https://archive.org/details/sri-ramanujan–6/26/28/30/33/34/35/37/40/42/43/51/59–61/63–109-/111/112/163-164-/186/189–192/199/223/ 267 incomplete-/319-320/322/324-326/335/-372-/375-377/381-387/390-396/
—————
ஒழுக்கமுடையோம்; அதனால் எங்களுக்கு ஒருவிதமான பிணியும் வருவதில்லை ;
சுகமாக இருந்து வருகிறோம்” என்றார்கள். அந்த உபதேசம் என்ன வென்றுகேட்க, (1) தினம் இரண்டு, (2) வாரம் இரண்டு. (9) பக்ஷம் இரண்டு, (4) மாதம் இரண்டு. (5) ௬௫ இரண்டு. (6) அயனம் இரண்டு. (7) வருடம் இரண்டு என்று சொல்லி விவரித்தார்கள்.
தினம் இரண்டு-பகலில் ஒரு வேளையும் இரவில் ஒரு வேளையுமாக தினப்படி. இருமுறை மட்டும் உணவு கொள்வது-“தஸ்மாத் த்விரஹ்நோ மநுஷ்யேப்ய உபஹ்ரியதே; ப்ராதச்ச ஸாயஞ்ச'' என்று வேதமும் இருமுறையுணவையே விதித்தது-உண்பதும் உறங்குவதுமான இரண்டும் தினந்தோறும் கட்டளைப் பட்டிருக்க வேணுமென்பதாம்
வாரம் இரண்டு -வாரத்தில் சனிக்கிழமையும் புதன்கிழமையுமாகிற இரண்டுநாள்
எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேணும்-வாரத்தில் இரண்டு நாளாவது ஆலயம் சென்று பகவானைத் தொழுவது என்றுமாம்
பக்ஷம் இரண்டு -வாரம் தோறும் தலைசிரைத்துக் கொள்ள வேணும் என்றபடி
மாதம் இரண்டு-ஏகாதசி தோறும் உணவு கொள்ளாமல் உபவாச மிருக்க வேண்டு மென்றபடி.
ருது இரண்டு -மாதம் தோறும் (அதாவது மாதத்திற்கு ஒருமுறை) வபனம் செய்வித்துக் கொள்ளவேண்டும் ; தலை சிரைத்துக் கொள்ள வேண்டு மென்றபடி.
அயனம் இரண்டு -முன்று மாதங்களுக்கு ஒருமுறை விரேசனங்கொள்ள வேணுமென் றபடி--தேஹத்திலுள்ள கசடுகள் தீர்வதற்காக இதை நியமமாகக் கொள்வர். -விரேசனமாவது எண்ணெய் முதலியன அருந்துதல்.
வருடம் இரண்டு -ஆறுமாதங்களுக்கொருமுறை இரண்டொரு, வாரமாவது ச்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும்
கும்குமிதி கிம் ப்ரமதி அம்ப ததிமத்யே
டிம்ப நநு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப! நவரிதமிதி ஸம்கததி க்ருஷ்ணே
மந்தஹஸிதம் ஜயதி மாதுரதிரம்யம்.
தயிர்த்தாழியில் வெண்ணெய் திரளத் தொடங்கிற்று. அப்போது கண்ணன் கேட்கிறான் “கும் குமிதி கிம் ப்ரமதி அம்ப! ததிமத்யே” அம்மா! தயிரினிடையே குழு குமூ குமுகுமூவென்று ஏதோ சுழல்கின்றதே, இது என்ன அம்மா! என்றான். அதற்கு யசோதை சொன்னாள் “டிம்ப! நநு பூதமிஹ தூரமபயாஹி” பையா! இதில் பூதமொன்று கிளம்புகின்றது; அது அருகேயிருக்கிற சிறுவர்களை விழுங்கிவிடும்; சடக்கென அப்பால் சென்றுவிடு என்றாள், இது கேட்ட கண்ணன் “அம்மா! அந்த பூதம் என்னை விழுங்குவதற்கு முன்னே அதை நான் விழுங்கிவிட்டாலோ? என்று சொல்லிக் கொண்டே அதை யெடுத்து விழுங்கிவிட்டு “அம்மா! பூதமென்று
பொய் சொன்னாயே, இது வெண்ணெயல்லவா ?” என்றான். அது கேட்ட யசோதை நம் குழந்தைக்கு இது வெண்ணெயென்று தெரிந்துவிட்டதே!! என்று மகிழ்ந்து புன்னகை செய்து “என் குட்டனே ! முத்தம் தா” என்றாள்.
மாவலிபக்கல் சென்ற வாமனன் வேஷம்
கெளபீனம் கடிஸூத்ரஸீம்ஙி கடயம் மெளஞ்ஜீமபிவ்யஞ்ஜயம்
க்ருத்திம் க்ருஷ்ணம்ருகஸ்ய வக்ஷஸி வஹற் ஆஷாடமம்ஸேர்ப்பயற்..
ஸ்வாத்யாயஸ்வரஸம்பதா பரிஷதாம் ப்ரீதிம் ஸமுத்பாதயற்
யாச்ஞாயை பலியத்ஞவாடநிகடம் ப்ராப்தோ வடு: பாது வ:
குறட்பிரமசாரியாய்ச் சென்றதனால் அவ்வாச்ரம லக்ஷணம் வழுவாதபடி. கடிஸூத்ர த்தில் கெளபீனம் விளங்கவும், முஞ்சி ஸுவர்ண மேகலைபோல் திகழவும், திருமார்பில் க்ருஷ்ணாஜினம் பொலியவும், தோள்மேல் பலாச தண்டம் திகழவும் பெற்று, “இவன் மெய்யான யாசக ப்ராஹ்மணன்” என்று தெரியுமாறு வேத வாக்யங்களை ஸூஸ்வரமாக ஓதிக்கொண்டு யாகசாலையிலுள்ளவர்களை யெல்லாம் மகிழச்செய்துகொண்டு யாசனைக்காக மாவலி வேள்வியில் புக்க மாணிக்குறளன் உம்மைச் காத்தருள்க.
மாவலிக்கும் வாமனனுக்கும் ஸம்பாஷணை
கஸ்த்வம் ப்ரஹ்மந்? அபூர்வ, க்வ ௪ தவ வஸதி:? யாகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி,
கஸ் தே த்ராதாஸ்தி? அநாத;:, க்வ ச தவ ஜ௩க:? றைவ தாதம் ஸ்மராமி
கிம் தேபீஷ்டம் ததாநி? த்ரிபதபரிமி தா பூமி;, அத்யல்பமேதத்
த்ரைலோக்யம் பாவகர்ப்பம் பலிமிதி நிகதந் வாமநோ வஸ் ஸ. பாயாத்.
தன்னை ஸாமாந்ய மனிதனாகக் காட்டும் ஒரு பொருளும் பரமாத்மாவாகக் காட்டும் மற்றொரு பொருளும் அமைய விடை கூறுவது நோக்கத்தக்கது. மாவலி:--*கஸ் த்வம் ப்ரஹ்மந்!* அந்தணனே, நீயார் ? வாமனன் “அபூர்வ” (1) முன்னே பின்னே
நான் யாசணைக்கு வந்தவனல்லேன். (2) எனக்கு முற்பட்டவர் யாரு மில்லை; எல்லார்க்கும் நானே முற்பட்டவன். “க்வ ச தவ வஸதி;?”” உன் இருப்பிடம் யாது? “யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி” (1) எனக்கு இருப்பிடம் ஒருகேடு; எங்கும். தட்டி. த்திரிபவன். (2) *எங்குமுளன்' கண்ணனென்றபடி ஸர்வவ்யாபிகாண் நான். “கஸ் தே த்ராதாஸ்தி?” நீ யாருடைய ஸம்ரக்ஷணையிலிருக்கிறாய்? “அநாத:” (1) எனக்கு
நாதனேது?' அநாதையாய்க்கிடக்கிறேன், (2) எனக்கு மேற்பட்ட நாதன் உலகத்திலேயே கிடையாது. “'க்வ ௪ தவ ஜ௩க;” உன்னுடைய தகப்பனார் எங்கிருக்கிறார் ? “நைவ தா தம் ஸ்மராமி” இளமையிலேயே தகப்பனார் போய்விட்டார்; அவரைப் பற்றின நினைவே எனக்கில்லை. (2) ஸகல ஜகத்பிதாவான எனக்குத் தகப்பனாருரிக்க ப்ரஸக்தியேது ? “கிம் தே அபீஷ்டம் ததாறி?? உனக்கு என்ன விருப்பம்? என்ன கொடுக்கவேணும் நான் ? “த்ரிபத பரிமிதா பூமி???
முவடிமண் வேணுமத்தனை, “*அத்யல்பம் ஏதத்” என்னிடம் வந்து மிக அற்பமான பொருளைக் கேட்கிறாயே. “த்ரைலோக்யமித்யா தி”, மூவுலகங்களையும் திருவுள்ளத்திலே கொண்டு இங்ஙனே மூவடிமண் வேணுமென்று பேசின வாமனன் காத்தருள்க.
ஸ்வஸ்தி ஸ்வாகதம் அர்த்த்யஹம், வத வடோ! கிம் தீயதாம், மேதிநீ,
கா மாத்ரா ? மம விக்ரம த்ரய பதம், தத்தம் ஜலம், தீயதாம்,
மா தேஹீத்யுசநா;, குதோ நு? பகவாந், பாத்ரம் கிமஸ்மாத் பரஞ்
சேத்யேவம் பலிநார்ச்சிதோ மகமுகே பாயாத் ஸ வோ வாம;
இதுவும் மாவலிவேள்வியில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறுவது.
[ஸ்வஸ்தி] இது மாவலிக்கு வாமனனுடைய மங்களாசாஸனம்.
[ஸ்வாகதம்] வருகவருகவென்று மாவலி வரமனனை கெளரவிக்கிற படி. [அர்த்தீ அஹம்] “நான் ஒரு பிச்சைக்காரனாதலால் என்னை இவ்வளவு கெளரவிக்கத் தகாது! என்று வாமனன் விநயமாகக் கூறுகிறபடி, [வத வடோ ! கிம்தீயதாம்] *மாணி! என்ன தேவை?!
[மேதிநீ] பூமிதானம் தேவை.” [கா மாத்ரா] “எவ்வளவு பூமிதேவை??
[மம விக்ரம த்ரய பதம்] என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடி. மண்... [தத்தம் ஜலம்] (இதோ தாரைவார்த்துத் தருகிறேன்.” [தீய தாம்] தாராய் மன்னவனே !' [மா தேஹீதி உசநா:] “இவ்வளவில் தைத்ய குருவான சுக்கிரன் வந்து தடைசெய்தான்.” [குதோ நு?] “கொடுக்கவேண்டாமென்று ஏன் தடை செய்கிறீர்?” என்றான் மாவலி.
[பகவான் ] (இவன் ஸாமாந்ய யாசகனல்லன்; உன்னிடத்து ஸர்வஸ்வாபஹாரம் பண்ணவந்த பகவான் கிடாய்! என்றான் சுக்கிரன். [பாத்ரம் கிமஸ்மாத் பரம்] நாராயணனே என்னிடம் யாசகனாக வந்தானாகில் வேறு ஸத்பாத்ரமுண்டோ ? நான் மஹாபாக்யசாலி யன்றோ?” வென்று தன்னைக் கொண்டாடி. வாமனனை ஆராதித்தானாயிற்று,
மஹாலக்ஷ்மிக்கும் பார்வதிக்கும் ஸம்பாஷணையாக வைத்து இயற்றிய சுலோகமிது. விஷ்ணுபக்தர்கள் சிவபெருமானிடத்தில் வெறுப்புக்கொள்ளலாகாது என்பதற்கு இந்தச்லோகம் பொருத்தமானது, ஸ்ரீ மஹாலக்ஷ்மி பார்வதியை நோக்கிக்கேட்டாள் “தோழீ! அந்த பிச்சையாண்டி எங்குப் போனான் ?? என்று. பரமசிவன்
*பிண்டியார் மண்டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு முண்டியானாகையாலே அதனைப் பரிஹஸித்துக் கூறினபடி, இங்ஙனம் வினவப்பட்ட பார்வதி விடை கூறினாள் “ஸுதநு பலிமகே?” அம்மா! அந்த பிச்சையாண்டி மஹாபலியின் வேள்வியிலே சென்றாரென்றாள். என் பர்த்தாமட்டும் பிச்சைக்காரரல்லர் ; உன் பர்த்தாவும் பிச்சைக் காரரே யென்று காட்டினபடி, பிறகு லக்ஷ்மி அதை விட்டிட்டு
வேறொரு கேள்வி “பதரே! அத்ய தாண்டவம் க்வ” நங்காய் ! இன்று கூத்து எங்கே? என்று கேட்டாள். பரமசிவன் நடராஜனாகையாலே அதைப் பரிஹஸித்தபடி. அதற்குப் பார்வதியின் விடை “மந்யே ப்ருந்தாவறாந்த;” அம்மா! லக்ஷ்மீ! இன்று கூத்து ப்ருந்தாவனத்திலிருக்குமென்று நினைக்கிறேனென்றாள். *கன்றப் பறை கறங்கக்
கண்டவர்தம் கண்களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் -காணேடீ* குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடவல்ல வெங்கோவே! இத்யாதிப்படியே உனது கணவனும் கூத்தாடியேயென்று காட்டினபடி. அதன் பிறகு லக்ஷ்மியின் வினா “'க்வ நுஸ ம்ருக சிசு;”” அம்மா பார்வதீ! அந்த மான் குட்டி எங்கே? என்றாள். பரமசிவன் மான் குட்டியை வைத்துக் கொண்டிருப்பதாக ஐதிஹ்யமாகையாலே அதைப் பரிஹஸித்தபடி, அதற்குப் பார்வதியின் விடை “நைவ ஜாநே வராஹம்” அந்தப் பன்றி எங்கே போயிற்றோ அறியேன் என்றாள். என்பார்த்தா மான் குட்டியை வைத்துக்கொண்டிருப்பது பரிஹாஸ்யமன்று; உன் பர்த்தா *பண்டொருநாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப்பன்றி* என்கிறபடியே தாமே பன்றியாக வடிவெடுத்தாரே, அது தான் பரிஹாஸ்ய மென் றவாறு. அதற்குமேல்
லக்ஷ்மியின் வினா “பாலே! கச்சிங் ௩ த்ருஷ்டோ ஐரடவ்ருஷபதி:” அந்தக் கிழ எருது எங்கே? பார்த்தாயா? என்றாள், பரமசிவன் வ்ருஷபவாஹனனாகையாலே அதைப்பரிஹஸித்தபடி, பார்வதியின் விடை “கோப ஏவ அஸ்ய வேத்தா”-எருதைப் பற்றி இடையனுக்குத் தான் தெரியுமென்றாள். என்பர்த்தா ஒரு எருதை வைத்துக் கொண்டிருப்பது ஹேயமன்று; உன்பர்த்தா எண்ணிறந்த மாடுகளை மேய்க்க இடையனான துதான் ஹேயம் என்று காட்டினபடி, இவ்வாறாக மலர் மகளுக்கும் மலை மகளுக்கும் விரோதமான ஸம்பாஷணை நடந்த தென்கை.
கோபால இதி க்ருஷ்ண ! த்வம் ப்ரசுரக்ஷீரவாஞ்சயா,
ச்ரிதோ மாத்ருஸ்தாக்ஷிரமப்யலப்யம் த்வயா க்ருதம்.
ஸ்ரீ கருஷ்ணபகவானைப் பற்றினவர்களுக்குப் புறர்ஜன்மமில்லை யென்பது ஒரு சமத்காரமாக த்தெரிவிக்கப்படுகிறது இதில். “கண்ணா! நீ இடையனாகையாலே உன்னைப் பற்றினால் விசேஷமாகப் பால் கிடைக்குமென்றாசைப்பட்டு வந்தடைந்தேன். என்னெண்ணம் விபரீதமாயிற்று, ஏற்கெனவே நெடுகாளாகக் கிடைத்துக் கொண்டிருந்த தாய் முலைப்பாலும் அரிதாம்படி. செய்துவிட்டாயே” யென்கிறான். புநர்ஜன்ம முண்டானாலன்றோ தாய் முலைப்பால் கிடைக்கும்? அஃது இல்லை யாயிற்றென்கை,
பவித்ரீ ரம்போரு ! த்ரி தசவதறக்லாநிரது௩ா
ஸதே ராமஸ் ஸ்தாதா ௩ யுதி புரதோ லக்ஷ்மஸக:.
இயம் யாஸ்யத்யுச்சைர் விபதமது௩ா வாநரசமூ:
லகிஷ்டேதம் ஷஷ்டாக்ஷரபரவிலோபாத் பட புற. -(இந்தச்லோகம் ஸம்ஸ்க்ருதஜ் ஞர்களுக்கே மிகவும் ரஸிக்கத்தக்கதாகும், ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் வானர ஸேனையுடன் இலங்கையிற்புகுந்த பின்பு இராவணன் ஸீதையிடம் வந்து முன்று வார்த்தைகள் சொல்ல; அவற்றை உடனே ஸீதை வெகு சாதுரியமாகக் கிள்ளிக் களைந்தமை இதில் தெரிவிக்கப்படுகிறது. கவி புத்தியின் சமத்காராதிசயம் கொண்டாடத்தக்கது.) ஸீதையை நோக்கி. ராவணன் சொன்ன மூன்று வார்த்தைகளாவன : [1, “பவித்ர ரம்போரு! த்ரித. சவதரக்லாநிரது௩ா”] ஸீதே! பார். இப்போது தேவதைகளின் முகம் வாட்டமடையப் போகிறது. [2. “ஸ தேராமஸ் ஸ்தாதா ௩ யுதிபுரதோ லக்ஷ்மணஸக:”] ராம லக்ஷ்மணர்கள் போர்க்களத்தில் என்னெதிரே நிற்கவல்லவர்களல்லர். [8. “இயம் யாஸ்யதி உச்சைர்விபதமது௩ா
வாரரச்மூ:] இங்கே வந்து சேர்ந்திருக்கிற வானர சேனையெல்லாம் மிகவும் விபத்தையடையப் போகிறது காண், ஆக இம் மூன்று வார்த்தைகளையும் கேட்ட ஸீதை சிறிதும் ஆலோசியாமல் உடனே சொன்னாள் [லகிஷ்ட,! இதம் ஷஷ்டாக்ஷரபரவிலோபாத் பட புஈ:] அடா அற்பனே! இப்போது நீ சொன்ன மூன்று வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் ஏழாவது எழுத்தை ரீக்கிவிட்டுப்பார்;) அப்போது
என்னபொருள் தேறுகிறதோ, அதுதான் நடக்கப்போகிறதென்பது திண்ணம் என்றாள். இனி இதன் விவரணம், முதல் வார்த்தையில் ஏழாவது எழுத்து “த்ரி? என்பது. அதை நீக்கிவிட்டு வாசித்தால் “தசவதறக்லாறி:! அதுநா பவித்ரீ” என்றதாகும், *இராவணனாகிய உனக்கு இப்போது வாட்ட முண்டாகப் போகிறது பார்” என்றதாம்.
இரண்டாவது வார்த்தையில் ஏழாவது எழுத்து “ந” என்பது! அதை நீக்கிவிட்டு வாசித்தால் ராமலக்ஷ்மணர்கள் போர்க்களத்தில் முன்னிற்கப் போகிறார்களென்றதாம். மூன்றாவது வார்த்தையில் ஏழாவது எழுத்து “வி” என்பது, அதை நீக்கிவிட்டு வாசித்தால் “இயம் வாரரசமூ: உச்சை: பதம் யாஸ்யதி' என்றதாகத் தேறும், இந்த
வானர சேனை வெற்றி பெற்று உயர்பதவியையடையப் போகின்றதென்றதாம். பிறகு இப்படியேயாயிற்று
குற்றங்கள் கழியும் வழி
அநுதாபாத் உபரமாத் ப்ராயச்சித்தோற்முகத்வத;,
தத்பூரணாச் சாபராதாஸ் ஸர்வே ஈச்யந்தி பாதச:,
ஒவ்வொருவனும் தான் செய்த பாபங்களை நான்கு காரியங் களினால் போக்கிக்கொள்ள வேணும் ; ஐயோ ! பாபம் செய்தோமே யென்று அநுதாபங்கொண்டானாகில் செய்த பாபத்தில் கால்பங்கு. தொலையும். இனிமேல் செய்வதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டானாகில் பாதிபங்கு பாபம் தொலையும். செய்த பாபத்திற்கு என்ன ப்ராயச்சித்தமென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு அதையனுட்டிக்க விரும்புவானாயின் முக்கால்பங்கு பாபம் தொலையும். அந்த ப்ராயச்சித்தத்தை யனுட்டித்துத் தலைக்கட்டினானாகில் முழுப்பாபமும் தொலைந்திடும்.
உபாஸநாபலத்தினால் விளைகின்ற. ஞானம் பயனற்றது; குருமுக மாகக் கற்பதால் விளையும் ஞானமே மிகச் சிறந்ததென்பது பற்றி முராரிகவி பணித்த பத்யமிது. பலர் வாக்தேவதையை உபாஸித்துப் ப்ண்டிதர்களாகிறார்கள். அன்னவர்களைப் பண்டிகர்களென்று செரல்லலாமாயினும் ஸாரஸ்வத ஸாரத்தை அவர்கள் அறிந்தவர்
களாகார்கள்; ஆசார்ய குலத்தில் குட்டுபட்டுக் கல்விபயின்ற முராரியே [நானே] ஸாரஸ்வத ஸாரஜ்ஞனாவன். வானரவீரர்களெல்லாரும் [இலங்கை செல்வதற்குக்] கடலைக் கடந்துவிட்டார்களெனினும் கடலின் ஆழத்தை ஒரு வானரமுமறியாது. திருவடியைக் கேட்டால் *ஆகாச வழியாய் சென்ற நான் கடலாழத்தை என்ன றி
மேவன்” என்பர், மற்ற வானரவீரர்களைக் கேட்டாலோ அணை கட்டிச் சென்ற வெமக்குக் கடலாழமென்ன தெரியும்” என்பார்கள். ஆகவே ஒரு வானரவீரனும் கடலாழமறியான்; *மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட* என்கிறபடியே கடல் கடையும்போது. மத்தாக நாட்டப்பட்ட மந்தரமலை பாதாளலோக மளவும் மூழ்கி யிருந்ததாதலால் அஃதொன்றையே கேட்டுக் கடலாழ முணரலகும்.
இவ்வாறாக உபாஸறபலத்தினால் பண்டிதரானவர்கள் ஸரஸ்வதியின்
உள்மருமமறியவல்லரல்லர். குருகுலத்திலிருந்து நெடுநாள் சிரமப்
பட்டவர்களே அஃதறியவல்லார்களென் தாயிற்று,
ரத்ரைகரஸ் தவ க்ருஹம் க்ருஹிணி ௪ லக்ஷ்மீ:
கிம் தேயமஸ்தி பவதே புருஷோத்தமாய,
ஆபீரவாமுயகாஹ்ரு தமாஈஸாய
துப்யம் ப்ரதத்தமிதமஸ்து மநோ மதீயம், -பெருமாள் வாசலிலெழுந்தருளும்போது நியமே உபஹாரம் ஸமர்ப்பிக்கும் விரதமுடையவரொருவர், ஒருநாள் திடீரென்று வாசலில் பெருமாளெழுந்தருளியாயிற்று, முன்னாடி உபஹாரம் ஸித்தப்படுத்தி வைக்கவில்லை. இன்ன து செய்வதென்று தோன்றாமல் அவர் பெருமாளருகே வந்துரின்று ஆசுகவிதையாக இந்த ச்லோ கத்தைக் கூறினர், “எம்பெருமானே! **மாகடல் நீருள்ளான்' என்கிற படியே உனக்கு வாஸஸ்தானமோ ரத்நாகரம் ; மனைவியோ ஸ்ரீமஹா லக்ஷ்மி ; ஸ்வயம் புருஷோத்தமனென்று பேர்பெற்றிருக்கின் றணை, இப்படிப்பட்டவுனக்கு ரீசனேன் நிறையொன்றுமிலேன் என்ன ஸமர்ப்பிக்க வல்லேன். எதுவுமில்லை. ஏதாவது அடியேன் கொடுப்ப தானால் உனக்கு இல்லாத வஸ்து இன்னதென்று தெரிந்துகொண்டு அதை ஸமர்ப்பிக்கவேணும். நீ அவாப்த ஸமஸ்தகாமனாயிருந்தாலும் உனக்கு இல்லாதது ஒன்றுண்டு ; அது ஏதென்னில் ; உன்னுடைய நெஞ்சைத் திருவாய்ப்பாடியாயர் மங்கைகள் கொள்ளை கொண்டு
போய்விட்டதனால் உனக்கு நெஞ்சு இல்லாமலிருக்கிறது, இதோ எனது நெஞ்சை ஸமர்ப்பிக்கிறேன் ; இதனைப் பெற்றுக்கொண்டு ம௩ஸ்வியாவாய்.” இங்கு உக்தி சமத்காரமும் பொருட் சுவையும் ரஸிக்கத்தக்கது.
இராவணனுக்கும் அங்கதனுக்கும் ஸம்வாதம்
கஸ் த்வம் வாநர ! ராமராஜபவநே லேகார்த்தஸம்வாஹக:
யாத: குத்ர புராகதஸ் ஸ ஹநுமார் நிர்தக்தலங்காபுர;,
பத்தோ ராக்ஷஸஸூநுநேதி கபிபிஸ் ஸந்தாடிதஸ் தர்ஜித:
ஸ வ்ரீடாத்தபராபவோ வறம்ருக: குத்ரேதி ௩ ஜ்ஞாயதே.
இராவணனிடம் அங்கதன் தூது சென்றான்; அங்கு இருவர்க்கும் ஸம்பாஷணை. இராவணன் கேட்கிறான் [கஸ் த்வம் வாநர] குரங்கே நீயார்?? அங்கதன் [ராமராஜபவநே லேகார் த்தஸம்வாஹக: ] *இராம பிரான் திருமாளிகையில் நான் குற்றேவல் செய்பவனொருவன்”, இராவணன் [யாத குத்ர புராகதஸ்ஸ ] “இங்கு முன்னே ஒரு குரங்கு வந்ததே, அது எங்கே போயிற்று ?' இராவணன் ஹனுமா
ணைப்பற்றிக கேட்கிறானென்பது அங்கதனுக்குத் தெரிந்தும் ஹனுமானென்று அவன் வாயில் வரவேணுமென்பதற்காகவும் அனுமன் இங்குச்செய்த செயலை இவன் தன் வாயினால் சொல்ல வேணுமென்பதற்காகவும், “அப்படியா? முன்னே இங்கு ஒரு குரங்கு வந்ததா என்ன? எனக்குத் தெரியாதே; அதன் பெயரைச் சொன் னால் ஆலோசிக்கிறேன்,' என்றான் அங்கதன். அதன் பிறகு இராவணன் [ஹநுமான்] என்றான். அதற்கு அங்கதன் “எங்கள் கோஷ்டியில் ஹநுமானென்று யாரையுங் காணோமே; அவன் இங்கு வந்து செய்தசெயலைச் சொன்னால் ஆலோசிக்கிறேனென்றான் அங்கதன். அதன்மேல் இராவணன் [நிர்தக்த லங்காபுர:] என்றான். -இங்கு வந்து லங்காபுரியை முழுவதும் கொளுத்திவிட்டுப்போன
குரங்கைப்பற்றிக் கேட்கிறேனென்றான். அதன்மேல் அங்கதன் சிறிது ஆலோசிப்பதுபோல் பாவனை காட்டி [பத்தோ ராக்ஷஸ ஸூநுநேதி...] ஓஹோ! அந்தக் குரங்கைப்பற்றிக் கேட்கிறாயோ ? அது இங்கே வந்து ராக்ஷஸப் பையலால் கட்டுண்டு நலிவுபட்ட தென்று எங்களுக்குத் தெரியவந்ததனால் அதை அடித்துப் புடைத்து வெருட்டியோட்டிவிட்டோம்; அது வெட்கத்தினால் தலைகுனிந்து ஓடிப்போயிற்று; அந்த வறம்ருகம் எங்கே புக்கொளித்ததோ அறியேன் என்றான். இதனால் அனுமானுக்கும் மேற்பட்ட குரங்குகள் நாங்கள் வந்திருக்கிரோங்காண் என்று தெரிவித்தவாறு.
———————————
ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -(367/378)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்
ஸ்ரீராமா நூஜன்-367-காளயுக்தி கார்த்திகை-12-1978-
எம்பெருமானார் தம்முடைய முப்பத்தைந்தாவது திருநக்ஷத்திரத்தில் திருமலையில்ஒரு மடத்தைஏற்படுத்தியருளினார் : சகம் 974. கி. பி. 1032ல் நாலைந்து வருடங்கள் ஏகாங்கிகள்
மூலமாகவே திருவேங்கடமுடையான் கைங்கர்யத்தை நடத்திவைத்து. கி.பி. 1057ல் அப்பன்
சடகோப ராமாநுஜஜீயரை நியமித்தார்.எம்பெருமானாரே இம்மடத்திற்கு முதல் ஜீயர். இரண்டாமவர் – அப்பன் சடகோப ஜீயராவர். பிறகு முறையாக வந்த- IIவது ஜியரான அப்பன் ஸ்ரீரங்கராமாநுஜ பெரிய ஜீயரிடத்தில் ஆச்ரயித்துச் சிறிய ஜீயராய்க் கைங்கர்யம் செய்துவந்த அப்பன் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி திருவேங்கடமுடையான் நியமனத் தால் (பெரிய ஜீயர் ஜீவதசையில எழுந்தருளியிருக்கும்போதே) யதிபதிபுநவதாரமான மண வாளமாமுனிகளிடத்தில் திருவிலக்கினை பெற்று அஷ்டதிக்கஜாந்தர்ப்பூதரான ஷ பெரிய ஜீயர் பரமபதித்தவுடன் கி பி. 1506ல் பெரிய ஜீயராய் அபிஷிக்தரானார் .-சிறிய ஜீயருக்கு ஆசா யாரானமையால் மணவாளமாமுனிகள் இப்பெரிய ஜீயர் மடத்தில் பன்னிரண்டாவது பெரிய ஜீயராகப் பரிகணிதரானார் )
ஆழ்வார்கள் கண்ட பஞ்சாமிருதம் கேளீர்; * சீரார் செந்நெற் கவரிவீசுஞ் செழுநீர்த் தீருக்குடந்தையில் ஆராவமுதே!என்றும், ஆராவமுதாயடியேனாவியக
மே தித்திப்பாய் என்றும் நம்மாழ்வாராலழைக்கப்பட்ட அமுதம் * கொண்டல்வண்ணன்
கோவலனாய்வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங்கவர்ந்தவன் அண்டர்நேனணியரங்கனென் னமுது என்று திருப்பாணாழ்வார் கண்ட வமுதம் அடியேன்மேவியமர்கின்ற வமுதே திருவேங்கடத் தெம்பெருமானே! என்றுநம்மாழ்வார் திருவேங்கடத்திற் கண்ட வமுதம்.-எனக்குத்தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக்கோனே ; என்று நம்மாழ்வார் தாமே தெற்குத் திருமலையிற் கண்ட வமுதம் மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூ சோலைமலைக்கரசே! கண்ணபரத்தழுதே! என்று திருக் கண்ணபுரத்திலே கண்ட வமுதம்.-ஆக இவ்வம்ருதங்கள் ஆழ்வார்களுடைய பஞ்சாம்ருதாகும்.
நம்முடைய ஸித்தாந்தமோ வென்னில்; அபூர்வமாக வொரு மஹானந்த மனுபவிப்பதே
மோ மென்பதாம். ஆளவந்தார் “கதாஹமைகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி”
என்றகுளிச் செய்தார் – ஒழிவில் காலமெல்லா முடனாம்மன்னி வழுவிலாவடிமை செயது
அனுபவிக்கிற ஆனந்தம் அவரவர்களுக்கு ஆத்மைக வேத்யம். . வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்துமைந்தும்” என்னப் பட்ட திருப்பாவையில் ஒருத்தி மகனாய்ப்பாசுரத்தில் வருத்தமுந் தீர்ந்து மகிழந்தேலோ ரெம்பாவாய் என்றது உயிரான வார்த்தை;-வருத்தம் தீர்ந்ததோடு நில்லாமல் மகிழ்ந்து என்னும்படியான வொரு நிலைமையுண்மை காட டப்பட்டது, நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் (7-5-10) வார்த்தையறிபவர் என்ற பாட்டில்-போர்த்தபிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துள்பம் வேரற நிக்கி என்றிவ்வளவு சொன்னதற்கும் மேற்பட “தன் தாளின்” கீழ்ச்சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை யெண்ணி என்றருளிச் செய்திருப்பது நோக்கத் தக்கது.-“சேஷக்வம் துக்கரூபமாகவன்றா நாட்டில் காண்கிற தென்னில். சு த நியமமில்லை; உகந்த விஷயத்துக்கு சேஷமாயிருக்கு ருப்பு ஸு கமாகக் காண்கையாலே”
ஸ்ரீவசனபூஷணம் நான்காம் பிரகரணத்தில் “த்ரிபாத் விபூ யிலே” இத்யாதி ப்ரதம
சூர்ணைக்கு அடுத்தபடி லலிதா சரிததிகளிலே இவ்வர்த்தம் சுருக்கமொழியக் காணலாம்”
என்கிற சூர்ணையின் வியாக்கியானத்துலே மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள்ள-அதாவது – விதர்ப்பராஜஸ தையாய் காசீரால மஹிஷியான லலிகை ஸபத்ங்களான முந்நூறு ஸ்த்ரீகளிலுங்காட்டில் ஆபிருப்யம் அகிவ ய பர்த்ருமக்தை தேஹதேஜஸ்- ஸர்வகுண ஸம்ப ந்தை இவை யுடையளாய்அஹோராக்ரவிபாகமற பகவத் ஸநியிலே அநேகந் கிருவிளக்கேற்றி அதிலேநிரதையாய்ப் போருகித படியைக் கண்டு, “உனக் கிவ்வாபிருப்யாதி களுக்கும் தீபாரோபண கைங்கர்ய ப்ராவண்யத்துக்குங் காரணமென்” என்று ஸபக்கள் கேட்க அவள்ஜாகி ஸ்கியோடே பிறங்கவளாகையலே ததேஷா கதயாம் யேகத் பத்வ் த்தம் மம சோபநா என்று தொடங்கி, *ஸௌவீர ராஜஸ்ய புரா மைத் ரேயோபூக் பரோஹித : கோ சாயக ம் விஷ்ணே காரிதம் தேவிகாதடே. அ யஹநிசுச்ரூஷாம் புஷப தூபாம்பலைபகை தீபாதநா கிபிச்சைவசக்ரே தத்ரவ ஸந்த்விஜ ” என்று ஸெ வீரராாஜ புரோஹிதனான மைத்ரேயன்.தேவியாற்றங்கரையிலே ஓரெம்பெருமான் கோயிலை யுண்டாக்கி, அங்கே நாள்தோறும் ஸகல கைங்காயங்களையும் பண்ணவர்த்தித்தபடியையும் *கார்த்திகே தீபிதோதீப உபாத்தஸ்கே சைகதா. அ ந் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நி , தேவதாயகநே சாஸம் தத்ராஹமபி மூஷிகா, ப்ரதீபவர்த் திக்ரஹணே க்ரு புத்ர் வராநநா :, கரு தாச மயாவர்த்தீ ப்ருஷதம்சோ ரராவச. நஷ்டா சாஹம் கதஸ் தஸ்ய மார்ஜாலஸ்ய பயாநுநா.வக் ர ப்ராந்தே நச்யந்த்யா ஸதீப ப்ரேரிதோ மயா, ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா தஸ்மிநாயதநே பு : என்று. கார்த்தி மாஸத்கிலே அவனந்த எம்பெருமான் ஸந்நிதியிலேற்றின அத் திருவிளக்கு அவியத்தேடுகிற வளவிலே யொரு பெண்ணெலியாய்க்கொண்டு வர்த்திக்கிறதான் அத்கிருவிளக்கில் திரியைக் கல்விக்கொண்டு போவதாக நினைத்துச்சென்றா வ்வினவளவிலே ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டஞ் மரணத்தையடையா நிற்க அப்போது பயத்தாலே நடுங்ககிற ன் மூஞ்சியாலே அந்தக்திரி தூண்டப்பட்டு முன்போல அத்திருவிளக்குப் பளபளத்தெரிந்த படியையும் தம்ருதா சாஹம் ததோ ஜாதா பரா குணை என்று அநந்தரம் தான்மரித்து விதர்ப்பராஜனுக்குப்புத்ரியாய் ஜாதி ஸ்ம்ருத்யாதிகளோடே பிறந்தபடியை யும்;” ஏஷப்ரபாவோ தீபஸ்ப ததோஜாதிஸ்ம்ருதிர் ஐந்ம தீபதாயிநாம் என்று அந்த அஜ்ஞாத க்ருதபலமாக தனக்கிந்தவேற்றங்களெல்லா முண்டானபடியையும் சொன்னாளென்று, ஸ் விஷ்ணுதர்மத்திலே லலிதாசரிதம் விஸ்தரேண சொல்லப்பட்டதிறே.”
ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்
‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.
ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)
ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )
ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.
கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்
ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை
ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.
ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி
உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,
கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்
ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.
அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)
புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.
கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.
பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி
கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்
ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்
அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,
குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)
குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.
இல் எத்தனை?-அன்பில்.
தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.
கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’
ஸ்ரீராமா நூஜன்-378–சித்தார்த்தி தைமீ 1980 வ-
1931ஆம் ஆண்டுதொடங்கி சித்தார்த்தி ஆண்டு மார்கழித் திங்களில்-(1979 80 டிசம்பர், ஜனவரி) ஐம்பதாம் (பொன்விழா) திருப்பாவை-பைங்கூகள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்! என்கின்ற கணக்கிலே.-திருப்பாவைக் காலட்சேப விழாவினை எதிர்பார்த்திருப்பார்கள்.-மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல், அதுகாணும் கண்பயன் ஆவதே!எனப்பாரித்திருப்பர்.-ராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்பாவைபலவும் பாடத் துடித்துக் கொண்டிருப்பர்!
அத்தகிரிக் கண்ணனான அருளாளனிடம் ஸ்ரீ ஆண்டாள் தன் மனத்தைப் பறிகொடுத்து திருப்பாவையிலே ஐந்து பாசுரங்களாலே அருளாளனை மங்களாசாசனம் செய்தருள்வது வியக்கத் தக்கதாகும்.-அர்த்த பஞ்சக ஞானத்தையும் வெளியிட்டருள்வ து மேலும் வியக்கத்
தக்கதாகும். தேவர், உம்பர். அமரர் என்பவை ஒரே பொருளைத் தரும்சொற்களே.-1-கீழ் வானம் -தேவாதி தேவன்-சுவாமித்துவமும் வாத்சல்யமும் ஆ! ஆ! என்று ஆராய்ந் அருள்வான் என்பதால் சௌசீல்யமும் இவ்விதம் அருளும் அருளாளன்-அத்தியூரான் என்று கொண்டால் கெளலப்பியமும் பெறப்படுவதால் மிக்க-இறை நிலையை ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்கிறாள்-2-அம்பரமே என்னும் பாசுரத்தாலே உம்பர் கோமானேஉறங்காது எழுந்திராய் என்று தேவாதி தேவனைத் துயில் உணர்த் துகையில்,-எம்பெருமான் நந்தகோபாலனையும் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாம்.குலவிளக்காம் எம்பெருமாட்டி யசோதையையும் மெய்யாம் உயிர் நிலையின்–அறம் செய்யும் நந்தகோபாலனின் ஞானமும்,கண்ணனின் அழுகையும்அஞ்சி நோக்கும் அந்நோக்கும். அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்தொழுகையும் கண்ட அசோதையின் ஆனந்தமும் இவர்களின் ஆத்மலட்சணத்திற்தப் புறப்பொருள்களே. இவர்கள் கண்ணன்பால் கொண்டுஒழுகிய அடிமைத் திறமே அந்தரங்க நிரூபகம்–3-சென்று கப்பம் தவிக்கும் கலியைத் துயிலெழுப்ப அதிபதியைத் துயிலெழுப்புவதேயாகும்.துவய மந்திர உபதேசப்படிபிராட்டியைக் கொண்டே பெருமாளைச் சரண் அடைய வேண்டும் என்னும்தக்க நெறியைக் காட்டியருளும் முகத்தாலே செப்பன்ன மென் முலைச்செவ்வாய்ச் று மருங்குவ நப்பின்னை நங்காய் திருவே! துயில் எழாய்!என்றுபிராட்டியை முன்னிடுகிறாள்!-4-ஏற்ற கலங்கள் பாசுரத்தாலே, அத்தியூரில் பிரமனதுவேதிகையில்தோற்றமாய் நின்ற சுடரே எனத் துயில் எழுப்புகையில்,இறைவனை அடைவதற்குத் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையை–மாற்றார்‘ சொரூபத்தில் அமைத்தருள்கிறாள்.-5-ஐந்தாவதாக ஒருத்தி மகனாய் பாசுரத்திலே. (நான்முகனின்கச்சி யாகவேதியிலே) நெருப்பென்ன ன்ற நெடுமாலே என அருளாளனைவிளித்து அவனிடம் அருத்தித்து வந்த நல்வாழ்வாக வைணவர் தம்பேறாகபுருஷார்த்தமாக வேண்டுவது திருத்தக்க செல்வமும். சேவகமும் பாடிவருத்தமும் தீர்ந்து மகிழும் பேறுதான்
பரகாலநாயகி கொல்லியம்பாவை* எனப்படுகிறாள். இங்கு உவமைக் குறி இல்லையாயினும் கொல்லிப்பாவை போன்றவள்’ என்றே பொருள்படுதலால் உபமா கர்ப்பமேயாகுமிது. வல்வில்ஓரி என்னும் சிற்றரசனுக்கு உரியதாய்க் கொல்லி
யென்னும் பெயர் கொண்டதான மலையின்கணுள்ள ஒரு பெண்பாற்பிரதிமை கொல்லிப்பாவையென்று பிரசித்திபெற்றது. இது தேவசிற்பியால் அமைக்கப்பட்ட அழகிற்சிறந்த பதுமையாகும். அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அப்பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்
களாம். அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களதுவாடைபட்டவுடன் இது தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப் பட்டதென்பர். இது நகைத்துக் கொல்லுமென்பது “திரிபுரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்கக். கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ?” என்ற சித்திரமடற் பாடலினால் விளங்குகின்றது இப்பாவை கண்டாருள்ளமும் விழியும் கவர்ந்து பெருங்காமவேட்கையுறுவித்து இறுதியில் கொல்லுமென்றுங் கூறுவர்.-ஒரு காலத்தில் திருமகள் தன்முன் போர்க் கெழுந்த அ ணர் மோஹித்து விழும்படி இக்கொல்லிப்பாவையுருக்கொண்டு ஆடினள் என்று சிலப்பதிகாரம் கூறும். “செருவெங்கோலமவுணர்நீங்கத் திருவின் செய்யோளாடிய பாவையும்” (கடடலாடு காதை60,61) என்றது காண்க.
*நீண்ட மலைகளும் மாமணி யும் மலர்மேல்மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் “என்று மூலமுள்ளது. கடலின் நிறம்போன்ற நிறமுடையவன் என்பத
னாலாகும் ஸாம்யமொன்று உண்டானாலும் இங்குச் சொல்லுகிறது-அதுவன்று கடலிலுள்ள வஸ்துக்களெல்லாம் எம்பெருமானிடத்துமுள்ளமைப்பற்றின உவமை சொல்லப்படுகிறது. முன்னொருகாலத்தில்மலைகளெல்லாம் சிறகுடனே பறந்து நாடு நகரங்களுக்குத் துன்பம்
விளைவித்துக்கொண்டிருக்கையில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தினால்அவற்றின் சிறகுகளைத் துணித்துக்கொண்டுவர. அப்போது மைனாகம் முதலிய பலமலைகள் கடலினுட்சென்று ஒளிந்து கொண்டு இற்றைக்கும் அவ்விடத்திலேயே தங்கிக்கிடக்கின்றனவென்று நூல்கள் கூறும்-எம்பெருமானுடைய திருத்தோள்கள் ஈரிரண்டுமால்வரைத் தோள் என்றும் குன்றருந்திரடோளன் என்று -எம்பெருமானும் மலை
களையுடையன் என்னலாயிருந்தது. க ட ல்ரத்னாகரமாகையாலேமாமணிகளை யுடையது; எம்பெருமானும் குருமாமணிப்பூண்’ எனப்பட்டஸ்ரீகௌஸ்துபத்தையுடையவன். கடலைக்கடைந்தபோது அதில்நின்றும் பிராட்டி பிறந்தனளென்று புராண வரலாருதலால் மலர்மேல்மங்கை தங்கப்பெற்றது கடல். எம்பெருமான் அகலகில்லே னிறையுமென்று அலர்மேல்மங்கை உறைமார்பன். சங்குக்கு உறைவிடம் கடல்.
எம்பெருமான் இடங்கைச்சங்கமுடையான்..
பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதியில் உரைமேற்கொண்டு என்னுள்ள மோவாதென்கிற அறுபத்தைந்தாம் பாட்டில் “வரைமேல் மாகதமே போலத்திரைமேல் கிடந்தானை” என்றவிதுஅதோபமை திருப்பாற்கடலிலே எம்பெருமான் ப ள்ளி கொண்
டிருப்பது – வெண்ணிறமான தொரு மலையில் மரகதக் கல்லைப் பதித்தாற் போன்றி ருப்பதாகக் கூறினவிது இல்பொருளுவமை.
ஒண்முத்தும் பைம்பொன்னும் – கெண்டைக்.குலம் ‘என்கிற இம்மூன்று சொற்களும் உபமேயத்தைமறைத்து உபமானத்தை மட்டுமே சொன்னவை. முத்து என்றது முத்துப்போன்றகண்ணீரரும்பைச் சொல்லும். பைம் பொள் என்றது பொன் குலாம்
பயலை’ எனப்படும் பசலை நிறத்தைச் சொல்லும். கெண்டை யென்றதுகயல்போன்ற கண்ணைச்சொல்லும். இங்கு இப்பாசுரத்தின் சுவைப்பொருளையறிவது நன்று. பொருள் படைப்பதற்காக நாயகியைப்பிரிந்துபோகவேணுமென்றெண்ணிய நாயகன் அவளோடு சொல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும், அல்லது தேசாந்தரம்போய்வருவதா யிருக்கிறே னென்று பிரிவை ப்ரஸங்கித்தாலும் அவள் மரணபர்யந்தமான கஷ்டத்தை யடைந்திடுவளென்று கருதி அவள் ஆற்றுமாறுமெதுவாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி லோகாபிராமமாகப்பலப்ரஸ்தாவங்கள் பண்ணுமடைவிலே உலகத்திலே பொருளீட்டுவதற்காகப் பிரிந்து தேசாந்தரம் போவதென்கிறவொரு விஷயமுண்டு
எனப் பொதுப்படையானவொரு ரஸ்தாவமெடுத்துக்கூற,அவள்.அது கேட்டவுடன் இப்போது இவர் இவ்விஷயம். ப்ரஸ்தாவித்ததுனெல்ல. இது லோகாபிராழவார்க்தைகளிற் சேர்ந்ததல்ல,-நம்மைப் பிரிந்து போவதற்காகவே இது அவதாரிகையாகக் கூறின
கூற்றாயிருக்கவேண்டும் என நினைத்து, பிரிவு உண்டாய்விட்டதா கவே நினைத்து வருந்திப் பிரிவாற்றாமையாலுண்டாகும் பசப்பென்கிறநிறவேறுபாட்டை யடைந்து கண்ணுங் கண்ணீருமாயிருக்க, அதைக்கண்டகாதலன் ‘நாம் பிரிந்து போவதாகச் சொல்லாதிருக்கவும் வெறும்வார்த்தையிலே நமது உட்கருத்தைத் தெரிந்துகொண்டஇவளது நிலைமை இப்படியாயிற்றே யென்று வியந்து தோழியை நோக்கி- பிரிவின் ப்ரஸ்தாவமும் அ ஹ்யமாகித் திருமேனி பாடுற்றுக் கண்ணீர் பெருக நிற்கும் தன்மை இதனால் சொல்லப் பட்டதாயிற்று.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply