திரு பல்லாண்டு –உண்டோ திரு பல்லாண்டுக்கு ஒப்பு–
வேதத்துக்கு ஒம் போல உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் தான் மங்களம் ஆதலால் –முதலிலும் முடிவிலும்–
இதன் விபரணமே மற்றவை எல்லாம்–தன்னை பார்க்காமல் அவனையே பார்த்து–
7 பாசுரங்கள் திரு வேம்கடம் உடையான் மேல் அருளி இருக்கிறார்–
சீத கடலுள் அமுது அன்ன தேவகி பதிகம்–அவயவம் எல்லாம் அனுபவிக்க -பாத கமலங்கள் வந்து காணீரே-
தவழ்ந்த கண்ணன் -யசோதை பாவனை- அம்மம் ஊட்ட –
கண்ணன் வெண்ணெயோ பெண்ணையோ தானே எடுத்து கொள்வான் பிறர் ஊட்ட கொள்ளான் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பறந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலி ! கடிதோடிவா 1-4-3-
தீர்த்தம் ஆடவும் கூப்பிட வேண்டும்–புளிதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்–
நப்பின்னை கானில் சிரிக்கும் -வா -என்பாள் யசோதை –அம்புலி காட்டி ஊட்டுகிறாள் —
நின் முகம் கண் உளவாகில் நோக்கி போ–கண் படைத்த பயன்–பார்த்த பின் போக முடியாதே —
தோகை கீதாசார்யன்-நடு பாகம் முக்கியம்-1 -10 வயசு வரை-அனைவரும் அனுபவிக்கும் பருவம் —
கை தலம் நோவாமே ஓடி வா–அவன் திரு முகம் ஒப்பு சொல்ல உன்னால் முடியாது–பிரயத்னம் எவ்வளவு செய்தாலும் முடியாது —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது–தேஜஸ் பதார்த்தங்கள் எல்லாம் அவன் திரு மேனியில் ஏக தேசம் கடன் வாங்கி-
ரசம் கந்தம் எல்லாமும் இப்படியே –பரம் ஜோதி –ஆஸ்ரித சேஷ்டிதங்கள் கொண்டவன்–வித்தகன்–
வேங்கட வாழ் நன் -வாணன் -நல்ல வாழ்வு-அனைவரையும் அவனை கூப்பிட இவன் உன்னை கூப்பிடுகிறான்
அவாக்யன் அனாதரக –அவாத சமஸ்த காமன் –
நசிகேதஸ் -யமன் -இடம் கேட்டு-பரம பதம்-நலம் இல்லாதோர் நாடு–கால தத்வ்பம் இல்லை–சாம கான கோஷம்–
மோரைக் கண்டால் புருஷர்களையும் வயசான பெண் போல– ரஷணம் இவனே என்று இருக்கும் இளம் பெண்கள் போல–
ஆயர் சிறிமியறோம்– செல்வ ஸ்ரிமீர்கள்– சிறுவராக இருப்பதே செல்வம்–நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடியோம் இல்லை–
எப்படி என்று பார்த்ததே இல்லை கண்ணன் பிறந்த பின்பு–ஏரார் இடைநோவ -கண்ணன் விட்டு பிறவாத இடை சீரார் வளை போல –
சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமலே இருப்பதால்–
————
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ ! 1-8-9
தாடாளன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன்-நமுசி-பிள்ளை- பாணாசுரனும் பிள்ளை என்பர்–
மின்னு முடியன்–வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரமன் ருத்ரன் இந்த்ரன் -ஆபத்துகள் போக்கி-இடர் கெடுத்த திருவாளன் –
ரமா பத்தி-நான்முகன் குறை கொண்டு குண்டிகை நீர் பேய்தான்-ஸ்ரீ பாத தீர்த்தம்–தானே பரத்வன்- முன்னும் முடி- இதனால்–
நிவந்த நீள் முடியன்–அளந்த திருவடிக்கு பல்லாண்டு இல்லை –
சர்வாதிகன் என்பதால் திரு முடி–ஆதி ராஜ்ஜியம் அகில புவனானாம்–
———————
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற
மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6-9
கோல் கொண்டு வா பதிகம்–திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து உகந்த காளை–
கன்றுகளுக்கு நீர் குடிக்க குனிந்து கற்று கொடுப்பானாம்-மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா-
திரு வடி மதித்த ஐஸ்வர்யம்–மின் இலங்கு பூண்-ஆபரணன் -அணிந்த விபீஷணன் நம்பி —
ராம பக்தி ப்ரேமம் கைங்கர்யம்-பூரணன்-நம்பி –
—————————-
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டை கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்! நீள் திரு வேம்கடத்து எந்தாய் !
பச்சைத்த மனகத்தொடு பாதிரி பூ சூட்ட வாராய் 2-7-3-
————–
போதார் கண்டாய் இங்கே போதார் கண்டாய்
போதரேன் என்னாதே போதார் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோது காலம் உடை குட்டனே! ஒ
குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா !
வேத பொருளே ! என் வேம்கடவா !
வித்தகனே ! இங்கே போதராயே 2-9-6-
———-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
—————–
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு
தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !
என்னையும் என் உடைமையும் உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திரு குறிப்பே ? 5-4-1-
———————————————-
1-4-3-/1-8-9/2-6-9/2-7-3/ 2-9-6/ 3-3-4/5-4-1–ஆக ஏழு பாசுரங்கள் –
ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ ! 1-8-9-
————
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன்
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-
—————–
ஸ்ரீ கண்ணபிரான் இவன்
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே 2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply