ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-8-
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
இப்படி இவன் க்ருத்ரிமம் செய்து நம்மை இங்கிருந்து விளையாட ஒட்டானாகில் நாம் இங்கு நின்றும் போவோம் -என்று பார்த்துத்
தன் தோழிமாரோடு கூடப் போகப் புக நான் போக ஓட்டேன் என்று இவன் தங்களை வளைத்து அருள –
அறியாதே விளையாடப் போந்த எங்களை உன்னுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலே இழுவித்துக் கொண்டு சர்வேஸ்வரனான
நீ வளைத்தால் உன்னை உகவாதவர் உனக்கு என்ன பழி சொல்லார் -உனக்கு எங்களோடு சம்ச்லேஷம் வ்ருத்தம் என்றும் சொல்லுவர் இறே
ஆனபின்பு இது யீடல்ல -என்று அவனை உபாலம்பிக்கிறாள் –
—————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-8-
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
நாம் இருக்கில் இ றே இங்கு இவனுக்கு நம்மை நலியலாவது -நாம் போவோம் என்று தானும் தோழிமாரும் போக உபக்ரமிக்க எம்பெருமானும் அவர்கள் போகிற வழியைக் கொண்டு அவர்களை போக ஒட்டாதே வளைக்க -அவர்களும் சேதன அசேதனங்களை -தேவ திர்யக் மனுஷ்யாதி விபாகங்களை ஒளிந்து ஒன்றாம் படி கலசி -அழித்தது ஸ்ருஷ்டித்தது என்று தெரியாத படி சம்ஹார காலத்துக்கு முன்பு இருந்த படிகளில் ஒரு வாசி படாத படி ஸ்ருஷ்டித்து -இதில் ஓர் ஆயாஸப் படாத படி மஹா ப்ரபாவமான வி லக்ஷண சங்கல்ப ரூப ஞானத்தை யுடைய -சர்வேஸ்வரனான நீ தோழிமார் தங்களோடு கூடிக் கொண்டு விளையாட்டுப் போருங்கோள் -என்ன அறியாதே போந்த எங்களை -உன்னுடைய ஸுந்தர்யாதி களாலே நெருக்கி எங்களை போக ஒட்டாது ஒழிந்தால் -இத்தை சஹியாத உன்னுடைய மின்னிடை மடவார் இம்மாத்திரத்தை கொண்டு யோக்யதையாலே சம்ச்லேஷம் வ்ருத்தம் என்று சொல்லி உன்னை உபேக்ஷிப்பார் என்கிறாள் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-8-
அநந்தரம் -இவன் சந்நிதியில் இருக்கில் அன்றோ மர்மம் சொல்லுவது -என்று போகத் தேட
இவர்கள் போகிற வழியைக் கட்டித் தகைந்த அவனை நோக்கி -எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்-என்று
சர்வஞ்ஞனான நீ எங்களைத் தகைந்தால் யுகவாதார் என் சொல்லார் -என்கிறாள் –
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்–சகல சேதன அசேதனங்களையும் ஸம்ஹ்ருத்ய அவஸ்தையில்
நாம ரூப விபாஹ ரஹிதமாம் படி கலசி -ஸ்ருஷ்டியில் வந்தவாறே அவ்வோ சேதனருடைய கர்மங்களுக்கு சாங்கர்யம் பிறவாதபடி
தேவ திர்யகாதி பேதத்தைப் பண்ணினவிடத்தும்-தத் கத தோஷத்தால் ஸ்வரூபத்துக்கு பேதம் வராதபடி அத்விதீயமாய்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!–அபரிச்சின்னமான கீர்த்தி சமுத்திரத்தை யுடைத்தாய் இருக்கிற
பிரபா ரூபமான சங்கல்ப ரூப ஞானத்தை வடிவாக யுடையவனே
இணக்கி எம்மை விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை–சஜாதீயைகளாய் ஸமான துக்கைகளான தோழிமார்
நாங்கள் இசையும்படி வார்த்தை சொல்லி விளையாட போங்கோள்-என்று லீலையை வ்யாஜமாகச் சொன்னபடியாலே
நீ இங்கு நிற்பது அறியாதே லீலா பரைகளாய் வந்த எங்களை உண்ணவும் ஒட்டாதே
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–உணங்கும் படி பண்ணி நீ தகைத்தால்-இச் செய்தி கண்டு
உகக்க மாட்டாத நாட்டார் என்ன சொல்லார் –
உன்னுடைய மின்னிடை மடவார் என்றுமாம்
இங்கு இன்னக்கி எம் தோழிமார் என்றது ஸஜாத்யத்தால் கலந்து லீலா ரஸ வ்யபதேசத்தாலே
பகவத் விஷயத்திலே மூட்டும் பாகவத விஷயத்தை ஸூசிப்பிக்கிறது –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-8-
நாம் இங்கு இருக்கில் இ றே இவனுக்கு மர்மங்களை சொல்லி நலியலாவது -நாம் போவோம் என்று எல்லாரும் கூடப் போகப் புகார்கள் -இவர்கள் போகிற வழி ஓர் அடிப்பரப்பாய் ஒழுகப் போக வேண்டுகையாலே வழியைக் கட்டி இரு விலங்காகக் கிடந்தான் -அவனைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறார்கள்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் –
சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி
பேதியாதது ஓர்–கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!–
சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இ றே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் -எம் தோழிமார் -சஜாதீயராய் இ றே இருப்பது
விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை-
கிருஷ்ணன் உண்டு என்று அறிந்தோம் ஆகில் வாரோம் –இவ்வகப்பாட்டை அறிந்து இருந்தோம் ஆகில் வாராது ஒழியல் யாயிற்று -அத்தால் வந்தது என் என்ன –
உணக்கி, நீ வளைத்தால்,
உணக்குகை யாவது -தரிக்க மாட்டாமே துவளும் படி பண்ணுகை -உன் முகம் பார்த்து அனுபவிக்க பெறாமையாலே தரிக்க மாட்டு கிறி லோம்
என்சொல்லார் உகவாதவரே?
நீயும் நாங்களுமாக இருக்கக் கண்டால் உகவாதவர் என் சொல்லார் -உங்கள் சந்நிதி மாத்திரமே யன்றோ உள்ளது -இதுக்கு சொல்லுகிறது எத்தை என்ன -யோக்யதையாலே சம்ச்லேஷம் வ்ருத்தம் -என்று உன்னுடைய மின்னிடை மடவார்கள் உபேக்ஷிப்பார்கள் –பிரிவாற்றாமையாலே கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எத்தை சொல்லார் -உன் மேன்மையையும் குணவத்தா ப்ரதையையும் இழக்கக் கிடாய் புகுகிறாய் -ஆப்பான் -இவனை இவர்கள் கடந்து போனார்கள் ஆகில் செய்வது என் என்ன ஜீயர் -அது ஆர்க்கு அழகு -என்று அருளிச் செய்தார் -நின்றார்கள் ஆகில் நினைத்தது பெற்றான் ஆகிறான் -கடந்து போனார்கள் ஆகில் சம்ச்லேஷ அர்த்தமான க்ருஷி தலைக் கட்டிற்று ஆகிறது –
——
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-8-
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-
இவன் சந்நிதியில் இருக்கில் அன்றோ மர்மம் -சிற்றில் இளைக்க போகலாம் என்று போகத் தேட -போகிற வழியை மறித்த அவனை நோக்கி
எல்லாம் அறிவீர் ஈதே அறீயீர்-சர்வஜ்ஞ்ஞன் நீ எங்களை தகித்தால் உகவாதார் என் சொல்வார்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்-சகல அசேதனம் சேதனம் -பிணக்கி கூட்டி –
சம்ஹ்ருத் அவஸ்தையில் நாம ரூப ரஹிதமாம் படி பின்பு சிருஷ்டித்து -குற்றம் வாராமல் -கர்மம் விட்டுப் போகாமல் –
தேவ திர்யக்-பிரித்தும் -ஸ்வரூப பேதம் வாராமல் –
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-அபரிச்சின்னமான கீர்த்தி சமுத்ரம் -பிரபா ரூபம் -சங்கல்ப ரூபம் -ஞானமே ஒரு மூர்த்தியாக –
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை-சஜாதீயர் -தோழிமார் -சொல்ல -இசையும் படி வார்த்தை சொல்லி -விளையாட –
வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -குடக் கூத்துக்கு போலே -வினையாவது அறியாமல் –
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?-உண்ணவும் ஒட்டாதே நீ ஸ்ரமம் கொடுத்து தகைத்தால் –
உகவாதார் நாட்டார் -உன்னுடைய மின்னிடை மடவார்-என் சொல்வார் –
ஆச்சார்யர் கோயில் பிரசாதம் ஆசை காட்டி கூட்டிச் சென்று அவன் இடம் சேர்ப்பார் போலே –
கங்கை தீர்த்தம் -ஜகன்னாத பிரசாதம் -நாம சங்கீர்த்தனம் -ஆசை காட்டி அவன் இடம் கூட்டிச் சேர்ப்பார்கள் –
லீலா ரச விபதேசத்தால் -பகவத் விஷயத்திலே மூட்டி வைப்பார்கள் –
அழிக்குங் காலத்திலே அசேதனங்களையும் சேதனங்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின், படைக்குங் காலத்தில் ஓர் ஆன்மாவின் கர்ம பலத்தை
மற்றோர் ஆன்மா அநுபவியாதபடி படைத்தும் வேறுபடாததாகிய ஒப்பற்ற எல்லை யில்லாத கீர்த்தி வெள்ளத்தினையுடைய கதிர் ஞானத்தினையே
திருமேனியாக வுடையவனே! எம் தோழிமார் எம்மை இசையச் செய்து விளையாடுவதற்கு வாருங்கோள் என்ன,
வந்த எங்களைத் துவளச் செய்து நீ வளைத்தால் விருப்பமில்லாதவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்?
பேதித்தும் பேதியாதது ஓர் ஞானம் என்க. ஞானம் – சங்கல்பரூப ஞானம். கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞானம் என்க.
அத்தகையஞானமே மூர்த்தி என்க. எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோம் என்க.
கிட்டு நின்று இவர்களைச் சில மிறுக்குக்களைச் செய்யப் புக்கான்;
‘இங்கே இருக்கில் அன்றோ இவை எல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள்.
‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப் பற்றி இரு விலங்காகக் கிடந்தான்.–இருகை விலங்கு —
பூஞ் சோலை யாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ.
இப் பாசுரத்தைச் சீயர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே, அங்கே இருந்தவரான ஆப்பான்
‘இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க,
‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று சித்திக்கும் என்று
அன்றோ அவன் தான் கிடந்தது’ என்று அருளிச் செய்தார்.
தாண்டி போனால் இடித்திக் கொண்டு தான் போக வேண்டும் –
நின்றார்கள் ஆகில் இவன் நினைத்தது சித்திக்கும் என்று இருந்தான்
நீ வழியைப் பற்றிக் கிடவா நின்றாய்; நீ செய்கிறவை எல்லாம் உறவு உண்டாய்ச் செய்கிறாய் என்று இருப்பர்கள் காண்;
நீ எல்லா ஆன்மாக்கள் விஷயமகாவும் செய்யும் லீலைக்கு ஓர் அளவு உண்டோ?
உன்னை ஒழிந்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் கோடி விகாரத்தைச் செய்து,
விகாரம் இல்லாதவனாய் இருப்பான் ஒருவன் அன்றோ;
அப்படியே எங்களை வேறுபாட்டினை யுடையவர்களாகச் செய்து நீ வேறுபாடு இல்லாதவனாய் இரா நின்றாய்.
யாவையும் யாவரும் பிணக்கி-
தன் பக்கல் பொருந்துகைக்கு நினைவு இல்லாதனவற்றையும் — நினைவாலே பொருந்தாதனவற்றையும் கூட்டி,
“மூலப் பிரகிருதியானது பரமாத்மாவினிடத்தில் கலக்கிறது”
-“தம: பரே தேவ ஏகீபவதி” சுபால உப. 2.-என்கிறபடியே, தன்னோடு வேற்றுமையறக் கலசி.
பிணக்கி –
வயிற்றில் வைத்து அவாந்தர பிரளயம் —
பிழையாமல் பேதித்தும் –
தப்பாமல் பிரித்தும் என்றது, வயிற்றில் நின்றும் புறப்பட விடுதல், சம்ஹரித்துப் புறப்பட விடுதல்களைக் குறித்தபடி.
ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடி வாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து,
விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே.
ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும்.
பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும்,
காரண நிலையில் அசித்தைப் பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,
சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்,
படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே,
ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய்,
ஒளி உருவமான சங்கல்ப ரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!
எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் -திருவாய்மொழி, 1. 5 : 2.-முதலில் சிதையாத மனஞ்செய் ஞானமன்றோ.
இதனால், பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏக ரூபன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இப்படிபட்ட குணங்களை அளவிடுவோம்’ என்று பார்த்தார் உளராகில் இளைத்துக் கால்வாங்கும்படி இருத்தலின்
‘கணக்கில் கீர்த்தி வெள்ளம்’ என்கிறது.
இப்படிக் கூட்டுவன கூட்டிப் பிரிப்பன பிரித்தாலும், ஞானத்திற்கு ஒரு குறைவு அற்று இருத்தலின்
‘கதிர் ஞான மூர்த்தியினாய்’ என்கிறது. என்றது,
காரியம் கொண்டது என்னா மழுங்காது இருக்கை;
காரியம் கொள்ளப் புகர்த்து வருகையைத் தெரிவித்தபடி.
ஞான மூர்த்தியினாய் –
அன்றிக்கே, ஞானமே ஸ்வரூபனாயுள்ளவனே! என்னுதல்.
எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை –
நீ செய்கிறவற்றால் பிரயோஜனம் உள்ளது நீ இருந்த இடத்தே நினைத்துத் தேடி வந்தார் உளராகில் அன்றோ?
இணக்கி –
இசையும்படி வார்த்தை சொல்லி. என்றது,
‘அவ்விடம் கிருஷ்ணன் வாராத இடம்’ என்று காண் சொல்லிக்கொண்டு போந்தது என்றபடி.
உன்னுடைய கலவியாகிற அயாயம் வரும் என்று அறியாத நாங்கள் என்பார் ‘எம்மை’ என்கிறார்கள்.
உன்னை வெறுக்கிறது என்? உன்பக்கல் குற்றம் உண்டோ? சேர்த்தாராலே வந்தது காண் என்பார் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.
ஒரே சாதியினராயிருந்து சேர்க்க வேண்டுமாதலின் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.
அவர்கள் உனக்குப் பெருநிலை நிற்பது அறியப் பெற்றிலோம்.
சொலவுக்கு மேல் அகவாய் ஆராயப் பெற்றிலோம் என்பார் ‘விளையாடப் போதுமின் என்னப் போந்தோம்’ என்கிறார்கள்.
என்றது, ‘நீ இங்கே உண்டு’ என்று அறிந்தோமாகில் இவ்விடம் என்றும் நினையோம் என்றபடி.
“அவர்கள் உனக்குப் பார்வை” என்னுமிடம் அறியப் பெற்றிலோம். -ஆச்சார்யர்கள் -பெருமாளுக்கு சகாயம் பண்ணுபவர்கள் என்றபடி –
பகவத் விஷயத்தில் வைலக்ஷண்யம் நெஞ்சிலே பட்டால் உபகாரகரைக் கொண்டாடவேண்டும் என்னும் அர்த்தமன்றோ உள் ஓடுகிறது.
“எந்த நாத முனிவருடைய இரண்டு திருவடிகளானவை எப்பொழுதும் எனக்கு ரக்ஷக வஸ்துக்கள்”-
“நாதாய நாதமுநயேத்ர பரத்ரசாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திரரத்நம், 2
என்கிறபடியே, இங்கோடு அங்கோடு வாசிஅற அவர்களாலே வருமதன்றோ.
பொகடுங்கோள்; ஆனால் என்? அவர்கள் சொல்லப் போந்தீர் கோளாகில் உங்களுக்கு வந்த தீங்கு என்? என்றான்.
உணக்கி நீ வளைத்தால் என்சொலார் உகவாதவரே –
உணக்குகையாவது, தரிக்க மாட்டாதே துவளும்படி செய்கை.
எங்களுக்கு இதற்கு மேல் வருவது என்? கால் வாங்கிப் போகப் பெறுகின்றிலோம்;
கிட்டி நின்று முகம் பார்த்து அநுபவிக்கப் பெறுகின்றிலோம்.
இதனைக் காண வேண்டாதவர்கள் என் சொல்லுவர்கள்? “எதனைச் சொல்லுவது?
என்னை ‘ஈஸ்வரன்’ என்றீர் கோளாகில், உங்களை ‘ஆயர் சிறுமியரோம்’ என்றீர் கோளாகில்,
இனி எதனைச் சொல்லுவது?” என்றான்.
நீ சர்வேஸ்வரனான இதுவும், நாங்கள் ஆய்ப் பெண்கள் ஆன இதுவுமே யன்றோ சொல்லுகைக்குக் காரணமும்.’
ஈஸ்வரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள் தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.
‘அது என்தான்? என்னோடு உங்களுக்கு உறவு முறை இல்லை என்றீர் கோளாகில் இதனால் வருவது என்?’ என்றான்.
என் சொலார் உகவாதவரே –
உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே,
உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.
பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply