Archive for January, 2022

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் எழுதிய ஏரெழுபது

January 7, 2022

ஸ்ரீ கம்ப இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும்.
கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை.

1. கணபதி வணக்கம்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

2. மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2

3. நாமகள் வணக்கம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3

4. சோழ நாட்டுச் சிறப்பு

ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4

5. சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5

6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6

7. வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7

8. வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8

9. அருட் சிறப்பு

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9

பாயிரம் முற்றிற்று.

நூல்

1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10

2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு

சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11

3. ஏர்விழாச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12

4. அலப்படைவாள் சிறப்பு

குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13

5. மேழிச் சிறப்பு

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14

6. ஊற்றாணிச் சிறப்பு

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15

7. நுகத்தடிச் சிறப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16

8. நுகத்துளைச் சிறப்பு

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17

9. நுகத்தாணியின் சிறப்பு

ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18

10. பூட்டு கயிற்றின் சிறப்பு

நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19

11. தொடைச் சிறப்பு

தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20

12. கொழுச் சிறப்பு

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே. 21

13. கொழு ஆணியின் சிறப்பு

செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுநீரா நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே. 22

14. தாற்றுக்கோல் சிறப்பு

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே. 23

15. உழும் எருதின் சிறப்பு

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. 24

16. எருதின் கழுத்துக்கறை சிறப்பு

கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே. 25

17. எருது பூட்டுதற் சிறப்பு

ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. 26

18. ஏர் பூட்டலின் சிறப்பு

பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே. 27

19. ஏர் ஓட்டுதலின் சிறப்பு

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே. 28

20. உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே. 29

21. உழவின் சிறப்பு

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே. 30

22. உழுத சாலின் சிறப்பு

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே. 31

23. மண்வெட்டியின் சிறப்பு

மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே. 32

24. வரப்பின் சிறப்பு

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே. 33

25. எருவிடுதலின் சிறப்பு

அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே. 34

26. சேறு செய்தற் சிறப்பு

வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாஞ் சேற்றினையே வளம்படுதற் பொருட்டாயே. 35

27. பரம்படித்தலின் சிறப்பு

வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்பிடிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே. 36

28. வித்திடுதலின் சிறப்பு

பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 37

29. முளைத்திறனின் சிறப்பு

திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. 38

30. நாற்றங்காலின் சிறப்பு

ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றடைகடலைத் தானன்றோ?
வேறுவளர்ப் பனகிடப்ப வேளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே. 39

31. நாற்று பறித்தலின் சிறப்பு

வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே. 40

32. நாற்று முடி சுமந்த சிறப்பு

மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ?
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே. 41

33. உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு

தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ? 42

34. நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு

வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலவுளவோ?
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. 43

35. பாங்கான நடவின் சிறப்பு

மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே, கற்றாரே! 44

36. உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடு முனையன்றோ திருமுனையே. 45

37. சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு

ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே. 46

38. வேளாண்மை முதலாதலின் சிறப்பு

அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே. 47

39. பயிர் வளர்திறத்தின் சிறப்பு

சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே. 48

40. நாளும் நீர் இறைத்தலின் சிறப்பு

காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. 49

41. பாய்ச்சும் நீரின் சிறப்பு

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயர் தனமீட்டப் படுவதுவும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே. 50

42. நிலம் திருத்தலின் சிறப்பு

மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டிக் குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே. 51

43. சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு

எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே. 52

44. பைங்கூழ்ச் சிறப்பு

கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத உயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே. 53

45. நீர் பாய்ச்சுதலின் சிறப்பு

கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே. 54

46. களை களைதற் சிறப்பு

வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்
விளைகளையுண் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே. 55

47. கருப்பிடித்தலின் சிறப்பு

திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே. 56

48. கதிர் முதிர்தலின் சிறப்பு

ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே. 57

49. பசுங் கதிர்ச் சிறப்பு

முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே. 58

50. கதிரின் தலைவளைதற் சிறப்பு

அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவநயும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே. 59

51. சோறிடுஞ் சிறப்பு

அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே. 60

52 அறுவடை கொநடையின் சிறப்பு

அரிவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படிவு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே. 61

53. அரி சூட்டின் சிறப்பு

கோடுவரம் பிடையுலவுங் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் கடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேறாதே. 62

54. களம் செய்தலின் சிறப்பு

சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே. 63

55. போர் அடிவலியின் சிறப்பு

கடிசூட்டு மலர்வாளி காமனுடல் சூடுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே. 64

56. அடிகோலின் சிறப்பு

முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டின்மிகுங் கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தமர்ந்து செந்நெற் சூடுமிதித் திடுங்கோலே. 65

57. போர் செய்தற் சிறப்பு

காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே. 66

58. போர்க்களப் பாடுதற் சிறப்பு

வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே. 67

59. இரப்பவரும் தோற்காச் சிறப்பு

பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே. 68

60. போர் செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே. 69

61. எருது மிதித்தலின் சிறப்பு

எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவளரு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே. 70

62. நெற்பொலியின் சிறப்பு

விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 71

63. நெற்குவியலின் சிறப்பு

தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே. 72

64. நெற்கூடையின் சிறப்பு

ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்த முயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. 73

65. பொலி தூற்றுங் கூடைச் சிறப்பு

வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே. 74

66. பொலி கோலின் சிறப்பு

சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கெப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே. 75

67. நெற்கோட்டையின் சிறப்பு

திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே. 76

68. கல்லறைச் சிறப்பு

தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல். 77

69. வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு

அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே. 78

70. நன்மங்கல வாழ்த்து

பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே. 79

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெண்பா–

January 7, 2022

ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெண்பா என்னும் இந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியாரால் இயற்றப்பட்டு,
சென்னை சூளையில் இருந்த அவரது சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் 1908ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

இந் நூலின் முகப்பில் கீழ்க் கண்ட இரு கட்டளைக் கலித்துறை பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இப் பாடல்கள் எந்நூலைச் சார்ந்தது என்பது தெரியவில்லை.

கட்டளைக் கலித்துறை

சங்குண்டு சக்கரத் தானுண்டு பாதத் தாமரை முன்
தங்கென்று காட்டுந் தடங்கையுண் டன்புந் தயவுமுண்டு
இங்கென்று மங்கென்று முழலாமல் வேங்கடத் தையன்முன்னே
பங்குண் டெனக்கண்டு பணிவார்க் கெலாமுண்டு பாக்கியமே.

பூவிற் றிருத்துளாய் தீர்த்தமுண் டள்ளிப் புசிப்பதற்கு
நாவிற் றுதிக்க அஷ்டாட் சரமுண்டு நனவெழுந்தால்
சேவிற்க திருமலை மேலே நாராயணன் சேவையுண்டு
கோவிந்த நாமந் துணையுண்டு நெஞ்சே நமக்கே துங்குறைவிலையே.

இந்நூலில் காப்புப் பாடலாக ஒரு வெண்பா பாடலும்,
நூலைச் சார்ந்த பாடல்களாக 111 பாடல்களும் அமைந்துள்ளன.
நூலின் முதல் 68 பாடல்கள் ‘யேழு மலையே’ என முடிந்துள்ளன.

நேரிசை வெண்பா

பொருப்பா மனேகமலை பூமியெலாத் தோற்றிடினுந்
திருப்பதியைப் போலாமோ தேடுங்கால் – விருப்பமுடன்
புண்ணியத்தைச் செய்திருந்தாற் போய் மனமே நீ தொழுது
பண்ணவினை போக்கி கொளப் பார்.

நூல்

பூவிற் பெரியமலை பொன்னுலகோர் தேடுமலை
பாவிற் கிளகிப் பழுக்குமலை – மேவிய சீர்
நீதித் தழைக்குமலை நிலவுலக மத்தனைக்கும்
ஆதிமலை யேழு மலையே. 1

திருமா துலாவுமலை தேவர்குழாஞ் சூழுமலை
பெருமான் கிருபைப் பெருக்குமலை – தருமஞ்
செழிக்குமலை யன்பர் செய்தவினை யெல்லா
மொழிக்குமலை யேழு மலையே. 2

சொல்லற் கரியமலை சுரர்முனிவர் தேவர்முதற்
பல்லுயிர்க ளெல்லாம் பணியுமலை – எல்லை
யெங்கும்பிர காசமலை யெல்லாஞ்செய் வானோர்கள்
தங்குமலை யேழு மலையே. 3

பூத்தமலர் வாசம் பொருந்துமலை வானோர்கள்
காத்திருந்து நித்தங் கருதுமலை – கீர்த்தி
பரந்தமலை யன்பர் பழவினையைப் போக்கச்
சிறந்தமலை யேழு மலையே. 4

தொண்ட ரகத்திற் றுளுக்குமலை தூய்மையிலா
வண்டர்க் கிடுக்கண் வளர்க்குமலை – பண்டாம்
யுகந்தோ ரிருந்தமலை யூழ்வினையை மாற்றத்
தகுந்தமலை யேழு மலையே. 5

கோகனக மாது குலாவுமலை கோடியிலா
ஆகமங்க ளெல்லா மளக்குமலை – யோக
சித்த ரிருக்குமலை செல்வமலை சித்தஜனை
பெற்றமலை யேழு மலையே. 6

உள்ள வுலகெல்லா மோரடியாக் கண்டமலை
வெள்ளை மனத்தில் விளக்குமலை – கள்ளமிலா
ஞானமலை மோனமலை ஞானத் தபோதனருக்
கானமலை யேழு மலையே. 7

காண்டற் கரியமலை கௌரவரார் காய்ந்த
பாண்டவருக் கெல்லாம் பலித்தமலை – நீண்ட
உலகை யளந்தமலை யூடுருவி யெங்கு
மிலகுமலை யேழு மலையே. 8

செல்வ மளிக்குமலை சேணுலகங் காட்டுமலை
நல்லவருக் கெல்லாமே நல்குமலை – பொல்லா
மூர்க்கர் செருக்கை முறிக்குமலை யபயங்
கார்க்குமலை யேழு மலையே. 9

இட்டார்க் கிரங்குமலை யேதேது கேட்டாலுங்
கிட்டே நெருக்குங் கிருபைமலை – துட்டர்
குலத்தைப் பிரிந்தமலை கோவிந்தா வென்பாரைக்
கலந்தமலை யேழு மலையே. 10

வாழைக் கமுகு வளர்ந்தமலை ஞானக்
கோழைப் படாமுனிவர் கூடுமலை – ஊழை
யதற்றுமலை யன்ப ரகத்துமலை சர்வ
சுதத்துமலை யேழு மலையே. 11

பூவனங்க ளெங்கும் பூர்க்குமலை பூமலிந்த
காவனங்கள் சுற்றுங் கனிந்தமலை – தாவி
யருவி கலந்தமலை யன்பரகத்தறிவி
லிருந்தமலை யேழு மலையே. 12

குன்ற மெடுத்தமலை கோதண்டந் தாங்குமலை
அன்றரக்கர் கூட்ட மழித்தமலை – நின்று
வணங்குவார் தன்குலத்தை வாழ்த்துமலை மேலோர்க்
கிணங்குமலை யேழு மலையே, 13

கஞ்சமலர் வாவிமலை காரிருண்ட சோலைமலை
கொஞ்சுங் கிளிமயிலுங் கூவுமலை – மிஞ்சும்
கீதவொலி நாதங் கேட்குமலை சர்வஜெக
நாதமலை யேழு மலையே. 14

தப்பை முழங்குமலை தாதர்குழாஞ் சூழுமலை
யெப்போதுங் கற்பூர மேந்துமலை – கப்பணங்கள்
சரஞ்சரமாய் வந்து செலுத்துமலை மாந்தர்
நிறைந்தமலை யேழு மலையே. 15

இரும்பென்ன நெஞ்ச மிளகாத வஞ்சகரைக்
கரும்பாய் நசுக்கிக் கசக்குமலை – பெரும்பால்
அன்பாகக் கோயிலைவிட் டகலா மலையார்க்கு
மின்பமலை யேழு மலையே. 16

துளசி மணக்குமலை தூய்மனத்தா ரேறுமலை
களஞ்சியத்தி லேநிதியங் கட்டுமலை – யுளந்தான்
நொந்தார் முகத்தை நோக்குமலை செல்வந்
தந்தமலை யேழு மலையே. 17

கோவிந்தா வென்றபெருங் கோட்டம் ஜொலிக்குமலை
தாவிப் பணிந்தடியார் தங்குமலை – மேவி
என்னேரஞ் சூடமிலகுமலை யேனையோர்க்
கன்னைமலை யேழு மலையே. 18

கோபந் தணிந்து குளிர்ந்தமலை சர்வ
சாபவினை யாவுஞ் சதைக்குமலை – பாப
மெல்லா மகற்றுமலை யெல்லாச் சுகமளிக்க
வல்லமலை யேழு மலையே. 19

குங்குமமுங் களபக் குழம்பும் மிகத்திமிர்ந்த
மங்கையர்கள் வாசம் மணக்குமலை – யெங்கும்
கேசவா மாதவா கோவிந்தா வென்றிறைஞ்சி
பேசுமலை யேழு மலையே. 20

நாற்றிசையி லுள்ளோரும் நாடித் தினந்தொடர்ந்து
போற்றிப் பொருள்பணிதி போடுமலை கீர்த்தி
சிறந்தமலை தொண்டர்களாற் செய்தபிழை யெல்லா
மறந்தமலை யேழு மலையே. 21

எட்டெழுத்தா யஞ்செழுத்தா யிருமூன்று ஆறெழுத்தாய்
துட்டர் வணங்குபல தோற்றமுமாய் – மட்டில்
ஏகப் பொருளா யெழுந்தமலை யட்டாங்க
யோகமலை யேழு மலையே. 22

காலைக் கதிரோனுங் கங்குலிலே சந்திரனும்
வேலைக் குளித்துவலஞ் செய்யுமலை – மேலாம்
உம்பர் முனிவோ ருயர்மா தவத்தரெலாம்
நம்புமலை யேழு மலையே. 23

அன்பர்களை வாவென் றழைக்குமலை யன்புடையா
ரின்புற்ற தெல்லா மீயுமலை – துன்பந்
துடைக்குமலை வானோர் துதிக்குமலை வேதியனைப்
படைக்குமலை யேழு மலையே. 24

நித்த மொருக்கால் நினைப்பார் நினைப்பிலெழும்
சித்தியென்ப தெல்லாஞ் செறிக்குமலை – அத்தி
மூலமென்ற போதே முளைத்தமலை மூர்க்கர்குல
காலமலை யேழு மலையே. 25

கூறுமொழிக் கெல்லாங் கோவிந்தா வென்றிறைஞ்சிப்
பேரைக் குறித்தெவரும் பேசுமலை – சீருடைய
அன்ன முகந்தோனும் ஆடுமயிற் சேவகனும்
மன்னுமலை யேழு மலையே. 26

புவிராஜர் முப்போதும் போற்றுமலை பொய்யறியா
தவராஜ ரெப்போதுந் தங்குமலை – கவிராஜர்
பாடுமலை பாட்டில் பதித்தவர மெல்லாங்
கூடுமலை யேழு மலையே. 27

திக்குவே றில்லையெனத் திருவடியிற் சார்ந்தாரை
யக்கரையாய் வாவென் றழைக்குமலை – மிக்க
கருணை மலிந்தமலை கருதும்போ தேயுதவுந்
தருணமலை யேழு மலையே. 28

ஊழ்வினையோ ரானாலு மோடிப் பணிந்தக்காற்
றாழ்வெல்லாம் நீக்கித் தணிக்குமலை – வாழ்வென்ற
அகத்துச் சுகபோக மியாவுங் கொடுக்குமதி
மகத்துமலை யேழு மலையே. 29

மாடேறும் பிஞ்ஞகனும் மயிலேறும் பெருமாளும்
ஏடேறும் வாணிக் கினியானும் – வீடேறு
முத்தரொடு சித்தர்களும் மூவிரண்டு லோகமெலாம்
நத்துமலை யேழு மலையே. 30

ஜெனகாதி மாமுனிவோர் சேருமலை வானுலகத்
தினமாதி யெல்லா மிருக்குமலை – மனுநீதி
யோங்குமலை யுள்ளன்பா லோங்குமடி யார்குடும்பந்
தாங்குமலை யேழு மலையே. 31

பொன்மகளை மார்பினிடம் பூண்டமலை யன்பர்கடம்
மின்பப் படிக்கெல்லா மீயுமலை – தொன்மறையும்
சொல்லுமலை வேதச் சோதிமலை யாயிரத்தெட்
டெல்லைமலை யேழு மலையே. 32

சீதமலர் நாற்றஞ் செழித்தமலை யன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலித்தமலை – மாதவர்கள்
சூழ்ந்தமலை மீனினமுஞ் சூரியனுஞ் சந்திரனுந்
தாழ்ந்தமலை யேழு மலையே. 33

பூமகளுஞ் சண்முகத்தைப் பூத்தவளும் வேதனுடை
நாமகளுஞ் சூழ்ந்து நயந்தமலை – தாமமணி
இந்திரனோ டட்டத் திசையாரும் வந்துதொழ
முந்துமலை யேழு மலையே. 34

செம்மான் றருமகளைச் சேர்ந்தசிவ சண்முகனுக்
கம்மானாய்த் தோன்றியவா னந்தமலை – பெம்மான்
மோகப் பசுங்கொடிக்கு மூத்தமலை யட்டசுக
போகமலை யேழு மலையே. 35

அஞ்ஞான மாமிருளை யகலத் துரத்திபர
மெஞ்ஞான வீட்டின்ப மீயுமலை – எஞ்ஞான்றும்
பன்னுமடி யார்மிடியைப் பற்றறவே நீக்குபசும்
பொன்னுமலை யேழு மலையே. 36

தொல்லைப் பிறவிதுயர் தூற்றுமலை துரியநிலத்
தெல்லைச் சுகமடியார்க் கீயுமலை – பல்லுயிருங்
கார்க்குமலை பக்திநெறி காப்பார் மனம்போலப்
பார்க்குமலை யேழு மலையே. 37

ஆறாத புண்புரைக ளாற்றுமருந் தானமலை
தீராத் துயரனைத்துந் தீர்க்குமலை – மாறாத
பொன்னுலக வாழ்விற் பொருத்துமலை பொன்னுலகோர்
பன்னுமலை யேழு மலையே. 38

ஈரமிலா நெஞ்சத்தாற் கிடுக்கண் ணியற்றுமலை
ஓரஞ்சொல் வார்குடும்ப மொழிக்குமலை – ஆரமலர்
சாற்றித் தொழுவார் சஞ்சலங்க ளப்போதே
மாற்றுமலை யேழு மலையே. 39

அறமென்ப தில்லா வழுக்கடைந்த கள்வர்கடம்
முறமெல்லாம் போக்கி யொடுக்குமலை – மறவாமல்
சிந்திப்பார் நோக்கமெலாஞ் சீரோங்கச் செய்யுமதி
விந்தைமலை யேழு மலையே. 40

பார்மீது வாழ்ந்துபிறர் பசியறியார் செல்வாக்கை
நீர்மே லெழுத்ததுபோல் நீற்றுமலை – யார்மீதும்
நீங்காக் கருணைமலை நீடுலக மண்டாண்ட
விந்தைமலை யேழு மலையே. 41

அண்டமெலா முந்தியிலே ஆவென்று காட்டுமலை
பண்டையுக மெத்தனையோ பார்த்தமலை – தொண்டர்
உள்ளமெனுங் கோயிலின்கண் ணோங்குமலை வைகுண்ட
வள்ளல்மலை யேழு மலையே. 42

மெய்த்தவஞ்சேர் ஞானியெலா மேவுமலை மெய்யுடனே
கைத்தவங்க ளில்லாரைக் கடியுமலை – எத்தலமும்
கொண்டாடிப் போற்றுமலை கோவிந்தா வென்றேத்து
மண்டர்மலை யேழு மலையே. 43

ஆதிசிவ னால்வரம்பெற் றகிலம் மிகநெரித்த
காதகரை யெல்லாங் கண்டித்தமலை – சோதனையில்
பத்தருக்கு முன்னிருந்து பாதுகாத் தாண்டபர
முத்திமலை யேழு மலையே. 44

அடியேன் றுயர்படுமா வாபத்துக் காலமெலாங்
கொடியபிணி நீக்கிக் கொடுத்தமலை – படியிலிப்போ
கொத்தடிமை கொண்டென் குடும்பத்தைக் கார்க்கமனம்
வைத்தமலை யேழு மலையே. 45

வேண்டித் தொழவறியா விளையாட்டுக் காலமெல்லாம்
ஆண்டதுணைத் தாதா வானமலை – தூண்டும்
குருவாகி யென்னறிவிற் குடியாகி நல்லறிவைத்
தருகுமலை யேழு மலையே. 46

மிடியைத் துலைத்துநிதி மென்மே லளித்தடியார்க்
கடிமைப் புரியவருள் செய்தமலை – கொடிய
ஊழ்வினையால் வந்தபிணி யொட்டுத் துடைத்தென்னை
வாழ்த்துமலை யேழு மலையே. 47

தஞ்சந் தஞ்சமெனத் தாள்பூட்டி வந்தவரை
யஞ்சலஞ்ச லென்றா தரிக்குமலை – கொஞ்ச
நேரத்தி லேமனனோய் நீக்கியே காத்தருளும்
பாரமலை யேழு மலையே. 48

அரிவோம் நமோநா ராயணா வென்பாருக்
குரியவர மெல்லாங் கொழிக்குமலை – பிரியமுடன்
யென்றுமஷ்ட லட்சுமியு மீஸ்வரியுஞ் சரஸ்வதியும்
நின்றமலை யேழு மலையே. 49

என்னா லுரைப்பதினி யென்னறிவே னுள்ளதெலா
முன்னா லறியா தொன்றுளதோ – பன்னாளும்
காத்ததுபோ லின்னுமெனைக் காத்தருள வென்கனவிற்
பூர்த்தமலை யேழு மலையே. 50

மாசி யிறங்குமலை மழைக்கால்க ளோடுமலை
தேசிகனார் மகிமை தெரியுமலை – வாசமலர்
மணக்குமலை யுண்டிதுகை மலைமலையாய் வந்தாலுங்
கணக்குமலை யேழு மலையே. 51

சொன்னத் துகையிலொரு செம்பு குறைந்தாலுங்
கன்னத்தி லேயடித்து கட்டவைக்கும் – அன்னவரை
திருப்ப நடத்துமலை தஞ்சமென்ற பேர்மேல்
விருப்பமலை யேழு மலையே. 52

கட்டுந் துகையிலொரு காசு குறைந்தாலும்
வட்டியுட னேதிரும்ப வாங்குமலை – எட்டுத்
திசையாரை யெல்லாந் திரளா யழைக்குமதி
வசியமலை யேழு மலையே. 53

பொன்வயிர பூஷணத்தைப் போடுவதாய் மலைக்குவந்த
பின்னால் துகைகொடுத்த பேய்மனதை – முன்னால்
உழைத்தபிணி யெல்லா முண்டாக்கி யட்சணமே
யழைத்தமலை யேழு மலையே. 54

மன்னரொடு மந்திரிமார் மகத்தாதி யானாலுஞ்
சொன்னபடி வாங்குஞ் சூட்சமலை – எந்நேரம்
தங்கங் குவியுமலை தஞ்சமென்றார் மேலாசை
பொங்குமலை யேழு மலையே. 55

நாமந் துலங்குமலை நாற்றிசையுங் கோவிந்த
நேமம் பெரியோர் நிறைந்தமலை – க்ஷேமம்
ஈயுமலை யடியா ரிடுக்கமெலாந் தீரவருட்
செய்யுமலை யேழு மலையே. 56

சங்கீத மேளஞ் சதாகோட்டஞ் செய்யுமலை
யெங்குங்கோ விந்தமய மெய்துமலை – மங்கையர்கள்
திரளா யுலாவுமலை தெய்வ மகத்துவமே
நிறைந்தமலை யேழு மலையே. 57

வடக்குமலை யென்று வழங்குமலை தென்கீழ்க்
குடதிசையோ ரெல்லாருங் கூடுமலை – யடக்கமதில்
இருந்தாரை யெல்லா மிழுக்குமலை நோய்க்கு
மருந்துமலை யேழு மலையே. 58

நிஜமா யிராப்போலே நெடுங்கதிரைத் தான் மறைத்து
விஜயனுக்கு வெற்றி விளைத்தமலை – புஜபலத்தை
நம்பி யெளியோர்மேல் நாப்புழுக்குந் துட்டருக்கு
வம்புமலை யேழு மலையே. 59

முத்திக்கு வித்தாய் முளைத்தமலை மூவுலகும்
பத்திபுரி வோர்க்குப் பலிக்குமலை – சித்தியெலாம்
மெய்யாய் விளங்குமலை மெய்யறியாப் பொய்யருக்கு
பொய்யுமலை யேழு மலையே. 60

எட்டெழுத்தாய் லோகமெலா மெங்கும் நிறைந்தமலை
துட்டருக்குத் தோற்றாத் தூரமலை – இட்டமுள
அன்ப ருளத்தி லமர்ந்தமலை யன்புடையார்க்
கின்பமலை யேழு மலையே. 61

அவ்வவ் வுலகோ ராசாரம் போல் குறிப்பு
வெவ்வே றுருவாய் விரிந்தமலை – எவ்வுயிரும்
தானாய் விளங்குமலை தாய்க்கும் பெரியதா
யானமலை யேழு மலையே. 62

வேலை வளைந்தமலை விரிகதிரும் சந்திரனைச்
சோலையிலே காட்டுஞ் சொகுசுமலை – ஆலிலைமேல்
சற்றே துயின்றளவில் சர்வவுல கத்தனையும்
பெற்றமலை யேழு மலையே. 63

மீனினங்க ளாமிருபத் தேழும் நவக்கிரகந்
தானுங் குலவித் தழுவுமலை – வானுலகிற்
றேடரிய தேவர்களும் தெய்வசபை மாதர்விளை
யாடுமலை யேழு மலையே. 64

தெய்வ மிருக்குமலை தெய்வீக மோங்குமலை
மெய்தவஞ்சேர் புங்கவர்கண் மேவுமலை – கைதவத்தை
பூண்டார்கள் சூழுமலை பூதலத்தி லேழைகுடி
யாண்டமலை யேழு மலையே. 65

எழுநிலமு மேழு மலையாய் வளர்ந்தமலை
பழுதருபொன் னாடாய்ப் படர்ந்தமலை – தழும்பேற
துதித்தார் மனத்தகத்திற் றேற்றுமலை யான்றோர்
மதித்தமலை யேழு மலையே. 66

வேதக் கொடிமுடியாய் விளங்குமலை வேதத்தின்
பாதமுத லுலகாய்ப் படர்ந்தமலை – சீதமலர்
பூணுமலை யன்பர்கள்செய் பூசைப் பலனளவே
காணுமலை யேழு மலையே. 67

பச்சைமலை பச்சைப் பவளமலை பல்லுலகும்
மொய்ச்சமலை லக்ஷ்மீ மோகமலை – யச்சமெலாம்
தீர்க்குமலை தீவினையைத் தினகரனார் முன்பனிபோல்
பேர்க்குமலை யேழு மலையே. 68

நீங்கா வுடற்பிணியை நீக்கவழி காணாமல்
வேங்கடவா யுன்னடியை வேண்டினேன் – பாங்குபெற
முற்போ தெனைக்காத்த முறைபோல் மனமிரங்கித்
தற்போதும் நீகருணை தா. 69

நாசியின் மேல் வந்தபிணி நாசப் படுத்தியுனைப்
பேசுமடி யார்புகழைப் பேசவருள் – தேசிகனே
என்போல மானிடர்முன் னேகமன மஞ்சுகிறே
னுன்பாதம் நம்பியு மீதுண்டோ. 70

பண்டிதரார்க் கற்றதெலாம்பார்த்துப் பார்த்தென்பிணியை
கண்டிக்க வாகாமல் கைவிட்டார் – எண்டிசையும்
தாவித் தொழும்பெரிய தாதாவே நீயிரங்கிப்
பாவியெனை யாதரிக்கப் பார். 71

முக்காலு முன்னடியை மெய்யாக நம்பினவ
னெக்கால முமறக்கே னுண்மையிது – தற்காலம்
அஞ்சும் படிக்கென்னை யாட்டுகிற வூழ்வினையைத்
துஞ்சும் படிச்செய் துணை. 72

ஊழ்வினையைத் தாங்காம லுள்ளுருகி நோவதிலும்
பாழ்கிணற்றில் வீழ்ந்தாலும் பண்பென்றே – தாழ்வடைந்த
என்முகத்தைப் பாராம லெங்ஙனமோ நீயிருந்தா
லுன்னைவிடப் பின்னா ருரை. 73

எள்ளுக்கு ளெண்ணையைப்போ லெங்கும் நிறைந்துளதாய்
தெள்ளுமறை யெல்லாந் திடமுரைக்க – உள்ளமதில்
என்னேர முன்றா ளிறைஞ்சுமெனைக் காராட்டாற்
பின்னாரோ தெய்வமினிப் பேசு. 74

காணுமிட மெல்லாமுன் காப்பென்றே பிரகலாதன்
தூணு மிடத்துந் துதிக்குங்கால் – ஆணவஞ்சேர்
இரணியனைத் தீர்த்ததுபோ லென்பிணியை மாற்றிதரத்
தருணமிது தற்காத் தருள். 75

பழையவடி யாரிருந்த பக்திவயி ராக்கியம்போல்
தொழவறியா வேழைமுறை தள்ளாதே – நிழலறியா
புழுப்போல் துடித்துனது பொன்னடிக்குத் தஞ்சமென்றே
னழுக்கறவே செய்வா யருள். 76

உள்ளமுட னேயெனது வூழ்வினையும் நீயறிவாய்
கள்ளனே யானாலுங் கடனுனக்கே – எள்ளளவு
உன்கருணை யென்மே லுதிக்குமே யாமாகில்
பொன்னாகு மென்னுடைய பொந்தி. 77

வயர்நிறைந்தாற் பானை வாய்மூடா னென்றசரீர்
தயவற் றளித்த தழகாமோ – நயமலிந்த
குணமுடையா தொண்டர் குலமுழுதுங் காக்கும்
மனமுடையாய் கேளென் மனு. 78

மனுவென்ப தென்னுடைய மாபிணியைத் தீர்த்துத்
தினமுன் றிருவடியைத் தொழுதேத்த – அனவரதம்
புத்தி யெனக்களிப்பாய் புகழ்மலிந்த வேங்கடவா
மற்றதைவேண் டாதென் மதி. 79

அன்ன மளித்தா யகமளித்தா யாடைபணி
பொன்னும் புகழு மிகவளித்தாய் – என்னுடம்பில்
பிணியளித்தால் – மற்றதெலாம் பாவிப்ப தெங்கேநீ
துணையிருந்து என்னேய் துலை. 80

செல்வ மகளைத் திருமார்பி லேதரித்து
வல்ல புகழ்படைத்த வேங்கடவா – தொல்லையினால்
நொந்துவந்து உன்னடியை நோக்கிச் சரணமென்றால்
எந்தவினை நிற்கும் எதிர். 81

புண்ணும் புரையுடனே பேய்பிடித்த நெஞ்சுக்கு
கண்ணுந் திரையாமா கலியுகத்தி – லென்பிழைப்பு
சொன்னால் நகையாகும் சுவாமிதிரு வேங்கடவா
என்னென் றுரைப்பே னிது. 82

தொண்டை முதுகு துடைநாசி மேல்விரணங்
கொண்டு மெலியுங் குறையெதுவோ – கண்டறிந்து
காத்தருள வேணுமையா கடவுளே – வேங்கடவா
யார்க்குரைப்பேன் சொல்வா யறி. 83

அரியுஞ் சிவனு மகிலபுவ னம்படைக்கும்
பெரியவிதி யும்முருகப் பெம்மானும் – பிரிவாகும்
அறுசமய தேவதையு மாயிரத்தெட் டண்டமெலாம்
நிறைந்ததுநீ தானே ஹரி. 84

பொய்வழியாற் சேகரித்த பொருளின்வினி யோகமெலாம்
மெய்வழியிற் சேர்க்காமல் மெய்குலைந்தேன் – உய்யும்வழி
காட்டிக் கொடுப்பதுஉன் கடமைதிரு வேங்கடவா
நாட்டினில் வேறேது நதி. 85

உன்னைப் பணிந்தார்க்கு வூழேது தாழ்வேது
பின்னை கிரகப் பிரட்டேது – பன்னலமும்
கூடுமென்றே கீதையெலாங் கூவுதலால் வேங்கடவா
தேடினே னென்மதியைத் தேற்று. 86

கள்ளக் கலிமதியால் காலமெலாம் நாயடியேன்
உள்ளத்தை யுன்பா லொடுக்காமற் – பள்ளத்தில்
வீழ்ந்தகஜம் போலே விம்முகிறேன் வேங்கடவா
தாழ்வகல நீகருணை தா. 87

ஆசைப் பெருக்கா லறிவுகெட்டு நின்புகழைப்
பேசாத தாலல்லோ பாழானேன் – தேசத்தார்
முன்செல்ல வென்றால் மெலியுதையோ வேங்கடவா
என்செய்வே னென்னோ யெடு. 88

உலகபோ கத்திற் குரித்தான காலமதில்
தலைவிதிதா நிப்படியுந் தானுண்டோ – நிலமனைத்தும்
பாதத்தி னாலளந்த பாரமலை வேங்கடவா
சோதித்து நீதா சுகம். 89

பாழும் பிரமனவன் படித்தபடிப் பென்னாவோ
ஊழை யொருக்காலே யூட்டுவனா – ஆழிதுயில்
கொண்டப்போ துந்திவழி கோகனத்தில் வந்தவனை
தண்டித் தெனைக்காத் தருள். 90

உன்மகிமை கேட்க வுளநடுங்கு தாகையினால்
யின்னுமுனை மறக்க வெண்ணுவனோ – மன்னர்முதல்
அஞ்சிப் பணியுமெந்த னாண்டவனே வேங்கடவா
கொஞ்சங் கருணை கொடு. 91

பூவி லயனைப் பெற்றெடுத்த தாதாநீ
பாவியென் றென்னைப்பா ராட்டாதே – தேவியொடு
சொற்பனத்தில் வந்த சொந்தம்போற் சோதித்து
அற்பவினை தீர்த்தா தரி. 92

என்கொடுமை யத்தனையு மெழுதப் பொழுதுண்டோ
உன்னடிமை யென்றே யுரைப்பதலால் – பின்னொன்றும்
பேசவறி யேனுலகிற் பெரியமலை வேங்கடவா
தாசரைப்போ லென்னையுமே தற்கார். 93

தற்கார்க்க வேணுமென்று தஞ்ச மபயமென்று
முக்கால் வலமாகி முன்னின்றேன் – மிக்காக
என்னபிழை செய்தாலு மெல்லாம் பொறுத்தருளி
ஜென்மவினை தீரவருட் செய். 94

ஆணதிலும் பெண்ணதிலு மடியேனைப் போல்கொடியோர்
காணவரி தென்றேநீ கண்டாலும் – வீணாக
தள்ளாதே யென்னபயந் தங்கமலை வேங்கடவா
கொள்ளாதே யென்மீது கோபம். 95

உந்தனுக்குக் கோப முண்டானா லுன்னெதிரே
வந்து தணிக்கவழி யார்க்காகும் – சந்ததமும்
சேய்பிழைக ளெத்தனைதான் செய்தாலு மீன்றெடுத்த
தாய்பொறுக்க வல்லோ தகும். 96

இத்தனைநாள் நினைக்கவிலை யென்றெண்ணி யுன்மனதில்
வைத்து வருமம் வளர்த்தாதே – மெத்தவுநான்
நொந்தேன் மெலிந்தே னோக்கிவந்தேன் கோவிந்தா
சந்ததமு முன்றாள் சரண். 97

கோவிந்த நாமம் கோருமடி யாருக்குப்
பாவந் துலையும் பதங்கிடைக்கும் – ஆவலெலாம்
கைக்கூடும் பிணியகலும் காளையிளந் தேகம்போல்
மெய்க்கூடும் மெய்யா மிது. 98

அலமேலு மங்கைக்கு ஆசைமண வாளா
உலகமிரண் டேழுக்கு மொருதகப்பா – நிலமதனில்
என்குறைக ளெல்லா மிணையடியி லொப்புவித்தேன்
பன்னலமுங் கூடவருட் பண். 99

குற்றங் குறைபலவாக் கோடிபிழை செய்தாலும்
முற்றும் பொறுத்து முகங்கொடுத்து – சற்றேநீ
கருணை பொழிந்தென் கருமப் பிணிநீக்கி
பொருளும் புகழும் பொழி. 100

ஆண்டுக் கொருக்கா லடியேன் திருமலையை
வேண்டித் தொழவரமும் வேண்டுமெனக் – காண்டவனே
செய்தொழிலும் சீவனமும் சீராய் செழித்துதினம்
கைதவமு மோங்கிவரக் கார். 101

துளபமணி மார்பா துவாரகையில் வாழ்முகுந்தா
களபமுலை யலர்மேற் கண்ணாளா – வளமலிந்த
வடக்குமலை கோவிந்தா வடிமைநெடு நாட்பட்ட
யிடுக்கமெடுத் தே யெரி. 102

வாத வலியும் வளர்மெகப் புண்புரையும்
சீத விரணத்தின் சங்கடமும் – ஆதவனை
கண்டபனி போலே கடிகையிலே மாற்றியுந்தன்
தொண்டாந் தொழிலெனக்குத் தா. 103

வைப்பா சூனியமா வல்லதுமுன் னூழ்வினையா
இப்பிறப்பி லேதேனுஞ் செய்தேனா – எப்போதான்
துலையுமிது வேங்கடவா தூரரியக் கூடலையே
யலையுகின்ற வேழைநெஞ்சை யாற்று. 104

பெற்ற அப்பா பெரியப்பா என்விதிக்கு
மற்றாரைப் போயடுத்து மல்லிடுவேன் – கற்றதெல்லாம்
சொல்லி யபயமிட்டுச் சூழ்ந்தேனே யுன்மனது
கல்லா யிருந்தாலுங் கரை. 105

உண்டு உடுத்தி யுலகத்தாற் போற்சுகத்தை
கண்டு களிக்காமற் காலமெலாம் – பண்டைவினை
பட்டு மெலியவா பெற்றெடுத்தாய் வேங்கடவா
கெட்டதெலாம் போதுமினிக் கார். 106

முன்னால் முறைபேசி முகமறைந்த தட்சணமே
பின்னால் கெடுநினைக்கும் பேயர்களை – யுன்னுடைய
சக்கரத்தி னாற்சிதைத்து சத்துருவைப் பாழாக்கி
துக்கமறச் செய்வாய் துணை. 107

வஞ்ச நெஞ்சத் தீயரெலாம் வந்துவந்து என்பிழைப்பை
கொஞ்சமுள வறிந்து கொண்டவுடன் – அஞ்சாமல்
மோசக் கருத்தால் முறைபிறழும் பாவிகளை
நாசப் படுத்தமுயல் நாதா. 108

தேடவைத்தாய் நின்னடியைத் தேடுந் திறமைதந்து
பாடவைத்தா யுள்ளந் தனிற்பதிந்து – ஆடலெலாம்
தீரவைத்தாய் பிணிமுதலாய் தீர்த்து சகலசுகம்
சேரவைத்தா யுன்றன் செயல். 109

ஆத்திரத்தி னாலே யடியே னுரைத்ததெலாம்
தோத்திரமாய்க் கொண்டு துணைபுரிந்து – பாத்திரமாய்
என்பிணியெல் லாங்களைந்து ஏழைகுடி காப்பாற்ற
லுன்கடமை யீதொன்றே யுண்மை. 110

அறிவில்லாச் சேயுரைத்த ஆசைவெண்பா நூற்றிபத்தும்
பொருளல்ல வானாலும் பூண்டருளித் – தெருளுடைய
முத்த ருரைத்தபழ மெய்த்துதிபோ லாதரித்து
பத்தியெனக் குதயம் பண். 111

ஏழுமலை வெண்பா முற்றுப்பெற்றது

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராகவாசாரியர் இயற்றிய ஸ்ரீ திருமால் வெண்பா–

January 7, 2022

ஸ்ரீ திருமகள் துதி

செந்தாமரை யுறையுஞ் சேயிழையை மூவுலகும்
தந்தா தரிக்கும் தனி முதலை – நந்தாது
மாயன் மறு மார்பின் மன்னு மணி விளக்கை
ஆயு மனமே யடை.

காப்பு

திருமாறன் வெண்பாவைச் செப்புதற்கு நெஞ்சே
வருமாறன் றான்மலரை வாழ்த்து.

நூல்

தாமரையாள் மேவுந் தட மார்பா! தண்டமிழால்
மா மறையைச் செய்த மகிழ் மாறன் – நா மருவப்
போற்றிப் புகழ்ந்துரைக்கும் புண்ணியா! வென்னிடரை
மாற்றிப் பணிந்தருள வா. 1

காதலித்த நற்பொருளுங் கைகூட்டும் வெவ்வினையின்
தீதவித்து நற்கதியிற் சேர்க்குமால் – மாதவத்தர்
நச்சிப் புகழ்ந்தேத்தி நாண்மலரை யிட்டிறைஞ்சும்
அச்சுதன் றன் பொன் னடி. 2

உலகத் திருணீக்கி யுத்தமரைத் தன்பால்
நிலவ வருள்புரிந்து நிற்றல் – நலமிகுந்த
பூவிந்தை மேவிப் பொலி மார்பன் பொன்னாடைக்
கோவிந்தன் கொண்ட குணம். 3

வண் குமுத வாயார் வனப்பில் மிக வாழ்ந்து
பண்கனிந்த வாய் மொழியைப் பாராது – வண் செவியே
வாசவனும் நான்முகனும் வார் சடைய னுங் காணாக்
கேசவன்றன் மெய்ச் சரிதங் கேள். 4

தொழுவார் துயரொழித்துத் தொல்லறிவை யாக்கி
வழுவாது வீடளிக்க வற்றாம் – மழுவாளும்
அஞ்சக் கரத்தா னலரா னறியாத
அஞ்சக் கரத்தா னடி. 5

கண்டக்கா லுள்ளங் கரையாதோ காதலித்த
தொண்டர்க் கருளுந் துணையானைப் – பண்டை
யருமறையுங் காணாத வப்பனை யொப்பில்
தருமனையென் னெஞ்சத்துட் டந்து. 6

புகழ்கின்ற நான்மறையும் புத்தேளிர் தாமும்
இகல் வென்ற மாமுனிவர் யாரும் – அகன் மதியால்
தேடுகின்ற பாதச் செழும் பொருளே யின்றெனது
கோடுகின்ற நெஞ்சகத்தைக் கொள். 7

நறவார் துளவணியு நாரா யணனை
மறவா திருக்கின் மனனே – பிறவாத
பேரின்ப நன்னிலையைப் பெற்றாய் நீ யற்றிடுவாய்
பாரின்பப் பாழ் வலையின் பற்று. 8

வழுத்துவார் நன் மனத்து வாழும் பரமன்
எழுத்தினால் காண யியையான் – சுழுத்தி தன்னில்
சாக்கிரத்தை யுற்றோர் தனிக் காண்ப ரல்லாதா
ராக்கிரகத் தாலறியா ராங்கு. 9

மை திகழு மேனி மணி வண்ணன் மாறொழிக்கும்
கை திகழு மாழிக் கருங்கொண்டல் – பொய் திகழும்
சிந்தை யுடையேனைச் சேவடிக்கே சேர்த்தருளும்
எந்தத் துயர் வருமா லின்று. 10

சொல்லரிய நான்மறையுஞ் சோர்ந்துணர மாட்டாது
மெல்லத் திரும்பி மெலிந்தே – எல்லைக்
கடங்காப் பெரு வெளியா யன்ப ரகத்தே
யொடுங்காது நின்ற வொன்றை யுற்று. 11

சங்கந் தனிக் கரத்துச் சாரு நெடுமாலே!
மங்கை யுறையு மணி மார்பா! – துங்கவிடைச்
செஞ்சடையான் போற்றுந் திருவடியாய் வெந்துயரம்
நெஞ்சடையா வண்ணம் நினை. 12

கேசவனை நாரணனைக் கேளா ரொடுங்கிடமுன்
வாசவனைக் காத்த வலியோனைப் – பாச
வினை யொழிய நன் மனமே வேண்டுதியேல் ஞாலத்
துனை யொப்பா ருண்டோ வுரை. 13

சூளா மணியாய்த் தொடரு மகத்திருளைக்
கேளா தொழித்துக் கிளரறிவால் – மீளாப்
பதமளிக்கும் பண்பினதாம் பாற்கடலில் மேவி
இதமளிப்பான் றாளி னிணை. 14

நீலநிறக் காலன் நிமிர் பாச மென் செய்யும்?
மேலை வினை யென் செய்யும்? மெய்யுணரின் – கோலத்
திருவருவ மென்னெஞ்சிற் றீகழுங்கா லன்றைக்
கொருதுயரும் யானடையே னுற்று. 15

சுரும் புறையு மென் கூந்தற் றோகா யிவட்குக்
கரும் பிறையால் நேர்ந்த கவலை – இரும் பவ்வம்
முன் கடைந்தான் முன் மொழிந்து மொய் துளவத்தார் வேண்டல்
உன் கடமை யன்றோ வுரை. 16

மறை யறியா வொன்றை மலரான றியான்
பிறை யணியும் பெம்மானோ பேசான் – நறை யொழுகுங்
கற்பகத்துப் பொன்னுலகோர் காணார் முன் கண்டதே
வெற்பு நிகர் வேழம் விரைந்து. 17

நெய்தற் கரியானை நீள் கமலை நாயகனை
எய்தற் கரியானை யெம்மானைத் – துய்ய
அறிவாளர் போற்று மமலனையே நெஞ்சத்
துறவாள னாக வுணர். 18

ஏதக் கடனீங்க வெந்தா யுனதடியாம்
போதத்தை நல்கப் புரிவாயோ – சீதச்
செழுந் தாமரை விரும்பு சேயிழையாள் மார்பா!
தொழுந் தாமரை யடியாய்! சொல். 19

பித்த மயக்கிற் பிணிப்புண் டுழல்வேனைச்
சித்தந் தெளியுந் திறமடையப் – பத்தி
நிலையு மடியார்க்கு நீடுயரம் போக்கும்
அலையுட் கிடந்தா யருள். 20

வம்பணிந்த கூந்தன் மடவார் படு வலையுள்
நம்பிக் கிடந்துழலும் நாணிலிக்கும் – உம்பர்
அடையா நிலை பெற் றடைய வருமோ
படி யேழு முண்டாய் பகர். 21

நறவார் துளவணிந்த நாரணன்றன் பாதம்
மறவாது நெஞ்சே வழுத்தின் – பிறவாத
மெய்ப் பதவி யெய்தும் விறற் காலன் வெம் பாசம்
எய்ப்பதனுள் வாரா திசைந்து. 22

சொல்லற் கரிதாஞ் சுகப் பொருளைத் தீ வினையோர்
புல்லற் கரிய புகழ்ப் பொருளை – மல்லற்
றொடை மாறன் போற்றுந் துணையிலியை நெஞ்சத்
திடர்மாற மென் கிளியே யேத்து. 23

ஆலத் திலையி லறி துயில்கொ ளம்மானை
ஞாலத்தை முன்னளந்த நாயகனைச் – சீலத்து
நன் முனிவ ரேத்து நறுங்கமலை கேள்வனையே
கன்மனமே யேத்தக் கருது. 24

சங்க முறலாற் றளிர்க்கொடியுந் தோன்றுதலால்
பொங்கு மணியும் பொலிந்திடலால் – செங்கண்
நெடுமாலே நின்னை நிகர்க்குமா லாழி
வடுமாற்ற மன்று வழக்கு. 25

எங்கள் பெருமானை யேந்திழையாள் நாயகனை
அங்கங் கரிய வழகானைப் – பொங்கும்
சுடராழிக் கையானைத் தொல்லமரர் கோனை
இடராழி நீங்க விறைஞ்சு. 26

அன்னந் துறந்தா ளணி துறந்தா ளந் தளிர்க்கை
வன்னங் குலவு வளை துறந்தாள் – இன்னும்
உயிர் துறக்கு முன்னே யுதவாயோ வாயர்
தயிரிறக்கும் வாயுடையாய் தந்து. 27

கரமொன்றி லாழி கரமொன்றிற் சங்கம்
உரமொன்றில் மா மணிதா னொன்றும் – சிரமொன்றில்
தாரொன்று மா முடியே தாமரை யுமுந்தி தனில்
காரொன்று மேனியன்பாற் காண். 28

பொங்கெரியி னின்று புலனைந்துந் தாமடக்கிப்
பங்கமிலா நற்றவங்கள் பாரித்தும் – எங்கும்
கரந்துறையுங் கார் முகிலைக் காணாதார் காணார்
நிரந்தரமா நல்லின்பம் நேர்ந்து. 29

நந்தமரு முன்கை நறு நுதலாள் மார்பிருக்க
அந்தமிலா வன்பா லழுங்கினேன் – வந்தென்
அருகிருக்குந் தோழீ யவன்மார் பணைந்து
பருகிடநீ செய்வாய் பரிந்து. 30

நறுந்துளவஞ் சூடி நறு நுதலாள் நெஞ்சம்
வெறுந் துகளாச் செய்தல் விறலோ? – உறுங்கவலை
நீக்கி யடியாரை நெஞ்ச மிக மகிழ
வாக்குந் தனிப் பொருளே யன்று. 31

நின்னைப் பிரிந்து நிலை யிலா விவ் வுலகில்
துன்னும் வினையிற் சுழல்வேனைப் – பொன்னிற்
பொலிகின்ற வாழிப் பொரு படையோ யென்றன்
வலி துன்று வெந் நோயை வாட்டு. 32

செம் பொருளை யென் மனத்துச் சேர வருளுங்கொல்
வெம் பிறவி சேர வெருட்டுங்கொல் – உம்பர்க்
கமுதளிக்க முன்னொருகா லாரணங்காய்த் தோன்றி
எமதகத்து நிற்கு மிறை. 33

பகருங்கால் மாயன் பதமன்றி நாளும்
புகலும் பிறிதுண்டோ போக – இகல் கடந்த
ஆயன் மணி வண்ணன் அன்ப ரகத் துறையும்
நேயனை நீ நெஞ்சே நினை. 34

நினைக்கும் விழுந்தரற்றும் நின்மலா வென்னும்
எனைக் காக்க வாராயோ வென்னும் – வினைக்கு
விழு மருந்தே யென்றன் விளங்கிழையா ளுய்யத்
தொழுதலல்லா லென்செய்வேன் சொல். 35

அறையு மறையு மருநூலும் யாவும்
கறையுண் மனத்தர் கருதார் – குறை வில்லா
நற் குணத்தி னார்க்கே நலந்தருமால் நல் விளக்கு
எக் குணமோ கண்ணிலற்கு மிங்கு. 36

இங்கொன் றறியா வெளியேன் மட நெஞ்சம்
தங்கும் வினையுள் தளராது – பங்கயக்கண்
மாயா வுனதடியை வாழ்த்திக் கரை சேர
ஓயா தருளா யுவந்து. 37

பன்னிருவர் பாடும் பெருமான் பதமலரைத்
துன்ன ஒருநாள் துணியாயோ – கன்னல்
சிலை வளைக்கும் சேயிழையார் செய்ய வுருவாம்
வலை யலைக்கும் நெஞ்சே வழுத்து. 38

பவளக் கொடி தாங்கிப் பன் மணியு மேந்திக்
குவளைக் கரு நிறமுங் கொண்டு – தவளத்
திரு முறுவல் வில் வீசுந் தெய்வக் கடலென்
மருவிதய மேவு மகிழ்ந்து. 39

நீலத் திருமேனி நெஞ்சங் கவர்ந்திடுமக்
கோலத்தை யென்னென்று கூறுவேன் – ஞாலத்துப்
பொங்கோத நீரிற் பொலிதா மரையன்ன
மங்காத வாய் கண் கை வாய்ந்து. 40

வாழ்த்துவார் வார் கழலை வண் முடியின் மீதணியப்
பாழ்த்த பெரும் பிறவி பாறிடுமால் – வீழ்த்த
நறை கமழு மென்றுளவ நாரணனா மெங்கள்
இறை யடியை யெப்பொழுது மேற்று. 41

ஏறுகந்த செஞ்சடையான் ஏற்ற நறு மலரான்
கூறுகந்த செங்கண்ணா! கோவிந்தா! – மாறொருவ
ரில்லா வுரத்தானே யின்புறவே நின்னடியைப்
புல்லா நினைத்தேமைப் போற்று. 42

பூ மகளும் நா மகளும் போற்றிப் பொறி யரவின்
மாமகரப் பாற் கடலின் மன்னிய வெங் – கோமகன்றன்
பொன்னடியை நன் மனமே போற்றிப் புகழ்ந்திடுவாய்
வெந்நரகஞ் சேரா விரைந்து. 43

விரைந்து தொழில் கேட்பர் விண்ணுலகி னுள்ளார்
கரைந்த மனத்தினராய்க் காரின் – புரைந்த
திரு மேனி மாயன் றிருவடியை நெஞ்சிற்
றருமேலோர்க் கிவ்வுலகிற் றாழ்ந்து. 44

தாழுங் குழல் மடவார் தம் வலையிற் சிக்காது
வாழு மட நெஞ்சே வாழ்த்துவாய் – ஊழின்
களங்கறுத்தான் கஞ்சத்தான் காண வறி யாத
களங்கறுத்த மேனியனைக் கண்டு. 45

கண்டுந் தெளியாது காசினியீர் காழ் பிறவி
மண்டும் வினை யுண் மயங்குவீர் – தண்டுளவன்
பேரோத நீங்காப் பெருந்துயரம் நீங்குமால்
காரோத வண்ணன் கழல். 46

அருட்கடலா யாயிருரா யன்பனா யென்னுள்
மருட்கை தனையொழித்த மாயன் – திருக்கழலைப்
பற்றார் நெடுங்காலன் பாசக் கடுவலையு
ளுற்றார் பிழையா ருழன்று. 47

தெய்வந்தா னெங்குந் திகழ்ந்துளதா லென்றுரைத்துப்
பொய்வந் தனையும் புரியாமல் – ஐயோ
நெடுநரகில் வீழாது நெஞ்சே நீ மாயன்
கடிமலர் சேர் பொன்னடியைக் காண். 48

எல்லாப் பொருள்கடொறு மெங்கு நிறைந்துறையும்
மல்லார் தடந்தோள் மணிக் குன்றைக் – கல்லார்
இருவினையு ளாழ்ந்திட் டிடருறுவர் நெஞ்சே
கருதரிய நாரணனைக் காண். 49

ஆனந்த மாகி யறிவாகி நின்றெங்குந்
தானந்த மில்லாத் தனி யுருவாய் – மோனந்
தனையடைந்தா ருண்டருளுந் தண்ணமிர்தாம் நெஞ்சின்
மனையடைந்த செங்கணெடு மால். 50

பற்றற் றொளிரும் பரம் பொருளைப் பாருலகிற்
கற்று மறியாக் கயவர்காள்! – சற்றே
நினைந்துய்ம்மின் நீண் மறையின் சார மிதுவே
புனைந்துரையு மன்று பொருள். 51

இருளா மயக்கொழிய வெஞ்ஞான்று நெஞ்சின்
மருளா வகை நிரம்பு மாயன் – அருளாம்
பொழியமுத முண்ணுமா போற்றுவேற் குண்டோ?
பழ வினையின் பற்றகலாப் பண்பு. 52

இன்பம் பெருகு மெழினலமுந் தான் பெருகும்
துன்பம் குறையுந் துணிவுண்டாம் – அன்பான்
மனமொழிக ளுக்கெட்டா மாய னடியைத்
தினநினைவார்க் கிவ்வுலகிற் றேர்ந்து. 53

பைந்துளவத் தாமன் பதம் பணிய வெவ் வினைகள்
நைந்து மனமே நலமுறுவாய் – செந்துவர்வாய்
மாதரார் வெவ்வலையின் மன்னி மயங்காது
போதராய் நெஞ்சே புகுந்து. 54

கை விளங்கு மாழிக் கரு முகிலை நெஞ்சத்து
மெய் விளங்க வேத்த விரையாதார் – நெய் விளக்கு
சூலத்தான் வெம்பகட்டிற் றோன்றுங்கா லென் செய்வார்
ஆலத் திலையா னரண். 55

செங்கமல வாண் முகமுஞ் செய்ய திருக் கண்ணும்
பைங் குமுத வாயும் பகர் செவியும் – மங்கை
உறைகின்ற பொன் மார்பு மோங்கென் மனத்தே
நிறைகின்ற வேறென் நினைப்பு. 56

நெஞ்சத்து ணிற்கு நிமல னடி யிணையை
வஞ்சத் திருக்கவிழ வாழ்த்துங்கால் – கஞ்சத்துப்
பெண்ணருளு முண்டாம் பெரும் பிறவி நீங்குமால்
நண்ணரிய முத்தியுமாம் நாடு. 57

நெஞ்சங் கடந்த நிமலா விரு வினையின்
வஞ்சங் கடக்க வழி யருளாய் – நஞ்சக்
கறைக் கண்டன் றுன்பொழித்த கார் முகிலே! வண்டார்
நறைக் கண்டத் தண்டுளவோய் நன்கு. 58

நாடுங்கா னன்னெஞ்சம் நாரணனைத் தானாடும்
பாடுங்கா லன்னான் பதம்பாடும் – நீடு புகழ்த்
தெய்வத் திருக் கழலைச் சென்னி புனைந்திடுமால்
உய்யத் தடையோ வுரை. 59

இன்ப மயமா யிருப்பதே யல்லாமல்
துன்பமய மாயிருக்கத் தோன்றுமோ – அன்பன்
தனதடியை நன்மலரால் தாழ்ந்திறைஞ்ச நாளும்
வினை கழல வெம் பிறவி விட்டு. 60

பாதம் பணிந்த பயனென்கொல் பங்கயத்து
நாதன் வணங்குகின்ற நாரணா – வேதந்
தொழுகின்ற பாதத் துணையா யடியேற்
கழுகின்ற நோயழியா தால். 61

நெஞ்சங் கலங்கி நிறை யழிந்து நிற்கின்றாள்
தஞ்ச மிவட்குண்டோ சாற்றுவாய் – கஞ்சத்
திருக் கையாய் கண்ணாய் திரு மார்பா நெஞ்சத்
திருக் கையாய் காண வினி. 62

நாண் மலர் சேர் பொய்கைக் கண் ணால்வாய் மதகரிமுன்
கோண்முதலை கௌவக் குலைகுலைந்து – நீண்மறையின்
மாமுதலே யென்றழைப்ப மற்றொன்றும் நோக்காமல்
ஆமுறையாற் காத்தா னரண். 63

புருவச் சிலையும் பொழிய முதச் சொல்லும்
உருவக் கருநிறமு மோங்கிப் – பருவத்
தெழுந்ததோர் மா முகிலே யென் மனத்து வெம்மை
விழுந்ததே யென்னோ? வியப்பு. 64

வஞ்சப் புலனடக்கி வள்ளா லுனதடியென்
நெஞ்சத் திருத்த நினையாயோ – கஞ்சக்
கருவிழியாள் கல்லுதிக்கக் கண்டாய் கவலும்
இருவினையி லாழு மெனக்கு. 65

கோசிகன்றன் வேள்வி குறையறமுன் காத்துகந்
தேசிகனை நெஞ்சத்துத் தேராது – பாச
மனைமக்கள் வாழ்வுகந்து மாநரகஞ் சேரும்
வினைமருவும் வெய்யேனை வேண்டு. 66

இன்றென் னிடர்தீர வெம்மா னிரங்குதியால்
கன்றும் வினையிற் கலங்காது – துன்றும்
செழுங்கொன்றைச் செஞ்சடையான் செல்ல லொழித்தாய்
அழுங்கும் வினையேனை யாள். 67

வாள் விழியார் மாய வலையில் வருந்தாதுன்
றாள்வழியே நெஞ்சந் தனித்தொழுக – நீள் விழியால்
பாராயோ ஐயா பரமா பெருமானே!
தீராயோ வென் கவலை தேர்ந்து. 68

கங்கை யுறையுங் கழலானைச் செஞ்சடைமேல்
மங்கை யுறையு மழுவானைத் – துங்க
விடையானை முன்னம் விடை தொலைத்த வாழிப்
படையானை நெஞ்சே பகர். 69

பண்ணுறுஞ் செவ்வாய்ப் பசுங்குழவி மெல்லுருவம்
கண்ணாரக் கண்டு களியேனோ! – புண்ணாறும்
பொய்யைச் சுமந்து புலை நரகில் வீழாமல்
உய்யும் வழியை யுணர்ந்து. 70

கண்டுங் கருமக் கடலுட் கவிழ்ந் துழன்று
மண்டும் பிணியின் மயங்காது – திண்டிறல்சேர்
வேதச் சிரங்காணா மெய்ப் பொருளி னற்றுளவப்
பாதத் துணை மனமே பற்று. 71

பற்றற் றொளிரும் பரம் பொருளை யல்லாது
மற்றொன் றறியா மனத்தினர் காண் – எற்றும்
பவத் திரையை நீக்கிப் பணிந்தோரைக் காக்குந்
தவத்தினரா நெஞ்சே தரி. 72

இன்றென் னிடரொழிக்க வெம்மா னெழின்மார்வந்
துன்று நறுந்தார் துருவுமினே – மன்றற்
கொடிசே ரிடையீர் குளிர் முத்துஞ் சந்தும்
கடியாவே யென்றுயரைக் கண்டு. 73

நாகத் தணையில் நலங்கிளர வின்றுயில்கொள்
மேகத் துருவை விறலோனைக் – காகத்
தொரு நயனம் போக்கு முரவோனை நெஞ்சே
யிருநயனங் காண வியை. 74

தாக்கு துயரந் தவிர்த்துச் சுகவருளைத்
தேக்கு பரமன் திருவடியை – நீக்கமற
நெஞ்சே நினைகுதியே னின்மலமா மென்னிலையை
எஞ்சா தடைவே னியைந்து. 75

ஐம்புலனிற் செல்லு மறிவை யொழித்துதறிச்
செம்பொருளிற் சேர்க்குந் திறங்கேட்கின் – அம்பரமாம்
போக்குவர வற்றிருக்கும் பூரணத்தை யெஞ்ஞான்றும்
நீக்கமற நெஞ்சே நினை. 76

மதவா ரணங்கொன்ற மாதவனை யென்கண்
உதவாது வேறெதனை யோர்வீர் – இதமார்ந்த
மென்மொழியீ ரென்றன் மிகுவே தனைதீரப்
பன்மொழியா லுண்டோ பயன். 77

செங்கமலச் செல்வி செறிந்தினிது வீற்றிருக்கும்
பொங்கு மணி மார்பப் புனிதன் பால் – சங்கை யறச்
சென்றுரைமின் செங்காற் சிறையனமே! வல் வினையேன்
கன்று துயரங் கரைந்து. 78

திரைத்துக் கரைபொரூஉந் தெண்டிரையே! மாயன்
வரைத் தடந்தோள் சேர வழியென் – உரைத்தும்
உணர்வரிய மெஞ்ஞான வுத்தமனை நின்பால்
நிணமுலவு நேமியனை நேர்ந்து. 79

உணர்வரிதாய் நெஞ்சத் துறுவதா யென்றும்
புணர்வரிதாய் நின்ற பொருடான் – குணங்குறிசேர்
புல்லறிவு கொண்டு புகலற் கெளிதேயோ
சொல்லரிய நெஞ்சேநீ சொல். 80

தாமரையைக் கண்டு தருக்கிச் செருப்புரியும்
காமருவு கண்ணுங் கனியிதழும் – மாமறைகள்
தேடுந் திருவடியும் தெய்வத் திருமார்பும்,
நீடுறையு மென்னெஞ்சி னேர்ந்து. 81

எந்தக் கரந்தா னெழிற்கமலை மெய் தழுவும்
அந்தக் கரத்தா லணைத் தருள்வாய் – சந்தம்
அமரு நெடுங் கூந்த லாயிழையா ளுய்ய
இமிர் சங்க மேந்தினா யின்று. 82

இன்றென் மடமா னிரு விழிகள் நின்னுருவம்
குன்றாது காணின் குளிருமால் – அன்றேல்
பிறை மதிக்குங் காமன் பெரு மலர்க்கு மாற்ற
நிறையிவட்கு முண்டோ நிலை. 83

கருத்தவிழக் கார் முகிலின் கங்கைக் கழலைத்
திருத்தமுற வேத்தத் தெரியின் – வருத்தமுறு
வெம்பவ நோய் நீங்கும் வியன் பதமு மெய்தலுறும்
கம்பமுறு நெஞ்சகமே காண். 84

வண்டுறங்குங் கோதை மடமானைத் திண்மார்பிற்
கொண்டு விளங்குங் குணக்குன்றைக் – கண்டு
தொழுதா ளுனை நினைந்து துன்புற்றா ளென்மின்
எழுதா வுருவுடையீ ரின்று. 85

பைஞ்சிறைய மென் கிளியே பங்கயக்கண் மாயன் பால்
நஞ்சனைய வாட்க ணறுநுதலாள் – கஞ்சமலர்க்
கண்டுயிலா ளன்னங் கருதா ளென மொழிந்து
வண்டுளவத் தாரினைநீ வாங்கு. 86

பெரும் பிறவி நீங்கிப் பிரிவிலா னந்த
அரும்பதவி யெய்த வவாவின் – சுரும்பு
மருவார் துளவணிந்த மாயன் பதத்தை
ஒருவாது நெஞ்சே யுரை. 87

மந்திரமும் வேண்டேன் மருந்தறியேன் மாணிக்கச்
செந்திருவி னாயகன்றன் சேவடியைச் – சிந்தித்துத்
தோத்திரிக்கப் பெற்றேன் துயரங்க ளென்செய்யும்
நாத்திரிக்கே னன்னெஞ்சே நான். 88

தந்தால் பிழைத்திடுவாள் தாராக்கால் நீ பிழைப்பாய்
செந் தாமரையாள் செறி மார்பா! – அந்தோ
மலர்க் கணைக்கும் மா மதிக்கும் வார் கடற்கு மேங்கும்
கொலைக் கண்ணாட் குன்றார் கொடு. 89

முன்னிகழ்ந்த நற் குறியால் மொய் குழலாள் வெண் மணன்மேல்
பொன்னெகிழ மேனி புலம்பெய்த – இன்னருளால்
நேரா தவளை நெருங்கா திருந்தனையே!
காராயா! வென்னோ? கருத்து. 90

கடிசேர் துழாய் முடியன் காமரு பூங் கோதைத்
துடி சேரிடையாள் துணைவன் – அடி சேர்ந்து
போற்றும் புகழுடைய புண்ணியரைத் தன்னுலகில்
ஏற்று மிறைவனை நீ யேத்து. 91

அமுதிற் பிறந்த வணி யிழையாள் கோனைக்
குமுதத் திரு மொழியீர் கொண்டு – நமதிந்தக்
காரிகையின் துன்பக் கடலைக் கடத்துவிரேல்
நேரிழையு முய்வாள் நினைந்து. 92

காண்டற் கரியானைக் கண்டக்கா னீங்கானை
வேண்டற் கெளியானை வேண்டினரின் – தாண்டற்கு
மேவானைத் தம்முள்ள மேவினர்க்கு நல்லமிர்த
மாவானை நெஞ்சே யடை. 93

தண்டுளவ நீண் முடியுந் தாமரையாள் சேர் மார்பும்
புண்டரிக வாள் விழியும் புன் முறுவல் – கொண்டிலகு
செவ்வாய் மலருஞ் செறிபுருவ வில்லிணையும்
எவ்வா றினிமறப்பேன் யான். 94

வண்டுளவந் தங்கு மணி முடியான் வாண் மதி போல்
விண்டு விளங்கும் வியன் வளையான் – தொண்டர்
துயரொழிக்கு நேமியினான் தொல் வினையைப் போக்கும்
மயலொழிக்க வென் மனத்து வந்து. 95

சிற்றவையின் சீற்றச் செருக்காற் சினங்கொண்டு
பெற்றவனை நோக்காப் பெரு வனத்தை – யுற்றோர்
அருந் தவத்தைச் செய்த அழகனை முன் காத்த
வருந் துவரை மன்னனை நீ வாழ்த்து. 96

நெஞ்சக் கொடுமை நெகிழப் புறம்புறையும்
வஞ்சக் கொடு வினைகள் வாட்டமுறக் – கஞ்சத்
திருவுந்தி மேவும் திருத்தன்றா ணாளு
மருவு மனனே மகிழ்ந்து. 97

ஆர்கலியை முன்கடைந்த வச்சுதா வம்புலிசேர்
வார்சடையன் காணாத வள்ளலே – கார்புரையும்
வண்ணத்தாய் வந்தென் மனம்புகுந்தாய் அன்பரகத்
தெண்ணத்தாய் என்னை யருள். 98

ஏனத் துருக்கொண்ட வெம்மானைக் கண்டு சொலா
மீனத் தடங்கண்ணாள் மெய்தளர்ந்தாள் – கூனற்
பிறைதொழலும் வேண்டாள் பிணைமலரும் வேண்டாள்
குறையவன்மால் தோழிநீ கூறு. 99

பால னுரையின் பயனறிய மாட்டாது
சாலக் கனன்றவனைச் சாதிக்கக் – கோலும்
கொடியானை மாய்த்துக் குழவியை முன்காத்த
நெடியானை நன்மனமே நேடு. 100

எப்பொருளுந் தந்தருளு மேந்திழையாள் நின்மார்பிற்
றப்பறவே நிற்கத் தரித்திரன்போல் – ஒப்பற்ற
மாவலிபால் செல்லும் வகையென்கொல் மாயவனே!
மூவடிமண் ணீயிரக்க முன். 101

வைய மளந்தானை வார்கடலின் மேயானைத்
துய்ய வரவிற் றுயில்வானைச் – செய்ய
மலருகந்த மானை மணந்தானை யன்பர்
நலமுகந்த நாதனையே நாடு. 102

பூசுரரை வாட்டும் புவி வேந்தர் மா முடிகள்
ஆசற முன்வீழ அவதரித்து – வீசும்
மழுவாயுதங் கொண்ட மாயவனே யன்றோ
தொழுவார் துயர்க்குத் துணை. 103

சங்கற்ப மற்றுத் தனியே சிறிதிருக்க
எங்கட் கருள விரங்காயோ – செங்கைச்
சிலைவளைத்த சேவகனே சேயிழைக்கா முன்ன
மலைவளைத்த வாரமுதே யன்று. 104

கழல் கொண்டு முன்னங் கடுங்கானஞ் சென்ற
நிழல்மணி வண்ணா நினையே – தழல் வண்ணன்
போற்றிப் புகழுரைப்பப் பொல்லா விரவொழித்தா
யாற்ற வடியேற் கருள். 105

இன்பம் பயக்கு மிருணீங்கு நம் மனத்துத்
துன்பந் தனையொழித்துத் தூய்தாக்கும் – வன் பரல் சேர்
கானந் தனைக் கடந்து காரரக்கர் போரழித்த
வானந்தா னந்த னடி. 106

தந்தை யுயிர் துறக்கத் தாய்மார் தளர்ந்தலற
நைந்து நகர நனிவருந்த – எந்தாய் முன்
மைப்படியு மேனி வருந்த நெடுங்கானம்
எப்படி நீ சென்றா யியம்பு. 107

செம்பொற் சிலை தரித்துச் சேயிழையும் பின்தொடரத்
தம்பிக் கரசளித்துத் தாயின் சொல் – நம்பி முன்
வெங்கானஞ் சென்ற விறலோன் பதமன்றி
எங்காம் புகன் மனமே யின்று. 108

பைம்பொன் முடி துறந்து பாரிழந்து தேவி யொடும்
வம்பு மலரடிகள் வாட்டமுற – நம்பா
கடுங்கானஞ் சென்ற கதையை நினைத்தால்
ஒடுங்காதோ வென்னெஞ்ச மோய்ந்து. 109

வனங்கடந்து வானவர்க்கா வாளரக்கர் மாய்த்த
கனங்கொண்ட மாமேனிக் கண்ணே! – முனங்கொண்ட
தீவினையேன் றுன்பம் சிதறக் கடைக்கணிப்பின்
மேவிடுவ லின்பம் விரைந்து. 110

வைய மிரங்க வனத்து நடையுகந்த
ஐய னடியை யடைந்தக்கால் – துய்ய
துரியநிலை மேவத் துணையாகு முய்ய
வரிய வழியா மது. 111

தம்பி மொழி தவிர்த்துத் தாரத்தின் மென் மொழியை
நம்பி வனத்தி னனியுழன்று – வெம்பிக்
கொடுந்துன்ப மேவிக் குவலயத்தைக் காத்த
அடுஞ்சிலையா யென்னி யளி. 112

நங்கைக் கிடரொழித்து நன் முனிவர் வெந்துயரைப்
பங்கப் பட வொழிக்கும் பண்பினதாம் – தங்கு புகழ்
வண்ணங் கரியன் வளையாழி யங்கையன்
தண்ணந் துளவன் சரண். 113

நின்னடியிற் சேர்ந்த நிமல விபீடணற்குப்
பொன் முடியைச் சூட்டும் புரவலனே! – என்னுடைய
வல் வினையைப் போக்கும் வகை யறியா யென்கொலிது
சொல்லரியாய்! காரணத்தைச் சொல்? 114

வேறு

நெடியானே நின்னை நினைந்துருகி நிற்குங்
கொடியாளை யென்னோ குலைத்தாய் – படி மேல்
துடி நேரிடை யாட்குத் துன்பமுன் செய்தாய்
அடி சார்ந்து வாழ்த லரிது. 115

வாரார்ந்த கொங்கை மடவா ளுவந்துறையும்
தாரார்ந்த மார்பன் றனிமுதலான் – போராரும்
தேரார்ந்த வாளரக்கன் றேயச் சரந்தொட்ட
காரார்ந்த மேனியனைக் காண். 116

வனகரிக்கு முன்னின்றான் வானவர்கள் போற்றுந்
தினகரனை முன்மறைத்த தேவன் – நினையின்
கனகனுரங் கீண்ட கையுகிரா னம்மான்
அனக னடியே யரண். 117

வேறு

விடந்தாங்கு வாளரவின் மேவிக் கிடக்கும்
கடந்தாழு மால்களிற்றைக் கண்டு – மடந்தாங்கு
நன்னெஞ்சே சேரற்கு நாடாது நாரியர்பா
லின்னஞ்செல் கின்றனையே யேன்? 118

காரரக்கர் சேனை களத்தவியக் கார் முகத்து
வார் கணைகள் தொட்ட வரை மார்பா – நேர் முகமாச்
சீறிவரு மிவ்விருளைக் கண்டு சிலைநுதலா
ளூறடையா வண்ண முரை. 119

தின்று கொழுத்துத் திரியுஞ் சிறியோர்பால்
சென்று மடநெஞ்சே சேராதே – குன்றின்
முழையுறைந்த வானரத்தை மொய்ம்புடனே காத்த
மழைமுகிலை நன்னெஞ்சே வாழ்த்து. 120

நாடு துறந்து நகர் துறந்து வானவர்க்காக்
காடு புகுந்த கருங்களிற்றை – வீடு புகல்
வேதங்கள் காணா விழுப்பொருளை நாடுவேற்
கேதங்க ளுண்டோ வினி. 121

செந்திருவி னாயகனைத் தேவர் பெருமானை
மைந்துடைய வில்லை வளைத்தானை – நொந்து
தனையடைந்த தொண்டர் தமையளிக்கு மின்பக்
கனவுருவை நெஞ்சே கருது. 122

மானருகில் நிற்க மறித்துமொரு மானுக்கா
வேனோ வுழன்றா யிறைவனே? – வானமுகில்
மாமழைதா னிற்க மதியாது கானனீர்
போமது போல் நெஞ்சிற் புரிந்து. 123

நெஞ்சங் கனன்று நிமிர்வில்லின் மொய்கணைக
ளஞ்சத் தொடுத்த வரக்கனைமுன் – கஞ்சப்
பிரமன் கணையால் பிரிந்துடலம் வீழ்த்தும்
பரமன் பதமெனக்குப் பற்று. 124

பைம்பொன் முடிசிதறப் பாய்பரியுஞ் சாய்ந்துவிழச்
செம்பொற் சிலைமுறியத் தேரொழிய – வும்பர்
மனமகிழ ராவணனை வாளமருள் வீழ்த்த
கனமுகிலை நெஞ்சே கருது. 125

வம்பவிழுங் கூந்தன் மடமா னுடனாக
வெம்புநெடுங் கான்புகுந்த வேழத்தை – நம்பிக்
கருத்திருந்து கின்றேன் கடுவினைக ளென்னைக்
கருந்திருத்த மாட்டா கறுத்து. 126

மான்பிடித்துத் தாவென்ற மாணிழையின் சொல்விரும்பிக்
கான்பிடித்துச் சென்றோர் கடுங்கணையால் – வான்பிடிக்க
மாரீ சனைக்கொன்ற வள்ளலே யென்மனத்து
ளோரீச னாவா னுவந்து. 127

கும்பமுனி தந்த கொடுமரத்தாற் கோளரக்க
ரும்ப ரடைய வொழித்தருளிச் – செம்பொன்
முடிகவித்து வீடணற்கு மொய்குழலை மீட்ட
வடிகளென் னெஞ்சத் தரண். 128

செங்கட் சிலைதரித்துச் சேண்விளங்கு மாமுகில்போல்
கங்கைக் கழனோவக் கானகத்து – மங்கைக்
கிடரொழிக்கச் சென்ற வியல்பை நினைந்தால்
தொடருமொ வெம்பிறவி சொல். 129

அன்ன மறியா ளணிமலருந் தானணியாள்
கன்னல் மொழியாள் கதியென்னே – முன்ன
மொரு கொடிக்கா வாழி யுயரணையைச் செய்தாய்
வருகொடிக்கு நல்காய் வரம். 130

சிறந்த பெரும்புகழ்சேர் தேவர்க்கா நீச
ரிறந்துபட நூறி யிலங்கை – யறந்திகழும்
வீடணற்குத் தந்த விறலோனே யென்னெஞ்சத்
தீடணைக ணீங்க விரங்கு. 131

முயன்றும் பயனறியேன் மொய்வினையை நீக்க
அயன்றன் விதியறிவா ராரோ? – வயந்தங்கு
நின்மாயை வல்லபத்தை நீக்க வெனக்காமோ
பொன்மானைக் கொன்றாய் புகல். 132

உவந்து மடநல்லா ளுன்புயத்தை மேவச்
சிவந்த விழிகொண்டு செற்றாய் – பவந்தன்னை
நீக்கு நெடியானே நின்னையுமென் னேரிழையாள்
காக்க நினைத்தல் கடன். 133

கடஞ்சென்று கானோவக் கார்முகிலே நங்கை
யிடஞ்சென்று மென்கனிக ளேன்று – தடம்புயத்து
வாலி வலியழித்த வன்றிறலே யென்மனத்தைக்
கோலி யெழுந்த குணம். 134

வெய்ய வனங்கடந்து வேத முதல்வன்சொற்
செய்ய விலங்கையினிற் சென்றருளித் – துய்ய
விளங்கிழையைக் கண்டு விதமுரைத்த தூதை
யுளங்குளிர நெஞ்சே வுரை. 135

என்றின் குலத்துதித்த எம்மா னிலங்கருவிக்
குன்றின் பதிவிருந்த கொற்றவனைத் – துன்று
மருங்கலைசேர் மாருதியா லன்புருக நட்டாய்
நெருங்கென் மனத்துறைய நேர். 136

மங்கைக் கிடர்கடிந்த மாய னடிக்கமலம்
தங்கத் தரியாத் தலையெதற்காம் – செங்கைச்
சிலைதரித்து வெங்கானஞ் சென்றரக்கர் மாளக்
குலவுபுகழ் மேவக் குறித்து. 137

சார்ந்துவந்து நல்லுருவந் தாய்போலத் தாங்கிக்
கூர்ந்த நடுவிரவிற் கோறற்கா – வாய்ந்த
கடுவிடத்தைப் பூசிக் கனதனத்தைத் தந்தாள்
மடிவடையச் செய்தானை வாழ்த்து. 138

உழல்மனமே யுத்தமனை யுன்னித் தொழுது
விழன்பிறவி நீக்க விரைவாய் – குழலூதி
ஆநிரையை மேய்த்த வடலாழி யண்ணலே
தீநிரய நீக்குந் தெளி. 139

ஓரா துழல்நெஞ்சே யுத்தமனை யெக்காலும்
நேராக நின்று நினைகுவாய் – சீராயன்
தன்னடியைப் போற்றுந் தகையினார்க் கன்றோத
னின்னுலகை யாக்கு மியைந்து. 140

பாழிப் பெரும்புயத்துப் பாண்டவர்க்கா வன்றமரி
லாழிப் படையெடுத்த வம்மானைத் – தாழிக்கு
வீடருளுந் தாளானை வெந்நரகஞ் சேராது
நீடருள நெஞ்சே நினை. 141

நெஞ்சி னிருணீங்கி நேயம் பெறநின்பொற்
கஞ்சத் திருவடியைக் காட்டுதற்குத் – துஞ்சும்
மழலைச் சிறுகுழவி மாமறையோற் கீந்த
குழலைத் தருவாயாய் கூறு. 142

சங்காழி யங்கைத் தனிமுதலே சார்ந்தவர்க்கு
மங்காத வின்ப மகிழ்ந்தீவாய் – பொங்காத
பாண்டவர்க்கு வாழ்வளித்த பைந்துளவ மாமுடியாய்
யீண்டெமக்கு நல்கா யியைந்து. 143

நெஞ்சிற் கறைகொண்ட நீசர்தங் கூட்டத்துக்
கொஞ்சிக் குலவிநீ கூடாதே – பஞ்சவர்க்குப்
பாரளித்த வையன் பதமலரை யெஞ்ஞான்றும்
நேரகத்து நிற்க நினை. 144

கஞ்சத் துறையுங் கனங்குழையா டன்னொடுமென்
நெஞ்சத் துறைய நெடுமாலே – வஞ்சச்
சகடுதைத்த தாண்மலரோய் தண்டுளவத் தாரோய்
பகடொழித்த பண்பாளா பார். 145

நினைப்பில்லா மாக்க ணினையகிலே னெஞ்சிற்
றினைப்பொழுது நீக்கேன் சிறியேன் – பனைத்தாள்
மதகரிக்கு முன்னின்ற மாயவனை யெங்க
ளிதகரனை யெப்பொழுது மேன்று. 146

அடியாற் படியளக்கு மாயிழைக்கா முன்னம்
விடையே ழடர்த்தருளும் வேய்த்தோள் – மடமானைத்
தண்டுளவ மார்பிற் றரிக்குங் கழனினைக்கும்
தொண்டர்தமை நீக்குந் துயர். 147

இனியுண்டோ நன்னெஞ்சே யெம்பெருமா னம்மைத்
துனிநீக்கிக் காக்குந் துணைவன் – கனவிளவின்
காயுதிர்த்துப் பேயின் கடுவிடத்தை யுண்டருளும்
சேயுதிக்கச் சென்மம் செறிந்து. 148

எந்தா யுனதடியை யேத்தித் தொழுவேனை
நந்தா தளிக்க நயவாயோ – பைந்தா
ரருச்சுனற்குத் தேரூர்ந்த வம்மானே நாகத்
தருச்செறியுங் கைத்தலத்தாய் தந்து. 149

தாட்கமலம் நெஞ்சிற் றரிக்கத் தமியேனை
யாட்கொள்ள வாராயோ வண்ணலே – பூட்கைப்
பொருமதத்து வேழத்தைப் போர்விசயன் றன்னால்
செருவொழித்த சேவகனே செப்பு. 150

பெய்வளையார் மாயப் பிணக்கிற பிணிப்புற்றே
யுய்வகையை யோரா துழல்நெஞ்சே – மைவண்ணத்
தாயர் கொழுந்தை யருமறையி னுட்பொருளைத்
தூய வமுதைத் தொழு. 151

பாதம் சிவப்பப் பழுதற்ற பாண்டவர்க்கா
வேத மறியா விழிப்பொருளே – தூதனாய்ச்
சென்ற திறத்தைச் சிறிது நினைத்தக்கால்
குன்றாதோ வெவ்வினையின் கோள். 152

தேர்த்தட்டின் முன்னின்று செம்பொருளை நீயுரைக்கப்
பார்த்தன் தெளிந்த பயனென்கொல் – பேர்த்தவனும்
பிள்ளை யுயிர்துறக்கப் பேதை கலங்குவதேன்
உள்ளற் கரியா யுரை. 153

வஞ்சினமுங் குன்ற வளையாழி கைக்கொண்டு
வெஞ்சினத்தால் வீடுமனை வீட்டுவான் – கஞ்சத்
திருவடிகள் நோவத் திருத்தேர் துறந்த
கருமணியை யென் கண்ணே காண். 154

பாம்பணையின் மேவிப் படுகடலுட் கண்டுயிலும்
தேம்புணர்ந்த தண்டுளவத் தேவர்பிரான் – வாம்பரிமாத்
தேர்நின்று பார்த்தன் தெளியத் தெரிந்துரைத்த
நேர்பொருளை நெஞ்சகமே நேடு. 155

அளியுறையு மென்கூந்த லாய்ச்சியர்முன் வெண்ணெய்க்
கிளிவரமுன் கூத்துகந்த வெந்தாய் – நளினமலர்
வாள்விழியா ளென்றன் மடமான் றுயரொழித்து
நீள்விழியால் காக்க நினை. 156

பின்னை திறத்துப் பெருவிடையேழ் செற்றுகந்த
மன்னை மறந்தக்கால் வாராதோ – கன்மப்
பெரும்பிறவி வீழ்ந்து பிணிபட் டுழலும்
நெருங்குதுயர் நெஞ்ச நிறைந்து. 157

பண்ணுலவு மென்மொழியும் பயங்கயத்து நீள்விழியும்
மண்ணுலவு வாயும் மணிவயிறும் – கண்ணிலவ
வாராயோ மாமுகிலே மாமறையோன் றுன்பொழித்த
காராயோ என்நின் கருத்து. 158

பிணிப்புண் டுரலிற் பிறழும் பெருமானை
மணிக்கொண்டல் மேனி மணியைத் – தணிப்புண்ட
நெஞ்சத்து மேவ நினைந்தக்கால் நீங்காதோ
வஞ்சக் கடுநோய் வறண்டு. 159

சுரிசங்கங் கைக்கொண்டு தொல்லரசர் மாளப்
பரிசுமந்த தேரேறிப் பார்த்தன் – வரிசிலையான்
வானுலகை மேவும் வகைபணித்த மாயன்றன்
தேனுலவு தாமரைத்தாள் சேர். 160

ஆயர் கலங்க வருங்கன் மழைதடுத்த
தூய வமுதைத் துரியத்தைத் – தீய
மனமுடையோர் காணா மணியை நினையின்
வினையொழிவை நெஞ்சே விரை. 161

விளவின் கனியுகுத்து வேய்புரையு மென்றோ
ளிளமயிலை யொக்கு மெழிலா – ருளமுருக
மென்றுகிலை முன்கவர்ந்த வேதப் பெரும்பொருளே
வன்றுயரை வாட்டு மருந்து. 162

சேராத கஞ்சன் றிறல்விளங்கு மென்குஞ்சி
யீரா வழித்தவனை யெம்மானைத் – தீராத
மெய்யன்பு கொண்டு விரைந்து வணங்குதியேல்
பொய்யொழியும் நெஞ்சே புகல். 163

பேச்சுக் கடங்காப் பெரும்புகழான் பெய்வளையா
ரேச்சுக்குகந்த வெளியன் காண் – நீச்சுக்
கடங்காத மாமடுவி லாரழனா கத்தின்
படங்காண வாடும் பரன். 164

அறியாத வாண னரும்புயங்கள் வீழக்
குறியாக வாழிதனைக் கொண்டான் – வெறியாரும்
தண்டுளவ மின்றித் தளிரியலு முய்யுமோ
வண்டுறையு மென்குழலீர் வாய்ந்து. 165

நெஞ்சந் துடிக்க நிலைதளரு மேந்திழையைக்
கஞ்சத் திருக்கரத்தால் காவாயோ – வஞ்ச
விளவுருவங் கொண்ட விறலோனை மாய்த்த
களவுருவா! வென்னோ? கருத்து. 166

நெஞ்ச மறியா நிமலப் பெரும்பதவி
எஞ்சா தடைய வினிவிரும்பின் – நெஞ்சே
உறிமருவும் வெண்ணெயினை யுண்டுகந்த வாயன்
வெறிமலர்ச்செஞ் சேவடியை வேண்டு. 167

கேள்விக் கரைகடந்த கேடில் விழுப்பொருளைக்
கோள்விக் கினமொழிக்கும் கோவலனை – வேள்விக்கு
நாயகனை நான்மறைகள் நாடுந் தனிமுதலைத்
தூயகமே நிற்கத் துணி. 168

பேசாத பேச்செல்லாம் பேசும் சிசுபாலன்
காசார் மணிமுடியைக் காசினியில் – கூசாது
வீழப் படைதொட்ட வேதியனை யேத்தாது
வாழப் படுமோ வழுத்து. 169

கொங்குறையு மென்கூந்தற் கோவியர்தம் வார்துகிலைப்
பங்கமுறக் கொண்டகன்ற பான்மையனே! – நங்கையிவள்
செங்கை வளையுந் திகழ்கின்ற வாழியையு
மங்ஙனநீ கொள்ள லழகு. 170

சேயிழையை மார்பிற் செறித்தானைச் செங்கரத்துப்
பாயொளிசே ராழி பரித்தானைத் – தாயுருவின்
வெங்கட் கடும்பேய் விடமுண்ட வித்தகனைக்
கங்கைக் கழலானைக் காண். 171

ஆயர் நெடுங்கயிற்றி னாப்புண்டு மாவுரலில்
தூய கரிபோலத் தோற்றுமால் – சேயுருவில்
நீற்றை யணிந்தானும் நீண்மலரின் மேலானும்
போற்றிப் புனைந்த பொருள். 172

படநாகப் பாயலான் பைந்துழாய் மாயன்
விடநாக வெங்கொடியோன் வீடக் – கடனாத்
தனஞ்சயற்குத் தேரூர்ந்த தாமோதரன் காண்
மனஞ்சயிக்க வல்ல மருந்து. 173

மருந்தின் பொருட்டா மணியாழி முன்னம்
திருந்தக் கடைந்த திறலோன் – விருந்தாக
வில்விதுரன் புன்குடிலில் மேவு மெளியன்காண்
வல்விரையு மென்மனத்து வந்து. 174

பண்தங்கு மின்சொற் பவளத் திருச்செவ்வாய்
மண்தங்கக் கண்டு மதிமயங்கப் – பெண்கொடிக்கு
நீளுலகந் தன்வாயிற் காட்டு நிமலோன்றன்
தாளுலவு மென்மனத்துத் தான். 175

வந்தெதிர்ந்த மல்லர் வலியழித்து வன்மருப்புச்
சிந்துரத்தை வானிற் செலுத்தினான் – சந்தக்
கழல்பணிந்து வாழ்த்திக் கருத்தில் நிறுத்த
அழல்வினையு நீங்கு மயர்ந்து. 176

உறிகமழும் வெண்ணெ யுவந்துண்ட வாயன்
வெறிமலர்த்தாள் மேவ விரைமின் – நெறியறியாக்
கன்மக் கடலிற் கவிழ்ந்துழலும் மாந்தர்காள்
சன்மக் கழிவுறுவீர் சார்ந்து. 177

நீலத் திருவுருவங் கொண்டு நிறைநெஞ்சில்
கோலத் துடனே குளிர்ந்திருக்க – மேலைக்
கொடுவினைநோய் நீங்கிக் குளிர வுடல
மடுகளிற்றா யம்மா னருள். 178

வஞ்சச் சகடுதைத்த வள்ளா லுனதடியென்
நெஞ்சத் திருத்த நினையாயோ – கஞ்சத்
திருப்புகந்த மான்சே ரெழின் மார்பா வென்னைக்
கருப்புகுதா வண்ணங் கணித்து. 179

நக்க னறியான் நளினத்தான் தானறியான்
புக்குழலு நெஞ்சர் புகலுவரோ – தொக்கமலர்
வம்பணியு மென்குழலார் வைத்ததயி ருண்டருளும்
செம்பவள வாயான் திறம். 180

மல்லர் மடிய மதமா மருப்பொடிய
வில்விழவு செய்த விறல்மாமன் – தொல்லைமுடி
போய்வீழ முன்னம் பொருதானை வெவ்வினையின்
நோய்நீங்க நெஞ்சே நுவல். 181

புன்முறுவல் கொண்டு பொருகயற்க ணாய்ச்சியரை
வின் மருவுங் கையால் விழைந்தணைந்தாய் – அன்மருவுங்
கூந்தன் மடமானைக் கூடுதற்கு மெல்லணையாப்
பாந்தண் மிசைக்கிடந்தாய் பார். 182

ஆயர் மகளி ரருந்துகிலை முன்கவர்ந்த
தூயன் மலரடியைத் துன்னாது – மாய
மடவார் வலையுள் மயங்கிக் கிடக்கும்
விடரின் பிறப்பன்றோ வீண். 183

பாந்தட் கொடியானைப் பாரதத்து முன்கொன்று
காந்தட் டிருக்கரத்துக் காரிகைக்குக் – கூந்தல்
முடித்தருளும் ஞான முதலே யடியேற்
கடித்துணையை நல்க வருள். 184

சொல்லற கரியானைத் தோமில் குணத்தானை
மல்லர்க் கரியான மாமணியைப் – புல்லற்குப்
போதுமோ சொல்லீர் புனையுழையீ ரல்லாக்கால்
சாதுமோ சொல்லீர் தளர்ந்து. 185

கொங்கைக் குவடு குழையத் தழீஇக்கொண்
டங்கங் குளிர வணையேனோ? – துங்க
விடையானும் நான்முகனும் மேவரிய மாயன்
நெடுமேனி யின்பம் நிறைந்து. 186

மனத்துறையு மாலை மதியாது தீயோ
ரினத்துறைய நெஞ்சே யெழாதே – தனத்துறையும்
மாவிடத்தை யுண்டு மருதிடைபோய் நின்றானை
நாவிடத்து நிற்க நவில். 187

செய்ய திருவடியென் சென்னிக் கணியேனே
லுய்ய வழிபிறிது முண்டுகொலோ – பைய
விடவரவ மேனடித்த வேத முதல்வ
னிடமுறைய வென்மனத்து ளின்று. 188

குடையா மலையெடுத்துக் கோநிரையைக் காத்த
வடலாயா! வுன்னை யடைந்தேன் – தடையாரு
மைம்புலனைச் செற்றிட் டறிவை யுனதடிக்கே
யின்புறநீ நிற்க விரங்கு. 189

ஆய ரிளங்கொழுந்தை யம்மானை யச்சுதனைத்
தூயர் மனத்துறையுந் தோன்றலை – மாயப்
பிறப்பொழிக்கும் பெம்மானைப் பேராழி யானை
மறப்பொழிய நெஞ்சே வழுத்து. 190

பைந்துளவத் தாரானைப் பாவையர்தம் மெய்தோயும்
மந்தரநேர் திண்புயத்து மாயோனைச் – செந்திருவின்
நாயகனை நான்மறையி னற்கனியை வெம்பிறவித்
தீயகல நெஞ்சகமே தேர். 191

வெய்ய படையொழித்து வேண்டாதார் மாண்டொழியத்
துய்ய வளைமுழக்குந் தூயோனே – நையும்
துடியிடையாள் சோர்வகற்றித் தொல்லருளாற் காக்கத்
தடையுண்டோ சொல்லாய்நீ சற்று. 192

தீர்த்தம் பலமூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
சீர்த்த மதியீர் சிறப்பில்லை – பார்த்தனுக்குக்
குற்றேவல் செய்து குருகுலத்தோர் வானேறப்
பொற்றேரி னின்றான் புகல். 193

விடையேழும் வென்ற விறலோய்! விளங்கு
குடையாகக் குன்றொன்றைக் கொண்டாய்! – கொடை
மாவலிபால் மூவடியா மண்ணுலகை முன்னளந்த
சேவடியென் சென்னிமிசைச் சேர். 194

அண்டர் துயர்நீக்கு மன்பரகத் தேநிற்கும்
பண்டகலி சாபம் பறிக்குமால் – கொண்டல்போல்
தெண்டிரையிற் கண்வளருந் தேவர்பிரான் செங்கமலத்
தண்டுளவத் திண்கழலே தான். 195

தண்டுளவத் தானைத் தனித்து வனங்கடந்த
புண்டரிக பாதப் புரவலனை – வண்டுவரை
மன்னவனைத் தன்னடியார் மாமனத்து ளார்வத்தாற்
சொன்னபடி செய்தவனைச் சொல். 196

கோலத் திருவுருவங் கொண்டு குரைகடல்சூழ்
ஞாலத்தை முன்னொருகால் நல்கினையே! – யேலக்
கருங்குழலாள் மெய்யணைந்து காவாயோ வேயி
னிருங்குழலா யெந்தா யியம்பு. 197

கழலாற் படியளந்த காகுத்தா! வேயின்
குழலாற் குளிர் நிரையைக் கொண்டா – யழலாரும்
வேற்கண்ணாள் வெந்துயரம் வீட்டாயோ பாம்பணையிற்
பாற்கடலிற் பள்ளிகொள்வாய் பார். 198

நாரா யணனே நமவென் றுனையடைந்தே
னாராயி னற்கதிநீ யாதலினாற் – றீராத
என்வினைதா னீங்க வெழிற்கமல மெல்லடியென்
சென்னிமிசை வைப்பாய் சிறந்து. 199

பொற்குன்றின் மீது பொலியும் கருமுகில்போல்
நற்கருடன் மேல்விளங்கும் நாரணா – யெற்கு
னெழிலுருவங் காண விரங்காயோ யெய்க்கும்
பொழுதினிலென் முன்னே புரிந்து. 200

திருமால் வெண்பா முற்றிற்று

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ராகவாசாரியர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள்–குறை ஒன்றும் இல்லை கோவிந்தா –

January 6, 2022

“பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்” என்கிறது கருடபுராணம்

பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள் “நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே”

“வேத மூல ப்ரமாணாத்

பகவான் கட்டிப் பொன் போலே.. அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே”

“வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம் ”

அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்”

“திரௌபதிக்கு ஆபத்திலே ஆடை சுரந்தது கோவிந்தா நாமமிறே”

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

“பத்மநாபோ, மரப்பிரபு ”.
“பத்மநாபோ, அமரப்பிரபு”
ஜ்யோதீம்ஷி விஷ்ணு:, புவனானி விஷ்ணு:, வநாணி விஷ்ணு: என்று பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா?
(ஜ்யோதீம்ஷி = ஒளி, புவனானி = உலகங்கள், வனானி = காடுகள்)

ஸ்ரீ க்ருஷ்ணாய நம: என்பதற்கு பதில் ஸ்ரீ திருஷ்ணாய நம:
ஸ்ரீ த்ருஷ்ணாய என்றால் ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்.
ஸ்ரீ (மகாலட்சுமி) திருஷ்ணை (அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும் என்றார்.

துயிலெழும்போது “ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி” என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.
“கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன”
“கேசவனைப் பாடவும், நீ கேட்டே கிடத்தியோ, தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

அவன் சொன்னது கீதை – கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
1. மகாபாரத சாரம்:
2. மகரிஷிகளாலே நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:
3. பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:
வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள்.
4. பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:
5. நோய் தீர்க்க வல்லது:நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம்
வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது. சர்வ சம்பத்தும் வந்து சேரும்.
அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.
6. கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:

திருஷ்ட பலம்
அதிருஷ்ட பலம்
திருஷ்டாதிருஷ்ட பலம்

ஜாமி என்றால் நல்ல ஸ்த்ரீ என்று அர்த்தம். அஜாமி என்றால் அதற்கு நேர் எதிரானவர்!
அத்தகைய ஸ்த்ரீயின் சேர்க்கையுடையவனாக இருந்தான் அஜாமிளன்.
“நாராயணா”என்று அவன் தன் குழந்தையைத் தான் கூப்பிட்டான்
அஜாமிளன் சரித்திரத்தைச் சொன்னது திருஷ்ட பலம் பற்றித் தெரிஞ்சுக்கறதுக்காக.

அதிருஷ்ட பலம். திரௌபதி சரணாகதி அடைந்த பொது அவளுக்குப் புடவை சுரந்தது அதிருஷ்ட பலத்துக்கு உதாரணம்.

திருஷ்டா திருஷ்டா பலனுக்கு உதாரணம் கஜேந்திர மோக்ஷம்.

காயத்ரி மந்திரம் எல்ல மந்திரங்களுக்கும் தாய்.
கருணை வடிவான காயத்ரியின் முதல் எட்டு அக்ஷரத்தை விளக்க வந்தது
விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பாதம்.
அடுத்த எட்டு காயத்ரி அக்ஷரங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தின் இரண்டாவது சுலோகத்திலே விளக்கம் பெறுகின்றன.
மூன்றாவது எட்டை விளக்க வந்தது சகஸ்ர நாமத்தின் மூன்றாவது சுலோகம்.
இந்த மூன்று சுலோகங்களுக்கு சர்வ மந்திரங்களுக்கும் சாரமான காயத்ரியை எடுத்துச் சொல்லுவதால் அவற்றுக்குச் சிறப்பு அதிகம்.
இந்த முதல் மூன்று சுலோகங்களுக்குள்ளே ஓர் அவதாரம் பேசப்படுகிறது.

அந்த காயத்ரியை தேவர்கள் எப்படித் துதித்தார்கள் என்றால், “விச்வமஸி, விச்வாயு” என்று ஆரம்பித்துத் துதித்தார்கள்.
அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமாக இருக்கிறது.
விச்வம் என்கிற சப்தத்துக்குப் பூரணத்துவம் என்றும் ஒரு பொருள் உண்டு.
பகவான் எதிலும் குறைவில்லாதவன் என்று அர்த்தம். அதனால்தான் பூரணன், கொள்ளக் குறைவிலன்
கொள்ளக் கொள்ளக் குறைவிலன். கொள்ளமாளா இன்பவெள்ளம் அவன்

பிரஹலாதனுக்கும் ஹிரண்ய கசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம்,
நரசிம்ஹ அவதாரத்தை மின்சக்தி என்கிறது. பிரஹலாதன் அஸ்தி (உண்டு) என்று சொல்கிறான்.
ஹிரண்ய கசிபு நேதி (இல்லை) என்கிறான் அஸ்தி என்கிற பாஸிட்டிவ் தத்துவனும் நேதி என்கிற நெகடிவ்வும்
மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம். ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம்

நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு.
ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும்
சஹஸ்ர நாம தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ராமா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ர வர்க்கத்திலே ரா என்பது இரண்டாவது எழுத்து.
ம என்பது ஐந்தாவது எழுத்து (வடமொழியின் ப ப ப ப ப ம வரிசை)
இரண்டை ஐந்தால் பெருக்கினால் கிடைப்பது பத்து.
ஆக ராம என்ற ஒரு சொல்லுக்குரிய எண் 10,
ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x 10x 10 அதாவது ஆயிரம்.
ஆக, ராம, ராம, ராம என்று மும்முறை சொல்வது ஆயிரம் திருநாமங்களுக்கு துல்யமானதுதானே.

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

பரமாத்மாதான் பரமார்த்தம்.

அவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான்
புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.
தத்வம் அஸி என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் விச்வம் என்று சொல்லணும்

ஆடு மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை பகவான்.
ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலே சுதந்தரத்தைக் கொடுக்கிறான்.
நல்லது இது – கெட்டது இதுன்னு காட்டிக் கொடுத்து அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான்.
“மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா? என்று சோதித்துப் பார்ப்பது அவனுடைய லீலை.

விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், ‘ஜகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்.
அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான். விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே,
ஆனதனாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்’.
இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.
சுவாபாவிகமாக – அதாவது இயற்கையிலேயே எண்ணிறந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே
பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.

விஷ்ணுதான் யக்ஜன் – யக்ஜ சாதனன், யக்ஜரூபி, யக்ஜபுருஷன்

இல்லை என்கிற சொல்லுக்கு நான்கு விதமான விளக்கம் உண்டு
பிராக பாவம்-பிரத்வம்ஸாபாவம் -அன்யோந்ய பாவம்-அத்யந்தா பாவம்-

நமக்குள்ளே எம்பெருமான் இருக்கிறான் – புரி சயநாத் புருஷ:-புருஷ சப்தத்துக்கு நான்கு பொருள்
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே பூதாத்மான்னு ஒரு நாமம பவித்ரமான ஆத்மா, பாவனமான ஆத்மா–
பஹு தானத் புருஷ: கேட்கும் வரமெல்லாம் கொடுப்பான்.
புராணாத்வாத் புருஷ: புராணாம் என்றால் ரொம்ப பழமையானவன்
பூர்ணாத்வாத் புருஷ:

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.
அவற்றில் முதல் பத்து, “அவன் திருநாமத்தைச் சொல்லு” என்று உணர்த்துகின்றன.
இரண்டாவது பத்து, “உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு” என்கிற பாசுரங்கள்.
மூன்றாவது பத்தோ “அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு” என்று சொல்கின்றன

திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது.
வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம்.
ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.
வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான
எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா?
ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள்

ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.
“அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த” என்றும்
“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று மறுபடியும்

ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்று ஆச்ரயித்து,
அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.

காஞ்சிபுரம் அருகே திருவேளுக்கை என்கிற ஷேத்ரம்
பகவான் தானாகவே, இஷ்டமாய் அமர்ந்திருக்கும் ஷேத்ரம். அதனால் அதற்கு காமாளிகை என்றொரு பெயர்
தபன இந்து அக்னி நயன: தாபனீய ரஹஸ்யானாம் சார:
தாபனீய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சமஸ்த ரகசியங்களின் சாரமாய் இருக்கக் கூடியவன் காமாஸிகா ஹரி:
பகவானுக்கு ஒரு பக்கம் வலது திருநேத்திரம் – சூரியனே (தபன) வலது திருநேத்ரமாக அமைந்துள்ளது.
இடது திருநேத்திரம் சந்திரன் (இந்து). இடையிலே ஒரு நேத்திரம் – அது அக்னி.
எல்லோருக்கும் நேத்திரமாய் இருக்கக் கூடிய பரமாத்மாவுக்கு, இந்த மூன்று தேவதைகள் நேத்திரமாய் இருக்கிறார்கள்.

கிருஷ்ண-யஜுர்வேத தைத்ரீய சம்ஹிதை என்று அந்த சம்ஹிதைக்குப் பெயர்.
(தித்திரா-என்கிற புறாவின் பெயரிலிருந்து வந்தது தைத்ரீய).
சூரியன் உபதேசம் பண்ணியதுதான் “சுக்ல யஜூர்வேதம்”.
சூரியன் ஆரோக்கியத்தை மாத்திரம் கொடுப்பவன் அல்ல-சிறந்த ஞானத்தையும் கொடுப்பவன்.
வேதத்தையே கொடுக்கக் கூடியவன்.
சத்யபாமாவினுடைய தந்தை சத்ராஜித். சூரியனை அவன் உபாசனை பண்ணி-ச்யமந்தக மணி பெற்றான்
பஞ்ச பாண்டவர்களுக்கு சூரியன் அஷ்ய பாத்திரம் கொடுக்க-
திருநேத்திரத்தினால் நம்மைக் கடாஷிக்கும்போது ஞானமும், ஐச்வர்யமும், ஆரோக்யமும், அன்னமும் நமக்கு சங்கல்பிக்கின்றன.
எனவேதான் நரசிம்ஹ தியானத்துக்குள்ளே சூரியனும் அடங்கிவிடுகிறான்.

ம்ருத்யு ம்ருத்யவே ஸ்வாஹா என்றும் நரசிம்ஹனை ஆராதிக்கிறோம்.
விச்வயோனி: விச்வாத்மா: என்றும் அவனை அழைக்கிறோம்.
நரசிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் என்று ஒன்று உண்டு. முப்பத்திரண்டு அஷ்ரங்கள்.
ஒவ்வொரு அஷ்ரமும் ஒரு பிரும்ம வித்தையை நமக்கு உபதேசம் பண்ணக்கூடியது.
ஆகவே 32 பிரும்ம வித்தைகளாலும் ஆராதிக்கப்படுகிறவர் நரசிம்ஹர் என்று கொள்ளலாம்.
நரசிம்ஹனைப் பார்த்து ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ணிவிட்டால்
எல்லா பிரும்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.

“அடித்த கை – பிடித்த பெருமாள்” என்று பெயர் அவனுக்கு! “எங்கடா”? என்று அடித்துக் கூப்பிட்டால்,
“இதோ” என்று வந்து நம் கையைப் பிடித்துக் கொள்வான். வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா!
ஹிரண்ய சம்ஹாரத்துக்காக ஏற்பட்டது அல்ல இந்த அவதாரம்.
பிரஹலாதனை காப்பதற்காக எற்பட்டதா இந்த அவதாரம் என்றால் அதுவும் இல்லை.
அக்கினியில் தூக்கிப்போடும்போதும், மலையில் இருந்து உருட்டும் போதும், சமுத்திரத்தில் எறிந்த போதும்,
யானையைக் கொண்டு இடறச் செய்த போதும், விஷப் பாம்புகளிடையே விடப்பட்ட போதும் பிரஹலாதனை யார் காப்பாற்றினார்கள்?
அப்போதெல்லாம் அவதரிக்காத நரசிம்ஹன், பிரஹலாதனின் வார்த்தையைக் காப்பாற்றத்தான் அவதரிக்கிறான்!
“எங்குமுளன் கண்ணன், அவன் இல்லாத இடம் கிடையாது” என்று பிரஹலாதன் சொன்னபோது
அதை உண்மையாக்க பரமாத்மா அவசரத் திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்தான்!
பிரஹலாதனின் வாக்கை மட்டுமின்றி பிரும்மாவின் வாக்கைக் காப்பதற்காகவும் எடுக்கப்பட்டது நரசிம்ஹ அவதாரம்.
யோசித்து எடுத்த ராமாவதாரம் போல் அன்றி, தேவதைகளின் பிரார்த்தனைகளுக்கிரங்கி தோன்றிய கிருஷ்ணாவதாரம் போல் அன்றி,
நினைத்த மாத்திரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
அவசரத் திருக்கோலம் என்றாலும் அதுதான் மிகவும் அழகான அவதாரமாக அமைந்திருக்கிறது!

கிருஷ்ணாவதாரத்துக்காகவே எழுந்த பாகவத புராணத்திலே, “அற்புதமான அவதாரம்” என்று
கிருஷ்ணரைச் சொல்கிறார் வியாசர்.
ஆனால் அவரே நரசிம்ஹனைச் சொல்கிறபோது “அதியத்புத அவதாரம்” என்று விளக்குகிறார்!

ருக்மிணி பிராட்டி, கண்ணனுக்கு ஓலை எழுதுகிறாள். அதிலே ஏழு இடங்களில் பகவானை அழைக்கிறாள்.
ஓரிடத்திலே கூட “கிருஷ்ணா” என்று அவனைக் கூப்பிடவில்லை.
பொய்யில்லாத பெருமான் யாரென்றால் நரசிம்ஹன்தான்! அழைத்தவுடனே வந்து ரக்ஷிக்கக் கூடியவன்.
எனவே ருக்மிணியின் இதயம் கவர்ந்த அவதாரமாகிறது இந்த அவதாரம்

ராமாவதாரத்திலேயும் மாரீசன் ராமனை “நரசிம்ஹா” என்று அழைக்கிறான்.
ஆஞ்சநேயரும் இலங்கையிலே சீதா தேவியிடம் “அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என் முதுகிலே ராமன் வருவான்.
நரசிம்ஹனைப் போல வருவான்” என்கிறார்.
ராமாவதாரத்திலே எங்கு தொட்டாலும் இப்படி நரசிம்ஹ பலம் தெரிகிறது.

பத்மாவதி கல்யாணத்திலே ஒரு காட்சி. தாயார் மணவறையிலே மணக்கோலத்திலே அமர்ந்திருக்கிறார்.
எல்லா உணவு வகைகளும் தயாராகி நிரம்பியிருக்கிறது. ரிஷிகள், உணவு கொள்ளக் காத்திருக்கிறார்கள்.
உணவை யாருக்கு நிவேதனம் செய்துவிட்டுப் பரிமாறுவது எழுகிறது.
பகவானிடமே கேட்கிறார்கள். “அஹோபில ஷேத்திரத்திலே உள்ள நரசிம்ஹனுக்கு நிவேதனம் செய்து
உணவு விநியோகிக்கப்படட்டும்” என்று சொல்கிறார் ஸ்ரீநிவாஸபெருமாள்.
அதனால்தான் ஸ்ரீநிவாஸர் நரசிம்ஹருக்குக் கைகூப்பி வணங்குவதை இன்னமும் அஹோபில ஷேத்திரத்திலே பார்க்கலாம்
ஸ்ரீ ராமனாலும், ஸ்ரீநிவாஸபெருமாளினாலும் வணங்கப்பட்டவர் என்பதாலே
நரசிம்ஹனை பெரிய பெரிய பெருமாள் என்று அழைக்கிறோம்.

“அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவன்” என்கிறார்.
நினைத்த இடத்தில் நினைத்த கணத்தில் தோன்றியவனின் காருண்யத்தைச் சொல்கிறார்.
“என் சிங்கப் பிரான்” என்று அவனை அழைக்கிறார். அந்தப் பாசுரத்தை பிறர் சொல்லும்போது,
அனைவருமே அவரவர் நரசிம்ஹனை அபிமானிக்கும்படியாகச் செய்து விட்டார் நம்மாழ்வார்.

தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா”? என்று கேட்டார் பராசர பட்டர்.
தூக்கம் என்பதை நமக்கு விதித்ததே இந்தப் பேருண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.
அவன் சர்வாந்தர்யாமி என்பதை உணர்த்துவதற்குத்தான்!

————-

நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்
ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.
மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?அதனால் தான்..
ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்து இருக்கிறாள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில்
அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.
மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.
1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட
எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது.
இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .
இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று
நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்

ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்டது திவ்ய சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகம்.
–
1.மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2.ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3.வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4.ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5.இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6.யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7.ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
8.தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே!

தமிழாக்கம்:
1.நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2.சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே;
3.அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே;
4.எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே;
5.இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே;
6.எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே;
7.நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை;
8.அதனால், நரசிம்மனே! உம்மைச் சரணடைகின்றேன்!

———

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீட்சணதம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்மம் பீக்ஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப சமுத்பவம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!

லஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ஆந்த்ரமாலாதரம் சங்கசக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ஸ்மரணாத் சர்வபாபக்ணம் கத்ரூஜவிஷநாசனம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
சிம்ஹநாதேநமஹதா திக் தந்தி பயநாசனம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீ சம் தைத்தேச்வரவிதாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
க்ரூரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
வேத வேதாந்த யஞ்ஞேசம் ப்ரம்மருத்ராதி வந்திதம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ய இதம் படதேந்நித்யம் ருணவிமோசன சங்கீதம் அந்ருநோஜாயதே சத்யோ தனம் சீக்ரமவாப்னுயாத்!

(ருண விமோசன ந்ருஸிம்ம ஸ்துதி பாராயணம் செய்வோருக்கு சகல கஷ்டம் நிவர்த்தியாகி வாழ்வில் வளம் சேரும்.)

———-

ஸ்ரீமத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் !–ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரம்

திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர
அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே,
கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா!
வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே,
என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

——–

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.

———

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிய ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்

1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
பாதக தவானல பதத்ரிவர கேதோ
பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
பங்க நவகுங்கும விபங்கில மஹோர
பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ மஹாத்மன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பண்டரிபுரம்–ஸ்ரீ பாண்டுரெங்கன் பாடல்கள் —

January 6, 2022

பாரத பூமியெங்கும் முழுமுதற் கடவுள் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோயில்களில் வழிபடப்படுகிறார்.
அவற்றில் சில கோயில்களும் விக்ரஹங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர், திருப்பதியில் பாலாஜி, குருவாயூரில் குருவாயூரப்பன், உடுப்பியில் கிருஷ்ணர்,
துவாரகையில் துவாரகாதீஷர் என்று இருப்பதைப் போல,
மஹாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ விட்டலராக வீற்றுள்ளார்.
அவர் தமது பக்தர்களால் பாண்டுரங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

பண்டரிபுரம் மும்பைக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிலரால் பூ-வைகுண்டம் (பூலோகத்தில் உள்ள வைகுண்டம்) என்றும்,
சிலரால் தக்ஷிண துவாரகை (தென்னிந்தியாவின் துவாரகை) என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம்
பீமா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
இந்த நதி பண்டரிபுரத்தை அடையும்போது பிறைநிலை போன்று தோற்றமளிப்பதால்,
இங்கே சந்திரபாகா என்று அழைக்கப்படுகிறது.
விட்டலரின் பக்தர்களுக்கு இந்நதி கங்கையைப் போன்று புனிதமானதாகும்.

நதிக்கரையில் பதினான்கு படித்துறைகள் உள்ளன, அவற்றுள் மஹா துவார படித்துறை முக்கியமானதாகும்.
இப்படித் துறையையும் விட்டலரது கோயிலின் கிழக்கு வாசலையும் இணைக்கக்கூடிய வீதியில்
துளசி, பூமாலைகள், தேங்காய், பழம், ஊதுவத்தி, இனிப்புகள் என பகவானுக்கு அர்ப்பணிப்பதற்காக
பல்வேறு பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன.

கோயிலும் விக்ரஹ வழிபாடும்

கருங்கல்லினால் கட்டப்பட்டதும் சுமார் ஐயாயிரம் வருடங்கள் பழமையானதுமான இத்திருக்கோயிலில்
பகவான் விட்டலர் ஸ்வயம்பு மூர்த்தியாக வீற்றுள்ளார்.
முற்றத்திலிருந்து சில படிகள் ஏறினால் தரிசன மண்டபத்தை அடையலாம்.
சுவர் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நின்றபடி தரிசனத்திற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
விக்ரஹ அறையின் நுழை வாயிலில் வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான
ஜயர், விஜயர் ஆகிய இருவருக்கும் பெரிய மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.

மெல்லிய புன்சிரிப்புடன் கருமை நிறத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ விட்டலரின் விக்ரஹம் மூன்றரை அடி உயரத்தில் உள்ளார்.
அவர் ஒரு செங்கல்லில் நின்று கொண்டுள்ளார்,
தனது கரங்களை இடுப்பில் வைத்தபடி கம்பீரமாக தோற்றமளிக்கின்றார்.
இந்த தோற்றம் பண்டரிபுரத்தில் நிகழ்ந்த அவரது லீலையைக் காட்டுகிறது.

பகவான் ஏன் பண்டரிபுரத்திற்குச் சென்றார் என்பதையும்
இந்த ரூபத்தில் அவர் நிற்பதற்கான காரணத்தையும்
பத்ம புராணமும் ஸ்கந்த புராணமும் விளக்குகின்றன.

ஒருமுறை ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைச் சந்திப்பதற்காக துவாரகைக்கு வந்தாள்.
அச்சமயத்தில் கிருஷ்ணர் தன்னை விட ராதையின் மீது அதிக கவனம் செலுத்துவதை ருக்மிணி தேவி கவனித்தாள்.
அதனால் மனமுடைந்து பண்டரிபுரத்திற்கு அருகிலிருந்த திண்டிரவனத்திற்கு அவள் வந்து சேர்ந்தாள்.
ருக்மிணியிடம் மன்னிப்பை வேண்டி கிருஷ்ணர் வந்த போதிலும், அவளது கோபம் தணியவில்லை.
அச் சமயத்தில் தனது பக்தரான புண்டரிகரை சந்திப்பதற்காக பகவான் பண்டரிபுரத்திற்கு வந்தார்.

புண்டரிகரின் ஆஸ்ரமத்தை பகவான் அடைந்தபோது,
அவர் தனது வயதான வைஷ்ணவ தாய் தந்தையருக்கு சேவை செய்து வந்தார்.
அதனால், பகவானுக்கு ஒரு செங்கல்லினைக் கொடுத்து அதில் நின்றபடி காத்திருக்கக் கோரினார்.
பகவானும் அப்படியே செய்தார். தனது தாமரைக் கரங்களை இடுப்பில் வைத்தபடி புண்டரிகரின் வருகைக்காக காத்திருந்தார்.

அவர் அங்கு காத்திருந்தபோது, தனது கோபத்தைக் கைவிட்ட ருக்மிணி தேவியும்
திண்டிரவனத்திலிருந்து வந்து அவருடன் சேர்ந்து கொண்டாள்.
இருவரும் விக்ரஹ ரூபத்தில் அப்படியே பண்டரிபுரத்தில் தங்கிவிட்டனர்.
பகவான் இன்றும் அந்த செங்கல்லில் நின்றபடி, புண்டரிகருக்காக அன்றி எல்லா பக்தர்களின் வருகைக்காக காத்திருக்கின்றார்.

அவ்வாறு காத்திருக்கும்போது, அவர் தமது பக்தர்களிடம் கூறுகிறார்,
“கவலைப்பட வேண்டாம். என்னிடம் சரணடைந்தவர்களுக்கு, இந்த பௌதிக உலகத்தின் கடல் போன்ற
துன்பத்தினை நாம் பெருமளவில் குறைத்து விடுகிறேன். பாருங்கள் இதன் ஆழத்தை!”
கடலின் ஆழம் இடுப்பளவில் மாறி விட்டதைக் காட்டும் பொருட்டு, அவர் இடுப்பில் கைவைத்தபடி நிற்கின்றார்.

மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர்
வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார்.
வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார்.
அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன.
அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு
அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.

விட்டலரின் வழிபாடு அதிகாலை நான்கு மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்குகின்றது.
ஆரத்திக்குப் பின்னர், பால், தயிர், நெய், தேன், சக்கரை நீர் ஆகியவற்றினால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சில சமயங்களில் அபிஷேகத்திற்கு மத்தியில் அவருக்கு வெண்ணெய் ஊட்டுவதும் வழக்கம்.
அபிஷேகத்திற்குப் பின்னர், அவர் நன்கு உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகிறார்.
தனது கருணை வாய்ந்த தன்மையை வெளிப்படுத்தும் விதமாக,
அவர் தனது அபிஷேக நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அனைவருக்கும் அனுமதியளிக்கின்றார்.

தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் தரிசனத்திற்காக பண்டரிபுரம் வருகின்றனர்.
பண்டரிபுரத்தின் தன்னிகரற்ற வழக்கம் என்னவெனில்,
ஒவ்வொரு யாத்திரிகரும் விக்ரஹத்தின் திருப்பாதங்களை தொடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்,
சிலர் அந்த திருப்பாதங்களில் தங்களது தலையைக்கூட வைத்து வணங்குகின்றனர்.
ஆயினும், கூட்டத்தின் காரணத்தினால் அனைவரும் விரைந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது.

விட்டலரின் சன்னதிக்கு அருகில், பகவானின் அழகிய திருமகளான ஸ்ரீமதி ருக்மிணி தேவியின் சன்னதி உள்ளது.
தரிசனம், ஆரத்தி, நைவேத்யம் என்று நாள் முழுவதும் விட்டலர் கருணையை வழங்குகிறார்,
மதிய நேரத்தில் சிறிய ஓய்வு வழங்கப்படுகிறது.
இரவு பதினோரு மணிக்கு கடைசி ஆரத்தி காட்டப்பட்டு, பின்னர் அவருக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.

விட்டலரின் பக்தர்கள்

விட்டலரின் சில பிரசித்தி பெற்ற பக்தர்கள் மஹாராஷ்டிரா முழுவதும் பயணம் செய்து அவரது மகிமையைப் பரப்பியுள்ளனர்.
அவர்களது பிரச்சாரமும் பக்தி பாவமும் மக்களிடையே நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்களது முடிவான உபதேசம் என்னவெனில்,
“தொடர்ந்து பாடுங்கள், தொடர்ந்து ஆடுங்கள், அவரது திருவடிகளின் அருகில் செல்லும்போது கருணைக்காக வேண்டுங்கள்.”
எனவே, நாம ஸங்கீர்த்தனம் மஹாராஷ்டிரா முழுவதும் பிரபலமான ஒன்றாகும்.

இது துகாராமின் நிலம்,
துகாராமர் மஹாராஷ்டிராவின் சாதுக்களில் மிகவும் பிரபலமானவர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்,
இன்றுவரை மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அபாங்கங்கள் என்று அழைக்கப்படும் அவரது 4,500 பாடல்கள் மஹாராஷ்டிர மக்களின் இதயத்தில் குடிகொண்டிருப்பவை.
துகாராமர் தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார், நாட்டு மக்களை பக்தியின் பாதைக்கு கொண்டு வந்தார்.
அவரது மொழி மிகவும் எளிமையானதாக இருந்ததால், அனைத்து கிராமத்தினரும் அவரது பாடல்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
பண்டரிபுரத்தின் முக்கிய திருவிழாக்களில் நிகழும் கீர்த்தனைகளுக்கும் பஜனைகளுக்கும் அவரே முக்கிய மூலமாவார்.

“துகாராமரின் ஸங்கீர்த்தன குழு இன்றும் மும்பையில் மிகவும் பிரபலமானதாகும்.
அது ஏறக்குறைய கௌடீய வைஷ்ணவர்களின் கீர்த்தன குழுவினை ஒத்துள்ளது,
அவர்களும் பகவானின் திருநாமத்தினை மிருதங்கம் மற்றும் கரத்தாளங்களுடன் இணைந்து பாடுகின்றனர்.”
அவர்களும் கௌடீய பழக்கத்திற்கு ஏற்றாற் போல, கழுத்தில் துளசி மாலையும் திலகமும் அணிகின்றனர்.

துகாராமர் சில நேரங்களில் பொறாமை கொண்ட நபர்களால் அவமரியாதை செய்யப்பட்டார்,
ஆயினும் அவர் புல்லை விடப் பணிவாக அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டார்,
அதனால் அவரது எதிரிகளின் இதயமும் மாறியது. அவர் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபட்டபடியே
தனது அதே உடலுடன் பலரும் பார்க்கும்படி ஆன்மீக உலகத்தை அடைந்தார்.

ஞானேஸ்வரர், நாமதேவர் ஆகியோரும் பண்டரிபுரத்தின் பிரபலமான சாதுக்களாவர்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் மக்கள் குவிகின்றனர்.
இருப்பினும், ஜுலை மாதத்தில் வரும் ஆஷாதி ஏகாதசி திருவிழா (அல்லது திண்டி யாத்திரை திருவிழா)
இலட்சக்கணக்கான மக்களைக் கவருகின்றது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி,
கர்நாடகா, ஆந்திரா, குஜராத் என பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர்.
ஆஷாதி ஏகாதசியன்று விட்டலரை தரிசிக்க அனைவரும் முயல்வதால், பெரும் திரளான கூட்டத்தைக் காண முடியும்,
ஒவ்வொருவரும் சில நொடித் துளிகளே விட்டலரை தரிசிக்க இயலும்.

சந்திரபாகா நதியின் ஒரு கரையில் விட்டல் ருக்மிணியின் கோயில்;
மறுகரையிலோ ஸ்ரீ ஸ்ரீ ராதா பண்டரிநாதர் வீற்றிருக்கும் இஸ்கான் திருக்கோயில்.
நாங்கள் இஸ்கானின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததால், நதியின் அழகு, பாண்டுரங்கர் கோயில்,
பக்தர்களின் புனித நீராடல், படகு போக்குவரத்து, பண்டரிபுரத்திற்கு அருகிலுள்ள கோபாலபுரம் ஆகியவற்றை
பரவசத்தோடு ரசித்து அனுபவிக்க முடிந்தது.
இரவில் சந்திரபாகா நதியைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாம் போலிருந்தது.
ஆயினும், மறுநாள் காலை இவையனைத்தையும் பிரிய மனமில்லாமல் பிரிய நேர்ந்தது.
தங்கியிருந்த இரண்டு நாள்களும் பண்டரிபுர் இஸ்கான் பக்தர்களின் உபசரிப்பும் பிரசாதமும் மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருந்தன.

“இக் கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. http://www.tamilbtg.com”

——-

பாட்டு கேட்கும் சாமி
பீமா நதி என்றழைக்கப்படும் இந்நதி மஹாராஷ்ட்ரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை
வளப்படுத்திக்கொண்டு க்ருஷ்ணா நதியுடன் கலக்கிறது.
பண்டரிபுரத்தில் இந்நதி சந்த்ரபாகா என்றழைக்கப்படுகிறது.
புண்டலீகன் என்னும் பக்தனுக்காக பகவான் கண்ணன் நதியை வளைந்து ஓடப் பணித்ததால்
நதியின் போக்கு பிறைச் சந்திரன்போல் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன்.
பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால்
அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.

அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி.
காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர்.

அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர்.
விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக
அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான்.
அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர்.
கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது,
அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர்.
மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன்,
வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான்.
‘நீங்கள் யார்?’ என வினவினான். ‘கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள்.
மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள்.
தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம்.
தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால்,
எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்பு கிறோம்’ என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.

அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.

தென்னாட்டிலிருந்து காசி யாத்திரையாக பெற்றோருடன் கிளம்பிய புண்டலீகன், ஆங்காங்கு தங்கி
மாதக் கணக்கில் பயணம் செய்து இவ்விடம் வந்தான்.
இங்கு குக்குட மஹரிஷி என்பவர் வசித்து வந்தார். அவர் குக்கூடாசனத்தில்‌ அமர்ந்து சாதனைகள் செய்து சித்தி பெற்றவர்.
மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை காஞ்சி மஹா பெரியவர் ஸர்வ சாதாரணமாகப் போட்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்.
மிகவும் வயதான தாய் தந்தையரை வைத்துக் கொண்டு,புண்டலீகன் கஷ்டப்பட்டு யாத்திரை செல்வதைப் பார்த்த மஹரிஷி,
இதற்கு மேல் வயதானவர்களை அழைத்துக் கொண்டு அலைய வேண்டாம்.‌
பெற்றோருக்கு சேவை செய்வது கங்கையில் ஸ்நானம் செய்த பலனைத் தரும்.
நதி தீரமாய் இருப்பதால், பெரியவர்களுடன் வசிப்பதற்கும், அவர்களின் சேவைக்கும் வசதியாக இருக்கும்.
இங்கேயே தங்கி பெற்றோர் சேவை செய் எனப் பணித்தார். ப்ரும்மதேஜஸுடன் விளங்கிய மஹரிஷியின் வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு புண்டலீகன் அங்கேயே குடிசை போட்டுக்கொண்டு பெற்றோருடன் வசிக்கலானான்.

தினமும் பெற்றோர்க்கு உணவு ஏற்பாடு செய்வதும், அவர்களின் ஸ்நானம் போன்ற அன்றாட வேலைகளுக்கு உதவி செய்வதும்,
அவ்வப்போது கைகால்கள் பிடித்து விடுவதும், இரவு உறங்கும்போது விசிறிவதும்,
பல புராணங்களைப் பார்வை மங்கிய பெற்றோருக்குப் படித்துக் காட்டுவதும்,
தனக்குத் தெரிந்த இறைப் பாடல்களை பாடி அவர்களை மகிழ்விப்பதுமாய் இனிதாகப் பொழுது போயிற்று.

அவ்வமயம் துவாரகையில் கண்ண பெருமான் வசித்து வந்தான்.
ஒருநாள் அவன் நீண்ட சிந்தனையில் இருப்பதைக் கண்ட நாரதர் என்ன சிந்தனை என்று விசாரிக்க..
நாரதரே! என் பெற்றோருக்கு சேவை‌ செய்யும் பேறு எனக்குக் கிட்டவில்லை.
சுமந்து பெற்ற அன்னைக்கு மழலையின்பம் கூடத் தரவில்லை. எனக்கு அது பெரும் குறையாய் இருக்கிறது.
பெற்றோருக்கு சிறப்பாக சேவை செய்பவர் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைப்‌ பார்த்தாவது நான் மகிழ்ச்சி அடைவேன் என்றான்.

நாரதர் இருக்கிறார் கண்ணா.. என்றது தான் தாமதம்.
உடனே பார்க்கலாம் வாருங்கள் என்று கிளம்பி வந்துவிட்டான்‌ கண்ணன்.
துவாரகாதீசன் கிளம்பியதும், தாயார்‌ருக்மிணியும் கிளம்ப, ஒரு‌ பரிவாரமே கிளம்பியது.
நாரதர் கண்ணனை ‌நேராக நமது புண்டலீகன் வீட்டு வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினார்.

அரசன் வந்திருப்பதாக கட்டிய வசனங்கள் வானைப் பிளக்க, புண்டலீகனோ உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த
தந்தைக்கு கால் பிடித்துக் கொண்டிருந்தான்.
குடிசைக்குள் எட்டிப் பார்த்த கண்ணன், அமைதியாய் இருக்கும்படி பரிவாரங்களுக்கு சைகை காட்டி விட்டு மெதுவாக அழைக்க,
புண்டலீகனோ, அரசே! சற்று பொறுங்கள். வயதான என் தந்தை உறங்குகிறார்.
வயதானவர்களுக்கு உறக்கம் வருவதே அரிது. சற்று நேரத்தில் வருகிறேன்.
அதுவரை இந்த செங்கல்லை ஆசனமாக ஏற்றுக்கொள்ளுங்கள். என்று சொல்லி
இரண்டு செங்கற்களை வாசலை நோக்கி வீசினான்.

அன்பே உருவான கண்ணனும் ருக்மிணியும் புண்டலீகன் வீசிய செங்கலின்மீது ஏறி நின்று கீழே விழாமல்
சமன் செய்வதற்காக இடுப்பில் கையை வைத்துக் கொண்டனர்.
இவர்கள் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதற்கு இன்னும் பல காரணங்களைப் பெரியோர் சொல்கின்றனர்.
அவற்றைப் பிறகு பார்ப்போம்.
தந்தை உறங்கியதும் வெளியில் வந்த புண்டலீகன் இறைவனிடம் காக்க வைத்ததற்காக மன்னிப்பு வேண்ட,
கண்ணனோ, புண்டலீகனின் பெற்றோர் சேவையில் நெகிழ்ந்து போயிருந்தான்.
வழக்கம் போல் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, கலியுகத்திற்கான ப்ரத்யேக வேண்டுதலாக‌,
நமக்காக புண்டலீகன் கேட்டது என்ன தெரியுமா?

பெற்றோர் சேவைக்கு மனம் மகிழ்ந்து இறைவனே நேரில் காண வந்து வாசலில் நின்றான் என்பதன் சாட்சியாக
நீ இங்கேயே இருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டான்.
தங்கள் திவ்ய மங்கள‌ ரூபத்திலிருந்து இரண்டு விக்ரஹங்களை எடுத்துக் கொடுத்தனர் கண்ணனும் ருக்மிணியும்.
ஆம், விட்டலனின் விக்ரஹம் ஒரு உளி கொண்டு சிற்பியால்‌ செதுக்கப்பட்டதல்ல.
இறைவனின் திருமேனியிலிருந்தே வெளிவந்தது.
இருபத்தெட்டு சதுர்யுகங்களாக புண்டலீகனுக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அங்கேயே நிற்கின்றான் பாண்டுரங்கன்.

சாதாரணமாக பாண்டுரங்கன் தரிசனம் என்றால் கோவிலின் பக்கத்தில் இருக்கும் பெரிய கட்டடத்தின் வழியாக
வரிசையில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஷாட, மற்றும் கார்த்திகை ஏகாதசி, இன்னும் சில விழாக்காலங்கள் தவிர, மற்ற நாள்களில் எவ்வளவு
நீண்ட வரிசையில் வந்தாலும் பெரும்பாலும் ஒரு மணி நேரத்தில் ஸ்வாமி தரிசனம் செய்து விட முடிகிறது.
ஆனால், தினமும் இரவு 9 மணி அளவில் கோவிலுக்குச் சென்றால் நேராக கோவிலினுள் உள்ள வரிசையில் அனுமதிக்கிறார்கள்.
மஹாத்வாரிலிருந்து உள்ளே நுழைந்தால், பத்து நிமிடங்களில் தரிசனம் செய்து விட முடியும்.
இதைத் தவிர அர்த்த மண்டபத்திலிருந்து விட்டலனின் திருமுகத்தை எப்போது வேண்டுமானாலும்
வரிசையின்றி தரிசனம் செய்யலாம். இதை முக தர்ஷன் என்று சொல்கிறார்கள்.
இரவு 11:30 மணிக்கு மேல் ஷேஜ் (சயன) ஹாரதி உண்டு. அப்போது பொது தரிசனம் இல்லை.
அதிகாலை 4 மணிக்கு பெருமாள் பள்ளி எழுந்ததும் செய்யப்படும் ஹாரதியை காகடா ஹாரதி என்று சொல்கிறார்கள்.
காகடா ஹாரதி சேவிக்க வேண்டுமானால், இரவு 2 மணி வாக்கில் கோவில் வாசலில் சென்று அமர்ந்து விட வேண்டும்.
முதல் இருபது பேரை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் வெளியிலிருந்து ஸேவிக்கலாம்.
மிக முக்கியமான விஷயம் இவை எதற்கும் கட்டணம் கிடையாது.
காத்திருக்க நேரமில்லாதவர்கள் இணைய தளத்தில் தர்சன நேரத்தை நிர்ணயம் செய்துகொண்டு செல்லலாம்.

மஹாத்வாரம் எனப்படும்‌ ப்ரதான வாயில். நாமத்தின் மூலமாக இறைவனை அடையலாம் என்று
கலியுகத்திற்கான தர்மமான நாம வழிக்கான நாம த்வாரம்.
இதே வாசல் வழியாகத் தானே நாமதேவர், ஞானேஸ்வரர், துகாராம் போன்ற எண்ணற்ற மஹான்கள்
விட்டலனை தரிசனம் செய்யச் சென்றிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தபோது மேனி சிலிர்த்தது.

தேவாசீயா த்வாரீ
உபா க்ஷண பரீ..
தேணே முக்தி சாரீ
ஸாதியேல்யா..
தேவாதிதேவனான விட்டலனின் கோவில் வாசலில் ஒரு கணம் நின்றாலும் போதும்.
நான்கு வகையான முக்திகளும் கிடைத்துவிடும் என்று பாடுகிறார் ஸத் ஞானேஸ்வர் மஹராஜ்.
வாசலில் இருந்த நாமதேவரின் படியை (நாமதேவரின் படியைப் பற்றி பிறகு பார்க்கலாம்) வணங்கிவிட்டு,
பக்கவாட்டில் இருந்த வழியின் வழியே உள்ளே சென்றோம்.
கருட மண்டபத்தில் ஸுஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான ஸாதுக்கள்‌ மிக அழகாகத் தாள்
(பாயசக் கோப்பை மாதிரி இருக்கும் ஜால்ரா வகை) போட்டுக்கொண்டு அபங்கம்‌ இசைத்துக்கொண்டிருந்தனர்.
உள்ளே செல்லும் வழியில், ஒரு தூணுக்கு வெள்ளிக் கவசம் சாற்றியிருந்தது.
எங்களுக்கு முன்னால் சென்ற அனைவரும் அந்த தூணைக் கட்டித் தழுவிக் கொண்டு
தலையால் முட்டி வந்தனம் செய்துகொண்டு சென்றுகொண்டிருந்தனர்.

வெள்ளிக் கவசம் சாற்ற்ப்பட்ட தூணின் முன்பு நின்றோம். ரங்க சிலா மண்டபத்தில் இருக்கும் அந்தத் தூணை
தாஸரஸ்தம்பம், மற்றும் புரந்தரதாஸர் தூண் என்றும் அழைக்கின்றனர்.
புரந்தரதாஸருக்கும் இந்தத் தூணுக்கும் என்ன தொடர்பு?
ஸங்கீத பிதாமஹர் என்றழைக்கப்படும் ஸ்ரீ புரந்தரதாஸர் கர்நாடக இசையின் அடிப்படைகளை வரையறுத்தவர்.
சுமார் 4,75,000 பாடல்களை இறைவன்மீது பாடியுள்ளார். நாரதரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
அவருடைய சரித்ரம் மிகவும் அற்புதங்கள் நிறைந்தது.
நாம் அவருக்கும் விட்டலன் கோவிலில் உள்ள தூணுக்குமான தொடர்பை மட்டும் பார்க்கலாம்.

விட்டலனின் பரம பக்தரான புரந்தரதாஸர் சில காலம் பண்டரி புரத்தில் தங்கியிருந்தார்.
இறைவனின் புகழை அபிநயங்களுடன் ஆடிப்பாடுவதற்கு கோவிலுக்கென்று சில மங்கையர் நியமிக்கப்பட்டிருந்த காலம்.
தினமும் கோவிலுக்கு வந்து விட்டலன் முன்னால் பாடுவார் தாஸர்.
ஒருநாள் அவர் வரும் சமயத்தில் கோவிலில் ஒரு பெண் விட்டலனின் புகழைப் பாடி ஆடிக் கொண்டிருந்தாள்.
அவளது பாடலின் கருத்தும், அவள் உருக்கமாகப் பாடிய விதமும் அவளை உண்மையான பக்தை என்று பறை சாற்றியது.
நடனத்தினால் விட்டலனைக் கண் முன்னால் கொண்டு நிறுத்தினாள் அவள்.
நடனம் முடிந்ததும், அவள் புரந்தரதாஸரைக் கண்டு வணங்கினாள்.
அவள் தனக்கு ஸங்கீத நுணுக்கங்களைக் கற்றுத்தரும்படி வேண்ட,
அவளது பக்தியைப் பார்த்து தாஸர் அவளுக்கு முறைப்படி அவளுக்கு ஸங்கீதப் பயிற்சி அளிக்கத் துவங்கினார்.

இறைவனால் நேரடியாக ஆட்கொள்ளப்பட்டவர். பரம்பரைப் பணக்காரர். நவகோடி நாராயணன் என்று அழைக்கும்
அளவிற்கு கோடிக் கணக்கான சொத்துக்களை உடையவர். இறைவனின் விளையாட்டால், ஒரு கணத்தில் பற்றுக்களைத் துறந்து,
குடும்பத்துடன் உஞ்ச வ்ருத்தி எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கியவர். இறை தரிசனம் பெற்றவர்.
அவரைத்தான் அவதூறு பேசியது இவ்வுலகம்.
அவரரோ எதைப் பற்றியும் கவலைப்பட்டாரில்லை.
உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் மஹாத்மாக்கள் பாகுபாடு பார்ப்பதில்லை.
அவ்வாறு ஏதேனும் நேர்ந்தால் அவர்களை இறைவனே தடுத்தாட்கொள்கிறான்.
விட்டலனுக்கு தாஸரை ஊரார் கண்டபடி பேசுவது பொறுக்குமா? துவங்கினான் ஒரு லீலையை.

ஒரு நாள் நள்ளிரவில் புரந்தரதாஸரின் உருவத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் போனான்.
தன்னுடைய விலை உயர்ந்த மாலை (கங்கணம் என்றும் சொல்லப்படுகிறது) ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
இது எனக்குக் கிடைத்தது. நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.
அவளோ தாஸரைத் தன் குருவாகப் பார்ப்பவள்.
குருவின் ப்ரஸாதமாக அதை வாங்கிக் கொண்டு தன் வீட்டிலிருந்த விட்டலனுக்குப் போட்டுவிட்டாள்.

மறுநாள் காலை கோவிலைத் திறந்த பண்டா முதல்நாள் இரவு விட்டலனுக்கு சாற்றப்பட்டிருந்த
நகையைக் காணாமல் பதைபதைத்துப் போனார்.உடனே அரசனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவில் விவகாரங்களில் அரசனே நேரடியாகத் தலையிட்டு உடனே சரி செய்யும் காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது.
காவலரை அனுப்பி விசாரித்ததில், நகை நடனமாடும் பெண்ணின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட,
அவள் தயங்காமல் உண்மையைச் சொன்னாள், புரந்தரதாஸர் கொடுத்தார் என்று.
விட்டலன் தாஸரின் உருவில் அல்லவா சென்றான்?

தாஸரோ கோவிலிலேயே எப்போதும் இருப்பவர். அவர் எடுத்திருக்க வாய்ப்பு உண்டென்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டனர்.
விட்டலனின் ஸந்நிதியிலேயே அவருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டு தூணில் கட்டினர்.
புரந்தர தாஸருக்கோ, தன்னை எதற்குக் கைது செய்தார்கள்? என்ன நகை? அந்தப் பெண் ஏன் அப்படிச் சொன்னாள் ஒன்றும் புரியவில்லை.
நன்மையோ, சோதனையோ, அடியார்களின் நாவில் வருவது இறைவனின் திருநாமம் மட்டுமே.
விட்டல நாமத்தைச் சொல்லிக் கொண்டு எது நடந்தாலும் அவன் இஷ்டம் என்று பேசாமல் இருந்தார்.
கோவிந்தனுக்காட்பட்டவர்கள் வேறெப்படி இருப்பார்கள்?

அவரிடமிருந்து பதிலேதும் வராததால், அரசன் கசையடிகள் கொடுப்பதாக தீர்ப்பு சொல்லி சாட்டையை ஓங்க…
சட்டென்று அற்புதம்‌ நிகழ்ந்தது. அரசன் கையிலிருந்த சாட்டையைக் காணவில்லை. அது விட்டலன் கையில் இருந்தது.
விட்டலன் அசரீரியாக நாமே கொண்டு போய்க் கொடுத்தோம் என்று சொல்ல,
அரசன் உள்பட ஊர் மக்கள் அனைவரும், புரந்தரதாஸரைத் தவறாக எண்ணி அவதூறு பேசியதற்கு வெட்கி, வருந்தி அவர் பாதம் பணிந்தனர்.
தாஸர் அதன்பின் அந்தத் தூணிலேயே சாய்ந்து நின்று கொண்டு ஏராளமான பாடல்களை விட்டலன் மீது பாடியிருக்கிறார்.

இந்நிகழ்விற்குப் பிறகு,
அந்தத் தூணை வணங்கி கட்டித் தழுவிக்கொண்டு அவரது ஆசீர்வதத்தால் தங்களுக்கும் பக்தி சித்திக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டு விட்டலனைக் காணச் செல்வது மரபாயிற்று.
தொடர்ந்து மேலே செல்ல, ஸந்த் துகாராம் அவர்கள் எழுதிய அபங்கங்கள் அடங்கிய பெரிய புத்தகம்
கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
அதன் அருகில் விட்டலன் மீது அசையாத பக்தி பூண்டு ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி,
பூத உடலுடனேயே வைகுண்டம் ஏகிய ஸந்த் துகாராம் அவர்களின் திருப் பாதம்.
அதையும் வணங்கித் திரும்பினால்…
ஆஹா!
வா வா ..
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்.. என்பதாக சிரித்த முகத்துடன்..
இடுப்பில் கையை வைத்துக் கொண்டு..
எந்தையின் தரிசனம்..

இடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன்.
இந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம்.
சுவாமியின் பீடமும் மணற்கல்லே. காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.

‘ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது.
பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர்.
விட் என்ற மராத்தி மொழிச் சொல்லிற்கு செங்கல் என்பது பொருள்.
‘வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம்.
கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளை போல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார்.
பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.

மூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில்.
இங்கே, அன்னை ருக்மணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
அன்னை ருக்மணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள்.
அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது.
ருக்மணி சந்நிதியை அடுத்து சத்தியபாமா மற்றும் ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

பாண்டுரங்கனின் பக்தர்கள்
புரந்தரதாசர்
நாமதேவர்
துக்காராம்
ஏகநாதர்
ஞானேஷ்வர்
சோகாமேளர்
ஜனாபாய்
சக்குபாய்

மகாராட்டிராவின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் விட்டலர் மீதான பக்தி பஜனைப் பாடல்களுடன்
பாடிக்கொண்டே ஊர்வலமாக, ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்று
விட்டலர் கோயிலுக்குச் புனித யாத்திரையாகச் செல்வது வழக்கும்.
நாமதேவர், துக்காராம், ஞானேஷ்வர், புரந்தரதாசர், சோகாமேளர் மற்றும் ஜனாபாய் போன்ற
வைணவ அடியவர்களால் பகவான் விட்டலரின் குறித்து அபங்கம் எனும் பதிகங்கள் பாடப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, 2014-ஆம் ஆண்டிலிருந்து, இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
வைணவர்கள் இக்கோயிலில் பூசாரிகளாக பணியாற்றுகிறார்கள்

——–

பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே

பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே

எம பயம் நீக்கி இன்பமும் தருமே
எம பயம் நீக்கி இன்பமும் தருமே
எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே
எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே

பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே

மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல்
மானிடப் பிறவி பழுதாகாமல்

பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே(8)
பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா..(4)

——-

ரெங்கா ரெங்கா ஓடிவா

ஏ… ரெங்கா ரெங்கா ஓடிவா பாண்டுரங்கா ஓடிவா
பண்டரி புரம் வாழும் பாண்டுரங்க சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா

பாற்கடலின் மீதினில் பாம்பணையில் தூங்கியே
பார் முழுதும் படியளக்கும் பாண்டுரங்க சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா! (ஏ… ரங்கா)

மங்காபுரம் தாயிருக்க மலை மேலே நீயிருக்க
ஏழுமலை நாதனே எங்கள் சீனி வாசனே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)

எங்கும்நீ திளவும் எல்லோருமே வாழவும்
பத்து அவ தாரமாய் பார் புகழ வந்தவா
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)

சங்கு சக்கரம் கொண்டுவா தாயாரையும் கூட்டி வா
கண் குளிரக் காணவா கார் மேக சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)

சர்வ லோக நாயகா சங்கரனின் மைத்துனா
பாரளந்த தேவனே பறந்து வாராய் சாமியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)

காவடியான் மாமனாம் காலடியால் வாமனை
மூவடியாய் ஆண்டவா என்பாவடியில் ஆடியே
நீ… எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ… ரங்கா)

———

கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!

பேகனே பாரோ முகவன்னு தோரோ
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)

காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ
காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே
இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா
காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

ராகம்: யாமுன கல்யானீ
தாளம்: சாபு
வரிகள்: வியாசராய தீர்த்தர்
மொழி: கன்னடம்

———-

ரங்க பாரோ பாண்டுரங்க பாரோ
ஸ்ரீரங்க பாரோ நரசிங்க பாரோ (ரங்க)

ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்
ஸ்ரீரங்கனே வாராய் நரசிங்கனே வாராய் (ரங்க)

கந்த பாரோ என்ன தந்தே பாரோ
இந்திரா ரமண முகுந்த பாரோ (ரங்க)

குழந்தையே வாராய் என் தந்தையே வாராய்
இலக்குமியின் கணவனே முகுந்தனே வாராய் (ரங்க)

அப்ப பாரோ திம்மப்பா பாரோ
கந்தர்பனய்யனே கஞ்சி வரத பாரோ (ரங்க)

தந்தையே வாராய் திம்மப்பா (வேங்கடவன்) வாராய்
மன்மதனின் தந்தையே காஞ்சி வரதனே வாராய் (ரங்க)

அண்ண பாரோ என்ன சின்ன பாரோ
புண்ணியமூர்த்தி மஹிஷபுரிய சென்ன பாரோ (ரங்க)

தந்தையே வாராய் எந்தன் செல்லமே (தங்கமே) வாராய்
புண்ணியமூர்த்தி மகிஷபுரியின் சென்ன கேசவனே வாராய் (ரங்க)

விஷ்ணு பாரோ உடுப்பி கிருஷ்ண பாரோ
என் இஷ்ட மூர்த்தி புரந்தர விட்டல பாரோ (ரங்க)

விஷ்ணுவே வாராய் உடுப்பி கிருஷ்ணனே வாராய்
என் இஷ்ட தெய்வமே புரந்தர விட்டலனே வாராய் (ரங்க)

———-

நானேன மாடிதேனோ ரங்கய்யா ரங்கா
நீ என்ன காய பேகோ (நானேன)

நான் என்ன (பாவம்) செய்தேன், ரங்கா
நீ என்னை காப்பாற்ற வேண்டும் (நானேன)

மானாபி மானவு நின்னது எனகேனு
தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா (நானேன)

(பக்தர்களுக்கு காட்டும்) அன்பு, பாசம் முதலியன உன்னுடையது எனக்கென்ன++
தீன ரக்‌ஷகனே திருப்பதி வேங்கடரமணா (நானேன)

கரிராஜ கரெசிதனே த்ரௌபதி தேவி
பரெதோலே களுஹிதளே
ஹருஷதிந்தலி ரிஷிபத்னிய சாபவ
பரிஹரிசிதேயல்லோ (நானேன)

துரியோதனன் கூப்பிட்டு (அவமானப்படுத்தியபோது) திரௌபதி தேவி
கடிதமா எழுதி அனுப்பினாள்?
(கூப்பிட்ட நேரத்திற்கு வந்து காப்பாற்றினாயல்லவா?)
ஒரு நிமிடத்தில் ரிஷிபத்தினியின் (அகலிகை) சாபத்தை
போக்கினாய் அல்லவா? (நானேன)

ரக்கசசூதனனே கேளோ
த்ருவராயா சிக்கவனல்லவேனோ
உக்கிபருவா கர்மா மாடித அஜாமிள
நின்னக்கன மகவேனோ (நானேன)

அரக்கர்களை அழித்தவனே கேளாய்
துருவ மகாராஜா சின்னப்பையன்தானே?
மறுபிறவி எடுக்கும்படியான பாவத்தை செய்த அஜாமிளன்
(அப்படி எடுக்காமல் மோட்சத்தை கொடுத்து காப்பாற்றினாயே)
அவன் என்ன உன் அக்கா மகனா? (நானேன)

முப்பிடி அவலக்கியா தந்தவனிகே
வப்புவந்தே கொடலில்லவே
சர்ப்பசயன ஸ்ரீ புரந்தரவிட்டலா
அப்ரமேய காயோ (நானேன)

மூன்று பிடி அவல் தந்தவருக்கு
உலகிலுள்ள அனைத்து செல்வங்களையும் நீ கொடுத்தாய் அல்லவா?
சர்ப்பத்தின் மேல் சயனித்திருக்கும் புரந்தர விட்டலனே
இறைவனே (எண்ணிக்கையில் அடங்காதவனே) என்னைக் காப்பாற்று (நானேன)

——–

வேங்கடரமணனே பாரோ
சேஷாசல வாசனே பாரோ (வேங்கட)

வேங்கடரமணனே வாராய்
சேஷாச்சலத்தில் (திருப்பதியில்) வசிப்பவனே வாராய் (வேங்கட)

பங்கஜநாபா பரமபவித்ரா சங்கர மித்ரனே பாரோ (வேங்கட)

தாமரைக் கண்ணனே மிகவும் பவித்ரமானவனே
சங்கரனின் நண்பனே வாராய் (வேங்கட)

முத்து முகத மகுவே நினகே
முத்து கொடுவேனு பாரோ
நிர்தயவேகோ நின்னோளகே நானு
பொந்தித்தேனு பாரோ (வேங்கட)

அழகான முகத்தையுடைய குழந்தையே உனக்கு
முத்தம் கொடுக்கிறேன் வாராய்
ஏன் தயவில்லை; உன்னில் நான்
கரைந்திருக்கிறேன் வாராய் (வேங்கட)

மந்தர கிரியனெத்திதானந்த
மூருத்தியே பாரோ
நந்தன கந்த கோவிந்த முகுந்த
இந்திரேயரசனே பாரோ (வேங்கட)

மந்தர மலையை தூக்கியவனே
எப்போதும் ஆனந்தமாய் இருப்பவனே வாராய்
நந்தனின் மைந்தனே; கோவிந்தனே முகுந்தனே
இந்திரனின் அரசனே வாராய் (வேங்கட)

காமனய்யா கருணாளோ
ஷ்யாமள வர்ணனே பாரோ
கோமளாங்க ஸ்ரீ புரந்தர விட்டலனே
ஸ்வாமி ராயனே பாரோ (வேங்கட)

மன்மதனின் தந்தையே கருணையே உருவானவனே
கறுமை நிறத்தவனே அழகானவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே ;
தலைவனே வாராய் (வேங்கட)

——–

கண்டேன கோவிந்தன
புண்டரிகாக்ஷ பாண்டவ பக்ஷ கிருஷ்ணன (கண்டேன)

கோவிந்தனை கண்டேன்
புண்டரீகாக்ஷனை ; பாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணனை (கண்டேன)

கேசவ நாராயண ஸ்ரீ கிருஷ்ணன
வாசுதேவ அச்சுதா அனந்தன
சாசிர நாமத ஸ்ரீ ரிஷிகேஷன
சேஷ சயன நம்ம வசுதேவ சுதன (கண்டேன)

கேசவனை நாராயணனை ஸ்ரீ கிருஷ்ணனை
வாசுதேவனை அச்சுதனை அனந்தனை
ஆயிரம் நாமங்கள் கொண்ட ஸ்ரீ ரிஷிகேசனை
சேஷன் மேல் சயனித்திருக்கும் நம்ம வசுதேவரின் புதல்வனை (கண்டேன)

புருஷோத்தம நரஹரி ஸ்ரீ கிருஷ்ணன
சரணாகத ஜன ரக்ஷகன
கருணாகர நம்ம புரந்தர விட்டலன
நேரே நம்பிதேனோ பேலூர சன்னிகனா (கண்டேன)

புருஷோத்தமனை நரஹரியை ஸ்ரீ கிருஷ்ணனை
சரணாகதி செய்யும் பக்தர்களை காப்பவனை
கருணாகரனை; நம்ம புரந்தர விட்டலனை
உன்னையே நம்பியிருக்கிறேன்; பேலூரில் சென்னகேசவனாய் இருப்பவனை (கண்டேன)

———

ஏனு தன்யளோ லக்குமி
எந்தா மான்யளோ
சானு ராகதிந்தா ஹரியா
தானே சேவே மாடுதிஹளு (ஏனு)

எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தவளோ லட்சுமி
எவ்வளவு மரியாதைக்கு உரியவளோ
சானு ராகத்தினால் அந்த ஹரியை
சேவை செய்து கொண்டிருக்கிறாள் (ஏனு)

கோடி கோடி ப்ருத்யரிரலு
ஹாடகாம்பரனா சேவே
சாடியில்லதே பூர்ண குணலு
ஸ்ரேஷ்டவாகி மாடுதிஹளு (ஏனு)

கோடி (எண்ணிக்கை) பணியாட்கள் இருந்தும்
ஸ்ரீ ஹரியின் சேவையினை
சாடியில்லதே ; குற்றமில்லாதவளான லட்சுமி
மிகவும் அருமையாக செய்து வருகிறாள் (ஏனு)

சத்ர சாமர வ்யஜன பர்யங்க
பாத்திர ரூபதல்லி நிந்து
சித்ர சரிதனு ஹாத ஹரியா
நித்ய சேவே மாடுதிஹளு (ஏனு)

குடை சாமரம் விசிறி கட்டில்
ஆகிய ரூபங்களில் நின்று
அதி சுந்தரனாகிய ஹரியை
தினமும் பணிவிடை செய்கிறாள் (ஏனு)

சர்வஸ்தலதி வ்யாப்தனாதா
சர்வதோஷ ரஹிதனாதா
கருட கமனன நாத
புரந்தர விட்டலன சேவிசுவளு (ஏனு)

எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும்
களங்கமில்லாதவனும்
கருடனை வாகனமாகக் கொண்டிருப்பவனுமாகிய
புரந்தர விட்டலனை வணங்குபவள் (ஏனு)

———-

குருவின குலாமனாகுவ தனகா
தொரயதண்ண முகுதி (குருவின)

குருவிற்கு அடிமையாய் ஆகாதவரை
கிடைக்காது முக்தி (குருவின)

பரிபரி ஷாஸ்த்ரவனேகவனோதி
வ்யர்தவாய்து பகுதி (குருவின)

விதவிதமான சாஸ்திரங்கள் பலவற்றை படித்தாலும்
வீணாகிப் போய்விடும் பக்தி (குருவின)

ஆறு ஷாஸ்த்ரவ ஓதிதரேனு
மூராறு புராணவ முகிசிதரேனு
சாரி சஜ்ஜனர சங்கவ மாடதே
தீரனாகி தான் மெரெதரேனு (குருவின)

ஆறு சாஸ்திரங்களை படித்தாலென்ன
(3×6) 18 புராணங்களை முடித்தாலென்ன
கற்று உணர்ந்த பெரியவர்களிடம் எதையும் கற்காமல்
கர்வத்துடன் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னாலும் (குருவின)

கொரளலு மாலெய தரிசிதரேனு
கரதல்லி ஜபமணி எணிசிதரேனு
மருளனந்தெ ஷரீரக்கே லேபவா
ஒரசிகொண்டு தா திரிகிதரேனு (குருவின)

கழுத்தில் (துளசி) மாலை அணிந்தாலென்ன
கைகளில் ஜபமணி இருந்தாலென்ன
ஹரிதாஸனென்று உடம்பில் கோபிசந்தனத்தை
தரித்துக் கொண்டு சுற்றினாலும் (குருவின)

நாரியர சங்கவ அளிதரேனு
ஷரீரக்கே துக்கவ படிசிதரேனு
மரையண்ண ஸ்ரீ புரந்தர விட்டலன
மரெயதே மனதொளு பெரெயுவ தனகா (குருவின)

பெண்களை புறக்கணித்து சன்னியாசி ஆனாலென்ன
பட்டினி கிடந்து உடம்பை துக்கப் படுத்தினாலென்ன
ஸ்ரீ புரந்தரவிட்டலனை மறக்காமல்
மனதில் வைத்து நினைக்கும் வரை (குருவின)

———

வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)

வேங்கடாசலத்தில் (திருப்பதியில்) வீற்றிருப்பவன் வைகுண்டத்தில் வசிக்கிறான்
தாமரை மலர் போன்ற அழகான கண்கள்; எவ்வித களங்கமுமில்லாத தூய்மையானவன்
இரு கைகளிலும் சங்கு, சக்கரம் தரித்த அழகே வடிவானவன் (வேங்கடாசல)

அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)

எப்பொழுதும் அவன் பேரை ஜபித்துக் கொண்டே இருக்கும் பிரம்மன்;
கூடவே தம்புரா வைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருக்கும் நாரதர் (வேங்கடாசல)

மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)

பளபளக்கும் குண்டலங்களை அணிந்திருக்கும் மதனகோபாலன்
பக்தர்களை காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனே (வேங்கடாசல)

————

கலியுகதொளு ஹரி நாமவ நெனேதரே
குலகோடிகளு உத்தரிசுவவோ ரங்கா (கலியுக)

இந்த கலியுகத்தில், ஹரியின் பெயரை நினைத்தால்
உன் குலம் முழுவதற்கும் புண்ணியம் கிட்டும் (கலியுக)

சுலபத முக்திகே சுலபவெந்தேணிசுவ
ஜலருஹநாபன நெனே மனவே (கலியுக)

சுலபமாய் முக்தி பெற, சுலபமாய் நினைவில் வைக்கும்படியான
ஸ்ரீ கமலாநாபனின் (பத்மநாபனின்) பெயரை நினைத்திரு மனமே (கலியுக)

ஸ்னானவனறியேனு மௌனவனறியேனு
த்யானவனறியேன் எந்தெணபேடா
ஜானகிவல்லப தசரத நந்தன
கானவினோதன நெனெ மனவே (கலியுக)

ஸ்னானம் எப்படி செய்யணும்னு தெரியாது; மௌனமாய் இருக்கத் தெரியாது
தியானம் செய்யத் தெரியாது என்று சொல்ல வேண்டாம்
ஜானகியின் கணவனை, தசரதனின் மைந்தனை
பாடலை விரும்பிக் கேட்கும் ஸ்ரீ ராமனை நினைத்திரு மனமே (கலியுக)

அர்ச்சிஸலறியேனு மெச்சிசலறியெனு
துச்சனு தானெந்தெணபேடா
அச்சுதானந்த கோவிந்த முகுந்தன
இச்சேயிந்தலி நெனெமனவே (கலியுக)

அர்ச்சனை / பூஜை செய்யத் தெரியாது; கடவுளை மெச்சவும் (புகழ் பாடவும்) தெரியாது
(அதனால்) நான் ரொம்ப கெட்டவன் என்று நினைக்க வேண்டாம்
அச்சுதன், ஆனந்தன், கோவிந்தன், முகுந்தன், (ஆகிய ஹரியை)
பாசத்துடன் நினைத்திரு மனமே (கலியுக)

ஜபவொந்தறியேனு தபவொந்தறியேனு
உபதேச வில்ல எந்தெணபேடா
அபார மஹிமே ஸ்ரீ புரந்தரவிட்டலன
உபாயதிந்தலி நெனெ மனவே (கலியுக)

(மந்திரங்களை) ஜெபிக்கத் தெரியாது; தபஸ் (தியானம்) செய்யத் தெரியாது
(தக்க குருவினிடத்தில்) உபதேசமும் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டாம்
பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
உத்தியுடன் (ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே (கலியுக)

——–

சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.

ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஹரிதாஸர்கள் பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று ஸ்ரீ புரந்தரதாஸரால் பாடப்பட்ட ‘சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே’. அதை இன்று பார்ப்போம்.

***

சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே
நாமகிரீஷனே

சிம்ம ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியே

ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு
சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே

ஒருமனதாக உன்னை வணங்கினால்
கண்டிப்பாக காப்பேன் என்று கூறிய ஸ்ரீஹரியே (சிம்ஹ)

தரளனு கரெயே ஸ்தம்பவ பிரியே
தும்ப உக்ரவ தோரிதனு
கரளனு பகெது கொரளொளகிட்டு
தரளன சலஹித ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)

ஹிரண்யகசிபு கூப்பிட்டவுடன் தூணை உடைத்துக்கொண்டு (வந்த நரசிம்மர்)
மிகவும் உக்கிரத்தை காட்டினார்
அவனைக் கொன்று தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு
அனைவரையும் காத்த ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)

பக்தரெல்ல கூடி பஹுதூர ஓடி
பரம சாந்தவனு பேடிதரு
கரெது தன் சிரியனு தொடெயொளு குளிசித
பரம ஹருஷவனு பொந்தித ஸ்ரீஹரி (சிம்ஹ)

பக்தர்கள் அனைவரும் (நரசிம்மரின் உக்கிரத்தால் பயந்து) வெகுதூரம் ஓடி
கோபத்தை குறைக்குமாறு வேண்டினர்
தன் பக்தனை (பிரகலாதனை) கூப்பிட்டு, தன் மடியில் உட்காரவைத்து
தன் கோபத்தை குறைத்தான் ஸ்ரீஹரி (சிம்ஹ)

ஜயஜயஜயவெந்து ஹுவ்வனு தந்து
ஹரிஹரிஹரியெந்து சுரரெல்ல சுரிசி
பய நிவாரண பாக்ய ஸவரூபனே
பரமபுருஷ் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)

வெற்றி வெற்றி என்று பூக்களை கொண்டுவந்து
ஹரி ஹரி என்று அனைவரும் (நரசிம்மரின் மேல்) அர்ச்சனை செய்ய
பயத்தைப் போக்கும் பாக்கியங்களை கொடுக்கும்
உத்தமமான கடவுள் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)

———–

தர்மர் பீஷ்மரிடம் கேள்விகள் கேட்கிறார்.

கிமேகம் தைவதம் லோகே
கிம் வாப்யேகம் பராயணம் !
ஸ்துவம்த:கம் கமர்சந்த:
ப்ராப்னுயுர் மானவா சுபம் !!

கோ தர்ம: சர்வதர்மாணாம்
பவத: பரமோமத:!
கிம் ஜபன் முச்சதே ஜந்துர்
ஜன்ம சம்சார பந்தனாத்!!

1. உத்தமமான கடவுள் யார்?
2. யாரிடம் போய் நாம் அனைவரும் சரணமடையலாம்?
3. யாரை புகழ்ந்து பாடினால், நாம் அமைதியையும், வளர்ச்சியையும் (முக்தி) அடையலாம்?
4. யாரை வணங்குவதால், நமக்கு மோட்சம் கிட்டும்?
5. மிகவும் உயர்ந்த தர்மமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
6. யார் பெயரை உச்சரிப்பதன் மூலம், ஜீவராசிகள் மறுபிறப்பு அடையாமல் இருப்பார்கள்?

இவைகளுக்கு பதில் சொல்லும் பீஷ்மர், பகவான் விஷ்ணுவின் அருமை பெருமைகளை சொல்லும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளுகிறார்.

ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!

அனைவரிலும் உத்தமமானவன் அந்த புருஷோத்தமன். அவனை வணங்குவதாலேயே மறுபிறப்பு கிட்டாமல், மோட்சம் கிட்டும் என்று சொல்கிறார்.

இந்த விளக்கத்தையே ஸ்ரீ புரந்தரதாஸர் இந்த அற்புதமான பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.

இனி பாடல்.

***

சகல க்ரஹபல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வரக்ஷா (சகல)

அனைத்து கிரகங்களின் பலன்களும் நீயே, தாமரை போல் கண்களை உடையவனே,
எல்லா இடத்திலும் இருந்து, இந்த உலகத்தை கட்டிக்காப்பவனே (சகல)

ரவிசந்திர புத நீனே ராஹு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவராத்ரியு நீனே நவவிதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)

சூர்ய, சந்திர, புதனும் நீயே, ராகு கேதுவும் நீயே
வியாழன், சனி மற்றும் வெள்ளியும் நீயே
பகலும் இரவும் நீயே, ஒன்பது விதானங்களும் நீயே++
நோய்களை தீர்க்கும் மருத்துவனும் நீயே, மருந்தும் நீயே (சகல)

பக்ஷமாசவு நீனே பர்வகாலவு நீனே
நக்ஷத்ர யோக கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்த நீ
பக்ஷிவாகன லோக ரக்ஷகனு நீனே (சகல)

(சுக்ல & கிருஷ்ண) பட்சமும் நீயே, மாதங்கள், பர்வ காலங்கள் நீயே
நட்சத்திர, யோக, கரணங்களும் நீயே
திரௌபதியின் மானத்தை குறைவில்லாத ஆடையளித்து காப்பாற்றிய நீ
கருட வாகனத்தில் வந்து உலகத்தை காப்பாற்றுபவனும் நீயே (சகல)

ருது வாசர நீனே ப்ருதிவிகாதியு நீனே
க்ரது ஹோம யஞ்ய சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடைய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகதா அப்ரதிம மஹிம நீனே (சகல)

(ஆறு) காலமும், வருடங்களும், வருடப்பிறப்பும் நீயே
ஹோம, யாகங்களினால் அடையும் முக்தியும் நீயே
யாராலும் தோற்கடிக்க முடியாத என் தலைவன் புரந்தர விட்டலனே,
நீ வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே (சகல)

——

பாக்யதா லட்சுமி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யதா லட்சுமி பாரம்மா

பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா
என் தாயே, சகல சௌபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா

ஹெஜ்ஜெ கால்களா த்வனிய மாடுதா
ஹெஜ்ஜெய மேல் ஒந்து ஹெஜ்ஜெய நிக்குதா
சஜ்ஜன சாது பூஜெயெ வேளெகே
மஜ்ஜிகே ஒளகின பெண்ணேயந்தே (பாக்யதா)

கொலுசு அணிந்த கால்களால் சத்தத்தை செய்தவாறு
அடி மேல் அடி வைத்து
நன்கு படித்தவர்களின் பூஜை வேளையில்
தயிரிலிருந்து (கடைந்தால்) வரும் வெண்ணையைப் போல் (பாக்யதா)

கனக வ்ருஷ்டியா கரெயுத பாரே
மன காமனெயா சித்தியு தோரே
தினகர கோடி தேஜதி ஹொளெயுத
ஜனகராயன குமாரி பேக (பாக்யதா)

தங்க மழை பெய்தவாறே வாராய்
என் விருப்பங்களை நிறைவேற்றுவாய்
கோடி சூரியர்களின் ஒளியை (போல தேஜஸ்) கொண்ட
ஜனகனின் மகளே (சீதையே) சீக்கிரம் (பாக்யதா)

அத்தித்தகலதே பக்தர மனெயொளு
நித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள
சத்யவ தோருவ சாது சஜ்ஜனர
சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பே (பாக்யதா)

அங்கிங்கு போகாமல் (நேராக) பக்தர்களின் வீட்டிற்கு (நீ வந்தால்)
(அங்கே) எப்போதும் திருவிழா; தினமும் சந்தோஷம்
(வேத சாஸ்திரங்களின்) உண்மையை எடுத்துரைக்கும் பக்திமான்களின்
மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் லட்சுமி (பாக்யதா)

சங்க்யே இல்லதா பாக்யவ கொட்டு
கங்கண கையா திருகுத பாரே
குங்குமாங்கிதே பங்கஜ லோசன
வேங்கடரமணன பட்டத ராணி (பாக்யதா)

கணக்கேயில்லாத பாக்கியத்தைக் கொடுக்கும்
வளையல்கள் கூடிய (உன்) வலது கையை காட்டியவாறே வாராய்
குங்குமம் இட்ட நெற்றியோடு, தாமரை (போல்) விழிகளை கொண்டவளே,
வேங்கடரமணனின் பட்டத்து ராணியே (பாக்யதா)

சக்கரே துப்பவ காலுவே ஹரிசி
சுக்ரவாரதா பூஜய வேளகே
அக்கரெயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணி (பாக்யதா)

சக்கரையும், நெய்யும் மழையாய் பெய்ய
வெள்ளிக்கிழமை பூஜை வேளையில்
கருணையே வடிவான ரங்கனின்,
புரந்தர விட்டலனின் ராணியே (பாக்யதா)

மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோஓஓஓ

ஞான வைராக்யம்
ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மை ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மையான பக்தி பகுத்தறிவுடன்
இகபர சுகம் தரும் கருணையாம்

மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்ஈஈ

கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்

குடல் கலங்குதே
இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே

இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை

உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை
ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ
பாண்டுரங்க ஜெய விட்டலை
என்று பணிந்திட

மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர் உயர்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோஓஓஓ

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ருக்மிணி தேவி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–

January 6, 2022

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன்,
புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.
அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர்.
அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

———

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

————

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மஹா லஷ்மி அஷ்டோத்திரம்

January 6, 2022

ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ச்ரத்தாயை நம

ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம

ஓம் பத்மாயை நம
ஓம் சுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம

ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம

ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம

ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹபதாயை நம

ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரிவல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம

ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்மஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம

ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்மனாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலாதராயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம

ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம

ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம

ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம

ஓம் ச்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம

ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் தந தாந்ய கர்யை நம

ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் ந்ருப வேச்ம கதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம

ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் சுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம ஓம் மங்கள தேவதாயை நம

ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம

ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம

ஓம் த்ரிகால ஜ்நாந ஸம்காயை பந்நாயை நம
ஓம் புவனேச்வர்யை நம.

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

———–

1-மஹா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள
ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

2.வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ
அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

3.ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள
ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4.காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள
காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5.சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில்
உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6.தனலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள
தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7.வீர லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள
வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8.தான்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும்
தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவரங்கம் பெரிய மண்டபம் – அமுது படிகள் விவரம் —

January 6, 2022

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்
சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம்.
ஆகம சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.

அழகிய மணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க
விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம்

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

யார் இந்த பரமன்?

எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?

பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம்.
எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது.
அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.
பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.
இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும்
நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார்.
கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை.
இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள்
(தங்க சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:

1) தீபாவளி

2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர்.
அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து
ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

———–

அரங்கனின் ஒன்பது தீர்த்தங்கள்
திருவரங்கம் தான் பிரம்மத்தின் சரீரம்(உடல்) என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்க மஹாத்மியம் தசாத்யாயி (பிரம்மானந்த புராணம்) மற்றும் ஷதாத்யாயி ஆகிய புராணங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

பரபிரம்மம் ஸ்ரீமன்நாராயனனின் சரீரம் ஸ்ரீரங்கம்

தலை – பிரணவாகார விமானம் (ஸ்ரீரங்க விமானம்)

இரண்டு கைகள் – வடத்திருக்காவிரி மற்றும் தென்திருக்காவிரி

ஹ்ருதயம் – சந்திர புஷ்கரனி

பிரம்மத்தின் திருவடிகள் தான் எட்டு திசைகளில் உள்ள எட்டு புஷ்கரனிகள்.

திருவரங்கத்திர்க்கும் தீர்த்தத்திர்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆழ்வார்களின் பாசுரங்களிலும் நீர்நிலைகள் பற்றிய குறிப்புகள் உண்டு.

திருசந்தவிருத்தம் (பாடல் 50) – திருமழிசை பிரான்

வெண் திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன்ஓர்நாள்
தின் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் உளர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டிரைத்த சோலைவேல் மன்னுசீர் அரங்கமே.

எட்டு திசைகளிலும் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தமாடுகிற (குளிக்கிற) எட்டு புஷ்கரனியை குறித்தும்
அதனால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்று குறிப்பிடுகின்றார்.

நடுவே அமைந்திருக்கும் சந்திர புஷ்கரனி அனைத்து பாவங்களையும் போக்க வல்லது.
சந்திரனின் ஷகவரோக பாவத்தை தவம் செய்து போக்கிக் கொண்டார்.ஆகையால் அவரது பெயரிலேயே இந்த புஷ்கரணி உள்ளது.

எட்டு புஷ்கரணிகளின் பெயர்:

கிழக்கு – பில்வ தீர்த்தம்
தென்கிழக்கு – ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம்
தெற்கு – அஸ்வத்த தீர்த்தம்/ அஸ்வ தீர்த்தம்
தென்மேற்கு – பலாச தீர்த்தம்
மேற்கு – புன்னாக தீர்த்தம்
வடமேற்கு – வகுள தீர்த்தம்
வடக்கு – கதம்ப தீர்த்தம்
வடகிழக்கு – ஆம்ர தீர்த்தம்

தீர்த்தவாரி நடைபெறுவது இரண்டு வகை உண்டு. ஒன்று தீர்த்த பேரருக்கு தீர்த்தவாரி நடக்கும்
மற்றொன்று ஸ்ரீசடாரிக்கு நடக்கும் தீர்த்தவாரி.

சந்திர புஷ்கரனி மற்றும் கொள்ளிடத்தில் நடக்கும் தீர்த்தவாரிகள் தீர்த்த பேரருக்கு நடக்கும்.
மற்ற அனைத்து இடங்களிலும் நடக்கும் தீர்த்தவாரி ஸ்ரீசடாரிக்கு நடக்கும்.

இந்த தீர்த்த பேரர் மூல ஸ்தானத்தில் நம்பெருமாளுக்கு அருகே எழுந்தருளியிருப்பார்.
இவரை செல்வர் என்றும் அழைப்பது உண்டு. இவரே தற்போது தினமும் இரவு தாயார் சன்னதிக்கு பள்ளியறை செல்லும் பெருமாள்.

ஒரு தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு தீர்த்தங்கள் போலவும் அதன் நடுப்பகுதி சந்திர புஷ்கரனி போலவும் அமைத்துள்ளது.
இந்த தீர்த்தங்கள் எங்கு உள்ளது என்றும், அதன் சிறப்புகளும், தீர்த்தமாடினால் போக்கும் பாவங்களும்,
பெருமாள் என்று அங்கெல்லாம் எழுந்தருள்வார் என்றும் விரிவாக காண்போம்.

1) திக்கு – கிழக்கு

தீர்த்தம் – பில்வ தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலை, திருவாசி கிராமம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்- பங்குனி 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – இந்த தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

சரித்திரம்– வாமன அவதாரத்தின் போது, அசுர குரு சுக்ராச்சாரியர் மகாபலி சக்கரவர்த்தி தானம் கொடுக்கும் போது தடுத்தார்.
அப்போது அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அதைப் போக்கிக் கொள்ள இந்த பில்வ தீர்த்த கரையில் தவம் செய்து தோஷத்தை நீக்கிக் கொண்டார்.

பெருமாள் நாமம் – ஸ்ரீனிவாசன்
மரம் – பில்வ வ்ருக்ஷம்
இன்றைய நிலை: இந்த குளம் எல்லை கரை மண்டபம் அருகே இருக்கிறது
(திருச்சி-சென்னை புறவழிச்சாலை கொள்ளிடம் பாலம் முன்பு)
30 ஆண்டுகள் முன்னர் வரை பெருமாள் இங்கு சென்று தீர்த்தவாரி நடந்தது.
தற்போது இந்த தீர்த்தவாரி எல்லை கரை ஆஸ்தான மண்டபத்தில் நடந்து வருகிறது.

2) திக்கு – தென்கிழக்கு

தீர்த்தம் – ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம்
இருக்கும் இடம் – திருவானைக்கோவில் மூன்றாம் பிரகாரம்
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்- பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் –
சரித்திரம் – சிவன் தவம் செய்து அவருடைய மோக சாஸ்திரத்தினால் ஏற்பட்ட தோஷத்தை போக்கிக் கொண்டார்.
பெருமாள் நாமம் – அச்சுதன்
மரம் – ஜம்பு வ்ருக்ஷம்
இன்றைய நிலை: கிபி1400 பின்னர் சைவ வைணவ சண்டைகளால் பெருமாள் இங்கு செல்வதில்லை.
ஆனால் பங்குனி எட்டாம் திருநாள் வெங்கடேசா தியேட்டர் அருகே ரோட்டில் இந்த தீர்த்தவாரி நடக்கிறது.

3) திக்கு – தெற்கு

தீர்த்தம் – அஸ்வத்த தீர்த்தம்/அஸ்வ தீர்த்தம்
இருக்கும் இடம் – பங்கஜம் மருத்துவமனை அருகே ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் , வித்யா மெடிக்கல் எதிரே இருக்கும் குளம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – வெபிசார தோஷம்
சரித்திரம் – இந்திரன் அகல்யையிடம் தவறு செய்து அவள் ராமனின் பாதம் பட்டு சாப விமோசனம் பெற்றாள்.
இந்திரன் இந்த குளத்தில் நீராடி தவம் செய்து தகாத சேர்க்கையின் பாவ விமோசனம் பெற்றான்.
பெருமாள் நாமம் – அனந்தன்
மரம் – அஷ்வத்த மரம்
இன்றைய நிலை – பெருமாள் எழுந்தருளி ஸ்ரீசடாரி தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது.

4) திக்கு – தென்மேற்கு

தீர்த்தம் – பலாச தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி கரூர் ரோட்டில் இருக்கும் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தின் எதிரே இருக்கும் தீர்த்தம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – சம்சர்க தோஷம், கூடாச்சேர்க்கை
சரித்திரம் – முருகன் தவம் செய்து இங்கு தான் வேலை வரமாக பெற்றார்
பெருமாள் நாமம் – கோவிந்தன்
மரம் – பலாச மரம்
இன்றைய நிலை – பெருமாள் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளும் முன் தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது.

5) திக்கு – மேற்கு

தீர்த்தம் – புன்னாக தீர்த்தம்
இருக்கும் இடம் – மேலூர் கிராமம். மேலூரில் இருந்து பட்டர்ஃப்ளை பார்க் செல்லும் ரோட்டில் இருக்கும் வ்ருக்ஷி மண்டபம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்– பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பரஸ்த்ரிகமன தோஷம்
சரித்திரம் – அக்னி கிருத்திகா தேவியிடம் அபச்சார பட்டார்.அந்த குற்றத்தை இந்த குளத்தில் நீராடி தவம் செய்து போக்கிக் கொண்டார்.
பெருமாள் நாமம் – ஸ்ரீபதி
மரம் – புன்னாக மரம்
இன்றைய நிலை – பங்குனி மாதம் 3ஆம் திருநாள் ஜீயபுரம் செல்லும் வழியில் இந்த தீர்த்ததிற்கு எழுந்தருளி
தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது

6) திக்கு – வடமேற்கு

தீர்த்தம் – வகுள தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலை, திருவாசி கிராமம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பசுவதம் / ஸ்தீரி வதம் இதனால் வரும் தோஷம்
பெருமாள் நாமம் – மாதவன்
மரம் – வகுள மரம்
இன்றைய நிலை – 1994வது வருடத்திற்கு பின்னர் பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது
கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்வது நின்று விட்டது.
அது முதல் இந்த தீர்த்தவாரி நடப்பதில்லை. தற்போது குளம் உள்ளது.

7) திக்கு – வடக்கு

தீர்த்தம் – கதம்ப தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலையில்ஏ உத்தமர் கோயில் திவ்யதேசத்தின் அருகே இந்த குளம் உள்ளது.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – மாசி 5ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – தானம் வாங்கியதால் வரும் தோஷங்கள் நீங்கும்
சரித்திரம் – ஜனகர் இங்கு தான் யாகம் செய்து கர்ம யோகத்தை பெற்றார்.
பெருமாள் நாமம் – உத்தமர்
மரம் – கதம்ப மரம்
இன்றைய நிலை: பெருமாள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தாளக்குடி மண்டபத்திற்கு செல்வதில்லை.
இந்த தீர்த்தவாரி தாளக்குடி மண்டபத்திற்கு செல்லும் வழியில் நடந்து வந்ததால் இப்போது நின்று விட்டது.
இந்த குளத்தில் தற்போதும் உத்தமர் கோயில் புருஷோத்தமர் சித்திரை பிரம்மோற்சவத்தில் தேர் முடிந்து
தீர்த்தவாரி கண்டருளிகிறார்

8) திக்கு – வடகிழக்கு

தீர்த்தம் – ஆம்ர தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி – லால்குடி சாலையில் தாளக்குடி எனும் கிராமம் உள்ளது.
இங்கு பெருமாள் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அதற்கு அருகில் இருக்கும் குளம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – மாசி மாதம் 5ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பித்ரு தோஷம் ஏதும் தாக்கியிருந்தால் போக்கும்
பெருமாள் நாமம் – ருஷிகேஷன்
மரம் – ஆம்ப மரம்
இன்றைய நிலை: பெருமாள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தாளக்குடி மண்டபத்திற்கு செல்வதில்லை.
ஆனால் குளம் உள்ளது.

———-

திருவரங்கநாதனுக்கு தினப்படி 3 வேளை திருவாராதனம் & 6 வேளை அமுது படிகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

காலை முதல் பிரசாதம்:
கோதுமை ரொட்டி(பெருமாளுக்கு 11, தாயாருக்கு 6), வெண்ணை, கும்மாயம் (குழைந்த பாசிப்பருப்பு),
பச்சைப் பால் (2 லிட்டர்).
ரொட்டியும் & பருப்பும் வடநாட்டு உணவு. துலுக்க நாச்சியாருக்காக முதல் அமுதாக நடைபெறுகிறது.

ரொட்டி செய்யப்படும் முறை:

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு பிசையணும்.
வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு எடுக்கணும்.

இந்த அமுது படிகள் முடிந்த பின்னர் காலை திருவாராதனம் நடைபெறும்.

காலை இரண்டாவது பிரசாதம்:
பொங்கல், வடிசல் (சாதம்), தோசை, புத்துருக்கு நெய் (தினமும் புதிதாக மண் பானையில் காய்ச்சப் பட்டது)
கூட்டு, கறியமுது, ஊறுகாய் & ஜீரண மருந்து – சுக்கு, வெல்லம், சீரகம் & ஏலக்காய். இதுதவிர சில அதிகப்படி தளிகைகள்.
வெண் பொங்கல் – பாசிப்பருப்பு, பச்சரிசி & நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும்.
பச்சரிசி உளுந்து தோசை – பெருமான் அமுது செய்யும் தோசை சற்று தடிமனாக இருக்கும்.

காலை தணிக்கைகள் அமுது செய்யப் படும் நேரம்: 7.45 – 9.15

மதியம் பெரிய அவசரம் அதனுடன் திருவாராதனம்:
வடிசல் (சாதம் – 18 படி ) கூட்டு, கறியமுது, சாத்தமுது (தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்),
திருக்கண்ணமுது (அரிசி, பாசிப்பருப்பு, பால் & வெல்லம்) மற்றும் அதிரசம்-11

கோயிலோ பெரிய கோயில்!

பெருமாளோ பெரிய பெருமாள்!

தளிகையோ பெரிய அவசரம்!!

பெரிய அவசரத்தில் 50 ஆண்டுகள் முன்னர் வரை கூட்டு, கரியமுது என்பது
செடி 5 & கொடி 5 என்ற வகையில் 10 காய்கறிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போதைய காலங்களில் ஒரு கறியமுது மற்றும் ஒரு கூட்டு என்று குறைந்திருப்பதை நாம் அறிகிறோம்.

கொடியில் காய்க்கும் காய் கறிகள் – அவரை, புடலை, பூசணி, பாகற்காய், வெள்ளரிக்காய்.
செடியில் காய்க்கும் காய்கறிகள் – கொத்தவரை, வாழைக்காய் & கிழங்கு வகைகள்

ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே, அமைந்துள்ள,”மதுரகவி திருநந்தவனத்தில்” இருந்து
மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவை நடந்து வருகிறது.
பெருமாளுக்குத் தினமும் 10 எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு 5 எலுமிச்சம் பழங்களும்
நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாலை ஷீராண்ணம் தளிகை:
ஷீராண்ணம் (அரை தித்திப்பாக இருக்கும் பொங்கல்), கறியமுது, திருமால் வடை, அப்பம்,
தேன்குழல், தோசை மற்றும் அதிகப்படி தளிகைகள்

பெருமாளுக்கு அமுது செய்யப்படும் பணியாரங்கள் –
பெரிய அப்பம் (6), பெரிய வடை (11) & பெரிய தேன்குழல் (6) ஆகியவை எண்ணிக்கை குறைவு தான்.

தாயாருக்கு மட்டும் ஷீராண்ணத்துடன், பச்சரிசிப் புட்டு தினமும் மாலையில் அமுது செய்யப்படும்.

இரவு செலவு சம்பா திருவாராதனம்: வடிசல் (சாதம்) மற்றும் பாசிப்பருப்பு.
இந்த திருவாராதனத்தில் செல்வர் எழுந்தருளி பலி சாதித்து வருவதால் இதற்கு செல்வர் சம்பா என்ற பெயர் ஏற்பட்டது.
காலப்போக்கில் இதுவே செலவு சம்பா என்று மருவியது.

இரவு கடைசி தளிகை – அரவணை & சுண்டக் காய்ச்சிய பசும்பால்
அரவணை (ஒருவிதமான சக்கரை பொங்கல்), கறியமுது மற்றும் காய்ச்சிய பால்.
இரவு 10 முதல் 11 மணி ஆகும். (ஜீயபுரம் செல்லும் நாளில் மட்டும் மாலை 6 மணிக்கு அமுது செய்வார்).

தாயார் சன்னதியில் அரவணையுடன் கீரை சேர்த்து செய்யப்படும்

இந்தப் பால் காய்ச்சப்படும் முறை ஒரு சிறப்பான முறை. அதாவது மண்பானையில் முதலில் தண்ணீரை ஊற்றி காய்ச்சி
அதன் மூலம் பானை சற்று இறுகிவிடும். அதன் பின்னர் பச்சை பாலை சுண்டக் காய்ச்சி அதனை சூடு போக ஆறவைத்து
அதற்குப் பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் & வெல்லம் சேர்த்து அமுது செய்யப்படும்.

உடையவரும் கஷாயமும்:

ஸ்வாமி ராமானுஜர் ஒருமுறை பெருமாளின் முகம் வாடி இருப்பது கண்டு,
முதலியாண்டானை பார்த்து பெருமானுக்கு என்ன அமுது செய்யப் பட்டது என்று கேட்டார்.
அதற்கு தயிர்சாதமும் & நாவல் பழமும் என்று முதலியாண்டான் சொன்னாராம்.
உடையவர் உடனே அரங்கன் ஒரு குழந்தை போல! அவருக்கு ஜலதோஷம் வந்து விடும் என்று சொல்லி
அதற்காக கஷாயம் தன்வந்திரி சன்னதியிலிருந்து தயார் செய்து பெருமாளுக்கு அமுது படைக்க சொன்னாராம்.
இதுவே உடையவருக்கு இருந்த பரிவை நமக்குக் காட்டுகின்றது.

முன்னர் அரவணையுடன் கஷாயம் அமுது நடந்ததாகவும் அது தன்வந்திரி சந்நிதியில் இருந்து வந்ததாகவும் செய்தி உண்டு.

திருவரங்கநாதனுக்கு தளிகை செய்வது தினமும் புது மண்பானையில் தான்.
மற்ற கோவில்களை போல் இங்கு பாத்திரங்களைக் கொண்டு தயார் செய்யப் படுவதில்லை.

வெள்ளிக்கிழமை புனுகாப்பு புளியோதரை:
பெரிய பெருமாளுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திருமார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு புனுகு தைலம் சாத்தப்படும்.
இந்த தைலம் சாற்றிய பின் விசேஷத் தளிகையாக புளியோதரை அமுது செய்வார்.
உத்ஸவங்கள் இருப்பின் இந்த வைபவம் நடைபெறாது.

பூச்சாற்று உற்சவத்தில் பானகம்
பூச்சாற்று உற்சவத்தில் தினமும், பூச்சூடிய பின் 5 பானைகளில் சிறப்பு பிரசாதமாக பானகம் மற்றும்
வடை பருப்பு (பயத்தம் பருப்பு) அமுது செய்யப்படும்.
அதன் பின்னர் இந்த பானகம் கோஷ்டி பிரசாதமாக விநியோகம் செய்யப்படும்.

வசந்த உற்சவ சாற்றுமுறை பால் மாங்காய்
வசந்த உற்சவ சாற்றுமுறை நாளன்று பாலில் மாங்காய் மற்றும் சில பழங்கள், சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு வகையான பிரசாதம்.
இதை ராக்ஷச கறியமுது என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பொதுவாக இது வைகாசி விசாகத்தன்று வரும்.

ஆனி ஜேஷ்டாபிஷேக பெரிய திருப்பாவாடை
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் (ஜேஷ்டா) தினத்தன்று ஆண்டுதோறும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும்.
உற்சவர் நம்பெருமாளுக்கு கவசங்கள் கழற்றி திருமஞ்சனமும் பெரிய பெருமாளுக்கு திருமேனி முழுவதும் தைலம் சாத்தும் வைபவம் நடைபெறும்.

இதற்கு அடுத்த நாள் அன்னகூட உற்சவம் என்று அழைக்கப்படும் பெரிய திருப்பாவாடை அமுது செய்யப்படும்.
108 படி அன்னம் தயார் செய்யப்பட்டு, பெருமானுக்கு முன்னே சேர்க்கப்பட்டு அமுது செய்யப்படும்.

ஆகமங்களின் படி தினசரி நித்தியப்படி அமுதுபடிகளில் ஏதேனும் குறை இருந்தால்,
அதனை நிறைவு செய்வதற்காக நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் என்ற குறிப்பும் உண்டு.

மார்கழி பெரிய திருநாள் சிறப்பு அமுது படிகள் –
சம்பார தோசை, செல்வரப்பம் மற்றும் உருப்படி
சம்பார தோசை – பெரிய திருநாளில் தினம் பெருமாளுக்கு சம்பார தோசை எனும் தடிமனான பெரிய தோசை அமுது செய்யப்படும்.
அரைக்கால் தோசையை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!

செல்வரப்பம் – மார்கழி பெரிய திருநாளில் தினமும் இந்த செல்வரப்பம் அமுது செய்வார்.
தட்டை போல் சிறிய வட்டமாக இருக்கும்.

உருப்படி – மார்கழி பெரிய திருநாளின் கடைசி நாள் சாற்றுமுறை அன்று உருப்படி என்னும் சிறப்பு பணியாரம் அமுது செய்வார்.
இது தட்டையை விட தடிமனாகவும், சிறிய அளவில் இருக்கும்.

சாற்றுமறை அன்று இந்த பணியாரங்கள் நூற்றுக்கணக்கில் அமுது செய்வார்.

தை, பங்குனி & சித்திரை உற்சவம் கொடியேற்ற தின அப்பம்
தை பங்குனி மற்றும் சித்திரை கொடியேற்றம் நடைபெறும் அன்று காலை சிறப்பு அமுதாக பெருமாள் அப்பம் அமுது செய்வார்.
இந்த கொடியேற்றப்பம் பெருமாள் ஏளப்பண்ணும் வேற்று ஆட்களுக்கு கிடைக்கும் பிரசாதம்.

வாகன வடை
உற்சவ காலங்களில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளும் போது அரிசி மாவு வடை சிறிதாக இருக்கும்.
இந்த வடை வாகனத்தில் எழுந்தருளிய உடன் அமுது செய்வார்.

மாசி வெள்ளி கருடன் – கொழுக்கட்டை பிரசாதம்
மாசி மாதம் தெப்ப உற்சவம் நாலாம் திருநாளன்று வெள்ளி கருட வாகனம் நடைபெறும்.
அன்று பெருமாள் வீதி எழுந்தருளி வாகன மண்டபம் அடைந்த பின்னர் சிறப்பு பிரசாதமாக பெரிய கொழுக்கட்டை அமுது செய்வார்.

மாசி தெப்பம் சிறப்பு பிரசாதம்
தெப்பத்தன்று பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் முன்னர் சர்க்கரைப் பொங்கல், சீயம் போன்ற அமுது படிகளை அமைத்து செய்வார்.
இவை முன் காலங்களில் தெப்பத்தில் எழுந்தருளிய பின்னர் நடுவே இருக்கும் மைய மண்டபத்தில் அமுது செய்யப்பட்டதாக செவிவழிச் செய்தி.

பங்குனி மாத சேர்த்தி உற்சவம் அக்காரவடிசல்
உறையூர் நாச்சியார் சேர்த்தி மற்றும் பெரிய பிராட்டியார் பங்குனி உத்திர சேர்த்தி நடைபெறும் இரண்டு நாட்களிலும்,
பெருமாள- தாயார் ஏகாந்தம் முடிந்து அமுது செய்யப்படும். பலரும் அதிகப்படி தளிகையாக அக்கார அடிசல் சமர்பிப்பார்கள்.

வாகனங்களுக்கு அமுது
பெருமாள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா முடிந்து நான்முகன் கோட்டைவாசல் நுழைந்த பின்னர்
கூரத்தாழ்வான் சன்னதி முன்னர் இரண்டு நிமிடங்கள் நிற்பார்.
அப்போது வாகனங்களுக்கு ஏற்றார்போல் அமுது படிகள் சமர்ப்பிக்கப்படும்.
உதாரணமாக சேஷ வாகனம், அம்ச வாகனம் & கற்பக விருட்சம் போன்றவற்றுக்கு
பால், குதிரை வாகனத்திற்கு கொள்ளு, கருடனுக்கு கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் வாகனங்களுக்கு அமுது செய்யப்படும்.

வழிநடை உபயங்கள்
வழிநடை உபயங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று பானகம் & வடை பருப்பு (பயத்தம் பருப்பு).
பெருமாள் எழுந்தருளி பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் , புளியோதரை போன்ற விதவிதமான பிரசாதங்கள் அமுது செய்வார்.

கோவிலுக்கு உள்ளே நடைபெறும் வசந்த உற்சவம், பவித்திர உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் பூச்சாற்று உற்சவம்
ஆகிய உற்சவங்களில், பெருமாள் மண்டபத்திற்கு எழுந்தருளியபின் சிறப்பு தளிகை அமுது செய்வார்.

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வைஷ்ணவத்வம் -ஆச்சார்ய அபிமானம் -கிளியும் குயிலும் —

January 5, 2022

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)

பதவுரை:
அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர்;
என்போர்-என்று சொல்லப்படுபவர்;
அறவோர்-அறநெஞ்சம் கொண்டோர்;
மற்று-(அசைநிலை – மற்ற-ஏனைய;
எவ்வுயிர்க்கும்-எந்த உயிர்க்கும்;
செந்தண்மை-செவ்விய தண்ணளி, அருள் தன்மை;
பூண்டு-மேற்கொண்டு;
ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்.

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

மணக்குடவர் உரை:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.
மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார்.
இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;
அந்தணர் என்போர் அறவோர் – அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.
(பூணுதல் விரதமாகக் கோடல். ‘அந்தணர்’ என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின்,
அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து.
அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.)

எல்லா வுயிர்க்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் ஆவர்.
அந்தணர் என்ற சொல்லுக்கு அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்பது நேர்பொருள்.
அந்தணர் என்பது அம்+தண்மையர் என விரியும். அழகிய குளிர்ச்சி உடையவர்கள் அல்லது நல்லருளுடையார் என்பது பொருள்.

அந்தணன் – அகத்தே தண்மை கொண்டவன் என்றும்
‘அந்தத்தை அணவுவார் (ஆராய்வார்) அந்தணர்’ என்றும்
‘வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்’ என்றும் இச் சொல்லை விளக்குவர்.

இச் சொல் மூன்று குறட்பாக்களில் ஆளப்பட்டுள்ளது.
முதலில், அறஆழி அந்தணன்.. (குறள் 8) என்று அது இறைவனைச் சுட்டுகிறது.
இரண்டாவதாக இப் பாடலில் (30) அந்தணர் என்போர் அறவோர்.. எனக் கூறப்பட்டு
அந்தணர் என்பது தந்நலம் நீத்த அறவோரைக் குறிப்பதாகச் சொல் விளக்கமும் தரப்படுகிறது.
இறை நூல் செய்வோர் என்னும் பொருளில் அந்தணர் நூற்கும் அறத்திற்கும்.. (குறள் 543) என்று கூறுவது மூன்றாவது பாடல்.

அந்தணர் -தண்மை -குளிர்ச்சி -செந்தண்மை பூண்டு ஒழுகுதல் வைஷ்ணவத்வம் வள்ளுவர்
மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக வேண்டும் –
ஸ்ரீ கீதை -12 அத்யாயம் வைஷ்ணவ லக்ஷணம்
பரஸ்பர நீச பாவம் -தண்டம் வத் வணங்கி -மத்யே மாதவன் புகுவானே –
பிறர் துக்கம் சஹியாமை
விஷ்ணு -வைஷ்ணவம் –
தொல் காப்பியம் -நூல் பூணூல் சாஸ்திரம் -கரகம் சொம்பு கொண்டு -முக்கோல் -வைஷ்ணவ சந்நியாசிக்கு -மணை -வைஷ்ணவர்களுக்கு –
முக்கோல் பகவரை வினவுதல் அகத்துறையில் உண்டே –
துளசி மாலை தாமரை மாலை -விரதம் -ஐயப்பன் இன்றும் பார்க்கிறோம் -சாமி என்று கூப்பிடுகிறோம்

குற்றம் செய்தவர்கள் பக்கல் -பொறையும் -கிருபையும் -சிரிப்பும் –உகப்பும் -உபகார ஸ்ம்ருதி –ஐந்து விஷயங்கள் –

இடுக்கண் வரும் கால் நகுக -தேகத்துக்குத் தானே
தேசிகன் -ரஹஸ்ய த்ரய சாரம் இதே அர்த்தம் –

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நற்கருமத்து நின்றுஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.

பிறவிப் பிணியை ஒழிக்கும் தொழில் செய்பவர் அந்தணர்.
அவர்கள் அக்கினி காரியங்களைத் தவறாமல் செய்பவர்கள்;
மூன்று வேளைகளிலும் தமக்கு விதிக்கப்பட்ட வற்றைத் நாள் தவறாமல் செய்து வருபவர்கள் அந்தணர்கள்.
சந்தி கால நியமங்களையும் தவறாமல் செய்து வருபவர்கள்.

https://tidley.com/2019/09/25/–ஸ்ரீ வைஷ்ணவம் -பரிபாடலில் -. திருக்குறளில் -சில பாடல்கள்–-

நரசிம்ம மேதா வைஷ்ணவ ஜனதோ தேனே -இதே கருத்து
பிறர் துயர் தீர்த்து -தனக்கு அனைவரும் உறவு -பற்று அற்று சம தர்சனம் -அந்நிய மாத்தறை தாயாக எண்ணி
ஸ்ரீ ராம நாமம் கேட்டு கண்ணீர் பெறுக அதுவே பவன புனிதம் ஆகும் –

காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று குஜராத் மகான் -நரசிம்ஹ மேதா(கிபி. 1500)
எழுதிய “வைஷ்ணவன் யார்?” என்ற கவிதையாகும்

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ

சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ

சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ

மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மன் மன் நெ
ராம் நாம் சூன் தாலி லாகி
சகல தீரத் தேனா தன் மன் ரெ

வான் லோபி நெ கபட-ரஹித செ
காம க்ரோத நிவராய ரெ
பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகொதர் தார்யா ரெ

பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

————-

சக்ரவர்த்தி திருமகன் வான் இளவரசு வைகுந்தக்குத்தான்
நந்த கோபன் குமரன்
யதிராஜ சம்பத் குமாரர்

அபஹத –அர்த்த காம -நிகிலா ஜன ஸூஹ்ருத் -எரும்பி அப்பா

மிளகு ஆழ்வான் -வைஷ்ணவன் என்ன கொண்டாடிய விருத்தாந்தம்

———-

ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்கு அடையாளங்கள் இருக்கிறது. திருமண், துளசி மாலை… இது எல்லாம் புறச் சின்னம்.
வேஷ பூஷணத்தால் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிவிட முடியாது. சில இலட்சணங்கள் இருக்கிறது.
அதை நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டும்.

கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
நல்ல வெயில், பசி. ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம் என்று தேடும்போது
ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு இரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்பட ,
அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாத கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.

ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து
இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது.
உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ?
அவர் பகவத் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி
நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு

“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.

———

மா தவம் -சிறந்த தபஸ்ஸூ
1-மாயோனின் தவம்
2-மன்னனின் தவம்
3-மகரிஷிகளின் தவம்
4-மகனின் தவம்
5-மாறனின் தவம்
6-மஹான்களின் தவம்

1-மாயோனின் தவம்
மாயை -பொய் -ஆச்சர்யம் -விசித்திரம் –ப்ரக்ருதி -செலுத்தும் மகேஸ்வரன்
நின்று நின்று பலகால் உயிர்கள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்றாகிலும்
ஜன்மம் கழிப்பான் என்று ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் உத்ஸாகம் குறையாமல் – சோம்பாது தபம்
தான் வித்து ஓர் வித்தாய் தனி வித்து -மா மாயன் வைகுந்தன் -கண் வளரும் மா மாயன் –

2-மன்னனின் தவம்
ஜனகன் தொண்டைமான் ஆகாச ராஜன் -நமக்காக தபஸ் செய்து பிரார்த்தித்து திவ்ய தேசங்கள்
த்ரவ்ய தான த்ரவ்ய ஸ்வாத்யாய யாகங்கள் -கர்ம யோகங்களின் பாகங்கள் -‘சொற்கள் கர்ம யோகம் -பொருள்கள் ஞான யோகம்
பூரகம் கும்பகம் ரேதகம் -இவையும் கர்ம யோகம் -13 வகைகள் கீதையில் உண்டே –

3-மகரிஷிகளின் தவம்
ஞான யோக நிலைகள்
யஜமான ஸம்ஹிதை – – உபாதேய -ஆமை போல் இந்திரியங்களை அடக்கி –
வ்யதிரேக ஸம்ஹிதை –த்யாஜ்ய விஷய –
பீத ராக பய க்ரோத -மனஸு கட்டுப்படுத்துவது மூன்றாம் நிலை ஏக இந்திரிய ஸம்ஹிதை –
சங்கம்-காமம் -ஆசை -அபி ஸ்நேஹம் –
விசுவாமித்திரர் -முதல் நிலை -ஆதி ஜட பரதர் மூன்றாம் நிலை -ஏக இந்திரிய ஸம்ஹிதை
வஸீகார சம்ஹிதை பிரகலாதன் நிலை நான்காவது
ஸ்ரவணம் -மனனம் -கேள்வி ஞானம் -நினைத்தல் -ஆத்ம அவலோகனம் -சாஷாத்காரம் -யோகம் -சம தர்சனம் நிலை அடைந்து –
பகவத் சம்பந்தம் அறிந்து -மேல் நிலை -தியானத்தால் அடைய முடியும் –
யோகத்தில் இருந்து எழுந்த பின்பும் தொடர்வது மூன்றாம் நிலை -சுகம் துக்கம் சமமாக பார்க்கும் நிலை அடுத்து
முக்தியை ஆசை வரவர இவை தானாகவே வரும் -ராகம் அடியாகவே வர வேண்டும் –

4-மகனின் தவம்
பக்தியின் 9 நிலைகளாக முறையே சிரவணம் ,கீர்த்தனம், விஷ்ணோஹோ ஸ்மரணம் ,பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம் மற்றும் ஆத்ம நிவேதனம் அதன் அர்த்த விஷேஷங்கள்
கிருதயுகத்தில் த்யானம் த்ரேதா யுகத்தில் யாகம் துவாபர யுகத்தில் அர்ச்சனை
பெருமானை அடைவதை விட கலியுகத்தில் நாமசங்கீர்த்தனத்தால் பெருமானை அடைவதே எளிய வழி

5-மாறனின் தவம்
ந்யாஸம் பிரபத்தி சரணாகதி அவனையே குறிக்கும்
ஒரு சரணாகதன் சரணாகதி அனுஷ்டிக்க கடந்து வரவேண்டிய படிக்கட்டுக்களாய் முறையை
ஈஸ்வர சௌஹார்த்தம் ,எதிருச்சயா ஸுக்ருதம் அத்வேஷம் ஆபிமுக்யம் சாது சமாகமம் பகவத் பிராப்தி
தவம் உபாயம் பொருளில் -கீழ் எல்லாம்
இதில் பாக்யம் என்ற பொருளிலே

6-மஹான்களின் தவம்
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் -சரணாகதர் உடலை ரக்ஷிக்க ஆழி எழ பதிகம் சொல்லி -ப்ரஸ்னங்கள்
பஞ்சம உபாயம் -சரம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
சடகோபர் ராமானுஜர் மா முனிகள் திருவடிகளே சரணம் –
பசு பொது சொல் மிருக மானையே சொல்லும் -நாம் மாற்றி வைத்துக் கொண்டு உள்ளோம்
பசுர் மனுஷ்யஸ்ய பகஷீ வா வைஷ்ணவ ஸம்ஸ்ரியா
தேன நவேத பிராயஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -சாண்டில்ய ஸ்ம்ருதி

கர்ம யோகம் 13 வகை
ஞான 4 வகை ஸம்ஹிதை
ஆத்ம சாம்யம் நாலு வகை
பக்தி -நாலு வகை
பிரபத்தி இரண்டு வகை ஆர்த்த திருப்த -ஸ்வ கத பர கத
இதிலும் இரண்டு வகை ஸ்வ கத பர கத -உண்டு

ஆறு மா தவங்களுக்கும் மா பெரிய பிராட்டியார் தவம் வேண்டுமே
அனைத்துக்கும் ஆதாரம் ஸ்ரேஷ்டம் இதுவே –

————-

நானே தான் ஆயிடுக
பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது

இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால் இல்லை செய்யாதே இசைகை இறே வைஷ்ணவ லக்ஷணம் –

மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று
பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக
ராம பக்தன் -விரல் விட ஒருவனே ப்ராதா என்பதால் அல்ல பரதன் என்பதால் -பாதுகா சஹஸ்ரம் )

ஸ்வ குண அபதானத்துக்காக கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணலாகாது என்றும் வேதார்த்தம் பிரகாசிக்கிறது –

—————

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ருத புஜமுச்யதே வேதாசாஸ்தரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசாவாத் பரம்

——–

ஆச்சார்ய ஹிருதயம்-ஸூரணை -153-

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே
அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப் படாதே அகவலைப்பட்டு
வளர்த்து எடுப்பார் கை இருந்து
தயிர் நெய்யமர் பாலமுதுண்டு
ஒரு மிடறாய்ப் போற்றி
ஒரு வண்ணத்து இருந்த
நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே
நல் வளம் துரப்பன் என்னும் அவற்றுக்கு முகந்து
சொல் எடுத்து சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்
கை கூப்பி வணங்கப் பாடி
ஆலியா அழையா பர அபிமாநத்திலே
ஒதுங்கின நம்பிக்கு அன்பர்
தலை மீது அடிப் பொடி உடையவர் உடையார்
போல்வாரைக் கிளி பூவை குயில் மயில் என்னும்-

அதாவது –
1-கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று
ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

2-வளர்த்து எடுப்பார் கை இருந்த –
(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞான மூட்டிய ஆச்சார்யர் அதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி )
வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,
எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும்
சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு –
இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கைவசமாய்

3-தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்-
சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே ( ஞானி தத்வ தர்சனி -)
உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து-

4-ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

5-போற்றி ஒரு வண்ணம் திருந்த –
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் –
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் –
திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும்
கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

6-நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் –
நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று
என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் –
ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் –
இன்னானதான தசையிலும்-

7-துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று
அநாராதித்த தசையிலும் –
( ஆக-ஆதரித்த -இன்னாதான – அநாதரித்த – மூன்று தசைகளிலும் )

சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்-
வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் –
என்னும் நினைவாலே உகந்து —

8-சொல்லெடுத்து சோர்ந்தவாறே
சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13-
என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்-
அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —

9-கற்பியா வைத்த மாற்றம்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே ,
முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –

10-கை கூப்பி வணங்கப் பாடி-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை
கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று
கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

11-ஆலியா அழையா —
ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–
(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே
இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )

12-பர அபிமானத்தில் ஒதுங்கின –
தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –
ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –
(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே
அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்று
ஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று
திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே
அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல
பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான
ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –

கிளி பூவை குயில் மயில் -என்னும் –
குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் –
குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி —

பூவையாவது -நாகண வாய்ப்புள் –
மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

————————————————-

நீளா தேவி நம்மைப் போல் இருவரையும் பற்றும் திரு -ததீய சேஷத்வ பர்யந்தம் -பூமா தேவிக்கும் கைங்கர்யம்
சிக்குத்தாடை -பூவை சுத்தி
வெங்கடாத்ரி கொண்டை
மகர கண்டிகை
robert clive கண்டிகை
தங்க கிளி -நம்மாழ்வார் உத்சவம் உடையவர் உத்சவம்
கடை வெள்ளிக்கிழமை உத்சவம் தாயாருக்கு
நீராட்டு உத்சவம் ஆண்டாளுக்கு சாத்தி
கோதாக்ரஜார் -தேவப்பெருமாள் மைத்துனர் உறவு
திரு ஆடிப்பூரம் போகி திருக்கல்யாணம் -தோள் மாலை -ஆண்டு முழுவதும் மாற்றிக் கொள்வார்
பிரதிநிதியாக கிளி
தானே கிளி போல் தமையனைக் கடாக்ஷிக்க –
குயிலை ஒத்து இருப்பர் பஞ்சம ராகத்தால் பாடி வசந்த காலத்தில் மக்களைக் கொள்ளை கொள்ளும்
சித்திரை வந்து உதித்தார் -சம்சார தாபம் போக்கி இன்ப வெள்ளத்தில் மூழ்க வைக்கிறார் –
ஆர்த்தரா நனைத்தல் ஈரம் –
பஞ்சமர் -தாழ்ந்தவர் இடத்திலும் ராகத்தாலே கூவி அழைத்து வாழ்வித்தார் -ஹரி தாஸர் ஆக்கி அருளி –
ஆண்டாள் இடப்புறம் -பாலமுதூட்ட பாங்காக
உலகு அளந்தானை வரக்கூவினால் தோழமை கொள்ளும் படி செய்வேன்
அதற்காகவே இங்கு கிளி

நாயனார் -கிளி பூவை குயில் மயில் என்னும் பராபிமான பூதர் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் பராங்குச பாத பக்தம்
குயில் அடுத்தவரால் பரிபாலனம் செய்யப்பட்டு இருக்குமே –
மாதரார் கண் வலையில் அகப்படாமல் –தாமரைக்கண்களின் வலையில் அகவலைப்பட்டு

திசைகளில் ஒளிரும் கமலச் செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும்…
இசைவுடன் அதிலே இணைந்து அமைந்து இனிமை கூட்டிடும் இடது கழலும்…
இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற்கழலும்…
திடமென அழகை எல்லாம் சேர்த்த திவ்யமான கணுக்கால் எழிலும்…
அதிசய ஒளிமுகம் சுருளாய் இறங்கும் அழகைப் போல் இரு முழந்தாள்களும்…
உதிரென அமையும் திருத்தொடைகளும், பொன்னரைஞாணைப் பூண்ட அழகும்…
அந்தி நிறத்தில் அமையும் ஆடையும், அஞ்சலி செய்யும் தடக்கைகளும்…
உந்தி மலரும் உயரிய கரமும், உடன் இணைந்திடும் கணுக்கைகளும்…
தங்க வளையலைத் தாங்கிய அழகும், தானாய் மடிந்த முழங்கைகளும்,
அங்கம் விரிந்து நீண்டு அமைந்த, அழகிய புஜங்கள் ஆடும் அழகும்,
பளபளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும்,
தளமாய்ப் பிரிந்த முந்நூல் அழகும், வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்…
வலம்புரிச் சங்கின் சுழிபோல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும்…
உலகை மயக்கும் மந்திர முகமும், உரையை வழங்கும் திருப்பவளமும்…
மந்தகாஸமும், ஸ்படிகமயத்தில் மண்டலம் போற்றிடும் கபோலங்களும்…
செங்கநகத்தில் செழித்து வளர்ந்து செவிமேல் அமைந்த கர்ணபாசமும்…
குடிமூக்கழகும், கோலத்தாமரை குடிகொண்டாடும் இரு நயனங்களும்…
வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்…
சந்திரகிரணம் ஒன்று கலந்து, சரியும் அழகாய்த் தாமரை நாமமும்…
இந்திரை மலராய்த் திருவடிபோலே, இலங்கி வளரும் ஸ்ரீசூர்ணமும்…
உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும்,
நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும்,
பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும்,
கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்,
காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜநே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!
வளர்த்து எடுப்பார் கை இருந்து –இஷ்டமாக வளர்த்து எடுத்துக் போகும் ஆச்சார்யருக்கு விதேயராய் –
அர்த்த விசேஷங்கள் அடிசில் பால் அமுது –

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

பர ப்ருத -குயில்

ஸ்ரீஎம்பார் -ஸ்ரீஎம்பெருமானார் ஆஸ்ரயித்து கொண்ட ஏற்றம் உண்டே -ஸ்ரீஉடையவர் உடையார் இவரே –
74 சிம்ஹாசனபதிகளே ஒரு உருவாக தங்கக்கிளி

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

”ஸ்ரீ” சப்தார்த்தம்–

January 5, 2022

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

ஆக –
திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே
பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய்
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம் விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –

—————————————————————————————-

ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் –
வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி இவ் யுபாய ஸ்வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்

அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-

அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ் ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -ஸ் ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –

வ்யுத்பத்தித் த்வயத்தாலும் –
சேவிக்கப் படா நின்றாள் –
சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –
அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –

விஷ்ணு பத்நீ –
விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ –
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய்
பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
த்வம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –

ஆக –
மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –

புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ –
ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-

ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே –
சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே
ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –

அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் –
இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-

கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க –
அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –

பின்பு –
இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –

பின்பு
அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது –
நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –

நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து

இவை படுகிற நோவைக் கண்டு –
இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –

சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால் அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது

பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று
நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்

ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது

அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று –
நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –

தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –
ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –

ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –

சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –

அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்

ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-
ந கச்சின் ந அபராத்யதி -என்னும்

இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று
புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –

இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –

அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே –
அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –

நாயந்தே
இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –

ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று
நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி
தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –

அவனுடைய பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –

பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –

சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக் குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –

ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –

கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –

அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –

இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ –
சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –

ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது –
உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –

அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று
இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –

ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –

————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ பரந்த படி -த்வய -பிரகரணம்

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————–

ஸ்ரீ சப்தார்த்தம்
1- அதில் ஸ்ரீ மத் என்கிற அம்சத்தாலே புருஷகாரத்தையும் –
புருஷகாரத்தினுடைய நித்ய சந்நிதியையும் சொல்லுகிறது –
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
பிராட்டியுடைய புருஷகார பாவத்துக்கு உபயுக்தங்களான குண விசேஷங்களைச் சொல்லுகிறது –

அக்குண விசேஷம் ஆகிறது உபய சம்பந்தம் –
அதில் கர்மணி வ்யுத்பத்தி சேதனனோடு உண்டான பந்த விசேஷத்துக்கு பிரகாசகமாய் இருக்கும்
கர்த்தரி வ்யுத்பத்தி ஈச்வரனோட்டை சம்பந்தத்துக்கு பிரகாசகமாய் இருக்கும் –

சேதனனோடே மாத்ருத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –
ஈஸ்வரனோடே மஹிஷீத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –

மாத்ருத்வ லஷண பந்தத்தாலே புருஷகார நிரபேஷமாக சகல சேதனர்க்கும் ஆஸ்ரயணீயையாய் இருக்கும் –
மஹிஷீத்வ பிரயுக்தமாக ஈஸ்வரனோடே நித்ய சம்யுக்தையாய் இருக்கையாலே புருஷகார நிரபேஷமாக ஈஸ்வரனை சேவியா நிற்கும் –

யஸ்யா கடாஷணம் அநு ஷணம்-இத்யாதியாலே
வ்யுத்பத்தி த்வயத்தாலும் உண்டான அர்த்தத்தை ஆழ்வான் அருளிச் செய்தார்

ஸ்ருணோதி ஸ்ராவயதி என்கிற நிறுக்தி விசேஷத்தாலே
ஸ்ரீ யதே ஸ்ரயதே என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்த விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸ்ருணோதி என்றது கேளா நிற்கும் என்றபடி –
ஸ்ராவயதி என்றது கேட்பியா நிற்கும் என்றபடி –

ப்ரதீப்த சரணத்தில் பொருந்தாதாப் போலே சம்சாரம் அடிக் கொதித்து
பகவத் விஷயத்தை கிட்டி யல்லது தரிக்க மாட்டாத படியான தசா விசேஷத்தை யுடையனாய் –
பகவத் சமாஸ்ரயண உன்முகனான சேதனன் –
யத் ப்ரஹ்ம கல்ப இத்யாதிப் படியே கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
சிறிது வரையிட்டுக் காட்டக் கடவதல்லாத படி க்ரூரங்களாய் இருக்கிற
அக்ருத்யகரண க்ருத்யாகரண பிரமுகங்களான அபராத விசேஷங்களை கரண த்ரயத்தாலும்
அநாதி காலம் கூடு பூரித்து ஈஸ்வரனுடைய -ஷிபாமி – ந ஷமாமி -என்கிற
வெட்டிய சொற்களுக்கு விஷயபூதனாய் போந்தான் ஒருவன் ஆகையாலே
அநாதி கால ஆர்ஜிதங்களான தன்னுடைய அபராத விசேஷங்களையும் –
ஈஸ்வரனுடைய நிரந்குச ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து பீதனாய்
பிராட்டியுடைய நிரவதிகமான காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்கு உண்டான பந்த விசேஷத்தையும் புரச்கரித்து
சாபராதனாய் அநந்ய சரணனாய் இருக்கிற எனக்கு அபராத நிவ்ருத்தி மாத்ரத்திலே ப்ரசன்னையாய்
அசரண்ய சரண்யையாய் இருக்கிறவள் திருவடிகளை ஒழியப் புகல் இல்லை என்று
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தையை தானே கேளா நிற்கும் –
ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்யும் வார்த்தையை அவன் கேட்கும்படி பண்ணா நிற்கும் –

இச் சேதனனுக்கு இருவரோடும் பந்தம் உண்டாய் இருக்க அவனுக்கு அவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில்
மாத்ருத்வ நிபந்தனமான வாத்சல்யாதி ரேகத்தாலும்
ஈச்வரனோபாதி காடின்ய மார்த்தவங்கள் கலந்து இருக்கை யன்றிக்கே கேவல மார்த்தவமேயாய்
சாபராதரான சேதனரை அபராதா நுகுணமாக நியமிக்கும் இடத்தில்
மர்ஷயாமீஹ துர்பலா -என்கிறபடியே அசக்நையாய் இருக்கையாலும்
தவம் நீசச்சவத் ஸ்ம்ருத என்கிறபடியே தன் திருவாயாலே இப்படி புல்லிதமான வார்த்தையை அருளிச் செய்ய வேண்டும்படி
விபரீத புத்தியாய்-தன் திறத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ணி
ராவணோ லோக ராவண -என்கிறபடியே இருந்ததே குடியாகக் கையெடுத்துக் கூப்பிட வேண்டும்படி
பர ஹிம்சையே யாத்ரையாக யுடையனாய் இருக்கிற
ராவணனுடைய தண்ணிமையைப் பாராதே
அவனைக் குறித்து -தேன மைத்ரி பவது -என்றும் –
மித்ர மௌபயிகம்கர்த்தும் -என்றும் ஹிதோபதேசம் பண்ணுகையாலும்

ராஷசிகள் ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் ஸ்வப்னம் கண்டு அத்தாலே பீத பீதைகளாக -த்ரிஜடை-
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-என்று
நாம் விடாதே இருந்து தர்ஜன பர்த்சனங்களைப் பண்ணி நலிய
நம்மாலே நலிவு படுகிறவள் தானே நமக்கு ஆபத்து உண்டான காலத்திலேயே
நம்மைக் கைவிடாதே ரஷிக்கும் என்று சொல்லுகையாலும்

இப்படி பிறர் சொன்ன அளவன்றிக்கே பிராட்டி தானும் இவர்கள் நோவுபடுகிற சமயத்தில்
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள்
நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா -என்று அபய பிரதானம் பண்ணுகையாலும்

இப்படி வ்யவஹார மாத்ரமேயாய் அனுஷ்டானம் விபரீதமாகை யன்றிக்கே திருவடி வந்து
ராவணன் பட்டான் -பெருமாள் விஜயிகளானார்-என்று
விண்ணப்பம் செய்த வார்த்தையைக் கேட்டு இவன் பண்ணின உபகாரத்துக்கு
சத்ருச பிரத்யுபகாரங்கள் காணாதே தடுமாறுகிற அவஸ்தையிலே

பத்து மாசம் தேவரீரை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணி நலிந்து போந்த இப்பெண் பயல்களை
நான் நினைத்த வகைகளிலே நலியும்படி அவர்களைக் காட்டித்தர வேணும்
நான் முன்பு தேவர் திருவடிகளிலே வந்த போது இவர்கள் பண்ணின நலிவைப் பொறுக்க மாட்டாதே நொந்து போனேன் –
இப்போது இவர்களை நிரசிக்கைக்கு ஒரு ப்ரதிபந்தகம் இல்லை –
இவர்களை ஐம்பது அறுபது வகைகளாலே கொல்லும் வகை சொல்லா நின்றேன் –
இவனுக்கு நாம் பரிசிலாகக் கொடுக்கலாவது என் என்று தடுமாற வேண்டா –
இவர்களை நிரசிக்கும் படி என்கையிலே காட்டித் தருமது ஒழிய
எனக்குப் பண்ணும் பிரத்யுபகாரம் வேறில்லை என்று விண்ணப்பம் செய்ய

திருவடி பண்ணின உபகாரத்தையும் ராஷசிகள் பண்ணின அபகாரத்தையும் பாராதே
அப்போது அவர்களுடைய அச்சம் ஒன்றுமே திரு உள்ளத்திலே பட்டு
அவர்களுடைய கண் குழிவு காண மாட்டாதபடியான மார்த்தவத்தாலே
ந கச்சின்னா பராத்யதி -என்றும் -க குப்யேத்-என்றும் -துர்ப்பலா -என்றும்
திருவடியோடே மன்றாடி ஆர்த்ராபராதைகளான ராஷசிகளை ரஷிக்கையாலும்

இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது பெருமாள் நிறுத்திப் போகத் தேடின அளவிலே
சீதாமுவாச -என்று பிராட்டி புருஷகாரமாகப் பெருமாளோடு கூடப் போகையாலும்

ஸ்ரீ விபீஷணப் பெருமாள் ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ என்று ஜீவிக்க வேண்டி இருந்தாயாகில்
பெருமாள் தம்முடைமையும் தாமுமாகச் சேர இருக்கும் படி
பண்ணப் பார் என்று ராவணனைக் குறித்து பெருமாளும் பிராட்டியும் சேர இருக்கைக்கு உறுப்பான
வார்த்தைகளைச் சொல்லியும்
த்ரிஜடையைப் பிராட்டிக்கு வ்யசனங்களில் உசாத் துணையாக வைத்தும் இப்படி
பிராட்டி முன்னாக பெருமாளை சரணம் புகுகையாலும்

மஹா ராஜர் திருவாபாரணம் முன்னாகப் பெருமாளைப் பற்றுகையாலும் –
காகம் அபராதத்தைப் பண்ணி வைத்து பிராட்டி சந்நிதியிலே தலை யறுப்புண்ணாதே பிழைக்கை யாலும்

ராவணனுக்கு அத்தனை அபராதம் இன்றிக்கே இருக்க பிராட்டி சந்நிதி இல்லாமையாலே தலை யறுப்புண்கையாலும்

பின்னையும் இளைய பெருமாளைக் குறித்து பிராட்டி தன்னை வனத்திலே விட்டுப் போகா நிற்க
தம்பிமாரோடே ஒக்க நாட்டை ரஷிக்க விண்ணப்பம் செய்யும் என்று அருளிச் செய்கையாலும்

மற்றும் இவை தொடக்கமான ஸ்வ பாவ விசேஷங்கள் எல்லாவற்றாலுமாக
ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் போது இவள் புருஷகார பூதையாகக் கடவள் –

முக்யமாக எம்பெருமானை ஆஸ்ரயிக்கை யாவது -பிராட்டி முன்னாக ஆஸ்ரயிக்கை –
ஆச்சி சிறியாத்தானுக்கு பகவச் சேஷமாய் அவற்றை நெடும் காலம் அகன்று போந்த இவ்வாத்மாவை
எம்பெருமானோடே இணைக்கக்குப் பற்றாசாக நமக்குப் பிராட்டி யுளள் என்று நிர்ப்பரனாய் இரு என்று அருளிச் செய்தார் –

சர்வஜ்ஞனாய் சர்வசக்தியாய் இருக்கும் ஈஸ்வரன் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்கிறபடியே
ஹ்ருதிச்தனாய்க் கொண்டு
சேதனர் பண்ணும் அபராதங்களைக் குறித்து அவற்றுக்கு ஈடாக நியமிக்கையாலே
சாபராதரான சேதனர் சரண உக்தியைப் பிரயோகித்தால் அதுவும் அபராத கோடிகடிதமாய் இருக்கும் இறே

ஆகையாலே அநாதி காலம் தான் பண்ணிப் போந்த அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் போது
அந்தபுர பரிகரமாய் நின்று விண்ணப்பம் செய்ய வேண்டுகையாலே –
சர்வஜ்ஞனான ஈஸ்வரனையும் கூட நிருத்தரனாம் படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும் –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்றும் –
மலராள் தனத்துள்ளான் -என்றும் –
மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் -என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்றும்
தன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தாலும்
மற்றும் உண்டான உசித உபாய விசேஷங்களாலும்
சேதனனுடைய அபராதங்கள் ஈஸ்வரன் திரு வுள்ளத்தில் படாதபடி பண்ணி
அநாதி காலம் அகன்று போந்த இருவரையும் சேர்க்கக் கடவதாய் இருக்கிற பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று

——————————————————————————————————————-

”ஸ்ரீ” சப்தார்த்தம்.
” ஸ்ரீ ” என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்.
இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறுவிதமாக அர்த்தம் கூறப்படுகின்றது.

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க,

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று)

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து,

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து,

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான
அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற
(அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி.

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் தான் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் எமை இன்னடி சேர்த்து அருளும்
திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே –2–

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் -சேதனம் அசேதனங்கள் ஆகிய அனைத்தும் தன்னை அடைந்து நிற்க
தான் அடைந்து -பிராட்டியாகிய தான் சர்வேஸ்வரனையும் சகல வஸ்துக்களையும் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து-சேதனர்கள் பயத்தால் கூறும் வார்த்தைகளை கேட்டும் அவற்றை எம்பெருமானை கேட்ப்பித்தும்
அகற்றும் வினை விலக்கி யிருதலை யன்புதனால் -சேதனர் எம்பெருமானார் இரண்டு பக்கங்களிலும் உள்ள அன்பினால்
எமை இன்னடி சேர்த்து அருளும் திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே

ஸ்ரீ -ஆறுவித வ்யுத்பத்திகள் உண்டே –
ஸ்ரேயதே அடையப்படுகிறாள் -ஸ்ரீயதே -அடைகின்றாள் –
அவனையும் அடைகிறாள் -சேதனர்களுக்குள் உள்ளும் புறமும் அடைகிறாள்
கேட்கிறாள்-கேட்ப்பிக்கிறாள்
கர்மங்களை நீக்குகின்றாள்-பரிபக்குவ நிலை கைங்கர்யம் செய்ய அருளுகிறாள்

இந்த மிதுனம் நம் மனத்தை விட்டு அகலாது நித்ய வாஸம் செய்து அருளுகின்றார்கள் என்றவாறு –

சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோருக்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நம் நிலை நாம் பெரும்பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக் களையற வெண்ணினமே –12-

இலக்காம் வடிவில் இணை யடிகள் -ஆஸ்ரிதர்கள் தியானிக்க இலக்காகும் திரு மேனியில் ஒரு பாகமாகிய இரண்டு திருவடிகளும்
பார்க்கும் சரண் -சேதனர்கள் பிரதானமாக கருதும் உபாயமான ஸ்ரீ மன் நாராயணனும்
நாம் பெரும் பேறு ஏற்கின்ற வெல்லைகள் -நாம் அடையும் பிரதான பலனான ஸ்ரீ மன் நாராயணனும்
கைக்கொள்ளும் சரம புருஷார்த்தமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் முதலியன –

1-சேர்க்கும் திருமகள்-ஸ்ரீ சப்தார்த்தம்
2-சேர்த்தியில் மன்னுதல் -மதுப்பின் அர்த்தம்
3-சீர்ப் பெரியோருக்கு ஏற்கும் குணங்கள்-நாராயண சப்தார்த்தம்
4-இலக்காம் வடிவில் இணை யடிகள் -சரண பதார்த்தம்
5-பார்க்கும் சரண் -சரணம் பதார்த்தம்
6-அதில் பற்றுதல் -பிரபத்யே யார்த்தம்
7-நம் நிலை -அகிஞ்சனர் அநந்ய கதிகள் ஆகிய நம் நிலை
8-நாம் பெரும் பேறு -ஸ்ரீ மன் நாராயண பதார்த்தம்
9-ஏற்கின்ற வெல்லைகள் -ஆய சப்தார்த்தம்
10-எல்லாக் களையற-நம சப்தார்த்தம்

வெண்ணினமே–ஆக இந்த பத்து அர்த்தங்களையும் அருளும் ஸ்ரீ த்வய அனுசந்தானம் செய்வதே காலஷேபம் -என்றவாறு –

அருள் தரு மடியவர்பான் மெய்யை வைத்து தெருள் தர நின்ற தெய்வநாயக! நின்
அருளெனுஞ் சீரோரரிவை யானதென இருள் செக வெமக்கோரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன. நின் திருவுருவில் அணியமராக வலங்கலா யிலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படியேற்க அன்புடனுன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித் தீண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக நின்னுடன் சேர்ந்து நிற்கு நின் திருவே.”– –(மும்மணிக்கோவை. 1)

[தெருள் – பூர்ண ஜ்ஞாநம் ;
அருள் எனும் சீர் – கிருபை என்கிற கல்யாண குணம் ;
ஓர் — ஒப்பற்ற;
அரிவை – பெண் (இருபது முதல் இருபத்தைந்தளவுமான பருவமுடையவள்);
இருள் – அஜ்ஞாநாத்யந்தகாரம் ;
செக – நசிக்க ;
விளக்கு — நிரதிசயாநந்த ரூபமான பகவத் ஸ்வரூபம்,
அபராதாநுகுணமாக தண்ட தரனான அவன்படி ஒளி விளக்கு,
பெரிய பிராட்டியின்படி இன் விளக்கு,
ஏகதத்வம் என்னலாம்படி ஸர்வாவஸ்தையிலும் ஸ்ரீ விசிஷ்டனான எம்பெருமான்படி இன்னொளி விளக்கு.
ஆகையாலே த்வத் விசிஷ்டையான பெரிய பிராட்டியாரின்படி ஓரின்னொளி விளக்கு ;
மணிவரை – மரகதமலை ;
திருவுருவில் – திருமேனியில் ;
ஆகம் – திருமார்பு;
அலங்கலாய் — மாலையாய் ;
இலங்கி – விளங்கி ;
நின்படிக்கெல்லாம் – என்னென்ன யோனியுமாய்ப் பிறக்குமுன் வகைகளுக்கெல்லாம் ;
அன்புடன் – இருதலையன்புதனால்.) என்றும் ;

வினை விடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி வெருவுரை கேட்டவை கேட்க விளம்பினாளும்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற தன்றிரு மாதுடனிறையுந் தனியா நாதன் -(அமிருதாசுவாதினி. 8) –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.