மாலை நண்ணி -பிரவேசம் –
அறுக்கும் வினையாயின -என்ற திருவாய் மொழியிலே அவனை பெற
வேண்டும் என்ற எண்ணமேயாய்ச் சென்றது –
எண்ணின சமயத்திலே விரும்பியபடி கிடையாமையாலே
மிக்க துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று -மல்லிகை கமழ் தென்றல் என்ற திருவாய் மொழியில்
அது தான் இரவில் விசனமாக நோவு பட்ட படி அன்றோ –
இப்படி எண்ணினவாறு பெறாமையாலே
நோவு படுகிற இவருடைய துன்பத்தினை நினைத்து
சர்வேஸ்வரன்
நீரோ இப்படி எண்ணுவீரும்
அது கிடையாமல் துன்பப் படுவீரும்
உம்மைப் பெற வேண்டும் என்று எண்ணுவோரும் நாம் அன்றோ
-உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ
உமக்கு ஒரு குறை உண்டோ
கலங்கா பெரு நகரம் கலவிருக்கையாய் இருக்க
அவ்விடத்தை விட்டு
திருக் கண்ணபுரத்திலே வந்து நாம் எழுந்து அருளி இருப்பதும் உமக்காக அன்றோ
நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் முடிவிலே -செய்யக் கடவோம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
என்று சமாதானம் செய்ய
சமாதானத்தை அடைந்தவராய் இவரும்உவகையர் ஆகிறார் –
அவன் ஓன்று செய்யக் கடவோம் -என்றால்
அப்போதே பெற்றதாக நினைத்து உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது –
இப்படி உவகையராய்
அவன்படி இதுவான பின்பு
சர்வேஸ்வரன்
எல்லாராலும் பற்றப்படுபவனாய்க் கொண்டு –
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் –
தொழுது எழுமினோ தொண்டீர் –
திருக் கண்ணபுரத்தில் அணித்தாக எழுந்து அருளி இருக்கிறான்
எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்
அடையும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள் –
முதல் நான்கு பாசுரங்களில் பக்தி பற்றி அருளி –
மேலே பிரபத்தி பற்றி அருளி
பக்திக்கு சாதனம் இல்லாதார் பிரபத்தியை செய்யுங்கோள்
அதற்கு தகுதியான மன உறுதி இல்லாதார்
திருக் கண்ணபுரம் -என்ற வார்த்தை மாத்ரம் ஆகிலும் சொல்லுங்கோள் -பத்தாவது பாசுரத்தில் –
அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்
ஆனபின்பு எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்
என்று பரோபதேசத்தில் மூளுகிறார்
மோகித்துக் கிடப்பார் ஆகில் கிடப்பார் இத்தனை போக்கி
உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு நலம் சொல்லி அல்லது நிற்க மாட்டார் –
பிராரப்த கர்மங்களின் முடிவில் மோஷமாகக் கடவது -என்று அன்றோ
வேதாந்தங்களில் சொல்லப் பட்டு இருக்கின்றது
சரீரத்தின் முடிவில் நீர் விரும்பியதை செய்யக் கடவோம்
என்று சர்வேஸ்வரன் சொன்ன இடமும்
அதனைக் கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்தா -என்னில்
இத் திருவாய் மொழியில் -பக்தியை செய்யுங்கோள் என்றும்
அது மாட்டாதார் பிரபத்தியை செய்யுங்கோள் என்றும்
சொல்லிற்றே அன்றோ –
வேதாந்தங்களில் உபாசகன் ஆகிற அதிகாரியை நோக்கிக் சொல்கிறது
இங்குப் பிரபன்னனுக்கு சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற
வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
இந்த உபநிஷ வாக்கியம் தான் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ
கர்மங்களின்முடிவில்மோஷமஎன்பதனைச்சொல்லுகிறதோ
என்று விசாரித்து
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறது
என்று -ஸ்ரீ பாஷ்யகாரர்-சித்தாந்திப் படுத்தி உள்ளாரே அன்றோ
அதனோடு சரீரத்தின் முடிவில் மோஷம் என்று இங்கே சொன்னது முரண் படாதோ என்னில்
நியாயத்தோடு கூடிய வாக்கியம் அன்றோ பொருளை அறிவிப்பதற்கு உரியது ஆவது
உபாசகனுக்கு தான் பற்றின உபாயம் முற்றுப் பெற்ற பின்னரே பலிக்க வேண்டி இருக்கையாலே
அவ்வளவும் நியாயம் நடக்கும்
பிரபன்னன் முதல் அடியிலே -என்னுடைய எல்லா பாபங்களுக்கும் நீயே கடவாய் -என்று கொண்டு
சர்வேஸ்வரன் பக்கலிலே
பரந்யாசம் செய்தவன் அன்றோ
இவன் தான் இனி செய்கிறது என்று ஓன்று உண்டாய்
அது முடிந்த பின்பு பெற வேண்டும் என்னும்
கால தாமதத்துக்கு காரணம் இல்லையே
இதனால் பரந்யாசம் பண்ணப் பட்ட சர்வேஸ்வரனுக்கு
ஆற்றல் இல்லை
அதனால் அது விளம்பதுக்கு காரணம் ஆகின்றது என்று சொல்லுவதற்கும் இன்று –
ஆக
இப்படி நியாயங்கள் காட்டினவாறே
இவனுக்கு சரீரத்தின் முடிவிலே பேறு கிடைப்பதற்கு தட்டு இல்லை அன்றோ
இனித் தான்
அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3
அவள் பகவானைச் சரண் அடைந்தாள்
பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
அதனுக்கே கவல்கின்றேனே -திருமாலை
அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –
த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-
த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும்
சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை –18-66
நன்று
ஆனால் சரணாகதி செய்த உடனே பகவானை அடைதல் வேண்டாவோ
இந்த விரோதியைப் போக்கி உன் திருவடிகளைத் தர வேண்டும் என்று அன்றோ இவன் விரும்புவது
பின்பும் தனக்கு விருப்பம் இல்லாத இச் சரீரத்தோடு இருக்கும் இருப்பு
கர்மங்கள் அனுபவித்து முடிவு பெறாமையாலே ஆவதோ
சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆவதோ -என்னில்
சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆகில் அவனுக்கு சில குற்றங்கள் உண்டாகும்
அவன் தான் நம் இரு வினைகளையும் நடுவே துண்டித்து
அவ்வருகே கொண்டு
போகிறேன் என்று சொன்னதோடும் முரண்படும்
ஆனபின்பு கர்மங்கட்கு கட்டுப் பட்டவர்கள் போன்று இன்ப துன்பங்களை இவனும்
அனுபவித்து இருக்கையாலே கர்மத்தாலே யாம் இத்தனை அன்றோ –
நன்று
இனிக் கர்மம் நடையாடக் கடவது ஆனால்
பிராரப்த கர்மங்களை அனுபவித்து முடிகிற வரையிலும்
போகத் தட்டு என் என்னில்
அதிகாரி விசெடத்தாலே அது வேண்டா
யாங்கனம் எனின்
இவன் சரணாகதி
செய்த அளவிலே முக்தனாம் ஆகில்
இது தன்னை நச்சுப் பொய்கை போன்றதாக நினைத்து அஞ்சுவார்கள் –
அதனால் ஆள் பற்றாது
இனி அவனை இங்கே சில நாள் வைக்கவே
ஸ்ரீ வீடுமரைக் கொண்டு நாட்டுக்கு வெளிச் சிறப்பைச் செய்து கொடுத்தால் போலே
இவன் சிலருக்கு உபதேசித்தும்
இவனுடைய ஒழுக்கைத்தைக் கண்டு திருந்துவாருமாய்
இங்கனம் சில நன்மைகளும் காரணமாக இருக்கும்
இனித் தான் -இவனை நமக்கு தந்த சரீரம் அன்றோ -என்று
இறுதியாக இந்த சரீரத்தை ஈஸ்வரன் தானாக உபஷிக்கவும் மாட்டான்
சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே
சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி
இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்
இது காறும் ஆர்த்த பிரபன்னன் விஷயமாக மூன்று விஷயங்களை அருளி
மேலே த்ருப்த பிரபன்னன் விஷயமாக ஒரு விஷயம் அடுளிச் செய்கிறார்
இவன் தான் சரணாகதி செய்யும் காலத்தில்
இப்போதே இவ் உடல் நீங்கி உன் திருவடிகளை பெற வேண்டும் -என்னும் விரைவும்
இவனுக்கு உண்டாக காரணம் இல்லை
முகம் பழகினது ஆகையாலே -இச் சரீரத்தை விட -என்றால் கடுக இசையான் –
இனி வேறு ஒரு சரீரத்தை அடைதல் கர்ப்ப வாசம் செய்தல்
செய்யாது ஒழிய வேண்டும் என்னும் அளவாயிற்று இவனுக்கு உண்டாகில் உண்டாவது
ஆகையாலே -தத் க்ரது-நியாயத்தாலே எங்கனம் நினைத்தானோ அங்கனமே பலித்தல் –
அப்படியே பேறாக இருக்கும்
ஆகையால் இவனுடைய நினைவையும் நோக்கி
இவன் தான் இச் சரீரத்தில் ஆசை வைத்து இருந்தானே ஆகில் நாலு நாள் இருந்திடுவானுக்கு
என்று இருப்பன் சர்வேஸ்வரன் –
ஆனால்
இங்கு இருக்கிற நான்கு நாள்களும் ஆதி வியாதிகளுக்கு இடம் கொடாதபடி
மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு தோற்ற மிக உயர்ந்த இன்பத்தினை உடையவனாக
இவனை வையாது ஒழிவான் என் -என்ன
உலகத்து மக்களைப் போன்று ஒன்றனை இழந்த காலத்தில் துன்புற்றும்
விரும்பிய பொருள்களை பெற்ற காலத்தில் இன்புற்றும்
போரும்படிக்கு தகுதியாக வைக்கிறது என் -என்னில்
இவன் தன் சரீரத்தைப் போக்கி உன்னைத் தர வேண்டும்
என்றோ அன்றோ விரும்பியது
இச் சரீரம் தான் தண்ணியது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் விட மாட்டாது
இச் சரீரத்தில் இன்பத்தையே அனுபவிக்குமாறு வைக்கும் அன்று
இது தான் நன்றாய் இருந்ததாகில் ஈனனம் சில நாள் இச் சரீரமே தொடர்ந்து நமக்கு இருந்திடுக
என்று விரும்புவான் அன்றோ
இவனுடைய இச்சைக்கு ஈடாக வைக்கும் அன்று இன்னமும் ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி உண்டாகவும் கூடுமே
ஆகையால்
இவனுடைய நலத்திலே நோக்கு உடையவனாய்
இவன் இருந்தபடி இருக்கிறான் என்று இருப்பான் இறைவன்
-ஆகையால் முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிய
இனி வேறு ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி பிறப்பதற்கு முன்பே ஈஸ்வரனுக்கு
கார்யம் செய்து தலைக் கட்டலாய் இருக்கும்
முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிந்து கொடு நிற்கும்
மேல் வரப் புகுகிறது அறியாமையாலே அச் சரீரத்திலே ருசி இல்லை
இது தான் பொல்லாதது என்று போலியாக அறிந்தும் வைக்குமே
இவன் முதலிலே இச் சரீரத்தை நீக்கி அருள வேணும் -என்று ஒரு வார்த்தை சொல்லி வைக்கையாலே
அவன் விரும்பாதது ஒன்றை செய்தானாகவும் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
இனி
இறக்கும் நிலையிலே காஷ்ட பாஷானன்களைப் போலே இருப்பானே அன்றோ இவன் தானே
ஆகையால் முதலில் சொன்ன வார்த்தையை கொண்டு இவன் விலக்க மாட்டாத அளவில்
ஈஸ்வரன் காரித்தைச் செய்து தலைக் கட்டுவான்
தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் -ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –
நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –
இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ
மனஸி ஸ்திதே –
நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது
பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ –
மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34-
காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்
என்றான் அன்றோ அவனும்
த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன
பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்
எந்தை பெயர் புனை யாயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகராகிய தளவத் திரு நகையாய்
கொந்து உற்றெழு குழலாய் குழல் நிகராகிய மொழியாய்
வந்துற்றது என என அன்னை மலர்த்தாள் களில் வீழ்ந்தான் –
வில்லி புத்தூரார் செய்யுள் -ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-
உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க
அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல
விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்
ஸூஸ்வஸ்தே சரீரே –
வேறுபாட்டினை அடியைக் கூடியதான இந்த சரீரமும் ஒரு நிலையிலே நிற்பது
தாது சாம்யே ஸ்திதே –
அதற்கு உறுப்பாக தாதுக்களும் ஓன்று முடங்கி
ஓன்று நிமுருகை அன்றிக்கே இவை எல்லாம் சமமாய்
சரீரத்திலே ஒரு நொய்ம்மை பிறந்து
சத்துவம் தலை எடுத்த போதாக
நம்மை யாவன் ஒருவன் நினைக்கிறான் -என்றது
நாம் யார் -சரீரம் ஆகிற இது அறிவில்லாத பொருளாய் இருந்தது –
சரீரத்துக்கு வேறு பட்டதாய் ஒரு ஆத்மா உண்டு
அவ்வாத்மாவானது ஈஸ்வரனுக்கு அடிமைப் பட்ட பொருள்
சர்வேஸ்வரனைப் பெறுதல் இவ்வாத்மாவுக்கு மோஷம் ஆகிறது -என்று நினைக்கிறவன் -என்றபடி –
விஸ்வ ரூபஞ்ச மாம் –
குடல் தொடக்கத்தால் முள் பாய்ந்தால் வரும் துன்பம் ஆத்துமாவினது ஆமாறு போலே
இவற்றுக்கு வந்த இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாம்படி
எல்லா வற்றையும் சரீரமாக உடையனாய் இருக்கிற என்னை –
அஜம் –
இவனைப் போன்று பிறவி காரணமான கலக்கம் இன்றிக்கே இருக்கை அன்றோ –
விஸ்வ ரூபஞ்ச மாம் -அஜம் -நாராயணன்
ஸ்வாமித்வம் சௌலப்யம் வாத்சல்யம் சௌசீல்யம்
அஜம் -ஞான சக்தியாதிகள் –
தத
ஆகையாலே
தம் காஷ்ட பாஷாண சந்நிபம் ம்ரியமாணம் அஹம் ஸ்மராமி
நடையாடித் திரியும் அன்று இவனுக்கும் உண்டே அன்றோ இந் நினைவு
அறிவில்லாத பொருளைப் போன்று கிடந்த அன்றும்
இவன் நினைதிலன் -என்ற தேவை இடாதே
நான் அவனை எப்போதே நினைத்தபடி நிற்பன்
மத் பக்தம் –
அடைகொடு பாழ் பொகடுமவனையோ அவன் பற்றிற்று -என்றது –
பல நாள்கள் பச்சை இடுவித்துக் கொண்டு
காரிய காலத்தில் வந்தவாறே
பச்சை இடாத நாள்களை எண்ணி
அகற்றுமவனையோ பற்றிற்று -என்றது
நயாமி பரமாம் கதிம் –
கள்வன் கொல் -பெரிய திருமொழி – 7-7-1-பிராட்டியை
அத்வாளத்தலையை-முந்தானையின் தலையில் -இட்டு
மறைத்து கொடு போனால் போலே
தானே கையைப் பிடித்து கொடு போமாயிற்று -என்றது
ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்
பெரிய திருவடியை வரக் காட்டி யாதல்
கொடு போகை அன்றிக்கே
ஆதி வாஹிகரில் முதன்மையான தானே கொடு போம் -என்றபடி –
——————————————————————————————————————————————————–
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே
———————————————————————————————————————————-
இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது
இறைவனைப் பற்றுமின் -என்பது-
அதனை இப் பாசுரத்தில் சுருங்க அருளிச் செய்கிறார்-
மாலை நண்ணித் தொழுது எழுமினோ –
சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டு
அடைந்து உய்வு பெறுவதற்கு பாருங்கோள்-
மால் -சர்வேஸ்வரன்
இனி மாலை நண்ணி -என்பதற்கு
சிநேகத்தின் காரியமான அன்பினைப் பொருந்தி -என்று பொருள் கூறலுமாம் -என்றது
பக்தி உடையவர்களாய் -என்றபடி -தொழுது எழுமினோ -என்கிறார் –
தொழுது எழு -என்கிற தம்முடைய வாசனையாலே -என்றது
அருளினான் -என்று பிரபத்தியை பற்றி இழிந்தவர் ஆகையாலே
தன் வாசனை தோற்றச் சொல்லுகிறார் -என்றபடி
சர்வேஸ்வரன் இந்த ஆத்மாக்களின் கூட்டத்துக்கு எல்லாம் சேஷி யாதலானும்
அவனை குறிக்க அடிமையாகும் தன்மை எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலும்
பலர்க்குமாக எழுமினோ -என்கிறார் –
வினை கெடக் –
பகவானை அடைதற்கு தடையாக உள்ள வினைகளின் கூட்டம் கெடும்படியாக -என்னுதல்
அன்றிக்கே
மல்லிகை கமழ் தென்றல்-என்ற திருவாய் மொழியில் கூறிய பிரிவுத் துன்பம் தீரும்படி -என்னுதல்
காலை மாலை –
இறைவனைப் பற்றுதற்கு கால வரை யறை இல்லை என்கை காலை-மாலையைக் கூறியது ஆதி நடு அந்தி வாய் -இரண்டாம் திருவந்தாதி -73- என்கிறபடியே
எல்லா காலங்கட்கும் உப லஷணம்-
கமல மலர் இட்டு-
எல்லா மலர்கட்கும் உப லஷணம் -என்றது
நீங்கள் விரும்பின இவ் உலகப் பொருள்களே அமையும் -என்றபடி –
நீர் –
அதிகாரிகளுக்கும் முன்புத்தை நீங்களே அமையும் -என்கை –
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
கடல் அணித்து ஆகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள்ள
மதிளாலே சூழப் பட்டு இருந்துள்ள திருக் கண்ணபுரத்திலே –
இத்தாலே -சிரமத்தை போக்கக் கூடிய தேசம் -என்று தெரிவித்த படி –
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே –
எல்லா உலகங்களையும் வயிற்றிலே வைத்து
அப்பொழுது தோன்றியது ஒரு ஆலம் தளிரின் மேலே
திருக் கண் வளர்ந்தவன்
இதனால்
உங்களுடைய விரோதியைப் போக்குதல் கூடாத செயல் ஆயினும்
அதனைச் செய்து முடிக்கும் வல்லமை உள்ளவன் என்பதனைத் தெரிவித்தபடி
ஆல் -நீரும் இடமும்
தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்
ஆலின் மேலிடத்து என்னுதல்
இரண்டாவது பொருளில் -மேல் ஆல் -என்பதில் உள்ள ஆல் அசை நிலை
அடி இணைகள்
அவனுடைய இரண்டு திருவடிகளை
தொழுது எழுமின் -என்க
ஆல்-செய்யுள் இன்பம்
மாலை நண்ணி –
துக்கம் -எதற்கு
கொடுப்பேன் சரீர அவசானம்
சமாஹிதர் ஆனார் ஆழ்வார் –
உம்முடைய பேற்றுக்கு நாம் தானே யத்தனம்
சரீர முடிவிலா கர்மம் முடிவிலா
இருக்கும் காலம் ஹிம்சை எதனால்
ஸ்திதே -நயாமி பரமாம் கதிம் –
அறுக்கும் வினை -மனோ ரதம்
கிலெசப்பட்டது சொல்லிற்று மல்லிகை கமழ் தென்றல்
துக்கம் நினைத்து -ஈஸ்வரன் -உம்மைபெற மனோ ரதம் -சு துர்லபம் வாசு தேவன் சர்வம் என்பார்
கிடையாமல் இலவு பட்டதும் நாமே
கலங்கா பெரு நகர் விட்டு திருக்
சரீர அவதானத்திலெ அபேஷிதம் பண்ணக் கடவோம்
சமாஹிதர் ஆகி ஹ்ருஷ்டர் ஆஹிறார்
ஓன்று செய்யக் கடவோம் என்றால் அப்பொழுதே பெற்றால் போல ஹிருஷ்டர் ஆகும் படி
அவன் படி இதுவான பின்பு –
இந்த பத்துக்கு இது உபதேச பதிகம்
ஈடுஎடுப்பும் இலன் -சுலபன் ஆஸ்ரயிக்க
பக்தி பண்ணவும் -தொழுது எழும்
சக்தி இல்லாதார் -சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிரபத்தி பண்ண வேண்டும்
சர்வ தரமான் பரித்யஜ்ய -விட்டு விட்டே பற்ற வேண்டும்
பிரத்யயம் –
த்யாகம்-
பெரிய விசாரம்
விட்டே பற்ற வேண்டும் நம் சம்ப்ரதாயம்
வடகலை -விட்டு இருப்பாய் ஆனால் -பற்று -சக்தி இருந்தால் பண்ணலாம்
சக்தி இல்லாதார் பிரபத்தி
புக்த்வா
அபக்த்யம் புக்தா -சாந்த்ராயனம் விரதம் அனுஷ்டிக்க
சாப்பிடா கூடாத வஸ்துவை சாப்பிட்டால் சாந்த்ராயனம் அனுஷ்டிக்க
ஸ்நாத்வா புஞ்சீத குளித்து இருப்பான் ஆகில் சாப்பிடு இல்லை குளித்தே உண்ண வேண்டும்
பக்தி ஸ்வரூப விருத்தம்
மர்கட -குரங்கு தாயைக் கட்டி –
பூனை குட்டி போல நாம் தாய் கவ்வி –
கட்டுரை விஷயம்
பிரமாணம்
வடகலை தென்கலை -பெயர் -நிர்தேச்யம் -பின்னால் தான்
பாஷைக்கு பெயர் உண்டு
கம்பர் -வடகலை தென்கலை வடுகு கன்னடம் –அமரர் ஆவரே -ஸ்ரீ ராமாயணம் எந்த பாஷை ஆயினும் –
கேட்ப்பார் நித்யர் ஆவார்
ஆழ்வார் -செந் தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் -அணி அழுந்தூர்
கலை -சாஸ்திரம் பாஷை
1650 அப்புறம் தான் சம்ப்ரதாயத்துக்கு இந்த பெயர்கள்
பக்தி செய்ய சக்தி இருந்தால் -இங்கு
உபாசகர் பார்த்து
பிரபத்தி அத்தியாவசியம் இல்லாதார் உக்தி மாதரம் போரும்
அவ்வளவு கொண்டு கை விடான் -ஆன பின்பு யெல்லாருமொக்க அவனை ஆஸ்ரயிக்க உபதேசிக்கிறார்
மோஹித்து கிடந்தார் ஆகில்
உணர்ந்தார் ஆகில் உபதேசம் பண்ணாமல் இருக்க மாட்டார்
சரீர அவசானம் எதற்கு அடுத்த ஷணம் கொடுத்தால் என்ன
மூன்று வகை கர்மங்கள் -அவசியம் அனுபோத்யம்-
போய பிழையும் -புகு தருவான் நின்றனவும் -காத்து இருக்கும் தலை மேல் உட்கார
நளன்-கால் அலம்பாமல் இருக்க பார்த்து –
சஞ்சிதம் ஆகாகி பிராரப்தம்
சஞ்சிதம் மலை மலைபோலே மேரு மந்த்ரம் போலே பாபப் கூட்டங்கள்
இதில் ஒரு கை அளவு எடுத்து அனுபவிக்க ஜன்மம் கொடுத்து -பிராரப்தம் பலன் கொடுக்க ஆரம்பம் –
கை அளவு பாபம் போக்க பல சரீரங்கள்
ஒரு சரீரம் -வந்த இடத்தில் புதிதாக சேர்க்கும் பாபங்கள் ஆகாமி –
சரணம் அடைதாருக்கு சஞ்சிதம் ஆகாமி இரண்டையும் கழித்து
பிரம்மா கல்பம் கோடி அநாச்யம் இஹ ஜந்து ஷணம் செய்கிறான் கூரத் ஆழ்வான் –
அனுபவம் செய்து கழிக்க முடியாதே நாய் வாலை நிமித்தல் மணல் எண்ணுதல் போலே
ஆகாமி கணக்கில் சேர்க்க மாட்டான் –
பிராரப்தம் போக்குவது இல்லை –
பக்தி யோக நிஷ்டன் முழுக்க அனுபவித்து கழிக்க வேண்டும் -அந்திம ஸ்மரதி வேணும்
பக்தி யோகம் தொடர வேண்டுமே அடுத்த ஜன்மத்திலும்
பிரபத்தி யோக நிஷ்டனுக்கு -பிராரப்தம் இந்த சரீரத்தில் -கழித்து –
கைங்கர்ய நிஷ்டர் -பிராரப்தம் கழிக்க -கஷ்டம் பட்டே ஆக வேண்டும் -அனுபவிக்க விட்டு வைக்கிறான் –
கிருபாவான் -இந்த கொஞ்சம் பிராரப்தம் ஒழிக்காமல் இருக்க காரணம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
வேதாந்தம் -பிராரப்தம் முடிந்தே மோஷம்
சரீரம் முடிவில் மோஷம் எப்படி –
ஸ்ரீ பாஷ்யம் -விசாரம் உண்டே –
நெருப்பை சொல்லி
நீரை சொல்லி
எரித்தே தீரும்
அணைத்தே தீரும்
முரண் இல்லையே –
கர்மம் ஸ்வாபம் அனுபவித்தே தீரும்
அவன் ஸ்வரூபம் ஸ்வாபம் இது -சமாதானம் ஸ்ரீ பாஷ்யம் சொல்லி
யாவது விமோஷயே அதில் இருந்து
கர்மம் முடிந்த பின்பா சரீரம் முடிந்த பின்பா
கர்மம் முடிந்த பின்பே சித்தாந்தம் ஸ்ரீ பாஷ்யம்
வேத வியாசர் -நியாய சஞ்சாரம் பண்ணி
தன்னுடைய முயற்சி பலிக்க உபாசகனுக்கு கால விளம்பம் உண்டே
அபிமானம் ஒதுங்கி -கால விளம்பம் இல்லாமல்
mercy petition கொண்டு தப்பி -லோகம் உதாரணம் உண்டே
சர்வேஸ்வரன் -அபிமானம் ஒதுங்கி –
பிரபண்ணன் சர்வ பரங்களுக்கும் கடவாய் நீயே -பரந்யாசம்
த்வயம் அனுசந்தானம் செய்யும் பொழுதே இது நாம் செய்கிறோம்
மேலையார் செய்வனகள் –
பொறுப்பை திருவடியில் வைத்து -விளம்ப ஹேது இல்லையே சித்தமான உபாயம் அவன் –
மரணமானால் வைகுந்தம் அளிக்கும் பிரான்
சங்கைகள் தீர்த்து பிரவேசம் அருளுகிறார் –
சரணாகதி செய்து சர்வ சக்தன்
சரீர அவசானம் பேறு தட்டு இல்லை
மாதவி -பகவந்தம் பிரபன்னா -அடைந்து விட்டாள்-
நரக அனுபவம் -நரகமே ஸ்வர்க்கம் ஆகும் நமனும் உட்கலனும் பேச –
அவதார ரகஸ்ய ஞானம் -த்யக்த்வா தேகம் புனர் ஜன்மம் இல்லையென்னையெ அடைகிறார்கள் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்றான் இ றே
கர்மம் முடிவில் மோஷமா தேகம் முடிவில் மோஷமா
ஆறு வார்த்தைகளில் ஓன்று தேவ பிரான் அருளி –
தேகாவசனே முக்திஸ்ஸ
சாஸ்திரம் கர்ம அவசானத்தில் முக்தி
தேவ பெருமான் சங்கை தீர்த்து அருளி -ஐந்தாவது வார்த்தை-
இப்படி நியாய சஞ்சாரம் பண்ணி –
சரீரம் இருக்கும் இருப்பு கர்ம சேஷம் இருப்பதாலா ஈஸ்வரன் வைத்து இருக்கிறானா –
காரணம் -என்ன வைத்து இருக்க
அநபிமதமான சரீரம் இனி இனி இருபத்து கால் கூப்பிட்டு
ஈஸ்வரன் வைக்கிறான் ஆகில் ஈஸ்வரன் தோஷம் உண்டாகும்
நயாமி பரமாம் கதிம் சொல்லியதை நடத்த வில்லை
கர்மத்தாலே தான் இத்தனை -துக்கம் அனுபவிக்கிறான் –
கர்மம் முடிந்த பின்பானால் -அதிகாரி விசேஷம்
அடுத்த ஷணம் முடித்தால்-பற்றுவார் துர்லபம் ஆகுமே –
உறாமை உற்றேன்ஆக்காமல் -நாயனார் அருளியது போலே
நாடு நச்சு பொய்கை ஆகாமைக்கு
நாட்டுக்கு உபதேசிக்க
விருத்தம் கண்டு லோகத்தார் திருந்த
சரீரம் இவன் பெற உபயோகம் -சரம சரீரம் கொண்டாட சரம சம்ஸ்காரம் வேறு தேகம் இல்லையே
அவனே ஆசைப்படுவான்
த்வரை நமக்கு அவ்வளவு இல்லையே
முகம் பழகின பின்பு உடனே விட இசையான்
இன்னும் ஒரு சரீரம் வேண்டாம் கர்ப்ப வாசம் கூடாது என்றே
கேட்பதே கொடுக்கிறான்
ஆர்த்த பிரபன்னருக்கு -உடனே கொடுத்து அருளுவான்
திருப்த பிரபன்னன் –
சபல புத்தி நாலு நாள் இருக்கட்டும் -விடுவான் ஈஸ்வரன்
கிருபாவாளன்-ஆகையால் -உடனே தொலைக்க விலை
துக்கம் தொலைத்தால் என்ன நாலு நாள் -அல்லாதார் போலே இல்லாமல்
நாட்டார் போலே பொரும்படி வைப்பது என்ன காரணம்
அதுவும் கருணை கார்யம்
துக்கம் படா விடில் சரீரம் விட்டு போக ஆசை விடானே
சரீரம் வெறுப்பு உண்டாக வேணுமே
பிராரப்த பலன் கொடுக்கிறான் –
நன்றாக இருந்தால் இது அனுவர்திக்க -இன்னம் இது போல சரீரம் கேட்பான்
ஹித பரனாய்-துக்கம் கொடுத்து அருளுகிறான்
படித்து -வேலை -சம்பாத்தியம் -விசாரம் இல்லாமல் படுத்து -அத்தை தான் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்
கர்ம பலன் கிருபா பலன் –
இன்னம் ஒரு சரீரம் ருசி பிறப்பதற்கு முன்னே கொடுத்து அருளுகிறான்
வராக சரம ஸ்லோகம் –
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன்
போலியாக சொன்னதையும் செய்து அருளுகிறான்
புருஷார்த்தம் செய்தானாக
காஷ்ட பாஷான சந்நிபம்-கல்லை கட்டை போலே
விலக்க முடியாத நிலை கார்யம் செய்து
அசித் போலே இருக்க தேவை இடாமல்
ராவணன் -சம்ஸ்காரம் எதிர்க்க முடியாதே
காஷ்ட பாஷான சந்நிபன் இருக்க
விபீஷணன் நீ தடுக்கிறாய்
ராவணன் சரீரம் -பிராதா நீ வந்தாயா தடுக்க
அஹம் ஸ்மராமி -நிகழ காலம்
அவன் ஸ்மார்த்த இறந்த காலம் ஒரு தடவை சொல்லி
மத பக்தம் நயாமி
சர்வ சொத்து கொடுத்து அருளி –
மனஸ் நில்லவா நில்லா நெஞ்சு
ஸ்திதே மனஸ்- நிற்பது அருமை
பட்டி திரியும் பசு போலே -நெஞ்சை கொண்டு பிரவர்த்திக்க வேண்டும்
பிரமாதம் -உண்டாக்கும் -மயக்கம் புத்தி மழுங்கி பிரமாதம்
சொன்னவன் ஜிதேந்த்ரியன் அர்ஜுனன்
ஊர்வசி தாய் அன்றோ நமஸ்கரித்து கடக்க நிற்கிறவன்
சாபம் -அலி -அஞ்ஞா வாசம்
இந்த்ரியங்கள் வென்றவன் மனஸ் அடக்க முடிய வில்லை சொல்ல
சரீரம் ஸ்வஸ்தமாக இருக்காதே
மின்னின் நிலையில
தாது சாம்யம் -பித்த கபம் ச்லேஷ்மம் மூன்று
சத்வம் தலை எடுத்த பொழுது யாவன் நம்மை ச்மரிக்கிறான்
சேஷ பூதன் என்று உணர்ந்து
நான் யார்
சரீரம் அசித்
பரமாத்மாவுக்கு சேஷ பூதன்
பெறுவதே மோஷம்
நினைத்து
விஸ்வரூபம் ஜகதாகாரம்
பிரவாதவன் என்று நினைத்து
இவற்றுக்கு வந்தது தனக்கு சரீரி என்ற ஞானம் வந்த பின்பு
ஜன்ம நிபந்தனம் கலக்கம் இல்லை
தேவை இடாமல் தான் எப்பொழுதும் நினைத்த படியே ஸ்மராமி நினைத்து கொண்டே இருப்பன்
standing instruction போலே
மத் பக்தம்
நயாமி நான் அழைத்து
கள்வன் கொல் பிராட்டி யாருக்கும் தெரியாமல் உத்தரியம் மூடி கூடிப் போவார் போலே
தானே கையை பிடித்து
நயாமி –
பெரிய திருவடி ஆதி வாஹர் இல்லாமல் தானே கூட்டு போகிறான்
அனந்தாழ்வான் -சர்மா தசையில் –தொழுகிறானா
தானே ஓடி வந்தான் ஸ்ரீநிவாசன்
மரணம் ஆனால் அந்த ஷணத்திலே கூட்டி வைகுந்தம் கொடுக்கும் பிரான்
பாதகமான பதார்த்தங்கள் -துக்கம் விளைவிக்க –
கோபிகள் -மாலை பொழுதில் பட்ட துக்கம் இவர் ஒருவரே பட –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -சாரமான பாசுரம் இந்த திருவாய் மொழியில் –
பிராரப்த கர்மம் -இந்த சரீர அவசானத்திலேபோக்கி
கிருபையால் -அடுத்த சரீரம் ஆசை வாராமல்
சரீரம் முடிந்த ஷணம்
பக்தி பரமான மூன்று பாசுரங்கள்
மாலை நண்ணி –
அவனை நண்ணி வ்யாமோஹம் உருவான
பக்தி உடன்
காலை மாலை -கால நியதி இல்லாமல் எப்பொழுது
கமல மலர் இட்டு
இறங்கி பறிக்கலாம் படி ஏறி பறிக்க வேண்டாமே
கல்லார் துழாயும் – -கண்டம் -முள் உள்ள புஷ்பங்கள்
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான்
ஆலங்கட்டி மழை-ஆல் -நீரம்
மால் ஈடுபட்டு ஆஸ்ரயக்கிக்க-
மால் சிநேகம்
பக்தி ஞானம் -முதிர்ந்த நிலை பக்திச்ச ஞான விசேஷ வேதார்த்த சங்கரகம் -எம்பெருமானார்
தொழுது ஏழு -பிரபத்தியில் இழிந்தவர் தம் நினைவால் அப்படி அருளுகிறார்
பக்தி த்யானம் –
பன்மையில் சொல்லி அனைவரும் அதிகாரிகள் அவனைப் பற்ற
தெரிந்து கொண்டாலும் அறியா விடிலும் எல்லாரும் சேஷ பூதர்
பாபம் போக்க சரீரம் தொலைய
நாகப்பூ முதல் ஆழ்வார் -வன சஞ்சாரிகள் -நாம் அறியாத பூ -எந்த பூவும் அவனுக்கு சேருமே
நாம் அறிந்த மல்லிகை முள் உடன் கூடிய புஷ்பம்
நீர் இறைஞ்சுமினோ-முன்புத்த நிலையிலே அதிகாரிகளாம் இத்தனை
ஸ்ரமஹரமான தேசம் –
வேலை மோதும்
கடல் அருகில் ஆழ்வார் காலத்தில் இருந்து இருக்க வேண்டும்
பவனான ஆல் இலையில் கண் வளர்ந்து
ரசித்து அருளினவன் கேட்க்காமல் வரையாதே வயிற்றில் வைத்து
சம்சார பிரளயம் இருந்து எடுத்து
ஆலின் மேல் அமர்ந்தான் இல்லை ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் இரண்டு ஆல்
ஜலம் மேல் உள்ள ஆலின் தளிர்
ஆல் -நீர்
அசைச் சொல் யென்னவுமாம்
ஜீயர் -கந்தாடை நாயனார் ஆல் நீர் சொல்ல பிரமாணம்
ஆலம்கட்டி மழை சொல்லக் கடவதே
எம்பெருமானை பற்றுங்கோள் என்கிறார் இதில் –
——————————————————————————————————————————————————
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-