Archive for April, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –28-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் இத்யாதி —

April 9, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மன பூர்வோ வாகுத்தர -என்னும் மனஸ்ஸூக்கு அநந்தரமான வாக்குக்கு
அவர் விஷயத்தில் உண்டான-ப்ராவண்யத்தை கண்டு ப்ரீதர் ஆகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே மனச்சினுடைய சம்ருத்தியைச் சொல்லி -இதிலே –
வாக்கு உள்ள சம்ருத்தியைச் சொல்ல ஒருப்பட்டு -துர் புத்தியான கம்சனை சம்ஹரித்து -அதி கோமளமான
ஸ்ரீ பாதங்களை உடைய-ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நேகியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ பாதங்களை ஆஸ்ரயியாத
ஆத்மா அபஹாரிகளுக்கு அகோசரரான ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறொரு விஷயத்தை
என் வாக்கானது ஸ்துத்திக்க மாட்டாது –ஆகையாலே இப்போது எனக்கு ஒரு அலாப்யலாபம் சேர்ந்தது என்று வித்தார் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

என் மேன்மைக்கு ஒரு குறையும் ஏற்படாது -நீர் உம் வாயாலே -கண்டு உயர்ந்தேன் -என்றீரே –
காண்டலுமே -வினையாயின எல்லாம் விண்டே ஒழிந்தன -ஏன் -உமது நெஞ்சம் தனியாய்-தளர வேண்டும் -என்று
ஸ்ரீ எம்பெருமானார் தேற்ற -தேறின ஸ்ரீ அமுதனார் –மனத்தைப் பின் பற்றி –வாக்கு அவர் திறத்து ஈடுபடுவதை கண்டு
உவந்து அருளி செய்கிறார் –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

பத உரை-
நெஞ்சில்-இதயத்தில்
கறை கொண்ட -சீற்றத்தை உடையனான
கஞ்சனை-கம்சனை
காய்ந்த -சீறின
நிமலன்-குற்றம் அற்றவனும்
நங்கள்-நம்முடைய
பஞ்சித் திருவடி -பஞ்சு போலே மெல்லிய திருவடிகளை உடைய
பின்னை தன் -நப்பின்னையினுடைய
காதலன் -அன்பனுடைய
பாதம்-திருவடிகளை –நண்ணா -ஆஸ்ரயிக்காத
வஞ்சர்க்கு -வஞ்சகர்களுக்கு
அரிய -நெருங்க இயலாத
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ் அன்றி -குணங்களை ஒழிய
என் வாய் – என்னுடைய வாக்கு
கொஞ்சி -மழலையில் குழறி
பரவ கில்லாது -ஸ்தோத்ரம் செய்ய இயலாததாய் உள்ளது
இன்று -இந்நாள்
என்ன வாழ்வு -எப்படி பட்ட வாழ்வு
கூடியது -கிட்டியது –

தீய புந்திக் கஞ்சனுன் மேல் சினமுடையன்-ஸ்ரீ பெரிய திருமொழி – -2 2-5 – -என்கிறபடியே –
ஹ்ருதயத்தில் சீற்றத்தை உடையனான கம்சனைச் சீறின ஹேய பிரத்யநீகனாய் ஆஸ்ரித ஜன அபிமானியாய்
பஞ்சிய மெல்லடிப் பின்னை -ஸ்ரீ பெரிய திரு மொழி – 3-6 4- – என்கிறபடியே பஞ்சு போலே மிருதுவான
திருவடிகளை உடையளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்க்தனானவன் உடைய திருவடிகளை-ஆஸ்ரியாத
ஆத்ம அபஹாரிகளுக்கு துர்லபரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய-குணங்களை ஒழிய
என்னுடைய வாக்கானது முக்த்த ஜல்பிதமாகக் கொண்டு அடைவு கெட ஏத்தாது –
இன்று எனக்கு கூடினதொரு வாழ்வு இருந்த படி –

நிமலன் –
தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -ஜிதந்தே ஸ்தோத்ரம் -2 – என்கிற-பொதுவான சம்பந்தமும் கிடக்கச் செய்தே –
ஆஸ்ரித விரோதி என்னும் ஆகாரத்தாலே அவனை நிரசிக்கையாலே-வந்த நைர்மல்யத்தைச் சொல்லுகிறது –

கறை –
கறுப்பாய் சீற்றத்தை சொல்லுகிறது
அன்றிக்கே
கறை என்று தோஷமாய் மனசிலே தோஷத்தை உடையனான என்னவுமாம் –

பஞ்சி-
பஞ்சு

கொஞ்சுதல்-
அபூர்ண உக்தியைச் சொல்லுதல் –
மனம் மொழி மெய் மூன்றுமே சேர்ந்து ஈடுபட வேண்டுமே
உளம் தொட்டு -தீங்கு நினைந்த காஞ்சனை காய்ந்த -செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-
அடியார்க்கு ஆட் படுத்திய நிமலன் -என்றுமாம் –
கிளி போலெ கொஞ்சி பரவும் பாசுரம்
வஞ்சர் -ஆத்ம அபஹாரி – ஜனகன் கும்பனானான் என்கிறார் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
குற்றமே இல்லை என்பவள் அன்றோ ஸ்ரீ நப்பின்னை
தென்னரங்கன் தென்னத்தியூர் இருப்பிடம் வேங்கடம் சொல்லுவார் மேலே –
அவையும் ஸ்ரீ ராமானுஜர் பெருமை சொல்லவே

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை
கம்சன் அசரீரி வாணி சொன்ன வார்த்தையை கேட்ட அன்று தொடங்கி மனசிலே -குரோதத்தை வைத்துக் கொண்டு இருந்தான் –
அந்த குரோதம் தமோ கார்யம்-என்கையாலே -அத்தை கறுப்பாக அருளிச் செய்கிறார் –
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் -என்கிறபடியே
ஹிருதயத்தில் சீற்றத்தை உடையனான கம்சனை -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்-இவ் விருத்தாந்தம் பரக்க-சொல்லப்பட்டது இறே

காய்ந்த
உத்ப்லுத் யாருஹ்யதமம் மஞ்சம் கம்சம் சம்பாதயாமாச தச்யோ பரிபபாதாச
க்ருஷ்னே நத்யாஜிதப்ராணா நுக்ரசே நாத்மஜோநர்ப -என்கிறபடியே சம்கரித்த

நிமலன் –
கல்மஷ ரஹீதன் –முன்னே ஒரு மலம் இருந்து அத்தைப் போக்கி கொண்ட படி அன்று –
நைசர்க்கிகமான நைர்மல்யத்தை உடையவன் –
ஹேயப் பிரதி படன்-என்றபடி –
அன்றிக்கே
கம்சனை கொல்லுமளவும் -மாதா பிதாக்களை சிறையிலே இருக்கக் கேட்டு-பொறுத்து இருந்த தொரு மலம் உண்டு –
அவனைக் கொன்று-மாதா பிதாக்களை சிறையில் நின்று விடுவித்த பின்பு-நிர்மலன் ஆனான் என்னவுமாம் –
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோர் தோன்றல் -என்னக் கடவது இறே –
அங்கனும் அன்றிக்கே
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே தம்மை ஸ்ரீ எம்பெருமானார்
திருவடிகளிலே அனந்யாஹராம் படி பண்ணினான் ஆகையால் –நிமலன் -என்கிறார் ஆகவுமாம்-

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்–
கம்சன் அசுரப் பிறப்பாளன் ஆதலின் ஸ்ரீ கண்ணன் திறத்து என்றும் கறை கொண்டவனாய் இருந்தான் –
கறை-சீற்றம்
கறை-கறுப்பாய் சீற்றத்தைக் குறிக்கிறது
அறையோ வென நின்றதிரும் கரும் கடல் -திரு விருத்தம் -62 – என்னும் இடத்தில் இவ்வாறே வியாக்யானம் செய்து
ஆசார்யர்கள் – சிவப்பும் கறுப்பும் வெகுளிப் பொருள்-என்று மேற்கோள் காட்டுவர் –
நெஞ்சிலே படிந்து விட்டது கம்சனுக்கு -பக்தி உண்டாக வேண்டிய இதயத்தினைப் பற்றிக் கொண்டது கறை –
அது சொல் அளவிலே அமைந்து இருப்பின் கண்ணன் காய்ந்து-இருக்க மாட்டான் –
தீய புத்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் -பெரி யாழ்வார் திரு மொழி – 2-2 5- –என்றபடி
புத்தி கெட்டு விட்டது கம்சனுக்கு -கருத்து அளவும் உட் புகுந்து ஆராய்ந்து -சிறிது அளவேனும் நன்மை -அதாவது –
அனுகூலனாகும் -வாய்ப்புத் துலங்காத போது -தான் -வேறு வழி இன்றி –
ஸ்ரீ கண்ணன் காய்ந்து கை விடுவது –
தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –ஸ்ரீ திருப்பாவை -25-
அவன் கைக் கொள்ளுவதற்கு புறமே அமையும் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -ஸ்ரீ திருவாய் மொழி – 5 1-1 – என்று
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்தது காண்க –

சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து
அறிந்த பின்னரே -காய்ந்து கை விடுகிறான் ஸ்ரீ கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன
நின்ற நெடுமாலே – என்றாள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ திருப்பாவையிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என்
முன்னைக் கோளரியே -திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் –

இனி கறை -தோஷம் ஆகவுமாம்-
தோஷம் இன்னது என்று குறிப்பிட்டு சொல்ல இயலாமையாலே-பொதுப்பட தோஷம் என்கிறார் –
ஸ்ரீ ஆண்டாளும் என்ன தீங்கு என்னாமல்-தீங்கு நினைந்த -என்று-அருளி செய்தது காண்க –
கஞ்சன்-
கம்சன் என்பதன் சிதைவு –
நாய்க்குடலுக்கு நறு நெய் தாங்காதது போலே தன் அகத்தே வந்து அவதரித்த ஸ்ரீ கண்ணனை-அனுபவிக்க கொடுத்து
வைக்காமையாலே -அன்றே ஸ்ரீ கண்ணன் ஆய்க்குலம் புக வேண்டியதாயிற்று –
பணம் இருந்தும் அனுபவிக்காத கஞ்சனாயினான் என்பதும் கஞ்சன் என்னும் சொல்லாலே தோற்றும் அழகு காண்க –

காய்ந்த நிமலன் –
காய்தல்-சீறுதல்
காரணம் இன்றி சீற்றம் கொண்டான் கஞ்சன் -அது அசஹ்யா அபசாரம் -எனப்படும் –
கரணம் இன்றி பகவத் பாகவத விஷயம் என்றாலே பொறுக்க ஒண்ணாத இயல்பே அசஹ்யா அபசாரம் -என்க-
ஒழித்து வளரத் தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்தமையாலும் -சாது சனத்தை நலிகையாலும் –
கம்சன் அசஹ்யா அபசாரம் புரிந்தவன் ஆகிறான் –
தேவர்கட்கும் அசுரர்கட்கும் தெய்வம் பொதுவாய் இருந்தாலும் கம்சனைக் காய்ந்தது —
ஆஸ்ரிதர்கள் அல்லல் தவிர்க்க அசஹ்ய அபசாரம் பற்றி அளித்த தண்டனையே ஆதலின் –
தெய்வத்துக்கு அது குறையாகாது -என்பார் –நிமலன் –என்றார்
மலம்-தோஷம் அது அற்றவன் நிமலன்-வட சொல்-

கஞ்சன் கொண்ட கறை -பூதனை முதலியவர்களை ஏவுதல் முதலிய தீங்குகளை விளைத்தது
நிமலன் காய்ந்தது -கம்சனை வதம் செய்தல் -என்னும் நல் செயலை விளைத்தது –
கஞ்சன் கறை காரணம் அற்றது -ஆதலின் அது தோஷம் ஆயிற்று
நிமலன் காய்தல் ஆஸ்ரிதர்கள் நலி உற்றமை யடியாக வந்தது –
ஆதலின் அது தோஷம் ஆகாது -குணம் ஆயிற்று -என்க-
அவுணன் பொங்கவாகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் –ஸ்ரீ பெரிய திருமொழி 1-7-1–

அமரேஷு மமாவஜ்ஞா ஜாயதேதைத்ய புங்க்வா
ஹாஸ்யம் மே ஜெயதே வீரா தேஷூயத் நப ரேஷ்வபி
ததாபி கலு துஷ்டா நாம் தேஷாமப்ய திகம்மயா
அபகாராய தைத் யே ந்தரா யாத நீயம் துராத்மா நாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்லோகம் –
அசுரத் தலைவர்களே -தேவர்கள் விஷயத்தில் எனக்கு அலஷ்யம் ஏற்படுகிறது – அவர்கள் என்ன முயற்சி-செய்திடினும்
எனக்கு சிரிப்பு வருகிறது -ஆயினும் கெட்ட மனம் படைத்த அக்கொடிய அமரர்க்கு-அதிகமான அபகாரங்களை செய்ய
நாம் முயல வேண்டும் -ஆஸ்ரிதர்கள் இடம் கம்சன் அபசாரப் படுவது முதலியவற்றை நாம் காணலாம்-

இனி வாளியினால் மாள முனிந்து -எனபது போல் அல்லாமல்-கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் போலே ஆளிட்டு -ஸ்ரீ அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –குஞ்சி பிடித்து இழுத்து –
மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-வதம் செய்தமையால் –
ஸ்ரீ கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம் –
இவ்விடத்தில் -பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நங்கள் பஞ்சித் திருவடி பின்னை தன் காதலன் –
நங்கள் பஞ்சித் திருவடி –
பஞ்சிய மெல்லடி பின்னை –என்கிறபடியே -பஞ்சு போலே சுகுமாரமான திருவடிகளை உடையாளான –
அன்றிக்கே
அத்யந்த-புஷ்பகாச சுகுமாரி ஆகையாலே -கடினமான பூமியிலே -திருவடிகளை வைத்தால் வாடும் என்று நினைத்து –
பஞ்சு மேல் அடியை இட்டு திரியும்படியான திருவடிகளை உடையாள் -என்னவுமாம் –

பின்னை தன் –
இப்படிப்-பட்ட சௌகுமார்யத்தை உடையளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு
பின்னை தன் காதலன் –
என் போல்வார் எல்லார்-உடையவும் ஈஸ்வர நிக்ரஹ ஹேதுவான அபராதங்களை -அவனாலே பொறுப்பித்து நம்மை ஆஸ்ரயிப்பைக்காக
அவனோடு அநேக அவதாரங்களை பண்ணினாள் ஆகையாலே -நமக்கேயாய் இருக்கிறாள் என்று நினைத்து –நங்கள்-என்கிறார் –
ஆக ஆஸ்ரிதர் ரஷண அர்த்தமாக அவதரித்து -அதி சௌகுமார் யத்தை வுடையளான
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி தனக்கு ஸ்நிக்தனான-என்றபடி –

ஸ்ரீ ஜனக ராஜன் -தன் பூமியில் உள்ள இடையர்க்கு எல்லாம் தலைவனாய் -கும்பன் என்னும் பேரை உடையவன்
ஆனவன் -இடையர் கோஷ்டியிலே ஏழு வ்ருஷபங்கள் -அசூரா வேகத்தாலே மகா பல வீர்யவத்துக்களாய் கொண்டு –
இருந்த ராஜ்யங்களை எல்லாம் பாதிக்கத் தொடங்கினவாறே -அவன் கும்பனை அழைத்து பயப்படுத்த –
அவனும் நப்பின்னை பிராட்டி என்று எனக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு -இந்த வ்ருஷபங்களை சம்ஹரித்தவனுக்கு
இந்தப் பெண் பிள்ளையை கொடுக்க கடவன் என்று பிரதிக்ஜை பண்ணினேன் -என்ன –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கும்பன் மாதூலன் ஆகையாலே இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு சடக்கென –
அங்கே சென்று ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைப் பார்த்து –
அவள் திறத்திலே அதி வ்யாமுக்தனாய் கொண்டு -அவளோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தங்களான
சப்த வ்ருஷபங்களையும் -ஒருக்காலே ஊட்டியாக தழுவி -சம்ஹரித்தான் என்று புராணங்களிலே பிரதிபாதிகமான
இந்த அபதாநத்தைக் கொண்டு -காதலன் -என்று அருளிச் செய்கிறார் –
தள வெழ் முறுவல் பின்னைக்காய்-வல்லானாயர் தலைவனாய் – இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –இப்படிப் பட்ட ஸ்ரீ கிருஷ்ணனுடைய-

நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் –
பஞ்சிய மெல்லடிப் பின்னை -பெரிய திரு மொழி – 3-4 4- -என்றும்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம்-பெரிய திரு மொழி – 3-7 7- – என்றும்
ஸ்ரீ திரு மங்கை மன்னன் அருளிய திரு மொழியை அடி ஒற்றிய படி –
தன் வடிவு அழகாலே கண்ணனை துவக்கி -நம் குற்றம் அவன் கண்ணில் படாதவாறு செய்து –
குற்றவாளராகிய நாம் சற்றும் கூசாது -ஸ்ரீ கண்ணனைப் பற்றும் படி செய்து தன் அபிமானத்தை நம் மீது-காட்டலின் –
நங்கள் பின்னை-என்கிறார்-

என் திரு மகள் சேர் மார்பன் போல ஸ்ரீ தாயார் திருவடியில் ஒதுங்குவார்கள்
ஆஸ்ரித ஜன அபிமானி இவள் தான்-
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

இறைவனுக்குத் தேவிமார் மூவர்-
திருமகள்-பூமி-பின்னை-என்பவர் அம் மூவர் –
இவர்கள் இறைவனோடு உயிர் இனங்களை இணைப்பவர்கள் –
குற்றம் புரியாதவர் எவரும் இலர் -என்று இறைவனது சீற்றத்தை ஆற்றி இணைத்து வைப்பவள் திரு மகள் –
சீற விடாது பொறுமைக்கு உள்ளாக்குபவள் பூமி தேவி –
காண்பதும் பொறுப்பதும் எதற்காக -குற்றத்தை காண ஒட்டுவானேன் என்று தன்
அனுபவத்தில் மூழ்கி மயங்கும்படி பண்ணி அவன் கண்ணில் குற்றம் படாதபடி செய்து இணைப்பவள் ஸ்ரீ பின்னை –
இதனை வேதாந்த தேசிகன் -தயா சதகத்தில் –
நிசாமயதுமாம் நீளா யத்போக பட லைர்த்ருவம் பாவிதம் ஸ்ரீ நிவாசச்ய பக்த தோஷஷ் வதர்சனம்-என்று
எவளுடைய போக படலங்களாலே -போகத்தால் உண்டான கண் ரோகத்தினாலே –
போக படலங்க உடைய சமூஹங்களாலே -ஸ்ரீ நிவாசனுக்கும் பக்தர்கள் உடைய தோஷங்களில்- பார்வை இல்லாமை -ஏற்பட்டதோ
அத்தகைய ஸ்ரீ நீளா தேவி -ஸ்ரீ நப்பின்னை-என்னைக் கடாஷித்து அருள்க –என்று அழகு பட வருணித்து உள்ளார் –
இங்கனம் மூவருள் ஸ்ரீ பின்னை முன்னைய இடத்தை பற்றி நிற்பவள் ஆதலின் -அவள் காதலன் பாதம் நண்ணுவது மிகவும் எளிது –
ஆயினும் இழக்கின்றனரே என்னும் இரக்கம் தோற்ற-
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா -என்கிறார் –

பஞ்சித் திருவடி –
பஞ்சு போன்ற மெல்லிய திருவடி-செம் பஞ்சியை உடைய திருவடி ஆகவுமாம்-
நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –
பகை களைதலும் -நலம் பேணுதலும் முறையாக பேசப்படுகின்றன
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு இங்குப் பிறந்ததும்
விண்ணோர்கள் தூபம் தரா நிற்க ஓர் மாயையினால் அடலாயர் தம்கொம்பினைக் காதலித்து
வல்லானாயர் தலைவனாய் வந்ததும் -முறையே இதுகாறும் பேசப்பட்டன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு –
திருவடிகளை ஆஸ்ரயியாத வஞ்சகருக்கு –
யோந்யதா சந்தமாத்மான மன்யதா ப்ரதிபத்யதே -கிம்தே ந ந கிர்தம் பாபாம் சோரேணா த்மாபஹாரிணா -என்கிறபடியே
த்வம் மே என்றால் அஹம் மே -என்னும்படியான ஆத்மா அபஹாரிகளுக்கு –
நமாம் துஷ்க்ர்தி நோ மூடா –ப்ரபத்யந்தே நராதம -மயாயாப ஹ்ர்தஜ்ஞானா ஆசூரிம் யோநி மாஸ்ரிதா -என்றான் இறே ஸ்ரீ கீதாசார்யானும் –
அப்படிப் பட்ட வஞ்சகருக்கு –

அரிய இராமானுசன் –
ஆஸ்ரயிக்கைக்கு கடிநராய்-சூதுர்லபரான ஸ்ரீ எம்பெருமானாருடைய-புகழ் அன்றி –
கீழ்ப் பாட்டிலே -வஞ்சகமான என் மனசிலே -என்னுடைய தோஷத்தை பாராதே அதுவே போக்யமாக அங்கீகரித்து புகுந்து நிற்க –
அத்தாலே -பிரகாசிதங்களான வாத்சல்ய சௌசீல்யாதி-கல்யாண குணங்களை ஒழிய-

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
கல் நெஞ்சினராய் -ஸ்ரீ கண்ணனுக்கே உரிய தம்மை தமக்கே உரியராக மாறுபடக் கொண்டு-
அக்கண்ணனையும் நண்ணாத வஞ்சர்கட்கு -கிட்டுதற்கும் அரியர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் –
பிறர் பொருளை தம்மதாக கொள்வது வஞ்சம்-என்க –
பின்னை தன் பஞ்சுத் திருவடியால் தனக்கு காதலை விளைவித்தது போலே -அவளது தாய் உள்ளத்தை களிப்பிக்க –
கருதிய ஸ்ரீ கண்ணனும் -மக்களுக்கு தன் மீது பக்தி உண்டாக்கி இன்புருவதற்காக தன் அழகிய திருவடிகளை –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மீன்-என்று காட்டிக் கொடுத்த விடத்தும் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது ஸ்ரீ கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –
தன்னை -ஆத்ம ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே ஸ்ரீ எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –எனபது கருத்து –

என் வாய் –
இத்தனை நாளும் பிரதி கூலனாய் போந்த என்னுடைய வாக்கானது –

கொஞ்சிப் பரவ கில்லாது –
அந்ய விஷய ஸ்தோத்ரத்துக்கு சங்கோ சித்து -அத்தை ஸ்தோத்ரம் பண்ண மாட்டாது –
முக்த்த ஜல்ப்பமாய் கொண்டு அறிவு கெட மாட்டாது -கொஞ்சுதல்-அபூர்ண உக்தியாய் சொல்லுதல் –

என்ன வாழ்வு இன்று கூடியதே –
இப்போது இந்த சம்ருத்தி நமக்கு சேர்ந்தது கண்டீரே -இது பெறாப் பேறு-என்று வித்தர் ஆகிறார் –

இராமானுசன் புகழ் அன்று
என்கையாலே –பகவத் குணங்களையும் ஸ்தோத்ரம் பண்ண மாட்டாது என்று
தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் -என்றது ஆய்த்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –ஸ்ரீ பொய்கையார் ஸ்ரீ ஸூக்தி
ஸ்ரீ அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
ஸ்ரீ எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
ஸ்ரீ பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

கில்லாது -முயலிலும் இயலாமை தோற்றுகிறது –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப் போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன்,
மாய மனிசரை என் சொல வல்லேன் என் வாய் கொண்டே?–3-9-8-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-
அவன் பேர் ஒதுவதே நாவினால் உள்ளு –இரண்டாம் திருவந்தாதி -44-
எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் –மூன்றாம் திருவந்தாதி -73-
நாரணனை நம் ஏழு பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –நான்முகன் -64-
நாக்கொண்டு மானிடம் பாடேன்–நான்முகன் -75-
உரைப்பு எல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய் –பெரிய திருவந்தாதி -77-

என்ன வாழ்வு இன்று கூடியதே –
பாதம் நண்ணா வஞ்சரில் சேர்ந்த நான் -ஸ்ரீ எம்பெருமானார் அளவும் வந்து –
அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-வியக்க தக்கது என்பது கருத்து –

இளைய புன் கவிதை போல- எம்பிராற்கு இனியவாறே-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
ஸ்ரீ எம்பெருமானார்க்கு இனியவாறே -என்கிறார் அமுதனார்
ஸ்ரீ பின்னை தன் காதலன் புகழையே பாடாது. எனக்கு கிடைத்ததே என்ன வாழ்வு பெறா பேறு–

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –27-கொள்ளக் குறைவற்று இலங்கி– இத்யாதி —

April 9, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் தமக்கு அநந்யார்ஹர் அளவிலே ஊன்றினவாறே ஸ்ரீ எம்பெருமானார் -இவர் நெஞ்சுக்கு தம்மை –
சர்வ காலமும் -விஷயம் ஆக்கிக் கொடுக்க -பாபிஷ்ட்டனான என் நெஞ்சிலே புகுந்து அருளின இது –
தேவரீர் பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என் நெஞ்சு தளரா நின்றது என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இப்படி இவர் தமக்கு அனந்யார்ஹர் பக்கலிலே பிரதி பத்தி பண்ணின வாறே ஸ்ரீ எம்பெருமானார்
இவருடைய நெஞ்சு -குற்றமே சர்வ காலமும் விஷயமாக்கிக் கொடுக்க -பாபிஷ்டனான என் நெஞ்சிலே
புகுந்து அருளின இது –தேவரீருடைய பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என்று என் நெஞ்சு தளரா நின்றது-என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தன்னை மேவும் நல்லோர் திறத்து மிகவும் ஸ்ரீ அமுதனார் ஈடுபாடு கொண்டு இருப்பது கண்டு ஸ்ரீ எம்பெருமானார் இவர் நெஞ்சுக்கு
தன்னை எக்காலத்திலும் விஷயம் ஆக்கிக் கொடுக்க -கொடிய பாவியான என்னுடைய நெஞ்சிலே புகுந்தது
தேவரீர் மகிமைக்கு மாசு விளைவிக்குமே என்று தனிப்பட்ட என் மனம் தளர்ச்சி அடைகின்றது -என்கிறார் –

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

பத உரை –
இராமானுசா -எம்பெருமானாரே
கொள்ள -வேண்டுவோர் வேண்டியதைக் கொள்ளும்படி
குறைவு அற்று -குறைவு படாது
இலங்கி-விளங்கி
கொழுந்து விட்டு-புதுமை பெற்று
ஓங்கிய -வளர்ச்சி யடைந்த
உன் வள்ளல் தனத்தினால்-தேவரீர் உடைய கொடைத் திறத்தினால்
வல் வினையேன்-பெரும் பாவியான என்னுடைய
மனம்-நெஞ்சிலே
நீ புகுந்தாய் -தேவரீர் வந்து புகுந்து அருளினீர்
இது -புகுந்த இது
வெள்ளை-தூயதும்
சுடர் விடும் -பிரகாசிப்பதுமான
உன் பெருமைக்கு -தேவரீர் உடைய அளவிறந்த ப்ரபாவத்துக்கு
இழுக்கு என்று -குறை என்று
என் தனி நெஞ்சம்-என்னுடைய தனிப்பட்ட மனம் ஆனது
தள்ளுற்று– தளர்ந்து
இரங்கும் -ஈடுபடுகின்றது –

வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொள்ளலாம் படி ஒரு குறைவு அற்று இருப்பதாய் –
கொடுக்கப் பெற்றால் -உஜ்ஜ்வலமாய் -மேன்மேலும் இளகிப் பதித்து -வளர்ந்து இருப்பதான –தேவரீர் உடைய ஒவ்தார்யத்தாலே –
மகா பாபியான என்னுடைய மனசிலே தேவரீர் உடைய-பெருமை பாராதே -வந்து புகுந்து அருளிற்று –
வசிஷ்ட்டன் சண்டாளச் ரேணியில் புகுந்தால் போல்
இப்படிப் புகுந்த விது-பரி சுத்தமாக விளங்கா நின்று உள்ள -தேவரீர் உடைய -நிரவதிக -பிரபாவத்துக்கு –அவத்யம் என்று
ஒரு துணை இன்றிக்கே -தனிப்பட்டு இருக்கிற என்னுடைய நெஞ்சானது தளர்ந்து-ஈடுபடா நின்றது –
தள்ளுதல்-தளர்தல்
இரங்கும்-ஈடுபாடு –

நிரபேஷமாக–தண்மை பார்க்காமல் -தன் பேறாக-சரம புருஷார்த்தம் –அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் –
நீர் அடியேன் உள்ளம் வர உமக்கும் இழுக்கு ஆகுமே -என்று கலங்கும் என் தனி நெஞ்சம்

கொள்ளக் குறைவற்று –
வேண்டுவார் வேண்டுவதை எல்லாம் கொண்டாலும் ஒரு குறைவு இன்றிக்கே –
குறைப்பட்டு இராதே -மகா மேருவானாலும் நித்ய வாசம் பண்ணத் தொடங்கினால் நாளுக்கு நாள் குறைப்பட்டு அழிந்து போம் இறே
இங்கு அப்படி அன்றிக்கே புஷ்கலாவர்த்தகாதி-மேகங்கள் பருகினாலும் சமுத்திர ஜலம் குறைப்பட்டு இராதே
நிச்சலமாய் பூரணமாய் இருக்குமாப் போலே

இலங்கி –
இந்தப் பிரபாவத்தாலே -ஆவிரபூத் ராமானுஜ திவாகர -என்றால் போல் அத்யுஜ்வலமாய் –

கொள்ளக் குறைவற்று இலங்கி –
விரும்பியவர் கொடுத்து வாங்க வேண்டாது -தாம் தாம் விரும்பியதை இஷ்டப்படி தாமே எடுத்துக் கொள்ளலாம் படி
குறைவற்று நிறைந்து உள்ளது -வள்ளல் தனம் -என்றபடி –
இனி கொள்ளக் கொள்ளக் சிறிதும் குறைவு படாதது என்னலுமாம் –
முகில்கள் எவ்வளவு பருகிடினும் நெடும் கடல் போலே தன் நீர்மை குன்றாதது -என்க –
கோரினவர் கொள்வதை தன் பேறாக கொண்டமை –இலங்கி -என்றதனால் தோன்றுகிறது –

கொழுந்து விட்டு ஓங்கிய
சமுத்ரத்துக்கும் இவருடைய வள்ளல் தனத்துக்கும் ஒரு வாசி உண்டு –
அது அதி கம்பீரமாய் பொருந்தி இருந்தபடியே இருக்கும் -இது வள்ளல் ஆனால் -லோகத்திலே-
இவருடைய க்ருபா விஷய பூதர் எல்லாம் வாங்கிக் கொண்டு போனதால் -அதுவே ஹேதுவாக-
பிரகாசித்து -பல்லவித்து -பரம பத பர்யந்தமாக படரா நிற்கும் -இப்படி ஓங்கி வளரா நிற்க –

உன் வள்ளல் தனத்தினால்
இவர் தாம் தம்முடைய அவதார தசையே பிடித்து எல்லாருக்கும்
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அறியாதன அறிவித்து -என்கிறபடியே -விசதமாக தெளியும்படி-உபதேசித்து –
இப்படி பண்ணினோமே என்று ஆறி இருக்கை அன்றிக்கே -சர்வரும் சர்வ காலமும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி –
ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதி பிரபந்தங்களை பண்ணியருளி உபகரித்தார் இறே –
க்ரந்த கரணத்தை வள்ளல் தனம் என்பாரோ என்னில் –
தத்வே நயஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ-போகாபவர்க்க ததுபாயக தீருதாரா -சந்தர்சயன் நிரமிமீத புராண ரத்னம் -என்று
ஸ்ரீ ஆள வந்தாரும் அருளிச் செய்தார் இறே –

உன் வள்ளல் தனத்தினால் –
லோகத்தில் கர்ண சிபி மாந்தாதிகள் வதாந்யராய் அநேகம் பேருண்டு -அவர்கள்
சகாசத்தில் பாத்ரனான அரத்தி வந்தால் அர்த்தங்களைக் கொடுப்பார்கள் என்று பிரசித்தமாய் இருக்கும் –
அப்படி அன்றே தேவரீர் உடைய வள்ளல் தனம் -அர்த்தித்வ நிரபேஷமாக-பாத்ரா பாத்ரங்களை பாராதே –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையே பற்றாசக் கொண்டு -பரம புருஷார்த்தத்தையே கொடுக்க கடவதாக இருக்கும் –

இப்படிப் பட்ட தேவரீர் உடைய ஔதார்யத்தாலெ —வள்ளலுடைய மகாத்மயம் சொன்னீரே -இது உமக்கு தெளிந்தபடி
என் என்னில் –
நான் புறம்பே எங்கே யாகிலும் சென்று கர்ணா கரணியாய் கேட்டு தெளிந்தேனோ இது –
இது ஸ்வபாவத்தால் வந்தது அன்றோ -என்கிறார் –

கொழுந்து விட்டு ஓங்கிய உன் வள்ளல் தனத்தினால் –
கடல் நீர்மை குன்றாமல் இருக்கும் -அவ்வளவு தான் –
வள்ளல் தனமோ -மேலும் மேலும் புதுமை பெற்று ஓங்கி வளருகின்றது –
இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி – நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –
ஏனையோர் வள்ளல் தனம் தன்னையும் மனைவியையும் தவிர மற்றவைகளை அள்ளிக் கொடுக்கும் அளவோடு நிற்கும் –
இவ் வள்ளல் தனமோ தன்னையே என்னுள் புகுத்துவது வரையிலும் –வளர்ந்து உள்ளது –
இவ் வேறுபாடு தோற்ற உன் வள்ளல் தனம் என்றார் –
இனி விரும்பியதை வழங்கும் ஏனையோர் வள்ளல் தனத்தினும்
விருப்பத்தையும் விளைவித்து – வழங்கும் வேறுபாடு தோற்ற உன் வள்ளல் தனம் என்கிறதாகவுமாம்-

கொள்ளக் குறை படும்..புஷ்கலா மேகங்கள் பருகினாலும் -1-சமுத்திர ஜலம் குறையாது போல.பூர்ணம் –
2-அசையாது–3- கரை காண முடியாது —4-பெருமை தாண்ட முடியாது ஆழம் காண முடியாது
பாஷ்யம்–5- பொருள் கலக்க முடியாது ..இலங்கி-தான் பேறாக செய்தல்–ஸ்ரீ ராமானுஜ திவாகரன்-ஒளி விடுகிறான்.

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-119–

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே —ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–120-

வல்வினையேன் மனம் –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் இன்றிக்கே ஒழிந்தாலும் –
திருவடி தன திரு நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -என்கிறபடி -தடஸ்தனாய் இருந்தேனோ –
நான் அறியும் படியே மகா கோரமான பாபங்களை பண்ணினேனே -இப்படி பாபிஷ்டனான என்னுடைய மனசிலே –
பந்தாயா விஷயா சங்கீ ப்பட்ட- என்ன பட்ட மனசிலே

நீ புகுந்தாய்
உபய விபூதி சாம்ராஜ்யத்துக்கு அபிஷேகம் பண்ணப்பட்ட தேவரீர் புகுந்தீர் –
உம்மை என் மனசுக்கு விஷயம் ஆக்கியே நிறுத்தினீர் -என்றபடி –
இத்தைப் பார்த்தால் அத்யந்த பாபிஷ்டனான நான் எங்கே –
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-என்னும்படியா அப்ரதிம பிரபாவத்தை உடைய தேவரீர் எங்கே –
இது சேராச் சேர்த்தி யன்றோ –
சண்டாள வாடிகைக்குள்ளே வசிஷ்டர் புகுந்தால் போலே -இது அதிசாகாச பிரவ்ர்த்தயாய் இருக்கும் -என்றபடி –

வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் –
கண்டு உயரும்படி செய்ததில் திருப்தி யற்று -என் உள்ளே குடியே புகுந்து விட்டார் –
அவ்வளவு வாத்சல்யம் எம்பெருமானாருக்கு
என்னைக் கண்டு அருவருத்து அகல வேண்டியவர் அவர்
கிட்ட நெருங்க ஒட்டாத மகா பாபம் பண்ணினவன் நான் -அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் –
அப்பாபங்கள் தடையாக வில்லை -வரவேற்க வைத்த பொருள்களாக அவை தோற்றின அவருக்கு –
அன்பு அறிவை மறைத்து விட்டது -வசிஷ்ட்ட பகவான் சேரியிலே புகுவது போலே என்னுள்ளே புகுந்து
விட்டார் அவர் -என்கிறார் –

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–-ஸ்ரீ திருவாய் மொழி-1-7-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை ––ஸ்ரீ திருவாய் மொழி1-10-10–

இராமானுச –
எம்பெருமானாரே –

வெள்ளைச் சுடர் –
லோபோகாரமாய் -ஸ்ரமஹரமான சந்திர தேஜச்சுக்கும்-ஒரு களங்கம் உண்டு –
அப்ராக்ருதமாய் -பகவத் கடாஷ விசேஷத்தாலே வந்தது ஆகையாலே தேவரீருடைய தேஜஸ் அப்படிப் பட்டது அன்றே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடி ஸ்ரீ ஆழ்வானை இட்டு என்னை திருத்துவித்து –
அவருக்கு சேஷ பூதனாம்படி க்ர்பை பண்ணி -அருளுகையாலே -அதி நிர்மலமாய் இருக்கும் -என்றபடி –
இப்படிப் பட்ட தேவரீர் உடைய பராபிபவன சாமர்த்தியம் ஆகிற தேஜசை –

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் சுடர்
அடியார்க்கு அடியவர் என்றதும்–ஸ்ரீ எம்பெருமானாரும்–நெஞ்சு முற்றும் வந்து விளங்கினார்.

விடும் –
லோகத்திலே மாம்பழம் இருக்கிற தோப்பை கொள்ளையாக விடும் தார்மிகரைப் போலே –
ச்வசி தாவதூத பரவாதி வைபவா -என்று கொண்டாடும்படி -ஸ்வ ஆஸ்ரிதர்க்கு முற்றூட்டாக கொடுத்து அருளுகிற –
உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று –
நிகமஜலதி வேலா பூர்ண சந்த்ரர் ஆகையாலே -எல்லாருக்கும்-ஒக்க பவ்யராய் இருக்கும் தேவரீர் உடைய
மகத்தான அப்ரதிம வைபவத்துக்கு அவத்யம் -என்று கொண்டு

இழுக்கு இது என்று
ஸ்ரீ பிராட்டி தன்னுடைய க்ருபையை வெளி இடுகைக்காக ராவணன் பவனம்- புகுந்தால் போலே –
அது லோகத்தாருக்கும் ஈஸ்வரனுக்கும் அசஹ்யமாய் இருந்தால் போலே –
அவரும் இவருடைய திரு உள்ளத்தில் புகுந்து நின்றால் -அது அவருடைய மேன்மைக்கு அசஹ்யமாய் –
அதுக்கு அவத்யம் விளைவிக்கும் என்று காணும் இவருடைய அத்யாவசாயம்

வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே என்று பயப்படுகிறார் –
தான் மிக உயர்வது பற்றி ஸ்ரீ அமுதனார் மகிழ் உற வில்லை –
ஸ்ரீ எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –
தான் கீழ் நிலையிலே இருந்தாலும் போதும் -மாசுணாத மேன்மை உடன் எம்பெருமானார் வாழ்ந்து கொண்டு இருப்பதே
தனக்கு தேவை என்கிறார்-அமுதனார் –
அவரது கீழ்மை கறுத்ததாம் -அதாவது மாசு படிந்ததாம் –ஸ்ரீ எம்பெருமானாரது மேன்மையோ வெளுத்ததாம் -மாசற்றதாம் –
கீழ்மை மங்கியது மேன்மை சுடர் விடுவதாயிற்று -இரண்டும் ஒரு விதத்தில் மட்டும் ஒத்து உள்ளன –
கீழ்மையும் அளவு அற்றது -மேன்மையும் அளவு அற்றது –
மேட்டில் இருந்து படு பள்ளத்தில் இறங்கினால் மாசு படியாதா –
மங்கி விடாதா -பெரு மேன்மை என்று பயப்படுகிறார் –
அறவே பாபம் அற்றவர் -மகா பாபி அகத்திலே தங்கினால் மதிப்பை இழந்து விட மாட்டாரா -என்கிறார் –

என் தனி நெஞ்சமே –
மனசிலே-ஒரு க்லேசம் உண்டானவாறே -தனக்கு ஆப்தராய் இருப்பாரோடு சொன்னால் செய்தது சரமகமாய் இருக்கும் –
அதுக்கு நமக்கு ஒரு சகாய பூதர் உண்டோ –
இப்படி பயப்படுகைக்கு தன போல்வார் ஒருவரும் இல்லாமையாலே அத்வதீயமான மனஸ் என்னவுமாம் –
இந்தப் பிரகாரமான மனச்சானது –

தள்ளுற்று இரங்கும் –
தளர்ந்து ஈடுபடா நின்றது -என்று போர நிர்வேதப்படுகிறார் –ஆய்த்து –
தள்ளுதல்-தளும்புதல் – இரங்கும் -ஈடுபாடு –
என் தனிநெஞ்சமே –
இத்தனை நாளும் நான் பண்ணின பிரதி கூல்யத்துக்கு தன்னோடு சதர்சர் இல்லை என்று இருக்கிற-
என்னுடைய மனஸ்ஸூ என்றவும் –

தள்ளுற்று -..தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி –
ஸ்ரீ எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி
தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-மற்று ஓன்று இன்மையின் –
தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –26–திக்குற்ற கீர்த்தி இராமானுசனை-இத்யாதி —

April 9, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் விஷயீ கரித்து அருளின பின்பு –
அவருடைய குணங்களே தமக்கு தாரக போஷக போக்யங்கள் ஆயிற்று என்றார் கீழ் –
அவ்வளவு அன்றிக்கே –
அவர் திருவடிகளுக்குப் அனந்யார்ஹராய் இருக்கும் மகா ப்ரபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
பூர்வ அவஸ்தைகளில் ஓர் ஒன்றே என்னை எழுதிக் கொள்ளா-நின்றது -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

மேகம் போலே உதாரரான ஸ்ரீ எம்பெருமானார் தம்மை விஷயீ கரித்த பின்பு அவருடைய
கல்யாண குணங்கள் -தமக்கு தாரகமாய் இருந்த படியை கீழ்ப் பாட்டில் சொல்லி –
இப்பாட்டிலே –
அவர்க்கு அனந்யார்ஹராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜன்ம வ்ருத்தாதிகளிலே
ஓர் ஒன்றே அடியேனை எழுதி கொள்ளா நின்றது என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானார் என்னை ஏற்ற பிறகு அவர் குணங்களே
எனக்கு தாரகமும் போஷகமும் போக்யமும் ஆயின என்றார் கீழ்-
அவ்வளவோடு அமையாது
அவரையே தஞ்சமாக பற்றி -விடாது நிற்கும் பெருமை வாய்ந்தவர்கள்-பற்றுவதற்கு முன் அவர் பால் இருந்த
அறிவுக்குறை இழிபிறப்பு -இழி தொழில் -இவற்றில் ஒவ் ஒன்றுக்குமே நான் அடிமைப் பட்டு விடுகிறேன் -என்கிறார் –

அவர் குணங்களே தாரக போஷாக போக்கியம் -உயிர்க்கு உயிர்– தித்திக்கும் என்றார் கீழ்
இதில் அவர் திருவடிகளில் அனந்யார்காராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பூர்வ அவஸ்த்தைகளில்
ஓர் ஒன்றே என்னை எழுதி கொள்ளா நின்றது என்கிறார் .

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

பத உரை –
என் செய்வினையாம் -நான் செய்து எனக்கு சொந்தமான கர்மங்கள் ஆகிற
மெய்க்குற்றம்-நிலை நிற்கும் தோஷத்தை
நீக்கி-போக்கடித்து
விளங்கிய -பிரகாசித்த
மேகத்தை- மேகம் போன்றவள்ளன்மை வாய்ந்தவரும் –
திக்கு உற்ற -திசை எங்கும் பரவின
கீர்த்தி-புகழ் படைத்த
இராமானுசனை-எம்பெருமானாரை
மேவும் -விட்டுப் பிரியாது பொருந்தி இருக்கும்
நல்லோர் -நல்லவர்கள்
எக்குற்றவாளர் -எந்த குற்றத்தை உடையராகவும்
எது பிறப்பு -எந்த பிறப்பினை உடையராகவும்
ஏது இயல்வு -எந்த நடத்தை உடையராகவும்
நின்றோர்-பற்றுவதற்கு முன்பு இருந்தார்களோ
அக்குற்றம்-அந்த குற்றமும்
அப்பிறப்பு -அந்த பிறப்பும்
அவ்வியல்வே-அந்த நடத்தையும்
நம்மை-ஞான ஜென்மத்தின் சிறப்பை உணர்ந்த நம்மை
ஆட்கொள்ளும் -அடிமைப் படுத்தா நிற்கிறது –

வியாக்யானம் –
த்விஷந்த பாபக்ருத்யாம்-என்கிறபடி பிறரதாய்-அசல் பிளந்து ஏறிட வந்தது அன்றிக்கே –
என்னாலே செய்யப்பட்ட கர்மம் ஆகிற நிலை நின்ற தோஷத்தை போக்கி-
இவன் விரோதியைப் போக்க பெற்றோம் -என்னும் ப்ரீதியாலே தாம் உஜ்ஜ்வலரான பரம உதாரராய் –
திக்குகள் தோறும் வ்யப்தையான குணவத்தா ப்ரதையை வுடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாரை-
ராமா நுஜபதச் சாயா -ஸ்ரீ ரங்க ராஜஸ்த்வம்- -1 2- -என்கிறபடியே
பதச் சாயாதிகள் போலே அப்ருதக் சித்தமாம் படி பொருந்தி இருக்கும் விலஷணர் ஆனவர்கள்
யாதொரு குற்றத்தை வுடையவராகவும் யாதொரு பிறப்பை வுடையராகவும் யாதொரு வருத்தத்தை வுடையராகவும்
முன்பு நின்றார்கள்-அந்தக் குற்றமும் -அந்தப் பிறப்பும்-அந்த இயல்வுமே –
சிறுமா மனிசர் -திரு வாய் மொழி – 8-10 3- – என்னலாம் படி மகா ப்ரபாவரான இவர்கள்
நிஸ்க்ருஷ்ட ஜன்மாதிகளைப் பரிக்ரஹித்து -தாத்ருசரான நம் போல்வாரும் -இவ் விஷய சமாஸ்ரயண அர்ஹர் –
என்னும் அத்தை தர்சிப்பைக்காக என்று நினைத்து இருக்கிற நம்மை அனுசந்திக்கும் தோறும் எழுதிக் கொள்ளா நின்றது –
இவ்வளவான பிரதிபத்தி பிறந்தால் இறே ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய பிரதிபத்தி குலைந்தது ஆவது
அதவா
2-அவர்கள் விஷயத்தில் அதிமாத்ரா ப்ரவணரான நம்மை என்னவுமாம்
அப்படி இருக்கும் இறே ப்ராவண்ய அதிசயம்
அன்றிக்கே
3-எக்குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் -என்றது
அஹங்கார ஹேதுவான ஜன்ம வருத்த ஞானங்களால் உண்டான ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து
நின்ற நிலையாய் -அவ்வவ ஸ்வபா வங்களே என்னை எழுதிக் கொள்ளா நின்றது என்கிறார் -என்னவுமாம் –

மெய்யாவது -நிலை நிற்கும் அது-
நிலை நிற்கை யாவது -அனுபவ விநாச்யம் ஆதல்-பிராயச்சித்த விநாச்யம் ஆதல் – அன்றிக்கே இருக்கை
என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி என்றது –
மத் க்ருத கர்மம் அடியாக உண்டான தேக சம்பந்த ப்ரயுக்த அஹங்காராதி தோஷங்களை போக்கி என்னவுமாம் –
அப்போதைக்கு வினையாம் -என்றது –
வினையாலே உண்டான என்றபடி-
ஜன்ம வ்ருத்தங்களோடே சகபடிக்கையாலே –எக்குற்றவாளர் -என்கிற இடத்தில்
குற்றம் என்றது ஞானத்தில் குறையாக கடவது –
இயல்வு -வ்ருத்தம்–

எண்ணிலும் வரும்-26-வைபவம் உண்டே -தனிக் கோல் செய்யும் வீவில் சீர் –விலக்ஷண பாசுரம் இது –
அத்புத பாசுரம் -ததீயர் வைபவம் சொல்லும் பாசுரம் –
பதச்சாயா -நிழல் -தண்ட பவித்ரங்கள் -உள்ளங்கை நாயனார் –
குற்றம் உள்ளோரும் ஸ்ரீ எம்பெருமானைப் பற்றலாம் என்று காட்டவே ஸ்ரீ எம்பார் செயல்பாடு –
நிஷ்க்ருஷ்ட ஜென்மம் வ்ருத்தம் ஏறிட்டுக் கொண்டு -நமக்கு காட்டி அருளினார் -என்ற நினைவு வேண்டுமே –
பாகவத அபசாரம் பல விதம் -ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –

1-குற்றம் இருப்பதால் தானே நம் ஆச்சார்யர் உடையவர் திருவடிகளைக் காட்டி ஆட்க் கொண்டார்கள் –
த்யாஜ்ய தேக வியாமோஹம் -இந்த பிறப்பு தானே திருவடி பெற பெற்றது என்பதால் என்றுமாம் –
அதுவே நம்மை ஆட்க்கொள்ளும் என்றுமாம் –
2-உறுதி விசுவாசம் பிறப்பித்தது இந்த குற்றம் இந்த பிறப்பு இந்த இயல்புகள் தானே -என்றுமாம்-
3-உயர்ந்த ஜென்மத்தில் பிறந்து -நாமும் அவர் ஜென்மம் -நினைப்பதே -குற்றம் -தானே -சேர்த்து பார்த்து -நாம் விஸ்வசிக்க பிறந்தார் -என்றுமாம்
4-கண் மூடித்தனமாக ப்ராவண்யம் கொண்ட நம்மை உணர்த்த என்றுமாம்
5-குலம் குடி அனுஷ்டானம் மோக்ஷத்துக்கு ஹேது என்று நினைத்து -அஹங்காரம் போன பின்பு –
நல்ல வேளை தாழ்ந்த ஞானம் -தாழ்ந்த குலம் என்கிற நல்லோர் ஞானம் பிறந்த பின்பு நின்ற நிலை என்றுமாம் –
6-சரீர சம்பந்தத்தால் வந்த குற்றம் இருந்தாலும் என்றுமாம் –
7-தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டு அற்று இருப்பார்களே -என்றுமாம் –
8-அவர்கள் இவற்றால் பட்ட ஸ்ரமம் நம்மை ஆட் கொள்ளும் என்றுமாம் –

நிர்வேதம் வெறுப்பு தானே முதல் படி –
ஏய்ந்த பெரும் கீர்த்தி -திக்குற்ற கீர்த்தி -பாட்டு தோறும் கீர்த்தியும் திருவடியும் விடாதவாறு அமுதனார் –

சயம் தரு கீர்த்தி ராமானுஜன் -தனியன்
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே -5-
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் -12-
திக்குற்ற கீர்த்தி -26-
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி ராமானுஜன் -56-
தன் கீர்த்தியினால் என் வினைகளை பேர் பறியக் காய்ந்தனன் -77-
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே -82-
புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி ராமானுஜன் -92-
பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை ராமானுஜன் -103-
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் -108-

ஆஸ்ரயித்த பின்பு புண்ணியத்துக்கு அஞ்சுமவன் பாபம் பண்ணான் இறே –
ஆக பூர்வாகம் சரணாகதி பண்ணின பின்பு மாய்ந்த -உத்தரவாதம் செய்யான் –
இதனால் அவர்களை சஜாதீய புத்தி கொள்ளக் கூடாது என்று சொன்னபடி –

என் செய்வினையாம்
த்விஷன் தாபபக்ர்த்யாம் -என்கிறபடி அசல் பிளந்து ஏறிட வந்தது அன்றிக்கே –
என்னால் செய்யப்பட அக்ருத்தி கரணாதி ரூபமாய் -பிராயசித்தாதிகளாலே நிவர்த்தியாதே –
நாபுக்தம் ஷீய தி கர்ம கல்ப கோடி சதைரபி – என்னும் படியான கர்மம் ஆகிற –

என் செய்வினையாம் –
வந்த வினை அன்று -நானே பண்ணின வினை என்பார் -செய்வினை-என்றார் –
ப்ரஹ்ம ஞானிகள் முக்தி அடையும் போது தங்கள் புண்யங்களையும் பாபங்களையும் உதறி செல்வதாகவும் –
புண்யங்கள் அவர்கள் நண்பர்கள் இடம் போய் சேர்வதாகவும் –
பாபங்கள் அவர்கள் பகைவர்கள் இடம் போய் சேருவதாகவும் – சொல்லப்படுகிறது –
அங்கனம் வந்த வினைகள் அல்ல -என்னுடைய வினைகள் –நானே செய்தவை அவை எனபது கருத்து –

மெய்க்குற்றம் –
நிலை நின்ற தோஷம் –
வாசா மகோசர மகா குண தேசிகா க்ரய-கூராதிநாத கதிதா கில நைச்ய பாத்ரம் எஷோஹமேவ நபு நர்ஜிக தீத்ர்ச -என்றும்
பூர்வைஸ் ஸ்வ நைச்ய மனு சம்ஹித மார்ய வைர் மாமேவ வீஷ்ய மஹாதாநந ததஸ்தி தோஷம் –
நைச்யந்தவிதம் சடரிபோ மமத்ச்யமேவ மத்தபரோ நம விநோயத ஆவிரஸ்தி-யாவச்சயச்ச துரிதம் சகலச்யஜந்தோ
தாவச்சதத் தததி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிற படி
ப்ரத்யயம் பண்ணி சொல்கிறார் .
மெய்யாவது -நிலை நிற்குமது –
இதி நிலை நிற்கையாவது அனுபவ விநாச்யமாதல் -பிராயச்சித்த வினாச்யம் ஆதல் இன்றிக்கே இருக்கை –
இப்படிப் பட்ட பாபத்தை நீக்கி -வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்கிறபடி
போன இடம் தெரியாதபடி சவாசனமாகப் போக்கி-

மெய்க்குற்றம்
உண்மையான தோஷங்கள்-
உண்மை அழியாது நிலை நிற்கும்
என்னுடைய செய் வினைகளாகிய குற்றமும் அழியாது நிலை நிற்பவை –
ப்ராயசித்ததாலோ அனுபவத்தினாலோ போக்கடித்து கொள்ள இயலாதவை –
இனி ஸ்ரீ ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம் என்னலுமாம்-என்று உரைப்பாரும் உளர் –
இனி மெய்க்குற்றம் என்று
சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு
வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை என்றது ஆயிற்று –

விளங்கிய –
அத்தாலே அத்யுஜ்வலமான –
இவன் விரோதியைப் போக்க பெற்றோமே என்னும் பிரீதியாலே காணும் அவர் தாம் உஜ்வலரானது

மேகத்தை –
வர்ஷூ-கவலாஹகம் போலே பரமோதாரராய் –
மேகத்தை -என்றது முற்று உவமை –

நீக்கி விளங்கிய மேகத்தை –
மேகம் எனபது மேகம் போன்ற வண்மை வாய்ந்தவரைக் குறிக்கிறது –
குற்றம் நீக்கியது வள்ளலாகிய ஸ்ரீ எம்பெருமானாருக்கு தாம் பெற்ற பேறாக தோற்றுவதால் அவர் விளக்கம் எய்துகிறார் என்க-
ஸ்ரீ அமுதனாரை குற்றம் அற்றவராகப் பெற்றோமே என்று மிக்க உவகையுடன் காணப்படுகிறார் எனபது கருத்து –

என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை
வினையேன் வினை தீர் மருந்தானாய் 1-5-6-
சேர்ந்தார் தீ வினைகட்க்கு அரு நஞ்சினை 2-3-6-

மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —
தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-ஆழ்வாருக்கு -இங்கு மெய்யமர் வல்வினை

மேகத்தை -முற்று உவமை
கைம்மான மதயானை இடர் தீர்த்த கரு முகிலை –பெரிய திருமொழி -8-9-1-

திக்குற்ற கீர்த்தி –
ஏய்ந்த பெரும் கீர்த்தி – என்கிற படி அஷ்ட திக்கிலும் வியாபித்து இருக்கிற குணவத்தா பிரதையை உடையரான

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

மேவும் –
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்கிறபடி –
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் -என்னும்படி
அவருடைய திருவடிகளையே பிராப்யமாகவும் பிராபகமாகவும் அத்யவசித்து இருக்கிற

நல்லோர் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -என்கிறபடி -அநந்ய பிரயோஜனரான மகாத்மாக்கள் –
அன்றிக்கே –
மேவும் நல்லோர் –
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா -என்கிறபடி பதாசாயிகள் போல அப்ருதக் சித்தமாம்படி
பொருந்தி இருக்கும் விலஷணமானவர்கள்-என்னவுமாம்-

மேவும் நல்லோர் –என்னை ஆட்கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
ஸ்ரீ எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட்கொண்டு விடுகிறது -என்கிறார் –

எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் –
அந்த மகாத்மாக்கள் ஆஸ்ரயண பூர்வ காலத்தில் –
யாதோர் ஞான சங்கோசம் ஆகிற குற்றத்தை உடையாராகவும் –
யாதொரு உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜாதியை உடையராகவும் –
யாதொரு நிஷித்த அனுஷ்டானம் ஆகிற வ்ருத்தியை உடையாராகவும் நின்றார்கள்-
குற்றம் -ஞான சங்கோசம் -இயல்வு -வ்ருத்தம்-அவர்களுடைய -அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வு –
இவை எல்லாம் அவ்யவதாநேன ஆஸ்ரயண பூர்வ பாவிகள் ஆகையாலும் –
அந்த சரீரத்தோடு தானே ஆஸ்ரயணத்தை பண்ணினார்கள் ஆகையாலும்
சிறு மா மனிசர்-என்னலாம் படி மகா ப்ரபாவரான இவர்களுடைய பூர்வ தசாவஸ்தித
விசேஷங்கள் ஆன இவையே –

நம்மை ஆட் கொள்ளுமே –
1–இவ்வளவு பிரதி கூலித்து போன நம்மையும் தாச பூதராய் க்ரய விக்ரயார்ஹராம்படி எழுதிக் கொள்ளக் கடவன் –
அன்றிக்கே-
2–நம்மை ஆட் கொள்ளுமே –
இப்படி மக ப்ரபாவரான இவர்கள் நிக்ருஷ்ட ஜன்மாதிகளை பரிக்ரஹித்து தாதர்சரான நம் போல்வாரும்
இவ் விஷய சமாச்ரயண அர்ஹர் – என்னும் இடத்தை தர்சிப்பைக்காகா என்று நினைத்து இருக்கிற நம்மை
அனுசந்திக்கும் தோறும் எழுதிக் கொள்ளா நின்ற -என்னவுமாம் –
துராசாரோபி சர்வாசீ க்ர்தக்னோ நாஸ்திக புரா-சமாஸ்ரயே தாதி தேவ ச்ரத்தயா சரணம் யதி-
நிர்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன-என்கிற வசனம் இவ்விடத்து பிரமாணம் –
அப்போது ஆதி தேவ சப்தத்தாலே –
பிரதம ஆசார்யன் என்று தோற்றினாலும் -அந்த சர்வேஸ்வரனே சேஷி என்றபடியாலே – உபதேசித்து உபக்ரமித்தவர் ஆகையாலே –
ஆதி தேவ சப்தமும் -எம்பெருமானாரை சொல்லும் என்ன குறை இல்லை –
அன்றிக்கே
3-ஸ்ரீ எம்பெருமானாருக்கு அனந்யார்ஹமான மகாத்மாக்கள்– எந்த வர்ணம் உடையார் ஆகிலும் –
எந்த வ்ருத்தம் உடையார் ஆகிலும் -எந்த ஸவாபம் உடையார் ஆகிலும் -அந்த வர்ண வ்ருத்த
ஸ்வபாவங்கள் -இவையே நமக்கு உதேச்யமாய் இருக்கும் -என்னவுமாம் –
அந்த மகாத்மாக்கள் எந்த வர்ணத்தில் ஜனித்தாலும் -பிரகிருதி சம்பந்தாயத்தமாய்க் கொண்டு –
அதுக்கு அநு ரூபங்களான ஸ்வபாவ வ்ருத்தங்களும் உண்டாய் இருக்கும் இறே
குற்றங்களே இல்லை யாகிலும் -மணி தர்பணாதி ஸ்வச்சத் த்ரவ்யங்களிலே எதிர் இருந்த
பதார்த்தங்கள் எல்லாம் தோற்றுமா போலே –
நிர்மலரான அவர்களைக் கொண்டு தம்தாமுடைய ஸ்வபாவ வ்ருத்தங்களை அவர்கள் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு
அஜ்ஞராய் பிரமித்து இருப்பார் இறே சிலர் –
அப்படிப்பட்ட ஸ்வபாவ வ்ருத்தங்கள் ஆகிலும் நமக்கு உத்தேச்யம் என்னுதல் –
அங்கனம் அன்றிக்கே
3-அவர்களுக்கு சரீர சம்பந்தத்தாலே ப்ராமாதிகமாய்க் கொண்டு -சில குற்றங்களுண்டாய் இருந்தாலும் –
பத்ம பத்ரமி வாம்பச -என்கிறபடியே
அவர்கள் அவற்றோடு ஒற்று அற்றே இருப்பது -அப்படியே யானாலும்
அவர்களுக்கு அவையும் உண்டாகையாலே நம்மை உத்தரிப்பிக்கைக்கு அவையே போரும் –

இப்படியே ஸ்ரீ எம்பெருமானாருக்கு அனந்யார்ஹராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜன்ம
வ்ருத்தாதிகளால் குறை உண்டானாலும் அவர்கள் நமக்கு ஆஸ்ரயநீயர் -என்று கருத்து
யஸ்மின் மிலேசேபி வர்த்ததே -தஸ்மை தேயம் ததோக்ராஹ்யம்சச பூஜ்யோயா தாஹ்யஹம் -என்று
மிலேச்சன் ஆகிலும் பக்தன் ஆகில் என்னைப் போலே பூஜ்யன் -அவன் பக்கல் ஞான உபதேசம் கொள்ளலாம் –என்றான் இறே –
அபிசேத்சூ துராசொரோபஜேதேமாம் அநந்ய பரந்யாது ரேவ சமந்த வியஸ் சம்யக் வ்யவஹி தோஹிச
மாம் – -திருத் தேர் தட்டிலே அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணா நின்று கொண்டு -ஸ்ரீ கீதாசார்யனான என்னை –
அநந்ய பிரயோஜனாக பஜித்தான் ஆகில் அவன் எப்படிப்பட்ட குற்றத்தை உடையவன் ஆகிலும் –
சாதுரேவ சமந்தவ்ய -என்றான் இறே –
இத்தால் அவர்களுடைய ப்ராமாதிகமான ஸ்வபாவ வ்ர்த்தங்கள் எல்லாம்
அகிஞ்சித்கரம் -ஆஸ்ரய பிராபல்யமே பிரதானமாக அவர்கள் பூஜ்யர் -என்றபடி –

தஸ்மாத் மத் பக்த பக்தாஸ்ஸ-பூஜநீயா விசேஷதே – என்றான் இறே
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே –
நம்மை அளிக்கும் பிராக்களே –எம் தொழும் குலம் தாங்களே – படியாதுமில் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே – என்றும் –
சிறுமா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே -என்றும்
அவர்களுக்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே -என்றும்
இவ் அர்த்தத்தை பத்தும் பத்தாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

பிரத்யஷி தாத்ம நாதா நாம் நைஷாம் சிந்தயம் குலாதிகம் -என்றான் இறே ஸ்ரீ பரத்வாஜ முனியும்
இனி –
4–அக்குற்றம் -என்றதுக்கு -ப்ராமாதிகமாய் -வந்தது அன்றிக்கே – ஆஸ்ரயண அந்தர்பாவி
புத்தி பூர்வாக பரமாய் அர்த்தம் சொல்லில் –
தீபோர்வோத்தர பாப்மனா மஜநநாத் -என்றும் புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்
பாபத்தை பண்ணான் இறே -என்றும் சொல்லுகையாலே –
இவர்களுக்கு அது புத்தி பூர்வகமாக வர வழி இல்லை –
ஜாதேபி -என்கிறபடி பிரகிருதி சம்பந்தத்தாலே -புத்தி பூர்வகமாக பிரசக்தம் ஆனாலும் –
என் அடியார் அது செய்யார் – செய்தாரேல் நன்று செய்தார் -என்றும் சொல்லப்படுகிற பகவத் அபிசந்தி விசேஷத்தாலும் –
வாத்சல்ய ஜலதே – என்கிறபடியே அவன் ஸ்வ ஆஸ்ரிதருடைய குற்றத்தை போக்யமாக கொள்ளும் ஸ்வபாவன் ஆகையாலும் –
இறையும் அகல கில்லேன் -என்று அவனைப் பிரியாதே நித்ய அநபாயினியாய் இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய
புருஷகார பலத்தாலும் குற்றத்தை அவளாலே பொறுப்பித்துக் கொள்ள தட்டில்லை –
ஓர் அஞ்சலி மாத்ரத்தாலே நசிக்கக் கடவதான பாவத்தை -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று ஸ்ரீ கீதாசார்யனும் –
ததைவ முஷ்ணாத்யசுபான்ய சேஷதே –என்று ஸ்ரீ ஆள வந்தாரும் –
சர்வ சப்தத்தாலே சேஷ பத்தா சாமாநாதி கரண்யத்வென வந்த பாவத்தை நிர்தேசிக்கையாலே
அந்த சப்தங்களில் புத்தி பூர்வோத்தரகமும் அந்தர்பவிக்கும் இறே –
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவனுடைய குற்றத்தை அபேஷித்தான் ஆகிலும்
அவனுக்கு ஒரு குற்றம் அடையாத படி பிரபன்னனும் சாவதானமாய் இருக்க வேணும் –
இப்படிப்பட்ட பிரபாவம் அவர்கள் பக்கல் உண்டாய் இருக்கையாலே –அத்தை இட்டு அவர்களை அநாதாரியாதே –
அவர்கள் எனக்கு சேஷிகள் என்று அத்யவசிக்க வேணும் என்றது ஆய்த்து –
இவ்வளவான பிரதி பத்தி பிறந்தால் இறே
இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர் பக்கலிலே -சஜாதீய பிரதி பத்தி குலைந்தது ஆவது –

எக் குற்றவாளர் –எது பிறப்பு -எது இயல்வு -என்று பிறப்பில் குறையும் நடத்தையில் குறையும் பேசப்படுதலின்
இங்கு கூறப்ப்படும் குற்றம் ஞானத்தில் குறைவைக் குறிப்பதாக கொள்ளல் வேண்டும் –
நல்லார் அல்லார் ஸ்ரீ எம்பெருமானாரை மேவார் –
மேவினார் நல்லார் – நல்லார் ஆயின் அவர்கள் இடம் எங்கனம் குறை இருக்க முடியும் -இருக்க முடியாது தான் –
பின்னை அவை அவர்களிடம் எவ்வாறு காணப்பட்டன –
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத்ஸ்வபாவ பாதச்சாயாம் ஆஸ்ரிதோயோ கோபிதஜ் ஜாதியஸ்தாத்ருச சதத் ஸ்வபாவ
ச்லிஷ்யத்யே நம் சூந்தரோ வத் சலத்வாத் -என்று –
திருவடி நிழலை ஆசரிக்கும் எவனோ ஒருவன் – எந்த ஜாதியை சேர்ந்தவனோ -எப்படி பட்டவனோ –
என்ன ஸ்வபாவம் உடையவனோ –
அந்த ஜாதியை சேர்ந்தவனாயும் – அப்படிப்பட்டவனாயும் -அந்த ஸ்வபாவத்தை உடையவனாயும் -அமைந்து
ஸ்ரீ சர்வேஸ்வரன் வாத்சல்யத்தால் அவனை அணைத்து கொள்கிறான் -என்று ஸ்ரீ ஆழ்வான்-அருளிச் செய்தது போலே –
நாம் எவ்வளவு அறிவு கேடராயினும் -இழி குலத்தவராயினும் -நடத்தை கெட்டவராயினும் –
ஸ்ரீ எம்பெருமானாரை மேவி வாழ்வதற்கு உரியவர் ஆகலாம் –
அதனுக்கு அவை தடங்கல் ஆக மாட்டாது -என்று
வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
நமக்கு வாத்சல்யம் சொல்ல வில்லை..குற்றத்தை குணமாக ஈஸ்வரன் மாற்றியதால் அவன் குணங்களின் மேன்மை தெரியும்–

ஸ்ரீ ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –
இவர்களும் தம்மைத் தாழ விட்டுக் கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர் என்று
ஸ்ரீ அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே –
இவர்கள் உடைய எளிமையினுக்கும் அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே -இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 –
என்று ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி –
யயாதி சாபத்தால் அரசு உரிமை இழந்து இழிந்த குலமாக கருதப்பட்ட யாதவ குலத்தை கை தூக்கி விடுவதற்காக
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ கோபாலனாக அவதரித்தது போலேயும் –
பிரளய காலத்தில் நீரில் மூழ்கின பூமியை இடந்து மேல் எடுப்பதற்கு கீழ் புகும் கேழலாய் அவன் அவதரித்தது போலவும் –
அஹங்கார ஹேதுவான குலம் தாங்கும் சாதிகளிலே பிறந்து சம்சாரத்தில் அழுந்தினவர்களை –
உயர்த்துவதற்காக -அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலத்திலே ஸ்ரீ இராமானுசனை மேவும் நல்லோர் அவதரித்து உள்ளனர் –

இவ் வண்ணமே தன் களவை கூட மறைக்க அறிய கிலாமையும் –
தயிர் வெண்ணெய் முதலிய வற்றை களவாடலாலும் –
கோபியரோடு கூடிக்கூத்தாடலாலும் நடத்தை இல்லாமையும் ஸ்ரீ கண்ணன் காட்டிக் கொள்வது போலே –
நல்லோரும் அறியாமையும் நடத்தை இல்லாமையும் தங்கள் இடம் உள்ளனவாக காட்டிக் கொள்கின்றனர் –

ஸ்ரீ வராஹப் பெருமாள் போன்று மாசுடம்பும் மானமில்லாமையும் வாய்ந்து இந் நல்லோர் தோன்றுகின்றனர் –

இங்கனம் இராமானுசனை மேவும் நல்லோர்கள் இடம்
மேவுவதற்கு முன்பு அறிவிலும் பிறப்பிலும் நடத்தையிலும் காணும் குறைகளை -இறைவனுடைய குறைகளைப் போல கருதி –
ஸ்ரீ அமுதனார் -நினைக்கும் தோறும் ஒவ் ஒன்றுக்கும் ஆட்பட்டு விடுகிறார் என்க –
பாகவதர்களை எந்த வகையிலும் -தன்னை விடக் கீழ்ப் பட்டவர்களாகவோ ஒத்தவர்களாகவோ கருதுவது
பாகவத அபசாரம் ஆதலின் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதர்ச பூதரான ஸ்ரீ அமுதனார் –
நல்லோருடைய ஞான ஜன்ம வ்ருத்தங்களை இங்கனம் சீரியனவாக கருதாமல் இருக்க ஒண்ணாது –
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் -என்று தனக்கு பிறப்பாலும் அறிவாலும் நடத்தையாலும்
கீழ்ப் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பது அபசாரம் ஆவது போலே –
ஆசார்ய துல்யர் -என்றும்-
சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும் அதிகர் என்றும் –
நினையாது ஒழிகையும் -அபசாரமாக தலைக்கட்டும் -என்று ஸ்ரீ வசன பூஷண காரர்
அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவு உறத் தக்கது –

இனி
மேவும் நல்லோர் திறத்து பிறந்த மிக்க ஈடுபாட்டினால் -அவர்களுடைய குற்றம் முதலியன நற்றமாய்
ஸ்ரீ அமுதனாரை ஆள் கொள்கின்றன -என்னலுமாம் –
அன்பு முதிர்த்திடின் குன்றனைய குற்றமும் குணமாக கொள்ளப்படும் அன்றோ –

இனி –
நிக்ருஷ்ட -இழி -குலத்தவர்கள் உடைய ஜன்ம ஞான வ்ருத்தங்களை ஸ்ரீ அமுதனார் கருதுவதாக கொள்ளாது –
உத்க்ருஷ்ட -உயர் -குலத்தவர்கள் உடைய ஜன்ம ஞான வ்ருத்தங்களையே கருதுவதாக கொள்ளலுமாம் –
ஸ்ரீ இராமானுசனை மேவும் நல்லோர் –
அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் -உயர் குடிப்பிறப்பும் – அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன –
அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப் பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர் –
இக் கருத்து உருவாவதற்கு முன்பு குலத்தாலும் -அறிவினாலும் -ஒழுக்கத்தாலும் -நாமே உயர்ந்தவர் என்று இறுமாந்து
இருந்த நிலைமைக்கு இப்பொழுது அவர்கள் எள்கி நிற்கின்றனர் –
அஹங்காரத்துக்கு இடம் தந்து நாம்கீழ்ப்பட்டவர்கள் ஆயினோமே என்று தங்களை அவர்கள் நொந்து கொள்ளும் நிலை
ஒவ் ஒன்றுக்கும் நான் ஆட் பட்டு விட்டேன் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –
அவ் இயலவே –
ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

அடியார் இல்லை . அடியார்களின் தாழ்ந்த ஞானம் /பிறப்பு/ இயல்பு இவையே உத்தேசம்.
.ராமானுசன் திருவடியை பற்றினால் இவையே நல்லதாக கொள்ள வேண்டும் என்றவாறு

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –25–காரேய் கருணை இராமானுசா- இத்யாதி —

April 7, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை பார்த்து –
தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ருபையை உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே -தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை தெளிந்தவர் யார் –
சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி அங்கீ கரித்த பின்பு –
தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –அடியேனுக்கு ரசியா நின்றது என்று –
ஸ்ரீ எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே-விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே ஸ்ரீ எம்பெருமானாரை நோக்கி
தேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார் –

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

பத உரை –
கார் ஏய்-கரு முகிலை ஒத்த
கருணை -கிருபையை உடைய
இராமானுச -எம்பெருமானாரே -நான்
அல்லலுக்கு -துன்பத்திற்கு
நேரே உறைவிடம்-நேரே குடி இருக்கும் இடமாக உள்ளேன்
நீ வந்து -தேவரீராக எழுந்து அருளி
என்னை உற்ற பின்-என்னை யுய்த்த பின்- –அல்லலுக்கு உறைவிடமான என்னை அடைந்ததற்குப் பிறகு
உன் சீரே -தேவரீர் உடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு -என்னுடைய ஆத்மாவுக்கு
உயிராய் -தாரகமாய்
அடியேற்கு-அடியானான எனக்கு
இன்று தித்திக்கும் -இப்பொழுது இனிக்கின்றன
நின் அருளின் தன்மை -தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை
இக்கடல் இடத்தில் -இந்தக் கடல் சூழ்ந்த உலகத்தில்
யார் அறிபவர் -யார் தான் அறிவார் –

ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும்-கிருபையை உடையவரே –
துக்கத்துக்கு நேரே ஆவாச பூமியே இருப்பானொருவன் நான் –இப்படி இருக்கிற என்னை
தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு தேவரீர் உடைய கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் –
அடியேனுக்கு இன்று ரசியா நின்றது
தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை இக்கடல் சூழ்ந்த பூமியில் யார் தான் அறிவார் –
காரேய் கருணை -என்றது -கார் ஏய்ந்த கருணை என்றபடி –
ஏய்கை-ஒப்பு–

பாலே போலே சீர் -நீ விட்டாலும் நான் விட்டேன் என்று அன்றோ சிக்கென கொள்வார் ஸ்வாமி –
இன்று இங்கே இந்த உடம்போடு தித்திக்கும் -தேசாந்தரம் தேகாந்தரம் காலாந்தரம் வேண்டாமே –
நின் அருள் -அவன் அருள் போலே அன்றே -மோக்ஷ ஏக ஹேது-உயிர் பாசுரம் இது –
சரண்யத்வம் ஸ்வாமி இடம் வந்த பின்பு தானே நிறம் பெற்றது -ஸ்வா பாவிகம் அடைந்தது -என்றவாறு –

காரேய் கருணை
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷூ கவலாஹகம் போலே –
அனலோசித விசேஷ லோக சரண்யமான – க்ருபை -சித்தே ததீய சேஷத்வே -சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி – என்னக் கடவது இறே –
கார் -மேகம் / ஏய்கை -ஒப்பு -இப்படிப் பட்ட க்ருபையை உடைய

கார் ஏய் கருணை இராமானுச
நீர் நிலம் என்னும் வேறு பாடு இன்றி எல்லா இடத்திலும் மழை பொழிவது போலத் தம் மீதும்
உலகத்தார் மீதும் வேறுபாடு இன்றிக் கருணை பெருகியது பற்றி –கார் ஏய் கருணை –என்கிறார் –
புலைச் சமயங்களை சாராது -தம்மை சஞ்ச நெஞ்சில் வைத்த தன்னைத் தம்மை உள்ளவாறு காணுறச் செய்தும் –
புலைச் சமயங்களை அவித்தும் -பொய்த் தவத்தில் உழலாது நிலத்தில் உள்ளாரை மெய் ஞானம் நெறியில் புகச் செய்தும் –
எல்லோருக்கும் உபகரித்ததை மீண்டும் -அருளின் தன்மையின் பெருமையை காட்டுவதற்காக அனுவத்தித்த படி –
கருணை-அருள்
அருளுடைமையாவது
யாதானும் ஓர் உயிர் இடர்படின் -அதற்க்கு தன் உயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போலே –
வருந்தும் ஈரம் உடைமை -எனபது மணக்குடவர் -திருக்குறள்-உரை –
இதனை பர துக்க துக்கித்வம்-அஸஹிதவம் -என்பர் வட நூலார்

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

கருணை இராமானுசன்-
கருணையை உடைய ஸ்ரீ இராமானுசன்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை –
செல்வத்துள் செல்வமாகிய அருள் செல்வத்தால் மேம்பட்டவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே–5-1-9-

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் –5-2-11-

வந்தருளி என்னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!–5-7-7-

மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்
சுழலின் மலி சக்கரப் பெரு மானது தொல் லருளே–5-9-9-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்–பெரிய திருமொழி–11-3-5-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் !–3-8-1-

இக் கடல் இடத்திலே
சதிஸ் சமுத்திர பரி வேஷ்டிதமான -இந்த -இருள் தரும் மா ஞாலத்திலே –

நின் அருளின் –
பர துக்க அசஹிஷ்ணுத்வ நிராசி கீர்ஷத்வாதி லஷணங்களோடு கூடி இறே கிருபை இருப்பது –
அப்படிப் பட்ட கிருபைக்கு நின் அருளின் என்று ஆஸ்ரிய ப்ராபல்யத்தாலே வந்த வெளிச் செறிப்பு
ஸ்வர்ணத்துக்கு பரிமளம் வந்தால் போலே காணும் -இருப்பது

தன்மை –
இப்படிப் பட்ட கிருபா ஸ்வபாவத்தை –

இக்கடல் இடத்தில் –நின் அருளின் தன்மை-ஆரே அறிபவர் —
நின் அருளின் தன்மையை இருள் தரும் மா ஞாலமாகிய இக்கடல் சூழ்ந்த நிலப்பரப்பில்
எங்கும் எக்காலத்திலும் அறிபவர் யாருமே இல்லை -என்றபடி –
எனவே தெளி விசும்பாகிய ஸ்ரீ பரம பதத்தில் உள்ள நித்தியரும் முக்தரும் அறிய வல்லார் என்பது கருத்து –
நின் அருளின் தன்மை-
ஸ்ரீ இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் ஸ்ரீ எம்பெருமானாறது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
ஸ்ரீ எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –

ஆரே அறிபவர் –
தெளிந்தவர் தான் யார் –
நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –
சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –
யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும்
பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

அல்லலுக்கு
கர்ப்ப ஜன்மாத்யவச்தாஸ் துக்கம் அத்யந்த துச்சகம் -என்னும்படியான துக்கங்களுக்கு –

நேரே உறைவிடம் நான்
சாஷாத் ஆவாச பூமியாய் இருப்பான் ஒருவன் நான் –
சரீர சம்பந்திகளுக்கு வந்த துக்கங்கள் எல்லாம் தத் சம்பந்தத்தாலே -எனக்கு ப்ராப்தமானால் சிறிது இலகுவாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே சாஷாத் எனக்கு வந்தது ஆகையாலே அவற்றுக்கு எல்லாம் நான் த்ருடமான ஆஸ்ரயமாய்-இருந்தேன் -என்றபடி –

அல்லலுக்கு நேரே உறைவிடம் நான் –
அல்லல்-கர்ப்ப வாசம் முதல் மரணம் ஈறாக உள்ள துன்பங்கள் அவற்றிக்கு நேரே உறைவிடம் நான்-
என்னை சார்ந்தர்க்கு நேர்ந்த துன்பங்களை கண்டு நான் படும் அவை யல்ல இவ் அல்லல்கள் –
எனக்கு நேர்ந்து நேரே நான் படும் அவை
ஆதலின் என்னால் பொறுக்க ஒண்ணாதவை -என்பது கருத்து

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—–பெரிய திருமொழி–1-6-7-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன்–திரு மாலை–30-

வந்து நீ –
நீ வந்து
தேவரீர் பர துக்க அசஹிஷ்ணுவாகையாலே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆர்த்த த்வனி கேட்டவாறே
ஸ்ரீ சர்வேஸ்வரன் அரை குலைய தலை குலைய வந்தால் போலே –
ஸ்ரீ பரம பதத்தின் நின்றும்-இவ்வளவாக எழுந்து அருளி –

என்னை –
துக்க ஆஸ்ரயமான என்னை –

உற்ற பின் –
த்வயாபி லப்த்த பகவன் நிதா நீ மனுத்த மாம் பாத்ரம் இததயாயா -என்றால் போலே
அலாப்ய லாபமாக என்னைப் பெற்ற பின்பு –

முதலை வாய்ப்பட்டு ஸ்ரீ கஜேந்த்திரன் துயர் உறும் இடத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் வந்து அவ் வெம் துயரை தீர்த்து அருளியது போலே
நான் இருந்து அல்லல் உறும் இடத்துக்கு எனக்காக தேவரீர் எழுந்து அருளி என் அல்லலைத் தீர்த்து அருளினீர் என்கிறார் –
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருளியது அவன் கதறிய காலத்தில் –
எனக்கு ஸ்ரீ எம்பெருமானார் அருளியதோ கதறவும் தெரியாது -அல்லலில் அழுந்திய காலத்தில் –
ஸ்ரீ கஜேந்த்திரன் துயர் உற்றது ஒரு மடுவிலே
நான் அல்லலுள் அழுந்தியது சம்சார சாகரத்திலே
ஸ்ரீ கஜேந்த்திரன் துயரம் தேவர்கள் கணக்கு படி ஆயிரம் ஆண்டுகள்-
என் அல்லல்களோ அநாதி காலம்
ஒரு முதலையின் வாய் பட்டது ஸ்ரீ கஜேந்த்திரன்
நானோ ஐம்புலன்களின் வாய்ப்பட்டேன் –
ஸ்ரீ கஜேந்த்திரன் துயரத்தை விட என் அல்லல்கள் மிகக் கொடியவை –
ஆயினும் தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்
ஸ்ரீ எம்பெருமானார் என்கிறார் இங்கு –

இருந்தான் கண்டு கொண்டேன் எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஒருவரைத் தேய்ந்து அற மன்னிப்
பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமாள்
தரும் தான் அருள் இனி யான் அறியேனே – திருவாய் மொழி – 8-7 2- – என்னும்
ஸ்ரீ நம் ஆழ்வார் பாசுரமும் அதன் வியாக்யானமும் காணத் தக்கன –

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌ லப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
ஸ்ரீ எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே
தேவரீர் உடைய கல்யாண குணங்களே –
குணா நாமா கரோ மஹார் -என்றால் போலே சீர் என்னும்படியான வாத்சல்ய சௌசீல்யாதி குணங்களை –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
கீழ் சொன்ன சௌலப்யம் முதலிய குணங்களும் -பிறந்த தோஷத்தைப் போக்கி -ஆரோக்யத்தை விளைத்து –
பாலை இனிக்க வைப்பது போலே -அல்லலை தீர்த்து அடியானாக்கி குணங்களை தித்திக்கும் படி செய்த
ஞானம் சக்தி முதலிய குணங்களும் எனக்கு இன்று இனிக்கின்றன -என்கிறார் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –

உயிர்க்கு உயிராய் –
ஆத்மாவுக்கு தாரகமாய் -லோகத்தில் எல்லாருக்கும் தம் தாமுடைய பிராணன் ஜீவன ஹேதுவாய் இருக்கும் –
இங்கு அப்படி அன்றிக்கே இவருடைய பிராணனுக்கு பிராணனாய்-காணும் அவருடைய சீர் இருப்பது –

உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் –
ஸ்ரீ அமுதனார் அவை எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –
அறிவார் உயிரானாய்

அடியேற்கு
சேஷ பூதனான எனக்கு –

இன்று –
ரசஹ்யே வாயலப்த்த்வா நந்தீ பவதி -என்றும்
சோச்நுதே சர்வான் காமான் சஹா -என்றும் –
சொல்லப்படுகிற ப்ரஹ்மத்தின் உடைய கல்யாண குண அமருத அனுபவமும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ததீயர் உடன் கூடிப் பண்ணக் கடவேன் என்று
பிராத்தித்தபடி தலைக் கட்டுவது பரம பதத்திலேயாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே எனக்கு இந்த பந்த -பத்த -தசையிலே தானே –

தித்திக்குமே –
ரச்யமாய் -ஆனந்த அவஹமாய் இருக்கும் என்று ஆய்த்து –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்தால் போலே ஆய்த்து -என்றபடி –
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – என்னக் கடவது இறே—

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு-
என்கையாலே கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் ஸ்ரீ பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஸ்ரீ ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு-வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான் தனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

நீ என்னை யுய்த்த-யுற்ற – பின் உன்–சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே–
ஸ்ரீ எம்பெருமானார் விஷயீ கரித்து அருளின பின்பு –
அவருடைய குணங்களே தமக்கு தாரக போஷக போக்யங்கள் ஆயிற்று என்கிறார் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –24–மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து- இத்யாதி —

April 7, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஒப்பார் இலாத உறு வினையேன் -என்றீர் -இப்படி இருக்கிற உமக்கு இவ்விஷயத்தை
முப்போதும் வாழ்த்துகை கூடின படி என் -என்ன –
தாம் முன்பு நின்ற நிலையையும் –
இன்று தமக்கு இவ் உத்கர்ஷம் வந்த வழியையும் சொல்லுகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே மகா ப்ராபவரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னுடைய வஞ்சகமான மனசிலே –
வைத்து ஸ்துதியா நின்றேன் -என்று நிர்வேதப் பட்டார் –
இப்பாட்டிலே -இப்படிப்பட்ட உமக்கு ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு தான் அதிகாரம் உண்டோ என்ன –
தேன் கூண்டை ஈ மொய்த்து கிடைக்குமா போலே –
ஆத்மாவை சுற்றிக் கொண்டு இருக்கிற கோரமான பாப கர்மங்களாலே -அநாதி காலம் தொடங்கி-
நாநாவித தேக பரிகிரகம் பண்ணி -கர்ப்ப ஜன்மாத்ய வஸ்த்தா சப்தகத்தாலே -இவ்வளவும் நசித்துப் போந்தேன் –
சாஸ்திர விஹிதமான தபச்சுகளை பண்ணும் -நீச சமய நிஷ்டர் எல்லாம் – பக்நராம்படி ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணும்
யதார்த்த ஜ்ஞானத்தை உடையரான ஸ்ரீ எம்பெருமானார் என்னுடைய காள மேகமானார் –
அவரைக் கண்டு உத்கர்ஷ்டன் ஆனேன் –ஆகையால் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இப்பாரில் ஒப்பார் இல்லாத மா பாவியாய் முன்னர் கீழ்ப் பட்டு இருப்பினும் இன்று உயர்ந்தவராய்
ஸ்ரீ எம்பெருமானாரை முப்போதும் வாழ்த்துதல் எங்கனம் உமக்கு வாய்ந்தது என்ன –
தமது முன்னைய நிலையையும் -இவ் உயர்வு வந்த வழியையும் –அருளிச் செய்கிறார் –

நன் அநாதி காலம் சம்சாரத்திலேயே உழன்று -நெஞ்சத்தில் சப்தாதி விஷயங்களுக்கே இடம் கொடுத்து – வஞ்சகனாகவே இருந்தேன் –
அந்நிலையிலே ஸ்ரீ எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் –
நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –பொய்யே யாயினும் ஸ்ரீ எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் –
அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி விட்டேன் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் இப்பாசுரத்தில் –
கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே–5-1-1-ஸ்ரீ திருவாய் மொழி – 5-1 1- –
என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியை இதனோடு ஒப்பிடுக –

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

முனை நாள்கள் எல்லாம் -அநாதியான காலம் எல்லாம்
மொய்த்த -ஆன்ம தத்துவத்தை மொய்த்துக் கொண்டு இருக்கிற
வெம் தீ வினையால்-கொடிய பாபத்தால்
பல் உடல் தோறும் -பல வகைப்பட்ட சரீரம் தோறும்
மூத்து -முதுமை அடைந்து
அதனால்-அக்காரணத்தால்
எய்த்து ஒழிந்தேன் -களைத்து போய் விட்டேன்
பொய் தவம் போற்றும் -பொய்யான தவங்களை ஆதரிக்கும்
புலைச் சமயங்கள்-நீச மதங்கள்
நிலத்து -உலகத்தில்
அவிய -அணைந்து போக
கைத்த -வெறுத்து தள்ளின
மெய் ஞானத்து -உண்மை அறிவு உடையரான
இராமானுசன் என்னும் -ஸ்ரீ எம்பெருமானார் என்கிற
கார் தன்னை -மேகம் போன்ற வண்மை உடையவரை
கண்டு -சேவித்து
இன்று -இப்பொழுது
உயர்ந்தேன் -மேன்மை பெற்றேன்

தேன் கூட்டை ஈ மொய்த்தால் போலே -ஆத்மாவை மொய்த்து கொண்டு இருப்பதாய் –
அனுபவ விநாச்யம் ஆதல் –பிராயச்சித்த விநாச்யம் ஆதல் -செய்யாத அதி க்ரூரமான கர்மத்தாலே அநேக சரீரங்கள்
தோறும் ஜராவதியாக வசித்து -அத்தாலே அவசன்னனாய் விட்டேன் -அநாதியான காலம் எல்லாம் –
அவைதிகங்கள் ஆகையாலே அயதா பூதங்களாய் இருக்கிற
விஷய விரக்தி
பரஹிம்சா நிவ்ருத்தி
சத் குரு சேவாதிகள் ஆன தபச்சுக்களை நோக்கிக் கொண்டு போரும் நீச சமயங்கள் பூமியிலே விளக்கு
பிணம் போலே நசிக்கும் படியாக நிரசித்த யதா ஞான யுக்தரான
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற பரம உதாரரை-தம்முடைய ஒவ்தார்யத்தாலே காட்டக் கண்டு -இன்று உத்க்ருஷ்டன் ஆனேன் –

மொய்த்த வெம் தீ வினையார் பல்லுடல்-என்று பாடம் ஆன போது-
திரண்ட க்ரூர கர்மங்களாலே நிறைந்துள்ள அநேக தேஹங்கள் என்க –
மொய்த்தல்-திரளுதல்
கைத்தல்-கடிதல்
கார் தன்னை -என்றது முற்று உவமை–

அழுக்கு போக்க -அலமந்து உள்ள எனக்கு -கார் மழை பொழிய -என்ன குறை எனக்கு –
கொண்டல் அனைய வண்மை -ஸ்ரீ கூரத் ஆழ்வான் மூலம் ஒரு பாட்டம் கருணை மழை –
இரா மு -இரா பி -வாசி உண்டே முன்னும் பின்னும் –நானே நாநா வித நரகம் புகும் பாபங்கள் பண்ணினேன் –எய்த்து ஓழிந்தேன்-
உன் அடி இணை அடைந்தேன் -திருவடி ஸ்வாமியே ஸ்ரீ கூரத் தாழ்வான் மூலம் -காட்டக் கண்டு-உயர்ந்தேன்–பிறவியே நீக்கப் பெற்றேன் –
ஸ்தோத்ரம் பண்ணும் அதிகாரம் பெற்றேன் -என்கிறார் –
இதில் -கண்டேன் இன்றே உயர்ந்தேன் -காண்கை தானே உயர்வாய் -தொழுகையே எழுவது போலே –

மொய்த்த –
அநாதி காலமே தொடங்கி என்னாலே பண்ணப்பட்ட பாபங்கள் எல்லாம் என்னாத்மாவை மொய்த்துக் கிடக்குமே
மொய்த்தல் -திரளுதல் –
தண்ட காரண்யத்தில் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனை -கர தூஷணாதி பதினாலாயிரம் ராஷசர்கள் மொசிந்தால் போலே
காணும் இவரை மொசிந்த படி –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று
க்லேசிக்கும்படி சூழ்ந்து கொண்டு இருக்கிற-

வெம் –
அநு கூலமாகவும் அநு பயமாகவும் மொசிந்தால் -ஒருபடியாக சஹிக்கலாம் –
அப்படி அன்றிக்கே அதி குரூரமான –

தீ வினையால்-
புண்ய பாபங்கள் இரண்டும் அன்று நான் செய்தது -எல்லாம் பாபமே யாய்த்து –
அன்றிக்கே –
சிறிது புண்யங்கள் உண்டாகிலும் -அதுவும் ப்ராப்தி பிரதிபந்தகமாய் தலைக் கட்டுகையாலே –
இவர் அபிப்ராயத்தாலே தீ வினையாம் இறே –
அதபாதாக பீதஸ்த்வம் -என்று புண்யங்கள் எல்லாம் பாதக சப்தத்தாலே சொல்லப்பட்டது இறே – ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும் –
அப்படியே –அநக -என்கிற ஸ்ரீ இராமாயண ஸ்லோக பதத்துக்கு ததீய பர்யந்தம் அன்றிக்கே இருக்கிற
ஸ்ரீ ராம பக்தியும் -அகம் என்னும் அத்தை ஸ்ரீ ஈட்டுக் காரரும் அருளிச் செய்தார் இறே –

மொய்த்த வெம் தீ வினையால்
ராவண பவனத்தில் ஸ்ரீ பிராட்டியை சுற்றிலும் வளைத்துக் கொண்டு
தஹ பச -என்று கோர பாஷணங்களைப் பண்ணும் ஏகாஷி ஏக கர்ணி-முதலான ராஷச ஸ்திரீகளைப் போலே
சூழ்ந்து கொண்டு தபன ஹேதுக்களான என்னுடைய பாபங்களாலே தப்தனானவன் என்றபடி –

மொய்த்த வெம்தீ வினையால்
தேன் கூட்டில் ஈக்கள் மொய்த்து கொண்டு இருப்பது போலே -ஆன்ம தத்துவத்தை தீ வினைகள் மொய்த்து கொண்டு உள்ளன –
தீ வினைகள்-புண்யமும் பாபமும் –இரண்டும் முறையே இன்பத்தையும் துன்பத்தையும் தந்து –
பேர் இன்பத்துக்கு இடைஞ்சலாய் இருத்தலின் தீ வினைகள் ஆயின –
தீமை பயப்பது தீ வினை –
வெம்தீ வினையால்-
ஸ்வர்க்க சுகம் முதலிய சிற்று இன்பமும் துன்பமும் பேர் இன்பத்தைப் பற்றத் தீ யவையே என்க-
அனுபவத்தாலோ பிராயசித்தத்தாலோ தொலைந்து ஒழியாதபடி எண்ணிறந்து நிறைந்து உள்ளமை பற்றித் தீ வினைகள்
வெவ்வியவைகள் ஆயின –

பல்லுடல் தோறும் –
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான நாநா வித சரீரங்கள் தோறும் –
சரீர சம்பந்தம் அடியாக இறே பாபங்களைப் பண்ணுவது –

மூத்து –
அவ்வவ சரீரன்களிலே ஜராவதியாக வசித்து –
இது கர்ப்ப வாச ஜன்மாதிகளுக்கு உப லஷணம் –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதிப் பதினையாண்டு
பேதை பாலகன் அதாகும் பிணிபசி மூப்பு துன்பம் -என்று மயர்வற மதி நலம் அருளப் பெற்றவரும் அருளிச் செய்தார் இறே –
கர்ப்ப ஜன்மாத்ய வஸ்தாஷூ துக்க மத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணன் நித்ய – சராமிந்தீரிய கோசர -ஏவ விஷய த்ர்ஷ்ணா –
வசகச்ய ஜராமம தத் போக கர்ணா நாஞ்ச சைதில்யம் குருதேப்ர்சம் -என்று அபி யுக்தரும் சொன்னார்கள் இறே –
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷியும் ஜரயயை அனுவித்து சொல்லி இருக்கிறார் இறே –

பல் உடல் தோறும் மூத்து –
தீ வினைகள் பல திறத்தன -ஆதலின் அவை யடியாக வரும் உடல்களும் பல வகைப்பட்டன –
அத்தகைய உடல்கள் பலவற்றிலும் -ஒவ்வொரு உடலிலும் முதுமைப் பருவம் முடிய இருந்து பட்ட கஷ்டங்கள் கணக்கற்றன –
முதுமையை சொன்னது மரணத்திற்கு முந்திய நிலையாய் இருத்தல் பற்றி என்க –
இதனால் கர்ப்ப வாசம் முதல் எல்லா நிலைகளிலும் துன்புற்று உழன்றமை தோற்றுகிறது-
பிறந்ததும் இறந்தால் எல்லா நிலைகளிலும் படும் துன்பங்களை அனுபவிப்பதற்கு வழியில்லையே

அதனால் எய்ந்து ஒழிந்தேன் –
அததே ஹாவாசா நேசதுக்ன முத்க்ராந்தி சம்பவம் -கர்ச்ச்ரென தேஹான் நிஷ்க்ராந்தி –
யாம்ய கிங்கரர் தர்சனம் -யாதானா தேக சம்பந்தம் யாம்ய பாசைச கர்ஷனம் -உக்ர மார்க்க தத் க்லேசம் -யமச்ய புரித ஸ்த்திதிம் –
தன்னி யோக வசாயா தயாத நாச சகஸ்ரசா -ச்ருத்வாசம்ர்த்வாசதூயேஹம் தத்ப்ரேவேச பயாகுல – புனஸ் சகர்ப்ப ஜென்மாதி
ப்ரேவேசம் கர்ம நிர்மிதம் -முஹூர் விசிந்தய மச் சித்தம் கபதேஜல சந்த்ரவத் -என்று அபி யுக்தரும் சொன்னார்கள் இறே –

அதனால் எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் –
சரீரத்தில் உண்டாகும் -கர்ப்ப-ஜன்ம பால்ய யவ்வன ஜரா மரண நரக அவஸ்தைகள் எனப்படும் –
அவஸ்தா சப்தகத்திலும் -ஏழு நிலைகளிலும் -அநாதி காலமாக துன்புற்று உழன்றமையால் களைப்பு அடைந்து விட்டேன் என்கிறார்
இது காறும் தமது முன்னைய நிலையை கூறினார் –
இனி மேலுள்ள பகுதியால் இன்றைய நிலையை கூறுகிறார் –

முன நாள்கள் எல்லாம்
இது அநாதி காலமே தொடங்கி -இவ்வளவான காலம் எல்லாம் -ஜன்ம ஜரா மரணாதிகளை
உடையனாய்க் கொண்டு -அவசன்னாய் விட்டேன் என்ற படி

இன்று –
இப்போது –

பொய்த்தவம் -சாஸ்திர விஹிதமான தபசு –
ராவண சந்யாசனம்-காலநேமி ஜபம் போலே –

போற்றும் –
அசாஸ்த்ரா விஹிதம் கோரம் தப்யந்தே தபோ ஜனா -யஜந்தே நாம யஜ்ஞைச
தம்பே நாவிதிபூர் வகம் -கர்சயச்சசசரீராணி-பூதக்ராமமசெதனம் – மாஞ்சை வாந்தஸ் சரீரச்த
தான்வித்யா சூரநிச்சயான் -என்கிறபடி –
அசா ஸ்த்ரீயங்களாய் -அயதா பூதங்களான -விஷய விரக்தி – பரஹிம்சா நிவர்த்தி -குரு சேவாதிகளான-
தபச்சுக்களை ஆசரித்துக் கொண்டு போரும் —
இவர்கள் தான் வெளிக்கு செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -போலே காணும் இருப்பது –

புலச் சமயங்கள் –
நீச சமயங்கள் -சைவ -மாயாவாத -சாக்தேய -காணாபத்ய – சார்வாக -பௌததாதி சமயங்கள் –

நிலத்தவிய –
பூ லோகத்தில் பஸ்மாம் படி -சமிதோதய சங்கராதி கர்வ -காதாதர தாகாதா நாம் -இத்யாதிகளிலே -சொல்லுகிறபடியே –
அவை எல்லாம் இந்த பூ லோகத்தில் அவியும்படி
யஜ்ஜ மூர்த்தி யாதவ பிரகாசன் -முதலானோரை சிஷித்து -அநு கூலராகப் பண்ணியும் –
ஸ்ரீ திரு நாராயண புரத்தில் பௌத்தரை நிரசித்தும் -அவற்றை பஸ்மாசாத்தாம் படி
பண்ணி அருளினார் என்று -சர்வ லோக பிரசித்தம் இறே –

கைத்த –
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கீதா பாஷ்ய வேதார்த்த சங்க்ரஹாதிகளை அருளிச் செய்து -வியாக்யானம் பண்ணி அருளின –
அன்றிக்கே –
கைத்தல் –
அவற்றை விளக்கு பிணம் போலே நசிக்கும்படியாக நிரசித்த -என்னவுமாம்-

பொய்த்தவம் –கார் தன்னையே —
வேதம் அபௌருஷேயம் ஆதலின் அது உண்மை அல்லது கூறாது –
அதனை பிரமாணமாய் ஏற்காத நூல்கள் கூறுவன உண்மைக்கு புறம்பானவை- பொய்யானவை
அத்தகைய பௌத்த ஜைனாதி நூல்கள் உண்மையானவைகளை கூறாத பொய் நூல்களாம் –
அங்கனமே வேதப்பொருளை உள்ளவாறு காண்கிலாத குத்ருஷ்டி நூல்களும் பொய் நூல்களே யாம் –
அவற்றில் கூறப்படும் தவங்கள் மெய்யானவை என்று மயங்கி -அதன்படி ஒழுகுவோர் பயன் அடையாது பாழாகி விடுகின்றனர் –
பொய் நூலை மெய் நூல் என்றோதி மாண்டு -பெரிய திரு மொழி – 2-5 5-என்றார் ஸ்ரீ திருமங்கை மன்னனும்-

தவமாவது சாஸ்திர நெறிப்படி தன்னை வருத்தப்படுத்தி கொள்ளுகை –
வைராக்கியம் அகிம்சை சத்குருசேவை முதலியன தவங்கள் ஆம் -ஆயின் அவை வேத நெறியில் வகுக்கப் படாது
பொய் நூல்களால் புகட்டப்பட்டவை ஆதலின் பொய்த் தவங்கள் ஆம் –
கண்ணன் மீதான காதல் அடியாக விளையாத தலானும் –
கண்ணன் உகப்புக்கு என்று கருதாத ததலானும் –
கண்ணனைக் காட்டித் தருபவனான குரு விஷயமாக ஆகாத தாதலானும் –முறையே
வைராக்யமும் -அஹிம்சையும் -சத்குருசேவையும்–உண்மை தவங்கள் ஆகா –
அத்தகைய தவங்களை போற்றும் சமயங்கள் புலை சமயங்கள் என்று இகழுகிறார் ஸ்ரீ அமுதனார் –

புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –
புலை அறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் -திரு மாலை-7 – என்னும் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தி நினைவுறத் தகும் –
அதனை ஸூ பெரியவாச்சான் பிள்ளை –
இவை நீச தர்சனம் ஆன படி எங்கனே என்னில் –
ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை –
ஈஸ்வரனையும் –ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
என்று வ்யாக்யானத்தில் விளக்கி இருப்பது இங்கு அறியத் தக்கது –

அஹிம்சையை விரதமாக கூறும் சமயங்கள்
வீணாக கீழ் கூறியபடி -பொய் விரதத்தை கைக் கொண்டு ஒழுகும் படி செய்து -பல ஏமாந்த மாந்தரை
ஹிம்சிப்பதனால் -புலை சமயங்கள் ஆயின –
எந்த ஜீவனுக்கும் ஹிம்சை செய்யக் கூடாது என்று கூறும் ஜைனர்கள் –
தங்கள் கூற்றுக்கு முரண்பாடாக கேசத்தை பிடுங்கிக் கொண்டு தங்களுக்கே ஹிம்சை செய்து கொள்வதனால்
அவர்கள் சமயம் புலை சமயம் ஆகிறது என்க –
வேதனை செய்கை வெறும் மறமென்று
விளம்பி வைத்தே மாதவம் என்று மயிர் பறிப்பார் -ஸ்ரீ பரம பத பங்கம்-
வேதனை செய்கை-ஹிம்சிக்கை
வெறும் மறம் -வீணான செயல்-என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் இங்கனமே பரிஹசிப்பதையும் காண்க –
ஜைனர்கள் -கேசொல்லுஞ்ஜனம் -தலை மயிரை பிடுங்கி விடுதல்-என்னும் விரத்தைக் கைக் கொண்டு
முக்தி பெறலாம் என்று சொல்லுகின்றனர் –
இங்கனம் பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்களை இந்நிலத்தில் நிற்பதற்கு இடம் இன்றி அழிந்து போம் படி
தம் மெய் ஞானத்தால் கடிந்து மக்களை மறை நெறியிலே உய்த்து வாழ்வித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் என்க –

மெய் ஞ்ஞானம் ஆவது தத்துவத்தை உள்ளபடியே அறிதல் –
புலைச் சமயங்களை பற்றி பொய்த் தவங்களை ஏற்று நிற்பாரையே அச் சமயங்களை யவித்து மெய் ஞான நெறியாகிய
தமது நெறியிலே உய்த்து உபகரிப்பவர் –
அங்கன் அல்லாது
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய் ஞானத்தராக ஸ்ரீ அமுதனார் அவரைக் கூறினார் என்க

மெய் ஞானத்து –
யதா வஸ்த்தித தத்வ விஷயிக ஜ்ஞான யுக்தரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

என்னும் கார் தன்னையே –
இவராகிற மேகத்தை -வேத மார்க்க பிரதிஷ்டாபனம் பண்ணி சர்வ லோகத்தையும் ரஷித்தது ஒரு ஔதார்யமாக நினைத்திலர் –
ஆர்த்த அபராதியான காகாசுரனை சக்கரவர்த்தி திருமகன் ரஷித்தால் போலே –
அப்படிப் பட்ட தம்மையும் ரஷித்து அருளின படியால் -ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும்
வர்ஷூகவலாகம் போலே இருந்தார் என்று ஸ்லாக்கிக்கிறார் –
கார் தன்னையே -என்றது முற்று உவமை –

கண்டு –
இப்படிப் பட்ட பரமோதாரரைக் கண்டு –ஸ்ரீ கோயிலிலே சேவித்து ஸ்ரீ ஆழ்வான் புருஷகாரமாக ஆஸ்ரயித்து – என்றபடி –
அவர் விஷயீ கரித்த பின்பு –

உயர்ந்தேன் –
உத்க்ருஷ்டனானேனே -என்றது ஆய்த்து –
அத்தாலே ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்கினேன் என்று கருத்து –

இன்று கண்டு உயர்ந்தேன் –
கண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் தம்மைக் காட்டக் கண்டு –
மேல் கார் தன்னையே -என்று
மேகம் நீர் நிலம் என்று பாராது மழை பொழிவது போலே
ஸ்ரீ எம்பெருமானார் தகுதி பாராது தம் வண்மையினால் -தமக்கு உபகரிப்பதை கூறுவதால் –
இவர் கண்டமை அவர் காட்டி உபகரித்ததாகும் என்று கூறல் வேண்டும் –
அடை மொழி இடாதே ஸ்ரீ இராமானுசனை என்றோ
அடை மொழி இட்டு காரனைய ஸ்ரீ இராமானுசனை என்றோ கூறாது –
ஸ்ரீ இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை ஸ்ரீ அமுதனார் கருத்தில்
கொண்டு உள்ளார் என்று நமக்கு புலப்படுகிறது –
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே
இதனை வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –

கார் தன்னையே இன்று கண்டு உய்ந்தேன் என்று கூட்டி முடிக்க –

கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —
நஞ்சு தான் கண்டீர் நம்முடைய வினைக்கு நாராயணா என்னும் நாமம் –
இன்று அடிமைத் தொழில் பூண்டாயே –
தொண்டனேன் கண்டு கொண்டேனே –
அரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே
இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே
திருப் பேர் கருதி நான் உய்ந்தவாறே
நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே
கண்டு கொண்டு களித்தேனே
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–என்று பல இடங்களிலும் கண்டு உயர்ந்ததை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -அரவணை மேல் கண்டு தொழுதேன் –

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் ––நான்முகன் திருவந்தாதி –96–

நெய்க்குடைதை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம்பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2 1-

ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-5-2 6-

வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-5 2-7 –

வள ஏழு உலகுக்கு முன் ஆழ்வார் பின் ஆழ்வார்
கேசவன் தமருக்கு முன் ஆழ்வார் பின் ஆழ்வார்
திருப்பு முனைகள் இவை
பெருமை பார்த்து அகலுகையும் எளியவன் என்று மேல் விழுவதையும் போல அகன்று முன்
இப் பொழுது தைரியமாக அருளுகிறார் இப் பாசுரத்தை
மேகம் கண்டார்-மேட்டை வெட்டி பள்ளம் போட்டு நிரப்பிய பின்பு – -ராஜா பாட்டை போல் -இள அரசர் போல அருளுகிறார்-

புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிற முடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயல் ஆழி அங்கைக் கரு மேனி அம்மான் தன்னையே–5-1-6-

இனி அறிந்தேன் ஈசர்க்கும் அவர்க்கும்..உயர்ந்ததால் அவர் திருநாமம் பாட புகுந்தேன்
ஸ்தோத்ரம் பண்ண உயர்ந்தேன்
இனி நைசயம் பாவத்தால் விலகினால் அவர் பலம் குறைந்தது என்று ஆகும்..
அ வஸ்து–இன்று வஸ்து ஆன படியால்..
ஸ்ரீ எம்பாரை பலர் ஸ்ரீ எம்பெருமானார் முன்பே கொண்டாட ஆம் என்றார்
அவரது திருவடி ஏற்றம் குறைக்க கூடாது என்கிற காரணத்தால்
முதல்வா நின் நாமம் கற்ற ஆவலிப்பு –பற்றினது முதல்வன் என்ற பலம்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் -ஸ்ரீ எதிராசன் வடிவு அழகு கண்ட படியால்-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –23-வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே இத்யாதி —

April 6, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நிர்தோஷரான பிரேம யுக்தர் பரம தனமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும்-விஷயத்தை
பாபிஷ்டனான நான் ஹேயமான மனசிலே வைத்து ஏத்தா நின்றேன் –
இது-அவ்விஷயத்தின் உடைய குணத்துக்கு என்னாகும் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ பூர்வாசார்யர்கள் எல்லாரும் –வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட –
அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை
அதி பாபிஷ்டனான என்னுடைய மனசிலே வைத்துக் கொண்டு அவருடைய கல்யாண குணங்களை ஸ்துதிக்கத் தொடங்கினேன்-
மகா பிரபாவம் உடைய அவருடைய கல்யாண குணங்களுக்கு இது என்னாய் விளையுமோ-என்று பரிதபிக்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நல்ல அன்பர்கள் சிறந்த செல்வமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும் ஸ்ரீ எம்பெருமானாரை
மிக்க பாவியான நான் குற்றம் உள்ள நெஞ்சிலே வைத்து எப்போதும் ஏத்தா நின்றேன் –
இது அவரது சீரிய-கீர்த்திக்கு என்னவாய் முடியுமோ -என்கிறார்

தான் சேம வைப்பாக கொண்ட ஸ்ரீ எம்பெருமானாரை -ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ ஆழ்வான் போல்வார்கள் —
தங்கள் நெஞ்சில் குறைவுறாத நிதியாக வைத்து பேணுவது கண்டு -நல்லன்பர்கள் பேணும் சீர்மை வாய்ந்த இந்த நிதியை
போலி அன்பனாகிய இவ் ஒப்பற்ற பாவியேன் நெஞ்சில் வைத்து ஏத்துவதனால் அந்நிதியின் சீர்மை
சிதைந்து விடலாகாதே என்று வருந்துகிறார் ஸ்ரீ அமுதனார் –
இங்கனம் தங்களை தாழ்ந்தவர்களாக நினைப்பதும் கூறுவதும் -நைச்ய அனுசந்தானம் –பெரியோர்கள் மரபு –
அன்பு நிலையில் மேல் விழுந்து -துய்த்து இன்புற்றுப் பேசுவதும்
அறிவு நிலையில் தன் தாழ்வு தோன்றி இகழ்வாய தொண்டனேனாகிய என்னால் குறை நேர்ந்து விடலாகாதே என்று
பிற்காலிப்பதும் தவிர்க்க ஒண்ணாதவை என்க-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

பத உரை –
வைப்பு ஆய -ஆபத்துக்கு உதவும் பொருட்டு வைக்கப் பட்டதான
வான் பொருள் என்று -சிறந்த செல்வம் என்று
நல் அன்பர் -நல்லவர்களான பக்தர்கள்
மனத்தகத்தே -நெஞ்சுக்கு உள்ளே –
எப்போதும் -எல்லாக் காலத்திலும்
வைக்கும் -வைத்துக் கொண்டு இருக்கிற
இராமானுசனை -எம்பெருமானாரை
இரு நிலத்தில்-பெரிய பூமியில்
ஒப்பார் இலாத -ஒத்தவர்கள் இல்லாத
உறு வினையேன் -பெரும் பாவியான நான்
வஞ்ச நெஞ்சில் -ஏமாற்றுகிற நெஞ்சகத்திலே –
வைத்து -வைத்து கொண்டு –
முப்போதும் -மூன்று வேளைகளிலும்
வாழ்த்துவன் -வாழ்த்துகின்றேன்
இது அவன் மொய் புகழுக்கு -இது அவருடைய சீரிய கீர்த்திக்கு
என் ஆம்-என்ன ஆகுமோ –

வைத்த மா நிதி -திருவாய் மொழி – 5-8 11- – – என்னுமா போலே ஆபத் ரஷகமாக வைக்கப்பட்ட அஷயமான தனம் என்று –
நிர்தோஷராய் பிரேம யுக்தராய் இருக்கும் அவர்கள் -சீரிய நிதிகளை செப்புக்குள்ளே வைப்பாரைப் போலே –
மனச்சுக்குள்ளே -திவாராத்ரா விபாகம் அற சர்வ காலத்திலும் -வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை –
மகா ப்ருதிவியில் பாபம் பண்ணினவர்களில் இவனைப் போல் ஒரு பாபிகள் இல்லை என்னும்படி பாபிஷ்டனாய் இருக்கிற நான்
நிச்ச்நேஹனாய் இருக்க ச்நேஹிகளைப் போலே பாவித்து –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் – திருவாய் மொழி -5 1-9 – – என்கிறபடியே
சர்வஞ்ஞனையும் மருட்ட வற்றான க்ருத்ரிம யுக்தமான மனசிலே வைத்து -த்ரி சந்த்யமும் ஏத்தா நின்றேன் –
இது அவருடைய ச்லாக்யமான புகழுக்கு என்னாய் விளையுமோ –
வான்-பெருமை
நல்லன்பர் -என்கிற இடத்தில் –
நன்மை அன்புக்கு விசேஷணமாய்-அநந்ய பிரயோஜநதையா விலஷண-பத்தி என்னவுமாம் –மொய்-அழகு–

எனக்கு எய்ப்பினில் வைப்பு அன்றோ நீ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஓ ஓ என்று கதற –
மாசூணாது என்று பதில் வந்ததாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு -அது போலே ஸ்ரீ அமுதனாருக்கும் –

வைப்பாய வான் பொருள் என்று
சேமித்த மகா தனம் என்று -நிஷேபித்து வைத்த-பரம தனம் என்று –
விஷ்ணுஸ் சேஷி ததீய சுப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரிஸ் ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பதே கமல யுகம் பாதிரம் யம் ததீயம் -என்று
சொல்லப்படுகிற பத கமலத்தை –தனம் மதீயம் -என்று அருளிச் செய்கையாலே –
அப்படி பட்ட ஸ்ரீ எம்பெருமானாரை பரம தனமாக நிரூபித்து என்றபடி –
குருரேவ பரம்தனம் -என்னக் கடவது இறே –
இப்படி யாவதாத்ம பாவி உஜ்ஜீவன ஹேதுவான பரம தனம்-என்று அத்யவசித்து இருக்கிற

வைப்பாய –இராமானுசனை –
ஸ்ரீ மது சூதனையே ஸ்ரீ ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் ஸ்ரீ எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-
என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
கைம்முதல் இல்லாத காலத்து நிதி பயன்பட்டு காப்பது போலே -தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சாதனம் எதுவும் இல்லாத நிலையில் –
தம்மை காப்பாற்றும் ஸ்ரீ எம்பெருமானாரே -சித்த சாதனமாய் பயன்படுதலின் -அவரையே
வைப்பாய பொருளாக கொள்கின்றனர் –நல்லன்பர் -என்று உணர்க –
வைப்பாய பொருள் –பயன் பட பயன் பட -குறைந்து கொண்டே போம் –
ஸ்ரீ எம்பெருமானாராகிய வைப்பு பொருளோ -அங்கன் குறைவுறாது – என்பார் -வான் பொருள்-என்றார் –

நல்லன்பர் –
ஜ்ஞாநாதிகராய்-அவர் திருவடிகளில் ப்ரீதி யுக்தர் ஆனவர்கள் –
நல்லன்பர் என்கிற
இடத்தில் –நன்மை அன்புக்கு விசேஷணமாய் – அநந்ய பிரயோஜந தயா -விலஷணையான பக்தியை உடையவர் என்னவுமாம் –
அவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலானவர்கள் –

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை-

மனத்தகத்தே -வான்பொருள் என்று –
வான் என்று விபு வாசகமாய் –
குரு ரேவா பரம் பிரம்ம -என்று சொல்லப்பட்ட மகா தனம் என்று கொண்டு -அத்தை வெளிச் செறிப்பாக
வைத்தால் சாதகமாய் இருக்கும் என்று அறியாதபடி நிரவயவமான மனச்சினுள்ளே –
நல்லன்பர் மனத்தகத்தே –
ஸ்தோத்ர ரத்னம் இயம் நியச்தம் ஆசார்யஸ்து திசம்புடே -என்று-
அநர்கமான ரத்னம் கிடைத்தால் செப்பிலே வைத்துக் கொண்டு இருப்பாரைப் போலே –
இந்த லோக விலஷணமான மகா தனத்தை தங்களுடைய நெஞ்சின் உள்ளே-

எப்போதும் வைக்கும் –
பூத பவிஷ்யத் வர்த்தமான காலத்திலும் வைக்கும் —
பூத காலத்தில் -ஸ்ரீ நம் ஆழ்வார்
கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக -என்று இவரை மங்களா சாசனம் பண்ணி நிற்கையாலும் –
ஸ்ரீ ஆள வந்தார் இவருடைய பிரபாவத்தை கேட்டருளி ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி –
ஸ்ரீ கரிய மணிக்கப் பெருமாள் சன்னதியில் இருந்து இவரை மங்களா சாசனம் பண்ணினார் ஆகையாலும் –
ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆழ்வார் சம்ப்ராயத்தாலே இவருடைய விக்ரகத்தைப் பெற்று -சர்வ காலமும் ஆராதித்துப் போந்தார் ஆகையாலும்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் -என்னத் தட்டில்லை இறே-

வைக்கும் –
சேர்த்து வைக்கும் -ஜங்கம ஸ்ரீ விமான நிஹ்ர்தயானி மநீஷிணாம்-என்ன கடவது இறே .
கிரணங்களால் தப்தனாய்க் கொண்டு -ரவி மண்டலத்திலே வர்த்தித்தும் -காடும் மேடுமான பர்வதாக்ரத்திலே
ஜடாதாரணம் பண்ணி நின்றும் -ஜல தத்வத்திலே சர்வதா வசித்தும் -இப்படி சாதனா அனுஷ்டானம் பண்ணி
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஞானிகளுடைய ஹ்ரதய கமல வாசம் சாத்தியம் என்று பிரசித்தமாக சொல்லுகையாலே
இது ஸ்ரீ பகவத் பரமானாலும் –
யஸ்ய தேவ பராபக்திர் யதா தேவ ததா குரவ் -என்றும் –தேவ மிவாசார்ய முபாசீத -என்றும் –
தேவ வத்ச்யா பரஸ்ய -என்றும் -சொல்லுகையாலே இருவரும் ஒக்கும் இறே –

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க
எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் ஸ்ரீ எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

இரு நிலத்தில் –
அதி விஸ்தைர்யான இந்த பூமியிலே-

ஒப்பார் இல்லாத –
என்னைப் போல் பாபிஷ்டன் ஆகிலும் கிடைப்பானோ என்று ஆராய்ந்தால் -எனக்கு துல்யமான பாபிஷ்டர்
இந்த லோகத்தில் கிடையாமையாலே –சத்ர்சர் இல்லாத –
ஒப்பார் -சதர்சர் –

அரு வினையேன் –
பிராய சித்தாதிகளால் நிவர்திப்பிக்க அரியதாய் –
அவசியம் அனுபோக்தவ்யம் கிர்தம் கர்மசுபாசுபம் -என்கிறபடி
அனுபவ ஏகைக நாச்யமான பாபத்தைப் பண்ணின நான் –
நத்விராணி க்ர்தான்ய நேன நிரையர் நாலம்புன கல்பிதை பாபா நாமிதி மத்க்ர்தே தததிகான் கர்த்தும் ப்ரவர்த்தேத்
வி தேப்யோப் யப்யதிகாரி தான்ய ஹமபி சூத்திர கரோமி ஷனாத் -என்றும் -அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-
துரிதம் சகலச்ய ஜந்தோ தாவச் சதத் தத்தி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் -பூர்வைஸ் ஸ்வ நைச்ய மனுசம்ஹித
மார்ய வர்யைர் மாமேவ வீஷ்ய மகாதாம் நாதாதச்த் தேஷாம் –நைசயம் த்விதம் சடரிபோம மசத்ய மேவமத்தம்
பரோநம லி நோய தா ஆவிரச்தி -என்றும் சொல்லுகிறபடியே
அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய –

வஞ்ச நெஞ்சில் வைத்து –
நான் அப்படி யானாலும் என் மனசு நிர்மூலமோ – என்னோட்டை சம்பந்தம் பெற்றதாகையாலோ
எனக்கு முன்னே பாப கர்மங்களிலே பிரவர்த்திக்கும் ஆய்த்து-
பந்தாயா விஷயாசங்கி -என்னும் படியாய்
பாஹ்ய விஷய ப்ரவணமாய் -எல்லாரையும் மோஷம் போகக் கடவதாய் -சர்வஞ்ஞாரான தேவரீரும் கூட
நல்லவன் என்று திரு உள்ளத்திலே கொண்டாடும்படியான -வஞ்சனத்தை உடைய மனசிலே வைத்து
வர்த்யாபசுர்நாவபுஸ் த்வஹா மீத்ர்சொபி சுத்யாதி சித்த நிகிலாத்மா குணாஸ் ரயோயம்
இத்யாதரேன க்ர்திநோபி மிதப்ரவக்து மத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே – என்று ஸ்ரீ ஜீயரும் அனுசந்தித்தார் இறே

இரு நிலத்தில் ஒப்பார் இலாத உறு வினையேன் –
இப்பூமி பரப்பு அடங்கலும் தேடினும் எனக்கு இணையான பாபியை காண இயலாது –
அத்தகைய மகா பாபி நான் என்றபடி –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -ஸ்ரீ எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
நல்லதும் தீயதும் பகுத்தறியும் பண்பு வாய்ந்த பேர் அறிவாளராய் இருந்தாலும் –
அவ் எம்பெருமானாரையே ஏமாற்றுக்கு உட்படும்படி பகட்டுவது என் நெஞ்சு –
உண்மையிலே அன்பு அற்று இருந்தும் அது அன்பார்ந்தது போலே தன்னைக் காட்டும் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -– என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கை இங்கு நினைவு கூறுக –
தூய மனத்தகத்தே -எப்போதும் வைக்கும் பொருளை -வஞ்ச நெஞ்சில் வைத்து மாசு படுத்தி விட்டேனே -என்று இரங்குகிறார் –
எப்போதும் அவர்கள் த்யானம் பண்ணுகிறார்கள்-
நானோ காலை-மத்யானம் மாலை மூன்று வேளைகளிலும் த்யானம் செய்பவன் போலே நடிக்கின்றேன் –
அவர்கள் பிறர் அறியாது அடக்கமாக த்யானம் செய்வார்கள்-
நானோ மூன்று வேளைகளிலும் வாழ்த்துவதன் மூலம்
அதனை டம்பமாய் வெளிப்படுத்தி கொள்கிறேன் –

முப்போதும் வாழ்த்துவன் –
சர்வ காலத்திலும் –
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே -அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே -என்றும்
எதிராசன் வாழி எதிராசன் வாழி -என்று கொண்டு மங்களா சாசனம் பண்ணினாரே ஸ்ரீ ஜீயரும் –
சக்ருத் ப்ர்ஷ்டனுக்கு பிராயச் சித்தம் லகுவாய் இருக்கும் -அப்படி இன்றிக்கே
இதுவே யாத்ரையாக இந்த அக்ர்த்யத்தை பண்ணா நின்றேன் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் போல்வார்கள் ஸ்ரீ எம்பெருமானாருக்கு நிதி-
இங்கோ வஞ்ச நெஞ்சு –வஸ்துவோ வான் பொருள்..

அன்பும் ஞானமும் மாறாடுகிறது-மாறி மாறி வருமே ஸ்ரீ ஆழ்வாருக்கும் – ஸ்ரீ அமுதனாருக்கு அது போல்
தேனும் பாலும் கன்னலும் அமுதமும் போல் .எல்லாம் கலந்து ஒழிந்தோம் என்பர் ..அனுபவம் பிரேம தசையில்
வள ஏழ் உலகின் முதலாய -..அருவினையேன் ..எந்தாய் என்பேன் –நினைந்து நைந்தே –உன் பெருமை மா சூணாதோ -என்பர்
வைகுந்தா மணி வண்ணா -நைச்சயம் பாவித்து விலகுவாரோ என்று கலங்கிய அவனுக்கு
உன்னை சிக்கென பிடித்து கொண்டேன் -மாஸூசா என்பர் ஸ்ரீ ஆழ்வாரும்
பக்தர் பேசவும் பித்தர் பேசவும் பேதையர் பேசவும் -ஸ்ரீ கம்பர்
மெய்யே பெற்று ஒழிந்தேன் பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி…
பாவனத்வம் இல்லை ..தயை இல்லை ..விநயம் இல்லை ..வெட்கமும் இல்லை –
இருந்தும் பெரியோர் கேட்ட உன் திருவடி தாமரையை கேட்டேன்–
நல்லது ஒன்றும் இல்லை யோக்யதை இல்லை நைச்ய அனுசந்தான பாசுரம்-

என்னாம் இது அவன் மொய் புகழக்கே–
அவன் -அநந்தம் ப்ரதமம் ரூபம் –
த்வதீயம் லஷ்மணஸ்ததா -பலபத்ரஸ் த்ரீயஸ்து-கலவ் ராமானுஜ ஸ்ம்ர்தா-என்று ப்ரஹ்ம நாரதீயத்திலும் –
சேஷாவா சைன்யநாதோ வா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை -விதர்க்யாய மகா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் – என்று அபியுக்தராலும் –
பிரதிபாதிக்கப்பட்ட அப்ரதிம பிரபாவரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய –
மொய் புகழ்க்கு –
அதி ஸ்லாக்யமான ப்ரபாபத்துக்கு –மொய் -அழகு –
அன்றிக்கே அசங்க்யேயமான ப்ரபாவத்துக்கு என்னுதல் –

அவன் மொய் புகழ்–
ஆதி சேஷன் லஷ்மணன் நம்பி மூத்த பிரான் -முன்பு யுகங்களில் -கலியில் ஸ்வாமி
பூதூரில் வந்து உதிர்த்த புண்யனோ
ஆழ்வாரோ
தூது நடந்த நெடுமாலோ-
ஆய் சுவாமிகள் திரு நாராயண புரத்தில் மா முனி பார்த்து கேட்டது போலே
யாதவ குலத்தை தூக்க கீழ் குலம் புகுந்த வராஹா கோபாலர் போலே –
ராமனுஜன்-பலராமன் தம்பி/ராமானுஜரோ பாஹ்ய குத்ருஷிகள் பர மதங்களை வீழ்த்தி –
அபி யுக்தராலும் நிகர் சொல்ல பட முடியாத பெருமை -அந்த ஸ்ரீ பார்த்த சாரதி போல

இது என்னாம் –
இது என்னாய் விடுமோ
இப்படிப் பட்ட மங்களாசாசனம் பண்ணுகிற இது -அவருடைய வைபவத்துக்கு என்னாய் தலைக் கட்டுமோ -என்றபடி –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் –
புனைந்த கண்ண நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் –
நினைந்த எல்லாப் பொருள் கட்கும் வித்தாய் முதலில்
சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றால் போலே தலைக் கட்டுகையாலே
எத்தனை சாகாசம் பண்ணுகிறேன் என்று அநு தபிக்கிறார் –
திகசுசிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம் பரம புருஷயோ ஹம்யோகிவர்யா க்ரகண்யை –
விதிசிவச நாகாத்யைர் த்த்யாது மத்யந்த தூரம் தவ பரிஜன பாவம் காமயே காமவ்ர்த்தா –
என்று ஸ்ரீ ஆள வந்தாரும் இப்படியே அனுசந்தித்து அருளினார் இறே –

என்னாம் இது அவன் மொய்ப் புகழக்கே –
என் இழி தகைமை எல்லோருக்கும் தெரியும் ஆதலின் -நல்லன்பர் போலே நானும் நெஞ்சில் வைத்துக் கொள்ளின்
இழிவுடையார்ர் இடத்தும் இருப்பவர் தனா ஸ்ரீ எம்பெருமானார் என்கிற எண்ணம் ஏற்படும் ஆதலின்
அவருடைய-அழகிய புகழுக்கு இழுக்கு உண்டாகி விடுமோ -என்று அஞ்சுகிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –22-கார்த்திகையானும் கரி முகத்தானும்- இத்யாதி —

April 6, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

முன்பு தன்னோடு எதிரிட்ட தேவ ஜாதி -பின்பு தன் வைபவத்தை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக வாணன் அபராதத்தை பொறுத்த ஸ்ரீ சர்வேஸ்வரனை ஏத்தும்
ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு ஆபத்து தனம் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

பாணன் என்கிற கோர அசுரன் கோர தபச்சாலே ருத்ரனை வசீகரித்து -அவனைத் தன் வாசலிலே வைத்துக் கொண்டு
இருந்த காலத்தில் -அவன் தன் பெண் பிள்ளையான உஷா நிமித்தமாக ஸ்ரீ அநிருத்தாழ்வானை நிரோதிக்க –
ஸ்ரீ கிருஷ்ணன் இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு -அவன் மேல் படை எடுத்து வர –
ருத்ரனும் சபரிகரனாய் கொண்டு வந்து எதிரிட்டு -ஸ்ரீ கிருஷ்ணனோடே கோர யுத்தம் பண்ணி -பலாயிதனான பின்பு –
தன்னை உள்ளபடி அறிந்து ஸ்தோத்ரம் பண்ணினவாறே –
அப்போது ருத்ரன் முதலான தேவ ஜாதிக்காக – பாணனுடைய ஆர்த்த அபராதத்தைப் பொறுத்த
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்துதிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு மகா நிஷேப பூதர் -என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தன்னை எதிர்த்து போரிட்ட அமரர் மக்கள் இவர்களோடு கூடிய முக் கண்ணன் என்னும் இவர்கள்
தோல்வி அடைந்து தன் வைபவத்தை அறிந்து துதிக்க –அவர்களுக்காக வாணன் அபராதத்தை
பொறுத்த ஸ்ரீ சர்வேஸ்வரனை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு சமயத்துக்கு உதவ சேமித்து வைத்த செல்வம்-என்கிறார்

ஸ்ரீ எம்பெருமானார்க்கு பூர்வாசார்யர்கள் ஆன ஸ்ரீ நாத முனிகள் ஸ்ரீ ஆளவந்தார் இவர்கள் இடம் உள்ள பக்தி பேசப்பட்டது-
கீழ் இரண்டு பாசுரங்களாலே –
இனி கீழ் கூறிய ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட ஸ்ரீ கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –
கண்ணன் கல்லது இல்லையோர் கண்ணே -என்று
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ கண்ணனையே பர தேவதையாக ஸ்தாபித்தார் –
ஸ்ரீ நாத முனிகள் யமுனைக் கரையிலே குடி இருந்து யமுனைத் துறைவனை வழி பட்டும் –
அத திருநாமத்தையே தம் திருப் பேரனாருக்கு சாத்தச் சொல்லியும் –
அரசன் தன் பெண்டிரும் தானுமாய் இவர் யோகத்தில் இருப்பதைக் கண்டு வியந்து மீண்டு போகும் பொழுது –
திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும் -என்ற படி ஸ்ரீ கண்ணனும் கோபியருமாக கருதி –
அம் மேதகு மன்னனை பின் தொடர்ந்து – ஸ்ரீ கண்ணனை தாம் காமுற்று பரதேவதையாய் வழி பட்டதை காட்டி அருளினார் –
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கண்ணனை –தனைப் பற்றி அருளிய ஸ்ரீ கீதையை –
ஸ்ரீ மணக்கால் நம்பி இடம் இருந்து கேட்டு -அதில் கூறப்படும் பர தேவதையை தவிர மற்று ஒரு உபாயம் இதனின் மிக்கது இல்லை –
அதனை இப்போதே சாஷாத் கரிக்க வேணும் என்று வேட்கை மீதூர்ந்து –
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ திருவரங்கத்தால் ஸ்ரீ பெரிய பெருமாளை காட்ட –
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடும் அன்று தொட்டு பிரியாது ஸ்ரீ கீதைப் பொருளாம் அரங்கனை வழி பட்டு –
ஸ்ரீ கண்ணன் பால் உள்ள தன் பரத்வ பிரதிபத்தியை காட்டி அருளினார் –

இவ்விதம் ஆழ்வாரும் ஆச்சார்யர்களும் உகந்த ஸ்ரீ கண்ணனை ஸ்ரீ எம்பெருமானாரும் ஏத்துவதாக -கோருகிறார் ஸ்ரீ அமுதனார் –
ஸ்ரீ கண்ணனது பரத்வம் பாணாசுர யுத்தத்தில் தெளிவாக வெளிப்படுதலின் வாணனது பிழையை
பொருத்து அருளிய தூய்மையை ஸ்ரீ எம்பெருமானார் எத்துவதாக சொல்லுகிறது இந்த பாசுரம் –

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

பத உரை –
கார்திகையானும் -கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற சுப்ரமண்யனும்
கரி முகத்தானும் –யானை முகனான கணபதியும்
கனலும் -அக்னி தேவனும்
முக் கண் மூர்த்தியும் -மூன்று கண்கள் கொண்ட வடிவு படைத்த ருத்னனும்
மோடியும் -காளியும்
வெப்பும் -ஜவர தேவதையும்
முதுகிட்டு -புற முதுகு காட்டி ஓடி
பின்னர்
மூ வுலகும்-மூன்று உலகங்களையும்
பூத்தவனே என்று -உண்டு பண்ணிணவனே என்று
போற்றிட -துதிக்க
அவர்க்காக
வாணன் -பானாசுரனுடைய
பிழை பொறுத்த -குற்றத்தை மன்னித்த
தீர்த்தனை-சுத்தமானவனை
ஏத்தும் -ஸ்தோத்ரம் செய்கிற
இராமானுசன்-எம்பெருமானார் –
என் தன் சேம வைப்பு –எனக்கு சேமித்து வாய்த்த செல்வம் ஆவார் –

கிருத்திகா நஷத்திர சம்பந்தத்தாலே கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற ஸூப்ரஹ்மண்யனும் கஜ முகனான கணபதியும் –
அவர்களுக்கு சகாயமாய் வந்த அக்னியும் -த்ரி நேத்ர யுக்தமான-வடிவை உடைய ருத்ரனும் – துர்கையும் -ஜ்வரமும்–
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடியங்கி யோடிட -திரு சந்த விருத்தம் -71 – என்கிறபடியே
புறம் காட்டி யோடி –
கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -விஷ்ணு புராணம் -5 33-41 – –
என்கிறபடியே ஸ்ரீ சர்வேஸ்வரன் என்று அறிந்த பின்பு –
க்ருதகம்- அக்ருதகம் -க்ருதகாக்ருதம் -என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற இந்த அண்டத்தை உன்னுடைய
திரு நாபீ கமலத்திலே ஜனிப்பித்தவனே -என்று அவனுடைய ஜகத் காரணத்வ கதனத்தாலே –
அவனுக்கும் தங்களுக்கும் உண்டான பித்ரு புத்ர சம்பந்தாதிகளை ஸூசுப்பித்து நின்று தங்களை ஆஸ்ரயித்த
வாணனுடைய ரஷண அர்த்தமாக ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக பாணாசுரனுடைய அபராதத்தை ஷமித்த குண சுத்தியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
அந்த குண வித்தராய் கொண்டு -ஏத்துகிற ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு ஆபத்துத் துணையாக சேமித்து வைத்த -தனம் ..
போற்றுதல்-புகழ்தல்
வைப்பு -நிஷேபம்–

தோள் பலம் கண்ட பின்பே ஸ்தோத்ரம் பண்ணினான் ருத்ரன் –
கிருஷ்ண கிருஷ்ண மா பாஹோ-பிரகலாதன் -விரோசனன் -மஹா பலி -நமுசி -பாணன் -இருவரும் பிள்ளைகள் –
நமுசி மஹா பலி திருக் கோவலூரில் சேவிக்கலாம் –இதுவும் ஒரு பரம்பரை -அவதாரங்களும் இவர்களுக்காக –
காமரு சீர் அவுணன் -அன்றோ –
ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நாத முனிகள் ஸ்ரீ ஆளவந்தார் -மூவர் திருவடி சம்பந்தம் அருளிச் செய்து –
இவர்கள் மண்டி கிடந்த ஸ்ரீ கண்ணன் பற்றி அருளிச் செய்கிறார் -இதில் –
அவன் இவன் என்று கூழேன் மின் -நெஞ்சினால் நினைப்பவன் எவன் அர்ச்சை பாடிய உடனே
அன்று தேர் கடாவின கழல் காண்பது என்று கொல் கண்களே என்பர் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவமே -ஸ்ரீ நம்மாழ்வார்
மூன்றாம் பதிகம் -முதல் இரண்டாலும் கொள்கை நிரதேசித்து அருளின பின்பு -சாஸ்த்ர மரியாதை படி நாராயணனே -என்றார் –

கார்த்திகையானும் -இத்யாதி
பிரகலாதனுடைய பௌத்திரனாய் -மகா பலியினுடைய புத்ரனான -பாணன் என்கிற மகா அசுரன் கோரமான தபச்சுக்களால்
ருத்ரனை பிரசன்னனாக்கி வசீகரித்துக் கொண்டு –
நீ என் வாசலில் இருந்து சகல லோக ஜெயத்தையும் பண்ணித் தர வேண்டும் என்று அர்த்தித்தவாறே -ருத்ரனும் அப்படியே
பார்யா புத்த்ராதி சஹிதனாய் வந்து தலையில் பூ வாடாதபடி உன்னைக் காக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணி
அவனுடைய வாசலிலே இருக்கிற காலத்திலே-
அவனுடைய கன்யகையான உஷா ரூப லாவண்யாதிகளால் அப்ரதிமையாய் இருக்கை யாலே –
அவளுக்கு க்ரீடார்த்தமாக ஒரு ஸௌதத்தை பண்ணிக் கொடுக்க – அவளும்
பஹூ பரிசாரிகா ஸ்திரீகளோடே அந்த ஸௌத தத்திலே விஹரியா நின்று கொண்டு -தனக்கு
தகுதியானவர்களைத் தேடும் பருவம் வந்த வாறே -ஒரு மாய பிறவியான தோழியை அழைத்து –
பூ லோகத்தில் இருக்கிற ராஜ குமாரர் எல்லாரையும் -ஒரு சித்ர படத்திலே எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல –
அவளும் அப்படி எழுதிக் கொண்டு அவள் கையில் கொடுக்க -அவள் எல்லோரையும் பார்த்து
அவர்களிலே ஸ்ரீ மத் த்வாரக நகர வாசியாய் -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பேரனாய் -ஸ்ரீ பிரத்யும்னனுடைய குமாரனான ஸ்ரீ அனிருத்தாழ்வானைப்
பார்த்து -அவரையே வரிக்க வேணும் என்னும் அதி வ்யாமோகத்தாலே அந்த தோழியை பிரார்த்திக்க –
அவளும் அசுர ஜாதியில் பிறந்த மாயாவினி யாகையாலே -ஸ்ரீ மத் துவாரகையில் உள்ள எல்லாரையும் வஞ்சித்து –
ஸ்ரீ அநிருத் தாழ்வானை எடுத்துக் கொண்டு வந்து அந்த ஸௌததத்திலே வைக்க –

ஸ்ரீ உஷையும் ஸ்ரீ அநிருத் தாழ்வானும் அந்யோந்யம் ச வதித்துக் கொண்டு -காந்தர்வ விவாஹத்தாலே
ஒருவரை ஒருவர் வரித்து போக பரராய் இருக்க –
பாணனும் அச் செய்தி அறிந்து குடில சித்தனாய் ஸ்ரீ அநிருத் தாழ்வானைப் பிடித்து நிரோதிக்க –
இவ் வ்ருத்தாந்தத்தை ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டருளி வாணன் மேல் சீறி ச பரிகரனாய் படை எடுத்து வர –
அவன் வாசலில் இருந்த ருத்ரன் எதிரிட்டு தோற்று ஸ்துதி பண்ணினான் என்று -இந்த வ்ர்தாந்த்தங்கள் எல்லாம் –
பாஹவத ஹரிவம்சாதிகளிலே பிரசித்தம் இறே –
அந்த கதா முகேன இப் பாட்டை அருளிக் செய்கிறார் –

கார்த்திகையானும் –
ருத்ர புத்ரனாய் கிருத்திகா நஷத்ரத்திலே ஜலத்திலே ஜனித்த சண்முகனும்
கார்திகையானும்
சரவணத்தில் பிறந்த சுப்ரமணியனுக்கு கார்த்திகைப் பெண்கள் பால் கொடுத்த காரணத்தால் கிருத்திகை மன்னனாக
அவன் கூறப்படுகிறான் -கார்த்திகேயன் -எனபது வட மொழி பெயர்

கரி முகத்தானும் –
ருத்ரன் தஷ யாக த்வம்சம் பண்ணின போது அங்கே இருந்தவர்கள் இவனுடைய சிரசை சேதித்தவாறே –
தேவ ஜாதி எல்லாம் திரண்டு வந்து ஒரு ஆனையினுடைய தலையை அறுத்துக் கொண்டு வந்து -இவன் கழுத்தின் மேலே சேர்க்க –
அன்று தொடங்கி கஜானனன் என்ற பேரை வகித்த ருத்ர கணபதியும் –
கரி முகத்தானும்
கரி-யானை-வட சொல் –
கார்திகையானும் கரி முகத்தானும் முக் கண் மூர்த்தியினுடைய மக்கள் ஆவர் –

கனலும் முக்கண் மூர்த்தியும் –
லோக சம்ஹாரம் பண்ணுகிற சம்வர்த்த காலாக்னி போலே பிரஜ்வ விதமான
மூன்று கண்களை உடைய நாமத்தாலே விருபாஷன் என்று பேசப்படுகிற ருத்ரனும் –
அன்றிக்கே –
கனலும் -என்று
அவர்களுக்கு சகாயமான அக்னியை சொல்லவுமாம் –
முக் கண் மூர்த்தி –
எரித்து விடுவான் என்னும் அச்சத்தை விளைவிக்கக் கூடிய வடிவு படைத்தவன் -என்றபடி
இத்தகைய திறன் உடைமையே ஸ்ரீ கண்ணனையும் மதிக்காது எதிர்க்கும்படி செய்தது -என்க-

மோடியும் –
துர்க்கையும் –
வெப்பும் –
யுத்த பரிகரமாய் எதிர்படைக்கு சந்தாபகரமான -ஜ்வராதி தேவதையும் –
மோடியும் –
இவளை ஸ்ரீ விஷ்ணு புராணம்-கோடரி-என்கிறது
அசுரர்கள் உடைய குல தேவதையாய் -வித்யா ஸ்வரூபமான இவள் வாணன் மீது சக்கரத்தை
ஸ்ரீ கண்ணன் பிரயோகிக்க முற்படும் போது -வாணனை காப்பதற்காக -கண்ணன் எதிரே அரையில் ஆடை இன்றி
நின்றதாகவும் -அதனால் வெட்கி -ஸ்ரீ கண்ணன் கண்களை மூடிக் கொண்டே சக்கரத்தை பிரயோகித்ததாகவும் –
அந்த புராணத்திலே பேசப்படுகிறது –
அவ்விடத்துக்கு ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -அருளிய வ்யாக்யானத்தில் –
ஸ்ரீ கண்ணன் அவளுக்கு -பன்னிரண்டு ஆண்டுகள் என்னிடம் பக்தி செலுத்திய பயன் உன்னை ஒரு கால் பார்த்து
வணங்கின மாத்ரத்திலே நசித்து விடும் -என்றும் –
எப்பொழுதும் அரையில் ஆடை அற்றவளாக கடவை -என்றும் சாபம் இட்டதாக மேற்கோள் காட்டி யுள்ளார் –
ஸ்ரீ திரு மழிசை பிரானும்-மோடியோடி லச்சையாய்ச் சாபமெய்தி முக் கணான் – என்று திருச்சந்த விருத்தத்தில் -53 –
சாபமிட்ட செய்தியை அருளி செய்து இருப்பதும் -இங்கு அறிய தக்கது –
அதன் வ்யாக்யானத்தில் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை -சாத்விகர்க்குத் தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி
இவர்களால் அபரிக்ராஹ்யையான சாபத்தை ப்ராபித்த காளியோடே-என்று அந்த சாபத்தை விளக்கி இருப்பதும் காண்க –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–53-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–71-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-6-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-4-8-

இத்தனை சாதனங்களுடன் வந்து யுத்தம் பண்ணி –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாண பாதத்துக்கு சஹிக்க மாட்டாதே –
முதுகிட்டு –
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட –என்கிறபடியே – விமுகராய் புறம் காட்டி ஓடி –
முதுகிட்டு
பாணாசுர னோடு போரிட அவன் நகராகிய சோணித புரத்தை நோக்கி ஸ்ரீ கண்ணன் படை எடுத்து வந்த போது –
தானும் தன் மக்களும் பக்க பலமாக வந்த அக்னி முதலிய தேவர்க்களுமாக முக் கண்ணன் வாணனை காக்க முற்பட்டு
போருக்கு ஆற்றாது -புறம் காட்டி ஓடினான் -என்க –
பிறகு பாணாசுரன் ஸ்ரீ கண்ணனை நேர எதிர்த்து போரிட -அவ்வசுரனுடைய ஆயிரம் தோள்களையும் அறுத்து
அவனைக் கொல்ல ஸ்ரீ கண்ணன் கருதிய போது -முக் கண்ணன் தன்னால் அபயம் அளிக்கப்பட அவனைக் காக்கும் நோக்குடன் –
மூவுலகும் பூத்தவனே -என்று கண்ணனைப் போற்றி -வாணனை கொல்லாது காக்குமாறு வேண்டினான் -என்க –

அப்போது அவனுடைய பரத்வத்தை அறிந்து –
மூ வுலகும் பூத்தவனே –என்று –
க இதி பிரம்மணோ நாம ஈசோஹம் சர்வதேஹினா – ஆவாந்த வான்சே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
ஏதவத் வைவிபுதச்ரே ஷ்டவ் பிரசாத குரோத ஜவ ச்மர்தவ் -ததா தர்சித பந்தானவ் ஸ்ர்ஷ்டி சம்ஹார காரகவ் -என்றும்
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-என்றும்
சொல்லுகிறபடியே
சமஸ்த லோகங்களையும் ஸ்ர்ஷ்டிக்கைக்காக காரண ஜலத்திலே ஒரு பவனான ஆலம் தளரின் மேலே பள்ளி கொண்டு
அவனுடைய திரு நாபீ கமலத்திலே -சதுர் முகன் தொடக்கமான சகல ஜகத்துக்களின் உடையவும் -உத்பத்தி காரணமாய்
இருப்பதொரு தாமரைப் பூவை விகசிப்பித்த ஜகத் காரண பூதன் ஆனவன் -என்று போற்றிட –

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் . ஜகதாகவே உபாதான காரணமாக
ப்ரஹ்ம சரீரம் நீராய் நிலனாய்–போல…நீ தான் புருஷோத்தமன்
தங்களுக்கும் அவனுக்கும் உண்டான பித்ர் புத்ராதி சம்பந்தங்களை சூசிப்பியா நின்று கொண்டு –ஸ்தோத்ரம் பண்ண –

போற்றுதல்-
புகழுதல் –
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –என்றும் –
கிருஷ்னேதி மங்களானாம் யச்யவாசி பிர வர்த்ததே பச்மீபவந்தி ராஜேந்திர மகாபாதக கோடாயா-என்றும்
கிருஷ்ணா-என்றும் தான் தீர கழியச் செய்த அபராதத்துக்கு பிராயச்சித்தார்தமாக -திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறான் காணும் –
ப்ராயச்சித்தான்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை -யாநி தேஷா மசெஷாணாம் கிருஷ்ண அனுஸ்மரணம் பரம் -என்னக் கடவது இறே –

கிருஷ்ண -என்றும்
கிருஷி ப்ர்பூ வாசகஸ் சப்தோனஸ் ச நிர்வர்த்தி வாசக -தயோரைக்யம் பரப்ரம்ம கிருஷ்ணா இத்யபிதீயதே -என்னும்படி –
உபய விபூத் யாத்மகனாய் – என்றும் –
ஜகச்சச -என்று தத்ரூப மகா ப்ர்திவி யானவனே – என்றும் –
மகா பாஹோ -பூர்வ காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் -அசுத்தாஸ்தே சமஸ்தாச்து தேவாத்யாம் கர்ம யோக -என்றும் –
அவித்யாந்தர்க்க தாஸ் சர்வே -என்றும் –
நமேவிதுஸ் சூரகணா பிரபவன்ன மகர்ஷய – என்றும் சொல்லப்பட்ட பிரக்ரதர் யாகையாலே –
ஹரி ஹரர்கள் இருவருடையவும் -பலாபலங்களை அறிவதற்காக விஸ்வ கர்மாவை அழைத்து -இரண்டு தனுச்சுக்களைப் பண்ணச் சொல்ல –
அவனும் அப்படியே பண்ணிக் கொடுக்க -அவர்கள் அந்த தனுச்சுக்களை எடுத்து இருவர்
கையிலும் கொடுத்து -யுத்தம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்க -அப்படியே இருவரும் யுத்தம் பண்ணுகிற போது –
விஷ்ணுவுடைய சர வேகத்தை -ருத்ரன் சஹிக்க மாட்டாதே மிகவும் அவசன்னனாய் -ரஜஸ் தமச்சுக்கள் அபி பூதமாய் –
சத்வம் தலை எடுத்தவாறே -அப்போது அவரை -சர்வ ஸ்மாத்பரன் -என்று அறிந்து -ஸ்தோத்ரம் பண்ணினான் -என்று பிரசித்தம் இறே –
அப்படியே இப்போதும் தமோத்ரேகத்தாலே யுத்தம் பண்ணி -அவனாலே அடி பட்டு -பின்பு சத்வம்தலை எடுக்க –
பூர்வ காலத்திலே அபதானத்தை ஸ்மரித்து -அவனுடைய பாஹூ பலத்தை அறிந்தவன் ஆகையாலே –
மகா பாஹோ என்று சம்போதிக்கிறான் –
ஜானே -இவ்வளவும் தேவரீர் கொடுத்த அதிகாரத்தாலே யுத்தம் பண்ணி -அடி பட்ட பின்பு –சத்வம் தலை எடுத்து தெளிந்தேன் –
சத்வாத் சஞ்சாய தேஜ்ஞ்ஞானம் -என்றது இறே -தெளிந்த படி
எங்கனே என்னில் –
த்வாம் புருஷோத்தமம் -என்றும் –
வாசுதேவ குமாரராய் -ஆஸ்ரித சுலபனான தேவரீரை – என்றும் –
புருஷோத்தமம் –என்றும் -அதோச்மிலோகேவேதேச பிரதித புருஷோத்தம -யோ மா மேவ மசமூடே ஜாநாதி புருஷோத்தமம் -என்று
தேவரீர் அருளிச் செய்த படி -பரம புருஷன் என்று -இப்போது தெளிந்தேன் என்று -போற்றிட –
இப்படி குணி நிஷ்ட குணாபிதானம் பண்ணி ஸ்துதிக்க –

வாணன் பிழை பொறுத்த –
இந்த ஸ்தோத்ரத்தாலே பிரசன்னனாய் ஸ்ரீ அநிருத் தாழ்வானை நிரோதித்து –
மகா அபராதம் பண்ணி நின்ற -வானனுடைய மகா அபராதத்தை ஷமித்த –

தீர்த்தனை –
ஒருவன் சில அபராதங்களைப் பண்ணினால் அவை அனுபவ பிராயசித்தங்களாலே போக்க வேணும் -இறே –
இவன் அப்படி அன்றிக்கே -ஒருவரை ஸ்தோத்ர மாத்ரத்தாலே -அவனுடைய பாபங்களை எல்லாம் பொடி பண்ணின -பாவனனை –
பதித பாவனனை-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை –
வாணனுக்கு அபயம் அளித்து -தன்னை எதிர்த்தவன் முக் கண்ணனாய் இருப்பினும் -தற் சமயம்
தன் பிரபாவத்தை உள்ளபடி உணர்ந்து அவன் வேண்டிக் கொண்டமையின் வாணனை கொல்லாது விட்டதோடு –
அவன் பிழையையும் பொறுத்து அருளினான் ஸ்ரீ கண்ணன் –
அத்தகைய சுத்தமான குணம் உடையவன் என்றபடி-இவ் வரலாற்றினை ஸ்ரீ ஹரி வம்சத்திலும் -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் –
ஸ்ரீ பாகவதத்திலும் விரிவாக காணலாம் -இதன் சுருக்கம் வருமாறு –

பாணாசுரன் பரம சிவ பக்தன்-பரம சிவன் நடமாடும் போது மத்தளம் கொட்டி அவனை மகிழ்வித்தான் –
பரம சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கரம் கொடுத்ததோடு -பரிவாரமும் தானுமாக -அவனுக்கு காவலாக கூடவே இருந்தான் -.
தம்பதிகளான பார்வதி பரமேஸ்வரர்கள் இணைந்து விளையாடி மகிழ்வதை பாணாசுரன் மகள் உஷை கண்டாள் –
தானும் இவ்வாறே கணவனைப் பெற்று அவனோடு இன்புற்று வாழ்வதற்கு ஆசை கொண்டாள்-
இதனை அறிந்த பார்வதி -வைகாசி மாதம் வளர் பிறை த்வாதசி அன்று நீ ஒரு கனா காண்பாய் –
அக்கனாவில் உன்னோடு ஒரு ஆடவன் கூடுவான் -அவனே உனக்கு கணவன் ஆவான் -அவனோடு கூடி விளையாடி
நீயும் என்னைப் போல் இன்புறுவாய் -என்று உஷையை நோக்கி கூறினாள்-
அவ்வாறே உஷை கனா கண்டாள் –
அவனை தன் தோழி சித்ர லேகை எழுதிக் காட்டிய பல சித்திரங்களுள் ஒன்றினால் அடையாளம் கண்டு கொண்டாள் உஷை-
அவன் ஸ்ரீ மத் த்வாரகையில் உள்ள ஸ்ரீ கண்ணனுடைய பேரனும் ஸ்ரீ பிரத்யும்னனுடைய புத்திரனுமான ஸ்ரீ அநிருத்தனே -எனபது ஊர்ஜிதம் ஆயிற்று –
அந்தபுரத்திலே உறங்கிக் கொண்டு இருக்கும் போது சித்ர லேகை தன் யோக வித்யையின் பலத்தினால்
யாரும் அறியா வண்ணம் அவனை உஷையின் கன்னி மாடத்தில் கொணர்ந்து அவனை காண்பித்தாள்
ஸ்ரீ அநிருத்தன் உஷையுடன் கூடிக் கழிப்பதை பணி யாட்கள் வாயிலாக ஒருவாறு அணிந்த வாணன்
போராடி இறுதியில் நாக பாசத்தாலே அவனைக் கட்டிப் போட்டான் –

ஸ்ரீ அநிருத்னனைக் காணாது கலங்கிய ஸ்ரீ கண்ணன் முதலியோர் நாரதர் மூலம் விஷயம் அறிந்து
ஸ்ரீ அநிருத்னனை மீட்பதற்காக சோணித புரத்தை நோக்கி படை எடுத்து வந்தனர் –
நினைத்தும் வந்த ஸ்ரீ கருடன் மீது ஸ்ரீ கண்ணன் எழுந்து அருளினான் –
வந்த படையை சிவ பிரானுடைய ப்ரமத கண்கள் தடுத்தன -அவர்களை சிதற அடித்து நகரை நெருங்கியது ஸ்ரீ கண்ணன் படை –
பின்னர் மூன்று தலைகளும் மூன்று கால்களும் கொண்ட சிவ பிரானை சேர்ந்த ஜவர தேவதை வாணனை
காப்பதற்காக கண்ணனோடு போர் இட்டது -வைஷ்ணவ ஜவர தேவதையால் அது நிராகரிக்கப்பட்டது –
பிறகு அக்னி தேவன் தோற்கடிக்கப் பட்டான் –
அசுரப் படை அனைத்தும் -வாணனும் -சிவ பிரானும் -சுப்ரமணியனும் போருக்கு எழுந்தனர் –
ஸ்ரீ கண்ணனுக்கும் பரம சிவனுக்கும் பயங்கரமான போர் மூண்டது –
ஸ்ரீ கண்ணன் ஜ்ரும்பகாஸ்த்ரத்தால் சிவ பிரானை கொட்டாவி விட்டு கொண்டே இருக்க செய்து ஒய்வுறச் செய்தான் –
சுப்பிரமணியன் வாகனம் கருடனால் புண் படுத்தப்பட்டது –
பிரத்யும்னனின் பாணங்களால் நோவுற்று ஸ்ரீ கண்ணன் ஹூங்காரத்தாலே சக்தி ஆயுதம்
பயன் அற்று போரினின்றும் விலகி ஓடினான் சுப்பிரமணியன் –
அசுரப்படைகளும் சிவ பரிகாரங்களும் நலிவுற்றன –

பின்னர் நந்தி தேரோட்ட ஸ்ரீ கண்ணனோடு போரிட முற்பட்டான் வாணன்
ஐந்நூறு விற்கள் ஏந்தி ஆயிரம் கை படைத்த வாறன் வாணன் -பல பல பாணங்களை எய்து
இறுதியில் ஸ்ரீ கண்ணனை கையில் சக்கரம் எடுக்கும்படி செய்தான் –
வாணனை கொல்லும் கருத்துடன் ஸ்ரீ கண்ணன் கையில் சக்கரம் எடுத்ததும் வாணனை காப்பதற்காக அசுரர்களுடைய
குல தெய்வமும் வித்யா ரூபமுமான கோடரி என்னும் பெயர் வாய்ந்த கௌரியின் சக்தி
அறையில் ஆடை இன்றி கண் எதிரே நின்றாள்-அவள் நின்றதும் ஸ்ரீ கண்ணன் கண்ணை
மூடிக் கொண்டே வாணன் தோள்களை துணிப்பதர்க்காக சக்கரத்தை ஏவினான் -அவன்
தோள்களை அது அறுத்து தள்ளியது -மீண்டும் அவனை நாசப் படுத்துவதற்காக சக்கரத்தை
ஏவ முற்படுவதை கண்டு உமாபதி தன்னால் அபயம் அளிக்கப்பட்ட வாணனை பிராணன் போகாமல் காப்பதற்காக
ஸ்ரீ கண்ணனை போற்றி வேண்டிக் கொண்டான் –

கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -என்று
நீண்ட கை படைத்த கிருஷ்ண கிருஷ்ண உன்னைக் புருஷோத்தமனாக அறிகிறேன் –
கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத- எனபது தற்காலப் பாடம் -என்று தொடங்கி
நான் அபயம் என்று சொன்னதை பொய்யாக்காது அருள வேணும் –
என்னிடம் இருந்து வரம்யேற்று செருக்கு கொண்டனன் – பொருத்து அருள வேண்டும் என்று மன்றாடினான் –
ஸ்ரீ கண்ணன்-உனக்காக பொறுத்தேன் என்று சக்கரத்தை ஏவாது வாணனை உயிரோடு விட்டு விட்டான் –
ஸ்ரீ கருடன் காற்றுப் பட்டதும் அநிருத்தனை கட்டி இருந்த நாக பாசம் விடுபட்டது -ஸ்ரீ அநிருத்னனையும் ஸ்ரீ உஷையையும் மீட்டுக் கொண்டு
ஸ்ரீ கண்ணன் முதலியோர் ஸ்ரீ மத் த்வாரகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தனர் –
உன்னை புருஷோதமனாக அறிகிறேன் என்றமையால்-அறியாமையால் முன்பு போரிட்டதை சிவ பிரான்
ஒப்புக் கொண்டமை தெரிகிறது -ஸ்ரீ அமுதனார் –
இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை பொறுத்தமை தோற்றுகிறது-

மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் ஸ்ரீ கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
பூத்தவனே –
ஸ்ரீ நாபீ கமலத்தை மலரச் செய்வதன் மூலம் பிறப்பிதவனே -என்றபடி –
பூவின் இடம் உள்ள பூத்தலை அதனை உடையான் மேல் ஏற்றி கூறுவது உபசார வழக்கு –
ஸ்ரீ நாபீ கமலம் மலருவதே லோக சிருஷ்டி என்றும்
அது கூம்புவதே லோக சம்ஹாரம் என்றும் சொல்லப்படுதலின் -இங்கனம் கூறினார் –
இனி பூத்தல்
விரிதலாய் உலகு அனைத்தும் தன்னுள் ஒடுங்க நின்ற இறைவன் விரிவு அடைதலே சிருஷ்டி யாதலின் -இங்கனம் கூறினதாகவுமாம் –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் –
பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் – ஆகையால் நாம் தந்தையும் மக்களும் ஆகிறோம் –
பிதேவ புத்ரச்ய -என்றபடி மகன் திறத்து பிதா பொறுத்துக் கொள்வது போல பொருத்து அருள வேணும் எனபது கருத்து –
வாணன் மன்னிப்பு கோரா விடினும் அவனுக்காக முக் கண்ணன் கோர – வாணன் பிழை பொறுத்தான் ஸ்ரீ கண்ணன் –
இதனால் -அஹமச்ம்ய பராதானாமாலய -நான் குற்றங்களுக்கு கொள்கலம்-என்று
சரண் அடைந்தவருக்கு மாத்திரம் அன்றி -அவர் அபிமானத்தை பெற்றவருக்கும் குற்றங்களை பொறுத்து
அருள் சுரக்கும் பெரும் தன்மை கண்ணன் இடம் துலங்குவது காணலாம் –

ஸ்ரீ கண்ணன் என்னும் தெய்வம் தவிர மற்றைத் தெய்வங்கள் கருணை காட்டினும் ஆபத்து காலத்து உதவகில்லாது
கை விட்டு ஓடி விடுவன -சீறின நிலையிலும் ஸ்ரீ கண்ணனே ஆபத்துக்கு உதவுமவன் என்பதும் இங்கே தெளிதற் பாலது –
தேக பந்துக்களை துறந்து -பற்ற வேண்டியவனான ஸ்ரீ கண்ணனை தன் பெண்ணாகிய உஷைக்காக பகைத்து
போரிடப் புறப்பட்டது -பாணனது பிழையாகும் –
மேலும் காதல் மணம் புரிந்து தன் மகள் ஸ்ரீ அநிருத்னனோடு கூடினதற்கு பிறகு ஸ்ரீ கண்ணனோடு தனக்கு சம்பந்தம் வாய்த்து
இருப்பதை பயன்படுத்தி காதல் தம்பதிகளை இணைத்து ஸ்ரீ கண்ணன் இடம் ஒப்படைத்து பேர் உவகை கொள்ளுமாறு
செய்ய வேண்டி இருக்க தன் தோள் வலிமையை பெரிதும் மதித்து போருக்கு புறப்பட்டு அல்லலுக்கு உள்ளாகியதும் அவன் இடம் உள்ள பிழையாம் –
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும் போக்கியும் போக்கி அவர்களை
தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –

ஆபத்துக் காலத்திலேயே உதவிய ஸ்ரீ கண்ணனது தூய்மையினை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானாரோ எனக்கு
ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

ஏத்தும் –
இந்த பிரபாவத்தை இட்டு ஸ்துதிக்கிற –
ஏத்தும் -என்கிற வர்த்தமான நிர்தேசத்தால் –
ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதிகளாலே -சர்வ காலத்திலும்-லோகத்தில் அவனுடைய பிரபாவத்தை ச்தாபிக்கிறவர் -என்றபடி –

இராமானுசன் –
எம்பெருமானார் –

என் தன் சேம வைப்பே –
எனக்கு யாவதாத்ம பாவியாய் -உஜ்ஜீவிக்கும்படி -சேமித்து வைத்த ஆபத்து தனம் – என்றது ஆய்த்து –
வைப்பு -நிஷேபம் –

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-
என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

ராமானுசன் எனக்கு சேம வைப்பே –
நம் கண்ணன் கண்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி போல் ஸ்ரீ சுவாமியும் தீர்த்தன் என்கிறார் இங்கு
என்றும் ரஷிக்க போகிறவர் ஸ்ரீ ராமனுஜன்–யாராலும் கை விட்டவரை ஸ்ரீ சுவாமி காப்பார்..
இந்த குணம் ஸ்ரீ கீதாசார்யன் மூலம் பெற்றார் ஸ்ரீ ஸ்வாமி –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் -விளக்கம் –

April 6, 2020

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -அவதார ஸ்தலம் ஸ்ரீ திரு உறையூர்-ஸ்ரீ நிகிளாபுரி–கோழியும் கூடலும்-மங்களா சாசனம் –
முனி வாஹனர் -ஆபாத சூடம் -பாத கமலம் -நல்லாடை -உந்தி -உதர பந்தம் -திரு மார்பு -கண்டம் -செவ்வாய் –
வாட்டமில் கண்கள் –அஷ்ட அங்க அனுபவம் -பின்பு திரு மேனி அனுபவம் –
அனுபவ பரிவாஹம் – அடியேன் என்னுமது ஒழிய இப்பிரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி தாம் பெற்ற அனுபவம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

திருக் கமல பாதம் அனுபவம் –
திருமகள் கூசிப் பிடிக்கும் மெல்லடி-போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் உண்டே – –
ஸ்ரீ லக்ஷ்மீ பூம்யோ:கர ஸரஸிஜை: லாளிதம் – பாதோம் போஜம், —
1–அமலன் -பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம்-
2–ஆதி -காரணம்
3–பிரான் –பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் -ஸ்ரீ பொய்கையாழ்வார்-
4–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -புருஷார்த்த காஷ்டை –பகவத் கிங்கரத்வம் –
த்வத் பரிசாரக ப்ருத்த்ய ப்ருத்த்யஸ்ய –அடியார் அடியார் தமக்கடியார்-
லோக சாரங்க முனிவர் சொல்படி கேட்க வைத்த அருள் –
5–விண்ணவர் கோன்-
6–விரையார் பொழில் வேங்கடவன் –
7–நிமலன் –நிர்ஹேதுக அருள்
8–நின்மலன் –தனது பேறாக அருள் -அவ்விஞ்ஞாதா -அடியார் பிழைகள் நின் கருத்து அடையா –
9–நீதி வானவன் -இமையோர் தலைவன் -அயர்வரும் அமரர்கள் அதிபதி
10–நீள் மதிள் அரங்கத்து அம்மான் -சர்வவித பந்து

திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே —
என் கண்ணுள் நீங்கா, நெஞ்சுள்ளும் நீங்காவே-ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்ரீ பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநாதீர்க்கி காயாம்-ஸ்ரீ தேசிகன் —
மனக்கடலில் வாழ வல்ல மாய நம்பி -ஸ்ரீ பெரியாழ்வார் –

இங்கு திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -என்று உபக்ரமம்
அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -நிகமனம் –

அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்தனத்துக்கு செய்தான் -பெரிய திரு மொழி -4-2-3-
தனக்கு அடிமைப் பட்டவனை ததீய சேஷத்வத்தில் நிலை நாட்டி அருளினான் –
தனது அபிமானத்தில் ஒதுங்கின இடையர்களை ஸ்ரீ கிருஷ்ணன் அந்ய சேஷமாக்காதபடி நோக்கி
திருமலை ஆழ்வாருக்கு சேஷமாக்கினான் -இப்படி பகவான் செய்யும் சேமத்தை கூறி ஆழ்வார்கள் ஆனந்திக்கிறார்கள் –

விண்ணவர் கோன் –வேங்கடவன் ..அரங்கத் தம்மான் -1-
ஆடும் கருளக் கொடி உடையார் –நல் வேம்கட நாடர் வந்து -நாச்சியார் திருமொழி -10-5-
பரம பதத்தில் நின்றும் கோயில் ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
ஆடும் -பரம பதம் கலவி இருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார் –
ஸ்ரீ வில்லி புத்தூரில் போலே இருந்தது பயணம் –

நீண்ட தோள் சென்று அளந்தது -இரண்டாம் திருவந்தாதி -61
ஒரு காலும் எண் மதியம் கடந்து -என்று திருவடிக்கு வளர்த்தி சொல்ல –இருக்க -திரு முடிக்கு அருளியது
ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற- நீண்ட தோள் என்கிறார் பூதத் ஆழ்வாரும்-

————

உவந்த உள்ளத்தனாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

உவந்த உள்ளத்தனாய் —
பக்த பிரகலாதன் வம்ச மஹா பலியைக் கண்ட உகப்பு –
இந்திரனுக்கு இரந்து கொடுத்தோம் என்ற உகப்பு –
பிரஜைகளைத் தீண்டப் பெற்றோமே என்ற உகப்பு –
ஆழ்வார்கள் பாடல் பெற அளந்தோமே என்ற உகப்பு
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த
திருவடியால் அளந்தவன் ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டிக் கொடுக்கும் -உயர்த்திய -நிமிர்ந்த -திரு அபிஷேகம்
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்-காகுஸ்த வம்ச ஸ்ரீ பெருமாள் அன்றோ இங்கே சேவை –
ஸ்ரீ ராம பானமே அமோகம் -வில்லாண்டான் என்றது கோதண்டத்தை போதும் என்று ஆள்வதையே குறிக்கும் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான் –வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை -அண்டர் கோன் அமரும் சோலை –
ஸ்ரீ பெரிய பெருமாள் -மரகதமலை—பச்சை மா மலை போல் மேனி அன்றோ –
மரகதகிரிமேல் மாணிக்கவொளி சூழ்ந்தாப்போல்-
அரைச் சிவந்த வாடையின் மேல்–திருப் பீதாம்பர அனுபவம் –
சென்றதாம் என சிந்தைனையே —-சிந்தனை -ஆழ்வாரைப் பிரிந்து வகுத்த இடத்தே சென்றதே –
என் -சாத்விக அஹங்காரம் –

நீண் முடியன் -2-
மலர் புரையும் திருவடி -திரு நெடும் தாண்டகம் -5-
திரு விக்ரமனின் திருமுடி விகாசத்தையும்-திருவடி விகாசத்தையும் அனுபவிக்கிறார்கள் –

—————-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்-அரங்கனின் வரத்து சொல்கிறது
மண்ணோரும் விண்ணோரும் தொழும் வெற்பு —
மந்தி போலவே அவயவங்கள் தோறும் அலைபடுகிறார் ஆழ்வாரும் –
விஷயாந்தரங்களில் அலைபடுகிறோம் நாம் –
அரங்கத்து அரவின் அணையான்–அரங்கத்தம்மான் கீழ் இரண்டிலும் -இங்கு அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ இங்கு அந்தி என்றது
காலை மாலை சந்திகள் இரண்டையும் -காலை சந்தி -மயர்வற மதி நலம் -ஞான உதயம்
மாலை சாந்தி -குளிர்ந்து -தாபத்ரயம் போக்கி அருளும் –
அடியேன் உள்ளத்து இன்னுயிரே–கீழே இரண்டிலும் என் கண் -என் சிந்தனை -என்றவர் இதில் அடியேன் –
இதில் உள்ளத்து இன் உயிர் என்று ஜீவாத்மாவைச் சொல்லி –
ஆத்ம தாஸ்யம், ஹரே : ஸ்வாம்யம்-என்பதால் அடியேன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் அன்றோ

எழில் உந்தி -3-
காமனைப் பயந்த காளை -திருவாய் மொழி -10-2-8-

எழில் உந்தி -என்று இளகிப் பதிக்கை-பிரசவாந்தம ச யௌவனம் -என்கிறபடி அன்றிக்கே இருக்கை-
பிரமனை உண்டாக்கிய பின்பும் ஒளியும் அழகும் மிக்கு -யோ ப்ரஹ்மானாம் விததாதி தம ஹ தேவம – விளங்குகிறான் –
பயந்த என்று பிரசவத்தை சொல்லி–காளை -என்று யௌவனத்தை கூறினார் இறே –

மூன்றாலும் ஓங்காரம் சொல்லி -அமலன் -உவந்த -மந்தி -பாவோ நான்யத்ர கச்சதி –
அடுத்த நான்கையும் சேர்த்து – அமலன் உவந்த மந்தி ச பாதுகை -அடி சூடும் அரசு-

———————

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்–ஓர் -அத்விதீயம்
ஒட்டி -இன்று போய் நாளை வா என்றது ஸூசகம்
ஓத வண்ணன்-கோபமாஹாரயேத் தீவ்ரம்-கோப வசமானாலும்-ஸ்வரூபம் மாறாதே -முகில் வண்ணன் அன்றோ இங்கு
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் –முகிலைக் கண்டு தானே மயிலினம் ஆலும் -வண்டினம் முரலும் –
திரு வயிற்று உதர பந்தம் —-தேட்டரும் உதர பந்தம் –அரை ஞான்- மேகலை- ஒட்டியாணம் -அனுபவம் –
அரங்கனுக்கு தேட்டரும் திறல் தேன் அன்றோ
என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே –பந்தம் என்ற பெயர் -ஆனால் உலாவுகின்றதே –
தாமோதர ஈடுபாடு எத்திறம் என்னப் பண்ணுமே-

மதுர மா   வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி பிரான் -4
வண்டு பலவிசை பாட மயிலாலு -பெரிய திருமொழி -3-9-3-
மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடும் -பெரிய திருமொழி -4-2-3-

——————–

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்–கானோ மறி கடலோ வானோ கண்டிலமால்
அதுக்கும் மேல் அடியார்க்கு என்னை ஆட் படுத்தி அருளினான் –
அத்துடன் இல்லாமல் மறப்பேன் என்று
வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்–என்னுள் புகுந்தான்
கீழே –
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே -என்றவர் –
இதில்
அவனே புகுந்ததை அருளிச் செய்கிறார்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான்–கீழ் பாசுரங்கள் போலே அவனது விபவ சேஷ்டிதங்கள்
எதுவும் இல்லாத பாசுரம் –
இதில் அடியேனைப் பெற அவன் செய்த கோரா மா தவத்தையே அருளிச் செய்கிறார் –
அடியாரானார்க்கு இரங்கும் அரங்கனாய பித்தன் அன்றோ இவன் –
திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–ஸ்ரீ வைஜயந்தி மாலையின் பிரபாவம் அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பு அன்றோ–
ஸூபாஸ்ரய மிதுன திவ்ய மங்கள விக்ரஹம் கண்ட பிரபாவத்தை அருளிச் செய்கிறார்

மற்ற ஒன்பது பாசுரத்திலும், “கவர்ந்ததுவே”, “உலாகின்றதே”, “சென்றதுவே”, “ஒக்கின்றதே”-ன்னு பாடும் இவர்…”திரு-ஆர-மார்பு” என்பதால் “ஆட்கொண்டதே” என்று பாடுவதில் தான் எத்தனை லயிப்பு!

தத்வக்ஷஸ் ஸ்தல “நித்ய” வாஸ ரஸிகாம்-பத்மாலங்க்ருத பாணி பல்லவ யுகாம்,
பத்மாசனஸ்தாம் ஸ்ரீயம்!-வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்,
பகவதீம்ம்ம்ம் வந்தே ஜகன் மாதரம்!

———————–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -பிறையின்-துயர்–சந்திரனின் துயர்-சந்த்ர சேகரின் துயர் தீர்த்தவன்
அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்–அஞ்சிறைய மட நாராய் –இனக்குயில்காள் –
மென்னடைய அன்னங்காள்-அகன்றில்காள் -சிறு குருகே-வரி வண்டே-இளங்கிளியே -போன்ற ஆச்சார்யர்கள் –
நல்லார் வாழும் நளிர் அரங்கம் அன்றோ –
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் —
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும், –
வையம் எல்லாம் பிள்ளை வாயுள் கண்டாள்-

முற்றும் உண்ட கண்டன் -6
நீடு உலகு உண்ட திறங்கிளர்வாய -திருவாய்மொழி -6-6-3
எஞ்சாமல் வயிற்று அடக்கி -பெரிய திருமொழி -2-10-1-

சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருப்பது போலே
இவற்றின் ரஷணம் இவனுக்கு தாரகமாய் இருக்கும் –
உலகு உண்ட திறங் கிளர்வாய-ரஷகத்வ ப்ரகாசகமான திரு வதரம் -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –
வயிற்று அடக்கி-பிரளய ஆபத்தில் உலகத்தை வாயாலே உட் கொண்டு கண்டத்தின் வழியாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினான் –
நிரபேஷ ரஷகத்வம் -இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள் –

—————

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் -திருமேனி அனுபவம்-திவ்ய சஷுஸ்-காட்டவே கண்டார்
துளப விரையார் கமழ் நீண் முடி–நீள்முடி-2-பாசுரம் -நாற்றத்துழாய் முடி –ஸ்ரீ ஆண்டாள் –
யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே —
ஐயோ என்னப் பண்ணுகிறதே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே–

ஆர் – நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி – சுழி; துளை
ஆர் சுரி சங்கு – நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு – கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி – சக்கரம்
அனலாழி – தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை – மலை
மெய் – உடல்
துளபம் – துளசி
துளப விரை – துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் – துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி – அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு – நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை – மேல்; மேலிடம்
மேய்தல் – உறைதல்
செய்ய வாய் – சிவந்த வாய்

கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்; கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ!
அரங்கன் திருமேனியில் ஒரு தாமரைக் காடே பூத்து இருக்கு!
ஒரு தாமரை, இரு தாமரை அல்ல! பெரும் தாமரைக் காடு!

தாமரைக் காடு பூத்து = எம்பெருமான் திருமேனியில் மொத்தம் ஒன்பது தாமரைகள்!
* திரு விழிகள் = 2
* செவ்விதழ்கள் = 2
* முகத் தாமரை = 1
* பத்ம நாபம் (தொப்புள் கொடி) = 1
* திருவடிகள் = 2
* இதோடு கூடே…மலர்மாமகள், அலர்மேல்மங்கை அவன் மார்பில் = 1
இப்படி உடலெங்கும் தாமரைக் காடு பூத்துள்ளது!

——————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–

கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -அப்பாஞ்சசனியம்– —
நிகரில்லாத நீல ரத்னம் போலே யிருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பலம் போன்று.-
ஸ்வாகதோதார நேத்ரம்-அப்பொழுதைத் தாமரைப்பூ –ஸரோஜஸத்ருசா–
ஜிதம் தே புண்டரீகாக்ஷ:-ஈச்வரோஹ மென்றிருப்பாரைத் தோற்பித்து
நமஸ்தே என்று திருவடிகளிலே விழப் பண்ணும்.

ஆதிப் பிரான் -8
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–திருவாய் மொழி -5-3-1-

தான் முற் கோலி உபகரிக்குமவன் -பிரகலாதனுடைய விரோதியை முற் பாடனாய் சென்று
போக்கின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறார் -ஆதிப் பிரான் என்று –
நம்மோட்டை கலவிக்கு அவன் முற் பாடனாகச் செய்தே பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பாடை யாகவோ –
ஆழ்வாருடைய ஆன்ம ஷேமத்துக்கு அவன் முற்பட்டமை -ஆதி -என்று கூறப் பட்டது –

——————————

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்–வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம்.–அவாந்தர பிரளயம்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்–அண்டரண்ட பகிரண்டத் தொரு மாநில மெழுமால் வரை கீழே-6-பாசுரம்–
வைய மேழும் கண்டாள் பிள்ளை வாயுளே–ஒரு–அத்விதீயன்
பேயிருக்கு நெடு வெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்ட –பெரிய திருமொழி -11-6–பதிகம்
முழுவதும் இதன் அனுபவம்
அகில புவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே —
ஆலிலை சயனம் விட்டு அரவணை துயில அன்றோ அரங்கத்துக்கு எழுந்து அருளினான்
ரக்ஷகத்வம் -காரணத்வம்-திவ்யாத்ம ஸ்வரூபம்–திவ்ய மங்கள விக்ரஹம்-மிதுன அனுபவம்

கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்–கோல மா மணி ஆரமும் -கோல மா முத்துத் தாமமும்-முக்தாஹாரமும் –
முடிவில்லதோ ரெழில் நீல மேனி –நீள் வரை போல் மெய் –
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாலும் ஆரங்களாலும் -ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்-
பூஷாயுதை ரதிகதம் நிஜ காந்திஹேதோ–ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் –
அதிகரண சாராவளி -தாத்பர்ய ரத்னாவளி -என்ற பெயர்களும் இதனாலேயே –
ஸர்வபூஷண பூஷார்ஹா–ஸ்ரீ திருவடி –
ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே –சிந்தை கவர்ந்ததுவே–7-பாசுரம் —
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ! –கம்பர் —
ஐயோ! கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே. –திருவாய்மொழி–
ஐயோ —
பச்சையுடையுடுத்துத் தனக்குள்ளத்தையடையக் காட்டி, எனக்குள்ளத்தை யடையக் கொண்டான்–ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை —
பச்சை மா மலை போல் மேனி அன்றோ-

————————

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே— 10–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை-செய்ய வாய் -7-பாசுரம் –
வெண் தயிர் தோய்ந்த செவ்வாய்-குலசேகரப் பெருமாள் –
தயிருண்டவாய் துடைத்த–
வைகலும் வெண்ணெய் கை கலந் துண்டான் பொய் கலவாதென் மெய் கலந்தானே
இதில் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ண அவதார அருளிச் செயல்
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்–அமுதன் என்று இல்லாமல் அமுது என்கிறார் -அனுபவிக்கப் பண்ணுவித்தானே
ஊர் பேருமரங்கமே-
இவனும் முகில் வண்ணன் அன்றோ -வெண்ணெய் முடை நாற்றம் இன்றும் உண்டே –
வண்ணம் -நிறத்துக்கும் வள்ளல் தன்மைக்கும் –
அநாலோசிதவிசேஷ அசேஷலோக சரண்ய-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று அன்றோ படுகாடு கிடக்கிறான் –
அடியேன் -என்று -3-5-6–பாசுரங்களில்
மற்றவற்றில் என் -என்று -சாத்விக அஹங்காரம்
ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது —
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு
கண்ட கண்கள்—-அமுதினைப் பருகிய என்று இல்லாமல் கண்ட கண்கள் –
முதல் பாசுரத்தில் கண்ணினுள்ளே ஒக்கின்றது -பார்த்தோம் –
கண்ட கண்கள் -வகுத்த விஷயத்தை அன்றோ கண்டது -கண் படைத்த பிரயோஜனம் பெற்றார் –
மற்றொன்றினைக் காணாவே.

கோவலனாய் வெண்ணெய் உண்ட -அமலனாதி பிரான் -10
நெய் பருக நந்தன் பெற்ற -பெரிய திருமொழி -5-5-3-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் -10
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா -திருவாய்மொழி -5-7-6-

கோவலனாய் வெண்ணெய் உண்டானைப் போலே
கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் –
யசோதை பிராட்டி வெண்ணெயில் பண்ணின ஸ்ரத்தையை -என் நெஞ்சிலே பண்ணி அனுபவித்தவன்
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே ஆய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போனபடி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினால் போலே -உள்ளம் கவர்ந்து வெறும் உடம்பு ஆக்கினான் –
ஏனமாய -பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய் சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தாய் –
திருப் பாண் ஆழ்வார் திரு உள்ளத்தை மணாளன் அரங்கன் கவர்ந்தான் –
இது தனக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ கிருஷ்ண நவநீத சௌர்யம்
ஆழ்வார் சம்சார ஆரணவம் அமுங்கி கிடக்க பகவான் உத்தாரணம் செய்து அருளினான்
இதுக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ வராஹ பூமி உத்தாரணம் -என்றது ஆயிற்று –

—————–

பாணர் ஸ்ரீவத்ஸத்தின் அம்சம் என்பர். ஸ்ரீவத்ஸ ரென்னும் நித்ய சூரி பாணராக அவதரித்தார் போலும்.
ஸ்ரீவத்ஸத்தின் ஸ்தானம் திருமார்பு.
‘அரங்கத்தம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே’ என்று தன் நித்ய ஸ்தானமான
திருமார்பு விஷயத்தில் மட்டும் பாடுகிறார்.
ஒன்பதாம் பாட்டில் அகண்ட நீலமேனி அனுபவத்திலும்
“கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்” என்று தம் நித்ய ஸ்தான மாகிய திரு மார்பின் கண் சென்றது.
“ஆட்கொள்வது” என்பது இவ்வாழ்வார் அனுபவத்தில் திருமேனியில் வஸிப்பது.
“அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்றவிடத்திலும் தோளில் வஹிக்கப்பட்டது ஆட்பட்டதாயிற்று.
திருமார்பில் வஹிக்கப்படுவது இவர் பெருமாளுக்கு ஆட்பட்டது.
சேஷர்களான சக்கரத்தாழ்வான் பாஞ்சஜன்யாழ்வான் முதலியவர்கள் பெருமாள் திருத்தோள்கள் முதலிய
அங்கங்களில் வஹிக்கப் படுகிறார்கள்.
சங்காழ்வானும் சக்கரத்தாழ்வானும் பெருமாள் தோள்களிலேறி அங்கிருந்தபடியே அவருக்கு ஆட்பட்டார்கள்.
அது போலவே இவரும் லோக சாரங்கமுனி தோளிலும், ஸ்ரீவத்ஸ மாகப் பெருமாள் திருமார்பிலும் ஏறி ஆட்பட்டார்.
திருமார்பு தவிர மற்ற ஓரிடத்திலும் இப்படிப் பாடவில்லை.
அடியாரான லோக சாரங்கமுனி விஷயத்திலும் முதற்பாட்டில் இவ்விதமாக ‘ஆட் படுத்த’ என்று பாடக் காண்கிறோம்.

ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி பாகவதம் தசம ஸ்கந்தம் முடிவில், ப்ருகு மஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப்
பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு.
அடியாராகிய ப்ருகு மஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்க
வேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம்.
ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப் போல – லாளநம் செய்ததாகவும்,
அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில் பாடுகிறார்.
திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது.
அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார்.
இது பெருமாள் தன்னை அடியார்க்காட் படுத்தும் முறையைக் காட்டின வழி.
‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார்.
லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம் முனிவர் மார்பில் தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்!
பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல்,
இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது.

இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்.
“காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி,
இவரும் சடகோபரைப் போல் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமே வடிவெடுத்துதித்தது போல் இருந்தவர்.
தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம்.
முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார்.
அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய: என்பது கீதை.

இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதிகதி ஸாமாந்யமான மார்க்கம்.
அர்ச்சி ஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர்.
சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில்– சைத்யாதீ நாம்– என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது.
சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன.
சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.

“பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்!
சீர்மறையின் செம்பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள்
வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை.
யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவச மாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது.
“வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார்.
இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவு மாகவே சென்றது.
நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தை யும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர்
அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ—ஸ்ரீபாகவதம் 1-5-39- என்று கூறினார்.
இத் திருப் பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை.

யோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி.
ய‌ம‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும்.
ஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம்.
அந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார்.
“பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள்.
முத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம். ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின்
ஸ்வ‌ரூபாநுப‌வ‌மும் க‌ல‌ந்தது.

அங்க‌ விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம். ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌க்ரியாத் ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது.
“ந‌ல்லாடை” என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம். வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு- ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும்.
ஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம். இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி,
ஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார்.
இப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார்.
அஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து,
உப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு,
பூம‌ வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.

ஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம். சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌
இவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே.
பீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும் போது ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்- என்று வ‌ர்ணித்த‌ப‌டி
பீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌
“இனி மீள்வ‌தென்ப‌துண்டோ!” என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது. அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து.
அத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.
சிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது.
“சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து,
அவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்” என்று பார‌த‌ம்.
“எல்லோர் முன்னே சிசுபால‌ னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது.
த்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்” என்று பாக‌வ‌த‌ம். அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌வில்லை.
இங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார்.
பாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும்.
சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேசித்துக் க‌ல‌ந்தது.
இத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.

காட்ட‌வே க‌ண்ட‌” (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி.
மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம்.
ப‌ர‌, விப‌வ‌, ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம்.
பெரிய‌ பெருமாள் திருமேனி யிலே திரும‌லை முத‌லாகக் கோவில் கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும்,
ராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌ போக்ய‌தையெல்லாம் சேர‌ அனுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌போக‌ம்.
உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ் ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம். நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌,
ஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம்.
பாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌.
உப‌ய‌ விபூதி விசிஷ்டாநு ப‌வ‌த்தில்
பித்ய‌தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திச்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ ஸ‌ம்சயா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே–(முண்ட‌க‌ம் 2,3,9) என்ற‌ப‌டிக்கும்
(ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ச்ய‌தி) (சாந்தோகிய‌ம் — பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும்,
ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் க‌ண்டு வாழும்” என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி.
முத‌ல் பாதத்தில் “க‌ண்ட‌” என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.

ந‌ம் பாண‌ நாத‌ர் யோகி ஸார்வ‌ பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநா கார‌ண‌மான‌ காட்சி போன்ற‌
தெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர்.
யோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுதுபோக்காய் இருந்தது.
க‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து.
யோகாரூட‌ராக‌ நெடுகிலும் இருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார்.
எந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌ மில்லை. ந‌ம்பிக‌ளும் இதை “முனியேறி” என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார்.
யோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம். ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள்.
ப‌ச்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே, தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து.
முநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம். முனியேறின‌ முனி இவரொருவரே.

————-

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே ––இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்— 11- –

பாவளரும் தமிழ்மறையின் பயனே கொண்ட
பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய்க் கலந்து நின்ற
காரணனைக் கருத்துறநாம் கண்ட பின்பு
கோவலனும் கோமானும் ஆன வந்நாள்
குரவைபுணர் கோவியர்தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பேடைபோற் சேர்ந்து
தீவினையோர் தனிமையெலாம் தீர்ந்தோம் நாமே.

ஆதிமறை யெனவோங்கும் அரங்கத்துள்ளே
அருளாரும் கடலைக்கண்டவன் என் பாணன்
ஓதியதோர் இருநான்கும் இரண்டுமான
ஒருபத்தும் பற்றாக உணர்ந்துரைத்தோம்
நீதியறி யாதநிலை யறிவார்க் கெல்லாம்
நிலையிதுவே என்றுநிலை நாடி நின்றோம்
வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம்
விதையாகும் இதுவென்று விளம்பினோமே.

காண்பனவும் உரைப்பனவும் மற்றொன் றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடியகாதல்
பாண்பெருமாள் அருள்செய்த பாடல்பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே
வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம்
நாண்பெரியோ மல்லோம்நாம் நன்றும் தீதும்
நமக்குரைப்பார் உளரென்று நாடுவோமே.

பாண் பெருமாள்–நம் பாண நாதன்–நம் பாணன்–என்று அன்றோ கொண்டாடுகிறோம் –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –21-நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர்-இத்யாதி —

April 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகள் ஆகிற ப்ராப்யத்தை பெற்றுடைய ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் –
ஆகையால் ஷூத்ரருடைய வாசல்களிலே நின்று அவர்கள் ஒவ்தார்யாதிகளைச் சொல்லி ஸ்துதியேன்-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ்வளவும் -ஸ்ரீ ஆழ்வார்கள் உடையவும் -ஸ்ரீ மன் நாத முனிகள் உடையவும் சம்பந்தத்தை இட்டு –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வைபவத்தை யருளிச் செய்து கொண்டு வந்து –
இதிலே சரம பர்வ நிஷ்டர் எல்லாருக்கும்-ஸ்வாமியான ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகளை உபாய உபேகமாக பற்றின –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து- அருளின பின்பு -இனி நீசரான மனுஷ்யரை ஸ்துதித்து க்லேசப் பேடன் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகளை பெரும் பேறாக உடைய ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் .
ஆகையால் அற்பர்கள் உடைய வாசல்களில் நின்று அவர்கள் உடைய வள்ளன்மை முதலியவற்றைக்
கூறிப் புகழ் பாட மாட்டேன் -என்கிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

பத உரை –
தூய் நெறி சேர் -சுத்தமான ஒழுக்கம் வாய்ந்த
எதிகட்கு -சந்நியாசிகட்கு
இறைவன்-தலைவரான
யமுனைத் துறைவன் -ஆளவந்தார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒத்த
அடியாம்-திருவடிகள் ஆகிற
கதி -பேற்றை
பெற்று உடைய -அடைந்து அதனை உடையவராய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானார்
என்னைக் காத்தனனே-என்னைக் காப்பாற்றி அருளினார்
இனி -இனிமேல்
நிதியைப் பொழியும் -நவ நிதிகளையும் தாரையாகக் கொட்டும்
முகில் என்று -மேகம் என்று
துதி கற்று -புகழ் பாடப் பயின்று
உலகில் -இவ் உலகத்தில்
நீசர் தம் -அற்பர்கள் உடைய
வாசல் பற்றி –வாசலிலே காத்துக் கிடந்தது
துவள்கின்றிலேன் -துவண்டு வறுமை தோற்ற நிற்கின்றிலேன்-

வியாக்யானம் –
பரி சுத்த அனுஷ்டான யுக்தரான -எதிகளுக்கு நாதரான -ஸ்ரீ ஆளவந்தார் உடைய பரஸ்பர சத்ருசமான திருவடிகளாகிற
ப்ராப்யத்தை பெற்றுடையராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் –
ஆன பின்பு நிதியை வர்ஷியா நிற்கும் மேகம் என்று அவர்களுடைய ஒவ்தார்ய கதனத்துக்கு உறுப்பான ஸ்தோத்தரங்களை
கற்று லோகத்திலே அஹங்காராதி தூஷிதரான தண்ணியர்கள் உடைய வாசலைப் பற்றி-நின்று –
என்னுடைய ரஷண அர்த்தமாக அவர்கள் அவசரம் பார்த்து துவளக் கடவன் அல்லேன் –
தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் -என்கிற இது –
ஸ்ரீ ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-
நெறி-ஒழுக்கல்
கதி–அதாவது ப்ராப்யம்–

யதீஸ்வரர் -ஸ்ரீ ஆளவந்தாருக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் இயையும் –
இல்லாதது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -மொட்டைத் தலையன் -கதை
என்னை காத்தனன் -நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னையும் கூட –
இன்பம் பயக்க -ஸ்ரீ திருவாறன் விளை அன்றோ – ஸ்ரீ திருவாய் மொழி அரங்கேற்றப் பட்ட திவ்ய தேசம் -துணைக் கேள்வி

தூய் நெறி சேர் –
சுருதி பத விபரீதஷ் வேளகல்ப ஸ்ருதவ் சப்ரக்ருதி புருஷ யோக ப்ராபகா சோனதத்ய –என்கிறபடியே
அபரிசுத்தமாய் இருக்கிற உபாயாந்தரங்களுக்கும் -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்றும் –
மதிராபிந்து மிஸ்ரமான சாதகும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்றும் சொல்லப்படுகிற -அவத்யங்கள் ஒன்றும் இன்றிக்கே –
அத்யந்த பாரதந்த்ர்ய ஸ்வரூப அநு ரூபமாய் -அதிலும் -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஈஸ்வரனை பற்றுகை அன்றிக்கே –
மோஷ ஏக ஹேதுவான சதாசார்யனைப் பற்றி -அதிலும் –
அஹங்கார கர்ப்பமான தான் பற்றும் பற்றுகை அன்றிக்கே -கிரூபா மாத்திர பிரசன்னாசார்யரான ஸ்ரீ ஆள வந்தார் –
தம்மாலே பரகதமாக ச்வீகரிக்கப் பட்டது ஆகையாலே -அத்யந்த பரிசுத்தமான
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

எதிகட்கு
ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் கதி ரஷ்டாஷரப்ப்ரத -என்றும் –
மாதா பிதா வுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்வா சார்யரான ஸ்ரீ ஆள வந்தாரே தங்களுக்கு ஐ ஹிக ஆமுஷ்யங்கள் எல்லாம் என்று கொண்டு –
மேக பிந்துக்களை ஒழிய மற்று ஒன்றை விரும்பாத சாதகம் போலே – ததீய விஷயங்களை விரும்பாதபடி –
தம் தாமுடைய மனசை நியமித்துப் போகிற –ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ திருமலை நம்பி –ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி –ஸ்ரீ மாறனேர் நம்பி -முதலானவர்களுக்கு –

இறைவன் –
ஸ்வாமி யானவர் –

யமுனைத் துறைவன் –
யமுனா தீரத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு உத்தேச்யராய் –
ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலிலே எழுந்து அருளி இருந்த ஸ்ரீ சுவாமிகளுடைய திரு நாமத்தை வஹித்த ஸ்ரீ ஆள வந்தார் உடைய

இணை யடியாம்
பாவனத்வ போயத்வங்களாலே பரஸ்பர ச தர்சமான-திருவடிகள் ஆகிற –

கதி பெற்று –உபாயத்தை லபித்து-உபாய உபேயங்களாக பற்றி -என்றபடி –
கதி –
கதி -அதாவது ப்ராப்யமும் ப்ராபகமும் –
அத்தாலே லோகத்தில் உள்ள பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம்-ஸ்வாமியாய் இருக்கிற-

இராமானுசன்b
எம்பெருமானார் –

என்னைக் காத்தனனே –
லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது –
பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் –
இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –

தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி ஸ்ரீ யமுனைத் துறைவற்கும் இசையும் -ஸ்ரீ இராமனுசற்கும் இசையும் –
நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது
அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ நாத முநிகளையே உபாயமாகவும்-
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி சேர்ந்தவர்கள் ஆயினர் என்க –

யமுனைத் துறைவன் –
ஸ்ரீ ஆளவந்தார் திரு நாமம்
அவருக்கு ஸ்ரீ நாத முனிகள் விருப்பப்படி இத் திருநாமம் சாத்தப்பட்டது என்பர் –
யாமுநேயர் -என்பது வட மொழி திரு நாமம் -பொருள் ஒன்றே –
கதி -பெறப்படுவது -பேறு என்றபடி
குருரேவ பராகதி -என்று குருவையே சிறந்த கதியாக சாஸ்திரம் சொல்லுவதும் காண்க –

ஸ்ரீ ஆளவந்தாரைப் பற்றி ஸ்ரீ எம்பெருமானார் –
யத் பதாம் போருஹ த்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்துதாம் உபயதோஹம் யாமுநேயம் நமாமிதம் -என்று
எவருடைய திருவடித் தாமரையை உபாயமாக த்யானம் செய்ததனால் பாபம் அனைத்தும் நீங்கப் பெற்றவனாய்
ஒரு பொருளாகி விட்டேனோ -அந்த ஸ்ரீ யமுனைத் துறைவனை வணங்குகிறேன் -என்று
அருளிய ஸ்லோகம் இங்கு அனுசந்திக்கத் தக்கது
நேர் ஆசார்யர் ஸ்ரீ பெரிய நம்பியே ஆயினும் -அவர் தம்மை ஸ்ரீ ஆளவந்தார் உடைய கருவியாகவும் –
ஆ முதல்வன் -என்று முந்துற முன்னம் ஸ்ரீ பெருமாள் கோயிலிலே கடாஷித்த ஸ்ரீ ஆளவந்தாரே நேர் ஆசார்யராகவும்
கருதினதாலும் -அங்கனமே ஸ்ரீ எம்பெருமானாருக்கு –
ஸ்ரீ பெருமாள் மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்து வானோர் வாழத் தண்ட காரண்யத்துக்கு
எழுந்து அருளினது போலே ஸ்ரீ ஆளவந்தாரும் அடியானான அடியேனை உமக்கு வைத்து
மேலை வானோர் வாழத் திரு நாட்டுக்கு எழுந்தி அருளினார் -என்று உபதேசித்த தனால்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடையரானார் என்க –
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ மணக்கால் நம்பி நேரே ஆசார்யன் ஆனாலும் தம் ஆசார்யர் திரு உள்ளப்படி
நித்யம் யதீயசரணவ் சரணம் மதீயம் -என்று
பரமாச்சார்யார் ஆன ஸ்ரீமன் நாத முனிகள் திருவடிகளையே கதியாகவும் பற்றினது -போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பரமாச்சார்யர் ஆன ஸ்ரீ ஆளவந்தார் இணை அடியாம்-கதியைப் பெற்று உடையரானார் -என்க-

இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது
ஸ்ரீ ஆளவந்தார் திருவடியான ஸ்ரீ பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-
இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம் –

ஆச்சர்ய அனுக்ரகம் ஒன்றாலே பெற பெறுவோம்
முக் கண்ணான் எட்டு கணான் 1000 கண் சேர்ந்து ஆச்சார்யர் கண் சமம் இல்லை-
இவ் உலக அவ் உலக இன்பம் எல்லாம் ஆச்சார்யர் எல்லாம் வகுத்த இடமே
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் …மேக பிந்துவை ஒன்றையே நோக்கும் சாதக பறவை போல –

சித்தி த்ரயம் கை விளக்கு கொண்டு வேதார்த்த சங்க்ரஹம் -வேதார்த்ததீபம் போன்றன அருளினார்-
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி கொண்டு கத்ய த்ரயம் அருளினார்-
கீதா சங்க்ரஹம் கொண்டு கீதா பாஷ்யம் அருளினார்-

என்னைக் காத்தனன் –
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே ஸ்ரீ எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே–3-7-6-

இனி
அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-

நீசர் தம் வாசல் பற்றி –
ய கஞ்சித் புருஷ அதம ரகதிபயக்ராமேச மல்பார்த்தத்தம் -என்கிறபடியே
அஹங்கார தூஷிதராய் -நிஹீநராய் இருக்கிறவர்களுடைய –
துரீச்வர த்வார பஹிர்விதர்த்தி காதுராசி காயை ரசிதோய மஞ்சலி -என்கிறபடியே-
நரக பிராயமான வாசலை ஆஸ்ரயித்து –

நிதியைப் பொழியும் முகில் என்று –
லோகத்திலே மேகம் ஜலத்தை வர்ஷிக்கும் இத்தனை –
இந்த தாதாவானால் நவ நிதியையும் ஒருக்காலே வர்ஷிக்கும் காள மேகமாய் இருந்தான் என்று –

துதி கற்று
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்கிற
தர்மஜ்ஞ சமயத்தையும் லன்கித்து வாய் வந்த படி எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணி –
மற்று ஒருவர் சொன்ன மித்யா ஸ்தோத்ரங்களை அப்யசித்து முன்னே சொன்னேன்-என்னுதல் –

உலகில் –
இப்படி இருந்த உலகில் -இருள் தரும் மா ஞாலத்திலே-

துவள்கின்றிலேன்
அவர்கள்-உடைய அவசரம் பார்த்து -என்னுடைய ரஷண்த்துக்காக கிலேச படக் கடவேன் அல்லேன் –
துவலுகை -வாடுகை –
குரு பாதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம சதா ஜபேத் குரோர் வார்த்தார்ஸ் சதக யேத் குரோர் அந்ய ந பாலயேத் –-என்கிறபடியே
இருக்கக் கடவேன் என்று கருத்து –

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழி தோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான் கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

நிதியை ….துவள்கின்றிலேன் இனி –
நீசர் -அதமர்கள்-பணச் செருக்கினால் மற்றவரை மதிக்காதவர்கள்-
அஹம் மமேதி சண்டாள -என்றபடி -அஹங்காரம் சண்டாளனாக கூறப்பட்டது –
அதனுக்கு இடம் தருவாரும் அத்தகையினரே –
மத்பக்தான் ச்ரோத்ரியோ நிந்தத் சத்யச்சண்டாளதாம் வ்ரஜேத் -என்று
வேதம் ஓதியவன் என் பக்தர்களை இகழும் பொழுதே சண்டாளன் ஆகி விடுகிறான் -என்றபடி
பணம் படைத்தவர்கள் பக்தர்களையும் மதிக்காது -இகழ்வதனால் உடனே சண்டாளர்கள் ஆகி விடுகிறார்கள் –
அவர்கள் வாசலில் உலகில் தவிர்க்க ஒண்ணாத பசி முதலியவற்றால் துவண்டு சமயம் எதிர்பார்த்து கிடக்கின்றனர் மக்கள்.
அந்த நீசரை மகிழ்விப்பதற்காக தம்மிடம் தகுதி இன்மையால் புகழுரை பாடப்பாடம் கற்று வருகின்றனர் –
மாரி யனைய கை – என்று பச்சை பசும் பொய்களை பேசுகின்றனர் –
நிதியை பொழியும் முகில் -எனபது போன்றவற்றை கற்று வந்து -வாசலில் துளள்கின்றனர் –
அங்கனம் அவர்கள் துவள்வதற்கு காரணம் -தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் திறன் இல்லாமையும் –
காப்பாற்றுவார் வேறு இல்லாமையும் –
எனக்குத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் இல்லாவிடினும் –
ஸ்ரீ எம்பெருமானார் என்னைக் காப்பாற்றி விட்டார் -இனி ஏன் நான் துவள வேண்டும்-என்கிறார் ஸ்ரீ அமுதனார் –

நிதியை பொழியும் மேகம் -ஜலம் கொட்டாது நிதியை கொட்டுகிறாய் என்று ஸ்தோத்ரம் கற்று–இனி துவள் கின்றிலேன்
இனி-காத்த பின்பு-நவ நிதியை வர்ஷிக்கும் காள மேகம் ஸ்ரீ எம்பெருமானார் இருக்க –
இந்த கஷ்டம் இனி எனக்கு இல்லையே –

மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்–ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் -ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை–156–

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
பு யற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
1-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

2-திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

3-உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

4-ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

5-தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

6-கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

7–வெளுத்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து

8- ஒளித்து –
மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )

9–கண்டு உகந்து –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –

10-பர சம்ருத்தியே பேறான
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர அவரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

(நம்மாழ்வார் த்ரிகாலம் உணர்ந்தவர் -முற்பட்டவர் பின்பட்டவர் பற்றியும் அறிந்தவர்
வால்மீகி முற்காலம் பிற்கால நிகழ்வுகளை அருளிச் செய்தது போலே – )

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மா முனிகள் -ஸ்ரீ அண்ணா / ஸ்ரீ தேசிகர் -ஸ்ரீ நயன வரதாச்சார்யர் ஸ்வாமிகள்– கால நிர்ணயம் –

April 4, 2020

ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்வாமிகள் திரு அவதாரம் –கலி -4471—கி பி -1370-
தன்னுடைச் சோதி அடைந்தது –கலி -4544-கி பி -1443-

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள்
திரு அவதாரம் தினம் –
கி பி -1362-கலி -4463-பிலவ வருஷம் இல்லை என்றும் –சுபக்ருத வருஷம் தான் என்றும் —
ஆடி மாதம் -வியாழக்கிழமை -கிருஷ்ண சதுர்த்தி -பூசம் நக்ஷத்ரம்
தன்னுடைச் சோதி அடைந்த தினம் –
கிபி -1454-கலி -4555-ஸ்ரீ முக வருஷம் இல்லை என்றும் பவ வருஷம் தான் என்றும் –
பங்குனி மாதம் -புதன் கிழமை -சுக்ல நவமி பூசம் நக்ஷத்ரம் –

ஸ்ரீ மா முனிகளுக்கு பின்பு -14- வருஷங்கள் இங்கே இருந்தார்

கலி ஆரம்பம் –கி மு -3101-என்றும் -3102-என்றும் இரண்டு பக்ஷங்கள் இருப்பதால் வருஷப் பெயர்களில் குழப்பம்

ஸ்ரீ தேசிகர் ஸ்வாமிகள் திரு அவதாரம் –கி பி -1268–தன்னுடைச் சோதி -1369-
இவர் திருக் குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அவதாரம் –கிபி -1316-தன்னுடைச் சோதி எழுந்து அருளியது -1414-

ஸ்ரீ மணவாள மா முனிகள்
திரு அவதாரம் -ஆழ்வார் திருநகரி
தந்தையார் திரு நா வீறுடைய பிரான் தாசர் அண்ணர்
சாதாரண வருஷம் -ஐப்பசி -26 நாள் -சுக்லபஷம் -வியாழன்
சதுர்த்தி -மூலம் நஷத்ரம் திரு அவதாரம்

அப்புள்ளார் –
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்ன
பாதியிலே உடையவராய் வந்து தோன்றி பரமபதம் நாடியவர் போவேன்  என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்ன
சாதாரணம் என்னும் வருடம் தன்னில் தனித்துலா மூல நாள் தான் வந்தாரே

ஈடு –முப்பத்தாறாயிரம் -பெருக்கர் என்ற திரு நாமம் உண்டு இவருக்கு
விஸத வாக் சிகாமணி -என்றும் உண்டே
சேஷ ஸ்ரீ மான் நிகம மகுடீ யுக் ம ரஷா ப்ரவ்ருத்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் நியமனப்படி
ஸ்ரீ கூர குலோத்தம தாச நாயன் முதலிய முதலிகள் இட்டு ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளைக்கு பரம ரகச்யார்தங்களையும் உபதேசிக்க பெற்றார்
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை ஸ்ரீ தேவ பெருமாள் நியமித்த படியே ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளை இடம் ஈடு முப்பத்தாறாயிரம் கேட்பதாக தொடங்கி
சகல அர்த்தங்களையும் கேட்டு தெளிந்தார் –
ஸ்ரீ திருவாய்மொழியிலும் ஸ்ரீ ஆழ்வார் இடமும் ஈடுபாடு பெருக –
திருவிதாங்கூர் ராஜ்யத்தில் திருக்கணாம்பி படை வீட்டில் எழுந்து அருளி இருந்த படியால்
அங்கு சென்று சேவித்து க்ருத்ரரானார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் நியமனம் படி ஸ்ரீ திருவநந்த புரம் சென்று ஸ்ரீ விளாஞ்சோலை பிள்ளை இடம்
ஸ்ரீ வசன பூஷணம் முதலாக பல க்ரந்த அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெற்றார்
அவருக்கு சரம பர்வ நிஷ்டையும் செய்தார்-

ஸ்ரீ சைல  தயா பாத்ரம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -இந்த பலனை பகவத் பிரசாதமாக -கொள்ளாமல்
யதீந்திர ப்ராவண்யமும் தீ பக்தி வைராக்ய குணார்ணத்வமும் -இவையும்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்ததாக அருளுகிறார் –

பிதரம் ரோசயாமாச ததா தசரதம் ந்ருபம் -ருசித்து ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஆனது போலே
ஸ்ரீ அரங்கன் அர்ச்சை நிலையிலும் ரசனை வாய்ந்த சீடனாக இருந்தானே
சார தம மந்திர ரத்ன அர்த்தமான ஸ்ரீ திருவாய் மொழி ஈட்டை கேட்டு அருளினான்  ஓர் -ஆண்டு
விழுமிய வேட்கை உடன் -ஸ்ரீ வட வேங்கடவன் வட மொழி மறைப் பொருளை
ஸ்ரீ பாஷ்யகாரர் இடம் சங்க்ரஹமாக கேட்டு அருளி -வேதார்த்த சங்க்ரஹம் –
இன்றும் ஞான முத்தரை உடன் திரு மலையில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்
திருக்குறுங்குடி நம்பி வைஷ்ணவ நம்பி ஆனது போலே ஸ்ரீ அரங்கனும் ஸ்ரீ மா முனிகள் இடம் ஈடு கேட்டருளி ஆனந்தித்தான்-

-1205-1325-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்-1323-படை எடுப்பு –

1323-1371 ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து போக
48 வருஷம் கழித்து திரும்பி ஸ்ரீ நம் பெருமாள் திரும்பி
1370 மணவாள மா முனிகள் திரு அவதாரம்
கவலை இல்லை இனி என்று வந்தானாம்-

ஸ்ரீ நம்பிள்ளை கால ஷேபம் கேட்டு திருப்தி இல்லை ஸ்ரீ மா முனிகளுக்கு நியமனம் சாதித்து
தாமாக வந்து மாறன் மறைப் பொருளை நல்க கேட்டருளி
பூர்த்தி இல்லை முன்பு உள்ள ஆசார்யர்கள்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஈடு தெரியாதே
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பின்பு தானே அஷ்ட தச ரஹஸ்யங்கள் அருளிச் செய்தார்
குரவர் மொழி அனைத்தும் அறிந்தவர் மா முனிகள் ஒருவரே

இவரை இட்டு
திருச்செவி சாத்தி
தனியன் அருளிச் செய்து –
திருநாமம் சாத்தி
திரு அத்யயனம் உத்சவம் செய்து அருளி –
ஜன்ம திரு நாமம் ஸ்ரீ அழகிய மணவாளன்
ஆஸ்ரம திருநாமம் ஸ்ரீ பெரிய பெருமாள் -இதுவே கொண்டு அருள -சாதித்து –

சொம்பை கொண்டு -இரண்டு திருமேனி செய்து அருளி –
நின்ற இருந்த திருமேனி ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில்
வீற்று இருந்த திருமேனி ஸ்ரீ திருவரங்கம்
மூன்று அங்குலம் உயரம் தான் –

வேதத்தின் உட் பொருள் நிற்கப் -பாடி என் நெஞ்சுள் -நிறுத்தினான் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
வேதப்பொருளே என் வேங்கடவா –
பொருள் அவன்
உள் பொருள் பாகவதர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் –
திருவடி நிலை என்பதால் எம்பெருமானார் ஆழ்வாரினும் வேறுபட்டு இல்லை
அவரது புநர் அவதாரம் என்பதால் பெரிய ஜீயரும் எம்பெருமானாரினும் வேறுபட்டு இல்லை –
ஆக மூவருமே உள் பொருள் -உத்தாரக ஆச்சார்யர்கள்

பகவான் புறப் பொருள் –
புறப்பொருள் மதிளரங்க மணவாளன்
உள் பொருள் மணவாள மா முனிகள்
அரங்கன் உடைய உலகளந்த பொன்னடி புறப்பொருளின் சாரம்
மா முனிகளின் பொன்னடியாம் செங்கமலம் உட் பொருளின் சாரம் –

எறும்பி அப்பா -வர வர முநி -சதகம் 63
ஆத்மா நாத்மப்ரமிதி விரஹாத் பத்யுரத் யந்ததூர
கோரே தாபத்ரி தய குஹரே கூர்ணமா நோஜ நோயம்
பதச்சாயாம் வர வர முனே ப்ராபிதோயத் ப்ரசாதாத்
தஸ்மை தேயம் ததி ஹகிமிவ ஸ்ரீ நி தேர் வர்த்ததே தே
பதச்சாயா -உள் பொருளின் முடிவு நிலமான மா முனிகள் திருவடியே உபாயம் -நிழல் உபேயமும் –

விஷ்ணு சேஷி ததீய ஸூப குண நிலையோ விக்ரஹ ஸ்ரீ சடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – என்றபடி
எம்பெருமான் நல்குணம் மிக திரு மேனியே ஆழ்வார்
அவர் இணைத் தாமரையே ஸ்ரீ  ராமானுஜர்
அவர் திறத்து அத்யந்த பாரதந்த்ர்யம் அனுசந்தித்து நிழல் போலே யதீந்திர ப்ரவணர் திருவடி நிழலாகி உபேயமாகிரார்
இதனாலே ஸ்ரீ ரம்ய ஜாமத்ரு முனிவருக்கு தனியன் சமர்ப்பித்து முதலிலும் முடிவிலும் அனுசந்திக்க ஸ்ரீ ரெங்கராஜ திவ்யாஞ்ஞை –
அந்த கட்டளையின் பலனே நாம் இன்று முடிவுப் பொருளாய் அனுசந்திக்கும்
ஜீயர் திருவடிகளே சரணம் -என்பதாகும்

திடமான அத்யாவசாயம் நாமும் பெற வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் -என்று
ஸ்ரீ மா முனிகளை சரணம் பற்றுவோம்

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ்வு இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே –

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்-

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.