Archive for August, 2021

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

[வாயவனையல்லது.] எம்பெருமான் ஆச்ரிதரை ரக்ஷிப்பதிலும் கொடியவர்களைத் தண்டிப்பதிலும்
தீக்ஷிதனாயிருக்கின்றான் என்கிற திருக்குணங்களிலே யீடுபட்டுத்
தம்முடைய இந்திரியங்கள் அவன் திறத்தே அவகாஹிக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

உலகம் தாயவன் என்றதனால் ஆச்ரிதரை ரக்ஷிப்பதில் தீக்ஷிதனென்பதும்,
பேய் முலை நஞ்சு ஊணாகவுண்டா னென்றதனால் கொடியவர்களைத் தண்டிப்பதில் தீக்ஷிதனென்பதும்
தெரிவிக்கப்பட்டன வென்க.

மூன்றாமடியில், உருவொடு- உருயையும் என்றபடி.
உருவை யல்லால் கண் காணா பேரை யல்லால் செவி கேளா என்று அடைவே அந்வயிப்பது.
இது- முறைநிரனிறைப் பொருள்கோள்.

————-

[செவி வாய் கண்.] ‘நமக்கு உபாயமு உபேயமும் எம்பெருமானே யாவன்’ என்கிற சாஸ்த்ரார்த்தம்
பலர்க்கும் தெரியுமாயினும் பக்தி முதலானவற்றையும் எம்பெருமானைப் பெறுகைக்கு உபாயமாகச் சிலர் ப்ரமித்திருப்பர்கள்.
அந்தோ! இப்படியும் சில மஹான்களுங்கூட மயங்கியிருக்கிறார்களே! என்று ஆழ்வாரிரங்குகிறாரிப்பாட்டில்.

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)

ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்ன வேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்.
* மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் தன்னுடைய
நிர்ஹேதுக கிருபையாலேயன்றி வேறொரு உபாயத்தை எதிர்பார்த்தன்றே என்று குறிப்பித்தவாறு.

இப்பாட்டின் முதலடியில் இந்திரியங்கள் ஐந்தையும் இரண்டா மடியில் பஞ்ச பூதங்களையும் சொல்லி யிருப்பதன் கருத்தாவது-
இந்திரியங்களோடு கூடினதாய்ப் பஞ்ச பூதங்களால் இயன்றதான சரீரத்தைச் சொன்னபடி.
சரீரத்தை மோக்ஷஸாதநமாக ஆரும் சொல்லவில்லையே யெனில்;
அவியாத ஞானம் என்பதனால் சொல்லப்பட்ட பக்திரூபாபந்ந ஜ்ஞானமானது கரண களேபர ஸாத்யமாகையாலே
கரண களேபரங்களுக்கும் பரம்பரையா மோக்ஷ ஸாதநத்வம் சொல்லக்கூடு மென்றுணர்க.

அக்நி ஹோத்ரம் முதலிய வேள்விகளும் விவேகம் தயை ஸத்யம் முதலிய நற்குணங்களாகிற நல்லறமும்
ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதனமாகக் கொள்ளப்படுகின்றனவோ வென்னில்;
அவையும் பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணங்களாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகையாலே
அவற்றுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத்வமே சொல்லகூடும்.

ஆகவே, இப்பாட்டில் அவியாத ஞான மென்று சொல்லப்பட்ட பக்தி யொன்றே மோக்ஷோபாயமாக வழங்கக் கூடியது.
எம்பெருமானுக்கே நிரபேஷ உபாயத்வம் கொள்ளுகிற ஆழ்வார் திருவுள்ளத்தாலே
அந்த பக்தி யுபாயத்வமும் கழிக்கப்பட்டுகின்றது. என்பரே! என்ற ஏகாரம் இதனை காட்டும் .

இனி என்பரே என்றவிடத்து ஏகாரத்தை அசையாகக்கொண்டு
‘பகவத் ப்ராப்திக்கு பக்தியை உபாய மென்பர்’ என்று சொல்லிவிடுவதாக உரைப்பாரு முண்டு, இயல்வு- உபாயம்.

———-

[இயல்வாக] எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதை யுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ,
ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு உரிய விரகு உண்டோ? என்று ஒரு சங்கை உதிக்கக்கூடுமே;
அதற்கு உத்தரமாக அவதரித்த பாசுரம் இது.

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்தவேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

நித்ய ஸூரிகள் தாம் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்ந்திருப்பவர்; இருக்கட்டும்;
ஸம்ஸாரிகளுக்கு பகவத் ஸமாச்ரயண யோக்யதையே கிடையாதென்று கொள்ள இடமில்லை
ஸம்ஸாரிகளும் வேதங்களை யோதி அவற்றின் பொருள்களைத் தெரிந்து கொண்டு படிப்படியாகத் திருந்தி
எம்பெருமானை வந்து கிட்டும்படியாக அப்பெருமான் தானே மூல ஸுக்ருதமாக அமைந்திரா நின்றானென்கிறார் .

இப்படியருளிச்செய்வதன் கருத்து யாதெனில்; எம்பெருமானை யடைவதாகிற காரியம் சேதநருடைய தலையிலே கிடப்பதன்று; .
“எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய, விதி சூழ்ந்ததா லெனக்கே லெம்மான் திரிவிக்கிரமனையே” என்கிறபடியே
நெடுநாளே பிடித்து ஸம்ஸாரியைப் பெறுவதற்கு அப்பெருமான்தானே பலவகையான க்ருஷிகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்றவாறு.

“ஆதியாய் நின்றாரவர்” என்றதன் கருத்து இதுவே. ஸ்ரீ வேதாந்த தேசிகனும் இதனையே திருவுள்ளம்பற்றி
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே “ நிதாநம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:’ என்றருளிச் செய்தா ரென்றுணர்க.

———-

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

[அவரவர்தாந்தாம்.] கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றாரவர் என்றதை விவரித்துப் பேசுகிறது இப்பாட்டு.
உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக் கொண்டு தாம் தாம் கற்ற சொற்களைக் கொண்டு
அத்தெய்வங்களைத் துதித்து விக்ரஹாராதநம் விசேஷ மென்றறிந்து சுவர்களிலே சித்திர ரூபமாக
அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தும் தொழா நின்றார்களாகிலும்,
அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாகவுள்ள தெய்வங்களுக்கெல்லாம்
ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாராயிற்று.
கீழ்ப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் எம்பெருமானை ஆச்ரயித்தே ஸத்தை பெறவேண்டும்படி அவனே முழுமுதற் கடவுள் என்கை.

அவரவர் என்ற சுட்டு – அவர்களின் குணக்குறைவைக் காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி.
தாந்தாமறிந்தவாறாவது- சாஸ்த்ரங்களையும் சிஷ்டா சாரங்களையுங்கொண்டு அறியகில்லாமல்
தங்களுடைய ராஜஸ தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு.

இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடு கூடியதாம்;
புருஷோத்தமனான எம்பெருமானை விட்டு க்ஷூத்ர தெய்வங்களைப் பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின்றியே
எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால்
இவனே முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து.
மூர்த்தி- ஸ்வாமி.

———-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும்–அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–கடல் சூழ்ந்த இப்பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

[முதலாவார்.] கீழ்ப்பட்டில் “உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” என்றருளிச்செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்
‘கீழ்ப்பட்ட தெய்வங்களென்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவகளுக்குப்
பலன்களை யளிக்கக் காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றோ என்று கூற,
அவர்களுக்கு விடை யளிக்கிறாரிப்பாட்டில்.

தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்படினும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும்
கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்;
அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன்.
ஸகல ஜகத் காரண பூதனாய் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனான அந்தத் திருமாலின் திருவருள்
நன்மையைத் தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்க மாட்டாது;
அவ்வருளைபெற நினைப்பது வீணேயாகும் என்றாராயிற்று.
க்ஷூத்ர தெய்வங்களின் அருள் க்ஷூத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும்
பரமபுருஷனுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும்
‘முதலாய நல்லானருளே நன்று, பல்லாரருளும் பழுது’ என்னத் தட்டில்லை யென்க.

———–

[பழுதேபலபகலும்.] கீழ்ப்பாட்டில் முதலாய நல்லானருளல்லால் …. பல்லாரருளும் பழுது” என்றருளிச் செய்த ஆழ்வார்
அவ்வெம்பெருமானுடைய அருள் தம்மிடத்தில் நெடுங்காலம் பயன்படா திருந்ததை நினைத்து,
‘அந்தோ! நெடுங்காலம் பாழாய்ப் போய்விட்டதே!’ என்று அநுதாபப் படுகிறாரிதில்.

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க்கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

இப்பாட்டில், இறந்தகாலத்தைப் பற்றி வருத்தமும் நிகழ்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியும் எதிகாலத்தைப்பற்றி அச்சமும்
ஆக மூன்றுகாலங்களைப் பற்றின மூன்று விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. (எங்ஙனே யெனின்?)
“கடலோதம் காவலைப்பக்கண்வளரும் செங்கணடலோத வண்ணரடியை அரவணை மேல் கண்டு (இன்று) தொழுதேன்”
என்றமையால் நிகழ்காலத்தில் பகவத்ஸேவை வாய்க்கப்பெற்ற ஆநந்தம் வெளியிடப்பட்டதாயிற்று;

“பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்” என்றமையால், கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் இவ்விதமாக
ஆநந்தமயமாய்க் கழியவில்லையே யென்கிற வருத்தம் காட்டப்பட்டது”,

“அஞ்சியழுதேன்” என்றமையால் – இனிமேல் வரப்போகிற காலமும் கீழ்க்கழிந்த காலம்போலே
வீணாகக்கழிந்து விடுமோ வென்கிற அச்சம் காட்டப்பட்டது.

“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்கால நிலைமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்;
தாம் இருப்பது இருள் தருமாஞாலத் திலாகையாலே
“விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை. மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே
இந்த லீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிறே.
பரம பக்தனாயிருந்த ப்ரஹ்லதழ்வானையுமன்றோ ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம்
”ஆற்றங்கரை வாழ்மரம்போ லஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும்.

கீழ் ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும்
“அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸ காலம் முதற்கொண்டே தாம்
பகவத் விஷய ப்ரவணராயிருப்பதாகச் சொல்லிக் கொண்ட இவ்வாழ்வார் இங்கே
பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்;
இப்பிறவிக்கு முன்னே மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி.
இப்பிறவியிலும் ஆதியே பிடித்து இங்ஙனே பாசுரம் பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும்
கீழே பல நாள்கள் பாழாயினவேயென்று வருந்துவதாகக் கொள்ளவுமாம்.

பேயாழ்வார் -சென்றநாள் செல்லாத செங்கண்மாலெ கண்மாலென்ற நாள் எந்நாளும் நாளாகும்” என்கிறார்;
(அதாவது) நிகழ்கால நிலைமை நன்றாயிருக்கப் பெற்ற ஆனந்த மிகுதியினால் இறந்தகால எதிர்கால நிலைமைகளிற்
கவலையற்று எல்லாக் காலமும் எனக்கு நல்ல காலமே யென்றார்; அஃதொரு சொற் சமத்கார விசேஷமென்க.

அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில் அலை என்னும் பொருள் விவக்ஷிதம்;
அதாவது திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி.
அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்ற தாயிற்று.

————-

[அடியும்படிகடப்ப.] கீழ்ப்பாட்டில் “பழுதே பல பகலும் போயின”என்றருளிச் செய்ததையே விவரிக்கிறது இப்பாட்டு.
இப்போது ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிற நான் திடீரென்று பிறந்துவிடவில்லை;
ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டியென்பது இல்லை யாகையால் “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே
அநாதி காலமாகவே பல பல பிறவிகள் பெற்று ஸம்ஸாரியாய் வந்து கொண்டிருக்கிறேன்;
எம்பெருமான் உலகளந்தருளின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஜந்துவாகப் பிறந்திருந்தவனேயொழிய
அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகி யாயிருந்து அந்த திவ்ய சரிதையிலே ஈடுபட்டிருந்தேனாகில்
அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் விடுபட்டு முக்தனாய்ப் போயிருப்பேன்;
அன்று நான் அறிவிலியாய்க் கிடந்து வாணாளை வீணாளாகப் போக்கிவிட்டேன்;
ஆகவே பழுதே பலபகலும் போயினவென்று கதறியழவேண்டியதாயிற்று- என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும்.

“முடியும் விசும்பளந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே-
உலகளந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்க வேண்டியதாயிற்றே யொழிய
நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிறே.

கீழ் இரண்டாம்பாட்டில் “ என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது “ என்று புராதன சரிதங்களெல்லாம்
ப்ரத்யக்ஷம் போலப் பேசப் பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்த காலத்திலே
அவற்றைத் தாம் ஸேவிக்கப் பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடம்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)

அடியும் படிகடப்ப “கோலமாமென் சென்னிக் கமலமன்ன குரைகழலே”என்றாற்போல அடியவர்களுக்கு சிரோபூஷணமாக
அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு கல்லும் கரடுமான உலகங்களை யளப்பதே! என்கிற வருத்தமும்.

[தோள் திசைமேல் செல்ல] பிராட்டியை அணைக்க வேண்டிய திருத்தோள்களைக்கொண்டு திசைகளின் மேல் வியாபரிப்பதே! என்கிற வருத்தமும்,

[முடியும் விசும்பளந்தது] எங்கள் கண்முன்னே விளங்கி
“முடிச் சோதியாய் உனது முகச்சோதிமலர்ந்ததுவோ?” என்று நாங்கள் பாசுரம் பேசவேண்டும் படியான திருமுடியை
அஹங்காரிகளும் பகவத் விஷயச் சுவடறியாதவர்களுமான தேவதைகளுள்ள விடங்களிலே நிமிர்ப்பதே! என்கிற வருத்தமும் உள்ளுறையும்.

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப் பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்த காலத்திலும்,
ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரை குலையத் தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் ஸேவித்து வாழா தொழிந்தேனே! என அநுதாபப்படுவதும் தோன்றும்.

————

[ நான்றமுலைத்தலை.] இப்பாசுரமும் கீழ்ப்பாசுரம் போலே இழந்தநாளைச் சொல்லி அநுதாபப்படுவதாம்.

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ள வல்ல
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானேயாவன்.

ஸ்ரீ கிருஷ்ணனாய்த் திருவவதரித்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியாஜத்தாலே முடித்தும்,
நவநீதம் முதலியவற்றைக் களவாடி அமுது செய்தும் குவலயாபீடமென்கிற கம்ஸனது மதயானையை முடித்தும்
பகாஸுரனை வாய்பிளந்தும் இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளியும் இப்படி பலவகையான
சிறுச் சேவகங்களைச் செய்தருளின காலத்திலும் ஸேவிக்கப் பெறாதே இழந்தேனே! என்கிறார் போலும்.

இழந்ததற்கு அநுதாபப்படுவதாகப் பாசுரத்தில் வாய்ச் சொல் இல்லை யாயினும்
கீழ்ப்பாசுரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்த நாளைக்கு அநுதாபம் தோன்றவே
இப்பாசுர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம்.
“ இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும்
இழந்தேனிறே என்று சோகிக்கிறார்.” என்றார் முன்னோர்களும்.

இனி, கிருஷ்ணாவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்தமாகப் போது போக்குகிறார் எனினும் குற்றமில்லை.

“மருதிடைபோய் மண்ணளந்த” -உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனான் என்று பொருளன்று;
மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகிலும் ஆழ்வாருடைய ஜ்ஞாந வைசத்யத்தாலே
அநுஸந்தாந தோரணியில் முன்னது பின்னதென்கிற வாசி யின்றியே எல்லாம் ஒன்று சேர விளங்குகிறபடி .

————

[மாலுங்கருங்கடலே.] *பழுதே பலபகலும் போயினவென்று அழுத ஆழ்வார்,
‘நம்மைப் போலே எல்லாரும் ஏமாந்தவர்கள் தானோ, அன்றி யாராவது எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும்
விடாது அநுபவிக்கப் பெற்றவர்களுண்டோ’ என்று ஆராய்ந்து பார்த்தார்;
“மாகடல்நீருள்ளான்” என்கிறபடியே ஸமுத்ரத்தில் ஸர்வ காலமும் எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருளும் செய்தி நினைவுக்கு வந்தது;
ஹா! ஹா!! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம்; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத்
தீண்டப் பெற்றிருக்கிறானன்றோ வென்றநுஸந்தித்து அக்கடல் தன்னையே நோக்கி
‘இப்படி உனக்குப்’ பகவதநுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றாய் கொல்?’ என வினவுகின்றார்.

நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப் பேறு பெறுவேன் காண் என்பது உள்ளுறை.

அஃறிணைப் பொருளான கடலை நோக்கிக் கேள்வி கேட்பதாகப் பேசின இப்பாசுரத்தின் கருத்தாவது
எம்பெருமான் இடைவிடாது திருப்பாற்கடலில் சயனித்திக்கொண்டு உறங்குவான்போல்
யோகு செய்யும் பெருமானாயிருக்கின்றா னென்பதைக் காட்டுவதேயாமென்க.

மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–திரு வாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்
கண்படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

கருங்கடலே!= திருப்பாற்கடல் வெண்ணிறமுள்ளதாயினும் கார்முகில் வண்ணனான எம்பெருமானுடைய நிழலீட்டாலே கருங்கடலாயிற்று.
பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்திலே ஸ்ரீரங்கவிமானத்தைப்பற்றிப் பேசிம்போது
அபி பணிபதியதிபாவாத் சுப்ரம், அந்தச் சயானோ; மரகதஸீகுமாரை; ரங்கபர்த்துர் மயூகை: –
ஸகல ஜலதிபாநச்யாமஜீமூதஜைத்ரம் புளகயதி விமாநம் பாவநம் லோசநே ந:” என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தகும்.
இதன் கருத்தாவது- திருவனந்தாழ்வானே ஸ்ரீரங்கவிமாநமாக எழுந்தருளியிருக்கையாலே
இவ்விமானம் வெண்ணிற முள்ளதாயினும் உள்ளே சயனித்திருக்கின்ற ஸ்ரீரங்கநாதனுடைய மைவண்ணத் திருமேனி
நிறத்தின் நிழலீட்டாலே கடலைப் பருகிக் கிளர்ந்த காளமேகத்தை வென்று விளங்குகின்றது–என்பதாம்.

“கருங்கடலே!” என்ற விளியில் – பகவத் விரஹ வ்யஸநத்தாலே நான் மாத்திரம் உடம்பு வெளுத்திருக்க,
நீ நித்ய ஸந்தோஷச் செருக்குத் தோன்ற மாமை பெற்று விளங்குகிறாயே! என்பதாகக் கருத்துக்தொனிக்கும்.
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்று உப்புக் கடலிலும் எம்பெருமான் உளனாகக் கூறுகையாலே
இங்கு ‘மாலுங் கருங்கடலே!’ என்று உப்புக் கடலையே விளித்ததாகக் கொள்ளுதலும் கூடும்.

———–

[பெற்றார் தளைகழல.] கிருஷ்ணாவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய
திருவடித் தாமரைகளை ஏத்தி யிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ;
அப் பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று நோவு படுகிறார்.

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து–(திருப்பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

“பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்” என்றிருப்பது கொண்டு
கிருஷ்ணனாய்ப் பிறந்த பின் வாமநனாய்ப் பிறந்தானென்று கருத வேண்டா;
ஒருகாலத்தில் கிருஷ்ணனாய்ப் பிறந்தவனும் மற்றொருகாலத்தில் வாமநனாய்ப் பிறந்தவனுமான ஸர்வேச்வரன் என்றபடி.
அன்றி,
“பெற்றார் தளை கழலப் பேர்ந்து” என்பதும் வாமநாவதாரச் செயலையே கூறுவதெனவும் கொள்வர்;
அப்போது, பெற்றார் என்றது – தன்னை ஆச்ரயிக்கப் பெற்றவர்களென்றபடி;
அவர்களுடைய தளையாவது= கருமபந்தம்;
அது நீங்கும்படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஓர் குறளுருவானபடியைச் சொல்லிற்றாகக் கொள்க.

செற்றார்படி= செற்றாரென்று சத்ருக்களுக்குப் பெயர்; படி யென்று பூமிக்குப் பெயர்;
ஆச்ரித விரோதிகளான மஹாபலி போல்வார் தங்களுடையதென்று அபிமாநித்திருந்த பூமியை என்றதாயிற்று.

ஈற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள்.
தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தி யிறைஞ்சப்பெற்றார்களே!
என்கிற ஆச்சரியமும் தொனிக்கும்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -1-10- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 15, 2021

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

பதவுரை

வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியன் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காகவென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.

[வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.
(தாளி என்று உலக வழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும்,
கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும்,
ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச் செய்கிறார்.
இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும்,
உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து
விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞான சக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய
ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பாசுரத்தால் விளக்கப்பட்டதாகும்.

ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-
விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ.
வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன.
கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது,
அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே
எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும்,
ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல
மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின்
அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ.

அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்;
கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்;
அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்;
இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.

முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது;
சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த
ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற
முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்;
இதுகூடுமோ?
சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து
வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக
இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால்
வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.

இடராழி நீங்குகவேயன்று–
இதுவரையில் எம்பெருமானைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும்,
துதிக்கவொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும்,
இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிகளும் துயர்தீர்ந்து வாழ்வதற்காக என்றும்
மூன்றுபடியாக உரைக்கலாம்.

———–

[என்றுகடல்கடைந்து.] ஸர்வேச்வரனை அநுமாநத்தால் ஸாதிப்பது தோன்றக் கீழ்ப்பாட்டு அருளிச் செய்யப்பட்டது;
அவனை அநுமாநங்கொண்டு ஸாதிக்கவேண்டிய வருத்தமில்லை; அவன் செய்தருளியிருக்கும் எல்லையற்ற
அதிமாநுஷங்களான செயல்களே அவனுடைய உண்மையை ஸாதித்துக் கொடுக்கக்கூடியவை என்று வெளியிடக்கருதி,
கடல் கடைந்தது உலகளந்தது முதலிய சில சேஷ்டிதங்களை அருளிச்செய்யும் முகத்தால் அவனுடைய உண்மையை மூதலிக்கின்றார்.

ஆளவந்தார் எம்பெருமானுடைய உண்மையை உணர்வதற்கு உரிய ஸாதநங்களை அருளிச் செய்யுமிடத்து
“த்வாம் சீல ரூப சரிதை:” (ஸ்தோத்ரரத்நம்.) இத்யாதிகள் அருளிச் செய்ததும்
அப்படியே ஆழ்வானும் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்—”சித்ரைச்ச கைச்சிதுசிதை: பவதச் சரித்ரை:” என்றருளிச் செய்ததும் ஸ்மரிக்கத்தக்கன.

கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரக்ஷித்ததும்,
மாவலி பக்கல் மாணுருவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளந்து இந்திரனது துன்பத்தைத் தீர்த்தொழித்ததும்
ஸ்ரீமந் நாராயணனுடைய உண்மையை விளக்கவல்லன காண்மின் என்கிறார்.

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

பதவுரை

கடல் கடைந்தது–(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
என்று–எந்த நாள்?
நீர் ஏற்றது–(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்–எந்த உலகம்?
அதனை–அவற்றை
நான் ஒன்றும் உணரேன்–நான் அடியோடு அறிகின்றிலேன்;
அது–அந்தக் கடலானது
அன்று–ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து–மலைகளைக்கொண்டு திருவணை கட்டித் தூர்த்து
உடைத்து–(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த–எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி–ஸமுத்ரமாம்;
இது–(நீரேற்றுப் பெற்ற) இவ் வுலகமானது
நீ–ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து–ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து–(வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு–(பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த–பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்–பூமியாகும்.

என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடையனவல்ல;
கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாறாமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே!;
உலகளக்கும் போது வைத்த அடிச்சுவடு மாறாமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோ தோன்றுகின்றதே! என்று
ப்ரத்யக்ஷஸமமாக்க் காட்டுபவர் போலச் சொல்லுகிறபடி.

கடல் கடைந்ததும் உலகளந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது
அகக் கண்ணுக்கு அச்சரிதைகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்ஙனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க.

நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று பரத்யக்ஷம்போல் தோற்றினாலும்,
‘ஐயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெறவில்லையே!
உலகளந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’
என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனை யுணரேன் நான் என்கிறார்;
அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அநுபவியா தொழிந்தேனே! என்றவாறு.

நம்மாழ்வார் *மத்துறுகடை வெண்ணெய்களவினிலுரலிடையாப்புண்ட சரிதையை அநுஸந்தித்ததும்] “எத்திறம்!” என்று
மோஹித்து கிடந்தது போல் இவரும் முதலடியில் அநுஸந்தித்த செயல்களிலே மோஹித்து
“ஒன்றும் அதனை யுணரேன்” என்கிறார் என்று முரைப்பர்.

முதலடியிலே கடல் கடைந்ததும் உலகளந்ததும் அநுஸந்திக்கவே அக்கடலிலும் அவ்வுலகத்திலும் எம்பெருமானுக்குள்ள
ஸம்பந்தங்கள் திருவுள்ளத்திலே ஞாபகத்திற்கு வர அவற்றைப் பின்னடிகளிற் பேசி அநுபவிக்கிறார்.
கடலில் எம்பெருமான் செய்த காரியங்களை மூன்றாமடியிலும் உலகுக்காக அவன் செய்த காரியங்களை நான்காமடியிலும் அருளிச் செய்கிறார்.

இராவண ஸம்ஹாரம் செய்து பிராட்டியை மீட்டிக் கொணர்வதற்காக இலங்கைக் கெழுந்தருளும்போது
“மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்” என்றபடி ஸேதுபந்தனம் பண்ணுனதும்,
பிராட்டியைக் கைக்கொண்டு மீண்டெந்தருளும்போது அதனை உடைத்ததும்,
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்றபடி
* தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிப் பள்ளிகொண்டிருத்தலுமாகிய கடலிலே செய்த காரியங்கள் அநுஸந்திக்கப்பட்டன.

ஆதியில் படைத்ததும், வராஹாவதாரத்தில் ஹிரண்யாக்ஷனைக் கொன்று இடந்ததும்,
ப்ரளயம் வந்த போது திருவயிற்றினுள்ளே வைதிட்டதும், பிறகு வெளிப்படுத்தியதுமாகிய
இவை உலகுக்காகச் செய்த செயல்களாக அநுஸந்திக்கப்பட்டன.

இப்படிப்பட்ட அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்தருளின ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்றும்,
அவனுடைய உண்மையை இச்செயல்களே ஸாதித்துத் தரவல்லன என்றும் இப்பாசுரத்தால் அறிவிக்கப்பட்டதாயிற்று.

——–

[பாரளவும்.] எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்கள் பலவற்றினுள்ளும் உலகளந்த சரிதையிலே நம் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடுவர்கள்;
விசேஷித்து முதலாழ்வார்கள் மிகவு மதிகமாக ஈடுபடுவர்கள்.
கீழ்ப்பாட்டில் “எவ்வுலகம் நீறேற்றது” என்று அந்தச் செயலைச் சிறிது ப்ரஸ்தாவித்த மாத்திரத்திலே
அதிலே திருவுள்ளம் மிகவும் அவகாஹிக்கப் பெற்று அந்த வரலாற்றைப் பேசி அநுபவிக்கத் தொடங்கி
நிலை கொள்ள மாட்டாமல் நின்று தளும்புகின்றார்.

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

பதவுரை

ஓர் அடி–ஒரு திருவடியை
பார் அளவும் வைத்து–பூமிப் பரப்பு உள்ள வரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்–மற்றொரு திருவடியும்
பார் உடுத்த–இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற
நீர் அளவும்–ஆவரண ஜலம் வரையில்
செல்ல–செல்லும்படி
நிமிர்ந்தது–ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்–தெய்வ மகளான யசோதையின் வடிவு கொண்டு வந்த பூதனையை
அளவு கண்ட பெருமான்–முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்ட நெறி–நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்–அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.

சூருருவிற்பேயளவுகண்டபெருமான் என்பது ஸம்போதநம்(விளி);
தமது வல்லமையால் எம்பெருமானை அளவிட்டுக் காணவேணுமென்று நினைப்பவர்கள் பூதனை பட்டபாடுபடுவர்கள்
என்பது தோன்ற இந்த ஸம்போதநமிடுகின்றார். உன்னை முடிப்பதாக வந்த பூதனையை முடித்த பிரானே!
நீ மாவலிபக்கல் மூவடி மண் நீரேற்றுப் பெற்று ஒரு திருவடியைப் பூமிப் பரப்படங்கலும் மலரவைத்து,
மற்றொரு திருவடியை மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்தளவும் செல்லவைத்து உலகளந்த விதத்தை யானறிகின்றிலே னென்கிறார்.

அளப்பதாவது-அளக்கிறவன் தான் நின்றவிடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக்காலிடுதல் என்று உலகத்திலே நாம் காண்கிறோம்.

ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்;
ஆகவே, எம்பெருமான் உலகளந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்?
ஒரு திருவடிக்கும் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்ட படியால்
மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தானென்பது எங்ஙனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேசுவார் போல
“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்கிறார்.

இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்-
“கழல்தல மொன்றே நிலமுழுதாயிற்று ஒரு கழல் போய், நிழல்தர எல்லாவிசும்பும் நிறைந்தது,…..
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக் கின்றதே?” (58) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க.
அவ்விடத்து வியாக்கியானத்திலே-
”அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே;
அடிமாறியிடிலிறெ அளந்ததாவது; இவனிங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோமீ!” என்றுள்ள
பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவு காண்கையாவது அளக்கை.

[சூருருவிற்பேயளவுகண்ட] “ சூருமணங்கும் தெய்வப் பெண்பெயர்” என்பது நிகண்டு,
பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்ணுருவாக வந்தாளோ வென்னில்;
கண்ணபிரானுக்குத் தாயாகிய யசோதைபோல வடிவெடுத்து வந்தாளாகையாலும்,
அவ்வசோதை “தெய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் சூருருவின் பேய் என்னக் குறையில்லை யென்க.
அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றாகக் கூறப்பட்டிருத்தல் பற்றியும் “சூருருவின் பேய்” என்றாகவுமாம்.

பேயளவு காண்கையாவது அவளுடைய ஆயுளின் அளவைக்கண்டுவிடுதல்; கொல்லுதலைக் கூறியவாறு.
கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்ட பூதனை யென்னும் பேய்ச்சி தன் முலையிலே விஷத்தைத் தடவிக்கொண்டு
யசோதைபோல வடிவெடுத்துத் திருவாய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண சிசுவையெடுத்து
நஞ்சுதீற்றிய முலையை உண்ணக்கொடுக்க பேயென்றறிந்த பெருமான்
முலைப்பாலோடு அவளுயிரையும் உறிஞ்சி உண்டிட்டனனென்ற வரலாறு ப்ரஸித்தம்.

————–

[நெறிவாசல்.] எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே
அவனுடைய ஸ்வரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல்,
கடலிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க,
தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்ஙனே அறிய வல்லான்?
எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டாத அவன் தன்னை ஸர்வஜ்ஞனாக நினைத்துக் கொண்டு
பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக் கொண்டு ஆலமரத்தடியிலே
உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானுடைய தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே!
இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹஸித்துப்பேசுகிறார்
“அரன் அறிவானாம்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனோ அறியப்போகிறான்;
தான் தெரிந்து கொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாசிரியனாக வீற்றிருந்தானே! என்று கர்ஹிக்கிறபடி.

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—

பதவுரை

அன்று–முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்–ஆலமரத்தின் நிழலிலே
(இருந்துகொண்டு)
நால்வர்க்கு–அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த–தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து–விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக் கொண்டுள்ளவனுமான
அரன்–சிவன்
ஜந்து பொறி வாசல்–செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
போர் கதவம் சார்த்தி–வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறி வாசல் தானே ஆய் நின்றானை–உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்–அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)

”அரன், நெறிவாசல் தானேயாய் நின்றானை அறிவானாம்” என்று அந்வயிக்க.
நெறி என்று வழிக்குப் பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி.
வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச்சொல்லுகிறது;
ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று அன்றி,
நெறி –ஸ்வரூபத்துக்கு ஏற்ற, வாசல்-உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம்.

சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக் கொண்டு
ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்;
திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-
”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்-
ஞால மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாசுரத்தினால்
இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.

ப்ரஹ்மஜ்ஞாநமில்லாத பாலாகி யென்பவன் ப்ரஹ்ம ஜ்ஞாநமுடையனான அஜாதசத்ரு வென்பவனுக்கு
ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை உபதேசிக்கத் தொடங்கியது போலும் சிவனது உபதேசமும் என்ற இழிவுதோன்ற “அறிவானாம்” என்று பழித்துக் கூறுகின்றார்.

[ “ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி”]
ஒரு வாசலை அடைக்கத் தொடங்கினால் மற்றொரு வாசற்கதவு திறந்துகொள்ளும்படியாயுள்ள பஞ்சேந்திரியங்களாகிற
யந்த்ரம் போன்ற ஐந்து வாசல்களையும் அடைத்தாலன்றி பகவத் தத்துவத்தை உபதேசிக்க வொண்ணாதென்பதும்,
அந்த வாசற்கதவுகளை அடைப்பது மிகவும் அருமை என்பதும் இவ்வாக்கியத்தில் தோன்றும் ஐந்து பொறி வாசற்கதவுகளை
அடைக்கமாட்டாத் ருத்ரன் எங்ஙனே அறிவான்? என்றவாறு.

போர்க்கதவம் என்றது- அடைக்கத் தொடங்குகிறவர்களின் முகத்திலே அறைகிற கதவு என்றபடியாய்;
எப்படிப்பட்டவர்களையும் விஷய ப்ரவணராக்கவல்ல இந்திரியங்களின் வன்மையைக் கூறியவாறு.

எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடையும்போது அதனின்றும் தோன்றிய விஷத்தை ஸ்ரீமந்நாராயணனுடைய கட்டளையாலே
சிவன் தான் வாங்கி உண்ண அதனையறிந்த பார்வதி அஞ்சி அவ்விஷம் கழுத்துக்குகீழே இறங்காதபடி
அவனது கழுத்தை இறுகப் பிடித்துக் கொள்ள விஷம் கழுத்தளவிலே நின்றுவிட்டது;
அதனால் சிவன் கறுத்த கழுத்தை யுடையனாய் காலகண்டனென்று பேர்பெற்றனன் என்ற வரலாறு தோன்ற “ஆலமமர்கண்டத்தான்” என்றார்.
ஆலம்-வஷம்; ஹாலாஹலமென்ற வடசொற் சிதைவு என்பர். சிவன் தனது தமோகுணத்துக்குத் தக்க செயலைச் செய்ய வல்லவனே யன்றி
ஸாத்விகர் செய்யும் செயல் அவனால் செய்யமுடியா தென்பதும் இவ்விசேஷணத்தின் கருத்தாம்.

ஹர: என்ற வடசொல் அரனெனத் திரிந்தது; ஸம்ஹார கர்த்தா என்கை

————–

[அரன்நாரணன்நாமம்] கீழ்ப்பாட்டில் சிவனுடைய ஒருசெய்தியை எடுத்துப் பேசின ஆழ்வார்
“அரன் அறிவானாம்” [சிவனுக்கு என்ன தெரியும்?] என்று இழித்துப் பேசவே அதனைக் கேட்ட சிலர்
“நாட்டங்கலும் ஈச்வரனென்று கொண்டாடப்படுகிற அச்சிவபெருமானை இப்படி நீ ஏசிப் பேசலாமோ?
அவன் காற்கீழே பலரும் தலையை மடுத்து ஏத்தியிரைஞ்சக் காண்கிறோமே, அவன் பரதெய்வமன்றோ?” என்று சொல்ல,
அது கேட்ட ஆழ்வார்-ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை யென்பதும் ருத்ரன் அங்ஙனல்லன் என்பதும்
இருவருடையவும் நாமம் ரூபம், வாஹனம், தொழில் முதலியவற்றால் நன்கு விளங்கக் காணலாமென்று
அவற்றை யெடுத்துரைத்துக் காட்டுகிறாரிதில்–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று —5-

பதவுரை

நாமம்–ஒருவனுடைய பெயர்
அரன்–எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)
நாரணன்–(ஸர்வ வ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி–ஒருவனுடைய வாஹனம்
ஆன் விடை–மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)
புள்–(வேத மூர்த்தியான) கருடப் பறவையாகும்;
உரை–ஒருவனைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்–மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
(மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)
மறை–(ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்–ஒருவனுடைய வாஸஸ்தானம்
வரை–(கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;
(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)
நீர்–(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்–ஒருவனுடைய தொழில்
அழிப்பு–(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)
அளிப்பு–(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது–ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல்–(கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
நேமி–அருளார் திருச்சக்கரம்
உருவம்–வடிவம்
எரி–(கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்
கார்–(கண்ட போதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று–சிவனாகிய ஒருவன்
மேனி–(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;
[ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]

இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன;
அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்;
நாராயணனென்றால், நாரங்களாகிய நித்ய வஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்;
ஆகவே, ஸர்வ ரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ
என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று.

இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு
த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்;
“ஸுபர்ணேஸி கருத்மாந்” என்ற வேத வாக்கியத்தாலும்
“வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும்,
“சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்…..
அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே” என்ற ஐயங்கார் பாசுரத்தாலும்
வேத ஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன்.

இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால்,
வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள
சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது;
ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம்
ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம்.

இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால்,
தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம்,
தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம்.
இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது.
அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது,
*அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.

இவை யெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; “ரூபமேவாஸ்ய ஏதந்மஹிமாநம் வ்யாசஷ்டே”
[உருவமே வ்யக்தியின் பெருமையைத் தெரிவிக்கும்] என்ற வேத வாக்கியத்தின்படி
இருவருடையவும் உருவத்தை நோக்குவோமாயின், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதபடி காலாக்நிபோலேயிருக்கும் அரனுருவம்;
கண்டார் கண்குளிரும்படியான காளமேகம்போலே யிருக்கும் செல்வநாரணன் திருவுருவம்.
“ஒன்று செந்தீ ஒன்று மா கடலுருவம்” என்றார் திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்திலே.

இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கிடக்கிற இரண்டு பொருள்களில் “அங்கந்யந்யா தேவதா:” இத்யாதி
உபநிஷத் வாக்கியங்களின்படி அரன் நாராயணனுக்கு அங்கமாயும் நாராயணன் அங்கியாயு மிருப்பர்கள்.
சரீரி தலைமையானதோ? சரீரம் தலைமையானதோ? ஆராய்ந்து சொல்லுங்கள் என்றவாறு

“மேனி ஒன்று” என்று அரனுடைய சரீரத் தன்மை சொன்னது போல நாராயணனுடைய சரீரித் தன்மை மூலத்தில்
சொல்லப்படவில்லையாயினும், ஒன்று சரீர மென்றால் மற்றொன்று சரீரி யென்பது தன்னடையே விளங்குமிறே.
அந்தர்யாமிப்ராஹ்மண மென்னும் வேதப்பகுதியில் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வசரீரி யென்பது பன்னியுரைக்கப்பட்டுள்ளமை காண்க.

“உருவமெரி கார்மேனியொன்று” என்பதை இரண்டு வாக்கியமாகக் கொள்ளுதலின்றியே ஏகவாக்கியமாகவே கொண்டு,
இருவருடையவும் உருவத்தைப் பார்த்தால், ஒன்று எரிமேனி, மற்றொன்று கார்மேனி என்பதாக உரைத்தலும் ஒக்கும்.

————

[ஒன்றுமறந்தறியேன்.] கீழ் நான்காம் பாட்டில் “அரன் அறிவானாம்” என்று சிவபிரானை மாத்திரம் இழித்துக் கூறி விட்டீரே;
அவனுக்கு பகவத் விஷயமே தெரியாதென்றும், தெரிந்தவனை போலப் பாவித்து சிஷ்யர்களுக்கு உபதேசிக்கவும்
தொடங்கிவிட்டானே யென்று ஏசியும் பேசினிரே; அவனைக் காட்டிலும் நீர் பகவத் விஷயஜ்ஞானத்தில் சிறந்தவரோ?
நீர் தாம் எம்பெருமானை யறிந்து பிறர்க்கு உபதேசிக்க வல்லீரோ? பிரபந்த முகத்தால் உணர்த்தத் தொடங்கிவிட்டீரே,
இஃது எங்ஙனே? என்று ஆழ்வாரை நோக்கி ஒரு கேள்வி பிறக்க
ஆழ்வார் அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறது போலே யிருக்கிறது இப்பாட்டு.

அந்த அரனுக்கும் எனக்கும் எவ்வளவோ வாசியுண்டு; அவன் ஸத்வகுணம் தலையெடுத்தபோது எம்பெருமானது
திருவருளாலன்றி ஸ்வப்ராயத்நத்தாலெ அப்பெருமானது ஸ்வரூபஸ்வபாவங்களைச் சிறிது அறிந்து பரமஸாத்விகன்போல இருப்பன்;
அடுத்த ஷணத்திலேயே ரஜோ குணமும் தமோ குணமும் தலையெடுக்கப் பெற்று
‘என்னைக் காட்டிலும் வேறொரு ஈச்வரன் உண்டோ? நானே ஸர்வேச்வரன்’ என்று செருக்குக் கொள்வன்;
அவனை போலவோ நான்? நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து அப்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப் பெற்று,
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன் தானே காட்டக் கண்டு,
“ஜாயமாநம் ஹி புருஷம்யம் பச்யேத் மதுஸூதந:- ஸாத்விகஸ்ஸது விஜ்ஞேய: ஸவை மோக்ஷார்த்த சிந்தக:”-
[கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாஷித் தருள்வனொ அவனே ஸாத்விகன்; அவனே முமுக்ஷூவாவான்] என்கிறபடியே
சித்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும்
பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்;
பெரும்பாலோர் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருந்த நான்
இனி ஒரு காலாகிலும் மறக்க வழியுண்டோ? அரனுக்குப்போலே எனக்கும் முக்குணங்களும் மாறி மாறி வருமோ?
ஸத்வகுணகார்யமே நிலை நின்றிருக்கப் பெற்ற வெனக்கு
அவனை உணர்தலும் உணர்ந்தவற்றைப் பிறர்க்கு உபதேசித்தலும் உசிதமே என்றாராயிற்று.

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

பதவுரை

அன்று–அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து–கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,
திருஅரங்க மேயான்–ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை–ஸ்வபாவங்களை யெல்லாம்
கண்டேன்–ஸாக்ஷாத் கரித்தவனாய்
கை தொழுதேன்–அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை–வெள்ளம் பரந்த ஸமுத்ர ஜலம் போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப் பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்-க்ஷண காலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்–(விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேடர்களே!
நான்–(அவனை மறக்கக் கூடிய கர்ப்ப ஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று–(மறக்க முடியாதபடி ஞான விகாஸம் பெற்ற இக் காலத்திலே)
மறப்பனே–எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

ஓதநீர் வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு
அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும்.
கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே
திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார்.
மேயான் – மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன்.

இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்னும் பொருளாயினும்
‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு.

இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று
இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று;
இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய்
வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை;
எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்;
இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும்
‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று
சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம்.

“கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்;
அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும்
இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது …..

————–

[திசையும்.] ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில்,
பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்?
அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்?
என்றொரு கேள்வி உண்டாக எம்பெருமான் தானே, தன்னை உகவாதவர்கள் தன்னை வந்து கிட்டாமல்
தேவதாந்தரங்களைப் பணிந்து க்ஷூத்ர பலன்களைப் பெற்று அகன்று போவதற்காகச் செய்து வைத்த
மயக்குக்கள் காண்மின் இவை-என்று மறுமொழி கூறுகின்றார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு -7–

பதவுரை

திசையும்–திக்குக்களோடு கூடிய உலகங்களும்
திசைஉறு தெய்வமும்–அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்–அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்–ஆகிய இவையெல்லாம்,
அசைவு இல் சீர்–கேடில்லாத [நித்யமான] குணங்களை யுடைய
கண்ணன்–ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்–மிகப் பெருமையை யுடையவனாய்
கடல் கடைந்த–(தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்பு நோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்–மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனான எம்பெருமான்
படைத்த–(தன்னிடம் வந்து பணிய மாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கி வைத்த
மயக்கு–அறிவை மயக்கும் பொருள்களாம்.

சர்க்கரை, கற்கண்டு, த்ராக்ஷை முதலிய சிறந்த வஸ்துக்களை வாங்கி உண்டு களிக்க இயற்றி யில்லாத ஜனங்களுக்காக
உப்பு, புளி முதலிய சிறு பொருள்களைக் கடை பரப்பி வைத்த மாத்திரத்திலேயே எல்லாப் பொருள்களுக்கும்
கடைகள் ஏற்பட்டிருக்கின்றன வென்று எல்லாம் சிறந்த பொருள்களாய் விடுமோ?
செல்வம் மிகுந்தவர்களுக்காக விலையுயர்ந்த உண்மையான ரத்னங்கள் ஏற்பட்டிருப்பது போல
ஏழைகளுக்காக அற்பவிலையுள்ள க்ருத்ரிமங்களான ரத்னங்களும் ஏற்பட்டிருக்கின்றன்;
இவை தம்மில் வாழ்வின்றிக்கே யொழியுமோ? சிறந்த வஸ்துக்களை அநுபவிக்க யோக்யதை யில்லாதவர்களை
மயக்குவதற்கு ஸாமாந்ய வஸ்துக்கள் எப்படி ஏற்பட்டனவோ,
அப்படியே பரமவிலக்ஷணனான திருமாலை அநுபவித்து வாழமாட்டாத க்ஷூத்ர ஜநங்களை மயக்குவதற்காகத்
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையுங் கருமங்களுமெல்லாம் ஏற்படுத்தப்பட்டனவென்று கொள்ளவேணுமென்கிறார்.

“திசையும்” என்றது பல பல வுலகங்களைச் சொன்னபடி.
எம்பெருமா னொருவனையே தொழுது இறைஞ்சுதற்கு உரிய உலகமொன்றே யிருக்கலாமாயினும்,
‘இது சிவஸாலோக்யம் பெறும் உலகம்’ ‘இது இந்த்ரஸாலோக்யம் பெறும் உலகம்’ என்றிப்படி
பல பல ஸ்தானங்களைக் கற்பித்தது காரோதவண்ணன் படைத்த மயக்கு என்றபடி.

திசையுரு தெய்வமும்- இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன், இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன் என்று
ஒவ்வொரு ஸ்தானத்திலும் நிர்வாஹகமாக ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தினதும் காரோத வண்ணன் படைத்த மயக்கு.

தெய்வத்து இசையும் கருமங்கள்- நான்முகன் படைப்புத்தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
இந்திரன் தேவதைகளை மெய்க்காட்டுக்கொள்ளுந் தொழிலை நோக்கக்கடவன்;
யமன் உயிர் நீத்துந் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்தவாறாகத் தொழில்களை
வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு.
திரிபுர மூன்றெரித்தல், காமதஹநம், வ்ருத்ராஸுரவதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம்.

கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸுரச்ம்வாதம் ப்ரஸங்கிக்க,
எம்பெருமான் மோஹிநி யுருவம் பூண்டு உகவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டு பண்ணி
வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுந் தோன்றக் “ கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றருளிச் செய்தாரென்க.
கடைந்த கடலிலே அமுதம் விஷம் யானை குதிரை சந்திரன் கல்பவ்ருக்ஷம் அப்ஸரஸ் முதலிய பல விசித்திரப் பொருள்களை
படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்யவல்லவனே யென்பதும் மூதலிக்கப்பட்டதாம்.

மயக்கு என்றது- மயங்கச் செய்யும் பொருள் என்றபடி;
‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் யிடுதல்போல.

———

[மயங்கவலம்புரி.] எம்பெருமான் தன்னை யுகவாதாரை அகற்றுகைக்காகச் சில மயக்குப் பொருள்களை
ஏற்படுத்தினனென்றார் கீழ்ப்பாட்டில் ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு இது தகுதியோ? என்று ஒரு சங்கை தோன்ற,
ஆச்ரிதர்களை எவ்விதத்திலும் பரிந்து பாதுகாப்பதும் தன்னை மதியாத ஆஸுரப்ரக்ருதிகளை விலக்கி விடுதலும்
அப்பெருமானுடைய காரியம்; துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலநமும் செய்வதே ஸர்வரக்ஷகத்வமாதலால்
அங்ஙனே செய்தருள்கின்ற எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வ குணத்திற்கு யாதொரு கேடுமில்லை,
மேன்மெலும் விளக்கமேயுள்ளது என்று ஸமாதான முரைப்பவர் போல இப் பாட்டு அருளிச் செய்கிறார்.

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது –8-

பதவுரை

திருமாலே நீ–லஷ்மீநாதனே!, நீ
முயங்கு அமருள்–(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க் களத்திலே
மயங்க–எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி–ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து–தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிக் கையால்–போர் செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது–(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எறி கதிரோனை–ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டே யிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தது என்–மறைத்தது எதுக்காக?

மயங்க வலம்புரி வாய்வைத்தது பகவத்கீதையின் முதலத்தியாயத்திற் சொல்லிற்று எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-
பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுநனது மைந்தனான அபிமந்யுவைத் துரியோதநனது உடன் பிறந்தாளின்
கணவனான ஸைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள்
தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுநன் சபதஞ்செய்ய,
அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல் முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே
நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுநனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான்
ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட,
அப்பொழுது எங்கும் இருள் பரவியதனால் அர்ஜுநன் தன் உறுதியின்படி அக்நிப்ரவேசம் செய்யப்புக,
அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க,
அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனைத் தலை துணித்தனன் என்பதாம்–
“நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.

இவ்வரலாற்றில் ஒரு சங்கை பிறப்பதுண்டு;- திருமாலின் சக்கராயுதத்தின் ஒளியானது ஸூர்யனுடைய ஒளியிற் காட்டிலும்
பலகோடி நூறாயிரம் மடங்கு மேம்பட்டதென்று சொல்லியிருக்க, கோடி ஸூர்யப்ரகாசனான அத்திருவாழியினாலே
இருளை உண்டாக்கினதாக வுரைப்பது எங்ஙனே? என்று. இதற்குப் பலர் பலவகையான ஸமாதானங்கள் கூறுவர்;
ஒரு ஸமயவிசேஷத்தில் திருவாழியின் பிரகாசம் சிறிதுபோது மழுங்கிப் போகக் கடவதென்று முக்கிய ஸமாதானமாகக் கூறுவதுண்டு.

போராழிக் கையால் பொருது” என்ற நான்காமடியில்- பாரதப்போரில் கண்ணபிரான் பீஷ்மரைக் கொல்வதாகத்
திருவாழியைக் கையிலே கொண்டு தேரில் நின்றும் கீழிறங்கித் துரத்திக்கொண்டு சென்ற கதை அநுஸந்திக்கத்தக்கது.
[மஹாபாரதம்-பீஷ்மபர்வம்-ஐம்பத்தொன்பதா மத்தியாயத்தில் விரிவு காண்க]

மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழியால் மறைத்ததும் போராழிக்கையால் பொருந்தும் ஏதுக்காக?
என்று ஆழ்வார் எம்பெருமானைக் கேள்வி கேட்கிறார் இப்பாட்டால்.
‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை என்று பிரதிஜ்ஞைசெய்து வைத்து அதற்கு மாறாக்க் காரியஞ் செய்தது
எல்லாரோடும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத் தகுமோ? ஸத்யஸங்கல்பனான உன் இருப்புக்குத் தகுமோ?
உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக் கேள்வியானது-
ஆச்சரிதர்களான பாண்டவர்களிடத்திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமே யன்றோ இத்தனையும் செய்வித்தது என்று
வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸெளஹார்த்ய குணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க.

முயங்கு அமர் என்றது பலபேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்களமென்றபடி.
போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரளுக்கு எல்லையில்லையிறே

தேராழியால் மறைத்தது’ என்கிறாரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸூர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்;
அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக் கொண்டே மறைத்தது;
சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குந் தன்மையுடையதாதலால் வடநூலார் ’ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழியெனப்பட்டதென்க.
’போராழிக் கையால்’ -கையிற்கொண்ட போராழியினால் என்று கொள்ளலாம்.

———–

[பொருகோட்டோர்.] எம்பெருமான் தான்செய்த பிரதிஜ்ஞையைப் பங்கப்படுத்திக் கொண்டாகிலும்
ஆச்ரிதருடைய காரியமே கண்ணாயிருப்பனென்றார் கீழ்ப்பாட்டில்;
அவ்வளவேயல்ல; தன் வடிவத்தை மாறுபடுத்திக் கொண்டும் இழி பிறப்பை ஏற்றுக் கொண்டும் காரியம் செய்பவன்
காண்மின் என்றருளிச் செய்வதாக வராஹாவதாரத்தை ப்ரஸங்கிக்கிறாரிதில்

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் –9-

பதவுரை

விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?

பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:- ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன்
தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது
தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு
அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்
கோட்டினாற்குத்தி அங்கு நின்று மெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப்பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து
மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.
“பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற
திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.

இவ்வரலாற்றினாலும் பின்னடிகளிற் குறித்த திரிவிக்கிரமாவதார சரிதையினாலும்-
எம்பெருமான் ரக்ஷ்ய வர்க்கங்களை இன்னபடி தான் ரக்ஷிப்பனென்கிற ஒருநியதியில்லை யென்பது வெளியிடப்பட்டதாம்.-
“ஆபத்துவந்தால் தலையாலே சுமந்து நோக்குதல், தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவனன்றோ நீ;
ரக்ஷயவர்க்கத்தை நோக்குமளவில் உனக்கொரு நியதியுண்டோ வென்று உகந்தனுபவிக்கிறார்” என்றும்;
” உதாரனாயிருப்பானொருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்து நாற்பதுபேருக்கு இட்டுமிகும்படி
சோறுண்டாக்குமாபோலே ரக்ஷ்யத்தினளவன்றிறே ரக்ஷகன் பாரிப்பு” என்றுமுள்ள வியாக்கியான வாக்கியங்கள் அநுஸந்திக்கத் தக்கன.

மிகப்பெரிய வடிவுகொண்டு உலகளந்தபோது எங்கும்பரந்த திருவடிக்குச் சரிசமமாகப் போந்திருந்த பூமியானது
வராஹாவதாரகாலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு நீலமணி போலே சிறுகிக்கிடந்ததே!
இஃது என்ன ஆச்சரியம் என வியக்கின்றார். இப்பிரபந்தத்தில் மேலே
“ பிரானுன் பெருமை பிறராரறிவார், உராயுலகளந்தநான்று- வராகத், தெயிற்றளவு போதாவாறென்கொலோ;
எந்தை அடிக்கு அளவு போந்தபடி” என்றருளிச் செய்துள்ள எண்பத்து நாலாம் பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

‘விரிதோட்ட’ என்பதை விளியாகக் கொண்டு ஒளி விரிகின்ற தோடுகளை யணிந்தவனே!-
மகர நெடுங்குழைக்காதனே! என்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் ‘விரிதோட’ என்றிருக்க வேண்டுவது
விரித்தல் விகாரம் பெற்று ‘விரிதோட்ட’ என்றாயிற்றென்று கொள்ள வேண்டும்;
இஃது அருமையெனின்; வேறுவகையாகவே பொருள் கொள்ளலாம்-
மலர்ந்த இதழ்களை யுடைய தாமரை போலேயிருக்கிற என்று. இப்போது இது சேவடிக்கு விசேஷணம்.

————–

[மண்ணும் மலையும்.] ஏனமாய் நிலங்கீண்ட போது மிகப் பெரிதான பூமி ஒருகோட்டின் மேலே அடங்கிக் கிடந்த
விசித்திரத்தைக் கீழ்ப்பாட்டில் பேசியநுபவித்த ஆழ்வார்க்கு மற்றொரு அற்புதச் செயலும் நினைவுக்கு வந்தது;
பிரளய காலத்தில் சிறிய பாலகனாய் ஏழுலைகையும் அமுது செய்தாயென்று ப்ராமாணிகர்களான வைதிக புருஷர்கள் சொல்லுகின்றனர்;
இது ஸத்யமான விஷயமேயன்றி ஈஷத்தும் அஸத்யமல்ல; சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை அமுது செய்யக் கூடமையாலே
உலகுண்ட அக்காலத்தில் உனது வாயும் உலகங்களின் பெருமைக்குத் தகுதியாகப் பெருத்திருந்ததோ என்று வினவுகின்றார்.

இங்ஙனே கேள்வி கேட்கிற முகத்தால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்றாராழ்வார் என்றுணர்க.
சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கவல்ல அபாரசக்தி யுக்தனன்றோ நீ என்றவாறு.

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்—10-

பதவுரை

மண்ணும்–பூமியும்
மலையும்–குல பர்வதங்களும்
மறி கடலும்–அலை யெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்–காற்றும்
விண்ணும்–ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது–(உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்–ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);
எண்ணில்–இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்–அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம்
எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று–இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
இஉலகு அளவும் உண்டோ–இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?

[அலகளவுகண்டசீர்] நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;
அவற்றை அளவு காண்கையாவது-அந்த எண்களின் எல்லைக்குத் தாள் மேற்பட்டுபோதல்; அளவுகடந்து போவதைச்சொன்னபடி.
‘அஸங்க்யேய கல்யாண குணகணெளகமஹார்ணவ!” என்பர் ஸ்ரீ பாஷ்யகாரரும்.

சீராழியாய்க்கு = ஆழியென்று ஸமுத்ரத்துக்குப் பெயர்; ஆழியான் – சமுத்ரமாயிருப்பவன்;
முன்னிலைப் பெயர் நான்காம் வேற்றுமையுருபு பெற்று “ ஆழியாய்க்கு” என்றாயிற்று;
அன்றி,
ஆழியையுடையவன் ஆழியான் என்றாகி,
எல்லை கடந்த திருக்குணங்களையும் சக்கராயுதத்தையும் உடைய உனக்கு என்று பொருளாகவுமாம்; இ
துவே வியாக்கியானத்திற்கும் பொருந்தியதென்க.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் கண்டு கொண்டமை —

August 11, 2021

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

கண்டு கொண்டேன் -பிரதம பர்வ ஸ்வ கத நிஷ்டை –
நாம் அவனைக் கண்டு -ஸ்வரூப ரூப குண விபூதிகளை அறிந்து பற்றிக் கொள்ளுகை

அவன் நம்மைக் கண்டு
வாழும் சோம்பராய் இருக்கும் நிலையைக் கண்டு உகந்து
நம்மைக் கைக் கொள்ளுகை

பாகவத நிஷ்டை மத்யம பர்வம்
ஆச்சார்ய நிஷ்டை சரம பர்வம்
இவற்றிலும் பரகத சரம பர்வ நிஷ்டைகள் உண்டே

கண்டு கொண்டார் ஆழ்வார்
நாம் பயன் அல்லாமலும் பாங்கு இல்லாமையாலும்
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் கை விட்ட அளவையும் கண்டு தாமே கைக் கொள்ளுவார்

கனவில் கண்டேன்
இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே—

————————

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–பெருமாள் திருமொழி-–1-1-

ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை
கோமளத்தை –கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்
கண்டு கொண்டு –கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே
என் கண் இணைகள்-பட்டினி விட்ட என் கண்கள்
என்று கொலோ களிக்கும் நாளே-
அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை
இங்கே கண்டு களிப்பது என்றோ –

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

——————————

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே–திரு மாலை-4-

பராங்கதி கண்டு கொண்டான்-
பாப விமோசனமே பலம் போந்து இருக்க-அவ்வளவு அன்றிக்கே-ஸ்வர்க்காதி பலங்களின் அளவும் அன்றிக்கே –
ஐஸ்வர்யாம் கைவல்யங்கள் அளவும் அன்றிக்கே – உத்தம புருஷார்தத்தைக் கிடீர் லபித்தது –
சம்சாரிகளில் கடையனானவன் அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தம் உடைய அனுபவத்தை இறே பெற்றது –

கண்டு கொண்டான் -என்றது
இழந்தது பெற்றால் போலே இருக்கை –
திரு நாமம் சொன்னதுக்கு பலம் பெற்றானாய் இருக்கை அன்றிக்கே தன்னது தான் பெற்றானாக வாய்த்து இவன் நினைத்து இருப்பது –
அஞ்ஞானத்தாலே மறைந்து கிடந்ததாய்-பகவத் விஷயீ காரத்தால் அதில் நிவ்ருத்தி பிறந்தால் ஸ்வரூபமும் –
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷமும் பிரகாசிக்கும் இத்தனை இறே –
பிரகாச்யந்தே ந்ஜந்யந்தே-என்னக் கடவது இறே –

————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

கண்டு கொண்டு
நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே
கண்ணாலே பருகும் கரும்பாய்த்து இது –
லோச நாப்யாம் பிபந்நிவ-

என் கண்ணினை களிக்குமாறே –
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

———-

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே–கண்ணி நுண் சிறுத் தாம்பு-7–

கண்டு கொண்டு என்னை
இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே
ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-
(பெருமாள் -அந்யோன்யம் அபிவிஷணை மஹாராஜர் போலே-மூவர் அனுபவம் – )

கண்டு கொண்டு என்னை-தம்முடைய துர்க்கதியைச் சொல்லுகிறார்
என்னைக் கண்டு-சத்துக்களாலே அசமீஷ்யனான என்னைக் கூசாதே கடாஷித்து
என்னைக் கண்டு-இவருடைய யம் பச்யேத்-என்கிற பிரதம கடாஷம் இருக்கிற படி
கொண்டு-தோஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார்
என்னைக்கண்டு -என்னைக் கொண்டு–பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்
எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக் கொண்டார்-இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே

————

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன என்றால் –
அநதிகாரியானவனுக்கு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -அதிகாரியானவனுக்கு அநதிகாராம் சம்பாதிக்க வேண்டா –
நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை -சர்வாதிகாரம் -என்றபடி –

கண்டு கொண்டேன் –
தனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும்
தாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –

நான் கண்டு கொண்டேன் –
கெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை

நாராயணா
பிரணவம் ஆதல் -நமஸ் ஆதல் -சதுர்த்தி யாதல் -கூட்டாமையாலே
திருவிடை யாட்டத்திலே இழிய அமையும் (ஐஸ்வர்யத்துக்குள் ஒருவனாக இருந்தாலே போதும் )
பல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது-
(நார சப்தத்துக்குள் நாமும் உள்ளோம் என்ற இசைவே வேண்டியது)

என்னும் நாமம் –
என்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான ஸ்ரீ நாராயண அநுவாகப் ப்ரசித்தி
நாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் –
இச்சை பிறந்த போதே காலம் –
சொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது-
(மந்த்ரம் என்று சொல்ல வில்லையே -ஆசையே அதிகாரி)

ஸ்ரீ திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்
கங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ
இந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-

———

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

கண்டு கொண்டேன் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
உலகுய்ய நின்றானை கண்டு கொண்டேன்
விளையாட வல்லானை கண்டு கொண்டேன்
தடம்பருகு கருமுகிலை கண்டு கொண்டேன்
தஞ்சைக் கோயில் தவ நெறிக்கோர் பெரு நெறியை கண்டு கொண்டேன்
வையம் காக்கும் கடும்பரி மேல் கற்கியை கண்டு கொண்டேன்

ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்

———

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணி முலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே/ வாழ்ந்து ஒழிந்தேனே /அல்லல் தீர்ந்தேனே —
பாசுரங்கள் தோறும் உண்டே -கண்களால் தரிசித்து -காதால் மட்டும் கேட்டுப் போகாமல் க்ருதார்த்தன் ஆனேன் –

————-

சினவில் செங்கண் அரக்கருயிர்மாளச்
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் என்றேத்தும்
மா முனியை மரமேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
நானடியேன் நறையூர் நின்ற நம்பியை,
கனவில் கண்டேனின்று கண்டமையாலென்
கண் இணைகள் களிப்பக் களித்தேனே–7-3-1-

————–

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

பிரவேசம் –

போன புனிதர் -என்று இன்னாதானார் –நாம் எங்கேனும் போனோமோ – உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில்
வந்து நிற்கிறது –என்று உகந்து அருளின கோயில்களில் நிலையைக் காட்டினான் –
இனித்தான் சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே வந்து உதவினவன் என்று நம்மை நீர் அறிந்து இலீரோ –
உமக்கு நினைத்த வகை எல்லாம் பரிமாறுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
உம்முடைய விரோதியைப் போக்கி-உம்மை அடிமை கொள்ளுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
என்று ஸ்ரீ திரு வழுந்தூரிலே நிற்கிற நிலையைக் காட்டக் கண்டு த்ருப்தராய் அனுபவிக்கிறார் –
ததேவ கோபாயா யத பிரசாதாயச ஜாயதே -என்கிறபடியே
இந்நிலை தான் இவர்க்கு இழவுக்கும் உடலாய் பேற்றுக்கும் உடலாய் யாய்த்து இருப்பது –
ஆகையால் இப்போது தமக்கு சமாதானமாய் விட்டது –

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே
ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அயர்வறும் அமரர்கள் அதிபதியை நான் கண்ணாலே காணப் பெற்று
ஷோபம் அடையத் தீர்ந்து களிக்கப் பெற்றேன் –
(ஷோபம் -கலக்கம் -ஸ்திதோஸ்மி –நாஷ்டோ மோஹ -அர்ஜுனன் போல் )

தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

பிராதி கூல்யமேயாய் அதிலே நிலை நின்றாரை அழியச் செய்யுமவனை –
நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
கீழே உபய விபூதி யோகத்தையும் சொல்லி யணி யழுந்தூர் உடையானை -என்னும் போது
அதுக்கு மேலே ஒரு சம்பத்து ஆக வேணும் இறே –
(த்ரிதீய விபூதி அரங்கம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்)
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –
உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன் –

அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

திரு வழுந்தூர் நின்றானை-திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
(பசுமாடு கன்றுகளை தேடி ஆ மருவி அன்றோ இங்கு நின்று அருளுகிறார் )
கண்ணாலே காணப் பெற்று–அபூர்ணனான நான்-பூர்ணனாகப் பெற்றேன் –

செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாப த்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாப த்ரயங்கள் தீரப் பெற்றேன் –

அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7-6-7-

திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே —அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக்
கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற கலையார் சொற் பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –கார் காலத்திலேயே மேகம் போலே
ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

———–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –
பசித்த இடத்தே-ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே அபேஷை பிறந்த இடத்தே
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-
(வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம்
யந்தணர் கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-
(கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று )
மறையோர் தங்கள் கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு-தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –கண்கள் ஆர அளவும் நின்று – காணப் பெறாமையால்
உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை=7-10-10-

——————

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

ஆமையாய் விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

வெஞ்சமத்து பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம் பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-

———

ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள் தாம்,
பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே–11-2-6-

————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது – பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –
கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

———

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

கண்டாயே நெஞ்சே-
நான் சொன்னபடியே பலத்தோடே -வியாப்தமானபடி -நிறைவு பெற்றபடியைக் கண்டாயே.

நெஞ்சே –
ஞான பிரசர த்வாரமான -ஞானம் செல்லுதற்கு வழியாக வுள்ள உனக்குச் சொல்ல வேண்டா அன்றே?

கருமங்கள் வாய்க்கின்று –
காரியங்கள் பலிக்குமிடத்தில்.

ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே –
‘எண்ணிலும் வரும்’ என்று தான் மிகையாம்படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே.
இயலுகை -பலிக்கை
இதனால், பகவானுடைய பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவு அன்று காண் என்பது பெறுதும்.
இத் தலையில் எண் இன்றிக்கே இருக்கப் பலிக்கும் என்னுமிடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் மேல் :

உலகு ஏழும் உண்டானை –
பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?

உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை –
இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?
இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?

கண்டு கொண்டனை நீயும் –
விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டு கொண்டாய்?
பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;
உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;
அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,
அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார்,
‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———–

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10–

கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –
வேதைஸ் ச சர்வைர் அஹம் ஏவ வேத்ய ’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும்,
வேதங்களை யறிந்தவனும் நானே,’ என்கிறபடியே,
பல கலைகளாலும் அறியப்பட்ட உத்கர்ஷத்தை ஏற்றத்தை யுடையனாயிருந்து, நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால்
கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.

என் நெஞ்சம் நிலைப் பெற்று – ‘
சிந்தாமற் செய்யாய்’ என்ற நெஞ்சும் ஒரு படி தரிக்கப் பெற்றது.

உயிர் நீடு பெற்றது –
அச்சேத்யமாய் அதாஹ்யமாய் -‘வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்ம வஸ்துவும்’ அழியப் புக்கது;
அங்ஙனம் அழியப் புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.
‘ஆயின், ஆத்மாவிற்கு அழிவு உண்டோ?’ எனின்,
ச்சேத்யாதி விச ஜாதீயம் – ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினை யுடையது’ என்ற இத்துணையே யல்லது,
தன்னில் ஸூக்ஷ்மமாய்ப் புக்கு வியாபித்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமை யில்லை என்க.
இனி நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி;
‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.

————

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–4-7-7-

பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் –
சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவு கேடு தவிரப் பெற்றேன்.-என்றது,
அறிவு பிறந்த பின்பு, ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று அபேக்ஷித்த -விரும்பிய அது பெற்றேன்’என்றபடி.

நறுந்துழாயின் கண்ணி வேந்தே –
வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுல வாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது.
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-
(ரசோக்தி. ‘பச்சை’என்றது, சிலேடை : திருத்துழாய் என்பதும், உபகாரம் என்பதும் பொருள் )
பரிமள பிரசுரமான திருத் துழாயை யுடைத்தான திரு மாலையை யுடைய சர்வாதிகனே

நான் உன்னைக் கண்டு கொண்டு –
உன் போக்யதையை இனிமையை அறிந்த நான்,
நிரவதிக – எல்லையற்ற -போக்ய பூதனான -இனியனான உன்னைக் கண்டு கொண்டு.

நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டுகொண்டு,
அறிந்து அறிந்து தேறித் தேறி
யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்! இது நான் பெற்ற அம்சம் – என்கிறார்.

(இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது, ‘பேதைமை தீர்ந்தொழிந்தேனித்தனை;
மார்பும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம்.)

———–

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

வீற்றிருந்தான் –
இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற
கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –

கண்டு கொண்டே –
மஹா வியாதியை -பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை
தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே
விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

———-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

இருந்தான் கண்டு கொண்டே-
கண்டு கொண்டே-இருந்தான்-
தரித்ரன் -வறிஞன் -தன லாபம் -செல்வப் பேறு உண்டானால் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
பார்த்த படியே இரா நின்றான் –
தத ஸூ ப்ரீத மனசௌ தௌ உபௌ கபிராகவென
அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18
சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும் மிகுந்த களித்த மனமுடையவர்களாய்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே
சொல்ல எதிர் தலையான தம்மை காண்கின்றிலர்

எனதேழை நெஞ்சாளும்-
எனது ஏழை நெஞ்சு ஆளும் –
கண்டன எல்லா வற்றிலும் சபலமாய் இருக்கிற -ஆசை கொள்ளுகின்ற என்னுடைய நெஞ்சை -மனத்தை –
அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பொதி எடுக்கத் தொடங்கிற்று -என்றது
ஒரு பிரபலனைப் பற்றாதே-விஷயங்களில் உள்ள ஆசையால்
நடுவே நின்றவாறே பணி கொள்ளத் தொடங்கிற்று – என்றபடி-

———–

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க
கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
ப்ரேமார்த்த சித்தருக்கு -அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
பாஹ்ய -புறச் சமயங்களால் அவிஸால்யனாய் அசைக்க முடியாதவனாய்
எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு
எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் உத்பாதகனாய் -காரணனாய் இருந்து வைத்து
ஆஸ்ரித -அடைந்தார்க்கு ஸூலபன் ஆனவனைக் காணப் பெற்றேன் -என்கிறார்

———

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

கண்டு கொண்டு-
நான் அழைப்பன் -என்ற விடாய் எல்லாம் கெட கண்களால் காணப் பெற்று –

என் கண்ணினை ஆரக்-
காணக் கருதும் என் கண்ணே -என்ற கண்கள் விடாய் கெட
கலியர் -வயிறார உண்டேன் -என்னுமா போலே-ஆரக் கண்டு கொண்டு -என்கிறார்

களித்து-
மறுகின நெஞ்சு களித்து –

பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் –
இவ் வுகப்புக்கு இடைச் சுவரான பிராரக்தந -பழைய கர்மங்களை
வாசனையோடு போக்கி –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் –
என்னளவும் அன்றிக்கே –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் –
நானும் உண்டு-என் பரிகரமும்- வேலையாள்களும் ஜீவித்து
என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் – என்பாரைப் போலே –
சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்
ததீய சேஷத்வ பர்யந்தமான -அடியார்கட்கு அடிமை யாதலை எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே
இது தான் தோன்றியான கைப்பற்று அடியாக வந்தது ஓன்று அன்று –

அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –
சர்வேஸ்வரனாலே அடியவனாக-விஷயீ அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

————

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

தாள் கண்டு கொண்டு –
காட்சிக்கு ஹேது காரணம் சொல்லிற்றோ அன்றோ –

என் தலை மேல் புனைந்தேனே –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -92-2-என்றும்
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும் சொல்லுகிறபடியே
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற போக்யதையை – இனிமை சொல்லுகிறது –
நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று பிரார்த்தித்தவத்தை -வேண்டிக் கொண்ட அதனை
தலையாகப் பெற்று கிருதகிருத்யன் ஆனேன்-

————

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

கண்டேன் –
என்றும் கேட்டே போகக் கூடிய விஷயத்தை -பொருளை கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி ஸ்வ சாத்யத்தோடு -அதன் பலத்தோடு பொருந்தின படியை
அதாவது-சாஷாத் கரிக்க -நேராக கண்ட படியையைச் சொல்கிறார்
இதனால் ப்ரத்யக்ஷ சாமானகாரமான -புறக் கண்களால் கண்டது போன்று-ஞான சாஷாத்காரத்தை –
ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –

கமல மலர்ப் பாதம் –
ப்ராப்தியை ஒழிய -பெறுகிற பேறு வேண்டாதபடி-ஞான லாபமே அமையும்படி யாயிற்று
போக்யதை – இனிமை இருக்கும் படி

காண்டலுமே –
கண்ட அளவிலே –

விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாஸூச -ஸ்ரீ கீதை -18-66- என்கிறபடியே
அவன் அடியாக வருகிறதே அன்றோ

வினை யாயின அடங்கலும் –
இவர் கேவலர் அல்லர் -அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –

———–

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் இத்யாதி
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம்
பிரத்யஷிக்கைக்கு ஆனைத் தாளான மனஸ்ஸாலே
புறப்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே
ஸ்வப்னதீ கம்யம் -என்கிறபடியே
மனஸ்ஸாலே காண்கை கனவிலே காண்கை யாவது
ஆங்கு இத்யாதி
அபாதிதமாகக் –கண்டேன்
கண்டேன் இத்யாதி
அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி
பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்
வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

———-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பகல் கண்டேன்
காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –
வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை –
எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –
நாரணனைக் கண்டேன் –
அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே –
பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –
மிகக் கண்டேன் ஊன் திகழும் நேமி யொளி திகழும்சேவடியான் வான் திகழும் சோதி வடிவு –
வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும்
ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய
பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான
திருமேனியைக் கண்டேன்
மேகம் போலே திகழா நின்ற ஜ்யோதிசை உடைய வடிவு
என்னவுமாம் –

————————

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —-மூன்றாம் திருவந்தாதி–2-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் –கழல் கண்டேன்-ஏழ் பிறப்பும் இன்றே அறுத்தேன்
திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
காண்கைக்கு ஒரு காலமும்-விரோதி போகைக்கு ஒரு காலமும் இல்லை கிடீர்-அக் காலத்திலேயே கிடீர் போயிற்று
த்ருஷ்டே நைவ ஹி நச்சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்யா -8-4-
அத்ய மே ஹி கதஸ் சோக –

இன்றே கழல் கண்டேன் –
கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –

ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் –
பிரதி பந்தகம் போய்த்து யென்னும்படியாய் யாயிற்று-அடிமை செய்யவும் பெற்றேன்
சம்சாரம் போனவற்றோ பாதியாகவும் பெற்றேன் –

பொன் தோய் வரை மார்பில் –
பொன் தோய்ந்த மலை போல் இருக்கும் மார்பில் –

பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட –
தோளில் மாலையைப் பிராட்டி கண்டு கொள்ளும் படி நின்ற –

அன்று திருக் கண்டு கொண்ட –
பிராட்டியோட்டை சம்பந்தம் அநாதி இறே –

பொன் தோய் வரை மார்பில் –
பிராட்டி பிச்சேறும்படியான மார்பை யுடையவன் –

அன்று திருக் கண்டு கொண்ட –
அம்ருத மதன காலத்தில்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயௌ வஷச்தலம் ஹரே -ஸ்ரீ விஷ் புரா-1-9-105-என்று
பிராட்டி தானே ஆசைப் பட்டு ஏறும்படியான மார்வைப் படைத்த ஸ்ரீ யபதியே

திருமாலே –
அவள் பக்கலிலே அவன் பிச்சேறி இருக்கும் படி –

உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம் –
அவள் விரும்புகிற விஷயம் என்று
பிற்காலியாதே
மருவிக் கண்டு கொண்டது என்னுடைய மனஸ் ஸூ –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ –
விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

——–

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–நான்முகன் திருவந்தாதி –26-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

——-

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி–20-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரப்படி –ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை —

August 11, 2021

ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

தந்தை தளை கழலத் தோன்றி
பிறந்தவாறும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
பிறந்த மாயா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான்
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன்
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –

———

ஸ்ரீ கிருஷ்ணன் போய் ஆய்ப்பாடி புக்கதும்

போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –

————-

அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை
ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும்
நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல-1-3-2-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-

—————————-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண சுருக்கம் / ஸ்ரீ திருவடியே மஹாத்மா –நம்மை அளித்து காக்கும் ஸ்ரீ ஆச்சார்யன் —

August 10, 2021

இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண வடிவத்தை (61 வரிகள்) மந்திரம் போல் படித்தால்
முழுமையான ஸ்ரீ ராமாயண காவியத்தைப் படித்த பலன் உண்டாகும் –
‘தபோவனம்’ திருத்தலத்தில் இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண வடிவம் மந்திரமாகத் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது.
இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண காவியத்தைத் தினமும் படித்தால் ஸ்ரீஇராமபிரானின் அருளும்
ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகளின் அருளும் ஒருங்கே கிடைக்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

1. க்ரெளஞ்ச பட்சி மோட்சம்

2. வால்மீகி பிரவேசம்

3. நாரதர் விஜயம்

4. ஸ்ரீசீதா காவ்யம்

5.ஸ்ரீராம கதா ஆரம்பம்

6. லவகுச கீர்த்தனம்

7. தசரத புத்ர சோகம்

8. குலகுரு வசிஷ்டர் அனுக்கிரஹம்

9. அஸ்வமேத யாகம்

10. ஸ்ரீராம லெஷ்மண சத்ருக்ண ஜனனம்

11.விஸ்வாமித்ர விஜயம்

12.அகல்யா சாபவிமோசனம்

13.வேள்வி காத்தல்

14. தாடகை மரணம்

15. மிதுலாபுரி விஜயம்

16. சீதா சுயம்வரம்

17. சிவதனுசு காவ்யம்

18. ஸ்ரீராமவீரம்

19. ஸ்ரீசீதாராம கல்யாணம்

20. பரசுராம விஜயம்

21. விஷ்ணு தனுசு ப்ரயோகம்

22. அயோத்தி விஜயம்

23. ஸ்ரீராமபட்டாபிஷேகம் ஆரம்பம்

24. கைகேயி வரம்

25. சீதா ராம வனவாசம்

26. குகன் பரிச்சியம்

27. சூர்ப்பனகை வதம்

28. மாரீசன் மரணம்

29. சித்ர கூட விஜயம்

30. இராவண விஜயம்

31.சீதா தேவியைத் தேடும் படலம்

32. ஜடாயு மோட்சம்

33. கந்தமா பர்வத விஜயம்

34. மாருதி விஜயம்

35. சுக்ரீவனுக்கு அபயம்

36. மராமரம் துளைத்தல்

37. வாலி மரணம்

38. சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம்

39. சேது பயணம்

40. தர்பசயனம்

41. சமுத்ர ராஜன் சரணாகதி

42. சேதுபாலம்

43. மாருதி இலங்கை பயணம்

44. விபீஷணன் சந்திப்பு

45. சீதா தரிசனம்

46. கணையாழி காவ்யம்

47. லங்கா தகனம்

48. விபீஷண பட்டாபிஷேகம்

49. சேதுபால பயணம்

50. இந்திரஜித் லெஷ்மண யுத்தம்

51. இந்திரஜித் மரணம்

52. ஸ்ரீராம ராவண யுத்தம்

53. சீதா அக்னி பிரவேசம்

54. புஷ்பக விமானம்

55. பரத்வாஜ ஆஸ்ரம விஜயம்

56. பரத மாருதி ஆலிங்கனம்

57. சீதாராம அயோத்தி விஜயம்

58. குலகுரு வசிஷ்டர் ஸப்தரிஷிகள்

59. பல முனிவர்கள் ஆசியுடன்

60. குலமாதர்கள் ஆசியுடன்

61. சீதாராம பட்டாபிஷேகம்

—————

ஸ்ரீ திருவடியே மஹாத்மா -நம்மை அளித்து காக்கும் ஸ்ரீ ஆச்சார்யன் —

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
மஹாத்மா அனுமான்

அஞ்சிலே ஓன்று பெற்று பஞ்ச சம்ஸ்காரம் -திருமந்திரத்தில் பிறந்து
அஞ்சிலே ஒன்றைத் தாவி அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
அஞ்சிலே ஓன்று ஆறாக -ஸித்த உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்
ஆர் உயிருக்குக்கா
அஞ்சிலே -பஞ்ச பிரகாரம் விண்ணின் மேல் இருப்பாய் –அர்ச்சாவதார -ஒன்றை -பக்தி ஏற்படுத்து
அயலார் ஊரான சம்சாரம்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பரம புருஷார்த்தம் -மற்ற நான்கையும் விட்டு
நம்மை அளித்து காக்கும் ஆச்சார்யன்
ஐம் பூதங்கள்
பஞ்ச சம்ஸ்காரம்
தீயில் பொலியும் வெண் சுடர் ஆழி
வானம் -திருமண
மந்த்ரம் -காற்று
தாஸ்ய -நிலத்தில் விழுந்து சேவித்து
திருவாராதனம் -தீர்த்தம்
இப்படி ஐந்துமே வருமே இதற்குள்

———–

ஸ்ரீ ராமர் போற்றிய மஹாத்மா!

கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூன் யபி ஸாதயேத் I
பூர்வகார்யாவிரோதேன ஸ கார்யம் கர்து மர்ஹதி II

கார்யே – செய்து முடிக்க வேண்டிய
கர்மணி – ஒரு காரியத்தில்
நிர்திஷ்டே ஏவப்பட்டபோது
ய: – எவனொருவன்
பூர்வகார்யாவிரோதேன – முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி
பஹூனி அபி – அனேகங்களையும்
ஸாதயேத் – சாதிக்கின்றானோ
ஸ – அவன்
கார்யம் – காரியத்தை
கர்தும் – செய்து முடிக்க
அர்ஹதி – திறமை உடையவனாகிறான்

——

அனுமனை ராமர் போற்றிக் கூறும் இடம் ஸ்ரீ ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
முதல் ஸர்க்கத்தில் 7,8,9 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் ஸ்ரீ ராமர் கூறுவதைப் பார்ப்போம்:

யோ ஹி ப்ருத்யோ நியுக்த: ஸன்பர்த்ரா கர்மணி துஷ்கரே I
குர்யாத் த்தனுராகேன தமாஹு: புருஷோத்தமம் II
(ப்ருத்ய: – வேலைக்காரன்; பர்த்ரா – தலைவன்/ எஜமானன்)

எந்த ஒரு வேலைக்காரன் தலைவனால் கஷ்டமான ஒரு காரியத்தில் ஏவப்பட்டு அதைக் குறையின்றி செய்வதோடு
அநுகூலமான வேறு பல காரியங்களையும் செய்து முடிக்கிறானோ அவனை
உத்தம வேலைக்காரனாகச் சொல்வர்.

—-

நியுக்தோ ய: பரம் கார்யம் ந குர்யான்ந்ருபதே: ப்ரியம் I
ப்ருக்தோ யுக்த: சமர்த்தஸ்ச தமாஹுர்மத்யமம் நரம் II

(யுக்த – அனுபவசாலி; சமர்த்த- சாமர்த்தியசாலி;ப்ரியம் –நன்மை விளைவிக்கத் தக்கது)

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால் ஒரு காரியத்தில் ஏவப்பட்டு
தலைவனுக்கு மேலான மேலும் பல காரியங்களைச் செய்யவில்லையோ அவனை
நடுத்தரமான வேலைக்காரன் என்று சொல்வார்கள்.

நியுக்தோ ந்ருபதே: கார்யம் ந குர்யாத்ய: ஸமாஹித:
ப்ருத்யோ யுக்த: சமர்தஸ்ச தமாஹு: புருஷாதமம்

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால் ஒரு காரியத்தில் ஏவப்பட்டு
தலைவனுக்குக் குறைந்தபட்ச காரியத்தைக் கூடச் சரியாகச் செய்யவில்லையோ அவனை
அதம வேலைக்காரனாகச் சொல்வார்கள்

இப்படி வேலை செய்பவர்களை மூன்று விதமாகப் பிரித்துச் சுட்டிக் காட்டும் ராமர்
அனுமனால் ‘பரி ரக்ஷிதா:’ (பேருதவிசெய்யப்பெற்றோம்) என்று மனம் குளிரக் கூறுகிறார்.

இந்த பேருதவியைச் செய்த ஸ்ரீ அனுமானை மஹாத்மன: (மஹாத்மா) என்று அவர் புகழ்கிறார்.
ஸ்ரீ ராமராலேயே மஹாத்மா என்று புகழப்பட்டார் என்றால் ஸ்ரீ அனுமனின் பெருமையைக் கூறவும் வேண்டுமோ!

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பேர் அருளாளனும் -ஸ்ரீ ஆழ்வார்களும் —

August 10, 2021

பர்த்தாவின் திரு நாமம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்யாமல்
அருளிச் செய்துள்ளார்கள் அன்றோ –

வரம் தரும் மா மணி வண்ணன்
பேர் அருளாளன்
தேவாதி ராஜன்
அமரரர்கள் அதிபதி
இமையோர் தலைவா
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் -போல் இவனுக்கு மங்களா சாசனம்

பெரிய ஆள் பெருமாள் கோயில் அன்றோ -ஆகவே பரதவ சப்தங்கள் கொண்டே இவனுக்கு மங்களா சாசனம்
நீர்மையிலும் மிகப் பெரியவன் அன்றோ
பேர் அருளாளன் அன்றோ
ஆகவே வரதன் -பேர் அருளாளன் -வரம் தரும் மா மணி வண்ணன் -போன்றவற்றாலும் மங்களா சாசனம்

நாயகனைக் குறிப்பால் உணர்த்தும் பராங்குச நாயகி
என்னை மனம் கவர்ந்த ஈசனை
பேர் அருளாளன் சீர் பேசக் கற்றவன் தாம் நிரூபகம்
பாட்டுப் பித்தன் –

———–

திருவோணத்தான்
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
தேவ பிரானுக்கு
ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் மாறு இல் மா மணி வண்ணன்
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான்

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா
பறவை ஏறு பரம் புருடா
என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு

——

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் !
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை
கடல் நிற வண்ணன் தன்னை

உயர் மணி மகுடம் சூடி நின்றானை
காமனைப் பயந்தான் தன்னை
அல்லி மா மலராள் தன்னோடும்
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை
கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை

கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை
கோயிலினுள்ளே வானவர் கோனை
நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும்
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை
திருத்தாய் செம்போத்தே திரு மா மகள் தன் கணவன் மருத்தார் தொல் புகழ் மாதவனை

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர்
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன்
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறென்றும் கடல் கிடந்த கனியே என்றும்,

———–

அமரர்கள் அதிபதி
அருளாத நீர்
அருளாழி புட் கடவீர்
அருளாழி அம்மான்
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக் கண்ணனை நெடு மாலை
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத் தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னை
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான்
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னை

தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான்
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை

——-

மூரி நீர் வண்ணன் -முதலாய நல்லான்
தேவாதி தேவன் எனப்படுவான்
உலகு ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான்
அத்தி யூரான் புள்ளை யூர்வான்
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ செங்கண் நெடுமால் திரு மார்பா

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா
அண்டர்கோன்
இமையோர் பெருமான்
ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இமையோர் தலைவா

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம்கரிய பிரான் எம்பிரான்
வானோர் தலைமகனாம்
எம் மீசர் விண்ணோர் பிரானார்
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி

————————–

ஸ்ரீ பெரியாழ்வார்

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

சாமுத்ரிக லஷணம் போவார் இவனைப் பார்த்து பும்ஸ்வத்த சாம்யம்
உடையவர்களில் இவனுக்கு சத்ருசர் இல்லை காண் என்பாரும் –
இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள் என்கை-

———

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 –

யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
பகவத் அனுபவத்துக்கு முற்பாடரான -(நீதி வானவர் ) நித்ய ஸூரிகளுக்கு சேஷித்வேன பிரதானனாய்
அவர்களுடைய சத்தாதிகளுக்கும் தாரகாதிகளுக்கும் தானே ஹேதுவானவனை

———-

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

ஆசுர ப்ரக்ருதிகளான கம்சாதிகளை அழிய செய்கையாலே தேவர்களுக்கு உபகாரகன் ஆனவனுக்கு

——–

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே – 3-7-8- –

தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே
(தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )
தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் –
அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் –
அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே-கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்
மாறில் -இத்யாதி
ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-

————

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ – 3-8- 7-

———–

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-

சகஸ்ர கிரணங்கள் ஆன ஆயிரம் ஆதித்யர்கள் சேர பிரகாசித்தால் போலே
இருக்கும் தேஜசை உடைத்தாய் –
ஆதி ராஜ்ய ஸூசுகமான ஒக்கத்தை உடைத்தான திரு அபிஷேகத்தை உடையவன் –

————

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

———–

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களைவாயே – 5-1 -9-

உம்பர் கோன் –
இங்கு உள்ளார் ஸ்வரூபத்துக்கு அஞ்சியும் தண்டத்து அஞ்சியும் இறே ஏத்துவது
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை -என்று ராக ப்ராப்தமாக ஏத்துவார் அங்கு உள்ளார் இறே –

உலகு ஏழும் அளந்தாய்-
ஏத்த ஏழு உலகம் கொண்ட –

உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் –
இந்த்ரனுக்காக உலகு ஏழும் அளந்தாய் -என்னுதல்
நான்முகனார் பெற்ற நாடு-என்கிறபடியே ப்ரஹ்மாவானவன் சதுர்தச புவனத்தையும் அளந்தாய் -என்னுதல்-

ஊழி யாயினாய்-
ஊழி -காலம் -ஸ்ருஷ்ட்டி -வாழ்த்துவார் பலராக -இத்யாதி –
ஆழி முன்னேந்தி –
விரோதி வருவதற்கு ஏற்கவே -திரு ஆழியை தரித்து –

கம்ப மா கரி கோள் விடுத்தானே-
கோள் முதலை துஞ்சக் குறித்து எறித்த சக்கரம் -என்கிறபடியே திரு ஆழியைக் கொண்டு
கார்யம் கொண்ட படி -கம்பம் -நடுக்கம் -நடுங்கா நின்றவர்களை என்னுதல் –
முதலை நீரிலே இழுக்க -ஆனை கரையிலே இழுக்க பட்ட அசைவு என்னுதல் –
மா -பெருமை -துக்கம் படாமாற்றாமைக்கு விரோதியை போக்கினவனே –
தட மலர் பொய்கை புக்கு நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் –

என் ஆர் இடரை நீக்காய் –
கோள்-சிறை -கோள் விட்டது -என்னக் கடவது இறே

காரணா –
மூன்று ஆபத்திலே ஒன்றிறே இது
இப்போது காரணத்வம் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பெற்றதும் –
ஈஸ்வரத்வம் நிலை நின்றதுவும் இப்போது என்கை

———-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே –

———-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

என் மனக்கடலில் வாழ வல்ல-
அது பனிக் கடல் ஆகையாலே குளிர்ந்து இருக்கும்
இது மனக் கடல் ஆகையாலே குளிர் கெட்டு இருக்கும்
அது ஊற்று மாறினாலும் இது ஊற்று மாறாது
பனிக் கடலையும் தனக்கு உள்ளே அடக்கும் கடல் இறே -பரவைத் திரை பல மோதி -இத்யாதி
இக்கடலை கண்ட வாறே பனிக் கடல் காட்டுத் தீயோடு ஒத்தது –

வாழ வல்ல–
செருக்கரான ராஜாக்கள் பழைய படை வீடை விட்டு -தாங்களே காடு சீய்த்து சமைத்த –
படை வீட்டிலே இறே ஆதாரத்தோடு இருப்பது –
சாதன தசை போலே அன்று இறே போக தசை
பனிக் கடலையும் விரும்புகைக்கு அடி -இவரை சேர்த்துக் கொள்ளுகைக்கு
யோக நிந்த்ரை சிந்தை செய்க்கைக்கு இறே –
மனக்கடலில் வாழ வல்ல –

வாழ வல்ல வாசு தேவா –
அக்கடல் எங்கும் வாழ்ச்சி இறே
கீழில் பாட்டில் -வாழச் செய்தாய் -என்று -ஸ்ரீ ஆழ்வாரை வாழ்வித்து அவ் வாழ்வு கண்டு
தான் வாழுகிற படி

மாய மணாளா நம்பீ –
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே -குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது

————-

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண கடந்த தேசு மேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது
விளங்கு ஞான மூர்த்தியாய்
ஞானம் விளங்குகிற மூர்த்தியை உடையையாய் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக
உடைய ஜ்ஞானத்துக்கு பிரகாசமான திவ்ய விக்ரஹத்தை உடையையாய்
இந்த ஜ்ஞானம் ஷட் குணங்களுக்கும் உப லஷணம் –ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் –
என்னக் கடவது இ றே

பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
சுருதியால் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனாய்
சம்சாரிகளுடைய தோஷத்தை போக்க வல்ல ஹேய பிரத்யநீகத்தை உடைய சர்வேஸ்வரனே

——-

திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -103-

திருக்கலந்து சேரு மார்ப –
பிராட்டி தேவரீர் உடன் சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷத்தில் அதி சங்கித்து –
அகலகில்லேன் இறையும் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்பை உடையவனே –
பக்தரோடு முக்தரோடு நித்யரோடு -வாசியற -ஈஸ்வரீம் சர்வ பூதாநாம் -என்கிறபடியே
சர்வருக்கும் அபாஸ்ரய பூதை யான பிராட்டி -தான் நித்ய சாபேஷை யாம் படி யன்றோ
தேவரீர் உடைய பெருமை –

தேவ தேவ தேவனே –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளுக்கு மோஷ ருசி பிறந்தவன்று -ப்ராப்யரான நித்ய சூரிகளுக்கு
நித்ய அனுபாவ்யனாய்க் கொண்டு நிர்வாஹகன் ஆனவனே –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியிலே -எடுத்துக் கை நீட்டுகையே -யாத்ரையாய்
இருக்கும் நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகன் -என்கை-

இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா –
ரிக் ப்ரசுரமான வேதத்தால் பிரதிபாதிக்கையையே ஸ்வபாவமாக உடையையாய் நின்ற
ஹேய ப்ரத்யநீகனே –
நீதி -ஒழுக்கம் -அதாகிறது -ஸ்வபாவம் –
ஹரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய -என்றும்
அபஹதபாப்மா -என்றும் -இத்யாதி வாக்யங்களாலே –
1-ஸ்ரீ ய பதித்வம் -என்ன
2-ஸூ ரி போக்யதை -என்ன –
3-ஹேய ப்ரத்யநீகை -என்ன –இப்படிகளாலே வேதைக ஸமதிகம்யன் -என்கை-

———–

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்-
இவர் தாம் நின்ற நிலை குலைந்து பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே யாய்த்து இருப்பது
தேவ பிரான்
நித்ய ஸூ ரிகளுக்குத் தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு-
யோகப்ரஷ்டர் ஊர்வசியினுடைய வடிவழகை வர்நிக்குமா போலே சொல்லுகிறார்
கோலமே தாமரைக் கண்ணன் ஓர் அஞ்சன நீலமே -என்று ஆழ்வார் சொல்லக் கேட்டிருக்கும் செவி ஏற்றாலே சொல்லுகிறார்
காண்பன் –
யோகப்ரஷ்டனுக்கு விஷயம் கண்ணுக்கு இலக்காமா போலே ஆழ்வாரை விட்டால் பகவத் விஷயமாய்த்து இவர் காண்பது
யான்
இப்படி சந்யசித்துப் போந்த நான்-

———————–

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்–1-1-6-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்–3-8-1-

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப–4-3-1-

கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே/ வாழ்ந்து ஒழிந்தேனே /அல்லல் தீர்ந்தேனே —
பாசுரங்கள் தோறும் உண்டே -கண்களால் தரிசித்து -காதால் மட்டும் கேட்டுப் போகாமல் க்ருதார்த்தன் ஆனேன் –

நாங்கையில் நடுவில் உள்ள திவ்ய தேசம்
ஹேம ரேங்கர் -செம் பொன் கோவில் -பேர் அருளாளன் -ஸ்ரீ காஞ்சி தேவ ராஜனே இங்கு –

மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6-
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7-
கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-
கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-
கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி–4-3-10

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் –4-8-7-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை–7-6-6-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே -11-3-5-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்-20-

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே–திரு நெடும் தாண்டகம்-6

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறென்றும் கடல் கிடந்த கனியே என்றும்,
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் தூ முறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல் விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–திரு நெடும் தாண்டகம்-6

———————–

உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே! –– திருவாய்மொழி (1-1-1),

அதன் கடைசி வரிகள் “ துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!” என ஆழ்வார்
தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
தற்போது கலியனின் கனவில் ஆழ்வார் தோன்றி, தனக்கு விருப்பமானதைத் தெரிவித்தார்.
அதன்படி பார்த்தால் நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் நூறு பாடல்களை
வரதன் விஷயமாகவே அருளியது தெள்ளென விளங்குகிறது.
வரதனின் திருவடியன்றி வேறு புகலறியாத ஆழ்வார், தனது நெஞ்சத்தில் கைவைத்து,
தனது உள்ளக் கருத்தை உலகோர் அறிய வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
அதனால்தான் கலியன் வடித்த ஆழ்வாரின் சிற்பம், கைமாறிய கோலத்தில் காட்சி தந்தது.

இவ் வுண்மையை நன்கு தெளிவாகப் புரிந்து கொண்ட ஆலி நாடன், உடனடியாக ஆழ்வாரின் தெய்வீகத் திருவுருவை
நம்மாழ்வார் விரும்பிய நிலையிலேயே ப்ரதிஷ்டை செய்தார்.
அந்தத் திருவுருவமே இன்றும் நாம் சேவிக்கும் மகிழ்மாறனின் எழிலுருவம்.

————

அருளாத நீர் அருளி அவராவி துவரா முன்
அருளாழி புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டு இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே -1-4-6-

அருளாத நீர்-
ஏதத் விரதம் மம ( ‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ )
என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர்.
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்;
அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.
அருள் ஆழி அம்மானை –
‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன்.
இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள்,
இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி,
ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு,
அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின்,
அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் ‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கே யன்றோ!
சர்வேஸ்வரன் பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது?
இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ!
அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.

———

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை-
இறைவனை நுகரும் நுகர்ச்சிக்கு-பகவத் அனுபவ விஸ்ம்ருதிக்கு ப்ராக பாவத்தை யுடையராய் –
மறதி என்பதனை எப்பொழுதும் இல்லாதவர்களாய்,
அந்நுகர்ச்சிக்குப் பிரிவு வருமோ என்ற ஐயமும் இல்லாதவர்களாய்-பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை இன்றிக்கே –
தாங்கள் பலராய் இருக்கின்ற நித்திய ஸூரிகட்குத்
தாரகம் முதலானவைகள் எல்லாம் தானேயாய் இருக்கின்றவன்.
இதனால், தான் அருளாத அன்று, தங்கள் -சத்தை கொண்டு -ஆன்மாவைக் கொண்டு ஆற்ற மாட்டாதாரை
ஒரு நாடாக வுடையவன் என்கிறார்.

————-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக்
அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்
உள்ளே நிற்கும்
இனி அவ்வருகு போக்கில்லை
தேவ தேவருக்குக்
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்
கண்ண பிராற்கு
உபகார சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு

————-

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-

வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தையுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீலரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்./ மா-கருமை. /இவ்வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:
அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.
கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.
நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தையுடையவனை.

———-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

ஆளும் பரமனை –
நாம் உகந்ததை உகக்கிறோம்: இவ்வாத்மாவை ஆளுமிடத்தில் இங்ஙனம் அவனைப் போன்று ஆள வல்லார் இலர்;
‘ஆயின், இவன் இவ்வாத்மாவை அடியார்க்கு ஆட்படுத்தி ஆள்வானோ?’ என்னில்,
‘அடியார்கட்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன்’ என்னக் கடவது அன்றோ?
‘இவ் வுகப்புக்கு அடி அவன்,’ என்கிறார்.
ததீயரை அடியாரை விரும்புவது அவன் அடியாக அன்றோ?
கண்ணனை –
ஆட்செய்து அடிமை கொள்ள வல்லார் அவனைப் போன்றார் இலர்.
‘அப்படி ஆட்செய்து அடிமை கொண்டானோ?’ என்னில்,
‘அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை’ என்றும்,
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை’ என்றும் சொல்லுகிறபடியே,
தான் தூதனாயும் சாரதியாயும் இருந்து அடிமை செய்தன்றோ அடிமை கொண்டது?
‘எதிர் சூழல் புக்கு ஒரு பிறவியிலே இவனை அடிமை கொள்ளுகைக்காகத் தான் பல பிறவிகளை எடுத்துத் திரிகின்றவன்’ என்றபடி.
ஆழிப் பிரான் தன்னை –
தான் தாழ நின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும்,
‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கைக்கும் பெருநிலை நிற்கும்-பரிகரத்தை- கருவியை உடையவனை.
ஸூதர்சனம் சிந்தித மாத்ரமா சு தஸ்யாக்ர ஹஸ்தம் ஸ்வயம் ஆருரோஹ ‘நினைத்த மாத்திரத்தில் உடனே
கண்ண பிரானுடைய திருக்கையில் உச்சியில் தானாகவே வந்து அடைந்தார்’ என்கிறபடியே,
ஒரு கையிலே ஏறி விரோதிகளை அழியச் செய்பவன் அன்றோ?
‘நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்’ என்பதாம்.
கையும் திருவாழியுமான அழகினை ஆஸ்ரிதற்கு ஆக்கி
அதனைக் கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி
அது தன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின்,‘ஆழிப்பிரான்’ என்கிறார்.
தோளும் ஓர் நான்குடை –
விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள் தாமே அமைந்திருக்கை.
ஆயதாச்சா ஸூ வ்ருத்தாச்ச கிமர்த்தம் -‘நீண்டனவாயும் அழகோடு திரண்டனவாயும் இரும்புத்தூண்களை ஒத்தனவாயும்
எல்லா ஆபரணங்களாலும் (கண்ணெச்சில் வாராதபடி) அலங்கரிக்கப்படத் தக்கனவாயுமிருக்கிற திருத்தோள்கள்
என்ன பிரயோஜனத்திற்காக அலங்கரிக்கப்படவில்லை?’என்றான் திருவடி.
இதனால், ‘கோலின காரியத்தின் அளவல்ல இப்பாரிப்பு’ என்றபடி.
நான்கு
பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு,
‘பரமபதத்தில் சர்வேஸ்வரன் நாற்றோளனாயோ, த்வி- இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன,
‘ஏகாயநர் இரு தோளன் என்னா நின்றார்கள்; நம்முடையவர்கள் நாற்றோளன் என்னா நின்றார்கள்,’ என்ன,
‘இரண்டிலும் வழி யாது?’ என்ன,
‘இரு தோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது;
நாற்றோளன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்;
நம்மளவு அன்றியே தெரியக் கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?
‘ஆயின், சாதாரண மக்களுக்கு அங்ஙனம் தோன்ற இல்லையே?’ எனின்,
ஆயர் பெண்களுக்கு நான்காய்த் தோன்றி, உகவாத கம்சன் முதலியோர்களுக்கு இரண்டாய்த் தோன்றுமாறு போலே கொள்க.
‘நான்காகத் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ?’ எனின்,
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது?
உப ஸம்ஹர -‘மறைத்துக்கொள்க’ என்ன, மறைத்தான் மற்றைத் தோள்களை.
நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன,
தாமஸ பரமோ தாத சங்கு சக்ர கதா தர – ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்,
சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன,
வேறு பதில் சொல்ல முடியாமையாலே -விக்ருதனாக -வேறுபட்டவராய் இருக்க,
‘பிரமாணப் போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச் செய்தார்.
கற்பக தரு பணைத்தால் போல் அத்விதீயமான நான்கு தோள்களை யுடைய
தூ மணிவண்ணன் எம்மான் தன்னை –
பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமை–அநந்யார்ஹன் ஆக்கினவனை –
இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி.
‘அடியார் பக்கல் அன்புடையராய்ச் செல்லும் இவர் இவனை ‘எம்மான்’ என்பான் என்?’ எனின்,
ததீயர் -அடியார் பக்கலிலே சென்ற மனத்தையுடையராய்ப்-அபஹ்ருதராய் – போவாரை நடுவே
வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், ‘எம்மான்’ என்கிறார்.
அன்றியே, ‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ் வடிவழகாலே யாதலின், ‘எம்மான்’ என்கிறார்’ என்னலுமாம்.

————-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் றனை
நா வியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே–4-5-4-

பிரான் –
உபகாரமே–சீலமாம்படி – இயல்பு என்னும்படி -இருக்குமவன்
ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் ப்ரயோஜனாந்தர பரராய் (வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாய் ) இருந்து,
பின்பு தன்னையே பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று.
முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி இருக்கின்ற
திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும் படி சொல்லுகிறது மேல் :

தூவி அம் புள் உடையான் –
‘தூவி’ என்ற அடைமொழியால்,
நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,
‘அம் புள்’ என்றதனால்,
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணாங்க ஸோபி நா–ஸ்தோத்திர ரத்நம், 41. ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின
தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே, சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த
ஏற்றத்தை யுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு.

அடல் ஆழி –
அஸ்த்தாநே பய சங்கை – ‘பரமபதத்திலும் கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சம் கொண்டிருப்பவன் ஆகையாலே,
எப்போதும் ஒக்க யுத்த உன்முகனாய் ( சந்நத்தனாய் )இருப்பவன்’ என்பார்
அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு.
(ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கார ரவணையான் பொன்மேனி – யாங்காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான் வல்லரே யல்லரே? வாழ்த்து.’)

அம்மான் தன்னை –
‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல், திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே –
சர்வாதிகன் (எல்லார்க்கும் தலைவன் )ஆவான் என்பார்,
‘தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.

———-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-
கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய கிருதே யுகே
யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய ந அச்யுத:”
எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;
எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது”
என்கிறபடியே, கலி தோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும்.
நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது.

மலியும் சுடர் ஒளி மூர்த்தி-
சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது.
மலிதல்-நிறைதலாய், மிக்க தேஜஸ்ஸாலே -ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி.
இதனால், அருள் செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி.

மாயம் பிரான் கண்ணன் தன்னை-
ஆச்சரியமான குணங்களையும் சேஷ்டிதங்களையும் -செயல்களையுமுடைய கண்ணனை
ஆயிற்றுக் கவி பாடிற்று.

————-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-
முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,
காரண வாக்கியங்களில் உபாஸ்யனாக -உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப் படுகிறான் தானே என்று
தன் பக்கலிலே நான் தெளியச் செய்து,’ என்றபடி.
அன்றிக்கே, ‘பரம பதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம்.
அதற்கு இவன் முதலாம் -அடி ஆம் இவன், என்று என் பக்கலிலே தன் ஸ்வரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.
இங்கே அருளிச் செய்யும் வார்த்தை:
திருப் புற்றுக்குக் கிழக்கே கரிய மாணிக்காழ்வார் திரு முன் பின் -சோபாநத்திலே -படிக் கட்டிலிலே
ஆள வந்தார் எழுந்தருளி யிருக்க, உடையவர் திருப் புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,
ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச் செய்தாராம்’ என்பது.

என் நா முதல் வந்து புகுந்து –
சர்வேஸ்வரன் ப்ரஹ்மாவை -கடாக்ஷித்து திருவருள் செய்ய- அவன் பின்னர்
மச் சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ரத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம’-ஸ்ரீராமா. பால. 2 : 31
முனிவரே! இந்தச் சரஸ்வதியானது என்னுடைய அருளாலேயே உமக்கு உண்டாயிற்று;
நீர் ராம சரிதம் முழுதினையும் செய்யும்,’ என்கிறபடியே
அவன் சரஸ்வதியை ஏவி, இப்படி நாலிரண்டு நிலை நின்றே அன்றோ ஸ்ரீ வால்மீகி பகவானைப் பேசுவித்தது?
அங்ஙனம் ஓர் இடையீடு இன்றிக்கே, என்னுடைய நாக்கிலே முற்பாடனாய் வந்து புகுந்து.
அன்றிக்கே, என் நாவுக்கு அடியாய் வந்து புகுந்து’ என்னுதல்.

நல் இன் கவி –
லக்ஷனோபேதமாய் – லக்ஷணங்கள் எல்லாம் நிறைந்தவனாய்,
அந்த லக்ஷணங்கள் கிடக்கச் செய்தே, சொல்லில் இனிமை தானே ஆகர்ஷகமாய் -கவர்ச்சி கரமாம்பாடி
இனியவான கவிகளை.

தூ முதல் பத்தர்க்கு –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு,
கேட்டு ஆரார் வானவர்கள்’ திருவாய். 10. 7 : 11.-என்கிறபடியே அவர்கள் கொண்டாடும்படி சொன்ன.
அன்றிக்கே, ‘சம்சாரத்திலே தலை நின்ற முழுக்ஷூக்களுக்கு’ என்னுதல்.

தான் தன்னைச் சொன்ன –
தானே சொல்லுதல், நானே ஒரு படி சொல்லுதல் செய்கை அன்றிக்கே,
என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று.

என் வாய் முதல் அப்பனை –
எனக்கு வாயத்த காரணனான மஹோபகாரகளை.
அன்றிக்கே, ‘என் நா முதல்’ என்றது தன்னையே அனுபாஷித்து -பின் மொழிந்து,
என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.

என்று மறப்பேனோ –
முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனி மேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம்
மறக்கைக்கு உடலாக்கினால் தான் மறப்பனோ?’ என்றது,
முன்பு நினைக்கையில் உள்ள அருமையோ பாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருமையும்:
இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.

————–

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

பெருந்தாட் களிற்றுக்கு
பெரிய தாள்களை உடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன்
வடிவில் கனமும் நோவில் பாடு அற்ற ஒண்ணாமைக்கு காரணம் ஆதலின் -பெரும் தாள் -என்கிறார் –

அருள் செய்த பெருமான் -தருந்தானருள் தான்-
பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே
தரும் அருள் -என்கிறார்
ஆஸ்ரிதற்கு -அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது
ஆதலின் -கொடுத்த என்னாது – தரும் -என்கிறார்-

—————–

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

அம்மானை
சர்வேஸ்வரனை –

அமரர் பிரானைப்
நித்ய ஸூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து அனுபவிப்பிக்கும் உபகாரகனை –

பெரியானைப் –
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள் தனக்கு அதீனமாய் உரிமைப் பட்டவையாய்
தன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –

பிரமனை முன் படைத்தானை –
பிரமனை முன்னே உண்டாக்கினவனை -ஜனகனாய் உள்ளவனை -–

——————–

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

ஆழியான் –
ஸர்வேஸ்வரத்வ ஸூசகமான -பரத்வ சின்னமான திரு ஆழியைக் கையிலே உடையவன் –

ஆழி யமரர்க்கும் அப்பாலான் –
அத் திரு வாழி ஆழ்வானைப் போன்று கம்பீர ஸ்வபாவரான -பெருமிதத்தை உடைய நித்ய ஸூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாய் இருக்குமவன் –

ஊழியான் –
நித்ய ஸூரிகளும் தானுமாய் பரம பதத்தில் பேர் ஒலக்கமாய் இருப்பவன் –
இங்கு உண்டான கார்ய வர்க்கம் – பொருள்களின் கூட்டம் அடங்கலும் அழிந்து
காலம் சேஷமான -மாத்ரம் இருக்கும் காலத்திலேயே தான் வந்து தோற்றுமவன் –

ஊழி படைத்தான் –
காலோபலஷிதமான காலத்தாலே அழிக்கப் பட்ட எல்லா பொருள்களையும்
பஹுஸ்யாம் -சங்கல்பத்தாலே உண்டாக்கினவன் –

————-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் –
தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே-சதா ஸேவ்யமாய் – எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்
நித்ய ஸூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை-நித்ய சம்சாரியான – பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –

எனது ஆவியை –
என்னுடையது என்னுமதுவே காரணமாக
அபிமத விஷயத்தில் -காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
என் உடம்பை விரும்பினாய் –

இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே-தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே -ப்ரக்ருதியோடே சம்பந்திக்கையாலே –
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்

——————

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் – எல்லாவற்றுக்கும்
மூன்று விதக் காரணங்களும் ஆனவனே
இதனால் -ரஷிக்க -காப்பாற்ற என்று புக்கால்-ரஷ்ய வர்க்கம் – காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-
ஸஹ கரிக்க – துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்
தனி -ஸஹ காரி -துணைக் காரணம்
வித்து -உபாதான -முதல் காரணம்

முதல் தனி உன்னை –
பிரதானனாய் -முதன்மை பெற்றவனாய்
ஒப்பற்றவனாய்
குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து பரிபூர்ணனாய் – இருக்கின்ற நீயான உன்னை

——–

ஸ்ரீ பொய்கையார்

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-

முதலாவார் மூவரே –
இவர் இவர் எம்பெருமான் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயராகை தவிர்ந்து முன்னம்
மூவரோடு சேரப் பெற்றோம் இறே-இனி இருவரைக் கழிக்க அமையும் இறே -என்று கருத்து –

அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –
இவர்கள் மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானன் ஆகிறானும் அன்று
அன்றிக்கேமூவரும் கூட பிரதானர் ஆகிராரும் அன்று
இனித் தான் மூவரும் கூட ஓன்று ஆகிராரும் அன்று –
அந்த மூவரிலும் வைத்து கொண்டு பிரதானனவன்
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருந்துள்ள வடிவை உடையவன்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு ஜீவவ்யதா நேன அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேணவும் நின்று ரஷிக்கிறான்-

முரி நீர் வண்ணன் –
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தண்டகம் -2-என்கிற அவற்றைக் கழித்து
மா கடல் உருவம் -என்கிற அத்தையே பிடிக்கிறார் –
முதலாய நல்லான் அருள் அல்லால் -நாம நீர் வையகத்துப் –
இதுக்கு அடங்க காரண பூதனுமாய்
இவற்றை உடையானும் ஆகையாலே
இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள
அவனுடைய அருள் அல்லது
பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள –

பல்லார் அருளும் பழுது –
பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்
இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு
வாசி யடைய வ்யர்த்தம்

அன்றிக்கே
நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –
பழுது தான் பலியாமையே அல்ல
பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்
அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்
திருவடி நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திரு -68-
மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ
தேவ தாந்தரங்களுக்கும்
உபாயாந்தரங்களுக்கும்
தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை
அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

———–

ஸ்ரீ பூதத்தாழ்வார்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்த வாறே -பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே
அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது –
இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது –
இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

வேதங்களும் வைதிக புருஷர்களும் எல்லாம் -தமீச்வராணம் பரமம் மகேஸ்வரம் -ஸ்வே -6-7-என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் பிரசித்தமாகச் சொல்லப் படுகிறவன்
முன்பு ஒரு கால விசேஷத்திலே கேசி வாயைக் கிழித்த பிள்ளை -என்னுதல்
மனிச்சு என்னுதல் –
நெஞ்சிலே புகுராமைக்கு வரும் விக்நம் போக்குவானும் தானே
தேவாதி தேவன் எனப்படுவானாய் –மா கடல் நீர் உள்ளானாய்-மா வாய் பிளந்த மகனாய் -நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளானாய் –
வேங்கடத்தானவன் -மனத்து உளனானவன் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன்–என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –

——–

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி
என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –
அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

திரு வத்தி யூரிலே நின்று அருளினவன் –
அத்தியூரான் என் நெஞ்சமேயான் –
திருப் பாற் கடலோடு ஒத்தது திரு வத்தி யூரும் –
ஆழியான் அத்தியூரான் என்னெஞ்சமேயான் –
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –

———–

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

அத்தி யூரான் புள்ளை யூர்வான்-
அவனே கருட வாஹனன் –
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –
அணியப்பட்ட மணிகளையும் துத்தி என்று பொறியையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுமவன் -அனந்த சாயி -இவை இரண்டாலும் சர்வேஸ்வரன் -என்றபடி –
முத்தீ மறையாவான் –
மூன்று அக்னியையும் சொல்லா நின்றுள்ள வேதத்தாலே சமாராத் யதயா பிரதிபாதிக்கப் பட்டவன் –
பகவத் சமாஸ்ரயண கர்மங்களை பிரதிபாதியா நின்றுள்ள வேதங்கள் -அன்றிக்கே –
முத்தி மறையாவான் -என்றதாகில் மோஷத்தைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே பிரதிபாத்யன் ஆனவன் –
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் –
அரியன செய்து அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரனும் ஆனவன் –
பெரிய கடலிலே பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை ஈஸ்வரனாக
அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன் –
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -என்றபடி –
எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

————-

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து
பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

எங்கள் பெருமான் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு நாயகன் –
இமையோர் தலைமகன் நீ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
செங்கண் நெடுமால் திரு மார்பா –
இவை எல்லாம் நித்ய ஸூ ரிகளுக்கு போக்யமானபடி –
செங்கண் நெடுமால் –
ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
திரு மார்பா –
ஸ்ரீ யபதியே -இமையோர் தலைமகனாய் வைத்து எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடி -பிராட்டி சம்பந்தம் –

—————

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரி களுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –

————-

ஸ்ரீ பேயாழ்வார்

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே
நமக்கு பரம பிராப்யம் என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான் –
கையிலே திவ்யாயுதங்களைப் பிடித்தால் ஓரிடத்தில் தோலக் கடவது அன்றிக்கே
வெல்லும் ஸ்வ பாவன் ஆனவன்
எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் புக்க போரில் எதிரிகளுக்குத் தோலாதே வெற்றியை யுடையவன் –
ஆண் பிள்ளை -என்றபடி –
சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –
அட்ட புயகரத்தான் –
திரு அட்டபுயகரத்திலே எழுந்து அருளி இருக்கின்றவன் –
எட்டுத் திருத் தோள்களிலும்–எட்டுத் திவ்யாயுதம் உண்டு –அம்மிடுக்கோடே சந்நிஹிதன் ஆனான் –

அந்நான்று-குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த –
அனுஷ்டானமும் உண்டு –

அந்நான்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத் தசையிலே

குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் –
மடுவிலே கிடந்தது முடிக்கக் கடவதான முதலை சிதிலமாம் படி –

குறித்தெறிந்த –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் திருவடிகளிலே படாமல் முதலை பிளப்புண்ணும் படி
எறிந்த –
அப்பதற்றத்தாலே கலங்காதே-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாமே எறிந்த –

சக்கரத்தான் –
திரு வாழியை யுடையவன் –

தாள் முதலே நங்கட்குச் சார்வு –
பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-

முதலே –
நம்முடைய சஹாயம் வேண்டா
உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –
ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி-ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு
சஹாவ ஸ்தானம் இல்லை இறே –ஈரரசு உண்டோ

நங்கட்கு –
ஸ்வ பலம் அற்றார்க்கு –

———————————————

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–-நான்முகன் திருவந்தாதி -4

தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே
ஜடையிலே கங்கையை தரித்து-சாதகனான ருத்ரன்-சர்வ சேஷி யானவனோடு ஒக்க
சேஷித்வத்திலே கூறு உடையன் என்று-இதுவும் சேதனருக்கு புத்தி பண்ணப் படுமோ
வேறொருவர் இல்லாமை நின்றானை-
அஹம் சர்வச்ய ஜகத பிரபவ
பிரளயச்த தா -மத்த பரதரம் நாந்யத் கிஞ்சித ஸ்த்தி தனஞ்சய–என்னும்படி நின்றவனை

திருவடிகளை விளக்கின கங்கா ஜலத்தைத் தலையிலே தரித்து சாதகனான ருத்ரன் ப்ரஹ்மா ச
ர்வேஸ்வரன் உடன் ஒக்க ஈஸ்வரர்கள் என்னும் இதுவும் கொள்ளப் படுவதோ -அன்றிக்கே
ஜகத் ஐஸ்வர் யத்தை கூறுடையர் என்னும் இவ்வர்த்தம் கொள்ள முடியுமோ என்றுமாம்
வேறு -இத்யாதி
ஆதித்ய சன்னிதியில் நஷத்ரங்கள் யுண்டாய்-வைத்தே இல்லாதார் கணக்கானாப் போலே
தன்னுடைய உயர்த்திக்கு ஈடாக சகல பதார்த்தங்களும் யுண்டாய்
வைத்தே இல்லாதார் கணக்காம் படி நிற்பதும் செய்து தனக்கு பிரகாரமான
சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
எப்பொருட்கும் சொல்லானை –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம் –

————-

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

இவையா வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-
அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே
அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நரசிம்ஹத்தின் யுடைய மிக்க வழகியவை –

————-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு கை வந்தது –
இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன்
சர்வத்துக்கும் காரணன் நீ
இதுக்கு முன்பு அறிந்தனவும்
இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு
நற்கிரிசை – நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
நன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

எம்பெருமான் உன்னை – இப்போது ருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –
கற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ
கற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ
இனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்
நற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்

சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும்
அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து
ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப் பிரபந்தத்தின் முழு நோக்கு –

———–

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே
அமரர்கள் அதிபதி
சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர்
அசங்குசித ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –

————-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் –
பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரை உடைத்தான கடல் சூழ்ந்த பூமிக்கு எல்லாம் உபகாரகன் –
பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-
விசும்புக்கும்பிரான் – இவர்களுக்கு ஜனகனான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாகனானவன்
மற்றும் நல்லோர் பிரான்-நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாகனானவன்
கோலம் கரிய பிரான்-இக் கண்ணுக்கு வளைத்து கொடுக்கும் உடம்பு –
நித்ய ஸூரிகளுக்கு முற்றூட்டாக அனுபவிக்க கொடுக்கும் உடம்பு
இவ் வடிவை காட்டி இறே அவர்களை பிச்சேற பண்ணுவது –
எம் பிரான்-அவர்களுக்கு நாயகன் ஆனாற் போலே எனக்கும் நாயகன் ஆனபடி

திரி தந்தாகிலும் –தேவ பிரானுடைய கரிய கோலத் திரு உருக் காண்பன் நான் –
என்றார் அன்றோ மதுரகவி ஆழ்வாரும்

———

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடயே-தேனாக சொல்லப்பட்ட -விண் முதல் நாயகன் -என்னுதல் –
நீண் முடி இத்யாதி -பிரிந்த நாளில் ச்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு -திரு அபிஷேகம் -அதில் வெண் முத்து வாசிகைஉண்டு-
வெளுத்த முத்து ஒழுங்கு -அத்தன்மையதாய்-அதின் படியை உடைத்தாய் –
திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று –

—————

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

வானோர் தலைமகனாம் சீராயின நல் நோய் -என்கிறது –
சீராயின -கனவிய நோய் –ஒருவரால் பரிகரிக்கிறோம் என்று தொடங்க அரிய நோய்
தெய்வ நோய் -அப்ராக்ருதமான நோய்
நல் நோய் -கைக் கூலி கொடுத்து கொள்ள வேணும் நோய் –
அன்றிக்கே
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையையும் -கல்யாண குணங்களையும் உடைய-
பர தேவதை அடியாக வந்த நோய் -என்னுதல்

————-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -பூமியிலே வந்து அவதரித்து –
தன் பக்கல் ஆசாலேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது-தரியாதானாய் –
அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு கண்டு அமுது செய்து –
தன்னை உகவாத சிசுபாலாதிகள் ஏசும்படியாய் இருக்கிறவர்-
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையாலும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள-த்ரவ்யத்தால் அல்லது தரியதானாய் இருக்கிற
சீலாதி அதிசயத்தாலும் ஆக என்னை-அனந்யார்ஹை ஆக்கினவர்

———–

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

பார் அளந்த பேர் அரசே -இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது –
மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –
அளந்த -பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –
இருளார் வினை கெட இறே செங்கோல் நடத்துகிறது –
பேரரசே -எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே -செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –
எம் விசும்பரசே -பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –
பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –
எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே -உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி-என்னை அகற்றி-
முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –
என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரித்து -இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-
என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று –என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் –
என்னோபாதி இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-

————

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 – –

ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி-
தான் வேறு சிலரை ஆஸ்ரயநீயராக உடையன் அன்றிக்கே இருக்குமவன்
சர்வேஸ்வரனாய்-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயநீயனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் –

———

———-

ஆனையின்‌ துயரம்‌ தீரப்‌ புள்ளூர்ந்த (கருடன்‌ மீதேறிய) வரதன்,‌ கஜேந்த்ர வரதனாக விளங்குகிறான்‌.
வடமொழியில்‌ ‘ஹஸ்தீ’ என்றால்‌ ‘யானை‘ என்று பொருள்‌.
யானையே மலையாக இருந்து எம்பெருமானைத்‌ தாங்குவதால்‌, வரதன்‌ ‘ஹஸ்தீசன்’ ‌– ‘யானைமலையரசன்‘‌.
மேலும்‌ அஷ்டதிக்கஜங்கள்‌ அவனை ஆராதித்ததனால்‌ ‘ஹஸ்தீசன்‘.
ஹஸ்த நக்ஷத்ரத்தில்‌ பிறந்ததினால்‌ ‘ஹஸ்தீசன்’.. அனைவர்க்கும்‌ வாரி வழங்குவதால்‌ ‘ஹஸ்தீசன்’..
பின்னர்‌ த்ரேதாயுகத்தில்‌ முதலையால்‌ கஷ்டமடைந்த யானையை மீட்டு பரதத்வ நிர்ணயம்‌ –
வரதனைத்‌ தவிர்த்து மற்றோர்‌ தெய்வம்‌ பரதைவமில்லை

இன்றும்,‌ தேவப்‌ பெருமாள்‌ ப்ரம்மோத்ஸவம்‌ ஆறாம்‌ திருநாள்‌ மாலை புறப்பாட்டில்,‌
யானை மீது ஆரோகணித்து எழுந்தருளும்‌ அழகு அவச்யம்‌ சேவிக்க வேண்டியது.
அதில்‌ யானை வாகனத்திற்குக்‌ கால்கள்‌ இல்லாமலிருப்பது ஓர்‌ சிறப்பம்சம்‌
(முதலையால்‌ இழுக்கப்பட்டுத்‌ தண்ணீரில்‌ கால்கள்‌ மூழ்கியுள்ளதைக்‌ காண்பிப்பதாக).
பர தத்வ நிர்ணயமாக ஏகாம்பரேச்வரர்‌ திருக்கோயில்‌ வாசலில்‌ ஏசலும்‌ நடைபெறுகிறது.

இதை யடி யொற்றியே ஏனைய விஷ்ணுவாலயங்களிலும்‌ இவ் வழக்கம்‌ இன்றளவும்‌ பின்பற்றப் பட்டு வருகின்றது.

————-

பத்தி முதலாமவற்றில்‌ பதி யெனக்குக்‌ கூடாமல்‌
எத்திசையு முழன்றோடி இளைத்து விழும்‌ காகம் போல்‌
முத்தி தரும்‌ நகரேழில்‌ முக்கியமாம்‌ கச்சி தன்னில்‌
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்‌ நான்‌ புகுந்தேனே–– அடைக்கலப்பத்து (1), ஸ்ரீஸ்வாமி தேசிகன்

பகவத்‌ ராமாநுஜர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ நம்பெருமாள்‌ ஸன்னிதியில்‌ சரணாகதி செய்தாலும்‌,
அங்கும்,‌ அர்த்தி கல்பக, ஆபத்ஸக, ப்ரணதார்த்தி ஹர என்றே அநுஸந்தித்தார்‌.

அவரின்‌ மறு அவதாரமான நம்‌ ஸ்வாமி, வரதன்‌ திருவடியில்‌ நேரிடையாக சரணாகதி செய்து,
இதுவே மோக்ஷமெனும்‌ பெரும் பயன்‌ பெறும் வழியென்று காட்டினார்

இன்றைக்கும்‌ இக்கலியில், தன்‌ பக்தர்களுக்கு அபீஷ்டங்களை வாரி வழங்குபவனாக, ஸ்ரீஸ்வாமி சாதித்தபடி,
வாரண வெற்பின்‌ மழை முகிலாகக், கேட்டதைக்‌ காட்டிலும்‌ அதிகமாகத்‌ தருகிறான்.

மாம்‌ மதீயம் ச நிகிலம்‌ சேதனா சேதனாத்மகம்‌ |
ஸ்வ கைங்கர்யோபகரணம்‌ வரத ஸ்வீகுரு ஸ்வயம்‌ ||–– ந்யாச தசகம் (7), ஸ்ரீ வேதாந்த தேசிகர்

———

ஸ்ரீமணவாளமாமுனிகள்,‌ தானருளிய ஸ்தோத்ரத்தில்‌ குறிப்பிடுகிறார் :

ஸ்ரீகாஞ்சீ பூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபி பாஷிணே |
அதீத அர்ச்சா வ்யவஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்‌ ||

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

நமது வேதங்கள் சமஸ்கிருதத்தில் எம்பி 3 வடிவில்—

August 10, 2021

All the five Vedas in original Sanskrit from IISH: Spread all over the world to everyone.

Each member should spread to a minimum 1000 people

இதில் நமது ஐந்து வேதங்களான
ருக் வேதம்
சுக்ல யஜுர் வேதம்
கிருஷ்ண யஜுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம் ஆகிய
அனைத்தையும் சமஸ்கிருதத்தில் எம்பி 3 வடிவில் உள்ளது.
இதை அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து நம் வேதத்தை காப்போம்மாக.
நமது வேதங்களை ரட்சிக்க வேண்டியது நமது ஒவ்வொருவருக்கும் கடமையும் ஆகும்.
அதன் மூலம் நமக்கு வேத மாதாவின் பரிபூர்ண ஆசியும் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

Rig Veda

Krishna Yajur Veda

Shukla Yajur Veda

Atarva Veda

Sama Veda

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவல்லிக்கேணி அனுபவம் —

August 8, 2021

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -16 –
அவதாரிகை –

திருப்பாற் கடலிலே நின்றும்
தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது
நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –

அனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே
இப்படி வந்து கிடைக்கைக்கு அடி
பிராட்டியோட்டை சம்பந்தம்–என்கிறார் –

—————————————————————————————–

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

—————————————————————————————–

வியாக்யானம் –

வந்துதித்த வெண் திரைகள் –
வந்து உதையா நின்றுள்ள
வெள்ளத் திரைகளாலே தள்ளப் படுகிற –

செம் பவள வெண் முத்தம் –
சிவந்த பவளங்களும்
நீர்மையை உடைத்தான முத்துக்களும் –

அந்தி விளக்காம் மணி விளக்காம் –
சந்த்யைக்கு பிரகாசஹமான
மங்கள தீபத்தை யுடை த்தான –

எந்தை –
எனக்கு ஸ்வாமி-

ஒரு வல்லித் தாமரையாள் –
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்
ஒரின்னிள வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே
கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன்
ஆனாப் போலே
இவள் நாரீணாம் உத்தமை –

தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
மலர்மகள் விரும்புகையாலே
சர்வாதிகத்வம் ஆகை-

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே சஷ்டி –
பிரஜைகள் பார்த்து இருக்க
பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே
தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்
தயா அவலோகிதா தேவா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
பின்னை சர்வேஸ்வரன் இவர்கள் உடைய அலமாப்பைப் பாராய் என்று
திரு உள்ளத்தாலே நினைத்த படி தோற்ற
பின்னை அவளாலே பார்க்கப் பட்டார்கள்
முன்பு கடாஷியா விட்டது என் என்னில் -தன் ஸ்வரூபத்தை பெற்று பிறரை ரஷிக்க வேணுமே –

பிரதேஹி ஸூ பகே ஹாரம் -யுத்த -131-80-என்று
அவன் நினைவும் சொலவும் அறிந்து இ றே
ஒருவரைக் கடாஷிப்பதும்
ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதும்
இவள் பிரிந்து இருக்கையாலே
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு
பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்
நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு -திருவாய்மொழி -9-2-1-

திருவல்லிக் கேணியான் எந்தை -சென்று
திரு வல்லிக் கேணியிலே எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –

எந்தை
பெறாப் பேறு பெற்றாப் போலே

ஒரு வல்லித் தாமரையாள் சென்று
ஒன்றிய சீர் மார்வனுமாய்
திருவல்லிக் கேணி யானுமானவன்
எந்தை –
அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்-

——-

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று
சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

———-

அழகிய அல்லியை யுடைத்தான தாமரையை இருப்பிடமாக யுடையளாய் –
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார்
அமிருத மதன சமயத்திலே நிற்கிற தேவர்களை மதியாமல் சென்று –
இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி வர்த்திக்கும் படியான அழகிய
திரு யுடைத்தான திரு வல்லிக் கேணியிலே தங்கினவன் எனக்கு ஸ்வாமி –

ஒரு வல்லித் தாமரையாள் -சென்று- ஒன்றிய சீர் மார்வனாய் –
வெண் திரைகள்–வந்துதித்த-செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்கான -திருவல்லிக் கேணியான் –எந்தை-என்று அந்வயம் –

———————————————————————————————

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு
இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை–நான்முகன் திருவந்தாதி –35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்
நீளோதம்-பெரிய ஓதம் –

பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளை கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
நீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-
மங்களாசாசனம் பண்ணாத -லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ –என்கிறார்-

அர்ச்சாவதாரத்தில் ஒருபடிப்பட -நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் -செய்து
ஒரு நாளும் சோதி வாய் திறந்து பேசாமல் இருப்பான் என்று அறிந்து வைத்தும் –
பிரேமத்தின் கனத்தால் -அர்ச்சாவதார சமாதியையும்
குலைத்து பரிமாறப் பாரிப்பார்களே ஆழ்வார்கள் –

கொடியார் மடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியால் அல்லல் தவிர்த்த அசைவோ -அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–திருவாய் -8-3-5-என்றும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசையத் தொடர்ந்து குற்றேவல் செய்து
தொல்லடிமை வழி வரும் தொண்டர்க்கு அருளித் தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே–9 -2-3-

இவரே -நடந்த கால்கள் நொந்தவோ –காவிரிக் கரைக் குடைந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே-என்கிறார்

அசைவு -அசவு -அயர்வு -பர்யாயம் –
கைரவிணி-புஷ்கரிணி பெயராலே திவ்ய தேசம் –
குடும்பத்தோடு சேவை சாதித்து அருளுகிறார்
மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்றே ஆழ்வார்கள் ஈடுபடுவார்கள்

————————

(நெறி எல்லாம் எடுத்து உரைத்த ஸ்ரீ கீதாச்சார்யன் இன்றும் நாம் சேவிக்கும்படி-
ஸ்ரீ பார்த்த சாரதி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
நின்றும் நடந்தும் கிடந்தும் இருந்தும் பரந்தும் ஐவர் சேவை –
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் பலராமன் சாத்விகி அநிருத்தன் பிரத்யும்னன் இப்படியும் ஐவர்
நம்மாழ்வார் -தேர் கடவிய பெருமான் கனை கழல் சேவிக்கப் பெறுவேன் -நம்மாழ்வார் மங்களாசாசனம்
பெற்றே புறப்பாடு இன்றும் -திருத்தேர் புறப்பாடும் நம்மாழ்வார் சந்நிதிக்கு அருகிலே –

கீழே இவரை வசீகரித்த ராம கிருஷ்ண அவதாரமும்
கிடை அழகையும்
சிங்க வேழ் குன்றம் ஸ்ரீ நரசிம்மம்
திரு வேங்கடத்தில் கஜேந்திர வ்ருத்தாந்தம் கஜேந்திர வரணும் இங்கே சேவை
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் -ஐவரும்
மன்னாதன் -சயனம் -திரு எவ்வுள் போலே
இப்படி இரண்டு வித சங்கதி )

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –
ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி
எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –

இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார்
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி-( இண்டை கொண்டு பாசுரம் கீழே பார்த்தோம் )
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே-

ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும்
என்று இடர் பட -(மீனமர் பொய்கை பாசுரம்)
அவ்விடர் தீர்க்கைக்காக-
அது இடர் பட்ட மடுவின் கரையிலே-
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து-
அத்தை ஆற்றி-

இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று
சாய்ந்து அருளினான் கண்டேனே -என்கிறார் –
(மன்னாதன் தானே இங்கே முன்னம் )

——————————————

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–-ஸ்ரீ பெரிய திருமொழி-2-3-1-

சிற்றவை-நடுவில் ஆய்ச்சி -மாற்றுத் தாய்-
தேவை–ஸ்வாமியை –

——————

வியாக்யானம் –

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் –
விற் பெரு விழா வாயிற்று
சத்ரு நிரசனம் பண்ண நினைக்கிறான் ஆகையாலே -பெருக்கக் கோலினான் -ஆயிற்று –
அத்தைக் கோலின கம்சனும்

அவனுக்கு பலமாய் மலை துள்ளினாற் போலே
பெரிய கிளர்த்தியோடே கூடின மல்ல வர்க்கமும் –

அவர்கள் பார்க்கிலும் கண் பாராதே இடையற வீசும்படி
மதிப்பித்து ( மதமூட்டி ) வழியிலே நிறுத்தின ஆனையும்

அத்தை தள்ளினாலும் அது தன்னை உயிர்ப்புள்ளது போலே
நடத்த வல்ல -பாகனும் –

வீழ செற்றவன் தன்னை-
ஏக உத்யோகத்திலே நிரசித்தாற் போலே
வினை செய்த சடக்கு-
(வார் கெடா -கஞ்சனை குஞ்சி பிடித்து -வரிசையாக நம்மாழ்வார் -இங்கு அக்ரமம் )

புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை –
திரிபுர தஹந அபதாநத்தாலே சஞ்சாத அபிமாநனான -ருத்ரன்
பிதாவுமாய் -லோக குருவுமாய் -இருக்கிறவன் தலையை அறுத்து -பாதகியாய் இருக்கும் –
மதிப்பனாய் இருக்கிறவன் எளி வரவு பட ஒண்ணாதே -என்று அத்தைப் போக்கி
அத்தாலே லோகத்துக்கு எல்லாம் தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை- வெளி -இட்டவன் –

தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷதாம் ப்ரயா சித விஷ்ணு பிரஸாதாத் –
சர்வேஸ்வரன் பிரஸாதத்தாலே
ஸூஸ்ரோணி
அவனைக் கிட்டுகையாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது இறே-என்கிறான்-

(மாத்ஸ்ய புராணம் -வாம அங்குஷ்ட நகத்தால் கிள்ளப்பட்டது -கபாலித்தவம் பவிஷ்யதி சாபம் –
பூ தல புண்ய க்ஷேத்ரம் போனேன் ஹிமாசலம் சென்றேன் -பதரி விசால் பெருமானைப் பிரார்த்தித்தேன்
ரத்தம் வியர்வை கபாலம் பட்டு வெடிக்க ஸ்வப்ன தனம் போல் கபாலம் தொலைந்தது
இதனாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது என்று பார்வதி இடம் சொன்னானே )

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு –
பற்றலர் -உண்டு -சத்ருக்கள்
அவர்கள் முடிந்து போம் படி
ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்றவாறே
குதிரைகளை நடத்தும் கோலைக் கையிலே கொண்டு –

பார்த்தன் தன் தேர் முன்னின்றானை –
ரதியைச் சீறினால்
சாரதியை இறே அழியச் செய்வது
அவனை பின்னே இட்டு -தன்னை அம்புக்கு இலக்காக்கி –
நின்றவனை

சிற்றவை பணியால் முடி துறந்தானை-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

(ஒவ் ஒரு பாசுரத்துக்கும் ஸ்வா பதேசமும் அருளிச் செய்கிறார் )
விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –
ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் செய்யுமவனானவனை –

திருவல்லிக்கேணிக் கண்டேனே
திருவல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார்

—————————————————————-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-2-

மயிலாப்பூர் படைவீடு
திரு வல்லிக்கேணி ஆரண்யம்

கனி-நிரதிசய போக்யம்
நந்தனார் களிற்றை-வேழ போதகம் -யானைக் குட்டி
யாளுடை யப்பனை-அடிமை கொண்ட உபகாரகன்
மா-செல்வம் நிறைந்த மாதவன் கேசவன் பார்த்தசாரதி உள்ளடக்கிய செல்வம்

———————————————————–

வியாக்யானம் –

வேதத்தை –
த்ரை குண்ய விஷயா வேதா –
என்கிறபடியே எல்லார்க்கும் ஹிதம் சொல்லப் போந்த
வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்

வேதத்தின் சுவைப் பயனை –
வேதோக்தமான கர்மங்களை அநுஷ்டித்து
ராஜசராயும் தாமசராயும் சாத்விகராயும் உள்ளாருக்கு
அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –
(அ சாஸ்திரம் படி செய்பவர் அசுரர்
சாஸ்திரம் முக் குணம் உள்ளோருக்கும் )

விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை-
கர்ம பாவனை யாதல் உபய பாவனை யாதல் அன்றிக்கே
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –

நந்தனார் களிற்றை-
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை-
பூமியில் உள்ளார் -காரணந்து த்யேய -என்கிறபடியே
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –

யமுதை-
அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –

யென்னை யாளுடை யப்பனை-
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை
அடிமை கொண்ட உபகாரகனை –

ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை-
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
என்று பிராட்டி ப்ராதான்யமேயான ஊராகையாலே
பிராட்டி பரிகரமே யாயிற்று –

நா நயோர் வித்யதே பரம் -என்று
அவள் விபூதியும் ஈஸ்வர விபூதியுமாய்
இரண்டு கூறாய் இறே இருப்பது –
(தேவர் திர்யக் மனுஷ -புருஷன் ஹரி -ஸ்த்ரீ தன்மை ஸ்ரீ லஷ்மீ -மைத்ரேயருக்கு )

மயிலாப்பூர் என்று படை வீட்டுக்கு பேர் –
திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

———————————————————————-

நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

விஞ்சை வானவர் -வித்யாதரர்
வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை

————————————————————–

வியாக்யானம் –

வஞ்சனை இத்யாதி –
தாய் வடிவு கொண்டு வஞ்சிக்க வந்த
பூதனை கதறிக் கொண்டு போய்
பூமியிலே விழும்படியாக
விஷம் நிரம்பின முலை வழியே
அவளுடைய பிராணன்கள் போம் படி அமுது செய்த –

நாதனை –
தனக்கு சேராத வடிவு கொண்டு
உலகத்துக்கு பிராணனான தன்னை நலிய வந்தவளை
முடித்து தன்னைத் தந்தவன்
ஸ்தந் யம்தத் -(விடமும் அமுதமும் சமம் -பிராணன் உடன் சேர்ந்து குடித்தார் -ரசமாக இருந்ததாம்
ஜகத் குருவுக்கு -விஷ்ணு புராணம்
பன்னிரண்டு மைல் நீளமாக உடல் விழுந்ததாம் வில் கடை தூரம் அன்று –
கொழு மோர் கொடுத்தாள் தாய் பரிந்து இவன் அச்சம் தீர்க்க )

தானவர் கூற்றை –
ஆசூர வர்க்கத்துக்கு ம்ருத்யு வானவனை

வித்யாதரர் சாரணர் ஸித்தர் உள்ளிட்ட
தேவ வர்க்கம் அடைய விஸ்மிதராய்
ஸ்தோத்ரம் பண்ணும்படி –

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –

————–

(பூதனை நிரசனத்து அளவு இன்றிக்கே த்ரை லோக இந்திரன் கல் மழை பொழிய –
கடுங்கால் மாரி கல்லே பொழிய -கோவர்த்தன விருத்தாந்தம் அனுபவம் இதில் )

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

———————————————————————

வியாக்யானம் –

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் –
திரு ஆய்ப்பாடியில் உள்ளார் த்ரை லோக்ய ஈஸ்வரனான
இந்த்ரனுக்காக வருஷார்த்தமாக ஆண்டுக்கு ஒரு
விருந்திடக் கடவர்களாய் –

நாம் பிறந்து வளருகிற ஊரிலே
புரோடாசத்தை நாய் தின்றாற் போலே
ஒரு தேவதை வந்து புஜிக்க யாவது என் -என்று
நீங்கள் செய்யப் புகுகிறது தான் என்ன -என்று கேட்டான் –

நாங்கள் இந்தரனுக்கு வருஷார்த்தமாக விருந்திடப் புகுகிறோம் என்றார்கள்

இந்த மலை யன்றோ நமக்கும் பசுக்களுக்கும்
ஒதுங்க இடமும் தந்து -புல்லும் தருகிறது
ஆரேனுக்குமோ பிரத்யுபகாரம் பண்ணுவது இம் மலைக்கு இடுங்கோள் -என்றான் –

முகத்தைப் பார்த்து ஓன்று சொன்னால் மறுக்கலாம் படி அன்றே இருப்பது –
ஒன்றாகக் கொடு வந்து குவித்தார்கள் –
(வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று -அழகைக் கண்டவள் ஏது என்று அறிய மாட்டாளே )

இந்த்ரன் இத்யாதி –
இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த
எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே
மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

அவன்
பசி க்ராஹத்தாலே கோபித்து மஹா வர்ஷமாக வர்ஷிப்பிக்க –
அத்தாலே இடையரானவர்கள் தளர்ந்து

ரஷகரான எங்களோடே
எங்கள் உடைய ரஷ்யமான பசுக்களும் தளராதபடி
நோக்கி அருள வேணும் -என்ன –

இத்தால்
புறம்புண்டான ரஷ்ய ரஷக பாவமும்
அப்ரயோஜகம் என்றபடி –

அந்தமில் –
அந்த மழையின் அளவு அல்லாத
பெரிய மலையாலே
மழையைத் தடுத்து –

(தேவதாந்த்ர பிரசாதம் தனது அநந்யார்ஹ பக்தர்களுக்கு கூடாதே -தானே உண்டான் -அவனுக்கு எல்லாம் ஆகுமே )

அப்படியே
பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -என்கிற
என்னுடைய சம்சாரம் ஆகிற வருஷத்தை
பரிகரிக்க வந்தவன்..

——————————————————————–—————————————————————

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுபவித்து -ஸ்ரீ பூமா நீளா தேவி நாயகனாய் இருந்து
வைத்தும் தூது சென்றான் என்று ஈடுபடுகிறார்

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

நற் புவி-ஷமை பிருத்வி சமாயா –
தன் துணை யாயர் பாவை-தன்னையே துணை இவளுக்கு மட்டும் தந்தை சுல்கம் வைத்து பற்றினான்

———————————————————-

வியாக்யானம் –

இன் துணைப் பதுமத் தலர்மகள் –
நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற
பதுமத்தலர் மகள் உண்டு –
தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார்
அவளுக்கு இன்பனானவன் –

தனக்குமின்பன் —
எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற
பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –

நற் புவி தனக்கிறைவன் –
சர்வேஸ்வரனான தனக்கும் கூட
பொறைக்கு உவத்தாய் இருக்கிற
பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )

தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை-
தன்னையே துணையாக உடையாளான
ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் –
(சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )

மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை –
இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை-
ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக
அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது –
இங்கே வந்து அறிவிப்பதாய் –
இப்படி ஆஸ்ரித விஷயத்தில்
தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை
(தூது இயங்கும் என் துணை -என்பதால் )
எனக்கு அறிவித்தவன் –

எந்தை –
எனக்கு ஸ்வாமியாய் –

தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.

—————————————————————

தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

அரசர் தம் அரசன் ராஜ ராஜன் -துரியோதனன் அவன் நினைவால்
அணி யிழை-அப்படிப்பட்டவள் இப்படி மூன்று நாள்கள் இருக்கும் பொழுதும்
அலக்கண் -துக்கத்தை
இந்திர புத்ரன் -அர்ஜுனன் -வாலி -அங்கு
சூர்ய புத்ரன் -கர்ணன் -சுக்ரீவன் -அங்கு

——————————————————-

வியாக்யானம் –

அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –

எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதி யம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

——————————————————————–

(ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தில் ஆசை கொண்டு தேர் தட்டிலும் குரு பரம்பரையில் இடம் பிடித்தான்
சிற்றவை பணியால் முடி துரந்தானே -கீழே பெருமாள் மங்களாசானம் இதில் விரித்து ச குடும்பமாக

ப்ருந்தாரண்ய துளசிக் காடு -நிவாஸாய –
கைரவணி புஷ்கரணி –மீன்கள் இல்லாதது
துர்வாசர் சாபத்தால் விஸ்வகர்மா-உடல் அற்று கீழே விழ சபித்து -அ ரஜ நதிக்கரையில் –
சாபம் போக இங்கு தபஸ் அங்கங்கள் பெற்றார்
ஆர்த்ரேயர் வியாசர் இருவரும் -வியாசர் எழுந்து அருளப்பண்ணிய வேங்கட கிருஷ்ணம்
வலது திருக்கையில் பாஞ்ச ஜன்யம்
இடது திருக்கையில் தான ஹஸ்தம் வைகுண்டம் ஹஸ்தம் ஞான முத்திரை
ஒரு திருவடி முன் வைத்து பார்த்தனை கடாக்ஷித்து -சாட்டை வைத்து பார்த்தசாரதி சேவை
சேஷ பீடத்தில் ஒட்டியாணம் நாகாபரணம் தரித்து ஹிரண்ய மீசை
சுமதி அரசன் -இரண்டு தோள் அமுது
அத்ரி முனிவர் தபஸ் -அத்ரி குமாரர் ஆர்த்ரேயர் நரசிம்மர் )

ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் நடுவில் வழி பரிப்பாரைப் போல் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -சிற்றவை –
நெஞ்சுக்குள் புகுந்து பாடல் பெறுகிறார் இங்கு –

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-

————————-

வியாக்யானம் –

பரதனும் தம்பி சத்ருக்கனனும்-
ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )

இலக்குமனோடு மைதிலியும் –
இதுவும் இங்கனே ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் )
ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை-
தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –
கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்
ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )

இராவணாந்தகனை –
இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின
அபதானம் ஒன்றுமே ஆயிற்று –

யெம்மானை –
அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
குரவம் கமழா நிற்பதாய்
ஸ்ரமஹரமான
பொழிலின் ஊடே
குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

——————————————————–

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

ஒள்ளியவாகி-அழகாக
ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்

—————————————————————

வியாக்யானம் –

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –
பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்
சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –
இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை
சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –

வாயில் ஓர் ஆயிர நாமம் –
அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி
இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –

நால் இரண்டு -திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
நாராயண -ஹரி என்றுமாம்
விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –

ஒள்ளியவாகிப் போத –
வயிற்றில் பிறந்தவன் சொல்லுகையாலே
இனிதாய் இருக்குமே –

வாங்கு –
அவ்விடத்தில் –

அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி –
பள்ளியில் ஓதும் பருவத்தில் சொல்லுவது எல்லாம் பிரியமாய் இருக்கும் –
தன் வயிற்றில் பிறந்தவன் சொல்லிற்று எல்லாம் இனிதாய் இருக்கும் –
சத்ருவே சொன்னாலும் சிரசா வஹிக்க வேண்டுமத்தை சொல்லிற்று –
அசஹ்ய அபசார ப்ராசுர்யத்தாலே
திரு நாமம் கேட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
முனிந்தான் ஆயிற்று –

பிள்ளையை-
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை
கை விட்டான் அவன் –
திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து
இருக்கிறபடியாலே -பிள்ளையை –என்கிறார்

சீறி வெகுண்டு தூண் புடைப்ப-
கோபத்தாலே செய்வது அறியாதே
தூணைத் தட்ட –

பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் –
பிறை போலே இருந்த எயிற்றையும்
அக்நி போலே இருந்த கண்களையும்
புறப்பட விடா நின்றுள்ள பெரிய வாயையும்- உடைய -( இவையாய் பிலவாய் )

தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே
நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன்
என்னும் இடத்தை வெளி இட்டான் –

————————————————————

ஆண் பிள்ளை ஐவருக்கும் பெண் பிள்ளைக்கும் சிறுக்கனுக்கும் உதவியது அன்றிக்கே
திர்யக்குக்கும் ஒரு திரியக்கால் வந்த நோவுக்கு அரை குலையத் தலை குலைய வந்த
மஹா குணத்தில் கட்டுண்டு அனுபவிக்கிறார்

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

———————————————

வியாக்யானம் –

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த –
நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே
இடர் பட்டுத் திரிந்த விது –
பூத்த தடாகத்தைக் கண்டு –
ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே
வந்து இழிந்த –

கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ –
காட்டிலே ஸ்வ சஞ்சாரம் பண்ணக் கடவ யானையானது
கை எடுத்துக் கூப்பிடும்படியாக
முதலை யானது இதின் காலைக் கதுவ –
முதலைக்கு தன்னிலமாய்
இதுக்கு வேற்று நிலமாயிற்று –

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –
ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம்
போம்படியாக
பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படியாக
திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
வண்டுகள் அமர்ந்த சோலையையும்
மாடங்களையும் உடைத்தான
மயிலாப்பூரில் திருவல்லிக்கேணிக் கண்டேனே –

—————————————————————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

பாண்டிய தேச அரசர் வம்சம் -தென்னன்
நின்றானை-ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை –
இவர் பாடலே இவனுக்கு அரண் -ஆகவே மதிள் மங்கை நாட்டில் இருக்க வேண்டுமே
சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
சொல் மாலை -ஸப்த சந்தர்பமான

——————————-

வியாக்யானம் –

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
நித்யமாய்
குளிர்ந்து இருந்துள்ள பொழிலும்
நீர் நிலங்களும்
அரணாகப் போரும்படியான மதிள்களும்
மாடங்களும்
மாளிகைகளும்
மண்டபங்களும்-

தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை –
இன்னமும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் எல்லாம்-( நன் மயிலை-சொல்லாத நல்லவைகளும் )
உண்டாம்படி யாயிற்று
தொண்டமான் சக்கரவர்த்தி ஏற்றிற்று –

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் –
அரணாகப் போரும்படியாய்
நன்றாய் இருக்கிற மாடங்களை உடைய
திருமங்கைக்கு ப்ரதானர் –

காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்-
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –

சுகமினி தாள்வர் வானுலகே –
நித்ய அனுபவம் பண்ணலாம் படியான
நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

———————————————————–

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் -திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி ––94-

திரிந்து உழலும்-ஐம் புலன் ஆசைகளில் சென்று அலைகின்ற
சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
திருவல்லிக்கேணி யான்-கண்ணன் – சீர் -பார்த்த சாரதி-வேங்கட கிருஷ்ணன் உடைய கல்யாண குணங்களை
புரிந்து புகன்மின் -விரும்பிக் கூறுமின்
புகன்றால்
கருவல்லிக்கு -கர்ப்பம் ஆகிய கொடிக்கு மருந்து ஆம்
மாக்கதிக்கு ஏணி ஆம்-

—————————————————————————-

ஸ்ரீ திருவல்லிக்கேணி கண்டேனே -பாடல் தோறும் கண்டு ஹர்ஷித்து அருளிச் செய்கிறார் ஸ்ரீ திருமங்கை மன்னன்

பாடல் ஸ்தலம் வைப்பு ஸ்தலம் -சைவர்கள் பதிகம் பெற்ற ஸ்தலத்துக்கும் துணுக்கு பாசுரத்துக்கும் வாசி சொல்வர் –
நாமோ அனைத்தும் ஸ்ரீ திவ்ய தேசங்கள் -பாசுரம் பெற ஸ்ரீ பெருமாள் முயன்று பெற்றார்கள் அன்றோ –
ஸ்ரீ ஆழ்வார்களின் ஏற்றம் அவனால் ஏற்படுத்தப் பட்டது அன்றோ –

ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை ஸ்ரீ பெருமாள் கோயில் மூவரையும் ஸ்ரீ திருவல்லிக்கேணியில் சேவை
ஸ்ரீ பஞ்சாம்ருதம் போலே ஐவர் சேவை –

ஸ்ரீ கஜேந்திர வரதன் பரத்வமாக
சதுர்புஜ ஸ்ரீ என்னை ஆளுடை அப்பன் வ்யூஹம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண விபவம்-இருவருமே குடும்ப ஸஹிதமாக
தெள்ளிய சிம்மம் -தூணுக்கும் அந்தர்யாமி -குடும்பம் -தாயார் உடன்
அர்ச்சா -வேங்கட கிருஷ்ணன் -சுமதி ஆசைப்பட்ட படி -fusion music போலே

மனத்துள்ளான் மா கடல் நீறுதான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் -சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த ஓங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து — ஐவரையும் ஸ்ரீ பூதத்தாழ்வார்

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புற வண்டத்தாய் எனதாவி உள் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ —-திருவாய் -6-9-5- போலே

ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தவமே இந்த திவ்ய தேசத்தில் ஸ்ரீ ஆழ்வார்களுக்குக் காட்டி அருளிய குணம்

வந்து உதைத்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக்கேணி யான் சென்று -16-ஸ்ரீ பேய் ஆழ்வார் –
வேங்கடத்தான் மேல் ஆழ்ந்து ஸ்ரீ திருவல்லிக்கேணி மங்களா சாசனமும் –
சென்று –
தானே சென்று மார்பிலே ஒன்றிக் கொண்டாள் அன்றோ –
இவள் சந்நிதியாலே தானே ஆஸ்ரித ரக்ஷணம் –

ஸ்ரீ பேயாழ்வார் ஸ்ரீ திருவேங்கடத்திலும் ஸ்ரீ கண்ணன் மேலும் ஒன்றி இவரையே மங்களா ஸாஸனம் –
இவர் அருளிச் செய்த திருவேங்கட மங்களா சாசன பாசுரங்களும் ஸ்ரீ கிருஷ்ணாவதார பாசுரங்களும்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை திரு உள்ளத்தில் கொண்டே மங்களா ஸாஸனம்
ஸ்ரீ சரம ஸ்லோகம் அருளியவனும் முத்ரா மூலம் காட்டியவனும் இருவரும் ஒன்றே தானே

ஸ்ரீ திவ்ய தேசம் -ஆழ்வார் அவதாரம் -ஆச்சார்யர் -மூவர் -அவதாரம் ஸ்ரீ பார்த்த சாரதியே ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி போலே முப்புரியூட்டிய திவ்ய தேசம்-அங்கு போல் இங்கும் மூலவருக்கும் உத்சவருக்கும் மங்களாசானம்
ஸ்ரீ ராமர் உடன் எழுந்து அருளும் பொழுது அருகிலே எழுந்து அருளுவார் ஸ்ரீ எம்பெருமானார் இங்கு ஆதி சேஷன் அவதாரம்
ஸ்ரீ பார்த்த சாரதி எழுந்து அருள மாட்டார் ஸ்ரீ எம்பெருமானார் உத்சவத்துக்கு

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்து அருளும் வாய் திரிவான் -நீளோதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35- ஸ்ரீ திருமழிசைப் பிரான் –
தர்மி ஐக்கியம் சயன கோலம் -ஸ்ரீ மன்னாதான் என்றுமாம் –
இங்கே சேவை பெற்று கிடந்த கோலத்தில் ஆழ்ந்து – அடுத்து ஒரே பாசுரத்தியல் பல சயன திருக்கோலம்
நாகத்தணைக் குடந்தை வெக்கா திருஎவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேர் அன்பில் -நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான் -36-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே —
ஆஸ்ரித விரோதி நிரசனத்தவம் -வாத்சல்யம் – சீலத்தவம் –ஸ்ரீ திருவல்லிக்கேணி பதிகத்தில் பிரதான கல்யாண குணம்
முன் நின்றானை -சாரதி உடகாராமல் நின்று -ரஷித்து-முன் -முன்னால் -வடுக்களை திரு முக மண்டலத்தில் -திரு மேனியில் சேவை
முன் சென்று கப்பம் தவிர்த்தது / மாதலி தேர் முன்-/போலே
ஸ்ரீ வீர ராகவன் -வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் அனுபவம்-இங்கு சிற்றவை பணியால் முடி துறந்தான்-ஸ்ரீ ராமர் அனுபவம் தர்மி ஐக்கியம்

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைத்திரியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
ராவணாந்தகன் -இங்கும் விரோதி நிரசன சீலத்தவம்

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பைப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே —
ஆங்கு அதனுக்கு-சொன்னது நல்ல விஷயம் -தன் பிள்ளை வேறே -தன் சிறுவன் -வாயில் ஓர் ஆயிரம் நாமம் –
ஸ்ரீ அழகிய சிங்கர் -அழகியான் தானே அரி உருவான தானே -இங்கும் விரோதி நிரசன சீலத்தவம் –

மீனவர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேடிக்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
கஜேந்திர வரதன் -யானையின் துயரம் தீர புள்ளூர்ந்து -அனைத்தும் விரோதி நிரசனம் -ஆஸ்ரித சம்ரக்ஷணம்

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
பிருகு முனிவர் புதல்வி -பெரிய பிராட்டியார் ஆசைப்பட அவளுக்காக -ஸ்ரீ மன்னாதன் –
ஆஸ்ரித வாத்சல்ய கார்யம் தானே இதுவும்

ஸ்ரீ பிராட்டி -தேவர் -பார்த்தன் -அசுரர் சிறுவன் -திர்யக் -அதிகாரி நியமம் இல்லாமல்
ரஷிக்கும் குணமே ஆஸ்ரித வாத்சல்யம் –

————————–——————-

திருக்கருவறையில்
திருத் தேவிமார் ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியார் -பெருமாளுக்கு வலப்பக்கம்
திரு அண்ணன் -ஸ்ரீ பலராமன் -தாயார் பக்கம் வடக்கு நோக்கி கலப்பை ஒரு திருக் கையிலும் வரத ஹஸ்தமாகவும்
திருத் தம்பி ஸ்ரீ சாத்யகி -பெருமாளுக்கு இடப்பக்கம்
திருப் பிள்ளை -ஸ்ரீ ப்ரத்யும்னர்-தெற்கு நோக்கி
திருப் பேரன் -ஸ்ரீ அநிருத்தன் -தெற்கு நோக்கி
உடன் சேவை

வியாச முனிவரால் பிரதிஷடை
ஆத்ரேய முனிவருக்கு அருளப்பெற்றார்

மூலவரின் திருவடி வாரத்தில்
பஞ்ச பேரங்கள் -நித்ய உத்சவர் -பலி பேரர் -சயன பேரர் -நவநீத கண்ணன் -ஸூதர்சனர்
ஸ்ரீ ரெங்கம்
ஸ்ரீ திருப்பதி
ஸ்ரீ காஞ்சிபுரம்
ஸ்ரீ அஹோபிலம்
ஸ்ரீ அயோத்தியை
ஐந்து திவ்ய தேசங்களும் இங்கே சேவிக்கலாம்

சுமதி சோழ ராஜனுக்கு ஸ்ரீ பார்த்த சாரதி ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ப்ரத்யக்ஷம்
அத்ரி முனிவருக்கு -ஸ்ரீ தெள்ளிய சிங்கர்
மதுமானுக்கு -ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் குடும்பத்துடன்
ஸப்த ராமருக்கு -ஸ்ரீ கஜேந்திர வரதர்

கலவ் வேங்கட நாயகம் -கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்-இரண்டு திவ்ய உருவங்களும் ஓன்று திரண்டு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் மூவருடன் அயோத்யா அஹோபிலம் ஐவருக்கும்
மங்களா ஸாஸன பாசுரங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளனவே –

ஸ்ரீ மந் மஹாத பூத புரியிலே ஆஸூரி கேசவப் பெருமாள் -மாக -வைகாசி -மாதத்தில்
மயிலாபுரியிலே கைரவணீ தீரத்தில்
மஹ்தாஹ்வய ருடைய அபிமான ஸ்தலத்திலே
அஹம் ஹி ஸர்வ யஜ்ஞா நாம் போக்தா சம்ரபூரேவச -என்றும் சொல்லுகிறபடியே
அவன் அபீஷ்டத்தைக் கொடுக்குமவன் ஆகையால் அப்படியே
பார்த்தன் தன தன தேர் முன் நின்றானாய்
அன்று ஐவர் தைவத் தேரினில் செப்பிய கீதை -என்னும்படி உபதேசித்து
அருளின ஸ்ரீ ஹீதா உபநிஷத் ஆச்சார்யன் தானே கேசவ சோமயாஜியாரின் பத்தினியான
காந்திமதி அம்தன்மையாரின் கர்ப்பத்தில் சோமயாஜீ ஸ்வாமி செய்த
புத்ர காமேஷ்டி யஜ்ஜத்தின் பலனாகவே ஸ்வாமி திரு அவதாரம்
ஸ்ரீ பார்த்த சாரதியை கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசனாக எழுந்து அருளினார் –
ஸ்ரீ ராமானுஜ திவ்ய சரிதை -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் –

ப்ரஹ்ம உத்சவத்தில்
முதல் நாள் காலை -தர்மாதி பீடம் -மாலை -பின்னை மர வாஹனம் -வேணு கோபாலன் திருக்கோலம்
இரண்டாம் நாள் -காலை -சேஷ வாஹனம் -பரமபத திருக்கோலம் –மாலை ஸிம்ஹ வாஹநம்
மூன்றாம் நாள் -காலை கருட வாஹநம் -மாலை ஹம்ஸ வாஹநம்
நான்காம் நாள் -காலை ஸூர்ய பிரபை -மாலை சந்த்ர பிரபை
ஐந்தாம் நாள் நாச்சியார் திருக்கோலம் -மாலை -ஹனுமந்த வாஹநம்
ஆறாம் நாள் -ஆனந்த வாஹநம் -சூர்ணபாபிஷேகம் -மாலை யானை வாஹனம்
ஏழாம் நாள் -திருத்தேர் -மாலை தோட்ட திருமஞ்சனம்
எட்டாம் நாள் -வெண்ணெய் தாழி சேவை பல்லக்கில் -மாலை குதிரை வாஹநம்
ஒன்பதாம் நாள் -ஆளும் பல்லக்கு -மாலை கண்ணாடி பல்லக்கு
பத்தாம் நாள் சப்தாவரணம் -வெட்டி வேர் சப்பரம்

பகல் பத்து திருக்கோலங்கள்
1-வேங்கட கிருஷ்ணன் –மூலவர் திருக்கோலம்
2-வேணு கோபாலன்
3-காளிங்க நர்த்தனம்
4-கோதண்ட ராமன்
5-ஏணிக் கண்ணன்
6-பரமபத நாதன்
7-பகாசுர வதம்
8-பட்டாபிராமன் ‘
9-முரளிக் கண்ணன்
10-நாச்சியார் திருக்கோலம் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வெங்கதிரோன் குலம் –/ ஸ்ரீ சந்திர குலம்–

August 8, 2021

ஓம் தாசரதாய வித்மஹே
சீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷண ஹரே கிருஷண கிருஷண கிருஷண ஹரே ஹரே

சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:
தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில்,
ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

——-

ஸ்ரீ வெங்கதிரோன் குலம் —
சூரிய குலம் என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த
விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் வம்சாவளிகளை குறிப்பிடுகின்றனர் .
சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார் -இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர்.
விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப் பெறுகிறார்.
இவருடைய பெயரனான இச்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.

இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள்.
மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர்.
சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தளைத்ததாகவும் நம்புவதுண்டு.

ஸ்ரீ ரகு வம்சம்
சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும்,
தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று
அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

வம்ச பட்டியல்
1-சூரியன்
2-வைவஸ்தமனு
3-இச்வாகு

பிரம்மா-மரீசி-காஷ்யப்பர்-விவஸ்வான்(சூரியன்–ரகு)-வைவஸ்வதமனு-இக்ஷ்வாகு(அயோத்தியை நிருவியவர்)
இஷ்வாகு –கரும்பு போன்ற வில்லை ஏந்தி -சஸ்திரம் ஏந்தி பிரஜைகளை ரக்ஷணம் செய்ய வல்லவர் –

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்|
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநு இக்ஷ்வாகவே ப்ரவீத் || கீதை 4-1||

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச்(சூரியன்) சொன்னேன்.
விவஸ்வான் (வைவஸ்வத) மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகுக்குக் கூறினான்

4-விகுட்சன்
5-புரஞ்சயன்
6-அனநேசு
7-பிருது
8-சாவஷ்தி
9-குவலயாசுவன்
10-யுவனாசுவன்
11-மாந்தாதா–இவனுக்கு 50 பெண்கள் -சவ்பரி சரிதம்
12-அம்பரீஷன்
13-புருகுச்சன்
14-திரிசங்கு – புருகுச்சன் பேரன்

குக்ஷி-விகுக்ஷி-பான்-அன்ரன்யா-ப்ருது-த்ரிஷங்கு(விஸ்வாமித்ரர் ஸ்வர்கம்)அரிச்சந்திரன்-ரோஹிதன்-பாகுகன்

மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான்.
அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான்.
அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:

தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|

தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி

இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது.
ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.

இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு
தனக்கு மேலும் துன்பங்களை வரவழைத்துக் கொண்டான்.
நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.

15-அரிச்சந்திரன் – திரிசங்கின் மகன்
16-ரோஹிதன்
17-பாகுகன் -ரோஹிதன் பரம்பரை
18-சகரன்– ஸாகரம் -இவன் பெயரால்
19-அசமஞ்சன்
20-அம்சுமான்
21-பகீரதன்-மா முனி கொணர்ந்த கங்கை
22-அஸ்தமகன்
23-மூலகன்
24-கட்வாங்கன்-ஒரே முஹூர்த்தம் -பராங்கதி கண்டு கொண்டாரே -சுகர் பரிக்ஷித்துக்கு சொல்லிய வ்ருத்தாந்தம்
25-தீர்கபாகு

26-ரகு – தசரதனின் தாத்தா– ராகவன் இவன் பெயராலேயே
லகு ரகு -தளம் தடம் பணம் படம் போல் -எளிது
தந்தையான திலீபன் இவருக்கு பெயர் சூட்ட –கல்வி கேள்வி சுருதி அந்தம் அடையட்டும் -சிறந்து விளங்கட்டும்
ஷத்ரியன் யுத்தம் அந்தம் பார்க்கட்டும் என்று பெயர்
அம்மா ஸூ தக்ஷிணா –
ரகுவம்சம் காளிதாசர் பிரசித்தம்
ரகு ராக்ஷஸ சம்வாதம் பிரசித்தம் -அஜனுக்கு அரசு கொடுத்து காட்டில் தபஸ் -அந்தணன் வந்து ரக்ஷிக்க வேண்டி வர –சரணாகத ரக்ஷணம்
என் உணவை பறித்தாய் என்ன -என்னை வேண்டுமானால் கொள் —

27-அஜன் -தசரதனின் தந்தை
இந்து மதி இவரது தர்ம பத்னி
பூ மாலை மேல் விழுந்து இறக்க
வசிஷ்டர் -தேவ மாதா -உன் மேல் பூ மாரி விழுந்து சாப விமோசனம் பெற்றாள் -என்றார்

28-தசரதன்-60000 ஆண்டுகள் -ரிஷி சாபம் -ஓசை வந்த திக்கில் அம்பை பிரயோகம் செய்து –
சாந்தா மகள்-ரிஷ்ய சிங்கர் தர்ம பத்னி என்றும் சொல்வர்

29-இராமர்

துந்துமார்-விகுட்சன்-புரஞ்சயன்-அனநேசு-பிருது-சாவஷ்தி-குவலயாசுவன்-யுவனஷ்வா-மாந்தாதா-சுசந்தி-
துவசந்தி-பரத்-அஸித்-ஸாகரன்-அஸமஞ்சன்-அன்ஷுமான்-திலீபன்-பாகீரதன் (கங்கை-பூலோகம்)
அஸ்தமகன்-மூலகன்-தசரதன்-கட்வாங்கன்-தீர்கபாகு-காகுஸ்தன்-ரகு-ப்ரவ்ருத்-ஷம்கன்-
ஸூதர்ஷன்-அக்னிவர்மன்-சிஹ்ராக்-மேரு-பரஷுக்ஷுக்-அம்பரீஷன்-புருகுச்சன்-நகுஷன்-யயாதி-நபாங்-
அஜன்-தஸரதன்–ராமன்–லவன் மற்றும் குசன்.

இராமருக்கு – லவன், குசன்
லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது,
பரதனுக்கு தட்சன், புஷ்கரன்,
சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன்

லவன்
குசன்
அதிதி நிஷதன் நபன் புண்டரீகன் ஷேமதர்மா
இரணியநாபன்
புஷ்யன்
பிரகதபாலன்

தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும்
இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன
ஆனால் கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக
சூர்ய வம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன.

———-

பிரம்மா
|
பிரம்மாவின் மகன் மரீசி
மரீசியின் மகன் காஸ்யபர்
காஸ்யபர் மகன் விவஸ்வான்(சூரியன்)
விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
வைவஸ்வத மனு மகன் இஸ்வாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்).
இஸ்வாகு மகன் குக்ஷி.
குக்ஷி மகன் விகுக்ஷி
விகுக்ஷி மகன் பானன்
பானன் மகன் அனரன்யன்
அனரன்யன் மகன் பிருது
பிருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)
திரிசங்கு மகன் துந்துமாரன்
துந்துமாரன் மகன் யுவனஷ்வன்
யுவனஷ்வன் மகன் மாந்தாதா
மாந்தாதா மகன் சுசந்தி
சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்
துவசந்தி மகன் பரதன்
பரதன் மகன் அஸித்
அஸித் மகன் சகரன்
சகரன் மகன் அசமஞ்சன்
அசமஞ்சன் மகன் அம்சுமான்
அம்சுமான் மகன் திலீபன்
திலீபன் மகன் பகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
பகீரதன் மகன் காகுஸ்தன்
காகுஸ்தன் மகன் ரகு(காளிதாசன் ரகுவம்சமே)
ரகு மகன் பிரவர்த்தன்
பிரவர்த்தன் மகன் ஷங்கனன்
ஷங்கனன் மகன் சுதர்ஷன்
சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்
அக்னிவர்னன் மகன் சீக்ரகன்
சீக்ரகன் மகன் மேரு
மேரு மகன் பிரகஷ்ருகன்
பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்
அம்பரீஷன் மகன் நகுஷன்
நகுஷன் மகன் யயாதி
யயாதி மகன் நபாகன்
நபாகன் மகன் அஜன்
அஜன் மகன் தசரதன்
தசரதன் மகன்கள்ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்

ராமன் மகன்கள் லவன் மற்றும் குசன். பரதன் மகன்கள் தஷகன் மற்றும் புஷ்கலன்.
லட்சுமணன் மகன்கள் அங்கதன்,சந்திரகேது.
சத்துருகனன் மகன்கள் சுபாகு,சூரசேனன்.
குசன் மகன் அதிதி
அதிதி மகன் புண்டரீகன்
புண்டரீகன் மகன் ஷேமதனுவா
தேவானீகன்
அகீனரு
குரு
பாரியாத்திரன்
பலன்
சலன்
உற்தன்
வச்சிரநாபன்
சங்கணன்
வியுஷிதாசுவன்
விசுவயஹன்
ஹிரண்யநாபன்
தனமன்
துருவசந்தி
சுதரிசன்
அக்னிவர்ணன்
சீக்கிரகன்
மரு(இவரே அடுத்து வரும் கிருத யுகத்தின் சூரிய வம்சத்தில் முதல் மன்னன் ஆவார்).
பிரசுசுரன்
சுசந்தி
அமர்ஷன்
ஸஹஹ்வான்
விசுவபவன
பிரகத்பலன்(இவரே சக்கர வியூகத்தில் அபிமன்யுவை எதிர்த்த 6 மகாரதர்களில் ஒருவராவார்.அபிமன்யுவால் கொல்லப்படுவார்.

இன்னும் பல…
ஆதாரம் :வால்மீகி இராமாயணம் அயோதியா காண்டம் சர்கம் 110 மற்றும் ஸ்ரீ விஷ்ணு புராணம்.

—————–

சந்திர குலம் அல்லது சந்திர வம்சம் என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும்.
வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில்
கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சந்திர குலத் தோற்றம்
சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது.
பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள்.
வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிச் சென்றபோது ஒரு காட்டை அடைந்தான்.
அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது.
அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.

தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துச் சென்றான்.
மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான்.
தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.

ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள்.
ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான்.
ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்து
வருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர்.
புரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல்.
ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.

தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக் கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது.
இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள்.
புரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான்.
பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’.
இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.

சந்திர குல அரசர்கள்
தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும்
இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.
தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.

சந்திர வம்சம்
சந்திரன்
புரூரவன்
ஆயு, தீமந்தன், அமவசு, சிராயு (தசதாயு),சுருதாயு (வசுமந்தன்)
இவர்களுள் ஆயுவின் மக்கள் ரஜி, அரம்பன், நகுஷன், க்ஷத்ர விருதன்,அநேநஸ்
இவர்களுள் நகுஷனுடைய மக்கள் உத்தபன், ஆயதி, யயாதி, யதி, சம்யாதி
துரஸ்வன்
வக்ரி
கோபானன்
காந்தன்
துர்யசித்தன்
குரு
துஷ்யந்தன்
பரதன்
பிரதிபன்
சாந்தனு
பீஷ்மர்
சித்திராங்கதன்
விசித்திரவீரியன்
விதுரன்
திருதராட்டிரன்
பாண்டு
விதுரன்
பாண்டவர்
கௌரவர்
அபிமன்யு
பரீட்சித்து
ஜனமேஜயன்
மூவேந்தர் சோழனைச் சூரிய குலம் என்றும்,
பாண்டியனைச் சந்திர குலம் என்றும்,
சேரனை அக்கினிக் குலம் என்றும் கொள்கின்றனர்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு –ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்– தமிழாக்கம் : எஸ். ராமன்–

August 8, 2021

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் |
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார்.
அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள்.
எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று
தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது.
மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து
மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை.
ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்கு முறையை
வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம்.
சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும்,
தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது.
அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது.
தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது.
தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார்.
ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி,
நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி
அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது;
அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே
அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார்.
இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன.
அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும்,
மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ
அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய
ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும்.
அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும்.
மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும்.
வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும் போது தான்
அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான்.
இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது.
அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது.
கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும்.
“தத்தம் குல வேதத்தை அத்யயனம் செய்தல், பிரணவம்- சாவித்திரி முதலான பவித்ரமான மந்திரங்களை சபித்தல் ,
கீதை முதலான வீடுபேறு பற்றிய நூல்களை சரியான ஆசார்யனின் உதவியோடு படித்தல்” என்று பாரம்பர்ய விரிவுரையாளர்கள் விளக்குவர்.
ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

———

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் |
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||

சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: |
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: || 1.1.3 ||

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: |
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³மஸ்²ஸா²ஸ்²வதீஸ்ஸமா​: |
யத்க்ரௌஞ்சமிது²னாதே³கமவதீ⁴​: காமமோஹிதம் || 1.2.15 ||

நிஷாத³ – O! Fowler, ஏ! வேடனே!
த்வம் – you, நீ
யத் for which reason, எதற்காக
க்ரௌஞ்சமிது²னாத் – from the pair of krauncha birds, ஜோடி கிரௌஞ்சப் பறவைகளில்
காமமோஹிதம் – when they were infatuated by love, காதல் களியாட்டத்தின்போது
ஏகம் = one, ஒன்றை
அவதீ⁴: – have killed, கொன்றாய்
(தத் for that reason), அதனால்
ஸா²ஸ்²வதீ: permanently, எப்போதும்
ஸமா: for long years, பல காலமாக
ப்ரதிஷ்டா²ம்ʼ glorious, பெருமையுடன்
மா க³ம: you will never get, உனக்குக் கிட்டாது.

“ஏ! வேடனே! காதலுடன் களித்திருந்த ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகளைப் பிரித்து,
ஒன்றைக் கொன்றப் பாதகச் செயலால் நீ வெகுநாட்கள் வாழமுடியாது போவாய்!”–என்று சபித்தார்.

——–

கீர்த்திமந்த: ப்ரணிஹிதா: யதா²வசனகாரிண: |
தேஜ: க்ஷமாயஸ²:ப்ராப்தா ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: || 1.7.6||

கீர்த்திமந்த: renowned, கீர்த்தியுடன்
ப்ரணிஹிதா: fixing their attention on their thoughts, எண்ணங்களில் கவனம் செலுத்துவோராக
யதா²வசனகாரிண: doing in accordance with word, சொல்வதைச் செய்வோராக
தேஜ:க்ஷமாயஸ²:ப்ராப்தா: possessing splendour forgiveness and fame, அழகும், புகழும், மன்னிக்கும் ஆற்றலும் கூடியோராக
ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: speaking with a smile, இன்முகத்துடன் பேசுவோராக.

க்ரோதா⁴த்காமார்த²ஹேதோர்வா ந ப்³ரூயுரன்ருʼதம்ʼ வச: … || 1.7.7||

க்ரோதா⁴த் either in anger, கோவத்தினாலோ
காமார்த²ஹேதோர்வா or for the reason of pecuniary gains or for desire, பேராசையினாலோ, பணம் சம்பாதிக்கும் நோக்கிலோ
அன்ருʼதம் untruth or unjust, நேர்மைக்கும், நீதிக்கும் புறம்பாகவோ
வச: word, வார்த்தைகளை
ந ப்³ரூயு: do not utter, சொல்லாதவர்கள்.

குஸ²லா வ்யவஹாரேஷு ஸௌஹ்ருʼதே³ஷு பரீக்ஷிதா: |
ப்ராப்தகாலம்ʼ து தே த³ண்ட³ம்ʼ தா⁴ரயேயுஸ்ஸுதேஷ்வபி || 1.7.8||

தே those ministers, அந்த அமைச்சர்கள்
வ்யவஹாரேஷு in their dealings, தங்கள் பொறுப்புகளில்
குஸ²லா: competent, தலை சிறந்தோர்
ஸௌஹ்ருʼதே³ஷு in friendship, நட்பு வட்டாரத்தில்
பரீக்ஷிதா: tested, சரி பார்த்து
ஸுதேஷ்வபி even in the matter of sons, தங்கள் மகன்கள் விஷயத்திலும்
ப்ராப்தகாலம் appropriately, தக்கதொரு
த³ண்ட³ம் punishment, தண்டனை
தா⁴ரயேயு: used to impose, வழங்க வேண்டி.

தத:ப்ரீதோ த்³விஜஸ்²ரேஷ்ட²ஸ்தான் ஸர்வானித³மப்³ரவீத் |
அவஜ்ஞயா ந தா³தவ்யம்ʼ கஸ்யசில்லீலயா(அ)பி வா|| 1.13.30||
அவஜ்ஞயா க்ருʼதம்ʼ ஹன்யாத்³தா³தாரம்ʼ நாத்ர ஸம்ʼஸ²ய:|

தத: then, அப்போது
ப்ரீத: pleased, திருப்திப்பட்டு
த்³விஜஸ்²ரேஷ்ட²​: best among brahmins, அந்தண சீலரான (வசிஷ்டர்)
தான் ஸர்வான் addressing all of them, அவர்களைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னார்
கஸ்ய சித் to any one, எவருக்கும்
அவஜ்ஞயா with insult, அவமரியாதையுடன்
லீலயாபி வா or casually, ஏனோ தானோ என்று
ந தா³தவ்யம் should not be gifted, அளிக்கப்படக் கூடாது
அவஜ்ஞயா with contempt, வெறுப்புடன்
க்ருʼதம் done, செய்தல்
தா³தாரம் donor, கொடுப்பவனுக்கு
ஹன்யாத் destroys, அழிவு தரும்
அத்ர in this aspect, இது பற்றி
ஸம்ʼஸ²ய: ந no doubt, ஐயம் வேண்டாம்.

தானம் அளிக்கும்போது தானம் பெறுபவரை அவமதிக்கும்படியோ, அல்லது அதை ஒரு தமாஷாகவோ செய்யக்கூடாது.
அப்படி வேண்டா வெறுப்பாகச் செய்யும் எவனுக்கும் தானத்தினால் வரும் நன்மை கிடைக்காது;
மாறாக அவனுக்கு நிச்சயமாக அது அழிவு தரும்.

——–

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா சந்த்⁴யா ப்ரவர்த்ததே |
உத்திஷ்ட² நரஸா²ர்தூல கர்த்தவ்யம் தை³வமாஹ்நிகம் ||

(ஆம், இது அனைவரும் அறிந்த வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் தொடக்க வரிகள்தான்.
ஆனால், எத்தனை பேருக்கு இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் என்று தெரிந்திருக்குமோ?)

கௌஸல்யா ஸுப்ரஜா: O! Beloved son of Kausalya, (a son by whom Kausalya became a blessed mother),
கௌசல்யாவின்செல்ல மகனான (ஒரு மகனால் ஆசீர்வதிக்கப்பட்ட கௌசல்யாவின்)
ராம O!Rama, ராமனே!
பூர்வா ஸந்த்⁴யா the day-break, வைகறைப் பொழுது
ப்ரவர்ததே is commencing, புலர்ந்து விட்டது
நரஸா²ர்தூ³ல O!Best among men, புருஷோத்தமனே
உத்திஷ்ட² awake (fromsleep), உறக்கத்திலிருந்து எழு
தை³வம் oblations to gods, தெய்வத்திற்குச் செய்யவேண்டிய
ஆஹ்னிகம் religious rite to be performed every day at a fixed hour, நித்ய கர்மானுஷ்டானங்கள்
கர்தவ்யம் are required to be done, செய்யப்படவேண்டி காத்திருக்கின்றன.

கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள்.
இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

———

மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான்.
அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான்.
அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:

தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|

தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி

இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது.
ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.

இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு தனக்கு மேலும்
துன்பங்களை வரவழைத்துக் கொண்டான். நம்மால் எதைச் செய்ய முடியுமோ
அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.

———–

இயம்ʼ ஸீதா மம ஸுதா ஸஹத⁴ர்மசரீ தவ|
ப்ரதீச்ச² சைனாம்ʼ ப⁴த்³ரம்ʼ தே பாணிம்ʼ க்³ருʼஹ்ணீஷ்வ பாணினா|| 1.73.27||

மம my, எனது
ஸுதா daughter, மகள்
தவ your, உனது
ஸஹத⁴ர்மசரீ with you observing righteous deeds, உன்னுடன் தர்மகாரியங்களைச் செய்ய
ஸீதா Sita, சீதை
இயம் this girl, இந்தப் பெண்
ஏனாம் her, அவளை
ப்ரதீச்ச² ச accept, ஏற்றுக்கொள்
தே ப⁴த்³ரம் prosperity to you, உனக்கு மங்களம் உண்டாக
பாணிம் her hand, அவளது கைகளை
பாணினா with your hand, உனது கைகளால்
க்³ருʼஹ்ணீஷ்வ hold, பற்றிக்கொள்.

எனது மகளான இந்த சீதை உனது தர்மகாரியங்கள் மேலும் நன்கு தொடர உறுதுணையாய் இருப்பாள்.
மங்களமே உங்களுக்கு உண்டாகட்டும். அவள் கையைப் பிடித்து ஏற்றுக்கொள்.

பதிவ்ரதா மஹாபா⁴கா³ சா²யேவானுக³தா ஸதா³|
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத்³ராஜா மந்த்ரபூதம்ʼ ஜலம்ʼ ததா³|| 1.73.28||

மஹாபா⁴கா³ highly fortunate, பாக்கியசாலியான
பதிவ்ரதா devoted, faithful and loyal wife, பக்தி, நேர்மை, நன்றியுடன் கூடிய மனைவி
ஸதா³ always, எப்பொழுதும்
சா²யா இவ like shadow, நிழலைப்போல
அனுக³தா follows, தொடர்வது
இதி thus, இப்படியாக
உக்த்வா having spoken, சொல்லிவிட்டு
ராஜா king, அரசன்
ததா³ then, அப்போது
மந்த்ரபூதம் sanctified with mantra, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட
ஜலம் water, நீரால்
ப்ராக்ஷிபத் released, வார்த்தார்.

பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா
உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும், என்றிவ்வாறு மந்திரங்களுடன் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா?
வால்மீகியின் இலக்கணப்படி ஒரு நல்ல மனைவி என்பவள்
கணவனுக்கு இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு,
எப்போதும் உறுதுணையாக இருந்து தோள் கொடுக்கும் ஒரு நல்ல தோழியாவாள்.

———

நாஹமர்த²பரோ தே³வி! லோகமாவஸ்துமுத்ஸஹே |
வித்³தி⁴மாம்ருʼஷிபி⁴ஸ்துல்யம்ʼ கேவலம்ʼ த⁴ர்மமாஸ்தி²தம்|| 2.19.20||

தே³வி O devi, தேவி
அஹம் I, நான்
அர்த²பர​: interested in wealth, செல்வத்தில் விருப்பம் கொண்டவனாக
ந not, இல்லை
லோகம் this world, இந்த உலகில்
ஆவஸ்தும் to follow, பின்பற்றி
உத்ஸஹே am striving, முயற்சி செய்கிறேன்
கேவலம் only, மட்டும்
த⁴ர்மம் righteousness, தர்மம்
ஆஸ்தி²தம் devoted to, முதன்மையாக
மாம் me, என்னை
ருʼஷிபி⁴​: with ascetics, தபஸ்விகளோடு
துல்யம் similar, ஒன்றாக
வித்³தி⁴ you may know, தெரிந்து கொள்.

தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது.
தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்.

——–

அஹம்ʼ தாவன்மஹாராஜே பித்ருʼத்வம்ʼ நோபலக்ஷ்யே|
ப்⁴ராதா ப⁴ர்தா ச ப³ந்து⁴ஸ்²ச பிதா ச மம ராக⁴வ​:|| 2.58.31||

அஹம் I,
மஹாராஜே in that great king, அந்தப் பேரரசரான
பித்ருʼத்வம் fatherhood, தந்தைப் பதவி
நோபலக்ஷ்யே I do not see, நான் கருதவில்லை
மம to me, எனக்கு
ராக⁴வ​: Rama alone, ராமன் ஒருவனே
ப்⁴ராதா ச brother, சகோதரன்
ப⁴ர்தாச also protector, காப்பாளனும்
ப³ந்து⁴ஸ்²ச friend, தோழன்
பிதா father, தந்தை.

அந்தப் பேரரசரான தசரதரை என் தந்தையாக நான் கருதவில்லை.
ராமன் ஒருவனே எனது சகோதரன், காப்பாளன், தோழன், மற்றும் தந்தை.

—————

தம்ʼ ப்ரேக்ஷ்ய ப⁴ரத​: க்ருத்³த⁴ம்ʼ ஸ²த்ருக்⁴னமித³மப்³ரவீத்|
அவத்⁴யா ஸ்ஸர்வபூ⁴தானாம்ʼ ப்ரமதா³​: க்ஷம்யதாமிதி|| 2.78.21||

ப⁴ரத​: Bharata, பரதன்
க்ருத்³த⁴ம் enraged one, கோபத்தில் இருந்தவன்
தம் ஸ²த்ருக்⁴னம் addressing that Satrugna, சத்ருக்னனைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னான்
ப்ரமதா³​: women, பெண்மணிகள்
ஸர்வபூ⁴தானாம் in all beings, எந்த சீவராசியிலும்
அவத்⁴யா​: should not be killed, கொல்லப்படக் கூடாது க்
ஷம்யதாம் may be pardoned, மன்னித்து விடலாம்.

கோபத்தில் இருந்த சத்ருக்னனைப் பார்த்து பரதன்
“எந்தப் பெண்மணியையும் கொல்லக் கூடாது, அவளை மன்னித்துவிடு” என்றான்.

—————-

ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்து
கொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின்
முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.

அவருத்³த⁴ம்ʼ வனே ராமம்ʼ தி³ஷ்ட்யா த்வமனுக³ச்ச²ஸி|| 2.117.21||
நக³ரஸ்தோ² வனஸ்தோ² வா பாபோ வா யதி³ வா ஸு²ப⁴:| …. 2.177.22||

த்வம் = you, நீ
தி³ஷ்ட்யா = with the grace of heaven, தேவர்களின் கருணையால்
வனே = in the forest, காட்டுக்குள்
அவருத்³த³ம் =constrained, குறுகிய
ராமம் = Rama,
அனுக³ச்ச²ஸி = you are also following, நீயும் வந்துள்ளாய்,
நக³ரஸ்த²: = in the city, நகரத்திலோ
வனஸ்தோ² வா = or in the forest, காட்டிலோ
பாபோ வா = or sinful, பாவமோ,
யதி³ வா = or அல்லது ,
ஸு²ப⁴: = virtuous, புண்ணியமோ.

(வருவது) நாடோ, காடோ, பாவமோ அல்லது புண்ணியமோ, ( உனது என்பதையெல்லாம் ) விட்டுவிட்டு
தேவர்களின் கருணையால் நீ இராமருடன் காட்டுக்குள் வந்துள்ளாய்.

————–

அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.

ஸ தே(அ)ம்பா³ மத்⁴யமா தாத க³ர்ஹிதவ்யா கத²ஞ்சன|
தாமேவேக்ஷ்வாகுனாத²ஸ்ய ப⁴ரதஸ்ய கதா²ம்ʼ குரு|| 3.16.37||

தாத = dear, அன்பார்ந்த
மத்⁴யமா = middle, நடு
(அ)ம்பா³ = mother, தாயார்
கத²ஞ்சன = somehow, கண்டபடி
தே = to you, உனக்கு
ந க³ர்ஹிதவ்யா = not to be criticized, குறைகூறக் கூடாது
இக்ஷ்வாகுனாத²ஸ்ய = of the lord of Ikshvaku, இஷ்வாகு குல அரசனனைப் பற்றி
ப⁴ரதஸ்ய = Bharata’s, பரதனைப்
தாம் கதா²மேவே = about him, அவனைப் பற்றி
குரு = you may, பேசலாம்.

அன்பார்ந்த லக்ஷ்மணா! நம் சிறிய தாயார் கைகேயியைப் பற்றிக் கண்டபடி குறைகூறி எப்போதுமே பேசாதே.
இஷ்வாகு குல அரசனான பரதனைப் பற்றி நீ பேசலாம்.
ஒருவரைப் பற்றிப் புகழும்போது மற்றவரை மட்டம் தட்டிப் பேசுவது ஒரு அருவருக்கத்தக்க செயல்.
இங்கு இராமர் சொல்வதும், “யாரைப் பற்றியும் எப்போதும் இகழ்ந்து பேசக் கூடாது” என்பதாகும்.

—–

உத்தரம்ʼ நோத்ஸஹே வக்தும்ʼ தை³வதம்ʼ ப⁴வதீ மம|| 3.45.28||

வாக்யமப்ரதிரூபம்ʼ து ந சித்ரம்ʼ ஸ்த்ரீஷு மைதி²லி|

ஸ்வபா⁴வஸ்த்வேஷ நாரீணாமேவம்ʼ லோகேஷு த்³ருʼஸ்²யதே|| 3.45.29||

மைதி²லி = Mythili, மைதிலி!
உத்தரம் = reply, பதில்
வக்தும் = tell, சொல்
நோத்ஸஹே = not intending, உத்தேசம் இல்லை
ப⁴வதீ = yourself, தாங்கள்
மம = for me, எனக்கு
தை³வதம் = deity, தெய்வம்
அப்ரதிரூபம் = unworthy, வேண்டத் தகாத
வாக்யம் = word, வார்த்தைகள்
ஸ்த்ரீஷு = among women, பெண்களிடம்
சித்ரம் = wonder, ஆச்சரியமாக
ந = not, இல்லை
ஏஷ: = such, அது
நாரீணாம் = womens’, பெண்களின்
ஸ்வபா⁴வஸ்த் = nature, இயற்கை
லோகேஷு = in the world, இந்த உலகில்
ஏவம் = likewise, அதே போல
த்³ருʼஸ்²யதே is seen, பார்க்கப்படுகிறது

மைதிலி! உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை
தாங்கள் பூசிக்கவேண்டிய தெய்வத்தின் அம்சம். நீங்கள் பேசிய வேண்டத் தகாத வார்த்தைகள் போன்றதைப்
பெண்களிடம் எதிர்பார்ப்பது இயற்கையே என்பதால், அதை நான் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இல்லை.

——-

ததோ(அ)க்³னிம்ʼ தீ³ப்யமானம்ʼ தௌ சக்ரதுஸ்²ச ப்ரத³க்ஷிணம்|| 4.5.15||

ஸுக்³ரீவோ ராக⁴வஸ்²சைவ வயஸ்யத்வமுபாக³தௌ|

தத: = then, அப்போதே
தௌ = both of them, அவர்கள் இருவரும்
தீ³ப்யமானம் = blazing, எரியும்
அக்³னிம் = fire, அக்னி
ப்ரத³க்ஷிணம் சக்த: = went round in great reverence, சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்
ஸுக்³ரீவ: = Sugriva, சுக்ரீவன்
ராக⁴வஸ்²சைவ = and Raghava also, இராமரும்
வயஸ்யத்வம் = friendship, நட்பை
உபாக³தௌ = both established, உறுதி செய்துகொண்டார்கள்.

உடனே அவர்கள் இருவரும் அக்னி வளர்த்து, அதனை சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்.
இப்படியாக இராமரும், சுக்ரீவனும் தங்கள் நட்பை பண்டைய வழக்கப்படி உறுதி செய்துகொண்டார்கள்.

———–

சிறப்பு கொண்ட மழைக் காலத்து வனப்புகளை வால்மீகியும் எதுவும் சொல்லாது விட்டு விடுவாரா?

வானில் விரியும் நிறங்களும், பறவைகள் எழுப்பும் இசைக் கூவலும், வண்டுகளின் ரீங்காரமும்,
மிருகங்களின் களியாட்டமும் வானிலிருந்து விழும் மழை நீரைப் பார்த்ததும் நடக்கும் ஒத்திகை பார்க்காத
இயற்கை நாடகங்கள். கிஷ்கிந்தா காண்டத்தில் வால்மீகியின் வர்ணனையைப் பற்றித் தெரிந்துகொள்ள,
அதன் 28-வது அத்தியாயத்தில் உள்ள 66 செய்யுட்களில் மாதிரிக்கு ஒன்று என்று கீழே 36-வது செய்யுளைப் பார்ப்போம்.

ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம்ʼ ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம்|
ஆவிஷ்க்ருʼதம்ʼ மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³ர்வனேஷு ஸங்கீ³தமிவ ப்ரவ்ருʼத்தம்|| 4.28.36||

வனேஷு – in the forest, காட்டினில்
ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம் – the sweet humming sounds of bees like the music of string instruments,
ரீங்கரிக்கும் வண்டுகளின் இனிய ஓசை தந்திக் கருவிகளின் இசை போல

ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம் – the noises of frogs sounding like the beating of trumpets to keep
the rhythm with the beating of drums of thunder clouds,
இடிஇடிக்கும் மேள ஓசைக்கு ஒத்தாக துந்துபியின் பிளிறல் போல் தவளைகளின் கத்தலும்

மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³: – sounds of clouds like the sounding like the beating of drums,
மேகங்கள் ஊடே வரும் இடியின் ஓசை மேளம் கொட்டுதல் போலவும்

ஆவிஷ்க்ருʼதம் – manifested, காணப்பட்டன

ஸங்கீ³தம் – musical event, இன்னிசைக் கச்சேரி

ப்ரவ்ருʼத்தம் இவ – as if commenced, தொடங்கியது போல

(இந்த வால்மீகியின் ஸ்லோகத்திற்கு மூல ஆசிரியர் எழுதியிருக்கும் ஆங்கிலக் கவிதையையும் தந்து,
அதனால் எனக்குள் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியையும் அதன் கீழே தமிழில் வரைந்திருக்கிறேன். கவிஞர்கள் மன்னிப்பாராக.)

The buzzing bees hummed and sang
Like the tunes, one plays on strings
Frogs in ponds and paddy fields
Croaked and chorused rhythmic beats
Clouds from distant mountains tops
Drum like boomed their thunderous noise
That was the concert monsoon gave
To Rama and his brother in Prasravana cave

ர்ர்ர்ரர்… என்று சுற்றிச் சுழலும் வண்டுகள் ரீங்கரிக்கும் ஓசைதான் யாழினின்று வரும் நாதமோ?
கிர்..கிர்..கிர்… என்று வயலிலும் குளக்கரையிலும் கத்தும் தவளைகள் அதற்குத் தரும் தாளமோ?
மலை உச்சியைத் தவழும் மேகங்களின் உரசலால் ஒளிரும் இடிதான் காது பிளக்கும் மேளமோ?
இவைதான் பிரஸ்ரவண மலைக் குகைவாசிக்கு இயற்கை தரும் இன்னிசை ஜாலமோ?

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்