பண்டே ஆயர் பெண்கள் நடுவே
இவன் குழல் ஊதுகிற போது
நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில வார்த்தைகளை
பேசிக் கொண்டும்
சில செயல்களைச் செய்து கொண்டும்
பாடும் பாட்டை நினைத்து
ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –
என்கிறாள் –
——————————————————————————————————————————
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்
——————————————————————————————————————————-
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் –
மேலே கூறியவை மிகை என்னும்படி
குழல் இசையே துன்புறுத்துகிற படி –
அது மொழிந்து இடை இடைத் –
இடை இடை -அது -மொழிந்து
பிரிந்தேன்
ஆற்றேன்
என்றாப் போலே சொல்லுகிற இழி சொற்களை இடை இடையே சொல்லி
ஆயிற்றுப் பாடுவது
தாழ்ந்த செயல்களையும் சொற்களையும் தன் வாயாலே
சொல்ல மாட்டாமையாலே -அது -என்கிறாள் –
எம்பார் -இந்த இடம் வந்தவாறே
மோர் உள்ளதனையும் சோறே யோ
தேசிகரும் கூட பாசுரம் இட்டு சொல்ல மாட்டாதே -அது
என்னா நிற்க
மத்யஸ்தரான நாம் இதற்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது -என்று அருளிச் செய்தாராம் –
அன்றிக்கே –
அது ஒழிந்து–என்ற பாடமான போது
அது தவிர்ந்து -என்னுதல் –
அதாவது
நடு நடுவே
தாழ்ந்த சொற்களை சொல்லிப் பாடுகிற பாட்டை விட்டு -என்றபடி –
தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தனக்குத் தானே ஆபரணமாய்
தன் கருத்தினை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக் கண்கள் -என்றது –
மனத்திலே உள்ள மறத்தாலே -கிட்டக் கடவோம் அல்லோம் –
என்று இருக்கிற
பெண்களுடைய கால்களை சென்று பிடியா நிற்கும் கண்கள் -என்றபடி –
நம்பி மூத்த பிரான் செய்யவற்றை அடைய செய்யா நிற்கும் ஆயிற்று
சந்தேசை சாம மதுரை பிரேம கர்ப்பை அகர்விதை
ராமேன ஆஸ்வாசிதா கோபய ஹரிணா ஹ்ருத சேதச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20-
பாலா ராமானால் மணம் தெளிந்தார்கள் -என்றபடியே
குழல் ஊதுகையிலே மீண்டு மீண்டு வார்த்தை சொல்ல
ஒண்ணாமை யாலே
வாக்கின் செயலை ஏறிட்டு கொள்ளுமாயிற்று
பேச்சாலே பிறக்கும் தெளிவு
நோக்காலே பிறக்கையைத் தெரிவித்தபடி –
நினைந்த முனி பகர்ந்த வெலாம் நெறி உண்ணி அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்குப் போரேற்றின் முகம் பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன்
நினைந்த வெலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் -கம்பர் பால -கார்முகம் -25
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப் –
அழகிய பேச்சுக்களோடு கூடின இசைகளாலே
கண்களாலே நோக்கி ஈடுபடுத்துமாறு போலே ஈடுபடுத்தி
இசையோடு இருக்கச் செய்தேயும் இயலும் தெரிந்து இருக்கை
அன்றிக்கே
வாக்கின் பேச்சும் கண்களின் நோக்கும்
மாறாடின படி -என்னுதல் –
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து –
கேட்கிறவர்களிலும் தன் செவி அணித்து ஆகையாலே
நாம் வருந்துகிறபடி கண்டால் பெண்கள் என் படுகிறார்களோ
என்று மிகவும் நோவு பட்டான் என்பதனை தெரிவித்த படி –
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
பெண்களுடைய நெஞ்சு ஊடலை மறந்து வந்து
பொருந்தும்படி படுகிற பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் –
அது துன்புறுத்துகிறபடி
எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை –
அம்ம அம்ம-
பூசல் -பூசல் –
மாலையும் வந்தது –
மிகவும் துன்புறும்படி மாலைபொழுதும் வந்தது -என்றது –
இனி இருந்து வருந்த வேண்டாதபடி
இது முடிந்தே விடும் போலே இருந்தது -என்றபடி –
மாயன் வாரான் –
தன்னைப் பிரிந்தார் நாணம் உறும்படி
தானே இழவாளனாய் வந்து
காலைப் பிடிக்கும் ஆச்சர்யத்தை உடையவன்
வருகின்றிலன் –
பண்டே -நடு நடுவே சில உக்தி செஷ்டிதங்கள்-
தூது செய் கண்கள் –
தீம் குழல் மட்டும் இல்லை
இடை இடை அது மொழிந்து -சிங்காரமாக
கீழில் அவை தேவலை போலே தீம் குழல்
பிரிந்தேன் ஆற்றேன் நீச பாஷாணங்கள் சொல்லி
அது –
தாழ்ந்த பேச்சும் தாழ்ந்த சொல்லும் தன வாயால் சொல்ல முடியாமல் அது -என்கிறாள் –
வாயால் அனுவாதம் பண்ண முடியாத வார்த்தைகள்
எம்பார் -மின்னிடை மடவார் பிரவேசம்
பிரட்டு பாடுதல் -கிராமாந்தரங்கள்-ஸ்ருனகாரமான பாட்டுக்கள் -பெண்கள் பூப்படைந்தால் பாடுவது
நலுங்கு கல்யாணம் போலே
எம்பார் அந்த பிரட்டு பாட்டை பாடி –
சிருங்காரம் அறிந்து வைராக்கியம் மிக்கவர்
இடை இடையே அது -எது கேட்டாராம்
தேசிகரும் பாசுரம் சொல்லாமல் அது -ஆழ்வார் சொல்ல முடியாமல் என்னால் சொல்லப் போமோ
மோர் இருக்கும் வரை சோறு போடா முடியுமா கதை
கேட்பது எல்லாவற்றுக்கும் பதில்
உயரக்கு அது காலன்
யௌவனம் -அது பேதை பாலகம் சொல்லி -வாயால் சொல்ல மாட்டாமல்
மத்தியஸ்தர் நாம் என்ன
மொழிந்து ஒளிந்து -தவிர்ந்து பாடம்
தூது செய் கண்கள்
தனக்கு தானே ஆபரணம்
நெஞ்சில் மரத்தால் கிட்டே போகாதார் காலை கண்ணாலே பிடிப்பானாம்
நம்பி மூத்த பிரான் -ஆச்வாசம் செய்வார் திரு ஆய்ப்பாடி
கண்ணாலே பேசி
வாக்கு வியாபாரம் செய்து
குழல் ஓசையாலேபேசி
இயலும் தெரிந்து -இசை உடன்
குழல் ஓசையில் இயல் உடன் அறியும்படி
வாக் நேத்ரம் மாறாடி
வாய் பார்த்து
பேதுறு முகம் செய்து –
அபலைகள் என் படுவார்களோ நினைந்து தானே முகம் செய்து
தானே குழல் ஓசையில் ஈடுபட்டு
நொந்து நொந்து
தன செவி அணித்தாகையாலே
வன் நெஞ்சர் தன்னையே உருக்க
அவர்கள் என் படுவார்களோ
அம்மா அம்மா பூசல் பூசல் பாதகத்வம்
மாலையும் வந்தது
முடித்தே விடும்
மாயன் வாரான்
பிரிந்தவர்கள் லஜ்ஜிக்கும் படி காலை பிடிக்கும் மாயன் வாரான்
—————————————————————————————————————————————
Leave a Reply