Archive for November, 2021

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

இதுவரை சர்வ வேதாந்தங்களும்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன்
என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது

அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று
என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் –
காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன

பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )
கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை
வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி

முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால்
இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான்
அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1-

ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-

முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –

ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –

அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்

ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்

இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –

———–

ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-

வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து

——————————

இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –

ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-

வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –

ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே

ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –

————

மூன்றாம் அதிகரணம் –ந விலக்ஷணத்வாதி கரணம்

ஸூத்ரம் –138– ந விலக்ஷணத்வா தஸ்ய தாத் வஞ்ச சப்தாத் –2-1-4-

இவ்வாறு கபில ஸ்ம்ருதியையும் யோக ஸ்ம்ருதியும் முரணானவை ஆதலின்
அவற்றால் வேதாந்த அர்த்தம் பாதிக்கப்படாது என்று காட்டி
பிறர் கூறும் தர்க்கங்களால் ஏற்படும் பாதத்தை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி –

வேதாந்தங்களுக்கு ப்ரஹ்மம் காரணம் என்பதில் நோக்கமா -அன்றி -பிரதானம் காரணமா என்று ஸந்தேஹம் தோன்றுகிறது
அங்கு பிரதான காரணத்வமே யுக்தமானது
ஏன் எனில்
ஜகத் ஜடமாய் இருப்பதால் ப்ரஹ்மத்தை விட ஸஜாதீயமான பிரதானம் காரணமாகத் தக்கது
என்ற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்

ந விலக்ஷணத்வாத்
அபிமானி வ்யபதேசாச் சான்ய
என்கிற இரண்டு ஸூத்ரங்களாலும் நிரஸனம் செய்கிறார்
இவை இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்

இதி சேத் ந –என்று கூறுவது பொருந்தாது
ஏது எனில்
அஸ்யக -இந்த ஜகத்துக்கு
விலக்ஷணத் வாத் -ஜடத்வாதிகளால் ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இருப்பதால் என்றபடி
ஸ லக்ஷணங்களுக்கே ம்ருத் கடாதிகளைப் போலே கூடும் என்பதால்
அத– ஆகையால் –ஜகத்துக்கு சமமான ப்ரதானமே
காரணம்
ததாத் வஞ்ச சப்தாத் -ப்ரஹ்மத்துக்கு ஜகத் விலக்ஷணத்வமும்
விஞ்ஞானம் சா விஞ்ஞானஞ்ச -முதலிய சப்தங்களால் அறியப்படுகிறது

ஆபோ வா அகா மயந்த –தம் ப்ருதி வ்ய ப்ரவீத் -முதலிய வாக்கியங்களில்
பிருத்வீ முதலிய அசேதனங்களுக்கும் ஞான கார்யமான காமனை முதலியவை கூறப்படுவதால்
ஞானாச்ரயம் என்ற முறையில் ப்ரஹ்மத்துடன் ஸாம்யம் உள்ளபடியால் உத் பத்தி தவறு இல்லையே என்றால்
அதற்கும் பூர்வ பக்ஷி விடை கூறுகிறார்

2-1-4-விலஷணத்வாத் அதிகரணம் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்

-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

———————-

ஸூத்ரம் –139-அபிமானி வ்யபதேசஸ் து விசேஷ அனு கதிப்யாம் –2-1-5-

து -என்கிற சப்தம் சங்கையை நிவர்த்திக்கிறது
ப்ருத்வீ அப்ரவீத் -முதலிய இடங்களில் ப்ருத்வீ யாதிகளின் அபிமானி தேவதைகளைக் குறிப்பதாகும்
பிருத்வீ முதலிய அசேதனங்களைக் குறிக்க வில்லை
ஏன் எனில்
விசேஷ அனு கதிப்யாம் –ஹந்தா ஹமிமா -திஸ்ரோ தேவதா -என்று
ப்ருத்வீ யாதிகளை தேவதை என்று விசேஷயத்தால் குறிப்பதாலும்
அக்னிர் வாக் பூத்வா முகம் ப்ராவிஸத் -முதலியவற்றால்
அக்னி முதலியவற்றுக்கு வாகாதிகளுக்கு அனு கதி -பின் பற்றிச் செல்லுதல் கூறுவதாலும்
அசேதனத்வேந ஜகத்துக்கு ஸஜாதீயமான பிரதானம் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

இதற்கு ஸித்தாந்தி கூறும் விடை –

—————

ஸூத்ரம் –140-த்ருஸ்ய தேது –2-1-6-

து சப்தம் பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறது
ப்ரஹ்மத்தை விட விலக்ஷணமான ஜகத்துக்கு ப்ரஹ்ம கார்யத்வம் என்பது கூடும்
ஏன் எனில்
உலகில் தேனடையில் இருந்து விலக்ஷணமான கிருமி போன்றவை தோன்றக் காணப்படுகிறது அல்லவா
அப்படியே காரியமும் காரணமும் விலக்ஷணமாய் இருப்பது தவறு அல்லவே
ஆகவே ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாய் இருக்கலாம் –

———————

ஸூத்ரம் –141-அஸத் இதி சேந் ந ப்ரதிஷேத மாத்ரத் வாத் –2-1-7-

கார்யம் காரணத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டால்
காரணத்தில் கார்யம் இல்லாததால் அஸத் காரிய வாதம் சரி என்றதாகும்
அசத்தான பொருள் தானே தோன்றுகிறது எனக் கொள்ள நேரும்
அப்படியாயின்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம என்று
ஜகத்தையும் ப்ரஹ்மத்தையும் சாமா நாதி கரணமாகச் சொன்னது பொருந்தாது
இதி சேந் ந–இப்படிக் கூறுவது பொருந்தாது
ப்ரதிஷேத மாத்ரத் வாத் –கார்ய காரணங்கள் ஒரே விதமாகவே இருக்க வேண்டும் என்கிற நியமம் மட்டும் தடுக்கப் பட்டது அன்றி
அவை ஒரே த்ரவ்யம் என்பது தடுக்க வில்லை
காரண அவஸ்தையில் இருக்கும் ஒரே த்ரவ்யமே காரியமான அவஸ்தையை அடைந்து கொண்டு
ஸஜாதீயமாகவும் விஜாதீயமாகவும் இரண்டு அவஸ்தைகளையும் அடைகிறது என்பது கருத்து

—————–

ஸூத்ரம் –142-அபீதவ் தத்வத் பிரசங்காத் அசமஞ்சஸம் –2-1-8-

இது பூர்வபக்ஷ ஸூத்ரம்
அபீதவ் -ஜகத்துக்கு ப்ரஹ்மத்தினிடம் -அப்யய -பிரளய காலத்திலும் -உத்பத்தியிலும்
தத்வத் பிரசங்காத் -முன் போலவே பிண்டத்தவம் கடத்தவம் முதலிய அவஸ்தைகளை யுடைய மண் போலே
ப்ரஹ்மத்துக்கும் ஸர்வஞ்ஞத்வம் அஞ்ஞத்வம்–முதலிய நிலைகள் வந்துவிடுமாதலால்
முரணான அர்த்தத்தைச் சொல்லும் வேதாந்தங்களுக்கு
அசமஞ்சஸம் -என்ற நிலை வந்துவிடும்
சர்வஞ்ஞதிகளை யுடைய ப்ரஹ்மமே
அஞ்ஞத்வ விசிஷ்ட ஜகத்தாகிறது-என்று
வேதாந்தங்கள் கூறுகின்றன என்றால்
ப்ரஹ்மம் காரணம் என்று சொல்வது தகாது என்பது பூர்வ பக்ஷம்

இந்த சங்கையை பரிஹரிக்கிறார்

————

ஸூத்ரம் –143-ந து த்ருஷ்டாந்த பாவாத் –2-1-9–

ந -ப்ரஹ்மத்தினிடம் அஞ்ஞத் வாதிகள் பிரசங்கிக்க மாட்டா
அதனாலேயே வேதாந்தங்களை அசமஞ்சஸ்த்வம் இல்லை
து -ஸப்தம்
அஞ்ஞத்வ பிரசங்கம் அசம்பாவிதம் என்று காட்டுகிறது
ஒரு வஸ்துவுக்கு இரு அவஸ்தைகள் ஏற்பட்டால் குண தோஷங்களின் வ்யவஸ்தைகளில் த்ருஷ்டாந்தம் இருப்பதால்
ப்ரஹ்மத்திடம் காரணத்வம் கார்யத்வம் என்கிற இரு அவஸ்தைகள் இருப்பதாக சரீரகதமான கர்ம வஸ்யாதிகளும் அதில் ஓட்டுவது இல்லை
ஆதலால் தவறு ஏதும் இல்லை
மனிதன் எப்படி பிறந்த பின் பாலனாகவும் யுவாவாகவும் முதியனாகவும் ஆகிறானோ அதே போல்
அசேதனமான மனித சரீரத்தில் பிறப்பும் பாலத்தவாதிகளும் ஏற்படினும் ஆத்மாவில் ஏற்படுவது இல்லையே
ஆத்மாவிடம் ஏற்படும் சுக துக்காதிகளும் சரீரத்துக்கு இல்லை அல்லவா
இதே போல் அவஸ்தா பேதம் அடையும் ப்ரஹ்மத்தினிடன் சேதன அசேதன தோஷங்கள் கலப்பது இல்லை
ஆகவே வேதாந்தங்கள் ஸமஞ்சசமே –

—————–

ஸூத்ரம் –144-ஸ்வ பக்ஷ தோஷாச் ச –2-1-10-

ப்ரஹ்ம காரண வாதம் தோஷம் அற்றது என்பது மட்டும் அன்று
பிரதான காரண வாதம் மிக்க தோஷங்களை யுடையது என்பதால் அதை விட்டு ஒழிக்க வேண்டும்

அவர் மதத்தில் நிர்விகாரமான புருஷனுக்கு பிரகிருதியின் சேர்க்கையால்
பிரகிருதியின் தர்மத்தைத் தன்னிடம் உள்ளதாய் பிரமித்து அதனடியாக ஜகத்தின் ஸ்ருஷ்டி கூறப்படுகிறது

பிரகிருதியின் இருப்பை மட்டும் சன்னிதானம் என்றால் முக்தனுக்கும் அத்யாஸம் வரும்
விகாரங்கள் சன்னிதானம் என்றால் எல்லா விகாரங்களை அத்யாசத்தாலே ஏற்படுவதால்
அத்யாசத்திற்கு விகாரம் ஹேது என்று கூறுவது முரணாகும்

இவ்வாறு மிகவும் அசமஞ்சஸமான பிரதான காரகத்வம் இகழத் தக்கதாம் –

———-

ஸூத்ரம் –145-தர்க்க அப்ரதிஷ்டா நா தபி–2-1-11-

கபில சித்தாந்தம் தர்க்கத்தை மூலமாகக் கொண்டது ஆதாலால்
புத்த மதஸ்தர் கூறிய தர்க்கங்களால் அது பாதிக்கப்பட்ட படியால்
தர்க்கத்துக்கு ஓர் முடிவே இராமையாலே அது யுக்தமான சித்தாந்தம் அன்று

————————

ஸூத்ரம் –146-அந்யத அநு மேயம் இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க –2-1-12-

அந்யத அநு மேயம்
இதற்கு முன் உள்ள தர்க்கங்களாலே பாதிக்க ஒண்ணாதபடி
பிரதான காரணத்தை அனுமானிக்கிறோம் என்று கூறினால்
இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க
இப்படியும் உன்னை தர்க்கத்தில் திறமை உள்ளவன் ஒருவன் ஏற்படக்கூடுமாதலின்
தோஷத்துக்கு விமோசனமே – –

——————-

நான்காவது அதிகரணம் –சிஷ்டா பரிக்ரஹா அதிகரணம்

ஸூத்ரம் –147-ஏதேந சிஷ்டா பரிக்ரஹா அபி வ்யாக்யாதா –2-1-13-

ஏதேந -கபில ஸ்ம்ருதியை நிராகாரணம் செய்த ஹேதுவான
நிலையற்றது என்ற ஹேதுவால்
சிஷ்டா பரிக்ரஹா அபி -சிஷ்டர்கள்
கணாதிகளின் ஸ்ம்ருதிகளும்
வ்யாக்யாதா -நிரஸனம் செய்யப்பட்டன என்று வ்யாக்யாதங்கள் என்பது கருத்து –

——————

ஐந்தாம் அதிகரணம் –போக்த்ரா பத்தி அதிகரணம்

ஸூத்ரம் -148–போக்த்ரா பத்தேர விபாகஸ் சேத் ஸ்யால் லோகவத் –2-1-14-

ப்ரஹ்மத்துடன் ஜகத்தில் உள்ள விகாரங்கள் ஒட்டாது என்பதற்கு ஜீவனை த்ருஷ்டாந்தமாக –
ந து த்ருஷ்டாந்த பாவாத் -என்கிற ஸூத்ரத்தில் காண்பித்தது
அப்படியானால் ஜீவனுக்கு உள்ளது போல் சர்வ சரீரத்வம் உள்ளமையால் ப்ரஹ்மத்துக்கு
சுக துக்க போக்த்ருதம் உண்டோ என்கிற சங்கையிலே
இவ்வதி கரணம் ப்ரவ்ருத்தம் ஆகிறது

ஸர்வாத்ம பூத ப்ரஹ்மத்துக்கு தன் சரீரமான ஜீவனைக் காட்டிலும்
நிரதிசய ஆனந்த ஏக ஸ்வரூபமான பேதம் கூறுவது
பொருந்துவதா இல்லையா என்ற சங்கைக்கு
பொருந்தாது என்பது பூர்வ பக்ஷம்

ப்ரஹ்மத்துக்கு ஜகத்து சரீரமானால் ஜீவனுக்குப் போலே ஸ போக்த்ருத்வம்
வந்து சேரும் என்பதால் பேதமில்லை -அபேதமே
அபஹத பாப்மத்வாதி ரூபமான விபாகம் கூடாது
இதி ஸ்யாத் -என்றால் விபாகம் வரத்தான் வரும்
ப்ரஹ்மம் கர்ம வஸ்யம் இல்லையால் ஜீவனைக் காட்டிலும் விபாகம் கூடும்
சுக துக்க போக்த்ருத்வங்கள் ச சரீரத்வம் காரணம் அன்று
கர்ம வஸ்யத்வமே காரணம்
அகர்ம வஸ்ய முக்தனுக்கு போக்த்ருத்வம் காணப்படாமையாலே -அதே போன்று
ஈஸ்வரனுக்கு சுக துக்க போக்த்ருவான்கள் பிரசங்கியாது
லோகவத் –
லோகத்தில் ராஜ வஸ்யர்களான ப்ருத்யர்களும் சாசகனான ராஜாவுக்கும் ஸ சரீரத்வம் இருந்தாலும்
ஸாஸனத்தை மீறினால் துக்கம் ப்ருத்யர்கட்க்கு இருக்க
ராஜாவுக்கோ தன் ஸாஸனத்தை மீறியதாக துக்கம் ஏற்படுவது இல்லை
அது போலவே ஸர்வ லோக நியந்தாவான ஈஸ்வரனுக்கு சுக துக்கங்கள் இல்லை என்பது திரு உள்ளம் –

————–

ஆறாம் அதிகரணம் -ஆரம்பணாதி கரணம் —

ந விலக்ஷணத்வாதி கரணத்தில்
கார்ய காரணங்கள் ஸ லக்ஷணமாகவே இருக்க வேண்டும் என்று நியமம் சொல்லும்
சாங்க்யனை நிரஸனம் செய்து
இதில்
கார்ய காரணங்களுக்கு விலக்ஷணதை சாதிப்பது போல் ஸ்வரூப பேதமும் சித்திக்கட்டும் என்று
எழுந்த வைசேஷிகன் கேள்விக்கு
காரியமும் காரியங்களும் அநந்யங்கள் -அபின்னங்கள் -என்று விளக்குவதன் மூலம்
கண்டனம் செய்கிறார் -என்று சங்கதி

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் காண்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும் வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –கார்யப் பொருளாய் மாறிய நிலையிலும்
நேற்று நாம் பார்த்த மண்ணே குட வாணாயகவும் மாறி விட்டது என்று காரணமான மண் நினைவு படுவதாலும்
மண்ணின் அவஸ்தைகள் பல இருப்பினும் த்ரவ்யம் ஒன்றே என்பது ப்ரத்யக்ஷ ஸித்தமாம்
மண்ணைத் தவிர வேறே பொருள் தேவை இல்லை என்பதாம்

ஒரே மண் என்னும் த்ரவ்யம் -பிண்டம் கட்டி உருண்டை குடம் முதலிய அவஸ்தை மாறுபாடுகளால்
மண் கட்டி குடம் ஓடு முதலிய பெயர்களைப் பெறுகுவது போல்
புத்தி பேதம் ஸப்த பேதம் முதலிய அவஸ்தா பேதங்களை சார்ந்து இருப்பதால் அவை வஸ்து பேதத்தை சாதிக்க மாட்டாதவை
ஆகவே மண் என்ற ஒரே பெயர் காரண காரியமாக இருப்பது போல்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸூஷ்ம அவஸ்தையில் காரணமாயும் ஸ்தூல அவஸ்தையில் கார்யமாயும் இருப்பதால்
ஜகத்துடன் அநந்யத்வம் -பேதமற்ற தன்மை என்று பெறுகிறது

இங்கு
வாசா ரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல்
ஆரம்பண சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டதால்
வாசா ரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்று உணர்த்தப்படுகிறது

ஸ்ரீ பாஷ்யத்தில் இந்த அதிகரணத்தில்
முதலில் கார்ய காரணங்களுக்குப் பேதம் கூறும் கணாத மதம் காட்டப்படுகிறது
அதற்கு -அத்ராஹு -என்று தொடங்கி சங்கரர் தம் சித்தாந்தப்படி கூறும் சமாதானம் கூறப்பட்டது
அந்த சங்கரரை ஜீவனுக்கு அஞ்ஞானம் சொல்பவன் எதிர்த்தான்
கேசித் -என்று தொடங்கியது அவ்வெதிர்ப்பு
பிறகு மாயாவி இரண்டிற்கும் பேதம் சொல்பவனை எதிர்த்தான்
பின் இவ்வதிகரண பூர்வ பக்ஷி -காணாதன் -சங்கர மதத்தைக் கண்டிக்கவே
இறுதியாக காணாதனை நம் பாஷ்யகாரர் நிரசனம் செய்கிறார் என்பது ஸாரம் –

———

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக் குடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந் ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத் ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————

ஏழாம் அதிகரணம்–இதரவ்யபதேஷாதிகரணம்||

ஸூத்ரம் –155-இதரவ்யபதேஷாத்திதாகரணாதிதோஷப்ரஸக்திஃ||2.1.21||

ஸூத்ரம் –156-அதிகஂ து பேத நிர்தேஷாத்||2.1.22||

ஸூத்ரம் –157-அஷ்மாதிவச்ச ததநுப பத்திஃ||2.1.23||

—————–

எட்டாம் அதிகரணம்–உப ஸஂஹார தர்ஸந அதி கரணம்||

ஸூத்ரம் –158-உபஸஂஹார தர்ஷநாந்நேதி சேந்ந க்ஷீரவத்தி||2.1.24||

ஸூத்ரம் –159-தேவாதிவதபி லோகே||2.1.25||

——————

ஒன்பதாம் அதிகரணம் –க்ருத்ஸன ப்ரஸக்தி யதி கரணம்

ஸூத்ரம் –160-க்ருத்ஸன ப்ரஸக்தி நிர்வயத்வ சப்த கோபோவா –2-1-26-

காலம் என்னும் வெளி உதவியை மட்டும் கொண்டு ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகட்டும்
அப்படி இருந்தாலும் ஒரு அவயவமும் இல்லாத ப்ரஹ்ம ஸ்வரூபம்
எப்படி பலவாறாக மாறுவேன் என்று சங்கல்ப்பிப்பது –
எப்படி பல பொருளாக மாறுவது
என்ற சங்கையால் சங்கதி

ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா என்ற சம்சயம் கூடாது –
ஏன் எனில்
நிர் அவயவமான ப்ரஹ்மம் ஜகத்துக்கு உபாதானம் என்று ஏற்றுக் கொண்டால்
ப்ரஹ்மம் முழுவதுமே ஜகத்தாகப் பரிணமிப்பதால் நித்ய விபூதியில் வியாபித்து உள்ளது
என்ற தன்மை ப்ரஹ்மத்துக்கு ஒவ்வாது போகும்
இந்த தோஷம் நீங்க ப்ரஹ்மம் ஸ அவயவம் என்று ஏற்கப் பட்டால்
ஏகமேவ அத்விதீயம் என்று
நிர் அவயவத்வம் சொல்லும் ஸ்ருதியுடன் முரண்பாடு ஏற்படும் என்பது பூர்வ பக்ஷம்

க்ருத்ஸன ப்ரஸக்தி
ப்ரஹ்மம் காரணம் ஆகில் அது முழுவதுமாகக் காரியமாக மாறுவதாக ஏற்க வேண்டி வரும்
அதற்காக ஸ அவயவம் என்று ஏற்றால்
நிர்வயத்வ சப்த கோபோவா —
நிர் அவயத்வம் சொல்லும் ஏகமர்வ அத்விதீயம் என்ற
சுருதி வாக்யத்துடன் விரோதம் -நிர்வயத்வ சப்த கோபம் -வரும்
என்று இப் பூர்வ பஷத்தை நிரஸனம் செய்கிறார் –

———

ஸூத்ரம் –161-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –2-1-27-

து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்
பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்
இதனால் விரோதம் இல்லை
பரிமித சக்திகமான ஷீராதிகளை உதாரணம் காட்டி வினவுதல் கூடாது என்று திரு உள்ளம் –

—————–

ஸூத்ரம் –162-ஆத்ம நிச ஏவம் விசித்ராச் சஹி –2-1-28-

ஆத்ம நிச ஏவம்
ஜீவாத்மாவிடம் சகல இதர வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராமை போலே
தேஹாதி வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராது என்று பரிஹாரம் கூற வேண்டும்
விசித்ராச் சஹி
அசேதனமான அக்னி ஜலம் முதலியவையும் விசித்ரங்களாகவே காணப்படுகின்றன
அக்னியில் உள்ள வெப்பம் நீரில் இல்லை
நீரில் உள்ள குளிர்ச்சி நெருப்பில் இல்லை
அப்படியே சித் அசித் விலக்ஷணமான ப்ரஹ்மத்திடம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியத்தகும்
ஸர்வ சக்திமத்வம் கூடும் என்பது கருத்து –

————-

ஸூத்ரம் –163-ஸ்வ பக்ஷ தோஷச் ச -2-1-29-

அனுமான கம்யமாய்
அசேதனமான பிரதானத்தில் கீழ்ச சொன்ன தோஷம் யாவும் மற்றும் பலவும் ப்ரஸக்தமாகும் –

—————

ஸூத்ரம் –164-ஸர்வோ பேதா ச தத் தர்சனாத் –2-1-30-

பரதேவதையானது மற்ற யாவற்றையும் விட வி லக்ஷண தன்மையால் மட்டும் ஸர்வ சக்தி யுக்த்தை அன்று
பின் ஏன் எனில்
தர்சனாச் ச -ஸ்ருதியாலும் கூறப்பட்டதால் சர்வ சக்தி உள்ளதாம்
தர்சய தீதி -தர்சனம் -ஸ்ருதி -வேதம்
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
இது முதலிய ஸ்ருதி பலத்தாலும் -உபாதானத்வம் நிமித்தத்வம் இரண்டும் கூடிய சக்தி யோகத்தவம் ஸித்திக்கிறது
ஆகவே ப்ரஹ்மத்துக்குக் காரணத்தவம் தடை அற்றது

————–

ஸூத்ரம் –165-விகரணத் வாந் நேதி சேத் ததுக்தம் –2-1-31–

சொன்ன அர்த்தத்தை உறுதி படுத்த மேலும் சங்கையை எழுப்பி சமாதானம் கூறுகிறார்
விகரணத் வாத் -சரீரம் இன்மையால்
நேதி சேத்-ப்ரஹ்மத்துக்குக் காரணத்வம் கூடாது என்றால்
ந தஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே -என்று
சரீர இந்திரியாதிகள் அவனுக்கு இல்லை என்ற படியால்
தத் யுக்தம் -பரிஹாரம் முன்னே கூறப்பட்டது
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத்
விசித்ராச் சஹி -என்ற ஸூத்ரங்களால்
சர்வ சக்தி உள்ளவன் என்று கூறப்பட்ட படி ஸர்வ வித காரணத்வமும் கூடும் என்பதாம் –

—————–

பத்தாம் அதிகரணம்–ப்ரயோஜனவத்வ அதிகரணம்

ஸூத்ரம் –166-ந ப்ரயோஜனவத்வாத் –2-1-32-

அவாப்த ஸமஸ்த காமனான பரம புருஷனுக்கு ஜகத் ஸ்ருஷ்டியாதிகளில் பிரயோஜனம் இல்லாமையால்
காரணத்வம் கூடாது என்கிற சங்கையை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி

ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா -என்று சம்சயம்
அது கூடாது
ந ப்ரயோஜனவத்வாத்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனான படியால்
ஸ்ருஷ்டியால் அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமையால் அது பொருந்தாது

உலகில் குயவர் போன்றவர் ஒரு ப்ரயோஜனத்தை எதிர்பார்த்தே குடம் முதலியவற்றைப் படைப்பதை பார்க்கிறோம் –
ஆகவே கர்ப்பவாசாதி துக்க ரூபமான ஜகத்தின் ஸ்ருஷ்ட்டியை கருணையால் செய்கிறான் என்பது அயுக்தம் ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு காரணத்வம் பொருந்தாது என்று பூர்வ பக்ஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது

அதற்கு விடை மேல் –

———————-

ஸூத்ரம் -167-லோக வத் து லீலா கைவல்யம் –2-1-33-

து சப்தம் சங்கையை விலக்குகிறது
லீலா கைவல்யம்-கேவலம் லீலையே பிரயோஜனம்
கேவலம் என்கிறது -வேறே பயன்கள் இல்லை என்கிறது
ஆகவே கேவல லீலை ஸ்ருஷ்ட்டியை ஆரம்பிக்கவே பயன்படுகிறது
அவன் அவாப்த ஸமஸ்த காமன் ஆனாலும் லீலா ரஸ மாத்ரத்திற்காக ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வது பொருந்தும்
லோகவத்
லோகத்தில் மஹா ராஜாவுக்கு கேவலம் பந்து விளையாட்டு சூதாட்டம் முதலியவற்றில் ஈடுபாடு காணப்படுகிறது
அப்படியே ப்ரஹ்மத்துக்கும் காரணத்வம் கூடும் –

———

ஸூத்ரம் –168–வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேக்ஷத்வாத் ததாஹி தர்சயதி–2-1-34–

இங்கு ஒரு ஆஷேபம் தோன்றுகிறது
ஸர்வ சமனாய் பரம காருணிகனான பரம புருஷனுக்கு தேவ மனுஷ்யாதிகளான விஷமமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதால்
வைஷம்யமும் -பக்ஷபாதமும்
துக்கம் மிக்க ஜகத்தைப் படைப்பதால்
நைர் க்ருண்யம் -இரக்கம் இன்மை
என்ற தோஷமும் வருமே என்பதே அது
அதுக்கு இந்த ஸூத்ரம் விடை தருகிறது

வைஷம்ய நைர் க்ருண்யே ந
இவ்விரு தோஷங்களும் வாராது
ஏன் எனில்
சாபேக்ஷத்வாத்
ஜீவர்களின் முந்திய கர்மங்களை அநு சரித்து தேவர் மனுஷ்யர் போன்ற வேறுபட்ட ஸ்ருஷ்ட்டியை செய்வதனால்
ஸ்வத ஸர்வ சமனான ஈஸ்வரனுக்கு தேவாதி விஷம ஸ்ருஷ்டியிலும்
துக்க மிக்க ஸ்ருஷ்டியிலும்
அவ்வோ ஜீவர்களின் பூர்வ ஜென்ம கர்மமே ஹேது என்று கருத்து
ததாஹி தர்சயதி
ஸாது காரீ -சாதுர் பவதி -அஸாது காரீ பாபோ பவதி -முதலிய சாஸ்திரங்கள்
பூர்வ கர்மாவுக்கு ஏற்பவே -ஸாது பாபீ என்ற வைஷம்யம் ஏற்படுவதைக் காட்டுகிறது

————

ஸூத்ரம் –169–ந கர்மா அவி பாகாத்தி சேந் நா நாதித்வாத் உப பத்யதே சாப் யுபலப்யதே ச –2-1-35-

ந கர்மா
ஸ்ருஷ்டிக்கு முன்னால் கர்மா இல்லை
ஏன் எனில்
அப்போது ஜீவர்கள் இல்லாமையாலே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் என்னும் ஸ்ருதி
ப்ரஹ்மதுக்கும் ஜீவனுக்கும் விபாகம் இல்லை
ப்ரஹ்மம் ஒன்றே அப்போது இருக்கிறது என்று சொல்வதால்
ஜீவர்களின் கர்மாவை அநு சரித்தே ஸாதுத்வமும் பாபித்வமும் போன்ற வைஷம்யம் ஏற்படுகிறது என்பது அனுப பன்னம்

இதி சேத் ந
என்று கூறுவது சரி அன்று
ஏன் எனில்
அநாதித்வாத்
ஜீவர்களின் கர்ம ப்ரவாஹமும் அநாதியாய் இருப்பதாலே

உப பத்யதே ச
ஜீவர்கள் அநாதிகளாய் பிரளய காலத்தில் இருந்தாலும் ஏகமேவ என்ற ஸ்ருதி பொருந்தலாம்
ப்ரஹ்மம் ஏகம் என்பது நாம ரூப விபாகத்திற்குத் தகாத ஸூஷ்ம அவஸ்தையில் உள்ள சேதன அசேதன சரீரகத்வம்
இத்தால்
அந்த ஸூஷ்ம அவஸ்தை ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவதால் ப்ரஹ்மம் ஏகம் என்பது பொருந்துமே

யுபலப்யதே ச
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே ஜீவர்களுக்கு அவர் தம் கர்மாக்களுக்கும் அநாதித் தன்மை தோன்றுகிறது
ஞ்ஞாஞவ் த்வவ் அஜாவிச நீசவ்
நித்யோ நித்யாநாம் சேதன அசேதனானாம் –முதலிய ஸ்ருதிகள்
ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தி அநாதி உபா வபி முதலிய ஸ்ம்ருதிகள் –

—————

ஸூத்ரம் –170–ஸர்வ தர்மோ பபத்தேச் ச –2-1-36-

சாங்க்ய வைசேஷாதிகளின் பக்ஷங்களில் காரணமாக ஏற்கப்பட்ட பிரதான பரமாணுக்களில்
அஸம்பாவிதமாயும்
காரணத்வத்துக்கு இன்றியமையாதவையுமான
ஸர்வஞ்ஞத்வம் – ஸர்வ சக்தித்வம் முதலிய தர்மங்களுக்குப் பரம புருஷன் இடத்தில் பொருத்தம் இருப்பதால்
அவனே ஸூஷ்ம சித் அசித் சரீரகனாய் இருந்து
ஸகல ஜகத்துக்கும் ஸர்வ வித காரணமாவான் என்பது சித்தமாயிற்று –

————

நம் ஆச்சார்யர் அருளிய முறையில் வைஷம்யம் நைர் க்ருண்யங்களை நீக்கும் முறை ஓன்று வருமாறு
நிச்சேஷாத்ம பவர்க்கே –குத்ர சிந் நித்யமஸ்து –அதிகரண ஸாரா வளி
அதாவது
நித்ய ஸம்ஸாரி ஒரு சாரார் -வரும் காலத்தில் சம்சாரம் அற்றவர் ஒரு சாரார்
ஷிபாம் யஜஸ்ரம சுபான் -என்றபடி ஒரு காலமும் ஸம்ஸாரம் நீக்கம் அற்றவன் நித்ய ஸம்ஸாரி
இத்தகைய நித்ய சம்சாரியை ஏற்றுக் கொள்ளா விட்டால்
லீலா விபூதி நித்யை என்ற ஸ்ரீ ஸூக்தி யுடன் முரண்பட்டு ஏற்படும்
ஆகவே நித்ய சம்சாரியை ஏற்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள்

மற்றும் சிலர் எல்லா ஜீவர்களுமே முக்திக்கு யோக்கியர்கள் என்று கூறும் சுகர் போன்றவர்க்கு
ஸஹ காரி காரணம் சித்தித்தால் முக்தியில் சந்தேகம் இல்லை என்றும்
ஷிபாம் யஜஸ்ரம சுபான்
மாமப்ராப்யைவ கௌந்தேய
அவிச்சின்னாஸ் தத
மூடா ஜன்ம நிஜன் மநி -என்கிற
பிரமாணங்கள் விளம்ப மிகுதியைக் கூறுகின்றன என்றும்
ததா ஸம்ஸாரி பாந்தஸ்ய யாதி மோஹ ஸ்ரம சமம் -முதலிய பிரமாணங்கள் எல்லா ஸம்ஸாரிகளுக்கும் உபாயத்வ சம்பந்தத்தால்
ஸம்ஸார மோஹ நிவ்ருத்தியைச் சொல்வதாலும் நித்ய ஸம்ஸாரியே இல்லை என்கிறார்கள்
இந்த இரண்டு பஷத்திலும் வைஷம்ய நைர் க்ருண்யத்தைப் பரிஹரித்து அருளுகிறார் –

நித்ய சம்சாரியை ஏற்கா விட்டால் ஜீவர்கள் அனந்தர்களாய் இருப்பினும் எல்லாரும் முக்தி யோக்கியர்கள் ஆதலின்
கால க்ரமத்தில் முக்தர்களாகும் பக்ஷத்தில் லீலா விபூதி இல்லாமல் போவதால் பகவானுக்கு லீலை ஒய்வு பெற்று விடும்
அதை விலக்க நித்ய சம்சாரியை ஏற்றால் அவனிடம் பகவானுக்குத் தயை இல்லாமையால்
நைர் க்ருண்யம் என்கிற தோஷம் வரும் என்ற பூர்வ பஷத்துக்கு சமாதானம்
முன் பக்ஷத்தில் லீலை அற்றுப் போம் என்பது தோஷம் அன்று
ஏன் எனில்
சுயேச்சையான செயலே லீலை யாதலின் ஸ்ருஷ்டியில் ஈடுபடுவது போல்
அதில் இருந்து விலகி நிற்றலும் லீலையே யாதலின் பிறரின் உபத்திரவத்தினால் அல்லது
தன் இச்சையால் மட்டும் வந்தபடியால் லீலையில் ஒய்வு குறையாகாது –
நித்ய ஸம்ஸாரி பக்ஷத்தில் அந்த ஜீவர்களின் முன் கர்மாவுக்கு ஏற்ப பகவானின் தயை விரோதியாய் இருப்பதால்
நைர் க்ருண்யாதி தோஷங்கள் இல்லை என்று பொருள்

ஸ்ரீ பாஷ்யம் ஆரம்பணாதி கரணத்தில் –பூர்வ பக்ஷத்தில் வந்த
லீலா விபூதியின் ஏற்க முடியாத நிலையாகிற தோஷத்துக்கு
இவ்வர்த்தம் இங்கு வேறு முறையில் பரிஹாரமாக எழுதப்படுகிறது –

—————-

இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன
1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால் காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –நான்காம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

————–

ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று
கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும்
ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து
உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட
சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை

107–ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –1-4-1-

பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது

கட உபநிஷத் –
இந்த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷான்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –

இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
ஸூத்ர காரர் இந்த சங்கையை அனுவதித்துக் கண்டிக்கிறார்

ஏகேஷாம் -கடகர்களுடைய சாகையிலே -இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா-இத்யாதியிலே
ஆநுமாநிகம் அபி -அனுமானிக்கப்படும் அப்ரஹ்மாத்மக பிரதானமும் ஜகத்துக்குக் காரணமாக
மஹத பரம் அவ்யக்தம் -எனப்பட்டது
இதி சேத் ந -என்பது தகாது -அப்ரஹ்மாத்மக பிரதானம் காரணம் என்று கூறப்படவில்லை
சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –உருவகத்தால் அவ்யக்தம் பிரதானம் சரீரமே
ஜீவனும் அல்லன்
பரம புருஷனே அந்தர்யாமியாய் இருந்து உபாஸனத்தை நடத்தி வைக்கிறான் என்று
அவனே வசீகரிக்க வேண்டியவற்றுள் பரம காஷ்டை -பேர் எல்லை -என்று கூறப்படுகிறது
அவன் இடம் சரணாகதி செய்வதே அவனை வசீகரிப்பது
யச்சேத் வாங் மனஸீ ப்ராஞ்ஞா -என்று இவ்வர்த்தத்தையே ஸ்ருதி காட்டுகிறது

சித்தாந்தம் –
முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்

இத்தால்
பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

————————————————————-

108–ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –1-4-2-

ஸூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே –
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

து சப்தம் ஏவ என்ற பொருளில் வந்தது
ஸூஷ்மந்து-அவ்யக்தம் தான் -வேறு அவஸ்தை பெற்று சரீரம் ஆகிறது
ததர்ஹத்வாத்-அந்த சரீர அவஸ்தமான ப்ரதானமே உபாசன அனுஷ்டானத்துக்குத் தகுதி உள்ளதாக ஆகின்றது
அதனால் காரண வாசக ஸப்தம் கார்யத்தைக் குறிக்கிறது

ரூபகம் செய்யப்பட ஆத்மாதிகள் வசீகரிக்கத் தக்கவையில் சிறந்த
இந்த்ரியம் அர்த்தம் முதலியவற்றால் க்ரஹிக்கப் பெற்றால்
அவ்யக்தாத் புருஷ பர -என்று
புருஷனை ஏன் கிரஹிக்க வேண்டும் என்பதற்கு மேல் விடை அளிக்கிறார் –

————————————————————

109-தத் அதீனத்வாத் அர்த்தவத் –1-4-3-

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

தத் அதீனத்வாத் -ஆத்ம சரீராதிகள் அந்தர்யாமியான புருஷனுக்கு ஆதீனம் ஆகையாலே
அர்த்தவத் –பிரயோஜனம் உள்ளதாகிறது
ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்
பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை
ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து
ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை
பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது
என்று விடை கூறப்படுகிறது –

——————————————————————–

110-ஜ்ஞேயத்வா வசநாத் ச–1-4-4-

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே
மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-

தந்த்ர சித்த ப்ரக்ரியை இவ்வாக்கியத்தில் சம்மதமானால் அவ்யக்தம் ஜேயம் என்று எண்ண வேண்டும்
வ்யக்தம் அவ்யக்தம் ஜேயன் -இவை பற்றி அறிவதால் என்று அல்லவோ சாங்க்யர்களின் முறை
இந்த சாகையில் அவ்யக்தம் ஜேயமாம் முமுஷுக்கு என்று கூற வில்லை
சாங்க்ய ப்ரக்ரியைக்கு இங்கு ஸம்பந்தமே இல்லை –

———————————————————————-

111–வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–1-4-5-

கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே–

இந்த வரிகளுக்கு முன்னால்
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்

அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்

சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு
பரம் பொருள்
யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –
புத்தரோத்மா மஹான் பர -என்றும்
மேலானவன் என்று உணர முடியலாம்-

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று
பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே

—————————————————

112-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –1-4-6-

மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு –

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்துக் கேட்டான் –
மோட்ஷம் பெற்றவர் சென்று அடையும் இடம் –மோட்ஷம் பெற விரும்புவர்களின் தன்மைகள் -வழி ஆகியவற்றை பற்றி –
ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-

இந்தப் ப்ரகரணத்தில் -யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே-என்று தொடங்கி
இறுதி வரை உபாஸ்யன் -உபாஸகன் -உபாஸனம் -மூன்று அர்த்தங்களும்
இவ்வாறு அறியத்தக்கன என்று உபந்யாஸமும் வினாவும் உள்ளன
ஆதலால் அப்ரஹாத்மகமான பிரதானத்தை ஜேயம் என்று கூற வில்லை –

ஆக மூன்றிலும் பிரக்ருதியைப் பற்றி இல்லை-

——————————————————

113-மஹத்வத் ச –1-4-7-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
புத்தேராத்மா மகான் பர –
மஹத் தத்துவத்தை விட அது உயர்ந்தது என்று கொண்டால் -சாங்க்ய மத மஹான் பற்றி இல்லை
புத்திக்கு மேலே உள்ள ஆத்மாவைப் பற்றி -என்று ஆத்மாவுக்கு விசேஷணமாகவே கொள்ள வேண்டும்

ஆத்மா எல்லாவற்றையும் விட மஹத்தான பரம் என்று திரு உள்ளம்

மேலும் மஹத பரம் அவ்யக்தம் -என்று மஹானை விட மேலானது அவ்யக்தம்-
இங்கு சாங்க்ய மத அவ்யக்தம் பிரகிருதி பற்றி இல்லை-

ஆநுமாநிகாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி-

பரிசேஷ க்ரமத்தாலும் ஸ்தான ப்ரமாணத்தாலும் அவ்யக்தம் என்பது அவ்யக்தத்தின் -பிரதானத்தின் -கார்யமான
சரீரத்தைச் சொல்வது என்று முன் ஸ்தாபித்தார்
அதே காரணத்தால் அஜாமேகம் என்ற இடத்திலும் அஜா ஸப்தம் அவ்யக்த்தத்தைக் குறிப்பிட்டதாகட்டும்
என்ற பூர்வ பக்ஷம் கூறி
அப்ராஹ்மத்மகமான பிரதானம் அதன் பொருள் அன்று என்று
இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார் –

114-சமசவத் அவிசேஷாத்-1-4-8-

உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-
சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-

ப்ரக்ருதி என்றே பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அஜாம் என்று உத்பத்தி இல்லாமை கூறப்படுவதாலும்
ஏராளமான பிரஜைகளுக்குத் தானே ஸ்ருஷ்டி கர்த்தா என்று கூறியதாலும்
என்ற இந்த பூர்வ பஷத்தை நிரசிக்கிறார் –

இந்த அஜா சப்தம் சாங்க்யர்கள் கூறும் பிரதானத்தை அன்று என்ற வாக்யத்தைத் தருவித்திக் கொள்ள வேண்டும் –
சமசவத் அவிசேஷாத்—அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்ற மந்திரத்தில் சமசத்திற்கு -பஷிப்பதற்கு சாதனம்
என்ற காரணத்தால் சமஸ பதம் சிரசைச் சொல்வது போல்
அஜா மேகம் என்றதில் அஜாம் என்ற ஸப்தம் அப்ரஹ்மத்மக பிரதானத்தைச் சொல்வது என்கையில்
விசேஷ காரணம் இல்லாமையால் அது பொருந்தாது
ஸ்வ தந்திரமாக ஸ்ருஷ்டிப்பது என்ற ஒரு விசேஷணமும் இல்லை

ப்ரஹ்மாத்மிகை யானால் ப்ரக்ருதி ஸ்ருஷ்டி ஹேதுவாய் அஜா என்று கூப்பிடலாமே
ப்ரஹ்மாத்மிகையான அஜையைச் சொல்லுகையில் விசேஷ ஹேதுவை அருளுகிறார் மேல்

———————————————————————–

115-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –1-4-9-

ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹூயா நாத்மா–திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –

ஜ்யோதிர் உபக்ரமாது- ஜ்யோதி -ப்ரஹ்மம் -அத்தைக் காரணமாக் கொண்டதே இந்த அஜை
ததா ஹி அதீயதே ஏகே -தைத்ரியம் சொல்லுமே -பர ப்ரஹ்மத்தை உபபாதித்து -ஸப்த ப்ராணா ப்ரபவந்தி என்று
சகல ஜகத்தும் ப்ரஹ்மத்தில் இருந்து தோன்றுகின்றன -என்கிறதே
இதே போலவே ஸ்வேதாஸ்வர மந்த்ரமும் கூறும்

அப்படியாயின் ஒரே வஸ்துவுக்கு அஜாத்வமும் -ஜ்யோதி ரூப க்ரமாத்வமும் -ப்ரஹ்ம காரணத்வமும் –
பொருத்துவதற்கு ஹேது மேலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

116-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –1-4-10-

பிரகிருதி பிறப்பற்றது என்றும்
கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –

தைத்ரிய உபநிஷத்தில் -5-7-
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் -என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 -என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –

சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு –
அசௌவா ஆதித்யோ தேவமது -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்
பிரளய காலத்தில் –
நை வோதே தா நாஸ்த மேதா-என்று சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
இரண்டு நிலைகளுக்கும் முரண்பாடு இல்லை-

கல்பந உபதேசாத் ச -ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேசிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது
ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே

மத்வாதி வத் அவிரோத –மது வித்யையில் கார்ய அவஸ்தையில் -அசௌவா ஆதித்யோ தேவமது-என்று மதுவாகக் கல்பனமும்
அதே ஆதித்யனுக்கு –அத தத ஊர்த்வ உததி அனேநை வோதேதா நாஸ்த மேதா-என்று முதலில்
காரண அவஸ்தையில் நாம ரூபங்களை விட்டமையால் ஸூஷ்ம ரூபமான இருப்பும் எப்படி முரண் பட்டவை இல்லையோ
அப்படியே இங்கும் இரண்டு தன்மைகளும் முரண் இல்லை –

சமசாதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –

முன் அதிகரணத்தில் சாங்க்யர் கூறிய அப்ரஹ்மாத்மக அவ்யக்தத்தை விளக்கும்
அஜாமேகம் -ஸ்ருதியில் ஏற்பட்ட பூர்வ பக்ஷம் நிரசிக்கப் பட்டது
இதில் சாங்க்யர் கூறும் தத்வ சங்க்யை -எண்ணிக்கை யைக் கொண்டு
ஸ்ருத் யர்த்தத்தில் ஏற்படும் பூர்வ பக்ஷம் கண்டிக்கப் படுகிறது என்று சங்கதி –

117-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –1-4-11-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று
5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து
இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்

25 கூறப்படுகின்றன என்று பூர்வ பக்ஷம்
பஞ்ச பஞ்ச ஜனா என்று ஐந்து ஜனங்களால் ஆரம்பிக்கப் பட்ட கார்யங்கள் ஐந்து ஆக 25 என்று
விசேஷிப்பதால் தத்வங்கள் தோன்றுகின்றன
மோக்ஷ ப்ரகரணத்தாலே அந்த ஸங்க்யை சாங்க்ய தந்த்ர யுக்தங்கள் என்று தோன்றுகிறது
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –என்றதும்
25 வது தத்வமான ஆத்மாவை ப்ரஹ்மம் என்று அறிந்தவன் முக்தன் ஆவான் என்கிறது
என்னும் பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-

ந சங்க்ய உப சங்கரஹாத் அபி –25 எண்ணிக்கையை ஏற்றாலும் இந்த தத்வங்கள் அப்ராஹ்மத்வங்கள் அல்ல
நாநா பாவாத் –யஸ்மின் -என்று குறிப்பிட்ட ப்ரஹ்மம் அந்த தத்துவங்களுக்கு ஆதாரமான படியாலே
அப்ரஹ் மாத்மகமான தத்வங்களைக் காட்டிலும் இந்த தத்துவங்களுக்கு ப்ரஹ்மாத் கத்வத்தாலே பேதம் தோன்றுவதால்
அதிரேகாத் ச-யத் ஸப்தத்தால் சொல்லப்படும் ப்ரஹ்மமும் ஆகாசமும்
வேறாய் இருப்பதால் -அதிகமாய் இருப்பதால் -தத்வங்கள் 27 ஆகின்றன
ஸூத்ரத்திலே அபி ஸப்தத்தாலே ஸங்க்யையை அங்கீ கரிக்க வில்லை என்று ஏற்படுகிறது
ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது
பஞ்ச ஜனங்கள் என்பது கண் முதலிய இந்திரியங்கள் அவை ஐந்து என்பதே பஞ்ச பஞ்ச ஜனா என்பதின் பொருள் –
ஸப்த ஸப்தர்க்ஷய-என்பது போலே -என்பது திரு உள்ளம் –

———————————————————————–

118-ப்ராணாதய வாக்ய சேஷாத்-1-4-12-

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று –
பிராணன் கண் காது அன்னம் அல்லது நாக்கு மனம் என்பவை ஆகும்-

ஜனநாத் -ஜனங்கள் என்ற வ்யுத்பத்தியாலே இந்திரியங்கள் கூறப்படுகின்றன என்று கருத்து

அன்னஸ் யான்னம் -என்ற வாக்கியம் இல்லாமையால் பஞ்ச ஜனங்கள் ஐந்து என்று
எப்படி அறியப்படுகிறது
என்ற சங்கையை பரிஹரிக்கிறார் மேல் –

—————————————————————————

119-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸத் அந்நே –1-4-13-

காண்வ முனிவரின் உபநிஷத் வரியில் அன்னம் என்று கூறவில்லை என்றாலும்
அதற்கு முந்திய வரியில்
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயூர் ஹோபாசதேம்ருதம் -ஜ்யோதிகள் அனைத்துக்கும் ஜ்யோதி என்று
புலன்கள் ஐந்துக்கும் ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தை சொல்லிற்று-

ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –
ஏகேஷாம் -காணவர்களின் வாக்ய சேஷத்தாலே
அஸத் அந்நே-அன்னம் என்ற பாடம் இல்லா விட்டாலும்
ஜ்யோதிஷா-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்று தொடக்கத்தில் ஆறாம் வேற்றுமையான
ஜ்யோதிஸ் ஸப்தம் ப்ரஹ்மத்தைக் குறித்தால் ப்ரகாசகங்களுக்கும் ப்ரகாசங்கள் ப்ரஹ்மமே என்று தோன்றுகிறது
அந்தப் ப்ரகாசங்கள் எவை என்றால் -பஞ்ச பஞ்ச ஜனா என்று பொதுவாகச் சொன்ன பஞ்ச ப்ரகாசங்களை
பிராணஸ்ய பிராணம் முதலியவற்றிலே விசேஷிக்கிறது
பிராணஸ்ய-என்று த்வக் இந்திரியம் சொல்லப்படுகிறது
அன்னஸ்ய -என்று மூக்கும் க்ராண இந்த்ரியமும் ரசன இந்த்ரியமும் சேர்த்து கூறப்படுகின்றன
ஆகவே ஐந்து என்பதற்குத் தடையில்லை எனத் திரு உள்ளம்
ஆகவே யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா என்ற மந்திரத்தில் இந்த்ரியங்களுக்கும் ஆகாசாதி பூதங்களுக்கும்
ப்ரஹ்ம ஆஸ்ரயத்வம் கூறப்படுவது சாங்க்யரின் கருத்து அன்று –

சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –

இப்படி மூன்று அதிகரணங்களால்
சாங்க்யர் கூறின சாகையை அனுசரித்த வாக்கியங்கள் பரமாத்மாவையே போதிப்பவை
என்று ஸ்தாபித்தவுடன்
அவர்கள் அப்ராஹ்மாத்மக பிரதானத்தையே போதிப்பதாகக் கூறும்
அவ்யாக்ருதம் முதலிய சொற்களும் பரமாத்மாவே பொருள் என்று
ஈஷத் யதிகரணாதிகளில் சொன்ன அர்த்தத்தை
இங்கு சிங்க நோக்கு முறையில் -ஸிம்ஹ அவலோகந-காட்டி ஸ்தாபிக்கிறார் –

120-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –1-4-14-

ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

சாந்தோக்யம் -2-7-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -சத் என்பதே காரணப் பொருள்

தைத்ரிய உபநிஷத்தில் -3-19-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று முதலில் அசத் என்பதே காரணப் பொருள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று காரணப் பொருள் அவ்யாக்ருதமாக இருந்தது
சாங்க்ய மதத்தில் அவ்யாக்ருதம் பிரகிருதி

ஜகத்துக்குக் காரணத்தைக் கூறும் -தத்தே தந்தர் ஹி அசதே வேதம் –இத்யாதி வாக்கியங்கள்
பிரதானத்தைக் காரணமாக் கூறுபவைவா
அன்றி ப்ரஹ்மத்தைக் காரணமாக் கூறுபவையா என்று சம்சயம்
பிரதான காரண வாத பரங்களே -பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -என்று சில இடங்களில் ஸத் காரணம் எனப்படுகிறது

சில இடங்களில் அசதே வேதம் அக்ர -என்று அஸத் காரணம் எனப்படுகிறது
அவ்வாறே தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று அவ்யாக்ருதம் காரணம் எனப்படுகிறது
அவ்யாக்ருதம் என்பதே பிரதானம்
ஆதலின் பிரதானம் காரணமாகையாலே ஸகல வாக்கியங்களும் பிரதானத்தையே காரணம் என்கின்றன
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும் தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று
பரமாத்வா விடம் இருந்து ஆகாசம் தோன்றிற்று என்றும்

சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் -பலவாக தோன்றுவேன் என்பதால் சத் அசத் அவ்யாக்ருதம்
போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று
இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

காரணத்வேன ச -ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –-ஆகாசம் முதலிய பதம் கொண்ட வாக்யங்களில் –
தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -முதலிய எல்லா வாக்யங்களிலும்
யாதவ்ய பதிஷ்டைஸ்யைவ காரணத்வேந யுக்த –சர்வஞ்ஞன் ஸர்வ சக்தன் என்று
எல்லாம் ஈஷத் அதிகரணாதிகளிலே ஸ்தாபிக்கப் பட்ட பரம புருஷனே காரணம் என்று சொல்வதால்
அவனுக்கு தேவாதி நாம ரூபங்கள் இல்லாமையால் அஸத் -அவ்யாக்ருதம் -எனப்படுகிறான்
ஆதலால் எல்லா காரணாதி வாக்கியங்களும் பர ப்ரஹ்மத்தையே காரணமாக் கூறுவன என்று திரு உள்ளம்

அப்படியாகில்
அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்பதற்கு என்ன பொருள் என்பதைக் கூறுகிறார் அடுத்து –

——————————————————————————-

121-சமாகர்ஷாத் –1-4-15-

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்

அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று
உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

தைத்ரிய உபநிஷத் –சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்று
பஹு பவன சங்கல்பத்துடன் ஜகாத்தை ஸ்ருஷ்ட்டி செய்யும்
ஸர்வஞ்ஞனான பர ப்ரஹ்மத்தையே அஸத் வா இதம் -என்ற வாக்யத்தில் ஆகர்ஷித்துக் கொள்வதால்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டனான ப்ரஹ்மத்துக்குக் காரண அவஸ்தையில் நாம ரூப சம்பந்தம் இல்லாமையால்
இத்தைப் பின் பற்றி அஸத் என்று ப்ரஹ்மத்தைச் சொல்கிறது
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்று ப்ருஹத் ஆரண்யாகாவிலும்
அதிலே ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய பஸ்யன் சஷு -போன்ற
முன் பின் வாக்கியங்களை ஆராயும் போது ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியுக்தனாய் உள்ள பர ப்ரஹ்மமே
அவ்யாக்ருத சரீரமாய்க் கொண்டு ஜகாத்தை ஸ்ருஷ்டிக்கையாலே
அவ்யாக்ருதம் என்று பிரதான சரீரிகமான பர ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்பது ஸித்தமாயிற்று –

காரணத்வாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –

இப்படி முன் அதிகரணத்தில் வேறாகக் கூற முடியாத பிரகரண பலத்தாலே
அப்ரஹ்மாத்மக ப்ரதான காரணத்வத்தை நிரஸனம் செய்து
யஸ்ய சைதத் கர்ம என்று கர்மவான் என்னும் சிறப்பான லிங்கத்தைத் துணை கொண்டு
முன் அதிகரண நியாயத்தின் படி ஸமாகர்ஷிக்கப் பட்ட ஜீவனே பிரதானத்தின் அதிஷ்டா யாதலின்
பரனாகட்டும் என்று சங்கித்து
அவனுக்கும் காரணத்வம் இல்லை என்று நிரூபிக்கிறார்
என்று சங்கதி

முன்பு அவ்யாக்ருத ஸப்தத்துக்கு ப்ரக்ருதி என்ற பொருளை விலக்கி பரமாத்மா என்ற
பொருள் தீர்மானிக்கப் பட்டது
தற்போது கர்ம ஸப்தத்திற்கு புண்ய பாப ரூபமான கர்மா என்ற பொருளை விலக்கி
படைக்கப்படும் ஜகத் என்ற பொருள் நிறுவப்படுகிறது
என்று மற்றோர் சங்கதி –

121-ஜகத் வாசித்வாத்–1-4-16-

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் –
கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று-

யஸ்ய சைதத் கர்ம -ப்ரக்ருதி வ்யுக்தனான புருஷனே வேதிதவ்யன் –
அவனுக்கு புண்ய பாப ரூப கர்ம சம்பந்தம் சொல்வதால்
என்கிற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் –
க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால்
ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து –

—————————————————————————

122-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –1-4-17-

அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்

தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்

ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்

சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத -ஜீவ லிங்கத்தாலும் முக்ய ப்ராண லிங்கத்தாலும்
வேதி தவ்யன் பரமாத்மா அல்லன் என்றால்
தத் வ்யாக்யாதம்-ப்ரதர்த்தன வித்யையில் அது விரித்து உரைக்கப் பட்டது
ப்ரகரணத்தை முன் பின் ஆராய்வதால் பரமாத்ம பரம் இவ்வாக்கியம் என்று நிச்சயித்தால்
ஜீவாதிகளைக் குறிப்பிடும் சொற்களும் ஜீவாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவையே போதிப்பவை என்று
ப்ரதர்தன வித்யா நியாயம் இங்கே நோக்கத் தக்கது

தவ்ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது –என்று தொடங்கி
உறங்கும் மனிதனிடம் நெருங்கி பிரம்பால் அடித்து எழுப்பி
சரீரம் இந்திரியம் பிராணன் இவற்றை விட வேறான ஜீவன் இருப்பதை விளக்குவது இந்த வாக்யம்
என்ற சங்கைக்கு
உத்தரம் சாதிக்கிறார் மேல் –

—————————————————————————–

123-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –1-4-18-

அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்

விடையாக
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்

சாந்தோக்யம் -சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே

ப்ருஹத் உபநிஷத் -ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-

து என்ற சொல் சங்கையை மாற்றுகிறது
ஜீவனைக் குறிப்பது ஜீவனை விட்டு வேறான ப்ரஹ்மம் இருப்பதை விளக்குவதற்க்கானது
கேள்வியாலும் பதிலாலும் அவ்வாறே புலப்படுகிறது
இவ்வினா விடைகளாலே ஜீவனைக்குறிப்பது ப்ரஹ்மத்தை விளக்கவே என்று ஜைமினி கூறுகிறார்
ஸ்ரீ வியாசருக்கு இதுவே திரு உள்ளம்
அபி ச ஏவம் ஏகே –வாஜசநேயிகள் இவ்வினா விடைகளை பரமாத்ம பரமாகவே ஓதுகிறார்கள்
ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே–தஹர ஆகாசம் பரமாத்மாவே என்று முன்னமே நிரூபணம் ஆயிற்று –

————————————————————————————

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

முன் அதிகரணத்தில்
சாங்க்யனால் லிங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட கர்ம ஸப்தம்
புண்ய பாப ரூப கர்மாக்களையும் ஜகத்தையும் குறிப்பதால்
பக்தனான ஜீவனுக்குப் பரத்வம் கிடையாது என்று ஸ்தாபிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில்
மைத்ரீ ப்ராஹ்மண ப்ரகரணத்தில் ஆத்ம ஸப்தத்தால் குறிக்கப்படுவதாகிய சிறப்பான லிங்கத்தாலும்
ஸர்வம் தம் பரா தாத் யோ அந்யத்ராத் மனஸ் சர்வம் வேத -என்னும் ஸ்ருதியில்
ஜீவனைக்காட்டிலும் வேறான தத்வம் தடுக்கப்படுவதாலும்
கணவன் மனைவி புதல்வன் என்னும் சம்பந்தம் ஜீவனுக்கே சிறப்பானததாலும்
முக்த ஜீவனே மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் பேசப்படுகிறான்
என்ற சங்கையால் என்று சங்கதி

124-வாக்ய அந்வயாத்-1-4-19-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்று
அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால்
பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

வாக்ய அந்வயாத்-காணத்தக்கவன் என்று குறித்தது பரமாத்மாவையே
அது ஏன் என்றால்
மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் எல்லா வாக்கியங்களும் பரமாத்மாவிடமே அன்வயம் -பொருந்தும் –
ஸர்வ காரணத்வம் சொல்வதால்
ஜகத் வியாபார வர்ஜம் -ஸூத்ரப்படி முக்தாத்மாவுக்குக் கூட ஸம்பவிக்காதே
ஒவ்வொரு வாக்யத்திலும் ஆத்ம ஸப்தம் மைத்ரேயிக்கு அம்ருதத்வத்தை சாதிப்பவனாகக் காண வேண்டியவன்
என்று உபதேசிக்கப்பட்ட பரமாத்மாவையே போதிக்கும் என்பதால் வாக்யங்களுக்கு அந்வயம் பொருத்தம் ஏற்படும்

அந்த அந்த ஜீவன்களின் கர்ம அனுகுணமாக பரமபுருஷன் தனது ஸங்கல்பத்தாலே
பத்யாதிகளைப் பத்னீ முதலியவர்களுக்குப் பிரியமாக்குகிறான் –

ஆத்மன காமாயா என்று பரமாத்மாவின் ஸங்கல்பம் ஸித்திக்கவே என்றே பொருள் –
தங்கள் காமம் நிறைவேற என்ற பொருள் அன்று

ஆத்ம சப்தத்துக்கு ஜீவாத்ம பரமாகவும் பொருள் கொண்டு வேறே நிர்வாகமும் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டப்பட்டு உள்ளது –
விஞ்ஞான கன ஏவ ஏதேப்யோ பூதேப்ய சமுதாய தான்யே வானு விநஸ்யதி -என்னும் வாக்யத்தில்
ஜீவ லிங்கமான விஞ்ஞான கன ஸப்தத்துக்கு பிற மதம் கொண்டும் நிர்வாஹம் அருளிச் செய்துள்ளார் –

————————————————————————————-

125-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-1-4-20-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால்
அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்-

ஜீவன் பரமாத்மாவின் கார்யமாகையாலே அவனை விட வேறு படாதவன் என்பதால்
ஜீவனைச் சொல்லும் பதம் பரமாத்மாவைக் குறிக்கும் என்பர் ஆஸ்மரத்யர்
ஜீவ வாசகமான ஞான கனமும் அவ்வாறே ஆகும் என்று கருத்து
இது சங்கர மதத்துக்கு ஆதாரம் –

———————————————————————————–

126–உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி-1-4-21-

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே –

சாந்தோக்யம் –
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்

முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது
ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு
ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்
இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்

—————————————————————————————

127-அவஸ்திதே–இதி காசக்ருத்சன-1-4-22-

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா –
அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன் ஸ்வரூபம் அழிய முயலாதே

ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால்
முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோட்சத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –

பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால்
விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான்
தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே
சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————————-

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –

கீழே பரமாத்மா ஜீவர்களின் நியாமகன் -என்பதால் ஸப்த ஸாமாநாதி கரண்யம் சொன்னதைக் கொண்டு
ஸேஸ்வர மீமாம்சகன் -ராஜாவே ராஜ்யம் என்றால் -உபசார வழக்காகவே தேறும் -ஐக்யம் அன்று
ராஜ்யத்துக்கு ராஜா உபாதான காரணம் அல்லன்
அதே போல் ஜகத்துக்கும் ப்ரஹ்மம் உபாதான காரணம் இல்லாமல் நிமித்த காரணமே ஆகும் என்பான்
இதற்கு விடை கூறலே சங்கதி

128-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —1-4-23-

பிரமமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும்
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம் பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்

சாந்தோக்யம் -திருஷ்டாந்தம் –
யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள
நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

பூர்வ பஷத்தை நிரசிக்கிறார்
பிரகிருதி ச -நிமித்தமான ப்ரஹ்மமே உபாதானமும் ஆகிறது
ஏன் எனில்
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —ஏக விஞ்ஞானத்தால் ஸர்வமும் அறியப்படும் என்ற ப்ரதிஜ்ஜைக்கும்
மண் -ம்ருத் -போன்ற த்ருஷ்டாந்தங்களுக்கும் விரோதம் வாறாமைக்காக
நிமித்த காரணம் மட்டும் ப்ரஹ்மம் என்றால் குயவனைப் பற்றிய அறிவால் குடத்தின் தன்மையை அறிய முடியாதே
உபாதான காரணமும் ப்ரஹ்மமாய் இருந்தால் தானே நேற்று இருந்த மண் இன்று குடமானது போல் ஜகத்தின் ஞானம் சித்திக்கும் –
ஸாஸ்திரத்தால் மட்டுமே அறியக் கூடிய ப்ரஹ்மம் காரணமும் கார்யமுமாய் இருப்பதாக ஸ்ருதி சொல்வதால்
நிமித்தமும் உபாதானத்வமும் முரண் ஆகாது
விகாரங்கள் சித் அசித் வஸ்துக்களையே சார்ந்தவை –
இவற்றின் சரீரிகமான ப்ரஹ்மத்துக்கு விகாரம் இல்லை -என்பதைக் காட்டவே
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் -என்று ப்ரக்ருதியையும் புருஷனையும் வெவ்வேறாகக் கூறுகிறது

இனி வைசேஷிகர் வாத நிரஸனம்
நிமித்தமும் உபாதானமும் ஒருவருக்கே கூடாது -நிமித்த காரணம் ஸமவாயி காரணத்தை விட வேறானதே என்பர்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் என்று
உபாதானமாயும் நிமித்தமாயுமாய் உள்ள ப்ரக்ருதிக்கும் ஈஸ்வரனுக்கு பேதத்தை நன்கு காட்டுகிறது

சமவாயி காரண பின்னமாய் இருக்க வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு சமவாயி காரணத்தைக் காட்டிலும் பேதமா
அனைத்து சமவாயி காரணங்களின் பேதமா என்று விகல்பித்து
முதல் பக்ஷத்தில் ஜகத்தின் உபாதானமான ப்ரஹ்மத்தினிடம் ஏதேனும் உபாதான பேதம் ஸூ லபமாகையாலே
உன் நோக்கம் நிறைவேறாது
இரண்டாம் பக்ஷத்தில் குடத்தின் நிமித்தமான தண்டத்தில் தன் ரூபாதிகளான உபாதானத்தில் இருந்து
பேதம் வராதலால் லக்ஷணத்து அவ்யாப்தி தோஷம் வரும்
ஆகவே நிமித்த லக்ஷணம் கூறியது பொருந்தாது –

நாங்கள் அப்படிக்கூற வில்லை -அதன் நிமித்தத்தை விட உபாதானத்துக்கு பேதம் என்றே கூறுகிறோம்
குடம் முதலியவற்றில் உபாதானமான மண் முதலியவற்றில் இருந்து பேதம் வருவதால் அவ்யாப்தி தோஷம் வராது
ப்ரஹ்மத்தினிடமும் இந்த லக்ஷணம் இல்லை என்றால் இதுவும் கூடாது
ஏன் எனில் துவம்சம் அழிவு என்னும் கார்யம் நிமித்தத்தால் உண்டாவதால்
த்வம்ச நிமித்தமான தண்டத்தை விட உபாதான பேதம் பிரசித்தம் இல்லாததால் லக்ஷணம் அப்ரஸித்தம் ஆகிறது

ப்ரஹ்மத்தில்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதானம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம்
ஆகவே வெவ்வேறானவையே
முன் மண் இருந்த ஞானம் இப்போது குடத்தைக் கண்டு உபாதாய ஞானத்தால் உபாதிய ஞானம்
சர்வம் ம்ருன் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத்
அவஸ்தைகளுடைய பேதம் என்ற ஞானம் போலவே இங்கும்

இங்கு இன்னும் ஒரு பூர்வபக்ஷம்
உபாதானமும் உபேதேயமும் ஒன்றாக இருந்தால் சர்வ வஸ்து இல்லாமையால்
சர்வ விஞ்ஞான ப்ரதி விஞ்ஞானமும் இல்லாமல் போகுமே
தனது ஞானத்துக்கு தனது ஞானமே ஹேது என்றதாகுமே -ஆத்மாஸ்ரய தோஷம் வரும்

ஸூஷ்ம ஸ்தூல பேதம் உண்டே -இரண்டு ஞானங்களுக்கும் பேதம் சித்தம் அன்றோ
காரணம் ஒன்றே யானாலும் காரியப் பொருள்கள் பலவாக இருப்பதால் சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு விரோதம் இல்லையே –
தேவதத்தன் முதலானோருக்கு பாலத்வம் யுவத்வம் அவஸ்தா பேதம் உண்டே

ஆகந்து காப்ருக் சித்த தர்மோ அவஸ்தே தீ கீர்த்யதே
விசேஷ்ய அபி ச வைசிஷ்ட்ய பேதோ அவஸ்தாந்தராயதே -என்று
புதிதாய் இணை பிரியாதோர் தர்மம் வந்து பெறுவதே அவஸ்தை என்கிறார்
விசேஷ்யமான பொருளில் ஒரு தர்மத்தை யுடைமை என்ற பேதம்
வேறு அவஸ்தையாகக் கருதப்படுகிறது என்பதாலும் பொருந்தும்

————————————————————————————-

129-அபித்யோப தேஸாத் ச-1-4-24-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூச்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூச்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

——————————————————————————————–

130-சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25-

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
ம நீ ஷி ணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

—————————————————————————————–

131-ஆத்மக்ருதே–1-4-26-

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் -ஸோ காமயத பஹூச்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது

உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது

இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

————————————————————————————

ப்ரஹ்மம் தன்னைத் தானே ஜகத்தாகப் பண்ணினான் என்றால்
அபஹத பாப் மத்வாதிகளுக்கு முரண் படாதோ –
ஜகத்து துக்கியாய் அன்றோ இருக்கிறது என்னில்
அதற்கு சமாதானம் இதில்

131-பரிணாமாத்–1-4-27-

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் -தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

———————————————————————————-

132-யோ நிஸ்ஸ கீயதே ஹி-1-4-28-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்

யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

யோ நிஸ்ஸ கீயதே ஹி-யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது
ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்
எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால்
அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –

பிரக்ருத்யதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

ஸாஸ்த்ர ஆரம்பத்தில் ஜந்மாத் அதிகரணத்தில் தொடங்கிய நிமித்த உபாதானத்வம்
ப்ரக்ருதி அதிகரணத்திலே உறுதி செய்யப் பட்டது
இனி ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத –
பதிரேக ஆஸீத்
ந சந் ந சாஸத் சிவ
ஏவ கேவல –இத்யாதிகளில்
முன் கூறிய அதிகரணப் பொருள்களையே ஊகித்து அறிய வேண்டும் என்று சங்கதி –

134-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா–1-4-29-

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

ஏதேந -முன் கூறப்பட்ட நியாய கலாபத்தாலே
சர்வே -இதுவரை காட்டப்படாத -ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே -இத்யாதி வாக்கியங்களும்
வ்யாக்யாதா வ்யாக்யாதா-ஸ்ரீயப்பதியான பரமபுருஷ காரணத்வ பரங்களாகவே வ்யாக்யாதங்கள்
இரட்டிப்பு அத்யாய பூர்த்தியைக் காட்டும்

ஸதேவ -என்ற ஏவகாரத்தாலே காரணத்வத்தையும் உபாஸ்யத்வத்தையும் போதிக்கும்
வாக்கியங்களில் உள்ள சாமான்ய ஸப்தங்கள் அருகே விசேஷ சப்தம் இருப்பதால்
சாக பசு நியாயப்படி அதையே குறிக்கும் என்பதாக ஸித்தம்

சர்வ வேதாந்தகளும்–ஸத் -ப்ரஹ்மம் -அக்ஷரம் –ஆத்மா முதலிய பதங்களும் –
சிவ சம்பு ஹிரண்ய கர்ப்பாதிகளும் ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பதாகும்

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள

ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்

விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான்
அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்
இதம் பூர்ணம் –இத்யாதி

—————

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

———

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே
ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி
அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி
ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –

கீழ் இரண்டு பாதங்களால்-
அஸ்பஷ்ட தரமாயும் அஸ்பஷ்டமாயும் உள்ள ஜீவாதி லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்பட்டு
இதில்
ஸ்பஷ்டமான -பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்படுகின்றன
முன் பாதத்தோடு சங்கதி

முன் அதிகரணத்தில் த்யு ப்ருத்வீ யாதி சம்பந்த புருஷன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது
இதில் பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்களால் ஆக்ஷேபித்து
ஜீவனாகத்தான் இருக்கக் கூடும் என்று
பூர்வபக்ஷம் செய்ய
அதுக்கு உத்தரம் இது என்று சங்கதி

மேலும் அத்ருஸ்யத் வதி கரணத்தில் முண்டக வாக்யங்களுக்கு த்ரை லோக்ய சரீர பரமாத்ம பரத்வம் ஸ்தாபிக்கப் பட்டது
அதை ஒட்டி வைஸ்வநர அதிகரணத்தில் சாந்தோக்யத்தில் உள்ள வைச்வானர வித்யா வாக்கியங்களும்
த்ரை லோக்ய சரீரத்வம் என்னும் லிங்கத்தால்
வைச்வானர ரூப ஜீவ பரத்வத்தை சங்கித்து பரமாத்ம பரத்வமே ஸ்தாபிக்கப் பட்டது –
இந்த அதிகரணத்தில் ப்ரசங்கத்தால் ப்ராப்தமான வேறு உபநிஷத் வாக்ய விசாரம் முடிந்த பின்
அத்ருஸ்யத் வதிகரண விஷயத்தை ஸ்தாபிக்க அதன் சேஷமாக முண்டகத்தில் உள்ள த்யுப் வாதி வாக்யமே
இங்கு சமாதானம் செய்யப்படுகிறது

முதல் பாதத்தை விட்டு மூன்றாம் பாதத்தில் அது ஏன் சொல்லப்படுகிறது -என்றால்
விலக்கத்தக்க ஜீவ லிங்கங்கள் இங்கு ஸ்பஷ்டமாய் இருப்பதால் அது பொருந்துவதாகும்
இதற்கு -ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5—என்னும் ஸூத்ரத்தில் பலன் ஸ்பஷ்டமாய் உள்ளது –

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -64 –த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –1-3-1-

பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்

அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்

நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்

அதர்வணத்தில் முண்டக –யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் -என்று தொட்ங்கும் வாக்கியத்தில்
தேவலோகம் பிருத்வீ இவற்றுக்கு ஆதாரமாக கூறப்படுபவன் ஜீவனா பரமாத்மாவா என்று சம்சயம்
ஜீவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6-ஸ்லோகங்களில்
நாடீ சம்பந்தமும்
பஹுதா ஜாயமானத்வமும்
மனஸ் ப்ராண ஸம்பந்தமும்
ஜீவ லிங்கங்களாகக் காணப்படுவதால் ஜீவனே யாக்கலாம் என்று பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை
த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
த்யுத்வாதி ஆயாதநம் -இவற்றுக்கு ஆயதனமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -ஜீவன் அல்லன்
ஸ்வ சப்தாத்-அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்ற படி தனக்கு அசாதாரணமான சப்தத்தால் கூறுகிற
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–இத்யாதிகளாலே
மோக்ஷ ஹேதுத்வம் பரமபுருஷனுக்கே தானே ப்ரஸித்தமாய் உள்ளது –

ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்

ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்

முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –

——————————————-

ஸூத்ரம் -65–முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –1-3-2-

முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்

யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்

நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-

பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –

முக்தனுக்கு பரம புருஷனே பரம ப்ராப்யன் என்றதாயிற்று

——————————————-

ஸூத்ரம் -66–ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –1-3-3–

ந அநு மாநம் -இந்தப் ப்ரகரணத்தில் அனுமான பிராமண கம்யமான பிரதானம் இவற்றுக்கு ஆயதனம் ஆகாது
அதச் சப்தாத் -அந்தப் பிரதானத்தைக் குறிக்கும் ஸப்தம் இல்லாமையாலே
பிராண ப்ருச் ச –இவ்வாறே ஜீவனும் ஆக மாட்டான்

முன்பு உள்ள ஸூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் –
இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –

———————–

ஸூத்ரம் -67–பேத வ்யபதேசாத் –1-3-4-

ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான –
ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹிமானம் இதி வீத சோக

மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் –
அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும் வேறுபட்டவன்-நியமிப்பவன் –
மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –

இது போன்ற வாக்யங்களாலே ப்ரக்ருதிக்கு அதீனனான இந்த ஜீவனின்
சோகத்தை நீக்குபவனாக வேறுபடுத்திக் கூறுவதால்
அந்த ஆயதனன் ஜீவன் அல்லன்

—————

ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5-

முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு
வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன்
யாராலும் காணப்படாமல் உள்ளவன்-

முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –

இங்கும் இத்தைச் சொல்வான் என் என்னில்
நாடீ சம்பந்தம் -பஹுதா ஜாயமானத்வம் -மனஸ் பிராணங்களின் ஆதாரத்வம் இவற்றால் நடுவில்
பர ப்ரஹ்ம பிரகாரணத்துக்குத் தடை -இடையூறு -ஏற்பட்டு விட்டதோ என்ற
சங்கையைத் தீர்க்கவே இந்த அதிகரணம் ஆரம்பிக்கப் பட்டது என்று கருத்து —

————————

ஸூத்ரம் -69–ஸ்தித்யத நாப்யாம் ச –1-3-6-

முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே –
ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –

த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி –
உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி

இத்தாலும் இவற்றுக்கு ஆயதனம் பரமாத்மாவுக்கே
அஜாயமானோ பஹுதா விஜாயதே என்றபடி ராம கிருஷ்ணாதி அவதாரங்களுடன் ஆவிர்பாவமும்
நாடீ ஆதாரத்தவாதிகளும் பரம புருஷனுக்கே பொருத்தம் என்றபடி –

முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று

————————————-

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்

பரமாத்ம ப்ரகரண தொடர்ச்சியால் முண்டகம் முழுவதும் -அடி முதல் -முடிவு வரை பரமாத்ம பரமே என்று நிரூபிக்கப் பட்டது
அப்படியாகில் சாந்தோக்யத்தில் பூம வித்யையில் ஜீவ ப்ரகரண தொடர்ச்சியாலே ஜீவன் நிரூபிக்கப் படுகிறான்
என்று பூர்வ பக்ஷம் தோன்றவே
பிரமாணங்கள் மூலம் நிரூபிக்கும் இந்த அதிகரணம் பொருந்துகிறது

முன் அதிகரண விஷயமாக முண்டகத்தில்
யே ந அக்ஷரம் புருஷன் வேத ஸத்யம்-என்று
ஸத்ய அக்ஷர சப்தங்களால் குறிக்கப்படும் பரமபுருஷனே ஸத்ய ஸப்த வாஸ்யன் -என்பதை
இந்த அதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி –

ஸூத்ரம் -70–பூமா சம் ப்ரசாதாத் தத் உபதேசாத் –1-3-7-

பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –

சாந்தோக்யம் ஏழாம் அத்தியாயத்தில் –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க

வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி

ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி –
உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்

சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று
சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்

சம் ப்ரசாதா என்றது
ஜீவனையா என்கிற சங்கைக்கு –
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான்
இதன் மூலம் ஸம் ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்

ஆத்மாவை அறிய விரும்பும் நாரதருக்கு ஸநத்குமார்
நாமம் முதல் பிராணன் வரை பலவற்றையும் உபாசிக்கத் தக்கவையாக உபதேஸிக்கிறார்
பிராணனை விட எது உயர்ந்தது என்ற வினாவோ விடையோ இல்லை
ஆகையால் பிராணன் என்னும் ஜீவன் வரையிலும் ஆத்ம உபதேஸம் என்று தோன்றுகிறது
இதற்கு மேலும் பூமா என்பதும் ப்ரத்யகத்மாவே என்பதே பூர்வ பக்ஷம் –

இனி ஸித்தாந்தம்
பூமா -பூம குண விசிஷ்டன் பரமாத்மாவே
ஏன் எனில்

சம் ப்ரசாதாத் தத் உபதேசாத்-சம் ப்ரசாதன் என்னும் ஜீவனை விட உயர்ந்தவனாக
ஸத்யம் எனப்படும் பரமபுருஷனையே உபதேஸிக்கையாலே
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று சொல்லி
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்
பூமாத் வேவ விஜிஜ்ஞாஸி தவ்ய-என்று
ஏராளமான ஸூகம் உடையவனாய் சத்யம் எனப்படுபவனாய் உள்ள பரம புருஷனை உபதேசிப்பதால்
பூமா எனப்படுபவன் பரமாத்மாவே என்று தேறுகிறது

பிராண ஸப்தத்தின் பொருளே ஆத்மா என்று எண்ணி ஆத்மாவை விட எது பெரியது என்று கேட்க வில்லை
ஆச்சார்யரும் கிருபையாலே சத்யமே அறியத்தக்கது என்று
ஏஷது வா அதி வததி-முதலிய வாக்யத்தால் உபதேஸிக்கிறார்
அதி வாதித்வம் என்பது தான் உபாசிக்கும் பொருளையே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று கூறுதல் –

——————

ஸூத்ரம் -71-தர்மோபபத்தே ச-1-3-8-

பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்

அந்த பரமாத்மா எதில் பிரதிஷ்டை செய்யப் பெற்று இருக்கிறார் –
தனது மஹிமையில் முதலிய வாக்கியங்களில் விளக்கப்பட்ட
தன் மஹிமையை பிரதிஷ்டை பெறுதல்
ஸர்வ காரணத்வம்
ஸர்வாத்மத்வம் -முதலிய தர்மங்கள் பகவானிடம் உப பன்னம் -பொருந்தும் -என்பதால்
பூமா என்பது பரமாத்மாவே என்பது உறுதி யாயிற்று

இந்த வித்யையில் தியானிக்க வேண்டியவைகளை சொல்லும் கிரமத்தில்
தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்று தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான
தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும்
பூத ஆகாசமே என்பது முதல் பக்ஷம்

இதற்கு விடை கூறுகிறார் இந்த ஸூத்ரத்தில்
தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அன்று
ஏன் எனில்
உத்தரேப்ய -மேல் வாக்கியங்களில் சொல்லப்படும் ஹேதுக்களால்
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விமிருத்யு -என்று தொடங்கும் வாக்கியம்
யம் காமம் காமயதே ஸோ அஸ்ய ஸங்கல்பா தேவ சமுத் திஷ்டாதி -முதலிய வாக்யங்களால் கூறப்படும்
குணங்கள் பூத ஆகாசத்துக்குப் பொருந்தாதவை

இப்படி தஹர ஆகாசத்தைப் பூத ஆகாசம் அன்று என்று நிரூபித்து
மேலே ப்ரத்யகாத்மாவாக இருக்கலாமோ என்ற சங்கையையும் நிராகாரணம் பண்ணுகிறார்

அத ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதேஎன்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறே ஜீவனைப் பேசுவதால்
ஸ இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந -அது தவறு
அசம்பவாத் -கூறிய அபஹத பாப் மத்வாதிகள் ஜீவனிடம் சம்பாவிதம் அல்லவே
ஸம்ப்ரஸாதன் என்றது பகவானின் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது

ஸங்கல்ப -நாம -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம் – நீர் -தேஜஸ் -ஆகாசம் -மன்மதன் -திசை -பிராணன் என்னும் ஜீவன்
இவை அனைத்துக்கும் மேல் ஸத்ய ஸப்த பொருளாக பரமாத்மாவே பூம குண விசிஷ்டானாயும்
த்யானிக்கத் தக்கவனாயும் கொல்லப்படுகிறான் என்று கருத்து –

சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று
அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –

பூமாதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –

கீழ் அதிகரணங்களில் -ஸத்யம் அக்ஷரம் என்ற சொற்களுக்கும் பொருளாகக் கூறப்பட்ட பரம புருஷனே
பூமாதி கரணத்தில் -ஸத்யம் ஸப்தத்தின் பொருள் என்று ஸ்தாபித்து
இவ்வதி கரணத்தில் அக்ஷரம் என்ற சொல்லின் பொருளும் அவனே என்று ஸ்தாபிக்கப் படுகிறது –

அஷரம் அம்பராந்த த்ருதே-1-3-9-

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –

யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி

இவ்வாக்கியத்தில் -அக்ஷரம் -பிரதானமா ஜீவனா பரமாத்மாவா என்ற சங்கை வர
முதலில் பிரதானம் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அக்ஷராத் பரத பர -என்ற இடத்தில்
அக்ஷர சப்தத்துக்குப் பிரதானம் என்ற பொருளில் பிரயோகம் காணப்படுகிறது
இதற்கு விடையே
அஷரம் -அக்ஷர ஸப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மமே
ஏன் எனில்
அம்பராந்த த்ருதே-ஆகாசத்தில் எல்லையான -முடிவான -காரணமான ஆகாசத்தினைத் தாங்குவதாகக் கூறுவதால்
எதில் ஆகாசம் பின்னப்பட்டு உள்ளது
சர்வ விகாரப் பொருள்களுக்கும் காரணமாய் -ஆகாசம் என்னும் சொல்லின் பொருளாய்
பிரதானத்துக்கும் ஆதாரமாகச் சொல்லப்பட்ட அக்ஷரம் பிரதானமாக இருக்க முடியாது
பரமாத்மா தான் -அது பிரதானத்துக்கு ஆதார பூதம் -அவனே அன்றி பிரதானம் எப்படி இருக்க முடியும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு

ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-

—————————————————

ஆனால் ஜீவனுக்கும் அசேதனமான பிரதானத்துக்கான ஆதாரத்வம் கூடுமே
அக்ஷரம் என்பது ஜீவனாகலாம் என்கிற பக்ஷத்தை அடுத்துக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் -73-சா ச பிரசாச நாத் –1-3-10-

அஷரம் ஸூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால்
உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் –
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாச நே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று
ஸூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே

சா ச -அம்பராந்தமான பிரதானத்தின் த்ருதியும் -தாங்குதலும்
பிரசாச நாத் –இந்த அக்ஷரத்தின் நியமனத்தாலே ஏற்படுகிறது
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய இத்யாதி -என்ற இது முதலியவற்றில்
தன் நியமத்துக்கு உள்பட்ட ஸர்வ வஸ்துக்களையும் தாங்குதல் பக்தனுக்கோ முக்தனுக்கோ கூடாது
ஆதலின் புருஷோத்தமன் ப்ர ஸாஸ்தா வான அக்ஷரமாம் –

———————

ஸூத்ரம் -74-அந்ய பாவ வ்யாவ்ருத்தே ச –1-3-11-

அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க –
தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால்
அஷரம் பரம் பொருளே –

அந்ய பாவ -வேறு தன்மை -ப்ரதாநத்வமும் ஜீவத்வமும்
வ்யாவ்ருத்தே ச –விலக்கப்படுவதால் -அக்ஷரம் என்பது பரமாத்மாவே யாகும்
கார்கி இந்த அக்ஷரத்தின் இடமே ஆகாசம் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பட்டுள்ளது
இந்த அக்ஷரமே பிறவற்றால் காணப்படாமல் தான் அனைத்தையும் காண்கிறது என்று சொல்லுகையால்
இப்படி ஸர்வஞ்ஞனாயும் ஸர்வ அந்தர்யாமியான ஸர்வ ஆதரன் எனும் அஷரம்
பிரதானத்தில் இருந்தும் ஜீவனிடம் இருந்தும் பிரிதாய் விலக்கிக் கூறப்படுகிறது என்று ஸித்தாந்தம் –

அஷர அதி கரணம் சம்பூர்ணம்

———————————————–

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே-

அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு -என்று பரமாத்மா இதரங்களால் காணப்படாதவன் என்று கூறப்பட்டது
அப்படியாயின் -பராத்பரம் புரி சயம் புருஷம் ஈஷதே -என்று காணப்படுபவனாகக் கூறப்படுபவன்
பரமாத்மாவாய் இருக்க முடியாது என்ற சங்கை இந்த அதிகரணத்தில் தீர்க்கப்படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -75-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –1-3-12-

ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று –
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று

புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று
என்பர் பூர்வ பஷத்தில்

அதர்வணத்தில் சத்யகாம ப்ரஸ்தானத்தில் -பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே என்னும் பகுதியில்
தியானிக்கவும் பார்க்கவும் படும் புருஷன்
ஜீவ சமஷ்ட்டி ரூபமான நான்முகனா அல்லது பரம புருஷனா என்ற சம்சயம்
சமஷ்டி ரூபமான -ஜீவனான -சதுர்முகன்பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஒரு மாத்திரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் மனுஷ்ய லோகம் என்றும்
இரண்டு மாத்ரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் அந்தரிக்ஷ பிராப்தி என்றும்
மூன்று மாத்ரை உபாசன பலம் ப்ரஹ்ம லோக பிராப்தி என்றும் கூறப்பட்டு இருப்பதால்
அந்த லோகத்தை அடைந்து காணப்படுபவன் நான்முகனே என்று பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை –

ஆனால் மேலே –
யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –
என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-

ஈஷதி கர்ம -பார்வைக்கு விஷயமானவன்
ஸ -அந்த ஸ்ருதி ப்ரதிபாத்யனான பரமாத்மாவே -சதுர்முகன் அன்று ஏன் எனில்
வ்யபதேசாத் ச –சாந்தமாய் ஜாரை மரணம் அற்று அம்ருதமாய் அபயமாயும் பரமமான ப்ரஹ்மத்தை அடைகிறான்
என்று மேலே சொல்வதால்
இத்தகைய தர்மங்கள் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
அந்தரிக்ஷ லோகத்துக்கு மேலே நான்முகன் லோகம் என்பது சரி அல்ல
நடுவில் மஹர் லோகாதிகள் உண்டே
ஆகவே சர்வ பிராகிருத லோகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டம் -யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஆகவே நான்முகன் லோகம் அன்று என்று திரு உள்ளம் –

ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே-

இப்படி கார்க அக்ஷர வித்யையில் அறியத் தக்க புரிசயனான புருஷனுக்கு பரமாத்மா நிலையை ஸ்தாபித்து
தஹர வித்யையில் ஆகாசம் எனப்படும் புரிசய புருஷனுக்கும் அப்ரமாத்மத் வம் இல்லை –
அவன் பரமாத்மாவே என்பது சங்கதி

ஸூத்ரம் -76-தஹர உத்தரேப்ய-1-3-13-

இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –

பஞ்சபூதங்களில் ஒன்றே என்பது முதல் பூர்வ பக்ஷம்
ஏன் என்னில்
ஆகாசம் என்ற சொல் அந்தப்பொருளிலே பிரசித்தம்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் -என்று
தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும் பூதாகாசமே என்பது முதல் பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை

தஹர -தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அல்ல
ஏன் என்னில்
உத்தரேப்ய-மேல் வாக்யங்களால் சொல்லப்படும் ஹேதுக்களாலே

அதே உபநிஷத்தில் மேலே –
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்ய காம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே

மேலும் அதே உபநிஷத்தில் மேலே –
யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-

அன்வேஷ்டவ்யம்-என்று சொன்னதும் கல்யாண குணங்களைப் பற்றியே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே-என்ற விஷய வாக்கியத்தின் பொருள் மேலே சொல்லப்படும் –

——————————————————————-

ஸூத்ரம் -77-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –1-3-14-

அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும்
ப்ரஹ்ம லோகம் என்பதாலும்
தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே

சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

நிலத்துக்குள் புதைந்து கிடைக்கும் புதையலை அறியாத மக்கள் அந்த நிலத்தின் மேலே அடிக்கடி நடமாடியும் அறிவது இல்லை
கதி சப்தாப்யாம் –
உபநிஷத் வாக்கியத்தில் ஏதம் என்று தஹர ஆகாசத்தைக் குறிப்பிட்டு ஸூ ஷுப்தி தசையில் செல்லும் -செல்லத்தக்க
தஹர ஆகாசத்தை ப்ரஹ்ம லோகம் என்று
இப்படி கமனத்தாலும் ப்ரஹ்ம லோக ஸப்தத்தாலும் குறிப்பது ப்ரஹ்மமே என்று சாதிக்க வல்லது
ததா ஹி த்ருஷ்டம்
இப்படி வேறு உபநிஷத்திலும் -ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-
முதலான வாக்கியங்களில் காணப்படுகிறது
லிங்கம் ச –
மற்ற ஸ்ருதிகளை விட்டு இதே ஸ்ருதியில் சொல்லும் கதியும் -ப்ரஹ்ம லோக ஸப்தமும்
வேறு எதையும் அபேக்ஷிக்காத லிங்கங்கள் என்றவாறு

———————————————-

ஸூத்ரம் -78-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –1-3-15-

அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –

சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய –இந்த பரமாத்மாவுக்கு ஜகத்தினைத் தங்குவது என்னும் மஹிமை
அஸ்மின் -இந்த தஹர ஆகாசத்தில்
உபலப்தே –தோன்றுகையாலே இந்த மகிமைக்கு ஆஸ்ரயமான தஹர ஆகாசம் பரமாத்மாவே தான்
யஸ் ஆத்மா ஸ சேதுர் வித்ருதி என்றும்
ஏஷாம் லோகாநாம் அசம்பேதாய இத்யாதி வாக்யங்களால் தாரணா ரூபமான மஹிமை சொல்லப்படுகிறது –

——————————————–

ஸூத்ரம் -79-பிரசித்தே ச –1-3-16-

ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால்
தஹரா பர ப்ரஹ்மமே –

தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-

மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே –

ஸ்ருதி ப்ரசித்தமும்
அபஹத பாப் மத்வாதிகளுடன் கூடிய ப்ரஸித்தி ப்ரபலம்

இப்படி பூத ஆகாசம் இல்லை என்று நிரூபித்து
மேலே பிரத்யக்தமா இல்லை என்று நிரூபிக்கிறார்

———————————————–

ஸூத்ரம் -80-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –1-3-17-

தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்

சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும்
பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள்
பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-

அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண-என்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஜீவனைப் பேசுவதால்
ச இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந-அது தவறு
அசம்பவாத் –கூறிய அபஹத பாப் மதவாதி கல்யாண குணங்கள் சம்பாவிதம் அல்ல என்பதால்
ஸம் ப்ரஸாதன் என்றது பகவத் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது –

——————————————–

ஸூத்ரம் -81-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –1-3-18-

பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –

ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல்
இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-

உத்தராத் சேத் -பிரஜாபதி வாக்யத்தால் -மேலே ஜீவனுக்கும் இந்த அபஹத பாப் மத்வாதிகள் கூறுவதால்
ஜீவனுக்கு அவை சம்பாதிக்காது என்று கூறுவது சரியில்லை
ஆவிர்ப்பூத ஸ்வரூப து –முதலில் கர்ம சம்பந்தத்தால் மறைக்கப்பட்ட ஸ்வரூபத்தை யுடைய ஜீவன்
பின்பு பரமாத்மா ஸம்பத்தியால் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்று பிரஜாபதி வாக்கியம்
து -தஹர ஆகாஸனோ என்னில் -மறைக்கப்படாத ஸகல கல்யாண குணங்களும் ஸ் வாபாவிகமாக
இவனது ஸ்வரூப ஆவிர்பாகத்துக்கும் காரணமான பரமபுருஷனே -ஜீவன் அல்லன்
ஸத்யன் என்ற சொல்லின்படி சேதன அசேதன நியாமகன்
ஆகவே பரமாத்மாவே அன்றி ஜீவன் அல்லன்

இப்படியாகில் ஜீவனை ஸம் ப்ரஸாத என்று ஜீவனை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும் என்றால் -மேல் –

——————————————

ஸூத்ரம் -82-அன்யார்த்த ச பராமர்ச –1-3-19-

ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-

அன்யார்த்த ச பராமர்ச –
பராமர்ச -தஹர வாக்கியத்தில் ஜீவனை பிரஸ்தாபித்தது
அன்யார்த்த ச -தஹர ஆகாச ப்ராப்தியாலே முக்தனுடைய ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படுகிறது என்று
அவனது கல்யாண குணத்தை விளக்கவே என்றவாறு –

———————————————

ஸூத்ரம் -83-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –1-3-20

தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 ஸூத்ரம் சொல்லவே
சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-

அல்ப ஸ்ருதே –ஆராக்ர சத பாகஸ்ய -இத்யாதி வாக்கியப்படி அணு பரிணாமம் ஜீவனுக்கே கூடும் என்றால்
இதி சேத்–அது தவறு
தத் உக்தம் -ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் -நிசாயத்வா தேவம் என்ற ஸூத்ரத்தில் இது விளக்கப்பட்டு விட்டது
உபாஸகர்கள் அனுக்ரஹத்துக்காக கட்டை விரல் அளவுள்ள
திருமேனி உள்ளவன் என்பதால் அல்பத்வம் சொல்லப்படுகிறது என்று திரு உள்ளம் –

———————————————–

ஸூத்ரம் -84-அநு க்ருதே தஸ்ய ச –1-3-21-

முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

அநு க்ருதே தஸ்ய ச
தஸ்ய -அந்த பரமாத்மாவின்
அநு க்ருதே -ஸாம்யத்தை அடைகையாலும்
சாம்யத்தை அடையும் ஜீவனைக்காட்டிலும் சாம்யத்தை உண்டாக்கும் பரமாத்மாவுக்கு தஹரத்துக்கு –
பேதம் ஸித்தமாயிற்று
நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்று முக்தனுக்கு ஸாம்யா பத்தி -சொல்லிற்றே –

————————————————-

ஸூத்ரம் -85-அபி ஸ்மர்யதே-1-3-22-

ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

இங்கும் பகவத் உபாஸனத்தாலே அவனுடன் ஸாம்யம் உடைய அனுக்ரஹம்
பகவானால் என்று சொல்லப்படுகிறதே

அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம என்று அனுவதித்து
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச என்ற வாக்கியத்தில் அஸ்மின் -இந்த அற்பமான இதயம் என்னும் தாமரையில்
அந்தர ஆகாச -உள்ளிருக்கும் ஆகாசம் எனப்படும் பரமாத்மா
ய -எவன் உள்ளானோ
தஸ்மின் -அவனிடம்
யத் -எந்த எந்த கல்யாண குணம் உள்ளதோ
தத் -அந்த ப்ரஹ்மமும் அந்த கல்யாண குண ஜாதங்களும் இரண்டும் உபாசிக்கத்தக்கவை
என்று யத் சப்தத்தை அத்தியாஹரம்-வருவித்திக் கொண்டும் கொள்ளாமலும் பொருள் சொல்லலாமே –

1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –

அல்ப ஸ்ருதே –ஸூத்ரத்தில் கூறிய அல்ப பரிமாணத்வம்
ஜீவனுக்கும் கடவல்லியில் கூறப்பட்டுள்ளதால்
அங்குஷ்ட ப்ரமிதன் ஜீவனாகவே இருக்கலாமே
என்ற சங்கையைப் பரிஹரிக்கவே
இந்த அதிகரணம் என்று சங்கதி –

ஸூத்ரம் -86-சப்தாத் ஏவ ப்ரமித–1-3-23-

கடவல்லியில் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மனி திஷ்டதி என்றும்
ஈஸானோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக என்றும்
ஹ்ருதய ஸம் நிவிஷ்ட என்றும்
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் கூறப்பட்ட அங்குஷ்ட ப்ரமிதன்
ஜீவனா பரமாத்மாவான என்ற சங்கை
ஜீவனே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்றும்
அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூப என்றும்
பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம் என்பதால்
அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்

சப்தாத் ஏவ ப்ரமித–பரமாத்மாவுக்கு அசாதாரணமான ஈஸானோ பூத பவ்யஸ்ய என்னும் ஸப்தத்தாலேயே
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி-என்ற வாக்கியத்தில் கர்ம சம்பந்தமாகிய ஜீவ லிங்க சப்தம் இருப்பது போல்
பரமாத்ம லிங்கம் இங்கு இருப்பதாலேயே
பரமாத்மாவே தான் ஜீவன் அல்லன் என்று திரு உள்ளம்

கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று
முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு -எனவே
அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

ஆனால் விபுவான பரமாத்மாவுக்கு
அங்குஷ்ட ப்ரமிதத்வம் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு மேல் ஸூத்ரம்

———————————————————–

ஸூத்ரம் -87-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-1-3-24-

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்
து சப்தம் சங்கையை விலக்குவது
ஹ்ருதி –மனிதனின் ஹ்ருதயத்தில் உபாஸனார்த்தமாக
தத் அபேஷயா -அத்தை அபேக்ஷித்து விபுவான பர ப்ரஹ்மத்துக்கு அந்த அளவு கூறப்பட்டது
மனுஷ்யாதிகாரத்வாத்-உபாஸனம் விதிக்கும் ஸாஸ்த்ரம் மனிதர்களை உத்தேசிக்கையாலே
அவர்கள் இருதயத்தை முன்னிட்டே இந்த அளவு என்று ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டது –

ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்

————————————————————-

மனிதர்களுக்கு உபாசனத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு
பின்பு தேவத அதிகரணம்
மத்வாத் யதி கரணம்
அப ஸூத்ர அதிகரணம்
ப்ரசங்க சங்கதியால் இடையே வந்தன
இப்படி விசேஷ அதிகாரம் பற்றி நிரூபிப்பதால் ஸாமான்யமான அதிகாரத்தைப் பற்றிப் பேசும்
மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்துடன் சாங்க்யம் -கலப்பு -என்ற தோஷம் இல்லை

இப்படி பிரசங்காத் வந்த மூன்றில் முதலில் தேவத அதிகரணத்தில்
தேவதைகளுக்குப் பொதுவாக உபாஸனத்தில் அதிகாரம் உண்டா என்று கேட்டு
அத்தை ஸ்தாபிக்கிறார் –

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு

ஸூத்ரம் -88-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-1-3-25-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-

உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்

தத் -அந்த ப்ரஹ்ம உபாஸனம்
உபரி அபி -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும்
பாதராயண -உண்டு என்று பாதாரயணர் கூறுகிறார்
சம்பவாத்-அநேந ஜீவேந அநு ப்ரவிஸ்ய நாம ரூப வியாகரவாணி -என்பதால்
தேவதைகளுக்கும் சரீரம் உண்டு
மோஷையில் ஆசையும் சாமர்த்தியமும் கூடுவதால் உபாஸனம் உண்டு –

நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –

சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

———————————————————–

ஸூத்ரம் -89-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–1-3-26-

தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்

சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

விரோத கர்மணி இதி சேத் ந
தேவதைகளுக்கு சரீரம் உண்டு என்று ஏற்றால் யாகாதி கர்மங்களில் எந்த இடத்துக்கு அவர்கள் செல்வார்கள்
என்னும் ஆஷேபம் தவறு
அநேக பிரதிபத்தே தர்சநாத்–ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டே
எனவே விரோதம் வராது என்றவாறு

————————————————–

ஸூத்ரம் -90-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-1-3-27-

தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-

விரோத -சொல்லை முன் ஸூத்ரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
சப்தே -வைதிக சப்தத்தில் விரோதம் வரும்
சரீரம் உண்டு என்றாலே அவயவங்களுடன் இருந்து உத்பத்தி விநாசம் வரும்
உத்பத்திக்கு முன்னும் விநாசத்துக்குப் பின்னும் இந்திராதி சொற்களுக்கு உரிய பொருள் இல்லாமல் போகும்
அநித்யத்வமும் ஏற்க நேரிடுமே என்றால்
இதி சேத் ந -இப்படிச் சொல்வது தவறு
அத பிரபவாத் -இந்த்ராதிகள் நசித்தவுடன் நித்தியமான வேதங்களால் இந்த்ராதியின் ஆக்ருதிகளை நினைத்து
நான்முகன் புது புது இந்த்ராதிகளைப் படைக்கிறான்
ததா யதா பூர்வமே கல்பயத்
இதுக்குப் பிரமாணம் ஏது என்றால்
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் தெரிந்து கொள்கிறோம் –
ஆகையால் அவையே பிரமாணம்

வேதத்தில் –
வேதே ந நாம ரூபே வியாகரோத் ஸதா ஸதீ பிரஜாபதி என்றும்
ஸ்ம்ருதியில்
ஸர்வேஷாஞ்ச ஸ நாமானி கர்மாணி விவிதானி ச
வேத ஸப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ் தாச்ச நிர்மமே -என்றும் உள்ளனவே –

———————————————–

ஸூத்ரம் -91-அத ஏவ ச நித்யத்வம் —1-3-28-

விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை –
இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

அத ஏவ -ப்ரஹ்ம தேவன் வைதிக சப்த்தத்தாலே ஜகத்தில் ஆகாரத்தை நினைத்து ஸ்ருஷ்டி செய்வதாலேயே
ச நித்யத்வம்-நித்யத்வம் ஸித்திக்கிறது
நைமித்திக பிரளயம் முடிந்த உடன் ப்ரஹ்ம தேவன் வஸிஷ்ட விச்வாமித்திராதியரின் பதவிகளுக்கு
உரிய புண்யம் மிக்க ஜீவர்களை நினைத்து
விச்வாமித்ரஸ்ய ஸூ க்தம் பவதி -முதலிய வேத பாகங்களையும் ஆராய்ந்து முன் கல்பங்களின் படியே
இந்த கல்பத்திலும் ஸ்ருஷ்டித்து அவர்கள் மூலமாக மந்த்ரங்கள் ஸூ க்தம் இவற்றைப் பரப்பச் செய்தார்

ஆனால் பிராகிருத பிரளயத்தில் ப்ரஹ்மாதிகள் யாவரும் நசித்த படியால்
பிராகிருத ஸ்ருஷ்டி தொடங்கும் போது நித்யம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கையை மேல் பரிஹரிக்கிறார் –

————————————————-

ஸூத்ரம் -92-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —1-3-29-

பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
ஸூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்

ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –

வேதங்களை முன் வரிசை மாறாமல் பிரமனுக்கு உபதேசிக்கிறார்
வேதத்துக்கு நித்யத்வம் என்பது முன்பு உச்சரித்த க்ரமத்தை நினைத்து
அதே க்ரமப்படி மறுபடியும் உச்சரிக்கப் படுவதே
அக்ஷரங்கள் நித்யம் என்பது அன்று –

தேவாதிகரணம் சம்பூர்ணம்

—————————————————-

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு-

கீழே தேவாதி சாமான்யத்துக்கு பகவத் உபாசன அதிகாரம் ஸ்தாபிக்கப் பட்டது
இதில் வஸ்வாதி தேவதா விசேஷங்களுக்கு மது வித்யை என்னும்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –

ஸூத்ரம் -93-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-1-3-30-

மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
ஸூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் –
நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் –

சாந்தோக்யம் மது வித்யையில்
அசவ் வா ஆதித்யோ தேவ மது -என்று தொடங்கி
தத்யத் பிரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி –என்று கூறி –
ஸ ஏதத் அம்ருதம் வேத வஸூநா மேகோ பூத்வா அக்னிநைவ முகேந ஏத தேவ அம்ருதம்
த்ருஷ்ட்வா த்ருப் யந்தி –முதலிய வாக்யங்களால்
ருக் யஜுஸ் சாமாதி வேதங்களில் சொல்லப்பட்ட
கர்மாக்களால் ஏற்படும் ரசத்துக்கு ஆதாரம் ஆதலின்
ஆதித்யனை தேவமது என்றும்
கிழக்கில் வஸூக்கள்
தெற்கில் ருத்ரர்கள்
மேற்கே ஆதித்யர்கள்
வடக்கே மருத்துக்கள் சாத்யர்கள் போக்யமாக அனுபவிப்பதாகச் சொல்லி
அவர்கள் அனுபவிக்கும் ஆதித்யனின் அம்சங்களை உபாசிக்கத் தக்கவை யாகவும்
ப்ராப்யங்களாகவும் உபதேசிக்கிறது –

தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால்
எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
பலனான வஸூத்வம் முன்னமே அடையப் பெற்று இருப்பதாலும் அதிகாரம் இல்லை என்பதே பொருந்தும்
என்பதும் பூர்வ பக்ஷம்
இதையே இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் கூறும் –

மத்வாதிஷூ அசம்பவாத் -தாமே தம்மை உபாசித்து அசம்பாவிதம்
கர்மாவும் கர்த்தாவுமாய் இருக்காய் சம்பவியாது
அநதிகாரம் ஜைமிநி-
எனவே அதிகாரம் இல்லை என்று ஜைமினி

—————————————————-

ஸூத்ரம் -94-ஜ்யோதிஷி பாவாத் ச –1-3-31-

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே

அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

ஜ்யோதிஷி -பர ப்ரஹ்மத்தின் இடம்
பாவாத் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்ற பர ப்ரஹ்ம உபாஸனம்
மனுஷ்ய தேவ இருவருக்கும் பொதுவாய் இருந்தும்
ஜ்யோதிஸ்ஸான பர ப்ரஹ்மத்தை தேவர்கள் உபாசிக்கிறார்கள் என்ற சிறப்பான வசனம்
வஸூ வாதிகளுக்கு மது வித்யையில் அதிகாரம் இல்லை என்று காட்டுகிறது என்பர் பூர்வ பக்ஷி

———————————————————

ஸூத்ரம் -95-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —1-3-32-

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி
இது சித்தாந்தம்

மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் –
தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

து சப்தம் ஜைமினி பக்ஷத்தை மறுதலிக்கிறது
பாவம் து பாதராயண -அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கூறுகிறார்
ஏன் எனில்
அஸ்தி ஹி-உபாஸ்யத்வமும் ப்ராப்யத்வமும் உள்ளன
ய ஏதா மேவம் ப்ரஹ்ம உபநிஷதம் வேத -என்று க்ருத்ஸன முழு மது வித்யைக்கும் ப்ரஹ்ம வித்யை என்றே பெயர்
இவர்களை சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம உபாசனை என்றவாறு
கல்பாந்தரத்தில் தங்கள் தேஹ முடிவில் ப்ரஹ்மத்தை அடைவதில் விரோதம் இல்லையே –

————————————————————

2-9- அப ஸூத்ர அதிகரணம்

கீழே தேவாதிகளுக்கும்
வ ஸூ முதலிய தேவ விசேஷங்களுக்கும்
ஆர்த்தித்தவமும் சாமர்த்தியமும் இருப்பதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்தார்
அப்படி என்றால் நான்கு வர்ணத்தாருக்கும் ஏற்கலாமே
என்ற சங்கையை நீக்குகிறார் இதில்

ஸூத்ரம் -96-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –1-3-33

அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்

இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் ஸூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை
அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-

அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் ஸூத்ரர்களுக்கும் சம்பவிக்கலாமே
அக்னி கிடையாது என்றாலும் மனஸ்ஸாலே உபாஸிக்கலாமே
இதிஹாஸ புராணங்களைக் கேட்ட மாத்ரத்தாலேயே ப்ரஹ்ம ஸ்வரூபாதி ஞானம் ஏற்படலாமே
விதுரர் போன்றவர் ப்ரஹ்ம நிஷ்டர்கள் என்பது பிரசித்தம் அன்றோ
ஸம் சர்க்க வித்யையில் -ஆஜஹார இமாச் ஸூத்ர -என்று ஸூ த்ர சப்தத்தால்
ஞான சுருதியை அழைத்து ரைக்குவர் ப்ரஹ்ம வித்யையை உபதேஸிக்கையாலே
ஸூ திறனுக்கும் அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷி
அதை நிரஸனம் செய்கிறார்

உபநயனம் செய்து வேத அத்யயனம் செய்து வேதாந்த ஞானத்தால் தான் ப்ரஹ்ம ஞானம் என்பது ஸாஸ்த்ர சித்தம்
இதிஹாஸ புராணாதிகள் ஸ்வ தந்திரமான உபாயங்கள் அல்ல -வேதாந்த விளங்கங்களே
விதுராதிகள் முன் ஜென்மத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் -அந்த ஸம்ஸ்காரமே இப்பிறவியிலும் தொடர்ந்தது
ஸூத்ர என்று அழைத்தது சோகம் அடைந்தவன் என்றவாறு -ஜாதி வசனம் அல்ல
தத நாதர ஸ்ரவணாத்-அந்த ஹம்ஸ ரூபம் கொண்ட இரு ரிஷிகளின் அநாதர வாக்யத்தைக் கேட்டு
ததா ஆத்ரவணாத்—ஜானை சுருதி ராஜா ரைக்குவரைத் தேடி ஓடி வந்ததால்
அஸ்ய -அந்த ஞான சுருதிக்கு
ஸூக் ஸூஸ்யதே ஹி –சோகம் காணப்படுகிறது அன்றோ

——————————————————————-

ஸூத்ரம் -97-ஷத்ரியத்வ கதே -ச-1-3-34-

தானம் அன்ன தானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை

ஸம் வர்க்க வித்யையின் தொடக்கத்தில்
ஜானஸ்ருதிர் ஹ பவ்த்ராயண பஹு தாயீ -முதலிய வாக்யங்களால்
சிறந்த கொடையாளி -கிராமங்களை தானம் பண்ணினவன்
அன்னம் உண்பித்தவன் -என்று
ஷத்ரிய வர்ணாஸ்ரம நிறைந்தவன் என்பதாலும்
ஸூத்ரன் என்ற சங்கை வேண்டாம் –

———————————————————————

ஸூத்ரம் -98-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —1-3-35-

உத்தரத்ர -இந்த வித்யையின் மேல் பகுதியில் ப்ராஹ்மண ஷத்ரியர்களுக்கே சம்பந்தம் காணப்படுகிறது
அதக ஸுநகம் காபேய மபி பிரதாரிணஞ்ச -இத்யாதி வாக்கியத்தில்
அபி ப்ரதாரீ என்று சைத்ரதரன் எனப்படும் ஷத்ரியன் சொல்லப்படுகிறான்
சைத்ரரதேன லிங்காத் —காபேயம் என்பதுடன் தொடர்பால் -லிங்கத்தால் -அபிப்ரதாரி என்பவன்
ஷத்ரியன் என்றும் சைத்ரதரன் என்றும் தோன்றுகிறது
மற்றோர் பிரகரணத்தில் காபேயனுடன் சம்பந்தம் உள்ளவன் சைத்ரரதன் ஷத்ரியனே என்றும் காணப்படுகிறது
ஏதே நவ சைத்ர ரதம் காபேயோ அயா ஜயன் -என்ற இடத்திலும்
சைத்ர ரதோ நாம ஏக க்ஷத்ர பதிர ஜாயத -என்கிற இடத்திலும் அவ்வாறே

ஆகவே இவ் வித்யையில் ப்ராஹ்மணரான ரைக்குவரை விட்டு
வேறான ஞானஸ்ருதியும் ஷத்ரியனாகவே இருக்க வேண்டும் என்று கருத்து –

சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே –
சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான காபேயனும்-
காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க –
இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி ஜாயத -என்பதன் மூலம்
அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்

இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞான ஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –

அதனால் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று

————————————————————–

ஸூத்ரம் -99-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –1-2-36-

ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம் செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது
ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
ஸூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை

சம்ஸ்கார பராமர்சாத் -வித்ய உபதேச பிரகரணத்தில் -உபத்வா நேஷ்யே -என்று உபநயனத்தைக் கூறுகையாலே
தத பாவாபி லாபாத் ச – ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –என்று
ஸூத்ரனுக்கு உப நயனம் இல்லை என்று சொல்வதால் ஞானசுருதி ஸூத்ர ஜாதியன் அல்லன் –

எனவே ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

—————————————————————-

ஸூத்ரம் -100-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —1-3-37-

நைதத் அப்ரஹ்மணோ வேத்தும் அர்ஹதி
ஸூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்

ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

——————————————————————-

ஸூத்ரம் -101-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —1-3-38-

ஸூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

——————————————————————–

ஸூத்ரம் -102-ச்ம்ருதே ச-1-3-39-

ஸ்ம்ருதிகளும் ஸூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-

அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்

அப ஸூத்ராதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————–

ஸூத்ரம் -103–ப்ரமிதாதி கரணம் சேஷம்-1-3-39-

அங்குஷ்ட ப்ரமித அதிகரணத்தில் மனுஷ்ய உபாஸன அதிகாரம் பற்றிய பேச்சால்
ப்ராசங்கிகமாக மூன்று அதிகரணங்களில் தேவதாதி அதிகாரத்தை பிரஸ்தாபித்து
ப்ரக்ருதமான அங்குஷ்ட பிரமிதனுக்குப் பரமாத்மத் வத்தை
இரண்டு ஸூத்ரங்களாலே சாதிக்கிறார் –

ஸூத்ரம் -104-கம்ப நாத் –1-3-40

அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-

தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————————————-

ஸூத்ரம் -105-ஜ்யோதிர் தர்சநாத் –1-3-41-

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –

இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-

ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்

————————————————–

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

முன்பு அங்குஷ்ட பிரமிதம் பரமாத்மா என்று சாதிக்கப் பட்டது
அதற்கு முன் தஹர வித்யை புத்தியில் இருப்பதால்
அதற்கு அடுத்த ப்ரகரணத்தில் உள்ளதும்
தஹர வித்யைக்கு அங்கமுமான
ஆகாஸோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா என்னும் வாக்யத்தில் முக்தாத்மாவே பேசப்படுகிறான்
என்று சங்கித்து
நிராகரிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் -106-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —1-3-42-

ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே

முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –

சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –

சித்தாந்தம் –
ஆகாயத்தைக் கூறும் பொழுது –
நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –

ஆகாச -ஆகாசம் எனப்படுவது பரமாத்மாவே -முக்தன் அல்லன்
ஏன் எனில்
அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —பரமாத்மாவுக்கு அசாதாரணமான நாம ரூபங்களை நிர்வஹித்தலும்
அவற்றால் ஸம்பந்தப்படாமையும் கூறப்படுவதாலும்
மேலும்
நிருபாதிக ப்ரஹ்மத்வம் அம்ருதத்வம் ஆத்மத்வம் இவற்றாலும்
ஆகாசம் என்பது பரமாத்மாவே –

———————————————————

தத்வ மஸி -என்று ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யம் சொல்லுவதாலும்
நேஹ நா நாஸ்தி -என்று பேதத்தைத் தடுப்பதாலும்
ஜீவனைக் காட்டிலும் பரமாத்மாவுக்கு அர்த்தாந்தரம் சொன்னது தகாது என்ற சங்கை தோன்ற
விடை தருகிறார் –

ஸூத்ரம் -107-ஸூஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –1-3-43-

தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால்
ஜீவன் வேறு பரம்பொருள் வேறு

பூர்வ பஷி –
தத்வ மஸி–
அஹம் பிரம்மாஸ்மி –
நேஹ நா நாஸ்தி -என்பர்

சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்

ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று
பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்

எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-

வ்யபதேசாத்-என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –ஸூ ஷூப்ததி தசையிலும் யுத்க்ராந்தி தசையிலும்
அத்யந்த அஞ்ஞனனான ஜீவனைக் காட்டிலும்
யோ பேதேந –அதே சமயத்தில் ஸர்வஞ்ஞனான ஜீவனைக் குறிப்பிடுவதால் இரண்டும் வெவ்வேறே
பரமாத்மா அர்த்தாந்தர பூதனானவனே என்றவாறு –

————————————————————-

ஸூத்ரம் -108-பத்யாதி சப்தேப்ய —1-3-44-

பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல

ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-

பத்யாதி சப்தேப்ய -ஸர்வஸ்ய அதிபதி –ஸர்வஸ் ஈஸாநா –ஸர்வஸ்ய வஸீ –இத்யாதிகளால்
தழுவப்படும் ப்ராஞ்ஞனை பதி என்றும் -ஈஸாநா என்றும் வஸீ என்றும் சொல்வதால்
ஆகாசம் பரமாத்மாவே என்று ஸித்தமாயிற்று
ஐக்யம் கூறியதும்
பேதத்தைத் தடுத்ததும்
ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமி ஒருவனே
ஆதலாலும் ப்ரஹ்ம சரீரம் இல்லாத வஸ்துவே உலகில் இல்லாமையாலும் பொருந்தும் என்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் -என்ற ஸ்ருதியிலே நன்கு கூறப்பட்டது என்று திரு உள்ளம்

அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்

———-

பத்து அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

என்ற பத்து கல்யாண குணங்களாலே பூஷிதனான ஸ்ரீயப்பதி புருஷோத்தமன்
இந்த மூன்றாம் பாதத்தால் விசாரித்து ஸ்தாபிக்கப் பட்டான் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளுகிறார் –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவிநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூமதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற -அஸ்பஷ்ட தரமான -ஜீவாதி லிங்கங்களையுடைய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய வேதாந்த வாக்கியங்களை
பரம புருஷனே காரணம் என்று விளக்குவன என்று ஸ்தாபித்த ஸ்ரீ பாஷ்யகாரர்
பின்வரும் மூன்று பாதங்களால்
அஸ்பஷ்டமாயும்
ஸ்பஷ்டமாயும்
ஸ்பஷ்ட தரமாயும் உள்ள
ஜீவாதி லிங்கங்களைக் கொண்ட வாக்கியங்களை முறையே
பரம புருஷ காரணத்வத்தை விளக்குவன என்று ஸ்தாபிக்கிறார் என்று இவ்விடம் சங்கதி

மேலும் முதல் பாதத்தால் வேதாந்த வாக்யங்கள் ப்ரஹ்ம பரம் அல்ல என்ற யோகம் விலக்கப்பட்டது -அயோக வ்யச்சேதம் –
மேல் வரும் மூன்று பாதங்களாலும் -அவ்வாக்கியங்கள் ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஒன்றையும் விலக்காதவை
என்று அந்ய யோக வ்யச்சேதம் -என்று மற்றோர் சங்கதி

மேலும் முதல் பாதத்தில் சர்வ வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மத்தைப் போதிப்பது வல்ல என்று ஆக்ஷேபித்து
ப்ரஹ்ம போதகங்களே என்று நிரூபிக்கப் பட்டது
பின் வரும் மூன்று பாதங்களிலோ ஒவ்வொரு வாக்கியம் ப்ரஹ்ம பரமானாலும் மற்றோர் வாக்யம் அப்படி அல்ல என்று
க்ரமமாகப் பல வாக்கியங்களையும் ஆக்ஷேபித்து ப்ரஹ்ம பரமே என்று சாதிக்கப் படுகிறது என்று மூன்றாவது சங்கதி –

இதனால் முதல் பாதம்
அடுத்து த்ரீ பாதீ -என்று இரு பிரிவாக்கப் பேசப்படுகிது

இரண்டாம் பாதத்தில் ஜகத்து ப்ரஹ்ம சரீரம் என்றும்

மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்மம் உலகின் ஆதாரமானவன் என்றும்

நான்காவதில் தாம் சொல்லும் கருத்துக்களுக்கு விரோதமாக வாதம் செய்யும் சாங்க்யாதிகளின்
பர பக்ஷிகளின் பக்ஷம் கண்டிக்கப்படுகிறது என்றும் சங்கதி –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

——–

முதல் அதிகரணம்-சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே-

முன் அதிகரணத்தில் –ப்ரதர்த்தன வித்யையில் –
இந்த்ர ப்ரணாதி ஸப்தங்கள் மஹா வாக்ய ஸ்வாரஸ் யத்தாலே எவ்வாறு ப்ரஹ்ம பரங்கள் ஆகின்றனவோ
அப்படியே சாண்டில்ய வித்யையும் மஹா வாக்ய ஸ்வாரஸ் யத்தாலே ஜீவாத்ம பரம் என்ற சங்கையால்
இவ் வதிகரணத்திற்கு சங்கதி

ஸூத்ரம் -33-சர்வத்ர பிரசித்த உபதேசாத்-1-2-1-

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதிசாந்த உபாசீத -அனைத்தும் ப்ரஹ்மமே
தோஷங்களும் கூட -கர்மம் தொடர்பு -தோன்றி மறைந்து -இவையுமா ப்ரஹ்மம்
அந்த்ர்யாமிதயா-என்பதால் –
எந்த ஒன்றிடம் இருந்து அனைத்தும் தோன்றுகிறதோ -எதனைச் சார்ந்து வாழ்கின்றதோ –
எதனிடம் சென்று மறைகின்றதோ அதுவே ப்ரஹ்மம்-

சாந்தோக்யம் -3-14-1- சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி
தைத்ரிய -3-1- யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே யேன ஜாதாநி ஜீவநதி யத்ப்ரத்யபி சம்விசந்தி தத்விஜ்ஞாச ஸ்வதத் ப்ரஹ்ம –
தைத்ரிய உபநிஷத் –6-9-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜா நாத் ஆனந்தாத் ஏவ கல்வி மானி பூதானி ஜாயந்தே -என்று
ஆனந்தமாகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
ஸ்வேதாஸ்வர உபநிஷத் -6-9- ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சித் ஜா நிதா ந சாதிப –அவனே காரணம் –
அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக உள்ளவனும் அவனே -என்கிறது-

சாந்தோக்யம் இரண்டாம் அத்தியாயத்தில் ஜ்யோதிர் வித்யைக்குப் பிறகு சாண்டில்ய வித்யை
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி-என்று தொடங்குகிறது
தன் கருத்தையும் பிறர் கருத்தையும் பின் பற்றி இங்கு பாஷ்யத்தில் இரண்டு நிர்வாஹங்கள் காட்டப்படுகின்றன

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி -என்னும் இடத்தில்
ப்ரஹ்ம சொல் ஜீவனைக் குறிக்கிறதா பரமாத்மாவையா என்று சங்கை
இங்கு பரமாத்மா அல்ல -ப்ரத்யகாத்மா -ஜீவனே -என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஜீவனுக்கே ஸர்வ பாபங்களுடன் ஸமமான இடத்தில் இருக்கும் நிலை உண்டு –
ஸர்வம் என்று குறிப்பிடும் ப்ரம்மா முதல் ஸ்தாவரம் வரையான ஜகத்தின் வடிவம் என்பது
ஜீவனுக்கே கூடும் என்கிறார்

இதனைக் கண்டிக்கிறார் ஸூத்ரகாரர் –

சர்வத்ர -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -இதில் ஸர்வம் என்று குறிப்பிடும் ஜகத்தில் –
ப்ரஹ்ம என்று சொல்லப்படும் ஜகத்தில் -ஆத்மா -ப்ரத்ய காத்மா -ஜீவன் அன்று –
பிரசித்த உபதேசாத்-வேறு ஸ்ருதிகளிலும் ப்ரஸித்தமான ஜன்ம ஸ்திதி லய காரணத்வத்தை
ஜகதாத் மத்வத்துக்கு ஹேதுவாக தஜ்ஜலான் -என்று உபதேஸிக்கையாலே
தஜ்ஜமாயும்
தல்லமாயும்
ததனமாயும்
இருப்பதால் மூன்று ஹேதுக்கள் ஆகின்றன
தஜ்ஜலான்–என்கிற பதம் நகாராந்தம்
ஜகத்தில் ஜன்மாதி ஹேதுத்வம் -ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் –முதலிய இடங்களில்
ப்ரஹ்மத்துக்குத் தானே ப்ரஸித்தம்
ப்ரஹ்மம் ஜகதாத்மகம் என்றது இரண்டும் ஸ்வரூபத்தால் ஓன்று என்று அன்று
சர்வத்துக்கும் காரணம் அந்தர்யாமி என்ற காரணத்தால் ஜகதாத்மகம் என்கிறோம்
இப்படி தாதாத்ம்யம் -அபேதம் -கூறினால் சரீரமான ஜகத்தில் உள்ள தோஷங்கள்
ப்ரஹ்மத்திடம் ஒட்டாதவை என்று திரு உள்ளம் –

———————

ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-
குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்

சாந்தோக்யம் -3-14-2-
மநோமய பிராண சரீரோ பாருப சத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்ம சர்வ காம சர்வ கந்த
சர்வ ரசசர்வ மிதயப்யாத்த அவாக்ய அநாதர-
அனைத்து குணங்களும் பரமாத்மாவிடம் மட்டுமே பொருந்தும்
மநோ மயா -தூய்மையான மனத்தால் மட்டுமே அறியப்படுபவன்
பிராண சரீர -உயிர்களுடைய பிராணனை தாங்கி உள்ளவன்
யாரிடம் பிராணன் கட்டுப்பட்டு உள்ளதோ யாரிடம் அடங்கி உள்ளதோ யாருக்கு அடிமையாக உள்ளதோ
யாருக்கு சரீரமாக உள்ளதோ அவனே பிராண சரீரன் எனப்படுகிறான் –
சரீரம் எனபது -ஒன்றைத் தன்னுள் கொண்டும் -ஒன்றுக்கு அடங்கி -ஒன்றுக்கு அடிமையாக உள்ளது -என்பரே –

பாருப -என்றால் பிரகாசத்துடன் கூடியவன் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
சத்ய சங்கல்ப -தடையற்ற உறுதி -சங்கல்பத்தாலேயே செயல் ஆற்றும் தன்மை
ஆகாசாத்மா -தெளிவு ஸூஷ்மம் சர்வ வ்யாபி -அனைத்துக்கும் ஆத்மா
சர்வ கர்ம -இந்த உலகங்கள் அனைத்தும் அவன் செயல்கள்
சர்வ காம -அனுபவிக்கும் பொருள் அனுவ அனைத்தும் தூய்மை
சர்வ கந்த சர்வ ரச-இத்தால்
கட 3-15-அ சப்தம் அ ஸ்பர்சம் -இவ்வுலகில் காணப்படும் மணம் சுவை போன்றவை அல்லவே அவனது
தோஷம் அற்ற -எல்லை அற்ற -மங்களமானவை-அவனாலே மட்டும் அனுபவிக்கக் கூடிய பல என்றவாறு
சர்வ மிதயப்யாத்த -இந்தத் தன்மைகள் வந்தேறி அல்ல -ஸ்வா பாவிகம்
அவாக்ய அநாதர-அவாப்த ஸமஸ்த காமன் அன்றோ -சர்வேஸ்வரேஸ்வரன் அன்றோ

—————–

ஆனால் இத்தகைய குணங்கள் பத்தரான ஜீவாத்மாக்களுக்குக் கூடா விட்டாலும்
முக்தாத்மாவுக்குப் பொருந்தலாமோ என்னில்

ஸூத்ரம் -35–அநுபபத்தே து ந சாரீர –1-2-3-

முன்பு கூறப்பட்ட குணங்கள் யாவும் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது என்பதால் –
இவன் ஜீவன் அல்லன் -என்றவாறு

து ஸப்தம் சங்கையை செய்கிறது
முன் நிலையில் தீய குணங்களுக்கு இருப்பிடமாய் இருந்த முக்தனுக்கும்
இந்தக் கல்யாண குணங்கள் தகாதவை யாதலின்
சரீர சம்பந்த யோக்யனான முக்தனும் ப்ரஹ்மம் அல்லன்

———–

ஸூத்ரம் -36-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –1-2-4-

பரமாத்மாவை அடையப்படுபவனாகவும்
ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்

சாந்தோக்யம் -3-14-4-ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –

இங்கு இருந்து சென்று நான் இப் ப்ரஹ்மத்தை அடைகிறேன் –
ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி–என்று
ப்ரஹ்மம் ப்ராப்யமாகவும்
முக்தன் ப்ராப்தா அடைபவன் என்றும் சொல்வதால்
அடைபவனான ஜீவனும் அடையப்படும் ப்ரஹ்மமும் ஒன்றாக முடியாது –

—————————

ஸூத்ரம் -37-சப்த விசேஷாத் –1-2-5-

ஒரு விதமான சப்த காரணமாக இவன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறானாவான்

சாந்தோக்யம் -3-14-3-ஏஷ மே ஆத்ம அந்தர்ஹ்ருதயே -என்று
இதயத்தில் உள்ளவன் என்னுடைய ஆத்மா என்றும்

இதே பிரகரணத்தில் உள்ள மற்ற ஒரு வாக்கியத்தில்
மே என்று ஜீவாத்மாவை ஆறாம் வேற்றுமையாலும்
ஆத்மா என்று பரமாத்மாவை முதல் வேற்றுமையாலும் –

சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ
ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –
நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க

இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –

———————

ஸூத்ரம் -38-ஸ்ம்ருதேச் ச–1-2-6-
ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –

சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ச்ம்ருதிர் ஞான அபோஹனம் -ஸ்ரீ கீதை -15-15-
யோ மாமேவ சம்மூடோ -15-19-
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்திர ரூடானி மாயயா–18-61-
தமேவ சரணம் கச்ச -18-62-

இவற்றில் ஜீவனை உபாசகனாகவும்
ப்ரஹ்மத்தை உபாஸ்யமாகவும் சொல்லிற்றே

————————–

ஸூத்ரம் -39-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ-1-2-7-

அர்ப்ப கௌகசஸ்வாத -மிகவும் சிறிய இடத்தில் இருத்தல்
சிறியதான ஹ்ருதயத்தை இருப்பிடமாகக் கொண்டதாலும் -சிறியவன் என்று ஓதப்படுவதாலும்
பரமாத்மா அல்ல என்று கூறுவது சரி இல்லை
உபாசன ஸுகர்யத்துக்காக தன்னை இப்படி அமைத்துக் கொள்கிறான் -ஆகாயம் போன்ற விபுவே அவன்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம ஆதமானந்தர் ஹ்ருதயே
அணீயான் வ்ரீஹேர் வா யாவத்
சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் பரிபச்யந்தி தீரா-
இவற்றால் அவனே ஜீவாத்மா -என்பர்

சித்தாந்தம் –
ஜீவாத்மா அல்ல -உபாசனையின் பொருட்டே பரமாத்மாவே தான் சொல்லப் படுகிறான் –
அவன் ஆகாசம் போன்று மிகப்பெரியவன் என்பதை
சாந்தோக்யம் 3-14-3-
ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாத் ஜ்யாயான் திவோ ஜ்யாயாத் அப்யோ லோகேப்ய–என்று சொல்லுமே

சந்தோக்ய உபநிஷத் -3-14-1-
சர்வே கல்விதம் ப்ரஹ்மம் தஜ்ஜலாநிதி சாந்த உபாசித-என்று
இவை அனைத்தும் ப்ரஹ்மமே – -காரணம் அனைத்தும் இதிலே உத்பத்தியாகி இதிலே லயிக்கிறது
ஆத்மாவாகவும் அந்தர்ப்ரேவேசித்து தரிக்க வைப்பதும் ப்ரஹ்மமமே -உபாசன வஸ்துவும் அவனே
சாந்தோக்யம் -3-14-1-
அத கலு க்ரதுமயோயம் புருஷோ யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்று
புருஷன் நம்பிக்கை வடிவன் ஆவான் -அதே நம்பிக்கையுடன் இங்கு இருந்து செல்கிறான்
உபாசனை எவ்விதம் செய்யப்படுமோ அவ்விதமாகவே பலன் கிட்டும்
ஸ க்ரதும் குர்வீத -என்று சிறந்த நம்பிக்கையுடன் உபாசிப்பானாக –
சந்தோக்ய உபநிஷத்-3-14-4-
மநோ மய பிராண சரீரோ பாருப சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா
சர்வகந்த சர்வரச சர்வ மிதமப்யாத்த அவாக்ய அநாதர-என்று
தூய்மையான மனத்தால் அறியத் தக்கவன் -பிராணனை சரீரமாகக் கொண்டவன் -பிரகாசம் ஆனவன் –
தடையில்லா சங்கல்பம் கொண்டவன் -ஆகாசம் போன்ற ஸூ ஷ்மரூபம் கொண்டவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -தான் விரும்பும் அனைத்தையும் கொண்டவன் –
அனைத்து கல்யாண குணங்களையும் ஏற்றுக் கொண்டு யாரையும் சார்ந்து இராமல் யாரிடமும் வாய் பேசாமல் -என்கிறது
சாந்தோக்யம் -3-14-3-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே அணியான் வ்ரீஹேர்வா யவாத்வா சர்ஷபாத்வா ச்யாமாகாத்வா ச்யாமாக தண்டுலாத்வா -என்று
இதயத்துள் ஆத்மாவாக உள்ள இவன் நெல்லைக் காட்டிலும்
கோதுமையைக் காட்டிலும் -கடுகைக் காட்டிலும் சயாமாகத்தைக் காட்டிலும் சிறியவன் என்றும்
சாந்தோக்யம் -3-14-3/4-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே ஜ்யாயாத் ப்ருதிவ்யா ஜ்யாயாத் அந்தரிஷாத் ஜ்யாயாத் தயவோ ஜ்யாயாத்
அப்யோ லோகேப்ய சர்வ கர்ம சர்வகாம சர்வகந்த சர்வமிதப்யாத்தோ அவாக்ய அநாதர -என்று
இதயத்தில் உள்ள அவன் ஏன் ஆத்மா -பூமி -அந்தரிஷம் தேவ லோகம் அனைத்து லோகங்கள் காட்டிலும் முகப் பெரியவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பெற்றவன்
அனைத்து நறுமணம் சுவைகள் கொண்டவன்
யாரையும் ஆதரீக்க வேண்டிய அவசியம் அற்றவன் –
உபாசிக்கப் படும் வஸ்து அவனே -அவனே அடைய வேண்டிய இலக்கு –

சாந்தோக்யம் –3-14-4-
ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஏதத் ப்ரஹ்ம —
இந்த ஆத்மா எனது இதயத்தில் உள்ளது -இது ப்ரஹ்மம்-
கருணை அடியாக நமது இதயத்தில் வந்து அமர்கின்றான்
சாந்தோக்யம் -3-14-4-
ஏதமித ப்ரேத்யாபி சம்பவி தாஸ்மி -என்று
இங்கு இருந்து புறப்படும் நான் அவனைச் சென்று அடைவேன் -உபாசனை மூலம் கிட்டப் பெறுவதைக் கூறும்
சாந்தோக்யம் -3-14-5-
யஸ்ய ஸ்யா தத்தா ந விசிசித் சாஸ்தி –என்று இத்தகைய உறுதி உள்ளவன் குறித்து எந்த சங்கையும் இல்லை

அர்ப்ப கௌகசஸ்த்வம் –சிறிய இடத்தைக் கொண்டு இருக்கை -இருதயத்தின் உள்ளே இருப்பதாகக் கூறுவதால்
அல்பமான ஹ்ருதயத்தை இடமாகக் கொண்டவன் ஆகையாலும்
தத் வ்யபதேசாத் -தானியன்களைக் காட்டிலும் சிறிய அணு ஸ்வரூபன் என்று கூறப்படுவதாலும்
இவன் விபுவான பரமாத்மாவாகக் கூடாது -ஜீவனாகத் தான் இருக்க வேண்டும்
ஸ நேதி சேத ந -இவ்வாறு கூறுவது தவறு
நியாயத்வாத் ஏவம் -பரம புருஷன் தானே உபாஸ்யனாகப் பேசப்படுகிறான்
வ்யோமவத் ஸ-விபுவான பரமாத்மாவே உபாசகர்களை அனுக்ரஹிக்க ஹ்ருதயத்துக்குள் அடக்கிய திருமேனியை யுடையவனாக்கிக் கொள்கிறான்
ஆதலால் அவனை இப்படி உபாஸிக்க வேண்டும் என்பது அல்பமாய்ச் சொல்வதின் கருத்து என்றவாறு –

———————

ஸூத்ரம் -40-சம்போக ப்ராப்திரிதி சேத் ந வை சேஷயாத்–1-2-8-

சரீரத்துக்குள் இருப்பதால் சுக துக்கங்கள் ஏற்படுமோ என்றால் அல்ல -வேறுபாடு உள்ளதால் ஆகும் –

பூர்வ பக்ஷம்
சரீர சம்பந்தம் அடியாக ஸூக துக்கங்கள் ப்ரஹ்மம் அனுபவிக்க வேண்டி வருமே

சித்தாந்தம்
அப்படி அல்ல –
கர்மங்கள் அடியாகவே ஜீவாத்மா ஸூக துக்கங்கள் அனுபவிக்கிறான்
ஸ்வாபாவிகமாக அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள் கொண்ட ப்ரஹ்மம் வ்யாப்திகத தோஷம் அற்றவன்

சம்போக ப்ராப்திர் -சுக துக்கங்கள் ஏற்படுமே என்றால்
இதி சேத் ந -அது அல்ல
வை சேஷயாத்–விசேஷமான ஹேது இருப்பதால்
சுக துக்க போகத்திற்கு சரீரத்தின் உள் இருக்கு ஹேதுவல்ல -புண்ய பாப ரூப கர்ம பரவஸ்யமே
அது கர்ம சம்பந்தம் அற்ற ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாதே
ஸ்ருதியும் இத்தையே கூறுகிறது –
முண்டக உபநிஷத் -3-1-1-
தயோரன்ய பிப்பலம் ஸ்வா து அத்தி அநஸ்நன் அன்யோ அபி சாகசீதி -என்று
மரத்தில் இரண்டு பறவைகள் ஓன்று பழங்களை உண்கிறது மற்று ஓன்று அதனை நோக்கியபடி உள்ளது —

———–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-

இப்படி பரமாத்மா கர்ம பல போக்தன் அல்லன் என்றால் கட வல்லியில் போக்தாவாகத் தோன்றுபவனும் ஜீவனாகவே ஏற்க நேரும்
என்ற சங்கையை பரிக்ரஹிக்கிறார் என்று சங்கதி
மேலும் கீழே ஹ்ருதயத்துக்குள் அல்ப ஸ்தானத்தில் பரம புருஷன் சிந்திக்கப் பட்டான்
இதில் குஹாம் ப்ரவிஷ்டவ்-என்று ஹ்ருதய குஹைக்குள் உள்ள பரமாத்மா சிந்திக்கப்படுகிறான் -என்பது கருத்து –

ஸூத்ரம் -41-அத்தா சராசர க்ரஹணாத்–1-2-9-

அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -சேதன அசேதனங்களை உணவாகக் கூறப்படுவதால் ஆகும் –

விஷயம்
கடவல்லி –1-2-24-
யஸ்ய ப்ரஹ்ம ஸ ஷத்ரம் ஸ உபேபவத ஓதன –ம்ருத்யுர் யஸ்ய உபசேசநம் க இத்தா வேத யத்ர ஸ —
யாருக்கு அந்தணர் மற்றும் ஷத்ரியர் இருவரும் உணவாகிறார்களோ
யமன் யாருக்கு ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் -என்கிறது

பூர்வ பஷம் –
உண்பவனாக சொல்பவன் ஜீவாத்மாவே தான் -கர்ம பலன்களை அனுபவிப்பதால்

சித்தாந்தம்
சராசர க்ரஹணாத்-அனைத்தையும் உண்பவன் பரமாத்மாவே தான்
உண்பது என்றது கர்மம் காரணமாக அல்ல
படைத்து காத்து அழிக்கும் தன்மையைச் சொல்லும்
கடவல்லி -3-9-
ஸோ அத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால்
அந்த விஷ்ணுவின் மிக உயர்ந்த இடத்தை அடைகிறான் என்பதால்
யமன் அனைவரையும் சம்ஹரிக்கிறான் -அந்தணர் ஷத்ரியர் என்றது அனைத்துக்கும் உப லஷணம்
ஆகவே இங்கு உண்பவனாக கூறப்படுவது பரமாத்வே தான் -எனபது சித்தாந்தம் –

அத்தா -அன்னத்தைப் பூஜிப்பவன் பரமாத்மாவே -ஜீவன் அன்று
ஏன் எனில்
சராசர க்ரஹணாத்-ஸமஸ்த சராசர ரூபமான ஜகத்தையும் ஒத்தனமாகக் கிரஹிக்கையாலே
இந்த போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் அன்று
ஜகத்தின் ஜென்ம ஸ்திதி லயங்களுக்குக் ஹேதுவான ஸம்ஹரிக்கும் தன்மையைக் குறிக்கிறது
மேலே வழியைக் கடந்து எம்பெருமானின் பரம பதத்தை அடைகிறான் என்று குறிப்பிடுவதாலும்
மிருத்யுவை உபசேசனமாகக் குறிப்படுவதாலும் அனைத்து சராசரங்களையும் போக்யமாகச் சொல்கிறது
இப்படியான அத்தாவின் -போக்தாவின் -தன்மை ஜீவனுக்கு கூடாது –

——————————

ஸூத்ரம் -41-ப்ரகரணாத் ஸ –1-2-10-

இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
இந்தப் பிரகரணமும் பரமாத்மா விஷயமே -அனைத்திலும் பரமாத்மாவே ப்ரக்ருதமாய் இருக்கிறான்

கடவல்லி -1-2-22-
மஹாந்தம் விபு மாதமா நம் மத்வா தீரோ ந சோசதி –
உய்ரந்தவனும் -எங்கும் வியாபித்து உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை உபாசிக்கும் அறிவாளி
ஒருத்தன் எதற்கும் வருத்தம் அடைய மாட்டான் –
கடவல்லி -1-2-23-
நாயமாத்மா ப்ரவசநேந லப்ய–ந மேதயா ந பஹிநா ச்ரு நேந யமைவைஷ வ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று
பரமாத்மா சரவணம் மனனம் த்யானம் மூலம் மட்டுமே அடையச்ப் படுபவன் அல்லன் –
யார் ஒருவனைப் பரமாத்மா தேர்ந்து எடுக்கிறானோ அவனால் மட்டுமே அடையப் படுபவனாக உள்ளான் –
அவனுக்கு மட்டும் தனது ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான்
கடவல்லி -1-2-24-
க இத்தா வேத யத்ர ஸ –
பரம்பொருள் இப்படிப் பட்டது என்பதை யார் அறிவார்கள் –
முன் கூறப்பட்ட பரமாத்மாவின் கருணையாலே மட்டுமே அவனை அடைய முடியும் என்றதாயிற்று –

பூர்வ பக்ஷம்
இங்கு உணவாக கொள்பவன் -என்று கர்ம பலனை அனுபவிப்பவனாகச் சொல்வது பரமாத்மாவாக இருக்க முடியாது
ஜீவாத்மாவாகவே தானே இருக்க முடியும்-
கடவல்லி -1-3-1-
ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பலன்களை அனுபவிப்பவர் புண்ய லோகமான இந்த உலகில் இதயம் என்ற குகையில் நுழைந்து
இருப்பவர் என இருவர் உண்டு
இருளும் ஒளியும் போன்று -என்று இப்படி பஞ்சாக்னி செய்பவர்களும் மூன்று அக்னி கார்யம் செய்பவர்களுமான
ப்ரஹ்ம வித்துக்கள் கூறுவார்கள்-
இரண்டாவது என்றது புத்தி பிராணனை என்பவர் -பரமாத்மாவுக்குப் பொருந்தாது என்பர் –
இங்கு ஜீவாத்மாவும் புத்தி பிராணன் சொல்வதாகக் கொள்ள வேண்டும்-

—————————

மேலே ஒரு சங்கை
அத்தா என்றது பரமாத்மா ஆகாது
கீழே ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பல போக்தாவான ஜீவனும் பிராணனும் ஹிருதய குகையுள் பிரவேசித்து உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது
ருதம் பிபந்தௌ-கர்ம பலனை அனுபவிப்பவர்கள் என்று பொருள்
கர்ம பல போகத்துக்கு உபகாரணமான பிராணனையும் கர்த்தா என்று உபசாரமாகக் கூறி
பிபந்தௌ-என்று ஜீவனையும் பிராணனையும் கூடச் சொல்கிறது என்ற
இந்த சங்கைக்கு விடை அடிசுத்த ஸூத்ரம் –

ஸூத்ரம் -42-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —1-2-11-

இதயம் என்கிற குகைக்குள் நிறைந்து இருப்பவர்கள் பரமாத்மாவும் ஜீவாத்மாவுமே —
புத்தியும் ஜீவாத்மாவும் அல்லர்-இவர்களுக்கு அவ்விதம் நுழைந்தது காணப்படுவதால்

சித்தாந்தம்
ஹ்ருதய குகையில் புகுந்து பலனைப் பருகுபவர்கள் பிராணனும் ஜீவாத்மாவுமோ புத்தியும் ஜீவாத்மாவுமோ அல்லர்
மாறாக ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஆவர் -ஏன் -என்றால்
தர்ச நாத் -இப்படியே காணப்படுவதால் ஆகும்

பரமாத்மாவைக் குறித்து
கடகவல்லி –2-12-
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி-என்று
காண்பதற்கு அரியவனும் -நம்முடைய கர்மம் காரணமாக மறைவாக உள்ளவனும் எங்கும் வியாபித்து உள்ளவனும்
இதயம் என்னும் குகையில் உள்ளவனும் -அந்தர்யாமியாக உள்ளவனும் -புராணமானவனும் தேவாதி தேவனும்
ஆகிய பரமாத்மாவை அறியும் ஒருவன் இன்ப துன்பங்களை விடுகிறான்

ஜீவாத்மாவைக் குறித்து
கடக வல்லி -4-7-
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-என்று
கர்ம பலத்தை உண்பதால் அதிதி என்று கூறப்படும் எந்த ஒரு ஜீவாத்மா -அதிதி-
பிராணனுடன் வாழ்கின்றானோ -ப்ராணேந சம்பவதி-
தாமரை போன்ற இதயம் என்கிற குகையில் நுழைந்து -பிரவிச்ய திஷ்டந்தீ-உள்ளானோ –
தேவர்கள் எனப்படும் இந்திரியங்கள் மூலம் இன்பங்களைப் பெறுகிறானோ -தேவதா மயீ
பஞ்ச பூதங்களுடன் பிறக்கிறானோ -யா பூதேபிர் வ்யஜாயத–தேவாதி ரூபமாக பிறக்கிறான் –
என்று ஜீவாத்மாவைப் பற்றி கூறியது
ஆகவே
ருதம் பிபந்தௌ-இருவரும் புஜிக்கிறார்கள்-ஜீவாத்மா புஜிக்க பரமாத்மா புஜிக்கச் செய்கிறான் என்கிறது-

குஹாம் பிரவிஷ்டை –என்றும் -ருதம் பிபந்தௌ-என்றும் ஆத்மா நௌ ஹி -ஜீவனும் பிராணனும் கூறப்படவில்லை
ஜீவனும் பரமாத்மாவுமே குறிப்பிடப்படுகின்றனர்
ஏன் எனில்
தத் தர்சநாத் —அப்படிக் காண்கையாலே
இந்தப்பிரகரணத்தில் இரு ஆத்மாக்கள் குகையில் பிரவேசிப்பதாகவே குறிப்பிடப்படுகின்றனர்
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி–கடக வல்லி -2-12–என்று பரமாத்மாவுக்கு குஹ பிரவேசம் கூறப்படுகிறது –
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-கடக வல்லி -4-7-என்று
ஜீவனுக்கு குஹ பிரவேசம் கூறப்படுகிறது
அத்தி -என்ற காரணத்தால் -கர்ம பலன்களை சாப்பிடுபவன் -அதிதி -எனப்படுபவன் ஜீவன்
ப்ராணேந சம்பவதி-ப்ராணனுடன் கூடி இருக்கிறது
தேவதா மயீ-இந்திரியங்களுக்கு அதீனமான போகங்களை யுடையது
குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா -ஹ்ருதய கமலத்தினுள் இருப்பது
பூதேபிர் -பஞ்ச பூதங்களுடன்
வ்யஜாயத-தேவாதி ரூபங்களில் பலவாறாகத் தோன்றுகிறான் என்றபடி –

————————

ஸூத்ரம் -43-விசேஷணாத் ச –1-2-12-

ஜீவன் பரம்பொருள் தன்மைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதால்
சிறப்பித்துக் கூறப்படுவதால் -பரமாத்மாவே

கடவல்லி -1-7-
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி -என்று
ஜீவாத்மா உபாசிப்பவன் என்று அதன் தன்மையை அறிந்த பின்னர் அவன் சாந்தியைப் பெறுகிறான்
ப்ரஹ்மஜஜ்ஜம்-ப்ரஹ்மத்தில் இருந்து வெளிப்பட்டவன் -ஞானம் நிறைந்தவன் -என்று ஜீவாத்மாவைக் குறிக்கும்
தேவ மீட்யம் விதித்வா-உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உள்ளவன்
கடவல்லி -3-2-
ய சேதுரீ ஜாநாநா மக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் அபயம் ததீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி –என்று அடைபடும் ப்ரஹ்மம்
கடவல்லி -3-3-
ஆத்மாநம் ரதி நம் வித்தி சரீரம் ரதமேவ ச –என்று தொடங்கும் வரி மூலம் உபாசிப்பவனாக ஜீவாத்மா -என்றும்
கடவல்லி -3-9-
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
கடவல்லி -3-1-
சாயாதபவ் -நிழலாகவும் ஸூர்ய ஒளியாகவும் -என்று அஞ்ஞாந மய ஸர்வஞ்ஞத்வ-
ஜீவாத்மாவைப் பற்றியும் பரமாத்மாவையும் பற்றி உண்டே –

பூர்வ பக்ஷம்
கடவல்லி-1-20-
யேயம் ப்ரேயதே விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத் ஏக நாயமஸ்தீந சைகே -என்று ஒரு மனிதன் மரணம் அடைந்த பின்னர்
சிலர் இதுவே அவன் என்றும் இது அவன் அல்லன் என்றும் சொல்வது ஜீவாத்மாவைப் பற்றியே

சித்தாந்தம்
அப்படி அல்ல -இங்கு சரீரத்தில் இருந்து கிளம்பிய ஜீவாத்மா உள்ளதா இல்லையா என்ற சங்கை பற்றிய கேள்வி இல்லை –
இப்படிக் கேட்க்கப் பட்டது என்று கொண்டால் கீழ் கேட்கப்பட்ட இரண்டு வரங்கள் பொருந்தாமல் இயலாமலுமாகும்
வாஜஸ்வரஸர் புத்ரன் நசிகேதஸ் -விஸ்வஜித் யாகம் நடத்தும் பொழுது கிழட்டுப்பசுக்கள் தானம் –
யமன் -மூன்று வரம் -வ்ருத்தாந்தம் கதை
இங்கு மரணத்தின் பின் மோக்ஷமான பரம புருஷார்த்தம் அடைவதையும் அடையாளத்தையும் பற்றிய கேள்வியே இது
பிருஹத் -2-4-12-ந ப்ரேத்ய சம்ஜ்ஞாஸ்தி -என்று உயிர் பிரிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
குறைவற்ற ஞானம் இல்லை என்கிறதே

சம்சார பந்தத்தில் விடுபட்ட பின்னர் உள்ளானா இல்லையா என்று ஸ்வரூபத்தைப் பற்றிய கேள்வி இது
மோக்ஷம் பற்றி பல தப்பான கருத்துக்கள் உண்டே
புத்தன் -அத்வைதி -நையாயிகன் -பாஸ்கரன் -நம் சித்தாந்தம் –
யமன் அவனை பரிஷித்த பின்பே உபதேசம்
கட 2-12-தம் துர்த்தர்சே கூட மநு ப்ரவிஷ்டம் -தொடங்கி -3-9-சோத்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -முடிய
உபாசனம் பற்றியும் நசிகேதஸ் அறிய வேண்டியதைக் குறித்தும் உபதேசம்
ஆக இங்கு அனைத்தும் பொருந்தும் -சராசரங்களை உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே –

உபாசிப்பவன் உபாசிப்பிக்கப்படுபவன் -அடைபவன் -அடையப்படுபவன் -என்று கூறப்படுவதைக் காணலாமே
கட உபநிஷத் -ஜீவனைக் குறித்து –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்-ஞானம் உள்ளவன் பிறப்பதும் இறப்பதும் இல்லை என்றும்
மஹாந்தம் விபு மாத்மானம் மத்வாதீரோ ந சோசதீ-என்று பரம்பொருளை
மிகப் பெரியவன் -எங்கும் உள்ளவன் -வருத்தப் படாதவன் -என்றும்
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் என்றும் கூறுவதால்
முன்பு சொல்லியவை ப்ரஹ்மத்தையும் ஜீவனையும் பற்றியவையே
பிராணன் அல்லது புத்தி பற்றியவை அல்ல என்கிறது-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவனும் பரமாத்மாவும்
உபாஸகன் உபாஸ்யன் என்றும்
ப்ராப்தா ப்ராப்யன் என்றும்
விசேஷண விசேஷ்யங்கள் என்றும் கொண்டு விளக்கப்படுகிறார்கள்
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி-என்று
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து தோன்றியதால் ப்ரஹ்மஜம் -ஜீவன் -என்பது ஞாதா
இத்தகைய ஜீவனை–ஈட்யம் தேவம் விதித்வா-வாஸூ தேவ ரூபியாக அறிந்து
நிசாய்யே -உபாஸித்து
மாம் சாந்தி மத்யந்த மோதி-அத்யந்த சம்சார நிவ்ருத்தியை அடைந்து விடுவான்
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்று
விஷ்ணுவைப் ப்ராப்யம் என்றும் ஜீவனைப் ப்ராப்தா வாகவும் சொல்கிறதே
இந்த ருதம் பிபந்தவ் மந்த்ரத்திலும் -சாயாதபவ் என்று ஜீவனும் பரமாத்மாவும்
அஞ்ஞனும் ஸர்வஞ்ஞனுமாக முறையே குறிப்பிடுகின்றனர்

ஆகையால் பரமாத்மாவே அத்தா -ஜீவன் அல்லன் என்று தெரிகிறது –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி —

த்ரயந்த ஒஷ்ணா தஸ்து நிகில ஜகத் ஏக காரணஸ்ய -அசேஷ ஹேய ப்ரத்ய நீக -அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபஸ்ய-
ஸ்வ பாவிக அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கரஸ்ய -சகல இதர விலக்ஷனஸ்ய –
சர்வாத்ம பூதஸ்ய–பரஸ்ய ப்ரஹ்மண –ஜீவஸ்ய –பரமாத்மா அனுபவம் ஏவ மோஷமா சஷதே
யுக்தம் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா ஜிஜ்ஞாஸ்யம் ஜெகஜ் ஜென்மாதி காரணம்
ப்ரஹ்ம அசித் வஸ்துன –பிரதான ரத –சேதநாச்ச -பக்த முக்த உபாய வஸ்தாத் விலக்ஷணம் –
நிரஸ்த ஸமஸ்த ஹேய காந்தம் சர்வஞ்ஞம் சர்வ சக்தி ஸத்யஸங்கல்பம்
ஸமஸ்த கல்யாண குணாத்மகம் சர்வாத்ம அந்தராத்மா பூதம் நிரங்குச ஐஸ்வர்யம் இதி

————-

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –

இப்படி ப்ரஹ்மத்துக்கு
தம் துர்த் தர்சம் கூடம் –க இத்தாவேத -என்று காண முடியாதவன் என்று செல்வதாலும்
ய ஏஷோ அக்ஷணி புருஷோ த்ருஸ்யதே -என்று கண்ணின் உள்ளே காணக் கூடியவன் என்று செல்வதாலும்
பரமாத்மா அல்ல என்ற சங்கை தோன்ற
அத்தைப் பரிஹரிக்கிறார்

முன் அதிகரணத்தில் உபாஸகன் ஹ்ருதயக் குகையில் இருக்கும் புருஷன் பரமாத்மா என்று நிரூபிக்கப் பட்டது
அதில் உபாஸகன் கண்ணில் இருக்கும் புருஷன் பரமாத்மா என்று நிரூபிக்கப் படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -44-அந்தர உபபத்தே –1-2-13-

கண்ணில் இருப்பவனாக கூறப்படுபவன் பரம்பொருளே-அங்கு கூறுவது அவனுக்கு மட்டுமே பொருந்தும்

விஷயம்
சாந்தோக்யம் -4-15-1-
ய ஏஷோ ஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹேவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம-
அவனே ஆத்மா -அம்ருதம் -அபயம் -ப்ரஹ்மம்

சங்கை
கண்ணில் இருப்பதாகக் கூறப்படும் புருஷன்
ப்ரதிபிம்ப ஸ்வரூபமா
சஷுர் இந்த்ரிய அதிஷ்டான தேவதையா
ஜீவாத்மாவா
பரமாத்மாவா–என்று நான்கு வித சங்கைகள்

ய ஏஷ -என்று பிரசித்தம் போ சுட்டிக் காட்டுவதால் ஜீவனாகவும் இருக்கலாம்
ஜீவனுக்கும் கண்ணினுள்ளே சிறப்பாக இருப்பு பொருந்தும்
கண் திறந்தால் தானே சரீரத்திலஜீவனுக்கு ஸ்திதியையும் கதியையும் ஜனங்கள் நிச்சயிக்கிறார்கள்
கண்ணுக்கு அதிஷ்டான தேவதையாகவும் இருக்கலாம்
ஸூர்ய தேவதையாக -பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று
வேதப்பிரசித்தி இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்

பூர்வ பக்ஷம்
காணப்படுபவன் என்பதால் அங்கு பிரதிபலிக்கும் ஒருவனே -ஜீவாத்மாவே –
உயிர் இருக்கிறதா இல்லையா என்று திறந்த கண்கள் மூலம் அறிவதால் அபிமான தேவதையே
பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று ஸூரயனில் காணப்படும் புருஷனே
இந்த மூவரில் ஒருவனே கண்ணில் உள்ளான்

சித்தாந்தம்
இதற்கு விடையாக
அந்தர -கண்ணுக்குள்ளே இருப்பவனான புருஷன் பரமாத்மாவே
ஏன் எனில்
உபபத்தே –
அங்கு கூறப்படும் விஷயங்கள் பொருந்த வேண்டும் என்பதால் -பரமாத்மாவே
சாந்தோக்யம்–4-15-3-
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏததம்ருதமபயமேதத் ப்ரஹ்மேதி
ஏதம் சம்யத்வாம இத்யா சஷதே ஏதம் ஹி சர்வாணி வாமான்யபி சம்யந்தி
ஏஷ உ ஏவ வாமநீ ஏஷ ஹி சர்வாணி வாமானி நயதி
ஏஷ உ ஏவ பாம நீ ஏஷ ஹி சர்வேஷூ லோகேஷூ பாதி -சாந்தோக்யம் -என்று
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் -அமிர்தமாகவும் -அச்சம் இல்லாதவனாகவும் –
கல்யாண குணங்கள் நிரம்ப உடையவனாயும்–எல்லா நன்மை அளிப்பவனாயும் -எங்கும் உள்ளவனாயும் – போன்ற
பல தன்மைகள் உள்ளவனாய் சொல்லியதால் ப்ரஹ்மத்தையே சொல்லிற்று-

சமயத் வாமத்வம் என்பது -சிறந்த சுகமான புருஷார்த்தங்களுக்கு எல்லாம் இருப்பிடம் –
ஸம் யந்தி வாமாநி ஸூகாநி -என்று வ்யுத்பத்தி
வாம நீத்வம் -ஆஸ்ரிதர்களை அபீஷ்ட ஸூ கங்களை அடைவித்தல்
பாம நீத்வம் -எல்லையில்லா பிரகாசமுடைமை
இந்தக் கல்யாண குணங்கள் பரம புருஷனுக்கே கூடும் என்று திரு உள்ளம் –

————————

ஸூத்ரம் -45-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –1-2-14-
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்

ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் -என்று கண்ணில் உள்ளவன் -நியமிப்பவன் -என்று இருப்பதால்
சாந்தோக்யம் 4-15-1- ய ஏஷ அஷிணி புருஷ -கண்ணில் உள்ள புருஷன் பரமாத்மாவே
மேலும் சாந்தோக்யம் 4-15-1-த்ருஸ்யதே -காணப்படுகிறான் -என்பதால்
யோகிகளால் கண்ணில் இவனைக் காண இயலும் என்பதால் பொருத்தமே யாகும்

கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவை பரமாத்மாவுக்கே கூறப்படுகின்றன
ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-யச் சஷுஷி திஷ்டன்–முதலிய ஸ்ருதிகளில் காணப்படுகிறான் என்று
ப்ரத்யக்ஷமாகக் குறிப்பிடுவது யோகிகளால் காணப்படுகிறான் என்பதாகப் பொருந்துவதே –

——————

ஸூத்ரம் -46-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –1-2-15-

சாந்தோக்யம் -4-10-5–கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் –
சுகத்துடன் பெரியதாக உள்ளவன் -ப்ரஹ்மமே
ய ஏஷோ அஷிணி –சுகமாக உள்ளவன் என்பதால் ப்ரஹ்மமே

மேலும் யாரிடம் அனைத்து விரும்பத்தக்க தன்மைகளும் உள்ளதோ அந்த ப்ரஹ்மம் என்றும் இங்கு உணர்த்தப்படுகிறது –
ஏவ -என்று இங்கு எடுக்கப்படும் வாதங்கள் மற்றவற்றுடன் தொடர்வு உடையவை அல்ல -இங்கு தனி வாதம்
கீழே -12–13-ஸூத்ர வாதங்கள் -18-ஸூத்ரத்தத்தில் நிகமனம்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம்-4-10-5- -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் —தொடர்ந்து
சாந்தோக்யம்-4-15-1–ய ஏஷோ அஷிணி இரண்டையும் இணைக்க இயலாது
இரண்டுக்கும் நடுவில்-4-11-/-4 -13-முடிய உள்ளவற்றில் -மூன்று அக்னிகள் குறித்த வித்யை உபதேசம் -உபகோஸலனுக்கு –
அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-கார்ஹபத்யம் என்ற அக்னி தேவதை உபதேசம்
இதனால் பெற்ற ஞானம் பலமாக நீண்ட ஆயூஸூ -பரம்பரை இத்யாதிகள் ப்ரஹ்ம வித்யையின் பலன்களுக்கு
விருத்தியாகும் -என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
உபக்ரமம் உபஸம்ஹாரம் இரண்டிலும் ப்ரஹ்ம பதம் தெளிவாக உண்டே
சாந்தோக்யம் -4-10-5-ப்ரானோ ப்ரஹ்ம -என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-1-ஏதத் அம்ருதம் அபயம் ப்ரஹ்ம –
மேலும் சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று பரம கதிக்கு ஆச்சார்யர் உபதேசிப்பார் –
என்பதால் ப்ரஹ்ம விதியையே உபதேசம்

மேலும் -அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள
ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
மேலும் சாந்தோக்யம் 4-10-3–வ்யாதிபி பிரதி பூர்ணோஸ்மி -என்று உலகவிஷய பீதனாக இருக்கும் படி சொல்லி
சாந்தோக்யம் -4-14-1-ஏஷா சோம்ய தே அஸ்மாத் வித்யா ஆத்மவித்யா ச -என்பதால்
இந்த அக்னி வித்யையானது ப்ரஹ்ம வித்யையின் அங்கமே
இவ்வாறு அறிந்த பின்பு மற்ற பலன்கள் குறித்த வாக்கியங்கள் அர்த்தவாதம் -வெறும் புகழ்ச்சி வாக்கியங்கள்
மட்டுமே என்று கொள்ள வேண்டும் –

மேலும் மோக்ஷத்துக்கு விரோதமாக எந்த ஒரு வாக்கியமும் காணப்பட வில்லை
சாந்தோக்யம் -4-11-2-
அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம்
தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று
அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள்

இது தவிர ப்ரஹ்ம வித்யையின் பலமாக முண்டக -3-2-9-/ மாண்டூக்ய -3-3-
நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி –என்று அவனுடைய குலத்தில் ப்ரஹ்ம வித்யை அறியாதவர்கள் பிறப்பது இல்லை
உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச —
வயம் என்றால் இங்கு -அக்னி என்று பொருள்
தம் -மோக்ஷ அதிகாரி
உப புஞ்ஜாமோ-ப்ரஹ்ம பிராப்தி வரை அனைத்து பிராப்தி பிரதிபந்தகங்களிலும் இருந்து காப்பாற்றுவோம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா –
ஆச்சார்யர் உனக்கு மார்க்கத்தைக் குறித்து உபதேசிப்பார்
என்பதால் போகும் பாதையை மட்டும் உபதேசம் –
மாறாக ப்ரஹ்ம உபாசனத்துக்கு இருப்பிடமோ அதன் குணங்களோ இந்தப்பகுதியில் சொல்வதாகக் கொள்ள முடியாது

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று
உபாஸனை பற்றி இல்லாமல் அர்ச்சிராதி பற்றி சொல்வது
அவன் வருந்தி இருக்க -அவனது கைங்கர்யத்தால் மகிழ்ந்த அக்னிகள் அவனைத் தேற்ற ப்ரஹ்ம ரூபம் குறித்து
ப்ரஹ்ம வித்யையின் அங்கமாக அக்னி வித்யை உபதேசித்தன-

அதன் பின்னர் –சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு

இதனால் தான் ஆச்சார்யனும் –
சாந்தோக்யம் -4-14-3-அஹம் து தே தத் வஹ்யாமி –என்றும்
யதா யுஷ்கரபலாச ஆபோ ந ஸ்லிஷ்யந்த ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே–என்றும்
கல்யாண குணங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் கண்ணின் உள்ளே இருப்பதாக உபதேசிக்க -ஆகவே
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்ற வரியில் கூறப்பட்ட ப்ரஹ்மமே
கண்ணில் உள்ள பரமாத்மா என்றதாயிற்று

இதுக்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்று உபதேசிப்பதன் பொருட்டு –
ஒன்றை மற்ற ஒன்றின் மேலே ஏறிட்டு -7-1-5-நாம ப்ரஹ்ம என்றும் -7-3-2-மநோ ப்ரஹ்ம என்றும்
போன்றதே என்பர்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————————————————–

ஸூத்ரம் -47-அத ஏவ ச ச ப்ரஹ்ம —1-12-16-
இத்தகைய காரணங்களால்–க என்ற சப்தம் மூலம் கூறப்படும் ஆகாசமும் – ப்ரஹ்மம் என்றதாயிற்று

அத ஏவ ச -யத் வாவ கம் ததேவ கம் என்று அளவற்ற ஸூக ஸ்வரூபமான ப்ரஹ்மத்தைச் சொல்லி இருப்பதாலேயே
அந்த கம் என்னும் ஆகாசம்
ச ப்ரஹ்ம-ப்ரஹ்மமே
பிரசித்த ஆகாசமோ பிரசித்த ஸூ கமோ அன்று என்பதாம் –

உபகோசலனுக்கு -ப்ரஹ்ம வித்யையை அக்னி தேவன் -பிராணனே ப்ரஹ்மம் சுகமே ப்ரஹ்மம் ஆகாசமே ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் –4-10-5–
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம் -என்று
ஆகவே கம் -ஆகாசத்தைக் குறிக்காது -ஸூகத்தையே குறிக்கும் –
ஆகாயம் போன்ற அளவற்ற சுகத்துடன் இருப்பவனே ப்ரஹ்மம் -என்பதால்
ஜீவனுக்கு பொருந்தாது -பரம் பொருளுக்கே பொருந்தும் —

இங்கே கூறப்படுவது இதுவே ஆகும் –
அக்னிகள் சாந்தோக்யத்தில் 4-10-5-
ப்ரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -பிராணனே ப்ரஹ்மம் ஸூகமே ப்ரஹ்மம் -ஆகாசமே ப்ரஹ்மம் -என்று கூற
அப்போது உபகோஸலன் -சாந்தோக்யம் 4-10-5-
ஜீவனாம் யஹம் யத் ப்ரானோ ப்ரஹ்ம கம் ச து கம் ச ந ஜீவா நாமி –என்று
நான் முக்கிய பிராணன் ப்ரஹ்மம் என்று அறிவேன் –
ஆனால் அத்தகைய ப்ரஹ்மம் ஸூகம் என்றும் ஆகாசம் என்றும் நான் அறிய வில்லை என்றான்

ஸூகம் ஆகாசம் இவை ப்ரஹ்மத்தின் சரீரமே -ப்ரஹ்மத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவையே –
தனித்தனியே இவை உள்ளதால் ப்ரஹ்மத்தின் அபரிமித ஆனந்தத்தை சொல்லுமோ
இத்தை அறிந்த அக்னிகள் -சாந்தோக்யம் -4-10-5-
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம்-என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் நிரதிசய ஆனந்த மயம் என்று சொல்லி நிறைவில் —
பிராணம் ச ஹாஸ்மை ததாகாசம் சோசு-என்றும் சொல்லி இந்த ப்ரஹ்மமே கண்ணுக்குள் உள்ளதாக சாந்தோக்யம் கூறும்

ஆகவே கண்ணுக்குள் உள்ளவன் பரமாத்மாவே தான் -என்றதாயிற்று

—————————————————————

ஸூத்ரம் -48-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –1-2-17-
உபகோசலனுக்கு அக்னி தெளிவாக கூறியதால் கண்களில் உள்ளவன் பரம்பொருளே
பரமாத்மாவைக் குறித்து யாதாத்ம்ய ஞானம் உள்ளவன் அர்ச்சிராதி கதி சிந்தனம் எப்போதும்
பண்ணியபடியே இருக்க வேண்டும் என்பதால் கண்ணில் உள்ளவன் பரம புருஷனே ஆவான் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-15-5-
தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–
சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந
பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–-அர்ச்சிராதி கதி என்று உபதேசிக்கப்பட்டு நிகமிக்கப்பட்டது–

இந்தக் காரணத்தாலும் கண்களில் உள்ளவான் பரமாத்மாவே ஆவான் –
பரம்பொருளை அறிந்தவர்கள் அர்ச்சிராதி கதி மூலம் அவனை அடைகிறார்கள்

————————————————————

ஸூத்ரம் -49-அனவஸ்திதே அசம்பவாத் ச–1-2-18-
ஜீவன் எப்போதும் கண்களில் நிலை பெற்று இல்லையே –
மரணம் இன்றி இருப்பவன் என்பதும் ஜீவனுக்கு பொருந்தாது –

அனவஸ்திதே -ப்ரதிபிம்பாதிகளுக்கு கண்ணில் எப்போதும் ஸ்திதி இல்லாததாலும்
அசம்பவாத் ச-நிருபாதிகமான அம்ருதத்வம் முதலிய குணங்கள் பிரதி பிம்பாதிகளுக்கு சம்பவியாது என்பதாலும்
நேதர -அஷி புருஷன் அல்ல
ஆகவே அஷி புருஷன் என்பது பரம புருஷனே ஆகும் –

சித்தாந்தம்
கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –
அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே –
இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –

ப்ருஹத் ஆரண்யகா -7-5-10-
ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான்
அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை
மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது –
ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்

————

முந்தைய மூன்று அதிகரணங்களிலும்
உபாஸகனின் சரீரம் -ஹ்ருதயம் -முதலியவற்றில் குறிப்பிட்ட அளவு இடமுள்ள
பரமாத்மாவே உபாஸ்யன் என்று சொல்லி
மேல் மூன்று அதிகரணங்களிலும்
விஸ்தாரமான பிரதேசத்தோடு கூடிய பரமாத்மா உபாஸ்யன் என்று கூறுவது
என்று பேடிகா

கீழே1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –என்று
கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவற்றால் அஷி புருஷன் பரமாத்மா என்று சாதித்து
இந்த அதிகரணத்தில் அந்த ஸ்திதி நியமனாதிகளை ஸ்தாபிக்கிறார் என்று சங்கதி –

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -50-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்–1-2-19-

அதிதைவம் அதிலோகம் அந்தர்யாமியாக உள்ளவன் பரம் பொருளே-அவனுக்கே உரிய தர்மங்கள் கூறப்படுவதால்

அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ –இவற்றால் கூறப்படும் அந்தர்யாமி அபஹத பாப்மாவான பரமாத்மாவே –ஜீவன் அல்லன்
ஏன் எனில்
தத் தர்ம வ்யபதேசாத்-பரமாத்மாவுக்கே உரிய சிறந்த தர்மங்கள் பேசப்படுவதால்
சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் ஒருவனாகப் புகுந்து அந்தர்யாமியாய் நியமிக்கை
ஸ்ரீ மன் நாராயணனின் தர்மமாகவே ப்ரஸித்தம்
அப்படியே உத்தாலகர் சர்வலோக பூதங்களையும் நியமனம் செய்யும் அந்தர்யாமியைப் பற்றி எனக்கு கூறும் என்கிறார் –

விஷயம் –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்-என்பதன் மூலம்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் — என்பதில் பரமாத்மாவே கண்ணில் உள்ளதாக ஓதப்படுகிறது என்று நிச்சயிக்கப்பட்டு –
அது மெய்யானதே ஆகும் என்று கூற உள்ளார் –
வாஜசநேயர்களில் இரண்டு பிரிவுகளான காண்வம் மற்றும் மாத்யந்தினம் ஆகிய இரண்டிலும்
பிருஹத் 3-7-3-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர யம் ப்ருத்வீ நீ வேத
யஸ்ய ப்ருத்வி சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயதி ஏஷ தா ஆத்மா அந்தர்யாமி யம்ருத -என்று
யார் ஒருவன் இந்த பூமியிலே நிற்கிறானோ -பூமியின் உள்ளே உள்ளானோ -அப்படி அவன் உள்ளதை பூமி அறியாமல் உள்ளதோ –
யாருடைய உடலாக இந்த பூமி உள்ளதோ -பூமியில் உள்ளே இருந்து இயக்குபவன் யாரோ
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அந்தர்யாமி யாவான் என்று படிக்கப்பட்டது –
இதன் பின்னர் – நீர் நெருப்பு வானம் -அந்தரிக்ஷம் -காற்று -த்யு லோகம் – சூர்யன்- திசைகள் சந்தரன் ஆகாசம் இருள் ஒளி–
போன்றவற்றின் அபிமான தேவதைகளின் உள்ளே வசிப்பவனாகவும் -அவனே அனைத்து உயிர்களின் உள்ளும் வசிப்பவனாகவும்
பிராணன் வாக்கு கண்கள் காதுகள் மனம் தோல் விஞ்ஞானம் புத்தி ரேதஸ் போன்ற அனைத்திலும் அந்தர்யாமியாக உள்ளவன்-
இப்படி ஒருவன் உள்ளதாகக் கூறி -ஒவ் ஒன்றின் உள்ளிலும் உள்ளவனாகப் படிக்கப் பட்டு –
அவ்விதம் அவன் உள்ளதை அவை அறியாமல் –ஒவ் ஒன்றும் அவன் சரீரமாக உள்ளன என்றும்
அவற்றை அவன் நியமிப்பவனாகவும் கூறி முடித்து
அவனை ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத –என்று முடிக்கப்பட்டது

ஆனால் மாத்யான சாகையில் மேலும் சில கருத்துக்கள் உள்ளன -அதாவது
ய சர்வேஷு லோகேஷு திஷ்டன் சர்வேஷு வேதேஷு ய சர்வேஷு யஜ்ஜேஷு -என்று
லோகங்கள் வேதங்கள் யஜ்ஜ்ங்களிலும் உள்ளான் என்றும் படிக்கப்பட்டுள்ளது
காண்வ சாகையில் -ப்ருஹு 3-7-22-
யோ விஞ்ஞாநே திஷ்டன் –யார் விஞ்ஞானத்தில் உள்ளானோ என்று படிக்கப்பட்டுள்ளது –
மேலும் ஏஷ த அந்தர்யாமி அம்ருத என்பதற்குப் பதிலாக
ச த அந்தர்யாமி அம்ருத -என்னும் வேறுபாடும் உள்ளது

இதில் சங்கை -அந்தர்யாமி ஜீவாத்மாவா பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
அந்தர்யாமியாகக் கூறப்படுபவன் ஜீவாத்மாவே –
அவனே–பிருஹத் -3-7-23- த்ரஷ்டா ஸ்ரோதா –என்று
அந்தர்யாமியாக உள்ளவன் கண்ணால் பார்ப்பவன் காதால் கேட்பவன்
இப்படி இந்திரிய ஜன்ய ஞானம் ஜீவாத்மாவுக்கே
மேலும் ப்ருஹ 3-7-23–
ந அந்ன்யோ தோஸ்தி த்ரஷ்டா -இவனை விடப் பார்ப்பவன் வேறே யாரும் இல்லை –
ஆக இங்கு அந்தர்யாமி ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்
அதிதைவம் -மற்ற தேவதைகளுக்கும் தைவம்
அதி லோகம் -அனைத்து லோகங்களுக்கும் தெய்வம் –
இவற்றால் அந்தர்யாமியாக சொல்பவன் பரமாத்மாவே
காண்வ சாகையில் உள்ள அதி தைவம் மாத்யந்தின சாகையில் உள்ள அதி லோகம் பதங்களை ஒட்டியே இந்த ஸூத்ரம்-
தர்ம வ்யபதேசாத்–பரமாத்மாவுக்கே உரிய தர்மங்கள் ஓதப்பட்டுள்ளதால் ஆகும்

இந்தப் பகுதியில் உத்தாலகர் ஒரு கேள்வி -பிருஹத் 3-7-1-
ய இமம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வாணி பூதாநி யோ அந்தரோ யமயதி –என்று தொடங்கி
பிருஹத் 3-7-2-தம் அந்தர் யாமிணம் ப்ரூஹி -என்று முடித்து
அதுக்குப் பதிலாக யஜ்ஞவல்க்யரால் 3-7-3-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதியால்
அனைத்தையும் நியமிக்கும் தன்மையும் சர்வாத்மாவாக உள்ள தன்மையும் பரமாத்மாவுக்கு பொருந்தும்
தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
தைத்ரியம் -2-6-
தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6-
நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண
சஷுச் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம்
ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில்
யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மா
அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே

ஆக சர்வாத்மாவால்வும் அனைத்தையும் சரீரமாகக் கொண்டும் அனைத்தையும் நியமித்தல்
பரமாத்மாவுக்கே பொருந்தும்

மேலும் த்ரஷ்டா -காண்பவன் என்றாலும் பரமாத்மாவைச் சொல்வதில் குறை இல்லையே
ஸ்வபாவிக சர்வஞ்ஞத்வம் ஸத்யஸகல்ப்பத்வம் உண்டே
ஸ்வேதாஸ்வர -3-19-
பச்யத்ய சஷூ ச ஸ்ருணோத்ய கர்ண –அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா –
இந்திரியங்களின் அவசியம் இல்லையே அவனுக்கு

மேலும் பிருஹத் -3-7-23-
நாந்யே அதோ அஸ்தி த்ரஷ்டா என்று இவனைப் போலே இல்லையே
இவனே நியமிக்கிறான்-இவனை நியமிப்பவர்கள் யாரும் இல்லை —
யாராலும் பார்க்கப்படாமல் பார்க்கிறான்

மேலும் காணவ சாகை பிருஹத் -3-7-23-ஏஷ த ஆத்மா -இது உனது ஆத்மா என்றும்
மாத்யாந்தின சாகையில் -ச த ஆத்மா அவன் உனது ஆத்மா என்று வெவ்வேறு விதமாகவும் உண்டு
ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக தே என்று வேற்றுமை உருபால் பிரித்து சொல்வதால்
ஜீவாத்மாவின் அந்தராத்மாவாக ஜீவாத்மாவே இருக்க முடியாதே

————————————————————-

ஸூத்ரம் -51-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச–1-2-20-

பிரக்ருதியும் ஜீவன்களும் அந்தர்யாமியாக இருக்க ஓயயலாதே-அவர்களுக்கு பொருந்தாத தன்மை கூறப்படுவதால்

சித்தாந்தம்
ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
ஸ்மார்த்தம்-என்பது ப்ரக்ருதி-கபில ஸ்ம்ருதியில் கூறப்பட்ட
சாரீர-என்பது ஜீவாத்மா
இந்த இரண்டும்
ந ச -அந்தர்யாமி அல்ல
ஏன் எனில்
அதத் தர்மாபி லாபாத்-ஜீவனுக்கும் பிரதானத்துக்கும் சம்பவிக்காத சர்வ நியாமகத்வம்
போன்ற தன்மைகளைப் பேசுவதால்
எப்படி அசேதனமான பிரதானம் சர்வஞ்ஞாதிகள் கூடாமையாலே அந்தர்யாமி அன்றோ
அப்படியே சாரீரனும் ஜீவனும் என்று கருத்து –
கீழே சொல்லப்பட்ட தன்மைகள் இவற்றுக்குப் பொருந்தாதே

———————————————————–

ஸூத்ரம் -52-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே-1-2-21-

இரண்டு சாகைகளிலும் அந்தர்யாமியாய் வேறுபட்டவனாக கூறப்பட்டுள்ளதே

உபயே அபி ஹி -காண்வர்களும் மாத் யந்தினர்களும்
ஏநம் -இந்த அந்தர்யாமியாய்
பேதே ந -ஆத்ம நியாந்தா என்றும் நியாம்யன் என்றும் பேதத்தாலே
அதீயதே-ய ஆத்ம நி திஷ்டன் -இத்யாதி வாக்யங்களாலே படிக்கிறார்கள்
ஆதலின் அந்தர்யாமி ஸ்ரீ மன் நாராயணனே என்று உறுதி யாயிற்று –

ப்ருஹத் ஆரண்யாகவில் -மாத்யந்தின சாகையில் -3-7-22-
ய ஆத்ம நி திஷ்டன் ஆத்ம நோ அந்தர யமாத்மா நவேத யச்யாத்மா சரீரம்
யா ஆத்மா நமந்த்ரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் அம்ருத -என்றும் –
காண்வ சாகையில் -3-7-22-
யோ விஜ்ஞான திஷ்டன் -என்றும் சொல்லி இருப்பதால் பரமாத்வையே சொன்னதாயிற்று –

2-4-அந்தர்யாமி யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-

முன் அதிகரணத்தில் அந்தர்யாமி வித்யையில் பரம புருஷனுக்கு ஜீவ நியாமகத்வம்
அத்ருஷ்டமாய் த்ருஷ்டா வாதல்-பிறரால் காணப்படாமல் தான் காண்பவனாய் –
இவை கூறப்பட்டமையால் ஜீவன் அந்தர்யாமி அல்லன் எனப்பட்டது
அதர்வண சைகையில் முண்டக உபநிஷத்தில் -பர வித்யையில் இத்தகைய
அத்ருஷ்டனாய் த்ருஷ்டா என்று கூறப்படவில்லை -அத்ருஸ்யன் என்று மட்டும் கூறப்பட்டு உள்ளது –
ஆதலின் அத்ருஸ்யனாயும் அஷராத் பரத பரனாயும் உள்ளவர் ப்ரக்ருதி அல்லது ஜீவனே யாகக் கூடும்
என்ற சங்கையால் சங்கதி

ஸூத்ரம் -53-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-1-2-22-

அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்

முண்டக உபநிஷத் –
அத பரா யயா தத் அஷரம் அதி கமே யத் தத் த்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்த்ரம் அவர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத் அபாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
முண்டக உபநிஷத்-2-1-2-
அஷராத் பாரத பர -என்றும்-

சங்கை -இங்கே காணப்படாத தன்மைகளுடன் கூடிய அக்ஷரம் இரண்டு இடங்களில் படிக்கப்படுகிறது –
ப்ரக்ருதியும் புருஷனுமா -இரண்டுமே பரமாத்மாவா

பூர்வ பக்ஷம்
இங்கு பிரக்ருதியும் புருஷர்களும் சொல்லிற்று
பிருஹத் 3-7-23-அத்ருஷ்டோ திருஷ்டோ –
முண்டக -2-1-2-அஷராத் பரத பர -என்று அஷரத்துக்கு காணப்படாத தன்மையும் –
ஸ்தூல மூல பிரக்ருதியைச் சொல்லி -இந்த பிரதானத்தைக் காட்டிலும் மேலான சமஷ்டி புருஷனையும் சொல்லிற்று
இப்படி புருஷனால் நிர்வகிக்கப்படும் பிரதானமானது மஹத்தாதி அனைத்தையும் ஏற்படுத்துகிறது என்பர் –

இதனை அடி ஒட்டியே முண்டக 1-1-7-
யதோர்ணாபி ஸ்ருஜதே க்ருஹ்ணேதே ச யதா ப்ருதிவ்யாம் ஒளஷதய சம்பந்தி யதா சதா புருஷாத் கேஸலோமாநி
ததா ஷராத் சம்பவ தீஹ விஸ்வம் –என்று
சிலந்திப்பூச்சி வலை -மண் தாவரம் -உடலில் முடி நகம் -போலே அக்ஷரத்தில் இருந்து உலகம் –
ஆகவே இங்கு பிரதானமும் ஜீவாத்மாவும் சொல்லப்பட்டது

சித்தாந்தம்
புருஷனால் அதிஷ்டிதமான ப்ரதானமே மஹத்தாதி விகாரங்கள் ஹேது என்பதைக் கண்டிக்கிறார்

அத்ருச்யத்வாதி குணக -அத்ருஸ் யத்வாதி குணங்களை யுடையவனும் அஷராத் பரதப்பரனும் பரமாத்மாவே
அத்ருச்யத்வாதி குணக -புல்லிங்காத்தால் -அஷராத் பரதப்பரன் வாக்கியமும் இங்கு விஷயம் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது –
தர்மோக்த-யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் முதலிய வாக்யங்களால் ஸர்வஞ்ஞத்வம் சொல்லப்படுவதால்

முண்டகம் 1-1-5-யயா தத் அக்ஷரம் அதிகம்யதே-என்று எந்த ஒரு வித்யையால் அக்ஷரம் அறியப்படுகிறதோ -என்றும்
முண்டக -1-1-7-தத் அஷராத் சம்பவ தீஹ விஸ்வம் -இந்த அக்ஷரத்தில் இருந்து இந்த உலகம் வெளிப்படுகிறது
என்பதால் இந்த அக்ஷரமே காரணம்

தொடர்ந்து -முண்டக -1-1-9-
ய சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தபஸ் தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே -என்று
அனைத்துக்கும் பிறப்பிடம் அவனே என்றும்
ததாஷராத் சம்பவதீஹ விச்வம் -என்றும்
பரம் பொருளில் இருந்து அஷரம்-அழிவு இல்லாத -உலகில் உள்ள அனைத்தும் தோன்றின-

மேலும் முண்டக -2-1-2-அஷராத் பரத பர-என்று அஷரத்துக்கும் அப்பால் பட்டவன்
இங்கு கீழே சொன்ன அக்ஷரம் இல்லை
இங்கு அக்ஷரம் அசேதனமான பிரக்ருதியையே சொல்லும்

————————————————————–

ஸூத்ரம் -54-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-1-2-23-

தனித்துக் கூறுவதாலும் -வேறுபாட்டினை உரைப்பதாலும் -பிரகிருதி மற்றும் புருஷர்கள் கூறப்பட வில்லை

சித்தாந்தம்
முண்டகம் 1-1-1-
ச ப்ரஹ்ம வித்யாம் சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் அதர்வாய ஜ்யேஷ்ட புத்ராய பிராஹா -என்று
நான்முகன் தனது மூத்த புத்திரனான அதர்வனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க
அந்த பரம்பரையில் வந்த அங்கிரஸ்ஸும் ப்ரஹ்ம வித்யை அறிந்து இருந்தான்

முண்டக -1-1-3-
ஸுவ்நகோ ஹ வை மகாசாலோ அங்கிரஸம் விதிவத் உபசன்ன பப்ரச்ச கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே
ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -என்று மகாசாலர் என்னும் ஸுவ்நக பகவான் அங்கிரஸ்ஸு இடம் கேட்க

முண்டக 1-1-4-
தஸ்மை ச ஹி உவாச த்வே வித்யே வேதி தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்ரஹ்ம விதோ வதந்தி பரா ச ஏவ அபரா ச -என்று
உயர்ந்த தாழ்ந்த இரண்டு ப்ரஹ்ம வித்யை பற்றிச் சொல்ல -ப்ரஹ்மத்தை நேராகவும் ஆழ்ந்த த்யானத்தாலும் –
உபாசனத்தால் அந்தர்யாமி தயாவாகும் இரண்டு விதம்
நேரடியாக -அபரோக்ஷ ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –

இதனை முண்டகம் -3-2-3-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய-என்று சொல்லுமே
உபாசனம் -சாதன சப்தகம் -விவேகாதிகள் -இதனை பிருஹத் -4-4-22-
தமேதம் வேதாநு வசநேந ப்ரஹ்மணா விவிதஷயந்தி யஜ்ஜேன தாநேந தபஸா நாசகேந -என்று சொல்லும்

இவை இரண்டையும் ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-60-60-
தத் பிராப்தி ஹேதுர் ஞானம் ச கர்ம சோக்தம் மஹா முநே ஆகமோத்தம் விசோகச்ச த்விதா ஞானம் ததோச்யதே–என்று
வேத ஜன்ய ஞானமும் -விவேகாதி ஜன்ய கர்மம் -என்றும் உண்டே

முண்டக -1-1-5-தத்ர அபரா ருக்வேதா யஜுர் வேதா -அபார வித்யை ருக் யஜு வேதங்களால் கிட்டும் -என்றும்
தர்ம சாஸ்த்ராணி -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம் யதே -என்று
எந்த ஒரு மேலான வித்யையில் அக்ஷரம் என்ற ப்ரஹ்மம் அறியப்படுகிறதோ -என்றும் சொல்லுமே

தொடர்ந்து -1-1-6-யத் தத்ரேஸ்யம் -எதனைக் காண இயலாதோ -என்று பரோக்ஷ அபரோக்ஷ ஞானங்கள் இரண்டுக்கும்
விஷயமான ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லி -1-1-7-யதோர்பண நாபி ஸ்ருஜதே க்ருண்ஹதே ச –என்று
சிலந்திப் பூச்சி நூலை உமிந்து இழுத்துக் கொள்வதைப் போலே பிரபஞ்ச ஸ்ருஷ்ட்டி –
என்பதை -1-1-8-தபஸா சீயதே-( சீயதே என்றால் வளருகிறது ) ப்ரஹ்ம ததோ அன்னம் அபி ஜாயதே அந்நாத் பிரானோ
மன சத்யம் (சத்யம் என்று அனைத்து சரீரங்கள் ) லோகா கர்மஸூ சாம்ருதம் -என்று
தபஸ்ஸால்-ஞானத்தால் – ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தில் இருந்து அனைத்து -உத்பத்தி
யஸ்ய ஞான மாயம் தபஸ் 1-1-9-

அடுத்து முண்டக -1-1-9-ய சர்வஞ்ஞ சர்வ வித் -என்று அனைத்தையும் அறிபவன் -எண்ணியதை முடிக்க வல்லவன்
அக்ஷர ஏதத் கார்ய ஆகாரம் ப்ரஹ்மம் நாம ரூபம் ச ஜாயதே -உயர்ந்த ப்ரஹ்மத்தில் இருந்தே வெளிப்படுகிறது

தத் ஏதத் சத்யம் –ப்ரஹ்மத்தின் ஸ்வபாவிக சத்யத் தன்மை சொல்லி
மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஸ்யன் தாநி த்ரேதாயாம் பஹுதா சந்த தாநி தாந்யா சரத நியதம் சத்ய காமா -என்று
ப்ரயோஜனாந்தரங்களை விட்டு ப்ரஹ்ம ப்ராப்திக்கே -ஏஷ வா பன்ன-இதுவே உனது மார்க்கம்
ப்லவா ஹி ஏதே அத்ருடா யஜ்ஜ ரூபா அஷ்டாத ஸோக்தமவரம் ஏஷு கர்ம ஏதச்சேயோ யே அவி நந்ததி மூடா
ஜரா ம்ருத்யும் தே புனரேவாபி யந்தி –என்று மூடர்கள் அல்ப பலன்களுக்கு யாகம் செய்கிறார்கள்

முண்டக 1-2-11-தபஸ் ஸ்ரத்தே ஹி உபவஸந்தி –என்று பலத் த்யாக பூர்வக தபஸ்ஸால் ப்ரஹ்ம பிராப்தி
பரீஷ்ய லோகான் – அல்ப அஸ்திரத்வாதி தன்மைகள் கொண்ட லோகங்களைப் புரிந்து கொண்டு
முமுஷுவாக குருவை அணுக அவனுக்கு குரு உபதேசம்
முண்டக -2-1-1-ததே தத் சத்யம் யதா ஸூ தீப்தாம் -என்று தொடங்கி
முண்டக -2-1-10-ஸோ அவித்யா க்ரந்திம் விக்ர தீஹ ஸோம்ய-என்று அறியாமை என்னும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்கிறான்
முண்டக -2-2-1–ஆவி சந்நிஹிதம்-யோகிகளால் காணப்படுகிறான்
சாம்யாபத்தி பெறுகிறான் -இப்படியாக சுருதியில் பிரகரணம் முடிகிறது

இவ்வாறு பல அசாதாரண விசேஷணங்களையும் சொல்லி மேலே ப்ரஹ்மத்துக்கும் பிரகிருதி ஜீவ வேறுபாட்டை
முண்டக -2-1-2-
திவ்யோ ஹி அமூர்த்த புருஷ ச பாஹ்யாப் யந்தரோ ஹி அஜ அப்ரானோ ஹி அமாந சுப்நோ ஹி அஷராத் பரத பர-என்றும் சொல்லுமே

கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -முதலிய இடங்களில்
காரணத்தை அறிவதால் காரியப்பொருள்கள் அனைத்தையும் அறியலாம்
என்ற ப்ரதிஜ்ஜையால்
இந்த பூத யோனியான அக்ஷரத்தை விசேஷ்யமாகக் குறிப்பதாலும்
ந இதரௌ-பிரதானமும் ஜீவனும் குறிப்பிடப்பட வில்லை
இங்கு யயாத தக்ஷரம் என்று ப்ரஹ்மமே கூறப்படுகிறது
அஷராத் பரத்பரம் -என்ற இடத்தில் ஐந்தாம் வேற்றுமை ஈறான அக்ஷர பாதத்தால் பிரதானம் கூறப்பட்டது
பிரதானத்தை விட பரனான ஜீவனை விட மேம்பட்டவன் என்று இவ்வாக்கியம்பரமாத்மாவையே குறிப்பதாகும்-

ஆகவே அக்ஷரம் என்பது பரமாத்மாவே தான் –
அச் -தாது -பரவி இருப்பதை குறிக்கும்
ஷர -வெளி வருதல் -உண்டாக்குதல் பொருளில்
அக்ஷரம் -வேறு ஒன்றால் உண்டாக்கப்பட்டு வருதல் இல்லாதது என்றுமாம்

ஆகவே நாம ரூபம் வேறுபாடு இல்லாத பிரதானம் அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்பட்டாலும்
ஸூஷ்ம நிலையில் அனைத்திலும் பரவி உள்ளது என்பதாலும் –
மஹத்தாதிகள் போலே உண்டாவது இல்லை என்பதாலும்
இவ்விதம் அக்ஷரம் என்ற பதம் கொண்டு கூறப்பட்டாலும் அது எதில் இருந்தும் வெளி வருவது இல்லை என்பதால்
தனிப் பெயர் கொண்டு அழைக்கப்பட வேண்டிய தகுதி அதற்கு இல்லையே

——————————————————————-

ஸூத்ரம் -55-ரூப உபன்யா சாத் ச –1-2-24-

உலகம் அனைத்தும் -அக்ஷரத்தின் சரீரம் -பரம்பொருளின் அங்கம் என்பதால் அஷரம் எனபது பரம் பொருளே

முண்டக உபநிஷத் -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷூஷீ சந்திர சூர்யௌதிச-ஸ்ரோத்ரே வாக்விவ்ருதாச்ச வேதா
வாயு பிரானா ஹ்ருதயம் விச்வமச்ய பத்ப்யாம் ப்ருத்வி ஹ்யேஷ சர்வ பூதாந்தராத்மா -என்று
அவனுக்கு அக்னி எனப்படும் த்யுலோகம் தலை -சந்திர ஸூர்யர்கள் கண்கள்-திசைகள் காதுகள் -வேத ஒலியே பேச்சு-
வாயு மூச்சு – உலகம் இதயம் -பூமியே கால்கள் -அனைத்துக்கும் அந்தராத்ம்னா-

அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்டுள்ள இப்படிப்பட்ட வடிவம் –
அனைத்துக்கும் அந்தராத்மாவாக உள்ள பரமாத்மாவுக்கே மட்டுமே கூடும்

இவ்வாறு விஸ்வ ரூப உபந்யாசத்தாலும்
பரமபுருஷனே அத்ருஸ் யத்வாதி குணகன் அஷராத் பரதப் பரன் என்றும் நிரூபிதமாயிற்று –

ஆகவே அத்ருஸ்யத்வம் -காணப்படாமை -போன்ற தன்மைகள் கொண்டதாகக் கூறப்படும்
பூத யோனி அக்ஷரம் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் சம்பூர்ணம்

————————————————————-

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-

இப்படிக் கூறப்பட்ட விஸ்வ ரூபம் ப்ரஹ்மத்தைத் தவிர வைச்வா நரனுக்கும் காணப்படுவதால்
இந்த ரூபத்தால் பர ப்ரஹ்மத்தைச் சாதிக்க முடியாது என்று சங்கித்து
அந்த வைச்வா நரனும் பரமாத்மாவே என்று சாதிக்கிறார் என்று சங்கதி

மேலும் ரூபோ பன்யா ஸாச்ச –என்ற ஸூத்ரத்தில்
விஸ்வரூப உபந்யாசத்தாலலே த்யு மூர்த்தத்வாதி –ஆகாயமே தலை கற்பனையாலும்
பகவானுக்கு பரமபுருஷத்வம் சாதிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில் மேற்படி கற்பனையால் வைச்வா நரன் என்பதும் பரமபுருஷன் என்று சாதிக்கப் படுவதால்
ப்ரசங்க சங்கதி –

ஸூத்ரம் -56-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-1-2-25-

சாந்தோக்யத்தில் வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-பொதுவான பதத்தைச் சிறப்பித்து கூறுவதால்

விஷயம்
சாந்தோக்யம் -5-11-6-
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் சம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி –நீர் உபாசிக்கும் வைச்வா நாராத்மாவை
எங்களுக்கு உபதேசிப்பீராக -என்று தொடங்கி
சாந்தோக்யம் -5-18-1-
யஸ் த்வேவ மேதம் ப்ராதே சமாத்ரமபி விமானமாத்மாநம் வைச்வாநரம் உபாஸ்தே -என்று எங்கும் பரந்து –
அதனால் அளவற்ற வைச்வாநராத்மாவை –யார் உபாசிக்கிறானோ -என்று நிகமனம்

சங்கை
வைச்வாநராத்மா பரமாத்மாவா அல்லது வேறே யாரையேனும் குறிக்குமோ

பூர்வ பக்ஷம்
வைச்வாநரன் என்னும் பதம் நான்கு வித பொருள்களில் வரும்
ஜாடராக்னியும்
பஞ்சபூதங்களில் மூன்றாவதான அக்னியும்
அக்னி தேவதையிலும்
பரமாத்மாவிலும் என்ற நான்கு

பிருஹத் -5-9-1-
அயம் அக்னிர் வைச்வா நரோ யேநேதம் அன்னம் பச்யதே யதிதமத்யதே தஸ்யைஷ கோஷா பவதி யமேதத் கர்ணாவபிதாய
ஸ்ருனோதி ச யதோக்தபிஷ்யன் பவதி நைநம் கோஷம் ஸ்ருனோதி –என்று ஜடாராக்னி பொருளில் உண்டு

ரிக்வேதத்தில்
விச்வாத்ம அக்னி புவநாய தேவ வைச்வா நரம் கேதுமஹம் க்ருண்வன்-என்று தேவர்கள் பகல் இரவு வேறுபடுத்த
அக்னியை உண்டாக்கி என்று பஞ்ச பூத அக்னியே வைச்வா நரன் என்கிறது இங்கு

ருக்வேதம் 1-98-1-
வைச்வா நரஸ்ய ஸூமதவ் ஸ்யாம ராஜா ஹி கம் புவாநாநாமவி ஸ்ரீ –என்று அவன் ராஜா –
அவன் இடம் நற் பெயர் பெறுவோம் என்று தெய்வம் பொருளில்
தைத்ரிய ப்ராஹ்மணம் 3-11-8-
ததாத் மந்யேவ ஹ்ருதயே அக்நவ் வைச்வா நரே பிராஸ்யத்-என்றும்
ப்ரஸ்ன உபநிஷத் -1-7-
ச ஏஷ வைச்வா நரோ விஸ்வ ரூப ப்ரானோ அக்னிருதயதே -என்று
பரமாத்மா பொருளில் படிக்கப்படுகிறது
ஆக இங்கு பரமாத்மாவையே கூறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம் –
வைச்வா நரம் பரமாத்மாவையே சொல்லும்
நான்கு பொருள்களுக்கும் சாதாரணமான இந்த சப்தத்தை பரமாத்மாவுக்கு –
அசாதாரணமான தர்மங்களாலே விசேஷமாகச் சொல்லுகையாலே
அந்த தர்மங்களாவன
சாதாரண சப்த விசேஷாத்-பொதுவான சப்தம் சிறப்பித்துக் கூறப்படுவதால்

ப்ராசீன சாலர் – சத்ய யஜ்ஜர் இந்த்ரத்யும்னர் -ஜனர் -புடிலர் -ஐந்து மஹ ரிஷிகளும்
சாந்தோக்யம் -5-11-1-
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்ற கேள்வி கேட்டு விவாதம் தொடங்கி
அவர்களுக்கு ஆருணி என்பவரின் புத்திரர் உத்தாலகர் என்பவர் ஆத்மாவை வைச்வா நரன் என்று கருதி உபாசிக்கிறார் –

சாந்தோக்யம் 5-11-2-
உத்தாலகோ வை பகவந்தோ அயம் ஆருணி ஸம்ப்ரதீ மாமாத்மா நம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
இவர்கள் வர தனக்கு முழுமையான ஞானம் இல்லாமையால்

சாந்தோக்யம் -5-11-4-
அச்வபதிர்வே பகவந்தோ அயம் கேகய ஸம்ப்ரதீ மமாத்மாநம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
கேகேய நாட்டு அரசன் அஸ்வபதி இத்தை நன்கு அறிந்து உபாசிக்கிறார் -அவர் இடம் செல்வோம் என்று
ஆறு பெரும் சேர்ந்து அங்கே சென்றனர் –

அஸ்வபதி அவர்களை வரவேற்று கௌரவித்து சாந்தோக்யம் 5-11-5-ந மே ஸ்தேந –என்று தொடங்கி
யஷயமானோ ஹ வை பவந்தோ அஹம் அஸ்மி -என்றும்
யாவேதைகை காத்மா ருத்விஜே தானம் தாஸ்யாமி தாவத் பகவத்ப்யோ தாஸ்யாமி வசந்த பகவந்தோ –என்றும் உபசரித்து —
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம –என்று இவர்கள் அவன் இடம் கேட்க –
ஆத்ம ப்ரஹ்ம சப்தத்தால் வைச்வா நரன் பரமாத்மாவே என்றதாயிற்று

மேலும் சாந்தோக்யம் 5-18-1-
ச சர்வேஷு லோகேஷு சர்வ வேஷு பூதேஷு சர்வேஷ் வாத்மஸ் வந்ந மத்தி -என்று
அவன் அனைத்திலும் உள்ளான் என்றும்

சாந்தோயம் -5-24-3-
தத்ய சேஷீகாத் லபக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூயந்தே –என்று
எஜமானின் பாபங்கள் போகின்றன –

பரமாத்மாவே என்பதற்கு மேலும் ஒரு காரணம் அடுத்த ஸூத்ரத்தில்

————————————————————————

ஸூத்ரம் -57-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –1-2-26-

இவ்விதமாக உலகம் அனைத்தையும் உருவமாகக் கொண்டதாக அறிவுறுத்தப்படுவதால்
வைச்வா நரன் பரமாத்மாவே -என்று கூறப்படும் விஷயத்தில் அடையாளமாகக் கூடும்

சித்தாந்தம்
அதர்வண வேதம் -முண்டக -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷுஷி சந்த்ர ஸூர்யவ் திச ஸ்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா வாயு பிரானோ ஹ்ருதயம்
விஸ்மஸ்ய பத்ப்யாம் ப்ருத்வீ ஹி ஏஷ சர்வ பூத அந்தராத்மா –இங்கு அக்னி த்யு லோக அர்த்தம்

சாந்தோக்யம் -5-4-1-
அசவ் வை லோக அக்னி -என்றும்
த்யாம் மூர்த்தா நாம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபி சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே திச ஸ்ரோத்ரே வித்தி பாதவ்
ஷுதி ச ஸோ அசித்யாத்மா சர்வ பூத ப்ரணேதா -என்றும்

சாந்தி பர்வம் -47-68-
யஸ் யாக்னி ராஸ்யம் த்யவ் மூர்த்தா கம் நாபிச் சரணவ் ஷிதிஸ் ஸூர்யச் சஷுர் திச ஸ்ரோத்ரம்
தஸ்மை லோகாத்மநே நம -என்றும் உண்டே

த்யு லோகம் முதல் பிருத்வீ லோகம் வரை வைச்வா நரனுக்கு மூர்த்தாதி அவயவமாக உபதேசிக்கப் படுகிறது
இந்த ரூபம் ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் பரம புருஷன் ரூபமாக பிரஸித்தம்

இதி -சப்தம் பிரகாரத்தைச் சொல்லுகிறது
இதி ஸ்மர்ய மாணம்-இந்தப் பிரகாரமான ரூபம்
அநு மாநம் ஸ்யாத் -இந்த வைச்வானர வித்யையில் ஸ்மரிக்கப் படுவதாய்க் கொண்டு
பரமாத்மாவே என்பதில் அனுமானம் சாதக லிங்கம் ஆகின்றது
ஆகையால் இத்தகைய தலை முதலியன கொண்ட வைச்வானரன் பரம புருஷனே என்று கருத்து

மேலும் இதுக்குப் பரிஹாரம் கூறுகிறார் –

————————————————————————–

ஸூத்ரம் -58-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –1-2-27-

சப்தம் போன்றவற்றாலும் சரீரத்தின் உள் இருப்பவன் என்பதாலும் வைச்வா நரன் பரமாத்மாவே ஆவான் என்று கூற இயலாது
என்று சொல்வாய் ஆனால் அது சரி அல்ல –
ஜாடராக்னியைச் சரீரமாகக் கொண்டதாகவே பரமாத்ம உபாசனம் கூறப்படுவதாலும் –
அந்த ஜடராக்கினிக்கு மூன்று லோகத்தையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் என்பது பொருந்தாது என்பதாலும்
வைச்வா நரனே பரமாத்மா ஆகிறான் -இவனையே புருஷன் என்று வேதம் கூறும்

பூர்வ பக்ஷம்
வைச்வா நரன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது சரி யல்ல –
சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச -சப்தம் போன்றவற்றாலும் உள்ளே இருப்பவன் என்பதாகும் –
யஜுர் வேதம் பின்பற்றும் வாஜசநேர்களின் வைச்வானர வித்யை பகுதியில் அக்னி என்பது வைஸ்வானரனுடன்
ஒத்தது போன்றே படிக்கப்பட்டுள்ளது –

சதபத ப்ராஹ்மணத்தில் 13-6-1-11–ச ஏஷ அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யம் -5-18-2-ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோந் வாஹார்யபசந ஆஸ்யமாவஹநீய-என்று
வைச்வா நரனுடைய இதயம் கார்ஹபத்ய அக்னியாகவும் -மனம் அன்வாஹார்ய அக்னியாகவும் –
வாய் ஆஹவனீய அக்னியாகவும் -மூன்று வித அக்னிகளாக படிக்கப்படுகிறான் –

மேலும் சாந்தோக்யம் -5-19-1-
தத் யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்தோமீயம் ச மாம் பிரதமா மாஹிதம் ஜூஹூ யாத் ப்ராணாய ஸ்வாஹா –என்று
ப்ராணனுக்கு ஆதாரமாக வைச்வா நரன் கூறப்படுகிறான்

இது போன்று சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச யோ ஏதமேவ மாக்நிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷேந்த ப்ரதிஷ்டிதம் –என்று புருஷனின்
சரீரத்துக்குள்ளே இருப்பதாக ஓதப்பட்டுள்ளது

இந்தக் காரணங்களால் வைச்வா நரன் வயிற்றில் உள்ள ஜாடராக்நியாக உள்ளான் –
எனவே பரமாத்மாவாக இருக்க முடியாது

இந்த சங்கையைப் பரிஹரிக்கிறார் இதி சேத் ந என்று

சித்தாந்தம்
ததா தட்ருஷ்த்யுபதேசாத் -இவ்விதம் பரமாத்ம உபாசனம் என்பது
ஜாடராக்கினியைச் சரீரமாகக் கொண்டுள்ள -என்றே கூறப்பட்டதால் –
வைச்வா நரவித்யா பிரகரணம் –
ச ஏஷா அக்னிர் வைச்வா நர -என்றும்

சாந்தோக்யத்தில் –
ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோ அன்வா ஹார்யப ஆஸ்யமா ஹவ நீய-என்றும்
யாம் ப்ரத மாமா ஹூதிம் ஜூஹூயாத் தாம் ஜூஹூயாத் பிராணாய ஸ்வாஹா -என்றும்
ஏதமே வாக்னிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் -என்றும்-

அசம்பவாத் -ஜாடராக்னிக்கு மூன்று லோகங்களையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் பொருந்தாதே
எனவே ஜாடராக்னியை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும்

புருஷம் அபி ஏ நம் அதீயதே –
இந்தக் கருத்தையே ஸ்ரீ பகவானும் ஸ்ரீ கீதையில் -15-14-
அஹம் வைச்வா நரோ பூத்வா பிராணி நாம் தேஹம் ஆஸ்ர த பிராண அபாந சமாயுக்த பசாம் யந்நம்
சதுர்விதம் –நான்கு வித உணவுகளை ஜீரணிக்கிறேன் -கடித்து -உறிஞ்சி -நாக்கில் தடவி குடிப்பது -என்றும் சொல்லுமே
இங்கும் ஜாடராலானத்தைச் சரீரமாகக் கொண்டு என்றே பொருள்

மேலும் சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச ஏஷோ அக்னிர் வைச்வா நரோ யத் புருஷ -என்று அந்த புருஷனே இந்த அக்னி
ஸ்வேதாஸ்வர -3-14-
சஹஸ்ரசீர்ஷா புருஷ -என்றும் –
ஸ்வேதாஸ்வர -3-15-
ததா புருஷ இத்யபி ஏவேதம் சர்வம் -என்றும் பரம் பொருளையே சொல்லிற்று-

புருஷம் அபி ஏ நம் அதீயதே
இந்த வைச்வாநரனையே வாஜஸனேயிகள் வைச்வாநர புருஷனாகப் படிக்கிறார்கள்
நிருபாதிக புருஷன் பரமாத்மா தான்

———————————————————————————

ஸூத்ரம் -59-அத ஏவ ந தேவதா பூதம் ச –1-2-28-

மேற் கூறிய காரணங்களால்
தேவதையான அக்னி தேவதையும்
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியும் வைச்வா நரன் அல்ல

——————————————————————————–

ஸூத்ரம் -60-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –1-2-29-

வைச்வா நரன் அக்னி இரண்டுமே பரம் பொருளையே குறிக்கும் என்று ஜைமினி கூறுகின்றார் –
அக்னி என்ற பதத்துக்கு நேராகவே பரமாத்மா என்று பொருள் கொண்டாலும் விரோதம் இல்லை என்றபடி

சித்தாந்தம்
ஸ ஏஷோ அக்னிர் வைச்வானர என்பதுக்கு
அக்னி சப்தம் அக்னி சரீரக பரமாத்மா பரம் என்பது பாதராயணரின் திரு உள்ளம்

அக்னி என்பது அக்ரம் நயதி என்று கொண்டு
நேராகவே பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறார் ஜைமினி

வைச்வா நரன் அக்னி இரண்டுக்கும் சாமா நாதி கரண்யத்தால் ஒற்றுமை கூறப்பட்டு –
அக்னியே பரமாத்மா வாகும்-ஜாடராக்கினியை பரமாத்மாவை சரீரமாக கொண்டதால் –
ஆகவே பரமாத்மாவையே உபாஸிக்க வேண்டும் என்கிறார் ஜைமினி

விச்வேஷாம் நராணாம் நேத வைச்வா நர–அனைத்து உயிர்களையும் வழி நடத்துபவன் -என்றும்
அக்ரம் நயதீத் யக்நி-என்றும் நல்ல நிலைக்கு அழைத்து செல்பவன் என்றும் ஜைமினி கூறுகிறார்-

பரமாத்மாவை போலே அக்னி உயர்ந்த கதியான அர்ச்சிராதி கதிக்கு அழைத்து செல்வதால்
அக்னி பதமும் பரமாத்மாவையே குறிக்கும் என்றவாறு –

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -5-18-1-
யஸ்த்வேவ மதம் ப்ராதேச மாத்திரம் அபி விமானம் –என்று
யார் ஒருவன் அளவற்றவனாக வைச்வா நரனை இப்படியாக த்யு லோகம் போன்ற பிரதேசங்களில் மட்டும்
அளவுபட்டவனாக உபாசிக்கிறானோ என்று உள்ளதே

அளவற்ற ப்ரஹ்மத்துக்கு இவ்வாறு அளவுள்ளது என்பது உபாசகர்களுக்கு
தெளிவு -அபி வ்யக்தி -ஏற்படவே என்பர் ஆஸ்மரத்யர்

தலையில் இருந்து பாதம் வரை அவயவ விசேஷங்கள் உடைய புருஷனாய் விளக்கியது
மோக்ஷம் விரும்புவோர் உபாசிக்கவே என்பர் பாதரி
இதுவும் தவறு அன்று
அனால் ஒரு சங்கை

ஆகவே உயர்ந்த ப்ரஹ்மம் அளவு படாதாக உள்ள போது பூமி மற்றும் த்யு லோகம் ஆகியவற்றுக்கு இடையே
அளவு கொண்டதாகக் கூறப்பட்டது எப்படி
ஆகவே வைச்வா நரன் ப்ரஹ்மம் அல்ல -என்பர் பூர்வ பக்ஷி

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————

ஸூத்ரம் -61-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-1-2-30-

உபாசகனுக்கு சங்கை இன்றி இருக்க ஆஸ்மத்ரயர் கூறுகின்றார் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமா நம் –
பிரதேச மாதரம் -பரம்பொருளின் உடலின் அங்கங்களாக-
ஸ்வர்க்கம் தலை என்றும் -ஆதித்யன் கண்கள் என்றும் -வாயு பிராணன் என்றும் -ஆகாசம் சரீர நடுப்பாகம் என்றும்
நீர் மூத்திரப்பை என்றும் -பூமி பாதங்கள் என்றும் –
உபாசகனுக்கு தோற்றுவதற்காக மட்டுமே இவ்விதம் அளவுபடுத்திக் கூறப்பட்டது

இதுக்கு பூர்வ பக்ஷம்
பரம புருஷனுக்கு தலை போன்றவை உள்ளதாக அவனை புருஷ ரூபியாக ஏன் கூற வேண்டும்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————–

ஸூத்ரம் -62-அநு ச்ம்ருதே பாதரி-1-2-31-

பாதரி உபாசகனுக்கு -எளிதாகும்படி –அளவில்லாத பரம்பொருளை அளவு படுத்தி கூறுகின்றார்-

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமாந மாத்மா நம் வைச்வா நரம் உபாஸ்தே ச சர்வேஷு லோகேஷு
சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம ஸ்வந் நமத்தி –என்று ப்ரஹ்மம் அடைய உபாசனம் கூறப்பட்டது
ஏதம் ஏவம் -இந்த ரூபம் கொண்ட அவன்
சர்வேஷு லோகேஷு சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம-அனைத்து லோகங்களிலும் அனைத்து பூதங்களிலும்
அனைத்து ஆத்மாக்களிலும் உண்கிறான்
ப்ரஹ்மம் இது போன்று இருப்பதால் உபாசகன் பேர் ஆனந்தம் அடைகிறான்
கர்ம வஸ்யர் கர்ம பலமான அன்னத்தை உண்கிறார்கள் -முமுஷு அனுபவிக்கும் அன்னம் வேறாகும் –
அவன் மற்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் அன்னத்தைக் கை விட வேண்டும்

இதுக்கு பூர்வ பக்ஷம்
வைச்வா நரனே பரமாத்மா என்றால் உபாசகனுடைய ஹ்ருதயம் போன்ற அவயவங்களை ஏன் பலி பீடம்
போன்றவையாகக் கூற வேண்டும்
ஆனால் ஜடராக்னியைக் கூறுகிறது என்றால் சரியாகும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————-

ஸூத்ரம் -63-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –1-2-32-

சம்பத்தே இதி ஜைமினி -இந்த வைச்வானர வித்யைக்கு அங்கமான ப்ராணாஹுதிக்கு
அக்னி ஹோத்ரத்தை நிரூபிக்கவே மார்பு முதலியவை வேதி முதலியவையாக உபதேசிக்கப் பெற்றன
என்று ஜைமினி கூறுகிறார்
ததா ஹீ தர்சயதி-பரமாத்ம உபாசனம் ஸர்வ பாப நிவர்த்தகம் என்றும் –
ப்ராணாஹுதியே அக்னி ஹோத்ரம் என்றும் ஸ்ருதியே காட்டுகிறது –

உபாசகனுடைய பல்வேறு அங்கங்களை பலி பீடம் போன்றவையாக உரைப்பது என்பது
வைச்வா நர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னி ஹோத்ரம் ஆக்குவதற்காகவே ஆகும்
என்று ஜைமினி எண்ணுகிறார் -ஸ்ருதியும் அப்படியே

சாந்தோக்யத்தில் –
உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹபத்ய-என்று
மார்பே வேதி என்னும் இடம் – -மயிர்களே தரப்பை -இதயமே கார்ஹபத்யம் என்றும்

சாந்தோக்யம் -5-24-1-
ய ஏததேவம் விதவாந் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி தஸ்ய
சர்வேஷூ லோகேஷூ பூதேஷு சர்வேஷ்வாத்மஸூ
ஹிதம் பவதி தத்யா சேஷீ கதூல மக்னௌ ப்ரோதம்
ப்ராதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று
ஐந்து முறை மந்த்ரம் சொல்லி பிரானா ஹூதி செய்பவன் வைச்வா நரனின் அக்னி ஹோத்ரமாக கொள்ளலாம்-

—————————————————————————-

ஸூத்ரம் -64-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –1-2-33-

இப்படி உபாசனம் செய்பவனின் உடலிலே வைஸ்வ நரன் உள்ளதாக உபநிஷத் சொல்லும்

ஆமநந்தி ச ஏவம் அஸ்மின்
ஏநம் -இந்தப் பரம புருஷனை
அஸ்மின்-இந்த உபாசகனின் சரீரத்தில் ப்ராணாஹுதியின் ஆதாரமாக
ஆமநந்தி -வேதங்கள் பேசுகின்றன

உபாசகன் தலையே பரமபதம் -கண்களே சூர்யன் -மூச்சுக் காற்றே வாயு -இடுப்பே ஆகாயம் –
மூத்திரப் பைகளே நீர் -கால்களே உலகம்
இப்படிப்பட்ட வைஸ்வ நரனுக்கு அக்னி ஹோத்த்ரம் அளிக்க வேண்டும் என்றதாயிற்று-

சித்தாந்தம்
சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று உபாசகனுடைய தலையே
த்யு லோகம் என்னும் ஸ்வர்க்கம்

சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்தேவமதம் ப்ராதேச மாத்ரபி விமான மாத்மாநம் வைச்வா நரம் உபாஸதே -என்று மூன்று லோகங்களையும்
சரீரமாகக் கொண்டதாக பரமாத்மா உபாசனம் சொல்லப்படுகிறது

தொடர்ந்து சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று தொடங்குவதன் மூலம் ப்ராணாஹூதியை
அக்னி ஹோத்ரமாக கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வைச்வா நர உபாஸனையின் அங்கம் எனப்பட்டது —

உபாசகனின் தலை -ஸூ தேஜஸ் -த்யு லோகம்
உபாசகனின் கண்கள் -ஸூர்யன் -விஸ்வரூபம்
உபாசகனின் மூச்சுக்கு காற்று பிராணன் -வர்த்தமான்
உபாசகனின் இடைப்பகுதி பஹுளம்-ஆகாசம்
உபாசகனின் மூத்திரப்பை -வைச்வா நரேனின் மூத்திரப்பை
உபாசகனுடைய பாதங்கள் -வைச்வா நரனுடைய பாதங்கள் -பூமி
உபாசகனுடைய மார்பு -வேதி -பலி பீடம்/சரீர முடி -தர்பை /இதயம் கார்ஹபத்ய அக்னி /
மனாஸ் -அன்வாஹார்ய அக்னி /முகம் ஆஹவனீய அக்னி /
இவற்றைக் கொண்டு அக்னி ஹோத்ரம் செய்து ப்ராணாஹுதியை பரமாத்மாவுக்கு அளிக்கிறான்
இத்தை நிரூபிக்கவே அவயவங்கள் இது போன்று கூறப்படுகின்றன

இவ்விடம் ஸ்வர்க்கம் இத்யாதிகள் எல்லாம் பரமாத்மா என்றும் உபாசகன் சரீரத்தில்
உபாஸ்யனின் ஸ்வரூபமாக த்ருஷ்ட்டி பண்ணியும் உபாசன விதி
ஒன்றை மற்ற ஒன்றாக என்னும் பிராந்தி அன்று
அனைத்தும் ப்ரஹ்மமே என்னும் த்ருஷ்ட்டி தான்
அந்ய பொருள்களை த்யேயமாகக் கூறவில்லை
ஆகவே சங்கைக்கு இடம் இல்லை

இப்படியாக பரமாத்மாவான புருஷோத்தமனே வைச்வா நரன் என்று நிரூபிக்கப் பட்டான் –

—————–

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

இவ்வாறு ஆறும் என்று ஸ்வாமி தேசிகன் அருள் மொழி –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–
ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–ஸ்ரீ வேதாந்த தீப-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

———

எம்பெருமானே உலகு உய்ய வேத வ்யாசராய் சாரீரீரக சாஸ்திரத்தை நான்கு அத்தியாயங்களாக அருளிச் செய்தார்
அதுக்கு போதாயன பகவான் அறுபதினாயிரம் படி வ்ருத்தி க்ரந்தமும்
கலியுக தொடக்கத்தில் டங்கர் ஆராயிரப்படியாக சுருக்கி அருளி
த்ரமிட முனிவர் அதற்கு பாஷ்யமும் அருளிச் செய்தனர்
நம் ஸ்வாமி அருளிச் செய்ததுக்கே ஸ்ரீ பாஷ்யம் என்று ஸ்ரீ சரஸ்வதி தேவியே திரு நாமம் சாத்தி அருளினாள்

ஸ்ரீ பாஷ்யம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -மங்கள ஸ்லோகமே ஸ்ரீ பாஷ்ய சாரம்
சமன்வய -காரணத்வ
அவிரோதித்தவ -அபாத்யத்வ
உபாயத்வ
பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

இரண்டாவது மங்கள ஸ்லோகத்தால்
இங்கு ப்ரஹ்ம விஷயமே விசாரம் என்றும்
அவனே நாம் அடையும் பயன் என்றும் விசாரிக்கப்படும் பொருள் என்றும் சம்பந்தம் காட்டி
போதாயனர் விஸ்தாரமாக அருளிச் செய்ததை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் விளக்க
மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

முதல் நான்கு அதிகரணங்கள் -ஒரே ஸூத்ரம் ஒவ்வொன்றும்
1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–
1-1-3- சாஸ்திர யோநித்வாத்-
1-1-4-தத் து சமன்வயாத் –

முதல் இரண்டும் சித்த ரூபமான ப்ரஹ்மத்தில் பிரமித்திதி ஏற்படுத்தவும்
அடுத்த இரண்டும் ஸாஸ்த்ரமும் அதனால் ஏற்படும் புத்தியும் வீண் என்ற வாத நிரஸனம்

அதிகரணம் என்பது
1-விஷயம்
2-சம்சயம்
3-பூர்வபக்ஷம்
4-சித்தாந்தம்
5-பிரயோஜனம்
என்ற ஐந்து பொருள்களைக் கொண்டது

————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸாதி அதிகரணம்

இதில் ப்ரஹ்ம விசார ஸாஸ்த்ரம் விஷயம்
அது ஆரம்பிக்க வேண்டியதா இல்லையா என்று சம்சயம்
ஆரம்பிக்க வேண்டாம் என்பது பூர்வ பக்ஷம்
ஆரம்பிக்க வேண்டுவதே என்பது ஸித்தாந்தம்
ஸாஸ்த்ரத்தை நிர்ணயம் செய்வதே பலம்

ஸூத்ரம் -1- அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-

இதில் விஷய வாக்கியம்
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் –தத் விஞ்ஞானர்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் –என்பது
கர்மாக்களால் பெறப்படும் லோகங்களை எல்லாம் ஆராய்ந்த ப்ராஹ்மணன்
அக்கர்மங்களால் அக்ருதனான -செயலுக்கு விஷயமாகாத -எம்பெருமான் பெறப்பட முடியாதவன் என்று நிர்வேதம் பிறந்து
ப்ரஹ்ம நிஷ்டனான ஸ்ரோத்ரியனை ஆச்சார்யராக வரித்து சமித்தாதிகளைக் கையிலே உபஹாரமாகக் கொண்டு
எம்பெருமானை அறிந்து கொள்ள பிரார்த்திப்பது ஆகும்

இங்கு ஒருவன் ப்ரஹ்ம விசாரம் செய்வது என்பது அவனது ஆசையாலேயே ஏற்படக் கூடிதயதாகையால்
கிடைக்காத ஒன்றை கிட்ட அபூர்வ விதி ஆகாது
பின் என் என்னில்
ப்ரஹ்ம விசாரம் செய்ய விரும்புபவன் அத்தை ஆச்சார்ய முகேன
உபதேச பூர்வகமாகவே செய்ய வேண்டும் என்ற நியமத்தை விதிப்பதால்
நியம விதியே யாகும்

பூர்வ மீமாம்ஸையில் கடைசி ஸூத்ரம் –
ஸ விஷ்ணு ராஹ ஹிதம் ப்ரஹ்மேத்யா சஷதே தம் ப்ரஹ்மேத்யா சஷதே-என்று உள்ளது
அந்த ப்ரஹ்மத்தின் விசாரம் தொடங்குகிறது என்று இதில் வ்யாஸர்

அத -பிறகு
அத– இக்காரணங்களாலே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் ஆராய்ச்சி செய்யத்தக்கது

கர்ம விசாரம் முடிந்து அவை அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்றும்
ப்ரஹ்ம ஞானமே முடிவற்ற எல்லை இல்லா நிலையான பலனைக் கொடுக்கும் என்று
மேல் எழுந்தவாரி உணர்ந்து ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறார் என்றவாறு

கர்ம விசாரம் செய்த பின்பே ப்ரஹ்ம விசாரம் என்பதற்கு -அத்வைதி பூர்வம் நடந்தது கர்ம விசாரமே அல்ல
1-நித்ய அநித்ய வஸ்து விவேகம்
2- சமதமாதி சாதன ஸம்பத்
3-இம்மை மறுமை பல போகத்தில் வைராக்யம்
4-மோக்ஷம் அடைய விருப்பம்
ஆகிய சாதன சதுஷ்டயமே பூர்வ விருத்தம் என்பர்

யாதவ பிரகாசரும் பாஸ்கரரும் முந்தையது தாப த்ரயத்தால் ஏற்பட்ட ஸ்ரமமே என்பர்
லகு பூர்வ பாசத்துக்கு லகு சித்தாந்தம் -மஹா பூர்வ பாசத்துக்கு மஹா சித்தாந்தம்
ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே உபாயம் என்றும்
நிர்விசேஷ ப்ரஹ்மமே ப்ராப்யம் என்றும்
இந்த ஐக்ய ஞானத்தால் அநிர் வஸநீய அஞ்ஞானமும் –
அதன் அடியாக பிரபஞ்சமும் நீக்கப்படுபவை என்றும் கூறுவார்
ஸ குண சாஸ்திரங்கள் குணங்களை அபேக்ஷிக்கையாலே துர்லபம் என்றும்
நிர்குண சாஸ்திரங்கள் பலம் மிக்கவை என்றும்

ஸத்யம் ஞானம் அநந்தம் -சோதக வாக்கியமும் நிர்குண ப்ரஹ்மத்தையே கூறும் என்பர்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவம் அத்விதீயம் ப்ரஹ்மம் என்பதில்
ஸதேவ -விஜாதீயங்களான அசேதனங்களை விட்டு பேதத்தையும்
ஏகமேவ -என்று சஜாதீயன்களான சேதனங்களை விட்டு பேதத்தையும்
அத்விதீயம் என்று ப்ரஹ்மத்திடம் உள்ள ஸத்யத்வம் ஞானத்வம் போன்ற ஸ்வ கத தர்மங்களில் நின்றும் பேதத்தையும்
விலக்கி நிர்விசேஷ ப்ரஹ்மமே நிரூபிக்கப் படுகிறது
எனவே யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித்
தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே முதலிய வாக்கியங்களில் உள்ள குணங்களை இல்லையாக்கி
நிர்க்குண ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்று காரண வாக்யத்துடன் ஐக்ய அர்த்தம் கொள்ள வேண்டும் என்பர் –

பிரமாணம் தர்க்கம் உபபாத்திகளைக் காட்டி நம் சித்தாந்தமான
பக்தி ரூபா பன்ன ஞானமே முக்தி உபாயம் -வெறும் தத்வ ஞானம் மட்டும் அல்ல
அது ஆசையால் கிட்டும் கேள்வி அறிவாலே கிட்டக்கூடியது விதிக்க வேண்டாம் என்று மஹா சித்தாந்தம்

இதுக்கு
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -அம்ருதம் ஆகிறான் சர்வ பாதங்களில் நின்றும் விடுபடுகிறான்
போன்ற வாக்யங்களிலே தத்வ ஞானமே முக்திக்கு வழி என்ற சங்கை
ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம்
காரணந்து த்யேய -என்பதால்
ஞானம் வேதனம் சொற்களுக்கு த்யானம் உபாஸனம் என்றே கொள்ள வேண்டும்
பக்தி ரூப ஞானமே முக்திக்கு சாதனம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -இதில் த்ருஷ்டே தர்சன சமானாகார சாஷாத்காரம் பெற தியானமே வழி
பேதங்களை ஏற்கக்கூடாது என்னும் பூர்வ பக்ஷிகளின் வாதத்தைக் கண்டித்து ஏற்க வேண்டும் என்று ஸ்தாபிக்கிறார்
தர்மமும் தர்மியும் எப்போதும் பேதம் உள்ளவையே

சத்யம் ஞானம் அநந்தம் ஸ்ருதி சஜாதீய பேதங்களைக் கண்டிக்க வில்லை
ஸதேவ -என்று ஸத்கார்ய வாதம்
ஏகமேவ -ஸூஷ்ம அவஸ்தை -உபாதான காரணம் காட்டும்
அத்விதீயம் -தன்னைத் தவிர வேறு நிமித்தம் இல்லை
கீதா வசனம் விஷ்ணு புராண வசனங்களைக் காட்டி அவன் ஒருவனே சமஸ்தத்துக்கும் அந்தர்யாமி என்று
நிர்விசேஷ ப்ரஹ்ம வாதத்தைக் கண்டித்தார்

ஏழுவித அனுபபத்திகள்
1- ஆஸ்ரய அனுப பத்தி -ஞானத்தால் பாதிக்கப்படும் அவித்யை ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்தையே
ஆஸ்ரயிப்பது பொருந்தாதே
ஸ்வரூப ஞானம் அவித்யைக்கு விரோதம் இல்லை என்பர்
இவன் தேவதத்தன்-இவனே தேவதத்தன் என்ற ப்ரத்யபிஜ்ஜை நினைவு ரூபமான ஞானத்துக்கும்-
இரண்டு நபர்கள் இல்லை என்று ஸ்தாபிக்கும் ஞானத்துக்கும் வாசி உண்டே
நீங்கள்கூறும் உதாரணம் வேறு வேறு காலத்து ஞானம்
ஆனால் இங்கோ ஒரே விஷயம் -நிர்விசேஷ ப்ரஹ்மம் பற்றிய ஞானம்
ஸ்வரூப ஞானமே ஜகத் என்னும் பிரமத்தைத் தடுக்கும் என்று கண்டிக்கிறார்
2-திரோதான அனுப பத்தி -ப்ரகாசமே வடிவான ப்ரஹ்மம் அவித்யையால் மூடப்பட்டது என்பது பொருந்தாதே
3-ஸ்வரூப அனுப பத்தி -ப்ரஹ்மத்திடம் அவித்யை தோஷம் உண்மையா சத்தியமா
உண்மை என்றாலே இரண்டு வஸ்துக்கள் கொண்டதாகும் அசத்தியம் என்றால்
அந்த அவித்யை பார்வையா பார்ப்பவனிலா பார்க்கப்படுபத்திலா –
ப்ரஹ்மமே தோஷம் என்றால் தோஷ நிவ்ருத்தியே ப்ரஹ்ம நாசமாகும்
4-அநிர்வசனீயத்வ அனுப பத்தி -அத்வைதிகள் அவித்யை ஸத் என்றோ அஸத் என்றோ
சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் என்பர்
ப்ரதீதி -உள்ளத்துக்குப் புலப்படுதலைக் கொண்டே அது ஸித்திக்க வேண்டும்
அது ஸத் என்றோ அஸத் என்றோ தோன்றுவதால் அநிர்வசனீயம் இல்லை
சத்தும் அசத்தும் இல்லாதது தான் அவித்யையின் விஷயம் என்றால் தோன்றாதது கூட ப்ரதீதியில் விஷயம் ஆகலாம்
அப்போது விஷயம் எது என்ற வ்யவஸ்தையே அற்றுப் போகும்
5-பிராமண அனுப பத்தி பாவ ரூபமான அஞ்ஞானம் உண்டு என்று ஏற்றுக் கொள்ள
அறிவற்ற நான் என்னையும் பிறரையும் அறிந்திலேன் -என்கிற ப்ரத்யஷம் பிரமாணம்
இந்தப் ப்ரத்யக்ஷம் உண்டாவதற்கு முன் இல்ல அபாவ -இன்மையை -விஷயமாகக் கொண்டது என்றால் பொருந்தாது
ஏன் எனில்
ஞானத்தின் பிராக் அபாவத்தை அதன் சம்பந்தியான பிரதியோகி ஞானத்தைக் கொண்டே நிரூபிக்க வேண்டும்
க்யாதி வாதங்கள்
சிப்பியைப்பார்த்து வெள்ளி என்ற பிரமம் -அநிர்வசநீயமான வெள்ளி உண்டாகிறது என்னும் அத்வைதி வாதம் நிரஸனம்
அக்யாதி
அந்யதா க்யாதி
ஆத்ம க்யாதி
அஸத் க்யாதி –பஷன்களில் அந்யதா க்யாதி சிறந்தது என்று விளக்கல்
அக்யாதி யோடே கூடிய யதார்த்த க்யாதியே சிறந்தது என்பதே ஸ்ரீ மன் நாத முனிகள் உகந்தது
சிப்பியில் வெள்ளியின் அம்சம் உண்டே
ஸ்வப்ன பொருள்களும் ஸத்யங்களே
கண்கள் ப்ரவ்ருத்தி விரலால் தடைப்பட்டு இரண்டு சந்திரன்கள் என்கை
மாயாந்து ப்ரக்ருதிம் –மாயா -விசித்ரார்த்த ஸ்ருஷ்ட்டி =மித்யா ஞானம் அல்ல
6- நிவர்த்தக அனுப பத்தி
தத் தவம் அ ஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம
நிர்விசேஷ ப்ரஹ்மாத்மைகத்வ ஞானம் அவித்யை நிவ்ருத்தி செய்யும் என்பர்
இது தவறு
ஜகத்தின் சரீரியான ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அம்ச அதிகரணத்தில் விளக்கம் உண்டே
பாஸ்கரன் உபாதி பேத அபேத வாதி
யாதவப்ரகாசர் ஸ்வ பாவிக பேத அபேத வாதி
தார்க் கிகன் ஸ்வ நிஷ்ட பேத வாதி
பிரகாரம் அப்ருதக் சித்தம் என்று உணராமல் பிதற்றல்கள் இவை
7- நிவ்ருத்தி -அனுப பத்தி -ஐக்ய ஞானத்தால் பந்த நிவ்ருத்தி என்பது பொருந்தாது
பகவத் பக்தியாலேயே நிவ்ருத்தி என்பதே சுருதி சித்தம்
ஐக்ய ஞானத்துக்கும் ஞாதா தனியே இருக்க ஒண்ணாதே
ஞானம் ஞாதா ஜேயம்-மூன்றும் வேண்டுமே
ப்ரஹ்ம ஞானமே அநந்தமான ஸ்திர பலனைக் கொடுக்கும்

இனி ஸித்த வஸ்து ரூபமான ப்ரஹ்மத்தை போதிக்கும் சக்தி இல்லை என்னும் மீமாம்ஸகனை நிரசிக்கிறார்
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் என்னும் வேத வாக்கியங்கள் பிரமாணங்களே
ப்ரஹ்ம விசாரம் தொடங்குவதில் எந்தவித விரோதமும் இல்லை –

1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –1-1-1-

அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோஷ பலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

அத -வேதத்தின் ஒரு பகுதியான கர்ம காண்டத்தை விசாரித்த பின்பு
அத -ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் கர்மங்கள் அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்பதால்
ப்ரஹ்ம ஞானம் அநந்த ஸ்திரம் ஆகையாலும்
ப்ரஹ்ம விஷயகமான மீமாம்ஸை -விசாரம் –
கர்த்தவ்ய -என்ற பதம் வருவித்துக் கொண்டு செய்யப்பட வேண்டும்
ப்ரஹ்ம -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக குணதானனாய் -ஸ்ரீயப்பதியான புருஷோத்தமன்
ஆகவே ப்ரஹ்ம விசாரம் செய்யத்தக்கதே –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—

————

ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது என்ற கேள்வி எழ
இது தோன்றுகிறது

இரண்டாம் அதிகரணம் ஜந்மாத்யாதி அதிகரணம்

2- ஜந்மாதி அஸ்ய யத–1-1-2-

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —என்பதே விஷய வாக்கியம்

உலகில் பிறப்பு முதலியவற்றுக்கு காரணமாய் இருத்தல்
இது ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக இருக்கலாமா கூடாதா சம்சயம்
ஸ்ருஷ்டி காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
என்று விசேஷணங்கள் பலவாய் இருப்பதால்
விசேஷ் யாமும் பலவாகி விடுமே
ப்ரஹ்மமும் பலவாகி விடுமே
ஆகையால் லக்ஷணம் என்று ஏற்க முடியாது -பூர்வ பக்ஷம்

ஜன்மாதி –அஸ்ய –யத –மூன்று பதங்கள்–
இந்த விசித்திரமான ஜகத்துக்கு -ஸ்ருஷ்டி ஸ்திதி -ப்ரளயங்கள் -எந்த ப்ரஹ்மத்தினிடம்
இருந்து உண்டாகின்றனவோ அவனே ப்ரஹ்மம் -என்றவாறு
ப்ரஹ்மம் -காரணப்பெயராகக் கொண்டால் உபய லிங்கமும்
இடுகுறிப் பெயராகக் கொண்டால் ஸ்ரீயப்பதித்வமும் ஸித்திக்கும்
ஜன்மாதி காரணத்வம் விசேஷணமாகவும் உபலக்ஷணமாகவும் கொள்ளலாம்
ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டே
உபாஸ்ய குண பேதத்தால் உபாஸ்யமும் பின்னமாகலாம்

காரணந்து த்யேய
சதவித்யையில் காரணத்வம் அறிய வேண்டும் என்பதால் விசேஷணமாக கொள்ள வேண்டும்
தஹர உபாஸனத்தில் ப்ரஹ்மத்தில் தோற்றம் ஏற்படுகையில் பொருந்தியும் இருப்பதால் காரணத்வம் உப லக்ஷணம் ஆகும்
இதில் அபஹத பாப்மத்வாதிகளே அறியத்தக்க ஆதாரம் ஆகையால் ஸ்ம்ருதி வ்யக்தி தோறும் தொடர்ந்து
விசேஷணம் ஆகின்றன என்று வித்யா பேதத்தாலே விஷயமும் வெவ் வேறு ஆவதால்
பாஷ்யத்தில் இரண்டு வகைகளும் காட்டப்பட்டது பொருந்தும்

யதோவா இமானி பூதாநி –சேதன அசேதனாத்மகமான ஸமஸ்த வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தை நிரூபிப்பது
ஸத்யம் ஞானம் அநந்தம் வாக்கியம் வேறுபட்ட ஸ்வரூபத்தை விளக்கும்
ஆகையால் இரண்டு லக்ஷண வாக்யங்களுமே பயனுள்ளவையே –

———-

உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மமே வேதாந்த வாக்யங்களால்
விளக்கப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது
ஏன் எனில்
ப்ரஹ்மம் அனுமானத்தாலேயே ஸித்திப்பதால்
அந்த அனுமானமே தர்மியான ப்ரஹ்மத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பிரமாணமாகையாலே
பிரபலமாதலின் வேறு ப்ரமாணங்களாலே சாதிக்க முடியாததையே ஸாஸ்த்ரம் ஸாதிப்பதில் பயன் உண்டு என்பதால்
அனுமான ஸித்தமான ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் உபாதான காரணனுமாகும் என்று கூற ஒவ்சித்யம் இல்லை
ஆதலின் ஸாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தேவை இல்லை என்று பூர்வ பக்ஷம்
அந்த அனுமானத்தைக் கண்டித்து
ஸாஸ்திரமே பிரமாணம் என்றும்
அதனால் ஆரம்பிக்கப் பட வேண்டியதே என்றும்
அடுத்தபடி ஸாதிக்கிறார் –

3-சாஸ்திர யோநித்வாதிகரணம்-

சாஸ்திர யோநித்வாத்–1-1-3-

ஸாஸ்த்ரத்தையே ப்ரமாணமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்றவாறு

பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டவை -செய்யப்படும் பொருளாய் இருப்பதால் –குடம் முதலியவை போலே –
செய்யப்படாதவைக்குக் கர்த்தா கிடையாது –ஆத்மாவைப் போலே
என்று இவ்வாறு அந்வய கேவல வ்யாதிரிகி அனுமானங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியக்கூடுமாதலின்
யதோவா இமானி -இத்யாதி வாக்கியங்கள் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிவிக்க மாட்டா என்பது பூர்வபக்ஷம்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்
ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால்
விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே
ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது
அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம்

அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே
யதோவா இமானி -என்ற வாக்கியம்
உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது –
ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது
பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –

————-

ப்ரஹ்மம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியக் கூடியதாய் இருப்பினும் –
ஸப்தம் ஸித்த வஸ்துக்களைப் போதிக்கும் திறனைப் பெற்று இருப்பினும்
ப்ரவ்ருத்தி என்பது -அறிய வேண்டும் என்னும் விருப்பத்துக்குக் காரியமாக இருப்பதாலும் –
அவ்விருப்பும் பிரயோஜனம் பற்றிய ஞானத்தைச் சார்ந்து ஆதலாலும் –
அந்த பிரயோஜனமும் அதற்கான சாதனங்களை அனுஷ்ட்டிப்பத்தைச் சார்ந்து இருப்பதாலும்
ஸித்த பரமான வாக்யத்துக்கு பிரயோஜனமான சுகமும் -துக்க நிவ்ருத்தி -அவற்றின் சாதனத்தை அனுஷ்டித்தல்
இவற்றின் விஷயத்தில் போதனத்தினால் ப்ரவர்த்தகத்வம் என்பது இல்லாததால்
ப்ரயோஜனத்தில் முடிவு பெறுதல் என்பது இல்லை
ஆதலால் வேதாந்த வாக்யங்கள் ஸித்தமான வஸ்துவைப் போதிக்கும் கருத்துடையவை அல்ல என்பது சங்கை
இத்தை நீக்கவே இந்த அதிகரணம் –

4-சமந்வயாதிகரணம்-

தத் து சமன்வயாத் –1-1-4–

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் போன்ற வாக்கியங்கள் ப்ரவ்ருத்திக்கும் நிவ்ருத்திக்கும்
விஷயமாகாத ப்ரஹ்மத்தை போதிக்க மாட்டா
ஆகையால் வேதாந்த அர்த்த விசார ரூபமான ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது இல்லை
என்பது பூர்வ பக்ஷம்

வீட்டுக்குள் புதையல் இருக்கிறது போல் ஈடற்ற ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை
இந்த வாக்கியங்கள் போதிக்கும் சக்தி கொண்டவையே
ஆதலின் ஸாஸ்த்ர விசாரம் ஆரம்பிக்கத் தக்கதே என்பது சித்தாந்தம்

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்ம
முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்
சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்
ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –

——————-

இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி
ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

5-ஈஷத் யதிகரணம்

இதில் எட்டு ஸூத்ரங்கள்

கீழே வேதாந்த வாக்யங்களுக்கு ப்ரஹ்மத்தை பரம புருஷார்த்த ரூபமாக விளக்குவது
சமன்வயமே பொருத்தமே என்பதை பூர்வ பக்ஷி மறுக்கிறார்
புருஷார்த்தம் அல்லாத பிரதானம் முதலானவற்றை காரணமாக விளக்குவதால் என்று ஆக்ஷேபித்து
இந்த அதிகரணம் தொடங்குகிறது என்பது சங்கதி –

5- ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

சாந்தோக்யத்தில் -ஸ்வேதகேதுர் ஹாருணேய ஆச -என்று தொடங்கும் ஆறாம் அத்தியாயத்தில்
ஜகத் காரணமாகக் கூறப்படும் ஸத் -என்பது
அனுமானத்தால் சித்திப்பதும் சாங்க்யர்கள் கூறும் பிரதானம் -பிரகிருதியா அல்லது ப்ரஹ்மமா என்று சங்கை
பிரதானம் தான் என்று பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
இதம் என்ற சொல்லால் கூறப்படும் சேதனர்களின் போக்யமான ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு
அதே விதமான பிரதானம் காரணம் என்கை உசிதமானது
ஜகாத்தை விட விலக்ஷணமான ப்ரஹ்மம் காரணம் என்பது பொருந்தாது
பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

பரம புருஷனே ஜகத் காரணம் என்றும் ஸத் என்றும் சொல்லப்படும் பர ப்ரஹ்ம ஸ்வரூபம்
அவனே ஸூஷ்ம சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால் காரணமானாலும்
ஸ்தூலமான சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால்
காரியமாகிய ஜகத்தின் ரூபத்தில் உள்ளவன் என்பதால் காரியமும்
காரியமும் காரணமும் ஒரே விதமானமையால் பரமபுருஷனே ஸத் எனப்படும்
ஜகத் காரணம் என்பது சித்தாந்த யுக்தி –

ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –

——–

6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –1-1-6-

தேஜஸ் பார்த்தது தண்ணீர் பார்த்தது முதலிய வாக்கியங்களில்
ஈஷ என்ற வினைப்பகுதியால் சங்கல்பம் என்பதை உபசார வாக்காக -கௌணமாக -கொள்வது போல்
இங்கும் கொண்டால் பிரதானம் காரணம் என்பதில் தடை இல்லையே
ஈஷணம் என்பது ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலையாகிய முக்கியமில்லாத ஈஷணத்தைச் சொல்வது என்றால்

கௌண சேத் ந -அஃது இல்லை
ஏன் எனில்
ஆத்ம சப்தாத் -ஐததாம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா என்று –
சேதன அசேதன ரூபமான சர்வ ஜகத்துக்கும் ஸத் என்பதே ஆத்மா என்பதால்
பிரதானம் ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமியான ஆத்மாவாய் இருத்தல் பொருந்தாது என்று கருத்து –

———

7-தந் நிஷ்டஸ்ய ச மோஷ உபதேசயாத் –1-1-7-

தந் நிஷ்டஸ்ய ச -சத்தே ஆத்மா என்றது -சந்திக்கும்
மோஷ உபதேசயாத் –புருஷனுக்கு உடலை விட்டதும் ப்ரஹ்மத்தை அடைதல் என்கிற மோக்ஷத்தை உபதேசிப்பதால்
அசேதனமான பிரதானம் காரணம் -காரணமே த்யானிக்கப் படுவதால் –
எதை உபாஸிக்கிறானோ அதே பலம் -தத் க்ரது -நியாயத்தால் –
தாப த்ரயங்களுக்கு காரணமான அசேதனத்தை அடைதலே -சம்பத்தியே -மோக்ஷம் -என்றதாகும்
பிரதானத்தைக் காரணமாக் கூறும் சாங்க்யர்களும் இதனை ஏற்பது இல்லையே என்று கருத்து –

யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-14-1–என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதேஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் –
சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே அவனுக்கு கால தாமதம் –
சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் –
சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்

தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

————

8-ஹேயத்வா வச நாத் ச –1-1-8-

சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

ப்ரதானமே ஸத் எனும் ஜகத் காரணமாகில்
மோக்ஷம் விரும்புகிற ஸ்வேதகேதுவுக்கு தன்னை பிரதான ஆத்மகன் என்று உபாஸிப்பது
மோக்ஷ விரோதியாதலின் அது விலக்கத் தக்கது என்று உபதேசித்து இருக்க வேண்டும் –
அவ்வாறு உபதேசிக்காமையாலும் பிரதானம் காரணம் அன்று –

———–

9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –1-1-9-

சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

பிரதானம் காரணம் என்னில் செய்த ப்ரதிஜ்ஜையும் விரோதிக்கும் –
அதாவது முதலில் -யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி –என்று
காரணத்தை அறிந்தால் கார்யங்கள் அனைத்தும் அறியப்பட்டு விடும் என்று ப்ரதிஜ்ஜை செய்யப் பட்டது
ஸத் என்பது ப்ரஹ்மமே என்று கொண்டால் தான் இந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
பிரதானம் ஸத் என்னும் சொல்லின் பொருள் என்றால்
அந்த சேதனம் சேதனத்துக்குக் காரணம் ஆக மாட்டாதே என்பதால்
ஜகத் அத்தனையும் அறியலாம் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது ஆகும் –

———–

10 –ஸ்வாப்யயாத்–1-1-10-

தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம்
சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத் புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

ஸதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி-முதலிய வாக்யங்களில் ஸூஷுப்தி தசையில் ஜீவன்
ஸத்திலே லயித்து இருப்பதாகக் காண்கிறது
பிரளயம் என்பது காரியப்பொருள் காரணத்திலே லயம் அடைதலே
இதனாலும் பிரதானம் காரணம் அன்று
எங்கு இந்த ஜீவன் உறங்குகிறானோ என்னும் இடத்தில் புருஷ என்னும் சொல்
விழித்து இருக்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிப்பிடுகிறது
அந்த ப்ரஹ்மம் ஸூஷுப்தி காலத்தில்
மனுஷ்யாதி நாம ரூப சம்பந்தத்தை விட்டு வெறும் ஸத் என்ற சொல்லின் பொருளாகிறது என்பதாம் –

————-

11-கதி சாமான்யாத் –1-1-11–

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று-

இது போன்ற பல உபநிஷத் வாக்யங்களுக்கு எந்த கதியோ -நியாயமோ -அதே கதி
முன்பு ஸத் ஒன்றாய் இருந்தது முதலிய வாக்யத்துக்கும் சமானம்
அவற்றில் எல்லாம் பரம புருஷனே ஜகத் காரணம் என்று நிச்சயித்து இருக்கிற படியால்
பரம புருஷனே ஸத் என்ற சொல்லின் பொருளாம் –

———-

12- ஸ்ருதத்வாச்ச –1-1-12–

ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம்–சாந்தோக்யம் -7-26-1- என்று
இந்த ப்ரஹ்மத்தில் இருந்து சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

இந்த ஸத் வித்யையிலும் ஸத் என்பதே ஆத்மா என்ற பெயருடன் நாம ரூபங்களை ஏற்படுத்தியது என்றும்
ஸர்வஞ்ஞன்–பாபங்கள் ஒட்டாதவன் -போன்ற பல கல்யாண குணங்கள்
இந்த ஜீவாத்மாவுடன் அனுபிரவேசம் செய்து நாம ரூபங்களை விளக்குகிறேன்
இந்த எல்லா பிரஜைகளும் சத்தை காரணமாக் கொண்டவையே
பாபம் அற்றவன் ஜரா மரணாதிகள் அற்றவன் முதலிய வாக்யங்களால் பொருத்தமாகக் கூறப்படுபவன்
ஸத் எனப்படும் ஸகல ஜகத் காரணமான பரம புருஷனே என்று ஸித்தாந்தம்

இந்த அதிகரணத்தால் கல்யாண குண பூர்ணனான பர ப்ரஹ்மமே ஸத் என்பதால்
நிர் குணம் நிர் விசேஷமாய் உள்ள ப்ரஹ்மம் என்ற அத்வைதி வாதம் நிரசிக்கப் பட்டது –

———–

6-ஆனந்த மயாதிகரணம்-

கீழே ஈஷணம் -சங்கல்பம் இல்லாத அசேதனத்தை விட ப்ரஹ்மம் விலக்ஷணம் என்று நிரூபணம்
ஈஷணம் சத்துக்கு வேண்டும் என்றால் அதுக்குத் தகுதி உள்ள ஜீவனே ஸத் என்றும் காரணம் ஆகட்டும்
அல்லது ஸத் வித்யையில்
அநேந ஜீவேந ஆத்மநா
தத் த்வம் அஸி என்று
விசேஷண விசேஷ்ய பாவ சாமானாதி கரண்யத்தால் ஜீவ ப்ரஹ்மங்களுக்கு ஐக்யம் சொல்லுவதாலும்
பக்தன் முக்தன் இரு நிலைகளை உடைய ஜீவனே காரணமாகட்டுமே
என்ற சங்கையை நிரஸிக்க
ஸத் எனப்படும் ப்ரஹ்மத்துக்கு ஜீவனைக் காட்டிலும் வேறு பாட்டை நிரூபிக்கிறார் இதில்
என்று அதிகரண சங்கதி –

13- ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-

தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -ஆனந்த வல்லி–என்று
விஷய வாக்யம்

முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

ஆனந்த மயம் என்பது பக்தனும் முக்தனும் அல்லாத பரமாத்மாவா அல்லது ஜீவனா என்ற சங்கை
ஜீவனே என்று சாங்க்யன் -பூர்வபஷி
ஏஷ ஏவ சாரீர ஆத்மா
தத் த்வம் அஸி -என்பதாக ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் தோன்றுவதால் ஜீவனே என்பது பூர்வ பக்ஷம்
சாரீரத்வம் சரீர சம்பந்தம் ஜீவனுக்கே பொருந்தும் என்பர்

இவ்வாறு கூறும் சாங்க்யனை ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கூறும் அத்வைதி எதிர்க்க
நநுச ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா என்று அத்தை சாங்க்யன் எதிர்க்க
அந்த சாங்க்யனையும் -நைவ -என்று தொடங்கி சித்தாந்தி கண்டிக்கிறார் –

இந்த அதிகரணத்தில் பூர்வ பக்ஷ ஹேதுக்கள் இரண்டு –
தத் த்வம் அஸி-என்றும் சாமானாதி கரண்யமும் -சாரீரத்வமும்
நிர் விசேஷமே பொருள் என்றால் பிரகரணத்தின் விரோதமும் –
இரண்டு பதங்களின் பரியாலோசனையுடன் சாமானாதி கரண்யம் பற்றி ஆலோசியாமையும் குற்றமாகின்றன
சாமானாதி கரண்யம் என்பதற்கு வையாகரணர் கூறிய லக்ஷணம் –
வெவ்வேறு பொருளுள்ள பதங்கள் ஒரே பொருளை விளக்கும் நிலை -என்றபடி
விசிஷ்டமான அர்த்தத்தைக் காட்டுவதாக சமர்த்திக்கின்றார்

அந்த லக்ஷணமாவது –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் ஸப்தானாம் ச ஏகஸ்மின்னர்த்தே வ்ருத்தி
அதாவது
ப்ரவ்ருத்தி என்றால் ஒரு சொல் இந்த அர்த்தத்தைப் போதிக்கும் என்ற நியதி
சிறப்பாக விசேஷ் யமான சொல்லின் பொருளையே விசேஷணமும் போதிக்கை தான் ப்ரவ்ருத்தி
அதுக்கு நிமித்தம் -த்வாரம் -விசேஷமான ஜாதி இனம் குணம் முதலியவை
அவற்றைக் குறிப்பிடும் சொற்கள் ஒரே விசேஷ் யமான அர்த்தத்தை
வ்ருத்தி -போதித்தல்

இந்த சாமானாதிகரண்யம் நிர் விசேஷத்தைப் போதிக்க மாட்டாது என்று கண்டித்ததுடன்
தன் மதத்தில் மீமாம்சகர் கூறும் அருணாதி கரண நியாயம் பொருத்தமாய் இருப்பதையும்
அவ்வதிகரணத்துக்கு நிரீஸ்வர மீமாம்சகன் அர்த்தத்தைக் கண்டித்து
தம் மதப்படியான பூர்வ பக்ஷ சித்தாந்தகளையும் கூறி அருளுதல்
பின்னர் தத் த்வம் இரு சொற்களுக்கும் விஸிஷ்ட அர்த்தமே பொருள் என்று நிறுவி
ஜாதி இனம் குணம் இவற்றைக் குறிக்கும் சொற்கள் கோ பசு முதலியவை குறிப்பிட்ட
வியக்தியை – பொருளை -விளக்கும் ஆற்றல் பெற்று இருப்பது போலவே
சரீரத்தைக் கூறும் சொற்களும் சரீரியான ஆத்மா வரை பொருளைக் காட்டுமவை எனக் காட்டல்
இவ்வாறு சாமானாதி கரண்யம் என்ற ஹேதுவைக் கண்டித்து
பின் சாரீரத்வம் -சரீர சம்பந்தம் -என்ற ஹேதுவையும் கண்டிக்கிறார்

பரம புருஷனே – தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –தைத்ரியம்
ஞான மயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்த மயன் பரமாத்மா –
சாரீரம் எனப்படுபவன் ஆதலின்
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது –

சைஷா நந்தஸ்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்

யஸ்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால்
அந்த பரம் பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்த மயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

————-

14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –1-1-14-

ஆனந்த மய என்பதில் மய என்ற விகுதி புலப்படுதலால்-விகாரம் என்ற பொருளில் அவ் விகுதி உள்ளமையால்
நிர் விகாரமான ப்ரஹ்மத்தை ஆனந்த மயம் என்ற சொல் பொருந்தாது
இயற்கையாய் ஆனந்த ரூபமான ஜீவனுக்கு சுக துக்கங்களுக்குக் காரணமாக சம்சார நிலை விகாரமாதலின்
ஆனந்தமயன் என்பது ஜீவனே
பரம புருஷன் ஆனந்த மயன் அல்லன் என்றால்

இதி சேத் ந -இவ்வாறு கூறுவது பொருந்தாது
ப்ராசுர்யாத் –யாத்ரை முழுவதும் வண்டி மயம் போல் ப்ராசுர்யம்-மிகுதி என்ற பொருளிலும்
மயட் -என்ற விகுதி பயன்படுத்தப் படுவதால்
நிகரற்ற ஆனந்தம் நிறைந்தவனான பரம புருஷனே ஆனந்த மயன் ஆவான்

ஆனால் ஆனந்தம் பிரசுரம் -மிகுதி என்றால்
துக்கமும் ஸ்வல்பம் உண்டு என்று பொருளாகுமே
அப்போது ப்ரஹ்மம் துக்கம் கலந்து என்னலாகாதோ என்னில்
அப்படி அன்று
கிரணங்கள் மிகுந்தவன் கதிரவன் என்றால் இருளும் சிறிது கலந்தவன் என்ற பொருள் எப்படி ஆகாதோ
அப்படியே அபஹத பாப்மா விஜர முதலிய வாக்யங்களால் துக்கம் அல்பமும் ஒட்டாது என்று கருத்து –

———–

15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச-1-1-15–

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்
ஆனந்தம் அடையும் ஜீவனை விட ஆனந்தத்தில் காரணமான பரமாத்மா வேறானவன் என்றவாறு

———-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே–1-1-16-

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

ஜீவனுக்கு ப்ரஹ்மமே ப்ராப்யம் -என்று கூறி
ததேஷாப்யுக்தா -முதலிய ப்ராஹ்மணம் மந்த்ரவர்ணம் முதலிய வாக்யங்களாலே சொல்லி
அந்த ப்ரஹ்மமே ஆனந்த மயன் -ஜீவனில் வேறு பட்டவன் என்று உறுதி ஆகிறது

————–

இவ்வாறு ப்ரஹ்மத்துக்கு பக்தனான ஜீவனில் பேதத்தைக் கூறி
மேல் முக்த ஜீவனில் பேதத்தைக் காட்டுகிறார் –

17-ந இதர அநுபபத்தே –1-1-17-

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்த மயன் ஜீவன் அல்ல –

இதர -பரமாத்மாவின் வேறுபட்ட முக்தாத்மாவும்
ந -மந்த்ர வர்ணத்தால் கூறப்படுபவன் அல்லன்
அநுபபத்தே –சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி-என்று கூறப்படும் இயற்கையான விபச்சித்த்வம்
அதாவது இயற்கையான ஸத்ய ஸங்கல்பம் முக்தனுக்குக் கூடாததாலால்
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய-என்று குறிப்பிடும் விபச்சித்வம்
முந்தைய நிலையில் சம்சாரியாய் இருந்த முக்தனுக்கும் பொருந்தாது என்று கருத்து –

———-

18-பேத வ்யபதேசாத் ச–1-1-18-

தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய –தைத்ரியம்- என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

தஸ்மாத்வா ஏதஸ்மாத்மான ஆகாசஸ் ஸம்பூத –போன்ற வாக்யங்களாலே
அன்னமயம் பிராண மயம் மநோ மயங்களைக் காட்டிலும்
வேறான விஞ்ஞான மயனான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனாக
அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய–என்று
பரமாத்மாவுக்கு பேதத்தைக் கூறுவதால் மந்திர வர்ணத்தில் கூறப்படும் ஆனந்தமயன்
ஜீவன் அல்லன் என்பது தெளிவாகிறது –

———-

19-காமாத் ச ந அநுமாநாபேஷா –1-1-19-

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை-

காமாச்ச –பஹுஸ்யாம் என்று அருளிய ஸங்கல்பத்தால் தான் விசித்திரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது
அதற்கு அனுமான அபேஷா ந –பிரதானத்தின் அபேக்ஷை இல்லை
சதுர்முகாதிகளுக்கு சரீர நிலையை அடைந்த பிரதானத்தின் சேர்க்கை தேவைப்படுவது போலே
பரமாத்மா சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிப்பதற்குப் பிரதானத்தின் தேவையில்லை –
ஆதலால் ஆனந்த மயன் என்பது ஜீவனின் வேறு ஆனவனே –

———–

20-அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி –1-1-20-

ஆனந்த மயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

இவ்வாறு ஆனந்த மயன் முக்தனுக்குக் கிட்டிய வுடன்
தத் யோகம் -அந்த ஆனந்தத்துடன் சம்பந்தத்தை
சாஸ்தி -ஸாஸ்த்ரம் கூறுகிறது
ஸாஸ்த்ரமாவது –ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்தவா ஆனந்தீ பவதி -என்பது
ஆகையால் பக்த முக்த விலக்ஷணனான பரம புருஷனே ஆனந்த மயன் என்பதாகும்

முன் தத் ஹேது வ்யபதேசாத் -என்ற ஸூத்ரம்
உபாஸன தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறியது
இதில் முக்தி தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறுகிறது
ஆகையால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

———–

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

ஸ்வல்ப புன்யர்களான ஜீவர்களால் ஸங்கல்ப மாத்ரத்தைக் கொண்டு
ஜகத் ஸ்ருஷ்ட்டியையும்
மிகுந்த ஆனந்தத்தையும்
பய அபய ஹேதுத்வமும் பெற முடியாமல் போகலாம்
ஆயினும் விலக்ஷண புண்யம் கொண்ட ஆதித்யன் இந்திரன் பிரஜாபதி முதலியோருக்கு
இந்த குணங்கள் சம்பவிக்கலாமே
என்ற சங்கையை இங்கு நீக்குகிறார் என்று சங்கதி

மேலும் இவ்வதிகரணத்தில் அந்தர்யாமி என்ற தன்மையால் மட்டும் சரீராத்ம பாவம் சொல்லப்பட வில்லை -பின் என் எனில்
பாணி பாத அஷி கேசாதிகளான பிரிவுகள் போல் சரீர சம்பந்தம் உள்ள புருஷன் கூறப்படுகிறான்
அந்தப் புருஷன் ஜீவன் தான் என்று பூர்வ பக்ஷம் தோன்றுவதே இங்கு சங்கதி

காரண வாக்கியங்கள் பரமாத்ம போதகங்கள் என்று ஸ்தாபிப்பதே இவ்விடம் பிரஸக்தம்
காரண வாக்கியம் இல்லாத அந்தராதித்ய வித்யா நிரூபணம் அயுக்தமே
ஆயினும் முன் அதிகரணத்தின் சேஷமாக நிரூபிப்பதில் தவறு இல்லை
எப்படி எனில்
ஆனந்தவல்லியில் -ஸ யச்சாயாம் புருஷே யச்சா ஸ ஆதித்யே ஸ ஏக -என்று
ஆனந்த மயனுக்கு ஆதித்யனின் உள் இருப்பு கூறப்பட்டது
சாந்தோக்யத்தில் சொன்ன ஆதித்ய மண்டை அந்தர்வர்த்தியான புருஷனுக்கு கர சரணாதி விஸிஷ்ட
தேஹ சம்பந்தம் சொல்லுகையாலே இரண்டு இடங்களிலும் ஒருவனே பேசப்படுபவன்
ஆகையால் ஆனந்தமயனும் ஜீவன் தான் என்கிற சங்கையை நிவர்த்திக்க
முன் அதிகரண சேஷமாக இங்கு நிரூபிக்கிறார் என்று விடை –

அதற்கு சேஷமாவது அங்கங்கு தேவையான பொருளை விளக்குதல்
அப்படி என்றால் வெவ்வேறு அதிகரணங்கள் என்று எவ்வாறு பேதம் கூற முடியும் எனில்
கூறிய நியாயத்துக்கு விஷயமான உபநிஷத்து மாறுபட்டதால் பேதம் வருவது பொருந்துமே

21-அந்த தத் தர்மோபதேசாத் –1-1-21-கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
இவை விஷய வாக்கியங்கள் –

இங்கு கீழ்ச் சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

அந்தஸ் -கண்ணின் உள்ளும் ஸூர்ய மண்டலத்தின் உள்ளும் இருப்பவனாகச் சொல்லப்படும் புருஷன்
ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவே
எப்படி என்றால்
தத் தர்மோபதேசாத் –ஸ்ருத் யந்தரங்களில் பிரசித்தமான பரமாத்மாவின் தர்மங்களை உபதேஸிப்பதால்
அவை -அபஹத பாப்மா -அஜர -அசோக —ஸத்ய காம –ஸத்ய ஸங்கல்ப -சர்வ லோக சர்வ காம நியந்த்ருத்வம் –
புண்டரீகாக்ஷத்வமும் திவ்ய மங்கள விக்ரஹம்முதலிய தர்மங்களும் உபதேசிக்கப்படுகின்றன
எனவே ஜீவ விலக்ஷண ஸ்ரீயப்பத்யே ஆதித்ய மண்டலத்தில் ஒளிரும் புருஷன்
இங்கு கூறும் சரீரம் கர்ம நிமித்தம் அன்று -அதுவே ஹேயமாகும் –
முமுஷுக்களுக்கு ஹேய நிவ்ருத்தமான திவ்ய மங்கள விக்ரஹம் என்பதேயாகும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம முதலிய பிராமண பலத்தாலே
ஸத்யத் ஞானத் வாதிகள் ஸித்திப்பது போல்
வித்யுத் புருஷாததி
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
அஜயமானோ பஹுதா விஜாயதே
அஜோபிசன் அவ்யயாத்மா
ஸம்பவாமி ஆத்ம மாயயா –முதலிய ப்ரமாணங்களால்
ஆஸ்ரிதர்களை அநுக்ரஹிக்க திவ்ய மங்கள விக்ரஹ ரூபமான தர்மமும்
தத் தர்ம உபதேசாத் -என்கிற பதத்தில் கருதப்படுகிறது என்று திரு உள்ளம் –

————-

22- பேத வ்யபதேசாத் ச அந்ய –1-1-22-

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்

ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அபஹத பாபனான இப்பரமாத்மா
அந்ய–ஆதித்யாதி ஜீவர்களைக் காட்டிலும் வேறானவன்
பேத வ்யபதேசாத் ச
ய ஆதித்யே திஷ்டன் –யம் ஆதித்யோ ந வேத -யஸ்ய ஆதித்யச் சரீரம் -ய ஆதித்யம் அந்தரோ யமயதி
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய அக்ஷரச் சரீரம்
யஸ்ய ம்ருத்யுச் சரீரம் –என்று இப்படியாக ஹிரண்ய கரப்பான் முதலிய ஸகல ஜீவர்களையும் சரீரமாகக் காட்டி
நாராயணனை அந்தராத்மாவாகப் பேதப்படுத்திக் காட்டுவதால்
பரமாத்மா ஜீவனைக்காட்டிலும் அந்நியன் தான் என்பதாம் –

——–

இப்படி யதோவா இமானி பூதாநி ஜாயந்தே என்கிற வாக்யத்தால் ஜகத்தின் காரணம் ப்ரஹ்மம் எனப்பட்டது
அத்தகைய ப்ரஹ்மம் எது என்ற ஐயம் எழுந்தால்
ஸதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத்
ஆத்மாவா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் –முதலிய வாக்யங்களால்
சாமான்யங்களான -ஸத் -ப்ரஹ்மாதி சப்தங்களால் -ஸத் -ப்ரஹ்மாதிகள் காரணங்கள் என்று குறிக்கப்பட்டன

அடுத்து ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான சமாக்யைகளில் முந்தியது பிந்தையதை விட பலம் மிக்கது என்றபடி
லிங்கத்தை விட ஸ்ருதி பலம் மிக்கது என்றாலும் -விசேஷமான லிங்கத்தைக் காட்டிலும் ஸ்ருதி துர்ப்பலை யாதலின்
விசேஷ லிங்கங்கள் பிரதானாதிகளை விலக்குவனவாய் பிரபலமாய் இருப்பதால்
ஈஷத் அதிகரணத்தில் முக்கியமான ஈஷணமும்
ஆனந்த மய அதிகரணத்தில் ஆனந்த விசேஷமும்
அந்தராதித்ய அதிகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும் ஆகிய
அர்த்த ஸ்வ பாவமான -லிங்கங்களாலே -அடையாளங்களாலே –
ப்ரஹ்மத்துக்கு -பிரதானம் -ஜீவாத்மா -இவை இரண்டிலும் இருந்தும் பேதம் தீர்மானிக்கப் பட்டது –

அப்படி இருப்பினும்
விசேஷ ஸ்ருதிக்கு விசேஷ லிங்கத்தை விட ப்ராபல்யம் இருப்பதால்
சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி=போன்ற இடங்களிலே
ஆகாசம் போன்ற விசேஷ சப்தங்களாலே சொல்லப்பட்ட ப்ரஸித்தமான ஆகாசம் பிராணன் முதலியவை
காரண ப்ரஹ்மம் என்கிற சங்கையை நீக்கி
கல்பிக்கப்பட்ட யோக காரணப்பெயர் -கல்பிக்க வேண்டிய ரூடி இடுகுறிப்பெயரை பாதிக்கும் என்ற நியாயப்படி
யோக சக்தி-காரணத்தை அடிப்படையாகக் – கொண்டு
ஆகாசம் முதலிய சொற்கள் பரமாத்மாவையே போதிக்க வல்லவை
என்பதை கீழ் வரும் அதிகரணங்களால் விளக்குகிறார் –

———–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

23-ஆகாஸ தல் லிங்காத் —1-1-23-

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும் பரம ப்ராப்யம் என்றும் சொல்லிற்று
இதில் ஆகாசம் -பூத ஆகாசமா -அல்லது முன் லக்ஷணம் கூறப்பட்ட ப்ரஹ்மமா என்று சங்கை
பிரசித்தமான
ஆகாசமே என்று பூர்வ பக்ஷம்
ஈஷணம் -சங்கல்பம் பற்றிய லிங்கத்தை விட விசேஷ ஸ்ருதி பலம் வாய்ந்ததாகையாலும்
ஆகாசம் என்பது பூத ஆகாசத்தில் ப்ரஸித்தமாகையாலும்
ஸத் -ப்ரஹ்மம் -முதலிய சாமான்ய சப்தங்களும் பிரசித்த ஆகாசத்தையும் கூறுபவை என்பதே பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
ஆகாஸ -அசேதனமான ஆகாசத்தை விட வேறு பட்டவனாக பரமாத்மாவே ஆகாசம் என்று கூறப்படுகிறான்
தல் லிங்காத் —அந்தப் பரம புருஷனின் லிங்கங்கள் அடையாளங்கள் காணப்படுவதால் –
அவை யாவன
அனைத்துக்கும் காரணமாதல்
எல்லாவற்றையும் விட பழமை
அனைத்துக்கும் பரம அடைக்கலம் –முதலிய தர்மங்கள்
தஸ்மாத் விராட் அஜாயத
ஏகோஹவை நாராயண ஆஸீத் –முதலிய உபநிஷத் வாக்கியங்களில் கூறப்பட்ட
விராட் புருஷத்வம் -நாராயணத்வம் -முதலிய தர்மங்கள்
ஆ –நாற்புறமும்
காச -பிரகாசிப்பது
என்ற காரணப் பெயராகக் கொண்டு பரம புருஷன் தான் ஆகாசம் என்பதாம் –

இங்குள்ள சிறப்பாவது
காரணப்பெயரை -யோகப்பெயரை -விட இடுகுறிப்பெயரே -ரூடியே -மேலானது என்ற நியாயம் இருந்தாலும்
கல்பிதமான யோகம் கல்பிக்கப்பட இருக்கிற ரூடியைப் பாதிக்கும் என்ற நியாயத்தால்
இங்கு -யதேஷ ஆகாச ஆனந்தோ நஸ்யாத்-என்ற வாக்யத்தில்
ஆகாச சப்தத்துக்கு யோகத்தால் -காரணத்தால் -பொருள் கல்பிக்கப்பட்டு இருப்பதால்
இந்த யோகாசக்தி பொருளை ரூடி சக்தி பாதிக்க மாட்டாது –
ஆகையால் முன் கூறிய லக்ஷணங்கள் –
ஈஷணம் -ஆனந்த விசேஷம் திவ்ய மங்கள விக்ரஹம் -முதலான சிறப்பான லிங்கங்களால்
ஸத் -ப்ரஹ்ம -பொதுச் சொற்களும்
ஆகாசம் போன்ற சிறப்புச் சொற்களும்
ஸமஸ்த ஜகத் காரணனாய் -சர்வஞ்ஞாதி கல்யாண குணங்களை யுடைய பரம புருஷனையே
விளக்குகின்றன என்பது திரு உள்ளம் –

———-

அடுத்தபடி -ஆகாசம் என்பது பரமாத்மா என்ற காரணம் இருக்கட்டும் –
சகல ஜனங்களுக்கும் ஸ்திதியோ ப்ரவ்ருத்தியோ ப்ராணனைச் சார்ந்து இருப்பதால்
சாந்தோக்யம் முதல் அத்யாயம் ஒன்பதாவது கண்டத்தில்
பிரஸ்தோ தர்யோ தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தா -என்று தொடங்கி
இந்த பூதங்கள் அனைத்தும் ப்ராணனையே சார்ந்து இருக்கின்றவை என்று கூறப்பட்டு இருப்பட்டு இருப்பதால்
பிரசித்தமான பிராணனே ஜகத் காரணம் என்று கூறலாமே என்று மேற்கொண்டு அதிகமான ஓர் சம்சயம் தோன்ற
அதைக் கண்டிக்கவே இந்த அதிகரணம் –

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

24-அத ஏவ பிராண –1-1-24-

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –

தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –

சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே
சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –ஹை வை -பிரதித்தம் -சாந்தோக்யம்
பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதிகளை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

அத –ஆகாசத்தில் கூறியபடியே சகல ஜலத்தின் உள் நுழைதல் வெளியேறுதல் முதலிய பரமாத்ம லிங்கம் இருப்பதாலேயே
ப்ராண –பிராணன் என்ற சொல்லால் கூறப்படுபவனும்
பரமாத்மாவே என்று பொருள்
சேதனர்களிடம் பிரசித்தமான பிராணன் உள் நுழைவதும் வெளி ஏறுவதும் இருப்பினும்
அசேதனமான கல் மரக்கட்டை முதலியவற்றில் அது சம்பவிக்காது
ஆதலின் பரமாத்மாவுக்கே அது பொருந்தும் என்பதைக் கொண்டு
எதிலும் உள் நுழையவும் வெளியேறவும் வல்ல பரமாத்மாவே பிராணன் என்றதாகும் –

———-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

இனி காரணத்வத்தை நிரூபிக்க வல்ல நிரதிசயமான தீப்தி -பிரகாசம் –
ஹித தமமான உபாசனத்துக்கு உரிய கர்மா -செயப்படு பொருள் என்னும் தன்மை
இவற்றுடன் கூடிய ஜ்யோதிஸ் என்பதும்
இந்த்ரன் பிராணன் முதலிய சொற்களும் கூறப்படுவதும்
உலகில் பிரசித்தமான ஒளி இந்திரன் இவற்றை விட்டு விலக்ஷணமான ப்ரஹ்மமே என்பதை
இந்த ஜ்யோதிர் அதிகரணத்திலும்
அடுத்த இந்திர பிராணாதி கரணத்திலும்
நிலை நாட்டுகிறார் என்று சங்கதி –

அது மட்டும் இன்றியே ஸ்ருதியிலே
ஆகாசாத் வாயு வாயுர் அக்னி -என்று கூறியுள்ள க்ரமப்படி
முதலில் ஆகாசம்
பின் வாயு -பிராணன் –
அடுத்து அக்னி –
என்ற க்ரமத்தைப் பின் பற்றி
ஆகாசாதி கரணத்தின் பின்
பிராணன் பற்றியும்
பின் ஜ்யோதிஸ் பற்றியும் விசாரிக்கிறார் என்றும் சங்கதி –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்-

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ
உத்தமேஷூ லோகேஷூ இதம் வாவ ஸர்வத தத் யதிதம் அஸ்மின் அந்த புருஷே ஜ்யோதி –சாந்தோக்யம் -மூன்றாம் அத்தியாயத்தில்
மது வித்யைக்குப் பிறகு காயத்ரீ ஸப்தப் பொருளான பரமாத்மா ஜ்யோதிர் வித்யையிலே பேசப்படுகிறார்
இதுவே விஷய வாக்கியம்

இங்கு ஜ்யோதிஸ் என்பது பிரசித்தமான ஸூர்யாதிகளான ஜ்யோதிஸ் ரூபங்களைக் குறிப்பிடுகிறதோ
அல்லது உலக காரணமான எல்லையில்லா ஒளி வடிவமான பரமாத்மாவையே குறிப்பதா என்பதே சம்சயம் –

ஆகாசம் பிராணன் போன்ற வாக்கியங்களை போலே இதில்
நிகில ஜகத் ஏக காரணத்வம் போன்ற பரமாத்மாவின் சிறப்பான லிங்கம் ஏதும் இல்லாமையால்
இதம் வாவதத் என்று தொடங்கி புருஷனின் வயிற்றில் உள்ள ஜ்யோதியுடன்
இந்த ஜ்யோதியை ஒன்றாகக் கூறுவதால்
பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாகவே இருக்கலாம் என்று பூர்வ பக்ஷம்
அதைக் கண்டிக்கிறார்

ஜ்யோதி -தேவ லோக சம்பந்தியாகக் கூறப்பட்ட ஏராளமான ஒளி உள்ள ஜ்யோதி என்பது பரம புருஷனே
ஏன் எனில்
சரணாபிதா நாத் –பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ் யம்ருதம் திவி -என்று
சர்வ பூதங்களும் இந்த ஜ்யோதிஸ்ஸுக்கு ஒரு பாதமாகவும்
பரமபதத்தில் மூன்று பாதங்களும் இருப்பதாகச் சொல்வதால்
பிரசித்தமான எந்த சோதிக்கும் அது பொருந்தாது
பரமபுருஷனே ஜ்யோதிஸ் ஸப்த பொருளாவான்

இந்த தேவலோக சம்பந்தியான ஜ்யோதிசை ஜாடராக்னி சரீரமாகக் கொண்டது என்று உபாசித்தால்
ஆபி ரூப்யாதிகள் -பொருத்தமான அழகு போன்றவை ஸித்திக்கும் என்பதால்
கௌஷேய-வயிற்று ஜ்யோதிஸ்ஸுடன் ஐக்யம் கூறுகிறது என்று திரு உள்ளம் –

உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————–

26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்–1-1-26-

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

சந்தோ அபிதா நாத் ந
அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே–இத்யாதி வாக்யத்துக்கு முன்பு காயத்ரி சந்தஸ்ஸை சொல்லி
பின்பு ததே தத் ருசாப் யுக்தம் –என்று கூறிய ருக்குக்கும் காயத்ரீ என்னும் சந்தஸ்ஸே விஷயமாகையாலே
இங்கு பரமபுருஷனைப் பற்றிய பேச்சே இல்லை என்று ஐயம் தோன்றிற்று
இதி சேத் ந -இவ்வாறு கூறுவது தவறு என்கிறார் –
ஏன் எனில்
ததாசே தோர்ப்பண –அவ்வாறு சித்தத்தாலே அனுசந்தானம் விதிக்கப்படுவதால்
அந்த காயத்ரியைப் போலவே பரம் ஜோதிசை நான்கு பாதங்கள் உள்ளதாக அனுசந்திக்கச் சொல்கிற படியால்
நிஹமாத் -நிச்சயிக்கப் படுவதனால் ஸப்த ரூபமான காயத்ரீ சர்வ பூதாத்மிகை என்பது பொருந்தாமையால்
பரம புருஷனை காயத்ரீ துல்யனாக நான்கு பாதம் உள்ளவனாக அனுசந்திக்க வேண்டும் என்று
நிச்சயிக்கிற படியால் பரம புருஷனே காயத்ரீ சப்தத்தின் பொருளாம்
ததாஹி தர்சனம்-அவ்வாறு நான்கு பாதங்கள் உள்ள காயத்ரியும் சில இடங்களில் காணப்படுகிறது
இந்த்ரச் சசீபதி வலே ந பீடித துச்சய வநோ வ்ருஷா ஸமித் ஸூ ஸஹி – என்று காணலாம் –

————-

27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்–1-1-27-

சாந்தோக்யத்தில்
பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

பூத ப்ருத்வீ சரீரங்களைச் சுட்டி இது நான்கு கால் உள்ளது என்பதற்குப் பொருத்தம் வர வேண்டுமானால்
ஏவம் -இவ்வாறு ப்ரஹ்மமே காயத்ரீ என்ற சொல்லின் பொருள் என்றாலே பொருத்தம் ஏற்படும்
பூத ப்ருத்வீ சரீர ஹ்ருதயங்களை-என்பதில்
பூதம் -ஆத்ம வர்க்கம்
ப்ருத்வீ -இந்த லோகம்
சரீரம் -கர்மாக்களால் ஆர்ஜிதமான போகத்திற்கு உரிய இடமும் -அதன் உபகரணமும்
ஹ்ருதயம் -ஆத்மா தங்குவதற்கான இடம் –

———–

28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –1-1-28-

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரம பதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை
மரத்தின் மேலே பறவை என்பதும்
மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

உபதேச பேதாத்
பூர்வ வாக்கியத்தில் த்ரி பாத் ஸ்யாம்ருதம் திவி என்று த்யு லோகத்தை ஆதாரமாகவும்
இந்த வாக்கியத்தில் திவ என்று த்யு லோகத்தைக் காட்டிலும் என்று எல்லையாகவும் உபதேசம் வேறு வேறாய் இருப்பதால்
முன் வாக்கியத்தில் கூறிய ப்ரஹ்மம் இந்த வாக்யத்தில் தோன்றவில்லை

இதி சேத் ந-என்று கூறுவது சரியில்லை

உபய அஸ்மின் அபி அவிரோதாத் –இரண்டுக்கும் அர்த்த ஸ்வ பாவம் ஒன்றே யாதலின் நினைவுக்கு விரோதம் இல்லை
மரத்தின் நுனியில் பருந்து என்றாலும்
மரத்தின் நுனிக்கு மேலே பருந்து என்றாலும் போலே இங்கும் அர்த்தம் ஒன்றே யாதலின்
ஏதாவான் அஸ்ய மஹிமா பாதோஸ்ய விஸ்வா பூதாநி-என்ற புருஷ ஸூக்த நினைவாலே
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்கிற எல்லையில்லா ப்ரகாசமுடைய புருஷோத்தமனே
அத யதத பரோ திவோ ஜ்யோதி என்று கூறப்படுகிறான் என்று திரு உள்ளம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் இவ்வதிகரணத்தின் அவதாரிகையில்-எல்லையில்லா பிரகாசம் என்னும்
லிங்கத்தாலே பூர்வ பக்ஷம் தோன்றுகிறது என்று காட்டி
பின்பு ப்ரசித்தவத் நிர்தேசம் இருந்தாலும் ஆகாசம் பிராணன் இவற்றைப் போலே
தன் வாக்கியத்தில் எடுக்கப்பட்ட பரமாத்மாவுக்கான லிங்கம் இல்லாமையால் என்று அருளியது
முன் பின்னாக முரணாக உள்ளதே என்னில்

அத யதத பரோ –என்னும் வாக்கியத்தில் காரணத்தைக் காட்டவல்ல
ஸர்வத ப்ரகாசமயமான தன்மை எனும் லிங்கம் உள்ளது
அப்படி இருந்தாலும் உபய லிங்கத்வாதிகள் கூடியதும் -பரமபுருஷனை நிலை நிறுத்தக் கூடியதுமான
ஜகத் காரணத்வம் என்னும் லிங்கம்
அத யத்த பாரோ வாக்கியத்தில் கிடையாது என்னும் பூர்வ பசியின் கருத்தால்
அருளிச் செய்வதால் முரண்பட்டு இல்லை
அப்படியான சிறப்பான லிங்கம் தன் வாக்கியத்தில் இருப்பதாகத் திரு உள்ளம் –

————

1-11-இந்திர பிராணாதி கரணம்-

இதில் காரணத்தோடு வியாப்தமான -முமுஷுக்களால் உபாஸிக்கத் தன்மை கொண்ட
இந்திரப் பிராணன் -என்று சொல்லப்படுபவனும் பரம புருஷனே என்று ஸ்தாபிக்கிறார்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

ஹித தமமாக உபாசனம் செய்யத்தக்க இந்த்ர பிராணன் என்று
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் சொன்னது ஜீவனா அல்லது பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான் என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
இந்த்ர சப்தம் ஜீவனைக் குறிப்பதாகவே ப்ரஸித்தம்
தான் என்று குறிப்பிடும் இந்த்ரனாகவும் பிராணனாகவும் உள்ளது
பிரசித்தமான இந்த்ரனைக் குறிப்பது என்பது பொருந்தாது

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

ப்ராணா –ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா -என்று சொன்ன இந்த்ரப்ரண ஸப்த வாஸ்யன் ஜீவன் அல்லன்
அவனை விட விலக்ஷணமான பர ப்ரஹ்மமே ஆகும்
ஏன் எனில்
ததா அநுகமாத் –அப்படியே தொடர்வதால்
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோ ஜர அம்ருத-என்று
ஆனந்தம் முதலிய தர்மங்களுக்கு தர்மியாகப் பிராணனைத் தொடர்வதாலே
ப்ரஸித்தமான இந்த்ரனுக்கு ஆனந்த் வாதிகள் கூடாமையாலே பரம புருஷனே
இந்த்ர பிராணன் என்ற சொல்லின் பொருள் ஆகும் –

————-

30-ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-1-1-30-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே
அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

ந -இந்த்ர ப்ராண சப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மம் அன்று
ஏன் எனில்
வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் –தொடக்கத்தில் -மூன்று தலையுள்ள த்வாஷ்ட்ரனைக் கொன்றேன் என்று கூறி
விஸ்வ ரூப வதம் முதலியவற்றால் ப்ரஸித்தமான ஜீவ பாவத்துடன் ப்ரஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன்
என்று பேசும் தன் ஆத்மாவை உபாஸீ என்று உபதேஸிப்பதால் ஜீவன் தான் என்றால்
அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-பிராண ஸப்தத்தால் குறிப்பிடும் இந்த ப்ரஹ்மத்திடம் உள்ள குணங்கள் -தர்மங்கள் –

அத்யாத்ம தர்மங்கள் -அவற்றின் சம்பந்தங்கள் -அவற்றின் பூமா -மிகுதியாய் உள்ளது அல்லவா
உபக்ரமத்தை விட மஹா வாக்யம் பிரபலமாகையால் இந்த ப்ரதர்தன வித்யையில்
ஆதி முதல் அந்தம் வரை பரமாத்வாவின் சிறப்பான தர்மங்கள் பேசப்படுகின்றன
அதாவது ப்ரதர்தன் இந்த்ரனிடம் -நீயே மனிதர்க்கு ஹித தமமாய் எண்ணும் வரத்தைத் தருக–என்று கூறிப் பின்
அனைத்து நல்ல காரியங்களையும் நிறைவேற்றுபவனாகவும் தேரின் குடத்தில் -ஆரங்களில் -சக்ரம் நிலை பெற்றது போல்
உலகிற்கே ஆதாரமாய் இருப்பவனும் -ஆனந்த வடிவாய் ஜரை மரணம் முதலியவை அற்றவனாய் –
உலகின் தலைவனாய் ஸகல கல்யாண குணா கரனுமாக இந்த வித்யையில் சொல்லப்படுகையாலே
பரம புருஷனே இந்த்ர பிராணன் என்பது கருத்து

————

ஆனால் இந்திரன் தன்னையே உபாஸிக்கச் சொல்வதால் பொருந்துமோ
என்ற சங்கைக்கு மேலே விடை தருகிறார் –

31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –1-1-31-

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

து -சங்கையை நீக்குகிறது
உபதேஸ முமுஷுக்கள் தன்னை உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்தல்
சாஸ்திர த்ருஷ்ட்யா–ஆத்மநி திஷ்டன் -ஆத்மநோ நந்தர -யம் ஆத்மா ந வேத –
யஸ்ய ஆத்மா சரீரம் -முதலிய ஸாஸ்திரத்தாலே
உபதேச -ஜீவ சரீரிகனான பரமாத்மாவை அறிந்து ஜீவனைக் குறிக்கும் அஹம் த்வம் முதலிய சொற்களும்
பரமாத்மாவையே போதிப்பது என்று அறிந்து
என்னையே அறிந்து உபாஸனை செய் என்று தன் ஆத்மாவைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்கிறான் இந்த்ரன் –
வாமதேவவத் –வாமதேவர் என்ற மஹ ரிஷி இப்படியே ஸாஸ்த்ர கண்ணோட்டத்தாலே
அஹம் மனுரபம் ஸூர்யச்ச -நானே மனுவாகவும் ஸூர்யனாகவும் இருந்தேன் என்று இருக்கிறார்
அப்படியே இந்த்ரனும் கூறுகிறான் -என்றபடி
ப்ரஹ்லாதனும் இப்படியே எம்பெருமான் எங்கும் நிறைந்து இருப்பதால் அவனாகவே நானும் இருக்கிறான் –
என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றுகிறது
நானே எல்லாமுமாய் ஆவேன் என்று கூறுகிறான் என்று கருத்து
கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் என்றாரே ஆழ்வாரும் –

———-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவாத்மாவைக் குறிக்கும் சொற்களாலும்
ப்ராணாதி சப்தங்களாலும்
உபாஸ்யமான பர ப்ரஹ்மத்தைச் சொல்லுகையில்
காரணத்தைச் சந்தேகம் தெளிவிப்பதன் மூலம் அருளுகிறார்

32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத் ந உபாசாத்ரை வித்யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத் யோகாத் –1-1-32-

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந –த்வஷ்ட்ர வதம் முதலான ஜீவ லிங்கங்களாலேயும்
இவ்வுடலில் பிராணன் உள்ள வரையிலும் தான் ஆயுள் என்று கூறும் பிராண லிங்கத்தாலும்
பரமாத்ம விஷய சம்பந்தம் மிகுதி என்பது இல்லை

இதி சேத் ந -என்று கூறுவது தவறு

உபாசாத்ரை வித்யாத் –மூன்றுவிதமாக உபாஸிக்க வேண்டும் என்றே உபதேஸிக்கிறார்
மூன்று வித உபாஸனமாவது
1- ஸமஸ்த காரணனான ப்ரஹ்மத்தை சத்யத்வ ஞானாதிகள் உடையதாய் உபாஸிப்பது
2-போக்த்ரு வர்க்கமான- ஜீவர்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது
3-போக்ய போக உபகரணமான -அசேதனங்களைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது –
என மூன்று வித உபாஸனங்கள்

ஆஸ்ரிதத்வாத் –தைத்ய ஸ்ருதியிலும் ஆஸ்ரயிக்கப் படுகிறது
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்றும்
ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் பகவத் ஸ்வரூப அனுசந்தானம் கூறப் படுகிறது
பின்னர் தத் ஸ்ருஷ்ட்வா ததே அநு ப்ரவிசேத் -என்று தொடங்கி
சேதன சரீரகமாயும் அசேதன சரீரிகமாயும் அனுசந்தானம் கூறப்படுகிறது

இஹ தத் யோகாத்-இந்த உபநிஷத்திலேயும் அந்த மூன்று வித உபாஸனங்களும் கூடும்
எப்படி என்றால்
என்னை உபாஸி -என்றதால்-என்னைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸி என்று
சேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
ப்ராஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன் என்றதால்
அசேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
சொல்லப் படுகின்றன
ஆனந்தோ -அஜரா -அம்ருத -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அனுசந்தானம் சொல்லப் படுகிறது
இவ்வாறு வேறு உபநிஷத்துக்களிலும் பரமாத்மாவின் சிறப்பான தர்மங்கள் சொல்லப்பட்டன
ஹிரண்ய கர்பாதிகளைக் குறிக்கும் சொற்களும் பரமாத்மாவையே குறிக்குமாம்

ஆகையால் இந்த்ர ப்ராண சப்தத்தால் குறிக்கப் படுபவன் ஜீவனை விட வேறுபட்ட பரமாத்மாவே என்று தேறிற்று –

இந்திர பிராண அதிகரணம் சம்பூர்ணம்

——–

இந்தப்பாதத்தில்
ஆகாசாதிகரணம் முதல் இறுதி வரை நான்கு அதிகரணங்களிலும்
ஆகாசம் -பிராணம் -என்ற சொற்கள் பிரித்துப் பொருள் கொள்ளும் காரணப் பெயராய்
யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்–முதலிய ஸ்ருதிகளிலே க்லுப்தமான படியாலே
ரூடி சக்தியை விட்டு ஸர்வார்த்ர்யாமியாய் –ஸர்வ பிராணிகளையும் உயிரூட்டுபவனாய் உள்ளான் -என்பதாக
நிமித்த பேதம் காரணமாக ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பவை என்றும்

ஜ்யோதிஸ் ஸப்தம் குஷி கதமான ஜ்யோதிஸ்ஸுடன் ஒன்றாக உபதேசித்து விசேஷ லிங்கம் இருந்தாலும்
ரூடி சக்தியால் பரம புருஷனையே குறிக்கிறது

இந்த்ர ப்ராணாதி ஸப்தங்களும் -த்வாஷ்ட்ர வதாதி லிங்கங்கள் இருப்பினும் அத்தகைய லிங்கங்களுடன் கூடிய
இந்த்ராதி சரீரகனான பரமாத்மாவையே போதிப்பன என்பதாக ஆச்சார்யர்கள் நிரூபித்து உள்ளனர்

பர வித்யாஸூ ஜீவோக்தி நிரூக்த்யாதே பராஸ்ரயா
தல்லிங்கா நந்யதா ஸித்தவ் தத் விஸிஷ்டாபி தாயினீ –என்று விளக்கினார்கள்
அதாவது
பரவித்யைகளில் காணும் ஜீவனைக் குறிக்கும் சொற்கள் பரமாத்மாவையே குறிப்பவை
அதன் லிங்கங்கள் மாற்ற முடியாமல் நிற்கையில் சேதனாதிகளைச் சரீரமாய்க் கொண்ட ப்ரஹ்மம்
என்ற பொருளைக் குறிப்பிடுவனவாம் என்றவாறு –

இந்தப்பாதத்தில் அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மன் நாராயணனே ஸ்ரீ பர ப்ரஹ்மம் -பிரமாணங்கள் தொகுப்பு —

November 14, 2021

கண்ணைப்பிடுங்கி அருச்சனைசெய்து திருமால் சிவனிடம் சக்கரம் பெற்றார் என்ற கதைக்கு மறுப்பு.!

“முன்பு ஜலந்தராசுரனை வதைப்பதற்காக திருமால், தாமரை மலர் ஓர் ஆயிரத்தைக் கொண்டு கைலாசாதிபதியை அர்சித்தார்.
அதில் ஒருமலர் குறைந்திருக்கவே, தம் கண் ஒன்றை இடந்து சிவனடியில் சாத்தினார்.
பரந்தாமனின் இச்செயலைப் பார்த்து மகிழ்ந்து பரமசிவன் அவருக்கு சக்கராயுதத்தை அளித்தார்”
என்னும் பெரும் மூட பங்கத்திறக்கு மறுப்பு..!

“சக்கரத்தை மிக்க மலர் சாத்தி யுபா சித்ததனால் முக்க வட்டுச் சூலமுனம் பெற்றான் —
நக்கனெனலென்? தாமதநூற் பொய்யறியா தார்”

‘சக்கரத்தை…..அறியாதார்’ —நக்க(திகம்பர) பிரானாகிய சிவன் திருவாழியாழ்வானாகிய சுதர்சன சக்கரத்தை
ஏராளமான மலர்களைக் கொண்டு ஆராதித்து மூன்று பிளவாக உள்ள சூலாயுதத்தைப் பெற்றான் என்று வேதங்கள் கூறி நிற்க;
தாமத நூல்களிலே கூறப்படும் பொய்யை உணராத நீங்கள் திருமாலுக்கு சிவன் சக்கராயுதத்தைக் கொடுத்தார்
என்பது எக் காரணம் பற்றியோ? என்பது இதன் கருத்து.

இனி இதற்கு மேற்கோள்;

“மொழியிருக்கு வேதமதி லெட்டா மட்டகத்தின் மூன்றாமத் தியாயமதின் மூன்றெனும் வர்க்கத்து
மெழில் கொளந்த வேதத்தி லெட்டா மட்டகத்தி லேழாமத் தியாயமதி லெட்டெனும் வர்க்கத்து
மிழிவிலெசு ரெனும் வேதாரணந் தனிலேயாதி யெனும் பிரசிநத்திற் பன்னொன்றெனு மநுவாகத்து
மொழிவிலதர் வணவேத சிரத்து முயர்சாமத் துத்தர ருக்கினி லொன்பா னத்தியாயத்தும்”

“கருதரிய பாகவதந் தனிலிரண்டா மூன்றாங் கந்தத்துஞ் சுந்தரமால் விட்ணு புராணத்துந் தருமிராமா யணத்திரா வணற்கு
மண்டோ தரியுரைக்கும் புத்தியினும் வராக புராணத்துண் மருவிய உத்தரகாண் டந்தனிலு
மெங்கள் பெருமான் மாதவனைச் சங்காழி நாதனென வோதும் பொருளது நால்வேத புராணத்தின்
வகைசொன்னேன் புரையறக் கண்டுணர்மின் எனப்புகலுவன் மேன்மேலும்”[கூரேச விஜயம்]

ரிக், யஜுர், ஸாம அதர்வணமென்னும் நான்கு வேதங்களிலும், விஷ்ணுபுராணம், வராஹபுராணம், இராமாயணம், பாவதம்
முதலிய இதிகாசபுராணங்களிலும் திருமாலுக்குச் சக்கரம் அனாதியானது என்று முழங்கியிருப்பதாகக்
கூரேச விஜயத்தில் இப்பாடல்களில் கூறப்படுவது காண்க.

மேலும், “சிவனைத் திருமால் சம்ஹார கர்த்தாவாக்கும் காலத்தில் அதற்குரிய ஆயுதத்தை எனக்கு அருள வேண்டுமென்று
சிவன் திருமாலைக் கேட்க; திருமாலும் எனது சுதர்சன சக்கரத்தைப் போற்றி அதற்க்குரிய படையினைப் பெறுவாயாக என்று கூறினார்.
அரனும் அவ்வாறே செய்து சூலாயுதத்தைப் பெற்றுக்கொண்டார் என்று அகஸ்திய சம்ஹிதையிலும்,
விஷ்ணுபுராணத்திலும் கண்டுகொள்ளுங்கள்” என்ற கருத்தமைந்த—–

“அரன்றனைச் சங்கார கர்த்தனாக்கிடும் போதவனங் கத்தொழிலுக் கியைந்த படையருளு மெனக்கேட்ப
வரன்தருமென் சுதரிசனச் சக்கரத்தைப் போற்றி வன்படை கொளெனச் சூலமப்படியே கொண்டான்
திரஞ்சொலிது வகத்திய சங்கிதையி லெழில் விட்ணு செய்யபுரா ணத்தினுங் கண்டுணர்மின் எனத்தெரிந்து
பரம்பொருள் மாலாகு மரனன்றென் றேசைவப் பாவலரைப் பார்த்திபனைப் பார்த்துரை செய்திப்பால்”.[கூரேச விஜயம்]
எனும் கூரேச விஜயப் பாடலையும் நோக்குக.

இனி; தமிழ் நூல்களில் உள்ள சான்றுகள்;

சிவன், திருமாலைக் கூறுமிடங்களில், சிவனால் திருமாலுக்குச் சக்கரம் அளிக்கப்பட்டது என்ற கதை
சங்கத் தமிழ் நூல்கள் எதிலுமே காணப்படவில்லை.
சக்கரப்படை திருமாலுக்கே உரியது என்றும், அனாதிகாலமாகத் திருமால் அதனைத் தம் திருக்கரத்திலே
தரித்திருக்கிறார் என்றுமே தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

“இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே”
[நற்றிணை: க.வா]
என்ற நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘திகிரியோனே வேதமுதல்வன்’ என்று கூறுவதிலிருந்து
திருமாலுக்குச் சக்கரம் அனாதி என்பது பெறப்படும்.
மேலும், திருமாலைக் கூறுமிடங்களிலெல்லாம் திருமாலையும் சக்கரத்தையும் இணைத்தே
பழந்தமிழ் நூல்கள் கூறுவதை அடியிற் காண்க;

“பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னிய முதல்வன்” [பரிபாடல் 1]
[சக்கராயுதத்தை வலது திருக்கரத்திலே தரித்து(அழிவில்லாமல்) என்றும் நிலைத்திருக்கும் முதல்வன்] எனப்
பரிபாடல் கூறுவது நோக்குக. மற்றும் உள்ள சங்கநூல்களிலும் சக்கராயுதம் திருமாலுக்கே
உரியதாகக் கூறப்பட்டுள்ளதென்பதை அடியிற் காண்க;

“தொல்கதிர்த் திகிரியான் பரவுதும்” [முல்லைக்கலி 4]
இதில் “கதிர்களோடு கூடிய பழமையான சக்கரத்தை உடைய திருமால்” என்பது காண்க.

“பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் நீனிற வுருவி னேமி யோனுமென் றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்கு.”[புறம்: 58]

“நேர் கதிர் நிறைந்த நேமி அம்செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்.”
[அகம்: 175]

“வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி.”
[பதிற்றுப்பத்து: 31]

“நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறிந்த மா தாங்கு தடக்கை.”
[முல்லைப்பாட்டு]

“வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லி னெறிகொள் படிவத்தோய் நீயும்— பொறிகட் கிருளீயும்
ஞாலத் திடரெல்லா நீங்க அருளீயும் ஆழி அவன்.”[புறப்பொருள் வெண்பா மாலை]

“பகையணங் காழியும் பால்வெண் சங்கமுந் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிள ரார மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற பொலிந்து தோன்றிய செங்க ணெடியோ னின்ற வண்ணமும்.”
[சிலம்பு: காடுகாண்காதை 47-51]

“கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ண னிடத்துளாள்”
[சிலம்பு: ஆச்சியர் குரவை 2856]

“பொன்னணி நேமி வலங்கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன்..”
[மணிமேகலை]

“அக்கணத் தனுமனு மவணின் றேகியத் திக்குறு மானத்தைச் செல்வ னெய்தியச் சக்கரத் தண்ணலைத்
தாழ்ந்து நின்றனன் உக்குறு கண்ண நீ ரொழுகு மார்பினான்.”[கம்பராமாயணம்: யுத்த 328]

“நின்றவ னிருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமிப் பொன்றிகழ் படையோன் அந்தப் பொய்த்துயிற் பாயல் நீங்கி.”
[வில்லிபாரதம்: வாசு தேவனைப் படைத்துனை அழைத்த சருக்கம் 11)

மேலே கண்ட பாடலுக்கு; “எம்பெருமானுக்குச் சக்கரம் முதலியன—பகைவர்களுக்கு அச்சம் செய்து ஆயுதகோடியிலும்,
அடியார்களுக்கு அழகுசெய்து ஆபரணகோடியிலும் அமைதலால்,
நேமிப் பொன் திகழ் படை’ என்றார” என்ற வை.மு.கோ. உரை நயம் காண்க.

“புனையாழி அங்கைப் புயல்வளர் பாற்கடற் பூங்கொடிவாழ்”
[தஞ்சைவாணன் கோவை]

“பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின் படர்களையு மாயனிவ னென்றுதெளி வெய்தத் தண்டுதனு வாள்பணில
நேமியெனு நாமத் தன்படைக ளானதிரு வைம்படைத ரித்தே.”
[கலிங்கத்துப்பரணி: 240]

“சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத் திக்குவிச யத்தின்
வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே.”
[கலிங்கத்துப்பரணி: 247]

பரணிகளில் முதன்முதல் தோன்றியது கலிங்கத்துப் பரணி.
“பரணிக்கோர் செயங்கொண்டான்” என்ற புகழ் கொண்ட பேராசிரியரால் பாடப்பட்டது.
ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப் பரணியில், தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு’ என
இதனை தெய்வப் பரணி என்று கூறுவர். கவி ஒட்டக்கூத்தராலே புகழ்பெற்ற பெரும்புலவர் செயங்கொண்டார்.
இவரது கலிங்கத்துப் பரணியில்
‘தண்டுதனு வாள்பணில நேமியெனுநாமத் தன்படைகளான திரு வைம்படை தரித்தே’ எனவும்
‘சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே, தன் னுடைய வானவதனால்’ எனவும் கூறுவதிலிருந்து
திருமால் ஒருவனே அனாதிகாலமாகச் சக்கரம் முதலிய ஐம்படைகளையும் தரித்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது.

“சேய ரும்பொருள் செல்வ மிவையென நேயம் வைக்கி னிகரில் வெருத்தரும் ஆயுங் காலிவ் விருப்பறுத்து
ஆழிசேர் மாயன் தாளில் மனவைத்தி மன்னனே.”[பாகவதம் 1531]

ஆழ்வார்களும்;
‘வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’
‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன்’
‘சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை’
‘தழலெடுத்த போராழி ஏந்தினான்’
‘என்னாழி வண்ணன் பால் பொன்னாழி கண்டேன்’
‘கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்’
கைகழலாநேமியான்’ என்று கூறுவது நோக்குக.

குறிப்பாகச் சங்ககால இலக்கியங்களிலும் பிற பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிவபெருமானிடமிருந்து திருமால்
சக்கரம் பெற்றார் என்ற கதை எதிலுமே காணப்படவில்லை.
அனாதி காலமாகத் திருமால் சக்கராயுதத்தைத் தரித்திருக்கிறார் என்றே தமிழிலக்கியங்கள் உரைக்கின்றன என்பது கருதத்தக்கது.

எனவே சக்கரத்தானான சர்வேஸ்வனுக்கு சுதர்சன சக்கரம் அனாதியானது என்பது தெரிகிறது.
துஷ்டர்களை அழிப்பது போல் பாஷாண்ட புனைப்பு கதைகளையும், பாஷாண்டார்களையும்.
எம்பெருமான் சுதர்சன ஆழ்வாரை ஏவி சங்காரம் பண்ணிடுவான் என்பதும் சத்யம்.

ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய “பரப் ப்ரஹ்ம விவேகம்” என்னும் உன்னத படைப்பில் இருந்து]

———

அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!

“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”

சைவர்களால் திருமாலான சர்வேஷ்வரனை சிறுமை படுத்த திட்டமிட்டு புனையப்பட்ட கதைகளில் ஒன்றுதான்
“அடிமுடி தேடிய கதை”
சைவர்கள் இயற்றிய கதையை பார்ப்போம்;
முன்னொரு காலத்தில் திருமாலும் திசைமுகனும் தானே கடவுளென்று பிணங்கி நிற்க;
அவர்கள் வேறுபாட்டை நீக்கும் பொருட்டு அண்ணாமலையார்(சிவன்) அக்கினிப் பிழம்பான மலைவடிவமாய்
அவர்கள் முன் தோன்றவே, திருமால் வராகமாய் அவனடியைத் தேடியும்,
பிரமன் அன்னமாய் அவன் முடியைத் தேடியும் அலைந்தார்களாம்..

இதற்க்கான மறுப்பு இனி:-

“அண்ட மளக்க வடிக்கீ ழொடுங்கியுல குண்ட பொழுதுதரத் துள்ளொடுங்கி—
துண்டமதி சூடினான் மாலருளாற் றோன்றினான் ஆங்கவனைத் தேடினான் மாலென்ப தென்”.

அண்டங்களனைத்தையும் திருமால் அளந்தான், அப்பொழுது அனைத்துலகங்களும் அவனடிக்கீழ் ஒடுங்கியது.
பிரளய காலத்தில் காப்பதற்காக உலகையெல்லாம் உண்டான். அக்காலத்தில் உலகனைத்தும் அவனது திருவயிற்றில் ஒடுங்கியது
ஸ்ருஷ்டிகாலத்தில் அருள்கொண்டு உலகனைத்தையும் உமிழ்ந்தான்.
அச்சமயம் பிறைசூடியாகிய சிவபெருமான் முதல் சகல ஜீவர்களும் மறுபடியும் தோன்றினர்.
இவ்வாறிருக்க சிவனடியைத் திருமால் தேடினான் என்பது ஏனோ? என்பதாகும்.

“ஒருகுறளா யிருநில மூவடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும் தருகவெனா
மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்……” என்பர் திருமங்கையாழ்வார்,

இனி திருமால் அண்டமளந்த வரலாற்றினை அடியில் வரும் சான்றுகள் கொண்டு தெளிக.

“கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை”(பரிபாடல் 3-20)

“ஞாலம் மூன்றடித் தாய முதல்வதற்கு” (கலித்தொகை- நெய்தற்கலி 7)

“மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்”(அகம் 220)
[நெடியோன்–திரிவிக்கிரமனாகிய திருமால்]

“ஏமம் ஆகிய நீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை”
(பதிற்றுப்பத்து 2-5)

“இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்…”
(பெரும்பாணாற்றுப்படை)

“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல்”
(முல்லைப்பாட்டு)

“நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொரு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக” (மதுரைக்காஞ்சி)

“கோள்வாய் மதியம் நெடியோன் விடுத்தாங்கு” (சிந்தாமணி)

“மூவுலகும் ஈரடியால் முறைதிறம்பா வகைமுடியத் தாவிய சேவடி”(சிலம்பு)

“திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல ரண்டடியால் மூலவுலகும் இருள்தீர நடந்தனையே”(சிலம்பு)

“வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் ஆடிய குடமும்”
(சிலம்பு)
எனப் பல இடங்களிலும் தமிழ்நூல்களிலும் திரிவிக்கிரமாவதாரம் பேசப்படுவது காண்க.

“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய” (மணிமேகலை மலர்வளம் புக்க காதை)

“நெடியோன் குறளுரு வாகி, நிமிர்ந்து, தன் அடியிற் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த, மூரி வார்சிலை, மாவலி….”
(மணிமேகலை சிறைக்கோட்டம் – அறக்கோட்டம் ஆக்கிய காதை)

“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி” (மணிமேகலை உலகவறவி புக்ககாதை)

என்று மணிமேகலையிலும் பல இடங்களில் வாமனதிரிவிக்கிரமா வதாரங்கள் பற்றிக் கூறுவன நோக்குக.

உலகப் பொது மறை என்று கூறப்படும் திருக்குறளிலே வள்ளுவனாரும்.

“மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு”(திருக்குறள்-610)

என்று கூறுவது காண்க.

“கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூனின் றளந்த குறளென்ப…” (பொன்முடியார்-திருவள்ளுவமாலை)

“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான்…” (பரணர் -திருவள்ளுவமாலை)

“கண்ணகன் ஞாலம் அளந்தூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்—-
நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”
(திரிகடுகம் கடவுள் வாழ்த்து)

“வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய் —வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று நெடுந்தகை நின்னையே யாம்”.(புறப்பொருள் வெண்பா மாலை)
எனப் பிற நூல்களிலும் உலகளந்த செய்தி வருவது காண்க.

தமிழ் அணங்குக்குச் சிறந்த அணிகலனாய் மிளிர்வது இறையனார் அகப்பொருளாகும்.
சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்ற காரணத்தினால் இந்நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்று பெயர்.
இதற்க்கு உரை கண்டவர் தெய்வப்புலமை நக்கீரனார். இவர் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகையாவர்,
நக்கீரனார் எழுதிய உரையிலே எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் சில திருமாலின் திரிவிக்கிரமாவதாரம் பற்றிப் பேசுகின்றன.
இதனை அடியிற் காண்க;

வேழம் வினாதல்

“வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த திருமா லவன்வஞ்சி அன்னஅஞ் சீரடிச் சேயிழையீர்!
கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச் செங்கட் பொருமால் களிறொன்று
போந்ததுண் டோநும் புனத்தயலே”(இறையனார் அகப்பொருளுரை 57)

“கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன் பொதியிற் கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல்
கருத்துரையான் அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான்
சிறுவன்கொல் லோவறி யேனோர் நெடுந்தகையே” (இறையனார் அகப்பொருளுரை -88)

“சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெல்லியல் மடந்தைமுன் வெற் நின்றான்
அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்[பெடுத்து பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே”.
(இறையனார் அகப்பொருளுரை 317)

சங்கினை வாழ்த்துதல்

“தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை
மண்ணளந்த நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீர் பானிற வெண்சங்கம் யார்
நின்னின் மிக்க படிமையரே”. (இறையனார் அகப்பொருளுரை 314)

“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்ற நம்மாழ்வார் வாக்கினுக்கிணங்க,
திருமாலின் பெருமையினை அரசர்கள் மேல் ஏற்றிக் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மரபு.
இம்மரபுக்கேற்ப நக்கீரர் உரையிலும் மாலின் புகழை மன்னன்மேல் ஏற்றிக் கூறினார்.
மேலும் சில பாடல்களும் காண்க:–

“வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.” (யாப்பருங்கலக் காரிகை மேற்கோள்)

“முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் —
நன்பரதன் கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண் டதும்
வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் —
செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவு நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்.” (தண்டியலங்காரம் குளகச் செய்யுள் மேற்கோள்)
[வெந்த கரி — கரிக்கட்டையான பரீட்சித்து. செந்தமிழ் தேர் நாவலன் –திருமழிசைப்பிரான்]

உலகளந்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் தண்டியலங்காரத்தில் மேலும் பல உண்டு. விரிவுக்கஞ்சி விடுத்தனம்.
இனி கம்பர் கூறுவதைக் காண்போம்.

“நின்றதாண் மண்ணெலா நிரப்பி யப்புறம் சென்றுபா விற்றிலே சிறிது பாரெனா ஒன்றவா னகமெலா மொடுக்கி
யும்பரை வென்றதாள் மீண்டது வெளிபெ றாமையே.”(கம்பராமாயணம்- வேள்வி 36)

பரம சைவராக விளங்கிய கவி ஒட்டக்கூத்தரும் இவ்வரலாற்றினை விட்டு வைக்கவில்லை.
நக்கீரரைப் போல மாலின் பெருமையை மன்னன் மேலேற்றிக் கூறுகிறார்:—-

“நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால்.”(குலோத்துங்க சோழன் உலா)

“மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோ ரருவினைபோற் போயிற்றே– அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு.” (புகழேந்திப் புலவர்: நளவெண்பா, கலிநீங்கு காண்டம் -7)
என்றார் புகழேந்தியும்.
கம்பர் ஒட்டக்கூத்தர், புகழேந்தி மூவரும் சமகாலப் புலவர்கள் என்பது பலர் கொள்கை.
இவர்கள் மூவருமே உலகளந்த உத்தமன் வரலாற்றினைக் கூறுவது குறிக்கொள்ளத் தக்கது.

“போதங்கொண் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று கொண்ட வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டும் கற்றே”
(கலிங்கத்துப்பரணி)-என்றார் சயங்கொண்டாரும்.

“தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் நீடிய உலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப்
பாம்பின்மேல் ஆடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள்”
(வில்லிபாரதம்)
என உலகளந்த திருவடியின் பெருமையினை வில்லிபுத்தூரார் பாரதத்தில் நயம்பட உரைப்பதை உணர்க.

“பூவரு மயன்முதல் யாவரு மறியா மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தி”(திருவரங்கக் கலம்பகம்)

“அடலவுணன் பாற்குறுகி அற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.”
(அழகர் கலம்பகம்) என்பனவும் காண்க.

இதுவரை சங்க கால இலக்கியங்களிலிருந்தும், தொன்மையான சிறந்த தமிழிலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன.
இனி, காலத்தால் முற்பட்ட முதலாழ்வார்களுடைவும், திருமழிசைப் பிரானுடையவுமான அருளிச்செயலமுதத்
திருவாககினை மட்டும் காண்போம். மற்றைய ஆழ்வார்கள் கூறுவதை திவ்யப்பிரபந்தத்தில் கண்டு தெளிக.

“நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசையளந்த செங்கண்மால்”
(பொய்கையாழ்வார்)

“அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும் அடிமூன் றிரந்தவனி கொண்டாய்”
(பூதத்தாழ்வார்)

“வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே”
(பேயாழ்வார்)

“தாளால் உலகம் அளந்த அசைவேகொல் வாளா கிடந்தருளும் வாய்திறவான்”
(திருமழிசையாழ்வார்)

இனி, அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பான வெண்பாவின் மேல் பகுதியைக் காண்போம்.

உலகுண்டபொழுது……மாலென்பதென்?

இதன் கருத்து;

திருமால் பிரளய காலத்தில் அழியாமல் காக்க அனைத்துலகங்களையும் உண்டான்.
உலகங்கள் அனைத்தும் அவன் உதரத்துள் ஒடுங்கின. அக்காலம் பிரம்மன், சிவன், தேவர், மனிதர் முதலிய
அனைவரும் திருமால் திருவைற்றுள் உறைந்தனர்.
சிருஷ்டி காலத்தில் தன் கருணையினால் உண்ட உலகனைத்தையும் உமிழ்ந்தான்.
அப்போது பிரம்மன் முதல் அனைத்துலகங்களும், பிறை சூடியாகிய சிவனும் தோன்றினர்.
உண்மை இவ்வாறிருக்க: சிவபெருமான் அடியைத் திருமால் தேடினான் என்பது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து.
இக்கருத்தினை..
“அன்றுலக முண்டுமிழ்ந்தா யகிலசெகத் காரணனீ என்றுனக்கே யாளானோம் இமிழருவி வடமலைவாழ் மன்றல்கமழ்
துழவோயுன் வயிற்றுளெங்களொடு கடை சென்றுறைந்து மீளவருந் தேவரை யாமதியோமே.”[என்று திருவேங்கடக் கலம்பகம் தெளிவாகக் கூறும்.)

இனி இதன் சான்றுகள்:—-

ஐம்பெரும் பூதங்கள், சூரிய சந்திரர்கள், மற்ற கிரகங்கள், பன்னிரு ஆதித்தியர், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்திரர்கள்,
அசுவிநீ தேவர்கள், இயமன், உருத்திரன் முதலியவர்களும், மூவேழ்உலகமும், அவற்றில் உள்ள சராசரஜீவர்களோடு,
உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் திருமாலிடத்திலிருந்தே தோன்றினர் என்பதைப் பரிபாடல் தெளிவாக விளக்குவது காண்க;

“மா அயோயே! மாஅயோயே!
மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மா அயோயே!
தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறுந் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை.”(பரிபாடல்-3)

மேலும், பரிபாடலிலே திருமாலின் வராகாவதாரம் பேசபபடுகிறது.
ஆனால் வராக வடிவெடுத்து சிவனடியைத் தேடியதாக எங்குமே கூறவில்லை.
ஊழி காலத்தில் நீரினுள் அமிழ்ந்த பூமியை வராகாவதாரம் எடுத்து மீண்டும் நிலைநிறுத்திய
திருமாலின் முதுமையை எவரும் அறியார் என்றே உள்ளது.

“கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ! நிற்பேணுதும் தொழுது”. (பரிபாடல் – 2)என்றும்,

“புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்”.(பரிபாடல்-4)

என்றும் பரிபாடல் முதலான சங்கநூல்கள் திருமால் பெருமையைப் பாடுகின்றனவேயொழிய,
சிவனடியை வராக வடிவெடித்துத் திருமால் தேடியதாக எங்குமே இல்லை.

சோலைமலைக்குறவஞ்சியும்.

“சாலவே அனந்தன் தலையில் இடுப்புவியெலாம்
கோலமோர் துகளெனக் கொடுவந்து வைத்ததால்
சுவேத வராக கல்பப்பேர் சொல்லி
இவேதியர் முதலாய் இனம்சங்கல் பிக்கிறார்
அப்படிக் கிருக்க அருணைக் கல்லடியை
எப்படி அறியா திருந்ததென் றிசைத்தாய்?.”என்று கூறிச் செல்வது காண்க.

இனி. கூரேச விஜயத்தில், ‘அடிமுடி தேடிய கட்சி என்ற அத்தியாயத்தின் உரைத் தொகுப்பினை அடியிற் காண்க:

“பிரளய காலத்தில் சிவனையும், சிவனைப் பெற்ற பிரமனையும், அவனால் படைக்கப்பட்ட தேவ, மனுஷ்ய, திரியக்ஸ்தாவரங்களையும்,
சிவனால் வசிக்கப்பட்ட கைலை முதலிய அஷ்டகுல பர்வதங்களையும், தன்னுடைய குக்ஷியில் தரித்திருக்க,
இந்தச் சிவன் விஷ்ணுவினுடைய குக்ஷியை விட்டு நழுவி இருந்தானோ? இப்படியிருக்க விஷ்ணு வராகாவதாரம் பண்ணி,
சேதனனான சிவனுடைய பாதத்தைத் தேடினாரென்பது வேத விருத்தமன்றோ?………

“திருவண்ணாமலையின் பிரபாவத்தைக் கேளுங்கள். அதற்கு சுதர்சனகிரியென்று திருநாமம்.
அதனுடைய சரித்திரமாவது— ஜைமினி பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் தர்மநந்தனனுக்கு ரோமசரிஷி திவ்யதேசங்களின்
பிரபாவங்களில், திருக்கோவலூர் திவ்யதேசத்தின் சரித்திரம் சொன்னவுடனே சுதர்சநகிரி மகாத்மியத்தைச் சொல்லுகிறார்….

“அதாவது; ஜகத் சிருஷ்டியின் ஆதியில் திருவாழி ஆழ்வானை லோக சிருஷ்டி பண்ணச் சொல்லி அனுப்ப,
அவர் அப்படிச் செய்யாமலிருந்ததின் பேரில் பிரம்மாவை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணச் சொல்லி நியமிக்க,
அவரும் அப்படியே வெகு காலம் கழித்ததின்பேரில், சிவனை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும்படி அனுப்ப,
அவரும் அப்படியே அலட்சியமாயிருந்ததின் பேரில் ஒரு வராஹத்தை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும் படி அனுப்பினார்.
அந்த வராஹத்தைக் கண்ட பிரம்மா, நீர் யார்? எதற்கு வந்தீர்?’ என்று கேட்க,
‘நான் சிருஷ்டி பண்ணும்படி ஸ்ரீமகா விஷ்ணு (வினாலே) அனுப்ப வந்தேன் என்ன.
அதற்க்கு பிரம்மா கோபித்து, ‘என்னை சிருஷ்டிங்கும் படி அனுப்பியிருக்கிறாரே’ என்று
வராஹத்துடன் வாதம் செய்கையில் சுதர்சந ஆழ்வான்,

‘ஒருவருக்கொருவர் சம்வாதம் நேரிட்டால் மத்யஸ்தராவார்கள் இருவரையும் சமாதானம் பண்ணாமல் பார்த்துக்
கொண்டிருப்பார்களாகில் அவர்களுக்கு நரகமுண்டு’ என்று வேதத்திற்சொல்லுகையால் தான் மத்யஸ்தராய் வந்து,
‘ஓய்! வராஹ மூர்த்தியே! நீர் லோக சிருஷ்டி பண்ண வந்தேன் என்று சொல்லுகிறீர்,
உம்முடைய வியாபாரம் மிகப் பெரிதாயிருக்கையால் இதோ நான் பர்வத ரூபமாயிருக்கிறேன்,
என்னை நீர் வெல்லுவீராகில், நீர் சிருஷ்டிக்க சாமர்த்தியமுடையவரென்று நம்புகிறேன்’ என்று சொன்னார்.”

வராஹ மூர்த்தியும் அப்படியே அந்த சுதர்ச நகிரியை தம்முடைய கோர தந்தங்களினாலே பேர்த்தெறிந்தது மல்லாமல்
விஸ்வரூபம் தரித்து மஹத்தான உக்கிரத்துடனே சேவை சாதிக்கையில்,
திருவாழியாழ்வானும் பிரம்ம ருத்திரர்களும் வேத வாக்கியங்களினாலே தோத்திரம் செய்து,
கோபத்தை சாந்தம் பண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கையில், அப்படியே
ஸ்ரீஸ்வாமியானவர் திருவுள்ளத்தில் சந்தோசமுண்டாய் பிரம்மாவை அழைத்து ‘நீர் லோக சிருஷ்டியைப் பண்ணக்கடவீர்’ என்றும்,
ருத்திரனை அழைத்து ‘நீர் சங்காரத் தொழிலைப் பண்ணக் கடவீர்’ என்றும் நியமிக்க;
அப்போது சிவன் ஸ்வாமியை மிகவும் தோத்திரம் செய்து, ‘இந்த கொடிய வியாபாரம் அடியேனுக்கு நியமிக்க வேண்டாம்,
என்று கண்ணுங் கண்ணீருமாய் அழுததின்பேரில், ஸ்வாமி கிருபை கூர்ந்து,
‘ஆகில் நீர் சூரியனைப் பார்க்கக்கடவீர், அவனிடத்தில் நின்றும் வைவஸ்வத மனு என்கிற இயமன் உண்டாவான்,
அவனைக் கொண்டு நித்ய சம்ஹாரங்களைப் பண்ணுவிக்கடவீர், முடிவில் நீர் சுதாவாய் பிரளயகால
ருத்திர ரூபத்தைத் தரித்து சர்வ சம்ஹாரம் பண்ணக்கடவீர்’ என்று நியமித்தார்

“சிவனுக்கு அந்த சுதர்சநகிரியின் அடிவாரத்தில் ஒரு ஆலயம் பிரஷ்டை பண்ணும்படியும்,
தம்மையும் அவ்விடத்தில் விஷ்ணுஸ்தலமாய் பிரதிஷ்டை பண்ணும்படியாகவும் நியமித்து,
உத்ஸவங்கள் நடந்தேறி வருகிறதாய் ஜைமினி பாரதத்தில் ஏழு அத்தியாயங்களில் இந்தச் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது”

“அதன் பின் வல்லாளகண்டன் என்ற அரசனால் அந்த விஷ்ணுஸ்தலம் சிவ ஸ்தலமாக்கப் பட்டது.
அதற்க்கு ஒரு மாகாத்மியமும் உண்டாக்கப்பட்டது”.

“இந்த சுதர்சந கிரிக்கும் அண்ணாமலை என்ற பெயருண்டாக்கி, சிவனுக்குப் பாட்டனான விஷ்ணுவானவர்
வராஹரூப மெடுத்துப் பேரனுடைய பாதத்தைத் தேடினார் என்றும்,
சிவனுக்கு பிதாவான பிரம்மாவானவர் குமாரனுடைய சிரசைத் தேடினார் என்றும், இந்தப் பொய்களுக்குத் தகுதியாய்,
தாழம்பூ பொய்சாட்சி சொன்னதாயும், அதற்க்காகத் தாழம்பூ தேவார்ஹமல்லாதே போகக்கடவதென்று சபித்ததாயும்
இந்தக் கதை ஸ்காந்தபுராணத்தின் பூர்வபாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் சொல்வது
வேதங்களுக்கும் இதிஹாசமாகிய பாரதத்திற்கும், புராணங்களுக்கும் விரோதிக்கிரதுமல்லாமல்
பௌத்திரன் காலைப் பாட்டன் தேடுகிறதும், புத்திரன் சிரசைப் பிதா தேடுகிறதுமாகச் சொல்லுகிறது
யுக்தி விரோதமுள்ளதாய், பரிஹாஸாஸ்பதமாகவிருக்கிறது.”

“விஷ்ணுவானவர் பாதளத்தில் கீழே ஆதிகூர்மமாயும், அதற்க்குமேல் ஆதிசேஷனாயும், அவதரித்திருக்கச்
சிவனுடைய காலைத் தேடிக் காணாதே போய்விட்டாரென்று சொல்வது புராண விரோதமென்று கண்டித்தார்.”
[கூரேச விஜயத்தின் உரைத் தொகுப்பு]
எனவே அடிமுடி தேடிய கதை ஒரு பொய், புரட்டு, புனைப்பு கதை என்பது தெரிகிறது.

———-

திரிபுரம் எரித்த சிவனே பரம் பொருள் என்பதற்க்கு மறுப்பு

சைவர்கள் அனேகமானவர்கள் கூறும் கதை இது; எங்கள் இறைவனாகிய பரமசிவன் திரிபுர தகனம் செய்து,
திரிபுரத்தை அழித்து, திருமால் திசைமுகன் முதலிய தேவர்களைக் காத்தார் என்றும்,
சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது திருமால் விருஷப வாகனமாய்த் தாங்கினார் என்றும்!
அதுமட்டுமல்லாது பகவான் ஸ்ரீவிஷ்ணுவை துவேஷித்து சில நையாண்டி பாடல்களையும் பாடியுள்ளான்
(காளமேகம் புலவன்) இப்படிப்பட்ட நையாண்டி பாடல்களுக்கும், திரிபுரம் எரித்தால் சிவன் பரம்பொருள் என்ற
பாஷாண்டா வாதங்களை நிர்மூலமாக்கவும் இந்த பதிவு பயனுள்ளதாய் அமையும்.

“ஆவாய் அதன்கன்றாய் அந்தரியா மிப்பொருளாய் ஏவாய்ப் பவுத்தனுமாய் எம்பெருமான்—
காவாக்கால் போரும் பொருமோ, புராந்தகனென்றே பேரும்சீரும் பெறுமோ சிவன் ?” (என்றும்

“அந்த அரனே அநுமானா கப்பிறந்து
சந்ததமும் வாகனமாய்த் தாங்கியதை— இந்தவுல(கு)
எல்லாம் அறியமால் ஏறானான் என்பதென்னோ
கல்லா மடமாந்தர் காள்!”–என்றும் கூறி,

“தூளாய்த் தலைசிதறிச் சுட்டவிடம் புன்முளைத்து
வாளாப் பெயரும் மறையாதோ–
தாள்வருந்த வந்தசிவ னுக்கிரங்கி மாயவிரு காசுரனை
அந்தவரி கொல்லாவிட் டால்”
என்ற செய்யுளைக் கூறி அவர்கள் வாதத்தை மறுப்பது.

‘ஆவாய்….சிவன்’ என்ற செய்யுளுக்கு, பசுவாகியும், அதன் கன்றாகியும், சிவனுக்கு அந்தர்யாமிகியும் (கரந்துறைந்தும்) அம்பாகியும்,
பௌத்தனுமாகியும் எம்பெருமானாகிய திருமால் காக்காவிடில், நீங்கள் கூறும் சிவபெருமான் அவ்வசுரர்களுடன் போர் செய்ய முடியுமோ?
திரிபுராந்தகன் என்ற பேரும் பெற்றுச் சிறப்புத்தான் அடைவானோ? என்பது கருத்து. இனி வரலாறு.

அவ்வசுரர் வேதத்தினிடத்திலே மிக்க பக்தியுடையவர்களாகையால், தான் ஒரு பௌத்தனாகி அவர்கள் முன்சென்று
அத்திரிபுரத்தில் உள்ளோர்க்கு மோஹனாகமம் என்ற ஒரு பொய்நூலை உபதேசித்து,
வேதங்களித்திலே அவர்கள் கொண்ட நம்பிக்கையைப் போக்கினார்.
மேலும், அங்குள்ள அசுரர்களின் மனைவியர் மிக்க கற்பொழுக்கமுடையவர்கள்; புத்திரர்களைப் பெறவேண்டி நிற்பவர்கள்
அச்சுதனும் அவர்களிடம் சென்று , நீவிர் புத்திரர்களைப் பெற விரும்பினால் அஸ்வத்த மரத்தைப் பூஜித்து
ஆலிங்கனம் செய்துகொள் வீராயின் புத்திரர்களை அடைவீர்கள்’ என்று உரைத்தான்.
அந்தப் பெண்களும் அவ்வாறே செய்ய; தானே விருக்ஷ ரூபமாய் இருந்து அர்களுடைய கற்பை அழித்தான்.
அதன் பின் , திருமால் சிவபெருமானை நோக்கி, பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும்,
வேதங்கள் நான்கினையும் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மஹா மேருபர்வத்தை வில்லாகவும்,
ஆதிசேஷனை நாணாகவுங்கொண்டு அசுரர்களை அழிக்கும்படி கூறினார்.

மேலும; தானே சிவபெருமானுக்கு அந்தர்யாமியாக இருந்து ஒருவராலும் அசைக்க முடியாத மகா மேருவை எடுத்து,
அக்நி தேவனை அம்பாக்கி அதன் நுனியில் தானிருந்தும், திரிபுராசுரர்களுடன் போர்செய்கையில் தேரின் அச்சு முறியவே,
தான் ஓர் விருஷபமாகித் தேரைத் தாங்கியும் சிவபெருமானுக்குப் பிரமனைக் கொண்டு
அரிபஞ்சரம் என்ற மந்திரத்தை உபதேசிக்கச் செய்தும் திரிபுரத்தைச் சிவபெருமான் அழிக்கும்படியாகச் செய்தார் திருமால் என்பது வரலாறு.

சிவன் திரிபுர ஸம்ஹாரத்தில் பொருட்டு, தன் சடையைச் சமித்தாகக் கொண்டு திருமாலை நோக்கி வேள்வி செய்ததும்,
திருமால் பசுவாகித் திருபுரத்தி லுள்ள அமிர்த கூபத்தின் அமிர்தத்தைப் பருகியதும் பாகவதத்திற் கூறப்பட்டன.

விஷ்ணு பரமசிவனுக்கு ஆத்மாவாய் இருந்தமையால்தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்யும்பொழுது,
வில் நாணி யைத் தொடவும் வல்லவரானார் என்பதும், பிரமன் சாரதியானதும் பாரதத்தில் கர்ணபர்வத்தில் பரக்கக் காணலாம்.

திருமால் பௌத்தாவதாரம் எடுத்து திரிபுரத்திலுள்ளவர்களின் விரதத்தை அழித்ததுபற்றிப் பாத்மமும் அரிவம்சமும் உணர்த்தும்.
‘அரிபஞ்சரம்’ என்ற மந்திரத்தை அயன் உபதேசித்தது பற்றி நாரதீயம், மந்திரசாலம் என்ற நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

சிவன் தேவர்கள்பால் ‘பசுபதி’ என்ற வரத்தைப் பெற்றனன் என்பது யஜூர்வேதத்தில் ஆறாம் காண்டம் இரண்டாம் பருச்சத்தில்
(ப்ரஸ்னத்தில்) காணலாம். இவை வடமொழிச் சான்றுகள்.

இனி நந்தம் தமிழ்மொழிச் சான்றுகளைக் காண்போம்.

தமிழர் சமயத்தையும், கொள்கை களையும், வாழ்க்கை நெறிமுறை களையும் தெள்ளத் தெளியக் காட்டுவன
சங்க கால இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு,
மற்றும் இதன்பின் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் தமிழர்களது சமயத்தை அறிய
மிகவும் பயனுள்ளவை களாகத் திகழ்கின்றன. அவற்றுள் சிலவற்றில் சிவபிரான் திரிபுரம் எரித்த வரலாறு வருகிறது.

“மூலவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்” எனத் திருமுருகாற்றுப் படையிலும்;

“ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்து.”
என்று கலித் தொகையிலும்;

“ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல்.”[புறம் 55;-1-4]
என்றும் புறநானூற்றிலும் இவ்வரலாற்றினைக் காணலாம்.

இப்புறநாநூற்றுச் செய்யுளில்,
‘ஒருகணை கொண்டு மூவெயிலுடற்றி’ என்ற இடத்தில், முன்பு பல கணைகளினாலே அழிக்க முடியாமல்,
அசுரர்களைத் திருமாலாகிய ஒரே அம்பினால் அழித்தான் என்பது பெறப்படும்.

எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று. பரிபாடலை, ‘ஓங்கு பரிபாடல்’ என்று உயர்வாகக் கூறுவர்.
சிறப்பு மிக்க அப்பரிபாடலில், சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாறு கூறப்படுகிறது. அதனை அடியிற் காண்போம்.

“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர்எயில் ஓர் அழல்– அம்பின் முளிய மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்” [பரிபாடல் 5]

சிவபெருமான் பூமியைத் தேராகவும், நான்கு வேதங்களையும் நான்கு குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும்,
மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவுங்கொண்டு, அக்னிவடிவமான(திருமாலாகிற) ஒரே அம்பினால்
திரிபுரத்தை எரிததார் என்று மேலே கண்ட பரிபாடல் விளக்குகிறது.

தக்ஷன் சாபத்தினால் யாகத்தில் சிவனுக்கு அவிர்பாகம் இல்லா மலிருந்தது,
இத்திரிபுர சம்ஹாரம் செய்ததற்குப் பிரதியுபகாரமாகத் தேவர்களிடம் ‘பசுபதி’ என்ற பேரைப் பெற்று
யாகத்தில் அவிர்ப்பாகமும் பெற்றார் என்பதை
“அம்பின் முளிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்” என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.

இதில் சிவபெருமானுக்குச் சாரதியான பிரமனைக் கூறுமிடத்து ‘ஆதி அந்தணன்’ என்றும் சிவபெருமானைக் கூறுமிடத்து
‘பைங்கட் பார்ப்பான்’ என்றும் கூறப்படுகிறது. பிரமன் முதலில் தோன்றியவனாகையினாலே ‘ஆதி அந்தணன்’ என்றார்.
பிரம்மனுக்குப் பிறகு தோன்றியத னாலே சிவபெருமானை ‘பைங்கட் பார்ப்பான்’ என்றார்
ஆகவே, சிவனிலும் பெரியோனாகிய பிரமன் சாரதியானதினாலும்,

“செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி
கல் உயிர் சென்னி இமய வில் நாண் ஆகி தொல் புகழ் தந்தாரும் தாம்”[பரிபாடல் திரட்டு 1]
என்ற பரிபாடல் திரட்டின்படி,
ஆதிசேஷன் நாணாகியதனாலுமே சிவபெருமான் திரிபுரம் எரித்த புகழை அடைந்தார் என்று தெளிவு பெறுகிறது. மேலும்,

“ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ” [பரிபாடல் 1]

என்ற பரிபாடல் அடிகளில், திருமாலே சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து உலகங்களை ஸம்ஹரித்தார் எனக் கூறுகையாலே,
அவரே சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து திரிபுரங்க ளையும் அழித்தார் என்பதும் விளங்கும்.
பிரமன் படைப்பும், சிவன் அழிப்பும் அவர்களுக்கு அந்தர்யாமிருந்து திருமால் ஒருவனே செய்கிறான் என்பதே
மேலே கண்ட பரிபாடற் பகுதிக்குப் பொருள் என்பதை—
“ஐந்து தலையைத் தோன்று வித்த அணங்குடை அருந்திறலையுடைய ஈசன்; மடங்கல்— அவனினாய உலகுயிர்களின் ஒடுக்கம்.
பூவில் நான்முகனும் அவனினாய உலகுயிர்களின் தோற்றமும் நீ. அழிப்பும் படைப்பும் கூறியவாறு” என்னும்
பரிமேலழகர் உரைகொண்டு தெளிக.

அன்றியும், நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் மாயோனே வேதமுதல்வன் எனவும், அவன் உயிர்கள் எல்லாவற்றினும்
அந்தர்யாமியாக விளங்குகிறான் எனவும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுவதையும் அடியிற் காண்க.

“மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே”[நற்றினை:க.வா]

இப்பாடலில் “இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் –தீதற விளங்கிய திகிரியோன்(சக்ரதாரி)” என்ற
அடிகளில் ஸர்வேஸ்வரனின் ஸர்வாந்தர்மித்வத்தை ஆசிரியர் ஆணித்தரமாக அடித்துக் கூறுவது காண்க.

“பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுர மெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்” [சிலம்பு:கடலாடுகாதை 36-43]

என்று சிலப்பதிகாரம் கடலாடுகா தையில் சிவபெருமான் திரிபுரம் எரித்தது பற்றிய செய்தி காண்கிறது. இவ்வடிகளுக்கு;

“தேவர் புரமெரிய வேண்டுதலால் வடவையெரியைத் தலையிலே யுடைய பெரிய அம்பு ஏவல்கேட்ட வளவிலே
அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்கு வையாகிய பாரதியரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று
பரணி, தூக்கு, சீர் என்னும் தாளங்களைச் செலுத்தத் தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன் சயானந்தத்தாற் கைகொட்டி நின்று
ஆடிய கொடுகொட்டியென்னு மாடலும்” “முகம்—தலை. பேரம்பு– பரமபுருடன். ஏவல்கேட்ப— சுட்ட வளவிலே” என்ற
அடியார்க்கு நல்லார் உரைனையும் காண்க.
இக்கூற்றிலிருந்தும் பரமபுருட னான திருமாலே அம்பாயிருந்து திரிபுரம் எரித்தார் என்பது விளங்கும்.

இனி அருளிச்செயலை நோக்குவோம்,

“சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித்து அமரர்க்கு மறிவியந்து அரனய னென உலகழித் தமைத்துளனே”
[திருவாய் 1-1-8]
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் திருமாலே சிவனுக்கு அந்தர்யாமியாக இருந்து முப்புரத் தையும் எரித்தான் என்பது விளங்கும்.
இப்பாசுரத்தின் ஈடுமுப் பத்தாறாயிரப்படி வியாக்கியானத்தில்–
“தான் பூட்டின நாணி தன் கழுத்தை யறுத்துக் கொண்டு போகாதொழியும் போதும் ஈச்வரன்
அந்தராத்மாவாய் நிற்க வேணும்” என்பது நோக்கத்தக்தாகும்.
இதன் கருத்தாவது;–“வாயு,இந்திரன், வருணன், அக்நி முதலானவர்களோ, மனிதர்களோ யாராயினும் சரி, எனக்கு ஈடல்லர்” என்று
உருத்திரன் செருக்குற்றிருந்தார் ஒருசமயம். அந்த உருத்திரன் தனது வில்லை ஊன்றிக்கொண்டு நின்றார்.
அந்த வில்லின் ஒருமுனை மண்ணிலும், மற்றொரு முனை விண்ணிலுமாகியது.
இதையுணர்ந்த இந்திரன் செல்லு (கரையான்) வடிவம்கொண்டு அந்த வில்லின் நாணியை மென்று தின்றுவிட்டான்.
நாணியற்ற அந்த வில் உடனே எழும்பி மேகமண்ட லத்தில் பாய்ந்து விட்டது. அப்படி அது மேலே எழும்பும்போது
உருத்திரனுடைய தலையை அரிந்துகொண்டு போயிற்று.
இன்றும் அந்த வில் நாணி இல்லா ததாக மேகமண்டலத்தில் தோன்று வது காணலாம்.
இக்காரணத்தினா லேயே அது “இந்திர தனுசு” என்று சொல்லப்படுகிறது.
இந்த வரலாறு தைத்திரீய ஆரண்யகத்தில் [1-5] கூறப்பட்டிருக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு தான் மேலே கண்ட ஈட்டு ஸ்ரீஸூக்தி அவதரித்திருக் கிறது என்று முன்னோர் மொழிவர்
அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு துணை செய்யாமையால் உருத்திரன் தலை இழந்துபோகும்படியாக நேர்ந்தது.
திரிபுர சம்ஹார காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு துணைசெய்தமையால் அப்படிப் பட்ட ஆபத்து ஒன்றுமில்லாமல்
சிவன் வெற்றி பெற்றார் என்பது விளங்கும்.

இதைத் திருவுள்ளம்பற்றி,

“குழல்நிற வண்ண நின்கூறு கொண்ட தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனிமலை சிலைவளைவு செய்து, அங் கழல்நிற அம்பது வானவனே”
[பெரியதிருவாய் 6-1-3]
என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்வதிலிருந்தும் திருமாலே தீயுமிழும் அம்பாக இருந்து
திரிபுர தகனம் செய்தார் என்பது பெறப்படுகிறது.

“கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்கவாறும் கலந்த உள்ளம் பேதம்செய்திட் டுயிருண்ட வுபாயங்களும் [சுரரை
வவெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்தென்னுயிரை யுருக்கியுண்ணுமே” [திருவாய் 5-10-4]
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில், பௌத்தாவதாரம் எடுத்து, திரிபுரம் சென்று அங்குள்ள அசுரர்களின்
உள்ளத்தைப் பேதித்துத் திருமாலே திரிபுரம் எரிய உதவினன் என்று நம்மாழ்வார் கூறுவதை ஒப்புநோக்குக.

திரிபுர சம்ஹார காலத்தில் சிவபெருமானுக்குப் பிரமன் சாரதியானது பற்றி,

“செங்கோல மலரிலிருந் தனைத்து மீன்ற திசைமுகன்தான் அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை
பங்கோனுக் காதிமறைப் புரவி பூண்ட படிக்கொடித் தேர் கடவு தனிப்பாகனானான்
பொங்கோதப் பாற்கடலா னிவனென்றியாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து
வெங்கோப விசயனுக்குச் சூதனானான் விசயனுமன்(று) உத்தரன்தேர் விசையி னூர்ந்தான்”
[வில்லிபாரதம்:கர்ண 28]
என வில்லிபாரதம் கர்ணபர்வம் 28ஆம் பாடல் விவரிக்கிறது.

இனி; “அந்த அரனே….மாந்தர்காள்” என்ற செய்யுளுக்கு விளக்கம்;
திருமால், சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்த காலத்தில் சிவபெருமான் அநுமனாகப் பிறந்து இ
ராமபிரானுக்கு வாகன மாகத் தாங்கித் தொண்டு செய்ததை இந்த உலகமே அறியும். இ
தனைக் கற்றுணராத நீவிர், திருமால் சிவனை விருஷபமாகத் தாங்கினார் என்று சொல்லுவது எ
க்காரணம் பற்றி? என்பது கருத்தாகும். இதற்குச் சான்று;

“வாயுமற் றெனது கூறு மாருதி யெனலு மற்றோர் காயுமர்க் கடங்க ளாகிக் காசினி யதனின் மீது போ
யிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானே வாத சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க் கவதி யுண்டோ”.
[கம்ப: பாலகாண்டம்; திருவவதார 27]
எனும் பாடலில், கம்பநாட்டாழ்வார்
‘புராரி மற்றியானே வாத சேய் எனப் புகன்றான்’
[திரிபுரமெரித்த சிவன் ‘வாயுபுத்திரனான அனுமன் யானே’ எனக் கூறினார்] என்று கூறுவது காண்க.

“தூளாய்த் தலைசிதறி….கொல்லாவிட்டால்”.–என்ற செய்யுளை இனி விளக்குவோம்.

அவர் தந்த வரம் உண்மைதானா? என்று பார்க்க உம் கையினால் உம் தலையையே தொட்டுப்பார்த்தலே
அது பொய் யென்று உணர்ந்துகொள்வீர்; அவர் வரம் ஒருநாளும் பலிக்காது’ என்று கூறினார்.
விருகாசுரனும் பிரம்மசாரியின் சொற்களிலே மனம் மருண்டு, தன் கரத்தைத் தன் தலையிலே வைத்தான்.
உடனே அவன் தலை தூள் தூளாய்ச் சிதறி விழுந்தது.
பிறைசூடியாகிய சிவனும், ‘நம் துன்பம் இன்றோடு நீங்கியது’ என்று மாயனை வாயார வாழ்த்தினார் என்பது வரலாறு.

இனி இதன் சான்று;..

“வாய்விரி யெருக்கமலர் மாலைதலை சூடாக் காயழல் பரந்தசுடு காடெழி லரங்காப்
பேயொடு நடிக்குமொரு பித்தனுரை மெய்யோ? ஆயிர முடித்தலை யனந்தனை நிகர்ப்பாய்!”

“மின்னொழுகு கொற்றவடி வேலுழவ! மற்றுன் சென்னி கரம் வைத்தது தெளிந்திடுத லன்றே
நன்னிலைமை யித்திற(ம்)முன் நாடுதி யெனத்தன் மன்னிய தடக்கைதலை வைத்தவுணன் மாண்டான்.”

“நன்றென மகிழ்ந்தமரர் நாண்மலர் பொழிந்தார் வென்றிமழு வாளனும் வியந்தன னடைந்தான்
மன்றகமழ் தண்டுளவ மாயனு மகன்றான் என்றுமுனி புங்கவ னெடுத்தன னிசைத்தான்.”

என பாகவதம் தசமஸ்கந்தம் விருகாசுரனைக் கொலைபுரி அத்தியாயத்தில் கூறப்படுவது காண்க.

எனவே, திரிபுரம் ஸ்ரீமந் நாராயணன் துனையோடுதான் அவன் பங்கேற்றதால்தான் சிவன் தகனம் செய்தார் என்பது விளங்கும்
இதனால் ஸ்ரீமந் நாராயணனே அனைத்து தேவர்களுக்கும் அந்தர்யாமி என்பதும் புலப்படும்.

———–

வேதமுதல்வன் பகவான் ஸ்ரீஹரியே!

சைவர்கள் தங்கள் சைவாகமத்தை வைத்துக் கொண்டு “எங்கள் ஈசன் தானே வேத முதல்வன்” என்று வாதிடுகிறார்கள்!
ஆனால் அனைத்து வேதங்களின் முடிவே ஸ்ரீமந் நாராயணனே(ஹரி) என்று வேதாந்திகளான
ஸ்ரீராமானுஜர, மத்துவர், ஆதிசங்கரர் மூவரும் வேதங்கள் சொல்லும் நாயகன் நாராயணனே என்று
முற்றுப்புள்ளி வைத்ததை இவர் அறியார்கள் போலும்..!

பிரம்ம ஞானத்தை தரும் இருக்கு, யஜூர், ஸாமம், அதர்வணம் என்ற வேதம் நான்கினையும் அந்தணர்கள்
ஓதத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் “ஹரி: ஓம்” என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்லுவதை இவர்கள் அறிவில்லையோ?
உலகிற்க்கு ஆதியாவானும், அந்தமாவானும் அரியே என்பதை உணர்ந்தவன்றோ அவர்கள் அவ்வாறு கூறுகிறனர்.

வேதத்தில் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகிற ‘ஹரி:’ என்ற சப்தத்திற்கு வியாஸர்
‘பிரம்மாவையும், இந்திரனையும், உருத்திரனையும், இயமனையும், வருணனையும் நிக்ரஹித்து ஹரிக்கின்ற காரணத்தாலே
ஹரி என்று சொல்லப்படுகிறான்’ என்று அருளிச்செய்கிறார்.
இதற்க்கு சங்கராசாரியர் செய்த அத்வைத பாஷ்யத்திலும் இப்படியே வியாக்யானம் செய்திருக்கிறார்”. என்று
கூரேச விஜயத்தில் கூறுவதை நோக்குக.

“எல்லா உலகங்களுக்குத் தாயும், தந்தையும், கர்மபலத்தை விதிப்பவனும், அறியவேண்டிய பொருளும், பாவனமானவனும்,
வேதத்திற்கு முதற்காரணமான ஓங்காரம் என்னும் பிரணவ ஸ்வரூபியும், இருக்கு, யஜூர், சாமவேதங்களும் நானே” என்று ஸ்ரீ பகவத்கீதையில்,
“பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: |
வேத்யம் பவித்ர மோங்கார: ருக் ஸாம யஜூரேவ ச||”
(பகவத்கீதை 9-17) என்று கீதாச்சாரியனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச்செய்திருப்பது காணத்தக்கது.

“வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே|
வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாணாத்மநா||”
[வேதத்தினால் அறியத்தக்க சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீராமனாக அவதரித்தபோது, வேதம் ராமாயணமாக வால்மீகியிடம் இருந்து அவதரித்தது.]
என்று ஸ்ரீராமாயணத்தின் பெருமை கூறும் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது மேலே காட்டிய கீதைப் பொருளை உணர்த்துவதை காணலாம்.

மேலும், தமிழ் இலக்கியங்களில் மிகப்பழைமையான பரிபாடலில் திருமாலைக் கூறுமிடங்கள் தோறும்,
‘நாவல் அந்தணர் அருமறைப் பொருளே’ என்றும், ‘முதுமொழி முதல்வ’ என்றும்,

‘தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்புநீ;
மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறைநீ; பூதத்துள் முதலும் நீ;”
என்று கூறிச் செல்லுமிடத்து, ‘வேதத்தில் மறைந்துநிற்க்கும் பொருள் நீயேயாவாய்’ என்று விளக்குவது உணரத்தக்கது.

“வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே”
என்ற நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் இறுதி இரண்டடிகளுக்கு,
“வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனேயென்று ஆன்றோர் கூறிநிற்பர்;
ஆதலின், யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு.” என்று பொருள் கூறி
அவனை விளக்குமிடத்து, ‘இறைவனது பரத்துவங் கூறுவார் வேதமுதல்வன்றார்.

விடமுண்ட கண்டனே வேதமுதல்வனாபின், அந்தணர்கள் அவ்வேதங்களை ஓதும்போதெல்லாம் ‘ஹரி: ஓம்’ என்று தொடங்குவதும்,
முடிக்கும்போதும் ‘ஹரி: ஓம்’ என்று முடிப்பதும் பொருந்துமோ? “ஹரி: ஓம்” என ஓதுவது உலகிற்கு ஹரியே
வேதத்தினுட்பொருள் என்பதை விளக்கவன்றோ? இந்த உண்மையை ராமாயணத்தைத் தொடங்கும்போதே,

“ஆதி யந்த மரியென யாவையும் ஓதி னாரல கில்லன வுள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி நன்மையன் பாத மல்லது பற்றிலார்”(3)
என்று கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமான் தெளிவுபடுத்தினார்;
இராமாயாணத்தின் பிற இடங்களிலும் திருமாலே வேத முதல்வன் என்பதை விளக்கினார்

“வேதங்க ளறைகின்ற வுலகெங்கும் விரிந்தனவுன் பாதங்க ளிவையென்னிற் படிவங்க ளெப்படியோ?
ஓதங்கொள் கடலன்றி யொன்றினோ டொன்றொவ்வாப் பூதங்கள்தொறு முறைந்தால்
அவையுன்னைப் பொறுக்குமோ”[ஆரணிய-விராதன்வதை – 48]

என வேதங்கள் அறைகின்ற பாதங்கள் திருமாலின் திருவடியே என்று விராதன் துதியிலும்,
வாலி தன் பிழையினைப் பொறுக்குமாறு இராமனை வேண்டி, சுக்ரீவனுக்குச் சொல்லுமிடத்து,
[வாலிவதைப்படலம் 132]

“மறைகளு முனிவர்யாரு மலர்மிசையயனு மற்றைத் துறைகளின் முடிவுஞ்சொல்லுந் துணிபொருள் நுனிவில்
அறைகழலி ராமனாகி யறநெறி நிறுத்தவந்த [லேந்தி இறையொரு சங்கையின்றி யெண்ணுதி யெண்ணமிக்கோய்” என்றும்,
சுந்தரகாண்டம் காப்புச்செய்யுளில்,
“அலங்கலிற் றோன்றும் பொய்ம்மை அரவெனப்பூத மைந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டா லவரென்பர் கைவி லேந்தி இலங்கையிற் பொருதா ரன்றே மறைகளுக் கிறுதி யாவார்” என்று
‘மறைகளுக்கிறுதியாவார் எனக்கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. இரணியன் வதைப்படலத்தில் பிரகலாதன் வாயிலாக,
“தொல்லை நான்மறை வரன்முறைத் துணிபொருட் கெல்லாம் எல்லை கண்டவ னகம்புகுந் திடங்கொண்ட தென்னுள்”(28) என்றும்,

“ஆரைச் சொல்லுவ தந்தண ரருமறை யறிந்தோர் ஓரச் சொல்லுவ தெப்பொரு ளுபநிட தங்கள்
தீரச் செய்வினை தேவரும் முனிவருஞ் செப்பும் பேரைச் சொல்லுவ தல்லது பிறிதுமொன் றுளதோ”(29) என்றும்,

“வேதத் தானும் நல் வேள்வியி னானுமெய் யுணர்ந்த போதத் தானுமப் புறத்துள எப்பொரு ளானும்
சாதிப் பார்பெறும் பெரும்பதந் தலைக்கொண்டு சமைந்தேன் ஓதிக் கேட்பது பரம்பொரு ளின்னமொன் றுளதோ” (30) என்றும்
வேதப்பொருளை உணர்த்துவதையும், மேலும், பிரகலாதன் இரணியனது வினாவிற்கு விடையிறுக்கும் பொழுது
“வேதத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் கூறும்
“ஹரி: ஓம்” என்ற திருமாலின் திருநாமததையே நான் கூறினேன் எனக் கூறும்.

“சுருதி யாதியில் தொடங்குறு மெல்லையிற் சொல்லும் ஒருவன் யாவர்க்கும் நாயகன்
திருப்பெய ருணரக் கருதக் கேட்டிடக் கட்டுரைத் திடர்க்கடல் கடக்க உரிய மற்றிதின் நல்லதொன் றில்லென வுரைத்தான்” (40)
என்னும் செய்யுளில் ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவதையும் ஐயங்கார் பாடலோடு ஒப்பு நோக்குக.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக விபீஷணன் அடைக்கலப் படலத்தில்(113) இராமன் வாயிலாக,
“போதக மொன்று கன்றி யிடங்கர்மாப் பொருத போரின் ஆதியம் பரமே யானுன் னபயமென் றழைத்த வந்நாள்
வேதமு முடிவு காணா மெய்ப்பொருள் வெளிவந் தெய்தி மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்.”
என வேத நாயகனை மெய்ப்பிப்பதையும்,

தான் இராமபிரான் தூதன் என்று அங்கதன் இராவணனுக்குத் தெரிவிக்குமிடத்தில்,
“பூதநாயகன் நீர்சூழ்ந்த புவிக்கு நாயகன் இப்பூமேற் சீதைநாயகன் வேறுள்ள தெய்வ நாயகன் நீசெப்பும்
வேதநாயகன் மேல்நின்ற விதிக்கு நாயகன் தான்விட்ட தூதன்யான் துணித்தமாற்றஞ் சொல்லியவந்தேன் என்றான்.”
(உயுத்த – அங்கதன் தூது -21)
என்று ‘சீதைநாயகனான திருமாலே வேதநாயகன் என்றுரைப் பதையும் காண்க.

“இலட்சுமணன் தன்னாலான மட்டும் முயற்சிசெய்தும் இந்திரஜித்தை வதைக்க முடியாமல் திகைத்துக் கடைசியாக
ஒரு பாணத்தை எடுத்து, ‘வேதத்தின் முடிவாகக் கூறப்படும் பரம்பொருள் இராமன் என்பது உண்மையானால்,
இந்த அம்பு இந்திரஜித்தின் தலையை அறுக்கக்கடவது ‘ என்று சொல்லி ஏவி விட்டான்;
அக்கணமே இந்திரஜித்தின் தலையை அவ்வம்பு கொய்தது” என்று பொருள்படும் பின்வரும் பாடலும் நோக்குக:-[உயுத்த -இந்திரசித்து-51

“மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற் பால இறையவ னிராம னென்னு நல்லற மூர்த்தி யென்னில்
பிறை யெயிற் றிவனைக்கோறி யென் றொரு பிறைவாய்வாளி நிறையுற வாங்கி விட்டா னுலகெலா நிறுத்தி நின்றான்.”
வேதநாயகன் திருமாலே எனக் கம்பநாட்டாழ்வார் இராமாயணத்தில் மேலும் பல இடங்களிலும்
விளக்குவது கற்றறிந்ததோர் கண்ட உண்மையாகும்.

“மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன் பிறவிப் பெருந்துயர மெல்லாம் — அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை அழைத்தேவல் கொண்ட அரசு”[நளபெண்பா: சுயம்..4] என்று
கம்பர் காலத்தவரான புகழேந்திப்புலவர் நளவெண்பா சுயம்வரகாண்டம் 4-வது கவியில்
ஆழியானையே ‘மறை முதல்வன்’ என்று அறுதியிடுவது காண்க.

“அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணணைத்
திருமகள் தலைவனைத் தேவ தேவனை இருபத முளரிக ளிறைஞ்சி ஏத்துவாம்”[வில்லிபாரதம்: வாரணா.கடவுள் வாழ்த்து]
என வில்லிபுத்தூரார் பாரதத்தில் வாரணாவதச்சருக்கத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் பாடலில்
‘ஆழிமாயனே அரு மறை முதல்வன்’ என்பது நோக்குக.

“மொழிமறைமுடிமே, லெழுமுதலவே செழுவடமலைவாழ், விழுமியபொருளே”
[திருவேங்கடக்கலம்பம்]

[சப்தஸ்வரூபமான வேதங்களின் அந்தமாகிய உபநிஷத் துக்களில், விளங்கிக் காணப்படுகின்ற முதற்பொருளாகிய
அதுவே வேங்கடமலையில் வாழும் சிறந்த பொருளாகும்] என்று வேதப் பரம்பொருளே வேங்கடத்திலுறையும் திருமால்
என்னும் திருவேங்கடக் கலம்பகம் 76 ஆம் பாடலை ஒப்புநோக்குக.

இவற்றை சுமார் 50 வருடங்களுக்கு முன் பாலர்களை முதன்முதல் பள்ளிக்கு வைக்கும்பொழுது ஆசிரியர்,
ஓலைச்சுவடி ஒன்றில் ‘ஹரி: ஓம் நமோ நாராயணா சித்தம்’ என்று எழுதி
அச்சு வடியில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் மாணவனுடைய விரலைப் பிடித்துக் காட்டிக்கொடுத்துப் படிக்கும்படி செய்து அதன்பிறகே
‘அ, ஆ’ என்ற உயிரெழுத்து முதலாகக் கற்பிப்பார்.
அந்த ஏட்டுக்கு ‘அரிச்சுவடி’ என்று பெயர் அச்சுப் புத்தகத்திலும் முதற்புத்தகம் அரிச்சுவடி என்றே காணப்படும்.

“அரியென்று சொன்னால் அளியென்று சொல்லும் வரிவண்டு பேசி வருமோ”
என்பது அழகர் கிள்ளைவிடுதூது.
இதற்கு, “அரி என்பது திருமாலின் பெயர்; அதைக் கூடச் சொல்லத் தெரியாது என்பது,
அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய ‘அரி’ என்பதே தெரியாதென்பதும்” என்பது
டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுடைய குறிப்புரை.
ஆகவே சைவர்களும் அரிச்சுவடியை ‘அரிச்சுவடி’ என்றோ, ‘சிவச்சுவடி’ என்றோ கூறுவதில்லை.
பண்டைச் சான்றோர்கள் முழுமுதற்கடவுளான அரியின் பெயரைக்கொண்டே ‘அரிச்சுவடி’ என்றார்கள் என்பது இங்கு கருதத்தக்கது.

இன்றும் பெரியோர்கள் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்று கூறுகின்றனர்.
அந்தணர்கள் செய்து வரும் சிராத்தங்களில் தத்தம் விடும்போது, ‘ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம்’ என்று கூறி
தாங்கள் செய்த கர்மாக்களின் பலனை எல்லாம் ஸ்ரீவிஷ்ணுவின் அடிக்கமலத்தில் அர்ப்பணம் செய்கின்றனர்.
ஸந்த்யாவந்தனம் செய்பவர்கள் முடிவில் ‘சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்’ என்று கூறி முடிக்கின்றனர்
இதிலிருந்து அரியே வேதமுதல்வன் என்பது தெளிவாகிறது.

———–

பரம புருஷ பகவானின் அவதார மகிமை!
பரம புருஷ பகவானான ஸ்ரீமந் நாராயணர் பற் பல அவதாரங்கள் செய்ததனால் அவரும் மனிதர்களைப் போலே
பிறப்புடையவர் தானே அவரை எப்படி பரம்பொருள் என்று கூறுகிறீர்கள் என்று வேதம் அறியாதவரும்
அவன் அவதார ரஹஸ்யம் அறியாதவர்களும் புத்தியில்லா பித்தர்களைப்போல் பிதட்டுகின்றர்

பிறப்பற்றவனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன் அடியார்கள் துயர்தீர்ப்பதற்க்காகத் தன்னிச்சையாய்
இந்நிலவுலகின் எம்பெருமான் பிறக்கிறான் என்று வேதம் கூறுவதை இவர்கள் அறியார்கள் போலும்..

தர்மத்தை நிலைநிறுத்தி, தர்மம் செய்பவர்களைக் காக்கவும், வெப்பத்தையுடைய தீயைப்போன்ற
கொடியவர்களை அழிக்கவுமே நான் பிறக்கிறேன் என்று கீதாச்சாரியனான கண்ணன் எம்பெருமான் கூறினான்!

“பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே”[பகவத் கீதை 4.8]
“பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.”

பகவான் தன் பக்தர்களை ரட்சிக்கவே பலவிதவாக தன்னிச்சையால் பிறக்கிறார். இதைய வேதம் உரைக்கிரது..;

“பிதா புத்ரணே பித்ருமாந்
யோநியோநௌ நாவே
தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்” [யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந”
[யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்”
[புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி
அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” [புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

பரமாத்மாவான பகவான் ஸ்ரீஹரி சர்வ பல்லமை உள்ளவர் இவர் அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவர்
அவர் தன் இச்சையில் தன் பக்தர்களை காக்க பிறப் பெடுக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் உள்ளது
சர்வ பல்லமை பொருந்திய எம் பெருமானுக்கு அனைத்துமே அல்ப்ப செயல் தன் பக்தனைத் தவிர
அதனாலே தன் பக்தன் துயர் களையவே யுகங்கள் தோறும் எம்பெருமான் அவதரிக்கிறான்.

“ஸர்வதா ஸர்வக்ருத் ஸர்வ: பரமாத்மேத்யுதாஹ்ருத:”
(எப்பொழுதும் எல்லாவற்றையும் செய்பவரும் எல்லாம் ஆனவருமே பரமாத்மா என்று சொல்லப்படுகிறார்)
வேதம் முழங்குகிறது எல்லாம் செய்பவரே பரமாத்மா அவனா பிறப்பெடுப்பதா பெரிதொரு காரியம்.!

(விஜாயதே) பல விதமாகப் பிறக்கிறான் என்றும், விசேஷமாகப் பிறக்கிறான் என்று பொருள் கொள்ளலாம்.
தேவர் முதலிய ஒவ்வொரு ஜாதியிலும் பல விதமாகப் பிறக்கிறான் என்றார் நாராயணமுனி.
(விஸேஷேண ஜாயதே) விசேஷமாகப் பிறக்கிறான். அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப் பிறக்கிறான்.
சங்கொடு, சக்கரம், வில், ஒண்மையுடைய உலக்கை, ஒள்வாள் தண்டு கொண்டு பிறக்கிறான்.
பிறந்த பின்பே மேன்மையடைகிறான்.
வேதத்திலும், “யுவா ஸுவாஸா: பரிவீத ஆகாத் ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந: தம் தீராஸ: கவய உந்நயதி”
(யௌவனத்தையுடையவனாகவும், அழகிய பீதாம்பரத்தைத் தரித்தவனாகவும், நித்யசூரிகளால் சூழப்பட்டவனாகவும்
புருஷோத்தமன் பிறக்கிறான். அவன் பிறந்த பின்பே மேன்மையுடைவனாகிறான்.
அவனைத் தீரர்களான கவிகள் தியானிக்கிறார்கள்) என்று சொல்லப்படுகிறது.

தன் அடியார்களுக்கு ஆபத்து ஏற்படும் காலத்தையே தனக்கு பிறக்கைகுக் காலமாகக் கொண்டு எம்பெருமான் பிறக்கிறான்.
அர்களுடைய சம்ரக்ஷணத்தையே பிரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்.
“ஆவிர்பூதம் மஹாமத்மநா” (மஹாத்மாவான நாராயணன் ஆவிர்ப்பவித்தான்) என்று பராசர மஹரிஷி
‘அவதரித்ததினால் தோஷமில்லை’ என்பதைக் காட்டுவதற்க்காக
‘ஆவிர்பவித்தான்’ என்று உரைத்தார்.

நம்மாழ்வார் வாக்கு:-“உயிரளிப்பான், எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா” [திருவிருத்தம்-1]

“சாதுசனத்தை நலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப் பிறந்த
வேதமுதல்வ னைப்பாடி வீதிகடோறுந் துள்ளாதார் ஓதியுணர்ந்தவர்முன்னா என்சவிப்பார் மனிசரே” (திருவாய்மொழி 3-5-5)
என்ற திருவாய்மொழியில்; பகவான், தன்னடியார்களின் விரோதிகளை ஒழித்துக்கட்டுவதற்க்காகவே
தன்னுடைய அசாதாரண ரூபத்தோடு கூடவே வந்து அவதாரம் செய்த திருக்கல்யாண குணத்தை நினைத்து
ஈடுபடாதவர்கள் செய்கிற தவம் ஜபம் முதலான எல்லாம் பயனற்றவை என்று கூறுகிறது.

பகவான் தன் இஷ்டத்தின் படி பிறக்கிறார்
எனவே பகவான் ஸ்ரீமந் அவதாரங்கள் அற்புதமானவை அவர் பரமாத்மா என்பதை வேதம் முதற்க் கொண்டு முழங்குகிறது.
சர்வ வல்லமை உள்ள பரமாத்மா கலங்கமில்லாமல், கர்மா வினை இல்லாமல் தன்னிச்சையில் பிறக்கிறான்
என்பதை வேதம் உரைக்கிறதை அறியலாம்.
பகவான் கர்மவினையால் பிறந்தான் என்பதை எந்த சாஸ்த்திரமும் கூறவில்லை
எனவே எம்பெருமானை சாதாரண மனிதர்போல் எண்ணம் கொள்வது
போலிக் கதைகளை புனைபவர்களை துர்பாஷாண்டார்கள் எனலாம்.

———

சங்க இலக்கியம் காட்டும் சர்வேஷ்வரன்

சங்க இலக்கிங்களில் சர்வேஷ்வரனான பகவான் திருமால் பற்றிய சிலவற்றை காண்போம்;

“சாயல் நினது வான் நிறை என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே!”
[பரிபாடல் 2-56,57]
“நினது நிறமும் அருளும் நீர் நிறைந்த மேகத்தை மேகத்தையொக்கும் என்று நாவன்மையுடைய
அந்தணர் ஓதும் அருமறைப்பொருள் கூறும்”

“மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய் மொழி உரைதர”[பரிபாடல் 3-10,11]
“மாயப்பிரானே! உலகம் முழுவதும் உன்னிடமிருந்தே உண்டாயிற்று என்பதை அழியாத வேதம் ஓதவதைக்கொண்டு நாம் சொன்னோம்”

“தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை”[பரிபாடல் 3-13,14]
“தாமரைப் பூவில் பிறந்த பிரம்மனும் அவனது தந்தையும் திருமாலாகிய நீயே என்று அந்தணர் ஓதும் அருமறை முழங்குகிறது”

“பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவலின் முதுமொழி கூறும்”[பரிபாடல் 13-38,39,40]
“பாம்புக்குப் பகையான கருடனைக் கொடியாகக் கொண்ட அழியாத செல்வமுடைய திருமாலை
எவராலும் இயற்றப்படாத முதுமொழியான வேதம் பரம்பொருளாக் கூறும்”

“புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்”[பரிபாடல் 15-49,52]

‘கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல் கடவுளாம்’

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்….

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;[- சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை]

ஆதிசேடன் என்னும் பாம்பினை உடையவன்; திருமகளை மார்பில் உடையவன்; ஒரு குழையை உடைய பலதேவனாகவும் இருப்பவன்;
அந்தணரின் அருமறைப் பொருளானவன் எனப் போற்றுகிறது பரிபாடல் (பரி. 1:1-14).
மற்றும் ஐம்பெரும் பூதங்களாகவும் இருப்பவன் (பரி.13:15-25) என அவன் புகழைச் சொல்லி வழிபடுகின்றனர் மக்கள்.

எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ(பரி. 3:63-68)-எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம்,வாய்மை = உண்மை, மைந்து = வலிமை,
பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி – குளிர்ச்சி)

மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல்,சுரத்தல் = விருப்பம் நிகழ்தல்,
வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல்,நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர்,
ஒலி = சொல்,வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்.
ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி
எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.

1.2.2 அவதாரங்கள்

திருமால் அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி எனப் பத்தாகும்.

கூர்ம அவதாரம்
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக.
அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.
தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாகஉருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம்.
இச்செய்தியைப் பரிபாடல் திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.

திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்(64-71)

(முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி = உச்சியில்ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி),
இருதிறத்தோர் = தேவர், அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)

வராக அவதாரம்
இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டிஎடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான்.
இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்குஉதவுமாறு வேண்டினர் தேவர்கள்.
திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;(பரி. 2:16-18)

(கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)
(கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)

நரசிம்ம அவதாரம்
இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதைநரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும்.
இரணியன் தன்னை விலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில்
யாரும் எந்த நேரத்திலும் தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப்
படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.
தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன்வணங்க மறுத்தான்.
இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க,
மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான்.
இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப் பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத்
தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.

இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).

வாமன அவதாரம்
குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமன அவதாரம் ஆகும்.
அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து,
மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து
அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.

பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன்
திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தை எடுத்துரைக்கின்றது.
கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.

பரசுராமன் அவதாரம்
திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக் களத்தில்,
கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,

மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல (அகநானூறு : 220-5-9)

(மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன் = மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)

மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலைஉடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது).
ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளதை
நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.

இராமன் அவதாரம்
இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை(இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு
ஆராய்ந்த பொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது.
எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான்.
பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை.
எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,

வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே–(அகம்,70:13-17)

(வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய,
பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை= கடற்கரை)
எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்.
தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும்.
எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போல அலர் அவிந்து கிடக்கும்.
இப்படிப் பொருத்தமான உவமையாகப் புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர்.
இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.

கிருஷ்ண அவதாரம்
நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்துகொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே
வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல–(அகநானூறு : 59 : 3-6)

(தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட, அண்டர் மகளிர் = ஆயமகளிர்,
ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்; ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)

நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர்
குளிர்ந்த தழையை உடுத்திக் கொள்ளக்குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று
கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன் கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது.
ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள்.
‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு(103: 53-55)
(மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து,புடைத்த = அடித்த, ஞான்று = வேளை, உட்கிற்று = நினைத்து)
என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.

மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல்(52:2-3)
(நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை)

மல்லரை மறம் சாய்த்த மால்போல் (52:5)எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன.
இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும்,
மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.

பலராமன்

பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி(நற்றிணை – 32)
(மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)
எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர்.
பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.
முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண – பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.

புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண – பலராமன் ஆகிய இருவரை,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும (புறம். 56: 3-6)
(வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)
என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.

சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,
பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு(புறம், 58:14-16)என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.

ஆக, சங்க இலக்கியங்கள்
கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.
பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.

1.2.3 வழிபடு கடவுள்

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப
தீது அற விளங்கிய திகிரியோன
என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார்.
திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர்,
உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும்,
சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார்.
இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும்.
எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

1.2.4 வழிபாடு

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பற்றிப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்
அந்நாட்டு மக்கள் படித்துறையில் நீராடி, துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள
ஆழிப்படையை உடைய செல்வனாகிய திருமாலை வழிபட்டுச் சென்றனர்.

‘செல்வன் சேவடி பரவி’(பதிற்றுப்பத்து 4:1:9)
(பரவி = வணங்கி) எனப் பாடியுள்ளார்.
திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும்
இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.

திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத்
திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும்.
திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால்
திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.

வழிபடுதல்
மக்கள் திருமாலை வழிபட்டதை,
நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே (பரி. 15:63-66)
(நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை,
பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்) என்று பரிபாடல் காட்டுகின்றது.

சுற்றத்தாரோடு சென்று
மரபினோய் நின்அடி தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:(பரி. 2: 72-76)
(கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி,வாழ்த்தி = போற்றி,
பரவுதும் = வணங்குகிறோம், கொடும்பாடு = கொடிய துன்பம்)

. . . . . . . .நின் அடி தொழுதனெம்
பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.(பரி. 13:61-64)
(பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)
எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.

திருவடி
திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.
மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!(பரி. 3:1-3)
(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான,
மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்) எனப் புகழ்ந்து,

முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையேரி:3:71-72)
திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால்
அவன் பிறவாத பிறப்பு இல்லை எனச் சிறப்பிக்கின்றது.

“எனவே சங்க இலக்கியங்கள் சர்வேஷ்வரனான சக்கரத்தானை பலவதாக போற்றுகின்றன”

————-

காசி முக்தி ராம நாமத்தால்
காசியல் இறப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பது ஸ்ரீ ராம நாமத்தாலே!

இதன் வரலாறு:- முன்னொரு காலத்தில் சிவன் பிரமனின் சிரசை அறுக்க, அச்சிரம் அரனின் கையைவிட்டு அகலாதிருக்க;
பிரமஹத்தியால் வந்த வினையைத் தீர்க்கப் பிக்ஷாடராய், பூமி எங்கும் சுற்றித் திரிந்து
திருமகள் நாதன் உகந்தறைகின்ற காசி நகரை அணுகியதும், அவ்வரன் கையிலிருந்த கபாலம் கழன்று விழுந்தது.
இதைக்கண்டு சிவன், திருமாலை வணங்கி “இறைவா! நீ உகந்துறைகின்ற இத்திருப்பதியை அடைந்ததும்
என்னைப்பற்றிய பாதகம் விலகியது. நீ வாழும் பதிக்கே இவ்வளவு மகிமை என்றால் உன் புகழை யாரால் ஓதமுடியும்?” என்று துதித்தான்.

அப்பொழுது காசிநகர் மாதவனும் பரமசிவனைப்பார்த்து; “சிவனே! இன்றுடன் உமது இன்னல் அகன்றது,
இனி நீர் உமது உறைவிடமான கைலைக்குச் செல்வீர்” என்று அருளிச் செய்தார்.
சிவனும் விடைபெற்று தன் விடையின் மீதேறிக் காசிமாநகரை விட்டகன்றார்.
அந்நகரை நீங்கியதும், முன்பு போல் மண்டையோடு சிவன் கையைப் பற்றிக்கொண்டது.
மறுபடியும் காசிப்பதிக்கி வந்து கமலக்கண்ணனை அடி பணிந்து, நடந்த வரலாற்றைக் கூறி;
“மாதவா! நீ வசிக்கும் இப்புண்ணிய நகரத்தின் மகிமையால் என் மாபாதகம் நீங்கப் பெற்றேன். இனியும் இப்பதியை விட்டகல்வேனல்லேன்.
எப்பொழுதும் இனி இப்பதியிலேயே இருக்க வரந்தரவேண்டும்” என்று வேண்டினார்.

அரனுக்கிரங்கிய அச்சுதன் காசியம்பதியை சிவனுக்கு அளித்து, தான் பிரயாகையை அடைந்தான்.
அன்று முதல் சிவன் காசியில் இருந்துகொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்கொடுத்து வரலாயினான்.
இதை உணர்ந்த அந்தனரும், யோகியரும், ஞானியரும் அப்பதிக்கு வந்து முக்தியை விரும்பத் தவம் கிடந்தனர்.

இவர்களது நிலையைக் கண்ட சிவன், ‘யாம் இவர்கள் விரும்பும் முக்தியை எவ்வாறு கொடுக்கவல்லோம்? என்று பிரமனைத் தியானித்தார்.
நான்முகனும் அங்கு வந்து ‘உம் சிந்தையில் உள்ள விஷயம் யாது?’ என்றார்.
சிவ பிரானும் பிரமனை நோக்கி, “இங்குள்ள ஞானியர்கள் என்னை முக்திதரும் தெய்வமாக மதித்துத் தவம் செய்கின்றனர்
இவர்கள் கருதுவதை நான் உதவுவதற்க்கு உபாயம் உரைத்தருள்வீர்” என்று வேண்டினார்.

பிரமனும், தாரகமஹாமந்திரமாகிய ஸ்ரீராம மந்திரத்தைச் சிவனுக்கு உபதேசித்து,
“இனி கங்கைக் கரையில் சரீரத்தை விடுவோர் காதில் இம்மந்திரத்தை உபதேசித்திடுவீர்.
இதன் பயனாக அவர்களும் முக்தியைப் பெறுவார்கள்; உமது எண்ணமும் ஈடேறும்” என்று கூறி மறைந்தார்.
அன்று முதல் இன்று வரை அரன் காசியில் மரணடைபவர் காதில் ராமநாமத்தை ஓதி
அவர்களுக்கு முக்தி பேற்றைக் கொடுத்து மகிழ்கின்றனன்.
இவ்வரலாறு நாரதீயம், அகத்திய இராமசங்கிதை முதலியவற்றில் சொல்லப் பட்டிருப்பதாக இருசமய விளக்கம் விவரிக்கும்.

சான்றுகள்:- அத்வைதமத ஸ்தாபகர் ஆதிசங்கரர். அவர் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திற்க்கு பாஷ்யமிட்டார்.
கோவிந்தனையே பூஜிக்கவேண்டுமென்று ‘பஜ கோவிந்தம்’ என்ற நூலைப் பாடினார்.
அவராலேயே தாரக மந்திரமாகிய இராமநாமத்தின் ஒப்பற்ற தன்மையும் விளக்கப்பட்டிருக்கிறது.
அவர் அவ்வாறு இராமநாமத்தின் பெருமையைக் கூறுமிடத்து, காசியில் பரமசிவன் இராம நாமத்தை எப்போதும்
ஜபித்துக் கொண்டு வசிப்பதையும், காசியில் மரணமடைந்த ஜீவனுடைய காதில் சிவன் தாரகமந்திரமாகிய
இராம நாமத்தைத் தானே ‘ராம ராம ராம’ என்று உபதேசிப்பதையும் விளக்கி
“ஜனன மரணச் சிறையிலிருந்து விடுவித்துக் காப்பதும், உயிர்பிரியும்போது பரமசிவனால் உபதேசிக்கப்பெறுவதுமான
இராம நாமத்தை நான் பஜிக்கிறேன். அதுவும் ஒருமுறையல்ல. நான்கு தடவை பஜிக்கிறேன்” என்று அறுதியிட்டுக் கூறும்
“யத் வர்ணயத் கர்ணமூலேSந்தகாலே
ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம்|
ததேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்||”
என்ற சுலோகத்தின் பொருளுணர்க.

மேலும், சிவன் பார்வதியின் கேள்விக்குப் பதில் சொல்லு மிடத்து.
“இராமநாமத்தைச் சொன்னால் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாமத்தைச் சொன்ன பலன் உண்டு” என்றும்,
தானும் அந்த இராமநாம கீத ஒலியிலே ரமித்துக்கொண்டிருப்பதாகவும் கூறும்

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே|
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே||”
என்னும் விஷ்ணுஸஹஸ்ரநாம சுலோகம் காண்க. மற்றும்,

“இராமதத் துவத்தை இதயத்தில் வைத்தும் இராமரா மேதி என்றுதான் துதித்தும்”.
[சோலைமலைக் குறவஞ்சி பக் 79. வரி 99,100] என்று (ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வெளியீடான) சோலைமலைக் குறவஞ்சி பாடுவது நோக்குக.

“கையில் துளசிமாலை, நெஞ்சில் இராமதத்துவம், சிரசில் கேசவனுடைய ஸ்ரீபாததீர்த்தம்,
நாவின் நுனியில் தாரக நாம மாகிய இராம மந்திரம், இவைகளைத் தரித்து நிற்க்கும் சிவனை
மஹா பாகவதனாக நினைக்கிறேன்” என்ற கருத்துக்கொண்ட,
“ஹஸ்தேSக்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம்
ஸ்வமஸ்தகே கேஸவபாத தீர்த்தம்
ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்த்ரம்
ஸிவம் மஹாபாகவதம் ஸ்மராமி||” என்ற ச்லோகம் இங்கு கருதத் தக்கது.

——————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் —

November 13, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

ஜகத்து முழுவதும் ப்ரஹ்மத்தின் கார்யம் என்பதை சமர்த்திக்க
சில ஸ்ருதிகளில் மேல் எழுந்த வாரியாக இந்திரியங்கள் நித்யங்கள் என்னும் எண்ணம்
சில மாந்தர்களுக்குத் தோன்ற இடம் இருப்பதால் அவ்வெண்ணத்தை நீக்க
ஜீவனின் உப கரணமான இந்திரியங்களுக்கு கார்யத்வத்தை சாதிக்கிறார் என்பது சங்கதி

இந்திரியங்கள் ஜீவன் போல் உண்டாவது இல்லையா –
ஆகாசாதிகள் போல் உண்டாகின்றனவா என்று சம்சயம்
உண்டாவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அஸத்வா இதம் அக்ர ஆஸீத் ததாஹு கிம் ததா ஸீத் இதி ருஷயோ வாவதே அக்ர ஆஸீத்
ததாஹு கேதே ருக்ஷய இதி ப்ராணா வாவ ருஷய இதி –
பிரளய காலத்தில் பிராண ஸப்த வாஸ்யங்களான இந்திரியங்களுக்கு இருப்பு கூறுவதால்
உத்பத்தி இல்லை என்பதாம் –

ஸூத்ரம் –265-கதா ப்ராணா –2-4-1- பூர்வ பக்ஷ ஸூத்ரம்

ஜீவன் எவ்வாறு உத்பத்தியும் மரணமும் இல்லாதவனோ
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
அப்படியே பிராணா -இந்திரியங்களும்
அஸத்வா –என்னும் ஸ்ருதிகளால் உத்பத்தி ஆவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அதைக் கண்டிக்கிறார் –

—————

ஸூத்ரம் –266-கௌண்ய சம்பவாத் தத் ஸ்ருதேச் ச –2-4-2-

ச என்றது து என்ற பொருளாய் பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறது
இந்திரியங்களும் வ்யத் யாதிகளைப் போலே உத் பன்னங்களே
தத் ப்ராக் ஸ்ருதேச் ச -அந்த பரமாத்மாவுக்கே பிரளய காலத்தில் இருப்பு ஸ்ருதியில் கூறப்படுவதால்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –இத்யாதி ஸ்ருதிகளில்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருக்கிறான் என்பது ப்ரஸித்தம்
ப்ராண ஸப்தமும் பிராணம் அபி ஸம் விசந்தி -என்ற ஸ்ருதியால் பரமாத்மாவைக் குறிப்பது
எல்லாவற்றையும் ஸாஷாத் கரிக்க வல்ல ரிஷி என்ற தன்மையும் அவருக்கே கூடும்
இப்படியாகில் ப்ராணா வாவ ரிஷயே என்ற பஹு பன்மை வசனம்
கௌணீ -உபசார வார்த்தை
ஏன் எனில்
அசம்பவாத் -இந்திரியங்கள் பிரளய காலத்தில் இல்லாமையால் –

————————–

ஸூத்ரம் –267-தத்வ பூர்வகத்வாத் வாச –2-4-3-

வாச -பரமாத்மேதரமான எல்லா நாமதேயங்களும்
தத்வ பூர்வகத்வாத் -அந்த அந்த வஸ்துவின் ஸ்ருஷ்ட்டியை முன்னதாகக் கொண்டு இருப்பதால்
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -தன் நாம ரூபாப்யாம் வியாக்ரியத -என்கிற ஸ்ருதி
அந்த வஸ்துக்களையும் நாமங்களையும் ப்ரஹ்மமே படைத்தது என்று சொல்வதால்
இந்திரியாதி ஸ்ருஷ்டிகளும் முன் உள்ள பிராணன் என்பது பரமாத்மாவே என்று சித்திக்கிறது –

——————

இதில் இந்திரியங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –268–ஸப்தகதேர் விசேஷி தத்வாச்ச–2-4-4-பூர்வ பஷ ஸூத்ரம்

இந்திரியங்கள் ஏழா பதினொன்றா என்று சம்சயம்
ஏழே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

கதே ஸப்தப் ப்ராணா ப்ரபவந்தி-என்று
ஜீவனுடன் சேர்ந்து கதி சொல்வதால்
விசேஷி தத்வாச்ச
யதா பஞ்ச அவதிஷ்டந்தே ஞானாமி மனஸா ஸஹ –புத்திச்ச ந விசேஷ்டேதே தமாஹு பரமாம் கதிம் -என்று
ஏழு விஞ்ஞானங்களும் ஸ்திரமாய் இருந்தால் யோகம் ஸித்திக்கும் என்று விசேஷித்து
ஞானி என்று ஞான ஸாதனங்களான இந்திரியங்களை விசேஷிக்கையாலும்
ஸ்ரோத்ரம் -த்வக் -சஷுஸ்-ஜிஹ்வா -கிராணம் -மனஸ் -புத்தி -என்று ஏழு இந்திரியங்கள்
வேறே இல்லை என்பது பூர்வ பக்ஷம் –

——————–

ஸூத்ரம் –269-ஹஸ்தாத யஸ்து ஸ்திதே அதோ நைவம் –2-4-5-

அவ்வாறு அல்ல -இந்திரியங்கள் ஏழு என்பது சரி யல்ல
ஸ்ரோத்ரம் முதலிய ஞான இந்திரியங்கள் ஐந்து
மனம் ஓன்று -கர்ம இந்திரியங்கள் ஆக -11 இந்திரியங்கள்
அவற்றுள் ஐந்து ஞான இந்திரியங்களும் ஜீவனுடன் வேறு சரீரத்தில் கூட இணைந்தே செல்கின்றன
ஹஸ்தாத யஸ்து–கர்மா இந்த்ரியங்களோ எனில்
ஸ்திதே -உடல் உள்ளவரை உள்ளன -சரீரம் தோன்றும் போது தோன்றி மறையும் போது மறைபவை
அதோ நைவம்-ஆகையால் இந்திரியங்கள் ஏழு என்பது இல்லை
புத்தி அஹங்காரம் சித்தம் என்ற வளாகங்களை மநோ விருத்தியின் பேதங்களே யாதலின் வேறே அல்ல
ஆக இந்திரியங்கள் பதினொன்றேயாது

இவ்வாறு வியாக்யானம் தீபத்தைத் தழுவியது –

இங்கு ஓர் பூர்வ பக்ஷம்
ஜீவன் இருக்கையில் ஹஸ்தாதிகள் அவனுக்கு உபகாரமாய் இருப்பதாலும் எடுப்பது வைப்பது போன்ற
செயல்கள் இயற்றுவதாலும் இந்த்ரியத்தில் தடை இல்லை
ஆகையால் அவை ஏழு தான் என்று கூறப்படுவது இல்லை -அவை பதினொன்றே
ஜீவன் சரீரத்தை அடையும் போது கர்ம இந்திரியங்கள் உண்டாகி சரீரம் நசிக்கும் போது அடியோடு நசிக்கின்றன
ஜீவன் லோகாந்த்ரம் தேஹாந்த்ரம் அடையும் போது ஞான இந்த்ரியங்களே உடன் போகின்றன
கர்ம இந்திரியங்கள் போவது இல்லை என்ற இவ் வர்த்தங்களைச் சாதிக்க வில்லை

ஸ்ருத பிரகாசிகையிலோ -பதினோரு இந்த்ரியங்களுமே அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை யாதலின்
ஜீவனின் லோகாந்தர தேஹாந்தர கமனத்திலும் இவை கூடவே செல்கின்றன என்றும்
பிரளய தசையில் தவிர மற்ற காலங்களில் இவற்றுக்குப் பிரிவே கிடையாது என்றும் கூறி
ஏழே இந்திரியங்கள் என்பதைக் கண்டிக்கிறார்

சிந்தாமணியிலும் -ஸப்த இமே லோகா யேஷு சரந்தி பிராணா -என்கிற சுருதியில்
ஜீவனுடன் செல்லுதல் ஞான இந்திரியங்களுக்கு மட்டும் கூறினாலும்
கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் என்று கூறப்பட்டுள்ளது
இப்படி இருக்க தீப அனுசாரியாக வியாக்யானம் செய்யலாமோ என்பது பூர்வ பக்ஷம்

இவ்விஷயத்தில் நியாய பரிசுத்தி கிரந்தம் சமாதானமாகக் கூறும் வழியைக் காண்போம்
யாதவ பிரகாசர் மதத்தைப் போல் கர்ம இந்திரியங்களுக்கு ஒவ்வோர் சரீரத்திலும்
உத்பத்தி விநாசங்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றுக்கு இந்த்ரியத்வம் ஸித்தமாகிறது என்பதால்
இந்த ஸூத்ரத்துக்குப் பொருத்தமான பொருள் ஓன்று கூறப்பட்டது
ஆகையால் பதினோரு இந்த்ரியங்களுமே வேறே சரீரங்களிலும் தொடர்கின்றன என்பதே
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் என்று அறிகிறோம்
சரீரே ஸ்திதே -என்றும் பிரயோஜனந்தரத்தாலும் பிறர் மதத்தை அனுவதித்து
இந்திரியங்கள் பதினொன்றே என்று ஸ்தாபித்தாலும்
தீபத்தில் சொல்லியதத்திற்கும் விரோதம் இல்லை என்பதாம் –

—————

மூன்றாம் அதிகரணம் –பிராண அணுத்வ அதிகரணம்

ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6-

இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –
என்று பூர்வபக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –

————–

ஸூத்ரம் –271-ஸ்ரேஷ்டச்ச –2-4-7–

இந்திரியங்களுக்கு நிர்வாஹகம் ஆகையால் ஸ்ரேஷ்டமான பிராண வாயுவும் உண்டாகிறது
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மன -என்று சொல்வதால்
இங்கு ப்ராணனைச் சொன்னது மேலே பிராணனின் ஸ்வரூபத்தை விசாரிக்க வாம் –

———

நான்காம் அதிகரணம் -வாயு க்ரிய அதிகரணம் —

ஸூத்ரம் –272- ந வாயு க்ரியே ப்ருதக் உபதேசாத் –2-4-8-

இந்த ஸ்ரேஷ்ட பிராணன் கேவல வாயு ஸ்வரூபமா -அல்லது வாயுவின் சலனாதி கிரியையா
அல்லது தேஹாதி தாரணத்துக்கு அனுகுணமான ஒரு அவஸ்தா விசேஷத்தோடு கூடின வாயுவா என்று சம்சயம்
கேவல வாயுவே –முதல் பக்ஷம் –யஸ் பிராணா ச வாயு -என்று சொல்வதால்
இரண்டாவது பக்ஷம் -உஸ்வாச நிச்வாஸ ரூபமான வாயுவின் கிரியையே பிராணன் என்பது
இவற்றை நிரசிக்கிறார்

ந வாயு க்ரியே -வாயு மாத்ரமோ அதன் கிரியையோ அன்று
ப்ருதக் உபதேசாத்–ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மனஸ் ஸர்வ இந்த்ரியாண ச
கம் வாயு -என்று
வாயுவும்
பிராணனும்
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உண்டாகின்றன என்று தனித்தனியே சொல்வதால் என்றபடி
ஆகையால் தேஹ தாரண யோக்யதா ரூபமான விசேஷத்தை யுடைய வாயுவே பிராணன் என்று சித்தம்

———–

இப்படி வாயுவைக் காட்டிலும் தனியாகச் சொல்லப்பட்ட அக்னியாதிகளைப் போலே
வேறே ஒரு பூதமோ என்னும் சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –273-சஷுராதி வத் து தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய –2-4-9-

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பிக்கிறது
பிராணன் தேஜஸ் முதலியவை போல் பூதம் அல்ல
சஷுராதி வத்–கண்–இந்திரியங்கள் போல் ஜீவனுக்கு உபகரணம் ஆகாது
தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய–உபகரணங்களான அவற்றுடன் சேர்ந்து உபதேசம் செய்யப்பட்டு இருப்பதால்
பிராண சம்வாதத்தில் -ஸர்வே ப்ராணா அஹம் ஸ்ரேயஸே விவத மானா -என்று
ச ஷுராதி இந்த்ரியங்களையும் பிராண வாயுவையும் கூட்டி பிராண ஸப்தத்தாலே உபதேசிக்கிறது
ச ஷுராதிகளைப் போலே பிராண வாயுவும் உபகரணம் என்ற வகையில் சமமானால் தான் பொருந்தும்
யோ அயம் முக்ய ப்ராணா -என்று ப்ராண சப்தத்தால் குறிப்பிடப்பட்டுள்ள கரணங்களுள்
பிராண வாயு முக்கியம் என்று கூறியது
ஸஹ சிஷ்ட் யா திப்ய-என்று ஆதி ஸப்தத்தின் பொருள் –

————–

ஸூத்ரம் –274-அகரணத் வாச்ச ந தோஷ ததாஹி தர்சயதி–2-4-10-

அகரணத் வாச்ச ந தோஷ –ஜீவனுக்கு உபகரிக்கை என்னும் காரணம் இல்லாமையாலே
ப்ராணனுக்கு உபகரணத்வம் கூடாது என்ற தோஷமும் இல்லை
ததாஹி தர்சயதி–யஸ்மின் உத் க்ராந்தே இதம் சரீரம் பாபிஷ்ட தரமிவ த்ருச்யதே ஸவை ஸ்ரேஷ்ட –என்றும்
ஸ்ருதி தானே பிராண வாயுவுக்கு தேஹ இந்திரியாதி அசை தில்ய கரண ரூபமான உபசாரத்தைக் காட்டுகிறது
ஆகையால் தோஷம் இல்லை என்பதாம் –

——————-

ஸூத்ரம் –275–பஞ்ச வ்ருத்திர் மநோ வத் வ்யபதிஸ்யதே–2-4-11–

பஞ்ச வ்ருத்திர்-ஒரே பிராண வாயு தான் பிராண அபா நாதி வ்ருத்தி பேத மூலமாக
ஐந்து பெயர்களால் கூறப்படுகிறது
மநோ வத்-ஒரே மனம் எப்படி காம நாதி வ்ருத்தி பேதத்தால்
காமம்
சங்கல்பம் விசிகித்சா
ஸ்ரத்தா
அஸ்ரத்தா
த்ருதி
அத்ருதி ‘
ஹ்ரி -வெட்கம்
தீ புத்தி
பீ பயம்
என்று வெவ்வேறாக கூறப்படுகிறது அப்படியே பிராணனும் ஐந்து இடங்களில் இருப்பைக் கொண்டு
பிராணன் அபானன் இத்யாதி பெயர்களால் குறிக்கப் படுகிறது

———————-

ஐந்தாம் அதிகரணம் –அணுச் ச அதிகரணம்

இந்தப் பிராணன் வாயுவா அல்லவா என்று சம்சயம்
சர்வகதன்-விபு -என்று பூர்வ பக்ஷம்
ஸ ஏபி த்ரி பி லோகை சம என்று அனந்தயம் சொல்வதால் என்று பூர்வ பக்ஷ ஹேது
இதை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –276–அணுச் ச –2-4-12–

தம் உத் க்ரமாந்தம் பிரானோ அனூத் க்ரமாதி –என்று உத் க்ராந்தி சொல்வதால்
இந்திரியங்கள் போலவே பிராணனும் ஸூஷ்ம பரிணாமம் உள்ளது
த்ரி பி பிராணை சம -என்றது பிராணனை ஸ்துதிப்பது அன்று வேறு இல்லை –

———–

ஆறாம் அதிகரணம் -ஜ்யோதிராத் அதிகரணம்

பராத் து தத் ஸ்ருதே -என்னும் அதிகரணத்தில் சொன்ன அர்த்தத்தை
இதில் ஸ்திரப்படுத்துகிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –277-ஜ்யோதிராத் யதிஷ்டா நந்து ததா மனனாத் ப்ராண வதா சப்தாத் –2-4-13–

ப்ராண வதா-பிராணனின் நியந்தா என ஜீவனுடன் கூடி
ஜ்யோதிராத் யதிஷ்டாநம் -அக்னி யாதி தேவதைகளுக்கு வாக் யாதி இந்த்ரியங்களில் அதிஷ்டானமானது
ததா மன நாத் து –ஆபி முக்யேந மனனம் ஆ மனனம் ஸங்கல்பம் –
அந்த பரம புருஷனின் சங்கல்பத்தாலே ஏற்படுகிறது என்று கருத்து
ஏன் எனில்
சப்தாத்-யோ அக்னவ் திஷ்டன் அக்னி மந்தரோ யமயதி ய ஆத்மனி திஷ்டன் –இத்யாதி
சப்தங்களால் என்றபடி –

——————–

ஸூத்ரம் –278- தஸ்ய ச நித்யத் வாத் –2-4-14–

தஸ்ய -ஸமஸ்த வஸ்துக்களும் பரமாதிஷ்டிதம் என்பதற்கு
நித்யத் வாச் ச -ஸ்வரூப அனு பந்தியாய் நியதத்வம் இருப்பதால்

ஆகவே பகவத் ஸங்கல்பத்தாலே தான் அக்னி யாதி தேவதைகளுக்கு
இந்திரிய அதிஷ்டாத்ருத்வம் தவிர்க்க முடியாததாகிறது –
தத் ஸ்ருஷ்ட்வா ததே வா அனு ப்ராவிசத் தத் அனு ப்ரவிஸ்ய சச்சத் யச்சா பவத் என்று
சர்வ நியாந்தாவாய் இருந்து அனு பிரவேசம் செய்தார் என்ற ஸ்ருதி இருப்பதால் என்று கருத்து –

————

ஏழாம் அதிகரணம் –இந்த்ரிய அதிகரணம்

ஸூத்ரம் –279-த இந்த்ரியாணி தத் வ்யபதேசாத் அந் யத்ர ஸ்ரேஷ்டாத் –2-4-15–

ஸர்வே பிராணா -என்று சஷு ராதிகளையும் பிராண வாயுவையும் பிராண சப்தத்தாலேயே சொல்லுகையாலே
முக்ய பிராணனையும் இந்த்ரியம் என்னலாம்
என்பதைக் கண்டிக்கிறார்
ஸ்ரேஷ்டாத் அந் யத்ர-ஸ்ரேஷ்ட பிராணன் அல்லாத பிற ப்ராணங்கள்
த இந்த்ரியாணி-அவையே இந்த்ரியங்கள்
தத் வ்யபதேசாத் -அவற்றையே அவ்வாறு வழங்குவதால்
இந்திரியாணி தசை கஞ்ச -என்று முக்ய பிராணனை விட்டு -சஷுராதி மனம் வரையானவற்றையே
இந்த்ரியம் எனக் குறிப்பிடுவதால்
முக்ய ப்ராணனுக்கு இந்த்ரியம் என்ற பெயர் கிடையாது என்பதாம் –

——————

ஸூத்ரம் –280-பேத ஸ்ரு தேர் வை லக்ஷண்யாச் ச–2-4-16–

பேத ஸ்ரு தேர்
ஏதஸ் மாஜ் ஜாயதே பிரானோ மனஸ் ஸர்வ இந்த்ரியாணி ச -என்று
பிராணனையும் இந்திரியங்களை வேறாகச்
சொல்லுகையாலும்
வை லக்ஷண்யாச் ச–இந்திரியங்கள் லயம் அடைந்த பிறகும் பிராண வ்யாபாரத்தைக் காண்கையாலே
இவற்றின் இடையே வேறுபாடு இருப்பதாலும் என்றபடி

இத்தாலும் ஸ்ரேஷ்ட ப்ராணனைத் தவிர்த்த ஏனைய சஷு ராதிகளே இந்த்ரியங்கள் என்று ஸித்தம் –

———–

எட்டாம் அதிகரணம் –ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம்

வ்யத் அதிகரணம் தொடங்கி இது வரை -14- அதிகரணங்களாலே
பூத இந்திரியாதிகளின் சமஷ்டி ஸ்ருஷ்டியை நிரூபித்து
இவ்வதி கரணத்திலே
தேவ மனுஷ்யாதி வ்யஷ்டி ஸ்ருஷ்டியை இங்கு நிரூபிக்கின்றார் என்று சங்கதி

ஸூத்ரம் -281–ஸம்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் -2-4-17-

பிரபஞ்ச ஸ்ருஷ்டியை சதுர்முகன் செய்கிறானா
சதுர்முக சரீரக பரமாத்மா செய்கிறானா
என்ற ஸம்சயத்தில்
அநேந ஜீவேந ஆத்ம நா அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டு நாம ரூப வியாகரணம் சொல்லுகையாலே
சதுர் முகனே வ்யஷ்டி ஸ்ருஷ்டியை செய்பவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் –
நாம ரூப வ்யாகரவாணி தாஸாம் த்ரி வ்ருதம்
த்ரி வ்ருதம் ஏகை காம் கரவாணி -என்று த்ரி வ்ருத கரணம் பண்ணுபவனுக்கே நாம ரூப வியாகரணம் உபதேசிக்கையாலே
த்ரி வ்ருத் க்ருதங்களான தேஜோ அப்பு அன்னங்களால் உத் பன்னமான அண்டத்தில் உள்ள சதுர்முகன்
அந்த த்ரி வ்ருத் கரணத்தின் கர்த்தா ஆக மாட்டான்
த்ரி வ்ருத் கரணமும் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் பரம புருஷனால் தான் செய்யப் பட்டன என்றாலே
வ்யாகரவாணி என்ற உத்தம புருஷனும் -தன்மை ஒருமை வினை முற்றும் -பொருந்தும்
ஜீவேந ஆத்ம நா என்ற சாமா நாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவமும் முக்கியப் பொருளாகும்
ஜீவேந ஆத்ம நா–ஜீவ சரீரகனான என்னால் என்றபடி–

————-

ஆமாம் அன்ன மசிதம் த்ரேதா விதீயதே என்று தொடங்கி
சதுர்முகன் படைத்த அன்னாதிகளிலும் த்ரி வ்ருத் கரண பிரகாரம் உபதேசிக்கப் படுகிறதே
ஆகையால் அவனும் த்ரி வ்ருத் கரணம் செய்யச் சக்தன் தானே என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –282–மாம் ஸாதி பவ்மம் யதா ஸப்தம் இதர யோச்ச 2-4-18–

மாம் ஸாதி பவ்மம் -மாம்சமும் மனமும் பவ்மம்-பூமி சம்பந்தம் உள்ளவை
அவை ஆப்யமோ தைஜஸமோ அல்ல
யதா ஸப்தம் -ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்று ஸ்ருதி சொன்னபடியே
இதர யோச்ச-அன்னம் மசிதம் என்ற பிரதம பர்யாயம் தவிர்த்த
ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்ற இரண்டு பர்யாயங்களிலும் மூத்ர பிராணங்களுக்கு ஆப்யத்வமும்
அஸ்தி மஜ்ஜைகளுக்கு தைஜஸத்வமும் உபதேசிக்கப் படுகின்றன
இதன் பொருளாவது

தாஸாம் த்ரி வ்ருதம் என்று அண்ட ஸ்ருஷ்டிக்கு என்று குறிப்பிடப்பட்ட த்ரி வ்ருத் கரணம்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே -என்பதால் விதிக்கப்பட வில்லை
ஆனால் அண்டத்துக்குள் இருக்கும் ஸ்வேதகேது எளிதில் புரிந்து கொள்ள மனிதனால் உட் கொள்ளப்படும்
அன்னம் ஜலம் முதலியவற்றில் மூன்று வகைப்பிரிவு கூறப்பட்டது
தஸ்ய யஸ் ஸ்தவிஷ்டோ பாக தத் புரீ ஷம் யோ மத்யம் தன் மாம்ஸம் யோ அ ணிஷ்ட தன் மன –என்று
மாம்சமும் புரீ ஷமும் மனஸ்ஸும் போல் பவ்மம் என்று உபதேசிக்கப் படுகிறது
ஏன் எனில்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே–என்று தொடக்கத்தாலும்
அன்ன மயம் ஹி சோம்ய மனஸ் –என்று வாக்ய சேஷத்தாலும் என்றபடி

தேஜோ ஆபன்னங்களுக்குத் த்ரி வ்ருத் கரண பிரகாரம் இதில் சொல்லப் படுகிறது எனில்
மாம்சமும் மனஸ்ஸும் பவ்மமான புரீ ஷத்தைக் காட்டில் அணீ யஸ்ஸாகையாலே
ஆப்யத்வமும் தைஜஸத்வமும் ப்ரஸக்தமாகும்
அவ்வாறே ஆப பீத தேஜோ உசிதம் என்ற இரு பர்யாயங்களிலும்
லோஹிதம் மூத்ரம் பிராணன் இம் மூன்றுக்கும் ஆப்யத்வமும்

தேஜஸ் பர்யாயத்தில் அஸ்தி மஜ்ஜை வாக்கு இவை மூன்றுக்கும் தைஜஸத்வமும் சொல்லப்படுகிறது
ஏன் எனில்
பீதா என்று தொடங்குவதாலும் ஆபோ மய ப்ராண என்ற வாக்ய சேஷத்தாலும்
அப்படியே தேஜோ உசிதம் என்ற தொடக்கத்தாலும்
தேஜோ மயீ வாக் என்ற வாக்ய சேஷத்தாலும்
என்றபடி

இப்படி இல்லாமல் த்ரி வ்ருத் கரணத்தை உபதேசிக்கிறது என்றால் மூத்ரம் ஸ்தவிஷ்டமாகையாலே பவ்மம் ஆகிவிடும்
பிராணனும் அணீ யஸ் யாதலின் தைஜஸம் ஆகி விடும்
தேஜோ அஸிதம் என்ற மூன்று பர்யாயத்தாலும் அஸ்தி -பவ்மமாயும் மஜ்ஜை ஆப்யமாகவும் ஆகும்
உபக்ரம வாக்ய சேஷங்களுக்கு விரோதம் வருமாதலின் முன்பே த்ரி வ்ருத் க்ருதமான அன்னாதிகளுக்கு
ஜாட ராக்னி யாலே மூன்று விதமாகப் பரிணாமம் உபதேசிக்கப் படுகிறது

—————-

முன்பே த்ரி வ்ருத்தமானால் வெறும் அன்னம் முதலிய சொற்களால் எப்படி வழங்கலாம்
என்பதற்கு விடை தருகிறார்

ஸூத்ரம் –283-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பதாம்
வைசேஷ்யம்–விசேஷ பாவ -ப்ருத்வீ ஜலாதிகள் முன்னரே த்ரி வருத் க்ருத்யங்கள் ஆயினும்
பிருத்வீயில் தன் அம்சம் பாதியும் ஜல தேஜோ அம்சங்கள் கால் காலும் உள்ளது என்பது போலே
அந்த அ ந்த பூதத்தில் விசேஷமானது தன் பாகம் ஆதலாலும் அன்னம் அப்பு தேஜஸ் என்கிற வ்யவஹாரம் ஏற்பட்டது

தத் வாத தத் வாத -இரு முறை கூறி அத்யாய முடிவைக் காட்டுகிறது

இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால்
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை
ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்
அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும்
மற்றவன் வியாகரணம் செய்வதாயும்
கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே
த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும் –

————-

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் /ஸ்ரீ தாடீபஞ்சகம் /ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்–

November 13, 2021

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ் க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வ ரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே–1-

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–2-

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–3-

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் கணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி–4-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுர ப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி–5-

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்

– (ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்)

—————

ஸ்ரீ தாடீ பஞ்சகம்

இந்த அத்புதமான ஸ்தோத்ரம்
ஸ்ரீகூரத் தாழ்வான் அருளிச் செய்தது என்றும்,
ஸ்ரீ முதலி யாண்டான் அருளிச் செய்தது என்றும் பெரியோர்கள் ஒருவாறு பணிப்பர்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர்

யார் அருளிச் செய்த ஸ்தோத்ரமானாலும், எம்பெருமானாரது விஜயங்களை எடுத்துரைப்பதாய்,
செவிக்கினிய செஞ்சொற்களாக அருளிச் செய்யப் பட்ட இந்த ஸ்தோத்ரம் நமக்கு நித்யாநுசந்தேயமாக
இருக்க வேணும் என்னும் காரணத்தினால் ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான்
இருவருடைய தனியன்களையும் அவற்றின் பொருளோடு விண்ணப்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ கூரத் தாழ்வான் தனியன்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ர தாம்

யவருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் எல்லாம் வேதமாகிற பெண்ணின் கழுத்துக்கு மங்கள ஸூத்ரமாக
(மாங்கல்யமாக) விளங்க, அந்த ஸ்ரீவத்ஸ சிஹ்நர் என்னும் திருநாமம் உடையவரான
ஸ்ரீகூரத் தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலி யாண்டான் தனியன்கள்

1–பாதுகே யதிராஜஸ்ய கத யந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடி நிலைகளாக (பாதுகைகளாக) அறியப் படுகிறாரோ,
அந்த தாசரதி என்னும் திரு நாமம் உடையவரான ஸ்ரீ முதலி யாண்டானுடைய
திருவடி யிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

2-யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய சஸ் சாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

யாரொருவர் பக்த நகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி)
ஸ்ரீதாடீ பஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தாரோ,
அந்த ராமாநுஜருடைய ப்ரிய சிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான
ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர் ஜைநே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய ஸூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி––முதல் ஸ்லோகம்–

நாஸ்திகர்கள் பாஷண்டர்கள் எனப்ப டுபவர்.
காட்டுத் தீ வளர்த்தால் எவ் விதம் மரங்கள் அழியுமோ அது போன்று,
எம்பெருமானார் பாஷண்டர்களை அழித்தார்.

சார்வாகர், பௌத்தர் முதலிய மலைகளை மிகவும் எளிதாக எம்பெருமானார் சாய்த்தார்.

பௌத்தம் என்ற இருளுக்குச் சூரியன் போன்று எம்பெருமானார் அவதரித்தார்.

ஜைனர்கள் என்ற யானைகளைச் சிங்கம் போன்று விரட்டினார்.

மாயாவாதிகள் என்ற நாகங்களைத் தனது நிழல் மூலமே அழிக்கின்ற கருடன் போன்று விளங்கினார்.

ஸ்ரீரங்கநாதனின் திருக் கோயிலைத் திருத்தி, பெருமையுடன் நின்றார்.

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹாந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாசநி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய ஸூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –

ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

————

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-இரண்டாம் ஸ்லோகம்–

பாஷண்டம் (நாஸ்திர்கள்), ஷண்டம் (பௌத்தம் முதலானோர்) ஆகிய மலைகளை
இந்திரனின் வஜ்ராயுதம் தண்டிப்பது போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் தண்டிக்கிறது.

மறைமுகமான பௌத்தர்கள் என்ற பெரிய கடலைக் கலக்கும் மத்து போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் உள்ளது.

“இருள் தருமா ஞாலம்” என்பதற்கு ஏற்ப வேதாந்தத்தின் ஆழ் பொருள்கள்,
இந்த உலகில் ஏகதண்டிகளின் (அத்வைதிகள்) பிடியில் சிக்கி நின்றது.
அந்த இருளை நீக்கும் தீபமான த்ரி தண்டியாக எம்பெருமானார் நின்றார்.

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –

சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

————

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத் வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதி கதக சிரோ வஜ்ர தண்டம் த்ரி தண்டம் –மூன்றாம் ஸ்லோகம்–

எம்பெருமானாரின் த்ரிதண்டம் இந்த உலகில் உள்ள சிஷ்யர்களுக்கும் ஞானத்தை அளிப்பதற்காக உள்ளது.
இந்த உலகில் பல விதமான வாதங்கள் தோன்றின்.
அவற்றை சீர் செய்து, சரியான வாதத்தை நிலைநாட்டிய த்ரிதண்டம் இதுவாகும்.

வேதாந்தத்தில் உள்ள ஸத் வித்யை, வைஸ்வாநார வித்யை போன்ற பல வித்யைகளை விளக்கிட்டு
நமக்குக் காண்பிப்பதற்காக உள்ளது இந்த த்ரிதண்டமாகும்.

“கலியும் கெடும் கண்டு கொண்மின்,” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தது போன்று,
கலியின் கொடுமைகள் அனைத்தையும் அழிக்கும் கால தண்டம் போன்றது.

வேதங்களுக்குத் தவறான பொருள் கூறும் மதங்களால் தளர்ந்து போன வேத புருஷனுக்குக் கை கொடுக்கும் தண்டம் போன்றது.
மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டதற்கு ஈடாக உள்ள வெண் கொற்றக் குடையின் மணிக் காப்பு போன்றது.
எதிர்வாதம் செய்பவர்களின் தலைகளைத் துண்டாக்கும் வஜ்ர தண்டம் போன்றது – எம்பெருமானாரின் த்ரிதண்டமாகும்.

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம் போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத் வித்யா தீப தண்டம் –
சத் வித்யா முதலான -அஷி வித்யா -வைச்வாநர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத் வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத் வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலளவாய திசைஎ எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது

7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி

ஆக இப் புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரி தண்டத்தின் பெருமை கூறிற்று-

————

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரி யுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத் வித்யா தீப ஸூத்ரம் சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–நான்காம் ச்லோகம்–

வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் ஸ்ரீமந்நாராயணனே நாயகன் என்று அறிவிக்கும்
தாலி போன்று எம்பெருமானாரின் யஜ்ஞோபவீதம் உள்ளது.

த்ரியுகம் என்பது எம்பெருமானாரின் ஒரு திருநாமம் ஆகும்.

அப்படிப்பட்ட அவரது திருவடிகளை அடைவதற்குப் பற்றிக் கொண்டு ஏறும் கயிறு போன்று, இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

மிகவும் உயர்ந்த வித்யைகள் மேலும் ப்ரகாசமாக எரியும் திரிநூலாக இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

கலியில் கொடுமைகளை அழிப்பதற்கு வந்த எமனின் பாசக் கயிறு போன்று இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

எம்பெருமானாரின் திருவடிகளை அடைந்தவர்களது உள்ளம் ஒரு தாமரை என்று வைத்துக் கொண்டால்,
இவரது யஜ்ஞோபவீதம் அந்தத் தாமரையின் தண்டு போன்று உள்ளது.

மற்ற மதத்தவர்கள், தங்கள் மதப்படி தங்களது யஜ்ஞோபவீதத்தை துறந்தால் மட்டுமே மோஷம் அடைவர்.

ஆனால் அவர்கள் எம்பெருமானாரின் யஜ்ஞோபவீத அழகைப் பார்த்தவுடனேயே மோக்ஷம் அடையலாம்.

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூத்ரம் போன்றதும் –
ஜகத் அநீஸ்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூத்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இறே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இறே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத் வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம் போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

————-

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம் –
இப்பிரபந்தம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் சிஷ்யர் ஸ்ரீ கடிகா சஹஸ்ர ஆச்சார்யாரோ –
ஸ்ரீ ஸ்ருதி ப்ரகாசிகா ஆச்சார்யரான ஸ்ரீ ஸூதர்சன பட்டரோ –
ஸ்ரீ எறும்பி அப்பாவோ –
ஸ்ரீ கோயில் அண்ணண் திருப்பேரானாரோ -என்பர் –

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் க்ருபயா பரயா தவ
மம விஜ் ஞாபநம் இதம் விலோக்ய வரதம் குரும்–ஸ்லோகம் -1-

அடியேன் குருவான வரத குரு ஆச்சார்யரை திரு உள்ளத்தில் கொண்டு
உபய விபூதியையும் நித்தியமாக யுடைய காரேய் கருணை இராமானுசா-
அடியேனுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அருள்வாய்

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே!
பரமமான க்ருபையோடே (அடியேனுடைய) ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து,
அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை தேவரீர் திருச் செவி சாற்றியருள வேணும்.

மேலே இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி ஆறாம் ஸ்லோகம் வரை உள்ள ஐந்து விண்ணப்பங்களை
பரம கிருபா மாத்திரை ப்ரசன்னாச்சார்யரான கிருபையினாலே
அடியேனுடைய சிறுமையைப் பாராமல்
ஞான பக்தி வைராக்யங்கள் நிறையப்பெற்ற வரத குருவின் பெருமை ஒன்றையுமே கடாக்ஷித்து
மேலே உள்ள ஐந்து பெருப் பெருத்த விண்ணப்பங்களுக்கு அங்கமாக
இந்த ஒரு விண்ணப்பம் கேட்டு அருள வேணும் என்கிறார்

இந்த ஐந்து விண்ணப்பங்களாலே இதுக்கு பிரார்த்தனா பஞ்சகம் என்ற பெயராயிற்று

———-

இதில் பகவத் விஷய பற்று வைக்க இடையூறாக உள்ள
பாஹ்ய விஷய ஸங்கத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார் –

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிவர்த்தய வாசநாம் –ஸ்லோகம் -2-

வாசனா ருசிகளை போக்கி அருள பிரார்த்தனை இதில் –
எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன்.
இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில் இருந்து எனது புலன்களை மீட்க வேண்டும்.

வாஸனா ஸப்தம் ருசிகளுக்கும் உப லக்ஷணம்
புத்தி பூர்வகமான ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சை ருசி என்றும்
அபுத்தி பூர்வகமாக ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சையே வாஸனை யாகும்
காமம் ஒழிந்தால் க்ரோதாதிகளும் ஒழியுமே

————–

உலகோரைப் பார்த்தார்
விஷயாந்தரங்களிலே பற்று மிக்கு புத்ராதிகளைப் பிரார்த்தித்து வருகிறார்களே
உபய விபூதி நாதர் ஸகல அபீஷ்ட பிரதர் அன்றோ
அவர்கள் வேண்டிக்கொண்டால் ஹித பரரான தேவரீரே அவற்றைத் தராமல் ஒழிந்து
அதுக்கும் மேலே அவற்றிலே வைராக்யத்தையும் தந்து அருள வேணும் என்கிறார்

அபி ப்ரார்த்த யமா நாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –ஸ்லோகம் -3-

விஷயாந்தர வைராக்யம் பிறப்பித்து அருள பிரார்த்தனை இதில் –
யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும்.
ஆனால் அவற்றை விலக்கி, நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்க வேண்டும் –
காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

புத்ர ஷேத்ராதி- ஆதி ஸப்தத்தாலே
ஐஹிக போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாவற்றையும் சொன்னபடி
ஹித காரின் -ஹித ஏக காரின் -ஆச்சார்ய சம்பந்தம் மோக்ஷத்திற்கே ஹேதுவாய் இருக்குமே –

—————–

பகவத் பாகவத அபசாராதிகள் பிரகிருதி ஸம்பந்தத்தினால் ஸ்வ ப்ரயத்னத்தினால்
தவிர்க்க முடியாது என்று உணர்ந்து
அவை நேராதபடி தம்மை நடத்தி அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

யதா அபராதா நஸ்யுர்மே பஃதேஷூ பகவத்யபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –ஸ்லோகம் -4-

பாகவத அபசாராதிகள் நேராதபடி அருள பிரார்த்தனை இதில் –

யதிராஜரே! முக்தி அடையும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான்,
ஒரு போதும் பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்தி விடக் கூடாது.

பாகவத அபசாரத்தை விட பகவத் அபசாரம் நேர்வது மிக குறைவு
பகவத் அபி -அபி சப்தத்தால்-ஆஸ்திகர்களுக்கு அச்சம் இருப்பதால் இது நேராது ஆகிலும் என்றவாறு
நிஷித்தங்கள் நான்கினுள் இவை இரண்டையும் சொன்னது
அஸஹ்ய அபசாரம் அக்ருத்ய கரணம் -போன்றவற்றுக்கும் இவை உபலக்ஷணம் –

——————-

மநோ வாக் காயங்கள்
ஸத் புருஷ ஸஹ வாஸத்தாலும்
ஸத் கிரந்த அனுசந்தான ஸம்பாஷணத்தாலும் ஆளும்படி
செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

ஆமோஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலேஷே போ அஸ்து நஸ் சத்பி ஸஹ வாஸம் உபேயுஷாம் –ஸ்லோகம் -5-

கீழே யாவத் தேஹம் -இங்கு ஆ மோக்ஷம் –
ரஜஸ் தமஸ் குணங்கள் உள்ள ப்ரக்ருதி -கழிந்து பரம பதம் செல்லும் வரை
கால ஷேபம் திருமால் அடியாரோடே ஸஹ வாஸம் –
பூர்வாச்சார்ய பிரபந்த கால ஷேபம்-வேண்டி பிரார்த்தனை இதில் –
லக்ஷ்மண முனியே! இந்த உடல் பிரியும் காலம் வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே கால க்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்க வேண்டும்.

த்வத் பிரபந்த
தேவரீர் அருளிச் செய்த நவ ரத்னங்களிலும்
தேவரீரைப் பற்றிய இராமானுஜ நூற்றந்தாதி யதிராஜ சப்ததி யதிராஜ விம்சதி ஆர்த்தி பிரபந்தம் போல்வனவும்
இவற்றின் அனுசந்தானமும் ஸத் ஸஹவாசமுமே மோக்ஷத்துக்கு அனுகூலமாகும் என்பதைக்
காட்ட- ஆ மோக்ஷம் பத பிரயோகம் இதில் —

————–

எம்பெருமானாருடைய பிரபத்திக்கு விஷயமான அருளிச் செயல்கள்
தமது நாவுக்கு இனியவாகும் படி அருள் செய்ய பிரார்த்தனை இதில் –

பராங்குச முனீந்திராதி பரமாசார்ய ஸூக்தயா
ஸ்வதந்தாம் மம ஜிஹ்வாயை ஸ்வத ஏவ யதீஸ்வர –ஸ்லோகம் -6-

ஆழ்வார்களையே பரமாச்சார்ய சப்தத்தால் -அருளி- செவிக்கு இனிய செஞ்சொல் –
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருக்க பிரார்த்தனை இதில் –

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத யுள்ளம் பெற இராமானுச முனி தன் வாய்ந்த
மலர்ப்பாதம் வணங்குகிறேன் -ஸ்ரீ அனந்தாழ்வான்

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -ஸ்ரீ எம்பார்

இவை இன்றும் இனித்தாலும் அகலகில்லேன் இறையும் என்ற பிராட்டி பிரார்த்தனை போல் இவரும்
தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் செவிக்கு இனிய செஞ்சொற்கள் ஆகையால் இந்தப்பிரார்தனை –

————-

இத் யேதத் சாதரம் வித்வான் ப்ரார்த்தநா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–ஸ்லோகம் -7

ஸ்வாமி திருவடிகளில் பேரின்பத்தை இந்த ஸ்லோகங்கள் சொல்ல பெறுவார் என்று
பலன் அருளிச் செய்து நிகமிக்கிறார்

சாதரம் படன்-என்று
பொருள் உணர்ந்தோ உணராமலோ சொன்னாலும் பலன் கிட்டுவது நிச்சயம் என்றவாறு –

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை
யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களோ,
அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

பகவத் பக்தி
பாகவத பக்தி
ஆச்சார்ய பக்தி
ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டம்
ஆச்சார்யர் திறத்திலே பரமபக்தியை விட வேறே ஒன்றே ஸ்ரேஷ்டம் இல்லையே
ஆகவே இத்தை அனுசந்தானத்தால் உண்டாகும் யதிராஜ பாத பங்கஜ பரம பக்தி
கைகூடும் என்று நிகமித்து அருள்கிறார் –

————–

காஷாய ஸோபி கமநீய ஸிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருஸோர் மமாக்ரே –ஸ்லோகம் -8-

ஸ்வாமி திவ்ய மங்கள விக்ரஹம் திவ்ய சோபை எப்பொழுதும்
நம் கண்களுக்கு விளங்க பிரார்த்தனை –

துவராடையால் விளங்குவதும்
அழகிய குடுமியின் அமைப்பை யுடையதும்
முக்கோலால் ஒளி பெற்ற திருக்கையை யுடையதும்
வெளுத்த பூணூலை யுடையதும்
ஒளி விடுகிற திருமண காப்பை யுடையதும்
உதியா நின்ற ஆதித்யனோடே ஒத்து உள்ளதான
தேவரீருடைய திருமேனியானது
காண விரும்பிய அடியேனுடைய இரண்டு கண்களுக்கு எதிரிலே இருக்கும்படி அருள்வாய் என்றபடி –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய இயற்கையான திருமேனி அழகை
பெருமாள் கோயிலிலே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாருக்கு
சிவந்து நெடுகி வலியராய்
ஆயத்தாச்ச ஸூ வ்ருத்தாச்ச–பாஹவா -என்கிறபடியே
ஆஜானு பாஹுவாய் நடுவே வருகிறவர் –
என்ற வர்ணனை இங்கே நினைக்கத் தகும் –

——–

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஜ்ஞாத்வா ஆர்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் சவகீயேப்யோ யதிராஜாய மங்களம் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார் வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தான்
யுல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீமத்வாச்சாரியார் / ஸ்ரீ ஆதி சங்கரர்/ஸ்ரீ ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஸ்ரீ மான் கந்தர்வன்

November 8, 2021

ஸ்ரீமத்வாச்சாரியார்

பிறப்பு 1238
பாஜகா, துளு நாடு, உடுப்பி, இந்தியா–
இறப்பு 1317
உடுப்பி
இயற்பெயர் வாசுதேவர்
தலைப்புகள்/விருதுகள் பூர்ணப் பிரஞ்ஞர் அல்லது ஆனந்த தீர்த்தர்
நிறுவனர் உடுப்பி கிருஷ்ண மடம்
குரு அச்சுத பிரகாச தீர்த்தர்
தத்துவம் துவைதம்
மத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார் (Madhvacharya, 1238 – 1317) இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர்.
மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர்.
இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே
இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர், துவைதம் என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.

வாழ்க்கை
மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகா மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
8வது வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரக்ஞர்.
மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும்
கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார்.
அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார்.
அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு.
அவரது 37 நூல்களில் இவர் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார்.

நூல்கள்
மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார்.
தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார்.
அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து
எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது.
அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது.

அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார்.
இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர்.
ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார்.
இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது.
இன்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது,
மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.
ருக்வேதத்திலிருந்து 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார்.
வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், சாயனரிடமிருந்து மாறுபட்டு,
ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது,
இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், புராணங்கள் இவற்றிலிருந்தும்
மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார்.

துவைத வேதாந்தம்
துவைதம் என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப்
பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவ கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது.
உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன.
அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை.
அவை:
1-பிரம்மமும் ஆன்மாக்களும்
2-ஆன்மாவும் ஆன்மாவும்
3-பிரம்மமும் உலகும்
4-ஆன்மாவும் உலகும் மற்றும்
5-உலகிலுள்ள பொருளும் பொருளும்.

இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால்,
பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம்.
ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை
மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம்.
இதை வடமொழியில் ஸ்வகத பேதம் என்பர்.
அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ
இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை விஜாதீய பேதம் என்பர்.
மரத்திற்கும் வேறு பகுப்பைச் சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல.

இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது.
அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது.
இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது.
ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை.
ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை.

மத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு.
கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும்
சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன.
அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும்.
இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது.

அற்புதங்கள் பல புரிந்த அற்புதன்
மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள்
அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வ விஜயம் என்ற நூலில் உள்ளன.
அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப் பிரசித்தி பெற்றது.

ஒரு சமயம் உடுப்பிக்கருகில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது.
கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார்.
கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து
ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார்.
கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர்.
இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார்.
அதனுள் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர்.
தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார்.

அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.
அவ்விக்கிரகத்தைப்பற்றி அவர் வெளிப்படுத்திய தகவல் இன்னும் பெரிய விந்தை.
‘விஸ்வகர்மா என்ற தெய்வச் சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ருக்மணியால் பூஜிக்கப்பட்டு,
பிற்பாடு துவாரகை மூழ்கிய போது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’!
பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால்
அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது
ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான,
அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர
கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.
துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது.
துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி
பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது

ஆதி சங்கரர்

சங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்
இயற்பெயர் சங்கர
தலைப்புகள்/விருதுகள் அத்வைதம் நிறுவியவர்,இந்து மறுமலர்ச்சி, சண்மதம் (ஆறுமதங்கள்) நிறுவியவர்
குரு கோவிந்த பகவத் பாதர்
தத்துவம் அத்வைதம்
மேற்கோள் ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம் (“வயிற்றை நிரப்ப இவ்வளவு வேஷம்” போடுகிறான் மனிதன்)
ஆதிசங்கரர் ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில்
ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.
இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று
சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு
விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது
இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.
சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம்,
உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

சங்கரர் நிறுவிய அத்வைத பீடங்களும் அவரது சீடர்களும்

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை,
வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி
தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.
காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.
தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

காலம்
கி.பி நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்து வந்த காலத்தினை
பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

தத்துவம்
பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது.
இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது.
இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான்.
நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது.
நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது.
நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது.
இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை.
தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன.
ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது.
தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார்.
ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும்.
நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.
பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

துறவறம்
தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம்
அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மனீஷா பஞ்சகம்
தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது
ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.
அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர்.
அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் “என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா” எனக் கேட்க,
சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.
உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி
அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார்.
இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.
இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற
சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

வாதங்கள்
கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று.
இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.
கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த
மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர்.
மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர்.
சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

ஆதி சங்கரர் நிறுவிய மடங்கள்
ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.
முதல் பீடாதிபதி திசை பீடம் மகாவாக்கியம் வேதம்
பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம்
சுரேஷ்வரர் தெற்கு சிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம்
அஸ்தாமலகர் மேற்கு துவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம்
தோடகர் வடக்கு ஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்

நிர்வாணாஷ்டகம்
முதன்மைக் கட்டுரை: நிர்வாணாஷ்டகம்
நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து இறுதியில்
பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.[
ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

—————

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி –
முன்னுரை
ஞாலம் வாழ் உயிர்களுக்கெல்லாம் தாய் போன்ற, கால வரையறையற்ற ஹிந்து சனாதன தருமத்தை
உலகிற்குத் தந்த பெருமை நம் பாரதப் புண்ணிய பூமியையே சேரும்.
கருணையே வடிவான ரிஷிகள் வகுத்துத் தந்த இம்மார்க்கத்தை, காலம் செல்லச் செல்ல, நம்மவர்கள் அறியாமையாலும்,
கவனமின்மையாலும், அற்ப ஆசைகளின் காரணமாகவும் கைவிட்டு, மனம் போன படி போக பலன்களை அனுபவிப்பதிலேயே மனம் செலுத்தி வந்தனர்.
பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் விளைந்த இந்த அவல நிலையை எதிர்த்து வந்த பௌத்த சமண மதங்களானவை
நடைமுறைக்கு ஒவ்வாத தீவிர அகிம்சா மார்க்கத்தைப் பறைசாற்றி வந்தமை அனைவரும் அறிந்த வரலாறு.

இத்தகைய ஒருதலையான, ஆபத்தான கொள்கை நாடெங்கும் தடையின்றிப் பரவியிருந்தால் அன்னியப் படையெடுப்புகள்
நம் கலாச்சாரத்தை வெகு சுலபமாகச் சீரழித்து, கொலைவெறி கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களையும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான
அபத்தக் கொள்கைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் பாரதமெங்கும் நட்டு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்துடன், முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நிலைநிறுத்திக் குழப்பத்தை உண்டுபடுத்தும் வேறு சில மதங்களும் ஓங்கி இருந்தன.
இத்தகைய விபரீதமான நிலையிலிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை, ரிஷிகள் வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில்
வேதத்தை எதிர்த்து வந்த மதங்களைத் தர்க்க ரீதியில் தகர்த்தெரிந்து, அத்துடன் கர்ம-ஞான-பக்தி யோகங்கள் அடங்கிய
முழுமையான வேதாந்த மார்க்கத்தை நிலைநிறுத்தி நம் சனாதன தருமத்தை மீட்டுத் தந்த சமயப் பெரியோர்கள் பலராவர்.

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர்
அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற பாஷ்யங்கள் (விளக்கவுரைகள்) எழுதி
நம் மார்க்கத்துக்குத் தொண்டு புரிந்த அவரே,
பின்னாளில் ஓங்கி வளர்ந்து பாரதமெங்கும் பரவிய உயர்வு தாழ்வு பாரா எளிய பக்தி மார்க்கத்துக்கும் வித்திட்டார் என்பதில் ஐயமில்லை.
பெரும் மரியாதைக்குரிய இவ்வாச்சாரியார் வாழ்ந்த கால வரையறைகள் முதலிய வரலாற்றுத் தகவல்களை நடுநிலைநின்று
அரும்பாடுபட்டு அறிவியல்பூர்வமான ரீதியில் ஆராய்ந்து நிரூபித்து ஆவணப்படுத்துதல் இந்துக்களாகிய நாம்
அவருக்கும் இந்து தருமத்துக்கும் புரியும் தலையாய தொண்டாகும்.
இதெல்லாம் தவிர, மதச்சார்பற்ற ரீதியில் பார்த்தாலும் இத்தகைய ஆராய்ச்சியில் கற்றுக்கொள்ளவேண்டிய
பல ஆர்வமூட்டும் வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.

நிற்க. இப்பொழுது பல மேலை நாட்டவரும் ஜப்பானியர்கள் முதலானவரும் நம் நாட்டின் வரலாற்றாராய்ச்சியைச் செய்து வருகின்றனர்.
இவர்களில் உள்நோக்கம் ஏதும் இல்லாதவர்கள் கூட அவ்வப்போது நம் கலாச்சாரத்தின் அடிப்படை உண்மைகளைப் பற்றிப்
பரிச்சயம் இல்லாததால் சில தவறான புரிதல்களையும் பிழைகளையும் செய்து வருகின்றனர்.
நம் கலாச்சாரத்திலும் சம்பிரதாயத்திலும் பரிச்சயமுள்ளவர்கள் வரலாற்று ஆராய்ச்சியில் வெளிவருவனவற்றை நடுநிலை நின்று அலசிப்பார்த்து,
அவை நியாயமானதாக இருந்தால் பாராட்ட வேண்டும்.
இல்லையென்றால் அறிவு நேர்மையுடன் (academic honesty) அது பற்றித் தர்க்க ரீதியில் விவாதித்து,
ஒவ்வாத கருத்துக்களைத் தக்க ஆதாரம் கொண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.
“வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்களோ சொல்லட்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” போன்ற வாதங்கள்
நம் சனாதன தருமத்துக்கு நன்மை செய்யாது; மாறாக, இத்தகைய போக்கு இன்றைய இளைஞர்களிடம்
நம் மதம் மீதான நம்பிக்கையின்மையையும் பற்றின்மையையுமே உண்டுபடுத்தும்.

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு சங்கரர் காலத்தை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் சுருக்கமே இக்கட்டுரை.
இதில் வைக்கப்படும் ஆவணக் குறிப்புகள், கருத்துக்கள், ஆராய்ச்சி யுக்திகள் குறித்து மாற்றுக்கருத்து உள்ள நண்பர்கள்
விரும்பினால் மறுமொழியிட்டு நட்பு முறையில் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சங்கரர் கால ஆராய்ச்சியில் பின்பற்றப்பட்ட யுக்தி

வரலாற்றில் ஒரு நபரின் காலத்தைக் கணிப்பதற்கு முன் “அவர் யார்” என்பதற்குத் தக்கதொரு இலக்கணம் கூற வேண்டும்.
அப்படிப் பார்த்தால், “பிரம்ம சூத்திரத்திற்கு ’யுஷ்மதஸ்மத் ப்ரத்யய கோசரயோ:’ என்று தொடங்கி,
’அனாவ்ருத்தி: சப்தாத் இதி ஸூத்ராப்யாஸ: சாஸ்த்ரபரிஸமாப்திம் த்யோதயதி’ என்று முடியும்
பிரபல பாஷ்ய உரை நூலை எழுதியவர்” என்று சொல்ல வேண்டும். இப்படிக் கொள்ளுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
இந்த பாஷ்யம் அவர் எழுதியது தான் என்பதில் எந்த ஒரு விவாதமும் இல்லை.
தொன்றுதொட்டு பலர் சங்கரருடைய இந்த ஆக்கத்திற்கு அநு பாஷ்யங்களையும் டீகைகளையும்
(sub-commentaries and glosses) எழுதி வந்துள்ளனர். உதாரணமாக-

(1)சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின் முதல்
நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார்.
இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார்.
“விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர்.
இவ்விவரண நூலை மேலும் விளக்க, “ருஜு விவரணம்”, “தத்வ தீபனம்” முதலிய பாஷ்ய நூல்கள் 13,14,15-ஆம் நூற்றாண்டுகளில்
வெளிவந்தமை பண்டிதர்கள் அனைவரும் அறிவர்.

(2) ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் எனப்படும் அத்வைத ஆச்சாரியார் சங்கரருடைய
பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிடத பாஷ்யங்கள், கீதா பாஷ்யம், உபதேச சாஹச்ரி கிரந்தம் ஆகியவற்றுக்கும்,
சங்கரருடைய பிரதான சீடராகிய சுரேஷ்வரருடைய பிருகதாரண்யக தைத்திரீய பாஷ்ய வார்த்திகங்களுக்கும், டீகைகளை இட்டுள்ளார்.

(3) மேலும், ஒன்பதாவது/பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் வாசஸ்பதி மிச்ரா என்பவர்
சங்கர பாஷ்யத்தை விவரிக்கும் “பாமாதி” என்னும் நூலை எழுதியுள்ளார்.
இவர் “பாமாதி பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை உண்டாக்கியவர்.
அதையும் மேலும் விவரித்து அமலானந்தர் என்னும் 13-ஆம் நூற்றாண்டு அத்வைதியர் “வேதாந்த கல்பதரு” என்ற ஒரு உரையையும் எழுதியுள்ளார்.

(4) இன்று சங்கர பிரம்ம சூத்திர பாஷ்யத்தை விளக்கும் “பிரகடார்த்த விவரணம்” என்ற நூல் பதிப்பில் உள்ளது.
இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை.
ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் ஸ்ரீ ஆனந்தகிரியும் தம் சூத்திர பாஷ்யத்தில் “பிரகடார்த்த காரர்” என்று
இவ்வாசிரியரைக் குறிப்பிட்டு, இந்நூலிலிருந்து மேற்கோளும் எடுத்துள்ளார்.

இந் நூலாசிரியர்கள் அனைவரும் அத்வைத சூத்திர பாஷ்யகாரரை “பகவத்பாதர்”,”பகவத்”, “பகவான் பாஷ்யகாரர்”, “சங்கரர்” அடையாளம் கண்டுள்ளனர்.
அது தவிர விசிஷ்டாத்வைத-துவைத்த ஆசிரியர்கள் பலர் சங்கரருடைய பெயரைக் குறிப்பிடாமல்
அவருடைய பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் உள்ள கொள்கைகளை விமர்சித்துள்ளனர் என்பது நிர்விவாதம்.

அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யகாரராகிய சங்கரர் எழுதிய வேறு நூல்கள் எவை எவை என்று பார்த்தால்,
சர்ச்சைக்கு இடமில்லாதபடி அவருடைய
(1) கீதா பாஷ்யம்,
(2) ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-
பிருகதாரண்யக-சாந்தோக்ய ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள்,
(3) ‘உபதேச சாஹச்ரி’ என்ற கிரந்தம் ஆகியவற்றை சம்பிரதாயமும் வரலாற்று ஆராய்ச்சியும் ஒப்புக் கொள்கிறது.

இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால்
இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தவில்லை.
எப்படி இருப்பினும், நாம் இப்பொழுது பட்டியலிட்டுள்ள நூல்களில் போதுமான அளவிற்குத் தகவல்கள் உள்ளன.
மேலும், மேற்கூறப்பட்ட நூல்கள் யாவும் சமஸ்கிருத மூலத்தில் இந்தியாவின் பல பதிப்பகங்களால் எந்த ஒரு பெரிய அளவிலான
பாட பேதமின்றி வெளியிடப்பட்டுள்ளன;
இந்திய அரசால் நடத்தப்படும் “டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா” (Digital Library of India, URL http://www.dli.ernet.in) என்ற
வலைத்தளத்தில் இந்தியாவின் பல பொது நூலகங்களில் உள்ள காப்புரிமை காலாவதியான புத்தகங்கள் (works with expired copyright)
மின்மயப்படுத்தி அத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை அங்கு இலவசமாகத் தேடிப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
ஆகையால், அவற்றில் இடைச்செருகல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று கொள்வதே நியாயமாகும்.

இந்நூல்களைக் கொண்டு என்ன நிரூபிக்கப்போகிறோம் என்று கேட்டால், அதற்கான பதில் இங்கே:
வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை” (terminus post quem), “கால பின் வரையறை” (terminus ante quem) என்ற
இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்.
இனி, பின்வரும் உதாரணத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்:

(1) வரலாற்றில் “நபர்-X” என்றொருவர் இருக்கிறார் என்றும் அவர் காலத்தை நிர்ணயிக்க முனைந்துள்ளோம் என்றும் வைத்துக் கொள்வோம்.

(2) “நபர்-A”, “நபர்-B” என்று இருவர் தம் தம் ஆக்கங்களில் தம் காலங்களை முறையே “வருடம் P”, “வருடம்-Q” என்று குறிப்பிட்டுள்ளார்.

(3) “நபர்-X” தம் ஆக்கங்களில் ஒன்றில் “நபர்-A” என்பவருடைய பெயரையும் அவர் எழுதியுள்ள வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

(4) “நபர்-B” தம் ஆக்கங்களில் ஒன்றில் “நபர்-X” என்பவரின் பெயரையும் அவர் வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட உதாரணத்தில், “நபர்-X” என்பவரின் காலத்தின் முன் வரையறை “வருடம்-P” என்றும், பின் வரையறை “வருடம்-Q” என்றும்
தெள்ளத் தெளிவாகக் கேள்விக்கிடமின்றி நிர்ணயிக்கப்படுகிறது.
இப்படித் தான் வரலார்ராராய்ச்சியில் terminus post quem மற்றும் terminus ante quem என்ற வரையறைகள் நிர்ணயிக்கப்படும்.
மேற்கூறிய வழியில் சங்கரர் காலத்தை நிர்ணயிக்க இடமிருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இனி அது குறித்த தகவல்களைக் காண்போம்.

ஆதி சங்கரர் கால பின் வரையறை

ஆதி சங்கரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெரிய அளவிலான அபிப்பிராய பேதம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆகையால் அதை முதலில் எடுத்துக் கொள்வோம்.
ஸ்ரீ ராமானுஜர் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு என்பதும்,
அவர் ஆதி சங்கரர் கொள்கைகளைத் தம் ஸ்ரீபாஷ்யத்திலும் கீதா பாஷ்யத்திலும் விமர்சித்துள்ளமையால்
அவர் சங்கரர் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் என்பதும் திண்ணம்.
அத்துடன், ஸ்ரீ ராமானுஜரின் இளைய பருவத்தில் வயதில் முதிர்ந்தவராக இருந்த யாமுனாச்சாரியார் அல்லது ஆளவந்தார்,
தம் நூல்களான “சித்தி திரயம்” மற்றும் “ஆகம பிராமாண்யம்” எனும் நூல்களில்
சங்கரரின் சில கொள்கைகளைச் சுட்டிக் காட்டி அவைகளிலிருந்து மாறுபடுகிறார்.

இதற்கும் மேலாக, சங்கர பாஷ்யத்தை விளக்க எழுந்த பாமாதி என்ற நூலின் ஆசிரியராகிய வாசஸ்பதி மிச்ரர்
தம் “நியாய சூசி நிபந்தனம்” என்னும் நூலில் “வருடம் 898-இல் முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.
இந்திய வருடக்கணக்கில் சாக வருடம் விக்கிரம வருடம் என்று இரண்டு கணக்குகள் உண்டு.
சாக வருடம் என்று எடுத்துக் கொண்டால் வாசஸ்பதி மிச்ரர் கூறும் தேதி கி.பி. 976 என்று கொள்ள வேண்டி வரும்.
விக்கிரம வருடம் என்று எடுத்துக் கொண்டால் கி.பி. 841 என்று கொள்ள வேண்டி வரும்.
இவ்விரண்டில் “விக்கிரம வருடம் 898”, அதாவது ஆங்கில வருடம் கி.பி. 841 என்று கொள்வது தான் சரி என்று
வரலாற்று ஆராய்ச்சியாளர் Hajime Nakamura தமது “A History of Vedanta Philosophy, Vol. 1” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

இனி, வாசஸ்பதி மிஸ்ரர் தம்முடைய பாமாதி நூலின் இறுதி சுலோகங்களில் தாம் படைத்த நூல்களைக் கால வரிசையில்
பெயரிட்டுக் காட்டியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இதில் மீமாம்சம், யோகம், நியாயம், சாங்கியம், முதலிய தர்சனங்களைப் பற்றி எழுதி விட்டுத்
தாம் சங்கரபாஷ்ய விளக்கமாகிய பாமாதியை எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.
இதை வைத்து Hajime Nakamura காலத்தைக் கணிக்க முயல்வது அவ்வளவு சரியன்று என்றே நினைக்கிறேன்.
“நியாய சூசி நிபந்தம்” (கி.பி. 841) எழுதி எத்தனை வருடம் கழித்து அவர் பாமாதியை எழுதினர் என்று அவரோ,
பாமாதிக்கு உரை எழுதிய அமலானந்த சரஸ்வதியோ குறிப்பிடவில்லை.
எந்த காரணமும் கொடுக்காமல் கி.பி. 850 என்ற வருடத்தை Hajime Nakamura பாமாதிக்குத் தருகிறார்.
மேலும், பாமாதியில் சங்கரர் சீடரான பத்மபாதருடைய பஞ்சபாதிகையில் உள்ள விளக்கங்களிலிருந்து வாசஸ்பதி மாறுபடுகிறார் என்பது தெளிவு.
அத்துடன் வாசஸ்பதி பாஸ்கரரின் பேதாபேத மதத்தையும் கண்டித்துள்ளார் –

மேலும், பத்மபாதரின் பஞ்சபாதிகத்தை பாஸ்கரர் கண்ணுற்றிருந்தார் என்று அவர் நூலை ஆய்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சங்கரர் கொள்கைகளைக் கண்டித்த பாஸ்கரர் சங்கரர் காலத்திற்குப் பிந்தியவர் என்பதில் ஐயமில்லை.
பஞ்சபாதிகா எழுதிய பத்மபாதர் தம்மைச் சங்கரர் சீடராகக் காட்டிக் கொள்கிறார். இதிலும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.
இதை வைத்து திரு Nakamura “ஆகையால், பத்மபாதர் காலம் சங்கரர் காலத்திற்கு 20 ஆண்டுகள் பிந்தியது என்றும்,
பாஸ்கரர் காலம் பத்மபாதர் காலத்துக்கும் ஒரு 30 ஆண்டுகள் பிந்தியது என்றும்,
வாசஸ்பதி காலம் பாஸ்கரர் காலத்துக்கும் ஒரு 20 ஆண்டுகளாவது பிந்தியது என்றும் கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தால்
அதில் எனக்கு உடன்பாடு இருந்திருக்காது.
“ஒருவர் இன்னொருவருடைய நூலைப் பற்றி எழுதினால் அவர் அவ்வின்னோருவருடைய காலத்திற்கு 20 ஆண்டுகளாவது தள்ளி இருக்க வேண்டும்”
என்பது ஞானிகளாகிய அவர்களின் ஆற்றலையும் உழைப்பையும் குறைத்துக் கூறுவது போல உள்ளது.

ஆனால் Hajime Nakamura ஒரு முக்கியமான வேறொரு சான்றைக் காண்பிக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் காலத்துக்கு முன் வாழ்ந்த ஆளவந்தார் என்னும் யாமுனாச்சாரியார் தம் சித்தித்ரயத்தில்
“ஸ்ரீவத்சாங்கர் என்னும் வேதாந்தி சங்கரர் காலத்துக்கும் பாஸ்கரர் காலத்துக்கும் இடையே வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார்.
இது சித்தி த்ரயம் ஐந்தாம் பாகம், முதல் அத்தியாயத்தில் உள்ளதென்றும் குறிப்பிடுகிறார்.
இதையும், வாசஸ்பதி மிச்ரர் கி.பி. 841-இல் நூற்கள் எழுதியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால்,
சங்கரர் கால வரையறையைக் கண்டிப்பாகக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வைக்க வேண்டும்.
இதிலிருந்து சிருங்கேரி மடம் கூறும் “கி.பி. 788-820” என்ற கணக்கு சற்று அடிபடுகிறது. ஓர் ஐம்பதாண்டுகளாவது தாமதமாக இருக்க வேண்டும்.

இதை மேலும் வலுப்படுத்தும் வண்ணம், இதுவரை கூறிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொள்ளாத வேறொரு சான்றும் உள்ளது.
சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்த வித்யானந்தர் தம் “அஷ்டசஹச்ரி” என்ற நூலில் சுரேஸ்வரருடைய
பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்திளிருந்து ஒரு மேற்கோளை எடுத்து “இது பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில் சொல்லப்பட்டது” என்று சுட்டி,
தம் சமண மதத்திற்கு விரோதமான வேதாந்த மதமாகிய அதில் உள்ள கருத்தை விமர்சிக்கிறார் .
இவ்வாக்கியங்கள் சங்கரரின் முதற் சீடராகிய சுரேஸ்வரரின் பிருகதாரண்யக வார்த்திகத்தின் முதல் பாகமான “சம்பந்த வார்த்திகத்தில்” காணப்படுபவை.
இதை முன்வைத்து திரு Nakamura வித்யானந்தரின் காலத்தை மேலும் ஆய்கிறார்.
ஜினசேனர் என்ற சமண பண்டிதர் “ஹரிவம்ச புராணம்”, “ஆதி புராணம்” என்று இரண்டு நூற்களையும்,
அந்நூற்களில் அவரே அவ்விரண்டும் முறையே சாக வருடக் கணக்கின்படி கி.பி. 783-இலும் கி.பி. 838-இலும் எழுதப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஆதி புராணத்தில்” வித்யானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவல்களை எல்லாம் Hajime Nakamura வின் நூலில் காணலாம்.
ஆகையால், வித்யானந்தர் ஜினசேனர் காலத்திற்கு முந்தையவராகவோ சமகாலத்தவராகவோ கொள்வதே சரியாகும்.
அவருக்கும் முன், அதாவது கி.பி. 838-க்கும் முன் சுரேஸ்வரர் தம் பிருகதாரண்யக வார்த்திக நூலைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதுவும், “சங்கரர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையது” என்னும் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

ஆதி சங்கரர் கால முன் வரையறை

சான்று 1:

பௌத்த நியாய சாத்திரத்தின் (Buddhist logic) முன்னேற்றத்துக்குப் பெரும் வித்திட்ட “தர்மகீர்த்தி” என்னும் பௌத்த ஆசிரியர்
ஏழு பிரசித்தமான நூற்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று “பிரமாண வார்த்திக காரிகை” என்னும் நூல்.
தர்மகீர்த்தியின் பெயரையும் இட்டு இதில் உள்ள ஒரு வாக்கியத்தைச் சங்கரர் தொடக்கமாக அத்வைத ஆச்சாரியார்கள்
மேற்கோள் எடுத்துள்ளனர் என்பதைக் காட்டுவோம் இனி. இதனால், ஆதி சங்கரர் தர்மகீர்த்தியின் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாகும்.

தற்போது பதிப்பில் உள்ள “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர்
என்பதற்குப் பல சான்றுகள் கொடுக்கப்படுகின்றன.
அவர் சீடராகிய சுரேஷ்வரர் “நைஷ்கர்ம்ய சித்தி” என்ற தம் கிரந்தத்தில் உபதேச நூலிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துள்ளார்.
நைஷ்கர்ம்யசித்தி என்ற நூல் சுரேஸ்வரருடையதே என்பதில் ஐயத்திற்கு இடமில்லாதபடி
ஸ்ரீ சர்வஞாத்ம முனிகள் தம் நூலில் மேற்கோள்களை எடுத்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி தம் நூலில் நைஷ்கர்ம்யசித்தி நூற் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
நைஷ்கர்ம்யசித்திக்கு ஞாநோத்தமர் என்னும் பிராசீனரும்,
உபதேச கிரந்தத்திற்கு ஆனந்தகிரி, ராமதீர்த்தர் முதலிய பிராசீனர்களும் விளக்கவுரைகளை இட்டுள்ளனர்.

அதுதவிர, பேதாபேத வேதாந்த மதத்தைச் சார்ந்த பாஸ்கராச்சாரியார் தம் பகவத் கீதை உரையில்
சங்கரரின் உபதேச கிரந்தத்தில் உள்ள கருத்து ஒன்றை “உபதேச கிரந்தத்தில் இவ்வாறு கூறப்படுகிறது” என்று
நூற்பெயரைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஒரு மேற்கோளையும் காட்டி விமர்சித்துள்ளார்.
இந்தத் தகவல்களை, “Sengaku Mayeda” என்னும் ஜப்பானிய வரலாற்று அறிஞர் தமது “The authenticity of the Upadesa Sahasri” என்ற
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அங்கே கண்டுக்கொள்க. அத்தகவல்களை நான் நேராக மூல நூற்களை வைத்துச் சரிபார்த்துவிட்டேன்.

இந்த உபதேச சாஹச்ரி நூலில் பதினெட்டாம் அத்தியாயத்தில் பௌத்த மதக் கொள்கைகளை விமர்சிக்கிறார் சங்கரர்.
இதில் எதிர் தரப்பின் வாதத்திக் காட்டும் ஒரு சுலோகம் உள்ளது:

“அபின்னோ அபி புத்த்யாத்ம விபர்யாசித தர்சனை:
க்ராஹ்ய க்ராஹக சம்வ்ருத்தி பேதவான் இவ லக்ஷ்யதே”[ உபதேச ஸஹஸ்ரி, 18.142]

இப்பகுதி ஒரு சிறு மாற்றத்துடன் அப்படியே தர்மகீர்த்தியின் பிரமாண வார்த்திக காரிகை நூலில் உள்ளது.
தர்மகீர்த்தியின் நூலில் “அவிபாக” என்ற சொல்லுக்குப் பதிலாக “அபின்ன” என்ற சொல்லைச் சங்கரர் பயன்படுத்தியுள்ளார்.
இரண்டு சொற்களுக்குள் பொருள் வேறுபாடு சற்றும் கிடையாது:

“அவிபாகோ அபி புத்த்யாத்ம விபர்யாசித தர்சனை:
க்ராஹ்ய க்ராஹக சம்வ்ருத்தி பேதவான் இவ லக்ஷ்யதே”[ பிரமாண வார்த்திக காரிகை, 3.354]

இனி, “இவ்வாக்கியத்தை தர்மகீர்த்தி பழைய பௌத்த நூலிலிருந்து தம் நூலில் கூறியிருக்கிறார்”,
“உபதேச கிரந்தத்தையும் நைஷ்கர்ம்யசித்தி கிரந்தத்தையும் நாங்கள் ஆச்சாரியார்களுடைய உண்மையான படைப்புகளாக ஏற்கவில்லை.
ஆதலால் இச்சான்று செல்லாது” என்றெல்லாம் கூறுவதற்கு இடமில்லாத வண்ணம் இன்னும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

சான்று 2:

மேலேடுக்கப்பட்ட வாக்கியம் தர்மகீர்த்தியின் வாக்கியமே என்று வேறு பல பிராசீன தத்துவ மேதைகளும் தம் ஆக்கங்களில் இயற்றியுள்ளனர்.
இதை Nakamura அவர்கள் தம் நூலில் விளக்கியுள்ளார். அங்கே கண்டுகொள்க.

சான்று 3, சான்று 4:

சங்கரருடைய சீடரான “வார்த்திககாரர்” என்று அழைக்கப்படும் சுரேஷ்வரர்
“பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம்”, “தைத்திரீய பாஷ்ய வார்த்திகம்” என்ற நூற்களை இயற்றினார் என்பதிலும்
இந்நூற்கள் இரண்டும் இன்று பதிப்பகங்களிலும் நூலகங்களிலும் கிடைக்கின்றன என்பதிலும் விவாதம் இல்லை.
இவர் மேலேடுக்கப்பட்ட தர்மகீர்த்தியின் “அபின்னோ அபி” அல்லது “அவிபாகோ அபி” என்று தொடங்கும் வாக்கியத்தை
பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில், 4.3.476 (இது பிருகதாரண்யக உபநிஷத்தின் “ஜ்யோதிஷ் பிராம்மணம்” என்ற பகுதிக்கான விளக்கமாகும்)
என்ற இடத்தில் எடுத்துள்ளார்.
இவ்விடத்திற்குட் டீகையிட்ட ஆனந்தகிரி, “(பௌத்த மதப் பிரிவான, யோகாசாரம் என்னும்) விஞான வாதிகளின் கருத்தைக்
கீர்த்தியின் வாக்கியம் வழியாக உதாஹரிக்கிறார்” என்று தெளிவாக தர்மகீர்த்தியையே “கீர்த்தி” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
இதற்கும் மேலாக, சுரேஸ்வரரே இவ் வார்த்திகத்தின் அப்பகுதியிலேயே வேறொரு இடத்தில் “தர்மகீர்த்தி கூறுவது” என்று பெயரிட்டுக் கூறியுள்ளார்:

“த்ரிஷு ஏவ து அவினாபாவாத் இதி யத் தர்மகீர்த்தினா
ப்ரத்யஜ்ஞாயி ப்ரதிஜ்ஞேயம் ஹீயெதாஸௌ ந சம்ஷய:”[பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம், 4.3.753]

சான்று 5:

இனி தர்மகீர்த்தியின் காலம் எது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நேரிடையான, சுலபமான சான்று உள்ளது.
யீ ஜிங் (I Tsing, I Ching or Yijing) என்ற சீன தேசத்து யாத்திரி தமது யாத்திரை ஆவணத்தில்
“அண்மையில் வாழ்ந்த தர்மகீர்த்தி பௌத்த நியாய சாத்திரத்திற்குப் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார்” என்று தெளிவாகக் கூறுகிறார்
யீ ஜிங்குடைய யாத்திரை ஆவணத்தை ஆங்கிலத்தில்
“A Record of the Buddhist Religion As Practised in India and the Malay Archipelago” என்று மொழிபெயர்த்து எழுதிய
நூலாசிரியர் பல பழைய சீன-ஜப்பானிய சுவடிகளின் துணை கொண்டு இந்நூலைத் தொகுத்துள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளமையால்,
இதிலும் இடைச்செருகலோ பிழையோ இருப்பது சாத்தியமில்லை என்றே கொள்ள வேண்டும்.

இப்பகுதியில் வரும் படிமச் சுட்டிக்கள் இப்புத்தகத்தின் பக்கங்களே.
இந்த யீ ஜிங் தாம் கி. பி. 671-ஆம் ஆண்டு இந்தியப் பயணத்தைத் துவக்கியதாகத் தம் யாத்திரை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.
ஆம், “ஆங்கில வருடம் போ.பே. 671” என்று குறிப்பிடவில்லை தான்.
ஆனால், “ஜியான் ஹெங் (‘Hsian Heng’ or ‘Xianheng’) யுகத்தின் இரண்டாம் வருடம்” என்று
கி.பி. 670-674 வரையறையைக் கொண்ட சீன யுகப்பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் .
சீன தேசத்துப் பல்வேறு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திகள் தெளிவாக யுகப்பெயர்களையும் வருடங்களையும் உபயோகித்தமை
வரலாற்று ஆராய்ச்சியில் பிரசித்தம் என்று அறியப்படுகிறது
அதுவும் தவிர, யீ ஜிங் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மற்றொரு புத்தகமும் தெளிவாக,
“அவர் தம் இந்திய யாத்திரையை செங்க்செங் (Zhengsheng) யுகம் முதல் ஆண்டில் முடித்துக் கொண்டார்” என்று
கி.பி. 695-ஆம் ஆண்டைக் குறிப்பிட்டுள்ளமை தெரிகிறது .

“ஆதி சங்கரர் கி.மு.500-இல் வாழ்ந்தார்” என்று கூறினால், “தர்மகீர்த்தி கி.மு. 500-க்கும் முன்பு வாழ்ந்தார்” என்று கூற நேரிடும்.
அப்படியானால், தம் காலத்திற்கு 1200 வருடங்கள் முன் இருந்த ஒருவரை “அண்மையில் வாழ்ந்தார்” என்று யீ ஜிங் குறிப்பிடுவது அபத்தமாகிவிடும்.
ஒரு வேளை யீ ஜிங் தவறான தகவலைக் குறிப்பிட்டுள்ளாரோ என்றால், அதற்கும் இடமில்லாதபடி ஒரு சான்று உள்ளது.
யீ ஜிங் தம்முடைய யாத்திரைக்கு முன்னோடியாக பா ஹியன் (Fa Hien), யுவாங் சுவாங் (Hsuan Tsang) ஆகியோர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
பா ஹியனும் யுவாங் சுவாங்கும் முறையே கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்
(யீ ஜிங்குக்கு முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு) இந்தியப் பயணம் மேற்கொண்டதாக அறிகிறோம்.
பல பௌத்த நியாய சாத்திர நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங்
தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பதும்,
பா ஹியன் தர்மகீர்த்தியையோ அவர் சமகாலத்தில் இருந்த மற்ற பௌத்த ஆசிரியர்களையோ குறிப்பிடவில்லை என்பதும்,
“தர்மகீர்த்தியின் காலம் சுமார் கி.பி. 640-க்குப் பிறகு தான்” என்னும் தரப்புக்கு வலு சேர்க்கிறது.

இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கையில், ஆதி சங்கரர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்
இருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. குறிப்பாக, தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால்,
ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

ஒரு ஆட்சேபமும் அதற்குச் சமாதானமும்

நிற்க. திரு சுப்ரமணியன் சுவாமி இந்திய வரலாற்று ஆராய்ச்சி பற்றிய ஒரு கருத்தை முன்வைக்கிறார்.
அவருடைய பேச்சிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை இங்கே.
கிரேக்க மொழியில் அமைந்துள்ள மெகஸ்தனீசு எழுதிய “இண்டிகா” என்ற இந்திய யாத்திரை ஆவணத்தில் உள்ள
“ஸாண்ட்ரகூட்டஸ் (Sandracottus)” என்னும் பெயரை மௌர்ய சாம்ராஜ்யத்தின் சந்த்ரகுப்த மௌர்யருடன் இணைத்து,
அவர் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறதாம்.
அதை வைத்துத் தான் புத்தர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறதாம்.
ஆனால், “இந்த ஸாண்ட்ரகூட்டஸ் சந்த்ரகுப்த மௌர்யர் அல்ல, குப்தர் காலத்துச் சந்த்ரகுப்தரே” என்பதற்குச்
சில வாதங்களை சுப்பிரமணியம் சுவாமி முன்வைத்துள்ளார்.
“சந்த்ரகுப்த மௌர்யரை ஸாண்ட்ரகூட்டஸ்ஸுடன் தவறாக முடிச்சுப் போடுவதால் தவறான காலக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆகையால், புத்தர் காலம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது” என்றும் கூறியுள்ளார்.
சுப்ரமணியம் சுவாமி கூறுவது உண்மையாகவே இருக்கட்டும்.
இது எந்த விதத்திலும் “சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு” என்ற கருத்துக்கு ஆதாரமாகாது.
ஏனெனில், நாம் இக்கட்டுரையில் இதுவரையில் காட்டியுள்ள சான்றுகள் புத்தர் காலக் கணக்கையோ அல்லது
எந்த ஒரு இந்திய சக்கரவர்த்தியின் காலக் கணக்கையோ வைத்து நிர்மாணிக்கப்படவில்லை என்பது தெளிவு.
மேலும், சுப்பிரமணிய சுவாமியே அதே கட்டுரையில் பா ஹியனின் காலத்தைக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்றே கூறியுள்ளார்.
அவருக்கும் பிற்பட்டவராகிய தர்மகீர்த்தி கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலோ அதற்கு முன்பாகவோ வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியாகிறது.

சான்று 6:

இது சற்று சிக்கலான சான்றாக இருப்பதால் “சங்கரர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்” என்ற தரப்பிற்கு
இதை முக்கிய ஊன்றுகோலாக நாம் கொள்ளவில்லை. செய்தியை மாத்திரம் கூறி விடுகிறேன்;
அதற்கு மேல் நடுநிலையாளர்கள் நிர்ணயிக்கட்டும்.

குமரீல பட்டர் (Kumarila Bhatta) என்னும் மீமாம்ச்சகர் சுலோக வார்த்திகம், தந்திர வார்த்திகம் என்று இரண்டு நூற்களை இயற்றியுள்ளார்.
இவர் காளிதாசனுடைய ஒரு வாக்கியத்தைத் தம் தந்திர வார்த்திக நூலில் எடுத்துள்ளார். அந்த வாக்கியமானது,

அஸம்சயம் க்ஷத்ர-பரிக்ரஹ-க்ஷமா யத் ஆர்யம் அஸ்யாம் அபிலாஷி மே மன:
ஸதாம் ஹி ஸந்தேஹ-பதேஷு வஸ்துஷு ப்ரமாணம் அந்த:காரண ப்ரவருத்தய:[அபிஞான சகுந்தலம், 1.21, பார்க்க: படிமம் 2]

என்னும் காளிதாசனின் அபிஞான சாகுந்தலத்தில் காணப்படுகிறது.
குமரீலரோ தந்திர வார்த்திகத்தில், மீமாம்ச சாத்திரம் பற்றிய ஒரு கருத்தைப் பற்றி விசாரிக்கும்போது
“வித்வான்களால் கூறப்படுவதிலிருந்து அறியப்படும் இத் தகவல், பிரசித்தமாகக் கவிகளால் (கவிகளின் வாக்கியத்தால்) நிரூபிக்கப்படுகிறது”
என்று குறிப்பிட்டு, மேற்கண்ட அபிஞான சகுந்தல சுலோகத்தின் இரண்டாம் பகுதியை ஆதாரமாகக் காட்டுகிறார்

சங்கர விஜய நூற்களில் சங்கரர் குமரீல பட்டரைச் சந்தித்ததாக வருகிறது.
அவர் சீடராகிய மண்டனரை விவாதத்தில் வென்று, அவரைத் தம் சீடராக்கிக் கொண்டார் என்றும் வருகிறது.
ஆனால், இதை ஆதாரமாகக் கொண்டு நாம் “சங்கரர் காலத்துக்குக் குமரீல பட்டர் முந்தியவர்” என்று நிரூபிக்கத் தேவையில்லை.
கேள்விக்கு இடமில்லாதபடி வேறு விதமான ஆதாரமும் இருக்கிறது:
மண்டன மிச்ரர் என்பவர் எழுதிய “பிரம்மசித்தி” (Brahma siddhi) என்ற நூலில், தந்திர வார்த்திகத்தையும் சுலோக வார்த்திகத்தையும்
மேற்கோள் காட்டியிருப்பதை அந்நூலைப் பதிப்பித்த தொகுப்பாளர் குப்புசாமி சாஸ்திரி அவர்கள் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த மண்டன மிச்ரர் சங்கரர் காலத்தவர் என்று மிகத் தெளிவாகக் கூற முடியும்.
ஏனெனின், பிரம்மசித்திக்கு உரை எழுதிய சங்கபாணி என்ற பிராசீனர் அந்நூலில் ஓரிடத்தில்
சங்கரர் கொள்கை கண்டிக்கப்பட்டுள்ளதைக் காட்டியுள்ளார்.

இதில் சங்கரருடைய கொள்கையை “பகவத்பாதீய மதம்” என்று சங்கபாணி குறித்துள்ளார்).
இங்கு மண்டனர் எதிர்க்கும் கொள்கையும் சங்கரருடைய சூத்ரபாஷ்யம் 3.3.32-இல் தெளிவாக உள்ளது.
இனி, “இந்த மண்டன மிச்ரர் சங்கரர் காலத்துக்கு வெகு காலம் கழித்து இதை எழுதியிருக்கலாமே” என்று கூற இடமில்லாதபடி,
சங்கரரின் முதல் சீடராகிய சுரேஸ்வரர் மண்டனருடைய சித்தாந்தத்தை பிருகதாரண்யக வார்த்திகத்தில் ஒரு இடத்தில் கண்டித்துள்ளார்.
இதை டீகை எழுதிய ஆனந்தஞானர் சுட்டியும் காட்டுகிறார்.
பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம் 4.4.796 மற்றும் ஆனந்தஞானர் டீகை; ஆனந்தஞானரும் விவரம் தெரியாதவர் அல்லர்.
அவர் மெத்தப் படித்த பண்டிதர் என்பது அவர் பல்வேறு தத்துவ மேதைகளின் நூற்களிலிருந்து மேற்கோள் எடுப்பதை வைத்துக் கூற முடியும்.
அது தவிர, சுரேஸ்வரரின் நைஷ்கர்ம்யசித்தியிலும் மண்டனருடைய பிரம்மசித்தி விமர்சிக்கப்பட்டுள்ளது என்று குப்புசாமி சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
ஆகையால், மண்டனரையும் சங்கரரையும் சம காலத்தவராகத்தான் ஏற்க வேண்டும்.
ஆகையால் சங்கரர் காலத்திற்குச் சமகாலத்தவர் மண்டனர், மண்டனர் காலத்திற்கு முந்தியவர் குமரீலர்,
குமரீலர் காலத்திற்கு முந்தியவர் காளிதாசர் என்று தெரிய வருகிறது.

இனி, காளிதாசன் காலத்தை நிர்ணயிக்கும் பெரும் சிக்கலுக்கு வருகிறோம். இதில் பலருக்குப் பல அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன.
வரலாற்று அறிஞர்கள் சிலர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர்.
இது நிரூபிக்கப்படுமானால், சங்கரர் காலத்தை 8-ஆம் நூற்றாண்டாக ஏற்க மேலும் ஒரு சான்று கிடைத்துவிட்டதாகிறது.
எப்படி இருப்பினும், இது வரை எவரும் “கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன் காளிதாசர் வாழ்ந்திருக்கிறார்” என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.
அத்துடன் இந்தியாவிலும் பல காலமாக, விக்ரமாதித்யரின் அரசவையில் “நவரத்தினங்களுள்” ஒருவராகக் காளிதாசன் கருதப்படுகிறார்.
சுப்பிரமணிய சுவாமி கூறும் “சந்திரகுப்தர் சர்ச்சை” முடியும் வரை காளிதாசன் காலத்தை நடுநிலை நின்று
நிர்ணயிப்பது கடினமாகவே இருக்கும் என்பது என் கருத்து.
எனினும், மேற்கண்ட சுப்பிரமணிய சுவாமியின் வாதத்தோடு உடன்பட்டால் கூட விக்கிரமாதித்தர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு
முந்தையது என்று கருதுவதற்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை.
ஆகையால், காளிதாசர்-குமரீலர்-மண்டனர்-சுரேஸ்வரர் சான்று சங்கரர் காலத்தைத் துல்லியமாக நிரூபிக்கப் பயன்படாவிடினும்,
இச்சான்ரும் “சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு” என்ற தரப்புக்குப் பெரும் பலவீனம் அளிக்கிறது என்றே கொள்ள வேண்டும்.

முடிவுரை: ஆய்வுக்கு எடுக்கப்பட்ட நூற்கள், சில கேள்விகள், எண்ணங்கள்

இந்த ஆய்வில்காட்டப்பட்ட சான்றுகள் முக்கியமாக Hajime Nakamura-வின் “A History of Vedanta Philosophy, Vol. 1 (1999)”-இலிருந்து எடுக்கப்பட்டவை.
அது தவிர, “Journal of Oriental Research, Madras (1929)”-இதழில் திரு தி.ஆர். சிந்தாமணி அவர்கள்
சங்கரர் காலம் பற்றியதொரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
அதிலிருந்தும், குறிப்பாக வாசஸ்பதிமிச்ரர்-பாஸ்கரர்-பத்மபாதர் குறித்த சான்றுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரம்மசித்தி பற்றிய ஆராய்ச்சி Allen Wright Thrasher என்பவர் எழுதிய “The Advaita Vedanta of Brahma-siddhi (1993)” என்ற நூலில் காணப்படுபவை.
இந்நூற்கள் பயன்படுத்தப்பட்ட முறை குறித்து ஒரு முக்கியமான தகவல்:

நான் இந்நூல்களைத் துணையாகக் கொண்டு தான் சொந்த ஆராய்ச்சி செய்தேன்.
அவர்கள் கூறுவதை மூல நூலைப் பார்க்காமல் கிளிப்பிள்ளையைப் போல, “இவர் சொன்னார், அவர் சொன்னார்” என்று இங்கு திரும்பச் சொல்லவில்லை.
முடிந்த அளவு அவர்கள் கூறும் சான்றுகள் சரியாக உள்ளனவா என்று மூல நூற்களின் துணைகொண்டு பார்த்துவிட்டு,
சரியாக இருந்தால் பக்கங்களைப் படிம வடிவிலும் கட்டுரையிலேயே சுட்டியுள்ளேன்.
மூல நூல்களைப் பற்றிய மேற்கொண்ட தகவல்களை அச்சுட்டிகளின் துணைகொண்டு கண்டுகொள்க.

இது வரை நாம் பார்த்த சான்றுகளின்படி, ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கும்
கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கும் இடைப்பட்டது என்று நம்ப வலுவான சான்றுகள் உள்ளன.
சிலர் சங்கரர் காலத்தைக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர்.
சிலர், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு ‘அபிநவ சந்கரருடன்’ நாம் குழப்புவதாகக் கூறுகிறார்.
அப்படியானால், பத்மபாதரும் சுரேஸ்வரரும் ஆனந்தஞானரும் குழம்பியதாகக் கொள்ள வேண்டும்.
அல்லது, ‘அபிநவ சங்கரர்’ போல ஒரு ‘அபிநவ பத்மபாதர்’ இருந்ததாகவும், ‘அபிநவ சுரேஸ்வரர்’ இருந்ததாகவும்,
‘அபிநவ ஆனந்தஞானர்’ இருந்ததாகவும் புதிதாகக் கற்பிக்கவேண்டும்.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டு தரப்பில் உள்ளவர்களிடம் முறையான விவாதம் நடக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இரண்டு கடமைகள் உண்டு:

(1) சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று நம்புவதற்கு கல்வெட்டின் உருவத்திலோ அல்லது ‘இடைச்செருகல்’ என்று
தள்ளுவதற்கு இடமில்லாத ஆவணத்தின் உருவத்திலோ வரலாற்றுச் சான்று ஏதேனும் உள்ளதா என்று
ஆதாரத்துடன் பொறுமையாக நாம் கட்டியது போல வரிசைப்படுத்திக் காட்ட வேண்டும்.

(2) அது மாத்திரம் போதாது. பின்வரும் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும்:

காளிதாசர் காலம் கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கும் முன்னது என்று நம்புவதற்குச் சான்று உண்டா?
தர்மகீர்த்தியின் காலம் எது? யீ ஜிங் ஏன் தர்மகீர்த்தியைத் தம் காலத்திற்கு அருகாமையில் வாழ்ந்தவராகக் குறிப்பிடுகிறார்?
பா ஹியன், யுவாங் சுவாங், யீ ஜிங் ஆகியவர்களுடைய காலம் சீன தேசத்து சக்கரவர்த்திகள் காலத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
மூவரின் காலம் முறையே கி.பி. 5-ஆம், கி.பி. 7-ஆம், கி.பி. 7-ஆம் நூற்றாண்டுகள் என்று அறியப்படுகிறது.
தர்மகீர்த்தி கி.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தார் என்றால் ஏன் பா ஹியனும் யுவாங் சுவாங்கும் தர்மகீர்த்தியைக் குறிப்பிடவே இல்லை?
அத்துடன், பா ஹியன் தர்மகீர்த்திக்கு அண்மையிலும் சற்று முன்னும் வாழ்ந்த பல பௌத்த பண்டிதர்களைப் பற்றி ஒரு பேச்சு கூட எடுக்கவில்லையே?

இது வரை கி.மு. 5-ஆம் நூற்றாண்டு தரப்பிலிருந்து வரும் வாதங்கள், மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலின் உருவத்தில் வந்ததில்லை.
மாறாக, அபத்தமாகச் சிலர் (குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Theosophical society-ஐச் சேர்ந்திருந்த Subba Row என்பவர்)
“சங்கரரின் காலம் புத்தர் நிர்வாணம் அடைந்து 52 ஆண்டுகளுக்குள்” என்றும்,
“சங்கரர் பரமகுருவாகிய கௌடபாதர் புத்தருக்கும் முன்பு வாழ்ந்தவர்” என்றும் கூறுகின்றனர்.
இப்படி இருக்கச் சற்றும் வாய்ப்பே இல்லை.

யீ ஜிங் “ஆதி காலத்தில் நாகார்ச்சுனர் முதலானோரும், மத்திய காலத்தில் வசுபந்து முதலானோரும்,
அண்மைக் காலத்தில் தர்மகீர்த்தி முதலானோரும் பௌத்த மதம் செழிக்கப் பல தொண்டுகளைப் புரிந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.
ஒரு 50 ஆண்டு காலத்தை “ஆதி காலம், மத்திய காலம், அண்மைக் காலம்” என்று மனநோயாளி கூட பிரிக்க மாட்டான்.
இத்தகைய நகைக்கத்தக்க விதண்டாவாதங்களை மாற்றுத்தரப்பில் உள்ளவர்கள் இனி தவிர்க்க வேண்டும்.

இன்னொரு ஆட்சேபத்தை ஒரு நண்பர் எழுப்பினார். அதாவது
“ஆதி சங்கரர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்று கூறிவிட்டால்
இந்து மதம் கிறித்தவ இசுலாமிய மதங்களுக்குப் பிறகே தோன்றின” என்று புனித தோமையாரைப் பின்பற்றும் சிலர் கூற இடமிருக்குமாம்.
சங்கரர் தம் பாஷ்ய நூல்களில் ஏகப்பட்ட சுருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண, பகவத் கீதா மேற்கோள்களையும்,
பல ரிஷி வாக்கியங்களையும், த்ரமிடர், டங்கர், பர்த்துரு பிரபஞ்சர், கௌடபாதர் முதலான ஆச்சாரியார்களையும் மேற்கோள் எடுத்துள்ளார்.
மேலும், கீதா பாஷ்ய முன்னுரையில் சங்கரர் கீதைக்கு தம் காலத்திற்கு முன் பல பேர் பாஷ்யம் செய்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து, வேதம், கீதை, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த மதம் என்பது வியாசர் காலம் தொடங்கி
ஒரு பெரும் தொடர்ச்சியான ஆறாக ஓடிக்கொண்டிருப்பது சிறுவர்களுக்கும் விளங்கும்.
அது ஆபிரகாமிய மத வெறியர்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்களைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பதில் ஐயமில்லை.

“சங்கரர் கி.பி.550 தொடங்கி கி.பி. 838 என்ற கேள்விக்கிடமில்லாத வரையறைகளுக்குள் எழுந்தருளினார்” என்பது தவிர,
இன்னும் துல்லியமாகக் கணக்கிடுவது மேற்கொண்டு ஆராய்ச்சி செய்தாலொழிய அரிது என்றே தெரிகிறது.

துல்லியமாக பொ.பி 780 – 820 என்பதற்கு ஒரு உறுதியான அகச்சான்று உள்ளது.

இந்திய அரசும் இந்த வருங்களையே அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே 1980ல் சங்கரரின் 1200வது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாராயணனின் ஸாத்விகம் பற்றிய பிரமாணங்கள்

November 8, 2021

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

மைதாரணீய உபநிஷத நிர்ணயம் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான பூர்வாச்சார்யர்களால் கையாளப்பட்டது)

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய
ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய
தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ (நாலாவது ப்ரபாடகம்)

பரமாத்மா விக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன.
பரம புருஷனானுடைய ராஜஸாமசம் பிரம்மன், ஸாத்வீகாமசம் விஷ்ணு, தாமஸாமசம் ருத்ரன் -என ஓதப்பட்டுள்ளது
ஸாத்வீக ராஜஸ தாமஸ தேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

———-

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே–ஸூபாலோபனிஷத நிர்ணயம்

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது.
கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம்.

———-

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன:
ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான:
ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம்
பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி–ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்கவொண்ணாதவனாய்,
ஸர்வேஷ்வரனும், ஸர்வவியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய்
ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்தரூபமாய்,
எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தை யெனபடும் கருமம்,
தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோ குணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம்.

—————

புருஷ,விஷ்ணு ஸூக்தவிநிர்ணயம்

ஸாவவேதபடிதமாய், ஸாவவேதச்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநதரஹிதமான புருஷஸூக்தத்திலே
லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில்
‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

————–

ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது விஷ்ணுஸூக்த வாசகம்

‘தம தவா கருணமி தவஸமவதவயாந க்ஷயநதமஸ ரஜஸ பராகே’

மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை
அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

————

‘தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)
‘தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)
‘ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)
ஸத்வ குணமுள்ள முன்போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.
“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)
ராமஸஸதபுருஷோலோகே” (அயோத்யாகாண்டம்2:29)

‘ஸ ச சர்வகுணோபேத (பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத (அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே (அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந’ (கிஷ்கிந்தாகாண்டம்15:21)

சிறந்த மலைத் தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன்
என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

————–

‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)

சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று
நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக அநுஸநித்தது.

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக
பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான்.
அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;
பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும்
இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும்
அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர்.

ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது.

————

ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான
அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது.

ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||
ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|
தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||
பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர|| (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத் பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார்.
கல்ப காலம் முடியும் வரை யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை உடைய
விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு
அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார்.
புசித்த பின் உலகம் முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார்.
என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன் ருத்ரன் எனவும் காட்டுகிறது.

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||
ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||
ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ|| (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான்.
ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான்.
ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோ குணத்தைகொண்டு ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று
இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது.

——————

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||
ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||
தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ ||
தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||
தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|–வராஹபுராண நிர்ணயம்

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன.
ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது.
ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன்.
அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது.
வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ,
அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது,
கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். என ருத்ரனே ஒப்புகொண்டான்.

——————-

லிங்கபுராண நிர்ணயம்

இலிங்கதிட்ட புராணம் என ஆழ்வார்களாலும் பேசப்பட்ட சைவபுராணமே இவ்விஷயத்தை ஒப்புகொண்டதை காண்போம்.

ஹிரண்யகர்ப்போ ரஜஸா தமஸா ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந ஸர்வகோ விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன் தமோகுணத்தோடும்,ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும் ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்
என்று பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ ருத்ரஸ் தமஸா ச ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா
ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத் ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன் கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு ஸத்வ குணமுடையவன்
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத||

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோக நமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும்
லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது.

———————

மத்யஸ்யபுராண நிர்ணயம்

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா | தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||
அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் | ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||
ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே | ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது.
அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது.
ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது.
ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிக பெருமை சொல்லப்படுகின்றன.
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் .

—————

ஸ்ரீமத் பாகவத புராண நிர்ணயம்

அநேக திவ்ய சரித்திரங்கள், அநேக மத விஷயங்களைப் பற்றிய ஆராய்வு, பகவானின் கல்யாண குணங்கள்,
பகவானில் பக்தி செலுத்த மனிதன் உண்மையான நிர்குண நிலையை அடைவதற்கும் பரமபதமெனும் முக்தியை அடையும்
நோக்கு எனும் அரிய விஷயங்களைப் பற்றி இப்புராணம் அடிக்கடி வசனிக்கிறது.
இதனாலேயே இதை “பரம ஹம்ஸ ஸம்ஹிதை” என்று பெயர் பெற்றது.
இதை வேதவியாஸர் இயற்றிய காரணம், இதை வெளியிட்டதனால் அவருக்குண்டான சாந்தியையும் இதை அப்யஸித்து
ஆனந்தித்த சுகபிரம்மத்தின் பெருமையும், மரணவாயில் சிக்கிய பரிக்ஷித்தை இது கரையேற்றிய விதம் என்பவற்றை
ஆராய்வோருக்கு இதன் மேன்மைவிளங்கும். இப்புராணத்தில் சரமாரியாய் பலவிடத்தும் ஸாத்வீகதாமஸ தேவதை பற்றி பேசுகிறது.

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|
ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்று குணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே.
ரக்ஷணம், ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான்.
அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது.

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||
முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||
ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||

ஆதி காலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுண திருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர்.
அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர்.
கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய்
சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர்.
ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான
ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர்
என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும் தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது.

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு வசப்பட்டவன். தமோகுணமுடையவன்.
ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே.
இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது,
தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன.

——————-

பத்மபுராண நிர்ணயம்

ப்ருகு மஹரிஷி ஸாத்வீக பரம்பொருள் யார் என்பதை யறிய மூவுலகம் சென்று முடிவெடுத்த விஷயம்
பாகவத, பத்ம, நாரதீய புராணங்களில் பேசப்படுகிறது.
பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளதை காண்போம்.

திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே! ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்
ஜீவாத்ம பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும் ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன.
ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,
உமக்கு என்னிடமுள்ள வாத்சல்யப் பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்ல வேணும்,
முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்?
சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்?
ஐந்து முகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்?
இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும்.

வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன்.
மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவா மனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான்.
அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர்.
ஸத்ரயாகம் நடக்கும் போது பரம் பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர்.
“வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது?
ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்?
எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது?
எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்?
எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? “என்று இவ் வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று.

சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர்.
சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
அழிவற்ற தாமரை கண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே
பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர்.
அவர்களின் விவாதம் தொடர்ந்த கொண்டிருக்கையில் ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.
“சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன்.
ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல.” என்று அவர் கூறியதை கேட்ட
மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர்.

“எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு அருகில் சென்று ஸத்வகுண சரீரம் கொண்டு
ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக” .
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார்.
சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார்.
“தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக”.
இதைகேட்ட நந்தி கடுமையாக பின்வருமாறு கூறிற்று” எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார்,
எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்”.

இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி ‘ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்க ஸ்வரூபமாக ஆகுக.
தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னை அவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான்,
ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும்.
இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக
வேதத்திற்கு புறம்பானவராவார்”என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார்.

அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார்.
முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை,
எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை.
இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி “அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக” என்று
இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார்.
இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார்.
(இவ்வாறு நடக்க வேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து ‘தன்யனானேன்’ என்று பேரானந்தத்தோடு
அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி
அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார்.
உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி
வணங்கி சொல்லலானார். அஹோ! என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது?
குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன்.
உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர்.
சுத்த ஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது,

நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது,
மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன் ஸனாதனனான உன்னை பூஜித்து
உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான்.
பித்ரு ஸிராத்தத்தில் உன் தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர்.
உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது.
ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே! தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்),
மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,
வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனே ப்ராஹ்மன்யன்,
ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன்,
கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனே
ப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,
இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும்
ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம்,

ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான பரமாத்மாவுக்கு உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம்.
எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா!
உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!
அப்பாதஹமான செயலை பொறுத்தருள வேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார்.

வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தை யுறைத்தார்.
ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம் பெறுவான்.
அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத் நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை.
ஆகையால் மற்றயவர்களை விட்டு பழையோனாகிய விஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது

மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும்
ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம்.
ருத்ர பக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம்.
தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல்
“மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்” என்பதையும் அறிகிறோம்.
எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.

இதே புராண வாயிலாகவே புராண நிர்ணயமும் பார்வதி பரமேஸ்வரனின் சம்பாஷனையினூடே தெளிவுற விவரிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டத்திலே 263ம் அத்யாயத்தில்
“பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர்.
அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள்.
அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ,
அவருக்கு சமமாக ப்ரஹ்ம ருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ,
கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை
யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ
சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.

இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான
அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச் சென்று
நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேத தர்ம நிஷ்டர்களாய்
விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர்.
அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும்
என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும்
பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க
இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க
தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும்.
ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால்
உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.

இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற
தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய்.
இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன.
என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள்.

வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது.
இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன.
கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது.
தேவ குருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது.
திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய
பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது.
கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது.
வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும்.
அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும்.
அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது.
ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.

கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம்
வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது.
நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள்
1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம்
ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள்
1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம்
4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம்
தாமஸ குண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள்
1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம்
இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை
(+வாஷிஷ்டம்,ஹாரிதம், வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்) கொடுக்கும்
மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்”என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது.

——————————-

ஸ்கந்தபுராண நிர்ணயம்

சைவர்களால் சிவ, லிங்க புராணங்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் புராணம் ஸ்கந்தபுராணமே;
அப்புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு
உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது.

ஜைமினி சொன்னார்-
இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,
வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான்.
“உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்?
அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தி யுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ!
புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ
ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை முக்தியையடைகின்றனர்” என
ப்ரஹ்ம ஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார்.

பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்?
வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம் என்பவற்றை பகவான் செய்கிறார்.
ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;
அந்த புருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்,
இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின”. என
தாமஸ குண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது.

இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம்
மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

‘சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி.
அதுவே எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது’. என்கிறார்.
இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது.

————-

‘யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ
எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே
என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராய பரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

—————–

‘ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர்
பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்’

எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய்
ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன்
என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது.

———————–

பிதா புத்ரணே பித்ருமாந் யோநியோநௌ நாவே தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்” [யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந” [யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்” [புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” [புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

————

ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந (பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று.
எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது?

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ| நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய்,
பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது.

————————-

ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது
‘ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி|

( இதைக்கேட்ட ருத்ரன் தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்”
என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால்

‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை
மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வத்து (35-50) வசனமும்
திரிபுரசம்ஹாரம் திகிரியானாளேயே ருத்ரனுக்கு சாத்யமானதென்பதை சாதித்தவழி காண்க.

இவ்வர்தத்தை உணர்ந்த சங்கச் சான்றோரும்
‘….பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக் கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
தொல் புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல்) என்று பாடி வைத்தனர்

——————-

‘ ந து நாராயணாதீதாம் நாம்நாமந்யத்ர ஸம்பவ| அந்யநாம்நாம் கதிர் விஷ்ணுரேக ஏவ ப்ரகீர்த்தித|
ருதே நாராயணாதீநீ நாமிநி புருஷோத்தம:| ப்ராதாததந்யத்ர பகவான்…‌…..‌.

நாராயணன் முதலிய பெயர்கள் மற்ற தெய்வங்களை குறிக்கமாட்டா,மற்ற தெய்வங்களினன் பெயருக்கு
விஷ்ணு ஒருவனே சேருமிடமாக கீர்த்திபெற்றிருக்கிறான்.
நாராயண நாமத்தை தவிற பிறபெயர்களை அவனே பிறதேவதைகளுக்கு கொடுத்தான் என்கிற வாமனபுராண வசனம்

—————

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய
பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை
ஸ்ருதி, ஸ்மிருதி இதிஹாச புராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .