Archive for May, 2013

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 6-இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஆறாம் பாட்டில் –
ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் -நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த-விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன –
அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார் –
ஆழ்வார் -கிருபை -ஸூசீநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோகப் ரஷ்டோபி ஜாயதே -என்றும் -சமாதி பங்கஸ் தஸ்யா சீத்-என்றும் பிரம்சம் பிரசங்கிக்கும்-பகவத் கிருபை அளவில் நினைத்து இருக்கலாமோ-(நழுவுதல் உண்டு என்பதற்கு பிரமாணம் –பிராப்யா புண்ய க்ருதா லோகம் –பூர்வ பாதி ஸ்லோகார்த்தம் -மான் குட்டி ஜடபிரதர் -)

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–

இன்று தொட்டும்-
விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –
விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ  இருப்பது

எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –

எம்பிரான் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை
உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே  )
எம்பிரான் –
என் ஸ்வாமி-

நின்று –
ஒருபடிப்பட நின்று
உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து
பின்பு அது கிட்டினவாறே
அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –

தன்  புகழ் ஏத்த –
ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ
ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )

அருளினான் –
நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறா இ றே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி –
தம்மையும் ஏத்தி இன்னம் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வார் உடைய
பூர்த்தி இருப்பது –
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யும் அது இ றே-இவர் நெஞ்சில் வாஸிதமாய் இருப்பது -அத்தைச் சொல்லுகிறார் –

என்றும் என்னை இகழ்விலன் –
என்றும் இகழ்விலன் –
என்னை இகழ்விலன் –
யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .
என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ
தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை
புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ
இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – -5-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஐந்தாம் பாட்டில் –
உம்மை புன்மையாகவும்
உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர்
உம்முடைய புன்மையையும் –
உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும்
சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-நம்பினேன் மடவாரையும் முன் எலாம் –
இவருடைய புன்மை -இருந்தபடி
பிறர் நன் பொருள் நம்பினேன் –
பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை
நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை
பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த  ஜீவன்  அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ் வ இதர ஸமஸ்த வஸ்து  விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண  கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – )
விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது -உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இ றே
பொருள் -என்று த்ரவ்யம்
நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இ றே
அத்தை இ றே நான் அபஹரித்தது
நம்புதல் –ஆசைப்படுதல்
பர த்ரவ்யதை ஆசைப்படுகை இ றே -அபஹாரம் -வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார்
அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –
பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ
ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )
ததீய சேஷமான வன்று இ றே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது
அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்
அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இ றே –
ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இ றே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இ றே-விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இ றே ரத்னம் களவு காண்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இ றே -இருப்பது-

நம்பினேன் மடவாரையும்
ஈஸ்வரனுக்கு அபிமதமான வஸ்துவை அபஹரித்த நான் –
தேஹாத்ம அபிமாநிகள் -என்னது -என்று அபிமானித வஸ்துவை அபஹரிக்க சொல்ல -வேணுமோ
ராஜ ரத்னம் அபஹாரம் பண்ண அஞ்சாத  நான் –
ஷூ த்ரர் உடைய விற்கும் வைக்கோலும் அபஹரிக்க அஞ்சுவேனோ
-இத்தால்
ஈஸ்வர அபிமான வஸ்துவை அபஹரித்தேன்
அந்யர் உடைய அபிமத வஸ்துவையும் அபஹரித்தேன் -என்றபடி –
மடவார் -என்கையாலே -அங்கும் அனந்யார்ஹங்களை அபஹரித்தேன் -என்கை-

முன் எலாம் –
இப்படி தேஹாத்ம -அபிமாநியாயும் –
விஷய -ப்ரவணனாயும் –
போந்த காலம் தான் சாவதியாகப் பெற்றதோ –
ஈச்வரனோபாதி ஆத்மாவும் நித்யம்
காலமும் அநாதி
அசித் சம்பந்தமும் அநாதி
ஆகையாலே -முன்புள்ள காலம் எல்லாம் இதுவே யாத்ரை -என்கை-

உம்முடைய புன்மை குறைவற்று -இருந்தது
ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்த அளவு ஏது என்ன –
அத்தைச் சொல்லுகிறார் மேல் –
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு –
என்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஆராயும் அத்தனை அபூர்ணரோ ஆழ்வார்
என்னை உபேஷித்த காலம் இவ்வளவு பாபம் இவ்வளவு என்று பார்க்கும் படி அன்றே
ஆழ்வார் உடைய பூர்த்தி
ஆத்ம அபஹாரம் பண்ணினான் நான் -விஷய பிரவணன் ஆனேன் என்று கை விடும்படி அன்றே
ஆழ்வார் திருவடிகளை நீர் தான் கிட்டின படி என் -என்ன
விஷயங்களுக்கு அர்த்தம் தேடி –
அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க –
அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் –
இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இ றே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ )
ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
திருநகரியைக் கவி பாடுகிறார் –

இன்று அன்பனாம் –
இதுக்கு முன் எனக்கு ஒரு நினைவு இன்றிக்கே இருக்க அசிந்திதமாக ஆழ்வார் திருவடிகளிலே
ப்ரவணனாகக் கண்டேன் –
அநாதி காலம் ஆத்ம அபஹாரம் -பண்ணியும் விஷய ப்ரவணனாயும் போந்த இது
இழவுக்கு உடலாகை அன்றிக்கே –
சரண்ய ப்ரபாவத்தாலே
பேற்றுக்கு உடலாக கிருஷி பண்ணினாரைப் போலே பலித்துக் கொண்டு நிற்க கண்டேன் –
நான் -என்னது -என்று இருக்கை தவிர்ந்து
இதர விஷயங்களில் விரக்தராய்
பகவத் சேஷத்தளவு நில்லாதே அதின் எல்லையான ததீய சேஷத்தளவிலே நின்றார் ஆழ்வார்
இந்த க்ரம அபேஷை அன்றிக்கே
முதல் அடியிலே நான் ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணனாகப் பெற்றேன் –

அடியேன் –
ஆழ்வார் உடைய வைபவத்தை அனுசந்தித்து -அதுக்கு -தோற்று  அடியேன் -என்கிறார் -குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே அதுக்குத் தோற்று அடியேன் என்கிறார்
ஆச்சார்யர்களை நம்பி என்னக் கற்பித்தார் போலே
ஆசார்யர்கள் அழைத்தால் -அடியேன் -என்கிறதும் ஸ்ரீ மதுரகவிகள் வாசனையாலே யாயிற்று
-சதிர்த்தேன்
சதிரை உடையேன் ஆனேன்
ஈஸ்வர சேஷமான வஸ்துவை -என்னது -என்று இருக்கைக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் மேல் பட்ட சதிர் கேடு இல்லை இ றே
அவற்றை விட்டு –
பகவத் விஷயத் தளவில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படி சதிரை உடையேன் ஆனேன் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -4- நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

நாலாம் பாட்டில் –
என் அப்பனில் -என்று காற் கடைக் கொண்ட விஷயத்தை -ஆழ்வார் உகந்தார் -என்று
விரும்புகைக்கு அடி என் என்னில் –
என் தண்மையைப் பாராதே -என்னை விஷயீ கரித்த நீர்மையை அனுசந்தித்தால் –
அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவேனோ -என்ன –
உம்முடைய தண்மை யேது -அது பாராதே அவர் விஷயீ கரித்த படி என் -என்ன -அத்தைப் பேசுகிறார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4

நன்மையால் இத்யாதி –
ஆத்ம குணங்களால் ப்ரசுரராய் -சம்சாரிகளுக்கு சுபாஸ்ரய பூதராய் இருப்பாரில் –
ஆழ்வாரை ஒழிந்தார் அடைய -இவன் அவஸ்து -என்று கை விடும்படி யன்றோ என்னுடைய-ஸ்திதி இருக்கும்படி –
ஒருத்தனுக்கு –நன்மையாவது
தோஷ குணங்களே ஆஸ்ரய ஸ்தலங்களாய் இருந்தால் தோஷத்தைவிட்டு குணாம்ஸத்தை-ச்வீகரிக்கை –
அதில் மிகுதி யாவது –
குணம் என்று பேரிடல் ஆவது ஓன்று இன்றிக்கே தோஷமேயாய் இருந்தால்
அது தானே பற்றாசாக கைக் கொள்ளுகை-

நான்மறையாளர்கள் –
அதுக்கடியாக ஹித அனுசானம் பண்ணக் கடவ வேதங்களிலே அவகாஹித்து இருக்குமவர்கள்
நாலு வகைப்பட்ட வேதங்களுக்கும் வ்யாசபதம் செலுத்த வல்லவர்கள்
அவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளார் -ஆதல்
கூரத் ஆழ்வான் -ஆதல்
இத்தால் -சொல்லிற்று ஆயிற்று -வேதார்த்த தாத்பர்யம் கைப் படுகை
அதாவது-ஆன்ரு சம்சய ப்ரதானர் ஆகை -என்றபடி-

புன்மையாகக் கருதுவர் –
புன்மை என்று ஒரு -தர்மமும் அதுக்கு ஆஸ்ரயமான தர்மியுமாய் இருக்கை அன்றிக்கே
புன்மை தான் ஒரு வடிவு கொண்டது -என்று இருப்பர்கள்
புன்மை யாவது -துக்கம் ஆதல் -பொல்லாங்கு ஆதல் -விஷயாந்திர ப்ராவண்யம் ஆதல் -துர்மானம் -ஆதல் -இது தான் மேலில் பாட்டில் ப்ரசக்தமாகக் -கடவது-

ஆதாலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் –
அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு
சர்வ வித பந்துவுமானவர்
ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –
பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –
ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும் –
ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன்  செய்யுமதுவும் -செய்யுமவர்-

தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில்
ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

தன்மையான் –
அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –
ஜலத்துக்கு சைத்யம் போலேயும் –
இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –
அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல்
இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-

–சடகோபன்
என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –
கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலே
என் நம்பி
தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்
அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள்
ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்
நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்
எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –
என் நம்பியே –
என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை-
இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல
கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும்
பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 3- திரி தந்தாகிலும் தேவபிரானுடை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 9, 2013

மூன்றாம் பாட்டில் -தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத்
விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன –
எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது –
ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் –
1-சூர்ப்பணகையைப் போலே கிடந்தானை கண்டு ஏறும் அது இ றே தவிர்த்துக் கொண்டது -2–விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று
3-பெரியாழ்வாரை முன்னாகப் பற்றும் ஆண்டாளைப் போலே ஆழ்வார் முன்னாகப் பற்றும் பற்றுத் தவிர்ந்திலரே –
ஆழ்வார் முன்னாக வரும் உத்தேச்யத்தை தவிர்ந்திலர் இ றே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஆதரணீயம் இ றே இவர்க்கு –

4-திரிபுரா தேவியார் வட கீழ் மூலையில் தத்வத்தையும் ஆஸ்ரயணீயாம் என்று உடையவர்-அருளிச் செய்தார் ஆகில் -எனக்கும் அதுவாம் அத்தனை அன்றோ -என்றாள் –
5-குணமலைப் பாடி உடையார் காங்கேயர் தெற்கே எடுத்து விட்ட போது
பிள்ளை ஆத்தான்  (கோயில் ஆச்சான் என்றும் சொல்வர் )-அங்கே  குறைவறுப்புச் சமைக்க -அவர் -உமக்கு வேண்டுவது என் –
என்று கேட்க -இவர் உம்மைக் கொண்டு பண்டே உபகாரம் கொண்டோம் காணும் -என்ன-ஆவது என் என்னை அறியாதே வருவதோர் உபகாரம் உண்டோ -என்ன-
எங்கள் ஆச்சார்யர் நான் கோயிலில் மண் பெற்றது அவ் வேளானாலே -என்று
அருளிச் செய்ய கேட்டு இருந்தோம் -இதுக்கு மேற்பட்டதோர் உபகாரம் உண்டோ -நமக்கு -என்றார் –
6-உடையவர் வெள்ளை சாத்தி எழுந்து அருளின காலத்தில் அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையாரை-பெருமாளை திருவடி தொழ வேண்டா -என்று விலக்க
ஆழ்வானை -நீர் ஆர் எனக்கு விரோதிகளோ நீர் புக்குத் திருவடி தொழல் ஆகாதோ -என்ன-ஆத்ம குணம் மோஷ ஹேது என்று இருந்தோம் -அது பந்த ஹேதுவான பின்பு
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யறுத்துக் கொள்ளவோ -என்று மீண்டு போந்தார்-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

 

திரி தந்தாகிலும் –
திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்
திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் –திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –
-அதாவது –
திருவாய்மொழிப் பாவை விட்டு –
இசைகளை விட்டு –
ஆழ்வாரை விட்டு –
அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் –
தேவபிரான்
நித்ய ஸூ ரிகளுக்கு தன்னை முற்றூட்டாக அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
இவர் நின்ற நிலை குலைந்து –
பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் -அதின் எல்லையான நித்ய ஸூரிகள் யாத்ரையாய்-ஆயிற்று இருப்பது –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு- (கரிய உரு –கோல உரு -திரு உரு )
நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே-இ றே இருப்பது –
கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே -என்று ஆழ்வார் வாய் புலத்து
கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார் – (திரும்பி வராத இடத்தில் உள்ள அமரர்கள் அதிபதியை திரி தந்தாகிலும் காண்பேன் -திரும்பி வந்த பொழுதும் -நம்மால் போக முடியாத இடம் என்கிறாரே என்னை தைர்யம் -)

பரம யோகிகள் யோகம் கை புகுந்தால் -ஊர்வசி உடைய வடிவை வர்ணிக்குமா போலே
இவரும் இவ் விஷயத்தை வர்ணிக்கிறார்-(உத்தேச்ய புத்தியால் இல்லை என்றவாறு )
கரிய கோலம் என்று ஸ்ப்ருஹை பண்ணும்படி ஆழ்வார் வர்ணிக்க கேட்டு இருந்த படியாலே
காண்பன் –
சாஷாத் கரித்து அனுபவிக்கிற இவரை விட்டால் -பரம பத நிலையனை யாயிற்று சாஷாத் கரிப்பது –
நான் –
தேவு மற்று அறியேன் -என்று
பகவத் விஷயத்தை சந்யசித்த நான் –

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
மஹா உதாரராய்க் கொண்டு -திரு நகரியிலே திரு வவதரித்த ஆழ்வாருக்கு –
சர்வேஸ்வரன் உடைய ஔதார்யம் ஜீவியாத காலத்திலே தன் வாசி யறிவித்த ஔதார்யம் இ றே
குருகூர் நகர் -என்று –
வைகுந்த  மா நகரை வ்யாவர்த்திக்கிறது
பரம பதம் –என்பதது -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்பதாய் ஆழ்வார் படுமது எல்லாம்
இவரும் -திரு நகரி -என்றாலும் -ஆழ்வார் -என்றாலும் அப்படியே யாயிற்று அனுபவிப்பது-

நம்பிக்கு –
நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது –
அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை-(குருகூர் நகரான என்னாமல் குருகூர் நம்பி -இதற்குள் குறுங்குடி நம்பியும் அந்தரபூதம் –இருப்பிடம் வேங்கடம் இத்யாதி -பூர்ணர் -அன்றோ -)
ஆள் உரியனாய் –
உரிய அடியனாய்
உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே
ஸ்வாமி உகந்ததையே பற்றி
அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இ றே ஸ்வரூபம்
அடியேன் –
ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இ றே
பெற்ற நன்மை –
பெற்ற பகவத் லாபம் –
ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இ றே
ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

கண்ணி நுண் சிறுத் தாம்பு -2- நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 9, 2013

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் –
-இப்பாட்டில் அவருடைய பாசுரமே தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார் -அதில்
உண்டான ஆதார அதிசயத்தாலே –
மனஸ் -சஹ காரம் இல்லாத வுக்தி மாத்ரம் அடியாக -நிரதிசய சுகம் பிரயோஜனம்
ஆனால் பின்னாட்டுகை தவிராது இ றே-

நாவினால் நவிற்று –
-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –
-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு
அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்
ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-

இன்பம் எய்தினேன் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற
பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி )-

மேவினேன் அவன் பொன்னடி –
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே- (3-மனஸ் ஸஹ காரம் இல்லாமல் நாவினால் நவின்றாலும் -மெய்ம்மையே மேவினேன் -உண்மையாகவே பேற்றைப் பெற்றேன் -)

தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று-
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

குருகூர் நம்பி-
இவரையும் பற்றி வேறு ஒரு விஷயத்தையும் பற்ற வேண்டும்படியோ இவருடைய
பூர்த்தி இருப்பது-(அரை வயிறு இல்லையே அந்த நம்பி போலே  )
குருகூர் நம்பி பா -என்கிறது -ஆழ்வார் திருவாயாலே அருளிச் செய்தது என்றது ஆயிற்று
திருவாய்மொழி தன்னையும் ஆதரிப்பது –அதிலே குருகூர் சடகோபன் -என்று அருளிச் செய்தார் இ றே -அவ்வழியால் யாயிற்று திருவாய் மொழியில் ஆதாரம் – (என் முன் சொல்லும் -யானே தன்னைத் தான் பாடி -அவன் சொல் அன்றோ -என்னில் -)
ஆழ்வார் ப்ரதிபாத்யர் ஆகையாலே –குருகூர் நம்பி பா -என்றது கண்ணி நுண் சிறுத் தாம்பை -சொல்லுகிறது என்னவுமாம் –

பாவின் இன்னிசை –
பாவோடே கூடப் புணர்ப்புண்ட இனிய இசை –
பாடித் திரிவனே-
உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –
ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –
உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-
நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு உழி தருகின்றோம் -என்னுமா போலே இதுவே
யாத்ரையாய் இருக்கிற என்னுடைய கதி நிவ்ருத்தியை பண்ண வல்லார் உண்டோ-என்றுமாம் –
ப்ராக்ருத கர்ம பலத்தை யநுபவிக்கும் யமன் -கதி பங்கம்  பண்ணவோ
அதுக்கடியான விஷயாந்தரங்கள் கதி பங்கம் பண்ணவோ –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 1-கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ண -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 9, 2013

முதல் -பாட்டில் -ஆழ்வார் உடைய நிரதிசய போக்யதையை -சொல்லுகிறது –
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –
ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர் -ப்ரதம அவதியான பகவத் விஷயத்தில்-இழிவான் என் -என்னில் –
ஆழ்வார் உடைய போக்ய  அதிசயம் தோற்றுகைக்காகவும் –
ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –
பையவே நிலையும் -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் –
ஆழ்வார் பக்கலில் இவர்க்கு உண்டான உத்தேச்யதை இருந்தபடி –
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின ஒரு கயிற்றின் உடைய உன்மானம் புறமானம்-ஆராயும்படி -ஆயிற்று இவர் பகவத் விஷயத்தில் கை ஒழிந்த படி –
இவர் ஆழ்வார் பக்கலிலே ந்யஸ்த பரர் ஆனபடி –

கண்ணித் -தாம்பு
உடம்பிலே கட்டப் புக்கால் உறுத்தும்படி பல பிணைகளை உடைத்தாய் இருக்கை
கண்ணி -முடி

நுண் தாம்பு –
உடம்பிலே அழுந்தும்ப்படி நேரியதாய் இருக்கை

சிறுத் தாம்பு –
இவனை கட்டின பின்பு உரலோடு சேர்த்த போராதாய் இருக்கை

கட்டுண்ணப் பண்ணிய-
உரலை நேரிதாகச் செதுக்கப் போகாது-அப்போதாகக் கையிற்றை நெடுக விடப் போகாது-இனி இவன் தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான்
காற்றில் கடியனே ஓடும் -இனிச் செய்வது என் என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான்

கட்டுண்ணப் பண்ணிய –
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கொண்டு கட்டுண்ணும் படி பண்ணினான் –
கட்டுகைக்கு பரிகரம் இல்லை என்று நிவ்ருத்தை -யாமாகில்
பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் இத்தனை இ றே
ஆகையாலே திருமேனியிலே இடம் -கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று -இருந்தான் என்றும் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் -என்றும் –
எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது -தான்
தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லன் -என்று இருந்தான் இ றே-

ஸ்வ வ்யதிக்ர்த்தரை யடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் –
தாம்நா சைவயதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித -என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான்இ றே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது-ஸ்வ வியதிரிக்தரை அடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் இப்போது
ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அன்றிக்கே -இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் -அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்ட ஒரு
கரு முகை யாலே கட்டுண்டு அகலுவதற்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே
இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே யிருந்த யிருப்பும் –
பிறர் உடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது –
தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் -போகாது என்கை
ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
உயர்வற உயர்நலம் உடையவன் -என்று அவன் குணத்தை வர்ணித்தார் –
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மை பற்றுகையாலே –
அவன் திருமேனியில் ஸ்பர்சித்த ஒரு தாம்பை வர்ணிக்கிறார் –
அவருடைய உத்தேச்ய வஸ்து இவர்க்கு வெளியதாய் கழிகிறது இ றே-

இவன் தன்னைக் -கட்டுவது-
ஒரு பெண்ணைக் களவு கண்டான் -வெண்ணெயை களவு கண்டான் -ஊரை மூலை
யடியே -நடத்தினான் -என்று இ றே -இவன் சாமான்யன் என்று இடும் ஈடெல்லாம் இடும் கோள்
என்று இருந்தான் -அதாவது களவிலே தகண் ஏறின படி -இவை கட்டி வைத்து அடிக்கப் புக்க வாறே
தொழுகையும் -என்ற படி தொழுக தொடங்குமே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கடி அற்ற தசையில் அபிமத ஸித்திக்கு அஞ்சலியே சாதநம் -என்று அறிந்தவன் இறே-

அதி சஞ்சல சேஷ்டித –
துரு துருக்கையனாக கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் இல்லையோ –
இத்யுக்த்வா
ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சாசகார
-அவள் தான் கறப்பது கடைவது ஆகத் தொடங்கினாள் –
குடும்பிநீ
இவனைப் போலே நியமிக்க வேண்டுவது அநேகம் உண்டு இ றே-

பெரு -மாயன்
நிரதிசய ஆச்சர்ய -உக்தன்
-இத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் –
அது தன்னை ஷூ த்ரரைப் போலே களவாகிற வழி யல்லா வழியிலே இழிந்து
சர்வசக்தியானவன்
அது தன்னையும் தலைக் கட்ட மாட்டாதே
வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டு
அடியுண்டு
பையவே நிலையும்
என்று உடம்பு வெளுத்து நின்ற நிலை யளவும் செல்ல -நினைக்கிறார்-

என் -அப்பனில்
ஆழ்வார் இவருக்கு உத்தேச்யராய் நிற்க -இங்கனம் சொல்லுவான் என் -என்னில்
பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டார் ஆவர் இ றே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா –
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் -என்கிறபடியே
அவ்வருகே போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே துவக்குண்டு -சொல்லுகிறார் என்னவுமாம்-

என் அப்பனில் நண்ணி-
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் விஷயத்தில் கிட்டி
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தில் கிட்டுகையில் உள்ள அருமை போல் அன்றி
ப்ரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டு சரம அவதியான ததீய சேஷத்வத்தை கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் அதின் தோஷ தர்சநத்தாலே
இங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லை யாகையால் இது அதிலும் அரிது

தென் குருகூர் -நம்பி-
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் –
பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இ றே-
ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர் –

என்றக்கால்-
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு –
ஒரு உக்தி மாத்ரமே அமையும் இவ் விஷயத்துக்கு
பூர்தியால் வந்த ஏற்றமே அன்று -சௌலப்யத்தாலும் வந்த ஏற்றம் உண்டு என்கை-

அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆழ்வாருக்கு பிறக்கும் ஆநந்தம் எல்லாம்
இவ்விஷயத்தில் ஒரு உக்தி மாத்ரத்திலே எனக்கு சித்தித்தது –

அமுதூரும்
அமுதூற்று மாறாதே நிற்கும்
அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே
எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்

என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்
முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு
அதின் எல்லையில் நிற்கிற எனக்கு
ரசிக்குமா போலே ரசிக்குமோ

என் நாவுக்கே
அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம்
ரசிக்கிறது –என்றுமாம்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் -/ ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த- வியாக்யானம் –

May 9, 2013

ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்கள்-

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —

அவிதித விஷயாந்தரச்-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –

தனியன் அவதாரிகை

அவிதித விஷயாந்தர -இத்யாதி
இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள்
அவிவிதங்களாய் இருப்பாராய் –
சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று -அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும்
ஸ்ரீ -மதுரகவிகள் -தன் நிஷ்டை -நிலை உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில்
ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது

தனியன் வியாக்யானம் –

அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி பண்ணி யறியார் -என்கிறது –
சிந்தைமற்று ஒன்றின் திறத்தல்லா –என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இறே –
இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
பாட்டுக் கேட்கும் இடமான பர -விஷயமும்
கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
குதித்த இடமான விபவ விஷயமும் –
வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும்
அறியாதே இருப்பர் –

மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் -எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த
வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் -என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை
வைத்தேன் மதியால் -என்கையாலே -அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான் -என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே -ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான் என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி -என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இ றே-
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –

அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்
என்கிறது –
அதாவது -ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது –கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான
பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இ றே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-

சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின் பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே –
என்று இருக்கை -என்றபடி-
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –

அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –

ஏவம் பூதரான –மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

————————————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –

வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் -என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை –வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான்
என்றத்தை –வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி  மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை –மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
என்றத்தை –வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது

எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை-வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்-எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆளுகிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே-நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது

————————————————————————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த-வியாக்யானம்-

பிரவேசம்-

த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே -ஐஸ்வர்யாதி சகல புருஷார்த்தங்களையும் யதாதிகாரம் விதிக்கிற-வேத மர்யாதையிலேநின்றார்கள் ருஷிகள் –
அதாகிறது வேத உப ப்ரும்ஹண முகத்தாலே சேதனருடைய குண அநுகூலமாக
ஐஸ்வர்யாதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் -பரம புருஷார்த்த  லஷணமான
மோஷத்தையும் உபதேசிக்கை –
கேவல சரீர  அனுஷ்டானங்களே ஐஸ்வர்ய விசேஷங்களுக்கு சாதனமாக உபதேசித்து –
கைவல்ய நிஷ்டருக்கு ஆத்ம ப்ராப்தியை உபதேசித்து -நித்ய சத்வஸ்தருக்கு பகவத் ப்ராப்தியை உபதேசித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –

இந்த ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -எங்கனே என்னில் –
வேத தாத்பர்யமாய் -உத்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தியில் நிஷ்டராய் –
பிறருக்கும் உபதேசிக்கும் இடத்திலும் சாஸ்திர சித்தமான ஐஸ்வர்யாதிகளையும்
த்யாஜ்யமாக உபதேசிக்குமவர்கள் இ றே
இவ் விலஷண புருஷார்தத்தின் காஷ்டையான ததீய சேஷத் வத்தளவிலே
வரப் புகுர நின்றார் ஸ்ரீ மதுர -கவிகள்

இவர்க்கு இவ் வேற்றம் வந்தபடி எங்கனே என்னில் –
ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் -தொடங்கி -அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
செல்ல அனுபவித்த இடத்தில் ஆழ்வார் தமக்கு புருஷார்த்த காஷ்டையாக அபிமதமான
ததீய சேஷத்வத்தைப் பற்றுகிறார் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதரான அர்த்தமே சாத்விகருக்கு-பரிக்ராஹ்யம் -என்னும் இடம் மகாபாரத சாரமான ஸ்ரீ சஹஸ்ரநாம அத்யாயத்திலே-சொல்லிற்று இ றே

ஸ்ரீ  பீஷ்மர் பக்கலிலே சகல அர்த்தங்களையும் குறைவறக் கேட்ட தர்ம -புத்திரன்
இவ்வர்த்தம் தமக்கு உத்தேச்யமாக ஸ்வீகரித்த தத்வ ஹிதங்களே நமக்கு உத்தேச்யம் என்று-நினைத்து –கேட்க தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசித்தான் இ றே –
த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலோ -எம்பிரானே ஆஸ்ரயணீ யன் -என்று
நீங்கள் பற்றிற்று -என்ன -அது ஒன்றும் அன்று –எம்பெருமானார் காழிச்சால் மூலையில்-தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில் அதுவும் எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக்--கடவது -என்றாள் –
அந்த ந்யாயத்தாலே -ஆழ்வார் தமக்கும் தஞ்சமாக நினைத்து இருக்கும் ததீய சேஷத்வத்தையே-இவரும் தமக்கு புருஷார்த்தமாக அத்யவசிக்கிறார்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

————————————————————————–

ஸ்ரீ கோவில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருச்சந்த விருத்தம் -111-120-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 8, 2013

111-பாட்டு –

அவதாரிகை –

தம்முடைய தண்மையை அனுசந்தித்து -பொறுத்து நல்க வேணும் -என்றார் -கீழ் பாட்டில் –

இதில் –
பகவத் ப்ரபாவத்தை அனுசந்தித்து கால ஷேப அர்த்தமாக பண்ணின அநுகூல
வ்ருத்தியால் வந்த குற்றத்தையும் –
ப்ராமாதிகமாக செய்த குற்றத்தையும் –
குணமாக கொள்ள வேணும் -என்கிறார் –

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-

பதவுரை

நின்னை வைது

தேவரீரை நிந்தித்து
வல்லஆ பழித்தவர்க்கும்

சக்தி யுள்ள வரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும்
மாறு இல் போர் செய்து

ஒப்பில்லாத யுத்தம் பண்ணி
நின்ன செற்றும்

தேவரீருடைய
தீயில்

கோபாக்நியில்
வெந்தவர்க்கும்

வெந்து போன வாலி முதலானோர்க்கும்
உனை வந்து எய்தல் ஆகும் என்பர்

தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப் பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லா நின்றனர்;
ஆதலால்

ஆகையாலே
எம் மாய!

எம்பெருமானை!
ஞானம் நாதனை

ஸர்வ லோக ஸம் ரக்ஷகனே!
நாயினேன்

அடியேன்
செய்த குற்றம்

பண்ணின குற்றங்களை
நற்றம் ஆகவே கொள்

குணமாகவே கொள்ளல் வேண்டும்.

வியாக்யானம் –

வைது நின்னை –
ஸ்தவ்ய ஸ்தவ ப்ரிய-என்று புகழப் படும் உன்னை
பருஷிக்கைக்கு விஷயம் ஆக்கி –
பருஷம் தான் என் -என்னில் –
அபிஷிக்த ஷத்ரியன் அன்றிக்கே அவர்களுக்கு பெண் கொடுத்து –
பெண் குடியான வம்சத்தில் பிறந்தான் என்றும் –
இடைக்கையும்  வலக்கையும்  அறியாத இடைக் குலத்தில் பிறந்தான் -என்றும்
ஆய்த்து பருஷிப்பது

வல்லவா பழித்தவர்க்கும்-
அவ்வவர்களுக்கு அவத்யமான தூத்ய சாரத்ய நவநீத சௌர்யாதிகளை
வ்ர்த்த ஹாநியாக பழித்து

பழி -குற்றம்

வல்லவா பழிக்கை யாவது –
உள்ள சக்தி எல்லாம் பகவன் நிந்தையிலே ஆக்குகை –

மாறில் போர் செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் –
எதிர் இல்லாத யுத்தத்தை பண்ணி -உன் கோப அக்நியாலே தக்தர் ஆனவர்களுக்கும் –
மஹா ராஜரோடே வாலி பண்ணின யுத்தத்தை யாய்த்து இவர் –மாறிலாத போர் –என்கிறது –
அவர்கள் ஆகிறார் –சிசுபாலனும்  வாலியும் முதலானவர்கள் –

வந்துனை எய்தலாகும் என்பர் –
சர்வாதிகனான உன்னை வந்து ப்ராபிக்கலாம் என்று ரிஷிகள் சொல்லா நின்றார்கள் –

பகவச் சக்ரேண வ்யாபாதிதஸ் தத் ஸ்மரணாத் தக்தா கிலக சஞ்ச யோ பகவந்த
முபநீதஸ் தஸ்மின் நேவலயமுபயயௌ -என்று
சிசுபால மோஷத்தை சொன்னான் ஸ்ரீ பராசர பகவான் –

ராம பாணா ஹத -ஷிப்ர மா வஹத் பரமாங்கதம் -என்று
வாலி உடைய பகவத் ப்ராப்தியை சொன்னான் ஸ்ரீ வால்மீகி பகவான் –

ஆதலால் –
உன்னை நிந்தித்தாருக்கும் எதிரிட்டாருக்கும் அகப்பட குண ப்ரபாவத்தாலே
உன்னைப் பெறலாம் என்று மஹ ரிஷிகள் சொல்லுகையாலே

எம் மாய –
ஆஸ்ரிதர் உடைய அபராதங்களைப் பொறுக்கைக்கு அடியான
தயா காங்ஷாத் யாச்சர்ய குணங்களை எனக்கு பிரகாசிப்பித்தவனே

நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் –
அநந்ய கதியாய் உன் கை பார்த்து இருக்கிற நான் –
ப்ராமாதிகமாகச் செய்த குற்றத்தையும் -குணமாகக் கொள்ள வேணும் –

ஞால நாதனே –
ஜகத்துக்கு நிருபாதிக சேஷி யானவனே
ஞான அஞ்ஞான விபாகம் இன்றிக்கே
இருந்ததே குடியாக
இஜ் ஜகத்தை உடையவன் என்று
குற்றத்தை குணமாக கொண்டு அருளுகைக்கு ஹேது சொல்லுகிறது –

——————————————————————————————

112-பாட்டு –

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே -இத்தலையில் குற்றத்தை பொறுக்க வேணும் என்று ஷாபணம்
பண்ணி -அக் குற்றங்களை குணமாக கொள்ள வேணும் என்றார் –
இப்பாட்டில் -(நெஞ்சுக்கு உபதேசம் பாடல் 1 இது )
திரு உள்ளத்தை குறித்து -ஆயுஸூ எனக்கு இன்ன போது முடியும் என்று தெரியாது –

அவன் திருவடிகளில் வணங்கி வாழ்த்தி கால ஷேபம் பண்ணப் பார் -என்கிறார்

வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே -112-

பதவுரை

நாள்கள்

தினங்களானவை
வாள்கள் ஆகி செல்ல

(நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள் போன்று கழிய
நோய்மை

பல வகை வியாதிகளாலே
குன்றி

உடல் பலக் குறைபட்டு
மூப்பு எய்தி

கிழத் தனமும் வந்து சேர்ந்து
மாளும் நாள் அது

மரணமடைவதோர் நாள் நெருங்கி விட்டது;
ஆதலால்

ம்ருத்யு காலம் குறுகி விட்டபடியால்
என் நெஞ்சமே

எனது மனமே!
ஆனது நன்மை ஆகும் என்று

எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மை யென்று
நன்கு உணர்ந்து

த்ருடமான அத்யவஸாயங் கொண்டு
வணங்கி வாழ்த்து

(அவ் வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா;
அது அன்றியும்

அதற்கு மேலே
மால பாதமே

அப் பெருமானுடைய திருவடிகளே
மீள்வு இலாத போகம்

மறுபடி திரும்பி வருதலில்லாத நித்ய போகத்தை
நல்க வேண்டும்

அளிக்கக் கடவது

 

வியாக்யானம் –

வாள்களாக நாள்கள் செல்ல –
ஆயுஸை ஈரும் வாள் போலே நாள்கள் கழிய –
தேஹாத்ம அபிமாநிகள் -தேஹத்தில் விருப்பத்தாலே ஆயுஸு போகா நின்றது என்று
அஞ்சா நிற்பர்கள் -சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதும் -என்கிறபடியே
பகவத் சமாஸ்ரயணத்துக்கு கண்ட காலம் வ்யர்த்தமாய் போகா நின்றது என்று
மோஷ ருசி உடையார் வெறுப்பர்கள் –
ஆஸ்ரயித்தவர்கள் பகவத் அனுபவத்துக்கு கண்ட காலம் வ்யர்த்தமாய் போகா நின்றது என்று  வெறுப்பர்கள் –

நோய்மை குன்றி மூப்பெய்தி –
யௌவன அவஸ்தையில் உண்டாக கடவ வலி -ரோகாதிகளாலே குன்றி –
பல ஹாநியே ப்ரக்ர்தியாய் மூப்பை ப்ராபித்து –
பால்யத்தில் ஜ்ஞானம் குறைந்து இருக்கும் –
வார்த்தகத்தில் சக்தி குறைந்து இருக்கும் –
இரண்டும் உண்டான யௌவன அவஸ்தையில் -ரோகாத் யுபாதிகளினாலே
ஜ்ஞான சக்திகள் குறைந்து இருக்கும் –
இவை யாய்த்து உள்ள ஆயுஸில் வரும் ப்ரத் யூஹங்கள்

மாளும் நாளது –
மாளும் அந்த திவசம் ஆய்த்து -முடியும் நாள் ஆய்த்து ப்ராப்தமாய் நிற்கிறது -என்கை

அதவா –
மாளும் -முடியும்
நாளது-ஆயுஸின் ஸ்வபாவம் என்றுமாம்

ஆதலால் வணங்கி வாழ்த்து –
ஆயுஸூ அஸ்திரம் ஆகையாலும் –
உள்ள ஆயுஸுக்கு ப்ரத்யூஹங்கள் பலவும் உண்டாகையாலும்
நாளைச் செய்கிறோம் -என்று இருக்குமதன்று –
உள்ள போதே தலை படைத்த பிரயோஜனம் பெறத் திருவடிகளிலே வணங்கி
ஸாஜிஹ் வாயாஹரிம் ஸ் தௌதி -என்கிறபடியே
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தப் பார் -என்றுமாம் –

என்னெஞ்சமே –
எனக்கு பவ்யமான நெஞ்சமே –
உன்னுடைய கார்யமான ச்ம்ர்திக்கு நான் சொல்ல வேண்டா வி றே -என்கிறார் –
நின் புகழ் க்கல்லால் -நேசமில்லை நெஞ்சமே -என்று தம்மிலும் பகவத் ப்ரவணமாய்
இறே தம்முடைய திரு உள்ளம் இருப்பது –

ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்து –
த்யாயன்ஸ்து வன்னமச்யம்ச்ச -என்று பகவத் ப்ராப்திக்கு இவற்றை சாதனமாக
சொல்லா நின்ற பின்பு அதுக்கு ஆனாலோ என்ன –

மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –
சர்வாதிகனான சர்வேஸ்வரன் திருவடிகள் நமக்கு -நச புநர் ஆவர்த்ததே -என்கிறபடியே
யாவதாத்மா பாவியான கைங்கர்ய போகத்தை தர வேணும்

நீ வணங்கி வாழ்த்தப் பார்
நம இத்யேவ வரதிந -என்றும் –
தத் விப்ராசோ விபந்யவ -என்று
இவை ப்ராப்ய அந்தர் பூதமாய் இறே இருப்பது
நீ இத்தை செய்யப் பார் -என்று கருத்து –

————————————————————————–

113-பாட்டு –

அவதாரிகை –

நெஞ்சுக்கு உபதேசம் பாடல் 2 இது
மீள்விலாத போகம் நல்க வேண்டுமே -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்ய போகமே
பாரதந்த்ர்யத்தினுடைய எல்லையிலே பெறுமதாய் இருக்க –
தத் விருத்தமான துர்மாநாதிகளாலே உபஹதராய் இருந்த நமக்கு அந்த பேறு
பெருகை கூடுமோ -என்ன –

திரு உள்ளத்தைக் குறித்து
துர்மாநத்தாலே ப்ரஹ்ம சிரஸை யறுத்த ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவனே
நமக்கு பாரதந்த்ர்ய விரோதியான துர்மாநத்தைப் போக்கிப் பேற்றைத் தரும்
நீ அவனை  உபாயம் என்று புத்தி பண்ணி இரு -என்கிறார் –

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-

பதவுரை

நெஞ்சமே!

என் மனமே
வாழி

உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள்
சலம் கலந்த செம்சடை

கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையை யுடைவனும்
கறுத்த கண்டன்

(விஷத்தினால்) கறுத்த கழுத்தை யுடையனும்
புலன் கலங்க

ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை

வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட

பிச்சை வாங்கி யுண்டு ஜீவித்த
பாதகத்தான்

கோர பாதகியாய் யுள்ள
சிவபிரானுடைய
வன் துயர் கெட

வலிதான துக்கம் தீரும்படி
அலங்கல்

திருத் துழாய் மாலையை யணிந்த
மார்வில்

திரு மார்பினின்றும்
வாசம் நீர்

திவ்ய பரிமளமான தீர்த்தத்தை
கொடுத்தவன்

அவனுக்கு ப்ரஸாதித்தருளி
அடுத்த சீர்

என்றும் விட்டு நீங்காத திருக் கல்யாண குணங்களை யுடைய
நலம் கொள் மாலை

ஆநந்த மயனான எம்பெருமானை
கண்ணும் வண்ணம்

அணுகும் வழியாகிற அவனது திருவருளையே
எண்ணு

அநுஸந்தித்து

வியாக்யானம் –

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் –
கங்கா ஜலத்தை சாகல்யேந  தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி
சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –

கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –

சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூ சகம் –

இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் –
குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –

சத் பிரக்ருதிகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே
துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –

வெண்டலை-
முடை யடர்த்த சிரம் ஏந்தி -என்கிறபடியே -ப்ரஹ்ம சிரஸை அறுத்த நாள் தொடங்கி
சிரகாலம் தரித்துக் கொண்டு -திரிகையாலே -ரக்தாதி ஸ்பர்சங்கள் போய் –
அஸ்தி மாத்ரம் ஆகையாலே –வெளுத்த சிர கபாலத்திலே-

புலன் கலங்க வுண்ட –
பூர்வ காலத்தில் -தன்னுடைய சக்தியையும் –
லோகம் அடங்க ஆஸ்ரயிக்கும் படியான ஐஸ்வர்யத்தையும் அனுசந்தித்து –
பின்பு பாதகியாய் -சிர கபாலத்திலே ஜீவிக்கும்படியான ஸ்வரூப ஹாநியையும்
அனுசந்தித்து -சர்வேந்த்ரியங்களும் ஷூ பிதமாம்படி -அதிலே ஜீவித்து திரிந்தவன்-

பாதகத்தன் வன் துயர் கெட –
பிதாவுமாய் -லோக குருவுமாய் இருந்துள்ள அவன் தலையை அறுக்கையாலே
வந்த பாதகத்தவனுடைய வலிய துக்கம் கெட –வன் துயர் -என்கிறது –
பிராயச்சித்த பரிஹாரம் ஆதல் –
அனுபவ விநாச்யம் ஆதல்-அன்றிக்கே ஒரு சர்வ சக்தி போக்க வேண்டும்படி இருக்கையாலே-

அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் –
திருமாலை உடைத்தான திரு மார்வில் -பரிமளிதமான நீராலே அக் கபாலத்தை நிறைத்தவன் –

அலங்கல் மார்வு -என்றது -பிரயோஜநாந்த பரரோடு -அநந்ய பிரயோஜநாரோடு வாசியற –
ஆபத்தே ,முதலாக ரஷிக்கைக்கு இட்ட தனி மாலை என்று தோற்றுகைக்காக –

வாச நீர் -என்றது அது தான் -சர்வ கந்த -என்கிற விக்ரஹத்திலே உத்பன்னமான ஜலம் ஆகையாலே –

முன்பு ஊரு செங்குருதி என்றது -பரிக்கிரஹித்த விக்ரஹத்தின் உடைய சஜாதீய பாவத்தின் உடைய-மெய்ப்பாடு தோற்றுகைகாக

அடுத்த சீர் நலம் கொள் மாலை –
ஸ்வரூப அநு பந்தியான கல்யாண குணங்களால் வந்த வைலஷண்யத்தை உடைய சர்வேஸ்வரனை

நண்ணும் வண்ணம் எண்ணு –
இப்படி துர்மாநியானவனுடைய பாதகத்தைப் போக்கினவன் –
அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –
நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு

அதாகிறது –
அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை

வாழி நெஞ்சமே
நெஞ்சமே வாழி

நெஞ்சமே -உனக்கு இந்த வ்யவசாயம் ஒருபடிப்பட உண்டாயிடுக-

—————————————————————————–

114-பாட்டு –வதாரிகை –

இப்படியானால் நமக்கு கர்த்தயம் என் -என்ன –
ஜ்ஞான ப்ரதானமே தொடங்கி
பரமபத ப்ராப்தி பர்யந்தமாக
நம் பேற்றுக்கு உபாயம்
நஷ்டோத்தரணம் பண்ணின ஸ்ரீவராஹ நாயனார் திருவடிகளே என்று நினைத்து
சரீர அவசாநத்து அளவும்
காலஷேப அர்த்தமாக
அவனை வாழ்த்தப் பார் –
என்கிறார்

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

பதவுரை

என் நெஞ்சமே

எனது மனமே
ஈனம் ஆய

(அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல
எட்டும்

அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும்
நீக்கி

போக்கி
ஏதம் இன்றி

ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய்
மீது போய்

(அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று
வானம்

பரம பதத்தை
ஆள வல்லையேல்

அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில்
ஞானம் ஆகி

ஆத்ம ஞானத்தை யளிப்பவனாயும்
ஞாயிறு ஆகி

ஸூரியனைப்போலே இந்த ஞானத்தை அளிப்பவனாயும்
ஏனம் மூர்த்திஆய்

மஹா வராஹ மூர்த்தியாய்
ஞாலம் முற்றும்

பூமி முழுவதையும்
ஓர் எயிறு

ஒரு கோட்டினாலே
இடந்த

அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த
எந்தை

எம்பெருமானது
பாதம்

திருவடிகளை
எண்ணி

சிந்தித்து
வணங்கி

நமஸ்கரித்து
வாழ்த்து

துதிக்கக் கடவை

வியாக்யானம் –

ஈனமாய எட்டும் நீக்கி-
சேதனர்க்கு குறையான அவித்யாதிகள் ஐந்தையும்
சரீர சம்பந்த பிரயுக்தமான தாபத் த்ரயங்களையும் நீக்கி
இவை இவனுக்கு ஜ்ஞான சங்கோசம் என்கையாலே –ஈனம் -என்கிறது –

ஏதமின்றி –
சம்சாரிகமான சகல துக்க ஹேதுவான அவித்யாதிகள் போகையாலே –
தத் கார்யமான துக்கங்களும் போம் இறே

ஏதம் -துன்பு

மீது -போய் -வானமாள வல்லையேல் –
துக்க சம்பந்தம் உள்ள லீலா விபூதிக்கு மேலே –
அர்ச்ச்சிராதி மார்க்கத்திலே போய் -பரமபதத்தில் -ஸ ஸ்வராட் பவதி -என்கிறபடியே
குறைவற்ற இருப்பை வேண்டி இருந்தாய் ஆகில் –

வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே –
உன் வழியே என்னைக் கொண்டு போகை அன்றிக்கே –
பகவத் அனுபவத்துக்கு சஹகாரியான நெஞ்சே –
கால ஷேப அர்த்தமாக அவன் திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப் பார் –
வணங்கி வாழ்த்துகை காலஷேபம் ஆகில் -கீழ்ச் சொன்ன பேற்றுக்கு முதல் என்ன -இன்னது என்கிறது -மேல் –

ஞானமாகி நாயிறாகி –
ஆந்தரமான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குகைக்கு பிரகாசகமான ஜ்ஞானமாய் –
பாஹ்ய பதார்த்த ப்ரகாசகனான ஆதித்யனாய் –

இத்தால் –
ஆத்ம ஜ்ஞான ஹேதுவுமாய் -ஐந்த்ரியக ஜ்ஞான ஹேதுவுமாய் -என்றது ஆய்த்து –

பாஹ்ய விஷயங்களை உள்ளபடி அறிந்தால் ஆய்த்து விடலாவது –

ஆத்ம விஷயத்தை உள்ளபடி அறிந்தால் ஆய்த்து புருஷார்த்த ருசி உண்டாவது

ஆக –ஜ்ஞான ப்ரதனும் சர்வேஸ்வரன் -என்கை –

ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி –
மஹா வராஹமாய் -பூமியை அடங்க அத்விதீயமான எயிற்றாலே யிடந்த விலஷண
விக்ரஹ உக்தன் –

மூர்த்தி -என்று ஸூரி போக்யமான பூர்ண ஷாட் குண்ய விக்ரஹத்தை உடையவனைச்-சொல்லுகிறது –

அவ் வடிவை உடையவன் கிடீர் ! தன்னை அழிய மாறி நஷ்டோத்தரணம் பண்ணினான் என்று கருத்து

யெந்தை –
அந் நீர்மையை காட்டி -என்னை எழுதிக் கொண்டவன் -என்னுதல்
அவ் வடிவை உடையவன் தன்னை அழிய மாறுகைக்கு அடி -இத்தை உடையவன்
ஆகையாலே -என்னுதல்

பாதம் எண்ணியே –
அவன் திருவடிகளையே உபாயமாக அனுசந்தித்து –
மஹா வராஹமாய் -பிரளய ஆர்ணவத்தின் நின்றும் பூமியை உத்தரித்தாப் போலே
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் நம்மை உத்தரிக்கும் என்று அத்யவசித்து
வணங்கி வாழ்த்தி -என்கிறார்-

ஈனமாய எட்டு நீக்கி -ஏதமின்றி -மீது போய் -வானமாள வல்லையேல் -ஞாலமாகி
நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் ஏனமாய் இடந்த மூர்த்தி -எந்தை -பாதம் எண்ணியே
வாழ்த்தி வணங்கு என் நெஞ்சமே -என்று அந்வயம்

—————————————————————————–

115-பாட்டு –

அவதாரிகை –

அவன் -அவாக்ய அநாதர என்கிறபடியே ஸ்வயம் நிரபேஷன் –
நாம் அநேக ஜன்மங்களுக்கு அடியான கர்மங்களைப் பண்ணி வைத்தோம் –
அவன் திருவடிகளே உபாயம் -என்று நினைத்த மாத்ரத்தில் நம்மை ரஷித்து அருள
கூடுமோ என்று -சோகித்த திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வவித பந்துவுமாய் -சகல விரோதிகளையும் போக்கி -தன்னைத் தருவானாக
ஏறிட்டுக் கொண்டான் -நீ இனி சோகிக்க வேண்டாம் என்று –
திரு உள்ளத்தைக் குறித்து -மாசுச -என்கிறார் –

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

பதவுரை

முத்தனார்

ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்
முகுந்தனார்

மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்;
ஒத்து ஒவ்வாத  பல் பிறப்பு ஒழித்து

ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி
நம்மை ஆட்கொள்வாள்

நம்மை அடிமை கொள்வதற்காக
அத்தன் ஆகி

பிதாவாயும்
அன்னை ஆகி

மாதாவயும்
ஆளும் எம்பிரானும் ஆய்

அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும்
நம்முன்

நம்மிடத்திலே
புகுந்து மேவினார்

புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு)
ஏழை நெஞ்சமே

மதிகெட்ட மனமே
எத்தினால்

எதுக்காக
இடர் கடல்

துக்கஸாகரத்திலே
கிடத்தி

அழுந்திக் கிடக்கிறாய்.

வியாக்யானம் –

அத்தனாகி –
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –

அன்னையாகி-
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –
மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –
இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –
சர்வேஷமேவா  லோகாநாம் பிதர  மாதர  ச மாதவ -என்றும் –
உலக்குக்கோர் முத்தைத்  தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே

அதவா –
அத்தனாகி அன்னையாகி –
ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –
உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –
இருக்குமவன் -என்னவுமாம் –
க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இறே

இவ்வளவால் -கீழ்ப் பாட்டில் –ஜ்ஞானமாகி –என்றத்தை விவரிக்கிறது –

யாளும் எம்பிரானுமாய் –
அடிமை கொள்ளக் கடவ என் ஸ்வாமியாய் –
உக்தமான ஜ்ஞான கார்யமாகக் கொண்டு –
கைங்கர்ய ருசி பிறந்தால் -அடிமை கொள்ளுகைக்கு ஸ்வாமி யுமாய் -என்கை –
இவை தான் சர்வவித பந்துவுமாய் இருக்கிற படிக்கு உப லஷணம் –

மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ர்த் கதிர் நாராயணா -என்றும் –

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கா சென்னுடை வாழ் நாள் -என்றும்
சொல்லக் கடவது இறே

இவ்வளவால் -கீழ்ப் பாட்டில் –ஜ்ஞானமாகி -என்றத்தை விவரிக்கிறது – கடவது இறே-

ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து –
ஒன்றுக்கு ஓன்று நெடுவாசிப் பட்டு –
இப்படி அசங்யாதமான ஜன்மத்தைத் தவிர்த்து-
ஆத்ம ஸ்வரூபம் ஏகமாய் இருக்க –

ஒருத்தனுக்கு ஒருத்தன் உடைய ஜன்மம் ப்ராப்யமாயும்
அவன் தனக்கே ஒருவனுடைய ஜன்மம் த்யாஜ்யமாயும் இறே இருப்பது –

அதவா –
ஓர் ஓர் ஆகாரத்திலே ஒத்தும் -ஓர் ஓர் ஆகாரத்திலே வைஷம்யப்பட்டும் இருக்கும்
ஜன்மங்கள் என்றுமாம் –

ஜ்ஞானக ஆகாரதயா -கர்மத்தாலே தேவ  திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபத்தாலே
விஷமமாயும் இருக்கை –

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை -என்னக் கடவது இறே-

நம்மை ஆட்கொள்வான் –
நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை -நித்ய ஸூரிகளைக்  கொள்ளும் அடிமை கொள்ளுகைக்காக –
ஜன்மங்கள் தோறும் உடன்கேடாய் போந்ததாகையாலே திரு உள்ளத்தைக் கூட்டி –நம்மை -என்கிறார் –

முத்தனார் –
அஸ்பஷ்ட சம்சார கந்தரானவர்

முத்தர் -என்று ப்ரத்வம்ஸா பாவத்தைச் சொல்லுகிறது அன்று –
தன்னுடைய ஹேய பிரத்யநீகை ஸ்வாபாவிகம் ஆகையாலே ப்ராக பாவத்தைச் சொல்லுகிறது –

முகுந்தனார் –
முக்தி பூமி ப்ரதானவர் -இத்தால் நித்யர் வ்யாவ்ர்த்தியைச் சொல்லுகிறது

ஆக –
இரண்டாலும் -விரோதி நிவ்ர்த்தி ஹேதுவான -ஜ்ஞான சக்தியாதி பூர்த்தியையும்
மோஷ ப்ரதத்துவதுக்கு அடியான ஔதார்யத்தையும் -சொல்லிற்று ஆய்த்து

புகுந்து நம்முள் மேவினார் –
ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –
ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

நம்முடைய தண்மை பாராதே –
தம்முடைய பெருமை பாராதே –
சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி –
நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ –
ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க –
துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –

ஏழை நெஞ்சமே –
பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –

ஏழையர் -அறிவிலோர்

முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –

————————————————————————————–

116-பாட்டு –

அவதாரிகை –

மேலுள்ள ஜன்ம பரம்பரைகளுக்கு அடியான கர்மத்தைப் போக்கி அடிமை கொள்ளுவானாக
ஏறிட்டு கொண்டான் -என்றார் -கீழ்

இதில் –
நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி
நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து
நமக்கு தஞ்சமான சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு –
யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ -என்கிறார்-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

பதவுரை

மாறு செய்த

எதிரிட்ட
வாள் அரசர்கள்

ஆயுதபாணியான இராவணனுடைய
நாள் உவப்ப

வாழ்நாள் முடியும்படியாக
அன்று

முற்காலத்து
இலங்கை

லங்காபுரியை
சென்று

அடைந்து
நீறு செய்து

நீறாக்கி
கொன்று

அவனைக் கொன்று
வெற்றி கெணண்ட

ஜயம்பெற்ற
வீரனார்

மஹாவீரரான பெருமாள்
என்னை

அடியேனை
தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால்

தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)
நமன்

யமனானவன்
கூறுசெய்து கொண்டு

(என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து
இறந்த குற்றம்

நான் செய்து கழித்த பாவங்களை
என்ன வல்லனே

நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.

வியாக்யானம் –

மாறு செய்த –
எதிரிட்டு கொண்ட –
ரிபூணா ம்பி வத்சல -என்று இருக்கிற விஷயத்தை இ றே எதிரிட்டுக் கொண்டது –
தபியோபாதி அனுகூலித்துப் பிழைத்துப் போகலாய் இருக்க –
துஷ் பிரக்ர்தியாகையாலே கிடீர் -எதிரிட்டுக் கொண்டது –

வாளரக்கர் -நாள் உலப்ப –
வாலியைக் கொன்று அவ்வரசிலே மஹாராஜரை அபிஷேகம் பண்ணின படியை
கேட்டிருக்கச் செய்தே இ றே எதிரிட்டது –
ருத்ரன் பக்கலிலே பெற்ற வாளையும் –
ப்ரஹ்மா தனக்கு கொடுத்த வயசையும்
தனக்கு பலமாக விஸ்வசித்து இருக்கையாலே -நம் கையிலே வாள் இருக்க ஒருவராலும்
ஜெயிக்க ஒண்ணாது -வரத்தால் வந்த ஆயுஸு உண்டாய் இருக்க ஒருவராலும் கொல்ல
ஒண்ணாது -என்று இருந்தான் ஆய்த்து

வாளரக்கர் -நாள் உலப்ப –
ராவணனுடைய அந்த வாளையும் ஆயுஸையும் முடிகைக்காக

யாதொன்றை தனக்கு பலமாக விஸ்வசித்து இருந்தான் -அத்தை யாய்த்து யழித்தது

உலப்பு -முடிவு

உலப்பிலானே -என்றும்
உலப்பில் கீர்த்தி யம்மானே -என்றும் சொல்லக் கடவது இறே-

அன்று –
சுரி குழல் கனி வாய்த் திருவினை பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன் -என்கிறபடியே
அவன் ப்ராதிகூல்யத்தில் கை வளர்ந்தவன்று –
பர ஹிம்சை பண்ணின அளவன்றியே
தேவதைகள் குடி இருப்பை அழித்த அளவன்றியே
நயஷ்டவ்யம் நதாதவ்யம் நஹோதவ்யம் -என்கிறபடியே ஈஸ்வர அஜ்ஞாதி லங்கநம்
பண்ணின அளவன்றிக்கே –
ஜகஜ் ஜீவநமான மிதுனத்தை கடலுக்கு அக்கரையும் இக்கரையும் யாம்படி பண்ணின
ப்ராதிகூல்யம் இ றே-

இலங்கை நீறு செய்து –
இப்படிச் செய்யச் செய்தேயும் -அனுகூலிக்குமாகில் இவனை வ்யர்த்தமே அழியச் செய்கிறது-என் –

என்று பார்த்தருளி -இலங்கையை பஸ்மம் ஆக்கி-

சென்று –
அவ்வளவிலும் அனுகூலியாமையாலே
ரிஷ்யமுகத்தில் நின்றும் கடல் கரையில் சென்று –
இலங்கைக்கு அரணான கடலை அணை செய்து –
இலங்கைக்கு சென்று அடை மதிள் படுத்தி-

கொன்று –
அவ்வளவிலும் -ந நமேயம் -என்கிற பிரதிஜ்ஞை குலையாமையாலே ஸபரிகரமாக
ராவணனைக் கொன்று –

வென்றி கொன்ற வீரனார் –
அவனை ஜெயித்து வீர ஸ்ரீ உடன் நின்றவர் –
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் –
இவன் நமக்கு புறம்பாய் இருப்பான் ஒருவன் என்று தம்முடைய திரு உள்ளத்திலே என்னை நினையாமையாலே –

வேறு செய்து -என்கிறது –
நாம் பண்ணின கர்மத்துக்கு கர்த்தாவும் -போக்தாவும் நாமே என்று இருக்கை

என்னை -என்று
அவன் திருவடிகளிலே பர ந்யாசம் பண்ணின என்னை -என்றபடி –
எனக்கு எதிரிகள் ஆனவர்கள் தமக்கு எதிரிகளாம் படி
தமக்கு அந்தரங்கன் ஆக்கி வைக்கையாலே -என்கை-

நமன்  கூறு செய்து கொண்டு –
செய்தார் செய்த குற்றங்களை ஆராயக் கடவ யமன் -என்னை விபஜித் கொண்டு –
ஆண் பிள்ளையான -சக்கரவர்த்தி திருமகனார் -தம்மோடு கூட்டிக் கொள்ள -யமனாலே-பிரிக்க லாமோ –

இப்பாட்டு –சக்கரவர்த்தி திருமகனைச் சொல்லுகிறது-

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று சொல்லுகிறபடியே –
யம வச்யமான ஸ்தாவர ஜங்கமங்களை இருந்தபடியே விஷயீ கரித்து –

பரம பதத்துக்கு-ஏறக் கொண்டு போன ஏற்றத்தை நினைத்து –

கூறு செய்கை -பிரிக்கை –

இறந்த குற்றம் எண்ண வல்லனே
செய்து கழிந்த பாபத்தை எண்ண வல்லனோ –
கீழ்க் கழிந்த பாபமாவது -அநுதாப தசையையும் -பிராயசித்த தசையையும் கழித்து –
நரக அனுபவம் பண்ணியே கழிக்க வேண்டுமவை -என்கை

எண்ண வல்லனே -என்றது -பாபம் பண்ணினான் என்று தனி க்ரஹத்திலே இருந்து நினைக்கவும் சக்தன் அல்லன் -என்றபடி –

——————————————————————————————

117 பாட்டு –

அவதாரிகை –

யம வஸ்யதா ஹேதுவான கர்மங்கள் போனாலும் -தேக ஆரம்பகமாய் இருந்துள்ள
ப்ராரப்த கர்மம் கிடந்தது இல்லையோ -என்ன –

அந்த பிராரப்த கர்மாவையும் -தத் ஆச்ரயமான தேகத்தையும் போக்கி –
பரம பதத்தில் கொண்டு போவான் ஆன பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறை இல்லை
என்கிறார் –

பூர்வாஹகம் ஆகிறது
தேக பரம்பரைக்கு ஹேதுவாகவும் –
நரக ஹேதுவாயும் -ப்ராரப்தமாய் -அநுபவ விநாச்யமாயும் -மூன்று வகைப்பட்டதாய்த்து இருப்பது –

அதில் -உபாசகனுக்கு -பிராரப்த கர்மம் ஒழிந்தவை நஷ்டமாகக் கடவது –
பிராரப்த கர்மம் அநுபவ விநாச்யமாகக் கடவது –
பிரபன்னனுக்கு -பகவத் ப்ரசாதத்தாலே த்ரிவித கர்மங்களும் அநுபவிக்க வேண்டியது இல்லை –

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -107-

பதவுரை

அச்சம்

பயமென்ன
நோயோடு அல்லலி

வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன
அவாயம் மூப்பு

அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன
பல் பிறப்பு

பலவகைப் பிறப்புகளென்ன
இவை

ஆகிய இவற்றையும்
வைத்த சிந்தை

இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும்
வைத்த ஆக்கை

கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும்
மாற்றி

போக்கடித்து
வானில்

(நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்)
அச்சுதன்

அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும்
அனந்த கீர்த்தி

எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும்
ஆதி அந்தம் இல்லவன்

முதலும் முடிவும் மில்லாதவனும்
நஞ்சு நாக அணை கிடந்த நாதனை

(விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும்
வேத கீதம்

வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம்

வியாக்யானம் –

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை-
பயம் -வியாதி அத்தோடு கூடின ஆதி ஜரை -அநேக ஜன்மம் ஆகிற இவை –

பயமாவது ஆதிகளிலே ஒன்றாய் இருக்க -பிரதமத்திலே எடுத்தது -ஆதி வ்யாதிகள்
எல்லார்க்கும் சாதாரணமாய் இருக்கையாலே –

அதாகிறது -ஆகாமியான துக்கத்துக்கு ஹேதுவான லிங்க தர்சநத்தாலே வரும் மானச துக்கம் –
பயமாகிறது -அது சர்வ துக்க சாதாரணம் இறே

வியாதி யாகிறது –சிரோரோகாதிகள்

ஆதி யாகிறது –
காம க்ரோதாதிகள்

நோயோடு அல்லல் என்றது -இரண்டும் ஆத்யாத்மிகம் ஆகையாலே
அது தான் -ஆதி பௌதிகத்துக்கும் ஆதி தைவிகத்துக்கும் உப லஷணம்
பிராரப்த கர்மாக்களை -அநேக ஜன்மம் சம்பாவனையாலே –பல் பிறப்பு -என்கிறது

ஆய இவை -என்கிறது –
சந்நிஹிதங்களான அனுபவங்களைச் சொல்லுகிறது-

வைத்த சிந்தை –
உக்தமான இவற்றை யனுசந்திக்கிற மனசையும்

வைத்த வாக்கை-
அந்த வாக்குக்கு ஆச்ரயமான சரீரத்தையும்

மாற்றி –

ஆக –
பிராரப்த கர்ம பலமான ஆதி வ்யாதிகளையும் –
அவற்றை அனுபவிக்கிற கரணங்களையும்
சர்வத்துக்கும் ஆச்ரயமான தேக சம்பந்தத்தையும் –
இவற்றை அடங்க தவிர்த்து –

வானில் ஏற்றுவான்-
நோ பஜநம் ஸ்மரான் நிதம் சரீரம் -என்கிறபடியே இவற்றை ஸ்மரிக்கைக்கும்
அவசரம் இல்லாதா பரம பதத்தே ஏறப் பண்ண வல்லவன் –

இஸ் ஸ்வபாவத்தை உடையவன் ஆர் என்ன –

அச்சுதன் –திருவடிகளை ஆஸ்ரயித்தாரை -ஒரு நாளும் -ஒரு படியாலும் -நழுவ விடாதவன் –

அனந்த கீர்த்தி –
இப்படி ஆஸ்ரித ரஷணம் பண்ணுகையால் உண்டான அபரிச்சேத்யமான
குண பிரதையை உடையவன் –

ஆதி யந்தம் இல்லவன் –
ஆதியந்த ரஹீதன் -அதாகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் செய்ய நினைத்து இருக்குமவற்றுக்கும் முதலும்  முடிவும்
இன்றிக்கே இருக்கை

நச்ச நாகணைக் கிடந்த நாதன் –
ஆஸ்ரிதரை ஒருக்காலும் பிரிய மாட்டாத சர்வ ஸ்வாமி
ப்ரதிகூலர் பக்கல் நஞ்சை உமிழ்வானுமாய்
ஜாதி பிரயுக்தமான -மென்மை குளிர்ந்து நாற்றங்களை உடையனுமான
திருவநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிறவன் –

நாதன் –
தாழ நின்று உபகரிக்கைக்கும்
ஆஸ்ரிதரை பிரியமாட்டாமைக்கும்
ஹேது உடையவன் ஆகையாலே

வேத கீதனே –
அச்யுதனாகவும் –
வகுத்த ஸ்வாமி யாகவும்
நாராயண அனுவாஹத்தில் பிரசித்தமானவன் –
சாஸ்வதம் சிவம் அச்யுதம் நாராயணம் -என்னக் கடவது இறே –

————————————————————————————-

118-பாட்டு -அவதாரிகை –

வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி -என்று பிராரப்த கர்ம அவஸாநமான விரோதி நிவ்ர்த்திக்கும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் -என்றும் –
நம்மை ஆட்கொள்வான் -என்றும் –
வானில் ஏற்றுவான் -என்றும் -சொன்ன ப்ராப்ய ஸித்திக்கும்
ஈச்வரனே கடவான் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டில் –

ஈஸ்வரனை நோக்கி -தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான ப்ராப்ய ருசியை
ஆவிஷ்கரிக்கிறார் -இதில் –

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-

பதவுரை

வல்லி நாள் மலர் கிழத்திநாத!

படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே!
உள்ளம்

எனது நெஞ்சானது
சொல்லினும்

வாக்கிலும்
தொழில் கணும்

காயிகவ்யபாரங்களிலும்
தொடக்கு அறாத அன்பினும்

பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)
அல்லினோடு ஆன மாலையும்

ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்
நல் பகவினோடு ஆன காலையும்

நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்)
பாதம் பொதினை

உன்னுடைய திருவடித் தாமரையை
புல்லி

அனைத்து
விளைவு இலாது

(ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல்
பூண்டு

அத்திருவடிகளையே மேற்கொண்டு
மீண்டதில்லை

நிலைத்து நிற்கின்றது.

வியாக்யானம் –

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும் –
வாசிகமான ஸ்துதி -கீர்த்தநாதிகளும் -கயிகமான ப்ரதஷிண அஞ்சலியாதிகளும் –
மானசமான ப்ரேமமும் –

ஆக -மநோ வாக் காயிக வ்யாபாரங்களுக்கு -பகவத் -விஷயமே விஷயமாகை
தொடக்கறா அன்பாகிறது –
விஷயாந்தர ஸ்பர்சம் இல்லாத ப்ரேமம் –

அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும் –
தமோ அபிபூதி யோடும் -விஷயாந்தர ப்ராவண்யத்தோடும் -செல்லக் கடவ ராத்ரியும் –
தேக யாத்ரா  சேஷமாக போது போக்கக் கடவ அஹஸ்ஸூம் –
ராத்ரியோடே கூடின ஸாயம் சந்தையும் –
அஹஸ் ஸோ டே கூடின ப்ராதஸ் சந்தையும் –
கரண த்ரயங்களும் ஏக விஷயமானாப் போலே –
சர்வ காலத்துக்கும் விஷயம் அதுவே யாகை –

நன் பகல் -என்றதை எல்லா காலத்துக்கும் கூட்டி –நன்றான -இரவும் -நன்றான பகலும் –நன்றான சந்தையும் என்கிறார் –

பகவத் விஷயத்தோடே செல்லுகையாலே –

அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத போத போதினைப்
படர்ந்த செவ்வித் தாமரைப் பூவை பிறப்பகமாக உடையவள் ஆகையாலே –
சௌகந்தய சௌகுமார்யாதிகளாலே அதிகையான பிராட்டி தான் –
அகலகில்லேன் -என்று மேல் விழும் சர்வாதிகனே –

அல்லி போலேயாய் செவ்வித் தாமரைப் பூவைப் பிறப்பகமாக உடையவள் -என்றுமாம் –

இத்தால் –
இவர் திரு உள்ளத்துக்கு ஒரு மிதுனமே ப்ராப்யம் -என்றது ஆய்த்து

பாத போதினைப் புல்லி-
உன் திருவடிகள் ஆகிற தாமரைப் பூவைப் பற்றி –
ஸ்ரீ ய பதியான -உன் திருவடித் தாமரைகளை –

மநோ -வாக்-காயங்களாலே -சர்வ காலமும் -பற்றி -என்றபடி –

புல்லல் -புனைதல்

யுள்ளம் வீள்விலாது பூண்டு –
என் மனஸ் ஒருக்காலமும் விச்சேதம் இல்லாதபடி அதி ப்ரவணமாய்
மீண்டதில்லையே –

இருவரும் சேர்ந்த சேர்த்தி அழகிலே -அனுபவிக்க இழிந்து –
அதில் பர்யாப்தி பிறவாமையாலே –
குணாந்தரங்களிலும் மீண்டதில்லை –

——————————————————————————————–

119-பாட்டு –

அவதாரிகை –

கரணத்துக்கும் க்ர்தர் பாவம் பிறக்கும்படியாக உமக்கு நம் பக்கல் பிறந்த அபிநிவேசம்
சம்சாரத்தில் கண்டு அறியாத ஒன்றாய் இருந்தது -இவ் வபிநிவேசத்துக்கு அடி என் -என்று –
பெரிய பெருமாள் கேட்டருள –

உம்முடைய வடிவு அழகையும் சீலத்தையும் காட்டி –
தேவரீர் பண்ணின க்ர்ஷி பலித்த பலம் அன்றோ -என்கிறார் –

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119-

பதவுரை

அரங்கம்

திருவரங்கத்திலே
பொன்னிசூழ்

காவிரிசூழ்ந்த
மேய

நித்யவாஸம் செய்தருள்கிற
பூவை வண்ண

காயம்பூப்போன்ற திருமேனியையுடைய
மாய!

ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே!
கேள்

(இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்;
என்னது

என்னுடையது
ஆவி என்னும்

ஆத்மா என்கிற
வல்வினையினுள்

வலிய பாபராசியிலே
கொழுந்து எழுந்து உள்ள

(தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து  உள்ள தேவரீருடைய
பாதழ் என்ன நின்று

திருவடியென்கிற
ஒண்சுடர் கொழுமலர்

அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே
மன்னவந்து பூண்டு

ஸ்திரமாக வந்து படிந்து
எங்கும்

தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும்
வாட்டம் இன்றி நின்றது.

குறையாமல் வியாபியா நின்றது

வியாக்யானம் –

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண –
காவேரி சூழ்ந்த கோயிலிலே மத்தர்தமாக நித்யவாசம் பண்ணுகிற பூவை வண்ணனே –
கோயிலுக்கு ஒரு தோள் மாலை இட்டால் போலே அலங்க்ர்தமாய்த்து திருப் பொன்னி –
பரம பதத்தில் நித்யவாசம் -அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளை அனுபவிப்பிக்கைக்கு –
ஷீராப்தியில் நித்யவாசம் -ஸ்வேத தீப வாசிகளை காதாசித்தமாக அனுபவிப்பிக்கைக்கு —
கோயிலிலே நித்யவாசம் பாபராசியான எனக்கு -தேவரீர் பக்கலிலே ருசி பிறப்பித்து
அனுபவிப்பிக்கைக்கு –
நிறத்தாலும் -சௌகுமார்யத்தாலும் பூவைபூவாக ஒப்பாகச் சொல்லும்படியாக ஆகர்ஷமான
வடிவு உடையவன் -என்கை

மாய –
இப்படி வேறு ஒரு வ்யக்தியில் காண ஒண்ணாத ஆச்சர்யமான சீலத்தையும்
சௌலப்யத்தையும் உடையவனே

கேள் –
உன்னுடைய அழகாலும்  சீலத்தாலும் -எனக்கு பிறந்த ருசி விசேஷத்தை கேட்டு
அருள வேணும் –

உபகரித்த தேவரீர் விஸ்மரித்தாலும் -உபகார ஸ்ம்ர்தியை உடைய என் பக்கலிலே
கேட்டு அருளீர் -என்கிறார் –

என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து –
என்னுடைய ஆத்மாவென்று பேராய் -பாப ராசியான அதின் பக்கலிலே -உன்னைக் குறித்து
ஸ்ரத்தையானது உதித்து –

கர்ம யோகத்தாலே விரோதி பாபம் போனால் பிறக்க கடவ ஸ்ரத்தை –

பாப ப்ரசுரான தசையிலும் -தோன்றும்படி இறே தேவரீருடைய சௌந்தர்யத்தின் ஏற்றம் -இருப்பது –
ஸ்வ ஸ்வரூபத்தை ஜ்ஞான ஆநந்த லஷணமாக நினைத்து இருக்கை அன்றிக்கே –
பாப வச்யராக வாய்த்து இவர் நினைத்து இருப்பது –

உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர் –
உன்னுடைய திவ்ய விக்ரஹம் என்று வேதாந்தங்களிலே தேஜோ மயமாயும்
கொழுவி மலர் போல் ஸூகுமாரமாகவும் சொல்லப் படுகிற படியே –
கீழ்ப் பிறந்த ஸ்ரத்தைக்கு -தேஜோ மயமாய் -யுவா குமாரா -என்கிற பருவத்தை
உடைத்தாய் -அத்யந்த ஸூகுமாரமான வடிவே விஷயம் -என்கை –

பாதம் -என்று சேஷபூதன் வ்யவஹாரம் இருக்கிற படி

மன்ன வந்து பூண்டு –
பிரியாதபடி வந்து பூண்டு –

பூண்கை யாகிறது -வ்யக்த் யந்தரங்களிலும் அந்வயியாது ஒழிகை –

வாட்டமின்றி எங்கும் நின்றதே –
ஷூத்ர விஷய வாசனையால் சலிப்பிக்க ஒண்ணாத படி உன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எனக்கு ப்ராப்தமாய் நின்றது –
அவ விக்ரஹம் தான் ஷாட் குண்ய விக்ரஹம் என்னும்படி குண பிரகாசகம்
என்கையாலே குணங்களிலே மூட்டிற்று –
அக்குணங்கள் தான் ஸ்வ ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் மூட்டிற்று –
அஸ் ஸ்வரூபம் தான் ஸ்வ ந்யாம்யமான விபூதியிலே மூட்டிற்று –

ஆக –
என்னுடைய ஆதரத்துக்கு உள்ளே
ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாம்
அந்தர்பூதமாய்த்து -என்கை —

——————————————————————————

120-பாட்டு –அவதாரிகை –

உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு
என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை
சொன்னார் -கீழ்-

இதில் –
கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே
நிர்ஹேதுகமாக
பெரிய பெருமாள்
தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே
விரோதி வர்க்கத்தை அடையப் போக்கி –
அபுநா வ்ர்த்தி லஷணமாய்
நிரதிசய ஆநந்த ரூபமான
கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே  தலைக் கட்டுகிறார் –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

பதவுரை

உயக்கொள்

(நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான
மேகவண்ணன்

காளமேக நிபச்யாமனான பெருமான்
இன்று

இன்றைக்கு (நிர்ஹேதகமாக)
இயக்கு அறாத பல் பிறப்பில்

தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும்
என்னை

அடியேனை
மாற்றி

மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி
வந்து நண்ணி

இங்கேயெழுந்தருளி நெருங்கி
தன்னில் ஆய என்னுள்

தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே
தன்

தன்னுடைய
மன்னுசோதி

நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
மயக்கினான்

ஸம்ச்லேஷிப்பித்தான்!
ஆதலால்

இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே
என் ஆவி தான்

எனது ஆத்ம வஸ்துவானது
இயக்கு எல்லாம் அறுத்து

ஒன்றோடொன்று  இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து
அறாத இன்பம் வீடு:

ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை
பெற்றது

பெற்றாதயிற்று

வியாக்யானம்-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –

இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –

இயக்கு -நடையாட்டம் –

இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –

மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –

இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –

நண்ணுதல் -அணைதல்

நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –

பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-

என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு  பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –

இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன்  பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –

மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –

ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே

என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –

இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –

இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்

அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -101-110-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 5, 2013

101-பாட்டு –

அவதாரிகை –

நீர் நம்மை ப்ரார்த்திக்கிற பரபக்தி -விஷயாந்தரங்களின் நின்றும் நிவ்ர்த்தமான
இந்திரியங்களைக் கொண்டு -நம்மை அநவரத பாவனை பண்ணும் அத்தாலே
சாத்தியம் அன்றோ -என்ன –

அங்கனே யாகில் ஜிதேந்த்ரியனாய் கொண்டு அநவரத பாவனை பண்ணுவேனாக
தேவரீர் திரு உள்ளமாக வேணும் -என்கிறார்-

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-

பதவுரை

ஏமம் நீர் நிறத்து

மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மா !

ஸ்வாமி!
இரந்து உரைப்பது உண்டு

(தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு
வாழி

பல்லாண்டு பல்லாண்டு;
மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில்

(சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில்
வைத்தது ஆகில்

அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.)
பரந்த

கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை

எனது நெஞ்சானது
ஒன்றி நின்று

(தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன

தேவரீருடைய
பாதபங்கயம்

திருவடித்தாமரைகளை
நிரந்தரம்

இடைவிடாமல்
நினைப்பது ஆக

தியானித்திருக்கும்படியாக
நீ நினைக்க வேண்டும்

தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும்.

வியாக்யானம்-

இரந்து உரைப்பது உண்டு –
சிரஸா யாச தஸ் தஸ்ய -என்கிறபடியே –

திருவடிகளிலே பக்த அபிமாநனாய்க் கொண்டு-விழுந்து –

தலையாலே தேவரீரை இரந்து விண்ணப்பம் செய்யப் புகுகிறதொரு கார்யம் உண்டு –

வகுத்த விஷயத்திலே ஸ்வரூப ப்ரயுக்தமான அநவரத பாவனையையே அர்த்திக்கிறார்-

ஆகையாலே -இப்படி கூசிச் சொல்லுகிறது என் என்னில் –
தம்முடைய பூர்வ வ்ர்த்தத்தைப் பார்த்தும் –
தத்துவத்தினுடைய உத்துங்கதையை பார்த்தும்  அருளிச் செய்கிறார்

பூர்வ வ்ர்த்தத்தை பார்த்தால் கிட்டக் கூச வேணும் –
கிட்டினாலும் உத்துங்கதையைப் பார்த்தால் அநாதிக்கிறானோ என்று கூச வேணும்

வாழி –
அவன் முகம் பார்க்கைக்காக மங்களா சாசனம் பண்ணுகிறார் என்னுதல் –
அநவரத பாவநைக்கு விஷயமான அவன் அழகை அனுசந்தித்து
மங்களா சாசனம் பண்ணுகிறார் என்னுதல் –

ஏம நீர் நிறத்த மா –
அப்ரமேயோ மஹோ ததி -என்கிறபடியே

அபரிச்சின்னமான கடல் போலே இருக்கிற-திரு நிறத்தை உடைய நிருபாதிக பந்துவே –

ஏமம் -உறவு

ஸநோ பந்து -என்றும் –
அஹம்வோ பாந்தவ ஜாத -என்றும் சொல்லக் கடவது இறே

இத்தால்-
1-இரந்து அல்லாது நிற்க ஒண்ணாத படியையும் –

2-மங்களா சாசனம் பண்ணி அல்லாது நிற்க ஒண்ணாத படியான வடிவு அழகையும் –

3-ப்ராப்தியையும் -சொல்லுகிறது –

வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப் –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அநுரூபமான நன்மைகளை –
அபேஷித்தார் அபேஷித்த வரங்களை தந்து அல்லது நிற்க மாட்டாத
திரு உள்ளத்திலே வைத்ததாகில்

சீர் -நன்மை -அதாகிறது -கைங்கர்ய சாம்ராஜ்யம்
இந்த கைங்கர்யத்துக்கு அடியாய் இருந்துள்ள அநவரத பாவனையை அபேஷிக்கிறார் மேல் –

பரந்த சிந்தை ஒன்றி நின்று-
சப்தாதி விஷயங்களில் போந்த என்னுடைய மனஸ் –
மற்று ஒன்றில் போகாதே –
உன் பக்கலிலே ஒன்றி நின்று –

நின்ன பாத பங்கயம் –
ப்ராப்தமுமாய் –
நிரதிசய போக்யமும்
ஆகையாலே -ஆகர்ஷகமுமான உன் திருவடிகளை
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –
அம் மனஸ் நிரந்தரமாக நினைக்க வற்றாம்படி நீ திரு உள்ளமாக வேணும் –

என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்

உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை

———————————————————————————–

102-பாட்டு –

அவதாரிகை –

விச்சேத ப்ரசங்கம் இல்லாத அநவரத பாவனைக்கு சரீர சம்பந்தம் அற வேணும் காண் -என்ன–

எனக்கு ருசி உண்டாய் இருக்க –
தேவரீர் சர்வ சக்தியாய் இருக்க –
அனுவர்த்திக்கிற இந்த அசித் சம்சர்க்கத்தை தேவரீர் அறுத்து தந்து அருளும் அளவும்-

நான் தரித்து இருக்கும்படி -இன்னபடி செய்கிறோம் என்று

ஒரு வார்த்தை யாகிலும்-அருளிச் செய்ய வேணும் -என்கிறார்-

விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-

பதவுரை

தெழிக்கும் நீர்

கொந்தளிக்கின்ற கடலிலே
பள்ளி

சயனங்கொண்டிருக்கிற
மாய

ஸர்வேச்வரனே!
பன்றி ஆய

மஹாவராஹமாகக் திருவவதரித்த
வென்றி வீர

ஜயசீலனான வீரனே!
துள்ளும் நீர்

துள்ளின கடலிலே
குன்றினால்

மலைகளைக் கொண்டு
உள்ளு வேனது

(அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய
ஊனம் நோய்

சரீர சம்பந்தமான நோய்களை
வரம்பு செய்த

அணைகட்டின
தோன்றல்

ஸ்வாமியே!
யிலவு இலாத காதலால்

நீக்கமில்லாத அன்பினால்
விளங்கு பாத போதில் வைத்து

(உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து
ஒழிக்கும் ஆ

ஒழிக்கும் வழிகளில்
ஒன்று

ஒருவழியை
சொல்லிவிடு

அருளிச் செய்க

வியாக்யானம்-

விள்விலாத காதலால் –
பிரயோஜனாந்தரன்களைப் பற்றி நெகிழாத –

அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு -திருவடிகளில் பண்ணின பிரேமத்தாலே –

விள்கை விள்ளாமை விரும்பி -என்னக் கடவது இறே

விளங்கு பாத போதில் வைத்து –
அந்த பிரேமத்தால் உஜ்வலமான திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரிதர் உடைய சந்நிதியிலே அலரும் அது இறே திருவடித்-தாமரைகள் –

இத்தால் –
நான் பிரயோஜனாந்த பரனாய் -அசித் சம்பந்தம் அனுவர்த்திக்கிறதோ –
தேவரீர் ஆஸ்ரித வத்ஸலர் அல்லாமே அனுவர்த்திக்கிறதோ -என்கை –

உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ-
அத்  திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு –

ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற நோயை போக்க நினைத்து இருக்கிற விரகு

ஊனமாகிறது –
ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –
பகவத் ஜ்ஞான சங்கோசமும் –
பகவத் அனுபவ சங்கோசமும் –

இவற்றை விளைக்கும் அது இறே தேக சம்பந்தம் –

சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இ றே

இத்தால் –
வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –
சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –

தெழிக்கும் நீர் பள்ளி மாய-
தேவரீரோட்டை ஸ்பர்சத்தாலே -கோஷிக்கிற கடலிலே –
ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக –
கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்யமான
சௌலப்யாதி திருக்குண உக்தனே

தெழிக்கை -முழங்குகை

பன்றியாய வென்றி மாய –
விஸத்ர்சமான சம்சாரத்திலே ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக கண் வளர்ந்து
அருளுகிற இவ்வளவே அன்றிக்கே –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாய் பாதாள கதையான
பூமியை எடுத்து ஹிரண்யாஷனை வென்ற வீரத்தை உடையவனே

குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் –
தன்னில் கிடக்கும் பதார்த்தங்களை கரையிலே பொகடும் திரைக் கிளர்த்தியை உடைய-
கடலிலே அழுந்தக் கடவ மலைகளைக் கொண்டு அணை செய்த சக்கரவர்த்தி திருமகனே –

தோன்றல் -அரசன்
பரமபத நிலயனான தேவரீர் -ஆஸ்ரித அர்த்தமாக -சம்சாரத்தில் வந்து –
சுலபராயும் -தேவரீரை அழிய மாறி நஷ்டோத்தரணம் பண்ணியும் –
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்தும் –
அதி மாநுஷ சேஷ்டிதங்களைப் பண்ணியும் –
இப்படி நீர்மையாலும் -சக்தியாலும் -குறைவற்ற தேவரீருக்கு
என் சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கு என் கையில் பொருள் உண்டோ -என்கை

ஓன்று சொல்லிடே –
இரண்டு தலையிலும் குறைவற்ற பின்பு இது அனுவர்த்திக்கிறது -நீ நினையாமை – இறே
தேவரீர் நினைக்கும் அளவும் தரிக்கும்படி -இன்னளவிலே  செய்கிறோம் –என்று
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

தெழிக்கும் நீர் பள்ளி மாய -பன்றியாய வென்றி வீர குன்றினால் -துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல்
விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து உள்ளுவேனதுஊன நோய் ஒழிக்கும் ஓன்று சொல்லிடே-என்று அந்வயம்-

———————————————————————————

103 பாட்டு –

அவதாரிகை –
அசித் சம்பந்தம் தேக அவஸானத்திலே போக்குகிறோம் -நீர் பதறுகிறது என் -என்ன –

அங்கனே ஆகில் –தேவரீர் உடைய
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
வடிவு அழகுக்கும்
வாசகமான திரு நாமங்களை நான் இடைவிடாது மனநம் பண்ணிப் பேசுகைக்கு
ஒருப்ரகாரம் அருளிச் செய்ய வேணும் -என்கிறார்

திருக்கலந்து சேரு  மார்ப தேவ தேவ  தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -103-

பதவுரை

திரு கலந்து சேரும்

பெரிய பிராட்டியார்  நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற
மார்பு

திருமார்பையுடையனே!
தேவர் தேவர் தேவனே

ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே!
இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற

(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான
நின் மலா

பரிசுத்தனே
கரு கலந்த

பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி

காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய

கண்ணபிரானே!
நின் பெயர்

உன் திருநாமஙக்ளை
ஒழிவு இலாது

நிரந்தரமாக
உரு கலந்து  உரைக்கும் ஆறு

திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை
உரைசெய்

அருளிச் செய்யவேணும்.

வியாக்யானம்-

திருக்கலந்து சேரு  மார்ப –
பிராட்டி தேவரீர் உடன் சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷத்தில் அதி சங்கித்து –
அகலகில்லேன் இறையும் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்பை  உடையவனே –
பக்தரோடு முக்தரோடு நித்யரோடு -வாசியற -ஈஸ்வரீம் சர்வ பூதாநாம் -என்கிறபடியே
சர்வருக்கும் அபாஸ்ரய பூதை யான பிராட்டி -தான் நித்ய சாபேஷை யாம் படி யன்றோ
தேவரீர் உடைய பெருமை –

தேவ தேவ  தேவனே  –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளுக்கு மோஷ ருசி பிறந்தவன்று -ப்ராப்யரான நித்ய ஸூரிகளுக்கு
நித்ய அனுபாவ்யனாய்க் கொண்டு நிர்வாஹகன் ஆனவனே –

தேவரீரும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியிலே -எடுத்துக் கை நீட்டுகையே -யாத்ரையாய்
இருக்கும் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் -என்கை-

இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா –
ரிக் ப்ரசுரமான வேதத்தால் பிரதிபாதிக்கையையே ஸ்வபாவமாக உடையையாய் நின்ற
ஹேய ப்ரத்யநீகனே –

நீதி -ஒழுக்கம் -அதாகிறது -ஸ்வபாவம் –
ஹரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய -என்றும்
அபஹதபாப்மா -என்றும் -இத்யாதி வாக்யங்களாலே –
1-ஸ்ரீ ய பதித்வம் -என்ன
2-ஸூ ரி போக்யதை -என்ன –
3-ஹேய ப்ரத்யநீகை -என்ன –
இப்படிகளாலே வேதைக ஸமதிகம்யன் -என்கை-

கருக்கலந்த காள மேக மேனி யாய –
பொன் போலே புகர்த்துக் கறுத்து மேகம் போலே இருக்கிற திருமேனியை உடைய க்ர்ஷ்ணனே –

கரு -பொன்
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லேகவபாஸ் வரா -என்றும்
அஜாயமாநோ பஹூதா விஜாயதே -என்றும் –
விக்ரஹத்தையும்
அவதார சௌலப்யத்தையும் சொல்லிற்று இறே
நவமாஸ த்ர்தம் கர்ப்பம் -என்னுமா போலே -நீரை உள்ளே உடைய காள மேகம் என்னவுமாம் –

கரு -கர்ப்பம்

இத்தால் –
தாபஹரமாய்
ஆகர்ஷமுமான
வடிவோடே க்ர்ஷ்ணனாய் வந்து அவதரித்து
ஆஸ்ரிதருக்கு சுலபன் ஆனவன் -என்கை –

நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
ஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –
ஆஸ்ரித சுலபன் -என்று
நிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை
வடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –

———————————————————————————————

104-பாட்டு-

அவதாரிகை –

யத் கரோஷியதச் நாஸி -என்றும் –
த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும்
இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி –
சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே –
நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ –
உரை செய் -என்கிறது என் -என்ன –

நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க
நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ

நீயே என் விரோதியைப் போக்கி -உன்னை நான் மேல் விழுந்து -இடைவிடாதே
அனுபவிக்கும்படி பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை
இடந்து கூறு செய்த  பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-

பதவுரை

கடு

க்ரூரனான
கவந்தன்

கபந்ததென்ன
வக்கரன்

தந்தவக்த்ரனென்ன
கரன்

கரனென்ன
முரன்  சிறை அவை

முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த

சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை

பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே

பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும்

படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன

தேவரீருடைய
பொன்கழல்

அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி

இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும்

தந்தருளவேணும்.

 

வியாக்யானம்-

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை-
அற வெட்டியனான கவந்தன் -தந்தவக்ரன் -கரன் -முரன் -இவர்களுடைய தலைகளை –
அல்லாதார் காட்டில் கபந்தனுக்கு வெட்டிமை யாவது
பிராட்டியை பிரிந்து கடலும் மலையும் விசும்பும் தேடுகிற தசையிலே
எதிர் அம்பு கோக்க வந்த வெட்டிமையை நினைந்து வெறுக்கிறார் –

இடந்து கூறு செய்த  –
அவர்கள் தலை மண்டையை இடந்து சரீரங்களை -சிந்நம் பிந்நம் சரைர் த் தக்த்தம் –
என்கிறபடியே சகலமாக்கினவனே –

அசூர ராஷசர்களைப் யழியச் செய்தாப் போலே
என்னுடைய பாப ரூபமானப்ரதிபந்தகங்களை யழியச் செய்ய வேணும் -என்கை

பல் படைத் தடக்கை மாயனே –
அவர்களை அழியச் செய்கைக்கும் -பலவகைப் பட்ட ஆயுதங்களை
ஆஸ்ரிதரைக் குளிரத் தடவ கடவ திருக் கையிலே
தரித்த ஆச்சர்ய சக்தி உக்தனே

ஒன்றே பிரதிகூலருக்கு பாதகமாய் -அது தானே அனுகூலருக்கு ரஷகமுமாய் இருக்கை
ஆச்சர்யம் இறே –
என்னுடைய விரோதியைப் போக்குகைக்கு திவ்ய ஆயுதங்கள் வேண்டா
இரங்க வமையும் -என்கை

அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி ஸ்ரீ மத நந்த மூர்த்தி -என்றும் –

அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்றும்
ஆஸ்ரிதரை உஜ்ஜீவிப்பிக்கும் கை இறே

தடம் -குளிர்த்தி
ஆனாலும் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

கிடந்து இருந்து நின்றி யங்கு போதும் –
ஆஸீ நா வசயா நவா திஷ்டந்தோ யத்ர குத்ரவா -என்கிறபடியே
கிடந்தும் -இருந்தும் நின்றும் சஞ்சரித்தும் -இப்படிகளாலே தேக யாத்ரை நடக்கும் போதும்

நின்ன பொற் கழல் –
வகுத்த சேஷியான தேவரீர் உடைய ஸ்பர்ஹணீயமான திருவடிகளை
தேக யாத்ரா சேஷமான காலமும் விட ஒண்ணாத திருவடிகள் -என்கை

தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே –
மேல் விழுந்து -இடை விடாத படியான ஸ்வபாவத்தை எனக்கு பண்ணித் தந்து
அருள வேணும் –

தொடர்ச்சி -செறிவு

இத்தால் –
அனுபவ விரோதிகளை தேவரீரே போக்கவும்
சர்வ காலமும் ஸ்பர்ஹ்ணீயமான தேவரீர் திருவடிகளை இடை விடாதே அனுபவிப்பேனாகவும்
பண்ணித் தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

——————————————————————————————-

105-பாட்டு –

அவதாரிகை –

நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும்
நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும்
ஹேது என் என்ன –

பிராட்டி புருஷகாரமாக –
குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே
தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே
உபாயாந்தர அபேஷை இல்லை –
தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-

பதவுரை

மண்ணை உண்டு

பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும்
பின் உமிழ்ந்து

பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும்
இரந்துகொண்டு

(மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று
அளந்து

அளந்துகொண்டும்.
மண் கண்ணுள் அல்லது இல்லை என்று

‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி
வென்று

(அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த
காலம் ஆயினும்

ஸர்வகால நிர்வாஹகனே!
பண்ணை வென்ற இன்சொல் மங்கை

பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கு

பிரியாது வாழ்கிற
பங்கயக்கண்ண

புண்டரீகாக்ஷனே!
நின்ன வண்ணம் அல்லது

உன் வடிவழகுதவிர
எண்ணும் வண்ணம் இல்லை

தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை.

 

வியாக்யானம் –

மண்ணை உண்டு உமிழ்ந்து
பிரளய ஆபத்தில் -அபேஷியாது இருக்க -ஆபத்தே முதலாக -வரையாதே
இஜ் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்து –
உள் இருந்து நோவு படாதபடி ஸ்ர்ஷ்டி காலத்திலேயே உமிழ்ந்து

இத்தால் –
தன் பக்கல் விமுகரான அளவிலும் வத்ஸலன் -என்கை –

பின்னிரந்து கொண்டு அளந்து  –
ஸ்ர்ஷ்டமான பின்பு -அஜ் ஜகத்தை மஹாபலி அபஹரிக்க -அவன் பக்கலிலே
அர்த்தியாய் சென்று –இரந்து -இந்தரனுக்கு த்ரை லோக்ய சாம்ராஜ்யத்தை கொடுத்து
அவ்வளவுக்கு மேலே சதுர்தச புவநத்தில் உண்டான சகல சேதனர் தலையிலும்
உன் திருவடிகளை வைத்து

இத்தால் –
விமுகரான அளவிலும் -சீலவானுமாய் சுலபனுமாய் இருக்குமவன் -என்கை –
தன்னை அழிய மாறி தாழ நிற்கை இறே –சீலம்
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கை இ றே –சௌலப்யம் –

மண் கண்ணுள் அல்லது இல்லை என்று –
விமுகரான சம்சாரிகளைக் குறித்து இப்படி செய்து அருளுகைக்கு அடி என் -என்னில் –
இஜ் ஜகத்துக்கு நம் கடாஷம் ஒழிய வேறு ஸ்திதி இல்லை என்று –

வென்ற காலமாயினாய் –
சகல பதார்த்தங்களும் தன் கையிலே அகப்படும்படி –
சகல பரிணாமத்துக்கும் நிர்வாஹகமான காலத்துக்கும் நிர்வாஹகன் ஆனவனே –

இத்தால் –
ஸ்ர்ஷ்டியாதிகளுக்கு கர்மீபவித்தும்
அந்ய சேஷத்வத்தால் முறை யழிந்தும் –
இப்படி கால வச்யரான சேதனருக்கு -தேவரீர் அல்லது காலத்தை ஜெயிக்க விரகு இல்லை -என்கை
காலம் ஸபச தே யத்ர நகாலஸ் தத்ர வை ப்ரபு -என்னக் கடவது இறே

மண் கண்ணுள் அல்லதில்லை என்று -கீழே அன்வயிக்க்கவுமாம்
அப் பஷத்தில்-மகாபலி- பிரளயம் ஆகிய விரோதிகளை உன் பேறாக வென்ற -என்கை

பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! –
மதுரா மதுரா லாபா -என்கிற பேச்சையும் பருவத்தையும் உடைய திரு முலைத் தடத்தையே-

அபாஸ்ரயமாக உடைய புண்டரீகாஷனே

இத்தால்-
பருவத்தாலும் -பேச்சாலும் -அவயவ சோபையாலும் -விலஷணமான பிராட்டிக்கு
வல்லபன் ஆகையாலே -பூர்வ வ்ர்த்தத்தை விஸ்மரித்து -என் பக்கலிலே
கீழ்ச் சொன்ன ஆபத் சகத்வாதி குணப் ப்ரேரிதமான விசேஷ கடாஷத்தைப் பண்ணினவன் -என்கை –

நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே –
தேவரீரை இடைவிடாதே யநுபவிக்க வேணும் என்கிற மநோரத பிரகாரத்துக்கு
ஹேது -உன் வடிவு அழகு அல்லது வேறு ஓன்று இல்லை-

உன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள்
ஒழிய உன் வடிவு அழகே எனக்கு இம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-

———————————————————————————–

106 -பாட்டு

அவதாரிகை

நின்ன வண்ணம் அல்லதில்லை -என்று தாம் வடிவு அழகிலே துவக்குண்டபடி சொன்னார் கீழ் –

இதில் –தேவரீர் உடைய ஆபத் சகத்துவத்துக்கு அல்லது நான் நெகிழிலும்
என்னெஞ்சு வேறு ஒன்றில் ஸ்நேஹியாது என்கிறார் –

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

பதவுரை

அன்று

முன்னொரு காலத்து
கறுத்து எதிர்ந்த காலநேமி

கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன்
காலனோடு கூட

யமலோகம் போய்ச்சேரும்படியாக
அறுந்த

அவன் தலையை அறுத்த
ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்

பஞ்சாயுதாழ்வார்களை
ஏந்தினாய்

திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே!
தொறு கலந்த ஊனம் அஃது

பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை
அன்று ஒழிக்க

அப்போதே போக்குவதற்காக
முன்

எல்லாருடையவும் கண்முன்னே
குன்றம் பொருத்த நீ

கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய
புகழ்க்கு அலால்

திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்)
நெஞ்சம்

எனது நெஞ்சுக்கு
ஓர் கேசம் இல்லை

சிறிதும் ப்ரதியில்லை.

வியாக்யானம் –

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூட-
க்ருத்தனாய் எதிரிட்ட கால நேமியாகிற அசுரன் ம்ர்த்யுவோடே கூடும்படி –
இந்த்ராதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் -அவர்கள் பக்கல் ஈஸ்வரன் அனுக்ரஹத்தையும்
பொறாதே க்ருத்தனாய் ஆய்த்து –

ஸூ ஹ்ர்தம் சர்வ பூதாநாம் -என்கிற விஷயத்தில் கிடீர் க்ருத்தன் ஆய்த்து
ஸநோ பந்து -அஹம்வோ பாந்தவோ ஜாத -என்கிறபடியே நிருபாதிக பந்துவின்
பக்கலிலே இறே கோபித்தது

ஓர் அஞ்சலியால் நீராக கலக்கும் விஷயத்தில் துஷ்ப்ரக்ர்தி யாகையாலே
எதிரம்பு கோத்து நசித்தான் -என்கை

அனுகூலித்தாரை உன்னோடு கூட்டுகையும்
பிரதிகூலித்தாரை யமனொடு கூட்டுகையும்
இறே தேவரீருக்கு ஸ்வபாவம்  –

அன்று –
கால நேமி யாலே இந்த்ராதிகளுக்கு ஆபத்து வந்த அன்று

அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –
ஸ பரிகரனான கால நேமியை தலை அறுத்த திரு வாழி தொடக்கமான
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரித்தவனே -திருவாழி யாலே அவன் தலை அறுப்புண்ட பின்னும்

தேவர்களுக்கு எவராலே என்ன விரோதம் வருகிறதோ -என்று –
கை கழலா நேமியான் -என்கிற படியே திவ்ய ஆயுத தரனாய் இருக்கிறபடி –

தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க –
இந்த்ராதிகளுக்கு அசுரனால் வந்த ஆபத்தை போக்கின்படி சொல்லிற்று  -கீழ்
இந்த்ரனால் பசுக்களுக்கும் இடையர்களுக்கும் வந்த ஆபத்தை போக்கின்படி சொல்லுகிறது -மேல்

பசுக்களுக்கு அநுபவ விநாச்யமான ஆபத்தை போக்குகைக்காக
அசுரர்களால் வந்த ஆபத்துக்கு ரஷ்யனான இந்த்ரனால் வந்த ஆபத்து ஆகையாலே
அநுபவித்தே அறும் ஆய்த்து

அன்று –
கோகோ பீஜ ந சங்குல மதீ வார்த்தம் -என்கிற தசையிலே-

தொறு  -பசு

குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் –
கோவர்த்தநத்தை தரித்து ரஷித்த உன் கல்யாண குணத்துக்கு அல்லது
இந்த்ரன் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸ்திதன் அல்லாமையாலே -அழியச் செய்யும்
திவ்ய ஆயுதங்கள் உண்டாய் இருக்க -தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து
நோக்கினான் -என்கை

முன் -என்கிறது -ஒருத்தருக்கு நோவு வருவதருக்கு முன்னம் என்கை

வரை முன் ஏந்தும் -என்று அவன் அநாயாசேந தரிக்கச் செய்தேயும் –
அவன் சௌகுமார்யத்தை அனுசந்தித்து –பொறுத்த -என்கிறார் இவர் –

ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –
வ்யக்த்யந்தரத்தில் ஆதல் –
குணாந்த்ரத்தில் ஆதல் –
எனக்கு ப்ராவண்யம் சம்பவிக்கிலும் என் மனசுக்கு ப்ராவண்ய லேசம் இல்லை

ஆக –
ப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்
ஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை
மலையை எடுத்து ரஷித்தும்
இப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது
என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை என்றது ஆய்த்து

————————————————————————————-

107-பாட்டு –

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும் –
தமக்கும் தம் உடைய திரு உள்ளத்துக்கும் உண்டான பகவத் பிரேமத்துக்கு அடியான
வடிவு அழகையும்
ஆபத் சகத்வத்தையும்
பேசினார் –

இதில் –
அந்த சங்க விரோதியான பிரபல ப்ரதிபந்தங்களை பிரபலமான அசுரர்களை அழியச் செய்தாப்
போலே போக்கின உன் திருவடிகளுக்கு அல்லது
வேறு ஒரு விஷயத்தில் நான் சங்கம் பண்ணேன் என்கிறார் –

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

பதவுரை

எம் ஈசனே

எம்பெருமானே!
காய் சினந்த காசிமன்னன்

மஹா கோபியான காசிராஜாவும்
வக்கரன்

(ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும்
பவுண்டிரன்

பௌண்ட்ரக வாஸுதேவனும்
மா சினந்த மாலி

அதிகோபிஷ்டனான மாலியும்
மா கமாலி

மஹானான ஸுலிமாலியும்
கேசி

(குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும்
தேனுகன்

தேநுகாஸுரனும்
நாசம் உற்று வீழ

துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக
நாள் கவர்ந்த

(அவர்களுடைய) வாழ்நாளை முடித்த
நின்

தேவரீருடைய
கழற்கு அலால்

திருவடிகளுக்குத் தவிர
எத்திறந்தும்

வேறு எவ்விஷயத்திலும்
நேச பாசம்

ஆசாபாசத்தை
வைத்திடேன்

வைக்கமாட்டேன்

வியாக்யானம் –

காய்சினத்த காசி மன்னன் –
காயும் சினத்தைஉடைய காசி ராஜன் –
சாத்விகரைக் கொன்று அல்லது விடாதே கோபத்தை உடையவன் -என்கை –

காய்தல்-கொல்லல்

அப்படி இருக்கும் தந்த –வக்கிரன் பவுண்டிரன்
ஈச்வரோஹம் -என்று இருக்கும் பௌண்ட்ரக -வாசுதேவன்-

மாசினத்த மாலி-
பெரிய சினத்தை உடைய மாலி

மான் சுமாலி –
மஹானான ஸூ மாலி
சினத்தை உடையவனுமாய் பத்ராகாரனுமாய் இருக்குமவன் -என்கை

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

தேனுகன் –
க்ர்ஷ்ணனை அனுவர்த்திக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் பயங்கரனான தேனுகன் –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக

நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின

நாசம் -துக்கம்

வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்

இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி

நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –

பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது

எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இறே

எம் ஈசனே –
என்  நாதனே

விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

—————————————————————————————-

108-பாட்டு –

அவதாரிகை –

நின் புகழ்க்கலால் ஒரு நேசம் இல்லை நெஞ்சம் -என்றும் –
நின் கழற் கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் -என்றும் -சொல்லக் கடவது இறே
இதுக்கு விஷயமாக நம்மைக் கிட்டி அநுபவிக்கப் பார்த்தாலோ என்ன –

போக மோஷ சுகங்களை அனுபவிக்கப் பெற்றாலும்
உன்னை ப்ராபிக்க வேணும் என்னும் ஆசை ஒழிய
மற்று ஒன்றை விரும்பேன் -என்கிறார் –

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன்

அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன்

எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட

நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது

எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு

ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும்

அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ

மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.

வியாக்யானம் –

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன் –
கேடில் சீர் வரத்தனாய -அயன் -கெடும் வரத்தனாய அரன் –
அழிவில்லாத சம்பத்தை உடையனாம்படி பகவத் பிரசாதத்தை உடையனாய் இருக்கிற ப்ரஹ்மா
சர்வத்துக்கும் தன்னாலே உப சம்ஹாரம் ஆம்படி பகவத் ப்ரசாதம் பெற்ற ருத்ரன் –

அதவா –
அழிவில்லாத சம்பத்தை உடையவனாய் -வர ப்ரதாந ஷமனான ருத்ரனும் என்றுமாம் –

நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் –
இவர்களுடைய நாட்டோடே கூட ஸஹஸ்ராஷனுடைய நாட்டையும் பெற்றாலும் –

நாட்டம் -கண்

நாடு -என்று நாட்டில் உள்ள விஷயங்களை நினைக்கிறது –

அதாகிறது -ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய மூவகைப்பட்ட ஐஸ்வர்யத்தை நான் ஒருத்தனும் பெற்றாலும் –
இவ் ஐஸ்வர்யம் மூன்றுக்கும் ஏகாஸ்ரயத்தில் சம்பாவனை இல்லை இறே -கூடாதது கூடினாலும்-

வீடதான போகமெய்தி –
அதுக்கு மேலே
பரம புருஷார்த்த லஷணமான போகத்தை ப்ராபித்து

மோஷம் ஆகிறது –
சம்சார நிவ்ர்த்தி மாத்ரம் ஆதல் –
ஒரு தேச விசேஷ ப்ராப்தி யாதல் -அன்று –
கைங்கர்ய போகம் என்கை-

வீற்று இருந்த போதிலும் –
கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்
நிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்
கைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இறே
போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –
உன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-

தர்மார்த்தகாமை கிந்தஸ்ய முக்திஸ் தஸ்ய கரேஸ்திதா
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ்ஸ் திராத்வயி -என்றும் –

விஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -என்று இ றே
பகவத் ஜ்ஞான பக்திகள் ரசித்தவர்கள் உடைய வார்த்தை –

———————————————————————————-

109-பாட்டு

அவதாரிகை –

கீழ்-நம் பக்கல் உமக்கு உண்டாகச் சொன்ன ஆசை -ஸ்வ யத்னத்தாலே அநவரத பாவனை
பண்ணியும் -சததம் கீர்த்தனம் பண்ணியும் பெறுவார் உடைய ஆசை போல் இருந்ததீ –

நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும் –
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவனே -என்றும் தொடங்கி
நின் நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -என்றும் –
கூடும் ஆசை யல்லதொன்று கொள்வேனோ -என்றும்
பேசினீரே என்ன –

உன்னுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் என்னைப் ப்ரேரிக்க
காலஷேப அர்த்தமாக பேசி நின்ற இத்தனை –
அது தானும் வேதங்களும் -வைதிக புருஷர்களும் பேசிப் போரக் காண்கையாலே
பேசினேன் இத்தனை -என்கிறார்

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் –109-

பதவுரை

சுருங்குவாரை இன்றியே

சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே
சுருங்கினாய்

(ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே!
சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே

அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல்
பெருக்கம் எய்து

(த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய்

பெற்ற பெருமானே
செருக்குவார்கள்

அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள்

அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த

தொலைத்தருளின

தேவதேவன்! தேவாதிதேவனே!

என்று

இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு
இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த

வேதமோதும் வாயையுடையரான  மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு)
யானும் ஏத்தினேன்

அடியேனும் துதித்தனித்தனை.

வியாக்யானம் –

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் –
ஒரு கர்மத்தாலே ஒரு காலத்திலே-ஒரு கர்த்தாவால் உண்டாம் ஹ்ராஸம் இன்றிக்கே
ஆஸ்ரித அனுக்ரஹம் ப்ரேரிக்க
இச்சையாலே
வாமனன் ஆனாய் –
சேதனர் கர்ம பேதத்தாலும் க்ர்தர் பேதத்தாலும் க்ரிமி கீடங்களாகா நின்றார்கள் இறே-

கலி காலமும் சேதனரை அங்குஷ்ட மாதரம் ஆக்கா நின்றது இறே

சங்கா ப்ரேவேச சமயத்தில் அந்ய பாரதந்த்ர்யத்தால் திருவடி ஹ்ர்ஸ்வ பூதனான் இறே

சுருங்கியும் —அப்படியே சிறுகி இருக்கச் செய்தேயும்-

பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய் –
பூர்வோக்தமான வ்ர்த்தி ஹேதுக்கள் இன்றிக்கே இருக்க பெருக்கம் எய்தும் ஸ்வபாவனே

பெற்றி -இயல்வு

இத்தால் -அர்த்தித்வத்துக்கு ஏகாந்தமான வாமன வேஷத்தைக் கொண்டு
கையிலே நீர் விழுந்த சமநந்தரத்திலே செய்தது யாய்த்து –

ப்ரீதி பிரகர்ஷத்தாலே வளர்ந்து –
சதுர்தச புவனங்களில் உண்டான சகல சேதனர் தலையிலும் -வரையாதே –
திருவடிகளை வைக்கையாலே –
ஆஸ்ரிதர் அர்த்தமாக வ்ர்த்தி ஹ்ராஸா திகள் இவனுக்கு ஸ்வாபாவிகம் -என்கை

செருக்குவார்கள் –
இந்த்ராதிகளை நலிந்து -த்ரை லோக்யத்தை அபஹரித்து –
நயஷ்டவ்யம் நதாதவ்யம் -என்று ஈஸ்வர ஆஞ்ஞையை அதிலங்கித்து
இப்படி செய்தோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே செருத்தி வர்த்திக்கிற மகாபலி போல்வார் உடைய

தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற நாசகரமான ஸ்வபாவத்தை தன்னுடைய அர்த்தித்வத்தால்-தவிர்த்து –

இந்த்ராதிகளுக்கு குடி இருப்பை கொடுத்த சர்வேஸ்வரனே

என்று இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த –
இப்பாசுரத்தாலே
த்ரை விக்ரம அபதாநத்தைப் பற்றி வேத ஸ்தலங்களும்
வைதிகரான முனி சமூஹங்களும்
விசக்ரமே ப்ர்திவீ மேஷ ஏதாம் -என்றும் –
த்ரிர்த் தேவ ப்ர்திவீ மேஷ ஏதாம் -என்றும் –
இத்யாதி வேதங்களும் –
சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ் தை ததா மநுஷ் யைர்க்கநேச கேசரை ஸ்துத
இத்யாதிகளாலே சௌந காதிகளும்
ஏத்தக் கண்டவாறே

யானும் ஏத்தினேன்

தேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி
கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே
யானும் ஏத்தினேன் இத்தனை
இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன் -என்கை-

————————————————————————————

110 பாட்டு –

அவதாரிகை –

தத்விப்ராசோ விபந்யவ -என்கிறபடியே -அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரும் -தேவர்களும் –
முநிக் கணங்களும் -ஏத்திப் போந்த விஷயத்தை –நித்ய சம்சாரியாப் போந்த நான் ஏத்தக்
கடவேன் அல்லேன் -தான் செல்லாமையால் புகழ்ந்தான் என்று திரு உள்ளம் பற்றி
பொறுத்தருள வேணும் என்று –
கீழ்-ஏத்தினேன் -என்றதற்கு ஷாபணம் பண்ணுகிறார் –

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-

பதவுரை

கரும்பு உலாவு

வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய!

ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன்

நீசனான அடியேன்
தூயனாயும்

பரிசுத்தனாகவோ
அன்றியும்

பரிசுத்தனல்லாதவனாகவோ
நின்னை

தேவரீரை
வணங்கி

ஸேவித்து
வேலை நீர்  பாயலோடு

திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட
பக்தர் சித்தர்

பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே
மேய

குடியிருக்கின்ற
வேலைவண்ணனே!

கடல்வண்ணனே!
வாழ்த்தும் இது எலாம்

துதிப்பதாகிற இதனையெல்லாம்
நீயும்

(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும்
நின் குறிப்பினில் பொறுத்து

திருவுள்ளத்திலே க்ஷமித்திருள்
நல்கு

அநுக்ரஹம் செய்ய வேணும்.

வியாக்யானம்-

தூயனாயும் அன்றியும் –
ஷேத்ரஜ்ஞஸ் யேச்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமா மதா -என்கிறபடியே தேவரீர் உடைய
பாவநத்தை அனுசந்தித்து நான் யோக்யன் என்று பரிமாறியும் –
ஆகர்ஷமான தேவரீர் உடைய வடிவைக் கண்டு மேல் விழுந்து நான் நித்ய சம்சாரி
என்று புத்தி பண்ணாதே பரிமாறியும் –

அதவா-

நஹிஜ்ஞாநேநஸ த்ர்சம் பவித்ர மிஹ வித்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே சுத்தன் என்று பரிமாறியும்

அந்த ஸ்வரூபத்துக்கு அஹங்கார மமகாரங்களால்  பிறந்த அசுத்தியையும் புத்தி பண்ணாதே
பரிமாறியும் போந்தேன் என்றுமாம் –

சுரும்பு உலாய தண் துழாய மாய –
தம் தண்மையையும் -அத்தலையில் வை லஷண்யத்தையும் பாராதே
யோக்யன் என்று பிரமிக்கைக்கு ஹேது சொல்லுகிறது –

வண்டுகள் அபிநிவேசிக்கும் திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் ஆச்சர்யமான
குண சேஷ்டிதங்களை வுடையவனே –

திர்யக்குகளுக்கும் ஸ்பர்ஹை பண்ண வேண்டும்படி இறே போக்யதை இருப்பது –
ஒப்பனை அழகும் குண சேஷ்டிதங்களும் ஆய்த்து இவரை மேல் விழப் பண்ணிற்று

நின்னை –
சர்வாதிகனாய் -பரம பாவநனாய் -ஸூ ரி போக்யனாய் -இருக்கிற உன்னை –

நாயினேன் –
உன்னுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாப் போலே –
என்னுடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லை -என்கிறார் –

நாயினேன் –
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து –
நுழைந்த வாசல் எல்லா வற்றிலும் பரி பூதனாய் –
தேவரீர் உகந்து தொடிலும் அன்குத்தைக்கு அவத்யம் விளையும்படி
ஸ்வரூபத்தை உடைய நான் –

வணங்கி வாழ்த்துமீதெலாம் –
ஒன்றைச் செய்து அதற்க்கு ஷாமணம் பண்ணுகிறேனோ –
திருவடிகளில் தலையார வணங்கி -வாயார வாழ்த்திப் -போருகிற ஈதெல்லாம் –

நீயும் –
நானும் பிரேமத்தால் தவிர மாட்டுகிறிலேன்
க்ஷமையை ஸ்வ பாவமாக உடைய நீயும் பொறுக்க வேணும்

நின் குறிப்பினில் பொறுத்து நல்கு –
காக -சிசுபாலாதிகள் உடைய அபராதத்தை திரு உள்ளத்திலே பொறுத்தால் போலே-
என் அபராதத்தையும் திரு உள்ளத்தாலே  பொறுத்து –
அவ்வளவு அன்றிக்கே –
இவன் பராதி கூல்யத்தில் வ்யவஸ்திதன் அல்லன் என்று ப்ரசாதத்தைப் பண்ணி
அருள வேணும்

வேலை நீர் பாயலோடு பத்தர் சித்தர் மேய வேலை வண்ணனே –
இது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்

திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்
ஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும்
போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –

ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே
அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –
ஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே
என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -91-100-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 4, 2013

91-பாட்டு-

அவதாரிகை

சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி -என்று பேறு உம்மதானால் உம்முடைய விரோதி நிவ்ர்திக்கு
நீரே கடவர் ஆக வேண்டாவோ –நின்னிலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் –
என்கிறது எத்தாலே என்ன -ப்ராங் ந்யாயத்தாலே -அது என் என்னில் –
அசோகவ நிகையிலே இருந்த பிராட்டி  தேவரீரை லபிக்கைக்கு ராஷச வதத்தாலே
அவள் யத்னம் பண்ணும் அன்று அன்றோ நான் என்னுடைய விரோதியை போக்குகைக்கு யத்னம்
பண்ணுவது -ஆனபின்பு
அநந்ய கதியாய்
அகிஞ்சனான என்னை
ஸ்வ ரஷணத்தில் மூட்டி அகற்றாது ஒழிய வேணும் -என்கிறார் –

பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-

பதவுரை

பண் உலாவும் மென்மொழி

(குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும்
படை தடம்கணாள் பொருட்டு

வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக
எண் இலா அரக்கரை

கணக்கிலாத ராக்ஷஸரை
நெருப்பினால்

அம்புகளின் தீயினால்
நெருக்கினாய்

தொலைத்தருளினவனே!
கண் அலால்

(எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய
ஓர் கண் இலேன்

வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்;
கலந்த சுற்றும்மற்று இலேன்

நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை;
எண் இலாத மாய!

அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே!
நின்னை

உன்னை
என்றும்

எக்காலத்திலும்
என்னுள் நீக்கல்

என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது.

வியாக்யானம் –

பண்ணுலாவு மென் மொழி –
பண்ணோடு சேர்ந்த ம்ர்துவான பேச்சை உடையவள்
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமி நீ -என்று சக்ரவர்த்தி திருமகன் வாய்
புலத்தும்படியான வார்த்தைப்பாடு உடையவள் -என்கை
பண்ணை வென்ற இன்சொல் மங்கை -என்றவள் இறே

படைத் தடம் கணாள் பொருட்டு –
வாள் போல் ஒளியையும் இடமும் உடைத்தான திருக் கண்களை உடைய ஸ்ரீ ஜனக ராஜன்
திருமகள் பொருட்டு –
நஜீவேயம் ஷணம்பிவி நாதா மஸி தேஷணம் -என்று அவர் வ்யதிரேகத்தில் தரிக்க
மாட்டாத கண்கள் இறே

ஆக -எதிர்தலையை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் பேச்சு அழகையும் கண் அழகையும்
உடையவள் -என்கை
தம்முடைய வெறுமையை சொல்ல இழிந்தவர் பிராட்டி உடைய ஏற்றங்களை சொல்லுகிறது –
நிஷ்க்ர்ஷ்டமான இவ்வாத்ம ஸ்வரூபம் –
பிராட்டியோபாதியும்
ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதியும்
விலஷணம் என்கைக்காக-

ஜ்ஞானம் பிறந்த பின்பு -பிராட்டி அசோகவநிகையில் இருந்தால் போலே
அசஹ்யமாக  இ றே சேதனனுக்கு சரீர வாசம்

எண்ணிலா வரக்கரை –
அவளைப் போலே விரோதிகள் அசந்க்யதராக வேணுமோ -அஞ்ஞன் ஆனால் ஆகாதோ

நெருப்பினால் நெருக்கினாய் கண் –

சர அக்நியால் அழியச் செய்த நீ -எனக்கு நிர்வாஹகன் என்னுதல் –

எதா ராகவ நிர்முக்தச்சர -என்கிறபடியே சரஸ்தா நீயனான திருவடியை இட்டு
இலங்கையை தஹித்து -ராஷசரை கண் கலங்கும்படி பண்ணின நீ
எனக்கு நிர்வாஹகன் என்னுதல் –

இத்தால் –என்னுடைய விரோதி வர்க்கத்தையும்
பஸ்மமாக பண்ண வேணும் என்கை-

அலாலோர் கண் இலேன் –
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்கிற தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் –
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சம் -என்கிறார் –
நத்வா குர்மி தசக்ரவ பச்ம  -என்று

பிராட்டிக்கு சக்தி உண்டாய் இருக்க ப்ராப்தி இல்லாதே-தவிர்ந்தாள் –

எனக்கு சக்தியும் இல்லை என்கிறார்

கலந்த சுற்றம் மற்றிலேன் –
நெஞ்சுக்கு பொருந்தின பந்து வர்க்கத்தை வேறு உடையேன் அல்லேன் –
உத்பாதகரான மாதா பிதாக்கள் தைவம் ரஷிக்கிறது என்று காட்டில் விட்டுப் போனார்கள்-

வளர்த்தவர்களை -பிதரம் மாதரம் தாரான் -என்கிறபடியே நான் விட்டேன் –
ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதாச மம ராகவ -என்கிறபடியே சர்வ பந்தும் தேவரீரே என்கிறார் –

பிராட்டிக்கு தனி இருப்பிலே திருவடி வந்து முகம் காட்டினார்
அப்படியே இருப்பதொரு  குளிர்ந்த  விழியும் தேவரீரை ஒழிய எனக்கு இல்லை என்கிறார்-

ஜனக குலத்தில் பிறந்த ஆபி சாத்தியம் உண்டு அவளுக்கு-

குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றீர் இ றே நீர் என்ன
எண்ணிலாத மாய –
அசங்யேயமான ஆச்சர்ய சக்தியை உடையவன் அல்லையோ –

இத்தால் –
நிஹீந ஜன்மாவாய்
சாஸ்திர அதிகாரியுமாயும் அன்றிக்கே இருந்துள்ள
பஷிக்கு மோஷம் கொடுத்த சக்தி யன்றோ தேவரீருடைய சக்தி –என்கை

ராவணன் குறி யழியாதே இருக்க -இக்கரையில் அவன் தம்பிக்கு லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம்
பண்ணிற்று அவன் ஜன்மம் பார்த்தோ -அபிஜ்ஞோ ராஜ தர்மாணாம் -என்கிறபடியே
அவன் ஜ்ஞானாதிகன் அன்றோ என்ன –

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றிற்று ஜ்ஞான அஜ்ஞானங்களில் உள்மானம்-புறமானம் பார்த்தோ

நின்னை என்னுள் நீக்கல் –
சர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –
அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்
ஷூத்ரமான உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றாது ஒழிய வேணும்

என்றுமே -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –

——————————————————————————————

92 -பாட்டு

அவதாரிகை –

நின்னை என்னுள் நீக்கல் -என்றீர்
நாம் உம்மை அகலாது ஒழிகைக்கு நம் அளவிலே நீர் செய்தது என்ன
நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

நிருபாதிக சரண்யரான தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை
உன்னுடைய கார்யம் எனக்கு பரம் -நீ பயப்பட  வேண்டாம் -என்று
பயம் தீர -மாசுச -என்ன வேணும் -என்கிறார் –

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –92-

பதவுரை

வேலை நீர்

ஜலதத்துவமாகிய கடலை
படைத்து

(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து

(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து

(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன்

முன்னொருகாலத்திலே
கநைடபுது

(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)
ஏழ்விடை குலங்கள்

நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்
அடர்ந்து

கொழுப்படக்கி
வென்றிவேல் மண்மாதரர்

ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
கடி கலந்த

பரிமளம் மிக்க திருத்தோளோடே
புணர்ந்த

ஸம்ச்லேஷித்த
காலி ஆய

கோபாலகிருஷ்ணனே!
நின் தனக்கு

உன் பக்கலிலே
அடைக்கலம் புகுந்த என்னை

சரணம் புகுந்த என்னை நோக்கி
அஞ்சல் என்ன வேண்டும்

“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.

வியாக்யானம்-

விடைக்குலம் -இத்யாதி –

முன் வேலை நீர் படைத்து -அதில் கிடந்து -கடைந்து -அடைத்து –
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து -வென்றி வேல் கண் மாதரார் –
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாய் -நின்றனக்கடைக்கலம் புகுந்த என்னை
அஞ்சல் என்ன வேண்டும் -என்று அந்வயம்

முன் வேலை நீர் படைத்தது –
அப ஏவஸஸர்ஜா தௌ -என்கிறபடியே -ஏகார்ணவ ஸ்ர்ஷ்டியைப் பண்ணி

வேலை நீர் -என்றது எல்லையான கடல் -என்னுதல்
திரைக் கிளர்தியை உடைய கடல் -என்னுதல்

வேலை -என்று எல்லையும் -திரையும் –

நீர் -என்று -கடல் –

அதில் கிடந்து –
அதிலே கிடந்து

ஸ்ரஷ்டமான ஜகத்திலே சேதனருக்கு ஆஸ்ரயண ருசி பிறந்தவன்று சரண்யரான நாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி

கடைந்து –
அக்கிடை பலித்து தேவர்கள் ஐஸ்வர்யத்தை இழக்க
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் சமஸ்தா தேவதா கணா -என்கிறபடி சரணம் புக
அவர்கள் இழந்தவற்றை –கடலைக் கடைந்து -அக்கடலிலே உண்டாக்கிக் கொடுத்தவன் -என்கை

அடைத்து –
அந்த தேவதைகளை குடி இருப்பு அழியும்படி அதிக்ரமத்திலே நடந்த ராவணாதி
கண்டக நிரசன அர்த்தமாக -தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து லவணார்ணவத்தை யடைத்து –

விடைக்குலம் -இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு சரண்யனாய் அவர்கள் ஆபத்திலே உதவின வளவு அன்றிக்கே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக கோப சஜாதீயனாய் வந்து அவதரித்து
ரஷித்த படி சொல்லுகிறது மேல்

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து –
விடை ஏழு அடர்த்து -என்னுதல்
விடைக்குலம் -அடர்த்து என்னுதல் செய்யாதே இப்படி சொல்லுகிறது –
சாதூர் வர்ண்யம் மயா ஸ்ர்ஷ்டம் -என்கிறபடியே  கோப ஜாதியிலும் வர்ண பேதம் உண்டாகையாலே
நாநா ஸ்வபாவங்களான விடை ஏழையும் மூட்டியாக நெரித்து

குலம் -வர்ணம்

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும்  பிறந்திலேன் -என்றார் இறே

வென்றி வேற் கண் மாதரார் கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா-
ஜிதந்தே புண்டரீகாஷ -என்றும் –

தூது செய் கண்கள் -என்றும் -என்கிறபடியே
சர்வரையும் கண்களாலே தோற்பிக்கும் –

தேவரீரையும் தோற்பிக்க வல்ல நோக்கை உடைய நப்பின்னை பிராட்டி உடைய
பரிமிளிதமான தோளை அநுபவித்து -அவளுக்கு பிரியமாக ரஷகாபேஷை உடைய
பசுக்கள் உடைய ரஷணமே பிரயோஜனமாய் இருக்குமவனே –

சர்வ கந்த -என்கிற அவன் திருமேனியையும் பரிமிளிதமாக்கும் தோள் -என்கை

யுவதிச்ச குமாரிணீ -என்கிறபடி ஸ்வ ஸத்ர்சமான பருவத்தை உடையவள் ஆகையாலே
செவ்வியை உடைய தோள் -என்னவுமாம்

வென்றி வேல் கண் –
வென்றியை விளைக்கும் வேல் போலே நோக்கை உடைய கண் –

கடி -என்று செவ்வியும் நாற்றமும் –

நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை –
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
முமுஷு ர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும் –
ஜகத்காரண வஸ்து சரண்யன் என்னும் இடம் சுருதி ஸித்தம்
சரணம் த்வா அநு ப்ராப்தா -என்றும் –
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்றும்
வியூஹ விபவங்களில் சரண்யதை ஆப்த வாக்ய ஸித்தம்

அங்கன் இன்றிக்கே
மாமேகம் சரணம் வ்ரஜ –
தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை

என்னை –
அநந்ய சரண்யனான என்னை

அடைக்கலம் புகுருகையாவது -என்  கார்யம் தேவரீர்க்கே  பரம் என்று இருக்கை
தவை வாஸ் மிஹி பர -என்னக் கடவது இறே

யஞ்சல் என்ன வேண்டுமே-
தேவரீர் பெருமையும்
என் சிறுமையும்
இடைச் சுவரான விரோதியின் கநத்தையும் பார்த்து
நான் அஞ்சாத படி -மாசுச -என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்

மாமேகம் சரணம் வ்ரஜ -என்ற தேவரீருக்கு
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கை அரிதோ –

—————————————————————————————-

93 பாட்டு –

அவதாரிகை –

அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்று பயம் கெட –மாசுசா -என்ன
வேணும் என்றீர் கீழ்-
இவ்வளவே  அமையுமே என்ன –

உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றாது ஒழிக்கைகாக சொன்ன வார்த்தை யன்றோ யது
தேவரீர் உடைய நிரதிசய போக்யதைக் கண்டு அனுபவிக்கிற ஆசைப்படுகிற எனக்கு
விஷயாந்தர நிவ்ர்த்தி பூர்வகமாக -தேவரீரையே நான் அனுபவிக்கும்படி
என் பக்கலிலே இரங்கி யருள வேணும் என்று பெரிய பெருமாள் திருவடிகளில்
அனுபவத்தை அபேஷிக்கிறார் –

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

பதவுரை

கரும்பு இருந்த கட்டியே

கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு

இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க

அழியும்படி
வெம்சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

பிரயோகித்த
வில்

ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே

இராமபிரானே!
அரங்கம் வாணனே

கோயிலில் வாழ்பவனே
கரும்பு

வண்டுகளானவை
அரங்கு

படிந்திருக்கபெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து

நெருங்கி
அலர்ந்த

விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே

(உனது) திருவடிகளையே
விரும்பி நின்று

ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு

தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு

க்ருபைபண்ணியருள்.

வியாக்யானம்-

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே –
வண்டு படிந்த ஸ்ரமஹரமான திருத் துழாய் தாரானது அலர்ந்து வருகிற திருவடிகளையே –

இத்தால் –
திருத் துழாயோட்டை சம்பந்தத்தாலே சர்வாதிக வஸ்து என்னும் இடத்தையும்
திருவடிகளோட்டை சேர்த்தியாலே திருத் துழாய்க்கு செவ்வியும் விகாசமும் உண்டாகையாலே-

திருவடிகளோடே சேர்ந்தாருக்கு செவ்வியும் விகாசமும் உண்டாகும் என்னும் இடத்தையும் –
திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் இருக்கையாலே நிரதிசய போக்யம் என்னும் இடத்தையும் சொல்லிற்று –

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு-இரங்கு –
அனுபவ ருசி பிறந்து அனுபவிக்கையிலே இழிந்த எனக்கு இரங்கு –

இவன் நாசகரமான விஷயாந்தரங்களில் நின்றும் மீளுவான் –
நிரதிசய போக்யமான தம்மை அனுபவிப்பான் -என்று க்ர்பை பண்ணி அருள  வேணும் –

தேவரீருக்கு ஒரு இரக்கம் மாதரம் -அது இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம்
ஆனபின்பு இத்தனையும் செய்து அருள வேணும்

அரங்க வாணனே –
கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –
தம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு
தேவரீர் அழகாலே -விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –
தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து –
அனுபவிக்கைக்காக  அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –

போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –
என்னக் கடவது இறே

கரும்பு இருந்த கட்டியே –
இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச்   சொல்லுகிறது –

கோதுண்டாதல் -கழிக்கும் அம்சம் உண்டாதல் இன்றிக்கே
சர்வதோ முகமாய் சாரஸ் யத்தை உடைத்தாய் –
பாக விசேஷத்தால் வந்த சாரஸ்யம் யன்றிக்கே –
ஸ்வா பாவிகமான சாரஸ்யத்தை உடைத்தாய் இருப்பது ஒரு கன்னல் போலே
நிரதிசய போக்யன் ஆனவனே

கடல் கிடந்த கண்ணனே
பெரிய பெருமாள் உடைய கந்தத்தைச் சொல்லுகிறது –

திருப்பாற் கடலிலே அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற சௌலப்யத்தை
உடையவனே -ப்ரஹ்மாவுக்கு ஷீராப்தி நாதன் உகந்து அருளின படியாலே
அங்குத்தை சௌலப்யமும் வடிவழகும் பெரிய பெருமாள் பக்கலிலே பிரத்யபிஜ்ஜை-பண்ணலாம்படி இறே இருப்பது –

இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே –
எதிரிகள் சரீரத்திலே அழுந்தும்படி -தீப்த பாவக சங்காசமான அம்புகளை விட்ட
வில்லை உடைய தசரதாத் மஜனே –

இத்தால் –
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே

சக்ரவர்த்தி திருமகனுடைய-வீரமும் அபிராமதையும் -பெரிய பெருமாள் பக்கலிலே அனுபவிக்கலாய் இருக்கை –

மேகச்யாயமம் மஹா பாஹூம் சர்வ சத்வ மநோ ஹரம் -என்னக் கடவது இறே

1-ப்ராப்தராய் –

2–சந்நிஹிதராய் –

3–நிரதிசய போக்ய பூதராய்-

4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க –

5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –
நான் இழக்க வேண்டுகிறது என் –இரங்கி யருள வேணும் என்கை –

கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே -இரும்பரங்க வெஞ்சரம் துரந்த
வில்லி ராமனே -அரங்க வாணனே -சுரும்பரங்கு தண் துழாய் துதைத்து அலர்ந்த
பாதமே விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு -என்று அந்வயம்-

————————————————————————————-

94 -பாட்டு –

அவதாரிகை –

த்வத் அநுபவ விரோதிகளைப் போக்கவும் –
அதுக்கு அநுகூலங்கள் ஆனவற்றை உண்டாக்கவும் –
அநுபவம் தன்னை அவிச்சின்னமாக்கவும் வேணும் என்று அபேஷிக்க ப்ராப்தமாய் இருக்க
இரங்கு -என்று
இவ்வளவு அபேஷிக்க அமையோமோ -என்ன

உனக்கு பிரகாரமாய் இருக்குமது ஒழிய ஸ்வ தந்த்ரமாய் இருப்பதொரு பதார்த்தம்
இல்லாமையாலே என் அபிமத ஸித்திக்கு உன் இரக்கமே யமையும் –என்கிறார் –

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-

பதவுரை

இராமனே

இராமபிரானே!
ஊனில் மேய ஆவி நீ

சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு
உற்றமோடு உணர்ச்சி நீ

ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு.
ஆனில் மேய ஐந்தும் நீ

பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ;
அவற்றுள் நின்ற தூய்மை நீ

அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது;
வானினோடு மண்ணும் நீ

நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும்
வளம் கடல் பயனும் நீ

அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ;
யானும் நீ

அடியேனு“ உன் அதீகன்;
அது அன்றி

இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல்
எம்பிரானும் நீ

ஸர்வேச்வரனும் நீ காண்.

வியாக்யானம்-

உறக்கமோடு உணர்ச்சி நீ -வளம் கடல் பயனும் நீ-ஆனில்  மேய ஐந்தும் நீ-
யவற்றின் நின்ற தூய்மை நீ -ஊனின் மேய வாவி நீ-வானினொடு மண்ணும் நீ-
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –என்று அந்வயம்

உறக்கமோடு உணர்ச்சி நீ-
தமோ குண அனுபவத்தால் வந்த நித்ரையும் –சத்வ குண கார்யமான
உணர்த்தியும் உன் ஆதீனம் –

இத்தால்-
சேதனருக்கு விஷயப்ராவண்ய ஹேதுவான அஞ்ஞானமும் –
பகவத் ப்ராவண்ய ஹேதுவான ஜ்ஞானமும் -நீ இட்ட வழக்கு -என்கை
அநாதி மாயயா ஸூ ப்த -என்று அஞ்ஞானத்தை நித்ரையாக சொல்லக் கடவது இறே

வளம் கடல் பயனும் நீ-
கண்டார்க்கு ஆகர்ஷமான கடலிலே அம்ர்தமும் ரத்நாதிகளும் உன் சங்கல்ப அதீனம்-

இது பிரயோஜனாந்தரங்களுக்கும் உப லஷணம் –

இத்தால் -உன் ப்ராவண்யத்துக்கு விரோதியாய் -அஞ்ஞான கார்யமான பந்தக
பதார்த்தங்கள் எல்லாம் நீ இட்ட வழக்கு -என்கை

ஆனில்  மேய ஐந்தும் நீ-
பசுக்களில் சுத்திகரமாய் சொல்லுகிற பஞ்சகவ்யமும் உன் அதீனம்

யவற்றின் நின்ற தூய்மை நீ –
அந்த பஞ்சகவ்யங்களுக்கு உண்டான சுத்தியும் உன் சங்கல்ப அதீனம்

பரம  பாவநரான தேவேரோட்டை ப்ரத்யா சத்தி இறே பதார்த்தங்களுக்கு சுத்தி ஹேது
கோ ப்ராஹ்மணர்க்கு பகவத் சமநராதன உபகரணங்கள் ஆகையால் இறே சுத்தி ஹேதுத்வம் –

ப்ரஹ்மணா நாம் கவாஞ்சைவ குலமே கந்த் விதாக்ர்தம்
அந்யத்ர மந்த்ராஸ் திஷ்டந்தி ஹவீரன் யத்ர திஷ்டதி -என்னக் கடவது இறே

கர்மத்துக்கு சுத்தி ஹேதுத்வம் பகவத் சமாராதானம் ஆகையாலே –
ஜ்ஞானத்துக்கு சுத்தி ஹேதுத்வம் பகவத் விஷயம் ஆகையாலே
ஷேத்ரஞ்ஞஸ் யே ச்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமாமதா -என்னக் கடவது இறே

பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே –என்றும் –

இத்தால் அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யத்தால் வந்த அசுத்தி பரிஹாரமான
பாவந பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு -என்கை

ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் தாரகமாக வர்த்திக்கிற பஞ்ச வ்ர்த்தி ப்ராணனும் நீ இட்ட வழக்கு –

இத்தால் –
சரீர ஸ்திதியும் சரீர விநியோகமும் நீ இட்ட வழக்கு என்கை

வானினொடு மண்ணும் நீ-
நிராலம்பனமான ஆகாசத்தில் வாய்வாதிகள் சஞ்சரிக்கிறதும்
நீரிலே கிடக்கிற பூமி கரையாதே சகல ஆதார பூதை யாகிறதும் உன்னாலே –

அதவா –
பந்தகமான சம்சாரமும்
முக்த ப்ராப்யமான நித்ய விபூதியும்
நீ இட்ட வழக்கு -என்றுமாம்

யானும் நீ –
பக்தனான நானும் உனக்கு பிரகார பூதன் –

இத்தால் –
எனக்கு ருசி இல்லாத வன்றும் -ததாமி புத்தி யோகந்தம் -என்கிறபடியே
என்னுடைய ருசி நீ இட்ட வழக்கு

யதன்றி –
அது ஒழிய

எம்பிரானும் நீ யிராமனே-
நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல என்கைக்கு உதாஹரணம் சொல்லுகிறது
சக்கரவர்த்தி திருமகனரான  நீயே அகிஞ்சனரான எங்களுக்கு ஸ்வாமி

அபி வ்ர்ஷா பரிம்லாநா -என்கிறபடியே ஸ்தாவர பர்யந்தமாக
அழகாலும் சீலத்தாலும் பிரிந்து தரிக்க மாட்டாதபடி பண்ணின நீயே எங்களுக்கு
நிர்வாஹகன்

அலமத்ய ஹி புக்தேந பரமார்த்தை ர லஞ்சன
தாபச்யாமி நிர்யாந்தம் ராமம் ராஜ்யே  பிரதிஷ்டிதம் -என்றும் –

புற் பா முதலா இத்யாதி –

யாகாதிர் யஜ்ஞ சீலாநாம் -என்று ஒரு பஷிக்கு மோஷம் கொடுத்தவனே
எங்களுக்கு நிர்வாஹகன் –

அன்று சராசரங்களை வைகுந்தத்து எற்றினவனே எங்களுக்கு நிர்வாஹகன் –

————————————————————————————–

95 பாட்டு –

அவதாரிகை –

எம்பிரானும் நீ யிராமனே -என்று நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல சக்தனுமாய்
ஸ்வ தந்த்ரனனுமான சக்கரவர்த்தி திருமகனே உபாயம் என்றார் -கீழ் –

இதில் –உபாயத்தில் தமக்கு உண்டான அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –

பாஹ்ய விஷய ருசியைத் தவிர்த்து
உன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
கைங்கர்யத்தை பிரார்த்திக்கும்படி
புகுர நிறுத்தின நீ -என்னை உபேஷித்து விஷயாந்தர ப்ரவணனாம் படி கை விட்டாலும்
உன்னை ஒழிய வேறொரு கதி இல்லை என்று
தம்முடைய அத்யவசாயத்தை யருளிச் செய்கிறார் –

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-

பதவுரை

எம் அண்ணலே!

எம்பெருமானே!
அடக்க அரு

அடக்க முடியாத
ஐந்து புலன்கள்

பஞ்சேந்திரியங்களை
அடக்கி

பட்டிமேயாதபடி நியமித்து
ஆசை அரும் அவை

விஷயந்தரப் பற்றுக்களை
துடக்கு அறுத்து வந்து

ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து
நின் தொழில் கண்

உன் கைங்கரியத்திலே
நின்ற

நிஷ்டனாயிருக்கிற
என்னை

அடையேனே

நீ

இவ்வளவு ஆளாக்கின நீ

விட கருதி

உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி
மெய் செயாது

என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல்
மிக்க ஓர் ஆசை ஆக்கிலும்

விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும்
கடல் கிடந்த நின் அலால்

க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது
ஓர் கண் இலேன்

வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன்.

வியாக்யானம் –

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி –
ஆச்சார்ய உபதேசத்தாலும் சாஸ்திர வாசனையாலும் இந்த்ரியங்களை நியமிக்க
இழிந்தால் நியமிக்க வரிய ச்ரோத்ராதிகள் ஐந்தையும் -ஆகர்ஷமான
தன் வடிவைக் காட்டி -விஷயங்களில் போகாதபடி மீட்டு -அவற்றுக்கு தானே விஷயமாம்படி நியமித்து –

ஈஸ்வரன் வடிவழகைக் காட்டி மீட்டான் என்கைக்கு இங்கே சப்தம் உண்டோ -என்னில் –

கீழே –புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறி இலேன் -என்றவர் ஆகையாலே
இங்குச் சொன்ன இந்த்ரிய நியமனம் ஈச்வரனாலே என்னும் இடம் அர்த்தாத் சித்தம்

தபோ பங்கம் பண்ண வந்த ஊர்வசியை மாத்ர்புத்தியால் நமஸ்கரித்து நின்ற அர்ஜுனனும் –
தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -என்னும்படி இறே
இந்திரிய நியமன அருமை இருப்பது

ஆசையாமாவை துடக்கறுத்து –
அவ்வடிவிலே பாவநத்வத்தாலே விஷயங்களில் ருசியை  வாசனையை தவிர்த்து
விஷயாந்தர ருசிக்கடி பாபமே இறே

வந்து உன் தொழில் கண் நின்ற என்னை –
புருஷார்த்தின் மேல் எல்லையில் வந்து-உன் திருவடிகளிலே கைங்கர்யத்தை அர்த்தித்து நின்ற என்னை –

நீ விடக் கருதி –
இந்த்ரிய ஜெயமே தொடங்கி -இவ்வளவும் புகுர நிறுத்தின நீ –
உபேஷிப்பாயாக நினைத்து

மெய் செயாது
ஆரம்பித்த கார்யத்தை முடிய நடத்தாதே –

மெய் செய்யாது ஒழிகையாவது -ஆத்ம உஜ்ஜீவனத்தை ஆரம்பித்து-தத் விபரீதமாக ஆசரிக்கும் மித்யா வியாபாரம் –

அந்யதா சங்கல்ப்யா ந்ய தாசரதீ தி மித்யா சாரஸ் ஸ உச்யதே -என்னக் கடவது இறே –

மிக்கோராசை யாக்கிலும் –
விஷயாந்தரங்களில் ருசியைப் பிறப்பித்தாய் ஆகிலும் –
ஸ்வ விஷயத்தில்  கர்ஷி பண்ணினவன் -சப்தாதி விஷயங்களில் ருசிக்கு
உத்பாதகனாகக் கூடாது -அப்படிக் கூடினாலும் –

கடல் கிடந்த நின்னலலார் ஓர் கண் இலேன் –
நான் அபேஷியாது இருக்க -என்னுடைய ஹித அர்த்தமாக
த்ரிபாத் விபூதியில் இருப்பை விட்டு –
சம்சார விஸத்ர்சமான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற உன்னை ஒழிய-வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன்

எம் அண்ணலே –
அபேஷா நிரபேஷமாக என்னுடைய ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு அடி
என்னுடைய நிருபாதிக ஸ்வாமி யாகையாலே -என்கிறார்
உபேஷித்தாலும் விட மாட்டாமைக்கடி நிருபாதிக ஸ்வாமித்வம்

அண்ணல்-ஸ்வாமி

———————————————————————————–

96 -பாட்டு

அவதாரிகை –

தம்முடைய வ்யசாயத்தை அருளிச் செய்தார் கீழ் பாட்டில் –

இதில் -அஞ்சேல் என்ன வேண்டுமே -என்றும்

இரங்கு அரங்க வாணனே -என்றும்
பல படியாக அபேஷியா  நின்றீர் –

உம்முடைய ப்ராப்யத்தை நிர்ணயித்து சொல்லீர் -என்ன

நான் சம்சாரத்தை அறுத்து நின் திருவடிகளில் பொருந்தும்படியாக பிரசாதத்தைப்
பண்ணி யருள வேணும் என்று தம்முடைய ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறார்

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-

பதவுரை

வரம்பு இலாத மாய

அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!

ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும்

ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே

மெய்யாகவே
வரம்பு இல் ஊழி

பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும்

தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய்

எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே

புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா

முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு

பற்பல ஜன்மங்களை
அறுத்து

இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து

உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ

அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த

நன்றாக
நீ வரம் செய்

அநுக்ரஹித்தருள வேணும்

வியாக்யானம்-

வரம்பிலாத மாயமாயா –
அளவிறந்த ஸ்வரூபத்தையும் அளவிறந்த மஹதாதி பரிணாமங்களையும்
உடைத்தான ப்ர்க்ர்தி தத்தவத்தை -ஸ்வ அதீனமாக உடையவனே –

மாயை -ப்ரக்ர்தி

அநந்தஸ்யந தச்யாந்தம் சங்க்யா நாம் வாபி வித்யதே -என்னக் கடவது இறே

இத்தால் –பந்தகமான ப்ரகர்தி நீ இட்ட வழக்கு என்கை

மாயம் -ஆச்சர்யம்

இத்தால் -கீழ் சொன்ன ப்ரக்ர்தியில் பக்தராய் -தன்நிவ்ர்த்தி அர்த்தமாக தேவரீரை
ஆஸ்ரயித்த சேதனருக்கு தத் சம்பந்தத்தை அறுத்து கொடுக்கைக்கு அடியான
ஜ்ஞான சக்தியாதி குணங்களை உடையவனே -என்கை

வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் –
சப்த லோகங்களும் ஸ்தோத்தாக்களாக –
தம்தாமுடைய சேஷத்வத்தை உணர்ந்து –
ஸ்வரூப அநுரூபமாக அநந்ய பரராய் கொண்டு –
அசந்க்யாதமான கல்பங்கள் எல்லாம் ஏத்தினாலும் எல்லை காண ஒண்ணாத ரஷகத்வ-ப்ரதையை உடையவனே –

இத்தால் –அசித் சம்சர்க்கத்தை அறுத்து -திருவடிகளோடே சேர்த்து ரஷித்து போந்த
ரஷகத்வ ப்ரதையை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-

வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி சர்வ லோகை
சதுர்முகா யுர்யதி கோடிவக்த்ர

வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து-
நம்மைப் புகழாதே அபேஷிதத்தை சொல்லீர் -என்ன
அசந்யேயமான பல வகைப்பட்ட பிறப்பை யறுத்து

பல வகை -யாவது தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள்
அசந்க்யாதம் ஆவது -ஒரு ஜாதியில் பிறக்கும் ஜன்மத்துக்கும் தொகை யற்று இருக்கை

காலம் -அநாதி
ஆத்மா-நித்யன்
பண்ணி வைக்க வல்ல கர்மங்களுக்கு அவதி யில்லாமையாலே
கர்ம அநு குணமாகப் பிறக்கஇருக்கிற பிறவிக்குத் தொகை இல்லை
ஜன்மங்களை யறுத்து

வந்து நின் கழல் பொருந்துமாறு –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே வந்து –
ஸூரி போக்யமான திருவடிகளில்
சாயாவா சத்வம் அநு கச்சேத் -என்கிறபடி -ப்ரதக் ஸ்தித்யநர்ஹமாக -பொருந்தும்படியாக-

திருந்த –
நோபஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே திருவடிகளுக்கு புறம்பானவற்றை
ஸ்மரியாதே -கைங்கர்ய சுகமே சுகமாம் படி

நீ வரம் செய் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாக -ஆள் பார்த்து உழி தருகிற நீ –
பிரசாதத்தை பண்ணி யருள வேணும்

புண்டரீகனே-புண்டரீக அவயவனே
புண்டரீகாஷனே
திருக்கண்களே ப்ரசுரமாய் இருக்கையாலே –புண்டரீகன் -என்கிறார்
விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்னக் கடவது இறே

இத்தால் -பிரசாதத்தை பண்ணுகை யாவது -ஒரு விசேஷ கடாஷம் என்கிறார்

———————————————————————————

97-பாட்டு –

அவதாரிகை –

வரம் செய் புண்டரீகனே –என்னா நின்றீர் –
நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய பக்கல் ஒரு முதல் வேண்டாவோ -என்ன

திரு மார்பிலே பிராட்டி எழுந்து அருளி இருக்க –
திருக் கையிலே திவ்ய ஆயுதங்கள் இருக்க
ஒரு முதல் வேணுமோ

அங்கனம் ஒரு நிர்பந்தம் தேவரீருக்கு உண்டாகில்
என் விரோதியைப் போக்கி
உன்னைக் கிட்டி அடிமை செய்கைக்கு
ஹேதுவாய் இருப்பதோர் உபாயத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார்

அகிஞ்சனனாய்
தேவரீர் கை பார்த்து இருக்கிற எனக்கு
ப்ராப்யமான கைங்கர்யத்தோடு
தத் உபாயத்தோடு
வாசியற தேவரீரே தந்து அருள வேணும் எத்தனை யன்றோ -என்கிறார் –

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே –97-

பதவுரை

வெய்ய ஆழி

(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும்
சங்கு தண்டு வில்லும் வாளும்

திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும்
சேரும் மார்ப

நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே!
நாதனே

ஸர்வஸ்வாமியே!
ஐயில் ஆய ஆக்கை நோய்

சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை
ஏந்து சீர் கைய!

தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது

செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து

தொலைத்து வந்து
நின் அடைந்து

உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம்

நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை
எனக்கு

அடியேனுக்கு
நீ நல்கவேண்டும்

அருள வேணும்.

வியாக்யானம் –

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய ! –
காணவே எதிரிகள் தறைப் படும்படியான ஸ்ரீ பஞ்சாயுதங்களும் -அவர் தம் வாத்ஸல்யத்தாலே-திருக்கையிலே ஏந்தினவனே –

வெறும் புலத்திலே ஆலத்தி வழிக்கும்படி இருக்கிற கையிலே திவ்ய ஆயுதங்களை
ஏந்தினவனே -என்றுமாம் –

திவ்ய ஆயுதங்களை ஏந்திய படியாயே இருக்கிறது -தேவரீருக்கு ஒரு விரோதி உண்டாயோ –

என் விரோதியை போக்குகைக்கு அன்றோ -என்கை-
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்னக் கடவது இறே

செய்ய போதில் மாது சேரு மார்பா !-
சிவந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையாளாய் இருக்கையாலே ஸூகுமாரியாய்
திரு மேனிக்கு பரபாக ரூபத்தாலே ஆபரண பூதையான பிராட்டி –

அகலகில்லேன் இறையும் -என்று சொல்லப்படும் திரு மார்பை உடையவனே –

இத்தால்
ஆஸ்ரயண விரோதி பாபத்தை பொறுப்பிக்கைக்கு பிராட்டி சந்நிதி உண்டாய் இருக்க –
மாத்ர்பித்ர் சந்நிதியிலே நோவு படுவாரைப் போலே -சரீர சம்பந்தத்தாலே நோவு படுவேனோ -என்கை

நாதனே !-
சர்வ ஸ்வாமி யானவனே –

இத்தால் -இவள் புருஷகாரம் ஆகாதே -கையில் பரிகாரமும் இல்லாது ஒழிந்த அன்று-தான் ஆருடைமை நோவு படுகிறது

இப்படி இருக்க புருஷார்த்த ஸித்திக்கு என் தலையிலும் ஒரு உபாயம் வேணும் என்று-

தேவரீருக்கு ஒரு நிர்பந்தம் உண்டாகில் அத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார் -மேல்

ஐயிலாய வாக்கை நோய் அறுத்து –
ச்லேஷ்மத்தை பிரக்ர்தியாக உடைய சரீரமாகிற நோயை அறுத்து –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ப்ரார்த்த நீயமான சரீரம் ஜ்ஞானம் பிறந்தால் வ்யாதியாய்-இறே இருப்பது –
ஏய்ந்த தம் மெய்குந்தமாக விரும்புவர் -என்னக் கடவது இறே

வந்து நின்னடைந்து –
ஒரு தேச விசேஷத்திலே வந்து
நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து

உய்வதோர் உபாயம் –
அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை
நீ எனக்கு நல்க வேண்டுமே –
1-ஸ்ரீ ய பதியாய் –
2-திவ்ய ஆயுத உபேதனாய் –
3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –
4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –

நல்குதல்-கொடுத்தல் –அதாகிறது தருதல் –

————————————————————————————-

98-பாட்டு –

அவதாரிகை –

நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய தலையிலே ஒரு முதல் வேணுமே
என்னை நீயே தர வேணும் என்னக் கடவீரோ -என்று பகவத் அபிப்ராயமாக
புருஷார்த்த ருசியாலே வந்த ப்ராதிகூல்ய நிவ்ர்த்தியும் புருஷார்த்த ருசியுமே
ஆலம்பந மாக நான் சம்சார துரிதத்தை தப்பும்படி நீயே பண்ணியருளவேணும் -என்கிறார் –

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-

பதவுரை

மாய!

ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே!
மறம் துறந்து

கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி

கன்னங்சுவடுகளைத் தவிர்த்து
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து

பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து
நின் கண்

உன் பக்கலில்
ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன்

பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன்
பிறந்து இறந்து

பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு
பேர் இடர் கழிக்கண் நின்றும்

மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும்
நீக்கும் ஆ

நீங்கும் பிரகாரத்தையும்
மற்று

அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும்
எனக்கு

அடியேனுக்கு
மறந்திடாது

மறவாமல்
கல்க வேண்டும்

அருளவேணும்

வியாக்யானம் –

மறம் துறந்து –
மறம் ஆகிறது -கோபம்
அதின் எல்லை -பர ஸ்ம்ர்ரத்தி பொறாது ஒழிகையும் -பர அநர்த்த சிந்தையும் -அத்தை விட்டு

வஞ்சம் மாற்றி –
க்ர்த்ரிமத்தை தவிர்த்து -அதாகிறது –
அனுகூலனாய்த் தோற்றி பிரதிகூலனாய் தலைக் கட்டுகை  –

வஞ்சம் -பொய்

ஐம் புலன்கள் ஆசையும் துறந்து –
இந்திரியங்களுக்கு இதர விஷயங்களில் உண்டான-யும்- ச-உம்மைத் தொகை –

இதில் கீழ் சொன்ன கோப க்ர்த்ரிமங்களுக்கு ஹேதுவான விஷயாந்தர சங்கத்தையும் விட்டு-

அவை தான் புருஷார்த்த ருசி பிறந்தாருக்கு அசம்பாவிதங்கள்-

நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற –
உன் பக்கல் ஆசையையே ஆதரித்து நின்ற -அதாவது பகவத் ப்ரேமம் வேணும் என்று இருக்கிற ஆதரம்

தொடர்வு -உறவு

நாயினேன் –
பிரதிகூல்ய நிவர்த்தியும் புருஷார்த்த ருசியும் ஒழிய -புருஷார்த்த சித்திக்கு
முதல் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற அநந்ய கதி
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா –
பிறப்பது சாவதான மகா துக்க சக்கரத்தின் நின்றும் நீங்கும் படி –

பிறந்து -என்கிற இது ஷட்பாவ விகாரத்துக்கும் உப லஷணம்

இறந்து -என்கிற இது நரகாதிகளுக்கும் உப லஷணம்

மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே –
சம்சாரத்தில் நான் பட்ட துக்கத்தையும்
என்னுடைய பூர்வ வ்ர்த்தத்தையும்
தேவரீருடைய ஸ்வா தந்த்ர்யத்தையும்
பார்த்து விஸ்மரியாதே –
அபேஷா மாத்ரத்தையும் சம்பந்தத்தையும் பார்த்து –
விரோதி நிரசனத்திலே அசக்தனான எனக்கு -தன்நிவ்ர்த்தி பூர்வகமாக
புருஷார்த்தத்தை தந்து அருள வேணும் –

மற்று -என்கிறது விரோதி நிவ்ர்த்தி சமநந்தரத்தில் லபிக்குமது ஆகையாலே

மாய –
மமமாயா -என்கிறபடியே
சம்சார சக்கரத்தை அறுத்து -நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனே-

————————————————————————————-

99-பாட்டு –

அவதாரிகை

புருஷார்த்த ருசி பிறந்த பின்பு -அத்தாலே வந்த பிரதிகூல்ய நிவ்ர்த்தியை உம்முடைய-பக்கல் முதலாக சொல்லா நின்றீர் –
அநாதி காலம் நரக ஹேதுவாகப் பண்ணின ப்ராதிகூல்யங்களுக்கு போக்கடியாக
நீர் நினைந்து இருந்தது என் -என்ன –

நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்ற

உன்-திருவடிகளில் ந்யச்த பரனான இது ஒழிய வேறு போக்கடி உண்டோ –

ஆனபின்பு
கீழ் சொன்ன கர்மம் அடியாக வருகிற யம வச்யதையை தவிர்த்து –
எனக்கு உன் திருவடிகளிலே அவிச்சின்னமான போகத்தை தந்து அருள வேணும் -என்கிறார்-

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-

பதவுரை

பூவை வண்ணனே

காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!
பின்னைகேள்வ!

!  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே
(யமகிங்கர ரானவர்கள்)

நான் செய் வல்வினை காட்டி

நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி
பயன் தனில்

அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை

எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து

துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல

அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார்

செய்ய நினைத்திருக்கிறார்கள்
என கேட்டது அன்றி

என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக
உன்னது ஆவி

என்னுடைய ஆத்மாவை
நின்னொடும் பூட்டிவைத்த என்னை

உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை

வியாக்யானம் –

காட்டி நான் செய் வல் வினைப் –
நான் செய்த பிரபலமான பாபங்களை எமபடர் எனக்கு காட்டி –
வாசிகமாயும் மானசமாயும் உள்ள பாபங்களை ஒழிய —

செய்தவையே நரக ப்ரவேசம்-பண்ணி அனுபவிக்கும் படி பிரபல பாபங்களை –

இத்தால் -இவர்கள் என்னை நலிகிறார்கள் என்று நான் நினையாதபடி பண்ணுமவர்கள் என்கை –

பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து –
இந்த பாப பலம் நமக்கு இவ்வளவும் அனுபவிக்க ப்ராப்தம் என்று
பலத்திலேயும் என் மனசைப் பூட்டி வைத்து

நல்ல வல்ல செய்ய எண்ணினார் –
கொடிய செயல்களை செய்ய எண்ணினார்

இவனுக்கு முதலிலே பண்ணின பாபத்தை அறிவித்து
இப்பாப பலம் நாம் இவ்வளவும் அனுபவிக்க வேணும் ஆகாதே -என்று நெஞ்சைப் பிறப்பித்து-

பின்னை யாய்த்து குரூரமான செயல்களை அவர்கள் செய்ய நினைப்பது –

எனக் கேட்டதன்றி –
என்று கேட்டுப் போந்தவற்றை அகற்றி –
இப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போந்த எம வச்யதையை தவிர்த்து –

என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை-
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆகையாலே வந்த நீர்மையை உடைய க்ர்ஷ்ணனே –
பாப ப்ரசுரனாய் அகிஞ்சனான என்னுடைய ஆத்மாவை உன் பக்கலிலே சமர்ப்பித்த என்னை –
காலியாய நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை -என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –

பூட்டி வைக்கை யாவது
நீ விடக் கருதி -மெய் செய்யாது மிக்கோர் யாசை யாக்கிலும் –நின் அலாலோர் கண் அலேன்–என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –

நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே –
பூவை பூ போல் நிறத்தையும் சௌகுமார்யத்தையும் உடைய வடிவு உடையவனே
நின் பக்கல் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –
புஷ்பஹாச சுகுமாரமான வடிவழகை சர்வ காலமும் விச்சேதியாதே அனுபவிக்கும்படி-பண்ணி யருள வேணும் –

பின்னை கேள்வ -என்னதாவி நின்னொடும் பூட்டி வைத்த வென்னை -காட்டி நான் செய்-வல்வினை பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து -நல்ல வல்ல செய்ய எண்ணினார் -எனக் கேட்டதன்றி -பூவை வண்ணனே -நின்னுள் நீக்கல் -என்று அந்வயம் –

—————————————————————————————–

100-பாட்டு

அவதாரிகை –

இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன –
அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

பதவுரை

பெறற்கு அரிய மாயனே

(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே!
பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும்

பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கும் அஃது

நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்
இறப்ப வைத்த

மறந்தொழிந்த
ஞான நீசரை

ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை
கரை கொடு

ஏற்றம் ஆ

கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக

பெறற்கு அரிய

துர்லபமான
சின்ன பாதம் பத்தி ஆன

உன் திருவடிகளில் பக்தியாகிற
பாசனம்

மரக்கல (ஓட) த்தை
எனக்கு நல்க வேண்டும்

அடியேனுக்கு அருளவேணும்.

வியாக்யானம் –

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த-
ஜன்மத்தோடே கூடின தாபத்ரய ரூபேண மஹா துக்கத்தை விளைக்கக் கடவதான
சம்சார சக்கரத்தில் நின்றும் நீங்குகைக்கு உறுப்பான தத்வ ஹிதங்களை மறைத்து வைத்தவர்கள்-
தத்வ ஹிதங்களை -அஃது -என்றது சுருதி ப்ரசித்தி யாலே

அதாவது -ஸ்வர்க்க -தத் சாதனங்களை வேதார்தம் என்று இருக்கை –

வேதவா தரதா  பார்த்த நான்ய தஸ்தீ திவா தி ந -என்று இ றே அவர்கள் நிர்ணயம்

இறக்கையாவது-நசிக்கை
அதாகிறது -ணச் -அதர்சநே -என்கிறபடியே மறைக்கை –

ஞான நீசரைக் –
சர்வஞ்ஞாராக தங்களை  அபிமானித்து இருக்கும் நீசரை –
யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டு நீசர் -என்றவர்கள் கேவல நீசர்
இவர்கள் ஜ்ஞான நீசர்

கரைக்கொடு ஏற்றமா –
இவர்களை கரையிலே கொண்டு ஏற்று கைக்கு உபாயமாக
சோத்வந பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
சம்சாரத்துக்கு கரையாவது பகவத் விஷயம் இ றே –

அத்தை லபிக்கைக்கு உபாயமாக-வேதாந்தந்களிலே சொல்லி வைத்த

பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம் –
பெருதருக்கு அரிய உன் திருவடிகளை விஷயமாக உடைத்தான பரம பக்தி யாகிற
பாஜனத்தை-ப்ராப்யன் ஆனவனை காட்டில் தத் விஷய பக்தி துர்லபம் இறே

யா ப்ரீதி ரவிவேகா நாம் -என்றும் –
முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா -என்றும் –
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி -என்றும் சொல்லக் கடவது இறே

பாசனம் -மரக்கலம்

அத்தாலே தனத்தை லஷிக்கிறது -தனமாய தானே கைகூடும் -என்னக் கடவது இறே

யாமேவை ஷவ்ர்ணு தேதே நலப்யே -என்றும் –

ஹ்ர்தாம நீ ஷா மனஸா பிக்ல்ப்த -என்றும் –
வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் பெறுகைக்கு சாதனமான பக்தியை உபதேசித்து-வைத்தது இறே -அந்த பக்தியை –

பெறற்கு அரிய மாயனே –
உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-சித்தியாத ஆச்சர்ய பூதனே –
லோகத்திலே சாத்யங்களுக்கு  எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே

எனக்கு நல்க வேண்டுமே –
பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை  அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்
பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக்
கொடுத்தருளக் கடவ தேவரீர் –
அநந்ய ப்ரயோஜனனாய் –
அநந்ய சாதனனாய் –
இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை
தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .