நித்ய சூரிகளுக்கு இனியனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை
விடாதே காண் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
————————————————————————————————————————————-
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே
————————————————————————————————————————————-
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை
மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –
இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –
சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான
நித்ய சூரிகள் –
குழாங்கள்-
அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
திரள் திரளாக ஆயிற்று இழிவது –
பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று
பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –
பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –
கருந்தேவன் –
காள மேகம் போன்று கரிய திவ்யமான வடிவை உடையவன் –
எம்மான் –
அவ்வடிவினைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நித்ய சூரிகளுக்கு படிவிடும் வடிவினைக் கண்டீர்
எனக்கு உபகரித்து -என்றபடி
கண்ணன் –
தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை
அன்றிக்கே
அவதரித்து வந்து உபகரிக்குமவன் –
விண்ணுலகம் தருந்தேவனை –
பரம பதத்தை தருவதாக இருக்கிற
சர்வேஸ்வரனை –
சோரேல் கண்டாய் மனமே –
அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே
இவன் விடுகையாவது
அவனுக்கு இழவு போலே காணும்
அவன் செய்த கிருஷி பலித்தது இல்லையாமே
இல்லையாகில்
உலகிற்கு வேறுபட்ட அவனுடைய சிறப்பினைநினையாதே
சுலபன் என்று காற்கடை கொள்ளாதே காண் –
திரு உள்ளத்தை குறித்து -நித்ய சூரிகளுக்கு இனியன்
அவதரித்து நம்மையும் அவர்கள் ஒக்க ஆக்க
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் போக்கின்
கண்ணனாக வந்து
மோஷம் கொடுக்க அவதரித்து –
உன்னுடைய அனுபவத்தால் –
மருந்தே -ரகசியம் ஒரு வித வியாக்யானம் -இங்கு ஒரு வித வியாக்யானம்
நாங்கள் -பெரும் தேவர் குழாம் பிதற்றும்
மகிழ்ச்சியை உண்டாக்கும் மருந்து
ரகசியம் -மகிச்சியை போக்கும் மருந்து
இரண்டையும் சமன்வயப் படுத்தி திவ்யார்த்த தீபிகை
பசி எடுக்க வைக்கவும் -குறைக்கவும் மருந்து உண்டே –
இரண்டும் வெவேற மருந்து லோகத்தில்
இங்கே பகவான் -ஆனந்தம் அடக்கவும் உண்டாக்கவும்
உண்டாக்கும் ஆனந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பார்த்தோம்
கைங்கர்யம் -அசேதன வஸ்து போலே செய்து -அவன் ஆனந்தம் கண்டு மகிழ சைதன்யம் நமக்கு உண்டே –
பிரதி கிரியை பண்ணாமல் இருக்க முடியாதே சைதன்யம் இருந்தால் –
அவன் ஆனந்தத்துக்கு தான் சைதன்யம்
சக்கரை பொங்கல் -தளிகை –மேல் சாமான் வாங்கி போட்டு -விசேஷ தளிகை –
புனுகு சேர்த்து சந்தனம்-வாசனை மிக்கு –
அவன் ஆனந்தம் அதிகம் ஆக்க குழந்தை பொம்மை கொஞ்சும் வரும் ஆனந்தம் வாசி போலே –
நம் ஆனந்தம் தடுக்கும் சக்தி -இல்லை
நீயே
மற்றை நம் காமங்கள் மாற்று -நீ மாற்றி அருள வேண்டும் அடக்கும் -ரகஸ்ய பிரஸ்தானம்
இங்கே திவ்ய பிரபந்தம் -வியாக்யானம்
கோரக்பூர் பண்டிதர் சம்பளம் ப்ரோப் தப்பு ஒன்றுக்கும் விலை அதிகம் proof பார்க்க
தப்பே கிடைக்க வில்லை அதிகமாக பார்ப்பார்கள்
சம்பாவனை -அவர் மகிழ்ந்து பின் –
தப்பு மட்டும் கண்ணில் விழுமே சுவாமிக்கு –
முதல் ஆனந்தம் இல்லை -பதில் ஆனந்தம்
படியாய் கிடந்தது அசேதனம் போலே கைங்கர்யம்
முறுவல் கண்டு பவள வாய் காண்பேனே –
கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு
உன்னுடைய அனுபவத்தால் எங்கள் ஆனந்தம் வர்த்தகன் ஆனவனே -இங்கே அருளி
பெரும் தேவர் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர்
கிண்னகம் இழிவார் போலே திரள் திரளாக போக
பிதற்று ஜுர சந்நித்தார் போலே அகரமாக கூப்பிடா நிற்கும்
பிரான் -அனுபவிக்க கொடுத்த உபகாரகன்
கரும் தேவன் காள மேக சியாமளன்
எம்மான் எனக்கு காட்டி
கண்ணன் அவதரித்து உபகர்க்கும்
விண்ணுலகம் தருவான்
சோரேல் அவன் உடம்பு வெளுக்க பண்ணாதே
இவன் விடுகை அவனுக்கு இலவு
வைகுந்த -மணி வண்ணா மாசுசா சொல்லி அந்தாமத்து -ஆரா அமுதாம் அல்லாவி உள் கலந்த
துக்கம் மிக்கு அவனுக்கு போக
நீச புத்தி -இனிமேல் பண்ணாமல் சிக்கென பிடித்தேன் என்றார்
அவனை உடம்பு வெளுக்க பண்ணாமல்
கிருஷி பலித்தது இல்லையானால் துக்கம் அவனுக்கு தானே
அவதார முகத்தாலே பண்ணும் கிருஷி பலம்
சுலபன் -தானே -கால் கடை கொள்ளாதே
வை லஷ்ண்யம் புத்தி பண்ணாதே –
விட பிரசக்தி இரண்டும் இல்லையே
மேன்மை -நித்ய சூரிகள் பிதற்றும்
கண்ணன் -சௌலப்யம்
இரண்டும் கூடாதே –
சோரேல் கண்டாய் –
——————————————————————————————————————————————————
Leave a Reply