திரு மா மகள் தன சீரருள் ஏற்றம் அருளிய பின்னர் -புருஷகார வைவவஞ்சம் அருளி முடித்த பின்பு
திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் – அதாவது -ஆறு
சாதனச்ய கெளரவம்- இனி உபாய பிரகரணம் – 6- இல் -2 –
புருஷகாரத்தால் பலிப்பது உபாயம் என்பதால் அதையும் முன்பே கொஞ்சம் அருளினார் .
சகிப்பித்துரஷிப்பையே ஸ்வரூபம் பிராட்டிக்கு .
பூர்வ உகத உபாய செஷமாக மேலே அருளுகிறார் 96 சூரணை வரை .
முன்பு அருளியது பிராசன்கிகமாக -விஸ்தரென அருளிச் சொல்கிறார் .
பிரதமத்தில் -அர்ஜனனுக்கு உபதேசித்தது யுத்த பூமியில் நீசர் நடுவில் உபதேசித்தான்
கால விசேஷம் பாராமல் ச்நாநாதிகள் இல்லாமல் அருளிச்செய்தான் .
சூரணை- 23-
பிரபத்திக்கு தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும் ,
அதிகாரி நியமமும்
பல நியமமும்
இல்லை விதி முறைகள் இல்லையே –
கர்ம ஞான பக்தி யோகங்களுக்கு உண்டே –
பக்தி வேற பக்தி யோகம் வேற –
வேதம் அத்யயனம் அதிகாரி -தரை வர்ணிகர் தானே செய்யலாம் -ஸ்திரீகள் பாலர்கள் கூடாதே .
அபசூத்ரா அதிகாரம் -நான்காவது வர்ணிகர் மோஷம் போக முடியாது அந்த ஜன்மத்தில்
அந்த வழியில் -ஆதி சங்கரரும் எம்பெருமானாரும் இங்கே அப்படி அருளி
வேற -பிரபத்தி மார்க்கம் -சர்வாதிகாரம் உண்டே என்றார் உடையவர் –
எம்பெருமானார் ஸ்பஷ்டமாக எடுத்து அருளினார் -கண்டு பிடிக்க வில்லை
invention வேற discovery -இருப்பதை கண்டு பிடிப்பது
தத்துவ ரீதி எல்லாமே discovery தான் -எல்லாம் முன்பே இருப்பது தான் -மூலப் பொருள் ஏற்கனவே உண்டே
பிரபன்ன ஜன கூடஸ்தர் நம் ஆழ்வார்
வேதங்களிலே உண்டே பிரபத்தி
எம்பெருமானார் தரிசனம் -சம்ப்ரதாயம் -பெருமை சேர்த்தால்
பகவத் சரண வரணம் தானே பிரபத்தி –சரணத்தை உபாயமாக பற்றுதல் –
அடைக்கலம் என்று வரித்தல் .-
முமுஷுக்கை சரணமஹம் பிரபத்யே -வேதமே சொல்லி
அகிர் புத்நியம் சம்ஹிதை –
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய –
அகிஞ்சன –
அகதி
த்துவமே ஏவ மே உபாய பூத பிரார்த்தனா மதி
லஷனை வாக்கியம் இது தான்
தேச நியமமாவது –
புண்ய ஷேத்ரங்களில் தான் பண்ண வேண்டும் அந்ய தேசங்களில் கூடாது என்பதில்லை
கயா ஸ்ரார்தம்கயாவில் தான் -அர்த்த சேது -ஸ்நானம் அங்கே தான் -திரு கடல் மலை பாதி சேது என்பர்
கால – நியமம் ஆவது வசந்தாதி காலங்களில் தான் செய்ய வேண்டும் என்றோ வேறு காலங்களில் கூடாது
பிரகார -இன்ன முறையில் -ஸ்நான பூர்வகமாக செய்ய வேண்டும் –
ஸ்நானம் சாப்பிட இப்படி செய்ய வேண்டும் சாஸ்திரம் -முதுகு நனைவது போல் நதி ஸ்நானம்
கூப ஸ்நானம் கிணறு ஸ்நானம் கூடாது விதி உண்டே -உடுத்தி கொண்ட வஸ்த்ரம் கொண்டு துவட்டிக் கோல கூடாது
வஸ்த்ரம் மாற்றும் பொழுது -மேலே தான் எடுக்க வேண்டும் கீழே விட கூடாது
மீண்டும்பாத ப்ரஷாலனம் காலை கழுவி கொள்ள வேண்டும்
கிழக்கே பார்த்து தான் சாப்பிட வேண்டும்
அதிகாரி -தரை வர்ணிகர் மட்டுமே எனபது இல்லை -ஜாத புத்திர கிருஷ்ணா கேச -யாகம் செய்ய -நரைத்த தலை கூடாதே
பல -எதற்கும் செய்யலாம் சரணாகதி -திருஷ்ட அதிர்ஷ்ட பலன்களுக்கும் –
அல்பபலன் பெற்று போக கூடாது -ஜ்யோதிஷிட யாகம் ஸ்வர்க்கம் வாயவ்யம் செல்வம்
சாத்குண்யம் மேன்மை வைகுண்யம் சிறுமை பாராமல் –
தீர்த்தத்தில் அவஹாகிக்கும் அவனுக்கு -சுத்தி பண்ணி கொள்ள வேண்டாமே
சுயமேவ பவித்ரமாய் சுத்த அசுத்த விபாகம் அற தன்னோடு அன்வயிக்கும் படி இருக்கையாலும்
அவபிரத ஸ்நானம் -தீர்த்தவாரி –
முதல் தேக அசுத்தி போக்கவும் அங்கே ஸ்நானம்
தேக பலன் -தேகத்துக்கு உண்டான விதி உண்டு வரணாதி அனுரூபமாய் இருக்கும் மற்றவை
பிரபத்தி ஆத்மா ஸ்வரூபத்துக்கு சேர்ந்தது என்பதால் இவை இல்லை ஸ்வரூப அனுரூபம்
ருசி அனுகுணமாக அணைத்து பலனுக்கும்
ந ஜாதி பேதம் – ந லிங்கம் ந குணா ந கிரியா ந தேசம் ந காலம் ந அவஸ்தை அயம் யோகக அபேஷிதே
சர்வ ஏவ -பிரபத்யேரன் சர்வ தாதாரம் அச்யுதன் -பாரத்வாஜ சம்ஹிதை .
சர்வ காம பல பர்தா -சனத் குமார சம்ஹிதை
இவை இல்லை யாகில் வேறே நியமும் உண்டோ
சூரணை – 24-
விஷய நியமமே உள்ளது
ஸ்ரீ மன் நாராயணன் குறித்து தான் செய்ய வேண்டுமஎன்கிறார் .
யாரை நோக்கி என்பதில் நியமம் உண்டு .
எதுக்கு தான் இவை -இந்த நியமங்கள் உண்டு என்று அடுத்து அருளுகிறார்
சூரணை -25 –
கர்மத்துக்கு
புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள் தரை வர்ணிகர் என்று இவை எல்லாம்
வ்யவச்திகங்களாய் இருக்கும்
கர்மம் ஆவது ஜ்யோதிஷ்ட ஹோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் பாவனதயா-
புத்திர காமோஷ்டி யாகம் ஆசூரி -திரு வல்லிக் கேணி எம்பெருமானார் திரு அவதாரம்
வசந்தாதி சுக்ல பஷ -ருது மட்டும் இல்லை –
சுச்சம் சுத்தி ஆசமன ஸ்நான விரதம் ஜபாதி ரூபமான –
காணாமல் கோணாமல் கண்டு விட வேண்டும் அர்க்க்யம் -உபஸ்தான மந்த்ரம் செய்யும் பொழுது சூரியன் உதிக்க
உபஸ்தானம் சொல்லும் பொழுது அஸ்தமிக்க வேண்டும்
பிராயச்சித்தம் கால அதிகம் ஆனால் -ஏக அர்க்க்யம் விட்டு கழிக்கிறோம் –
கைங்கர்யம் செய்பவர்கள்
கோயில் காத்தவன் –குளம் காத்தவனுக்கு தான் இவை –
கர்மம் கைங்கர்யத்தில் புகும் -பலத்துக்கு சாதனமில்லை
கைங்கர்யம் போலே ஆகும்
வேதாதிகர் -உபநயனம் ஆன பின்பு -சாஸ்திர விதி
ஆஸ்ரமம் -வேத வேதாங்க உக்தத்வம் -வ்யவச்தின்களாய் இருக்கும்
பிரபதிக்கு இவை ஒன்றும் இல்லை
தேச கால நியமம் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறார் .
சூரணை -25 –
ச ஏஷ தேச ச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை
திருவடி வார்த்தை இது –விபீஷன ஆழ்வான் சரணா கதி கட்டம்
அதேச கால -சரியான காலம் தேசம் வர வில்லை –
கடைசியில் மாறி -பஞ்சவடிக்கு வராமல்
ராவணனுக்கு ஆபத்து என்றதும் வந்தான்- ஜாம்பவான் சொல்ல
இதிகாச ஸ்ரேஷ்டம் -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம் கொண்டு நிர்ணயம் செய்கிறார் .
அதேசகாலே சம்ப்ராப்தாக -சர்வதா சங்கை வருகிறது ஜாம்பவ மகாராஜர் பஷத்தை தூஷித்து திருவடி
அருளிய வார்த்தை இது –
ராவணனால் அவமாநிதனாய் வந்தான் – சு நிகர்ஷம் முன்னிட்டு கொண்டு சரணம் என்று வந்தான் –
யாதொரு தேசம் யாதொரு காலத்தில் வந்தானோ அது தான் தேசம் காலம்
சத்வதோதரன் இவன் -பர ஹிம்சை செய்யும்-இதுவே யாத்ரை – ராவணன் அசக்யா அபசாரம் போல் இன்றி –
பர ரஷணமே யாத்ரையாக தேவரீர் இடம் வந்து
அக்ருத்யதுக்கு சக காரியாக இல்லாமல் வந்தானே –
பீஷ்மர் அதர்மம் துணை -ஹஸ்தினாபுரம் ஆசனத்துக்கு என்றும் பாதுகாப்பாகா இருப்பேன் சத்யம் செய்து என்றோ-
பிரதி கூல்யதுக்கு முடிந்து போவான் தோஷம்
கைங்கர்யம் புத்தி பண்ணி –
கருணை வடிவான தேவரீர் திரு உள்ளம்கன்னும் படிபிராட்டி பிரித்த துஷ்டன்-
தேவரீர் சக்தி கண்டு விசேஷ ஞ்ஞன் வர வேண்டியது பிராப்தம்
இது நியாயம் தானே
இது தான் தேசம் இது தான் காலம்
குறை பார்க்க கடவது இல்லை
சரணாகதி தர்மக்ஞ்ஞானான திரு வடி வார்த்தை .
இது தான் பிரபத்தி அனுஷ்டான ரூபமான த்வயத்தில்
ஸ்பஷ்டமாக காணலாம் .
சூரணை -27 –
இவ்வர்த்தம்
மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்திலே
சூச்பஷ்டம்
ரகஸ்ய த்ரயம் பார்த்தோம் முமுஷு படி சூத்ரம் அனுபவித்தோம் –
பிரதம பதத்திலே -ஸ்ரீ மத் எப்பொழுதும் கூடி
நித்ய யோகே மது -பிரத்யயம்-
சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டதையா
சகல உபநிஷத் சாரம்
சர்வ அதிகாரம்
அவிளம்ப பல பிரதானம்
சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதம் –
பிரபதிக்கும் மந்திர ரத்னதுக்கும் உத்கிருஷ்டம்
மந்திர ரத்னம் -த்வயம் சொல்லாமல் இதை காட்ட
புருஷகார உபாய நித்ய யோகம்
ஏதேனும் ஒரு காலத்திலேயே ஏதேனும் தேசத்தில் யாரோ ஒருவனுக்கு ருசி பிறக்க
சஞ்சலம் ஹி மன -நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் –
சூறாவளி காற்று போல் -நெஞ்சு –சுழன்று வருகிற நெஞ்சை தளம் அன்குரித்து
முளை விடும் தத் உத்பத்தி ஷணத்திலே ஆஸ்ரயிக்க-எப்பொழுதும் கூடி இருக்க வேண்டுமே –
ஆகையாலே பிரபத்தி உடைய தேச கால ராஹித்யம் இந்த பதத்தில் தோற்றும்
சூரணை -28 –
பிரகார நியதி இல்லை
என்னும் இடம் எங்கும் காணலாம்
பண்ணினவலும் கேட்டவனும் சுத்தி இன்றிக்கே இருக்க
சூரணை – 29-
திரௌபதி ஸ்நாதையாய் யன்றே பிரபத்தி பண்ணிற்று
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ்வர்த்தம் கேட்டது
ஏக வச்த்ரத்தில் இருக்க -சபாயாம் நடுவே இருக்க -என்னும்படி அசுத்தையாக இருக்கிறவள் –
பிரயதராய் முன் ஏற்பாடு செய்து பிரபத்தி செய்ய வேண்டாம் –
நீசர் -நெடும் தகையை நினையாதார் நீசர் தானே –
விஷ்ணு பக்தி இன்றி எதியாய் இருந்தாலும் நாய் மாமிசம் உண்பர் -சுபஜாதமிகர் –
கங்கை கொண்டான் மண்டபம் காஞ்சி சங்கர மடம் எதிரில் யாரும் கோஷ்டியில் நுழைய மாட்டார்கள் –
பகவத் விமுகரை -பாண்டவர் -தீங்கு கர்ம சண்டாளர் -அந்த ஜன்மத்திலே -நீசர் நடிவில் –
நீச சகாசத்தில் உபதேசித்தான்
பிரபத்தி சரவணம் பண்ணும் பொழுதும் நியதி இல்லை
சூரணை -30 –
ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும்
தேட வேண்டா
இருந்த படியே அதிகாரியாம் இத்தனை
அனுஷ்டிக்கும் பொழுதும் கேட்ட பொழுதும் –
சுத்தனாய் இருப்பவன் அசுத்தி தேட வண்டாம் சொல்லணுமா –
கீழ் சொன்னவரும் -அனுஷ்டான சரவண தசையில் -அசுத்தி தசையில் -சங்கியாமைக்காக இருந்த படியே
இருந்த அளவிலே அதிகாரியாம் –
சூரணை – 31-
இவ்விடத்தில் வேல் வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை
அருளிச் செய்த வார்த்தையை
ஸ்மரிப்பது
நான் கண்டு கொண்டேன் நாராயணனே
சக்கரவர்த்தி திரு மகன் -பிராமுக கிருத்வா -தர்ப்பம் பரப்பி
மூன்று நாள் உபவாசம் இருந்து —
பிரகார நியதி இல்லை என்றால் பெருமாள் செய்தது எதற்கு -கேட்டார் –
வேல் வெட்டி கிராமம் -சோமயாஜி -அனுஷ்டான பரர -நித்ய அக்னி கோத்திரம் -ஆய் சுவாமி
வியாக்யான வார்த்தைகளையே மா முனிகள் ஆர்ஜவமாக காட்டி –
ஆசார்ய பிரதானர் பெருமாள் -அதே இடத்தில் விபீஷண சரணாகதி
முழுக்கு கூட இடாமல் -செய்தான் –
உபாயதுக்கு உடன் வந்தது அன்று -அவர் ச்வாபத்தாலே வந்தது –
சமுத்ரம் சரணம் பற்ற சொன்னதே விபீஷணன் -அவன் இந்த அனுஷ்டானம் செய்ய வில்லையே
பெருமாள் தம் நிலையிலே அநுஷ்டித்தார் –
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை
சதாபிஷேகம் சுவாமி ஆக்ஜ்ஜை பன்னிரண்டு திரு மண் இட சொல்லி -இன்றும் தொடர்ந்து –
பகவத் விஷயம் கேட்ட அன்று முதல் -இட்டுக்காமல் புறப்பாடு கூட ஒரு நாள் சேவிக்க வில்லை –
ஆய் சுவாமி -பிரமாணம் -அபவித்ரா பவித்ரானாம் -த்வய ஸ்மரணமே பரி சுத்தம் ஏற்படுத்தும்
கங்கையில் நீராட போனவன் பக்கம் குளித்து போக வேண்டாமே –
சமுத்ரம் அப்படியே குளிக்க கூடாது பரி சுத்தம் வண்டும் -ஓர் குழி அது –
அதிகாரி நியமம் ஒழிந்த படி என்
சூரணை – 32-
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்த
ஷத்ரியர் ஸ்திரீ காகம் பஷி காளியன் கஜேந்த்திரன் ப்விபீஷணன் ராஷசன் பெருமாள்
இளைய பெருமாள் தொடக்க மாணவர்கள்
தர்ம புத்ராதிகள் -திரௌபதி உடன் ஜனார்த்தனன் நம -பிரபத்தி
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் –
காகம் தேவன் அசுர குணம் பஷி காகம் மூவரும்
காளியன் -திர்யக் பிரதி கூலன் –
கஜேந்த்திரன் திர்யக் அனுகூலன்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ராஷச ஜாதி
சர்வ சரண்யரான பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள் -முசுகுந்தன் -ஷத்ர பந்து -மாதவி -இந்த்ராதி தேவர்கள் -வானர சேனை
அதிகாரி நியமம் இல்லை –
ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள்
சூரணை -33 –
பல நியமம் இன்றிக்கே ஒழிந்த படி என் என்னில் -அபெஷித்த பலம் –
தர்ம புத்ராதிகளுக்கு பலம் -ராஜ்ஜியம்
தருபதிக்குபலம் வஸ்த்ரம்
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணம்
ஸ்ரீ கஜேந்தர ஆழ்வான் பலம் கைங்கர்யம்
ஸ்ரீ விபீஷணன் ஆழ்வான் -பலம் ராம பிராப்தி
பெறுமாளுக்கு பலம் -சமுத்திர தரணம்
இளைய பெறுமாளுக்கு பலம் -ராம அனுவ்ருத்தி
பிரபன்னர் -கைங்கர்யம் ஒன்றுக்கே -அவர்கள் இந்த அர்த்தத்துக்கு பண்ணினார்கள் என்று காட்டி –
சூரணை -34 –
விஷய நியமாமாவது குண பூர்த்தி உள்ள இடமே
விஷயமாகை
சூரணை 35- –
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –
காருண்யம் சக்தி இரண்டும் வேண்டுமே –
பரி பூர்ணம்-அர்ச்சையிலே தான் -சௌலப்யம் போன்றவை இங்கே தான் புஷ்கலங்கள் –
பரம பதம் -வாத்சல்யம் வெளிப் படுத்த முடியாதே –
சூரணை – 36-
ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே
ப்ராப்ய த்வரையால் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் –
சிலது பரத்வம் விபவம்
பிறந்தவாறும் -விபவம் –நோற்ற நாலும் -உலகம் உண்ட சேர்க்கவில்லை ஆசார்ய ஹ்ருதயம் நாயனார் –
திரு மங்கை ஆழ்வாரும் -பல இடங்களிலும் –
பிரபத்தி பண்ணிதும் உம்மையால் பூர்ணம் இங்கே காட்ட –
சூரணை -37 –
பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள்
சூரணை -38 –
பிரபத்திக்கு அபெஷிதங்களான – சௌலப்ய யாதி கள்
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே
பூர்ணம் -கட வல்லி -பூர்ணம் அதக -பூர்ணம் இதம் -அங்கே உள்ளவனும் பூர்ணம்
பூர்ணஸ்ய பூரணத்வம் -பூர்ண ஸ்துதி –
ஆஸ்ரென சௌகர்ய ஆபாத குணங்கள் -சௌலப்யம் சௌசீல்யம் போன்றவை –
கண்டு பற்றுகை மேன்மை கண்டு அகலாமை நிகரில் புகழாய்
வாத்சல்யம் ஸ்வாமித்வம் -போன்ற நான்கும்
பரத்வத்தில் உண்டு பரம சாம்யாபன்னருக்கு முகம் கொடுக்கும் இடம் அது
இங்கே தான் எடுபடும் -பிரகாசிக்கும் -தண்மைக்கு எல்லை நிலம் நித்ய சம்சாரிகளுக்கு
விஷயம் உள்ள இடத்தில் தான் பிரகாசிக்கும் -கம்பர் -தானம் செய்பவர் அயோத்தியில் இல்லை –
நித்யரே இங்கே வந்து சீல குணம் அனுபவிக்க -என் நாள் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு
ஆஸ்ர்யேன கார்ய ஆபாத குணங்கள் -அனைத்தும் இங்கே பரி பூர்ணம் –
சூரணை – 39-
பூர்த்தியையும் ஸ்வா தந்த்ர்யத்தையும்
குலைத்துக் கொண்டு தன்னை
அநாதிக்கிரவர்களையும் தான்
ஆதரித்து நிற்கிற இடம்
சூரணை -40 –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே -பரத்வம்
பாற்கடல் போலே -வ்யூஹம்
பெருக்காறு போலே -விபவங்கள்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply