சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று
அஞ்சும் ஆசை உடையார்
காவலோடு கூடிய தேசம் என்று
அச்சம் இல்லாதவர்களாய்
நாள் தோறும் தொழுது எழுமின் –
என்கிறார்
———————————————————————————————————————————-
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே
———————————————————————————————————————————–
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
செவ்விப் பூவைக் கொண்டு அர்ச்சித்து அடி வணங்கும் கோள்
பக்தி உடையவர்கள் செவ்விப் பூவை தேடுவார்கள் அன்றோ
கள்ளார் துழாயும் கணவலரும் -பெரிய திருமொழி -11-7-6-என்கிறபடியே
பூக்களின் இனத்தை சார்ந்தவை யாவும் அமையும் அன்றோ –
அவன் படியைப் பார்த்தால்
ஆக -பொருள்களின் உயர்வு தாழ்வுகளை நோக்கான்
அடைகின்றவனுடைய அன்பினைப் பார்க்கும் இத்தனை
ஸ்ரீ புருஷோத்தம உடையானுக்கு அரச புத்தரன் சாத்தின செண்பகப் பூ வார்த்தையை நினைப்பது –
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை –
நிறைந்த தண்ணீர் உடைத்தான வயலாலே சூழப் பட்ட அகழியின் அருகே
நண்டுகள் நீர் மாறாத இடங்களிலே ஆயிற்று வாழ்வது
ஆதலின் – நள்ளி சேரும் வயல்-என்கிறார்
நள்ளி -பெண் நண்டு
பள்ளிக் கமலத்திடைப் பட்ட
பகுவாய் அலவன் முகநோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே -பெரிய திருமொழி -6-7-6-
கிடங்கு -அகழி –
வெள்ளி ஏய்ந்த மதிள்-
நட்ஷத்திர லோகம் அளவும் ஓங்கின மதிள் -என்னுதல் -வெள்ளி -சுக்கிரன் -அனைத்துக்கும் உப லஷணம்
அன்றிக்கே
வெள்ளியாலே செய்யப் பட்ட மதிள் என்னுதல்
நமக்கு அங்கனம் தோற்ற வில்லை யாகிலும்
மிக்க அன்போடு நோக்குவார்க்கு மிக உயர்ந்த பொருளாக தோற்றும் அன்றோ –
சூழ் திருக் கண்ணபுரம் -உள்ளி –
மதிள்கள் சொந்த திருக் கண்ணபுரம்
காவல் மிக்கு இருப்பதனால் அச்சம் இல்லாத தேசம்
என்று அதனை நினைத்து –
நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே –
சர்வேஸ்வரன் விஷயத்தில் பக்தியை உடையீராய் இருக்கும்
நாளும் தொழுது
பிறவிப் பெறும் கடலில் நின்றும் கரை ஏறும் கோள்
பருவம் அல்லாத காலத்தில் கடல் தீண்டல் ஆகாது என்னுமாறு போலே
சர்வேஸ்வரன் விஷயத்தில் கால வரை யறை இல்லை
ஆதலால் நாளும் -தொழுது -என்கிறார் –
மங்களா சாசனம்
செவ்விப்பூவை பக்தி காரணமாக
வெள்ளி ஏய்ந்த -ஒக்கம்
மங்களா சாசனம் செய்கிறார் –
புருஷோத்தமன் -புஷ்பம் பக்தி கனம்
குறும்பு அறுத்த நம்பி -பெயரே இது நிரூபகம்
மண்ணால் புஷ்பம் தலை மேல்
அஹங்காரம் இல்லாமல்
தார தம்யம் -பக்தி ஒன்றே
பிராக்ருதம் தங்கம் மண் எல்லாம்
கோடி உள்ளவனுக்கு ஒன்றோ பத்தோ -சமம்
கள்ளவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
அவன் படி பார்த்தால் எதுவும்
நள்ளி -பெண் நண்டு நீர் வளம் அகழி உள்ள திவ்ய தேசம்
வெள்ளி -சுக்ரீவன் நஷத்ரம்
வெள்ளி ஏய்ந்த-ப்ரீதி உடன் அப்படி தோன்றும்
ஸ்வர்ணம் கோபுரம் –
திவ்ய தேசம் ஆக மங்களா சாசனம் செய்கிறார்
———————————————————————————————————————————–
Leave a Reply