Archive for October, 2019

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம் -1-4-4-

October 12, 2019

விஷயம்
வேதங்கள் அனைத்தும் ப்ரஹ்மம் ஒன்றையே ஜகத் காரணமாக கூறுகின்றன என்று
உரைக்க முடியும் என்பது நிரூபணம்

1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –

ஆகாசம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது என்று கூறப்பட்டதையே மீண்டும் கூறுவதால் –
ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

பூர்வ பக்ஷம்
பிரதானமே அனைத்துக்கும் காரணம் என்று சொல்லும் சாங்க்யர்கள் இங்கு மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் ஒரு வஸ்துவிடம் இருந்து மட்டுமே ஸ்ருஷ்ட்டி ஏற்படுவதாகக் கூறப்படுவது இல்லை –
ஆகவே ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்று கூற இயலாது என்பர்

சாந்தோக்யம் -6-2-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்று தொடக்கத்தில் சத் என்பது மட்டுமே காணப்பட்டது என்பதால் –
சத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –

தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று தொடக்கத்தில் இந்த அசத் மட்டுமே இருந்தது -என்பதால் –
அசத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –

வேறு ஒரு இடத்தில் சாந்தோக்யம் -3-19-1-
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத் -என்று
முதலில் அசத்தாக இருந்தது -பின்பு சத் என்று ஆனது -தொடர்ந்து உத்பத்தி அடைந்தது -என்று உள்ளது
ஆகவே வேதாந்தங்களில் ஸ்ருஷ்ட்டிக்கு காரணம் இன்னது என்று கூறப்படாதலால்
ஜகத்துக்கு ப்ரஹ்மமே காரணப் பொருள் என்று உறுதியாக கூற இயலாதே

மாறாக -ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று ஜகத் அப்போது அவ்யாக்ருதமாக –
நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் – இருந்தது -என்று தொடங்குவதன் மூலம்
ஜகத்து பிரளயத்தில் அவ்யாக்ருதத்தில் லயிப்பதாக கூறப்பட்டு
தொடர்ந்து 1-4-7-தந் நாம ரூபாப்யாம் ஏவ வியாக்ரியதே-என்பதன் மூலம்
அவ்யாக்ருதத்தில் இருந்தே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாகிறது என்று கூறப்பட்டது
இந்த அவ்யாக்ருதமே பிரதானம் -நித்யம் –அனைத்து வித பரிணாமங்களுக்கும் இதுவே இருப்பிடம்
இந்த காரணத்தால் தான் ஜகத் காரணமாக இதனைக் கூறும் இடங்களில் சத் என்றும் அசத் என்றும்
இரண்டுவிதமாகக் கூறினாலும் முரண்பாடு ஏற்படவில்லை
ஆனால் ப்ரஹ்மம் என்றால் இரண்டு சொற்களையும் முரண்பாடு இல்லாமல் உபயோகிக்க இயலாது

இப்படியாக அவ்யாக்ருதம் என்பதே அனைத்துக்கும் காரணம் என்று நிச்சயித்த பின்பு -ஈஷணம்-அதாவது
பார்த்தல் -சிந்தித்தல் -பஹுஸ்யாம் -பலவாகக் கடவேன்-என்பது போல உபநிஷத்தில் கூறப்பட்ட
ஜகத் காரண வஸ்துவுக்கு இருக்கும் தன்மைகள் அவ்யாக்ருதமானத்துக்கு பொருந்தும்
பிரதானம் மிகப் பெரியதாகவும் பரந்தும் உள்ளதால் -ப்ரஹ்ம சப்தம் ஆத்ம சப்தம் பிரதானத்துக்கு பொருந்தும்
ஆகவே ஸ்ம்ருதிகள் மற்றும் நியாயம் ஆகியவற்றால் உணர்த்தப்படும் பிரதானமே ஜகத்காரணமாகும்
என்றே வேதாந்த வாக்கியங்களும் நிரூபிக்கின்றன என்பர்

சித்தாந்தம்
காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
இதில் ச -என்பது -து –ஆனால் -என்ற பொருளில் வந்துள்ளது –
ஸர்வஞ்ஞத்வ – ஸர்வேஸ்வரத்வ -ஸத்யஸங்கல்பத்துவம் -அகில ஹேய பிரத்ய நீகத்வம்-இவை
அனைத்தும் பொருந்திய பர ப்ரஹ்மத்துக்கே ஜகத் காரணத்வம் நிச்சயமாக உரைக்க இயலும் –
ஆகாசாதிஷூ காரணத்வேன ச யதா வ்யபதிஷ்ட உக்தே -ஆகாசம் போன்றவற்றுக்கு ப்ரஹ்மமே காரணம்
என்று கூறப்படுவதால் ஆகும் –
ஸ்ருஷ்டிக்குத் தேவையான அனைத்தும் அறிந்த தன்மை போன்ற சிறப்புக்களுடன் ப்ரஹ்மம் உள்ளதாக
ஜந்மாத் யஸ்ய யத-1-1-2- என்பது போன்றவற்றால் முன்பே கூறப்பட்டது

மேலும் ப்ரஹ்மமே ஆகாசம் போன்றவற்றுக்கு காரணமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது
தைத்ரியம் -2-1-1-
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாசஸ் ஸம்பூத–என்று அந்த ஆத்மா எனப்படும்
ப்ரஹ்மம் இடம் இருந்தே ஆகாசம் உண்டானது -என்றும்
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத–என்று அந்த தேஜஸ்ஸை உண்டாக்கியது என்று அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மமே காரணமாக உள்ளது என்றும்
தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ஸூ சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –என்று
சத்யம் ஞானம் அநந்தம் என்பதாக உள்ள ப்ரஹ்மம் ஜூ -முக்தாத்மா -இப்படிப்பட்ட அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மத்துடன் கூடி இருந்து அனைத்து விருப்பங்களையும் அனுபவிக்கிறான் என்பதால் சர்வஞ்ஞன் என்று கூறப்பட்டு
தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று அந்த ஆத்மாவான ப்ரஹ்மத்திடம் இருந்து தொடங்கி
மேலே உள்ளவை சொல்லிற்று
இது போன்று -சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் –நான் பலவாக தோன்றுவேன் என்று சங்கல்பம் செய்தது-என்று கூறப்பட்ட சர்வஞ்ஞனான ப்ரஹ்மமே
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத –அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டித்தது -என்பதில் கூறப்பட்டது –
இப்படியே அனைத்து ஸ்ருஷ்ட்டி குறித்த வாக்யங்களுக்குப் பொருள் கொண்டு
சத் அசத் அவ்யாக்ருதம் போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது

பூர்வ பக்ஷம்
தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று உள்ள போது சர்வஞ்ஞனான -ஸத்யஸங்கல்ப விசிஷ்டனான ப்ரஹ்மமே
காரணம் என்பது எப்படி நிச்சயிக்கப்படும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————-

1-4-15-சமாகர்ஷாத் –

தொடர்ந்து கூறப்படுவதால் -என்றபடி –

இந்த ஸூத்ரத்துக்கு -அநு கர்ஷம் அபகர்ஷம் -அதி கர்ஷம் -மூன்று வித பொருள்கள்
முந்தைய இடத்தில் உள்ளத்தை பிந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அநு கர்ஷம் ஆகும் –
பிந்தைய இடத்தில் உள்ளதை முந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அபகர்ஷம் ஆகும்
புதிதாக ஒன்றைச் சேர்த்தல் அதி கர்ஷம் ஆகும்
தைத்ரியத்தில் உள்ள -ஸோ அகாமயத–தத் சத்ய மித்யா சஷதே -என்பதில் கூறப்பட்ட பொருளையே
அசத்வா இதம் அக்ர ஆஸீத் -என்பதில் உள்ள அசத் என்னும் சொல்லால் கூறத் தொடங்குவதால் இது அநு கர்ஷம் ஆகும்
சாந்தோக்யத்தில் அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்பதில் தத் சத் ஆஸீத் -என்று பின்னர் வரும் இடத்தில்
உள்ள சத் என்பதற்கு கூறப்பட்ட பொருளை முன்பு உள்ள அசத் என்பதற்கு எடுப்பதால் இது அபகர்ஷம் ஆகும்
பிருஹத் உபநிஷத்தில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத-என்பதில் வியாக்ரியத என்பதான
செயல் புரியும் சொல் உள்ளதால் -புதிதாக ஒரு கர்த்தாவைச் சேர்ப்பதால் இது அதிகர்ஷம் ஆகும் –

சித்தாந்தம்
சர்வஞ்ஞனான -ஆனந்த மாயா -ஸத்யஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மமே
தைத்ரியம் -3-7-1-அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -என்ற வாக்யத்திலும் தொடர்ந்து கூறப்பட்டது –
எப்படி என்றால் முந்திய பகுதியில் -அநு கர்ஷ முறை –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத்-அந்ய அந்தரே ஆத்மா ஆனந்த மய—2-5-என்று
ஜீவாத்மாவை விட வேறுபட்ட ப்ரஹ்மம் என்றும்
ஸோ காமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய–2 6-என்றும்
இதம் சர்வம் அஸ்ருஜத யதிதம் கி ஞ்ச டு தத் ஸ்ருஷ்ட்வா-தத் ஏவ அநு பிராவிஸத்-தத் அநு பிரவிஸ்ய –
சத் த்யத் ச அபவத்-என்று அனைத்தையும் ஸ்ருஷ்டித்து புகுந்து அனைத்துக்கும் ஆத்மாவாகவே
ப்ரஹ்மம் -என்று கூறப்பட்டது –

தொடர்ந்து -2-6- தத் அபி ஏஷ ஸ்லோகோ பவதி -என்று
இதுவரை கூறிய அர்த்தத்தில் பின்வரும் மந்த்ரமும் உள்ளது -என்றுள்ள வரி மூலமாக இதுவரை கூறப்பட்டவற்றை விளக்க –
அதற்கு சாட்சியாக பின் வரும் மந்த்ரமும் உள்ளது என்று கூறிய பின்னர்
அசத் வா இதம் அக்ர ஆஸீத்–2-7- -என்று தொடக்கத்தில் இவை அனைத்தும் அசத்தாகவே இருந்தன
என்னும் வாக்கியம் உள்ளது

அடுத்து இந்த மந்திரத்தின் அடுத்த வரியை குறைப்பதால் -அபகர்ஷம் தோன்றுகிறது
இத்தைத் தொடர்ந்து பீஷாஸ்மாத் வாத பவதே–தை -2-8- போன்ற வாக்யங்களால் அதே ப்ரஹ்மம் கூறப்பட்டு
ஸர்வேச்வரத்வம் சர்வ ஆனந்த விசிஷ்டத்வம் போன்ற பலவும் உரைக்கப் படுகின்றன
ஆகவே இந்த மந்த்ரம் -அசத் குறித்த வாக்கியம் -ப்ரஹ்மத்தைக் குறித்த விஷயமே யாகும் என்றதாகிறது
அப்போது -ஸ்ருஷ்டிக்கு முன்பு நாம ரூப வேறுபாடுகள் என்பதால் ப்ரஹ்மத்துக்கு சத் -அதாவது -இருக்கின்ற பொருள்
சம்பந்தம் இல்லை என்பதால் ப்ரஹ்மம் அஸத் சப்தத்தால் கூறப்படுகிறது
அஸத் ஏவ இதம் அக்ர ஆஸீத் –சாந்தோ 3-19-1-/6-2-1–போன்ற வாக்யங்களுக்கும் இதே கருத்தே

அடுத்து பூர்வ பக்ஷத்தில்
ப்ருஹி–தத் ஏதத் அவ்யாக்ருதம் ஆஸீத் 1-4-7-என்பது பிரதானமே ஜகத் காரணம் என்பர் -அது கூடாது –
இங்கும் அவ்யாக்ருதம் என்ற சொல்லால் கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே –
ப்ருஹ -1-4-7-
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக் ரேப்ய -பஸ்யம்ச் சஷு ச்ருண்வஞ்சரோத்ரம் மந்வாநோ மந –
ஆத்ம இதி ஏவ உபாஸீத்-என்று ச ஏஷ -என்று உணர்த்தப்படுகிற -தத் -அது என்பதன் மூலம் அவ்யாக்ருதம் என்ற சொல்லால்
கூறப்பட்ட ப்ரஹ்மமே அனைத்துக்கும் உட் புகுந்து நியமிக்கிறார் –
இப்படி முன்னம் கூறப்பட்ட விஷயம் இங்கு சேர்க்கப்பட்டதால் இது அநு கர்ஷம் ஆகும்

மேலும் தை -2-6-1-
தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிஸத்-என்றும்
சாந்தோக்யம் -6-3-2-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்றும் உள்ளவற்றால்
சர்வஞ்ஞனான பர ப்ரஹ்மமே உட் புகுந்து நாம ரூபங்களை ஏற்படுத்துகிறான் என்றதாயிற்று
மேலும் தைத்ரியம் 3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும் உள்ளதால்
உட் புகுந்து நியமித்தல் பிரதானத்துக்கு சம்பவிக்காது –
ஆகவே அவ்யாக்ருதம் என்று கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே ஆகும்

அடுத்து அதிகர்ஷ முறையில் விளக்கம்
பிருஹு -1-4-7-
தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியதே –என்று அதே ப்ரஹ்மம் -பல சரீரங்கள் கொண்டதாக தன்னை மாற்றிக் கொண்டது
பஹுஸ்யாம் ப்ரஜாயேய -போன்ற சங்கல்பம் -ஈஷதே-போன்ற பார்வை
இப்படி பல மேன்மைகளை கொண்ட தன்மை பிரதானத்துக்கு இல்லை என்பதால் ப்ரஹ்ம ஆத்மா சொற்களால் கூற இயலாது
ஆகவே ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபணம்

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்
அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம் -1-4-3-

October 11, 2019

விஷயம்
இந்திரியங்கள் ஆகாசம் போன்ற அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே என்று நிரூபணம் –

1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –

எண்ணிக்கையைக் கூறுகிறது என்பதால் சாங்க்ய யோகம் என்றது ஆகாது –
வேறுபடுவதாலும்-அதிகம் உள்ளதாலும் -என்றவாறு –

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று-எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் நிலைபெறுகின்றனவோ அவனே ஆத்மா –
அந்த ஆத்மாவை இப்படியாக அறிபவன் முக்தனாகிறான்
இந்த மந்திரத்தில் ஐந்து ஐந்து என்று -25-தத்வங்களோ-சாங்க்யர்கள் சொல்வது போலே என்ற சங்கை

பூர்வ பக்ஷம்
கபில தந்திரத்தில் கூறப்பட்டதே இங்கு பஞ்சநா ஐந்து கூட்டங்கள் -25-இவையே முக்தி பெற அறிய வேண்டியவை
கபில மதத்தில் –மூல ப்ரக்ருதி அவிக்ருதிர் மஹாதாத்யா பிரகிருதி விக்ருதய சப்த -ஷோட சகச்ச விகாரோ -விகாரஸ்து –
ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ –என்று அனைத்துக்கும் காரணம் மூல ப்ரக்ருதியே —
மஹத் அஹங்காரம் ஆகாசம் வாயு அக்னி நீர் பூமி ஆகிய எழும் ஓன்று மற்ற ஒன்றின் காரணம் –
பஞ்ச பூதங்கள் பதினோரு இந்திரியங்கள் கார்யம் –ஆத்மா காரியமும் அல்ல காரணமும் அல்ல –
இதுவே இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது என்பதே கபில தந்திரம்

சித்தாந்தம்
ந சங்க்ய உப சங்கரஹாத் அபி
இங்குள்ள பஞ்ச பஞ்ச ஜனா -என்று -25-பற்றி கூறினாலும் இது கபில தந்த்ரத்தை உணர்த்தப்பட வில்லை –
நாநா பாவாத் –
வேறாக உள்ளதால்
பிருஹு -4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்சநா ஆகாசச்ச ப்ரதிஷ்டித -என்பதில் யஸ்மின் -யத் என்ற சொல்லால் –
அவை அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்பதால் ப்ரஹ்மாத்மகமே
மேலும் பிருஹு -4-4-17-
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் -என்று அந்த ஆத்மாவை இப்படியாக அறிபவன்
முக்தி அடைகிறான் என்பதில் உள்ள
தம் -அந்த -என்பது ப்ரஹ்மமே ஆகிறது
இதுவே கீழே யத் என்ற சொல்லால் காட்டப்பட்ட ப்ரஹ்மம் –
எனவே வேறுபட்டதாகும்
அதிரேகாத் ச –
இங்கு கூறப்பட்டவை கபில தந்திரத்தில் கூறப்பட்ட எண்ணக்கையை விட அதிகமாக உள்ளன –
அதாவது -யத் -என்பதால் கூறப்பட்ட ஆத்மா -ப்ரஹ்மம் -மற்றும் ஆகாசம் ஆகியவை இரண்டும் கூடுதலாகும்
ஆகவே -தம் ஷட்விம்சகம் இத்யாஹு சப்த விம்சதா பரே–தத்வங்கள் -26-என்றும் -உயர்ந்த ப்ரஹ்மம் -27-என்றும் சொல்லும்
சுருதி வாக்கியத்தின் படியே அனைத்துக்கும் ஆதாரமாக உள்ள சர்வேஸ்வரனும் பரமபுருஷனும் ஆகிய
ப்ரஹ்மமே இங்கு உபதேசிக்கப்படுகிறான்
ஸூத்ரத்தில் -ந சங்க்ய உப சங்கரஹாத் அபி-என்பதில் அபி சப்தம் -என்றால் கூட -என்பதன் மூலம்
பஞ்ச பஞ்ச நா என்று இருந்தால் கூட -25-தத்துவங்களே கூறப்பட்டன என்று கூற முடியாது
இங்கு ஒவ் ஒன்றும் ஐந்து எண்ணிக்கைகள் கொண்ட ஐந்து கூட்டங்களாக உள்ளன என்று கூறப்பட வில்லை
பொதுவான ஜாதி குணங்கள் வேறே எந்த அடிப்படையிலோ ஐந்து கூட்டங்களாக பிரிக்க முடியாதே
ஐந்து கர்ம இந்திரியங்கள் ஐந்து ஞான இந்திரியங்கள் ரோந்து பூதங்கள் ஐந்து தன்மாத்திரைகள் மீதம் உள்ள ஐந்து என்று
கொள்ளலாமே என்னில் இது சரி அல்ல -ஆகாசம் தனியாக –4-17-மந்திரத்தில் இருப்பதால் –
ஆக பஞ்ச அடைமொழிகள் உடன் கூடிய பஞ்ச ஜனா -என்றது
சப்த சப்த ரிஷிகள் ஏழு சப்த ரிஷிகள் என்றால் போலவே –

ஆக -5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து-இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்
சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-என்றவாறு

இதுக்கு பூர்வ பக்ஷம்
அப்படியானால் பஞ்ச பஞ்ச ஜனா என்று கூறப்படுபவை எவை

அடுத்த ஸூத்திரத்தில் சமாதானம்

—————–

1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-

முடிக்கும் பகுதி மூலமாக பிராணன் போன்றவையே கூறப்பட்டதாகிறது -என்றவாறு

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று
ப்ராணனுக்கு பிராணன்-கண்ணுக்கு கண் -காதுக்கு காது -அன்னத்துக்கு அன்னம் அல்லது நாக்குக்கு நாக்கு –
மனஸூக்கு மனமாக எதை அறிகிறார்களோ என்று கூறப்படுகிறது
ஆகவே ப்ரஹ்மத்தை ஆதாரமாகக் கொண்ட பிராணன் போன்றவையே இங்கு பஞ்ச பஞ்ச ஜனா -என்று அறியப்படுகிறது

பூர்வ பக்ஷம்
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா-4-4 17-என்ற மந்த்ரம் காண்வர்கள் மற்றும் மாத்யந்தினர்களுக்கும் பொதுவானதாகும் –
ஆனால் -பிராணஸ்ய ப்ராணம் -4-4-18-என்ற மந்த்ரத்தை காண்வர்கள் ஓதும் போது
அவர்கள்- அன்னஸ்ய-என்று படிப்பதில்லை
அப்படி என்றால் அவர்கள் சாகையில் பஞ்ச பஞ்ச ஜனா என்பதன் மூலம் பிராணன் போன்றவை
கூறப்படுகிறது என்று சொல்ல முடியாதே

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————

1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

முன்பு உள்ள ஜ்யோதி என்ற பதம் மூலம் அன்னம் என்பது இல்லாத போது
அவ்விதம் அறியப்படுகிறது -என்றவாறு

ஏகேஷாம் –என்றால் –
காண்வ சாகை பாடத்தில் -என்று பொருள்
அஸ்தி அந்நே –
அன்னம் கூறப்படவில்லை என்றாலும்
ஜ்யோதிஷாம்
ஜ்யோதி என்ற சொல்லால் -பஞ்ச ஜனா என்பது இந்த்ரியங்களைக் குறிக்கிறது என்று அறியப்படுகிறது
பிருஹு 4-4-17-யஸ்மின் பஞ்ச பஞ்சஜனா என்ற மந்திரத்தின் முன்பு
4-4-16-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயுர் ஹோபாஸதே அம்ருதம் –என்று பரமாத்மாவை தேவர்கள் உபாசிக்கிறார்கள் –
அவன் பிரசாதம் மூலம் பெற்ற ஜ்யோதிஸ்ஸூக்கள் எவை என்று நிச்சயிக்காமல் இருக்க
இந்த மந்த்ரம் -4-4-17-யஸ்மின் பஞ்ச பஞ்சஜனா-என்று இவை வெளி விஷயங்களை பிரகாசித்து உணர்த்தப்படும்
இந்த்ரியங்களே என்று சொல்லி
அடுத்து -4-4-18-பிராணஸ்ய ப்ராணம் –என்பதில் இரண்டாவது பிராணன் மூலம் ஸ்பர்ச இந்திரியம் –
வாயு வுடன் தொடர்பு கொண்டது அன்றோ -என்பதாலும்
முக்கிய பிராணனை ஜ்யோதி என்ற பதம் காண்பிக்க இயலாது என்பதாலும் ஆகும் –

சஷுஸ் ச சஷு -என்பதில் உள்ள -சஷுஸ் ச என்பதன் மூலம் பார்க்கும் இந்த்ரியமான கண்ணும்
ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் என்பதில் உள்ள ஸ்ரோத்ரஸ்ய என்பதன் மூலம் கேட்க்கும் இந்த்ரியமான காதும் கூறப்பட்டது
இது தந்திரமாக -ஒரு முறை செய்யும் ஒரு செயல் மூலம் பலவும் நிறைவேறுதலே தந்திரம் எனப்படும் –
பூமியானது மணம்-கந்தம் -என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ளதால் –அந்த பூமியில் விளையும் அந்நம் மூலம்
அந்த சுவைக்கும் இந்த்ரியத்துடன் அன்னத்துக்கு தொடர்பு
மனஸ யே மன -என்பதில் மனச -என்றது மனத்தைக் குறிக்கும்
இங்கு மணம் மற்றும் சுவை ஆகிய இந்திரியங்கள் தந்திரமாக எடுக்கப்பட்டதால் ஐந்து என்று எண்ணிக்கை கூறும்
பஞ்ச பஞ்ச ஜனா வாக்யத்துடன் முரண்படாமல் உள்ளது –
ஆக ஞானத்தை ஏற்படுத்தும் மனம் முடிய உள்ளதான இந்த்ரியங்களே இங்கு பஞ்ச ஜனா என்று கூறப்படுகிறது –
மனத்துடன் சேர்த்து இந்திரியங்கள் ஆறு அன்றோ என்ற சங்கைக்கு விடை அளிக்கிறார்
இங்கு முரண்பட்டு வாராமல் இருக்க நுகருதல் சுவைத்தல் இரண்டையும் தந்த்ரத்தல் சொன்னதாயிற்று

ஆகவே ப்ருஹு -4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசச்ச ப்ரதிஷ்டித -என்ற வாக்யத்தால்
பஞ்ச இந்திரியங்களும் ஆகாசம் என்பதன் மூலம் பஞ்ச பூதங்களும் ப்ரஹ்மத்தில் நிலை நிற்கின்றன என்பதும்
அனைத்து தத்துவங்களும் ப்ரஹ்மத்தையே அண்டியுள்ளவை என்பதையும் கூறப்பட்டதாயிற்று

இதன் காரணமாக கபில தந்திரத்தில் மூலம் வெளிப்படும் -25- தத்வங்கள் குறித்து
இங்கு ஏதும் இல்லை என்று நிரூபணம்

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –இரண்டாம் அதிகரணம்—சமச அதிகரணம் -1-4-2-

October 11, 2019

விஷயம் –
அஜா -என்ற சொல்லால் -ப்ரஹ்மத்தை அந்தர் யாமி யாகக் கொண்ட –
மூலப் பிரக்ருதியே கூறப்பட்டது என்று நிரூபணம்

1-4-8-சமசவத் அவிசேஷாத்-

சமசம் போன்று சிறப்பித்துக் கூறப்படாதலால் -என்றவாறு –
இதிலும் கபில தந்திரம் மூலம் கூறப்படும் சித்தாந்த நிரசனம் –

சமசம் என்பது யாகங்களில் பயன்படுத்தப்படும் மரத்தால் செய்யப்பட ஒரு வகைப் பாத்திரம்
கீழ்ப் பாகம் அகலமாகவும் மேல் பாகம் ஒரு சிறிய துளை மட்டுமே கொண்டதாகவும் இருக்கும்
இதில் சோமலதை எனப்படும் மூலிகை ரசம் வைக்கப்படும்
உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –

ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்ட ப்ரக்ருதி மஹத் அஹங்காரம் -என்பதை ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும்

அதர்வணத்தில்–ஸூலி-3-/7–
விகார ஜநநீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம்–த்யாயதே அத்யாசிதா தேந தன்யதே ப்ரேர்யதே புந –
ஸூயதே புருஷார்த்தே ச தேந ஏவாதிஷ்டிதா ஜகத் –
கௌரநாத் யந்தவதீ சா ஜநித்ரீ பூத பாவிநீ -ஸீதா அசீதா ச ரக்தா ச சர்வ காமதுகா விபோ-
பிபந்த்யே நாம் அவிஷமாம் அவிஞ்ஞாதா குமாரகா
ஏகஸ்து பிபதே தேவ ஸ்வச் சந்தோ அத்ர வசாநுகாம் -த்யான க்ரியாப்யாம் பகவான் புங்க்தே அசவ் பிரசபம் விபு –
சர்வ சாதாரணீம் தோக்க் நீம் பீட்யமா நாம் து யஜ்வபி -சதுர்விம்சதி ஸங்க்யாகம் அவ்யக்தம் வ்யக்தம் உச்யதே –என்று
அனைத்துக்கும் தாய்-பிரகிருதி -எட்டு விதமாக –மஹத் அஹங்காரம் தன்மாத்திரைகள் பஞ்ச பூதங்கள் ஆகிய எட்டும் –
சர்வேஸ்வர நியமன அதீனம்-இந்த ஜகத்தே புருஷார்த்தங்களை அடைய சாதனம்
பிரக்ருதியே பசு போலே -வெண்மை கருமை -சிகப்பு -மூன்றுமாக இருந்து இன்பமான -பால் -கர்மம் -அளிப்பவள் -என்றும்

ஸூலி -14-
சதுர்விம்சதி சங்க்யாகம் அவ்யக்தம் வ்யக்தம் உச்யதே – அவ்யக்தமான அதுவே வெளிப்பட்டு
வ்யக்தம் ஆகிறது -என்றும் ப்ரக்ருதி ஸ்வரூபம் கூறப்பட்டது –
மேலே சூலி -13-/14-
தம் ஷட் விம்சகாம் இத்யாஹு சப்த விம்ச மதா பரே -புருஷம் நிர்குணம் சாங்க்யம் அதர்வ சிரசோ விது –
அவனை -26-தத்வம் என்றும் சிலர் -27-தத்வம் என்றும் கூறுகிறார்கள்
அதர்வண சிரசை அறிந்தவர்கள் அவனை நிர்க்குணம் என்றும் அறியத்தக்கவன் என்றும் சொல்வார்கள்
வேறே சில அதர்வண சாகைகளில்
அஷ்டவ் ப்ரக்ருதய ஷோடச விகார -என்று பிரகிருதியின் நிலைகள் -8-மாற்றங்கள் -16-என்பர்

பிரகிருதி புருஷன் ஈஸ்வர ஸ்வரூபங்களை
ஸ்வேதரா -1-8-
சம்யுக்தம் ஏதத் ஷரம் அக்ஷரம் ச வ்யக்த அவ்யக்தம் பரதே விஸ்வம் ஈஸ -ஆநீ சச்ச ஆத்மா பத்யதே போக்த்ரு பாவாத்
ஞாத்வா தேவம் முச்யதே சர்வ பாஸை–என்றும்
ஸ்வேதரா-1-9-
ஜ்ஞ அஜ்ஜவ் த்வவ் அஜவ் ஈஸ அநீசவ் அஜா ஹி ஏகா போக்த்ரு போகார்த்த யுக்தா -அனந்தச்ச ஆத்மா விஸ்வ ரூபோ ஹி
அகார்த்தா த்ரவ்யம் யதா விந்ததே ப்ரஹ்மம் ஏதத் -என்றும்
இப்படி அனுபவிப்பவன் அனுபவிக்கப்படுவது அனுபவம் மூன்றையும் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -என்றும்
ஸ்வேதரா-1-10-
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹர ஷர ஆத்மாநவ் ஈஸதே தேவ ஏக -தஸ்ய அபி த்யாநாத் யோஜநாத்
தத்வ பாவாத் பூயஸ் ச அந்த விஸ்வ மாயா நிவ்ருத்தி -என்றும்
ஸ்வேதரா-4-9-
சந்தாம்ஸி யஜ்ஞா க்ரதவோ வ்ரதாநி பூதம் பவ்யம் எச்ச வேதா வதந்தி -அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வம்
ஏதத் தஸ்மிம்ச்ச அந்யோ மாயயா சந்நிருத்த -என்றும்
ஸ்வேதரா-4-10-
மாயம் து ப்ரக்ருதிம் வித்யான் மாயிநம் து மஹேஸ்வரம் -தஸ்ய அவயவ பூதைஸ்து வ்யாப்தம் சர்வம் இதம் ஜகத் -என்றும்
ஸ்வேதரா-6-16-
பிரதான ஷேத்ரஞ்ஞா பதிர் குணேச சம்சார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது -என்றும் உள்ளதே

ஸ்ம்ருதி -ஸ்ரீ கீதையிலும் -13-19-
ப்ரக்ருதிம் புருஷம் ச ஏவ வித்த்யநாதீ உபாவபி விகாராம்ச் ச குணாம்ச் ச ஏவ வித்தி ப்ரக்ருதி ஸம்பவாந் -என்றும்
ஸ்ரீ கீதை-13-20-
கார்ய காரண கர்த்ருத்வ ஹேது -ப்ரக்ருதிர் உச்யதே புருஷ ஸூக துக்காநாம் போக்த்ருத்வே ஹேது உச்யதே -என்றும்
ஸ்ரீ கீதை-13-21-
புருஷோ ப்ரக்ருதிஸ் தோ ஹி புங்க்தே ப்ரக்ருதி ஜாந் குணாந் -காரணம் குண சங்கோஸ்ய சத சத் யோநி ஜென்ம ஸூ
ஸ்ரீ கீதை-14-5–
சத்துவம் ரஜஸ் தம இதி குணா பிரகிருதி ஸம்பவா -நிபத் நந்தி மஹா பாஹோ தேஹ தேஹிநம் அவ்யயம் -என்றும்
ஸ்ரீ கீதை-9-7-
சர்வ பூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் கல்பக்ஷய புநஸ் தாநி கல்பாதவ் விஸ்ருஜாமி அஹம் -என்றும்
ஸ்ரீ கீதை–9-8-
ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந -பூத க்ராமம் இமம் க்ருத்ஸ்னம் அவசம் ப்ரக்ருதேர் வசாத் -என்றும்
ஸ்ரீ கீதை-9-10–
மயாத்க்ஷேன ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் ஹேது நாநேந கௌந்தேய ஜகத் விபரி வர்த்ததே -என்றும் கூறியதே

மேலும் -ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய–என்று
பிரக்ருதியை முக்தாத்மா விட்டுச் செல்கிறான்

இங்கு கபில தந்திரத்தில் சொல்லப்படும் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரக்ருதியா -ப்ரஹ்மாத்மகமான பிரக்ருதியா -சங்கை

பூர்வ பக்ஷம்
அஜம் ஏகம் என்று பிறப்பற்ற ஓன்று என்பதால் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரக்ருதியே யாகும்
பிரகிருதி எதனாலும் உண்டாக்கப்படுவது இல்லையே
மேலும்
பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-என்பதால் பிரஜைகளை தனது ஸ்வரூபம் போலே
ஸ்வ தந்திரமாக ஸ்ருஷ்டிக்கும் சக்தி பிரக்ருதிக்கும் உள்ளதாகவும் கூறப்பட்டது –

சித்தாந்தம்
சமசவத் அவிசேஷாத்-
இங்கு கபில தந்திரத்தில் கூறப்பட்ட பிரகிருதி இல்லை
சமசவத்-என்று சமசம் போன்றதாகும்
பிருஹு -2-2-3-
அர்வாக்பிலச் சமச ஊர்த்வ புத்ந -என்று
மேலே பருத்து கீழே துளை உள்ள -உணவு உண்ண பயன்படும் பொருள் -என்றே அன்றி
ஒரு குறிப்பிட்ட சமஸத்தை-என்று சிறப்பித்து சொல்ல வில்லையே
சம் -உண்ணுதல் பருகுதல்-என்பதால் சமாசம்
அதாவது பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன-என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் -என்று நிச்சயிக்கலாம்
இதே போலே அஜா -சொல்லின் பொருளையும் அதன் பயன்பாடு மற்றும் இந்தப்பகுதியில் உள்ளது என்பவை
போன்றவற்றால் அறிய வேண்டும்
இங்கு அஜா -பிரகிருதி ஸ்வ தந்திரமாக செயல்படும் என்று கூறவில்லை
பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா–ஸ்வேதரா-4-5-என்பதன் மூலம் ஸ்ருஷ்ட்டி செய்கிறது என்னும் விவரமே உள்ளது
ஆகவே இந்த மந்திரத்தில் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரகிருதி கூறப்பட வில்லை என்றதாயிற்று

இப்படியாக கல்ப தந்திரத்தில் கூறப்பட்டதான ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத
ப்ரக்ருதி போன்ற பலவும் தள்ளப் பட்டது –

மேலும் ஒரு காரணத்தாலும் அஜா என்று ப்ரஹ்மாத்மகமான பிரக்ருதியே என்பதை அடுத்த ஸூத்ரத்தில் நிரூபணம்

——————

1-4-9-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –

இது உயர்ந்த ஜ்யோதியான ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்டதாகும்
ஒரு குறிப்பிட்ட சாகையைச் சார்ந்தவர்கள் இப்படியே ஓதுகிறார்கள் -என்றவாறு

சித்தாந்தம் –
ஸூத்ரத்தில் உள்ள– து –என்ற சொல்லானது –
இங்கு கூறப்படும் கருத்தை அதிக அழுத்தத்துடன் கூறுவதை உணர்த்துகிறது –
அஜா -என்பது ஜ்யோதியை தனது காரணமாகக் கொண்டதாகும் –
இந்த ஜ்யோதி ப்ரஹ்மமே –
பிருஹு -4-4-16-
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்றும்
சாந்தோக்யம் -3-13-7-
அத யதத பரோ தேவோ ஜ்யோதிர் தீப்யதே -என்றும் சொல்வதால் பிரசித்தம் ஆகிறது
ஜ்யோதி ரூப க்ரமா-என்று
ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்ட -என்று பொருள்
ததா ஹி அதீயதே ஏகே-என்று
இப்படியாக தைத்ரிய சாகையைச் சேர்ந்த சிலர் கூறுகிறார்கள்
ஹி -என்பது
காரணத்தைக் குறிக்கும்
இந்த அஜா -ப்ரக்ருதி என்பது ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள்
ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயாந் ஆத்மா–குஹாயா நிஹித அஸ்யா ஜந்தா-என்று சொல்லி தொடர்ந்து
சப்த பிராணா ப்ரபவந்தி தஸ்மாத் –என்றும்
அஜாம் ஏகாம் லோஹித சுக்ல கிருஷ்ணம் பஹ்வீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் –
அஜோ ஹி ஏகோ ஜுஷமான-அநு சேத ஜஹாத் யோநாம் புக்த போகம் அஜ அந்ய–என்றும் இத்யாதிகளால்
அனைத்துக்கும் காரணமான பிரகிருதி ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி ஆனது என்று கூறப்பட்டது –

இந்த அஜா தன்னைப் போன்ற வஸ்துக்கள் தோன்ற காரணம் –
இது கர்ம வஸ்யரான ஜீவாத்மாவால் அனுபவிக்கப் படுகிறது
பின்பு முக்தாத்மாவால் கை விடப்படுகிறது
இந்த அஜா மற்றவற்றைப் போலவே ப்ரஹ்மத்தின் இடம் உத்பத்தியாகி ப்ரஹ்மத்தையே
ஆத்மாவாகக் கொண்டுள்ளது என்றவாறு

அதீயதே ஏகே -என்று
ஸ்வேதாஸ்வர உபநிஷத்தில் உள்ள அஜா என்ற சொல்லுக்கு மற்ற ஒரு சாகையைச் சேர்ந்த மஹா உபநிஷத்தில்
காணப்படும் அதே போன்ற வரியில் இருந்து பொருள் –
ஸ்வேதாஸ்வர-1-1-
கிம் காரணம் ப்ரஹ்ம -என்று தொடங்கி
ஸ்வேதாஸ்வர-1-3-
தே த்யான யோக அநு கதா அபஸ்யன் தேவாத்ம சக்திம் ஸ்வ குணைர்நி கூடாம்-என்று
அஜா ப்ரஹ்மத்தின் சக்தி என்று சொல்லி
ஸ்வேதாஸ்வர-4-9-
அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் தஸ்மிம்ச் ச அந்யோ மாயயா சந் நிருத்த–என்றும்
ஸ்வேதாஸ்வர–4-10-
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -என்றும்
ஸ்வேதாஸ்வர-4-11-
யோ யோநிம் யோநிம் அதிஷ்டதி ஏக-என்றும் போன்ற பல வரிகளால்
அதே அஜா -ப்ரஹ்மாத்மகமான ப்ரக்ருதியே கூறப்படுகிறது –
திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –
கபில தந்திரத்தில் சொல்லிய ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரகிருதி குறித்து சிறு வாசனை கூட இல்லை என்றதாயிற்று

இதற்கு பூர்வ பக்ஷம்
அப்படியானால் ஜ்யோதியான பரமாத்மாவைக் காரணமாகக் கொண்டது என்றும் –
சிகப்பு வெளுப்பு கருப்பு நிறங்களைக் கொண்டது என்றும் கூறப்படும் பிரகிருதி அஜா -பிறப்பற்றது என்று எப்படிக் கூறப்படுகிறது
பிறப்பற்றது என்று கூறப்படும் பிரகிருதி ஜ்யோதியில் இருந்து தோன்றுவதாகக் கூறுவது எப்படி –

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————

1-4-10-கல்பநோபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

ஸ்ருஷ்ட்டியைக் கூறுவதால் -மது -என்பது போன்று விரோதம் இல்லை -என்றதாயிற்று –
பிரகிருதி பிறப்பற்றது என்றும் கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –

சித்தாந்தம்
ஸூத்ரத்தில்–ச -சப்தம் –
இங்குள்ள சங்கையைப் போக்கும்
பிரகிருதி பிறப்பற்றது என்பதற்கும் -ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தின் இடம் வெளிப்பட்டது என்பதற்கும் முரண்பாடு இல்லை
கல்பந உபதேசாத்-என்று
ஸ்ருஷ்ட்டி குறித்து உபதேசிப்பதால் –கல்பநம் என்றது உண்டாக்குதல் -ஸ்ருஷ்ட்டியைச் சொன்னவாறு –
அதாவது ஜகத் ஸ்ருஷ்ட்டி குறித்து உபதேசம் –

தைத்ரிய உபநிஷத்தில் –
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் –5 7-என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 –என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –
இத்தால் ப்ரக்ருதி கார்ய காரண இரண்டு நிலைகளில் உள்ளதாக உணர்த்தப் படுகிறது –
பிரகிருதி காரண நிலையில் உள்ள போது அஜா -பிறப்பற்றது –
கார்ய நிலையில் உள்ளது ஜ்யோதியைக் காரணமாகக் கொண்டது என்றவாறு

மத்வாதி வத்–
ஆதித்யன் காரண நிலையில் உள்ள போது ஈஸ்வரனுடன் ஒன்றாகவே உள்ளான்
அதே ஆதித்யன் கார்ய நிலையில் உள்ள போது ருக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறும் கர்மங்கள் மூலமாக
உண்டாகும் தேனின் இருப்பிடமாகவும்
தன்னை உபாசிக்கும் வஸூக்கள் மற்றும் தேவர்களால் அனுபவிக்க வல்ல தேனாகவும் இருக்கிறான்
அந்த நிலையிலும் உதயம் அஸ்தமனம் குறித்து எந்த முரண்பாடும் இல்லையே –
சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு —
அசௌவா ஆதித்யோ தேவமது-3-1-1 -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்-சொல்லித் தொடங்கி
பிரளய காலத்தில் –
அத தத் ஊர்த்வ உதேத்ய ந ஏவ உதேதா ந அஸ்த மேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா — என்று
சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
ஏகல -என்று ஒரே இயல்புடன் மாறாமல் உள்ளான்
ஆக இந்த மந்திரத்தால் ப்ரஹ்மாத்மகமான பிரக்ருதியே -அஜா -என்று கூறப்பட்டது அல்லாமல்
கபில தந்திரத்தில் கூறப்பட்ட பிரகிருதி அல்ல என்றதாயிற்று

அத்வைதிகள் இந்த மந்திரத்தில் தேஜஸ் நீர் பூமி ஆகியவற்றால் உண்டாக்கிய
ஒரு அஜா என்பது கூறப்படுவதாகச் சொல்வார்கள் –
இவர்கள் இடம் பூதங்களாகிய தேஜஸ் நீர் பூமி ஆகியவை ஒரே தத்துவமாக உள்ள அஜா என்பதை குறிக்கின்றனவா
அல்லது கார்ய நிலையில் உள்ள ப்ரஹ்மமே தேஜஸ் நீர் பூமி என்று உள்ளதால் அஜா என்கிறதா அல்லது
தேஜஸ் நீர் பூமி ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ள ஓன்று மூலப்ரக்ருதி -அஜா என்பதாக உள்ளதோ

இதில் முதல் கருத்தை ஏற்றால் -தேஜஸ் நீர் பூமி இவை ஒன்றுக்கு மேற்பட்டவை
ஸ்வேதாஸ்வர -4-5-
அஜம் ஏகாம் -ஒரே ஒரு அஜம் என்பதுடன் முரண்படும்
இவை மூன்று அல்ல -த்ரிவ்ருத்க்கரணத்தால் ஒன்றாகும் என்னில் -அவை பலவாக உள்ள தன்மை மாறாதே
சாந்தோக்யம் 6-3-2-
இமாஸ்திஸ்ரோ தேவதா -என்று இந்த மூன்று தேவதைகள்
சாந்தோக்யம் -6-3-3-
தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதம் ஏகைகாம் கரவாணி –என்று ஒவ் ஒன்றுக்கும் த்ரிவித்கரணம் சொல்லப்படுகிறதே

இரண்டாவது கருத்தில் இரண்டு கேள்விகள் -ப்ரஹ்மமே தேஜஸ் நீர் பூமி மாறுதல்கள் அடைந்து அஜா வஸ்துவாகிறதா –
அல்லது ப்ரஹ்மம் ஸ்வரூப மாறுதல் இல்லாமல் ஒரு அஜா எனப்படுகிறதா
முதல் கேள்வி தள்ளுபடி பலவாக உள்ள தன்மை மறையாமல் உள்ளதால்
இரண்டாவது -சாந்தோ –4-5-
லோஹித சுக்ல க்ருஷ்ணாம் என்பதுடன் முரண்படும்
மேலும் ப்ரஹ்மம் தனது ஸ்வரூபத்துடன் உள்ள போது தேஜஸ் முதலானவற்றை அதன் லக்ஷணமாகக் கூற முடியாது

மூன்றாவது கருத்தின் படி அஜா என்று தேஜஸ் நீர் பூமி பூதங்கள் உணர்த்தப்பட்டு அவை மூலம்
அஜா காரண நிலையில் உள்ளது என்றதாயிற்று
இதற்கு மாறாக அஜா என்பது தேஜஸ் நீர் பூமி ஆகியவற்றின் காரண நிலையான பிரகிருதி உள்ளதை
சுருதி கூறுவதால் அப்படியே கொள்ளலாம்
சில அத்வைதிகள் அஜா என்று -ப்ரக்ருதி ஒரு பெண் ஆட்டின் உருவமாக கூறப்பட்டது என்பர்
இந்த கற்பனையால் எந்த பயனும் இல்லை என்பதால் பொருத்தம் ஏற்றதாகும்
கட -ஆத்மாநம் ரதிநம் வித்தி -சரீரம் உபாயம் என்பதைக் காட்டவே உருவகம்
இதே போலே ஆதித்யனை அனுபவிப்பதால் தேனாக உருவகம்
பெண் ஆடாக உருவகம் பயன் இல்லை என்பது மட்டும் இல்லை -முரண்பாடும் ஏற்படும்
எல்லை அற்ற கால சம்பந்தம் -சகலத்துக்கும் மோக்ஷ பந்த ஹேது அசேதனம் இப்படிப்பட்ட தன்மையான பிரக்ருதியை
பால் மட்டும் கொடுக்கும் சேதன உருவகம் முரண்பாடு ஆகுமே

மேலும் ஸ்வேதாஸ்வர -4-5-
அஜாம் ஏகாம் —அஜோ ஹி ஏக –அஜ அந்ய–என்பதில் உள்ள அஜா சொல்லுக்கு
பலவிதமான பொருள்களைக் கற்பிப்பது சரி இல்லை
இதற்கு அத்வைதிகள் பெண் ஆடு பொருளையே கொள்ளலாம் என்றால் இது அடியோடு முரண்படும்
ஜஹாத்யேநாம் முக்த போகாம் அஜ அந்ய–ஸ்வே -4-5-என்று முக்தாத்மா
இந்த பெண் அத்துடன் சம்பந்தம் கொள்கிறான் என்னும் முரண்பாடு வரும்

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –முதல் அதிகரணம்—ஆநுமாநிக அதிகரணம் -1-4-1-

October 10, 2019

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –

—————-

விஷயம்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதி ஜகத்தின் காரணப் பொருள் என்று
கூறப்பட வில்லை என்பது நிருபிக்கப் பட உள்ளது –

1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –

அவ்யக்தம் எனப்படும் மூல பிரக்ருதியே ஜகத் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் –
அது சரி அல்ல –
உருவகத்தில் தேராக உருவகம் செய்யப்பட சரீரத்தையே அவ்யக்தம் என்பதால் ஆகும்

பரம புருஷார்த்த சாதனமாக உள்ள ப்ரஹ்மத்தை அறிய இச்சை ஏற்பட வேண்டும் –
அந்த ப்ரஹ்மமே அறியத் தக்கது -என்றும் இதுவரை கூறப்பட்டது –
அந்த ப்ரஹ்மமே சகல காரணன் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
கபில மகரிஷியால் முன்பு கூறப்பட்ட ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரதானமும் புருஷர்களும் உண்டு என்பதை நிலை நிறுத்தும் விதமாக
ஒரு சிலர் ஒரு சில வேத சாகைகளில் இப்படிப்பட்ட பிரதானமே ஜகத் காரணம் என்று கூறுவதாக ஆஷேபம் எழுப்ப –
அத்தை தள்ளி ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்படுகிறது

கட உபநிஷத் –
இந் த்ரியேப்ய பரா ஹி யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரம் மந
மநசஸ்து பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர
புருஷான் ந பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி -3-10-/-11-என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –
இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –

பூர்வ பக்ஷம்
இங்கு பிரதானமே சொல்லப்படுகிறது -வேறு பதத்தால்- அவ்யக்தம் என்கிறது
சாங்க்ய மதம் -நிரீஸ்வர -மதம் -25-தத்துவமான புருஷனைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றும் இல்லை

சித்தாந்தம் –
ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத்
ஏகேஷாம்-ஒரு சில வேத சாகைகளில் சேர்ந்தவர்களால்
ஆநுமாநிகம்-பிரதானம் என்பதே காரணப் பொருளாகக் கூறப்படுகிறது
இதி சேத்-இப்படியாக கூறப்படுவது
ந-
அப்படி அல்ல -இங்குள்ள அவ்யக்தம் -என்ற பத மூலம் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரதானம் கூறப்படவில்லை
ஏன் என்றால்
சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே
சரீரமாக உருவகம் செய்யப்பட்டதையே அவ்யக்தம் என்று கூறுகிறது –
அதாவது -ஆத்மா சரீரம் புத்தி மனம் இந்திரியம் இந்திரிய விஷயங்கள் இவற்றை
தேர் ஓட்டுபவன் தேர் போன்றவை உருவகப் படுத்தப் படுகிறது
தர்சயதி ச
இதனால் சரீரமே தேர் -அதுவே அவ்யக்தம் எனப்பட்டது

முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்—3-3-4-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் –3-9–என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்
இத்தால் பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

சம்சாரத்தின் அக்கரையில் உள்ள ஸ்ரீ விஷ்ணுவின் பதத்தை அடைய விரும்பும் சேதனன் -உபாசகன் –
தேரில் அமர்ந்து செல்பவனாகக் கூறப்பட்டு அவனது சரீரம் இத்யாதி தேரின் அங்கங்கள் –
யார் ஒருவன் தேர் முதலானவற்றை தன் வசப்படுத்தி உள்ளானோ
அவனே ஸ்ரீ பரமபதம் அடைகிறான் என்றதாயிற்று

இந்த்ரியேப்ய பாரா ஹி அர்த்தா -இந்த்ரியங்களைக் காட்டிலும் இந்திரிய விஷயங்கள் மேலானவை
குதிரைகளை விட பாதைகள் மேலானவை –
இதை விட கடிவாளம் மேலானது -மனஸ் வலியது
அதை விட புத்தி -அறிவில் உறுதி இல்லாவிடில் மனசால் பயன் இல்லை –
அதுக்கும் மேலே கர்த்தாவான ஆத்மா -அவனே மஹான் என்று சிறப்பித்துச் சொல்லி –
பரார்த்து தஸ்ஸ்ருதே-2-3-10-இவற்றை நியமிக்கும் பர ப்ரஹ்மமே என்பதையே
கடவல்லி
புருஷான் த பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பரா கதி -3-11-என்று அவனை விட உயர்ந்த ஒன்றும் இல்லை –
அவனே பரமகதி என்றும்
இதே போலே அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் பிருஹு -3-7-22-
ய ஆத்மநி திஷ்டன் –இத்யாதியாலும்
ந அந்ய த்ரஷ்டா 3-7-23–என்றும் சொல்லப்படுகிறது

ஸ்ரீ கீதையிலும்
அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக் விதம்–விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் ச ஏவ அத்ர பஞ்சமம் -18-14 –என்று
ஐந்து காரணங்களில் தைவத்தைச் சொல்லி
ஸர்வஸ்ய ச அஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட மத்த ஸ்ம்ருதிர் ஞானம் போஹனம் ச –15-15-இந்த தெய்வம் புருஷோத்தமனே -என்றும்
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி -பிராம்யன் சர்வ பூதாநி யந்த்ர ரூடாநி மாயயா –
தமேவம் சரணம் கச்ச சர்வ பாவேந பாரத -18-61-/62– என்று
அவனே மாயையால் சுழல வைக்கிறான் -அனைத்து விதங்களால் சரணம் புகுவாய் என்றதே
ஆகவே கட -3-3-ஆத்மாநம் ரதிநம் வித்தி –இத்யாதியால் உருவகப்படுத்தி
இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -3-10-என்று இந்த்ரியங்களைக் காட்டிலும் விஷயங்கள் உயர்ந்தவை என்று
அவற்றின் பெயரையே சொல்லி சரீரம் என்பதையே அவ்யக்தம் என்று கூறப்பட்ட தாகிறது –
பிரதானம் இங்கு பிரசங்கம் இல்லை என்றதாயிற்று –

அடுத்து -தர்சயதி ச -விளக்கம்
ஏஷ சர்வேஷு பூதேஷு கூட ஆத்மா ந ப்ரகாசதம்-த்ருச்யதே த்வக்யயா புத்தயா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி –3-12- என்றும்
எச்சேத் வாங் மனஸீ ப்ராஞ்ஞ தத் யச்சேத் ஞான ஆத்மநி -ஞானம் ஆத்மநி மஹதி நியச்சேத் தத் யத் சாந்த ஆத்ம நிம்-3-13-என்றும்
புலன்களை அடக்கியே பர ப்ரஹ்மத்தை காண முடியும் -ஞான ஆத்மாநி இரண்டும் தனித்தனியாக ஏழாம் வேற்றுமை –
மனசை ஆத்மாவில் உள்ள ஞானத்தில் அடக்க வேண்டும் -என்று முன்பு சொன்ன புத்தியைச் சொன்னபடி
மேலே -ஞானம் ஆத்மநி மஹதி நியச்சேத் -என்று புத்தியானது ஆத்மாவில் அடைக்கப்பட வேண்டும் என்றும்
தத் யத் சாந்த ஆத்ம நிம்-அந்த ஆத்மாவை அந்தர்யாத்மாவான பரமாத்மாவிடம் அடக்க வேணும்
தத் -பரமபதத்தையே இலக்காகக் கொண்டு அதனை அடைகிறான் என்றபடி

இதுக்கு பூர்வபக்ஷம்
சரீரம் கண்களால் காணப்படும் -அவ்யக்தம் காணப்படாதது -இப்படியானதால் எவ்வாறு
அவ்யக்தம் என்பது சரீரத்தைக் குறிக்கும் –

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

———–

1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –

சூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே -கர்த்ருத்வ தகுதி அடைகிறது என்றவாறு
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

பஞ்சபூதங்கள் அவ்யாக்ருத -மாறுபடாத நிலையில் தகுந்த நேரத்தில் சரிரமாகும்
இத்தையே அவ்யக்தம் என்கிறோம்
தத் அர்ஹத்வாத் -கர்த்ருத்வ தகுதி அடைய என்றவாறு
எனவே சரீரம் -தேர் – தனக்கு சேஷியான ஆத்மாவுக்கு ஏற்றதான புருஷார்த்தம் பெற வைக்கும் சாதனம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
மாறுபாடு அடையாத பூத் ஸூஷ்மம்-இதுவே கபில தந்திரத்தின் படி அவ்யக்தம் என்று சொல்லலாமே

இதுக்கு சமாதானம் சுத்த ஸூத்ரம்

———–

1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

சுருதி ஸ்ம்ருதிகள் -பரமாத்மாவை அனைத்துக்கும் ஆத்மாவாக சொல்லுமே
ஸூபால உபநிஷத் -2-
பிருதிவி அப்ஸூ ப்ரலீ யதே என்று தொடங்கி -தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே –பூதாதிம் அர்ஹதி லீயதே –
மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் தமஸி லீயதே -தம பரே தேவ ஏகிபவதி —
என்று இருப்பது போலேயும்
தஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆப சரீரம் -யஸ்ய தேஜஸ் சரீரம் -யஸ்ய வாயு சரீரம் -யஸ்ய ஆகாசம் சரீரம் –
யஸ்ய அஹங்காரம் சரீரம் -யஸ்ய புத்தி சரீரம் -யஸ்ய அவ்யக்தம் சரீர -யஸ்ய அக்ஷரம் சரீரம் -யஸ்ய ம்ருத்யு சரீரம் –
ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால -3-என்றும் உள்ளதே

இதே போன்று ஸ்ரீ கீதையிலும்
பூமி ஆப அநலோ வாயு கம் மநோ புத்தி ஏவ ச அஹங்காரம் இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி அஷ்டதா -7-4-என்றும்
அபரா இயம் இத து அந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் -ஜீவ பூதாம் மஹா பாஹோ யயா இதம் தார்யாதி ஜகத்-7-5- என்றும்
ஏதத் யோநி இதி பூதாபணி ஸர்வாணி இதி உப தாரய அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத பிரபவ ப்ரளயஸ் ததா -7-6-என்றும்
மத்த பரதரம் ந அந்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய -மயி சர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ர மணி கணாம் இவ -7-7-என்றும் உள்ளதே

இதே போலே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
வ்யக்தம் விஷ்ணு தத் அவ்யக்தம் புருஷ கால ஏவ ச –1-2-18- என்றும்
ப்ரக்ருதிர் யா மயா க்யாதா வ்யக்த அவ்யக்த ஸ்வரூபாணீ–புருஷச்ச அப்யுபாவேதவ் லீயதே பரமாத்மநி –
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார புருஷோத்தம -விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷு ச கீயதே -6-4-38-/39-
என்றும் கூறப்பட்டுள்ளதே

—————

1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-
அவ்யக்தத்தை அறியப்பட ஒன்றாக கபில தந்திரத்தில் கூறப்பட வில்லையே

—————–

1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–

அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறப்படுகிறதே என்றால் -அப்படி அல்ல –
பிரகரணத்தை ஆராய்ந்தால் அங்கு கூறப்படுபவன் பரமாத்மாவே ஆவான்

பூர்வ பக்ஷம்
கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே –என்ற
சுருதி வரியானது அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறுகிறது

சித்தாந்தம்
அப்படி அல்ல -அனைத்தும் அறிந்த பரம புருஷனே அறியத் தக்கவனாக கூறப்படுகிறான் –
இந்த வரிகளுக்கு முன்னால்–கட -3-9-
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹவான் நர-
ச அத்வன பாரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்—ஞானத்தை தேர் ஓட்டுபவனாகவும் மனத்தைக் கடிவாளமாகவும்
கொண்டு ஸ்ரீ பரமபதத்தை அடைகிறான் -என்றும்
அதற்கு கீழே -ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடஸ் ஆத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வக்யயா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று அனைத்தும் அறிபவனாகிய
பரம புருஷனே இந்த பகுதியில் கூறப்படுகிறான் –

புருஷான் ந பரம் கிஞ்சித் –கட 3-12-புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை என்பது மறுக்கப்பட வில்லை
புருஷன் இங்கே கூறப்பட வில்லை
அந்த பரம் புருஷனுக்கே சப்தம் போன்ற குணங்கள் இல்லை என்பதை
முண்டகம்–1-1-5-
யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் – -என்று எது காண இயலாதோ எடுக்க இயலாதோ -என்ற சுருதி வாக்கியங்கள் உணர்த்தும்
மேலும் கட -3-15-
மஹத பரம த்ருவம்-என்று மஹத்தை விட பெரியது என்று கூறப்பட்ட வஸ்துவான
பரம் பொருள் தானே –
கட –3-10-
புத்தரோத்மா மஹான் பர -என்று புத்தியைக் காட்டிலும் மஹான் என்ற ஆத்மா பெரியது என்று
ஜீவாத்மாவை விட மேலானவன் என்று உணர முடியலாம்-

—————————

1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –

உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு —
மூன்றைக் குறித்தே அறிய வேண்டும் என்ற பதில் இருப்பதால் கேள்வியும் மூன்றையும் பற்றியே இருக்க வேண்டும்
மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்

சித்தாந்தம்
இந்த பிரகரணத்தில் -உபாயம் உபாசனம் —உபேயம்–அடையப்படும் பரமாத்மா -உபேதா அடைபவனாகிய ஜீவாத்மா –
ஆகிய மூன்றையும் குறித்த விளக்கம் -இவற்றைக் குறித்தே அறிய வேண்டும் என்னும்
விதி கேள்விகள் உள்ளன -அவ்யக்தம் பற்றி ஒன்றுமே இல்லை

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
புருஷார்த்தம் அடைய வல்ல -தனது தந்தை தன்னுடன் மகிழ்வுடன் இருக்கும் வரம் –
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்து–மோக்ஷ சாதனமாக உள்ள -நாசி கேதஸ் -என்ற பெயர் கொண்ட
அக்னி வித்யையை குறித்து அறிய வேண்டும் என்று கேட்டான்
ஸ்வர்க்கம் என்று உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமே கூறப்படுகிறது

கடவல்லி -1-1-13-
ச த்வம் அக்நிம் ஸ்வர்கயமவ்யேஷி ம்ருத்யோ ப்ரப்ரூஹி தம் ஸ்ரத்த தாநாய மஹ்யம் –
ஸ்வர்க்க லோகா அம்ருதத்வம் பஜந்தே ஏதத் த்விதீ யேந வ்ருண வரேண–என்று உபதேசிக்க பிரார்த்திக்கிறான்

கடவல்லி -1-1-13-
அம்ருதத்வம் பஜந்தே -பிறப்பு இறப்பு இல்லா அம்ருதத் தன்மை அடைகிறார்கள்
மேலும் -கடவல்லி -1-1-17-
த்ரிணாசிகேதஸ் த்ரி ப்ரேத்ய சந்திம் த்ரி கர்ம க்ருத தரதி ஜென்ம ம்ருத்யு -என்று நாசி கேதஸ்ஸின் மூன்று வித அநுவாகங்களை
-தாய் தந்தை குரு மூவரிடம் கற்று -அந்த அக்னியை மகிழ வைத்து -யஜ்ஜம் இயற்றுதல் -தானம் அளித்தல்-வேத அத்யயனம் செய்தல் –
ஆகிய மூன்று வித கர்மங்களை செய்து -சம்சாரம் கடந்து மோக்ஷம் அடைகிறான் –
அடுத்து 1-1-20-
யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத்யேக நாயமஸ்தீதி சைகே -ஏதத் வித்யாம் அநு சிஷ்டஸ் த்வயாஹம்
வரணாம் ஏஷ வரஸ் த்ருதீய –என்று மூன்றாவது கேள்வி

பின்பு அவனுக்கு மோக்ஷம் பற்றி அறிய தகுதி இருப்பதை பலவாறாக பரிசோதித்து யமன்
கட -2-12-
தம் துர் தர்ஸோ கூடம் அநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ்வ ரேஷ்டம் புராணம் -அத்யாத்ம யோகாதி கமேந தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி –என்று பரமாத்மாவை அறியும் ஞானி சம்சார கர்மவினைகளை விட்டு
அவனையே அடைகிறான் -என்று உரைத்தான்

தேவம் மத்வா –என்று அடையப்படு அவனது ஸ்வரூபம்
அத்யாத்ம யோகாதி கமேந-இலக்கை அடையும் பிரத்யாகாத்மாவின் ஸ்வரூபம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி- ப்ரஹ்ம உபாசனையில் ஸ்வரூபம்
இதன் காரணமாக நசிகேதஸ் மீண்டும் -2-14-
அந்யத்ர தர்மாத் அந்யத்ர அதர்மாத் அந்யத்ர அஸ்மாத் க்ருத அக்ருதாத் -அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
தத் பச்யதி தத் வத -என்று
அனைத்துக்கும் வேறுபட்ட அந்த பரமாத்மாவை -மோக்ஷத்தை காண்கிறாய் அல்லவா –
அதனை எனக்கு கூற வேண்டும் என்று கேட்டான்

இதற்கு பதிலாக யமன் பிரணவத்தை புகழ்ந்து ப்ராப்ய ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பற்றி விளக்கினான்
இதுவே கட -2-15-
சர்வே வேதா யத் பதம் அமநந்தி தபாம்சி ஸர்வாணி ச யத் வதந்தி -யத் இச்சந்தோப்ரஹ்மசர்ய சரந்தி தத்தே பதம்
ஸங்க்ரஹேன பிரவீம் ஓம் இதி ஏதத் –என்று உபக்ரமித்து உபதேசித்து மீண்டும் பிரணவத்தை புகழ்ந்தான்
கட -2-18-
ஜீவாத்மா ஸ்வரூபம் -ந ஜாயதே ந ம்ரியதே வா விபச்சித் என்றும்
கட -2-20-
பர ப்ரஹ்மமான ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்வரூபம் –
அனோர் அணீயான்-என்று தொடங்கி
கட -2-24-
க இத்தா வேத யத்ர ச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி–என்று முடிய உபதேசிக்கப்பட்டது

இந்த வாக்யங்களுக்கு நடுவில் -2-24-
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயோ ந பஹுநா ஸ்ருதேந –என்று தொடங்கி உபாஸனையின் ஸ்வரூபம் சொல்லப்பட்டது
கட -3-1-மூலம்
ருதம் பிபந்தவ் –என்று இருவர் கர்ம பலனை புஜிக்கிறார்கள்-என்பதால் அவன் அருகிலே இருப்பதால் உபாஸனை எளிது என்றும்
கட -3-3-
ஆத்மாநம் ரதிநம் வித்தி -என்று தொடங்கி
கட -3-14-
துர்கே பதஸ் தத் கவயோ வதந்தி –என்று பாதை கடினம் என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்று நிகமிப்பதன் மூலம்
உபாஸனையின் வழி முறைகளும் உபாசகன் ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் அடைதல் பற்றியும் கூறப்பட்ட இந்த பிரகரணத்தில்
கட -3-15-
அ சப்தம் அ ஸ்பர்சம் என்று முடிக்கப்பட்டுள்ளது –

இங்கு அறியப்பட வேண்டியவர்களாக மூன்று விஷயங்களும் -அவற்றைக் குறித்த கேள்விகளும் மட்டுமே உள்ளன –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை

—————–

1-4-7-மஹத்வத் ச –

மஹத் தத்வம் போன்றது என்றவாறு-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
கட -3-10-
புத்தேர் ஆத்மா மஹான் பர – புத்தியைக் காட்டிலும் மஹான் என்று கூறப்படும் ஆத்மா உயர்ந்தது -என்றது
சாமாநாதி கரண்யத்தால் –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட மஹான் சொல் இல்லை
இதே வரியில் ஆத்மா என்பதைக் காட்டிலும் அவ்யக்தம் மேம்பட்டது என்ற பொருளில் படிக்கப்பட்டதால்
இந்த அவ்யக்தம் கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் என்ற சொல்லைக் கருத்தில் கொண்டு
எடுக்கப்பட விலை என்று அறியலாம்

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் –பத்தாவது அதிகரணம்–அர்த்த அந்தரத்வாதி வ்யபதேச அதிகரணம் -1-3-11-

October 10, 2019

1-3-42-ஆகாச அர்த்தாந்த்ரத்வாதி வ்யபதேசாத் —

வேறுபட்டவனாக இருத்தல் போன்றவை கூறப்படுவதால் ஆகாசம் எனப்படுபவன் பரமாத்மாவே தான் -என்றபடி –

நாம ரூபங்கள் கொடுக்கும் -ஆகாசத்துக்கும் – மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால்
ஆகாயம் எனபது பரம் பொருளே

விஷயம்
சாந்தோக்யம்
ஆகாசோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ச ஆத்மா -8-14-1–

சங்கை ஜீவாத்மாவா பரமாத்மாவா

பூர்வபக்ஷம்
முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –
இந்த சுருதி வாக்யத்துக்கு சற்று முன்பு –
சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரம் அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -8-13-1-

குதிரை பிடரியை உதறுவது போலே வும் -ராகுவிடம் இருந்து சந்திரன் விடுபடுவது போன்றும்
பாபங்களில் இருந்து விடுபட்டு சரீரத்தை உதறி க்ருதக்ருத்யனாக ப்ரஹ்ம லோகம் அடைவேனாக –

தே யதந்திரா -நாம ரூப ஆகியவற்றின் நடுவில் உள்ள -என்பதன் மூலம் நாம ரூபம் இவற்றால் விடுபட்ட
நாம ரூபயோர் நிர்வஹிதா முக்தாத்மாவை சொல்லி -என்பதன் மூலம் முக்தாத்மாவின் முந்தைய நிலையைச் சொல்லி
இந்த முக்தாத்மா தேவாதி சரீரங்களை விட்டு -தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் -இதுவே ப்ரஹ்மம் அம்ருதம் -என்கிறது என்பர் பூர்வ பக்ஷி

மேலும் முக்தாத்மா ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவதால் ஆகாசம் என்பது பொருந்தும் என்பர்

இதை மறுத்து சிலர் -இங்கு சொல்லும் ஆகாசம் முன்பு கூறிய தஹராகாசமே-என்றும்
தஹர ஆகாசம் பரமாத்மா என்பதால் இங்கும் பரமாத்மாவையே சொல்லிற்று என்னில்
அது அப்படி அல்ல -நடுவில் பிரஜாபதி வாக்கியம் வருவதால் இது வேறே பிரகரணமே –
பிரஜாபதி வாக்கியம் பிரத்யகாத்மா முக்தி பெரும் நிலையைச் சொல்லி
விதூய பாபம் -8-13-1-என்று கூறுவதால் முக்தாத்மா பற்றியே இங்கு என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம் –
ஆகாயத்தைக் கூறும் பொழுது -அர்த்தாந்த்ர வ்யபதேசாத்-என்று ஆகாசம் மற்றவற்றில் இருந்து வேறுபட்டது –
ஆகாசோ ஹை வை நாம ரூபயோர் நிர்வஹிதா–8-14-1- -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
சம்சார பந்தத்திலும் முக்தி பெற்ற நிலையிலும் வேறுபட்டவன் -முக்தனுக்கு ஜகத் வியாபாரம் வர்ஜம் அன்றோ –

அநேந ஜீவேந ஆத்மந அனுப் ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி –சாந்தோக்யம் -6-3-2-என்றும்
ய சர்வஞ்ஞ சர்வ வித் யஸ்ய ஞான மயம் தபஸ் தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே முண்டகம் –1-1-9-என்றும்
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரோ நாமானி க்ருத்வாபி வதன்யதாஸ்தே –தைத்ரியம் -3-12-7-என்றும் பலவாகக் கூறப்பட்டன
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –

தே யதந்தரா-8-14-1–
அவற்றின் நடுவில் விளங்கியது -நடுவில் இருந்தாலும் இவற்றின் தோஷங்கள் தீண்டப்படாமல் -நிர்வகிக்கிறான்
ஆதி -சப்தம்
அனைத்துக்கும் ஆத்மாவான தன்மை -ப்ரஹ்மமான தன்மை -அமிர்தமான தன்மை -நிர்ஹேதுகத்வ பரமான தன்மை –
பரமாத்மாவுக்குமே சம்பவிக்கும்
தூத்வா சரீரம் 8-13-1-சரீரத்தை விட்டு என்பதால் இங்கு முக்தாத்மா சொல்லப்படுகிறான் என்பது சரியில்லை -என் என்னில்
ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -8-13-1-என்பதில் பர ப்ரஹ்மமே பேசப்படுகிறது –
இங்கு சென்று அடைந்தவன் முக்தாத்மா என்றும் -அடையப்படுவது பர ப்ரஹமம்-என்றுமே கூறப்படுகிறது
இந்த ஆகாசம் தஹர ஆகாசம் என்பதே சரி -ஆகாச சப்தத்தால் எங்கும் ஆத்மாவை சொல்லப்படவே இல்லையே –

இதுக்கு ஒரு பூர்வ பக்ஷம்
பிரத்யகாத்மாவைத் தவிர்த்து வேறு எந்த ஆத்மாவும் கூறப்பட வில்லை
ஐக்கியம் கூறப்படுவதாலும் த்வைத தன்மை தடுப்பதாலும் முக்தாத்மாவே பரமாத்மா பரப்ரஹ்மம் பரமேஸ்வரன்
என்று எல்லாம் கூறப்படுகிறான்
அடைபவனாகிய முக்தாத்மா தவிர வேறே வேறுபட்ட ப்ரஹ்ம லோகம் தனியாக இல்லை –
அவனே ப்ரஹ்ம லோகம் ஆகாசம் ஆகிறான் -அவனே நாம ரூபம் ஏற்படுத்த வல்லவன் என்பர் பூர்வ பக்ஷி

—————

1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –

தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால்
ஜீவன் வேறு பரம்பொருள் வேறு
கீழ் ஸூத்ரத்தில் இறுதியில் -வ்யபதேசாத்-உபதேசிக்கப்படுவதால் -என்பதை இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும் –

பூர்வ பஷி –
தத் த்வமசி–அஹம் பிரம்மாஸ்மி –நேஹ நா நாஸ்தி -என்பர்

சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
வாஜச நேயகத்தில் -கதம் ஆத்மா யோயம் விஞ்ஞான மய ப்ராணேஷு -4-3-7-என்று
ஆத்மா யார் -புராணங்களில் ஞானத்துடன் உள்ளவன் என்று சொல்லாத தொடங்கி
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் -4-3-21-என்று
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்
இதே போன்று மரணத்துக்கு பின்னரும்
ப்ராஜ்ஞேந ஆத்மநா அன்வாரூட உத்சர்ஜன்யாதி -4-3-35-என்று பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்
எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல-என்றதாயிற்று –

——————

1-3-44-பத்யாதி சப்தேப்ய —

பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல-

ப்ருஹத் உபநிஷத் –
சர்வஸ்ய அதிபதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ்ய ஈசாந ச ந சாதுநா கர்மணா பூயான்நோ ஏவாசாநுநா கர்மணா கதியாநேஷு
சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷு பூத பால ஏஷ சேதுர் விதரண யேஷாம் லோகாநாம் அசம்பேதாய–
தமேதம் வேதாநு வசநேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி –ஏதம் ஏவ விதித்வா முனிர்பவதி-
ஏவம் ஏவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்சந்த ப்ரவ்ரஜந்தி-4-4-22- என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன்-கர்ம வஸ்யன் அல்லன் -என்றும்
ச வா ஏஷ மஹான் அஜ ஆத்மா அந்நாதோ வஸூதாந -4-4-24-அவனே உயர்ந்த பிறப்பற்ற ஆத்மா –
வலிமனையானவன் -செல்வத்தை அளிப்பவன் -என்றும்
அஜரோ அம்ருதோ அபாய ஆனந்தோ ப்ரஹ்ம -4-4-25-என்றும் பலவிதமாகக் கூறப்பட்டது –

இந்த தன்மைகள் முக்தனுக்கு ஏற்படாதே
ஐக்கியம் சொல்வது சாம்யா பத்தியைப் பற்றியதே -அனைத்தும் ப்ரஹ்மாவைச் சார்ந்தே உள்ளவை –
அனைத்துக்கும் ப்ரஹ்மமே ஆத்மா –
இதனையே சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜாலாந் –சாந்தோக்யம் -3-14-1-இத்யாதிகளால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -த்வைதத்தை மறுக்கும் வாக்யங்களுக்கு எல்லாம் இதுவே பொருள்
ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-

ஸ்ரீ பாஷ்யம் முதல் அத்யாயம் மூன்றாம் பாதம் சம்பூர்ணம்

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் –பத்தாவது அதிகரணம்–பிரமிதாதிகரணம் -1-3-10-

October 10, 2019

இது ஆறாவது அதிகரணமாகிற பிரமிதாதிகரணத்தின் தொடர்ச்சி –

விஷயம்
இவ்வாறு வந்த ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் குறித்த விவாதங்கள் முடிந்த பின்பு –
முன்பு கூறப்பட்ட விஷயமான அங்குஷ்டமானவானும் முக்காலத்திலும் அனைத்துக்கும் அதிபதியான
ப்ரஹ்மம் குறித்து மேலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன –

1-3-40-கம்ப நாத் –

தேவர்களுக்கு நடுக்கம் கூறப்படுவதால் -கட்டை விரல் அளவுள்ளவன் என்று கூறப்படுபவன் பரமாத்மாவே ஆவான்
அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி –கட -4-12-என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷ அந்தராத்மா -கட -6-16-என்றும் உள்ளவற்றில் நடுவே
யத் இதம் கிம் ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ரம் உத்யதம் ய ஏதத் விதுர் அம்ருதாஸ்தே பவந்தி-6-2-என்று அனைத்து லோகங்களும்
உயர்த்திப் பிடிக்கப்பட்ட வஜ்ராயுதம் போன்ற இவனைக் கண்டு நடுங்குகின்றன –
இவ்விதம் அறிபவர் மோக்ஷம் பெறுகின்றனர் -என்றும்

பயாத் அஸ்ய அக்நிஸ் தபதி பயாத் தபதி ஸூர்ய
பயாத் இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவதி பஞ்சம- கட -6-3-என்று
பயம் காரணமாகவே அக்னி சுடுகிறது -சூர்யன் காய்கிறது -இந்திரன் வாயு ஐந்தாவதான யமன்
அஞ்சி பணி செய்கிறார்கள் -என்றும்

பிருஹு
ஏதஸ்ய வா அஹரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத -3-8-9-என்றும்

தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாத் அக்நிஸ்ச இந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம -2-8-
இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்களை – பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————

1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –

கடவல்லியில்
அங்குஷ்ட மாத்ர புருஷனை விஷயமாகக் கொண்டு கூறப்பட்ட வாக்யங்களுக்கு நடுவில்
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -5-15-என்று அவனது
தேஜஸ்ஸாலே அனைத்தும் பிரகாசிக்கின்றன

அதர்வண வேதத்தில் முண்டக உபநிஷத்தும் அவனை பரஞ்சோதி என்றும்

சாந்தோக்யமும்
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே -8-3-4-/8-12-3–என்றும்
பிருகு
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் ஆயுர் ஹோபாஸதே அம்ருதம் -4-4-16-என்றும்
ஜ்யோதிஸ்களுக்கும் ஜ்யோதிஸ்சான பரமாத்மாவை ஆயுஸாகவும் அமிர்தமாகவும் உபாசிக்கிறார்கள் என்றும்

மேலும் சாந்தோக்யம்
அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -3-13-7-என்று ஸ்வர்க்கத்தையும் கடந்து பிரகாசிக்கிறது -என்றும்

இப்படிப்பட்ட பெருமை உடைய அங்குஷ்ட மாத்ர புருஷன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-என்றதாயிற்று –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஒன்பதாம் அதிகரணம்–அபஸூத்ராதி கரணம் -1-3-9-

October 9, 2019

1-3-33-ஸூக் அஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –

விஷயம்
ப்ரஹ்ம வித்யைக்கு சிலருக்கு அதிகாரம் உள்ளதா என்பதின் விசாரம்

அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட-நிந்தையாகக் கூறப்பட்ட வாக்யத்தைக் கேட்ட – ஜானஸ்ருதியின் சோகம் –
அவன் உடனே ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்-

இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் சூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-

சாந்தோக்யம் -நான்காவது ப்ரபாடகம்-முதல் காண்டம் -சம்சர்க்க வித்யை –
ஜானஸ்ருதி அரசன் -இரண்டு அன்னப் பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ள
ஓன்று -அவன் அருகே நெருங்காதே அவனது தேஜஸ்ஸு சுவர்க்கம் வரை பரவி உள்ளது என்றும்
அதற்கு அடுத்தது -வடிவுடன் கூடிய சயுக்வான் என்னும் ரைக்குவாரோ -என்ன
அவரைப் பற்றி சொல்ல அந்த பறவை கேட்க -உலகில் நல்லவர்கள் செய்பவன எல்லாம் அவர் செயலில் அடங்கும் –
அவரது அறிவு த்யானம் போன்ற பலவற்றில் அனைவருடையதும் அடங்கும் –
அவரைக் கண்டு -600-பசுக்கள் காசுமாலை தேர் அனைத்தையும் அளித்து
ஹாரே த்வா ஸூத்ர தவைவ சக கோபி -4-2-2-என்று கோபத்துடன் நீயே வைத்துக் கொள் என்று பேசி பின்பு சமாதானம் அடைந்து —
ஆஜ ஹாரேமா ஸூத்ர அநேந ஏவ முகேந ஆலாபிஷ்யதா-4-2-5-என்று ப்ரஹ்ம வித்யையை உபதேசித்தத்தைப் பற்றியே இந்த அதிகரணம்

பூர்வ பக்ஷம் –
தேவர்களுக்குப் போலே இவர்களுக்கும் அதிகாரம் உண்டு -அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் இருப்பதால் –
ப்ரஹ்ம வித்யை மானஸீகமே -வர்ணாஸ்ரம கர்ம அநுஷ்டானமே வேண்டுவது –
தஸ்மாத் ஸூத்ரோ யஜ்ஜே அநுவக்லுப்த–தைத்த –7-1-6- என்று யாகத்துக்கு அதிகாரம் இல்லை என்றது
அக்னி வித்யை கொண்டு செய்யப்படும் கர்மங்களுக்கு மட்டுமே –
வேத அத்யயனம் இல்லாமல் வேதாந்தங்களைக் கேட்க்காமல் ப்ரஹ்ம ஞானம் ஏற்படாதே என்னில்
அவர்கள் இதிகாசம் புராணங்களைக் கேட்கலாமே
ஸ்ராவயோச் சதுரோ வர்ணான் க்ருத்வா ப்ராஹ்மணம் அச்ரத –என்று உண்டே
விதுராதிகள் ப்ரஹ்ம நிஷ்டராக இருப்பதை அறிவோம்
ஞானசுருதியை ஆச்சார்யரான ரைக்குவர் -ஸூத்ரா -என்று அழைத்து –
ஆஜஹாரேமா ஸூத்ர அநேந ஏவ முகேந ஆலாபயிஷ்யதா–சாந்தோக்யம் -4-2-5-என்று
காணிக்கைகள் செலுத்தி என்னை உபதேசிக்கும்படி செய்தாய் என்றார்
ஆகவே ப்ரஹ வித்யையில் அவர்களுக்கு அதிகாரம் ஏற்படலாம் என்பதே பூர்வ பக்ஷம்

சித்தாந்தம்
சாமர்த்தியம் இல்லையே -ஆர்த்தித்த மாத்திரத்தாலே அதிகாரம் சம்பவிக்காதே –
வேத அத்யனம் வர்ணாஸ்ரம கர்மங்களுக்கு அடிப்படை ஆகுமே –
விதுரர் போன்றவர் முற்பிறவியில் பெற்ற ப்ரஹ்ம ஞானம் மறவாமல் மீண்டும் ப்ரஹ்ம ஞானம் பெற்றார்கள் –
பிராரப்த கர்மம் காரணமாக -பலன் அளிக்காத தொடங்கி விடட கர்ம பலனால் ப்ரஹ்ம நிஷ்டர்களாக விளங்கினார்கள்
சம்வர்க்க வித்யை பகுதியில் பணிவிடைகள் செய்த சிஷ்யனை ஸூத்ர-என்று அழைத்ததால் அதிகாரம் உண்டு எண்ட்ரீர்களே என்னில்
இங்கு அன்னப்பறவைகள் பேச்சல சோகம் அடைந்து துக்கம் -ஸூக் -அடைந்ததால் ஸூத்ர-என்று அழைக்கப் பட்டான்-
நான்காம் வர்ணத்தவன் என்பதால் அல்ல –
இவனது தான தர்ம சிந்தனையைக் கண்டா மகாத்மாக்கள் இருவரும் அன்னப் பறவை வேஷம் கொண்டு ஓன்று
போ போ பல்லாஷா பல்லாஷா ஜானஸ்ருதே பவுத்ராயணஸ்ய சமம் திவா ஜ்யோதிராதிதம்-
தன்மா பிரசாங்க்ஷீ-தத் த்வா மா பிரதாஷீத் –சாந்தோக்யம் –4-1-2-என்று சொல்ல –
அத்தைக் கேட்ட மற்ற ஹம்சம் -கம்வர யேநம் ஏதத் சந்தம் சயுக்வாநமிவ ரைக்வம் அத்த –4-1-3-என்று சொல்ல
ஜானஸ்ருதி அங்கு சென்று காணிக்கைகளை செலுத்தி
-அநு ம ஏதாம் பகவோ தேவதாம் சாதி யாம் தேவதாம் உபாசித்தே -4-2-2-என்று பிரார்த்திக்க
அந்த ரைக்குவர் யோகமகிமையால் நடந்தவற்றை அறிந்து அனுக்ரஹம் செய்தார்
தொடர்ந்து அபாஹர த்வம் ஸூத்ர தவைவ ஸஹ கோபிரஸ்து -4-2-3-என்று
அவன் கொடுத்த அனைத்தையும் அவன் இடமே திருப்பிக் கொடுத்து
ஸூத்ர என்றது சோகத்தாலும் -ப்ரஹ்ம ஞானம் பெற த்வரையாலும் பெற்ற அதிகாரத்தால் தான் என்றதாயிற்று –

———–

1-3-34-ஷத்ரியத்வ கதே -ச

பஹு தாயீ –பஹு பாக்ய –சர்வதே ஏவ மே அத்ஸ்யந்தி -சாந்தோக்யம் -4-1-1-என்பதால்
பலவித தானம் செய்பவன் -பலவித உணவை சமைப்பவன் -என்றும்
ச ஹ சம்ஜிஹான ஏவ ஷத்தாரம் உவாச 4-1 -5—என்று தேரோட்டியை ஏவும் தன்மை -இவற்றால் ஷத்ரியனாகவே இருக்க வேண்டும்
தொடர்ந்து அவன் ஷத்ரியன் என்பதை மீண்டும் நிரூபணம் செய்து
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை-என்று நிரூபணம் –

——–

1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —

மேலே கூறப்படுகின்ற சைத்ராத வம்சத்தை சேர்ந்த ஷத்ரியன் மூலமும் ஜானஸ்ருதி ஒரு ஷத்ரியனே ஆவான்
என்பதை அறியலாம் -அடையாளம் உள்ளதால் -என்றபடி –

அத ஹ ஸுவ்நகம் ச காபேயம் அபிப்ரதாரிணம் ச காஷஸேநிம் பரிவிஷ்யமானவ் ப்ரஹ்மச்சாரி
பிபேஷ–சாந்தோக்யம் -4-3-5-என்று தொடங்கி
ப்ரஹ்மசாரிந் ந இதம் உபாஸ்மஹே-4-3-7-என்பதன் மூலம் காபேயன் அபிப்பிரதாரி
ப்ரஹ்மசாரி மூவரும் சம்வர்க்க வித்யையுடன் சம்பந்தம் உள்ளது -அவர்களில் அபிப்பிரதாரி ஷத்ரியன் –
மற்ற இருவரும் அந்தணர்கள் –

இதற்கு அபிப்பிரதாரி சைத்ராதான் என்றும் ஷத்ரியன் என்றும் சொல்ல வில்லையே என்று ஆபேஷம் வர

லிங்காத்-என்கிறார்

அத ஹ ஸுவ்நகம் ச காபேயம் அபிப்பிரதாரிணம் ச காஷஸேநிம் –4-3-5–என்று
காபேயனுடன் தொடர்பு கொண்டவன் என்றும்
ஏதேந வை சைத்ரரதம் காபேயா ஆயாஜயந் –தைத்ரியம் —20-12-5–என்று
காபேயனுடன் சைத்ரரத வம்சத்தில் வந்தவனுக்கு சம்பந்தம் உண்டு என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதிர் அஜாயத–என்று இந்த சைத்ரரதன் ஷத்ரிய தன்மை கொண்டவன் என்றும் உண்டே
இத்தால் ஷூத்ரனுக்கு அதிகாரம் உண்டு என்று கூற எந்தவித அடையாளமும் இல்லை
இத்தால் ப்ரஹ்ம வித்யையில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் கூறுகின்றனவே –

சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே -சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான
காபேயனும்-காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க -இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி சாயாத -என்பதன் மூலம் அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்
இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞானஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –
அதனால் சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

———-

1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –

ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
இவை கிடையாது என்று கூறுவதாலும் -என்றவாறு

சாந்தோக்யம் உப த்வா நேஷ்யே–4-4-5–உப நயனம் செய்து வைக்கின்றேன் -என்றும்
தம் ஹோபநித்யே –அவர் உபநயனம் செய்வித்தார் -என்றும் உள்ளது -ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
சூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை
ந சூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி -மனு-10-126-
சதுர்த்தோ வர்ண ஏக ஜாதிர்ந ச சம்ஸ்காரம் அர்ஹதி-கௌஷகி -10-50–என்றும் இருப்பதால்
எனவே சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

————

1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —

சூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை
உபதேசிக்கப் பட வேண்டும்-என்பதாலும் என்றவாறு

சத்யகாமன் என்பானது தாயார் ஜாபாலி இடம் தனது கோத்ரம் என்ன என்று கேட்க
அவள் சான்றோர்களுக்கு கைங்கர்யம் செய்தே போது போக்கின எனக்கு இது தெரியாது என்ன –
இதையே தனது ஆச்சார்யர் இடம் அவன் சொன்னதும்
இத்தை கேட்டதும் -ந ஏதத் ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹதி சமிதம் ஸோம்ய ஆஹர–சாந்தோக்யம் -4-4-5-
பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் -எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன்
சமித்தை எடுத்து வா -என்றார் –

தகுதியை உறுதி செய்த பின்பே வித்யை உபதேசம் என்றதாயிற்று –

———–

1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —

சூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்

வசிஷ்ட ஸ்ம்ருதி
பத்யு ஹ வா ஏதத் ச மசாநம் யத் ஸூத்ர தஸ்மத் சூத்ர சமீபே நாத்யேதவ்யம்–7-9–என்பதாலும்
யார் ஒருவன் வேதங்களைக் கேட்கவும் கூடாதோ என்று கூறப்பட்டது அவனுக்கு வேத அத்யயனமும்
பொருளை உணர்ந்து அனுஷ்டானமும் சம்பவியாதே

சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை -என்றதாயிற்று-

———

1-3-39- ச்ம்ருதே ச-

அத ஹாஸ்ய வேதம் உப ச்ருண்வதஸ் த்ர புஜ துப்யாம் ஸ்ரோத்ர ப்ரதிபூர்ணம்
உதாஹரணே ஜிஹ்வாச் ஸேதோ தாரனே சரீர பேத -கௌஷீத -12-3-
ஸ்ம்ருதி களும் சூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும்
ந ச அஸ்ய உபாதி சேத்தர்மே ச ச அஸ்ய விரதம் அதி சேத் -மனு -4-80-
என்பதால் அதிகாரம் இல்லை-

அத்வைதிகள் -சின்மாத்ரா ப்ரஹ்மம் ஒன்றுமே சத்யம் -மற்ற அனைத்தும் மித்யை –
சம்சார பந்தமும் அபாரமார்த்தமே -உண்மை யற்ற நிலை -என்பர்
ஒருவன் வேத அத்யயனம் ஆகாவிடிலும் யார் மூலமாக இந்த வாக்கியம் கேட்டு ஞானம் பெற்று சம்சார விமுக்தி பெறுவான்
இது வெள்ளி இல்லை முத்துச் சிப்பி தான் என்று உணர்த்தப் பெற்ற ஞானம் போலே -பேத வாசனை நீங்கப் பெறலாம்
இதனால் ஞானம் பெற்று நிர்விசேஷ சின் மாத்ர ஸ்வயம் பிரகாச ப்ரத்யக் வஸ்துவே ப்ரஹ்மம் என்று அறிகிறான் என்பர்
இவ்வாறு என்றால்
வேதங்கள் பயன் அற்றதாகி விடும்
உபாஸனை மூலமே ப்ரஹ்ம ஞானம் கை வந்து அத்தால் ப்ரஹ்மம் மகிழ்ந்து
யதார்த்த ஞானம் பிறப்பித்து சம்சார பந்தம் விலகி முக்தனாகிறான்

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -எட்டாம் அதிகரணம்-தேவதாதிகரணம் -1-3-8-

October 9, 2019

1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-

மது வித்யை போன்ற வித்யைகளுக்கு அதிகாரம் ஏற்படாது என்பதால் தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி –
இது பூர்வபக்ஷம் மட்டுமே உள்ள ஸூத்ரம்

சாந்தோக்யம் –3-1-1-
ஸூர்ய பகவானை தேனாக தியானிக்கும் வித்யை -ஸூர்ய மண்டலத்தை தேவதைகள் உட் கொள்ளும் தேனாகவும்–
மேல் உலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும் -வேதங்கள் இதிகாச புராணங்கள் -வண்டுகளாகவும்
வஸூக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மற்றும் ம்ருத் ஸாத்ய கணங்கள் நான்கு திசைகளிலும் மேல் புறத்திலும் நிற்பதாகக் கருதி
ஸூர்ய பகவானின் அந்தர்யாமியாக உபாசனம் செய்வதே மது வித்யை ஆகும்

தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால் எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
அசம்பாவித
முன்பே தேவர்கள் வஸூ தன்மை அடைந்ததால் பொருந்தாதே
அசவ் வா ஆதித்யோ தேவ மது —சாந்தோக்யம் -3-1-1-என்று இந்த ஆதித்யன் தேவர்களின் மெதுவாக உள்ளான் என்று தொடங்கி –
தத் யத் ப்ரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி-3 6-1–என்று கூறி
ச ய ஏதத் ஏவம் அம்ருதம் வேத வஸூநாம் ஏவ ஏகோ பூத்வா அக்நே நைவ முகேந ஏதேவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி-3-6-3-என்று
இவ்விதம் உள்ள அம்ருதத்தை அறிபவன் அக்னியை முன்னிட்டு வஸூ வாகிறான் –
பின்னர் அந்த அம்ருதத்தைக் கண்டு அந்தப்பார்வை மூலம் மன நிறைவு கொள்கிறான் -என்று நிகமிக்கப்படுகிறது-

————-

1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம்-4-4-16- -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

இதுவும் பூர்வ பஷ ஸூத்ரம்-

—————

1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் -அடுத்த கல்பத்தில் ஏற்படுவதால்

30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி இது சித்தாந்தம்

மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் -தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

வஸூ ஆதித்யன் பதவிகளை அடைந்த பின்பு தங்களுக்கு அந்தராத்மாவான ப்ரஹ்ம உபாசனம் பண்ணலாமே
அடுத்த கல்பத்திலாவது ப்ரஹ்மம் அடைய என்றும் -அதே பதவிகளைப் பர என்றும் உபாஸனை இருக்கலாமே –
அத தத் ஊர்த்வம் உதேத்ய-3-11-1-என்று பிறகு மேல் எழுந்து என்றும்
அத தத் ஊர்த்வ ந ஏவோ தேவாதேதா-3-11-1–என்றும் அதனைக் காட்டிலும் அதன் பின்னர் உயர்ந்த -என்றும் உள்ளதால்
கார்ய நிலை காரண நிலை இரண்டிலும் உள்ளதாக உபாசனம் செய்து
ந ஹ வா அஸ்மா உ தேதி ந நிம்நோசதி சக்ருத்திவா ஹ ஏவ அஸ்மை பவதி -ய ஏதாமேவ ப்ரஹ்ம
உபநிஷதம் வேத –3-13-1–என்று உபாசனம் மூலம் வஸூ தன்மை அடையப்பட்டு ப்ரஹ்மத்தை அடைவதைக் கூறும்
மேலும் ப்ருஹ
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -4-4-16-என்று ஜ்யோதிகளுக்கு எல்லாம் ஜ்யோதி என்றதும்
ப்ரஹ்மமே உபாசிக்கப்படும் வஸ்துவாக உள்ளதால்
வ்ருத்தி காரரும் -போதாயனரும் -ப்ரஹ்மமே எங்கும் உபாசிக்கப்படுவதால் மது வித்யை தேவர்களுக்கும் சம்பவிக்கும் என்றபடி

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஏழாம் அதிகரணம்-தேவதாதிகரணம் -1-3-7-

October 9, 2019

விஷயம்
தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனத்தில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம்

1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-

ப்ரஹ்ம உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-

கீழே ப்ரஹ்ம உபாசனா அதிகாரம் மநுஷ்யர்களுக்கே என்றதால் தேவர்களுக்கு உண்டோ இல்லையோ
என்ற சங்கை வருமே -அந்த விசாரணையே இங்கு

பூர்வ பக்ஷம்
தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -அவர்களுக்கு சாமர்த்தியம் இல்லை என்பதால் –
ப்ரஹ்ம உபாஸனைக்கு அங்கங்களாக விவேகம் விமோகம் போன்றவை கை கூடாது –
தேவர்களுக்கு சரீரம் உள்ளது என்று எந்த பிரமாணமும் இல்லை -சரீரம் இருந்தால் துன்பம் ஏற்படும்
அத்தை தீர்த்துக் கொள்ள உபாஸிக்க வேண்டும்
எனக்கே சாமர்த்தியம் இல்லாமையாலும் தேவை இல்லாமையாலும் தேவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனத்துக்கு அதிகாரம் இல்லை என்று பூர்வபக்ஷம்

உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே -சாந்தோக்யம் -தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

சித்தாந்தம்
தத் உபரி அபி பாதராயண சம்பவாத்–
தத் -என்று அந்த ப்ரஹ்ம உபாசனம் –
உபரி -மற்ற தேவர்களுக்கும்
சம்பவதி -உண்டு
இப்படியாக பகவத் பாதாரயணர் எண்ணுகிறார் -அவர்களுக்கு அர்த்தித்தவம் சாமர்த்தியம் இரண்டும் உண்டு என்பதால்
ஆத்யாத்மீகம் போன்ற துக்கங்கள் உண்டே இவர்களுக்கும்
கூர்மையான தெளிவான சரீரங்கள் இந்திரியங்கள் உண்டே இவர்களுக்கும்
சத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –
தத் தேஜ அஸ்ருஜத –சாந்தோக்யம் -6-2-1-என்றும்
அநேந ஜீவேந ஆத்மனா அநு பிரவிஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி -6-3-2- இத்யாதியால்
தேவ மனுஷ்யாதி ஸ்ருஷ்ட்டி பற்றி சுருதி சொல்லும்
தத்தோபயே தேவாஸூரா அநுபுபுதிரே தே ஹோசு–இந்த்ரோ ஹை வை தேவா நாம் அபி ப்ரவவ்ராஜ விரோசன
அஸூரானாம்-தவ் ஹ த்வாத்ரிம்சத் வர்ஷாணி ப்ரஹ்மசர்யமூஷது-தவ் ஹ ப்ரஜாபதி உவாச -8-7-2-/3 —
பிரஜாபதி உபதேசத்தைக் கேட்க வந்தனர் –
இவற்றால் தேவர்களுக்கு சரீரம் இந்திரியங்கள் உண்டு
வஜ்ர ஹஸ்த புரந்தர -இந்திரன் வஜ்ராயுதத்தைக் கையில் கொண்டு இருந்தான்
இவற்றால் சரீரம் உண்டு என்றும் தேவர்கள் ஸ்வ பாவம் பதவிகள் இன்பங்கள் செய்கைகள் இப்படி பலவற்றிலும்
வேறுபாடுகள் உண்டு என்பதையும்
அவர்கள் உபாசித்தே பதிவுகள் பெறுகிறார்கள் என்றும் உண்டே –
எனவே அவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்றது ஆயிற்று –

————–

1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–

யாகம் போன்ற கர்மங்களில் விரோதம் ஏற்படுமே என்றால் பல சரீரங்கள் உள்ளதால் விரோதம் இல்லை -என்றபடி

பூர்வ பக்ஷம்
தேவர்களுக்கு சரீரம் உள்ளது என்று கொண்டால் பலரும் பல யாகங்களை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது விரோதம் உண்டாகும்
அக்னிம் அக்ந ஆவாஹ -அக்னியை அழைத்து வா -இந்திர ஆகச்ச ஹரிவ ஆகச்ச -இந்திரனே வா பச்சைக் குதிரையுடன் வா –
கஸ்ய வா ஹ தேவா யஜ்ஜம் ஆகச்சந்தி கஸ்ய வா ந -பஹு நாம் யஜமாநா நாம் யோ வை தேவதா
பூர்வே பரிக்ருஹணாதி ச ஏனா ஸ்வோ பூதே யஜதே -யாருடைய யாகங்களில் தேவர்கள் அடைகிறார்கள்
யாருடைய யாகங்களில் அடைவது இல்லை –
இது போன்ற விரோதம் வரும் என்பர்

சித்தாந்தம்
அநேக பிரதிபத்தேர் தர்சநாத் -சக்தி காரணமாக ஒரே நேரத்தில் பல சரீரங்கள் கொள்ளலாமே
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

————————-

1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-

இந்திரன் முதலான சப்தங்களில் விரோதம் வரும் என்றால் வேத சப்தங்களில் இருந்தே வருவதால் விரோதம் இல்லை என்றவாறு

பூர்வ பக்ஷம்
கடந்த ஸூத்ரத்தைப் போலே விரோத சப்தம் முதலில் கொண்டு -தேவர்கள் சரீரம் கொள்கிறார்கள் என்றும் கொண்டால்
சரீரம் அநித்தியம் என்பதால் -இந்திராதி சப்தங்கள் பயன் அற்றதாகிப் போகுமே-ஆகவே வேதங்களும் அநித்யமாகி விடுமே என்பர்

சித்தாந்தம்
தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-
மாடு பூ போலே இந்திரன் போல்வனவும் ஜாதிப் பெயர்களே –
வேதேந நாம வ்யாகரோத் சதாசதீ பிரஜாபதி -என்றபடி நான்முகன் வேதத்தின் துணை கொண்டே
சத் என்றும் அசத் என்றும் வேறுபடுத்துகிறான்

ததா சா பூ ரிதி வ்யாஹரத்ஸ பூமிக்கு அஸ்ருஜத-ச புவ இதி வ்யாஹரத்ஸ அந்தரிக்ஷம் அஸ்ருஜத-என்று
பூ -பதத்தை- என்று உச்சரித்து பூமியைப் படைத்தான்-புவ -பதத்தை உச்சரித்து அந்தரிக்ஷத்தைப் படைத்தான்
பதத்தை உச்சரித்த பின்பு ரூபம் தன்மை நினைவு கூர்ந்து படைத்தான் என்றவாறு

ஸர்வேஷாம் து ச நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாச்ச
நிர்மமே –மனு -1-21-என்றபடி அந்த அந்த ஜாதிக்கு உரிய தன்மைகளுடன் என்பதையே ஸம்ஸ்தா-பதம் -காட்டும்

நாம ரூபம் ச பூதா நாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்சனம் -தேவ சப்தேப்ய ஏவாதவ்
தேவாதீ நாம் சகாரா ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-5-62–

ஆகவே விரோதம் இல்லை என்றதாயிற்று

—————————

1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —

ஆகவே வேதத்தின் நித்யத்தன்மை சம்பவிக்கிறது

மந்த்ர க்ருதோ வ்ருனீதோ–தைத்ரியம் -மந்த்ரங்களை உண்டாக்கியவர்களை வேண்டுகிறான்
வேத வாக்கியம் மூலமாக அந்த காண்டம் ஸூக்தம் மந்த்ரம் ஆகியவற்றை ஏற்படுத்திய ரிஷிகளுடைய
உருவம் சக்தி போன்றவற்றை நான்முகன் நினைவு கூர்கிறான்
நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்பய -மந்த்ரங்களை உண்டாக்கிய ரிஷிகளுக்கு நமஸ்காரம்
அதே மந்த்ரங்களை நினைவு கூர்ந்து உண்டாக்கும் சக்தியை அளிக்கிறான் –
இந்த சக்தி கொண்டு தவம் இருந்து அதே மந்த்ரங்களை அறிகிறார்கள் –
எனவே வேதம் நித்யம் -இந்த ரிஷிகள் இந்த மந்த்ரங்களை உண்டாக்கினவர்கள் என்பதில் எந்த விரோதங்களும் இல்லை
விஸ்வாமித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை -இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

பூர்வ பக்ஷம்
நைமித்திக பிரளயத்தில் நான்முகன் இவ்வாறு செய்யலாம் –
ஆனால் பிராகிருத பிரளயத்தின் பொழுது நான்முகனும் அழிகிறானே
பரிணாமம் பூதாதி அஹங்காரம் போன்ற சப்தங்களும் அழியுமே-

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரத்தில்

——————–

1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

பிராகிருத பிரளயத்தின் ஸ்ருஷ்டிக்கப்படும் போது முன்பு உள்ளது போன்று நாம ரூபம் கொண்டவையாய் இருப்பதால் விரோதம் இல்லை –
வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டது –

பஹுஸ்யாம் என்று சங்கல்பித்து -மஹத் தொடங்கி ப்ரஹ்மாண்டம் வரை -ஹிரண்ய கர்பன் -ப்ரஜாபதியையும் -சேர்த்தே ஸ்ருஷ்டிக்கிறான் –
வேதங்களையும் பூர்வ அநு பூர்வி வரிசையில் நான்முகனுக்கு உபதேசம் செய்து ஒவ் ஒன்றிலும் அந்தராத்மாவாக புகுந்து நியமிக்கிறார்
ஆகவே வேதம் பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் – -அபவ்ருஷேயம்-
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும் -ஸ்வேதா –6-18-
மனு ஸ்ம்ருதியிலும்
ஆசீத் இதம் தமோ பூதம் -1-5-என்று தொடங்கி -யோ அபித்யாய சரீராத் ஸ்வாத் சிஷ்ருஷு விவிதா பிரஜா –
அப ஏவ சசார்ஜதவ் தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத் –தத் அண்டம் அபத்வைமம் சஹஸ்ராம்சு ஸமப்ரபம் –
தஸ்மிந் ஐஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதாமஹா -1-8-/9-என்றும்
ஸ்ரீ நாரத புராணத்திலும்
தத்ர ஸூப்தஸ்ய தேவஸ்ய நாபவ் பத்மம் ஜாயத-பத்மம் பூந்மஹத் -தஸ்மிந் பதமே மஹா பாகா வேத வேதாங்க பாரகா-ப்ரஹ்ம
உத்பன்ன ச தேநோக்த பிரஜா ஸ்ருஜ மஹா மதே -3-1-2–என்றும்
ஸ்ரீ வராஹ புராணத்திலும்
பரோ நாராயணோ தேவ தஸ்மாத் ஜாத சதுர்முக –90-3-என்றும்
ஆதி சர்கம் அஹம் வஹ்ய–2 5–என்று தொடங்கி
ஸ்ருஷ்ட்வா நாரம் தோயம் அந்த ஸ்திதோஹம் யேந ஸ்யாத்மே நாம நாராயணோதி -கல்பே கல்பே தத்ர சயாமி பூயஸ் ஸூப்தஸ்ய
மே நாபிஜம் ஸ்யாத் யதாப்ஜம் -ஏவம் பூதஸ்ய மே தேவி நாபி பத்மே சதுர்முகே-உத்பன்ன ச மயா ப்ரோக்த
பிரஜா ஸ்ருஜ மஹாமதே -2-12-/13-என்று முடிக்கப்பட்டது
தைத்ரியம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே  –
ஆகவே தேவர்களுக்கு அர்த்தித்தவம் மற்றும் சாமர்த்தியம் இரண்டும் உள்ளதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்றதாயிற்று –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஆறாம் அதிகரணம்-பிரமிதாதிகரணம் -1-3-6-

October 7, 2019

விஷயம் –
இருதயத்தில் கட்டை விரல் பருமன் கொண்டவனாகக் கூறப்படுபவன்
சர்வேஸ்வரனான பரமாத்மாவே என்று நிரூபிக்கப்படுகிறது

1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–

கடவல்லியில்
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி-ஈஸோநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -ஏதத்வை தத் -4-12-என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக -ஈஸாநோ பூத பவ்யஸ்ய ச ஏவாத்ய ச உ ச்வ –4-13- என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷ அந்தராத்மா சதா ஜனாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்டாய தம் ஸ்வாத் சரீராத் ப்ரவ்ருஹேன்
முஞ்ஜாதி வேஷீகாம் த்யைர்யேண தம் வித்யாச் சுக்ரம் அம்ருதம் –6-17-என்றும்
அவனே அடையப்பட வேண்டியவன்-அனைவருடைய ஹ்ருதயத்தில் உள்ளான் –
அவனை உபாசகன் முஞ்சை என்னும் புல்லில் இருந்து ஈர்க்கைக் பிரிப்பது போலே பிரித்து அறிய வேண்டும்
என்றும் கூறப்பட்டுள்ளது

சங்கை -இங்கு கூறப்படுபவன் பிரத்யகாத்மா -(ஜீவாத்மாவா )-பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
பிரத்யகாத்மாவே ஆவான் -ஜீவாத்மா கட்டை விரல் அளவே உள்ளான் என்று சுருதி வேறு இடத்தில் கூறுவதால்
ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்று பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம்
என்பதால் அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
கடோ உபநிஷத்தில் -ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை
பரம் பொருளுக்கே உண்டு -எனவே அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-
பிராண அதிப சஞ்சரதி ஸ்வகர்ம அபி அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூபா சங்கல்பம் அஹங்காரம் அந்வி தோ ய -5-7-என்று
ஜீவன் கர்மங்களுக்கு ஏற்ப சஞ்சரிக்கிறான் -கட்டை விரல் அளவே உள்ளான் -சங்கல்பம் அஹங்காரம் கூடியவனாக உள்ளான்
சூர்யன் போலே பிரகாசிக்கிறான் -என்றது
மேலும் பரமாத்மாவானவன் கட்டை விரல் அளவு உள்ளதாக எந்த சுருதியில் கூறப்பட வில்லை
ஜீவன் இந்திரியங்களை நியமிப்பதால் ஈசன் என்னலாம்

சித்தாந்தம்
ஈஸாநோ பூத பவ்யஸ்ய -இறந்த காலம் எதிர் காலம் நியமிப்பவன் கர்மவசப்பட்ட ஜீவாத்மாவாக முடியாது
ஆகவே பரமாத்மாவே தான்

பூர்வ பக்ஷம்
பரமாத்மாவைக் கட்டை விரல் அளவாகக் கூறுவது எப்படி

அடுத்த ஸூத்ரம் இத்தை விளக்கும்

————–

1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

மனிதனுக்கே அதிகாரம் உள்ளதால் -அந்த ஹ்ருதயத்துடன் தொடர்பு உள்ளதால் ஆகும் என்றபடி

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –
ஹிருதயம் கட்டைவிரல் அளவு இருப்பதால் அதற்கு ஏற்ற படி பரமாத்மாவையும் சொன்னபடி
ஜீவாத்மாவும் ஹ்ருதயத்தில் உள்ளதால் அவனும் கட்டை விரல் அளவு என்னலாம்
சுருதி உண்மையில் அரிசியின் நுனியைக் காட்டிலும் நுண்ணியவன் என்கிறது
மானிடர்களுக்கு மட்டுமே உபாஸிக்க அதிகாரம் -குதிரை பாம்பு போன்றவற்றுக்கு ஹ்ருதயம் கட்டை விரல் அளவு இல்லை
இவற்றை பற்றி மேலும் விவரங்கள் -1-3-40-ஸூத்ர விளக்கத்தில் உள்ளன

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-