Archive for March, 2022

ஸ்ரீ திரு மாலை-1–காவலில் புலனை வைத்து -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.

பதவுரை

மூ உலகு –எல்லா வுலகங்களையும்
உண்டு –(ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த –(பிரளயம் நீங்கின பிறகு ) அவற்றை வெளிப்படுத்திய
முதல்வ –ஜகத் காரண பூதனே!
அரங்கமாநகரளானே!
நின் நாமம் கற்ற –உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான
ஆவலிப்புடைமை –செருக்கினாலே
புலனை –பஞ்சேந்திரியங்களையும்
காவலில் வைத்து –(வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து
கலி தன்னை– பாப ராசியை
கடக்க பாய்ந்து–வெகுதூரம் உதறித் தள்ளி
நாவலிட்டு–ஜய கோஷம் செய்து
நமன்தமர் தலைகள் மீதே– யம படர்களின் தலை மேல்
உழி தருகின்றோம்–அடி யிட்டுத் திரிகின்றோம்.
(கண்டாய்-முன்னிலை அசைச்சொல்)

அடியார்களைக் காத்தருளும் திறம் நன்கு விளங்கும்படி கோயிலில் கண் வளர்ந்தருளும் பெருமானே!
உன் திருநாமத்தை நான் கற்றதனால் பெற்றபேற்றின் கனத்தைக் கண்டாயோ?
அஹோ! என்னைத் தீவழியில் செலுத்தி உனக்கு விலக்காக்கின பஞ்சேந்திரியங்களை அவற்றின்
ஸ்வாதந்திரியம் ஒன்றும் ஓங்க வொண்ணாதபடி அமுக்கி இத்தனை நாளாக இவற்றை அமுக்கி,
ஆளமுடியாதபடி தடையாய்க் கிடந்த பாபங்களையும் உதறிவிட்டு, நரகபாதையில் நின்றும் பயம் தவிர்ந்து
யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் திரியா நின்றேன்; எனது செருக்கு எப்படிப்பட்டது! பாராய் என்கிறார்.

(காவலில் புலனை வைத்து)
முன்பு என்னைச் சிறையில் வைத்த இந்திரியங்களை இன்று நான் சிறையில் வைத்தேனென்கிறார்.
இராவணன் போர்க் களத்திலே இராம பிரானது அம்புகட்கு இலக்காகிப் பட்டுப் போனவாறே மந்தோதரி புலம்புகிறாள் –
“இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரிபுவநம் த்வயா-ஸ்மரத்பிரிவ தத்வைரமத்ய தைரேவ நிர்ஜித; என்றாள்;
அதாவது-
இராவணனே! நீ முன்பு இந்திரியங்களை யெல்லாம் வென்று அதனால் மூவுலகையும் வென்றாய்;
(இந்திரியங்களை நிக்ரஹித்துக் கொடுந்தவம் புரிந்து வரம் பெற்றமையால் மூவுலகும் வென்றனனாதலால் இங்ஙன் கூறப்பட்டது.)
அந்த இந்திரியங்கள் “இப்பாவி நம்மை இப்படி தலையெடுக்க வொட்டாமல் பண்ணிவிட்டானே;
ஆகட்டும் தக்க சமயம் பார்த்து இவனைத் தலையமுக்குவோம்” என்று நெஞ்சில் பகை வைத்துக் கொண்டிருந்து
இப்போது உனக்கு பிரதிக்ரியை செய்துவிட்டன எனறாள்.
(இந்திரியங்களை அடக்காமல் அவற்றுக்குப் பரவசப்பட்டு ஸீதையைக் கவர்ந்ததனால் உனக்கு இக்கேடு விளைந்ததென்றபடி.)

அப்படி இராவணனிடத்தில் இந்திரியங்கள் முதலில் பரிபவப்பட்டு. பிறகு அவனைத் தாம் பரிபவப்படுத்தியவாறு போல
இவ்வாழ்வார் முதலில் தாம் இந்திரியங்களால் பரிபவப்பட்டுப் பொன்வட்டில் நிமித்தமாகச் சிறைபட்டிருந்த சினத்தை
நெஞ்சில் வைத்துக் கொணடிருந்து ஸமயம் பார்த்து அவற்றைத் தாம் சிறைப்படுத்தினர் என்ற விசேஷார்த்தம் இங்கு உய்த்துணரத்தக்கது.

கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து-
கலி என்று கலியுகத்தைச சொல்லிற்றாய்
“இவன் க்ருதயுக புருஷர்களில் ஒருவன்” என்று பலருஞ்சொல்லும்படி கலியைக் கெடுத்தேனென்றுமாம்.

நாவலிடுதல்-
தோற்றவர் முன்னே ஜயித்தவர்கள் தமது வெற்றியைக் கூறிக் கோஷித்தல்.

“உழிதருகின்றேன்” என்று
ஒருமையாகக் கூறாமல் பன்மையாகக் கூறியவித்தால்-
ஒரு புண்ணியசாலியின் ஸம்பந்தத்தாலே பல பாபிகளும் பேறு பெறுவர்களென்னும் சாஸ்த்ரார்த்தம் வெளியாம்;
அதாவது-
நான் ஒருவன் நின்நாமம் கற்க
அந்த ராஜகுல மாஹாத்மியத்தால் என்னைச் சேர்ந்தவர்களும் நமன்றமர் தலைகள் மீது அடியிடும்படியானமை பாரீர் என்கை.
வாலியின் பெயர் செவிப்பட்ட வளவில் தானே அஞ்சிச் சுரமடைந்துகிடந்த ஸுக்ரிவ மஹாராஜர்
இராமபிரானை அண்டை கொண்ட பலத்தாலே கிஷ்கிந்தாத் வாரத்திலே சென்று அறை கூவினாற்போல
இவரும் கீழெல்லாம் நமன்தமர்க்கு அஞ்சிக்கிடந்து
இன்று திருநாமத்தை அண்டைகொண்ட பலத்தாலே
அவர்கள் தலைகளிலே ஸபரிகரராய் அடியிட்டுத் துவைக்கிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ என்னை ஆளுடை அப்பன் பல்லவ உத்சவம்அனுபவம் -ஸ்ரீ தெள்ளிய சிங்கர் ப்ரஹ்மோத்சவம் அனுபவம் -ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

March 28, 2022

பல்லவம் – இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்..

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது.
இந்த பல்லவ உத்சவம் என்பது பல்லவர்கள் சம்பந்தபட்டதல்ல ! பல்லவம் என்பது காலம்.
பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீ ரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி
அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை சேவிக்கப்படுகிறது🙏

பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு அருள்வார்
தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார்.
பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு
ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது 🙏🙏🙏🙏

ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் என்கிறபடியே
ஒரு ஜீவாத்மா ஏழ் பிறப்பையும் கடந்து /அறுத்து அந்த பரமாத்மாவிடம் செல்கிறான்… 🙏

ஏழு திரை விலகி ஸ்ரீ ரெங்கநாதர் சேவை
அவஸ்தா ஸப்தகங்கள் நீங்கி….எம்பெருமானுடன் கூடி…

வேதத்தை வேதத்தின் *சுவைப்பயனை விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.

எம்பெருமானை ஸாக்ஷாத் வேதமாகச் சொன்னது வேத ப்ரதிபாத்யனா யிருக்குந் தன்மைபற்றியாதல்,
வேதங்களை வெளியிட்டருளினமை பற்றியாதல்,
உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொருவகையாக இருக்குமாதலால்
அவரவர்களுடைய விருப்பத்திற்கிணங்க உபாயங்களையும் பலன்களையும் வேத மூலமாகக்
காட்டிக் கொடுத்திருக்கின்றமை பற்றி வேதத்தின் சுவைப்பயனை எனப்பட்டது.

என்னையாளுடையப்பன் தமது தேவியருடன்* திருத்தேரில் புறப்பாடு கண்டருளுகிறார் 🙏

எம்பெருமான் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நிதி இருப்பதைக் காணலாம்.
அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க
ஒரு கண்ணாடியாய் எம்பெருமானைக் காட்டும் கண்ணாடியே வேதம்!

வேதாத்மா விஹகேஸ்வர:
கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கிறது…..

எம்பெருமானை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது.
ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து,
அதைப் பின்பற்றி அவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, எம்பெருமானை நமக்கு எளிதில் காட்டிக்கொடுக்கிறான்.. கருடாழ்வாராக🙏

பட்சிராஜன், வைனதேயன், கருத்மான், சுபர்ணன்,
தார்க்ஷ்யன், காச்யபி, சுதாஹரன், ககேச்வரன்,
நாகாந்தகன், விஷ்ணுரதன், புள்ளரசன், புள்ளரையன், மங்களாலயன், பெரிய திருவடி, கலுழன் எனப்
பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.

*ஆளவந்தார் என்னும் மஹாசார்யரும்…

​“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: என்ற ஸ்லோகத்தில்

கருடன் திருமாலுக்குத் தொண்டராகவும் நண்பராகவும் வாகனமாகவும் இருக்கையாகவும்
கொடியாகவும் மேல்கட்டாகவும் விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார். 🙏

நம்மாழ்வாரும் தமது முதல் ப்ரபந்தத்தில்
அப்புள்ளின்பின் போன என் தனி நெஞ்சமே என்கிறார் 🙏
திருவடியை வாஹனமாகக்கொண்டு நடத்தியருளும்போது
என்னுடைய நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அத்திருவடியின் பின்னே தனியாய்ப் போய்விட்டது… என்கிறார் 🙏

ஸ்ரீ மந்நாதன் கண்ணாடி கருடனில் ஆரோஹித்துத் திருவீதிகளில் எழுந்தருளுகிறார். 🙏

————–

ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விஸ்வசித சிந்நயநாதிகாரம்
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ்தமஶிஶ்ரியாம🙏

நம் குருபரம்பரையில் பெரிய பிராட்டியாரை ஆசார்யராய்க் கொண்டவரும் ,
ஆழ்வார்கள் அனைவரையும் சிஷ்யராய்க்கொண்டவரும்
நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட
நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்ளும்
ஸேனை முதல்வர்..
ஸேநாதிபதி
வேத்ரதரர்
வேத்ரஹஸ்தர்
என்று பல திருநாமங்களைக் கொண்ட இவருடைய திவ்யமஹிஷி சூத்ரவதி என்பவர்.

ஸ்ரீ ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்னத்தில்

த்வதீய புக்த உஜ்ஜித ஶேஷ போஜிநா
த்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதாப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி
தத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:
எம்பெருமானுடைய ஸேஷப்ரசாதத்தை முதலில் உட்கொள்பவரும்,
உபயவிபூதியை நிர்வஹிக்கும் அனுமதி பெற்று அவன் கடாஷத்தாலேயே அவன் திருவுள்ளமறிந்து
கார்யம் செய்பவரும் எல்லாராலும் விரும்பப்படுமவர்–என்று கொண்டாடுகிறார்🙏

எம்பெருமானின் ஶேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால்,
இவருக்கு ஶேஷாஶநர் என்ற திருநாமமும் உண்டு.

நாம் அநுபவித்து வரும் குருபரம்பரையின் மூன்றாவது ஆசார்யனாக விஷ்வக்ஸேனர் கொண்டாடப்படுகிறார்.
பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆசார்யனாக இருக்கிறாள்.
ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய ஶிஷ்யர்களாக இருக்கிறார்கள்.

ஸேனை முதலியாரிடம் உலக விஷயங்களை நடத்தும் பொறுப்பை விட்டு, எம்பெருமான் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணராய்,
பரமபதமான நித்ய விபூதி மற்றும் ஸம்ஸாரமாகிற லீலா விபூதியையும் ஆனந்தமாக அனுபவிக்கிறார் என்று பூர்வாசார்யர்கள்… 🙏
மேலும், எம்பெருமான் ராஜகுமாரனைப் போலேயும், ஸேனை முதலியார் மூத்த அமைச்சராகவும் பேசப் படுகிறார்🙏

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ அழகிய சிங்கர்
ப்ரஹ்மோத்ஸவ அவசரத்தில்
ஸ்ரீ சேனை முதலியார் திருவீதி புறப்பாடு 🙏

———

கோப்புடைய சீரிய சிம்மாசனம் பரமபதத்தில் உன் இருக்கைக்கு ஒப்பானது
பரமபத சிம்மாசனம் எட்டு கால்கள் கொண்டதாக விவரிக்கப்படுகிறது

தர்மம்
அதர்மம்
ஞானம்
அஞ்ஞானம்
வைராக்கியம்
வைராக்கியமின்மை
பொருள்,
பொருளின்மை என்ற எட்டு கால்களைக் கொண்ட தர்மாதிபீடம்🙏

ஏழுலகம் தனிக்கோல் செய்ய வீற்றிருந்து என்கிற படியே

ஸ்ரீ நரசிம்மர்…
தர்மாதிபீடத்தை அலங்கரித்து…
திருவீதி எழுந்தருளிய ஸந்நிவேசம். 🙏

———

நாவலம் பெரிய தீவினில் வாழும்
நங்கை மீர்களி தோரற்புதங்கேளீர்!
தூவலம் புரியுடைய திருமால்
தூய வாயிற் குழலோசை வழியே
கோவலர் சிறுமியரிளங் கொங்கை குதூகலிப்ப
உடலுள விழ்ந்து எங்குங்
காவலுங் கடந்து கயிறு மாலையாகி
வந்து கவிழ்ந்து நின்றனரே 🙏

ஜம்பூத்வீபம் என்கிற மிகப் பெரிய தீவில் வசிக்கும்
பெண்களே!
ஓர் ஆச்சர்யமான செய்தியைக் கேளுங்கள்! சுத்தமான வலம்புரி சங்கை திருக்கையில்
வைத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனுடைய *பவள வாயினால் ஊதப்பெற்று வரும் குழலோசையானது*
திருவாய்ப்பாடியிலிருக்கும் இடைப்பெண்களின் காதில் ஒலித்தவுடன், அவர்கள், தங்களின் உடலும்
உள்ளமும் கண்ணனிடம் இழந்தவர்களாக, காவல்களை மீறி அவனிடம் ஓடி
வந்து, கயிறில் கோத்த மாலை போல் அவனைச் சூழ்ந்து வெட்கத்துடன் தலையை கீழ் நோக்கி
தொங்கவிட்டு நின்றார்கள்!!!! 🙏

புன்னை மர வாகனத்தில்
திருக்குழல் ஊதிக்கொண்டு கோபியர்களை
மெய்ம்மறப்பித்துக் கொண்டு எழுந்தருளும் ஸ்ரீ அழகியசிங்கர்🙏

திரண்டெழு தழை மழை முகில் வண்ணன்
செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லுங் கடை வாய் வழி சோர
இரண்டு பாடுந் துலங்காப் புடை பெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே
🙏

———-

அனந்தம் ப்ரதமம் ரூபம்…..
என்கிற படியே
எம்பெருமானுக்கு
நிரந்தர கைங்கர்யம் பண்ணும்
ப்ரதம சேஷன்….. 🙏

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு
போலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வ அவஸ்தைகளிலும்
எல்லா கைங்கர்யங்களையும் எல்லா காலங்களிலும் செய்ய
திரு உள்ளம் கொண்ட ஆழ்வார்
அவன் செய்யும் அடிமைகளை எடுத்து காட்டுகிறார்….. 🙏

சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான்.

இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்

நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்

நீள் கடலுள் என்றும் புணையாம்
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்

புணையாம் திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்

அணி விளக்காம்–
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்

மணி விளக்காம் என்றுமாம்

பூம் பட்டாம்
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்

புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்

பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்…

ஆளவந்தாரும்
பணிபதி:ஸய்யாஸனம் வாகனம் என்று
ஆதிசேஷனின் நிரந்தர நிரவதிக கைங்கர்யத்தைக்கொண்டாடுகிறார்🙏

ஸ்ரீ அழகியசிங்கர்

நித்யசூரிகளில் ப்ரதம சேஷனான ஆதிசேஷன் ஸிம்மாஸனமாகக் கொண்டு திருவீதிகளில் புறப்பாடு கண்டருளுகிறார்🙏

———-

முடிச்சோதி யானது முகச்சோதியாய் மலர்ந்ததுவோ என்று கோவிந்த அபிஷேகத்தால்
திரு முடியில் நல் தரித்த ஸ்வாமித்வ பிரகாசமாய் கதிர் ஆயிரம் இரவி கலந்து எறிந்தால் ஒத்த நீண் முடியும்

ச விலாச ஸ்மித அதரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்கிறபடியே
முறுவல் எடுத்த கலம் என்றலாய் -ஸ்வாமித்வ பல உபாதான ஸுசீல்ய ப்ரகாசகமான ஸ்மயமான முகாரவிந்தமும் –

அலர்ந்து குளிர்ந்து இருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கு ஆடுகிற
இரண்டு வண்டு ஒழுங்கு போல் இருக்கிற தன் கைச் சார்ங்கம் அதுவே போல் அழகிய திருப் புருவ வட்டங்களும்

பதிம் விஸ்வஸ்ய-என்கிற பிரமாணம் வேண்டாதே அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் என்று
ஸர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் ஸ்மிதோபத்தஸ் பர்த்த ஸ்ப்புரித ச பரதவ த்வந்த்வ லலிதங்களான திருக் கண்களும்

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் -என்று திரு நெற்றியில் சாத்தின கஸ்தூரி திலகமும்

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கின் அழகும்”

அதினுடைய பல்லவ உல்லாசம் போல் இருக்கிற திருக் கபோலங்களும்

அதினுடைய நவ குஸூமம் போலேயாய்-
பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
பூர்ண சந்திரன் முழு நிலாவைச் சொரிந்தால் போலே திரு முகத்தின் ஒளியை ப்ரவஹிக்கிற ஸ்மித விலாசமும்
என்கிற படியே
திருமுகத்தின் அழகு
இருந்தபடி,…. 🙏

———

திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே! 🙏

எம்பெருமான் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் குறுகிய காலத்திற்கு ஏற்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்தான்.
எந்த தூணை பிரகலாதன் கை காட்டுவான் அங்கிருந்து ஆவிர்பவித்துத் தோன்றி எழுந்து
பிரகலாதன் வார்த்தையை மெய்ப்பிப்போம் என்று பெருமாள் ஆவலுடன் அண்டமெங்கும் வியாபித்துக்
காத்துக் கிடந்ததில்தான் அவருக்கு களைப்பு ஏற்பட்டதாம், இரணியனை கொன்றதால் அல்ல.
அந்த களைப்பைத்தான் பந்தனை என்று பெரியாழ்வார் பாடுகின்றார்..

பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.
ஆகையால் தான்
திருமழிசை ஆழ்வாரும் அழகியான் தானே அரியுருவம் தானே
என்று கொண்டாடுகிறார்🙏

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்*.. 🙏

அதிருங்கழற் பொருதோள் இரணியனாகம் பிளந்து அரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை *உள்ளவா கண்டார் உளர்*🙏
இடந்திட்டிரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய்! என்று ஆழ்வார்கள்.. 🙏

ஆண்டாளும் திருப்பாவையில்….

மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளி…..
மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது
நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து
உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக் கர்ஜனை செய்து வெளியில் வருவது போல
காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே, நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து ….
என்று அவன் சிம்ஹ நடையைக் கொண்டாடுகிறாள்🙏

ஸ்ரீ அழகியசிங்கர்
ஸிம்ஹ வாகனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏

———-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப,
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, *என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?*🙏

எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன்பட்ட பாடுபடுவார்கள்;
ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்டபாடு படாதே கிடிகோள்-என்கிறார்.
வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண்
அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி,
அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே
திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,
வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு
வந்து தூணிலே பாய்ச்சினார் என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே,
அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,
அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த
பிரதிஜ்ஞை தவறி நீ சொல்லுகிறவன் இங்கில்லை என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே,
அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,
அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று
அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை. 🙏

————-

அன்னத்தை ஆசார்யனோடு ஸாம்யம் சொல்லும் பூர்வாசார்யர்…. 🙏🙏
செல்வ நம்பி பெரியாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் போல்வாரை அன்னம் என்று கொள்ளலாம்…
நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றை பிரிக்க வல்லது அன்னம் -அது போலே ஆச்சார்யர்கள் சார அசார விவேக குசலர்கள்-
வேத சாஸ்திரங்களை வெளியிட்டது பகவத் அவதாரமான ஹம்சம் -அது போல் சிஷ்யர்களைக் குறித்து சாஸ்திர உபதேசம் பண்ணுவார்கள்…
ஹம்சம் சேற்றில் பொருந்தாது -அது போலே மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்கள்-
அன்னம் மாதர் நடை அழகைக் கண்டு அப்படியே தானும் நடை பயிலும் -அது போலே அன்ன நடைய அணங்கான
பிராட்டியின் புருஷகாரத்வம் ஆகிற நடத்தையை அநுசரிப்பர்கள் –
அன்னமானது மேலே எழுந்த தாமரை இலையைக் குடையாகவும் பக்குவமான செந்நெல் பயிர் அசைந்து ஆடுவதை சாமரம் வீசுதலாகவும்
சங்குகளின் முழக்கத்தை விஜய கோஷமாகவும் வண்டுகளின் மிடற்று ஓசையைப் பாட்டாகவும் கொண்டு
மானஸ சரஸ் சிலே உள்ள தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்று இருக்குமே
அப்படியே தாமரை இலை போலே சாமளமான பகவானது திரு மேனியை தமக்கு சம்சார தாப ஹரமாகவும்
செந்நெல் பயிர் போலே
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்னும்படி பரிபக்குவ ஞானம் உடையவர்கள் ஸ்தோத்ரம் செய்யவும் ….
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் என்கையால் சாஸ்திர முறைப்படி க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆகவுமாம் …
அந்தரம் ஓன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் என்கையாலே சம்சார பற்று அற்ற யுத்திகள் ஆகவுமாம்🙏

ஸ்ரீ ஹம்ஸாவதாரம் 🙏

அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய்!! 🙏
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின் இவ்வுலகினில்
பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே! 🙏
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை!! 🙏
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை! 🙏
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன்!!!! 🙏
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே!! 🙏
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான்!! 🙏
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட….! 🙏
அன்னமாய் நூல் பயந்தாற்கு……!! 🙏
முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே !!🙏
புள்ளாய் என்றும்
ஆழ்வார்கள்…!! 🙏

————

*ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:

ஆதி³த்யாநாம் விஷ்ணு:…..

ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி:

ஆண்டாளும்
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு… என்கிறாள்🙏

காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி

ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம்

முக்தி மார்க்கத் தலைவாசல்

ஜகத் ஏக சக்ஷுஷே

ஸவித்ருமண்டல மத்யவர்த்தி நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:

செய்யதோர் ஞாயிற்றைக்காட்டி சிரீதரன் மூர்த்தி ஈதென்னும்🙏……..

புரவியேழ் ஒருகாலுடைய தேரிலே….🙏

ஏழு குதிரைகளும்
(ஏழு சந்தஸ்ஸுக்களும்) ஒரு சக்கரத்தையும் உடைத்தாகையாலே விலக்ஷணமான பெருமை வாய்ந்த தேரிலே
தேஜோ விசேஷத்தாலே
திருவாழி உடன் ஒத்து கால சக்ர நிர்வாஹகனான எம்பெருமான் ஆஞ்ஜையை நடத்தி
நக்ஷத்ரம் முதலிய சோதி மண்டலம் தேஜஸை குறைத்து அக்னியினுடைய தேஜஸ் ஸூக்கும் சந்திரன் உடைய அம்ருதத்துக்கும் பிறப்பிடமாயும்
மந்தேஹர் என்னும் ராக்ஷஸர்களுக்கு சிவந்த நெருப்பாயும் அர்ச்சிராதி கதிக்கு முதல் வாசலாயும்
ஜகத் சக்ஷுஷே-என்கிற படியே அனைவருக்கும் கண் போன்ற
ஸர்வேஸ்வரன் கண்ணிலே பிறந்த கண் மணியாயும் -வேதமயமுமாய் இருக்கும் ஸூர்ய மண்டலத்தில்
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருப்பவனாய் -தோள் வளையும் மகரக் குண்டலங்களும் கிரீடமும் ஹாரமும்-
திரு வாழி திருச் சங்கும் பொன்னிறமான திரு மேனியும் -செந்தாமரைக் கண்களும் உடையனாய் -பகவத் விக்ரஹத்தையும்
ஆதித்ய மண்டலத்தையும் தன்நிறம் ஆக்குகின்ற சிவந்த திரு நிறத்தை உடையளான பிராட்டியோடே கூட ஆதித்யன் உள்ளே இருப்பவனாய்
எப்போதும் சிந்திக்க யுரிய தேஜோ ரூபியாய் இருக்கிற விலக்ஷண பரம புருஷனை ப்ரதிபாதிக்கின்ற
சூர்யப்ரபை.. யில்
ஸ்ரீ அழகியசிங்கர் திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏

—————-

சந்த்ரமா மநசோ ஜாத -புருஷ ஸூக்தம் படி
பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் என்கை…
ஆண்டாளும்…
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்–என்கிறாள்..
விஷ்ணோ கடாட்சம் !! குளிர்ச்சியான கண் ஞானத்தை பெருக்க வல்லது,
வெப்பம் தரும் கண் அஞ்ஞான இருளை விலக்க வல்லது–திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் …
ஆண்டாள் பரமனின் கண்களில் ஒரு சேரக் காணப்படும் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் பற்றிச் சொல்வது,
அடியவரைக் காப்பவனாகவும், அதே நேரம் பகைவர்க்கு நெருப்பாகவும் விளங்கும் பரமனின் தன்மையைச் சொல்வதாம்….

ஏககாலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரைமலர் பாதி முகுளிதமாயும், பாதி விகஸிதமாயுமிருக்கு மென்று கொண்டு,
கண்ணபிரானுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர்.
இஃது, இல்பொருளுவமை’ வடநூலார், அபூதோபமை’ என்பர்.
கண்ணனுடைய திருக்கண்கள் சேதனருடைய குற்றங்குறைகளை நினைத்துப் பாதி மூடியும்,
அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதிதிறந்து மிருக்கு மாதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.

மகாவிஷ்ணுவின் இரண்டு கண்களும் சூரியன் மற்றும் சந்திரனாகப் பிரகாசிக்கிறது.
இரண்டுமே உதய காலத்தில் குளிர்ந்த கிரணங்களைப் பெற்றிருக்கும்.
எனவே, எழுந்தாற்போல் உதயமான சூரிய சந்திரனைப் போன்று, இரண்டு கண்களால் எங்களை நோக்கினால்,
நாங்கள் சாபம் நீங்கியவர்களாக ஆவோம் என அழைக்கிறாள் ஆண்டாள் . 🙏

சந்த்ரப்ரபை வாஹனத்தில் ஸ்ரீ அழகியசிங்கர் 🙏🙏

————

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர்.
அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர்.
அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே,
பெருமாளும் மோகினி (நாச்சியார் திருக்கோலம்) அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். 🙏

ஸ்ரீ அழகியசிங்கர்
நாச்சியார் திருக்கோலத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏

———

யோக நரசிம்மர் திருக்கோலம்

அனுமந்த வாகனம்

——-

சூர்ணாபிஷேகம்

——–

வாரணம் பைய நின்று ஊர்வது போல்.. பெரியாழ்வார் 🙏

யானைக்கு எப்போ மதம் பிடிக்கும் ன்னு யார்க்கும் தெரியாது.
ஆனா, எந்த யானைக்கு மதம் பிடிச்சாலும் என்ன நடக்கும்னு எல்லார்க்கும் தெரியும்.
அதனால் முன்னெச்செரிக்கையா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள்..
கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால்
அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல
தூங்கு பொன்மணியொலிப்ப உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க
கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப,
அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்ப்பரிக்க,
இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல்
பெருமளவு சத்தம் உண்டாக்க தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து,
சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன் தளர்நடை நடக்கிறான்…!!!🙏

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்.

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலேயே அழுக்கோடு சேரும். எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
“நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரக்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே…!!!! 🙏🙏
(காஞ்சி ஸ்வாமி 🙏)

————-

அர்ச்சுனனை
(பார்த்தன்) வில் எடுக்கும்படி பண்ணி அவனுடைய
திண்தேர்மேல் முன் நின்ற–வண்மையான- தேரில்… எம்பெருமான் தானே சாரதியாக முன்னின்று
அர்ஜூனன்… மேல் விழவேண்டிய அம்புகளை தன்மேல் தாங்கி!!
செங்கண் செம்மையான அருள் நோக்கு நோக்கும் திருமால்
வாத்ஸல்யம் மிக்க கண்களால் பரிவுடனே பாண்டவர்களை ரக்ஷித்த கண்ணழகு
செங்கண்மாலின் செந்தாமரைக் கண்ணழகு
அலவலை தன்னால் வந்த வெற்றி என்று இல்லாமல்
அப்படி ஆகிவிடாதவாறு அர்ஜூனன் வெற்றி பெற்றான் என்பது போல அவனைப் புகழ்ந்த கண்ணன்.
!! பக்தர்களுக்கு தன்னை நம்பி சரணடைந்தவர்களின் பால் பகவான் அருளும் பாங்கு அப்படிப்பட்டது!!

அலவலை என்றால் தான் சொன்ன உபதேசத்தின் அர்த்தமும் கேட்பவர்கள் தகுதியும் பார்க்காது…….
அலை!! அலையாக!!! உபதேசம் பண்ணின சீர்மை!…. எளிமை! 🙏!
மங்கல நன் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழைப்பீலி சூடி பொங்கிள வாடை அரையில் சாத்திப்
பூங்கொத்து காதில் புணரப் பெய்து- ….
தேரில் எழுந்தருளி உலா வரும் எம்பெருமான் … 🙏
ஸ்ரீ அழகியசிங்கர்

———

தெள்ளியசிங்கமாகிய தேவை திருவல்லிக் கேணி கண்டேனே என்பது திருமங்கையாழ்வார் பாசுரம்.
பெருமாள் ரொம்பவும் தெளிவாய் இருக்கிறாராம்.

மிக்கானை மறையாய்த் தெரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ன பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடம் குன்னின் மிசை இருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே🙏

அக்காரம் என்றால் சர்க்கரை. அந்த சர்க்கரையில் கனி செய்தால் எப்படி இருக்கும்?

இரணிய வதம் முடிந்தும், ஆவேசம் தணியாமல் இருந்தார் நரசிம்மர்.
இரணியனின் ரத்தம் பூமியில் சிந்தாதபடி வாயில்வைத்து உறிஞ்சியதால், உக்கிரத்துடன் இருந்தார் நரசிம்மர்.
இதனால் கிழக்குத்தொடர்ச்சி மலை வழியாக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு வந்த நரசிம்மர்,
அங்கிருந்த வனத்தில் சிங்கமாகவே திரிந்தார். அதேசமயம், தம்முடைய அவதார நோக்கம் பூரணமாகிவிட்டதை மறந்திருந்தார்.
இதனால் உலக இயக்கம் தடைப்பட்டது. தேவலோகம் களை இழந்தது. பூமியிலுள்ள உயிரினங்கள் அஞ்சி நடுங்கின.
நரசிம்மரின் உக்கிர சொரூபத்தையும், ஆவேசத்தையும் பார்த்து அங்கிருந்த வனவிலங்குகள் அபயக்குரல் எழுப்பின.

அதேசமயம் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இல்லாததால் மகாலட்சுமி சோகத்தில் ஆழ்ந்தார்.
அவ்வேளையில் மகாலட்சுமியின் நிழல், வனத்தில் இருந்த நரசிம்மரின் மீது படர்ந்தது.

அக்கணமே நரசிம்மர் சாந்த சொரூபியாக மாறினார். தம்முடைய அவதார நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டதை உணர்ந்தார்.
தம்மீது படர்ந்த அந்நிழலுக்கு உயிர் கொடுத்து, மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து மனநிறைவு கொண்டார்.
பின்னர் தம் இடது மடியில் லட்சுமியை அமர்த்தி அரவணைத்தபடி சிவன், பிரம்மாவுக்குத் தரிசனம் தந்தார்.
அப்போது பிரம்மா, சிவன், தேவாதி தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்து லட்சுமி நரசிம்மரை வாழ்த்தி வணங்கினர்.

எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்
காய்ந்திங்கில்லையாலென்று இரணியன் தூணுடைப்ப
அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய
என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

ஒவ்வொரு ஆழ்வாரும் இந்தப் பெருமானை ஒவ்வொரு கோணத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள்.
அவருடைய பெருமை யாருக்குத் தெரியும்? ஒருத்தருக்கும் தெரியாது.
சிங்கப் பெருமான் பெருமை சொல்லி முடியாது என்றே நம்மாழ்வார்… ஆனந்தப்படுகிறார். 🙏
நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. யாதெனில்,
நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள்.
நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள்.
ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை
இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். இதை சிதாக்ஷீரநியாயம் என்று சொல்வர்கள்.. 🙏

————

குதிரை–புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், சிறப்பாக கருதப்பட்டு வந்து உள்ளது.
இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம் ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர்.
பண்டையஅரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. அவற்றின் சக்தி ப்ரமிப்பூட்ட வல்லது.
நமது வைணவ திருக்கோவில்களில் பிரஹ்மோத்சவத்தில் குதிரைவாஹனம் சிறப்பானது.

குதிரை,
புரவி தவிர ~ மா பரி மான், இவுளி, *கலிமா – குதிரையின் வேறு பெயர்கள்.

குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கலியன், நீலன் திருவாலிநாடன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர்.
தினமும் 1008 பாகவத அடியார்களுக்கு நித்யம் ததீயாராதனை செய்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் களவு செய்தாவது அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.
அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக எம்பெருமான் திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்
அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, திருமங்கையாழ்வார்’ என்று பெயர்பெற்றார்.

இந்த உன்னத நிகழ்வை நினவு கூறும் விதமாக இன்று தெள்ளியசிங்கர் தங்க குதிரையின் மீது எழுந்து அருளுகிறார் 🙏
திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பாடு காண்கிறார்.
பெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.
ஸ்ரீமன் நாராயணன், ஆலி நாடனை கலியனாக ஆட்கொண்டு-நம் கலியனோ?!!?
ஓம் நமோ நாராயணா என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்;🙏
சிந்தை தெளிந்து அருள் பெற்ற ஆழ்வாரும், திருமொழி பாசுரங்களை வாடினேன் வாடி வருந்தினேன்” என தொடங்குகிறார். 🙏🙏

சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில் உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே,
ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை வாசித்தல் நடைபெறுகிறது.
இன்று பெருமாள் திருப்பரிவட்டத்துடன் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள
இந்தப் பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது🙏

ஸ்ரீ அழகியசிங்கர்
*குதிரை வாகனத்தில்..
திருமங்கையாழ்வாரைக் கடாக்ஷிக்கும்…
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏🙏

————

ஆளும் பல்லக்கு – இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள் மீது பல்லக்கை சுமப்பது போன்றே
அமைந்து இருப்பதால் ஆள் மேல் பல்லக்கு..
இந்த பல்லக்கில் ஸ்ரீ அழகியசிங்கர் நிறைய (9) போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருளுகிறார்.
புறப்பாடுக்கு பிறகு மட்டையடி சேவை,

திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்,
பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும்,
அதிகாலை பெருமாள் நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,
முன்தினம் கலியன் வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் 🙏
நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் போர்வை களைதல் என கொண்டாடப்படுகிறது.
கலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு, பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில்
பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும்.

ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு,
பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.
அழகான பட்டாடைகள் உடுத்தி வருவார்;
அழகான பல வண்ணத் திருமாலைகள் சாற்றப்படுகிறது…🙏

ஸ்ரீபாதம்தாங்கிகள் அழகு மிளிர சுற்றி வரும்போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஓரோர் போர்வை நீக்கி,
கற்பூர ஆரத்தி கண்டருளி அனைத்து போர்வைகளும் களையப்பட்ட கணத்தில், சில நிமிடங்கள்
எம்பெருமான் சௌந்தர்யம் திகழும் திருமேனியை –
சங்கு சக்ர கதாபாணியை அணிகலன்களுடன் சேவிக்கும் ஒரு அற்புத வாய்ப்பு🙏
உடன் சில நிமிடங்களில் மணம்கமழும் மாலை அணிந்து வேறொரு சேவை அளிக்கிறார்
ஸ்ரீ அழகியசிங்கர்
🙏🙏

————-

திருக்கோவிலை சென்றடைந்ததும் மட்டையடி எனப்படும் ப்ரணய கலஹம்’ –
பிணக்கு – ஊடலில் பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை சாற்றி விட,
பெருமாள் மறுபடி திரும்ப திரும்ப ஏளும் வைபவமும்,
சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.
ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் (பட்டோலை)அதன்
அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி,
மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற
அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் …என நாச்சியார் வினவ,

பெருமாள் அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம் – நாயிகா பாவத்தில் :

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி ஊடலும், விளையாட்டும் பிரசித்தம்.
கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே ப்ரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு.
அவர்களுடைய பாவனை உறவே ஆழ்வாருக்கும் ஆகி முற்றியிருக்கின்றது.
கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா?
என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா?
மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன்.
நீ கிளம்ப ஆயத்தப் படுமுன் என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ,
நம்பீ! என்கிறார். 🙏

———–

பகவதேகபரமாய்
போக்யமுமாய்
தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய்
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய்
ஸம்ஸார விச்சேதமுமாய்
*பகவதேகபரமாய்
போக்யமுமாய்
தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய்
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய்
ஸம்ஸார விச்சேதமுமாய்
சீக்ர பலப்ரதமுமாய்
பகவத் விஷயம்
திருவாய்மொழி யில் உள்ள பகவதேகபரத்வம்

இத்தால்
பகவத் விஷயம்
என்றே அழைக்கப்படும் திருவாய்மொழி
எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை
ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம்| ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார்.

எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே
ஆலிலை,

தேவகீ பிராட்டியின் திருவயிறு முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும்
எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.! 🙏

இத்தகைய திருவாய்மொழியை செவிசாய்த்துக் கொண்டு
ஆனந்திக்கும் ஸர்வேஸ்வரனும்

ஸுக்ருதின: ஜனா: என்கிறபடியே
ஸர்வஜன ஸுக்ருத்துக்களும்…. 🙏🙏🙏

—–

வெட்டிவேர் சப்பரத்தில்
ஸ்ரீ அழகியசிங்கர்

இது வெட்டிவேர் சப்பரம் என்று பிரபலமாக அறியப்படும் சின்ன திருத்தேர்..
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது.
வெட்டிவேர் என்று அழைக்கப்படும் இவை 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது
மற்றும் அகலமான கொத்துக்களை உருவாக்குகிறது.
இந்த தேர் வெட்டிவேர்சப்பரம் என்று அழைக்கப்படுகிறது –
இந்த புல்லால் செய்யப்பட்ட பல தாள்கள் கோயில் தேரின் மீது வைக்கப்பட்டுள்ளன.
தூரத்திலிருந்தே தெய்வீக வாசனையை ஒருவர் உணர முடியும்.
புல் வெட்டிவேரின் தண்டு வெட்டப்பட்டு, மிருதுவாகி பாய் போடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த பாய்கள் முன்பு கூட வீடுகளில் பயன்படுத்தப்பட்டன,
மேலும் காற்று அதன் வழியாக செல்லும்போது, ​​​​காற்றின் நறுமணமும் இயற்கையான குளிர்ச்சியும் இருக்கும்.
புறப்பாடில் கோஷ்டியாரால் திருவரங்கத்து அமுதனாரின் இராமானுஜ நூற்றந்தாதி
சேவிக்கப்பட்டது🙏

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

March 28, 2022

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

—————————————————————————————————————

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –

அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –

இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ

இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ

மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ

அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ

அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

———————————————————————–

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————————————

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

——————————————————————

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

எம்பெருமானார் தம் பிரான் என்னுமவரை
நம்பெருமாள் தாம் உகந்து நாள் தோறும் -தம் பரமாய்
ஏறிட்டுக் கொண்டு அளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கைவிடார் -1-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குரவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ -நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –2-

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர்காள்
ஸூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர் –3-

தென்னரங்கர் தேவியே ஸ்ரீ ரேங்கர் நாயகியே
மன்னுயிர்கட்க்கு எல்லாம் மாதாவே -என்னை யினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலுங்காமல்
அவ்வுலகில் வாங்கி அருள் –4-

ஸ்ரீ ரெங்க நாயகியே தென்னரங்கன் தேவியே
நாரங்கட்க்கு எல்லாம் நல் தாயே -மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எண்ணிட தீராதது என் –5-

இந்த உடம்போடு இனி இறுக்கப் போகாதது தான்
செங்கமலத் தாள்கள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருப்பாயே இங்கு –6-

இந்த உடம்போடு இரு வினையால் இவ்வளவும்
உந்தனடி சேராது உழன்றேனே -அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி –7-

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -31-40–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 25, 2022

அவதாரிகை
பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில்
ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க
நம்மாலே செய்யலாமோ என்று
அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து

திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார்
சில உதார ஸ்வ பாவரைக் கண்டு
இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை
மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால்
அனுமதி பண்ணக் காணகிறிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே
தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால்
அது தான் செய்யக்கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான பொன்னும்
மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசை
வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி

மின் மிளிரிய
மின்னைப் ப்ரகாசிப்பவனாய்
போவான் வழிக் கொண்ட
போகைக்கு வழிப்பட்ட

மேகங்களே
உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை

போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று
அன்வயம்

இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்
இசையைக் கண்டிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நம்முடைய அபேக்ஷை தோன்ற
சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால்
அனுமதி பண்ணக் கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான ஸ்வரூபமும்
மஹார்க்கமான குண ரத்னங்களும்
ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே
ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய
வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10-
அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய்
உஜ்வலமான தீப்தியை யுடையரான
(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் )
உதார ஸ்வா பாவமானவர்கள்
(எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் )
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இசையிலம் -என்ற ஒரு பாடம்
இசைவலம் -என்ற ஒரு பாடம்

இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை
ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்

அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
இசைகிறவன வில்லை
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே

வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை
என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று
நான் கால் கட்டினால்
அத்தைச் செய்கிறவன வில்லை

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்ந்தால்
திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள்
அப்படி என் தலையிலே உங்கள் காலை
நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும்
பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே
என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து
அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்
அங்கன்

———–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி
வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று
பரமபத நிலையன் அளவும் சென்றபடியால்
ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை
பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப்
(முக்தர்களை )போலி கண்டு யுரைத்த
(ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே )
தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-

பதவுரை

மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

வியாக்யானம்

மேகங்களோ
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -திருவாய் -4-4-9- என்கிறபடியே
பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே
ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள்

உரையீர்
நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறி லீர்

வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில்
திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்
ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான
உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு
எப்பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது
உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்

உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
பிராணிகளை ரஷிக்கைக்காகப்
பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து

நன்னீர்கள் சுமந்து
ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான
ஜல ஸம்ருத்தியைத் தரித்து

நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே
ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே
ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –

இத்தால்
ஸாம்யா பன்னரைக் குறித்து
உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து
மறு மாற்றம் பெறாமையாலே

பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத
நெறி
நன்னெறி
தீதில் நன்னெறி )

ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து
சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து
ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே
பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று
பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது
நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று
விஷண்ணரானமை தோற்றுகிறது –

(மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தாபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ
உபாயம் என்றால் உழைப்பு இல்லை
கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை
இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே – )

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

————

அவதாரிகை
இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை
நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி
பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் –
தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறாளும் இறையோனும் -4-8-

பதவுரை

அரவு அணையீர்–ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும்–பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும்–மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி
(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.
(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
மாமை–மேனி நிறத்தை
சிதைக்கின்றது–அழிப்பதானது
ஈங்கு–‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும்–புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ–அவதாரமோ?
(அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்கு
உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம்–அறிகின்றிலோம்

வியாக்யானம்

அருளார் திருச் சக்கரத்தால்
ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே
பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே

அகல் விசும்பும் நிலனும்
பரந்த விசும்பும் நிலனும்

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி
ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற் புதீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்

இவள் மாமை சிதைக்கின்றதே –
இவளுக்கு இடம் கொடாமல்
இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –

இத்தால்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
ஸங்கல்ப மயமான திருவாழியாலே
விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே
நித்ய விபூதியில்
அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே
அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே
இருளார் வினை )

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார்
ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
இந்த விபூதியிலும்
அந்த விபூதியிலும்
அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ
(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )

இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை
அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும்
விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும்
அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி

அரவணையீர் -என்கையாலே
அந்த விபூதியில் உள்ளவரோடு
நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது

இவள் மாமை சிதைக்கின்றதே -என்கையாலே
அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது

இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன
ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும்
அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன,
பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,
பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.

காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய்
திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் –
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்

அருளார் திருச்சக்கரத்து
உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம்
நீர் செய்ய முடியாமல் இருந்ததோ
வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ
உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது
இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ
நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ

ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ
அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது
ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று
அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான்
ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்

பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே
அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே
அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – -ஸஹ தர்ம சாரிணி அன்றோ
ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ
லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்

இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்
உன்னை விட்டாலும்
லஷ்மணனை விட்டாலும்
உயிரை விட்டாலும்
ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்
எவர்களை –
ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு
அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்
கர்ப்ப பூதாஸ் தபோ -உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்
தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே
ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்
கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை
ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள் –

விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில்
சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும்
யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன்
அதே அர்த்தம் இங்கும்
மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன்
பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே
ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன்
ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்

இந்த ராமர் விரதம் அறிவாள்
அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம்
சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல
யாரேனும் யாகிலும் ரஷிப்பேன்
இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ

லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ
பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்
ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ
ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்

ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள்
பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள்
தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்

இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல்
அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி
ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான்
சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும்
திருச்சக்கரத்தான்
ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும்
அநாயாசேந ரஷிக்கும் சக்தன்
இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான்
தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –

உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன்
அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்

அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –
நிலனும்
லீலா விபூதியும்
அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில்
உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில்
அங்கு அதிசங்கை உண்டே
நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்
பிராக பாவத்தால் அங்கு
இங்கு ப்ரத்வம்ச பாவம்
அழகைக் காட்டி அங்கு
‘இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்

அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே
இவள் மாமை சிதைக்கின்றது
யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ
அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே
பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர்
இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே
உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே

ஸ்ரீ கீதை -10-39- ஸ்லோகத்தில் லோக்கத்துக்கு பீஜம் நான்
என்னைத் தவிர்த்து யாரும் எங்கும் இல்லையே –

உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க
உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே
இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே

உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ
நெருப்பினால் நனைக்க முடியுமோ

திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ

இனி திரௌபதி பரிபவம்
இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல
சா அஹம்
கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன்
நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன்
இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்

என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்
புருஷோத்தமன் அன்றோ ‘
உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ
சரணாகதை நான்
நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி
அருளார் திருச்சக்கரத்தால் இங்கு

சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோ

துவாரகா நிலையா –
பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே
அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ

அச்யுத –
சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்

கோவிந்தா
பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ
குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே

புண்டரீகாஷ
விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ
ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால்
கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ

மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –
மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை

தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம்
இவர்களைக் கூப்பிடவில்லையே

ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி
அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக
இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே

தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில

தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பார்த்தா இருக்க
இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார்
பண்டே உபதேசம் பெற்றாளே
ஸ்மர்தவ்ய பகவான் ஹரி -பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்
குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல்
ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -ஆழ்வார்

பிரார்த்தனா மதி சரணாகதி
உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம்
இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – திரு விருத்தம் 75-

நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்

அரவணையீர்
இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே
உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர்
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி
உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ
யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே
சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே

இவளை சிதைக்கின்றது
இவளை நோவுபட வைத்து
பகுதியாக தான் காண முடியும்
ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று
பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்

——————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
வியாக்யானம்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள
திருவாழியாலே
அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது
நமக்கு ஒரு புருஷார்த்தமோ
என்று அநாதரித்த படியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரஷ்ய வஸ்து பஹிர் பூதை
இவள் என்று நினைத்தீரோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
இப்போதும் வாய்த்த படுக்கையிலே
கண் வளரா நின்றீர்

இவள் மாமை சிதைக்கின்றதே
இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே
நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –

————-

அவதாரிகை
இப்படி அவசன்னரான இவர்
பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து
அது கூடாமையாலே
பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு
கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற
நாயகியைக் கண்டு
தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம்
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி
ஆழி என்று கூடல் வட்டம்
கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று
அந்த ஆழியை வெறுத்து

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடும்
தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற
மேனாணிப்போடும்

சீரடி என்று
சிவந்த அடி -என்றுமாம்
சீறடி -என்றும் சொல்வர்

மாலே
பெரியவனே
இவள் ஆவி அழித்த பெருமை
பெரிய நீ காணத் தகும் என்று கருத்து

அன்றியே
மாலே உனது தண்டார்-தண் தார் -என்று
மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே
உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –

உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற
குளிர்ந்த
தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு
அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு

தார் என்று
மாலை ஆகவுமாம்

பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல்
கிலேசிக்கிற

கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்

மாதின் திறத்து
கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்

அறியேன் செயற் பால் அதுவே
செய்யத் தக்கது அறிகிறிலேன்

இவளைப் பதைப்பிக்கிற நீயே
பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்
சிதைக்கின்ற தாழி என்று
தன் கையில் வியாபாரம்
ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி

ஆழியை சீறி -என்று
ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று
அனுபாதேயத்வ புத்தி பிறந்தால்
அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில்
இவ்வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது

அதாவது
ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்

மாலே -என்று
விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும்
ஞான சக்தியாதியாயும் யுள்ள
குணங்களின் பெருமை சொல்லுகிறது –

(மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள்
அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் )

உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று
இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும்
விஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –

அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல்
ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறது

மாதின் திறத்து -என்று
ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி

அறியேன் செயற் பால் அதுவே -என்று
ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு
ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும்
ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே
அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே
இது தான்
அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க
அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரவு தாழ்த்து
ஆற்றாமை மீதூர்ந்து
பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே
கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்
ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே

ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம்
ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1-
தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய்
ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய்
அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும்
இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது
அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே
ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை
கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ்வாற்றாமை

வ்யதிதாம் -ஆரண்ய -29-1-
இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை

அநிந்திதாம்
அத்தலையால் வரில் வரும் அத்தனை
அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்

வ்யபேத ஹர்ஷாம்
சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே
இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ –

——–

அவதாரிகை
இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு
அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு
ஸந்நிஹிதமான அளவிலே
ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு
அனுசந்தித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு
பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண்
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது

பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று
தன்னிடத்து வாய்ந்த பிறைப்பிள்ளை என்றுமாம்

பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று
பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்

ஓக்கலாவது –
சுற்றம்

பகல் என்று
ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்

இத்தால்
மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று
தோற்றுவித்ததாயிற்று

உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல்
எல்லை நடந்து
தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து
சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி

சோல்வான் புகுந்து
கொள்ளுவதாகப் புகுந்து

இது வோர் பனி வாடை
முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே
பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –

துழா கின்றதே
துழாகின்றது

சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
பால்வாய் -என்று தொடங்கி
மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே
அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால்
தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி
மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற
பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்
மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த
விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )

உலகளந்த என்று மேலுக்கு
அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு
போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே
ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும்
குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது
தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது

இதுவோர் பனிவாடை
இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ
இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது

துழா கின்றதே
இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று
துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்
இத்தால்
சந்த்ர உதயம்
அத்தால் வந்த பரிச்சேதம்
இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே
இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால்
நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது
பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்
இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்
தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள்
என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்

ஆர்க்கு என்ன
உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு
என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே
அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்
இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி

இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்

மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும்
கண் விழிக்கவும் பெற்றாள்
இத்தை அபஹரிக்குமதாய்

புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே
பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை
இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு
இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று
அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

———–

அவதாரிகை
இப்படி கால சந்நிதியிலும்
போக ஸந்நிதி இல்லாமையாலே
மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய
ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை
இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி
தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்

தம் தண் தராது பெயரா
தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின
இவ்வளவிலும்

ஈங்கு இவள்
இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று

இரங்கார்
பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்

அம்மனோ
என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே
பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க
இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது

நெடிய இருள் இறே என்றும்
இருள் பொறுக்க மாட்டாள் என்றும்
துக்கம் கனவிது என்றும்
இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க
இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –

இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு
மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த
கால தைர்க்யம் விஞ்சின அளவிலும்
இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர்
அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்

தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று
கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர்
இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என்
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

(கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –
காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி –
அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழ்
ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று
அதுக்கும் மேலே
இருளும் வந்து தோற்றிற்று

வியாக்யானம்
துழா
இதுக்குத் தேடிப்பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ
ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு

நெடும் சூழ் இருள் என்று
எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று
ஒரு பேரையிட்டு
தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே

ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில்
அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே

வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்
தன் தண் தராது பெயரா
வழி போவாரை யடைய
நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே

ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது
பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி

அங்கன் அன்றிக்கே
வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான
லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்
அது அங்கன் அன்றிக்கே
இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே
அழித்தார் இத்தனை
அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது
நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று
ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால்
போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை
அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு
ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து
ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல்
இருளும் ராத்திரியும் இவளை
நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்
இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று
திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும்
முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்

தம் தண் தராது பெயரா
தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும்
இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்

ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல்
அத்யா பன்னை யானவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வலுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று

இரங்கார்
இரக்கத்தைப் பானு கிறிலர்

அம்மனோ
புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது
இந்தக்கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய
கொடுமைகள் இருந்தபடி என்

ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

———

அவதாரிகை
இப்படி ஆப்தரான இவ்வாழ்வார்
பகவத் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நவையான பக்தி தசையைத்
தம்முடைய ஞான தசையாலே அநு சந்தித்து
துர்க்கதமான ஸம்ஸார மார்க்கத்தில் இந்த ப்ரேம தசையானது நடந்ததாகை
அரிது என்று நொந்த பிரகாரத்தை
புணர்ந்ததுடன் போன தலைமகளுடைய கரத்தருமை நினைந்து
நற்றாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –
நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து துழாவி -4-4-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்
இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்துபோன
சூழ்கடம்–பரந்த பாலை நிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைய வீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

வியாக்யானம்

கொடும் காற் சிலையர்
கொடிதான கோலை யுடைத்தான சிலையை யுடையவர்கள்
கோடுதல்-வளைதல்
கால் என்று சிலைக்கோடி
கோடிய காற் சிலையர் -என்றுமாம்

நிரை கோள் உழவர்
நிரை கொள்ளுகையை உழவாக யுடையவர்கள்
நிரை என்று -காலித்திரள்
உழவானது -இதுவே க்ருஷியாய் இருக்கை

கொலையில் வெய்ய கடுங்கால்
மாற்றார் எதிர்ப்பட்ட விடத்து கொலைத் தொழிலில் வெவ்வியரான கடிய காலை யுடையவர்கள்
அதாவது
சீக்ர காமிகளாய் எதிரிகளை அழியச் செய்கை

விளைஞர்
இந்த ஸுர்யாதிகளுக்கு ஈடான
பருவத்தின் இளமையை யுடையவர்கள்

துடி படுங்கவ் வைத்து
இவர்கள் பறை அறைவால் யுண்டான ஆரவாரத்தை யுடைத்து

அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணனுடைய ஸர்வ சமாஸ்ரயணீயமாய்
நிரதிசய போக்யமான திருவடிகளைக் கீர்த்த நாதி முகத்தாலே
ஆஸ்ரயித்துப் பெறப்பட்ட

தொடுங்கால் ஓசியும் இடை
தொடும் அளவில் முறியும் என்னும்படி
மெல்லிதான இடையை யுடைய

இள மான்
பருவத்தாலும்
தனிமையால் யுண்டான நோக்காலும்
முக்தமான மான் போலே இருக்கிறவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடக்கிற சூழ்ச்சியை யுடைய வழியானது

சூழ்ச்சியாவது
வெம்மையால் துயரை விளைத்தல் –

இத்தால்
இளமான் -என்று
பருவத்தையும்
ஸ்த்ரீத்வத்தையும் சொல்லுகையாலே
அபி நவையாய்
தாஸ்ய ப்ரீதி ரூபையான பக்தியை ஸூசிப்பித்த படி

தொடுங்கால் ஓசியும் இடை -என்கையாலே
பக்தி கார்யமான வைராக்யத்தின் முதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது
அன்றியே
அந்நிய ஸ்பர்சம் யுண்டாகில்
மத்யே அவிச்சின்னமாம் படி யான
பக்தியின் மேன்மை சொல்லிற்றாகவுமாம்

நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-என்கையாலே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான ஸமாதிபிர் நராணாம் ஷீண பாபாநாம்
கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்கைக்கு உடலான அருமை தோற்றுகிறது

சென்ற சூழ் கடமே –என்று
இந்த பக்தி வர்த்திக்கிறது
ஸம்ஸார காந்தார மார்க்கத்திலே என்றபடி

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய-என்று
இம் மார்க்கத்தினுடைய விரோதி பூயஸ்தையைச் சொல்லுகிறது –
இவ் விடத்து பக்திக்கு விரோதிகளாவன விஷய அர்த்திகளான இந்திரியங்கள்

கொடுங்கால் சிலையார் என்கையாலே
பாதக ஸாதனத்தினுடைய ஸாமர்த்யத்தைச் சொன்னபடி

இதில்
கால் கொடுத்தலாவது
அபிராப்த விஷய அவகாஹநம் ஆகிற வக்ர கதி

கொடுமையான போது
இந்த்ரியங்களினுடைய அநர்த்தா வஹத்வம்

நிரை கோள் உழவர் -என்று
இந்த்ரியங்களுக்குப் பிரதி நியதமாய்க் கொண்டு நிரை நிரையான
ஸப்தாதி விஷயங்களை
கிரஹிக்கையே வ்ருத்தியாய் இருக்கை

கொலையில் வெய்ய-என்கையாலே
இச் சேதனனை பகவத் விஷயத்தை விஸ்லேஷிப்பித்து நலியும் இடத்தில்
க்ரூரங்களாய் இருக்கை

கடுங்கால் என்று
சீக்ர காரிகளாய் இருக்கை

இளைஞர்-என்று
நலியும் இடத்தில் சக்தி குன்றாது இருக்கை

துடி படுங் கவ்வைத்து-என்கையாலே
பலவா திந்த்ரியக்ராவோ வித்வாம் ஸமபி கர்ஷதி -என்று
பறை அறைவாரைப் போலே உண்டான பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது

ஆக
இந்திரிய பலாக்ராந்தமான ஸம்ஸார மார்க்கத்திலே
பகவத் பக்தி தசையானது நடக்க அரிது என்னும் இடத்துக்கு
நொந்து அருளிச் செய்தார் ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாதே
ஆற்றாமை மிகுகையாலே தனி வழியே புறப்பட்டு குரூரமான காட்டிலே
துஷ்ட ஸத்வங்களும் –
துர்த்வனிகளும்
துர்க்கதியுமான
தேசத்திலே போனாளாய்
அவளைத் திருத்தாயார் படுக்கையிலே காணாமையாலே
எல்லாப் படியாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே போன இவள் என் செய்கிறாளோ என்று
இவள் போன வழியைப் பார்த்து சோகிக்கிறாள்
திருக்கோளூரிலே புக்க பெண் பிள்ளையுடைய திருத்தாயாரைப் போலே
ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே அவளிலும் இவளுக்கு சோகம் அதிசயித்து இருக்கும் –
அன்றிக்கே
புணர்ந்ததுடன் போக்கிலே இவளுக்கு இரங்குகிறாள் ஆகவுமாம்
இவளுடைய ஸுகுமார்யத்தையும்
இவள் தான் ஸ்லாக்யையாய் இருக்கிற பொடியையும்
வழியில் அருமையையும்
அது தனக்கு ஓர் எல்லை இன்றிக்கே இருக்கிற பொடியையும் சொல்லிக் கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
கொடும் காற் சிலையர்
அவ்வழி தான் இருக்கிற படியைச் சொல்லுகிறது

கொடும் காற் சிலையர்
கொடிதான காலை யுடைத்தான சிலையை யுடையராய் இருப்பர்கள்
எப்போதும் ஓக்கக் கால் வளைந்த படியே இருந்துள்ள வில்லை யுடையராய் இருப்பர்கள்
பர ஹிம்ஸா த்வரையாலே போஜன சமயத்தோடு நித்ரா சமயத்தோடு வாசியற
எப்போதும் ஓக்க நாண் ஏறிட்ட படியேயாய் இருக்குமாயிற்று வில்லு

இப்படி ஏறிட்ட நாணி இழிய விடாதே இருந்துள்ள வில்லைக் கொண்டு இவர்கள்
கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்
நிரை கோள் உழவர்
நிரை கோள் உண்டு -கோ க்ரஹணம்
அதுவே யாத்ரையாய் இருப்பர்கள்
ரக்ஷகனாய் இருக்குமவன் கோ ப்ராஹ்மண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-25-
ஹிதனாய் இருக்குமா போலே
இவர்கள் இவற்றின் ஹிம்சையே தங்களுக்கு வெள்ளாண்மை யாய் இருப்பர்கள்

கொடுங்கால்
நான் ஏறிடுகையாலே வளைந்து இருக்கை

சிலையர்
அது நிரூபகமாய் இறுக்கியபடி
அவன் கையும் திருவாழியுமாய் இருக்கிறாப் போலே இறே
எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கும் இறே -பெரிய திரு -87-
அவன் பர ரக்ஷகனாய் இறே இருப்பது
நா ஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா -அயோத்யா -60-20-என்னுமா போலே
பயம் கெட்டு இருக்கிறது அன்று இறே இங்கு

என்னும்படி நாயகனும் தொடக் கூசும்படியான இடையாள்
மிகவும் இளமை யுள்ளவள்
இளமான் போல் காதராஷி யானவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடந்து போன பெரும் காடு இவ்வகையாக ஆயிற்று
அதிலே இப்படி போனாள் என்று சோகிக்கிறாள் –

——–

அவதாரிகை
இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர்
ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்
ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து
நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே
நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை
தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட –
தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் –
தலைவனைப் பிரிந்த தலைவி போலி
கண்டு மகிழ்தல் -சொன்னால் விரோதம் இது -3-9-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இந்த பூ லோகமும் ஊர்த்வ லோகமும் ஆச்சர்யப்பட்டு அசையும்படியாக
குடமாடி -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்தாடியும்
வுலகளந்த-லோகங்களை த்ரிவிக்ரம அவதாரத்தில் ஆக்ரமித்தும்
நடமாடிய பிரான் உரு ஒத்தன -சஞ்சரித்த சர்வேஸ்வரனுடைய திரு மேனியோடே சாம்யம் உடைத்தாய் இருக்கின்றன
இது -இதற்குக் காரணம்
கடமாயினகள் கழித்து -தேவ பித்ரு ருஷி ருணங்கள் நிறைவேற்றி
தன் கால் வன்மையால் -தனது காலின் உரத்தினால்
பல நாள் தடமாயின -அநேக காலம் தடாகம் என்ற பேர் பெற்றவைகளில்
புக்கு நீர் நிலை நின்ற தவம் கொல்-பிரவேசித்து ஜலத்தில் சிரகாலம் வாஸம் பண்ணின தபஸ்ஸாய் இருக்கலாம்

வியாக்யானம்

கடமாயினகள் கழித்து
தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து

தன் கால் வன்மையால்
தான் நின்ற அடி யுரத்தாலே

பல நாள்
அநந்த காலம்
பலம் பெறும் அளவும் என்றபடி

தடமாயின புக்கு
அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து

நீர் நிலை நின்ற
நீரிலே நித்ய வாஸம் பண்ணின

தவமிது கொல்
இது தபஸ்ஸாகக் கூடும் இறே

குடமாடி
பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம்
காணும்படி குடக் கூத்தாடி

யிம் மண்ணும் விண்ணும் குலுங்க
இந்த பூமியோடு
தேவ லோகத்தோடு
வாசி யற
தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக

இது கீழோடே சேரவுமாம்

வுலகளந்த நடமாடிய
அளக்கிற இடத்திலே
அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை

பெருமான்
அந்நிய சேஷத்வத்தையும்
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும்
கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய

பெருமான் உரு
ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே
பெருமை சொல்லுவதாக நிறம்

ஒத்தன நீலங்களே
நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன

ஆக
இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே
நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று

(திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள்
தவம் க்ஷேத்ர வாசமே )

இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –
தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே

இத்தால்
யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே
அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே
சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை

அதில் கடமாயின கழித்து -என்கையாலே
கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம் -என்கிறபடியே
இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது

தன் கால் வன்மையால் -என்கையாலே
வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி

பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே
சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே
வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி
(நீராடப் போதுவீர் -)

நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை

தவமிது கொல் -என்கையாலே
அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி
அவிசேஷிதமாய் இருக்கை

குடமாடி இத்யாதியாலே
கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே
வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது

உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே
ஸாம்யா பன்னரானவர்கள்
புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே
கீழ்ச் சொல்லிற்று

இப்பாட்டில்
பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார்
அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே
ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்
இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்

நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –

ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும்
முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு

குருகைக் காவல் அப்பனை
ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க
எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று
இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு
ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே
இச்சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்

அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன
நான் உனக்கு அது சொல்லுகிறேன்
நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்

ஆவது என் என்னில்
ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன்
அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே
விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி

இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்
சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று
இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன
இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –

குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி
நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்

நீலங்களே
கரு நெய்தல் பூக்கள்

——–

அவதாரிகை
இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்
இதுக்கு அடியான
பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து
அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது
ஏழையர் ஆவி -யில் போலே
உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் –
தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-

பதவுரை

நீலம்–நீலமணி மயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.

வியாக்யானம்
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல
நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே

பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி
அழகு விஞ்சி

எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்
கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்

இத்தால்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல்
முந்நீர் ஆனால் போலே
அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு
தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி

விசும்புக்கும் பிரான்
வெளி நாடான நித்ய விபூதிக்கும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே
தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்
முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே
நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே
தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்

கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான
திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்

எம்பிரான்
இக் கண் அழகையும்
வடிவு அழகையும்
காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய

கண்ணின் கோலங்களே –
கண்களின் அழகுகள் ஆனவை
அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்
தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள்
நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து
எமக்கு எல்லா விடத்தவும்
என்று அந்வயம்

இப்பாட்டு
கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத்
தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே
இவ்வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே
ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு
இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது
என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து
அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய்
ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்
அத்தாலே அணைக்கக் கணிசித்துக்
கைக்கு எட்டாமையாலே நோவு பாடவும்
அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய்
நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

நீல இத்யாதி
ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8-
பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது
அதன் மேலே இறே கண் அழகு
விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது
கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்
ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8-
இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை
நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்
நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்
ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8-
அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை
வடிவு அழகும்
ஆனு கூல்யமும்
போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை
ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே

ஸம்பன்ன
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை

ஸம்பன்ன ப்ரஸூத
இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை

பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்
இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன
ஓன்று உண்டு
ஜனகாத்மஜே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே
தேவரீரும் உண்டு

எமக்கு எல்லா விடத்தவும்
இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே
நமக்கே இறே பாதகம் ஆகிறது
கண்டு அனுபவிக்க இழிந்தால்
ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது

முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –

எம் பிரான்
இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்

ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று
அந்வயம்
திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

———-

அவதாரிகை
இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர்
நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி
ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று
ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாத்திரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள்
உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று
பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது
அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க

புய்த்தால்-வாங்குதல்
போக என்றபடி

இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது
மேனாணிப்பாலும்
புகர் யுடைமையாலும்

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன
திரளாகப் பரந்த
நீல நிறத்தை யுடைத்தான
ராத்திரிகள் ஆகிற
ஆனை கள் எல்லாம் எதிர்பட்டன

கங்குழைக் களிறு என்றது
இருட்சியாலும்
திரட்சியாலும்

நேரிழையீர்
தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே
மெல்லிய ஆபரணம் என்றுமாம்

ஞால பொன் மாதின் மணாளன்
ஞால மாதினுக்கும்
பொன் மாதினுக்கும்
மணாளன்

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து
திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி
தகுதியாகச் சூட்டி என்றுமாம்

என்னைமார்
என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி

எம்மை நோக்குவது என்று கொலோ
எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று
வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய -என்கையாலே
ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி
(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது

ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி
ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே
அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது

என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே
பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது

என்று கொலோ -என்கையாலே
தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று

(விருப்பமே நாம் செய்ய வேண்டியது
அடைவிப்பவன் அவனே
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

இவ்விடத்தில்
நேரிழையீர் என்று
ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே
பகலும் கழிந்து ராத்திரியுமாய்
அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு
நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்

இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே
தோழி வார்த்தை யாதல்
இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக
வீர பத்நீ இறே
அவன் இருப்பில் புக்கிருந்து
த்வம் நீச -ஸூந்தர -21-16-என்னுமவள்
ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே
வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்
பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்
பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று
ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே
ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே
குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான
கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன
தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு
இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –

நிறைந்தன நேரிழையீர்
இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க
நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று
அதாவது என் எண்ணில்
மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே

இழை -என்று
ஆபரணமாய்
விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்

ஞால பொன் மாதின் மணாளன்
குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று
இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன்
ஒரு ரக்ஷகனும் வேணும் இறே
ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும்
அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு
ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்

மணாளன்
இக்குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

March 25, 2022

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமத் வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நாராயண தீக்ஷிதர் இயற்றிய ஸ்ரீ தென் திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங் குழைக்காதர் பாமாலை–

March 22, 2022

ஸ்ரீ நாராயண தீக்ஷிதர் இயற்றிய
ஸ்ரீ தென் திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங் குழைக்காதர் பாமாலை

காப்பு

ஸ்ரீ நம்மாழ்வார்

கட்டளைக்கலித்துறை

அடியேங்க டுன்ப மகல்வதற்கா வந்த நான்மறையின்
முடியே பரவுங் குழைக்காதர் மீது முது தமிழாற்
படியேழு மோங்கிய பாமாலை யீரைம்பது மளிப்பான்
கடியே றிலஞ்சித் தொடை ஞான முத்திரைக் கைத்தலனே. 1

ஸ்ரீ பெரிய திருவடிகள்

பொன் சிறை நீக்கி விரித்தே பறக்கின்ற புள்ளரசே
என் சிறை நீக்குவித் தாயில்லையே யிக லாடரவ
வன் சிறை நீக்கினை வானவர்க் காக மகிழ் விநதை
தன் சிறை நீக்கினை யாரா வமுதமுந் தந்தனையே. 2

நூல்

கன்றுக் கிரங்கிய கற்றாவைப் போலக் கருணையுடன்
என்றைக் கிரங்குவரோ வறி யேனெழு பாருமுய்யக்
குன்றைக் கவிகை யெனத் தரித்தோர் குழைக் காதரை நாம்
சென்றெப் பொழுது தொழுவதும் பாவங் கடீர்வதுமே. 1

எப்போது நின்னை நினைப்போ மங்கே வந் தெதிர் முகமாய்
அப்போது நீயும் வந் தஞ்சலென் பாயடி யாருளத்தில்
மெய்ப் போத ஞான விளக்கே கராங்கௌவ வீரிட்டந்தக்
கைப்போத கஞ்சொன்ன மாலேதென் பேரையிற் காகுத்தனே. 2

நூற்றெண் மருக்கிடர் வந்தாலு மவ்விடர் நோயகற்றி
மாற்றும் பரஞ்சுடர் நீயல்லவோ தமிழ் வாணர்தினம்
போற்றுஞ் சுருதிப் பொருளே மதுரம் பொழிந்து நறை
ஊற்றுந் துளவப் புயத்தாய் தென் பேரையி லுத்தமனே. 3

உத்தம னைத் தமிழ்ப் பேரை யம்மானை யன் புற்றவர்க்கு
நித்த மனத்தந் தவிர்க்குஞ்செஞ் சோதியை நீண்டசுடர்
அத்த மனம் பட வாழி தொட்டானை யனுதினமும்
தத்த மனத்து ணினைப் பார்க்கொரு துயர் தானிலையே. 4

எந்தெந்த வேளை யினுமலங் காம லிருசரணம்
தந்தந்த கார வினை தவிர்ப்பா யிந்தத் தாமதமென்
உன்றன் றிருவடிக் காளான வெங்கட் குவகைநல்காய்
கொந்துந்து தாமப் புயனே மகரக் குழைக் கொண்டலே. 5

பூரண சந்த்ர முகமுங்கத் தூரியும் பொற் புயமும்
ஆரணந் தேடு நின் பாதாம் புயமு மபயமென்றே
வாரணங் காத்த கர புண்ட ரீகமும் வந்து தொழாக்
காரண மேதென் றறியேன் றென் பேரரையிற் காகுத்தனே. 6

அன்னையல் லாமன் மகவுக்கு வேறில்லை யாதுலர்க்குப்
பொன்னையல் லாமற் புகல்வே றிலையிப் புலைதவிர்க்க
நின்னையல் லாமன்மற் றாரையுங் காண்கில னீதியுடன்
நன்னயஞ் சேருந் தமிழ்ப்பேரை வாழ்கின்ற நாரணனே. 7

பொல்லாத வஞ்சனை வாராமற் போக்கினை போக்கினதும்
அல்லாம லெங்கட் கபயமென் றாயடி யேங்கள்வினை
எல்லா மகற்றிநின் சந்நிதிக் கேவர ரட்சிகண்டாய்
நல்லார் தொழுந்தென் றிருப்பேரை வாழ்கின்ற நாரணனே. 8

வஞ்சம் புணர்ந்த கொடுவினை யாவையு மாற்றியெங்கள்
நெஞ்சங் கலங்கி யழியாமற் காத்தரு ணின்னையெந்நாள்
கொஞ்சுங் குழந்தையுங் கூடத் தொழுவது கோவியர்பால்
துஞ்சுந் தயிருண்ட மாலேதென் பேரையிற் றூயவனே. 9

காவா யெனப்பல தேவரை வாழ்த்திக் கவலையுடன்
நாவா யுலர்ந்ததல் லாற்பய னேதெம்மை நாடிவந்த
தாவா வினையைத் தவிர்ப்பா யினியுன் சரணங்கண்டாய்
தேவா தியர்தொழுந் தேவேதென் பேரையிற் சீதரனே. 10

பித்தனைப் போன்மன மேங்காம லிந்தப் பிணியகல
எத்தனை நாட்செல்லு மோவறி யேனிசை தேர்குருகை
முத்தனைப் போற்று மகிழ்மாறன் கூறு முகுந்தமலர்க்
கொத்தலர் பேரைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. 11

அடியா ரிடத்தில் வினைகள்வந் தாலு மவையகற்றி
நொடியாகத் தீர்ப்பது நீயல வோமின் னுடங்குவஞ்சிக்
கொடியா ரிடைச்சியர் மத்தா லடிக்கக் குழைந்துநின்ற
வடிவா கருணைக் கடலேதென் பேரையின் மாதவனே. 12

ஆயிரங் கோடி வினைகள்வந் தாலு மவையகற்றி
நீயிரங் காவிடின் மற்றாரு மில்லை நிறைந்ததமிழ்ப்
பாயிர மாறன் கவிகேட் டுருகும் பரமவிசை
வேயிரங் குங்கனி வாயா தென்பேரையில் வித்தகனே. 13

அவலப் படாப்பழி வாராமற் காத்தடி யேங்கண்மனம்
கவலைப் படாமற் கடாட்சிகண் டாய்கற்ற நாவலரும்
நுவலப் படாவரை மத்தாக நாட்டி நுடங்குதிரைத்
திவலைக் கடலைக் கடைந்தாய்தென் பேரையிற் சீதரனே. 14

உனையா தரிக்கு மடியேங்கண் முன்செய்த வூழ்வினையால்
நினையாமல் வந்த நெடுந்துயர் தீர்த்தரு ணேமிசங்கம்
புனையா ரணப்பொரு ளேபல காலன்பு பூண்டவர்பால்
அனையா கியகுழைக் காதா வினியு னடைக்கலமே. 15

நெஞ்சினு நீயென் னினைவினு நீநெடும் பூதமெனும்
அஞ்சினு நீகலை யாறினு நீயறி வோடிருகண்
துஞ்சினு நீயன்றி வேறறி யேனித் துயர்தவிர்ப்பாய்
மஞ்சினு மேனி யழகா கருணை வரோதயனே. 16

வண்ணங் கரியன் கனிவாய் முகுந்தன் மலர்ப்பதமும்
கண்ணுங் கரமுங் கமலமொப் பான்கஞ்ச மாமயிலை
நண்ணுங் கருணைத் திருப்பேரை மாதவ னாமஞ்சொன்னால்
எண்ணுங் கவலையுந் துன்பமுந் தீரு மெமக்கினியே. 17

நிலையாக் கயத்துட் படிந்தவர் போலெங்க ணெஞ்சழிந்து
மலையாம லித்துயர் மாற்றுகண் டாய்மலர்ச் சேவடியாற்
சிலையா ரணங்கி னுருவாக்குந் தெய்வ சிகாமணியே
அலையாழி சூழுந் தமிழ்ப்பேரை வாழச்சு தானந்தனே. 18

எண்ணாத வெண்ணி யிடைந்திடைந் தேங்கி யிருந்துமனம்
புண்ணாய் மெலிந்து புலம்பாம னீயிப் புலைதவிர்ப்பாய்
பண்ணார் மதுரத் தமிழ்ப்பா வலரும் பழமறையும்
விண்ணாட ருந்தொழு மெந்தாய்தென் பேரையில் வித்தகனே. 19

இழைக்குங் கொடிய வினையா வையுமாற்றி யெங்களுயிர்
பிழைக்கும் படிக்கருள் செய்தனை யேசுவை பெற்றபசுங்
கழைக்கண்டு செஞ்சொல் வசுதேவி கண்டிரு கண்களிக்கும்
மழைக்கொண்ட லேயண்டர் வாழ்வேதென்பேரை மணிவண்ணனே. 20

திங்களொன் றாகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி
எங்கடம் பாலிரங் காததென் னோவிசை நான்மறையின்
சங்கமுங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற்
பொங்குதென் பேரைப் புனிதா கருணைப் புராதனனே. 21

இன்றாகு நாளைக்கு ணன்றாகு மென்றிங் கிருப்பதல்லால்
ஒன்றா கிலும்வழி காண்கில மேயுன் னுதவியுண்டேல்
பொன்றாம னாங்கள் பிழைப்போங் கருணை புரிந்தளிப்பாய்
அன்றா ரணந்தொழ நின்றாய்தென் பேரைக் கதிபதியே. 22

வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே
விள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிர்பாற்
கள்வா வருட்கடைக் கண்பார் கருணைக் களிறழைத்த
புள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப் புராதனனே. 23

பறவைக் கரசனைக் கண்டோடும் பாம்பெனப் பாதகமாம்
உறவைக் கரங்கொண் டொழிப்பதென் றோபவத் தூடழுந்தித்
துறவைக் கருது மவர்க்கருள் பேரையிற் றூயவமா
சறவைத்த செம்பொற் றுகிலுடை யாயச்சு தானந்தனே. 24

வீயாம னாங்கண் மெலியாம லிந்த வினையகற்றி
நாயா கியவெங்க ளைக்காத் தருணவ நீதமுண்ட
வாயா வொருபத்து மாதஞ் சுமந்து வருந்திப்பெற்ற
தாயா கியகுழைக் காதாதென் பேரைத் தயாநிதியே. 25

கண்டோ மிலைமுனங் கேட்டோ மிலையவன் கைப்பொருளால்
உண்டோ மிலையிவ் வினைவரக் காரண மொன்றுளதோ
தண்டோடு சக்கரஞ் சங்கேந்து மும்பர் தலைவநெடு
விண்டோய் பொழிற்றடஞ் சூழ்பேரை வந்தருள் வித்தகனே. 26

நாவையண் ணாந்தசைத் துன்றிருநாம நவிலமற்றோர்
தேவையெண் ணோமித் துயர்தீர்த் திடாத திருவுளமென்
கோவைவண் ணாகமுடிமே லொருபதங் குந்திநின்ற
பூவைவண் ணாவிண் ணவர்போற்றும் பேரைப் புராதனனே. 27

ஒருநாளு நின்னை வணங்காதி ரோங்கண் ணுறங்கினுநின்
திருநாம மன்றிமற் றொன்றறி யோமிந்தத் தீங்ககற்றாய்
பொருநா கணையொன்றி வேரோடு மைம்மலை போற்பொலிந்த
கருநாயி றேயன்பர் கண்ணேதென் பேரையிற் காகுத்தனே. 28

உரகதங் கொண்ட கொடியோனை நீக்கி யுறுதுணையாய்ப்
பரகதி யாகவந் தஞ்சலென் பாய்பவ ளக்கதிர்பூங்
குரகத மாமுகம் போற்கவி பேரைக் குழக செம்பொன்
மரகத மேனி யழகா கருணை வரோதயனே. 29

சிந்தா குலந்தவிர்த் தெங்களை யூரிற் றிரும்பவழைத்
துன்றா மரைச்சர ணந்தொழ வேயரு ளும்பர்தொழும்
எந்தாய் பொருநைத் துறைவா வரிவண் டிசைபயிற்றும்
கொந்தார் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. 30

உய்வண்ண மெங்கட் குதவியஞ் சேலென்று றுதுணையாய்
எவ்வண்ண மித்துய ரந்தவிர்ப் பாய்கதி ரீன்றுபுனற்
செய்வண்ணப் பண்ணை வளமே செறிந்ததென் பேரைவளர்
மைவண்ண மேனி யழகா கருணை வரோதயனே. 31

பலகா லிருந்து மெலிந்தூச லாடும் பழவினையை
விலகா திருந்த திருவுள மேதுகொல் விண்ணவர்க்கா
உலகா ளிலங்கையர் கோமா னுயிர்க்கும்வண் டோதரிக்கும்
குலகால னாகிய கோவே மகரக் குழைக்கொண்டலே. 32

அடங்காத் தனம்புதைத் தார்போன் மெலிந்தடி யேங்களிந்த
மடங்காத் திருந்து சலியாம லித்துயர் மாற்றுகண்டாய்
தடங்காத் திகழுந் தமிழ்ப்பேரை வாழுந் தயாபரபொற்
குடங்காத்து வெண்டயிருண்டாய் மகரக் குழைக்கொண்டலே. 33

பங்கே ருகத்தை யிரவி புரந்திடும் பான்மையைப்போற்
செங்கேழ்க் குமுதத்தைத் திங்கள் புரக்குஞ் செயலினைப்போற்
கொங்கே கமழு மிருசர ணாம்புயங் கொண்டுதினம்
எங்கே யிருந்துங் குழைக்காத ரெம்மை யிரட்சிப்பரே. 34

எங்களை யுந்தொண்ட ரென்றே யிரங்கி யினியெங்கள்பா
வங்களை யும்படிக் கேயருள் வாய்கனி வாயமுதம்
பொங்களை யுண்டு தெவிட்டியன் பாற்பரி பூரணமாம்
திங்களை வென்ற முகத்தாய்தென் பேரையிற் சீதரனே. 35

விடனட வாது கருமஞ்செய் தானை விலக்கினியெம்
முடலடு மாதுயர் தீர்த்தெமை யாண்டரு ளுண்மையிது
திடனட மாத ருடனே பதாம்புயஞ் சேப்பநின்று
குடநட மாடு முகுந்தா மகரக் குழைக்கொண்டலே. 36

இரவும் பகலு மெலியாம வெங்கட் கிரங்கியுனைப்
பரவும் படிக்கிவ் வினைதீர்த் தருணெடும் பாரதப்போர்
விரவுங் கொடுந்துயர் நூற்றுவர் மாள விசயனுக்கா
அரவுந்து தேர்முன மூர்ந்தாய்தென் பேரையி லச்சுதனே. 37

பாற்கொண்ட நீரன்னம் வேறாக்கு முன்னைப் பரவுமெங்கள்
மேற்கொண்ட வல்வினை வேறாக்க நீயன்றி வேறுமுண்டோ
சூற்கொண்ட செந்நெல் வயற்பேரை யந்தணர் சூழ்ந்துதொழும்
கார்க்கொண்ட லேகுழைக்காதா கருணைக் கருங்கடலே. 38

அறிவு மறமுந் தரும்பல பூதமு மாரணத்தின்
பிறிவும் பிறிதொரு தெய்வமு நீயிப் பெருவினையாற்
செறியுந் தமியர் துயர்தீர்த் திடாததென் றெண்டிரைநீர்
எறியும் பொருநைத் துறைவாதென் பேரைக் கிறையவனே. 39

நெருங்கடர் தீவினை நீக்கியுன்னாம நினைப்பதற்குத்
தருங்கட னெங்களைக் காப்பதன் றோதளர்ந் தேமெலிந்த
மருங்கட வீங்கும் படாமுலைப் பூமட மான்றழுவும்
கருங்கட லேகுழைக் காதாதென் பேரையிற் காகுத்தனே. 40

செழுந்தா மரையிலைத் தண்ணீ ரெனநின்று தீவினையால்
அழுந்தாம னாங்கண் மலங்காமற் காத்தரு ளாரணத்தின்
கொழுந்தாதி மூலமென் றேதௌிந் தோதிய கொண்டல்வண்ணா
கழுந்தார் சிலைக்கை யரசேதென் பேரையிற் காகுத்தனே. 41

பெய்யுங் கனமழை கண்டபைங் கூழெனப் பேருதவி
செய்யுங் கடவுளர் வேறிலை காணிந்தத் தீங்ககற்றி
உய்யும் படிக்கெங் களைக்காத் தருணற வூற்றிருந்து
கொய்யுந் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. 42

பஞ்சின்மென் சீறடிப் பாண்டவர் பாவை பதைபதையா
தஞ்சலென் றேயன் றவண்மானங் காத்தனை யப்படியிவ்
வஞ்சகந் தன்னையும் தீர்த்தருள் வாய்கர வால்வருந்தும்
குஞ்சரங் காத்த முகிலே மகரக் குழைக்கொண்டலே. 43

மறுகாம னாங்கண் மனஞ்சலி யாமலிவ் வஞ்சகர்வந்
திறுகாம லெங்களைக் காத்தருள் வாய்துண ரீன்றமணம்
பெறுகாவில் வாசச் செழுந்தேற லுண்டிளம் பேட்டுவரி
அறுகால் வரிவண் டிசைபாடும் பேரையி லச்சுதனே. 44

காக்குங் தொழிலுனக் கல்லாது வேறு கடவுளரை
நாக்கொண்டு சொல்லத் தகுவதன் றேநணு காதுவினை
நீக்கும் படிக்கருட் கண்பார்த் திரட்சி நிறைந்தபுனல்
தேக்கும் பொழிற்றென் றிருப்பேரை வாழும் செழுஞ்சுடரே. 45

கண்ணுக் கிடுக்கண் வரும்போ திமைவந்து காப்பதுபோல்
எண்ணுக்கு ணீங்கு துயர்தவிர்த் தேயெங்க ளுக்கருள்வாய்
விண்ணுக்கு ளோங்கும் பொழிற்குரு கூரன் விரித்ததமிழ்ப்
பண்ணுக் கிரங்கும் பரமாதென் பேரைப் பழம்பொருளே. 46

சத்துரு வைத்தள்ளி யெங்களைக் காத்துத் தயவுபுரிந்
தித்துரு வத்தையு மாற்றுகண்டா யிலங் காபுரியோன்
பத்துரு வங்கொண்ட சென்னிக டோறும் பதித்தமுடிக்
கொத்துரு வக்கணை தொட்டாய் மகரக் குழைக்கொண்டலே. 47

இரும்பான கன்னெஞ்ச வஞ்சக னார்க்கு மிடர்விளைப்போன்
திரும்பாம னீக்கி யெமைக்காத் தருணறை தேங்குமுகை
அரும்பாரு மென்மல ராராமந் தோறு மமுதம்பொழி
கரும்பாருஞ் செந்நெல் வயற்பேரை வாழ்கரு ணாநிதியே. 48

முன்னிற் புரிந்த பெருவினை யான்முற்று மேமலங்கி
இன்னற் படாம லெமைக்காத் தருளிறை தீர்த்தருள்பூங்
கன்னற் றடமுங் கமுகா டவியுங் கதிர்ப்பவளச்
செந்நெற் பழனமுஞ் சூழ்பேரைத் தெய்வ சிகாமணியே. 49

தீதாம் பரத்தர்செய் தீவினை யாவையுந் தீர்த்தளிக்கும்
மாதாம் பரத்துவ னீயல்ல வோமறை யோர்பரவும்
வேதாம் பரத்தி னடுவே யரவின் விழிதுயின்ற
பீதாம் பரத்தெம் பெருமான்றென் பேரையிற் பேரொளியே. 50

ஆலமென் னோருருக் கொண்டானை நீக்கி யகற்றவிது
காலமன் றோவெங் களைக்காத் தருளக் கடனிலையோ
ஞாலமென் றோகையும் பூமாது மேவிய நாததும்பி
மூலமென் றோதிய மாலே நிகரின் முகில்வண்ணனே. 51

மெய்கொண்ட பொய்யென வித்துயர் மாற்றி விலக்கமுற்றும்
கைகண்ட தெய்வ முனையன்றி வேறிலை கான்றவிடப்
பைகொண்ட நாக முடிமேற் சரணம் பதித்துநடம்
செய்கண் டகர்குல காலாதென் பேரையிற் சீதரனே. 52

முத்தித் தபோதனர்க் குங்கலை வேத முதல்வருக்கும்
சித்தித்த நின்பதஞ் சேவிப்ப தென்றுகொ றேவகிமுன்
தத்தித்த தித்தி யெனநடித் தேயிடைத் தாயர்முனம்
மத்தித்த வெண்ணெய்க் குகந்தாய்தென் பேரை மணிவண்ணனே. 53

நிம்ப வளக்கனி போற்கசப் பாகிய நீசனுளம்
வெம்ப வளத்த வினையணு காமல் விலக்கிவிடாய்
கும்ப வளத்தயி ருங்குடப் பாலும் குனித்தருந்தும்
செம்ப வளத்தெம் பெருமான்றென் பேரையிற் சீதரனே. 54

ஊழ்வே தனைசெய்ய வாராதுன் னாம முரைத்தவர்க்குத்
தாழ்வேது மில்லை மிகுநன்மை யேவரும் சஞ்சரிகம்
சூழ்வேரி தங்கும் துழாய்ப்புய லேயெங்கள் துன்பகற்றும்
வாழ்வே மரகத வண்ணாதென் பேரையின் மாதவனே. 55

முன்னம் பழகி யறியோ மவனை முகமறியோம்
இன்னம் பழவினை வாராமற் காத்தரு ளேற்றசெங்கால்
அன்னம் பழன வயறோறுந் துஞ்சு மடர்ந்தபசும்
தென்னம் பழஞ்சொரி யுந்திருப் பேரையிற் சீதரனே. 56

ஆக நகைக்கும் படிதிரி வோன்கடந் தப்புறமாய்ப்
போக நகத்திற் புகுந்தோட வேயருள் போர்க்களத்தில்
மாக நகப்பெயர் கொண்டானை மார்வம் வகிர்ந்தசெழும்
கோக நகச்செங்கை யானே மகரக் குழைக்கொண்டலே. 57

பொய்யா னிறைந்த கொடியவெம் பாதகன் பொய்யும்வம்பும்
செய்யாம லெங்களைக் காத்தருள் வாய்செழுந் தாரரசர்
மொய்யாக வந்தனிற் பாண்டவர்க் காக முழங்குசங்கக்
கையா கருமுகில் மொய்யாதென் பேரையிற் காகுத்தனே. 58

இகலிட மான புலையனை மாற்றினி யெங்களுக்கோர்
புகலிட நீயன்றி வேறுமுண் டோபுகல் கற்பமெலாம்
பகலிடமான சதுமுகத் தேவொடு பண்டொருநாள்
அகலிட முண்ட பிரானேதென் பேரைக் கதிபதியே. 59

கையக நெல்லிக் கனிபோ லெமைத்தினங் காத்தளிக்கும்
துய்யகண் ணன்செழுங் காயா மலர்வண்ணன் சுக்கிரனார்
செய்யகண் ணைத்துரும் பாலே கிளறிச் சிறுகுறளாய்
வையக மன்றளந் தான்றமிழ்ப் பேரையின் மாதவனே. 60

கலகக் கொடிய புலையனெம் பாற்செய்த காரியத்தை
விலகக் கடனுனக் கல்லாது வேறிலை வேலைசுற்றும்
உலகத் தனிமுத லென்றறி யாம லுபாயம் செய்த
அலகைத் துணைமுலை யுண்டாய்தென் பேரையி லச்சுதனே. 61

கைச்சக டைத்தொழில் கொண்டே திரியுங் கபடன் செய்த
இச்சக டத்தையு மாற்றி விடாயிடை மாதருறி
வைச்ச கடத்தயி ருண்டே தவழ்ந்தன்று வஞ்சன்விட்ட
பொய்ச்சக டத்தை யுதைத்தாய்தென் பேரையிற் புண்ணியனே. 62

புண்ணிய நந்தகு மாராமுன் னாட்செய்த புன்மையினார்
பண்ணிய நந்தம் வினைதவிர்ப் பாய்பல காலுமுளம்
கண்ணி யனந்தன் முடிமே னடிக்கும் கருணைமுகில்
எண்ணி யனந்த மறைதேடும் பேரைக் கிறையவனே. 63

இறையவ னெம்பெரு மானெடு மாலெறி நீர்ப்பொருநைத்
துறையவ னேழை யடியார் சகாயன் சுடரிரவி
மறைய வனந்திகழ் நேமிதொட் டானென் மனக்கருத்தில்
உறைய வனஞ்சுடும் தீப்போலப் பாதகக மோடிடுமே. 64

அக்கணஞ் சாதெந்த வேளையென் றாலு மளித்தனைநீ
இக்கணஞ் சால வருந்துமெம் பாலிரங் காததென்னோ
மைக்கணஞ் சாயன் மடமாதுக் காக வளர்மிதிலை
முக்கணன் சாப மிறுத்தாய்தென் பேரை முகில்வண்ணனே. 65

ஆடகச் சேவடி யாலெம தாவி யளித்தனைகார்க்
கோடகப் பாவிகள் வாராமற் காத்தனை கோசலநன்
னாடகத் தோர்சிலை தாங்கிவெங் கூற்றை நகைக்குமந்தத்
தாடகைக் கோர்கணை தொட்டாய்தென் பேரைத் தயாநிதியே. 66

பரனே பராபர னேபதி யேபதி கொண்டசரா
சரனே நெடும்பர தத்துவ னேசமர் வேட்டெழுந்த
கரனே முதற்பதி னாலாயி ரங்கண் டகரைவெல்லும்
உரனே நிகர் முகில் வண்ணாவிந் நாள்வந் துதவினையே. 67

காலிக் கொருவரை யேந்தினை நெஞ்சங் கலங்குமெங்கள்
மேலிக் கொடுவினை வாராமற் காத்தனை மேன்மைதரும்
பாலுக் கினிய மொழியாளைத் தேடிப் பகையையெண்ணா
வாலிக் கொருகணை தொட்டாய்தென் பேரை மணிவண்ணனே. 68

அராமரி யாதை யறியாத வஞ்ச னதட்டவெமைப்
பொராமர ணாதிகள் வாராமற் காத்தனை பூதலத்தில்
இராமா வெனும்படிக் கேநீ யொருகணை யேவிநெடு
மராமர மேழுந் துளைத்தாய்தென் பேரையின் மாதவனே. 69

மாதவ னேகரு ணாகர னேயென் மனவிருட்கோர்
ஆதவ னேகரு மாணிக்க மேமல ராசனத்திற்
போதவனேக மெனவே பரவிப் புகழ்ந் தகுழைக்
காத வநேகம் பிழைசெய்த வெங்களைக் காத்தருளே. 70

அதிபாவஞ் செய்து பிறந்தாலு மப்பொழு தஞ்சலென்னல்
விதிபார மன்றுனக் கெங்களைக் காப்பது வேரிமடற்
பொதிபாளை மீறி நெடுவாளை யாளைப் பொருதுவரால்
குதிபாய் பொருநைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. 71

மகரக் குழையு முககாந்தி யும்மணி மார்பமும் பொற்
சிகரக் குழையும் புயபூ தரமுநற் சேவடியும்
பகரக் குழையுந் திருநாம முந்நெடும் பாதகநோய்
தகரக் குழையும் படியுரை யீருயிர் தாங்குதற்கே. 72

ஓருரு வாயிரண் டாய்மூவ ராகி யுபநிடதப்
பேருரு நான்கைம் புலனா யறுசுவைப் பேதமதாய்ப்
பாருரு வேழெட் டெழுத்தாய்ப் பகரும் பிரணவமாய்க்
காருரு வாங்குழைக் காதருண் டேயெமைக் காப்பதற்கே. 73

இடைந்தோ ரிருப்பிட மில்லாத வஞ்சக னேங்கிமனம்
உடைந்தோட நோக்கி யெமைக்காத் தனையுயர் வீடணனொந்
தடைந்தே னெனவன் றரசளித் தாயறு காற்சுரும்பர்
குடைந்தோகை கூரு மலர்ப்பொழிற் பேரையிற் கோவிந்தனே. 74

கோவிந்த னாயர் குலத்துதித் தோன்செழுங் கொவ்வைச் செவ்வாய்
மாவிந்தை நாயகன் பூமாது கேள்வன் பொன் வானவர்தம்
காவிந்த நானிலத் தாக்கிய பின்னை கணவன் பொற்றாள்
மேவிந்த நாளெண்ணு நெஞ்சேதென் பேரை விமலனையே. 75

விண்டலத் தாபத ரும்மிமை யோருநல் வேதியரும்
பண்டலத் தால்வருந் தாதவர்க் காகப் பகைதவிர்த்தாய்
மண்டலத் தாதவன் போற்கதிர் வீசு மணிமகர
குண்டலத் தாய்தண் டமிழ்ப்பேரை யெங்கள் குலதெய்வமே. 76

புராதனன் மாயன் புருடோத் தமன்பரி பூரணன்வெவ்
விராதனை மாய வதை செய்த காரணன் விண்ணவர்கோன்
சராதன மாய மெனவே யிறுத்தவன் றன்றுணையாம்
கிராதனை மாலுமி கொண்டான்றென் பேரையிற் கேசவனே. 77

வலையுற் றினம்பிரி யுங்கலை போல மறுகிமனம்
அலைவுற்று நைந்து மெலியாமற் காத்தனை யம்புவிக்கே
நிலையுற்ற தெண்டிரை முந்நீரைச் சீறு நெடும்பகழிச்
சிலையுற்ற செங்கை முகிலேதென் பேரையிற் சீதரனே. 78

சீதர னேமது சூதன னேசிலை யேந்துபுய
பூதர னேபுல வோரமு தேபுவி தாங்கியகா
கோதர னேயன்றொ ராலிலை மேற்பள்ளி கொண்டருள்தா
மோதர னேகுல நாதா நிகரின் முகில்வண்ணனே. 79

சேரீர் செனன மெடுத்தவந் நாண்முதற் றீங்கு செய்வ
தோரீர் சடைப்பட் டுழலுந்தொண் டீர்நற வூற்றிதழித்
தாரீச னார்க்கு மிரவொழித் தேயொரு சாயகத்தால்
மாரீச னைவென்ற மால்குழைக் காதர் மலரடிக்கே. 80

புங்கவ னெம்பெரு மானெடி யோன்புடை தோள்புனையும்
சங்கவ னம்பெரு மாநிலம் போற்றுந் தயா பரன்மா
துங்க வனந்திரி யுஞ்சூர்ப் பணகை துணைமுலைகள்
வெங்க வனத்தி லறுத்தான்றென் பேரையில் வித்தகனே. 81

வித்தக னேமிப் பிரான்றிரு மாறிரி விக்கிரமன்
பத்தர்க ணெஞ்சுறை யும்பர மானந்தன் பண்டொருநாள்
மத்தக மாமலைக் கோடொடித் தான்முகில் வண்ணனென்றே
கத்தக மேயிக மேபெற லாநற் கதியென்பதே. 82

கூசுங்கண் டீர்முன் வரக்கொடுங் கூற்றுங் குளிர்ந்தமணம்
வீசுங்கண் டீர்நறுந் தண்ணந் துழாய்விதி யால்விளைந்த
மாசுங்கண் டீர்வினை யும்மருண் டோடு மகிழ்ந்தொருகாற்
பேசுங்கண் டீர்தண் டமிழ்ப்பேரை வானப் பிரானெனவே. 83

அன்பர்க் கருள்வ துனக்கே தொழிலடி யேங்களிந்தத்
துன்பப் படாமற் றுணைசெய்வ தென்றுகொல் சூட்டுமணி
இன்பப் பஃறலைப் பாம்பணை யிற்கண் ணிணை துயிலும்
என்பற்ப நாப முகுந்தாதென் பேரைக் கிறையவனே. 84

முராரி கராவை முனிந்தான் றயாபர மூர்த்திமுக்கட்
புராரி கபால மொழித்தான் சதுமறை போற்றநின்றான்
பராரித யத்தி லிரானன்ப ரேத்தும் படியிருப்பான்
சுராரி களைப்பட வென்றாறென் பேரையிற் றூயவனே. 85

வேலிக்கு ணின்று விளைபயிர் போல விரும்புமெங்கள்
பாலிக் கொடுந்துயர் தீர்த்தளித் தாய்பகை வென்றபுய
வாலிக்கும் வேலைக்கு மானுக்கு மாய மயன்மகடன்
தாலிக்குங் கூற்றுவ னானாய்தென் பேரைத் தயாநிதியே. 86

பாரதி நாவி லுறைவோனுந் தேவர் பலருமன்பு
கூரதி காந்தி மலர்ச்சே வடியினை கூறுமைவர்
சாரதி பேரை வளர்சக்ர பாணி சரணமென்றே
மாருதிக் கீந்த திருநாம நாளும் வழுத்துவனே. 87

பேராழி வையக மெல்லா மனுமுறை பேதலியா
தோராழி யோச்சி யரசளித் தேபின் னுறுவர்பதம்
கூராழி யேந்துந் தமிழ்ப்பேரை வாழ்குல நாதனெழிற்
காராழி நீர்வண்ணன் பேரா யிரத்தொன்று கற்றவரே. 88

சிகரந் திகழுநின் கோபுர வாசலிற் சேவிக்கநாம்
பகருந் தவமுனம் பெற்றில மோமடப் பாவையர்தம்
தகரந் தடவு மளகா டவியிற் றவழ்ந்திளங்கால்
மகரந்த மொண்டிறைக் குந்திருப் பேரையின் மாதவனே. 89

மந்தர மாமலை மத்தாக வேலை மதித்தனைகா
மந்தர மீது புரியாம னூற்றுவர் மாயவைவர்
மந்தர ஞால மரசாள வைத்தனை வான்பகைமுன்
மந்தர சூழ்ச்சியின் வென்றாய்தென் பேரையின் மாதவனே. 90

வாமன னூற்றெண்மர் போற்றும் பிரான்மல ராள்கணவன்
பூமனை நாபியிற் பூத்தோ னடங்கப் புவியிடந்தோன்
காமனைத் தந்த திருப்பேரை வாழ்கரு ணாநிதிதன்
நாமனைச் சிந்தையில் வைத்திலர் வீழ்வர் நரகத்திலே. 91

அருங்கொடிக் கோர்கொழு கொம்பென வெம்மை யளிப்பதுஞ்செய்
திருங்கொடி யோனையு மாற்றிவிட் டாயிறு மாந்துவிம்மி
மருங்கொடித் தோங்கு முலைச்சா னகியை வருத்தஞ்செய்த
கருங்கொடிக் கோர்கணை தொட்டாய்தென் பேரையிற் காகுத்தனே. 92

அரந்தரும் வேல்விழி யாரனு ராக மகற்றியுயர்
வரந்தர வல்லவன் வானப் பிரானெங்கள் வல்வினையைத்
துரந்தர னாகவந் தஞ்சலென் றோன்றன் றுணைமலர்த்தாள் 93
நிரந்தரம் போற்று மவரே புரந்தரர் நிச்சயமே.

காண்டா வனமெரித் தான்றரித் தானென் கருத்திலன்பு
பூண்டா னெழின்மணிப் பூணா னறிவற்ற புன்மையரை
வேண்டா னடியவர் வேண்டநின் றான்விரி நீர்ப்புடவி
கீண்டான் றமியனை யாண்டான்றென் பேரையிற் கேசவனே. 94

கேசவன் பேரை வளர்வாசு தேவன்கை கேசிசொல்லால்
நேச வனம்புகுந் தோர்மானை வீட்டி நிசாசரரை
வாசவன் செய்த தவத்தாற் றொலைத் தருண் மாதவன் பேர்
பேச வனந்த லிலும்வரு மோபெரும் பேதைமையே. 95

கழகா ரணத்தின் பயனறி யாத கபடனெம்மைப்
பழகாத வஞ்சனை நீக்குவித் தாயிடைப் பாவையர் தம்
குழகா வழுதி வளநாட கோவர்த் தனமெடுத்த
அழகா மகரக் குழையாய்தென் பேரையி லச்சுதனே. 96

அச்சுதன் பேரை யபிராமன் செஞ்சொ லசோதக்கன்பாம்
மெய்ச்சுத னெங்களை யாட்கொண்ட மாயன் விசயனுக்கா
அச்சுத நந்தைக் குறித்தா னரவிந்த லோசனன்முன்
நச்சு தனஞ்சுவைத் துண்டானென் பார்க்கு நரகில்லையே. 97

இல்லைப் பதியென் றிருந்துழல் வீரௌி யேங்கள் சற்றும்
தொல்லைப் படாதருள் பேரையெம் மான்பதத் தூளிகொடு
கல்லைப்பெண் ணாக்குங் கருணா கரன்முன்பு கஞ்சன்விட்ட
மல்லைப் பொருதவ னென்றோதத் துன்பம் வராதுமக்கே. 98

வாரா யணுவெனு நெஞ்சேயஞ் சேல்வஞ் சகமகலும்
கூரா யணிந்தவன் சேவடிக் கேயன்பு கூர்ந்துமறை
பாரா யணம்பயி னூற்றெண்மர் நாளும் பரிந்துதொழும்
நாரா யணன்றிருப் பேரையெம் மான்றனை நண்ணுதற்கே. 99

பதமும் பதச்சுவை யுங்கவிப் பாகமும் பாகச்செஞ்சொல்
விதமும் விதிவிலக் கில்லா விடினும் வியந்தருளற்
புதமென் றளிரிளந் தேமாவும் பூகப் பொழிலுமழைக்
கிதமென் பசுந்தென்றல் வீசுந்தென் பேரைக் கிறையவனே. 100

வாழ்த்து

பார்வாழி நூற்றெண்ப பதிவாழி மாறன் பனுவலியற்
சீர்வாழி நூற்றெண்மர் நீடூழி வாழியிச் செந்தமிழ்நூல்
ஏர்வாழி மன்ன ரினிதூழி வாழியெந் நாளுமழைக்
கார்வாழி பேரைக் குழைக்காதர் வாழியிக் காசினிக்கே.

தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை முற்றிற்று

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குழைக்காது வல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மகர நெடும் குழைக்காதர் -ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தென் திருப்பேரை ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் கருட சேவை

March 22, 2022

ஸ்ரீ தென் திருப்பேரை ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் கருட சேவை

ஸ்ரீ ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -12

தாமிரபரணியாற்றின் தென் கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் திருச்செந்தூருக்கு அருகில்,
ஸ்ரீ ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஸ்ரீ தென்திருப்பேரைத்தலம் அமைந்துள்ளது.
ஸ்ரீ திருக்கோளூரிலிருந்து பேருந்திலும் நடந்தும் வரலாம்.

மூலவர்: மகரநெடுங்குழைக்காதர், உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்
தாயார்: குழைக்காது வல்லி, திருப்பேரை நாச்சியார்.
விமானம்: பத்ர விமானம்.
தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம்,
பிரத்யட்சம்: சுக்கிரன், ஈசான்ய ருத்திரன், பிரம்மா.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (7ம் பத்து -3ம் திருவாய் மொழி)..
கிரகம்: சுக்கிரன் ஸ்தலம்.

தாய்மாரும் தோழிமாரும் தடுக்கவும், பராங்குச நாயகியாகிய தலைவி திருப்பேரைக்கு செல்வேன் என்று
துணிந்து கூறும்படி பாடியுள்ளார் அதில் ஒரு பாசுரம்

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார்கடல் வண்ணனோடு என் திறத்துத்
கொண்டு, அலர் தூற்றிற்று; அது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில், தோழி,
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்;
தென் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் – சென்றே.

தோழீ! எம்பெருமானிடத்து நான் கொண்டுள்ள காதலின் தன்மை எவ்வளவு பெரியது தெரியுமா?
அவனை நான் காதலித்ததால் என் உடம்பில் பலவகை மெய்ப்பாடுகள் தோன்றின.
அவற்றைப் பார்த்த பலரும் ஒன்று கூடி கரிய நிறம் கொண்ட கடல் போன்ற எம்பெருமானிடத்தில்
நான் வைத்துள்ள காதலைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்.
ஊராரெல்லாம் இதனைக் காரணமாகக் கொண்டு என்னை பழித்தார்கள். இதனால் என் காதல் குறைந்ததா? இல்லை:
மாறாக அது மேன் மேலும் வளர்ந்தது, எவ்வளவு பரந்து வளர்ந்தது தெரியுமா?
மண் நிறைந்த இப்பூவுலகமும், ஏழு கடல்களும், மற்றும் நீண்ட வானமும், ஆக இவையாவும் எவ்வளவு பெரியவையோ,
அவற்றை விடவும் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே அக்காதலுக்கு உரியவனாகிய பெருமான் வீற்றிருக்கும் தெளிந்த
அலைகளையுடய நீர் சூழ்ந்த தென்திருப்பேரெயில் என்னும் தலத்தை நான் அடைவேன்:
ஆள் விடுதல், அவன் வரவு பார்த்தல் செய்யாமல் நானே அங்குச் சென்று சேர்வேன்.

ஸ்ரீ பூமாதேவி மகரக்குழை அளித்த வரலாறு: பெண்களுக்கு பொறாமை மற்றும் கர்வம் கூடாது என்பதை விளக்கும்
வகையில் இத்திருக்கோவிலின் தல வரலாறு அமைந்துள்ளது.
ஒரு சமயம் மஹாலக்ஷ்மி தன்மை விட பூமாதேவியிடம் பெருமாள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதாக நம்பி,
துர்வாச முனிவரிடம் தான் பூமாதேவியை விட அழகாக இல்லாதத் காரணத்தால்தான் ஸ்ரீமந்நாராயணன் தன்னை வெறுக்கின்றார்.
அதனால் பூமாதேவியைப் போலவே அழகும் திறமும் தனக்கு ஏற்பட வேண்டும் என்று கேட்டார்.
துர்வாசரும் பூமாதேவியைக் காண வந்த பொழுது தனது வடிவில் கர்வம் கொண்ட பூமாதேவி பெருமாளின் மடியை விட்டு
எழுந்திருக்கவில்லை அவரை உபசரிக்கவில்லை.
கோபம் கொண்ட துர்வாசர் “ நீ லக்ஷ்மியின் ரூபத்தை அடையக் கடைவாய்” என்று சபித்தார்.
பூமிதேவியும் முனிவரிடம் சாப விமோசனம் வேண்ட, தாமிரபரணி நதியின் தென் கரையில் உள்ள ஹரிபதம் என்னும்
க்ஷேத்திரத்தில் சென்று நதியில் நீராடி தவம் புரிய உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார்.

துர்வாசர் உபதேசித்த திருவெட்டெழுத்தை ஜபித்துக்கொண்டு பூமிதேவி, ஸ்ரீபேரை(லக்ஷ்மியின் உடல்) என்ற
நாமத்தை தரித்து தவம் செய்து வரும் போது ஒரு பங்குனி பௌர்ணமி தினத்தன்று ஜெபம் செய்து ஆற்றின் நீரைக்
கையில் எடுத்த போது இரண்டு அழகிய மகர குண்டலங்கள் (மீன் வடிவிலான காதில் அணியும் ஒரு அணிகலன்) கிட்டியது.
உடனே பூமிதேவியும் இவை பெருமாளின் திருக்காதுகளுக்கே இவை உகந்தவை என்று நினைத்தவுடன்,
பெருமாள் அங்கு தோன்றி பிரியே! அந்த மகர குண்டலங்களை எனக்கு தர வேண்டும் என்று கூற ,
அவளும் மகிழ்ச்சியுடன் அவற்றை பெருமாளுக்கு கொடுத்தாள்.
அவரும் தனது அழகிய நீண்ட திருக்காதுகளில் அவற்றை அணிந்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்,
தேவ துந்துபிகள் முழங்கின. பூமாதேவியின் திருமேனி முன் போலவே அழகானது.
தேவர்கள் வேண்டிக்கொண்டபடி பெருமாள் மகர நெடுங்குழைக்காதர் என்னும் திருநாமத்துடன் இன்றும் சேவை சாதிக்கின்றார்.
அந்த தீர்த்தமும் மத்ஸ்ய தீர்த்தம் என்று வழங்கப்படலாயிற்று. இத்தலத்தின் பெயரும் பூமிதேயின் பெயரான திருப்பேரை ஆயிற்று.
சோழ நாட்டு திவ்ய தேசங்களில் திருப்பேர் நகர் என்னும் திவ்ய தேசம் உள்ளதால் இத்தலம் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகின்றது.

வருணன் பாசம் பெற்ற வரலாறு:
இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட அசுரர்கள் மேற்கே சென்று வருணனுடன் போரிட்டனர்.
குருவின் சாபத்தினால் நாகத்தையும் பாசத்தையும் இழந்தார். உடனே அவன் மனைவி குருவை சரணடையக் கூற,
அவனுன் குருவிடம் சென்று வேண்ட, அவரும் நீ முன் போல் உன் ஆயுதங்களைப்பெற தெற்கு திக்கில்
பார்வதி தேவியின் சரீரத்தில் இருந்து உண்டான் தாமிரபரணி நதி தீரத்தில் உள்ள “ஸ்ரீபேரை” என்னும் தலத்தில்
பூமி தேவியுடன் சேவை சாதிக்கும் பெருமாளை திருவெட்டெழுத்தால் வழிபட உன் எண்ணம் நிறைவேறும் என்று அருளினார்.
வருணனும் தென்திருப்பேரை வந்து மகர தீர்த்தத்தில் நீராடி மகரநெடுங்குழைக்காதரை பங்குனி பௌர்ணமியன்று வழிபட,
மாதவன் மகிழ்ந்து தீர்தத்தை தாரையாக விட அது பாசமாயிற்று. அப்பாசத்தைக் கொண்டு வருணன் அசுரர்களை வென்றான்.
எனவே இத்தலத்திம் மழை வேண்டி செய்யுன் பிரார்த்தணைகள் பொய்ப்பதில்லை.

விதர்ப்ப தேசத்தில் பஞ்சம் நீங்கிய வரலாறு:
ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில்12 வருடம் மழையில்லாமல் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
எனவே விதர்ப்ப மன்னன் குருவை அழைத்து பரிகாரம் கேட்க, அவரும் தென்திருப்பேரை சென்று
மகரநெடுங்குழைக்காதரை பூஜிக்க பஞ்சம் நீங்கும் என்றார். அரசனும் அவ்வாறே செய்ய பஞ்சம் நீங்கியது.

சுந்தர பாண்டியன் வரலாறு:
சுந்தர பாண்டியன் பிள்ளை வரம்வேண்டி பெருமாளுக்கு பூசை செய்வதற்காக 108 அந்தணர்களை அழைத்து வந்தான்.
வரும் வழியில் ஒருவர் காணாமல் போய்விட்டார். ஊர் வந்து சேர்ந்தபோது 107 பேர்தான் இருந்தனர்.
ஆனால் அரசம் வந்து பார்த்தபோது 108 பேர் சரியாக இருந்தனர்.
பெருமாளே காணாமல் போனவர் வடிவில் வந்து அரசன் முன் தோன்றினார் எனவே பெருமாள் எங்களில் ஒருவர் என்று
இந்த ஊர் அந்தணர்கள் கூறுகின்றனர். பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல்வேறு கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.

இக்கோவில் மிகப்பெரிய கோவில். மூலவர் மகர நெடுங்குழைக்காதர் நீண்ட மீன் போன்ற குழைகளை காதணியாக
அணிந்து கொண்டு குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் இருவருடனும் எழிலாக அமர்ந்த் கோலத்தில்
ஈசான்ய ருத்திரருக்கும், பிரம்மனுக்கும் காட்சி தரும் பரமபத திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

வேதம் ஒதி வரும் வேத வித்களைக் காணவும், குழந்தைகள் விளையாடுவதைக் காணவும் பெருமாள்,
கருடனை இடப்பக்கமாக விலகி இருக்குமாறு கூறியதால்.கருடாழ்வார் சன்னதி பெருமாளுக்கு நேராக இல்லாமல்
இடப்பக்கம் சிறிது விலகி உள்ளது. இதை நம்மாழ்வார்

வெள்ளைச்ச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக்காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவ வீற்றிருந்த வேதவொலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியுமராத் திருப்பேரெயில் சேர்வன் நானே.

என்ற பாசுரம் இதையே காட்டுவதாகக் கூறப்படுகின்றது.

இத்தலத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது ஐந்தாம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில்
பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு எழுந்தருளும் போது பெருமாளை சேவிக்கும் அழகே அழகு.
வார்த்தகளால் வர்ணிக்க முடியாத காட்சி அது.

திருவரங்கனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் தமது

நகரமும்நாடும்பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள்
சிகரமணிநெடுமாடநீடு தென்திருபேரெயில்வீற்றிருந்த
மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரையன்றுமங்கநூற்ற
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னையூழியானே.

என்னும் பாசுரத்தில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

“கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று
போற்றப்படும் நிகரில் முகில் வண்ணரின் கருட சேவையைக் காணலாம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குழைக்காது வல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மகர நெடும் குழைக்காதர் -ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு வதரியாஸ்ரமம் (ஸ்ரீ பத்ரிநாத்), ஸ்ரீ அஷ்டாக்ஷர க்ஷேத்திரம்–

March 21, 2022

திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி
மூலவர் பத்ரி நாராயணன்
உத்ஸவர்
தாயார் அரவிந்தவல்லித்தாயார்
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசை கிழக்கு
பாசுரங்கள் 22
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 21
பெரியாழ்வார் 1

—–

இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிபடர்ந்த சூழலில், மலையின் மத்தியில்,
எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நர நாராயண பர்வதத்தின் மடியில்,
பவித்திரமான அலகநந்தா நதிக்கரையில், அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும்
பத்ரிநாத் மலைச் சிகரங்களின் மத்தியில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில்,
இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது.
இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.

எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும், ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில்,
இதுவும் ஒன்றாக, இத்தலம் அமைந்து உள்ளது.
திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய
எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள் ஆகும்.
(இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

பரமாத்மா, தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து அல்லது
எம்பெருமானே தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு,
ஓம் நமோ நாராயணாய என்ற ”அஷ்டாக்ஷர மந்திரம்” எனும் மூல மந்திரமாகிய திருமந்திர உபதேசத்தை,
நாராயணன் என்ற திருநாமத்துடனே உலகத்திற்கு வந்து உகந்து அருளின இடம், பத்ரிகாஸ்ரமம் தான்.
குரு நாராயணன், சீடன் நரநாராயணன்.
எம்பெருமான் ஆச்சார்யராக இருந்த ஸ்தலங்களில் பத்ரிநாத்தும் திருநறையூரும் முக்கியமானவை.
திருநறையூரில் எம்பெருமான் குரு, திருமங்கையாழ்வார் சீடர்.
எம்பெருமானைச் சரண் புகுந்து மோட்சம் புகும் பக்தர்கட்கு மிக எளிய வழி திருமந்திர உபதேசத்தில் சொல்லப்பட்டது.
அதனால், திருமந்திரம் அவதரித்த திருத்தலமாக இந்த பத்ரிநாத் கருதப்படுகிறது.

மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால்
பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்ரிகாச்ரமம் ஆயிற்றென்பர்.
எம்பெருமான் தவம் செய்ய அமர்ந்த பின், அவருக்கு நிழலாக மஹாலக்ஷ்மி இலந்தை தோட்டமாகவே
அவதரித்து இங்கு வந்ததாகவும் சொல்வார்கள்.
மஹாலக்ஷ்மி சொரூபமான இலந்தை(பதரி) மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க
இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக தேர்ந்தெடுத்ததால் பத்ரிகாஸ்ரமம் ஆயிற்றென்பர்.
வடமொழியில் இலந்தை மரங்களுக்கு பதரீ என்று பெயர். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடம் என்பது பதரிகாச்ரமம் என்று ஆயிற்று.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும்.
தொடக்கூட முடியாத அளவில் வேகமாகவும், மிகக்குளிர்ந்த நிலையிலும், அலகநந்தா பக்கத்திலேயே ஓடிக்கொண்டு
இருக்கும் போது இந்த வெந்நீர் ஊற்று மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
அதற்கான காரணம் இன்னும் அறியப்படாததும் மேலும் ஆச்சர்யம் தரும். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் சூடாக வருகிறது.
இது பத்ரி யாத்ரிகர்களுக்கு எம்பெருமானின் அனுக்கிரகம்.
இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து, தரிசிக்க வசதியாக உள்ளது.
தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் சிம்ம துவாரத்தில் இருக்கும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார்.

கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.
இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், உத்தவர், குபேரன், நரன் மற்றும் நாராயணன் முதலானோர்
மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர்.
பத்ரி நாராயணர், இலந்தை மரத்தின் கீழ், ஜடாபரிதனாய், நான்கு திருக்கரங்களுடன், (சதுர் புஜங்களுடன்),
கிழக்கு நோக்கி மேல் வலது திருக்கரத்தில் சக்கரமும், மேல் இடது திருக்கரத்தில் சங்கும்,
கீழ் வலது இடது திருக்கரங்களை யோக முத்திரையாக் கொண்டு,
மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன், பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மூர்த்தியாக
வீற்று இருந்து தபஸ்வி வேஷத்தில் காட்சி கொடுக்கிறார்.

பகவானின் வலப்புறம் குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள்.
இடப்புறத்தில் தேவரிஷி நாரதர், உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர்.
ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே.
தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள தாயார் சந்நிதியில்,
மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள். பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது.
கோவிலின் பின்புறம் லக்ஷ்மிநரசிம்ஹருக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது,
அதில் இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.

இங்கு எம்பெருமானுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை,
மக்களுக்கு எதிரிலேயே, திரை எதுவும் போடாமல் பக்தர்கள் நேரடியாக காண்பதற்கு ஏதுவாக கேரளத்தை சேர்ந்த
நம்பூத்ரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து நடைபெறுகின்றன.

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, திருமஞ்சனம் செய்து நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து,
ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார்.
இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும்.
அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர்.
இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். இந்த பூஜை நடைபெறும் சமயம் எம்பெருமானின் பக்கத்தில் அமர்ந்தே
பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.

இங்கு கோவிலின் வடபுறம் அலகநந்தாவின் கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது.
இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு, கயா ஸ்ராத்தம் போல், இங்கும் ஸ்ராத்தம் செய்யப்படுகிறது.
பத்ரிநாராயணனுக்கு காலையில் நிவேதனம் செய்துவிட்டு, பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் எனப்படும் பிரசாதத்தை,
கோவிலிலேயே கொடுப்பார்கள். இவ்விடத்தில் ஸ்ராத்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து
தலைமுறையினர்க்கும் மோக்ஷம் கிடைப்பதாக ஐதீஹம்.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன.
அவை, தப்த குண்டம், பிரகலாத குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா மற்றும் ரிஷிகங்கா.
இதில் தப்த குண்டத்தில், அக்னி வாசம் செய்வதாக வரலாறு. தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது.
மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது.
கூர்ம தாரா தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது.
இங்கு எம்பெருமானின் திருவடிகளை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை
மானா கிராமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள்.
இந்த மானா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது, அதற்கு பிறகு திபெத்.
இங்கே கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது. சரஸ்வதி நதி இங்கே பூமிக்குள் சென்று, திரிவேணி சங்கமத்தில்
( அலஹாபாத் பிரயாகை) மீண்டும் வெளிவருவதாக நம் புராணங்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.
இவற்றை தவிர, பத்ரியில் வஸுதார என்ற பனித்திவலைகள் விழும் நீர்வீழ்ச்சியும் உண்டு.
அந்த நீர்திவிலைகள் நம் மேல் படும் போது புண்ணியம் தரும் என்று நம்பப் படுகிறது.

இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும்
இப்பிரதேசத்திற்கு குளிர்தாங்கும் பருவம் இளமை என்பதால்,
கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் (திருவாய்மொழி 2.10.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல்,
மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து விடப்படும்.
அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால்
குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு மீண்டும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்படும்.
பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும் போது முதல்நாள் இரவில்
பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள் மறுநாள் காலையில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் இருக்குமாம்.
அதனால் தான் மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் ஆராதித்து செல்கின்றனர் என்ற ஐதீஹம்.
மேலும் பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது.
குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6 மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்.
அதனால் இங்கு ஆறு மாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனுஷ்ய பூஜை என்று சொல்லப்படுகிறது.

குளிர்காலத்தில், சுமார் 6 மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும்.
இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை, ஜோஷிமத் நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளச் செய்து,
அங்கு கிரமப்படி நித்ய ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மறுபடியும் சித்திரை மாதம், அக்ஷய திருதியைக்கு மறுநாள், கோயில் கதவுகள் திறக்கப் பட்டு எம்பெருமானும் பத்ரியில் எழுந்தருளுகிறார்.

பத்ரிகாச்ரம் பற்றி குறிப்பிடுகையில் “பஞ்ச பத்ரி” என்று ஐந்து பத்ரி பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பெரும்பாலானவை இறுதியில் 4 அல்லது 5 கிமீ, போல் நடைப் பயணத்தின் மூலமாகவே அடையவேண்டி உள்ளது.
புருஷசூக்தம் ஸ்லோகத்தை இயற்றிய நாராயணர், இந்த ஐந்து இடங்களில் தவம் இருந்ததாக சொல்வர்.
அவை, யோகபத்ரி, வ்ருத்தபத்ரி, த்யானபத்ரி, தபோபத்ரி மற்றும் பவிஷ்ய பத்ரி.

வ்ருத்தபத்ரி அலகநந்தாவின் அழகான பள்ளத்தாக்கு , மிகவும் ரம்யமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார்.
ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார்.
த்யானபத்ரியில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.
யோகபத்ரியில் தியான மந்திர் அமைந்துள்ளது.
அங்கே, கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார்.
த்யானபத்ரி, யோகபத்ரி இரண்டும் ஒன்று, பாண்டுகேஸ்வரில் உள்ளது, என்று சொல்பவர்கள் உண்டு.
அவர்கள், இதனைத்தவிர, ஆதிபத்ரி என்று இன்னொரு ஸ்தலமும் கர்ணப்ரயாகை அருகில் சொல்லப்படுகிறது.
பவிஷ்யபத்ரி தபோவனில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.
இங்கு அகத்தியர் வழிபட்டதாகவும், கலியுகத்தில் தாம் இங்கு எழுந்தருளப் போவதாகவும் சொல்லப் படுகிறது.
வரும் காலத்தில், இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகும் என்றும்,
அது சமயம் பத்ரி நாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது.
தபோ பத்ரி தான் இன்றைய பத்ரிநாத், அல்லது பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகிறது.

பத்ரிநாராயணன் கோவில் அமைந்து இருப்பது நாராயண பர்வதம்.
இதைத்தவிர கோவிலுக்கு எதிர்புறம், நரநாராயண பர்வதங்கள்; கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள நீலகண்ட பர்வதம்
போன்றவை காண்பதற்குப் பேரெழில் பொலிந்தனவாகும். குளுமை மிக்க அழகான மலைத் தொடரில்,
நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம் என்று வழங்கப்படுகிறது.

இங்கு பனியும் குளிரும் அதிகம். முதல் நாள் பகலில், பத்ரி வந்து சேர்ந்து அன்று மாலையில் ஒரு முறை எம்பெருமானை
ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்று சேவித்துவிட்டு அடுத்த நாள் அதிகாலையில் சுமார் 03 00 மணிக்கு எழுந்து விட்டதால்
தங்கியிருந்த இடத்திலே ஒரு ஸ்னானம் செய்து விட்டு, காலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு கிளம்பலாம் என்று வரும் போது,
நீலகண்ட பர்வதத்தை தரிசித்த காட்சி மறக்க முடியாதது.
இரண்டு மலைகள், வானத்தில் சிறிய சந்திர ஒளியினால், (வளர்பிறை சதுர்த்தி அல்லது பஞ்சமி), நீல நிற ஒளியுடன்,
மிக பிரகாசமாக நாங்கள் விவரிக்க முடியாதபடி, வியக்கும் வண்ணம், மறக்க முடியாதபடி, ஒரு மலையில் உள்ள பனியினால்
சந்திர ஒளி பட்டு அதனுடைய பிரதிபலிப்பு இன்னொரு மலையில் விழுந்து, அந்த ஒளியும் மீண்டும் அதிகமாக ஒளி விட,
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றிய விதமாய் எங்களை மேலும் நடக்க விடாமல் அதையே பார்த்து பிரமிக்கும்படி செய்தது.
அப்போது எங்களுக்கு அது நீலகண்ட பர்வதம் என்று தெரியாது. நாங்கள் நினைத்தது நரனும் நாராயணனும் என்றே நினைத்து,
நன்றாக அனுபவித்தபடி கோவிலை அடைந்தோம்.
எங்களுக்கு நீலகண்டனின் நேரடியான தரிசனமே கிடைத்து விட்டது –
நர நாராயணர்களுடன் நீலகண்டரின் அருளாசியும் எங்களுக்கு கிடைத்து ஒரு அரிய அனுபவமே.

ஸ்தல வரலாறு

பத்ரிநாத்தில் ஸ்ரீமந்நாராயணன் தானே எழுந்தருளித் தவம் புரிந்த தலம் என்பது புராண வரலாறு.
ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி முதல் யுகத்தின் ஆரம்ப காலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தானே
உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்கு சுலபமாக தனது திவ்ய தரிசனத்தைக் கொடுத்து அருள்பாலிக்கவும்
பத்ரிநாத் என்ற பத்ரிகாச்ரமத்தில் (உத்தராகண்ட்) அர்ச்சாரூபமாக எழுந்து அருளி உள்ளார்.

நர நாராயணன் : எம்பெருமான் நர மற்றும் நாராயணா என்று இரண்டு தர்மத்தின் உருவங்களாக அவதரித்து
துறவறத்தை அமைக்க, பக்திமிக்க இமயமலைகளுக்கு மத்தியில் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது,
அலகநந்தா ஆற்றின் பின்புறத்தில் இரண்டு கண்கவர் குளிர்ச்சியான மற்றும் வெந்நீர் ஊற்றுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு இடத்தை கண்டனர்.
இந்த இடத்திற்கு பத்ரி விஷால் என்று பெயரிட்டனர். இதில் நரனாக அவதரித்தது ஆதிசேஷன் என்று சொல்லப்படுகிறது.
அலகாநந்தா நதிக் கரையில், ‘சேஷ நேத்ரம்’ என்று ஒரு பகுதி உள்ளது.
இங்கே ஒரு சிறு பாறை அனைவராலும் வணங்கப்படுகிறது. இதன் மேல்புறத்தில் ஆதிசேஷ நாகத்தின் கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன;
பக்கவாட்டில் பகவானின் திருவடிகள் காணப் படுகின்றன.

இங்கு சஹஸ்ரகவசாசுரன் என்று ஒருவன் இருந்தான். அவன் சூரியனிடம் கடினமாக தவம் இருந்து,
சாகா வரம் வேண்டும் என்று கேட்க, சூரிய பகவான் அது இயற்கைக்கு முரணானது என்று சொல்லி மறுத்து,
வேறு வரம் கேட்க சொல்ல, அவனும் பதினாயிரம் கவசம் வேண்டும்,
அதில் உள்ள ஒவ்வொரு கவசத்தையும் அழிக்க கூடியவன் பதினாயிரம் நாட்கள் தவம் செய்தவனாக இருக்க வேண்டும்,
அப்படி ஒரு கவசத்தை அழித்தவுடன் அவனும் மடிய வேண்டும் என்று வரம் கேட்டான்.
சூரிய பகவானும் அந்த வரத்தை அளித்தார். அதனால் அவன் பதினாயிரம் கவசம் அணிந்து யாராலும் அழிக்க முடியாதபடி இருந்தான்.

பத்ரிகாசிரமத்தில் தவம் இருந்த முனிவர்களுக்கு சிவன், இந்த திருத்தலத்தில் தவம் இருந்தால்,
இந்த இடத்தில் செய்யும் எல்லா தவங்களும் அது பதினாயிரம் மடங்கு பலன் அளிக்க வல்லது என்று ஒரு வரம் அளித்து இருந்தார்.

சஹஸ்ர கவசாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் எம்பெருமானிடம் வேண்ட,
அவரும் ஆதிசேஷனுடன் நர நாராயணர்களாக இங்கு அவதரித்தார்கள்.
ஆதிசேஷனுக்கு உயிர்ப்பிக்கும் மந்திரத்தையும் உபதேசித்து இந்த அசுரனிடம் போரிட ஆரம்பித்தார்.
அதன்படி ஒரு நாள் ஒருவர் போர் புரிவது, அதே நாள் மற்றொருவர் தவம் புரிவது. போரில் அசுரனின் ஒரு கவசத்தை அழிப்பது,
அதனால் மடிந்தால், உயிர்ப்பிக்கும் மந்திரம் கொண்டு ஒருவர் மற்றொருவரை பிழைக்க வைப்பது என்று பேசி வைத்து கொண்டனர்.
அதன்படி நரனும் நாராயணனும் 9999 நாட்கள் போர் மற்றும் தவம் புரிந்து அசுரனின் 9999 கவசங்களை அழித்து விட்டனர்.
கடைசி நாள் பிரளயம் ஏற்பட, கடைசி கவசத்தோடு அசுரன் கர்ணனாகப் பிறந்தான் என்று சொல்வார்கள்.
இந்த நர நாராயணர்களே பின் வந்த யுகத்தில், அர்ஜுனனாகவும் பகவான் கிருஷ்ணன் ஆகவும் அவதரித்தார்கள் என்று இங்கே கூறுகிறார்கள்.

தப்த குண்டம் :
அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார்.
இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார்.
விஷ்ணு, அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால்
அவருடைய பாவமெல்லாம் நீங்கும் என்றும், அதனால் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார்.
அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம்.
சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலகாநந்தா நதியில் தொட முடியாத அளவிற்கு
குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

நாரதர் :
வ்ருத்தபத்ரி நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும்
அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.
நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், பின்னாளில் ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குபேரன் :
மஹாலக்ஷ்மியை திருமணம் முடிக்க எம்பெருமான் இங்கு குபேரனை அழைத்து விமரிசையாக தன்னுடைய
திருமண ஏற்பாட்டை செய்த திருத்தலம். அதனால், குபேரனும் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார்.

ப்ரம்ம கபாலம் :
சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது.
அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை. சிவன், விஷ்ணுவிடம் இதற்கு பரிகாரம் கேட்டபோது,
‘பூலோகத்தில் ஒரு பதிவிரதையிடம் பிச்சையினை பெற்றால்’, பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று கூறினார்.
சிவபெருமான், பூலோகத்தில் பத்ரி ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க,
மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது.
அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர்.
இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஹனுமான் :
பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர்.
ஹனுமான் கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

உத்தவர் :
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி
உத்தவரை அங்கு சென்று, தனது திருவடி தீர்த்தமான அலகநந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய வேண்டும் என்று உபதேசித்தார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது,
தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர், கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார்.
உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார்.
பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும்,
அதுவரை பத்ரி சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் வைகுந்தம் வந்தடைய ஆசி வழங்கினார்.
கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் சென்று பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு,
வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

வியாசர் :
இந்த மலையில், மணிபத்ரபூர் என்ற மானா கிராமத்தில், ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார்.
வியாச குகைக்கு எதிரில் உள்ளது. இந்த குகை புராதனப் பெருமையைப் பறைசாற்றியபடி அமைந்திருக்கிறது.
இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவியம் மனதில் ஊன்றியது.
வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார்.
உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகம் எடுத்ததாகவும், அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம்,
விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை என்றும், ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்துபோகச் செய்துவிட்டார் என்றும்
ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.

பாண்டு :
இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும், அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது.
பீமன் கட்டிய பீம்பாலம் வழியாகத் தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள் என்று இங்கு நிலவும் செவி வழி செய்தி.

ஆதி சங்கரர்:
எம்பெருமானின் உத்திரவு படி பிரம்மா முதலிய தேவர்கள், அலகானந்தா, நாரத குண்டத்தில் இருந்த பகவானின்
திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்து அன்று முதல் தேவர்களாலும்,
மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வந்தார். இடையில் இதற்கு தடை ஏற்பட்டு, விக்ரகம் மறைந்தது.
ஆதிசங்கரர் பத்ரிநாத் வந்தபோது, அவர் கனவில் தோன்றிய எம்பெருமானை, ஆதிசங்கரரே மீண்டும் நாரத குண்டத்தில் இருந்து மீட்டு
மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
இதனால் தான் இன்னும் ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நம்பூதிரிகளால்,
அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 22 பாசுரங்களில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

திருமங்கையாழ்வார்:

திருமங்கை ஆழ்வார் ஒரு பதிகத்தில், “வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” என்று
பதரிகாச்ரம க்ஷேத்ரத்தை மங்களாசாஸநம் செய்தும்,
“வதரியாச்சிரமத்துள்ளானே” என்ற அடுத்த பதிகத்தில் அந்த க்ஷேத்திரத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானைத் துதிக்கின்றார்.
ஆழ்வார், ஸ்ரீபதரீநாதன் எழுந்தருளியிருக்கிற திருமலை முழுவதையும் திருவுள்ளம் பற்றி வதரிவணங்குதுமே என்று சொல்லி,
அந்தத் திருமலையில் எல்லா இடங்களிலும் ஸ்ரீநாராயணன் தவம் புரிந்த இடமாயும்,
தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டு அருளின இடமாக இருக்கிற
ஸ்ரீபதரிகாச்ரம விசேஷத்தை வதரியாச்சிராமத்துள்ளானே என்று சொன்னதால்,
மேலே சொன்ன ஐந்து பத்ரிகளும், ஆதிபத்ரி எல்லாம் சேர்ந்து இந்த திவ்யதேசம் என்று கொள்ள வேண்டும்.

பெரியதிருமொழி 1.3

வதரி என்னும் இதுத் திருத்தலம் மற்ற திருப்பதிகள் போல் இல்லாமல் வெகு சிரமப் பட்டு அடையக்கூடியது ஆகையால்,
உடல் கட்டுக்குலைவதற்கு முன்னே போய் அநுபவிக்க வேண்டும்,
இல்லையானால், உடல் தளர்ந்து போனபின் நெஞ்சால் கூட நினைக்கவும் அரிதாகும்.
அப்படிப்பட்ட தளர்ச்சி நேருவதற்கு முன்னே சென்று ஸேவிக்க வேண்டும் என்று அருளிச்செய்கிறார்.
வயதான காலத்தில், முதுகு கூனிட்டபின், முன்னடி நோக்கி வளைதல் இயல்பு என்றும்,
அதற்கு முன்பே வதரி சென்று வணங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
முதுமை வருதற்கு முன்பே நம்முடைய கரணங்கள் சக்தியோடு இருக்கும் இளமையில் பரமபோக்யமான
வதரியை வணங்குதல் நன்று என்கிறார்.

தேனைப் பருகின வண்டுகள் களிப்புக்கு இடமான வதரி என்று சொன்னது
“எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” ( திருவாய்மொழி 10.7.2) என்னும்படியான
எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து முக்தாத்மாக்கள் வாழப் பெற்ற வதரி என்கிறார்.
உடம்பில் இளமையில் மறைந்து கிடக்கும் நரம்புகள், முதுமையில் உறிகள் போலே, உடம்பின் மேற்பக்கம் தெளிவாகத் தெரியும்.
அப்படிப்பட்ட நிலைமையில் உடல் நடுங்கி திருநாமங்களை வாயினால் சொல்ல முடியாது;
ஒரு திவ்ய தேசத்திற்கு காலினால் செல்ல முடியாது; நெஞ்சால் நினைக்கவும் முடியாது;
ஆகையால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், உடல் திடமாக உள்ள போதே,
பக்தியுடன் திருநாமங்களை சொல்லி பரமபோக்யமான வதரி சென்று வணங்குதல் நன்று என்கிறார்.

முதுமையில் கண்கள் சுருங்கி அவற்றில் இருந்து பீளை பெருகவும், இருமி, பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தடுமாறி
நடக்கவும் முடியாமல், இருக்கும் காலத்தில் வதரி வணங்குதல் முடியாத காரியமாகும்.
அப்படி நேருவதற்கு முன்னமே அங்கு சென்று,
‘கண்ணபிரானே நம் குலக் கொழுந்து, இவன் சொற்படி நடப்பதே நமது கடமை’ என்று இருந்த இடையர்களுக்கு,
கோவர்த்தன குன்றினை ஏந்தி, பெருமழையில் இருந்து காத்த கண்ணபிரானது, வாளை மீன்கள் குதித்து வாழும்
குளிர்ந்த குளங்களைக் கொண்ட வதரியை சென்று வணங்குதல் நன்று என்கிறார்.

இளமையில், மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும்
சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொல்லுவது இருமுவது என்ற இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டு,
தடியைக் காலாகக்கொண்டு, முதுமையில் தடுமாறி நடக்க நேருவதற்கு முன்னே,
வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை உடையவனான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார்.
இங்கு, மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும்
சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொன்னது சம்சாரிகளைப் பற்றி தானே தவிர,
ஆழ்வாருடைய நெஞ்சில் ஒரு துளி கூட அப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பலஹீனமான பேச்சுடனே இருமி சரீரம் மெலிந்து பைத்தியம் பிடித்தவர்கள் போல விகாரப்பட்ட மனமுடையராய்
வார்த்தைகள் சொல்லி தளருவதற்கு முன்பே, எல்லோருக்கும் ஸ்வாமியாயும், தனக்கு தந்தையாயும்,
உலகத்திற்கு மூலக் கடவுளாயும், ஒரு காலத்தில் தேவர்களுக்காக ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாயும் உள்ள
எம்பெருமானுடையதான ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார்.

அத்தன் என்பதனால், பொதுப்படையாக உலகத்துக்கெல்லாம் ‘ஸ்வாமி என்பதும்,
எந்தை என்பதனால், விசேஷித்துத் தமது ஸ்வாமி என்றும் ஆழ்வார் அருளுகிறார்.
உலகில் விசித்திரமான ஒன்றையோ, விகாரமான ஒன்றையோ பார்க்கும் போது கண்கள் கூசி ‘அப்பப்ப!’ என்று
மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டு கொண்டு கால் ஊன்றி தள்ளி நடந்துகொண்டு,
தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதி செல்லும் போது, அளவு கடந்த முதுமை விகாரங்களைக் கண்டு
அந்த மாதர்கள் தங்களுக்குள்ளே அதிசயித்து, பக்கத்து வீட்டுக்காரிகளை அழைத்து
அவர்களுடைய எஜமானர் வருகிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டி சிரிப்பார்க்கள்.
அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவதற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று என்கிறார்.

முதுமையில் கருநெய்தல் போன்ற அழகிய கண்களை உடைய மாதர்கள் இருக்கும் இடத்தின் வழியே செல்லும் போது,
‘அப்பால் ஒழிந்து போங்கள், இங்கே இருக்கக் கூடாது’ என்று அவமரியாதையாகப் பேசுகிறர்களிடம்,
ஆசைகளை விட்டுத் தொலைத்து நல்வழி போகப் பார்க்க நினைத்தால், பரிமளம் மிக்க குளிர்ந்த திருத்துழாய் மாலையை
அணிந்த எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார்.
குவளையங்கண்ணியர் என்று சொன்னது கண்ணழகிலே துவண்டு நிற்கும் முதியவர்களின் எண்ணத்தினால் என்று கொள்ளவும்.

இந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்றும் ஞானேந்திரியங்கள் என்றும் இருவகைப்படும்.
வாய், கை, கால், குதம், குறி என்பன கர்மேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள்.
பொதுவாக முதுமையில், இவை எல்லாம் படிப்படியாக அழியும். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும்
அடியெடுத்து வைக்க முடியாதபடியும் முதுமை அதிகரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற
நேருங்காலத்தில் வதரியை வணங்குதல் முடியாது. அப்போதைக்கு இப்போதே குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு,
அவனது திருநாமங்களை பாடுதலும் ஆடுதலும் செய்யப்பெற்ற, வதரி வணங்குதல் நன்று என்கிறார்.

வண்டுகள் ரீங்காரம் செய்து குளிர்ந்த மலர்களில் இருக்கும் மதுவை உண்டு மகிழும் அழகிய பூக்கள் சூழ்ந்து திகழும்
பத்ரி எனப்படும் இடத்தில் எழுந்தருளியுள்ள நெடுமாலைப் பற்றி மங்கை நாட்டின் வேந்தனான கலியன் சொன்ன பாடல்களை
கூட்டமாய்ச் சேர்ந்து ஆடிப்பாடும் தொண்டர்கள் நீள்விசும்பில் பரமபதம் எனப்படும் வைகுந்தத்தில் சென்று
ஆட்சி செய்திருப்பார்களே தவிர அற்பர்களாய் மீண்டும் இவ்வுலகிற்க்கு வந்து துவள மாட்டார்கள் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது.

ஒவ்வொரு பாட்டிலும் வதரிவணங்குதுமே என்று இந்த தலத்தைப் பற்றிச் சொல்லி வந்தவர்
இப்பாட்டில் வதரிநெடுமாலை என்று சொல்லி முடிப்பதால் வதரிநாராயணனை முன்னிட்டே
வதரி வணங்கினார் என்பது தெளிவாயிற்று.

பெரியதிருமொழி 1.4

ஸ்ரீதேவி, பூதேவி நாச்சிமார்களுக்காக அரிய பெரிய காரியம் செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.
முதலடியில் பூதேவிக்கு செய்த வராஹ அவதாரமும், இரண்டாம் அடியில் ஸ்ரீதேவிக்கு செய்த இராம அவதாரமும் சொல்லப்படுகிறது.
இப்படி நிலமகள் இருவர்க்கும் காரியம் செய்த எம்பெருமான், தான் என்றைக்கும் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் காரியம் செய்வதற்காக,
இந்திரன் முதலிய தேவர்கள் தேனொழுகுகின்ற கற்பக நறுமலர்களைக் கொணர்ந்து வணங்குமிடமாயும்
கங்கைக் கரையில் உள்ளதாயும் இருக்கிற பதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறார் என்கிறார்.

எம்பெருமானையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவு கொண்டு வந்த மாரீசனை ஒழித்ததையும்,
ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்ததையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.
வாலியை, ஆழ்வார் கொடுமையான தொழிலை உடைய பலசாலியானவன் என்று கூறுகிறார்.
தேனையுடைய திருநாபிக் கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட தேவர்களும் பல காலம் வந்து வணங்கப் பெற்றதும்
பெருகுகின்ற புராதனமாக ஆகாச கங்கைக் கரை மீது உள்ளதுமான ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறான்.
முதுநீர் என்று கங்கை நீரை சொல்கிறார், முதுநீர் என்பதால் புதிதாகச் சுரந்த நீர் அல்ல என்று புரியும்.
இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டுள்ளமையால் வேதம் போலவே நித்யமான நதி என்பது புலப்படும்.

ஒருவரால் அழிக்க முடியாத லங்கா புரியும் அதற்கு பாதுகாப்பாக இருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும்,
அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸ ஜாதி முற்றிலும் நாசம் அடையும் விதம் தனது மிகச் சிறந்த
பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியம் செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம் என்கிறார்.

“கடலை வற்றச் செய்துவிடுகிறேன்” என்று இங்கிருந்து கிளம்பும் முன் திருப்புல்லாணியில் சிவந்த கண்களுடன் அம்பு தொடுத்ததனாலும்,
கடலிடையே அணைகட்டினதாலும், கடல் கெடாவிட்டாலும், “கடல் கெடக் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் ” என்று ஆழ்வார் கூறி உள்ளார்.

கங்கையின் மிடுக்கையும் வேகத்தையும், சூரியன் சுழன்று வரும் மேருமலையை முட்டி வருகின்ற வெண்ணிறமான கங்கை நீர்
ஆகாயத்தில் பரவி இருப்பதைப் பார்த்தால், மாளிகைகளின் உச்சியில் இருக்கிற தூண்களில் கட்டப்பட்டுள்ள
வெளுத்த துணிக் கொடிகள் காற்றில் அசைந்து பரவுவது போல் இருக்கின்றது என்று ஆழ்வார் சொல்கிறார்.

‘நெஞ்சே! தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளி இருக்கிறான்.
அங்கே சென்று அவனை நீ வணங்கி வாழ்வாயாக; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதியான ‘ஒரு நல்வார்த்தை ‘ என்கிறார்.
அந்த வதரியாச்சிரமம் கங்கைக்கரையிலுள்ளது; அந்த கங்கை, கண்ணன் செய்கிற காரியமெல்லாம் செய்யும்.
அவன் “ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு,
காற்றிற் கடியனாய் ஓடி” ( பெரியாழ்வார் திருமொழி, 2.10.1) என்றபடி
ஆய்ச்சிகளின் துகில்களையும் ஹாரங்களையும் வாரிக்கொண்டு ஓடுவது போல், மேலுலகத்து மாதர்களுடைய வஸ்த்ரங்களையும்
முக்தாஹாரம் முதலியவற்றையும் வாரிக்கொண்டும் பல பல ரத்னங்களையும் தள்ளிக்கொண்டும் பெருகி ஓடுகின்றதாம் கங்கை.

சென்ற பாட்டில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வரவே, மற்றொரு க்ருஷ்ண வரலாற்றை இங்கே பேசுகிறார்.
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையுண்டு அவளை முடித்த வரலாறு தெரிந்த ஒன்று.
யசோதையைப் போலவே வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய மடியிலே நல்ல மகன் போல இருந்து அவளது
முலையையுண்டு அவளை முடித்த கண்ணனைக் கண்ட தாயானவள், ‘இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக்கூடாது,
முலையுண்கிற பாவனையில் உயிரை முடிக்கும் பிள்ளை இது’ என்று கூசும்படியாக சூரனாய் வளர்ந்த தலைவன்
எழுந்தருளி இருப்பது வதரியாச்சிரமம். இந்த பிள்ளையை நாம் மடியிலே வைத்து முலைகொடுத்துப் பழக்கியதால்
இவன் கண்டார் மடியிலும் முலையுண்கிறது ; இனி நாம் இவனை இடுப்பில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்று கூசினாள் யசோதை என்கிறார்.

வதரியாச்சிரமம், ஓங்கி இருக்கும் சிகரத்தின் உச்சியிலே அண்டத்தைத் தரிக்கிற செம்பொன்மலையாகிற மேருபர்வததில்
விளங்குகின்ற விசாலமான சிகரத்தில் இருந்து விழுந்தது போல் ஓடி வருகின்ற கங்கையின் கரையிலுள்ளது என்கிறார்.

கண்ணபிரான் தொட்டில் பருவத்தில் செய்த லீலை ஒன்றை சென்ற பாசுரத்தில் சொன்னார்.
இதில் குமாரனான பருவத்தில் செய்த மற்றொரு செயலைச் சொல்லுகிறார்.
கும்பன் என்னும் இடையர் தலைவனது மகளாகவும் நீளாதேவியின் அம்சமாகவும் பிறந்த “நீளா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு
வருபவளுமானவும், இதற்கு உவமையாக முடியாது வருந்துகின்ற அல்குல் படைத்தவளுமான,
நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை குறித்தபடி யார்க்கும் அடங்காத ஏழு எருதுகளையும்
கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு அவற்றை அடக்கி அப்பிராட்டியை மணம் செய்து கொண்ட அப்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான் என்கிறார்.

அந்த வதரி, கங்கைக்கரையில் உள்ளது. கபில மாமுனியின் சாபத்தால் நீறாய்க் கிடந்த தன் பாட்டன்மாரை,
சுத்தி செய்தற்காகக் கங்கையைப் பெற வேணுமென்று பகீரதன் தவம் புரிந்ததால் காரணந்தன்னால் என்று ஆழிவார் கூறியுள்ளார்.
அந்த கங்கையை, பகீரதன் இந்த உலகத்திற்கு அழைத்து வரும் போது -அவதரிக்க செய்த போது,
நடுவழியிலே ஒரு மலை தடுத்துக் கொண்டு நின்றதாகவும், கங்கை நீரின் அளவும் வேகமும் ஏற்படுத்திய விசையினால்
அந்த மலையை இரண்டு பிளவு ஆகும் படி குத்திப் புறப்பட்டு, அம்மலையிலிருந்த யானைகளையும்
தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தது எனபது ஒரு விளக்கம். பகீரதன் கொணர்ந்த கங்கா ப்ரவாஹத்தை ஒரு மலை தடுத்த போது,
அவன் இந்திரனை நோக்கித் தவம் புரிந்ததாகவும், அவன் தவத்தை மெச்சி, இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி,
அது அந்த மலையை, தன்னுடைய நான்கு தந்தங்களால் இருபிளவாகும் படி குத்தி
கங்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாதாகவும் புராணம் சொல்லுவது இன்னொரு விளக்கம்.

திருமால் தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கிக் கடல்கடைந்து அருளியபோது, கடையப் பட்ட அந்த கடலில் இருந்து
ஐராவதம் என்ற யானை, உச்சிச்ரவஸ் என்னும் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயின.
அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவத யானையையும், அமிருதத்தையும், தேவர்களுக்குத் தலைவனாயிருக்கும் சொர்க்க லோகத்தையும் கொடுத்தருளி,
அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரியில் உள்ளான்;
அவ்வாச்சிரமம் கங்கையின் கரைமேலுள்ளது. அந்தரத்து அமரர் அடியிணை வணங்க, ஆயிரம் முகத்தினால் அருளி கங்கை,
மந்தர மலையில் இருந்து விழுந்தது. அதாவது கங்கையானது ஒரு முகமாக வந்து இறங்கினால்,
பெரிய விசையோடே வருகிற மிடுக்கைக் கடல் தாங்காது என்று தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து
‘ கங்கை பல முகமாகப் பெருகும்படி அருள் புரிய வேணும்’ என்று பிரார்த்திக்க, அவன் ‘ அப்படியே ஆகுக’ என்று
அருள் கூர்ந்து கங்கையை நியமித்த வளவிலே கங்கை பல முகமாகப் பெருகிற்றாம்.
அதையே, கங்கா தேவியின் திருவடிகளிலேயே வணங்கிப் பிரார்த்தித்தனர் என்றும்
கங்காதேவியே ஆயிரம் முகமாக பிரிந்து வந்தாள் என்றும் கூறுவார் உளர்.

மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரம பக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமை செய்த
ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்து ஒழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்ம ஹத்தி சாபத்தைத் தொலைத்து
அருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். தவம் புரிந்துயர்ந்த மாமுனி கொணர்ந்த
என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர். ஒன்று பெரிய தவம் செய்து பகீரதன் கொண்டுவந்த கங்கை என்பது.
மற்றொன்று, பெரிய தவம் புரிந்து பிரம்மரிஷி என்று உயர்ந்த, விசுவாமித்திர முனிவர், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத்
தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அழைத்துக் கொண்டு போன போது கங்கையின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே
கங்கைக் கரை மேல் சென்றதால், தவம் புரிந்து உயர்ந்த மாமுனியினால், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன்
கரைமீது கொண்டு வரப்பெற்ற கங்கை என்ற விளக்கம் சொல்வதுண்டு.

எல்லா உலகங்களில் உள்ள எல்லா பொருட்களையும், பிரளய காலத்தில், தன்னுடைய திருவயிற்றிலே வைத்து காப்பாற்றியவனும்,
உபயவிபூதி நாதனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். “ஒண்சுடர் எய்ந்த உம்பரும் ஊழியுமானான்” என்றது
மேலுலகத்திற்கும் கீழுலகத்திற்கும் நாதன் என்று சொன்னது. உம்பரும் ஆனான் என்பதனால் மேலுலகத்திற்கு
நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ‘ஊழியுமானான்’ என்பதனால், காலம் நகரக்கூடியதான இவ்வுலகுக்கு
நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ப்ரஹ்மலோகத்தில் இருந்து நடுவே வழிபண்ணிக்கொண்டு அதற்குக் கீழ்ப்பட்ட
அந்தரிக்ஷலோகத்திலே வந்து இறங்கி, அங்கு நின்றும், பூமிப்பிராட்டி பொறுக்க மாட்டாமல் தடுமாறும்படி,
பூமியிலே வந்து பெருகுகின்ற கங்கையின் கரைமேலுள்ளது வதரியாச்சிரமம்.

பெரிய வேகத்தோடு வருகிற அலைகளை உடைய தெளிந்த தீர்த்தத்தை கொண்ட கங்கையின் கரைமேலே
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளி இருக்கிற கடல் வண்ணனான ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சிந்தித்துத்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறந்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை
நெடு நாள் ஆண்ட பின் ப்ரஹ்ம லோகத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர்.
எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன்கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள்.
தம்முடைய கவன ஸாமர்த்தியத்தால் இல்லாமல், எம்பெருமானுடைய இன்னருளால் செய்யப்பட்ட பாசுரம் எனபதை
பனுவல் என்ற வார்த்தையால் ஆழ்வார் சொல்கிறார்.

சிறிய திருமடல் 74:

நிறைய திவ்யதேசங்களைப் பற்றி சொல்லும் இடத்தில,
பாரோர் புகழும் வதரி என்று ஆழ்வார் கூறுகிறார்.

பெரியாழ்வார் :

பெரியாழ்வார் திருமொழி (4.7.9) பாசுரத்தில், பெரியாழ்வார் பத்ரிநாத் பற்றி சொல்லி உள்ளார்.
தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம்,
புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி
திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத்,
பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா,
அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா,
இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார்.

–————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருசாளக்ராமம் -ஸ்ரீ முக்திநாத் -ஸ்ரீ முக்தி நாராயண க்ஷேத்திரம்–

March 21, 2022

திவ்யதேசம் திருசாளக்ராமம் முக்திநாத் முக்தி நாராயண க்ஷேத்திரம்
மூலவர் ஸ்ரீ மூர்த்தி
உத்ஸவர்
தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசை வடக்கே திருமுகமண்டலம்
பாசுரங்கள் 12
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10
பெரியாழ்வார் 2

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.
நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
அதிக உயரம் மற்றும் வானிலை காரணமாக, இங்கு செல்வது மிகவும் கடினமாகும்.
கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது.
எனவே இந்த திவ்ய தேசத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.

திவ்யதேசம் பற்றி
முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில்,
முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த புனித தலமாகும்.
கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது.
எனவே முதலில் காட்மாண்டு அல்லது சீதாமரி சென்று அங்கு இருந்து, பொக்காராவை அடைந்து,
அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது தரை வழியாக ஜாம்சம் அடைந்து,
பின்னர் ஜீப் மூலம் முக்திநாத் சென்று அதன் பிறகு சுமார் அரை மைல் தூரம் மலையில் ஏறி முக்திநாதரை தரிசிக்கலாம்.
பொக்காராவில் இருந்து விமானத்தில் 20 நிமிடம் அல்லது தரைவழியாக செல்ல 9 முதல் 10 மணி நேரம் வரையில் ஆகும்.
சுமார் 160 கிலோமீட்டர் தூரம் மலை பிரதேசத்தில், கடினமான சாலைகளில் பயணிக்க வேண்டும்.
ஜாம்சம் என்ற இடத்தில இருந்து முக்திநாத் சுமார் 1 மணி நேர பயணம்.

காத்மாண்டு போகரா 201 கிலோமீட்டர் சாலை அல்லது வான்வழி சாலை பயணம் 6 மணி நேரம், வான்வழி 30 நிமிடம்
சீதாமரி ( பீகார் இந்தியா) போகரா 358 கிலோமீட்டர் சாலை சுமார் 8 மணி நேரம்
போகரா ஜோம்சம் 160 கிலோமீட்டர் சாலை அல்லது வான்வழி (வானிலையை பொறுத்து)
வான்வழி 20 நிமிடம், சாலை 8 முதல் 10 மணி நேரம் வரை
ஜோம்சம் முக்திநாத் 25 கிலோமீட்டர் சாலை 1 மணி நேரம்
முக்திநாத் முக்திநாத் கோவில் 2 கிலோமீட்டர் சாலை நடை பயணம் 30 நிமிடம்

இந்த திருத்தலம், நேபாளத்தில் ஓடும் கண்டகி நதி பகுதியில் உள்ளது.
அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும்.
கண்டகி ஆறு, 8000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் உள்ள அன்னபூர்ணா, தவுளகிரி மலை சிகரங்களிலில் இருந்து உற்பத்தி ஆகிறது.
நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து சுமார் 375 கிலோமீட்டர் தூரத்தில் கண்டகி நதிக்கரையில்
முக்திநாத் எனப்படும் இந்த திவ்யதேசம் அமைந்து உள்ளது.
இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண க்ஷேத்திரம் என்று ஒரு இடம் உள்ளது.
இந்த முக்தி நாராயண க்ஷேத்திரத்தை சாளக்கிராமம் என்று சொல்வாரும் உண்டு.
இமயத்தின் அடிவாரத்தில் ஹரிபர்வதம் என்ற மலை உள்ளது.
இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தி ஆகின்றது.
இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்று அழைக்க படுகிறது.
நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது.
அதுவும் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது.

இரண்டு சிறு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன.
கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார்.
சங்கு சக்கரம், கதை என்ற ஆயுதங்களுடன் எம்பெருமானும், ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியருடன் தரிசனம் தருகிறார்.
பல ரிஷிகளும், முனிவர்களும், ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் பற்பல எடுத்தாலும் தரிசனம் கிடைப்பதற்கு அரிய
எம்பெருமானான நாராயணன், தம்மைத் தரிசிப்பவர்களுக்கு முக்தி அளிப்பதால்,
அவருக்கு ‘முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோயில் கருவறைக்குள் சென்று, ஸ்ரீசாளக்ராம நாராயணனை மிக அருகில் தரிசித்து,
நாமே வஸ்திரம், பூ மாலை போன்றவற்றை அணிவித்து பூஜை செய்யலாம்.
கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள்
(108 பசுமாட்டின் தலை கொண்ட சிலை) கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, 108 திவ்யதேசங்களில், 106 திவ்யதேசங்கள் தான் இந்த பூவுலகில் உள்ளன
இருந்தாலும், திருப்பாற்கடல் மற்றும் பரமபத திவ்யதேச தீர்த்தங்களும் இங்கு கோமுக தீர்த்தத்தில் உள்ளன என்பது ஆகும்.
கோமுக தீர்த்தங்களிலும் நீராடலாம்.

108 வைணவ திவ்ய தேசங்களில், பரமபதம், திருப்பாற்கடல் நீங்கலாக,
பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு திவ்யதேசம் தான்.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று.
திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய
எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும்.
(இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

சாளக்ராமங்கள்

இந்த ஹரி க்ஷேத்திரத்தில் விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணிய
காலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த திருத்தலத்தில் உள்ள மூர்த்தியும் சாளக்கிராம வடிவத்தினர்தான்.
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும்.
இவைகளில் எம்பெருமான் மிகவும் உகந்து தானாகவே இங்கு வந்து வசிக்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.
இவைகள் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து
பலவிதமான சுருள் ரேகையுடன் பலவித ரூபங்களில் தனது அவதாரங்களை, பல மூர்த்திகளை,
பல வடிவங்களில் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
விஷ்ணுவின் பற்பல நாமங்களிலும், அவதார மூர்த்திகளாகவும் 68 வகை சாளக்ராமங்கள் உள்ளன என்று சொல்வர்.

இந்த சாளக்ராமங்கள் நாம் சேவிப்பதற்கு உகந்தவை ஆதலால், விஷ்ணு கோவில்களிலும், வீடுகளிலும் இவை வணங்கப்படுகின்றன.
இவைகளில் ஸ்ரீமந் நாராயணன் இருப்பதாக ஐதீஹம்.
இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து தினமும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.
சில சாளக்ராமங்கள் தங்க அல்லது வெள்ளி ரேகைகளுடன் கிடைக்கும்; அவை மிக உயர்ந்த பலன்களை அளிக்கவல்லது.

சாளக்ராமங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. அவைகளை,

வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ க்ஷேத்திரம்
கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு க்ஷேத்திரம்
பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண க்ஷேத்திரம்
மஞ்சள் சற்று மஞ்சள்-சிகப்பு நிற சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரம்
மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன க்ஷேத்திரம்
கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண க்ஷேத்திரம்
இன்றும் சில திவ்யதேச பெருமான்கள் சாளக்ராமங்களால் உருவானவர் என்று சொல்லப்படுகிறது.
திருவரங்கம், திருவனந்தபுரம் திவ்யதேச பெருமான்கள் பல்லாயிர கணக்கான சாளக்ராமங்களால் உருவானவை என்றும்
முக்திநாத் என்ற இந்த திவ்யதேச எம்பெருமான் ஒரே சாளக்ராமத்தால் உருவானவன் என்றும் சொல்லப்படுகிறது.

விற்பனை செய்யும் சாளக்கிராமம் வாங்குவதற்கு, சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம்
அதன் வர்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு.
சாளக்ராமம் குளம்படி உள்ளதாகவும், கருமை நிறத்துடனும், குளிர்ச்சி உள்ளதாகவும் வாங்க வேண்டும்.
பூஜை செய்யப்பட்ட சாளக்கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் நியதி.
பொதுவாக ஆண்கள் மட்டுமே சாளக்ராமத்தை தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்று நம் நூல்கள் உபதேசிக்கின்றன.
அதே போல், இனிமேல் நம்மால் சரிவர பூஜை செய்ய இயலாது என்ற நிலை வரும் போது,
அவைகளை பூஜை செய்ய முடிந்த மற்றவர்களுக்கோ, சரியாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கோ கொடுப்பது நலம்
என்று மாத்வாச்சார்யாரும் இன்னும் சில ஆச்சார்யர்களும் செய்ததாக சரித்திரம் சொல்கிறது.

சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

சாளக்ராம பூஜா பலன்கள்

இதே போல், இந்த சாளக்ராமங்கள் நிறத்திற்கு ஏற்ப பூஜைகளும், பலன்களும் வேறுபடும் என்றும் சொல்வார்கள்;
நீலநிறம், செல்வத்தையும், சுகத்தையும் கொடுப்பதாகவும்,
பச்சை பலம், தைரியம் கொடுப்பதாகவும்,
வெண்மை, ஞானம், பக்தி, மோட்சம் கொடுப்பதாகவும்,
கருப்பு, புகழ், பெருமை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பதாகவும், சாளக்ராமங்கள், துண்டிக்கப் பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும்
உடைந்திருந்தாலும் எரிந்து இருந்தாலும், தோஷம் இல்லை என்றும்,
அவற்றில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும் என்றும் சொல்வார்கள்.

சாளக்ராமங்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு ஆராதித்து, புனிதமான பொக்கிஷமாக குடும்பங்களில் பாதுகாக்கப்படுகிறது.
பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது, இதுவும் ஒரு அரிய சீதனமாக தருவதும் உண்டு.

சாளக்ராமங்களை பூஜை செய்யும் போது புருஷ சூக்தம் கொண்டு பூஜிப்பார்கள்; வீட்டில் சாளக்ராமம் இருந்தாலே புனிதமானது.
சாளக்ராமம் உள்ள வீடு வைகுந்தத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.
சாளக்ராம தத்துவ முக்தாவளி, சாளக்ராம திருமஞ்சன தீர்த்தம், கங்கை நதி தீர்த்தத்தை விட புனிதமானது என்று கூறுகிறது.

சாளக்ராம துவாரங்களில் எல்லா பித்ருக்களும் வசிக்கிறார்கள் என்றும், சாளக்ராம பூஜையினால் அவர்கள் மனம் உகக்கிறார்கள் என்றும்,
அதனால் ஒருவருக்குள்ள பித்ருக்கள் சாபமும், தோஷமும் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதே போல், ஸ்ரார்த்த காலங்களில் அவை பிதுர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க வல்லது.

தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) மற்றும் பூஜை செய்து, சாளக்ராமத்திற்கு நிவேதனம் கொடுத்து வந்தால்,
அதுவே மோக்ஷம் என்ற வைகுண்ட வாசம் கொடுக்க வல்லது.
மரண காலத்தில் சுய நினைவோடு சாளக்ராமத்தை மனத்தால் நினைத்தால், எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார் என்றும் சொல்வர்.
ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீ நரசிம்ம புராணமும் சாளக்ராம வழிபாட்டினை புகழ்கின்றன;
சாளக்ராமங்களை, துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பு என்கிறது.
துவாரகா சிலா என்பது, துவாரகையில், கோமதிநதி கடலில் கலக்கும் இடத்தில கிடைக்கும் சாளக்ராமத்திற்கு நிகரான புண்ணிய கற்களாகும்.

எந்த இல்லத்தில் சாளக்ராமங்கள் உள்ளதோ, அங்கு, பேய், பூதங்கள் நடமாடாது, அது ஒரு தபோவனம்.
தினமும் சாளக்ராமத்தை பூஜிப்பவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது.
சாளக்ராம தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷம் உட்பட, எல்லா பாவங்களில் இருந்தும் போக்க வல்லது.
சாளக்ராம பூஜை செய்பவனின் இல்லத்தை சுற்றி அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் நிற்கும்.
அந்த இல்லம் காசியை விட உயர்ந்தது, அந்த இல்லத்தில் செய்யும் தானம் காசியில் செய்யும் தானத்தை விட 100 மடங்கு உயர்ந்தது.
தினசரி சாளக்ராம ஆராதனையானது, பற்பல உயர்ந்த யாகங்கள் செய்த பலனையும்,
கோ தானங்களையும் செய்த புண்ணியம் கிடைக்கும். எம பயம் வராது, இருந்தால் விலகிவிடும்.

சாளக்ராம பூஜை செய்பவன், விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான், விஷ்ணு லோகத்தில் நிரந்தரமாக வாழ்வான்.
12 சாளக்ராமங்கள் ஒரு இல்லத்தில் இருந்தால், அது ஒரு திவ்ய தேசமாக கருதப்படும்.
12 சாளக்ராமங்களை ஆராதனை செய்பவனுக்கு கிடைக்கும் பலன் ஆனது, 12 கோடி சிவலிங்கங்களை 12 கல்ப காலம்
பூஜை செய்த பலனுக்கு நிகர் ஆகும். சாளக்ராமத்திற்கு நிகரானது, இவ்வுலகத்திலும் பாதாளத்திலும் ஸ்வர்கத்திலும் எதுவும் இல்லை.
விக்கிரக பூஜையை விட, சாளக்ராம பூஜையே உயர்ந்தது என்றும், பரிபூரணமான பலன்களை கொடுக்க வல்லது என்றும் சொல்லப்படுகிறது.

முன்காலங்களில், சாட்சி சொல்லும் போது, ‘ சாளக்ராமம் சாட்சியாக‘ என்று சாளக்கிராமத்தை
கையில் வைத்து கொண்டு சாட்சி சொல்வது வழக்கம். சாளக்ராம சந்நிதியில் ஒரு புழு இறந்தால் கூட அது மோக்ஷத்தை அடையும்.

ஸ்தல வரலாறு

வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள்
மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க
அதை ஏற்று எம்பெருமான் இந்த நதியில் நித்ய அவதாரம் செய்கிறார் என்று தினம் தினம்
சாளக்கிராம ரூபத்தில் அவதரித்து கண்டக நதிக்கு சிறப்பளிக்கிறார்.

ப்ரம்மனது வியர்வையில் தோன்றியவள், கண்டகி. அவள் கடுந்தவம் புரிந்ததை கண்ட தேவர்கள் அவளுக்கு வரம் அளிக்க வந்தபோது,
அவள் அவர்களை அவளுக்கு பிள்ளைகளாகும்படி வேண்டினாள்;
அது முடியாது என்றதனால், அவள் அவர்களை புழுக்களாக மாறும்படி சாபம் இட்டாள்.
கோபம் அடைந்த தேவர்கள், அவளை ஒரு ஜடமாக சபித்தனர்.
இதனால், பிரம்மன், ருத்ரன், இந்திரன் ஆகியோர் விஷ்ணுவை அணுகினார்கள்.
விஷ்ணு இரண்டு சாபங்களையும் நீக்க முடியாது என்றும், தான் சாளக்ராம க்ஷேத்திரத்தில் சக்ரதீர்த்தத்தில் வாசம் செய்வதாகவும்,
அங்கு தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாக தோன்றி, அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழ வேண்டியது என்றும்
கண்டகி நதி வடிவமாக அந்த கற்களில் பாய்ந்து வருவாள் என்றும் சொன்னார்.
இதனால் கண்டகியின் ஆசையும் நிறைவேறும், தேவர்களும் அப்படியே, தேவா அம்சமும் விஷ்ணு அம்சமும் பொருந்திய
சாளக்ராமங்கள் ஆவார்கள் என்றும், எம்பெருமான் திருவுள்ளபடி அவைகளை வழிபட்டவர்களும் எம்பெருமானுடன்
நித்யவாஸம் செய்யும் வைகுண்ட பிராப்தி அடைவார்கள் என்றும் கூறி மறைந்தார்.

கஜேந்திர மோக்ஷம் நடந்த இடமாகவும் இதனை சொல்வர். பிரம்மன் முதலானவர்கள் எம்பெருமானை அணுகியபோது,
அப்போது அவர், முதலை ஒன்றும், யானை ஒன்றும் இங்கு மோக்ஷம் அடைய போகின்றன என்றும்,
அவை இறந்தபின், அந்த உடல்களில் தேவர்கள் வஜ்ரகீடம் என்ற பூச்சிகளாக வாழவேண்டும் என்றும் அறிவித்தார்.
கஜேந்திர மோக்ஷ சரித்திரத்தின்போது, எம்பெருமான் முதலையின் வாயினை சக்கரம் கொண்டு அறுத்து மோக்ஷம் அடைவித்ததினால்,
அந்த நதியில் உள்ள எல்லா கற்களும் விஷணுவின் சக்ர சின்னம் கிடைக்கப்பெற்று துவாரகாசிலா என்ற பெயரும் பெற்றது.
இந்த பிரதேசம் ஹரி க்ஷேத்திரம் என்றும் இங்குள்ள சாள மரங்கள் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு கற்களாக மாறி,
சாளக்ராமங்கள் ஆயின என்று சொல்வர்.

கண்டகி நதியில் ஸ்நானம் செய்து முக்திநாதனை பக்தியுடன் வழிபடுபவர்கள், இந்த பூமியில் சுகமாக வாழ்ந்து
பின்னர் வைகுந்தத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுகிறார்.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாக தலைக் கட்டுகிறார்.
திருமங்கையாழ்வார் ராமனாக காண்கிறார்.
ஸ்ரீ இராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்,
சாளக்கிராம உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்,
ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய். (பெரியாழ்வார் திருமொழி, 2.9.5)

கண்ணபிரான் தன் தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து,
மீண்டும் முன்பு போல் பிறர் வீடுகளில் புகுந்து, பால் வெண்ணை முதலியவற்றை எடுத்து குறும்புகள் செய்ய,
மேற்கு பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த ஒரு ஆயர் குலத்து பெண், யசோதை அருகிலே வந்து,
தன் வீட்டில் கண்ணன் செய்த குறும்புகளைச் சொல்லி முறை இடுகின்றாள்;
இங்கு ஆழ்வார் கண்ணனை குறிப்பிடும் போது, சாளக்ராமத்தில் நித்யவாஸம் செய்பவன் என்கிறார்.

இங்கு ஆழ்வார் சொல்லும் கண்ணனின் குறும்பு, ஆயர் குலத்துப் பெண் வீட்டில், அவள் பாத்திரத்தில் பாலை எடுத்து,
அடுப்பின் மேல் வைத்து, பக்கத்து வீட்டிற்கு சென்று நெருப்பு வாங்கி வருவதற்குள், கண்ணன் பாலை குடித்து,
பாத்திரத்தை உருட்டி விட்டு சென்று விட்டான் என்பதாம்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தட வரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும் கடி நகரே. (பெரியாழ்வார் திருமொழி 4.7.9)

தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம்,
புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணர்களாய் தோன்றி
திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத்,
பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா,
அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா,
இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம்
கண்டமெனும்கடினகர் என்கிறார்.

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி 1.5-ஸ்ரீஸாளக்ராமம் என்னும் திவ்யதேசத்திலே தான் எழுந்தருளியதை,
எம்பெருமான் ஆழ்வாரது ஞானக் கண்ணுக்குத் தோற்றுவிக்க,
ஆழ்வாரும், இத்திருமொழியில், தமது திருவுள்ளத்தை அழைத்து ‘நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேருவோம், வா’ என்கிறார்.

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்து உகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே. (1)

தன்னுடைய அடியவர்களின் விரோதிகளை அழிப்பதற்காக, எம்பெருமான், பலபல மிருகங்கள் நிறைந்து கிடந்த கொடிய காட்டைக் கடந்து,
மலைகளைக்கொண்டு கடலிலே பாலம் கட்டி, கடலைக் கடந்து, இலங்கை வந்து, யுத்த பூமியில்,
வில்லையும் அம்புகளையும் துணையாகக் கொண்டு இராவணனது தலைகள் பத்தையும் அறுத்து உகந்த
இராமபிரானுடைய ஸ்ரீஸாளக்ராமம் என்னும் திவ்யதேசத்தை அடைந்திடு என்று தன்னுடைய நெஞ்சிற்கு சொல்கிறார்.

கடம் சூழ்க் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்,
உடன் சூழ்ந்தெழுந்த கடி இலங்கை பொடிய வடிவாய்ச்சரம் துரந்தான்,
இடம் சூழ்ந்தெங்கும், இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்,
தடம் சூழ்ந்தெங்கும் அழகாய சாளக்கிராமமடை நெஞ்சே. (2)

விசாலமான மேலுலகத்தில் உள்ள தேவர்கள் பூமியெங்கும் வந்து பரவி ஆச்சர்யத்தக்க புஷ்ப வாஸனைகள் வீசுகின்ற
நீர்நிலைகளால் சூழப்பட்டு எல்லாப் பக்கங்களிலும் அழகை உடைய சாளக்கிராமம் அடை நெஞ்சே என்று
இங்கும் ஆழ்வார் தன் நெஞ்சினை அழைக்கிறார்.
அந்த சாளக்ராமம், மத ஜலம் வழிகின்ற, மலைகள் வடிவெடுத்து நடந்தது போல் உள்ள யானை கூட்டங்களும், குதிரை கூட்டங்களும்,
மிகுந்த சப்தத்தை உண்டாக்கும் பெரிய தேர்களும் காலாட்களும் ஆகிய இவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து
பெரிய கிளர்ச்சியோடு தோன்றின இலங்கை, சுடுகாடு ஆகும்படி கூர்மையான அம்புகளை உபயோகித்த
சக்ரவர்த்தி திருமகன் எழுந்தருளி இருக்கும் இடம் ஆகும்.

உலவுதிரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும் *
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான், வென்றி விறல் ஆழி
வலவன் * வானோர் தம் பெருமான், மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் * சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே! (3)

உலாவுகின்ற அலைகளையுடைய கடலும், மலைகளும், காலம் முதலாக எல்லா பொருட்களும், எட்டுத்திசைகளும்,
சந்திரனும் ஸூர்யனும், இருட்டும் ஆகிய இப்பொருள்கள் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவனும்,
வெற்றியையும், மிடுக்கையும் திருவாழியை வலத் திருக்கையிலே உடையவனும்,
தேவாதி தேவனும் தன்னுடைய அடியவர்களை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் விஷயத்தில் எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய
எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம், நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தி சாளக்கிராமம் ஆகும்
அதை அடை நெஞ்சே! என்று ஆழ்வார் சொல்கிறார்.

“ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம” என்று வேதம் சொல்வது போல்,
எம்பெருமான் ஜகத்ஸ்வரூபி என்பதை சொல்லும் பாடல்.
பகவத் பாகவத விஷயம் என்றால் பொறுக்கமாட்டாத ராக்ஷசர்களுக்கு எப்போதும் தீங்கு செய்பவன் என்றும் ஆழ்வார் சொல்கிறார்.

ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய,
தேரா அரக்கர்த் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான்,
பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்,
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே. (4)

திருஊரகம் என்ற திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும், திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும்,
ஸ்ரீராமாவதாரத்தில், வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து, ‘பரமபுருஷனான பெருமானோடு நாமோ எதிரிடுவது’ என்று
விவேகம் இல்லாமல் அறிவு கெட்டு போரிட்ட அரக்கர்களையும் அவர்களது சேனை படைகளையும் வெற்றி கொண்டவனும்,
ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண் வளர்ந்தது அருள்பவனும்,
ஆயிரம் ஆயிரம் நாமங்களை யுடையவனும், நெருங்கி இருக்கிற சிறகுகளை உடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற
திருத்துழாய் மாலையை உடையவனுமான எம்பெருமான், தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே
சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அதனை அடை நெஞ்சே என்று ஆழ்வார் சொல்கிறார்.

தாரா என்ற பெயரிலே இன்றும் ஒரு விமானசேவை இங்கு உண்டு
வற்றா வரு புனல் சூழ் பேரான் –
இன்றும் திருப்பேர் நகரில் வற்றாத காவேரி நீர் தேங்கி இருப்பதைக் காணலாமே

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான், விளங்கு சுடர் ஆழி விண்ணோர்ப் பெருமான் நண்ணார் முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஒன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே. (5)

மேல் விழுந்து வந்து ஆரவாரம் செய்தவளான சூர்ப்பணகையின் பிலம் போன்ற பெரிய வாயைத் திறந்து கொண்டு கதறும்படியாக,
அவளுடைய மூக்கை, இளையவனைக் கொண்டு, கூர்மையான வாளாலே அறுத்தவனும்,
பிரகாசிக்கின்ற ஒளியையுடைய சக்கரத்தாழ்வானை திருக்கரங்களில் ஏந்தியவனும்,
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும், வேகத்துடன் ஆரவாரம் செய்து வந்த கன மழையை, எதிரிகளான இந்திரன்
முதலானவர்களின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை காப்பதற்காக, கோவர்த்தனம் என்கிற ஒரு மலையை ஏந்தித்
தடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற
ஸாளக்ராமத்தை அடை நெஞ்சே என்று ஆழ்வார் பாடுகிறார்.

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவிற் குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகேழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (6)

தாய் போல் வந்த பூதனையின் உயிரையும், தயிரையும் வெண்ணெயையும் ஒன்று போலவே அமுது செய்தவனும்,
யாசிப்பதற்குத் தகாதவனான எம்பெருமான், பரிசுத்தமும் மிக அழகிய வடிவத்தை உடைய வாமனனாக வந்து
மாவலி சக்ரவர்த்தியிடம் இப்பொழுதே தனக்கு மூன்று அடிநிலம் வேண்டும் என்று யாசித்து,
அவன் நீர் வார்த்து கொடுத்தவுடன், எல்லா உலகங்களையும் தாவி அளந்தவனும்,
காயாம் பூப் போன்ற நிறம் உடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை சென்று
அடை நெஞ்சே என்று தன்னுடைய நெஞ்சத்திற்கு உபதேசிக்கிறார்.

ஏனோர் அஞ்ச வெம் சமத்துள், அரியாய்ப் பரிய இரணியனை,
ஊன் ஆர் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இரு சுடராய்,
வானாய்த் தீயாய் மாருதமாய், மலையாய், அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானும் ஆனான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (7)

எதிரிகளான அசுரர்கள் பயப்படும்படியாக, நரசிங்கமூர்த்தியாகி, மிக பெருத்த உடலையுடைய ஹிரண்யனை
கடுமையான சண்டையில், சதை, எலும்பு, நிறைந்த மார்பு கிழியும்படி செய்த ஒருவனும்,
இப்படி செய்தவன் தானே, சந்திர, சூரியர்களாய், நெருப்பாய், வானாய், காற்றாய், மலைகளாய் அலையாய்
எல்லா உலகங்களுமாய் இருப்பவனும், ஆச்சர்யமான திவ்ய மங்கள விக்கிரகத்தை உடையவனுமான
எம்பெருமான் எழுந்தருளி உள்ள சாளக்கிராமத்தை அடை நெஞ்சே என்று ஆழ்வார் உரைக்கிறார்.

வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று,
என் எந்தாய்! சாபம் தீர் என இலங்க அமுதநீர்த் திருமார்பில் தந்தான்,
சந்தார்ப் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே! (8)

செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும் சுட்ட சாம்பலையும் உடம்பில் பூசிக்கொண்டு,
ஓட்டைகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
பரமசிவன் எம்பெருமான் அருகே வந்து, தன்னுடைய ப்ரஹ்மஹத்தி சாபத்தை தீர்த்து கொடுக்குமாறு வேண்டியபோது,
தனது திருமார்பில் இருக்கின்ற அம்ருத ஜலத்தை அளித்தவனான எம்பெருமான், வாசம் செய்யும் சந்தனமரங்கள்
நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை சென்று அடை என்று தன் நெஞ்சுக்கு சொல்கிறார்.

தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும்,
அண்டா எமக்கே அருளாய் என்று அணயும் கோயில் அருகு எல்லாம்,
வண்டார்ப் பொழிலின் பழனத்து வயலின் அனயலே கயல் பாய,
தண்டாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (9)

தொண்டு செய்பவர்களான பாகவதர்களும், நித்யஸூரிகளும், பூணுலுடன் கூடின மார்பை உடைய பிராமணர்களும்
‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலிலும்,
சுற்றுப் பிரதேசங்களெங்கும் வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில் கழனிகளிடத்துள்ள
கயல் மீன்கள் வந்து துள்ள, அதனால் குளிர்ந்த தாமரை மொக்குகள் முகம் மிளிரும்
ஸாளக்ராமத்தை நெஞ்சே!, அடை என்று ஆழ்வார் சொல்லும் பாடல்.

தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை,
காரார்ப் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஓலி செய் தமிழ் மாலை,
ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நல் நாடு அரசு ஆள,
பேர் ஆயிரம் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே. (10)

இவ்வுலகத்திலே விவேகம் உள்ளவர்கள் எல்லோரும், நித்யஸூரிகளுடைய கைங்கர்யம் செய்யும் ஸ்ரீவைகுண்டத்தை
அரசாளும் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:
அல்லது, மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார்
ஸாரஸ பறவைகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் விஷயமாக
அருளி செய்த தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே வாயில் வந்த படி சொல்லுங்கள்.
எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் சம பலன் தரும் என்கிறார்.
இப்பாசுரங்களை வாயில் வந்தபடி தப்புந்தவறுமாகச் சொன்னாலும் பலன் தரும் என்று ஆழ்வார் கூறி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

——————–

அவதாரிகை

நன்மைகள் உள்ளது தத் தலையாலே என்று இருக்கையும் –
தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்-
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –

இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு
ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –
ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வே நாநீகே நமர்திதும் -என்று முதலிகள் –
நான் அழிக்க நான் அழிக்க-என்று சொல்லுமா போலே –
வாடையும் ராத்ரியும்-நான் நான் என்று நலிகிற படி –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

துழா நெடும் சூழ் இருள் என்று –
இருள் துழாவிப் கொண்டு வருகிறபடி
சத்தையை அழித்துக் கொண்டு வருகிற படி –
பதார்த்தங்களைத் துழாவிக் கொண்டு வருகிறபடி என்றுமாம் –
பற்றுகிற இடம் விடாதே மேல் விழுந்து பற்றுகிற படி –

சூழ் இருள்-
ஓர் அருகே ஒதுங்க என்றாலும் ஒண்ணாத படி சூழுத்துக் கொண்டு வாரா நின்றது –
தீர்க்கயாமா த்ரியாமா-என்று இறே பிரிந்தார் எல்லார்க்கும் வார்த்தை –

இருள் என்று –
வருகிற போது சன்யாசியாய்
கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே

தம் தண் தராது பெயரா –
தன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை யாசைப்பட்ட இத்தைக் கொண்டு –

எழா நெடு வூழி–
பேராத கல்பம் –
மலையாளர் வளைப்பு போலே வைத்த கால் வாங்காதே இருக்கிறபடி

எழுந்த-
தோற்றின –
சம்வர்த்த பிரளய கல்ப என்னும் படியே
பிரளயமாய்க் கொண்டு பெருகா நின்றது-
தயமாந மநா -என்று சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே -அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு
அவன் பக்கல் கிருபை இல்லாமையால் இப்பிரளயத்துக்கு முடிவு இல்லை

விக்காலத்தும்–
ஸீதாதா வேண் யுத்க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி
தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே பிணைக்கப் புக்க தசையாய் இறே இருக்கிறது

ஈங்கு இவளோ –
இப்படிப் பட்ட இவள் –
அவர்களையும் அவர்கள் தசையும் போலேயோ-
இவளும்
இவள் தசையும்

அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இறே இருப்பது –
இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி –

அங்கு பிரகிருதி அளவிலே –
இங்கு ஆத்மா அளவிலே –

அங்கு நீர் பிரளயம் –
இங்கு ராத்திரி பிரளயம்

மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு –
இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது

அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே –
இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் –
வழுவாத நெடும் துன்பத்தவள் என்று இரங்குகிறிலர்-

துக் கேந புபுதே ஸீதாம்-
திருவடி இவள் தாபம் கண்டு பிராட்டி என்று அறியாதாப் போலே
அறிதல் ஒழிதல் செய்யும் அத்தனை இறே –

கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் –
இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும் பகவத் ருசி அடியாக வருகிற துக்கமாகையாலே –
பகவத் ருசி மாறுவது
சைதன்யம் இல்லையாதல் –
விலக்ஷணம் அன்றியிலே ஒழிதல் செய்யில் இறே

ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய
ஹேயத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ

பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ –
ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு பரதந்த்ரரோ

எங்களுக்குப் புறப்படில் குற்றம் –
தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –

வரில் எங்கள் சேஷத்வம் அழியும்
வராது ஒழியில் தம்முனைய சேஷித்வம் அழியும் –
சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-

பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது –
ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது –

வைதர்ம யன்நேஹ வித்யதே -என்னும் படியே
பெருமாள் தோள் வலியை நினைத்த படியால் சர்ப்பத்தின் வாயிலே புக்கால் போலே
ராவண சந்நிதியில் இருந்து -த்வன் நீச சசவத் ஸ்ம்ருத-என்று
சசத்தோடு உன்னோடு வாசி என் என்று சொல்லக் கடவள் இப்போது
சர்வேஸ்வரனுடைய ரக்ஷையை அதி சங்கை பண்ண வேண்டும் படி காணும் ஸ்வரூப விபரியாஸம் இருந்த படி –

இவளுக்கு அவன் பக்கல் குண ஞானமே காணும் உள்ளது
ஸ்வரூப ஞானம் இல்லை –
ஸ்வரூப ஞானம் உண்டாகில் அத்தலை பட்டதும் அறியாளோ –

அத்தலை –
நைவ தம் சாந்ந மஸகான்ன-ஆயிறே கிடக்கிறது
த்வத் கதே நாந்தராத்மனா -என்னும்படியே
குளப்படி கலக்கினால் போலே அன்று இறே-கடல் கலங்கும் படி

அத்தலை
ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யே -என்று இருந்தால் –
இத்தலை –
நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இறே இருப்பது
இரண்டு தலையும் அந்யோன்யம் அபேக்ஷிதமாய் இறே இருப்பது-

இன்றாக நாளையாக இத்யாதி –நான்முகன் -7-

நின் அருள் என்பாலதே-
உன் கிருபை என் பக்கல் அதே -அதில் சந்தேகம் இல்லை –

நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே–
சேஷ பூதனாய் உன்னை ஒழிய ஸ்திதி இல்லாமையால் –
உனக்கு சேஷ பூதனை ஒழிய சேஷித்வம் இல்லாமையால்
இரண்டுக்கும் அடி இது தான் என்கிறது –

நாற்றங்காலை ஒழிந்த நாராயணன் இல்லாமையால் –
நாராயணன் என்று ஸ்வரூபத்தையும் குணத்தையும் சொல்லுகிறது

குறைவாளனை ஒழிய நிறைவாளனாக மாட்டான் –
சேஷ பூதனை ஒழிய சேஷியாக மாட்டான் –

இரங்கார் –
வாராது ஒழிந்தால் -பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ

அம்மனோ –
புலி என்னுமா போலே –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி

இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-
ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று
புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –
ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்-
அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –

ஓ என்று
க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –
ஆசை என்றுமாம் –

இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக கடலை யடைத்து-
இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு
குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி
மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று
எம்பார் அருளிச் செய்தார் –

இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -21-30–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 17, 2022

அவதாரிகை

இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக
(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே
(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )
நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-
ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது

(ஏழு ரிஷபங்கள் அடக்கி
நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்
துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும் )

என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க
ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )
மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை -ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் )
(ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார் –

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி -எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
முதல் பாசுரம் இதுவும் இறுதி பாசுரமும் தாமான தன்மை —
அகத்துறை சொல்ல வேண்டாம் என்றும் சொல்வர் சிலர் –

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்ய ஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள் தோறும் கடைந்து)
சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையை யுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற மகளான
நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்
(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )

மாலைக்கு நன்மை யாவது
அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை
அனுரூபமாய்
புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )

சூட்டு -திருமுடி சாத்தாய்
மாலை -தோளுக்கு விடுவதாகவும்
(மூன்று முடிக்கு உரிய அரசு
பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே
வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்
அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்

தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது
த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்
(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் (

ஏந்தி
பாரதந்தர்யத்தால்
யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )

விண்ணோர்கள்
பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்

நன்னீர் ஆட்டி
அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )

அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய்
சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே
(வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு -இத்யாதி
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )

அங்கு
அந்த நித்ய விபூதியில்

விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு
அங்கே சென்ற பின்பு
போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )

ஓர் மாயையினால்
அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான
தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே
மாயா வாயுனம் ஞானம்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து

இமிலேற்று வன் கூன் கூட்டிடை ஆடின கூத்து
ககுத்துக்களை யுடைய எருதுகளின்
வலித்தாய்
வளைந்த கொம்புகளின் நடுவே
வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –
பிரபலரான கோப குலத்தில் பிறந்த
நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது
(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே
தயிர் பால் சம்சாரி
வெண்ணெய் முமுஷு
நெய் முக்தன் )
இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து
முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி
ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து –
ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக

உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –
அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி
நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை
பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்

சம்சாரம் கழித்து –
உண்டியே உடையே உகந்து திரியாமல்
அவஸ்தையைக் கழித்து
ஆகதோ பரமபதம் புகப் பெறாமல்
ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க
இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் –
எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே

அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து
கோட்டிடை இத்யாதி-
ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்
அவஸ்தா சப்தகம் போக்கி
கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள்
பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்

அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே
நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்

பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்
ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை -அடலாயர் கொம்பு
அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் -கொம்புக்கு இரண்டும் உண்டே
இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்
என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று

————–

அவதாரிகை

இப்படி ஈஸ்வரனுக்கு அபிமத விஷயராய் இருக்கிற இவர் பக்கலிலே
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த வித்வத் அபிமானி ஜனங்களைக் குறித்து
உங்கள் படிகள் பரஸ்பர அசங்கதங்களாய் இருந்தன வென்று
பார்ஸ்வத்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
மதி யுடன்படுவதற்குக் களிறு வினவி வந்து
குறையுற்ற தலைமகனை
தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல்குரவும் செல்வமும் -6-3-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்)
தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன–கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது
உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்த மில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமை மிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான்புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைத்தது?

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை
கைக்குப் பரிகரம் ஆயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை
நாட்டுக்கு வார்த்தை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே யானை போந்ததோ
என்று வினவா நிற்பது

ஐயர் ,
ஐயர் -இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது

புள் ளூரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன
பெரிய திருவடியை மேற்கொண்டு
எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற
ஈஸ்வரனுடைய விபூதியிலே
எக் காலத்திலும் நடை யாடாததான

தம்மிற் கூடாதன
தன்னில் தான் சேர்த்தி அற்றன

வம்பார் வினாச் சொல்லவோ
நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ

வம்பார் வினா -என்று
புதுமையால் மிக்க வினா என்னலுமாம்

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களைப் பெரிய புனத்திலே உடையவர்கள் வைத்தது –

(இந்திரியங்கள் -தந்தியான யானை
ஞானம் என்ற அம்பு கொண்டு அடக்கப் பார்த்தோம் –
கையிலே இருக்கும் தழையை வில்லாகக் கொண்டு அடக்கவோ )

இத்தால்
கொம்பார் தழை கை -என்கையாலே
விஷய ப்ரவாஹங்கள்
கை விட்டதில்லை -என்றபடி

சிறு நாண் எறிவிலம் -என்கையாலே
ப்ரணவ தநுர் விஷ்பாரித ஸ்வர
மாத்ரமும் இல்லை என்றபடி –

(பிரணவம் தனுஷ் -ப்ரஹ்மம் லஷ்யம் -ஞானம் கொண்டு விட வேண்டுமே
ஆத்மா அம்பு -மூன்று மாத்திரை உள் அட வாங்கி விட வேண்டுமே
மூன்றரை மாத்திரை ஸ்வரமும் இல்லையே
ஸ்வரூப ஞானத்துக்கு பிரணவ தனுஸ் வேணுமே )

வேட்டை கொண்டாடு-என்கையாலே
ஸம்ஸார அந்தகாரத்திலே -பாலைவனத்தில் –
துஷ்ட ஸத்வமான
ராக த்வேஷ
லோப மோஹாதிகளுடைய
நிரஸனத்திலே ஒருப்பட்டோம் நாங்கள் என்கிற கொண்டாட்டமே உள்ளது என்றபடி

அம்பார் களிறு வினவுவது -என்கையாலே
ஞான சர வித்தமாய் இருக்கச் செய்தே
இந்த்ரிய தந்தியானது விஷய அடாவீ வித்ருதமாயிற்று
என்று தத் அநுயானம் பண்ணிற்று என்கிறது

(தத் அநுயானம் பண்ணிற்று -இந்திரியங்கள் போன வழியிலே போகிறோமே
சதுர் தந்து -நான்கு கொம்பு உள்ள மிருகங்கள் -ராமாயணம் சொல்லுமே
சம்சாரம் மரம் தலை கீழ் -படைக்கும் பிரம்மா மேல் இருப்பதால்
இத்தை வெட்டிச் சாய்க்க
அஸங்கம்-பற்றின்மை வைத்தே வெட்ட வேண்டும் -திடமான வைராக்யம் வேணும் )

ஐயர் ,-என்று
ஞாத்ருத்வ உத்கர்ஷத்தாலே வந்த கௌரவ்யதை இருந்தபடி என்கிறது

புள் ளூரும் கள்வர் –
வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய்
(வேதம் நான்காய் -வேதம் தந்தவனும்
வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே )
யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-
முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன –
ஸ்வாதந்த்ர கடினையான பூமியிலே ஒரு காலத்திலும் நடையாடாதே
பரஸ்பர சங்கதி அற்று ப்ரயோஜன பர்யவசாயி அன்றியிலே

வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
அபி நவமான ப்ரஸ்னத்துக்கு பிரதி வசனம் பண்ணுகைக்காகவோ
ஈஸ்வரன் தனக்கு போக சக்திக்கு உறுப்பாகத் திருத்தி நோக்குகின்ற
இத் தேசத்திலே
(புனம் காத்து -நம்மைத் திருத்தி – இசைவித்து நின் கண் வேட்க்கை எழுவிக்க )
தனக்கு நிர்தேச காரிகளாய் இருக்கிற எங்களை நியமித்து வைத்தது என்று
ஞாத்ருத்வ ஆபாஸத்தாலே துர் அபிமானிகளான புருஷர்களைத் திருத்துக்கைக்காக
பார்ஸ்வத்தரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன ஹித வசனத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –
அவதாரிகை
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே ஈடு பட்டு இருக்கிற படியைக் கண்ட பாகவதர்கள்
தடுமாறுகிற படியைச் சொல்லுகிறது
கலந்து பிரிந்த தலைமகள் தோழிமாருடனே புனம் நோக்கி இருந்த இடத்தே
கையிலே தழையைக் கொண்டு சென்று
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்க அவனை நிஷேதிப்பாரைப் போலே
இடம் கொடுத்து வார்த்தை சொல்லுகிறாள் –

வியாக்யானம்
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் சுண்ணாம்பு என்பாரைப் போலே
தழையை முறித்துப் பிடித்துக் கொண்டு இவர்கள் இருந்த புனத்தே சென்று
இங்கனே ஓர் ஆனை அம்போடே போந்ததோ என்று கேட்டான்
கொம்பார் தழை கை
கையிலே தழையைக் கொண்டு சென்றான் தன் ஆற்றாமையை அறிவிக்கைக்காக –
நீர் ஒன்றை நினைத்து இருந்தீர்
அது விபரீத பலத்தைப் பலியா நின்றது
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே உங்களைப் பிரிந்து நான் உறாவினேன் -என்கைக்காகக் கொடு நின்றான் இவன் –
அது உன் கையிலே ஸ்பர்சத்தாலே தளிரும் முறியுமாய் சத சாகமாகா நின்றது
பாவியேன் உம்முடைய ஆற்றாமை காட்டுகைக்காகக் கொடு வந்தீராகில் கொம்பிலே காட்ட மாட்டு கிறீலிரே –
பிறர் இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் உள்ளது
உம்முடைய கைப்பட்டாருக்கு வாட்டம் யுண்டோ
கொம்பாய் உம்முடைய கையிலே இருந்தோம் அல்லோம்
கொடியாய் உம்முடைய தோளில் அணைந்தோம் அல்லோம்
நாங்கள் என்ன இருப்பு இருக்கிறோம் தான் –

வேட்டை கொண்டாடு
வேட்டைக்குப் போந்தானாக வாயிற்றுச் சொல்லுகிறது
வில்லோ என்றவாறே தழையைக் காட்டா நின்றான்
கையைப் பார்த்தவாறே நாண் தோய்ந்த தழும்பும் கூட இன்றியே இரா நின்றது

சிறு நாண் எறிவிலம்
இப்போது கையிலே வில் இல்லாமையே அன்றிக்கே முன்பு விற் பிடித்த தழும்பு கூடக் கண்டிலோமீ
இவர்கள் தான் வீர பத்னிகள் யாகையாலே கையைக் கண்டபோதே அறிவார்கள் ஆயிற்று
அன்றியே
சிறு நாண் எய்யப்படுவதான வில்லை யுடையீர் அல்லீர் என்று

ஒரு கதிர் போகில் ஜகத் உப ஸம்ஹாரமாம் படி யன்றோ எங்கள் நிலை

இவ்வான் புனம்
அவனுடைய உபய விபூதியோ பாதியும் பரப்புப் போராதோ எங்கள் புனம்
எங்களுக்குக் கிட்டாருக்குத் தான் உத்தரம் சொல்லுகைக்கு அவசரம் யுண்டோ
எங்கள் கார்யமே போரும் காணும் என்கிறார்கள்

இத்தால்
ஸம்ஸார ஜன்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது
பகவத் பிரவணர் படியைக் காண்கையே இறே –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி கண்ணனுக்கு அபிமத விஷயமாய் இருக்கிற இவரில்
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த ஆபாஸ வித்வஜ் ஜனங்களைக் குறித்து
உங்கள் படி பரஸ்பர அசங்க தங்களாய் இருந்தன என்று ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
உடன் படுத்தக்
களிறு வினவ வந்து குறையுற்ற தலைவனைத் தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வியாக்யானம்
ஒரு வியாஜத்தால் அபிமத விஷயத்தைக் கிட்டுவாரைப் போலே தளிருள்ள தழையை முறித்துப் பிடித்து
இங்கு ஓர் ஆனை போந்ததோ என்று வினவிக் கொண்டு நின்றான்
அவனைப் பரிஹஸித்துக் கொண்டு சொல்லுகிறாள் –

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரமாயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே சிறு நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே ஓர் யானை வந்ததோ
என்று வினவப் பாரித்தது

ஐயர்
இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இரா நின்றது

புள்ளூரும் கள்வர் தம் பாரகத்து என்றும் ஆடாதனர்
புள்ளூர்ந்து வஞ்சித்துத் திரிகிற ஈசுவரனுடைய விபூதியில் நடையாடுமது அல்ல

தம்மில் கூடாதன
தம்மில் தான் சேர்ந்தன அல்ல

வம்பார் வினாச் சொல்லவோ
ஆரோ கேட்ட உடனே நிஷ் பிரயோஜனமாக மறு மாற்றம் சொல்லவோ

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களை இந்தப் பெரிய புனத்திலே வைத்தது
நமக்குள்ள சேஷிகள் –

————-

அவதாரிகை
இப்படி ஹித வசனம் கேட்டுத் திருந்தின ஞாதாக்கள்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சம் துவக்குண்டு சொல்லுகிற பாசுரத்தை
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைமகன் குறைவற உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே -தலைவன் குறை யுற உரைத்தல் –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப்புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப் புனத்தினருகிலே வழிச்
செல்லுகிற பாவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியை யுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் காடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனமோ
உங்கள் வேலிக்குள்ளே அகப்பட்டுத் திருத்துண்டு
விளைந்து கிடக்கிற புனமோ

புனத் தயலே வழி போகும்
அப்புனத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
அகப்பட்டால் தப்ப மாட்டாத பாபத்தைப் பண்ணின என்னுடைய நெஞ்சமோ

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நீளமான பிறவி அழகை யுடைய
உங்கள் காவலுக்கு விஷயம் சொல்ல வேணும்
புனம் விட்டு அகலாதவோ பாதி
என் நெஞ்சம் விட்டு அகலுகிறிலீர் என்று கருத்து

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை
சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

(கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –73-)

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக விபூதியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய்,
திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீராய் இருக்கை

இவையோ நும் இயல்வுகளே
பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று
தன் குறையற யுரைத்தானாயிற்று

இத்தால்
புனமோ என்று
உம்முடைய அநந்ய சாதனத்வாதி மர்யாதைக்கு உட்பட்டு போக
உன்முகமாம் படி திருத்துண்ட இவ்விபூதி ப்ரதேசமோ என்றபடி

புனத்தயலே என்று தொடங்கி
இதனுடைய பரிசர வர்த்தியான சாதன சரணியாலே நடக்கும்
எங்கள் நெஞ்சோ என்றபடி –

(மனசால் தியானித்து -உபாயாந்தரங்கள் ஆகிய வழியிலே
புனம் -சிந்தை அற்று -நெஞ்சு -சிந்தனை அன்றோ
அஜடமாய் இருந்தால் தானே கார்யகரம் ஆகும் )

இவ்விடத்தில் அருவினை -என்றது
விடமாட்டாத பாவ பந்தத்தை

மகளிர் என்று தொடங்கி
பாரதந்த்ர ஏக நிரூ பணீயமான ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடைய
உங்களுக்கு நியாம்யம் ஏது என்று அருளிச் செய்ய வேணும் என்றபடி

புண்டரீகம் இத்யாதி
ஸ்வாமித்வ
வாத்ஸல்ய
ஸூ சகமான கண் அழகை யுடையவனாய்
(செவ்வரியோடும் அந்த நீண்ட பெரியவாய கண்கள் இவற்றைக்காட்டுமே )
உத்துங்க லளிதனான கிருஷ்ணனுடைய அப்ராக்ருத பரம வ்யோம வாசிகளான
ஸாத்ய தேவர்களுடைய சங்கத்தோடே சாத்ருஸ்யம் சொல்லலாம்படி
விண்ணுளாரிலும் சீரியராய் வைத்து
மார்க்க அந்தர காமிகளையும் வர வலித்துக் கொள்ளும்படியான
வியாபார வை லக்ஷண்யம் இருந்தபடி என் என்று
திருந்தின விலக்ஷணர் பண்ணின நிந்தா ஸ்துதியை அருளிச் செய்தாராயிற்று –

(நிந்தா ஸ்துதி -நேராக ஸ்தோத்ரம் பண்ணவில்லையே –
கிளைவித் தலைமகன் ஆழ்வாரைப் புகழ்ந்த படி )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இவனை நோக்கி இவர்கள் சில வக்ர யுக்திகளைச் சொல்ல
இவன் தானும் இவர்களைச் சில வக்ர உக்திகளைச் சொன்னான்
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான் புனத்தே -என்றார்கள்
அழகிது -இது சொல்ல ஒண்ணாதாகில் நீங்கள் பூனம் நோக்கி இருக்கிறி கோளோ
வழி போவார் மனம் நோக்கி இருக்கிறி கோளோ -என்கிறான் –

வியாக்யானம்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-என்னக் கடவது இறே இவர்களை

இவையோ நும் இயல்வுகளே
நான் உங்களை இங்கன் அன்று நினைத்து இருந்த படி
நாநா பவநம் பெற்று அநேக சரீர பரிக்ரஹத்தைப் பண்ணி அனுபவிக்கக் கோலி வர
உள்ள நெஞ்சையும் கூடக் கைக்கொண்டு வாய் திறவாதே இருப்பதே
அழகிதாக போதயந்த பரஸ்பரம் -கீதை -10-9- பண்ண வந்தேன்

இதுக்கு ஸ்வாபதேசம்
ஆழ்வார் பகவத் அலாபத்தாலே வந்த ஆற்றாமையுடனே
நல்லார் நவில் குருகூர் நகரான் –திரு விருத்தம் -100- என்கிற படியே
ஸத்வ நிஷ்டர்கள் அடங்கலும் திரண்டு படுகாடு கிடைக்கும் படி இருக்கிற இருப்பைக் கண்ட
அவர்களுடைய சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமாகிற படியைச் சொல்கிறது –

தென் ஆனாய்
நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்
பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்
வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததுக்கு

நம்பிள்ளை ஈட்டில்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்
மச்சிலே
பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க
ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
சீலாதி குணம் அளவு இல்லையே
குண வித்தர் படி

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்டியுள்ள ஹித வசனத்தைக் கேட்டுத் திருத்தப்பட்ட பரம ஏகாந்தி பண்ணும் நிந்தா ஸ்துதியைப்
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைவன் குறை யுரைத்த பாசுரத்தாலே
காட்டுகிறார் இதில்

வியாக்யானம்
புனமோ
இது உங்கள் வேலிக்குள் அகப்பட்ட புனமோ என்பது ஹர்ஷ யுக்தி இங்கு

புனத் தயலே வழி போகும்
உங்கள் புனத்திலே புகுந்தோம் அல்லோமே
புணத்துக்கு அருகே அல்லது வழி இல்லை இறே நமக்கு
புணத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
ஈஷத் அநு ரக்தரிலும் அநு ரக்திக்க்கும் படியான பாபத்தைப் பண்ணின என் மனம் தான்

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நிலமான பிறவியையுடைய
உங்கள் காவலுக்கு உட்பட்ட புனம் தானோ சொல்லுங்கோள்

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்தினுடைய அழகிய ஸ்ரீ யை யுடைத்தான வனத்தோடே ஒரு போலியே சொல்லும்படியான
கண்களை யுடைய

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக பூமியான நாட்டிலே
நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,
நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீர் களாய் இருக்கிறீகோளே

இவையோ நும் இயல்வுகளே
ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய்
ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே
உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த
ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்

புனம் -இவர்கள் இருக்கும் தேசம்
யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று –

———-

அவதாரிகை
இப்படி பாகவதர் ஈடுபடும்படியான இவருடைய வை லக்ஷண்யம்
பகவத் ப்ராவண்ய அதிசயம் ஆகையால்
அந்த ப்ராவண்ய அனுரூபமாக பிராப்தி சித்தி யாகையாலே
தமக்குப் பிறந்த ஸைதில்யத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரத்தைத்
தலைமகன் பிரிவு ஆற்றாளாய் தலைவி ஈடுபாடு கண்ட தோழி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(நாட்டைத் திருத்தவும்
நச்சுப் பொய்கை யாகாமைக்கும்
ஆர்த்தி அதிகார பூர்த்திக்காகவே ஆழ்வாரை இங்கே வைத்து இருந்தார் )

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-

பதவுரை

இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல்மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்ததன மலையினால்
இனம் நிரைகாத்த–பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் = (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்
ஸ்வா பாவிகமாய் பிறர் அறியாத படியான காதல் நோயைக் கொண்டு
ஆர்த்தி அதிசயத்தாலே யாதாயாதம் பண்ணா நிற்பனவாய்
(யாதாயாதம் பண்ணா நிற்பனவாய் -உலாவி-கண்கள் உலவுவதாக இங்கு –
ஆழ்வார் உலவுவதாக மேலே சொல்வார் )

ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,
ஒரோ சிறாங்கை போலே பெருத்து நீண்ட கயலானது நிரம்பின கயத்திலே பாயுமா போலே
கண்ணீர் வெள்ளத்திலே அலமருகிற கண்களோடும்

கண்கள் தன்னோடும் என்றும் சொல்வர்

குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி
கண்டதொரு மலையாலே
பெரு மழையில் ஈடுபடாமல்
கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய

கள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு
மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட –

என் னான்கொல் எம் கோல வளைக்கே
கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

கோல் வளை -என்று
மழுக்கான வளை என்றபடி
(அழகிய வளை என்றும் வளைந்த வளை என்றும் )

என்னாம் கொல் என்று
கண் கலக்கமும்
நெஞ்சு அழிவுமான
அளவன்றியிலே இனி ஏதாய் முடியுமோ என்று
வளைக்கும் அஞ்சி உரைத்தாள் யாயிற்று

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் எம் கோல் வளை -என்று
அந்வயமாகவுமாம்
(உலாவும் இங்கு ஆழ்வாருக்கு )

இத்தால்
ஸ்வாபாவிக ஆகாரமாய் –
ஸ்வ ஸம் வேத்யமான பக்தி யோகத்தை யுடைத்தாய்க் கொண்டு –
ஒரு நிலை நில்லாமல் வியாபரிப்பதாய்-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி தர்சநீய ஸம் ஸ்தானத்தை உடைத்தாய்
ஆர்த்தி ஜெனிதமான அஸ்ரு வெள்ளத்திலே அலமருகிற பாஹ்ய கரணத்தோடும்

ஆர்த்த விஷயத்தில் யரும் தொழில் செய்து நோக்க வல்லனாய்
த்வராயை நம -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-57-என்னும்படி
அதி த்வரித காமியானவனுடைய
அதிசயித போக்யமான மாலை அழகை அனுபவிக்கையிலே
அபி நிவிஷ்டமான அந்தக் கரணத்தோடும்

ஈடுபடுகிற இவர் கையிலே
நமக்குத் தஞ்சமான
(ஆழ்வார் இடம் உள்ள பாரதந்தர்யமே நமக்குத் தஞ்சம் )
பாரதந்தர்ய லக்ஷணம் பிரியப்படுகிறதோ என்று நொந்த
ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை அருளிச் செய்தார் யாயிற்று

(சீதாபிராட்டி இளைய பெருமாள் இடம் -என்னை நான் அழித்துக் கொள்ள முடியாது
என்று பாரதந்தர்யம் காட்டி அருளினாள் அன்றோ )

இங்கும் வஞ்ச நோய் கொண்டு உலாவும் என்று ஆழ்வாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
வியாக்யானம்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு

கண்டதோர் மாலையாலே மஹா மேக வர்ஷத்திலே அகப்படுவனவான கோ ஸமூஹங்களைக் காத்தவனுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனுமானவனுடைய
மது ஸ்யந்தியான திருத்துழாயின் கொய்தல் வாய்ந்த மலர் மேல் அபி நிவிஷ்டமான மனத்தோடும்
நோய் கொண்டு உலாவும் என்று அந்வயம்

என் னான்கொல் எம் கோல வளைக்கே –
அழகிய கையும் வளையுமான
என் மக்களுக்கு ஏதாய் முடியுமோ –

—————–

இப்படி ஸூஹ்ருத்துக்களும் ஈடுபடும்படி ஈஸ்வரனுடைய போக்யதையிலே ஈடுபட்டவர்
அந்த போக்யதையினுடைய அதி ப்ரவ்ருத்தியை
அவன் உகந்த திருத்துழாயிலே ஈடுபட்ட தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
எங்கள் கையிலே
கோல் வளை படியாக

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன்
லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
பிரபலரான லோக பாலாதி தேவர்களுக்கும் நிர்வாஹகனான ப்ரஹ்மாவுக்கும்
அசாதாரண ஸ்வாமி யானவன்

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும்
நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இந்த மேன்மையாலே நம்மை அடிமை கொண்ட ஸர்வேஸ்வரன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7- என்கிறபடியே
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைத்தான திருத்துழாயானது

என் செய்யாது இனி நால் நிலத்தே –
குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று நாலு வகைப்பட்ட பூமியிலே
இனி எது செய்யாது என்றதாயிற்று
(பாலை -ஐந்தாவது -மக்கள் வாழ மாட்டார்கள் அன்றோ )

எம் கோல் வளை -என்று
தலைமகளைச் சொல்லிற்று ஆயிற்று

தலைமகள் ஈடுபாட்டுக்கு
தோழி ஆற்றாது உரைத்தலாகவுமாம்

இத்தால்
எம் கோல் வளை இத்யாதி
நம் கையிலே மினுங்கித் தோற்றுகிற பாரதந்தர்ய லக்ஷணம் அடியாக
உபய விபூதியையும் நிர்வஹிக்கிற
பகவத் சங்கல்பத்தை அநு விதானம் பண்ணி
ஆறி இருக்க ஒட்டாதபடி த்வரையை விளைக்கையாலே
பகவத் ஆஜ்ஜா பங்கத்தைப் பண்ணுவதாய் இரா நின்றது

நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்
அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய
அதி பிரவிருத்தி யானது
இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று

(பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான-
ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி -புருஷ -ஸ்தூல ரூப -காலம் -இப்படி நான்கும் –
அந்திம ஷட்கம் ஸங்க்ரஹ ஸ்லோகம்-இப்பத பிரயோகங்கள் உண்டே
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.)

அன்றியே
எம் கோல் வளை -என்று
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஆழ்வாருடைய ஸ்வரூபத்தை உத்தேசித்து பார்ஸ்வத்சரான
ஸூஹ்ருத்துக்கள் சொன்ன வார்த்தை யாகவுமாம்

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஸர்வேஸ்வரன் அபலையானவள் நிமித்தமாகத் தன்னுடைய ஆஜ்ஜையை நெகிழப் பண்ணா நின்றான்
அவன் நினைவு அறிந்து கார்யம் செய்யும் திருத்துழாய் எத்தைச் செய்யாது என்னுதல்
அன்றிக்கே
உபக்ரமத்தில் அவனுடைய ஆஜ்ஜையையும் கூட அழிக்கிற இது
இனி எல்லாம் செய்தது அன்றோ என்று
இத் திரு துழாய் தன்னையே சொல்லிற்றாதால்
திருத் தாயார் வார்த்தை யாகவுமாம்

வியாக்யானம்
எங்கோல் வளை முதலா
எனக்கு எல்லா வழியாலும் உஜ்ஜீவன ஹேதுவான இவள் நிமித்தமாக
பகவத் ஸ்பர்சம்
க்லேசமாகப் புக்கது
இவளைத் தொடங்கிக் கிடீர்

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-மூன்றாம் திரு அந்தாதி -27-என்னக் கடவது இறே

அவஸ்யம் அநு போக்த்வயம் -என்கிறபடியே
அனுபவ விநாஸ்யமான பாபத்தைப் பண்ணின
பகவத் ப்ரத்யாஸன்னரில் அப் பாப பலம் அனுபவித்தார் யார்

அவன் தானும்
ந மே பக்த ப்ரணஸ்யதி-ஸ்ரீ கீதை -9-31-என்றான் இறே

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –
இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –
என்னையே நினைந்து பிரதி பந்தகங்கள் போக்கப் பெற்று என்னை அடைகிறான் –
ரஜஸ் தமஸ் ஒழித்து துராசாரம் போகும் -என்னை பற்றி நினைத்தவனுக்கு -கிரமத்தால் பக்தன் ஆவான்
இதை நீயே ப்ரதிஞ்ஜை பண்ணப் போகிறாய் –
நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –
அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் –
மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை
மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி
மத் கதா ஸ்ரவணா ப்ரீதி -கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –

ந வாஸூ தேவ பக்தா நாம சுபம் வித்யதே க்வசித் -ஸ்ரீ ஸஹஸ்ரநாம அத்யாயம்
ஸர்வேஸ்வரன் பக்கலிலே ப்ரேமத்தைப் பண்ணி இருக்கையும்
பொல்லாங்குகள் உண்டாகுகையும்
அக்னி நாஸிஞ்சேத் -போலே கூடாதது ஓன்று இறே

இவன்
தான் போக்கிக் கொள்ளப் பார்த்தல்
அவனுக்கு அசத்தி உண்டாதல் செய்யில் இறே
இது உண்டாவது

ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய ஸீததி –என்றும்
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந-என்றும் -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-இத்யாதியாலே கண்டோம்

சர்வ பிரகாரங்களாலும் தோஷமே யாகிலும் ஞானத்துக்கு மேல் அவ்வருக்கு நன்மை இல்லையாகிலும்
பக்தி நெருப்பு இவன் இடம் இல்லை யாகிலும்
இனி இவனை நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ண வேண்டுகிறது என்ன ஹேது கொண்டு என் என்னில்
ப்ரபாவாத் பரமாத்மந -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-
இத் தோஷங்களோடே பகவத் விஷயத்திலேயும் கை வைக்கும்
பின்னை இத்தையே-தோஷத்தையே- பார்த்து இருக்கும் அத்தனை போக்கி இவனைக் குறைய நினைத்ததாகில்
பகவத் ப்ரபாவத்தைக் குறைய நினைத்தானாம் இத்தனை –
எலி எலும்பனான இவனைப் பார்த்து குறைய நினைக்கிறது
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்து இவனை நிர்தோஷனாகப் பிரதிபத்தி பண்ணுகிறது –
புரா -பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு இறே தோஷம் இருப்பது

பின்பு அவன் பக்கலில் நெஞ்சு வைக்கவும் பொல்லாங்கு உண்டாகையும் கூடாது
அவன் தானும் ஷிப்ரம் பவதி என்றான் இறே
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்
சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை
நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்
இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க

தாசரும் தனது தன்மை அறிந்தவர்
எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்க்களே என்ன

என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்
பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

என் கோல் வளை
எனது ஜீவனம் அழித்தோ தனது ஸ்வாதந்த்ரம் நடத்தப் பார்ப்பது
இளைத்து கை வளை இழந்த ஆழ்வார் அழகு -மிக்கு இருக்குமே
ஆகிலும் இக் குறையும் வராதே இவர் இருக்க வேண்டும்
அம்ருத சாகரத்தில் ஆழ்ந்து அங்கு -சம்சாரம் அப்படி இல்லையே

உண்ணும் சோறு –கண்கள் நீர் மல்கி இருப்பவரையே நமக்குப் பிடிக்கும் -இப்படி இருந்தாலும்
அவனை அன்றி வேறே ஒன்றை நினையாத -ஏங்குதலே அழகு
கண் எச்சில் படாமைக்கு இவை வேண்டாம் -த்ருஷ்ட்டி தோஷம் வரக் கூடாது
தாயார் ஆகையால் இப்படித்தானே நினைப்பாள்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு பார்ப்பது அழகு தான் இருந்தாலும்

தன்னை அழிய மாறி ஆஸ்ரித வத்ஸலனான கண்ணன் கூட இப்படி பண்ணுவானோ
தனது ஆணையை அழித்து
அகர்மவஸ்யனாய்
தேவகி வயிற்றில் பிறந்து வந்து சொல்கிறான்
ஜாதோசி தேவ தேவ
ஜாதோஹம் -அவன் சொன்னதைத் திரும்பி ரிஷிகள்

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
ஈரக்கையால் தடவி ரக்ஷிக்கும் செங்கோல்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற திருவரங்கச் செல்வனார்
ஆணை -அதுக்கு வளைவு -உண்டாக்கலாமோ
திருத் துழாய் ஆணையை வளைத்து விடடாதே
ரஷ்ய வர்க்கத்தில் ஒருத்தி விட்டாலும் ஸர்வ ரக்ஷகத்வம் கொத்தை ஆகுமே –
அதுதானே ராம ராஜ்ஜியம்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவரை இழந்தால் -இனிக் கிடையாது என்னில்
உபய விபூதியும் இழந்தது ஆகுமே அவனுக்கு

பக்தி பிரியர் என்பார் ஒருவர்
இவர் விரகம் அனுசந்தித்து
ஆழ்வீர் என் பட்டீர் என்று திரிவாராம்
வியாசர் -சம்சார வாசனை கனத்து புத்ர வியோகத்தில் மலையில் இருந்து விழுந்து சாயா சுகரை வைத்து தரித்தார்
பகவத் விஷயத்தில் இழிவாருக்கு-இவர் திருவாய் மொழி கொண்டே
கதிர் பொருக்கி தர்ம வீர்ய ஞானம் பெற்றவர்கள் போல் இல்லாமல்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அத்தால் கூட தானே செங்கோல் -கூட வளைவிப்பானோ

திறல் சேர் அமரர்
சம்சாரிகள் ஸூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டார்கள்
நித்ய ஸூரிகள் அவனை அனுபவித்து -மேலும் அனுபவிக்க நிரந்தரமாக திறமை கொண்டவர்கள்
சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க போக்த்ருத்வ சக்தி உடையவர்கள்
விஷ்வக்சேனருக்கும் கோன்
தேவர்கள் கோன் ப்ரஹ்மாதிகளுக்கும் கோன்
உகக்கும் துழாய்
ராஜ குலா மஹாத்ம்யம்

இவன் தான் செங்கோல் வளைத்தாவது ஆழ்வாரை துன்பம் கொடுக்க சங்கல்பிக்க
திருத்துழாயும் சஹகரித்து
ஒரு பிரபு ஆயிரம் காசு கொண்டு வரச் சொல்ல இவன் மூன்று மடங்கு பண்ணி அவன் ப்ரீதிக்கு விஷயம் ஆக்குமே
அழியாத விபூதியையும் அளிக்கப் பார்க்கும் இது லீலா விபூதியை அளிக்க சொல்ல வேணுமோ

சீதா பிராட்டி துக்கம் கண்டு-தெப்பம் முழுகினால் போல் துன்பம்
புருஷகாரம் செய்து நம்மை சேர்ப்பிக்க இவளும் துக்கம் பட்டால்
காலத்தின் கொடுமை என்ன சொல்வது திருவடி வார்த்தை சுந்தர காண்டம்
காலம் என்பது -கால சக்கரத்தாய் -அழிக்கிற வஸ்துவில் நான் காலம் என்றானே கீதாச்சார்யன்
அகால தேசத்திலும் துன்பம் கொடுக்கும் காலம் அவன் தானே
நீர்மைக்கு அவ்வருக்காய் இருப்பார் இப்பாட்டு படா நின்றால் என் செய்யாது

இவளோ முடியா நின்றாள்
இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்
திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை
காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது

இத்தால் சொல்லிற்று
நான்கு நிலமும் -வாசி இல்லாமல் ஏக ரூபமாய் துன்பம்
நெடியானே என்று கிடைக்கும் நெஞ்சமே
காணக் கருதும் கண்ணும்
பாஹ்ய அந்தக்கரணம் அனைத்தும் ஈடுபட்டதுக்கு பிரமாணம்

ஆற்றாமை கைவிஞ்சி இருப்பு கண்ட பாகவதர்கள்
இவர் ஸம்ஸாரிகளுடைய அன்ன பானாதிகளால் தரிக்குமவர் அல்லராய் இரா நின்றார்
தம்முடைய உத்தேச்யம் கைப் புக்கு இருக்கிறது இல்லை
இனி இவ் விருப்பு அவருக்கு எவ்வளவாகக் கடவதோ
இவர் ஜீவிப்பாரோ ஜீவியாரோ என்று சம்ஸயம் பண்ண வேண்டும்படியான தசை
விளைந்த படியைச் சொல்லிற்று கீழ்

இதில் இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி எனக்கு அதி போக்யமும்
எங்கோன் உகக்குமதுமான இத்திருத்துழாய்
ஸர்வ ரக்ஷகனும் ஸர்வாதிகாரி நிர்வாஹகனுமானவனதான
பெண்ணீர்மை ஈடழிக்க வல்ல திவ்ய ஆஜ்ஜையினுடைய ஸர்வ தேசா க்ரமணத்தை விஜ் ரும்பியா நின்றதே
இனி இந்நான்னிலத்து இது எத்தைச் செய்யாதது என்று
அதின் கொடுமைகளிலும்
போக்யதையிலும் தலைமகள் ஈடுபடுகிறாள்

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
என்னுடைய கையில் வளை முதல் கொண்டு

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனுடைய லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
ஆஜ்ஜையினுடைய தேச சதுஷ்டய வ்யாபனத்தை சத சாகமாக விளைவியா நின்றதே

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
சமர்த்தகளான லோக பாலாதி தேவர்களுக்கு நிர்வாஹகானான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யான

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூ ரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இம்மாலை போலே எங்களை அடிமை கொண்டவன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7-என்னும்படி
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைய திருத்துழாயானது

என் செய்யாது இனி
என்னை எந்தப்பாடு படுத்தாது –
உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ

நால் நிலத்தே –
பாலை மருதம் நெய்தல் குறிஞ்சி என்றுள்ள நாலு வகையான நிலத்திலுள்ள
தன்னை ஆசைப்பட்டாரையும் கழல் வளை ஆக்காமல் விடுமோ –
அவளவள் தோழிமார்களையும் தாய்மார்களையும் அங்கனே புலம்பப் பண்ணாமல் விடுமோ
என்று தலைமகள் அவசன்னை யாகிறாள் –

————–

அவதாரிகை
இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர்
இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும்
அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து
உடன் போன தலைமகன்
நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடம் தலைப்பெய்தமை சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-

பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-

பதவுரை

நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

வியாக்யானம்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து
சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து

வேனிலம் செல்வன்
கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்

சுவைத் துமிழ் பாலை
பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை

கடந்த பொன்னே
நெருப்பிலே நடப்பாரைப் போலே
இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே
ஒளி விடுகிறவனே

கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்
இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே
பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து
கால் பொருந்தி அனுபவிக்கும் படியான

கண்ணன் வெக்காவுதம்
ஆஸ்ரித ஸுலப்யத்தாலே
சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது
அடுத்து அணித்தாயிற்று

பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற
சோலை அவ்விடத்தது –

எப் பாலைக்கும் சேமத்ததே —
இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்

இத்தால்
நானிலம் என்று தொடங்கி
சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும்
தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி

கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே
பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்

(செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்
கிரணம் -சங்கல்பம்
ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்
குணம் -அடியேன்
வைபவம் -கைங்கர்யம்
சார அம்சம் புஜித்து )

பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு
அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட
ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து

அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு
நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி
நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான
ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம்
அதூர வர்த்தியாய்
அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றது

இது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற
ஷேம கரமான புகலிடம் என்கிற
அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –

————-

அவதாரிகை
இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும்
அனுகூலித்த படியை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே
முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு
உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக்காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

வியாக்யானம்

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது

செருவாரும் நட்பாகுவர் என்று
அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம் பெற
தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி

வையம் சொல்லும் ,மெய்யே
நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்

எங்கனே என்னில்
பண்டு எல்லாம் மறை கூய்
முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –
அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று
தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன்
இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்
சேமம் என்று தொடங்கி
நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில்

முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே
அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று
அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே
வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

ஸ்ரீ கீதை -8-12- உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –
அங்கன் அன்றிக்கே
ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே
இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் –
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம்
இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –

செருவாரும் நட்பாகுவர் என்று
முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம்பெற
பழகினும்

வையம் சொல்லும் ,மெய்யே
லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே
எங்கனே என்னில்

பண்டு எல்லாம் மறை கூய்
முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து
அவ்வாடையே இப்போதாக வந்ததாய்

தண் என்றதே
ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

—————-

அவதாரிகை
இப்படி பாவநா ஸித்தமான
பகவத் அங்கீ காரமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே

பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு
ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை
வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி
நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள்வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-

பதவுரை

வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

வியாக்யானம்

தண் அம் துழாய் வளை கொள்வது
அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும்
அழகும் யுடைத்தான
திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –

நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
இதில் ஒரு துவக்கற்று
பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம்
உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது
நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது

வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான
கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே

அருளாய்
நீ அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று
இரங்கி உரைத்தார் யாயிற்று

இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
சீதள ஸ்வ பாவராய்
தர்ச நீயரான
பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்
ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்

வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது
ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்
(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே
என்கையை ஸூ சிப்பிக்கிறது

அருளாய்-என்று
ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற
நீ இரங்கக் காண்கிறிலோம் –

எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும்
இரங்காது இருந்த விஷயங்கள்
முற் காலத்திலும் யுளவோ
இல்லை என்றபடி

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
திரௌபதி
ஸ்ரீ கஜேந்திரன்
தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே
இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –
அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது
தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது
இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –
லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே
அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே
அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்
அவ்வளவு அல்ல இறே இது
ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய்
ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது
ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை
ஆக
ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –

வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்
இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு
ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்

இதுவான பின்பு
பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய்
அண்ணியனுமாய்
இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்
ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று
இருக்குமது இல்லை இறே நீருக்கு

திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ
இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ
எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்
மயர்வற மதிநலம் அருளின பின்பு
தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி
த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே
அப்படியேயோ
அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
இப்படி பாவநா ஸித்த பகவல் லாபமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே
ஆர்த்திக்கு உறுப்பாய்
அரங்கா அருளாய் -முன்போல் இன்னம் பாதிப்பது உண்டோ -என்று கூப்பிடுகிறார் –
இப்பாசுரத்தில்

வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது
அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது
என் வளையைக் கொள்வது பிராப்தம்
நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு
எடுப்பதாகா உலவா நின்றது –

வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான
ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே

அருளாய்
அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –

————

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும்
நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து
வெறுக்கிற பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும்
அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர் குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வன்னப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய் வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்த கதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன–மின்னல்போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

வியாக்யானம்
இன்னன்ன தூது
இப்படிப்பட்ட தூது
நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான
பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ

எம்மை
கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய
நம்மை அன்றோ
(வீசும் சிறகால் பரப்பீர் )

ஆள் அற்ற பட்டு
வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ
அபேக்ஷிக்கிறது

இரந்தாள்
அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று

இவள்
தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ
அபேக்ஷித்தது

என்று
1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்
2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்
3-தன் ஆள் அறுதியாலும்
4-தன் பெண்மை பாராதே
நம்மை இரந்தாள் என்று நினைத்து

அன்னன்ன சொல்லாப்
அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது

பெடையொடும் போய் வரும்
ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்
நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே
ஸ்யா மளத்வ
ஹிரண்மயத்வங்கள்
கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்

பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?
பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற
ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ
முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று
ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிப் பிறப்பால் வந்த சீர்மை

அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி
குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி
1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே
நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று
தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே

ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு
யாதாயாதம் பண்ணா நின்றார்கள்

உபாஸ்யத்வ
போக்யத்வ
ப்ரகாஸகத்வமாம் படி
வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில்
பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ –
இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்

(நீலம் உண்ட மின்னன்ன மேனி
உபாஸ்யத்வம்
போக்யத்வம்
ப்ரகாஸகத்வம்
மூன்றுமே உண்டே )

ஸ்வ பாவ ஸுத்தியும்
ஸ்ரைஷ்ட்யமும்
அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே
அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம்
அருளக் கண்டது இல்லை
அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க
ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று

அன்னன்ன சொல்லாப்
அந்த அன்னமானது சொல்லுமது அல்ல

பெடையொடும் போய் வரும்
தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்
போய்வருமது யுண்டாயும்
என் தசையை இவை சொல்லா
என்று அந்வயம்

சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்
நீலம் –இத்யாதியாலே

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான்
நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய்
குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்

உலகில் பெண் தூது செல்லா
பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது
அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல

அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிச் சீர்மையாவது
அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை
அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ
அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு
என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

————–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு
சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை
நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி
வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-

பதவுரை

அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப் பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்-

வியாக்யானம் –

அன்னம் செல்வீரும்
பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்

வண்டானம் செல்வீரும்
அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்

அன்னம்
வண்டானம்
என்கிற ஒருமை
சொல்லீர் என்கிற பன்மையாலே
ஜாதி பரம் –

தொழுது இரந்தேன்
பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண
யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே
வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்

யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே
வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு
பூர்வ பாவியாம் இறே

ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
உங்களில் குண பிரதான பாவம் இல்லை
முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது

ஏது என்ன
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த
சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9-
ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்

நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்

ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்
ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகாரமாக நெஞ்சைக் காண்கையும்
அரிது என்றபடி

என்னைச் சொல்லி
என்னோடு யுண்டான
சம்பந்தத்தையும்
பூர்த்தியையும்
தனிமையும் தோன்றச் சொல்லி

அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே
அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி
இன்னமும் போகாது ஒழிவதே

அவர் என்று
உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள்
தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்

இதுவோ தகவு
ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம்
இருக்கும்படி இதுவோ

என்று இசைமின்களே –
இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்
சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –

இத்தால்
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்
கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து
நடையாலும்
பேச்சாலும்
புத்தி யோகத்தால்
ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும்
பிரதான
புருஷ
அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான
உங்களைக் குறித்து என்றபடி –

தொழுது இரந்தேன்-என்கையாலே
த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும்
ஓர் அளவில் நில்லாது என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்று
ஆர்த்தியினுடைய அதிசயத்தாலே
முற்பட அறிவிக்கையை வேண்டுவது
பிரதான நியமமும் இல்லை -என்றபடி

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால்
என் அவஸ்தையை அறிவித்து

இதுவோ தகவு என்று இசைமின்களே –
இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே
இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே
நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்

அதாவது
அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே
அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில்
விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி

கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி
மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –

(சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்
ஏது செய்ய முடியாது என்றவாறு )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து
அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே
யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச
திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே –

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம்
தூது விடவும்
இரக்கவும் செய்து
தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து
இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று
அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி
உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

வியாக்யானம்
அன்னம் செல்வீரும்
அன்னமாய்ப் போமவர்களும்

வண்டானம் செல்வீரும்
குருகாய் போமவர்களும்

தொழுது இரந்தேன்
கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள்
முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே
நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து
சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு
ரமண சீலமானவராய்
எனக்கும் காரண பூதரானவராய்
அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்

அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்
காணப்பெற்றால்

என்னை சொல்லி
எனது இவ்வாற்றாமையை
அவருக்கு அறிவித்து

அவர் இடை
என்னோடு கலந்து என்னைப் பிரிந்த
என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும்
புருஷ ரிஷபரிடை

நீர் இன்னும் செல்லீரோ
இன்னம் அவகாஹியா நின்றீரோ

இதுவோ தகவு என்று
அவனுடைய அருளும் இவ்வளவேயோ
என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ
என்னா நின்றாள்

என்று இசைமின்களே –
என்றுமாகச் சொல்லி
என் நெஞ்சுக்கும்
அவருக்கும்
நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .