அடிமையின் இனிமையை அறியாத
பிரமன் முதலாயினோர்கட்கும்
பற்றப் படுமவனாய்
இருக்கிற உன்னுடைய சீலம்
என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது -என்கிறார்
———————————————————————————————————————-
தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே
———————————————————————————————————————–
தாள தாமரையான் உனதுந்தியான்
தாமரைப் பூவினை பிறப்பிடமாக உடைய பிரமன்
உன் திரு நாபியைப் பற்றி வாழ்கிறான்
தாமரைப் பூவிலே பிறந்தோம் நாம் -எண்ணும் செருக்கினை உடையவனுக்கு
அன்றோ உடம்பினைக் கொடுத்தது –
என்கிறார்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஒளியை உடைத்தாய்
தொடங்கின கார்யத்தை முடிய நடத்த வற்றான மழுவினை உடைய சிவன்
உன் திருமேனியில் ஓர் இடத்தைப் பற்றிக் கொண்டு வாழாநின்றான்
வேறு ஒருவரையும் அடைகலமாகப் பற்றாமையை
தெரிவிக்கிற
தொடை ஒத்த துளவமும் கூடையுமாக -புகுந்து இருக்கிறான் அல்லனே –
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் –
அடியாராய் அடைகின்ற தேவர்களும்
நித்ய சூரிகள் செய்யும் அடிமையை அன்றோ
மரணம் இல்லாத ஒப்புமையாலே
ஈச்வரோஹம் -என்று இருக்குமவர்கள் செய்கிறது –
நாளும் என் புகழ் கோ உனசீலமே –
காலத்தை முழுதும் ஒரு போகி ஆக்கி
புகழுகைக்கு எனக்கு உறுப்பு ஆக்கினால் தான்
என்னாலே புகழ்ந்து தலைக் கட்டலாய் இருந்ததோ
உன்னுடைய சீல குணம்
உன சீலம் -நாளும் -என் புகழ்கோ
தாஸ்ய சுவடு அறியாத ப்ரஹ்மாதிகளும்
உனது உந்தியான்
ஆகத்தான்
உன்ன சீலமே -எப்படி புகழ்வது
அவர்களுக்கும் இடம் கொடுக்கும் சீலம்
திரு நாபி பற்றி
துர்மானி -அஹங்காரம் கமல யோனி -என்ற
நீள் மழு வாளி-ஒளியை உடைய -தொடங்கின கார்யத்தை முடிய நடத்த மழு உடைய ருத்ரன் –
மழுவை ஆளுகின்ற்றவன்
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
ஏகதேசம் பிரளயம் பொழுது இடம் கொடுத்து
அநந்ய சரணத்வம் -தொடை ஒத்த துளபம் கொண்டு வராமல்
ஆயுதமும் கையுமாக வந்தாலும் இடம் கொடுக்கும் சேலம்
அமரர்கள் –
நித்ய சூரிகள் செய்யும் அடிமை
தாஸ்ய பாவம்
ஈச்வரோஹம் இவர்கள்
நாளும் உனது சீலம் எப்படி புகழ
புகழ்ந்து தலைக் கட்ட முடியாதே
சீல குணம் –
—————————————————————————————————–
Leave a Reply