கழிய மிக்கதோர் காதல் -வளர்ந்த அவஸ்தை
கால பரம் ஸம்ஸார பரம் இரண்டும் -எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க் கழிவதும்-
கல்ப காலம் ஆயிரம் சதுர்யுகம் பிரம்மா இருந்தும் வீண் அன்றோ
இவற்றைக் கண்டும் -எள்ளி நகையாடாமல் இருக்கப் போமோ -கால கோலம் கண்டும் இருக்கப் போமோ –
உலக விஷயம் பார் அதில் புத்தி செலுத்தி பொழுது போக்கலாம் என்ன
கண்டு கண்டு என்கிறாள் -கண்டேன் -இவற்றின் நிலையைக் கண்டு சமாதானம் ஆக மாட்டேன் என்கிறாள்
பண்டைய திருமாலைக் கண்டு -காதல் பிறந்து -வளர்ந்து – இருக்குமே
பகவான் ஸ்வாராதன்-பரிவதில் ஈசனை -1-6-
பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-
மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-
ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-
அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-
மனம் விடாது -கண்கள் அவனையே காணும் அங்கு உண்டே)
அவதாரிகை –
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றும் –
நின்கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் –
இவ்விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ்விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந் தவிராதாய் இரா நின்றது –
அல்லாதார் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து –
அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி –
அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன –
அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –
தலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல் —
எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-
பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-
பதவுரை
எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள் கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம்-தேவர்கள் கூட்டம்–
தொழுவதும் வணங்குவதையும்–
சூழ்வதும் -(பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தி யடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்-
உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)
வியாக்யானம் –
எழுவதும் -இத்யாதி –
இதுக்கு இரண்டு படி–(சம்சாரி பரமாகவும் கால பரமாகவும் )
உத்பன்னமாவதும் -அனந்தரத்திலே நசிப்பதும் –
உத்பன்னமாய் சில நாள் கடுக ஜீவித்து -பின்னை நசிப்பதுமாய் இறே இருப்பது —
ஜாயஸ்வ ம்ரியஸ்வ -என்கிறபடியே
உத்பத்தி ஷணமே விநாச லஷணமாய் இருப்பன சிலவும் –
கல்பாதியிலே உண்டாய் கல்ப அந்தத்திலே விநாசமாய் இருப்பார் சிலருமாய் இறே இருப்பது –
அவை எல்லாம் ஒரு போகியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –
கண்டு கண்டு எள்கல் அல்லால்-
இப்படி இருக்கிற இவற்றினுடைய அஸ்தைர்யாதிகளைக் கண்டால்-இகழலாய் இருக்கும் –
உன் பக்கலில் கை வைத்தார்க்கும் விடப் போமோ –
எள்கை யாவது-
இகழுகை-
அவற்றில் விரக்தர் ஆகலாம் இறே அவற்றின் தோஷ தர்சனம்-பண்ணினவாறே –
எழுவதும் இத்யாதி –
உதிப்பது அஸ்தமிப்பது –
இப்படி அநேக நாள் சென்று கழிய காணா நின்றாலும்-
எள்கல் அல்லால் -ஈடுபடுத்தும் இத்தனை போக்கி
நாள் சென்றது என்றால் நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது –
இப்போது எள்கையாவது -இரங்குகை -அதாவது ஈடுபடுகை -(கீழே இகழ்வது அர்த்தம் -இங்கு இரங்குதல் ஈடுபடுதல் )
இவை சதோஷமாய் இருக்கையாலே விடலாம் –
விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ –
எப்பொழுதும் நாள் திங்கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –
இமையோர் இத்யாதி –
உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு வைக்கக் கடவர் அன்றிக்கே இருந்துள்ள
நித்ய ஸூரிகள் உடைய திரளானது –
நித்ய அஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்கிறபடியே-
தொழுது –
நம புரஸ்தாத் அ தப்ருஷ்ட தஸ்தே (ஸ்ரீ கீதை 11-அத்யாயம்)-என்கிறபடியே
முன்னே வருவது பின்னே வருவதாய்-
மொய்த்து –
இப்படி செய்து போகையே யாத்ரை யாம்படி பழைய னான சர்வேஸ்வரனை –
கண்ணாரக் கண்டு –
காத்ரைஸ் சோகாபி கர்சிதை ஸம்ஸ் ப்ருசேயம் (ஸூந்தர-40) -என்கிறபடியே
காண-வேணும் என்கிற ஆசை கண்டவாறே தீரும் இறே –
மேல் வருமது விஷயாதீநமான காதல் இறே –
உற்றார்க்கும் –
காதல் முருக்கு கொளுந்தினார்க்கும் (திடமாக இருந்தார்க்கும் )
உண்டோ இத்யாதி –
ஸ்வ தந்த்ரனான பெருமாள் உறங்கினார் என்று கேட்டோம் இத்தனை போக்கி-
அவரை அனுவர்த்தித்துப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –
பகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று
யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –
தாத்பர்யம்
இதில் சம்சாரிகள் பகவத் விஷயம் விட்டு சுகமே ஜீவித்து உள்ளார்களே
அதே போல் நீரும் அவனை நினைந்து அடையாமல் வருந்தி இருப்பது தவிர்ந்து ஸம்ஸாரிகளைப் போல் இருக்கலாகாதோ என்ன
சம்சாரம் தான் அஸ்திரமாய் பல தோஷங்களை யுடையதாக அன்றோ காண்கிறோம்
ஆகவே இப்படிச் செய்யப் போகாதே
சம்சாரத்தில் பிறந்த உடனே மரிப்பதுமாகவும்
நெடு நாள் இருந்து மரிப்பதாகவும் அன்றோ இருக்கிறது
நிலை நின்ற சுகமே இல்லையே
இப்படி நிலையற்ற -மற்றும் உள்ள தோஷங்கள் பார்த்தால் இப்படி இருக்கப் போமோ
அஸ்ப்ருஷ்ட சம்சார -அசங்குசித ஞானரான நித்ய ஸூரிகளும் -நித்தியமான சகலவித கைங்கர்யங்கள் செய்து கொண்டே இருந்தாலும்
கண்ணாரக் கண்டு கொண்டே இருந்தாலும்
இப்படியே இவை நிலை பெற்று இருக்க பிரார்த்திக்கும் படி இருக்குமே அன்றோ
ஒரு ஷணமும் கண் உறங்காமல் இருக்க அன்றோ அடுக்குமே – நான் எவ்வாறு கண் உறங்குவேன் என்கிறார்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply