Archive for February, 2019

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–முதல் ஆழ்வார்கள் வைபவம் –

February 8, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————–

பொய்கையாழ்வார் வைபவம்
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதங் காசார யோகி நம்
கலயே யஸ் ஸ்ரீ யபத்யே ரவிந் தீபம் அகல்பயத்
முகுந்தஸ்ய முகோல்லாஸ மூல வாக் ஜால மூர்ச்சிதம்
முநி முக்யம் சரோ ஜாதம் முக்தி மூலம் உபாஸ்மஹே
ஆஜ்ஞாதி ஸ்ரீ சந்தநே த்வாபராக்யே சித்தார்த் யாக்யே வத்ஸரே மாசி சேஷ ஸூக்ல அஷ்டம்யாம் பவ்மவாரே
ஸூபர்ஷே விஷ்ணோர் ஜென்ம பிரப காசார யோகீ(த்வாபர யுகத்தில்–ஆஜ்ஞாதி ஸ்ரீ சந்தநே-கடபடாதி சங்க்யை –8629012-செவ்வாய் கிழமை -விஷ்ணோர் ஜென்மம் திருவோணம் – )
முதல் ஆழ்வார்கள் மூவரிலும் வைத்துக் கொண்டு ப்ரதமம் பொய்கை ஆழ்வார்
க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சி தோ ஹரி -தத காஞ்சீதி விக்யாதா புரீ புண்ய விவர்த நீ -(புண்ய கோடி விமானத்தில் கீழ் )என்கிறபடியே
ககார வாச்யனான ப்ரஹ்மாவினால் சர்வேஸ்வரன் அஸ்வ மேதத்தால் ஆராதிதனான ஸ்தலமாகையால் காஞ்சீ புரம் என்று
ப்ரக்யாதமாய்ப் புண்ய விவர்த்தகமான -கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சியிலே –
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாவில் பொற்றாமரைப் பொய்கையில் காஞ்சந பத்ம கர்ப்பத்தில்
ஐப்பசி மாசத்தில் விஷ்ணு நக்ஷத்ரமான ஸ்ரவண நக்ஷத்ரத்திலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சமாய் அவதரித்து அருளினார்
ஹேமாப்ஜிநீ ஹேம சரோஜ கர்பாத் ஸ்ரீ பாஞ்ச ஜந்யோஸ் ஜனி தத்ர திவ்ய யோகீ தாரா ஹரேரா ஆஸ்வயுஜாக்ய மாஸே
ஸமஸ்த ஜீவ அவந கர்ம ஹேதோ –என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

பூதத்தாழ்வார் வைபவம்
மல்லா புரா வராதீசம் மாதவீ குஸூமோத் பவம்
பூதந் நமாமியோ விஷ்ணோ ஞான தீபம கல்பயத்
வந்தே பூதாக்ய யோகீந்த்ரம் வரேண்ய குண சம்பதம்
லஷ்மீ ஸஹாய கருணா ப்ராப்த ப்ரமிதி வைபவம்
அநந்தரம் -மாதவன் பூதங்கள் -என்று சொல்லலாம்படியான பூதத்தாழ்வார் –
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தலை சயனம் என்று அனுசந்தேயமான திருக் கடல் மல்லையில்
பரிமள பிரசுரமாய் திவ்யமாய் இருபத்தொரு மாதவிப் பூவிலே அந்த ஐப்பசி மாசத்தில் அவிட்ட நக்ஷத்ரத்திலே
ஸ்ரீ கௌமோதகீ கத அம்சராய் அவதரித்து அருளினார்(ஒண் சங்கதை வாள் ஆழியான் -நான்கு ஆழ்வார்கள் )
மாஸே ததஸ்மிந் வஸூபே ஜநிஷ்ட பாரே சமுத்ரம் புரி மல்லநாம்ந்யாம் -லதா க்ருஹாந் தாத் புவி பூத நாமா
கௌமோதகீ சக்தி மயோ முனீந்திர-என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லப் பட்டது இறே

பேயாழ்வார் வைபவம்
தந்மாசி ஜாதம் சத தார காயம் மயூர புர்யாம் மணி கைரவாந் தாத் பக்த்யா
மஹாந்தம் மஹதாஹ்யாந்தம் வந்தே ஸ்ரீ நந்தகாம் சம் ஸ்ரீத பக்தி ரூபம்
த்ருஷ்ட்வா – நிதி ஹோவாச -ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா
மயிலாதிபம் கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹத்வயம் ஆஸ்ரயே
பத்மா ரமண பாதாப்ஜ ப்ரேம ப்ராந்த்யா மநோஜ்ஞயா
ப்ராந்த யோகீதி விக்யாதம் முனிம் வந்தே குணாம்புதிம்
அநந்தரம் பேயாழ்வார் -தேனமர் சோலை மாட மா மயிலையில் ஆதி கேசவப் பெருமாள் கோயில் திருக் கிணற்றில்
உண்டானதொரு செவ்வல்லிப் பூவிலே அந்த ஐப்பசி மாசத்தில் சதய நக்ஷத்ரத்திலே ஸ்ரீ நந்தக அம்சராய் அவதரித்து அருளி
நியத புலகிதாங்க நிர்ப்பர ஆனந்த பாஷ்பா களித நிகில சங்கா கத்கத ஸ்தோத்ர கீதி அம்ருத லஹரி வர்ணா ஹர்ஷ
ந்ருத்தோப பன்னா விகத நரக பீதிர் விஷ்ணு பக்திர் விபாதி – என்கிறபடியே
விஷ்ணு பக்தியை உடையராய் -பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -என்கிறபடியே பகவத் அனுபவ அதிசயத்தாலே
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன் -என்றும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் அனுபவ பாரவஸ்யம் அல்லாத ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு மிக்கு இருக்கையாலே
பேயாழ்வார் என்றத்தை நிரூபகமாக உடையராய் இருப்பர்
தன்மாச ஏவ ஆவிரபூத் விபஸ்சித் ப்ராசேதா சர்ஷேத மயூர புர்யாம்-மஹா பிதாநோ மணி கைரவாந்தாத்
ஸ்ரீ நந்தகாத்மா ஸ்ரீத பக்தி ரூப -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

ஞான தர்சன ப்ராப்தி-அறிந்து கண்டு அடைதல் -மூன்று அவஸ்தைகள் பர பக்தி பர ஞானம் பரம பக்தி –பகவத் விஸ்லேஷ ஸம்ஸ்லேஷ-துக்கமாயும் சுகமாயும் தோன்றி-த்வரை மிக்கு வழியில்லா வழியாகிலும் அடைய முயல்வதும் -அடைந்து அனுபவிப்பதும் -மூன்று நிலைகள் -பர ஞானம் அர்ச்சிராதி மார்க்க மத்யத்தில் ஏற்படும் -அங்கு சென்று பரம பக்தி -முதல் ஆழ்வார்கள் -மூவரும் இம்மூன்று -அவஸ்தைகளுக்குச் சொல்வார் -மூவருக்கும் மூன்றும் உண்டு -அருளிச் செயல்கள் மூலம் நமக்கு புரிய வைக்கும் ஊற்றத்தைப் பற்றிய இவ்வாறு சொல்வார்கள் –

முதல் ஆழ்வார்கள் வைபவம்
இப்படி இம்மூவரும் யோனி ஜாதர் அன்றிக்கே புஷ்ப ஜாதராய் வந்து அவதரித்து எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தால்
முக் குணத்து இரண்டு அவை அகற்றி என்கிறபடியே ராஜஸ தாமச ரஹிதராய்
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பயாபயே -பந்தம் மோக்ஷஞ்ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ -(18-30-)-என்று
சொல்லுகிற சத்வ குணமாகிற ஒன்றிலே ஒன்றி நின்று
தாஸா வயமிதி ப்ரஹிமந் மாநிநோ லோக வர்ஜிதா -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வேஹ் யாத்மாந பரமாத்மாந நான்யதா லக்ஷணந் தேஷாம் பந்த மோஷே ததைவ ச-என்றும்(சேஷத்வமே பிரதான அடையாளம் -அடியேன் உள்ளான்-அங்கும் ஸ்வ தந்த்ரன் அல்ல -ஸ்வராட் -ஸம்ஸார கட்டு இல்லை என்றது )
ஸ்வ த்வமாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதாஸ்மர–என்றும்
ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா சேஷோஹி பரமாத்மந –என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வதஸ் சித்த பகவத் தாஸ்ய ரசத்தை உடையராய் அத்தாலே உண்டான சம்யக் ஞான பக்தி வைராக்யங்களை உடையராய்
புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத-என்கிறபடி அன்ன பாநாதி வர்ஜராய்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -என்று
பால்யாத் ப்ரப்ருதி பகவத் குணைக தாரகராய் இருக்கிற இவர்கள்

சம்சாரிகள் தங்களைப் போல் அன்றியே
உண்டியே உடையே உகந்து சப்தாதி விஷயங்களிலே அதி ப்ரவணராய் தீதில் நன்னெறி நிற்க அல்லாதது செய்து
பகவத் விமுகராய் இருக்கையாலே
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது -என்கிறபடியே அவர்களோட்டை ஸஹ வாசம் தங்களுக்கு துஸ் சஹமாய்
ஒரு நாள் இருந்த இடத்திலே ஒரு நாள் இராமே க்ராம ஏக ராத்ரராய் இவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதே
தனித்தனியே வர்த்திக்கிற காலத்திலே-சர்வேஸ்வரனும்
மமாத்மா ஞானிநாம் வர -என்றும்
ஞானீத் வாத்மைவ மே மதம் -என்றும் சொல்லுகிற திரு முகப்படியே
தனக்கு ஆத்ம பூதரான இவ் வாழ்வார்களைக் கொண்டு ஜகத்தைத் திருத்த வேணும் என்று நினைத்து
அநாதி மாயயா ஸூப்த–என்கிறபடியே அநாத யவித்ய அபிபூதராய்ப் போருகிற சம்சாரி சேதனருக்கு
அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி ஸ்வ விஷய ஞான பக்திகளை உண்டாக்குகைக்காக ஒரு நாள் ராத்திரியிலே
இம் மூவரையும்

சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூரிலே ஒரு திரு (மிருகண்டு மஹரிஷியுடைய )இடை கழியிலே யாத்ருச்சிகமாக சங்கதராக்க இவர்களும்
வைஷ்ணவோ வைஷ்ணவந் த்ருஷ்ட்வா தண்டவத் பிரணமேத் புவி -என்கிறபடியே அந்யோன்ய வந்தன பரராய்க் கொண்டு
நீர் யார் நீர் யார் என்று ஒருவரை ஒருவர் கேட்க
பகவத் சேஷ பூதம் அஹம் -அநந்யார்ஹ சித பர -என்றும்
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய –என்றும்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்றும்
ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா சேஷோஹி பரமாத்மாநி -என்றும்
இத்யாதிகளாலே
தந்தாமுடைய ஸ்வரூப நிர்த்தேச பிரசங்க வ்யாஜேந போதயந்த பரஸ்பரம் பண்ணிக் கொண்டு இரா நிற்கச் செய்தே –
அவ் வளவில் எம்பெருமான்

அநன்யாஹி மயா சீதா பாஸ்கரேண பிரபாயதா-என்று இருக்குமவன் ஆகையால்
இறையும் அகல கில்லாத பிராட்டி ஸஹிதனாய்க் கொண்டு கூராழி வெண் சங்கு ஏந்தி
துளஸீ காந நம் யத்ர யத்ர பத்ம வநாநிச வசந்தி வைஷ்ணவா யத்ர தத்ர சந்நிஹிதோ ஹரி -என்கிறபடியே
செந்தமிழ் பாடுவார் ஆகிற இவர்கள் அருகே தழுவி முழுசிப் புகுந்து நெருக்கி நிற்க –
இவர்களும் நம்மை ஒழியவும் காமர் பூங்கோவல் இடைக் கழியைப் பற்றி நிற்கிறார்கள் உண்டோ என்று பார்க்கைக்காக
வெய்ய கதிரோன் விளக்கு ஏற்றியும்
ஞானச் சுடர் விளக்கு ஏற்றியும்
உணர்வு என்னும் ஒளி விளக்கு ஏற்றியும் பார்த்து அருளி
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் -என்றும்
ஸ்ரீ மன் நாராயணனுடைய மைப்படி மேனியையும் -செந்தாமரைக் கண்ணையும் பரம வைதிகரான இவர்கள்
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே கண்டு அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி அதிசயம் உள் அடங்காமல் பாலேய் தமிழர் என்று சொல்கிற நல் தமிழர் ஆகையால்
வையம் தகளி
அன்பே தகளி
திருக் கண்டேன்
என்கிற திவ்ய பிரபந்தங்களை சம்சாரிகள் அதிகரித்து அஞ்ஞான அந்தகாரம் நீங்கி உஜ்ஜீவிக்கும் படி
ஞானத் தமிழாக அருளிச் செய்து பிரபந்தீகரித்து அபகரித்து அருளி ஜகத்தை வாழ்வித்து அருளினார்கள் –

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி-பிரவேசம்-

February 8, 2019

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்ய பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்கரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபராங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாயில் இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபராங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

பின்பழகு -அருளிச் செயல்களை அருளிச் செய்த ஆழ்வார்களின் வரலாற்றை அருளிச் செய்தவர் என்றுமாம்

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

பேயாழ்வார் போல் சத்யம் அவதாரமே -திருக்கண்டவர் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் வரலாறு நாம் அறியும்படி அருளிச் செய்தவர்

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————–

ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -ஸ்ரீமத் அனந்த முக நித்ய ஸூரி பரிஷந் நிஷேவ்யமாணனாய் –
அவாப்த ஸமஸ்த காமனாய்-அகில மங்கள குண ஸ்வரூபனான சர்வேஸ்வரன்

ஷயந் தமஸ்யா ரஜஸ்ய பராகே-என்றும்-ரஜஸ் லீலா விபூதி தாண்டி விரஜை தாண்டி
த்ரிபாத் ஸ்யாம்ருதந்திவி -என்றும்-ஏகபாத் லீலாவிபூதி -அம்ருதமயமான பரமாகாசம்
தத் அக்ஷரே பரமே வ்யோமன் -என்றும்–ரஜஸ் தாண்டி ஸ்ரீ வைகுண்டம்
யோ அஸ்ய அக்ஷரா பரமே வ்யோமன் -என்றும்–அரசர்களுக்கு எல்லாமே அரசன் தேவாதிதேவன்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -என்றும்–கண்களால் பருகிக்கொண்டே ஸேவை செய்யும் நித்ய முக்தர்கள்
சகல ஜகத் ஹித அனுசாசன ப்ரவ்ருத்தங்களான நிகில நிகமாந்த சஹஸ்ரங்களிலும்–வேதங்களிலும் வேதாந்தங்களிலும்

வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா சார்த்தஞ்ச ஜகத்பதி –ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -(அசிந்த்யாத்மா-சிந்தைக்கு அப்பால் பட்ட -பக்தைர் பாகவதைஸ் ஸஹ-குண விக்தரும் கைங்கர்ய வித்தரும் )என்றும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர (மூவருடன் கூடி ஜனங்களை உஜ்ஜீவிக்க ) -என்றும்
அத்யர்க்க அநல தீப்தந் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ் ப்ரேஷந் தேவ தாநைவ -என்றும்(தேவர்களாலும் தானவர்களாலும் நுழைய ஒண்ணாத )
ஆக்ரீடா விவிதா ராஜன் பத்மின் யஸ்சாமலோதகா -ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந-என்றும்(மற்றவை எல்லாமே நரகத்துக்கு சமமாகும் )
காலம் ச பசேத யத்ர ந காலஸ் தத்ரவை பிரபு (காலம் வைத்து தளிகை பண்ணுவார் போல் நன்மை நடாத்திப் போகிறவர் இருக்கும் இடத்தில் காலம் பிரபு அல்லவே)-என்றும்
கலா முஹுர்த்தாதி மயஸ் சஹாலோ ந யத் விபூதி பரிணாம ஹேது (அங்கு பரிணாமமே இல்லையே )–என்றும்
அண்டகோஸாத் சாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்திதோ அஹம் பரமே வ்யோமன் அப்ராக்ருத சரீரவான்(ஸூத்த ஸத்வ மயம் ) -என்றும்
யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமந் த்ருவம் -யத் பதம் ப்ராப்ய தத்வஞ்ஞா முச்யந்தே சர்வ கில்பிஷை -(அடைந்த பின்பு கல்மஷம் விடுபட்டவன் -ராஜ குமாரனை முடி சூட்டி சிறையில் இருந்து வெளியே எடுப்பது போல் )என்றும்
அண்டேப்ய பரதோ நித்யம் த்ரி பாதேந விராஜதே –இதரேணது பாதேந பிராக்ருதே அண்டே விராஜதே –என்றும்
இத்யாதியான யோக யாஞ்ஜ வல்க்ய பஞ்சம வேத புராண ரத்ன சமுதஞ்சித ப்ராமாண்ய பாஞ்சராத்ராதி வசன சஞ்சயங்களிலும்

மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்களாலே
நலம் அந்தமில் நாடு -என்றும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு திரு நாடு -என்றும்
மாக வைகுந்தம் -என்றும்
தெளிதாகிய சேண் விசும்பு -என்றும்
இத்யாதி வாக்ய சதங்களிலும் அறுதியிடப்பட்ட அளவிறந்த ஏற்றத்தை உடையதாய்

குணா பிரதானம் புருஷ பரம் பதம் பராத்பரம் ப்ரஹ்ம ச தேவி பூதய–(ஸ்தோத்ர ரத்னம்
)என்றும்
பரம யோகி வாங் மனசா அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ -(வைகுண்ட கத்யம்)
என்றும்
நிரதிசய வைகுண்ட நாதா –
என்றும்
காலாதிகா தவ பரா மஹதீ விபூதி –(வைகுண்டம் ஸ்தவம்) என்றும்
யத் தூரே மனசோ யதேவ தாமஸ பாரே யதத் யத்புதம் -(குணரத்னகோசம்
)என்றும்
சர்வ பூர்வ தேசிக ஸ்தோம ப்ரசஸ்தமாய்

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||–ஶ்லோகம் 17 –1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

இப்படி வேதாந்தங்களாலும் -ருஷிகளாலும் -ஆழ்வார்களாலும் -ஆச்சார்யர்களாலும் –
ஏக கண்டமாகப் ப்ரதிபாதிக்கப் பட்ட (பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -ரிஷிகள் ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள் ) பிரபாவ அதிசயத்தை உடைய பரம பதத்திலே

பிரகாரைஸ் ச விமநைஸ் ச சவ்தை ரத்ன மயைர் வ்ருதா-(இட வர்ணனை -ரத்ன மயம் )என்றும்
மணி தோரண சித்ராட்யா விசித்திர த்வஜ சாலிநீ (மாலு நீ –பாட பேதம்)-என்றும்
கோடி வைஸ்வாநர ப்ரய க்ருஹ் பங்க்தி பிரா வ்ருதா –என்றும் சொல்லுகிறபடியே
கொடி யணி நெடு மதிள்களையும் கோபுரங்களையும் உடைத்தான திருப் படை வீட்டிலே
மணி மாட மாளிகைகளாலே சூழப் பட்ட செம்பொன் செய் கோயிலிலே

சஹஸ்ர தூணே விசித்ரே த்ருட உக்ரே யத்ர தேவாநா மதி தேவ ஆஸ்தே -என்றும்
மத்யேது மண்டபே திவ்யே ராஜா ஸ்தானம் மஹோச்ச்ரயம் –மாணிக்ய ஸ்தம்ப சாஹஸ்ர ஜுஷ்டம் ரத்ன மயம் ஸூபம் —
நித்ய முக்தைஸ் சமா கீர்ணம் சாம கான உபஸோபிதம் அதீவ தத் சதா பூர்ணம் ( பதம் புண்யம் -பாட பேதம் )-என்றும்
மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து -என்றும் சொல்லப்பட்ட
ஆனந்த ஏக ஆர்ணவமான திரு மா மணி மண்டபத்திலே
பர்யங்க வித்யாதி ப்ரத்யோதித அநவத்யா மஹாத்ம்யத்தை உடைய திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே

உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -கோப்புடைய சீரிய சிங்காசனத்தில்
ஹிரண்மயே பரே கோசே விரஜம் ப்ரஹ்ம நிஷ்களம் தச் சுப்ரம் ஜ்யோதிஷாஞ் ஜ்யோதிஸ் தத் யதாத்ம விதோ விது-என்றும்
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோபாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி -என்றும்
தீவி ஸூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பத் உத்திதா யதிபாஸ் சத்ருசீ சாஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்மந-என்றும்
ஸ்ரக் வஸ்திர ஆபரணைர் யுக்தம் ஸ்வ அநு ரூபைர் அநூபமை -சிந்மயைஸ் ஸ்வ பிரகாஸைஸ் ச அந்யோந்ய ருசி ரஞ்ஜிதை -என்றும்
சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளம் -என்றும்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்றும் சொல்லுகிறபடி
நிரவதிக தேஜோ ரூபமாய் –சதைக ரூபமாய் நித்ய சித்த பரமேஷ்ட்யாதி பஞ்ச உபநிஷந் மயமாய்
ஸ்வ அனுரூபமாய்ச் சிந் மயமாய் விளங்குகிற கிரீடாதி நூபுர அந்தமான
திவ்ய ஸ்ரக் வஸ்திர ஆபரண பூஷிதனாய்
ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் மெய்க்காட்டுகிற திவ்ய ஆயுதங்களால் தீப்யமானனாய்

நிரதிசய ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனாதி அபரிமித உதார குண கண நிதியான
திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய்
இவ் வடிவு அழகு அடங்க காட்டில் எரித்த நிலா வாகாமே
பிருஹச் சரீரோபி விமாந தேஹோ யுவா குமாரத்வம் உபேயிவான் ஹரி ரேமே ஸ்ரீயாஸ்ஸு
ஜெகதாஞ் ஜநந்யா ஸூஜ்யோத்ஸ்நயா சந்த்ர இவாம்ருதம் ஸூ -(சந்த்ரனும் ஒளியுமாப் போல் )என்றும்
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மடமகள் என்றும் சொல்லுகிறபடி இரண்டு அட்டத்திலும் இருந்து அனுபவிக்கிற
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல வாயர் கொழுந்துக்கும் கேள்வனாய்க் கொண்டு
ஸ்ரீ பூமி நீளா தேவிமாருடன் வீற்று இருந்து
இப்படி கண்ணன் விண்ணூரான வைகுண்ட மா நகரிலே திவ்ய போகம் நடவா நிற்க

அச் சேர்த்தி அழகைத் தலை நீர்ப்பாட்டிலே கண்டு அனுபவித்து நிர்ப்பர ஸ்துதி பண்ணி
நம-என்பது
ஜிதம் -என்பது
பல்லாண்டு -என்பதாய் -அக்ரமமாகப் பிணங்கி அமரர் பிதற்றுமது கண்டு
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை என்கிறபடியே
அஸ்தாந ரஷா வ்யசனிகளாய் -தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரராய்
ஸூரயோ நித்ய சம்சித்தாஸ் ஸர்வதா சர்வ தர்சின -என்கிறபடியே
முடியுடை வானவரான அயர்வறும் அமரர்களாலும் –
ஸூர்ய கோடி பிரதீ காசா பூர்ணேந் த்வயுத சந்நிபா யஸ்மின் பதே விராஜந்தே
முக்தாஸ் சம்சார பந்த நாத் -என்னும்படி -கரை கண்டோராய்
அனந்த வைனதேயாதிவத் அத்யந்த அந்தரங்கரான அனந்த முக்த ப்ருந்தங்களாலும்
அனவரத பரிச்சர்யமான சரண நளினனாயக் கொண்டு

ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான் ஈஸ்வரந்தம் விஜாநீமஸ் ச சம்புஸ் ச பிரஜாபதி –
என்கிற வேண்டற்பாடு தோன்ற
ஏழு உலகும் தனிக் கோல் வீற்று இருந்து -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய
திருவரங்கச் செல்வனார் -என்றும் சொல்லுகிறபடியே உபய விபூதி நிர்வாஹனாய்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் என்கிறபடியே கண்ட காட்சியில் தான் உபய விபூதி நிர்வாஹனானமை தோற்ற எழுந்து அருளி இருந்து
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண அனந்த ஞானானந்த ஏக ஸ்வரூப -என்கிறபடியே தானும் நிரதிசய ஆனந்த உக்தனாய்
அயர்வறும் அமரர்கள் என்கிறபடியே நித்ய அசங்குசித ஞானராய் இருந்துள்ள அனந்த கருட விஷ்வக்ஸேன பிரமுகரான நித்ய ஸூரி களையும்
இயக்கெலாம் அறுத்து -என்கிறபடியே நிவ்ருத்த சம்சாரருமாய் அசங்குசித ஞானருமாய் அந்த நித்யரோபாதி லப்த கைங்கர்யருமான முக்தரையும்
அந்தமில் பேர் இன்பத்து அடியர்-என்னும்படி ஆனந்திப்பித்துக் கொண்டு இருக்க போரா நிற்க

இவர்களோபாதி சம்சாரிகளும் நம்மை அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதி காரித அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷதைக ரதி ரூப நித்ய நிரவத்ய நிரதிசய ஆனந்த ரூப மத் கைங்கர்யம் ஆகிற மஹா சம்பத்தைப் பெற்று
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து இருப்பதே என்று
மிகவும் வியாகுல அந்தக் கரணனாய் அங்குத்தை அனுபவங்கள் ஒன்றும் உண்டது உருக் காட்டாதே
ச ஏகாகீ ந ரமேத-என்கிறபடியே அவன் தனியரைப் போலே போர நொந்து (பெருமாள் இலஷ்மணன் உடன் இருக்கச்செய்தே எப்போது பரத சத்ருக்ந உன்னுடன் சேர்வேனோ -என்று அருளிச் செய்தது போல் )இவர்கள் கரண களேபர ஸூந்யராய்
லூந பஷ இவாண்டஜ-என்கிறபடியே இறகு ஒடிந்த பஷி போலே இருக்கிற படியைக் கண்டு
கரண களேபரைர் கடாயிதுந் தயமாந மநா -(காருணிகனான ஸர்வேஸ்வரன் நீர்மையாலே கொடுத்தருளி )என்றும்
பல்லுயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே -என்றும் சொல்லுகிறபடி பரம தயாளுவாய்க் கொண்டு
அகில ஆத்மாக்களுக்கும் கரண களேபர பிரதானம் பண்ணி அருள-இவர்களும்

விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும்–பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா -(தன்னை வணங்க வைத்த கரணங்கள் உமக்கன்று )என்றும்
நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -என்றும்
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை -என்றும்
தேனேய் மலரும் திருப் பாதம் என்றும்
துயரறு சுடரடி என்றும் சொல்லுகிறபடி
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொடுத்த கர சரணாதி அவயவ சங்கா தாத்மகமான சரீரத்தைக் கொண்டு
அவன் நினைவின் படி செய்யாதே
சமித்தை தறிக்கக் கொடுத்த கத்தியைக் கொண்டு பசுவின் வாலைத் தறிப்பாரைப் போலேயும்
களை எடுக்கக் கொடுத்த கோலைக் கொண்டு கண்ணைக் கலக்கிக் கொள்வாரைப் போலேயும்
ஆறு நீந்தக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரை ஏறலாய் இருக்க அது செய்யாதே
நீர் வாக்காலே ஒழிகிக் கடலிலே புகுவார் போலேயும்
ஆக்கையின் வழி உழன்று சப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கர்ம ப்ரவாஹத்தாலே
பிறவி என்னும் பெரும் கடலிலே புக்கு அநர்த்தப் படுகிறபடியைக் கண்டு

நல் வழி கண்டு நடக்கைக்கு உடலாக
ஸாஸநாத் ஸாஸ்திரம் -என்றும்
ஹர்த்துந் தமஸ் சதசதீச விவேக்து மீசோ மாநம் ப்ரதீப மிவ காருணிகோ ததாதி–என்றும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள் செய்து -என்றும்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகப் பண்டே பரமன் பணித்த பணி வகை -என்றும்
சொல்லுகிறபடியே தன் கிருபையாலே ஸாஸ்த்ர பிரதானம் பண்ணின இடத்திலும் அதன் படி செய்யாதே

ஈஸ்வரோஹம் அஹம் போகீ ஸித்தோ அஹம் பலவான் ஸூகி ஆட்யோ அபி ஜனவாநஸ்மி கோ அந்யோ அஸ்தி சத்ருஸோமயா -(கீதையில் அஸூர ஸ்வபாவம் )என்றும்
யோ அந்யதா சந்தமாத்மாந மந்யதா பிரதிபத்யதே –கிந்தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா-(பிறர் நன்பொருளை அபஹரித்த பெரும் திருடன் )என்றும்
கொல்வன முதலா வல்லன முயலும் (அக்ருத்யங்களை அனைத்தும் செய்து போந்த)–என்றும் சொல்லுகிறபடியே அகில பாப ஹேதுவாய் ஸ்வ ஸ்வாதந்தர்ய ரூபமான
ஆத்ம அபஹாரத்தைப் பண்ணி அநாதி கர்ம வாசனா தோஷ தூஷித அந்தக் கரணாய் அபேத ப்ரவ்ருத்தராய்
இருக்கிற படியைக் கண்டு ஓலைப் புறத்துச் செல்லாத நாட்டை எடுத்து விட்டுக் குறும்பு அறுக்கும் ராஜாக்களைப் போலே
சர்வேஸ்வரனும் நாமே போய் இவர்களை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு வர வேணும் என்று
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திவ்ய அவதாரமாக அவதரித்துப் படாதன பட்டுத் (நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு )திருத்தப் பார்த்த இடத்திலும்

ஆஸூரிம் யோநிமா பந்நா மூடா ஜென்மநி ஜென்மநி மாம் அப்ராப்யது கௌந்தேய ததோ யாந்த் யத மாங்கதிம் –(16-20)-என்றும்
அவஜா நந்தி மாம் மூடாம் மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவம் அஜானந்தோ மம பூத மஹேஸ்வரம்(9) -என்றும்
சொல்லுகிறபடியே சஜாதீய பிரதிபத்தியாலே அவிஞ்ஜை பண்ணி எதிர் அம்பு கோப்பாராய்ப்
பல பல நாழம் சொல்லிக் கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வைது
வல்லவா பழித்து வாக் துருத்தங்கள் பண்ணுவாராய் ஆஸூர ப்ரக்ருதிகளாய்த் தன்னை வந்து கிட்டாமை அன்றிக்கே
அஹம் மே என்று எதிரிட்டுக் கொண்டு அதமமான கதிகளிலே விழுகிறபடியைக் கண்டு
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த தனியனாகையாலே விசஜாதீயரான நமக்கு இது சாத்தியம் அன்று என்று பார்த்து
பார்வை வைத்து மிருகம் பிடிப்பாரைப் போலே மனுஷ்ய சஜாதீயரான ஆழ்வார்களை இடுவித்து

ஜகத்தை திருத்தி அருள வேண்டும் என்று பார்த்து அருளி ஸ்ரீ வத்ஸ ஸ்ரீ கௌஸ்துப ஸ்ரீ வைஜெயந்தி வனமாலைகளையும் —
ஸ்ரீ பூமி நீளை களையும் ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களும் அனந்த கருட விஷ்வக் சேந ப்ரப்ருதிகளையும் பார்த்து
நீங்கள் போய் லீலா விபூதியில் நாநா வர்ணங்களிலும் அவதரித்து அகில ஆத்ம உத்தாரணம் பண்ணுங்கோள் என்று நியமித்து அருள –
அவர்களும்
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிச–என்றும்
தாம்ரபரணீ நதி யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவிரி ச மஹா பாகா பிரதீஸீச ஸரஸ்வதீ-என்றும் சொல்லுகிறபடியே
இந்நதிகளின் சமீபங்களான த்ரமிட பூ பாகத்திலே நிமக்நரை உயர்த்த நாநா வர்ணங்களில் வந்து அவதரிக்க
சர்வேஸ்வரனும் அவர்களுக்கு மயர்வற மதி நலம் அருளி அவர்கள் முகேன
சர்வாதிகாரமான த்ரமிட வேத ரூப திவ்ய பிரபந்தங்களை பிரகாசிப்பித்து அருளினான்
எங்கனே என்னில்-

பிரவேசம் முற்றிற்று–

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

February 8, 2019

திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா—உபாதானத்வம் ஏவ-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-
மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/மிக்க வேதியர் –
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை
பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து அஞ்ஞானம் போக்கினவர்

மா மறையோர்–
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக் கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/
இவர் மா மறையோர் என்பதால்-
திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//
அந்யோந்ய ஆஸ்ரயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/
மா மறையோர் ஆகிறார்
மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /-ததீய வைபவம் அறிந்தவர்-
அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்-சமாக்யா பந்ததி பாதுகா சஹஸ்ரம் –

தொல்-
பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழ மன்னர்கள்//
பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/-

நகரம்
நகரங்களில் இறே நல்ல வஸ்துக்கள் இருப்பது
நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும் அனுபவம் கிட்டும்
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –
உண்டோ ஒப்பு என்று திவ்ய தேசம் -ஆழ்வார் -திவ்ய பிரபந்தம் அனைத்துக்கும் மா முனிகள் –
தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமை/

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்
தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
கனக நாம்நி — பொன்னி–பொன் அலைக்கரங்கள்-மகரந்த துகள்களால் மூடப்பட்டபடியால் –
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–
ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரமும் நீளா துங்க தனியனும் பட்டர் திருக் கோஷ்ட்டியூரிலே இருந்து அருளிச் செய்தார்
பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-
அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் –
இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா–2-3-2–அஞ்ஞானம் போக்க –
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

February 8, 2019

திருமாலை ஆண்டான் தனியன்–ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் //
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்—ஆளவந்தார் திருக்குமாரர் – தமிழ் தனியன்-ஆளவந்தார் திரு குமாரர்

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்
ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்/ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-

பிள்ளை லோகம் ஜீயர்-அவதாரிகை
ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது -தொழுகை ஸ்தோத்ரம் –
நம்மது -இத்தை ஒன்றை கொண்டு மதாந்தரங்கள்-ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது இத்தால் –
குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-
செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்-
பேராத சீர் அரங்கத்து ஐயன்-/சொல் மாலையும் பூ மாலையும் /
ஸ்துதி அபிவாதனம்–ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் -மற்றைய மதஸ்தர் இவற்றை செய்கின்றனர்
பெரிய ஆழ்வார் ஆண்டாள் போல/ஸுக்தி மாலை திரு மாலைக்கும் இதற்கும் –
ப்ராபோதிகீம்-திரு பள்ளி உணர்த்துகிற -ஸூக்திமாலாம்-
இது தான் திருப்பள்ளி எழுச்சிக்கு தனியனாக இருப்பது

ராஜா போல-சொல்ல வந்தவர்- ராஜ வத் அர்ஹநீயம்–ராஜாவாலே பூஜிக்க பட்டவர்/-
சக்ரவர்த்தியாலே-சக்கரவர்த்தி திரு மகன்-இலங்கையர் கோன் வழி பாடும் செய் கோவில்-
சக்கரவர்த்தி திரு மகன்-ராமனாலே பூஜிக்க பட்ட -/-
மா மழை முக்குழிலில் மாய்ந்து ஆழ்ந்தார்கள் -பக்தன் பெருமை என்றும் நிற்கும்-
ராஜாவத் பூஜ்யராய்-ராஜாவால் பூஜிக்க பட்டவராய்-ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –
அரங்கமும் ரெங்கனும் -வேதமும் பிரதி பாத வஸ்துவும் போலே//ஒன்றினால் மற்ற ஒன்றுக்கு வைபவம்-
வேதம்-பகவானை சொல்லும் /சுருதி பிரசித்தமான பர வாசுதேவன் -இவனே என்று பிரதிபத்தி பண்ணி-உறுதியாக நம்பி-
ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்காய்

எடுத்து காட்டு-உயர்ந்த வஸ்து கொண்டு தான் சொல்லணும் இந்த ராஜா இல்லை/
ராமன் கௌசல்யை தேவிக்கு பிறந்ததும் அதிதி தேவி வஜ்ர பாணியை பெற்ற ஆனந்தம்-
இந்த்ரன் இல்லை வாமனன்-வஜ்ர ரேகை என்று அர்த்தம் அருளி சமாதானம் அடைந்தார் –
வஜ்ராயுத பாணி இல்லை/வஜ்ர லாஞ்சனம்–மதீயமூர்த்தன் அலங்கரிஷ்யதே –

ரங்கேசயம்–
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய-ராமனால்-பூஜிக்க பட்ட பெரிய கோவில் –
கருவிலே திரு இல்லாதீர்-/கடலில் முன் கடல் சாய்ந்தால் போலே -பணி புங்கவே-பட்டர் –
புனர் அபி விபீஷணனுக்கு ஆனந்தத்துக்காக இங்கே –
/திரு பாற்கடல் திரு புல்லாணி திரு அரங்கம் -மூன்றிலும் சயனம்/
திரு முடியை காட்டி திரு வடியை காட்டி கொண்டு-/கொடுத்து கொடுத்து நீண்ட திருக்கை-
அரங்கத்து அரவணை பள்ளியான்-
அரங்கம் தன்னுள் பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் –பிரமாணங்கள் சொல்லி அர்த்தம் விளக்குகிறார்

/கிளி சொன்ன ஸ்லோகம் பிரணவாகார விமானம் காட்டி கொடுக்க தர்ம வர்மாவுக்கு /
காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச-வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்தம் பிரகாசா – சொல்லிக் காட்ட –
கிளி சொல்லி ஸ்லோகம் -ஸூகர் பாகவதம் -தர்ம வர்மா விபீஷணன் இருந்த காலம் சோழ ராஜர் –
இடம் மண்ணால் மூட -விபீஷணன் / தர்ம வர்மா /கிளி சோழன் —மூவரும் பிரசித்தம் –
கிளி மண்டபம்-உண்டு-படுக்கை வாய்ப்பாலே -மெத்தன்ன பஞ்ச சயனம்-நறு மணம் விசாலம் குளிர்ச்சி மென்மை வெளுப்பு

படுக்கை வாய்ப்பாலே -பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள் /
வண்டினம் முரலும் சோலை..பூரணமாக -கல்யாண குணங்களால் நிரம்பி-
மத்வா-
பர வா ஸூ தேவனாகவே புத்தி பண்ணி –
இங்குத்தை படியை விசாரியாதே அங்குத்தை படியை -இருப்பிடமே அனுசந்தித்து –
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -அர்சைக்கு ஆதீனம் இங்கு-
சங்கல்பம் அடியாக அங்கு–நெஞ்சினால் நினைப்பவன் எவன் ஆகும் நீள் கடல் வண்ணன் அவன் இவன்–3-6- என்று/
கடல் நிற வண்ணனே —
துயரில் சுடர் ஒளி தன் உடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே –
துயரில் பிறவி மலியும் மநிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நில உலகில் புக வைக்கும் அம்மான் –
பிறவி நீக்கி-பிறவிக்கு துக்கம் செய்து என்றபடி –
தன் தெய்வ நிலை உலகில் புக வைக்கும் அம்மான் -துயரமில் சீர் கண்ணன் மாயனை பாடி-/

கடல் வண்ணனே வாசுதேவன்-சர்வம் பூரணமாய் -இங்குத்தை அவன் படி -இருப்பது-
யாவரும் வந்து அடி வணங்க-ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும்-
பூர்ண ஷட் குணமாய் -ஞான பல ஐஸ்வர்ய வீரய சக்தி தேஜஸ் –
இங்குண்டு-அங்கு உண்டா கேளுங்கோ-இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் சகோம் –
இது தான் எல்லா விதத்திலும் பூர்ணம் என்று அர்ச்சையை சொல்லிற்றே /
தயை ஷமை சௌசீல்யம் வாத்சல்யம் இங்கு தானே காட்ட முடியும்-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ..
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே-மேலை வீடும் கீழை வீடும் சொல்லும் பாசுரம் –
எல்லா விதத்திலும் பூர்ணம் -ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும் –
அங்கு முக்தருக்கும் நித்யருக்கும் தானே-

ஏவ-
அவதாரணம்- வாசுதேவனே இவன்-
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்- என்றும்
க்ரியதம் இதி மாம் வாத -க்ருஷ்யாம் என்றும் –
அருள பாடு சொல்லி தான் எல்லா கைங்கர்யமும் இங்கும்-வண்டு அமரும் குளிர் விழிகளாலே என்றும் –
எதிர் விழி கொடுக்கும் பர வாசுதேவனே இவன் ஆதி மூர்த்தி –இச் சுவை பெற்று -.
இந்திர லோகம் வாழும் அச் சுவை பெறினும் வேண்டேன்-ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே திரு மாலை- 14/
பக்தி இங்கு அதிகம் இந்திர லோகம் அச்சுவை பெறினும் வேண்டாம் அரங்க மா நகர் உளானே –
என்றும் அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
திரு நாமம் ரஷிக்கும் முதலில் சொல்லி போக்கியம் என்று அடுத்து சொல்லி –
இச் சுவை-உன் தன் திரு நாம சங்கீர்த்தனமே இங்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும்/
ஸ்ரீ வைகுண்டம் விட ஏற்றம்-இவர் மண்டி இருப்பது இங்கு/

தம்-
அந்த திரு அரங்க நாதன்-என்ன சொல்லி என்-அவர் அவர் தான் போல–
அந்த-எல்லா பெருமையும் -சௌலப்ய/
மூன்று சொல்லி-
அந்த ராஜா பூஜித்த –
அந்த பர வாசு தேவ /
அந்த ரெங்கேசன் –எங்கு சேர்கிறோமோ அது தானே பிரதானம்–
தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்
தம்-
ரெங்கேசர் கூட தான் சேர்க்க வேண்டும்-மற்றவை இரண்டாம் பட்ஷம்/
பரத்வத்துக்கு வாசகம் அவை இரண்டும்/ நமக்காகா இங்கு கிடக்கிறானே சௌலப் யத்துக்கு எல்லை காண முடியாமல்
அந்த எளிமை-நம்மாலே அணுகி ஆச்ரயிக்க கிடக்கிறானே /
பர வாசுதேவன்
என்று சொல்லி வியூக வாசுதேவனை விட -வ்யாவர்த்தி சொல்ல-
பாஞ்சராத்ர ஆகமம்-பாற்கடல் சயன குணம் வியூக சொவ்கார்த்தம் பிரதானம் இங்கு-சயனமும் பொது -வ்யாவர்த்தி சொல்ல –

பர வாசுதேவன்
ஆத்மாநாம்- வாசுதேவாக்யாம் சிந்தியம் மதுசூதன —
தன்னையே நினைந்து கொண்டு ஆழ்வார்களை அனுபவித்து கொண்டு-
சிந்தனைக்கு பிரமாணங்கள்-
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –
என் செய்கின்றாய் பெரிய பெருமாள் இடம் ஆழ்வார் கேட்க–
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்—சொத்துக்கு ஹானி வந்தால் சுவாமிக்கு தானே ஹானி-
திரு பாற்கடலில் தான் இந்த நினைப்பு/ அங்கு -ஸ்ரீ வைகுண்டத்தில் -ராஜ தர்பார் போல/
இயற்கையாக நமக்கு அவன் கூட இருப்பது தான் ஸ்வாபிகா ஞான ஆனந்த மயன் ஆத்மா –
/கூப்பீடு கேட்க்கும் இடம் -ஜகத் ரக்ஷண சௌஹார்த்தம்–வ்யூஹ ஸுஹார்த்தமும் உண்டே இங்கும் –
ஸ்ரீ வைகுண்டம் ராஜ தர்பார் -வீற்று இருந்த திருக் கோலம் -முக்தர்கள் வந்து கொண்டே இருப்பர் –
பெரிய ஓலக்கம் -ரக்ஷண சிந்தைக்கு உசித ஸ்தலம் திருப் பாற் கடல் தானே
இவர் பர வாசுதேவனாகவே நினைந்து கொண்டு இருக்கிறார் —
இவர் பரிபூரணம் அனுபவம் பண்ணும் பர வா ஸூ தேவனாகவே என்னில் இருப்பர்

ஸ்ரீ ரெங்க மகாத்மயம்-
காவேரி விரஜா சேயம் .வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வா ஸூ தேவோ ரங்கேசா.
பிரத்யட்ஷம் பரமம் பதம்-அந்த வாசுதேவன்
ஸ்ரீ வைகுண்ட-விரஜை -வைகுண்டமும்- வாசுதேவனும் சேர்ந்து இருப்பதால்
அண்டர் கோன் அணி அரங்கன்-என்றும்
வானோர் தலைவனே என்னும் அரங்கனே என்னும் –என்றும்-
மர்மம் தெரிந்த ஆண்டாள் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகமும் அங்கு ஆதும் சோராமே
ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் -என்றும்
முளை கதிரை திரு குறுங்குடி முகிலை… மூவா மூவுலகும் கடந்து அப்பால் அளப்பரிய ஆரமுதை–
ஆகாசத்தில் கடல்-அரங்கமேய அந்தணனை-கடலில் இருந்து சொட்டு விழுந்து கடல் ஆனது இங்கும்–
அடி அறிவார் -ஆழ்வார்கள்-/-அனுசந்தித்தார்கள் அன்றோ –

அமுதம் கடலில் இருந்தால் வேடிக்கை பார்க்கலாம் நாம் அனுபவிக்க இங்கு வந்தானே -என்றும்-
அமுதம் கடலில் இருந்தால் அனுபவம் இல்லை -நமக்கு பருகி உண்டு கழிக்கும் படி ஸுலப்ய காஷ்டை
விண்ணவர் கோன் -விரையார் பொழில் வேங்கடவன் -நீல் மதிள் அரங்கத்தம்மான் என்றும் -ஸ்தான த்ரயம்

அர்த்தம் அறிய சுமார் எத்தனை ஜன்மம் ஆகும்-தப்பு எத்தனை ஜன்மம் எடுத்தாலும்
சுமாரான அர்த்தமே தெரிந்து கொள்ள முடியும் /
என் நெஞ்சுக்குள் இருந்து-வாய் முதல் அப்பன் தானே தன்னை தான் பாடி-கீதை போல சொல்லி இருக்கலாமே-
அதே நிலைமை ஏற்பட்டு இருக்கும்-தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம் /

வடக்கு வாசலில் வழியே வந்து சயனித்த திரு கோலம்-பர வாசுதேவனே இவன்/
துவாதச அஷர மந்த்ரம்/ ஷடஷர விஷ்ணு /நாராயண காயத்ரி-ஸ்ரீ ரெங்க நாத ஜகன் நாத /என்னும் படி-
மந்த்ரங்கள் எல்லா வற்றுக்கும் ராஜா-ரஷிக்கும் ஓம் பகவதே வாசுதேவ-
மந்திரங்களுக்கு எல்லாம் ரக்ஷணம் ராஜா -துவாதச அக்ஷரம் -பாஞ்ச ராத்ரம் சொல்லும் –
அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத –
வேண்டும் என்றால் ஜகன் நாதர்/நமக்கும் நாதர்/உபய விபூதிக்கும் நாதர்-

ராஜாக்களை பள்ளி உணர்த்துவது போல இவருக்கு அருளுகிறார் /
தசரதர்-கைகேயி-தூங்கா விடிலும் எழுப்ப வந்தவர்கள் கைங்கர்யம் பண்ண வந்தார்கள்-
அது போல தூங்காமல் யோகு செய்பவன் இவனுக்கும் கைங்கர்யமாக பண்ணுகிறார்/

அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் இனிமையாய்-தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை-
ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்/
பணித்த ஆழ்வாருக்கும் பெருமை/குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார்
அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே -ஏற்கும் நால்வருக்கும்

ஈடே-
தொழுவதும் ஸ்தோத்ரம் பண்ணுவதும் இரண்டையும்-வசிக்க- சொல்ல கடவது -வாசகம் -சொல்ல என்றபடி..
ஸ்தோத்ரமும் தொழுவதும் கொண்டு இரண்டு இதர மதங்கள் –
அயோத்தி எம் அரசே–என்று இ றே இவர் பள்ளி உணர்த்துவது -ராஜாதான் /
ஸ்ரீ மதே ராஜ ராஜானே -ஏஷ ராஜா விபீஷணன்-
ராவணன் முன் சுக சாரணர் தூதர் சொல்ல-ஸ்ரீ மதாம் ராஜ ராஜென லங்கா நாம் -இந்த ராஜாவான விபீஷணன் –
அக் கரையிலே பட்டாபிஷேகம் லோக ராஜாவால் செய்ய பட்டான்-உலகுத்துக்கு இவரே ராஜா என்பதால்-
அபிஷேப்பிக்கப் பட்டான் -ஜகத்து ராஜா அன்றோ முடி சூட்டினான் -சக்கரவர்த்தி திருமகனால் –
ராமன் ராஜ ராஜா/ராஜாதி ராஜம் ஸர்வேஷாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்/
வீர விபுத்சத்வ ஜகத் /கௌசல்யா நந்த வர்த்தனனே- என்றும்-
கௌசல்யா ஸூப்ரஜாகா-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்றும் /
ராஜா /ராஜா ராமன்/துயில் எழுப்ப வேண்டும்/பிரமாணம் கொண்டே எழுதுவார்கள்/-
ராஜா -ராஜா ராமன் -அவரை போலே -அங்கு போலே இங்கும் பள்ளி உணர்த்தி -அவருக்கும் பெரிய பெருமாளாய்-
பெரிய பெருமாளான-ஸ்ரீ ரெங்க ராஜர் -பெயர் பெற்ற என்கிறபடி –
எதற்க்காக பிரமாணங்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் -கால ஷேபத்தின் மூலம் அறிந்து ருசி விளைக்க
உபன்யாசம்- ருசி விளைக்க– கால ஷேபம் கொண்டு ஆழ்ந்த அனுபவம்/

இவர் பெருமாள்–அவர்க்கும் பெரிய பெருமாளாய்–பெரிய பெருமாளான ஸ்ரீ ரெங்க ராஜரை இறே இவர்
திரு பள்ளி எழுச்சி /காலம் உணர்த்தி –அதிக்கிரமித்த படியையும் /
பிரம்மாதி தேவர்களும் திரு வாசலில் நெருக்கி கொண்டு நிற்கிற படியையும்–அங்குத்தையில் சம்மர்த்தையும் –
திருப்பள்ளி உணர்ந்தால் கண்டு அருளும்படி –
மங்கள வஸ்துகள் வைத்து பறித்த படியையும் / மங்கள வாத்திய தொனியும்/
மங்கள தீபம் போல ஆதித்யன் உதித்துத் தோற்ற–
கும்ப ஹாரத்தி போல சூர்யன்/பொறி தட்டி தாமரை மலர்வது போல கற்பூர ஹாரத்திகள்/தீபிகை விகசித்து-அரவிந்தங்கள்
இவை எல்லாம் ராஜா அர்ஹநீயங்கள்//
ராஜா வான படி எல்லாம் பண்ண வேண்டும் என்றவர்
இப்பொழுது-இவை எல்லாம் நடப்பதால் அவன் ராஜா என்கிறார்/
அரங்கத்து அம்மா பள்ளி எழுந்து அருளாய்–பொதுவாக சொல்லி –
ஒரு பாசுரத்தில்–இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோவில் என்கிறார் இவரே/

ப்ராபோதிகம்-திரு பள்ளி எழுச்சி ஆகிற சொல் மாலை/திரு மாலையும் ஸூக்தி மாலை தான் -/
அதிலும் -என்னை நோக்காது ஒழி வதே அரங்கத்து அம்மா என்றும் –
அளியல் எம் பையல்-என்னா-என்றும்
கிடைந்த தோர் கிடை அழகை-எங்கனம் மறந்து /
நடை அழகை அனுபவிக்க இங்கு-/இரண்டும் பெரிய பெருமாளுக்கு ஸூக்தி மாலைகள் /
பகவந்தம் ஞான பக்தி சம தமம் /பக்தாம் அங்க்ரி ரேணும்/-ஞானம் காரணம் -தொண்டர் அடிப்பொடி கார்யம்-
காரணம் காரியம்/-ஞானம் காரணம் தொண்டர் அடிப் பொடி கார்யம் -நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் போல/
அடியார்களுக்கு அடியார் என்பதால் ஞான ஆதிக்யம் – இருந்ததால் தான் அடியார்க்கு அடியார் ஆனார்/
பீஜாங்குர நியாயம் -இரண்டையும் ஒரு சேர அருளுகிறானே-
ஒரு சேர வளர்கிறான்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே/
தொண்டர் அடி பொடி- இரண்டிலும் தலை கட்டுகிறார் /
சூட்டு நன் மாலை —படியே பாகவத முக உல்லாச ஹேதுவான பகவத் கைங்கர்யம் பிரார்த்திப்பது போலே
அடலாயர் தம் கொம்பினுக்கே -ஆழ்வார் பாசுரம் படி-பாகவத முக விலாசம் காரணம் என்பதால்
பகவத் கைங்கர்யம் – பிரார்த்திக்கிறார்-இவர் கைங்கர்யமும் -சூட்டு நன் மாலைகள்/
இவரும் புஷ்ப கைங்கர்யம் என்பதால் இந்த பிரமாணம் –
ஈடே
என்று அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் சொல்லித் தலை கட்டுகிறது-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் —

February 2, 2019

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம் –

உபசார ஆச்சார்ய உத்தார ஆச்சார்ய சம்பந்தம் இரண்டையும் காட்டி அருளிய தனியன்
சரமாவதாரம் -பரமாச்சாரியார் அன்றோ-

யதி வர தத்வ வித் நம நம -எறும்பியப்பா -வித் -அறிபவர் அடைந்தவர் –
எம்பெருமானார் தன்மையையே அடைந்தவர் அன்றோ மா முனிகளும்
உபாய உபேய உண்மை ஆகாரம் அறிந்தவர் என்றுமாம்

வர வர முனி -பரத்வம் தேடிப்போன பிருகு முனியை முன்னமே -இவரது திரு அவதாரம் ஸூசகம்

திருவனந்த ஆழ்வானை-எம்பெருமானாரைப் போலே அனைத்து உலகும் உஜ்ஜீவிப்பார் ஒருவரைக் கொண்டு
பிரபத்தி சம்பிரதாயத்தை நன்றாக நிலை நிறுத்த பெரிய பெருமாள் நியமிக்க –
திருநாவுடைய பிரான் தாசர் அண்ணருடைய தேவிகள் கர்ப்பத்தை அடைந்து அருள -மா முனிகள்
கலியுகத்தில் –4472-சக வருஷம் -1292-சாதாரண வருஷம் -ஐப்பசி மாதம் -26-நாள்
சுக்ல பக்ஷம் -வியாழக்கிழமை -சதுர்த்தி -திரு மூலம்-திரு நகரியிலே -திருவவதாரம்
ஜாத கர்மம் பண்ணி -12-நாள் திரு இலச்சினை சாத்தி -அழகிய மணவாளர் திருநாமம் –
சிக்கில் கடாரத்தில் அம்மான் திருமாளிகையில் வளர்ந்து வந்தார்

இவர் திருவவதரித்த சாதாரண வருஷத்துக்கு மூன்றாவதான -பரீதாபி வருஷம் -வைகாசி மாதம் -17-நாள்
நம்பெருமாள் நாய்ச்சிமாருடன் கோயிலுக்கு எழுந்து அருளினார்
கோபணார்யார் -என்கிற மஹான் -திருமலையில் இருந்து செஞ்சியிலே எழுந்து அருளப் பண்ணுவித்து –
செஞ்சியிலே-சிறிது நாள் ஆராதித்து -துலுக்கரை எல்லாம் அடித்து நம் பெருமாளை எழுந்து அருள பண்ணினார்

திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை -திருவடிகளை ஆஸ்ரயித்து –
யதிராஜ விம்சதி-திருநகரியில் சாதித்து அருள -யதீந்த்ர பிரவணர் -திருநாமம் சூடப் பெற்றார் –
திருக்குமாரர் -ராமானுஜ ஐயன் -திரு நாமம் சாத்தினார் –
(பின்பு இவருக்கு இரண்டு திரு குமாரர்கள் -அழகிய மணவாள பெருமாள் நயினார் -பெரியாழ்வார் -என்ற திருநாமங்கள் இருவருக்கும் )
பெரியாழ்வார் திருமொழி வியாக்யானம் சாதித்து அருளினார்
அருளிச் செயலிலே காலஷேபம் -ஸ்ரீ பாஷ்யம் -ஒருமுறை சாதிக்க நியமனம்-

திருவாய் மொழிப் பிள்ளை-திருவவதார ஸ்தலம் -குந்தீ நகரம் –வைகாசி விசாகம்
மற்றைய திரு நாமங்கள் -திருமலை ஆழ்வார் -ஸ்ரீ சைலேசர் -சடகோப தாசர் -காடு வெட்டி ஐயன்
திருநாட்டுக்கு எழுந்து அருளியது -வைகாசி மாதம் -கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி –

பிள்ளை லோகாச்சார்யார் சிஷ்யர் கோடியில் அண்ணர் ஸ்வாமிகள் மா முனிகள் கோயிலுக்கு எழுந்து
அருளும் பொழுது இருந்தவர் -கோயில் அதிபதி -திருமாலை தந்த பெருமாள் என்ற பட்டர் –
பெரிய பெருமாள் -ஈடு -திருச் செவி சாய்த்து -தனியன் சாதித்தது பிரசித்தம் –
ஈடு பெருக்கர் -என்ற திரு நாமம் –

பெருமாள் கோயிலில் கிடாம்பி ஆச்சான் திரு வம்சம் -ஸ்ரீ ப்ரஹ்ம தந்த்ர ஜீயர் சந்நிதியில் ஸ்ரீ பாஷ்யம் அதிகரித்து
அழகிய மணவாள பெருமாள் நாயனார் சிஷ்யரான கிடாம்பி திருமலை நயினார் சந்நிதியில் –
நம் ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம்ம் அதிகரித்து தலைக்கட்டினார்
சொன்ன வண்ணன் செய்த பெருமாள் சந்நிதியில் அடியார்க்கு உபய வேதாந்தம் சாதித்து அருளியதால்
இன்றும் அங்கே ஞான முத்திரை யுடனும் த்ரிதண்டத்துடனும் சேவை சாதிக்கிறார்

கோயிலிலே திருமலை ஆழ்வாருக்கு சிஷ்யரான சடகோப ஜீயர் சந்நிதியில் ஆஸ்ரம ஸ்வீ காரம்
சடகோப ஜீயர் என்ற திரு நாமமும் பெற்றார்
ரஹஸ்யம் விளைந்த மண் -திருமலை ஆழ்வார் -வியாக்கியான மண்டபம் –
பெரிய ஜீயர் என்ற திரு நாமம் –

வாதூல வத்ஸா கௌண்டிண்ந்ய ஹாரீத
ஆத்ரேய கௌசிக பாரத்வாஜஸ் ச சப்ததை தே வாதூலா இதி கீர்த்திதா
ஏழு கோத்திரத்தில் உள்ளவர் இதிலே சம்பந்தம் -அவர்கள் வாதூல கோத்ரம் -முக்கியம் ஆகையால்
அதன் பெயரை கிட்டே வழங்கி கந்தாடையார் -என்றே வழக்கம் –
முதலி யாண்டான் -முடும்பை நம்பி -முடும்பை அம்மாள் -ஆஸூரிப் பெருமாள் -கிடாம்பிப் பெருமாள் –
குமாண்டூர் இளைய வல்லி யாச்சான் -வாங்கிபுரத்து நம்பி -சந்தஸ்த்தர்களே இந்த ஏழு கோத்ரத்திலும் இருப்பது

உத்தம நம்பிக்கு கனவிலும் கொற்றி அம்மையாருக்கு பிரத்யக்ஷமாகவும் இவர் தாமே சேஷ அவதாரம் என்று காட்டி அருளினார்
ருதிரோத்காரி வருஷம் -மாசி மாதம் -கிருஷ்ண பக்ஷம் -சனிக்கிழமை துவாதசி -திருவோணம் நக்ஷத்திரத்தில்
பெரிய ஜீயர் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
-73-திரு நக்ஷத்திரங்கள் இங்கே இருந்து கைங்கர்யம்
வட பொன்னி தென்பாலிலே ஆதிகேசவப்பெருமாள் திருவடிக்கு கீழே திருப்பள்ளிப்படுத்தி
ஸ்ரீ மான் ஸூந்தர ஜாமாத்ரு முனி பர்யாய பாஷ்ய க்ருத பாஷ்யம் வ்யாக்ருதே தஸ்ய ஸ்ரோத்ரு
கோடவ் மம அன்வய –கந்தாடை அண்ணன்-சாதித்த தனியன்
ஸ்வாமி நிஜ ரூபத்தில் பால் அமுது செய்த கல் தொட்டியில் பிரசாதம் சேர்த்து சிஷ்யர்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது

——————————

யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவாணரும்
1–வ்யாக்யான -கிரந்த –தாநாத் –வியாக்கியான கிரந்தங்கள் அருளிச் செய்வதிலே பிரதான நோக்கு –
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீப சாரங்கள் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மா முனிகள் வ்யாக்யான கிரந்தங்கள் பிரசித்தம்
கத்ய த்ரயம் வேதாந்த ஸங்க்ரஹம் போலே யதிராஜ சப்ததி -உபதேச ரத்னமாலை இத்யாதிகள்

2–பரிவதன கதா கந்த வைதேசிகத்வாத்–பரிவதனமாவது பரிவாதம் நிந்தை –
பரிகாசமோ நிந்தையோ அணு அளவும் இல்லாமல் பரம பவித்ரமான திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் அன்றோ இவர்களது

3–நாநா சாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபி –ப்ராஞ்ஞா ஹ்ருத் ரஞ்சகத்வாத் —
தொட்ட தொட்ட இடம் எங்கும் சாஸ்த்ரார்த்த திரள்களே மலிந்த ஸ்ரீ ஸூக்திகள் -பண்டிதர்கள் உள்ளத்தை உகப்பிக்கும்

4–பூர்வாச்சார்ய யுக்தி ராகாத் -ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் தொடங்கும் பொழுதே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சிஷிபு
தன் மத அநுசாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே-என்று
பூர்வாச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகளில் தமக்கு உள்ள அபிநிவேச அதிசயத்தை காட்டி அருளியது போலவே
மா முனிகளும் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு –முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்றும்
தம்முடைய வியாக்கியான கிரந்தங்களை பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்தி மயமாகவே அருளிச் செய்கிறார்

5–சடரிபு முநிராட் ஸூக்தி சம்வர்த்தகத்வாத்
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

6–பீடாதி ச ப்ரதிஷ்டாபந க்ருதி கரணாத்
ஸ்வாமி -74-ஸிம்ஹாஸனாபதிகள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்
லஷ்மீ நாதாக்ய சிந்தவ் சடாரி புஜலத-இத்யாதிகளை உண்டே
மா முனிகளும் –
திறமாக திக் கஜங்கள் இட்டு அருளும் பெருமாள் -அஷ்ட திக் ஆச்சார்யர்கள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்

7–திவ்ய தேச அபிமானாத்
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரீம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் –
ஸ்ரீ ரெங்கேச ஜெய த்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி
மா முனிகளும்
அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ
அதவா
திவ்ய தேச ஸ்ரேணியில் சேராது இருந்த திரு நாராயணபுரத்துக்கு ஒரு நாயகமாய் -சமர்ப்பித்தும்
மா முனிகள் ராஜ மன்னார் சந்நிதிக்கு -தீர்ப்பாரை யாம் இனி -சமர்ப்பித்தும்
திவ்ய தேசமாக அபிமானித்ததும் உண்டே –

8–பணி ராஜ அவதாரவாத்
ஸ்வாமி சேஷ அவதாரம் என்று பிரசித்தம்
வர வர முனி சதகத்தில் -துக்தோதந்வத் தவள மதுரம் சுத்த சத்வ ஏக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யாம்
பணீந்திர அவதாரம் -என்றும் -பல சரித்திர பிரசித்தங்கள் படியும் ஸூவ்யக்தம்

9–ஸ்ரீ ரெங்க ஸ்ரீ விவர்த்த நாத் –
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
அரங்க நகர் வாழ இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

10–ஸ்ரேஷ்ட சிஷ்யத்வாத்
அப்பனுக்கு சங்காழி கொடுத்தான் வாழியே
எதிராஜசம்பத் குமாரர்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம் -தனியன் பெற்றார் மா முனிகள்

ஆக இத் தன்மைகளால் -யதீந்த்ர பிரவணஸ் சாஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத த்ருவம்-

—————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீத கோவிந்தம் –

February 2, 2019

ஸ்ரீ கீத கோவிந்தம்
ஸ்ரீ ஜய தேவர் -அருளிச் செய்தது -ஸ்ரீ போஜ தேவர் -ரமா தேவி குமாரர் -/ பத்மா தேவி மனைவி /
வங்க தேச ராஜா லஷ்மண சேனன் சபை புலவர் இவர்
ஸ்ரீ பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் அருளிச் செய்தது -இவர் பாட -இவர் தர்ம பத்னி பத்மா தேவி ஆடி சமர்ப்பணம்
12-சர்க்கங்கள் -ஒவ் ஒன்றிலும் அஷ்ட பாடல்கள் -ஆகையால் அஷ்ட பதி –
சில சர்க்கங்களில் பல அஷ்டபதிகள் -மொத்தம் -24-அஷ்ட பதிகள் –

யத் கோபீ வத நேந்து மண்டனமபூத் -மங்கள ஸ்லோகம் –
கார் ஒளி வண்ணன் நம் ஹ்ருதயத்திலே என்றும் நித்தியமாக நிலை பெற பிரார்த்தனை இதில்
திங்கள் திரு முகத்து சேயிழையீர் -முதலில் அணியும் கஸ்தூரி -கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
மலராள் தனத்துள்ளான் -மை வண்ண நிறுத்தினன் -யோகிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுக்கும் மை –
நித்யம் கரீச திமிராவில த்ருஷ்டயோ அபி சித்தாஞ்சனநேந பவ தைவ விபூஷி தாஷா
பஸ்யந்தி யுபர் யுபரி சஞ்சரதாம் அத்ருஸ்யம் மாயா நி கூடம் அநபாய மஹா நிதிம் த்வாம் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
சித்தாஞ்சன மிவ ச்யாமாம் -அச்யுத சதகம்
அந்தர் ஜ்யோதி கிமபி -பகவத் த்யான சோபனம்
அந்தர் ஹிதோ நிதி ரசி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
நிதிர் அவ்யய -ஸ்ரீ சஹஸ்ர நாமம்

ராதா மநோ ரம ரமாவர–மங்கள ஸ்லோகம்
ராதையின் திரு உள்ளம் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளால் பூர்ணம் –
ராஸக்ரீடை தனி இடம் -அத்தை பத்மாவதி பதி ஜெயதேவர் கானாம்ருதமாக நமக்கு வழங்கியுள்ளார்

ஸ்ரீ கோபால விலாஸி நீ வலய-மங்கள ஸ்லோகம்
கோபிகள் கை வளையல்கள் போன்ற கண்ணன் திருப்பாதங்கள் –
இவற்றை அநவரதம் சித்தித்து அருளிய ஸ்ரீ கீத கோவிந்தம் -அவர் திருவடி போற்றுவோம்

———————–

ஸ்ரீ கீத கோவிந்தம் -1-
மேகை மேதுரம் அம்பரம் வனபுவ
ராதை இடம் கண்ணனை பசு மேய்த்து திரும்ப கூட்டி வர நியமிக்கிறார்ன் நந்தகோபர் –
பழம் நழுவி பாலில் விழுந்ததே -இவர்கள் லீலைகளுக்கு பல்லாண்டு பாடுவோம் –

முதல் அஷ்டபதி –
பிரளய பயோதி ஜலே
கேசவன் ஜெகதீசன் ஹரி -மீனாய் சத்யவ்ரதன் -பாண்டிய தேசம் -அந்த மஸ்த்ய அவதாரத்துக்கு மங்களம்-

முதல் அஷ்ட பதி -2-
ஷிதி ரதி விபுல தரே தவ திஷ்டதி —ப்ருஷ்டே தரணி தரண கிண சக்ர கரிஷ்டே
கேசவ த்ருத கச்சப ரூப ஜய ஜெகதீச ஹரே —
ஆதி கூர்ம மூர்த்தி –
மலை யாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி –லக்ஷம் யோஜனை -8-லக்ஷம் மைல்கள் பரப்பு திரு முதுகு
ஆமையான கேசவன் –
பரஸ்ய நிஸ்வாச வாத ஊர்மய புவன த்ரயீம் அவ்யாஸூ –மூச்சுக் காற்று நம்மை ரக்ஷிக்கட்டும்

முதல் அஷ்ட பதி -3-
வசதி தசன சிகரே தரணீ தவ லக்நா சசிநி கலங்க கலேவ நிமக்நா கேசவ த்ருத ஸூகர ரூப ஜய ஜெகதீச ஹரே
ஸ்ரீ கோபால வராஹ நாயனாருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -4-
தவ கர கமலவரே நகம் அத்புத
அரி பொங்கி காட்டி அருளிய ஸ்ரீ நரஸிம்ஹ வபூ ஸ்ரீ மானுக்கு மங்களம்
வண்டுகள் மதுபானர்த்தமாக தாமரையின் நுனி பகுதியை பிரிப்பதும் கிழிப்பதும் உண்டு
இங்கு ( கைத் )தாமரையின் நுனியே அன்றோ ஹிரண்யன் மார்பை கிழித்தது

முதல் அஷ்ட பதி -5-
ஸலயஸி விக்ரமணே பலிம்
அத்புத குள்ளன் -ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உபேந்திரனாய் பிறந்து ஓங்கி அளந்த உத்தமனுக்கு மங்களம்
ஹரி பாதோதகம் -ஸ்ரீ பாத அம்ருதமே கங்கா பிரவாகம்

முதல் அஷ்ட பதி -6-
ஷத்ரிய ருதி
கோகுல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவாள் போக்கிய புனிதன் -கார்த்த வீர் யாதிகள் குருதம் – –
குருஷேத்ரம் பக்கலில் மருக்கள் ஏற்படுத்தி அரசர்கள் குருதி -ஸ்யமந்த பஞ்சகம் -இடம் இன்றும் உண்டே –
ஸ்ரீ பரசுராமருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -7-
விதரஸ தீஷூ ரணே
தசரதன் -என்பதால் பத்து ராவணன் தலைகளையும் திக் பாலர்களுக்கு கொடுத்து உகந்த
சக்ரவர்த்தி திருமகனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -8-
வஹஸி வபுஷி விசதே
நீல மேக ஸ்யாமளன் -கலப்பை ஆய்தம் தரித்த ஸ்ரீ பலராமனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -9-
நிந்தசி யஜ்ஞவிதே
கள்ள வேஷம் பூண்டு புறம் புக்கவாறும்-பேச்சில் மயங்கி அசுரர்கள் உடைய
யாக ஸ்ரத்தை அழித்து தேவர்களை ரஷித்த புத்தவதாரத்துக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -10-
ம்லேச்ச நிவஹ நிதநே
கலியுக முடிவில் -சம்பலம் கிராமத்தில் -விஷ்ணு யசஸ் -என்பவருக்கு பிள்ளையாய் –
தேவ தத்தம் என்கிற குதிரை மேல் ஏறி -வால் நக்ஷத்ரம் போன்ற கூரிய வாள் கொண்டு -பகைவர்களை அழித்து –
தர்ம ரக்ஷணம் செய்து அருள அவதரிக்கப் போகும் ஸ்ரீ கல்கி பகவானுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -11-
ஸ்ரீ ஜய தேவ கவே இதம் –வேதான் உத்தரதே —
ஒரே ஸ்லோகத்தில் கீழே சொன்ன தசாவதாரங்களையும் சேர்த்து அருளி –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களைச் செய்து அருளி எம் இடர் தீர்க்கும் எம்பிரான் -உனக்குத் தோற்றோம் –
இப்பாடல்கள் தாமே அவன் திருவடிகளை பிராபிக்கும்

—————————————————

ஸ்ரீ கீதா கோவிந்தம் –
இரண்டாம் அஷ்ட பதி -1-
ஸ்ரித கமலா குச-
ஸ்ரீ யபதி –அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் -தேஜஸ் பரப்பும் திரு மகர குண்டலங்கள் –
வைஜயந்தி மாலைகள் -தரித்து விளங்கும் உனக்கு மங்களங்கள்

இரண்டாம் அஷ்ட பதி -2-
தின மணி மண்டல மண்டிந
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி -ஹிரண்ய மய புருஷ -யோகிகள் ஹ்ருத் புண்டரீகத்தில் பரம ஹம்ஸமாக இருக்கும் உனக்கு பல்லாண்டு –

இரண்டாம் அஷ்ட பதி -3-
காலியவிஷ

இரண்டாம் அஷ்ட பதி -4-
மது முர
ஸ்ரீ ஹயகீரனாக அவதாரம் -மதுகைடபர்களை நிரசித்து வேதங்கள் மிட்டாய் -வேத ஸ்வரூபி வாஹனம்

இரண்டாம் அஷ்ட பதி -5-
அமல கமல தல
சர்வ வ்யாபி -மம மாயா துரத்தயா-மாம் ஏவ -ஆஸ்ரிதர்க்கு தன்னையே தரும் கற்பகம்

இரண்டாம் அஷ்ட பதி -6-
ஜனக ஸூதா

இரண்டாம் அஷ்ட பதி -7-
தவ சரண

இரண்டாம் அஷ்ட பதி -8-/9/10
பத்மா பயோதர/ வசந்தே வாஸந்தீ/ ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம்

——————————–

ஸ்ரீ கீதா கோவிந்தம்
மூன்றாம் அஷ்டபதி -1-
லலித
ராதாவின் ஸஹி வசந்த கால வர்ணனை –
இலவங்கக் கொடி வளர்ந்து பருவமடைய -காற்று அணைக்க காதல் -ஹர்ஷத்தால் ஆட –
தேனை குடித்த வண்டுகள் ரீங்காரம் -குயில்கள் கூவ

மூன்றாம் அஷ்டபதி -2-
விஹரிதி ஹரி ரிஹ
விரஹத்தால் துடிக்க -கண்ணனோ மற்ற கோபிகள் உடன் கொஞ்சிக் குலாவுகிறான்

மூன்றாம் அஷ்டபதி -3-
உன்மத மதன
வகுள மலர்கள் பூத்து குலுங்க -வண்டுகள் மது பானம் பண்ணி களிக்க –
நாம் வாட கண்ணன் மற்றவருடன் குதூகலித்து இருக்க -நாம் தவிக்க

மூன்றாம் அஷ்டபதி -4-
ம்ருகமத –
கஸ்தூரி வாசம் கமழுகிறது -பூ மொட்டுக்கள் -விரஹத்தால் மன்மத அம்புகள் பிளக்கும் நம் ஹ்ருதயம் போலே

மூன்றாம் அஷ்டபதி -5-
மதன மஹீ பதி
மகிளம் பூ சிவந்த தண்டுகள் -மன்மதனின் செங்கோல் போலே –
பாடலம் பூ கொத்து கொத்து அவன் அம்பு போலே -பூங்கொத்துக்கள் அம்புறாத துணி போலே

மூன்றாம் அஷ்டபதி -6-
விகளிஸ் புரததி முக்த
வசந்த கால பூக்கள் காற்றில் ஆடுவது போலே காதலர்கள் மகிழ –
தாழாம் பூக்கள் கூர்மையாக ஹ்ருதயம் பிளப்பது போலே

மூன்றாம் அஷ்டபதி -7-/8/9
மாதவிகா பரிமள / ஸ்புர ததி முக்த /தத விதலித/ உன்மீலன் / அநேக நாரீ/ஸ்ரீ ஜெயதேவ
மல்லிகை பூ நறுமணம் / மா மரம் சுற்றி இளம் கொடி பிணைந்து /

மூன்றாம் அஷ்டபதி -10-
வசந்த கால இனிமை வன வாய்ப்பு குயில் ஓசை . பாத கமலா பக்தியை பெருக்கும் பாடல்கள்

——————–

நாலாம் அஷ்ட பதி –
சந்தன சர்ச்சித
சந்தனம் பூசி மாலைகள் அணிந்து ஒய்யார நடையால் கோபியை வசீகரித்து மகிழ்கிறான்
பீந பயோதர
குழல் ஓசையால் மயங்கி கோபி ஒருத்தி தழுவ
காபி விலாச
தேஜஸ் மிக்கு கண்டவர் தம் மனம் வழங்கும் படி -தாமரை திருமுக மதுவை க்ரஹிக்கும்
வண்டு போலே கண்களால் பருகும் படி
காபி கபோல தல
ரஹஸ்யம் சொல்லுவாள் போலே ஒரு கோபி அருகில் வர அவன் குனிய
ஒரு கோபி அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்
ராதே அவனை போலே இவளும் பொல்லாதவள்
கேலிகலா
கோபி ஒருத்தி உடன் யமுனையில் லீலா ரசம் -அவனை ஆடையைப் பற்றி
இழுத்து செல்கிறாள் என்ன துணிச்சல்
கரதால தால
யமுனைக் கரையே கொண்டாட்டத்தில் திளைத்து இருக்க – ராஸக்ரீடை –
கொலுசுகள் த்வனி எங்கும் ஒலிக்க
அவன் குழல் ஓசைக்கு ஏற்ப வளையல்களை கொண்டு தாளம் தட்ட
ஸ்லிஷ்யதி
ஒருத்தியை அனைத்து -மற்று ஒருத்திக்கு முத்தம் -வேறே ஒருத்தியை கடாக்ஷித்து –
இன்னும் ஒருத்தி இடம் காதலை யாசிக்கும் கள்ளன்
விச்வேஷாம் நித்யோத்ஸங்க ராஸ உல்லாச
ராதே உன்னை தவிக்க விட்டு அவன் மற்ற கோபிகளுடன் கூடிக் களிக்கிறானே
ராதையும் கண்ணனை நெருங்கி -இருவரும் சேர்ந்து நம்மை ரக்ஷிப்பர்-
ஸ்ரீ ஜெயதேவ
இவற்றை பாடியும் கேட்டும் பக்தர்கள் அவனையே பெற்று மகிழ்வார்கள்

———————

சஞ்ச சரதர
குழல் ஓசையிலும் கண் வலையிலும் அகப்பட்டோம் -மயில் பீலி நம்மை அழைக்க –
அவன் கன்னம் உரசும் கர்ண குண்டலங்கள் செய்த பாக்யம் என்ன
சந்த்ரக
மேக ஸ்யாமளன் –
கோப கதம்ப
கோவைப்பழம் போன்ற திரு அதரம்/ ஸ்மிதம் கூற்றம் போலே
விபுல புலக
மெல்ல அசைந்து ஆட -திரு ஆபரணங்களும் அசைய
ஜலதபடல
மணிமய மகர
மகர குண்டலம் பீதாம்பரம் மோஹன ஸ்மிதம்
விசத கதம்ப
கதம்ப மரத்தடியில் ஸ்மிதம்
கண யதி குண க்ராமம்
சேஷ்டிதங்கள் நம் காதலைப் பெருக்குமே
ஸ்ரீ ஜெயதேவ
மதுவை நிரசித்த கண்ணன் திருவடிகள் தியானிக்கும் ஞானிகள் உள்ளம் நிறைந்துள்ளானே –

——————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜய தேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளிச் செயல்களில் விலக்ஷணமான பரீஷை–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி –

February 2, 2019

கண்ணா இன்று நான் உன்னைப் பத்து பாட்டு கேட்க விரும்பி இருந்தேன் சொல்லு

1-கண்ணா –கண்ணா நான்முகனைப் படைத்தானே –பெரியாழ்வார் -5-1-6–
2-இன்று -இன்று வந்து இத்தனையும் –நாச்சியார் -9-7–
3-நான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -நான்முகன் -1-
4-உன்னை -உன்னைச் சிந்தை செய்து –திருவாய் -2-6-6-
5-பத்து –பத்துடை அடியவர்க்கு எளியவன் –திருவாய் -1-3-1-
6-பாட்டு –பாட்டு முறையும் படு கதையும் –நான் முகன் –76-
7-கேட்க -கேட்க யான் உற்றது உண்டு –திருக் குறுந்தாண்டகம் -4-
8-விரும்பி –விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –திருமாலை –17-
9-இருந்தேன் –இருந்தேன் இரு வினைப்பாசம் –இராமானுச நூற்று –62-
10-சொல்லு –சொல்லுவன் சொற்பொருள் –பெரிய திருமொழி -2-9-1-

நங்கைமீர் உங்கள் மண் வீடு அடியோடு நன்றாய் இல்லை –
எங்களது மாட மாளிகை முழுதும் தந்தம் பொன் வெள்ளி வெண்கலம் இரும்பானது

1-ஆயிரம் மக்கள் உள்ளே அடங்க இடம் உண்டு
2-நங்கைமீர் -நங்கைமீர் நீரும் ஒரு பெண் பெற்று –திருவாய் -4-2-9-
3-உங்கள் -உங்கள் புழக்கடை –திருப்பாவை -14-
4-மண் -மண்ணாய் நீர் எரி கால் –பெரிய திரு மொழி -1-9-6–
5-வீடு –வீடுமின் முற்றவும் –திருவாய் -1-2-1-
6-அடி -அடியால் படி கடந்த முத்தோ -பெரிய திருவந்தாதி -27–
7-ஓடு -ஓடுவார் விழுவார் –பெரியாழ்வார் -1-1-2-
8-நன்றாய் ஞானம் கடந்து போய் –திருவாய் -8-8-6-
9-இல்லை -இல்லை யல்லல்–திருவாய் -9-10-10-
10-அது -அது நன்று இது தீது என்று —
11-மாட மாளிகை –மாட மாளிகை சூழ் திருமங்கை –பெரிய திருமொழி -5-8-10-
12-முழுதும் -முழுதும் வெண்ணெய் அளந்து –பெருமாள் –7-8-
13-தந்தம் –தந்தம் மக்கள் அழுது சென்றால் –பெரியாழ்வார் -2-2-3-
14-பொன் -பொன் மேல் மஞ்சனமாட்டி -பெரியாழ்வார் -3-1-2–
15-வெள்ளி -வெள்ளியார் பிண்டியார் போதியார் –பெரிய திருமொழி -9-7-9-
16-வெண்கலம் -வெண்கலப் பாத்திரம் –பெரியாழ்வார் -1-9-5-
17-இரும்பு –இரும்பு அகன்று உண்ட –திருக்குறுந்தாண்டகம் -5-
18-ஆனது –ஆனது செம்மை யறநெறி –இராமானுச நூற்று
19-ஆயிரம் –ஆயிரம் தோள் பரப்பி –பெரியாழ்வார் -4-3-10-
20-மக்கள் -மக்கள் பெறு தவம் போலும் –பெரிய திருமொழி -10-4-2-
21-உள்ளே –உள்ளே உருகி நைவேனை –நாச்சியார் -13-8–
22-அடங்க -அடங்கு எழில் சம்பத்து –திருவாய் -1-2-7-
23-இடம் -இடம் வலம் ஏழ் பூண்ட —
24-உண்டு –உண்டு களித்தேற்கு — திருவாய்

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பாவையும் ஸ்ரீ பாஷ்யமும் –

February 2, 2019

மதி நலம் –பக்தி ரூபாபன்ன ஞானம் -ஞானம் கனிந்த நலம் -ஸ்நேஹ பூர்வமான த்யானம் பக்தி ரூபா பன்ன ஷேமுஷீ ஸ்ரீநிவாஸே
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க ஆதி லீலே-
கில -விடு பட்டது -அகில் -விடு படாமல் -அப்ருதக் சித்தம் -சகல எல்லாம் –
அகில -ஓன்று விடாமல் எல்லாம் -நிகில -அ காரம் மங்களம் -ந காரம் நிஷேதம் -கூடாதே
லயம் சொல்லாமல் பங்க
ஆதி -அந்த பிரவேசம் -வ்யாபகத்வம்
பூதே பூ சத்தாயாம்
விநத- பக்தி பிரபத்தியால் -வணக்குடை தவ நெறி
விவித பூத சர்வாதிகாரம் -பக்தி பிரபத்தியே வேண்டும் -விசிஷ்ட விதம் –வித வித -அதிகாரி நிதமும் இல்லையே –
விரத-கூட்டம்
ரக்ஷை தீஷே-ஏதத் வ்ரதம் மம -/ ஸ்தேம ஏற்கனவே சொல்லி இங்கு -அங்கு சாமான்யம் இங்கு விசேஷ ரக்ஷணம்
மோக்ஷ பிரதம் -விசேஷ ரக்ஷணம்
நந்தா விளக்கின் சுடர் -ஸ்ருதி சிரஸீ-கொழுந்து விட்டு எரியும் -தீப்தே –
ப்ரஹ்மம் -ஆஸ்ரயிப்பவரை ப்ரஹ்மம் -சமன் கொள் தரும் தடம் குன்றமே -ஸ்ரீநிவாஸே –
காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் முதல் அத்யாயர்த்தம்
லீலே -அவிரோதம் இல்லை -இரண்டாம் அத்யாய யர்த்தம்
விநத விவித பூத -பக்தி பிரபத்தி உபாயம் மூன்றாம் அதிகாரார்த்தம் – –
பக்தி ரூபா -ரக்ஷை -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ப்ராப்யம் கைங்கர்யம் -ரக்ஷணம் ப்ராப்யம் பல அத்யாயம்
ஸ்தேம -சாமான்யம் -ரக்ஷை மோக்ஷ பிரதத்வம் –
ஸ்ரீ நிவாசே -பராத்பரன் -பரம புருஷன் -ரூடி சப்தார்த்தம் –ப்ரஹ்மம் -சாமான்ய சப்தம் –
உயர் திண் அணை ஓன்று -பரத்வம் -அணைவது -மோக்ஷ பிரதத்வம்
ஸ்ருதி சிரசே சப்தம் வேதமே பிரமாணம் -ப்ரஹ்மாணீ -காரணத்வம் வேறே யாருக்கும் இல்லையே –
ஸ்ரீ நி வாஸே -திரு மூர்த்தி சாம்யபிரமம் நிராசனம்
ஷேமுஸீ பக்தி ரூபா -வாக்ய ஜன்ய வாக்யார்த்தத்தால் மோக்ஷம் அத்வைதி மதம் நிரசனம்
நிலத்தேவருக்காக ஸ்ரீ பாஷ்யம் -அடுத்த மங்கள ஸ்லோகம் -ஸூ மனஸா –நடு நிலைமையாளர்
நித்தியமாக குடிக்க -இதுவே உபாயம் -பாராசார்யர் -வேத வியாசர் -பராசரர் திருக் குமாரர்
சாரீரிகம் -ப்ரஹ்ம விசாரம் -இதுவே அமிர்தம் -உபநிஷத் கடலை கடைந்து எடுக்கப்பட்டது
பாற் கடல் ஆழத்தில் இருந்து -ப்ரஹ்மத்தில் அருகில் இருந்து-நம்மை ப்ரஹ்மத்தின் இடம் இழுத்து செல்லுவது உப நிஷத் சப்தார்த்தம்
சர்வ தர்ம சமாராதானாய்–முதல் -12-அத்யாயம் / சகல தேவதா அந்தராத்மா பூதனாய்–அடுத்த நான்கு அத்யாயம் /
ப்ரஹ்ம வாஸ்யன் ஸ்ரீ மன் நாராயணன் -உத்தர மீமாம்சை நான்கு அத்யாயம்
கடக்க ஒண்ணாது -ஆழம் காண ஒண்ணாது -கலக்க ஒண்ணாது -கடல் போன்ற உப நிஷத்
கிருஷ்ண த்வைபாயனர் -சம்சார அக்னி கொழுந்து விட்டு எரிய ப்ராண சப்த ப்ரஹ்மம் –
சம் ஜீவனம் -வெறும் ஜீவனம் இல்லை ஐஸ்வர்யம் கைவல்யம்

ஸ்ரீ -விஷ்ணு சித்தர் எங்கள் ஆழ்வான் -திரு வெள்ளறை -ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஆச்சார்யர் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் வியாக்யானம் -ஸ்ரீ பாஷ்யம் மூன்றாம் நான்காம் அத்யாயம் –
ஸ்ரீ கூரத்தாழ்வான் போல இருப்பதால் ஸ்ரீ பாஷ்யகாரர் அபிமானித்து -திரு நாமம் சாதித்து
அம்மாள் ஆச்சார்யர் திரு மாளிகை திரு வெள்ளறையில் இன்றும் -எங்கள் ஆழ்வான் திருவடிகளில் அம்மாள் சேவை –

——————————————-

தை பூசம் -தான் உகந்த திரு மேனி –பரதனுக்கு உண்டான கைங்கர்யம் வேண்டுமே
ஆகவே இந்த நக்ஷத்ரம் கொண்டான் போலும் – / தை புனர் பூசம் -எம்பார் திரு நக்ஷத்ரம் -பதச்சாயா
கஜேந்திர ஆழ்வான் -ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் விதுர ஆழ்வான் -வேறு வேறு யுகங்களில் -பட்டம் –
பக்தர்களுக்காக அனைத்தையும் செய்பவன் –கோதுகலமுடைய பாவாய் -இருவருக்கும் கோதுகலம் –
திருப்பாவை ஜீயர்-த்யானம் அர்ச்சனம் பிரணாமாம் -வேதார்த்த ஸங்க்ரஹம் முக்கரணங்கள் வியாபாரம் —
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது –
இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து -நரஸிம்ஹ அனுபவம் -பாலும் சக்கரையும் சேர்ந்து
நரஸிம்ஹம் பிரகலாதன் ஹிரண்யன் ஹிம்சிக்க / ராகவ ஸிம்ஹம் ஹநுமானை ராவணன் அம்பால் அடிக்கச் /
கேசவ -யாதவ ஸிம்ஹம் -அர்ஜுனனை பீஷ்மர் அம்பால் அடிக்க / ரெங்கேந்திர ஸிம்ஹம் -முனிவாஹனர்
பல கோயில்களில் பிரஸ்னம் -தாயார் சீற்றம் -பெருமாளுக்கு ஆராதனம் சரியாக இல்லை -பெருமாள் களவு –
ஸ்ரீ ஸூக்தம் பூ ஸூக்தம் நாச்சியார் திரு மொழி பாராயணம் -பின்பு திரும்பிய வ்ருத்தாந்தம் உண்டே
விக்ரமம் -விசித்திரம் -திரி விக்ரமன் -மூவடி இரந்து- ஈரடியால் முடித்துக் கொண்ட முக்யமும் -three -த்ரி -இது என்ன விசித்திரம் –
மூன்று பதம் -த்ரி பாதாஸ் -மூன்று பாதத்தால் அளந்து மூன்று பதார்த்தம் –
நரஸிம்ஹன்-இரண்டில் ஓன்று -உபாய உபேய பாவங்களில் அழகியான் தானே அரி உருவானே
ஸ்தம்பம்-சொல்லாமல் – ஸ்தூணா -பெண்பால் சொல் -நரஸிம்ஹரை பெற்றதால்
சேஷி -ஓன்று -சேஷம் இரண்டு /பேத ஸ்ருதி தத்வ த்ரயம் -போக்தா போக்யம் ப்ரேரிதா /
அபேத ஸ்ருதி -அனைத்தும் ஒன்றும் இதம் சர்வம் ப்ரஹ்மம்-ஏக தத்வம் /
கடக ஸ்ருதி-இரண்டும் ஒன்றே -அஹம் ஏவ பர தத்வம்-தர்சனம் பேத ஏவச- /
மறை-மறைத்து சொல்லும் -வேதம் -வேதவதி அர்த்தம் விளக்கி சொல்லும் /
முதல் ஆழ்வார் -பொய்கை பூதம் பேயாழ்வார் ஒன்றாகவும் மூன்றாகவும் /

—————————————-

வண்டு -ராமானுஜர் ஸூ சகம் -/ விதானம் -பிரார்த்தித்து இவர் அவதாரம்

கோதா-6-2-10—கோதுகலம் உடையவனே -திரு விண்ணகர் அப்பனை திரு மங்கை விளிக்கிறார்

————————————-

பாட்டாறு ஐந்தும் -ஸ்ரீ பாஷ்ய விஷயங்கள் -156-திருப்பாவை -சரணாகதி சாரம் -உத்க்ருஷ்டம் –
இதனாலே அன்றோ ஸ்ரீ பாஷ்யகாரர் -திருப்பாவை ஜீயர் -இவர் இவற்றைக் கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் –
அத்யாபயந்தி -அவனுக்கும் மயர்வற மதிநலம் அருளி -கேளாய் என்று தொடை தட்டி –
லிங்க பூயத்வாதி -அதிகரணம் -மூன்றாம் அத்யாயம் இறுதியில் -நாராயணன் சப்தம் -ரஷிக்கும் தீக்ஷை கொண்டவன் –
கீழே எல்லாம் பர ப்ரஹ்ம சப்தமே பிரயோகம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ப்ரஹ்மணீ ஸ்ரீநிவாசே
மார்கழி –ஸங்க்ரஹம் -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் அகில புவன இத்யாதி போலே இதுவும்

பிரணவம் -தனுஷ் -ஆத்ம அம்பு -ப்ரஹ்மம் லஷ்யம் -மார்க்க சீர்ஷம் -தனுர் மாதம் -ஓம் இது ஆத்மாநாம் உஞ்சீதா
கேசவன் -அதி தேவதை இந்த மாதத்துக்கு -சம்சாரம் போக்கும் -கிலேச நாசனன் –
சைத்ர ஸ்ரீ மான் மாசம் -சேஷிக்கு சேஷ பூதன் கிடைத்த மாதம் என்பதால் வந்த ஸ்ரீ மத்வம் –
செல்வ சிறுமீர்காள் -லஷ்மி சம்பன்ன இத்யாதி போலே
ஸ்ரீ மான் -ஸூ ஸூ ப் தா பரந்தப -இவனுக்கும் ஸூ ப்ரபாத கைங்கர்யம் கொள்ளும் ஸ்ரீ மத்வம்
திருவாளர் / மங்கையர் செல்வி -திரு மழிசை ஆழ்வார் வளர்த்ததால் –
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்றே –
நன்னாளால் -ஆல் -வாய்ப்பால் விளைந்த விஸ்மாய ஸூசகம்
நேர் இழையீர்-கலவியில் தானே மாறாடி இருக்கும் –
நந்த கோபன் -ஸ்வாமியை ஹர்ஷிக்கப் பண்ணி-நந்த – சிஷ்யர்களை ரஷிக்கும் -கோப -ஆச்சார்யர் –
கூர் வேல் -வாக்கு -ஸ்ரீ ஸூ க்திகள் மூலம்
யசோதா -யசஸ் ததாதி –பெரும் புகழோன் -புகழும் நல் ஒருவன் என்கோ -பர ப்ரஹ்மம் தருபவள்
தஹர வித்யை -குண விசிஷ்ட ப்ரஹ்மமே உபாஸ்ய வஸ்து -நாராயண அநுவாகம்-
தைத்ரியம் சாந்தோக்யம் இரண்டிலும் உண்டே தஹர வித்யை –
இவனே ஹிரண்ய கர்பன் -சிவன் -சத் -சர்வ சப்த வஸ்யன் –
இதில் ஸ்பஷ்டமாக நாராயண சப்தம் -இத்தையே நாராயணனே நமக்கே பறை தருவான் –

நாராயணனே நமக்கே பறை -பரத்வம் சொல்லி ஸுலப்யம் -பாற் கடலுள் பையத் துயின்ற -ஸுலப்யம் சொல்லி பரத்வம்
ஐயம் -ஷ்ரேஷ்டாமாவதை அளிப்பது
பகவல்லாபம் / பிச்சை -ஐஸ்வர்யம் கைவல்யம் -அவன் இஷ்டத்தை தருவது
உய்யுமாறு எண்ணி உகந்து-பிரபத்தி ஸாஸ்த்ர மஹிமை -நான்கு அதிகாரங்கள் -ரஹஸ்ய த்ரய சாரம்
ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளை கழித்து -நெய் உண்ணோம் -மை உண்ணோம் இத்யாதி –
பொன்னை கொண்டு தவிடு வாங்குவோமே -பரமன் அடி பாடி

நாட்காலே நீராடி -ஹர்ஷ ப்ரயுக்தமாக குண அனுபவம் -கல்யாணத்துக்கு நாள் இட்ட பின்பு கர்தவ்யம்
இது அன்றோ மேலே ஓங்கி இத்யாதியால்
உப கோசல வித்யை -ப்ரஹ்ம ஞானம் இல்லாத வியாதி -அக்னி உபதேசம் –
கம் ப்ரஹ்ம -ஸூ கம் ப்ரஹ்ம -ப்ரஹ்ம தேஜஸ் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-ஆச்சார்யர் உபதேசம் அப்புறம் போலே
அக்னி வித்யை -அவாந்தர பலன் -ஓங்கி -பாசுரம் –
உத் நாராயணன் -பாற் கடலுள் பரமன் -உத்தரன் -ஓங்கி உலகு அளந்த உத்தமன் -அவதரித்து சகல நயன சஷுர் விஷயமானதால்
கயல் உகள -செந்நெலூடு-புலவர் நெருக்கு உகந்த மத்ஸ்யன் அன்றோ ஆயன் –பாகவத ஸம்ருத்தி –
வள்ளல் பெரும் பசுக்கள் -வள்ளல் மால் இரும் சோலை மணாளர் –
கோ -வாக்கு ததாதி கோதா -கோவிந்தன் -கண்ணன் ஸ்பர்சத்தால்-நீங்காத செல்வம் -இவள் அருளிய திருப்பாவை தானே -அந்தணர் மாடு –
நிறைந்து -கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனிய கண்டோம் -பகவத் பாகவத ஸம்ருத்தியே பிரயோஜனம் -மற்றவை ஆனு ஷங்கிகம்

பரமாத்மா விசிஷ்ட தன் ஆத்ம உபாசனம் பஞ்சாக்கினி வித்யை -கைவல்யம் -கேவலம் ஆத்ம மட்டும் -அதனால் வாசி உண்டே
என் ஆத்மாவை சரீரமாக கொண்ட பரமாத்மா உபாசனம் -சாஷாத் ப்ரஹ்ம உபாசனம் –
பஞ்சாக்கினி வித்யை -மூன்றாம் அத்யாயம் முதல் பாதம் –உபாசனம் -ப்ரஹ்மம் அந்தர்யாமி –
மது வித்யை -முதல் அத்யாயம் -வசு-ருத்ரன் -ஆதித்யன் -ப்ரஹ்ம வித்யை -மேலே மேலே -ஒன்றுக்கு ஓன்று
வஸு சரீரம் இருந்து ருத்ரன் -ருத்ரன் சரீரம் இருந்து ஆதித்யன் -ஆதித்யன் சரீரம் இருந்து ப்ரஹ்மம்
வைகல் தீர்த்தங்கள்- என்று பூஜித்து -பாகவத சமாஹம் கால வரை இல்லா புனிதம் அன்றோ இது
உத்கீதா உபாசனம் பிரணவ உபாசனம் –

ஆழி –கம்பநாத் -சூத்ர அர்த்தம் -அங்குஷ்ட மாத்ர -பரமாத்மாவே தான் -ஈசானா பூத பவிஷ்ய -முக்காலத்துக்கும் நியமனம்
அல்லா தேவதைகளும் நடுங்கி கார்யம் செய்வார்களே -பீஷாத் வாயு இத்யாதி –
கப்பம் தடுக்கும் கலியே துயில் எழாய் மேலும் வரும் –
ஆழி -ழ காரம் -11-தடவை உண்டே

மாயனை –இத்யாதி-நான்காம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -அஸ்லேஷா விநாசம் -32-ப்ரஹ்ம வித்யை –
ஒன்றை அனுஷ்ட்டித்தால் போதும் -நாநா சப்தாதி பேதாத் -ஸூ த்ரம் -மூலம் பிரபத்தியையும் சொன்னதாயிற்று
மாயா -வந்து இருக்கும் மார்பன் -மா ஆயாது மாயன் /
தோன்றும் விளக்கு -ஆவிர் பூதம்-சாலையில் தேய்க்கும் ரத்னம் போலே பிறந்து ஒளி -பஹு ஸ்ரேயான் ஜாயமானா
அணி விளக்கு ஜ்யோதிர் அதிகரணம் -நிரதிசய தீப்தி உக்தன் -ம
மனோ வாக் காயம் -க்ரமமாக இதில் -/ காய கிலேசம் -கர்ம -ஞான -பக்தி -வசீகர -சரீரம் தொடங்கி –
நாம சங்கீர்த்தனம் வாயினால் பாடி -நமக்கு இதில் -ஆழ்வாருக்கு
முடியானே மனஸ் வாக் காயம் -என்ற வரிசையில்

பாதராயணர் -ஜைமினி -முக்தனுக்கு சரீரம் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லலாம் –
புள்ளரையன் -ராமானுஜன் -ராமரை வைத்து லஷ்மணன் / லஷ்மண பூர்வஜ -லஷ்மணனை வைத்து பெருமாள் போலே இங்கும்
உபஸ்திதம் -தண் திருக்கையையே பெருமாள் திருவடி தழும்பை பார்த்துக் கொண்டு உகப்பானே -தாஸா சஹா இத்யாதி
கஜேந்திர ஆழ்வான் -ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் விதுர ஆழ்வான் -வேறு வேறு யுகங்களில் -பட்டம் –
பக்தர்களுக்காக அனைத்தையும் செய்பவன் –கோதுகலமுடைய பாவாய் -இருவருக்கும் கோதுகலம் –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமாயணத்தில் –பரிஷ்வங்க-விஷய ஸ்லோகங்கள் —

February 2, 2019

ஸ்ரீ ராமாயணத்தில் பல பரிஷ்வங்கங்கள் உண்டு –
பிரசித்தமானவை சில –

பரத அக்ரூர மாருதிகளை பரிஷ் வங்கித்த மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று –ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் –

1-தம் சமுத்தாப்ய காகுத்ஸ்த சிரஸ்யாஷிபதம் கதம் —பாரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ் வஜே –
ஆக்ராய ராமஸ் தம் மூர்த்திந பரிஷ் வஜ்ய ச ராகவ–பாரதம் ஆரோப்ய–அயோத்-100-3-
என்று பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானுக்கும்

2-சோப்யேநம் த்வஜ வஜ்ர அப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா சம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்ய ச பிரீத்யா ஸூ காடம் பரிஷஸ் வஜே —
ஸ்ரீ கண்ணபிரான் அக்ரூரருக்கு அளித்த பரிஷ் வங்கம்

3–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந –யுத்த -1-15-
பெருமாள் திருவடிக்கு கொடுத்த பரிஷ் வங்கம்

4-தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகா வஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹி பார்த்தாராம் பரிஷஸ் வஜே–ஆரண்ய-30-39-
கர தூஷண வத அனந்தரம் பிராட்டி பெருமாளுக்கு கொடுத்த பரிஷ் வங்கம்

மற்றவைகளின் தொகுப்பு –

5-தம் த்ருஷ்ட்வா ப்ரணதம் பார்ஸ்வே க்ருதாஞ்சலி புடம் ந்ருப க்ருஹ்யாஞ்சலவ் சமயாக்ருஷ்ய சச்வஜே ப்ரியமாத்மஜம் –அயோத் -3-34–
சக்கரவர்த்தி பெருமாளுக்கு பரிஷ் வங்கம்

6-ப்ரண மந்தம் சமுத் தாப்ய தம் பரிஷ் வஜ்ய பூமிப –அயோத்-4-11–
சக்கரவர்த்தி பெருமாளுக்கு பரிஷ் வங்கம்

7-பரிஷ் வக்தச் ச பஹுப்யாம் உபாக்ராதச் ச மூர்த்த நி –அயோத் -20-21–
ஸ்ரீ கௌசல்யா தேவி பெருமாளை பரிஷ் வங்கம்

8-ப்ரதக்ஷிணஞ் சைவ சகார ராகவம் புந புநச் சாபி நிபீட்ய சச்வஜே –அயோத் –25-46–
ஸ்ரீ கௌசல்யா தேவி பெருமாளை பரிஷ் வங்கம்

9-சுக்ரோச பதிமாயத்த ப்ருசமா லிங்க்ய ஸத்வரம் –அயோத் -30-22-
ஸ்ரீ சீதா பிராட்டி பெருமாளை பரிஷ் வங்கம்

10-தம் பரிஷ் வஜ்ய பஹுப்யாம் விசம்ஜ்ஞாமிவ துக்கிதாம் உவாச வசனம் ராம –அயோத்-30-26-
பிராட்டியை பெருமாள் பரிஷ் வங்கம்

11-தம் பரிஷ் வஜ்ய பஹுப்யாம் தாவுபவ் ராம லஷ்மணவ் –அயோத் -34-20-தாசாரதிகள் சக்கரவர்த்தியை பரிஷ் வங்கம்

12-புஜாப் யாம் சாது வ்ருத்தாப் யாம் பீடயந் வாக்யம் அப்ரவீத் -அயோத் -50-42–ஸ்ரீ குஹப் பெருமாளை பெருமாள் பரிஷ் வங்கம்

13-தாந் நராந் பாஷ்ப பூர்ணாஷாந் சமீஷ்யாத ஸூ துக்கிதான் பர்யஷ்வஜத தர்மஞ்ஞ பித்ருவன் மாத்ருவச்ச ச –அயோத் -102-47-
சித்ர கூடம் வந்த பவ்ர ஜனங்களை பெருமாள் பரிஷ் வங்கம்

14-ச தத்ர காம்ச்சித் பரிஜஸ் வஜே நரான் —அயோத் -102-48-
சித்ர கூடம் வந்த பவ்ர ஜனங்களை பெருமாள் பரிஷ் வங்கம்

15-ததேதி ச ப்ரதிஞ்ஞாய தம் பரிஷ் வஜ்ய சாதரம் சத்ருக் நஞ்ச பரிஷ் வஜ்ய பரதஞ்சேதம் அப்ரவீத் –அயோத் -112-27–
ஸ்ரீ பரத்தாழ்வானையும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானையும் பெருமாள் பரிஷ் வங்கம்

16-ஹத்வா துதிதம் பீமா பலம் விராதம் ராக்ஷஸம் வநே ததஸ் ஸீதாம் பரிஷ் வஜ்ய சமாஸ்வாஸ்ய ச வீர்யவான் –ஆரண்ய –5-1-
விராத வதத்துக்கு பின் பெருமாள் பிராட்டிக்கு பரிஷ் வங்கம்

17-ச நிரீஷ்ய ததோ வீரம் ராமம் தர்ம ப்ருதாம் வரம் சமாஸ் லிஷய ச பஹுப்யாம் இதம் வசனம் அப்ரவீத் –ஆரண்ய -7-7-
ஸூ தீஷ்ண முனிவர் பெருமாளுக்கு பரிஷ் வங்கம்

18-தவ் சம்ஸ் ப்ருசந்தவ் சரணா யுத்தாப்ய முநி புங்கவ கடாமாச் லிஷ்ய சஸ்நேஹமிதம் வசனம் அப்ரவீத் –ஆரண்ய -8-10–
ஸூ தீஷ்ணர் ராம லஷ்மணர்களை பரிஷ் வங்கம்

19-ச்ருத்வா ஜடாயுஷோ வாக்யம் ராமஸ் சவ்மித்ரிணா ஸஹ க்ருத்ர ராஜம் பரிஷ் வஜ்ய பரித்யஜ்ய மஹத் தநு–ஆரண்ய -67-22-
பெரிய உடையாரை பெருமாள் பரிஷ் வங்கம்

20-நிக்ருத்த பக்ஷம் ருதிராவ சிக்தம் ச க்ருத்ர ராஜம் பரி ரப்ய ராம –ஆரண்ய -67-29-
பெரிய உடையாரை பெருமாள் பரிஷ் வங்கம்

21–25–கிஷ்கிந்தா காண்டம் -5-14–/-7-16-/-12-12-/-39-1-/-40-1-/–ஐந்து இடங்களிலும்
பெருமாள் ஸூ க்ரீவ மகாராஜரை பரிஷ் வங்கம்

26-அத தஸ்மிந் நிமித்தாநி த்ருஷ்ட்வா லஷ்மண பூர்வஜ ஸூக்ரீவம் பரிஷ் வஜ்ய –யுத்த -41-1–
பெருமாள் ஸூ க்ரீவ மகா ராஜரை பரிஷ் வங்கம்

27-தாவுத் தாப்ய மஹா வீர்யவ் கருடோ வாசவோபமவ் உபவ் தவ் சஸ் வஜே –யுத்த –50-41–
பெரிய திருவடி ராம லஷ்மணர்களை பரிஷ் வங்கம்

28-ஏவம் உக்த்வா ததோ ராமம் ஸூ பர்ணஸ் ஸூ மஹா பல பரிஷ் வஜ்ய –யுத்த –50-55–
பெரிய திருவடி ராம லஷ்மணர்களை பரிஷ் வங்கம்

29-உபவேஸ்ய சமுத் சங்கே பரிஷ் வஜ்யா வபீடிதம் பிராதரம் லஷ்மணம் –யுத்த -92-10–
பெருமாள் இளையோனை பரிஷ் வங்கம்

30-ச தம் பிராதரம் ஆஸ்வாஸ்ய பரிஷ் வஜ்ய ச ராகவ –யுத்த -92-19–
பெருமாள் இளையோனை பரிஷ் வங்கம்

31-ஏஹ்யே ஹீத்யப்ரவீத் ராம லஷ்மணம் பர வீரஹா சஸ்வஜே ஸ்நேஹ காடஞ்ச –யுத்த -102-46–
பெருமாள் இளையோனை பரிஷ் வங்கம்

32-ராகவ பரம ப்ரீத ஸூக்ரீவம் பரிஷஸ் வஜே பரிஷ் வஜ்ய ச ஸூக் ரீவம் –யுத்த –115-6–
பெருமாள் ஸூக்ரீவ மகா ராஜரை பரிஷ் வங்கம்

33-தம் சமுத்தாப்ய காகுத்ஸ்த சிரஸ்யா ஷிபதம் -அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ் வஜே –யுத்த -130-40–
பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானை பரிஷ் வங்கம்

34-புத்ரம் தசரதஸ் தத–பாஹுப்யாம் சம் பரிஷ் வஜ்ய –யுத்த -172-12–
சுவர்க்கத்தில் இருந்து வந்த சக்கரவர்த்தி பெருமாளை பரிஷ் வங்கம்

35-த்வாம் து த்ருஷ்ட்வா குசலிநம் பரிஷ் வஜ்ய ச லஷ்மணம் அத்ய துக்காத் விமுக்தோஸ்மி –யுத்த –172-15–
சக்கரவர்த்தி இளைய பெருமாளைச் சேர்த்து பரிஷ் வங்கம்

36-அபி ஷிக்தவ் ஸூ தா வங்கே ப்ரதிஷ்டாப்ய புரி தத பரிஷ் வஜ்ய மஹா பாஹு மூர்த்ந் யுபாக்ராய சா ஸக்ருத் –உத்தர -107-18–
பெருமாள் குசலவர்களை பரிஷ் வங்கம்

—————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரெங்கம் -மட்டை அடி என்னும் -ஸ்ரீ ப்ரணய கலக-உத்சவம் –

February 2, 2019

ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ ப்ரணய கலக உத்சவம் –
பங்குனி மாத சுக்ல பக்ஷம் ஆதி ப்ரஹ்ம உஸ்தவத்தில் பங்குனி உத்தரம் -ப்ரணய கலகம் –
பெருமாளுக்காக அரையரைக் கொண்டும் -நாச்சியாருக்காக பண்டாரிகளைக் கொண்டும் வாதிப்பார்கள் –

திரு பங்குனி உத்தர நக்ஷத்ரம் -ஸூர்ய உதய காலத்தில் நம் பெருமாள் திருப் பல்லக்கில் ஏறி அருளி
முன்னும் பின்னும் ஸ்ரீ வைஸ்ணவ உத்தமர்கள் ஸ்தோத்ரம் பண்ண
திரு வெண் சாமரம் திரு முத்துக் கொடை முதலிய உபசாரத்தோடும்
ஒவ்வொரு திரு மாளிகையிலும் திருக் காவனம் பரிமாறி -வாழை மரம் பாக்கு கொலை முத்து பவளம் இவற்றால்
அலங்கரித்து ரமணீயமாய் இருக்கிற உள் திரு வீதி சித்திர திரு வீதிகளை வளம் வந்து
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருச் சந்நிதிக்கு அதீதமான ப்ரேமையுடன் எழுந்து அருளும் போது
பெருமாள் உறையூர் நாச்சியார் இடம் போய் வந்தார் என்ற கோபத்தால் பெரிய பிராட்டியார்
திருக் காப்புச் சேர்த்துக் கொண்டு பூப் பந்துக்களாலும் -வாழைப் பழம் பலாச் சுளை முதலவைகளாலும் எறிவித்து
வாசலிலே நிறுத்தி வைக்கும் இருவருக்கும் போது நடக்கிற சம்வாதம் –

ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் –
நாம் உத்சவ அர்த்தமாக புறப்பட்டு அருளி திரு வீதிகள் எல்லாம் வலம் வந்து
தேவர்கள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க ஸ்ரீ வைஷ்ண உத்தமர்கள் முன்னும் பின்னும் ஸ்தோத்ரம் பண்ண
இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்கள் இடத்திலே வந்தால் தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு
திருக் கை கொடுத்து உள்ளே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்ஹாசனத்திலே
ஏறி எழுந்து அருள பண்ணி திருவடி விளக்கி – திரு ஒத்துவாடை சாத்தி -திரு ஆலவட்டம் பரிமாறி –
மங்கள ஆலத்தி கண்டு அருள பண்ணி சுருள் அமுது திருத்தி சமர்ப்பித்து இப்படி அநேக உபசாரங்கள் எல்லாம் நடக்குமே
இன்றைக்கு நாமே எழுந்து அருளின இடத்திலே திருக் காப்புச் சேர்த்துக் கொண்டு திரு முக மண்டலத்தைத் திருப்பிக் கொண்டு
திருச் சேவடிமார்கள் கைகளால் பந்துக்களாலும் பலன்களாலும் விட்டு எறிவித்து இப்படி ஒரு நாளும் பண்ணாத அவமானங்களை
எல்லாம் இன்றைக்கு பண்ண வந்த கார்யம் ஏது என்று கேட்டு வரச் சொல்லி
ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
தாம் எப்போதும் போலே எழுந்து அருளினதே மெய்யானால் திருக் கண்கள் எல்லாம் சிவந்து இருப்பான் என்
திருக் குழல் கற்றைகள் எல்லாம் கலைந்து இருப்பான் என்
திருக் கஸ்தூரி திரு மன் காப்பு கரைந்து இருப்பான் என்
திரு அதரம் வெளுத்து இருப்பான் என்
திருக் கழுத்து எல்லாம் நகச் சிஹ்னங்களாக இருப்பான் என்
திரு மேனி எல்லாம் குங்குமப் பொடிகளாக இருப்பான் என்
திருப் பரி வட்டங்கள் எல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பான் என்
திருவடிகள் எல்லாம் செம்பஞ்சுக் குழம்பாய் இருப்பான் என்
இப்படிப்பட்ட அடையாளங்களை பார்த்து நாச்சியாருக்கு திரு உள்ளம் மிகவும் கலங்கி இருக்கிறது
ஆனபடியினாலே உள்ளே இருக்கிறவர்களை வெளியே விட வேண்டாம் என்றும்
வெளியிலே இருக்கிறவர்களை உள்ளே விட வேண்டாம் என்றும்
இப்படி கட்டுப்பாடு பண்ணிக் கொண்டு இருக்கிற சமயத்திலே உள்ளே விண்ணப்பம் செய்ய சமயம் இல்லை
ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்து அருளின இடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி
நாச்சியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
திருக் கண் சிவந்து இருப்பான் என் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான படியால்
கவரி முடித்து கல் கச்சை கட்டி வல்லபம் ஏந்தி குதிரை நம்பிரான் மேலே ராத்திரி முழுவதும் நித்திரை இன்றி
ஜகத் ரக்ஷண அர்த்தமாக ஜாக ரூகனாய் இருந்த படியினால் திருக் கண் சிவந்து போச்சுது
திருக் குழல் கற்றைகள் எல்லாம் கலைந்து இருப்பான் என் என்றால் காற்று அடித்து கலைந்து போச்சுது
கஸ்தூரி திரு மண் காப்பு கரைந்து இருப்பான் என் என்றால் அதுகடோரமான ஸூர்ய கிரணத்தால் கரைந்து போச்சுது
திரு அதரம் வெளுத்து இருப்பான் என் என்றால் அசுரர் நிரசன அர்த்தமாய் தேவதைகளுக்காக சங்கத்வானாம் பண்ணின படியால் வெளுத்துப் போச்சு
திருக் கழுத்து எல்லாம் நகச் சின்னமாய் இருப்பான் என் என்றால் அதி பிரயாசமான காடுகளில் போகிற போது பூ முள்ளு கிழித்தது
திருமேனி எல்லாம் குங்குமப் பொடிகளாய் இருப்பான் என் என்றால் தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்த படியால் புஷ்ப ரேணு படிந்தது
திருப் பரிவட்டங்கள் எல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பான் என் என்னில் சந்த்யா ராகம் போலே இருக்கிற
திவ்ய பீதாம்பரமான படியால் உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாய்த் தோன்றுகிறது
திருவடிகள் எல்லாம் செம்பஞ்சக் குழம்பாய் இருப்பான் என் என்றால் குதிரை நம்பிரான் மேல் ஏறி அங்கை மேல்
திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியாலே திருவடிகள் சிவந்து போயின
இப்படிப்பட்ட அடையாளம் ஒழிய வேறே இல்லை -ஆனால் போது கழித்து வருவான் என் என்றால்
வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற சமயத்திலே திருமங்கை ஆழ்வான் என்பான் ஒருவன் வந்து
சர்வ ஸ்வ அபஹாரத்தையும் பண்ணிக் கொண்டு போனான்
அவனை சில நல் வார்த்தைகளைச் சொல்லி திரு ஆபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு போய்
கரு வூலத்தில் எண்ணிப் பார்க்கும் இடத்து கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது –
அதற்காக விடிய பத்து நாழிகைக்கு புறப்பட்டு அருளி திரு வீதிகள் எல்லாம் வலம் வந்து கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே அப்பொழுது தேவர்கள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு சேவிக்க வந்தார்கள்
நாம் நம்முடைய பெண்டுகள் அன்னியிலே சூடுகிறது இல்லை என்று தமக்கு முன்னமே வரக்காட்டி நாமும் பின்னே எழுந்து அருளினோம்
ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால் விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டு அருளி உறையூரில் போய்
மின்னிடை மடவார் சேரி எல்லாம் புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து அவ்வனுபவத்திலே உண்டாய் இருக்கிற
அடையாளங்கள் எல்லாம் திருமேனியில் தோற்றா நிற்கச் செய்தேயும்
அவ்வடையாளங்களையும் அந்யவதாவாகக் கொண்டு நாங்கள் ஏழைகளான படியால் இப்படிப்பட்ட இருக்கிற வஞ்சந யுக்திகளை
எல்லாம் நேற்றைக்கு எழுந்து அருளின இடத்திலே தானே சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே தான் எழுந்து அருளச் சொல்லி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை -காதாலே கேட்டதும் இல்லை
துஷ்டர்களாய் இருக்கிறவர்களும் மனதுக்கு சரிப்போன படி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு
நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானங்களை எல்லாம் பண்ணலாமா
நீங்கள் ஸ்த்ரீகளான படியால் முன்பின் விசாரியாமல் பண்ணினீர்களாம் என்கிற அவமானம் உங்களுக்கே ஒழிய நமக்குத் தேவை இல்லை
ஆனபடியால் நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து எழுந்து அருளினார் என்று
அடியோங்கள் அதி ப்ரீதியுடனே எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து உள்ளே
எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்ஹாசனத்திலே ஏறி அருள பண்ணி திருவடி விளக்கி
திரு ஒத்து வாடை சாத்தி திரு ஆலவட்டம் பரிமாறினோம்
அப்போது அதிக சிரமத்தோடு எழுந்து அருளி இருந்தார் –
ஆனால் இளைப்போ என்று வெந்நீர் திரு மஞ்சனம் சேர்த்து சமர்ப்பித்தோம்
அதை நீராடினது பாதியும் நீராடாதது பாதியுமாகவே எழுந்து அருளி இருந்தார்
ஆனால் இளைப்போ என்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து சமர்ப்பித்தோம்
அதையும் எப்போதும் போலே சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒரு விதமாக சாத்தி அருளினார்
ஆனால் இளைப்போ என்று கஸ்தூரித் திரு மண் காப்பு சேர்த்து சமர்ப்பித்தோம்
அதையும் எப்போதும் போல் சாத்திக் கொள்ளாமல் திரு வேங்கடமுடையான் திரு மண் காப்பு போலே
கோணாமாணாவாய்ச் சாத்தி அருளினார்
ஆனால் இளைப்போ என்று தங்க பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
வர்க்க வகைகள் முதலானதுகளைச் சேர்த்து சமர்ப்பித்தோம்
அதையும் அமுது செய்தது பாதியும் செய்யாதது பாதியும் எழுந்து அருளி இருந்தார்
ஆனால் இளைப்போ என்று சுருள் அமுது சேர்த்து சமர்ப்பித்தோம் –
அதையும் அமுது செய்யாதபடி தானே எழுந்து அருளி இருந்தார்
ஆனால் இளைப்போ என்றுதிரு அநந்த ஆழ்வானைத் திருப் படுக்கையாக விரித்து அதன் மேல்
திருக் கண் வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் படித்து இருந்தோம்
தாம் வஞ்சகரான படியால் எங்களுக்கு ஒரு மாயா நித்திரையை உண்டாக்கி எங்கள் கருகூலம் திறந்து
எங்கள் ஸ்த்ரீ தனங்களான -அம்மானை -பந்து கழஞ்சு -பீதாம்பரங்களையும் கைக் கொண்டு இன்ன இடத்துக்கு
எழுந்து அருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்து அருளினார்
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்து இருந்து திருப் படுக்கையை பார்க்கும் இடத்தில்
பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாய் அடித்து அணுக விடும் வாசல் காப்பாளரை அழைத்து
கேட்கும் அளவிலே அவர்கள் வந்து – அம்மானை -பந்து கழஞ்சு -பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக் கொண்டு
இன்ன இடத்துக்கு எழுந்து அருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்து அருளினார் என்று சொல்ல வந்தார்கள்
அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற திருச் சேவடிமார்களை அழைப்புவித்தோம்
அவர்கள் வந்து அடி பிடித்து அடி மிதித்துக் கொண்டு போன இடத்திலே உறையூரில் கொண்டு போய் விட்டது
அங்கே மச்சினி என்று ஒருத்தி முறைமை சொல்லி மற்று ஒருத்தியை மடியைப் பிடித்ததும் –
கச்சணி பொன் முலை கண்ணால் அழைத்ததும் -கனிவாய்க் கொடுத்ததும் -கையிலே நகக் குறி மெய்யாக ஆனதும் –
கார் மேனி எங்கும் பசு மஞ்சள் பூத்ததுமாய்க் கரும்புத் தோட்டத்தில் யானை சஞ்சரிக்குமா போலே
தேவரீர் சஞ்சரிக்கிறார் என்று நாங்கள் உசிதமாகப் போக விட்ட தூதியோடி வந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள்
உம்மாலே எமது மனது உலை மெழுகாய் இருக்கிறது -ஒன்றும் சொல்லாதே போம் போம் என்று
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
ஒருவருக்கு ஒருவர் சம்சயப்பட்டால் அந்த சம்சயம் தீராமல் போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்
அந்தப்படி பிரமாணம் பண்ணித் தருகிறோம்
நாம் தேவாதி தேவனான படியால் தேவதைகளைத் தாண்டித் தருகிறோம் -சமுத்ரத்திலே மூழ்குகிறோம் –
அக்னி பிரவேசம் பண்ணுகிறோம் -பாம்புக்கு குடத்தில் கை இடுகிறோம் -மழு ஏந்துகிறோம் –
நெய்க்குடத்திலே கை இடுகிறோம் -இப்படிப்பட்ட பிரமாணங்களை யானாலும் வாங்கிக் கொண்டு
நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கி சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம் பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
ஒருவருக்கு ஒருவர் சம்சயப்பட்டால் அந்த சம்சயம் ஒரு பிரகாரத்தாலும் தீராமல் போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்
லோகத்தில் ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மனைத் தாண்டிக் கொடுப்பான்
தாம் தேவாதி தேவனான படியால் தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே
அந்தத் தேவதைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம் என்று சதா பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறவர்களை
வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால் வேண்டாம் என்பார்களா
சமுத்ரத்திலே மூழ்கிறோம் என்று சொல்ல வந்தீரே -பிரளய காலத்திலே சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த தமக்கு சமுத்ரத்திலே முழுகுகிறது அருமையா
அக்னிப் பிரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்ல வந்தீரே -ப்ரஹ்மாவுக்காக உத்தர வீதியிலே ஆவிர்பவித்த தமக்கு
அக்னியில் மூழ்கிறோம் என்றால் அக்னி சுடுமா
பாம்புக் குடத்தில் கை இட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம் என்று
சதா சர்வ காலமும் திரு அநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளர்ந்து இருக்கிற தமக்குப்
பாம்புக் குடத்தில் கை விட்டால் பாம்பு கடிக்குமோ
மழு ஏந்துகிறோம் என்று சொல்ல வந்தீரே -கோடி ஸூர்ய பிரகாசகமான திருவாழி ஆழ்வானை சதா திருக் கையிலே
தரித்துக் கொண்டு இருக்கிற தமக்கு அப்ரயோஜகமான இரும்பு மழு ஏந்துகிறது அருமையோ
நெய்க்குடத்திலே கை இடுகிறோம் என்று சொல்ல வந்தீரே -கிருஷ்ண அவதாரத்தில் பஞ்ச லக்ஷம் குடியில் உள்ள
நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்திலே கை இடுவது அருமையா
இப்படிப்பட்ட இருக்கிற பரிஹாஸ பிரமாணங்களை எல்லாம் தமக்கு சரிப்போன இடத்திலே தானே பண்ணிக் கொண்டு
இன்றைக்கும் அங்கே தானே எழுந்து அருளச் சொல்லி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம்
நாம் உத்சவ அர்த்தமாகப் புறப்பட்டு அருளி திரு வீதிகள் எல்லாம் உலா வந்து தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ண இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்கள் இடத்தில் வந்தால்
தாங்கள் எப்போதும் போல் ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப் பண்ணினோம் என்கிறீர்கள்
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம்
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்
ஆனால் பிரமாணம் பண்ணித்தருகிறோம் என்று சொன்னோம் அத்தை பரிஹாஸ பிரமாணம் என்று சொன்னீர்கள்
இப்படி நாம் எத்தனை சொன்ன போதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு சற்றும் திரு உள்ளத்தில் இரக்கம் வாராமல்
கோபத்தால் திரு உள்ளம் கலங்கி திரு முக மண்டலம் கறுத்துத் திருக் கண்கள் சிவந்து இப்படி எழுந்து அருளி இருந்தால்
நமக்கு என்ன கதி இருக்கிறது
அழகிய மணவாள பெருமாள் ஸ்ரீ ரெங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளுப பட்டுக் கொண்டு இருக்கிறார் என்கிற அவமானம்
உங்களுக்கே ஒழிய நமக்குத் தேவை இல்லை
ஆனபடியால் நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி
ஸ்ரீ நம்பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் –

ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்
தாம் வருஷா வருஷம் அடமா எழுந்து அருளி தமக்குச் சரிப்போன படி நடந்துப் போட்டு பின்னும்
இங்கே வந்து நாம் என்றும் அறியோம் என்றும் பிரமாணம் பண்ணித் தருகிறோம் என்றும் பரிஹாஸங்களைப் பண்ணி
இப்படிப் பட்டு இருக்கிற அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர்
நாமானால் பொறுக்கிறது இல்லை –
நம்முடைய அய்யா நம்மாழ்வார் வந்து மங்களமாகச் சொன்ன வாய் மொழியினாலே பொறுத்தோம் –
உள்ளே எழுந்து அருளச் சொல்லி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் அருளிச் செய்த பிரகாரம்

பிரணய கலகம் முடிந்து உடனே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன்
ஒரே சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி சகல மனுஷ நயன விஷயமாகி சேர்த்தி சேவை சாதித்து அருளுகின்றார் –

——————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-