Archive for February, 2015

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -11-20– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 21, 2015

கா என்று கொண்டு வெறுமனே தலையிலே  ஏறிடுகிறது என் –
தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார்  –

தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன –
இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

கடை நின்று -இத்யாதி
ஜகத்தடையக் கடையாய் கிடக்கிறபடியை அனுசந்திக்கிறார் –
கா என்ன மாட்டாதார் படும் பாடு –

கடை நின்று –
அவ்வோ  தேவதைகளின்   வாசல்களைப் பற்றி நின்று –
கடைத்தலை இருக்கை இங்கே யாவதே –

அமரர் கழல் தொழுது நாளும்-
நாள் தோறும் அவ்வோ தேவதைகளின் காலிலே குனிந்து

அமரர் –
தன்னில் காட்டில் நாலு நாள் சாவாதே இருந்ததுவே ஹேதுவாக –

கழல் தொழுது –
ஆருடைய கடல் தொழக் கடவவன் –
யாவந்த சரனௌ பிராது –சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா -98-8-என்று
வகுத்த கழல் ஒழிய –

நாளும் –
சக்ருதேவ -என்று இருக்க ஒண்ணாதே
அந்ய சேஷத்வம் ப்ராமாதிக  மாகவும் பெறாது ஒழிவதே

உபாயங்களால் பெருத்து -உபேயங்களால் சிறுத்து இருக்கும் இதர விஷயத்தில்
பகவத் விஷயத்தில் உபாயம் வெருமனாய் உபேயம் கனத்து இருக்கும்
அதுக்கடி அங்கு பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அவர்கள் பக்கலிலே

இடை நின்ற வின்பத்தராவர் –
நிரதிசய ஸூக ரூபமான போக பூமியிலே போய்ப் புகுமத்தையும் இழந்து
அதுக்கு யோக்யதை யுடைத்தான சம்சாரத்திலும், நிலையும் குலைந்து
நடுவே யுண்டாய் -அவர்கள் கொடுக்க வல்ல ஸ்வல்ப பலத்தை ப்ராபிப்பர்

அதாகிறது 
அஸ்த்திரமான ஸூகத்தை ப்ராபியா நிற்பார்
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே
சம்சாரத்தில் வாசி இழக்கிறோம் என்றும்
போக பூமியில் புகப் பெறு கிறிலோம் என்றும்
அவற்றை லந்த நெஞ்சாறாலாலே அந்ய பரனானவன்
துஸ் சீல தேவதைகளாலே உன் பசலை அறுத்துத் தா எனபது
ஆட்டை அறுத்துத் தா
இடைவிடாதே ஆஸ்ரயி என்பார்கள்
கரணம் தப்பில் மரணம் இறே-

அங்கன் அன்றிக்கே
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்த்ரங்களும் திரு வாசலில் நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பெறுகையே பிரயோஜனமாக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
ஷூத்ரமான பிரயோஜனங்களைக் கொண்டு போவார் -என்றுமாம் –

புடை நின்ற நீரோத மேனி –
பூமியைச் சூழப் போந்து கிடக்கிற கடல் ஓதம் போலே இருக்கிற வடிவை யுடையையாய் –

நெடுமாலே-
அபரிச்சேத்யனானவனே-
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நின்னடியை யாரோத வல்லார் அவர்–
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –

————————————————————————–

ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ –
அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு
இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –
மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் –
அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்-

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளி யிருக்கின்ற இடத்தைத் தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

அவர் இவர் என்று இல்லை –
சிறியார் பெரியார் என்று இல்லை –
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான தேவர்களோடு -அவர்களை ஆஸ்ரயித்த மனுஷ்யரோடு வாசி அற-
பெற்ற தாய்க்கு ஆகாத பிரஜை யுண்டோ –

அரவணையான் பாதம்-
ஷீரார்ணவ சாயியான சர்வேஸ்வரன் திருவடிகளை –
சர்வேஸ்வரத்வ லஷணம் ஆவது -அநந்த சாயித்வம் போலே காணும் –
புருஷகாரம் அங்கே யுண்டு -யத்ர ராமஸ் ஸ லஷ்மண-யுத்த -17-1-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11- என்றும்
நாகணைக்கே சென்று -நாச் -10-9- என்றும் சொல்லக் கடவது இறே

எவர் வணங்கி ஏத்தாதார் –
ஆஸ்ரயியாதார் ஆர் -வேறு ஒருவன் காலிலே விழாத படியான
வைபவம் யுடையவனைப் பற்ற வேண்டாவோ –

எண்ணில்-
ஆராயில் –

பவரும்-இத்யாதி –
இவர்கள் அன்றோ நாட்டுக்கு ஆஸ்ரயணீயாராய் பிரசித்தராகிறார் –
இவர்கள் தாங்கள் செய்கிறபடி இது வன்றோ –

பவரும் செழும் கதிரோன்-
பரம்பின அழகிய  சஹச்ர க்ரணனான ஆதித்யன் –

ஒண் மலரோன்-
திரு நாபீ கமலா ஸ்தானனான ப்ரஹ்மா-

கண்ணுதலோன் -என்றே
லலாட நேத்ரனான ருத்ரன் -இவர்கள் அன்றோ

தொழும் தகையார் நாளும் தொடர்ந்து—-
நாடோறும்   அவன் புக்கிடம் புக்கு -வடிம்பிட்டு -அவனையே ஆஸ்ரயிக்கையே
ஸ்வ பாவமாக யுடையராய் -இருக்கிறார்

நாளும் தொழும் தகையார் –
முறுக்கொழியில் கொட்டொழியும் என்று -தொழுகை மாறில் பிரயோஜனங்களும் மாறும்
என்று தொழும் தகையார்
தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே -இது வகுத்தது என்று இராதே –
பிரயோஜனங்களைக் கொண்டு இழப்பதே –
பலத்தைக் கூலியாக்கி த்யாஜ்யமான ஐஸ்வர்யத்தைப் பலமாகக் கொள்வதே -என்ன தர்ம ஹாநி-

————————————————————————–

ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ –
அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே  உள்ளது ஓன்று அன்றோ –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி
அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார்
ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு————–13–

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானை யானது
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின
எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.

தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்துக் கையிலே கொண்டு ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற மத்த கஜமானது
விலங்கை முறித்து எடுத்துப் பொகட்டுத்   திரியும் பெரிய யானை -என்றுமாம்

மால் யானை –
மத்தித்து இருந்துள்ள யானை –
பாடாற்ற மாட்டாமை -என்றுமாம் –

சூழ் கயம் புக்கு –
பெரிய பரப்பை யுடைத்தாய் -கண்ணால் கரை காண ஒண்ணாத பொய்கையிலே புக்கு

சூழ் கயம் –
புக்காரை துஷ்ட சத்வங்களாலே சூழ்க்க வல்ல கயம்-

கயம் புக்கு –
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு –

அஞ்சி-
முதலையால் வந்த இடருக்குப் பயப்பட்டு -ஸ்வ பலம் உள்ள போது-அதுவும் ப்ரஹ்மாதிகளோடு ஒக்கும்
பரமாபதமாபன்ன-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–அவனிலும் சீரிய ஆபத்து
சர்வ சக்தியில் காலோடு கட்ட வல்ல ஆபத்து இறே
இவன் தன்னைப் பொகட்ட வாறே  அவனும் தன்னைப் பொகட்டான்-

படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
படர் -படர்ந்து -பரப்பு மாற அலர்ந்து –
எடுத்த -ஓங்கிய
பைங்கமலம் -அழகியதாய் இருந்த தாமரை -என்னுதல்
அன்றிக்கே –
குளிர்ந்து இருந்துள்ள பூவை அத்யாதரத்தோடே வாங்கி

அன்று இடர் அடுக்க-
அங்கே முதலையாலே  ஆபத்தானது வந்து ப்ரஸ்துதமாக
இடர்-வேறு பரிஹாரம் இல்லாத துக்கம் –

அஞ்சி
அநந்தரம் இப்பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே பணிமாறப் பெறு கிறிலோம்-என்று
அஞ்சி -அதுக்குப் பரிகாரமாக

ஆழியான் பாதம் பணிந்து அன்றே –
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயித்தது அன்றோ –

ஆழியான் –
க்ராஹம் சக்ரேண  மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81–அனந்யப் பிரயோஜனர் திறத்து இருக்கும் படி –
பைங்கமலம் -பூவைப் பூவாக வாங்கின படி
ஆழியான் -துரிதம் போக்குகைக்கு பரிகரம் யுடையவன் –

வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப பண்டு–
முன்பு அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய ஸ்தானமான பரம பதத்தைப் பிராபித்தது –
நித்ய ஸூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே ஏறப் பெற்றது
ஆன பின்பு -இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்கிற நியதி யுண்டோ –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் சர்வாதிகாரம் அன்றோ -என்கிறார் –

————————————————————————–

இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே
பகவத் பஜனத்தைப்  பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் –

அவன் படி இதுவான பின்பு –
சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி
விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களை யுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

பண்டிப்பெரும் பதியை யாக்கி-
முன்பு இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து -என்னுதல்-
பழையதான சம்சாரத்தை வளர்த்து -என்னுதல்  –
அன்றிக்கே –
பண்டி -ஆகிற பெரிய ஸ்த்தானத்தை யுண்டாக்கி –
அதாகிறது
பெரிய ஊர் போலே வயிற்றைப் பெருக்கி -என்னுதல் –

பண்டு ஒருத்தர் -இதாகிறது -ஜங்கம விமானம் காண் என்று சொல்லித் திரியும் -என்று
நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஈஸ்வரனையும் ஆத்மாவையும் அழிய மாறி உடம்பை வளர்ப்பதே -என்கை-

பழி பாவம் கொண்டு –
ததர்த்தமாக பழிகளும்  பாபங்களும் கொண்டு -வளர்க்கிறதும்
யுடம்பை –தேடுகிறது பழியும் பாவமும் –

அமூலமாயும் -சமூலமாயும் வருமவற்றுக்கு எல்லாம் ஒரு ஆஸ்ரயமாய்-
பிரமாதிகமாக வருமவற்றையும் -பிரகிருதி வச்யனாய் புத்தி பூர்வகமாக வருமவற்றையும்
ஏறிட்டுக் கொண்டு இருப்பர்கள் இறே-

பழியாவது ஏறிடுமது-
பாவமாகிறது நிஷித்தமாக அனுஷ்டிக்குமது –

பழி-அந்ய சேஷத்வம் –
பாவம் ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –

இங்கு வாழ்வாரைக் கூறாதே –
இஹ லோகத்திலே வாழும் மனிசரை ஏத்தித் திரியாதே –
தேஹாதிரிக்த வஸ்துவும் ஓன்று உண்டு என்று இருக்கில் –
அவ்வருகே பரலோக பிராப்தியும் -அங்கே ஒரு போகமுமாய் இருப்பது –
காண்கிறத்துக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கையாலே
இங்குற்றை நாலு நாளை வாழ்வே யாய் இருக்கும் இறே –
இப்படிப்பட்ட ஹேயரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
உனக்கு ஒரு பழி யுண்டோ பாவம் யுண்டோ என்று அவர்களை ஸ்தோத்ரம் பண்ணாதே –

இங்கு வாழ்வாரை –
துக்கத்திலே ஸூக பிரதிபத்தி பண்ணுகை-

பேதைகாள் –
மதி கேடர்காள்-கண்டது அல்லது அறியாதே இருக்குமவர்காள் –
த்ருஷ்டத்தில் ஐஸ்வர்யத்தையும் ஒன்றாக நினைத்து இருக்கிற அறிவு கேடர்காள்-

எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் –
திருக் கைகள் எட்டுத் திக்கிலும் போய் வியாபித்து விம்ம வளர்ந்த படி –
திக்குகளானவை அழித்துப் பண்ண வேண்டும்படியாய் வந்து விழுந்தது ஆய்த்து
இப்படி ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –

தீர்த்த கரராமின் திரிந்து-
ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத்தரணி தானே -பெருமாள் திருமொழி -10-5
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-
அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்-
அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே
இவர்கள் தாங்களும் க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைவ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாத ஸ்தே மா கங்காம் மா குரூன் க ம -மனு -8-92-

திரிந்து தீர்த்தக்காரர் ஆமின் –
உங்களுடைய சஞ்சாரத்தாலே லோகத்தை பாவனம் ஆக்குங்கோள்-

பிள்ளானுக்கு மூத்த தேவப் பிள்ளை பட்டரைக் கண்டு  -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க
ஆர் முகத்திலே விழிக்க மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
பட்டர் -த்ருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -குசலவர்களுக்கு –
திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே-
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத் தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————–

ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் –
அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று
கிருஷ்ண அவதாரத்திலும் ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து
அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –
இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—————–15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
கொடிதான யுத்தத்திலே சாரத்யம் பண்ணியும் -படை  பொருத்தியும் சஞ்சரித்தது –
அது தன்னிலும் தான் பிரதானனாய்ச்  சிலரைக் கார்யம் கொண்டு தெரியப் பெற்றதோ –
ஜயம் உள்ளது அவன் தலையிலேயாய் -அம்பு விழுவது தன் மேலேயாம்படி முன் நின்றான் ஆயிற்று –
இனி யுத்தத்திலே ரதியைச் சீற நினைத்தவன் சாரதியை இறே முந்துற தலை அழிப்பது
அவனை உயர வைத்து -எதிரிகள் சாயுதராய் வர –
தான் உடம்புக்கு ஈடிடாதே சாரத்யம் பண்ணித் திரிந்தான் ஆயிற்று –

வெஞ்சமத்துத் தேர் கடவி -திரிந்தது-
படை பொருத்தித் திரிந்தான் ஆயிற்று -பகதத்தன் விட்ட அம்பு திரு மேனியிலே பட்டது இறே –
உரஸா பிரதி ஜக்ராஹ பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -பார -த்ரோண-29-18-
அர்ஜுனன் மார்பில் அம்பு படாமல் தன் மார்பையோக்க –
அவன் மார்பில் அம்பு படாமல் பிராட்டி மார்பை ஏற்றபடி –

அக்ரதஸ் தே கமிஷ்யாமி -அயோத்யா -27-7-அடியாரைக் காக்க முன் செல்பவள் -என்னுமவள் இறே
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்-
மாயா மிருகத்தின் பின் போய் தன்னுயிரை யாய்த்துப் பிரித்தது –
கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே படர்ந்தானை -பெரிய திருமொழி -2-5-6-என்னக் கடவது இறே  –
பிராட்டிக்கு ஆகர்ஷமான பொறியை -புள்ளியை -யுடைத்தான மறியானது திரிய –
அத்தைப் பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன
துஷ்ட மிருகம் ஆகையாலே பிடி கொடாதே கை கழியப் போக -தானும் அதன் பின்னே ஓடித் திரியக் கார்யம் பார்த்தான் ஆய்த்து-
பிராட்டியோட்டை பிரிவளவும் செல்ல விளைத்தது இறே

மான் பின் போய்ப் பிரிந்தது சீதையை –
ரஷிக்கிற இடத்தில் இருவரும் கூட இருந்து ரஷிக்கப் பெற்றோமோ –
கூடி இருப்பதுவும் பரார்த்தமாக –பிரிவதுவும் பரார்த்தமாக –

சீதையை –
பிராட்டியை -ப்ராணேப்யோ கரீயசீ -ஆர -10-21-என்னும் விஷயத்தை –

புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள-
அனுஷ்டித்ததுவும் -என்னுதல்-ஆதரித்ததும் என்னுதல் –

கண் பள்ளி கொள்ள –
கண் -என்றது இடமாய் -அதாவது
தறைக்  கிடை  –
த்ருணா சயனே அநு சிதே-பால -22-23-என்று என்றும் கூப்பிடும் படியானவன் இறே
இருப்பதுவும் கூடத் தேட்டமாம்படி கிடக்கிறான் —

காட்டிலும் அடைவு படத் திரியப் பெறாது ஒழிவதே –
கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ காகுத்தா -பெருமாள் திரு -9-3-
இன்று இப்படி போகவிட வல்ல நான் அறிந்து பொறுக்கும் படிக்கு ஈடாக வளர்க்கப் பெற்றிலேன் –

கண் பள்ளி கொள்ள –
பிராட்டியைப் பிரிந்த சோகத்தாலே இளைய பெருமாள் பர்ண சய்யையைப் படுக்க
அதுவும் அறியாதே தறை யிலே கண் வளர

அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–
திரு அநந்த ஆழ்வான் மேலே சாய்ந்தாலும் திரு மேனிக்கு என் வருகிறதோ  என்று
அனுகூலர் அஞ்சும்படியான சௌகுமார்யம் உடையவனுக்கு அழகிதாக வந்து விழுந்தது –

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு -திருப் பல்லாண்டு -9- என்னா நின்றார்கள் இறே

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்து அருளும்  வாய் திறவான் –
நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத் தணை – நான்முகன் -35-
குளிர்ந்த இடத்தே படுக்கைக்கு அடி ஸ்ரமத்தின் யுடைய அதிசயம் என்று இருக்கிராறிவர்

அழகியதே –
இஜ் ஜகத் ரஷணம் பண்ணப் பெறாதே யாய்த்து இருக்கிறது –

அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த ஆழ்வான் மேல் பள்ளிக் கொள்ளக் கடவ ஸூகுமாரனானவனுக்கு
தறைக் கிடை கிடக்க வேண்டுவது –
நல்லுயிரைப் பிரிந்து திரிவது
அயல் யேசும்படி யுத்தத்திலே திரிவதாய் ஜகத் ரஷணம் பண்ணுகை சால அழகியதாய் இருந்ததீ
இஃது  ஒரு ஆஸ்ரித ரஷணம் இருக்கும்படியே
முதல் அழியவோ ஆஸ்ரித ரஷணம் பண்ணுவது -என்று நோவு படுகிறார் —

————————————————————————–

அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால்
இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –

எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க
நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் –

அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ –
ஆன பின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருதாலும்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்
மாலை–அப்பெருமானை
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;)
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்-
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இவ்வாத்மா தனக்குக் கூருபட்டது சேஷத்வம் –
எம்பெருமானுக்கு கூருபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் –
ஆத்மதாச்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-

தான் அறியானேலும்-
இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –
தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் –
சமயக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்

தான் அறியானேலும் –
இப்படி பிரமாண பிர சித்தியாலும்
ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-

மனத்தடைய வைப்பதாம்-
செய்கிறார் செய்யும் இத்தைக் கண்டாகிலும்
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது-
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரோ ஜன -ஸ்ரீ கீதை -3-21-என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை ஹ்ருதயத்திலே வைப்பது –

அங்கனே அன்றிக்கே
மனத்து அடைய வைப்பதாம்  மாலை –
இங்கனே இருக்கச் செய்தே  இவனுடைய ஹ்ருதயத்திலே சர்வேஸ்வரன் தன உடைமையைப் பெறுவானாக வந்து
புகுரப் புக்கால் விலக்காத மாத்ரமே உண்டாய் இருப்பது –
அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால்
அப்போது இடம் கொடுப்பது இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது
இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –

வடுக நம்பி -எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –
அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திருநாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –

ந ச மாம் யோப்ய ஸூ யதி-ஸ்ரீ கீதை -18-67-

நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின
இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –

இத்தால் –
ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி
இதுக்குத் திருஷ்டாந்தம் மேல் -அதாகிறபடி எங்கனே -என்னில்

வனத்திடரை  ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லாள் –
காடான திடரை ஏரியாகப் ப்ரவர்த்தித்து -வருகிற நீரைப் புறம்பு போகாத படி
தகைததுக் கொள்ள வேண்டுவதே யன்றோ ஏரிக்கு உள்ளது

இத்தனை போக்கி -மாரி யார் பெய்கிற்பார் மற்று –
வர்ஷம் இவன் அதீனமோ –
அதுக்குக் கடவனான பர்ஜான்யன் -அன்றோ என்கிறார்
இவன் சேதனனான வாசிக்கு அத்வேஷ மாதரம் உண்டானால்
அவ்வருகான ப்ராப்தியைப் பண்ணித் தர்வான் அவன் அன்றோ –

அன்றிக்கே
இங்கனே ஒருபடியாக நிர்வஹிப்பாரும் உண்டு –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -முண்டக -1-1-10- என்றும்
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -ஸ்வே-6-8-என்றும் சொல்லுகிறபடியே
ச்வதஸ் சர்வஜ்ஞன் ஆனவனுக்கு இவன் அடிமை யானதும் -சர்வ நிர்வாஹகன் ஆனதும் –
இவன் அறியாத படியாலே தனக்கு சேஷத்வ ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும்
சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு வந்து வைப்பதாமீ -என்று ஷேபமாக்கி

அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் –
இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ –
இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ

அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி
இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது
மனுஷ்யரை பிரேரித்து ஏரி கல்லுவிப்பானும்
அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று –
இந்த்ரனை இடுவித்து மழை பெய்விப்பானும் அவன் தானே அன்றோ –

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது –
ஹிருதயத்தில் அவித்ய கர்ம வாசன ருசிகளைத் தவிர்க்குமது இ றே-அவன் செய்யுமது
அதுவும்
மாரி யார் பெய்கிற்பார் மற்று –
குணாவிஷ்காரம் பண்ணுவானும் அவனே அன்றோ
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி பெய்கிற்பார் மற்று யார் -என்று
பொருள் சொல்லும் போது திருஷ்டாந்தம் கிடையாது –
பகவத் பராவண்ய அனுசந்தானம் கனத்து இருப்பார்க்குச் சொல்லில் பரிக்ரஹிக்கும் அத்தனை போக்கி அல்லது –
நினைத்தபடி சொல்லலாம் பொருள் அன்று

அதவா
எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான்
வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்

மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும்
ருசி மாத்ரமே உடையானாகை என்றும்
ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்

ஓன்று பட்டரது
ஓன்று திருமலை நம்பியது
ஓன்று ஆழ்வானது-

————————————————————————–

இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு
இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரயணீயன்   அவனே அன்றோ என்கிறார்

ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி
இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ
லப்த ஸ்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று  –
பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே

ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு
இங்கு ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறது

அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது
பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?

மற்று ஆர் இயலாவார் –
சர்வேஸ்வரனை ஒழியஓர் இயற்றியால் அறியப்படிவார் யார் –
வேறு ஆஸ்ரயிக்கப் படுவார் யார்
இத்தாலே அவனே ஆஸ்ரயணீயன் -என்றபடி

வானவர் கோன் மா மலரோன்-
தேவர்களுக்கு எல்லாம் பிரதானனான இந்த்ரன் –
திரு நாபி கமலத்தை வாச ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா –

சுற்றும் வணங்கும் தொழிலானை –
நேர் கொடு நேர் ஆஸ்ரயிக்கப் பெறாதே கடக்க நின்று பாடே பக்கமே  ஆஸ்ரயிக்கும் படியான
தொழிலை யுடையவன் -என்னுதல்
அனுகூல வ்ருத்திகளைப் பண்ணும் தொழிலை  யுடையவன் என்னுதல்
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி வணங்குவர் என்னுதல்
இவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தந்தாம் அபிமதம் பெறுகிறது –

தொழிலானை –
ஆஸ்ரயணீய பிரகாரங்களை யுடையவனை -இவர்கள் இப்படிப் படா நிற்க

மாற்றார் இயலாவார் –
வேறு யத்னம் பண்ண வல்லார் யார் -என்றுமாம்

ஒற்றைப்பிறை யிருந்த செஞ்சடையான் –
ஒற்றைப்பிறை -தனிப்பிறை -ஒப்பிலாத பிறை என்றபடி
ஒரு பிறையை சிவந்த ஜடையிலே தரித்தானாய் -ஸூக பிரதானனான ருத்ரன் ஆவவன்

பின் சென்று மாலைக் கொண்டு –
தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு

பின் சென்று –
அவனை அனுவர்த்தித்து

குறை இரந்து-
அநந்தரம்-தன்னுடைய குறையை அபேஷிதது

தான் முடித்தான் –
அத்தைத் தலைக் கட்டப் பெற்றான் –
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான் –

ஆன பின்பு அவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ என்கிறார் –

————————————————————————–

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –
அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் –
அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

பதவுரை

குறள் உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம–பூமி முதலிய லோகங்களை
கொண்டத–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்

கொண்டது இத்யாதி –
அவன் ஜகத் ரஷணம் பண்ணும் படிகள் சொல்லுகிறது –
அரியத்தைச் செய்து -இது பிராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான் –

கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஆஸ்ரிதர்க்காக வாமன வேஷத்தைக் கொண்டு -தன்னை அர்த்தி யாக்கி யாய்த்து லோகத்தை கொண்டது –
தன்னது தான் கொள்ளும்போது இரந்து கொள்ள வேணுமோ –
இரந்து கொள்ளும் போது தானே நின்று கொண்டால் ஆகாதோ –

கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
நாட்டில் ஒருவர் கொள்ளாத நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டாய்த்து –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் மார்பில் உகிரை நாட்டிற்று –

கோள் அரி-பெரு மிடுக்கன் ஆன நரசிம்ஹம்-
ஒரு வடிவைக் கொண்டு இவ்விரோதியைப் போக்கல் ஆகாதோ

ஒண் திறலோன் –
ஒள்ளிய மிடுக்கு

மார்வத்து உகிர் வைத்து –
கை தொட்டு ஆஸ்ரிதர் விரோதிகளைப் போக்கும் படி

உகிர் வைத்து –
திரு ஆழியை இட்டுக் கீண்டால் ஆகாதோ –
இத்தனை விவேகம் உண்டாகில் சங்கல்பமே யமையாதோ –

உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே –
ஒரு அனுகூலர்க்கு பிரகலாதனுக்கு -உதவவிட்டால் ஆகாதோ –
வயிற்றிலே வைத்ததுவும் ஒரு நாள் தன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமியையே –

அன்றிக்கே ஒரு-
தாமரைக்கண் மால் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் -அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-

ஸ்ரீ வாமனனாய் இரந்து கொண்டது பூமியை –
ஸ்ரீ நரசிம்ஹமமாய் ஹிரண்யனுடைய  மார்பைக் கீண்டது
ஒரு நாள் தான் அளந்து கொண்ட  ஏழுலகை உண்டது –
வான் கடந்தான் –
அபரிச்சேத்யனானவன்-

வானிலும் பெரியன வல்லன் -திருவாய் -1-3-10-என்கிறபடியே
ஆகாசத்தை அளவிடிலும் தன்னை அளவிட ஒண்ணாதவன் –

அன்றிக்கே –
வான் -என்று வானில் உள்ளாரை ஆக்கி நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் -என்றுமாம்
வை லஷண்யம் பார்த்தால் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு

அன்றிக்கே –
வான் கடந்தான் -வானை அளந்தவன் -ஸ்வர்க்கத்தை  யளவிட்டவன் -என்றுமாம் –

செய்த வழக்கு
இப்படி தான் செய்ததை தான் ரஷகன் ஆகையாலே
தன்னுடமைக்காகச் செய்கையால் ப்ராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான்

வான் கடந்தான் செய்தனவானவை ப்ராப்தம் –
அதாகிறது –
பிறர்க்கு ஒரு செயல் செய்தானே இருக்கை அன்றிக்கே கடவப்படி செய்தான் என்று தோற்றி இருக்கை-
ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –

————————————————————————–

அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது)
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததே யென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்-
ரஷணம் பண்ணுகை வழக்கே யாகிலும் -ஸ்ரீ வாமனனாய் நிரதிசய ஸூ குமாரனான நீ
வலிதான சகடத்தை நிரசித்தது  அப்ராப்தம் கிடாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்தது வழக்கன்று –

வலி சகடம் செற்றாய் –
வலியாலே சகடத்தை பங்கம் பண்ணினாய் -என்றுமாம்
இத்தால் செய்தது வழக்காமோ -என்றபடி

செற்றாய் –
வெற்றி உண்டானது பாக்கியம் –
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
செய்ததற இது உற்றது -இனி ப்ராப்தமாம் இத்தனை அன்றோ என்னில் -இது இறே நானும் வேண்டா என்கிறது
அது செய்தற்றேதே யாகிலும் அத்தைப் பிராப்தமாக புத்தி பண்ண வேண்டா

நீ மதிக்க வேண்டா –
இத்தைச் செய்தால் அனுதாபம் இன்றிக்கே ஒழிவதே –
இவரும் இது பிராப்தம் என்று அனுமதி பண்ணுவார் ஆகில் அவன் இன்னம் அதிலே கை வளரத் தொடங்குமே

புழுக் குறித்தது எழுத்தான மாத்திரம் அது –
ஒருக்கால் இங்கனே வாய்த்ததாகில் இது கடவதோ
குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை –
அதுக்கு மேலே நீ ஒன்றைக் கொண்டு ஒன்றை எறிந்தாயான படி எங்கனே –
அவை இரண்டுக்கும் நினைவு ஒன்றே அன்றோ –
ஒரு அசுரனான குழக் கன்றைக் கொண்டு அசுரவடிவேத் தீதான விளவின் காய்க்கு எறிந்தாயான இது தப்பு
இருவரும் கூடி கிருத சங்கே தரை வந்து தீங்கு செய்யிலோ என்று வயிறு பிடிக்கிறார்

திரு மாலே-
பிராட்டியும் நீயுமாய் இருந்து போது போக்கை அன்றோ உன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த செயல்
இவை யுனக்குப் போருமோ
அன்றிக்கே
பிராட்டி பரிய இருக்கும் விஷயம் படும் பாடே என்றும்
திருமாலே -ஜகத்து அநாயகம் ஆகாதோ
மங்களாந்ய பிதத் யுஷீ -பால -16-21-

பார் விளங்கச் செய்தாய் பழி——
பாரிலே -பூமியிலே பிரகாசிக்கும்படி பழியைச் செய்தாய் -தப்பைச் செய்தாய்

பழி-
விபூதியிலே ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு  உபய விபூதியையும் இழக்கப் பார்த்தாய்
தம்முடைய ச்நேஹத்தால் வழக்கன்று -பழி என்று இருக்கிறார்
எம்பெருமான் தான் புகழ் என்று இரா நின்றான் –
இவர் இது அந்யதா ஜ்ஞானம் என்று இருக்கிறார் –

————————————————————————–

பகவத்  பஜனத்திலே அடி இட்டாரோடு –
தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அற
எல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் –
கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து –
இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்னராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).

பழி பாவம் கை யகற்றிப் –
நாட்டார் பழி சொல்லுமவையும் -அதன் நிபந்தனையும் தவிர்த்து

பழி பாவம் –
தான் செய்யாது இருக்க வந்தேருவதான அப கீர்த்தியும் –
புத்தி பூர்வகமாகப் பர ஹிம்சா ரூபமாக அனுஷ்டிக்கையால் வந்த பாபமுமான -இவற்றைக் கை கழியப் பண்ணி –

அடி யுண்டாயும்-அடி இன்றிக்கேயும் உள்ள விரோதிகளைப் போக்கி –
இவன் செய்யாதே இருக்கச் செய்தே வந்தேறுமதுக்கு பலம் புஜிக்க வேணுமோ என்னில் –
அது தானும் ஒரு பாப பலம் இறே-
ஆகையாலே அது தனக்கு யோக்யமான நிலையைக் குலைத்துக் கொண்டு நிற்க வேணுமே

பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம்-
எப்போதும் உன்னை சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே வழி பட்டு நின்றாராய்-
ஆஸ்ரயிப்பார் வாழ்வராம் – -அவர்கள் வாழ்வு பெறுவாராம் –
உபாய அனுஷ்டானம் வாழ்வாய் -புருஷார்த்த சித்தியும் வாழ்வாய் இருக்கை-
ந ஸூகாத் ஸூகம் லப்யதே -என்கிறது இல்லையாகாதே -சாதனா சாத்திய விபாகம் இல்லை –

மாதோ –அந்தோ –
இஃது ஒரு இடைச் சொல் இருக்கிறபடி –
இது அவ்விஷயமாய்  ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்கிறது –

வழுவின்றி-இத்யாதி –
சர்வேசவரனுடைய திரு நாமங்களை விச்சேதம் இல்லாத படி -அழகிதாக அனுசந்தித்து
அழகிதாகச் சொல்லுகைக்கு அடியான -வழுவு இன்றி -பழுது   இன்றிக்கே இருக்கிற
நாராயணன் உடைய திருநாமங்கள் –

நாரணன் தன் நாமங்கள் –
தாய் பேர் சொல்லுமா போலே –

நன்குணர்ந்து –
பக்தியாலே உணர்ந்து

நன்கேத்தும்-
ஏத்தினால் அல்லது செல்லாமை –

காரணங்கள் –
ஹேதுக்கள்-அவை யாவன –
இதுக்கடியான பக்தியை யுடையராய் –
அதுக்கடியான ருசியை யுடையராய் –
அதுக்கடியான ஸூ க்ருதத்தை யுடையராய் –
அதுக்கடியான பகவத் கடாஷத்தை யுடையவர் ஆனவர்களும்

பழி பாவம் கை யகற்றி -பலகாலும் நின்னை வழி வாழ்வார் ஆனவர்களும் வாழப் பெறுவார்
இவ்விரண்டு அதிகாரிகளும் அழகியதாக அனுசந்திக்கப் பெறுவர்கள்-

இத்தால் –
உனக்குப் பரியப் பிறந்தார் உன் பிரசாதம் உடையார் அன்றோ -என்றபடி

தாரணங்கள் தாமுடையார் –
என்ற பாடமான போது-தாரணம் -என்றது த்ருதி யுடையார் –
அதாவது
பகவத் விஷயத்திலே யூன்றி த்ருதியை உடையராய் இதர விஷயங்களால் சலிப்பிக்க ஒண்ணாதே இருக்கை –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -1-10– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 20, 2015

அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில்
ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் –
இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் –
அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –

அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது

கீழில் திருவந்தாதியில்
அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-
இவர்
தம் மனசின்  யுள்ளே அனுசந்தித்து
அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

கீழில் திருவந்தாதியில்
ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று
பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –

உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் –
இப்படியாகக் கூடுமோ என்னில்

சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே
தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-

சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால்
அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-

சாதனம் தம் தலையில்  இன்றியிலே அவனே யாகையாலே
இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ

குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –

எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் –
த்ருப்தனாய் போனான் –

அதாகிறது –
ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –

சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே
ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –

அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் –
இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்

த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஜைமினியும் -வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம்
ஜைமினியும் வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே
ஏக சாஸ்த்ரமாய்த்து இறே –
அப்படியேயாய் இருக்கிறது –

அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் –
சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே
இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –

ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –

அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் –
எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )

————————————————————————–

ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான
தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப் பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து –
பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –

அதாவது –
வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ச்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது
பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –

கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-

ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பையே அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது
அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –

ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம்
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய்
அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –

அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –

ஆவல் அன்புடையார் தம்  மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-

இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய்
அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் –
குணாதிக விஷயம் ஆகையாலும் –
த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –

நன்புருகி-
நன்பு என்கிறது
ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-

அன்றிக்கே
நன்பு -என்கிறது
ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது
அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-
நித்தியமாய் –
ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –

உருகி என்கிறது –
அசேத்யமாய்-
அதாஹ்யமாய் –
அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவ த்ரவ்யம் பட்டது பட்டது –

நித்ய வஸ்து உருகுகையாவது என் என்னில்
அவ் விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல்
எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –

ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து –
விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரம பக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ் வளவிலே பகவத் பிரசாத லப்தமான பர ஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது
தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது
தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –

விளக்கேற்றினேன் –
அவ் வழியாலே அடிமை செய்கிறேன்-

நாரணற்கு-
சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –

பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று
பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான்  –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் –
காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக்  கடவது இறே

என்னளவிலே யாய்ப் போகை அன்றியே –
நாட்டார்க்கும்  எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப் பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –

இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

————————————————————————–

அவதாரிகை –
இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் –
அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு

சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி –
நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான
நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்

நாரணன் தன் நாமங்கள்–மற்றவன் பேர் -ஞானத்தால் நன்கு உணர்ந்து-தானத்தால்-சாற்றினால்-
நாராயணன் உடைய அசாதாரணமான திரு நாமங்களையும்-மற்றும் பிரகார வாசியான திரு நாமங்களையும் –
யுக்தமான படியே பக்தி பூர்வமாக யுணர்ந்து -மேற்பட உச்சமான ஸ்தானத்திலே சாற்றினால் –

ஞானத்தால் நன்கு உணர்ந்து-
பக்தியாலே அழகியதாக உணர்ந்து –
இருவர் கூட ஞானத்தை அப்யசிக்கச் செய்தே
சஞ்சயனுக்கு பக்தி யுண்டாய் -திருதராஷ்டிரன் வரி யடையவே கற்றுப்   போனான் இறே
இருவர் கூட அப்யசித்தோம் -உனக்கு ஞானம் உண்டாய்த் தோற்றுவான் என்-
எனக்கு தோற்றாது ஒழிவான் என் -என்ன
உன்னைப் போலே வரியடைவே கற்கை அன்றிக்கே
நான் பக்தியை உடையேனாய்க் காண் அப்யசித்தது -என்றான் இறே –

நன்கு உணர்ந்து-
உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் –
அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும்
ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
அவன் சேஷித்வத்தையும் தன் சேஷத்வத்தையும் அனுசந்தித்து –

நாரணன் தன் நாமங்கள்-
அல்லாத திரு நாமங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
ஜ்ஞான ஆனந்தங்கள் ஸ்வரூப நிரூபகமாய் -அல்லாத ஜ்ஞான சக்தியாதிகள் குணமானாப் போலே யாயிற்று
திருமந்தரம் ஸ்வரூப நிரூபகமாய் அல்லாதவை திரு நாமங்களாய் இருக்கிறது –

பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் -அவன் யார் என்னில் -நாராயணன் -திருவாய் -9-3-1-என்றது இறே
நாமம் பல சொல்லி நாராயணா – மூன்றாம் திரு -8-என்றது இறே

நாரணன் தன் நாமங்கள் –
வகுத்த சேஷியானவனுடைய திரு நாமங்கள் –

தானத்தால் –
பிரயோஜன நாந்தர பரனாய்ச் சொல்லுதல் –
பிரயோஜன நிரபேஷனாய்த் தவிருதல் -செய்கை அன்றிக்கே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமையாலே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமை
பக்தியினுடைய ஸ்தானத்திலே –
பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –

மற்று –
அவ்யயமாய்ப் பொருள் இன்றிக்கே நிற்றல் -அசை நிலை –
மற்று ஓன்று பக்திக்கு மேலே திரு நாமத்தையும் சொன்னால் –

அவன் பேர் –
விபூதிக்கு வாசகமாயும் –
குணங்களுக்கு வாசகமாயும் உள்ள திரு நாமங்கள்

பேர் -சடங்கு வேண்டாமை

தானத்தால் சாற்றினால் –
அவன் பக்கல் உண்டான பக்தி வழிந்த சொல்லாலே பெரும் தானத்தைச் சொல்லிக் கூப்பிட்டால் என்றாதல் –

அன்றிக்கே
கீழ்ச் சொன்ன பக்திக்கு அனுரூபமாக அடைவு கெடக் கூப்பிட்டு-என்னுதல்-
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய் -3-5-8-என்னக் கடவது இறே

நன்கு உணர்ந்து சாற்றுகை யாவது –
நெஞ்சாலே உணர்ந்து அப் பேரை வாயாலும் சொல்லுகை –

சாற்றினால்
உகவாதார் மண் உண்ணவும் உகப்பார் களிக்கவும் கேட்கச் சொல்லிக் கூப்பிடுகை –

பின்னை அவன் செய்யுமது என் என்னில்
வானத்தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே –
நித்ய விபூதிக்கும் இவன்  சம்பந்தத்தால் ஒரு நிறம் உண்டாம்படி பண்ணி –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணுமதன்றோ-என்னுதல் –

அன்றிக்கே
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு
பூஷணமான  தேவர்கள் ஆக்குகை அன்றோ -என்னுதல்

மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவை -திருவாய் -4-2-11-என்னும்படியே
அடியார்கள் குழாங்களை —உடன் கூடுவது என்று கொலோ-திருவாய் -2-3-10- என்று இறே
இவர்கள் பிரார்த்தனை –

வானத்து அணி அமரர் –
பரமபதத்துக்கு விசேஷம் அச்ப்ருஷ்ட தோஷ கந்தரான நித்ய ஸூரிகளை உடைத்தாகை –
சம்சாரிகளை நித்ய ஸூரிகளை ஆபரணமாக யுடைத்தான பரம பதத்திலே கொண்டு போய் வைக்கும் என்றுமாம்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -திருவாய்-10-5-8-என்னக் கடவது இறே

இப்படிச் செய்கிறது தன்னை ஆஸ்ரயிப்பார் இல்லாமையோ என்னில்
நங்கள் பணி யமரர் கோமான் பரிசு-
நமக்கு நிருபாதிக பந்துக்களாய்-நித்யாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந-பார -சாந்தி -344-45-என்கிறபடியே
அவன் திருவடிகளிலே பணிகையே யாத்ரையாக யுடையரான அநந்த வைனதேயாதிகள் உள்ளிட்ட
நித்ய சித்த புருஷர்களுக்கு ஸ்வாமியானவனுடைய பிரகாரம்

பணி யமரர்  –
வேறு பணியை யறியாதே -ஒரு நாள் பணிந்து ஒரு நாள் பணியாது இராதே
அவனைப் பணிகையே ஸ்வரூபமாய் இருக்கை-

பணி யமரர் –
முக்தரையும் முமுஷூக்களையும் போலே சில நாள் புறம்பே பணிந்து –
பின்னை தெளிந்து
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்  -திருக் குறும் தாண் -12-என்றும்
காவடியேன் பட்ட கடை -இரண்டாம் திரு -10-என்றும்
சொல்ல வேண்டாதார்

பணி யமரர் கோமான் பரிசு வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அக்தன்றே-
அடைவுகெடக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் -என்றபடி –

————————————————————————–

கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே –
அவ் வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே
ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-
இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் –
அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் –
அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் –

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
அழகிய செவ்விப் பூக்களைக் கொண்டு
நமக்கு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாய் அவதாரங்களுக்கு எல்லாம் அடியான
திருப் பாற் கடலிலே அநிருத்த ஆழ்வானாய் இறே கண் வளர்ந்து அருளுகிறது –

வாஸூதேவ -சங்கர்ஷண-பிரத்யும்ன -அநிருத்தர்களில் கடைக் குட்டியான அநிருத்த ஆழ்வானாய்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் திருவடிகளை –
சம்சாரிகளை அக்கரைப் படுத்த வேணும் என்று திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
பூர்வஜன் -நமக்காக தானே முற்பட்டவன் -என்றபடி –

பரிசு புரிவார் –
சாஸ்திர உக்தமான படியே ஆஸ்ரயிப்பார் ஆவது –
பக்தி பிரகாரத்தாலே -ஏற்றபடி –

புகப் பெறுவர் போலாம் –
புகப் பெறுவாராமீ பேற்றில் குறை யில்லை –ஆஸ்ரயியாதே 
இழப்பார் இழக்கும் அத்தனை -என்கிறது –

புகப் பெறுவர் போலாம் –
தாம் புகப் பெறாத வெறுப்புச் சொல்கிறது –

இப்படிக் கொள்கிறது தன்னை ஆஸ்ரயிக்கைக்கு ஆள் இல்லாமையாலோ என்னில்
புரிவார்கள்-இத்யாதி
எப்படிப்பட்ட எவ்விடத்தே தான்-என்னில் –
புரிகை யாகிறது -செயலாதல் -விருப்பமாதல் –

புரிவார்கள் –
சாதகராய்த் திருவடிகளை ஆஸ்ரயிப்பார் -சபிப்பார் -ஜடை பின்னுவராய்
சம்சாரிகளில் பழையரான பிரம்மாதி தேவர்கள் –

தொல்லமரர் –
நாலு நாள் முற்பாடரானவர்கள்

கேள்வித் –
காண ஒண்ணாதே என்றும் கேட்டே போம் இத்தனை –
யாம் ந தேவோ முனய ந சாஹம் ந ச சங்கர ஜாநந்தி பரமேசச்ய
தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-

துலங்கொளி சேர் தோற்றத்து-
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸத்தா நம் -பார -ஆரண்ய -136-18-என்கிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்க் கொண்டு தோற்றுவதான
ஆதித்ய வர்ணம் தமாசா பரஸ்தாத் -ஸ்வே-3-8- என்றும்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் -நாச் -10-2-இத்யாதி வத்

நல்லமரர் கோமான் நகர் –
சிலநாள் சம்சார ஸ்பர்சம் உண்டாய்ப் பின்பு ஒரு ஸூஹ்ருத விசேஷத்தாலே
அது கழிந்து க்ரமத்தாலே பெறுவார்கள் அன்றிக்கே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தராய்  ஸ்வ பாவ சித்தரான பெரிய திருவடி திரு அநந்த ஆழ்வான் உள்ளிட்ட
அயர்வறும் அமரர்களுக்கு நாயகன் ஆனவனுடைய நகரத்தை

நல்லமரர் கோமான் –
நாலு நாள் சாவாதே இருந்து பேர் படைத்த சாதகர் ஆனவர்கள் அன்றிக்கே சாத்யராய்
பிரியில் தரியாதே இருக்கும்படியான நித்ய ஸூரிகளுக்கு அதிபதி என்று அவனுக்கு ஸ்வரூபம் –
அவனுக்கு ஸ்வரூபம் கொடுக்க வல்லவர்கள்  நகர் –

நிர் விசேஷம் என்று போகாமே –
ஒரு திவ்ய தேசமும் –
திவ்ய புருஷர்களும் -தானுமாய் இருக்கப் பெறுவதே

நல்லமரர் கோமான் நகர் பாற் கடலான் பாதம் நறு மலரால் பரிசு புரிவார் புகப் பெறுவர் போலாம் –
இத்தால் –
அர்ச்சாவதாரத்திலே  ஆஸ்ரயித்து
பின்னை விபவமாய்
அநந்தரம் வியூஹமாய்
அநந்தரம் மோஷமாய்-பரமபதம் பெறுவார்கள் -என்று சொல்லுகிறார் –

சொல்லுகிறது ஆழ்வார்களுக்கு உப லஷணம் அல்ல என்னும் இடமும்
தங்கள் பிரதிபத்தியின் அளவுக்கு ஈடாகச் சொல்லுகிறார் என்னும் இடம் தோற்றுகிறது-

கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆச்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால்
அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-

————————————————————————–

கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் –
அன்றிக்கே –
இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்-
இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4–

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை
வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு –
பக்தியைச் சொல்லுகிறது-என்னவுமாம்
ஏவம் விதமான பூவை யுண்டாக்கி ஆஸ்ரயிக்க-என்னவுமாம் –

அன்பே தகளியா -என்று ஒரு விளக்கை ரூபித்தால் போலே
ஒரு புஷ்பமாக ரூபித்து அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்

நகர் இழைத்து-
எம்பெருமானுக்குப் பாங்காக தம்முடைய ஹ்ருதயத்திலே அவனுக்கு ஒரு வாச ஸ்தானத்தைக் கற்பித்து

நகர் -என்றது
நகரமாய் -கோயில் என்றபடி

நித்திலத்து நாண் மலர் கொண்டு –
நீர்மையை யுடைத்தான முத்தை  செவ்வியை உடைத்தான இதழாக புத்தி பண்ணி
சிநேக ரூபமாகிற இதழை யுடைத்தாக்கி

நித்திலத்து நாண் மலர் –
குளிர்ந்து பரிமளிதமாய் இருக்கை-
குளிர்த்தி யாகிறது த்விதா பஜயேயமப் யேவம் ந நமேயம் -யுத்த -36-11-என்னாது இருக்கை

நாண் மலர் -போக்யமாய் இருக்கை

ஆங்கே -அதிலே

திகழும் மணி வயிரஞ் சேர்த்து –
அபி நிவேசம் ஆகிற உஜ்வலமாகா நின்ற ரத்னங்களும் வைரங்களும் ஆகிற அல்லியையும் தாதியும் சேர்த்து யுண்டாக்கி
திகழா நின்றுள்ள மணியும் வைரமும் ஆகிறது -பக்தி விசேஷமாய் இருக்கிறபடி

நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் –
இப்படி உபமான ரஹிதமாய் இருப்பதொரு பாவ புஷ்பம் ஆகிற தாமரைப் பூவை தரித்துக் கொண்டு
பணிந்தேன் -ஆஸ்ரயித்தேன்-

பைங்கமலம் -பரந்த பூ
ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –
மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்

இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ச்நேஹத்தை
மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை

நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
பக்தியைப் பாவ புஷ்பமாக நிரூபிக்கைக்கு காரணம்
பெரிய பிராட்டியாரோடு எம்பெருமானை அனுபவிக்கையால் பிறந்த விபாகம்
ஆரைத் தான்  ஆஸ்ரயிக்கிறது என்னில்

பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி-
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரை வலத் திரு மார்பிலே அணைத்துக் கொண்டுள்ள
சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே விழுந்தேன்

இத்தால்
ஆஸ்ரயணீய வஸ்து லஷ்மீ பதியான வேஷம் -என்கை-
பணிவுக்கு விஷயமாவான் ஸ்ரீ யபதி இறே
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே
ஆஸ்ரயிப்பார் உடைய நன்மை தீமை கணக்கிட ஒட்டாளே
நன்மைக்குப் பரிகை நம் உறவுக்குப் போகாது என்னும்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன்  –

————————————————————————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் –
நகரம் கோயிலாகப் பேசினார் –
இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –

அன்றிக்கே
பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாக வுமாம் –

நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே –
ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன
ஒன்றைச் சொன்னேன் அத்தனை -இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று
கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் –
பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் –

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

பதவுரை

படி நின்ற–பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல் வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ் வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலி யிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓத வல்லார் ஆர்–பேச வல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்-
இப்படி பக்திமான்களுக்காக வந்து திரு வவதாரம் பண்ணி -அவர்கள் பக்கல் உண்டான பஷ பாதம் தோற்றும்படி
மூன்று அடிக்கு உள்ளே அளப்பதாகத் திரு உள்ளத்தாலே கணிசித்து
அதுக்கு ஈடாக ஏற்கவே மூன்றடியை அபேஷித்தான் ஆய்த்து-
அடி மூன்றாலே இரந்து லோகத்தை அன்று அளந்து கொண்டாய்-

அதாகிறது –
தன்னதைத் தான் கொண்டானாகை யன்றிக்கே  
பிறரத்தைத் தான் கொண்டான் என்று தோற்றுகைக்காக-

அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –
பூமியை உனக்காக்கிக் கொள்ளுகைக்காக அளக்கைக்காக மூன்றடியை யாசித்து
இரண்டு திருவடிகளாலே இந்த லோகத்தை அன்று அளந்து கொண்டாய்

அளக்கைக்காக அடி மூன்றையும் பெற்று உடையாய்க் கொண்டு
இரண்டு அடியாலே லோகங்களை அன்று அளந்து கொண்டாய்
அதுக்கடியாக சிற்றடியாலே மூன்று அடிக்கு பூமியை இரந்து ப்ராப்தி பண்ணிக் கொண்டாய்
தூர தர்சி யாகையாலே இரண்டு அடியாலே அளந்து ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பதாக மூன்று அடியை இரந்தாய்
உன்னுடைய இந்த நினைவை ஒருவராலே அறியலாய் இருந்ததோ

படி நின்ற-
பூமியிலே ரஷகனாய்ச் செவ்வே நின்ற –
அன்றிக்கே
ஒப்பாய் நின்ற ஸ்வ பாவமாய் நின்ற என்றுமாம் –

நீரோத மேனி நெடுமாலே –
ஓதம் கிளர்ந்த கடல் போலே இருக்கிற வடிவு அழகை யுடையையாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனே

நெடுமாலே –
மிக ஓங்கின வடிவை யுடையவனே -ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நீரோத மேனி நெடுமாலே –
அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது

நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-
உன் திருவடிகளினுடைய நீர்மையை அறிந்து ஓத வல்லார் ஆர் –
ஆர் அறிந்து பேச வல்லார் -என்கிறார்
என்னைப் போலே அறிவு கெட்டுப் பேசில் பேசும் அத்தனை
அபரிச்சேத்யனான உன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை -என்கிறார்

நீ மஹா பலி பக்கல் சென்று இரந்து பூமியை அளந்து கொண்ட அச் செயலை பர்ச்சேதிக்கில் அன்றோ –
உன்னைச் சிலராலே பரிச்சேதித்து ஆஸ்ரயிக்கலாவது-என்கிறார்
உன் மேன்மையை எல்லை காணிலும் நீர்மையை எல்லை காண ஒண்ணாது -என்றபடி

————————————————————————–

அறியப்  போமோ -என்றாரே –
ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று –
இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் –
ஆகில் பின்னை இங்கனே எல்லோரும்  அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் –
அது வேண்டா

இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டிமேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்திமிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன் பேர்–அப்பெருமானது திருநாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹாபாக்யசாலிகள்
கார் ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.

அறிந்து –
ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி –
பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் –
சப்தாதி விஷயங்களினுடைய  பொல்லாங்கையும் அறிந்து –
சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -என்றுமாம் –
ஐந்தும் உள்ளடிக்கி-
அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு  இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி
பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –
யாய் மலர் கொண்டு –
சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –
ஆர்வம் செறிந்த மனத்தராய்-
ச்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ் ஸூ
செவ்வே அறிந்து –
அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி
அவன் தன்பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர்-
அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –
காண்பரே காரோத வண்ணன் கழல்-
ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –
காண்பரே –
தம்முடைய நோயாசை -நப்பாசை –
காரோத வண்ணன் –
அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –
காண்பரே –
இது நிச்சயம் –

————————————————————————–

இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் -என்று அறிந்து நீயும் விடாதே
அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று 
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

கழல் எடுத்து-
திரு யுலகு அளந்து அருளின போது-ஒரு திருவடிகளை மேலே எடுத்து –
இத்தால் ஆஸ்ரயித்தாரை வாழ்வித்த படி –
மேல் -அநாஸ்ரிதரைக் கெடுத்த   படி

வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச –
தழல் எடுத்த போராழி ஏந்தினான் –
வாய் மடித்துச் சுழலா நின்றுள்ள கண்களை யுடையராய் –
ஹ்ருதயத்தில் கொளுத்தின பயாக்னியை உடையரான நமுசி பிரப்ருதிகள் அஞ்சும்படி –
அவர்கள் மேலே விழுமாப் போலே இருக்கிற திரு ஆழியை ஏந்தினான் -என்றபடி

பொன் மலர்ச் சேவடியே –
பொன் போலேயும் மலர் போலேயும் ஸ்ப்ருஹணீயமுமாய் ஸ்லாக்யமுமான திருவடிகளையே

ஓர் –
அனுசந்திப்பாய்

ஆழி நெஞ்சே –
அளவுடைய நெஞ்சே -அது செய்யும் இடத்து

உகந்து ஓர் –
விருப்பத்தோடு அனுசந்திக்கப் பார்
உன் அளவுடைமை கொண்டு ஓராதே -உகப்பைக் கொண்டே ஓர் –
தேவைக்காக ஒண்ணாது –

ஓர் –
ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-

————————————————————————–

ஆன பின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் –
அதாவது –
பொய் யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது –
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க –
அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –

நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே
பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்-

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகு பெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

உகந்து –
தாய் வடிவு கொண்டு வந்தவள் ஆகையாலே தாயார் உகக்குமா போலே பொய்யே உகந்து –
யசோதைப் பிராட்டி உகக்குமா போலே உகந்து –
உள்ளே முனிவு கிடக்க -உகப்பை மெய்யாக பாவித்த படி –
மெய்யாகா விடில் முலை சுரவாதே-நெஞ்சு இல்லையாகில் இல்லையே –

உன்னை வாங்கி –
யசோதைப் பிராட்டி சநேஹத்தோடே தூக்கி எடுக்குமா போலே -உறக்கத்திலே தூக்கி எடுத்து –
அவள் பரிவாலே ஒசழக்காக எடுக்குமா போலே எடுத்து –

ஒளி நிறம் கொள் கொங்கை-
யசோதைப் பிராட்டி யுடைய முலை போலே பாலாலே விம்மி உஜ்வலமாகா நின்ற முலைகளை –
முலைப்பால் நெறித்து அத்தாலே புகர் பெற்றபடி –

அகம் குளிர உண் என்றாள்-
தாய்மார் ஆனவர்கள் எடுப்பதற்கு முன்பே பிள்ளைகளுடைய ஸ்ரமம் ஆறும்படி -தந்தாமுடைய உகப்பு தோற்ற –
வயிறு நிறைய உண் என்று சொல்லுவான சில சொற்கள் உண்டு -அவற்றைச் சொன்னாள்-
உண்டு அல்லது நிற்க ஒண்ணாத படி ஹ்ருதயம் குளிரும்படிக்கு ஈடாகச் சொன்னாள் –
முலை யுண்ண வேண்டாதே பேச்சிலே வயிறு நிறையும்படி

ஆவி-
அவளுடைய பிராணனை

நீயும் உகந்து முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் –
நீயும் உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
அவள் பொய்யே யுகந்து முடிக்க நினைத்தால் போலே
நீயும் பொய்யே உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
இவனும் முனிவு தெரியாதபடி உகந்தபடி
அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்-
இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்

முனிந்து யுண்கை யாகிறது
அகாலத்திலே முலை கொடுத்தால் பிள்ளைகள் சீறுவர்கள் ஆய்த்து-
நம்முடைய பரமபக்தியும் பிரபத்தியும் எல்லாம் நிரூபித்தால் பூதனையுடைய உகப்பு போலே பொய்யாய் இருக்கும் –

அலை பண்பா லானமையால் அன்று—
அவள் அப்படி முதல் அழியக் கார்யம் பார்த்த அன்று நீ இப்படிச் செய்தது –
நீ அலைத்த பண்பை யுடையை ஆகையாலே இறே-
மிக்க நீர்மையை யுடையை ஆகையாலே இறே –
மிக்க குணத்தை யுடையை ஆகையாலே இறே –

அலை பண்பால் –
பெரும் குண சமுத்ரம் ஆகையால் –
உனக்கு ரஷிக்க மித்ர பாவம் அமைந்து இருக்கச் செய்தே -பூதனை தன்னை முடித்து –
ஜகத்துக்கு சேஷியான யுன்னை யுண்டாக்கித் தந்தது -நீ குணாதிகனாகை இறே
அவளை முடித்து உன்னைத் தந்தது ஆஸ்ரிதர் பக்கல் உனக்கு உண்டான ஓரம் இறே என்னுதல்-
தங்களை வாழ்விக்கைக்காக இறே என்னுதல்

அங்கன் அன்றிக்கே
அலை பண்பால் –
அழிந்த  நீர்மையை யுடையளாய் என்று அவள் பக்கலிலே பொகடவுமாம்

உகந்து உன்னை வாங்கி ஓளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர
உண் என்றாள்  ஆனமையால்
அன்று நீயும் உகந்து முலை யுண்பாய் போல் முனிந்து
ஆவி யுண்டாய் அலை பண்பால் –
என்று அந்வயம்-

————————————————————————–

வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் –
இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை-
பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி-
தனக்கு அஞ்சுகை தவிர்ந்து -அத்தலைக்கு அஞ்சினபடி –

உனக்கு இரங்கி-
பரிவாலே வயிறு பிடித்த படி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு –
தளராதே கால் தரையிலே பாவும்படி நின்று முலை தந்த இந்த ஸ்வ பாவத்துக்கு
மோஹிக்க வேண்டும் தசையிலே தரித்து நின்று -ரஷை பார்த்த படி

அன்று வரன் முறையால் நீ  யளந்த –
அன்று வரிஷ்டமான க்ரமத்தாலே -ஸ்வா பாவிகமான ஸ்வாமி த்வ ப்ராப்தியாலே நீ அளந்து கொண்ட –
பெற்ற தாயான முறையாலே ஜகத்துக்கு முலை கொடுத்த படி –
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து அளந்தாய் -திருவாய் -3-1-10- இத்யாதி வத்

மா கடல் ஞாலம்-
பெரிய கடல் சூழ்ந்த பூமியானது –

பெரு முறையால் எய்துமோ பேர்த்து–
பெருமைக்கு ஒப்பாக முன்னிட்டால் போருமோ -என்கிறார் –
அதுவும் பெரிய செயல் –
இதுவும் பெரிய செயல்
ஆனாலும் அந்த ஸ்வ பாவத்துக்கு
இது மறித்துப் பார்க்கும் போதுபெருமைக்கு ஒப்பாகப் போருமோ –

இதில் இது பெரிது என்று ஒன்றுக்கு ஓன்று பெருக்கினால் பூமியை அளந்தது  இந் நீர்மைக்கு ஒக்குமோ -என்கிறார் –
பின்னைச் செய்த செயல் விஞ்சி இருக்கும் இறே-

பேர்த்து–பெரு முறையால் எய்துமோ –
அவளுடைய ஸ்வ பாவத்துக்கு நீ பெரிதாகச் செய்த செயல் தெரியட்டும் ஒப்பன்று என்கிறது –

பேர்த்து –
பேர்த்தால் -எண்ணினால் -என்னவுமாம் –

————————————————————————–

ஆக -இருந்தபடி இதுவாகையால்
இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது –
அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை
இனி ஒரு காலமும் வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–போக்கி யருள வேணும்.

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய்-
பிள்ளையான தன்மையில் குறைவற்று இருக்கச் செய்தே
ஒன்றால் சலிப்பிக்க அரிதான பெரிய சகடத்தை கட்டழியத் தள்ளிப் பொகட்டாய் –

மா சகடம் –
அது இவன் அருகில் வரில் என்பட கடவோம்

மண்ணிரந்து காத்தனை  பல்லுயிரும்-
உன் உடைமையைப் பறித்துக் கொள்ள இந்த்ரனுக்காக அர்த்தித்வத்தில் குறையாதே நின்று பெற்று
உன் திருவடிகளாலே எல்லார் தலையிலும் ஸ்பர்சித்து அளந்து கொண்டு
சேதன வர்க்கத்தை அடைய நோக்கி உஜ்ஜீவிப்பித்தாய் –

காவலனே –
இங்கனே செய்ய வேண்டுகைக்கு அடி என் என்னில் -ரஷகன் ஆகையாலே
ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே
ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
ஆனால் நீர் இவை கொண்டு கொள்ளப் புகுகிற கார்யம் என் என்னில்  –

நின்னுள்ளி நின்றமையால்-
இப்படிப்பட்ட ஸ்வ பாவத்தை யுடையனான உன் பக்கலிலே வைக்கப் பட்ட
அனுசந்தானத்தை யுடையேன் ஆகையாலே –

ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை ஸ்துதிக்கிற வாக் இந்த்ரியத்தையும்
உன் பக்கலிலேயான காயிக வியாபாரத்தையும் -யுடையேன் ஆனேன் –

உடையேன் என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான ஏந்திய வா வுடையேன் –
தனத்துத் தானே யேத்துகைக்கு ஈடான நாவை யுடையேன் ஆனேன்

பூ வுடையேன் – என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான பூவையும் யுடையேன் ஆனேன் –

நின்னுள்ளி நின்றமையால் -ஏந்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே
ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக  உடையேன் ஆனேன் –

ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
ஆனாலும் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –

கா அடியேன் பட்ட கடை –
உனக்கு அடியேனான நான் அப்ராப்த விஷயங்களான இதர தேவதைகளின் காலிலே விழுந்து
தாழ்வு செய்கையால் வந்த தண்மை
இனி முன்னம் வாராதபடி தேவர் பார்த்து அருள வேணும்

அடியேன் பட்ட கடை கா –
அடிமை யாகிற பெருமையை யுடைய நான்

தலையான நான்
கடையான அடிமைப்பட்ட எளிமை இனி வாராதபடி பார்த்து அருள வேணும்

அடியேன் பட்ட கடை –
அனந்யார்ஹ வஸ்து பட்ட பாடே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

February 19, 2015

அவதாரிகை
ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்

பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
த்ரௌபதி யினுடையவும்–
சிந்தயந்தி யினுடையவும் –

தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
சிந்தயன்தீ ஜகத் ஸூ திம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று –

இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம் –
அதாவது
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

அப்படியே இறே-
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -பார -சபா -90-42-என்றதும்

இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
அதினாலே பரிபூதையான தான் –
அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –

———–

த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

சங்க சக்ர கதா பாணே  –
கைப்படியில்லாதனையோ நான் கை கூப்பிற்று –

த்வாரகா நிலய-
ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –

அச்யுத –
தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
ந ச்யவந்தே யஸ்மாதி த்யச்யுத –

கோவிந்த-
தன் ஆ ஸ்ரீ தரை நோவு பட  விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –

புண்டரீகாஷ-
கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
கண் இரக்கம் –

ரஷமாம் –
ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –

சரணா கதாம் –
ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –

1-சங்க சக்ர கதா பாணே –
நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –

2-சங்க சக்ர கதா பாணே —
சுவர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை -திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத  ரஷணத்துக்கு அன்றோ –

சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தச்யாக்ர ஹச்தம் ஸ்வயம் ஆருரோஹா -பார -பீஷ்ம -59-58-என்று

நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
நான் கை விரிப்பது என் –

நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ

3- சங்க சக்ர கதா பாணே –
நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
அங்கனம் தொட்ட படி இறே

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-

அப்படியே கூராராழி  வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து

பின்பு இவளுக்காக இறே –
ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயு நா -பார -த்ரோ -73-58-என்றும்

ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்

கழல் மன்னர் கலங்கச் சங்கம்  வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்

ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெருயால்வார் -1-4-8- என்று  செய்து அருளியதும்

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி

4- சங்க சக்ர கதா பாணே-
அருளார்  திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்-திரு விருத்தம் -33-

5- சங்க சக்ர கதா பாணே –
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் -திருவாய் -2-3-10- என்றபடி
இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –

இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்

1-த்வாரகா நிலயாச்யுத-
நீ -வண்டுவராபதி மன்னாய் -திருவாய் -5-3-6-
நழு வதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –

2-த்வாரகா நிலயாச்யுத-
பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ

அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –

பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறிதுவரை எல்லாரும் சூழச் சிங்கா சணத்திலே -பெரியாழ்வார் -4-1-6- இருக்கும் இடம் அன்றோ –

ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
ஜக்ராஹவிதிவத்  பாணீன் ப்ருதக்கே ஹீஷூ தர்மத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-

ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –

3- த்வாரகா நிலயாச்யுத –
நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
அவர் ஒருநிலை நின்றது என்பரேல்-
திரைபொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன்மைத்துனன் மார்க்காய்
அரசினையவிய அரசினையருளும் அரி புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –

4-த்வாரகா நிக்லயாச்யுத
ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்

5- அச்யுத –
என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
அச்யுதாஹம் தவாச்மி-என்கிறாள்

மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –

அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தாமோ
நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது

6-சங்க சக்ர கதா பாணே த்வ்ரகா  நிலயாச்யுத –
தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
இவளும் இப்படியே பேசுகிறாள்

ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –

பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் செய்வது என்

பின்பு -ரதம் ச்தாபாய மே அச்யுத -ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
நீ கை கழலா நேமியானாய் இருக்க
என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
பொற் சக்கரத் தரியினை யச்ச்தனைப் பற்றுகிறாள் –

1-கோவிந்த-
இனி அரை குலையத் தலை குலைய அலமாக்கும்படியான முடி சூடின பேரைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி -பார -உத் -47-39-என்று
அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர்நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –

2- கோவிந்த –
நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி

3- கோவிந்த –
நீ ஆஸ்ரீத ரஷணத்தில் தீஷித்து இருக்க
க்ருஷ்ணாஸ்ரய-பார த்ரோண -183-24-என்று இருக்கிற என்னை
கிருபை பண்ணாது ஒழிவது என்

நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று
நாமைதத்தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று
சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்மசதை க்ருதம்-பாபராசிம் தஹத்யா ஸூ தூலராசி மிவா நல -என்று
சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –

4- கோவிந்த –
நான் குழல் பேணாமல் இருக்க –
நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –

5- கோவிந்த
நீ முடி சூடிவித்திருக்க நான் –
சாஹம் கேசக்ரகாம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
என்று சொல்லி –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
குண ஜ்ஞானத்தாலே நிர்ப்பரை யானாள்-
பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்

6- கோவிந்த –
ஜகத்திதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –

7- த்வாரகா நிலய கோவிந்த –
துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்

8- கோவிந்த –
கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்

9- கோவிந்த –
என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
கண்ணாலே நோக்க அமையாதோ
கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது

விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோ நு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-

1- புண்டரீகாஷ-
பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்

2- புண்டரீகாஷ-
என்னுடைய ஆபத்துக்கு
அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
நம் அன்றோ அபேஷிதம்-

3- கோவிந்த புண்டரீகாஷ
க்ருஷ்ணம் கமல பத்ராஷம் -என்னக் கடவது இறே-
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி -பார -உத் -91-44
என்ற அனந்தரம்
பீஷ்மத் ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –

4-புண்டரீகாஷ
நான் கண் கலங்கி இருக்க நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-

5-புண்டரீகாஷ –
நீ கண் யுடையவனாய் இருக்க நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –

6- புண்டரீகாஷ –
நான் கண் சிவந்து இருக்க
நீ உன் முகத்தன கண்கள் அல்லவே -நாச் -2-5-இருப்பது என் –

7-புண்டரீகாஷ –
அவன் கண் செம்பளித்து இருந்தான்
பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ச்வஸ்தா நமுத்தமம் -பார மௌசல-9-34-இத்யாதி
அனுகூல ரஷண்த்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் பரிகரம் ஒன்றே யாயிற்று –

8- புண்டரீகாஷ –
தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்

9-புண்டரீகாஷ -அச்யுத –
தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்

10- அச்யுத புண்டரீகாஷ –
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –

11- புண்டரீகாஷா –
கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7- என்கிற
சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி  –

12-புண்டரீகாஷ-
ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே -என்று
இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி

13-புண்டரீகாஷ –
ச  ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன -பார -வன -192-51-என்று
இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது

14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –

15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ -திருவாய்  -3-4-3-என்கிறாள்

16-புண்டரீகாஷ –
பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம் -ஜிதந்தே -8-என்கிறாள்

ரஷமாம் —
1-ரஷ அபேஷை யுடைய என்னை –
2- அநாதையான என்னை –
3-அபலையான என்னை –
4-ஆ ஸ்ரீ தையான -பலமற்ற -என்னை
4-அநந்ய சரணையான என்னை

ரஷமாம் –
ரஷிக்கை யாவது
விரோதியைப் போக்குகையும் –
அபேஷிதங்களைக் கொடுக்கையும் –

அலமன்னு மடல்  சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –பெரிய திரு -2-4-3-

1-சரணாகதாம்-
சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்

ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9-என்றபடி –
அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்

2-சரணாகதாம் –
சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்

தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்

சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே

காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்

3-சரணாகதாம் –
ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
அஞ்சேல் என்னாது இருப்பது என்-
மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –

சங்க  சக்ர கதா பாணே –சரணாகதாம் –
1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
2-ஆசன்னன் ஆவது –
3-ஆ ஸ்ரீ தரை நழுவ விடாடதவனாவது –
4-ஆ ஸ்ரீதரஷணத்திலேதீஷித்து இருக்குமவனது
5-கண் யுடையவனாவது
6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
ஆகையாலே ரஷிக்கக் குறை என் –

சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் சொல்லி

த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் சொல்லி

ரஷமாம் -என்கையாலே
அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி

சரணாகதம் -என்கையாலே
உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

இத்தால்
லஜ்ஜா புரச் சரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
சித்த உபாய ச்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-என்றது ஆயிற்று –

—————————————————————————————–

ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம  நாதாம் கிம் உபேஷஸே
கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
ஹே நாத  ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
கௌரவார்ணவ மக்நாம்  மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம் -பார -சபா -90-44/45/46/47-

மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –

வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
அதில் முதல் தடவை வந்த போது
நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா  ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத்  ப்ராஹசத் ததா -பார -ஆர -12-128/129–
யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்

உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-

மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்

சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பார ஆர -192-56–என்ன

ஏவமுக்தாச்ச  தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -பார -ஆர -192-57- என்று சரணம் அடைய

ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி -பார -ஆர -192-58-என்று

திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும்  தடை நீங்க –
சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-

இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-

நம் பேர் தன கார்யம் செய்தது இத்தனை போக்கி
நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இ றே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-

முமுஷூப்படி -அவன் தூரஸ்தன்  ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி  வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
உபாய புத்தி யுடன்  திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம்  முதலியவற்றைக் கருதியே
திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –

திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –

கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
இந்த உபாயாந்தர   சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
அதனால் தோஷமாக கொள்ள வில்லை-

வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –

குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
புண்டரீகாஷா -இக்கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
பின்பே  கலங்கினாள்-
நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
இதன் பிரபாவம் கிம்பு நர்ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா ஸ்ரீ ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

February 18, 2015

அவதாரிகை –
அனுபாவ்ய வஸ்து  லாபத்துக்கு நிரபாய உபாயமான
1-ஆஸ்ரயண காலத்தையும் –
2-ஆஸ்ரயண அதிகாரியையும்
3-ஆஸ்ரயண பிரகாரத்தையும்
4-ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தையும்
5-ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது இந்த ஸ்லோக த்வயம் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்
ஸூஸ்வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ஸ்லேஷ்மம் என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச  அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம்  ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ
தத் -பிற் காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய்  –
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத் பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி  -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி தாது சாம்யே ஸ்திதே-என்று -ஆஸ்ரயண காலத்தை -சொல்லுகிறது

யோ நர -என்று -ஆஸ்ரயண அதிகாரியைச் சொல்லுகிறது

ஸ்மர்த்தா -என்று -ஆஸ்ரயண பிரகாரத்தைச் சொல்லுகிறது –

விஸ்வ ரூபஞ்ச மா மஜம்-என்று -ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தைச் சொல்லுகிறது

ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-
அஹம் ஸ்மராமி மத்பக்தம்  நயாமி பரமாம் கதிம் -என்று -ஆஸ்ரயண பலத்தைச் சொல்லுகிறது –

——-

ஸ்திதே மனஸி-மனஸி ஸ்திதே -மனம் நிலை நிற்கையில் –
மனஸ்ஸானது எது –
அதுக்கு அவ ஸ்தானம்   ஆவது எது என்னில் –

மனஸ் ஆனது
அநாதி கால பாப  வாசனை யாகிற மஹா வாதத்தாலே -புயல் காற்றாலே -ப்ரேரிதமாய்-
தனக்கு ஆவாஸ பூமியான ஹிருதய குகையிலே ஷண காலம் தங்கப் பெறாதே
கண்ட விஷயங்களிலே மண்டி –
திறந்து கிடக்கும் வாசல் தோறும் புகுந்து புறப்படும் நாய் போலே
நினைத்த இடம் எல்லாம் புக்குத் திரியாமல்  நிர்விஷயமாகை –

ஆக
இதில் மனஸ் ஸி னுடைய விஷய அதீனமான
அந்ய பரத்தை தவிர்ந்தபடி சொல்லுகிறது-

அநந்தரம்
சரீரா லஸ்ய நிபந்தனமான -வியாதி காரணமாக –
மனஸ் ஸி னுடைய அந்ய  பரதா சாந்திக்கு ஹேது  சொல்லுகிறது –

ஸூஸ்வதே சரீரே சதி -சரீரே ஸூஸ்வஸதே சதி -சரீரம் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கையில் -என்று
சரீரம் ஸ்வஸ்தமாய் அழகிதான அளவிலே  வ்யாதீநாமாகரமாய் இறே சரீரம் இருப்பது
அந்த வியாதிகளில் ஓன்று தலை  எடுத்ததாகில்
தஜ் ஜநிதமான துக்க அநு பாவத்திலே உப ஷீணம் ஆகையாலே
பகவத் விஷயத்துக்கு யோக்யம் ஆக மாட்டாது இறே நெஞ்சு
ஆகையாலே சரீரா லஸ்ய நிவ்ருத்தி மனஸ் ஸ்வாஸ் யத்துக்கு ஹேது —

அந்த சரீரா லஸ்ய நிவ்ருத்திக்கு ஹேது சொல்லுகிறது –
தாது சாமே ஸ்திதே -என்று

தாதுக்கள் ஆவன –
வாத பித்த ஸ்லேஷ்மங்கள் -அந்த தாதுக்களுக்கு சாம்யம் உண்டாகையாவது –
ஒன்றுக்கு ஓன்று ந்யூ நாதிரேகம் அற்று ஒத்திருக்கை –

அந்த தாதுக்களினுடைய ந்யூ நாதி ரேகங்கள் வியாதி ஹேது
மூன்றினுடைய ப்ரகொபம் மரணம் இறே

ஆகையால் அந்த வியாதி ஹேதுக்கள் தன்னில் ஒத்தவாறே
அவற்றினுடைய நிம் நோன்னதத்தாலே வரும் வியாதி உண்டாகாது –
வியாதி உண்டாகாமையாலே சரீரம் ஸ்வஸ்தமாம்
சரீரஸ்வாஸ்த்யத்தாலே மனஸ் ஸ்வாஸ்த்யம் பிறக்கும் –
பின்பு மனஸ்ஸூ ஸ்மரண ஷமமாம் –

ஆக
கீழ் இத்தனையாலும் ஸ்மரணா காந்தமான கால விசேஷத்தைச்  சொல்லிற்று –

———

அநந்தரம்-
ஸ்மரணாதி  காரியைச் சொல்லுகிறது –
யோ நர -என்று

நர சப்தம் -ம நுஷ்ய வாஸீ
இதிலே தேவதைகளையும் உப லஷிக்கிறது

இத்தால்
பகவத் சமாஸ்ரயணத்துக்குக் கரண பாடவமே அபேஷிதம் என்றதாயிற்று
வஷ்யமாணமான ஸ்மரணத்துக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் அப்ரயோஜகங்கள் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்-
வ்ருத்த மாகவுமாம் —
கரண பாடவமும்
ருசியுமே வேண்டுவது-

ஸ்மர்த்தா-
ஸ்மரணம் ஆவது ஒரு ஜ்ஞான விசேஷம் –

மேல் –
விஸ்வ ரூபம் -என்று சேஷித்வத்தையும்
நயாமி -என்று உபாயத்வத்தையும்
பரமாம் கதிம் -என்று உபேயத்வத்தையும் சொல்லுகையாலே
இம் மூன்றும் இந்த ஸ்மரணத்துக்கு விஷயமாகக் கடவது
ஆக இத்தால் ஆஸ்ரயண பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

———-

அநந்தரம்
ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்லுகிறது -விஸ்வ ரூபம் -என்கிற பதம் –
விஸ்வத்தையும் தனக்கு ரூபமாக உடையவன் விஸ்வ ரூபி யாகிறான்
இவன் விஸ்வ சரீரியாய் இருக்குமாகில்

உபய கதமான தோஷமும் ஸ்பர்சியாதோ-என்னச் சொல்லுகிறது -அஜம்-
ஜனன மரணாதி ஸூந்யம்-
இந்த ஜனனம் சரீர தர்மமான ஷட் பாவ விகாரங்களுக்கும்
ஆத்ம தர்மமான அஜ்ஞான துக்காதி களுக்கும் உப லஷணம்-

ச-
இச் சேதனனுடைய ஹிதாஹித ஜ்ஞான விசேஷத்தையும்
ஜ்ஞான அநு குணமாக கார்யம் தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தியையும் தயையும் கணிசிக்கிறது –

மாம் –
என்னை என்றபடி
அசாதாரண விக்ரஹத்தை அஸ்ம தாதிகள் கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு நிற்கிற சௌலப்யத்தையும்
மானமிலாப் பன்றி என்று அத்யந்த நிஹீனமான வராஹ ஜன்மத்திலே
அத்யாபி நிவிஷ்டனாம்படியான சௌசீல்யாதி அதிசயத்தையும் மூதலித்துக் காட்டின படி –

———

அநந்தரம் -தத -இத்யாதி ஸ்லோகத்தாலே –
ஆஸ்ரயித்தவனுக்கு ஈஸ்வரன் உண்டாக்கும் பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது

தத -பின்பு என்றபடி –
இத்தால் ஸ்ம்ருதி யினுடைய நைரந்தர்யத்தைக் கழிக்கிறது-

தம் –
ஸ்மர்த்தா -என்கிறபடியே –
என்னையே உபாய உபேயமாக அத்யவசித்த அதிகாரியை –

இவனுக்கு பலம் கொடுப்பது எப்போதோ என்னில் -ம்ரியமாணம் –
மரண உன்முகமான சமயத்திலே
து சப்தம் -சாதகனில் காட்டில் இவ்வதிகாரிக்கு வஷ்யமாணமான விசேஷத்தை த்யோதிப்பிக்கிறது

அந்த விசேஷம் என் என்னில்
காஷ்ட பாஷான சந்நிபம் –
ஜ்ஞான சம்சர்க்க ஸூ ந்யமான காஷ்ட பாஷாணங்களோடு ஒத்து இருக்க அமையும் –
சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி கொண்டு உஜ்ஜீவிக்க வேணும் என்று சொல்லா நிற்க
அந்திம ஸ்ம்ருதி ஒழிய உஜ்ஜீவிப்பிக்கக் கடவன் என்கை  சாஸ்திர விருத்தம் அன்றோ என்னில்

அதுவும் அப்படியே –
இந்த அம்சம் என்னது -என்கிறார் -அஹம் ஸ்மராமி -என்று
அபேஷித ஸ்மரணத்துக்குக் கர்த்தா நானே
க்ருஷ்யம்சம் கர்ஷகனுக்கு அன்றோ

ஸ்மார்த்தா –
இவன் ஒரு கால் ஸ்மரித்தான் ஆகில் -அநவரத பாவனை பண்ணக் கடவன்-

நீ இப்படி மேல் விழுந்து நினைக்கைக்கு இவன் பக்கல் தன்னேற்றம் என் என்னில் -மத்பக்தம் –
எனக்கு நல்லவன் அன்றோ
மத் பக்தம் -என்று ப்ரபன்ன அதிகாரியைச் சொல்லுகிறது –

ஆக என் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியை உடையவன் ஆகையாலே
அவன் காஷ்ட பாஷாண சந்நிபனே யாகிலும் நான் ஸ்மரிப்பன்-

இங்குச் சொல்லுகிற ஸ்மரணம் ஆவது –
இவன் தன கார்யத்தில் கை வாங்கி நம் பக்கலிலே தன சர்வ பாரங்களையும் சந்யசித்தான்
ஆன பின்பு இவன் கார்யம் அடைய நமக்கே பரம்
இவன் இன்னம் ஒரு கால் உத் க்ராந்தி க்லேசம் அனுபவித்தல்
யமன் முகத்திலே விழித்தல் கர்ப்ப குஹையிலே கிடத்தல் செய்யாதே
இவன் நித்ய கைங்கர்யம் பண்ணி நித்ய ஆனந்தியாக வேணும் என்கிற சங்கல்பம் –

நயாமி பரமாம் கதிம் -என்றது –
பரம ப்ராப்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –

பரமாம் கதிம் நயாமி –
பரமையான கதியைக் கொண்டு ஸ்வீகரிப்பிக்கக் கடவன்

கதியாவது –
கம்யத் இதி கதி -என்கிற வ்யுத்பத்தியிலே யாய் -ப்ராப்யத்தைச் சொல்லுகிறது

அதில் -பரம கதி யாவது –
அதுக்கு அவ்வருகு இல்லாத ப்ராப்யம் –
அதாவது -பரம புருஷார்த்த லஷண மோஷம் –

நாட்டில் புருஷார்த்தமாக வேண்டுவது –
தர்மார்த்த காம மோஷம் -இவை புருஷார்த்தமாகக் காட்டாமையாலே அத்தை வ்யாவர்த்தித்து –
ஸ்வயம் புருஷார்த்தமாய் -ஸ்வ ரசமாய் -நிரதிசயமான பகவத் கைங்கர்யமான பரம ப்ராப்யத்தைச் சொல்லுகிறது –

நயாமி –
அந்தப் ப்ராப்யத்தைப் ப்ராபிக்கும் இடத்தில்-
ஆதி வாஹிகர்கள் கையிலே காட்டிக் கொடேன் –
அத்த வாளத் தலையாலே முட்டாக்கு இட்டு நானே கொண்டு போகக் கடவேன் –
லங்கா ஜன பதத்தில் இருந்த பிராட்டியைப் புஷ்பத்தின் மேலே தானே எடுத்து வைத்துக் கொண்டு
போனால் போலே காணும் இவ் வாத்மாவைக் கொண்டு போம்படியும் –

—————————————————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

February 18, 2015

அவதாரிகை –
சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –

ஆதௌ –
பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் -என்கிறார் –

பிரமாணம்-
சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
அசம்யக்த்வ ஹேது ப்ரம விப்ர லம்பாதி காரண தோஷமும்
நேதம் இத்யாதி- பாதகட்ரத்யமும் இறே  –
காரணா நபேஷமுமாய் அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –

இப்படி பிரமாணம் ஆகிறது –
இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –

வேதா  –
காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
வாசா விரூப நித்யயா-என்றும்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்றும் சொல்லுகிறபடியே
அநாதி நித்தா விச்சின்ன சம்பிரதாயமாய் –
நித்ய நிர்த்தோஷமாய்-
ப்ரம  விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான  வேதங்கள் –

வேதா –
வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது ஏன்
யோ புத்த்யதே ஸ பரான் போதயாதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது

நேதி நேதி -என்றும்
க இத்தா வேத -என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
பிறரை அறிவிக்கும் படி என் என்னில்

ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
ஸ்வரூ பேண குணைச்ச யத்ரா நவதி காதிசயம் -என்றும்
தவா நந்த குணஸ் யாபி -என்றும்
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண  குணா கண -என்றும் சொல்லுகிறபடியே
வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே

அபரிச்சின்னம்  என்று அறிகை இறே
அபரிச் சின்னத்தைப்  பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் குறை இல்லை –
வேத புருஷன் தானே -வேதாஹா மேதம் புருஷம் -என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
அறிந்தபடி என் -என்னில்
மஹாந்தம் -என்று அபரிச்சிண்ணன் என்று அறிந்தேன் என்றான் இறே

வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜ நா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே

இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இ றே

நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
நேதி நேதி -என்றும் –
அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது அன்றே

இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
வேதா –
ரூசோ யஜூம்ஷி சாமா நி ததை வாதர்வணா நி ஸ -என்கிறபடியே
ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
அநந்தா வை வேதா -என்கிறபடியே
காணவ மாத் யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –

யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
ஏக சந்திக்தே காரே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
ஜ்ஞாநாத சந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
பிரமாணாந்தர விஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது

வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
வ்யாப்தி சித்தமாய்
திருஷ்டாந்த   கதமான கமவச்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிர சந்கிப்பதும் செய்யும்
இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
ந த்வத் சமோ அச்த்யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே  அப்ய பிரதிமப்ரபாவ -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர் த்தத்யமும் பிரசங்கிக்கும்
ஆகையால் -இவ்விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –

ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
சுருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
ப்ருதகுபாத்தமாய் -சஹபடிதமான ஸ்ம்ருதி யாதி   க்ருத்யம் என்ன –
வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தச்யமும் –
இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –
மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –

ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று
பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –

இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –

இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரண்மும்
இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –

அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
புராணம் -பரத்வ ஏக பரம் –
நியாயை என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷண மே இருக்கிறது

இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
வாக்யார்த்த விசாரம் என்ன –
வாக்யாங்கமான பத வர்ண ஸ்வ ராதி நிர்ணயம் என்ன –
இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –

ஆக இத்தால்
புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிச்ரிதா –வேதா ஸ்தா நாநி  வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
சீஷாயாம் வர்ண சிஷா பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சொப்யாம் சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
கல்ப அனுஷ்டானம் உக்தம் ஹ்புசிதகமிதயோர் நியாய மீமாம்சையோ ச்யாதர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா – என்றும் சொல்லுகிறபடியே
அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது
வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-

ஸேதிஹாசை  நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதி ருபகுருதே -என்று
பிபெத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப்ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும்  கபளீகரிக்கைக்கு ஈடான
அளவில்லாத மந்தமதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –

ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை  அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –

இதிஹாசம் ஆவது –
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்கிறபடி
கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
அவ்வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்ம தாதடே -சாரச்வதாய தேநாபி மம சாரச்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம்  -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –

புராணம் ஆவது –
புராபி நவ -என்றாய்
அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –

ந்யாயம் ஆவது
பூர்வபஷ சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ்கர்ஷித்துக் கொடுக்கை –

ஆக இப்படி
சாங்கமாயும் சசிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
பிரமாணம் என்றே சொல்லுகிறது –

அது செய்யும்படி என் –
அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம்  நிர்வபேத்-என்றும்
வாயவ்யம் ச்வேதமாலபேத பூதிகாம -என்றும்
ஐந்தரம் சாரும் நிர்வபேத் ப ஸூகாம -என்றும் இத்யாதிகளாலே
அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –

த்வதர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
அவ்விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -என்று
அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்

இஷ்டா பூர்த்தம்  பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவநஸய நாபி -என்றும்
யத் கரோஷி யத் அஸ் நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹூதாச நான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
ஏநமேகே வதந்த்யக்நிம் மனுமந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
சமாக்யைக்கு பாதகமான சுருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
தத் தத் பிரதேச அநுகுணமான  அவயவ சக்தியாலே யாதல்
அபர்யவசாநவ்ருத்தியாலே யாதல்
அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –

த்வதர்ச்சாவிதிமுபரி –
உம்முடைய ஆராதன விதியிலே –
யஜ்ஞேன தா நேந தபஸா அநாசகேந -என்றும்
வர்ணாச்ரமா சாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுராராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
தேவருடைய சமாராத நத்தைச் சொல்லுகிறது
நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –

நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை இதோ விமுகராக்கி நல் வழியே போக்குகைக்கு
தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –

ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
இதுக்கு க்ருத்யம்-
ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –

முதல் பழுவிலே தவறி யெலாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
அனர்த்தகரமான சரீரத்தை  விட்டு மோஷத்தைப் பெறு-என்று சொன்னால்
அப சர்ப்பேத சௌகதா ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே

அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ச்யேன விதியை உபதேசித்து
அது பலித்து -அந்த வாக்யத்திலே விசுவாசம் பிறந்தவாறே
போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
அது பலித்து தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான
ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்னபத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு

அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
ப்லவா ஹ்யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -என்றும்
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
ஸ்வர்க்கே அபிபாத பீ தஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
ஆப்ரஹம புவ நாலலோகோ  புநரா வர்த்தி ந -என்றும்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பரமாத்மன -என்றும் உபதேசித்து –

இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெல்ல இவனை இதிலே மூட்டுகைக்காக
முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –

அழகியது -பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
உத்தர பாகத்துக்கு க்ருத்யம்   என் என்னில்

ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நைஸ் த்வத் பதாப்தௌ-
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி -என்றும்
கஷாயே கர்மபி பாகவே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
அவித்யயா மருத்யும்
தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண  பாபாநாம் கிருஷ்ணே  பக்தி பிரஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே
பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதாக ஷயனானவனுக்கு
பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது

இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -என்றும்
வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதொர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்ய மித்யுக்தம் பவதி -என்றும்
அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-

ஊர்த்வோ பாக –
ஸ்ருதி சிரஸி விதீப்தே -என்கிறபடியே
சத்வாரமாக பகவத் ப்ரதிபாத நம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
இவ்வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –

இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –

த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நை —
ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –

த்வதீஹா –
ஜகத் ரஷண உபயோகியாக
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
பரத்வ ஸூசகமாயும்
சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும் சொல்லுகிறது –

சேஷ்டா தஸ்யா ப்ரேமே யஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித்யுபா தார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –

இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
குண –
குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
ச்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்  என்ன
பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –

இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
அபரிமித குண கனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
இருப்பிடமாதல் –
ஒரு போகமாதல்
பரிகரமாதல் இல்லையோ -என்னில்

விபவ –
சர்வஸ்ய வசீ சர்வசஸ்யேசான-என்றும்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
ஹிரண்மயே பரெ லோகே விரசம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவி சதே தேவ ஏக -என்றும்
திவி திஷ்டத் ஏக-என்றும்
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதி என்ன –
லீலோபகரணமான போக பூமி என்ன
ஆக
உபய விபூதியையும் உடையன் -என்கிறது-

குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –

பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
அன்றியிலே
பரிஜ்ஞாபநம் ஆகிறது –
விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்

இவை அறிவிக்கிற  இத்தால் பிரயோஜனம் என் என்னில்
த்வத் பதாப்தௌ-
ஷேத்ரஜ்ஞஸ் யேஸ்வரஜ் ஞாநாத்  விசுத்தி பரமா மதா-என்றும்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-

ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
ஆத்மா நாம நுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காமசரோ பவதி -என்றும்
இக்குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
சர்வஸ்ய   வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் வை ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே
இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –

அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
மனசா து வி ஸூ ததே ந -என்றும்
ஹ்ருதா மநிஷா  மநசாபி க்லுப்த-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
சவிபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –

த்வதாப்தௌ -எஎன்னா தே –
த்வத் பதாப்தௌ -என்கிறது
விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம் –

ஆக
இப்படியால் -ஊர்த்வ பாகமானது
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது

ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
உபாசனம் கண்டிலோமே -என்னில்
உபாசனம் ஆகிறது
த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –

ஆக -இத்தால்-
நதா ஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
வேதே ராமாயனே புணயே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும்சொல்லுகிறபடியே
சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –

இவ்வர்த்தத்தை –
வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –
வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –

சர்வைர் வேதை –
அதீயமானமாயும் -விபர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்

அஹமிதி –
சர்வ அந்தர்யாமியாய் –
சர்வ சமாராத்யனாய்
சர்வ பலப்ரதானவன் -என்கிறார்

ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
ஷத்ரியே யஜேத -என்றும்
ஷத்ரியாதி சப்தங்கள் தஜ்ஜாதி விசிஷ்ட  பிண்டத்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம் மளவிலே பர்வசிக்கக் கடவது -என்கிறார்

வேத்ய
வாசக சப்தமானது வாச்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்

பகவன் –
ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம் -என்கிறார்

ஸ்வேந ச  வ்யாசகர்த்த –
மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ -என்கிறார்

————-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –

வேதா -வேதங்களானவை-

பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –

ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்

ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்

ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட

உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –

பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி

த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்

பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-

ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்

த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –

த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்

பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –

பகவன்-எம்பெருமானே

சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே

ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே

உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன

அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்

த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –

கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்

உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-

இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

————————————————————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

February 17, 2015

அவதாரிகை –
ஸ்ரோதாக்களுக்கு இப்பிரபந்தம் ஆப்த தமம் என்று
இதிலே புபுத்சை பிறக்கைக்காக
விலஷணனான ஆச்சார்யன் பக்கலிலே
புபுத்ஸூவாய்
அபி ஜாதனான சிஷ்யன் அவசரத்திலே பிரச்னம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச –1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்   –
முனிவர் தலைவராய் -காலைக் கடன்களை முடித்தவராய் யுள்ள ஸ்ரீ பராசர மகரிஷியை

மைத்ரேய -ப்ரணிபத் யாபிவாத்ய ச –பரிபப்ரச்ச-
ஸ்ரீ மைத்திரேயர் என்னும்  ரிஷி வணங்கி -அபிவாதனம் செய்து -நன்றாகக் கேட்டார் –

1-பராசரம்-
சஹோவாச வியாச பாராசர்ய -தை ஆர -1-9-என்று
வேதாச்சார்யனான ஸ்ரீ வேத வியாச பகவானுக்கு இவனோட்டை சம்பந்தத்தாலே
ஆப்தி சொல்ல வேண்டும்படி ஸ்ருதியிலே ஆப்தனாக சித்தனானவனை
2- பராசரம் –
வைதிக பஷத்துக்கு சத்ருக்களான பாஹ்ய குத்ருஷ்டிகளை
பிரமாண தர்க்கங்கள் ஆகிற சரங்களாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம் –
அதவா –
3- பராசரம் –
ஆந்தர சத்ருக்களான ராகத் வேஷாதிகளை சம தமாதிகளாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம்-

முநிவரம் –
பரமாத்ம விஷயத்தில்  மனன சீலர் ஆனவர்களில் உத்க்ருஷ்டனானவனை
இத்தால் ஜ்ஞான சம்ருத்தி சொல்லுகிறது –

1-க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்   -என்று
இவ் உபாசனத்துக்கு அங்கமாக சாஸ்திர சோதிதமாய் ஜ்ஞான பூர்வகமான அனுஷ்டானமும் –
அனுஷ்டிதமான சமயத்திலே -2-1-க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்  -என்கையாலே
சத்வோத்தர காலத்திலே என்கை –

இத்தாலே
வசிஷ்டன் அந்ய பரனாய் இருக்க த்ரி சங்கு சென்று கேட்டால் போலே அன்றிக்கே
ஆச்சார்யன் அநந்ய பரனாய் இருக்கிற சமயத்திலே கேட்டான் -என்கை –

பரபஷ பிரதிஷேபம் பண்ணுகிற போது அவசரம் அன்று
உபாசன காலமும் அவசரம் அன்று
ததங்கமான அனுஷ்டான சமயமும் அவசரம் அன்று
ஆகையாலே க்ருத க்ருத்யனாய்த் தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவசரத்தே கேட்டான் என்கை –

3-மைத்ரேய –
யாஜ்ஞ வல்க்ய பகவானை  இடங்களிலே பிரச்னம் பண்ணிப் போரும் ப்ரஹ்ம விதுஷியான மைத்ரி ஸூதனாகையாலே –
அவசரத்திலே பிரச்னம் பண்ணுகை தன்னைத் தோன்றி வந்ததன்று –
தன்னுடைய பிறப்பால் வந்தது -என்கை –
அன்றியிலே
கேகய மித்ரயு பிரளய -பாணிநி ஸூத்ரம் -7-3-2- என்றபடி
இய என்னும் பதம் -நிஷ் பன்னமாகக் கிடக்கிறதாகவுமாம்   –
மித்ரயு -என்பவரின் பிள்ளை என்றும் கொள்ளலாம்-

1-பரிபப்ரச்ச-
ஒரு வார்த்தை சொல்லுகை அபேஷிதமான போது கண்ணுக்கு எட்டாதபடி பின்னே இருக்கவும் கடவது அன்று
கண் படும்படி பார்ச்வத்திலே இருக்கை சிஷ்யனுக்கு பிராப்தம்
அந்த ஸ்தானத்திலே நின்று கேட்டான் -என்கை –
2- பரிபப்ரச்ச –
நினைத்த அர்த்தத்திலே ஆச்சார்யன் உதாரனாம்படி பாடே அத்தைக் கேட்கை-
அதாகிறது
யன்மயம் ச ஜகத் ப்ரஹ்மன்-யதைஸ் சைதச்  சராசரம்
லீ ந மாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-5-என்று
சாமான்யத்தில் பிரச்னமாய்
விஷ்ணோ சகாஸாத் உத்பூதம் -ஜகத் தத்ரைவ ச ஸ்திதம்
ஸ்திதி சம்யம கர்த்தா அசௌ ஜகதோ அஸ்ய ஜகச்ச ஸ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-31-என்று
விசேஷத்திலே உத்தரமாம்படி கேட்டான் -என்கை –
பரிபப்ரச்ச –
அன்றியிலே பரி -என்கிறது சாகல்யா வசனமாய்
ஜ்ஞா தவ்யங்களை யடையக் கேட்டான் என்றாக வுமாம் –

ப்ரணிபத்ய-
பதனம் ஆகிறது -சர்வ அவயவங்களும் தரையிலே பொருந்த விழுகை –
நிபதநமாகிறது -ஆந்தரமான அபிமானமும் பக்னமாய் விழுகை
ப்ரணி பதநாமிகிறது -இது தானே விஹிதம் என்று இருக்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாக இருக்கை –

அபிவாத்ய –
ஸ்வ நாமத்தை ஆவிஷ்கரித்துக் கொண்டு பாதோப சங்க்ரஹனம் பண்ணுகை –

ச —
ஆச்சார்யன் பக்கல் அனுஷ்டிக்கக் கடவ விநயங்களை சமுச்சயிக்கிறது –

———

பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்யாபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம்

————–

ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்’ என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.

ஏறிய பித்தினொடு – மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு – ஸகல லோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும் – க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில் – பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும் – ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;

“என் பெண்கொடி யேறிய பித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக் கட்டிற்று.
உலகில் பித்துக் கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே;
அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன;

பித்து ஏறின நிலைமையிலும் பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை யென்கிறாள்.
பராசர மஹர்ஷி முதலானார் தெளிந்திருந்து என்ன வார்த்தை சொல்லுவார்களோ
அந்தவார்த்தை இவள் சொல்லுகின்றாள் காண்மின்.

பராசரம் முநிவரம் க்ருதபெளர்வாஹ்நிகக்ரியம்இ மைததேய்: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய ச” என்கிறபடியே
வணங்கி வழிபட்டுக் கேள்விகேட்ட மைத்ரேய பகவானுக்கு, நற்றெளிவு கொண்டிருந்த பராசரபகவான்
விஷ்ணோஸ் ஸகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திகம்.
ஸ்திதி ஸம்யமகர்த்தாஸென ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:.” என்று உபதேசித்த
அரும் பெரும் பொருளை இவள் பித்துக் கொண்டிருக்கிற நிலையிலே அவவீலையாக எடுத்துரைக்கின்றாளாயிற்று.

நன்குவேதமோதிய அந்தணன் பித்தேறினாலும் வேத வாக்கியங்களையே சொல்லித் திரியுமாபோலே
இவளும் வாஸநாபலத்தாலே பகவத் விஷயமல்லது பேசாளென்கை.

நீறு செவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடும் = திருமாலடியார்களுக்கு பஸ்மதாரணம் சாஸ்த்ர நிஷித்தம்
என்னுமிடம் ஆழவாரறியாததன்று;
அப்படியிருக்க இங்கு அருளிச்செய்வதற்குக் கருத்தென்னென்னில்;
“தாவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்த்வமாக இடக் காணில் நெடுமாலடியாரென்றோடும்.” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
இதனை அடியொற்றியே மற்ற வியாக்கியானங்களு முள்ளன.
பஸ்மதாரணம் பண்ணினவர்களேயாயினும் அந்த பஸ்மத்தைக் குறுக்கே பூசாதே நெடுக இட்டால்
‘ஊர்த்த்வபுண்ட்ரதாரிகளிவர்கள்’ என்று அவ்வளவுக்காக ப்ரதிபத்தி பண்ணுமென்றபடி.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

February 17, 2015

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலே பள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —

அவதாரிகை
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ஸ்வே-1-12- என்கிறபடியே
சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித்  அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –

அதில் அசித்து –அஜாமேகாம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ஸ்வே -4-5- என்கிறபடியே
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரச்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
விபரீத ஜ்ஞான ஜனகமாய் -ஷட் வித விகாராஸ் பதமாய் -சதத பரிணாமியாய்-சதத ஷணஷாண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய்  இருக்கும் –

சித் வஸ்துவைப்   பார்த்தால் தேக இந்த்ரியாதி வி லஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –

ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பரதந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –

இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் இன்றிக்கே
பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
பார லௌகிக பல சித்தி ஹேதுவாக –பதிம் விச்வச்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே லோகாயத மத அநு சாரிகளையும்
ஸ்யாதிஸ்தி ஸ்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ஸ்யா ஸ்திதி -ஸ்யான் நாஸ்தி -ஸ்யா தஸ்தி ச நாஸ்தி ச –ஸ்யா தச்தீதி வக்தவ்யம்-ஸ்யா நாஸ்தீதி வக்தவ்யம் –
ஸ்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும்  -கதிமிச்சே ஜ்ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூ கதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூ கதமத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயன பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சமயக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
புண்டரீகாஷா சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு
மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –
பத்ரம்  கர்ணேபி ஸ்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி
1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
தேவர்களே விஜிகீஷா ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்
பத்ரம் பச்யேமா ஷபிர்யா ஜத்ரா-ஆஷாபி பத்ரம் பச்யேம -இங்கே பச்யேம என்ற போதே சித்தம் அன்றோ
அஷபி-என்கைக்கு அடி என் என்னில்  -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வ பாவாக்யாந மாக வுமாம் –
அஷபி -பத்ரம் பச்யேம -ஸ்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்
யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –
ஸ்திரை  ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
பச்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
ஸ்திரை  ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
க்ரியாசமபிஹாரே யங்-ஆய்-யங்-லு  கந்தம் ஆகையாலே ச்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –
தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ் ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
விசேம என்னாமல்  வ்ய சேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –
ஆக -இத்தால் -பத்ரச் ஸ்ரவனமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ச்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர்தர்க்யமும்
பிரதிபாதித்தாயிற்று -அங்கன் அன்றியிலே -உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு தினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா –
இங்கு தேவ சப்தம் -தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணம்-
தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம்  ஸ்ருணுயாம்-ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ -திருவாய் -7-5-3-என்று சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்
ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் -பத்ரம் பச்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
இங்கு பத்ர சப்தத்தாலே -சதைக ரூப ரூபாய -என்றும் -ந பூத சங்க  சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
ரூபௌதார்ய குனைபும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
தத்ரு ஸூர் விச்மிதாகாரா ராமஸ்ய வன வாசி ந -என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
பகவத் அனுபவ ரூபம் இ றே கண்ணுக்கு இலக்காகுவது
யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
யோ அஹம் அஸ்மி ச சந்யஜே-என்றும் -ச ச்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவி பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாசமும்
ஏவம் பூதமான நியாச வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும் ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது
ஸ்திரி ரங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்ய சேம தேவ ஹிதம் யுதாயு –
ச்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண வி நாசியான தேஹம் போல் அன்றியே
அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
ஹா வுஹா வுஹா வு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று-

ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக தான் அவதீர்ணனான அவ்வவ தாரங்களில்
மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒருபுறம் சொல்லவே இருக்கும் –
ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அநிர்ப்பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்
ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன அடிக்கீழ் ஆக்கா நிற்கும்
பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்யக்ருஹ்ணன் த்ருடவ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்
கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் -ரூபமே தச்ச சதுர புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
அவதார தசையிலும் ஆ ஸ்ரீ த சம்ரஷனத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இ றே
அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி  தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –
ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ்வவதாரத்திலே இ றே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய் -1-3-1- என்றும்
கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
கோவிந்தற்க்கோர் குற்றேவல்  இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
வார் மணல் குன்றில் புலர நின்ற வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
இப்புடைகளிலே ஆழ்வார்களும் இவ்வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்
ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
சகல ஜகத் காரணத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
சமுத்திர சாயித்வத்தையும்
சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி  மதுரா புரீ சங்கதத்வத்தையும்
பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-

ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் -(அரையர் தாளம் எறிந்து அடி பட்ட ஸுலப்யம் இன்றும் காணலாமே )
2- ஏஷ -அனுமாநம் ஆகமம் அர்த்தாபத்தி அநுப லப்தி -யாதிகளான–பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது -(தேவ தத்தன் பருத்து பகலில் உண்ணாமல் -என்றால் இரவில் உண்கிறான் என்பதே அர்த்தாபத்தி)(காணுமோ கண்ண புரம் -என்று காட்டினாள் -ப்ரத்யக்ஷம் )

(பிரான் இருந்தமை காட்டினாள் திருத் தாயார் -இவளோ திவ்ய தேசம் காட்டுகிறாள் -கருவிலே திருவில்லாமல் கண்ணை மூடி செவிக்கும் துர்பாக்கியவாதிகள் -பட்டர் -கண்ணைத் திறந்து பார்க்க வேண்டுமே–கண்டு மேல் அஞ்சலி பண்ண சொல்ல மாட்டாமல் சேஷம் காட்டினாள் )

(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் பயில்கின்றாளால் –வர்த்தமானம் நிகழ் காலம் –என்று என்று -முதலில் தெரியும் போல் -பின்பு தெரிந்து கொள்ள முடியாமல் இருக்குமே -அழகைக் காட்டி ஈர்த்து கொள்வானே–பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் போல் )

(அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் ஸ்ரேஷ்டம் போல் கண்ணபுரம் அர்ச்சா ஸ்தலங்களில் ஸ்ரேஷ்டம்-வட மதுரைப் பிறந்தான் 9 பத்து ஆரம்பம்- இறுதியில் கண்ணபுரம் மங்களா சாசனம்)

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –காணுமோ கண்ணபுரம் காட்டினாள் –அங்கு சங்கை இது தெளிவு -இது அன்றோ இதன் ஏற்றம்

3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன் நாவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவுமாம் –
4-ஏஷ -அங்கன் அன்றியே -உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவுமாம் –

இப்படி  சங்குசித வ்ருத்தியாய்இருப்பான் ஒருவனோ என்னில்
1- நாராயண –
அந்தர் பஹிச்ச தத்சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –
2- நாராயண –
ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
3- நாராயண –
சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத்பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
ஏகோ ஹவை நாராயண ஆசீந்த  ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதி வீ -மஹா உபநிஷத் -என்றும்
ஆபூத சம்ப்லவே    ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விசவாத்மா ஸ து நாராயண பிரபு -பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் -நாராயண – –
நராஜ்ஜாதா நி தத்த்வா நி -பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேத ந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –
தா யதாஸ் யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –
6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர் ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர்பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –
7- நாராயண -அங்கன் அன்றியே -அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
8- நாராயண -மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
ஆச்ரயண  உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
இக்குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சாச்ச்சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆ சீத்-என்றும் சொல்லுகிறபடியே
ஹிரன்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரய ணீ யதையும் போக்யதையும் தோற்றுகிறது-
2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் -இத்தால் பூவும் மணமும் போலே அவி நா பாவம் தோற்றுகிறது –
ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈச்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி
3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத்தலைக்கு என்றால் -ஸ்ரீ மான் -இவளும்
இறையும் அகலகில்லேன் -என்று அலர்மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
ஸ்ரீய ஸ்ரீ யம்என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ச்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் –
இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன் –
4- ஸ்ரீ மான் -இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டதுபடுவார்கள்
ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆச்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று
இத்தைப் பற்ற இ றே ஆழ்வார்களும் -திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –

அது எங்கே கண்டோம் என்றால் –
1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இறே
2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –
3- ஷீரார்ணவ நிகேத ந -அங்கன் அன்றியே -பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம்  -18- என்றும் சொல்லுகிறபடியே
கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –
4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயண த்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-

ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
1-நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏகாதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
2- நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
3- நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –

கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
1-ஆகத-கனத்து இருந்த களிறு -என்றும் -தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி
-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –
2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸி நீ சார்த்தத்துக்குத் தன வடிவழகை தூளிதாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-

இப்படி வருகிறது தான் பரமபதத்திலேயோ திருப் பாற் கடலிலேயோ என்னில்
1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யாபாப ஹரி ஸூபா -என்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இ றே-
2- மதுரா புரீம் -தேவா நாம் பூரயோத்யா என்கிற தேசம் போலே துஷ்ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
சத்ரு மித்ர உதாசீனரான  கோடித்ரயத்துக்கும் ஆச்ரயமான தேசம் இ றே
3- மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது –
4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
ஜடா பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இ றே
5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய்  தான் கார்யைகதேசத்திலே ஒதுங்கி வந்தான் –
6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் -ஸூ ப்ரபாதா ச ரஜ நீ மதுரா வாச யோஷிதாம் பச்யந்த யச்யுத வக்த்ராப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பன்னுவாரைப் போலே வந்தான் –
7-அங்கன் அன்றியே -அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –

8-நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –

ஆக இந்த ஸ்லோகத்தாலே-
வாக்ய த்வயம் போலே உபாயத்வேநவும் உபேயத்வநவும் ஆஸ்ரய ணீ யனாய்
ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
கங்கா பதநம் போலே ஆ ஸ்ரீ தர் இருந்த தேசத்திலே தான் வந்து
தன வடிவு அழகாலும்
நடை அழகாலும்
அஜ்ஞரானவர்களையும் வசீகரித்துச் சரிதார்த்தராம்படி பண்ணிற்று ஆயிற்று –
அங்கன் அன்றியே
பண்டு இவரைக் கண்டு அறிவது யெவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும் –
அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம்இடவகை கொள்வது -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும் மதுரா புரீ சப்தார்த்தையும்
பிரதிபாதிக்கையாலே ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று –

————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்ய பாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்தது-ததோ தத்ருஸூ ராயாந்தம் விகாஸி முகபங்கஜம்-5-அம்சம் -13 அத்யாயம் -43- ஸ்லோகம்-

February 16, 2015

ததோ தத்ருஸூ  ராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
கோப்யஸ் த்ரை லோக்ய கோப்தாரம்  க்ருஷ்ண மக்லிஷ்ட சேஷ்டிதம்–5-அம்சம் -13 அத்யாயம் -43- ஸ்லோகம் –

ததோ -கண்ணனைத் தேடிக் காணாமல் திரும்பின பிறகு
தத்ருஸூ -கண்டனர்
ஆயாந்தம் -வருகின்றவனாய்
விகாஸி முக பங்கஜம் -மலர்ந்த முகத் தாமரையை யுடையவனாய்
கோப்யஸ்-கோபிகள்
த்ரைலோக்ய கோப்தாரம் -மூன்று உலகங்களுக்கும் ரஷகனாய்
க்ருஷ்ணம் -கண்ணனை
அக்லிஷ்ட சேஷ்டிதம்– குற்றம் அற்ற செயலை யுடையவனான –

ததோ –
இவ்விடத்தில் கிருஷ்ணன் போனான் என்று நெடும் தூரம் எல்லாம் சென்று

ப்ரவிஷ்ட காநநம் க்ருஷ்ண பதமத்ர ந லஷ்யதே நிவர்தத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-11- என்றும்

நிவ்ருத்தாஸ் தாஸ்ததோ கோப்யோ நிராச க்ருஷ்ண தர்சனே- ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-42- என்றும்

நிராசைகளான கோபி ஜனங்கள் மீண்ட அநந்தரம்-
இப்படி முடிய நிராசைகளாய் காணப் பெறாதே விட்டார்களோ -என்னில்-

தத்ருஸூ –
நெடும் போது காணப் பெறாத உறாவுதல் தீரக் கண்டு கொண்டார்கள் –

இவர்கள் கண்டு கொண்டது அவர் இருந்த இடத்திலே சென்றோ -என்னில்

ஆயாந்தம் –
பெண்களை நெடும் போது யுண்டு நாம் அலைச்சல் படுத்துகிறது –
அவர்கள் இத்தனை போது என் படுகிறார்களோ என்னும் த்வரை தோற்ற

சக்ய பசித்த க்ருஷ்ணச்ய முக மத்யருணே   ஷணம்
கஜ யுத்த க்ருதாயாச  ஸ்வேதாம்பு கணி காஞ்சிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-5-20-என்னும்படியே

குரு வேர் பரம்பித்த முகமும்
குலைந்த பரியட்டமுமாய்க் கொண்டு வாரா நின்றான் –

வருகிற இடம் தன்னில் முகத்திலே ஒரு விஷாதம் தோற்ற வந்தானோ என்னில் –

விகாஸி முக பங்கஜம் –
இவர்களைக் கண்ட அநந்தரம்-இத்தனை போது உங்களை அம்பலமாக பண்ணினோம் இறே-
நம்மைத் தேடிக் காண மாட்டிற்று இலைகோள்-
இத்தனையே உங்கள் சக்தி –
என்று தன் வெற்றியும் அவர்களுடைய தோல்வியும் தோற்றும்படி
முறுவல் செய்து கொண்டு வந்தான் ஆயிற்று –

இப்படி அவன் வந்த இடத்தில் அவர்கள் செய்தது என் –
தங்களை அவன் பண்ணின தீயறத்திலே முகத்தை மாற வைத்து
ப்ரணய கலஹம் பண்ணி இருந்தார்களோ என்னில் –

கோப்யஸ் –
பிரகல்பவ நிதைகள் அன்றிக்கே எட்டும் இரண்டும் அறியாத இடைப் பெண்கள் ஆகையாலே

காசிதா லோக்ய கோவிந்த மாயாந்த மதிஹர்ஷிதா -க்ருஷ்ண க்ருஷ்ணேதி பஹூ ஸ
ப்ராஹ நான்யது தீறையத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-44-என்றும்

தச்யைவ ரூபம் த்யா யந்தீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-13-46- என்றும் –

நேத்ர ப்ருங்காப்யாம் பௌ தன்முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-45- என்றும்

அவன் தூரத்திலே தோற்றும் காட்டில் அறிந்து கொண்டு மேல் விழுந்தார்கள் –

அதுக்கடி என் என்னில் –
த்ரைலோக்யகோப்தாரம்-
ரஷ்ய வர்க்கம் கூடு பூரித்துக் கிடக்கிற இத் த்ரை லோக்யத்திலே இந்த நாலிரண்டு பேரை ரஷித்தால் என் –
தவறில் -தவிரில் -என் -அவனுடைய ரஷகத்வத்துக்கு பங்கம் வரப் புகுர நின்றதோ –
இனி -ஸ்வ தந்த்ரநோடே ப்ரணய ரோஷம் கொண்டாடில் மூட்டவிழ்ந்து விடுமத்தனை
என்று மேல் விழுந்தார்கள் –

ஸ்வ தந்த்ரனாகில்-தான் இருந்த இடத்தே உவர்கள் அடைய வந்து விழும்படி இருக்க –
இருந்த இடத்தில் இராதே வருவது என் என்னில்

க்ருஷ்ணம் –
அவர்களுடைய ஸ்பர்சத்தையும்-
அவர்களுடைய தாழ்ந்த உக்திகளையும் ஒழியச் செல்லாமை யுடையவனாகையாலே –
இப்படி தங்களை ஒழியச் செல்லாமை யுடையனான பின்பு –
அவன் தானே வந்து கால் காட்டும் படி இராது ஒழிவான் என் என்னில்

அக்லிஷ்ட சேஷ்டிதம்–
உபகார ஸ்ம்ருதியாலே-அதாகிறது –
இனிச் சிறிது போது தாழ்க்குமாகில் அடியே தொடங்கி-
பஹூஸ்யாம் -சாந்தோக்யம் -6-2-3-என்று சங்கல்ப்பித்து
ஸ்திரீ சிருஷ்டி பண்ண வேண்டும்படியாய் விடும் இறே
அப்படிச் செய்யாதே ஓர் அளவில் மறைந்தானாய் பிசகாதபடி ரஷித்த உபகாரத்துக்காக –

————————————————————————————-

இரண்டாவது வியாக்யானம் –

ததோ –
பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தால்
அரை ஷணமும் செல்லாத படியான விடாய் பிறந்த அநந்தரம் –

ததோ –
ஸ்வ யத்னத்தாலே அவனைத் தேடிக் காண மாட்டாதே இயங்கி
அவன் தலையிலே சுமையைத் தள்ளின அநந்தரம்
இப்படிச் செய்த பின்பு
தேஹாந்தரே
தேசாந்தரே
காலாந்தரே காணப் பெற்றதி  என்றால்

ததோ தத்ருஸ-
சுமை தள்ளின அனந்தரமே பேற்றிலே தோள் மாறினார்கள்  –
கண் படைத்த பிரயோஜனம் பெற்றார்கள்

யஸ்ஸ ராமம் ந பஸயேத் –ஸ நிந்தித-அயோத்ய -17-11-என்று இறே
காணப் பெறாத போது இருப்பது –

ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நை நம் -தை நா -1-10- என்றும்

ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா  நான்யைர் தேவை -முண்ட -3-1-8- என்றும்

யத்ததத்ரேஸ் யமக்ராஹ்யம் -முண்ட -1-1-6- என்றும்

அ நிர்தேச்ய மரூபஞ்ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-66-என்றும்

கட்கிலி -திருவாய் -7-2-3- என்றும்-
நிஷேதிக்கிறது ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு இறே

தஸ்யைஷ ஆத்மா  விவ்ருணுதே தா நூம் ஸ்வாம்-கட -1-2-23- என்றும் –

மநஸா து வி ஸூத்தேந -ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரம் -275-2- என்றும் –

யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -முண்ட -1-1-6- என்றும்

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய -ருக் அஷ்டகம் -1-2-7/சாம -3-18-2-4–என்றும்

காண்பன் அவன் கண்களாலே -திருவாய் -1-9-9- என்றும்

அவனாலே அவனைக் காணும் போது காணலாம் இறே –

இப்படி காண்கிற இடத்திலே
தேஹா வஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே போயோ என்னில்

ஆயாந்தம் –
எதிர் சூழல் புக்கு -திருவாய் -2-7-6-
கிருஷி பண்ணித் திரிகிறவனை

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -திருவாய் -8-5-11-என்கிறபடியே
அவ்விடத்திலே காணப் பெற்றார்கள் –

ஆயாந்தம் -என்கிற வர்த்தமான நிர்த்தேசம் என் என்னில் –
வருகின்றவனைக் கண்டார்கள் -என்று
யுகபன் மோஷம் உண்டாகில் இறே எதிர் சூழல் மாறுவது
இஸ் சம்சாரமாக அவன் கிருபையாக எதிர் சூழல் மாறாது இறே –

நம்மைக் கொடு வந்து ஸூ லபனாக்கிக் காட்சி கொடுத்தோம் ஆகில்
இத்தால் வரும் ப்ரீத் அப்ரீதிகள் தங்களுக்கு அன்றோ என்று 
நிர்விகாரனாய் இருந்தானோ என்னில்

விகாஸி முக பங்கஜம் –
விஜ்வர-என்றும் –
ப்ரமுமோத ஹ -பால -1-85- என்றும் –
ஆஸ்ரீத கார்யம் தலைக் கட்டினது தன் பேறாக உகந்து 
அவ்வுகப்பு தன் முகத்திலே நிழல் எழும்பும்படி இருந்தான் காண் –

நின்றவர்கள் தான் –
திவ்யஜ்ஞா நோபபன் நாஸ்தே -ஆரன் -1-10/ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-37-9-என்றும்

அஹம் வேத்மி மஹாத்மா நம்  ராமம் சத்யபராக்ரமம் வசிஷ்டோ அபி
மகா தேஜா யே சேமே தபஸி ஸ்திதா -பால -19-14- என்றும்

வேதாஹா மேதம் புருஷம் மஹாந்தம் -புருஷ ஸூக்தம் -என்றும்
பேசப்படுகிற வேதங்கள் ஆதல் –
வைதிக புருஷர்கள் ஆதலோ என்னில்

கோப்யஸ் –
கோக்களையும் கவ்யங்களையும் பரதேவதையாக நினைத்து இருக்குமவர்கள் ஆயிற்று
இவர்கள் அதிகாரிகளாக இப்படி ஸூலபனாகைக்கு அடி என் என்னில்

கோப்ய-
தங்கள் வருத்தத்தாலே முயற்சியாலே -அவனைக் காண இருந்து –
அவனாலே அவனைக் காணப் பெறுவது என்று அறுதி இட்டு
பின்னையும் ப்ராப்ய ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே

க்ருஷ்ணோ அஹமேஷ லலிதம் வ்ரஜாமி -ஸ்ரீ விஷ்ணு புரா -5-13-26- என்றும் –

துஷ்ட காளிய திஷ்டாத்ர-ஸ்ரீ விஷ்ணு புரா -5-13-27- என்றும்

அவனுடைய கதி பாஷித சேஷ்டிதங்களைக் கொண்டு காலயாபநம் பண்ணின இது பற்றாசாக –

கோப்ய தத்ருச-
சதா பச்யந்தி ஸூரா -ருக் அஷ்டகம் -1-2-7/சாம -3-18-2-4- என்று
இமை கொட்டி விழிப்பதும் கூட
பகவத் அனுபவ விரோதி என்று நிமேஷோன் மேஷங்களைத் தவிர்ந்து
நித்ய ஸூரிகள் பெரும் பேற்றை இறே-

ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -திருவாய் -10-3-1- என்று
இவன் பசு மேக்கப் போனான் –
ஒரு பகலாகிலும் பிழைக்கும் என்று இருக்கும் இவர்கள் பெறுகிறது –

ப்ராப்ய வஸ்துவைப் பேசும் இடமடைய –
காரணம் து த்யேய-அதர்வசிகை -என்றும்

சர்வஸ்ய வசீ சர்வஸ்யேசான-ப்ருஹ -6-4-22- என்றும்

ஷயந்த மஸ்ய ரஜச பராகே -ருக் அஷ்ட -5-1-25/சாம -உத்தர -17-2-7-2- என்றும்

வைகுண்டே து பரே லோகே -சைவ புராணம் -என்றும்

திவி திஷ்ட த்யேக-முண்டக 1-1-7- என்றும்

திவ்யோ தேவ ஏகோ நாராயண -ஸூ பால -என்றும்

பேசப்படுகிறவன் கிடீர்
இடையர்க்கும் இடைச்சிக்கும் இலக்கானவன் –

இங்கே சந்நிஹிதன் என்றால்
இது வஸ்த்வந்தர ஸூசகமாய்த் தோற்றாதோ-என்னில்

த்ரை லோக்ய கோப்தாரம் –
இப்படி பரத்வத்தில் எல்லையிலே நிற்கிறவன் கிடீர்
இவனுடைய பரத்வத்தைப் பார்க்கக் கீழே சொன்ன சௌலப்யம் கூடாத படி யாய் இருந்ததீ-என்ன

க்ருஷ்ணம் –
பாரே புராதன கிராம் பார்ச்வே சாகோஷ யோஷிதாம் -என்று வேதங்களுக்கு
நேதி நேதி -ப்ருஹ -4-3-6–என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -தை ஆ -9-1-என்றும்
அவிஜ்ஞாதம் விஜா நதாம்- கேந -2-3- என்றும் -எட்டாத படியாய் இருக்கும் –

இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கால் மேல் கால் ஏறிடலாம் படி இருக்கும்
ப்ராப்ய வஸ்துவுக்கு லஷணம் பரத்வ  சௌலப்யங்கள் இரண்டும் இறே –

அத்யந்த துர்லபமான வஸ்து இப்படி ஸூலபமாகக் கூடுமோ என்னில்
அக்லிஷ்ட சேஷ்டிதம்-
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -சவே -6-8- என்றும்

சர்வ சக்திஸ்து பகவான் –ஸ்ரீ விஷ்வக்சேந சம்ஹிதை -என்றும்

ஏவம்விதமான அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவன் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-சர்வ லோகேஸ்வர-யுத்த -114-17 /பாபாநாம் வா ஸூபாநாம் வா -116-44 /ஸ்நேஹோ மே பரமோ ராஜன் -உத்தர -40-16–

February 16, 2015

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகாநாம் ஹிதகாம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

—————————————————————————————————————————————————————-

அவதாரிகை –
இப்படி பரிவார மனிதரும் தாமும் பிறந்தது ஏதுக்காக-என்னில் –
மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து இருக்கைக்காக -திருவாய் -7-5-2-என்கிறது –

1-சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம் ஹிதகாம்யயா-
இத்தை உடையராகையாலும் -உடைமையை இவன் நலிந்த படியாலும் -லோக ஹிதமாக கொன்றார் –
2- சர்வ லோகேஸ்வர –
பதிம் விச்வச்ய -என்றும் -சர்வச்ய வசீ சர்வஸ்யேசாந-ப்ருஹ -6-4-22-என்றும்
பொழில் ஏழும்காவல் பூண்ட புகழ் ஆனாய் -திரு நெடு -10-என்றும் சொல்லுகிறபடியே
ஒரு ஊருக்கு அன்று -ஒரு நாட்டுக்கு அன்று -ஒரு மண்டலத்துக்கு அன்று -ப்ரஹ்மாண்ட பரிந்த ஜகஜ் ஜென்மாதி காரணம் ஆனவன் –
3- சர்வ லோகேஸ்வர –
சதுஸ் சமுத்திர முத்ரிதமான பூ மண்டலத்துக்கு மாத்ரம் அன்றியிலே
பூர்ப் புவஸ் ஸூவர் மஹர் ஜனஸ் தப சத்யம் -நாராயண வல்லி -என்கிற லோகங்களோடு
ஹிரண்மயே பரே லோகே -முண்டக -2-2-10- என்கிற லோகத்தோடு வாசியற எல்லா வுலகுமுடைய எம்பெருமான் -என்கிறது –
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்யாபத் விமோசன மஹிஷ்ட பல ப்ரதாநை -ஸ்தோத்ர ரத்னம் -13- என்று
ப்ரஹ்மாதிகளைப் போலே ஒருவன் காலிலே குனிந்து அவன் ஆபத்துக்களைப் போக்கி அவன் அபீஷ்டங்களைக் கொடுக்க  வந்த பதமோ -என்னில்
4-சாஷாத் சர்வ லோகேஸ்வர –
ய ஈசே அஸ்யஜகதோ நித்யமேவ நான்யோ  ஹேதுர் வித்யத ஈசநாய-ஸ்வே -6-17- என்றும் –
ஸ்வா பாவி காநவதிகாதி சயே சித்ருத்வம் -ஸ்தோத்ர ரத்னம் -10- என்றும்
ஒரு காரண ஜன்யம் அன்றிக்கே அவ்யவ ஹிதமாக ச்வதஸ் சித்தமான  சர்வாதிபத்யம் உடையவன் –
5- சாஷாத் சர்வ லோகேஸ்வர –
ஒருவன் காணிப் பற்றிலே பலர் குடியேறி அகம் எடுத்திருந்து இன்னாரகம் -என்று ஆண்டு  போந்தார்களே யாகிலும்
ஸ்வா ம்யம் காணிக்காரனதாய் இருக்குமா போலே அவ்வவ  லோகங்களை இந்த்ராதிகள்
ஆண்டு போந்தார்களே யாகிலும் அவ்யவஹிதமான ச்வத ஸ்வா ம்யம் எம்பெருமானுக்காய் இருக்கை-
6- சர்வ லோகேஸ்வர சாஷாத் –
தம்முடைய ஈஸ்வர பாவத்திலே நின்று
ந சந்த்ருசே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நை நம் -என்றும்
கட்கிலீ -திருவாய் -7-2-3- என்றும்-
ஒருவருக்கும் தோற்றாதபடி நிற்கை அன்றிக்கே
நந்தாமி பஸ்ய ந்நபி தர்சநே பவாமி த்ருஷ்ட்வா ச புநர் யுவேவ -அயோத்ய -12-104- என்றும்
ஸோ மமிவோத் யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண-ஆரண்ய -1-11-என்றும்
ராகவஸ்ஸ மயா த்ருஷ்ட -சுந்தர -27-12-என்றும்
ராஜாக்களோடு -ருஷிகளோடு -ராஷசிகளோடு -வாசி அறக் கண்ணிட்டுக் காணலாம் படி நின்று -என்றுமாம் –
-அன்றியிலே -7- சாஷாத் -என்று -சாஷாத் பூத்வா ஹதவான் -என்று அந்தர்யாமி போலே கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்கை அன்றிக்கே
பௌமரோடு திவ்யரோடு  வாசி அறக் காட்சி கண்டு நின்று
நாத தாநம் சரான் கோரான் ந முஞ்சந்தம் சரோத்தமான் -ஆரண்ய -25-39- என்றும்
தொடுத்ததும் விட்டதும் தெரியாதே ஓர் அம்பிலே பல அம்புகள் புறப்பட்டால் போலே
வளைந்த வில்லும் தாரளமான அம்பும் இருக்கும் படி என்-என்று கைவாரம் கொள்ளும்படியாக-எதிரிகளும் அஞ்சலி பண்ணும்படியே- பிரத்யஷராயே நின்றார் -என்றுமாம்
இப்படி சர்வ லோகங்களுக்கும் ரஷகர் ஆனால் -ச ராஷச பரீவாரம் ஹதவாம்ஸ் த்வாம் -என்று
ஒரு ஜாதியாக நிர்வாஹகனோடு  கிழங்கு எடுப்பப் பெறுமோ -என்னில்
1- லோகாநாம் ஹிதகாம்யயா-
ஸ்வா ர்த்தமாக நலிந்தவர் அல்லர் -பரஹிதமாகச் செய்தார் அத்தனை –
பரித்ராணாய சாது நாம் வி நாசாய ச துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8- என்று பயிர் செய்வான் ஒருத்தன் களை பறிக்குமா போலே சிஷ்ட பரிபால நார்த்தம் அசிஷ்ட நிக்ரஹம் பண்ணுகை பிராப்தம்  இ றே-
2- சர்வ  லோகேஸ்வர லோகா நாம் ஹித காம்யா த்வாம் ஹதவான் –
எல்லா யுலகுமுடைய எம்பெருமானாய்   இருந்தார் அவர்  –
ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் -பால -15-20- என்று அவருடைய நாட்டை நலியும் அரக்கனாய் இருந்தாய் நீ –
ஆகையாலே யதா பாராத தண்டா நாம் -ரகுவம்சம் -1-6- என்று குற்றம் செய்கையாலே பொடிந்தார் அத்தனை -என்றுமாம் –
3- சர்வ லோகேஸ்வர –
ஈஸ்வரத்வம் ஆவது -ஈசதே தேவ ஏக -ஸ்வே-1-10- என்றும்
சாஸ்தா ராஜா துராத்மா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர சேஷச்ய-என்றும் நியந்த்ருத்வம் இ றே –
அந்த ஸ்வா பாவிக நியந்த்ருத்வம் நிலை நிற்கைக்காகச் செய்தார் என்றுமாம் –
4- சர்வ லோகேஸ்வர ஹித காம்யயா-
ராஜா நாம் சர்வ பூதா நாம் -என்றும்
ராஜா த்வசாச நாத்பாபம் ததவாப் நோதி கில்பிஷம் -என்றும்
ராஜா தண்ட்யாம்ச் சைவாப்ய தண்ட யன் -அயசோ மஹதா நோதி நிரயஞ்சைவ கச்சதி -என்று
குற்றம் செய்தவர்களை தண்டியாத போது பாபம் வரும் –
அது வாராமைக்கு ஸ்வ ஹிதத்துக்காகச் செய்தார் என்றாக வுமாம் –
5- சர்வ லோகேஸ்வர லோகா நாம் ஹித காம்யயா -என்று
தமக்கு ரஷணீயமான லோகத்தில் உள்ளார் -பரிபாலய நோ ராஜன் வத்யமா நான் நிசாசரை -ஆரண்ய -6-19- என்றும்
ராஷசைர் வத்யமா நா நாம் பஹூ நாம் பஹூ தா வ நே -ஆரண்ய 6-16- என்றும்
முறை பட்டவர்களுடைய ரஷண அர்த்தமாக என்றாக வுமாம் –
6- சர்வ லோகேஸ்வர தவ ஹித காம்யயா த்வாம் ஹதவான் -என்றாய் –
தேவா நாம் தா நவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -ஜிதந்தே -2- என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் மூன்றாம் திரு -88- என்றும்
அநு கூலரோடு பிரதிகூலரோடு வாசியற
ச்வத சர்வே ஹ்யாத்மா ந -என்று சம்பந்த விசிஷ்டர் ஆகையால் ரஷிக்க வேணும் என்று –
ராஜபிர் த்ருத தண்டாஸ்து க்ருத்வா பாபா நி மா நவா நிர்மலா ஸ்வர்க்க மா யந்தி -கிஷ்கிந்தா -18-4- என்று
உன்னைத் தண்டித்து ஸூ பனாக்கி -பரிசுத்தனாக்கி -உன்னைக் கைக் கொள்ளுகைக்க்குச் செய்தார் ஆகவுமாம்
7- ஹித காம்யயா –
அவர்களுடைய நன்மைக்கு உறுப்பாக வேணும் என்று
8- லோகா நாம் ஹித காம்யயா –
ஜகதாம் உபகாராய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72- என்றும்
சகலமேதத் சம் ஸ்ரீ தாரத்த சகர்த்த -ஸ்ரீ வராத ராஜ  ஸ்தவம் -63- என்றும்
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்  பிறந்தான் -திரு விருத்தம் -1- என்றும்
இவருடைய வியாபாரம் ஆகில் பரார்த்தமாய் இ றே இருப்பது –
இப்படி   பரார்த்தமாகச் செய்த ஹிதம் தான் ஏது என்னில் –
1-ஸ ராஷச பரீவாரம் ஹத வாம்ஸ் த்வாம் —
பாதகனான உன்னையும் உனக்குத் துணையான பரிகாரத்தையும் கொன்றார் –
2- ஸ  ராஷச பரீவாரம் –
பொல்லா வரக்கரைக் கிள்ளிக் களைந்தானை -என்கிறபடியே நிதான ஜ்ஞனான பிஷக்கு தோஷம் உள்ள இடத்திலே குட்டமிட்டுச் சிகித்சிக்குமா போலே
நல்லவரக்கர் இருக்க துஷ்ட ராஷசரையே நலிந்தார் –
3- ஸ ராஷச பரீவாரம் –
தனித்தால் இத்தனை பாதகனாகான் இ றே
இப்படி கருத் துணையாக்கி இ றே இப்படி கை விஞ்சிற்று
3- ஸ ராஷச பரீவாரம் –
பாதகன் ஆனவன்றும் கூட்டாய் -பாத்தின் ஆனவன்றும் கூட்டாய் ஆயிற்று –
4- ஸ ராஷச பரீவாரம் –
சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-71-என்றும்
அலம்பா  வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்து -பெரியாழ்வார் -4-2-1-என்றும்
ச்வத ப்ரயுக்த பாதகத்வம் உடைய ஜாதி யாகையாலே நிரவேஷம் ஆக்கினார்
5- ஸ ராஷச பரீவாரம் –
இவன் பட்டான் என்றால் நம் அரசனைக் கொன்றார் என்று பறை கொட்டி முழக்கிப் பின்பு ஒருத்தன் புறப்படாமே
கீழ்  உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே  ஆழி விடுத்து  அவருடைய கரு அளித்த அழிப்பன்-பெரியாழ்வார் -4-8-6- என்று
அசுரர்களை அற முடித்த படி –
இப்பரிகரத்து அளவில்  விட்டாரோ என்னில் –
1- த்வாம் –
இதுக்கு எல்லாம் அதிஷ்டாதாவாய் இன்னபடி நலியுங்கோள்-என்று வகை இட்டுக் கொடுத்துப் பகைத் தொடனாய் இருக்கிற உன்னை –
2- த்வாம் –
ஆததாயி நாமா யாந்தம் ஹன்யாதே வாவிசாரயன்-ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி -5-185—188-என்று தார அபஹாரம் பண்ணி வத்யனான உன்னை –
3- த்வாம் –
தார மாதரம் அன்றிக்கே ராஜ தாரமாய் ராஜத்ரோகியான உன்னை –
4- த்வாம் –
தம்மள வன்றியிலேஅநரண்ய வதத்தாலே குல விரோதியான உன்னை
5- த்வாம் –
அநு ஜ பார்யா அபஹாரம் பண்ணின வாலி பட்டபடி கண்டும் ஆக்ரஜ பார்யா அபஹாரம் பண்ணி விடாதே இருந்த உன்னை
6- த்வாம் –
விபீஷணஸ்து தர்மாத்மா -என்று -பரம தார்மிகனான விபீஷணன் ஹிதம் சொன்னால்
ப்ருச்ச பாலம்பி புத்தி சாலி நம் -என்றும்
யதச்ய கத நாயா சைர் யோஜிதோ அஸி மயா குரோ  தத் ஷமயதாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-11- என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8- என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -அடியேன் அறிந்தேனே -திருவாய் -2-3-2- என்றும்
பிரத்யஷத்தில் குரு ஸ்தோத்ரமும் -சரீர அர்த்த ப்ராணாதி நிவேதனமும்  பண்ண ப்ராப்தமாய் இருக்க
அப்ரவீத்  பருஷம்  வாக்கியம்  -16-1- என்றும்
தாச வச்சாவமா நித -17-14- என்றும் பரிபவ பரம்பரைகளைப் பண்ணி
குருத்ரோஹியாய் பந்து பரித்யாகம் பண்ணின உன்னை –
7- த்வாம் –
இந்த்ராதி சங்கர பர்யந்தமாக  தேவதைகளைச் சிறை வைத்தும் -அழித்தும் -உதைத்தும் -தேவதாத் ரோஹாம் பண்ணிப் பல பாக்கான உன்னை –
8-த்வாம் –
மருத்தாதிகள் உடைய யாக பங்கம் பண்ணின உன்னை –
9- த்வாம் –
யஜ்ஞ்  சத்ரு என்று -இது விருது போராய் -பலமச்யாப்ய தர்மஸ்ய ஷிப்ரமேவ பிரபத்ச்யசே-யுத்த -51-30-என்று
அதர்மம் பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்கிற உன்னை –
10-த்வாம் –
மாரீச மால்யவத் கும்பகர்ண விபீஷணாதி பந்து வாக்யங்களைக் கேளாதே விபரீதமே செய்த உன்னை –
11- த்வாம் –
தேவதா திருப்தி பண்ணுகிறேன் என்று உன் தலையை அறுக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த உன்னை –
இவனைச் செய்தது என் என்னில் –
1- ஹதவான் –
கண்ணோட்டம் அறக் கொன்று விட்டார் –
2- ஹதவான் –
யாத்ருசம் குருதே கர்ம தாத்ருசம் பலம் அஸ்நுதே -என்று யதோபா சனம் பலமாய் -பிறரை ஹிம்சித்தால் போலே தானும் ஹிம்சிதன் ஆனான் –
3- ஹதவான் –
ஸ்வர்க்க ஆரோஹண சாதனமான யுத்த யஜ்ஞத்திலே ஸ்வ ஆலம்பனம் பண்ணினார்
4-ஹதவான் –
ஹந ஹிம்சா -இத்யோ-இ றே-அந்தர் பாவ  ணி ச்சாய் ஸ்வர்க்க நரகங்களை கமிப்பித்தார் -என்றாக வுமாம் –
இப்படி விரோதியைப் போக்கிச் செய்தது என் -என்னில் –
1- மஹாத்யுதி –
வடிவில் புகரிலே தொடை கொள்ளலாம் படி இருந்தார்
2- மஹாத்யுதி –
நடுவுண்டான ராஜ்ய பிரம்சவநவாசா திகளால் பிறந்த செருப்பு தீர்ந்து இப்போது லோக கண்டகனான நீ பட்டவாறே பெரிய தேஜச்வியாய் இருந்தார் –
3- மஹாத் யுதி-
அபிஷிச்ய ச லங்கா யா ராஷச  சேந்த்ரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராம -பால -1-85-என்று
ஆ ஸ்ரீத கார்யம் செய்யப் பெறுகையாலே வந்த தீப்தி யாகவுமாம் –
4-ஹதவான் மஹாத்யுதி –
ராவணனைக் கொன்றது ஆயுதத்தை இட்டு என்று இருந்தோம் -அங்கன் அன்றிக்கே
நிர்த ஹேதபி காகுத்ச்த  கருத்த சவீவ்ரேண சஷூஷா-சுந்தர -30-14- என்று பிரதாபத்தை இட்டு சுட்டு விட்டார் இத்தனையாய் இருந்தது –
5-மஹாத் யுதி –
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸாசர்வமிதம் விபாதி -கடக்க -2-5-15-என்று
நீ புகர் கொள்ளுகைக்குப் பற்றின ஷூத்ர தேவதைகள் அடையக் கரிக் கொள்ளியாம்படி நிரவதிக தேஜோ ரூபரானவர் –
6- மஹாத் யுதி –
மஹாத் யுதி என்றும் தேஜசாம் ராசி மூர்ஜிதம் -என்றும் ஒண் சுடர்க் கற்றை -திருவாய் -1-7-4- என்றும்
தேஜ பதார்த்தங்களை அடையத் திரளப் பிடித்து ஒராக்கை இட்டால் போலே இருந்தார் –
1- ஏஷ த்வாம் ஹதவான் –
என்று மூலியான அநு மானத்தை இட்டு மூலமான பிரத்யஷத்தை பாதிக்க ஒண்ணாதே இருந்தது
மனுஷ்ய ரான இவரே ராஷசனான உன்னைக் கொன்றார் –
2- மஹா யோகீ த்வாம் ஹதவான் –
சௌர்ய வீர்ய தைர்யஸ் தைர்ய சாதுர்ய மாதுர்யாதி சமஸ்த கல்யாண குணங்களை யுடைய  இவர்
அமர்யாத ஷூத்ரஸ்  சாலமதிர் அசூயாப்ரசவபூ கருதக்நோ துர்மா நீ ஸ்மர பரவசோ வஞ்சநபர நருசம்ச பாபிஷ்ட -ஸ்தோத்ர ரத் -62-
என்று சொல்லுகிற சமஸ்த ஹேய குண பூர்ணனான உன்னைக் கொன்றார் –
3- பரமாத்மா த்வாம் ஹதவான் –
எல்லாருக்கும் மேலாய் -நியாமகராய் இருக்கிறவர் -எல்லாருக்கும் கீழாய் நியாம்யனான உன்னைக் கொன்றார் –
4- மஹத பரம்ஸ் த்வாம் ஹத்வான் –
மஹதாத்ய சித்  வி லஷணரானவர்-அசித் சம்ஸ்ருஷ்டனான உன்னைக் கொன்றார்
5- ஹதவான் சநாதநஸ் த்வாம் –
எப்போதும் உளராய் இருக்கிறவர் காலைக்க தேச வர்த்தியான உன்னைக் கொன்றார் –
6-அநாதி  மத்திய நிதநஸ் த்வாம் ஹத்வான் –
முதலும் நடுவும் முடிவும் இல்லாத இவர் ஜன்மமும் ஆயிரவதியும் யுடைய உன்னைக் கொன்றார் –
7- மஹான் த்வாம் ஹத்வான் –
மஹானான இவர் ஏஷோ அணு ராதமா -என்கிற உன்னை சரீரவியுக்தனாம் படி பண்ணினார் –
8-தம்ஸ பரம்ஸ் த்வாம் ஹதவான் –
அப்ராக்ருதராய் இருக்கிற இவர் ப்ராக்ருதனான உன்னைக் கொன்றார் –
9-தாதா த்வாம் ஹதவான் –
ஜகத் தாரகராய் இருக்கிற இவர் தார்யங்களில் ஏக தேசனான உன்னைக் கொன்றார்
10- சங்க சக்ர கதா  தரஸ் த்வாம் ஹத்வான் –
திவ்ய ஆயுத தாரரான இவர் ஷூத்ர ஆயுத தரனான உன்னைக் கொன்றார் –
11-ஸ்ரீ வத்ஸ வஷாஸ் த்வாம் ஹதவான் –
பரத்வ சின்ஹங்களை  உடையவர் அபரத்வ சின்ஹங்களை யுடைய உன்னைக் கொன்றார்
12- நித்ய ஸ்ரீ த்வாம் ஹதவான் –
நித்ய அநபாயிநியான ஸ்ரீரியை யுடையவர் ஆகமா பாயிநியான ஸ்ரீ யை யுடைய உன்னைக் கொன்றார் –
13- அஜய்யஸ் த்வாம் ஹதவான் –
அபராஜிதரானவர் தன் பக்கல் பராஜயமேயான உன்னைக் கொன்றார் –
14- சாசவதஸ் த்வாம் ஹதவான் –
போது செய்யாதவர் போது செய்கிற உன்னைக் கொன்றார் –
15- த்ருவஸ் த்வாம் ஹதவான் –
ஸ்திர ஸ்வ பாவராய் இருக்கிறவர் அஸ்திரனான உன்னைக் கொன்றார் –
16- மா நுஷம் வபுராஸ் தாய த்வாம் ஹதவான் –
மா நுஷ்யம் உடையவர் மா நுஷ்யம் இல்லாத உன்னைக் கொன்றார் –
17- விஷ்ணுஸ் த்வாம் ஹதவான் –
வ்யாபகரானவர் வ்யாப்யைகதேசனான   உன்னைக் கொன்றார் –
18- சத்யா பராக்ரமஸ் த்வாம் ஹதவான் –
உண்மையான வாக்ய சேஷ்டைகளை யுடையவர் அசத்திய வாக்ய சேஷ்டனான உன்னைக் கொன்றார் –
19-சர்வை பரிவ்ருதோ தேவைஸ் த்வாம் ஹத்வான் –
வி லஷணராலே சூழப் பட்டவர் ஹேயராலே சூழப் பட்ட உன்னைக் கொன்றார்
20-வாநரத்வம் உபாகதை பரிவ்ருதஸ் த்வாம் ஹதவான் –
ராஷசனாய் பிரபலனான உன்னை ஷூத்ர மிருகங்களை கொண்டு கொன்றார் –
21- சர்வ லோகேஸ்வரஸ் த்வாம் ஹதவான் –
சர்வ நிர்வாஹகராய் இருக்கிறவர் ஏகதேச நிர்வாஹகனான உன்னைக் கொன்றார் –
22-சாஷாத் த்வாம் கொன்றார் –
நேரே தனக்கு ஒரு குற்றம் செய்யாமையாலே வாலியை மறைந்து நின்று கொன்றவர்
அது தீரக் கழியத் தனக்குக் குற்றம் செய்த படியாலே நேர் கொடு நேர் நின்று உன்னைக் கொன்றார் –
23- லோகா நாம் ஹித காம்யயா த்வாம் ஹதவான் –
லோக ஹிதத்துக்காக அஹிதனான உன்னைக் கொன்றார்
24- மஹாத் யுதிஸ்  த்வாம் ஹதவான் –
பெரிய தேஜஸ் சை யுடையவர் தேஜோ ஹீனனான உன்னைக் கொன்றார் –
எதிரியைப் பெருப்பித்து அவனைக் கொன்றான் என்றால் அல்லவோ நாயகனுக்குப் பெருமை யாவது
பெருமாள் பெருமையும் ராவணனுடைய அபகர்ஷமும் சொல்லப் பெறுமோ என்னில்
இவ்விடத்தில் நாயகனுடைய உத்கர்ஷ அபகர்ஷங்களில் தாத்பர்யம் இல்லை
மா நுஷாணாமவிஷயே சரத காம ரூபிண வி நாசஸ்தவ ராமேண சம்யுகே நோபாபாத் யதே -114-7-என்று
பெருமாளை சிறியராகவும்-ராவணனை பெரியனாகவும் பிரமித்து பெருமாளால் இவனுக்கு வதம் கூடாது என்று நினைத்திருந்து
அவரை யுக்திகளால் தெளிந்து -பெருமாள் பெரியவர்   ராவணன் ஓர் ஆபாசன் என்று அறுதி இடுகிறாள் ஆகையாலே ஓர் அநு பாபத்தி இல்லை –
ஆக இஸ் சதுஸ் ஸ்லோகியால் சொல்லிற்று ஆயிற்று –
இவளுடைய முன் செய்வினை வெளிப்பட்டு
ஸ தவம் மா நுஷ   மாத்ரேண ராமேன யுத்தி நிர்ஜித  ந ஹ்ய பத்ர பசே ராஜன்  கிமிதம்   ராஷசர்ஷப -என்று
ராவணனை உத்கர்ஷித்துப் பெருமாளை உபாலம்பித்து
சாபராதையான மந்தோதரி
அநு தப்தையாய் –
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டைகளைத் தெளிந்து பேசி
ஸ்தோத்ர முகத்தாலே பிராயஸ் சித்தம் பண்ணிப் பூதையாகிறாள் –

————————————————————————————————————————————————————————————–

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

————————————————————————————————————————————————————————————–

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித
பக்திஸ்ஸ நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி –உத்தர -40-16-

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் -ராஜன் -மே-  பரம ஸ்நேக -அரசரே எனக்கு மிகச் சிறந்த அன்பானது
த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித-தேவரீர் இடத்திலே எப்போதும் நிலை நிற்கிறது
பக்திஸ்ஸ நியதா -பக்தியும் நித்தியமாய் இரா நின்றது
வீர பாவோ நாந்யத்ர கச்சதி -சூரனே என் நினைவு  வேறு ஒரு இடத்தில் செல்கின்றது இல்லை –
ஸ்நேஹோ  மே பரமோ-
எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம்  நூற்ற -100–உன்னிடம் எனக்கு உள்ள அன்பு என்னிலும் பெரிது என்கிறார்-
ராஜன் த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்றி –அதுவும் அவனது இன்னருளே -திருவாய் -8-8-3-
நித்யம் ப்ரத்திஷ்டித-
இன்று அன்றாகில் மற்று ஒரு போதுகொடு போகிறோம் என்ன -அங்கன் செய்யுமது  அன்று
தர்மியைப் பற்றி வருகிறது ஆகையாலே -நின்னலால் இலேன் கான் -பெரிய திரு -7-7-4-என்னுமாப் போலே –
பக்திஸ்ஸ நியதா-
ஸ் நேஹமாவது என் -பக்தியாவது என் -என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து -வ்யதிரேகத்தில் முடிந்த சக்ரவர்த்தி நிலை ஸ் நேஹம் –
பக்தியாவது -நில் என்ன -குருஷ்வ -அயோத்யா -31-32-என்னும்படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை –
வீர –
தன்னைத் தோற்ப்பித்த துறை –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்று இங்கு வெல்ல முடியாது
தானும் வீரன் ஆகையாலே தோற்ப்பித்த துறையைப் பிடித்து பேசுகிறான் –

பாவோ நான்யத்ர  கச்சதி –
என்னை மீட்டீர் ஆகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அன்யத்ர -என்கிறது -மற்றானும் உண்டு என்பார் -சிறிய திருமடல் -5-என்றும்
அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை -2- என்னுமா போலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட அசஹ்யமாய் இருக்கிறது-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர-யுத்த -114-15/மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு -16/–

February 14, 2015

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

இரண்டாம் ஸ்லோகம் –
இரண்டாம் ஸ்லோகத்தாலே –மஹத பரமோ -மஹான்-என்று மஹத் அவ்யக்தங்களில் வ்யாவ்ருத்தனாய் பெருத்து இருக்கும் என்று சொல்லி நின்றது
அவ்யக்தம் அஷரே லீயதே —ஸூ பால உபநிஷத் – என்றும்
மம யோ நிர்மஹத் ப்ரஹ்ம-ஸ்ரீ கீதை -14-3- என்றும் –
தே நாக்ரே சர்வமே வாஸீத் வ்யாப்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-21- என்றும் –
தத நந்தம சங்க்யாதம ப்ரமாணஞ்ச-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-26-என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ்-திருவாய் -10-10-10- என்றும்
இவ்வருகில் உள்ளவற்றுக்கு எல்லாம் மேலாய்ப் பெருத்து இருப்பது தமஸ் சப்த வாச்யையான மூல பிரகிருதி அன்றோ -என்ன
1- தமஸ பரம –
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ் தாத் -என்றும் –
ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே -என்றும் ரஜஸ் தமஸ் சப்த வாச்யையான மூலப் பிரக்ருதிக்கும் அவ்வருகாய் இருக்கும்
2-தமஸ பரம –
அத யத்த பரோதி வோ ஜ்யோதிர் தீப்யதே -என்றும் ஹிரண்மயே பர் லோகே -என்றும்
வைகுண்டேது  பரே லோகே –ஆஸ்தே-என்றும்
ப்ராக்ருதத்தைக் கடந்து அவ்வருகாய் இருக்கிறவன் –
தமஸ பரம -என்றால் என்-
அதீத்ய ப்ராக்ருதான் லோகன் -என்றும் -தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்றும்
விஸ்வத  ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூத்த மேஷ்வ நூத்த மேஷூ லோகேஷூ -சாந்தோக் -3-13-7- என்றும்
இப்பிரக்ருதிக்கு மேலாய் இருப்பது பரமபதம் அன்றோ -என்ன
1- தாதா –
விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ் நமே காம் ஸேந ஸ்திதோ ஜகத் -ஸ்ரீ கீதை -10-32- என்று உபய விபூதியும் தார்யம் இத்தனை போக்கி தாரகன் ஆனவன் அவன் அன்றோ –
2- தாதா –
டுதாஞ் தாரண போஷண யோ -என்றும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தி பவதி –தை ஆன -7-1- என்றும்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11- என்றும்
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி இருக்கிறவன் –
3- தாதா –
முகுந்தா என்றும் சகல பல ப்ரத -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-47-என்றும் –
புக்த்வா ச போகான் விபுலான் –மம லோகமவாப்ஸ் யஸி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-26-என்றும் என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு 5-19-26-என்றும்
போக மோஷ ப்ரதன் என்றாக வுமாம் –
4-தாதா –
காரணகளே பரை–ஸ்ரீ ரெங்க ஸ்த -2- 41-என்றும் -சங்கல்பாதே  வாஸ்ய பிதர சமுத்திஷ்டந்தி –சாந்தோ  -8-2-1-என்றும்
ச ஏகதா பவதி –சஹச்ரதா பவதி -என்றும்
சம்சாரிகளுக்கு ஸ்வ ப்ராப்த்யு உபகரணமாகவும்
முக்தருக்கு ஸ்வ அனுபவ உபகரணமாகவும் -கரணகளேபர ப்ரதன் என்றாக வுமாம் –
அன்றிக்கே -5-தாதா –
யத் த்ரவ்யம் யத் த்ரவ்யச்ய சர்வாத்ம நா ச்வார்த்தே நியந்தும் தாரயிதுஞ்ச சகயம் தச் சேஷதைக ஸ்வரூபஞ்ச தத் தஸ்ய சரீரம் -ஸ்ரீ பாஷ்யம்-2-1-9-என்றும்
யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் -ப்ருஹ -5-7-என்றும்
ஸ்வ சரீர பூத சேதன அசேதனங்களை ஆத்மாதா நின்று தரிக்கும் -என்றாக வுமாம் –
இது எல்லாம் என் -தமஸ பரமோ தாதா -என்றால் -பிரகிருதி மண்டலத்துக்கு மேலாய்
பக்தைர் பாகவதைஸ் சஹ ஆஸ்தே விஷ்ணு –லைங்கம்-என்றும்
ஷயம் தமச்யரஜஸ பராகே -என்றும்
ப்ரஜாபதே சபாம் வேசம ப்ரபத்யே -என்றும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் ஸூ ரிகளும் முக்தரும் எழுந்து அருளி இருக்க
ஆதாரமாய் இருக்கிறது திரு மா மணி மண்டபமும் திவ்ய லோகமும் அன்றோ -என்ன
1-சங்க சக்ர கதா தர –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ -நாச் -7-1-என்று
கேட்கலாம் படி அநு கூலர்க்கு ஆஸ்வாசம் பண்ணுகிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ன –
க்ராஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81- என்றும்
கருதுமிடம் பொருது -திருவாய் -10-6-8- என்றும்
பிரதி கூலரை நிரசிக்கும் திரு வாழி யாழ்வான் என்ன  –
கௌ மோதகீம் ஜ்ஞான விகாச ஹேதும்-என்று ஆ ஸ்ரீ தர்க்குஜ்ஞான விகாச ஹேதுவாய்புத்த்யபி நினியான கதை என்ன-இவற்றை யுடையவர்
2- சங்க சக்ர கதா தர –
என்று ஸ்ரீ பஞ்சாயுத உப லஷணம் ஆக வுமாம் –
இத்தால் என் -மம சாதர்ம்யமா கதா -ஸ்ரீ கீதை -14-2–என்றும் தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திரு -11-3-5- என்றும் ஸாரூப்யம் பெற்ற நித்ய ஸூ ரிகளும் சக்ராதி தரராய் அன்றோ இருப்பது என்ன –
1- ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –
அசித் தத்வாபிமாநிநி யாகையாலே -யவ நிகா மாயா ஜகன் மோஹி நீ -சதஸ் லோகி -1-என்று இருக்கிற அந்தப்புர நாச்சிமாரை யுடையவர்
இரண்டைத் தொன்று அமைந்து இருக்க இரண்டு விசேஷணம் என் என்னில்
சமஸ்த ஹேய ரஹிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53- என்றும் ஆசறு சீலனை –மாசறு சோதி -திருவாய் -5-3-1- என்றும்
ஒரு மறு வற்று இருக்கிறவனை மறு வுடையவன் என்றால் அவத்யமாம் என்று நித்ய ஸ்ரீ என்கிற இதுவே விவஷிதம் –
பிரதான  மகிஷிக்கு உசித பரிகரம் திரஸ் கரிணி யாகையாலே யவ நிகையான  ஸ்ரீ வத்சத்தைக் கூட்டிச் சொல்லுகிறாள்
அநு கரித்த பௌண் டரீக வா ஸூ  தேவனை வ்யாவர்த்திக்கலாம்
அது பிற்பட்ட அவதாரத்திலே யானாலும் ஸூ ரிகளிலே வ்யாவர்த்திக்கிற பிரகரணம் ஆகையாலே சம்சாரிகளை வ்யாவர்த்திக்கப் போகாதாகையாலும் அநு சித்தம்
2-நித்ய ஸ்ரீ –
நித்யைவைஷா நபாயி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றும்
இறையும் அகலகில்லேன் -திருவாய் -6-10-10- என்றும்
உபாய தசையில் புருஷகாரத்வ ண் விடாள்
உபேய தசையில் ப்ராப்ய அந்தர் கதையாய் விடாள்
இப்படிக்கு எப்போதும் அவசர ப்ரதீஷை பண்ணி விடாதே இருக்கும்
நித்ய ஸ்ரீ என்றால் தான் தவிர்ந்ததோ -லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால -18-29- என்றும்
அந்தரிஷ கத ஸ்ரீ மான் -யுத்த -16-17- என்றும்
ஸ து நாக வர ஸ்ரீ மான் -என்றும்
பரமனைப் பயிலும் திருவுடையார் -திருவாய் -3-7-1- என்றும்
தாஸ்ய ஸ்ரீ யும் -கைங்கர்ய ஸ்ரீ யும் யுடையராய்
அவன் பார்யாத்வேன நித்ய ஸ்ரீ யாய் இருக்குமா போலே  மாத்ருத்வேன-ச்வாமித்வேன-நித்ய ஸ்ரீ க்க்களுமாய் அன்றோ சூ ரி பரிஷத் இருப்பது என்னில்
1- அஜய்ய-
அவர்கள் எல்லாரும் ஜேதவ்யராய்இருப்பார்கள்
இவன் ஒருவனுமே ஜெயிக்க ஒண்ணாத படியாய் இருப்பான்
2- அஜய்ய –
ஜிதந்தே புண்டரீகாஷா -என்றும் –ஜிதம் பகவதோ ஜகத் -என்றும்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7- என்றும்
எல்லாரும் தோற்று கிடக்கும் இத்தனை போக்கி இவரை ஒருவராலும் தோற்பிக்க ஒண்ணாது –
இவருக்கு ஏற்றம் என்-சர்வ விஜய -என்றும் அபராஜித -என்றும் -கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா வெரியும் திரு நேமி -திருவாய் -6-10-2- என்றும்
ஆழ்வான் சத்ருக்களுக்கு ஜேதாவாய் அவர்களுக்கு அஜய்யராய் அன்றோ இருப்பது என்னில்
1-சாஸ்வத அஜய்ய –
ஆழ்வான் பூசல் யுண்டானால்அப்போது ஜெயித்து இருக்கும் அத்தனை அன்றோ
இவர் சர்வ காலமும் அஜய்யராய் இருப்பார்
2- சாஸ்வத அஜய்ய –
காதாசித்கம் அல்ல –
சத்யேன் லோகன் ஜயதி தீனான் தாநேந ராகவ குரூன் ஸூஸ்ருஷயா வீரோ தநுஷா யதி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்றும்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றும் எப்போதும் அநுபோக்தாக்கள் யுண்டாகையாலும்
அது தான் ஒரு பிரகாரம் இன்றிக்கே ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டைகள் எல்லாவற்றிலும் ஆழம் கால் பட்டு இருக்கையாலும்
எப்போதும் இவர்க்கு தோற்று இருப்பார்கள் -இவர் எப்போதும் அஜய்யராய் இருப்பார்
இதா நீ மிவ சர்வத்ர த்ருஷ்டான் நாதி கமிஷ்யதே என்று லோக வ்யாப்தி விருத்தமாக வருவது  உண்டோ -பங்கம் ஜெயம் சாபதுரவ்ய வஸ்தம்-என்றும்
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜெயபராஜயௌ-என்றும்
ஜயாபஜயங்கள் அவ்யவஸ்திதங்கள் அன்றோ -ஏக ரூபமாகக் கூடுமோ என்ன
1- த்ருவ –
சர்வச்ய வசீ சர்வச்யேசாந -என்றும்
ந தஸ்யேச கச்சன  தஸ்ய நாம மகாத் யச -என்றும்
ந தத் சமச்சாப்யாதி கச்சா த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய -திருவாய் -2-3-2-என்றும்
சர்வாதிகனாய்  சர்வ வி லஷணனாய் இருக்கையாலே லோக சாமான்ய சங்கை பண்ண ஒண்ணாது
ஜெயமும் வ்யவச்திதமாய் இருக்கும்
2-அஜய்ய சாச்வதோ த்ருவ
என்று அஜய்யராய் இருக்கும் இருப்பில் சர்வ கால சம்பந்தியாய் இருக்கும் –
த்ருவ மசாலா மம்ருதம் விஷ்ணு சம்ஜ்ஞம் சர்வாதாரம் தாம -என்று வ்யவஸ்தி தாஸ்ரயமுமாயும்   இருப்பர்
3- த்ருவ
விஷ்ணு பரம என்று லோகத்தில் வி லஷண புருஷர்களில் மேலாம் இடத்தில் எல்லை நிலமாய் இருப்பர்
4- த்ருவ –
உபே பவத ஒத் ந ம்ருத்யுர் யஸ்ய உபசே ச நம் –கடக-1-2-25-என்றும்
ஏகோ ஹ வை நாராயண ஆசீன்ந ப்ரஹ்மா நேசா ந நேமீ த்யாவாப்ருதிவீ -மகா உபநிஷத் -என்றும்
யாதும் இல்லா வன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் -4-10-1-என்று
ப்ரஹ்மே சேநாதி சர்வமும் சம்ஹ்ருதமான வன்று எல்லாவற்றையும் உண்டாக்குகைக்குத் தான் ஒருவனுமே யுளனாய் ஸ்திரனானவன் –

ஆக –
இந்த ஸ்லோகத்தால் –
நித்ய விபூதி பூஷண  ஆயுத பத்னீ பரிச்ச தாதி யோகமும்
ஸ்வ இதர வி லஷணத்வமும்
சொல்லிற்று –

———————————————————————————————————————————————————————————–

மூன்றாவது ஸ்லோகம் –
அவதாரிகை –
இப்படி வ்யாவ்ருத்தரானவர் -திவி திஷ்டதி -முண்டக -1-1-7- என்றும்-
திவ்யோ தேவ ஏகோ நாராயண -முண்டக 2-2-10-என்றும் -பரம பதத்திலே அன்றோ –
ஏஷ-என்னும்படி கர்ம பூமியிலே  சந்நிஹிதராய் -மாநுஷ வேஷமும்  கையும் வில்லுமான இவர் என்-என்ன
மானுஷம் வபுராஸ் தாய விஷ்ணு சத்யா பராக்கிரம -என்று
அவர் தான் தேவாதிகளால் படாத படி ப்ரஹ்மாதி முகத்தாலே வரம் கொடுத்த படியாலே
தாம் பொய்யாகாத படி தம்மைக் காக்க மண்ணிலே இட்டு மயக்கிச் சுற்றுப் பரிகாரம் நர வா நரங்களாய் அவதரித்து நிற்கிறபடி காண்-என்கிறாள் மூன்றாம் ஸ்லோகத்தால் –

மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை–114-16-

1-மா நுஷம் வபுராஸ்தாய-
திவி திஷ்டதி -என்றும் –
வைகுண்டேது  பரே லோகே –ஆஸ்தே விஷ்ணு -என்றும்
பரமபதத்தில் இருந்த விஷ்ணு தான் கிடீர் ஆதி யஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -திருவாய் -3-5-5–
2–மா நுஷம் வபுராஸ்தாய–வர மந்யத்ர மா நுஷாத்-பால -16-5- என்று வரம் கொள்ளுகைக்கும் பாத்தம் போராத ஷூ தர மனுஷ்யர் சரீரத்தை கிடீர் பரிக்ரஹித்தது
3- -மா நுஷம் வபுராஸ்தாய–
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் -திருமாலை -3-என்று உபா லம்ப விஷயமான த்தைக் கிடீர் ஆதரித்து அருளியது
4- -மா நுஷம் வபுராஸ்தாய–
இச்சாக் ருஹீதாபி மதோருதேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று வடிவை மாறாட்டும் இத்தனை போக்கி –
வஸ்து வஸ்த்வாத் மகம் குத-என்று ஸ்வரூபத்தை மாறாட்ட ஒண்ணாதே –
5- மா நுஷம் வபு –
அஜாயமா நோ பஹூ தா விஜாயதே -என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5- என்றும்
உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் -1- என்றும்
கர்ம பந்தமான பிறவி தனக்கு இன்றிக்கே இருக்க அநுக்ரஹத்தாலே ஆஸ்ரீத ரஷண அர்த்தமாக அவன் கோலின வடிவுகளிலே இதுவும் ஓன்று இத்தனை அன்றோ –
பஹஊதா விஜாயதே -என்று -உபேந்திர -மத்ஸ்ய -கூர்ம -வராஹ -நாரசிம்ஹ வாம நாதிகளான தேவ திர்யக் மனுஷ்யாதி  பரிக்ரகாம் பண்ணுகிறது போராமல்
விவிதம் ஜாயதே -என்று நரம் கலந்த சிங்கமாயும் -ஹயம் கலந்த நரமாயும் -ஹன்சம் கலந்த தேவனையும்
அடுத்ததோர் உருவாய் -திருவாய் -8-1-3- என்றபடி -வேறு ஒரு வடிவோடு கூடி வேறு ஒரு வடிவாயும்  தோற்றிலனோ
6-ஆஸ்தாய-
-எடுத்துக் கொண்டு -ஸ்வதஸ் ஸித்தம் இன்றியிலே கொண்டு கூட்டாய் இருந்தபடி -ஏறிட்டுக் கொண்டபடி –
7- ஆஸ்தாய –
ஆஸ மந்தாத் ஸ்தித்வா -அனுபரிமாணனானஜீவனைப் போலே -ஹ்ருதி ஹ்யயமாத்மா -என்று ஏக தேசத்திலே அடங்குகை அன்றிக்கே விபு வாகையாலே சரீரம் முழுக்க வியாபித்து –
8- ஆஸ்தாய –
சரீரத்து அளவேயோ -அநேக ஜீவே நாத்ம நா  -என்றும்
தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -என்றும் –
ப்ராணோ அஸ்மி பிரஜ்ஞாத்மா -என்றும்
அடியேன் யுள்ளான் -திருவாய் -8-8-2-என்றும்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை -திருவாய் -8-8-4–என்றும்
ஆத்ம சரீர இந்த்ரிய பிராண பிரஜ்ஞாதிகள் எல்லாத்திலும் நின்றும்
இப்படி எங்கும் பரந்து உளனாகைக்கு அடி என்-என்னில்
1-விஷ்ணு –
விஷ்லு வ்யாப்தௌ-இலே நிஷ்பன்ன பதம் ஆகையாலே -வியாபகன் ஆகையாலே -என்கிறது
அன்றியிலே -2- விஷ்ணு -என்று
விஸ பிரவேச நே -என்ற தாதுவாய்-ஸோ அந்தரா தந்திரம்  ப்ராவிசத் -என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவா நுப்ராவிசத் தத் நுப்ரவிச்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் -சர்வ அநு ப்ரவஷ்டா வாகையாலும் -என்றுமாம் –
3-விஷ்ணு சங்க சக்ர கதா தர –
ஏதஸ்மின் நந்தரே  விஷ்ணு ரூப யாதோ  மஹா தாயாதி -சங்க சக்ர கதா பாணி -பால -15-16-என்று
பாக ப்ரதிக்ரஹார்த்த மாகத்-தசரத யாக ஹவுஸ் கொள்ள – திரண்ட தேவர்கள் திரளிலே வந்தவன் தானே இவன் என்று ப்ரதி சந்தானம் பண்ணுகிறான் ரிஷி
4- விஷ்ணு –
ரிஷியே அல்ல -சா தம் சமா சாத்ய வி ஸூ த்த சத்வா மனச்வி  நீ -கிஷ்கிந்தா -24-3- என்ற தாரையைப் போலே ராம சந்நிதியிலே மயர்வற மதி  நலம் பிறந்து ஒரு போகம் சாஷாத் கரித்து
தத்ர த்வம் மா நுஷோ பூத்வா ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் –சமரே ஜஹி ராவணம் -பால -15-20-என்று தேவர்கள் அபேஷித்தவர் தாமே இவர் -என்கிறாள் –
இப்படியே பர வஸ்து தானாகில் மனுஷ்யத்வம் ஏறிட்டுக் கொள்ளுகைக்கு அடி என் என்னில்  –
1- சத்ய பராக்கிரம –
சத்யா வால்யர் ஆகையாலே -என்கிறது –
2- சத்ய பராக்கிரம –
க்ரமு பத விஷேபே -இ றே-பத  விஷேபம் ஆகிறது பத பிரயோகம் –
பத வாக்ய ரூபமாய் இ றே வசன வ்யக்தி இருப்பது -இத்தால் -தேவர்களால்  படாதபடி அடியிலே வரம் கொடுத்த படியாலே
தாமான தன்மையிலே கொல்ல ஒண்ணாது என்று சத்யா வசனம் பண்ணினத்துக்காக இவ்வடிவு கொண்டார் -என்கை-
வேஷம் மானுஷமாய் மாராடினால் வீர்ய சௌர்யாதிகளும்மராடுமோ -என்னில்
3- சத்ய பராக்கிரம
சத்யகாம -சத்ய சங்கல்ப  -என்றும் -தா இமே சத்யா காமா -என்றும் -ஸ்வாபாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்றும்
விக்ரஹம் மாறினாலும் பராக்ரமாதி குணங்கள் சதைகரூபமாய் இருக்கும் -என்றுமாம் –
4- சத்ய பராக்கிரம –
ஒருபடிப்பட்ட பராக்கிரமம் யுண்டு -பற்றை ஆக்ரமிக்கை -சத்ருக்களை பரிபவிக்கை -அத்தை யுடையராய் இருப்பர்
இப்படிப் பரிபவம் பண்ணிற்று தனியே நின்றோ -என்னில் 1- சர்வை பரிவ்ருதோ தேவை –
அவனாலே செறுப்புண்ட தேவர்கள் அடையக் கூடினார்கள் –
2-சர்வைர் தேவை –
பூர்வ தேவர்களான அசூரர்களோடு அந்ய தமரான தேவர்களோடு வாசி அறக் கூடினார்கள் –
3- சர்வைர் தேவை –
தேவதா நவயஷ கந்தர்வ கின்னர கிம்புருஷ ப்ரப்ருதி சமஸ்த தேவ ஜாதியும் சூழ்ந்தது –
4- சர்வை பரிவ்ருத –
முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர் குறைந்தார் இல்லை –
5- தேவை –
தீவு க்ரீடா விஜிகீஷா வ்யவஹாரத் யுதி ஸ்துதி கதிஷூ -என்று இத்தனை யுண்டு இ றே தாத்வர்த்தம் –
விளையாட்டு -வழக்கு -தேஜஸ் -துதி -கதி -பொருள்கள் யுண்டே தாதுவுக்கு –
முதல் க்ரீடையிலேயாய்-க்ரீடந்தோ நந்தவநே  ரௌத்ரேண கில ஹம்சிதா -பால -15-23- என்று ராவணனாலே நலியப் பட்டு க்ரீடிக்கப் பெறாதே இருந்தார்கள்
இப்போது யுத்த கிரீடை பண்ணும்படி பெருமாளைப் பற்றினார்கள் –
6- தேவை –
ராஷஸ நிர்ஜிதா -என்று முன்பு தோற்றுக் கிடந்தவர்கள் இப்போது இவனை வேல்லுவதாக பெருமாளை அண்டை கொண்டார்கள்
7- தேவை –
ஸ்வயம் ஜல்பதே -என்று பயப்பட்டு -வாயைத் திறக்கவும் மாட்டாதே இருந்தவர்கள் இன்று பெருமாளை
அவஷ்டம்பித்துப் பூசலிலே புக்கு வீர வாதமும் பரோ பாலம்பமும் பண்ணும்படி யானார்கள் –
8- தேவை –
ராவணன் கையிலே தோற்றுத் தேஜோ ஹீ நராய் இருந்தவர்கள்  இன்று ராவணனைக் கொன்று புகர் படிக்கும்படி வந்தார்கள் –
9- தேவை –
முன்பு ராவணனைப் புகழைத் தொடங்கி-வீணாம் சம்ஹார நாரத ஸ்துதி  கதாலா பைரலம் தும்புரோ -என்று
அது தனக்கும் இடம் பெறாதே திரிந்தவர்கள் கலக்கமற்று
பவான் நாராயணோ தேவ  -எனபது –புஷ்கராஷ மஹா பாஹோ -எனபது -சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -என்பதாய் ஸ்தோத்ரம் பண்ணும் படி யானார்கள் –
10-தேவை -கதியைக் குறிப்பதாய் –
சாரணாஸ்ஸ திசோ கதா -என்னும்படி வாசலிலே கட்டுண்டு கிடப்பாரும் -தி கந்தங்க ளிலே ஓடிப் போய் ஒளித்துக் கிடப்பாரும் ஆனவர்கள் –
அத்ய வை நிர்ப்பயா லங்காம்  பிரவிஷ்டா ஸூ ர்யச்மய -என்னும்படி ச்வை ரகதிகளாய்த் திரியத் தொடங்கினார்கள் –
இப்படி பீதரேத் திரிந்தவர்கள் இப்போது ராவணனைக் கொல்ல வந்தபடி என் என்னில் –
1-வாநரத்வம் உபாகதை –
அவர்களும் சாகாம்ருகங்களாய்-மறைந்தவர்களாய் வந்தார்கள் –
2-வாநரத்வம் உபாகதை —
அவன் நரனான வாறே இவர்கள் வா நர ரூபி யானார்கள் -ஹீ நான்ன வஸ்த்ர வேஷ ஸ்யாத் சர்வதா குரு சன்னிதௌ-என்று
ஸ்வாமி சந்நியியில் ஒரு மாற்றுத் தாழ நிற்க வேணும் இ றே-
3- வாநரத்வம் உபாகதை —
என்று உப லஷனமாய் ருஷ கோபுச்ச வா நரர்களாய்பிறந்தார்கள் –
4- வாநரத்வம் உபாகதை —
பின்னையும் இரண்டு ஜாதி யும் யுண்டாய் இருக்க வா நர விசேஷத்தைச் சொல்லுவான் என் என்னில்
வா நரங்களாலே இலங்கை அழியக் கடவது என்ற நந்தி கேஸ்வர சாபம் பளித்தமை தோற்றுகைக்காக-
வாநரத்வமா கதை -எண்ணாதே -வாநரத்வம் உபாகதை -என்பான் என் என்னில் –
விஜ்ஞான பிரம்சமாப் நோதி-என்று பூர்வ ஜன்ம வாசனையை மறந்து வெறும் வா நரமாகை அன்றிக்கே
தேவாத அநு குணா ஜ்ஞான சக்த்யாதிகளை விடாதே
கார்யப் பட்டாங்காலே
வா நர வேஷ மாதரத்தை ஏறிட்டுக் கொண்டார்கள் என்று தோற்றுகைக்காக –
5-வாநரத்வம் உபாகதை –
ஸூ க்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-20-என்று பெருமாள் சரணம் புகும் போதுஅதின் வாசி அறியும் ஜாதியிலே யாக வேணும் இ றே
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-31–என்றும்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ ததே -யுத்த -21-1- என்றும் –
சமுத்ரத்தை சரணம் புக்க விடத்திலே அது வாசி அறியாமையாலே பலித்தது இல்லை இ றே –
6-வாநரத்வம் உபாகதை –
கர்த்தரி நிஷ்டையாய் கர்ம பந்தனமாய் அவகாசம் அன்றிக்கே வர அவிரோதமாக ஸ்வ புத்த்யதீந ச்வீகாரத்தைச் சொல்லுகிறது
இத்தேவர்களால் பெருமாள் பெற்றது என் -என்னில்
1- பரிவ்ருத -சூழப் பட்டார் –
நமக்காகக் கீகட தேசத்திலே எழுந்து அருளினார் -விரோதி பஹூளமாய் இருக்க -என் புகுகிறதோ என்று  பரிவாரங்களாலே சூழ்ந்து இருக்கப் பட்டார் –
2-பரிவ்ருத –
பரிதோ வ்ருத-சுற்றிலும் சூழப் பட்டார் -ஒரு பார்ச்வம் வெளியானால் அவ்விடத்தில் ராஷசர் புகுவார்கள்  என்று
ஸ்ரீ நலரும் பரிகரும் கிழக்கும் -ஹனுமத் ப்ரப்ருதிகள் தெற்கும் -ஜாம்பவத் ப்ரப்ருதிகள் மேற்கும் -கஜன் கவயாதிகள் வடக்குமாக சூழ விட நோக்கும்படி யானார்
3- வாநரை பரிவ்ருத –
சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்த -59-45-என்று
கோப்த்ருத்வ வாரணம் பண்ணப் பட்டார்
4- தேவை பரிவ்ருதஸ் த்வாம் ஹதவான் –
என்றாய் -ராவணச்ய வதார்த்திபி அர்த்தித -அயோத்ய -1-7- என்கிறபடியே தேவர்களால் அபேஷிக்கப் பட்டு உன்னைக் கொன்றார்-என்றுமாம்
5- தேவை பரிவ்ருதோ ஹதவான் –
என்று பாக ப்ரதி க்ரஹ சமாஜத்தில் அபேஷித்த அளவன்றிக்கே  கார்ய காலத்தில் மறக்கக் கூடும் என்று தேவர்கள் தான் பூசலிலே பெருமாள் அருகே நின்று
வைத்த நாள் வரை எல்லை குறுகிற்று -திருவாய் -3-3-10- என்றும்
அத –மாதலிஸ்–111-1/2- என்றும் பிரம்மாஸ்திரம் தொடுத்து அருளீர் -என்று அபேஷிக்கக் கொன்றார் -என்றுமாம் –
6- வாநரத்வம் உபாகதைர் தேவை பரிவ்ருத –
விஷத் த்ருஷ்டிகளுடைய கண் படலாகாது என்று தாங்களும் மறைந்து பெருமாளையும் மறைத்தார்கள் -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்