திருவழுந்தூர்க் கம்பன் –கருணை செயதோர் மற்றும் புலவரையும் வாழ வைத்தார் சோழ மண்டலமே
சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூர் உவச்சன் -கம்பர் ஜாதி உவச்ச சாதி
தந்தை பெயர் -ஆதித்யன் -இளைமையில் இழந்ததால்–திரு வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் போஷகரானார்
நம் சடகோபனைபி பாடினையோ வென்று நம்பெருமாள் விஞ்சிய ஆதரத்தால் கேட்பக்
கம்பன் விரித்துரைத்த செஞ்சொல் அந்தாதிக் கலித்துறை நூறும் -சடகோபர் அந்தாதி
எண்ணி சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய விராம காதை பங்குனி உத்தரத்தில்
கண்ணிய வரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே —
சாலிவாகன சகாப்தம் -807-கி பி -885-மெட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அரங்கேற்றம் –
சிலர் 12-நூற்றாண்டு என்றும் சொல்வர் –
திருமண் தரித்து இருந்தார் -நான்முகன் முதல் யாரும் யாவையும் நின்ற பேர் இருளினை நீக்கி
நீள் நெறி சென்று மீளாக் குறி சேர்த்திடு தன் திரு நாமத்தை தானும் சாத்தியே –
இவருக்கு அம்பிகாபதி என்ற மகன் பிறந்து அவனும் சிறந்த வித்வானாக ராஜசபை சென்று நாள்தோறும் பெருமையுடன் வாழ்ந்தான்
புகழேந்தி புலவர் ஒட்டக்கூத்தர் சமகாலத்து புலவர்கள்–
————————
தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9
தருகை நீண்ட-கொடுக்கும் தொழில் மிக்குள்ள -சாஷாத் தர்மமான பெருமாளையே தந்தவர் அன்றோ
தயரதன்தான் தரும்-சக்கரவர்த்தி பெற்ற
இரு கை வேழத்து இராகவன் தன் கதை-இரண்டு திருக் கையை யுடைய யானையைப் போன்ற ஸ்ரீ ராமபிரானு டைய சரிதத்தை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட–வட்ட வடிவமாகிய சமுத்ரத்தால் சூழப்பட்ட இந்த பூ லோகத்தில் சொல்லுதற்கு
குருகை நாதன் குரை கழல் காப்பதே.–காப்பாக இருப்பது திருக் குருகூர் நம்பி நம்மாழ்வாருடைய வீரக் கழலை அணிந்த திருவடிகளே
தனியன்
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி,
கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2– தாலை நாட்டி -நாவாகிற மந்த்ரத்தை நிறுத்திக் கடைந்து –
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணை பள்ளியான் யன்பர் ஈட்டம் கண்டு அருந்த நிறைப்பான்-போலே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே –
இம்மையே இ’ராம’ என்று இரண்டு எழுத்தினால். 15
வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21
இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1-பிராணவார்த்தம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -போலே
சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
சிற்குணத்தர்–ஞானவான்கள்
தெரிவு அரு நல் நிலை எற்கு உணர்த்த அரிது–அறிந்து சொல்ல முடியாத பர ப்ரஹ்மத்தின் தன்மையை –
பிறர் அறியும்படி சொல்லுவது எனக்கு முடியாததாகும்
எண்ணிய மூன்றினுள்–சாஸ்திரங்கள் மதித்து கூறும் சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களுள்
முற் குணத்தவரே முதலோர்–மும்மூர்த்திக்களுக்குள் சுத்த சத்வம் யுடைய திருமாலே முதல்வர்
அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ–அவனது கல்யாண குண சாகரத்தில் நீராடுவதே நன்று
ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன – மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3-
————-
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4-
பாற்கடலை நக்கி முழுவதும் நக்கிப்பருக புகுந்தால் போல் அன்றோ ஸ்ரீ ராமகதையைச் சொல்லப்புகுந்தேன் -அவை அடக்கப்பாடல்
மா நிஷாத ப்ரதிஷ்டான் த்வம் காம் ஸாஸ்வதீஸ் சமாயத் கிரௌஞ்ச மிதுனா தேகம் அவதி காம மோஹிதம்
வையம் என்னை திகழவும் மாசு எனக்கு
எய்தவும் இயம்புவது இது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலைமையினோன் புகழ்
தைவ மாக் கவி மாட்சி தெரிக்கவே
முத்தமிழ் துறையின் முறை போகிய
உத்தமக் கவி கட்கு ஓன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையார் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
அறையும் ஆடரங்கும் படைப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையில் நூல் உணர்ந்தாரும் முனிவரோ —தச்சர் -சிற்ப நூல் வல்லரான சிற்பிகள்
———————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply