திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்-திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்-

ஸ்ரீ மஹா லஷ்மீ நம்மை லஷ்யமாகக் கொண்டு கடாக்ஷித்து –
நஷ்டம் ப்ராக் அலாப்ய -த்ரி புவனம் -இவள் அங்கீகாரம் பெற்றே ஸ்ருஷ்டித்து –
நிழல் போல்வன பூமி நீளா தேவிமார் –
திரு வெள்ளறை -நாச்சியார் கோயில் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -மூன்றும் மூவருக்கும் ப்ராதான்யம் –
திருப்பாவை ஜீயர் உகந்த பாசுரம் –

ஈராயிரப்படி -அவதாரிகை –
இனிமேல் மூன்று பாட்டாலே
நப்பின்னை பிராட்டியை எழுப்பி -(18)
அவள் வழியால் எம்பெருமானை -(19-மலர் மார்பன் -அவளை முன்னிட்டு-இது மட்டுமே இதில் )
எழுப்புகிறது -(20 கலியே -விமலா -துயில் எழாய் -நப்பின்னை நங்காய் திருவே -கொஞ்சம் அவள் )
பிராட்டியை ஒழிந்தால் பல சித்தி இல்லையோ என்னில் -இல்லை –
எங்கனே -என்னில் –

1-இளையபெருமாள் பிராட்டி முன்னிலையாகப் பெருமாளைப் பற்றினார் –
2-அபராதத்தினுடைய எல்லையில் நின்றாலும் இவள் சந்நிதியாலே காகம் பிரபன்னர் பெரும் பேற்றைப் பெற்றது
3-திருவடி பிராட்டி கடாக்ஷம் பெற்ற பின்பு
ஸீதாம் ஆஸ்ரித்ய தேஜஸ்வீ -ஆனதும் அன்றிக்கே ஸ்ரீ ராம தாசனும் ஆனான்
(தூதோஹம் -பட்டம் -கோசலேந்த்ரஸ்ய தாஸோஹம் -ஸ்வரூப ஆவிர்பாவம் )
ஏஷ சர்வஸ்வ பூத -(அங்கு வாலில் நெருப்பு இங்கு ஆலிங்கனம் )
4-எம்பெருமானாரும் கத்யத்திலும் அப்படியே –

(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரி சானுஷு ரம்யதே -சர்வ தேச -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
சீதா பிராட்டியை முன்னிட்டு சரணாகதி -கைங்கர்யம் –
புருஷகாரம் இதில்
புருஷகாரம் முன்னிட்டு உபாயம் அடுத்த பாசுரம்
கைங்கர்ய பிரார்த்தனை -20 பாசுரம் )

ஆகையாலே இவர்களும் ஒரு பாட்டாலே அவள் தனக்கு அடிமை புக்கு
பின்னை ஒரு பாட்டாலே உபாயத்துக்கு உடலாக அவனைப் பற்றி
பின்னை ஒரு பாட்டாலே உபேயத்துக்கு உடலாக அவனையும் அவளையும் பற்றுகிறார்கள் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-

உந்து மத களிற்றன் –மதம் உந்து களிற்றன் -மத ஜலம் பெருகும் -யானை போன்ற பலம் -யானைகளை சொத்தாக கொண்டவர் –
ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் -கண்ணனைக் கொடுத்த -அறம் செய்த -பல சாலி -மூன்றும் மூன்று பாசுரங்களில் –
மருமகளே -இங்கு உள்ளார் அனைவருமே –
இறைவன் ஸ்வரூபம் விவரித்து -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் –
நப்பின்னாய் கந்தம் கமழும் குழலீ -இயற்கையிலே ஸ்கந்தம் கொண்ட திருக்குழல்
கடை திறவாய்-வாசல் கதவை திறந்து அருள்வாய்
மாதுகரம் -செய்யும் பொழுது இப்பாசுரம் அனுசந்தித்து -திருப்பாவை ஜீயர் -பெரிய நம்பி திரு மாளிகை –திருக்குமாரி -அத்துழாய் –
திறக்க -மயங்கி சரிந்த சரித்திரம் -பின்பு தான் விஷமிகள் -மாதுகரம் வேண்டாம் என்று நியமித்தார் நம்பி –
ஆத்ம யாத்திரையில் ஆச்சார்யர் கண் வைக்க வேண்டும் இருந்தாலும் திருக்கோஷ்ட்டியூர் நம்பி -இவர் திருமேனி பரிவால் —
அவனுக்கே இது அன்றோ உத்தேச்யம்–இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி – -பரிவுடன் -கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி கைங்கர்யம் –
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் -நான்கு பக்கங்களிலும் கோழி கூப்பிட -இடைச்சிகள் மெய்ப்பாடு வார்த்தை –
மாதவிப் பந்தல் மேல் -குருக்கத்தி பூ பந்தல் மேல்
பல்கால் குயில் இனங்கள் கூவின காண்-பல முறை கூப்பிட -பந்தார் -ஆர்ந்து -பொருந்தி
பந்தார் விரலி -ஒரு கையால் அவனும்-நாராயணனும் இன்னும் ஒரு கையால் பந்தும் -நாமும்
வஞ்சுள வல்லித் தாயார் -நம்பிக்கை நாச்சியார் -நம்பியைக் கையில் கொண்டவள் அன்றோ –
உன் மைத்துனன் பேர் பாடச்-தோற்ற அவனைக் கேலி பண்ண
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப-கை விட்டு கழலாத சீர்மை -நித்ய அநபாயத்வம் -உண்டே
அவன் திருக்கை தாமரைக்கை
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–மகிழ்ந்து வந்து திறவாய் -ஸ்வரூபம் புருஷகாரம் -குணம் கிருபை -காருண்யம் –

உந்து மத களிற்றன்
உந்துகை -முறுக்குகை –
அதாவது பொருகிற யானையை நினைவை அறிந்து நடத்த வல்லன் என்றபடி
மதத்தை உந்து களிறு என்றுமாம்

களிறு உண்டோ இவனுக்கு என்னில்
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்த கோபரும் ஒரு மிடறு ஆகையாலே அங்குள்ளது எல்லாம் இங்கும் உண்டு
ஆனைகளோடு பொரும்படியான மிடுக்காய் யுடையவன் என்கை –
ஆகையால் அன்றே பிள்ளைகள் போய் ஆனையோடே போர் உற்றது
அவசியம் பிதுராசாரம் -இறே –
குணைர் தசரதோபம் -இறே
(க்ஷமைக்கு பிருத்வி காம்பீர்யம் கடல் போல் -கல்யாண குணங்களில் சக்கரவர்த்திக்கு ஒத்தவன் )

ஓடாத தோள் வலியன்
எதிரிகளைக் கண்டு பிற்காலியாதே கொல்ல வல்ல மிடுக்கு –
தம்முடைய தனத்துக்கு காவல் உண்டு என்கிறார்கள் –
ஸ்துஷா தசரதஸ்யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபின -(ஸூந்தர 22 )-என்று பிராட்டி அருளிச் செய்தால் போலே
(தசரத மருமகள் -ஜனக புத்ரி-சீதா நாமம் – ராம பார்யா )
ஸ்ரீ நந்தகோபரைக் கொண்டாடுகிறார்கள்
அது தன்னையே நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்-என்கிறார்கள்

அவள் பின்னை திருவாய்ப்பாடியிலே பெண்களானவர்கள் நந்தகோபாலன் மருமகள் அல்லாதார் உண்டோ
நமக்கு ஏன் என்று பேசாதே கிடந்தாள்
அதுக்காக
நப்பின்னாய்
என்கிறார்கள் –

கந்தம் கமழும் குழலீ
முன்பு க்ரமம் அறிகிலோமோ என்ன
என்னை நீங்கள் சொல்லுகிறது என் என்ன
எங்களையும் கிருஷ்ணனையும் சேர்த்து விடாய் -என்ன
இங்கு அவன் உண்டோ என்ன
பூ நாறா நின்றது –
வ்யாவ்ருத்த பரிமளமும் சமுதாய பரிமளமும் அறியோமோ என்ன
அவன் -சர்வ கந்த -என்று பூவுக்கு நாற்றம் கொடுக்குமா போலே
அவனுக்கு நாற்றம் கொடுக்க வல்ல குழல் இவளது என்கை
உன் குழலில் பரிமள போகத்திலே அவன் அழுந்திக் கிடக்கும் அனுபவிக்கைக்கு நாங்கள் வேண்டாவோ
(ரசம் கந்தம் தேஜஸ் -பதார்த்தங்களுக்கு இவன் ரசம் கந்தம் தேஜஸ் கொடுப்பான் -அவனுக்கும் இவள் )

கடை திறவாய்
கிண்ணக வெள்ளத்தைக் கரை கட்டினால் போலே
அடைத்துக் கொண்டு திறவாமல் கிடவாதே வெட்டி விடாய் எல்லாரும் அனுபவிக்கும் படி
1-இவர்கள் அவளுக்கு அவயவம் ஆகையாலும்
2-ஸ்ரக் சந்தனாதிகளோ பாதி யாகையாலும்
3-போக உபகரணம் ஆகையாலும்
4-இவளோடு அவன் புஜிக்கும் போது அவனுக்குத் தன திரு முலைத் தடத்தாலே
நெருக்கினவோபாதி ப்ரியமாகையாலும்
அவளை எழுப்புகிறார்கள் –
(குழலாக ஒருத்தி -முலையாக ஒருத்தி -சந்தனம் பூ போல்வர் )
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -(10-3 )-இத்யாதிவத்-

(இப்பாட்டில் நம் மூக்கு கண் நாக்கு -பேர் பாட -காது வளை ஒலிப்ப –
பந்தார் விரலி-தோல் -அனைத்து இந்திரியங்களுக்கு பிராட்டியே விஷயம் )

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
கதவு திறக்கப் போது விடிய வேண்டாவோ என்ன
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ கோழி கூவுகிறது -என்ன
ஒரு கோழி கூவப் போது விடியுமோ -என்ன
எங்கும் கோழி கோவா நின்றது -என்ன
அது சாமக் கோழி -மற்ற அடையாளம் உண்டோ என்ன
(ஆழி வண்ணர் வரும் -கோழி -கூவும் -மடியில் கட்டிக் கொண்டு வருவான் )

மாதவிப்-பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்-
இப் பூம் படுக்கையினின்றும் இவை உணரும் போது விடிய வேண்டாவோ என்ன
அது மேலே கூவ
நாங்கள் கீழே கூவா நின்றோம்

மாதவிப் பந்தல் மேல்
ஸூக ஸ்பர்சத்தாலே படுக்கையிலே உறங்குகிறவை –

பந்தார் விரலி –
கிருஷ்ணனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்கை –
அவன் செண்டை ஒரு கையாலும் இவளை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்கும்
அப் பந்து ஆனோமாகில் எங்களைக் கை விட வேண்டாவே
இவளுக்கு அவன் போக உபகரணம் -பந்து லீலா உபகரணம்-
(யசோதை நந்தகோபனையும் கண்ணனையும் கீழே பார்த்தோம்
அகாரம் -உகாரம் -மகாரம்
விபூதியும் விபூதிமானையும் பற்றிக் கிடக்கிறாள் )

உன் மைத்துனன் பேர் பாட-
நீங்கள் வந்தது என் என்ன
நீயும் அவனும் ஒருவருக்கு ஒருவர் உத்தரம் சொல்லும் போது
ஒத்து நில்லாமே
உன் பக்ஷத்தில் நின்று உனக்காக அவனை ஒத்தன சொல்லி
அவன் தோல்வி கண்டு உன் விஜயம் பாட
அஸ்மின் மயா சார்த்தம் உதார ஸீலா சிலாதலே -என்று இளைய பெருமாள்
பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே
(கோதாவரி நீச்சல் போட்டி -பத்னிக்குத் தோற்பான் பரம ரசிகன் )

பேர் பாட
நாமம் பலவுமுடை நாரண நம்பி (பெரிய திருமொழி -10-8)-என்று அவனுக்கு
உள்ளவை எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கு

செந்தாமரைக் கையால்
அவனும் ஆசைப்படும் கை
அவன் உகக்கும் -அணி மிகு தாமரைக் கை -(திருவாய் -10-3-5-)
(இவள் கையை உன் கையால் பிடி -ஜனகன் இங்கும் இவள் கையே முதலில் )

எங்களை மா ஸூச என்னும் கை
நீங்கள் பண்ணுகிற பாபத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா நான் உள்ளேன் -என்கிற
இப் பெருமாளுடைய அஞ்சேல் என்ற கை
பவேயம் சரணம் ஹி வ -என்னும் கை-
ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா என்கிறது பெரிய பிராட்டியார் அஞ்சல் என்ற கை

(விஜய ஸ்ரீ கேட்டு -ஹர்ஷம் –
த்ரிஜடை கனவு கண்டு சொன்ன வார்த்தைக்கு அஞ்சிய ராக்ஷஸிகளுக்கு பிராட்டி –
அப்படி நிகழ்ந்தால் இப்பொழுதே நான் அடைக்கலம் ஆகிறேன் -பவேயம் சரணம் ஹி வ-
சரண் அடையாமல் பயத்தால் இருந்த நிலையே போதும் என்று அடைக்கலம் )

சீரார் வளை ஒலிப்ப
வளையை ஏறக் கடுக்கித் திறக்கப் புக்காள்-
அங்கண் ஒண்ணாது –
அவனும் நாங்களும் நடை அழகைக் கண்டு வாழ வேணும்

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
பேறு உன்னதாக வேணும் –
தர்மத்துக்குத் திறக்க ஒண்ணாது –
அடியே பிடித்து- பவேயம் சரணம் ஹி வ – என்ன வேணும்

எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு இது –

————————————

(த்வயம் – -ந வேதாந்தாத் சாஸ்திரம் ந மது மதநாத் சாத்விக பதம் ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம்
ந முக்தே ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கரம் -என்றார் இறே ஸ்ரீ மன் நிகமாந்த மஹா தேசிகன் –

முதலில் கத்யத்தில் அவளைப் பற்றி -புருஷகாரமாக தனித்து -மோக்ஷ உபாயமாக அவன் -ஸ்வ தந்த்ரனாக இருக்க வேண்டுமே
நம் குற்றங்களைப் பார்க்காமல் மோக்ஷம் தர -பரதந்த்ரையான பிராட்டியைப் பற்ற வேண்டுமே
மஹா விஸ்வாஸம்-வேண்டுமே -இந்த உறுதியைப் பெற புருஷகாரமாகப் பிராட்டியைப் பற்றிப் பெறுகிறோம்
அடுத்து இவளை முன்னிட்டு அவனை உபாயமாகப் பற்றுகிறோம் -நடு நிலை
இறுதியில் கைங்கர்ய பிரார்த்தனை மிதுனத்தில் -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
இந்த மூன்று நிலைகளுக்கும் மூன்று பாசுரங்கள்-உ கு மு -மூன்றிலும் உகாரம் உண்டே -உ இவள் மட்டுமே -மேல் -க் உ -ம் உ -சேர்ந்தே மேல் –
பாஞ்சராத்ரம் லஷ்மீ தந்திரம் – இந்த ரஹஸ்யம் சொல்லும்)

(அஸ்து தே அவள் அருளிச் செய்ய அடுத்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் -உபாயம் பலிக்க
மைத்தடம் கண்ணினாய் –தத்வம் அன்று தகவும் அன்று
அடுத்து -நீராட்ட முப்பத்து மூவர் பாசுரம் -கைங்கர்யம் –
கலியே துயில் எழாய் -நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் -உன் மணாளனை இப்போதே நீராட்டு –
புருஷகாரமாய் -புருஷகாரம் முன்னிட்டு உபாயமாய் -கைங்கர்ய பிரார்த்தனை -மூன்றும் என்று உணர வேண்டும்
நந்த கோபன் மருமகள் -பாகவத சம்பந்தம் மூன்றிலும் இதில் மட்டும்)

(புள்ளும் சிலம்பின் ஆனைச்சாத்தான் -குயில் கூவின -பறவை நாதம் பல பாசுரங்களில் -ஆழ்வார்களால் பக்ஷிகளுக்கு ஏற்றம்
பந்தார் விரலி -ஒரு கையால் அவனும்-நாராயணனும் இன்னும் ஒரு கையால் பந்தும் -நாமும்
வஞ்சுள வல்லித் தாயார் -நம்பிக்கை நாச்சியார் -நம்பியைக் கையில் கொண்டவள் அன்றோ –
உன் மைத்துனன் பேர் பாடச்-தோற்ற அவனைக் கேலி பண்ண
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப-கை விட்டு கழலாத சீர்மை -நித்ய அநபாயத்வம் -உண்டே
அவன் திருக்கை தாமரைக்கை
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–மகிழ்ந்து வந்து திறவாய் -ஸ்வரூபம் புருஷகாரம் -குணம் கிருபை -காருண்யம் -)

(மாதுகரம் -செய்யும் பொழுது இப்பாசுரம் அனுசந்தித்து -திருப்பாவை ஜீயர் -பெரிய நம்பி திரு மாளிகை –திருக்குமாரி -அத்துழாய் –
திறக்க -மயங்கி சரிந்த சரித்திரம் -பின்பு தான் விஷமிகள் -மாதுகரம் வேண்டாம் என்று நியமித்தார் நம்பி –
ஆத்ம யாத்திரையில் ஆச்சார்யர் கண் வைக்க வேண்டும் இருந்தாலும் திருக்கோஷ்ட்டியூர் நம்பி -இவர் திருமேனி பரிவால் —
அவனுக்கே இது அன்றோ உத்தேச்யம்–இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி – -பரிவுடன் -கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி கைங்கர்யம் -)

——

நாலாயிரப்படி -அவதாரிகை –
பெண் பிள்ளைகள் எல்லாரையும் எழுப்பி(6-15)
திருவாசல் முதலிகளையும் நந்தகோபர் உள்ளிட்டாரையும் எழுப்பினார்கள் -(16-17)
இந் நேரத்தி எல்லாம் பிராட்டியை எழுப்பி(18) அவனோடே கூட அவளையும் முன்னிட்டு(19)
எம்பெருமானைப் பற்றா விட்டால் பல வ்யாப்தம் ஆக மாட்டாமையாலே –

இனி மேல் மூன்று பாட்டாலே (18-19-20)நப்பின்னை பிராட்டியை எழுப்பி –
அவ் வழியாலே எம்பெருமானைப் பற்றுகிறது –

பிராட்டியை ஒழிந்தால் பல சித்தி இல்லையோ என்னில் -இல்லை -எங்கனே -என்னில் –

இளைய பெருமாளை நில்லும் என்ன
பிராட்டியைப் பற்றி அவன் சங்கல்பத்தை அழித்துப் பெருமாளோடே கூடப் போனார்
அபராதத்தினுடைய எல்லையில் நின்றாலும் இவள் சந்நிதியாலே காகம் பிரபன்னர் பெரும் பேற்றைப் பெற்றது
ராவணனுக்கு அத்தனை அபராதம் இன்றிக்கே இருக்க -பிராட்டி சந்நிதி இல்லாமையால் தலை அறுப்புண்டு போனான்

பிராட்டி ராவணனைக் குறித்து அருளிச் செய்த ஹிதம் –
சிம்ஸூபா வ்ருக்ஷத்தில் மறைந்து இருந்த திருவடிக்கும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும்
அவன் பரிகரத்துக்கும் உடலாய்(திரிஜடை அனலா கலா )
பிராட்டியை முன்னிட்டுப் பெருமாளைப் பற்றுகைக்கு உடலாயிற்று

எம்பெருமான் அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த ஹிதம்
நம் ஆழ்வார்கள் கொண்டு போய் விட்டால் போலே திருவடி பிராட்டியைக் காண்பதற்கு முன்பு -வாநரோஹம்-(தூதோஹம் ராமஸ்ய )என்றான்
பிராட்டியைத் திருவடி தொழுத அனந்தரம் தாஸோஹம் (கோசலேந்தரஸ்ய )-என்றான்
மற்றும் பல பர்யந்தமான இடங்கள் எல்லாம் ஆராய்ந்தால் இப்படியேயாய் இருக்கும்
எம்பெருமானார் கத்யத்திலே தமக்கு த்வய நிஷ்டையை உண்டாக்குகைக்காக முதலிலே பிராட்டியை சரணம் புக்கார்(மஹா விஸ்வாஸம் பலம் )

இவர்களும் ஒரு பாட்டாலே அவள் தனக்கு அடிமை புக்கு
பின்னை ஒரு பாட்டாலே உபாயத்துக்கு உடலாக அவனைப் பற்றி
பின்னை ஒரு பாட்டாலே உபேயத்துக்கு உடலாக அவனையும் அவளையும் பற்றுகிறார்கள் –

மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா (2-7)-என்னக் கடவது இறே
தன்னுடைய கர்மாதி உபாயங்களாலே எம்பெருமானைப் பெறப் பார்க்கை இளிம்பு
அவற்றைப் பொகட்டு எம்பெருமானுடைய கிருபையால் புகுகிறது சதிர்
அந்த கிருபைக்கும் அடியானை பிராட்டி சம்பந்தம் கொண்டு அவனைப் பெற இருக்கை மா சதிர்

(கேசவன் தமருக்குப் பின் ஆழ்வார் நிலை வேறே அன்றோ-பிராட்டியாலேயே பேறு -)

(கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-)

எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -என்றார் -அதுக்கு அடியாக -மாதவன் -என்றார்

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

உபாயத்தில் வந்தவாறே யுக்தி மாத்திரமே அமைந்தது
பலத்தில் வந்தவாறே சம்பந்த சம்பந்திகளும் வாழ்ந்து போயிற்று என்றார்

(சரீரத்தாலே பேறு ஸாஸ்த்ரங்கள் சொல்லும் -ஆத்மாவால் பேறு திருமந்திரம் சொல்லும் –
சரம ஸ்லோகம் அவனாலே பேறு -பிராட்டியாலே பேறு த்வயம் )

(வாய் வார்த்தையாக சொன்னாலே போதும்-இதுவே போதும்
பேறு முக்கரணங்களுக்கும்-அதுவும் சம்பந்த சம்பந்திகள் அடைவிலும் -அவன் அருள –
கைங்கர்யங்களும் அனைவரும் முக்கரணங்களாலே செய்ய வேண்டுமே)

அவருடைய பெண் பிள்ளை அன்றோ -முறை தப்பாமல் எம்பெருமானைப் பற்றுகிறாள்
எம்பெருமானை முறை தப்பிப் பற்றின சூர்ப்பணகை அனர்த்தப் பட்டாள்
பிராட்டியை முறை தப்பிப் பற்றின ராவணன் அநர்த்தப் பட்டான்(அந்தரப்பட்டான் -)
இருவரையும் முறையால் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வாழ்ந்து போனான் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-

உந்து மத களிற்றன்
மத்த கஜம் போலே இருந்துள்ள பலத்தை யுடையவன் –
மத முதிதமான கயிற்றை யுடையவன் என்றுமாம்
உந்துகை –தள்ளுகையாய் ஊர்ப்படுகை-
மிடுக்கையும் மதத்தையும் உந்து களிறு என்னவுமாம்

களிறு உண்டோ இவனுக்கு என்னில்
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்த கோபரும் ஒரு மிடறு ஆகையாலே அங்குள்ளது எல்லாம் இங்கும் உண்டு
வாரணம் ஆயிரம் சூழ வலம் இத்யாதி –
திருவாய்ப்பாடியிலே பசுக்களும் ஆனைகளும் ஓக்கத் திரியும் அத்தனை
தத் புத்திரனுக்கு இரண்டு இடத்திலும் கூறு உண்டாகக் கடவது அன்றோ –
ஆகையால் அன்றே பிள்ளைகள் போய் ஆனையோடே போர் உற்றது
குணைர் தசரதோபம்-என்று எல்லாவற்றுக்கும் அவரை ஒப்பாகச் சொல்ல வேண்டுகை –

(உந்து மத களிற்றன்-களிறுகள் போல் பலசாலி -களிறுகளை உந்தும் பலசாலி -பசுக்கள் களிறு போல் –
வஸூதேவர் செல்வம் இவர் இடமே -வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து வந்தானே
களிறு போன்ற கண்ணன் இவர் இடம் பவ்யம் அன்றோ)

ஓடாத தோள் வலியன்
பிரதிபக்ஷம் காணப் பணைக்கும் தோள் வலியை யுடையவன்
யுத்தே சாப்ய பலாய நம் -என்கிறபடியே -எதிரிகளைக் கண்டு பிற்காலியாதே கொல்ல வல்ல மிடுக்கு-
இப்போது இவர் மிடுக்குச் சொல்கிறது தங்கள் பயம் கெடுகைக்காக

கம்சனுக்கு குடிமக்களாய் இருந்தே அவனுக்கு அஞ்சார்கள்
பசு மேய்க்கிற கோலாலே தகர்க்கிலும் தகர்த்து விடுவார்கள்
அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் -என்று அஞ்சினான் புகலிடம்
ஸ்ரீ மதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அச்சம் கெடுக்குமூர்-

(வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்* வீங்கு இருள்வாய்-
பூண்டு* அன்று அன்னைப் புலம்ப போய்* அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்*
காண்டல் இன்றி வளர்ந்து* கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,*
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்* எனக்கு என்ன இகல் உளதே?)

தோள் வலியன்
ந பிபேதி குதஸ்ச ந -என்று நம்முடைய அநீதியை நினைத்தால் எம்பெருமான் தோளை நினைத்து பயம் கெடுமா போலே
கிருஷ்ணனுடைய தீம்புகளை நினைத்தால் அவருடைய தோளை நினைத்து பயம் கெடலாய் இருக்கை
தம்முடைய தனத்துக்கு காவல் உண்டு என்கிறார்கள்(தோள் வலிமை இவரை விட்டு என்றுமே ஓடாதே )

நந்த கோபாலன் மருமகளே
ஸ்துஷா தசரதஸ்யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபின -என்று பிராட்டி அருளிச் செய்தால் போலே
ஸ்ரீ கும்பர் மகள் என்னுமதிலும் மாமனாரை இட்டுச் சொல்லுகை அவளுக்கும் பிரியம் ஆகையால்
மருமகள் என்று சொல்லுகிறார்கள் –
இங்கே மைத்துனமை யாடி வளர்ந்து வாழ்க்கைப் படுகையாலே
ஸ்ரீ நந்தகோபர் சம்பந்தம் அல்லது இன்னான் மகள் என்றால் அறியார்கள்

இப்படிச் சொன்னவாறே
திருவாய்ப்பாடியிலே கம்பும் காற்றையும் அகப்பட நந்தகோபாலன் மருமகள் அல்லாதார் உண்டோ
நமக்கு ஏன் என்று பேசாதே கிடந்தாள்
அதுக்காக
நப்பின்னாய்
என்று விசேஷிக்கிறார்கள்

கந்தம் கமழும் குழலீ
முன்பு (17-பாசுரம் )க்ரமம் அறியாதே அவனை எழுப்பினமை தாழ்க்கைக்கு அடி என்று முறையால் எழுப்புகிறார்கள்
என்னை நீங்கள் சொல்லுகிறது என் -என்ன
எங்களையும் கிருஷ்ணனையும் சேர்த்து விடாய் -என்ன
இங்கு அவன் உண்டோ என்ன
பூ நாறா நின்றது -வ்யாவ்ருத்த பரிமளமும் சமுதாய பரிமளமும் அறியோமோ என்ன
அவன் -சர்வ கந்த -என்று பூவுக்கு நாற்றம் கொடுக்குமா போலே
அவனுக்கு நாற்றம் கொடுக்க வல்ல குழல் இவளது என்கை
உன் குழலில் பரிமள போகத்திலே அவன் அழுந்திக் கிடக்கும் அனுபவிக்கைக்கு நாங்கள் வேண்டாவோ

கடை திறவாய்
கிண்ணக வெள்ளத்தைக் கரை கட்டினால் போலே அடைத்துக் கொண்டு திறவாமல் கிடவாதே
வெட்டி விடாய் எல்லாரும் அனுபவிக்கும் படி
இவர்கள் அவளுக்கு அவயவம் ஆகையால் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதி யாகையாலும்
போக உபகரணம் ஆகையால் இவளோடு அவன் புஜிக்கும் போது
அவனுக்குத் தன திரு முலைத் தடத்தாலே நெருக்கினவோபாதி ப்ரியமாகையாலும் அவளை எழுப்புகிறார்கள் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க வின்புறுதும் (10-3-)என்னக் கடவது இறே

மத்திய ராத்திரியிலே வந்து எழுப்புகிறது என் போது விடிய வேண்டாவோ -என்ன
போது விடிந்தது என்ன
விடிந்தமைக்கு அடையாளம் சொல்லுங்கோள் என்ன
கோழி கூவா நின்றது என்ன
அது சாமக் கோழி காண் -என்றாள்
என்ன ஒண்ணாது

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் -என்கிறார்கள்
உணர்ந்தவை எல்லாம் கூடக் கூப்பிட பின்னை உறங்கப் புகும் -அது அடையாளமாக மாட்டாது –
மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்று பேசாதே கிடந்தாள்

மாதவிப்-பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்-
இப் பூம் படுக்கையினின்றும் இவை உணரும் போது விடிய வேண்டாவோ –
உன்னுடைய ஸ்பர்சமும் நோக்கும் தாரகமாய் இருக்கிற குயில்கள்
விடிந்த பின்பும் உன்னைக் காணாமையாலே
நாக்கொட்டி பலகால் கூப்பிட்டு நின்றன காண் -என்கிறார்கள்
அது மேலே கூவ நாங்கள் கீழே கூவா நின்றோம்

மாதவிப் பந்தல் மேல்
ஸூக ஸ்பர்சத்தாலே ந உபஜந் ஸ்மரந்-என்கிற படுக்கையிலே உறங்குகிறவை –

பந்தார் விரலி –
பந்தும் கையும் பொருந்தின படி
கிருஷ்ணனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்கை
அவன் செண்டை ஒரு கையாலும் இவளை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்கும்
அப் பந்து ஆனோமாகில் எங்களைக் கை விட வேண்டாவே
இவளுக்கு அவன் போக உபகரணம் -பந்து லீலா உபகரணம்-
ஒரு கையிலே நாரமாயிற்று -ஒரு கையிலே அயனமாயிற்று
ஒரு கையிலே விபூதி யாயிற்று -ஒரு கையிலே விபூதிமான் ஆயிற்று
இப்போது பந்து பிரசங்கம் என் என்ன-
கிருஷ்ணனோடு பந்து அடித்து அவனை தோற்பித்த கர்வமோ வாய் திறவாது ஒழிகிறது -என்னும் அத்தாலே

திறந்தால் நீங்கள் செய்யக் கடவது என் என்ன
உன் மைத்துனன் பேர் பாடச்
நீயும் அவனும் மைத்துனமை கொண்டாடி ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும் போது
மத்யஸ்தராய் நில்லாதே
உன் பக்ஷத்தில் நின்று உனக்காக
அவனை ஒத்தன சொல்லி அவன் தோல்வி கண்டு உன் விஜயம் பாட
இருவரும் ஒன்றாய்ச் செல்லும் அன்று செல்லவும் பிரிந்த அன்றும் தாய் பக்கலிலே பிரஜைகள் நிற்பது
அஸ்மின் மயா சார்த்தம் -என்று இளைய பெருமாள் பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே

(கோதாவரி பாறையில் அமர்ந்து நீச்சல் போட்டி விருத்தாந்தம்)

பேர் பாட
நாமம் பலவுமுடை நாரண நம்பி (10-8-4)-என்று அவனுக்கு உள்ளவை எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கு

செந் தாமரைக் கையால்
அவனும் ஆசைப்படும் கை –
அவன் உகக்கும் அணி மிகு தாமரைக் கை –
அவனுடையது தாமரைக் கை இறே
ததவ் பாஹு (ராஸக்ரீடை களைப்பு -சாய்ந்து கண்ணன் தோள் உடன் இணைந்து )எங்களை –
எங்களை மா ஸூச என்னும் கை
நீங்கள் பண்ணுகிற பாபத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா நான் உள்ளேன் -என்கிற
இப் பெருமாளுடைய அஞ்சேல் என்ற கை
பவேயம் சரணம் ஹி வ -(ராக்ஷஸிகளுக்கும் மா ஸூச )என்னும் கை-
ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா என்கிறது பெரிய பிராட்டியார் அஞ்சல் என்ற கை

(லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -அவள் கையை உன் கையால் பிடி ஜனகனும் முதலில் -)

(பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தின்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5)

சீரார் வளை ஒலிப்ப
வளையை ஏறக் கடுக்கித் திறக்கப் புக்காள்-
அங்கண் ஒண்ணாது –
நாங்களும் அவனும் த்வனி கேட்டு வாழ வேணும்
சங்கு தங்கு முன் கை இவளது
இரு கையில் சங்கிவை நில்லா இறே இவர்களுக்கு
கலியர் சோற்றை வர்ணிக்குமா போலே வர்ணிக்கிறார்கள்
சூடகமே தோள் வளையே-என்று அவர்கள் பூட்டினால் இறே இவர்களுக்கு உள்ளது( பூட்டும் ஆத்ம பூஷணங்கள் )

(யாமி ந யாமி –போகிறேன் என்றதும் விரஹத்தால் மெலிந்து விழும் -கூடவே இருக்கப் போகிறேன் என்றாலும் பூரித்தும் வெடிக்கும்)

(அஸ்தமிக்காத அஸ்தி இவளுக்கே -வாமனனாக வேஷம் கொண்டாலும் இவள் பிரிய வில்லையே -)

எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு இது –

வந்து திறவாய்
யந்திரத்தாலே கண் வளர்ந்து அருளினை படியே கிடந்தது திறக்கப் புக்காள்
அது ஒண்ணாது
அவனும் நாங்களும் நடை அழகு கண்டு வாழும்படியாக வேணும்

மகிழ்ந்து
பேறு உன்னதாக வேணும் –
தர்மத்துக்குத் திறக்க ஒண்ணாது
அடியே பிடித்து- பவேயம் சரணம் ஹி வ – என்ன வேணும்-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading