ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே -மனஸ் தத்வாதிகளுக்கு அபிமாநிகளாய்-இருக்கிற
ஸ்ரீ திரு வாழி முதலான திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே-இந்திரிய ஜயாதிகள்-உண்டாக வேண்டி இருக்க –
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கவே இவை எல்லாம் உண்டாம் என்கிறது –
என் கொண்டு -என்ன –
அந்த ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களும் லோக ரஷண அர்த்தமாக ஸ்ரீ எம்பெருமானார் பக்கலிலே யாயின-என்கிறார் –
அதவா –
அவை எல்லாம் லோக ரஷண அர்த்தமாக ஸ்ரீ எம்பெருமானாராய் வந்து திருவவதரித்தன –என்னவுமாம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
இலைகளாலே நெருங்கி இருக்கிற -தாமரைப் பூவிலே அவதரித்த ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான-
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருக்கையிலே ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்கிற ஸ்ரீ திரு ஆழி ஆழ்வானும் –
அவனோடு ஒரு கோர்வையாய் இருக்கிற ஸ்ரீ நந்தகம் என்னும் -பேரை உடைத்தான ஸ்ரீ கட்கமும் –
ஆஸ்ரித ரஷணத்தில் பொறுப்பை-உடைத்தான ஸ்ரீ கதையும் – அதி ச்லாக்யமான ஸ்ரீ சார்ங்கமும் –
புடையாலே தர்சநீயமாய் ஸ்ரீ வலம்புரி என்னும் பேரை-உடைத்தான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –
கலி தோஷாபிபூதமாய் காணப்படுகிற இந்த லோகத்தை ரஷிப்பதாக ஸ்ரீ எம்பெருமானார்
அதிகரித்த கார்யத்துக்கு சஹா காரியர்களாக கொண்டு -அவர் பக்கலிலே ஆய்த்து என்கிறார் –
அன்றிக்கே
ஸ்ரீ பஞ்ச-ஆயுதங்களும் ஸ்ரீ எம்பெருமானாராய் வந்து திரு அவதரித்து அருளின -என்கிறார் ஆகவும்
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
புலன் அடக்கம் முதலானவை மனம் முதலிய தத்துவங்களுக்கு அபிமானியான
ஸ்ரீ திரு வாழி யாழ்வான் முதலிய ஸ்ரீ திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்க –
ஸ்ரீ எம்பெருமானாரை சேரவே இவை எல்லாம் உண்டாகும் எனபது எங்கனம் பொருந்தும் என்ன –
அந்த ஸ்ரீ திவ்ய ஆயுதங்களும் ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலேயே உள்ளன -என்கிறார் –
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-
ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் -7 வது- பாசுரமாக கொண்டு போனால் ஸ்ரீ திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-
பூ மன்னு-1-/ அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
ஸ்ரீ திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –
பத உரை –
அடை ஆர் -இலை நிறைந்துள்ள
கமலத்து -தாமரைக் கொடியினுடைய
அலர் மகள் -பூவிலே தோன்றியவளான பிராட்டிக்கு
கேள்வன் -கணவனுடைய
கை-கையிலே உள்ள
ஆழி என்னும் -சக்கரம் என்று பேர் பெற்ற
படையோடு -திவ்ய ஆயுதத்தோடு
நாந்தகமும் -நந்தகம் என்னும் திரு வாளும்
படர்-காத்தலில் பரவி நிற்கும்
தண்டும் -ஸ்ரீ கதையும்
ஒண் -விளங்குகிற
சார்ங்க வில்லும் -ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லும்
புடை ஆர் -பக்கத்தில் பருத்த
புரி சங்கமும் -வலம் புரியாய் அமைந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ற சங்கமும்
இந்தப் பூதலம் -இந்த பூமியை
காப்பதற்கு என்று -ரஷிபதர்க்கு என்று
இந் நிலத்தே -இப்பூமியிலே
இராமானுச முனி இடையே -எம்பெருமானார் இடத்திலே
ஆயின -இருப்பனவாக உள்ளன –
வியாக்யானம்
இலை நெருக்கத்தை உடைத்தான தாமரையினுடைய பூவை ஜன்ம பவனமாக வுடையளான-
ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபனானவனுடைய திருக் கையிலே வர்த்திப்பதாய் –
சல ஸ்வரூப மத்யந்த ஜவே நாந்தரிதா நிலம்-சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தத்தே விஷ்ணு கரே ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1 22-71 – –
என்கிறபடியே –மனஸ் தத்வ அபிமானியாய் இருக்கிற ஸ்ரீ திரு வாழி என்று-பிரசித்தமான ஸ்ரீ திவ்ய ஆயுதத்தோடே-
பிபர்த்தி யச்சாசி ரந்த மச்யுதோ த்யந்த நிர்மலம்-வித்யா மயந்துயத் ஜ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-22 74- –என்கிறபடியே –
ஜ்ஞான அபிமானி யான திரு வாளும்–
புத்திரத் யாஸ்தே கதா ரூபேண மாதவே -ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-22 69- – –என்கிற படியே –
புத்ய அபிமானியாய் ரஷணத்திலே பரந்து இருக்கும் ஸ்ரீ கதையும் –
பூதாதி மின்த்ரியாதிஞ்ச த்விதா ஹன்கார மீச்வர-பிபர்த்தி சங்க ரூபேண சாரங்க ரூபேண ச ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-22-70 –
என்கிற படியே இந்திரிய காரணமான சாத்விக அஹங்கார அபிமானியாய் இருக்கிற-விலஷணமான
ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு நாமத்தை உடைய திரு வில்லும்
பூத காரணமான தாமச அஹங்கார அபிமானியாய் மிக முழங்கு கைக்கு உறுப்பாம்படி
புடை பருத்து தர்சநீயமான சந்நிவேசத்தை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும்
இந்தப் பூதலத்தை ரஷிக்கைக்காக வென்று -இந்தப் பூதலத்திலே ஸ்ரீ எம்பெருமானார் பக்கலிலே ஆயின –
இவர் பக்கலிலே ஆகையாவது –
இவர் நினைவைக் கடாஷித்து நின்று அதிகரித்த கார்யத்துக்கு சஹகரிக்கை –
அடையார் கமலம் -என்று தொடங்கி–புடையார் புரி சங்கமும் –
பூதலம் காப்பதற்கு -என்று இந்நிலத்தே இராமானுச முனி இடையே ஆயின -என்று அந்வயம் –
மற்றைப் பஷத்தில்
அடையார் கமலம் -என்று தொடங்கி –புடையார் புரி சங்கமும் இந்தப் பூமியை ரஷிக்க வேணும் என்று-
இந்த பூமி தன்னிலே நடுவே ஸ்ரீ எம்பெருமனாராய் அவதரித்தன -என்கை-
இத்தால்-இவருடைய விரோதி நிரசன சாமர்த்த்யத்தைப் பற்ற ஸ்ரீ பஞ்ச ஆயுத ஆவேச அவதாரம் என்று-
பிரபாவ கதனம் பண்ணினார் ஆயிற்று
அடை-இலை
படை-ஆயுதம்
படர்தல்-பரம்புதல்–
ஆழி -மனஸ் தத்வம் / கட்கம்-நந்தகம் -வாள்-கத்தி -அசி -ஞானம் -அஞ்ஞானம் உறை /
தண்டு -கதை -கௌமோதிகம் புத்தி தத்வம் -உறுதி /சார்ங்கம் -வில் சாத்விக அஹங்காரம் /
சங்கம் -பாஞ்ச ஜன்யம் -தாமச அஹங்காரம் அபிமானி /
இடை -சஹகாரி என்றுமாம் –
விரோதிகளுக்கு ஆயுதம் ஆஸ்ரிதற்கு ஆபரணம் இரண்டு ஆகாரங்களும் ஸ்ரீ ஸ்வாமிக்கு உண்டே –
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் –
தாமரை தான் -கம்பீராம்பஸ் சமுத்பூதமானால் –செவ்வி நாற்றம் -குளிர்த்தி முதலான குணங்கள் எல்லாம் மிகுந்து
இலை நெருக்கத்தை உடைத்தாய் இருக்கும் இறே
அப்படிப் பட்ட தாமரை பூவின் உடைய பரிமளம் தான் -ஒரு வடிவு கொண்டால் போல் இதிலே ஈடுபட்டு-
விட மாட்டாதே திரு வவதரித்த ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான -ஸ்ரீ பரவாசுதேவனுடைய –அடை-இலை –
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் –
அலர் மகளான ஸ்ரீ பிராட்டியினுடைய சந்நிதியாலே ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் அழிப்பனவாக ஆகவில்லை-
அளிப்பவன வாயின –
இவள் இல்லாத போது ஆயுதங்கள் இராவணாதியரை அழித்தன –
உள்ள போது ப்ருஹ்மாஸ்த்த்ரமும் காகத்தை அழிக்க வில்லை –
காகம் காக்கப் பெற்றது –கருணை வடிவினளான இவள் சந்நிதியில் கேள்வன் காருணிகனாக அன்றோ இருக்கிறான் –
அலர் மகள் கேள்வன்–
இவள் இருந்தால் அளிக்கும்- இல்லை என்றால் அழிக்கும் என்பதால்
அஸ்த்ரமே பூஷணம் இவள் இருந்தால் இல்லை என்றால் தானே ஆயுதம் என்பதால்
இங்கு அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -சொல்லி ஆரம்பிக்கிறார் .
கை யாழி என்னும் படையோடு –
திருக் கையிலே நிரந்தரமாக இருந்துள்ள ஸ்ரீ திருவாழி என்கிற ஆயுத விசேஷத்தோடே –
சல ஸ்வரூப மத்யந்த ஜவே நாந்தரிதா நிலம் சக்ர ஸ்வரூபஞ்ச்சமனோ தத்தே விஷ்ணு கரஸ்த்திதம் -என்று
ஸ்ரீ அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே –மனஸ் தத்தவ அபிமானியாய் –கம்பீர ஸ்வபாவனான
ஸ்ரீ திருவாழி ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் கணிசிக்கப்பட -என்றபடி –
விரோதிகளால் ஆஸ்ரிதர் நலிவு பட்டு -ஸ்ரீ கஜேந்த்திரன் ஆழ்வானை போல கூப்பிட –
அக் கூப்பீடு கேட்டு ஆயுதம் வரக் கொள்ளில் பணிப்படும் என்று –
எப்போதும் ஆசிலே கையை வைத்து கொண்டே இருக்கிறான் காணும் –படை -ஆயுதம்-
கை யாழி என்னும் படையோடு –
எப்போதும் கை கழலா நேமியாய்க் கையார்ந்து இருக்கையாலே –கை யாழி-என்கிறார் –
இத் திரு வாழி ஆழ்வான் மனம் என்னும் தத்துவத்திற்கு அபிமானியாய் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
ஸ்ரீ அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் பிரசித்தம்
நாந்தகமும்
பிபர்த்தியஸ் சாசிரத்ன மச்யுதோத் யந்தநிர்மலம் – வித்யா மயந்து தத்ஜ்ஞா நமவித்யாசர்-மசம்ச்த்திதம் -என்கிறபடியே
ஞான அபிமாநியாய் ஸ்ரீ நந்தகம் என்னும் பேரை உடைத்தான
நாந்தகமும் –
ஸ்ரீ நாந்தகம் என்னும் ஸ்ரீ திரு வாள்-ஞானத்திற்கு அபிமானியாய் பிரசித்தம்
திரு வாளும் –படர் தண்டும் –
புத்தி ரப்யாச்தே கதா ரூபேண மாதவே -என்கிறபடியே புத்த்யபிமானி யாய் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை சிஷிக்கும் போது -அதி விபுலமாய் தோன்றும் –ஸ்ரீ கதையும் –படர்தல்-விபுலத்வம் –
படர் தண்டும்
புத்தி தத்துவத்திற்கு அபிமானியாக -ஸ்ரீ கௌமோதகி -என்னும் ஸ்ரீ கதை பிரசித்தம் –
காத்தலில் முற்பட்டு நிற்றலின் –படர் தண்டு -என்கிறார் –
ஒண் சாரங்க வில்லும் புடையார் புரி சங்கமும்
பூதாதிமிந்த்ரியாதி சாத்வித-அஹங்காரம் ஈஸ்வர பிபர்த்தி சங்கு ரூபேண சாரங்க ரூபேண ச ஸ்த்திதம் -என்கிறபடியே
இந்திர-காரணமான சாத்விக அஹங்கார அபிமானியாய் -அத்யந்த விலஷணமாய்
ஸ்ரீ சார்ங்கம் என்னும் பேரை-உடைத்தானை ஸ்ரீ திரு வில்லும் –
பூத கரணமான தாமச அஹங்கார அபிமானியாய் -மிகவும் முழங்குகைக்கு உறுப்பாயும் படி புடை பெருத்து
தர்சநீயமான சமஸ்தானத்தை உடைய ஸ்ரீ வலம்புரி யான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –
ஒண்மை -அழகு
புடை-இடம் –
புரி -வலம்புரி அதாவது தஷினாவர்த்தம்
ஒண் சாரங்க வில்லும் புடை ஆர் புரி சங்கமும் –
இந்திரிய காரணமான சாத்விக அஹங்காரத்திற்கு அபிமானயாய் ஸ்ரீ சாரங்க வில் விளங்குவது பிரசித்தம் –
பூத காரணமான தாமச அஹங்காரத்திற்கு அபிமானியாக ஸ்ரீ பாஞ்ச சன்னியம் என்னும் ஸ்ரீ சங்கம்-விளங்குவது பிரசித்தம் –
நன்கு முழங்குகைக்கு உறுப்பாக புடை பருத்து இடமுடைத்தாய் இருத்தல்-பற்றி புடை ஆர்ந்ததாக சங்கை விசேடிக்கிறார் –
ஸ்ரீ கௌஸ்துபம் -ஆத்மா
ஸ்ரீ வத்சம் -பிரதானம் -மூல பிரகிருதி
புத்தி -ஸ்ரீ கதை
சாத்விக அகங்காரம் -ஸ்ரீ சார்ங்கம்-சார்ங்கம் உதைத்த சர மழை போல..
தாமச அகங்காரம் -ஸ்ரீ சங்கு -முழங்குதற்கு புடை பெருத்து வலம் புரி –
ஆழி போல் மின்னி -ஸ்ரீ சக்கரம்-மனசு
ஸ்ரீ வன மாலை -பஞ்ச பூதங்கள்
தன் மாத்ரைகள் முத்து மாணிக்கம் மரகதம் வைரம் நீலம்
அம்பு- இந்த்ரியங்கள்
கத்தி- ஞானம்
உறை அவித்யை அஞ்ஞானம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் – ஸ்ரீ பாஞ்ச சன்யம் அம்சம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் -ஸ்ரீ கதை அம்சம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் – ஸ்ரீ நந்தகம்-ஸ்ரீ கட்கம் அம்சம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ சக்கரம் அம்சம்
ஸ்ரீ திரு மங்கை- ஆழ்வார் – ஸ்ரீ சார்ங்கம் அம்சம்
இந்தப் பூதலம் காப்பதற்கு என்று –
பரிதர்ச்ய பானமாய் கீழில் பாட்டில் போல் கலி சாம்ராஜ்யம் பண்ணி
வேத மார்க்கத்தை மூலையடியே நடத்திக் கொண்டு போருகிற-இருள் தரும் மா ஞாலத்தை ரஷிக்கைக்காக -என்று –
இந்த பூதலம் –
கீழ்க் கூறியபடி செறு கலியால் வருந்திய ஞாலம் என்றபடி-இந்நிலத்தே ஆயின
விண்ணாட்டவரான ஸ்ரீ திவ்ய ஆயுத புருஷர்கள் அருவருக்கத் தகுந்த இந்த உலகத்தில் ஆயினவே என்றபடி –
இடையே
மத்யே வந்து –
இந்நிலத்தே -ஸ்ரீ நித்ய சூரிகளான இவர்கள் அத்யந்த ஹேயமாய் அருவருக்கும் படியான இந்த-லோகத்திலே-
இராமானுச முனி யாயின
ஸ்ரீ எம்பெருமானார் தாம் மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற இந்த-ஜகத் ரஷண கார்யத்துக்கு
தாங்கள் சக கரிக்கைக்காக-இவர் பக்கலிலே ஆயின –ஸ்ரீ எம்பெருமானார்க்கு-கை யாளாக இருந்தன என்றபடி –
அன்றிக்கே-
இந்த லோகத்தை ரஷிக்கைகாக ஸ்ரீ பஞ்சாயுதங்களும்-தாங்களே வந்து லோகத்திலே –ஸ்ரீ எம்பெருமானாராய் அவதரித்தன -என்னவுமாம் –
பிரதயன் விமதேஷூ தீஷ்ணா பாவம் பிரபுரச்மத் பரி ரஷனே எதீந்திர-அப்ர்தக் பிரதிபன்ன அன்மயத்-
வைர வவர்த்தே பஞ்சபி ராயுதைர் முராரே -என்று இவ் அர்த்தத்தை ஸ்ரீ அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –
இராமானுச முனி இடையே யாயின –
ஸ்ரீ இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –
அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே ஸ்ரீ இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-
இனி
இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன என்று பொருள் கொள்ளலுமாம் –
இதனால் பகை களைந்து காப்பதில் உள்ள திறமையைப் பற்ற ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களின் ஆவேச அவதாரமாக
ஸ்ரீ எம்பெருமானாரின் பிரபாவத்தை வருணித்தார் ஆயிற்று –
இடையே
நடுவே-பராங்குச பரகால யதிவராதிகள்
இடையே-
ஆழ்வார் ஆச்சார்யர் நடுவில் இடையே தோன்றினார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ யதிராஜ சப்ததியில் –
பிரதயன் விமதேஷூ தீஷணபாவம் பிரபுர ஸமத் பரி ரஷன
யதீந்திர அப்ருதக் பிரதிபன்ன யன் மயத்வை வவ்ருதே பஞ்ச-ப்ராயுதைர் முராரே -என்று தனிப் பட்டு தோன்றாது –
ஸ்ரீ எம்பெருமானார் மயமாகவே பஞ்ச ஆயுதங்களும் வளம் பெற்றன –
அத்தகைய ஸ்ரீ யதிராஜர் பிற மத விஷயங்களில் தம் கொடிய தன்மையை வளர்ப்பவராய்
நம்மைக் காப்பாற்றுவதில் திறன் படைத்தவராக இருக்கிறார் -என்று அருளிச் செய்தது –
இந்த நிர்வாஹத்திற்கு ஏற்புடையதாக உள்ளது –
ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே –
அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-ஸ்ரீ எம்பெருமானாரைக் கொள்வது ஸ்ரீ மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –
இங்கனம் கொண்டால்-ஸ்ரீ ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் –
ஸ்ரீ பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்-ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை -என்று உணர்க –
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -1-
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கை களாலே வந்து அச்சோவச்சோ -1-8-2-
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை யிராமனை–4-1-2-
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் –4-7-5-
கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கத்திக் கருடன் என்னும் வென்றிக் கடும் பரவையிவை யனைத்தும் புறம் சூழ் காப்ப –பெருமாள் திருமொழி ––1-8-
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் என்னும் -திரு வாய் மொழி–7-2-6-
அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்–8-10-9-
திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply