மையார் -பிரவேசம்
இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –
சீலம் முதலான குணங்கள் வந்தவாறே
ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்
நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று
இவளுடைய சேர்த்தி
நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து
ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீ ய பதி என்றாரே அன்றோ –
ஸ்ரீ ய பதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –
ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய
அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப-
இப்படி இருக்கிறவனுடைய
சீல குணத்தையும்
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –
கடுக பெற வேண்டும்படி
குணங்களால் மேம்பட்டவனுமாய்
பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –
அப்போதே பெறக் காணாமையாலே
விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்
பெறுவிப்பாரும் அருகே உளராய்
இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –
ஆகையாலே
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது
முடியானே /வீற்று இருந்து ஏ ழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி
இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –
தாமும் விடாய்த படி தான் -நாம் அழைப்பேன் -பேதுறுவன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின
அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்
தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –
தோற்ற வேண்டும் படி ஆயிற்று –
இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும்
நினைத்து உவகையினராய்
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்
அடிமை செய்யப் பெற்றேன்
வாழ்ந்தேன்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று
தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து
இனியராய்
அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார் –
———————————————————————————————————————————————–
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே
———————————————————————————————————————————
திருமகள் கேள்வனானவனை
காண வேண்டும் -என்று
தம்முடைய கண்களுக்கு பிறந்த
அவாவினை
அருளிச் செய்கிறார்
மையார் கருங்கண்ணி –
அவனைப் பெற வேண்டும் என்று இருப்பார் ஆசைப்படுவதும் அவள் முன்னாகவாய் பெற்றால்
பின்னை கைங்கர்யம் செய்வதும் இருவருமான சேர்த்தியிலேயாய் இருக்கும் அன்றோ –
மையார் கருங்கண்ணி –
வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி
இயல்பான அழகினை உடையதாய்
ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே -மையார் -என்னும் போது
மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –
கமல மலர்மேல் செய்யாள் –
இது ஆயிற்று மிருதுத் தன்மை இருக்கும்படி –
மற்றை இடம் பொறாத -மலர் மேல் இருக்கையே-பொருந்தும் படியான மிருதுத் தன்மை –
திரு மார்வினில் சேர் திருமாலே –
தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்
உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி
மார்வு படைத்தவனே
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே
அவ்வருகு போக வேண்டாவே
அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-
திருமாலே
இவள் -மார்பில் படும் பாட்டினை –
இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –
அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே
இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து
அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –
இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை
அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது
ஆக
காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்
வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக
பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45
யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது
ஆகையாலே
இருவருமான சேர்த்தியிலே இவை இருவருக்கும் குறை அற்று இருக்கும் -என்றுமாம் –
பிரிந்து இருக்கும் காலத்திலும் தனித் தனியே குறைவு அற்று
இருக்கும் என்றுமாம்-
-திரு மார்வினில் சேர் -என்றதனால்
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
அகலகில்லேன் இறையும்-என்று இன்று வந்து கிட்டின புதியார்
படுவதனை எல்லாம் படா நிற்பாள்
என்பதனைத் தெரிவித்தபடி
சேர் திருமாலே -என்ற நிகழ்கால வினைத் தொகை இதனைக் காட்டுகிறது
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்ட மாதவா -திருவாய்மொழி -1-5-5-
வெருவும் ஆலமும் பிறையும் வெவ் விடையவற்கு ஈந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற்கு அருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுற வழங்கி
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி -கம்பர் -பால -அகலிகைப் படலம் -26
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் –
இவள் கையில் உள்ள விளையாட்டுத் தாமரைப் பூ அவனுக்கு
இனிதாக இருக்குமா போலே ஆயிற்று
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு இனியவை இருக்கிறபடி
பிராட்டி யை கூறி திவ்ய ஆயுதங்களை அருளுவதால் –
ஸ்ரீ குணரத்ன கோசம் -47 ஸ்லோகம் -இது போலே
இவள் உகப்புக்காக அடியார்கள் உடைய பகைவர்களை அழியச் செய்கைக்கு காரணமாய்
காட்சிக்கு இனியதாய் இருக்கும் ஆயிற்று –
பகைவர்கள் மேல் மிக வெம்மையை உடைத்தாய்
புகரோடு கூடி இருக்கிற திரு ஆழி –
இருக்கும் தோற்றப் பொலிவே அமைந்து -வேறு ஒரு கார்யம் கொள்ள வேண்டாதே
வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் படியான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
ஏந்தும் கையா –
வெற்று ஆயுதங்களையே அன்று –
வெறும் திருக் கரங்களையே அன்று –
இரண்டின் உடைய சேர்த்தியை யாயிற்று இவர் ஆசைப் படுகிறது
கூர் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1- என்னுமவர் அன்றோ
உனைக்-
பிராட்டி சம்பந்தத்தோடும்
திவ்ய ஆயுதங்களோடும்
திவ்ய விக்ரகத்தோடும்
கூடி இருக்கிற உன்னை –
இவருடைய உத்தேச்ய வஸ்து இருக்கிற படி இது காணும் –
காணக் கருதும் –
தமஸ பரமோ தாதா சங்க சகர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய ஸ்ரீ அஜய சாஸ்வத த்ருவ-யூத -115-15-மண்டோதரி -வார்த்தை
சங்கையும் சக்ரத்தையும் கதையும் தரித்து இருப்பவனே
பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ வத்சத்தையும் மார்பில் உடையவனே
என்கிற உன் வடிவைக் காண ஆசைப் படா நின்றது –
அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று
காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோ -சிறிய திரு மடல் -69-
சதா பஸ்யந்தி சூரைய-நித்ய சூரிகளும் இத்தனை -அன்றோ
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்று
இவ்வளவிலே தேக்கிட்டு விடுவர் இங்கு உள்ளார்
நவை தேவோ அச்நந்தி நபிபந்தி
ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் –3-10-
தேவர்கள் உண்பது இல்லை
இந்த அமிர்தத்தை பார்த்தே திருப்தி அடைகிறார்கள் -என்று
இவ்வளவிலே தேக்கிட்டு விடுவர் அங்கு உள்ளார்
என் கண்ணே –
சம்சாரிகளில் தமக்கு உண்டான ஆசையோ பாதியும் பேருமாயிற்று
இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு
முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவற்றுக்கு-
சம்பந்தம் காட்டிக் கொடுக்க
சீலத்தில் கால் தாழ்ந்தார்
ஆர்த்தி -மிக்கு -துக்கம் உடன் ஆரம்பம் -சந்தோசம் உடன் முடிய
சீலாதி குணங்களுக்கு அடி பிராட்டி
ஸ்வாதந்த்ர்யம் மேல் இட்டால் -இவை தலை எடுக்கும் படி –
சாய்வது புருஷகார பலத்தாலே
ஸ்வா பாவிகம் தாம் இரண்டும் -ஸ்வா தந்த்ர்யம் சீல குணங்களும் –
மருந்து குலுக்கி சாப்பிட -நீர்பாகம் மேலே மருந்து குலுக்க சிரப்பு- –
பிராட்டி திருத்தி -அருள
சீலாதி குணங்கள் அவள் ஆதீனம் -சுவாதீனம் இல்லையோ
அங்கன் இல்லை
ஸ்வா தந்த்ர்யம் –சீலம் –இவள் ஓட்டை சேர்த்தியும் –மூன்றும் நித்யம்
ஸ்ரீ வல்லபா -சொல்லும் முன் -ஸ்ரீ ய பதி நிகில ஹேய பிரத்ய நீக
கீதா பாஷ்யம் முதல் வாக்கியம் –
கதய த்ரயம் -சம்யோக -வாக்கியம்
ஸ்ரீ உடனே கூடி பதியாக உள்ளவன்
அத்தால் சீலம் எப்பொழுதும் உண்டே
அணியார் மலர் மங்கை தோள் -சீலம் இரண்டையும் அனுசந்தித்தார் கீழ் -நாளும் உன் புகழ்கோ சீலமே –
கார்ய கரமாக வில்லை –
இப்பொழுதே பெற சாபலம் பிறக்க –
வஸ்து குணாதிகம் சேர்விப்பவளும் அருகில் இருக்க
சேதன சமாதியாலே கண்கள் காண கருதும் -கரணங்களும் விடாய்த்து –
இந்த்ரியன்கலெ தனி தனியே –
தாமும் விடாய்த்தார் முனியானே வாசனை
ஓன்று ஒன்றின் செயல் விரும்ப –
ஆசை மிக்கு இருந்தது எல்லா திருவாய் மொழி
பாவ விருத்தி
செஞ்சொல் கவிகாள் -திருமேனி ஆசை
வீற்று இருந்த ஏழு உலகம்
என்றனைக்கும் -அடியார்க்கு பாட வைத்தான்
முடியான கரணங்கள் –
கஜேந்திர ஆழ்வான் ஆர்த்தி கொஞ்சம் குறைவு போலே
அந்த த்வரையும் போதாதே இவருக்கு
தூணிலே வந்து தோற்றும்படி வேண்டும்
தட்டின அடுத்த நொடி வந்து தோன்ற வேண்டும்
க்ரமத்தில் நிதானம் ஆகவந்தான் அங்கே-
ஆழ்வார் தசை
விடை -முகம் காட்டின படி -கண்டு கொண்டேன்
அனுபவித்து ஹிருஷ்டராய்
அடிமை செய்ய பெற்றேன்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் வாசிக கைங்கர்யம்
இப் பேறு இருந்த படியே
தம்முடைய லாபத்தை பேசி ஹிருஷ்டராய் தலைக் கட்டுகிறார்
ஆராயிர படி -அவசன்ன -பிரீதியாக முடிப்பதை காட்ட வில்லை
ஒன்பதாயிர படி -ப்ரீதராய் முடிக்க –
சபலம் -ஆசை –
பிறந்த ஆசையை வெளிப்படுத்துகிறார்
உன்னைக் காண கருதும் கண்கள்
மையார் கரும் கண்ணி
கமல மேல் மேல் செய்யாள் சிவந்த திருமேனி
திருமார்பில் சேரும் திருமால்
கையார் சக்கரம் –
அவனை பெற ஆசை படுவது அவளை முன்னிட்டு -த்வய பூர்வ வாக்கியம் –
சேர்த்தியில் கைங்கர்யம் -த்வய உத்தர வாக்கியம்
தனிப் பதம் இல்லை சமஸ்த பத விசேஷணம் ஸ்ரீ மத நாராயண பூர்வ வாக்கியம்
உத்தர வாக்கியம் ஸ்ரீ மன நாராயணா – சொல்லாமல்
ஸ்ரீ மதே -சதுர்த்தி விபக்தி உடன் தனிப் பதம் –
சமஸ்த பதம் அர்த்தம் -முதலில் –
மையார் கரும் கண்ணி
மங்கள அர்த்தம் அஞ்சனம்
ஆபரணம் சூட்டாத அவயவம் கண்கள்
சுயமாக அழகு உள்ள திருக் கண்கள்
கரும் கண்ணி -மை எதுக்கு -மங்கலம்
சௌகுமார்யம் பூ உறுத்தும் படி மென்மை
தாமரை பூவில் பரிமளமும் தாதும் அடி கொதித்தால் –
அதை விட மென்மை திரு மார்பில்
அதற்கு அவ்வருகு போகாமல்
அகலம் விசாலம் அகல் மார்பு எல்லாம் போக்கியம்
அகலகில்லேன் இரையும்
அவனும் இவன் மார்பில் படும் பாட்டு போலே
திரு மால் மையல் திருவின் இடத்தில் மால் மொத்த அவயவங்களில்
இவனுக்கு ஒரு அவயவம்
அவளுக்கு சர்வ அவயவங்கள்
கம்பர் -பட்டர் சமகாலம்
திருவடி சப்தம் பிற்காலம் நாத முனி காலம் இல்லை என்பர்
இரண்டு வித அபிப்ராயமும் உண்டே
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
நங்கையை காணும் தோறும் -அன்னதேயாம் –
ஒவ்வொரு அவயவம் காண ஆயிரம் கண்கள் வேணும்
பிச்சேரி சர்வ அவயவன்கலிலும்
ராகவன் வைதேகி முழுக்க சொல்லி -இவள் அஸி தேஷணா
அவன் கண்கள் சிவந்து தாமரைக் கண்ணன்
இவள் மேலே ஊறி செய்யாள் -சிவந்த திருமேனி ஆனதாம் –
கண்ணில் கருப்பு -இவள் நித்ய கடாஷம் செய்வதாலே
குளிர்ந்து இருக்கும் இவளுக்கு
அவன் வாத்சல்யம் கண்கள் குதறி சிவந்து
செர்த்தியாலெ தண்ணளி
பிரணயித்வத்தால் -இருவருக்கும் இரண்டும் உண்டே குறைவற்று இருக்கும்
வரவிட்ட ஆள் ந கச்சின் ந அபராதி
திருவடி இடம் -பிராட்டி வார்த்தை -தண்ணளி
இவளை சீதை குறைத்தால் செய்தாரேல் நன்று செய்தார் வாத்ச்சல்யம்
கிருபை தண்ணளி -வாத்சல்யம் இருவருக்கும் குறை அற்று இருக்கும்
திரு மார்பினில் சேர் இன்று வந்து கிட்டினவர் படுவது படா நிற்கும்
அகலகில்லேன் இறையும் -தண்ணீர் தண்ணீர் -என்று சொல்ல வைக்கும் –
நித்ய அநபாயினி-இப்படி சொல்லும்படி
சேர் -வர்த்தமானம் -சேர்ந்த சொல்லாமல்
தொடர்ந்து வரும் -நிகழ காலம்
கையில் லீலா அரவிந்தம் அவனுக்கு போக்கியம்
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு போக்கியம்
இவள் உகப்புக்காக ஆயுதங்கள்
பர்த்தாரம் அனைத்து
ஏந்தும் கையன்
வெம்மை மிக்க -சுடர் ஆழி பிரதி பஷம் மேல் –
சந்நிவேசமே -கண்டு கொண்டு இருக்கும் படி
விசேஷணம் ஒன்றும் இல்லை சுரி சங்கு -அதுவே அழகு
ஏந்தும் கையா
சேர்த்தி ஒன்றே ஆசைப்
கூரார ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்
உன்னை
லஷ்மி சம்பந்தம் திவ்ய ஆயுதம் திருமேனி உத்தேச்ய வஸ்து
நிர்விசேஷ சீன மாத்திர இல்லை
சங்கு சக்கர கதா
காண கருதம்
கண்டு வேற பிரயோஜனம் இல்லை கண்ணால் பார்த்தால்
அழைப்பன் திரு வேங்கடத்தானை –காண -திருமழிசை ஆழ்வார்
ஆசைப்படுவது வேறு கார்யம் கொள்ள இல்லை
காரார் திரு மேனி காணும் அளவும் –ஓராது ஒழியேன்
கண்டால் வேற
சதா பஸ்யந்தி சூரயா அங்கும் பார்த்து கொண்டே
கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா
அமிர்தம் த்ருஷ்ட்வா திருப்யந்தி
என்கண்ணே
சம்சாரிகள் விட ஆழ்வார் வாசி போலே
இவர் கண்கள் இவரை விட -என்கிறார்
நேத்ரா பூதமான ஏற்றம் உண்டு இ றே
முக்யஸ்தர் அக்ரேசர் நேத்ரா பூதர் –
சிரசே பிரதானம் அதிலும் கண் பிரதானம் –
———————————————————————————————————————————-