Archive for May, 2019

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –நான்காம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 27, 2019

தன் பக்கத்திலே தங்கி இருப்பது ஒரு நாரையைப் பார்த்து,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னாகக் காரியங்கொள்ள வேண்டும்’ என்று இருக்கும்
தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி
‘நீ என் நிலையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்,’ என்கிறாள்

மட நாராய் என்று பேடையை முன்னிடுகிறதுக்கு பாவம் –
இத்தால் பகவத் விஷயத்தில் போலே ஆச்சார்ய விஷயத்திலும் புருஷகாரம் வேணும் என்றபடி –
சேவல் -பும்பஷி / பேடை -ஸ்த்ரீ பஷி

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ–1-4-1-

————————

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும்
நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

இவள் கலங்கிற்றிலள் ஆகில் இவள் ப்ரேமத்துக்கும் விஷய வைலக்ஷண்யத்தைக்கும் கொத்தையாகும் –
அவன் ஸூந்தர்யத்துக்குக் கொத்தை -அவன் குணாதிக்யதைக்கும் கொத்தை –
நமஸ்காரமாம் அத்தனை -என்றது தேசாய் தஸ்மை நம-என்கிற இடத்தில் போலே
பரித்யாகமே யாய் விடும் அத்தனை -என்றபடி –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-

—————-

‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பக்தி வாதங்கள் நமக்குத் தெரியா;
அவஸ்யம் அனுபோக்தவ்யம் (‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ )என்கிறபடியே,
அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

விதியினால் -அகிஞ்சனோ அநந்ய கதி -த்வத் ஏக சரணஸ் சாஹம்-போன்ற பக்தி க்ருத உபசார யுக்திகள் –
நான் பண்ணின -சிந்தையந்தி யுடைய வினை அனுபவித்தாள் மாளலாமோ என்று தாத்பர்யம் –
மதியிலேன் வல்வினையோ -என்று அன்வயத்தி வியாக்யானம்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

—————–

அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் கீழே –
‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்;
அவன் அரைக் கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே?
இவ் வளவிலே சில மகன்றில்கள்,-நாம் கிஞ்சித்கரிக்க நல்ல அளவு –
நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து,
‘நாங்கள் இவ் விடத்திற்குச் செய்ய வேண்டுவது என்ன?’ என்று வந்து முகங் காட்டினவாகக் கொண்டு,
அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று –
நிராசையாய் -ஆசையற்றவளாய், பின்னரும் -சாபலத்தாலே -ஆசைப் பெருக்காலே,
பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று,
இத்தனையுஞ் சொல்ல வல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள்

மகன்றில்காள் -சக்ரவாகங்கள்
நன்னீல மகன்றில்காள் என்றத்தையும் என் சொல்லி யான் சொல்லுகேனோ என்றதையும் கடாக்ஷித்து அவதாரிகை –
நல்லளவு -நல்ல சமயம்
அவன் பக்கலில் உள்ள கோபம் இவற்றின் பக்கலிலும் ஏறி நல்குதிரோ நல்கீரோ என்கிறாள் –
சொல்லு மறுத்தற்கு -கேளாதவர்க்கு

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-

——————

‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்;
ஜீவிக்க நினையும் தமக்கு தாம் வேண்டாவோ?’ என்கிறாள்.
அதாவது,
‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.

கீழ்ப் பாட்டிலே நான் முடிவதற்கு முன்னே வந்து உதவ வேணும் என்ற அளவிலே முகம் காட்டக் காணாமையாலே
நம்முடைய சத்தை போனாலும் போகிறது-தம்முடைய சத்தைக்கு ஒரு ஹானி வராமல் பரிஹரிக்கச் சொல்
என்று போக விடுகிறாள் என்கிறார் -வாக்ய த்வயத்தாலே –
என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –
ஒறுவாய்ப் போகாமே-விகலமாய்ப் போகாமே -என்றபடி

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

——————

எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி,
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன்,
‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக் காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’
என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப் பாசுரத்தில்.
அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒரு வழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே?
அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது;
நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு,
அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

கீழ்ப் பாட்டில் பிரமேயத்தை அனுபாஷித்து சங்கதி -ஒறுவாய்-விகலமாய் –
அவர் வீதி ஓரு நாள் அருளாழிப் புட் கடவீர்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
அழகு செண்டு ஏறுகை -தான் அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டால் அந்த அழகு ஆஸ்ரிதர் நெஞ்சில் படும்படி புறப்படுகை –
விளையாட்டுச் சரிகை புறப்படுகை -செண்டு என்று பந்தாய் அது அடித்து விளையாடுகைக்காக ராஜாக்கள்
அழகியதாகக் குதிரை ஏறிப் புறப்படுவதைச் சொன்னவாறு-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

—————–

தம்தாமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ
வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக,
‘எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது?
தம்முடைய அபராத சஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.

கீழ்ப் பாட்டில் யாமும் என் பிழைத்தோமே என்று அதப்யுபகத வாதத்தால் அருளிச் செய்து
இப்பாட்டில் அப்யுபகத வாதத்தாலே அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்வர்-
குற்றம் -பூர்வாகம் -கீழ்ப் பாட்டிலே அபராதம் உத்தராகம் -என்று விவஷிதம் என்று கருத்து –

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

——————–

முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது,
இவள் உறாவப் புக்கவாறே தானும் உறாவப் புக்கது; அத்தைப் பார்த்து,
‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்;
நானோ, முடியா நின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
பூவை என்பது நாகணை வாய்ப் புள் -அதாவது ஒரு பஷி விசேஷம்-

நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

———————–

‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்’ என்று இருக்கிற சமயத்தில் வாடைக் காற்று வந்து உடம்பிலே பட்டது;
அதனுடைய தோற்றரவு இருந்தபடியால் வெறுமனே அன்று -இத்தைக் கண்ட தலைவி
மகாராஜருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை, சிறிது நேரத்திற்கு முன் வாலி கையில் நெருக்குண்டு போனவர்
இப்போது இப்படித் தெளிந்து வந்து அறை கூவுகிற இது வெறுமன் அன்று; இதற்கு ஓர் அடி உண்டு, என்றது போல
இவ் வாடைக்கு ஓர் அடி உண்டாக வேண்டும் என்று நினைத்தாள்;
நினைந்து, ‘இராஜாக்கள் இராஜத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வர விடுமாறு போன்று,
நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,
வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

தூதரை -ஈராய் எனதுடல்-என்கையாலே இது பாதகம் என்னும் இடம் தோன்றி இருக்கையாலும்-
அவனுக்குச் சொல்லி என்னை முடி -என்கையாலே அவன் வர விட்டான் என்று தோற்றுகையாலும் –
இவ்விரண்டுக்கும் அனுகுணமாக அருளிச் செய்கிறார் –
ஊடாடு பனி வாடாய்-என்றதைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –
தோற்றரவு -ப்ராதுர் பாவம் -இதனுடைய தோற்றரவு இருந்தபடியால்
இவ்வாடைக்கு ஓரு அடி-அவஷ்டம்பம் – உண்டு என்று அன்வயம் –
ஈஸ்வரனே வர விட வந்ததாக வேணும் என்றபடி –
வேற்காரரை-ஆயுதவான்களை-
இன்னுயிர் சேவல் -9-5-பிரவேசத்தை படியே பாதக பதார்த்தங்களை முடிக்கச் சொல்லி வர விட்டானானாக வேணும் –
வைக்கவே வகுக்கின்று -என்றதை பற்ற நிதி யுண்டு என்பாரைப் போலே இரக்கிறாள் -என்று அன்வயம் –
நலிய வந்தவர்கள் தாழ்க்கைக்காக நிதி உண்டு இத்தைக் கொள்ளுங்கோள் என்று இரப்பார்களே-
நிதி போலே இங்கே இரண்டு பிரயோஜனம் -மலர் நாடி சமர்ப்பிக்கையும் அல்லாவாகில் ஈருகையும்-
தார்ஷ்டாந்திக்கே நிதி ஸ்தாநீயம் -கைங்கர்யம் –

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

——————-

அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர்.
அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு
‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –
தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது;
நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;

தூத பிரகரணம் ஆகையால் மனசைச் சொல்லுகிறதுக்கு இரண்டு பிரயோஜனம் அருளிச் செய்கிறார்

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே! வினையோம் ஒன்றாமளவே–1-4-10-

——————-

நிகமத்தில் – இத்திருவாய்மொழியில் சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம்
கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.

வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளம் பெறலாம் என்றத்தைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார் –

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –மூன்றாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 26, 2019

எம்பெருமானுடைய எளிமையினை உபதேசிக்கப் புக்கு, அவன் வெண்ணெய் களவு கண்ட சரித்திரத்தில்-
நவநீத ஸுர்ய சாரித்ரத்திலே – அழுந்துகிறார்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-

——————

எத்திறம்’ என்ற ஸ்ரீ ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ?
இவர் மோஹித்துக் கிடக்க,
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தாற்போன்று,
ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும்-பலிதமான வ்ருக்ஷத்தை – பழங்கள் நிறைந்த மரத்தைப் –
பஷி ஜாதங்கள் -பறவைக் கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்.
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப் பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும்
உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்ட,
அவ் விடத்தைக் கண்டவாறே சத்ருனோ அனந்தர ஸ்த்தித ( ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி )
என்று மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர்,
சிரேண சம்ஜ்ஞாம் பிரதி லப்ய சைவ விசிந்தயாமாச விசால நேத்ரா ( விசாலமான கண்களையுடைய ஸ்ரீ பிராட்டி
பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’) என்பது போன்று-
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே – பெரியோர்களுடைய நல் வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து,
‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.
ஆயின், அங்கு அனுபவிக்கும் பெரியோர் உளரோ?’ எனின்,
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றே? ஆதலால், அங்குள்ள சத்துக்கள் – பெரியோர் அனைவரும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தனர்.
கேட்டதற்குப் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்று கூறி, அதனை விளக்குவதற்கு அதன் தொடர்ச்சியாக
‘மத்துறு கடை வெண்ணெய்’ என்பது முதலாகச் –ப்ரசக்த அனுபிரசக்தமாக -சிலவற்றைக் கூறி,
‘எத் திறம்’ என்று மோஹித்துக் கிடந்தீர், என்றார்கள்,
‘தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.
அதாவது,
பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்;
இப் பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி.
மேல் பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

பெரியவர்களுடைய ஸ்திதி கமந சயநாத் அவஸ்தைகள் எல்லாம் இவ்வாத்மாவுக்கு பகவத் பக்தி வர்த்தகங்களாய்க் கொண்டு
தஞ்சமாய் இருக்கையாலும் காமிநிகளுடைய வியாபாரங்கள் எல்லாம் காமுகருக்கு அவர்கள் இடத்தில் அபிநிவேசத்தாலே
போக்யங்களாய் இருக்குமா போலே இவ் வாழ்வார் பக்கல் தமக்கு உண்டான அபிநிவேசத்தாலே அவருடைய
மோஹ அவஸ்தையும் தமக்கு போக்யமாய் இருக்கையாலும் அதில் தமக்கு உண்டான ஆதார அதிசயம் தோன்றும்படி
அவர் மோஹித்த போது ஞாதாக்கள் எல்லாம் அவரை நோக்கிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் பிரகாரத்தை
அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி அதிஷ்டிக்கை அருளிச் செய்கிறார் –
இவர் இப்படி மோஹித்துக் கிடந்த ஆறு மாசமும் எறும்புகள் கடியாதபடி ஞாதாக்கள் நோக்கிக் கொண்டு இருந்த பிரகாரத்தை
ச நிதர்சனமாக அருளிச் செய்யா நின்று கொண்டு அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
பழுத்த மரத்தைப் பழத்தில் ஆசையால் பக்ஷிகள் சூழ்ந்து கிடைக்குமா போலே பகவத் ப்ரேமத்தாலே பரிபக்வமான இவர் பக்கல் நின்றும்
நமக்கு ப்ரேமம் உண்டாய் க்ருதார்த்தராக வேணும் என்று இவரை வளைத்துக் கொண்டு கிடந்தார்கள் என்கை —
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமான அர்த்த விசேஷ அனுஷ்டான விசேஷ ஞான பக்தி வைராக்யாதி சித்த்யர்த்தமாக என்றபடி —
ரக்ஷண புருஷார்த்த லிப்சிஸைகளுக்காக இரண்டு த்ருஷ்டாந்தங்கள் —
ஸ்ரீ குகப்பெருமாள் ஆஸ்ரமத்தின் நின்றும் பெருமாள் புறப்பட்டு எழுந்து அருளினதுக்கும் அங்கு ஸ்ரீ பரதாழ்வான் எழுந்து அருளினதுக்கும்
மத்யே இருபத்திரண்டு நாள் வ்யவதானம் உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தத் சயன சிஹ்னங்களை அனுபவித்த போதே ஸ்ரீ குகப்பெருமாள் இவ்விடத்தை ரஷித்துக் கொண்டு இருந்தமை சித்தம் என்று கருத்து –

நல்லார் நவில் -ஆச்சார்ய விஷயத்தில் சேஷித்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு ஸ்ரீ ஈஸ்வரனை
தத் சம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார் –
தப்பச் சொன்னோம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று சோபாதிகம் என்று தோன்றும்படி சொன்னோம் என்றபடி –
அழித்து ப்ரதிஜ்ஜை பண்ணுகையாவது -நிருபாதிகத்வம் தோன்றும்படி சொல்லுகை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வேஸ்வரனாய் இருக்குமவன் அவதரித்து சேதன கத அப்ரதிஷேதாதிகமும் அபேக்ஷியாதே
அபார காருண்யாதிசயத்தாலே எளிவருகையே ஸ்வ பாவமாக யுடையனாகிற பிரகார ஸஹிதமாக அருளிச் செய்கிறார் இதில் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல வீடாம்
தெளிதரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே–1-3-2-

—————–

‘எளியவன்’ என்றார்;
எளிமையை -ச பிரகாரமாக -வகைப்படுத்தி அருளிச் செய்தார்;
இவனுடைய அவதாரத்தின் ரஹஸ்யம் – மறைபொருள் அறிதல் ஒருவர்க்கும் நிலம் அன்று என்கிறார் இப்பாசுரத்தில்

கீழே இரண்டு பட்டாலும் சொன்ன ப்ரமேயத்தை அனுபாஷித்துக் கொண்டு –
மாயையை அறிபவர் யாரே -என்கிற பதத்தைக் கடாக்ஷித்துக் கொண்டு இப் பாட்டுக்கு
சங்கதி அருளிச் செய்கிறார் -வாக்ய த்ரயத்தாலே –
மாயை என்றதை பற்ற அவதார ரஹஸ்யம் என்றது-

அமை வுடை அற நெறி முழுவதும் உயர் வற உயர்ந்து
அமை வுடை முதல் கெடல் ஒடி விடை அற நிலம் அதுவாம்
அமை வுடை அமரரும் யாவையும் யாவருந் தானாம்
அமை வுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?–1-3-3-

————————–

‘தானாம் அமைவுடை நாரணன்’ உடைய அவதாரத்தின் ஸுலப்யம் – எளிமை ஒருவர்க்கும்
அறிய நிலம் அன்றோ? என்னில்,-
ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய் அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் என்கிறார்.

யஸ்ச ராமம் ந பஸ்யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி -நிந்திதஸ் ச வசேல் லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே-
இப்பாட்டுக்கு சம்வாதம்
ய என்கையாலே ஞானாதிகளையும் யம் என்கையாலே ஞான ஹீனனையும் சொல்லுகிறது –
அறிய நிலம் அன்று அறியவும் நிலம் அன்றோ -என்றபடி –
அறிய நிலம் அன்று என்று அறிகைக்கு ஸூலபனாய் இருக்குமே

யாரும் ஓர் நிலைமையன் என அநி வரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறி வெளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிறபல உடைய எம் பெருமான்
பேரு மோர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே–1-3-4-

——————–

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

——————-

அவதாரத்தில் ஆஸ்ரயியுங்கோள் ‘அவதாரங்களை வணங்குங்கோள் என்று கூறுகின்றீர்;
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார ( ‘‘பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ )என்கிறபடியே,
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;
அவர்கள் மூவரும் ஒத்த காரியத்தில் அதிகரித்து நின்றார்கள்;
இப்படி நிற்கையாலே, மூவரும் முதல்வரோ? மூவரில் ஒருவன் முதல்வனோ? மூவர்க்கும் அப்பால் ஒருவன் முதல்வனோ?’ என்று
எங்களால் பகுத்து அறியப் போகாமையால் பற்றுவதற்கு அருமையாக இருக்கின்றது;
ஆதலால், நாங்கள் பற்றுவதற்குப் பற்றக் கூடிய பொருளை நிரூபித்துத் தரலாகாதோ?’ என்ன,
‘காண்கிற சரீரமே ஆத்துமா என்னும் நிலை தவிர்ந்து,
சரீரத்திற்கு -வ்யதிரிக்த -வேறுபட்ட ஆன்மா ஒன்று உண்டு என்று அறிதல்தானே அரிது?
வருந்தி அதனை அறிந்தானே யாகிலும், பிரமன் சிவன் முதலியோரைச் சரீரமாகக் கொண்டு
தான் ஆத்துமாவாய் நிற்கிற சர்வேஸ்வரன் நிலையினை அறிதல் முடியாது;
ஆன பின்னர், இவ்வழியே இழிந்து பற்றப் பாருங்கள்,’ என்று,
ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-
ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்கிற பதங்களைக்
கடாக்ஷித்து -சங்கா பூர்வகமாக சங்கதி –
மனப்பட்ட தொன்றை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -இத்யாதியைப் பற்ற
ஆஸ்ரயணீய வஸ்து இத்யாதி –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்றதை பற்ற ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றது

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்!
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே–1-3-6-

———————

அப்படியே செய்கிறோம்,’ என்று ஆறியிருந்தார்கள்;
‘ஐயோ! நீங்கள் உங்களுடைய ஆயுளின்-ஸ்தியையும் – நிலையும்,
இழக்கிற விஷயத்தின் நன்மையும் அறியாமையால் அன்றோ ஆறியிருக்கின்றீர்கள்?
நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;

‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

நம்முடை நாளே என்றத்தை பிரதானம் ஆக்கிக் கொண்டு- நன்று என நலம் செய்தவனிடை -என்னும் அளவும் கடாக்ஷித்து சங்கதி –
நன்று எழில் நாரணன் -என்றதை பற்ற -நன்மையையும் அறியாமை இறே-என்றது –
நலம் செய்வது என்றதை பற்ற -பக்தியைப் பண்ணப் பாருங்கோள் என்றது
கீழ் யுக்த அர்த்தத்தையே சொல்லிற்று ஆகில் இப் பாட்டு வ்யர்த்தம் அன்றோ என்ன
விசேஷம் காட்டுகிறார் நீங்கள் இத்யாதி –

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

————-

உடலை விட்டு உயிர் நீங்குவதற்கு ஒரு நாள் முன்னராயினும் இறைவனைப் பற்றும்படி-ஆஸ்ரயிக்கும் படி – கூறுகின்றீர்;
நீண்ட காலமாக நாங்கள் பண்ணி வைத்த பாவங்கள் விலக்காவோ?
இனி, அவனைப் பற்றுவதற்குக் காலந்தான் உண்டோ?’ என்ன,
‘நீங்கள்-ஆஸ்ரயணத்திலே – பற்றுவதற்கு ஒருப் படவே பாவங்கள் அடங்கலும் அழிந்து விடும்;
திருமகள் கேள்வனைப் பற்றுவது ஆகையாலே காலங்கழிந்தது என்று இருக்கவும் வேண்டா;
நீங்கள், ‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி, நடக்கும்போது-(பெரிய திருமொழி. 1. 3 : 5.)
அக் அக்கோலோடே சாயவும் அமையும்,’ என்கிறார்.

நம்முடை நாளே -என்று சீக்கிரமாக ஆஸ்ரயிக்கச் சொன்ன இவருடைய வார்த்தையைக் கேட்ட சம்சாரிகள் –
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி பவந்திமஹதாமபி -என்கிறபடியே நாங்கள் பாப பூயிஷ்டர்கள் ஆகையால்
எங்கள் விரோதிகள் எங்களை ஆஸ்ரயிக்க ஒட்டாது-நாங்கள் வ்ருத்தர்கள் ஆகையால் பூர்ண உபரசனத்துக்கு அசக்தர் –
இத்தனை காலமும் வ்யர்த்தமே போயிற்று இனி அல்ப காலமே இருக்கப் போகிறது ஆகையால் காலம் தான் உண்டோ -என்று சங்கிக்க –
அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரயணத்தில் ஒருப்படவே -என்றது வணங்கி என்றதைப் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது -உடனே மாளும்-என்றதை பற்ற –
திருவுடை அடிகள் -என்றதை பற்ற ஸ்ரீ யபதி ஸமாஸ்ரயணம் –
மாளும் ஓர் இடத்திலும் என்றதைக் கடாக்ஷித்து -நீங்கள் தண்டு காலா இத்யாதி -இப்படி தடுமாறி நடப்பதற்கு முன்னே –
தண்டு -அக்கோலோடே சாயாவும் அமையும் -காலால் கொள்ளும் பிரயோஜனத்தை தண்டத்தாலே யாயிற்று கொள்வது –

நாளும் நின்று அடும் நம பழமை அம் கொடு வினை யுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகம் மலம் அறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

————————

கீழ் – ஆறு, ஏழாம் பாசுரங்களால் பிரமன் சிவன் இவர்களுடைய -அபரத்வமும் -தலைமை இன்மையினையும்,
சர்வேஸ்வரனுடைய பரத்வமும் அருளிச் செய்தார்:
இப் பாசுரத்தில் அவர்கள் இருவரும் இவனைப் பற்றி-லப்த ஸ்வரூபராய் – ஸ்வரூபத்தை அடைந்தவர்களாய்
இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.
‘ஆயின், பிரமன் முதலியோர்கட்கும் உத்பாதகனாய் காரணனாய் -அவர்களுக்கும் ரக்ஷகனான சர்வேஸ்வரன்,
அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின்,
ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் –
பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், –
ருசி ஜனகன் ஆகைக்காகவும்-
ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’ என்று-
பரித்ராணாம் ஸாதூ நாம் – அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே காரணம்.
‘ஆயின் துஷ்க்ருதர் விநாசம் -, பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் யாது பற்றி?’ எனின்,
‘பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே,’ என்று அவன் தானே அருளிச் செய்தான்-

இப் பாட்டுக்கு அர்த்த த்வய அனுகுணமாக சங்கதி த்வயமாதல் –
அன்றிக்கே ஏக சங்கதியாய் கீழ் வாக்ய விவரணமாய் அவர்கள் லப்த ஸ்வரூபராய் இருக்கிற படியையும்
அவதாரத்துக்கு ஹேதுவையும் அருளிச் செய்கிறார் என்றுமாம்

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித்
தலத்து எழு திசை முகன் படைத்தநல் உலகமுந் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே–1-3-9-

————-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க;
அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை அனுபவிப்போம்,’
என்று பாரிக்கிறார்.

கீழ் எல்லாம் பரோபதேசம் பண்ணிப் போந்தவர்
இங்கே தாம் அனுபவிக்கக் கடவேன் என்று சொல்லுகிறது -அவர்கள் திருந்தாமையாலே –
இதுக்கு ஹேது அவன் பண்ணி வைத்த மயக்கம் என்று அனுசந்தித்து அருளி ஸ்வ அனுபவத்தில் இழிகிறார் என்கிறார் –
அவன் காட்டின வழி என்றது அவதரித்து வடிவழகைக் காட்டின வழி என்றபடி –

துயக்கறு மதியில் நன் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்த நல் அடிப்போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே–1-3-10-

————————–

நிகமத்தில் , இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட நித்திய சூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றதைக் கடாக்ஷித்து சங்கதி –
அறவைச் சிறையாவது -அறவைக்குத் தெய்வம் துணை என்னுமா போலே -அறவை என்று தனியாய் –
அதில் அத்விதீயமான சிறையாய் துக்க ஏக ரூபமான சிறை -என்றபடி -தயநீயமான சிறை என்றுமாம்

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –இரண்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 26, 2019

இதர விஷயங்களை விட்டு உங்களுக்கு வகுத்த விஷயத்தைப் பற்றப் பாருங்கள்,’ என்கிறார்.

வீடுமின் உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்னும் அளவும் கடாக்ஷித்து அவதாரிகை –
வகுத்த விஷயத்தை என்றது உடையான் என்றத்தைப் பற்ற —

வீடு மின் முற்றவும், வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை, வீடு செய் மி(ன்)னே–1-2-1-

————–

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு விட்டுச் சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே
ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்,’ என்றார் முதற்பாட்டில்;
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்தனவற்றை இப் போதாக விடப் போமோ?’ என்ன,
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில்.

முதல் பாட்டில் த்யாஜ்யத்தை அடங்க விடுங்கோள் என்று சொல்லி அனந்தரம் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களை
சொல்லுகிறதுக்கு பிரயோஜனம் சம்சாரிகளுக்குப் பிறந்த சங்கையை பரிஹரிக்கை என்கிறார் –

மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

—————–

தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்; காலம் அநாதி;
அக்காலத்தில் ஈட்டிய வினைகளும்-அநந்தரமாய்- முடிவின்றி இருக்கின்றன;
ஆதலால், பற்றின காலம் எல்லாம் வேண்டுமன்றோ விடுகைக்கும்?’ என்ன,
த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும்,
அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் -பகவத் சமாஸ்ரயணத்தையும் சொல்லுகிறதுக்கு பிரயோஜனத்தை
சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
பீஜம் -அஞ்ஞானம் கர்மத்துக்குக் காரணம் –
நீர் நுமது என்கையாலே சம்சார பீஜம் –
வேர் முதல் மாய்த்து -பேஷஜம்

நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

——————

விடப்படுகின்ற பொருள்கள் போன்று –
அபோக்யமுமாய் -இன்பம் அற்றனவாயும்,-ச தோஷமுமாய் – குற்றங்களை யுடையனவாயும் இராது என்று
பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச் செய்கிறார்.

இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

—————–

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –
அருளிச் செய்கிறார்.
(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை. ‘
ஆயின், அதனை இடையூறு என்றால் பொருந்துமோ?’ எனின், )
இந்திர பதத்தினைக் கோலுமவன், இல்வருகு உண்டான ஐஸ்வர்யத்தைக் கோலான்;
பிரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன், இவ்வருகு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்;
கைவல்யத்தை (ஆத்துமானுபவத்தை) ஆசைப்படுமவன் ஐஸ்வர்யம் முதலியவைகளில் கண் வையான்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் நித்ய மங்கள விக்ரஹ உக்தனாய் –
எல்லா நற்குணங்களை யுமுடையனாய் திவ்விய மங்கள விக்கிரகத்தை யுடையவனாய் –
இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான்;
ஆக, இங்ஙனம்,- இவை ஒன்றற்கு ஒன்று இடையூறு ஆதல் காண்க.

செற்றது மன்னுரில்-என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –
ஆத்ம அனுபவம் அந்தராயம் என்னலாம் என்று விவஷித்து அநேக வாக்கியங்கள் அருளிச் செய்கிறார்
ப்ராப்யதயா பற்றினவன் கைவல்யத்தை இச்சியாதே -அத்தை அபேக்ஷியாது இருக்கையை பரிஹாரம் –

அற்றது பற்றுஎனில், உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில், அற்று இறை பற்றே-1-2-5-

————–

பற்றுமிடத்தில் வரும்-அந்தராய பரிஹாரம் – இடையூற்றை நீக்குதலை அருளிச் செய்தார் கீழே ;
‘ஆயின், நீர் பரிகாரம் சொல்லுகைக்கு-அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய்,
சேஷியாயிருக்கிற அவன்தான் நமக்குக் கைப் புகுந்தானோ?’ என்ன,
அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஒன்று இல்லை;
அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்- என்கிறார்.

ஆத்ம அனுபவம் ஆகிற அந்தராயத்தைத் தப்புங்கோள் என்ற அனந்தரம் சங்க ஸ்வ பாவனாவனுடைய சர்வவித
கைங்கர்யங்களிலும் அன்வயி என்றதற்குப் பிரயோஜனத்தை சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
நீர் பரிகாரமும் சொல்லி நாங்களும் ஆஸ்ரயிக்கைக்கு அவன் இப்போது கைப் புகுந்தானோ என்றபடி –
ஈசன் என்றத்தைக் கடாக்ஷித்து அவாப்த ஸமஸ்த காமன் இத்யாதி –

பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-

——————–

சங்க ஸ்வபாவன் -அடியார் பக்கல் பற்றையே இயல்பாக உடையவன் -என்றார் கீழ் –
அவன் பற்றையே இயல்பாக உடையவன் ஆயினும்,-அபரிச்சின்ன அளவிட முடியாத-
உபய – இரண்டு விதமான மஹா விபூதியை யுடையவனாய் இருந்தான்;
இவன்-அதி ஷூத்ரனாய் – மிகச் சிறியனாய்,-ஷூத்ர- மிகச் சிறிய உபகரணத்தை யுடையவனாய் இருந்தான்;
ஆன பின்னர், அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ?
மேலும், கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்கவும்,
திரை மேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ?
‘அப்படியே அவனுடைய ஐஸ்வரிய-தரங்கமானது – அலையானது- இவனைத் தள்ளாதோ?’ என்னில்,
இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே –
நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!
ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால்
வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய
வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு
வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி
விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,
‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,
கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,
அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய்
அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால்
ஒருவன் இரு வினைப் பயன்களை -புஜியா நிற்கும் -நுகரா நிற்பன்; ஒருவன் -புஜிப்பித்து -நுகர்வித்து விளங்கா நிற்பன்;
அவன் நியாமகன் – ஏவுகின்றவன்; நாம்-நியாம்யம் – ஏவப்படும் பொருள்,’ என்னும் முறை அறியவே பொருந்தலாம் அன்றே!

ஓர் அரச குமாரன்-உத்யானத்தை – பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தகப்பனது காண்,’ என்னவே,
நினைந்தபடி நடந்து கொள்ளலாம் அன்றோ!
ஆன பின்னர்,ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;
தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்.

சங்க ஸ்வ பாவனானால் அவன் பூர்த்தியும் இவன் குறையும் கொண்டு கார்யம் என் –
இவை ஆராயாதே கிட்ட ஒண்ணாதோ என்ன –
ஆனாலும் அவன் ஐஸ்வர்ய உத்ரேகம் இவனுக்குப் பயத்தை விளைவிக்கும் என்னுமத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
கடலுக்கும் இத்தைத் தள்ள வேணும் என்னும் நினைவு இல்லை -துரும்புக்கும் தள்ளப் போகிறது என்கிற நினைவு இல்லை
ஐஸ்வர்ய தரங்கம்-இவனைத் தள்ளுகையாவது அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று அயோக்ய அனுசந்தானத்தால் பிற்காலிக்கை-
இத்தால் தானும் அவ்விபூத் அந்தர் பூதனாய்க் கொண்டு-சேஷ பூதனானால்
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்தைக் கொண்டு கிட்டலாம் என்றதாயிற்று –
அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி -அம்பாலே தலை அறும்படி
தார்ஷ்டாந்திகத்தில்-ஜீவர்கள் சரீரமாகிற வ்ருக்ஷத்தில் சங்கதராய் இருக்கச் செய்தே-த்வம் மே -என்றால் அஹம் மே –
ஷிபாமி -ந ஷமாமி-இங்கனே பிணங்குகிற சமயத்தில்
ஆச்சார்யன் சம்பந்தத்தை உணர்த்தி உபதேசிக்க -இவன் அபிமானத்தில் போம்படி திருத்தி –
தேவர்க்கு சேஷமான இவ் வாத்மாவை இவன் அபாராத்தைப் பார்த்து தள்ள ஒண்ணாது -என்று அவன் திருவடிகளில் சரணம் புக்கு
இவ் வழியாலே இருவரும் கூடினால் -பொழுதே பல பகலும் இத்யாதிப்படியே இவன் சோகிக்க-
கர்மத்தை வியாஜி கரித்து தள்ளினோமே என்று அவனும் சோகிக்க –
இப்படி இருவரும் கீழ் இழந்த நாளைக்கு சோகிக்க -இருவரும் ரஷ்ய ரஷக பாவேந சேருகை
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்–அபிசாகதீதி-என்றதால் பலித்த நியாந்த்ரு நியாம்ய பாவ சம்பந்தமும் இப்பாட்டுக்கு விவஷிதம்-

அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

———————–

அவனுக்கு விபூதியாய் அந்வயித்தால் (‘இறைவனுக்கு உரிய செல்வங்களுள் ஒன்றாகச்சேரின்,) பின்னை,
தானும், தனக்கு என்னச் சில கரணங்களும் – உண்டாய் பஜித்தானாகை அரிதாக இருந்ததே என்ன –
(வேறாகக் காணப்படுவன இலவே? வேறாக இருப்பின் அன்றோ வணங்குதல் முடியும்?’ என்ன,)
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச்செய்கிறார்.

சம்பந்த ஞானம் பூர்வகமாக அவன் விபூதிக்குள்ளே ஒருவனாய் அந்வயிப்பது என்ற அனந்தரம் –
கரண த்ரயத்தையும் அப்ராப்த்த விஷயங்களில் பிரவணம் ஆகாதபடி பண்ணி பகவத் விஷயத்தில் பிரவணம் ஆக்குவதற்கு
என்று சொன்னதுக்கு பிரயோஜனத்தை சங்கா பரிஹார கதந முகேந அருளிச் செய்கிறார் –
பஜன பிரகாரத்தை என்றது–இறையுள்ளில் ஒடுங்கே-என்றது –
பஜனப் பிரகாரமாவது-அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை –

உள்ளம் உரைசெயல், உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்துஇறை, உள்ளில் ஒடுங்கே.-1-2-8-

——————

இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்த ஞானம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து அகல வேண்டா என்றும்,
பஜனமாவது -வணங்குதலாவது – இவன், இறைவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு
உறுப்பு ஆக்குகை என்றும் அருளிச் செய்தார், கீழே இரண்டு திருப் பாசுரங்களால்;
‘இது தன்னரசு நாடாய்-ப்ராப்த விஷயம் – அடையத் தக்க பொருள் அவன் அல்லாமையால் -பஜியாது- வழி படாது இருக்கின்றேமோ!
பஜனை விரோதிகள் -வழிபட ஒட்டாமல் தடுக்கும் விரோதிகள்-கனக்க- மிகுதியாக இருத்தலால் அன்றோ
நாங்கள் வழிபடாது இருக்கிறோம்?’ என்ன,
‘நீங்கள் அவனைக் கிட்டவே அவை அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருபாசுரத்தில்.

கீழ் இரண்டு பாட்டில் ப்ரதிபாதித்த பிரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
இப் பாட்டில் ஒடுங்கலும் எல்லாம் விடும் என்கிற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி – அருளிச் செய்கிறார்-
பஜன விரோதிகள் என்றது பஜன கார்ய விரோதிகள் -புருஷார்த்த விரோதிகள் என்றவாறு –
அவனைக் கிட்டவே -கிட்டுகை -ஆஸ்ரயணம் –

ஒடுங்க அவன் கண், ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை, விடும் பொழுது எண்ணே-1-2-9-

————————-

அழகிது; அப்படியே செய்கிறோம்; பஜனத்துக்கு ஆலம்பமான -வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான- மந்திரம் யாது?’ என்ன,
அது இன்னது என்றும், அதனுடைய -அர்த்தம் அனுசந்தேயம் -பொருள் நினைத்தற்கு உரியது -என்றும் அருளிச் செய்கிறார்.
‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச் செய்ய வேண்டுமோ?’ எனின்,

இம் மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளா நிற்பர்;
நம் ஆசாரியர்கள்,-ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதனுடைய அர்த்த அனுசந்தானம் மோக்ஷ சாதனம் – என்று
தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக் கொண்டு போந்தார்கள்.
மற்றும் வேதங்களுக்கும் இவ் வாழ்வார்க்கும் இம் மந்திரம் பிரஸ்துதமான போதே முன்னர் மந்திரத்தைச் சொல்லி,
பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்;
அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல்
செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்;
அதற்குக் காரணம்,-அர்த்த அனுசந்தானம் – பொருளின் நினைவு இன்றியமையாதது -ஆகையாலே.
‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,’என்னுதல்
‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ -என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு –
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதி –
(‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,) என்னுதல்
நாராயண பரஞ்சோதி நாராயண பரமாத்மா
(‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’) என்னுதல் செய்யும் வேதமும்

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப் பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப் பாசுரம் திரு மந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப் பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

ஆலம்பன மந்த்ரம் எது என்ன -என்றது
சாஸ்த்ராதி ஷு ஸூத் ருஷ்டாபி சாங்கா சக பலோ தயா-ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேச-என்றதைப் பற்ற –
அநந்ய சாத்யத்வ ரூபமான -அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வ – ஸ்வரூபத்துக்குச் சேர
பூர்வர்கள் அர்த்த அனுசந்தானத்திலே நிஷ்டராய் இருந்து உபதேசிப்பர்
அந்தர் பஹிஸ்ஸ -பஹு வ்ரீஹி ஸித்தமான ஸுலப்யம்
ப்ரோ ஜ்யோதி தத் புருஷ ஸித்தமான பரத்வம்
ஸ்ரீ ஆழ்வானுடைய முந்தின வார்த்தை கௌரவ்யத்தையிலே நோக்கு –
பிந்தின வார்த்தை போக்யத்தையிலே நோக்கு

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-

———————

நிகமத்தில்
முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பஜனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

இது தான் -என்றது கீழ்ச் சொல்லப்பட்ட அர்த்தம் –
வாய் வந்தபடி கை வந்தபடி -இதி கேஷுசித் ஸ்ரீ கோசேஷூ வர்த்ததே -தத் லேகக தோஷா கதம்

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –முதல் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

May 26, 2019

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ் வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான
கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார் .

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறி உண்டு போய்க் கடலிலே புகும்;
நீர் வஞ்சிக்கொடி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்;
அவை போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை;
அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார்
அஹம் அஸ்யாவரோ பிராதா குணைர் தாஸ்யம் உபாகதா -என்னுமா போலே
இளைய பெருமாளை ‘நீர் இவருக்கு என் ஆவீர்?’ என்ன,
‘பெருமாளும் ஒரு படி நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பன்,’ என்றார்.
‘அவர் நினைத்திருக்கிறபடி என்? நீர் நினைத்திருக்கும்படி என்?’ என்ன,
‘அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர்’ நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்று இருப்பன்,’ என்றார்.
அப்படியே இவரும் ‘உயர்வற உயர்நலம் உடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுப் பாராய் நெஞ்சே என்கிறார்.

ஆயின், இவர் தாம் முற்படக் குணங்களில் இழிந்து பேசுதற்குக் காரணம் யாது?’ எனில்,
தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

———————–
மனன்அகம் மலம்அற மலர்மிசை எழுதரும்
மனன்உணர் வளவிலன் பொறிஉணர் வவைஇலன்
இனன்உணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனன்இலன் என்னுயிர் மிகுநரை இலனே–1-1-2-

யாதோ வா இமானி-ஸ்ருதி பிரகிர்யையாலே ‘எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ,
எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்;
அவன்தான் பரம் பொருள்,’ –
கார்ய ஆகாரமான ஜகத்தைப் பிடித்து ஜகத் காரண வஸ்து உபாஸ்யம் என்னுதல்
அன்றிக்கே
ஸ்வ ரூபத்தை முற்படச் சொல்லி பின்னை விபூதியில் போருதல் செய்யாதே
முற்படக் குணங்களில் இழிவான் என் என்னில்
சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டியாகையாலே, தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார்;
அக் குணங்கள் தாம் ஸ்வரூபத்தைப் பற்றி அல்லது இராமையாலே அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை –
‘அவன்’- என்று பிரசங்கித்தார் முதல் பாட்டில் –
அங்கு ப்ரஸ்துதமான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் ஹேய ப்ரத்ய நீகதையாலும்-கல்யாண குணைகதாநதையாலும்
சேதன அசேதன விலக்ஷணமாய் இருக்கும் என்று அந்த ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் இப் பாட்டில் –

————–

இலன்அது உடையன்இது எனநினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்தஅந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே—1-1-3-

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித் அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார்
அவற்றோடு சேர ஒரு கோவையாகத் தோற்றும் இறே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவருக்கு
நோ பஜனம் ஸ்மரத் இதம் சரீரம் (‘மனிதர்களின் நடுவில் இருக்கும் இந்தச் சரீரத்தை நினையாமல்
அந்த ஈஸ்வரனிடத்து நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான் முத்தன்’ )என்னா நிற்கச் செய்தே
‘முத்தன் ஆனவன் எல்லாப் பொருள்களையும் பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகா நின்றது முத்தனுக்கு. ‘ஆயின், இவர் முத்தரோ?’ எனின்,
இவர்க்கும் கர்மம் நிபந்தமான ஆகாரமும் -சரீரம் கிடக்கச் செய்தே- மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே,
ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.
(‘ஆயின், இவ்வுலகங்கள் இறைவன் உடைமை என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், )அரசர்கட்கு நாடு எங்கும்
தமது ஆணை செல்லுமாயினும், தங்கள் தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக்
குட நீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் -லீலா ரசம் -அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே,
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார் –

——————–

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே–1-1-4-

கீழில் பாட்டிலே ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களைப் போன்று உத்தேஸ்யமாகத் தோற்றுகையாலே
லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்;
இனி, மேலில் பாட்டுக்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாகவே இருக்கின்றன.
நித்திய விபூதியில் வந்தால், அவ்வுலகிலுள்ளார் அனைவரும் பாவஞ்ஞாராய்
அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுகிறவர்களாய் இருப்பார்கள்;
‘ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப’ என்னும்படியாய் இறே இருப்பது –
மேலும், அவ்வுலகத்தில் இறைவனுடைய இருப்புக் கண்டு உகக்கும் அதற்கு அவ்வருகு ஒன்றும் இல்லை.
இவ்வுலகில் உள்ளவர்கள், கர்ம நிபந்தமான அசித் சம்சர்க்கத்தோடே கூடினவர்களாய்
ஈஸ்வர சங்கற்பத்தினைப் பின் செல்லுகின்றவர்களாய் இருப்பார்கள்;
மேலும்,அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் நடையாடுகிறது இவ்வுலகத்திலே ஆகையாலே,
இரண்டனையும் தவிர்த்து பகவத் அதீனமாய் இருக்கும் என்று சொல்ல வேண்டுவது இங்கேயாய் இருந்தது

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால், (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால், (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால், (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

அதில் ஸ்வரூபம் அவன் அதீனம் என்கிறார் இப்பாட்டில் -அது ஆகிறபடி
‘எங்ஙனம்?’ என்னில் , ஸ்ருஷ்ட்டி காலத்தில் வந்தவாறே இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநு பிரவேசித்து –
வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் உண்டாம்படி பண்ணியும் இவை அடங்கவும் அழிந்த அன்று,–
சக்த்யவஸ்தை பிரபை போலே ( நீறு பூத்த நெருப்புப் போன்று )தன் பக்கலிலே ஸூஷ்ம ரூபேண கிடக்கும்படி
இவற்றை ஏறிட்டுக்கொண்டு தரித்தும், காரணநிலையோடு காரிய நிலையோடு வாசி அறத் தன்னைப்பற்றி
ஸ்வரூய ஸ்திதி முதலியவை ஆகும்படி இருப்பதனால் அவன் அதீநம் என்கிறார்.

அதில் லோகத்தில் சகல பதார்த்தங்களையும் தனித்தனியே சொல்லி
இதினுடைய ஸ்வரூபம் அவனாலே என்னில் பணிப்படும் இறே ஜீவ அநந்தயத்தாலே
இனி ப்ரயோஜகத்திலே சொல்லி விடும் அன்று பிரதிபத்திக்கு விஷயம் ஆகாது
ஆகையாலே, தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்துத் தொகுத்து
அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் என்கிறார்

—————-

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என யடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே—1-1-5-

ஸ்வரூபம் அவன் அதீனமானவோ பாதி ஸ்திதியும் அவன் அதீனம் என்கிறார் –
ஒருவன் ஒரு க்ருஹத்துக்குக் கடவனாய் இருக்கும் -ஒருவன் ஒரு கிராமத்துக்கு கடவனாய் இருக்கும் –
ஒருவன் ஒரு ஜன பதத்துக்கு கடவனாய் இருக்கும் -ஒருவன் த்ரைலோக்யத்துக்கும் கடவனாய் இருக்கும் –
ஒருவன் சதுர்த்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும் –
ஆக சதுர்த்தச புவனத்துக்கும் கடவனானவனோடு ஒரு க்ருஹத்துக்குக் கடவனானவனோடு வாசியற
அவர்கள் ரக்ஷகர் ஆகிறதும் இவர்கள் ரஷ்யமாய் உபகாரம் கொண்டாகிறதும்
ஸ்ரீ சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே –
அவன் இப்படி நடத்திக் கொண்டு போராத அன்று இவர்கள் ரக்ஷகர்கள் ஆக மாட்டார்கள் -என்கிறார்

ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தநே-சமர்த்தோ த்ருச்யதே கஸ்சித் தம் வினா புருஷோத்தமம்-
நஹி பாலான சாமர்த்தியம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
எல்லா நன்மைகளும் பண்ணித் தர வல்லனாய்-விரோதிகளை போக்க வல்லவனாணை ஒழிய
வேறு ஒருவர் பக்கலில் இந்த ரக்ஷகத்வம் கிடவாது

யத் வேதா தவ் ஸ்வர ப்ரோக்தோ வேதாந்ததே ச ப்ரதிஷ்டித-
செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே வைக்குமா போலே –
ஆத்யந்த பீஜமாய் இருக்கிறது யாது ஓன்று –
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய-அது தன்னுடைய ப்ரக்ருதியிலே லீநமாய் இருக்கிறது ஆகிறது அகாரம் –
அது ரக்ஷகனைக் காட்டுவது ஒரு இறே-
ய பரஸ் ச மஹேஸ்வர -அதுக்கு வாஸ்யதயா பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்
அவன் ஸ்ரீ சர்வேஸ்வரன் என்றது இறே

—————

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமோர் இயல்வினர் எனநினைவு அரியவர்
என்றுமோர் இயல்வொடு நின்றஎம் திடரே–1-1-6-

லீலா விபூதியினுடைய ஸ்திதியும் பகவத் அதீனம் என்றார் கீழ் –
அவற்றினுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் அதீநம் என்கின்றார் இதில்.

————————-

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7-

கீழே சாமா நாதி கரண்யம் சொன்னது -பாவி ப்ரதிஸந்தான நியாயத்தாலேயாய் –
அத்தால் பலித்த சம்பந்தம் சரீராத்மா சம்பந்தம் என்கிறீராதல்
அன்றியே -கீழே சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொன்னார் –
அப்படிச் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்னுதல் –
அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி ( ‘இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு
இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,) என்கிறபடியே –
த்ரிவ்ருத் க்ருதமான அசைத்திலே ஜீவத்வாரா அநு பிரவேசித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் உண்டாக்கும் படி பண்ணி ,
எல்லாம் தான் என்னலாம்படி இருந்தால் -ம்ருதாத்மகோ கட -, (‘மண்ணே குடம்’)என்பது போன்று இராமல். –
அந்தப்ரவிஷ்டச் சாஸ்த்தா ஜெநா நாம் சர்வாத்மா -என்கிறபடியே ஸர்வேஷாம் ஆத்மாவாய் -இவற்றை நியமிக்குமிடத்தில்
இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று
யஸ்யாத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ எவனுக்கு
இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போரும் என்று என்று
கீழ்ச் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார்.
ஆயின், வ்ருஷத்தில் தேவதத்தன் நின்றான்,’ என்றால், அங்குச் சரீர ஆத்துமபாவம் இல்லை.
‘ஜாதி குணங்கள் வ்யக்தியில் கிடந்தன,’ என்றால், அங்குச் சரீர ஆத்துமபாவம் இல்லை.
விசிஷ்டத்திலே இறே சரீராத்மா பாவம் கொள்ளலாவது

————–

சுரர் அறிவு அருநிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே–1-1-8-

சுருதி சித்தன் அவனே என்றும்,சர்வ சரீரியாய் நிற்கின்றவன் அவனே என்றும் சொல்லா நின்றீர் ;
அல்லாதாரும் ஒவ்வொரு காரியத்திலே அதிகரித்து அவற்றை நடத்தி யன்றோ போருகிறது –
பிரமன் ஸ்ருஷ்ட்டிற்கு கடவனாய் ருத்ரன் சம்ஹாரத்துக்குக் கடவனாய் அன்றோ போருகிறது –
இவற்றை ஒரு வியக்தியிலே ஏறிட்டால் நீர் பஷ பாதத்தால் சொன்னீர் ஆகீரோ?’ என்ன,
‘ஒரு வியக்தியிலே பக்ஷ பாதத்தால் சொல்லுகிறேன் அல்லேன்;
பிரமாணங்களின் போக்குகளை ஆராய்ந்தால் அவை அவர்கள் பக்கல் கிடவாமையாலே சொல்லுகிறேன்,’ என்கிறார்.

—————————

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடையின்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே-1-1-9-

——————-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்து உளன்
பரந்த அண்டம் இதுஎன நிலம் விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே–1-1-10-

ஜகத்தை சரீரதயா சேஷமாக யுடையனாய் எங்கும் வியாபித்து -தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருக்கும்
என்று கீழே அருளிச் செய்தார் .
இப்படி வியாபித்து நின்றால் அசித் சம்சர்க்கத்தாலே -சேதநனுக்கு ஒரு சங்கோசம் பிறவா நின்றது இறே –
அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை சம்சர்க்கத்தாலே சங்கோசம் பிறக்குமோ என்னில், அது செய்யாது;
அங்குசிதமாக வியாபித்து நிற்கும் என்று வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்கிறார்-

—————-

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-

நிகமத்தில்
பாட்டு தோறும் அருளியதை தொகுத்து சொல்கிறார்
முதல் பாட்டிலே — கல்யாண குணயோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரக வைலஷண்யத்தையும் -என்றும்
இரண்டாம் பாட்டிலே -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலக்ஷணம் என்றும்
மூன்றாம் பாட்டில் -நித்ய விபூதியோபாதி ததீயத்வ ஆகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாய்த் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டிலே அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் ஆதீனம்-என்றார் –
ஐந்தாம் பாட்டிலே அதனுடைய ஸ்திதியும் அவன் ஆதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் ஆதீனம் என்றார்
ஏழாம் பாட்டிலே சரீர சரீரிகளுக்கு உண்டான லக்ஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார் சரீர சரீரி
எட்டாம் பாட்டிலே குதிர்ஷ்டிகளை மிராசுதார்
ஒன்பதாம் பாட்டிலே சூன்ய வாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டிலே வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கர்ஷித்தாராய் நின்றார் கீழ்
இத்திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி /ஸ்ரீ அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதியும் / ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் அருளிச் செய்த – திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியும் –முதல் பத்து —

May 26, 2019

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -1-

உயர்வே பரன்-படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ -1-உயர்வற

தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்

———————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி

இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -2-உயர்வற

1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –

2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-

3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்

4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –

விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்

எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்

சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-

7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்

8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்

9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்

10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்

பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்

தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்

—————————

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -2-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் –

———————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

—————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -3-

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை–3-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரணத்ரயதஸ் த்ருதீயே –3- பத்துடை அடியவர்

—————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–3- பத்துடை அடியவர்

1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –

2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –

அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்

4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்

5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்

6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்

7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்

8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-

9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –

10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்

எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

—————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -4-

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம் -4-அஞ்சிறைய

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே -4-அஞ்சிறைய

தத் காங்ஷித –ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து

————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-

த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -4-அஞ்சிறைய

1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்

2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –

3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-

4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-

5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-

6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்

7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –

8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-

9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-

10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –

ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———–

ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -5-

1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –

2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –

3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –

4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –

5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –

6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –

7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த

8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –

9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –

10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –

ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –

—————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -5-

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-

————

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஸ்வ ஆலிங்க நாதி சபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிரதி போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாமத பஞ்சமே அபூத்-5-வள வேழ் உலகு –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்–5-வள வேழ் உலகு –

1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –

2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்

3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –

4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –

5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –

6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்

7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்

8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்

9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்

10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-

————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -6-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு–6–

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமஸ்ய
பக்தி பரம் பஹு மதா தத ஏவ சோ அயம்
ஸ்வாராத இத்யுபதிதேச முநிஸ்து ஷஷ்டே-6-பரிவதில் –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

அக்ரீதைரர்ச்ய பாவாத்
அநியத விவிதாப் யர்ச்சநாத்
அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத்
ஸ்வ விஷய நியதேஷ் வாதராத்
ஸ்வாது பூம்நா
பாதா சக்த ப்ரசக்தேஸ்
சக்ருது பசத நே மோக்ஷணாத்
தர்ம ஸவ்ஸ்த்யாத்
ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத்
ஸூகரபஜநதாம் மாதவஸ்யாப்யதத்த–6-பரிவதில்

1-அக்ரீதைரர்ச்ய பாவாத் -நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே -அர்த்தவ்யயம் பண்ணி சம்பாதிக்க வேண்டாத படி
ஸூலபமான புஷ்ப சலிலாதிகளால் பூஜிக்கப் படுமவனாகையாலும் –

2-அநியத விவிதாப் யர்ச்சநாத் -எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே -அதிகாரி நியமம் இல்லாதபடி
பஹு விதிமான பூஜனத்தை யுடைத்தாகையாலும்

3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்புமில் ஈசன் -இது யோக்யம் -இது அயோக்யம் -என்னாதே நாம் செய்கிறது
அல்பமானாலும் அத்தாலே ப்ரீதனாகையாலும் –

4-ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத் -வணங்கி வழிபடும் ஈசன்-பிரஹ்வீ பாவத்தால் தானே ஆவர்ஜிக்கப் படுமவனாகையாலும்

5–ஸ்வ விஷய நியதேஷ் வாதராத் -உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்
இடத்திலே ஆதர யுக்தனாகையாலும்

6–ஸ்வாது பூம்நா -அமுதிலும் ஆற்ற இனியன் -அத்யந்த போக்யனாகையாலும்

7-பாதா சக்த ப்ரசக்தேஸ் -தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே-தன் திருவடிகளைத் தலையாலே வணங்கினவர்கள்
இடத்திலே மிகவும் பிரசாதத்தைப் பண்ணுமவனாகையாலும் –

8-சக்ருது பசத நே மோக்ஷணாத்-அவனைத் தொழுதால் இத்யாதி -ஒருகால் உபசத்தி பண்ணினார்க்கு விரோதி நிரசன பூர்வகமாக
அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கையாலும்

9-தர்ம ஸவ்ஸ் த்யாத்-தருமவரும் பயனாய்-தர்மங்களினுடைய பரம பல ரூபனாய் இருக்கையாலும்

10-ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -விரோதிகளை நிரசிக்கும் இடத்தில்
ஒரு க்ஷணத்தில் தானே போக்குகையாலும் –

ஸூகர பஜநதாம் மாதவஸ் யாப்யதத்த– ஸ்ரீ எம்பெருமான் ஸ்வாராதன் -என்று பரிவதில் ஈசனை என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளுகிறார் என்கிறார் –

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -7-

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு–7–

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -7-பிறவித்துயர் –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –

1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-

2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –

3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –

4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –

5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-

6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –

7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்

8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –

9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்

10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற

ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –

————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -8-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8–

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந -8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்
சந்தர்ஸ்ய –வெளிப்படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்

1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்

2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்

3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்

4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்

5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்

6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்

7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்

8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்

9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –

10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற

நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –

——————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -9-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9–

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி -9-இவையும்

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -9-இவையும்

1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –

2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-

3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –

4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –

5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்

6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்

7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –

8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்

9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –

10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்

ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –

——————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -10-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய்–10–

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

இத்தம் ஸ்ரீ யபதி க்ருத ஸ்வ ஸமஸ்த தேஹ
சம்ஸ்லேஷ லக்ஷண பலஸ்ய ஸூ துர் லபஸ்ய
பக்த்யாதி வத் ஸ்வ கணநே அபி ச தத் ப்ரஸாதாத்
நிர்ஹேதுக த்வம வதத் தசமே சடாரி -10-பொரு மா நீள்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்
விகணந ஸூலபம்
வ்யக்த பூர்வ உபகாரம்
ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும்
ஸ்வயமுத யஜூஷம்
பந்த மாத்ரோபயாதம்
சிந்தாஸ் துத்யாதி லஷ்யம்
நத ஜன சததஸ் லேக்ஷிணம்
தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே -10-பொரு மா நீள்

1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்-ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணித்
திரு வுலகு அளந்து அருளினை போது அத்யாச்சர்யமாக எல்லாராலும் காணப்படுமவனாய்

2-விகணந ஸூலபம் -எண்ணிலும் வரும் -ஓன்று இரண்டு தொடங்கி இருபத்தஞ்சு இருபத்தாறு -என்று சொன்னால்
இருபத்தாறாவாவன் நான் என்று தன்னைச் சொன்னதாகக் கொண்டு ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –

3-வ்யக்த பூர்வ உபகாரம் எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –
இன்று உபகரிக்கை இன்றிக்கே பூர்வ பூர்வர்களுக்கும் உபகாரகனாய்

4-ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும் -நெஞ்சமே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கொண்டாய் -மனஸ்ஸூ
தன்னிடத்தில் தானே ஐகாக்ர்யத்தை பஜிக்கைக்கு ஹேது பூதனுமாய் –

5-ஸ்வயமுத யஜூஷம்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -எண்ணிக்கை இன்றியே தானே வருவானுமாய் –

6-பந்த மாத்ரோபயாதம்-தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் ஈசன் -மாதா பிதாக்களைப் போலே
சம்பந்த மாத்திரத்தாலே வந்து உதவுமவனாய் –

7-சிந்தாஸ் துத்யாதி லஷ்யம் -சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -சிந்தா ஸ்துதி ப்ரணாமங்களுக்கு லஷ்யமுமாய்

8-நத ஜன சததஸ் லேக்ஷிணம்-இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் -ஆஸ்ரிதரை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிவில்
தரிக்க மாட்டாதவனாய் –

9-தர்சி தார்ச்சம் -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற -அதுக்கு உதாஹரணமாக தான் திருக் குறுங்குடியிலே
நின்று அருளின படியைக் காட்டுமவனாய் –

10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறவாதபடி மனசிலே ஜாகரூகனுமாய் இருக்கிற
ஸ்ரீ பெருமாளை அனுசந்தித்து

ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே – தன்னைத் தந்த கற்பகம் -என்கிறபடியே தன்னை அனுபவிக்க விதரணம் பண்ணுகிற
அவனுடைய மஹா உதார குணத்தால் -பொரு மா நீள் படை -என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அதி ஸந்துஷ்டரானார் -என்கிறார் –

—————

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம் -11-

இப்படி பிரதம சதகத்தில் பத்து சதகங்களாலும் பிரதி பாதிதங்களான அர்த்தங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார்
1-ஆதா வித்தம் பரத்வாத்–சர்வ ஸ்மாத் பரனாகையாலும்

2-அகில சமதயா–சர்வ சமனாகையாலும்

3-பக்த ஸுலப்ய பூம்நா–ஆஸ்ரித ஸூலபனாகையாலும்

4-நிஸ் சேஷாகஸ்சஹத்வாத்–சர்வ அபராத சஹனாகையாலும்

5-க்ருபண ஸூகட நாச்சாக்ய–ஸூ சீலனாகையாலும்

6-சம்ராத நத்வாத் –ஸ்வா ராதனாகையாலும்

7-ஸ்வாது ஸ்வோபாச நத்வாத்–ஸூக ரூப உபாசகனாகையாலும்

8-ப்ரக்ருதி ருஜு தயா–ருஜு பிரகிருதி ஆகையாலும்

9-சாத்ம்ய போக ப்ரதத்வாத் –சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கையாலும்

10-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம் –

May 24, 2019

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீதரஸ் சதா

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி திருக்கண்ணமங்கை எம்பெருமான் , திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களைக் கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார். எனவே அருளிச்செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக கலியன் நம்பிள்ளையாகவும், எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.  இவருக்கு வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும் அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு

———–

தத்வ ஞானத்தால் மோக்ஷம் -இல்லையாகில் சம்சாரத்தில் உழன்று கொண்டே இருப்போம் -இங்கு கலக்குவாரும் உண்டு -கலங்குவாரும் உண்டு -முமுஷுக்கு தத்வ த்ரய ஞானம் வேண்டுமே -ஸ்வரூப சித்தி பிறப்பது தத்வ தர்சனத்தாலே-முமுஷூ வான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம்போது தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

இங்கு தத்வம் என்னப் பார்க்கிறது-உபாய-உபேய தத்வங்களை

உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணவ் -என்கையாலே
இவ்வதிகாரிக்கு உபாய உபேய ரூபமான தத்வ தர்சித்தவம் யுண்டாம் போது
ஞாதவ்யமாய் இருப்பது மூன்றாய் இருக்கும் –

1-தத்வ த்ரய விஷய ஞானமும் —
2-தத்வ த்வய வைராக்கியமும் –
3-தத்வ ஏக விஷய பக்தியும்

இதிலே தத்வ த்ரய விஷய ஞானமாவது –
1-அசித் விஷய ஞானமும் –
2-சித் விஷய ஞானமும் –
3-ஈஸ்வர விஷய ஞானமுமே –

1-அசித்து த்யாஜ்யதயா ஞாதவ்யம் –
2-சித்து த்யாஜ்ய உபாதேய தயா ஞாதவ்யம் –
3-ஈஸ்வரன் உபாதேய தயா ஞாதவ்யன் –

——–

அவதாரிகை –
1–இதர தர்சனங்களில் பதார்த்தங்கள் ஆறு என்பார் -பதினாறு என்பார் -இருப்பத்தஞ்சு என்பார் –
இப்படி பஹு .பிரகாரங்களிலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள்(நையாகிகர் -ஆறு பதார்த்தம் என்பர் -சொல் வேறே பத அர்த்தம் வேறே –வைசேஷிகர் -16 -விஷயங்கள் என்பர்-சாங்க்யர் -25 -என்பர் )
2– நம் தரிசனத்துக்கு தத்வம் மூன்று
3–அவையாவன–சித் என்றும் அசித் என்றும் ஈஸ்வரன் என்றும்

(ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷)

(சைதன்யம் -அறிவுடையவர் சித் -ஞானம் உடையவர் அசித் -எதிர்மறை -ஞான சூன்யம் ஜடப் பொருள்கள் –புலன்களால் அறியப்படும் அனைத்தும் அசித் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறில–ஆத்மாக்களும் அவன் கல்யாண குணங்கள் போல் பல உண்டு
ஈஸ்வரன் -மட்டுமேஒருவன் -ஒப்பில்லா அப்பன் -ஆணை இடுவதை ஸ்வ பாவமாக உடையவன் ஈஸ்வரன்-நாராயணனே நமக்கே பறை தருவான்)

(ஜீவாத்மாக்களும் பரமாத்மாவும் புலன்களால் அறிய முடியாது -ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் பண்ணியே உணர முடியும் –
நாம் கண் காண -ஸகல மனுஷ விஷய தாங்கனாக -வந்து தன்னைக் காட்டி அறிய வைக்கிறான் -ஸாஸ்த்ரம் நமக்கு உபதேசிக்கும்-போக்தா போக்யம் ப்ரேரிதா –என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதம் அக்ஷரம் -தேவ தேவன் ஒருவன் -என்றும் ஸ்ருதிகளும் காட்டும் )

(வீடுமின் முற்றவும் -அசித்துக்களை விட்டு -ஈஸ்வரனையே பற்ற வேண்டுமே-வீடு செய்து -உம்முயிர் வீடு செய்வானைப் புல்கு பற்று அற்று-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய –மாம் வ்ரஜ –விட வேண்டியவை பல -பற்ற வேண்டியவன் ஒருவனே )

(தேஹ ஆத்ம அபிமானம் நீங்க -சித்-அசித் -வாசிகள் ப்ரத்யக்ஷமாகவே -காணலாமே
1–நாம் -நான் -என்று ஆத்மாவைச் சொல்லி –இது அது என்று அசித்தைச் சொல்கிறோமே
2-உடையவன் -ஸ்வாமி என்றும் உடைமை -சொத்து என்றும் சொல்கிறோமே
3-அறிபவன் -அறியப்படும் பொருள் என்று வேறே வேறாகச் சொல்கிறோமே
4-நான் -ஏகம் -ஒருமையில் சொல்லி -அநேக பொருள்களை கண்டு கேட்டு இருப்பதால் -பன்மையாக சொல்லி வேறுபாடு
5-நான் -அவயவ ரஹிதம் -துண்டாக்க முடியாமல் -கை கால்கள் -தோல்-சதை இப்படி அவயவ ஸஹிதம்-வாசியும் உண்டே
6-நான் -ஸ்வயம் பிரகாசம் -தன்னையும் காட்டும் பிறருக்கும் காட்டும் -அதுவோ ஜடம் -ஞானத்து விஷயமாகும்
7-ப்ரத்யக் -தனக்குத் தானே தோன்றும் -நான் எங்கு இருக்கிறேன் -என்று தானே சொல்வோம்-அதுவோ பராக் -பிறருக்குத் தோன்றுமவை
8-இதுவோ எப்போதும் அநு கூலம் -அதுவோ நோய் இத்யாதி இல்லாத போது தான் அநு கூலம் -இருக்கும் பொழுது பிரதி கூலம்
9-இதுவோ போக்தா அனுபவிப்பவர் -அவர்களோ போக்யம் -அனுபவிக்கப்படுபவை
10-இது ஸ்வ தந்திரம் -அவர்களோ பர தந்திரம்
11-இவை சேஷி உடையவர் -அவை சேஷம் -உடைமைகள்
12-இவர்கள் கர்த்தாக்கள் -அவை கரணம் -அவற்றைக் கொண்டு கார்யம் செய்கிறோம்
13-அணுத்வ பரிமாணம் -வெட்டவோ கூட்டவோ முடியாது -அவை மத்யம பரிமாணம் கூறாக்கவும் கூட்டவும் முடியுமே

——————-

இந்த வாசியை உணர்ந்த பின்பு சாஸ்திரம் மூலம் ஈஸ்வர தத்வத்துக்கும் ஜீவ தத்வத்துக்கும் உள்ள வாசி அறிவோம்

நவவித சம்பந்தம் –பிதா புத்திர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி -பர்த்ரு பார்ய -ஜ்ஞாத்ரு ஜ்ஞ்ஞேய -ஸ்வ ஸ்வாமி -ஆதார ஆதேய -சரீராத்மா -போக்த்ரு போக்ய-பாவம் –

1–பிதா -காரணம் – புத்திரர் -காரியம்
2–ரக்ஷகர் -ரஷ்யம்
3–சேஷி -சேஷன்
4–பர்த்தா–பார்யை
5–ஜேயன்-அறியப்படுபவன் -ஞாதா -அறிபவன்
6– ஸ்வாமி -ஸ்வம் –
7–ஆதாரம் –ஆதேயன்
8–வியாபி -அந்தர்யாமி -ஆத்மா அனைத்துக்கும் அனைவருக்கும் -நாமோ அவனுக்கு சரீரம் -வியாப்யம்
9–போக்தா -நம்மை அடைந்து அனுபவிப்பவன் -நாமோ போக்யம் -படியாய் கிடந்து பவள வாய் காண்போம்
10–நிரங்குச ஸ்வ தந்த்ரன் -நாம் பரதந்த்ரர் -ஏவிப் பணி கொள்ளப் பிரார்த்திப்போம்

11–ஸ்வா பாவிக அபஹத பாப்மா -இயற்கையாகவே பாபங்களால் தீண்டப்படாமல் -நாம் அப்படி இல்லையே
12–ஸ்வா பாவிக வி ஜரன்-மூப்பு இல்லாத
13–ஸ்வா பாவிக வி ம்ருத்யு -இறப்பு இல்லாத
14–ஸ்வா பாவிக வி சோகன்-சோகம் இல்லாத
15–ஸ்வா பாவிக வி ஜிகஸ்தன் -பசி இல்லாத
16–ஸ்வா பாவிக அபி பாசன் –தாகம் இல்லாத
17–ஸ்வா பாவிக சத்ய காமன்
18–ஸ்வா பாவிக சத்ய ஸங்கல்பன்
19–அனந்தன் -தேச கால வஸ்து த்ரிவித அபரிச்சேதன்
20–அகில காரண அத்புத காரண -நிஷ்காரண காரணன் –

நாம் அவனது அனுக்ரஹத்தாலே அவனை அடைந்து இந்த அஷ்ட வித –
அபஹத பாப்மா -வி ஜர -வி ம்ருத்யு -வி சோக -வி ஜிகிஸ்தா -அபிபாச-சத்யா காம -சத்யா சங்கல்ப -குணங்களில் சாம்யம் பெறுவோம் அன்றோ

(படைப்பையும் பற்றிச் சொல்லி -விசித்ரா தேஹ சம்பந்தி -அவனுக்கு கைங்காயம் செய்யவே -இத்தை உணர வேண்டுமே)

———————

அசித் பிரகரணம் –

4-அசித்தாகிறது –
1-குண த்ரயாத்மகமாய்-(ஸத்யம் ரஜஸ் தமஸ் )
2-நித்தியமாய் -(அவஸ்தை தானே மாறும் -மண் -குடம் -மடக்கு )
3-ஜடமாய் -(ஞான சூன்யம் )
4-விபுவாய்-
5-எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய்-(பிரகாரம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் பூ பரிமளம் போல் )
6-இவனுக்கு லீலா உபகரணமாய்-
7-மஹதாதி சர்வ விகாரங்களுக்கும் ப்ரக்ருதியாய் –
8-தன்னோடே சம்பந்தித்த சேதனனுக்கு பகவத் ஸ்வரூபத்தை மறைத்து –
9-தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கும் தன்மையை யுடைத்தாய்
10-சதத பரிணாமிமாய் இருக்கும் –

5–இதில் ஸூஷ்ம பரிணாமம் அவிசதமாய் இருக்கும் -(ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்று -பிரளய தசை -நாம ரூப விபாகம் இல்லாமல்-வாதம் பித்தம் கபம் -மூடும் சமமாக இருந்தால் வியாதி வராது-பிரளயத்தில் முக்குணங்களும் சம நிலையில் இருக்கும்)

6–ஸூதூல பரிணாமம் விசதமாய் இருக்கும் -அதாகிறது மஹதாதி விகாரங்கள் -(ஸ்ருஷ்டி தசை -பஹுஸ்யாம் ப்ரஜாயேய –த்ரிவித காரணமும் அவனே -வேர் முதல் தனி வித்து -அத்வாரம் சத்வாரகம் -சமஷ்டி ஸ்ருஷ்டி வ்யஷ்டி ஸ்ருஷ்டி-பருத்தி பட்ட பன்னிரண்டு பாடு போல் உடம்பு ஆவதற்கு முன்பு பல நிலைகள் உண்டே )

7–இந்த மூல ப்ரக்ருதி மஹதாதிகளாய்ப் பரிணமிக்கும் படி
எங்கனே என்னில்

8–குண த்ரயங்களினுடைய சாம்யா அவஸ்தையான மூல ப்ரக்ருதியில் நின்றும் மஹான் பிறக்கும்(மகான் வை புத்தி லஷண -என்றுபுத்தி தத்துவமே மஹான் )

9–இதில் நின்றும் அஹங்காரம் பிறக்கும்

10–இது தான்
சாத்விகமாயும் -(வைகாரிகம் )
ராஜஸமாயும் -(தைஜஸம்)
தாமஸமாயும் -(பூதாதி )
மூன்று படியாய் இருக்கும்

11—இதில் சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்கள் பிறக்கும் –

12–இந்திரியங்கள் தான் எவை என்னில்
ஸ்ரோத்ர-த்வக் -சஷூர் -ஜிஹ்வா -க்ராணங்கள்-என்கிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
வாக் -பாணி -பாத -பாயூபஸ்தங்கள் -என்கிற கர்ம இந்திரியங்கள் ஐந்தும்
இவற்றுக்கு பிரதானமான மனஸ்ஸூமாக இந்திரியங்கள் பதினொன்று

13–தாமச அஹங்காரத்தில் நின்றும் சப்த தந் மாத்ரை பிறக்கும் -(தன்மாத்ரை ஸூஷ்ம வடிவமாய் இருக்கும் -)

14–இதில் நின்றும் இத்தினுடைய ஸ்தூல அவஸ்தையாய் சப்த குணகமான ஆகாசம் பிறக்கும் –

15–இதில் நின்றும் ஸ்பர்ஸ தந் மாத்ரை பிறக்கும்

16–இதில் நின்றும் ஸ்பர்ஸ குணகமான வாயு பிறக்கும்

17–இதில் நின்றும் ரூப தந் மாத்ரை பிறக்கும் –

18–இதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும் –

19–இதில் நின்றும் ரஸ தந் மாத்ரை பிறக்கும்

20–இதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் –

21–இதில் நின்றும் கந்த தந் மாத்ரை பிறக்கும் –

22–இதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வீ பிறக்கும் –

23 — ராஜஸ அஹங்காரம் -இரண்டிற்கும் அனுக்ரஹகமாய் இருக்கும் –

(கண் -ரூபம் -அக்னி
காது -ஸப்தம் -ஆகாசம் –
மூக்கு -வாசனை- பிருத்வி -கந்தவதி
நாக்கு -சுவை -ரஸம் -நீர்
தோல் -ஸ்பர்சம் -காற்று
பூநிலாய ஐந்துமாய் — பூமியின் ஓசை, தொடுகை, உருவம், சுவை, மணம் என்ற 5 குணங்களாகவும்
புனர்க்கண் நின்ற நான்குமாய் — நீருக்குரிய ஓசை, தொடுகை, உருவம், சுவை என்ற 4 குணங்களாகவும் (பொதுவாக நீருக்கு மணம் கிடையாது)
தீநிலாய மூன்றுமாய் — நெருப்புக்குரிய ஓசை, தொடுகை, உருவம் (சுவை, மணம் இல்லை) என்ற 3 குணங்களாகவும் –இத்யாதி -ஆகாசம் சப்தம் -வாயுவுக்கு ஸ்பர்சமும் சப்தமும் இருக்கும்-நெருப்புக்கு சப்தம் ஸ்பர்ச ரூபம் -)

24–ஆக –
இந்த மஹதாதி சகல பதார்த்தங்களும் கூட அண்டமாய் பரிணமிக்கும் –

25–இவ் வண்டத்தில் பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மா பிறக்கும்

26–இதுக்கு கீழ் ஸ்வ சங்கல்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும் –

இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும் –

27–இவ்வண்டம் தான் பத்தாத்மாக்களுக்கு
போக்ய
போக உபகரண
போக ஸ்தானமாய்க் கொண்டு பரிணமிக்கும் –

28–போக்யங்களாவன -சப்தாதிகள்

29–போக உபகரணங்கள் ஆவன இந்திரியங்கள் –

30–போக ஸ்தானம் ஆவன
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீரங்களும் –
பூமி முதலான மேல் ஏழு லோகங்களும் பாதாளாதி லோகங்கள் எழும்

31–இந்திரியங்களும் இச் சரீரங்களும் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களுக்கு சாதகமாய் இருக்கும்

32–இது வ்யக்த அவ்யக்த ரூபமான அசித் தத்வம்

(இது ஸூத்த சத்வம் என்றும்
மிஸ்ர சத்வம் என்றும்
சத்வ சூன்யம்-காலதத்வம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –)

இதில் ஸூத்த சத்வமானது ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே கேவலசத்வமாய்
நித்தியமாய் ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் நித்ய முக்தராலும் ஈச்வரனாலும்
பரிச்சேதிக்கஅரிதாய் அதி அத்புதமாய் இருப்பதொன்று –சூர்ணிகை -79-)

(மிஸ்ர சத்வமாவது-சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
1–பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
2–விபரீத ஜ்ஞான ஜநகமாய் 3–நித்தியமாய் 4-ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–பர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும் விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் 6–பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –)

(இது தான் பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி மானாங்கார மனங்கள் –10–7- என்கிறபடியே இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –)

33–காலமாகிறது –
அசித் விசேஷமாய் –
நித்தியமாய் –
ஏக ரூபமாய் –
கீழ்ச் சொன்ன பிரகிருதி பரிணாமாதிகளுக்கு சஹகாரியாய்க் கொண்டு நிமேஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய் –
எம்பெருமானுக்கு ப்ரகாரதயா சேஷமாய்-
லீலா பரிகரமாய் இருப்பது ஓன்று –

(1–இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
2–கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் 3–நித்யமாய்
4–ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் 5–சரீர பூதமாய் இருக்கும் -சூர்ணிகை -120-–)

அசித் பிரகரணம் முற்றிற்று –

——————–

(போக்யம் போக்தா ப்ரேரிதா –தத்வ த்ரய ஸ்ருதி
கீழ் போக்யம் -போகம் போக உபகரணம் போக ஸ்தானம் -பார்த்தோம்
இனி போக்தா சித் பிரகரணம்
ப்ரேரிதா ஈஸ்வர பிரகரணம் பார்ப்போம்)

(கடல் அலை போல் பிரகாரம் பிரகாரி -அப்ருதக் ஸித்த தத்வங்கள் சித்தும் அசித்தும்
மயில் தோகை -சிலந்தி கூடு -த்ருஷ்டாந்தங்கள்
தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருச்சந்த வ்ருத்தம்)

(அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –திருவரங்கத்தந்தாதி –-53-)

சித் பிரகரணம் –

34–ஆத்ம தத்வம் மூன்று வர்க்கமாய் –
அஸங்யாதமாய் இருக்கும் –

35–இதில் பகவத் சேஷத்தை ஏக ரசரான
அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகள் நித்ய வர்க்கம் –

36–சம்சாரிகளாய் ஒரு நாளிலே பகவத் ஞானம் பிறந்து –
அதனாலே பகவத் ப்ராப்தி பண்ணினவர்கள் விமுக்த வர்க்கம் -(கரை கண்டவர் )

37–அநாதியான கர்ம ப்ரபாவத்தாலே சதுர்வித சரீரங்களையும் பிரவேசித்து -(தேவ மனுஷ்ய திரியக் ஸ்தாவரங்கள் ) அதனாலே சப்தாதி விஷய ப்ரவணரான சம்சாரிகள் பத்த வர்க்கம் -(மாறி மாறி பிறந்து ஸம்ஸாரத்தில் -பந்தப்பட்டு இருப்பவர்கள் )

(அசித் -மூன்று வகை ஆத்மாக்கள் -பரமாத்மா
ஐந்து விரல்கள் -கட்டை விரல் போல் பரமாத்மா -ஸமஸ்த இதர வஸ்து விலஷணன்)

38–ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான ஆனந்த ஸ்வரூபமாய் –
நித்தியமாய் –
அசித்தில் காட்டில் ஸூஷ்மமாய்-
ஞான குணகமாய் -(ஞான மயமாயும் ஞானம் உடையவனாயும் -தர்மி ஞானம் -தர்ம பூத ஞானம்ஆத்மாவே ஞானம் ஆத்மாவுக்கு ஞானம்ஸ்வயம் ப்ரகாஸம்)
அணு பரிமாணமாய்-
பகவதாயத்த கர்த்ருத்வகமாய் -(நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-)
ஈஸ்வரனுக்கு பிரகாரதயா-சேஷமாய் இருக்கும் -(அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-அப்ருதக் ஸித்தம் -விட்டுப் பிரியாமல் அவனையே சார்ந்து இருக்கும் –உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ
யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ -சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )

39- பத்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அர்ஹமாய் இருக்கும்

40–நித்ய முக்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அநர்ஹமாய் இருக்கும்(ஸ்வரூப ஆவிர்பாவம் அடைந்து ஸாம்யா பத்தி அங்கு உண்டே-கௌஸ்துப மணி போல் -பிறர் நன் பொருளாய் இருக்குமே – )

(ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக-இந்த்ரிய-மன-பிராண-புத்தி-விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாந ஆஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய் இருக்கும்-சூர்ணிகை -4-)

சித் பிரகரணம் முற்றிற்று –

———————-

ஈஸ்வர பிரகரணம் –

41–ஈஸ்வரன் சேதன அசேதனாத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் –

(ஈஸ்வரன்
1–அகில ஹேய ப்ரத்ய நீக
2–அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
3–ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
4–சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
5–ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற-சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
6–தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
7–விலஷண விக்ரஹ யுக்தனாய் –
8–லஷ்மி பூமி நீளா நாயகனாய் –இருக்கும்-சூர்ணிகை -141-)

42–எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம்
ஹேயபிரத்ய நீகமாய்-(குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா )
கல்யாணைகதாநமாய் –
அதி ஸூஷ்மமாய் -சகல இதர விலக்ஷணமாய் –
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னமாய் (விபுவாய் )உள்ள ஞான ஆனந்தமாய் இருக்கும்

(ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா, அபஹ தபாப்மா, திவ்யோ தேவ ஏக, நாரயண…)

43–திவ்ய மங்கள விக்ரஹம்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய்-(பரமேஷ்டிபுமான்நிவ்ர்தஹாவிஸ்வஹாசர்வஹா)
எம்பெருமானுக்கு ஸர்வதா அபிமதமாய் –
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கும் அத்தை ஆஸ்ரயித்து இருக்கும் கல்யாண குணங்களுக்கும் ப்ரகாசகமாய் –
ஏக ரூபமாய் –
சர்வ விஸஜாதீயமாய்-
அப்ராக்ருதமாய் –
அளவிறந்த தேஜஸ்ஸை யுடைத்தாய் –
நித்ய யவ்வன ஸ்வ பாவமாய் –(யுவதிஸ் ச குமார )
சர்வ கந்த ஸ்வ பாவமாய் -(ஸர்வ கந்த ஸர்வ ரஸ )
ஸுந்தர்யாதி கல்யாண குண யுக்தமாய் –
அதி மநோ ஹரமாய்-
நித்யர்க்கும் முக்தர்க்கும் அநு பாவ்யமாய் –
முமுஷுக்களுக்கும் ஸூப ஆஸ்ரயமாய் இருக்கும் –

(விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய் இருக்கும்-சூர்ணிகை -181-)

44–பரம பதமும் அங்குள்ள பதார்த்தங்களும்
முக்தருடைய விக்ரஹங்களும் –
நித்ய சித்தருடைய விக்ரஹங்களும்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய் இருக்கும் –

45–எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன –
ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் –
அதிலே பிறந்த ஸுசீல்யாதிகளும்-

46–இவை தான் ஒரோ குணங்களுக்கு அவதி இன்றியிலே –
இவற்றுக்குத் தொகை இன்றியிலே இருக்கும்

47–இப்படிப்பட்ட ஸ்வரூபாதிகளை யுடைய ஈஸ்வரன்
பர வ்யூஹாதிகளினாலே
உபய விபூதியையும் நிர்வகித்து அருளும் –

48–எங்கனே என்னில்

(எங்கும் உளன் கண்ணன் -விண் மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல் சேர்ப்பாய்! மண்மீது உழல்வாய் , இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்)

49–கீழ்ச் சொன்ன ஷாட் குண்யாதி ஸமஸ்த கல்யாண குணங்களோடும்
திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
பரம பதத்தில் நித்யரும் முக்தரும் தன்னை அனுபவிக்க
அவர்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பு பர அவஸ்தை –

50–வ்யூஹ அவஸ்தை யாவது –
லீலா விபூதியை நிர்வஹிக்கைக்காக இவ்விரண்டு இரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு
சங்கர்ஷண ப்ரத்யும்னாதி ரூபேண வந்து அவதரிக்கை –

51–இந்த வ்யூஹங்கள் தான்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும்
திரு வவதாரங்களுக்கும் அடியாய் இருக்கும் –

52–விபவமாவது-
திவ்ய மங்கள விக்ரஹத்தை
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களோடே சஜாதீயமாக்கிக் கொண்டு –
தன் படிகளை ஒன்றும் விடாதே -அவ்வோ ஜாதிகளில் வந்து அவதரிக்கை -சாஷாத் விபவமாவது –(ஆமையான கேசனே -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்து)

சேதனர் பக்கல் ஸ்வரூபேண ஆவேசித்து அவதரிக்கை -ஸ்வரூப ஆவேச அவதாரம் –

சில சேதனர் பக்கலிலே சக்தியினாலே கார்ய காலத்திலே ஆவேசித்து ரஷிக்கை-சக்தி ஆவேச அவதாரம் –

(பரசுராமன் ஸ்வரூப ஆவேசம் -கார்த்த வீர்ய ராஜன் சக்தி ஆவேசம் -சக்ரவர்த்தி இடம் தோற்றார் பரசுராமன்)

53–அர்ச்சாவதாரமாவது –
ஆஸ்ரிதர் உகந்தது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை அதிஷ்டித்து –
அதிலே திவ்ய மங்கள விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு
ஆஸ்ரித பராதீனனாயக் கோயில்களிலும்
க்ருஹங்களிலும்
கால அவதி இன்றிக்கே திரு வவதரிக்கை-

(1—ருசி ஜனகத்வமும்
2–ஸூபாஸ்ரயமும்
3–அசேஷ லோக சரண்யதவமும்
4–அனுபாவ்யத்வமும் எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரி பூர்ணம் –சூர்ணிகை -201-)

(ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும் அசவந்தரைப் போலேயும் இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் –சூர்ணிகை -202-)

(பின்னானார் வணங்கும் சோதி -அடியோர்க்கே அல்லீமோ இந்தளூரீரே -தமர் உகந்த அவ்வுருவம் இத்யாதி -சீரார் திருவேங்கடமே -இத்யாதி-64 சதுர்யுகம் -திருக்கண்ணபுரம் -சரண்ய முகுந்தன் )

54–உபாசிப்பவருடைய ஹ்ருதயங்களிலே விக்ரஹ ஸஹிதனாயக் கொண்டு
அவர்களுக்கு ஸூபாஸ்ரயமாய் இருபத்தொரு பிரகாரம் உண்டு –

ஈஸ்வர பிரகரணம் முற்றிற்று

———————-

55–இப்படி சித் அசித் ஈஸ்வர தத்துவங்களும்
ஸங்க்ரஹேண சொல்லப் பட்டது

56–சகல சேதன அசேதனங்களையும் ஈஸ்வரன் பிரகாரமாக யுடையனாய்
தான் அவற்றுக்கு பிரகாரியாய்
வேறு சேதனர்க்கு பிரகாரி இல்லாமையால்
நம் தர்சனத்துக்குத் தத்வம் ஒன்றே என்னவுமாம் –

(சோழ அரசன் -உனக்கு இரண்டாவதே இல்லை-பரிசுகள் தந்த வ்ருத்தாந்தம் -அத்விதீயம் -ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ
ந ப்ரதிமா அஸ்தி -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ)

—————-

தத்வ த்ரய ஸங்க்ரஹம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —1-7-10-

May 20, 2019

என்னோடு கலந்த ஸ்ரீ எம்பெருமானுடைய குணங்களைக் கால தத்வம் உள்ளதனையும்
அனுபவியா நின்றாலும் திருப்தன் ஆகிறிலேன் என்கிறார்

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –

————————

அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-7-10—

அகலில் அகலும்
இவன் அகன்றபடியே நிற்கில் -யதி வா ராவண ஸ்வயம் -என்கிற சாபலமும் கிடக்கச் செய்தே
கண்ண நீரோடு கை வாங்கும் –
த்விதா பஜ்யேயமப் யேவம் ந நமேயம் -என்னும் நிர்பந்தத்தோடே நிற்கில் முடித்தே விடும் –

அணுகில் அணுகும் –
தன பக்கலே ஆபிமுக்யம் பண்ணினால்-ஆக்யாஹி மம தத்வேந -என்னும்
இளைய பெருமாள் நிற்க -நாலடி வர நின்றவனை இறே-ராஜ கார்யம் செய்யும்படி சொல்லீரோ -என்றது –

ராக்ஷஸாநாம் பலாபலம் -இவனை ராக்ஷஸ சஜாதீயனாக நினைக்கை அன்றிக்கே இஷுவாகு வம்சயனாகவே புத்தி பண்ணி –
ராக்ஷஸருடைய பலாபலம் சொல்லீரோ என்றார் இறே

இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு அகலில் அகலும் என்ற இடம் சொல்லிற்று
இரண்டாம் பாட்டு அணுகில் அணுகும் என்ற இடம் சொல்லிற்று –

புகலும் அரியன்
அர்ஜுனனும் துரியோதனனும் கூட வரச் செய்தே-அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து
துரியோதனனுக்கு தன்னை ஒழிந்த பங்களத்தை கொடுத்து விட்டான் இறே
உகவாதற்குக் கிட்ட அரியனாய் இருக்கும்

பொரு வல்லன்
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-
யாத்ரா கிருஷ்ணோ ச கிருஷ்ணா ச சத்யபாமா ச பாமிநீ -புத்ரர்களுக்கும் புக ஒண்ணாத சமயத்தில் இறே
சஞ்சயனை அழைத்துக் காட்சி கொடுத்தது –
பொரு-என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் –
அத்தாலே தடையைச் சொல்லிற்றாய் தடை உடையன் அல்லன் என்கை –

எம்மான் –
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன்

நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்-
அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி ஒரு காலும் விச்சேதிக்க ஷமன் ஆகிறேன் அல்லேன் –
இப்படி விடுகைக்கு ஷமன் இன்றிக்கே ஒழிகிறது காலம் சாவதியாயோ -என்னில்

பகலும் இரவும்
சர்வ காலமும் -ஆனால் விஷயத்தைகே குறைய அனுபவித்தோ என்னில்

படிந்து குடைந்தே –
எங்கும் கிட்டி விஷயத்தை அனுபவியா நிற்கச் செய்தே விட மாட்டுகிறிலேன்

——————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அகலில் -அர்த்த த்வயம் -பராங்முகதையும்-துவேஷமும் / கண்ண நீரோடு -வெறுப்போடு /
தன்னை ஆஸ்ரயித்தும் ப்ரயோஜனாந்தர பரனாய் நிற்கில் அத்தைக் கொடுத்து அநந்ய ப்ரயோஜனனாகப் பெற்றது இல்லையே –
என்ற இழவோடே கை வாங்கும் -என்றபடி –
இப் பஷத்தில் அணுகில் அணுகும் என்றதும் அநந்ய ப்ரயோஜனனாய் நிற்கில் ப்ராப்ய ப்ராபக பூதனாய் நிற்கும் என்றபடி –
ஆபிமுக்யம் இல்லையாகில் அவர்களால் அறியப்படான் –
ஆபிமுக்யம் உண்டாகில் பக்த்யாத் சாஸ்த்ராத் வேத்மி என்கிறபடியே அவர்களால் அறியப்படும் –
புகலும் அரியன் -பொரு வல்லன் -இதி பதத்வயம் –
அகலில் அகலும் அணுகில் அணுகும் இதி ப்ரதிஜ்ஜாதார்த்த உபபாதன பரம் –
பங்களம்-கூளக் கூட்டம் -அசாரம்-இஞ்சித் தழைக் கூறு போலே சப்பரை -என்றபடி –
இளைப்பிலம் என்றது திருப்தி அடையோம் என்றபடி –
இளைப்பு என்று ஸ்ரமமாய்-தத் கார்யமான விச்சேதத்தை லஷிக்கிறது –
படிந்து கிட்டி -உட்புகுந்து அனுபவிக்கை -குடைந்து -அவகாஹித்து –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் /ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-1-5–

May 3, 2019

ஸ்வரூபம் அவன் ஆதீனமானவோ பாதி ஸ்திதியும் அவன் ஆதீனம் என்கிறார் –
ஒருவன் ஒரு க்ருஹத்துக்குக் கடவனாய் இருக்கும் -ஒருவன் ஒரு கிராமத்துக்கு கடவனாய் இருக்கும் –
ஒருவன் ஒரு ஜன பதத்துக்கு கடவனாய் இருக்கும் -ஒருவன் த்ரைலோக்யத்துக்கும் கடவனாய் இருக்கும் –
ஒருவன் சதுர்த்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும் –
ஆக சதுர்த்தச புவனத்துக்கும் கடவனானவனோடு ஒரு க்ருஹத்துக்குக் கடவனானவனோடு வாசியற
அவர்கள் ரக்ஷகர் ஆகிறதும் இவர்கள் ரஷ்யமாய் உபகாரம் கொண்டாகிறதும்
ஸ்ரீ சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே –
அவன் இப்படி நடத்திக் கொண்டு போராத அன்று இவர்கள் ரக்ஷகர்கள் ஆக மாட்டார்கள் -என்கிறார்

ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தநே-சமர்த்தோ த்ருச்யதே கஸ்சித் தம் வினா புருஷோத்தமம்-
நஹி பாலான சாமர்த்தியம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
எல்லா நன்மைகளும் பண்ணித் தர வல்லனாய்-விரோதிகளை போக்க வல்லவனாணை ஒழிய
வேறு ஒருவர் பக்கலில் இந்த ரக்ஷகத்வம் கிடவாது

யத் வேதா தவ் ஸ்வர ப்ரோக்தோ வேதாந்ததே ச ப்ரதிஷ்டித-
செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே வைக்குமா போலே –
ஆத்யந்த பீஜமாய் இருக்கிறது யாது ஓன்று –
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய-அது தன்னுடைய ப்ரக்ருதியிலே லீநாமாய் இருக்கிறது ஆகிறது அகாரம் –
அது ரக்ஷகனைக் காட்டுவது ஒரு இறே-
ய பரஸ் ச மஹேஸ்வர -அதுக்கு வாஸ்யதயா பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்
அவன் ஸ்ரீ சர்வேஸ்வரன் என்றது இறே

————————-

ஸ்ரீ அரும் பொருள் உரை -ஸ்ரீ ஜீயர் வியாக்யானம்

ஸ்ரீ விஷ்ணு புராணே பிரதம அம்சே த்வாவிம்ச அத்யாய ஸ்லோகம் பிரமாணம்
புருஷோத்தம பதமும் ஹரி பதமும் ஹேது கர்ப்பம் என்று தாத்பர்யம் –

புருஷ சப்தேன பஹு பிரதத்வமும் உத்தம சப்தத்தால் ஆபத் விநிவர்த்தன சாமர்த்தியமும் தோற்றுகிறது-
அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணாமல் இஷ்ட பிராப்தி மாத்திரம் பண்ணுகிறவன் உத்தமன் அன்றே —
ஹர்தீதி ஹரி -ஆஹாரதீதி ஹரி –ஈஸ்வரோ ஹி நியாந்தா -ஹரணாதேவ துக்கா நாம் ஹ்ரிரித்யபி தீயதே

யச் சப்தம் -சாந்தச -ஸ்வர -பிரணவ -பிரானவஸ்ய ப்ரக்ருதி -அகாரம் -அநந்தா வை வேதா –
பிரணவத்தை உச்சரித்து -வேதத்தை அனுசந்தித்து பின்னையும் பிரணவத்தை உச்சரிக்கக் கடவது இறே –
அதில் பிரதம உச்சாரணத்தாலே அத்யேஷ்யமான வேதார்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே இருக்கிறது என்று ஸூ சிப்பித்து –
அந்த அர்த்தங்களை வேதாந்தங்கள் மூலம் அனுசந்தித்து -அதீத அர்த்தம் எல்லாம் இதுக்குள்ளே என்று
த்விதீய உச்சாரணத்தாலே ஸூசிம்பிக்கையாலே ஆபரணம் -செப்பு -த்ருஷ்டாந்தம்
அகாரம் சகல சப்தத்துக்கும் காரணமாய் நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே –
சகல ஜகத்துக்கும் காரணமாய் சர்வ ரக்ஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது –

—————————

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என யடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே—1-1-5-

அவரவர்
தம்முடைய அநாதரமும் அவர்களுடைய வைவித்யமும் தோற்றுகிறது

தமதமது
குண பேதத்தால் வந்த பல பேதத்தைச் சொல்லுகிறது

அறிவறி
அதுக்கு அடியானை ஞான பேதத்தைச் சொல்லுகிறது –

வகை வகை-
மார்க்க பேதங்களாலே

தமதமது அறிவறி வகை வகை
சேதன பேதத்தோ பாதியும் போருமாயிற்று ருசி பேதங்களும்
தாமதாமுடைய குண அனுகுணமாகப் புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயனீயருமாய் இருப்பாருமாய் இருக்கும் இறே
ரஜோ குண பிரசுரராய் இருப்பாரும்-தமோ குண பிரசுரராய் இருப்பாரும்
அளாவனான சத்வத்தை உடையராய் இருப்பாரும் இறே இருப்பது –
அப்படியே குண அனுகுணமாகப் பிறந்த ஞானமும் –
அறிந்த அறிந்த வகைகளாலே

அவரவர் இறையவர் என
அவரவர் ஆஸ்ரயணீயர் என்று

யடி யடைவர்கள்
அவ்வவ தேவதைகள் தான் துராராத தேவதைகளாய் -பிரஜையை அறுத்துத் தா -ஆட்டை அறுத்துத் தா –
என்னா நிற்கச் செய்தேயும்-ஆஸ்ரயணமாவது-அவற்றின் காலிலே குனியும் அதுக்கு அவ்வருக்கு இல்லை என்று இருக்கிறார் இவர் –
ஸ்வ கோஷ்டீ ப்ரஸித்தியாலே -ஓர் அஞ்சலி ஸாத்ய வஸ்துவோடு இ றே தமக்கு வாசனை –

அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ
க்ருதாபராதஸ்ய ஹி நான்யத் பஸ்யாம் யஹம் சமம் -அந்தரேணா அஞ்சலிம் பத்த்வா லஷ்மணஸ்ய ப்ரசாத நாத்-
இளைய பெருமாளுடைய ஜய கோஷத்தைக் கேட்டு மஹா ராஜர் கழுத்தில் மாலையை அறுத்துப் பொகட்டுக்
காபேயமாகச் சில வியாபாரங்களை பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து –
இவ்வளவில் நமக்குச் செய்ய அடுத்து என் என்ன –
அபராத காலத்திலே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் ஏலியன் சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இறே
இப்படி குணாதிகனாய் ப்ராப்தனாய் இருக்கிறவனோட்டை வாசனையால் அடியடைவர்கள்-என்கிறார்

மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு தொழுதும் எழுதும் என்னும் இது மிகையாய் இறே இவர் பற்றின விஷயம் இருப்பது

அவரவர் இறையவர் குறைவிலர்
ஆஸ்ரயிக்கிறவர்களுடைய இறையவர் என்னுதல் –
அவ்வவ ஆஸ்ரயணீயரானவர்கள் என்னுதல் –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயரானவர்கள் அவர்களுக்குப் பல பிரதான சக்தர் ஆகைக்குக் குறையுடையர் அல்லர் –
அதுக்கு அடி என் என்னில்

இறையவர்
பொதுவில் இறையவர் என்கிறார் –
அவர்களோடே அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடே தம்மோடு வாசி யற எல்லாருக்கும் ஓக்க இறையவர் ஆகையால்
பதிம் விஸ்வஸ்ய-என்கிறபடியே எல்லாருக்கும் ஓக்க ஸ்வாமி யானவர்

அவரவர் விதி வழி யடைய நின்றனரே-
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களில் அடையும்படியாக
நம் இறையவர் அந்தராத்மாவாய் நின்றார்
அன்றிக்கே சர்வேஸ்வரன் காமநாதிகாரத்தில் அருளிச் செய்தபடியே அவர்கள் அடையும்படியாக என்னுதல்
இராமட மூட்டுவரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-இவர்களும் பல பிரதான சக்தராகிறார்கள் அத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்று ஆயிற்று அவ்வோ தேவதா மாத்ரங்களுக்குப் பல பிரதான சக்தி உள்ளது –

—————————-

அறிவறி -வீப்சையின் கருத்தையும் அருளிச் செய்கிறார்-
ஏக பல விஷயமாகவும் அநேக சாதனங்கள் உண்டாகையாலே
அறிந்த அறிந்த -என்கிறது -அப்போதைக்கு உபாய விஷயமான ஞானம் என்றபடி
அளவானான -மிஸ்ரமான
ருசி பேத ஹேதுவாய்ச் சொல்லுகிற வழியால் அதிகாரி பேதமும் சித்திக்கையாலே
அத்தை ருசி பேதத்துக்கு த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் -அப்படியே இத்யாதி –
ஸ்வ கோஷ்டீ -பரம வைதிக ப்ரபந்ந ஜன கோஷ்டீ –
யஸ் சீலோ ஸ்வாமி தத் சீலோ தாச –
திருவடி சக்கரவர்த்தி பிள்ளைகளுடைய பாவஞ்ஞன் ஆகையால் -அஞ்சலி சாத்யதைக்கு பிரமாணம் –
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற வருடைய திவ்ய ஸூக்தியையும் பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
யோ யோ யாம் யாம் தனும் பக்த ஸ்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி-தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம் யஹம்-
ச தயா ஸ்ரத்தாயா யுக்தஸ் தஸ்ய ஆராதனமீஹதே-லபதே ச ததா காமான் மயைவ விஹிதான் ஹி தான் -இத்யாதி
சர்வேஸ்வரன் காமநாதிகாரத்தில் அருளிச் செய்தபடி
ஐயன் -சாஸ்தா / பாழி -ஸ்தானம் –
நாலாம் பாதம் முதலில் அனுசந்தித்து மற்றை மூன்று பாதமும் அடைவே அனுசந்திப்பதும் ஒரு அன்வயம் –

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-