இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து –24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,-மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
————
திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை-வாழ —-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி உலகினில்–லௌகிகர் இடங்களில்-சார்ங்கம் உதைத்த சர மழை போல்-இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்–சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று –எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சார்ங்கம் உதைத்த –அகம்படியர் –சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இறே-அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும்-விலக்க ஒண்ணாதாய் இருக்கை-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே-சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-வாழ உலகினில் பெய்திடாய் –த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது-அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்
————–
பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே–ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –-கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –உறக்கத்தில் தலையானவனும்-உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ -ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே –நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ ––அவனது -துயில்-உன்னது -பெரும் துயில்–அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்-ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே-அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு – நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு-அவன் ஒருத்தியை இறே பிரித்தது-நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-கூற்றத்தின் வாய் வீழ்ந்த-தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே- வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த-பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின -எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் -விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –
இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு-இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை
—————
சினத்தினால் –உண்ணாது உறங்காது –அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே-பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழியபெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்-இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே –விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –சினத்தினால் மனத்துக்கு இனியான் –அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று-(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப்புரக் காரியமும் செய்வார் பெருமாள் ) தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-
தென்னிலங்கை-பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –-ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி கொலைக் காரன் இருக்கிற இடம் இறே-அத் திக்குக்கும் அஸஹ்யமான படி-தென்னிலங்கை கோமானைச் செற்ற-யத்ய தர்மோ ந பலவான்-என்றும் –அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் –திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே-ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –படையைக் கொன்று –புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து ஆயுதங்களை முறித்து –அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –கோபத்தினாலே-யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து-அத ஏவ மனத்துக்கு இனியானை –சக்கரவர்த்தி திருமகனை –மனத்துக் கினியானைப் –வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக-பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே-ஏகதார வ்ரதனாய் இருக்கை –கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று-நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு-இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –
———–
பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே-தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –-முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே-கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி– திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே-ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது–அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய-கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.-ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க-ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் –தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில் –
கீர்த்திமை –-எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம்-உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்-தங்கை அழகிலே கண் கலங்கினாள்-தம்பி சீலத்துக்கு இலக்கானான் –-பாடிப் போய் –இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி –வழிக்கு தாரகம் இறே திரு நாமம்-தன் தாள் பாடி -என்னக் கடவது இறே –தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –கீர்த்திமை பாடிப் போய்-கல்யாண குணங்களை-ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி-அதுவே தாரகமாய் போய் –விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தநத்தைப் பாதேயமாகக் கொண்டு வழி கடந்தன ரென்றவாறு
————–
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே-பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை-எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை இவர்களுக்கு குடிப் பிறப்பு –தென்னிலங்கை-அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய் குழவிக் கூடு கொண்டாப் போலே-ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –செற்றாய் –ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை-திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே-மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும் அவர்கள் ஆகையாலே-குடிப் பிறப்பாலே வந்தது –இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்-ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்-சென்று அங்குத்-அங்கே சென்று –நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –கொடிய காட்டிலே பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள் –எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே- உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –
————-
உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் –
அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா ” என்பது பிராட்டியின் திருவாக்கு.-
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.” என்றார்.- பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அவிநாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த வித்வம்ஸந உதய: ।பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவிநா பாவமேயாம்.
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை–நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது –ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உன் தன்னோடு-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்-(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்-எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் –(பராங்குச நாயகி )
உனக்கே நாம் ஆட்செய்வோம் –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே-நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –
———————
வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயினனென்றதாகக் கொள்க.
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்‘-பிராட்டியே தான் மதுரக் கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான் ஸுந்தர பாஹு – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே!” என்றார் திருமங்கை யாழ்வாரும்.—
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்-கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் –என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை-அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது-அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்
மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்-லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து-அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –
மேலே கேசவனென்றதனால் பரசு ராம பங்க கதை ஸூசிதமாகிறது- கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே யாதலால் அது கேசவனை யென்பதனால் ஸூசிதமென்னக் குறையில்லை.-
கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை –பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை –
பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே
போக்க வல்லவன் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது--அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற நிலையைச் சொல்லிற்று
மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –
என்று பட்டர் அருளிச் செய்வர் –
“திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸூ சனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;
சேயிழையார் என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்விய இழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால் சொல்லப்பட்ட
தாகிறது. ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே- பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று- அடுத்தபடியாக ஸீதாபிராட்டி மங்களாசாஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.
இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம் செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களாங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூப ஸம்ஹநம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ருர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்ற பாடமும் பல ஸ்ரீகோஸங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “
ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப் பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில் கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷிகளையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்து கொள்ளக் குறையில்லை.
தருணவ் மஹாபலெள,புண்டரீக விசாலாக்ஷள சீர க்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை — அதன் பிறகு தாரையின் புகழுரை.-நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-
த்வமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தம தார்மிகச்ச, அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச் ச க்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள் ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-
வயத்தமேஷ மஹாயோ …. தம : பரமோயாதர சங்க சக்ர கதாதர , ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் ஸாச்வதோ த்ருவ:”இத்யாதியாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வாக்கிலும் வந்ததல்ல.-
சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே-ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே-கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –ஸ்வரூப குணங்களாலும்
ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –(நேரிழையீர் அது நேர்மை -ஆஸ்ரயணீய தசை-சேயிழையீர் இது செம்மை -இது அனுபவ தசை )
திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறை கொண்டவர் சக்ரவர்த்தி திருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்று சொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்க வேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றது தான் அங்குப் பறை கொண்டவாறு.
”குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”
பெருமாள் திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹித ஸித்தி யாதலால் இதனையே பறை கொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சால விணங்கும்.
இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து –அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி
அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –-எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-தங்கள் வெறுமையையும்-அவன் பூர்த்தியையும்-பந்தத்தையும் முன்னிட்டுத் தப்புக்கு பொறை கொண்டு-ருசியையும் த்வரையையும் காட்டி-வளைப்பிட்டு-அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –கொண்ட-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-ஆற்றை –கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி -சேதன லாபம் பகவானுக்கே -பேற்றுக்கு சாதனங்களும் செய்து பெற்று உகப்பானும் அவனே
“அணி புதுவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த விசேஷணமும் ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி உபபாதிப்போம். ஆண்டாளுக்கும வான்மீகி முனிவர்க்கும் அபலபிக்க வொண்ணாத வொரு உத் கர்ஷம் கோதாஸ்தியில்-ः –
வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: | கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7): என்கிற ஸ்லோகத்திற்கு —நிலததில் தென்படும் புற்றானது பூமி தேவியின் காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமாதலால் பூமி என்றே கொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில் நின்றும் தோன்றிய வால்மீகி முனிவர்-ஆண்டாளுடைய காதில் நின்றும் தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்தி ஏற்பட்டு விட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும் தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில் நின்று உண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோக விலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவானால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஸஹஜமே யாதலால்
மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில் நின்றும் தோன்ற
வென்பதில் வியப்பு ஒன்றுமில்லை கிடீர் -ஸ்ரீராமாயணத்திற்கு ஏற்பட்டிருக்கும் ப்ரஸித்தையைப் பற்றிச் சிறிது வியக்க வேண்டுமே யல்லது உம்முடைய திவ்ய ப்ரந்தங்ளுக்கு ஏற்பட்டிருக்கின்ற போக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
ஸக்தியில்லை என்பது உள்ளுறை –இதனால்,வால்மீமி கோகிலத்தின் சொற்களில்
கிளி மொழிக் கோதையின் சொற்களே விலக்ஷணமாயுள்ளது.
ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன்.
அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,
தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்-உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்!-திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ஸ்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.-அதுபோல உன்னுடைய ஸ்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.-உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?-உன் “ஸ்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது
அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் –தனக்கு-பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேஸ்யமாய் அவர் அபிமானித்த தேசம் என்று ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் திரு அயோத்யையும் போலவும்-நப்பின்னைப் பிராட்டிக்கு கும்ப குலமும் திருவாய்ப்பாடியும் போலவும் அன்றிக்கே-ஆண்டாளுக்கு-பிறவியும் புக்க இடமும் ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இறே உள்ளது –பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே-நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற அலங்காரம் உள்ள தேசம் இறே
(அகாரம் உகாரம் மகாரமும் என்றுமாம்-ரெங்க மன்னாரும் ஆண்டாளும் பெரிய திருவடி-சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்-ஓங்காரமே காட்சி கொடுத்து ஸேவை சாதித்து அருளும் திவ்ய தேசம் )
‘‘கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்று காட்டினாப் போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவை மிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹல்யா சாப விமோசனம் .4.வில் வளைத்து வைதேஹியை மணம் புணர்ந்தது. 5.பரசு ராம பங்கம்.(ஆக 5) அயோத்யா காண்டத்தில்,1.யுவ ராஜ பட்டாபிஷேக ப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டது. 4. பாதுகா பட்டாபிஷேகம்.5-அத்திரி பகவானாச்ரமத்தில் அநஸூய தேவிக்கும் மீதா ஸீதேவிக்கும் ஸம்வாதம். (ஆக 5)இங்ஙனே காண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை ஐயைந்தாக வகுத்தாள்வது.-
இப் பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக
உரைப்பார்-உபந்யஸிக்க ல்லவர்கள்.
———————————————————————————————————-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply