குரு பரம்பரை பூர்வகமாகவே கொள்ள வேண்டுமே
பொய்கை முனி –மனன சீலர் / பூதத்தார் -பூ சத்தா கர்ப்ப ஸ்ரீ மான் – கருவரங்கத்துள்ளே கை தொழுதார் -/
பேயாழ்வார் -மாறுபட்ட ஸ்வா பாவம்-எழுந்தும் பறந்தும் துள்ளி –
நாட்டாரோடு இயல் ஒளிந்து நாரணனை நண்ணி / நம் பாணர் -முனி வாஹனர் /
இந்நின்ற நீர்மை -உள்ளம் நடுங்கி அனுவாதம் -பீதி அனுவாதம் ஹேது -என்று இவர்கள் -ப்ரீதி அனுவாத ஹேது / மகிழ்ந்து பாடி /
என் உயிர் தந்து அளித்தவரை-நல்கு த் தான் அளித்து – சரணம் புக்கு யான் அவர் குருக்கள் நிரையினை -குரு பரம்பரையை -அடைவே -ஆ பகவந்த-வணங்கி —
பின் அருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் / அவதாரங்களை பின் -குரு பரம்பரை வணங்கிய பின் -என்றுமாம் -/
பெரிய -விசேஷணம் -பிராட்டியாருக்கும் / திருவடிக்கும் / பெரிய உடையார் / பெரியாழ்வார் / பெரிய நம்பி / பெரிய ஆச்சான் பிள்ளை /
ஆளவந்தார் -அடியோம் –சம்சாரம் போக்கி நிரந்தர உஜ்ஜீவிக்க -/ மணக்கால் நம்பி -மணல் கால் என்றுமாம்
/நல் நெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் /
ராம மிஸ்ரரும் புண்டரீகாக்ஷரும் /பழையது சாப்பிட்டு உய்யக் கொண்டார் -நாத முனிகள் திரு குமாரி புக்கத்தில் /
பிணம் கிடக்க மணம் சூடுவார் உண்டோ -நாம் உய்ய அன்றோ பிரபத்தியை ஸ்வீகரித்து கொண்டார் /
நல் நெறி -நாதமுனி நியமனம் படி ஆளவந்தாருக்கு சேர மணக்கால் நம்பிக்கு உரைத்த என்றுமாம்
நாத முனி -மனன சீலர்-லோகத்தாருக்கு நாதர் அன்றோ /மாறன் -அஞ்ஞானம் விடுவித்து/ சேனை நாதன் –
ஸ்ரீ லஷ்மி நாதன் / வியாசாதிகள் உபகார பரம்பரை -இவர்கள் உத்தாரகர்கள்
ஸ்ரீ பராங்குச தாசர் மூலமாகவும் யோக மஹிமையாலும் சாஷாத்தாக நம்மாழ்வார் அருள் பெற்றார் ஸ்ரீ மத் நாத முனி
இன்னமுத திரு மகள் -அமுதத்வம் அசாதாரணம் -பகவானுக்கு -அவனுக்கும் இனியவளே –
இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடியை அடைகின்றேன் -ப்ராப்ய பிராபக கோடி இரண்டிலும்
குரு கு சப்தம் அந்தகார ரு சப்தம் தன் நிவர்த்தகம் / ஆச்சார்யர் மூன்று –
1-ஆஸி நோதி சாஸ்த்ரார்த்தம் -தத்வ ஹிதம் புருஷார்த்தங்களை அறிந்து அறிவித்து –
2–சிஷ்யனுக்கு ஆச்சாரங்களில் நிலை பெருவித்து —
3-ஸ்வயம் தானும் ஆசரித்து-அவன் பொருட்டு இவரே சரணாகதி என்றவாறு – -/
ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டும் கொண்டு சிஷ்யருக்கு வளங்கி /
நம அதீமஹே–நமஸ் சப்தார்த்தம் –ஓதாமல் ஒருக்காலும் இருக்க வேண்டாம் -சந்தை சொல்லி கிரஹித்து –
கிரமமாக ஜபம் பண்ணி -அத்யந்த ஆதாரத்துடன் /
காலத்தாலும் கௌரவ புத்தியாலும் /மானஸ வாசிக காயிக நமஸ் முக்கரணங்களால்
தத்ர -ஸ்வ ஆச்சார்யர் தொடக்கமாக குரு பரம்பரை /வரித்து கொண்டு விரிணீ மஹே//
ஆத்யம் தம்பதி -ஜெகதாம் பதி-சேஷி –காரணத்வம்-ஆதி /
ஆச்சார்ய சம்பந்தமே சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேது என்று அறுதி இட்டார்கள் –
பாபிஷ்ட சத்ர பந்துவுக்கும் கூட -இவன் செய்வது எல்லாமே பாபமே -அவனுக்கும் கூட மோக்ஷம் பலம் கிட்டிற்றே ஆச்சார்ய சம்பந்தத்தால்
புண்டரீகன் செய்த புண்ணியத்தால் இல்லை -இவனுக்கும் ஆச்சார்ய சம்பந்தத்தால் -மோக்ஷம் பலம் -கிட்டிற்றே –
அன்வய வ்யதிரேகத்தால் காட்டி அருளுகிறார்
ஆதியிலே வேதம் சதுர்முகனுக்கு அருளி / மீளவும் அவன் தொலைக்க மீட்டு கொடுத்தான் /
நாரதாதி மகரிஷிகள் வியாசர் -அனுபிரவேசம் பண்ணி வேதங்களை பிரவர்த்திப்பித்து
அவதாரம் -ஞான பிரதானம் ஹம்சம் -அன்னமாய் வெளிப்படுத்தி / மத்ஸ்ய -மனுவுக்கு தர்ம சாஸ்திரம் / ஹயக்ரீவ / நர நாராயண /கீதாச்சார்யன்
பீஷ்மாதிகள் இட்டு மூதலித்து / பாஞ்சராத்ர ஆகமம் பிரவர்த்திப்பித்து / ஆழ்வார்களாக அபிநவ தசாராவதாரம்
திராவிட பாஷையால் அருளிச் செய்து /பிரகட பிரசன்ன பாஷண்டிகளை நிரசிக்க ஆச்சார்ய முகேன-அவதரித்ததும் -/இப்படி தச வித உபகாரங்கள்
ஆரண நூல் வழி செவ்வை அழித்திடும் ஐதுகர் -விசுவாச ரஹிதர்கள் -ஆரிய சிதைவு -ஹேது கேட்டே வாழ்க்கை –
ஓர் வாரணமாய் -அத்விதீய -அவர் வாதக் கதவிகளை-அழித்து ஒழித்து
ஏரணி கீர்த்தி ராமானுஜர் -இன்னுரை சேரும் சீர் அணி சிந்தையினோம் நம் தீவினைகள் போக்கும்
ஆளவந்தார் அடியோம் இனி அல்வழக்கு படியோம் –
———————————-
[அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் முதலாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது. )[ ஸத்ஸம்ப்ரதாயத்தின் ஆவச்யகதை-ஸத்ஸம்ப்ரதாய லக்ஷணம்–ஸத்ஸம்ப்ரதாய க்ரமம் கலியுகத்தில் நம்மாழ்வாரின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்-நாதமுநிகள் முதலாக ஆசார்ய பரம்பரை ப்ரதாந ஆசார்ய லக்ஷணம்-ஸ்ரீபாஷ்யகார ஸம்ப்ரதாயத்தில்ஆபாதப்ரதீதியில் தோன்றும் ஸந்தேஹங்களுக்குப் பரிஹாரம் திருமந்த்ர விஷயமான விளக்கம்-த்வய விஷயமான விளக்கம்-சரமச்லோக விஷயமான விரோத சங்கா பரிஹாரம் நிகமனம் ]
அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள் -சம்பிரதாய பரிசுத்தி- சோதனம் -கலக்கம் போக்குவது -போல்வன–
சாஸ்திரம் மூலமான சம்ப்ரதாயம் -தத்வ ஞானம் அனுஷ்டானம் / தத்வ ஹித புருஷார்த்தம் விளக்கி /
தம்பரம் என்று இரங்கி தளரா மனம் தந்து அருளால்
உம்பர் தொழும் திருமால் உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே –1–
உபாயம் ஒன்றால் -பிரபத்தி மார்க்கத்தால் –
ஞானப் பெரும் தகவோர் -அருளால் –பெரும் -ஞானத்துக்கும் அருளுக்கும் -அபரிச்சின்னமான ஞானம் தயை நிரூபணம் கொண்ட நம் ஆச்சார்யர்கள் –
தகவு -ஸ்வரூப நிரூபணம் / அருளால் -கார்யம் கொண்ட தயை
தம்பரம் என்று இரங்கி -நம்மை தம்முடைய பரம் என்று இரங்கி-பொறுப்பில் கொண்டு -அருளால் இரங்கி
எல்லா பிர்விருத்திகளும் அருளால் -பிடிக்கி பிடிக்கு ராஜ குமாரர் நெய் சேர்ப்பது போலே
தளரா மனம் தந்து -தத்வ ஹத புருஷார்த்தங்களில் -மஹா விச்வாஸம் -உபாயாந்தர பிரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாமல்
உம்பர் தொழும் திருமால் -நித்ய ஸூ ரிகள் -உபாய அபேக்ஷை இல்லாமல் –மிதுனம் -ஸ்ரீ யபதி
உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்–ஏற்கும் உபாயம் பக்தி /பிரபத்தி -இவற்றுள் உகந்து ஏற்பது பிரபத்தி என்றவாறு –
நம் பிறவித் துயர் மாற்றிய –ஜென்மாதி ஷாட்ப்பாவ விகாரங்கள் –அழித்து-
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே-ஆச்சார்ய சிஷ்ய க்ரமத்தில் வரும் சாஸ்த்ரார்த்த ஞானம்
-நிரூபிதம்-ஒன்றி -முழுமையாக அவகாஹித்து -சதிர் -புருஷார்த்தம் -சர்வ வித கைங்கர்யம் -மா சதிர் இது பெற்று -அடியேன் சதிர்த்தேன் இன்றே –
ஆவச்யகதை -ஸதாசார்ய ஸம்ப்ரதாயத்தாலே அத்யாத்ம சாஸ்த்ரார்த்த விபேஷ நிர்ணயம் பண்ண வேண்டும் என்னுமிடம் உபநிஷத்துக்களிலும் உபப்ரும்ஹணங்களிலும் ஸத் ஸம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தம். பாஸ்த்ரார்த்த நிரூபணம் பண்ணும்இடத்தில் ஸக்தி இல்லாதவர்களுக்கு-(உபதேசாத் ஹரிம் புத்த்வா- (சாஸ்த்ரத்தைத் தெரிந்து கொள்வது அதிகக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியது, புத்தி சலிப்பதற்குக் காரணம், ஆகையினாலே ஆசார்யனுடைய ) உபதேசத்தினால் பகவானைத் தெரிந்து கொண்டு (எல்லாக் கர்மங்களிலிருந்தும் ஓய்வடைய வேண்டும்).என்கிறபடியே சாஸ்த்ரஜ்ஞ ஸம்ப்ரதாயமாத்ரமும் அபேக்ஷிதார்த்த நிர்ணாயகமாம். ஸத்ஸம்ப்ரதாய ரஹிதமான சாஸ்த்ரத்தால் அர்த்தநிர்ணயம் துஷ்கரம். ஸுகரந்தானாகிலும் உபயுக்தமாகாது.
ஸத் ஸம்ப்ரதாய லக்ஷணம்-அத்யந்த அதீர்த்ரிய விஷயத்தில் சாஸ்த்ரமூலமல்லாத ஸம்
ப்ரதாயமும் ஸம்ப்ரதிபந்ந பாஸ்த்ரவிருத்தமான ஸம்ப்ரதாயமும் ப்ரம விப்ரலம்ப ஸம்பாவனையுண் ஸத் ஸம்ப்ரதாய லக்ஷணமாகையாலே பாஹ்ய துல்யமாகையால் அவிஸ்வஸநீயம். பரஸ்பர விருத்தமாக ஸதஸ்யமும் ரஹஸ்யமும் என்று சொல்லுமவை யிரண்டும் ஸ்வவாக்யத்தாலே பாதிதங்களாம். திரளிலே சொல்லுமவைகளில் சில அர்த்தங்களை ஏகாந்தத்தில் சொல்ல விதிக்கையாலே அவற்றை ரஹஸ்யங்கள் என்கிறது. ப்ரஜாபதி வாக்யம், முற்பட அஸுரேந்த்ரனான விரோசநனை மோஹிப்பிக்கைக்காகச் சொல்லப்பட்டு, பிற்பட தேவேந்த்ரனைப் பர்வ க்ரமத்தாலே பரித்தாத்ம விஷயத்திலே ப்ரதிஷ்ட்டித புத்தியாக்குகிறது. உபகோஸல வைஸ்வாநராதி வித்யைகளிலே முற்பட வேத்யோபாதேயங்களைப்பற்ற ஏகதேச உபதேரம் க்ரமேண ஷேபூரணார்த்தம். ஸர்வேஸ்வரன் தானும் தான் உபதேலித்த ஜ்ஞாநத்தைப் பின்னையும்- தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரநேந ஸேவயா -கீதை -4- 34 நன்றாக நமஸ்கரிப்பதினாலும், விநயமாகக் கேட் பதினாலும் சுச்ரூ ை செய்வதினாலும் (ஜ்ஞாநிகளிடமிருந்து) அந்தத் தத்துவார்த்தத்தை அறிந்துகொள்-என்று பல ஜ்ஞாநிகள் பக்கலிலே கேட்க விதித்தானிறே. இப்படிகளால் ஸம்ப்ரதிப சாஸ்த்ர விரோதமின்றிக்கே பல சாஸ்த்ர மூலத்வ ஸம்ப்ரதி பத்தியுண்டான ஸம்ப்ரதாயம் உபஜீவ்யம்.
இப்படிப்பட்ட ஸத்ஸம்ப்ரதாயத்தில் தோற்றும் விரோதம் தத்த்வ விஷயமாகில் தாத்பர்யபேதத்தாலே விரோத பாந்தியுண்டாம். அநுஷ்ட்டாந விஷயமாகில் அவ்வோ அதிகாரிக்கு அநுகுணமாக வ்யவஸ்த்தித அவயவஸ்த்திதப்ரக்ரியையாலே விகல்ப
மாம். ந்யாஸ உபாஸநங்களிலே அதிகாரிபேதத்தையிட்டு வ்யவஸ்த்தித விகல்பம் என்று பார்க்கிலும், பலஸாம்யத்தையிட்டுத் துல்ய விகல்பம் என்று பார்க்கிலும் விரோதமில்லை.
ஸத் ஸம்ப்ரதாய க்ரமம்-ஸர்வலோகஹிதமான அத்யாத்ம லாஸ்த்ர ஸம்ப்ரதாயத்
திற்கு ப்ரதம ப்ரவர்த்தகன் ஸர்வேஸ்வரன். மற்றுள்ளார் எல்லாரும் அவன் தன்னாலேயாதல் சேதநாந்தர முகத்தாலேயாதல் மயர்வறமதிநலம் அருளப்பட்டு ப்ரவர்த்திப்பிக்கிறவர்கள்.
கலியுகத்தில் நம்மாழ்வாரின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்-இப்படி அநஸூயாதி குணயுக்தராய் (ப்ரணிபத்யாபிவாத்ய ச-விஷ்ணு புராணம்-1-1-1 ( மைத்ரேயர் பராசர முனிவரை) ஸேவித்து அபிவாதநம் செய்து(கேட்டார்) )இத்யாதிகளிற்படியே ஸம்யக் உப
ஸந்நரான அதிகாரிகளைப் பற்ற யதார்த்ததர் பிகளாய் யதாத்ருஷ் டார்த்த வாதிகளான வ்யாஸ போதாயநாதிகளாலே யதாதிகாரம் ப்ரவர்த்திதமான வேதாந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்த யுகாரம்பத்திலே ப்ரஹ்மநந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார்.-( ப்ராப்யம் ஜ்ஞாநம் ப்ராஹ்மணாத் க்ஷத்த்ரியாத்வா வையாத்-சூத்ராத் வாபி நீசாதபீக்ஷ்ணம்- பார – சாந்தி -323-98 பரமாத்மாவைப் பற்றிய ஜ்ஞாநம் ப்ராஹ்மணனிடத்திலிருந்தாவது,க்ஷத்த்ரியனிடத்திலிருந்தாவது,வைச்யனிடத்திலிருந்தாவது-சூத்ரனிடத்திலிருந்தாவது, தாழ்ந்தவர்களிடத்திலிருந்தாவது எப் பொழுதும் அடையத்தக்கது. )இத்யாதி ப்ரமாண பலத்தாலே- மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் ‘-என்கிறது உபபநம். வேதாந்தார்த்த வைத்ய ஹேதுவாகையாலே பாஷாந்தரமும் உபஜீவ்யம். தர்மவ்யாத துலாதாராதி வருத்தாந்தங்களையும் இங்கே அநுஸந்திப்பது.
சூத்ர யோநாவஹம் ஜாதோ நாதோ ந்யத் வக்துமுத்ஸஹே- பாரதம்-உத்யோக-41-5 சூத்ரயோநியில் நான் பிறந்தவன், ஆகையினால் மற்றதை (மந்த்ராதிகளை)ச் சொல்ல விரும்பவில்லை.)என்கிறது விஷயபேதத்தாலே பரிஹ்ருதம். மதுரகவி முதலான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் ப்ராதுர்ப்பாவ விலேஷத்தாலும் நாத மு களுக்கு நம்மாழ்வார் ஆசார்யரானார். இவரை ப்ரபந்ந ஸந்தாந கூடஸ்த்ததையாலே ஆளவந்தார்-ஆத்யஸ்ய ந: குலபதே:-ஸ்தோத்ரம்-5 நம்முடைய முதலாமவரான குலபதியான,]என்று அருளிச்செய்தார்.
நாதமுநிகள் முதலாக உபதேலியுங்கோள்என்று ஆஜ்ஞா ஆசார்ய பரம்பரை-நாதமுநிகள் தம்முடைய திருப்பேரனாரான ஆளவந்தாருக்குத் தாம் உபதேரியாதே, தம்முடைய சிஷ்யப்ர ஸ்பிஷ்யர்களை இவருக்கு ஆகாங்க்ஷை பிறந்தபோது-நாதமுநிகள் முதலாக உபதேசியுங்கோள்என்று ஆஜ்ஞா ஆசார்ய பரம்பரை பித்தது குருபுத்ர பௌத்ராதிக
ளும் வித்யா ப்ரதாநத்திற்கு ப்ரஸ்தபாத்ரங்கள் என்றும், ஜ்ஞாநஸந்ததியிலே முற்பட்டவர்க
ளும் குருக்களாக ஆதரணீயர் என்றும், ஆகாங்க்ஷையின்றிக்கே இருக்கச்செய்தே சொன்னால் சிஷ்ய புத்தியில் அர்த்தம் ப்ரதிஷ்ட்டிதமாகாது என்றும் தெளிவித்தபடி. மணக்கால்நம்பி ஆள வந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே ஆகாங்க்ஷை
உண்டாக்கி உபதேசித்தது ஆசார்ய குலத்திற்குத் தாம் ஒரு கிஞ்சித்காரம் பண்ணுகையிலும் ஆசார்ய நியோகத்தைக் கடுகத் தலைக்கட்டு கையிலும் உண்டான த்வரையாலும் சிரகால பரீக்ஷாதிகள் வேண்டாதபடி-போதநம் ச முஹு; க்ரமாத்-உபதேசிப்பது,அடிக்கடி உபதேசிப்பது என்கிற க்ரமத்தில். )-என்கிற யுகதர்மா நுஸாரத்தாலும் உபப நம். ஆளவந்தார் தாம் நாதமுநிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணிற்றும், ஸரணம்புக் கதுவும், தம்முடைய ஆசார்யனுக்கு இது ப்ரியதமம் என்றும்,
தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத் துக்களுக்கும் அடி நாதமுனிவம்பலத்தில் பிறவி என்றும் தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்திற்போலே ப்ரப்ராசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேண்டும் என்கைக்காகவும் (என்று அறியப்படும்).
ஆசார்யபங்க்தியில் சிலரை க்ரந்தங்களிலே வ்யபதேஸித்து அவர்களையும் மற்றுமுள்ளவர்களையும் அநுஸந்திப்பார்கள். ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீ பாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரியநம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்ம சாரிகளான திருக்கோட்டியூர்நம்பி பக்கலிலே அர்த்த பிக்ஷை பண்ணவும்,
திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழிகேட்கவும், ஆழ் வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும் நியோகித்ததும்
‘ப ப்ய: ச்ரோதவ்யம் ப தா ச்ரோதவ்யம் ‘-* ஜ்ஞாந வ்ருத்தா : மயா ராஜந் ! பஹவ: பர்யுபாஸிதா: ‘-பலரிடமிருந்து கேட்கவேண்டும், பலபடிகளில் கேட்கவேண்டும். ஓ! அரசனே! ஜ்ஞாநத்தில் முதிர்ந்தவர்கள் பலர் என்னால் நன் றாக உபாஸிக்கப்பட்டார்கள்,-இத்யாதிகளையும் சுகாதி வருத்தாந்தங்களையும் பார்த்து, ஷ்யபூதரை பஹுமுகமாகத் திருத்தவேண்டுமென்கிற அபிஸந்தியாலே உபபந்நதமம். இப்படி ஆசார்யாபிமத விஷயத்தில் ஆசார்யாநுஜ்ஞையாலே அபேக்ஷித ஜ்ஞாநோபஜீவநம் பண்ணும து மாஸ்த்ரார்த்தம் என்னுமிடம் அந்திமதலாவதியாக அத்யந்த அவஹிதராய்க் கொண்டு ஸதா சாராநுபாலநம் பண்ணின ஸ்ரீ பாஷ்யகாரருடைய அநுஷ்ட்டாநத்தாலே ஸித்தம்.
ப்ரதாந ஆசார்யலக்ஷணம்-அத்யாத்ம விஷயத்தில் (ாஸ்த்ரங்களில்) ப்ரதாந அப்ரதா
நாம்பங்களை ஒருவருக்குப்பலராக உபதேசிக்க வேதாந்தங்களில் பல இடங்களிலே கண்டோம்.-ஓராசார்யன் பக்கலிலே க்ருத்ஸ்நோபதேம் மைத்ரேயாதிகளுக்குப்போலே சிலருக்கு உண்டாம். ப்ரதாந ருதத்தினுடைய ப்ரதிஷ்ட்டார்த்தமாகப் பலர் உபதேஸித்தால்-அல்பம் வா பஹுவா யஸ்ய ச்ருதஸ்யோபகரோதி ய: தமபீஹ குரும் வித்யாத் சருதோபக்ரியயா தயா 11 – எவன் கொஞ்சமாகவாவது அதிகமாகவாவது சாஸ்த்ரார்த்தத்
திற்கு உபகாரம் செய்கிறானோ,அவனை அந்தக்கேட்கப்பட்ட அர்த்தத்திற்கு உபகாரம் செய்தபடியால் இங்கு குருவாக அறியவேண்டும்.) என்கையாலே அவர்கள் பக்கலிலும் ஆசார்யப்ரதிபத்தி பண்ண ப்ராப்தம். அவ்யவஹித மோக்ஷோபாய வ்யவஸாயம் பிறப்பிக்கை ப்ரதாந ஆசார்ய க்ருத்யம். இது கலங்காதபடி பண்ணுகையும் பரிகர பூர்த்தி உண்டாக்குகையும் ஆசார்யாபிமத பி காந்தர க்ருத்யம். இப்படிப்பட்ட ஆசார்ய ஸம்பந்தத்தை உண்டாக்கினவர்களும் ப்ரபந்த முகத்தாலே பரம்பரயா உபகரித்தவர்கள்ளும் ஆதரணீயர். இவர்களில் ப்ரதாநதமன் ஸர்வப்ரேரகனானபரிய:பதி. இவன் ஒருவனுமே தனக்கு ஒரு ஆசார்யனில்லாதபரமாசார்யன்.
ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸம்ப்ரதாயத் வரும் -ஆபாதப்ரதீதியில்தோன்றும்–ஸந்தேஹங்களுக்குப் பரிஹாரம்-ஸ்ரீபாஷ்யகாரருடைய பிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை, வாக்ய யோஜநாபேதமேயுள்ளது. தேச காலஅவஸ்த்தாவிசேஷங்களாலே அநுஷ்ட்டாந வைஷம்யம்தில் ராஸ்த்ராநுமதம். சோராபராதத்தை மாண்டவ்யன் பக்கல் ஆரோ பித்தாற்போலே ஸ்வேச்சைக்கு அநு குணமாக அநிபுணர் சொல்லுமது வக்தாக்களுக்கே தோஷமாம்.
திருமந்த்ர விஷயமான விளக்கம்-திருமந்த்ரத்தில் பதார்த்த வாக்யார்த்தங்களெல்லாம் மூல
பூத நிருக்தாதி வாக்யவிபேனஷங்களாலே வந்தவை. இதில் பத -த்ரயத்திலுமாகவாதல், பரதமபதத்திலேயாதல், ப்ரதமாக்ஷரத்திலேயாதல் ஸங்க்ஷேப விஸ்தர க்ரமத்
தாலோப்த அர்த்தஸ்வபாவங்கள்ளைக்கொண்டு அர்த்தபஞ்சகா நுஸந்தாநம் பண்ணுமதுவும் அந்யோந்ய விருத்தமன்று. இப்படி ப்ரதம த்விதீயாக்ஷரங்களாலே ஆர்த்தமாகவாதல் பலாப்தமாகவாதல் ரண்ய ஸஹதர்மசாரி ப்ர திபாதநம் பண்ணுமதுவும் அவ்வோவாக்யவி ஸேஷமூலம். மத்யமாக்ஷரம் பத்நீ பரமென்னும் நிர்வாஹத்தில் விசேஷ உபாதாநபலத்தாலே அவதாரணம் அர்த்தஸித்தம். இந்த அவதாரணத்தாலே ஸராத்மபாவம் ஸித்திக்கிறதுஎன்பார்க்குனேஷத்வ அயோக வ்யவச்சேதத்திலே தாத்பர்யம் கொள்ளலாம்.
மகாரார்த்தோ ஜீவ: -அஷ்டச்லோகீ-1 ம என்பதற்கு அர்த்தம் ஜீவன்-இத்யாதிகளிற்படியே த்ருதீயாக்ஷரம் ஜீவ ஜாதீய ஸர்வபரம் என்பார்க்கும் இதில் ஸ்வாநுஸந்தாநம் ஆர்த்தம் என்னவேண்டும்.-அகாரார்த்தாயைவ ஸ்வமஹம் -அஷ்ட ச்லோ -3 அகாரத்திற்கு அர்த்தமான பகவானுக்கே நான் சேஷபூதமான வஸ்துஎன்று விபேஷித்துவ்யாக்க்யாநம் பண்ணினவர்களுக்கும் இவ்வநுஸந்தாநம் ஸர்வ ஜீவ ஸாதாரணாகார விஷயம். பகவச்சே
ஷத்வம் தோற்றுமிடமெல்லாம் பாகவத பேனஷத்வ பர்யந்தமாக அநுஸந்திக்க ப்ராப்தமாயிருக்க ஔசித்யாதிப யத்தாலே மத்யம பதத்திலே இத்தை அநுஸந்திக்குமது உபப நம். ப்ரதம த்விதீய சதுர்த்திகளுக்கு ஏகார்த்தத்வ பிந்நார்த்தத்வங்களும் ப்ரமாணா
நுகுண வாக்யார்த்த விவக்ஷா பேதத்தாலே சொன்னவை.
த்வயவிஷயமான விளக்கம் -த்வயத்தில் பூர்வ அபர ஸ்ரீமத் சப்தங்களிலும், பூர்வ அபர
நாராயண ஸப்தங்களிலும் சில ஆகார வினேஷங்களைப் பிரித்து அநுஸந்திக்குமது உபாய பல தஸைகளுக்கு உபயுக்ததமாம்ப நிஷ் கர்ஷம் பண்ணினபடி. சரணங்களை உ பாயம் என்கிறதுக்குச் சரண வி ஷ்ட வ கார்யன் பக்கலிலே தாத்பர்யமாகையாலே
ஸித்தோபாய பேதமும்ஸாத்யோபாய பாதமும் வாராது. நமஸ்ஸு நாநார்த்தமாக அஹிர்புத்ந்ய ஸம்ஹிதாதிகளிலே நிருக்தமாகையாலே ப்ரதம த்விதீய ரஹஸ்யங்களில் மத்யம சரம பதங்களுக்கு வாக்யார்த்தா நுகுணமாக அர்த்தபேதம் கொள்ளலாம்.
த்விதீய த்ருதீய ரஹஸ்யங்களில் கிடக்கிற சரண பலப்தம் உபாய பரமானதடியாக வஸ் கரனோபாயத்திற்குச் சிலர் பண்ணும் அதிவாதமெல்லாம் ஸித்தோபாய ப்ராதாந்யபரம். ஸ்வாநுஸந்தாந பரமாயும் விதிபரமாயும் நிற்கிறஆக்க்யாதங்களில் ஆவ்ருத்திக்கு
ஜ்ஞாபகமில்லாமையாலும்அநா ருத்திக்குக் கண்ட்டோக்தி உண்டாகையாலும் வர்த்தமாந வ்ய பதேயம் அநுஷ்ட்டாந காலாபிப்ராயம். ப்ரபத்திக்கு யாவஜ் ஜீவா நுவருத்தி சொல்லுவார்க்கும்-(த்வய அர்த்த அனுஸந்தா நேந ஸஹ ஸதைவம் வக்தா-சரணாகதி கத்யம் – த்வயத்தைக் கீழ்ச் சொல்லியபடி அர்த்தத் தின் அனுஸந்தானத்துடன் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு. )இத்யாதிகளிற் சொன்ன ஸுகா ஸிகையிலே தாத்பர்யம் கொள்ள
லாம்.
ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: – லக்ஷ்மீ தந்த்ரம்-52-14 -ஐந்து அங்கங்களை யுடையதான ப்ரபத்தி-என்று சொன்ன ப்ரபத்த்யங்கங்களிலே சிலர் கதிபயாநாதரம் பண்ணுமது அங்கியினுடைய வைபவார்த்தம். விரே ஷித்துக் கதிபய அங்கோபாதாநம் பண்ணுமதுவும் அங்காந்தரங்களிற்காட்டில் இவ்வங்கங்களுடைய ப்ரஸம் ஸார்த்தம்.
சரம ச்லோக விஷயமான-விரோதசங்கா பரிஹாரம்-சரமஸ்லோகத்தில் விதிக்கிற ப்ரபத்தி ஸகல பல ஸாதநமாகையாலே அங்கமாகவும் ஸ்வதந்த்ரமாகவும் வ்யாக்க்யாநம் பண்
ணின பாஷ்ய கத்யாதிகளுக்கு விரோதமில்லை. ஸர்வதர்ம ஸப் தத்தில் ஸங்குசித அஸங்குசித வ்ருத்திகளைக் கொள்ளுமவர்க ளுக்குப் பரபக்ஷத்திற்போலே ஸ்வ தர்ம ஸ்வரூபத்யாகவிதி விவ க்ஷை யில்லாமையாலே ஸ்வதந்த்ராஜ்ஞானு பாலந விரோதமில்லை.
‘பரித்யஜ்ய ப்தத்திலும் ‘ஏக’பப்தத்திலும்மூலப்ரமாணாநுகுணமாகச் சொல்லும் பல அர்த்தங்களிலும் பரஸ்பர விரோதமில்லை.-அவற்றில்புநருக்திவாராதபடி அநுஸந்திக்குமதுவே வேண்டுவது. ஸரண்யனுக்கு ப்ரபத்தி கர்மத்வத்தையும் மோக்ஷ கர்த்ருத்வத்தையும் ப்ரதிபாதிக்கிற ‘மாம்,அஹம்’ என்கிறபதங்களிலே பர ஸ்வீகார உபயுக்தமான ஸௌலப்யமும், ஸ ர்வோபகார உபயுக்தமான பரத்வமும் அநுஸந்திக்குமிடத்தில் அபேக்ஷித வியேஷங்களைப் பிரித்து அநுஸந்திக்குமது பேஸஷ வ்யவச்சேதார்த்தமன்று. வ்ரஜ’ என்றும், ‘ த்வா’ என்றும் அர்ஜுநனை ஒருவனைக் குறித்துச் சொன்னாலும் தாத்பர்ய விஷேத்தாலே இது ப்ரபத்த்யதிகாரிகள் எல்லாருக்கும் வரும். ஸர்வ பாப மோக்ஷ வசநத்தில் புத்தி பூர்வோத்தராகத்தையும் கூட்டு வார்க்கு ஸரண்ய அபிப்ராய மூல புநப்ரபதநாதி முகத்தாலே அவைகளுக்கு விநாம் விவக்ஷிதமாகையால் ஸாஸ்த்ர விரோத மில்லை. .மோக்ஷயிஷ்யாமி ‘ என்கிற ஸங்கல்பத்தின் பலத்தை
ப்ராரப்த கர்மாவஸாந காலத்திலே என்றவர்களுக்கும் ப்ரபத்தி பண்ணுகிறவன் கோரின காலத்திலே என்றவர்களுக்கும் ஆர்த்தியில் தாரதம்யத்திற்கு ஈடாகப் பலா நுபவத்தாலேயா
தல் ப்ரபத்தி வைபவத்தாலேயாதல் ப்ராரப்த கர்மாவஸாந காலத்திலே மோக்ஷம் துல்யம். அர்ஜுநனுக்கு பேலாக நிமித்தம் வேறேயாகிலும்-மா ச: ஸம்பதம் தைவீம் -16-5. அபிஜாதோஸி பாண்டவ’ என்று மேல்.ஓ! பாண்டுவின் பிள்ளையாகிய அர்ஜுந ! துக்கப்படாதே, தேவர்களின் ஸம்பத்தை உத்தேசித்துப் பிறந்தவனாகிறாய். )-என்கிற இடத்திற்போலே மோக்ஷயிஷ்யாமி மா ச: ‘ என்கிற இடத்திலும் ப்ராகரணாகுண நிமித்த வியேஷா நுஸந்தாநம் உசிதம்.
நிகமநம் -மற்றும் இப்படி வேதாந்த ஸித்தங்களான தத்த்வ ஹித புருஷார்த்தங்களில் பரஸ்பர விரோதமும் பூர்வாபர விரோதமும் இல்லாத ஸுத்த ஸம்ப்ரதாய க்ரமத்தை ஸங்க்ரஹித்தனம்–ஸுதாநி மஹதாம்.-பாரதம் – உத்யோக- 34-34. ‘ஸுக்ருதாநி ததஸ்தத: ஸஞ்சிந்வந் தீர ஆஸ்தஸிலஹாரி-ஸிலம் யதா ‘ என்று மேல். பெரியோர்களுடைய ஹிதோபதேச ரூபமான வார்த்தைகளையும் அவர்களுடைய அநுஷ்ட்டாநங்களையும் அவர்கள் ளிடமிருந்து உயர் நெல்லைப் பொறுக்குமவன் உயர் நெல்லைப் பொறுக்குவ தைப்போல பொறுக்கிச் சேர்த்துக் கொண்டு தீரனாய் இருக்கவேண்டும்–இத்யாதிகளையும் இங்கே ஸங்க்ரஹித்துக்கொள்வது
——————–
கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமால் அடி காட்டிய நம்
தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே –2-
நமக்கு திருமால் திருவடியே உபாயமாகக் காட்டி அருளின நம் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தை சிறந்ததாகப் பற்றி ஈடுபட்டோமே –
கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால் -ஏக தேச அந்வயம் – நம் -தேசிகர் தம் நிலை பூர்ண அந்வயம்
கடலைக் கடைந்து அமுதம் சேர்த்த திருமால் –
திருமால் அடி தானே நம் தேசிகர் -பூர்வாச்சார்யர்கள் -ப்ராப்யம் ப்ராபகம் இவரே –
சாஸ்திரம் கடலை கடைந்து தத்வ ஹித புருஷார்த்தங்கள் அமிருதம் சேர்த்த தேசிகர் –
பாராசாராய வக்ஷஸ் ஸூ தாம் –சடஜித் -உபநிஷத் -சிந்தும் -இத்யாதி –
திருமால் அடி காட்டிய நம் -தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே -நிலை -நிஷ்டை -ஞான நிஷ்டை –
சதாச்சார்யர் திருவடிகளில் கேட்டு சிந்தித்து தரித்து -நிர்பயராக நீர்பரராக-
தத்வம் /உபாயம் /புருஷார்த்தம் முக்கிய மந்த்ரம் காட்டிய மூன்றின் நிலை
ஸமுத்திரத்தைக் கடைந்து அம்ருதத்தை ஒன்று சேர்த்தவனாகிய ச்ரிய:பதியினுடைய திருவடிகளை உபாயமாயும் உபேயமாயும் காட்டிக் கொடுத்த நம் பூர்வாசார்யர்களினுடைய ஸ்திதியை அவலம் பி த் து நாம் அடைந்தோம்.
ஸர்வஜ்ஞனாகிய பகவான் தொடக்கமாக நம்முடைய ஆசார் யர்களின் வரிசையின் நல்ல மார்க்கத்தை ஒரு விதத் தோஷமும் இல் லாதிருக்கும்படி ஸ்தாபிக்கிற அப்படிப்பட்ட இந்த ஸம்ப்ரதாயத்தினு டைய பரிசுத்தி, அதாவது ஸ்ரீ ஸம்ப்ரதாய பரிசுத்தி என்கிற இ ந் த
க்ரந்தமானது சாதக நிஷ்ட்டையையுடைய பரமை காந்திகளினால் எப்பொழுதும் விச்வஸிக்கத்தக்கது.
————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply