Archive for March, 2022

ஸ்ரீ திருவேங்கட திருமலை வைபவம் —

March 11, 2022

திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய
திவ்யதேசம் திருவேங்கடம் எனப்பெறும் திருப்பதி திருமலைக் கோயிலாகும்.
திவ்ய பிரபந்த பாசுரங்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைத் திருவரங்கமும் ( 274 பாசுரங்கள்)
இரண்டாம் இடத்தை (203) பெற்ற திவ்ய தேசம் திருவேங்கடமலையும் ஆகும்.

பெரியாழ்வார் ஏழும், ஆண்டாள் பதினாறும், குலசேகர ஆழ்வார் பதினொன்றும், திருமழிசையாழ்வார் பதினைந்தும்,
திருப்பாணாழ்வார் இரண்டும், திருமங்கை ஆழ்வார் அறுபத்து இரண்டும்,
பொய்கை ஆழ்வார் பத்தும், பூதத்தாழ்வார் ஒன்பதும், பேயாழ்வார் பத்தொன்பதும், நம்மாழ்வார் ஐம்பத்து இரண்டும் என
இருநூற்று மூன்று பாசுரப்பதிகங்கள் திருவேங்கட மாமலை உறை வேங்கடநாதனைப் புகழ்ந்துரைக்கின்றன.

பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் திகழும் திருக்கோயிலாக திருவெஃகா எனப்பெறும்
காஞ்சிபுர நகரத்துக் கோயிலை பெரும் பாணாற்றுப் படையும், பரிபாடல் மதுரைக்கு அருகில் உள்ள
திருமாலிருஞ் சோலையில் நின்ற வண்ணம் திகழும் நெடியோனின் கோலத்தை விவரிக்கின்றன.

சிலப்பதிகாரம் எனும் அருந்தமிழ் நூலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டவாறு
திருமால் திகழும் இடமாகக் காவிரி நடுவண் உள்ள திருவரங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நூலில் கடலாடுகாதையில் வேங்கடமலை பற்றி கூறும் அடிகளார் வேன்றி காதையில் தமிழ் நாட்டு எல்லைகளைக்
குறிக்குமிடத்து வேங்கடமலையையும் குமரிக்கடலையும் பின்வருமாறு சுட்டியுள்ளார்.
‘‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்’’ என்பது அவர் வாக்கு.

இங்கு நெடியோன் என்பது திருவேங்கடவனையும், தொடியோள் என்பது கன்னியாகுமரி பகவதியையும் சுட்டுவதாகும்.
எனவே நெடியோனாகிய திருமாலுக்கு வேங்கடமலையில் கோயில் திகழ்ந்து என்பது சிலப்பதிகாரத்தின் கூற்றாகும்.
கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் பல சமயச் சார்புடையவர்களால் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்பெற்று வந்துள்ளன.

திருமலைத்திருப்பதி கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் திகழும் மூலஸ்தானத்து திருமேனி கொற்றவையாகிய
தேவியின் திருவடிவம் என்று ஒரு சாரரும், இல்லை அத்திருமேனி குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானின் திருவடிவமே
என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கெல்லாம் உரிய பதிலாக கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டிலேயே இளங்கோ அடிகள்
தம் சிலப்பதிகாரக் காப்பியத்தின் காடுகாண் காதையில் பாடலடிகள் வாயிலாகக் கூறியுள்ளார்.

‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிறமேகம் நின்றது போலப்
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி நளங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ வாடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’’என்பதே
அவர் விவரிக்கும் திருவேங்கடவனின் திருக்கோலமாகும்.

பண்டு இளங்கோ அடிகள் காலத்தில் திருப்பதி திருமலைமேல் இருந்த திருக்கோயிலின் மூலஸ்தானத்தில்
திருமால் வில்லினைத் தரித்தவாறு மேகம் போன்ற கறுப்பு வண்ணத்தில் பகைவரை அழிக்கக் கூடிய சக்கரத்தையும்,
பால் போன்ற அவருடைய திருக்கைகளில் இடமும் வலமும் ஏந்தியவாறு அழகுடைய மணி ஆரத்தை மார்பிலே தரித்தும்
பொன்னாலாகிய பூ ஆடையைப் பூண்டும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களுடன் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார் என்று கூறியுள்ளார்.

சிலப்பதிகாரமே திருப்பதி திருமலைத்தெய்வம் நின்ற கோலத்திருமால் தான் என்று சான்று பகரும்போது,
தேவியின் வடிவம் என்றும், முருகன் வடிவம் என்றும் கூறுவது தேவையற்ற சர்ச்சைகளாகும்.

தமிழ் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை தெளிவுற விளக்கமாக எடுத்துரைக்கும் நூலான அகநானூற்றின் 213 ஆம் பாடல்,
‘‘வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர் இனமழை தவிழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடம்’’எனக்கூறி
திருவேங்கடமலை தொண்டைமான் மன்னர்களுக்கு உரிய மலை என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

குறுந்தொகையின் 260 ஆம் பாடலும் தொண்டைமான் மன்னர்களின் மலையே வேங்கடம் என உரைக்கின்றது.
வேங்கட கோட்டத்து மன்னன் புல்லி என்பானின் வேங்கடமலையின் சிறப்புக்களை அகநானூற்றின் எட்டுப் பாடல்கள், தெளிவுற உரைக்கின்றன.
அப்பெருமகன் களவர் குலத்தோன்றல் என்பதையும், தொண்டைமான் எனப்பட்டம் புனைந்த அவன் மரபினரே பிற்காலத்தில்
காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் என்பதையும் சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

10ஆம் நூற்றாண்டில் கி.பி, 952ல் பராந்தகச் சோழனின் ஆட்சியில் தொண்டை மண்டலம் வியத்தகு முறையில் வளர்ந்ததால்,
நிறைய பொன்னாபரணங்களை அளித்தான். சைவர்களும், வைஷ்ணவர்களும் திருமாலின் திருவடியைப் போற்றினர்.

பெரும்பான்மையான தஞ்சைச் சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமலைக்குச் சொத்துக்களை அளித்தபடி இருந்தனர்.
11 ஆம் நூற்றாண்டில், தென்பகுதியில் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமையால் பெற்ற
ராஜராஜ சோழனின் காணிக்கைகளோடு சோழ அரசி ‘அம்மார்’ என்ற மாதரசி 57 கழஞ்சுப் பொன்னை திருமலை ஆலயத்திற்கு அளித்தாள்.

கி.பி. 1016ல் சோழப் பேரரசில் வாழ்ந்தத பிராமணர் ஒருவர் 26 கழஞ்சு பொன் அளித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் யாதவ, சாளுவ, காகதீய, ஹொய்சாள மன்னர்கள் இத்திருக்கோயிலைப் போற்றி நிலங்களும் பொருட்களும் கொடுத்தனர்.
கி.பி. 1130ல் ஸ்ரீ ராமனுஜர் திருப்பதி ஆலயத்தின் நிர்வாகம், வழிபாடு முதலியவற்றைச் சீர்படுத்தி ‘ஜீயர் களை’ நியமித்து
ஆலயத்தின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

1356ல் விஜய நகர மன்னரான சாளுவமங்கதேவர் ஆட்சிக் காலத்தில் திரும்பவும் திருக்கோயிலுக்குப் பொன் வேய்தல் திருப்பணி நிகழ்ந்தது.
விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு திருமலைத் தெய்வம் குலதெய்வமானபடியால் பொருள் வளம் பெருகத் தொடங்கிற்று.
இரண்டாம் ‘ஹரிஹரர்’ 1404ல் ஸ்ரீ வேங்கடேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தினைப் பதிக்கச் செய்த நாணயத்தினை வெளியிட்டார்.

—————-

அஞ்சனாத்ரி த்ரேதா யுகத்தில் –
வால்மீகி ராமாயணம் திருவேங்கடம் குறிப்பு உண்டே

————

செக்கர் மா -திருவாசிரியம் போல்

———-

கம்பர் -கம்பத்தில் இருந்து வந்த நரஸிம்ஹர் பெயர்
ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்
தொங்கல் பாசுரம் -கம்பர் -மூன்று
திருவெழு கூற்று இருக்கை -சிறிய திருமடல் -பெரிய திருமடல்
சடகோபர் அந்தாதி சாதித்து

திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்
புலியும் யானையும் சேர்ந்து வாழும் திருமலை
புகு மதத்தால் -தேன் விண்ட மலரால் வாழ்த்தும் திருவேங்கடம்
வேங்கை -முயல் என்று சந்திரன் மேல் -மதியின் ஒண் முயலைப் பாய்ந்து -ஆழ்வார் பாசுரம் போல் கம்பர்
மோக்ஷம் அடைவார் திருமலையில் தேடாதீர் -சுக்ரீவன்
கிட்டே கூடப் போகாதீர் –
திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்
அவனை விட பெருமை என்பதால் -திரு மலையையே பாடினார் கம்பர்
மலையே திரு உடம்பு -ஆழ்வார்
மலை ஒன்றுமே தொழ வினைகள் போமே
ஆச்சார்யர் கோஷ்ட்டியில் கேட்ட அர்த்தங்கள் கம்பர் அருளிச் செய்கிறார்

—————-

ஆராத்தி ஏழை செல்வம்
காணே -உள் கண் கட் கண் -ஞானம்
விகடே-தாப த்ரயம் போக்க திரு மலைக்கு வா
தடங்கல் -திருமலைக்கு வந்தால் திருப்பம் உண்டாகும்
க்ரீம் கச்ச
ஸ்ரீ பீடஸ்ய
ஸ்ரீ நிவாஸன் -மஹா லஷ்மிக்கு பீடம் இவன்
அகலகில்லேன் இறையும்
சத்வம் நிறைந்த அடியார்களுடன் நாடி வா
உரியவனாய் ஆவாய்
பரன் சென்று சேர் மலை ஒன்றையுமே தொழ வினைகள் அனைத்துமே போகுமே
வேதத்தால் மங்களா ஸாஸனம்
பஞ்சாயுதம்
ஐந்து மொன்றும் அஷ்ட குண சாம்யம்
ஐம்பூதங்கள் சரீரம் பிறப்பு அடைய மாட்டான்

————–

சமயம் கடந்த, தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகள்! (3rd CE)
வேங்கடம் என்னும் மலையையும் பாடுகிறார்

= சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகி!
= துதிப் பாட்டாய் இல்லாது, இயற்கையும் தமிழுமாய்!
= வேங்கட மலை மேல் நிற்பது யார்? அதையும் சொல்லிடறாரு இளங்கோவடிகள்!

சிலப்பதிகாரம் காட்டும் – வேங்கட மலையில் இருப்பது யார்?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை

நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே மலைப் பாதையில் நடந்து செல்லும் போது,
ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து

கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

கோடி = புதுத் துணி
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;

கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி,
தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல்

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவால கருமேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

——–

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்-சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

மாயோன் என்ற முல்லை நில நடுகல்…
பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,

அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!

வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்… என்பதே சங்கத் தமிழும்,
ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!

* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் – இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் – இவனே!
* இவனே – அவன் எவனே

———–

திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.

திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

————–

இளங்கோ -சேர மன்னனின் தம்பி இளவல் என்பர்
கோவலன் -கோபாலன் என்பதின் மருவு
இளங்கோ வுடன் எவ்வாறு நடந்தனையோ
ஜைனர் வைஷ்ணவர் சம்பந்தம் உண்டே
புத்தர் சைவர் சம்பந்தமும் உண்டே
ஜைனர் வழிபாட்டில் ஆச்சார்ய சம்பாவனை ராமானுஜருக்கு உண்டாம்
ஜைனர்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் கீழ் உள்ள ஸ்லோகம் கல்வெட்டுக்களில் உண்டே

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

மனத்து உள்ளானை பற்றிய சில அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகள் —

March 5, 2022

மனத்து உள்ளானை பற்றிய சில அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகள்

மன (12)
மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ – நாலாயி:471/2
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – நாலாயி:655/1
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2
மன சுடரை தூண்டும் மலை – நாலாயி:2107/4
மன மாசு தீரும் அருவினையும் சாரா – நாலாயி:2124/1
மன போர் முடிக்கும் வகை – நாலாயி:2405/4
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை – நாலாயி:2442/1
மன துயரை மாய்க்கும் வகை – நாலாயி:2627/4
மன கவலை தீர்ப்பார் வரவு – நாலாயி:2639/4
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து – நாலாயி:3490/1

மனக்கருத்தே (1)
கள்ள மாய மனக்கருத்தே – நாலாயி:3026/4

மனக்கு (2)
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – நாலாயி:3995/2

மனக்கே (1)
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2

மனக்கொள் (2)
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் – நாலாயி:1464/1
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/3

மனங்கள் (1)
தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு – நாலாயி:1889/1

மனங்களே (1)
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4

மனத்தகத்தே (1)
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/1,2

மனத்ததுவாய் (1)
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய்
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/3,4

மனத்தர் (1)
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:911/2

மனத்தராய் (4)
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய்
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/1,2
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் – நாலாயி:2187/2
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து – நாலாயி:2360/1
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4

மனத்தலை (1)
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் – நாலாயி:2609/3

மனத்தவர்-தம் (1)
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3

மனத்தவரை (1)
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4

மனத்தனர் (1)
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4

மனத்தனளாய் (1)
கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட – நாலாயி:320/1

மனத்தனன் (1)
தீர்த்த மனத்தனன் ஆகி செழும் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3670/2

மனத்தனனாய் (2)
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய – நாலாயி:320/2
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை – நாலாயி:3082/3

மனத்தனாம் (1)
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன் – நாலாயி:667/2,3

மனத்தாயோ (1)
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே – நாலாயி:1634/4

மனத்தார் (2)
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4

மனத்தால் (9)
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/1,2
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து – நாலாயி:2672/26
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/4
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/3

மனத்தான் (1)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான் – நாலாயி:1244/1

மனத்தானை (1)
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/2,3

மனத்தில் (3)
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை – நாலாயி:901/1
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி – நாலாயி:1883/2
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ – நாலாயி:2856/2,3

மனத்தின் (1)
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2

மனத்தினளாய் (1)
மல்கு நீர் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/1,2

மனத்தினால் (3)
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – நாலாயி:478/6
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4
வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால் – நாலாயி:2035/3

மனத்தினில் (1)
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் – நாலாயி:1977/1

மனத்தினுள் (2)
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3

மனத்தினை (1)
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ – நாலாயி:3136/1

மனத்தினொடு (1)
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2

மனத்து (45)
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி – நாலாயி:541/1
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் – நாலாயி:950/3
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் – நாலாயி:1189/2
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் – நாலாயி:1400/2
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி – நாலாயி:1458/3
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த – நாலாயி:1460/3
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த – நாலாயி:1466/3
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் – நாலாயி:1838/2
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/2
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/4
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த – நாலாயி:2032/3
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
மாயவனையே மனத்து வை – நாலாயி:2181/4
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/2
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் – நாலாயி:2209/1
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் – நாலாயி:2284/1
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் – நாலாயி:2460/2
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ – நாலாயி:2627/3
கொன்றானையே மனத்து கொண்டு – நாலாயி:2632/4
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை – நாலாயி:2774/3
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
மறவியை இன்றி மனத்து வைப்பாரே – நாலாயி:2965/4
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை – நாலாயி:3036/2
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1
தெளி விசும்பு திருநாடா தீவினையேன் மனத்து உறையும் – நாலாயி:3851/3
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு – நாலாயி:3858/2
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மனத்துக்கு (2)
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் – நாலாயி:249/4
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் – நாலாயி:485/6

மனத்தும் (1)
கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா – நாலாயி:1797/3

மனத்துள் (2)
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே – நாலாயி:1728/3,4
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3

மனத்துள்ளும் (1)
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே – நாலாயி:3151/4

மனத்துள்ளே (3)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மாணி குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே
பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி – நாலாயி:447/1,2
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் – நாலாயி:1978/1

மனத்துளானை (1)
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் – நாலாயி:893/3

மனத்தே (17)
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை – நாலாயி:473/1,2
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் – நாலாயி:646/3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1193/2
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் – நாலாயி:2606/2
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் – நாலாயி:3348/2
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே – நாலாயி:3478/4
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ – நாலாயி:3872/1

மனத்தை (3)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் – நாலாயி:955/1,2
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/1,2
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து – நாலாயி:3344/2

மனத்தொடு (1)
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4

மனத்தோடு (1)
இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1

மனத்தோர் (1)
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4

மனப்பட்டது (1)
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே – நாலாயி:2926/4

மனம் (86)
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் – நாலாயி:623/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/3
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/3
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/4
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/1,2
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை – நாலாயி:1444/1
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா – நாலாயி:1559/2
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த – நாலாயி:1566/2
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1591/1
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் – நாலாயி:1628/1
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு – நாலாயி:1635/1
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் – நாலாயி:1821/2
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப – நாலாயி:1865/1
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து – நாலாயி:1974/3
காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல் – நாலாயி:2023/3
மால் ஓத_வண்ணர் மனம் – நாலாயி:2123/4
மால் தேடி ஓடும் மனம் – நாலாயி:2208/4
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மருக்கண்டுகொண்டு என் மனம் – நாலாயி:2283/4
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – நாலாயி:2295/1
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2
மனம் தன் அணை கிடக்கும் வந்து – நாலாயி:2296/4
மனம் துழாய் மாலாய் வரும் – நாலாயி:2304/4
விரும்புவதே விள்ளேன் மனம் – நாலாயி:2441/4
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் – நாலாயி:2458/3
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் – நாலாயி:2462/1
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு – நாலாயி:2465/1
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் – நாலாயி:2512/3
மா வாய் பிளந்தார் மனம் – நாலாயி:2634/4
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை – நாலாயி:2635/1
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி – நாலாயி:2769/2
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம் – நாலாயி:2780/3
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் – நாலாயி:2807/2
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் – நாலாயி:2817/2
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/3
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி – நாலாயி:2879/3
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம் – நாலாயி:2892/1
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே – நாலாயி:2944/4
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே – நாலாயி:3124/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
கள்ள மனம் தவிர்ந்தே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3343/3
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:3358/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் – நாலாயி:3577/1
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே – நாலாயி:3808/3,4
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/3,4
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் – நாலாயி:3860/2
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ – நாலாயி:3873/2
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1
நண்ணும் மனம் உடையீர் – நாலாயி:3935/2
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மனம்-தன் (1)
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/2

மனம்-தனை (2)
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/3,4
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/1,2

மனம்-அது (1)
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு – நாலாயி:892/1

மனமாய் (1)
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/3,4

மனமுடையீர்கள் (1)
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ – நாலாயி:4/2

மனமும் (6)
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/3
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே – நாலாயி:3828/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3

மனமுருகி (1)
வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/3

மனமுள் (1)
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2

மனமே (19)
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1438/4
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1439/4
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1440/4
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1441/4
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1442/4
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1443/4
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1444/4
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1445/4
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1446/4
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு – நாலாயி:1770/1
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/1,2
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/4
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
தரும் தேவனை சோரேல் கண்டாய் மனமே – நாலாயி:3806/4
மனமே உன்னை வல்வினையேன் இரந்து – நாலாயி:3807/1
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே – நாலாயி:3964/3
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே – நாலாயி:3965/4

மனமோ (1)
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2

மனன் (3)
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் – நாலாயி:2900/1
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/2
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி – நாலாயி:2928/2

மனனே (13)
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை வாழ தலைப்பெய்திட்டேன் – நாலாயி:457/3
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் – நாலாயி:2956/2,3

————–

உள் (59)
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி – நாலாயி:23/1
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/3
மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
மூலம் ஆகிய ஒற்றை_எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி – நாலாயி:374/3
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை – நாலாயி:582/3
மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற – நாலாயி:604/2
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத_நீர்_வண்ணன் என்பான் ஒருவன் – நாலாயி:623/2
தருதலும் உன்தன் தாதையை போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர – நாலாயி:712/2
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று – நாலாயி:756/2
உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு – நாலாயி:763/1
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் – நாலாயி:800/2
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர – நாலாயி:952/3
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு – நாலாயி:1085/3
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/2,3
செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து – நாலாயி:1610/2
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
கவள மா கதத்த கரி உய்ய பொய்கை கராம் கொள கலங்கி உள் நினைந்து – நாலாயி:1749/1
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/2
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2166/3
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல் – நாலாயி:2167/3
ஊன குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி – நாலாயி:2172/1
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2187/1
தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் – நாலாயி:2202/1
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு – நாலாயி:2279/2
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே – நாலாயி:2303/3
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு – நாலாயி:2374/2
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே – நாலாயி:2598/1
சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை – நாலாயி:2653/3
உள் நாட்டு தேசு அன்றே ஊழ்வினையை அஞ்சுமே – நாலாயி:2663/1
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/4
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே – நாலாயி:2885/1
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே – நாலாயி:2958/4
நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3017/1
வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3018/1
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் – நாலாயி:3026/3
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் – நாலாயி:3026/3
உக உருகி நின்று உள் உளே – நாலாயி:3047/4
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே – நாலாயி:3195/3,4
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த – நாலாயி:3206/3
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே – நாலாயி:3443/4
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் – நாலாயி:3470/1
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே – நாலாயி:3498/4
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே – நாலாயி:3521/4
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் – நாலாயி:3561/1
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் – நாலாயி:3574/2
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள்
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/1,2
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் – நாலாயி:3740/3
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள்
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் – நாலாயி:3741/2,3
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/3
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

உள்கலந்து (1)
கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல் – நாலாயி:3920/2

உள்கொண்ட (1)
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் – நாலாயி:3635/2

உள்புக்கு (2)
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த – நாலாயி:1160/1
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/3,4

உள்புகுந்து (2)
காம_தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடை கங்குல் – நாலாயி:578/3
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் – நாலாயி:2652/3

உள்மடுத்தலும் (1)
வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை – நாலாயி:3984/1

உள்மடுத்தே (1)
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே – நாலாயி:3983/4

உள்மெலிந்தாள் (1)
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ – நாலாயி:1660/4

உள்வாங்கி (1)
ஒரு நான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே – நாலாயி:2386/3

உள்ள (20)
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை – நாலாயி:294/1
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் – நாலாயி:465/3
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் – நாலாயி:481/2
இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர் – நாலாயி:838/2
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் – நாலாயி:839/3
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் – நாலாயி:1250/1
நா-தன்னால் உள்ள நலம் – நாலாயி:2354/4
கதை பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதை பொருள் தான் – நாலாயி:2413/1,2
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல் – நாலாயி:2660/2,3
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் – நாலாயி:2793/2
உள்ள இ மூன்றையும் – நாலாயி:2917/2
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே – நாலாயி:3067/4
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/2
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4

உள்ளகிற்கும் (1)
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு – நாலாயி:3788/2

உள்ளடி (1)
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த – நாலாயி:91/1

உள்ளத்தர் (1)
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/4

உள்ளத்தவர் (1)
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் – நாலாயி:1167/2

உள்ளத்தனாய் (1)
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற – நாலாயி:928/1

உள்ளத்தாய் (1)
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் – நாலாயி:2059/2

உள்ளத்தின் (7)
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி – நாலாயி:218/2
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே – நாலாயி:2001/4
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் – நாலாயி:2180/4
உள்ளத்தின் உள்ளே உளன் – நாலாயி:2320/4
உள்ளத்தின் உள்ளே உளன் – நாலாயி:2364/4
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே – நாலாயி:3667/4
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் – நாலாயி:3668/1

உள்ளத்து (27)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும் – நாலாயி:479/6
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே – நாலாயி:929/4
உள்ளத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1591/2
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் – நாலாயி:1742/3
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் – நாலாயி:1973/1
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான் – நாலாயி:2006/2,3
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/3,4
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/1,2
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2180/2
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும் – நாலாயி:2214/2
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2321/2
உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாக தேர்ந்து உணர்வரேலும் உளனாய – நாலாயி:2365/1,2
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே – நாலாயி:2411/3
உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு – நாலாயி:2431/4
கலந்தான் என் உள்ளத்து காமவேள் தாதை – நாலாயி:2463/1
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2467/2
அடியேனது உள்ளத்து அகம் – நாலாயி:2652/4
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் – நாலாயி:2805/3
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/3
நிறுத்தி நும் உள்ளத்து கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள் – நாலாயி:3358/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் – நாலாயி:3732/1
செ வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த – நாலாயி:3743/3
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே – நாலாயி:3746/1
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/4
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்-பால் – நாலாயி:3820/1

உள்ளத்துள் (2)
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே – நாலாயி:930/4
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை – நாலாயி:1276/2

உள்ளத்துள்ளும் (1)
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று – நாலாயி:3668/2

உள்ளத்துள்ளே (1)
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2

உள்ளத்துளும் (1)
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே – நாலாயி:1628/4

உள்ளத்தே (4)
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா – நாலாயி:905/1
ஊண் ஆக பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை – நாலாயி:1094/3
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து – நாலாயி:2374/4

உள்ளத்தை (4)
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே – நாலாயி:2017/4
தெளிது ஆக உள்ளத்தை செந்நிறீஇ ஞானத்து – நாலாயி:2111/1
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் – நாலாயி:2462/3
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4

உள்ளது (3)
ஓர் அகலத்து உள்ளது உலகு – நாலாயி:2324/4
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே – நாலாயி:3786/1
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே – நாலாயி:3810/3,4

உள்ளதும் (2)
இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு – நாலாயி:2913/1,2
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/2

உள்ளதோ (1)
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ – நாலாயி:2150/3

உள்ளப்பெற்றேற்கு (1)
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/3,4

உள்ளப்பெற்றேன் (1)
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே – நாலாயி:3276/3,4

உள்ளம் (60)
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே – நாலாயி:288/4
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் – நாலாயி:439/3
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:479/8
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் – நாலாயி:518/3
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டு காணும் – நாலாயி:546/2
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
தருதலும் உன்தன் தாதையை போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர – நாலாயி:712/2
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் – நாலாயி:826/2
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை – நாலாயி:936/2
உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி – நாலாயி:970/1
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் – நாலாயி:975/1,2
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி – நாலாயி:976/1
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் – நாலாயி:1324/1
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல் – நாலாயி:1360/2
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருக புகுந்த ஒருவர் ஊர் போல் – நாலாயி:1366/1,2
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா – நாலாயி:1551/2
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட – நாலாயி:1558/1
கனியை காதல்செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே – நாலாயி:1575/4
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு – நாலாயி:1772/1
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன் – நாலாயி:1791/2
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண் – நாலாயி:1852/3
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற – நாலாயி:1883/3
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா – நாலாயி:2024/4
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா – நாலாயி:2025/4
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா – நாலாயி:2026/4
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே – நாலாயி:2033/4
கொள்ளி மேல் எறும்பு போல குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட – நாலாயி:2040/2,3
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் – நாலாயி:2106/1
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்து ஒழியும் செவ்வே களியில் – நாலாயி:2132/1,2
தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் – நாலாயி:2202/1
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து – நாலாயி:2235/3
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால் – நாலாயி:2251/1
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும் – நாலாயி:2253/2
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து – நாலாயி:2363/1
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய் – நாலாயி:2422/3
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே – நாலாயி:2614/2
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினை படலம் – நாலாயி:2660/1
கடி கொண்ட மா மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் – நாலாயி:2827/3
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே – நாலாயி:2862/2,3
கற்றார் பரவும் இராமாநுசனை கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/3,4
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால் – நாலாயி:2878/2
உள்ளம் உரை செயல் – நாலாயி:2917/1
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிக – நாலாயி:3045/2,3
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகி நின்று உள் உளே – நாலாயி:3047/3,4
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி – நாலாயி:3071/1
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும் – நாலாயி:3443/2
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே – நாலாயி:3443/4
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே – நாலாயி:3636/4
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள்நாளும் – நாலாயி:3722/1
ஒத்தே சென்று அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் நல் உறைப்பே – நாலாயி:3755/4
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும் – நாலாயி:3816/2
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே – நாலாயி:3819/4

உள்ளம்-தன்னை (1)
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4

உள்ளமா (1)
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே – நாலாயி:2017/4

உள்ளமும் (1)
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே – நாலாயி:1690/4

உள்ளமே (1)
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் – நாலாயி:895/3

உள்ளமோ (1)
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் – நாலாயி:2040/1

உள்ளவர்-தம் (1)
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு – நாலாயி:3191/1

உள்ளவா (2)
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – நாலாயி:328/4
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/2,3

———–

ஸ்வாமி நம்மாழ்வார் – திருவாய்மொழி
(10.8.2) பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து, பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் ,
(10.8.6) திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
(10-8-9) “இன்று என்னை பொருளாக்கி, தன்னை என்னுள் வைத்தான் ”
(1.7.6) “என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ ”
(1.8.5) “வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான், பொய் கலவாது, என் – மெய்கலந்தானே”
(1.9.5) “ஈசன் மாயன் என் நெஞ்சில் உளானே”
(2.6.7) “உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி”
(2.9.4) என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி“
(2.9.8) “எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்”
(5.5.9) “கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே”
(8.4.7) திருச்செங்குன்றூர் எம்பெருமான் “என்றும் என் சிந்தை உளான்”
(8.6.2) “திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான் கண்டீர்”
(8.6.4) “நேயத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்“
(8.6.8) “என் நெஞ்சும் திருக்கடித்தான நகரும், தனதாயப் பதியே”
(10.4.4) “என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே”

8.7 (எல்லா பாடல்களிலும் வருவது ஒரு சிறப்பு)
‘இருந்தும் வியந்து” என்ற பதிகத்தில், (8.7) – (எல்லா பாசுரங்களிலும் இது பற்றி வருவது ஒரு சிறப்பு)
முதல் பாடலில், “பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து” என்றும்,
இரண்டாம் பாடலில், ‘எனது ஏழை நெஞ்சு ஆளும்: என்றும்,
மூன்றாம் பாடலில் ‘அவன் என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான்‘ என்றும்,
நான்காம் பாடலில் “எனது அம்மான், தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்,’ என்றும்
ஐந்தாம் பாடலில் “என்னுள் திகழும் மணி குன்றம்” என்றும்,
ஏழாம் பாடலில் ‘செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்திருந்த‘,
எட்டாம் பாடலில் ” சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும்,தம் நெறியா வயிற்றிற் கொண்டு நின்று ஒழிந்தாரே‘ என்றும்
ஒன்பதாம் பாடலில் “வயிற்றிற்கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே” என்றும்
பத்தாம் பாடலில் “வைத்தேன் மதியால் என் உள்ளத்து அகத்தே‘ என்றும் கூறுகிறார்.

மற்ற எல்லா பாசுரங்களில் நேரடியாக சொன்ன ஆழ்வார், ஆறாவது பாசுரத்தில்,
கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல், திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே (8.7.6) என்று சொல்வது,
எம்பெருமானுடைய இயற்கையான அழகை கூறுவன அல்ல, தம்மோடு சேர்ந்த பின்,
அதாவது, எம்பெருமான் நம்மாழ்வாருடன் கலந்த பின், அவனுடைய திவ்ய அவயங்களில் பிறந்த புது அழகாகும்.
ஆக ஆறாவது பாசுரத்தில் நெஞ்சுள் புகுந்த பெருமானின் பெருமையை ஆழ்வார் கூறுகிறார்

ஸ்வாமி நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி
22 “மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே“,
35 “நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சு அகலான்,,
75 “நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்”

பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி
99 வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்உள்ளத்திலுள்ளான் என்றோர்’

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
54 வெற்பு என்று திருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும், நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல்,
நிற்பு என்று இளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன், வெள்ளத் திளங்கோயில் கைவிடேல் என்று.
95 என் நெஞ்சம் மேயான் என் சென்னியான், …….. உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்.

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
26 “சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும்”
81 நெஞ்சால் நினைப்பு அரியன் எலும் நிலைபெற்றேன், நெஞ்சமே பேசாய், நினைக்குங்கால்,
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, ஓராது நிற்பது உணர்வு.
82 உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை,
83 விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தின் உள்ளே யுளன்
84 உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வர் ஏலும்,
உளனாய வண் தாமரை நெடுங்கண் மாயவனை யாவரே, கண்டார் உகப்பர் கவி.

திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்
65 நிற்பதும் ஓர் வெற்பு அகத்து, இருப்பும் விண், கிடப்பதும் நற்பெருந்திரைக் கடலுள், நானிலாத முன்னெலாம்,
அற்புதன் அனந்த சயன ஆதி பூதன் மாதவன், நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
64 நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது
என் இலாத முன்னெலாம், அன்று நான் பிறந்திலேன், பிறந்த பின் மறந்திலேன், நின்றதும், இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
30 “அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் “
86 உளன் கண்டாய் நன் நெஞ்சே. உத்தமன் என்றும் உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து, உளன்கண்டாய்
தன் ஓப்பான் தானா உளன் காண் தமியேற்கும், என்னொப்பார்க்கு ஈசன் இமை”

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
2.3.2 நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா,
5.2.5 “மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே, பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண்டேன்பிறிதின்றி”
5.2.10 அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
5.4.8 “அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்‘
5.4.9 பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ
5.4.10 வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே
5.4.11 வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே, கோயில்கொண்ட கோவலனைக்

ஆண்டாள் – திருப்பாவை
5 வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் (5) –
மற்ற ஆழ்வார்கள் தங்கள் மனதில் உள்ள பரமாத்மாவை கூறினார்கள்.
ஆண்டாள், முனிவர்கள் யோகிகள் உள்ளத்தில் உள்ள பரமாத்மாவை குறிப்பிடும் சிறப்பினை இங்கு காணாலாம்.

திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான்
5 “என்னை தன் வாரமாக்கி வைத்தான், என்னுள் புகுந்தான்”
9 “முடிவு இல்லது ஓர் எழில் நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே”

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி
1.1.3 திருமங்கையாழ்வார் தன்னுடைய முதல் ப்ரபந்தத்தின் முதல் பத்தின் முதல் பதிகத்திலேயே மூன்றாவது பாசுரத்தில்,
எம்பெருமான் தன் பக்தர்களின் மனதினில் இருப்பார் என்பதை,
“தம் அடைந்தார் மனத்திருப்பார், நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்கிறார்
1.10.6 அதே முதல் பிரபந்தத்தில் முதல் பத்தின் இறுதியில் பத்தாவது பதிகத்தில் ஆறாவது பாசுரத்தில்,
“மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே!” என்று மீண்டும் உறுதிசெய்கிறார்.
1.10.7 திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே
11.5.10 வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை
16 “மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை, போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து”
34 உள்ளத்தே உறையும் மாலை

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு அனந்தாழ்வான் வைபவம் —

March 5, 2022

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நவதிருப்பதி / ஸ்ரீ திவ்ய தேசங்களில் ஊர் வகைகள் —

March 5, 2022

ஸ்ரீ ஆழ்வார் திருநகரி

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே
எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று
திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,
திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்-

(உயர் திண் அணை ஓன்று -நான்குமே பரத்வத்பரம் –
பரத்வே பரம் -விபவாயாம் பரம் -மோக்ஷ ப்ரத பரம்–அர்ச்சாயாம் பரத்வம் -)

——-

ஸ்ரீ திரு தொலை வில்லி மங்கலம் -இரட்டை திருப்பதி

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

———

திருக்கோளூர்

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை

————

திரு தென் திருப்பேரை

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-

மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

———–

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-

நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

—————————–

திருக்குளந்தை மாயக்கூத்தன்

சாதரரை பரிசு அழிக்கும் சேஷ்ட்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் –சூரணை -172-
அதாவது-
பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி
ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்
மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று
கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

————

திருப் புளிங்குடி திரு வரகுண மங்கை ஸ்ரீ வைகுண்டம் பாக த்வரை

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — சூரணை -177-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன
புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று-9-2-4–என்று
கிடப்பது இருப்பது நிற்பதான –
திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை –

——————–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-
மகா நகரான தென் திரு பேரையில் –

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-
நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை

தென்னகரிலே–திரு வல்ல வாழ்
நன்னகரிலே–திரு விண்ணகரம்
அவ்வூர் -தொலைவில்லி மங்கலம் -இரட்டைத் திருப்பதி
புகுமூரிலே–திருக்கோளூர்
மகா நகர் – தென் திரு பேரையில் –
நீண் நகரிலே-திரு வாறன் விளை –
புகழுமூர் -குட்ட நாட்டுத் திருப்புலியூர்

————————————

புண்டரீகம் -செந்தாமரையா வெண் தாமரையா சங்கை வருமே
புண்டரீக மலர் அதன் மேல் புவனா எல்லாம் படைத்தவனே -பெருமாள் -8-2-

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் -திருவாய் -5-10-8-
செந்தாமரையே என்பது தெளிவு

தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ்
புண்டரீகம் சிதாம் போஜம் இறே –
ஸம் ரக்த நயநா கோரா போல் எரி விழியாய் இருக்கை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன தவளமான கண்கள் இருந்தபடி என் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்பதால்
வெண் தாமரை திருக் கண்களில் செவ்வரி இருப்பதை அறியலாம்

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷீணீ
புண்டரீக தளம் அமலாய தேஷண

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -11-20–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 3, 2022

அவதாரிகை
இப்படி இவருடைய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டு
பகவத் அனுபவ அர்த்தமாகவும்

(இசைவித்து உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
நின் கண் வேட்க்கை ஏழுவிப்பேன்
அனுபவத்துக்கும் -உம்மை ப்ரீதி காரித கைங்கர்யத்துக்கும்
இவற்றை ருசி காற்றிய ஆழ்வார் அருளிச் செயல்கள் உண்டே )

தேசாந்தரத்திலே பாகவத விஸ்லேஷம் பொறாத படியான
இவருடைய ஞான வை லக்ஷண்யம் கண்ட அன்புடையார் சொன்ன பாசுரத்தை
பொருள் வயிற் பிரியலுற்ற
தலைமகன் பிரிவாற்றாத தலைமகள் வேறுபாடு கண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

(விலக்ஷண ஞானம் பாகவத ஸம்ஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம்
கண்ணபுரம் ஓன்று உடையோருக்கு வேறு ஒருவருக்கு உரியேனோ ஞானம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -விலக்ஷண ஞானம்
கேட்டு அல்லிக் கமலக் கண்ணன் ஆவான் அன்றோ )

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-

பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு
தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-

பதவுரை

யாம் இன்று காண்கின்றன–நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன–(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய்–எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு–அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ–பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என–என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க
(அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன–எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன–தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை–கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி–(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
(பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு
வந்து பேர்கின்ற–(என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ–இது என்ன வியப்பு!.

உரை
அரியன யாமின்று காண்கின்றன
நாட்டில் அரிதாய் இரா நின்றதீ
நாங்கள் இன்று காண்கின்றன

கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே
நிரதிசய போக்ய பூதை யானவளே
(கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )

பெரியன காதம் பொருட்கோ பிரிவென
அதி தூரங்களான காதங்களில் பொருளுக்காகவோ நினைத்தது

ஞாலம் எய்தற்குரியன
ஸர்வ லோகத்தையும் தன் வசம் ஆக்கத் தக்கவையாய்

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
ஆற்றாமையால் வந்த அஸ்ரு பிந்துக்களாகிய முத்துக்களையும்
பயப்பாகிற அழகிய பொன்னையும் ஏந்தி

ஒரோ குடங்கைப் பெரியன
தனித் தனியே ஒரு சிறாங்கை போலே பெருத்து இருப்பன

கெண்டைக் குலம்
1-குளிர்த்தியாலும்
2-மிளிர்தலாலும்
3-ஓடுதலாளாலும்
கெண்டையோடே சமமான குலம் என்னும்படி

இவை
இக் கண்களானவையோ

வந்து பேர்கின்றவே
என் முன்னே வந்து உலவா நோன்றன


இது என்ன ஆச்சர்யமோ
அரியன யாம் இன்று காண்கின்றன என்று அந்வயம்

இத்தால்
அரியன யாம் இன்று காண்கின்றன -என்று
இவருடைய ஞான வை லக்ஷண்யம் ஓரு இடத்திலும் காண அரிது என்றபடி

(மாதா பிதா -ஆளவந்தார்
ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம்
ஜகத் காரணம் ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமே
வாஸா -விவகாரத்துக்கு பரிணாமம் ரூபம் நாமம்
ஸர்வம் ப்ரஹ்மம்
நிர்ஹேதுக கிருபா விசேஷத்தாலே மதிநலம் அருளப்பெற்றவர் அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-)

கண்ணன் விண் -என்கையாலே
பரமபதமும் ஓர் மாயையினால் போந்த கிருஷ்ணனது என்றபடி

விண் அனையாய்
பரம வ்யோமம் போலே
1-அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
2-அப்ராக்ருதத்வத்தையும்
3-ஆனந்தாவஹத்வத்தையும் -உடையவர் என்றபடி –
(எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் பக்த அம்ருதம் தொண்டர்க்கு அமுதம் அன்றோ )

பெரியன காதம் பொருட்கோ பிரிவென -என்று
புருஷார்த்த ஸித்த்யர்த்தமாக தேசாந்தர கமனம் பண்ண வேணுமோ என்றபடி

ஞாலம் எய்தற் குரியன -என்கையாலே
ஸமஸ்த விபூதியையும் விளாக்குலை கொள்ளும்படியாய் இருக்கை
(சூழ்ந்து அதனில் பெரிய அவா அன்றோ இவரது )

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி -என்கையாலே
விலக்ஷணமான நித்ய முக்த்தாகாரத்தையும்
ஹிரண்மயமான ஈஸ்வர விக்ரஹத்தையும்
தன்னுள்ளே பிரகாஸிப்பிக்கை

(சர்வஞ்ஞத்வமும் இவருக்கு உண்டு என்றபடி
கண்ணுள்ளானே இவனும்
அனைவரும் பிரதிபலிப்பார்களே )

ஒரோ குடங்கைப் பெரியன -என்கையாலே
ஏவம்விதமான மஹாத்ம்யத்தை யுடைத்ததே யாகிலும்
அன்பர்களுக்கு சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி இருக்கை

கெண்டைக் குலம் -என்கையாலே
ஸ்ரீ நாயனாபமாய்
பிரளய ஆபத் சஹமான பிரதம அவதாரத்திலே
அவஹாகித்தமை தோற்றி இருக்கை

இவை-என்கையாலே
ஞானத்தை அபரோஷித்து அனுபவிக்கலாம் படி இருக்கை

வந்து -என்று
ஆசையுடையோர் சென்று அனுபவிக்கை அன்றிக்கே
தானே வந்து
ஆசையையும் அவர்களுக்கு உண்டாக்கும் என்கை

பேர்கின்றவே-என்று
அதற்கு அடியான பரம்புதலை ஸ்வ பாவமாக யுடைத்தாய் இருக்கும் என்றபடி

இவ் விடத்து
இவையோ பேர்கின்றவே என்று
பன்மை
ஞானத்தின் வ்ருத்தி பேதத்தை நினைக்கிறது

இப்படி அன்புடையவரான பாகவதருடைய
ஸ்லாகா வசனத்தை வெளியிட்டு அருளினார் ஆயிற்று –

———

தாத்பர்யம்
இப்பாசுரத்தில் பாகவத விஸ்லேஷம் ஒரு ஷணமும் பிரியாமையை ஸஹியாத ஆழ்வாரைக்
கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தனம் அர்த்தமாக பிரிந்த நாயகனைக் கண்ட
நாயகியின் அவஸ்தையைக் கண்டு உரைத்த நாயகன் பாசுரமாய் இருக்கிறது

அத்யந்த போக்யமாய் உள்ள ஓ நாயகியே
நான் இன்றைக்கு ஒருநாளும் காணாத அத்புதம் கண்டேன்
சிலர் என்னிடத்தில் பொருளின் பொருட்டு பிரிவதைச் சொல்ல
நான் அவர்களை நிஷேதியாமல் இருக்க
நானும் பிரிந்தேன் என்று எண்ணி அவ்வளவிலேயே
நெடுதூரம் பிரிந்த நாயகி போல் படுகிறாய்
நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன்
உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி
கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து
ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல்
நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே
இது என்ன ஆச்சர்யம்

——————————

நம்பிள்ளை ஈடு அவதாரிகை

தலைமகளோடே கலந்து பரிமாறா நிற்கச் செய்தே
நடுவே போது போக்காக
நாட்டிலிலே சிலரைச் சிலர் பொருளுக்காகப் பிரிவர் காண் -என்று ப்ரசங்கித்தார்கள்
அத்தை இவன் கேட்டு
நாம் பிரிந்தோம் அல்லாமாகில்
நமக்கு இது குற்றமாகப் புகா நின்றதோ என்று
இத்தை நிஷேதியாதே அனுமதி பண்ணினான்
இத்தை இவன் அனுமதி பண்ணின போதே பிரிய நினைத்து அன்றோ செய்தது என்று விக்ருதையாக
அத்தைக் கண்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்
அரியன
இவை சால அரியவாய் இருந்தன
ஸம்போக மத்யே பிரிவை நினைக்கை சால அரியது ஓன்று இறே
இப்பெரிய திருநாளிலே இது ஒரு திரு ஏகாதசி எங்கே தேடி எடுத்தி கோள் -என்று பட்டர் அருளிச் செய்தார்
நீ நினைத்த ஸாஹஸத்தை நாம் போய் அனுஷ்ட்டித்தாலும் கிடையாதது ஒன்றாய் இருந்ததே
இது சாலப் பெறுவதற்கு அரிதாய் இருந்ததீ

யாம்
உன்னாலே உன்மஸ்தக போகங்களையும் புக்கு அனுபவிக்கிற நான்

இன்று காண்கின்றன
நீ அதிசங்கை பண்ணுகிற இப்பிரிவுக்கு முன்பேயும் சில பிரிவுகள் உண்டு இறே
அவற்றிலும் கண்டிலோமீ இவை
இத்தை ஐந்தாம் பிரிவு என்னக் கடவது இறே
அநந்தரம் வார்த்தை இறே

கண்ணன் விண்ணனையாய்
ஒரு தேச விசேஷங்களிலே
ஸமஸ்த போகங்களையும் பெற்று புஜிக்கிறான் ஒருவன் ஒன்றேயாய்
அது தான் அகஞ்சுரிப்பட்டு மற்றவை இன்றிக்கே இருக்குமத்தை நினைக்கும் அன்று அன்றோ
உன்னோடே கூடினவன்று ஓர் இடத்தை நினைப்பது
தேவ தாவத் ஸர்வார்த்த ஸித்திஸ் ஸ்யாத் -என்கிறபடியே ஸ்வத யுண்டாயிற்று அது
ஒரு நாளும் அழியக் கடவது அன்றிக்கே இருந்துள்ள அபஹத பாப்மத்வாதிகளை உடையவோடு ஓக்கத் தானும்
அபஹத பாப்மத்வாதிகளைப் பெற்று அனுபவிக்கிறவன்
இவற்றுக்குத் திரோதானம் பண்ணக் கடவதான ஸம்ஸாரத்தை ஸ்மரிக்குமோ

பெரியன காதம்
அஸங்கயேயமான காதமாகப் புக்கதாயிற்று
பிரிவைப் பிரசங்கித்தவாறே காதல் நெடிதாகப் புக்கது

பொருட்கோ பிரிவென
ஷூத்ர ப்ரயோஜனங்களுக்காகச் சிலரைச் சிலர் பிரிவார் காண் என்று இங்கனே சிலர் பிரசங்கித்தார்கள் போலே
இவனும் அத்தைக் கேட்டான் போலே
பொருள் அதிகாரத்தைக் கிழித்துப் பொகடப் போகாதே இவனால்
போய்ப் படைக்கும் பெரும் பொருளை த்யாஜ்யம் என்று இருந்தானாகில்

———————————

இப்படி பாகவதர்
ஸ்லாகிக்கைக்கு அடியான பகவத் ப்ராவண்யத்தாலே
தத் விஷயத்திலே அபி நிவிஷ்டமாய்
தன் திரு உள்ளம் கைகழிந்த படியாலே பிறந்த ஸைதில்யத்தை
தலைவி தன் ஆற்றாமை கூறிய பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை -தலைவன் பிரியப் பெற்ற தலைவி
தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –மாசறு சோதி -5-3–

பதவுரை

மணி மாமை–(எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது–விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை–விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது–மேன் மேல் பரவா நின்றது;
கங்குல்–இராப் போது
ஊழிகளே–அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே–இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து–(கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன்–எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற–ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார்–(எனது) நல்ல மனம்
தந்து போன–(தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே–ஒப்பற்ற செல்வங்களாம்.

பேர்கின்றது மணியாமை
நன்றான மாமை நிறமானது வேறுபடா நின்றது

மாமை -என்று
ஸ்த்ரீகளுடைய நல் தோலின் நிறம்

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது
மேன்மேலும் கிளர்ந்து செறிந்த வை வரண்யமானது பரவா நின்றது

கங்குலூழிகளே
ஒரு இராத்ரி அநேக கல்பங்களாகப் பரிணயியா நின்றது

இதெல்லா மினவே
இவை எல்லாம் இப்படியே யானது

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன்
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டு
எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய

தண்ணம் துழாய்
ஸ்ரம ஹரமாய்
தர்ச நீயமான
திருத் துழாயிலே

சார்கின்ற நன்னெஞ்சினார்
அபி நிவேசித்துப் போருகிற ஸ்நேஹோத்தரமான நெஞ்சினார்
அத் தலையில் ஆஸக்தி யடியான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்லுகிறாள்

தந்து போன தனி வளமே—
போகிற தசையில் நமக்குத் தந்து போன நிரதிசய ஐஸ்வர்யம்
என்று பாங்கியைக் குறித்துத் தன் ஆற்றாமை சொன்னாள் ஆகவுமாம் –

இத்தால்
பகவத் விஷயத்தில் இவர் நெஞ்சு
அபி நிவிஷ்டமாய்ச் சென்றதடியாக

பேர்கின்றது மணியாமை -என்று
ஸ்வா பாவிகமான ஸ்வரூப ஆகாரமும் குலையும்படியாய்

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது -என்று
அபி நிவேச விகாரங்கள் அபி விருத்தமாய்
ப்ரசரிக்கும் படியாய்

கங்குலூழிகளே -என்று
மோஹ அந்தகாரம் நடக்கும் காலமானது
விளம்ப அஷமத்வத்தாலே கல்ப கோடியாய்
ப்ரதிபாதியா நின்றது

(பக்தி பாரவஸ்யத்தாலே இவருக்கு
நமக்கு அஞ்ஞானத்தாலே
காலைப் பூசலும் மாலைப் பூசலும் உண்டே
இரவாக ஆளவந்தார் நிர்வாகம்
முற்கூற்றில் இருந்து பிற்கூற்றாக வந்தமை எம்பெருமானார் )

இதெல்லா மினவே-
இது எல்லாம் இப்படி யானது

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் -என்று
விரோதி ஸமர்த்தமான திருவாழியையும்

தெம்பெருமான்
ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்தையும்

கண்ணன்
ஆஸ்ரித பவ்யத்தையும் யுடையனான
கிருஷ்ணனுடைய

தண்ணம் துழாய்
நிரதிசய போக்யதா ஸூசகமான மாலை அழகிலே

சார்கின்ற நன்னெஞ்சினார்
அநு ரக்தமான நெஞ்சானது

தந்து போன தனி வளமே
தந்து போன அத்விதீயமான ஸம்பத்து இறே என்று
அனுசந்தித்தார் ஆயிற்று

ஸூஹ்ருத் பூதரை நோக்கி அருளிச் செய்தார் ஆகவுமாம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தமாக இருக்குமோ பாதி
பகவத் விஸ்லேஷமும் பாகவத விஸ்லேஷ பர்யந்தமாகவே இருக்கும் இறே
ஆகையாலே
தடாவிய அம்பிலே -பாசுரம் -6-
இவருக்குக் கீழ்ப் பிறந்த பகவத் விஸ்லேஷமானது
இப்பாட்டு அளவும் வர
பாகவத விஸ்லேஷமும்
காதாசித்கமாக ஸம்ஸ்லேஷம் உண்டாயிற்றாகில்

அவர்களோடே கூட அவனை அனுபவிக்கப் பெறாமையாலே
2-3-1-முதல் பாட்டில் அனுபவமும் போனதே
ஆர்த்தி உடன் தலைக்கட்டிற்றே

(அவர்கள் விஸ்லேஷிக்கில் செய்வது என் எனது அதிசங்கையாய்ச் சென்றது
அது தானும் போய்
11- அரியன யாம் பாசுரத்தில்
பாகவத விஸ்லேஷம் பற்றி அதி சங்கை சொல்லி
இதில் பகவத் விஸ்லேஷ ஆற்றாமை வந்ததால்
கீழே பாகவதர்கள் பிரிந்து போக மாட்டோம் என்று சொல்லி

வரிகளுக்கு நடுவில் உள்ள அர்த்தம்
முதல் பாட்டில் பிறந்த பகவத் ஸம்ஸ்லேஷம் அபி நிவேசம் மீண்டும் தலை எடுக்கிறது இதில்
இங்கனம் அல்லை யாகில் இரண்டும் புருஷார்த்தம் ஆகாவே
பூஜ்யம் ஓன்று இரண்டையும் கொண்டே binary கணிதம்
அது போல் அல்லவே இங்கு

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாமல் விடாமல் இருக்கும்
பகவத் சம்ச்லேஷம் ஏற்பட்டு பாகவத சம்ச்லேஷம் விரும்பலாம்
அடியாருக்கு ஆட்படுத்தி அருள் என்று பிரார்த்திக்கலாம்
என் அப்பனில் -என்று சொல்லி மேல்
முடிவில் உண்டான பாகவத ஸம்ஸ்லேஷம் இல்லாத அன்று
கீழ் உண்டான பகவத் ஸம்ஸ்லேஷமும் போவதற்கு ஹேது
இந்த பகவத் ஸம்ஸ்லேஷம் தான் -பாகவதர்கள் உடன் கூடின அன்று தான்-அல்லது ஒன்றாய்த் தலைக் கட்டாதே
அது போன அன்றே இதுவும் போகுமே
main switch போட்டு தான் ஒன்றை உபயோகிக்கலாம் -சார்ந்தே இருக்கும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று இவர்கள் உடன் கூடி
அவனை அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த பகவத் சம்ஸ்லேஷமும் குலைந்து போனதே )

(நம்பிள்ளை ஈட்டில் -ஊனில் வாழ் உயிரிலே -2-3- 1/10/11 பாசுரங்களையும் சேர்த்து –
களிப்பும் கவரவும் அற்று விளக்கி உள்ளார்)

(ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7-

அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

(பகவத் ஸம்ஸ்லேஷம் பெற்று ஏக ரஸமாகக் கலந்து –
குலைந்து
ஆற்றாமை யுடன் தலைக்கட்டிற்றே ‘களித்தேனே’ என்றவர்,

மீண்டும், ‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்
‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.
மாயப்பிரான் தானே–மாயப்பிரான் அடியார்கள் – பாகவத ஸம்ஸ்லேஷம் அளிக்க வேண்டும்

குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–என்று பலன் சொல்லித் தலைக்காட்டுகிறார்

குழாங்களாய் –
என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி,
குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.

அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

(ஆடுகை -அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி )

அவனைப் பிரிந்த பிரிவு தோற்றாத படி
ஸ்மரிப்பித்து
ஆஸ்வசிப்பித்தி
போந்த இவர்கள் போய் நின்ற வாறே -இவர்கள் விலகினால் -பழைய பகவத் விஸ்லேஷமும் கிட்டும்
பத்து மாதம் பிரிந்த சீதை
திருவடி கண்டு மகிழ்ந்து
திரு கணையாழி கண்டு அவனையே கண்டது போல் மகிழ்ந்து
போன பின்பு பிறந்த ஆற்றாமை போல் இங்கும் இருந்தது
கணையாழி கையிலே இருந்தாலும் நோவு பட்டாள்
அன்றோ அங்கு

வியாக்யானம்

அனுகூல பதார்த்தங்களும் இப்பொழுது அவனை நினைவூட்ட -அவை நலிய
உன்னாலே தானே வந்தது என்று தோழியைக் கோபித்து
பின்னும்
இவளை வெறுப்பது என்
அவள் சொல்ல மெய் என்று கைக் கொண்ட நெஞ்சு அன்றோ என்று அத்தோடு கிலாய்க்கிறாள்
அவள் குண கீர்த்தனம் பண்ண அத்தை மெய் என்று நினைத்தது நெஞ்சின் குற்றமே என்று கிலாய்க்கிறாள்

கிட்டின போது நிறமானது மேலே மேலே ஒளி வீச
ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்கு யோக்கியமான இவள் நிறம்
அவன் போன போது அத்தைக் கொண்டு ஜீவித்தோம்
அதுவும் மாறிற்றே
இளைய பெருமாள் சுக்ரீவனுக்கு பெருமாள் பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமையை சொன்னது
சுந்தர காண்ட ஸ்லோகம் –
வார்த்தை செவியில் பட பிரபை குறையத் தொடங்கிற்று
பெருமாள் அளவு அல்ல சுக்ரீவனுக்கு
செய்தியைக் கேட்டவுடன் இவனுக்கு அத்யர்த்தம் ஆனதே
பிராட்டி உடன் கூடியவாறே பெருமாளுக்குப் போகும்
இவனுக்கு கூடவும் வேணும்
பெருமாளுக்கு வர்ணமும் வர வேண்டும்
தான் ராஜ்ஜியம் மனைவி இழந்த போதும் பெற்ற இழவை பெருமாள் திரு உள்ளத்தில் போட்ட
பின்பு முகம் வெளுத்து இருந்ததே
பின்பு இளைய பெருமாள் பிராட்டி பிரிவால் பெருமாள் பட்ட பாட்டை சொல்லக் கேட்டு
கிரகத்தால் பீடிக்கப்பட்ட அம்சுமான் -சந்திரன் போலே ஆனதாம்
காண்கிற போதே ஹர்ஷம் மேலே மேலே யாமா போல் இங்கு நிறம் போகிற படி
இவை போனதும் இருள் சூழ்ந்து கொண்டதே
விஷம் போலே ஒரே யாத்ரி அநேக கல்பங்களாக உருக்கொண்டதே
இவை எல்லாம் –
சந்திரன் அன்றில் தென்றல் போல் அனைத்தும்
என் நெஞ்சினார் கொடுத்துப்போன இவை
கலந்து பிரிந்தவர் தந்தது அல்ல
அவரோடே கூட போன நெஞ்சினார் கொடுத்த
சந்தான சாபம் போல் வைத்துப் போனதே
யுகாவாதாரை ஆண்மையால் அழிக்கும்
உகந்தாரையும் அழகாலே அழிக்கும்
கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டான்

சக்கரம் பிடித்த கண்ணன்
மறைத்துப் போக சொன்ன தேவகி -இங்கு கம்சன் போல்வார் இல்லையே
காணில் முடிப்பான் அவன்
காணாத போது முடிவார் இவர் போல்வார்
தோளில் சாத்தின துழாயில் ஈடுபட்ட நல் நெஞ்சு அங்கெ சார்ந்தது
நாம் கண்டது அடங்கலும் பகையாக்கிக் கொண்டு இங்கே இருந்தோம்
என்னைப் போல் இல்லாமல் நெஞ்சு துணிந்தார்
துணிந்தாருக்கு அல்லது பேறு இல்லையே –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம ருஷி வேத வியாசர் பக்கலில் சென்று
ப்ரஹ்ம பிராப்தி உபாயம் பிரார்த்தித்த அளவிலே
எனக்கு ஞானம் மட்டுமே உண்டு
எனது சிஷ்யர் ஜனகனுக்கு சால அத்யவசாயம் உண்டு என்று சொல்ல
அவன் இடம் கேட்ட இடத்து
விவசாயம் -திட அத்யாவஸ்யம் தவிர வேறே ஒன்றும் இல்லை -மோக்ஷ தர்மம் ஸ்லோகம்
துணிவைத் தவிர வேறே உபாயம் இல்லையே
நாம் பழிக்கு பயந்து இருந்தோம்
அது மேல் விழுந்து வாழ்ந்து போனார்

நல் நெஞ்சினார்
பாரதம் சாந்தி பர்வ–334-47-என்று
துணிவே ஒழிய வஸ்துவை லபிக்கைக்கு ஒரு விரகு இல்லை காண் என்றான் இறே
நாம் பழிக்கு இறாய்த்து நின்று கிலேசப்படா நின்றோம்
அவர் மேல் விழுந்து வாழ்ந்து போனார்
தம் தாம் வயிற்றிலே பிறந்தார்களே யாகிலும் பகவத் ப்ரத்யா ஸந்தரை கௌரவிக்க வேணும் இறே

தந்து போன
சிலர் ஜீவிக்கப் புக்கால்
பித்ராதிகளை அழைத்து வாழ்விக்க கடவர்கள் இறே

தனி வளம்
அவர் நமக்கு வைத்துப் போன ஒப்பில்லாத ஸம்பத்து
அதாகிறது
அவர் தாம் வந்தாலும் இது போக்க ஒண்ணாதே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
கண்ணன் கலந்த போது உள்ளம் பத்து ஆர்க்கும் இல்லையே
இப்போது உனக்கு என்ன குறையாய் இப்படிப் படா நின்றாய்
எதைத் தந்து போயிற்று உன்னெஞ்சில் அவனில் என்று ஊரார் கேட்கச் சொல்கிறாள்
பேர்கின்றத்திலே –

வியாக்யானம்
மணியாமை
மணி மாமையாவது
ஸ்த்ரீக்கு யவ்வன ப்ராதுர் பாவத்தில் உள்ள ஒளி பெற்ற நிறம்
அது போயிற்று

பேர்கின்றது
அது வேறுபடா நின்றது
அந்நிறம் போன இடம் பாழ் கிடவாமே

பிறங்கி யள்ளல் பயலை
மேல் மேல் வளர்ந்து வருகிற வை வர்ணமானது

ஊர்கின்றது
பரவா நின்றது

கங்குலூழிகளே
ஒரு ராத்ரி அநேக கல்பங்களாக பரிணமியா நின்றது

இதெல்லா மினவே
இத்தோடு என்னில் உள்ளது எல்லாம் இப்படியே யாயிற்று

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான்
அன்று கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்

கண்ணன்
எனக்கு அதி பவ்யமானவன்
இப்போது தன் பிரிவால் என்னை ஈர்கின்றான் -வதியா நின்றான்
அப்போது அத்யந்த அனுகூலமான தானும்
தன் பரிகரமும்
தன் சம்பந்தமும்
இப்போது அதி ப்ரதிகூலமாய் என்னைக் கொல்ல வேணுமோ
அவனுடைய

தண்ணம் துழாய் ஈர்கின்ற
அவன் பிரதிகூலித்த இப்போது
அவன் சாத்திக் கொண்டு இருக்கும் குளிர்ந்த திருத்துழாயைப் பெற ஆசைப்படா நின்றார் பாருங்கோள்

சார்கின்ற நன்னெஞ்சினார்
இந்நெஞ்சு இப்படி ஸ்வ தந்திரமான பின்பு என்னால் தான்
என் நெஞ்சினார் என்ன வேண்டிற்று

தந்து போன தனி வளமே
என் நெஞ்சு தான் என்னை விட்டுப் போம் போது எனக்குத் தந்த
அத்விதீய ஸம்பத்தானது இது என்கிறார் –
தந்து போன தனி வளமே என்று –

—-

தாத்பர்யம்
தம்முடைய திரு உள்ளம்
பகவத் ப்ராவண்யம் அடைந்து அத்தாலே
பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிட்டாத-அஸஹ்யமாய் -பிறந்த ஸைதில்யம்
நாயகன் விரஹம் -நாயகி -சேர்ந்த நாயகன் இங்கு
கையும் திருவாழியுமாக சேவை சாதிக்க
அவன் சாத்தி அருளிய திருத்துழாயை ஆசைப்பட்டு அவன் பின்னே நெஞ்சு போக
தேக சவுந்தர்யாதிகள் அழிந்து
அது போனதால் இது வந்ததால் கொடுத்துப் போனதாக சொல்கிறார்
சூர்யன் இருளை பரிசாகக் கொடுத்து போனது போல்
சரீரம் வெளுத்து வைவர்ணயம் அடைந்தது
மற்றும் உண்டான தென்றல் முதலியவையும் பாதிக்க
இப் பாதகங்கள் எல்லாம்
ஒரு இரவு பல கல்பங்களாக பெருகத் தொடங்கிற்றே
நெஞ்சுடன் ஸஹவாசத்துக்கு நான் பெற்ற பலனே இது

———————

அவதாரிகை

இப்படி பகவத் லாபம் அடியான ஆர்த்தி அதிசயத்தாலே
தம்முடைய விவேகமும் குலைந்து (பகல் மறைந்து )
மோஹ அந்தகாரமும் விஞ்சி
ஸ்வ பாக ஸைதில்யமும் பிறந்து
விளம்ப அஷமதை அடியாக ரக்ஷக அபேக்ஷை பிறந்த ஆகாரத்தை
பிரிவாற்றாத் தலைமகள்
இருளாலும் வாடையாலும் ஈடுபட்ட உரைத்த பாசுரத்தாலே
அனுசந்தித்து அருளுகிறார்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய-இத்யாதியாலே –

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-

பதவுரை

தனி வளர்–ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல்–(தனது ஒளியாகிய) அரசாட்சியை
நடாவு–(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு–உஷ்ணத்துக்கு வாய் ஸ்தானமான வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய–ஒழிய
பனி வளர் செங்கோல் இருள்–(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும்–பூமி முழுவதும்
வீற்றிந்தது–அரசு வீற்றிருந்தது;
இனி–இனி மேல்,
நுனி வளர் காதல்–துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை–(தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு–அளைந்து வருகிற
தண் வாடை–குளிர்ந்த காற்றை
தடிந்து–தண்டித்து (அழித்து)
வளை–(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை
காப்பவர்–கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர்–யாருளர்?
(எவருமில்லை.)
ஊழிகள்–(கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை–என்னை
ஈர்வன–பிளக்குந்தன்மையுடையன.

உரை

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி
அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான
தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய்
உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
விரஹி ஜனங்களுக்கு நடுக்கத்தை வளர்கிற நிலையை யுடைத்தான
அந்தகாரமானது
லோகம் அடையத் தன்னுள்ளே யாக்கிக் கொண்டு
தன் பெருமை தோற்றும் படி இருந்தது

பனித்தல்
துளிர்த்தலும்
குளிர்த்தியுமாய்

துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதான காதலுக்கு விஷயமான திருத்துழாயை
அளைந்து வருகிற குளிர்ந்த வாடையைத் துணித்து

இனி வளை காப்பவர் ஆர்
ரக்ஷக ஸந்நிதி இன்றியே
பாதக ஸந்நிதி யுண்டான பின்பு
கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்

எனை வூழிகள் ஈர்வனனே
கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன
ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து

1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –

(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )

இத்தால்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
இவருடைய அனுபவ அலாப கிலேசத்தால் ஆதித்ய பிரகாசம் போலே
அத்விதீயமாய் அபி வ்ருத்தமாம் படி ஈஸ்வர ஆஜ்ஜை நடத்துவதால்
பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசனத்தாலே பிரதாப உத்தரமான விவேகத்தை யுடைய
ஸ்வரூபமும் (அனுபவ அலாப கிலேசத்தாலே ) அஸத் ஸமமாம் படி

(யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

(சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)

(ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -83-)

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அபிமத அலாபம் அடியான ஆந்த்யத்தை (அறியாமையை ) வர்த்திப்பிக்கிற
பெருமையை யுடைத்தான
மோஹ அந்தகாரமானது
ஈசேஸீ தவ்ய விபாகமறத் திரோதானம் பண்ணுகையாலே தானேயாய் விட்டது

துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு
ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற
சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி

இனி வளை காப்பவர் ஆர்
பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை
இனிக் கழலாமல் நோக்குபவர் யார்

(கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் )

எனை வூழிகள் ஈர்வனனே
விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும்
அழிக்கத் தேடா நின்றது
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ராத்திரியும் மற்றும் ஸ்மாரக பதார்த்தங்கள் எல்லாம் பாதகமாம் படியைச் சொல்லிற்று இறே கீழ்
இதில் அந்த ராத்ரி தானே அற இருண்டு
பாதக பதார்த்தங்களும் தனித்தனியே வந்து நலிய
அவற்றின் கையிலே நோவுபட்டு
இவற்றின் படி இதுவான பின்பு இனி நான் சத்தை கொண்டு ஜீவிக்கை என்று
ஓன்று உண்டோ என்று நோவு படுகிறாள்

வியாக்யானம்
வீற்று இருந்தது பார் முழுதும்
பனியை விஜ்ரும்பிக்க வற்றான சக்தி யுள்ள தமஸ்ஸானது லோகம் எங்கும்
தானே தானாய் ஸ்திரப்ரதிஷ்டித்தமாயிற்று

இதுக்கு மேலே
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதாக காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற
குளிர்ந்த வாடையால் ஸோஷிதையாய் க்ருசையானேன்

இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படியான பின்பு கை கழலத் தேடுகிற வளை கழலாத படி பண்ணுவார் யார்
இக் கங்குலும் எத்தனை கல்பமாய் என்னைப் பாதியா நின்றதே என்கிறாள் தலைமகள்
இவளை என்கிறாள் தோழி
இப்படி இருவகையால்
ஞான சூன்யரோடும் அஞ்ஞரோடும் இருப்பு அஸஹ்யமாய்
அவனைப் பிரிகையாலே அனுகூலரும் பாதகராவாரும் விடுவாருமாய் நோவு படுகிறாள் –

———

தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை –
காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு
வருந்திய நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்

பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி
தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து சர்வ பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க
அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்

இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இருள் மண்டிற்று
குளிர் நடுங்க தொடங்கிற்று
இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்
நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று என்னை நலிந்தது
இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே
நாயகனோ வரவில்லை
எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்

————-

அவதாரிகை
இப்படி பகவத் அலாபத்தாலே ஈடுபட்டவருடைய ஞான வை லக்ஷண்யத்தைக் கண்டு
கொண்டாடுகிறவர் பாசுரத்தை
தலைவி கண் அழகு கண்டு வியந்த தலைவன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-

பதவுரை

ஈர்வனவேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர்மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ–கண்களோ?

வியாக்யானம்

ஈர்வன வேலும் அஞ்சேலும்
கூரிய பார்வையாலே எதிரியை அழிக்கையாலே வேல்களாயும்
நீர்மையின் மிகுதியாலே செல்லாமை தோற்றுகையாலே சேல்களாயும் இருக்கிற இவை

வேல் என்கையாலே
நாயக அநுராக ஜனகமாய்க் கொண்டு ஈடுபடுத்தும் என்றபடி

சேல் என்கையாலே
பிரிவில் தரியாமை தோற்றுகிறது

ஆக உபய அநுராகமும் பிரகாசித்ததாயிற்று

ஈர்வன வேலும் அஞ்சேலும் -என்று
பாதகத்வ
போக்யத்வங்கள் இரண்டும் உண்டான படி

உயிர் மேல் மிளிர்ந்து
பிராணனை வசீகரிப்பதாக ப்ரவர்த்தியா நின்று கொண்டு

இவை
கீழ்ச் சொன்ன ஆகாரங்கள்
அபரோஷிக்கும்படியான இவை


இவற்றினுடைய வைச்சித்ர் யத்துக்கு ஆச்சர்யப்பட்ட படி

பேர்வனவோ அல்ல
உயிர் மேல் மிளிர்தல் தவிருமோ என்னில் தவிரா

அதுக்கும் மேலே
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்யமான ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையை யுடைய சரங்கள் ஆகிற
தாமரை நீலம் தொடக்கமான வற்றின் யுடைய மகத்தான பிரபையை
அனுபவியா நின்று கொண்டு காமுகதையை ஜநிபிப்பபவனாய் யுள்ளன

பேர் ஒளியே சோர்வன -என்று
ஒளியை பிரஸரிப்பன என்றுமாம்

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியுடைய ஸர்வேஸ்வரனதாய்
பரம வ்யோம ஸப்த வாஸ்யமான ஸ்ரீ வைகுண்டத்தையும்
தான் இட்ட வழக்காகக் கணிசியா நின்றன

இச் செழும் கயலே
தர்ச நீயமான ஸம்ஸ்தானத்திலே கயல்கள் என்று சொல்லலாம் படி இருக்கிற இவை

தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயேவ நிர்மிதா -பால-1-27-என்கிறபடியே
திவ்ய ஆகாரைகளான உங்களுடைய கண்ணாய் இருக்கின்றனவோ என்று
வியந்து உரைத்தலாய் இருக்கிறது

இது பாங்கியுடன் தன்னைப் புனத்திடைக் கண்டு மதி யுடன்படுத்த தலைவன்
குறை நயந்து உரைத்தல் ஆகவுமாம் –

இத்தால்
இவருடைய ஞான வை லக்ஷண்யம்
ஈர்வன வேலும் அஞ்சேலும்
வேல் என்றும்
சேல் என்றும் சொல்லுகையாலே
கூர்மையும்
நீர்மையும் தோற்றிற்று

ஈர்தலும் அழகும் சொல்லுகையாலே
எதிரிகளை வித்தராக்கி உகப்பிக்கும் என்றதாயிற்று

உயிர் மேல் மிளிர்ந்து -என்கையாலே
சேதனர் பக்கல் பூர்ண விஷயீ காரம் தோற்றிற்று

இவையோ பேர்வனவோ அல்ல -என்கையாலே
இந்த விஷயீ காரத்துக்கு குலைத்தல் இல்லாமை தோற்றிற்று

(ததீய சேஷத்வத்தைக் குலைக்க முடியாதே
மதுரகவி ஆழ்வார் பெற்று மகிழ்ந்தமை கண்டோமே )

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன -என்கையாலே
போக்ய விஷயத்தில் பக்தி காமரான திவ்ய புருஷர்களுடைய
ஸதா பஸ்யந்தி என்று இலக்குத் தப்பாத கிரணங்களுடைய பெரிய ப்ரகாஸத்தையும்
தன்னதாக்கிக் கொண்டமை தோற்றிற்று

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன -என்கையாலே
நித்ய விபூதியையும் ஸ்வா தீனமாகக் கணிசிக்கும் என்றதாயிற்று

(பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றாரே )

இச் செழும் கயலே-என்று
லீலா விபூதியில் அவதார அனுபவத்திலும் அவகாடம் என்றதாயிற்று

தைவம் அந் நீர கண்ணோ -என்று
நித்ய ஸூரி ஸமானரான வோபாதி ஞானமும்
லோக விஸஜாதீயமாய் இரா நின்றது என்று விஸ்மிதரான
அந்யர் பாசுரத்தை வெளியிட்டார் ஆயிற்று –

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நாயகனானவன் தலைமகளோடே கலந்து பிரிகிற சமயத்திலே
தன் ஈடுபாட்டாலும்
தனக்குத் தாரண அர்த்தமாகவும்
மேல் பிரிந்தால் இவன் தம்மை ஒழியவும் ஜீவிக்க வல்லன் என்று
அவள் நெஞ்சில் படாமைக்காகவும் அவள் அழகைக் கொண்டாடுகிறான் –

வியாக்யானம்
ஈர்வன வேலும்
ஈர்வனவான வேல் போலவும்
அஞ்சேலும்
அழகிய சேல் போலவும் இருக்கிற
இவை கண்ணோ
ஸ்வ கார்யம் செய்து தலைக்கட்ட வற்றாய் இருக்கையும்
தர்ச நீயமாய் இருக்கையும்
பற்ற வேலைச் சொல்லுகிறது
இரண்டாலும் செய்கிறது பின் அழியாமே நின்று கார்யம் செய்ய வற்றாய் இருக்கை –

உயிர் மேல்
அவ்வேல் போலே தோல் புரையே போமவை யல்ல
அசேத்யமாயும்
அதாஹ்யமாயும்
இருக்குமதிலே யாயிற்று வியாபரிப்பது

உயிர் மேல் மிளிர்ந்து
குத்தின வேலைப் புரித்து யுடைத்தால் போலே

இவையோ பேர்வனவோ அல்ல
பறித்துக் குத்த ஒண்ணாதே
அவ்விடம் தன்னிலே இடம் காணும் அத்தனை –

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
ஈர்வன வேலும் சேலும் என்று விசேஷித்தால் போலே
நாட்டில் காமன் தான் ஒப்பாகப் போராமை அவனையும் விசேஷிக்கிறதாயிற்று
அப்ராக்ருத ஸ்வ பாவனுமாய்
விலக்ஷணமாய் இருப்பான் ஒரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி பகவத அலாபத்தாலே நோவு படுகிற இவள் கண் அழகு கண்டு
விஸ்மயப் படும் நாயகனாய் ஈடுபடும்
தோழியினுடைய பாசுரத்தாலே
ஸ்வ ஞானத்தின் அழகில் நம்மை ஈடுபடுத்துகிறார்

வியாக்யானம்
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல
தன் கண்களுக்கு லஷ்யனான என்னை
வேதிப்பது கொண்டு வேலுமாய்
என்னைத் தன்னில் அநு ரக்தனாக்கி ஆகர்ஷிக்க வல்ல அழகிய மத்ஸ்யங்களுமாய்
என் ப்ராணன்கள் மேல் விழுந்து கார்ய க்ரூரத்தால் தன்னால் இவையே என்னவான
இவை நின்று வசீகரியாமல் தவிர்வன வல்ல


இது என்ன இதன் வசீகரண சக்தி என்று ஆச்சர்யப்படுகிற படி –

இவ்வளவோ இதன் கார்யம்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்ய ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையுள்ள காமனதான சரங்களினுடைய
மஹத்தான பிரபையைத் தன் ஒளியாலே அபஹரியா நின்றன

இவ்வளவில் தான் நிற்பதோ இவற்றின் சக்தி
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியை யுடையவளாய்
நம்மில் விளையாடும் ஸ்வாமியுடைய விண்ணில் வியாபித்ததாய்
அதில் தன் போன்ற கண்களைத் தேடா நின்றன

இச் செழும் கயலே
தர்ச நீய ஸம்ஸ்தானத்தால் கயல்களே என்று சொல்லலான இவை

தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயையே என்னலானதாய்
என்னை அந்ய பரன் ஆகாமல் பலாத்கரிப்பதான கண் தானோ
இவள் கண் தான் இவள் தோழிக்கும் இப்படி ஆகர்ஷகமாய் இருக்கிற படி –

————

தாத்பர்யம்

ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக்கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை –
நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்
அழகிய இரண்டு மத்ஸ்யம் போலே யும்
மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு
இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு
நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக்கொண்டு வந்தார்கள்
அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்

—————

அவதாரிகை –

இப்படி ஆழ்வாருடைய ஞான வை லக்ஷண்யத்திலே வித்தரானவர்கள்
இவர் ஞானத்தை ஸ்லாகிக்கச் செய்தே
அந்ய பரதை தோன்ற வர்த்திப்பார் சிலரைக் குறித்து
அவர்கள் ஹ்ருதய சோதன அர்த்தமாக
பார்ஸ்வஸ்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை

புனத்திடைக் களிறு வினவ வந்த கண் அழகைக் கொண்டாடின தலைவனைக் குறித்து
தோழி (பேச வந்த தலைமகன் )கருத்து அறிந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(ஆக இவர் இது தோழி பாசுரம் என்றே திரு உள்ளம் கொள்கிறார் )

(கயிறு வினவ வந்த கோஷ்ட்டி வேறே
ஆழ்வார் ஞானம் பேசும் கோஷ்ட்டி வேறே
உபாயாந்தர கோஷ்ட்டி அயலோர்
ஆழ்வார் இடம் அவர்களை இழுத்து பிரபன்னர் கூட்டத்தில் சேர்க்க எண்ணி
பார்ஸ்த்வத்த ஸூஹ் ருத்துகள் பாசுரத்தை என்றபடி )

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

பதவுரை

களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.

வியாக்யானம்

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
உங்கள் கண்கள் கயல் போலே இரா நின்றன என்று கொண்டாடி
கயிற்றை எங்கே என்று தேடி நில்லா நின்றீர்கள்
களிறு வினவினார் காணா விட்டால் போக அன்றோ அடுப்பது –
கண்ணைக் கொண்டாடுகைக்கும்
போகாமே நிற்கைக்கும்
என்ன சேர்த்தி யுண்டு
களிறு வினவி கயலோ நும் கண்கள் என்றார் என்று அந்வயம்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
புறம்புள்ளார் அறிவிலும் இது என்ன சேரா வார்த்தை
களிறு வினவி வந்தவருக்குக் கண் கொண்டு கார்யம் என் என்று
அயலோர் நினைப்பர் என்று கருத்து

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன்
பெரும் கடலை மண்டி யுண்டு கண்டவிடம் எங்கும் தூறலோடும் துளியோடும் திரிகிற
காள மேகம் போலே குளிர்ந்த திரு நிறத்தை யுடைய

புன வேங்கடத்து
புனல் சூழ்ந்த திருமலையிலே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–
நியமனத்தின் படியிலே கொல்லைக்கு அழிவு வாராமல் நோக்கிக் கொண்டு
போருகிற நாள்களும் பல பல யுண்டு
ஆண்டு தோறும் பல பல நாள்களும் காக்கின்றோம்

எம்மொடும் பயலோ இலீர்
எங்களுடன் பயிர்க்கூட்டு இல்லை
பயல் என்று
பாகமாய்
கூட்டுப் பயிர் இல்லை என்றபடி
ஆதலால் நிற்கிற இதுவும் மிகை என்றதாயிற்று –

இத்தால்
கயலோ நும கண்கள் என்று
எங்கள் தர்சனத்தையும் கொண்டாட நின்றீர்

(பிரபத்தி நிஷ்டை தானே எம்பெருமானார் தர்சனம் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
த்வமேவ உபாய பூதோ மே பவ
அத்யவசாயம் கொண்டாடுவது )

களிறு வினவி -என்கையாலே
ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா வந்தம் ப்ரமாதினம்
ஞான அங்குசேந க்ருஹ்ணீயாத் வஸ்ய இந்திரிய தந்தினம் -சுக்ர நீதி -1-98-என்று
காடு பாய்ந்து திரிகிற கடக் களிற்றைத் தேரோட்டி விட்டுப் பிடிக்க நினைப்பாரைப் போலே
இந்த்ரிய அநுதா வனத்திலே தேட்டமாய் இரா நின்றது –

(உபாயாந்தர நிஷ்டர்
இந்திரியங்கள் திரிய ஞானம் என்றும் அங்குசன் கொண்டு நாம் கட்டுப்படுத்த வேண்டும் இவர்களுக்கு
ஆழ்வார் ஹ்ருஷீகேசன் இடம் விட்டார் அன்றோ
கீதாச்சார்யன் அருள் கொண்டு அருளியவற்றையே அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினார் )

நிற்றீர் -என்கையாலே
இங்கு உண்டானது புறம்பு போக மாட்டு கிறிலீர் -என்றபடி

அயலோர் -என்று
இம் மர்யாதைக்குப் புறம்பானவர்கள் என்றபடி –
அதாவது
ஆழ்வார் ஞான வை லக்ஷண்யத்துக்குப் புறம்பாய்
ஸ்வ ஞானத்தாலே இந்த்ரிய வஸீ கரணம் பண்ணத் தேடும் உபாஸகரை நினைத்த படி

அறியிலும் -என்கையாலே
தேவாநாம் குஹ்யமான இந்த ஞான அநு ப்ரவேஸம்
உபாயாந்தர நிஷ்டர் அறியாமல் மறைக்கப்படும் ரஹஸ்யம் என்றதாயிற்று –

ஈது என்ன வார்த்தை -என்கையாலே
இந்த்ரிய வஸீ காரத்துக்குத் தான் யத்னம் பண்ணுகையும்
அநந்ய ஸாதனருடைய ஞானத்தை ஸ்லாகிக்கைக்கும்
ஏக அதிகாரிக்குச் சேராது என்றபடி

(ஞானத்தால் தானே இருவருக்கும் இந்திரிய வஸ்யத்தை செய்ய வேண்டும்
தர்ம வீர்ய ஞானத்தால் ரிஷிகள்
அருளின பக்தி ஆழ்வாருக்கு -அவனது ஞானத்தால் அவனே செய்து அருளுவான் அன்றோ )

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் -என்கையாலே
இந்த ஞான நிஷ்டருக்கு
1-உபாய பூதனானவனுடைய உள் நீர்மையால் உண்டான பூர்த்தியையும்
2-ஜல ஸ்தல விபாகம் இல்லாத உபகாரகத்வத்தையும்
3-ஸர்வ ஸந்நிதியையும்
4-தர்ச நீயமான விக்ரஹ யோகத்தையும் சொல்லிற்று

வேங்கடத்து என்று
உபாய பூதனானவன் உத்துங்கன் அன்றியே
ஸர்வ ஸூ லபனான அர்ச்சாவதார யுக்தன் -என்றதாயிற்று

புன வேங்கடத்து -என்கையாலே
அர்ச்சாவதார ஸ்தலமே போக ஸ்தானம் என்றபடி

எம்மொடும் பயலோ இலீர் -என்று
ஏவம் வித போக பாக்த்வம் உபாயாந்தர நிஷ்டருக்கு இல்லை என்றபடி

கொல்லை காக்கின்ற -என்று
இந்த போக ஸ்தானத்துக்கு ரக்ஷை இந்த அநந்ய ஸாதனருடைய நித்ய ஸந்நிதி என்றபடி

நாளும் பல பலவே–என்று
இவ்வதிகாரிகளுக்குப் போக அந்வயம் தத் தத் கால உசிதமாய்க் கொண்டு
அவிச்சின்னமாய் நடக்கும் என்றதாயிற்று –

கொல்லை என்று
வரம்பு அறுதியைக் காட்டுகையாலே அர்வாசீன போகம் போலே பரிச்சின்னம் அன்றியிலே
இருக்கும் என்றதாயிற்று (கொல்லை எல்லை என்றபடி )

ஆக
இப்படி ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்திலே அவகாடரானவர்கள்
உபாயாந்தர ஆகாங்ஷை யுடையாரையும் திருத்தி
உள்ளே புகுர விடும் பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைவனானவன்
பிற்றை நாள் தலை மகளும் தோழி மாரும் கூடப் புனம் நோக்கி இருந்த இடத்தே சென்று
தன் ஆயாஸத்தை ஆவிஷ்கரித்து
ஆற்றாமையைச் சொல்ல அத்தைக் கேட்ட தோழிமார் வார்த்தையாகச் செல்லுகிறது

வியாக்யானம்
கயலோ
இங்கனே ஓர் ஆனை போந்ததோ என்று சொல்லுவதாக மநோ ரதித்துக் கொடு போன அவன்
அவர்களோடே கிட்டிக் கண்ணுக்கு இலக்கனவாறே
சொல்லுவதும் அறியாதபடி கலங்கி கண்ணை ப்ரஸ்னம் பண்ணத் தொடங்கினான்

கண்கள் கயலோ என்றான்
இது ஒரு வ்யாஹத பாஷணம் இருந்தபடி என் என்ன

இங்கு ஒரு வ்யாஹதீ இல்லையீ -இதுக்கு சம்பாவனையும் இல்லையீ என்கைக்காக
கயலோ நும் கண்கள் என்கிறான்

இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் பண்ணி வ்ரீளை யாலே கவிழ்ந்து இருந்தார்கள்
அநந்தரம் தப்பினோம் ஆகாதே என்று வாஸனை கை கொடுத்து களிறு வினவத் தொடங்கினான்

திரியட்டும் இவன் இந்த அசங்கத பாஷணம் பண்ணத் தொடங்கினான் என்று அறிந்து
கேளாமைக்காக முகத்தை மாற வைத்தார்கள்

பின்னை அதுவும் கூடச் சொல்ல மாட்டாதே
ஸ்தப்தனாய் நின்றான்

தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து தரிக்க வந்தவனை முடிய நிஷேத வசனத்தைப் பண்ணினால்
பின்னை அவனுடைய ஸ்வரூப ஸ்திதி இல்லையே
என்றதுக்காக நேரே முகத்தைப் பார்த்து
பாவீ நீ இது என் சொன்னாய் -என்கிறார்கள்
இவன் தன்னை உளனாக்கிக் கொண்டு நின்று வார்த்தை சொல்ல வேணும் என்று

அயலோர் அறியிலும்
நாங்கள் அறிந்தோம் என்கை
நீர் தான் இதுக்கு முன் கண்டு அறியாதார் ஒருவராய் இரா நின்றீர்
நாங்கள் தனியே இருந்த இடத்தே இது என் சொன்னீர் என்கிறார்கள்
நாங்கள் இருக்கிற இடத்திலே வந்து அசங்கத பாஷணங்களைப் பண்ணா நின்றாள்
இவ்வார்த்தையில் உள்மானம் புற மானம் அறியாதார் என் நினைத்து இருப்பார்கள்

அறியிலும்
உள்ளுள்ளார் குமிழி நீர் உண்ணா நிற்க
புறம்பு உள்ளாருக்கு அறிய ஒண்ணாது இறே
ஆனாலும் பாஷிக தோஷமாய் வருமாதுவும் பரிஹரிக்க வேணும் இறே

ஈது என்ன வார்த்தை
அனந்விதமுமாய்
அபார்த்தமுமாய்
இரா நின்றதீ
முன்னிலை வார்த்தைக்கும் பின்னில் வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லாமையாலே
அசங்கத பாஷணமாய் இரா நின்றதே
முன்பே அற்ற எங்களை
இப்போது அறுகைக்குச் சொல்லுகிறது ஆகையாலே ப்ரயோஜன சூன்யமாய் இரா நின்றதே

அன்றிக்கே
அடிக்கழஞ்சு பெறும் சீரிய வார்த்தையாய் இருந்ததீ

இத்தால்
தங்களுடைய ஈடுபாடும்
நிஷேதமும்
இரண்டும் தோற்றச் சொல்லுகிறார்கள்

ஈது என்ன வார்த்தை
என்று வார்த்தையைக் கொண்டாடுகிறார்கள்

அயலோர் அறியிலும் என்று
உள்ளீட்டைக் கொண்டாடுகிறார்கள்

கடல் கவர்ந்த
உம்மை முன்பு கண்டு அறியோம்
எல்லா

———-

பேராமலே நின்றான்
இவள் அவன் பாவஜ்ஜையாய்
அதுக்குத் தானும் உள்பட்டாளாய்
இது என்ன வார்த்தை என்று இவள் சொல்லி
என்தான் முன் உன்னோடு நமக்கு அந்வயம் இல்லையோ -என்னும்படியான அவன் பாவத்தை
நாங்கள் புனத்தில் பண்ணும் பயிரில் உமக்கு அந்வயம் இல்லையே என்று அந்யதா கரித்துச் சொல்ல
ஆகில் நீங்கள் இங்கே நிற்பான் என் என்று அவனும் கேட்க
இக்கொல்லை காக்க நாள் தோறும் வந்து நிற்பன் நான்
உமக்கு என்னில் இப்படிகள் தகுமோ -என்கிறான்
கயலோ நும கண்கள் -என்கிற இதில்

வியாக்யானம் –
கயலோ நும் கண்கள் என்று
களிறு வேட்டைக்கு வந்தவரைப் போலே உன் கண்கள் கயல் போல் இரா நின்றது என்று கொண்டு

களிறு வினவி நிற்றீர்
களிறு எங்கே என்று தேடி நில்லா நின்றீர்
உறவு என்ன உமக்கு என்னோடு என்று இவளுக்கு ஸ்வ கதம்
இப்படி இவள் சொல்ல என் தான் என்னும்படி அவன் சில சொன்னான்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
என்கிறாள்
அயலார் அறியும்படி வரிலும் வரும்
இது என்ன அசங்கத பாஷிதத்தைச் சொல்லா நின்றீர் என்று அபிப்ராயம்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8- என்பதான
சுத்தாந்த சித்தாந்திகள் அன்றே அயலார்
மாதவர் இவரே
ஏவம் பூதன் என் கணவன் என்னுமத்தை ஸூ சிப்பிக்கிறாள்
நீர் யாரோ என்பதானதாய்

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
பெரும் கடல் மண்டி யுண்டு எங்கும் வர்ஷிக்கலான சஞ்சாரம் உள்ள காள மேகம் போலே
குளிர்ந்த நிறத்தை யுடையவனுடைய வேங்கடத்தில் உள்ள புனத்தில் என்னோடு உமக்கு
கூட்டுப் பயிரும் இல்லையே
உமக்கு என்னோடு என்ன சம்பந்தம் என்றபடி

இங்கே வந்து நிற்பது நீ நம்மை ஆசைப்பட்டு அன்றோ என்னப் புக
கொல்லை காக்கின்ற
என்கிறாள்
நாங்கள் இங்கே வந்து நிற்பது கொல்லை காக்கைக்காவே காண்
என் உன் ரஷ்ய ரஷாக பாவத்துக்கு நான் இல்லை என்று தான் நீ இல்லை என்று தான்
குறை சொல்ல வல்லையே
நாளும் பல பலவே–

———–

அவதாரிகை
இப்படி ஆழ்வாருடைய வை லக்ஷண்யம் கண்டு ஸம்ஸ்லிஷ்டரான பாகவதருடைய
ஸம்ஸ்லேஷ தசையிலும் விஸ்லேஷ தசையிலும்
காலத்தினுடைய அத்யல்பத்வாதி மஹத்வங்கள் அடியாகத் தம்முடைய ஸைதில்யத்தைத்
தம்முடைய ஸூஹ் ருத்துக்களுக்கு அருளிச் செய்த பாசுரத்தை
தலைவி தன் பாங்கியருடன் வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பதவுரை

கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.

பல பல ஊழி கள் ஆயிடும்
பல அவாந்தர கல்பத்தை யுடைத்தான பல மஹா கல்பமாகா நிற்கும்

அன்றியோர் நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அந்தக் கல்பம் தான் தன் அவயவ ஏக தேசமான ஒரு நாழிகையைப் பல பலவாக
கலா ரூபத்தாலும்ம காஷ்டா ரூபத்தாலுமாகக் கூறிட்ட கூற்றிலே ஏக தேசமாகா நிற்கும்

கண்ணன் விண் அனையாய்
கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ ந யத் விபூதே பரிணாம ஹேது என்னும்படி
அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல நாள் அன்பர் கூடிலும் காலம் அத்யல்பமாகையாலே யாம் மெலியா நின்றோம்
பல பல நாள் அன்பர் நீங்கிலும் நாடோறும் காலம் அதி மஹத்தாகையாலே யாம் மெலியா நின்றோம்

ஆகையால்
இப்பாய் இருளே பல பல சூழல் உடைத்து
இந்தப் பாய்ந்த இருள் சிறுமைக்கும் பெருமைக்கும் பல விரல் யுடைத்தாய் இரா நின்றது

அம்ம வாழி
அம்ம -இது ஒரு வாழ்வு இருந்தபடியே என்று ஆச்சர்யப்படுகிறாள்

இத்தால்
இப்பாய் இருள் என்று
மோஹ அந்தகார ஜனகமான இக்காலமானது என்றபடி

பல பல இத்யாதி
இங்கும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ தசைகளில் கால அத்யல்ப அதி மஹத்வங்களைச் சொல்லுகிறது

விண் அனையாய் -என்று
க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —
அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்;
பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்கையாலே
இக்காலத்தினுடைய உபய வித பரிணாமம் ஸைதில்யாவஹம் என்றபடி

அம்ம வாழி -என்று
தான் நினைத்த வடிவைக் கொள்ளவற்றே என்று ஆச்சரியப்பட்டார் ஆயிற்று –

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் ஆழ்வார்
பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –
தோழியுடன் கூடி பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்
பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது
தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி
சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வகாலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்
அந்த இரவே வாழட்டும்

——————————————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத தலை மகள்
அவனை ஒழியத் தனக்கு காலம் சென்றிட அரிதாகிற படியைத் தோழியைப் பார்த்து சொல்லுகிறாள் ஆதல்

அன்றிக்கே
ஸம்ஸ்லேஷ அநந்தரத்திலே பாங்கிமாரும் தானுமாய் இருக்கிற இருப்பு உண்டு இறே
அதிலே இராத்ரியிலே போகம் விருத்தமான படி என் என்று கேட்க
வ்ருத்தமான படியைச் சொல்லுகைக்கு போகத்துக்குக் காலம் உண்டாயிற்றோ
பிரிவில் காலம் நெடுகுமா போலே இறே கூடினால் காலம் குறுகும் படி -என்கிறாள் ஆகவுமாம்

இதிலே இவை இரண்டுமே உண்டு
ஒன்றைப் பிரதானமாக்கி ஒன்றை ஆனு ஷங்கிகமாகக் கொள்ளும் அத்தனை இறே

புணர்ந்து நீங்கின தலைமகனைச் சிறைப்புறத்திலே கண்டு தோழி என்றோரு பேரையிட்டு
அவனை ஒழிய தனக்கு உண்டான செல்லாமையை அவன் நெஞ்சிலே படுத்துகிறாளாய் இருக்கிறது

இத்தால்
ஒரு நாளும் பிரிவின்றிக்கே நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணுகையில் தனக்கு கருத்து என்னும்
இடம் தோற்றச் சொல்லுகிறாள் –

(தேஷாம் சதத யுக்தாநாம் –ததாமி புத்தி யோகம் —
எப்போதும் கூடி இருக்க வேணும் என்று விரும்புவனுக்கு என்று கொள்கிறோம் )

இப் பாசுரம் தோழி வார்த்தை யாகவுமாம்
இவளைக் காட்டில் இவள் தோழியானவள் அவன் படி அறிந்து இருக்கும் இறே –

அயோத்யா மக்களைக் கூட்டி வந்த பரதாழ்வானுக்கு குகப்பெருமாள் இளைய பெருமாள் சரித்ரத்தைக் கூறினான்
யாரைப்பற்றி யார் இடம் பேசுவது –
ஆச சஷே-கூறினான்
குகோ ககன கோசர-காட்டு வாழ் சாதி
மனசுக்கும் கூட அகோசரமான விஷயத்தை வாயாலே பேசினான்
அத -இதுக்கு முன்னால்
முன்பு இவன் கைகேயி
பெருமாளுக்கு நல்லான் என்று அறிந்த பின்பு சின்னான்
ஸத் பாவம்
லஷ்மனோ லஷ்மி வர்த்தந
பெருமாள் திருவடிகளில் அதிப்ராவண்யமே இவனுக்கு ஸத் பாவம்
லஷ்மணஸ்ய
கடலைக் கையாலே இறைக்கக் கோலுவாரைப் போல் தலைக்கட்டு
பரதாய குக
யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்று விவஸ்தையே இல்லையே
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரோதா
ஸ்ரீ குகப்பெருமாள் வக்தா
அப்ரமேயா பரதா
இளைய பெருமாளை பிரகாரம் அறிந்தேன் என்று பேசத்தொடங்கினான்
இவனது பிரபாவம் புத்திக்கு எட்டாதே
காட்டிலே சுத்தி திரிந்த குகன்
பிரிந்தால் தானே சுகம் என்று சொல்லி பிரிந்த பெருமாள் –
பின்பு குகன் மரத்தில் அடியில் தலையை மடுத்து இருந்தவன் பெருமாளுக்கு நல்லான் என்றவனைக் கண்டவன் எழுந்து பேசுகிறான்
நம்பியும் நாயகனை ஒக்கின்றான்
தவம் வேடம் தலைக் கொண்டான் -பேச முடியாதே
காட்டில் உள்ளவற்றை தனித்தனியே பதார்த்தங்களை அறிநதால் போல் இளைய பெருமாள் குணம், முழுவதும் அறிந்து பேசுகிறான்
அன்றிக்கே
எங்கே பிறந்து வளர்ந்தவன் ஆறு வார்த்தை சொல்கிறான் என்று ரிஷி கொண்டாடுகிறான்
காட்டிலே பிறந்து மரங்களை அறிந்தவன்
இவனோடு ஓக்க பிறந்தவனைப் பற்றி சொல்கிறான்
இன்னார் சொல்ல இன்னார் கேட்க என்னும் நியதி இல்லையே
தேசிகர் சொல்லும் அத்தனை
கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே அன்றோ

பல பல ஊழி கள் ஆயிடும் —
எண்ணிறந்த அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –

அன்றி –இத்தை ஒழிய –
யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் –
இதனுடைய பரப்புக்கு எல்லை இல்லாதவோ பாதி
ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில்
ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே
உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி–
போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி

கண்ணன் விண் அனையாய்-
தலை மகள் வார்த்தை ஆன போது
அகால காலத்தில் உள்ளார் பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..

தோழி வார்த்தை ஆன போது
பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
நீ நித்ய விபூதி போல் அன்றோ அழிய விடமாட்டான்
முக்தருக்கு லீலா விபூதி ததீயதத் ஆகாரத்தால் த்யாஜ்யமாக இருக்காது
கர்ம நிபந்தமான ஸ்ம்ருதி இல்லாமல் ததீயத்வ ஆகாரம்
தாதார்த்தம் -அவன் பிரயோஜனத்துக்காகவே அறிந்து சேஷத்வத்திலேயே அந்வயித்ததே

சம ஸுகம் துக்கம் உண்டே தோழிக்கும்
சுக்ரீவர் மஹாராஜர் பெருமாள் இடம் கண்டோமே

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,
நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —

தன் வார்த்தை –
கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )
ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் ,
பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்

கூடின எல்லா நாளுக்கும் ஒக்கும்

தோழி வார்த்தை- ,
நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்
அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –
குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் –

சம்போகத்துக்குக் காலமே இல்லையே
நீங்கிலும்
நீங்க மாட்டான்
அப்படியே நீக்கினாலும் ஸம்ஸ்லேஷ வர்த்தகத்துக்காக பிரிந்தான் அன்றோ

இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி-
அன்பர் பிரிகையாலே –

பல பல சூழல் உடைத்து-
விசித்திர சக்தன் அவன் என்று இருந்தோம்
காலத்துக்கு இப்படியா
நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே,
கலவிக்கு முன்னிலையாய் ,
விஸ்லேஷத்தில் வந்தால் –
சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று
அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்

அம்ம .
அம்மே என்ற படி-

ஒரு சொல்லாக்கிச் சொல்லலாம்
அன்றிக்கே
அம்ம
ஹிம்சிக்க பதார்த்தம் போல் வெறுத்து பேசுகிறாள்

வாழி-
தன் வார்த்தை யான போதைக்கு —
வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —

தோழி வார்த்தை யான போது —
இவ் அவசாதம் நீங்கிடுக-
நீயும் வாழ்ந்து இவளையும் வாழ வைக்க மாட்டாயோ
ஆயுஷ்மன் -ஜடாயு என்றால் போல் இந்த இருளும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்றவாறு

இப்பாய் இருளே –
பரந்த இருளே முன்னிலை யாக –
கடல் கண்ணால்பார்த்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதது போல் இந்த இருளும்

இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-
காலக்ருத பரிணாமாதிகள்
வியதிரிக்தருக்கு அர்த்த காமங்களுக்கு உறுப்பாகும்
ஆழ்வாருக்கு எப்போதுமே பகவத் தசையில் ஆழ்வதற்கே உறுப்பாகும்
பக்தியின் சிறப்பு

தோழி வார்த்தையான போது
ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப்பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி

ஆசையாக சுமந்திரன் நின்றானே
இரண்டு நாள் நின்றாலும்
பலப்பல நாள் அங்கேயே இருந்தான் என்று ஸ்லோகம்
ஐயருக்கு போர பழைய நாள் போந்தீர்
ஆய்ச்சிமாரையும் அயோத்யா மக்களையும் ரக்ஷித்து போம் என்று விடை கொடுக்க நின்றான்
திவசம் பஹுன் -காலம் நெடுங்கிய படி
அதே போல் இங்கும்
குகப்பெருமாள் உடன் தானே நிற்கிறான் -ஆனால் காலம் நெடுக வேண்டுவான் என்
பகவத் ஸம்ஸ்லேஷம் இல்லாத பாகவத ஸம்ஸ்லேஷம் மட்டுமே போதாதே

நினைவு படுத்த கூட இவர் இருக்க ஆற்றாமை தானே விஞ்சும்
பிரிவாற்றாமையால் தானே அவனும் -ஸ்ம்ருதிக்கு உத்போதகர் அவன் தானே

ஸ்ரீ குஹப்பெருமாளோடே நின்றானாகில் இவனுக்கு காலம் நெடுகுவான் என் என்று பிள்ளை கேட்டருள
ஸம்ருத்திக்கு உத்போதகர் உண்டானால் காலம் நெடுகும் அத்தனை இறே என்று ஜீயர் அருளிச் செய்தார்

ஆசயா யதி மாம் ராம புந சப்தா பயேதிதி -அயோத்யா -59-3-
ஸூமந்த்ரா நீ போ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுவாரோ என்றாகிலும் நின்றான் அன்றோ –

————

ஸ்ரீ பெரிய பரகாலன் ஸ்வாமி வியாக்யானம்

கீழ்ப்பட்ட காலம் எல்லாம் உன்னைப் பிரியாது இருந்தவன் இப்போது அத்யல்ப காலம் உன்னைப் பிரியவே
உன் முன்னே வந்து நிற்கப் பெற்றவனை இங்கனே சொல்லி விடவோ என்று சொன்ன உயிர்த் தோழியை
கண்ணனுக்கு விண் போலே அதி ப்ரியை யானவளே என்று ஸம்போதித்து
கேளடீ பல பல நாள் அன்பர் கூடிலும்
ஒரு நாழிகையை ஆயிரமாக விபஜித்தால் அதில் ஒரு பாகமாய்ப் போமடீ

அங்கன் அன்றியே
நீங்கிலும்
பிரியிலும் பிரிந்த ஒரு க்ஷணமும் பல பல கல்பமாய் விடும் காண்
இது அன்புடையார் ஸ்வ பாவம் இருக்கும் படி

பா ஸ்வ பாவமிடீ
நாங்கள் பிரிந்த காலம் அதி மஹத்தாகையாலே மெலியா நின்றோம்
இப்படிப் பிறந்த இருள் என்னைச் சூழ்கைக்கு பல விரகு யுடைத்தாய் இருந்தது

அம்ம
சிறு பெண்ணே
என்னோடே நீயும் அவசன்னை யாகா நின்றாய்

உன் அவஸாதம்
வாழி
நீங்கி நன்றாய் இருக்க வேணும் என்கிறாள்

அவன் கீழ் களிறு வினவி நின்றதுவும் என்னைப் பிரிந்து இருக்க மாட்டாமையால் இறே
அத்தால் அவனைத் தன் போல்வனாக்கிக் கூட்டிக் கொண்டு
யாம் -என்கிறது –

———————————

அவதாரிகை
இப்படி அபிமதரான பாகவதருடைய விஸ்லேஷ தசையில் அவர்கள் பக்கல் தமக்கு ஆஸ்வாஸ ஜனகமான
மநோ ரத ஸரணியைக் குலையாது ஒழிய வேணும் என்று
ஸம்ஸார ஆர்ணவத்தை அபரோக்ஷித்து உரைத்த பாசுரத்தைத்
தலைவன் பிரிந்து போன நேர் வழி தூரல் என்று
கடலை நோக்கி இரந்த தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

பதவுரை

இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற
நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக-

உரை

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு
இருள் பரம்பினால் போலே இருக்கிற கறுத்த நீர்த் திரையைக் கொண்டு

மா நீர் -என்று
பெரிய நீர் என்றுமாம்

வாழியரோ

இருள் பிரிந்தார்
என் பக்கல் அன்புடையவர் யாகையாலே
அயல் அறிய ஒண்ணாது என்று இருளிலே பிரிந்து போனவருடைய

தேர் வழி தூறல் ,
எனக்குக் கண்டு தரிக்கைக்கு உடலான நேர் வழியைத் தூராது ஒழிய வேணும்

அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக்
கருவாகச் சமைத்த ஆதித்யன் ப்ரபையை உமிழுமாப் போலே

இருள் விரி சோதி பெருமாள் உறையும்
இருண்டு விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற

எறி கடலே–
எறிதல் -கொந்தளித்தல்

எறிகிற கடலே -வாழியரோ
வாழியரோ என்று தேர் வழி தூராமைக்கு வாழ்த்துகிறாள் –

இத்தால்
எறி கடலே என்று
பாத்ய பாதக பாவத்தாலே கொந்தளிக்கிற ஸம்ஸார ஆர்ணவத்தைக் காட்டுகிறது

அரவணை மேல் என்று தொடங்கி
பகவத் சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
தமக்கு விருத்தாசரணம் பண்ணாமைக்கு உறவு சொல்கிறாள்

இருள் பிரிந்தார் அன்பர் என்று
இருள் தரும் மா ஞாலமான -திருவாய் -10-6-1-ஜகத்திலே
ஸ்நிக்த பந்துக்களான
பாகவதர் விஸ்லேஷித்தார் என்றபடி –

மச் சித்தா மத்கத ப்ராணா –ஸ்ரீ கீதை -10-9- இத்யாதியாலே
துணைத் தேட்டமாய் இருப்பது இத் தேசத்திலே இறே

தேர் வழி தூரல் -என்கையாலே
ஸாம் சாரிக கோலா ஹலம் மேலிட்டால் தத் விஷய மநோ ரத ஸரணியும் குலையும்
என்று நினைத்துக் குலையாமையை அபேக்ஷித்த படி

இருள் விரிந்தால் அன்ன -இத்யாதி
மோஹ அந்தகார பிரசரத்தைப் பண்ணும் வாஸநா கல்லோலம் சைத்தில்ய ஹேது என்றபடி

வாழியரோ என்று
தம் ஆற்றாமையாலே இம் மநோ ரத ஸரணியைக் குலையாமைக்காக பாதகரை வாழ்த்துமா போலே
மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை
தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று
சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல்
விஸ்லேஷ துக்கம் அறியாய்
இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்
அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தலைமகன் கலந்து பிரிந்து போனானாய்
இவளும் தேர்க்கால் சுவட்டைத் தனக்குத் தாரகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாளாய்
இனித்தான் பிரிந்தார் இரங்கும் நிலம் நெய்தல் நிலமாகையாலே கடற்கரை யாய் இருக்கும் இறே
அத்தேர் சுவட்டை அலை வந்து அழிக்கப் புக
அத்தை அழியாதே கொள் -என்று அதின் காலிலே விழுந்து கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
இருள் பரம்பினால் போலே இருக்கிற பெரிய நீர்த் திரைகள் ஆகிற கையைக் கொண்டு
அபாம் அபி -சுக்லம் என்று கொண்டு காலத்துக்கு குணம் வெளுப்பாகச் சொல்லா நிற்கச் செய்தே
மா நீர் -என்றதைக் கொண்டாயிற்று இருட்சியைச் சொல்லிற்று
பரப்பாலும் நீர்ச் செறிவாலும் கறுத்துத் தோற்றும் இறே
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு தேர் வழி தூரல் -என்னவாயிற்று உபக்ரமித்தது
கடல் மலை போலே நடுவே வந்து அத்தை அழிக்கில் செய்வது என் என்று
வாழியரோ என்று
அதின் காலிலே விழுந்து சரணம் புக்கு அத்தை நியமிக்கிறாள்
தன்னைப் புரிந்தவன் செய்ததைத் தானும் செய்கிறாள்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா -யுத்த -21-1-

விஸ்லேஷத்தில் அவர்களோடு சம்பந்தம் உள்ளது ஓன்று கொண்டாகிலும் தரிக்க வேண்டும்படியாக
இவருக்குப் பிறந்த தஸா விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸோபி ரேணுர் ந லஷ்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-8-31-

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்பாட்டின் வகுப்பு இப்படி –
கண்ணன் விண்ணனையாய் -பல பல நாள் அன்பர் கூடிலும் ஒரு நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அன்றி
நீங்கிலும் யாம் மெலிதும் பல பல ஊழிகள் ஆயிடும்
அன்பர் யாம் மெலிதும் பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-
என்று
தன்னோடு ஸம்ஸ்லிஷ்டனான தன் தலைமகன் அவ்விருளிலே தானே ஒரு கார்யத்துக்காகப் பிரிந்தவனாய்
கடற்கரையிலே தேர் ஏறிப்போக அதின் மார்கம் அழியும் படி தரங்க விஜ்ரும்பணமுள்ள கடலைத்
தன் தலைவன் வர்ணத்தாலும் ஸம்பந்தத்தாலும் உள்ள ஸ்நே ஹத்தைப் புரஸ்கரித்து
அதின் மார்க்கத்தை அழியாமைக்காகப் பிரார்த்திக்கிறாள்
பிரிவில் கடலும் தத் வியாபாரமும் துஸ் ஸஹமாய்
இருள் விரிந்தால் -என்று இதில் –

வியாக்யானம்
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு –
இருள் பரம்பினால் போலே இருக்கிற உன்னுடைய மஹா ஜலமயமனான அலைகளைக் கொண்டு

இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி
அன்பானவன் இந்த அந்தகாரத்தில் பிரிந்தவனாய்த் தேர் ஏறிப் போம் வழியை

தூரல் ,
அழியாதே கொள்ளாய்

எத்தால் நம்மை நீ இப்படிப் பிரார்த்திப்பது என்ன
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–
என்கிறாள்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக் கருவாக உண்டாக்கின
அதி நீல ஆதித்யனுடைய ப்ரபையை உமிழுமா போலே
இருள் போலே விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன் நித்ய வாஸம்
பண்ணுகிறானே உன்னில் என் கணவனவன் அவநதான தேர் மார்க்கத்தை
தூரல்
அலைகளை வீசி எறியும் கடலே
வாழியரோ -என்று
தேர் வழி தூராமைக்குச் சொல்லுகிறாள் ஆயிற்று –

——————

அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹரான இவருக்கு அனுபவ யோக்ய காலத்தில்
ப்ராப்ய அலாப்ய நிபந்தனமான ஆர்த்தியைக் கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூஹ்ருத்துக்களான பாகவதர் சொன்ன பாசுரத்தை
கார் காலம் கண்டு அழிந்த தலைவி ஆற்றாமை கண்டா பாங்கி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

பதவுரை

கடல்கொண்ட–கடலளவினதான
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல்தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)

உரை

கடல் கொண்டு எழுந்தது வானம்
ஆகாசமானது கடலைக் கிரஹித்துக் கொண்டு கிளம்பிற்று என்னலாய்

அன்றி-அவ் வானத்தை
அன்றி அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கோபித்து

கடல் -சென்று – கொண்டு ஒழிந்த அதனால்
கடல் தான் சென்று கொண்டு விட்டது என்னலாய் இருக்கையாலே

இது
இந்த அவஸ்தை

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ

புயல் காலம் கொலோ
கார் காலமோ

காரிகை கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும்
அழகு வடிவு கொண்டால் போலே இருக்கிற இவள்
திரை கொள்ளும் படியான கண்களிலே
நீராலே அருவியைப் பண்ணா நின்றாள் என்று
காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்தாள் யாயிற்று

காரிகைக்கு -என்ற
பாடமான போது
இவர் கண்ண நீர் அருவி செய்யா நின்றது என்றபடி

மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ-என்று
எல்லாவற்றுக்கும் முடியும் காலமோ
நமக்கு என்று வந்த கார் காலமோ என்கையாலே
ஆற்றுதலுக்கு உறுப்பான கால மயக்கம் அன்று –

இத்தால்
கடல் கொண்டு எழுந்தது வானம் -என்று
பரம வ்யோமமானது ஸம்ஸார ஸாகரத்தைக் கபளீ கரித்தது -என்னலாய்
அவ்வானத்தை என்று
(அசித் சித் வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே )

அன்றியே
இஸ் ஸம்ஸார சாஹரம் தான் பரம வ்யாமத்தோடே ஏகீ பவித்தது என்னலாம் படி இருக்கையாலே

(சூழ் விசும்பு அணி முகில் இப்பாட்டுக்கு விரிவு
சம்சாரம் முக்தனுக்குத் தானே தொலையும் )

கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபி சாப்யய-என்று
அவன் தான் விபூதி த்வயத்தையும் உப ஸம்ஹரிப்பதாக
(மண்ணும் விண்ணும் -பரமபதத்தைச் சொல்ல வில்லை )
கால அகால யதாம் அஹம் -ஸ்ரீ கீதை -10-30- என்கிறவன் தானாம்படியாக ஒரு காலம் வந்ததோ
இவருடைய ஸைதில்யம் இருந்தபடியோ
இரண்டு விபூதியும் அழியுமா போலே இருந்தது என்று சங்கா வஹமாய் இருக்கை

புயல் காலம் கொலோ -என்று
இவருடைய ப்ராப்ய த்வரையை அறிக்கைக்காக (அறிவிக்கைக்காக ) வந்து
ஆர்த்தியை ஜனிப்பிக்கிற தொரு கால விசேஷமோ

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –
பாரதந்தர்யத்தை அனுசந்தித்து இருக்கப் ப்ராப்தமாய் இருக்க
அபரிச்சின்னமான ஞானத்துக்குக் காலுஷ்யம் பிறந்து நடவா இருந்தது என்று
சிதிலராய்ச் சொன்ன பாசுரமாய் இருந்தது –

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இது போய் பகவத் விஷயத்திலே மூட்டும் இறே
இதுவும் ஒரு கால மயக்கமாய் இருக்கிறது
இவர் தமக்குப் பல இடங்களிலும் வருமாயிற்று கால மயக்கு
அவற்றுக்கு எல்லாம் மூல ஹேதுக்கள் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -1-என்ற
அநந்தரமே தொடங்கி பகவல் லாபத்தோடே செல்ல வேண்டி இருக்க
அது கிடையாமல் பிறந்த ஆற்றாமையைப் பார்ஸ்வஸ்த்தருக்கு ஆஸ்வசிப்பித்தும்
ஜீவிப்பிக்கிறது பரமாய் இருக்கும் இறே
ஆகையால் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்துப் போனானாய்
அக்காலமும் வந்து அவன் வாராமையால் பிறந்த ஆற்றாமை

கண்ணன் இத்யாதி
சர்வேஸ்வரனுடைய
பூமி அந்தரிக்ஷம் ஸ்வர்க்காதிகள் அடைய -பிரளயம காலமோ
வர்ஷா காலமோ
இரண்டாலும் உனக்கு இழவு இல்லை
அஸத் ஸமமாய்க் கிடக்கும்
உண்டது உருக்காட்டாமல் அவன் இருப்பானே
தான் உளனாக உண்டாக்குமவன் -உன்னையும் உண்டாக்கி விடுவானே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹ மானை யான தலை மகளுடைய போக யோக்கியமான காலத்தில்
அவன் வாராமையாலே
வந்த ஆர்த்தி அதிசயத்தாலே புறப்படும் கண்ணீர் வெள்ளத்தைக் கண்ட இவள் தாயார்
அத்தைச் சொல்லிக் கொண்டு இக்காலம் பிரளய காலமேயோ வர்ஷா காலம் தானோ என்று
தானும் ஏங்கி அவசன்னை யாகிறாள்
இப்பாசுரத்தில் –

வியாக்யானம்
கடல் கொண்டு எழுந்தது வானம்
மேகமானது கடலை அடி மண்டியோடே பருகினதாய் எழும்பிற்று

அவ் வானத்தை அன்றி சென்று
அன்றி -அவ்வானத்தைத் தான் கபளீ கரித்து அன்று விடாததாய்ச் சென்று
ஸ்வயம் விஜ்ரும்பித்து எழும்பினதாய்

கடல் கொண்டு ஒழிந்த
கடலானது அவ்வானத்தைக் கபளீ கரித்துக் கொண்டு
ஸ்வயம் அதி மஹத்தாய் எழுந்தது ஆயிற்று

அதனால் இது
அந்தக்காரணத்தாலே இக்காலம்

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ
கிருஷ்ணம் பூமி ஆகாச சமுத்ரங்களை வயிற்றிலே வைத்துக் கொண்டு விஜ்ரும்பித்த மஹா ப்ரளயமோ

புயல் காலம் கொலோ
மேகங்களே விஜ்ரும்பித்து எழும்பி வர்ஷிக்கும் காலம் தானோ


இது என்ன காலமாயிற்று

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
காரிகை -இவ்வவஸ்தை பொறுக்க மாட்டாத அபலையான சீர்மை யுள்ளவள் –

கடல் கொண்ட கண்
கடலைத் தோற்பித்த கண்
அது யுடையவள்
அக்கண்ணீர் அருவிகளையே சொரியா நின்றாள் என்று அவசன்னை யாகிறாள்
இது கால மயக்குத்துறை –

——————-

அவதாரிகை
இப்படி அனுபவ யோக்ய கால தர்சனத்தாலே ஈடுபட்ட இவருக்கு ஈஸ்வரன் சடக்கென
அனுக்ரஹம் பண்ணாதே
விளம்பிக்கிறபடியைக் கண்டு ஸூஹ்ருத்துகள் ஈடுபட்டு உரைத்த பாசுரத்தை
கார் காலத்தில் ஈடுபட்ட தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
பாங்கி பழிக்கு இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற்
பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு-கோபத்துக்கு வர்ணம்
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
அதிமாத்ர ப்ராவண்யத்தைப் பழி என்கிறார்கள்
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

உரை

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகு பார்த்து இருக்கும் பெண் பிறந்தாரில் தங்கள் பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று

இன்னே
இப்படியே

கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை வர்ஷித்துக் கொண்டு அணிந்து ஏறி

அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்

வாழியரோ சாரிகை புள்ளர்
இவ்வளவிலும் தம்முடைய வைபவத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ண இருக்கிற இவர்

சாரிகை புள்ளார்
ஆ பன்னர் இருந்த இடத்தில் சடக்கென வருகைக்கு ஈடான பரிகரத்தை யுடையவர்

சாரிகை என்று
மண்டல ஆகார கதியைச் சொல்லுகிறது
தர்ச நீய கதியான புள் என்றபடி
(சிறப்பான நடத்தை ஆச்சாரம் அனுஷ்டானம் வேதம் தானே சொல்லும் )

ஆர்ந்து அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை

இறை கூய் அருளார்
ஏக தேசமும் அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்
கொடுக்கும் போதை ஸாந்த்வ வாதமும் தேட்டமாய் இருக்கிற படி

(இறை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை
இங்கு ஏகதேசம் )

சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –
என்னுடைய மித பாஷிணி யானவளுக்கு
ஊரார் கை வகுத்து உறும்படியான பழியாய்ப் ;பலித்தது

கை ஏறும் பழி என்று
கை எடுத்து உரைக்கவுமாம் –

இத்தால்
காரிகையார் -என்று
ஸ்த்ரீத்வத்தைச் சொல்லுகையாலே பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-ஸூந்தர –37-62- என்று இருக்கும் ஸ்வரூபத்தைச் சொன்னபடி

நிறை காப்பவர் யார் -என்று
இந்த ஸ்வரூப பூர்த்தியை யாராலே நோக்கலாம் என்று அபிப்ராயம்

கார் கொண்டு என்று தொடங்கி
ஸ்மாரக முகத்தாலே ஆகர்ஷகமான விக்ரஹத்தையும்
அனுபாவ்யமான குண அபி வர்ஷத்தையும் ஆவிஷ் கரித்து

இப்படி அனுபவ யோக்ய அவஸ்தையானது அபி முகமாய் த்வரிப்பிக்கச் செய்தேயும்
மங்களா ஸாஸனம் பண்ணும்படி
தர்ச நீயமான வாஹன வை லக்ஷண்யத்தை யுடையவர்
போக்யமாய் ஸ்ரம ஹரமான தம்முடைய ப்ரஸாதத்தை ஸ்நிக்த கம்பீரமான திரு மிடற்று ஓசையாலே
அழைத்து ஏக தேசமும் கொடுத்து அருளுகிறீலீர்

என் சின் மொழிக்கு
என்று இதனுடைய அபேக்ஷையில் புனர் வசனம் மிகையாம் படி ஸக்ருத் யுக்த அதிகாரிகளால்
எங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான அவருக்கு என்றபடி
(ஸக்ருத் ஏவ யுக்தி த்வயம் பிரபத்தி ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ இவர்
மாறன் சொல் வேராக வீடு )

சேரி இத்யாதி
இந்த ஸ்ரேணி யிலுள்ள சாத்விக ஜனம் கை எடுத்துக் கூப்பிடும்படி பழியாய்
பரிணமித்தது என்றார் ஆயிற்று –

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தோழியானவள் காலத்தை மயக்கி இவளை ஆஸ்வசிப்பித்து வார்த்தை சொல்லா நிற்க
அவ்வளவில் பிரிந்து தனி இருப்பாரைக் காலத்தை மயக்கி தரிப்பிப்பார் யுண்டாகில் தரிப்பிப்புயுங்கோள் என்று
வாய் பற்றிக் கொண்டு வந்து தோற்றின சில மேகங்கள்
அவற்றின் உத்யோகத்தைக் கண்ட திருத்தாயார் வார்த்தையாகாச் செல்லுகிறது

வியாக்யானம்
காரிகையார் உண்டு -அபலைகள்
அவர்களுடைய நிறையுண்டு -அடக்கம்
அத்தை ஆர் தான் அறியாதபடி நோக்குகிறார்கள்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் என்று

கார் கொண்டு
புறம்பு கறுப்பு
அகவாயில் கறுப்பு புறம்பு பொசித்துத் தோற்றிற்று என்னலாய் இருக்கை
இன்னே
இதனுடைய ஒருப்பாடு இருந்தபடி கண்டோ உமக்கு இப்படி -என்னும் அத்தனை போக்கிப்
பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லையே

மாரிகை ஏறி
ரண உத்யதா நாம் கிஷ்கிந்தா -28-21-என்னும்படி
கையும் அணியும் வகுத்துக் கொண்டு

அறை இடும் காலத்தும்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் -என்று அறையோ அறை -என்னா நின்றதாயிற்று
தேந நாதேந மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர -பால -1-68-

அவன் ரக்ஷகன் நாம் ரஷ்யம் என்று ஆச்சார்ய உபதேச மாத்திரம் அறிந்து ஆறி இருக்கலாய் –
க்ரமத்தாலே பெறுவோம் என்று இருக்கலாம்
இவருக்கு அனுபவ பூர்வகமாக அறிந்து -கிருபா குண ஞானம் பிறந்து
இரக்கமே உபாயம் -அதுக்கு நான் ஆள் என்று உணர்ந்த பின்பு க்ரம பிராப்தி என்று ஆறி இருக்காமல் -துடிப்பாரே
பேற்றுக்குத் த்வரிக்க வேணுமே
வழி அல்லா வழி மேல் விழுந்து அடைய த்வரிப்பது குற்றம் அன்றே
ஸாஸ்த்ரங்கள் விதித்தாலும் செஞ்சே தீர கங்கணம் கொண்டு – வாஸனை பலத்தாலும் கவனக்குறைவால் -பிராமாதிகமாகவும்
அபிராப்த விஷயங்களில் புத்தி பூர்வகமாக குற்றம் நாம் செய்வது போல் பகவத் விஷயத்தில்
ஞானாதிக்யத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறலாம்
பத்தி மேலீட்டால் தெரிந்தே செய்தாலும் குறை இல்லையே
குணாதி விஷயத்தில் விஷய வை லக்ஷண்யம் பண்ண வைக்கும்
ஷூத்ர விஷயம் அல்பம் அஸ்திரம் அப்ராப்யம் -இதிலே மேல் விழுந்து
இது அநந்தமாயும் ஸ்திரமாயும் ப்ராப்த விஷயமுமாய் அதுக்கும் மேலே குணாதி விஷயமுமாய் –
ஆக நான்காலும் இருக்க கைமுதிக நியாயத்தால் செய்வதிலே குறை இல்லையே

இத்தால் சொல்லிற்றாயிற்று என் என்னில்
ஷூத்ர விஷய ப்ராவண்யத்தோ பாதி பகவத் விஷயத்துக்கு குற்றம் உண்டாகிலும்
விட மாட்டாத படியான இவருடைய ப்ராவண்ய அதிசயம் சொல்லுகிறது –

பகவத் விஷயத்தில் குற்றமே சொன்னாலும் விட மாட்டார்
கடியன் கொடியின் நெடிய மால் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பர் அன்றோ

———————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி வர்ஷா காலத்திலேயே அத்யாவசன்னையாகும் தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
இவள் தாயார் ஊரார் சொல்லும் பழிக்கு இரங்கி அவசன்னை யாகிறாள் இப்பாட்டில் –

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகைக் கண்டு உகக்கும் பெண்களுடைய பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று

கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி
இன்னே –
இப்படியே
கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை மேல் மேல் வர்ஷித்திக் கொண்டு
அணி அணியாக ஏறி

அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்

வாழியரோ
என்று சிலராலே தமக்கு மங்களத்தை ஆஸாஸிப்பித்திக் கொண்டு

சாரிகை புள்ளார்
மண்டல ஆகார கதியால் ஸாரி விடும் புள்ளுடையவருடைய

அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை

இறை கூய் அருளார்
ஈஷத்தாகிலும் மனமுற்று அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்

என் சின் மொழிக்கே –
என் மகளாய்
மித பாஷிணியான இவளுக்கு

சேரி –
ஊரார்

கை ஏறும் பழியாய் விளைந்தது
கை வகுத்து ஏறும்படியான பழியாய்ப் பலித்தது

அவனில் பிரவணை யானாய் உனக்கு இத்தனையும் வேணும் காணும் -என்னும்படி
ஓர் அவதி அற்றுத் தூற்றுவார்களே என்று அவசன்னை யாகிறாள்
இது இவள் பசி வளர்க்கப் பட்டினி இடா நின்றவன் என்று அறிந்தும்
சிலருக்கு அவனில் ப்ராவண்யத்தைத் தவிர்க்கவாய்
சேரியர்க்கே பழியாய்த் தன் குலத்துக்குப் பழியாய் விளைந்தது என்னா நின்றாள் –

————

அவதாரிகை
இப்படி நோவு படுகிற இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கைக்காக
ஈஸ்வரன் அநந்ய ஸாத்யன் -என்று அறியாதே இவர் பக்கல் பரிவாலே உண்டான கலக்கத்தாலே
ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -அயோத்யா காண்டம் -2-52-என்னுமா போலேயும்
நாய்ச்சியார் காமன் காலிலே விழுந்தால் போலேயும்
பகவத் விபூதி பூதரான தேவதாந்தர அனுவர்த்தனத்தாலே யாகிலும் இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கலாமோ
என்று ப்ரவர்த்தித்த பரிவரைக் குறித்து
இவருடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கும் ஸ ப்ரஹ்மசாரியான ஸூஹ்ருத்துக்கள் விலக்கின பாசுரத்தை
தலை மகள் ஈடுபாட்டுக்கு நிதானம் அறியாதே வெறி யாடலுற்ற தாயாரைக் குறித்து
இவள் பிரகிருதி அறிந்த தோழி வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–

பதவுரை

சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லாவுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழிகொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்-

வியாக்யானம்

சின்மொழி நோயோ
வாய் விட்டு வார்த்தை சொல்லவும் மாட்டாத இவளுடைய நோய்


நோயின் முதிர்த்திக்கு ஈடுபட்ட படி

கழி பெருந்தெய்வம்
மிகவும் பெரிய ஈஸ்வரன் அடியாக வந்தது

இன்ன-இந்நோய் இது என்று
இந்த நோய் இப்படிப்பட்டது என்று
ஸ்வரூப பிரகாரங்களைப் பரிச்சேதித்து

இன்மொழி கேட்கும்
இல்லாத மொழியைக் கேட்கப்படுவதான

இளந்தெய்வம் அன்று இது
இது அர்வாஸீன (தாழ்ந்த )தேவதை அன்று

வேல! நில் நீ
முருகனே -நீ வெறி யாடுகிற வேலனே -கடக்க நில்லு

என் மொழி கேண்மின்
இவள் பிரகிருதி அறிந்த என்னுடைய வார்த்தையை கேளுங்கோள்
ப்ரக்ருதி அறியாதே அசம்பாவிதத்தைச் சொல்லுகிற
கட்டு விச்சி
வேலன்
தொடக்கமானவர் வார்த்தையைக் கேளாதே என்று கருத்து –

என்னம்மனை மீர் !
மெய் சொல்லுகைக்கு அடியான பந்தமும்
ப்ரக்ருதி அனுகுணமாகப் பிரவர்த்திப்பிக்கும் வாத்சல்யத்தையும் யுடைய நீங்கள்

உலகு ஏழும் உண்டான் சொல் மொழி
ஸப்த லோகத்தையும் தனது வயிற்றிலே வைத்து நோக்கினவன் திரு நாமத்தைச் சொல்லுகை

மாலை யம் தண் யம் துழாய்
மாலா ரூபமாய்
தர்ச நீயமுமாய்க் குளிர்ந்த திருத்துழாய்

கொண்டு சூட்டுமினே –
சொன்மொழியைக் கொண்டு
திருத்துழாயைச் சூட்டுமின் என்று நேர் நிரல் நிறை
இந்நோய்க்கு பகவன் நாமமாகிற மந்த்ரத்தை உச்சரித்து
ப்ரஸாதமாகிற பசு மருந்தை சிரஸா வஹியுங்கோள்
என்றதாயிற்று –

இத்தால்
சின்மொழி நோய் -என்று
ஸ்வ காரியத்தில் ஸக்ருத் வசனமும் ஒழிய அறியாதவள் என்றபடி –

நோயாவது
அனுபவ அபி நிவேச ரூபமான பக்தி யோகம்

கழி பெருந்தெய்வம் -என்று
ஸமாப்யதிக ரஹித ஸர்வேஸ்வரன் என்றபடி
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ )

இந்நோய் இது என்று-இத்யாதியாலே
இந்த ஆர்த்தி ஏவம் விதம் என்று பர்ச்சேதிக்கலாம் படி
அஸத்ய ப்ரலாப ஸ்ரவண விஷயமான அர்வாஸீன தேவதைகளுக்கு ஸாத்யம் அன்று
ஆகையாலே
வேல நில் நீ -என்று
தேவதாந்த்ர அந்வயம் நிற்கப்படுவதாக என்றபடி

பிரதமத்திலே பகவத் சம்பந்தம் உடையோருக்கு அவதானித்துக் கழிக்க வேண்டுவது
தேவதாந்த்ர சம்பந்தம் ஓன்று இறே
பின்பு இறே
ஆர்த்தி பரிஹாரமும்
போக ஸித்தியும்

(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் )

என் மொழி கேண்மின் -என்று
ஆர்த்தி பரிஹாரம் -ஆப்த உபதேச மூலம் என்றபடி

என்னம்மனை மீர் ! -என்று
பிதா புத்ர ஸம்வாதம் போலே மூப்பு இளமையால் வரும் தாரதம்யம் இன்றியே
அறிவுடையார் உபதேஷ்டாக்கள் என்றபடி

உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று
நாம உச்சாரண பேஷ ஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே
ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி

மாலை யம் தண் யம் துழாய் -என்று
போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை
சமிப்பிக்கும் என்றதாயிற்று

கொண்டு சூட்டுமினே –என்கையாலே
போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி
அத்தாலே
நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே
ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே

ஆகையால்
உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும்
போக்ய அந்வயமும்
விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

———-

ஸ்ரீ நம்பிள்ளை -ஈடு
அவதாரிகை
காலமும் போய் மர முதிர்ந்து மேகங்களுமாகக் கை வளர்ந்து
நாயகனும் வாராமையாலே இவள் மோஹங்கதையாக
இத்தைக்கண்ட தாயார் தொடக்கமான பந்து வர்க்கமும் போய் அறிவு இழந்து
இவளுக்கு இது ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாக நினைத்து
பாஹ்ய ஆகமங்களைத் த்ருஷ்டியாகக் கொண்டு தேவதாந்தர ஸ்பர்சமுடையாரை
சிகித் சகரராய்க் கொண்டு சிகிச் ஸஹையிலே இழிய
இவள் பிரக்ருதியை அறிந்த தோழி யானவள்
இவர்கள் இவளை இழக்கும்படி வ்யாபரியா நின்றார்கள்
அவன் வந்திலனேயாகிலும் நாம் இவள் சத்தியை நோக்கி இட்டு வைப்போம் என்று பார்த்து
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து -திருவாய் -4-6-8-என்கிறபடியே
வேதத்தைத் த்ருஷ்டியாகக் கொண்டு வேத தனரைத் தேசிகராய்க் கொண்டு
வேதாந்த வேத்யமான பரதத்வம் அடியாக வந்தது என்று புத்தி பண்ணி
இக்குடிக்கு அனுரூபமாகப் பரிஹரிக்கப் பாருங்கோள் என்று
பரிஹாரத்தைச் சொல்லி இவள் வெறி யாட்டத்தை விலக்குகிறாள்

வியாக்யானம்
சின் மொழி
கீழ்ச் சொன்ன தசா விசேஷம் தன்னையே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
சில கற்ப்பித்தவை சொல்லுமது ஒழியத் தானாக ஒன்றும் சொல்ல மாட்டாத படியன்றோ இவள் பருவம்
இப்பாவைக்கு வந்தது அவனடியாக வேண்டாவோ

சின்மொழி நோயோ
இவள் கொண்ட நோய் அறிந்து ஸர்வேஸ்வரன் அடியாக வந்தது என்னுதல்

அன்றிக்கே
சின் மொழி நோய் கழி பெரும் தெய்வம் ஓ
என்னவுமாம்
இவள் இந்நோய் கொள்ள பாக்யம் பண்ணுவதே
இது என்ன ஆச்சார்யமோ
நாம் இந்நோயைக் கொள்ளாதே
இதுக்குப் பரிஹாரம் பண்ணுவதாகப் புகுந்து அவிக்ருதிகளாய் இருப்பதே என்று
ஓ என்னவுமாம்

கழி பெரும் தெய்வம்
இவளுடைய இந்நோய் கழியப் பெரிதான பரதேவதை அடியாக வந்தது
இந்த்ராதிகளில் காட்டில் ப்ரஹ்மாதிகள் யுடைய ஐஸ்வர்யத்துக்கு ஏற்றம் உண்டே யாகிலும்
இருவருக்கும் ஷேத்ரஞ்ஞத்வம் அவிசிஷ்டம் இறே
சேஷித்வ ப்ரயுக்தமான இதர விஸஜாதியை யுள்ளது அவன் ஒருவனுக்கும்
ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ ஷேத்ரஞ்ஞத்வங்கள் இங்கு உள்ளார் எல்லாருக்கும் ஒக்கும் இறே

கழி பெரும் தெய்வம்
அவ்வருகு இல்லாத தத்வம்
பதிம் விஸ்வஸ்ய -தைத்ரியம்
பதிம் பதீ நாம் -ஸ்வேதாஸ்
தமீஸ் வரணாம் பரமம் மஹேஸ்வரம் -ஸ்வேதாஸ்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தைத்ரியம்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய அஷ்ட ப்ரபந்தகங்களில் பிரபல பாசுரங்கள் —

March 2, 2022

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி

திரு அரங்கா உறை மார்பா திசை முகன் சேவிப்ப கந்
திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட திருக் கண் வளர்
திருவரங்கா வுன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்
திரு வரம் காதலித்தேன் உனக்கே தொண்டு செய்வதற்கே–1

முதல் -வரி -திருவரங்கா -திரு அரங்கு ஆ -திரு மகள் தான் வசித்தற்கு இடமாக கொண்டு
இரண்டாம் வரி -திருவரங்கா தரித்து -கந்தருவர் அங்கு ஆதரித்து
மூன்றாம் வரி -திருவரங்கா -அவனையே குறித்து அருளி

நான்காம் வரி -திருவரங்கா -எழுந்திரு-உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் = வரம் பெற ஆசைப்பட்டேன்-

————–

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந் திருக் காவிரிக்கும்
திருக்கா விரிக்கும் -அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற
யமுனா நதிக்கும் கங்கா நதிக்கும் தெளிவான அமுதம் போலே இனிதாய் இருக்கிற மேன்மை உள்ள காவேரி நதிக்கும்
கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
சமுத்ரத்துக்கும் தலைவனான எம்பெருமானது அழகிய திருவரங்கம் என்று ஒரு தடவையாவது வாயினாலாவது சொல்ல
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த் திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –
-அன்பு உய்த்து இருக்கா -அன்பு செலுத்தி இராமல்
திருக்கு ஆவீர் -மாறுபடுவீர்காள்
இக்கு மொழியார்க்கு -கருப்பஞ்சாறு போலே இனிய சொற்கள் உடைய மகளிர் திறத்திலோ
தீ மெழுகு ஆவீர் -தீப்பட்ட மெழுகு போலே கரைந்து உருகுவீர்கள்
இவ்வாறு இருக்க
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமது எ ஆறு -அப்பெருமான் உங்களுடைய பிறப்பை ஒழிப்பது எங்கனம் நிகழும்
திருக் கா விரிக்கும் -அடை மொழி யமுனை கங்கை காவரி மூன்றுக்கும் கொள்ளலாம்
யமுனைக்கும் இவனே பிரான் -ஸ்ரீ கிருஷ்ணா லீலைகள் செய்து அருளியதால்
கங்கைக்கும் பிரான் -ஸ்ரீ பாத தீர்த்தமானதால்
திருக் காவேரிக்கு பிரான் -உபய காவேரி மத்யத்தில் திருப் பள்ளி கொண்டு அருளிக் கொண்டு இருப்பதால் -எனவே தெள்ளமுதாம் –

———-

தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து என்னைத் தேவரொடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே –100-

தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து
தரங்கம் பவ நோய் தீரத் துடைத்து
அலை போல் மாறி மாறி வந்து வருத்துகின்ற எனது பிறவித் துன்பத்தை ஒழியுமாறு நீக்கி
என்னைத் தேவரொடும்
அடியேனை நித்ய ஸூ ரிகளோடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீர்த்தர் -ஓடும் ஞானி
அங்கு -அவ்விடத்தில் -பரம பதத்தில்
அ பணி
எம்பெருமானுக்கு செய்யும் அந்தக் கைங்கர்யங்களை
காப்ப -காத்து இருந்து தவறாமல் செய்யுமாறு
வைத்த செயல் எனபது ஒர்தீர்
செய்கையை அறியுங்கோள்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
அத்தர் அங்க -தலைவர்களான பிரம ருத்ரர்களை தனது திருமேனியில் கொண்டு அருள்பவனே
அபயம் என்று ஆர்க்கும்
அடைக்கலம் என்று ஓலம் இடுவது போன்று ஆரவாரிக்கின்ற
திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே —
தீரத்து அரங்கன் -வரம்பை உடைய திருவரங்கன் உடைய
சிலம்பு ஆர்த்த செய்ய திருவடியே
சிலம்பு என்னும் திரு ஆபரணம் பொருந்திய சிவந்த திருவடிகளே –

பணி காப்ப வைத்த செயல் -அவா அற்று வீடு பெற்றார் என்றால் போலே
அத்த ரங்க அபயம் என்று ஆர்க்கும் திரைப் பொன்னி
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன்
அஞ்சாதே என்று என்னை பாதுக்காக உரியன் நீயே -என்றபடி

————————————————————————————

பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் பரிதி வளை
நிணவாள் அம் சார்ங்கம் கதை தோளில் சார்த்தினன் நீள் நிலமேல்
குணவாளர் ஆம் பட்டர்க்கு ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
மணவாள தாசன் யமக அந்தாதி வனைந்தனனே —

பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் சார்த்தினன்
திருவடிகளில் சமர்ப்பித்தான்
பரிதி வளை நிண வாள் அம் சார்ங்கம் கதை தோளில்
பரிதி -சக்கரம்
வளை -சங்கமும்
நிணம் வாள் -பகைவரின் கொழுப்புத் தோய்ந்த வாளும்
அம் சார்ங்கம் -அழகிய சார்ங்கம் என்னும் வில்லும்
கதை -ஆகிய பஞ்ச ஆயுதங்களும்
தோளில் -தமது திருக்கைகளில் கொள்பவரான
தொனி தக்க சங்கம் திருச் சக்கரம் சுடர் வாள் முசலம் குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் -என்றார் முன்னமே
நீள் நில மேல் -நீண்ட நில வுலகத்திலே
குணவாளர் ஆம் பட்டர்க்கு
உத்தம குணங்களை யுடைய வரான பட்டர் என்னும் ஆச்சார்யர்க்கு
ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
பதினான்கு தலை முறைகளிலும் -தொன்று தொட்டு -பரம்பரையாக அடியவனான
மணவாள தாசன் –
அழகிய மணவாள தாசன்
யமக அந்தாதி வனைந்தனனே —
யமக யந்தாதி பா மாலையைத் தொடுத்து

————————————————————————————–———–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –

நம்மாழ்வார் துதி
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

திரு நா வென் மந்தரத்தால் -பாட பேதம்-

அளத்தற்கு அரிய பரப்புடைமை -இன் சுவை யுடைமை -எம்பெருமான் உறைவிடம் ஆதலால்
மறையை பாற் கடலாக உருவகம் செய்து அருளுகிறார்
திரு -வேறு ஒன்றுக்கு இல்லாத மேன்மை -திரு நா வீறுடைய பிரான் போலே
கறை-நஞ்சினை யுடைய – -புள்ளி என்றுமாம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –

——-

4- யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பு ஆமோ —

நாயகராய்த் திரியும் சில தேவர் -திரு வேம்கடத்து அந்தாதி
கடவுள் -எல்லாவற்றையும் கடந்து இருப்பவன் -தொழில் ஆகு பெயர்

——–

1-அலை கடல் வயிறு கலக்கினை
கூர்மாவதாரத்தில் ஷீராப்தி மதன காலத்திலும் -ஸ்ரீ ராமாவதாரத்தில் வருணனை வழி வேண்டிய பொழுதும்
2-அவுணரை மதுகை யடக்கினை
மதுகை யடக்கினை -வலிமை கெடச் செய்தாய்
3-மலை கட களிறு வதைத்தனை
குவலயாபீட வதம்
4-மலை தலை கவிழ எடுத்தனை
கோவர்த்தன உத்தாரணம்
மதுசூதனன் எடுத்து மறித்த மலை –
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்துக் கவித்தமலை –

————————————–

1-மண்ணை விண்டனை
2- வெண்ணெய் உண்டனை
3- மருது இடந்தனி
4-எருது அடர்ந்தனை
5-உள் நிறைந்தனை
அந்தர்யாமித்வ வைபவம்
6-எண் இறந்தனை
எண்ணத்தையும் கடந்து –மனத்தை கூறினது மொழி மெய்களுக்கும் உப லஷணம்
7-ஒருமை ஆயினை
அத்விதீயன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
8-பெருமை மேயினை-

—————————————————————————-

11- தானே தனக்கு ஒத்த தாள் -தாமரைக்குச் சரண் புகுந்து ஆள்
ஆனேன் இனி உன் அருள் அறியேன் எனது ஆருயிரே
தேனே என் தீ வினைக்கு ஓர் மருந்தே பெரும் தேவர்க்கு எல்லாம்
கோனே அரங்கத்து அரவணை மேல் பள்ளி கொண்டவனே –11-

உயிர்க்கு உயிர் என்பதால் ஆருயிர்
அழியா இன்பம் தருவதால் தேன்
தேவாதி தேவன் -என்பதால் பெரும் தேவர்க்கு எல்லாம் கோன்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி உன் திருக் குறிப்பே -பெரியாழ்வார் –

———————————————

20- கேசவனையே செவிகள் கேட்க திரு அரங்கத்து
ஈசனையே சென்னி இறைஞ்சிடுக நேசமுடன்
கண்ணனையே காண்க இரு கண் இணர் கொள் காயம் பூ
வண்ணனையே வாழ்த்துக என் வாய் –20-

இணர் கொள்-கொத்தாக மலர்ந்த

————

தான் தூது விட்ட நெஞ்சு திரும்பி வாராமைக்குத் தலைமகள் இரங்குதல்
24-நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க -மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான்
ஆர் இருக்கினும் என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –24–

தோழிமீர் -நீர் அவன் அழகிலே ஈடுபட்டு திரும்பி வாராமல் இருப்பீர்
கிளியோ மன்மதன் குதிரை
வண்டோ மன்மதன் வில்லின் நாண்
அன்னம் மந்தகதி –
குருத்தத்தை மாரன் குரகதமாம் என்றே வருத்தத்தை அங்கு உரைக்க மாட்டேன்
கருத்துற்ற மா தண்டலைவாய் மதுகரத்துக்கும் அவன் தன் கோதண்ட நாண் என்று கூறேன் நான்
பொற்கால் வெறிப்பது மவீட்டன்னம் வெண் பாலும் நீரும் பிரிப்பது போல் நட்பும் பிரிக்கும்
குறிப்பு அறிந்து காதலால் உள்ளக் கவலை யது கேட்க ஓதலாகாது என்று உரையாடேன் ஆதலால்
உள்ளே புழுங்குவது அன்றி ஒருவருக்கும் விள்ளேன் -திரு நறையூர் நம்பி -மேக விடு தூது –

——————

73-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –73-

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -இரு கரைகளையும் மோதிப் பெருகுகின்ற காவிரி நதி ஓன்று உண்டு
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -நம்பெருமாள்
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே—திரு அவயவங்கள்
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே -இடது திருவடி ஒரு சேர அளந்ததே
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே -வலது திருவடி -கங்கை நதியை வெளி உமிழ்ந்தது
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே-உந்தித் தாமரை மலர் பிரமதேவனை உண்டாக்கிற்று
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே -திரு மார்பு அழகிய இடமாய் -திரு மனையாகி
பெரிய பிராட்டிக்கு வாசஸ் ஸ்தானம் -பருத்த கௌஸ்துபம் விளங்கப் பெற்று உள்ளதே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே -வலத் திருக்கை முடை நாற்றம் உடைய பிரம கபாலத்தை ஒழித்தது
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே -இடது திருக்கை கோதண்டத்தை வளைத்தது
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே -திரு முக மண்டலம் -எப்பொழுதும் மலர்ந்து அருளோடு இருந்தது
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே -திருப்பவளம்
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய இன்பம் தழீ இய இரு பெரும் கமலம்-திருக்கண்கள் –
துன்பம் தழீ இய தொண்டனேனையும் உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –

பத்துத் தாமரையும் ஒன்பது அதிசயமும் அருளுகிறார்
அரவிந்தம் -தாமரை -பங்கேரு ஹம்-சேற்றில் முளைப்பது -கோகனகம்- கோக நதம் -மருவி –பதும மலர் –
முளரி-வனசம் -வனஜம் -நீரில் முளைப்பது -புண்டரீகம் -அம்போருகம் -கமலம் -பர்யாய பத்து சொற்கள் –

அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி -அவன் கடாஷமே உய்ய ஹேது என்றவாறு –

ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேன் மது ஸூதான -சாத்விகஸ் சது விஜ்ஞேயஸ் சவை மோஷார்த்த சாதக –

மா முதல் அடிப்போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ
நான்முகப்புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட நெறீஇத் தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாயுடைய
–முடி தோள் ஆயிரமும் தழைத்த நெடியோக்கு அல்லது அடியதோ வுலகே –

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே –

இப்பாடலின் சிறப்புகள் :

1. இவ்வண்ணத்தில் உள்ள சொற்கள் அடுத்த வரியிலும் உடனே வருகின்றன (அந்தாதி போல)
2. இவ்வண்ணத்தில் உள்ள சொற்கள் தாமரையின் வெவ்வேறு பெயர்களையும்
அரங்கனின் (அடைப்பு குறிக்குள்உள்ள ) அவயவங்களையும் குறிக்கின்றன

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே ! (பொருது – மோதி)
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே !
அரவம் சுமப்பதும் ஓர் அஞ்சன மலையே ! (அஞ்சனம் – கண் மை)
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே !
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே !

கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம்
உடன் முழுது அளந்தது, ஒருதாமரையே (இடது திருவடி)
வகிர் இளம் பிறையான் வார்சடை தேங்கப்
பகிரதி கான்றது ஓர் பங்கேருகமே (வலது திருவடி)

யாவையும் யாரையும் படைக்க, நான்முகக்
கோவை ஈன்றது ஓர் கோகனகமே (திரு நாபி)
திருமகட்கு இனிய திருமனை ஆகி
பரிமணி இமைப்பது ஓர் பதும மலரே (திரு மார்பு)

சடைத்தலை தாழ்த்து சங்கரன் இரப்ப
முடைத்தலை தவிர்த்தது ஓர் முளரி மாமலரே (வலத் திருக்கை )
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கள நாண்
வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே (இடத் திருக் கை )

விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென்திசை (விபீஷணன்)
புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே (திரு முக மண்டலம்)
மண்திணி ஞாலமும் வானமும் உட்பட
அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போருகமே (திருப் பவள வாய்)

கடை சிவந்து அகன்று கருமணி விளங்கி
இடை சில அரி பரந்து இனி ஆய் நெடி ஆய்
இன்பம் தழீஇய இரு பெரும் கமலம் தழீ இய – நிறைந்த (திருக் கண்கள்)
துன்பம் தழீஇய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி
பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே

——————————

திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது.
இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது.
எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது.

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.–38-

வாலி காலனை -வாலிக்கு யமனாய் இருந்தவனே
வாசவன் தலைவன் -இந்திரன்
ஔவியப் பிறப்பில்-பொறாமையை உடைய பிறவிக் கடலில் –
அவா வெகுளி இன்னாச் சொல் -போன்ற தீக் குணங்களுக்கும் உபலஷணம்

அழன்று பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் திருவாலி மாயன் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி

இந்தப் பாடலில் மாலவன் மகிழ்ந்தினிதுறையும் தலங்களும்,
அவனுடைய திருநாமப்பெருமையும்,
அவன் உயிர்களில் கரந்துறையும் மாண்பும்
மனங்கவரும் வண்ணம் இடம்பெற்றுள்ளன.

———–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்து மாலை

சிறப்புப் பாயிரம் -அபியுக்தர் அருளிய தனியன் –

மறைப் பொருளோ அச்சிரப் பொருளோ மனுவே முதலாம்
முறைப் பொருளே இதிகாகச புராண முதுப் பொருளோ
இறைப் பொருளாம் நம் பெருமாளுடைத் திரு எட்டு எழுத்துள்
உரைப் பொருளோ -மணவாளர் தம் மாலையின் உட் பொருளே –

வேதம் -வேதாந்தம் -சிர பொருள் -மனு முதலான தரும சாஸ்திரம் -18 ஸ்ம்ருதிகள் –இதிகாசம் -புராணம் -அஷ்டாஷரம் –
இவை அனைத்தின் பொருளும் இந்த திருவரங்கத்து மாலையிலே உண்டு என்றவாறு
புகழு நல் ஒருவன் என்கோ-பொருவில் சீர் பூமி என்கோ -திகழும் தண் பரவை என்கோ -தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ -இகழ்வில் இவை யனைத்தும் என்கோ என்றால் போலே
ஈடு பட்டு வியந்து சங்கை போலே அருளிச் செய்கிறார் இங்கு
இறைப் பொருள் -தலைமையான பொருள் -முதலாவார் மூவரே யம் மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -என்பதால் –
இறைப் பொருளாம் நம் பெருமாள் -என்றவாறு
இறைப் பொருள் திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்துக்கு விசேஷணம் என்றுமாம்
நம்பெருமாளுடை திரு எட்டு எழுத்து -இவன் வெளியிட்டு அருளி குரு பரம்பரையில் இடம் பிடித்து கொண்டதால்
குரு பரம்பரை பூர்வகமாக அனுசந்திக்கும் அஷ்டாஷரம் என்றவாறு-
கோயிலில் வந்த மணவாளர் பொற் திருப் பாதாம்புயங்கட்கு மாலை என மணவாளர் சூடும் என்றவாறு-

——————————

பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் பிறங்கும் கவந்தம்
நேர் ஒத்த ஆடும் அது ஆயிரம் ஆடின் நெடும் சிலையின்
ஏர் ஒத்த கிண் கிணி சற்று ஒலித்திடும் அது ஓர் யாமம் நின்று
கார் ஒத்த மேனி அரங்கர் தம் போரில் கறங்கியதே –44-

ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவல் ஆயிரம் படில் செழும் கவந்தம் ஓன்று ஆடும்
கானம் ஆயிரம் ஆயிரம் கோடிக்கு கவின் மணி கணில் என்னும் எனை யம் மணி ஏழரை நாழிகை யாடியது இனிதன்றே -கம்பர்
நாளில் ஏட்டில் ஓர் பாகம் -யாமம் -ஏழரை நாழிகை

————

திருவெட்டு எழுத்து -பெரிய திருமந்திரம்

நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணிவாள்
வெம்படை மாசுணம் மா மத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –81-

மகா மாயாவியான சம்பாசுரன் செய்த மாயைகளை எல்லாம் திரு வாழி யாழ்வான் தகித்து சாம்பராக்கி விட்டதனால் சம்பரன் மாயமும்
புரோகதர் உண்டாக்கி மேலே ஏவின கிருத்யை வந்து ஒன்றும் செய்ய மாட்டாதே திரும்பிப் போய் அந்த புரோகிதர் மேலே விழுந்து
தகிக்க ஆரம்பித்ததனால் புரோகிதர் சூழ் வினையும்
அங்கு இருந்த அசுரர்கள் ஆயுதங்களை எடுத்து பிரயோகிக்க அதனால் வேதனை உறாமல் விளங்கியதால் தாரணி வாள் வெம்படையும்
கொடிய மகா சர்ப்பங்கள் -மா சுணமும் – மா மத வேழமும் -விஷமும் -தழல் கால் அம்பரம் முதலானவை என்றதால் பர்வதம் முதலியனவையும்-என்றவாறு –
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் -சம்சார ஆர்ணவ தாரக –கதி அஷ்டாஷர உன்ரூணா மபுநர்ப்பவ காங்ஷிணாம்-
குலம் தரும் செல்வம் தந்திடும் இத்யாதி

————————————————————-

துவாதசாஷர மகா மந்திரம் –

அத்தா அரங்கத்து அமர்ந்தவனே எழுத்து ஆறு இரண்டின்
வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ -விளைவு ஓன்று அறிய
உத்தான பாதன் மகன் சலியாது உலகு உள்ளளவும்
எத்தார கைக்கும் முனிவர்க்கும் மெல் சென்று இருக்கின்றதே –82-

சூரிய குலத்தில் உத்தானபாக மகாராசன் குமாரன் துருவன் சஞ்சலம் இல்லாமல் லோகம் உள்ளவரையிலும்
மேல் ஸ்தானம் சென்று அடைந்து இருப்பது -ஸ்ரீ த்வாதச அஷர விதையாகிய உனது அருள் கொண்டே –
விளைவு ஓன்று அறியா -துருவனுக்கும் உத்தான பாதனுக்கும் இயையும்-இளையாள் மேல் பஷபாதம்
காட்டியதால் பெரும் தீங்கு விளைய காரணம் ஆனான் என்றவாறு –

—————————————

திரு வநந்த வாழ்வான் –

சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் திருத் தீவிகை ஆம்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம் நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் புனை கோசிகை ஆம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே –87-

சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் -திருப் பள்ளி மேத்தையாம்
திருத் தீவிகை ஆம் -விளக்கு இட்டுக் காண அபேஷிதம் ஆன பொழுது மங்கள தீபம் ஆகும்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம்
நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம்
புனை கோசிகை ஆம் -பும்ச்த்வ அவஹமாகிய அழகிய திருப் பரிவட்டமாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே —
சென்றால் குடையாம் இத்யாதி -நிவாசா செய்யா ஆசன இத்யாதி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதை யதோ உசிதம் சேஷ இதீர்ய தேஜ நை

—————————

ஏழு மதில்களும் திருவரங்க விமானமும்

அருமறை ஓதிய ஓர் எட்டு எழுத்தும் அயன் படைத்த
இரு நில மீதினில், யாவரும் காண இலங்குதுத்திக்
குரு மணி நாகத்தில் எம் கோன் விழி துயில் கொண்டருள
திரு மதில் ஏழும் விமானமும் ஆகிச் சிறக்கின்றவே –95-

பிரணவாகார விமானம் இங்கேயே அனைவரும் காணும் படி -எழுந்து அருளி இருப்பதனால் –
இரு நில மீதினில் –யாவரும் காண சிறக்கின்ற -என்கிறார் –

———————————————————————-

இதுவும் அது –

தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் தயங்கு செம் பொற்
கேழா விமானம் கிளர் செம் பொன் மேரு கிரி -நிகர்த்த
ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் இவ் அனைத்தும்
சூழ் ஆறு மா கடல் எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –96-

தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதி மூலமே என்ன
அரை குலைய தலை குலைய விரைந்து எழுந்து அருளி காத்து அருளிய நம்பெருமாள்
தயங்கு செம் பொற் கேழா விமானம் -விளங்கும் செம்பொன் மயமாகிய விமானம்
கிளர் செம் பொன் மேரு கிரி –
நிகர்த்த ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் -சப்த த்வீபங்களை ஒத்த ஏழு மதில்கள்
இவ் அனைத்தும் சூழ் ஆறு மா கடல் -சொந்த காவேரி கடலை ஒத்தது
எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –பூ லோக வைகுண்ட மகிமையை வருணித்துச் சொல்ல இயலாது -என்றவாறு

———————————————————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை –

காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –
திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –

நாராயணா
வடியேனாடும் -அடியேன் நாடும்
தமிழ் வேதப் பாராயணா சடகோபா
அடியேன் நாடும் -தமிழ் வேத பராயணத்துக்கும் சடகோபருக்கும் அடை மொழியாகக் கொள்ளலாம்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் –
பராயணம் = முழுவதும் -நாதனுக்கு நாலாயிரமும் அருளினவர் அன்றோ
திண்பார் புகழும் திருவேங்கட மாலை –
வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -உலக்குக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மழைத் திரு வேங்கடம் –
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய் -வெண்பாவால் நூறும் விளம்புவதற்கு கிருபை செய்து அருளுவாய்

———————————————–

இதுவும் அது -திருவேங்கடமுடையானைக் குறித்து அருளிச் செய்கிறார்
மூலமே யென்ற கரி முன் வந்திடர் தொலைத்து
நீலமேகம் போலே நின்றானைப் பாலாய
வேலை நடு விற்றுயிலும் வித்தகனை வேங்கடத்து
மாலை யன்றிப் பாடாதென் வாய் –

தேவு மற்று அறியேன் -வேறு ஒன்றும் நான் அறியேன் -போலே வேங்கடத்து திருமாலை யன்றி பாடாது என் வாய் என்கிறார்
மறந்தும் புறம் தொழாதவர் -என்நாவில் இன்கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –
பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகன் -வியூக நிலை –

———————————————

——————————————————————

பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-

பாடும் மதுகரமும்-இசை பாடுவது போல் ஒலிக்கின்ற வண்டுகளும்
மணம் மருவும் -மலர்களின் நறு மணம் பொருந்தப் பெற்ற
பச்சைத் தழைக் குடிலின் -பசுமையான தழைகளால் அமைக்கப் பட்ட குடிசைகளில்
வேடும் மணம் மருவும் -வேடர்களும் கல்யாணம் செய்யப் பெற்ற
வேங்கடமே
-நீடு மகராலயம் கடந்தார் -நீண்ட கடலை தாண்டியவரும் -மகரங்களுக்கு இடமான கடல் -மகரம் -சுறா மீன்
வாழ் வாசு தேவர்க்கு மகர் -வாழ்வை யுடைய ஸ்ரீ வசுதேவருக்கு புதல்வரானவரும்
ஆலயங்கள் தந்தார் வாழ்வு -திருக் கோயில்களை தந்து அருளிய திருமால் நித்ய வாசம் செய்யும் திருப்பதி

——————————————————————-

நாந்திச் செய்யுள் –

ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —

பட்டர் இரு கோகனைத் தாள் சேர் -ஸ்ரீ பராசர பட்டர் உடைய சரணார விந்தங்களை சேர்ந்த
அழகிய மணவாள தாசன் உடைய திரு மொழியாகும்
கோகம் -சக்கரவாக

——————————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி –

எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-

பணி வெற்பின் மீது-சேஷகிரியின் மேல் ஓங்கி நின்ற தனிச் சுடரே –சூர்யா சந்திர அக்னிகளிலும் மேம்பட்ட பரஞ்சோதி அன்றோ நீ
எனக்குப் பணியப் பணி ஒரு கால்-ஒரு கால் பணிய எனக்கு பணி -ஒரு தரம் வணங்குவதே எனக்கு தொழில்
இரு காலும் நல்க உனக்குப் பணி -உனது திருவடி இணைகளை அருளுவது உனக்கு உரிய க்ருத்யம்
இங்கு இருவேம் பணியில்-இவ்வாறு குறித்த நம் இருவர் வேலைகளிலும்
என் ஓர் பணியும் நினக்குப் பணி வித்துக் கொண்டு -ஒரு கால் பணிதல் ஆகிய எனது தொழிலை மாதரம் உனக்கு நீ செய்வித்துக் கொண்டு
உம் பணி நீ பணித்திலை என் தனக்குப் -இரு காலையும் நல்குதல் ஆகிய உனது தொழிலை நீ செய்கின்றாய் இல்லை –

——————————————————————————————-

அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-

திருவரங்கம் முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை 17 திவ்ய தேசங்களை அடை மொழி இல்லாதபடி அழகாக அருளிச் செய்கிறார் –

—————

திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–

பேதைச் சனங்களே உங்கள் பக்கல்
திருமந்திரம் இல்லை
சங்கு ஆழி இல்லை-சங்கு சக்கர முத்திரை இல்லை
திரு மண் இல்லை -திருமான் காப்பும் இல்லை
மந்த்ரம் தாபம் புண்டரம் மூன்றும் அருளிச் செய்தது மற்றை நாமம் யாகம் இரண்டுக்கும் உப லஷணம்
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் -சரணாகதி தர்மத்தை நிலையாக சிறிதும் செய்து பயின்றீர் இல்லை
செம்பொன் தானவனை மருமம் திரங்கப்-மார்பு வருந்த – பிளந்தான்
வடமலை வாரம் செல்லீர் -திருவேங்கட திருமலை அடிவாரம் -சென்றீர் இல்லை –
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –மலை போலே பெரும் தொகுதியாக குவிந்து உள்ள -திரண்ட கர்மங்களை எவ்வாறு களைவீர் –
அவைஷ்ணவர்களை பரம காருண்யத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகுமாறு அருளிச் செய்கிறார் உஜ்ஜீவன உபாயமாக –

———————————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி –

வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின் பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய தொங்கல் சுற்றும்
தாழும் இன்பஞ்சணை மேல் மடவார் தடமா முலைக்கே
வீழும் இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே –44–

தொங்கல் சுற்றும் தாழும்
இன்பஞ்சணை மேல் -இன் பஞ்சு அணை மேல்
மடவார் தடமா முலைக்கே வீழும்
இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே —
பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய –
வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின்–வாழும் மின்னல் போலே நித்ய அநபாயினி -சுந்தர வல்லி தாயார் கேள்வன் உடைய
மாலிருஞ்சோலை திருமலையை பிரதஷிணம் செய்மின்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யு மாய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -ஆழ்வார்

——————————————————————————

மணவாளர் ஆவி நிகர் திரு மாதுக்கு மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக்
குணவாளர் ஆவீர் இன்றே உயிர்காள் உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே –51–

உயிர்காள் -பிராணிகளே
மணவாளர் ஆவி நிகர்-உயிர் போன்ற – திரு மாதுக்கு
மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக் -தியானிக்குமாறு
குணவாளர் ஆவீர் இன்றே
ஏன் என்றால்
உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் -கொடு வினைக்கு ஏற்ப நிணம் தோய்ந்த -முன்பு அறுக்கப் பட்ட பிராணிகளின் கொழுப்பு தோய்ந்த –
வாள் ஆயுதத்தை கூர் செய்து அது கொண்டு அறுக்கும் படியான
அப்போது நினைப்பு அரிதே –அந்த அந்திம காலத்தில் நினைப்பது இயலாகாதாகும்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் –

———————

பணிபதி வாட நின்று ஆடின நூற்றுவர் பால் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின பாப் பதின்மர்
பணிபதி எங்கும் உவந்தன பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் பொன் திருப் பாதங்களே –94-

பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் -ஸ்ரீ கௌஸ்துபம் மணி பொருந்திய மார்பன் -அலங்கார அழகர் யுடைய
பொன் திருப் பாதங்களே —
பணிபதி வாட நின்று ஆடின -காளியன் வலிமை தளரும் படி அவன் தலையில் நர்த்தனம் செய்தன
நூற்றுவர் பால் சென்றன -துரியோதனாதிகள் பால் பாண்டவ தூதனாய் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின-பதினாலு புவனமும் தாவி அலைந்தன
பதின்மர் பாப் பணிபதி எங்கும் உவந்தன-பத்து ஆழ்வார்கள் அருளிச் செயல் அருளி ஸ்துதிக்கப் பட்ட
திவ்ய தேசங்களில் எல்லாம் உவந்து எழுந்து அருளின –

இது இரண்டாவது யமகச் செய்யுள் இந்த பிரபந்தத்தில் –

—————————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –

காப்பு –

ஆழ்வார்கள் பன்னிருவர்

பொய்கை பூதன் பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் வையகம் எண்
பட்டர் பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு –

வையகம் எண் -உலகோரால் நன்கு மதிக்கப்படும் –
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு -அரும்புகளின் முறுக்கு விரிந்த மாலையைத் தரித்த வாட்படையை ஏந்திய திரு மங்கை யாழ்வார்
தார் முள்ளி மலர் மாலை என்றுமாம் -முள்ளிச் செழு மலரோ தாரான் =

—————————————————————

நம்மாழ்வார் –

பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –

——————————————————————–

உடையவர் –

முன்னே பிறந்து இறந்து மூதுலகிற் பட்ட எல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி —

————————————————————————-

கூரத் தாழ்வான் –

முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு —

முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘-முக்காலம் இல்லா -முகில் வண்ணனுக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் விசேஷணம்
தக்கார் எண் -பெரியார்களால் நன்கு மதிக்கப் பெற்ற –
போட்டு —பேரும் சுமை என்பதால் -சடம் போட்டு -உடம்பை விட்டு

—————————————————————————

பட்டர் –

நான் கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலந்தான் கண்டீர் -ஆம் கூட்டச்
சிட்டருக்கு வாய்ந்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக் காட்பட்ட பயன் –

ஆம் கூட்டச் சிட்டருக்கு வாய்த்த திரு வரங்கன்-இன்னருளால்
திரள் திரளாக யுள்ள பெரியோர்கட்கு -கருணை செய்யுமாறு வாத்சல்யத்துடன் -பொருந்திய இருக்கும்
திருவரங்கன் யுடைய இனிமையான நிர்ஹேதுக கிருபையினால்
சித்தர் சிஷ்டர் நல்ல ஒழுக்கம் உடையவர் -என்றபடி

———————————————————————

திருப்பதிகளின் வகை –

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–

நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்

—————————————————————–

1–திருவரங்கம் பெரிய கோயில் –

சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-

ஆர்வம் ஒருவர் அங்கு அங்கு ஒயில் -ஒருவர் அந்த அந்த விஷயங்களில் பலவகையான உலகப் பற்றுக்களில் ஆசை ஒழிந்தால் –
உகந்து அவரை ஆள்வான் -அவ்வாறு பற்று அற்ற அன்பரை விரும்பி அடிமை கொள்ளும் எம்பிரான் உடைய
திரு அரங்கம் கோயில் சிறப்பு -பெருமையை
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என் சோர்வந்த சொல்லில் -குற்றம் பொருந்திய சொற்களில் -சுருங்குமோ
நான்முகன்-முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும் எம்பெருமான புதல்வன் என்பதாலும் -சீர் வந்த உந்தித் திசை மகன் என்கிறார் –

——————————————

34-திரு வண் புருடோத்தமம் –

சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்
ஒண் புருடோத்தமன் தன் ஊர் –34-

ஏய்ந்த -திரு உள்ளத்துக்கு பாங்காக –
புருஷோத்தமன் எழுந்து அருளி உள்ள வளப்பம் உள்ள திருப்பதி யாதலால் திரு வண் புருடோத்தமம் –

—————————————

41- திரு மால் இருஞ்சோலை —

பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–

திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன்
பணிந்தேன் திருமாலை
பாமாலை தாளில் அணிந்தேன்
அருள் தஞ்ச மாகத் துணிந்தேன்
எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் -ஜோதிமயமான பரம பதம் கிட்டும் -இது திண்ணம் –

பணிந்தேன் திருமேனி பைங்கமலக் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-

————————

49-திருக் குருகூர் –

வளம் தழைக்க உண்டால் என் வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என் சீ சீ குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய் –49-

குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச்
சடகோபன் ஊர்
எங்கள் வண் குருகூர் என்னாத வாய் — வளப்பம் பொருந்திய எங்கள் திருக் குருகூர் என்று
ஒரு தடவையாவது சொல்லாத வாயானது
வளம் தழைக்க உண்டால் என்
வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என்
சீ சீ -இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல்

க- பிரமனே இங்கே தவம் செய் என்று காட்டிக் கொடுத்தலால் -குருகா புரி -திரு நாமம் –
ஆழ்வார் திருவவதரித்ததால் ஆழ்வார் திருநகரி –
ஆழ்வார் திரு நகரி ஆதிதேவ நாதர் திருக் கோயில் உபய பிரதானம் –

—————————

73-திருக் கோவலூர் –

தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த
பூங்கோ வல் ஆயன் பொருள் –73–

தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும்
பூ மடந்தைக்கு ஆம் கோ
அலாயுதன் பின்னா அவதரித்த -கலப்பையை ஆயுதமாக யுடைய நம்பி மூத்த பிரானுக்கு பின்னாக திருவவதரித்த
பூங்கோ வல் ஆயன்
பொருள் –படைப்புப் பொருள்கள் ஆகும்
அனைத்தும் அவனால் படைக்கப் பெற்று அவன் இட்ட வழக்காகும் என்றவாறு

கோபாலபுரம் –
பா வரும் தமிழால் பேர் பனுவல் பா வலர் பாதி நாள் இரவின் மூவரும் நெருக்கி
மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –

———————————————————————

91-திரு நீர் மலை –

இரங்கும் உயிர் அனைத்தும் இன் அருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால்
போர் மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று –91–

இரங்கும் உயிர் அனைத்தும்-வருந்துகின்ற எல்லா உயிர்களையும்
இன் அருளால் காப்பான் அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால் -ஆயிரம் கரங்களினாலும்
போர் மலைவான் வந்த-போர் செய்யும் படி வந்த –
புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று —

தன்னை ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி தன்னைத் தொழுத கைகளை
கள்ளிக் காடு சீய்த்தால் போலே சீய்க்கக் கண்டு உயிர் உண்டால் உப்பு மாறி உண்ணலாம் என்று நெற்றியிலே
கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினான் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
ஈஸ்வரன் மாதாக்கள் கை விட்ட அவஸ்தையிலும் பின்னி நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் —
நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தெரிப்பாலே அகவையில் நின்று சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே
இவனே எல்லாருக்கும் ரஷகன் -ப்ரபன்ன பரித்ராணம்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலமே -நம்மாழ்வார் –

———————————————————————–

92-திரு இட வெந்தை —

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து -ஸ்தாவரமும் ஜங்கமும்ஆகிய எல்லா பிறவிகளையும் எனக்கு உண்டாக்கி
கொன்று திரியும் கொடு வினையார் -வருத்திக் கொண்டு திரியும் கொடிய வினைகள்
இன்று வெருவிட-அஞ்சி ஓடும்படி
யான்
திருவிட வெந்தைக்கே செறிந்து
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் –

வானோ மறி கடலோ -இத்யாதி –

———————————

94- திருவல்லிக்கேணி —

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் –94-

திரிந்து உழலும்-ஐம் புலன் ஆசைகளில் சென்று அலைகின்ற
சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
திருவல்லிக்கேணி யான்-கண்ணன் – சீர் -பார்த்த சாரதி-வேங்கட கிருஷ்ணன் உடைய கல்யாண குணங்களை
புரிந்து புகன்மின் -விரும்பிக் கூறுமின்
புகன்றால்
கருவல்லிக்கு -கர்ப்பம் ஆகிய கொடிக்கு மருந்து ஆம்
மாக்கதிக்கு ஏணி ஆம்-

—————————————————————————-

95-திருக்கடிகை -சோளிங்க புரம்–

சீர் அருளால் நம்மைத் திருத்தி நாம் முன் அறியாக்
கூர் அறிவும் தந்து அடிமை கொண்டதற்கே நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான் –95-

மனமே
சீர் அருளால் நம்மைத் திருத்தி
நாம் முன் அறியாக் கூர் அறிவும் தந்து
அடிமை கொண்டதற்கே
முத்தி தரு கடிகை மாயவனை
நேரே
ஒரு கடிகையும் -ஒரு நாழிகை பொழுதாவாது
உள்ளுகிலாய் -நினைக்க மாட்டாய் –
தான் -ஈற்று அசை –
கடிகாசலம் -சோழ தேசத்துக்கு வளம் மிக்க ஸ்ரீ நரசிம்ஹம் நித்ய வாசம் செய்து அருளும் ஸ்தலம்
என்பதால் சோளசிம்ஹபுரம்-
சோளசிம்ஹராஜன் உடைய புரம் என்றுமாம்

————————————————————————–

96-திருவேங்கடம் –

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

தானே சரணமுமாய்
தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான்
தேன் ஏய்திருவேங்கடம் தொழுதேம்
தீய விபூதிக்குள் மருவேம்
கடந்தனெம் இவ்வாழ்வு –சம்சார வாழ்வைக் கடந்து விட்டோம் –
தெளிவு பற்றி எதிர் காலத்தை இறந்த காலத்தில் அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி –

———————————————————

97-திருச் சிங்கவேள் குன்றம் -திரு அஹோபிலம் –

வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-

கேழ் கிளரும் -நிறம் விளங்குகின்ற
அங்கவேள் -அழகிய தேகத்தை யுடைய மன்மதன்
குன்ற அழல் சரபத்தைப் பிளந்த -சிவபிரானது ரூபமான சரபம் என்னும் விலங்கை பிளந்து அளித்து அருளிய
இரண்டு தலைகள் சிறகுகள் கூறிய நகங்கள் எட்டுக் கால்கள் மேல் நோக்கிய கண்களை யுடைய மிருக விசேஷம் –
சரபம் பறவையும் என்பர்
சிங்கவேள் குன்றத்தினார்க்கு —
வாழ் குமரன் மேல் -அருள் பெற்ற பிரகலாதன் மேல்
ஓர் முகத்தே சூழ் கருணையும்
கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே முனிவும் தோன்றினவால்
இப்படி மாறான குணங்களை ஓன்று சேர வைத்த அகடிகடநா சமர்த்தன் –
சிங்கமாகி அழகியவனாய் அனைவராலும் விரும்பத்தக்கவன் என்பதால் சிங்க வேள் குன்றம் –
நவ நரசிம்ஹ அஹோபில ஷேத்ரம் –

————————————————

101-திருவதரியாச்சிரமம் —

தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-

நெஞ்சமே
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு
எட்டெழுத்தும் கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு போவது அரிது ஆனாலும்
போய்த் தொழுவோம் மாவதரியாச்சிரமத்து –
நர நாராணனாய் உலகத்து அறநூல் சிந்காமை விரித்தவன்
பதரி இலந்தை மரம் -இலந்தை மரங்கள் அடர்ந்த ஆஸ்ரமம்

———————

104-திருவட மதுரை –

செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-

மாந்தர்காள்
கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான்-திடம் அது உறுதியாக -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று உபதேசித்து அருளினவன்
தொல்லை வடமதுரையான் திறத்து-திரு வடமதுரை திருவவதரித்த பெருமான் இடத்தில் –
செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி -வல்வினையை நீக்குமினோ
கண்ணனுக்கு மதுரமாய் இருக்கும் ஸ்தலம் -மது அசுரனை நிரசித்த இடம் -மதுரை பெயர் காரணம் –

————————————————————————-

105-திருத் துவாரகை –

திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-

நறுந்துளவ
மாதுவரையோனே
பாதகர் ஓர் ஐவர்
திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி
மனம் துணையாகக் கொண்டு
மெய் கலந்து
என்னைக் காதுவர் ஐயோ —
அகன்ற துவாரத்தை யுடையது திருத் துவாரகா –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர் –

———————————————————

106-திருவாய்ப்பாடி –

கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-

மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி -அண்டர் -இடையர்கள் வாழ்கின்ற ஆய்ப்பாடி திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கும்
அமலர்
அடியார் அடியார் தொண்டராய்ப் பாடித் தொழும்–தாசானுதாசராய் அடிமைப் பட்டவராய் -அவர்கள் குணங்களைப் பாடி
அவரை வணங்குங்கோள்-அப்படி வணங்கினால்
கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும் பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர்
கரை கண்டோர் துளக்கமில்லா வானவர் –
பெருமை மிக்க இடையர்கள் வசிக்கும் சேரி பொருளில் திரு ஆய்ப்பாடி -திரு கோகுலம் –

——————————————————————

107–திருப்பாற் கடல் –

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

தொழும் பாய நான்-எம்பிரானுக்கு அடியேனான நான்
நல்ல சூது அறிந்து கொண்டேன் -நல்ல உலவை அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும் திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார்
அடி சேர்ந்து இருப்பாற்கு அடலாம் இடர் -ஒழித்தல் எளிதாம்
அல்ப செயலால் பெரும் பேறு சித்திக்கும் என்பதால் நல்ல சூது என்கிறார் –

வ்யூஹ நிலை -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்த அர்த்தமாகவும்
சம்சாரிகள் சம் ரஷண அர்த்தமாகவும்
உபாசக அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண நிற்கும் நிலை –

—————————————————————————–

திரு நாட்டுத் திருப்பதி -108-

இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-

தொடரும் -தொடர்ந்து வருவதும்
கருவைகும் -கர்ப்பத்தினுள் பிரவேசிக்க காரணமான
தம் பிறவிக் கட்டு அறுத்து
மீளாத் திருவைகுந்தம் பெறுவார் சீர் –
பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே
இடருடையேன் சொல்ல எளிதோ -கைமுதிக நியாயம் –

பரத்வமாவது அகால கால்யமான நலம் அந்தமில்லதோர் நாட்டிலே நித்ய முக்தருக்கு
போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

——————————————————————-

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –

நூலோதி வீதி வாழி என வரும் திரளை வாழ்த்துவார் தம் மலர் அடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –

———————————————————-

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

—————————————————————–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –

காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —

————————————————————————

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

——————————————

———————————————————————-

அருவரங்கள் தரு பராங்குசனே ஆதி ஆழ்வார்கள் தம்பிரான் ஆடீர் ஊசல்
இருவர் அங்க ஒளிக்கு அகலா இருள் அகற்றும் எதிராசன் தம்பிரான் ஆடீர் ஊசல்
தருவரங்கர் நீள் பொழில் கூரத்து வேதா சாரியனார் தம்பிரான் ஆடீர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திரு முற்றத்துத் தெய்வங்கள் தம்பிரான் ஆடீர் ஊசல் –31-

—————————————————————–

உணராத முதலை இளங்குதலைச் சொல்லை உளமுருகித் தந்தை தாய் உவக்கு மா போல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொற் கேட்டுத் தந்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணவாள் அரா முடி மேல் படி ஏழ் போற்றும் பட்டர் திருத் தாட்கு அடிமைப் பட்ட காதல்
மணவாள தாசன் தன் புன் சொல் கொண்ட மதில் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –32–

——————————————————————–

தற்சிறப்புப் பாசுரம்

போதாரு நான் முகனே முதலா யுள்ள புத்தேளிர் தொழு நாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வ மான நாதன் அனைத்து உயிர்க்கு நாதன் அணி யரங்க நாதன்
சீதார விந்த மலர்த் திரு வினாதான் திரு ஊசல் திரு நாமம் ஒரு நால் எட்டும்
வேதா சாரிய பட்டர்க்கு அடிமையான வெண் மணிப் பிள்ளைப் பெருமாள் விளம்பினானே —

————————————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –

காப்பு –

முருகூரும் மகிழ் மாலை அணியும் மார்பன் முத்தமிழன் கவித்தலைவன் முனிவர் வேந்தன்
திருகூரு மனத்திருள் நீக்குதய பானு சி பராங்குச யோகி திரு நா வீறன்
அருகூருந் தண் பொருணை வழுதி நாடன் அக்கமலம் பாடினான் அன்ன மேறி
குருகூரன் சடகோபன் காரி மாறன் கோகனக மலரடியின் குணங்கள் போற்றி –

———————————————–

நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ நெடு மகுடப் பணிவாழக் கருடன் வாழப்
பேராழி செலுத்திய சேனையர் கோன் வாழப் பேய் பூதன் பொய்கை முதல் பதின்மர் வாழ
ஓர் ஆழிக் கதிர் வாழத் திங்கள் வாழவும் அடியார் மிக வாழ உலகம் வாழச்
சீராழி சங்கு கதை சிலை வாள் வாழச் சீரங்க நாயகியார் ஆடீர் ஊசல் –1-

————————

————————————————————————

மேவிய பங்கயன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் வேணி யரன் புராண நூல் விளம்பும் கோயில்
தாவு திரைக் காவேரி புடை சூழ் கோயில் சந்திர வாவியின் மருங்கு தழைத்த கோயில்
பாவளர் சத்தாவரணம் உடைய கோயில் பணி அணி சேர் ஓங்காரமான கோயில்
தேவம் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –15–

—————————————————-

தற் சிறப்பு பாசுரம் –

தார் அரங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச் சாத்தினான் பேரன் எனும் தன்மையாலும்
ஆரும் கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின் அதிசயத்தை அறிவன் என்னும் ஆசையாலும்
பார் எங்கும் புகழ் வேத வியாச பட்டர் பதம் பணி கோனேரியப்பன் புன் சொல்லாகச்
சீரங்க நாயகியார்க்கு ஒரு பத்தைந்து திரு ஊசல் திரு நாமம் செப்பினானே –

—————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ கேசவ நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

(புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:)
(இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:)

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு.
பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும்.
சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும்.
கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.

அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர்.
ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
“கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்”

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார்.
க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்).
நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன்.
அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான்.
ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது.
ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க,
அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம்.
பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார்.
பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார்.
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார்
(வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்…).
திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார்.

வாழி கேசவா!!!

நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவ ப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

———-

திவ்யப்ப்ரபந்தம் 3776 ஆக இருப்பினும் 4000 பாசுரமாக கணக்கில் கொள்வது எப்படி?

“இலங்கெழு கூற்றிருக்ககையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிருநூற்றிருபத்தே ழீந்தான் வாழியே “
என்னும் அப்பிள்ளையருளிய வாழித்திருநாமத்தைப் பின்பற்றி திருமடல்களில் ஈரடி கொண்ட கண்ணிகளை
ஒரு பாட்டாகக்கொண்டு சிறிய திருமடல் 77 1/2 பாட்டாகவும்,
பெரியதிருமடல் 148 1/2 பாட்டாகவும் கொண்டு மூன்றாமாயிரத்தில் மொத்தப் பாசுரங்கள் 817 என்று கொண்டு
சில பதிப்புகளில் திருவாய்மொழியோடு சேர்த்து திவ்யப்ரபந்தம் நாலாயிரம் பாட்டாகக் கணக்கிடப்பட்டது.

“சிறியமடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும் சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும் (தேசிகப்ரபந்தம் 389) என்னும்
பிரபந்த பாட்டில் உள்ளபடி சிறியமடலை 40 பாட்டாகவும்
பெரிய திருமடலை 78 பாட்டாகவும் கொண்டு
மூன்றாமாயிரம் 709 பாசுரங்களாகவும்
திருவாய்மொழியையும் இராமானுஜ நூற்றாந்தாதி 108 பாட்டையும் சேர்த்து 4000 பாசுரங்களாக கணக்கிடப்படுகிறது.

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———

கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )

————–

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

—————

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

—————

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரிலே பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

——————

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

கேசவன் பேர் இட்டு –
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவாம் கே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
கேசவ க்லேச நாசன -என்கிறபடியே
க்லேச நாசனாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை இட்டு –
கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித் திருமினோ –
நீங்கள் அந்த பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து சந்தோஷத்தோடு இருங்கள்
தேனித்து இருக்கை யாவது -இனியராய் இருக்கை

நாயகன் நாரணன்
நாயகன் -என்றது – சர்வ சேஷி -என்றபடி
நாரணன் -என்றது -சமஸ்த கல்யாண குணாத்மகன்-என்றபடி

இத்தால் –
ஆஸ்ரிதரத்தை ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியையும்
குண யோகத்தையும் உடையவன் என்கை

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்

——————

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

————-

பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-16-

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

——————-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே –2-7-1-

நம்முடைய வாழ்வு -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ -வி லஷணமாக உள்ளது -கேசவன் தமர் என்னும்படியான சிறப்பு பெற்றார்கள்
சர்வேஸ்வரன் -கண் அழகால் என்னை ஈடுபடுத்திக் கொண்டு
வடிவு அழகாய் முடூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ கரித்த மகா உபாகாரகன் நாராயணனாலே மா சதிர் பெற்றோம்
கேசவன் -கேசாபாசம்/கேசி நிரசித்தவன் /பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன் –

—————–

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

————–

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

————

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:3688/1

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவாய் உடையவன்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோஹம்

அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்-விரோதி -நிரசன சீலன் –

கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத பிரசஸ்த கேசன் –
செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்

நாரணன் –
ஆஸ்ரித வத்சலன் -அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்

சீ மாதவன் –
அதற்கு அடியான ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆனவன்

கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே ஆஸ்ரிதற்கு அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்

வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்

என்று என்று
நிரந்தரமாக -எப்பொழுதும்

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

————–

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி
நம்முடைய சேஷத்வத்தை -அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –
பிரசஸ்த கேசன் -நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி
நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-பிராப்தி பந்தகமாய் -அடைவதற்குத் தடைகளாய்-அநாதி கால ஆர்ஜிதமான –
பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள் எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண
கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கேசவனாகிய மருத்துவனை –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலாய் இருக்கும் அன்றோ –

————-

கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது
மருதரும் வசுக்களும் அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள்

கிளர் ஓளி மணி முடி
மிக்க ஒளியை யுடைய ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேயம்
வ்யூஹ விபவங்கள் அளவு அன்றிக்கே திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகையாலே நீர்மையிலே தோற்று
சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————-

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

————-

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
ப்ரஸித்த நாமம் ஆதல்

—————

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு

பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –

————–

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு –
ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள்-
புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளே-ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் காட்டும் திரு நாமம்

நாராயணன் மூர்த்தி கேசவன் –
வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

————–

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

———————–

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

——————-

தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

——————

கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

———————

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

————–

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

கேசவன் -இத்யாதி –
ஆன பின்பு -பிரசஸ்த கேசவனோடே-
அவ் வை லக்ஷண்யத்தில் எடுப்புண்டு பின் பற்றித் திரிகிற இவளை –

————

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

(கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரம் -குலசேகரப்பெருமாள் )

நித்ய வாசம் பண்ணுகிற ஸௌசீல்ய குணயுக்தனாய்-
ஆஸ்ரித விரோதிகளை -மதுவை – நிரசித்தால் போலே நிரசித்து பொகடுமவனாய் –
அவர்களுக்கும் அனுபாவ்யமாம்படி பிரசஸ்தமான திருக் குழலை உடையனாய் இருக்கிறவனே

பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

——————–

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

பிரம ருத்ரர்களுக்கு காரண பூதன் ஆகையாலே -கேசவன் -என்னும்
திருநாமத்தை உடையவனே –

—————

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

கேசவா என்றும்
பிரசச்த கேச வனானவனே-என்றும்

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும் –
உன்னால் அல்லது செல்லாதவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்றும்

————–

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

—————

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

—————-

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

——————–

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———–

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

—————

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் –
ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்;
எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்;
நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

—————

கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
ப்ரஹ்ம ஹத்யைக்கு -பிராயச்சித்தமாக -கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு பிராயச்சித்தம் -கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –
ப்ராயச்சித்தமும் -கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன

கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
ராவணன் ஒருவனும் பிரதிகூல்யம் -தீ வினை செய்ய ராக்ஷஸ ஜாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே
எல்லாம்-
அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
என்ன –
கார்யத்தில் வந்தால் -அர்த்தக்ரியா காரியாயே – அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின்
யுக்தி -வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –

இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
பிரசஸ்த கேசனாய் -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-சம்சார துரிதங்கள் –
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் -தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

————-

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

————

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என் நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அச்யுத – நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

ஸ்ரீ அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தாம்தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–3-

————–

அச்சன் (1)
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/3

அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2

அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2

அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4

அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4

அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2

அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2-

————–

அச்சன் (1)
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/3

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

என் அத்தன் அச்சன் –
எனக்கு ஜனகனுமாய் ஸ்வாமியும் ஆனவனை

அரங்கனுக்கு அடியார்களாகி –
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியாராகி

அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள்
அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –

மற்றையார் முற்றும் பித்தரே–
இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –
இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –

————–

அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

அச்யுத பாநு நா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் -என்கிறபடியே –
தேவகி திரு வயிறு கிழக்கு ஸந்த்யை -இவன் அச்யுத பாநு
(கிழக்குக்கும் ஸூர்யனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் இவள் கர்ப்பத்துக்கும் தொடர்பு )
கர்ப வாச தோஷம் அற ஆவிர்பவித்து –
(சேதனனைப் போலே கர்ம நிபந்தம் இன்றிக்கே
இச்சா க்ருஹீத -அனுக்ரஹத்தாலே ஆவிர்பவித்தான் -என்கிறது )

ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ
விடாதவனுடைய முத்தம் இருந்தபடியை காணுங்கோள் –
முத்தம் -சண்ணம்
முகிழ் நகை -மந்தஸ்மிதம்-

———–

அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-9-

என்னுடைய ப்ராதாக்கள் ஆனவர்களே –
இதுக்கு எல்லாம் –லாஜ ஹோமம் –அபிமானிகள் -என்னும் இடம்
தங்கள் முகத்தில் ஒளியிலே காணும் படியாக வந்து
அக்னி முகத்தை பாரித்து -ஜ்வலிகச் செய்து —
நான் வ்ரீளையால் இறாய்க்க-என்னை எடுத்து முன்னே நிறுத்தி-

அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
பொரி முகந்து -அட்ட –
பொரியை அள்ளி அக்னியிலே பரிமாற-

மைத்துனமை முறையுடையார் இவனை இளிம்பு படுத்திச் சிரிக்க வேணும் என்று
சில விலாச சேஷ்டிதங்களை பண்ணக் கோலினால்
அவர்களுக்கு கணிசிக்க ஒண்ணாத படி அநபிபவனாய் இருந்த இருப்பு –

அச்சுதன் –
அவர்கள் பொரியட்டி விட்டாலும் தான் கை விடாதவன் –

கைம்மேல் என் கை வைத்து –
அடியார் ரஷணத்தில் பிராட்டி புருஷகாரம் அடியாக என்பதால்
இவள் கையே மேலே இருக்கும்

என் கை மென்மையை தோழி நீ அறிவாயே-
அவனும் அறியும் படி அவன் கை மேல் என் கை வைக்கப் பெற்றேன்

————

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

அத்தனாகி –
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –
அன்னையாகி-
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –
மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –
இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –
சர்வேஷமேவா லோகாநாம் பிதர மாதர ச மாதவ -என்றும் –
உலக்குக்கோர் முத்தைத் தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே
அதவா –
அத்தனாகி அன்னையாகி –
ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –
உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –
இருக்குமவன் -என்னவுமாம் –
க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இ றே
இவ்வளவால் -கீழ்ப் பாட்டில் –ஜ்ஞானமாகி –என்றத்தை விவரிக்கிறது –

———-

அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-

வானில் ஏற்றுவான்-
நோ பஜநம் ஸ்மரான் நிதம் சரீரம் -என்கிறபடியே இவற்றை ஸ்மரிக்கைக்கும்
அவசரம் இல்லாதா பரம பதத்தே ஏறப் பண்ண வல்லவன் –
இஸ் ஸ்வபாவத்தை உடையவன் ஆர் என்ன –

அச்சுதன் –திருவடிகளை ஆஸ்ரயித்தாரை -ஒரு நாளும் -ஒரு படியாலும் -நழுவ விடாதவன் –

அனந்த கீர்த்தி –
இப்படி ஆஸ்ரித ரஷணம் பண்ணுகையால் உண்டான அபரிச்சேத்யமான
குண பிரதையை உடையவன் –

ஆதி யந்தம் இல்லவன் –
ஆதியந்த ரஹீதன் -அதாகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் செய்ய நினைத்து இருக்குமவற்றுக்கும் முதலும் முடிவும்
இன்றிக்கே இருக்கை

நச்ச நாகணைக் கிடந்த நாதன் –
ஆஸ்ரிதரை ஒருக்காலும் பிரிய மாட்டாத சர்வ ஸ்வாமி
ப்ரதிகூலர் பக்கல் நஞ்சை உமிழ்வானுமாய்
ஜாதி பிரயுக்தமான -மென்மை குளிர்ந்து நாற்றங்களை உடையனுமான
திருவநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிறவன் –

நாதன் –
தாழ நின்று உபகரிக்கைக்கும்
ஆஸ்ரிதரை பிரியமாட்டாமைக்கும்
ஹேது உடையவன் ஆகையாலே

வேத கீதனே –
அச்யுதனாகவும் –
வகுத்த ஸ்வாமி யாகவும்
நாராயண அனுவாஹத்தில் பிரசித்தமானவன் –
சாஸ்வதம் சிவம் அச்யுதம் நாராயணம் -என்னக் கடவது இறே –

—————-

ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4

சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமல னையே–3-4-4-

ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே –
ஆதும் இல் காலத்திலே- சம்சார காலத்திலே எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே,
தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,
பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே ரஷித்து ,
இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் ரஷித்தவனை .

அன்றியே,
‘யாதுமில் காலம் உண்டு – பிரளயகாலம் –
கார்யாகாரமான இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ அவஸ்தமாய் கிடக்கிற அன்று,
தான் ஸ்வாமியான பிராப்தியைக் கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச்
சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி
இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.

‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரியநின்ற போதும்
இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு;
இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற போதும்
இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ என்று அருளிச்செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.

‘புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண் டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்காரங்கள் சார்ங்கஞ்சங்காக மனம் திகிரி யாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இருபூத மாலை வன மாலையாகக் கருட னுருவா மறையின் பொருளாம்
கண்ணன் கரி கிரி மேல் நின்றனைத்தும் காக்கின்றானே.’ ஸ்ரீதேசிகன் ஸ்ரீசூக்தி (அதிகார சங்.80)

—————

அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1

அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ! நலம் கடல் அமுதம் என்கோ!
அச் சுவைக் கட்டி என்கோ! அறு சுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவைத் தேறல் என்கோ! கனி என்கோ! பால் என்கேனோ!–3-4-5-

அச்சுதன் அமலன் என்கோ –
நித்ய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு ஒருநாளும் அழிவில்லாதபடி யிருப்பவனாய்,
ஹேய ப்ரத்ய நீகனாய் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய், –
உபலக்ஷணத்தால்-
கல்யாணை கதானனாய்- நற்குணங்கட்கெல்லாம் தானே இருப்பிடமானவனாய் உள்ளவன் என்பேனோ!
(கீழே‘ஆதியஞ்சோதி’ என்பதனைக் கடாக்ஷித்து, ‘நித்யவிபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு’ என்று அருளிச்செய்கிறார்)

————

அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1

அறியும் செந் தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி,‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினை யுடையாட்டியேன் பெற்ற
செறிவளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?–4-4-3–

அறியும் –
‘ஒன்றால் அவிக்க ஒண்ணாது, தாஹகம் -எரிக்குந் தன்மையது’ என்று எல்லாராலும் அறியப்படுகின்ற.
அன்றிக்கே,
‘இவள் தானும் இப்படி மயங்குவதற்கு முன்பு எரிக்கும் தன்மையது என்று அறிந்து-பரிஹரித்து – நீக்கிப் போந்தது’ என்னுதல்.

செந் தீயைத் தழுவி –
எரிக்கின்ற நெருப்பைத் தழுவா நின்றாள்;
‘மந்திரம் மருந்து முதலியவைகளால் -பிரதிபத்த -தடை செய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்றுதான் தழுவுகிறாளோ?’
தேஜஸாம் ராசி மூர்ஜிதம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவா நின்றாள்.
அன்றிக்கே,
‘பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ என்னுமாறு போன்று,
இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.

அச்சுதன் என்னும் –
‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.

———–

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் றனை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–4-5-3-

வீவு இல் இன்பம் –
வீவின்ரிக்கே -ஒரு விச்சேதமும் இன்றிக்கே -அழிவு இன்றிக்கே இருப்பதான
இன்பம் -ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில்,

மிக எல்லை நிகழ்ந்த –
‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான எல்லையிலே இருக்கிற.

நம் –
ஆனந்த வல்லியில் பிரசித்தி.

அச்சுதன் –
இதனை ஒரு பிரமாணம் கொண்டு உபபாதிக்க (விரித்துக் கூற) வேண்டுமோ?
இவ் வானந்தத்திற்கு ஒருகாலும் விச்சதம் (அழிவு) இல்லை என்னுமிடம் திருப் பெயரே சொல்லுகிறதே அன்றோ?

வீவு இல் சீரன் –
இந்த ஆனந்தத்திற்கு அடியான நித்ய விபூதியை (பரமபதத்தை) உடையவன்.
அன்றிக்கே, ‘நித்யமான குணங்களை யுடையவன்’ என்றுமாம்.
குணங்களும் விபூதியும் ஆனந்தத்திற்குக் காரணமாய் -ஆனந்தாவஹமாய் -அன்றோ இருப்பன-

மலர்க்கண்ணன் –
ஆனந்தத்தை இயல்பாகவே-ஸ்வாபாவிகமாக- யுடையவன் என்னுமிடத்தைத்
திருக் கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.

————-

அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே–3-6-8-

அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை –
தன் திருவடிகளைப் பற்றினாரை அறிவு கலங்கும்படிக்கு ஈடாக-பிராண வியோகத்தை
உயிரைப் பிரிக்கக் கூடியவர்களாயிருந்துள்ள யமபடர்க்குக் காற்றவொண்ணாத நஞ்சாக உள்ளவனை;

அச்சுதனை
தன்னை ஆஸ்ரயித்தாரை யம வஸ்யராக வீட்டுக் கொடாதவனை
‘உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி அயர வென்ற தீர்க்குமவனே அன்றோ?
‘எங்ஙனே கண்டோம்?’ என்னில்,

தயரதற்கு மகன் தன்னை –
தான் அரசு செலுத்தா நிற்கச்செய்தே ஒரு பிராஹ்மணனுடைய குமாரனுக்கு அகால மரணம் உண்டாக,
அவனை வாளாலே மீட்டும்;
இராவணனைக் கொன்ற பின் படைக்குறி காணாநிற்கிற அளவிலே முதலிகளிலே சிலரைக் காணாதொழிய,
இந்திரனை அழைத்துப் போகவிட்டு வரம் கேட்கிற வியாஜத்தாலே அவனை இடுவித்து
அவர்களையும் கூட்டிக்கொண்டு போன சக்கரவர்த்தி திருமகனை;
ஒரு முனிவனுடைய புத்திரனுக்கு அகால மரணம் வர, அப்பாலே மீட்டுக்கொடுத்தும் செய்தவை.

‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,
ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய்,
‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’ என்னா, இப்படிச் சொல்லலாம்படி
அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்.
அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –

இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்க,
நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது -பாவநத்வத்தைப் பற்ற;
இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச்செய்தார்.

பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ‘‘ஸ்ரீராமா, நீதான் எல்லா உலகங்களிலுள்ள எல்லா உயிர்கட்கும்
பாவத்தைப் போக்குகின்றவனாய் இருக்கிறாய்,’ என்கிறது இல்லையோ இவரையும்?’ என்ன,
‘அவனும் இவரோடு ஒத்தான் ஒருவன்; இவர் ‘இனிய பொருள் வேறில்லை’ என்றிருக்குமாறு போன்று,
அவன் ‘பாவநத்துக்கும் இவர் ஒழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று.’

பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச் செய்ததே யாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே
ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்று காண்;
இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமை காண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று?
‘முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்,
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே,
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;
பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.
இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு
வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த
-மாமேகம் சரணம் வ்ரஜ ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
ஆபிமுக்யத்தாலே பெறலாம் என்றால், அவ் வாபி முக்கியம் தானும்
பரமபத்தியைப் போன்று அரிதாய் இருக்கும் அன்றோ இம்மக்களைப் பார்த்தால்?
‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
சரண்யனுடைய–பற்றப்படுகின்ற சர்வேஸ்வரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;
இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’
என்ன வேண்டும்படியாய் இருக்கும்.
‘ஒரு சிறாயை நம்பி ஆறு மாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியா நின்றான்;
அதைப் போன்ற நம்பிக்கை யாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்தார்

—————

நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே–5-2-9-

————

அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3

கச்சோடு பொற் சரிகைக் காம்பு கநக வளை
உச்சி மணிச் சுட்டி ஒண் தாள் நிரைப் பொற் பூ
அச்சுதனுக்கு என்று அவநியாள் போத்தந்தாள்
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ -1-3 8-

அச்சுதன் இத்யாதி –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாதவனுக்கு என்று ஸ்ரீ பூமி பிராட்டி வர விட்டாள்
தன் படிகளில் ஒன்றும் நழுவ விடாதவன்-என்னுதல்

—————

ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி
ஸ்ரீ வைஷ்ணவ சிஹ்னமான கேசவாதி நாமங்களாலே அருளிச் செய்தது
ஆகையால் இறே ஆராத அந்தாதி ஆயிற்று –

பன்னிரண்டும் வல்லார்
இப் பன்னிரண்டு பாட்டையும் சாபிப்ராயமாக வல்லார்கள்

ஆராமை ஆவது
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்போது விரும்பிக் கற்றால் போலவே
அதிருப்த போகமாய் இருக்கை
அவன் தான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் ஆனால் போலே

அச்சுதனுக்கு அடியாரே
தன் படிகள் ஒன்றும் நழுவ விடாதவனுக்கு அடியராகப் பெறுவர் –
(பெருமைகள் ஒன்றும் குறையாமல் -நழுவ விடாமல் அவதரிப்பவன் அன்றோ )

————–

அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!–7-8-2–

அம் கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே –
அழகிதாய்த் தேனோடு கூடின மலரை யுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத் துழாயைத் திருமுடியிலே யுடையையாய்,
அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே
என்றும் ஒக்க நித்யாம்படி இருக்கிறவனே!
வைத்த வளையத்தைப் போன்றும் போக்யமாகிற தாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு.
கீழில் திருவாய் மொழியிலே
விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை
ஸ்மரிக்கிறார் -நினைக்கிறார்’ என்று. பிள்ளான் பணிப்பர்.
மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து,
நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ?

—–

அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறிதென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே–7-8-10-

அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
நித்ய விபூதி உக்தனாய் -பரம பதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியை யுடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திரு மார்பினை யுடையவனே!

அச்சுதனே –
அவ் விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரம பதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை
எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

———-

அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-

அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
திருப் பவளத்தை மோந்து பார்த்தல் இப்போதும் வெண்ணெய் மணக்கும் ஆய்த்து –
கூர்ம வ்யாக்ரீ நக பரிமள பஞ்ச ஹேதீ யசோதா நத்தா மௌ கத்யா பரணம் அதிகம் நச்சமாதின் திநோதி -என்று
ஸ்ரீ யசோதை பிராட்டி பிள்ளைப் பணியாக சாத்தின திரு ஆபரணம் இப்போதும் ஸ்ரீ பெரிய பெருமாள்
திருக் கழுத்தில் கிடக்கிறது -என்று கண்டு அனுபவித்தார் இறே -ஸ்ரீ பட்டர் –

ஆகையால்
இவ் விடத்தில் மறையோர்கள் என்கிறது-
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பட்டர் போல்வானவர்களை

(மறையோர்கள் ஏத்தும்-
லோக சாரங்க முனிவர்கள் தோள்களால் ஏத்தி எழுந்து அருள பண்ணிய திருப்பாண் ஆழ்வார் -என்றுமாம் )

வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே

அச்சுதனை –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடதவனை –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செங்கண் அச்சுதா -என்றார் இறே ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார்

அச்சுதா என்ற அநந்தரம்
ஆயர் தம் கொழுந்தே -என்றும் அருளி செய்தார் இறே

அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
நித்ய விபூதி உக்தனாய் -பரம பதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியை யுடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திரு மார்பினை யுடையவனே!

அச்சுதனே –
அவ் விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரம பதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை
எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –
இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்:
இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சில சொல்லிற்றா மத்தனை போக்கி யல்லது,
உனக்கு ஓர் இயத்தை -அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்;
அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – அது அன்று என்கிறது’ என்னுதல்.
அன்றிக்கே,
உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு இன்றிக்கே, இருந்தாகளாகிலும்,
அவர்கள் ஒன்றைச் சொன்னால், ‘ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகள் நடுவே அவர்களுக்கும் கூடப் பேச்சுக்கு
நிலம் அன்றிக்கே இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே அதி ஷூத்ரனாய் -மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற
இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே,
இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.

————-

அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2

கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே–3-4-9-

கண்ணனை மாயன் தன்னை –
‘எத்திறம்!’ என்ன வேண்டும்படியான குணங்களையும் சேஷ்டிதங்களையும் உடையவனை.

கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை –
ப்ரயோஜனாந்தர பரரானவர்களுக்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் -விரும்பிய பொருள்களைக் கொடுக்கும் ஸ்வாமியை.

அச்சுதனை –
தன்னை அடைந்தவரை ஒருநாளும் நழுவவிடாதே ரக்ஷிக்கும் ஸ்வபாவனானவனை .

அனந்தனை –
சொரூப ரூப குண விபூதிகளால் அளவிட்டு அபரிச்சின்னமானவனை

அனந்தன் தன் மேல் நண்ணி நன்கு உறைகின்றானை –
திருவனந்தாழ்வான் மேலே கிட்டி நன்கு கண்வளர்ந்தருளுகிறவனை. –
சேஷத்வ காஷ்டையிலே ‘அடிமை நிலத்தின் எல்லை நிலத்திலே நிற்கையாலே சேக்ஷியானவனையும்
விளாக்குலை கொள்ள வல்லவன்’ என்பார், ‘அனந்தன்’ என்கிறார். அனந்தன் முடிவில்லாதவன்.
பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்ப வொண்ணாதபடி கண் வளர்கின்றானாதலின்,
‘நண்ணி நன்கு உறைகின்றானை’ என்கிறார்.

———

ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

மாயவனை
ஆச்சர்ய சக்தி யுக்தனை

மதுசூதனனை
மங்களா ஸாஸன விரோதிகளை
மதுவாகிற அஸூரனை நிரஸித்தால் போலே நிரஸிக்குமவனை

மாதவனை
அதுக்க்கடியாக ஸ்ரீ யபதியானவனை

மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை
வேத தாத்பர்யம் கைப்பட்டு இருக்குமவர்களுடைய மங்களா ஸாஸனத்துக்கு
விஷய பூதனான கிருஷ்ணனை
கோப குலத்தின் நடுவே மேனாணித்து இருக்குமவனை-

அச்சுதனை
இப்படி மங்களா ஸாஸன பரரை ஒரு நாளும் நழுவ விடாதவனை

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
மங்களா ஸாஸனத்துக்கு விஷய பூதனாய்க் கொண்டு
கோயிலிலே தன் ஸுகுமார்யத்துக்குத் தகுதியாக
திரு வனந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனை

———

அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படை யொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே–3-10-4-

பொன் சக்கரத்து அரியினை –
அனுகூலர்க்கு ஸ்ப்ருஹணீயமான – விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும்
காண முடியாதவனை-அப்ரதிருஷ்யமானவனை –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜானோ த்வாம் புருஷோத்தமம் -. ‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே!
நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும்
பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே,
தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேஸ்வரன் என்று அறிந்தது.

அச்சுதனை –
ஆஸ்ரிதர்களை -அடியார்களை நழுவ விடாதவனை.

ருத்ரன் தன்னை ஆஸ்ரயித்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ?
சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவன்’ அன்றோ இவன்?
தலைமையாவது, வாணனைக் கைம்முதல் அறுத்துத் தலை அழியாமல் வைத்த தலைமை.
ஆக, இதனால், அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பு ஏற்கையாலே
ஆஸ்ரிதற்குத் தஞ்சம்’ என்று நம்புதற்குத் தட்டு இல்லை என்று தெரிவித்தபடி.

பற்றி யான் இறையேனும் இடர் இலனே –
இவனைப் பற்றின எனக்குச் சிறிது -அல்பதுக்கமும் இல்லை.
பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று;
அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார்,
இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.

————

ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-

ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும்
அசாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது.

அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.

———-

அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-

அச்சுதா –
திருஷ்டாந்தமாக சொன்ன மலை -பவளம் -தாமரை -போலே
நாள் செல்லச் செல்ல
செவ்வி மாறுதல் -தான் அழிதல்-செய்யாதே
ஏக ரூபமாய் இருக்கை-
சதைக ரூப ரூபாய -என்னக் கடவது இ றே –
அதவா –
இச் செவ்வி மாறாதே செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்
சேவடி செவ்வி திருக் காப்பு -என்னக் கடவது இ றே –
இவ் அழகிலே அகப்பாட்டாரை ஒரு நாளும் நழுவ விடான் என்றுமாம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .