ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ எம்பெருமானார் உம்மளவில் செய்த விஷயீகாரத்தை பார்த்து -கர்மம் எல்லாம் கழிந்தது –என்றீரே யாகிலும் –
பிரக்ருதியோடே இருக்கையாலே -இன்னமும் அவை வந்து ஆக்ரமிக்கிலோ-என்ன -இனி –
அவற்றுக்கு வந்து என்னை அடருகைக்கு வழி இல்லை என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானார் உம்மை நிர்ஹேதுகமாக அங்கீகரித்து அருளின ராஜகுல மகாத்ம்யத்தால்-களித்து –
அநாதியான கர்மங்கள் என்னை -பாதிக்க மாட்டாது என்றீர் -நீர் ப்ரக்ருதி சம்பந்தததோடு இருக்கிற-காலம் எல்லாம் –
நா புக்தம் ஷீயதே கர்ம -என்கிறபடியே கர்மபல அனுபவமாய் அன்றோ இருப்பது -என்ன –
தேவதாந்திர பஜனம் அசேவ்ய சேவை தொடக்கமான விருத்த கர்மங்களை அனுஷ்டித்தால் அன்றோ-
அநாதி கர்மம் மேல் யேருகைக்கு அவகாசம் உள்ளது -அவற்றை சவாசனமாக விட்டேன் –
ஸ்ரீ எம்பெருமானார்-திருவடிகளை சர்வ காலமும் விச்மரியாதே வர்த்தித்தேன் –
இப்படியான பின்பு க்ரூர கர்மங்கள்-என்னை வந்து பாதிக்கைக்கு வழி இல்லை -என்கிறார் .
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் உம்மை அடர்க்காவோ என்னில் –
அவை என்னை அடர்க்க வழி இல்லை என்கிறார் –
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –
பத உரை –
ஒரு தெய்வம் -வேறு ஒரு தெய்வத்தை
நயவேன் -ஆசைப்படேன்
நானிலத்தே -இவ் உலகத்திலே
சில மானிடத்தை -சில அற்ப மனிதர்களை
புயலே என –மேகம் போலே பொழிகிறவனே என்று
கவி போற்றி செய்யேன் -கவி பாடிப் புகல மாட்டேன்
பொன்னரங்கம் என்னில் -அழகிய திருவரங்கம் என்னும் பேச்சிலே
மயலே பெருகும் -காதல் மையல் வளரும்
இராமானுசன் -எம்பெருமானாருடைய
மன்னும் -ஒன்றோடு ஓன்று பொருந்தும்
மா –சீரிய
மலர்த்தாள்-தாமரை போன்ற திருவடிகளை
அயரேன்-மறவேன்
அருவினை-தொலைக்க அரிய கருமங்கள்
எவ்வாறு-எப்படி
என்னை இன்று அடர்ப்பது -என்னை இப்பொழுது பற்றிப் பிடித்து கொள்வது –
புறம்பு ஒரு தெய்வத்தை விரும்பேன்
இந்த லோகத்தில் சில சூத்திர மனுஷ்யரை புயலே -என்று அவர்களுடைய ஒவ்தார்யத்துக்கு-மேகத்தை ஒப்பாக கவி சொல்லி ஸ்துதியேன்-
ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ கோயில் என்னும் பிரசங்கத்திலே காதல் மையல் அபிவ்ருத்தமாக நிற்கும்-ஸ்ரீ எம்பெருமானார் உடைய
பரஸ்பரம் பொருந்திய பரம பூஜ்யமாய் போக்யமான திருவடிகளை விஸ்மரியேன் –
ஆதலால்-அறுக்க அரியதான கர்மங்கள் எவ் வழியாலே என்னை இன்று அடர்ப்பது –
அப்ராப்த தேவதா ப்ராவண்யமும் அசேவ்ய சேவையும் அப்ராப்த விஷய ஸ்ம்ருதியும் ஆயிற்று கர்மம்-அடறுகைக்கு வழி –
இவை ஒன்றும் எனக்கு இல்லாமையால் கர்மத்துக்கு என்னை ஒரு-வழி யாலும் அடர்க்கப் போகாது என்று கருத்து –
கவி போற்றி செய்யேன் -என்ற இது-
கவி செய்யேன் –போற்றி செய்யேன் -என்று பிரித்து யோஜிக்க்கவுமாம் –
அப்போதைக்கு கவி செய்கையாவது –
அவர்களை கவி பாடுகை –
போற்றுகை யாவது -கேவலம் புகழுகை
நயவேன் -என்றது -விரும்பேன் -என்றபடி /புயல்-மேகம் / மையல்-ப்ராந்தி /அயர்வு -மறுப்பு-
மனசால் உடையவர் திருவடி மறக்கேன் -என்கிறார் -பாதுகே யதிராஜ்ய பதச்சாயா நிழலை விடாமல் –
நேராக திருவடி சேவை துர்லபம் அன்றோ –
அத்த பத்தர் சுற்றி வாழும் அரங்கம் -வாய் வார்த்தை யாதிருச்சிகமாக சொன்னாலும் மையல் கொள்ளும் –
மன்னு மா மலர் தாள் –சென்னியில் சூடி -தேன் பால் கன்னல் அமுது –அஞ்சுவை அமுதம் -ஐந்து கருத்துக்கள் ஒரே பாசுரத்தில் –
1-ஸ்ரீ திவ்ய தேச மஹிமை /2-ஸ்ரீ திருவரங்கம் வேர் பற்று /3-ஸ்ரீ ஸ்வாமியின் மையல் /4- அஸேவ்ய சேவை கூடாது /
5-ஆச்சார்யருக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை
இப்படி இருந்தால் பாபங்கள் அணுகா —
பஞ்சா அமிர்தம் போல எல்லா திரு கோலப் பெருமாளையும் சேவிக்க
ஸ்ரீ திரு வல்லிக்கேணி மங்களா சாசனம் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
ஐ சுவை அமுதம்-தேன் பால் கன்னல் அமுது அனைத்தும் கலந்த சுவை போல-
அதனால் தன் சக்கரை பொங்கல் இங்கே விசேஷம்
நயவேன் ஒரு தெய்வம்
ஸ்ரீ எம்பெருமானாரை ஒழிய மற்று ஒருவரை பர தேவதை அன்று-ஆதரிக்கிறேன் அல்லேன் –
நயவேன் என்றது -விரும்பேன் என்றபடி
ஸ்ரீ நான்யம்வதாமி -ந பஜாமி-ந சிந்தயாமி -நான்யம் ஸ்மராமி ந ஸ்ருனோமி ந சாஸ்ரயாமி –
முக்த்வாத்வ தீய சரணாம் புஜ மாதரேன ஸ்ரீ ஸ்ரீ நிவாச புருஷோத்தம தேஹிதாச்யம் –என்றும் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம்-நாடுதிரே -என்றும் –
மற்றைத் தெய்வம் விளம்புதிரே -என்றும் சொல்லுகிறபடியே
பிரதம பர்வ-பர்யந்தம் அத்யாவசியம் இன்றிக்கே –
குரோர் அன்யம் ந பாவயேத் –
தேவு மற்று அறியேன் என்கிறபடியே -ஸ்ரீ எம்பெருமானாரை பர தேவதையாக அத்யவசித்து-இருந்தேன் என்றபடி –
உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் மற்று அறியா -மன்னு புகழ் சேர் வடுக நம்பி
தன்னிலையை என் தனக்கு நீ தந்து எதிராசா என் நாளும் உன் தனக்கே ஆட் கொள்ளு உகந்து -என்று-
இது தன்னை ஸ்ரீ ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –
த்ர்ணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிய -ஸ்ரீ ராமானுஜ-பதாம் போஜ சமாச்ரயண சாலின -என்னக் கடவது இறே –
நானிலத்தே சில மானிடத்தை புயலே என கவி போற்றி செய்யேன் -என்றும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும்
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும் –
ஷோணீ கோண சதாம்ச பால நமவஹா துர்வார கர்வான-லஷூப் யத் சூத்ர நரேந்திர சாடுரச நாதன்யான் நமன்யமஹோ –
யம்கம்சித் புருஷா தமம்கதி பயாக்ராமே-சமல்பார்த்ததம் – என்றும் சொல்லுகிறபடி –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதையான -மகா பிருத்வியிலே –
ஒரு ஷூத்ரனைக் குறித்து -ஜல ஸ்தல விபாகம் அறசர்வ விஷயத்திலும் வர்ஷிக்கும் வர்ஷூ-கலாவஹம் போலே
இருப்பான் ஒருவன் என்று அவனுடைய ஔதார்யத்தை கவி பாடி-பிரபந்தீகரித்தும் –
வாசா ஸ்துத்திதும் -இப்படி அப்ராப்தரை சேவியேன் –
புயல்-மேகம் -போற்றுதல்-புகழ்தல் –
அன்றிக்கே –
தாம் சரம பர்வ நிஷ்டர் ஆகையாலே -சர்வேஸ்வரனைக் கூட தேவதாந்திர தோடு ஒக்க-அநாதரித்து -கணிசித்து –
ஸ்ரீ வேங்கடாசல சிகராலய காள மேகம் -என்று அவரைப் போலே ஸ்துதியாதே –
தேவு மற்று அறியேன் -குரோர் அந்ய ந பாவயேத் -என்கிறபடி இருக்க கடவேன் -என்னவுமாம்
இப்படி இவ்வளவும் -தேவதாந்தரங்களும் -நீச மனுஷ்யரும் -அப்ராப்தர் ஆகையாலே –அவர்களை திரச்கரித்தும் –
பிராப்த விஷயனான சர்வேஸ்வரனை -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே –பந்த மோஷங்கள் இரண்டுக்கும் -பொதுவானவன் என்னும்
சம்சயத்தால் -அவனை அநாதரித்தும்- பிரதி கூல்ய வர்ஜனம் பண்ணினீர் –
ஆனாலும் சிறிது ஆநு கூல்ய சரணம் என்று பேர் இடலாவது ஒரு-வியாஜ்யம் உம்மிடித்தில் உண்டோ -என்ன –
உண்டு என்கிறார் -அது என் என்ன –
எம்பெருமானாரே தெய்வம் என்பர்
கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை ஸ்ரீ மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட்கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –
நயவேன் ஒரு தெய்வம்
தேவு மற்று அறியேன் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளைப் போலே கூறுகிறார் –
பிரதம பர்வத்தில் ஊன்றியவர்கள் -வாசுதேவம் பரித்யஜ்ய யோன்யம் தேவமுபாசதே
த்ருஷிதோ ஜாஹ்ன வீதீரே கூபம் கநதி துர்மதி -என்று
எங்கும் வியாபித்து விளங்கும் ஸ்ரீ வாசுதேவனை விட்டு -எவன் வேறு தெய்வத்தை உபாசிக்கிறானோ –
அந்த மதிகேடன் -கங்கை கரையில் விடாய் தீரக் கிணறு வெட்டுகிறான் -என்றபடி-
தொடர்பு இல்லாதவராய் -துர்லபராய் -பாடுபட்டு வழி பட வேண்டியவராய் -உள்ள
திரு இல்லாத் தேவரை -உபேஷிப்பர் –
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-என்பர்
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் -என்று இருப்பார் –
ஸ்ரீ அமுதனாரோ -ஸ்வ தந்த்ரனாய் -சம்சார பந்தத்துக்கும் மோஷத்துக்கும் காரணமான ஸ்ரீ சர்வேஸ்வரனையே உபேஷிப்பர்
நானிலத்தே –கவி போற்றி செய்யேன் –
கவி வாணர் -ஆசை தீர்ந்து மீண்டும் பிறர் இடம் குறை வேண்டிப் போக வேண்டாதபடி கொடுக்கும் தரம் பெற்ற-
செல்வம் உள்ளவர்கள் இல்லாத இடம் இது என்னும் கருத்துடன் –நானிலத்தே -என்கிறார் –
இம் மண்ணுலகில் செல்வர் இப்போதில்லை நோக்கினோம் -திருவாய்மொழி -3-9-6-என்று ஸ்ரீ நம் ஆழ்வார் அருளியதை இங்கு நினைவு கூர்க-
மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி –
சில மானிடத்தை –என்று
அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார் –
தன்னை மெய்யாக அறியாதவன் அசித் பிராயன் இறே-3-9 2- – என்பது ஈடு
கொடுக்கும் திறன் இல்லாத மானிடத்தை புயலே -என்று-கூறவே -அது பொய்யாயிற்று –
பிழைப்புக்காக அங்கனம் பொய் கூறுவர் பிறர் பயன் எதிர் பாராது-வழங்குதலும் வரையாது வழங்குதலும்
கொடுக்கப் பெறாத பொது உடம்பு வெளுத்தாலும் உள்ள புயலுக்கு ஒப்பானவனே என்று கூசாது போய் பேசுவர் –
மாரியனைகை மால்வரை யொக்கும் திண் தோள் என்று
பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே – என்னும் திருவாய் மொழியும் இங்கு காண்க –
இவ்வாறு கவி போற்றி செய்யேன் –
கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி-வணங்கு நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே-என்கிறபடியே
தத் விஷயமான பக்தி -ததீய பர்யந்தமாய் -திருவரங்கம் -என்று யாதார்ச்சிமாக-சொன்னாலும் –
தத் பக்தி பாரவச்யத்தாலே -காதல் மையல் மென்மேலும் பெருகி வாரா நிற்கும் –
மையல்-பிராந்தி –
பொன்னரங்கம் –அயரேன் –
கீழ் பிரதி கூலிம் தவிர்ந்தமை கூறப்பட்டது
இனி ஆனுகூல்யம் சொல்லப்படுகிறது
பொன்னரங்கம் –
பொன் போலே விரும்பத்தக்க அரங்கம்-
அந்தப் பேச்சிலேயே ஸ்ரீ எம்பெருமானார்க்கு மையல் பெருகுகிறதாம் –
அந்த துறவிக்கும் –பொன் -என்று தொடங்கும் போதே-மையல் பெருகி விடுகிறது –
மையல்-வியாமோகம்-
மாந்தற்கு வியாமோகம் பொன்னிலே
இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக -இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள
வ்யாமோகத்தாலே என்கிறார் ஸ்ரீ ஆழ்வான் –
அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு –
பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான ஸ்ரீ அமுதனார் –
இனி திருவரங்கம் என்னும் பொருளில்
பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-
வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –
ஸ்ரீ பிராட்டி பிறந்தகத்தையும் –புக்ககத்தையும் -மறந்து -மக்களாகிய நம்மை காப்பதற்கு தக்க இடமாய் இருத்தல் பற்றி
இவ்விடம் பெரும் களிப்புடன் களிநடம் புரிவதாக பெரியோர் பணிப்பர் –
மக்களை பிராட்டி காப்பது புருஷகாரம் எளிதில் பலிக்கும் இடம் ஆயிற்று ஸ்ரீ திருவரங்கம் –
ஏனைய இடங்களில் ஸ்ரீ பெருமாளுக்கு பிராதான்யமாக அவர் ஸ்வா தந்த்ரியம் தலை தூக்கி நிற்றல் கூடும்
அதனை அடக்கி கருணையைத் தூண்ட வேண்டிய அருமை உண்டு ஸ்ரீ பிராட்டிக்கு -இங்கோ பிராட்டிக்கு
பிரதான்யமாய் -ஸ்வா தந்த்ரியம் தலை சாய்ந்து கருணை மீதூர்ந்து -இருத்தலின் களி நடம் கண்டு
பரவசம் அடைந்த பெருமாள் வாயிலாக மக்களை அளிப்பது மிக எளிதாய் உள்ளது -இவ்விடத்தில் –
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -ஸ்ரீ பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை-
அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –
ஆக அரும் தவனாகிய ஸ்ரீ எம்பெருமானார் -தாம் கைக் கொண்ட சரணாகதி -தம் தொடர்பு உடையார் அனைவர் திறத்தும் –
பலிப்பதற்கு ஸ்ரீ பிராட்டி உறு துணையாய் இருந்தமை பற்றி
பொன்னரங்கம் என்னும் போதே மையல்-பெருகுவாராய் ஆயினார் -என்க
இனி ஸ்ரீ இறைவன் திரு நாமங்கள் பல இருக்க ஸ்ரீ பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே
ஸ்ரீ எம்பெருமானாருக்கு- மயல் பெருக காரணம் –
தம் ஆசார்யராகிய ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப் பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் –
இவ் விஷயம் ஸ்ரீ பெரிய ஜீயரால் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில்
ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது –
அது இது –ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்- ஸ்ரீ உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –
ஸ்ரீ பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க –
ஸ்ரீ திருவரங்கம்-என்கிற நாலைந்து திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் –
என்று அருளிச் செய்ய –
அத்தை ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று ஸ்ரீ உடையவர் விரும்பி இருப்பர் –
இராமானுசன் –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானாருடைய –
மன்னு மா மலர் தாள் –
இவருடைய திருவடிகளுக்கும் –
மன்னு மா மலர் என்று -நித்தியமாய் மகத்தாய் -விகசிதமான-புஷ்பத்தை போலியாக அருளிச் செய்தது –
லோகத்தில் சாதாரண புஷ்பத்தை எடுத்து சொல்லிற்று அன்று –
லோகத்துக்கு புஷ்பத்துக்கு விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -தொடக்கமானவை –
ஒரு கால விசேஷத்தில்-உண்டாய் – ஒரு காலத்தில் இல்லாதே ஒழியும் இறே –
அப்படி அன்றிக்கே –
யாவதாத்மா பாவியாய் கொண்டு-இருப்பதாய் -விகாசமும் பரிமளமும் மாறாதே மென்மேலும் பெருகி வரும்படி –
அவற்றை உடையதாய் – லோகத்தாரை எல்லாம் ஸ்வ வசமாக்கிக் கொள்ளுகைக்கு ஈடான மகத்துவத்தை
உடைத்தான தொரு-புஷ்பம் கிடைத்தால் அத்தை அவர் திருவடிக்கு ஒரு போலியாக சொல்லலாம் என்றபடி –
அயரேன்-
குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்றும் –
த்யா யேத்ஜ பேத் நமேத் பக்த்யா -என்கிறபடியே-
அத் திருவடிகளை சர்வதா த்யானம் பண்ணிக் கொண்டு -விச்மரியேன் –
அயர்வு -மறுப்பு –
எனாத வந்தோ ஹி பவந்தி லோகே தி நாத் மகார்யாணி சமாரபந்தே -என்கிறபடியே என்னுடைய-பரத்தை எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானார் பரித்த பின்பு -நிர்ப்பரனாய் இருக்கிறேன் என்று கருத்து –
ஆன பின்பு –
அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே –
அருவினை -அனுபவ பிராயாச்சித்தங்களாலும்-போக்க அரியதாய் -அநாதி காலம் தொடங்கி பண்ணப்பட்ட
புண்ய பாப ரூப கர்மங்கள் வந்து
என்னை –
யேன யத்ர சபோக்தவ்யம் சுகம் வா துக்கமே வா சத்தத்த்ராஜ்வா பத்வை வபலாத் தேவே ந நீயதே –என்கிறபடியே –
இத்தனை நாளும் ஸ்வ ஸ்வ பலங்களை அனுபவித்து -சம்சாரத்திலே மூட்டினாலும்-
இப்போது ஸ்ரீ எம்பெருமானாருடைய சம்பந்தம் ஆகிற ராஜ குல மகாத்மயம் உடைய என்னை –
இன்று-
இப்போது
எவ்வாறு அடர்ப்பது –
எந்த உபாயத்தாலே பாதிப்பது -வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்கிறபடியே –
சிம்ஹத்தை கண்ட சூத்ர ம்ருகங்களைப் போலே-கண்டு ஓடிப் போகிற கர்மங்களுக்கு –
சும்மனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே
இரு செவி அறியாதபடி போக வேண்டி இருக்கை ஒழிய என்னைப் பாதிக்க வழி இல்லை என்றது ஆய்த்து –
நயவேன் பிறர் பொருளை -என்கிற பாட்டிலே இவ் அர்த்தத்தை பிரதம பர்வ நிஷ்டரும் அருளிச் செய்தார் இறே –
மலர்த் தாள் அயரேன்
குருபாதாம் புஜம் த்யாயேத் -குருவின் திருவடித் தாமரையை த்யானம்செய்ய வேண்டும் -எனபது அனுஷ்டானத்தில்-வந்த படி –
அரு வினை -இன்று அடர்ப்பதுவே –
வினைகள் அடர்ப்பதற்கு மூன்று வழிகள் உண்டு -அவற்றில்
முதலாவது -இயல்பான தொடர்பு அற்ற -அப்ராப்தமான –வேறு தெய்வங்கள் இடம் ஈடுபாடு –
அது நானிலத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இல்லாத வேறு ஒரு தெய்வத்தை-நயவாமையாலே-என்னிடம் இல்லை-
இனி இரண்டாவது வழி சேவிக்கத் தகாத அற்ப மனிதர்கள் இடம் பொருள் வேண்டி அவர்களைப் போற்றுதல்-
சில மானிடத்தை புயலே எனப் போற்றாத என்னிடம்-அதுவும் இல்லை –
இனி மூன்றாவது வழி -சப்தாதி விஷயங்களை நினைப்பதாகும் –
அதுவும் –மன்னு மா மலர்த்தாள்-அயராத -என்னிடம் இருப்பதற்கு இல்லை –
இனி எவ்வாறு அருவினை என்னை அடர்ப்பது -என்கிறார் –
பிராப்தத்தைச் செய்து அபிராப்தத்தைச் செய்யேன் என்று இருக்கிற என் பக்கல் பாபத்துக்கு வரப் போமோ -என்கிறார் –
உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி ப்ராவண்யம்
உரைத்தாலும் துர்வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன -நான் நின்ற நிலை
இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–64–ஸ்ரீ பொய்கை யாழ்வார் –
1-பிறர் பொருளை விரும்பேன்-/2-கீழாரோடு சேரேன் / 3–மேலார்கள் உடனேயே பழகுவேன் –
4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –/ 5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் –
நயவேன் பிறர் பொருளை –
பிறர் பொருளை ஆசைப்படேன் –த்ரவ்யத்துக்கு உத்கர்ஷமாவது-த்ரவ்யம் தன்னுடைய
நன்மையாலும் -உடையவனுடைய நன்மையாலும் —
த்ரவ்யம் பரிணாமியான அசித் அன்றிக்கே ஆத்ம த்ரவ்யமாய் இருந்தது -யஸ் யாத்மா சரீரம் –பதிம் விஸ்வஸ்ய
என்று ஓதப்படுகிறவன் உடையவன் —
உத்க்ருஷ்டமான ஆத்மாவை -என்னது -என்று இரேன் –
நள்ளேன் கீழரோடு–
ஆத்மாவை என்னது என்று இருக்குமவர்களோடு -இவர்களே கீழார் ஆகிறார் -அவர்களோடு கிட்டேன்
தங்கள் படி ஆக்கிக் கொள்வர் என்று
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் –
உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்
வியவேன்-திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்–
ஸ்ரீ யபதியைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் –
அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஸ்துதியேன் –
வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்
வருமாறு என் என் மேல் வினை —-
அவசியம் அநு போக்தவ்யம்– என்கிற வசனத்தைக் கொண்டு என் பக்கலிலே வர போமோ பாபத்துக்கு -என்கிறார் –
க்ருதக்ருத்யன் என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமான் விரும்பும் ஆத்மாவை அபஹரியேன் -ராவணன் செயலைச் செய்யேன்
கீழார் அவனுக்கு கூட்டுப்படும் மாரீச பிரப்ரு த்திகள்
உயர்ந்தவர் விச்வாமித்திராதிகள் -மஹா தமாநசது –
பெரியோர் -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய-ப்ரஹ்மாதிகளைக் கண்டால் அடுப்படைக் கல்லாக நினைத்து இருக்கும் அத்தனை –
திரு மாலை யல்லது வியவேன் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை –அவசியம் அநு போக்தவ்யம்–என்கிறவை என்னை நலியவோ
உத்தம புருஷஸ் த்வந்ய–என்கிறபடியே
சர்வ விசஜாதியனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஆத்ம த்ரவ்யத்தை என்னது என்று விரும்பேன் –
பிறரதான ஆத்மாவை என்னது என்று இருக்கும் தாழ்ந்த சம்சாரிகளோடு செறியேன் –
உத்துங்கமான ஆத்ம வஸ்து சர்வ உத்தமனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –
சர்வாதிகனான ஸ்ரீ யபதியை ஒழிய புறம்பே சிலரை ஆசிரயணீய தேவதைகள் என்று புத்தி பண்ணி வாய் விட்டுப் புகழேன்
இவ்வாகாரங்கள் நமக்கு உண்டாயத்தே என்று ஆச்சர்யப் படேன் –
இப்படியான பின்பு பகவத் அனுபவ பாத்ரரான நம்முடைய மேல் தன் நிக்ரஹ ரூபமான பாபம் வந்து மேலிடும் படி எங்கனே –
ஸ்ரீ திருமாலை அல்லது வியவேன்–
அவனை அல்லது தைவம் அன்று ஏத்தேன்–என்னவுமாம் –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி ——முதல் திருவந்தாதி-–11-
தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் ——-63-
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால் ——-65–
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது————இரண்டாம் திருவந்தாதி—–21-
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே!
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்,
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ் சோலை
அயன் மலை அடைவது அது கருமமே–2-10-3-
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே–3-9-4-
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply