‌ வாய்ந்த முனிவரின்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌.

———-

அவதாரிகை:-இக்த ச்லோகத்தில்‌, முன்‌ கூறப்பட்ட. சிறந்த வவராக்யஸ்ரீ மாத்திரமின்றி பகவத்‌ கைங்கர்ய ஸ்ரீயும்‌ இம்முனிவரிடம்‌ குடிகொண்டது என்கிறார்‌,

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்ய மாரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வரம் வரஸ்ய யதீஸி துஸ்தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

பதவுரை:–
யதீசிது: – யதிகட்கு இறைவனாகிய,
வரவரஸ்ய -ஸ்ரீவரவர முனிவரது,
ப்ரீத்யை பரம்‌-ப்ரீதியை உத்தே.சித்தே,
ய: – எந்த வாநாசல முனிவர்‌,
பணிகாதவத்‌ – ஆதி சேஷனைப் போலே, வாநாசலஸ்ய – வானமாமலையான எம்‌ பெருமானுக்கு,
வரமண்டப – சிறந்த.
மண்டபங்களென்ன,
கோபுர – கோபுரங்களென்ன,
ஆதி-இவை முதலியவற்றின்‌,
கைங்கர்யம்‌ – திருப்பணியை,
ஆரசிதவான்‌ – செய்தனரோ,
தத்‌ – அந்த,
வாநாத்ரியோகி – வாநாசல முநிவரின்‌, சரணெள- திருவடிகளை.
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

இதில்‌ இம்முனிவர்‌ யதிகட்கிறையாகிய. ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருவுள்ளத்தைப்‌ பின்‌ சென்று அவரது ப்ரீதிக்காகவே “*வானமாமலையே அடியேன்‌ தொழவந்தருளே” என்ற ஆழ்வார்‌ பாசுரப்படியே வானமாமலையாய எம்பெருமானுக்குச் சிறந்த மண்டபங்கள்‌, கோபுரங்கள்‌, ஆதி சப்தத்தால்‌ ப்ராகார வாஹநாதிகள்‌ என்ற பலவற்றையும்‌ உண்டாக்கி, பரமபத நாதனுக்கு அங்குப்‌ பரமபதத்தில்‌ சேஷன்‌ என்று கூறப்படும்‌ ஆதிசேஷன்‌
**சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாசுரப்படி அநேக கைங்‌கர்யங்களையும்‌ செய்யுமாபோலே, இவரும்‌ இங்கு அநேகம்‌ கைங்கர்யங்களைச்‌ செய்துள்ளார்‌ என்று இவருடைய அநந்‌த அவதாரத்தை ஸூ ஸிப்பிக்கிறார்‌. இங்கு **ப்ரீத்யை பரம்‌ வரவரஸ்ய ” எனக்‌ கூறியதால்‌ இவர்‌ இந்த கைங்கர்‌யங்களுக்காக மாமுனிகளைப்‌ பிரிய மனமில்லாவிட்டாலும்‌
அவருடைய உகப்புக்காக வானமாமலை யப்பனின்‌ கைங்கர்‌யத்தை ஏற்றுக் கொண்டார் எனத் தெரிகிறது. இங்ஙனன்றாகில் “ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு…
தேசாந்தரத்திலிருக்க மனந்தான் பொருந்தமாட்டாது”
என்று உபதேச ரத்னமாக உபதேசித்த மாமுனிகளின் அடிச் சுவட்டைப் பின்பற்றும் பாத ரேகா ஸமரான இவர் அவரை விட்டிருக்கவும் வல்லரோ? “வரம்” என்று பாடமான போது சிறந்த என்று பொருளாய் கைங்கர்ய பதார்த்தத்தில் அந்வயித்து சிறந்த கைங்கர்யத்தை எனக் கொள்ளத் தகும்; இப்பொழுது தூராந் வயமாகும். இங்கு உபமானமாகக் கூறப்பட்ட ஆதி சேஷனுக்கும் இவருக்கும் வாசி யுண்டு. அவர் நித்ய ஸூரிகளில் தலைவராகையாலே தமது ஸங்கல்ப மாத்திரத்தினாலேயே தமது திருமேனியைக் குடை, சிங்காஸநம் முதலிய உபகரணங்களாக அமைத்துக் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்தியையும் எம்பெருமானுடைய அவ்வவ நிலைகளுக்கு அநுகுணமாகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார். நமது ஸ்வாமியோ மநுஷ்யாவதாரத்திற்குச் சேர மெய் வருந்திப் பொருளீட்டி அநேக பரிச்ரமங்களோடு நெடு நாட்களில் செய்ய வேண்டி யிருந்தபடியால் அவர் கைங்கர்யங்களிலும் இவர்
திருப்பணிகளே மேலானவை என்னத் தட்டில்லை. ஆயினும் அவரைப் போல் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ததற்கு மாத்திரமே அவர் உபமானமாவார். இத்தகைய கைங்கர்ய நிஷ்டையை யுடைய கைங்கர்ய லக்ஷ்மீ ஸம்பந்நரான வானகிரி முனிவரைச் சரணம் புகுகிறேன் என்கிறார்

——–

அவதாரிகை:
இம்முனிவர் ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவுள்ளக் கருத்துப்படி கைங்கர்யங்களைச் செய்ததுமன்றி, பாஷாந்தரமான த்ராவிட பாஷையாகப் பரிணாமத்தை அடைந்து நம்மாழ்வார் திருமுகத்திலிருந்து வெளி வந்த திருவாய்மொழி முதலிய த்ராவிட வேதங்களின் அர்த்தங்களை அறிய விருப்பங்கொண்ட ஸாத்விகர்களுக்கும், அவற்றைத் தமது ஒளதார்யத்தால் உதவிய மஹோபகாரகர்‌, ஞான பரிபூர்ணர்‌ என்று இதில்‌ கொண்டாடுகிறார் –

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதி ஸது தாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

பதவுரை:–
பாஷாந்தரேண – வேறு பாஷையான திராவிட பாஷையாக,
பரிணாவதாகமாகாம்‌ – மாறுபாட்டை யடைந்த வேதங்களாயும்‌,
ச்ரவணாம்ருதாகாம்‌- காதுகளுக்கு
அமுதம்‌ போன்றவைகளுமான,
ஸ்ரீ சடாரிவசஸாம்‌ – ஸ்ரீ சடகோபனின்‌ திருவாக்குக்களான திருவாய்மொழி முதலியவற்‌றின்
அர்த்தான் -அர்த்தங்களை,
உதார தர:-மிக உதாரரான,
ய:-எந்த முனிவர்‌,
ஸதாம்‌ – ஸாத்விகர்களுக்கு,
உபாதிசத்‌-உபதேஸித்தனரோ,
தத்‌ – அப்படிப்‌பட்ட,
வாநாத்ரி யோகி-வானகிரி முனிவரது,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌..

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வேத வேத்யனான பரம புருஷன்‌ ஜீவ ராசிகளை உஜ்ஜீவிப்பிக்க விரும்பி, தனது பெருமையைச்‌ சிறிதும்‌ பாராது தன்னை ௮ழியமாறி மானிட சாதியிலும்‌
மற்றும்‌ திர்யக்‌ ஸ்தாவர ஜாதிகளிலும்‌ அவதரித்தது போலவே, அவனை ப்ரதி பாதிக்கின்ற வேதமும்‌, சிலருக்கே அதிகாரமுடையதாகையாலும்‌,, அதன்‌ அர்த்தங்களும்‌
அநேக சாஸ்த்ர ஞாநா பேக்ஷமாய்‌ கிலேசப்பட்டே அறிய. வேண்டும்படி யிருக்கையாலும்‌, தன்னால்‌ உலகைத்‌ திருத்த இயலவில்லையே என்று வருந்தி, வ்யாஸ பராசராதிகள்‌ பக்கலில்‌ “* வேத: ப்ராசேதஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா ” என்கிறபடியே இதிஹாஸ புராணாதிகளாக அவதரித்தாப் போலே, ஸம்ஸ்கிருத பாஷையை யறியாதாரும்‌ உஜ்ஜீவிக்கவேணு மென்ற க்ருபாதிசயத்தாலே, திராவிட வேதமாகவும்‌ பரிணாமத்தை யடைந்தது. இப்படி மாறுபாட்டுடன்‌ உதித்தவை ஸ்ரீசடகோபன்‌ அருளிச் செய்த திருவாய்மொழி முதலியனவாம்‌.. இது மற்றய ஆழ்வார்களின்‌ ப்ரபந்தங்களுக்கும்‌ உபலக்ஷணமாகும்‌. அவையும்‌ நாதமுனி களுக்காக ஸ்ரீ சடகோபன்‌ முகமாக வெளிவந்தவையே.-இவற்றை ** ச்ரவணாம்ருதாநாம்‌. ” எனக்‌ கூறியது “*செவிக்‌கினிய செஞ்சொல்லே’? என்றதை அடியொற்றியபடி. அம்ருதம்‌ எனக்‌ கூறியதால்‌, இப்‌ரபந்தங்களே *உள்ளத்தை மாசறுத்து”,“இருவினைப்‌ பாசங்கள்‌ நீக்கி”, *வீடும்‌ தரும்‌”
என்ற விஷயம்‌ ஸூஸிப்பிக்கப்‌ பெற்றது. இப்படிப்‌ பட்ட அர்த்த விசேஷங்களை ஸத்துக்களுக்கு உபதேஸித்த உதாரர்‌ இம்முனிவர்‌. இங்கு ஸத்துக்களாகிறார்‌ *ஸந்தமேநம்‌ ததோ விது:” என்று கூறப்பட்ட வேதாந்த ஞானமுடைய பெரியோர்கள்‌. அப்படிப்பட்ட பெரியோர்களுக்கும்‌ இப்‌ப்ரபந்தார்த்தங்களி லுண்டாகக் கூடிய ஸம்சய விபர்யங்‌களைத்‌ தமது உபதேசத்தால்‌ அறவே நீக்கும்‌ சிறந்த ஞானி இவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌. இங்கு உதார : என்னாதே “உ தார தர:”” எனக்‌ கூறியதால்‌,-பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்த ஆழ்வாருடையதும்‌ அதற்குப்‌ பாஷ்யமாக ஈடு முதலிய வ்யாக்யானங்களை அருளிச் செய்த ஆசார்யர்களுடையதுமான, ஓளதார்யங்களைக்‌ காட்டிலும்‌, அந்த ஈடு முதலிய வ்யாக்யானங்களில்‌ துரூஹங்களுமான அர்த்தங்கள்‌ தெளிவு பெறும்படி. அருளிச் செய்யும்‌ ஆற்றல் வாய்ந்த ஆசார்யர்கள்‌ இல்லாதிருந்த காலத்திலே இவர்‌ எல்லாருக்கு முபதேசிக்கையாலே இவர்‌ சிறந்த ஓளதார்யமுடையவர்‌ எனக்‌ கூறினார்‌. இப்படிப்பட்ட அதிகாரி துர்லபமாயிருத்த படியால் தான்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை மாமுனிகளைப்‌ பகவத்‌ விஷயத்‌தையே பேணிப்‌ போரும்படி. நியமித்ததும்‌. ஆகையால்‌-“உதார தர:” என்னத்‌ தட்டில்லை. இங்ஙகனன்றியே தமது பீடத்தை உண்டாகத்‌ தமது பரம்பரையிலே இன்றளவு அலங்கரிக்கும்‌ முனிவர்களை யாவரையும்‌ ஸாதுக்களுக்கு உபதேஸிக்கும்படி நித்யமாய்‌ நியமித்த ஒளதார்ய விசேஷத்‌தாலே ** உதார தர:” எனக்‌ கூறினர்‌ எனவும்‌ கொள்ளலாம்‌. ஆக இவ்வாறு உதாரரான வானமாமலை முனிவரின்‌ சரணங்களைச்‌ சரணடைகின்றேன்‌:

—————

அவதாரிகை:–
கீழில்‌ இம் முனிவரின்‌ ஒளதார்யம்‌ பரக்கப்‌ பேசப்பட்டது. இந்த ஸ்லோகத்தில்‌, இவருடைய** ராமானுஜன்‌ ” என்னும்‌ திருநாமம்‌ விஷத்தைப்‌ பேர்க்கும்‌ மந்த்ரம்‌ போலே ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்க வல்லது என்றும்‌, தன்னை உச்சரிப்பவர்‌களுக்கு பரம புருஷனோடு பரம ஸாம்யத்தையும்‌ (முக்தியை)தரவல்லது என்றும்‌ திருநாமத்தின்‌ பெருமையைக்‌ கூறி,இவர்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகிறார்‌.

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–7–

பதவுரை :–
ஆர்யா: – பெரியோர்‌,
அநுக்ஷணம்‌ .-அநு ஷணந்தோறும்‌ செய்யப்படும்‌,
யத்‌-எந்த முனிவரது,
நாம கீர்த்தனம்‌ – திருநாம ஸங்கீர்த்தனத்தை
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
போகி – ஸர்பத்தினுடைய,
விஷ- விஷத்தை,
நிர்‌ஹரணாய -போக்குவதன்‌ பொருட்டாகிய,
மந்த்ரம்‌-மந்தரமாக,
ஆஹு -சொல்லுகிறார்களோ,
பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு,
பரேண -பராத்பரனான,
புருஷேண ச – புருஷனோடும்‌,
ஸாம்யதம்‌ -ஸாம்யத்தை கொடுக்கவற்றோ
தத்‌-௮ப்படிப்பட்ட,
வாநாத்ரியோகி-வாநாத்ரி முனிவரின்‌,
சரணெள-திருவடிகளை;
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே–பற்றுகிறேன்‌.

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இம்முனிவரது ராமானுஜன்‌ என்னும்‌ திருநாமம்‌ ப்ரதி ஷணமும்‌ கீர்த்தனம் செய்யப்படுமானால்‌. அதுஒரு மந்த்ரத்தின்‌ கார்யத்தைச்‌ செய்ய வல்லது. அடிக்கடி ஜபித்து அதன்‌ ஸித்திக்கு உறுப்பாகச் செய்ய வேண்டிய எண்ணிக்கையோடு கூடி ஸித்தியைத்‌ தரும்‌ கருட மந்த்ரமானது, ஸ்மரண மாத்ரத்தாலே எப்படி ஸர்ப்பாதி துஷ்ட ஜந்துக்களின்‌ விஷத்தை நீக்குமோ அது போலவே அநவரதம்‌ சிந்திக்கப்படும்‌ இந்த ராமாநுஜன்‌ என்னும்‌ இவர்‌ திருநாமம்‌,ஸம்ஸாரமாகிற. ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்கும்‌. அது “மாத்திரமே யன்றி பரம புருஷனான ஸ்ரீமந் நாராயணனோடு ஸாம்யத்தையும்‌ அளிக்கும்‌ என்று பெரியோர்கள்‌ கூறுகிறார்கள்‌. இங்கு ஸம்ஸாரத்தை ஸர்ப்பமாகக்‌ கூறியதால்‌ பாம்பு போலவே ஸம்ஸாரமும்‌ வக்ர கதியை உடையது என்‌றும்‌, அப் பாம்பால்‌ தீண்டப்பட்டவன்‌ மூர்ச்சை யுறுவது போலவே இந்த ஸம்ஸார ஸ்பர்சம்‌ பெற்றவனும்‌ உண்‌மையை உணராது மயங்குகிறான்‌ என்றும்‌ அதை நீக்கும்‌ கருட மந்த்ரம் போல்‌ ஸம்ஸார ஸ்பர்சத்தால்‌ வந்த மயக்‌கத்தை நீக்கி உண்மை உணர்வை அளிப்பது, அடிக்கடி. உச்சரிக்கப்படும்‌ இந்த முனிவரது திருநாமமே யாகையால்‌ அதை மந்த்ரமாகக்‌ கூறுவர்‌ ஞானவான்களான பெரியோர்‌. “* மந்‌தாரம்‌ த்ராயத இதி மந்த்ர:’” என்ற வயுத்பத்திப்படி தன்னை அநுஸந்திப்பவனைக் காப்பாற்றுவது மந்தரம்‌ அல்லவா? நிற்க இத் திருநாமம்‌ நான்கே அக்ஷ்ரமுள்ளதாயினும்‌ திருவஷ்டாஷரம் போலவே பரம புருஷனாகிய ஸ்ரீ மந் நாராயணனோடு**பரமம்‌ ஸாம்யாமுபைதி”என வேதத்தால்‌ கூறப்படும்‌ பரம ஸாம்யத்தையும்‌ தர வல்லது. **நமோ நாராயணேதி மந்த்ரோ பாஸக:, வைமுண்ட புவநம்‌ கமிஷ்யதீதி” என்ற ப்ரமாணத்‌தின் படியே அஷ்டாஷர மஹா மந்த்ரம்‌ ஸ்ரீவைகுண்‌டத்தைக்‌ கொடுத்து குணாஷ்டகத்தாலே பரமனோடு பரம ஸாம்யத்தையும்‌ கொடுட்பது போலவே இத் திருநாமமும்‌ என்று பணிப்பர்‌ பெரியோர்‌. பும்ஸாம்‌ என்‌றதனால்‌ அதிகாரி நியதி இல்லை என்‌ற படி. அப்படிப்‌ பெருமை வாய்ந்த திருநாமத்தை யுடையவரான வானாத்ரி முநிவரின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌

———–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகங்களில்‌ ஞான வைராக்‌யாதிகளாலும்‌ திரு நாம ப்ரபாவத்தாலும்‌ வந்த இம் முனிவரது பெருமையைக்‌ கூறி, திருவடிகளில்‌ சரணம்‌ புக்கார்‌.
இனி மேல்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ ஸாஷாத்தாகத்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்தையே கூறி, அவற்றைச்‌ சரணம்‌ புகுகிறார்‌..
அதிலும்‌ இந்த முதல்‌ ஸ்லோகத்தில்‌ ஸ்வாமியின்‌ திருவடிகள்‌ கேவல ஸ்மரணத்தாலே ஜந்மாந்தரத்தில்‌ உண்டான
பாப ஸமூஹத்தையும்‌ நசிப்பிக்கும்‌ பெருமை வாய்ந்ததெனக்‌ கூறிச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--8–

பதவுரை :–
பும்ஸாம்‌ – மனிதர்களுடைய,
புராதந -பழைமையான,
பவ-ஐன்மங்‌களில்‌,
ஆர்ஜித-ஸம்பாதிக்கப்பட்ட,
பாப ராசி:, பாபங்‌களின்‌ திரளானது,
யயோ: – எந்தத்‌ திருவடிகளினுடைய,
ஸக்ருத்‌-ஏக மாவகவே செய்யப்படும்‌,
ஸம்ருத்யா ௮பி-௮நுஸந்தானத்தாலும்‌,
ப்ரளயம்‌-நாசத்தை,
ப்ரயாதி-௮டைகிறதோ,
ஸத்வந்திதெள-பெரியோர்களால்‌ ஈமஸ்கரிக்கப்‌ பெற்றதும்‌,
பரம-மிகச்‌ சிறந்த,
பாவந-பரி சுத்தத்‌ தன்மையையே,
ஏக வேஷெள-முக்கிய ஸ்வரூபமாயுடையதுமான,
வாநாத்ரி யோகி சரணெள-வாநாத்ரி முனிவரின்‌ திரு வடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்‌ரபத்யே- பற்றுகிறேன்‌.

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

இம் முனிவரின்‌ திருவடிகள்‌ புராதனமான அநேக ஜன்மங்களில்‌ ஸம்பாதித்து மனிதர்களால்‌ கூடு பூரிக்‌கப்பட்ட
பாப ஸமூஹங்களையும்‌ ஒருக்கால்‌ ஸ்மரித்த மாத்‌திரத்திலேயே நசிக்கும்படி. செய்கின்றது”என்‌கிறார்‌.

**மனத்‌தினால்‌ சிந்திக்கப்‌ போய பிழையும்‌ புகு தருவான்‌ நின்றனவும்‌ -என்று ஆண்டாளருளிச்‌ செய்ததை
இவர்‌ தமக்கு வகுத்த விஷயத்திலே யாக்கி யருளுகிறார்‌.

பும்‌ஸாம்‌ என்றது ஸ்த்ரிகளுக்கும்‌ உபலக்ஷணம்‌.-ஆசார்ய சரணாரவிந்த சிந்தனத்தில்‌ அதிகார நியமம் யில்லை யிறே.
“*பும்ஸாம்‌” எனக்‌ கூறியதால்‌ வர்ணாசஸ்ரமாதி அதிகார நியதியில்லாமை கூறப்பட்டது.
இது ஸர்வே பரப்மாந: ப்ர.தூயந்தே ‘* என்ற உபநிஷத்‌ வாக்‌யத்தை நினைப்பூட்டுகிறது.
மேலும்‌ இத்திருவடிகள்‌ **ஸந்த மேநம்‌ ததோ-விது:’” என்று கூறப்படும்‌ ப்ரும்ஹ ஞானிகளான
அப்பாச்சியாரண்ணா, ராமானுஜம் பிள்ளான்‌ போன்றவர்களால்‌ வணங்கப்‌ படுமவை,
மிகுந்த புனிதத்‌ தன்‌மையையே தமக்கு ஸ்வரூபமாகக்‌ கொண்டவை.
இத்தால்‌ நித்ய ஸித்தமான அபஹதபாப்மத்வாதி கல்யாண குணங்‌களை யுடையவனே தன்னை ஆஸ்ரயித்தவனுக்கு
அக்‌ குணாஷ்டக ப்ராதுர்பாவத்தைச்‌ செய்விக்கச்‌ சக்தனாமாம் போலே
இத் திருவடிகள்‌ ஸ்மரித்தவர்களின்‌ பா பங்களையும்‌ போக்குவிக்கும்‌ சக்‌தி வாய்ந்தவை யாயின என்று
முற்கூறியதற்குக்‌ காரணமும்‌ இத்தால்‌ ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்‌.
** பரமபாவந தைகவாஸெள *’ என்று பாடங்‌ கொண்டால்‌ “புனிதத்‌ தன்மைக்கு முக்கியமான உறைவிடம்‌ ” என்பதாகும்‌.
தாத்பர்யத்தில்‌ அதிக பேதமில்லை. இத்தகைய திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

———–

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ இத் திரு வடிகள்‌ தான்‌ வேண்டுமோ?

இவைகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாத தீர்த்தமே।தாப த்ரயமாகிற அக்னியை ௮ணைக்க வல்‌லது;
இவைகளின்‌ சம்பந்தம்‌ பெற்று உதிரும்‌ திருவடித்‌ துகளும்‌, உள்ளே உண்டாகும்‌ ரஜோ குணங்களையும்‌ சமகம்‌ ‘செய்யு மவையல்லவா ?
இத்தகைய பெருமை வாய்ந்த இம்‌ முனிவரின்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகன்றேன்‌ என்கிறார்‌.

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

பதவுரை :–
யத் தீர்த்த வாரி – எந்தத்‌ திருவடிகளில்‌ நின்றும்‌ கிரஹிக்கப்பட்ட ஸ்ரீபாததீர்த்தம்‌,
விமலம்‌ – பரி சுத்தமானதாய்க்‌ கொண்டு,
கலிகால -கலியுகமாகிற,
ஸமீரண – காற்றினாலே,
உத்த – வ்ருத்தி யடைந்த,
தாப த்ரய – ஆத்யாத்மித ஆதிபெளதிக ஆதி தைவங்கள் என்னும்‌ தாபங்கள்‌ மூன்றாகிற,
௮க்நி -நெருப்பை,
சமகம்‌ – அணைக்கத் தகுந்ததோ,
யத் ரேணு: – எந்தத்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததுளி,
அந்தர – மனதில்‌ உண்டாகும்‌,
ரஜ: – ரஜோகுணத்தை,
ப்ரசமாய ௪ – நீக்குவதன் பொருட்டு ஆகிறதோ,
ஏத்த் வாநாத்ரி யோகு சரணெள – இத்தகைய சக்தி வாய்ந்த
வாநாத்ரி முனிவரது இத் திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ட்ரபத்யே – பற்றுகிறேன்‌-

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்க வல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கல்மஷ மற்று பரிசுத்தமான, இம்முனிவரின்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததீர்த்தம்‌
கலி யுகமாகிய காற்றின்‌ ஸஹாயத்தினால்‌ அபிவ்ருத்தி யடையும்‌,
ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகம்‌ என்னும்‌ அக்நியை அணைக்கும்‌ சக்‌தி வாய்க்தது.
ஆத்யாத்மிகமென்பது சரீரதீதிலுண்டாகும்‌ நோய்களாலான துன்பங்களும்‌ நாசமும்‌.
ஆதிபெளதிகமென்பது கரடி. புலி காளை முதலியவற்‌றால்‌ ஏற்படும்‌ துன்பம்‌ நாசம்‌ முதலியன.
ஆதி தைவிகமென்‌பது இடி. மின்னல்‌ முதலியவற்றால்‌ தெய்வீகமாய்‌ ஏற்படும்‌ துக்கங்களும்‌ நாசங்களுமாகும்‌.
இவைகளை அக்நி யாக நிரூப ணம்‌ செய்ததால்‌ அக்நி தனக்கு ஆதாரமான விறகுகளையும்‌ அழிப்பது போல்‌
இதுவும்‌ ஆஸ்ரயத்தை அழித்தே தீருமென்‌பதைக்‌ தெரிவிக்கிறது.
கலி காலத்தை வாயுவாகக்‌ கூறியதால்‌ அக்நிக்கு அநுகூலமாய்‌ அதை வ்ருத்தி செய்விக்கும்‌ வாயுவைப் போல்‌
கலிகாலம்‌ அந்தத்‌ தாப த்ரயங்களுக்கும்‌ அநுகூலமாய்‌ அவற்றை வ்ருத்தி செய்கிறது என்ற அம்சம்‌ கூறப்பட்ட தாகும்‌.
தாப த்ரயத்தை அக்நியாய்க்‌ கூறியதால்‌ இது சீக்‌கிரம்‌ பரவும்‌ ஸ்வபாவமுடையது என்றும்‌
தாமதித்தால்‌ அணைக்கக்‌ கூடாதவை எனவும்‌ தோற்றுகிறது.
எனவே அத்தகைய தீயை யணைக்கும்‌ தன்மை வாய்ந்தது இந்த முனிவ:ரின்‌ ஸ்ரீபாத தீர்த்தம்‌.
இப்படி ப்ரபாவம்‌ வாய்த்த ஸ்ரீபாத தீர்த்தம்‌ இன்றளவும்‌ நாம்‌ பெறும்படி யிருப்பதும்‌ நமது பாக்ய வசமேயாகும்‌. நிற்க
இத் திருவடிகளின்‌ துகளும்‌ மனிதனின்‌ உள்ளத்து உண்டாகும்‌ ரஜோ குணத்தைப்‌ “போக்கும்‌ தன்மை பெற்றதாயிருக்கிறது.
ஒரு ரஜஸ்௭ு மற்றொரு ரஜஸ்ஸைப்‌ போக்குிறபடி என்னே?
இப்படிப்‌ பெருமை வாய்ந்த இத் திருவடிகளைச்‌ சரண்‌ புகுகின்றேன்‌.

———

அவதாரிகை :–
கீழ்‌ திருவடிகளின்‌ ஸ்மரண ப்ரபாவமும்‌ தீர்த்த ப்ரபாவமும்‌ ரஜஸ் ப்ரபாவமும்‌ கூறப்‌பட்டன.
இந்த ஸ்லோகத்தில்‌ பெரியோர்களும்‌ இந்தத்‌ திரு
வடி.களில்‌ வந்து ஆஸ்ரயிப்பதால்‌ வந்த பெருமையைப்‌ பேசி அவற்றைச்‌ சரண்‌ புகுகிறார்‌.

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–10–

பதவுரை
வாதூல வம்ச திலக: – வாதூல குலத்‌திற்கு அலங்காரமான: திலகம்‌ போன்றவரும்‌,
வாத்ஸல்ய ஸிந்து: – வாத்ஸல்யமென்னும்‌ குணத்திற்கு கடல்‌ போன்றவரும்‌,
அகில ஆத்ம குண சமதமாதி களான எல்லா ஆத்ம குணாங்களாலும்‌,
உபபந்ந; – நிறைந்‌த தாயும் இருக்கிற,
வரதார்யவர்ய : –வரதாசர்ர்யர்‌ என்று திருநாமமுள்ள அப்பாச்சி யாரண்ணா என்பவர்‌,
யயோ : – எந்தத் திரு வடிகளில்‌,
சகலம் – எல்லாவிதமான,
நிஜ பரம்‌-“தம்முடைய பாரத்தை,
நிக்ஷிப்தவான்‌ – வைத்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வானமாமலை முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே –

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கந்தாடைத்‌ திருவம்சத்திற்குத்‌ திலகம்‌ போன்றவரும்‌,
கோயிலண்ணனின்‌ சிறிய தகப்பனார்‌ குமாரரூம்‌,
திருமஞ்சனம்‌ அப்பா என்பவருக்கு தெளஹித்‌தராயும்
ஆய்ச்சியின்‌ குமாரருமாய்‌, -வாத்ஸல்யமென்‌ னும்‌ குணத்திற்குக்‌ கடல்போன்றவரும்‌
சமதமாதி அநந்தாத்ம குண பரிபூர்ணருமான அப்பாச்சியா ரண்ணா என்று வழங்கும்‌ திருநாமமுடையவருமான்‌ வரதாசார்யர்‌ என்பவர்‌,
இம் முனிவரது திருவடிகளையே பற்றி அவைகளிலே தமது பரத்தை எல்லாம்‌ ஸமர்ப்பித்து நியஸ்த பரராயிருந்தார்‌.
அதாவது ஆகிஞ்சந்யம்‌ அநந்ய கதித்‌வம்‌ இவைகளை முன்னிட்டு இந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளையே உபாயமாகப்‌ பற்றிப்‌ பின்பு
ஸ்வ ரக்ஷணத்‌தில்‌ அந்வயமின்றி ஓடத்தில்‌ ஏறியவன்‌, தன்னைக்‌ காப்பாற்‌றும்‌ பொறுப்பை ஓடக்காரனிடம்‌ விட்டு விட்டுக்‌
கரை சேரும்‌ காலத்தையே சிந்தித்துக்‌ கொண்டிருப்பதுபோல்‌ இத் திரு வடி.களிலே தமது பொறுப்பை ஓப்புவித்தபடியால்‌,
**கூவிக் கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ ”” என்று இருந்தார்‌.
ஆசார்யரும்‌ ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அப்புறப்படுத்துமவனாகையால்‌ ஓடக்காரனாகவே கொள்ளப்படலாம்‌.
எனவே சிறந்த குடிப்‌ பிறப்பும்‌ ஆத்மகுணமும்‌ நிறைந்த பெரியோரும்‌ தமது பாரத்தை ஒப்புவிக்கும் பெருமையை யுடையரான வாநாத்ரி முனிவரின்‌
திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌, போரேற்று நாயனார்‌ என்று சொல்லப்படும்‌ ஸமரபுங்க வாசாரியர்‌ என்‌ற
மற்றொரு பெரியோரால்‌ அர்ச்சிக்கப்பட்டது இம்முனி
வரின்‌ திருவடி என்று .அதன்‌ பெருமையைக்‌ கூறி,
அத்‌திருவடிகளையே சரணம்‌ புகுகிறார்‌.

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம்நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–11–

பதவுரை
ஸத்வருத்த – சிறந்த ஸதாசாரங்களுக்கு,
ஸம்பவபுவா – உத்பத்தி ஸ்‌தானமாயும்‌,
சம – மன அடக்கத்திற்கும்‌,
தாந்தி – மற்‌றைய இந்த்ரியங்களின்‌ அடக்கத்திற்கும்‌,
ஸீம்நா – எல்லை நிலமாயும்‌,
ஸத்வந்‌ தீதே – ஸாதுக்களால்‌ வணங்கப் பெற்றவரும்‌, நிகமாஞ்சல-வேதாந்தங்களின்‌,
ஸார–ஸாரார்த்தங்களால்‌, (அறிந்தமையால்‌-வந்த)
பூம்நா – பெருமையை யுடையவருமாயிருக்கிற,
ஸமர புங்கவ தேசிகேக – ஸமர புங்கவர்‌ என்னும்‌ ஆசார்யனாலே,
ஸம் பூஜஷிதெள -நன்கு! பூஜிக்கப்பட்ட,
வாநாத்ரி யோகி சரணெள – வாநாசல முநிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே -பற்றுகிறேன்‌.

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

போரேற்று நாயனார்‌ எனப்படும்‌ ஸமர புங்கவாசார்யர்‌, சிஷ்டர்களின்‌ மிகச்‌ சிறந்த ஆசாரங்களுக்கு விளையும்‌ பூமி எனப்‌ போற்றப்படுமவர்‌.
மனதை அடக்கி யாளுகையாகிற :*: சம’”மென்னும்‌ குணத்திற்கும்‌,
மற்றய கண்‌ முதலிய வெளி இந்த்ரியங்களை அடக்க யாளுகையாகிற.** தமம்‌ ” எனப்படும்‌ குணத்திற்கும்‌
எல்லை நிலமென்றும் மெச்சப்படுமவர்‌;
ஞானிகளான ஸாதுக்களும்‌ வணங்கும்‌ பெருமை வாய்ந்தவர்‌.
** வேதாந்த வாக்யங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ நன்கு உணர்ந்தவர்‌ ‘” ஏன்னும்‌ அதிசயம்‌ வாய்க்‌கப்‌ பெற்றவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஸமர புங்கவராலும்‌ இம்முனிவரது திருவடிகள்‌ நன்கு பூஜிக்கப்‌ பெற்றன என்றால்‌
இதனில்‌ மிக்க பெருமையும்‌ உண்டோ ?’
அப்படிப்பட்ட இம்முனிவரின்‌ திருவடிகளை அடைக்கல மாகப்‌ பற்றுகிறேன்‌.
ஸதாசாரங்களும்‌ சமதமாதி குணங்‌களும்‌ ஞானிகள்‌ வணங்கும்‌ பெருமையும்‌ வாய்ந்து,
வேதாந்த.ஸாரார்த்த ஞானமு முடைய ஸமரபுங்கவரும்‌ இவர்‌ திருவடி.களை ஆஸ்ரயித்து அவற்றை பூஜிப்பர்‌ என்றால்‌,
இம்முனிவரிடம்‌ ஸதாசார ஞான வைராக்யாதி குணங்கள்‌ எவ்வளவு பூர்ணமாக இருக்க வேண்டுமென்பது,
கைமுதிக நியாயத்‌தாலே ஸித்தமான தொன்றன்றோ?
இத்தால்‌ “ஒப்பற்ற ஞான வைராக்யாதிகளை யுடைவர்‌ இத்த ராமாநுஜ முனிவர்‌’” என்றது ஸூஸிப்பிக்கப்‌ பட்டதாகும்‌.

——-

அவதாரிகை:–
இப்படித்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்‌தைக்‌ கூறிப்‌ பின்னும்‌ இந்த வாநாத்ரி முனிவரின்‌ வைராக்‌யம்‌ பக்தி ஞானம்‌ என்ற குணங்களில்‌
ஓவ்வொரு குண விஷயத்திலும்‌ ஒருவரிருவரை உபமானமாகக்‌ கூறி
**இவருக்கு ஓப்பாமவர்‌ உலகில்‌ ஒருவரும்‌ இலர்‌” என்கிறார்‌.

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

பதவுரை:–
வாநாத்ரி லஷ்மணமுநே –வாநாத்ரி ராமாநுஐ முனிவரது,
வைராக்யம்‌ – வைராக்யம்‌ என்னும்‌ குணம்‌,
யதி(வர்ண்யதே)-நிரூபணம்‌ செய்யப்படுமேயாலால்‌,
வாயு – வாயு தேவனுடையவும்‌,
சந்தனு- சந்தனு மஹாராஜனுடையவும்‌,
ஸுத-புத்ரர்களான அறுமானை

எம்பெருமானார்‌, மணவாள மாமுனிகள்‌ இவர்களின்‌ ஞாநத்‌தின்‌ ரீதியை இவரது ஞானம்‌ உடையதாக ஆகும்‌.
பூர்வாசார்யர்களின்‌ ஞானத்தோடொத்த ‘ ஞானத்தை: உடையவர்‌ எனத்‌ தேறிற்று.
இப்படிப்பட்ட ஞான பக்தி வைராக்யங்களை யுடையராய்‌ இருப்பதால்‌ உலகில்‌ இம்‌.முனிவர்க்கு ஓப்பாவார்‌ ஒருவருமில்லை என்கிறார்‌.
இங்கு.கீழே ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஓவ்வொன்றுக்கும்‌ உபமானமாக சிலரைக்‌ கூறியிருக்க

கோவாஜகத்யா ம்ஸம:–உலகில்‌ ஓப்பாவார்‌ மார்‌? எனக்‌ கேட்பது அஸம்பாவித மன்றோ?
எனச்‌ சிலர்க்கு சங்கை பிறக்கக்கூடுமல்லவா ? அதற்குப்‌ பரிஹாரம்‌ என்‌? என்னில்‌,.
வைராக்யத்திற்கு அனுமான்‌ பீஷ்மர்‌ இருவரையும்‌,
பக்திக்கு நம்மாழ்வார்‌ “முதலிய பல ஆழ்வார்களையும்‌,
ஞானத்திற்கு நாதமுனிகள்‌ முதலிய பல ஆசார்யர்களையும்‌ இவர்‌ உபமானமாகக்‌ கூறிய தால்‌,

ஓவ்வொரு குணத்திற்கே இவர்‌ குணப்‌ பெருமையால்‌ பலரை உபமானமாகக்‌ கொள்ளவேண்டி. யிருப்பது தெளிவு…
எனவே எல்லா குணங்களும்‌ சேர்ந்து திரண்டு இருக்கும்‌ இவரைப்‌ போன்ற அக்‌ குணங்களுக்கு ஆஸ்ரய மில்லாமை.
ஸித்திப்பதால்‌ இவருக்கு ஓப்பாவார்‌ யார்‌ என்றார்‌.
௮ன்‌றியே
இவரது வைராக்ய பக்தி ஞானங்களுக்கு தெய்வாம்சம்‌. பகவதாஞ்ஞையால்‌ ஆழ்வார்களும்‌ ஆசார்‌யர்களுமாய்‌
அவதரித்த நித்ய ஸூரிகளும்‌ ஒப்பாமதொழிய-இவ் வுலகில்‌ கர்மமடியாகப்‌ பிறந்தார்‌ ஓப்பாவரோ? என்றுமாம்‌.
அல்லது ௮க்காலத்திலுள்ளார்‌ ஒப்பாமதொழிய இக்‌.காலத்தவர்‌ ஒருவராவது இவரோடு ஓப்பாமவர்‌ உளரோ என்றுமாம்‌.
** ஐகத்யாம்‌”” (இவ்வுலகில்‌) எனக்‌ கூறிய தால்‌, அவ்வுலகில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ உள்ளவர்‌ ஒப்பாவர்‌ எனத்‌ தேறுகிறதல்லவா ?
எனவே கீழ்க்‌ கூறியவாறு ஆழ்வார்கள்‌ ஆசார்யர்கள்‌ உபமானமாசக்‌ கொள்‌ளப்படுவதில்‌ ஆக்ஷேபம்‌ ஏதுமில்லை என்பதும்‌ உணரத்‌ தக்கது.

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஒப்பாவார்‌ ஒருவருமில்லை என்றார்‌.
‘இந்த ஸ்லோகத்தில்‌ பகவத்‌ கைங்கர்ய விஷயத்திலும்‌, பகவத்‌ பஜந விஷயத்திலும்‌, பாகவத ஸேவா விஷயத்திலும்‌
ஆசார்ய சரண கமலார்ச்சன விஷயத்திலும்‌ ஓவ்வொன்‌றுக்கும்‌ ஓரொருவரை உபமானமாகக்‌ கூறி,
இவரது ஒப்பற்ற தன்மையை நிரூபணம்‌ செய்து, இவரே சிறந்த குணங்கட்‌கெல்லாம்‌ முக்கியமான உறைவிடம்‌ என்கிறார்‌.

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர--13-

பதவுரை :–
௮ஸ்ய-இந்த முநிவருடையதாய் ,- முனிவர்‌ செய்த என்றபடி,
வானசைல – வானமாமலை என்ற திருநாமமுள்ள,
கமலாகாந்தஸ்ய -லக்ஷ்மீ வல்லப விஷயமான,
கைங்கர்யம்‌ – மண்டப ப்ராகாராதி நிர்மாண ரூபமான திருப் பணிகள்‌,
நிரூப்யதே யதி ..ஆராயப்படுமாயின்‌,
சேஷக்ரமாத்‌ – ஆதிசேஷனுடைய**சென்றால்குடையாம்‌” என்ற கைங்கர்ய க்ரமத்தை அதுஸரித்ததாக,
ஸ்யாத்‌ – ஆகும்‌.
பஜே – அநத எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌,
தத் பக்த பூஜாவிதெள-அவ்‌ வெம்பெருமானிடம்‌ பக்தி பூண்ட பாகவதர்களை ஆராதிக்‌கும்‌ விஷயத்திலும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
ப்ரீதி: -சந்தோஷமானது,
நிரூப்யதே சேத்‌-ஆராயப்படின்‌,
குலசேகரஸ்ய (இவ) குலசேகர ஆழ்வாருடையது (போல),
ஸ்யாத்‌-ஆகும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
(சார்ய) -ஆசார்யனுடைய,
அங்கரிஸசரோருஹ – தாமரை போன்ற திருவடிகளின்‌,
அர்ச்சகவீதெள-அர்ச்சு ப்ரகாரத்‌தில்‌,
உஜ்வலா : – நன்கு விளங்குகின்ற,
தா : தா:-அந்தந்த
ப்ரக்ரியா : – ப்ரகாரங்கள்‌, அநுஷ்டானங்களென்றப்டி,
யதி நிரூப்யக்தே – ஆராயப்படுமானால்‌,
மஞ்ஜுகவே:((இவ)-ஸ்ரீமதுரகவிகளுடையது போன்றதாக, (ஸ்யாத்‌)ஆகும்‌,
(ஆகையால்‌) வாநாத்ரியோகீஸ்வர : – வாநாசல முநிவர்‌, குணைகஸதகம்‌-குணங்கட்கொல்லாம்‌ முக்யமான உறை விடமாக

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ் வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

இம்முனிவர்‌ வானமாமலை எனத்‌ திருநாமம்‌ பூண்ட ஸ்ரீ ய :பதிக்குச்‌ செய்தருளிய பலவித கைங்கர்யங்‌களையும்‌ ஆராயின்‌,
அவை பலவாகையாலே, **சென்றால்‌.குடையாம்‌”, “நிவாஸசையாஸநக” என்கிற வசனங்களின்‌ படி
பல கைங்கர்யங்களையும்‌ செய்து போரும்‌ ஆதிசேஷ.னுடைய ரீதியை(கிரமத்தை) அநுஸரித்ததாகக்‌ கூறலாம்‌..
அவ்வானமாமலை எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌ அவனது பக்தர்களை பூஜிக்கும்‌ விஷயத்திலும்‌
இவரது ஆர்வத்தை ஆராய்ந்தால்‌ குலசேகர ஆழ்வாருடைய ஆர்‌வத்தை யொத்ததாகக்‌ கூறலாம்‌.
ஆசார்ய சரணாரவிந்தத்தை அர்ச்சிக்கும்‌ கிரமத்தில்‌ ஒப்புயர்வற்ற இம்‌ முனி’வரின்‌ அந்தந்த ப்ரகார விசேஷங்கள்‌
ஆராயப்படுமானால்‌: அவ்வவ அநுஷ்டானங்கள்‌ ஸ்ரீமதுரகவி யாழ்வாருடையன: போன்றனவாகும்‌.
எனவே இம்முனிவர்‌ சிறந்த குணங்களுக்குக்‌ கொள்கலமாவார்‌ என்கிறார்‌.
இங்கு **வாநசைல கமலா:- காந்தஸ்ய ‘? என்ற இடத்தில்‌ வானசைல என்று ஊரைச்‌ சொல்லி,
“*கமலாகாந்தஸ்ய’” என்று அங்கு எழுந்தருளி யிருக்கும்‌ எம்பெருமான்‌ எனக்‌ கொள்வது
**வானமா மலையே”” என்று எம்பெருமானையும்‌ ** சிரீவரமங்கலககர்‌ ‘? சிரீவரமங்கை என்று திருப்பதியையுங்‌ கூறிய ஸ்ரீ ஸூக்திகளோடு பொருந்தாது.
அன்றியே இந்த சப்தம்‌ * வைகுண்டோவிஷ்டரஸ்ரவா :” என்று எம்‌பெருமானுக்கும்‌,
* வைகுண்டேது பரே லோகே ?’ என்று: ஸ்தானத்திற்கும்‌ பேராகக்‌ கொள்ளப் படுமா போலே
அத்‌ திருப்பதிக்கும்‌: பேராகக்‌ கொள்ளப்படினும்‌ குற்‌றமில்லை-
இந்த ந்யாயத்தைக்‌ கொண்டுதான்‌ வானமா மலை என்று அவ்‌வூருக்கும்‌ பேராகத்‌ தற்காலம்‌ எல்லோரா லும்‌ வழங்கப்‌
பெற்று வருகிறது என்பது உணரத்தகும்‌.
இவ்விராமானுஐ .முனி பல சைங்கர்யங்களைச்‌ செய்ததால்‌, ஆதிசேஷனின்‌ கைங்கர்யத்தை யநுஸரித்தது இவரது கைங்கர்யம் என்கிறார்‌.
சேஷக்ரமாத்‌” என்பதற்கு “*சேஷக்ரம மநுஸ்ருத்ய ‘”என்று “ல்யப்லோபே பஞ்சமீ” எனக்‌ கொண்டு அர்த்தம்‌கூறப்பட்டது.
பகவத்‌ பஜனத்திலும்‌ ஸ்ரீவைஷ்ணவ பூஜா விஷயத்திலும்‌ மற்றை ஆழ்வார்களை விட்டு ஸ்ரீகுலசேகரரை
இவர்‌ உபமானமாகக்‌ கொள்வான்‌ என்‌? என்னில்‌,
அவ்வாழ்‌வாருடைய பஜந ப்ரகாரம்‌ விலக்ஷண்மல்லவா? பகவத்‌ ஸம்பத்‌தம்‌ பெற்ற தேசமே அமையும்‌-;

அத்தேசத்திலும்‌ ஞானத்‌திற்கு அடைவில்லாத திர்யக்‌ ஸ்தாவர ஜங்கமங்களும்‌ அமையும்‌ என்று நினைத்து
** குருகாய்ப்‌ பிறப்பேன்‌,” *மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையனாவேன்‌ ‘?,
“*தம்பகமாய்‌ நிற்கும்‌ தவ முூடையேன்‌ ஆவேன்‌ ,
“படியாய்க்‌ கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேன்‌ ”’ என்றாரல்லவா?
அது போலவே ‘இம்முனிவரும்‌ அவனுகந்த திருப்பதியில்‌ “ஏதேனுமாவேன்‌”என்‌ற அத்யவஸாயம்‌ பெற்றவர்‌ என்றபடி.
பாகவதர்களை ஆராதிக்கும்‌ விஷயத்திலும்‌ ““ஆரங்கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரெனக்‌ குடப்பாம்பில்‌ கையிட்ட” ஸ்ரீகுலசேகராழ்வாரைப்‌ போலே
ஸ்ரீவைஷ்ணவ விஷயத்தில்‌ கூறப்படும்‌ தோஷலே சத்தையும்‌ ஸஹியாது பரிந்து அவர்களை பூஜிக்குமவர்‌ என்று தோற்று கைக்காக இந்த உபமானம்‌
இனி இம் முனிவர்‌ தமது ஆசார்‌யனான மணவாளமாமுனிகளின்‌ திருவடிகளை அர்ச்சிக்கும்‌ க்ரமங்களும்‌,
அந்தந்த ப்ரகாரங்களும்‌ மதுரகவி நிலையை ஓத்ததாகும்‌. அதாவது–
அவர்‌ **தேவுமற்றறியேன்‌ ” என்று ஆழ்வாரையே தெய்வமாகப்‌ பற்றினாப் போலே
இவரும்‌ “*ஆசார்யதேவோ பவ” என்கிறபடியே ஆசார்ய ப்ரபத்தி யையே தேவனாகக்‌ கொண்டு அர்ச்சிக்கும்‌ நிலையாகும்‌,
ஆயின்‌ இவருக்கு பகவத்‌ கைங்கர்யத்தில்‌ ப்ரவ்ருத்தி சேருவது எங்‌கனே என்னில்‌ ?
ஆசார்ய முகோல்லா ஸார்த்தமாகச்‌ செய்கையாலே சேரும்‌.
இதுதான்‌ **ப்ரீத்யை பரம்‌ வர வரஸ்ய’” என்றவிடத்தே கூறப்பட்டதாகும்‌.
கவி :’” என்றது மதுரகவி என்றபடியாம்‌.

———

அவதாரிகை :–
ஆக இவ்வளவும்‌ வர வாநாத்ரி முனிவரது ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌, பகவத் கைங்கர்யம்‌,
பகவத் பாகவத ப்ராவண்யம்‌, ஆசார்ய பாதார்ச்சனம்‌ முதலியவற்றை உபமான முகத்தாலே சிறப்பித்துக்‌ கூறி
அவ்வழியாலே இவர்‌ ப்ரபாவத்தைக்‌ கூறியவர்‌ எம்பெருமானே நர நாரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தாப்‌ போலே,

ஞானப்ரதானம்‌ செய்து உலகினை உய்விக்க விரும்‌பிய ஆதிசேஷனே அநேகாவதாரம்‌ செய்தவர்‌ என்றும்‌
ஸ்ரீமந் மணவாள மாமுனிகளாகவும்‌ அவரது சிஷ்யரான வானமா மலை ராமானுஜ முநிவராயும்‌ அவரித்தவரும்‌ அவரே என்‌றும்‌
இவரது அநந்தாவதாரத்வத்தை அருளிச்‌ செய்து அவ்‌வழியாலே
அவரது ஓப்புயர்வில்லாப்‌ பெருமையை உணர்த்துகிறார்‌ இந்தக்‌ கடைசி ஸ்லோகத்தால்‌.

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

லக்ஷ்மீபதி: – லக்ஷ்மீ வல்லபனான எம்பெருமான்‌,
ஆத்மாகம்‌-தன்னை (ப்ராயேண்‌) –அநேகம்‌ தடவை, சிஷ்யாசார்யதநுத்வயம்‌ -சிஷ்பனென்னும்‌ ஆசார்யனென்னும்‌ இரு சரீரங்களையுடையவனாக,
நிரபஜத்‌ – பகுத்தான்‌,
ஏக: – அவ்‌ விருவரில்‌ ஒருவன்‌,
புரா – முற்காலத்தில்‌
கரஸம்ஞக: –
நர நாராயணன்‌, நரநாராயணர்களென்கிற சிஷ்யாசார்யர்களாக அவதரித்தது போலவே
திருவநந்தாழ்வான்‌ மாமுனிகளும்‌ வானமாமலை “ ராமனுஜ முனிவருமாய்க்கொண்டு சிஷ்யாசார்யர்களாக அவதரித்தார்‌ எனக்‌ கொள்வதே தகுதியுடையதாகும்‌.
ஸ்ரீ மணவாளமாமூனிகளையும்‌. இந்த ராமானுஜ முனிவரையும்‌ ஈச்வராம்சமாகச்‌ சொல்லுமிடங்களில்‌
“ஸாக்ஷ£ந்‌ நாராயணோதேவ:”’ என்று ஆசார்ய ஸாமாந்யத்தையும்‌ பகவதம்சமாகக்‌ கூறும்‌ ஸாமாந்ய வசனத்தைக்‌ கொண்டே. சொன்னதாகக்‌ கொள்ள வேண்டும்‌.இல்லாவிடில்‌ எம்பெருமானார்‌ முதலியோருக்குக்‌ கூறப்படும்‌ சேஷாவதாரத்வம்‌ ஸித்தியாது.இந்த மஹார்யரென்றும்‌ தொட்டை ஐயங்கார்‌ அப்பை, இந்த “*மங்களாசாஸசம்‌ ப்ரபத்தி என்ற இரு கரந்தங்கள்‌ போலவே தமது ஆசார்யரான வானமாமலை ராமானுஜ ஜீயர்‌ விஷயமான *: தினசர்யை ‘” என்னும்‌ கீரந்தமும்‌ அருளிச்‌ செய்திருக்கிறார்‌ என்‌பது ஸ்ரீ வரமங்கைமுகி வைபவத்தால்‌ அறியப்படுகிறது.இந்த ப்ரபந்தங்களை ராமானுஜம்‌ பிள்ளான்‌ அருளிச்செய்ததாகவும்‌ சிலர்‌ கூறுவர்‌.

————————-————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண ஸாரம் -ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள்

July 23, 2025

ஸ்ரீராமாயண உபன்யாஸத் தொடரை பார்த்தஸாரதி பக்த ஸபை சார்பில்
திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் நிகழ்த்திய போது வெளியிடப் பெறற
விழா மலரில் இந்நூல் இடம் பெற்றது.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவசியம் ” அறிய வேண்டிய அர்த்தங்கள் ” என்று
கூறப்பெறும் அர்த்த பஞ்சகத்தை உள்ளத்தில் கொண்டு ஸ்ரீராமாயணத்தை ஆராயும்
ஓர் ஆய்வு நூலாக மீமாம்ஸா நியாயங்களின் உதவி கொண்டு இந்நூலை ஸ்வாமி
இயற்றியுள்ளார்.
மிக்க இறைநிலை மெய்யாம் உயிர்நிலை தக்கநெறி தடையாகி தொக்கியிலும்
ஊழ்வினை வாழ்வு, ஆகிய ஐந்து செம்பொருட்களும்
தூய தமிழ் நடையில் எழுதப்
பெற்றுள்ளது. தற்காலப் போக்கைக் கருத்தில் கொண்டு ஸ்வாமி கால்நூற்றாண்டிற்கு
முன்னமேயே ஸம்ப்ரதாய மணிப்பிரவாள நடையை விட்டு தமிழ் மரபு நடையை
மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாம்.

திருமகள் கொழுநனான பரமபுருஷன், நம்முடைய நன்மையைத் திருவுள்ளம்
பற்றி, திரு அயோத்தியில் திருவவதரித்து, பதினோராயிரம் ஸம்வத்ஸரம் இவ்வுலகில்
எழுந்தருளியிருந்த சரிதம் நாம் நன்கு அறிந்ததேயாகும். அப்பரமபுருஷன் அங்ஙனம்
இராமபிரானாகத் திருவவதாரம் செய்தருளினபோது, அவனை அறிவிக்கும் வேதமானது,
வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாய்த் திருவவதாரம் செய்ததாம். இக்
கருத்தைக் கொண்டுள்ள,” வேத வேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத : ப்ராசேதஸாதா த் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா| “
-என்னும் முதுமொழியை ஊன்றிக் காணுங்கால், ‘இராமபிரானைப் போன்று, அவ் இராமபிரான் திவ்யசரிதமான இராமாயணமும் நமக்கு அன்புடன் ஆதரிக்கத் தக்க திவ்ய சாஸ்திரம்’ என்பது நன்கு புலனாகும். “விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை இவ்வுலகில் நன்கு பாவச் செய்தவரும், பூர்வாசாரியருள் நடுநாயக மணிபோன்று விளங்குபவருமான எம்பெருமானார், திருமலையில் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து, திருமலைநம்பிகள் ஸந்நிதியில் இராமாயண விசேஷார்த்தங்களை (இராமா யணத்தில் கூறப் பெற்றுள்ள சிறந்த பொருள்களைக்) கேட்டருளினார்” என்பதே இவ் இராமாயணத்திற்குள்ள தனிச்சிறப்பை நன்கு தெரிவிக்கின்றதன்றோ?-“இவ்வாறு மிக்க சிறப்புள்ள இராமாயணத்தின் ஸாரப் பொருள், பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோதி, உபாயம் என ஐந்தாம்” என்பதை இந்த ‘இராமாயணஸாரம்’ என்னும் நூல், மிக விரிவும், மிகச் சுருக்கமும் இன்றி விளக்கிக் காட்டி யிருக்கிறது.

திருமாலான பரம புருஷன், தனக்கே உரித்தான திருநாட்டில் திருமகள் மண்மகள்
முதலிய தேவிமாரோடு வீற்றிருந்து, நித்யராலும் முக்தராலும் தொண்டு பூண்டொழுகப்
பெற்றிருப்பவனாம். இங்ஙனம் இருப்பினும்,அப்பரம புருஷன் அத்திருநாட்டிலுள்ளாரைப்
போன்று, இவ்வுலகிலுள்ளாரும் தன்னை அனுபவித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிப் பெருங்
களிப்புற வேண்டியிருக்க. அங்ஙனமின்றி,மாயா சப்தப் பொருளான மூலப்ரைக்குதியில்
அழுந்திக் கிடந்து, அறிவுற்றவராகயிருப்பினும், அறிவற்ற அசேதனப் பொருளோடு
வாசியற இருத்தலைக் கண்டு இரக்கமுற்றனன்.

இவ்வாறு இரக்கமுற்ற எம்பெருமான், இவ்வுலகத்தாரைக் கரையேற்றத் திருவுள்ளம்
பற்றி,

இங்ஙனம் அருளப் பெற்றிருப்பினும், இச் சேதனர் அக்கலைகள் காட்டிய வழியைப் பின்
பற்றாது அவ்வுறுப்புக்களையும் அவ்வுடல்களையும் கொண்டு, ஆற்றைக்கடக்கக் கொடுத்த
புணையைக் கொண்டு அவ்வாற்றைக் கடவாது கடலிடைப் புகுவாரைப் போல், சுவை,ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்னும் விஷயங்களில்உழல்வராயினர்.
இதைக் கண்ட எம்பெருமான், தன் கட்டளை செல்லாத நாட்டில் தானே சென்று,
தன் வழி வருமாறு செய்யும் அரசன் போன்று, இவ்வுலகினில் எண்ணிறந்த அவதாரங்களைச் செய்தருளினான்.
இவ் வவதாரங்களுள்,இராமாவதாரம் மிகமிகச் சிறந்ததாம்.இவ்விராமபிரான், தன் உபதேச மொழிகளாலும், ஒழுக்கங்களாலும் இவ்வுலகத்தவர்க்கு உணர்த்தின நீதிகள் பல. அந்நீதிகளை, பின்னானார்க்கும் உதவ வேண்டும் என்னும் எண்ணத்தினால் நான்முகனார், நூறுகோடி அளவினதான இராமாவதார சரிதத்தைச் செய்து, நாரதர் முதலான தேவஷிரிகளுக்கு உபதேசம் செய்தருளினார்; அந்த நாரதரையே இராமநாமத்தையே ஜபித்துப் போது போக்குபவனாகிய வால்மீகி முனிவனிடம் அனுப்பி, அவ்விராமபிரானுடைய சரிதத்தை அம்முனிவனுக்கு உபதேசம் செய்வித்து, தாமும் காட்சி அளித்து, இராம சரி
தத்தை இயற்றுமாறு கட்டளையிட்டார்.

இங்ஙனம் அருள் பெற்ற அம்முனிவனும் ஸ்ரீராமாயணத்தைச் செய்தனன்.

ஸ்ரீராமாயணச் சிறப்பு

பிள்ளைலோகாசார்யார், ஸ்ரீராமாயணத்தை-இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனக்கொண்டாடி
அருளிச்செய்திருக்கிறார். ஆனால், நாராயணனாகவே போற்றப்பெற்றவர் வ்யாஸர்; இராம
பிரானிடம் சிறந்த பக்தி பெற்றிருப்பவர் வால்மீகி ; அவரிடம் பிறந்தது பாரதம்;-இவரிடம் பிறந்தது இராமசரிதம்;
பாரதம் என்னும் இதிஹாஸத்தை அங்ஙனம் போற்றி அருளிச் செய்யாது, இராம சரிதத்தை ‘ இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனப்போற்றி அருளிச்செய்ததற்குக் காரணம் யாதோ? எனின்,- (நாராயண:கதா மிமாம்) என்று தொடங்கி,வ்யாஸர், நாராயணனின் பரிபூர்ணாவதாரமாய்க், கொண்டாடப்பெறும் கண்ணபிரானுடைய சரிதத்தை, பாரதத்தில் ஒருவாறு வெளியிட்டிருப்பது உண்மையேயாம். ஆயினும்,
(யதா தர்மாதயச் சார்த்தா: முனிவர் யானுகீர்த்திதா !ந ததா வாஸுதேவஸ்ய மஹிமாஹ்
யனுவர்ணித:
)என்று நாரதர் (பாரதத்தைச் செய்து மன மகிழ்ச்சி சிறிதும் இன்றி இருக்கும்) வ்யாஸரை நோக்கிக் கூறுகின்றவாறு, அப்பாரதத்தில், அறம் பொருள் இன்பங்களும், அவற்றின் ஸாதனங்களும் கூறப் பெற்றிருக்கின்றன போன்று, கண்ணபிரானுடைய பெருமை கூறப்பட்டிலது.மேலும், பூசல் பட்டோலை‘ என்று ப்ரஸித்தி ஏற்படுமாறு, யுத்த சரிதத்தையே பெரும்பாலும் வெளியிட நேர்ந்திருக்கிறது; நான்முகனார் புத்திரரான நாரதர், கண்ணபிரானுடைய சரிதத்தைஉபதேசம் செய்ய, பின்பு வ்யாஸர், ஸ்ரீபாகவதத்தைச் செய்ததாக அங்கு சரித்தரம், பாரதத்தைச் செய்திருந்தும், அகக் களிப்பற்றிருந்த வ்யாஸர்,தம் துன்பம் தீருமாறு ஸ்ரீபாகவதத்தைச் செய்தார் என்பதற்கு அவர் திருவாக்கையே சான்றாகக் காண்க :–அஸ்த் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸுலாம் !வாசம் சௌரி தாலாப கங்கயைவ புனீமஹே||”நாரதருக்குத் தந்தையாரான நான்முகனார் பூஜிக்கப்பெறும் பெருமை வால்மீகி முனிவனுக்கு உண்டு, நான்முகனார்,வால் மீகி முனிவனுடைய ஆசிரமத்திற்கு வந்தார்;அம்முனிவனுடைய இராமபக்தியைக் கண்டு மனமகிழ்ச்சியுற்றார்; அம்முனிவனால், இவ்வுலகம் உய்வு பெற விரும்பினார்; அம்முனிவனைப் பூஜிக்க விரும்பி, தம் முன்னே உள்ளதோர்ஆஸனத்தைக் காட்டி, அதில் அமரச் சொன்னார். வால்மீகியும் அவ்வாறே அதில் அமர்ந்தார்” என்னும் வால்மீகி முனிவன் பெருமையைக் கூறும் சரிதம் இங்கே காணத்தக்கது.-வால்மீகயே மஹர்ஷயே ஸந்திதேசாஸனம் தத: ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாத : ஸோப்யுபாவிச தாஸனே !-என்னும் வால்மீகியின் திருவாக்கும் இங்கே அனுபவிக்கத்தக்கது.-மேற்கூறிய சரித்ரங்களை உற்று நோக்குங்கால் அங்கு, பாரதத்தைச் செய்த வ்யாஸருக்கே மனமகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும்,’இங்கு, இராம சரிதத்தைச் செய்த வால்மீகி முனிவனுக்கு அங்ஙனம் குறை கூறுவதற்கு இல்லை’ என்பதும் தெளிவாம்.-மேலும், வேதத்தினால் அறியப்படும் பரம புருஷன், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்த வாறே, அவ்வேதம், அப்பரமன் கல்யாண
குணங்களையும், ஆச்சரியச் செயல்களையும் கூற வால்மீகி முனிவனிடம்  ராமாயணமாக (இராம சரிதமாக) அவதரித்தது’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள,-வேத வேத்யேபரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமா யணாத்மநா ||| என்னும் ஸ்காந்த வசனத்தை அனுபவிக்குங்கால், இவ்விராம சரிதத்தின் வேதத் தன்மையும் நன்கு புலனாம்.
அன்றியும், ஆழ்வான் திருக்குமாரரான பட்டர், ஸஹஸ்ரநாம் பாஷ்யத்தில்-
ஸ்ரீ மத் ராமாயணவன் மஹாபாரதம் சரணம் ) என்று அருளிச் செய்திருக்கிறார். இவ் வாக்கியத்தில், பாரதப் பெருமையைக் கூறும்போது இராமாயணத்தை எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பது காணத் தக்கதாம்.

இவ்வாறு சிறப்புற்றிருக்கும் இராமாயணத்தில் தேறிய ஸாரப்பொருள் பல உண்டு. எம்
பெருமானார், திருமலையில் எழுந்தருளியிருந்து திருமலை நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டருளினார் என்பதே இதற்குத் தக்க சான்றாம்.
(அடைய வேண்டிய பரமாத்மா, (அடைகிறவனாகிய) ஜீவாத்மா, (பரமனை அடைவதன்)
பலம், (அவனை) அடையவொட்டாது தடைசெய்யும்) விரோதி, (அவனை அடைவதற்கான)
உபாயம், என ஸாரப்பொருள் ஐந்து
“ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந ப்ராப்த்யுபாயம்பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதிச வதந்தி ஸகலா வேதா : ஸேதிஹாஸ புராணகா: II என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது இவ்வசனத்தின் கருத்து – ” இதிஹாஸம்,
புராணம் ஆகிய இவற்றோடு கூடிய வேதங்கள் மேற்கூறிய ஐந்து பொருளையும் கூறுகின்றன என்பதாம்.
மேற்கூறிய ஐம்பொருளையும் வேறு வழியாக நாம் அறியலாகாதோ? இதிஹாஸத்தின் உதவியைக் கொண்டுதான் அறிதல் வேண்டுமோ? அவசியமானால், அவ்விதிஹாஸம் தான் எவ்வாறு இயம்புகின்றதோ ?எனின், விரித்துக் கூறுவோம் :
கண்முதலிய வெளி இந்திரியங்களையும் மனமாகிய உள்ளிந்திரியத்தையும் ப்ரத்யக்ஷம்
என்பர். இதனால், பரமாத்மா முதலிய பொருளை அறிய இயலாது. இந்திரியத்தினால்
அறியப்பெறும் இரண்டு பொருள்களுள், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைமையைக் கொண்டு, ஒன்றைக் காணாத இடத்தும் கண்ட ஒன்றினால் காணாத மற்றொன்றை அறிகைக்கு உறுப்பான யுக்தியை அனுமானம் என்று கூறுவர். புகையைக்கண்டு அப்புகையினால் காணாத நெருப்பை ஊஹித்து அறிகிறோம் அல்லவா? இவ்வனுமானமும், மேற் கூறிய ஐம்பொருளையும் அறிதற்குப் பயன்படாது. ஒருவகைக் குற்றமும் இன்றி இருப்பதும், என்றும் உள்ளதுமான வேதத்தினால் தான் அறியலாம். அவ்வேதமும்,தெளிவாக எடுத்து. உரைக்கும் வண்ணத்தில் அமைந் திலது, ஆதலின், இதிஹாஸத்தின் உதவி அவசியமாம். இவ்வுதவி அவசியம் என்னும் இவ் விஷயத்தை வால்மீகி முனிவன் பின் குறிக்கப்பெறும் சலோகத்தினால் வெளியிட்டு இருக்கின் றனன்.
ஸது மேதாவிநெள திருஷ்டவா வேதேஷ பரிநிஷ்டிதெள: 1-வேதோபப்ரும்கணார்த்தாய தாவக்ராஹயத ون-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :” வால்மீகி முனிவன் நான்முகனார் கட்டளையைப் பின்சென்று, இராமாயணத்தைச் செய்தபின், “இவ்விராம சரிதத்தைப் பாட வல்லவன் எவனோ? யான் அறியேன்; எம்பெருமான்! நீயே அவனை எனக்கு அருள வேண்டும். என்று அப்பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தனன். அக்காலத்தில் ‘முனி வேஷம் பூண்ட குசலவர் அம்முனிவன்- திருவடிகளைப் பணிந்து நின்றனர். அம்முனிவனோ, மிகச் சிறந்த புத்தி பெற்றிருப்பவரும், ருக் வேதம் முதலிய நான்கு வேதங்களையும், மற்ற நூல்களையும் நன்கு ஓதி உணர்ந்தவருமான
அக்குசலவர்களைக் கண்டு களித்து, வேதோபப்ரும்ஹணமாகிய இராம சரிதத்தை அவர்
களுக்கு உபதேசம் செய்தனன்”-வேதோப ப்ரும் ஹணம்’ என்பதற்குக் கருத்து யாதோ? எனின், கூறுவோம்: எங்ஙனம் இருபத்து நாலாயிரம் ச்லோகங்கள் கொண்டுள்ள இராமாயணத்தில் சில பகுதிகளை மட்டும் கற்றுணர்ந்தோர்க்கு அந்த இராமாய
ணத்தின் கருத்து அறுதியிட இயலாதோ,அங்ஙனமே, பல கிளைகள் கொண்டுள்ள வேதத்திலும் சில கிளைகளை மட்டும் ஓதி உணர்ந்தோர்க்கு அந்த வேதத்தின் கருத்து அறுதியிட இயலாது. அறிவிலிகளான நாம் வேதம்முழுவதும் ஓதி உணர இயலாது. ஆதலின், மிக நெடுகின காலத்தில் பரமபுருஷனை வணங்கி வழிபட்டு உள்ளத் தூய்மை பெற்றிருக்கும் மஹான்களுக்கே அந்த வேதமும், அதின் உண்மைக் கருத்தும் நன்கு புலனாகும்.-அன்னாரே,அந்த உண்மைக் கருத்தை உள்ளபடி அறுதியிட்டு, அக்கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூலை இயற்றஇயலும். “அன்னாம்ருள் வால்மீகி முனிவனும் ஒருவன்’: ”அங்ஙனம் வேதக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூல்களுள், இராமாயணமும் ஒன்று”என்னில், இவை புகழுரையாமோ? ஆகாதன்றோ? இவற்றால், “வேதக் கருத்தைத்தெளிவாகத் தெரிவிக்கும் நூல் உபப்ரும்ஹணம்’‘ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?–இங்கு”வேதோபப்ரும் ஹணார்த்தாய- வேதோபப்ருமணரூப ஸ்வக்ரந்த படனாயேத்யர்த்த: உபப்ருஹம்ணம் நாம நாநாசாகானுஸாரண நிர்ணீத வேதார்த்த ரதிபதகோ சுரந்த: என்னும் கோவிந்த ராஜீய வ்யாக்யான வாக்யங்களும்
 (உபப்ரும்ஹணம் ச ச்ருதி பிரதிபந் நார்த்த விசதீகரணம் ) என்னும் எம்பெருமானாருடைய திருவாக்கும் அனுபவிக்கத்தக்கவை.
[பதப் பொருளைச் சொல்வது எதுவோ, அது உபப்ரும்ஹணம் என்று சிலர் கூறுவர்.இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரத்தைக் காணப் பெற்றிலோம். மேற் கூறிய ஆதாரங்களுள் அமைந்துள்ள “நிர்ணீதார்த்த பிரதிப்பாத கோக்ரந்த:” ச்ருதி ப்ரதிபந்நார்த்த விசதீகரணம்”-என்னும் வாக்கியங்களைக் காண்க-இனி, வேதத்தில் கூறப்பட்டுள்ள பரமாத்மா முதலிய ஐம்பொருளையும் இராமாயணத் தில் காண்போம்.

வேதாந்தமும் பரமாத்மாவும்

வேதம்,பரமாத்மாவை எங்ஙனம் கூறுகின் றது? என்னில், சிறிது விவரித்துச் செப்புவோம்:
வ்யாஸர், உபநிஷத்துக்களில் அமைந்துள்ள காரண வாக்கியங்களினால் பரமபுருஷனை
நன்கு உணரலாம் என்கிறார்.-கண் முதலிய வெளியிந்திரியங்களால் காணப்பெறும் இப்பிரபஞ்சத்திற்கு எது காரணமோ, அப்பொருளே ‘பரமாத்மா
“(யதோவா இமானி பூதானி ஜாயந் தே தத்ப்ரஹ்ம) என்னும் வாக்கியத்தைக் காண்க.
சங்கை : ஆனால், உபநிஷத்துக்களில் காரண வாக்கியங்கள் பல உண்டு. அவற்றுள்
ஒரு வாக்கியம் போன்று,மற்றொரு வாக்கியம் காரணப் பொருளைக் குறிக்காமல் முரண்பாடு தோன்றக் கூறியிருத்தலை நாம் காணலாம்.
(ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே -)(ஏகோ ஹவை நாராயண ஆஸீத்) என்னும்
வாக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு பொருள் காரணப் பொருளாகக்கூறப் பெற்
றிராமல் அந்த அந்த வாக்கியத்தில் வெவ்வேறு பொருள் (பிரமனும், சிவனும் நாரா
யணனும்) காரணப் பொருளாக முரண்பாடு தோன்றுமாறு குறிக்கப் பெற்றிருப்பது புலப்படுகின்றதன்றோ! இங்ஙனம் இருக்க,ஒன்றே காரணப் பொருள்; அப்பொருள் நாராயணனே என்பதை நாம் அறுதியிடுவது யாங்ஙனம்? என்னும் ஐயம் இங்கு உண்டாகலாம்.

வேத வாக்கியங்களைக் கொண்டு பரமனை அறியுங்கால், இவ்வாறான க்லேசம் உண்டாவது உண்மையே. இங்ஙனம் க்லேசம் பெற்றிருப்போர்க்கு மனத்தெளிவுக்கு இடம்
இல்லை. “வேதம் தெளிவாக எடுத்து உரைக்கும் வண்ணத்தில் அமைந்திலது’ என்று நாம்
முன்னமே கூறியிருந்தோமே அஃது.இப்போது எண்ணத் தகுந்தது. இக்லேசம் தீருவதற்கு
வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரம் ஒரு வழியினால் உதவி புரிகின்றது. வால்மீகி முனி
வன் இயற்றிய இராமாயணமோ, வேறொருவழியினால் உதவி செய்கின்றது. இவற்றுள்
மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியை முதலில் சுருக்கமாகக்காண்போம் :
மீமாம்ஸா சாஸ்திரமாவது – வேத ஆராய்ச்சி செய்யும் நூலாகும். இவ்வாராய்ச்சி முறையை, மேற்கூறிய உபநிஷத்வாக்கியங்களில் பின்வருமாறு நாம் அறியலாம் :
“ஹிரண்ய கர்ப்ப : என்னும் முதல்வாக்கியம், ‘எல்லாம் அழிந்த காலத்து,பிரமன்
இருந்தான்’ என்னும் கருத்தையும், “நஸத்நசாஸத். என்னும் இரண்டாம் வாக்கியம்,
ஸத்தும் அஸத்தும் அக்காலத்தில் இல்லை; சிவன் இருந்தான்” என்னும் கருத்தையும்
“ஏகோ ஹவை நாராயண என்னும் மூன்றாம் வாக்கியம், ‘அச்சமயத்தில் நாராயணன்
இருந்தான்’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளன. ஆனால்,முதல் இரண்டு வாக்கியங்
களில் பிரமன் இருந்தான்; சிவன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது போல், ‘நாரா
யணன் இல்லை’ என்பது தெரிகிறதா? இங்கு இது முக்கியமாய் நோக்கத்தக்கது.
(ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரஹ்மா நேசான 🙂 என்னும் மூன்றாம் வாக்கியத்தில் “நாராயணன் அக்காலத்தில் இருந்தான்” என்பது எங்ஙனம் தெளிவாகத் தெரிகின்றதோ, அங்ஙனமே “அக்காலத்தில் பிரமனும் இல்லை; சிவனும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறல்லவா?-இதனால் என்ன தேறிற்று என்னில், கூறுவோம்; மேற்கூறிய மூன்று வாக்கியங்களுக்கும் முரண்பாடு சிறிதும் இன்றி, கருத்தைக் கொள்வது சிறந்த முறையாகும். முதல் இரண்டு வாக்கியங்களுக்கும் ‘எல்லாம் அழிந்தகாலத்து, பிரமன் மாததிரம் இருந்தான்; அல்லது சிவன் மாத்திரம் இருந்தான்; வேறு ஒரு பொருளும் இல்லை’ என்னும் கருத்தைக் கொண்டால், ஏகோ ஹவை நாராயண ஆஸீத். என்னும் வாக்கியம் சேருமோ? சேராதன்றோ? ‘ஏகோ ஹவை’ என்னும் வாக் கியம் தெளிவாகக் கூறுகின்றவாறு, “எல்லாம் அழிந்த காலத்தில் நாராயணன் மாத்திரம் இருந்தான் மற்றொன்றும் இல்லை” என்னும் கருத்தைக் கொண்டாலோ,முதல் இரண்டு வாக்கியங்களும் பொருந்தும் என்று கூறவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ? ‘ஏனைய பொருள் அழிந்த காலத்து, பிரமனோ சிவனே இருந்ததாகவும், அப்பிரமனும் சிவனும் அழிந்த காலத்தும் அழிவில்லாத நாராயணனே இருந்ததாகவும், முதல் இரண்டு வாக்கியங்களும், மூன்றாம் வாக்கியமும் முறையே அறிவிக்கின்றன என்று கூறும்போது, முரண்பாடு சிறிதும் இல்லையன்றோ? இவ்வாறு ஆராய்ந்து வேதக் கருத்தை அறுதியிடும் நூலே வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரமாம். இந்த சாஸ்திர உதவியைக கொண்டு வேதக் கருத்தை நாம் நன்கு காணலாம்.-ஆயினும், மேதாவிகளுக்கே இது கூடும்.-இராமாயணம் செய்யும் உதவியை இனிக் காண்போம் :

இராமாயணமும் பரமாத்மாவும்
”சக்ரவர்த்தித் திருமகன் ஸீதாபிராட்டி யைத் திருமணம் புரிந்துகொண்டு அப்பிராட்டியுடனும், சுற்றத்தாருடனும், பரிவாரங்களுடனும் திரு அயோத்திக்கு எழுந்தருளும்போது, வழியில், பரசுராமன் வந்து-குறுக்கிட்டு, தன் வில்லை வாங்கி நாணேற்றுமாறு அச்சக்ரவர்த்தித் திருமகனை வேண்டிக்கொண்டனன்” என்பது வரலாறு. பரசுராமன் கையில் இருந்த அவ்வில்லின் பெருமை பின்வருமாறு:

[ததிதம் வைஷ்ணவம் ராம தனு: பரமபாஸ்வரம்!ஸமானஸாரம் காகுத்ஸ்தரௌத்ரேணதனு ஷாத்விதம்
ததாது தேவதாஸ்ஸர்வா : – ருச்சந்தி ஸ்மபிதாமஹம் சிதிகண்டஸ்ய விஷ்ணோச்சபலாபலநிரீக்ஷயா
அபிப்ராயந்து விஞாய தேவதாநாம் பிதாமஹ விரோதம் னயாமாஸ தயோ: ஸத்யவ
தாம்வர:
விரோதே து மஹத்யுத்தம் அபவத்ரோமஹர் சித்திகண்டஸ்ய விஷ்ணோச்ச பரஸ்பரஜி
கீஷிணோ: !|
ததா து ரும்பிதம் சைவம் தனுர்பீம பராக்ரமம் ஹுங்காரேண மஹாதேவ: ஸ்தம்பிதோதத்ரி லோசன:
தேவை ஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸங்கை: ஸசாரணை: யாசிதெள ரசமம் தத்ர ஜக்மது :தெள ஸுரோத் தமெள 
ஜ்ரும்பிதம் தத் தனுர் த்ருஷ்டவா சைவம் விஷ்ணு பராக்ரமை அதிகம் மேனிரேவிஷ்ணும் தேவா : ஸர்கணாஸ் ததா]
இவற்றின் கருத்து – இந்த வில் விஷ்ணுவினுடையது. முன், எம்பெருமானுடைய வராஹாவதாரச் செயலை பிரமனிடம் கேட்டு,அவ்வெம்பெருமானுடைய மேன்மையை
உணர்ந்திருந்த எல்லாத் தேவர்களும், சிவன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்தபின் சிவனுடையவும் விஷ்ணுவினுடையவும் பலாபலத்தைக் காணக் கருதி, யாருடைய வலிமை மிகச் சிறந்தது’ என்று நான்முகனைக் கேட்க அந் நான்முகன், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் விரோதத்தை விளைவிக்க, அவ்விருவரும் கோரமான யுத்தம் செய்ய, அப்போது விஷ்ணுவினுடைய ஹும் என்னும் ஓசையினால் சிவனுடைய வில்லும், சிவனும் பங்கம் அடைய, ‘இனிப் போர் நிகழ வேண்டாம்’ எனத் தேவர்கள் வேண்டிக் கொளள, அவ்விருவரும் சமனம் அடைய. விஷ்ணுவின் விக்கிரமத்தினால், சிவனும் சிவனது வில்லும் பங்கம் பெற்றதைக் கண்கூடாகக் கண்ட முனிவர்களும தேவர்களும் விஷ்ணுவைச் சிறந்த தெய்வமாக அறுதியிட்டனர்” என்பது

மேலும், திருவடி இராவணன் முன்னிலையில் இராம பிரானுடைய மேன்மையைக் கூறுமிடத்துத் தென்படும் வார்த்தை-(ப்ரஹ்மாஸ்வயம்பூ: சதுரானனோவா ருத்ரஸ்
த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா 1 இந்த்ரோ மஹேந் ர : ஸு ரநாயகோவா த்ராதும் நசக்தாயுதி ராமவத்யம் ! ] இதின் கருத்து- “சிறந்த செல்வம் பெற்றிருப்பவனும், வ்ருத்ரன் என்னும் அஸுரனைக் கொன்றொழித்தவனும், முப்பத்து முக்கோடி தேவதைகளைத் துணையாய்க் கொண்டிருப்ப வனுமான இந்திரனும், இந்த இந்திரனுக்கும் மேலானவனும் ப்ரளய காலத்தில் ப்ரஜைகளை அழச் செய்பவனும் காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனும் த்ரிபுராந்தகனுமான சிவனும், இச்சிவனுக்கும் தந்தையானவனும் ஏனையோரைப் போல் பிறவாதவனும் நான்கு முகங்களை உடையவனுமான பிரமனும், தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்காய் வதம் செய்யத்தகுந்தவனைக் காக்க சக்தியற்ற வராம்” என்பது.
மேற்கூறியவாறு, தேவதைகளை (இரக்ஷகராக விளங்குகின்றவரைக் கழித்துப் பேசும்
வார்த்தையில், “நாராயணனும் சக்தியற்றவன் என்று குறிக்கப் பெற்றிலது –இதனால்,
” இராமபிரான் நாராயணனே” என்னும் உண்மை யார்க்கும் கூறாமலேயே நன்கு
விளங்குகின்ற தன்றோ?-அன்றியும், இராமபிரானால் கொலையுண்டு கிடக்கும் இராவணனைக்கண்டு, நெஞ்சழிந்து, புலம்பிப் பேசும் மண்டோதரி, ஒருவாறு
தெளிந்து, அந்த இராமபிரானுடைய மேன் மையைப் பின்வருமாறு பேசியிருக்கிறாள்:
இராமபிரானே! “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம், இனியறிந்தேன் எம் பெருமானுன்னை” என்று பெரியோர் அருளிச் செய்தது போன்று, இத்தனை போதும் உன்னை அறிந்திலேன்; இப்போது அறிந்தேன் என்றாள் மண்டோதரி.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரான்,-“நீ என்னை அறிந்தவாறு எங்ஙனே?” என்ன,
திருநாட்டில் திருவாழி, திருச்சங்கு, திருத்தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும்,
திருமறுவைத் திருமார்பில் சின்னமாகப் பெற் றும், திருமகளோடு என்றும் வாழ்பவனாகிய
திருமால் நீ என்றாள்.
”திருமாலாகிய நாம் திருநாட்டை விட்டிட்டு இவ்வுலகில் வரக்காரணம் யாதோ?”
என்று சக்ரவர்த்தித் திருமகன் திரும்பவும் வினவினான்.எல்லா உலகங்களிலும் உள்ள
எல்லாஉயிர்களுக்கும் நன்மையைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,மானிட வடிவத்துடன்
திருவவதாரம் செய்து, உலகத்திற்கே கண்டகனாகிய இராவணனைக் கொல்ல வந்தாய்;
கொன்றாய் என்றாள் மண்டோதரி. இக்கருத்துக்களை, பின் குறிக்கப்பெறும் மண்டோதரி
வார்த்தையில் காண்க:
(தமஸ : பரமோதாதா சங்கசக்கர கதாதர-ச்ரீவத்ஸவக்ஷாநித்ய அஜய்யச்சா வ
தோத்ருவ:-மானுஷம் வபுராஸ்தாய விஷ்ணுஸ்ஸத்ய பராக்ரம் 1)
இன்னமும், ‘ தேவரீருடைய திரு நாபிக் கமலத்தில் பிரமனாகிய என்னை உண்டாக்கி,
என்னிடம் படைப்புத்தொழிலும் தேவரீரால் வைக்கப் பெற்றுள்ளது’ என்னும் கருத்தைக்
கொண்டுள்ள,-பத்மே திவ்யேஅர்க்க ஸங்காசே நா யாமுத் பாத்ய மாமபி! ப்ராஜாபத்யம் த்வயா கர்ம மயி ஸவம் நிவேசிதம் ||-என்னும் வார்த்தையைக் காணுங்கால்,
நாராயணன் மேன்மையை நாம் நன்கு அறியலாம் அன்றோ? (இராமபிரான் தன்னுடைச்
சோதிக்கு எழுந்தருளும் போது, பிரமன் வார்த்தையாகக் கால் புருஷனால் கூறப்பெற்
றுள்ளது, இது.)முன்னம், . ஹிரண்யகர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே” “நஸத் நசாஸத் சிவ ஏவ கேவல:”ஏகோஹவை நாராயண ஆஸீத்ந ப்ரஹ்மா)நேசான :” என்னும் வாக்கியங்கள், கருத்
தைத் தெளிவாகத் தெரிவிக்கும் வண்ணத்தில் அமைந்தில; மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஆய்ந்து காணும் மேதாவிகளுக்கே கலக்கம் சிறிதும் இன்றி, ஏனைய பொருள்கள் இன்றி இருச்கும்போது, சிவனோ,பிரமனோ இருந்ததாகவும் எல்லாம் அழிந்த காலத்து, நாராயணனே இருந்ததாகவும் அவ்வாக்கியங்களின் தெளிந்த பொருளைக் காணக்கூடும் என்று கூறியிருந்தோமல்லவா?
இப்போது, இராமாயணம்,(மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியைப் போலன்றி)
யார்க்கும் எளிதில் நன்கு விளங்குமாறு,
(I) விஷ்ணு.சிவன் இவ்விருவருக்கும் போர் நடக்கும்போது, விஷ்ணுவினுடைய மேன்மையை முனிவரும் தேவரும் கண் கூடாகக் கண்டனர்; (2) இந்திரனோ, சிவனோ, பிரமனோ ஒன்று சேர்ந்த இம்மூவரோ, இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்கானாரை இரக்ஷிக்கஇயலாதவர் ; (3) இவ்வுலகத்திற்கு நன்மையையும், இராவணனுக்கு அழிவையும் செய்ய வந்த இர க தெய்வமான நாராயணனேஇராமபிரான்; (4) படைப்பவனாகிய பிரமன்
படைப்புத் தொழிலைப் பரம புருஷனாகிய இராமபிரானுடைய அருளாலேயே பெற்றிருப்பவன் ; என்னும் உண்மைக் கருத்துக்களை முறையே, பரசுராமன்,திருவடி மண்டோதரி (பிரமன்) காலபுருஷன் ஆகிய இவர்கள் வாக்கியங்களினால் நன்கு இயம்புகின்றதைக் கண்டோமல்லவா?
மேற்கூறிய உண்மைக் கருத்துக்களை நாம் மனத்தில் கொண்டு “ஹிரண்யகர்ப்பு: “
“நஸத் நசாஸத்” “ஏகோ வை நாராயாண ஆஸீத் நப்ரஹ்மா நேசான: ‘ என்னும் வாக்
கியங்களைக் கண்டால், மந்த மதிகளுக்கும் கலக்கம் சிறிதும் உண்டாகாதன்றோ?
இவ்வாறு நாராயணன் மேன்மையையும், ஏனையோருடைய தாழ்ச்சியையும், ஆங்கு
ஆங்கு பல வாக்கியங்களினால் மிக மிகத்தெளி வாகத் தெரிவித்திருத்தலை ஒருவாறு சுருக்கமாகக் கண்டோ மல்லவா? இனி ஜீவாத்மாவின் உண்மையை உணருவோம்.

வேதாந்தமும் ஜீவனும்

(பதிம் விச்வஸ்ய) என்பது ஒரு வேதாந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இவ்வுலகை உடையவன் எம்பெருமான்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளது. இதனால், (எங்ஙனம், சக்ரவர்த்தித் திருமகன் இராமன்’ என்றால், இராமனுக்குத் தந்தை சக்ரவர்த்தி’ என்பது தேறுகின்றதோ, அங் ஙனமே) இவ்வுலகு எம்பெருமானுக்கு உடைமைப் பொருள்’ என்பது தேறுகின்றதல்லவா?
இவ்வாறு உடைமைப் பொருளாயிருக்கும் தன்மையை சேஷத்வம்’ என்று கூறுவர் ஆன்றோர்.-உடைமைப் பொருளாயிருக்கும் தன்மை’ என்பதைச் சிறிது விவரித்துக் கூறுவாம்: கட்டிப் பொன் ஒருவனுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலைக்காண்கிறோம். அப் பொன், அவன் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும், அவன் விரும்புகின்றவாறு, தான் அனு பவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றதாயும் இருக்கின்றது.இது போன்று,ஜீவனும் எம்பெருமானுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலை ” பதிம் விச்வஸ்ய” என்னும் வாக்கியத்தில் காண்கிறோம். அந்த ஜீவன், எம்பெருமான் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும்,அவ்வெம்பெருமான் விரும்புகின் றவாறு தான் அனுபவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றவனாயும் இருக்கின்றான். இங்கு, “கட்டிப் பொன்
போலே சேஷத்வம்” என்னும் வாக்கியம் காணத் தக்கது.
அன்போடு கூடிய இந்தச் சேஷத்வ நிலையை தாஸ்யம்‘ என்பர். இந்தத் தாஸ்யம் ஜீவ
னுக்கே உரியதொரு சிறப்பாகும்.

(யஸ்யாஸ்மி நதமந்தரேமி) என்னும் மற்றொரு வேத வாக் கியத்தைக் காண்போம். இவ்வாக்கியத்தின் கருத்து- ‘எவனுக்கு நான் தாஸனாக (அடிமையாக) இருக்கின்றேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்’ என்ப தாம் இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள யஸ்யாஸ்மி‘என்னும் பகுதி, ‘பதிம் விச்வஸ்ய என்னும் வாக்கியத்தின் தேறிய பொருளையே குறிக்கின்றது.
‘நதமந்தரேமி’ என்னும் பகுதியின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவாம். ஒருபொருள் ஒரு க்ஷணம் இருந்தால், அவ்வாறுஓரு க்ஷணம் இருத்தலை ‘ஸத்தை’ என்பர்-இரண்டு க்ஷணம் முதல் அந்த அந்தக்காலத்தில் இருத்தலை ‘ஸ்திதி’ என்று கூறுவர். முயறசியை ”ப்ரவ்ருத்தி’ என்று பகருவர். முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி, என்று சொல்லுவர்.
இம்முறையில், ஒவ்வொரு ஜீவனுடைய ஸத்தை, ஸ்த்திதி, பரவ்ருத்தி, நிவ்ருத்தி ஆகிய
இவை பரமபுருஷனுக்கு வயப்பட்டனவாகவே காணப்படுகின்றமையின், ஜீவன் எம்பெரு
மானுக்குப் பரதந்திரன் எனப்படுகிறான்.-எங்ஙனம்,தட்டான் கைப்பட்டுப் பணி செய்யப்படுகின்ற பொன்னானது, அவன் அதனை உருக்கவும், தட்டவும், நீட்டவும்,
ஆக்கவும், அழிக்கவும் முயலுமளவில், அது நெகிழ்வதும் வளைவதும், நீள்வதும், ஆவதும்
அழிவதுமாகி, தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வசமாயிருக்கையின்றி, அவன் வசப்
பட்டிருக்கின்றதோ, அங்ஙனமே, ஜீவனும், தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வச
மின்றி, எம்பெருமான் விரும்புகின்றவாறு, ஆக்கவும், அழிக்கவும் வசப்பட்டிருக்கின்றான்’
என்பதை நாம் அறிதல் வேண்டும் இங்கு,” பணிப்பொன் போலே பாரதந்திரியம்’
என்னும் வாக்கியம் நோக்கத்தக்கது.
இப்பாரதந்திரிய சப்தக் கருத்தை ஊன்றி நோக்கின்.எம்பெருமான் ஸ்வதநதிரன்’
என்பதும் இங்கு நன்கு விளங்குமன்றோ?
பரமபுருஷனைப் பற்றி உள்ள சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டும் சேர்ந்தே யிருக்கு
மாதலின், அவற்றைத் தனித்தனியே பிரித்து அறிந்து கொள்ளுமாறு, கட்டிப் பொன்,
பணிப்பொன் என்னும் இவ்வுதாரணங்கள் காட்டப் பட்டன.
இவற்றால்,எம்பெருமானுக்குச் சிறப்பை விளைக்கைக்கு உறுப்பாய், அவன் விருப்புக்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதற்குத் தகுதி யுடையதாயிருக்கை, ‘சேஷத்வம்’ என்றும்,
அங்ஙனம் உபயோகப்படுவதாயிருக்கை, ‘பாரதந்திரியம்’ என்றும் இவற்றிற்கு உள்ள
வேற்றுமையை நாம் நன்கு அறியலாம்.
இதுகாறும் கூறியவாற்றால், ”பதிம் விச் வஸ்ய., ‘யஸ்யாஸ்மி நதமந்தரேமி “ என்னும் வாக்கியங்களில் எம்பெருமான் ஸ்வாமி(உடையவன்) ‘ஸ்வதந்திரன்’(தனக்கு வசமான தன் ஸத்தை முதலியவற்றைப் பெற்றிருப்பவன்)’ என்னும் கருத்தும்,ஜீவன்,அவ் எம்பெருமானுக்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன்’ என்னும் கருத்தும், அவ
னுக்கும் (பரமனுக்கும்) இவனுக்கும் ( சேதனனுக்கும்) வேற்றுமை உண்டு’ என்னும் கருத்தும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
இனி,  (தத் த்வம் அஸி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தைக் காண்போம். இவ்வாக்கியம், ஆத்மா ஒரு பொருள்தான் உண்டு; ஜீவனுக்கும் பரமனுக்கும் வேற்றுமை யில்லை என்னும் கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இக்கருத்தையும். “ பதிம் விச்வஸ்ய” “யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்னும் வாக்கியங்களின்,மேற்கூறிய கருத்தையும் சேர்த்து நோக்குங்கால், ‘ஜீவனும் பரமனும் ஒரு பொருளா ? அல்லது வேறு வேறு பொருள்களா? ஒன்று எனின். ‘பதிம் விச்வஸ்ய’ என்னும் சுருதி சேராது. வேறு எனின், “தத் த்வம் அஸி’ என்னும் சுருதி சேராது’ என்னும் இக்கலக்கம்)
உண்டாவது இயல்பன்றோ?
இக்கலக்கத்திற்குப் பரிஹாரம் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின் பறறிக் காணுங்கால், பின்வருமாறு அறியத்தக்கது : தத்த்வம் அஸி” என்னும் சுருதியிலுள்ள-தத்’ என்னும் பதம், அறிவு, ஆற்றல் முதலிய திருக்குணங்களோடு கூடிய காரணப்பொருளான பரமனைக் குறிப்பதாகும். ‘த்வம்’ என்னும் பதம் ‘ஸ்வேதகேது ‘ என்னும் ஜீவனைச் சரீரமாய்க் கொண்டுள்ள பரமனைக் குறிக்கும்.-இவ்விருவரும் ஒருவர்’ என்பது இவ்வாக்கியத்
தின் கருத்து.

தத் என்னும் இப்பதம் பரமனைக் குறிக்கும் என்பது உண்மையே. ஆனாலும், இந்த த்வம்
என்னும் பதம், முன்னிலைப் பொருளான ஜீவனை (ச்வேதகேதுவை)க் குறிக்குமேயன்றி,
பரமன் வரையில் செல்லுமோ? செல்லாதன்றோ ? அங்ஙனமாயின்,இஃது அவனை
(ச்வேதகேதுவை)ச் சரீரமாய்க்கொண்டுள்ள  பரமனைக் கூறும் என்று நீங்கள் கூறுவது
எவ்வாறு?’ என்னும் கேள்வி உண்டாகலாம்.
இக் கேள்வியின் பரிஹாரம் – ஜாதியை உணர்த்தும் சொல், ஜாதியை உணர்த்தும் அளவில் நில்லாமல்,எங்ஙனம் அந்த ஜாதிக்கு இருப்பிடமான வடிவத்தையும் உணர்த்துகின்றதோ, (எங்ஙனம். ‘குடம்’ என்னும் சொல்,குடத்தன்மையை உணர்த்தி அவ்வளவில் நில்லாமல், அக்குடத்தன்மைக்கு இருப்பிடமான குடத்தையும் உணர்த்துகின்றதோ-அங்ஙனமே, சரீரத்தை உணர்த்தும் சொல்லும், சரீரத்தை உணர்த்தும் அளவில் நில்லாமல், அச்சரீரத்தைத் தாங்கும் ஆத்மா வரையில் செல்லும்’ என்பது ஒரு முறையாம். இம்முறையை-அபர்யவஸான வருத்தி’ என்று கூறுவர். ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
 (என்பது யஸ்யாத்மாசரீரம் ) என்னும் சுருதியினால் அறியத்தக்கது.-ஜீவன். கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி,அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகந்து போருகின்றமையின், அவனை ஆத்மா என்றும், அப்பிண்டத்தைசரீரம் என்றும் அறிகின்றோம்.
இது போன்றே, பரமாத்மாவும், அறிவுற்ற சித்தும் அறிவற்ற அசித்துமாகிய இப்பிரபஞ்
சத்தைத் தூண்டி, தாங்கி, இப்பிரபஞ்சம் செய்யும் பணியை ஏற்று உகக்கிறானாதலின்,
அப்பரமன் ஆத்மா; இப்பிரபஞ்சம் சரீரம் என்னத் தட்டில்லையன்றோ?(தாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா) என்னும் வாக்கியம், “தத் த்வம் அஸி என்னும் வாக்கியத்தோடு சேர்ந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இப்பிரபஞ்சம் பரமனை ஆத்மாவாக உடையது ; அது உண்மை;-பரமன் ஆத்மா’ என்னும் கருத்தைக் கொண் டுள்ளது .-இவ்வாறு, முதலில், இப்பிரபஞ்சத்திற்கும் பரமனுக்கும் உள்ள சரீரத் தன்மை,ஆத்மா வின் தன்மை இவற்றைக் கூறி, பின்பு, ‘ஸ்வேதகேது’ என்னும் ஜீவனையும், பரமனையும் முறையே த்வம், ‘தத் ‘ என்னும் பதங்களினால் குறித்து, இவ்விருவருக்கும் உள்ள (சரீரத்தன்மை ஆத்மாவின் தன்மை ஆகிய) தொடர்பினால் உண்டான ஒற்றுமையை அந்த ”தத்த்வம் அளி” என்னும் சுருதி அறிவிக்கின்றதாக நாம்கொள்ளுதல் நன்றாம். இப்போது, “தத் த்வம் அளி ” என்னும்
இந்தச்சுருதியிலும், ”பதிம் விச்வஸ் ” “யஸ் யாஸ்மி ந தமந்தரேமி’ என்னும் சுருதிகளில்
போன்று, ஜீவனைப் பரமனுக்குச் சேஷப் பொருளாயும், பரதந்திரப் பொருளாயும்
கண்டோமல்லவா? கண்டவாறு யாதோ?எனின், ‘ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
என்ற போதே,அந்த ஜீவன், எம்பெருமானுக்கு சேஷப் பொருளும், பரதந்திரப்
பொருளுமாம்’ என்பது தெள்ளிதன் விளங்குகின்றதன்றோ?
இம்முறையில், மீமாம்ஸா சாஸ்திரம், முன்னம் கூறிய கலக்கத்திற்குப் பரிஹாரத்தைத்
தெரிவிக்கின்றது. இது போலன்றி, இராமாயணம் எளிதில் உணருமாறு ஜீவனுடைய
உண்மை நிலையை உணர்த்துகின்றது. இவ்வாறு எளிதில் உணர்த்தும் உண்மை நிலையைக் காண்போம்.

இராமாயணமும் ஜீவாத்மாவும்-
‘சக்ரவர்த்தித் திருமகன், ஸீதாபிராட்டி யுடனும், இலக்குமணனுடனும் வனத்திற்கு எழுந்தருளி, சக்ரவர்த்தியும் துஞ்சி, இராச்சியம் அராஜகமாய்க் கிடந்த காலத்து, பரதனை
முடி சூடிக்கொள்ளவேணும் என்று வஸிஷ்டர்) வேண்டிக்கொள்ள, அப்பரதன் அதற்கு இசையாது இருந்தனன்’ என்பது சரித்திர உணமை அங்ஙனம் இசையாது இருக்கும்போது, பரதன் வளிஷ்டரை நோக்கிக் கூறினவார்த்தை பின் வருமாறு :-
(கதம் தசரதா ஜாதோபவேத் ராஜ்யா பஹாரக: ராஜ்யம் சாணம் ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹ )-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :-
இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளிய பின், அப்பரமபுருஷன் பிரிவு பொறாது, என் தந்தையாரான சக்ரவர்த்தி துஞ்சினார். அச் சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த நான், அவ்வி ராமபிரான் துறந்த இராச்சியத்தை எங்ஙனம் ஏற்றுக்கொள்வேன். அங்ஙனம் ஏற்றுக் கொண்டால், சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த பிள்ளை என்று என்னை உலகம் கூறுமோ? கூறாதன்றோ ?
மேலும், என் உண்மை நிலையை உணருங்காலும் இவ்விராச்சியத்தை யான் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், நான் என்னும் இவ்வாத்மாவும், இந்த இராச்சியமும் அப்பிரானுக்கே உரிய பொருள்களாம்.-அப்பிரானுக்கே உரிய இரண்டு உடைமைப் பொருள்களுள், ஒன்று மற்றொன்றை ஆண்டு பரிபாலனம் செய்வது முறையாமோ? ஆகா தன்றோ?
இவ்வுலகில் தன்னைப் பெற்று வளர்த்த தன் தந்தையாரையும்சிறையிலிட்டு வைத்து, தான்
இராச்சியத்தை முறை தவறிப்பெற்று, பரிபாலனம் செய்வது என்பதொன்று உண்டு. இம்முறையைப் பின்பற்றி, என் பாக்கல் இராச்சி யத்தை வைப்பது தகுமோ ? தகாதன்றோ ?
என் இயல்பை உணர்ந்து, காக்கும் தன்மையைக் கூறுவீர்.இராமபிரானுக்கே உரிய இப்பொருள்களுள், ஒன்று மற்றொன்றைஆண்டு பரிபாலனம் செய்யலாம் என்னில்,
என்னைத்தான் இராச்சியம் இரட்சிக்கட்டுமே?-என, ஒருவனுக்கே உரிய பெட்டி, இரத்தினம் ஆகிய இரு பொருள்களுள், ஒன்று காப்பதாயும், மற்றொன்று காக்கப்படுவதாயும் காணப் பெறுகின்றன அல்லவா? இதுபோன்று பரதனாகிய நீ, காப்பவனாகியும் இராச்சியம் காக்கப் படுவதாயும் ஆனாலோ? என்னில்,-மேற்கூறிய இரு பொருள்களுள், ஒன்றான இரத்தினம், உடையோனாகிய அப்புருஷனால் என்றும் தரிக்கத்தக்கதாம். அவ்வாறான அந்த இரத்தினத்தை,அவன் ஒருகால்பெட்டியில் வைத்து, அப்பெட்டியைக் காப்பதாய்க் கரு துங்கால், அது அங்ஙனம் காணப் பெறுகின்றது. அல்லாத போது, அப்பெட்டி அங்ஙனம்
காணப் பெறுகின்றதோ? இல்லையன்றோ? இராமபிரானுக்கே உரிய (இரத்தினமாகிய இராச்சியம் அப்பிரானாலேயே என்றும் தரிக்கத் தக்கதல்லவா? அந்த இராச்சியமாகிய
இரத்தினத்தைத் தரித்துக் காக்கத் தகுதி எனக்கு உண்டோ? இல்லையன்றோ? நான் அப் பெட்டியாய் இருக்கத் தகுமோ? தகாதன்றோ?-என,
இராச்சியத்திற்கு அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால், அதற்கு உன்னைக் காக்க இடமில்லை. அறிவும் ஆற்றலும் உள்ள உனக்கோ, அந்தஇராச்சியத்தைக் காக்கத் தகுதி உண்டு என்னில், என்அறிவும் ஆற்றலும் எம் பெருமானுக்குப் பணி செய்யப் பாங்காயுள்
ளன வன்றி, அந்த எம்பெருமான் உடைமையை அவனுக்கு இல்லை செய்யத் தகுதியுடையனவோ? அங்ஙனமோ தேவரீர் எண்ணியிருக் கிறது?” என்பது இதின் கருத்து-இதனால், ‘பரதன் உண்மைநிலையே ஜீவனுக்குரிய ஓர் உண்மை உயரிய நிலை என்பது தெள்ளிதின் விளங்குகின்றதல்லவா?

இனி, ஸீதா பிராட்டியார் சரிதத்தில் பார தந்தரிய நிலையைக் காண்போம் : ஸீதா பிராட்டியாருக்கு மூன்று பிரிவுகள் உண்டு. தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காக அசோகவனத்தில் தாம் சிறை இருந்தது. முதல் பிரிவு. இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சக்ரவர்த்தித் திருமகன் அப்பிராட்டியாரை காட்டிலே போகவிடப் பிரிந்தது . மறுபடியும் அப்பிராட்டியார் இராமபிரான் முன்னிலையில் வந்திருக்கும் போது, பிரிந்து, பிறநதகத்தில் (பூமியில்) புகுந்து விட்டது மூன்றாம் பிரிவாம். இப்பிரிவுகளுள், இரண்டாம் பிரிவில் பாரதந்தரிய நிலை நன்கு விளங்குகின்றது. இதைச் சிறிது விவரித்துக் கூறுவாம் :
சக்ரவர்த்தித் திருமகனும் ஸீதாபிராட்டியாரும் திரு அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் காலம். திருவயிறு வாய்த்திருத்தலை (கர்ப்பிணியாயிருக்கையை ) சக்ரவர்த்தித் திருமகன் கண்டனன். அவன் அப்பிராட்டியாரை நோக்கி, அறுபதினாயிரம் ஆண்டு மலடு கிடந்த என் தந்தையாரான சக்ரவர்த்தியைப் போன்று வருந்திப் பெறாது, எளிதாகவே எனக்குப் புத்திரப் பேறு கிட்டிற்றே! அவசியம் அனுபவித்தல்லது நிற்க வொண்ணாத ஆசையோடு கூடி இருக்கும் நீ எத்தை விரும்பு கிறாய்? எல்லாவற்றையும் சொல்லாய், உள்ளோடுகிறவை நிழலெழுகிற முகவொளி உடையவளே!-(அபத்யலாபோ வைதேஹி மமாயம் ஸமு பஸ்தித: I கிமிச்சஸி ஸகாமா த்வம்ப்ரூஹி ஸர்வம் வரானனே) என்று அருளிச் செய் தனன்.
இதைச் செவியேற்ற பிராட்டி இராம பிரானை நோக்கி, அருளிச் செய்த வார்த்தை யாவது -(தபோவனானி புண்யானி த்ரஷ்டும் இச்சாமி ராகவ கங்காதீர நிவிஷ்டானி ருஷீணாம்
புண்ய கர்மணாம் பல மூலாசி நாம் வீர பாத மூலேஷு வர்த்திதும் / ஏஷமே பரம: காம :)-என்பதாம்.
இதின் பொருள் ‘இராகவனே ! கிழங்கு, காய்,கனி இவற்றைப் புஜிப்பவரும், ஸத்துவ குணம்பெற்றிருப்பவருமான மஹான்களுடைய திருவடி நிழலில் ஒரு நாளாகிலும் தங்கி, கங்கைக் கரையில் உள்ள தபோவனங்களைக் காண விரும்புகிறேன். இதுவே. எனக் குள்ள மேலான விருப்பம்’ என்பதாம்.
இவ்வார்த்தையைத் திருச்செவி சாற்றியருளின இராமபிரானும், உலக அபவாதத்தைப்
போக்கிக் கொள்ள வேணும் என்னும் திருவுள்ளம் பெற்றிருப்பவனாகையால், அப்பிராட்டி யாரின் விருப்பத்தை நிறைவேற்றுபவன்போல், அவ்வாறே அனுப்பினன். இதுவே இரணடாம் பிரிவாகும்.
இப்பிரிவுக்குப் பயன்- இராமபிரடான், கட்டிலே வைத்த போதோடு காட்டிலே
விட்ட போதோடு வாசியற அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின் சென்று நடக்க வேண்டும்படியான தன் பாரதந்தரிய நிலையைப் பிரகாசப்படுத்துதலேயாம்.
கட்டிலே வைத்தபோதோடு காட்டிலே விட்ட போதோடு வாசியற, அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின்சென்றுநடக்க வேண்டும்படியான நிலை’ என்பதைச் சிறிது விளக்குவோம்.
ஸீதாபிராட்டி அசோக வனத்தில் சிறை இருக்குங்கால், இராவணனாலும், அரக்கியராலும் பட்ட துன்பம் எல்லையற்றதாம். அப் பிராட்டி முன்னிலையில், இராவணன் முறை தவறிக் கூறிய வார்த்தைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று பின்வருமாறு-‘கிளி போன்றவளே! நான் உன்னைக் கொணர்வதற்கு முன்னமே உன் கணவனாகிய இராமன் மாண்டு போனான்; அவன் இறக்குங்கால்,ஹா ஸீதா ! ஹா லக்ஷ்மணா ! என்று கூறியதை நீ காதாரக் கேட்டிருக்கின்றாய் ; அங்ஙனம் இருக்க, இராமனைக் கூடவேணும் என்று நீ கருதுகின்றனையே!  ஈது என்ன பேதமை? நல்விதி என்னை உன் பக்கல் கூட்டி
யிருக்க, அதை அவமதித்து என்னை வெறுப்பது தகுதியோ ‘ இங்கு,
“வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டாற்குஇருத்தி கொல் கிள்ளை நீ !
நாட்டும் கால்நெடு நல் அறத் தின்பயன்
ஊட்டும்காலத்து இகழ்வது உறும்கொலோ–என்னும் கம்பர் வாக்கைக் காண்க.
மக்களுள் ஒருவனாகிய இராவணன் தாயான பிராட்டி முன்னிலையில், கூறும் வார்த்தை
யாமோ? இது. இங்ஙனமே. அரக்கியரும். தத்தமக்குத் தோன்றியவாறு கடிந்து கூறிய
சரிதம் உலகமறிந்ததேயாம். வில்லம்புக்குத் தப்பலாம்; சொல்லம்புக்குத் தப்ப இயலுமோ? இயலா தன்றோ?
“தீயினாற்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு-என்னும் ஆன்றோர் வாக்கு இங்குக் காணத் தக்கது.
இங்ஙனம் இருப்பினும்,முடிந்து பிழையாது, பிராட்டி அசோக வனத்தில் உயிர் தரித்து
இருந்தமைக்குக் காரணம் யாதோ? எனின்,-காரணம் ஒன்று கூறுவாம்.
நம் தலைமகனான இராமன் நம்மிடம் அளவற்ற அன்பு உள்ளவன்;ஜகதேக வீரன்;
விரோதியான இராவணனைக் கொல்வது திண்ணம். கொன்று, நம்மைத் தேடுங்கால்,
ஸீதை முடிந்து பல மாதங்களாயிற்றே? என்றால், தண்ணீர்ப் பந்தலில் வந்து, உருண்டு
உடைந்து கிடக்கும் தண்ணீர்ச்சாலைக் கண்டு தபிக்கும் விடாயனைப் போன்று, அப்
பரமன் கதி என்னாகும்! அப்பரமனுக்காகவே நாம் உயிர் தரித்திருப்பது நம் நிலைமைக்குப்
பொருந்திய கார்யம் அன்றோ?” என்று இருந்ததே அக்காரணமாம்.இங்கு, இராமபிரான் திருவுள்ளக் கருத்தைப் பின்சென்று இருக்கும் பாரதந்தரியநிலையை நாம் நன்கு உணரலாம் அல்லவா?-இக்கருத்தை நாம் மனத்திருத்தி, இரண்டாம் பிரிவையும், அப்பிரிவில் நடந்தசெயலையும் காணுங்கால்,ஓர் ஐயம் எழக்கூடும் அந்த ஐயம் பின்வருமாறு காணத்தக்கது.-இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காக இராமபிரான் பிராட்டியைக் காட்டிலே போகவிடப்பிரிந்தது’ என்று முன்னமேயே கூறியிருந்தோம். இதைக் காணுங்கால், பிராட்டியிடம் இராமபிரானுக்கு அன்பு எள்ளளவும் இல்லை என்று தெரிகிறதன்றோ? அப்பிராட்டியார், தம் உயிரை விரும்பி இருப்பது இராமபிரானுக்காகவே என்ற கருத்து,-(நஹி மே ஜீவிதேநார்த்த :) என்ற அவர் கூற்றால் நன்கு விளங்குகிறதன்றோ ? அசோகவனத்தில் எழுந்தருளியிருக்குங்கால், இரா
வணனாலும் அரக்கியராலும் சொல்லொணாத்துன்பம் பெற்றிருந்தும் இராமபிரானுக்காக
வேயன்றோ உயிர் தரித்திருந்தது? அவன் அவ்வாறு இருக்க, பிராட்டியார் உயிர் துறக்காது
இருந்ததற்குக் காரணம்யாதோ ?-இவ் ஐயத்திற்குப் பரிகாரமாவது– மிகவும்
துயருற்றிருந்த இலக்குமணன், கங்கைக் கரையேறினதும், பிராட்டி ஸன்னிதியில், இராமன்,
காட்டிலே விட்டதிற்குப் பயனாகத் திருவுள்ளம் பற்றின உலக அபவாத பரிஹாரத்தை விண்ணப்பம் செய்தனன். அதைச் செவிமடுத்த அப்பிராட்டி, மிகவும் துன்புற்றுப் புலம்பிப் பேசும்போது, அருளிச்செய்த வார்த்தைகளுள் ஒன்று.
(நகல்வத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம்ஜாஹ்வீ ஜலே
த்யஜேயம் ராகவம் வம்சேப துர்மாபரிஹாஸ்யதி ||–இதன் கருத்து – இலக்கு மணனே! ‘இராம
பிரானைச் சுட்டியிருக்கும் ரகுஸந்தானமானது, அவ் இராமபிரானுடைய திருவம்சத்தில்
இல்லாமல் அழிய வொண்ணாது’ என்று கங்கா ஜலத்தில் இப்போதே உயிரை விடுகைக்குத்
தகுதியுடையவளாக ஆகிறிலேன்’ என்பதாம்.
இக்கருத்தைக் காணுங்கால், இராமபிரானைப்பற்றி உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லை. அப்பிரான் விரும்பிய ஸந்ததியைப்பற்றி அப்பிராட்டியார் அப்பிரிவில் உயிர் தரித்திருந்ததாய்த் தெரிகிறதன்றோ? இதைக்காண்போருக்கு மேற்கூறிய ஐயத்தின் பரி
ஹாரம் நன்கு புலனாம்.-இங்கு, ”ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்கை தேட்டமாகா நிற்கச் செய்தேயும், அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப்
பின் சென்று, தன் ப்ராணனை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் படியான பாரதந்
திரியத்தையிறே ப்ரகாசிப்பித்தது” என்னும் மணவாளமா முனிகள் திருவாக்கு அனுபவிக்
கத்தக்கது.
இத் திருவாக்கில் அமைந்துள்ள “பெருமாள் நினைவைப் பின்சென்று” என்பதற்கு, ‘குசல
வர்களுடைய திருவவதாரத்தில் இராமபிரான் விருப்புற்றிருப்பவனாம்.ஆதலின,இப்போது
நாம் உயிர் தரித்திருப்பது அப்பிரானுக்கு இஷ்டமாம்’ என்னும் எண்ணத்தை, (அபத்
யலாபோவைதேஹி. என்னும் அப்பிரான் திருவாக்கையும், அதின் மூலமான அவன் திரு
வுள்ளக் கருத்தையும் பின்பற்றி)ப் பெற்றிருந்து’ என்பது கருத்தாம்.
இனி, இங்கு அப்பிராட்டியார் குசலவர்கள் திருவவதாரம் செய்த பின், உயிரோடு இருந்ததிற்குக் காரணம் யாதோ?என்னும் வினா சிலருக்கு உண்டாகலாம். இராமபிரானுக்காகவோ, அப்பிரானுடைய ஸந்ததிக்காகவோ, பிராட்டியார் உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லையன்றோ?இவ்வினாவிற்கு விடை பின்வருமாரு – தலைவன், தலைவிக்கு அடையப்பெறும் நன்மையாயும், அந்நன்மையைப் பெறுதற்கு ஏதுவாயும்,-அத்தலைவியினால் உபசரிக்கத் தக்கவனாயும், போற்றத் தகுந்தவனாயும் இருப்பவனாம்.
அதனால், உயிரையோ, அவ்வுயிரிலும் மேற்பட்டது ஒன்றையோ, விட்டாகிலும் தலைவன்
விருப்பத்தைச் செய்ய வேண்டியவளாம் தலைவி
(பதிர்ஹி தைவம் நாரயா : பதிர்பந்து : பதிர் கதி: 1 ப்ராணை ரபி ப்ரயம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: I”பாலயந்தீ ஹரேர் பாவம் பத்னீ பகவ தோஹ்யஹம் ) என்று பிராட்டியாராலேயே அருளிச் செய்யப் பெற்றுளளது
இங்கு, ‘பிறருக்காக உயிர் தரித்திருக்கவேண்டும்; பரதந்திரருக்கு முடிகை தேட்டமானாலும் முடியப்போகாது’ என்னும் உண்மையை உணருதல் வேண்டும் இவ்வுண்மைக் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்: பெருவ்யாதியினால் பீடிக்கப்பட்ட ஒருவன், அப் பீடை தாங்க மாட்டால், தானே உயிரைத் துறந்து விடுகிறான். அவன் அங்ஙனம் முடிகையே அவனுக்குச் சேர, பிழைக்கை எனப் பெறுகின்றது. இவ்வாறு முடிகையே பிழைக்கையானால் பிழைக்கையும் முடிகையாகலா மன்றோ?
ஸீதாப்பிராட்டியார், குசலவர்கள் திருவ வதாரம்செய்த பிறகு, இராமபிரானுடைய
ஸந்ததுக்காக உயிர் தரித்திருக்கவேண்டுவதில்லை என்பதும். அக்காலத்தில் அவருக்கு
முடிகை தேட்டமாயிருந்தது என்பதும் ஒருவாறு உன்மையேயாம். ஆயினும், அப்பிராட்டியார் தம் இயல்புக்கு ஏற்ப, மேற்கூறிய வாறு பிழைக்கை என்னும் முடிகையைப் பெற்றிருந்தவர் என்றே நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு இருத்தற்கும் காரணம் இராமபிரான் திருவுள்ளக் கருத்தேயாம்.
இங்கு, திருவுள்ளக் கருத்து என்பது யாதோ? எனின், கூறுவோம்: “ஸீதா பிராட்டியார் கற்
புடையவர்” என்பது மாத்திரமன்றி, கற்பினுக்கு அணியாகவே விளங்குபவராம். கண்
டனன் கற்பினுக்கு அணியை’ என்னும் திருவடி திருவாக்கையும் இங்கு நாம் காணுதல்
வேண்டும். அப்பிராட்டியாரை, இக் கொடுவுலகம் தன் இயல்புக்கேற்ப, குற்றம் கூறிற்று.
ஆயினும், நாள் செல்ல, நாள் செல்ல இக் கொடுவுலகத்திற்கே, அப்பிராட்டியாரின்,
குற்றம் சிறிதும் இன்றியிருக்கும் சிறப்பு நன்கு விளங்கக் கூடும். அக்காலத்கில் குழந்தைகளுடன் பிராட்டியாரை அழைத்துக் கொள்வதே தமக்கு நன்றாம். ஆதலின், இப்
பொழுது பிராட்டியார் உயிர் துறத்தல் கூடாது. என்பதே அக்கருத்தாம்.
இதற்குத்தக்க பிரமாணம் யாதோ? எனின்,
மூன்றாம் பிரிவைப் பற்றிக் கூறுமிடத்து, வால்மீகி முனிவன். இராமபிரானுடைய ஸன்
னிதியில் வந்து ஒடுங்கி நிற்கும் ஸீதாப்பிரட்டியாரைக் குறித்து,’இவர் குற்றம் சிறிதும்
இன்றி நல்லொழுக்கம் பெற்றிருப்பவர்;-பாவம் சிறிதும் இல்லாதவர் ; இராமபிரானை
யல்லாமல் மற்றொருவரையும் நெஞ்சாலும் நினைத்திலாது, அப்பிரானையே தெய்வமாகப்
பற்றி இருப்பவர்-‘இயம்சுத்தஸமாசாரா அபாபா பதிதே வதா’ என்று கூறியிருத்தலையும்,
இராமபிரானும், “நானும், குற்றம் சிறிதும் இன்றி இருப்பவர் பிராட்டியார் என்பதை அறிவன் (“அபாபேத் யபி ஜானதா ) முனிவனாகிய நீர் சொன்னதுவே போதும்-ஏ தேவம் மஹாபாக யதா வசஸ் தர்மவித்)ஆனாலும், இந்தத் திரளிலே உலகம் நம்புமாறு, தன் சுத்தியை வெளியிட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அருளிச் செய்திருத்தலையும் காணுங்கால், மேற்கூறிய கருத்து,தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
இங்கு, (பிறருக்காக உயிர் தரித்து இருக்க வேண்டும் பரதந்திர ஜன்மத்தில் பிறந்தோருக்கு நினைத்தபோது முடியப்போமோ ?-அங்ஙனம் நினைத்தபோது முடிந்து விட்டால்,
பாரதந்திரியமாகிற செல்வம் நிலை பெற்றிக் குமோ ?) என்னும் கருத்தைக் கொண்டுள்ள
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண் பிறந்ததே என்னும் ஆழ்வார் திருவாக்கையும் காண்க.
இதுகாறும் கூறிய பரதன், ஸீதா பிராட்டியார் இவ்விருவருடைய சரிதங்களை நாம்
மனத்திருத்தி நோக்குங்கால், இராமபிரானுக்கு இராச்சியமும், பரதனும், ஸீதாப்
பிராட்டியும் போன்று, ‘இந்த ஜீவனும், இவனுடைமையாக எண்ணப் பெற்றிக்குமவையும் அப்பிரானுக்கே (நாராயணனுக்கே) உரிய உண்மை உடைமைப் பொருளும் பரதந் திரப்பொருளுமாம்’ என்பது நன்கு விளங்கு கின்றதல்லவா ? இவ்வாறு ஜீவனுடைய
உண்மை நிலையை இராமாயணத்தில் கண்டோ மல்லவா? இனி, உபேயம் எனப்படும் பயனைப் பற்றி ஆராய்வோம்.

—————-

வேதாந்தமும் உபேயமும்

இவ்வுலகிற்கு மீண்டுவருதல் இன்றி, மோக்ஷ உலகத்தைத் தருவதான வழியில் சென்று,  திருநாட்டிலே எம்பெருமானைச் சேர்ந்து, அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன் அனுபவித்து, அவ்வனுபவத்தினால் உண்டான. ஆனந்தம்தூண்ட அவன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதலே, இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மையாம். இவ்வாறான வாழ்வையே உபேயம்’ என்றும், வீடுபேறு‘ என்றும் கூறுவர், ஆன்றோர். இங்கு, ‘பரமனைப் பஜனம் பண்ணுவோர்,
(மோஷ உலகத்திற்குச் செல்லுவோரை முதலிற்கண்டு. உபசரித்து, வழி நடத்தும்
தெய்வமான) அர்ச்சிஸ்ஸை அடைகின்றனர்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள
(தே ர்ச்சி ஷமபி ஸம்பவந்தி)என்னும் வேதாந்த வாக்கியமும்,-பரமனைப் பஜனம் பண்ணுவோன் அப்பரமனையே அடைகின்றான்’ என்னும் பொருள் பெற்றுள்ள
 (ப்ரஹ்மம் விதாப்நோதி பரம்) என்னும் வேதாந்த வாக்கியமும்,
‘மிகவும் இனிய பொருளான பரம புருஷனை அடைந்து, அனுபவித்து இன்பம் துய்க்கின்றான்’ ‘திருநாட்டில் முக்தன் எம்பெருமா னுடன் அவன் திருக்கலியாண குணங்களை அனுபவிக்கின்றான்’ என்றும் அப்பரமபுருஷனுடைய திருமேனியைக் கண்கூடாகக் காண்கின்றனர் நித்யர்’ என்னும் கருத்துக்களை முறையே காட்டும்
 ” (ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாS நந்தீ பவதி) ” (பரமே வ்யோமன் ஸோ ச்னுதே ஸர்வான் காமான் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா(ஸதா பச்யந்தி ஸூரய :) என்னும் வேதாந்த வாக்கியங்களும் காணத் தக்கன.
ஆனால், ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதல் இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை’ என்பதற்குத் தக்க பிரமாணம் யதோ? என்னும் கேள்வி இங்கு உண்டாவது இயல்பேயாம்.
இக்கேள்விக்கு விடை பின்வருமாறு : ஜீவன் கை, கால் முதலிய உறுப்புக்களோடு
கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி, அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின், அந்த ஜீவன் ஆத்மா ; அப்பிண்டம்சரீரம்’ என்பது எங்ஙனமோ, அங்ஙனமே-பரமன் ஜீவனை ஏவி,தாங்கி, அந்த ஜீவன் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின்,
அப்பரமனும் ஆத்மா; அந்த ஜீவனும் சரீரம், என்பதைபும் நாம் உணரலாமல்வலா?
இங்கு, (யஸ்யாத்மா சரிரம்= எவனுக்கு ஜீவன் சரீரமோ) என்னும் வேதாந்த வாக்கியம் பிரமாணமாய்க் காணத்தக்கது இதனால், தேறிய ஸாரப் பொருள் என்? என்னில், இந்தச் சுருதி. ஜீவன் பரமனுக்குச் சரீரமாம்’ என்று கூறிய போதே. இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை பரமனுக்குத் தொண்டு செய்கையேயாம். என்பதையும் கூறிற்றன்றோ?

ஆனால், ‘இவ்வடிமைத் தொழில் உலகப்போக்கில் துன்பம் தருவதாய் இருத்தலினாலும் ‘ஓருவருக்குத் தொண்டு பூண்டொழுகுவது துன்ப மயமானது’ எனச் சாஸ்த்திரங்களில் சொல்லப்படுவதாலும், மனுமுதலியபெரியோர் தொழில்களில் அடிமைத்தொழில், கடைப்பட்டது; துன்பமயமானது’என இயம்பி இருத்தலாலும், அடிமைத்தொழில் துன்பம் தருவதொன்றாம்’ என்பதுதெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
உண்மை இவ்வாறு இருக்க, ‘துன்பம் கலவாத பேரின்பத்தையே அனுபவித்துக்
கொண்டிருக்கும் மோக்ஷ தசையிலும்,ஜீவனுக்கு இவ்வடிமைத் தொழில் உண்டு எனச்
சொல்லப் பெறுகின்றதே, இது பொருந்துமாறு யங்ஙனம்? என்னும் இவ்வினா இங்கு
எழுகின்றது.-இவ்வினாவிற்குவிடை பின்வருமாறு :-
எங்கும் அடிமைத் தொழில் துன்பம் தருவ தாகவே இருக்கும்’ என்பது இல்லை. ‘காளி
தாஸன், தான் உகந்த விலைமகளுக்குத் தண்ணீர் கொண்டு வ து தருதல் முதலிய தொண்டைமிக்க மகிழ்வுடனும், இன்பத்துடனும் செய்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை. அதைப்போன்றே, பரமனுக்குச் செய்யும்தொண்டும் இன்பமாகவே இருக்கும்.
காளிதாஸன், தான் உகந்த விலை மகளின் அழகு முதலிய குணங்களில் ஈடுபட்டு, அவ் வுவப்பினால், அங்குத் தொண்டு புரிந்ததால், அத்தொண்டு இன்பமாக இருந்தது என்ன லாம்.
இங்கு, எம்பெருமானுக்கு அழகு முதலியகுணங்கள் உண்டோ? ‘அவன் நிர்குணன் (குணங்களற்றவன்) என வேதாந்தங்களில் கூறப்பெறுகின்றனனே, அங்ஙனம் குணமற்ற அப்பெருமானிடத்தில் இந்த ஜீவனுடைய நெஞ்சம் ஈடுபடுமோ? ஈடு படாதன்றோ? மனக்
கவர்ச்சி உண்டாகாத இடத்தில் உவப்புக்கொள்ளாத இடத்தில் அடிமைத் தொழில் இன்பமாய்த் தோன்றுவதுதான் எவ்வாறு? எனச் சிலர் கருதக்கூடும்.
எம்பெருமான் நிர்குணன்’ என்னும் வேதாந்த வாக்கியத்திற்கு, குணம் ஒன்றுமே இல்லாதவன்’ என்பது கருத்தன்று; பின்னை-கருத்து யாதோ? எனின், ‘தீயகுணம் சிறிதும்
இல்லாதவன்’ என்பதே கருத்தாம்.
திருக்கலியாண குணங்களும் இல்லாதவன்’என்று பொருள் கொள்ளில், பேரறிவு,
பேராற்றல் முதலிய எண்ணிறந்த திருக்கலியாண குணங்களைப் பெற்றிருப்பவனாம் எம்
பெருமான் ‘ என்னும் கருத்தைக்கொண்டுள்ள (பராஸ்ய சக்தி:) என்பனபோன்ற பல வேதாந்த வாக்கியங்களோடு முரண்பாடுஉண்டாமன்றோ ?
இங்ஙனம், எம்பெருமான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என
வேதாந்த வாக்கியம் இயம்புகின்றமையினாலும், இந்த ஜீவனும்,எம்பெருமான் திருக்
குணங்களில் ஈடுபட்டு, உவந்து, அடிமைத்தொழில் புரிகின்றமையினாலும், இங்கும்
அடிமைத் தொழில் இன்பமாகவே இருக்கும்என்பதில்,தட்டு ஒன்றுமில்லை.
இதுகாறும் கூறியவற்றால், வேதாந்த வாக்கியங்களைக்கொண்டே, ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்வதே வீடுபேறு’ என்பதை உணர்ந்தோமல்லவா ?
(ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும், அவ்வாக்கியத்தில் மேலெழத்தோன்றும் கருத்தையும் காண்போம்.
“ஒருவன் குற்றத்தினால், முத்துச்சிப்பியில்அதன் தன்மையை அறியாது, வெள்ளியின்
தன்மையை அறிகின்றான்; அவ்வறிவு பிரமம் எனப்படும். அந்தப் பிரமம் இருக்கும்போது,
வெள்ளி உண்மைப் பொருளாய்த் தெரிகின்றது. அதனால் அவன் அதை எடுக்கச்
செல்கின்றான். அங்ஙனம் சென்று, எடுத்து,நோக்குங்கால், ‘ இது வெள்ளியன்று, முத்துச்
சிப்பி’என்று சிப்பியின் தன்மை புலனாகின்றது. அப்போது, அம்முத்துச் சிப்பியைத் தவிர,
வெள்ளியோ, அதன் தோற்றமோ இல்லை; சிப்பி மட்டும் தென்படுகின்றது” இது போன்று, ப்ரஹ்மமானது குற்றத்தினால் பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. “தத் த்வம் அஸி-என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒன்று தான் உண்டு’ என்னும் உண்மையை உணரும்போது, இப்பிரபஞ்சமோ இதன்தோற்றமோ ஒன்றுமே இராது. அந்த ப்ரஹ்மம் மட்டும் இருக்கும். அங்ஙனம் அந்த ப்ராஹ்மம் மட்டும் இருக்கையே வீடு பேறாம். இதுவே மேற் கூறிய வாக்கியத்தின் மேலெழத்தோன்றும் கருத்தாம்.
இக்கருத்தையும், முன்னம் கூறிய அடிமைத்தொழிலே வீடு பேறாம்’ என்னும் கருத்தை
யும் ஒன்று சேர்த்துக் காண்போருக்குக் கலக்கம் உண்டாவது இயல்பேயாம்.-இக்கலக்கத்தை மீமாம்ஸா சாஸ்திர முறையைக் கைக்கொண்டு போக்கிக்கொள்ளுங்கால்,
” ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி” என்னும் வாக்கியம், ‘ஆத்மாவினுடைய உண்மையை
உள்ளபடி உணர்பவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்’ என்னும் கருத்தைக் காட்டுவதன்று; பிறகு எக்கருத்தைக் காட்டுகின்றதோ என்னில், ‘மேற்கூறியவாறு உண்மையை உணருவோன், மோஷ தசையில் பரமனோடு மிகவும் ஒற்றுமை பெற்றிருப்பவனாம்’ என்னும் கருத்தையே காட்டுவதாம் ; என்பதுநன்கு புலனாம்.
இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியில் “ப்ரஹ்ம
மாக ஆகிறான்” என்னும் கருத்து காணப் பெறுகின்றது என்பது ஒருவாறு உண்மையே.
இக்கருத்தையே கொள்ளில் ஜீவனுக்கும் பரமனுக்கும் உள்ள வேற்றுமையைப் பலவாறாகக்
கூறும் பல வேதாந்த வாக்கியங்களோடுமுரண்பாடு உண்டாமன்றோ?
முன்னம் சேதனன் அர்ச்சிராதி வழியில் செல்லுதல், திருநாட்டிலே பரமபுருஷனைச்
சேர்தல்,அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அனுபவித்தல், ஆனந்தம் பெறுதல்,அடிமை செய்தல், அப்பரமனை உவப்பித்தல் என்னும் பல நன்மைகளை அறிவிக்கும் பல வாக்கியங்களைக் கண்டோமல்லவோ?-மிகவும் ஒற்றுமையுள்ள இருபொருள்களைஅவ்வொற்றுமை தோன்ற ஒன்றாகவே கூறுதலும் செய்யுள் வழக்கில் உள்ளதொன்றேயாம். தாமரை மலர் போன்றுள்ள கண்ணை அம்மலராகவே கூறுகின்றாரல்லவா? ‘தாவிவையங் கொண்ட தடந்தாமரை என்று.இம்முறையைப் பின்பற்றி, ‘‘ப்ரஹ்மைவபவதி” என்னும் சுருதியில் மேற்கூறியவாறு பொருத்தமான பொருளைக் காண்பதே நன்றாம்.
ஆனால், தலைவன், தொண்டன் இவ்விருவருள் தலைவனுக்குச் சிறப்பும், தொண்டனுக்குத் தாழ்ச்சியும் தென்படுகின்றன. இது போன்று,உண்மையில் தலைவனான எம்பெருமானுக்குச் சிறப்பும் தொண்டனான ஜீவ னுக்குத் தாழ்ச்சியும் உண்டு என்றே கொள்ளுதல் வேண்டும். அங்ஙனமே பிரமாணங்களும் கூறுகின்றன.-உண்மை இவ்வாறு இருக்க, பரமனுக்கும் ஜீவனுக்கும் மிகவும் ஒற்றுமை உண்டு என்று கூறுவது யாங்ஙனம்? எனச் சிலர் கருதக்கூடும்.
ஓர் அரசனுக்கு அவன் புத்திரனைத் தொண்டன் என்றும், அந்த அரசனோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் அவன் புத்திரன் என்றும் காண்கின்றோம். அது போன்றே
இங்கும் ப்ரஹ்மத்திற்கு ஜீவன்தொண்டன் என்றும், அந்த ப்ரஹ்மத்தோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் என்றும் கொள்ளக் குறையில்லை நான் இராஜ குமாரன்’ என்
னும் கருத்தைப் பெற்றுள்ள ‘(அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்னும் வாக்கியத்தை இங்குக் காண்க. அரசனுடைய புதல்வன் அரசனன்றோ?
இவ்வாறு உபேயத்தைக் குறிக்கும் வேதாந்த வாக்கியங்களின் கருத்தை மிமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி,கலக்கம் சிறிது மறக் கண்டோம். இனி, இராமாயணத்தில் இவ் உபேயத்தைக் காண்போம் :

இராமாயணமும் உபேயமும்

முதலில். எம்பெருமானுடைய அருளுக்கு இலக்கானவனை எம்பெருமானாகவே சுருதி இயம்புகின்றதே, இதை இராமாயணம் எவ்வாறு தெரிவிக்கின்றதோ, அதை அவ்வாறே அனுபவிப்போம்
திருவடி அசோக வனத்தில் ஸீதாபிராட்டி யாரைத் திருவடிதொழுது நிற்கும் போது, அப்பிராட்டியார் தாம், அத்திருவடியை நோக்கி, இவன் இராமதூதனோ? அல்லனோ?
என ஐயமுற்று, உண்மையை உணரவிரும்பி, இஷ்வாகு குலத்திலே திருவவதாரம் செய்தருளின புருஷோத்தமர்களான இராம இலக்ஷ்மணர்களுக்கும். வானரரான ஸுக்ரீவன் முதலானார்க்கும் தோழமை ஏற்பட்டதற்குக் காரணம் யாதோ? ஏற்பட்டது எவ் வாறோ? என்று வினவியிருப்பது நாம் அறிந்த தேயாம்.

அவ்வினாவிற்குத் திருவடி விடை விடுக்குங்கால், கூறிய வார்த்தை,  “(ராம ஸூக்ரீவயோரைக்யம் தேவ் யேவம் ஸமஜாயத) என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்து, பின்வருமாறு:- ‘புருஷோத்தமனாகிய இராமபிரானோ. மிக மிகப் பெரியோனும், ஒப்பற்ற மேன்மை பெற் றிருப்போனுமாம். குரங்காகிய ஸுக்ரீவனோ மிக மிகச் சிறியோனும், ஒப்பற்ற தாழ்ச்சி பெற்றிருப்போனுமாம். அப்பெருமான் இக் குரங்கைத் தோழமை கொள்வதற்குத் தக்க காரணம் இவன்பால் ஒன்றும் அறிகின்றி லேன், அம்மா!ஆயினும், இராமபிரான் ஸுக்ரீவன் ஆகிய இவ்விருவரும் ஒருவர் என்னலாம் படி, அவ்விருவருக்கும் உள்ள தோழமையைத் தான் அறிகின்றேன்.’-இன்னமும் கேட்டருளாய்: இராமபிரானுடைய தர்ம பத்தினியாகிய தேவரீருக்கு இலக்குமணன் தூது வருதல் முறையாகும்.-அல்லது, உயிர்த்தோழனாகிய ஸுக்ரீவன் அங்ஙனம் தூது வருதல் முறை என்னலாம்.
நானோ, ஸுக்ரீவன் தொண்டர்களுள் மிகவும் கடைப்பட்டவன். இவ்வாறு கடைப்பட்டவனாகிய இத்தொண்டன், தூது வருமாறு அவ்விருவருக்கும் தோழமை ஏற்பட்டுள்ளது என்றால், அத்தோழமை எவ்வாறு உள்ளது என்பதற்கு யான் விடை விடுக்கவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ?இங்கு, “ராம ஸுக்ரீவ யோரைக்யம்”’
என்றிருந்தாலும், அவ்விருவரும் ஒருவரே’ என இயம்புவாரும் உண்டோ? இல்லையன்றோ?
அவ்வாறு இயம்பினால், அதை உலகம் ஏற்குமோ?=சுருங்கச் சொல்லின், இராமபிரானும்
ஸுக்ரீவனும் உண்மையில் வேறு வேறு பொருளாகவே இருப்பவராம். ஆயினும், இன்ப
துன்பங்களை ஸமமாகப் பெற்றிருப்பவராம். அஃதாவது- இராமபிரானுடைய இன்ப துன்பங்களை ஸுக்ரீவனும், ஸுக்ரீவனுடைய இன்ப துன்பங்களை இராமபிரானும் பெற்றிருத்தலாம். இவ்வாறு இவ்விருவருக்கும் மிகவும் ஒற்றுமை இருப்பது பற்றி
இருவரும் ஒருவராகவே போற்றப் பெறுகின்றனர். இது போன்று, வீடுபேற்றைப் பெற்
றிருக்குங்கால், பரமனுக்கும் ஜீவனுக்கும் உண்மையில் வேற்றுமை உண்டு, ஆயினும்,
மிகவும் ஒற்றுமையைப் பற்றி, ஜீவன் ப்ரஹ்ம மாக ஆகிறான், எனப்போற்றப் பெறுகிறான்
என்பது, இங்குத் தெளிவு அன்றே?
இராமாயணம் இவ்வாறு ‘ப்ரஹ்மைவ பவதி‘ என்னும் சுருதியின் கருத்தை, கலக்கம் சிறிது
மின்றி, யாருக்கும் எளிதில் விளங்குமாறு இயம்பியிருத்தலைக் கண்டோமல்லவா?
இனி, இலக்குமணனுடைய சரிதத்தில், ‘எம்பெருமானுக்கு அடிமை செய்து உவப்பிப்பதே
இந்த ஜீவனுக்கு சிறந்த நன்மையாம்’ என்பதைக் காண்போம்:
இராமாயணம் இயம்புகின்றவாறு, இலக்குமணனுக்கே உரிய சீரிய சிறப்புக்களை,-”பசியராயிருப்பார் அட்டசோறும் உண்ணவேணும், அடுகிறசோறும் உண்ணவேணும்
என்னுமாபோலே, காட்டுக்குப் போகிறபோது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு அடிமை செய்யவேணும், எல்லா அடிமையும் செய்யவேணும், ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார்; படை வீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ண மாட்டாதே ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக் குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தை
யும். தரித்தடிமை செய்தார்” என்னும் ஸூத்திரத்தில், பிள்ளை லோகாசார்யர் வெகு அழகாக அருளிச் செய்திருக்கிறார். இந்தஸூத்திரத்தின் கருத்து :-
மிக்க பசியுடையோர் தம் பசியின் மிகுதியினால், ஆக்கின சோறும் ஆக்குகின்ற சோறும்
எல்லாம் தாமே உண்ணவேணும் என்றுஎண்ணுவர் . இவர் போன்று, இலக்குமணனும் இராமபிரானுக்கு எல்லா அடிமைகளும் தானே செய்யவேணும் என்று எண்ணுகின்றானாம். இந்த இலக்குமணன், முளைக்கும் போதே மணத்தோடு முளைக்கும் திருத்துழாய் போன்று, திருவவதாரம் செய்யும்போதே இராமபக்தியோடு அவதரித்தவனாம். ஆதலின், இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளும் போது, அவனுடன் செல்வதாக முயன்றனன்.
அம்முயற்சியைக் கண்ட இராமபிரான், ‘இலக்குமணா! நீ இத்திரு அயோத்தியிலேயே இருப்பாய்’ என்றனன். அப்போது, இலக்குமணன்,(நீரைப் பிரியில் உயிர் தரியாத மீன்நிலை
போன்றுள்ள) அந்த இராமபிரானைப் பிரியில் உயிர் தரியாத தன் நிலையை முன்னிட்டு,
“நாணோடு சேர்ந்த வில்லைத் தாங்கியும். உனக்கு முன்னே சென்றும், ஆங்கு ஆங்கு வழி
காட்டியும், காய், கனி முதலியவற்றைத் தேடிக் கொணர்ந்து உதவியும் இவ்வாறான அடிமையை இராமா ! நான் உனக்குச் செய் வேன் ; என்னை அழைத்துச் செல்வாய்’ என
வேண்டிக் கொண்டனனாம்.-அன்றியும், அப்பெருமானை அந்த இலக்குமணனே, தேவரீருக்குத் தொண்டு செய்யப் பெறாதபோது, நான் உயிர் தரியேன். தேவரீரோ எனில், நிறைவாளராகையாலே தொண்டைக் கொள்ளாவிடினும், உயிர்தாங்கத் தக்கவர். ஆயினும், என்னிடம் அடிமைகொண்டால தேவரீருக்கும் பெருமை உண்டு.-ஸீதாப்பிராட்டியார் தேவரீர் ஆகிய இருவரும் மலைச்சாரலில் விளையாடும் போதும்,-திருக்கண்வளருங் காலத்தும், அங்ஙனம் கண் வளருதலின்றி விழித்திருக்குங்காலும் எல்லா அடிமைகளும் செய்யவேணும். என் விருப்பத்துக்காக இன்றி,தம் விருப்பத்துக்கேற்ப ஏவி, என்னிடம் பணியை திருவுள்ளம் பற்ற வேணும்’ என்றும் விரும்பிப் பெற்றனனாம்.
இன்னமும், தானே சமையல் செய்து தானே உண்ணும் ஒருவன், நாளடைவில் தன்
வயிற்றைப் பெருக்கிக் கொள்வான்; மற்றவனோடு உண்ண இசையான். இவன் போன்று,
இலக்குமணனும். தானே வனத்தில் இராம பிரானும் ஸீதாபிராட்டியுமாகிற சேர்த்தியில், எல்லா அடிமைகளையும் செய்து, அடிமைக் கண் அன்பை பெருக்கிக் கொண்டவன் மற்றும் பரதன் முதலானாரோடு தானும் ஓர் அடிமை செய்ய இசைந்திலன். இவ்விசையாமையே எங்கே கண்டோம்? என்னில்,
இராமபிரான் வனவாஸத்தைச் செய்து, மீண்டு திரு அயோத்திக்கு எழுந்தருளி, முடி
சூடியிருக்கும் போது, ஒரு கையால் திருவெண் கொற்றக்குடையை எடுத்துப்பிடித்தும், மற்றொரு கையால் திருவெண்சாமரத்தைப் பணிமாறியும் இவ்வாறு இரண்டு அடிமையை ஒரு காலத்தில் செய்தனனாம்.
(நச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ ஜலான் மத்ஸ்யாவிவோத்ருதெள தனுராதாய ஸகுணம்.அகரதஸ் தே கமிஷ்யாமி பந்தானமனுதர்சயன், ஆஹரிஷ்யாமி தே-நித்யம் மூலாநி ச பலானி ச | பவாம் ஸ்துஸ்ஹ வைதேஹ்யா கிரிஸானுஷ ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமிஜாக்ரத ஸ்வபதச்ச தே 1 கரியதாமிதி மாம் வத ச த்ரம்ச சாமரம் திவ்யம் திருதவான் லக்ஷ்மணஸ் ததா ) என்னும் இவை காணத்தக்கன
இனி, இங்கு மற்றொரு முக்கியப் பொருளையும் நாம் ஆராய்ந்து அறிதல் இன்றியமை
யாததாம். முன்னம் கூறிய பகுதிகளில்,)’ இராமபிரான், ப்ரஹ்ம சப்தப் பொருளான
நாராயணனே’ என்பது நமக்கு விளங்குகின்றது.ஆயினும், ‘அப்பரமன் திருக்கலியாண
குணமும் இல்லாதவனா? அல்லது தீய குணம் சிறிதும் இன்றி, திருக்கலியாண குணம் நிரம்பி இருக்கப் பெற்றவனா? இராமாயணம் இப் பரமனை இயம்புகின்றது எவ்வாறோ? என்னும் இக்கேள்வி இங்கு ஏற்படுவது இயல்பேயாம்.-இதற்கு விடை பின்வருமாறு-
ஒரு நூலின் உண்மைக் கருத்தைஉணரும் போது,அங்ஙனம் உணர்வதற்கு ஏதுவாயுள்ள
வழி சில உண்டு. அவ்வழியைப் பின்பற்றிக் காணுங்கால், உண்மை நன்கு புலனாகும். இம்
முறையில் ஒரு வழியை இங்குக் காண்போம்.
இராமாயணம், முதலிலும், இடையிலும், இறுதியிலும் எப்பொருளை எவ்வாறு இயம்பு
கின்றதோ, அதை அவ்வாறே அறுதியிடுதல் மேற்கூறிய வழியாகும்.
இராமாயணம் முதன் முதலில் இராமபிரானைக் கூறுகின்றது எவ்வாறோ ? எனின்,
திருக்கலியாண குணமும் இல்லா தவன் என்று கூறவில்லை; ‘தீயகுணம் சிறிதும் இன்றி,
திருக்கலியாண குணமே நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என்றேகூறுகின்றது.
நாரதமுனிவனை நோக்கி, வால்மீகி முனிவன் மிக வணக்கத்துடன், இக்காலத்தில் இவ்வுலகில் சீலம் முதலிய எல்லா நற்குணங்களும் பொருந்தியிருப்பவன் யாவன்? என வினாவ,-யாவும் அறிந்த அந்நாரத முனிவன், இஷ்வாகு குலத்தில் திருவவதாரம் செய்தருளின இராமபிரான், எல்லாத் திருக்கலியாண குணகணங்களும் பொருந்தி யிருக்கப் பெற்றவனாம்;-எங்ஙனம் கடல் தன்னிடத்துள்ள சிறந்த-இரத்தினம் முதலிய பொருளைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருக்கின்றதோ,-அங்ஙனமே இராமபிரான் (உலக நன்மையை உண்டுபண்ணுவதான) தன்னிடத்திலுள்ள
சிறந்த திருவுள்ளக் கருத்துக்களைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருப்பவனாம்;
வீரத்தன்மையில் விஷ்ணு போன்றவன்; பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன்
போன்று காண இனியன் ; காலாக்னி போல்சீற்றமுடையவன்; பொறுமையில் பூமியோடு
ஒத்தவன் ; ஸத்தியத்தில் தரும தேவதையே வடிவெடுத்தது போன்றவன் என்று விடை
கூறினன்.
(கோன்வஸ்மின்ஸாம் ரதம்லோகே குணவான் கச்ச வீர்யவான்) என்னும்வால்மீகி முனிவன் வார்த்தையும்-(வம்சா ப்ரபவ: ராமோ நாம ஜனை: ச்ருத: 1 ஸமுத்ர இவ காம்பீர்யே விஷ்ணுநா ஸத்ரு சோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன: காலாக்னிஸத்ருச: க்ரோதே க்ஷமயா ருதிவீ ஸம: 1 ஸத்யே தர்ம இவாபர:) என்னும் நாரத முனிவன் வார்த்தைகளும் காணத்தக்கன.
இவ்வாறு, வேதாந்தக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வந்த (உபப்ரும்ஹண
மாகிய) இராமாயணம் முதன் முதலிலேயே இராமபிரானுடைய திருக்கலியாண குணங்
களை, ஆசார்யன் சீடனுக்குக் கூறும் முறையில் மிகமிகத் தெளிவாக இயம்பியிருத்தலைக் கண்டோம். இனி, இடையிலும் காண்போம்
அயோத்தியா காண்டம் முதலில் கூறப்பெற்றுள்ள வரலாறு பின்வருமாறு – சக்ரவர்த்தி, ஸபையில் வீற்றிருக்கும் அரசர் முதலானாரை நோக்கி, இது மிகப் பெரிதான இராச்சியம். இதை என் முன்னோரான மன்னர் மிகுந்த மனவூக்கத்துடன் பாதுகாத்து வந்தனர். அவரது வம்சத்தில் பிறந்த நானும், மனுநெறியைப் பின்பற்றி எனது அறிவு ஆற்றல்களுக்கு ஏற்றவாறு இது வரையில் பாதுகாத்து வந்தேன். எனது சரீரம் மிகவும் மூப்படைந்து விட்டது. ஆதலின், இந்த அரசுரிமையை இராமபிரானிடம் வைத்து, வருத்தந் தீர்ந்து, இனிது வாழ
விரும்புகின்றேன். இது பொருத்தமான செயல் என்று நீவீர் எண்ணியிருப்பின், நுங்கருத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன் என்று கூறினன்.
இதைச் செவிமடுத்த அவையிலுள்ள அரசர் முதலானோரனைவரும் அளவற்ற ஆனந்தம்
அடைந்தனர்; மிகமிகப் பெரிய கோஷத்தைச் செய்தனர்; அப்பெரிய கோஷத்தினால் எதிரொலியைக் கிளப்பி அங்குள்ள விமானத்தை அசையச்செய்தனர். இவ்வாறு தம் ஆனந்தத்தை அறிவித்து, இப்போதே இராமபிரான் இராச்சியத்தை ஏற்று, முடிசூடி, பட்டத்து
யானையின் மீது திருவெண்கொற்றக்குடை நிழலில் எழுந்தருளும் சிறப்பைக் கண்டு
களிக்கவேணும் என்றனர்.
இவ்வாறான களிப்பைக் கண்ட தசரத மன்னவன், திரும்பவும் அவ்வரசர் முதலானோரைக் குறித்து, ‘நீவீர் பேரிரைச்சல் செய்து கூறுவதை நோக்குங்கால், இது வரையில் கொடுங்கோல் மன்னனான தசரதன் பாதுகாத்து வந்தான் ; இவன் விலகுவது நலம்;
இனி, செங்கோல் மன்னனான இராமபிரான் இராச்சியத்தை ஏற்று பாதுகாக்கப் போகிறான்; நமக்குஇனி நற்காலம்! என்னும் நுங்கருத்து வெளிப்படுகின் றதே ! இவ்வாறு என்னை வெறுத்துக் கூறுதற்குக் காரணம் யாதோ? எனக்குக் குற்றம் ஏதேனும் உண்டோ?’ என்றனன்.
சக்ரவர்த்தியின் இவ்வார்த்தையைக் கேட்ட அரசர் முதலானோர். ஒரு கருத்துடன், மன்னர்பிரானே! தேவரீருக்குக் குற்றம் உண்டு என்று கூறினர். அக்குற்றம் யாதோ ? என்று
அம்மன்னர்பிரான் கேட்க, (பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே)-எண்ணிறந்த திருக்கலியாண குணக் கூட்டங்களுக்குக் கடலான இராமபிரானைப்
புத்திரனாகப் பெற்றிருப்பதே தேவரீருக்கு உள்ள குற்றம். அதனாலேயே தேவரீரை
வெறுக்கின்றோம் என்றனர்.-இவ்வாறு, இராமாயணத்தின் இடையில் இராமபிரான் திருக்குணங்களைச் சுருக்கமாய்க் கண்டோம். இனி, இறுதியில் காண்போம்.
‘இராமபிரான் பதினான்கு வருடம் வனத்தில் வளித்து, அதினின்றும், மீண்டு திரு
அயோத்திக்கு எழுந்தருளி,முடிசூடி,பதினோராயிரம் ஆண்டு இராச்சியத்தைப் பாதுகாத்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை.-அவன் மன்னர்பிரானாயிருந்து அரசு புரியுங்
கால், மக்களின் மனோநிலைமையைக் கண்கூடாகக் கண்ட வால்மீகி முனிவன், (” ஸர்வம் முதிதமேவாஸீத் ஸர்வோ தர்ம பரோபவத்)மக்களனைவரும் மனமகிழ்ச்சியுடனும், அவரவருக்குரிய தருமங்களில் ஊற்றம் பெற்றிருப்பவருமானார் என்று கூறியிருக்கிறான். இங்ஙனம் அனைவரும் இருப்பதற்கு காரணம் யாதோ? எனின், இந்த இராமபிரானுடைய
திருக்கலியாண குணமேயாம். (ராமோ ராஜ்யமுபாஸித்வ) என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது.-இராமன் தன் தேஜஸ்ஸினால் மக்களைஅடக்கி ஒடுக்கி ஆண்டவனல்லன், தன் திருக் கலியாண குணத்திற்கு ஏற்ப, இனிய நல் வார்த்தைகளைக் கூறி, பின் சென்று,வயப்
படுத்தி, ஆண்டவன் என்கிறான்.
இவ்வாறு இராமாயணத்தில், ‘இராம பிரான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்
கப்பெற்றவன்’ என்பதைக் கண்டோம்.-இலக்குமணன் இராமபிரானுடைய அத்திருக்
குணங்களில் மிகவும் ஈடுபட்டு உவப்புடன் எல்லா அடிமைகளும் செய்தவன்’ என்பதையும், (குணைர்தாஸ்யமுபாகத 🙂 என்னும் அந்த இலக்குமணன் வாக்கி யத்திலேயே நாம் நன்கு காணலாம்.
இங்ஙனம் இராமாயணத்தில் உபேயத்தைக் கண்டோம். இனி ஐம்பொருள்களுள் ஒன்றாகிய விரோதியைக் காண்போம்.

————–

வேதாந்தமும் விரோதியும்

எம்பெருமானை ஜீ வன்அடையாதவாறு எது தடையாய் நிற்கின்றதோ, அது, விரோதி’ எனப்படும். வேதாந்தம் அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவற்றை விரோதியாய் இயம்புகின்றது.-இதைச் சிறிது விவரித்துக் கூறுவோம்:
அஜ்ஞானம், ‘கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டமே ஆத்மா’ என
எண்ணும் எண்ணமும், ‘தான் எம்பெருமானுக்கு உரியவனல்லன்; தனக்காகவே இருப்பவன்’ என எண்ணும் எண்ணமுமாகும். இவ் விரு எண்ணங்களுள், முன்னது, தேஹாத்மாபிமானம்’ என்றும் பின்னது, ‘ஸ்வாதந்திரியாபிமானம்’ என்றும் கூறப் பெறும்.

தேஹாத்மாபிமானத்தைச் சிறிது விளக்கிச்சான்றுடன் கூறுவோம்: ‘இரும்புத் துண்டு, நெருப்பு இவ்விரண்டும் வேறு வேறு பொருள் களாயிருப்பினும், நெருப்பிலிட்டுப் பழுக்கக்
காய்ச்சிய அந்த இரும்புத்துண்டு, நெருப்புத்தொடர்பின் மிகுதியினால் நெருப்பாகவே
எங்ஙனம் தோன்றுகின்றதோ, அங்ஙனமே,-ஆத்மா, சரீரம் இவ்விரண்டும் வேறு வேறு பொருள்களாயிருப்பினும், அந்த ஆத்மாவும், சரீரத்தொடர்பின் மிகுதியினால் சரீரமாகவே தோன்றுகின்றான்’ என்பதை நாம் அறிதல் வேண்டும்.
இவ்வாறு, ‘சரீரமே ஆத்மா’ என எண்ணுங்கால், உண்மை உணர்வு சிறிதும் இல்லை. ஆத லின், (உணர்விண்மையே உறக்கமாதலின்-ஜீவனை உறங்குகின்றவனாகவே (அனாதி மாயயா ஸு ப்த:) என்னும் சுருதி இயம்புகின்றது. ( இந்தச் சுருதியில் மாயா சப்தம் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடு கூடிய பிரக்ருதி )என்னும் அசித்தைக் கூறும் வழியால் சரீரம் என்னும் பொருளைக் குறிக்கின்றது.)உண்டி உடைகளை உவந்து அவற்றைப் பெற ஓடித்திரியுங்காலத்தும், ஜீவனுக்கு இவ்வுறக்கம் உண்டு. அதனால் நன்மை சிறிதும் இல்லை. எப்போது, உறக்கம் போய் உண்மையை உணருகின்றனனோ, அப்போது தான் நன்மை உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளதும், அனாதி மாயயா ஸுப்த: என்னும் வாக்கியத்தோடு தொடர்புற்றதுமான  ” (யதா ஜீவ: ப்ரபுத்யதே) என்னும் சுருதியைக் காணுமவர்க்கு தேஹாத்மாபிமானம்’ தடை என்பது நன்கு புலனாகும்.
இங்ஙனம் தேஹாத்மாபிமானத்தைச் சுருக்கமாய்க்கண்டோம். ஸ்வாதந்திரியாபிமானத்
தையும் இனிக்காண்போம் :
‘ஆத்மா, அறிவுடையவன்’ என்ற போதே,’ஸ்வதந்திரன்’ என்று கூறியதாகக் தேறும்.
எங்ஙனம் என்னில்,-இந்த ஜீவன், முதலில் ஒரு பொருளை உள்ளபடி அறிகிறான்; பின்பு, அப்பொருளின் சீர்மையைப்பற்றி அதை விரும்புகிறான் ; அதன் பிறகு அதை அடைய முயல்கிறான் ;-அதற்கேற்பஏதுவைத் தேடுகிறான்; முடிவில் அதை அடைந்து, இன்பம் பெறுகிறான்
இவற்றை, வடமொழியாளர்,(ஜாநாதி இச்சதி, யததே, கரோதி,அனுபவதி) என்பர்
இவற்றை நோக்குங்கால்,அறிவுடை யனான ஜீவன்,தனக்காக ஒன்றை விரும்பி, முயன்று,
செய்து, இன்பம் துய்ப்பவன்’ என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் இருக்கின்றமையின், ‘இவன் ஸ்வதந்திரன்’ எனப்படுகிறான்.
அஷ்டாக்ஷரத்தில் முதல் பதம் பிரணவம்.-அப்பிரணவம் அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துடையது. அம்மூன்றுனுள், ‘ம்’ என்னும் எழுத்து அறிவுடையனான ஜீவனைக் குறிக்கின்றது.-இவ்வாறு, அறிவுடையவன்’ என்பதை அறிவிக்கும் ‘ம்’ என்னும் அக்ஷரத்தாலும்,-நான் இதை அறிகிறேன்’ என்னும் அனுபத்தாலும், ‘ஜீவன் ஸ்வதந்திரன்’ என்பதை நாம் அறியலாகும். இங்ஙனம் தன்னை ஸ்வதந்திரனாக (தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றில் முயன்று, செய்து, பெற்றுப் புஜிப்பவனாக) அறியுங்காலத்து, உண்மை உணர்வும் பெற்றிறான் ; தன் நிலைக்கேற்ற பயனையும் பெறான்.-இதனால்தான், அஷ்டாஷரத்தில், நடுவில் அமைந்துள்ள’நம:’ என்னும் பதமானது, ம்’ என்னும் அக்ஷரத்தினால் தேறிய ஜீவனுடைய ஸ்வாதந்திரிய நிலையை இல்லை செய்து, பாரதந்திரிய நிலையையே இவனுக்குரிய சீரிய தன்மையாக அறிவிக்கின்றது ‘நம:’ என்பதில், “ம: ந என்று எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டி, ‘எனக்கு நான் இல்லை; எம்பெருமானுக்கே உரியவன்’ என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. அஃது இங்குக் காணத்தக்கது.
”தனக்குப் பாரதந்திரிய நிலையை உண்மையாக உணருங்கால், நன்மை உண்டு; அப்பாரதந்திரிய நிலைக்கு எதிரான ஸ்வாதந்திரிய நிலையை உணருங்கால், நன்மை இல்லை” என்பது அஷ்டாஷர மஹா மந்திரத்தில் தேறிய ஸாரம் பொருளாதலின், ஸ்வாதந்திரியாபிமானம்’ தடை என்பது தெளிவு.
இனி, கருமம் தடை என்பதைக் காண்போம்: புண்ணியமும் பாவமும் கருமம் எனப்படும். இக்கருமம் எம்பெருமானை அடைய வொட்டாது தடுக்கின்றது. ஆதலின்,
விரோதி’ எனப்படுசின்றது.-ஆனால், பொய் கூறுதல் முதலிய பாவம் தடை என்னில், அதை நம் மனம் ஏற்கின்றது போன்று, புண்ணியமும் தடை என்னில், அதை நம் மனம் ஏற்குமோ? ஏற்காதன்றே?-உண்மை இங்ஙனம் இருக்க,புண்ணியத்தைத் தடையாக கூறுவது யாங்ஙனம்? எனச் சிலருக்கு இங்கு ஐயம் எழக்கூடும்.-இதற்குப் பரிஹாரம் பின் வருமாறு
‘புபுஷு, முமுஷு என மானிடரை இருவகையில் வகுத்துக்காணுதல் வேண்டும். இம்மை
மறுமைகளில் இன்பத்தை விரும்புகின்றவன் புபுஷு என்றும், பரம புருஷனை அடைய
விரும்புகின்றவன் முமுஷு என்றும் கூறப்படு கின்றனர். புபுஷு நிலைமைக்கேற்ப இம்மை
மறுமைகளில் ஓரொரு நன்மைக்கு எதுவாய் உள்ளது புண்ணியம் எனப்படும்.உதாரணமாக இவ்வுலகில் பசு, பூமி, புத்திரன், முதலிய நன்மைக்கு ஏதுவாயுள்ள புண்ணியங்களையும்,
மறுமையில் ஸு வர்க்கம் முதலிய நன்மைக்கு எதுவாயுள்ள புண்ணியங்களையும் நாம் காணலாம். இப்புண்ணயங்கள், பரமபுருஷனை விரும்புபவனுக்கு (முமுக்ஷவிற்கு) இம்மை
மறுமைப் பயன்களைக் கொடுத்துத் தடையாயிருக்கின்றமையின்,பாவங்களேயாம்?.
(அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்) என்னும் சுருதி வாக்கியமானது, குதிரை தன் ரோமங்களை விடுவது போன்று, புண்ணிய பாவங்களாகிற கருமத்தை விட்டு, பரமனுடைய
உலகத்தை இந்த ஜீவன் அடைவதாகக் கூறுகின்றமையின், கருமம் தடை எனத் தெரிகிற தன்றோ?(புண்ய பாபே விதூய நிரஞ்ஜன: பரமம் ஸாம்ய முபைதி) என்னும் வாக்கியமும் இங்குக் காணத்தக்கது.-இக்கருத்தாலே பொய்யில் புலவரும் *இருள் சேரிரு வினையுஞ் சேரா’ என்று கூறிச் சென்றனர்.-இதுகாறும், கூறியவாற்றால் கருமம் தடை என்பதைக் கண்டோம். இனி, ப்ரக்ருதி ஸம் பந்தம் விரோதி என்பதைக்காண்போம்
ப்ரக்ருதி ஸம்பந்தம்‘ என்னுமிடத்திலுள்ள”ப்ரக்ருதி’ என்னும் சொல், தேவ சரீரம், மானிட சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம் என்னும் நான்கு வகையிலுள்ள அசித்தைக் குறிக்கும்; ஸம்பந்தம் என்னும் சொல்,அந்த அந்தச் சரீரத்திற்கும் ஆத்மாவுக்கும் உள்ள-தொடர்பைக் குறிக்கும். இத்தொடர்பு, எம்பெருமானைப் பெற்று, பூர்ணமாக அனுபவித்து, அடிமை செய்து, அவனை உவப்பிப்பதற்குத் தடையாயிருக்கின்றது.-இப்பொருள்  (தஸ்ய தாவதேவ சிரம் யாவந்ந விமோ யே அத ஸம்பத்ஸ்யே) என்னும் சுருதியினால் நன்கு விளங்கும். இந்தச்
சுருதியின் கருத்து: “ஸத் என்னும் பரமனைப் பஜனம் செய்பவனுக்குச் சரீரத் தொடர்பு
உள்ளவரையில் விளம்பம் உண்டு; சரீரத் தொடர்பு மறுவலிடாதபடி விட்டதும் பரமனை அடைகின்றான்” என்பதாம்.இதனால்,’சரீரம் தடை’ என்பது வெள்ளிடைமலை.
இவ்வாறு, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதைக் கண்டோம்.
மேற்கூறிய அஜ்ஞானம் முதலியவை போன்று,அஜ்ஞான வாஸனை, கரும வாஸனை,
ருசி ஆகிய இவையும் பரமபுருஷனை அடைய வொட்டாது தடையாயுள்ளனவாம்.
பாம்பு முதலியவற்றைக் காணும் போது, உண்டாகும் அச்சம் முதலியவற்றுக்கு காரணமாயுள்ளது ‘அஜ்ஞான வாஸனை’ என்றும்,-துரும்பு முதலியவற்றைக் கிள்ளுதற்குக் காரணமாயுள்ளது ‘கரும வாஸனை’ என்றும், பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்
களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை ‘ருசி’ என்றும் நாம் அறிதல் வேண்டும்.-இங்ஙனம், அஜ்ஞானம், கருமம்,ப்ரக்ருதி ஸம்பந்தம், அஜ்ஞான வாஸனை,கரும வாஸனை,ருசி இவை பரமனை அடைவதற்குத் தடையாய்க் கண்டோம்.

இனி, சிலருடைய கருத்துக்கிணங்க வேறொருவாறு தடையைக் கூறுவதாகக்  தோன்றும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும் காண்போம்(தத் யதா ஹிரண்யநிதிம் நிஹிதம் அக்ஷேத்ர ஜ்ஞா: உபர்யுபரி ஸஞ்சரந்த: ந விந்தேயு: எவ மேவ இமா: ஸர்வா: ப்ரஜா:
அஹரஹர் கச்சந்த்ய: ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா🙂 என்பதே அவ்வேதாந்த வாக்கியமாம்.-இவ்வாக்கியத்தின் கருத்து : ‘ பூமியின் கீழே உள்ள புதைபொருளை அப்பூமியின் இயல்பை உணராதார், தினந்தோறும் அப்பூமியின்
மேலே செல்பவராயிருந்தும், எங்ஙனம் பெறு கிறாரில்லையோ, அங்ஙனமே, மிகமிகச் சிறந்த பயனும், ஆத்மாவுமான பரமனை உணராதார். எல்லாக்காலத்தும் அவனோடு ஒருவாறு தொடர்புற்றிருந்தும், பெறுகிறாரில்லை. இவர் பொய்யான அஜ்ஞானத்தினால் ஆத்மாவினிடத்தில் நின்றும் இழுக்கப் பெற்றும், மறைக்கப் பெற்றும் இருப்பவரன்றோ?’ என்பதாம்.
இங்கே, பின்குறிக்கப்பெறும் பொருள்முக்கியமாய் அறியத்தக்கதாம் -” முத்துச்சிப்பி
வெள்ளியாய்த்தோன்றுதற்குக் காரணம் குற்றம் என்பது உலகானுபவத்தினால் எங்ஙனம் புலனாகின்றதோ, அங்ஙனமே, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணம்
குற்றம் ‘ என்பதும் பிரமாணத்தினால்(வேதாந்த வாக்கியத்தினால்) புலனாகின்றது.
அக்குற்றம் அவித்யை. அஜ்ஞானம் என்பனபோன்றுள்ள சப்தங்களினால் குறிக்கப் பெறுகின்றதாம். அந்த அஜ்ஞானமும், அதனால் உண்டாம் பிரபஞ்சத்தோற்றமும், பிரபஞ்சமும் பொய்ப்பொருளாம்.
“தத்த்வம் அளி’ என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒருவனே உண்மைப் பொருள்
என்னும் உண்மை உணர்வு உண்டாகும் போது, மேற்கூறிய அஜ்ஞானமும்,அதன்
காரியங்களும், அழிந்து விடுகின்றமையின், அந்த அஜ்ஞானமும் அதன் காரியங்களும்
பொய்ப் பொருள்’ என்பது தெளிவாக விளங்குகின்றது? “இதைத்தான் மேற்
கூறிய வேதாந்த வாக்கியத்திலுள்ள அந்ருதசப்தம் இயம்புகின்றது” என்பதே அறியத்
தக்க அம்முக்கியப் பொருளாம்.
‘அஜ்ஞானமும், அதன் காரியமும் உண்மைஉணர்வினால் போக்கத் தக்கவையாயிருத்
தலின், பொய்ப் பொருள்களாம்’ என்பதும்,-‘அந்த அஜ்ஞானமே, ப்ரஹ்மமாக மாத்திரம்
இருக்கும் இருப்புக்குத் தடை’ என்பதும் இங்குத் தேறிய ஸாரப் பொருள்களாம்.
இக்கருத்தையும், மேற்கூறிய (அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவை
தடை என்னும்) கருத்தையும் வேத வாக்கியங்களிலே காணுமவர்க்குக் கலக்கம் ஏற்படுவது இயல்பேயாம். இக்கலக்கத்திற்கு, மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிக்காணுங்கால் உண்டாம் பரிஹாரம் பின்வருமாறு-
”நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் மருத்துவனைக் கிட்டி, தன் நோய் தீருமாறு
மருந்தைப் பெற விரும்புகின்றான். அம்மருத்துவனும், அவன் நோயை உள்ளபடி
உணர்ந்து, அந்நோய்க்குத் தக்க மருந்தைக்கண்டு, உதவுகின்றான். அங்ஙனம் உதவப்
பெற்ற அந்நோயாளியும், அம்மருந்தை உட் கொள்ள,அவன் நோய் தீருகின்றது. இதை
இங்கு எடுத்து நாம் நோக்குதல் வேண்டும்.-நோக்கின் நோயின் உண்மையை உணர்ந்து,
தக்க மருந்தை உதவுகின்றதும், நோயின் பொய்மையை உணர்ந்து அங்ஙனம் மருந்தை
உதவா தொழிகின்றதும் யார்க்கும் நன்கு விளங்குகின்றன அல்லவா? நோயின் பொய்
மையை உணர்ந்தும், மருந்தை உதவுவார் உண்டோ? இல்லையன்றோ? இதுபோன்று, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணமாயுள்ள குற்றம்\(அஜ்ஞானம்) உண்மையாயிருப்பின், அது தீருவதற்கு, ‘தத் த்வம் அளி” என்னும் சாஸ்திரம், ஆத்மா ஒருவனே உண்டு’ என்னும் உண்மையை உணர்த்தி, உதவி செய்ய இடம் உண்டாம். ‘அஜ்ஞானம் உண்மை இல்லை’ என்னில், ‘சாஸ்திரம் உதவி செய்ய இடம் இல்லை’ என்பதைக் கூறுதலும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ?’அஜ்ஞானமும் உண்மைதான்’ என்று கொள்ளில், ‘ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்; மற்றொன்றும் உண்மையில் இல்லை என்னும் கொள்கைக்கு இடமுண்டோ? இல்லை யன்றோ? (‘அஜ்ஞானமும் உண்மை’ என்று கொள்ளுங்கால், அஜ்ஞானமும் ஆத்மாவும் உண்மைப் பொருள்களாய்த் தேறுகின்றன அல்லவா? ‘ஆத்மாவைத் தவிர ஒன்றும் உண்மையில் இன்று’ என்பது பொருந்துவது எவ்வாறு?)
இதனால் என்ன தேறிற்று? என்னில் ‘ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்கு ஏதுவான
அஜ்ஞானத்தை உண்மையாகவோ, பொய் மையாகவோ ஒத்துக் கொள்வதற்கு இல்லை”
என்னும் கலக்கமே தேறிற்று.-இவற்றை நெஞ்சில் கொண்டு நோக்கு
வார்க்கு, ”தத் யதா …..அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதிக்கு மேற்கூறியவாறு கருத்துரைத்தல் பொருத்தமுடைத்தன்று என்றால், வேறு கருத்து யாதோ? எனின், கூறுவோம்.
ஒருவன் செய்யும் கருமம், பயனில் சிறிதும் விருப்பம் இன்றி,எம்பெருமான் முகமலர்த்திக்
குறுப்பாகவே, செய்யப் பெறுமாயின், அக் கருமம் ருதம்‘ என்றும், இவ்வாறின்றி
இம்மை மறுமைகளில் ஓரொரு பயனை விரும்பிச் செய்யப்படுமாயின், அக்கருமமே
‘அந்ருதம்’ என்றும் கூறப்படும். இம்முறையில், மேற்கூறிய சுருதியில் உள்ள அந்ருத
சப்தம், ஓரொரு பயனை விரும்பிச் செய்யும் கருமத்தையே கூறுகின்றமையினாலும், அக்
கருமம், பரமனை அடைவதற்குத் தடையாயிருத்தலாலும், மேற்கூறியவாறு இங்குக்
கலங்க இடம் இல்லை.
“அச்வ இவ ரோமாணி விதூய பாபம்” என்னும் சுருதி, பாவங்களை விட்டுப் பர
மனைப் பெறுகின்றான்” என்னும் கருத்தையும்,
“ஏதம் ப்ரஹ்ம லோகம் நவிந்தந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதி,பாவமுடை
யார் பரமனைப் பெறுகின்றாரில்லை’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளனவாதலின், இங்கு முரண்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லை?-இல்லையன்றோ? இதனால்,’அந்ருத சப்தம்
பொய்ப் பொருளைக் குறிக்கும்’ என்று கூறும் போது ஏற்படும் இடர்களுக்கும் இங்கு இட
மின்று என்பது யாவருக்கும் புலனாகும்.
இவ்வாறு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிப் பொருள்கொள்வார்க்குக் கலங்க
இடமில்லை என்பதைக் கண்டோம். இனி, இராமாயணத்தில் விரோதியைக் காண்போம்:

இராமாயணமும் விரோதியும்

‘இராமாயணம் விரோதியை, ஒருவாறு மெய்ப்பொருளாகவே உணர்த்துகின்றது
என்பதையும் உபபாதித்துக் காட்டுவோம் :-இது மெய்’ ‘இது பொய்’ என்பதை நாம்
அறுதியிடுவது எவ்வாறோ? எனின், யாரும் எளிதில் உணருமாறு ஓர் அனுபவத்தை
முதலில் எடுத்துக் காட்டுவோம்.-ஒருவன், முதலில் முத்துச் சிப்பியை வெள்ளி என அறிந்து, அதை எடுக்கச் சென்று,பின்பு, இது சிப்பி; வெள்ளியன்று’ என்னும் உண்மையை உணர்ந்து, அதை எடுக்காது விட்டிடுகிறான். அங்கு, ‘வெள்ளி பொய்ப்பொருள்’ என்பது தெளிவு.
வேறொருவன், வெள்ளியையே வெள்ளி என உண்மையை உணர்ந்து, அதை எடுக்கச் சென்று, எடுத்து, அதனாலாம் பயனைப் பெறுகிறான். இங்கு, ‘வெள்ளி மெய்ப் பொருள்
எனபதும் யார்க்கும் நன்கு புலனாம்.
இம்முறையைக் கைக்கொண்டு.இராமாயணம் மெய் பொய்களை அறுதியிடுகின்றது’
என்பதை நாம் அறியலாம்; எங்கே? என்னில், திருவடி, இராமபிரானுடைய திருக்குணம்
சிறிதும் நடையாடாத அசோகவனத்தில் போய்ப்புக்கு, தென்றலும், சிறுதுளியும்
போன்றுள்ள இராம நாமத்தைக் கூறுங்கால், அதைத் திருச்செவி ஏற்ற ஸீதாபிராட்டியார்-முதலில் இந்நிலத்தில் இது பரிமாறுவது ஒன்றல்ல; இது சித்தமோஹத்தால் வந்ததோ? வாதகதியோ? உன் மாதஜவிகாரமோ?ம்ருக திருஷ்ணிகையோ?” என்று ஐயமுறுகிறார். பின்பு ‘இவன் (ஹனுமான்) முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்; இது
கேட்டு, நாம் வேற்றுமை பெற்றிருக்கிறோம்;-ஆனபின்பு, இது மெய்யாம்’ என்று திருவுள்ளம் தெளிந்து இன்புறுகிறார் என்பது வரலாறு.-இவ்வரலாற்றைத் தெரிவிக்கும் வார்த்தை:-(கிம்நு ஸ்யாத் சித்தமோஹோயம் பவேத் வாதகதிஸ்த்வியம் | உன்மாதஜோ விகா
ரோவா ஸ்யாத் இயம் மருக ருஷ்ணிகா | அதவா நாய முன்மாத : மோஹோ யுன்
மாத லக்ஷண: ஸம்புத்யே சாஹமாத்மான மிமம்சாபிவனெளகஸம்) என்பதாம்.
(தலைமகனைப் பிரிந்த தலைமகளுக்கு. தன் தலைமகன் நன்மையைக் கேட்பதில் விருப்பம்
உண்டாவது இயல்பேயாம்; அவ்விருப்பினால் அவனைப் பற்றிய எண்ணமும் இடையீடின்றி
ஏற்படும். அவ்வெண்ணத்தின் ஒருநிலையை சித்தமோஹம் என்பர். ஊணும் உறக்கமும்
இன்றி இருக்கும்போது, வாத பித்த சிலேஷ்மங்களாகிய தாதுக்களுக்குக் கலக்கம் உண்
டாகும்.அக்கலக்கத்தினால் உண்டாகும் காற்றின் ஒரு நிலைக்கு வாதகதி’ என்று பெயர்.
அந்நிலையிலுள்ள பிரமத்தை இங்கு வாதகதி என்று கூறுவர். தலைமகனைப் பிரிந்த தலை மகளுக்கு உள்ள ஒருநிலையை உன்மாதம் என்றுபகருவர். அந்த உன்மாதத்தினால் உண்டாகும் பிரமத்தை உன்மாதஜ விகாரம் என்று செப்புவர். மருகதருஷ்ணிகையாவது ஒன்றை மற்றொன்றாக அறிதலாம். கானலைத் தண்ணீராகக் கருதலாம் ]

இங்கு ஸீதாப்பிராட்டியார், முதலில் திருவடி வார்த்தையைப் பொய்யாக பிரமித்து,
தக்க சான்றுகளினால், ‘இது பொய் அன்று ;மெய்தான்’ என்று அறுதியிட்டிருப்பதை உலகம் நன்கு காணக் கூடுமன்றோ? இது போன்று,(பிரஹ்மம் பிரபஞ்சமாகத் தோன்றுதற்கு காரணமாகிய) ‘அஜ்ஞானமும், பிரபஞ்சத் தோற்றமும், பிரபஞ்சமும் ஆகிய இவை
பொய்ப் பொருள்கள் தாம்’ என்று அறிதியிடு தற்குத் தக்க சான்றுகள் உளவாகில், நாம்
இசையத் தட்டு ஒன்றுமிராது. அங்ஙனம் உலகத்திலும் சாஸ்திரத்திலும் சான்றுகள்
காணக் கிடைக்காதவையே யாம்’ என்பது இங்கு முக்கியமாய் அறியத்தக்கதாம்.
இனி, தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்தரியாபிமானமுமாகிய இவை, பரமனைப்
பெற்று அனுபவித்ததற்கு உண்மையான இடையூறாம்’ என்பதை இராமாயணத்தில்
காண்போம். இங்கு முதலில், பின்வருவது கவனிக்கத் தக்கதாம்:
ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருப்பானாயின், அவன் ஸத்து’ என்றும், அவ்
வறிவு பெறாது இருப்பானாயின், அவன் அஸத்து’ என்றும் வேதாந்தம் அறிவிக்கின்றது
(ஸந்தமேனம்; அஸன்னேவஸபவதி) ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருந்தும், அவ்வறிவுக்கு ஏற்ப அன்பையும் ஆதாரத்தையும் பரமன்பால் செய்யாது இருப்பின், அவனை
ஸத்து என்றோ, அஸத்து என்றோ, மேற்கூறிய சுருதி அறிவித்திலது. ஆயினும், அவனும்
அஸத்தே’ என்றுதான் கூறுதல் வேண்டும்.-அவன் அறிந்தும் அன்பைச் செய்யாது இருக்
கின்றமையின் அவனுக்குக் குற்றம் அதிகமாம்-இதுபோன்று, “ஒருவன் ஜீவனாகிய தன்னை
தேஹமாகவோ, ஸ்வதந்திரனாகவோ உணரவில்லை; தன் உண்மை நிலையை ஒருவாறு
உணர்ந்தவனேயாம். ஆனாலும், அவன் தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்திரியாபிமான முமாகிய குற்றம் பெற்றிருப்பவன் எவ்வாறு சரிதம் பெற்றிருப்பனோ, அங்ஙனம்
சரிதம் பெற்றிருப்பானாயின், பரமனை அனுபவித்து வாழப்பெறாது இழந்து விடுகிறான்”
என்பது ஓர் உயரிய உண்மைப் பொருளாம்.
இவ்வுண்மைப் பொருளை இராமாயணம், சக்ரவர்த்தியின் வரலாற்றில் தெளிவாகத்
தெரிவிக்கின்றது.எங்கே?எங்ஙனம்? என்னில்,
அவ்வரலாற்றை முதலில் கூறுவாம்: “சக்ரவர்த்தி, வஸிஷ்டரைக் குல குருவாகக் பெற்
றிருந்தவர் ; அச்வமேதம், புத்திர காமேஷ்டி முதலியவற்றைச் செய்தவர். ஆதலின், ஆத்மாவின் உண்மை நிலையை உணராதவரல்லர். இங்ஙனம் இருப்பினும், இராமபிரானுக்கு முடி சூடுவதாய் நிச்சயித்து, தன் ப்ரிய மஹிஷியான கைகேயியிடம் சென்று தெரிவிக்க. அப்போது, ‘பரதனுக்கு முடி சூடவே ணும்; இராமன் பதினான்கு வருஷம் வனம் செல்லவேணும்’ என அக்கைகேயி வேண்டிக் கொள்ள சக்ரவர்த்தியும் அவ்வேண்டுதலுக்கு இசைய, இராமபிரான் இலக்குமணனோடும், ஸீதாபிராட்டியோடும் காடு சென்றனன்” என்பது வரலாறாகும்.
இவ்வரலாற்றைக் கூறுமிடத்து, இராமாயணம் சக்ரவர்த்தியைப் பல இடங்களில்
கைகேயியிடம் காமம் பெற்றிருப்பவன்’ என்றே நிந்தித்துக் கூறியிருக்கின்றது. ‘
காமீ கமல பத்ராஷீ முவாச வனிதாமிதம்) என்பதையும், இது போன்றுள்ள வசனங்களையும்
இங்குக்காண்க. ஒருவனுக்கு, ஆதமாவினுடைய உண்மை உணர்வு உள்ளபடி இருக்குமேயானால், பெண்ணாசை சிறிதும் இராது.’காமீ. என்று கூறும் போது, பெண்ணாசை உண்டு என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
தேஹாத்மாபிமானமும் ஸ்வாதந்திரியா பிமானமும் பெற்றிருப்பான் போன்றவன் சரிதமே
யன்றோ? அக்காலத்திலேயே பரம புருஷனான இராமபிரானை அனுபவித்து வாழப்பெறாது
முடிய நேரிட்டதன்றோ? ஆனால், ச க்ரவர்த்தி இராமபிரானைப் பிரிந்து முடிய நேரிட்டதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு; கைகேயிக்கு முன்னமேயே சக்ரவர்த்தி இரண்டு வரங்கள் தருவதாய் வாக்களித்திருந்தத்தினாலும், அதைப் பின் சென்று ஸத்தியத்திற்குக் கட்டுப்பட்டு,இராம பிரானாகிய தருமத்தைத் துறந்து விட்ட தனாலும் அப்பரமனை இழக்க நேரிட்டது. ஸத்திபம்’ என்பது தருமமேயானாலும், இராமபிரா னாகிய மிகமிகச் சிறந்த தருமத்தைக் காணுங்கால், அந்த ஸத்தியம் என்னும் தருமத்தை ஒரு பொருளாய்க் கருதாமல் காற்கடை கொள்ள வேண்டியவன் சக்ரவர்த்தி.அங்ஙனம் அந்த ஸத்தியத்தைக் காற்கடை கொள்ளாது பற்றி, துறக்கத் தகாத அப்பரமனைத் துறந்ததே, இராமனை அனுபவிக்கப் பெறாது இழந்ததற்கு காரணம். [ இராமபிரான் மிக மிகச் சிறந்த தருமம் என்பதை வரும் உபாயத்தைப் பற்றிக் கூறும் பகுதியில் நாம் காணலாம்.] இதை, பிள்ளை லோகாசார்யர் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு” என்று அருளிச் செய்திருக்கிறார்.-உண்மை இவ்வாறு இருப்பினும், கைகேயி பால் உள்ள ஆசையும் இராமபிரானை இழந்த தற்கு காரணம் என்னில், குற்றம் ஒன்றும் வாராது, ‘மற்றதில் பற்றுள்ளவனுக்குப் பரமன் கிடைக்க மாட்டான்; பற்றற்றவனுக்கே பரமனைப் பெறலாம்’ என்பதும் சாஸ்திரத்தில் கூறப்பெற்றுள்ள ஓர் உயர்ந்த உண்மை . இவ்வாறு தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியாபிமானன் இவற்றின் தடைத் தன்மையைக் கண்டோம
இனி, இராமாயணத்தில் கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதையும் காண்போம். இராமபிரான் எம்பெருமான்; ஸீதாபிராட்டி எம்பெருமாட்டி” என்பது உண்மை.-இராமபிரானுக்குப் புண்ணியமும் பாவமும் உண்மையில் இல்லை. இதுபோன்று, ஸீதா பிராட்டியாருக்கும் புண்ணியமும் பாவமும் இல்லை’ என்பதும் உண்மையேயாம். ஆனாலும், ஸீதாபிராட்டியார் ., ஜீவன், இங்ஙனம் இருப்பின் பரமனைப் பிரிய நேரிடும்’ என்பதைத் தம் சரிதத்தில் வெளியிட்டிருக்கிறார்.-இதை முதலில் நாம் இங்கு அறிதல் அவசியமாம்.
“‘இராமபிரான் காட்டிற்கு எழுந்தருளும் போது, ஸீதாபிராட்டியாரின் மென்மையை
யும், காட்டின் வன்மையையும் திருவுள்ளம் பற்றி, அயோத்தியிலேயே தாம் வனவாஸம்
செய்து திரும்பிவரும் வரையில் அப்பிராட்டியாரை இருக்க வேண்டிக் கொள்கிறான். அப் பிராட்டியாரும் அப்பெருமான் பிரிவு பொறாது, தம்மை உடன் அழைத்துச் செல்ல வேணும் என விரும்புகிறார். பலகால் விரும்பியும், இசையாது இருந்த இராமபிரானைக் குறித்து, “என் தந்தையார் என்னை ஆண்மை உடையானொருவனுக்குக் கொடாது, பெண்
ணுக்கே கொடுத்து விட்டார்; ஆனால், “நான் பெண்ணோ? ‘ என்று தேவரீர் எண்ணலாம்.
அகவாயில் பெண்மையும், புறவாயில் ஆண்மையும் பெற்றிருப்பவரன்றோ ? நீவீர். அகவாயிலும் உண்மையில் ஆண்மை பெற்றிருப்பீராயின், இங்ஙனம் என்னை விட்டுச் செல்வதாகக் கூறுவீரோ ? கூற மாட்டீரன்றோ?-(ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்றனள்” என்பது சரித்திர உண்மை.-தம் சரிதத்தினால் உலகுக்கு நன்மை புரிய வந்த பிராட்டியார், புருஷோத்தமனான இராமபிரானைக் குறித்து, இவ்வாறு என் தந்தையார் பெண்ணுக்கே பெண்ணைக் கொடுத்தார் என்று இயம்புவது முறையாமோ? ஆகாதன்றோ? இவ்வாறு கூறியது பகவதபசாரமன்றோ? இது முதலில் இங்குக்குறிக்கொள்ளத் தக்கது.
மேலும், இராமாயணத்திலேயே வேறொரு வரலாறும் இங்குக் காணத்தக்கதாம்:
இராமபிரான் ஸீதா பிராட்டியார்பால் உள்ள அன்பின் மிகுதியினாலே, மாரீசன் என்னும் மாயா மிருகத்தின் பின்னே வெகுதூரம் சென்று, அம்மிருகத்தை அம்பினால் அடித்துக்
கொன்றனன். அந்த சமயம் மாரீசன் மிருகரூபத்தைவிட்டு, தன் சரீரத்தை எடுத்து
உயிர் துறந்தனன் ; அங்ஙனம் உயிர் துறக்குங்கால், இராமபிரானுடைய குரல் போன்றுள்ள
தன் குரலாலே ஹா ஸீதே ! ஹா லக்ஷ்மணா என்று கூறினன். அக் கூற்று பிராட்டியார் திருச்செவியில் பட, அப்போதுஇலக்குமணனை, இப்போதே நீ சென்று இராமபிரானை இரட்சித்தல் வேண்டும்’ என்று அவள் வேண்டிக் கொள்ள, (இராமபிரா னுடைய சிறப்பைஉள்ளபடி உணர்ந்த ) இலக்குமணன், மாரீசன் மாயையைக் கூறி, அவ்வாறு செல்ல இசையாது இருந்தனன். அங்ஙனம் இலக்குமணன் இசையாது இருக்க, பிராட்டியார் அவனை நோக்கி, கடுஞ்சொற்களைக்-(“”அநார்ய, அகருணாரம்ப, நருசம்ஸ, குலபாம்.ஸந.)கூறினார் என்பதே அவ்வரலாறாம்.-இலக்குமணன் இயற்கையிலேயே இராம
பிரானிடம் அளவற்ற அன்பு பெற்றிருப்பவனாம். அவ்வாறு பரமபக்தி பெற்றிருக்கும்
அந்த இலக்குமணனை நோக்கி, கூறத் தகாத(லக்ஷ்மணா ! நீ நிச்சயமாய் என்னை உனதாககிக் கொள்ளக் கருதி,இம் மாதிரி கபட வேஷத்துடன் கானகம் வந்திருக்கின்றாய்
என்று கூறி) மேற்கூறிய கடுஞ் சொற்களைக் கூறியது அப்பிராட்டியாருக்குத் தகுமோ?
தகாதன்றோ ? இவ்வாறு கூறியது பாகவதாபசாரமன்றோ?இதுவும் இரண்டாவதாக இங்கு
காணத்தக்கது.
‘இம்மாதிரி பரமனிடமும்,பாகவதோத்தமனான இலக்குமணனிடமும் பிராட்டியார்
நடந்து கொண்டமையின், இவை காரணமாகப் பரமனைப்பிரிந்து, அசோக வனத்தில்
அரக்கிமார் நடுவில் இருந்து துன்புற வேண்டிற்று’ என்பதை இங்கு நாம் அறிதல்
வேண்டும்-இதை ஸீதாபிராட்டியார் அருளிச் செய்த”(மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி நஸம்சய:) என்னும் வார்த்தையில் நன்கு காணலாம். இவ்வார்த்தையில், இராமபிரான் திறத்தில் செய்த அபராதத்தை’கிஞ்சித்’என்னும் சப்தமும், இலக்குமணன் திறத்தில் செய்த அபராதத்தை மஹத்’ என்னும் சப்தமும் கூறுகின்றன என்று நாம் நன்கு அறியலாம். இவ்வாறு, கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதை பிராட்டியார் சரிதத்தில் ஒருவாறு கண்டோம்.
இனி, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதை இராமாயணத்தில் சில இடங்களில் காட்டுவோம்.
(1) இராமபிரான், ஸீதையுடனும் இலக்குமணனுடனும் சரபங்கருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளும் தருணம். அத்தருணம் இந்திரன் சரபங்கரிடம் வந்து அளவளாவிக்
கொண்டிருந்தான். அந்த இந்திரன், இராம பிரானை அப்போது கண்டு, இந்த இராமன்,
வேறொருவராலும் சிறிதும் செய்ய இயலாத மிகப் பெரியதொருகாரியத்தை (இராவண
வதத்தைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,அவதரித்தவன். அதை அவன் நிறைவேற்றிய பிறகு என்னைப் பார்ப்பது நலம் என்று கூறி, சரபங்கரிடம் விடை பெற்று, இரதம் ஏறி, தன் உலகம் சென்றான். இந்திரன் சென்றதும், இராமபிரான் சரபங்கரிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கினன் ; பின்பு இந்திரன் வந்து போனதைப் பற்றி வினவினான்.
அவ்வினாவுக்கு விடையாக சரபங்கர் கூறிய வார்த்தையை பின்வருமாறு காணலாம்:

(மாமேஷவரதோ ராம ப்ரஹம லோகம் நி ஷதி 1 ஜிதமுக்ரேண தபஸா து ப்ராபம் அக்ரு
தாத்மபி: அஹம் ஞாத்வா நரவ்யாக்ர வர்தமானம் அதூரத |
ப்ரஹ்மலோகம் நகச்சாமி த்வாம் அத்ருஷ வா ப்ரியாதிதிம் த்வயாஹம் புருஷவ்யாக்ர தார்மிகேண மஹாத்மநா! ஸமாகம்ய கமிஷ்யாமி த்ரிதிவம் தேவ ஸேவிதம் )
இதின் கருத்து : ”இராமா ! எல்லோருககும் நன்மையை அளிப்பவனாகிய இந்த இந்திரன்,பிரமனுடைய ஆணையினால் அப்பிரமனது உலகத்திற்கு என்னை அழைத்துக்
கொண்டு போக விரும்புகின்றனன். நான் ஸமீபத்தில் எழுந்தருளியிருக்கும் உன்னை
ஞானக் கண்ணால் கண்டவனாதலின், மிகவும் இனியனாகிய உன்னை வெளிக்கண்களாலும் கண்டு, களிப்புற எண்ணி, (திரும்பி வருதல், அழிதல் முதலிய குற்றங்களோடு கூடிய) பிரமனது உலகத்திற்குச் செல்ல விருப்பம் இன்றி இருக்கின்றேன். மிகமிகச் சிறந்த தர்மம் எனப் போற்றப் பெறும் பரமனாகிய உன் குளிர்ந்த நோக்குக்கு இப்போது இலக்காகிப் பின்பு அநந்தன், கருடன் முதலிய நித்யர் சூழ்ந்திருக்கப் பெற்றுள்ள பரமபதத்தில் உன்னை அடைய விரும்புகின்றேன்” என்பதாம்.
சரபங்கள் இவ்வாறு கூறி, இராமபிரானை நோக்கி, ” இராமா ! நீ சிறிது நேரம் என்னை
நோக்கிக் கொண்டிரு” என விரும்பி, அவ் வெம்பெருமானுடைய முன்னிலையிலேயே
எரிந்து கொண்டிருக்கும் ஹோமாக்னியில் ப்ரஹ்மமேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டு
பாம்பு தோலை உரிப்பது போன்று மானிட சரீரத்தை விட்டு, அர்ச்சிராதி வழியினால்
சென்று, பரம பத்தில் பரமனைப் பெற்று வாழ்வுற்றார்’ என்பது, சரபங்கருடைய சரித்திர உண்மை.
(2) இராமபிரானுடைய, ஸீதாபிராட்டி என்னும் உயரிய உடைமைப் பொருளை முறைதவறி விரும்பி, தனக்கு ஆக்கிக் கொள்ள இராவணன் எடுத்துச் செல்லும் ஸமயம் அதனை அறிந்த ஐடாயு தமக்கு இயன்ற அளவும் இராவணனோடு போர் புரிந்தார். இறுதி|யில் அப்பாபியினால் பிராட்டியைப் பற்றியே உயிர் துறக்க நேர்ந்தது. பரமபுருஷன் தேடிக் கொண்டு வரும்போது, ‘ஆயுஷ்மன்’ என்று அப்பரமனுக்கு மங்களம் பாடினார் ; “இராவ
ணன் உன் உயிரையும் (பிராட்டியையும் ), என் உயிரையும் கொண்டுபோய் விட்டான்” என்
னும் உண்மையையும் உணர்த்தினார். அவருக்குப் பரமன் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தைச்
செய்து,  (கச்ச லோகாநநுத்தமான்) என்கிறபடி விஷ்ணுலோகத்தையும் தந்திருளினான் என்பது ஜடாயுவின் சரித்திர ஸாரம்.
(3) “சபரி என்னும் வேட்டுவச்சி, தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளின இராமபிரானுக்கும் இலக்குமணனுக்கும் அதிகமான அன்புடன் பூஜை செய்தாள்; அப்பெருமானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்கானாள்; அவளும், தன் உடம்பை விட்டு உத்தம கதியைப் பெற்றாள் என்பது சபரியின் வரலாறு.-இங்கு (சஷுஷா தவ ஸும்யேனே பூதாஸ்மிரகுநந்தன பாதமூலம் கமிஷ்யாமி ) என்னும் வார்த்தை நோக்கத்தக்கது.-மேற்கூறிய மூவிடங்களிலும், சரபங்கரும், ஐடாயுவும், சபரியும் ஆகிய இம்மூவரும் இராமபிரானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்காகி, உடம்பை விட்டு அப்பரமன் திருவடிகளைச் சார்ந்ததாகவே தெரிகின்றமையின்,பிறப்பறுக்கலுற்றாற்கு உடம்பும் தடை’ என்பது நன்கு புலனாம். தேஹாத்மா பிமானம் முதலியன பொய்ப்பொருளாகவே இருப்பின், அவற்றின் காரியம் நிகழ்வதற்கு இடமில்லை யன்றோ? இவ்வாறு இராமாயணத்தில் விரோதியின் உண்மையைக் கண்டோம். இனி உபாயத்தைப் பற்றி ஆராய்வோம்.

———————————

வேதாந்தமும் உபாயமும்

வேதாந்தம் ஜீவன் பரமனைப் பெறுதற்கு எதை ஸாதனமாக அறிவிக்கின்றதோ, அது
உபாயம் எனப்படும். அவ்வேதாந்தம் கூறிய உபாயத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :
இப்பிரபஞ்சத்தை அந்த அந்தக் காலத்தில் ஆக்கி, அளித்து, அழிக்கின்றவன் எவனோ,
அவனே பரமாத்மா எனப்படுகின்றான். அப் பரமனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும், உள்ளத்துக் கொண்டு அன்புடன் சிந்திக்கும் சிந்தனை ‘பக்தி’ எனப்படும்.
இப்பக்தி, இச்சேதனன் எம்பெருமானைப் பெற்று வாழ்வதற்குச் சிறந்த ஸாதனமாம்,
இங்கு (காரணந்து த்யேய: ) என்னும் சுருதி வாக்கியம் சான்றாய்க்காணத்தக்கது.
இந்தப் பக்தியை ஒருவன் சாஸ்திரம் கூறியவாறு செய்து தலைக்கட்டுதற்குச் சிறந்த அறி
வும், ஆற்றலும் இன்றியமையாதனவாம்.இச்சிறந்த அறிவும், ஆற்றலும் எவனுக்கு இல்லையோ, அவன், எம்பெருமானை இழக்க வேண்டுவதில்லை; எம்பெருமான் திருவடிகளில் சரணாகதியைச் செய்து, அவனைப் பெற்று வாழலாம்
சிலர், மேற்கூறிய பக்தியைச் செய்து தலைக் கட்டுதற்குத் தக்க அறிவு ஆற்றல்களைப் பெற்
றிருந்தும், பக்தியை ஸாதனம’ என்று எண்ணிச் செய்யாது, தன் நிலைக்கு ஏற்ப பக்தி
யைப் பயனாகவே எண்ணிச் செய்து,கொண்டானையல்லாலறியாக் குலமகள் போன்று,எம்பெருமான் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி, இன்புறுகின்றனர். இவரே மிகச்
சீர்மையுற்றவராவர்.
சரணாகதியாவது: ‘எனக்குச் சிறிதும் நன்மையில்லை; குற்றங்களெல்லாம் உண்டு.
வேறு இரஷகரும் எனக்கு இல்லை’ என்று தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார் முன்னாக எம்பெருமான் திருவடிகளையே ஸாதனமாகப் பற்றுதலாம். இச்சரணாகதிக்கு, (சரணமஹம் ப்ரபத்யே) என்னும் சுருதி வாக்கியம் தக்க பிரமாணமாகும்.
இவ்வாறு, பக்தியையும் சரணாகதியையும் ஜீவன் எம்பெருமானைப் பெறுதற்கு ஸாதனமாக அறிவிக்கும் வாக்கியங்களைக் கண்டோம்
சிலர் ‘ப்ரஹ்மமாக மாத்திரம் இருத்தல் மோஷம்‘ என்றும், அதைப் பெறுதற்கு ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள் என்னும் (சுருதி வாக்கியத்தினால் ஏற்படும்) ஞானம் ஸாதனம்” என்றும் எண்ணுகின்ற (ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வாக்கியத்தையும் ஆதாரமாய்க் காட்டுகின்றனர்.-இதைக் கேட்பவர்க்கு மனம் கலங்கும் என்பது உண்மையே. இக்கலக்கத்திற்கு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஒரு பரிஹாரத்தைச் சுருக்கமாய்க் கூறுவோம் :

ஒருவனுடைய முயற்சி சக்தியினால் (ஆற்றலினால்) எது உண்டாகிறதோ, அதைப் ‘புருஷதந்திரம்‘ என்றும், ஒருவன் முயற்சி சிறிதும்இன்றி இருந்தும், எது பிரமாணத்திலேயே
ஏற்படுகின்றதோ, அதைப் ‘பிரமாண தந்திரம்’ என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.
மேற்கூறிய பரமனைச் சிந்திக்கும் சிந்தனையும், பரமன் திருவடிகளை உபாயமாய்ப் பற்றும் பற்றுதலும், ஒருவன் முயற்சி சக்தியைக் கொண்டு செய்யும் போது உண்டாகின்றமையின், புருஷ தந்திரமாம். சிலர் கூறுகின்ற வாறு தத்த்வம் அஸி‘ என்னும் சுருதியினால்,’ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்’ என்னும் ஞானம் உண்டாகும் போது,முயற்சி சக்தி ( பக்தி ப்ரபத்திகளுக்குப் போன்று வேண்டப்படாமையின் அந்த ஞானம் பிரமாண தந்திரமாம். இவற்றை நாம் மனத்திற் கொண்டு, பின்வருமாறு இங்கு ஆராய்தல் அவசியமாகும்:
சுருதி வாக்கியத்தினால் உண்டாகும், ‘ஆத்மா ஒன்றுதான் உண்மைப்பொருள் என்னும் ஞானம் மட்டும் மோஷஸாதனமா யிருப்பின், புருஷ தந்திரமான பக்தியையோ,
சரணாகதியையோ, அந்தச் சுருதி வாக்கியம் சேதனனைக் குறித்துக் கட்டளையிட இடம்
பெறுமோ? பெறாதன்றோ?
மேலும், ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி என்னும் சுருதியில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியின் உண்மைக் கருத்தையும், “தத் த்வம் அஸி ‘ என்னும் சுருதியின் உண்மைக் கருத்தையும், முறையே-“வேதாந்தமும் உபேயமும்” “வேதாந்தமும் ஜீவனும்” 
என்னும் பகுதிகளில் கூறியுள்ளோம்; கண்டு கொள்வது.
ஆனால், “ப்ரஹ்ம வேத ” என்பதின் கருத்து யாதோ? எனச் சிலர் வினாவக் கூடும். இவ் வினாவிற்கு, ” பரமனைப் பற்றிய சிந்தனையும்-ப்ரஹ்ம ஞானமாதலின், அந்தச் சிந்தனை
என்னும் ஞானம் பெற்றிருப்பானையே ‘ப்ரஹ்ம வேத’ என்னும் சுருதி குறிக்கின்றது’ என்பது விடையாய்க் காணத்தக்கது.-இவ்வாறு மிகச் சுருக்கமாய் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிய பரிஹாரத்தைக் கண்டோம். இனி, வேதாந்தத்தின்முடிந்த பொருளைக் காட்டுவோம்:
இங்கு பின்வருமாறு வேதாந்தத்தின் அம்முடிந்தபொருள் காணத் தக்கது : பரமனைப்
பற்றிச் சிந்திக்கும் சிந்தனை பரமனைப் பெறுதற்குக் காரணம் என்பது ஒருவாறு உண்மையேயாம். ஆனாலும், ‘அப்பரமன் திருவடித் தாமரைகளையே சரணமாகக் கொண்டு,
அவற்றைப் பெறுகின்றது என்பது மிக மிகச் சிறந்த முறையாகும்”; இதற்குப் பல சான்று
கள் உண்டு.
(I) அறிவாளிகளுள் மிகச் சிறந்தவர் ஸ்ரீ பீஷ்மர். அவர் சரதல்பத்தில் கிடந்து தருமபுத்திரருக்குப் பல தருமங்களை உபதேசம் செய்தனர். அங்ஙனம் உபதேசம் பெற்ற
தருமபுத்திரர், அந்த அந்த தருமத்தை உபதேசம் செய்யும் போது, அது அது சிறந்த
தருமமாகத் தெரிகின்றமையின், மிக மிகச் சிறந்த தருமத்தை அறிய வேணும் என்று
கருதி, தம் சாதுரியத்துக்கு ஏற்ப அப்பீஷ் மரை நோக்கி, ‘தேவரீர் மிகவும் விரும்பும்
தருமம் எது?’ என்று வினவினார். அங்ஙனம் வினவப்பெற்ற ஸ்ரீபீஷ்மரும், ‘நாராயணனு
டைய திருநாமங்களைச் சொல்லுதலே மிக மிகச் சிறந்த தருமம்’ என விடை கூறியிருக்
கிறார். (இது விஷ்ணு ஸஹஸ்ர நாமாத்தியா யத்தில் காணக்கிடக்கின்றது.)
இதைநாம் மனத்திருத்தி, (மிகமிகச்சிறந்த பிரமாணம் எனப் போற்றப்பெறும்) வேதத்
தில் கூறப்பெற்றுள்ள தருமங்களுள், அவ் வேதம் மிகவும் விரும்பும் தருமம் எது? என்
பதையே ஆராய்ந்து அறிதல் இங்கு இன்றியமையாததாகும்.அங்ஙனம் ஆழ்ந்து ஆய்ந்து
காணுங்கால், ‘சரணாகதி’ என்னும் தருமத்தையே வேதம் மிக விரும்புகின்றது என்பது விளங்கும்.ஆனால், “ஸ்ரீ பீஷ்மர்தாம் விரும்பும் தருமத்தைத் தெரிவிக்கும்போது, (ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோதி கத மோமத:) என்று எவ்வாறு தெளிவாகத் தெரிவித்திருக்கிறாரோ, அவ்வாறு வேதமும் சரணாகதியை, தான் விரும்பும் தருமமாய்த்தெரிவித்திருக்கிறதோ?” எனச் சிலர் ஐயமுறக்கூடும். இவ் ஐயத்திற்கு இடம் சிறிதும் இல்லை. எவ்வாறு எனின், கூறுவோம்: ஸ்ரீ பீஷ்மர் விரும்பிய தருமம் திருநாம ஸங்கீர்த்தனம் என்பதற்கு, அவருக்கு “ஏஷமே” என்னும் சொல்லை ஆதாரமாய்க் கண்டோம் அங்கு.-இங்கு, வேதபுருஷனுடைய ஆசாரத்தையே ஆதாரமாய்ப் பின்வருமாறுகாணலாம் :
இப்பிரபஞ்சத்திற்குக் காரணனான எம்பெருமான் அன்புடன் சிந்திக்கத் தக்கவன்’
என்று பக்தியைச் சுருதி சொல்லிற்று. அக்காரணனான எம்பெருமானை மோக்ஷத்தில்
விருப்பமுடைய நான் சரணம் பற்றுகிறேன்’ என்று சரணாகதியைத் தன் ஆசாரத்தில்
உள்ளதாய் அறிவிக்கின்றது. இங்கு மேற் கூறிய “காரணந்து த்யேய:” “முமுக்ஷர்வை
சரணமஹம் ப்ரபத்யே” என்னும் சுருதி வாக்கியங்கள் நோக்கத் தக்கன. ஸ்ரீபீஷ்மருடைய
சொல்லிலும், வேத புருஷனுடைய ஆசாரம் பிரபலமன்றோ? இவ்வாறு வேதத்தில் சான்றைக் கண்டோம்; இனி, பரம புருஷனுடைய திருவாக் கிலும் தக்க சான்றைக் காண்போம்
(2) பரம புருஷன் அர்ஜூனனைக் குறித்து அருளிச் செய்த திவ்விய சாஸ்திரம்
பகவத்கீதை ‘ என்பது உலகு உணர்ந்ததேயாம். அக்கீதையில் உள்ள பதினெட்டு அத்தி
யாயங்களிலும், கருமயோகம், ஞானயோகம்,பக்தியோகம் என்னும் தருமங்களைப் பரக்க
அப்பரமன் உபதேசம் செய்திருப்பது அதை அனுபவிப்போர் அறிந்ததேயாகும். (நான்
செய்பவன்’ இக்கருமம் என்னுடையதுஎனக்கு இப்பயன் வேண்டும்’ என்னும் எண்
ணங்களை அறவே ஒழித்து பரமன் திருவுள்ளம் உகக்குமாறு தன் வருணத்திற்கும், ஆசிரமத்திற்கும் ஏற்ற தருமங்களைச் செய்தலே கருமயோகமாம். இவ்வாறு நெடுகின காலத்தில் கரும யோகத்தைச் செய்து, அதனால் சித்த சுத்தி பெற்று, அச் சித்தத்தைக் கொண்டு,ஜீவ னாகிய தன்னைச் சிந்திக்கும் சிந்தனையே ஞானயோகமாம்.)
உண்மை இவ்வாறு இருப்பினும்,அப்பரமபுருஷன், அந்தக் கீதையின் முடிவில் அருளிச
(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ) என்னும் வார்த்தையைக் காணுங்கால்
சரணாகதியே அவன் உகந்த தருமம் எனத் தெரிகின்றது. இதைச் சிறிது விரித்துரைப்
போம்.
பிள்ளைலோகாசார்யர், “தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்தானே, ஸர்வ
தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று’ என்கையாலே, ஸாக்ஷாத் தர்மம் தானே என்
கிறது’ என்று அருளிச் செய்திருக்கிறார்.-இதின் கருத்து : தருமத்தை நிலை நாட்டுதற்கெனவே திருவவதாரம் செய்தருளின கண்ணபிரான், .தன்னால் உபதேசம்
செய்யப் பெற்றவையும்’ ‘ஒருவாறு வீடு பேற் றைத் தருகின்றவையுமான கரும ஞான
பக்திகள் எல்லாவற்றையும் விட்டு, என் ஒரு வனையே பற்று’ என்கையாலே,அவனே,
நேரே பயனைக் கொடுக்கக் கூடிய தருமம்’ என்பதும், ‘மேற்கூறிய கரும ஞான பக்தி
களாகிய யாவும் அங்ஙனம் நேரே பயனைக் கொடுக்கும் தருமங்கள் அல்ல’ என்பதும்
நன்கு விளங்குகின் றனவல்லவா ? என்பதாம்.
அன்றியும், ‘ பக்தி சபலன்’ (ஜீவன் செய்யும் பக்தியில் மிகவும் விருப்புற்றிருப்பவன்)
என்று புகழப்பெறும் பரமபுருஷன் அப்பக்தியைப் பல இடங்களில் பலவாறாகப் பரக்கப்
பேசி, இறுதியில், ‘அதையும் விட்டு,என்னைப் பற்று’ என்று அருளிச் செய்திருக்கின்றமையின். அப்பக்தியிலும் தானாகிய தருமமேதான் உவந்ததாம் என்பதும் இங்கு தெளிவு.-இவ்வாறு, ‘எம்பெருமான் உகந்த தருமம் சரணாகதி” என்பதைக் கண்டோம். இனி, வைதிகரும் மிகவும் ஆதரித்து, ஆசரித்த தருமம் சரணாகதி’ என்பதைக் காட்டுவோம்.
(3) வேதத்தைச் சிறந்த பிரமாணமாகக் கொண்டு, அவ்வேதக் கருத்தையும் உள்ளபடி
உணர்ந்து, அவ்வுணர்வைப் பின் சென்று நடப்போர் யாவரோ,அவரே வைதிகர் எனப்
போற்றப் பெறுகின்றனர். அவ்வைதிகருள்,-மயர்வற மதி நலமருளப்பெற்ற நம்மாழ்வாரே சீர்மை யுற்றவராவர். ‘அவர் மிகமிகச் சிறந்த பக்திபெற்றிருந்தும், தமக்குப் பரமன்
பால்உள்ள அப்பக்தியை அவனைப் பெறுதற்குக்காரணமாய்க் கருதாது,அவன் திரு
வடித்தாமரைகளையே காரணமாய்ப் பற்றியிருந்தவர்’ என்பதும் மிகவும் பிரஸித்தமானது. இவர் போன்று, இவர் திருவடித் தாமரைகளைப் பணிந்துய்ந்தவரான நம்
ஆசார்யர்களும் சரணாகதி தர்மத்தையே விரும்பி யிருந்தனர் என்பதும் தெளிவு.
இவ்வாறு, வேதம், வேத்யன், (வேதத் தின் முக்கியப் பொருளான பரமபுருஷன்)
வைதிகர் ஆகிற இம்மூவரும் மிகவும் விரும்பும் தருமம் சரணாகதி என்பதைக் கண்டோம்.
இச்சரணாகதியையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’ என்பதை இனிக் காண்போம்.

இராமாயணம்-சரணாகதி-சாஸ்திரம்

பரமாத்மா.ஜீவாத்மா, உபேயம், விரோதி, என்னும் (ஐம் பொருளில் சார்ந்த, நான்கு பொருள்களையும் இராமாயணம் தெளிவாகத் தெரிவிக்கின்றவாறு இக்கட்டுரையி
லேயே ஒருவாறு கண்டிருக்கிறோம். ஆயினும், சரணாகதி தருமத்தைவெளியிடுவதில் இராமயணம் நோக்குடைத்தாதலானும், ‘இராமாயணம் சரணாகதி சாஸ்திரம்’ எனப் பிரஸித்தி பெற்றிருப்பதால்,சரணாகதி தருமத்தையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’
என்று கூறு வதிலும் தட்டொன்றும்இல்லை. இப்பகுதியில், சரணாகதி தருமத்தின் உண்மைகளை நாம் அறியலாம்.
எம்பெருமான் முன்னிலையில் தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார்.
முன்னாக எம்பெருமானை ஸாதானமாய்ப் பற்றுதல் சரணாகதி’ என முன்பு கூறியிருந்
தோம். இங்கு சேதனன்பால் உள்ள பற்றுதல், பேற்றுக்கு ஸாதனமா? அல்லது, இச்
சேதனனால் பற்றப் பெறும் எம்பெருமானே ஸாதனமா? என்னும் ஐயம் ஏற்படுவது
இயல்பேயாம்.

பிள்ளைலோகாசார்யர் ‘பற்றப் பெறும் எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனம்; பற்றுதல் ஸாதனமன்று’ என்று அருளிச் செய்திருக்கிறார் ; சேதனன் பாலுள்ள பற்றுதலை
அதிகாரி விசேஷணமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
இங்கு, முதலில், இவ்விரு ஆசார்யர்களுடைய கருத்துக்களையும் தக்க சான்றுகளுடன்
முறையே விரித்துக்கூறி, கருத்து வேற்றுமை யின்மையையும் காட்டி, பின்பு, இராமாயணத்தில் சரணாகதி பேசப் பெற்றிருக்கும் விதம் இன்னது என்பதையும் தெரிவிப்போம்.
தேசிகன், சேதனன் பாலுள்ள பற்றுதல் பக்தி ஸ்தானத்தில் எமபெருமானை ஸாதித்துத்
தருவதென்றும்,அத்தானத்திலுள்ள எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனமென்றும் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
பிள்ளைலோ காசார்யர் திருவுள்ளம் பின்வருமாறு காணத் தக்கது:
“தருமம்” என்னும் சொல்,எது விரும்பும்பயனுக்கு முக்கிய காரணமோ, அதைக்
குறிக்குமாம். பரமபுருஷன் அவர் அவர் விரும்பும் பயனுக்கு முக்கிய காரணனாயிருத்
தலின்,சாஸ்திரம் தர்மம்’ என்னும் சொல்லையிட்டு, அவனைக் குறிக்கின்றது.
 (ராமோ விக்ரஹவாந்தர்ம 🙂 ‘ (க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் ) என்னும் வாக்கியங்களை
நாம் இங்குக் காணுதல் நன்றாம். மேலும் இந்த எம்பெருமான் எனப் பெரும் தருமம்
மிகச் சீர்மை யுற்றதாம். எவ்வாறு? என்னில் கூறுவோம்:
ஏனைய தருமங்களுக்கும்,எம்பெருமான் எனப்படும் தருமத்திற்கும் மிகவும் வேற்றுமை
உண்டு. எவ்வாறு? என்னில், ஏனைய தருமம் எதுவாயிருப்பினும், அது வேறொன்றின் உத
வியை விரும்பியன்றி இராது. எம்பெரு மானோ,அவ்வாறு வேறொன்றின் உதவியை
விரும்பான்’ என்பது மாத்திரமன்று; அவ்வாறு உதவியைப் பொறுப்பானும் அல்லன்.-இங்கு எடுத்துக்காட்டாகப் பின் குறிக்கப்பெறுவது நோக்கத்தக்கது. பரமனைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்பது நாம் அறிந்ததேயாம். இப்பக்தி, தான் உண்டாம்போது
சேதனனுடைய முயற்சியை விரும்புகின்றது;-இச்சேதனன், சாஸ்திரம் கூறுகின்றவாறு
முதலில் இன்னது பக்தி’ என்பதை உணர்ந்து-அங்ஙனம் உணர்ந்தவாறு முயன்று, செய்யும்
போதுதானே உண்டாகின்றது ; முயன்று-செய்யாதபோது உண்டாவதில்லையன்றோ ?
மேலும் இப்பக்தி, பயனைக் கொடுக்கும் போது, அங்ஙனம் கொடுக்கத்தக்க அறிவு
ஆற்றல்களைப் பெற்றிராமையின், பேரறிவு பேராற்றல்களைப் பெற்றிருக்கும் எம்பெரு
மானை உதவியாய் விரும்புகின்றது. இதனால், பக்தி, தான் உண்டாம்போது, சேதனனு
டைய முயற்சியை உதவியாய் விரும்புகின்றது என்பதும், பயனைக் கொடுக்குங்கால், எம்பெரு மானை விரும்புகின்றது’ என்பதும் நன்கு புல னாகும்.
அன்றியும், சித்தம் சுத்தமாய் இராத போது, அச்சித்தம் பரமனைச் சிந்திக்கப்பாங் காயிராது.ஆதலின்,எதைச் செய்தால் சித்தம் சுத்தி பெறுமோ, அதைச் செய்தல்
இன்றியமையாததாகும். இச்சித்த சுத்தியை கரும யோகத்தைச் செய்து பெறலாகும்.
இதைக் காணுங்கால்,பக்தியைச் செய்தற்குச் சித்த சுத்தி இன்றியமையாததாம். சித்த
சுத்தி பெறுதற்கு கரும யோகத்தைச் செய்தல் இன்றியமையாததாம். ஆதலின், ‘பக்தி,
சித்தசுத்தி வழியாகக் கருமயோகத்தை உதவியாய் விரும்புகின்றதாம்’ என்பது நன்கு
விளங்குகின்றது? (சித்த சுத்தியாவது – உள்ளத் தூய்மையாம்)-இன்னமும், இவ்வாறு, பக்திக்கு உதவியாயுள்ள பலவற்றைச் சாஸ்திரங்களில் காணலாம் .
உதவி வேண்டா உபாயம்
எம்பெருமான் என்னும் தருமத்திற்கோ,ஓர் உதவியும் கூறுதற்கு இன்று. நித்தியரனாய் (என்றும் உள்ளவனாய்) இருத்தலின், ‘உண்டாதல். என்பதே இல்லை; பேரறிவும்,
பேராற்றலும் பெற்றிருத்தலின், பயனைக் கொடுக்கும்போது, பிறருதவி வேண்டுவதில்லை; இயற்கையிலேயே மிகவும் தூய்மை பெற்றிருத்தலின், அத்தூய்மை பெற ஒன்றைவேண்டிச் செய்தலுக்கும் இடம் இன்று. இயற்கையில் தூய்மை பெற்றிருப்பவன் என்பது மாத்திரமன்று; தன் தொடர்பினால் பிறருக்கும் தூய்மையை உண்டு பண்ணுவானன்றோ?
எம்பெருமான்.-மேலும், வேறொன்றின் உதவியையும் எம்பெருமான் பொறான்’ என்பதற்குப் பின் வரும் சரிதம் எடுத்துக்காட்டாகக் கூறப்பெற்றுள்ளது: இந்திரஜித்தினுடைய பிரமாஸ்தி
ரத்தினால் கட்டுண்ட திருவடியை இராக்கதர்மேலும், சணல் கயிறுகளால் கட்டியபோது,
அப்பிரமாஸ்திரம் நழுவியதாயும், அங்ஙனம் நழுவியிருந்தும், இராவணனுடைய உண்மைகளை உணர விரும்பி, கட்டுண்டவன் போன்று, அத்திருவடி இருக்க, அவனை அவ் இராக்கதர் இராவணன்பால் இழுத்துச்சென்றனராம்”. என்பதே அச் சரிதமாம். இச் சரிதத்தில், ‘வேறொன்றின் (சணல் கயிறின்) தொடர்பைப் பிரமாஸ்திரம் பொறுத்திலது’ என்பது தெளிவு. இதுபோன்று, எப்பெருமானும் மற்றொன்றின் உதவித் தொடர்பைப்
பொறான்’ என்னும் உண்மை இங்கு உணரத் தக்கதாம். இவ்வாறு, எம்பெருமானுக்கும்
ஏனைய தருமங்களுக்கும் உள்ள வேற்றுமையையும், எம்பெருமானுக்குள்ள சீர்மையையும்
கண்டோம். மேற் கூறியவாறு, ‘எம்பெருமான் வேறு ஒன்றின் உதவியைச் சிறிதும் பொறான்’ என்பதற்குத் தக்க சான்று யாதோ? எனின், கூறுவோம்: சரணாகதியைக் கூறும் சான்றுகள் பலஉண்டு. அவையாவன ; (மாமே வயே ப்ரபத்யேத்) (தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத்)
(த்வமேவ உபாய பூதோ மே பவ)) ” ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பனவாம்.-இச் சான்றுகளுக்கு முறையே, “யாவர் சிலர் என்னையே பற்றுகிறார்களோ, ‘அந்த ஆதி புருஷனையே பற்றக் கடவன்’ நீயே எனக்கு உபாயமாக வேண்டும்’ ‘எனக்கு
உபாயம் தருமிடத்தில் உன் திருவடிகளையே உபாயமாக அளித்தாய்’ என்னும் கருத்துக்கள்
காணத்தக்கன.-மேற்கூறிய சான்றுகளில்,உபாயப் பொரு ளைக் குறிக்கும் சொல்லைச் சேர்ந்தே ‘ஏவ-என்னும் சொற்களைக் காண்கின்றோமல்லவா?
இச்சொற்கள் இங்கு, பிரிநிலைப் பொருள் பெற்றுள்ளனவாம்,அஃதாவது: எம்பெருமான், அவனைப் பெறுதற்கு முக்கிய காரணனாம்; வேறொன்றும் முக்கிய காரணமாகவோ,
துணைக் காரணமாகவோ இல்லை’ என்பதாம்.
இக் கருத்தைக் காணுங்கால், சேதனன் பாலுள்ள பற்றுதல் காரணமன்று : பற்றப்
பெறும் எம்பெருமானே காரணன் என்பது தெளிவாக விளங்குகின்ற தன்றோ?

அதுவும் அவனது அருளே

இன்னமும், “இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல் பேற்றுக்குக் கார
ணமன்று”, என்பதை  (தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்) என்னும் சுருதியினாலும் நாம் நன்கு காணலாம். இந்தச்சுருதியின் கருத்து : ‘எம்பெருமான் உபாயம்’ என்னும் அறிவு அவ் எம்பெருமானுடைய அருளாலேயே பெறுவதொன்றாம் என்பது.-இந்தச் சுருதி, முன்னம் கூறிய “முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” என்னும் வாக்கியத்தோடு சேர்ந்திருக்கின்றமையின்,-‘எம்பெருமான் உபாயம் என்னும் அறிவை எந்த எம்பெருமான் தன் இன்னருளால் மலரச் செய்கின்றானோ, அவ்எம்பெருமானையே, வீடு பேற்றில் விருப்பமுடைய நான் (வேதபுருஷன்) உபாயமாகப் பற்றுகிறேன்’ என்னும் கருத்து இங்குக் காணத்தக்கதாம்.-இக்கருத்தை ஆழ்ந்து ஆராய்ந்து காணுங்கால், முதலில்,எம்பெருமான் இன்னருளுக்கு இலக்காகிய பின்பு, அவ் இன்னருளினால் ‘எம் பெருமான் உபாயம்’ என்னும் அறிவு பெற்று, அதன் பிறகு, அவ்எம்பெருமானைப் பற்ற விரும்பி, பிறகு, எம்பெருமானை உபாயமாகப் பற்றுகிறான்’ என்னும் அடைவு நன்கு புலப்படுகின்றதன்றோ?
எம்பெருமானை உபாயமாகப் பற்றுதற்கு அங்ஙனம் உபாயமாகப் பற்றுதல் வேண்டும்
என்னும் விருப்பம் காரணமாம். அவ்விருப்பம் உண்டாதற்கு, எம்பெருமான் உபாயம்
என்னும் அறிவு ஏதுவாம். அவ்வறிவு பெறு வதற்கு அவ் எம்பெருமான் இன்னருள் இன்றி
யமையாததாம் என்று வேறொரு வழியில் அமைந்துள்ள அடைவும் இங்கு அறியத் தக்கதாகும்.-இக் கருத்தையே நம்மாழ்வாரும், “என்னுணர்வினுள்ளே இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே” என்ற தமது திருவாக்கினால் வெளியிட்டிருக்கிறார்.
இது காறும் கூறியவாற்றால். ”இந்தச் சேதனன் எம்பெருமானைப் பற்றிய பின்பு.
இவன் துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் எவ்வாறு ஏற்படுகின்றதோ, அவ்வாறே, இவை
இரண்டிற்கும் முன்பு இச்சேதனன் பாலுள்ள பற்றுதலும். அவ்வெம்பெருமானாலேயே உண்டாகின்றது” என்னும் முடிந்த உண்மைப் பொருளும் இங்கு நன்கு விளங்குகின்றது.
இங்கு, பின் குறிக்கப் பெறும் எடுத்துக் காட்டும் காணத்தக்கது: தந்தையான ஒரு
வன், தன் புத்திரனுக்கு ‘காயத்ரீ’ என்னும் மந்திரத்தைசாஸ்திர முறைப்படி உதவுகிறான்.
அங்ஙனம் உதவப் பெற்ற அப்புத்திரனும், தன் தந்தையார் தன் கையில் கொடுத்த
தனத்தை, அத் தந்தையாருக்கே தன் நன்றி அறிதலுக்கு ஏற்பத் திரும்பவும் கொடுக் கின்றான்.-இதுபோன்று, எம்பெருமான் கொடுக்க அறிவு, விருப்பம் இவற்றைப் பெற்ற இச்சேதனன், அவ்வெம்பெருமான் கொடுத்த ஆற்றலைக் கொண்டே அவனை உபாயமாகப் பற்றுகின்றான். ஆதலின், அப்பற்று தலுக்கு உபாயத் தன்மை கொள்ளுதற்கு இல்லை யன்றோ ?

அதிகாரி விசேஷணம்
இதுவரையில் கூறியவற்றால், ‘எம்பெருமானைப் பற்றும் பற்றுதல் ஸாதனமன்று;எம்
பெருமானே முக்கிய தருமமாம்’ என்பதை உணர்ந்தோம். ஆனால், இப்பற்றுதல் இச்
சேதனனுக்குப் பேற்றைப் பெறும்போது,உதவுகின்றது எவ்வாறு? எனின், அதிகாரி
விசேஷணமாய் உதவி புரிகின்றது. இதனைச் சிறிது விரித்துக் கூறுவோம்.
சாஸ்திரங்களில், உபாயம், அங்கம், பலம் என்று கூறப் பெற்றிருத்தலை நாம் காணலாம்.
எம்பெருமானைப் பெற்று அவனையும், திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன்
அனுபவித்து, அவ்வனுபவத்தாலாகிய ஆனந்தம் உள்ளடங்காது தூண்ட, அதனால் செய்யும்
அடிமைத் தொழிலே மிகமிகச் சிறந்த பயனாம். இப்பயனைப் பெறுதற்கு எம்பெருமானே உபாயமாம். இவ்வுபாயத்தை (எம்பெருமானை)ஒருவன் பற்றும்போது, ஏனைய தருமங்கள்
எல்லாவற்றையும் விட்டே பற்றுதல் இன்றியமையாததாகும். இ தற்கு “(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய ) என்னும் கண்ணபிரானுடைய திருவாக்கே தக்க சான்றாம்.
“உண்பானொருவன், முதலில் நீராடியே பின்பு உண்ணுதல் வேண்டும் ” ‘ (ஸ்நாத்வா புஞ்ஜீத) என்று எவ்வாறு சாஸ்திரம் கூறுகின்றதோ, அவ்வாறே, கண்ணபிரானும், ‘பரம புருஷனாகிய என்னைப் பற்றுங்கால், ஏனைய தருமங்கள் எல்லாவற்றையும்அறவே விட்டு, என்னைப் பற்று’ என்று அருளிச்செய்திருக்கின்றான். இவ்வாறு ஏனைய தருமங்களை விடுதல் என்பது அங்கமாம்(உதவியாம்).-இச்சேதனன் பாலுள்ள பற்றுதலோ, உபாயமும் அன்று ; அங்கமும் அன்று. ஆனாலும், இச்சேதனன் பற்றினால், மேற்கூறிய பயனைப் பெறலாம். பற்றாவிடில் பயனைப் பெற இயலாது.- இவ்வாறு, இச்சேதனன் பாலுள்ள பற்றுதல், உபயம், அங்கம் இவற்றில் வேறுபட்டதாயும், பயன் உண்டாம்போது வேண்டப் பெறுவதாயும் இருக்கின்றமையின்,இஃது அதிகாரி விசேஷணமாம்.
இங்கு, கண்ணன் அருளிச் செய்த(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா ஸர்வ பாபேப்ய ; மோக்ஷயிஷ்யாமி மாசுச :)என்னும் வார்த்தை காணத் தக்கது.
இவ் வார்த்தையில்,”ஸர்வ தர்மான்பரித்யஜ்ய” என்னுமிடத்து, முற்கூறியவாறு ஏனைய தருமங்களை அறவே விடுதல்’ என்னும் அங்கத்தையும்; ‘மாம்” என்னுமிடத்து, எம்பெருமானாகிற உபாயத்தையும்; ‘ஏகம்’ என்னுமிடத்துஇவன் பாலுள்ள பற்றுதல் உபாய
மன்று; ‘எம்பெருமான் வேறொன்றின் உதவியைப் பொறான்’ என்பதையும், ” வ்ரஜ என் னுமிடத்து, இவன் பற்றும் பற்றுதலையும்,”த்வா” என்னுமிடத்து, பற்றுதலைச் செய்த
சேதனாகிற அதிகாரியைக் கூறும் முகத்தாலே ‘பற்றுதலாகிய அதிகாரி விசேஷணத்தையும்,,ஸர்வபாபேப்யோ மோ யிஷ்யாமி’ என்னுமிடத்து, பரமனை அடைய
ஒட்டாது தடையாயிருக்கும் பாவத்தைப் போக்கி அளித்தலையும் கண்ணன் வெளியிட்டிருப்பது தெளிவு.-மேலும்,
தனக்கடிமைபட்டது தானறியானேலும் மனத்தடைய வைப்ப தாம் மாலை- வனத்திடரை ஏரி யாம் வண்ணமியற்று மிது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று” என்னும் பூதத்தார் பாட்டும் இங்கு அனுபவிக்கத் தக்கதாம். இப்பாட்டில் முன் அடிகள் தெரிவிக்கும் கருத்து : ”இச்சேதனன்,எம்பெருமான் உடையவன்;தான் உடைமைப் பொருள்’ என்னும் உண்மை
உணர்வு பெறாதிருந்தும், பெரியோர் செய்யும் முறையைக் கண்டாகிலும், எம்பெருமானைத்
தன் மனத்திலே கொண்டு விரும்பக் கடவன்”என்பதாம்.-இனிப் பின்னடிகளின் பொருளைக் காண்போம். (இச்சேதனனுக்கு முன்னடிகளில் கூறியவாறு) விருப்பம் மாத்திரம் உண்டானாலும், எம்பெருமான் இவன் விரோதியைப் போக்கி, இவனுக்குத் தன்னைத்தானே தந்தருளுவன். எவ்வாறு? என்னில்,-காடெழுந்து மேடாயிருக்கும் நிலத்தை ஏரியாக வெட்டுகின்றோம். இச்செயல் மழை பெய்தற்குக் காரணமன்று.நாம் ஏரி வெட்டு
கின்றோம் என்பது பற்றியே மழை பெய்யுமா?-அல்ல. இதனால், ‘ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்று’ என்பது உலகறிந்ததேயாம். ஆனால் ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்றாகில் அங்ஙனம் வெட்டுதல் பயனற்றதுதானே ! என்று எண்ணலாகாது. பரமனுடைய நினைவினால் மழை பெய்யும்போது,அம்மழை நீரை அவ் வனத்திடர் தாங்கிக்’ கொள்ளுமோ? கொள்ளாதன்றோ ? அத்துடரைத் திருத்தி, ஏரியாக
அமைத்து வைப்போமாயின். மழை பெய்யும் போது,அம்மழை நீரை அந்த ஏரி தாங்கித்
தன்பால் வைத்துக் கொள்ளும் என்பதே பின்னடிகளின் பொருளாம்.-இதனால் ‘ஏரி வெட்டுதல், மழை நீர் பழுதுபடாமைக்காகவே யன்றி, மழையைப் பெய்வித்தற்காக வன்று’ என்பது நன்கு தெரிகிறது.-இங்கு, எம்பெருமானை உபாயமாகப் பற்றாதாரை வனத்திடராகவும்,எம்பெருமானை உபாயமாக பற்றும் பற்றுதலை, ஏரியாம் வண்ணம் இயற்றுதலாகவும், சேதனன் பால்உள்ள எம்பெருமான் இயற்கை இன்ன ருளை,ஏரியில் தங்கின மழை நீராகவும் கொள்ளுதல் பொருத்தமாகும்.
இங்குத்தேறிய முடிந்த பொருள் என்ன?எனில், ” சேதனராகிற நாம் செய்யும் நற் செயல்களெல்லாம், எம்பெருமானுடைய இயற்கை இன்னருளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒருவாறு உறுப்பாம் என்பதொழிய, அப்பரமன் அருளை உண்டாக்குதற்கு உடலாகாது”-என்பதே அம்முடிந்த பொருளாம்.
இதனால், “ஏரி வெட்டுதல் போன்று, சேத னன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல்
உபாயமன்று ; ஏரி வெட்டுதல் எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே எம்பெருமானை உபாயமாகப் பற்றுதலும் இன்றியமையாததாம். என்பதை இங்கு ஸாரப் பொருளாய்க் காணலாம். இக்கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு, பிள்ளைலோகாசார்யார்.
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணம் என்று திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.-இதுகாறும், பிள்ளைலோகாச்சார்யருடைய திருவுள்ளத்தைச் சுருக்கமாய்க் கண்டோம்.

இனி, தேசிகன் திருவுள்ளத்தைக் காண்போம்.
‘எம்பெருமானைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்று முன்னமே கூறியிருந்தோம்.
இப்பக்தியைச் செய்யத் தகுந்த அறிவும் ஆற்றலும் உள்ளவன், இதையே மோக்ஷ ஸாதனமாகச் செய்யக்கடவன். அறிவும் ஆற்றலும் இன்றி இருப்பவனோ, பக்தியைச் செய்யமாட்டாது இருப்பினும், வீடுபேற்றை இழக்கவேண்டியதில்லை; எம்பெருமானை உபாயமாகப் பற்றினால், அந்த எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருவன். அங்ஙனம் வந்து சேர்ந்த எம்பெருமான், (பக்தி ஸ்தலத்தில் பக்தி எங்ஙனம் வீடுபேற்றிற்கு ஸாதனமோ, அங்ஙனமோ மோக்ஷத்திற்கு உபாயம் ஆவான்.-இங்ஙனம், ப்ரபத்தி, எம்பெருமான் வேறொரு உபாயமாகிய பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமேயன்றி, நேராக வீடு பேற்றைப் பெறுதற்கு காரணமன்று; எம்பெருமான தான் அப்பேற்றுக்கு காரணம்.-இவ்வாறு தேசிகன் திருவுள்ளத்தைச் சுருக்கமாய் காணலாம்.
மேற்கூறிய இரு பக்ஷங்களிலும், ப்ரபத்தியை, அதிகாரி விசேஷணமாக ஒருவரும்,
எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமாக மற்றொருவரும் திரு வுள்ளம் பற்றியிருத்தலைக் காண்கின்றோம்-இதை நோக்குங்கால், இவ்விரு ஆசாரியர்களுக்கும் திருவுள்ளத்தில் வேற்றுமை உண்டு’ என்பது தெரிகிறது.-ஆனாலும்.எம்பெருமான் நேரே வீடு பேற்றிற்கு உபாயம் என்பதை  இவ்விரு ஆசார்யர்களும்,  திருவுள்ளக் கருத்து வேற்றுமையின்றி, ஆதரித்திருக்கிறார்கள் என்பது நன்கு இங்கு விளங்குகின்றது.   இந்தத் திருவுள்ளக் கருத்தொற்றுமையே இங்கு முக்கியமாய் அனுபவிக்கத்தக்கது.
இனி, இராமாயணம் சரணாகதி தருமத்தை இயம்புகின்றவாறு சிறிது விரித்துக்
 கூறுவோம்.

இராமாயணமும் சரணாகதியும்

தசரத சக்ரவர்த்தி புத்திரப்பேற்றை விரும்பி, வேள்வி செய்யும் தருணம். அத்தருணத்தில், நான்முகனாரும், ஏனைய தேவதைகளும், மற்றும் மஹரிஷிகளும் அவ்வேள்வியில்,
தம்தம் அவியை (ஹவிஸ்ஸை)ப்பெற விரும்பி, ஒன்று சேர்ந்து வந்திருந்தனர். அங்ஙனம்
வந்திருந்த தேவதைகள் முதலானார் யாவரும், நான்முகனாரை நோக்கி, ஓ பகவானே !
உமது அருள்பெற்று, மிக்க பராக்கிரமம் கொண்ட இராவணன், எங்களனைவரையும்
துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனன். நாங்கள் அவனை அடக்கத் தக்க வன்மையற்றிருக்கின்றோம். ஆதலின் அவனைக் கொல்லுதற்கு ஏற்ற உபாயத்தை நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டனர்.
இவ்வாறு வேண்டுங்காலத்து, சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண், பேரொளி
பெற்றிருப்பவனும், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனும், திரு அரையில் கட்டிய கசசை
யுடையனும், என்றும் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் பரந்திருப்பவனும், இப்பிர
பஞ்சத்திற்கு ஸ்வாமியுமான நாராயணன் வைகுந்தத்தினின்றும் எழுந்தருளினன்.
இங்ஙனம் பரமபுருஷன் எழுந்தருளின வரலாற்றைக் கூறும் வார்த்தை,

(ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யுதி : சங்க சக்ர கதாபாணி : பீதவாஸா ஜகத்பதி 🙂 என்பதாம்.-இவ்வார்த்தையில், சரணாகதி தருமத்தின் உண்மை பலவற்றை நாம் உணரலாகும்.(1 ) தருமம், என்னும் சொல்,எது பயனுக்கு ஸாதனமோ, அதைக் குறிக்கும். எம்பெருமான் அந்தஅந்த நன்மைக்குக் காரணனாயிருக்கின் றமையின், தரும சப்தத்தால் குறிக்கப்பெறுகின்றான். அவன் நித்தியமாயிருப்பவன். ஆதலின், ஏனைய தருமங்களில் ஏதேனும் ஒன்று எங்ஙனம் முயற்சி சக்தியினாலேயே ஏற்படுகின்றதோ, அங்ஙனம் எம்பெருமான் உண்டு பண்ணப்படுமவனல்லன் என்று முன்னமே கூறியிருந்தோம்.
எம்பெருமான் எதிர்நோக்குவது
இதைச் சிலர் காணுங்கால், ‘அவர் அவர்விரும்பிய பயன் அந்த அந்தக் காலத்து, யாதொரு இடையூறுமின்றி, எம்பெருமானாகிய தருமத்தினால் ஏற்படத் தட்டென்? ‘ என்றுகருதக்கூடும். ஆனாலும், இங்ஙனம் கருதஇடம் இல்லை. ஏனெனில்,’எம்பெருமானாகிய தருமம் எல்லாருக்கும் என்றும் உள்ளது’ என்பது ஒருவாறு உண்மையே. ஆனாலும், அந்த எம்பெருமானாகிய தருமம் துன்பம் துடைத்து, இன்பம் அளித்து, இவனை நோக்குங்கால், இவனுடைய வேண்டு தலையும் வேண்டுகின்றது.
(ரக்ஷயா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே) என்னும் பிரமாண வசனம் இங்குக் காணத் தக்கது.
இதனால் “‘இரட்சித்தல் என்னும் தொழிலை இயற்கையாகப் பெற்றிருக்கும் எம்பெருமான், (காக்கப்பெறும்) இச்சேதனனுடைய வேண்டுதலை விரும்பியே இவனை இரட்சிக்கின்றான்” ! என்னும் சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையை நாம் உணரலாகும்.
இவ்வுண்மை, மேற்கூறிய “ஏதஸ்மிந் அந்தரே” என்னும்வார்த்தையில் நன்கு புலனாகின்றது . எவ்வாறு என்னில் ?”எம்பெருமான், ஏனைய தேவதைகளைப் போன்று, தன் அவியைப் பெற்றுப் புசிக்க, வேள்வி நிகழும் நிலத்து எழுந்தருளினான்” என்பது இங்கு உண்மையன்று. அங்ஙனம், அவியைப் பெற்றுப் புசிக்கத் திருவிள்ளமிருப் பின். அவர்களைப் போன்று, அந்நிலத்தில் முன்னமேயே எழுந்தருளியிரானோ? சங்கம், சக்கரம், தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும், திருவரையில் கச்சை கட்டியும் போர் புரிபவன் போன்று எழுந்தருளுதலும் ஏற்படுமோ? பிறகு உண்மை என்ன? எனின், ‘; ஏதஸ் மிந்அந்தரே” என்பதை இங்கு உற்றுநோக்குதல் இன்றியமையாததாகும். இச்சொல்லில் நான்முகனாரை நோக்கி, ‘துன்பம் தீர்ந்து இன்பம் யாம் பெருமாறு நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று தேவதைகள் வேண்டுங்காலத்து, எம்பெருமான் எழுந்தருளினான் என்பது கூறப்பெற்றிருத்தலால், ‘எம்பெருமான் இச்சேதனருடைய வேண்டுதலை விரும்பி இரட்சிக்கின்றான்’ என்பது வெளிப் படை.
”பிரமாஸ்திரம் எங்ஙனம் சணல் கயிற் றின் தொடர்பைப் பொறுக்கின்றதில்லையோ ; அங்ஙனமே, எம்பெருமானும் வேறொன்றின் தொடர்பைப் பொறான்’ என்று முன்னம் கூறியிருந்தீர்கள். இப்போது, ‘இச்சேதனன் வேண்டுதலை எம்பெருமான் எதிர்பார்த்தே இவன் காரியம் செய்கின்றான்’ என்று கூறுகிறீர்கள்.இக்கருத்துக்கள் இரண்டும் பொருந்துமாறு யாங்ஙனம்?” எனச் சிலர் இங்கு வினவக்கூடும்.
ஒருவன், வேறொருவரின் உதவி சிறிதும் இன்றி, சமையலைச் செய்ய வல்லவன்,அவனை
வேறொருவன் தன் வீட்டுச் சடங்கு நிமித்தமாய்ச் சமையல் தொழில் புரியுமாறு வேண்டிக் கொள்கின்றான். அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெற்ற அவனும் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, சமையல் செய்கின்றான்.-இவ்விடத்து, “வேறொருவரின் உதவி சிறி
தும் வேண்டாதவன் இவன் என்று கூறினீர்களே? இவன் சமையல் நிமித்தமாய் வேறொருவன் வேண்டுதலை விரும்பித்தானே,வந்து சமையல் செய்தனன்” என்று முரண்பாடு தோன்ற வினவுவாரும் உண்டோ? இல்லை யன்றோ? இங்குக் கருத்து யாதோ? எனின், சமையல் செய்பவன் சமையலைச்செய்யுங்கால், வேறொருவரின் உதவியைச் சிறிதும் விரும்பி யிருப்பின், அஃது அவன் சிறப்பிற்கு (வேறொருவரின் உதவி சிறிதும்இன்றி சமையலைச் செய்ய வல்லவனாயிருக்கைக்கு ) அழிவை விளைக்கும்.
அஃது இல்லையன்றோ?-இது போன்று,எம்பெருமானாகிய தருமம் இச்சேதனன் காரியம் செய்யும்போது, வேறொன்றின்தொடர்பை வேண்டினால், அத் தருமத்தின் சிறப்பிற்கு அவ்வேண்டுதல் அழிவை விளைக்கத்தான் செய்யும். அங்ஙனம் வேண்டாமையின், முன்னம் கூறிய அச்சிறப் பிற்கு (வேறொன்றின் உதவித்தொடர்பை வேண்டாதவனாயிருக்கைக்கு) யாதொரு குறை கூறுதற்கும் இடம் இல்லையன்றோ
இவ்வாறு, இச்சேதனன் வேண்டுதலை விரும்பி எம்பெருமான் இவன் காரியம் செய்பவன்’ என்னும் உண்மையை உணர்ந்தோம்.-இனி, இவ்வார்த்தையில்,சரணாகதியைப் பற்றிய வேறொரு உண்மையையும் நாம் காணலாகும். அவ்வேறொரு உண்மை யாதோ ?எனின், கூறுதும்.

வேண்டுவது விலக்காமையே

(2) எம்பெருமான் உடையவன்; சித்தும் அசித்தும் உடைமைப் பொருள் என்று முன்னமேயே கூறியிருந்தோம். உடைமைப்பொருள்’ ‘உடையவன்’ என்னும் உண்மைப்பொருள்-இரண்டனுள், உடைமையை நோக்கிக்காக்கும் பொறுப்பு உடையவனுக்கு என்றும் உண்டு. அவ்வுடைமைப் பொருள் அறி வுற்றிருக்கும் ஜீவனாயிருந்தால், அந்த ஜீவனுடைய விலக்காமையைக்கண்டு, உடனே வந்து இரட்சிப்பவன் எம்பெருமான். இவ்வுண்மை
“ஜகத்பதி ” என்னும் சொல்லைஉற்று உணர்ந் தால் நன்கு உணரலாகும். இச்சொல் ‘இப்
பிரபஞ்சத்திற்கு ஸ்வாமி’ என்னும் பொருளைக் காட்டி நிற்கின்றமையின். இப்பிரபஞ்சம்
உடைமைப் பொருள்’ எம்பெருமான் உடையவன்’ என்பது இங்குத் தெளிவன்றோ? இராவணனால் துன்புற்றிருக்கும் தேவதைகள் முதலானாருக்கு உள்ள விலக்காமையைக் கண்டு,உடனே எம்பெருமான் எழுந்தருளினன்’ என்னும் உண்மையை இங்குக்காணலாமல்லவா? மேற்கூறிய உண்மைகளை உணருங்கால், இச்சேதனன், எம்பெருமானாகிய தருமத்தினால் தன் நிலைக்கேற்ற நன்மையை அடையும் போது, ‘சேதனனாகிய இப்பொருள் எம்பெருமான் ஒருவனுக்கே இரட்சிக்கத் தக்கதாம்?-எம்பெருமான் கிட்டிக்காக்கும்போது, அவன் செய்யும் இரட்சணத்தை விலக்காது இருத்தலும் இவனுக்கு இன்றியமையாததாம். என்பன தேறிய பொருள்களாக நன்கு விளங்குகின்றனவல்லவா?

பிராட்டியை முன்னிடுதல்

இனி, இந்த இராமாயணத்திலேயே, ‘இச்சேதனன் எம்பெருமானைச் சரணம் பற்றுங்கால், பெரிய பிராட்டியாரை முன்னிடுதலும் இன்றியமையாததாகும்’ என்னும் ஸாரப்பொருளையும் நாம் காண்போம். இப்பொருளை இராமாயணம் பலவாறாக விரித்துக் கூறியிருக்கின்றது. இதைச் சிறிது விவரிப்போம்.-எம்பெருமானும் பெரிய பிராட்டியாரும்
இச்சேதனனை இரட்சிப்பவராம். எம்பெருமான், இச்சேதனன் துன்பம் தீர்ந்து, இன்பம் பெற்று வாழ்தற்கு முக்கிய காரணனாம். பெரிய பிராட்டியாரோ, இச்சேதனன் எம் பெருமானைச் சரணம் பற்றுங்கால், புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்பவராம்.
புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்கையாவது : இச்சேதனன் எமபெருமானைச் சரணம் பற்றுங்கால், இவன் நெடுகின காலத்தில் அறிந்தும் அறியாமலும் எண்ணிறந்த பாவங்களைச் செய்திருக்கின்றமையினாலும், இவன்,தன் முன்னிலையில் வந்து நிற்குங்கால், பேரறிவாளனாகிய தனக்கு இவனது பாவம் முற்றும் நினைவுக்கு வருவதாலும்,அந்த அந்தப் பாவத்திற்கு ஏற்ப, பயனை அளித்து நல்வழியில் நடத்திப் போருமவனாய்த் தான் இருப்பதாலும்,எம்பெருமான் சீறிச் சிவந்து இச்சேதனனைக் கண்கொண்டு பாரான். அஙஙனம் இருக் குங்கால், இப்பரமனுக்கு, அவனுக்கும் (பரம
னுக்கும் ) இவனுக்கும் (சேதனனுக்கும்) உள்ள தொடர்பை உணர்த்தி, இவன் நிலையை அறி
வித்து,இரக்கத்தையும் இவன் பிழையைப் பொறுக்கும் தன்மையையும் கிளப்பி, இவனைக்
கண்கொண்டு பார்க்கச் செய்து, அப்பரமன் இவனைத் திருவுள்ளமுவந்து அங்கீகரிக்குமாறு
பெரிய பிராட்டியார் உதவி புரிகிறார். இங்ஙனம் உதவிபுரிகையே புருஷகாரமாயிருந்து
உதவி செய்கையாம்.
சரணாகதி தருமத்தைப் பற்றிய இந்த உண்மையை, இராமாயணத்தின் முடிந்த
பொருளாய்ப் பின்வருமாறு பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்:-
அவள் புருஷகரமாக அவனைப்பற்றுவதே பலவ்யாப்தமாவது. இது தான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம். அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்ப்பண்கை அநர்த்தப் பட்டாளிறே. பெருமாளை யொழியப் பிராட்டியைப் பற்றின இராவணனும் அநர்த்தப்பட்டான். இருவரையும் பற்றினாலிறே ஸ்ரீவிபீஷணாழ்வானைப் போலே வாழ லாவது”
இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்:- முதலில்,காகத்தின் வரலாற்றைக் காண்போம். “திருச்சித்திரக் கூடத்தில்,இராமபிரான் ஸீதா பிராட்டியார் மடியில்
திருக்கண் வளருங் காலம். அக்காலத்தில்,இந்திரனுடைய புத்திரனும், கெட்ட எண்ணத்தினால் காகத் தன்மையைப் பெற்றிருப்பவனுமாகிய காகாஸுரன் ஸீதாபிராட்டியாரைக் கிட்டி,- திருமேனியில் புண்ணை உண்டாக்கினான் . அப்பிராட்டியார் துன்பம் பொறாமல், தன் மடியில் கண்வளரும் எம்பெருமானை எழுப்பினார். உணர்ந்தெழுந்து அப்பெருமானும், காகத்தின் பாவச் செயலைக் கண்கூடாகக் கண்டு, பிரமாஸ்திரத்தை அக்காகத்தின் மீது விட்டருளினான். அதுவும், அந்த அஸ்திரத்தினால் துரத்தப்பட்டு. ஓரிடத்தில் ஒன்பது தடவை சென்று இரட்சணத்தை இரந்தும், ஒருவரும் இரங்கவில்லை. அப்போது புகலற்று அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம்
வந்து விழுந்துகிடந்தது. தரையிலே தலையும் பெருமான மடியிலே கால்களுமாய்க் கிடந்தது. அக்காகத்தின் நிலையைக் கண்ட ஸீதா பிராட்டியார் அக்காகத்தை இரட்சிக்குமாறு அப்பரமனை வேண்டிக் கொண்டனர் . அப் பரமனும் அஸ்திரம் பயனற்றதாய் ஆகாமையின், அதனால் அக்காகத்தின் கண்ணை அழித்து, அதற்கு உயிர்ப் பிச்சைக் கொடுத்து, அதனை இரட்சித்தனன்” என்பதே காகத்தின் வரலாறாம்.

(ஸபித்ராச பரித்யக்த: ஸரைச்ச ஸமஹர்ஷிபி த்ரீந்லோகாந்ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம்கத : 1) என்னும் (இராமாயணம்ஸுந்தரகாண்டத்தில் உள்ள) வார்த்தை யிலும்,
சித்திர கூடத்திருப்பச் சிறு காக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலககும் திரிந்தோடி
வித்தகனே ! இராமாவோ ! நின் அபயம்என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்னை அறுத்ததும் ஓரடையாளம்”-என்னும் பெரியாழ்வார் திருவாக்கிலும் காணலாம். இவ்வரலாற்றில் அமைந்துள்ள ஸாரப் பொருளைப் பின் வருமாறு காணலாம் :

ஸீதா பிராட்டியார் திறத்தில் இராவணனும், காகா ஸுரனும் பொறுக்கொணாத்
துன்பத்தை விளைவித்தவர்களாம். ஆனாலும்இராவணனைக்காட்டிலும் காகா ஸுரனுக்குப்
பாவம் அதிகமாம். எங்ஙனம் ? என்னில், இராவணன் அப்பிராட்டியாரை எடுத்துச் சென்று, அசோகவனத்தில் சிறையில் வைத்து, தானும்,ஏகாக்ஷிமுதலான அரக்கிமாரும் பல தடவை சொல்லொணாச் சொற்களைச் சொல்லித் துன்புறுத்தியது ஒருவாறு உண்மையே.
ஆயினும் காகா ஸூரனைப் போன்று,அப்பிரட் டியார் திருமேனியில் புண்னை உண்டாக்க
வில்லை யன்றோ? ஆதலின், காகாஸுரன் பாவம் அதிகமன்றோ?-இக்காகாஸுரன், பிரமாஸ்திரத்தினால் துரத்தப் பெற்று எங்கும் புகலற்று, செய லற்றுப் பரமன் முன்னிலையில் விழுந்து கிடந்தது போன்று, இராவணனும், இராமபிரானுடன் முதலில்போர் புரிந்த போது,அவ் எம்பிரான் பாணங்களால் அடிப்பட்டு, கையில் உள்ள வில்லை விழ விட்டு, இரதத்தில் தனக்குரிய இடத்தையும் விட்டுச் செயலற்றுக் கிடந்ததாய்’ வால்மீகி முனிவன்
வரலாற்றைக் கூறியிருக்கிறான்.-இங்ஙனம் செயலற்றுக் கிடத்தல்’ என்பது,
காகம் இராவணன் இவ்விருவருக்கும் ஒத்தி ருந்தும், இராவணனிலும் காகம் மிக்க பாவம்
பெற்றிருந்தும், இராவணன் இலங்கையுடன் அழிவு பெற்றதற்கும் காகம் (கண்ணழிவு
மாத்திரம் பெற்று) உயிரழிவு பெறாததற்கும் காரணம் யாதோ? எனின் காகத்திற்கு ஸீதா
பிராட்டியார் முன்னிலையும், அதனால், அப் பிராட்டியார் இயற்கை இன்னருளுக்கு இலக்கானதும் உண்டு. ஆதலின், வாழ்வு பெற்றான். இராவணனுக்கோ, அப் பிராட்டியார் முன்னிலையும், அதனாலாம் இயற்கை இன்னருளுக்கு இலக்கா தலும் இல்லை. ஆதலின்
முடிந்தான். இவ்வுண்மை, இராவணன் வரலாற்றோடு காகத்தின் வரலாற்றையும் சேர்த்து உணருங்கால், நன்கு விளங்குகின்றதன்றோ ?-இங்கு,” இவள் ஸந்நிதியாலே காகம்
தலை பெற்றது; அதில்லாமையே இராவணன் முடிந்தான்” என்னும் பிள்ளைலோகாசார்யர்
திருவாக்கும்,இவள் ஸந்நிதியாலே அபரா தத்தைத் தீரக் கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காய் தலையறுப்புண்ணத்தேடின காகம்… தலை பெற்றுப் போய்த்து;-அப்படியிருக்கிற இவள் ஸந்நிதி இல்லாமயையாலே போக்கற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை யொத்திருக்கச் செய்தேயும், காகத்தோபாதி அபராதமுமின்றிக்கே யிருக்க, ராம சரத்துக்கிலக்காய் இராவணன் முடிந்து போனான் என்கை என்னும் மணவாளமாமுனிகள் திரு வாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
இதுகாறும் கூறிய காகாஸுரன் வரலாற்றினால், “மிக்க பாவம் பெற்றிருப்பவனும்,
பிராட்டியாரை முன்னிடும் போது, எம்பெருமா இன்னருளுக்கு இலக்காகி,
நன்மை பெற்று, வாழ்வு பெறலாம்” என்னும் உண்மைக் கருத்து தெள்ளிதின் விளங்கு
கின்றதன்றோ? மேலும், இராவணனும், சூர்ப்பணகையும், விபீஷணனும் ஒரு குடியிலே பிறந்தவர்கள். இராவணன் எம்பெருமானை அறிவிலக்கி, பிராட்டியாரை மாத்திரம் முறைதவறி விரும்பினான். சூர்ப்பணகை பிராட்டியாரைவிட்டு, எம்பெருமானை மட்டும் முறை தவறி விரும்பினாள். பிராட்டியாரை விட்டு என்பது மட்டும் இல்லை; ஏன் பிராட்டியாரை இடையூறாகக் கருதி, விழுங்கவும் முயன்றாள்.-இவ்விருவரும் நன்மையைச் சிறிதும் பெற்றரில்லை. விபீஷணனோ, இராவணன், சூர்ப்பணகை இவ்விருவருடன் பிறந்திருந்தும் இவ் விருவரைப் போன்று, முறை தவறி ஒருவரை விட்டு ஒருவரை மாத்திரம் விரும்பாமல், பிராட்டியார் எம்பெருமான் இருவரையும் முறையுடன் பற்றி, இருவர் சேர்த்திக்கும் முயற்சி மேற் கொண்டதால் இன்றும் வாழ்ந்து போருகின்றானன்றோ? திருவரங்கத்தில் எம்பெருமான் இன்றும் விபீஷணனை நோக்கிக் கிடக்கின்றானன்றோ? இவ்விடத்திலே, தென்திசை இலங்கை நோக்கி” என் னும் தொண்டரடிப்பொடியார் திருவாக்கும், இத் திருவாக்கிற்குப் பொருள் கூறுமிடத்துள்ள ‘‘தென் திசை இலங்கை நோக்கி (முன்புத்தை திக்குகளைக் கடாக்ஷித்தது அவ்வோ தேசங்களின் வெறுமை தீருகைக்காக) இது தம் குறை தீருகைக்காக ; மாதா ப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாபோலே’ என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
மேற்கூறிய இரு திருவாக்குகளிலும், விபீஷணன், இன்றும் எம்பெருமானுடைய இன்னருளுக்கு இலக்காயிருந்து வாழ்ந்து போருகிறான்’ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
இது காறும் கூறியவாற்றால், ‘இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுங்கால், பெரிய
பிராட்டியாரை முன்னிடுதல் இன்றியமையாததாம்’ என்பதை ஒருவாறு கண்டோம்.

இறைவன் திருவுள்ளத்தை பின் சென்று பற்றுதல்

இனி இச்சேதனன் எம்பெருமானை உபாயமாய்ப் பற்றும்போது, இவன் பற்றும்
அப்பற்றுதல் அவ எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்றிருக்கவேண்டும்” என்பதும்
சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையாகும்.-இவ்வுண்மையைப் பரதன் வரலாற்றில் நாம்.
அறியலாகும்.
“கூனியின் கூற்றினால் கலங்கிய கைகேயி,பரதன் முடியையும், இராமபிரான் வன
வாஸத்தையும் சக்ரவர்த்தியிடம் வேண்ட,அச்சக்ரவர்த்தியும் ஸத்தியத்திற்குக் கட்டுப்
பட்டு அளிக்க, இராமபிரானும் வனம் செல்ல,அதனால் சக்ரவர்த்தியும் துஞ்ச, கேகய தேசத்
தினின்றும் அயோத்தி வந்த பரதன் இவ்வரலாறுகளை அறிந்து, சக்ரவர்த்திக்குச் செய்ய
வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து.சித்திரகூடம் சென்று, இராமபிரான் திருவடித்
தாமரைகளை உபாயமாகப்பற்றி,இப்போதே திருவயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக்
கொள்ளுதல் வேண்டும்’ என்று அவ் இராமனை ஆர்த்தியுடன் வேண்டின் இடத்தும், அப்
பிரான் அதற்கு இசையாது இருக்க, அத்தரு ணம் அவன் திருவடி நிலைகளை அருள, அவற்றைப் பெறாப்பேறாகப் பெற்று, திரும்பி நந்திக்ராமம் வந்து, அத்திருவடி நிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அவற்றுக்குப் பரதந்திரனாய் பதினான்கு ஆண்டு பரமபுருஷன் வரவை எதிர்பார்த்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தனன் பரதன்” என்பதே அப்பரதன் வரலாறாம்.
இவ்வரலாற்றைக் காணுங்கால், “இராமபிரான் திருஅயோத்திக்கு எழுந்தருளி முடி
சூடிக்கொள்ளுதல்” பயன் என்பதும், ” அப்பயனுக்கு அவன் திருவடிகளே உபாயம்”
என்பதும் பரதன் எண்ணத்தில் நன்கு விளங்குகின்றன அல்லவா ?
இங்கு வால்மீகி முனிவன்,  (அபிஷஞ்சஸ்வ சாத்) என்றும், (ஏவமுக்த்வா மஹா பாஹு : ஸபாஷ்ப: கைகயீஸுத : Iராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதிவத் புந : II) என்று கூறியிருப்பது காணத்தக்கது.-மேற்கூறிய வார்த்தைகளுள், “அத்யைவ அபிஷஞ்சஸ்வ” என்னும் பகுதியில், “பரதன் விரும்பும் காலத்திலேயே முடி சூடிக்கொள்ளுதல் அப்பரதன் விரும்பிய பயன் ‘ என்பதும்,”ஸபாஷ்ப:” என்பதில், “‘பரதன் ஆர்த்தியுடையவன்’ என்பதும், “ராமஸ்யபாதெள சிரஸா ஜக்ரா ” என்னும் பகுதியில்,”பரதன் இராமபிரானுடைய திருவடிகளை உபாயமாய்ப் பற்றியவன்” என்பதும், “விதிவத் ‘; என்பதில் “அப்பரதன் அங்ஙனம் பற்றும்போது, முறையுடன் பற்றியவன்” என்பதும் நன்கு விளங்குகின்றனவல்லவா ?
இக்கருத்துக்களை மனத் திருத்திக் காணுமவர்க்கு, “பரதன் ஆர்த்தியுடன் முறைப்படிசரணம் பற்றியவன்” என்பது தெளிவு.-(ஆர்த்தியுடன் சரணம் பற்றியவனுக்கு, அப்போதே பயனுண்டாம்’ எனச் சாஸ்திரம் கூறுகின்றது. அவ்வாறு அப்பரதன் பயன் பெற்றனனா? என்னில், பெறவில்லை என்றே வால்மீகி முனிவன் கூறியிருக்கின்றான்.
“(ஸகாமம் அநவாப்யைவ ராம பாதாவுபஸ்ப்ருசன் நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகம
நகாங்யா) என்னும் வால்மீகி முனிவனின் வார்த்தை இங்குக்காணத்தக்கது.
இவ்வார்த்தையில் அமைந்துள்ள “ஸகாமம் அநவாப்யை ” என்னும் பகுதியில், பரதன் இராமபிரானிடம் தான் விரும்பிய பேற்றைப் பெறவில்லை என்பது தெளிவு.
இங்கு, பரதன் முறைப்படி பற்றியிருந்தும், பயனைப் பெறாதற்குக் காரணம் யாதோ? எனின், இதற்கு பரிஹாரமாய் முதலில் சிலர் கூறும் கருத்துக்களை கூறுவோம் :
(1) சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண் எம்பெருமான் எழுந்தருளிய போது,
தேவதைகள் முதலானார், அப்பரம புருஷன் மானிட வடிவத்துடன் திருவவதாரம் செய்து
இராவணனை அழிக்க வேண்டும் என விரும்பி,அவனைச் சரணம் பற்றியிருப்பது சரித்திர
உண்மை. அந்தச் சரணாகதி முதலில் தேவதைகளினால் செய்யப்பெற்றுள்ளது. அத்
தேவதைகள் கோரின பயனை அளிக்கத் திருவுள்ளங்கொண்டு, வனவாஸம் என்னும் வியாஜத்தினால் எழுந்தருளியிருக்கும் தருணத்தில், பரதன் ஆர்த்தியுடன் சரணம் பற்றியிருக்கும் வரலாறும் நாம் அறிந்ததேயாம். இதனால்,’இப்பரதன் செய்தசரணாகதி பின்பு செய்யப் பெற்றுள்ளது’ என்பது தெளிவு. முன்பு செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முதலில் பயனை அருள் செய்து, பின்பு செய்த பரத சரணாகதிக்குப் பின்பு பயனை அருள புரிதல் முறை எனத் திருவுள்ளம் கொண்டு, பரதன் விருப்பத்திற்கு ஏற்ப, அப்போதே இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடிக்கொள்ளவில்லை. இது முதல் பரிஹாரம்.
(2) இராமபிரான் திருவுள்ளம் புண்படுமாறு பரதனுக்குச் சில பாவங்கள் இருக்கக்
கூடும் பயனின்மையைக் கண்கூடாகக் காண்கின்றமையின், அங்ஙனம் சிலபாவங்கள்
இருக்கக்கூடும் என்று ஊஹிக்கலாமல்லவா ? இவ்வாறு கூறுவது இரண்டாம் பரிஹாரம்.
(3) இச்சரணாகதிக்குச் சில அங்கங்கள்(அங்கங்கள் = உதவி செய்யுமவை) உண்டு.பெரியோரை முன்னிடுதல், பெரியபிராட்டியாரை முன்னிடுதல் போல்வன அவ்வங்கங்களாகும். பரதன் பயன் பெறத்தற்குக்காரணம், அவ்வங்கங்களுள், ஏதோ ஓன்றிரண்டு குறைந்திருக்கலாம். இது மூன்றாம் பரிஹாரம்.
( ) இராமபிரான், தந்தை, தாய் இவரைப் பூசித்தல் இன்றியமை யாததாம்’ என்னும் முறையைத் தன் செயலில் நடத்திக்காட்டி நிலைநிறுத்த வந்தவன். ‘தன்தாய்’ என்றும், ‘ வேற்றுத் தாய் ‘ என்றும் வேற்றுமை சிறிது மில்லாதவன். கைகேயி வேற்றுத் தாயாயிருப்பினும், அத்தாய் சொல்லைப்பின்சென்று முடியையும் துறந்த பரமபுருஷனன்றோ? அவன். அப்பெருமான் அவ்வாறு பூசித்தகைகேயியைப் பரதன் பலவகையால் வெறுத்துப்பேசியது அவன் திருவுள்ளத்தை மிகவும் புண்படுத்தியது. ஆதலின், அவன் பரதன் விருப்பத்துக்கேற்ப இரங்கினான் இல்லை
(மாதரம் ரக்ஷ கைகேயீம்) என்னும் இராமபிரான் வார்த்தையும் (பூஜிதா மாமி கா மாதா) என்னும் பரதன் வார்த்தையும் இங்குக் காணத்தக்கன. சித்திர கூடத்தில் திருவடி நிலைகளைக் கொடுத்து அருளுங்கால், இராமபிரான் அருளிச் செய்தது, முதல்
வார்த்துை.பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து மீண்டு நந்தி ராமத்தில் எழுந்தருளியிருக்கும் இராமபிரான் முன்னிலையில் பரதன்சொன்ன வார்த்தை( பூஜிதா மாமி காமாதா” என்பது .) இது நான்காம் பரிஹாரம்.
இவ்வாறு சிலர் கருத்துக்கிணங்க நான்கு பரிஹாரங்களைக் கண்டோம். இப்பரிஹாரங்கள் பொருத்தமுடையன அல்ல என்பதை முறையே காட்டுவோம், இனி
(1) தேவதைகள் சரணாகதியைத் தெரிவிக்கும் இடத்தில் “இராவணன் அழிவை விரும்பிச் சரணம் பற்றியிருக்கிறதாகக் கூறப் பெற்றிருக்கிறதன்றி, காலம் குறிக்கப் பெற்றிலது என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.-அவ்விடத்துள்ள தேவதைகள் வார்த்தை
 (விஷ்ணோ ஸரமே ஜஹி ராவணம்) என்பதாம். பரதன் சரணம் பற்றுங்கால், “அத்யைவ ” (இப்போதே) என்று காலம் குறிக்கப் பெற்றிருக்கின்றது வெளிப்படை. இதனால், என்ன தேறிற்று என்னில் கூறுவோம்.
தேவர்களும், பரதனும் தம் தமக்கு உரிய இராவணன் அழிவு. ‘திரு அயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக் கொள்ளுதல்’ என்னும் பயன்களை ஒரே காலத்தில் பெற விரும்பியிருப்பின்
பயனைப் பற்றிய முரண்பாடு ஏற்படுகின்றமையின்,அம் முரண்பாடு தீருமாறு பரம புருஷனும், முந்திச் செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முந்தியும், பிந்திச் செய்த பரத சரணாகதிக்குப் பிந்தியும் பயனை அளித்தல் நன்றாம்’ என்று திருவுள்ளங்கொண்டு, பரதனுக்கு அக்காலத்திலேயே உதவ இசையவில்லை என்னலாம். தேவர்களும் பரதனும் தம் தமக்குஉரிய பயனை ஒரேகாலத்தில் பெற விரும்பி, பரமனை வேண்டிக் கொண்டதாகக் கூறப்பெற்றிலது.-பரதனாவது, காலத்தைக் குறிக்காது தனக்குரிய பயனைச் சரணம் பற்றி வேண்டிக் கொண்டிருந்தானென்றிருப்பின், பரமன் பரதனுக்கு அக்காலத்திலே அருளாவிடினும், இந்த ஆராய்ச்சிக்கே இடம் ஏற்பட்டிராது.-அப்பரத னே, ‘இப்போதே முடிசூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று காலத்தைக் குறித்தே சரணம் பற்றியிருக்கிறான் அன்றோ? இதனால் பரதன் விருப்பத்திற்கு ஏற்ப அப்போதே, முந்தி முடி சூடி, அப்பரதன்
தாபத்தைந்போக்கி, பிந்தித் தேவதைகள் விரும்பியவாறு, இராவணனை அழிக்க, ஏதோ
ஒன்றை வியாஜமாய்க் கொண்டு, இராம பிரான் வனததிற்கு எழுந்தருளலாமன்றோ ?
ஆதலின், முதல் பரிஹாரம் ஏற்கத் தகுந்த தன்று.(வியாஜம் = போலிக் காரணம்.)
(2) பரதன் திருவவதாரன் உண்மையை உணரின், இராமபிரான் எங் னம் பாவமின்றி
இருப்பவனோ, அங்ஙனமே அப்பரதனும், பாவமின்றி இருத்தலின், அப்பரதனுக்கு இராம
பிரான் திருவுள்ளம் புண்படுமாறு சில பாவங்கள் உண்டு’ கூறுதற்கும் இடம் இன்று.
இதனால், இரண்டாம் பரிஹாரமும் பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவு.
(3) “ராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதி வத்பு :” என்பதில் உள்ள “விதி வத்”
என்னும் சொல்லை நோககின், “எம்பெருமானை உபாயமாய்ப் பற்றுங்கால்,முறை வழுவாது
பற்றியவன் பரதன்” என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? ஆதலின், மூன்றாம்
பரிஹாரத்திற்கும் இடம் இன்று.
(4) நான்காம் பரிஹாரம் இராமாயணத்தில் ஒருவாறு கூறபபெற்றுள்ளது என்பது உண்மையே. ஆயினும் அதைப் பரிஹாரமாய் எடுத்துக் கொள்வதற்கு இல்லை. இதைச்
சிறிது விரித்துக் கூறுவோம்.-‘இராமபிரான் பரமாத்மா, பரதன் ஜீவன்’ என்னும கொளகையை உள்ளத்தில் கொண்டு, பின்வரும உணமை உணரத்தககது.
எம்பெருமான எலலாச்சேதனருக்கும எனறும் தஞ்சமாகிய தந்தையும் தாயுமானவன். இங்ஙனம் தந்தையாயும தாயாயும அவன் இருப்பது கருமத்தினாலன்று. பரமனுக்கும் சேதனனுககும் உளள ஒன்பது வித்த தொடர்பும்என்றும உள்ள தனறோ? இவவாறான
தொடர்பு இலக்குமணனுக்கும் இராமபிரானுக்கும் எஙஙனம் என்றும் உள்ளதோ, அங்ஙனமே பரதனுக்கும் இராமபிரானுக்கும் என்றும் உள்ளதாம். இவவாறான தொடர்பு பரதனுக்கும் கைகேயிக்கும உண்டோ ? இல்லையன்றோ?
இலக்கு மணன், (முடி சூடவைத்த முஹுர்த்தத்திலே, ஜடைசூடி இராமபிரா னைக கானகம்புகச்செயத கைகேயி போன்று, விபரீதச் செயல் உண்மையில் இன்றியிருநதும் )
தசரதனையும ஸுமித்ரா தேவியையும் தஞ்சமாகி தந்தையாயும் தாயாயும் கருதாது,
இராமபிரானையே அங்ஙனம் தந்தையாயும், தாயாயும், மற்றும் எல்லா உறவினராயும் கருதி, அவ் இராமபிரான் பின்னே, அவன் மனம் மகிழுமாறு அடிமை செய்யக் சென்றனனன்றோ? இல்வாறு இலக்குமணன் சென்றதற்குக் காரணம் அவ் இலக்குமணனுக்குள்ள இராம பக்தியன்றோ?-அவ் இலக்குமணன்போன்று, பரதனும்
மிக்க இராமபக்தி பெற்றிருப்பவனன்றோ ? மேற்கூறியவாறு விபரீதச்செயல் உள்ள
கைகேயியினிடம் அப்பரதனுக்கு மனம்பொருந்துமோ ? அவன் தன் தாயை வெறுத்தது சாஸ்திர முறையைக் காணுங்கால்,குற்றமாமோ ?-பரமனிடம் வெறுப்புற்ற தாயை அறவே விட்டிடுவது, சாஸ்திரத்தின் உண்மைக்கருத்து அன்றோ?-இவ்வுண்மைக் கருத்தைக் காணுங்கால்,’நான்காம பரிஹாரமும் பரிஹாரமாகாது’ என்பது தெளிவாம்.
ஆனால், இராமபிரான் “மாதரம் ரக்ஷகைகேயீம் மா ரோஷம் குரு தாம ப்ரதி’
என்று கூறியிருக்கின்றனனே; பரதனும், பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து, திரும்பி
நநதிகராமததில் எழு தருளியிருக்கும் இராம பிரானைக குறிதது, பூஜிதா மாமிகாமாதா “
என்று பகவதபிபராயத்தைப் பின்பற்றி நடந்த தன செயலைக் கூறியிருக்கின்றனனே
என்று சிலர்மறுபடியும மறுததுக கூறலாம்-இப்பரிஹாரத்தை முக்கியமாய் நம்
ஆசார்யர்கள் திருவுளளம் பற்றவில்லை சேதனனுடைய உண்மை நிலையை உணருஙகால்,
கைகேயியை பரதன் வெறுத்தது மேற்கூறியவாறு குற்றமாமோ?
மேலும், இராமாயணத்தில் இப்பகுதியி லேயே இரண்டொரு உண்மைகளையும், கிஷ்கிந்தா காண்டத்தில் ஓர் உண்மையையும் இங்கு எடுத்துக்காட்டுவோம்.
(1) தந்தை ஆசாரியன் இவ்விருவருள், தந்தை சரீரத்தை உண்டுபண்ணி அச்சரீரததை வளர்ப்பவனாம். ஆசாரியனோ,ஞானத்தை உண்டுபண்ணி ஆத்மாவை வளர்ப்பவனாம். இருவரும் உதவியைச் செய்பவரேயாயினும், ஞானத்தை உதவும் ஆசாரியனே மிக்க சிறப்புப் பெற்றவனாம். ” (ஸஹி வித்யாத : தம் ஐநயதி தத் ச்ரேஷ்டம் ஜன்ம கரியாந் ப்ரஹ்மத பிதா ) என்னும் வசனம் காணத்தக்கது,-இங்கு. ஆதலின், ஆசாரியன் ஆணையைப் பின் சென்று நடத்தல் மிகவும் முக்கியமாகும். இவ்வுண்மையை உணர்த்தி, வஸிஷ்டர்,
‘இராமா! உனக்கும் உன் தந்தையாருக்கும் நான் ஆசாரியன் ; ஆதலின், என் சொற்படி
நீ வனவாஸத்தை விட்டிட்டு, இராச்சியத்தை ஏற்று முடி சூடுதல் நன்றாம்” என்று கூறியிருக்கிறார், இராமபிரானை நோக்கி .-மேலும், ஸ்வதந்திரனான பரமனுக்கு
ஆசரித பாதந்திரியமும் உண்டு. அஃது அவனுக்குச்சிறந்த செல்வமாம். ஆச்ரித பாரதந்
திரியமாவது – பரமனாகிய தான், தன்னை அன்புடன் ஆதரித்தோருக்கு, அவர் ஏவிற்றுச்
செய்யும் கையாளாயிருத்தலாம். கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்க்குத் தூதனாயும்
தேரோட்டியாயும் இருந்து இழிதொழில் செய்தனனன்றே ?
வஸிஷ்டர் மேற்கூறிய உண்மையையும்உணர்த்தி, இராமா ! நீ பரமனன்றோ? பரதன்
பக்தி பெற்றிருப்பாரில் சீரியனன்றோ? ஆதலின், அப்பரதன் திறத்தில் பரதந்திரனாய்,
அவன் ஏவிற்றுச் செய்தல் உனககுச் சிறந்தசெல்வமன்றோ? இப்போது, பரதன் வேண்டு
கின்றவாறு, நீ முடியை ஏற்றுக்கொள்ளாதிருப்பின், உனக்குரிய சீரிய செல்வத்தை இழந்தே விடுவாய்’ என்றும் கூறியிருககிறார்.-இவ்வாறு வஸிஷ்டர் இராமபிரானை நோக்கிக் கூறிய உண்மைக் கருத்துக்களைப் பின்வரும் அவ்வஸிஷ்டர் வார்த்தைகளில் நாம்  காணலாம் 🙁ப்ரஞாம் ததாது சாசார்ய: தஸ்மாத் ஸகுரு ருச்யதே II ஸோ S ஹம் தே பிதுராசார்ய: தவ சைவ பரம்தப மம த்வம் வசனம் குர்வந்நாதிவர்த்தேஸ் ஸதாம்கதிம்||
பரதஸ்ய வச : பர்வந்யாசமாநஸ்ய ராகவ ஆத்மாநம் நாதிவர்த்தேஸ் த்வம் ஸத்ய தர்ம
பராக்ரம |1)-இவ்வாறு கூறிய வஸிஷ்டரை நோக்கிஇராமபிரான் அருளிச் செய்த விடையாதோ?எனின், கூறுவோம்.
உலகத்தில், சுவரை வைத்துச் சித்திரம் எழுதுதல்” என்று ஒரு முறை உண்டு. இம்
முறையைத் திருவுள்ளத்தில் கொண்டு, இராமபிரான் பின் வருமாறு விடையை அருளிச்
செய்திருக்கிறான் :-சரீரம் அற்றிருப்பானுக்கு ஞானம் உணடாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவிபுரிதற்கும் இடம் இன்று. சரீரம், பெற்றிருப்பானுக்கே ஞானம் உண்டாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவி புரிதற்கும் இடம் உண்டு. இதனால், சரீரம், சித்திரம் எழுதுதற்குச் சுவர் போன்று,ஞானம் உண்டாதற்கு மிகவும் முக்கியம் எனத்தெரிகின்றதன்றோ?-இவ்வாறு மிகவும் முக்கியமாயுள்ள சரீரத்தை உண்டாக்கி, வளர்ப்பதற்கு, தந்தையாரும், தாயாரும் நோன்புநோற்று,பத்து மாஸம் சுமந்து, பெற்று,பெற்றபினபும், இவனறியாது இருக்கும் சைசவ நிலையில் இவன்
பொருட்டு,படாதனபட்டு இவ்வாறு உதவி புரிகின்றவராதலின், ஆசாரியனிலும் மிக
மேம்பட்டவராவர். ஆசாரியனிலும், தந்தைக்கு ஏற்றமுண்டு; அவ்வாசிரியன் வசனத்திலும், தந்தையார் வசனத்திற்கும் ஏற்றமுண்டு. உண்மை இவ்வாறு இருத்தலின்,
தந்தையார் வசனமே ஆதரிக்கத்தக்கதாம்.-இதுவே, இராமபிரான் விடையாகும்.’ (ஸ ஹிராஜா ஜநயிதா பிதா தசரதோ மம ! ஆஜ்ஞாதம் யந்மயா தஸ்ய ந தந்மித்யா பவிஷ்யதி) என்னும் இராமபிரான்வார்த்தை அனுஸந்திக்கத் தக்கது.
இதைச் சிறிது ஆராய்வோம் : ‘ராமா! ஆச்ரித பாரதந்திரியமாகிய உன் சீரிய செல்வத்தை நீ இழந்துவிடாது பரதன் விருப்பத்தை நிறைவேற்றுவாய் ” என்று வஸிஷ்டர் கூறியதற்கு இராமபிரான் ஒன்றும் விடையறுத்ததாய் இங்குத் தெரியவில்லை.
இராமபிரான் இயம்பியவாறு தாய்தந்தைகளுக்குச் சிறப்பு உண்டு” என்பது ஒருவாறு உண்மையேயாகும். ஆனாலும், “ஆசாரியனிலும் தாய் தந்தைகளுக்கு ஏற்றம்
உண்டு” என்று கொள்ளில், அவர்களிலும் ஆசாரியனுக்குச் சிறப்புக்கூறும் பல சாஸ்திரங்
களோடு முரண்பாடுஉண்டாமன்றே?-மேலும், தாயையும் தந்தையையும் விடச்
சொன்ன சாஸ்திரம் போன்று, ஆசாரியனையும் விடச் சொன்ன சாஸ்திரமும் உண்டோ?)
இல்லையன்றோ? எழுத்தறிவித்தவன் போன்றாரைச் சாஸ்திரம் விடச் சொன்னது உண்மை.
திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசம்செய்தவன் எம்பெருமானிலும் மி க மேம்பட்டவன்”
என்பது சாஸ்திர உண்மைக் கருத்தனறோ?-வஸிஷ்டர், எம்பெருமான் இராமனுக்குத் திரு
அஷ்டாக்ஷரத்தை உபதேசம் செய்த ஆசாரியரன்றோ? இவ்வுலகத்தில், தன் உபதேச மொழிகளினாலும், செயல்களினாலும் அந்த அந்த முறையை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளினவனும்,அங்ஙனமே நிலை நிறுத்தினவனுமான இராமபிரானும், “ஆசாரியன் வசனம் ஆதரிக்கத் தக்கதன்று” ”தந்தையாரின் வசனமே ஆதரிக்கத் தக்கது ‘ என்று அருளிச் செய்வானாயின்,அவ் எம்பெருமானை யார் மறுத்துக்கூற முடியும். ஸ்வதந்திரனை மறுத்துக்கூற இயலுமோ? அவன் திருவுள்ளம் அப்போதே திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடுதற்கு இடம் தரவில்லை என்பதைத் தவிர, வேறு நோக்கு அவன் வார்த்தைக்கு உண்டோ? இல்லையன்றோ?
இக்கருத்து, இப்பகுதியிலேயே உள்ள பரதனின் வேறொரு வரலாற்றைக் காணுங்கால், உறுதிப்படுகின் றமையின், அவ்வரலாற்றையும் எடுத்துரைப்போம் இங்கு :பரதன் தன் வேண்டுகோளுக்கு இராமபிரான் சிறிதும் இரங்கக் காணாமையின்,
“அந்த இராமபிரான் ஆசிரமத்தின் வாசலில், (அவன் திரு அயோத்திக்கு முடிசூட எழுந்தரு
ளும் வரையில்) ஊணின்றி, தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின்மேல் கிடப்போம்” என்று
எண்ணி, ஸுமந்திரனைத் ‘தர்ப்பங்களைக் கொண்டு வா” என்று ஏவினன். இதைக்
கேட்ட ஸுமநதிரன்,பரதன் கூற்று இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராததை
ஒருவாறு உணர்ந்து, அப்பரதன் ஏவினவாறு செய்யாது இருநதனன். அத்தருணம், பர
தனே, தான் எண்ணியவாறு தர்ப்பங்களைப் பரப்பி, அவற்றின்மேல் கிடக்க முயன்றனன்.
இதைக் கண்கூடாகக் கண்ட இராம பிரான், பரதனை நோக்கி அருளிச் செய்த வார்த்தை பின் வருமாறு காணத்தக்கது :
”அப்பா! நான் உடையவன் ; நீ என்உடைமைப் பொருள். இங்ஙனம் உடைமை யாயிருக்கின்ற உன்னை, உடையோனாகிய யான், என் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ள எண்ணினேன். இவ்வாறு விரும்பி உபயோகம் கொள்ளுதல், எனக்குச் செய்யத் தகாத செயலாய் உன் மனத்தில்தோன்றியது போலும் . அங்ஙனம்தோன்றியது மாத்திரம் இன்றி, உடைமைப் பொருளாய் உள்ள நீ, உன் நிலைக்கு உரியதும், உடையோனான என்னைஅடக்கி நல் வழியில் நடக்கச் செய்வதுமாக நீ கருதிய இச்செயலை (இந்த ஆசிரமத் தின் வாசலில் தர்ப்பங்களைப் பரப்பிச் கிடத்தல் என்னும் செயலை ச் செய்து,இதனால், என்பால் உள்ளதும், என் நிலைக்கு ஏலாததாய் நீ எண்ணியிருப்பதுமான செய்யத் தகாத
செயலை (உன்னைஎன் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதல் என்னும் செயலைத் தவிர்க்கப் பார்க்கிறாய் போலும். என்செயல் எனக்கு ஏற்றது’ என்பதை யான் இயம்புதலும் வேண்டுமோ? உன் செயல்உனக்கு ஏற்றதாமோ? “ஏற்றதன்று” என்பதையும் கூறுவேன்.
ப்ராஹ்மணன் ஒருவன் தன் பொருளை”இன்ன தருணம் தரவேண்டும்” என்று தருணத்தைக் குறித்து, கடனாக ஒருவனுக்குக்கொடுக்கின்றான். அங்ஙனம் கடன் வாங்கியவன், கடன்காரனான ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளைக் குறிப்பிட்ட
காலத்துக் கொடுக்காது தவறி இருப்பின், அக்கடன் காரன் வாங்கியவன் வீட்டுவாசலில்,
நீ இப்போது செய்ய விரும்பியது போன்று, தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல் நன்றாம்.
இது ப்ராஹ்மண தருமம். த்திரியனான உனக்குரியதன்று. நீ வேறொரு வருணத்தின்
முறையைப் பின்பற்றியவனாதலின், உனக்குப் பாவம் உண்டாம். அப்பாவம் போமாறு,
“இனி, இவ்வாறான பாவச் செயலை நான் செய்வதில்லை” என்று சபதம் பண்ணி, தண்ணீரைத்தொட்டு, நீ என்னைத்தொடு.ஈதேஅப்பாவச் செயலுக்கு ஏற்ற பரிஹாரச் செயலாம்.(இக்கருத்துக்களைப் பின் குறிக்கப்பெறும் வார்த்தைகளில் காண்க 🙂
(சேஷ்யேபுரஸ்தாத் சாலாயா யாவந்ந ப்ரதியாஸ்யதி) என்பது பரதன் வார்த்தையாம்.
(கிம் மாம் பரத குர்வாணம் தாத ரத்யுப வே யஸ் | ப்ராஹ்மணோஹ்யேக பார்ச்வேந் நராந் ரோத்தும் இஹார் தி 1நதுமூர்த்தாபிஷிக்தா நாம் விதி: ப்ரத்யுப வேச நே I உத்திஷ்ட த்வம் மஹாபாஹோ ! மாம்சஸ்ப்ருச ததோதகம்)(இவ்வாறே பரதனும் பரிஹாரச் செயலைச்
செய்ததாய்ச் சரித்திரம்]-இங்கு உண்மை பின்வருமாறு உணரத் தக்கதாம். இராமபிரான் சக்ரவர்த்தித் திருமகனாக இருக்கின்றமையின், க்ஷத்தி ரியனே ஆவான்.
மேலும், இப்பரம புருஷனுடைய திருவடிநிலைகள் திரு அபிஷேகம் செய்யப் பெற்றிருக்
கின்றமையின், ” இப்பரம புருஷன் மூர்த்தாபிஷிக்த சத்திரியன் ” என்று கூறுதற்குக் தடை
ஒன்றும் இராது அன்றோ?அன்றியும், இந்த இராமபிரான், வானர வெள்ளங்களுடன் கடற்கரை சேர்ந்து, கொந் தளிக்கும் அக்கடலைக் கண்டிருக்கும் காலம். அக்காலத்து, அவ்வாறான கடலைக் கடந்து செல்லத் தக்க உபாயம் யாதோ? என ஆராய்ந்து காணுங்கால், அப்பரம புருஷன்”இக்கடலைக் கடந்து அக்கரை செல்லுதற்கு, கடலரசனை நோக்கி அவன் அருள் புரியுமாறு இக்கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின் மேலே கிடத்தல்,’ அணைகட்டுதல், இக்கடலைத் தண்ணீர் சிறிதும் இன்றி வற்றச் செய்தல், எனப் பல உபாயங்கள் உண்டு. அவற்றுள், கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தலே சிறந்த உபாயமாம்” என்று அருளிச் செய்திருக்கின் றனன்.
(தபஸா ஸேதுபந்தேந ஸாகரோச் சோஷணேந வா ஸர்வதா ஸுஸமர்த்தோஸ்மி ஸாகரஸ்
யாஸ்ய லங்கநே) என்னும் அவ் இராமபிரான் வார்த்தை இங்குக்காணத் தக்கது.
இவ்விடத்து, ‘தபஸா’ என்னும் சொல் நோக்கத் தக்கது. இன்னமும் தர்மாத்மா’ என்று கொண்டாடப் பெறும் விபீஷணனும்,-” இராமபிரான் இவ்வாறு கடலரசனை நோக் கிக்கிடத்தலே நன்றாம்” என்று கூறியிருக்கின்றனன்.-இராமபிரானும், கடலரசனைக் குறித்து, தர்ப்பசயனத்திலே கிடந்தனன் என்பது சரித்திர உண்மை. அபிஷேகமில்லாத பரதனை நோக்கி, ” இது ப்ராஹ்மண தருமம் ; அபிஷே கம் செய்யப்பட்டுள்ள க்ஷத்திரியன் இவ்வாறு செய்தல் தீதாம்” என்று அருளிச் செய்த எம்பெருமான்,மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து கொண்டக்ஷத்திரியனாகிய தான் இவ் வாறு செய்திருத்தல் முறையாமோ? இன்னமும், பரதன், இவ்விராமபிரானுக்குப் பின் பிறந்த தம்பியாதலின், அபிஷேகத்திற்குத் தகுதியற்றவனாம். கேகயதேசத்தினின்றும் திரு அயோத்திக்கு வந்து,
தன் தாயின் வீட்டிலேதன் தந்தையார் சக்ரவர்த்தி உயிர் துறந்ததைக் கேட்டு, பூமியில்
விழுந்து புரண்டு அழும் போது, தன் தாய் கைகேயி ‘ராஐந்” என்று அழைக்க,அவ்வாறு அழைத்ததையே மிகவும் பொறாது இருந்தவனன்றோ?
மேலும், குலகுருவும், தன் குருவான இராம பிரானுக்கும் குருவுமான வஸிஷ்டர் “இவ்
விராச்சியத்தை ஏற்று முடி சூடிக்கொள்’ என்று கூறுங்கால், அவரையும் மிகவும் பூசிக் கத் தக்கவர் என்று பாராது பலவாறாக வெறுத்துப் பேசி, யானும் இராச்சியமும்
இராமபிரானுடைய உடைமைப் பொருளாய் உண்மையில் இருக்க, யான் இவ் இராய்ச்சி
யத்தை ஏற்றுக் கொள்வது எவ்வாறு? என்று பேரோலக்கத்தில் கதறிக் கூறிய மஹான்
அன்றோ?-இன்னும், மேற்கூறியவாறு கூறியது மாத்திரமேயன்றி, ஆர்த்தியே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள அப்பரதன், தாய்மார், மந்திரிமார், வ ஷ்டர், ஜாபாலி முதலிய பெரியோர், யானைகள், குதிரைகள், ஏன் அயோத்தியிலுள்ளார் அனைவரையும் ஒன்று
சேர்த்து, அழைத்துக் கொண்டும், மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி திசை நோக்கித் தொழுது கொண்டும், சித்திரகூடம் சென்றுசேர்ந்து,இராமன் திருவடித் தாமரைகளிலே
வேரற்ற மரம் போன்று விழுந்து கிடந்து,தன் தலையாலே இரந்து, வேண்டிக் கொண்ட
வனன்றோ?-இப்பரதன் உண்மை நிலை இதுவாயிருக்க. இவனுக்குப் பாவந்தான் உண்டோ? இவன் க்ஷத்திரியனானாலும்,மூர்த்தாபிஷிக் க்ஷத்திரியன் என்று கூறுதற்கு இடம் தான் உண்டோ? பாவத்திற்கே இடமில்லாத போது, பரம புருஷன் பரிஹாரத்தைச் செய்யக் கட்டளை யிட்டதுதான் பொருந்துமோ?-ஆனால், பரதன் இராமபிரான் கட்டளையிட்டவாறு பரிஹாரத்தைச் செய்திருக்கின்றனனே? என்று சிலர் வினாவக் கூடும். இராமபிரான் வனம் எழுந்தருளியதற்குத் தன் பாவமே காரணம்” என்று கூறினவனும், உண்மை யில் பாவம் சிறிதுமின்றி இருக்குமவனான பரதன், தன் நிலைக்கு ஏற்ப பரிஹாரத்தைச் செய்தனனேயன்றி, பாவம் இருந்து பரிஹாரம் செய்தான் என்பது உண்மையாமோ
இதுவே மேற்கூறிய வினாவிற்கு விடையாம்.-தன் நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளும்
பரதன் ஸ்வாமியான இராமபிரான் முன், அவ்விராமன் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராத,”தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல்” என்னும் செயலைச் செய்ய முயன்றது தான் முறையாமோ? என்று சிலர்க்கு இங்கு ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்குப் பரிஹாரத்
தைக் கூறுவோம் :-அப்பரதன், எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்று நடக்கும் தன் நிலைக்குச் சேராத செயலை ( தர்ப்பங்களைப் பரப்பி அவற்றில் கிடத்தலைச் செய்ய முயன்றதும் இராமன்பாலுள்ள பக்திப் பெருமையினா லல்லது, வேறு காரணத்தினால் ஏற்பட்ட தாமோ? ஆகாதன்றோ?-நம்மாழ்வார், திருமங்கை மன்னன் போல்வார், எம்பெருமானை அடையப்பெறாத போது, தரித்திருக்க மாட்டாமையின்,
‘அப்பரம புருஷனை முறை தவறியாவது பெறவேணும்’ என்று எண்ணி, மடலெடுத்தல்,தூது விடுதல் முதலிய செயல்களைத் தம் நிலைக்குச் சேராதிருந்தும், செய்யக் கருதிச்
செய்திருக்கிறார்கள். ”இவ்வாறு இவர்கள் கருதிச் செய்தது எங்ஙனம் பக்திப் பெருமை
யினாலேயோ, அங்ஙனமே பரதன் செயலும் பக்திப் பெருமையினாலேயே” என்பதைநாம்
அறியலாகும்.-இதுகாறும் கூறியவாற்றால்,முடிந்த
பொருள் யாதோ? எனின், இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பரதன் செயல் பாங்கா
யில்லை” என்பதே தேறிய முடிந்தபொருளாம்.-ஆனால், மறுபடியும் சிலர், “மாதரம்ரக்ஷ
கைகேயீம்” ”ஆ ஞாதம் யந்மயாதஸ்ய”உத்திஷ்டத்வம்” என்னும் முன்னம் கூறிய
வாக்கியங்களில், இராமபிரான், ‘பரதா!கைகேயியை வெறுப்பது கூடாது’ என்றும்,
‘ஆசாரியனிலும் தந்தையாருக்கு ஏற்றம் உண்டு: ஆதலின் அவர் வசனமே தனக்கு ஆதரிக்கத் தக்கது’ என்றும், ‘பரதா ! நீ பாவம் செய்தவன் ஆதலின், பரிஹாரத்தைச் செய்’
என்றும் வெளிப்படையாக அருளிச் செய்திருக் கின்றமையின்,அங்ஙனம் வெளிப்படையாகக் கூறியவற்றைக் காரணமாய்க் கொள்ளாது, அவற்றைக் கழித்துப் பேசி, இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையையே பரதன் பயன் பெறாததற்குக் காரணமாய்க் கூறுதல் ஏற்கத் தக்கதாமோ? என்று கருதக் கூடும்.
“வெளிப்படைப் பொருளை விட்டிட்டு, உட்கருத்தையே எடுத்துக்கொள்ளுதல் சிறந்த
முறையாம்” என்பதை ஓர் எடுத்துக் காட்டினால் விளக்கிக் காட்டுவோம் :
‘இராமபிரான், ஸுக்ரீவனுடன் தோழமைகொண்டவன்; ஸுக்ரீவன் விருமபியவாறு வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா ராச்சியத்தையும், ருமை என்னும் ஸுக்ரீவன்
மனைவியையும் அந்த ஸுக்ரீவன் பெற்று, முன்புபோல் வாழும்படி உதவி புரிந்தவன்;
அங்ஙனம் உதவி புரியும் போது, ஸுக்ரீவன் நம்புமாறு மழுவேந்திக் கொடுத்துக் காரியம்
செய்தவன்” என்று நம் ஆசாரியர்கள் பரம புருஷனுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து அருளிச் செய்வதுண்டு” அங்ஙனம் வாலியை வதம் செய்யும் போது, அவ்வாலிக்கும் ஸு க்ரீ
வனுக்கும் நடந்த போர் இரண்டு. முதலில் நடந்த போரில், இராமபிரான் வாலியை
அடித்துக் கொல்லாது விட்டிருக்கிறான். அப் போரில், ஸுக்ரீவன் தன்னாலாந்தனையும்
போர் புரிந்தும், இராமபிரான் கூறியபடி அம்பை எய்து வாலியைக் கொல்லாது இருந்தமையின், அடி தாங்கமுடியாமல் முதுகு காட்டி ஓடிவிட்டான் என்பது வரலாறு – (ஈது
இங்கு முதலில் அறியத்தக்கது-இவ்வாறுஓடிவந்த ஸுக்ரீவன், இராமா! நீ ஏன்? கூறியவாறு வாலியை அடிக்கவில்லை என்று வினவினான். இவ்வினாவிற்கு இராமபிரான் விடை யளிக்கும் போது கூறிய வார்த்தை-(ஸுக்ரீவ ச்ரூபதாம் தாத க்ரோதச்ச வ்யபநீயதாம்
காரணம் யேந பாணோயம் நமயா ஸ விஸர்ஜ்ஜித:-அலங்காரேண வேஷேண ப்ரமாணேம்
கதே நச த்வம் ச ஸுக்ரீவ வாலீச ஸத்ருசெள ஸ்த: பரஸ்பரம்||| ஸ்வரேண வர்சஸாசைவ ப்ரேக்ஷித ந விக்ரமேண ச வாக்யைச்ச யக்திம் ச வாநர வாம் நோபலக்ஷயே ததோரஹம் ரூப ஸாத்ருச்யாத் மோஹிதோ வாநரோத்தம நோத்ஸ்ருஜாமி மஹா வேகம் சரம்-என்பதாம்

இவற்றின் வெளிப்படையான பொருள்:
ஸுக்ரீவா ! ஒப்பனையிலும், வடிவ அமைப்பிலும். உயரத்திலும், நடையிலும்,குரலிலும், தேஜஸ்ஸிலும், பார்வையிலும், பராக்ரமத்தி லும்,வாக்கியங்களிலும் நீயும் வாலியும் ஒருவரை ஒருவர் ஒத்திருக்கிறீர்களாகையினால், உங்கள் இருவருள், ‘இன்னவன் வாலி ; இன்னவன் ஸுக்ரீவன்’ என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஸந்தேஹத்தில் நான் பாணத்தை விட்டால், அது ஒருகால் உன்மேல் பட்டு, ஆபத்து நேருமோ என்று அஞ்சி, நான் வாளா இருந்து விட்டேன்” என்பதாம்.
இவ்வெளிப்படைப் பொருளை இங்குக் கொள்ளுதற்குப் பொருத்தம் உண்டா? என்பதுதான் நாம் ஆழ்ந்து கவனிக்கத்தக்க தாம். பேரறிவாளனான இராமபிரான் ஸு க்ரீ வனுக்கும் வாலிக்கும் உள்ள வேற்றுமையை உண்மையில் உணர இயலாதோ? உணர வில்லையோ? அல்பம் அறிவுள்ளவன் கூட ‘அடி படுபவன் ஸுக்ரீவன்; அடிப்பவன் வாலி’ என்பதை எளிதில் அறியக்கூடியதை, என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று இராம பிரான் இயம்புகின்றனனே,இது பொருந் துமோ? இதில், நம் ஆசாரியர்களின் திருவுள்ளக் கருத்தைக் கூறுவோம். இங்கு, முதலில், பின் கூறப்பெறும் உண்மைஉணரத்தக்கதாம்.
பரமபுருஷன், சேதனனை நோக்கி, நீ,என்னி டத்தில் உனக்குள்ள அன்பை என் அன்பர்
பால் என்றும் வைத்திரு; அங்ஙனம் என் அன்பர் பால் அன்பைச் செய்யாது இருப்பின்,
அவர் திறத்தில் அபராதத்தைச் செய்தவனா வாய்; அதனால், உனக்கு மாத்திரம் அழிவு உண்டாம் என்று எண்ணாதே,உன்னோடு தொடர்புற்ற இப்பிரபஞ்சமும் அழிந்துவிடும்’ என்று அருளிச் செய்திருக்கின்றான்- -(யா ப்ரீதி: மயி ஸம்வருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே 1 அவமானகரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் !! )என்னும் பரமபுருஷன் திருவாக்கு அனுபவிக்கத் தக்கது. இங்கு
இதனால், நாம் ஓர் உண்மையை உணர லாம்: ஒரு சேதனன் எம்பெருமானை முறை வழுவாது பற்றியிருப்பினும், தான் கோரின் பயனைப் பெறும்போது, அவன் அடியார் திறத்து அபராதம் சிறிதும் இல்லாது இருத்தல் இன்றியமையாததாகும்.இவ்வாறு அப ராதம் பெற்றிருப்பின், பயனைப் பெற இயலாது. சரணாகதி தருமத்தை நாம் உணரும் போது, ”பரமனடியார் திறத்து அபராதம் சிறிதும் இன்றியிருத்தல், ஒரு முறை என்ப தையும் உணரல் வேண்டும்.-இவ்வுண்மைக் கருத்தை மனத்தில் கொண்டு,ஸு க்ரீவன் வரலாற்றை ஆராய்தல் வேண்டும்! ஸுக்ரீவன் இராமபிரானி டத்து மிக்க அன்புள்ளவன் என்பது மெய்யே. ஆயினும், இலக்குமணனிடம் எங்ஙனம் அன்பு காட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டினா னில்லை : இராமபிரானும் ஸுக்ரீவனும் அக்னி ஸாக்ஷியாய்த் தோழமை கொள்ளுகிறார்கள். அவ்வாறு தோழமை கொண்டபின், ஸுக்ரி வன். இலையும் பூவும் நிரம்பியிருக்கும் ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, பூமியின் மேலே போட்டு, அதின் மேலே இராமபிரானுடன் உட்கார்ந்து கொண்டு,அப்பெருமானிடம் தன் குறை ைப் போக்குமாறு வேண்டிக் கொள்கிறான். இவ்வாறு, ஸுக்ரீவனும் இராம பிரானும் இலையும் பூவும் நிரம்பியிருக்கும் கிளையில் பல ஸமயங்களில் உட்கார்ந்து ஒருவ ருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சரிதம் கூறப் பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு ஸ்மயமாவது, இலக்குமணனை ஸுக்ரீவன் இவ்வாறு ஆஸனம் கொடுத்து உபசரித்ததாய் இராமாயணத்தில் கூறப் பெற்றிலது.-(தத : ஸ ப ணப ளாம் சித்வா சாகாம்
ஸுபுஷ்பிதாம் ஸாலஸ்யாஸ்தீர்ய ஸுக்ரீவ: நிஷஸாத ஸராகவ: II லக்ஷ்மணாயாத ஸம்ஹ்ருஷ்ட:ஹநுமான் பலவகாஷப: சாகாம் சந்தனவர்க்ஷஸ்ய ததெள பரம்
புஷ்பிதாம் II)-என்பனகாணத் தக்கன ) ஸுக்ரீவனுடைய இச்செயலைக் காணுங்கால், இலக்குமணனிடம் அன்பில்லை; அபராதம் உண்டு’ என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ? இச்செயலை இராமபிரான் கண்கூடாகக் கண்டவனாதலின், முதலில் ஸுக்ரீவனும் வாலியும் போர் புரியுங்கால், வாலியை அடிக்க அவன் திருவுள்ளம் இசையாது இருந்தது-பின்பும், ஸுக்ரீவன் தன் செயலை உணர்ந்து, இலக்குமணனிடம் எங்ஙனம் அன்புகாட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டின தாய்க்ாணப் பெற்றிலது . ஆனாலும், தன்னைப் பற்றினாரை அடியாருடைய அபிமானத்திற்குப் பாத்திரமாக்கிக் காரியம் செய்வது என்பது பரமபுருஷனுடைய ஓர் உயரிய முறையாம். இம்முறையைத் திருவுள்ளம் பற்றி, ஸுக்ரீவனுடைய கழுத்தில் இலக்குமணன் திருக்கைகளால் அடையாளமாய்
க புஷ்பி மாலையைப் போடச் செய்யும் முகத்தால், அந்தப் பாகவதோத்தமனுடைய அன்
புக்கு இலக்காக்கி, வாலியை இரண்டாம் போரில் கொன்று, ஸுக்ரீவனுக்கு, அவன்
கோரின பயனை அளித்திருக்கின்றான், இராமபிரான்.-கருதாபி ஞா நசிஹ்நஸ் த்வம் அநயா கஜஸாஹவயா லஷ்மணே ந ஸமுத்பாட்ய யைஷா கண்டே க்ருதா தவ Il
என்னும் வார்த்தை அனுபவிக்கத் தக்கது.

இதுகாறும் கூறிய ஸுக்ரீவன் வரலாற்றில், ஆழ்ந்து, ஆராய்ந்து காணும் போது,
“வெளிப்படையான பொருளில் உண்மை நோக்கு இன்று; உள்ளுரை பொருளிலேயே
உத்தமனுடைய உக்திக்கு நோக்கு உண்டு என்று எங்ஙனம் அறிகின்றோமோ, அங்ஙன மே, பரத சரணாகதிப் பகுதியில் அமைந்துள்ள புருஷோத்தமனுடைய,“மாதரம் ர கை
கேயீம்” ஆஞாதம் யந்மயா தஸ்ய” ” உத் திஷ்ட த்வம்” என்னும் உக்திகளுக்கும்,
”வெளிப்படையான பொருளில் நோக்கு இன்று; உள்ளுறை பொருளிலேயே நோக்கு “
என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.
ஆகவே, பரதன் இராமபிரானை முறை யுடன் பற்றியிருந்தும் அப்பற்றுதல், அந்த
இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையின், பயனற்றதாம் என்பதைக்
கண்டோம். இப்பொருளை தேசிகன் திருவாக் கிலும் அனுபவிப்போம்.-(ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம்ச ப்ரஜாநாம் மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதி ததௌச 1 சிந்தாதீத: ஸம நி ததா பாதுகாகர்யாபிஷேக : துர்விஜ் ஞா நஸ் வஹ்ருதய மஹோ தைவமத்ர ரமாணம்)-என்பதே அத்திருவாக்காம்.
இத்திருவாக்கின் கருத்து : “தசரத சக்ரவர்த்தி, இராமபிரானுக்கு முடி சூட்டி,
இராச்சிய பாரத்தை அப்பரமபுருஷனிடத்தில் வைக்க விரும்பினான். அச்சகரவர்த்தி
கொள்கையை மக்கள் அனைவரும் ஒரு முகமாக விரும்பினார்கள். அச்சக்ரவர்த்தி மஹிஷியான கைகேயி, பரதனுக்கு முடி சூட்டி இராச்சிய பாரத்தை அவனிடம் வைக்க வரம்
கேட்டாள். ஸத்திய வாதியான சக்கரவர்த்தி யும் அங்ஙனம் அளித்தான். ஆனால், சக்ர
வர்த்தி கோரியவாறு இராமபிரானுக்கும்,கைகேயி கோரியவாறு பரதனுக்கும் திரு அபி
ஷேகம் நடைபெறாது . ஒருவரும் ஒரு காலும் எண்ணாதிருக்க, திருவடி நிலைகளுக்குத் திருவபிஷேகம் நன்கு நடந்தது. இதற்குக் காரணம் எம்பெருமானுடைய ஸங்கல்பமேயாம்” என்பதாம்.
இத்திருவாக்கில், இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூட வேண்டும்’ என்னும் பரதன் விருப்பம் சப்தத்தில் தெளிவாய்க்கூறப்பெறாதது ஒருவாறு உண்மையேயானாலும், கூறப் பெற்றிருக்கிறதாகவே கொள்ளுதல் பொருத்தமுடைத்தானதாம். சக்ரவர்த்திக்கும் மக்களுக்கும்) இராமபிரானுடைய திருவபிஷேகம் எங்ஙனம் இஷ்டமோ ; அங்ஙனமே அதுதானே பரதனுக்கும் இஷ்டம் அது தைவமாகிய இராமபிரானுக்குத் திருவுள்ளமில்லாமையால் உண்டாகவில்லை.
இத்திருவாக்கையும், இதின் கருத்தையும்அனுபவிப்போர்க்கு, இராமபிரான் திரு
வுள்ளமில்லை. அதனால், பரதன் கோரியதுநிறைவேறவில்லை’ என்பது நனகு விளங்கு
மன்றோ?
இதுவரையில், கூறிய வற்றால் “எம்பெருமான் சிறந்த தருமம்” என்பதும், “அவ்வெம்
பெருமான் சேதனனுடைய வேண்டுதலையும். இச்சேதனன் தன்னைப் பற்றும்போது.பெரிய
பிராட்டியாரை முன்னிடு தலையும் வேண்டு கின்றனன்” என்பதும், இச்சேதனன் அவ்
எம்பெருமானைப் பற்றும்போது,அப்பற்றுதல் அப்பெருமான் திருவுள்ளத்திற்குப் பாங்கா
யிருக்க வேண்டும்” என்பதும் இராமாயணத்திலேயே ஒருவாறு அறியப் பெற்றுள்ளன
அல்லவா? இனி, இவ்வாறான தருமம் இராமாயணத்தில் நிலை நிறுத்தப் பெற்றிருக்கும் இடத்தைக் காண்போம் :
ஆனால் “தருமம் இருவகைப்படும். இச் சேதனன் முயன்று செய்யும் போது, உண்டா
வது ஒன்று. எப்போதும் உள்ளது மற்றொன்று.எம்பெருமான் என்றும் உள்ளதொரு மிகச்
சிறந்த தருமம்” என்று முன்னமேயே கூறி யிருந்தோம்.

இக்கருத்தை மனத்தில் கொண்டு நோக்குவார்க்கு, “சேதனன் முயன்று செய்யும்
போது, உண்டாகும் தருமம், நாள் செல்லசெல்ல சிறிது அழிவு பெறலாமாதலின்,
அத்தருமத்தை நிலை நிறுத்துதல் என்பதற்குப்பொருள்உண்டு; என்றும் எங்கும் உள்ள எம்
பெருமானாகிய தருமத்தை எம்பெருமான் திருவவதாரம் செய்து, நிலை நிறுத்துவதாவது
என்?” என்னும் ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்கு ஸமாதானத்தை இராமாயணத்தில்
விபீஷண சரணாகதிப் பகுதியில் நன்கு காணலாம். ஆதலின், விபீஷண சரணாகதிப் பகுதி
யில் அமைந்துள்ள வரலாற்றையும், ஸாரப் பொருள்களையும் மிக விரிவின்றி, அனுபவிப்
போம்.
இராமபிரான், கடற்கரையில் வானரவெள்ளங்களுடனும், ஸுக்ரீவன் இலக்கு
மணன் இவர்களுடனும் எழுந்தருளியிருக்கும் தருணம். அத்தருணம், இலங்கையில், இரா
வணன், தனக்கு நன்மையைக் கூறின விபீஷணனைப் பலவாறாக நிந்திக்க, அந்நிந்தனையைப்  பொறாது, அவ்விபீஷணன், கதையைக் கையில் உடையவனாய் நான்கு இராக்கதருடன் ஆகாசத்திலே கிளம்பி, வடகரையை அடைந்து, ஆகாசத்திலேயே தஙகியிருக்க, அதைக் கண்ட எல்லா வானரர்களும், இராவணன் தம்பியாயிருத்தலாலும், இலங்கையின் நின்றும் வந்திருத்தலாலும், இவ்விராக்கதரால், எம்பெருமானுக்கு என்ன தீங்குநேரிடுமோ?’ என்று தம் அன்பு நிலைக்கு ஏற்பஅஞ்சி,அவ்விராக்கதரை அழிக்கக் கருதி, தம் கைகளில் மரங்களையும் மலைச்சிகரங்களையும் வைத்துத் தயாராயிருக்க, அவ்வானரர்களின் அந்நிலையைக் கண்கூடாகக் கண்டிருந்தும், அவர்களின் இராமபக்தியைப் புகழ்ந்து, அவ் வானரர்கள் முன்னாக இராமபிரானைப் பற்றுகையே முறையாம்’ என அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டவாறே, அவ்வானரர்களை வெகு மதிப்புடன் முன்னிட்டு முறை வழுவாது இராமபிரானைப் பற்றியிருக்கின்றான், விபீஷணன்” என்னும் வரலாறு முதலில் இங்கு அறியத்தக்கதாம்.-இவ்வாறு இராமபிரானை விபீஷணன் பற்றுங்கால், அவ்விபீஷணன் கூறிய வார்த்தைகளாவன :

1. ராவணோ நாம் துர்வ்ருத்த : ராக்ஷ ோராக்ஷஸேச்வர : 1 தஸ்யாஹம் அநுஜோ ப்ராதா விபீஷணஇதி சருத : 11
2. தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ச விவசா தீநா ராக்ஷ பிஸ்
ஸூரக்ஷிதா!
3. தமஹம் ஹேதுபி: வாக்யை: விவிதைச்ச ந்யதர்சயம் ஸாது நிர்யாத்யதாம் ஸீதா ராமாயேதி.
4. ஸச ந ப்ரதிஜக்ராஹ உசயமாநம் ஹிதம் ராவண : கால சோதித : 1
வாக்யம் விபரீத இவெளஷதம்பு
5. ஸோஹம் பரு தஸ் தேந தாஸவச் சாவமாநித : த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம்
சரணம் கத: 11
6. ஸர்வாபாலோக சரண்யாய ராகவாய மஹாத்மநநிவேதயத மாம் ப்ரம் விபீஷணம் உபஸ்திதம் 1 )

இவற்றின் கருத்து : (I) (”எம்பெருமானைப் பற்றுவோன், தன் குற்றங்களைக் கூசாது கூறிப்பற்றக் கடவன்’ என்னும் முறையைக் கைக்கொண்ட) விபீஷணன், “இராமபிரானுக்கே உரியவனாய் இருத்தல் இன்றி, எல்லா உலகங்களையும் கதறிக் கூப்பிடுமாறு செய்பவனும், இங்ஙனம் கொடியோன்’ என ப்ரஸித்தி பெற்றிருப்பவனும் கெட்ட நடத்தை உடையவனும்
இராக்கதனும், இராக்கதர் அனைவர்க்கும் ஈச்வரனுமான இராவணனுக்கே உரியவனாயிருந்து, இதுவரையில் தொண்டு செய்து போந்தவன்; அவன் எக் குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தனனோ, அக்குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தவன்; எல்லோரையும் நடுங்கச் செய்பவனாயிருத்தலின் ‘விபீஷணன்’ என்று எங்கும் ப்ரஸித்தி பெற்றிருப்பவன்,-நான்” (சுருங்கச் சொல்லின், இராவணனுக்கு அவனுக்குரிய குற்றங்கள் மாத்திரம் உண்டு; எனக்கு எனக்குரிய குற்றங்களும், அவன் தொடர்பினாலாகிய குற்றங்களும் உண்டு ஆதலின்,என் குற்றம் அதிகம்) என்கிறான்.

(2) மேலும் அவ்விபீஷணன் கூறியதாவது: ”அவ் இராவணன், (திரு அயோத்தியில் இருப்பு சிறை என்னலாம் படி, அனுபவத்திற்கு மிகவும் பாங்கான) ஜனஸ்தானத்தினின்றும், உயிரையும் உடலையும் பிரிப்பது போன்று, ஸீதா பிராட்டியாரையும் இராமபிரானையும் பிரித்து, அவ்இராமபிரானுக்கு உயிரான ஜடாயுவையும் கொன்று, தன் அசோகவனிகையில், அந்த ஸீதா பிராட்டியாரைக் கொணர்ந்து வைத்து, எங்கும் போகவொட்டாது,-அரக்கிமாரைக் காவலாய் வைத்தவன் அங்ஙனம் ஸ்தா பிராட்டியார் திறத்திலும் ஜடாயு பக்கலிலும், அளவிறந்து அபராதத்தைச் செய்தவனாகிய இராவணன் பின் பிறந்தவன், நான்” என்பதாம்.
(3) அன்றியும், அவ்விபீஷணன் செப்பியதாவது : “இர வணா! நீ. இராமபிரானுக்கே உரியவராகிய அந்த ஸ்தா பிராட்டியாரை, அவ் எம்பெருமானிடம் திரும்பவும் கொணர்ந்து போய்ச் சேர்த்துவிடு’ என்றும், ”நான் கூறியவாறு செய்யாவிடின், நீ அழிந்து விடுவாய்” என்றும்,அவனுக்கு அடிக்கடி அறிவித்தேன்'” என்பதாம்.-

(4) இன்னமும் “நோய்வாய்ப் பட்டு, சாகக் கிடக்கிறான் ஒருவன், மருந்தை எங்ஙனம் எடுத்துக் கொள்ள மாட்டானோ,அங்னமே, யமனால் தூண்டப்பட்ட அவ் இராவணன், நான்கூறிய ஹித வசனத்தைச் செவிதாழ்த்தும் கேட்கவில்லை’ என்றும் கூறினான்,-விபீஷணன்.
(5) இன்னும்,விபீஷணன் பகர்ந்ததாவது : “என் ஹித வசனத்தைச் செவி தாழ்த்துக் கேட்கவில்லை ” என்பது மாத்திரமே அன்று. ஹித வசனத்தைக் கூறியதே காரணமாக அவனும். அவனைச் சேர்ந்தாரும் என்னை அவமதித்தனர். ஆதலின், என் மனைவிமாரையும், புத்திரர்களையும், விட்டிட்டுஇராமபிரானைத் தஞ்சமாகப் பற்றினேன், நான்” என்பதாம்.
(6) இவ்வாறு கூறி, பின்னும் அவ்விபீஷணன் வேண்டிக்கொண்டதாவது :
‘வானரர்களே !எம்பெருமான் எந்தச் சேதனனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுகின்றனனோ அந்தச் சேதனனே புண்ணியனாவான்.அவ் எம்பெருமானாகிய இராமபிரான், இவ்விபீஷணனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுவானாயின், இவனுக்கு நன்மை உண்டாம். அந்நன்மைநான் பெற்றேனாக வேண்டும்.-அங்ஙனம் நன்மை பெற்றேனாதற்குச்
செய்ய வேண்டுவது யாதோ? எனின், மிக்க ஆர்த்தியுடன் இலங்கையினின்றும் இங்கு வந்
திருக்கும் இவ்விபீஷணனை இராமபிரானுக்கு அறிவித்தல் வேண்டும். நீங்கள் என் வரவை அறிவிக்குங்கால் ” இராமபிரானுக்கு இவ்விபீஷணன் தொண்டுடனாதல் நன்றாம்” என்னும் எனக்குள்ள இந்த ருசி மாறுவதற்கு முன் வெகு சீக்கிரமாக அறி வித்தல் பயனுற்றதாகும். என்னை அவ்இராமபிரான், திருவுள்ளம் உவந்து ஏற்றுப் பணி கொள்ளுமாறு செய்தல் உங்களுக்குப் பணியாம். அப்பிரான் ஏற்றுப்பணி கொண்டு உவத்தல், அவன் தனக்கு உற்ற தாகும். நீங்கள் இச்சேதனனைப் பரமன் உவந்து ஏற்குமாறு செய்யுமவர்களா யிருக்கின்றமை யின்,அங்ஙனம் செய்யாதபோது, உங்கள் நிலை உங்களைவிட்டு அகன்றொழிந்து விடுமன்றோ? ஆத ன், உங்களுக்கு அழிவுஉண்டாம்.
அப்பெருமான், நீங்கள் என் வரவை அறிவித்த பின்பும், அவன் கூவுதல் வருதல் செய்யாதும், என்னைத்திருவுள்ளம் உவந்து ஏற்று, அடிமை கொள்ளாதும் இருப்பின்,அப்பரமன்
தன் நிலையினின்றும் தவறியவனாவானன்றோ ?
எம்பெருமானிடம் பேரன்பு பெற்றிருக்கும் உங்களையும், அவ் எம்பெருமானையும் உவப்பித்தல், தொண்டனான என் நிலைக்கு ஏற்றதும், இன்றியமையாததுமாம். அங்ஙனம்
உவப்பியாது யான் இருப்பின், அஃது என்நிலைக்கு அழிவை விளைக்குமன்றோ ? உவப்பியாது இருத்தலே அழிவை விளைக்கும் என்னும் போது, உங்களையும், அவ் எம்பெருமானையும் உங்களுக்கும் அவனுக்கும் உரிய அந்த அந்த நிலையில் நின்றும் நழுவச் செய்யும் முகத்தால் அழிப்பேனாயின், என் கதிதான் என்னாகும் ?
ஆதலின், நீங்கள் என் வரவை சீக்கிரம் அறிவிக்கும்போது, உங்களுக்கு நன்மையுண்டு.
அப்பரமன் என்னை ஏற்று அடிமை கொள்ளும் போது, அவனுக்கு நன்மை உண்டு; நான்
உங்கள் ஓலக்கத்தில் ஒருவனாகக் கலந்திருந்து உங்களைப்போல் அடிமை செய்யும்போது.
எனக்கும் நன்மை உண்டு. இவ்வாறு எல்லாரும் நன்மை பெற்றுவாழுமாறு நீங்கள் என்
வரவை அறிவித்தல் நன்றாம் எல்லா உலகங்களையும் காக்கும் பரமனன்றோ? அவ்வெல்ல உலகங்களிலும் யானும் ஒருத்தனன்றோ ? அவ்எம்பெருமான் நீர்மைக்கு ஆகாதாரும் உண்டோ ? இராவணன் தம்பியும் சத்துருவுமான உன்னைஎம்பெருமானிடம் அறிவிக்கையாவது என் ? என்னாதீர்கள். [இவ்வுலகத்திலுள்ளாரனைவரும்.ஒன்றுசேர்ந்து எதிர்த்தாலும் அறப் பெரியோ னாகிய அப்பரமனுக்கு, பொல்லாங்கு சிறிதும் உண்டாதற்கு இடமுண்டோ? சரணம் பற்றினாரைக் காக்கும் குடியில் திருவவதாரம் செய்த மஹாத்மாவன்றோ? அப்பரமன்.அவன் பொருட்டு எல்லோருக்கும் நன்மை உண்டாமாறு அறியுவிங்கோள்” என்பதாம்.-அங்ஙனம் விபீஷணன் அறிவிக்குங்கால் இராமபிரான் பக்கலில் பொங்கும் பரிவு பெற்றிருப்பவனான ஸுக்ரீவன், மேற்கூறிய விபீஷணன் வார்த்தையைக் கேட்டு, மிக்க பரபரப்புடன், அப்பெருமானைக்கிட்டி, ஒரு வார்த்தை
விண்ணப்பம் செய்து கொண்டனன்.
”திரு அயோத்தியை விட்டுப் போந்து அநேக நாளாயிற்றே? ராஜ நீதியை மறந்ததோ? இவ்விடம் இலங்கைக்கு மிகவும் அண்ணியதன்றோ ? இராவணன் அநீதிகள் அறியவில்லையோ? ஒருவன் ‘சரணம்’ என்னும் சொல்லைச் சொல்லும்போது, இவற்றை
மறந்து விடலாமோ?-வத்யதாம் ஏஷ தீவ்ரேணே தண்டேநஸசி வைஸ்ஸஹ | ராவணஸ்ய ருசம்ஸஸ்ய ப்ராதாஹ் யேஷ விபீஷண 1-இவனை கட்டியிட்டு வைத்தல்; மாரீசனைப்
போன்று,வரும் காலத்தில் துன்பம் விளைக்கும்படி தொடுத்த அம்போடே விடுதல் செய்யக்
கடவோமல்லோம். கொன்றே விடுவோம். அங்ஙனம் கொல்லும் போது, முதலிலே தேவரீரை நலிகைக்குக் கூட்டுப்படையாய் வந்த இந் நால்வரையும் தலையறுத்து, இவன்கையிலே கொடுத்துப் பின்பு இவனைக் கொல்லக் கடவோம். இவன் இராவணன் உடன்பிறந்தவனன்றோ ? அவ் இராவணன்,பெற்றதாயையும் தமப்பனையும் சேர இருக்கப்
பொறாதவனன்றோ ? உடலையும் உயிரையும் பிரித்தது போன்று, என்றும் விட்டகலாத
ஸீதாபிராட்டியரையும் எம்பெருமானாகிய தேவரீரையும் கடல் ஒரு புறமும் மலை ஒரு
புறமுமாக்கின பையலுக்கு, இவன் ஓர் அவயவம் என்று சொல்லலாம் படி அண்ணியனன்றோ?” என்பதே அந்த ஸுக்ரீவன் கூறியஅவ்வார்த்தையாம்.

இவ்வார்த்தையைத் திருச் செவியேற்ற இராமபிரான், வானரர்களை நோக்கி, கூறிய
தாவது :வானரர்களே! இவ்விபீஷணன், இராவணன் தம்பியாதலின், இவன் நம்முடன் சேரத்
தகுதியற்றவன்; அங்ஙனம் சேரத் தகுதியற்றமைக்குத் தகுந்ததும், யுக்தியோடு சேர்ந்ததும், எல்லோரும் விரும்பத் தக்கதும் இனியதுமான ஸுக்ரீவன் வார்த்தையை நீங்கள் கேட்டீர்களன்றோ? இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளுமிடத்து, உங்கள் கருத்து யாதோ? கூறுமின்’ என்பதாம்.-இராமபிரானுடையமேற்கூறிய வார்த்தையைக் கேட்ட வானரர்கள் அனைவரும், விபீஷணனை ஏற்றுக் கொள்ளுதல் முறை என்னில், ஸுக்ரீவ மஹாராஜருக்கும் கலக்கம் உண்டாம்; ‘அங்ஙனம் ஏற்றுக் கொள்ளுதல் முறையன்று’ என்னில், இராமபிரானுக்குத்திருவுள்ளம் கலங்கும்; இவ்விருவருக்கும் பரதந்திரமான நாம் ஒன்றும் கூறுதற்கு இல்லை என்று மெளனமாயிருந்தனர்.-அங்ஙனம் மெளனமாயிருக்கும் வானரர்களை நோக்கி, இராமபிரான் அருளிச் செய்த-வார்த்தையாவது 🙁 ஹ்ருதாஹ்யர்த்த க்ருச்ச்ரேஷ யுக்தம் புத்திமதா ஸதா ! ஸமர்த்தேநாபி ஸந்தேஷ்டும் சாச்வதீம் பூதிமிச்சதா ||
என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்துப் பின்வருமாறு :
வானரர்களே! நம்மைச் சரணம் பற்றியிருக்கும் விபீஷணன், தன்னை நாம் ஏற்றுக் கொள்ளாது ஒழியில் பிழையாதாயினாயிருந்தான்; இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளில், உங்கள் மஹாராஜர் பிழையாதாராயிருந்தார். சரணம் பற்றி யவனை ஏற்றுக்கொள்ளுதலும், நம்மிடம் பொங்கும் பரிவுபெற்றிருக்கும் மஹாராஜர் கூறியதைக்
கேட்டு நடத்தலும் நமக்குச் சிறந்த நன்மைகளாகும். சரணம் பற்றி யவனை விட்டிட்டால், இரகு குலத்திலே பிறந்த இராமன் சரணம் பற்றியவனைக் கைவிட்டு விட்டான்’என்பர். மஹாராஜர் கூறியதைச் செய்யாவிடின், ‘தன்னைப் பற்றினாரிடம் பரதந்திரனாயிருக்கும் இராமன் க்ரீவ மஹாராஜர் கூற்றுச் செய்தான் இல்லை’ என்பர்.-இவ்வாறு இரண்டையும் செய்தேயாக வேண்டியிருந்தும், ஒன்றுக் கொன்று முரண்பட்டவைகளாயிருத்தலின், செய்வதா ? அல்லது செய்யமாட்டாது விட்டிடுகின்றதா?என்று தபிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு,’இது செய்யத்தக்கது; இது செய்யத் தகாதது’ என்னும் பகுத்தறிவு பெற்றிருப்பாரும்,
நினைத்ததை நடத்தவல்ல ஆற்றல் பெற்றிருப்பாரும், அழியும் பொருளில் கண்வையாது. அழிவற்ற செல்வத்தைவிரும்புவாரும், நொந்தாரைக் கண்டால் பொறுக்கமாட்டாது, ஐயோ !என்றிருப்பாரும் உத்தமஸ்நேஹிதரும் ஆன நீங்கள், என் தாபம் நீங்குமாறு,ஆராய்ந்து சொல்லுதல் பொருத்தமன்றோ? கூறுமின்.”
மேற்கூறிய வார்த்தையில் அமைந்துள்ள‘சாச்வதீம் பூதிம் இச்சதா” என்னும் பகுதி)
இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கதாம். இப்பகுதியில் விளங்கும் இராமபிரானுடைய திருவுள்ளக் கருத்து வெகு அழகானதாம். அக்கருத்தாவது : ”உங்கள் மஹாராஜர், நம் சரீரத்திற்கு இராவணன் தம்பியான இவ்விபீஷணனால் என்ன தீங்கு நேரிடுமோ? என அஞ்சுகிறார். இச்சரீரம் என்றும் அழியாது இருக்கும் செல்வம் அன்று .சரணம் பற்றியவன்,யவரேனும் ஆகிலுமாம்; அவரை விட்டிடாதுகாக்கும் போது, உண்டாம் புகழுடம்பு ஒருநாளும் அழியமாட்டாதன்றோ? நீங்கள் கூறும் கூற்று, நமக்கு நிலைநின்ற புகழுடம்பு உண்டாமாறு இருத்தல் வேண்டும்” என்பதாம். மேற்கூறிய கருத்துக்களைக் காணுங்கால், ‘என்றும் உள்ள எம்பெருமானாகிய தருமத் திற்கும் ஒருவாறு சலனம் ஏற்படும் இடம்-உண்டு” என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ?
இராமபிரான் விபீஷணனை விட்டிடாது காப்பானாயின், அப்பிரானை விட்டு, தருமத்தின்
தன்மை(பற்றினாருக்கு நன்மையை அளிப்பவனாயிருக்கை) அகன்றொழியாது. ஸுக்ரீவன்
பொங்கும் பரிவினால் மிகக் கலங்கி, “விபீஷணனைக் காக்கல் ஆகாது ; கொன்றே தீரவேண்டும்’ என்று கூறும் கூற்று, தருமமாகிய இராமபிரானையே ஒருவாறு அழிக்கத் தேடு கிறதன்றோ?-இங்கு இராமபிரான், தானாகிய தருமத்தை அழிவுக்கு இடம்கொடாது, நிலைநிறுத்தும் பரிசு யாதோ? எனின், தன்னைப் பற்றி னார்,ஒருகாலும் தன் எண்ணத்தைப் பின்செல்லாது இரார் ; அங்ஙனம் பின் செல்லாது ஒரு ஆச்ரிதன் இருப்பின், அவ்வாச்ரிதனுடைய (தன்னைப் பற்றினவனுடைய) மனக்கலக்கத்தை ஏனைய ஆச்ரிதரால் மாற்றி, அவனைத் தன் வயப்படுத்தி, தன்னைத் தன்னிலையின் நின்றும் நழுவவிடாது, தன்னை நோக்கி அருளுவதே, அவன் தன்னை நிலைநிறுத்தும் பரிசாம். இதுவே, இராமபிரான் திருவவ தாரம் செய்து செய்யும் முக்கியமான தருமஸ்தாபனமாம்.(தருமத்தை நிலை நிறுத்தலாம்.)-இந்த ” ஸுஹ்ருதா ” என்னும்வார்த்தை கூறுகிறவாறு இராமபிரான் வானரர்களை நயமாகக் கேட்க, அவ்வானரர்கள் அனைவரும்தம் கொள்கையை அறிவித்துக் கொள்ளுதல் இயலாதாதலின்,அங்கதன், சரபன்,ஜாம்பவான், மைந்தன் ஹநுமான் இவ் ஐவரும் ஒன்று சேர்ந்து, ஒரு குழாமாயிருந்து, அவ் இராமபிரானுடைய ஸன்னிதியில், அவன் நன்மையையே நினைந்து, வேறிடத்தில் எண்ணத்தை விட்டிட்டு, தன் தனக்குரிய கொள்கையைத் தனித் தனியே விண்ணப்பம் செய்து கொண்டதாய் இங்கு வரலாறு அறியத் தக்கது.-அங்கதன் கூறிய வார்த்தையும்,அதின் கருத்தும் வருமாறு 🙁அர்த்தாநர்த்தெள விந்ச்சித்ய வயவ ஸாயம் பஜேத ஹ குணத : ஸங்க்ரஹம் குர்யாத்
தோஷ தஸ்து விஸர்ஜ்ஜயேத் என்பது அவ்-வார்த்தையாம்.
“இராமபிரான் தன்னைத் தஞ்சமாய்ப் பற்றியிருப்பவனை விட்டிடாதவன். ஸுக்ரீவன் விபீஷணனைக் கொல்ல வேனும் என்று இருப்பவன். இவ்விருவருடைய இவ்விரு
கொள்கைகளுள் ஒன்றை விட்டு ஒன்றைக்கொள்ளும்போது,வீபீஷணனுடைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து காணுதல் அவசியமாகும். அங்ஙனம் ஆராய்ந்து காணும் போது, குற்றமிருப்பின், விபீஷணன் விடத்தக்கவனாம்.-மிக்க குணம் பெற்றவனாயிருப்பின்,விபீஷணன் கொள்ளத்தக்கவனாம்.ஆதலின், விபீஷணனைப் பற்றி ஆராய்தல் மிக முக்கியமானதாம்” என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும்.
இவ்வாறு அங்கதன் கூறிய பின்பு,சரபன் தன் கொள்கையை, “புருஷர்களுள் மிகச்
சிறந்தவ னே ! இவ்விபீஷணனனுடைய, நடத்தை நன்கு நமக்குத் தெரியாதாகை
யால், அதை அறிகைக்கு, முந்துறத்தூதுவிடவேணும்.-க்ஷிப்ரம் அஸ்மிந் நரவ்யாக்ரசார: ப்ரதிவிதீய தாம் ) என்று கூறியிருக்கிறான்.-இங்ஙனம் சரபன் செப்பிய பிறகு,ஜாம்பவான் கூறியதாவது :
” இவ்விபீஷணன் இராவணனிடத்தினின்றும் வந்தவன் என்பது மாத்திரமின்றி வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும், காலத்திலும் வந்தவன். ஆதலின் யோசிக்கத் தக்கவன்(அதேசகாலே ஸம்ப்ராப்த: ஸர்வதா சங்க்ய தாம் அயம்) என்பதாம்.

இப்படி ஜாம்பவான் தன் கொள்கையைக்  கூறிய பிறகு, மைந்தன், ” இவ்விபீஷணனை : 
நம்மோடு சேர்த்துக்கொண்டு, இவன் நன்மை தீமைகளை நன்கறிந்து, அதற்கு ஏற்ப நடந்து
கொள்ளுவது நன்றாம். “(பாவமஸ்யது விஜ்ஞாயதத்வதஸ் த்வம் கரிஷ்யஸி)” என்று கூறினன்.
இந்நால்வரும் இவ்வாறு இயம்பிய பிறகு, திருவடி இந் நால்வருடைய கொள்கைகளையும்
கண்டித்து, தன் கொள்கையை இராமபிரான் ஸன்னிதியில் விண்ணப்பம் செய்து கொண்டி
ருக்கின்றனன். இங்கு இத்திருவடி வார்த்தையும், அவ்வார்த்தையின் கருத்தும் பின் வருமாறு : ஸுக்ரீவனைக் குறித்து, “தலைவ ஒருவரை வெல்லவேண்டும் என்றாவது, ஒருவ
ரிடத்தில் அஸுயையினாாவது, நான் பெரி யன்’ என்னும் எண்ணத்தினாலாவது, ஒரு
பயனை விரும்பி, பக்ஷபாதத்தினாலாவது கூறப் போகிறேனில்லை. இராமபிரானுடைய திருக் குணங்களைக்கண்டு, உண்மையைக் கூறுவேன்” என்றனன், திருவடி.
இவ்வாறு கூறி, அத்திருவடி அங்கதன் கொள்கைக்குக் கூறியிருக்கும் குற்றமாவது:
” இவ்விபீஷணனிடத்தில், குணங்கண்டு ஏற்றுக் கொள்ளுதல்; குற்றங்கண்டு விட்டிடு
தல்’ என்னும் கொள்கை சிறந்ததன்று.ஏனெனில், இவனை நம் காரியத்தில் ஏவினாலல்லது, இவன் நன்மை அறிய இயலாது ; நன்மையை அறியாமல் ஏவ இயலாது. ஆதலின்,
இவனை ஆராய்தல் இயலாததாம்.-(ருதே நியோகாத் ஸாமர்த்யம் அவ போத்தும் ந சக்யதே
ஸஹஸா விநியோகோ ஹி தோஷவாந் ப்ரதிபாதி மா ) என்பதாம்.
பின்பு, சரபன் கொள்கைக்குச் செப்பியிருக்கும் குறையாவது : “இவ்விபீஷணன் எதிரே நிற்கையால், “தூதனை விட்டு, இவன் நன்மை தீமைகளை அறிந்து, அவ்வறிவுக்கு
ஏற்ப நடந்து கொள்ளலாம் ” என்னும் கொள்கையும் சீரியதன்றாம்.-(சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் ஸசிவைஸ்தவ அர்த்தஸ்யா ஸம்பவாத் தத்ர காரணம் நோபபத்யதே )என்பதாம்.
பிறகு, ஜாம்பவான் கொள்கைக்குப் பகர்ந்திருக்கும் புன்மையாவது :
“இவ்விபீஷணன், இராமபிரானிடம் வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும்,காலத்திலும் வந்தவன் ” என்னும் மதமும் பொருத்தமுடைத்தன்று. ஏனெனில், இராவணன் மிக்க தமோகுணம் பெற்றிருப்பவனாம், பிறரைத் துன்புறுத்துகின்றவனாம். ஆதவின், விடத் தக்கவனாம். விபீஷணன் அவனை விடாது இருப்பின், அவன்பாவச்செயலினால்,அவனைப் போன்று, அவனுக்கு உடன்பட்டிருக்கும் இவனும் அழிய நேரிடும்.-இராமபிரானோ, ரஜஸ்ஸும், தமஸ்ஸும் சிறுதுமின்றி, சுத்த ஸத்துவ குணமுடையவனாம். துன்பம் துடைத்து இன்பம் தந்து பிறரை வாழ்விப்பவனாம். ஆதலின், பற்றத்தக்கவனாவன். இவ் இராமபிரானைப் பற்றி இவனருளால், இப்பரமன் திருவடித் தாமரைகளைக் கிட்டி, தொண்டு செய்துவாழ்வுபெறலாம்.
இவ்வாறு இராவணனுக்கும் இராமபிரானுக்கும் உள்ள தீமை நன்மைகளைக் கண்டவனாம் இவ்விபீஷணன். மேலும், இராவணன் கீழ்மையும் இராமபிரான் ஆண்மையும் நன்கு உணர்ந்தவனாம், இவன். ஆகவே உள்ளத் தூய்மையுடன் பரமபுருஷனையே தஞ்சமாய்ப் பற்ற வந்தவன் வரவுக்கு இவ்விடமும் இக் காலமும் தகுந்த இடமும் காலமும் ஆகத் தட்டொன்று மில்லை யன்றோ?-(ஸ ஏஷதேச: காலச்சபவதீ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷகுணாவபி !தெளராத்ம்யம் ராவணே திருஷ்ட்வா விக்ரமம் ச ததா த்வயி
யுக்தம் ஆகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித)-என்பதாம்.
[ஒருவன் கருமயோகத்தைச் செய்கின்றான். அக்கரும யோகமாகிய தருமம், பரிசுத்மான இடத்திலும், காலத்திலும் செய்யப்பெறுமாயின், அதற்கு நன்மையுண்டாம் ;
அதனாலாகிய பயனும் உண்டாகும்.அங்ஙனம் செய்யப் பெறாவிடின், அத்தருமத்திற்கு நன்மையும் பயனும் உண்டாகா.இத்தருமம்போன்று. இடம் காலம் இவற்றினால், எம்பெருமானாகிய தருமத்திற்கு ஏற்படும் நன்மையும் பயனும் கூறுதற்கு சாஸ்திரம் இடம் தரவில்லையன்றோ? இராமபிரானாகிய தருமத்தைத் த ஞ்சமாய்ப் பற்றும் விபீஷணனுக்கு, அங்ஙனம் பற்றுங்கால், ஏதேனும் ஓர் இடமும் ஒரு காலமும் அமையுமாதலின், இன்ன இடம்
இன்ன காலம் என்பது இல்லையன்றோ? இந்த உண்மையைத் திருவடி வாயிலாக வெளியிடுகின்றான், வால்மீகி முனிவன். கருமயோகமாவது – எம்பெருமான் திருவுள்ளம் உகக்குமாறு, தனக்குரிய தருமங்களைச் சாஸ்திரமுறையைப் பின் சென்று செய்கையாம்.)
இவ்வாறு ஜாம்பவான் கொள்கைக்குக் குறை கூறி, மைந்தன் கொள்கைக்கு இழிவைக்
கூறியிருக்கிறான் திருவடி. அவ்விழிவாவது :-”இவ் விபீஷணனை ஒரு காரியத்தில்
தூண்டி, அக்காரியத்தைச் செய்வித்து, அதனால், இவன் கருத்தைத் தெளியலாம்” என்னும் கொள்கையும் சீர்மை உடைத்தன்று.-ஏனெனில், எதிரி தன் காரியத்தில் வல்லவனாயின், தன் எண்ணத்தை வெளியிடாதவாறு, நடந்துகொள்வன் ; ஆதலின், சீக்கிரத்தில் அவன் நினைவு அறிய இயலாது அன்றோ ?-(அசக்யஸ் ஸஹஸா ராஜந்பாவோ வேத்தும் பரஸ்யவை)-என்பதாம்.

இங்ஙனம்,அங்கதன் முதலானார் கொள்கைகளுக்குக் குறைகூறிய தி ருவடி, தன்
கொள்கையையும் நன்கு கூறியிருக்கின்றனன் :
”இந்த விபீஷணன் கூறும்போது, இவன் பால்குற்றங்களைக் குறிக்கும் செயல் ஒன்றும்
காணப் பெற்றிலது : வழியடியுண்டவன்தாய் முகத்திலே விழித்தாற் போன்று, இவன்
முகம் குளிர்ந்தன்றோ? தெரிகிறது; இவன் தீம்பனாகில், இவனுக்கு விரோதத்தைச் செய்ய
முயன்ற இவ்வானர வெள்ளத்தில், அன்பனாய் இவ்வாறு வார்த்தை கூறு தற்கு இடம்
உண்டோ? கூறியிருப்பனோ ? பயம் சிறிதும் இன்றியும் இருப்பனோ ? இவன் குரல் தழு
தழுத்துத் தெரிகின்றதோ? இல்லையன்றோ?-ஒருவனுக்குக் கெட்ட எண்ணம் உண்மையில்
இருப்பின்,அவ்வெண்ணத்தை அவன் மறைக்க முயன்றாலும், அதை, அவன் முகம்
வெளிப்படுத்திவிடுமன்றோ? ஆதலின், இவன் தூய்மை பெற்றிருப்பவனேயாம்.
பிறருக்குச் செய்ய அரிதான இராமபிரானுடைய முயற்சியையும், இராவணனுடைய
கெட்ட சரிதத்தையும் நன்கு கண்டு, தீம்பனான வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா இராச்
சியத்தை ஸுக்ரீவனுக்கு வயமாக்கிக் கொடுத்ததையும் கேட்டு, அவ்வாறே, இராவணனைக்
கொன்று, இலங்கா இராச்சியத்தைத் தனக்கு வயமாக்கிக் கொடுப்பன் என்று திடமாய்
எண்ணி, இவ்விபீஷணன் இங்கு வந்தனன்-என்பது என் எண்ணம். இவன் நிலையை
இவ்வாறுஉண்மையாக உணர்ந்தால் இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாம் . இதுவே, திருவடி கூறிய கூற்றாம்.-இங்கு, திருவடியின் வார்த்தை பின் வருமாறு 🙁உத்யோகம் தவ ஸம்ப்ரேக்ஷ்ய மித்யா வ்ருத்தம்ச ராவணம் | வாலி நம் ச ஹதம் சருத்வா ஸுக்ரீவம்ச
அபிஷேசிதம் || ராஜ்யம் ரார்த்தயமானஸ்து புத்தி பூர்வமிஹாகத : ஏதாவத்து புரஸ்க்ருத்யவித்யதேத் வஸ்ய ஸங்க்ரஹ : ) இங்ஙனம் திருவடி கூறிய வார்த்தையைத்
திருச்செவி சாற்றி, (ஸக்ரீவன் முதலானார்,’சரணம் பற்றிய விபீஷணனை ஏற்றுக் கொள்
ளுதல் கூடாது’ எனக் கூறும்போது ஒருவாறு அழிந்திருந்த ) இராமபிரான் உளனானான் ;
மனக்களிப்பும் பெற்றான் ; தன் கொள்கையையும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றான்.
(அத ராம ப்ரஸந்நாத்மா) என்னும் வால்மீகி முனிவன் வாக்கியமும், ” அத ராம்: = அநந்தரம் பெருமாள் உளரானார்; திருவடி வார்த்தையாலே உளரானார். ப்ரஸந்நாத்மா=தர்மியுண்டான
வாறே தர்மம் உண்டாயிற்று’‘ என்னும் பெரியவாச்சான்பிள்ளை திருவாக்கும் அனுப விக்கத் தக்கவை.

இனி, இராமபிரான் கொள்கையைக்காண்போம்.-இராமபிரான், அங்கதன் முதலானாரை நோக்கி, தன் கொள்கையைக் கூறுதற்கு முன், தன் உத்தமத் தன்மைக்கு ஏற்ப, ‘உங்கள் வார்த்தையை நான் கேட்ட வோபாதி, இவ்விபீஷணனைப்பற்றி,யான் கூறும் வார்த்தையையும் நீங்கள், செவி தாழ்த்துக் கேட்க வேண்டும். என்று இரந்து கொண்டிருக்
கின்றான்.-இவ்வாறு இரந்து, இராமபிரான் கூறிய வார்த்தையாவது (மித்ராபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதம்சந தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம் )என்பதாம்
இராமபிரான். கடற்கரையில் வானரர்கள் திரளிலே அருளிச் செய்த ‘மித்ரபாவேந’
என்னும் இவ்வார்த்தை,கண்ணன் பகவத் கீதையின் இறுதியில் அருளிச் செய்த “ஸர்வ
தர்மாந் “ என்னும் வார்த்தைபோன்று உள்ளதாம்.
கண்ணபிரான், அக்கீதையில், கருமயோகம்,(எம்பெருமான் முக மலர்த்திக்குஉறுப்பாகச் செய்யும் ஜீவனாகிய தனக்குரியதருமம்) ஜ்ஞான யோகம், (உள்ளத் தூய்மை பெற்றிருப்பவன் சிந்திக்கும் ஜீவாத்மாவைப்பற்றிய சிந்தனம்) பக்தி யோகம் (பரமனைப்
பற்றிச்சிந்திக்கும் சிந்தனம்) ஆகிய இவ்வுபாயங்களைப் பரக்கக்கூறி, இறுதியில் இவற்றை
விட்டிட்டு, பரமனாகிய தன்னையே பற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான்.
இராமபிரானும், இங்கு அங்கதன், சரபன் முதலானோர் கூறிய கொள்கைகளைக் கழித்து,
இறுதியில் தனக்கே உரிய சீரிய கொள்கையை முடிந்த பொருளாக அருளிச் செய்திருக்கிறான்.
கண்ணன் செல்வம் இழந்திருக்கும் அர்ஜ்னனைச் செல்வ வானாக்க இறுதியில் ஸர்வ தர்மாந்” என்னும் வார்த்தையை அருளிச் செய்தது போன்று, இராமபிரானும், இலங்
கையை இழந்த விபீஷணனை இலங்கையை உடையவனாக ஆக்க இறுதியில் ‘மித்ரபாவேந என்று அருளிச் செய்திருக்கிறான்.
அங்கு, கண்ணன் ஸேனையின் ந டுவில் அர்ஜ்ஜுனன் சோகம் தீர்வதற்கு அவ்வார்த்
தையை அருளிச் செய்திருக்கிறது போன்று, இங்கும், இராமபிரான் ஸேனையின் நடுவில்
விபீஷணன் சோகம் தீர்வதற்கு இவ்வார்த் தையை அருளிச் செய்திருக்கிறான்.
நம்ஆசாரியர்கள் ‘திருத்தேர்த் தட்டில்வார்த்தை’ ‘கடற்கரை வார்த்தை’ என்னும்,
(கண்ணபிரான் இராமபிரான் இவ்விரு எம்பெருமான்களுடைய) இவ்விரு வார்த்தைகளையும், எல்லாச் சேதனருடைய சேமத்தைவிளைவிக்கும் சீர்மையுடையன வாயிருத்தலினாலும், மேற்கூறியவாறு ஒற்றுமை பெற்றிருக்கின்றமையினாலும், அன்புடன் தாங்களும் ஆதரித்தும், தங்கள் திருவடிகளில் ஸம்பந்தம்
பெற்றிருப்பார்க்கு உபதேசம் செய்தும்போருகிறார்கள்’‘ என்பதையும், “எந்தச் சேதன
னுக்கு ‘இவ்விரு வார்த்தைகளில் நன்கு தொடர்பு ஏற்படுகின்றதோ,அந்தச் சேதனனே. ஸ்ரீ வைஷ்ணவன்’ எனப் புகழப்பெறுகின்றான்” என்பதையும் நாம் இங்கு அறிதல் அவசியமாகும்.
உண்மை இங்ஙனம் ஆனாலும், பெரியவாச்சான்பிள்ளை இராமபிரான் வார்த்தைக்கு
மிக்க ஏற்றத்தைத் திருவுள்ளம் பற்றி அருளிச் செய்திருக்கிறார் :
அங்கு.சரணாகதாத்வஸாயம்’ சொல்லிற்று; இங்கு . ‘சரண்யாத்வாஸாயம்’ சொல்
லுகிறது .அங்கு, ‘சரணாகதனைப் பாபங்களில் நின்றும் விடுவிப்பேன்’ என்கிறது; இங்கு
‘நான் விடேன்’ என்கிறது” என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கு அவசியம் அனு
பவிக்கத் தக்கதாம்.
இத்திருவாக்கின் கருத்தைச் சிறிது விவரித்துக் கூறுவோம் : எம்பெருமானை எவன்
அவனைப் பெறுதற்குக் காரணமாய்ப் பற்றுகின்றனனோ, அவனைச் சரணாகதன் என்பர்
அச்சரணாக தனுக்கு உரிய திடமானஎண்ணத்தை (“எம்பெருமான் இப்பொருளை
ஒருகாலும் விட்டிடான்; காத்தே தீருவன் ‘என்னும் எண்ணத்தை) ‘அத்யவஸாயம்
என்று கூறுவர்.

இந்த எண்ணம், எம்பெருமான் திருவடிகளை உபாயமாய்ப்பற்றி, பேற்றைப்பெறுபவ
னுக்கு இன்றியமையாததாம். இவ்வின்றியமையாமையைப் பின்வருமாறு நாம் அறியலாம்:
ஒருவன், கப்பலை ஏறி, கடலைக் கடந்துதான் விரும்பிய இடத்துக்குச் செல்கிறான்.
அங்ஙனம் கடந்து செல்பவனுக்கு உள்ள(இக்கப்பல் மிக உறுதியானது : இது நம்மை,
கோரின் இடத்திற்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிடும் என்னும் ) எண்ணத்தைக் காண்
கின்றோமல்லவா?-இது போன்று, இந்த ஜீவனும் எம்பெருமானாகிய கப்பலை ஏறி ஸம்ஸாரமாகியபெருங்கடலைக் கடந்து, தான் விரும்பிய பரமபதமாகிய இடத்துக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கின்றமையின், .எம்பெருமானாகியகப்பல் மிகமிக உறுதியானது; இக் கப்பல்நம்மைப் பரமபதத்தில் கொண்டு போய்ச்சேர்த்துவிடும்” என்னும் திடமான எண்ணம்பெற்றிருக்கவேண்டியவனன்றோ?
இங்கு, ”ஒரு சிறாயை விச்வஸித்து,ஆறு மாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும்
ஏற்றிக்கொண்டு, கடலிலே இழியாநின்றான். அவ் வோபாதியாகிலும் வேண்டாவோ பக
வத்விஷயத்தைப் பற்றுவார்களுக்கு‘ என்னும் நம்பிள்ளை திருவாக்கு அனுபவிக்கத்
தக்கது.
இத்திருவாக்கை அனுபவிக்குங்கால்
“எம்பெருமானாகிய கப்பலை ஏறிச் செல்பவ னுக்கு மிகவும் திடமான எண்ணம் வேண்டும்.
அவ் எண்ணம் இந்த ஜீவன் நிலையைக் காணுங்கால், உண்டாவது அரிதாம். ஆனாலும், கருங்கடலைக் கடப்பவன், அங்ஙனம் கடக்கக் கருவியாய் எண்ணியிருக்கும் கப்பலில் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றுள்ள நம்பிக்கையாவது இந்த ஜீவனுக்கு வேண்டுவது அவசியமன்றோ?”‘என்னும் உண்மை நன்கு விளங்குகின்ற தன்றோ?
‘இந்தத் திடமான எண்ணம் பரம புருஷனாகிய என்னைச் சரணம் பற்றியிருப்போனுக்கு
இன்றியமையாததாம்” என்பதை இயம்பியிருக்கிறான்,”ஸர்வ தர்மான்” என்னும்
வார்த்தை வாயிலாகக் கண்ணன்.மேலும், அக்கண்ணபிரான், மேற்கூறிய வார்த்தையிலேயே, இவ்வாறு திடமானஎண்ணம் பெற்றிருக்கும் சேதனனை, என்னை
அடையவொட்டாது தடைசெய்யும் பாவங் களினின்றும் விடுவிப்பேன்’ என்றும் அருளிச்
செய்திருக்கிறான்.
இதுவரையில், சரணாகதாத்யவஸாயம் சொல்லிற்று; சரணாகதனைப் பாவங்களில்
நின்றும் விடுவிப்பேன்‘ என்னும் பகுதியின் கருத்தைக் கண்டோம். இனி, சரண்யாத்ய
வஸாயம்’ என்பதின் கருத்தைக் காண்போம்.
‘சரண்யன்‘ என்பதற்கு, ‘துன்பம் துடைத்து இன்பம் தரும் எம்பெருமான் என்று பொருள். அவ் எம்பெருமானுடைய திடமான எண்ணத்தை (“இந்த ஜீவனை ஒருக்காலும் விட்டிடேன்; காத்தே தீருவேன்” என்னும் எம்பெருமான் எண்ணத்தை) சரண்யாதியவஸாயம்’ என்று கூறுவர்.
இவ் அத்யவஸாயத்தையும் ‘இந்த ஜீவனை எம்பெருமானாகிய நான் விடேன்’ என்று கூறி
யிருத்தலையும், இங்கு இராமபிரான் வார்த்தையில்நாம் நன்கு அறியலாகும்.
ஜீவனுடைய திடமான எண்ணம், எம் பெருமானுடைய திடமான எண்ணம் இவை
இரண்டும், இந்த ஜீவன் பேறு பெறும்போது அவசியமானவை என்றாலும், இவன் எண்ணத்
திலும்,அவன் எண்ணம் மிகமிக முக்கியமானதல்லவா ?
இந்த ஜீ வன், “எம்பெருமான் இப்பொருளை இரட்சியாது விட்டிடான் : இரட்சித்தே தீருவன்” என்னும் திடமான எண்ணம்பெற்றிலனேயானாலும், எம்பெரு மான்,
இந்த ஜீவனை நாம் விட்டிடாது, இரட்சித்தே தீருதல் வேண்டும” என்னும் திடமான எண்ணம் பெற்றிருப்பின், எம்பெருமானுடையஅவ் எண்ணத்தினாலேயே, இவனுக்கு நன்மை
உண்டாவது திண்ணமன்றோ ?

‘இந்த ஜீவன், எம்பெருமான் இப்பொருளை இரட்சித்தே தீருவன்’ என்று திடமாக
எண்ணியிருந்தாலும், எம்பெருமான், ‘இந்தஜீவனை இரட்சித்தே தீரவேண்டும் என்று எண்ணாது இருப்பின், இவன் நன்மை பெற இயலுமோ? இயலாதன்றே? இதுபோன்று
பாவத்தினின்று விடுவிப்பதிலும், எம்பெருமான் இவனை விடாது இருத்தல் மிகவும் முக்கி
யமானதன்றோ ?
இங்கு,”உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தைபிரானே” என்னும்
திருமங்கை மன்னன் திருவாக்கும் அனுபவிக்கத்தக்கதாம் .-உண்மை இவ்வாறு இருத்தலின், கண்ணன் வார்த்தையிலும், இராமபிரான் வார்த்தைக்கு ஏற்றம் உண்டு என்பது தெளிவாம்.
இதுவரையில், “மித்ரபாவேந்” என்னும் இவ்வார்த்தையின் சீர்மையைச் சிறிது கண்டோம். இனி,இவ்வார்த்தையின் கருத்தைச் சுருக்கமாய்க் காண்போம் :
நம்பத் தக்கவன் செயலாலே நம்மை நெருங்கி வந்த இவ்விபீஷணனை ஒரு படியாலும் விடஊஹை கூடச் சிறிதும் நமக்கு இல்லை; இவ்விபீஷணனுக்குக் குற்றம் இருந்தாலும்,இவன் நினைத்த காரியம் பெற்றானா கிறான். இவனை ஏற்றுக் கொள்ளுதல்,பெரியோர்களுக்கு நிந்திக்கத் தக்கதாகாதாம்” என்பது, மேற்கூறிய வார்த்தையின் கருத்தாம்.
இவ்வாறு இராமபிரான் தன் இயல்பை இயம்பியிருந்தும், பொங்கும் பரிவு பெற்றிருந்
துள்ள ஸுக்ரீவன், தெளிவு சிறிதும் இன்றி,-அவ் இராமபிரான் முன்னிலையில் “விபீஷணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் அல்லன்” என்பதைச் சில முறைகளைப் பின் பற்றிக் கூறி
யிருக்கிறான். அக்கூற்றிற்கு இராமபிரான் விடை அளிக்குங்கால். அப்பிரான் திருவாக்கி
லிருந்து அவதரித்ததும், “மித்ரபாவேந என்னும் வார்த்தை போன்று மிகச் சீர்மையுற்றதும், எல்லாச் சேதனருக்கும் நன்மையை உண்டு பண்ணுவதுமான வார்த்தை வருமாறு

(ஸக்ருதேவ ரபந்நாய தவாஸ்மீதிசயாசதே |அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வரதம் மம1
என்பதே அவ்வார்த்தையாம்.-(இவ்வார்த்தையின் கருத்துக் காணும் போது. ஸக்ரீவன் கேள்விகளுக்கு இராமபிரான்விடையளித்திருக்கிறதாய் நாம் காணுதல் நன்றாம்.
ஸுக்ரீவன், இராமபிரானை நே க்கி இராம! நீ புருஷோத்தமன்; உன்னை முறையுடன் உபாயமாய்ப் பற்றியிருப்போனை விட்டிடாது காத்தல் உனக்குரிய தருமமேயாம். சாஸ்திரம், ‘சரணாகதியை ஒருகால் செய்தல் நன்று; பலகால் செய்யலாகாது’ என்று இயம்பியிருக்கின்றது. இவ்விபீஷணனோ, சாஸ்திரம் கூறும் முறையைப் பின்
சரணம் கா: / பவந்தம் சரணம்கத: / பாதயோச்சரணாவேஷநிபபாத ) என்று முக்
கால் சரணம் பற்றியவனன்றோ? ஆதலின், இவன் ஏற்கத் தக்கவனல்லன் எனறு கூறினன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை :
“(ஸக்ருதேவ) இவ்விபீஷணன் முறை வழுவாது ஒருகால் நம்மைப் புற்றியவனே
ஆவான்; எங்ஙனம்? என்னில், இராவணனால் மிகவும் அவமதிக்கப்பட்ட விபீஷணன் நம்மை
நோக்கி, நான்கு இராக்கதருடன்,ஆகாசத் தில் கிளம்பிய போதே, நீங்கள் அவனைச் சத்துருவாய் எண்ணிக் கலங்க, உங்களுக்கு அக்கலக்கம் போக வேண்டும் என்று அவன் எண்ணி,’என்னைச் சத்துருவாய் எண்ணலாகாது நான் இராமனைச் சரணம் பற்ற வந்தனன்”’
என்னும் உண்மையை உங்களுக்கு உணர்த்திய வார்த்தை, “ராகவம் சரணம் கத” என்பது.
உங்கள் வார்த்தையினால், நாமும் கலங்கினோமோ? என்று ஐயம் கொண்டு,நம்மைத்
தெளியப்பண்ணச் சொன்ன வார்த்தை,
பவந்தம் சரணம் கத:” என்பது. உண்மையில் முறை வழுவாது நம்மைச் சரணம் பற்றும் போது உள்ள வார்த்தை“பாதயோச் சரணான்வேஷ நிபபாத ” என்பது. ஆதலின், இவன் ஏற்றுக்கொள்ளத்தக்கவனேயாம். . இதைச்செவி மடுத்த ஸு க்ரீவன், மேலும் வினவியதாவது:-இவ்விபீஷணன் தேவரீரைச் சரணம் பற்றியிருப்பவனல்லன்; ஏன்? எனில் “வதம் செய்யவேண்டும்” என்று எங்கள் கூற்றைக்கேட்டு வெருவி, போகநிற்கிறவனன்றோ?
இவன். ஆதலின்,இவன் ஏற்கத் தக்கவனல்லன்”
இதற்கு இராமபிரான் விடையாவது:‘(ப்ரபந்நாயைவ) நாம் இவ்வாறு இவனை
ஏற்றுக் கொள்ளுதல் முறையோ, முறையன்றோ? எனத் தடுமாறுதல் போன்று இராது.
உறுதியுடன் நம்மைப் பற்றியே இருப்பவன் காண், இவன்”.-இதைச் செவியேற்ற ஸுக்ரீவன், இவ்விபீஷணன்,தேவரீரையே மிகச் சிறந்த நன்மையாய்க் கருதாது, இலங்கையைப் பெற
விரும்பி வந்தவனன்றோ? –த வரீருக்கு த்தொண்டனான திருவடியுமன்றோ? “ராஜ்யம்
ப்ரார்த்தயமாநச்ச” என்று இவ்விபீஷணனுக்குள்ள நிலைமையை (இலங்கையில் விருப்
புற்றிருக்கும் இயல்பை)த் தெளிவாய்க்கூறி,தன் கொள்கையை முன்னம் வெளியிட்டிருக்
கின்றனன். ஆதலின், இவன் ஏற்கத் தகுந்தவனல்லன்’ என்றனன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை : “( தவாஸ்மீதி ச யாசதே.)திருவடி இராவணன் முன்னிலையில், நம் சிறப்புக்களை கூறுங்கால், அவ் இராவணன்
அவற்றைப் பொறாது, அத்திருவடியைக்கொல்ல, தன் தொண்டர்களுக்குக் கட்டளை
இட்டனன். அந்த ஸமயம் அங்கிருந்த வி ஷணன். தூதனைப் கொல்லலாகாது” என்றுதடுத்தனன். அவ்வாறு தடுத்து, தனக்குச் செய்திருக்கும் நன்மையை உணர்ந்த திருவடி இலங்கையின் அரசுரிமையை விபீஷணனுக்கு அளிக்கவேணுமென்று தான் கருதி “ராஜ்யம் ப்ரார்த்தய மானச்ச “ என்று கூறினனேயன்றி விபீஷணன் அரசுரிகைமயை வேண்டினனோ? இல்லையன்றோ?
மேலும் நம் தம்பியான இலக்குமணன், நம்மைஎங்ஙனம் விரும்பி, நம்மைப் பிரியாது
நம்முடன் நின்று, நமக்கு மனமகிழ்ச்சிஉண்டாகுமாறு நம்மையே மிகச்சிறந்த பயனாகப் பற்றியிருக்கின்றனனோ,அங்ஙனமே இவ்விபீஷணனும், நம்மையே மிகச்சிறந்த பயனாக விரும்பி நமக்கே ஆட்செய்ய வந்தவன் காண். (தவ,ச, அஸ்மி இதி யாசதே என்று பதங்களைக் கூட்டி, ‘ச’ என்னும் சொல்லை,ஏகாரப்பொருளில் கொண்டு நோக்கின், ” இராமபிரானாகிய உனக்கே அடிமையாக இருக்கிறேன் என்று விரும்புகின்றவன் பொருட்டு” என்னும்பொருள் இங்குக் கிடைக்கிறதன்றே?)
இதைக் கேட்ட ஸுக்ரீவரின் மேலும்இராமபிரானை நோக்கி, இராமா! விபீஷண னுடைய சரணாகதி. முறை வழுவியது’ என்னும் என் கூற்றுக்கு நீ விடை கூறினாய் நீ அவனுக்கு அளிக்கும் பயன் தான் யாதோ?என்றனன்.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரானும், “தேவர் மனிதர். முதலிய எல்லா ஐந்துக்
களினின்றும், பயத்தைப் போக்கி, நன்மையைச் செய்வேன் எனக்கூறி, ! இவ் வுலகிலுள்ளார் அனைவருக்கும்துன்பம் துடைத்து இன்பம் தருதல்,நமக்கே உள்ளதொரு தருமமன்றோ! ஸுக்ரீவ ! இதை நீதலைக்கட்டித் தருதல் நன்றாம்” என்றும் கூறி
யிருக்கின்றனன். (அபயம் ஸர்வ பூதேப்ய; ததாமி ஏகத்வரதம் மம).இவ்வாறு, தன் திடமான ஸங்கல்பத்தை இராமபிரான் வெளிப்படுத்திய இடத்தும் ஸுக்ரீவனுக்குக் கலக்கம் தீர்ந்திலது.அத்தருணம் தன் மிடுக்கையும் அவன் நெஞ்சில் படுமாறு. கலக்கம் தீர்வதற்குக் கூறியிருக்கிறான் 🙁பிசாசாந்தாநவாந்யஷாந் ருதிவ் யாம்சைவ ராக்ஷஸாந் |
அங்குள்யக்ரேணதாந் ஹந்யாம் இச்சன் ஹரிகணேச்வர| ) என்பது, அம்மிடுக்கைக் கூறிய வார்த்தையாம்.
இதின், கருத்து : ‘ ஸுக்ரீவ!பிசாசங்களையும். அஸுரர்களையும் இயக்கர்களையும்,
இப்பூமியிலுள்ள அரக்கர்களையும் இவர்களனைவரையும் அழியச் செய்யுமிடத்து, தம் பலம்
எல்லாம் வேண்டா ; ஆயுதமும் வேண்டா; நம் கைவிரலும வேண்டா; விரல் நுனியே
போரும் . ஆனால். நம் விரோதிகளுடையதிரள் குறி அழியாது இருப்பானேன்? என்னலாம். அருமையாலனறு, செய்யநாம் நினையாமல் இருத்தலே, அங்ஙனம் அத்திரள அழியாது இருததலுக்குக் காரணமாம். உயிர்நிலையிலே நலிந்த இராவணனை நலிய நினைவில்லாமல் இதுகாறும் இருத்தலுக்குக் காரணம்யாதோ? என்று வினவலாம்.இவவிபீஷணனைப் போனறு உயிரோடு தலைவணங்கினால் அவனும் அவனைச் சேர்ந்தோறும் வாழ்நது போகலாமன்றோ? இதுதான அங்ஙனம் இருத்தலுக்குக்காரணம். வாலியை நாம் அடித்துக் கொன்றபோதுதானே கிஷ்கிந்தையின் அரசுரி மையை நீ பெற்றுவானர வெள்ளங்களுக்குஅரசனானது” என்பதாம்.
இங்கு, பின்வருமாறு உண்மை உணரத் தக்கது: எவன் தன் இச்சையினால் இப் பிர
பஞ்சத்தைஆக்கி, அளிதது அழிக்கின்றனனோ,அவனே மிகமிக மேலான தெய்வம்” என்பது
வேதாந்தங்களின் உண்மைக் கருத்தாகும்.-அங்ஙனம் மிகமிக உயர்ந்த தெய்வம் இராம
பிரான என்பதை இவ்வுலகம் உணர்ந்ததேயாம். அந்த இராமபிரானுக்கு, ” இவ் இரா
வணனையும் இலங்கையையும் அழித்தல்” என்பது உண்மையில் ஒரு பொருளோ?
தேவதைகளுடைய வேண்டுகோளுக்குஇணங்கி தன் மேன்மையை, மற்றவர் அறி
யாது இருக்குமாறு, மானிட சரீரம் போன்றுள்ள தன் சரீரத்தினால் மறைத்துக் கொண்டிருக்குமவனும், இராவண வதமான பிறகும்,-பிரமன், சிவன் முதலானோர். இராமா! நீ நாராயணன்’ என்று உண்மையை உணர்ந்து கூறுங்கால், தன்னை மானிடனாகவே கூறிக்
கொண்டவனும், பரதேவதையும் பரமபுருஷ னுமான இராமபிரான், தானாகிய தருமத்தை
நிலைநிறுத்தும் இவ்விடத்து, மித்ர பாவேந் என்னும் வார்த்தை வாயிலாகத் தன் இயல்
பையும், “ஸர்வ தர்மான் ‘ என்னும் வார்த்தை வாயிலாகத் தன் திடமான எண்ணத்தையும் கூறிய அந்த அந்த அளவில் நில்லாது, தன் இச்சையினாலேயே இப் பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழிக்க வல்லவனுக்குஇலங்கையையும் இவ் இராவணனையும் அழித்தல் அருமையாமோ? என்று தனக்கே உரிய தெய்வத் தன்மையையும் வெளிப்படுத்திக்
கூறி, இம் முகத்தால். ‘ஸகரீவனாகிய ஆசரிதனுக்குத் தான் வயப்பட்டிருத்தல்’ என்னும்
தனக்கே உரிய சீர்மையையும் அழியவொட்டாது காத்து தனககுரிய தருமத் தன்மையை
யும் நிலைநிறுத்தி, விபீஷணனையும் வாழ்வித்தஇச்சரிதம் வெகு ஆச்சர்யமானதல்லவா?
இராமபிரான் இவ்வாறு அருளிச் செய்து மேலும் கூறிய வார்த்தை:(ஆநயை நம் ஹரிச்ரேஷ்டதத்தம் அஸ்யா பயம் மயா விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் )என்பதாம்.
இவ்வார்த்தையின் கருத்தையும் முடிந்தபொருளையும் முறையே இங்குக் காண்போம்:
“ஸுக்ரீவனே! தன் வரவை இராகவனாகிய நம்மிடம் தெரிவிக்குமாறு இவ்விபீஷணன், வேண்டிக் கொண்டவனன்றோ? இவன் நெஞ்சாறல் தீர்ந்து நம்மிடம் சேர்ந்தானாவ
தும்.நாம் ஏற்றுக் கொண்டோமாவதும் நீ சென்று அவனை அழைத்து வந்தாலன்றோ?
ஆதலின், அவனை அழைத்து வருதல் வேண்டும். விட வேண்டிய எல்லாவற்றையும் விட்டிட்டு, நம்மைச் சரணம் புகுந்த இவனுக்குநம்மால் பயமின்மையானது அருளப் பெற்றுள்ளது. (இவ்வாறு கூறியதும் விபீஷணனை அழைக்கச் சென்ற ஸுக்ரீவனைக் குறித்து, திரும்பவும் இராமபிரான் கூறியதாவது) விபீஷணனைத் தானே அழைத்து வரும்படி கூறப் பட்டது என்று மீளாதே, இராவணன் தானே யாகிலும் அழைத்துக் கொண்டு வரவேணும், விபீஷணனைக் கைக் கொண்டோமாகில், தன்பக்கல் புண்ணியம் உடையோனை ஏற்றுக்கொண்டோமாவோம்; இவ் விபீஷணனுடன் வந்த இந்நான்கு இராக்கதரும் பிழைத்துப் போருவர் ; வந்தவன் உண்மையில் இராவண னாயிருந்து, அவ் இராவணனை ஏற்றுக் கொண் டாலோ,அப்போதுதான், இராமபிரானாகிய நமக்கு நிறமுண்டாம்; இலங்கையிலுள்ள இராக்கதர் அனைவரும் வாழ்ந்து போருமாறு நோக்கினோமாவோம். நமக்கு வரும் ஏற்றம்முழுவதும் உயிர்த்தோழனான உன்ன தன்றோ?
என்னும், இதுவே மேற்கூறிய வார்த்தையின்உண்மைக் கருத்தாகும்.
இங்கு, ஸுக்ரீவன் இசைந்ததும், இராமபிரான் தானே நேரே விபீஷணனை அழைத்து
ஏற்றுக்கொள்ளாது, ஸுக்ரீவனையிட்டேஅழைத்து வருமாறு ஏவியிருப்பதற்குக் கருதது
யாதோ? எனின், கூறுவோம் :
இராமபிரானுக்கு ‘ஆச்ரிதபாரதந்திரியம்’ என்னும் செல்வம் உண்டு; அதாவது,
தன்னைப் பற்றியவனுக்கு வயப்பட்டிருத்தலாம்” என்று இக்கட்டுரையில் அடிக்கடி கூறி
வருகிறோம் அல்லவா ? தானே விபீஷணனைஅழைத்து ஏற்றுக்கொள்ளும்போது, அச்செல்
வம் இவன் பால் நிலைபெற்றிருக்குமோ ? அழிந்து விடாதோ? ஆதலின், ஸுக்ரீவனை இட்டே அழைத்து ஏற்றுக் கொண்டனன்.-இது நம் ஆசாரியர்களாலே இங்கு ஸமாதானமாய்க்கூறப் பெற்றுள்ளதொரு உண்மைக் கருத்தாம்.
மேலும், விபீஷணன் இராமபிரானிடம் அளவற்ற அன்பு உடையவன். அவ்விபீஷண
னைக் கொல்லவேண்டும்” என்று ஸுக்ரீவன் கூறியது, அவ்வாறு கூறிய ஸுக்ரீவனுக்குப்
பெரிய பாவமன்றோ ? ” தன்னை விட்டிட்டு, தன் அடியார் திறத்தில் அன்பைச் செய்தல்நன்றாம் என்பதும், “அங்ஙனம் அன்புசெய்யாது இருத்தல், பெரிய பாவம்” என்பதும்,
” அப்பாவம் உள்ளவன் மாத்திரமேயன்றி, அவனோடு தொடர்பு பெற்றிருக்கும் இப்பிர பஞ்சமும் அழிந்துவிடும்” என்பதும் பரமபுரு ஷனாலேயே கூறப்பெற்றுள்ள உயரிய உண்
மைக் கருத்துக்கள் அல்லவா?உண்மை இங்ஙனம் இருக்க, ஸுக்ரீவன்,
விபீஷணனைக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருப்பது மிகமிகப் பெரிய பாவமன்றோ?
இராமபிரான, ஆச்ரிதரிடம் மிக்க அன்பு பெற் றிருப்பவனாதலினாலும், ஸு க்ரீவன் அவ் ஆச்ரிதருள் ஒருவனாதலினாலும், அந்த ஸுக்ரீவன்பாவம் தீர்ந்து நன்மை பெறுமாறு திருவுள்ளம்பற்றி, அந்த ஸுக்ரீவனையே அழைததுவர நியமித்தருளினான்’ என்பதும் இங்கு ஓாஉண்மைக் கருத்தாகும்.
இன்னமும், இங்கு அறியவேண்டுவதோர்உண்மை உண்டு: எம்பெருமானை ஜீவன பற்றும் பற்றுதல், “ஸ்வகத ஸ்வீகாரம்” எனப்படும் எம்பெருமான் ஒரு சேதனனைத்
தனக்குக் காக்கத தககவனாய்க கருதி, அவனே இவனை மேல் விழுந்து ஏற்றுக்கொளளுதல் என்பதை ‘பரகத ஸவீகாரம்” என்று பகருவர். இங்கு,முன்னது 
” (முமுக்ஷர்வை சரணமஹம் ப்ரபத்யே)என்னும் வாக்கியமும்,பின்னதுக்கு,
தேநலப்ய = எந்தச் சேதனனை எம்பெருமான்மேல் விழுந்து விருமபுகின்றனனோ, அவனால்
அப்பெருமான் அடையத் தக்கவனாம்) என்னும் வாக்கியமும் தக்க சான்றுகளாம்.
“ஜீவன் எமபெருமானைப் பற்றுமபோது எங்ஙனம் பிராட்டியாரை முன்னிட்டுப் பற்று
கின்றனனோ,அங்ஙனமே, எம்பெருமானும் ஒரு சேதனனை மேல் விழுந்து ஏற்றுக்கொள்
ளும போதும், பிராட்டியாரையோ, அல்லது, பிராட்டியார்ஸதாநத்தில் உள்ள ஒரு பாகவ
தோததமனையோ, முன்னிட்டே ஏற்றுக் கொள்கின்றான் என்பதும் ஒர் உயரிய
உணமையாகும்இம்முறையை, இந்த இராமயணத்தில் பலஇடங்களில் நாம் காணலாகும். எங்கே?என்னில், கூறுதும்.
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டு, ச்ருங்கி பேர புரத்தில் குகனை ஏற்றுக்கொண்
டிருத்தலை, நாம் காணலாம் 🙁குஹேந ஸஹிதோராம 🙂 என்னும் வாக்கியம் இங்குக் காணத்
தக்கது. இல்வாக்கியத்தில், “குஹன் இராமபிரானோடு சேர்ந்தனன்” என்று கூறப் பெற்றிலது; ‘இராமபிரான் குஹன் இருக்குமிடம்எழுந்தருளி அக்குஹனோடு சேர்ந்தனன்”
என்றே கூறப் பெற்றுள்து. இதனால், எம்பெருமான், சேதனனை அவனிருக்குமிடம்
எழுந்தருளி மேல் விழுந்து ஏற்றுக் கொள்கி றான்‘ என்பது தெளிவு.
இங்ஙனம் ஏற்றுக் கொள்ளும் போது,
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டே ஏற்றுக்கொண்டனன், இராமபிரான்‘ என்பதை
திருமங்கை மன்னன், “மாழை மான் மடநோக்கி” என்னும் வாக்கியத்தினால் அருளிச்
செய்திருக்கிறார்; காணலாம்.
இந்தக் குஹன் சரிதம் போன்றே, இவ்விபீஷணன் சரிதமும் உள்ளது. (விபீஷணே நாசு ஜகாம ஸங்கமம்) என்பது இங்கே வாக்கியம், இவ்வாக்கியத்திலும் இராமபிரான் விபீஷணனோடு சேர்ந்ததாகவே கூறப் பெற்றுள்ளது.
இங்கு ஸீதாபிராட்டியார் ஸ்தாநத்திலுள்ள ஸுக்ரீவனை முன்னிட்டு விபீஷணனை இராம
பிரான் ஏற்றுக் கொண்ட இவ்வுண்மை,
“ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்னும் வார்த் தையில் தெளிவு.
ஆனால் “ஜீவாத்மா எம்பெருமானைப் பற்றும்போது, தான்,குற்றக்கடலாயிருக் கின்றமையின், பிராட்டியாரை முன்னிடுகிறது, அக்குற்றங்களைப் பொறுத்தற்கு என்னலாம்.எம்பெருமான் சேதனனைத் தனக்குத் காக்கத் தக்கவனாகக் கருதி, மேல் விழுந்துஏற்றுக்கொள்ளும் போது பிராட்டியாரையோ, அல்லது அந்த ஸ்தாநத்தில்
உள்ளஒரு பாகவதோத்தமனையோ,முன்னிடுதல், எப்பயனைக் கருதியோ ? இவ் எம்பெரு
மானுக்குக் குற்றம் சிறிதும் இல்லையன்றே?”எனச்சிலர் இங்கு ஐயமுறக்கூடும்.
இதின் பரிஹாரம் :
எம்பெருமானுக்கும் குற்றம் உண்டு; அக்குற்றம் யாதோ? எனில், எம்பெருமானுக்கும்
சேதனனுக்கும் உள்ள தொடர்பு என்றும் உள்ளது ; ஒழிக்க ஒழியாதது. இவ்வாறான
தொடர்பையும், தன்னுடைய நீர்மைக்குணங்களையும் இது வரையில் பாராது, இச்
சேதனன் செய்த குற்றங்களையே கண்டு,இவனை விலக்கி ஸம்ஸாரத்தில் வைத்திருந்
தானாதலின், இப்போது மேல் விழுந்து ஏற்றுக்கொள்பவ னாயிருந்தும், இவ் எம்பெருமானை இச்சேதனன் வெறுத்து விலகக்கூடுமன்றோ ? இவ்வாறு விலகாது இச்சேதனன் தன் வயத்திலே வரவேண்டி எம்பெருமானுக்கும் பிராட்டியாரையோ அவர் ஸ்தாநத்தில் உள்ள வரையோ முன்னிடுதல் இன்றியமையாததாம்.
இங்கு ”இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் என்னுமிடம் அபயப்ர தானத் திலும் காணலாம். இருவர் முன்னிடுகிறதும் தந்தாம் குற்றங்களைச் சமிப்பிக் கைக்காக.
என்னும் பிள்ளைலோகாசார்யர் திருவாக்கு-அனுபவிக்கத் தக்கது.
இவ்வாறு இராமபிரான் விபிஷணனை நேரே ஏற்றுக் கொள்ளாது, ‘ஸு க்ரீவனை அழைத்து வா’ என்று அருளிச் செய்திருப்ப தற்கு, பல உண்மைகளைக் கண்டோம்.
இவ்விடத்து, ஸுக்ரீவன் இராமபிரான்நியமனப்படி அழைத்து வர விபீஷணனும்
வந்து, அவ் இராமனைக்கிட்டி, வணங்கிவாழ்ந்துபோனான் என்பது சரித்திர உண்மை.
இங்கு, எம்பெருமானாகிய தருமம் நிலை நிறுத்தப் பட்டிருத்தலையும் கண்டோமல்லவா?
ஆக, ” திருமகள் கொழுநனான எம்பெருமான், இவ்வுலகில் செய்தருளின திருஅவதாரங்களுள் இராமாவதாரம் மிகச் சிறந்தது”‘என்பதும், அங்ஙனம் அவ் எம்பெருமான்திருவவதாரம் செய்தபோது, அவனைக் கூறும் வேதமும், வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாகத் திரு அவதாரம் செய்திருக் கிறது’ என்பதும், ” அந்த இராமாயணம் மிக்க சிறப்பு பெற்றுள்ளது ” என்பதும், ”வீடு பேற்றை விரும்புகின்றவன் அவசியம் அறிய வேண்டும் பொருள் ஐந்து; அவை பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோ தி, உபாயம் என்பன” என்பதும், “ நாராயணன் பரமாத்மா, ” அப்பரமாத்மாவிற்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன் ஜீவன்’ அப்பரமன் திருவுள்ளம் உ க்குமாறு
அடிமை செய்தலே வீடுபேறு என்னும் உபேயம் அப்பேற்றைஇதுவரையில் இந்த ஜீவன்
அடையப் பெறாது தடை செய்யும் அஜ்ஞானம் முதலியன விரோதி’ ” இவ்விரோ தி
போவதற்குத் தக்க ஸாதனம் பக்திப்ரபத்திகள்’ என்று வேதாந்தம் கூறுகின்றது ” என்பதும், “வேதத்தின் திரு அவதாரமான இராமாயணமும், வேதாந்தம் கூறுகின் றவாறு ஐம்
பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்றது’என்பதும், “ வேதாந்தம் மாத்திரம், தான்மிகச்சிறந்த பிரமாணமாயிருந்தும். இவ்ஐம் பொருளையும் கலக்கம் சிறிதும் இன்றி அறிவிக்க மாட்டாதாதலின், அவ்வேதாந்தம் மீமாம்ஸா சாஸ்திரம், இதிஹாஸமான இரா
மாயணம் இவற்றின் உதவியை விரும்புகின்றது என்பதும் “மீமாம்ஸா சாஸ்திரம்
செய்யும் உதவி சிறந்ததாயிருந்தும், மேதாவி களுக்கே அது பயன்படும்” என்பதும், ” இரா
மாயணம், பெண்ணுக்கும் பேதைக்கும் விளங்குமாறு, நன்கு உதவி புரிகின்றது” என்பதும், இவ் இராமாயணம் மேற்கூறிய ஐம்பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்ற
தாயிருப்பினும், சரணாகதி என்னும் உபா யத்தையே விளக்கிக் கூறுவதில் அது மிக்க
நோக்குடையது என்பதும், “இதனாலேயே சரணாகதி சாஸ்திரம் ‘ என இராமாயணம்
பெயர் பெற்றிருக்கிறது’ என்பதும், ” சரணாகதி தருமத்தைப் பற்றிய பல உண்மைகளை
இராமாயணம் அந்த அந்த இடத்தில் விரிவா கவும்,தெளிவாகவும், அழகாகவும் கூறுகிறது
என்பதும், இக்கட்டுரையின் பலபகுதிகளிலும் அறியக்கிடக்கின்ற ஸாரப் பொருள்கள் என
விளங்குகின்றன அல்லவா? 

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-