பாருருவி நீர் எரி கால் விசும்புமாகிப்
பல் வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என நின்ற
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது
ஓர் உருவம் பொன் உருவம் ஓன்று செந்தீ
ஓன்று மா கடல் வுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் வுருவம் எம் அடிகள் உருவம் தானே–2
திரு மூர்த்தி சாம்யம் இல்லை என்கிறார்–
ஏர்-உயர்ந்த உரு–பொன் உருவம்-பிரமன் செந்தீ-சிவன் -கடல் உருவம்-விஷ்ணு–
கண்ட போது -பிரமாணங்கள் கொண்டு ஆராய்ந்த பொழுது —
சரீரத்தில் இருந்த உரு இவை சொல்லி–
ஐந்து பஞ்ச பூதங்களுமாய் நிற்கிறான்–
பல்வேறு சமயங்களுமாய் பரந்து வியாபித்து நிற்கிறான்–சகலமும் ப்ரஹ்மாத்மிகம் என்கிறார்–
அவற்றைப் படைத்தால் போல இவர்களையும் படைத்தான் என்கிறார்
ஆராய்ந்து பார்த்தால்-..பரம் சோதி ஒன்றாம்–அவன் எம் அடிகள்- நம் கண்ணன் -முகில் வண்ணன்-
ஜகத் காரணத்வம் சொல்லி -நிரூபிக்கிறார்–
தேக ஆத்மா விவேகம் சொல்லி பிராப்தி பர்யந்தம் –
ஆறு விஷயங்கள் -உபகரித்ததை முன்பு சொல்லி
இதில்- திரு மூர்த்தி சாம்ய பிரமம் அறுத்து கொடுக்கிறாய் –
எண்ணும் பொன் உருவாய் சொல்லி-ஸ்வரூப வைலஷண்யம் சொல்லி
அர்த்தம் மூலம் உயர்ந்தவனை -அர்த்ததகம் உள் உரை பொருள்–
சிம்கம் வெளியில் போகும் பொழுது நேராக பார்க்காமல் இடது வலது பார்த்து போகும் –சிம்க கதி–
உபகாரங்களை மறித்து பார்த்து -மற்ற உபகாரம் மறந்தாலும் இந்த சம்சயம் அறுத்து கொடுத்ததை மறக்கப் போகுமா –
உலகம் மயங்கிக் கிடக்கும் இதை தனியாக சொல்ல ஆசை கொண்டு அருளுகிறார் -ஆதிக்யத்தால் மறு படியும் சொல்கிறார் —
தேக ஆத்மா விவேகம் விஷயாந்தர பிராவண்யத்தில் இருந்து மீட்டதை விட கைவக்ல்ய ஆபத்தில் மீட்டதை விட இது முக்கியம்–
இருவர் சேஷமாய் ஒருவர் சேஷயாய் — இருவர் காரியம் உத்பாதம் ஒருவர் காரணம் -இருவர் சரீரமாய் ஒருவன் சரீரி -இருப்பதை காட்டுகிறார் /
சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி சொல்லி-பஞ்ச பூதம்-வ்யக்தி ஸ்ருஷ்ட்டி அடுத்து –
பார் உருவி-ஆரிய சிதைவு – வுருவியை-பாருருவி- பார்=கடினமான உருவி =பிரத்வி//
விசேஷணம் பூமிக்கு மட்டும் -கடினம்– உருவில் பாட பேதம்-இடத்தில் –
அண்ட காரணமான பதார்த்தங்களில் என்று கொண்டு–அகங்காரம் மகான் பிரகிருதி உண்டே –பஞ்ச பூதங்களுக்கு முன்பே உண்டே–
அவற்றை விட ஸ்தூலம் இவை–அண்டத்துக்கு சாஷாத் நெருங்கிய காரணம் இவை-பக்கத்தில் நேர் காரணம்–
நித்ய சிருஷ்டிக்கு இவை தான் காரணம்-மூன்று வித காரணம் என்பதால் -இதை சொன்னார்–
பார் முதலா -ஆகாசம் தானே முதல்–அழிகிற க்ரமம் சொன்னார்–பிரத்வி தான் முதல்–ஆகி-ஆக்கி இல்லை–
ஜகத் காரண பூதன்–உண்டாக்கி -என்று காட்டும் -வேதாந்தி ஆகையால் ஆழ்வார்கள்–
பஹுஸ்யாம் -நானே ஆவேன் என்பதால்- அவன் உபாதான காரணம்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் ஆகிறான் என்றாரே–அதனால் ஆகி என்கிறார்–
சாஸ்திரம் ஆகாசாத் வாயு -வாயு-அக்னி- ஜலம்-பிர்த்வி- சொல்கிறதே -ஒவ் ஒன்றுக்கும் முன் தானே காரணம்–
ஈச்வரனே உத்பாதகம் என்னப் போமோ–கூடஸ்தர் –
ஈஷண கிரியை அசேதனத்துக்கு ஆகாது–சங்கல்ப சக்தி அவனுக்கு தானே–
உருவாக்க முடியாது ஆகாசம் உரு ஆகலாம் –தத் அவச்தாபண்ணன் -ஆகாசம் சரீரம் ஆக கொண்ட பரமன் சங்கல்பித்து ஆனான்–
வாயு சரீரத்துடன் பரமன் உரு ஆகிறான் –எதுவும் அவன் இடம் பிரியாது -சரீர ஆத்மா பாவம் அப்ருதக் சித்தம் —
ஈஷண கிரியை அனைத்தையும் விசிஷ்டாத்வைதம் ஒருங்கே விட்டு சொல்லும்–
அண்டம் சிருஷ்டித்த இவனை அண்டத்தில் ஒரு மூலையில் ஒரு ராஜ்யத்தில் உள்ளவர்களுக்கு சாம்யம் சொல்ல கூடாது —
சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி சொல்லி வ்யஷ்ட்டி சிருஷ்டி–பல் வேறு சமயமும் ஆகி–
பக்த சேதனர் பூதங்களிலே-சமஷ்டி ரூபேண அன்வயித்து இருக்கும் –
தேவாதி பேதம் இல்லாதது சமஷ்ட்டி/ பேதம் உள்ளவை வ்யக்ஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி–
பிரம தொடக்கம் பேதம் -பலவாய் வேறு பட்ட சமயத்தை உடைத்தாய் இருக்கும் –
அஸங்க்யேய -பல-சமஷ்ட்டி எண்ணிக்கைக்கு உட் பட்டது –24 தத்வம்–ஈரில வண் புகழ் நாரணன்–
வேறு பட்டு இருக்கை – ஒன்றோடு ஓன்று தீண்டாமல் இருக்கும் -பிரிந்து – தேவர்-அன்யோன்யம் அத்யாந்தம் பின்னம்-
விரலை போல் வேறு விரல் இல்லை–சமயம்-விவஸ்தை–நிலைகள்-தேவதை -மனுஷ்யர் ஆராதகர் -அமிர்தம்- திர்யக் ஸ்தாவரம்
ஆராதன உபகரணம் பண்ணுபவை -இதை சமயமுமாய் என்றார் –
அல்லாதவை–புழு–பாகவதன் அபிமானத்தில் கிடந்தது உஜ்ஜீவனம் அடைய–
அணையை ஊற -புழு ஜன்மம் கேட்டார்களே தவ தாஸ்ய சுகம் அறிந்த பாகவதர் திரு மாளிகையில் புழுவாக பிறக்க ஆசை பட்டார்களே —
பரந்து நின்ற–அனு பிரவேசத்தால் வியாபித்து இருக்கிறான் –உள்ளே புகுந்து -ஸ்தூல சூஷ்ம ஆகாரம் –விசிஷ்ட்ட ப்ரஹ்மம் —
படைக்கப் பட்ட பொருள்களில் இவற்றுக்கும் பிரமன் சிவனுக்கும் வாசி இல்லை என்கிறார்–
ஏர் உருவில்-அழகிய உருவில்-வியாபித்து நிற்கிறான்–வியாபகன் இவன்- ஜகம் அடைய பரந்து விரிந்து நிற்கிறான்
கரந்து எங்கும் பரந்துளன் -உரு-ஜகம்–அழகு இதற்க்கு சொல்லலாமா –த்யாஜ்யம் தானே–
முமுஷுக்கு சம்சாரம் தான் பயச்தானம் உத்தேசமாயும் இருக்கும் —
கர்ம நிபந்தனமாக பார்த்தால் பயம்–அவனை சரீரம் ஆக கொண்டவை என்று நினைக்கும் பொழுது உத்தேசமாக இருக்கும் —
கர்மம் பார்க்கும் பொழுது பயம் பிறந்து கிருபை பார்த்து பயம் விலகுமே —
இதில் ஏர் உரு என்றது அவனுக்கு சரீரம் என்பதால் அழகு என்கிறார்–இகழ்வில் இவ் அனைத்தும் என்கோ–உன் சரீரம் என்பதால் —
மூவருமே என்ன நின்றான்–அனைவருக்குள்ளும் நிற்கிறான்–வேதாந்திகள் மூவரை விசாரம் என்பதால்–
பகு நாயகம் ஜகத் -குருக வைத்து வைத்தார்கள்– ஆராதனாய்-முப்பத்து முக் கோடி -இன்றி மூவருமே —
545 சூதரங்கள்- 3 அத்வைத பர சூதரம் ஸ்ரீ பாஷ்யம் போல —
காரணம்து தேயக- காரணத்தை உபாசிக்க சொல்லி -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம் கடவர்கள்-
மூவரைக் கொண்டு மற்றவரைத் தள்ளி இவர் ஆஸ்ரணீயர்கள் என்பார்கள்–
நிரூபித்தால் சாம்யம் இல்லை–
வெளி படையாக மேல் எழுந்தவாறு சமம் தோன்றினாலும் உள் புகுந்து பார்த்தால் சாம்யம் இல்லை தெரியும் —
பகவான் ஏககா ஒருவன்-ஜனார்த்தனன் ஒருவனே –பராசரர் விஷ்ணு புராணம்–பிரம விஷ்ணு சிவா ஆத்மிகாம் சப்தம் சரி படுத்த பட்டது –
மத்யே விரிஞ்ச -இணைவனாம் -இமையவர் தம் திரு உருவம்–தேவர்கள்-இவர்களுக்குள் என்ன தார தம்யம்-இதுவும் ப்ரம ஹேது —
தேவர்களுக்கு பரியாய சப்தம் சுரர் -அநிமிஷா ஆகாரம் ஒத்து இருப்பதால் மட்டும்–கண் இமைக்காமல்-
வில்லை முறிக்கும் பொழுது கண் இமைக்காமல் பார்த்தார்களே —
தேவ சப்தம் அனைவருக்கும் சொல்வதாலும் சாம்ய ப்ரமம் ஏற்படும்–முழு முதல் கடவுள் -நிர்பாதுஹ தேவத்வம் -அவன் பிரசாதத்தால் பெற்றது —
தர்ம சனாதனம் த்வாரகா தீசன் மது சூதனன் சாஷாத் தேவன்-மகா பாரதம்–பேட் துவாரகை- குசேலர் உடன் சேர்ந்த இடம்–
கால சக்கரத்தான் ஆமாறு அறியும் பிரான்–சாம்யம் இல்லை–தன் திரு உருவு வேறு என்னும் பொழுது —
அவர் அவர் வேறு படுத்தி எண்ண தொடங்கினால்-பிரித்து அனுசந்திக்கும் பொழுது –
தமக்கு நிஷேத்யர் ஆய் இருக்கும் இவர்கள் உருவை திரு உரு சொல்ல -ஸ்லாகித்து -காரணம்-
அவர்கள் சரீரம் ஈஸ்வரன் -ஜகமே சரீரம் தானே என்பதால் கொண்டாடுகிறார்
இருவர் சேஷமாய் ஒருவர் சேஷியாய் இருப்பது–
உணர்ந்து உணர்ந்து உணரிலும் ஸ்ரவண ஞானம் மனன ஞானம் யோக சாஷாத் காரம் இறை நிலை உணர்வு அரிது —
உயிர் காள்- உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து –அரி அயன் ஹரன் என்று இவரை-
பிரமாணங்கள் சொல்வதைக் கொண்டு–எம்பெருமானார் தரிசனம் நம் பெருமாள் நாட்டி வைத்தார்-
பழைய தரிசனம்–லிங்க புராணம் விஷ்ணு புராணம்-பிறந்த கதை–நம் பிள்ளை-
சூத பௌகார்நிகர்-இடம் கேட்கிறார் சிஷ்யர்–மைத்ர்யர் -எங்கு இருந்து எங்கு உண்டாகிறது விஷ்ணுவிடம் பிறந்து-
பொதுவாக கேட்டு பிறந்தது விஷ்ணு புராணம்–/லிங்கத்துக்கு பெருமை சொல்ல பிறந்தது விசேஷித்து கேட்டு பிறந்தது
அறிந்த மதங்களில் எது சிறந்தது -தர்மன் கேட்க பீஷ்மர் சொன்னான்/
அர்ஜுனன் கேட்க கண்ணன்/ மதுரகவி கேட்க நம் ஆழ்வார் சொன்னது–அரி அயன் அரன் என்னும் இவரை-
பாபம் அபகரிக்கும் -சமம் சொல்லும் பாவத்தையும் சேர்த்து போக்குவான்–
ஒன்ற நும் மனத்து வைத்து நான் முகன் -நன் எழில் நாரணன் -சௌந்தர்யம் ஒன்றும் –
கண்டவாற்றால் தனதே உலகு என்று தோற்றும் படி தனதே உலகு —
அழகு ஒன்றே போதுமே–நாரணன் சப்தமே போதுமே அனைவரும் தன் உள் பிரகாரம் சரீரம் தோன்றுமே —
அரன் அதிகன் அயன் அதிகன் என்று பேசும் அறிவிலிகள் -கம்பர்-உலகு அளந்த அரி அதிகன் -விசேஷணம் வைத்தார் –
அளந்த அவன் திருவடி நீட்ட இவன் கழுவ அவன் தாங்க –ஒன்ற நும் மனத்தே வைத்து -ஆராய்ந்து -உள்ளி -நும் இருபசை அறுத்து —
சாஸ்திரம் சொன்னதை ஆராய்ந்து -நன்று என நலம் செய்யுங்கள்-பக்தி பண்ணுங்கோள்-ஆழ்வார்//
ஓர் உருவம்–இத்யாதி–ஸ்வாபம்-ஓர் உருவம் பொன் உருவம்–ஸ்ருஷ்ட்டிக்கு -சர்வ ஆபரணங்களுக்கு யோக்கியம் போல
சதிர் தச புவனம் சிருஷ்டிக்கு -பக்தன் இவன்/
ஓன்று செம் தீ அக்னி போல- அழியும் போட்டால் அது போல-தகிக்கும் -உபசம்கரிகைக்கு ஈடாகி இருக்கும் —
ஓன்று மா கடல் உருவம்–கண்டார்க்கு ஸ்ரம பரிகாரமாய் குளிர்ந்து –அனைவரையும் அடக்கி வைத்த கடல் போல/
தன் அபிமானத்தில் வைத்து ரஷிகிறான் –மூன்றும் சேர்ந்து ஜகத் காரணம் இருக்கும்–
ஒத்து நின்ற -சேர்ந்து -இருக்கிற ஸ்வாபம்–ப்ரமம் நிவ்ருத்தி -மூன்று உருவம் கண்ட பொழுது —
ஒன்றாம் சோதி–ஒன்றே ஆம் ஜோதி–உத்பாதகமாயும் -உருவாக்கும் -சரீரியாயும் சேஷியாயும்–இவன்/
மற்ற உத்பாத்யமாயும் சரீரமாயும் சேஷ பூதராயும் இருப்பார்கள் —
ஒன்றாம் ஜோதி சாஸ்திரம் -பிரளய காலத்தில் இவர்களும் சம்காரத்துக்கு விஷயம் ஆகும் –
அசித் உடன் -ராஜ்யச்த அஹம்ஸ் பரதன்-ராஜ்யமும் அடியேனும் உனக்கு சொத்து பரதன்-ச பிரம ச சிவா ச இந்திர —
பரமச்வராத் -ஷேத்ரக்ஜா சேஷத்வம் சொல்லும் –அவனே அவனும் அவனும் அவனும்–
சர்வ பூதாத்மா –தேவ ஏககா நாராயணா –சத்தை இருக்கும் அனைத்தைக்கும் அந்தராத்மா -சர்வ-சப்தத்தில் இவையும் அடங்கும்–
அம்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வைப்பும் அகன்றதோ–
ஆம் சோதி –ஆகிய சோதி இல்லை அவன் காரணம் ஜோதி- நிர்வாக்யம் ஜாதிகளை-ஆத்மாவை உருவாக்கினான்–
ஆகிய சோதி இல்லை ஆம் சோதி–இவன்-சேதனரும் சுயம் பிரகாசம் தானே —
தனக்கு தானே ஒளி விடும் பிரத்யகர்தம் –அதை விளக்குகிறார் ஆம் சோதி என்று –
நாராயண பரோ ஜோதி ஜோதிசாம் ஜோதி –தனித்து சேவை சாதிக்கிறான்–
ஏக த்ரவ்ய வாதம் இல்லை–அத்வீதியம் என்கிறார்–ஜோதிசுகளில் மேம் பட்ட பரம ஜோதி–
பரன் திறம் அன்றி பல் உலகீர் தைவம் மற்று இல்லை–காமரு மானை நோக்கியர்க்கே –
பலன் ஆரா அமுதம்- இவருக்கு தரிசனம் இல்லை என்பதால் இந்த பஷம் இல்லை —
தத்வத்ரயம் அழகு அழகாகாமுன் இரு பின் உரு பொன் உரு சொன்னதால் இந்திரனுக்கும் முதல்வன் அடுத்து சொல்வதாலும் –எம் அடிகள் முகில் உருவம்–
அந்த சாலு-கால மேக சியாமளன் -அங்கு கடல் உரு -ரஷணம் சொல்லி இங்கு -முகில் உருவம் வடி அழகை சொன்னார்
ஜகத் காரணம் -ஸ்ரீய பதித்வம் காரணத்வம் எல்லாம் வேண்டாம் – -ஐயப் பாடு அறுத்து தோன்றும் அழகன் -தானே–
மணி உரு அங்கே சொன்னது -முந்தானையில் முடிந்து ஆளும் படி- பவ்யமாய் இருக்கும் பிரகாசமாய் இருக்கும்
மதிப்பு உடன் இருக்கும் போக்கியம் இருக்கும் –
இங்கு அதே பகவான் முகில் உரு காட்டி கொடுத்தான் — இங்கு மும் மூர்த்தி சாம்யம் நீக்கி இது தான் மகா உபகாரம் —
பேணிலும் வரம் தர மிடிகிலாத தேவர்கள் –
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –