Archive for the ‘Poyhai Aazlvaar’ Category

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

இவனுடைய ரக்ஷகத்வத்தில் த்வரையைக் கண்டு தம்முடைய இந்திரியங்கள் வியாகுலமாம் படி சொல்லுகிறது –

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான
அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்

இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான
அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் -(ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் அதனால் தான் இப்படி )

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காண மாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் முரரிபும்-சேதோ பஜ ஸ்ரீ தரம்-
பாணித்வந்தவ ! சமர்ச்ச யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய !ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம்
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-மூர்த்தன் நமா தோஷஜம்--.  -முகுந்த மாலை–16 ஸ்லோகம்

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் -வாராய் நாக்கே -கேசியைக் கொன்ற கண்ணபிரானையே ஸ்தோத்ரம் செய் -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன் -கேச பாசம் யுடையவன் –
முரரிபும்-சேதோ பஜ -வாராய் நெஞ்சே முராசூரனைக் கொன்ற கண்ணபிரானையே பற்று
ஸ்ரீ தரம்-பாணித்வந்தவ ! -சமர்ச்ச -இரண்டு கைகளே திருமாலையே ஆராதியுங்கோள்
யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !-இரண்டு காதுகள் -அடியாரைக் கை விடாத எம்பெருமான் சரித்ரங்களையே கேளுங்கோள்
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய -இரண்டு கண்களே கண்ணபிரானையே சேவியுங்கோள்
ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம் –இரண்டு கால்களே எம்பெருமானுடைய சந்நிதியையே குறித்து போங்கோள் –
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-வாராய் மூக்கே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடித் தாமரைகளில் சாத்தின திருத் துழாய் கந்தத்தையே அனுபவி
மூர்த்தன் நம அதோஷஜம்-வாராய் தலையே எம்பெருமானையே வணங்கு-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்——ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -28-பாசுரம்–

வாய் அவனை அல்லது வாழ்த்தாது –நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ –திரு உலகு அளந்து அருளினவனுடைய நீர்மையைக் கண்டால்
நான் வேண்டாம் என்னிலும் தொழுது அல்லது நில்லாது
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–பேய் நஞ்சாகக் கொடுத்தால் -இவன் தாரகமாக யுண்டான்
அவள் தன் நெஞ்சில் தண்மையால் முடிந்தாள் அத்தனை –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி ——அவன் உரு அல்லது கண்கள் காணா
அவன் பேச்சே அல்லது செவிகள் கேளா –
ஆஸ்ரித விஷயத்திலும் -சாமான்ய விஷயத்திலும் இருக்கும் இருப்பில் சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமான படி –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -தாம் புறம்பே வாழ்த்தப் பார்க்கிலும் -தாம் செய்யா
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ–தொழாதார் தலையிலும் இருந்து தொழுவித்துக் கொள்ளும் திருவடிகளை
யுடையவனை அல்லது -தாம் தொழா-அவனும் ஏற வாங்கிலும் -நானும் ஏற வாங்கிலும் –
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–கொடா விடில் பிழையேன் என்று கொடுக்க –
உண்ணா விடில் பிழையேன் என்று உண்டான் -அநந்யார்ஹம் ஆயிற்று –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி -ஹ்ருஷீ கேசன் அன்றோ —

(முடியானே -திருவாய் -3-8-போலே இவரது கரணங்களின் அன்பு விஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்தில் –
ஹ்ருஷீகேசன் ஆகையாலே எனது ஹ்ருஷீகங்களை இவ்வாறு நியமித்து அருளினான் என்கிறர்)

———————-

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்
இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் -(ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் அதனால் தான் இப்படி )

என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –
கைகளானவை தர தம விபாகம் பாராதே இருந்ததே குடியாக லோகத்தை அடைய அநாயாசேன அளந்து கொண்ட
சீலாதிகனாவனை ஒழிய தாம் தொழப் பாராது —
பூதனை யுடைய முலையில் விஷத்தை தாரகமாக விரும்பி
அமுது செய்தவனுடைய வடிவை ஒழிய கண் காணாது –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஒழியச் செவி கேளாது —

————

(அடைய சாதனம் -சாதன பக்தி உபாயாந்தரங்கள்-தேஹமும் வேணுமே -பக்தி பண்ண
அவனை அடைய அவனே உபாயம் -அனுபவிக்க ருசி -ஸாத்ய பக்தி வேண்டும் -இதுவே ஆழ்வாரது நிலைப்பாடு
சாதன பக்தியை இகழ்ந்து பேசுகிறார் -மூன்றாவது நிர்வாஹம் -என்பரே -இத்தையா சாதனமாக சொல்லுவார் என்றபடி -)

தம்முடைய அனுபவமான பக்தியைச் சொல்லுகிறது (ஸாத்ய பக்தியை )என்னவுமாம் –
பக்தியை விதிக்கிறது என்னவுமாம் –

கீழ் ப்ராப்ய சிஷை பண்ணினார் –
இனி ப்ராபகம் சொல்லுகிறார் –

கீழ் ஸமாச்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்-விமோகம் சாதன சப்தகங்கள் -(பக்தி வளர தயையும் தானமும் வேண்டுமே )
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு-அவனே பிரார்த்திக்காமல் இடந்து எடுத்து அருளினானே )

அவியாத ஞானம் -நாஸம் அற்ற பக்தி ரூப பன்னமான ஞானம்
செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்-பஞ்ச பூதங்களிலான தேஹமும்
வேள்வியும் -அக்னி ஹோத்த்ரம் போன்ற பக்திக்கு சாதனமான கர்மங்களும் –
நல் அறமும் -பக்திக்கு விருத்தியைச் செய்யும் விவேகம் விமோகம் முதலான ஆத்ம குணங்களும்
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —என்பரே–
நிரபேஷ ரக்ஷகனான ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு சாதனம் என்கிறார்களே -என்ன அறிவு கேடு –

வேள்வியும் -பக்தி விவ்ருத்தி யர்த்தமாகவும் -பாப ஷயத்துக்காகவும் அனுஷ்டிக்கிற கர்மங்கள் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்ச நாத் —
ஆ ப்ராயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் (ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் முதல் பாதம் )-என்றும் –
யஞநேன தாநேந தபஸா அநாசகேன ப்ராஹ்மனோ விவிதி ஷந்தி(ப்ரஹ்மதாரண்ய )-என்றும் சொல்லுகிறபடியே
நல்லறம் -விவேகாதிகள் – என்பரே ஏனமாய் நின்றார்க்கு இயல்வு –

(தல் லப்தி-விவேகம் ஆகார சுத்தி -விமோகம் -விஷயாந்தர பற்று இன்மை -அப்யாசம் -பழக்கம் – கிரியா -பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் –
கல்யாணம் -சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை அலோபம் பேராசை இல்லாமை
அநவசாதம் பெரும் துன்பம் இல்லாமை -அனுத்க்ருஷம் -பேர் ஆனந்தம் படாமை
இந்த ஏழும் நல்லறங்கள்)

ஏனமாய் நின்றாரைப் பெறுகைக்கு பண்ணும் பிரவ்ருத்தி இவை என்பர் –
ஆபத்தே அடையாளமாக தானே ரஷிக்கும் என்கையாலே –
அவன் உபாயமாகத் தன்னுடைய பக்தியைச் சொல்லுகிறது என்றுமாம் -(கர்மம் கைங்கர்யத்தில் பக்தி ருசி வளர புகும் )

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –சர்வ இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்
செந்தீ-புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் -ஆக இருபத்து நாலுக்கும் உப லக்ஷணம் –

அவியாத்-ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே–(பக்தி ரூபா பன்ன ஞானம் பதவுரையில் பார்த்தோம் )கர்ம யோக அந்தர் கதமான ஞானம் -ப்ரக்ருதி ஹேய தயா ஜ்ஜேயை(தாழ்ந்தது என்று அறியத்தக்கது )
ஆத்ம உபாதேயதயா ஜ்ஜேயன் -ஈஸ்வரன் உபாதேய தமனாய் கொண்டு ஜ்ஜேயன் -சஞ்சலம் ஹி மனஸ்
வேள்வி -கர்ம யோகம் – நல்லறம் ஆன்ரு சம்சயாதி தர்மங்கள் என்பர் -வேத சாஸ்திரங்களில் பிரசித்தி

ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —தளர்ந்த போது எடுக்குமவன் -என்று ஷேபமான போது பிரவ்ருத்தி கொண்டு
புகுவதைக் கை வாங்கின அன்று (சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் )எடுக்க இருக்க -ஞானப் பிரானை அல்லால் இல்லை –
அறிவானாம் -என்றால் போலே -இயல்வு -உபாயம்-

(சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம் -குமார சம்பவம் -5-33- சரீரமே முதல் தர்ம சாதனமாகும் –
தைல தாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் த்யானம் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்சநாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-15-
ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-12-
தமேதம் வேதா நு வசநேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி
யஜ்ஜேந தாநேந தபஸா நாஸகேந -ப்ருஹதாரண்யம் -6-4-22-
தல்லப்திர் விவேக விமோக அப்யாஸ க்ரியா கல்யாண அநவஸாத அநுத்தர் ஷேப்ய–என்கிறபடியே
1- அன்ன ஸூத்தியால் உண்டாகும் சரீர ஸூத்தி யாகிற விவேகம்
2-விருப்பங்களில் பற்று அற்று இருக்கை யாகிற வி மோகம்
3-பகவத் விஷயத்தில் பலகால் பழகுகை யாகிற அப்யாஸம்
4-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்களை முயன்ற வரை அனுஷ்டிக்கை
6-உண்மை நேர்மை இரக்கம் கொடை கொல்லாமை பேராசை இன்மை முதலிய கல்யாண குணங்கள்
6-மன வருத்தம் இன்மை
7- அதி சந்தோஷம் இன்மை –ஆகிய சாதன சப்தகம் -ஸூத்ரகாரர் அருளிச் செய்தவை -எம்பெருமானை அடைய உபாயம்
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி
பக்த்யா த்வன் அந்யயா சக்ய -கீதை -11-54-
பக்தி க்ரீதோ ஜனார்தன
ஏனத் துருவாய் இடந்த பிரான் அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தம் -99–நம்மாழ்வார் சித்தாந்தமே இவருடையதுவும் -)

————-

கீழ் ஸமாஸ்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

ஸ்ரோத்ர ஜிஹ்வா சஷூர் க்ராண த்வக்குகள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
தேஜஸ் பிருத்வி வாயு ஜலம் ஆகாசங்கள் ஆகிற பூத பஞ்சகமும்
தத் உப லஷிதமான சரீரமும் –

இந்த கரண களேபரங்களால் சாதிக்கப் படுமதாய்-அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான பக்தி ரூபா பன்ன ஞானமும் –

பக்தி உத்பத்தி விவ்ருத்தி ஹேதுவாய் -பல சங்க கர்த்ருத்வ தியாக பூர்வகமாக பண்ணும் யாகாதி கர்மங்களும்
நாள் தோறும் பக்தியை வளர்க்கக் கடவ விவேக விமோதாதிகளும் –

ஆன்ரு சம்சய தாநாதிகளும் ஆகிற விலக்ஷண தர்மமும்
சர்வ ஸூலபனாய்-ஆபத் சகனாய் நின்ற சர்வேஸ்வரனுக்கு -சத்ருச சாதனம் என்று வேத வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள்

பக்தித–என்றும் –
பக்த்யா த்வத் அநந்யா ஸக்ய-என்றும் சொல்லக் கடவது இறே

அங்கன் இன்றிக்கே
தமக்கு போக உபகாரணமான பக்தியை -உபாசகர் உபாயமாக அநுஸந்திக்கும் கட்டளையைச் சொல்லி
பக்தியை ஷேபித்து பிரபத்தியை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –

அப்போதைக்கு –
ஏனமாய் நின்றார்க்கு நல்லறமான இவை இயல்வு என்பரே-தானே வந்து சந்நிஹிதனாய் ரக்ஷிக்குமவனைப் பெறுகைக்கு
இவற்றை சத்ருச சாதனம் என்று சொல்லா நிற்பார்கள் -என்ன அறிவிலிகளோ -என்று ஷேபமாகக் கடவது

ஞானப் பிரானை அல்லால் இல்லை (ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே )நான் கண்ட நல்லதுவே என்று இறே தம்முடைய சித்தாந்தம் –

———————————————————————————————–

வாயவனை யல்லது வாழ்த்தாது -என்னும்படியாய் இருந்தது -உம்மது–அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது
அவதானம் வேணும் -எங்கனே கூடும்படி என்னில் –
பிரக்ருதயா இயற்கையாகவே அவனை ஆஸ்ரயித்து இருப்பர் நித்யர்கள் -அல்லாதாரும் ஆஸ்ரயிக்கும் படி தானே பிரதம பாவியாம் -என்கிறார் –

உபகரணங்களையும் கொடுத்து -ருசியையும் ஜநிப்பித்து-உபாயமுமாய் -தானே பல பிரதானம் பண்ணும் என்கிறார்

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூரிகளே —
இப்படி இருக்கச் செய்தேயும்
சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூலபனாக்கி வைக்கும் -என்கிறார் –

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
எம்பெருமானது-புருஷோத்தமானது- திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதை யுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்த வேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

(ராமானுஜர் ஆறு கட்டளைகள் -ஸ்ரீ பாஷ்யம் கற்று –தொடங்கி -திவ்ய தேச வாஸம் —
அடுத்து அடுத்து மேலே போவோமே
திருப்பாவை அனுசந்தானம் -பட்டர் -இதே போல் -அனைத்தையும் கொடுத்து கூட்டிப் போவான் அன்றோ -அனுபவத்துக்கு ருசி வளர – ஆதியாய் தானே நிற்கிறான் -)

இயல்வாக –சத்ருசமாக
யீன் துழாயான் அடிக்கே செல்ல-ஆக முதலியாகத் தோள் மாலை இட்டிருக்கிறவதுக்குப் போரும்படியாக
முயல்வார் இயல் அமரர் முன்னம்-இயற்றியை யுடையரான நித்ய ஸூரிகள் முன்னே மஹா யத்னம் பண்ணுவார்கள் –
விஷய பிரவணராய் அவனை அறியாதவர்களும்(நம் போல்வாரும் )
இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -முறையால் திரு நாமங்களை சொல்லி(காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் )
நியமங்களால் பரவ-பரவும் படிக்கு ஈடாக -சாஸ்திரங்களில் சொல்லும் நியமங்களாலே பரவசமாகும் படிக்கு ஈடாக(பரவ -வாசிக -முக்கரணங்களுக்கும் உப லக்ஷணம் )
ஆதியாய் நின்றார் அவர்–அவர் தாமே –பிரதம ஸூஹ்ருதம் ஆனார் -(உபகரணங்களையும் கொடுத்து ருசியையும் பிறப்பித்து -அனைத்துக்கும் அவனே உபாயம் )

இயல் அமரர் –இயற்றியை யுடைய அமரர் –
முன்னம் -முந்துற முன்னம்
இயல்வாக–இதுவே யாத்திரையாக
யீன் துழாயான்-(ஆர்த்தமாக )பரி பூர்ணன்
அடிக்கே செல்ல–திருவடிகளுக்குச் சேர
முயல்வார்-யத்னம் பண்ணுவார் –
இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -சாஸ்திர யுக்தமான படியே
நியமங்களால் பரவ-ஸ்ரவணாதிகளால் ஆஸ்ரயித்து (வாயினால் பாடி மனசால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது )
ஆதியாய் நின்றார் அவர் -அவர்களுக்கு உபேயத்துக்கு அடியானால் போலே (த்வயம் நித்ய அனுசந்தானம் இனிமையால் -அனுபவத்துக்கு நித்யர்களுக்கு )வேண்டினவிடத்துக்கு இவர்களுக்கு உபாயத்துக்கு அடியாக நின்றால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ –
அவனே இதுக்கும் வேண்டின பின்பு அவனையே பற்ற அமையாது என்றுமாம் –

(உபகரணங்களையும் தந்து அருளி -ருசியையும் உண்டாக்கி – உபாயவுமாகி பலனையும் தந்து அருளி -தன்னை அடையலாம் படி முற்படுபவனும் அவனே
ஸமஸ்த லோகங்களுக்கும் ஏக சக்ராதிபதி என்பதைக் காட்டவே தனி மாலை இட்டுள்ளான் –
மந்த்ரோ ஹீந ஸ்வர தோ வர்ண தோ வா யஜமானம் ஹிநஸ் தி -என்பதை அறிவானே
பூர்வா யோ தேவேப்யோ ஜாத –
மஹா புருஷ பூர்வஜ
ஆகையால் நமக்கும் அவனை ஆஸ்ரயிக்கக் குறையில்லை என்கிறார் -)

———–

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூரிகளே –இப்படி இருக்கச் செய்தேயும்-சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூலபனாக்கி வைக்கும் -என்கிறார் –

ஐஸ்வர்ய ஸூசகமான அழகிய திருத் துழாயை யுடையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட -சத்ருசமாக உத்யோகிப்பர்
முந்துற முன்னம் அதுக்கு ஈடான யோக்யதையை யுடையரான நித்ய ஸூரிகள் -அல்லாத நம் போல்வாரும்
ஸ்வர வர்ணாதிகளுக்கு நழுவுதல் வாராத படி அழகிதாகக் கொண்டு
சாஸ்திர யுக்தமான விரத நியமாதி க்ரங்களோடே அத்யயனத்தைப் பண்ணி –
அதீதமான வேதத்தின் அர்த்தத்தை ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு மனனம் பண்ணி
அர்ச்சனை பிரணாம கீர்த்த நாதிகளோடேகூட அனவரத பாவனை பண்ணுகை யாகிற நியமங்களாலே
பக்தி பரவசராய் பரவும்படிக்கு ஈடாக அப்படிப் பட்ட பெருமை யுடையவர் –

பூர்வஜ -என்கிறபடியே
ருசி உத்பாதகராய்க் கொண்டு முற்பாடராய் நின்றார் —
ஆகையால் நமக்கு எல்லாம் ஆஸ்ரயிக்க குறையில்லை என்று கருத்து –

இயலமரர் –இயற்றியை யுடையரான -யோக்யதை யுடையரான நித்ய ஸூரிகள் -என்றபடி –

————————————————————————————————————

பிரக்ருத்யா ஆஸ்ரயிக்குமவர்களையும் சொல்லி -ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுமவனையும் சொல்லிற்று
இது ஒன்றும் பெறாதாரைச் சொல்லுகிறது –
அவனை வேண்டாதார் படுகிற பாடு பாரீர் -என்கிறார் –

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு –
சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயரான தேவதைகளுக்கும்
ஆஸ்ரயணீயன் அவனே -என்கிறார் –

(அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் -கம்பர்-நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் –
சதுர்முகன் கையில் சங்கரன் தலையில் சதுர் புஜன் தாள் -பார்த்தாலே அறிவோம்)

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி
அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

(யஜந்தே ஸாத்த்விகா தேவாந் யக்ஷ ரக்ஷாம்ஸி ராஜஸா–
ப்ரேதாந் பூத கணாம் ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா–৷৷17.4৷৷

எந்த தேவதையை சேவிக்கிறான் -சாத்விகர் தேவர்களை வணங்குவார் -அவர்கள் இடம் இருப்பதை எதிர்பார்ப்பார்கள் -அதிலே ருசி
ஸ்ரீ மன் நாராயணன் -பரம சாத்வீகன் -தேவர்க்கும் தேவாவோ -மாக வைகுந்தம் அடைய எண்ணுவார்கள்
ராக்ஷஸர்கள் யஜ்ஜர்கள் ராக்ஷஸர்களை – அன்யா -வேறு பட்ட தாமஸர்கள் பூத கணங்கள் பிரேதங்களை
வணங்கி சா லோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் அடைய)

அவரவர் –ரஜஸ் பிரசுரரும் தமஸ் பிரசுரரும்
தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-குணானுகுணமாக வெளிச் செறிந்த படி ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு விஷயமானவரை என்னுடைய ஸ்வாமி என்று
சுவர் மிசைச்-சார்த்தியும் வைத்தும் தொழுவர் ——-சர்வேஸ்வரன் பக்கல் -எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பர்
என்கிற செயலில் பித்தியிலே எழுதியும் வைத்தும் தொழுவர் –
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் —-இவர்களுடையவும் -ஆசிரயணீயங்கள் யுடையவும் தலையிலே அடியை வைத்தவனே பிரதானம் –
மூர்த்தி யுருவே முதல்–சர்வேஸ்வரனுடைய திரு மேனியே பிரதானம் –

அவரை வேண்டாதார் படும்பாடு மேல் அருளிச் செய்கிறார்

அவரவர் பின்ன ருசிகள் – தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி -சாஸ்திரத்தின் பின் செல்லார்
இவர் இவர்–சகர புத்திரர்கள் கண்டாரை -என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே -தோற்றினாரை
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் –சமாஸ்ரயிப்பார் தலையிலும் ஸமாச்ரயணீயர் தலையிலும்
ஓக்கத் திகைத்த சர்வேஸ்வரன் -உருவே முதல் -வடிவே முதல் –

(பிறப்பில் பல் பிறவிப்பெருமான் -அஜாய மானோ பஹுதா விஜாயதே -இவனதே அவதாரம்
கஹா அதிக கன்யதாம் ஏககா ஒருவனே
ஒருவன் திருவடி நீட்ட
மற்ற ஒருவன் கழுவி
மூன்றாமவன் தலையால் தாங்கி -அறிய வைத்தார்கள் -)

(ஸாத்விகஸ் ச து விஜ்ஜேய
லோகோ பின்ன ருசி
ஸத்வாத் சஞ்ஜாயதே ஞானம்
அஜாய மாநோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
பிறவாப் பிறப்பு இல்லை பிறப்பித்தார் இலையே
ஏக ப்ரஸீஸாத் பாதம் ஏக ப்ராசிஷளன் முதா அபரோப்யதான் மூர்த்நா கோ அதி கஸ்தேஷு கண்யதாம்
சங்கரன் தலையில் சதுர்முகன் கையில் சதுர் புஜன் தாளில் இத்யாதி )

———————

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு –
சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயரான தேவதைகளுக்கும்
ஆஸ்ரயணீயன் அவனே -என்கிறார் –

ரஜஸ் தமஸ் பிரசுரராய் பின்ன ருசிகளான அவ்வதிகாரிகள் -சாஸ்திர முகத்தால் அன்றிக்கே குணானுகுணமாக
தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே வாய் விட்டுப் புகழ்ந்து தங்கள் உகந்த குணங்களை யுடைய ஐயன் துர்க்கை
தொடக்கமாக ருத்ரன் முடிவாக உண்டான இவர்கள் நமக்கு ஆஸ்ரயணீயரான ஸ்வாமிகள் என்று ஆதரித்துக் கொண்டு
ஒவ்வொரு தேவதைகளை ஓரோர் பித்திகளிலே சித்ர ரூபேண எழுதியும் க்ருஹம் தொடக்கமான
ஓரோர் இடங்களிலே ப்ரதிமா ரூபேண ப்ரதிஷ்டித்து வைத்தும் ஆஸ்ரயியா நிற்பார்கள் –

இவர்கள் இப்படிச் செய்தாலும் ஆஸ்ரயிக்கிறவர்களோடு -ஆஸ்ரயணீயராக இவர்கள் விரும்புகிற அத் தேவதைகளோடு வாசியற
எல்லோரும் தன் கால் கீழே துகை யுண்ணும் படி ஜகத்தை அடைய அளந்து கொண்ட சர்வேஸ்வரன் திருமேனியை பிரதானம் –

———————

(ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -தானே வேண்டுவது -விலக்காமை அத்வேஷ மாத்ரமே கொண்டு அருள் பயன்பெறும்
அவன் அருள் எப்போதும் நித்யமாகவே இருந்தாலும்-கார்ய கரம் ஆவதுக்கு இதுவே வேண்டுவது-)

(சிலர் பரம சிவன் என்பர் -சிலர் பராசக்தி என்பர் -சிலர் மஹா கணபதி என்பர் -சிலர் ஸூ ப்ரஹ்மண்யன் -என்பர்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது போல் -நீயும் நானும் கூடப் பரம் பொருள் தான் என்பாரும் உண்டே

ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –விஷ்ணுவுக்கும் பிறப்பை ஓதும் வேத வாக்யம்
ஆகவே துரீய நான்காவது ப்ரஹ்ம வாதிகள் பரமசிவன் பார்வதியே என்பர்
பரம் பொருளை இந்த்ர ஸப்தத்தாலும் ஆகாச ஸப்தத்தாலும் வாயு சப்தத்தாலும் சொல்லி இருப்பதால்
பரமேந்திரன் பரம ஆகாசம் பரம வாயு தத்வங்களைக் கற்பித்து பரம் பொருள் என்பர் சிலர் )

அவ்வோ தேவதைகளும் ஆஸ்ரயணீயராய்ச் சொல்லா நிற்கச் செய்தே –
அவர்கள் அப்ரதானர் இவன் பிரதானன் என்று சொல்லுகிறது உம்முடைய பக்ஷத்தாலே இறே என்ன –
அர்த்த தத்வம் இருந்தபடியைப் பார்க்கலாகாதோ -என்கிறார் –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்க்கு பலம் கொடுப்பார் சிலருமாய் அன்றோ
நாட்டில் நடந்து போருகிறது-என்ன –
அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பல பல தெய்வங்கள் வழங்கப் பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம் மூவர் உள்ளும்–அந்த த்ரி மூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப் பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–ப்ரஸித்தமான கடல் சூழ்ந்த இப் பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

(அணைவது அரவணை மேல் –இருவர் அவர் முதலும் தானே –இணைவனாம் -)

முதலாவார் மூவரே –இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் அன்று இறே -மூவர் இறே பிரதானர்

அம் மூவருள்ளும் முதலாவான் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஜீவ வ்யவதாநத்தாலே -அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேண நின்றும் காரணம் ஆவான் -(அவர்கள் கர்ம வஸ்யர் -பரமாத்மா இவன் ஒருவனே )

மூரி நீர் வண்ணன்-பொன்னுருவும் தீயுருவும் ஆனவர்கள் அன்று -பரப்பை யுடைத்தான கடல் வண்ணன் -(குளிர்வித்துக் கொள்ளும் ஆஹ்லாத வண்ணன் இவன் ஒருவனே )

முதலாய–காரணமான

நல்லான் அருள் அல்லால்-அறவனானவன் அருள் அல்லால்(தர்மம் அறிந்தவன் -கிருஷ்ணன் தர்மம் ஸனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம -)

நாம நீர் வையகத்துப்-பல்லார் அருளும் பழுது ——அவனுடைய அருள் ஒழிய அல்லாதார் எல்லாருடைய அருளும் பழுது

அதிகாரிகள் ஆகையால் அவர்களை முற்படச் சொன்ன அத்தனை -பழுதாம் இடத்தில் அவர்களோடு அல்லாதாரோடு வாசி இல்லை
அவனுக்கு வசராய்க் கொண்டு பலம் தரிலோ என்னில் இரண்டும் வியர்த்தம் -(ஆரோக்யம் பாஸ்கரன் அக்னி செல்வம் பரமசிவன் ஞானம் -அந்தர்யாமியாய் இருந்து செய்விக்கிறான் )

முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ(காரணந்து த்யேய -நல்லான் மோக்ஷ பிரதன் )

நாமம் -நாம மாத்ரரான பல்லார் என்னுதல் –பிரசித்தமான நீர் வையகம் என்னுதல் –

பல்லார் -கீழ்ச் சொன்ன ப்ரஹ்ம ருத்ராதிகள் அகப்பட
தனித் தனியவும் திரளவும் பழுது -வியர்த்தம் –

———–

காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்யதே₃வதா:|–
தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—ஸ்ரீ கீதா 7-20-

உலகில் பலர் தமது முக் குண மய பொருள்கள் விஷயமான அநாதி வாசனையால் எப்போதும் சேர்ந்து இருக்கப் பெற்றவர்களாய்
தமது வாசனைகளுக்கு ஏற்ற அந்த அந்த முக்குண மயமான விரும்பப்படும் பொருள்களாலே கவரப் பெற்ற
என் ஸ்வரூப விஷயமான அறிவை உடையவர்களாய் –
அந்த அந்தப் பொருள்கள் கிடைப்பதற்காக என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை அந்த அந்த தேவதைகளையே
மகிழ்விப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக் கொண்டு அவர்களையே ஆஸ்ரயித்து ஆராதிக்கிறார்கள் –
ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக்குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக் கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.

ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் —
மந்தி பாய் –கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடு
அர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-

அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் -அப்படி இல்லாதவர்க்கும் –
அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் –
நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதநமீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷

அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்ப மேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வ யஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

புல்லறிவாளர்களான அவர்களுக்கு அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது
ஏன் எனில் தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களை அடைகின்றனர் –
என்னுடைய பக்தர்களும் என்னை அடைகின்றனர்

யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-
என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் –
மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம் எல்லாமே கிடைத்ததாகுமே –
அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்கி இருந்து –
அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் -பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —

(ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா தே ஸர்வே ஸம் ப்ரஸூயந்தே -அதர்வசிகை
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண மஹா உபநிஷத்
ஸோரோதீத் -ருத்ரன் அழுதான்
ஸோ அப்ரவீத் அநபஹத பாப்மா வாஹம்
வரம் வ்ருணை அஹமேவ பஸூநா மதி பதி ரஸாநீதி -பசுபதியாகக் கடவேன் என்று வரம் வேண்டினான்
ஸோ பிபேத் -யமனைக் கண்டு பிரமன் பயந்தான்
உஷஸி ரேதோ சிஞ்சத் -பிரமன் உஷஸீ என்னும் தனது தேவியிடம் வீர்யத்தை -ரேதஸ்ஸை விட்டான் –
ஆகவே பயமும் பிராக்ருதி சம்பந்தமும் அபூர்ணத்வமும் இவர்களுக்கு உண்டே
ச ப்ரஹ்ம ச சிவா
அவனே அவனும் அவனும் அவனும்
ப்ரஹ்மா நாராயண சிவஸ் ச நாராயண சக்ரஸ் ச நாராயண
சேந்த்ர
சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண
திஸஸ் ச நாராயண விதிஸஸ் ச நாராயண சர்வம் நாராயண
புருஷ ஏவேதம் ஸர்வம்
விஸ்வம் ஏதம் ஸர்வம்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா திவ்யோ ஏக ஏவ நாராயண
அந்தர் பஹிஸ் ச நாராயண
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய  நாராயண ஸ்தித
விஸ்வ ஆத்மாநம் பாராயணம்
ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
தஜ்ஜலான்
அந்நியஸ் ச ராஜன்ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக தத்ஸ்த த்வாத் அநு பஸ்யந்தி ஹ்யேக ஏ வேதி ஸாதவ
ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -கீதை -11-40-
ஸர்வ கத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவாஹம வஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-35-
யதோ வா இமாநி
ஏகமேவ அத்வதீயம்
ஏக ஏவ நாராயண
ஏக ஏவாக்ர ஆஸீத்
ஈஸதே தேவ ஏக
ஏகஸ் ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ
ஏக ஸாஸ்த்தா ந த்வதீய அஸ்தி
ஏக ஏவ ஜநார்த்தன
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயநாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயநாத் ருத்ரோ ஜாயதே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லே கேவ
காரணந்து து த்யேய

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥-ஸ்ரீ கீதை —7-21-
எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான
நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதநமீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்ப மேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வ யஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

புல்லறிவாளர்களான அவர்களுக்கு அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது
ஏன் எனில் தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களை அடைகின்றனர் –
என்னுடைய பக்தர்களும் என்னை அடைகின்றனர்

மூவருக்கும் முதலாவான் முந்நீர் வண்ணன் -கடல் நீர் வையகத்தை வியாபித்து இருப்பது போலவே ப்ரஹ்ம ருத்ராதிகளை வியாபித்து இருப்பவன் என்றும்
கடல் நீரே மேகமாகவும் நதிகளாகவும் உரு எடுப்பது போலவே விஷ்ணு முதலிய அவதாரங்களை எடுத்து
லோக ரக்ஷணம் பண்ணி அருளுகிறான் என்றும் காட்டி அருளுகிறார் – )

———–

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்க்கு பலம் கொடுப்பார் சிலருமாய் அன்றோ
நாட்டில் நடந்து போருகிறது-என்ன –
அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

இவர் இவர் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் என்று பிரமியாதே ஸ்ருஷ்டியாதி கார்யங்களை
அதுக்கு அடைத்த வடிவு எடுத்து நடத்திக் கொண்டு போருகிற-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகள் ஆகிற
மூவருமே ஜகத்துக்கு ப்ரதானர் ஆவர் –
அம் மூவர் தம்மில் சமர் என்றும் –
மூவரும் கூட ஓன்று என்றும்
மூவருக்கும் அவ் வருகே ஒருவன் பிரதானன்-என்றும் பிரமியாதே –
அந்த மூவரிலும் வைத்துக் கொண்டு பிரதானனாவான்

ப்ரஹ்மாதிகளை இடுக்கி ஸ்ருஷ்டியாதிகளை நிர்வகித்துப் போருமவனாய்-
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருக்கிற வடிவையும் யுடையவன் ஆனவன் -(நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேக பாஸ்வதா )

(நாராயாணா பிரம்மா ஜாயதே -நாராயாணா ருத்ரோ ஜாயதே
அஜயமானோ பஹுதா விஜாயதே
பிறப்பிலி -பல் பிறவிப்பெருமான் –
அந்தர் பஹிஸ்ஸ ஸர்வம் நாராயணா

சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பூநிலாய ஐந்துமாய்
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி -நாராயணன் நான்முகனைப் படைக்க அவன் சங்கரனைப் படைக்க
ஸோரோதீத்–ரோதனம் -ருத்ரா -அழுதான் –

ஸோ அப்ரவீத் அநபஹத பாப்மா வாஹம் –பாபம் நீங்காதவன் -சிவ அபூத் –

ச பிரம்மா சேந்த்ர -சக்ரஸ்ய நாராயண -இந்திரனும் நாராயணனே -திசைஸ் ஸ நாராயண -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்

கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் –அனைத்தும் என்கோ -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்

சஷுஸ்  ஸ த்ரஷ்டவ்யஞ்ச நாராயணா -கண்ணும் காணும் பொருளும் நாராயணனே

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா -பூமி எங்கும் வியாபித்து உள்ளான்
தஜ் ஜலான் –
அந்யஸ்ய ராஜன் ஸ பர தத் அந்ய பஞ்ச விம்சக தத்ஸ தத்வா தத் அநு பஸ்யந்தி ஹ் ஏவேதி சாதவ -பாரதம்
ஜீவனும் பரமாத்மாவும் வேவ்வேறே தத்துவமாக இருப்பினும் அந்தர்யாமியாக இருப்பதால் இருவரையும் ஒருவராகவே நல்லோர்கள் காண்கிறார்கள் –

நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே–நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ.–
அநந்த வீர்யாமித விக்ரமஸ்த்வம் -ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ—৷৷-ஸ்ரீ கீதை -11.40৷৷

மூ வகையான அளவுகளும் இல்லாதவனே -தேவர்களுக்கு ஈசனே -உலகு அனைத்தையும் வியாபித்து இருப்பவனே –
நாம ரூபங்கள் அற்றதாய்க் காரண நிலையில் உள்ள மூல ப்ரக்ருதியும் –
நாம ரூபங்கள் உடையதாய் கார்ய நிலையில் உள்ள மூல பிரக்ருதியும் –
இந்த மூல பிரக்ருதியோடு கூடிய பத்த ஜீவ ஸ்வரூபமும் –
இவை அனைத்துக்கும் மேற்பட்டதான முக்தாத்ம ஸ்வரூபமும் நீயே –
ஆகையால் நீயே ஆதி தேவனாவாய் -புராண புருஷனாய் இருப்பவன் –
இந்த உலகுக்கு மேலான ஆதாரமாய் இருப்பவனும் நீயே

ஈச தேவ ஏக நாராயணா
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயதம்

ஸர்வ கத்வாத் அனந்தஸ்ய ஸ ஏவாஹம் அவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85-அநந்தன் எங்கும் பரவி இருக்கையாலே நானும் அவனாகவே இருக்கிறேன் –

யதோ வா இமாநி

ஏகஸ் ஸ்வ தந்தரோ ஜகதோ பபூவ -என்றும்
ஏக ஸாஸ்தா ந த்விதீயோ அஸ்தி ஸாஸ்தா -பாரதம்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்

ஸர்வ அந்தர்யாமி -விஸ்மாத்மநம் -சரீரீ சரீரம் பாவம் -பிரகாரீ பிரகாரம் )

ஜகத் காரண பூதனுமாய் சர்வ விஷயமான வாத்சல்யத்தையும் யுடையனானவனுடைய
கிருபை ஒழிய -பிரசித்தமான நீரை யுடைத்தான ஜகத்தில் உள்ள பலருடைய பிரசாதமும் வியர்த்தம்

இவனை ஒழிந்த மற்ற இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்களோடு வாசியற சர்வமும் வியர்த்தம்
அன்றிக்கே –
நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது என்னவுமாம் –

தான் பலியாத அளவன்றிக்கே
பகவத் பிரசாதத்தையும் விலக்குவதாகையாலே-பழுது -என்கிறார்-

(பாணாசூர வ்ருத்தாந்தம் போல்வன அறிவோமே

ரஜஸ் தமஸ் -பிரசுரராகையாலே ஸம்ஸாரத்திலே பூண் கட்டவும் அல்ப அஸ்திர பலன்களையே இவர்களால் தர முடியும் -)

(மூவருள்ளும்-முதலாவான் மூரி நீர் வண்ணன் -என்கையாலே கடல் நீர் வையகத்தை வியாபித்து இருப்பது போலே
ப்ரஹ்ம ருத்ராதிகளை வியாபித்து இருப்பவன் என்றும்
கடல் நீரே மேகமாகவும் நதிகளாகவும் உரு எடுப்பது
போலே
தானே விஷ்ணு யாதி அவதாரங்கள் எடுத்து உலகோரை ரக்ஷித்து அருள்பவன் என்கிறார் -)

—————————————————————————————–

நல்லான் அருள் பெற்ற -எனக்கு சோகம் உண்டாயிற்று -என்கிறார் –
பண்டு உபாயாந்தரங்களிலும் தேவதாந்தரங்களிலும் ப்ரவணனாய் இழந்தேன் என்று சொல்லுகிறார் –

இதர தேவதைகளைப் பற்றி இவ்விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரத்வ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்
அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி
இவ் விஷயத்தை அகன்று திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந் தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவை யுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க் கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ் விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் —
போன காலம் அநாதி –வரும் காலம் அநந்தம் –
இத்தோடு ஒத்த காலம் இறே போயிற்று என்று அழுதேன்

இழவுக்கு அழுதார் ஆகில் அச்சம் ஆவது என் –
வருமத்தை குறித்து அன்றோ அஞ்சிற்று என்னில் -அதிகாரி நான் ஆகில்
போன காலம் போலே ஆகிறதோ வருகிற காலமும் என்கிறார் –

காலேஷ்வபி ச ஸர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத
சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தே -1-9-

வர்த்ததே மஹா பயம்-ஜிதந்தே 9 மந்த்ரம் – -ஸ்ரீ வசன பூஷணம் காட்டும் பிரமாணம்

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி –நிந்திதஸ்ச வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே-(அயோத்யா-17-14 )என்று
சொல்லுகிறது பெருமாளுடைய ஒரு நாளைக்கு இழவுக்கு இறே

யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே
ஸா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் சாப்ராந்தி சா ச விக்ரியா –என்று ரிஷிகள் ஈடுபட ஆழ்வார்கள் அழ கேட்கவும் வேணுமோ-

கடலோதம் காலலைப்பக் –
(புஷ்ப்ப ஹாஸ -மலரின் மெல்லியவன் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் )திருவடிகளை -கடலோதமானது துடை குத்துமா போலே அலைப்ப(அதனாலேயே மெய் மறந்து கண் வளருகிறான் -கண் வளர்ந்து அருளும் போதும் வாத்சல்யத்தாலே ஜகத் ரக்ஷண சிந்தையிலே ஈடுபட்டுள்ளான் -)

கண் வளரும் செங்கண்-அடலோத வண்ணரடி——அரவணை மேல் கண்டு தொழுதேன்–
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே(வெளுத்த பாற் கடல் அரவணை -மேல் கறுத்த திருமேனி பரபாகம் )

(யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவசா ப்ரதி பேதிரே -பாரதம் -தங்களையும் மீறி கேசவன் இடம் மரியாதை செய்தனர்
அப்படி எதிரிகளையும் ஈடுபடுத்தும் வடிவு அழகு என்னை ஈடுபடுத்தச் சொல்ல வேணுமோ)

பழுதே –
பழுதும் பழுது அல்லாததும் கூடப் பெற்றேனோ

பல பகல் –
இழந்த அநாதி காலம் பலவாய் -அதுக்கு அநந்தரம் அனந்த காலமான படி

போயின –
போன நீர்களைக் கோலவோ–வரும் காலமும் பழைய காலமும் ஓன்று -பழைய நானே இன்னம்
அப்படி யாகில் செய்வது என் –என்கிறார் -காலேஷ் வபி ச –

அரவணை மேல் கண்டு –
பரியங்க வித்யையில் படியே பூர்ணமாகக் கண்டேன்

கண்டு தொழுதேன் -கண்டால் செய்யும் தொழில்
கால் அலைப்ப -சிறு திவலை துடை குத்த
செங்கண் –வாத்சல்யம் தோற்றுகை
அடலோதம் -நெருங்கின ஓதம் –

(யதார்ஹம் கேசவ வ்ருத்திம் தவஸா பிரதிபேதிரே -துரியோதனாதிகள் தங்களையும் மீறி மரியாதை செய்தார்கள் அன்றோ –
காலேஷ் வபி ச ஸர்வேஷு திஷூ ஸர்வாஸூ ச அச்யுத
சரீரே க கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தே -1-9-
யஸ் ச ராமம் ந பஸ் யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ச வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே -அயோத்யா -17-14-
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயேத்
ஸா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் சா பிராந்தி சா ச விக்ரியா – )

(ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2))

————-

இதர தேவதைகளைப் பற்றி இவ் விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரத்வ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்

அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி-இவ் விஷயத்தை அகன்று திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

ஸுகுமார்ய அனுரூபமாக கடலின் சிறு திவலைகள் ஆனவை துடை குத்துவாரைப் போலே
அனுகூலமாகத் திருவடிகளை ஸ்பர்சிக்க –
அத்தாலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனுமாய் –
அனுபவிக்கப் புக்கவர்களை அபி பவித்து எழ வீசுகிற ஸுந்தர்ய தரங்கங்களோடு கூடின வடிவை யுடையவனுமானுடைய திருவடிகளை –

(அரைச் சிவந்த ஆடை அலை வந்து திருவடியில் இருந்து கூட்டிப் போனதே
ஸுந்தர்ய அலைகள் மேல் அனுபவிக்க ஒட்டாமல் -அடலோத வண்ணர்)

வெளுத்த நிறத்தை யுடையனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே -ஞான சாஷாத்கார முகேன

(திருப்பாற் கடலிலே நேராகப் போனவர் அல்லவே -ஆகையால் ஞான சாஷாத்காரமே )கண்டு அனுபவித்து –
தத் அனந்தர பாவியான தொழுகையிலும் அந்வயிக்கப் பெற்றேன் —

இப்படி அனுபவத்தோடு அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகைக்கு-உறுப்பான கீழ்க் கழிந்த காலம் எல்லாம் ஓன்று ஒழியாத படி வ்யர்த்தமே போய் விட்டதே -என்று-கண்ண நீர் வெள்ளமிட இருந்து சோகித்தேன் –

கீழ் இழவுக்கு அடியான நம்முடைய கர்மம் இப்போதும் குறி அழியாதே கிடக்கையாலே
மேலுள்ள காலத்திலும் -இவ் வனுபவத்துக்கு குறைத்தல் வரில் செய்வது என் -என்று பயப்பட்டு அழுதேன் –

———————————————————————————————

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கப் போமோ –
பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
இங்கே வெள்ளம் இட்ட அன்று தான் பெற்றேனோ -என்கிறார் –
பழுது என் என்னில் -இன்று கதை கேட்க இருந்தேன் என்பார் இறே

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-
அவன் தானே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து தூளி தானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-
நான் இழந்தேன் -என்கிறார் –

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ் சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புள் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடமும்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று ஞானிகள் சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெற வில்லையே!!)

அடியும் படி கடப்பத் -கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-6- -என்னும் (புஷ்ப ஹாஸ திருவடிகளைக் கொண்டு )திருவடிகளைக் கொண்டு காடுமோடையும் அளப்ப
தோள் திசை மேல் செல்ல–திருத் தோள்கள் திக்குகளில் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் –திரு அபிஷேகம் அண்ட பித்தி அளவும் நிமிர்ந்தது

வடியுகிரா-லீர்ந்தான் ஈராணியன தாகம்–கூரிய உகிராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்(ஆயுதம் தேவையாய் இருக்க வில்லையே -அதுவும் விளையாட்டாகக் கிழித்தவன் -ஈர்ந்தவன் )

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான் உலகளந்த நான்று ——-பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான(புஷ்ப ஹாஸ )
திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று –

அடியும் படி கடப்ப-தோள் திசை மேல் செல்ல -முடியும் விசும்பு அளந்தது -என்கிறார்
நான் கேட்டார் வாய் கேட்டுப் போம் அத்தனை -(தாவி அளந்த தடம் தாமரை அடிகளில் தலை வைக்காமல் பாக்யம் கிட்டப் பெற்றேன் அல்லேன்-இன்று யாம் வந்தோம் இரங்கு -அன்று உலகம் அளந்த -சென்று இலங்கை செற்ற திருவடிகள்
திரிவிக்ரமன் ராமன் -நின்ற இடத்தில் இருந்து அளந்ததுக்கு மேல் சென்று இலங்கை செற்ற -நடந்தான் -பல்லாண்டு பாட வேண்டாமோ )

அடியும் படி கடப்ப-இத்யாதி –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப் படுத்திக் கொண்டது
தோள் திக்குகளை எல்லை கண்டது –முடியும் அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று-
நின்றார் நின்ற படியே வெற்றி கொள்ளுமா போலே

வடிவு -இத்யாதி
ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி -ஓர் இடத்திலே சென்று முகம் காட்டும் -அளவன்று இறே
ஜகத்துக்கு எல்லாம் ஏக காலத்திலே உதவின இது –

———

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-
அவன் தானே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து (அடிப் பொடித் தானம் செய்த போதும் அன்றோ  )தூளி தானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-நான் இழந்தேன் -என்கிறார் –

கூர்மையான திரு உகிராலே -அதுக்குத் தக்க -பரியனாக வந்த இரணியன் -தேவர்கள் வர பலம் -அநாயாசேன கிழித்துப் பொகட்டு

பெரிய திருவடியை மேற் கொண்டு ஸ்வைரமாக நடத்தி -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட மிக த்வரையுடன் ஓடி வந்து

இந்திரன் கார்யம் செய்க்கைக்காக திரு வுலகு அளந்து அருளின காலத்திலே –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-6- -என்கிறபடியே
என் தலைக்கு அலங்காரமாக நான் ஆசைப்பட்டு இருக்கும் திருவடிகள் -காடும் ஓடையுமான பூமியை அளந்து கொள்ள

பிராட்டியை (அணைக்க)பரிஷ்வ்ங்கிக் கடவ திருத் தோள்கள் ஆனவை இடமடையும் படி திக்குகளின் மேலே வளர்ந்து செல்ல
திரு அபிஷேகமும் அபரிச்சேதயமான ஆகாசத்தை முசிவற நிமிர்ந்து அளவு படுத்திக் கொண்டது -என்று
தத்வ வித்துக்களான ரிஷிகள் சொல்லா நிற்பர்கள் –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

(சஞ்சயன் கண்டு சொல்ல கேட்டான் த்ருதாஷ்ட்ரன் -இங்கு ரிஷிகள் கேட்டு சொல்ல கேட்ட வ்ருத்தாந்தம் இது)

(ஓர் இடத்திலே ஓர் அடியானுக்கு விரோதியை அழித்து உபகரித்த ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில் இழந்தது வியப்பில்லை
ஸ்ரீ கஜேந்த்ரனுக்குப் புள்ளூர்ந்து காட்சி அளித்து உபகரித்த போது இழந்ததும் வியப்பில்லை-
எல்லார் தலையிலும் திருவடியை வைத்து உபகரித்த திரிவிக்ரம அவதாரத்தில் அன்றோ இழந்தேன் என்கிறார் -)

———————————————————————————————

திரு உலகு அளந்தித்திலேயோ இழந்தது -அத்தோடு ஓக்க வரையாதே தீண்டிப் பரிமாறின
கிருஷ்ணாவதாரத்தில் இழந்திலேனோ-என்கிறார் -(உலகம் தீண்டிய திரிவிக்ரமன் -ஊராகத் தீண்டிய கிருஷ்ணன் )

கடலில் கிடையிலும் அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக் குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே –
என்று சோகிக்கிறார் –

நான்ற முலைத் தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி-தோன்ற–களவு வெளிப்படும்படி –
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப் படுத்திக் கொள்ள வல்ல(சூழ்ந்து கொல்ல -சூழ்ச்சியால் கொல்ல )
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து பொகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானே யாவன்.

(இவ்வளவு சேஷ்டிதங்கள் செய்த கண்ணனே -ஸர்வ ஸூலபனே  மண் அளந்த மால் -சர்வாதிகன் -மால் -பெருமைக்கும் ஆஸ்ரித வ்யாமோஹமும்)

நான்ற முலைத்தலை–தொங்குகிற ஸ்தநத்தில் இருக்கிற
தோன்ற வுண்டான்-திருடி எல்லாரும் அறியும் படியாக அமுது செய்தவனும் –
வென்றி சூழ் களிற்றை-வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய குவலயா பீடத்தை –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –
இவன் தன்னுடைய வாயை முலையில் வைக்க ஸ்வரூபா பத்தியைப் பெற்றாள் அவள்(ஸ்வேந ரூபேண -ஆவிர்பாவம் -அபி நிஷ் பத்யதே –மூடிகள் விலகி -ஸ்வரூபாபத்தி -கிருஷ்ண சம்பந்தம் பெற்றுக் கொடுக்கும் -தாய் தன்மை கழிந்து பேய் தன்மை பெற்றதே இயற்கைத் தன்மை அவளுக்கு )
ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கு ஸ்வரூபாபத்தி தப்பாது -எல்லாருக்கும் வந்தேறி போம் -(நமக்கு சம்சாரம் கர்மா வந்தேறி )
ஸ்வேன ரூபேண அபி நிஷ் பத்யதே–என்கிறபடியே –

உறி வெண்ணெய்-தோன்ற வுண்டான் –
உறியில் சேமித்து வைத்த வெண்ணையைக் கண்டு எட்டி யுண்டு -களவு தோற்றும் படி உண்டான் -(தெய்வாதீனமாக தானே வெண்ணெய் தோற்ற -பொத்த உரலைக் கவிழ்த்து -தோன்ற உபாயத்தால் -கண்டு உண்டான்-சிசுபாலாதிகளுக்கும் தோற்ற அடியேன் இழந்தேனே )

வென்றி சூழ் களிற்றை —
வென்றி மிக்க களிற்றை-வெற்றியை யுடைத்தாய் இவனைச் சூழ்க்க நினைத்த களிற்றை -என்றுமாம் –

ஊன்றிப்-ஆனைப் பூசல் என்று இராதே கிட்டி -மருப்பொசித்த பாகன் (திருச்சந்த -52)-என்னும் படியே

பொருதுடைவு கண்டானும் –
பசலைக் கலம் போலே உடையும் படி கண்டவன் –
இடைவு கண்டான் -என்றுமாம் -(ஆயுதத்தை உருவினவுடன் உறை சுருங்கிப் போவது போலே கொம்பைப் பிடுங்கிய வுடன் ஆனையும் சுருங்கியது -சிதைந்து உழுத்துப் போம் படி பண்ணினான் )

புள்ளின் வாய் கீண்டானும்-மருதிடை போய் மண்ணளந்த மால் —
திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிறது-
கிருஷ்ணாவதாரத்துக்கும் திரு உலகு அளந்து அருளின இடத்துக்கும் 1-அழகும் 2-முஃத்யமும் 3-ஆஸ்ரித பக்ஷபாதமும்
உள்ளிட்டவை இரண்டு இடத்துக்கும் ஒத்து இருக்கும் –

நான்ற -இத்யாதி –
தன் க்ருத்ரிமான பால் போன வாறே அந்த முலை பையான படி —

தோன்ற யுண்டான் -சிசுபாலாதிகளும் ஏசும் படி -(களவு வெளிப்படும்படி )

வென்றி இத்யாதி –
வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய

ஊன்றி -தரித்து நின்று –
உடைவு -கருவிப் பை போலே ஆக்கின படி -மண்ணளந்த மால் -பின்னாட்டின படி –

——————-

கடலில் கிடையிலும் -(16)அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் (17 )இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக் குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே -என்று சோகிக்கிறார்

பேய் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு வந்த பூதனை யுடைய பாலின் கனத்தாலே சரிந்து நாலுகிற
முலையில் யுண்டான நஞ்சை -அவள் பிணமாய் விழும்படி அமுது செய்து -உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெயை சிசுபாலாதிகள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாம் படி அமுது செய்து அருளினவனாய்-
வெற்றியை யுடைத்தாய் -எதிர்த்தவர்களை தப்பாமல் சூழ்த்துக் கொள்ள வல்ல குவலயா பீடத்தை
கஜ யுத்தத்துக்கு தேசிகரான வர்களை போலே உறைக்க நின்று பொருது தலை எடுக்க மாட்டாமல்
உரு அழிந்து உளுக்காம் படி பண்ணினவனும் -தன்னை விழுங்க வந்த பகாஸூரன் வாயை
கிழித்துப் பொகட்டவனும்-யமளார்ஜுனங்களின் நடுவே அவை வேர் பரிந்து விழுந்தபடி தவழ்ந்து
போய் பூமி முதலான லோகங்களை அளந்து கொண்ட சர்வாதிகன் கிடீர் –

பழைய பேய் வடிவை கொண்டு விழுந்தாள் என்றுமாம்-

———————————————————————————————–

அவதாரம் ஒழியப் பெற்றாரும் உண்டு கிடீர் -என்கிறார் –
நான் தீண்டப் பெறாதே மயங்கா நின்றேன் -நீ தீண்டப் பெற்று பரவசமாகா நின்றாய் –
பூமியைப் போலே ஒரு கால் இன்றியே
நித்ய சம்ஸ்லேஷம் பெறுவதே கடல் -என்று கொண்டாடுகிறார் –

காதா சித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திரு மேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந் தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–கடலில் சயனம் என்றும் –ஆலிலை துயின்ற போதும் திரு வாழியை யுடையவனும் என்றும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்-ஆஸ்ரித வாத்சல்யம்
கண் படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் போல்)

மாலும்-மது பான மத்தரைப் போலே பிச்சேறா நின்ற
கருங் கடலே-பெற்ற பேறு உன்னுடம்பே கோள் சொல்லுகிறது இல்லையோ -இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ–
என் நோற்றாய்-ஆசையை விட்டு நானும் நோற்கும் படி சொல்லாய் –

(நிர்ஹேதுக கடாக்ஷமே எதிர்பார்த்து உள்ளவர் அன்றோ ஆழ்வார்கள்
கோர மா தவம் செய்து பெரிய பெருமாள் -மலைக்கு மேல் -அக்னியின் நடுவில் -கோயில் திருமலை பெருமாள் கோயில்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பினால் -அன்றோ அவன் செய்யும் தவம் நம்மைப் பெற)

வையகமுண்-டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ——–சிறு வயிற்றிலே பூமி எல்லாவற்றையும் அடக்கி -பவனான ஆலிலையில்
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருமேனியைத் தீண்டப் பெற்று

மாலும் -மதுபான மத்தரைப் போலே பிச்சேறுகிற கடலே –

கருங்கடல் -உடம்பு வெளுக்க வேண்டாவே

(நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ -கண்ணன் திருமேனி ஒளி வீச பாற்கடலும் நீலக்கடல் ஆகுமே)

ஆழியான் -ஏகார்ணவத்திலும்(பிரளய காலத்தில் )-திருப் பாற் கடலிலும் துயின்ற -என்னுதல் –

ஆஸிலே கை வைத்து பிரளயத்தை இரு துண்டமாக விடுவேன் என்று இருக்கும் -என்றுமாம் –

பிராட்டிமாரோடு ஊடின போதும் உனக்கு பிரிவு இல்லை –

கடலும் எம்பெருமானும் -ஸ்ரீ பரத ஆழ்வானும் பெருமாளையும் போலே நிறம்

ப்ரஹ்ம பிராப்தி பலமாய்- கைங்கர்யம் ஆனுஷங்கிகம்  ஆனால் போலே -திருமேனி தீண்டுகை பிராப்தம் –
கைங்கர்யம் அவகாதத்தில் ஸ்வேதம் ( நெல் குத்த வியர்வை வருமா )போலே –உபாயத்திலும் ஸ்வரூப ஞானம் பிறந்தால் வியவசாயம் ஆனுஷங்கிகம் –

——————

காதா சித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து –நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

ஜகத்தை அடைய பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே எடுத்து வைத்து ஓர் ஆலம் தளிரிலே -கண் வளர்ந்து அருளினவனாய்
பிரளயம் வரில் இரு துண்டமாக விடுகைக்கு பரிகரமான திருவாழியை யுடையனுமாய் -அழகிய கறுத்த நிறத்தை யுடைய திரு மேனியையும்
அதுக்குப் பகைத் தொடையாகும் படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களையும் யுடையனாய்-
ஆஸ்ரித வியாமுக்தனானவன் கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -சர்வ காலத்திலும் அவன் திருமேனியை நீ அனுபவிக்கப் பெற்று-
அந்த ஸ்பர்ச ஸூகத்தாலே மயங்கா நிற்பதாய் -அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே-
இப் பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய் -அத்தைச் சொல்ல மாட்டாயோ

நானும் அனுஷ்ட்டித்துப் பார்க்கைக்கு -என்று கருத்து –

மால் -என்று பெருமையைச் சொல்லுகிறது என்றுமாம் –

கண் படையுள்
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -அழகு முழுதும் காணலாமாம் படி
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட –நாச்சியார் -4- ஆசைப் பட்ட பேற்றை அன்றோ பெற்று இருப்பது
என்றும்
அன்புடையார் ஒரு நாள் ஒரு போது பெற ஆசைப்படும் பேற்றை அன்றோ எப்போதும் பெற்று இருப்பது
திருமேனி
பெரிய பிராட்டியார் ஆசைப்படும் பேற்றை அன்றோ பெற்று இருப்பது
தீண்டப் பெற்று
பார்ப்பது மட்டும் அல்லாமல் -எல்லாக் காலத்திலும் அவன் திருமேனியை அனுபவிப்பிக்கப் பெற்று
அந்த ஸ்பர்ச ஸூ கத்தாலே மயங்கா நிற்பதாய்
அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே
இப்பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய்
அத்தைச் சொல்ல மாட்டாயோ நானும் அனுஷ்ட்டித்துப் பெறுகைக்கு என்று கருத்து –

மால் -ஆஸ்ரித வ்யாமோஹமும் பெருமையும்-

மாலும் கரும் கடலே -திருப்பாற் கடலை கரும் கடல் என்னலாமோ என்னில்
நீலக்கடல் கடைந்தாய் -திருவாய் -10-10-7-என்றாரே -இவன் நிழலீட்டாலே ஆகுமே
பிரளய ஜலத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்-

——————————————————————————————-

பெற்றார் தளை கழல -என்கிற -இத்தால் கிருஷ்ணாவதாரத்தை சொல்லவுமாம்
வாமனாவதாரம் தன்னையே சொல்லுகிறது ஆகவுமாம் -(அதிதி கஸ்யபர் -ஸம்ஸார விலங்கு போக்கி அருளியவன் என்றுமாம் )

(புள்ளின் வாய் கீண்டான் பகாசுரன் என்று கொண்டும்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
புள்ளின் வாய் கீண்ட ஜடாயுவை முடித்த ராவணன் என்றுமாம் போல் இங்கும்)

(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன ஆகதாம் மதுராம் புரீம்-அவதார கந்தம் -பீஜம் போல் பாற்கடல் -ஆழி எழ கோஷம் உண்டே )

படுக்கையாய் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ –
தேவதாந்தரங்களுக்கு தன்னைக் கொடா நிற்க என்கிறார்

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப் படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக(தந்தை தாய் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் )
பேர்ந்து–(திருப் பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆஸ்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெற வில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

பெற்றார் தளை கழலப் -பேர்ந்து -பிறந்து -என்றுமாம் -ஆரேனுமாக ஸ்பர்சிக்கப் பெற்றார்க்கு –தளை கழல-(தந்தை கால் விலங்கற -பெரிய திருமொழி 8-5-1-)

பேர்ந்தோர் குறளுருவாய்ச்-செற்றார் படி கடந்த –செங்கண் மால்— இந்திரனுக்கு அன்று ஆகாத சத்ரு தனக்கு ஆகாதே

(வாமனனுக்கும் பொய்கை ஆழ்வாருக்கும்
பள்ளியில் ஓதி -இங்கு இல்லையே -எங்கும் உள்ள கண்ணன் என்ற மகனைக் காய்ந்த -ஆழ்வார் தமக்கு மகனாகக் கொண்டது போல்)

த்விஷத் அன்னம் நபோக்த்வயம்–யஸ்த்வாம் த்வேஷ்ட்டிச மாம் த்வேஷ்ட்டி –(மம பிராணா ஹி பாண்டவ )

(யஸ் த்வாம் த்வேஷ்ட்டி மாம் த்வேஷ்ட்டி யஸ் த்வாம் அநு ச மாமது
அபேத நாத்மநோ வேத்மி த்வாம் அஹம் பாண்டு நந்தன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -37-2-)

மஹா பலி என்னது என்று அபிமானித்த பூமியை அளந்த சர்வேஸ்வரன் –

நற்றாமரை மலர்ச் சேவடியை –செவ்வி மாறாதே இருந்துள்ள திருவடிகளை
வானவர் கை கூப்பி-நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று–திரள நின்று பூவைக் கொண்டு ஏத்துவார் -என்றுமாம்
தொடுத்த மாலை கொண்டு ஏத்துவார் என்றுமாம் –

(த்ருஷ்ட்வா கிருஷ்ணம் )

பெற்றார் -(எடுத்த பேராளன் -)நிதி எடுக்கப் பெற்றார் என்னுமா போலே -என் பிள்ளை என்று அபிமானித்தால் தளை கழலா நின்றால்
அடியோம் என்றால் தளை கழலச் சொல்ல வேணுமோ –

பேர்ந்து -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்று என்னவுமாம் -திருப் பாற் கடலில் நின்றும் வந்தான் ஆகவுமாம் –

ஓர் குறள்-நாட்டில் வாமனர்கள் இவன் வளர்ந்து அருளின இடத்தோடு ஒக்கும் –

செற்றார் -தன்னைச் செற்றார் -மம பிராணா ஹி பாண்டவ —

படி கடந்த -இக் காடு மோடையும் அளந்த -பிறரது பெற்றால் போலே இருப்பதே -(உவந்த உள்ளதனாய் -அனைவரும் உகக்கும் படி )

செங்கண் -ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் முடிக்க பெறுகையால் -மால் -செய்தது போராது என்று இருக்கை

நல் தாமரை –
1-செவ்விக்கும் -2-அழகுக்கும்-3- குளிர்த்திக்கும் சத்ருசமான தாமரை தேடுகிறார் -(பரிஷ்காரம் பண்ணி இல் பொருள் உவமை )

வானவர் –
எட்டாத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கை(அவனது ஸுலப்யம் காட்ட வந்த இந்த பூமியில் இல்லாமல் )
கை கூப்பி -அவசா பிரதிபேதிரே (மறந்து கை கூப்பினார்களே )- நிரை மலர் -ஏற்கவே தொடை ஒத்த துளபம் கொண்டு இருந்தார்களோ(துளஸீ ப்ருத்யர் _

ஏத்துவரால் -இப்படிப் பிறந்தார் பெறாது ஒழிவதே -(ஆல் -வருத்தம் வியப்பு இரண்டும்)

நின்று-கிண்ணகத்தே எதிர்த்து நின்று -(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் போல் அல்லவே வானவர்களுக்கு )

(த்விஷ தன்னம் ந போக் தவ்யம் ந விஷந்தம் நைவ போஜயத்
பாண்டவான் த்விஷஸே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ -உத்யோக -91-27-

த்ருஷ்ட்வா கிருஷ்ணம் ததா யாந்தம் ப்ரதிபந்தமி வவ்ஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்தி மவஸா பிரதிபேதிரே)

————–

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப்படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் (விபரீத லக்ஷணம் -தேவர்களுக்கு )கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வாஸூ தேவர் தேவகியாருடைய காலிலிட்ட விலங்கு நீங்கும் படியாகப்
பரம பதத்தின் நின்றும் போந்து -இங்கே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து

அவ்வளவு இல்லாமல்
அழகுக்கு அத்விதீயமாய் – கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படியான வாமன வேஷத்தை யுடையனாய் –
ஆஸ்ரிதனான இந்திரனை நெருக்குகையாலே (துன்பம் கொடுக்கை நாட்டைப் பறித்தல் )தனக்கு சத்ருவான மஹா பலி போல்வார் என்னது என்று
அபிமானித்திருக்கிற பூமியை அநாயாசேன அளந்து கொண்டவனாய் –

அத்தாலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
ஆஸ்ரித வியாமுக்தன் ஆனவனுடைய அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை-

இந் நீர்மை ஏறிப் பாயாத ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற இந்த்ராதிகள் இச் செயலுக்குத் தோற்று அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
தொடை வாய்ந்து இருந்துள்ள செவ்விப் பூக்களை பரிமாறிக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பெறுவர்களாம்

பாவியேன் நாமே இழப்போம் (ப்ரயோஜனாந்தர பரர்கள் பெற நாம் இழப்பதே )-என்று வெறுக்கிறார் –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி- / பாசுரங்கள் -2-10 – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

கார்யாத் காரண அநு மானம் வேணுமோ –
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே(ப்ரத்யக்ஷம் அன்றோ )
இப்படி அநு மானப் பிரமாணம் கொண்டு வருத்தத்துடன் அவனுடைய பரத்வம் அறுதியிட்டு வேணுமோ
அவன் விபூதி விஷயமாக பண்ணி அருளின உமிழ்ந்த பர்யந்த திவ்ய சேஷ்டிதங்கள்
ஓர் ஒன்றே அவனுடைய பரத்வத்தை அறுதியிட்டுத் தராதோ -என்கிறார் —

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

பதவுரை

கடல் கடைந்தது–(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
என்று–எந்த நாள்?
நீர் ஏற்றது–(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப் பெற்றது
எ உலகம்–எந்த உலகம்?
அதனை–அவற்றை
நான் ஒன்றும் உணரேன்–நான் அடியோடு அறிகின்றிலேன்;
அது–அந்தக் கடலானது
அன்று–ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து–மலைகளைக்கொண்டு திருவணை கட்டித் தூர்த்து
உடைத்து–(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண் படுத்த–எப்போதும் பள்ளி கொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப் பெற்ற
ஆழி–ஸமுத்ரமாம்;
இது–(நீரேற்றுப் பெற்ற) இவ் வுலகமானது
நீ–ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து–ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து–(வராஹாவதார காலத்தில் அண்ட பித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு–(பிரளய வெள்ளம் கோத்த போது) திரு வயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த–பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்–பூமியாகும்.

என்று-
இன்னமும் கடல் கடைந்த நுரையும் திரையும் மாறிற்றோ

கடைந்தது-
கடையப் புக்கு கை வாங்கினவர்களை
ஈஸ்வரனாகக் கொள்ள வேணுமோ

எவ்வுலகம்-
லோகாந்தரத்தையோ -அடிச்சுவடு தெரியாதோ -(மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்)

எவ்வுலகம் நீர் ஏற்றது–
இன்று மஹா பலியால் நோவு படா நின்றதோ –
அவன் அடிச்ச சுவடு மாறிற்றோ
வாமனன் மண் இது என்று தோற்றுகிறது இல்லையோ —
இவ் வுலகம் அன்றோ நீர் ஏற்றது -என்கிறது –

ஒன்றும் அதனை யுணரேன் -அன்று எங்கே போனேனோ(விஷயாந்தரங்களைத் தேடிப் போனேன் )
இச் சேஷ்டிதங்கள் கிடக்க கார்யாத் காரண அநு மானம் பண்ணித் திரியவோ நான்

அன்றிக்கே –
ஒன்றும் அதனை யுணரேன்-என்றது –
அதி மானுஷ சேஷ்டிதங்களைக் கண்டு எத்திறம் -என்று மோஹிக்கிறார் ஆகவுமாம் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

(அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம் –ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
திவ்யமான ஸ்வ பாவம் என்ன –
சேஷ்டிதம் என்ன –
ஆக்ருதி என்ன இவற்றாலும்

அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி திவ்யமான விக்ரமங்கள் என்ன –
பிரதாபங்கள் என்ன -இவற்றாலும்

அதி லங்கித சர்வ லோக சாம்யம்
ஒருவரோடும் ஒப்புச் சொல்ல ஒண்ணாது இருக்கிற

வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம்
எம்பெருமானுடைய விபவ அவதாரத்தைப் புகழ்கின்றேன்

அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
வியாபாரத்தாலும்-
அலங்காரத்தாலும் –
விக்ரமத்தாலும் –
பிரதாபத்தாலும்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
புகழ்ந்து பேசாத தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
இமவ் ஸ்ம முனி சார் தூல கிங்கரவ் சமூபஸ்திதவ்–என்றும்

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே லஷ்மணாம் ந ஹி ப்ரதிஜ்ஞாம் ஸம்ஸ்ருத்ய ப்ராஹ்மனேப்யோ
விசேஷத–என்றும் இத்யாதிகளிலே ஸ்ரீ ராமபிரானுடைய சீலமும்

கடலிலே அணை கட்டிய ஸ்ரீ ராமபிரானுடைய விருத்தமும்

கோவர்த்தன உத்தாரண முதலான ஸ்ரீ கண்ணபிரானின் வ்ருத்தமும்

பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-என்னும்படியான ஸ்ரீ ராமனின் வேஷமும்

அம்போதநீலம் அரவிந்த தளாய தாக்ஷம் பிஞ்சாவதாம்ச முக பாணிம் -என்ற ஸ்ரீ கண்ணபிரானின் வேஷமும்

அதி மானுஷ கடலிலே ஒரு திவலை எடுத்துக் காட்டின படி

அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
விக்ரமம் ஆவது என் –
பிரதாபம் ஆவது என் –
கூசாதே சத்ரு ஸைன்ய மத்யத்தில் பிரவேசிக்கைக்கு ஈடான சக்தி விசேஷம் வீர்யம்
பிறரால் அபி பவிக்க ஒண்ணாமைக்கு உறுப்பான சக்தி விசேஷம் பிரதாபம்

வரயே
வரம் என்று ஸ்லாக்யமாய்-ஸ்லாக்யமாக சொல்கின்றேன் -புகழ்கின்றேன் என்றபடி)

யுணரேன்  நான் –
அன்றைக்கே எனக்கு என்னவோ ஒரு விஷயம் தேடி அநர்த்தப் பட்டேன் –
ஒன்றையோ -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டது இல்லையோ –
யுணரேன் -என்று இழந்த நாளைக்கு சோகிக்கிறார்-

என்று கடல் கடைந்தது எவ் வுலகம்-என்றது
எல்லாச் செயல்களுக்கும் உப லக்ஷணம்

என்று -என்று ஞான வைஸத்யம் சொல்லுகிறது –
ஞானமாவது -யத்தேச கால சம்பந்தி தயா யாதோர்த்தர்தம் தோற்றிற்று
தத் தேச கால சம்பந்தி தயா அவ் வர்த்தத்தை காட்டுகை இறே-

அன்று -இத்யாதி –
நீ அணை அடைத்து திரு வில்லாலே அழித்து உண்டாக்கின கடலிலே –
கண் படுத்த -கண் வளர்ந்த ஆழி –

உடைத்து -சம்ஹரித்து -என்றுமாம் -(தனுஸ்ஸாலே உடைத்து என்றும் ஸம்ஹரித்து என்றும் )

இது -இத்யாதி –
இல்லாத அன்று ஸ்ருஷ்டித்து –
பிரளயம் கொள்ள அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து
பிரளயம் வருகிறது என்று ஏற்கவே திரு வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறப்பட விட்ட பார் –

இது -என்றது -தாம் இருந்த பூமி யாகையாலே

அது -என்றது
அத்தோடு சம்பந்தித்த கடலாகையாலும்
அஸந்நிஹிதம் ஆகையாலும்–
ஆழி அது -என்று அந்வயம்–

செய்யுடையவன் அன்றோ கிருஷி பண்ணுவான் –(பக்தி உழவன் இவனே )
அல்லாதார்க்கும் ஈஸ்வரத்வ பிரசங்கம் யுண்டாகில்
இதிலே அவர்களுக்கும் ஒரு தொழில் யுண்டாகாதோ-

(அண்ணல் செய்து அலை கடல் கடைந்து -பெரிய திருமொழி -6-1-2-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும்
மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -திருவாய் -4-5-10-
அவனே ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டும் செயல்கள் அன்றோ
இது -என்றார் பூமியை தான் நிற்கும் இடமாகையாலே
அது என்றார் பூமியைச் சூழ்ந்த கடலை -தூரத்தில் இருப்பதாகையாலே
என்று -எவ்வுலகம் -என்று அவை தம் அறிவுக்கு இப்போதும் தோற்றுவதைச் சொல்லுகிறார்- )

————————————————

தன்னை அர்த்தித்த தேவர்கள் அபேக்ஷிதம் செய்கைக்காக-
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து -என்னும் படி
தன் ஸர்வேஸ்வரத்வம் தோற்ற கடல் கடைந்து அருளிற்று எத்தனை நாள் உண்டு என்றும்
ஈஸ்வர அபிமானிகளான ருத்ராதிகளும் –
திருவடி விளக்குவார் —
விளக்கினை தீர்த்தத்தை சிரஸா வஹித்து பரிசுத்தரராம் படி
இந்திரன் பிரார்த்தனை சார்த்தமாக்கும் படி அர்த்தியாய்க் கொண்டு(வேத அபஹார குரு பாதக தைத்ய பீடா இத்யாதி )
மஹா பலி பக்கல் நீர் ஏற்று அளந்து கொண்டது எந்த லோகம் என்றும்
அவ்வவோ செயல்களில் குமிழ் நீர் உண்ணக் கடவதான அந்த சேஷ்டிதத்தை
ஏக தேசமும் யான் அனுசந்திக்க மாட்டுகிறிலேன் –

ராவணன் திருவினைப் பிரித்த அன்று -(பெரிய திருமொழி 5-7-7)
சீதா முக கமல சமுல்லாச ஹே தோஸஸ சே தோ-(ஆளவந்தார் முக்த ஸ்லோகம் )என்கிறபடியே
தத் உல்லாச அர்த்தமாக தத் சஜாதீயமான லவண சமுத்திரத்தை மலைகளால் அடைத்து –

அங்கு உள்ளவர்கள் இங்கு வந்து நலியாத படி
தனுஷ்கோடியாலே உடைத்து –

எழுப்பிக் கார்யம் கொள்ளலாம் படி கண் வளர்ந்த கடலாகும் அந்தக் கடல்
ரஷ்ய வர்க்க சம் ரக்ஷணத்தில் நித்ய தீஷிதனாய் இருக்கிற நீ -அழிந்த அன்று ஸ்ருஷ்டித்து

அவாந்தர பிரளயத்தில் இடந்து எடுத்து –

மேல் பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே வைத்து வெளி நாடு காணப் புறப்பட விட்டு
இப்படி உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டுக் கிடக்கிற பூமியாகும் இந்த பூமி –

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-8-5-

மாணியாய் மண் கையால் இரந்தான் –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகனேறின வடிவைக் கொண்டு சென்று –
தன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

கண்டவாற்றால் தனதே உலகு என்றான் (4-5-10)-என்கிறபடியே
இவ்வோ திவ்ய சேஷ்டிதங்கள் தானே அவனே சர்வாதிகன்
என்னும் இடத்தை காட்டுகிறது இல்லையோ -என்கை –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

என்று -என்கையாலே
திரையும் நுரையும் இப்போதும் மாறிற்று இல்லை -என்கை –

எவ் வுலகம் என்கையாலே
அளந்த அடிச்சுவடு இப்போதும் அப்படியே எடுக்கலாய் இருக்கை –

—————————————————————————————

அப் பூமியை அடைய அளந்தான் என்று –
இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —

எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன
திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் –
அதிலே கிடந்தது -அலைகிறார்

(அவரால் நாம் அளக்க -உலகு அளக்க எளிதானது
பூதனை பட்ட பாடு நாம் அளக்க முயல்வது போல்)

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

பதவுரை

ஓர் அடி–ஒரு -ஒப்பற்ற-திருவடியை
பார் அளவும் வைத்து–பூமிப் பரப்பு உள்ள வரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்–மற்றொரு திருவடியும்
பார் உடுத்த–இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிற
நீர் அளவும்–ஆவரண ஜலம் வரையில்
செல்ல–செல்லும்படி
நிமிர்ந்தது–ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்–தெய்வ மகளான யசோதையின் வடிவு கொண்டு வந்த பூதனையை
அளவு கண்ட பெருமான்—உயிருக்கு எல்லையைக் கண்ட -முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்ட நெறி–நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்–அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.

நீரளவும்–ஆவரண ஜலம் வரையில்
சூருருவின் பேய் அளவு கண்ட -தெய்வப் பெண்ணின் வடிவை யுடைய பேயான
பூதனை யுடைய உயிருக்கு எல்லையைக் கண்ட

நீயளவு கண்ட நெறி –
நீ செய்து முடித்த செயல்களை –

பாரளவும் ஓரடி வைத்து —
பூமி உள்ள அளவும் ஓர் அடி வைத்து –

ஓரடியும் –
வைத்த அடியை -சொல்லவுமாம் –
மற்றை அடியை யாகவுமாம் –

பாருடுத்த-நீரளவும் செல்ல நிமிர்ந்ததே —
பவ்வ நீரோடை ஆடையாகச் சுற்றி -என்கிறபடியே
பூமியை ஆவரித்த ஜலத்தை கடந்து -என்னவுமாம் —
(கண்ணார் கடல் உடுக்கை -சிறிய திருமடல் )
மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஜலத்து அளவும் சென்றது என்னவுமாம் –

சூருருவின்-பேயளவு கண்ட பெருமான் —
சூரும் அணங்கும் தெய்வப் பெண் -என்கிறபடியே –
விலக்ஷணமான வடிவு என்கிறது –

பேயைத் தெய்வப் பெண் என்னலாமோ என்னில் –
பிசாசோ –தேவ யோநயா -என்று
பிசாசையும் தேவ யோனியிலே கூட்டுகையாலே யாம் –

பேயளவு கண்ட-
பேயாகப் பரிச்சேதித்த —

பேயாகப் பரிச்சேதிக்கை யாவது –
முடிக்கை என்று பொருளாம் இறே

பெருமான் -பூதனையை முடித்து ஒரு சேஷியை ஜகத்துக்குத் தந்தாய் –
ஸ்தந்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்யம் ஆஸீஜ் ஜகத் குரோ -(ஹரி வம்சம் )

அறிகிலேன்-நீ யளவு கண்ட நெறி —-
நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் )

அன்றியே –
மஹா பலியாலே அபஹ்ருதையான பூமியை அளந்து உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –
பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி
என்னை விஷயீ கரித்த படி அறிகிலேன் என்னவுமாம் –

பாரளவும் -அளவிலே குசை தங்கின அருமை
உடுத்த நீர் அளவும் -ஆவரண ஜலம்
பேயளவு -எல்லை
பெருமான் -அச் செயலாலே என்னை யுண்டாக்கினவன் –

நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை –
உன்னை பரிச்சேதிப்பார் முடிந்ததே போம் இத்தனை-

தாயைப் பேயாக்கின படி –

நீ அளவிட்டு வைத்த உபாயம் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ –
உணரப் பண்ணுகிறாயோ

(லோக விக்ராந்த சரணம் -உணர வேண்டுமே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்)

(கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பாரைப் போல் -படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே -திருவாய் -9-2-2-
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -நிகண்டு
தெய்வ நங்கை யசோதை
வித்யாதராப் ஸரோ யஷஸ் ரஷோ கந்தர்வ கின்னர –பிசாஸோ அமீ தேவ யோநய -அமரகோசப்படி
பிசாசங்களும் தேவர்கள் இடம் இருந்தே உண்டானவைகள் ஆகையால் சூர் உருவின் பேய் -என்கிறது என்று பெரியவாச்சான் பிள்ளை நிர்வாஹம்
அறிகிலேன் நீ அளவு கண்டா நெறி -இன்னபடி அளந்து அருளினாய் என்று அனுசந்தித்தாலே காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
எனது விரோதிகளைப் போக்கி என்னையும் அறியாமலேயே என்னை ஆள் கொண்டு அருளியதை அறிகிறேன் அல்லேன்
எம்பெருமான் சிலரை அளவிட நினைத்தால் அவனுக்கு ஒரு அருமையும் இல்லை –
அவனை சிலர் தம் முயற்சியால் அளவிட நினைத்தால் பூதனையைப் போலவே முடிந்ததே விடும் அத்தனை -)

——————————————————–

அதி லோகமான அழகை யுடைய ஒரு திருவடியை -படிக்கு அளவாக நிமிர்த்த  நின் பாத பங்கயமே -என்கிறபடியே
பூமியுள்ள வளவே நிற்கும் படி குசை தாங்கி வைத்து
அத்தோடு துல்ய விகல்பம் பண்ணலாம் படியான மேலே எடுத்த மற்றொரு திருவடியும்
அண்ட கடாஹத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்து அளவும் செல்ல வளர்ந்தது இறே

தன் வடிவை மறைத்து தெய்வ நங்கையான யசோதை வடிவு கொண்டு வந்த பூதனையை-
அவள் நினைவு அவளோடு போம் படி அளவிட்டு முடித்த செயலாலே-
ஜகத்துக்கு சேஷியான உன்னை நோக்கித் தந்தவனே –

நீ அளந்து கொண்ட வழியை நான் இன்ன படி என்று அறிய மாட்டுகிறிலேன் –
இச் செயலை அனுசந்தித்தால்
அதிலே ஆழங்கால் படும் அது ஒழிய அளவிட்டு அனுபவிக்க மாட்டுகிறிலேன் -என்று கருத்து –

சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்கிறபடியே
திவ்ய ஆகாரையான பேய் என்றபடி

பேயளவு கண்ட-என்ற இத்தால்
ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –

அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது
நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –

———————————————————————————————

நீர் அறிந்திலீர் ஆகில் -ஈஸ்வரன் அறியானோ -என்ன –
எம்பெருமான் பிரசாதம் அடியாக பிறந்த அறிவுடைய நான் தடுமாறா நின்றேன் –
தபஸ் சமாதியாலே பெற்ற அறிவுடையவன் உபதேசிப்பதே -என்று ஷேபிக்கிறார்

அவன் அருள் அடியாக வந்த தெளிவால் குறைவற்ற நானும் உட்பட நீஞ்சிக் கரை ஏற மாட்டாமல் கிடந்தது அலையா நிற்க –
ஸ்வ யத்னத்தாலே வந்த ஞான சக்திகளை போரப் பொலிய நினைத்து —
ஒருவனை -ஒருவன் -அறிய ஒருப்படுவதே-என்ன மதி கேடனோ என்று ருத்ரனை ஷேபிக்கிறார்

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—

பதவுரை

அன்று–முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்–ஆலமரத்தின் நிழலிலே
(இருந்து கொண்டு நால்வர்க்கு–அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த–தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து–விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக் கொண்டுள்ளவனுமான
அரன்–சிவன்
ஜந்து பொறி வாசல்–செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
போர் கதவம் சார்த்தி–வலிய கதவுகளை யிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டி மேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறி வாசல் தானே ஆய் நின்றானை–உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்–அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)

நெறி வாசல்-உபாயமும் -ப்ராப்யமும்
நால்வர்க்கு-அகஸ்தியர் -தக்ஷர் -புலஸ்தியர் -கஸ்யபர் -என்னும் நால்வருக்கும் —
ஐந்து-பொறி வாசல்–ஐந்து ஞான இந்த்ரியங்களுடைய துவாரங்களில் யுள்ள –
போர்க் கதவம் -அடைக்க ஒண்ணாத கதவுகளை –

நெறி வாசல் தானேயாய் நின்றானை–
நெறியான வாசல் -உபாயமான வாசல் என்னவுமாம் -(நெறியான வாசல் -உபாயம் மட்டும் என்றுமாம் )

நெறி என்று உபாயமாய் —
வாசல் என்று உபேயத்தைச் சொல்லிற்றாய் –
உபாயமும் உபேயமும் தானேயாய் நின்றவனை -என்றுமாம் –

இப்போது இது சொல்கிறது -பிராப்தி அவனை ஒழிய
உண்டாகில் அன்றோ அறிவும் அவனை ஒழிய உணர்வது என்கைக்காக-

(ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

யைந்து பொறி வாசல்–
ஒன்றை அடக்கில் ஓன்று திறக்கும் -என்கை –
நீரை அடைக்கப் புக்கால் ஓர் இடம் அடைக்க
ஓர் இடம் கோழைப் படுமா போலே –சஞ்சலம் ஹி மன-(6-34)

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

போர்க் கதவம் சாத்தி –
அடைக்கப் புக்கால் –ஒண்ணாத படி பொரா நின்ற கதவம் –
சாத்தி -என்றது அடைக்கப் போகாமையாலே –
அறிவானாம்-என்று ஷேபிக்கிறார்

ஆலமர நீழல் –
தான் தபஸ்ஸூ பண்ணின ஆலமர நிழலிலே – தான் பகவத் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னே
சிஷ்ய பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே —
சர்வஞ்ஞனான அஜாத சத்ருவுக்கு ப்ரஹ்ம ஞானம் இன்றியே இருக்கிற -பாலாகி -உபதேசத்தால் போலே –

அறம் -ஸமாச்ரயண பிரகாரம்
நால்வர்க்கு -அகஸ்திய புலஸ்யாதிகளுக்கு –

அன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன் —–
தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே
கதற (உபதேசிக்க )அவன் கடவானோ -என்கிறார்
நெறி வாசல் -ஸ்வரூப அனுரூபமான உபாயம் என்றுமாம் –

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷

ஸத்த்வாத் = சத்வ குணம்
ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது
ஜ்ஞாநம் = ஞானம்
ரஜஸோ = ரஜோ குணம்
லோப = பேராசை
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ப்ரமாத = மயக்கமும்
மோஹௌ = குழப்பமும்
தமஸோ = தமோ குணத்தின்
பவதோ = ஒன்றாகிறது
அஜ்ஞாநம் = அறிவீனம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்

சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்
ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்
வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக்குறைவு விபரீத ஞானமும்
அறிவின்மையுமே உண்டாகின்றன –
சத்வம் -ஆத்ம சாஷாத்காரம் – பலன்களில் ஆசை மூட்டும்

யாய் நின்றானை–சித்தம்

சாத்தி-வருந்திச் சாத்தலாம் அத்தனை -தாளிட ஒண்ணாது-முகத்திலே அறையும் –
நல்ல விஷயம் காட்டா விடில் குதறு கொட்டும்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே(ஸ்ரீ கீதை )-பண்ணா விடில் உபாயம் உண்டோ -(கண்ணனைக் காட்டியே ரசம் போக்க முடியும் )

அறிவானாம்-பட பட என சிஷிஷுக் கொள்ளும் அத்தனை அல்லது அறிவுக்கு அடைவுண்டோ –

சீராமப் பிள்ளைக்கு பட்டர் –
இதுவே தாரமாக இருக்கிற சாதுவை நலியாதே என்று அருளிச் செய்தார் –

(சர்வ பூத ஸூஹ்ருத்துக்கள் அன்றோ நம் பூர்வர்கள்)

நால்வர்-தஷாதிகள்

அன்றுரைத்த-ஆலமர் கண்டத் தரன் —
எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும்
விஷ ஹரண சக்தியையும் கொண்டு
இத் துறையிலே இழியப் போமோ –

(ப்ருஹதாரண்யாகத்தில் நாலாம் அத்யாயத்திலும்-கௌஷீதகீ மூன்றாம் அத்தியாயத்திலும்
ருத்ரன் அஜாத சத்ருவுக்கு பாழாகி உபதேசித்த வ்ருத்தாந்தம் –
பகவான் அந்தர்யாமியாய் இருப்பதை அறியாமல் தானே ஸம்ஹரிக்க வல்லவன் என்ற ஈஸ்வரோஹம் அபிமானம் கொண்ட ருத்ரன்
அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்கண்டேயருக்கு உபதேசம் பண்ணாத தொடங்கினான்
தானே ஞானம் பெரும் முன் சிஷ்யர்களை சம்பாதித்துக் கொண்டானே -)

——————————————————–

வட வ்ருஷச் சாயையிலே பகவச் ஸமாச்ரயண ரூபமான தர்மத்தை –
அகஸ்திய புலஸ்திய தக்ஷ மார்கண்டேயர்கள் ஆகிற நாலு சிஷ்யர்களுக்கு
பகவத் விஷயத்தில் உவ்வக் குழியிட இழிந்த அன்று
பகவத் விஷயத்தை மறுபாடுருவும் படி தர்சித்துச் சொல்ல வல்ல பேரளவுடையார்
பண்ணக் கடவ உபதேசத்தைப் பண்ணி ஆச்சார்ய பதம் நிர்வஹித்தோம் என்று இருக்கும் பெரிய அறிவாளனாய் –

அமிருத மதன தசையில் பிறந்த ஹாலாஹலம் என்கிற விஷத்தை நாராயணன் ஆஜ்ஜையாலே
கழுத்திலே அடக்கிக் காள கண்டன் என்று விருது பிடித்துத் திரியும் பெரு மிடுக்கனாய்
சம்ஹாரத்வ சக்தி யுக்தனாய் அபிமானித்து இருக்கிற ருத்ரன் –

ஸ்ரோத்ராதி ரூபேண ஐந்து வகைப் பட்டு இருப்பதாய் -விஷயங்கள் ஆகிற வரை நாற்றத்தை காட்டித் தன்னுடன்
சேர்ந்தாரை முடிக்கும் யந்த்ர கல்பமான இந்திரிய துவாரங்களில் –
அடைக்கப் புக்கவர்கள் முகத்தில் அறைந்து பொருகிற கதவை -வருத்தத்தோடு அடைத்து
உபாயமும் தத் ஸாத்யமுமான உபேயமும் -அநந்ய ஸாத்யனான தானேயாய்க் கொண்டு நின்ற சர்வேஸ்வரனை
ஸ்வ யத்ன ஸித்தமான தன் ஞான சக்தியாதிகளைக் கொண்டு அறிவதாக இருக்கிறானாம் –
என்ன அஞ்ஞனோ -என்று கர்ஹிக்கிறார் –

நெறி வாசல் என்று ஸ்வரூப அனுரூபமான உபாயம் -என்னவுமாம் –

—————————————————————————————————

நாட்டிலே ஈஸ்வரனாக நிச்சயித்து போருகிறவனை-அறிவானாம் -என்று நீர் சொல்லுகிற படி எங்கனே என்னில்
அவ்வீஸ்வரத்வம் போலே காணும் கோள் அறிவும் -என்கிறார் –
ஞானம் இல்லாமையால் இவன் ஐஸ்வர்யம் ஆறல் பீறல் (நிறைவானது அல்ல என்றபடி )-என்கிறார் —

நாடு அடங்க ருத்ரனே சர்வாதிகன் என்று அறுதியிட்டு -அவன் கால் கீழ்த் தலை மடுத்து –
போற்றுவது புகழ்வதாய் யன்றோ போருகிறது-
நீர் அவனை ஷேபிக்கப் கடவரோ -என்ன –
ருத்ரனுடைய அநீஸ்வரத்வமும்-எம்பெருமானுடைய ஈஸ்வரத்வமும்
தத் தத் நாம வாஹ நாதி ஸ்வரூபங்கள் கொண்டே அறுதியிடலாம் -என்கிறார் –

(ஏழு விஷயங்களில் வேறுபாடு காட்டி அருளுகிறார்)

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறை யுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று —5-

பதவுரை

நாமம்–ஒருவனுடைய பெயர்
அரன்–எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)
நாரணன்–(ஸர்வ வ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி–ஒருவனுடைய வாஹனம்
ஆன் விடை–மூடத் தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)
புள்–(வேத மூர்த்தியான) கருடப் பறவையாகும்;
உரை–ஒருவனைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்–மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
(மற்றொரு மூர்த்தியைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)
மறை–(ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்–ஒருவனுடைய வாஸ ஸ்தானம்
வரை–(கடினத் தன்மையுள்ள) கைலாச மலையாம்;
(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)
நீர்–(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்–ஒருவனுடைய தொழில்
அழிப்பு–(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)
அளிப்பு–(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது–ஒருவனுடைய கையிலுள்ள ஆயுதம்.
வேல்–(கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
நேமி–அருளார் திருச்சக்கரம்
உருவம்–வடிவம்
எரி–(கண் கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்
கார்–(கண்ட போதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காள மேக வுருவாம்;
ஒன்று–சிவனாகிய ஒருவன்
மேனி–(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;
[ஸ்ரீமந் நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]

(யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி -ஜகத் சர்வம் சரீரம் தே)

அரன் நாரணன் நாமம் –
ஒருத்தனுக்கு நாமம் அரன் –(ஹரதி -அபஹரிக்கிறவர் -)
ஒருத்தனுக்கு நாமம் நாராயணன் -(அசாதாரண திரு நாமம் )

ஸ்ருஷ்டமான ஜகத்திலே தீம்பிலே கை வளர்ந்து தன்னை முடித்துக் கொள்ளப் புக்கால்
அத்தை சம்ஹரிக்கைக்காக அவன் கொண்ட வடிவுக்கு பிரகார பூதனான தான் அரனாகிறான் –
ஈஸ்வரன் கை யடைப்பாக கார்யம் செய்யும் இடத்திலும் அழியும் லீலா விபூதியில் இவனுக்கு அந்வயம் –
மாநாவிக்கு நிர்வாஹகரானார் போலே

நாராயணன் -உபய விபூதியும் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் –
அவற்றுக்கு ஆலம்பனமாய் இருக்கும் என்றிட்டு நாராயணன் -என்று திரு நாமம் –

ஆன் விடை புள்ளூர்தி-
கைக் கொள் ஆண்டிகளைப் போலே ஒருத்தனுக்கு ஒரு எருது வாஹனம்–
ஒருத்தனுக்கு ஒரு வேதாத்மாவாய் இருந்துள்ள பெரிய திருவடி

உரை நூல் மறை-
ஒருத்தனுக்கு உத்கர்ஷம் சொல்லுவது ஆகமம் –
ஒருத்தனுக்கு உத்கர்ஷம் சொல்லுவது அபவ்ருஷேயமான வேதம்

(வேத முதல்வன் திகிரியோன் -சங்கத் தமிழ் கோஷிக்கும்)

யுறையும் கோயில் வரை நீர்-
தன் காடின்யத்துக்குச் சேர்ந்த மலை ஒருவனுக்கு வாசஸ் ஸ்தானம்
தன்னுடைய தண்ணளிக்குச் சேர்ந்த நீர் ஒருவனுக்கு –

(தோயாத்ரி நீர் மலை -இவர் இருந்தால் மலையும் நீர்ப் பண்டமாய் உருகி இருக்குமே)

கருமம் அழிப்பு அளிப்புக்-
ஒருவனுக்கு கர்மம் அழிக்கை –
ஒருவனுக்கு கர்மம் ரக்ஷை –
அழிக்கை என்றால் அது ஒன்றிலும் நிற்கும்
அளிப்பு என்றால் அழிக்கும் அதிலும் செல்லும் –

(பரித்ராணாம் சாது ரக்ஷணத்துக்குள் துஷ்ட சம்ஹாரமும் உண்டே)

(ஜகதாதிஜா -விஷ்ணு பிரதம அவதாரம் -அலகிலா விளையாட்டுடையார்
அகில புவன ஜன்ம –ஸ்தேம பங்க ஆதி லீலே -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே)

கையது வேல் நேமி-
ஒருவனுக்கு ஆயுதம் பிணம் தின்னிகளைப் போலே வேல் -ஒருவனுக்கு ஆயுதம் –
தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா -என்கிற ஆயுதம் -(மண்டோதரி அறிந்து வார்த்தை )

நிலத்துக் குறி பகவன் பட்டரை பரம பதத்திலும் ஈஸ்வரன் சதுர் புஜனாய் இருக்கும் என்னும் இடத்துக்கு
பிரமாணம் உண்டோ என்று கேட்க
தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா-(நால் தோள் அமுது )என்று பேசா நின்றது இறே என்று அருளிச் செய்ய
அவன் கோபிக்க –
பிராமண கதி இருந்தபடி இது -ப்ரசன்னராம் அத்தனை இறே -என்று அருளிச் செய்தார் –

உருவம் எரி கார் -ஒருவனுக்கு வடிவு எரி -சம்சார தப்தனாய் சென்றவனுக்கு நெருப்பிலே விழுமா போலே –
ஒருவனுக்கு வடிவு கார் -தப்தனாய் சென்றவனுக்கு ஒரு நீர்ச் சாவியிலே வர்ஷித்தால் போலே ஸ்ரமஹரமான வடிவு

(மேக வண்ணன் முகில் வண்ணன்)

மேனி  யொன்று —-இப்படி விசத்ருசமாய் இருக்கையாலே ஓன்று சரீரம் ஒருத்தன் சரீரி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா என்றால் -சர்வஞ்சாஸ்ய சரீரம் என்று தோற்றுமா போலே
ஒருத்தன் சரீரம் என்றால் ஒருத்தன் சரீரி என்று தோற்றும் இறே

(ஏஷ ஸர்வ பூதாத்மா-
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

அவனே அவனும் அவனும் அவனும்
நளிர் மதிச் சடையன் என்கோ
முனியே நான்முகனே முக்கண் அப்பா)

அரன் –
சிலரை நசிப்பிக்குமவன் ஒருவன் –

நாரணன் —
ததீயத்தை ஒழிய உளன் ஆகாதவன் ஒருவன் -நீ என்னை அன்று இலை -(நான்முகன் -7)

ஆன் விடை –
அநஸ் வர்ய ஸூசகம்

புள்ளூர்தி-
கெருட வாஹனம் நிற்க -இவன் ஐஸ்வர்ய ஸூசகம்

நூல்-
ஆப்தி கேட்க வேண்டில் விப்ர லம்பாதி தோஷ தூஷிதம்

மறை-
அபவ்ருஷேய நித்ய நிர் தோஷ ஸ்ருதி

வரை-
காடின்யத்துக்கு சத்ருசமான இடம்

நீர்-
தண்ணளிக்குத் தக்க இடம்

கருமம்
அழிப்பு -நசிப்பிக்கை

அளிப்புக் –
ரஷிக்கை

வேல் –
காண வயிறு அழலும்

நேமி-
விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்

எரி-
நெருப்பைத் தூவும் –

கார் –
காண ஜீவிப்பிக்கும்

மேனி  யொன்று-ஓன்று மேனி-சரீரம் என்றால் மற்று யவன் சரீரி என்று தன்னடையிலே வரும் இறே –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தை நினைக்கிறார் -(யஸ்ய பிருத்வீ சரீரம் ந வேத –யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத )

அரன் -தன்னை ஒழிய ஒன்றை அழியாதே நிற்கில் ஈஸ்வரத்வம் இல்லை(சம்ஹார தொழிலில் குறை வைக்கக் கூடாதே )
நாரணன் -தன்னை ஒழிந்த வற்றில் ஓன்று வழியில் ஈஸ்வரத்வம் இல்லை

ஆன் -அநீஸ்வரத்வ ஸூசகம்
புள் -ஈஸ்வரத்வ ஸூசகம்

நூல் -சொன்னவனுக்கு ஆப்தி இல்லையாகில் அப்ரமாணம்
மறை -ஆப்த வாக்யமான பிரமாணம்

அழிப்பு அளிப்பு– இவற்றை ஸூ சிப்பிக்கிறது அரன் நாரணன்- வாசக சப்தத்துக்கு வசன கிரியை போலே

வேல் -கலக்க வரிலும் -பயமாம் –
நேமி -பிரிந்தாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்

உருவம் எரி மேனி ஓன்று கார் மேனி ஓன்று -இங்கனம் சேர்ந்து இருக்க வேண்டாவோ –
ஷேபம்-அறிவுடையார்க்குச் சொல்ல வேணுமோ சேர –

(ஹரதீதி ஹர -ஸம்ஹரிக்கிறானாகையாலே ஹரனாகிறான் –
ஸூ பர்ணோ அஸீ கருத்மான்
த்ரயீ மய
நின் ஏவலுள் பணிந்தமை கூறும் அருமறைப்பொருள் -பரிபாடல்
வாய் மொழிப்புலவ
சாயல் நினது வான் நிறை எனும் அரு மறைப்பொருள்
நீ என மொழியுமால் அந்தணர் அருமறை
முது மொழி முதல்வ
வேதத்து மறை நீ
வேத முதல்வன் என்ப திகிரியோனே
ருத்ரோ வை க்ரூர
தர்ம ரக்ஷணம் பண்ணும் அறமுயலாழி -திருவாய் -5-1-6–தர்ம சக்கரம்
ருத்ர காலாக்னி ஸந்நிப
ஸர்வ பூத அந்தராத்மா நாராயண
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
சிவஸ் ச நாராயண
விஷ்ணுர் ஆத்மா பகவத பவஸ்ய
ரூப நாம வாஹன ஸ்தானாதி பேதங்களைக் காட்டி அருளுகிறார் )

———————————————–

பிணம் சுடும் தடி போலே கண்டதடைய அழிக்கையே தொழிலாக உடையவன் என்னும் இடத்தை தெரிவிக்கிற ஹரன் -என்று ஒருவனுக்குப் பெயர் –
ஸமஸ்த வஸ்துக்களையும் உள்ளும் புறமும் ஓக்க வியாபித்து சத்தையையே நோக்கும் என்று அறிவிக்கிற நாராயணன் என்று ஒருவனுக்கு பெயர் –

அறிவு கேட்டுக்கு நிதர்சநமாகச் சொல்லப்படும் ருஷபமே ஒருவனுக்கு வாஹனம் –
த்ரயீ மய-என்று சொல்லப்படுகிற பெரிய திருவடி ஒருவனுக்கு வாஹனம் –

ஒருவனைச் சொல்லும் பிரமாணம் வேத விருத்தார்த்தைச் சொல்லும் பவ்ருஷேயமான ஆகமம்
ஒருவனைச் சொல்லும் பிரமாணம் நித்ய நிர்தோஷமாய் அபவ்ருஷேயமாய்-யதாபூத வாதியாய் -ஸ்வத பிரமணமான வேதம் –

ஒருவன் நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் கடின ப்ரக்ருதியான -தன் பிரக்ருதிக்கு சேர்ந்த கைலாசம்
ஒருவன் உகந்து வசிக்கும் ஸ்தானம் தண்ணளி பண்ணி ரஷிக்கும் தன் படிக்குச் சேர்ந்த ஷீரார்ணவம்

ஒருவன் செய்யும் தொழில் கண்டது எல்லாவற்றையும் கண்ணற்று அழிக்கை –
ஒருவன் செய்யும் தொழில் ஸமஸ்த வஸ்துக்களையும் தண்ணளி பண்ணி ரஷிக்கை

ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் கொலைக்கு பரிகரமான மூவிலை வேல் –
ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் ரக்ஷணத்துக்கு பரிகரமான அறம் முயல் ஆழி

ஒருவன் ரூபம் நெருப்பு போலே -ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத படி காலாக்கினி ஸந்நிபமாய் இருக்கும்
ஒருவன் வடிவு கண்டவர்கள் கண் குளிரும்படி காள மேகம் போலே இருக்கும் –

இப்படி பரஸ்பர விசத்ருசமான இரண்டு வஸ்துக்களில் ஓன்று சரீரமாய் இருக்கும் —
ஓன்று சரீரியாய் இருக்கும் என்னும் இடம் அர்த்த சித்தம்

சர்வாத்மா -சர்வ பூத அந்தராத்மா நாராயண -என்றால்
சர்வஞ்சாஸ்யை சரீரம் என்று ப்ரதிகோடி வருகிறாப் போலே –

அன்றிக்கே
இவர்கள் ரூபம் பார்த்தால் –
எரி மேனி ஓன்று –
கார் மேனி ஓன்று என்னவுமாம் –

————————————————————————

அவனை சரீர தயா சேஷம் என்றீராகில் நீரும் சேஷ பூதர் அன்றோ –
நீர் உபதேசிக்கிற படி எங்கனே என்னில்
எனக்கு அவன் பிரசாதம் அடியாகையாலே விஸ்ம்ருதி சங்கை இல்லை -என்கிறார் –

அவன் அறிவானாம் -என்று ருத்ரனை அறிவு கேடன் என்று ஷேபித்துச் சொன்னீர் —
நீர் தாம் அறிந்து பிறர்க்கு உபதேசிக்கும் படி எங்கனே -என்ன –
சத்வம் தலை எடுத்த போது ஸ்வ யத்னத்தாலே சிறிது அறிந்தானாய் ரஜஸ் தமஸ் ஸூக்கள்
தலை எடுத்த போது ஈஸ்வரோஹம் -என்று இருக்கும்
அவனைப் போலேயோ நான் -நிர்ஹேதுகமாக அவன் தானே காட்டக் கண்டவன் ஆகையால்
எனக்கு ஒரு விஸ்ம்ருதி பிரசங்கம் இல்லை -என்கிறார் –

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

பதவுரை

அன்று–அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து–கர்ப்பப் பையாகிற ஸ்தானத்திலே இருந்து கொண்டு,
திரு அரங்க மேயான்–ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை–ஸ்வபாவங்களை யெல்லாம்
கண்டேன்–ஸாக்ஷாத் கரித்தவனாய்
கை தொழுதேன்–அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை–வெள்ளம் பரந்த ஸமுத்ர ஜலம் போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப் பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்-அவனது ஸ்வரூபாதிகளை க்ஷண காலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்–(விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேடர்களே!
நான்–(அவனை மறக்கக் கூடிய கர்ப்ப ஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று–(மறக்க முடியாதபடி ஞான விகாஸம் பெற்ற இக் காலத்திலே)
மறப்பனே–எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

(அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து –
கண்ணே உன்னைக் காண-காட்டவே கண்ட -திருப்பாணாழ்வார்
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் -விலக்காமையே வேணும்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே)

ஓன்று மறந்து அறியேன்–அன்று-கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்–
கர்ப்ப வாசம் பண்ணா நிற்கச் செய்தே
ஐயோ நோவு பட்டாயாகாதோ -என்று அவன் கடாக்ஷிக்க -அவனைக் கண்டேன்
தம்முடைய விலக்காமையைக் கொண்டு சாஷாத் கரித்ததாகச் சொல்லுகிறார்

திருவரங்க மேயான் திசை –ஓன்றும் மறந்து அறியேன்–
பெரிய பெருமாள் இடையாட்டத்தில்-அவனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒன்றும் மறந்து அறியேன் –

ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ –
ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரிய பெருமாளை இன்று மறப்பேனோ
இது தான் தேஹ யாத்ரையாய் பர ப்ரதிபாதன யோக்கியமான காலத்திலே மறப்பேனோ –

ஏழைகாள்-
இவ் விஷயத்தில் புதியது உண்டு அறியாதவர்களே -என்கிறார் –

திசை என்றது –
அவன் இடையாட்டத்திலே என்றபடி –
அத் திக்கிலே என்று சொல்லக் கடவது இறே

ஒன்றும் மறந்து அறியேன் –
கண்ட அளவிலே ஒன்றும் மறந்து அறியேன் –
உம்முடைய ஸுஜன்யமோ -என்னில் அன்று
ஓத நீர் வண்ணனை -மறக்க ஒண்ணாத அழகு –

ஏழைகாள்-மறக்க ஒண்ணாத விஷயத்தை விட்டு
நினைக்க ஒண்ணாத விஷயத்தைப் பற்றி நிற்கிறவர்களே –

அன்று -அறியாக் காலத்துள்ளே–ஜாயமானம் ஹி —

கரு இத்யாதி -மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் மறந்திலேன்
நினைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் இன்று மறப்பேனோ

திருவரங்கமே யான் -இடையாட்டம் பர திசையிலேயோ-எல்லை நிலத்திலே -(அர்ச்சைக்கு எல்லையான திருவரங்கம் அன்றோ )

அன்று-கருவரங்கத் துட்கிடந்து–திருவரங்க மேயான் திசை – கை தொழுதேன் கண்டேன்-ஓன்று மறந்து அறியேன்
ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ வேழைகாள் -என்று அந்வயம்-

(அறியாக் காலத்துள்ளே –திருவாய் -2-3-4-என்கிறபடியே அறிவு வெளிப்பட தகுதி இல்லாத கர்ப்பத்திலேயே
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
ஜாய மாநம் ஹி புருஷம் யம் பஸ்யேத் மது ஸூதந
ஸாத்விகஸ் ச து விஜ்ஜேயஸ் ச வை மோஷார்த்த சிந்ததம்-பாரதம் -சாந்தி -358-73-
பரமபத நாதனையோ நான் மறவாமல் இருப்பது
எல்லை நில மான அர்ச்சாவதாரங்களில் எல்லை நில மான பெரிய பெருமாள் இடம் அன்றோ நான்
அச்சுவை பெறினும் வேண்டேன் என்று ஈடுபட்டு இருப்பது என்கிறார் -)

——————————————————————

அறிவு நடையாடுகைக்கு யோக்யதை இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்தில் கிடந்தது ஜயமான காலத்திலே
இத் தலையிலே அபிரதிஷேதமே பற்றாசாக குளிரக் கடாக்ஷித்து தன் படிகளைக் காட்டித் தருகையாலே
சம்சாரிகளை தண்ணளி பண்ணி ரஷிக்கைக்காக தாமே கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளுகிற
பெரிய பெருமாளுடைய ஸ்வரூப ரூப குணாதி ஸமஸ்த ஸ்வ பாவங்களையும் சாஷாத் கரித்து அனுபவித்தேன்

காட்சிக்கு அனந்தரமான அஞ்சலி பந்தம் முதலான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன்
மறுக்க இடம் அறும் படி தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள வற்றாய்-ஓதம் கிளர்ந்த சமுத்திர ஜலம் போலே
இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையவனை ஏக தேசமும் மறந்து அறியேன் –

உலக இதர விஷயங்களில் மண்டித் திரிகிற அறிவு கேடர்காள்-மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில்-
மறவாத நான் நினைக்குக்கு ஹேது உள்ள இன்று மறப்பேனோ –

————————————————————————-

அல்லாத தேவதைகள் -சரீர தயா சேஷ பூதர் -நிர்வாஹ்யர் -அவனே சேஷி -நிர்வாஹகன் -என்று
சொல்லும்படி எங்கனே-
அவர்களும் ஒரோ தேசங்களுக்கு ஈஸ்வரருமாய் –
அவர்களுக்குப் பிரதானமான செயல்களும் உண்டாயச் செல்லா நிற்க -என்ன
அதுக்கும் அடி அவனே -அது அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு வர்த்தகம் -என்கிறார்

அப்படியாகில் நாட்டடங்க எம்பெருமானை விட்டுக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே
தலை மடுத்து எடுத்து-திரிகைக்கு அடி என் என்ன
உகவாதார் தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்குகள் -என்கிறார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு -7–

பதவுரை

திசையும்–திக்குக்களோடு கூடிய உலகங்களும்-திக்குகளால் உபலஷிக்கப்பட்ட லோகங்கள்
திசை உறு தெய்வமும்–அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்–அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்–ஆகிய இவை யெல்லாம்,
அசைவு இல் சீர்–கேடில்லாத [நித்யமான] குணங்களை யுடைய
கண்ணன்–ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்–மிகப் பெருமையை யுடையவனாய்
கடல் கடைந்த–(தன் பெருமையைப் பாராது சரணாகதர்களுக்காக உடம்பு நோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்–மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனான எம்பெருமான்
படைத்த–(தன்னிடம் வந்து பணிய மாட்டாதவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கி வைத்த
மயக்கு–அறிவை மயக்கும் பொருள்களாம்.

திசையும் –திக்கோடு கூடின பூமியும் –
திசையுறு தெய்வமும்-அத் திக்கிலே வியாப்தரான தேவர்களும்
தெய்வத்-திசையும் கருமங்கள் எல்லாம்-அவ்வவ தேவதைகளுக்கு பொருந்தின கர்மங்கள் எல்லாம் -த்ரிபுரதஹநாதி

அசைவில் சீர்க்-அல்லாதாருடைய சீருக்கு அசைவு உண்டு போலே காணும்
கண்ணன் -தன்னை இதர சஜாதீயன் ஆக்குவது -தன்னுடைய இச்சையால்
நெடுமால் -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஓதப்படும் பெரியவன்(பெரும் பிச்சன் என்றுமாம் )
கடல் கடைந்த -பெரியவன் என்று இராதே அரியன செய்து நோக்குமவன்
காரோத-வண்ணன் -நோக்காதே அழிக்கிலும் விட ஒண்ணாத வடிவு –

(கண்ணனாய் அவதரித்த போதே பிரம்மா கர்வம் அழித்து -கோவர்த்தன லீலை -பாணாசூர வதம் இத்யாதிகளால்
தனது மஹாத்ம்யம் வெளிப்படுத்தி அருளியவன் அன்றோ)

படைத்த மயக்கு —–பல சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியையும் கொடுத்து வைத்தால் தன் வழி வாராதவர்களை
அறிவு கெடுக்கும் படி –அல்லாதார் அறியா விடுவான் -தைவீ ஹ்யேஷா குண மயீ-ஸ்ரீ கீதை -7-14-
தெய்வத் திசையும் -ஸ்ருஷ்டியாதி கர்மங்கள்
அசைவில் சீர் -நித்தியமான கல்யாண குணங்கள்
கண்ணன் நெடுமால் -ஆஸ்ரிதரை விடாத பெரும் பித்தன்
கடல் கடைந்த -அபேக்ஷிப்பாரே வேண்டுவது
காரோத வண்ணன் -குண ஹீனன் ஆனாலும் விட ஒண்ணாதே

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்
இந்த முக் குண சேர்க்கை பிரகிருதி மாயா என்னாலே படைக்கப் பட்டது -மிக உயர்ந்தது -தைவ தன்மை கூடியது —
லீலைக்காக -பகவத் ஸ்வரூப திரோதானம் -இது –
மாயா -ஆச்சர்யம் என்றவாறு –மாயாவி -மயக்கும் பகவான் –தாண்டிச் செல்வது அரியது–மித்யை இல்லை –
மஹா விசுவாசத்துடன் என்னை அடைந்தவர்களுக்கு -பரம காருணிகனான -நான் -இந்த மாயையை தாண்டுவிக்கிறேன்
தே தரந்தி-அவர்கள் தாண்டுகிறார்கள் -என்னை சரண் அடைந்தவர்கள் —

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன் –அகற்றி நீ என்னை அரும் சேற்றில் அழுத்த –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேன் —
மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் -அரையர் சேவை விருத்தாந்தம்
ஸ்ரீ எம்பார் -கயிற்று வலை காட்டாமல் திருக் கண்களைக் காட்டி -கமலக் கண் என்னும் நெடும் கயிறு -ஸ்ரீ ஆண்டாள் —
கண் வலைப் படாமல் அகவலை அகப்பட வேண்டுமே –
இந்த சரணாகதி -வேறே -சரம ஸ்லோகம் சரணாகதி வேறே –
பயன் பக்தி ஆரம்ப விரோதி போக்க –தடைகளை நீக்கி -பிராயச்சித்தம் பண்ணிப் போக்க முடியாத
பாப மூட்டைகள் உண்டே -அவற்றை தொலைக்க அங்கு -இங்கு உண்மை அறிவு தெரியாமல் திரை இருக்க -அத்தை நீக்க –
மாயையை விலக்கி -ஞானம் தெளிவு பிறக்க –
நாம் சரம ஸ்லோகம் -ரஹஸ்ய த்ரயத்தில் -அங்க பிரபத்தி இல்லை -நேராக மோக்ஷம் கொடுக்கும் –
சர்வ பாபேப்யோ -சர்வ கர்மங்களும் போக்கி இங்கே –
மாம் -சர்வஞ்ஞன் -சர்வ சக்தன்- பூர்ணன்- பிராப்தன்- காருணிகன்- ஸத்ய ஸங்கல்பன் -இத்யாதி

நாட்டினான் தெய்வம் எங்கும்
மஹா க்ரம -படிக்கட்டு வைத்து அருளுகிறார்

திக்கு பலஷிதையான பூமியும் -அவ்வவ திக்குகளில் வர்த்திக்கிற தேவதைகளும் –
அத் தேவதைகளுக்குச் சேர்ந்த-ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களும் யாவும் –
அபஷயாதி (தேய்மானமான)தோஷங்கள் இன்றிக்கே-நித்தியமான கல்யாண குணங்களை யுடையனாய் -அக்குணங்கள் ப்ரேரிக்க வந்து
கிருஷ்ணனாய் வந்து பிறந்த ஸுலப்யத்தை யுடையனாய் –

ஸூலபனான இடத்திலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -தன் பெருமை பாராதே சரணம் புக்க
தேவர்களுக்காக உடம்பு நோவக் கடலைக் கடைந்து அபேக்ஷித சம்பவிதானாம் பண்ணுமவனாய் –
ரஷியாதே அழியச் செய்யிலும் விட ஒண்ணாத கறுத்த கடல் போலே இருந்து குளிர்ந்த வடிவை உடையனானவன் –
தன் பக்கல் வாராதாரை அகற்றுகைக்கு உண்டாக்கின ப்ராமக வஸ்துக்களாய் இருக்கும் —

மயக்கு -மயங்கப் பண்ணும் வஸ்துக்கள் –

(அபஷய விநாஸாப்யாம் பரிணாமர்த்தி ஜன்ம அபி வர்ஜித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-
நாராயண பரம் ப்ரஹ்ம
த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –ஶ்லோகம் 15-–

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:-உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||–ஶ்லோகம் 16 –

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.-என்று ஸ்ரீ ஆளவந்தார் இப்பாசுரத்தை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் -)

———————

இம் மயக்கு பொதுவோ என்னில் –ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும் நோக்கும் -என்கிறார் –

இப்படி அநாஸ்ரீதரை மயங்கப் பண்ணுகிற அளவன்றிக்கே- ஆஸ்ரிதர விஷயத்தில்-ஸத்ய சங்கல்பனான தன் நிலை குலைந்து பக்ஷ பதித்து ரஷிக்கும் என்கிறார் –

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது –8-

பதவுரை

திருமாலே நீ–லஷ்மீநாதனே!, ஸத்ய சங்கல்பனான நீ
முயங்கு அமருள்–(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க் களத்திலே
மயங்க–எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி–ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச் சங்கை
வாய் வைத்து–தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிக் கையால்–போர் செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது–(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எரி கதிரோனை–ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டே யிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்—ரதாங்கம் -சக்கராயுதத்தினால்
மறைத்தது என்–மறைத்தது எதுக்காக?

முயங்க மருள்-முயங்கு அமருள்-சைன்யம் நிறைந்த பாரத யுத்த களத்திலே-

மயங்க வலம் புரி வாய் வைத்து —
அர்ஜுனன் தன்னை நிமித்தமாக நிறுத்தி யுத்தம் பண்ணப் புக்கால் -இவன் க்ரமத்தாலே
தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் போகாத அளவிலே -தன் திரு வாயிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைக்கும் அத்தனை
அதுக்கு ஒருத்தராலும் இறாய்க்கப் போகாது -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற எல்லாரும் மயங்கும் இத்தனை
உகவையாலே மயங்குவாரும் -பயத்தாலே மயங்குவாரும் —

யஸ்ய நாதேந தைத்யா நாம் பல ஹானி ரஜாயத
தேவா நாம் வவ்ருதே -தேஜ-பிரசாதஸ் சைவ யோகி நாம் -ஸ்ரீ விஷ்ணு புரா-5-21-29-என்கிறபடியே

ச கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்–ஸ்ரீ கீதை -1-19-

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்.–
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்—৷৷1.19৷৷

ஸ = அந்த
கோஷோ = கோஷம், போர் ஆராவாரம்
த்ர்தராஷ்ட்ராணாம் = திருதராஷ்டிர கூட்டத்தினரின்
ஹ்ருத³யாநி = இதயங்களை
வ்யதா³ரயத் = பிளந்தது
நபஸ்ச = விண்ணையும்
ப்ருதிவீம்ச = மண்ணையும்
சைவ = அது நிச்சயமாக
துமுலோ = பேரொலி
அவ்யநுநாத³யந் = இடி போன்ற

ஆகாசம் பூமி முழுவதும் எதிரொலிக்கச் செய்ததான ஓன்று சேர்ந்த அந்த சங்கு நாதம்
திருதராஷ்டரனின் புதல்வர்களுடைய ஹ்ருதயங்களைப் பிளந்தது
நம்முடைய சேனை இந்த சப்தத்தால் தோல்வி அடைந்ததை உணர்ந்து
மனசை உளுக்கும் படி -சஞ்சயன் முதல் பதில் -மறைத்து -மேலே மீண்டும் சொல்லுவான் –

இதே ஒலி பாண்டவர்களுக்கு கேட்டு மகிழ்ச்சி கொடுத்தது ஸூசகம்

அத்யைவ நஷ்டம் குருணாம் பலமிதி தார்த்த ராஷ்ட்ரா மே நிரே-தத் விஜயா காங்ஷிணே சஞ்சயோ-
அகதயத் ஈத்ருசீ பவதியானாம் விஷயஸ் திதி ரிதி

வானத்து –மறைக்க ஒண்ணாத நிலத்திலே
இயங்கு -ஒரு க்ஷணம் ஓர் இடத்தில் நில்லாதவனை
மெரி கதிரோன் தன்னை-குறித்துப் பார்க்க போகாதபடி கிரணங்களை விடா நின்றுள்ளவனை

முயங்க மருள்-தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே

போராழிக் கையால் பொருது ——ஸத்ய சங்கல்ப என்ற ஸ்ருதிக்குச் சேருமோ –
நமே மோகம் வஸோ பவேத் -(பாரதம்) என்று- அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ –
ஈஸ்வரத்துவத்துக்குச் சேருமோ

திருமாலே -ஸத்ய சங்கல்பத்தை அழிக்குமவளைச் சொல்லுகிறது -(பித்தன் பனி மலர் பாவைக்கு -அல்லி மகள் போக மயக்குகள் )

போராழி இத்யாதி -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று சொன்ன பீஷ்மாதிகள் முன்னே ஆயுதத்தை எடுத்துப் பொருது –

மயங்க -எல்லார்க்கும் ஆஸ்ரித விஷயத்திலே அவர்கள் சங்கல்ப்பித்த படியே நடத்தும் பக்ஷ பாதி
மயங்க -ஆயுதம் எடேன் என்று வைத்து அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லப் பற்றாமே ஒரு கால் முழுக் காயாக அவிய
வானத்து -தூரத்து நிற்கிறவனை
இயங்கும் -சஞ்சரிக்கிறவனை –
முயங்கு அமருள் -தனி இடத்தில் அல்ல -எல்லாரும் காண -எத்திறம் அறிந்தேன் –
திருமால் -நாட்டார் பரிமாற்றம் அல்ல -அவை அந்த புரத்தில் பரிமாற்றம்
போரிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே கொன்றான் -ஆதித்யனை மறைத்தான் –ஸ்ரீ பீஷ்மரைத் தொடர்ந்தான் –
முயங்கு அமருள்-நெருங்கிய யுத்தம்
தேராழி –ரதாங்கம்-திரு வாழி –

(நிமித்த மாத்ரம் பவ -ஸ்ரீ கீதை -11-33-
யஸ்ய தாநேந தைத்யா நாம் பல ஹாநிர ஜாயத தேவாநாம் வவ்ருதே தேஜஸ் ப்ரஸாதஸ் சைவ யோகி நாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-29-
ஸ கோஷா தாரத்ர ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை -1-19-
ஸத்ய காம -ஸத்ய ஸங்கல்ப
த்யவ் பதேத் ப்ருத்வீ ஸீர்யேத் ஹிமவான் ஸகலீ பவேத்
ஸூஷ்யத் தோய நிதி கிருஷ்ணே ந மே மோகம் வஸோ பவேத் -பாரதம் -உத் -70-48-
எது செய்தாகிலும் எப்படிப் பட்டாகிலும் அடியார்களை ரஷித்தே தீருவேன் -விசேஷ ஸங்கல்பம் கொண்டுள்ளான் அன்றோ –
இந்த விசேஷ ஸங்கல்பம் பழுதாமைக்காக ஸாமான்ய ஸங்கல்பங்களையும் மாற்றிக் கொள்பவன் அன்றோ )

——————————————

துரியோத நாதிகள் பீதி அதிசயத்தாலே அறிவு அழியும்படியாக -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்திலே மடுத்தூதி –
மறைக்க ஒண்ணாத தன்னிலமான ஆகாசத்தில் -குறிக்க ஒண்ணாத படி இதஸ்தநஸ் சஞ்சரிக்குமவனாய்
ஸ்வ தேஜஸால் சர்வரையும் அபி பவிக்கிற கிரணங்களை யுடையவனான ஆதித்யனை ஆஸ்ரித விஷயத்திலே
ஓரத்துக்கு உவாத்தான பிராட்டியார் பக்கல் பெரும் பிச்சானவனே –

சகல பிராணிகளும் யுத்த தித்ருஷயா வந்து
நெருங்கிக் கிடக்கிற சமர பூமியிலே பொருகைக்குப் பரிகரமான திரு வாழி யோடே கூடின திருக் கையாலே
பீஷ்மாதிகளைத் துரத்திப் பொருது ஸத்ய சங்கல்பனான நீ அத்தைக் குலைத்து
திரு வாழி யாலே மறைத்து அருளிற்று எதுக்காக

சர்வ சாதாரணமான உறவுக்குச் சேருமோ –
ஸத்ய சங்கல்பனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ
உன் பெருமைக்குப் போருமோ-
இவை எல்லாவற்றையும் கால் கடைக் கொண்டு இங்கனே செய்து அருளிற்று எதுக்காக
ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் ஆகாதே -என்று வித்தாராகிறார் –

தேராழி –ரதாங்கம்-

————————————————————————

ஆஸ்ரிதரை ஒழியவும் ஜகத்துக்கு சத்தா நாஸம் வரில் பரிஹரிக்கும் என்கிறார் –

இவ்வளவு அன்றிக்கே ஆபத்து முதிர்ந்த அளவில் –
ஆஸ்ரிதர் -அநாஸ்ரிதர் -என்று தரம் பாராதே-இருந்ததே குடியாகத்
தன்னை அழிய மாறி நோக்கும் ஸ்வபாவன் -என்கிறார் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் –9-

பதவுரை

விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!(மலர்ந்த இதழ் கொண்ட சேவடிக்கு விசேக்ஷணம் என்றுமாம் )
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்(மஹா வராஹ ஸ்புட பத்ர லோஷண )
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?

விரி தோட்ட-சேவடியை-மலர்ந்த இதழ்களை யுடைய தாமரையைப் போன்ற சிவந்த திருவடியை –
விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் – பொரா நின்ற கோட்டை யுடைத்தான-ஏனமாய்-அத்விதீயமான ஏனமாய்
ஜாதிச் செருக்காலே பூமியை உழுது கொடு திரியா நிற்கும்(மானமிலா பன்றியாய் -உபமானம் அபிமானம் இல்லா பன்றியாய் )
புக்கு இடந்தாய்க்கு அன்று உன்-ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –பிரளயம் கொண்டு உழுகைக்கு பூமி இல்லாத அன்று
தன் திரு வயிற்றிலே வைத்து நோக்கும் –

இத்தால் சொல்லிற்று யாயிற்று உதாரனாய் இருப்பான்
ஒருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்தால் நாற்பது பேருக்கு இட்டு மிகும்படி சோறு உண்டாக்குமா போலே
ரஷ்யத்தின் அளவன்று இறே ரக்ஷகன் பாரிப்பு –

விரி தோட்ட-சேவடியை நீட்டித்-விரியா நின்ற தோடுகளை (இதழ்களை) யுடைத்தான தாமரை போலே இருந்துள்ள சேவடியை நீட்டி
விரி தோட்ட -என்று சம்புத்தி (விளிச்சொல்) யாகவுமாம் –
திரு மேனியில் ஒளி விரியும் தோட்டை யுடையவனே –
திசை நடுங்க-திக்குகள் எல்லாம் நடுங்க –
விண் துளங்க-விண்ணில் உள்ள தேவ ஜாதி எல்லாம் நடுங்கும் படியாக
மாவடிவின் நீ யளந்த மண் —-பெரிய வடிவைக் கொண்டு நீ அளந்த மண் –

ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு (ஸ்ரீ மஹா வராஹமாய் ) புக்குச் செய்யிலும் செய்யும் –
சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் (ஓங்கி உலகு அளந்த உத்தமனாய் )செய்யிலும் செய்யும் –

பொரு-ஆபன்னராய் விலக்காதார்க்கும் -தன்னைக் கொண்டு கார்யம் கொள்ளுவார்க்கும் செய்யும் படி –
விரி தோட்ட-விரிகிற தோட்டை உடையவை போலே இருந்துள்ள –
விண் துளங்க -அபி மானிகளான தேவர்கள் -நடுங்க
பெரிய வடிவாலே அளந்த மண் -திரு எயிற்றுக்கு ஒரு நீல ரத்னம் போலே இருப்பதே -என்ன ஆச்சர்யம் –

(ஸர்வ ரக்ஷகன் -தன்னை தாழ விட்டாகிலும் ரக்ஷிப்பவன் என்பதை உலகு அளந்த -உலகு இடந்த -வ்ருத்தாந்தங்களால் காட்டி அருளுகிறார் இதில்
தலையால் சுமந்தும் தலையிலே காலை வைத்தும்
பெரிய வடிவையோ சிறிய வடிவையோ
உயர்ந்த வடிவையோ தாழ்ந்த வடிவையோ
கொண்டு தான் ரக்ஷிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாதவன் -அன்றோ –
அவதாரங்களில் மெய்ப்பாடு தோன்ற அன்றோ அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ
தந்தத்தின் நுனியில் ஒரு மறு போல் அன்றோ பூமி இருந்தது -ரஷ்யத்தின் அளவை விஞ்சி நிற்கும் ரக்ஷண பாரிப்பு –
களிறு மருப்பின் நாப்பண் புள்ளி நிலனும் -பரிபாடல் )

——————————————–

விகசிதமான இதழையுடைய தாமரை போலே சிவந்த திருவடிகளை வளர்த்து
திக்கு உப லஷிதையான பூமியில் உள்ளார் நடுங்கவும் உபரிதன லோகத்தில் உள்ளார் நடுங்கவும்
பெரிய வடிவை யுடையையாய்க் கொண்டு நீ அளந்து
கால் கீழ் இட்டுக் கொண்ட பூமியானது –

நில மகள் முலையில் குங்குமத்தோடே நிலத்தோடு வாசி அற எங்கும்
ஜாதி உசிதமான செருக்காலே பொருது கொடு வருகிற கொம்புகளை யுடைத்தாய் அழகுக்கு அத்விதீயமான
வராஹ வேஷத்தை உடையனாய்க் கொண்டு –
பிரளய ஜலத்திலே முழுகி அண்ட பித்தியினின்றும் இடந்து எடுத்துக் கொண்டு ஏறின உனக்கு அக் காலத்தில்
உன் எயிற்றின் ஏக தேசத்திலே ஒரு மறுப் போலே கிடந்தது ஓன்று அன்றோ –

ஆபத்து வந்தால் தலையால் நோக்குதல் –தலையிலே காலை வைத்து நோக்குதல் -செய்யுமவன் அன்றோ நீ
ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ -என்று உகந்து அனுபவிக்கிறார்

விரி தோட்ட என்று விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

————————————————–

சேராதன செய்தும் ஆஸ்ரிதரை நோக்குமவன் -என்கிறார்-

இப்படி பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்து நோக்கும் அளவு அன்றிக்கே –
சிறிய வடிவைக் கொண்டு
பெரிய செயலைச் செய்து நோக்கிலும் நோக்கும் -என்கிறார் –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்—10-

பதவுரை

மண்ணும்–பூமியும்
மலையும்–குல பர்வதங்களும்
மறி கடலும்–அலை யெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்–காற்றும்
விண்ணும்–ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது–(உனது திரு வயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்–ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);(மார்க்கண்டேயர் தாமும் உள்ளே இருக்கக் கண்டாரே )
எண்ணில்–இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்–அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம்
எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று–இவற்றை யெல்லாம் விழுங்கின வக் காலத்தில்
இவ் உலகு அளவும் உண்டோ–இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?(வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே )

மறி கடலும்-அலை எறியும் சமுத்ரங்களும்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு–
எண்ணிக்கைகளை எல்லை கண்ட -எண்ணிறந்த கல்யாண குணங்களையும்–திருச் சக்கரத்தையும் யுடைய உனக்கு –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்–ஆதாரமான மண்ணும் -அதற்கு உறுதியான மலையும் –வேலியான கடலும் –
தாரகமான காற்றும் –அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும் -விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் –

ஐந்தர ஜாலிகர் செயல் போலே பொய்யன்று இது -ஆப்தரான ஆழ்வார்கள் மெய்யென்பர்

எண்ணில்-ஆராயில்

அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு –
எண்ணிறந்த குணங்களையும் திரு வாழி யையும் யுடையனான யுனக்கு

அலகாவது -பரிச்சேதகம் (அளவிடும் கருவி )இறே –

அத்தை அளவு கண்ட சீர் -அபரிச்சேதயமான அலகை பரிச்சின்னமாக்கின சீர்

அன்றிவ்வுலகளவும் உண்டோ வுன் வாய்—-இந்த ரக்ஷணத்தில் த்வரை தான் சிறிய வடிவில் பெரிய ஜகத்தை வைத்தான் –

மண்ணும் இத்யாதி -சேராச் சேர்த்தியானவை அடைய மெய் என்பர் –
இந்திர ஜாலம் என்னப் பெற்றதோ –
ரிஷிகள் கூப்பிடா நிற்பார்கள்

எண்ணில்-அலகளவு கண்ட-எண்ணை அளவு படுத்தும் குணங்கள்-

தாதூ நாமிவ சைலேந்தரோ-குணாநாம் ஆகரோ மஹான் -கிஷ் -15-21-
பஹவோ ந்ருப கல்யாண குணா -அயோத்யா -2-26-(தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ )

ஆழியாய்க்க்கு-குணங்களும் அப்படியே சீரிய கை வுலகளவும் உண்டோ-ரக்ஷகத்வ பாரிப்புக்கு அடைவில்லாமை –

(ரக்ஷிக்கும் போது இன்ன செயலைச் செய்வோம் என்னும் நியதி இல்லாமல் சேராத செயல்களை செய்து ரக்ஷிப்பவன் அவன் என்கிறார் –
தத பஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மந -பாரதம் -ஆரண்ய –
எண்ணும் அலகு -கருவி -லக்ஷம் கோடி சங்கம் மஹா சங்கம் பத்மம் குமுதம் –
தாதூ நாமிவ சைலேந்தரோ குணா நாமா கரோ மஹான் -கிஷ்கிந்தா-15-21- -தாரா வாக்யம்
தே தமூசுர் மஹாத்மா நாம் பவ்ர ஜான பதைஸ் ஸஹ
பஹவோ ந்ரூப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே -அயோத்யா -2-26- )

————————————————–

சர்வ (சாதாரணமான )ஆதாரமான பூமியும் -அதுக்கு தாரகமான குல பர்வதங்களும் அத்தைச் சூழ்ந்து கிடந்து அலை எரிகிற சமுத்ரங்களும்
தத் அந்தர்வர்த்திகளுக்கு உஸ்வாசாதி ஹேதுவான காற்றும் -அதுக்கு அவகாச பிரதமான ஆகாசமும் –
இவற்றை அடையத் திருவயிற்றிலே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்து அருளின இத்தை –
பரமார்த்தம் என்று உன் சக்தி சாமர்த்தியத்தை
தறை காண வல்ல வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள் –

உன் படியைப் பரிச்சேதித்து அநுஸந்திக்கும் அளவில் அளவிடுகைக்கு பரிகரமான ஆயுதங்களையும் பரிச்சேதித்து எல்லை
கண்டு இருக்கிற அசங்க்யாதமான கல்யாண குணங்களையும் –
திரு வாழியையும் யுடையையான உனக்கு இவற்றை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்து அருளின அன்று
இஜ் ஜகத்தோ பாதியும் பெருமை யுடைத்தோ
உன்னுடைய திருப் பவளமானது-இந்த சிறிய திருப் பவளத்தைக் கொண்டு
பெரிய ஜகத்தை அமுது செய்து அருளின இவ் வாச்சர்யம் என்னாய் இருக்கிறதோ -என்று ஈடுபடுகிறார் –

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரம் -1- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

கோயில் திருமலை பெருமாள் கோயில்
போக மண்டபம் புஷ்ப்ப மண்டபம் தியாக மண்டபம்
போல் முதல் ஆழ்வார்கள்
ஜென்ம வைபவத்தால் முதன்மை பெற்ற –
செம் பொன் கழலடி செல்வா பலதேவா போல் பொற் கால் இட்ட ஆழ்வார்கள்
நல் தமிழால் நூல் செய் உய்வித்த பெற்றிமையோர் -இரண்டாம் பெருமை
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் -பொய்கையார் பூதத்தார் பெயர் தேசுடனே தோன்றும் சிறப்பு
திருக்கோவலூர் -த்வாபர யுக முடிவில் -திரு அவதாரம் –

மூவரும் சேர்ந்தே புறப்பாடு திருவரங்கத்தில் சதயம் அன்று –
ஸ்ரவணம் -விஷ்ணு நக்ஷத்ரம் –
ஒண் சங்கு கதை வாள் ஆழி -பொய்கையார் பூதத்தார் பேயர் திருமழிசை நால்வரும் –
பாஞ்ச ஜன்யம் கோஷிக்கும் அன்றோ –
கனைத்து இளம் கற்று எருமை-

வேத வேதாந்த -பாஹ்யர் கலங்க –
திக்கு எட்டும் பரவ

துலாயாம் ஸ்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சன வாரி ஜாத்
த்வாபரே பாஞ்ச ஜன்ய அம்சம் ஸரோ யோகி நமாஸ்ரயே

துலாயாம் ஸ்ரவணே ஜாதாம்
காஞ்யாம் -முத்தி தரும் க்ஷேத்ரம்
ஐப்பசி தொடங்கியே எண்ணுவோம்
நக்ஷத்ரமும் திருவோணம் தொடங்கி
காஞ்சன வாரி -பொற்றாமைக் குளத்தில் -அயோனிஜ வாஸம் -அத்தையே பேராக சர யோகி -என்று கொண்டார்
த்வாபர யுக சந்தியில் -கலியுக பூர்வ ஸந்த்யை
சூரியனை தீபமாக ஏற்றி
ஸ்ரீ யபதி -குறித்து -காணவே விளக்கு ஏற்றினார் அவரை -வணங்குவோம்

செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே
திருக்கச்சி மா நகரம் செழிக்க வந்தோம் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே
வநச மலர்க் கருவதனில் வந்த மைந்தன் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற் பதமும் வாழியே
பொன் முடியும் திரு முகமும் பூதலத்தில் வாழியே

கலவ் -நாராயண பாராயண -ஸ்ரீ மத் பாகவதம்
தாமிரபரணி க்ருதமாலா பயஸ்வினி பாலாறு-கரையில் இவர்கள் ஆவிர்பாவம் ஸூ சிதம்
பர பக்தி பர ஞான பரம மூன்று அவஸ்தைகள்-ராஜவித்யா- ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஞான தர்சன பிராப்தி

முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்தில் ஊன்றி இருப்பர் -ஊற்றம் பற்றியே சொல்வர்-த்ரிவிக்ரமம் -திருவேங்கடம் மூன்றும் பாடுவார்

இவையே பரத்வத்துக்கு விபவத்திலும் அர்ச்சையிலும் பிரதிநிதி

ஸம்ஸ்லேஷத்தில் ஆனந்தம் விஸ்லேஷத்தில் துக்கம் -பர பக்தி
வழி அல்லா வழியில் அடையும் த்வரை பர ஞானம்-ஞானம் ப்ரேமம் சாஷாத்காரம் -மூன்றும் இந்த மூன்று அவஸ்தைகள்

உபய விபூதி நாதன் -ஸர்வேஸ்வரன் -நேராக நாராயணன் சொல்லாமல்
நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்
திருக்கண்டேன் -ஸ்ரீ யபதி -திரு ஆழி திரு பாஞ்ச ஜன்யம் சம்பந்தம் சொல்லியே -காட்டி
உயர்வற உயர்நலம் -உடையவன் -அயர்வறும் அமரர்கள் நாதன் -வண் புகழ் நாரணன் -நம் திருவுடை அடிகள் -மூன்று திருவாய் மொழியில்
திருவில்லா தேவரை தேறேன் மின்
நம் கண்ணன் அல்லது களை கண் மற்றிலேன்
சங்கு -பால் போன்ற வெண்மை -ஞானம்=ஓங்கார வடிவம் –
வருத்தும் –புற விருள் மாற்ற -எம் பொய்கைப் பிரான்–திருவோண திருவிளக்கு முதலில் ஏற்றி -அருளி

ஸ்ரீ யதோத்தகாரி சந்நிதியில் -பொற்றாமரை பொய்கையில்-பத்ம மலரில் —
படை போர் புக்கு முழங்கும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சம்
துலா ஐப்பசி மாச திருவோணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவவதாரம் –
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ஸஸ ப்ரஹினோதி தஸ்மை -போலே
தமிழ் மறைகளை வெளிப்படுத்தி அருள பத்மத்தில் அவதரிப்பித்தான் போலும் –
செந்தமிழ் பாடுவார் -செஞ்சொற் கவிகாள் –இன்கவி பாடும் பரம கவிகள் -திருவோணத்தான் உலகாளும் என்பார்களே –

————————————————–

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

கலி வைரி தாஸர் -நம்பிள்ளை கருணைக்குப் பாத்ரபூதர்
காருண்யத்துக்கு ஒரே கடல்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடுபட்ட ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகளை வணங்குகிறேன் –

தன்மை சிங்கம் ரோகிணி நாள் தழைக்க வந்தோம் வாழியே
தாரணியில் சங்க நல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழ் உரைப்பான் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மன் புகழ் சேர் சடகோபர் வளம் உரைப்பான் வாழியே
மறை நாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைத்தான் வாழியே
அன்புடன் உலகாரியர் தம் அடி யிணையோன் வாழியே
அபய பிரத ராசர் தாள் அனவரதம் வாழியே –

————————————————————–

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்

க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி –தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
புண்ய கோடி விமானம் அன்றோ -ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-புஷ்கரணீயிலே புஸ்கரத்திலே-விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்
இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது

கைதை-கேதகை –தாழை-கைதை வேலி மங்கை —என்றும்
கண்டல் வேலி மங்கை பெரிய திருமொழி -1-3-10–(கண்டல் -தாழை )என்றும்
கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய் -4-10-8—என்றும் சொல்லுமா போலே —
அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -2-10-8–என்னும் படி -(நீர் நிலைகளில் அன்றோ தாழை செழிக்கும் )
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–

சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம் பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற் றாமரைப் பூவிலே ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது
பத்ம ஜனான பூவனைப் போலே யாயிற்று பொய்கையரான இவர் பிறப்பும் –

வந்து உதித்த என்கையாலே
ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -(இராமானுச நூற்றந்தாதி -8-)என்னக் கடவது இறே –
பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை –
அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
தத்தீரமான பொய்கை என்கை –

பொய்கைப் பிரான் -மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
தீர்த்த கரராய்த் திரியுமவர் (இரண்டாம் திருவந்தாதி-14- )இறே(தீர்த்தங்களுக்கும் தீர்த்தமாகித் திரியுமவர் )

கவிஞர் போரேறு -ஆகையாவது
கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி -முதல் ஆழ்வார்களில் முதல்வரான -ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-

உலகம் படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் –
செஞ்சொற் கவிகாள் என்றும்
செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி -2-8-2 )என்றும் கொண்டாடப் படுமவராய் -(பாலேய் தமிழர் இசைக்காரர் )
நாட்டில் கவிகளுக்கும் விலக்ஷண கவியாய் இருப்பர்
இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது –
அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால்
விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –

வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று
வையத் தடியவர்கள் -ஆகிறார் -பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அவர்கட்கே இறே வாழ வேண்டுவது
வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இறே இருப்பது –

இத்தால் இவர்கள் வாழுகையாவது —
சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி (திருவாய்-3-2-4 )-என்னக் கடவது இறே –
இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –

(இராமானுச நூற்றந்தாதி எட்டு கூடி இருக்கும் ஏற்றம் கொண்டு இருக்கும்)

அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது –
அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
தமிழான பிரகாரத்தாலே ஸூலபமாய் -அது தான் நூறு பாட்டாய் -அந்தாதியாய் இருக்கை-

அன்றிக்கே –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று
வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –

நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது —
வையம் தகளியாய் -என்று தொடங்கி -ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்

அன்றிக்கே –
படி -என்று உபமானமாய் –
திராவிட வேதத்துக்கு படிச்சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –

விளக்கம் -பிரகாசம்
படி என்று விக்ரஹமாய் -திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –

(படி -பூமியிலே –
உபமானம் -படி என்று உரைத்து காட்டும் படித்து அன்றோ அவன் படிவம் –
திராவிட சாகரம் -திருவாய் மொழிக்கு உப மானம்
படி விக்ரஹம் -மூன்று நிர்வாஹங்கள்)

செய்தான் பரிந்து –
பரிவுடன் செய்கை யாவது –
சேர்ந்த விஷய (பாகவத விஷய -மற்ற ஆழ்வார்கள் உடன் சேர்ந்த என்றுமாம் )ஸ்நேஹத்தாலே -என்னுதல் –
பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இறே –
ஸ்நேஹத்தாலே (எண்ணெய்- அன்பு )இறே விளக்கு எரிவது

இத்தால்
அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

———————————————————–

அவதாரிகை –

ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -திரு விருத்தம் -75
இன் கவி பாடும் பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் -என்னும் இவர்கள் அவதரித்தது -ஒரோ தேசங்களில் யாகிலும்
( கச்சி நகர் வந்துதித்த /கடல் மல்லை பூதத்தார் / தோன்றியவூர் வன்மை மிகு கச்சை மல்லை மா மயிலை )
ஞானப் பெருமையால் -( காலப் பழமையால் ) இன்ன விபூதி ( விடம் )என்று நிச்சயிக்கப் போகாது –

பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்–( பெருமாள் திருமொழி-3-8- )
பகவத் விஷயத்தில் அவகாஹியாதார் எல்லாரும் தமக்குப் பேயராய் இருப்பர்
அவர்கள் நிலையிலே தாம் நில்லாத படியால் அவர்களுக்குத் தாம் பேயராய் இருப்பர் –
இப்படியாலே பகவத் விஷயத்திலே அவகாஹியாதார் இருக்கும் இடத்தில்
ஸ்தாவரங்கள் உள்ள காடே அமையும் என்று இருப்பார்கள் –

ஆன் விடை ஏழு அன்று அடர்த்தற்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே
சர்வேஸ்வரன் திரு உள்ளம் ஊற்றம் அறுத்த அளவிலும் கிருபையைப் பண்ணும்
தம்முடைய மனசிலும் கொடுமையை வைத்தேன் என்கிறார்
இனி அவர்கள் மனுஷ்யர் அல்லர் என்று செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ள அமையும் –

சிறந்தற்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்-(இரண்டாம் திருவந்தாதி -46)என்னும் படியே
அறிவு நடையாடாதவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்குமதில்
காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-

இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு
திருக் கோவலூரிலே ஒரு (மிருகண்டு மஹ ரிஷியின் )இடை கழியிலே ஒருத்தர் புக்குக் கிடக்க-(சயனித்து இருக்க )

இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க(அமர)

மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –

இருவர் வந்து நெருக்க —
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86–என்றும்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -பெரியாழ்வார் -என்னும் நீயும்
உன் பரிகரம் -திருவடி சென்று -நலிய புக —
ந கச்சின் நாபராத்யதி -என்று ஏறிட்டுக் கொண்டு நோக்கும் திருமகளும் –

குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -(முதல் திருவந்தாதி )
மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி -(புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )

வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி —
காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில் போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே –
இவ் வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –

இனி-இப்போது

இப்படி இருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
ஞானம் ஆகிற விளக்கை ஏற்றினார் -(முதல் ஆழ்வார் )
ஞான தீபேன பாஸ்வதா -(ஸ்ரீ கீதை -10-11)
விளக்கு யுண்டானாலும் ஞானம் இல்லையாகில் பதார்த்தங்களை விவேகிக்கப் போகாதே –

முதல் ஆழ்வாருக்கு ஞானம் பிறந்த படி சொல்லிற்று –
( சேமுஷீ பக்தி ரூபா )-

இருவராவாருக்கு ஞானம் முற்றி பக்தியானபடி சொல்லிற்று

மூவராவார்க்கு பக்தியை யுடையராய் அவனை ஒழிய செல்லாதவர்களுடைய சாஷாத் காரம் பிறந்த படி சொல்லிற்று

இம் மூவருக்கும் அர்த்தம் ஒன்றே –
மூன்று ரிஷிகள் கூடி ஒரு வியாகரணத்துக்கு கர்த்தாக்கள் ஆனால் போலே
கர்த்ரு பேதம் யுண்டே யாகிலும் –
அர்த்த சரீரம் ஒன்றே –
த்ரி முனி வியாகரணம் -என்னுமா போலே

——————————————————————–

அவதாரிகை –
ஸ்ரீ அப்புள்ளை ஸ்வாமி —
ஸ்ரீ யபதியாய்-அவாப்த ஸமஸ்த காமனாய்-ஸமஸ்த கல்யாண குணாதி மகனான -சர்வேஸ்வரன்
நித்ய விபூதியில் -நித்ய அசங்குசித ஞானரான நித்ய ஸூரிகளை நித்ய கைங்கர்யம் கொண்டு
நித்ய ஆனந்தியாய் இருக்கச் செய்தேயும் (ந ஏகாகி ந ரமேத )

அவர்களைப் போலே கைங்கர்ய நிரதராய்-வாழுகைக்கு இட்டுப் பிறந்து வைத்து -அதுக்கு அசலாய் –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி பரவஸ்யராய் பரபிரமிக்கிற சம்சாரி சேதனரைத் திருத்திப் பணி கொள்ளுகைக்காக –
இவர்கள் அழிந்து கிடக்கிற தசையில் ஸ்வ ஆஸ்ரய உபகரணமாக கரண களேபரங்களைத் தன் கருணையால் கொடுத்து அருளி
அவற்றைக் கொண்டு விபசரியாதே நல் வழி நடக்கைக்கு உடலாக ஸ்ருதியாதி சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பிக்க

அவற்றைத் திரஸ்கரித்து -ஸ்வைரம் சஞ்சரிக்கிற தசையிலே ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து அவதரித்து அருளி
உபதேச அனுஷ்டானங்களாலும் ரூப உதார குண சேஷ்டிதங்களாலும் வசீ கரித்து இவர்களைத் திருத்தப் பார்த்த இடத்தில்
அவற்றுக்கும் அகப்படாத படி இதர விஷயங்களில் மண்டி இவர்கள் நஷ்ட கல்பராய் போகக் கண்ட படியால்
ஆழ்வார்களைக் கொண்டு இவர்களைச் சேர்த்துக் கொள்வானாக –
ஆ முதல்வரான (திருவாய்-7-9-3 )-முதல் ஆழ்வார்களை அனந்தரம் அவதரிப்பித்து அருளினான் –

இவர்கள் ஆகிறார் –
பகவதாகஸ்மிக கடாக்ஷ விசேஷ லப்தமான ஞான ப்ரேமங்களை குறைவற யுடையராய்
நித்ய ஸூரிகளைப் போலே பிறப்பே பிடித்து -பகவத் அனுபவத்தில் பழுத்து -சம்சார யாத்திரையில் கண்ணற்று
இன் கவி பாடும் பரம கவிகள் (திருவாய்-7-9-6 )- என்றும் –
செந் தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி -2-8-2-)-என்றும் நாவீறுடைய பெருமாளும் -நாலு கவிப் பெருமாளும்
கொண்டாடும்படியான வேண்டப்பாடு யுடையராய் –

பரத்வாதிகள் ஐந்தையும் ஒரு காலே கண்டு மண்டி அனுபவிக்கும்
சதிரை யுடையராய் இருக்கச் செய்தே-ஆறு பெருக்கு எடுத்து எங்கும் ஒத்துப் போகா நிற்கச் செய்தே
நீருக்கு நோக்கு ஓர் இடத்திலேயாய் இருக்குமா போலே
திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் –
திருமலையிலும் கால் தாழ்ந்து (ஈடுபட்டு )
அனுபவித்துப் போருமவர்களாய்-

அறிவுண்டாய் இருக்க பகவத் விஷயத்தை கால் கடைக் கொண்டு இதர விஷயங்களில்
மண்டித் திரிகிற சம்சாரிகளோட்டை ஸஹவாசம் துஸ் சஹமாய் -அவர்கள் வர்த்திக்கிற நாட்டை விட்டு
அறிவுக்கு அடைவில்லாத ஸ்தாவரங்கள் வர்த்திக்கிற காட்டை விரும்பி -அவ்விடத்தில் யத்ர சாயங்க்ருஹராய்
ஒருவரை ஒருவர் அறியாத படி மறைந்து வர்த்தித்தார் சில மஹா புருஷர்கள் ஆயிற்று –

இப்படி வர்த்திக்கிற இவர்கள் மூவரும் யாதிருச்சிகமாக ஒரு நாள் திருக் கோவலூர் பிரதேசத்தில் வந்து சங்கதராக
அவ்வளவில் பெரும் மழையும் பெரும் காற்றும் பிரவர்த்தமாக –
அத்தைக் கண்டு மழைக்கு ஒதுங்க ஓர் இடை கழியிலே
ஒருவர் புக்கு கிடக்க மற்றையவர் வந்து -திறக்க வேணும் என்ன –

ஒருவர் கிடக்க இடம் போரும் அத்தனை -என்ன

ஒருவர் கிடந்த இடம் இருவருக்கு இருக்கலாம் காணும் என்ன —
ஒருவர் மூச்சு ஒருவர் பொறாத சம்சாரத்திலே
இப்படிச் சொன்ன இவர் கேவலர் அல்லர் -என்று திறக்க –
அவரும் புகுந்து இவ்விருவருமாக இருக்கிற அளவிலே

மற்றையவரும் வந்து திறக்கச் சொல்ல -எங்கள் இருவருக்கும் இருக்க இடம் போரும் அத்தனை -என்ன –

இருவர் இருந்த இடம் மூவருக்கு நிற்கலாம்
இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே –

ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களைப் பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க –
நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றிப் பார்க்க வேணும் என்ன –

அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை –
பர பக்தி ரூப ஞானத்தால் தரிசித்து
அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான -வையம் தகளி -அருளிச் செய்தார் –

அநந்தரம்
ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே
அந்தப் பர பக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-
அன்பே தகளி -அருளிச் செய்தார் –

அநந்தரம்
மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-
திருக் கண்டேன் அருளிச் செய்தார் –

ஞான பக்தி சாஷாத்காரங்கள் -மூன்றும் பிரபந்த த்ரயத்துக்கும் தாத்பர்யமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து
இருக்க -விருத்தமாக
இங்கனே சொல்லலாமோ என்னில்-அதுக்கு குறை இல்லை –

அங்கு ஞானம் என்கிறது -பர பக்தி ரூபா பன்ன ஞானத்தை –
பக்தி என்கிறது -பர ஞான தசா பன்னமான ப்ரேமத்தை-

சாஷாத்காரம் என்கிறது -பர ஞான விபாக ருபாயான பரம பக்தியை -கர்மா அனுஷ்டானகாந்தமாக ஞானம் உதித்து –
அது த்யான உபாஸனாத் யவஸ்தா பன்னமாய் முற்றி –
அநந்தரம் –
த்ரஷ்டவ்ய -என்னும் படி சாஷாத்கார ரூபமாய்
அநந்தரம்
விஷய வை லக்ஷண்யத்தை அவகாஹித்து பக்தி ரூபாபன்னமாய்-பின்னை பர பக்தியாதிகளாக பரிபக்வமாம்
பிராமாணிகர் படியில் இவர்களுக்கு முதலிலே அன்வயம் இல்லை இறே –

கர்ம ஞான அநு க்ருஹீதை யான பக்தியினுடைய ஸ்தானத்தில் பகவத் பிரசாதம் நின்று
அநந்தரம் விளைந்த பர பக்தி யாய்த்து இவரது என்று இறே பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கு
நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வது -(-ஈட்டில் -வீடுமின் முற்றவும் -)
அது அல்லாத ஆழ்வார்களும் ஒக்கும் இறே –
அல்லாத போது ஆழ்வார்கள் எல்லாரும் ஏக ப்ரப்ருதிகள் என்னப் போகாதே
ஆகையால் விரோதம் இல்லை –

பர பக்த்யாதிகள் மூன்றும் ஓர் ஒருவருக்கே குறைவற யுண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓர் ஒருத்தருக்கு ஒவ் ஒன்றிலே ஊற்றமாய் இருக்கும்-
பகவத் ஸ்வரூபாதிகள் எல்லாம் எல்லார்க்கும் அனுபாவ்யமாகா நிற்கச் செய்தே
ஓர் ஒன்றிலே ஒவ் ஒருத்தருக்கு ஊற்றம் சொல்லுகிறாப் போலே
அனுபவ அபி நிவேச ரூபை யான பரபக்த்யாதி அவஸ்தைகளிலும் தனித் தனியே ஊற்றம் சொல்லக் குறை இல்லை –

கர்த்ரு பேதம் யுண்டாய் இருந்ததே யாகிலும் ஒருவனுக்கே க்ரமத்திலே பிறக்கக் கடவ
பரபக்த்யாதி அவஸ்த்ய த்ரயமும்
தளமாக பிரபந்த த்ரயமும் அவதரிக்கையாலே
அர்த்த க்ரமம் பார்த்தால் ஏக பிரபந்தமாய்த் தலைக் கட்டக் கடவது –

பூர்வ உத்தர மீமாம்சைகளுக்கு கர்த்ரு பேதம் –ஜைமினி வியாசர் –உண்டாய் இருக்கச் செய்தே
வேத ஐக்கிய பிரபந்த வியாக்கியான ரூபம் ஆகையால் பிரபந்த ஐக்கியம் கொள்ளுகிறாப் போலேவும்
பாணினி வரருசி பதஞ்சலி மூவரும் கூடி
ஷூத்ர வ்ருத்தி பாஷ்யங்களும் ஒரே சாஸ்திரமாகக் கொள்ளுமா போலேயும் –
இங்கும் பிரபந்த ஐக்கியம் கொள்ளத் தட்டில்லை –

———————————————————————

விசித்திர கார்யமான ஜகத்துக்கு காரணமாம் போது —
விசித்திர ஞான சக்தி உக்தனாய் –
சங்க சக்ராதி திவ்யாயுத தரனான ஸர்வேஸ்வரனே காரணம் ஆக வேணும் என்னும் அநு மானத்தாலே-
ஜகத் காரண வஸ்துவை நிர்ணயியா நின்று கொண்டு
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாக
வாசிக கைங்கர்யம் செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

பதவுரை

வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றி யிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலை யாகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காக வென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக் கடல் நீங்குகைக்காக.

தகளி – என்றும் –
விளக்கு -என்றும் –
நெய்-என்றும் வர்ணிக்கிற படி எங்கனே என்னில் –
ஜகத்தானது –ச அவயத்வாத்-கார்யம் என்னக் கடவது –

கார்யமாவது கர்த்ருமத்தாகக் கடவது –
அந்த கர்த்தா சங்க சக்ர கதாதரன் என்கிறது –

சாஸ்திர யோநித்வாத்-என்று
ஆநுமாநிகரை சாஸ்திர காரர் தூஷிக்கச் செய்தே –
இங்கு ஆநுமாநிகமாக கொள்ளும் படி எங்கனே -என்னில்

(ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச )வேத சாஸ்த்ரா அவிரோதி நா -யஸ் தர்க்கேண அநு சந்தேத்தே ச தர்மம் வேத நேதர -என்று
வேத சாஸ்த்ரங்களோடு விருத்தமான தர்க்கம்(அனுமானம்) நிஷேதிக்கப் படுகிறது –
அவிருத்தமானது ஸ்வீகரிக்கப் படும் என்று சொல்லுகையாலே
அது தர்க்கமாகக் கொள்ளுகிறது –
நியாயா அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ்ய அர்த்த நிஸ் சாய கத்வாத்-(ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி )என்கிறபடியே –

வையம் தகளியா —
ச அவயவுமாய் -காரியமும் ஆகையால் -வையம் தகளி-என்கிறது –

வார் கடலே நெய்யாக-
1-வார் கடல்-சூழ்ந்த கடல்-
2-பூரணமான கடல் என்னவுமாம் –

நதியினாலே ஜலம் புகுந்தது என்று பூர்ணமாகாது இருக்கையாலும் –
இல்லை என்று குறையாது இருக்கையாலும் -பூமிக்கு உயர்ந்து இருக்கச் செய்தே
பூமியை அழிக்க மாட்டாமையாலும் –
கார்யம் -என்று தோற்றுகையாலே -நெய்யாகக் கொள்ளுகிறது –

வெய்ய கதிரோன் விளக்காக –
முப்பது நாழிகையில் ஒரு நாழிகை குறையவும் ஏறவும் நிற்கப் போகாமையாலே-
பீ ஷோ தேதி ஸூர்ய -என்று
ஈஸ்வர கார்ய பூதன் என்று தோற்றுகையாலே விளக்கு -என்று சொல்லிற்று –

தன்னையும் காட்டி –
ஈஸ்வரனையும் பிரகாசிப்பிக்கையாலே –
வெய்ய கதிரோன் என்று விளக்கினுடைய ஸ்தானத்தில் சொல்லுகையாலே –
இப்படி சகலத்துக்கும் அவன் சேஷி -சகலமும் அவனுக்கு கார்யதயா சேஷம் என்று அறிந்தால்
செய்ய அங்குத்தைக்கு அசாதாரண பரிசர்யை பண்ணும் படி சொல்கிறது மேல்

செய்ய சுடர் ஆழியான் –
செய்ய சுடர் என்றது ஸ்யாமமான திருமேனிக்கு பகைத் தொடையாய் இருக்கை –

இத்தால் –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம-என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது –
இதர ஆயுதங்களை யுடைய தேவதாந்த்ரங்களையும் தவிர்க்கிறது

அடிக்கே -என்று
விக்ரஹ வத்தையைச் சொல்லுகிறது –

அடி என்றதால்
தம்முடைய சேஷத்வம் சொல்லுகிறது

அடிக்கே சூட்டினேன் சொன் மாலை–
பரிமளம் மாறாத மாலையைச் சூட்டினேன் –
சொல் தொடை -என்னுமா போலே

இடர் ஆழி நீங்குகவே யென்று –
இடர்க் கடலானது வற்ற வேணும் என்று -தாப த்ரயத்தாலே தப்தரானவர்கள் இதைக் கற்று
தம் வழியே போந்து இடர்க் கடலை பிழைப்பார்கள் என்று –
அன்றிக்கே
அவனைப் பேசப் பெறாத தம்முடைய இடர் போக என்றுமாம் –

மற்றை ஆழ்வார்களில் இவர்கள் ஞான பிரதாநராய் –
பர தசையோடு –
உகந்து அருளின நிலங்களோடு வாசி அற கடல் கோத்தால் போலே
இவர்களுடைய பக்தி எங்கும் ஓக்க வியாபித்து இருந்ததே யாகிலும் –
கிண்ணகத்தில் ஆறு எங்கும் ஓக்க பரந்து வாரா நிற்க
நீருக்கு ஓர் இடத்திலே நோக்கமாப் போலே -திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் -திருமலையிலும் ஊன்றி இருக்கும் –

இவர்கள் பேயரே எனக்கு யாவரும் -என்னுமா போலே
சம்சாரிகளோடு பொருந்தாமையாலும் –
ஸ்தாவரங்களுக்கு விபரீத ஞானம் இல்லாமையாலும் அவற்றோடு பொருந்தி காடுகளில் வர்த்திப்பார்கள் –
யத்ர சாயங்க்ருஹராய் அஸ்தமித்த இடத்தே உறங்கி ஒருவரை ஒருவர் அறியாமல் திரியா நிற்பார்கள் –

இவர்களைக் கூட்டி இவர்கள் தன்னை அனுபவித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு –வழிந்த சொல்லாலே
தானும் ஜகத்தும் வாழ வேணும் என்னா நின்றான் எம்பெருமான் (கரும்பு ரசம் -மூன்று திருவந்தாதிகள் தேசிகன் )

யாதிருச்சிகமாக ஒரு இடை கழியிலே பெரும் காற்றும் மழையும் கண்டு புக்கு ஒருவர் கிடக்க மற்று ஒருவர்
ஒருவர் கிடக்கிற இடம் இருவருக்கு இருக்கலாம் -என்றார் –

மற்றையவர் -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கலாம் -என்றார்

இவர்களை எம்பெருமானும் பிராட்டியும் புகுந்து நெருக்குகிறார்கள் –

வாசல் கடை கழியா யுட் புகா –
இவர்கள் சம்பந்தம் இல்லாத புறம்பும் உள்ளும் காட்டுத் தீயோடு ஒக்கும்
நம்மை ஒழிய நெருக்கினாரை அறிய ஒரு பிரகாசம் வேணும் என்ன உண்டாக்குகிறார் இவர்களில் ஒருவர் –

பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே ஸ்ரீ யபதியே ஜகத்துக்கு நிர்வாஹகர் என்கிறார் ஒருவர் –
விஷயத்திலே ஈடுபட்டு பக்தி ரூபமான விளக்கு ஏற்றினார் ஒருவர் —
அது உடையோருக்கு அவன் காட்டக் காணும் வடிவை சாஷாத் கரித்தார் ஒருவர்

ஞான பக்தி சாஷாத் காரங்கள் மூன்றும் அடைவே ஒருவருக்கு பிறந்தானாலோ என்னில் -ஒண்ணாது
வ்யாகரணத்துக்கு மூன்று கர்த்தாக்கள் யுண்டானால் போலே மூவரும் கூடி இவ்வர்த்தத்தை நிலையிட்டார்கள்
அநுமான முகத்தாலே இழிகை தரிசனத்துக்கு விருத்தம் அன்றோ என்னில்
வேத சாஸ்திர விருத்தமான அநு மானம் இங்கே தவிருகிறது-
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
சாஸ்திரத்தோடே சேரும் அநு மானம் இறே இது

ச அவயத்வாத் கார்யம் -கார்யம் விசித்திரம் ஆகையால் கர்த்தாவும் ஆச்சர்ய சக்தி உக்தனாக வேணும் –

வையம் தகளியா -பூமி கடினை யாகையாலே தகளி யாக்கிற்று
வார் கடலே நெய்யாக-திரவ த்ரவ்யமாகையாலே நெய்யாகக் கொண்டது
வெய்ய கதிரோன் விளக்காக -தேஜோ பதார்த்தம் ஆகையால் விளக்காகக் கொண்டது –
இம் மூன்றும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்

வையம் தகளியா-
பெரிய வெள்ளத்திலே ஒரு கழல் மிதக்குமா போலே பூமி ஜலத்திலே நிற்கும் போது இதுக்கு ஓர் அடி வேண்டாவோ

வார் கடலே நெய்யாக-
பூமியை அபி பவியாதே நிற்கும் போது ஓர் அடி வேண்டாவோ –

வெய்ய கதிரோன் விளக்காக —
முப்பதில் ஓன்று ஏறுதல் குறைதல் செய்யாத போதே -பீ ஷோ தேதி ஸூ ர்ய -ஆக வேண்டாவோ
யஸ் சர்வஞ்ஞ  சர்வவித்-இத்யாதிகளில் சொல்லுகிறவனாக வேண்டாவோ –
இதுக்கு ஒரு நாதன் உளன் என்று இருந்தால் அடிமை செய்ய வேண்டும் –

செய்ய-சுடர் ஆழியான் —
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஜகத்தில் ஏக தேச சம்பந்தம் உண்டே என்னில் -அத்தை வ்யாவர்த்திக்கிறது
ரூபாதிகள் இல்லை என்னும் வாதிகளை நிரஸ்தராக்குகிறது

அடிக்கே -பிராட்டி அல்லீரே -முறை தப்பாத படி வேணுமே(அடி விடாத சம்ப்ரதாயம் )

சூட்டினேன் சொன் மாலை–யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசி
பண்டு அல்லாத அழகும் உண்டாக்கினேன்

இடர் ஆழி நீங்குகவே யென்று —
என்னை உளன் ஆக்குகைக்காக சொல்லாது இருக்கை இடர் -இடரார் படுவார் -இத்யாதி வத்

குணத்தை அனுசந்திக்கிலும் பிரகாரி பர்யந்தமாய் இருக்கும் இவர்களுக்கு -(குணத்துடன் நிற்காமல் குணி அளவும் பாட வேண்டுமே )

மாறனேர் நம்பி -எம்பெருமானை மறக்க விரகு இல்லையோ -என்றாராம் –
ஜகத்தின் இடர் தீருகை அர்த்தாத் சித்தம் –

(காடின்யவான் யோ பிபர்த்தி ஜகதே தத சேஷத
ஸப் தாதி ஸம்ஸ்ரயோ வ்யாபீ தஸ்மை பூம் யாத்மநே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28-
பூமி ஸ்வரூபமாய் இருக்கும் பரம் பொருளுக்கு நமஸ்காரம் என்றபடி
பீஷோதேதி ஸூர்ய–தைத்ரியம் – -பரமபுருஷனின் பயத்தால் ஸூர்யன் உதிக்கிறான் –
இருள் அன்ன மா மேனி எம்மிறையார் -பெரிய திரு -26–ஆழியானை இட்டே நிரூபகம் அவனுக்கு
யதோ வாஸோ நிவர்த்தக்கே என்று வேதம் திரும்பிய விஷயத்தையே பரிபூர்ணமாகப் பேசி முன்பு இல்லாத அழகையும் உண்டாக்கினேன் என்கிறார் –
வேதத்துக்கு அனுரூபமான அனுமானமும் உத்தேச்யம் தானே
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு 12-106-
ந்யாய அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -ஸ்ரீ பாஷ்ய ஆரம்பம் –
வையம் வார் கடல் கதிரோன் -லக்ஷண முறையால் லீலா விபூதியையும்
ஆழியான் -லக்ஷண முறையால் நித்ய விபூதியையும்
அடிக்கே -லக்ஷண முறையால் திவ்ய மங்கள விக்ரஹம்
காட்டி ஸ்வ மத ஸ்தாபனம் பண்ணி அருள்கிறார்
ஸர்வம் ஸூந்யம் -புத்த மத நிரஸனம்
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம ஏவ ஸத்யம் அந்நியத் ஸர்வம் மித்யா -ஸ்ரீ பாஷ்யம் -மஹா பூர்வ பக்ஷம் -அத்வைத மத நிரஸனம்
சுடர் ஆழியான் -என்பதால் சூல தாரி யாதிகளைப் பரம் பொருளாகச் சொல்லும் சைவ மத நிரஸனமும் செய்து அருளினார் ஆயிற்று – )

————————————————————

(பூ நிலாய ஐந்துமாய் போல் )காடின்யவான் யோ பிபர்த்தி-ஜெகதே தத சேஷத -சப் தாதி ஸம்ஸரயோ வ்யாபீ தஸ்மை
பூம்யாத்மனே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28–என்கிறபடியே(பூமி ஸ்வரூபமான ப்ரஹ்மத்தை ஆஸ்ரயிப்போம் )
பகவத் சங்கல்பாயத்தமான காடின்யத்தை யுடைத்தான பிருத்வியானது —
மேல் நெய்யும் திரியுமாக ரூபிக்கப் படுகிற வஸ்துக்களுக்கு ஆதாரமான தகளியாகவும் –

அந்த பிருத்வியை சுற்றும் சூழ்ந்து -த்ரவ்ய ஸ்வபாவமாய்
தேன ச க்ருத சீமா நோ ஜலாசயா -என்கிறபடியே
பகவத் ஆஜ்ஜையாலே கரையை அதிக்ரமியாமல் அதுக்குள்ளே அடங்கிக் கிடக்கிற
கடலின் நீரான அம்சமானது -மேல் யேற்றப் போகிற விளக்கை உத்தர உத்தர ஒளி வீட்டுக் கிளரப் பண்ணும் நெய்யாகவும் –

கிரண முகேன கிரசிக்கப் பட்ட ஜலத்தாலே அபிவ்ருத்தமாய் -பிரதாப உத்தரமான கிரணங்களை யுடையனாய் –
பீ ஷோ தேதி ஸூ ர்ய-என்கிறபடியே
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு நடுங்கி வட்டம் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாகத் திரியக் கடவ
ஆதித்யன் அர்த்த பிரகாசகமான விளக்காகவும்

இருளன்ன மா மேனிக்கு எம் இறையோர் -பெரிய திரு -26-
விளக்கு ஏற்றினால் போலே பகைத் தொடையாக சிவந்த ஒளியை யுடைய
திரு வாழி யாழ்வானை நிரூபகமாக யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறாத
என்னுடைய துக்க சாரமானது விட்டு நீங்கும் படியாக –
தத் குண சேஷ்டிதங்களை உள்ளீடாக வைத்துத் தொடுத்த
நிரதிசய போக்யமான சப்த சந்தர்ப்பங்களை அவற்றுக்கு அலங்காரமாம் படி சாதரமாக சமர்ப்பித்தேன் –

இவ் விஷயத்தை அறியப் பெறாமல் அஸத் கல்பராய் நோவு படுகிற சம்சாரிகளுக்கு பர வஸ்து வாஸ்தவ ப்ரகாசகமான
இப் பிரபந்த அப்யாஸ முகத்தாலே-அனந்த கிலேச பாஜகமான சம்சார சாகரம் வற்ற வேணும்
என்று சொன் மாலை சூட்டினேன் -என்றுமாம் –

இப்படி விசித்திர பிரபஞ்ச நிர்மாண அநு குணமான ஞான சக்த்யாதி குண வைச்சித்ராதி யுக்தனான-சங்க சக்ர கதா திவ்யாயுத தரனான -ஸர்வேஸ்வரனே
ஜகத் காரணம் என்னும் அனுமானத்தாலே காரண வஸ்துவை நிர்ணயித்தார் யாய்த்து –

ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
வேத சாஸ்திரத்தோடே விருத்தமான தர்க்கத்தை அழித்தது-

அவிருத்தமான தர்க்கத்தை ஸ்வீகரிக்கையாலே இங்கும் அப்படி விரோத பிரசங்கம் சொல்ல இடம் இல்லை –
ந்யாயான் அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

பிருதிவ்யாதி களாலே லீலா விபூதியை உப லஷிக்கிறது –
சுடர் ஆழி -என்று நித்ய விபூதிக்கு உப லக்ஷணம்
அடிக்கே என்று திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம் –

இப்படி ஸ்வ பக்ஷத்தை சிஷிக்கவே
ஸூ ந்யமே தத்வம் -என்றும் –
நிர் விசேஷ வஸ்துவே தத்வம் என்றும் –
விசேஷணாந்தர விசிஷ்டமே தத்வம் என்று சொல்லப் படுகிற பர பக்ஷங்கள் அர்த்தாத் ப்ரதிஷிப்தங்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-91-100–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஊனக் குரம்பையினுள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும்-ஏனத்து
உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்–91-

—————————————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கு
மாம்சத்தினால் ஆகிய
சரீரம் ஆகிற குடிசையில்
உள்ளே பிரவேசித்து
அதாவது
சரீரத்தின் தோஷம் எல்லாம் மனத்தில் படியும்படி
அதை நன்றாக ஆராய்ந்து
தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும்வேண்டா நாற்றமிகு உடல் –

இருள் நீக்கி
சரீரம் போக்கியம் என்று நினைக்கிற
அஞ்ஞானம் ஆகிற இருட்டைப் போக்கி

ஞானச் சுடர் கொளீஇ
தத்வ ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
சுடர் கொளுவி
நாடோறும்-
நாள் தோறும்

ஏனத்து உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
வராஹ ரூபியாகி
பிரளயம் கொண்ட பூமியைக் குத்தி
எடுத்துக் கொணர்ந்த
எம்பெருமான் உடைய திருவடிகளை
யுகாந்த காலத்திலும் சத்தை அழியாமல் பாதுகாத்து கொண்டு இருந்தான் என்பதால் -ஊழியான்-

மருவாதார்க்கு உண்டாமோ வான்
சேவியாதவர்களுக்கு பரமபதம் கிடைக்குமோ
கிடைக்க மாட்டாது

ஆக
சரீரம் பற்றிய அஞ்ஞானம் தொலைந்து
ஆத்மாவைப் பற்றின சத்ஞானம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை அடைந்து
வாழுமவர்கட்கே வானுலம் சித்திக்கும் என்றதாயிற்று –

——————————————————————————————————————————————————————————–

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே -ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு–92-

—————————————————————————————-

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
ஆகாசமாகியும்
அக்னியாகியும்
அலை எரிகிற கடலாகியும்
காற்றாகியும்
பஞ்ச பூதங்கள் ஐந்துக்கும் உப லஷணம்
இவற்றால் சமைத்த அண்டங்களுக்கு நிர்வாஹகன் என்றபடி

தேனாகிப் பாலாம் திருமாலே –
தேன் போன்றும்
பால் போன்றும்
பரம போக்யனான
எம்பெருமானே
பரம போக்யனான உன்னை ஞானிகள் உட்கொள்ள கருதா நிற்க
நீ வேறு ஒரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்வது என்னோ -என்றபடி

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே
இடைக்குலத்தில் பிறந்தவளான
யசோதை என்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
அள்ளி அமுது செய்ததினால் நிறைந்து விடுமோ
நிறைய மாட்டாது
உலகமுண்ட பெருவாயனான உனக்கு –

முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு
பிரளயம் நீங்கின காலத்தில்
பிரளய காலத்தில் உட்கொண்டு இருந்த இவ்வண்டத்தை
உள்ளே கிடந்து தளர்ந்து போகாதபடி
வெளியிட்ட உன் வயிறானது

அவாப்த சமஸ்த காமன் -உனக்கு பசி இல்லை
வெண்ணெய் உண்டது பசி நீங்க இல்லையே
ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் உட்கொண்டால் அல்லது தரிக்க மாட்டாமை

உண்டாய் உலகு ஏழு முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசருவ வலையாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே -திருவாய்மொழி

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாத படியான வ்யாமோஹத்தாலே
அமுது செய்தான் அத்தனை அன்றோ -அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி

தாழ் குலத்தார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் ஏழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே -என்றும்
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறிநீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே -என்றும்
திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகள்-

————————————————————————————————————————————————————————————————

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ -பொறி யுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா நின்
சேவடி மேல் ஈடழியச் செற்று–93-

——————————————————————————————————-

வயிறு அழல
என்ன தீங்கு நேருமோ என்று அனுகூலர்
வயிறு எரியும்படி

வாளுருவி வந்தானை யஞ்ச
வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அவன் உன் வடிவைக் கண்டு
நடுங்கும்படி

எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாயை மடித்துக் கொண்டு இருந்தது எதுக்காக

பொறி யுகிரால்
நாநா வர்ண நகங்களால்

பூவடியை யீடழித்த
புஷ்பத்தின் சுகுமாரத் தன்மையை
அடியோடு போக்கிய
மிகவும் ஸூ குமாரமான

பொன்னாழிக் கையா
அழகிய திரு ஆழியைக் கொண்ட
திருக் கையை உடையவனே –

பொன்னாழிக் கையால் -பாட பேதம்

நின் சேவடி மேல்-
உனது திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு

ஈடழியச் செற்று
கட்டுக் குலைந்து போம் படி கொன்று
பின்னையும் சீற்றம் மாறாமையால்

ஆஸ்ரிதற்கு பிராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு
ஆஸ்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே நமக்குத் தஞ்சம்
கொடியவாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஓன்று உண்டு ஓன்று உளது அறிந்து
உன்னடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -திருமங்கை ஆழ்வார்
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி
தரித்ரனானவன் தனிகனை அடையுமா போலே சீற்றம் உண்டு என்று ஆயத்து இவர் பற்றுகிறது —
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இ றே சீற்றம் -பெரியவாச்சான் பிள்ளை
அளவு கடந்த சீற்றமே தஞ்சம் என்று ஆஸ்ரிதர்களுக்கு காட்டத் தானே
எயிறு இலக வாய் மடித்தது-

—————————————————————————————————————————————————————————————————————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து -முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா–94

——————————————————————————

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
எழுந்து தீ விழுத்து இந்த ஏழ் உலகும் செற்று
அநியாயம் மேலிட்ட படியால்
எழுந்து
லௌகிக பதார்த்தங்களை எல்லாம்
அடியோடு அழிக்க பெரு முயற்சியோடு கிளம்பி
தீ விழித்து
உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி
நெருப்பு எழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும் செற்று
இந்த உலகங்களை எல்லாம் அழித்து
யுகாந்த காலத்தில் அக்கிரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்ரம் கொண்டு
உலகங்கள் அழித்து தன்னிடம் அடக்கிக் கொள்வான் –

மற்றிவை
பின்பு
பிரளயத்தில் அழிந்த இப்பதார்த்தங்கள்

சென்ற
என்னிடத்து அடங்கிக் கிடக்கின்றன என்று சொல்லி

யா வென்று வாய் அங்காந்து
ஆ என்று வாயைத் திறந்து

-முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
சகல ஜகாத்தையும்
வைதிகனான மார்கண்டேய மகரிஷிக்கு
முன்பு போலவே இருப்பதைக் காட்டி அருளிய
ஆச்சர்ய சக்தி உக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
காலகதியைக் கடந்துஎன்றும் பதினாறாக நீடூழி வாழ
பத்ர நதிக் கரையிலே தவம் புரிந்த மார்கண்டேயர்
நர நாராயணன் சேவை பெற்று
பின்பு பிரளயம் வந்தவாறே
ஆலிலை குழந்தை வயிற்றுக்குள் தன்னையும் உலகங்கள் எல்லாம் கண்டார்
எய்த்த மார்க்கண்டன் கண்டிட வமலைக்கும் உலகு அழியாது உள்ளிருந்தது என்னே -என்றும்
ஆலத்திலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த காலத்தில்
எவ்வகை நீ காட்டினாய் –வேதியர்க்கு மீண்டு -என்றும்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அருளுகிறார்

வேறு ஒருவனை
இறையேனும் ஏத்தாது என் நா
எனது நா வானது சிறிதும் துதிக்க மாட்டாது –

——————————————————————————————————————————————————————————————

நா வாயில் உண்டே நமோ நாராயணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே –மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே என்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம்–95-

—————————————————————————————–

நா வாயில் உண்டே
ஸ்தோத்ரம் பண்ண கருவியான நாக்கு
ஸ்ரமம் பட்டு தேட வேண்டாதபடி
ஒவ்வொருவர் வாயிலும் படைக்கப்பட்டு இருக்கின்றதே

நமோ நாராயணாய வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சஹஸ்ரநாம மந்த்ரம் போலே இடை இடையே
விட்டு விட்டு சொல்ல வேண்டாமல்
எளிதாக ஒரே மூச்சிலே சொல்லக் கூடிய
திரு அஷ்டாஷர மந்த்ரம் சித்தமாய் இருக்கின்றதே
நமோ நாரணா வென்று -பிழையான பாடம்

-மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே
கிழத் தன்மை அற்ற -திரும்பி வருதல் அல்லாத
பரமபிராப்யமான மோஷத்தில்
சென்று சேருவதற்கு ஏற்ற உபாயம் உண்டே

இப்படி இருக்கவும் உஜ்ஜீவியாமல்

என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம்
சிலர்
விநாசத்துக்கு காரணமான கெட்ட வழிகளிலே
போய் விழுகிற படி என்னோ

உபயோகம் அற்ற விஷயங்களை சொல்ல நாவைப் பயன்படுத்தி அனர்த்தப் படுகிறார்களே
நாராயாணா ஆதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த் நீதி
ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -சாஸ்திர வாக்கியம்
தாமுளரே தம்முள்ளம் உள்ளுள்ளதே தாமரையின்
பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே வாமன்
திருமருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி பாசுரம்

—————————————————————————————————————————————————————————–

திறம்பாது என்னெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் – புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கட் பிடி –96-

—————————————————————————–

திறம்பாது பிடி
தவறாமல் உறுதியாக கொள்

என்னெஞ்சமே

செங்கண் மால் கண்டாய்
புண்டரீ காஷனான எம்பெருமானே ஆவான்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் –
புண்ணியம் பாவம் எனப்படும்
இருவகைக் கர்மங்களுக்கும் நிர்வாஹகன்
எந்த ஆத்மாவை நல்ல கதி பண்ணுவிக்க கருதுகின்றானோ அவனைக் கொண்டு நல் வினையைச் செய்விக்கின்றான்
எந்த ஆத்மாவை அதோகதி அடைவிக்கக் கருதுகின்றானோ
அவனைக் கொண்டு தீ வினையை செய்விக்கின்றான்
என்ற வேத வக்யத்தின் படியே -அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் -என்று அருளிச் செய்கிறார்

புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான்வான் தானே
இந்த பூமியும்
அலை எறிகிற கடலும்
வாயுவும்
ஆகாசமும்
இவை தவிர உள்ள மகான் முதலிய தத்தவங்களும்
அந்த திருமாலே யாவான்

கண்டாய் கடைக்கண்
முடிவாக ஆராய்ந்து பார்க்கும் அளவில்
இதுவே உண்மை என்பதை
திறம்பாமல் பிடி – தவறாமல் உறுதியாக கொள்

சம்சாரிகள் எந்த வழியில் போனாலும் போகட்டும்
நெஞ்சே நீ மாத்ரம்
சர்வ நிர்வாஹகன் அவனே என்பதில் விப்ரதிபத்தி பண்ணாமல்
இதுவே பரமார்த்தம் என்று உறுதி கொண்டு இரு-

—————————————————————————————————————————————————————————————————-

பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -பொடி சேர்
அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப்பொன் –97-

———————————————————————————

கீழில்
அறம் பாவம் இரண்டும் அவன் இட்ட வழக்கு என்றார் அதன் விவரணம் இதில்
விஷய பிரவணமாய் திரிந்து கொண்டு இருந்த யானைக்கும் அருளினான்

ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ -திருச் சந்த விருத்தம் -94-
பஞ்ச கவ்யமும் அதன் பரி சுத்தமும் நீ என்றார் திரு மழிசை பிரான்
பிடி சேர் களிறு அளித்த பேராளா
பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆகிற
ஆண் யானையை
காத்து அருளின மஹானுபாவனே

உன்தன்அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே
உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
பாபிகளை பரிசுத்தன் ஆக்கும் படி
உன்னுடைய திருவருளைப் பெற்றாள் அன்றோ

-பொடி சேர் –
தான் பண்ணின பாபத்துக்கு பிராயச் சித்தமாக
பஸ்மத்திலே சாயுமவனாகி

அனல் கங்கை ஏற்றான்
அனற்கு அங்கை ஏற்றான்
அக்னிக்கு தனது அழகிய கையை ஏற்ற பாதகியான
ருத்ரனுடைய
அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப்பொன்
ஒளி பொருந்திய ஜடையின் மேலே
அவனுடைய சுத்தியின் பொருட்டு வந்து குதித்த
ஜலமயமான
கங்கை என்னும் பெயர் பூண்டுள்ள
சிறந்த பெண்
பெயர்ப்பொன்-தவறான பாடம்- மோனை இன்பம் குறையும்-

—————————————————————————————————————————————————————————————-

பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடு மாலும் -என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்–98-

———————————————————————

பொன் திகழும் மேனிப்
பொன் போலே விளங்குகின்ற உடலையும்

புரி சடை அம் புண்ணியனும்
பின்னிய சடை முடியை உடையனாய்
அழகிய சாதனா அனுஷ்டானம் ஆகிற
புண்ணியத்தை உடையனான ருத்ரனும்

நின்று உலகம் தாய நெடு மாலும் –
நின்று உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட சர்வேஸ்வரனும்

என்றும்
எக்காலத்திலும்

இருவர் அங்கத்தால் திரிவரேலும்
இருவாராக வெவ்வேற வடிவத்தோடு
இருந்தார்களே யாகிலும்

ஒருவன்
சடை புனைந்து
சாதனா அனுஷ்டானம் பண்ணும்
ஒருவனாகிய சிவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
நெடுமாலான மற்று ஒருவனுடைய
சரீரத்திலே
எப்போதும் சத்தை பெற்று இருப்பன் –
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமான் உடைய சரீர பூதன் ஆகையாலே தானே –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே -நம் ஆழ்வார்
புரிசடை புண்ணியன் -அவன் வேஷமே ஈஸ்வரன் அல்லன் என்பதைக் காட்டுமே
நின்று உலகம் தாய நெடுமால் -ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசி அற திருவடியை
நீட்டி தானே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினான்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய அங்கத்தில் ஏக தேசத்தில் என்றும்
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்ளலாம்-

—————————————————————————————————————————————————————————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99-

———————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான்
காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான்
காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன்
காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று
தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத்தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

—————————————————————————————————————————————————————————-

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்னெஞ்சே–ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை –100-

—————————————————————————————
-ஓரடியில் தாயவனைக் கேசவனைத்
தனது ஒப்பற்ற அடி வைப்பினாலே
லோகங்களை எல்லாம் அளந்து கொண்டவனும்
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனும்

தண் துழாய் மாலை சேர்
குளிர்ந்த திருத் துழாய் மாலை உடன் சேர்ந்தவனுமான

மாயவனையே மனத்து வை
எம்பெருமானையே
மனத்தில் உறுதியாக கொள்வாயாக
இப்படி அவனே உபாயம் என்று உறுதி கொண்டால்

ஓரடியும்
உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட ஒரு திருவடியும்

சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
சகடம் முறிந்து விழும்படி உதைத்த
பூ போன்ற திருவடியும்
ஆகிய

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே-
இரண்டு திருவடிகளையும்
சேவிக்கப் பெறலாம் காண்

மாயவனை மனத்து வைத்தால் -உபாயமாக கொண்டால்
ஈரடியையும் சேவிக்கப் பெறுவது எளிதாகும்
சாடுதைத்த திருவடி –அநிஷ்ட நிவ்ருத்தி
உலகளந்த திருவடி– இஷ்ட பிராப்தி

திரிவிக்ரமாவதாரமும்
கிருஷ்ணாவதாரமும்
இவ் வாழ்வார் ஈடுபட்ட துறைகள்
அதனால் இத்தை பேசி தனது திவ்ய பிரபந்தத்தை முடித்து அருளுகிறார்
மீண்டும் தாயவனைக் கேசவனை என்பதும் இதே நோக்கம்

உபாயமும் உபேயமும் எம்பெருமானே
சைதன்ய கார்யமான இந்த அத்யாவசியம் ஒன்றே நமக்கு வேண்டியது
என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-

————————————————————————————————————————————————————————————————

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று -1-

—————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-81-90–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஆளமர் வென்றி யடுகளத்துள் அந்நான்று
வாளமர் வேண்டி வரை நட்டு -நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை –81-

—————————————————————————————–

ஆளமர்
யுத்த வீரர்கள் நெருங்கி
இருக்கப் பெற்றதும்
கடல் கடையும் காலம் தேவாசுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியும் காலம்
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரர் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்

வென்றி
ஜெயத்தை உடையதுமான

யடுகளத்துள்
எதிர்த்தவரை கொல்லுகின்ற
யுத்த களத்திலே

அந்நான்று
அசுரர்களை தேவர்கள் மேல் விழுந்து நலிந்த
அக்காலத்திலே

வாளமர் வேண்டி
அனுகூலரான தேவர்கட்கு வெற்றி
உண்டாகும் படி
மதிப்புடைய யுத்தத்தை விரும்பி

அதற்கு ஏற்ப

வரை நட்டு –
தண்ணீரிலே அமிழக் கூடிய
மந்த்ர பார்வத்தை மத்தாக நாட்டி

நீளரவைச்சுற்றிக் கடைந்தான்-
உடல் நீண்ட வாசூகி நாகத்தை
கடை கயிறாக சுற்றி
அமுதம் உண்டாகும் படி திருப் பாற் கடலை கடைந்தவன் உடைய

பெயரன்றே தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை
திரு நாமம் எப்படிப் பட்டது என்றால்
சம்சாரிகளை வாரிப் பற்றாக
பிடித்துக் கொண்டு போய்
பழைமையாய் இருக்கிற சம்சாரம் என்னும் நகரத்து
தாண்டுவிக்கின்ற சாதனம்
நரகு -சம்சாரம்

பிரயோஜனாந்தர பரர்களுக்கும்
தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அருளிய அவன் திரு நாமமே உத்தாரகம்-

——————————————————————————————————————————————————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் பைம்பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் -இடையிடையின்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேலோருநாள்
மானமாய வெய்தான் வரை –82-

——————————————————————————-

படையாரும் வாள் கண்ணார் –
வேலாயுதம் போன்ற ஒளி பொருந்திய
கண்களை உடைய பெண்கள்
அறிவு ஒன்றும் இல்லாத பெண்களும் ஆஸ்ரயிக்கும் படி

பாரசிநாள்-
த்வாதசி அன்று –
சத்வோத்தரமான நாள்

பைம்பூம் தொடையலோடு ஏந்திய தூபம் –
வாடாத மலர்களைக் கொண்டு
தொடுத்த மாலையோடு கூட
திரு வேங்கடமுடையானுக்கு
சமர்ப்பிக்கும் படி ஏந்தி உள்ள
தூபமானது
தூபத்தின் கமழ்ச்சியே திருமலை எங்கும் பரவிக் கிடக்கிறது –

இடையிடையின் மீன் மாய
ஆகாசத்தில் நடுவே நடுவே தோன்றுகின்ற
நஷத்ரங்கள் மறையும்படி

மாசூணும்
மாசு ஏறும்படி பண்ணா நிற்கும்

வேங்கடமே
திருமலையே யாகும்

மேலோருநாள் மானமாய வெய்தான் வரை
முன் ஒரு காலத்திலே
ஸ்ரீ ராமாவதாரத்திலே
மாரீசன் ஆகிய மாய மான் இறந்து விடும்படி
அம்பு தொடுத்து விட்ட ராமபிரான்
நித்ய வாசம் செய்கின்ற மலை யாவது

———————————————————————————————————————————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -உரவுடைய
நீராழி உள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

———————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து
ஒருவராலும் அசைக்க முடியாத
கோவர்த்தன மலையே குடையாகவும்
தனது திருத் தோளே அந்தக் குடைக்கு காம்பாகவும் ஆக்கி
பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து

ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே
ஆயர்கள் வைத்திருந்த திரண்ட
ரிஷபங்கள் ஏழையும்
முடித்த விதம்
எங்கனே

-உரவுடைய நீராழி உள்கிடந்து-
மிடுக்கை உடைத்தான நீரை உடைய திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து

நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான்
எதிரியாக வந்த
மதுகைடபர் முதலிய ராஷசர்களின் மீது
அவர்கள் நீறாகும்படி
பெரிய சக்ராயுதத்தை திருக் கையிலே கொண்டு இருக்கிற உபகாரகனே
நிராசரர் -இரவில் திரிகின்றவர்கள் –

இப்படி கருதும் இடம் சென்று பொருது கை நிற்க வல்ல
திரு ஆழியான் திருக்கையிலே இருக்கச் செய்தேயும்
அவனைக் கொண்டு கார்யம் கொள்ளாமல்
உடம்பு நோவ கார்யம் செய்து அருளியது
ஆஸ்ரித பாரதந்த்ரயத்தாலே
பெறாப் பேறாக நினைத்து —
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -திருவாய்மொழி -3-1-9-

——————————————————————————————————————————————————————————–

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் யுலகளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

————————————————————————

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உபகாரகனே
உனது பெருமையை அறிவார் யாரும் இல்லை
சர்வஞ்ஞனான உன்னால் தான் அறிய முடியுமோ
உன்னால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்போல்வாரால் ஒருக்கால் அறியப் போகலாமே ஒழிய
சுய யத்னத்தால் உணர விரும்புவார்க்கு ஒருநாளும் காண முடியாதே

உராய் யுலகளந்த நான்று
எங்கும் சஞ்சரித்த படி அளந்த காலத்திலே
உராய் -உலாவி என்றபடி
சிறிதும் சிரமம் இன்றி -பட்டர் உடைய கருத்து
உராய் – உரசிக் கொண்டு -எல்லாரையும் தீண்டிக் கொண்டு
உரையாய் -மருவி உராய் சொல்லு என்றுமாம் –

வராகத்துஎயிற்று அளவு போதாவாறு என் கொலோ
வராஹ ரூபியான உன்னுடைய
திரு எயிற்றின் ஏக தேச அளவும்
போதாதாக இருந்த விதம்
எங்கனேயோ

எந்தை அடிக்களவு போந்த படி
எனது ஸ்வாமியான உன்னுடைய
திருவடிகட்கே அளப்பதற்குப் போந்திருந்த
பூமியானது-

——————————————————————————————————————————————————————————————————

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ —85-

———————————————————————————

படி கண்டு அறிதியே –
அவனது திருமேனியை
சேவித்து
அனுபவித்து அறிந்து இருக்கிறாயோ

பாம்பணையினான்
சேஷசாயி யான பெருமானுடைய

புட்கொடி கண்டு அறிதியே கூறாய்
கருடப் பறவை யாகிற த்வஜத்தை
சேவித்து
அனுபவித்து
அறிந்து இருக்கிறாயோ
சொல்லு –

வடிவில் பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
பஞ்ச இந்த்ரியங்களையும்
சரீரத்துக்கு உள்ளே அடங்கி இருக்கச் செய்து
திருவாராதன சாமக்ரியான
புஷ்பங்களையும்
தீர்த்தத்தையும்
தரித்துக் கொண்டு

நெறி நின்ற நெஞ்சமே நீ –
ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நிலைத்து நிற்கும் மனமே

இத்தால்
எம்பெருமான் கருடாரூடனாய் சேவை சாதிக்கும் நிலையில்
சேவிக்கப் பெறுதலிலும்
சேஷசாயியாய் சேவை சாதிக்கும் நிலையிலும்
சேவிக்கப் பெறுதலிலும்
தமக்கு ஆசை கொண்டு இருக்கும் படியை வெளியிட்டு அருளுகிறார்-

—————————————————————————————————————————————————

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா -வாசல்
கடை கழியா வுள்புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றியினி–86-

———————————————————————

குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
கோவர்த்தன மலையை
வேரோடு பிடுங்கி எடுத்து
மேலே வந்து சொரிகிற மழையை
மேலே விழாமல் தடுத்த
குணசாலியே
பனி மறைத்த -என்றும் பாட பேதம்

கழியா வுள்புகாக்
வெளிப் பட்டு போகாமலும்
உள்ளே புகாமலும்

காமர் பூங்கோவல்
விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரிலே

வாசல் கடை
திரு வாசலுக்கு வெளியிலே

இடை கழியே
நடுக் கட்டான
இடை கழியிடத்தையே
ரேழி-வெளியிலே சம்சாரிகளும்
உள்ளே உபாசகனான ரிஷியும்
அநந்ய பிரயோஜனரான மூவர் நின்ற இடமே உகந்து சேரும் இடமாக பற்றினான்

பொய்கை பூதம் பேயாழ்வார் நாங்கள் மூவரும் தங்கி இருந்ததனால்

பற்றி
விரும்பிய இடமாகக் கொண்டு

நீயும் திருமகளும்
நீயும் பிராட்டியுமாக

இனி

நின்றாயால்
நின்று அருளினாய் -ஆச்சர்யம் –

பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனை தொழுத நன்னாடு –
இவ்வரலாற்றுக்கு மூலமாய் இருக்கும் இப்பாட்டு
இஃது என்ன திருவருள்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய நீல மேக ச்யாமளமான திருமேனியையும்
மின்னல்கொடி பரந்தால் போன்ற திருமகளாரையும்
நெஞ்சு என்னும் உட்க் கண்ணால் கண்டு
அனுபவித்த படியை
இத்தால் வெளியிட்டு அருளினார் ஆயிற்று
இடையரோடும் பசுக்களோடும் நெருக்கி நின்றால் போலே ஆயிற்று இங்கு மூவரையும் நெருக்கி நின்று அருளினான்

கீழ் பாட்டில் நெஞ்சமே நீ அவனைசாஷாத் கரித்து அனுபவிக்கப் பெற்றாய் இல்லை -என்றாரே
அப்படி சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவர் இருந்த இடம் தேடி பிராட்டியுடன் வந்து கலந்தான்
இவர் தம்முடைய திரு உள்ளத்தை குறித்து
சாஷாத் கரிதில்லை -என்னத் தரியான் இ றே-பெரியவாச்சான் பிள்ளை –
முன்னே நடந்த திருக்கோவல் இடை கழி நெருக்கத்தை
மீண்டும் அனுபவிப்பித்து அருளினான் போலும்-

————————————————————————————————————————————————————————————————–

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் -கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு –87-

—————————————————————————————-

இனியார் புகுவார் எழு நரக வாசல்
ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனிமேல் யாவர் பிரவேசிப்பார்
ஒருவரும் இல்லை ஒ யம கிங்கர்களே
ஏழு நரகங்கள் -கொடிய நரகங்கள்
பெரும் களிற்று வட்டம் /பெரு மணல் வட்டம் /எரியின் வட்டம்
புகையின் வட்டம் /இருளின் வட்டம் /பெரும் கீழ் வட்டம் /அரிபடை வட்டம்
என்று ஓர் இடத்திலும்
கூட சாலம் கும்பீ பாகம் அள்ளல் அதோகதி யார்வம்பூ செந்து என்ற ஏழும் தீ நரகப் பெயர்
என்று ஓர் இடத்திலும்
ரௌரவம் /மகா ரௌரவம் /தமஸ் /நிக்ருந்தனம் /அப்ரதிஷ்டம் /அசிபத்ரம் /தப்த கும்பம்
என்றும் வேறு வகையாக கூறுவார்
அன்றிக்கே
எழு நரகம்
சம்சாரிகள் அடங்கலும் சென்று புகுகிற நரகம்
கிளர்த்தியை உடைய நரகம் என்றுமாம்

முனியாது மூரித்தாள் கோமின்
உங்கள் ஸ்தானத்துக்கு
அழிவு உண்டாவதாகச் சொல்லும் என் மேல்
கோபம் கொள்ளாமல்
இனி ஒருக்காலும் திறக்க முடியாத படி
பெரிய தாழ்பாளை போட்டுப்
பூட்டுங்கோள்

-கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே
காண்பதற்கு
விளாம் பழம் உதிர்ந்து விழும்படி
வத்சாசூரனை
எறி தடியாக எடுத்து எறிந்து
இரண்டு அசுரரையும் முடித்த
திருத் தோள்களை உடையனான
சர்வேஸ்வரன் உடைய
ஆபரண த்வனியை உடைய திருவடிகளை
சேவிப்பதற்கு சாதனம்
ஆபரண த்வனியில் ஈடுபட்டு கனை கழல் என்கிறார்

அவன் உகந்து வாழ்கிற திருக் கோவலூர் க்கு சமீபமான
இடத்தில் வசிப்பது தான் என்று

நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு
நன்றாக
அழகிய ஐம்பூ என்று பேர் படைத்த பரந்த
த்வீபத்தில் உள்ள பிராணிகள் அறிந்து விட்டன –
அறிந்த -அறிந்தன –விரைவில் பகவத் ஞானம் உண்டாகி விடும்
எதிர் கால செய்தியை இறந்த காலமாகவே அருளிச் செய்கிறார்

ஆழ்வார் திரு உள்ளம் ஆனந்த்தின் எல்லை கண்டது
நெருக்குண்டு இருக்கும் நிலைமை தாம் அனுசந்தித்தார்
உலகோரை உபதேசத்தாலே திருத்தி பணி கொண்டதும்
பாவனா பிரகர்ஷத்தாலே
அனைவரும் அவனுக்கு ஆட்பட்டதாக கருதி
கம்பீரமாக அருளிச் செய்கிறார்
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் நடமாடும் ஜம்பூத்வீபமே நாடு மற்றவை காடு
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை போலே –

————————————————————————————————————————————————————————————–

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் -சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு–88-

———————————————————————

நாடிலும் நின்னடியே நாடுவன்
மனத்தினால் தேடும் பொழுது
உனது திருவடிகளையே தேடுவேன்

நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் –
எப்பொழுதுவாய் விட்டு ஏதாவது
சொல்லும் போதும்
உனது புகழ்களையே பாடுவேன்

சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
ஏதாவது ஒன்றைத் தலையிலே
அணிவதாய் இருந்தாலும்
அழகிய திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உன்னுடைய அழகிய திரு வடிகளையே
சிரோ பூஷணமாக கொள்பவனான

என்னாகில் என்னே எனக்கு
எனக்கு
எது எப்படி யானால் என்ன

உண்டியே உடையே உகந்தோடும் மண்டலத்தவர்கள்
அநாதி கால துர்வாசனையை எளிதில் அகற்றப் போமோ
தம்மைப் பார்த்தார்
நல்லபடியாக ஈடேறப் பெற்றோமே
நாடிலும் நின்னடியே நாடுவன்-மநோ வ்ருத்தியையும்
நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் -வாக் வ்ருத்தியையும்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு -சரீர வ்ருத்தியையும்
சொல்லி மூன்றும் பகவத் விஷயத்தில் அவஹாஹித்த படியை அருளிச் செய்தார் ஆயிற்று
என் ஆகில் என்
இங்கு இருந்தால் என்ன
பரம பதத்தில் இருந்தால் என்ன என்றுமாம்-

——————————————————————————————————————————————————————

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் -புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம்–89-

————————————————-

எனக்கு
எம்பெருமான் நிர்ஹேதுக கடாஷத்துக்கு
பாத்ரபூதனான எனக்கு

ஆவார் ஆர் ஒருவரே
ஒப்பு ஆகுவார் எவர் ஒருவர் இருக்கின்றார்
யாரும் இல்லை

எம்பெருமான்
அந்த சர்வேஸ்வரனும்

தனக்காவான் தானே மற்றல்லால் –
தானே தனக்கு ஆவான் அல்லால் -மற்று
தானே தனக்கு ஒப்பாவானே அல்லாமல்
அவன் தானும்
எனக்கு ஒப்பாக வல்லானோ –
இப்படி சொல்லும்படி உமக்கு வந்த ஏற்றம் என் என்ன

புனக்காயாம் பூ மேனி
தனக்கு உரிய நிலத்திலே தோன்றின
காயம் பூ வின் நிறமும்

காணப் பொதியவிழும் பூவைப் பூ
காணக் காண கட்டவிழா நிற்கும்
பூவைப் பூவின் நிறமும்

மா மேனி காட்டும் வரம்
வரம் -சிறந்ததான
அவனது கரிய திருமேனியை எனக்கு காட்டா நிற்கும்

ஆகையாலே போலியான பொருள்களைக் கண்டும் அவனை கண்டதாகவே நினைத்து மகிழ்கிற எனக்கு
ஒருவரும் ஒப்பாகார் என்றபடி

இதுவும் கீழ்ப் பாட்டின் சேஷம்
ஹர்ஷப் பெருக்கால் அருளிச் செய்கிறார்
அவன் அடிமையில் ஈடுபட்டு அதன் மூலமாக செருக்கு கொள்ளுதல்
அடிக் கழஞ்சு பெறுதலால்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மற்றையோரும் அருளிச் செய்தவை
இது ஹேயம் அன்று உபாதேயம்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –
பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே அனுசந்தேயம்-

———————————————————————————————————————————————————————————————–

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே -உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை
ஒரரியாய் நீ இடந்த தூன்–90-

—————————————————————————————-

வரத்தால் வலி நினைந்து
ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தினால்
தனக்கு உண்டான பலத்தை பெரிதாக மதித்து
வரம் கொடுத்தவர்கள் ஸ்ரீ மன் நாராயணன் ஆதீனம் என்று உணர வில்லையே –

மாதவ
திருமாலே

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உனது திருவடிகளை தனது தலையினாலே
வணங்காமல் இருந்தான் என்ற காரணத்தினாலோ
இல்லையே
பக்தனான பிரஹ்லாதனை நலிந்தான்
என்ற காரணத்தினாலே அன்றோ

-உரத்தினால்
உனது மிடுக்கினாலே

ஈரரியாய்
இரண்டு கூறாக கிழித்துப் போட வேண்டிய
சத்ருவாகி
பெரிய சத்ரு என்றுமாம்

நேர் வலியோனாய
எதிர்த்து நின்று போர் செய்யும் வலியை உடையனாகிய

விரணியனை
ஹிரண்யாசூரனை

ஒரரியாய் நீ இடந்த தூன்
ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாகி
நீ உனது நகங்களால் குத்தி கீண்டதானது
சரீரத்தை
ஓரரி – ஓர்தல் த்யாநித்தல் -த்யானிக்கப் படுகிற நரசிங்கம்

விமுகனாய் இருந்த காரணம் இல்லையே
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று சீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-பெருமாள் அருளினாரே
தனக்கு உயிர் நிலையான பாகவதர்களுக்கு தீங்கு என்றால் கொண்ட சீற்றம் உண்டே
கோபமாஹாரயத் தீவரம்
ததோ ராமோ மஹாதேஜா ராவனேண க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபச்ய வசமே யிவான்
பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப்
பிள்ளையை சீறி வெகுண்டு நலிந்தான் என்றவாறே
நம்மளவில் எத்தனை தீம்பனாய் இருந்தாலும் பொறுத்து இருப்போம்
நம்முடைய சிருக்கனை நலிந்த பின் பொறுத்து இருக்கவோ –
கேள்வி மட்டும் இங்கே
உத்தரம் அருளிச் செய்ய வில்லை
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -68 ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
இது போலே
பெரிய திருவந்தாதி பாசுரத்தில்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாக்கால் பேராளா
மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து –
இதற்கு அதிமாநுஷ ஸ்தவத்தில்
த்வன் நிர்மிதா ஜடரகாச தவ த்ரீலோகீ கிம் பிஷனாதியம்ருதே பவதா துராபா -என்று அனுவதித்து
மத்யே கதாது ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதமிவ ஸ்ருதிரஞ்சித ஸ்யாத்-என்று உத்தரம் அருளிச் செய்தார்
இது போலே ஆழ்வார் வெளிப்படையாக அருளிச் செய்த
மழுங்காத –சுடர் சோதி மறையாதே -என்பதற்கும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் சூத்ரம் இயற்றி அருளினார் –
—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-71-80–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று  நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —71-

——————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
பிணி மூப்பு
வியாதியையும் கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி
மரணத்துக்கும் உப லஷணம்
ஜரா மரணம் மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை
நன்றாக அடியோடு தொலைந்து ஒழியும்படி விட்டும்
கை வலய மோஷத்தைப் பெற்றாலும்
நான்கூழி
நான்கு யுகங்களில் உள்ள -காலதத்வம் உள்ள வரையிலும் –

நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் –
ஸ்திரமாக நின்று
பூமி தொடங்கி ப்ரஹ்ம லோகம் வரையிலும்
ஸ்வா தீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும்
பரமைச்வர்யம் கிடைத்தாலும்
உம்மை தொகை அதில் தமக்கு விருப்பம் இல்லாமை காட்டி அருளி

என்றும் விடலாழி நெஞ்சமே
என்றுமே விடாமல் இரு
ஆழி நெஞ்சே -நீயே பகவத் விஷயத்தில் ஆழ்ந்து உள்ளேயே
நான் பிரார்த்திக்க வேண்டியது இல்லை
ஏதோ சொல்லி வைத்தேன்

வேண்டினேன் கண்டாய்
உன்னைப் பிரார்த்திக்கிறேன் காண்
பகவத் விஷயம் அறிந்த நெஞ்சுக்கு உபதேசிக்கிறார்
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போலே

அடலாழி கொண்டான் மாட்டன்பு
தீஷணமான திரு வாழியைக் கையில் ஏந்திய –
கை கழலா நேமியான் –
பெருமான் இடத்தில்
ப்ரீதியை-

————————————————————————————————————————————————————

அன்பு ஆழியானை யணுகு என்னும் நா வவன்தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் -முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்–72-

————————————————————————————

ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது
கரணங்கள் தனித் தனியாக ஆசார்ய பதம் வகித்து
உபதேசிக்க முற்படுகிற படியை பேசி அருளுகிறார் இதில்

அன்பு ஆழியானை யணுகு என்னும்
பகவத் பக்தியே வடிவு எடுத்தது போன்று
இருக்கிற என் நெஞ்சானது
சர்வேஸ்வரனை கிட்டி அனுபவி என்று
எனக்கு உபதேசிக்கிறது –
அன்பு ஒரு வஸ்து நெஞ்சு வேற வஸ்து இல்லாமல்
அன்பு தானே நெஞ்சாக
அறிவுக்கு ஆஸ்ரயமான ஆத்மாவை விஞ்ஞான சப்தம் சொல்வது போலே

நா வவன்தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் –
வாக்கானது அவனது சௌந்தர்ய சாகரமான
திருத் தோள்களைப் பேசி துதி என்று
உபதேசிக்கின்றது
பண்பு ஆழி -அழகுக்கு கடல் போன்ற
பண் பாழி -அழகையும் வலிமையையும் உடைய தோள் என்றவாறு

முன்பூழி காணானைக் காண் என்னும் கண்
கண்களானவை
நாம் அவனை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்புஇருந்த
காலத்தில் உள்ள
வைமுக்யத்தை நிலைமையை
நெஞ்சாலும் எண்ணாத பெருமானை சேவி
என்று உபதேசிக்கின்றன
மகா பாதகன் -அபராதகன் -இன்று ஆஸ்ரயித்தால் நேற்று வரையில் எப்படி இருந்தான்
முற்கால பாபங்களை சிறிதும் ஆராயதவன் -காணான்
எம்பெருமான் -என்றவாறு –

செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
காதுகள் ஆபரணமான ஹாரம் முதலியவற்றை
அணிந்து கொண்டு இருக்கிற
அப்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை கேள்
என்று தூண்டுகின்றன –

————————————————————————————————————————————————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான்–73-

———————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ
ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு
அன்றியே
நிந்திப்பதனாலும் நிந்தி
சிசுபாலாதிகளைப் போலே

பூந்துழாயானை –

அன்றிக்கே
இகழ்வாய்-
அநாதாரித்தாலும் அநாதரி
அன்றிக்கே
கருதுவாய்-
ஆதரித்தாலும் ஆதரி
உனக்கு இஷ்டப் பட்டபடி செய்
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்கு ஒரு குறையும் வாராது காண்

நெஞ்சே
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண
நின்றவா நில்லா நெஞ்சு
கருதுவாய் என் நெஞ்சே என்றும் பாட பேதம்

-திகழ் நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்
விளங்குகின்ற ஜல பூர்த்தியை உடைய சமுத்ரமும்
பர்வதங்களும்
பரம்பிய ஆகாசமும்
வாயுவும்
தேவாதி சரீரங்களும்
அந்தந்த சரீரங்களில் உள்ள பிராணன் களும்
ஆகிய இவற்றை எல்லாம்
தரித்து கொண்டு இருப்பவன் அவ்வெம்பெருமானே காண்
தான் என்ற சொல்லுக்குள் அடங்கும்படி எல்லா வற்றையும் தனக்கு விசேஷணம் ஆகக் கொண்டு உள்ளான் என்றுமாம்
சர்வ தாரகத்வத்தை சொல்லி
நம்முடைய புகழ்வு இகழ்வு எல்லாம் அவனுக்கு அப்பிரயோஜகம் –

——————————————————————————————————————————————————————————–

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் -கூற்றொருபால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு –74-

—————————————————————————————–

ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரத்வத்தையும்
ருத்ரனின் அபரத்வத்தையும் சொல்லி
சிவனும் எம்பெருமான் உடைய ரஷணத்தில் அடங்கினவன் என்கிறார்

ஏற்றான்
ரிஷபத்தை வாகனமாக உடையவனும்
தமோ குணமே வடிவு எடுத்ததாயும்
மூடர்களுக்கு உவமையாக சொல்லத் தக்கதாயும்

புள்ளூர்ந்தான்
கருடனை வாகனமாக உடையவனும்
வேத ஸ்வரூபி

எயில் எரித்தான்
திரிபுர சம்ஹாரம் பண்ணினவனும்
தன்னை ஆஸ்ரயித்தவர்களின் குடி இருப்பை எரித்தவன்

மார்விடந்தான்
இரணியனது மார்பை பிளந்தவனும்
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் விரோதியை மார்பை பிளந்து ஒழித்தவன்

நீற்றான்
சாம்பலை பூசிக் கொண்டு இருப்பவனும்
தான் பிராயச் சித்தி என்று தோன்றும்படி
நீறு பூசின சர்வாங்கம் உடையவன்

நிழல் மணி வண்ணத்தான் –
நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனும்
ஸ்ரமஹரமான குளிர்ந்த வடிவை உடையவன்

கூற்றொருபால்மங்கையான்
தனது ஒரு பக்கத்தில்
பார்வதியை தரித்துக் கொண்டு இருப்பவனும்
உடலின் பாதி பாகத்தை ஸ்திரீ ரூபம் ஆக்கிக் கொண்டவன்

பூ மகளான்
பெரிய பிராட்டியை திவ்ய மகிஷியாக உடையவனும்
உலகுக்கு எல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாக கொண்டவன்

வார் சடையான்
நீண்ட ஜடையைத் தரித்து உள்ளவனும்
சாதனா அனுஷ்டானம் பண்ணுவது உலகோருக்கு தெரியும் வண்ணம் சடை புனைந்தவன்

நீண் முடியான்
நீண்ட கிரீடத்தை அணிந்து உள்ளவனும்
சர்வேஸ்வரத்வ ஸூசகம்

கங்கையான்
ஜடை முடியில் கங்கையை தரித்து கொண்டு இருக்கும் ருத்ரன்
பரிசுத்தன் ஆவதற்காக கங்கையை தரித்தவன்

நீள் கழலான் காப்பு
நீண்ட திருவடிகளையும் உடையவனான
சர்வேஸ்வரன் உடைய
ரஷணத்தில் அடங்கினவன்
அந்த கங்கைக்கு உத்பத்தி ஸ்தானமான திருவடியை உடையவன்

மாறி மாறி சொல்லி அருளியது வாசி நன்றாக விளங்குவதற்காக-

———————————————————————————————————————————————————————

காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி–75-

—————————————————————————————————–

திருமாலே
உன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
பிரதிபந்தகங்கள் நீங்கப் பெற்று
பிரகிருதி சம்பந்தமும் நீங்கி
திவ்ய லோக பிராப்தியும்
வாய்க்கப் பெறுவார்கள் -என்கிறார் இதில்
கர்மவச்யர் ஆகார் -பரம சாம்யா பத்தியை பெறுவார் என்றவாறு

காப்பு உன்னை உன்னக் கழியும்
பிரதிபந்தங்கள்
பரம புருஷனான உன்னை
ரஷகனாக அனுசந்திக்கும் அளவில்
விட்டு நீங்கும் –
காப்பு -பிரதிபந்தகம்-தடை
பாப சாஷியாக பதினால்வர் நியமிக்கப் பட்டு
சூர்யன்/சந்தரன்/வாயு /அக்னி /த்யுலோகம் /பூமி /ஜலம்
ஹ்ருதயம் /யமன் /அஹஸ் /ராத்திரி /இரண்டு சந்த்யைகள்/தர்ம தேவதை
இப்படிப் பட்ட கர்ம சாஷிகளும் ஆராயக் கடவர் அல்லர் -என்றபடி

அருவினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும்
போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
உன்னை நினைக்கும் அளவில்
அவிழ்ந்து போம்
ஆப்பு -யாப்பு -கட்டு -கரும பந்தம்

-மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை
உன்னை த்யானிப்பவர்களுக்கு
கிழத் தனம் முதலிய ஷட்பாப விகாரங்களும் இல்லை யாம்
உளதாகை/பிறக்கை/மாறுகை/வளர்க்கை/மூப்பு-குறுகை/அழிகை-ஆகிய ஷட் பாவங்களும் இல்லை

திருமாலே
ஸ்ரீ யபதியே

நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தை -வழி காண்பர் –
கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-

——————————————————————————————————————————————————————————————–

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் -பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76

——————————————————————————

வழி நின்று நின்னைத் தொழுவார்
பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள்

வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் –
உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற
ஸ்வரூப ஆவிர்பாவத்தை
உடையராகவே ஆவார்கள்
வழுவா மொழி -வேதம்
அதில் சொல்லப் பட்ட மூர்த்தி யாவது -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம்
ஞ்ஞாநாநந்த விகாசம்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருமங்கை ஆழ்வார் –

பழுதொன்றும்வாராத வண்ணமே
ஒரு குறையும் இல்லாதபடி

விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்
உலகளந்த மகானுபாவன் எழுந்து அருளி இருக்கிற
திருமலையே
ஆஸ்ரிதர்களுக்கு மோஷம் அளிக்கக் காண்கிறோம் அன்றோ
கைமுதிக நியாயம்
அவன் எழுந்து அருளி இருக்கும் திரு மலையே கொடுக்க வல்லது என்றால்
அவன் கொடுத்து அளிப்பான் என்பது சித்தமே

எம்பார் நாள்தோறும் சிற்றம் சிறு காலையில்ஓவாதே இந்த பாசுரம் அனுசந்திப்பாராம் -பெரியவாச்சான் பிள்ளை –

—————————————————————————————————————————————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77-

————————————————————————

எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்து அருளி
இருக்கும் படிகளை நாம் அனுசந்தித்தால்
நமது இடர் எல்லாம் நீங்கி விடும் -என்கிறார் இதில்
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதும் ஆனபடிகளை நாம் சொல்ல
நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்கள் எல்லாம் தன்னடையே போம்

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்
திருமலையும்
வைகுண்ட மா நகரும்
திரு வெஃகாவும்

அஃகாத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
பூ மாறாத நீர் நிலைகளை உடைய
சிறந்த திருக் கோவலூர் என்கிற
திவ்ய தேசமும்

ஆகிய
நான்கு இடத்தும்
நான்கு திருப்பதிகளிலும்
வரிசை கிரமமாக

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால்
எம்பெருமான்
நிற்பதும்
வீற்று இருப்பதும்
பள்ளி கொண்டு இருப்பதும்
நடப்பதுமாய்
இருக்கிறான் என்று அனுசந்தித்தால்

கெடுமாம் இடர்
துக்கங்கள் எல்லாம்
விட்டோடிப் போய் விடும்
விண்ணகர் பரமேஸ்வர விண்ணகர் வீற்று இருந்த திருக் கோலம் என்பதால்
அத்தை சொன்னதாகவும் கொள்ளக் குறை இல்லை-

—————————————————————————————————————————————————————————

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த -படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-

———————————————————————-

இடரார் படுவார்
அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்
துக்கத்தை அனுபவிக்க யாரால் முடியும்
என்னால் முடியாது -என்கிறார்

எழு நெஞ்சே
எழுந்திரு

வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை விழுங்குவதாக
தொடர்ந்து வந்த
பெரிய நெஞ்சில் இரக்கம் இன்றியே
கொடுமை பூண்ட முதலையை
தப்பிப் போகாதபடி எண்ணிக் கொன்றவனும்

-படமுடைய பைந்நாகப் பள்ளியான் –
படத்தையும்
பசுமை நிறத்தையும் உடைய
திரு வநந்த ஆழ்வானை
திருப் பள்ளி மெத்தையாக உடையவனுமான எம்பெருமான் உடைய

பாதமே கை தொழுதும்
திருவடிகளை தொழுவோம்

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு
கொய்யப்பட்ட புன்னையின்
அழகிய மலர்களைக் கொண்டு

நாம் அவனை ஆஸ்ரயிக்கவே துக்கங்கள் எல்லாம் போம்
துக்கப் படுக்கைக்கு ஆள் இல்லை
ஒருகால் துக்கம் வந்தாலும் அது முதலை பட்டது படும்-

—————————————————————————————————————————————————————–

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
மண் தா என இரந்து மா வலியை-ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து –79-

————————————————————————————

எம்பெருமான் தனது ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டாவது கார்யம் செய்து அருளுபவன்
என்று மூதலிக்க வேண்டி இருக்க
சம்சாரத்தில் அவனை கொண்டாடுபவர் இல்லையே
வஞ்சகன்/ சர்வஸ்பஹாரி /தனக்கு தானம் கொடுத்தவனை பாதாளத்தில் தள்ளினவன் என்பரே
மகாபலியை அஹங்காரி/ ஆசூர பிரகிருதி என்று நினைக்காமல்
ஔதார்ய குணம் ஒன்றாலே கொல்லாமல் விட்டு அருளினானே

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானை
பழிக்கிறார்களே அன்றி
தன்னது அல்லாததை தன்னதாக அபிமானித்துக் கொடுத்த
அந்த மாவலியை
பழிப்பவர்கள் யாரும் இல்லையே
இஃது என்ன அநியாயம் –

மண் தா என இரந்து மா வலியை-
மாவடி நிலத்தை எனக்குத் தா என்று
மாவலி இடத்தில் யாசித்து

ஒண் தாரை நீர் அங்கை தோய
அழகிய நீர் தாரை
தனது அழகிய திருக் கையிலே
வந்து விழுந்ததும்

வடுத்து நிமிர்ந்திலையே
கடுக ஓங்கி வளரவில்லையோ
மாவலி தாரை வார்த்த உதகமும்
ப்ரஹ்மாதிகள் திருவடி விளக்கின உதகமும்
ஏகோதகம் என்னலாம் படி அத்தனை விரைவாக நீ வளர வில்லையோ –

நீள் விசும்பில் ஆரங்கை தோய
பரம்பின மேல் உலகில்
வாழ்கின்ற ப்ரஹ்மாதிகள் உடைய
அழகிய கைகள் ஸ்பர்சித்து
திருவடி விளக்கும்படி –

நீள் விசும்பிலார் அங்கை தோய
விசும்பில் உள்ள தேவர்கள் உனது திருத் தோளில் வந்து அணையும்படியாகவும்

நீள் விசும்பில் ஆரம் கை தோய –
பரந்த விசும்பில் உனது திரு மார்பில் அணிந்திருந்த
முத்தா ஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி
ஓங்கி -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த -விடத்தரவை
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள் –80-

————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு
நெருங்கிய கொடிய சத்துருவான
கருடனுக்கு

ஆற்றேன் என்று ஓடி
நேரே நின்று பிழைத்து இருக்கத் தக்க
வல்லமை உடையேன் அல்லேன் என்று
சொல்லிக் கொண்டு
விரைந்து ஓடிப்போய்

படுத்த பெரும் பாழி
எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு
விரித்த
பெருமை பெற்ற
படுக்கை யாகிற சேஷனை

சூழ்ந்த –
சுற்றிக் கொண்ட

விடத்தரவை
விஷத்தை உடைய ஸூ முகன்
என்கிற சர்ப்பத்தை
தேவேந்தரன் சாரதி மாதலி தனது புத்திரி குணகேசி என்பவளுக்கு வரம் தேடி
நாரத மகரிஷி உடன் புறப்பட்டு
பாதள லோகம் போகவதி நகரம் அடைந்து
ஐராவத குலத்தில்-ஆர்யகன் பௌத்ரன் -வாமனன் தௌஹித்ரன் -சிக்ரன் புத்திரன் -ஸூ முகன் நாக புத்ரன்
ஆர்யகன் இவனை கருடன் பஷித்து இவன் தந்தையை யும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக கருடன் சொல்லி இருப்பதை சொல்ல
மாதலி அந்த சுமுகனைஉபேந்திர மூர்த்தி உடன் இருந்த தேவேந்தரன் இடம் கூட்டிச் செல்ல
உபேந்த்ரன் இவனுக்கு அமிர்தம் தரலாம் இஷ்ட பூர்த்தி உண்டாகும் சொல்ல
வலது திருக்கை பாரம் கூட தாங்க முடிய வில்லை கருடனுக்கு
அபராத ஷாமணம் செய்து கொள்ள

வல்லாளன் கைக்கொடுத்த
வலிமை உடைய கருடன் கையிலே
அடைக்கலப் பொருளாக
தந்து ரஷித்த
கருடா சுகமா சொல்லி
குசலப் பிரச்னம் பண்ணுவான் ஆயினான்

மாமேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்
சிறந்த திருமேனி உடைய
எம்பெருமானுக்குத் தவிர
மற்ற தேவதாந்தரங்கட்கு
அடிமை ஆவாரோ –

————————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-61-70–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் -உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு –61-

—————————————————————————————

உலகு இறந்த ஊழியும் அழிந்து கிடந்த பிரளய காலத்திலும்

புந்தியிலாய-சங்கல்ப ஞானத்தினால் படைக்கப் பட்ட

புணர்ப்பு -படைப்புகளாம்

ரக்த சம்பந்தமே யாகும்
பெற்றவனை ஒழிய வளர்ப்பவன் இல்லை என்றது ஆயிற்று
இவை அறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே
இப்போது உபாயம் அறிவானும் அவனே என்று
கீழ்ப் பாசுரத்துடன் சேர்த்து பொருள் –

————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மணமருவ மால் விடை ஏழ் செற்று–கணம் வெருவ
ஏ ழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-

———————————————————————————
ஸ்ருஷ்டித்து தூரச்தனாய் நில்லாமல்
களைகளைப் பிடுங்கி ரஷிப்பவனும் அவனே
தோள் என்றது கை
தவழ்ந்து போய் மருதம் முறித்ததால் கைகளின் மேல் ஏறிட்டு கூறுகிறார்

கணம் கூட்டம் -வேறுபாடி இன்றி அனைவரும் வெருவ

சூழ் அரவப் பொங்கணையான் தோள்
பரிமளம் குளிர்த்தி -பொருந்திய திரு அரவப் படுக்கையும் பொறாத சௌகுமார்யம்
இப்படி அல்லாடி திரிகிறான் -வயிறு எரிகிறார்-பொங்கும் பரிவு
எல்லா செயல்களையும் தோளின் மேல் ஏறிட்டு அருளுகிறார்-

——————————————————————————————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேளவனது இன்மொழியே கேட்டு இருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்–63-

————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்

கேளவனது –
சகல வித பந்துவான அப்பெருமான்
விஷயமாகவே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே –

இன்மொழியே கேட்டு இருக்கும்
நா நாளும்
கோள் நாகணையான்-
மிடுக்கை உடைய திருவநந்த ஆழ்வானை படுக்கையாக
உடைய அப்பெருமானது

குரை கழலே
ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த திருவடிகளையே

கூறுவதே

நாணாமை நள்ளேன் நயம்
சப்தாதி விஷயங்களை வெட்க்கப் படாமல்
விரும்புவாரைப் போல் நான் விரும்ப மாட்டேன்
நயம் -நயக்கப் படுவது நயம் -ஆசைப் படத் தக்க விஷயாந்தரங்கள்
நயந்தரு பேரின்பம் எல்லாம் -இராமானுச நூற்றந்தாதி
எல்லா இந்த்ரியங்களும் அவன் மேல் ஊன்ற பட்ட படியை
ஹர்ஷத்துடன் அருளிச் செய்கிறார்
ஒரே உறுதியாக இருக்கவே நானும் நாமம் கொண்டு இதர விஷயங்களை காறி உமிழ்ந்தேன்-

——————————————————————————————————————————————————–

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் -வியவேன்
திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என்மேல் வினை–64-

————————————————————————

விஷயாந்தரங்கள் துர்வாசனையால்
தம்மை இழுக்க மாட்டாது என்கிறார் இதில்
அவன் அனுக்ரஹத்தை பூரணமாக பெற்று இருக்கிறேன் –
நயவேன் பிறர் பொருளை
பரமபுருஷன் உடைய ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று விருமப மாட்டேன்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத -என்பதால் எம்பெருமானை- பிறர்- என்கிறார்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -கண்ணி நுண் சிறுத் தாம்பு
கௌஸ்துப ஸ்தானமான ஆத்மவஸ்துவை -என்னது -என்று அபிமானித்ததால்
இராவணன் செயல் உடன் ஒக்கும்

நள்ளேன் கீழாரோடு
சம்சாரிகளோடே ச்நேஹம் கொள்ள மாட்டேன்
மாரீசன் போல்வார் உடன் ச்நேஹம் கொள்ள மாட்டேன்

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் –
சரிந்த ஸ்ரீ வைஷ்ணவர்களோடு அல்லால்
மற்றவர்கள் உடன் கால ஷேபம் செய்ய மாட்டேன்
உய்வேன் -உசாவேன் என்றபடி வார்த்தையாடி போது போக்குதல்
உசாத்துணை -ஸ்ரீ வைஷ்ணவர்களே

திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
ஸ்ரீ யபதியை தவிர வேறு தேவதாந்தரங்களை
தெய்வமாக கொண்டு துதிக்க மாட்டேன்

வியவேன்
இப்படி இருக்க ஹேதுவான சத்வ குணம் என்னிடம் தான் உள்ளது
என்று அஹங்கரித்து என்னைப் பற்றி
நானே ஆச்சர்யம் பட மாட்டேன்

திருமாலை அல்லது வியவேன் -என்றுமாம்

வருமாறு என் என்மேல் வினை
இப்படியானபின்பு
அவன் அனுக்ரஹத்துக்கு இலக்கான என்மேல்
அவன் நிக்ரஹ ரூபமான பாபம்
வரும் விதம் எது -வர மாட்டா -என்றபடி
அவசியம் அனுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் -சாஸ்திர வாக்கியம்
வருமாறு என் நம் மேல் வினை -என்றும் பாடம்
தம்முடன் சம்பந்தித்ததவர்களையும் கூட்டிக் கொண்டு அருளுகிறார்
ஒருமையில் பன்மை வந்த வழு வமைதி-

———————————————————————————————————————————————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிகட் செல்லார் -நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்
கரியானை கை தொழுதக் கால்–66-

—————————————————————————————-

ஆழ்வார் தாம் ஒருங்கு பட்ட நிலையை அருளிச் செய்த அநந்தரம்
நாமும் அந்த நிலை பெற இலகுவான உபாயம் காட்டி அருளுகிறார்

வினையால் அடர்ப்படார்
நல்வினை தீ வினை இரண்டாலும்
நெருக்குப் பட மாட்டார்கள்
பொன் விலங்கு புண்யம் இரும்பு விலங்கு பாபம்

வெந்நரகில் சேரார்
கொடிய சம்சாரம் ஆகிய நரகத்திலே மீண்டும் சென்று
சேர மாட்டார்கள்
அவன் உடன் கூடி இருத்தல் ஸ்வர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை –

தினையேனும் தீக்கதிகட் செல்லார் –
சிறிதேனும் கெட்ட வழியிலே போக மாட்டார்கள்
தர்ம புத்திரன் நரக தர்சனம் பண்ணினவோபாதியும் கூடாது இவர்களுக்கு
அஸ்வத்தாமா ஹத குஜ்ஞ்ஞர

நினைதற்கு அரியானை
ஸ்வ பிரயத்தனத்தால்
நினைக்க கூடாதவனும்

சேயானை
நெஞ்சுக்கு விஷயமாகாத படி
தூரச்தனாக இருப்பவனும்

ஆயிரம் பேர்
ஆயிரம் திரு நாமங்களை உடையவனும்

செங்கண் கரியானை கை தொழுதக் கால்
சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவையும் உடையவனுமான பெருமானைக் குறித்து
அஞ்சலி பண்ணினால்

————————————————————————————————————————————————————————————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் -வேலைக்கண்
ஓராழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்–66-

——————————————————————————–

காலை எழுந்து உலகம் கற்பனவும்
உயர்ந்தவர்கள் சத்வம் வளரக் கூடிய விடியல் காலையில் துயில் எழுந்து அப்யசிப்பனவும்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே

கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
படித்து அறிவு நிரம்பிய
வைதிகோத்தமார்கள்
சாஷாத் கரிக்க ஆசைப்படுவனவும்
கீழ் வேதம் -கர்ம காண்டம்
மேல் வேதம் -ப்ரஹ்ம காண்டம் உபநிஷத்
மேலைத் தலை மறையோர் -வேதாந்திகள் என்றபடி

எவை என்றால் –

வேலைக்கண் ஓராழியான் அடியே
திருப் பாற் கடலிலே
ஒப்பற்ற திரு வாழியை உடையவனாய்
பள்ளி கொண்டு இருக்கும் பெருமான் உடைய
திருவடிகளேயாம்

ஓதுவதும்
மகான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்

ஒர்ப்பனவும்
மனனம் பண்ணப் பெறுவனவும்
எவை என்றால்

பேராழி கொண்டான் பெயர்
பெரிய கடல் போன்ற திரு மேனியைக் கொண்ட
அப்பெருமான் உடைய
திரு நாமங்களே யாம்-

—————————————————————————————————————————————————————————————

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனையே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு–67-

—————————————————————————–

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு
பொங்கிக் கிளறுகின்ற மகா சமுத்ரம் நோக்கியே
ஆறுகளானவை செல்லும்

ஒண் பூ உயரும் கதிரவனையே நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது
உக்கத ஸ்தானத்தில் ஆகாசத்தில்
இருக்கிற சூரியனைக் கண்டே மலரும்

-உயிரும் தருமனையே நோக்கும்
பிராணனும் யமதர்ம ராஜனையே
சென்று சேரும்
இவை போலவே

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
ஞானமானது
அழகிய தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு
வல்லபனான பெருமான் ஒருவனையே சென்று பற்றும்
பகவத் விஷயம் அல்லாத ஞானம் செருப்பு குத்த கற்றது போலேயாம்

தொக்கிலங்கி யாரு எல்லாம் பறந்தோடி தொடு கடலே
புக்கன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டு அம்மா உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -பெருமாள் திருமொழி

முமுஷுப்படி திரு மந்திர பிரகரணம் -73-இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்றதாயிற்று
இதற்கு மா முனிகள் உணர்வு -ஞான மாயனான ஆத்மா
திருமாலுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை இப்பாட்டு உணர்த்தும் என்று காட்டி அருளுகிறார்

ஆக
எம்பெருமானைப் பற்றிய ஞானமே ஞானம்
ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்
மிதுன சேஷத்வமே ஜீவாத்மா லஷணம் -தாமரையாள் கேள்வன் என்பதால்

ஸ்ரீ வைஷ்ணவ பிராணன் யமனை கிட்டி சேராதே சங்கை உண்டே
உயிரும்-பகவத்பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் -அப்பிள்ளை உரை
ஆத்மா வேறு பிராணன் வேறு -சித்தாந்தம்
ஸ்ரீ வைஷ்ணவ ஆத்மா எம்பெருமானைச் சேர்ந்தாலும்
பிராணன் யமனைச் சென்று சேரும் என்பர் சிலர்
மற்றும் சிலர்
யாமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷா ஹ்ருதி ஸ்தித -என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும்
எம்பெருமானையே யமனாகவும் தருமனாகவும் சொல்லி இருப்பதாலே
அங்கு எம்பெருமானே பொருள் என்பர் சிலர்-

————————————————————————————————————————————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்–68-

—————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
இப்படிப் பட்ட உன்னுடைய பெருமையை
காலதத்வம் உள்ளதனையும் இருந்து ஆராய்ந்தாலும்
அறியக் கூடியவர் ஆர்

உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
உனது திவ்யாத்மா ஸ்வரூபத்தை
தான் அறியக் கூடியவர் ஆர்

விண்ணகத்தாய்
பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவனே

மண்ணகத்தாய்-
இந்த மண்ணுலகில் திரு வவதரிப்பவனே

வேங்கடத்தாய்-
திருமலையில் நின்று அருளுபவனே

நால் வேதப் பண்ணகத்தாய்
பண் நால் வேதத்து அகத்தாய்
ஸ்வர பிரதானமான நான்கு வேதங்களாலும்
அறியப் படுபவனே

நீ கிடந்த பால்
ஆர்த்த ரஷணத்துக்காக
நீ பள்ளி கொண்டு இருக்கப் பெற்ற திருப் பாற் கடலை தான்
உணர்வார் ஆர்

யாரும் இல்லை
சர்வஞ்ஞன் உன்னாலும் உணர முடியாதே
தனக்கும் தன் தன்மை அறிவரியான்-

——————————————————————————————————————————————————————–

பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல்அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் –69-

——————————————————————————–

சமத்காரமான கேள்வி
எத்திறம் என்று நினைந்து ஈடுபடும்படியான
ஏழு பிராயத்தில் கோவர்த்தனம் குடையாக பிடித்த
செயலை விட ஆச்சர்யமான
அகடிதகட நா சாமர்த்தியமான செயல்
பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர்-

வேலை நீருள்ளதோ
பிரளய சமுத்ரத்தில் தோன்றிய ஆலம் தளிரா

விண்ணதோ
பிடிப்பு ஒன்றும் இல்லாத ஆகாசத்தில் தோன்றியதா
மண்ணதோ
பிரளயத்தில் கரைந்து போன மண்ணில் நின்றும் தோற்றியதா

சர்வஞ்ஞன் உன்னாலும் கண்டு பிடித்து சொல்ல முடியாத கேள்வி
அதிமாநுஷ சே ஷ்டிதங்களில் குதர்க்கம் பண்ணுதல் தகாது
அல்பபுத்திக்கு அசம்பாவிதமாக தோற்றினாலும்
விசித்திர சக்தனான
அவன் செயல்களில் துராபேஷங்கள் செய்ய அதிகாரம் இல்லை-

———————————————————————————————————————————————————————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை-நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –70-

————————————————————————————-

சொல்லும் தனையும்
சொல்லக் கூடிய சக்தி உள்ள வரையிலும்

தாமத்தால்
மந்த்ரம் இல்லாத கிரியைகளாலும்

தவறாமல் சரிந்தே போகக் கூடியது உடல்
இதம் சரீரம் பரிணாம பேதலம் பதத்யவச்யம் ச்லதசந்தி ஜர்ஜரம்
அப்படி உடலால் செய்ய முடியாவிடில் வாயாலே திரு நாமங்களை சொல்லலாமே

தொழுவதற்கு சக்தி இல்லா விடில்
திருநாமங்கள் சொல்லும் சக்தி உள்ள வரையில்
புகழ்ந்தீர்கள் ஆகில் அது மிகவும் நன்று

————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-51-60–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே -களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான் திருநாமம் எண் –51-
களியில்-அஹங்காரத்தால்

—————————————————————————————————–

எம்பெருமான் உடைய திரு நாமங்களை
பரம போக்யமாக வாயாலே சொல்லவே
அப்பெருமான்
ப்ரஹ்லாதன் உடைய விரோதிகளைப் போக்கி
தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கி
தன்னையும் தந்து அருள்வான்
நெஞ்சமே
நீ திருவடி இணையை சேவித்து அனுபவிப்பதற்கு
தெளிவு கொண்டு இருந்தால்
அவன் பிரசன்னனாய் அருள் புரிவான்
நீ தெளி வுற்று இருக்கிறாய் எனபது
நன்கு விளங்குமாறு ஸ்ரீ நரசின்ஹா மூர்த்தியின் திரு நாமங்களை
எண்ணிக் கொண்டு இரு –

——————————————————————————————————————————————————

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் -நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கை தொழுவர் சென்று –52-

ஒரு மாலையால் ஒப்பற்ற புருஷ ஸூ கத மாலை கொண்டு

——————————————————————————————

அஹங்காரம் கொண்ட
முப்பத்து மூவர் அமரர்களும்
எம்பெருமானை அடி பணிந்தே சிறப்பு உற்று இருக்கின்றனர்
முப்பத்து மூவரை எடுத்துக் காட்டினது
முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரையும்
எடுத்துக் காட்டினதுக்கு பர்யாயம்
பெரிய திருவந்தாதியில்
இருநால்வர்
ஈரைந்தின் மேல் ஒருவர்
எட்டோடு ஒரு நால்வர்
ஓர் இருவர் -என்று நம் ஆள்வார் அருளிச் செய்கிறார்-

————————————————————————————————————————————————-

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –53-

————————————————————————————

திருவனந்தாழ்வான் போலே
எல்லா கைங்கர்யங்களையும் எல்லா காலங்களிலும் செய்ய
திரு உள்ளம் கொண்ட ஆள்வார்
அவன் செய்யும் அடிமைகளை எடுத்து காட்டுகிறார்
சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான் –

இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்

நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்

நீள் கடலுள் என்றும் புணையாம்-
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்

புணையாம் -திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்

அணி விளக்காம் –
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்

மணி விளக்காம் என்றுமாம்

பூம் பட்டாம்-
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்

புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்

பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்

ஆளவந்தார் -செய்யா ஆசனம் இத்யாதி
சென்றால் குடையாம் கடல் புணையாம் திருத் தீவிகையாம்
நின்றால் இரு திருப் பாதுகையாம் நித்திரைக்கு அணையாம்
குன்றா மணி ஒளி ஆசனமாம் புணை கோசிகையாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசர்க்கு அரவரசே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -திருவரங்கத்து மாலை

———————————————————————————————————————————————————————

அரவம் அடல் வேழம் மான் குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மல் குன்றம் -காவின்றி
விட்டிறுத்து மேய்தொசித்து கீண்டு கூத்தாடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன்–54-

—————————————————————————–

திருப் படுக்கையிலும் பொருந்த மாட்டாமல்
லீலி விபூதியில் பிறந்து
களை பிடுங்கி
விபூதியை பாது காத்து அருளும் திவ்ய சேஷ்டிதங்களை
அனுசந்திக்கிறார்
முறை நிரைநிரை அணி அலங்காரம்

அரவம் விட்டு -காளியனை கொள்ளாமல் விட்டு அடித்ததும்
அடல் வேழம் இறுத்து -பொருவதாக வந்த குவலயா பீடம் தந்தம் முறித்து உயிர் தொலைத்தும்
ஆன் மேய்த்து -பசுக்களை வயிறு நிரம்ப மேய்த்ததும்
குருந்தம் ஒசித்து -அசூராவேசமுடைய குருந்த மரத்தை ஒடித்துப் பொகட்டும்
புள்வாய் கிண்டும் -பகாசுரன் வாயைக் கிழித்தும்
குரவை கோத்தும் -ராசக்ரீடையை இடைப் பெண்கள் உடன் கை கோத்து ஆடியும்
குடம் ஆடி -குடங்களைக் கொண்டு ஆடியும்
முலை உண்டு -பூதனை முலையை உயிர் உடன் உறிஞ்சி உண்டும்
மல் அட்டும் -கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களை கொன்றும்
குன்றம் எடுத்தும் -கோவர்த்தன மலையை குடையாக எடுத்தும்
இவை அனைத்தும் தாமரைக் கண்ணன் அவன் திவ்ய சேஷ்டிதங்கள்-

—————————————————————————————————————————————————————————–

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் –55-

———————————————————————————

பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்
இடைத்தனத்தில் குறைவின்றி பூரணமாய் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
அன்றிக்கே
ஒரு பாகவதன் பேரை அபாகாவதன் தரிப்பது
அவனையும் யம கோஷ்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது
ஒரே சொல்லாக கொண்டு நாயனார் ஆழி மழைக் கண்ணா-திருப்பாவை வ்யாக்யானத்தில் அருளிச் செய்தபடி

யமபடர்கள் பாகவதர்கள் இடம் அஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார்
குணாகுணங்களை ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்
அவர்களை கண்டால் அனுவர்தித்து இருங்கள் என்று நியமித்தான்
பிராட்டியே சிதைகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்வார் என்னுமவன்

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்–நான் முகன் திருவந்தாதி

கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினையும் செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் -திருவாய்மொழி

வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -திருச் சந்த விருத்தம்

ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூல
பரிஹர மதுசூதன பிரபன்னான் ப்ரபுரஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

————————————————————————————————————————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க -நேரே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன்–56-

———————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை ஆரே அறிவார் அது நிற்க –
எம்பெருமான் பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டு அறிய முடியாதது
அவன் திரு நாமங்களை வாயில் வந்தபடி எல்லாம் சொல்லி கூப்பிடுமது செய்யலாம் அத்தனை ஒழிய
ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்ம வித் -என்றது எல்லாம் அளவிட்டு அறிந்தமையை சொன்னது அன்று
கன்றுக் குட்டி அம்மே -சப்தம் செவிப்பட்டதும் தாய் பசு இரங்கி நிற்பது போலே
திருநாமத்தை வாய் விட்டு பிதற்றினால் அவன் வந்து அருள் புரிவான்
பெம்மான் -பெருமான் மருவி
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன்

—————————————————————————————————————————————————————————————–

அயனின்ற வல்வினையை யஞ்சினேன் யஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் -நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது –57-

——————————————————————————–

திருமந்த்ரத்தின் பொருளை விவரிக்கும் இப்பாசுரம் பாடினதால்
அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவனம் பெற்றேன்

நயம் நின்ற
திருமந்த்ரார்த்தை நயப்பித்தலில் நோக்கமாய் உள்ள -என்றுமாம்
எம்பெருமான் உடைய ஸ்வரூபம்
ஜீவாத்மாவின் ஸ்வரூபம்
அடைவதற்கு உபாயம்
அடைந்து பெற வேண்டிய பேறு
விரோதி ஸ்வரூபம்
ஆகிய அர்த்த பஞ்சக அர்த்தங்களும் திருமந்த்ரார்த்தம்
இதுவே இந்த பிரபந்தத்தாலும் விவரிக்கப் படுகின்றன-

————————————————————————————————————————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே -பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை–58-

———————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும்
புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டு
தூபத்தை ஏந்திக் கொண்டு
எம்பெருமானை வணங்கி
உஜ்ஜீவிப்பொம்

எழு
நீ புறப்பட்டு

வாழி நெஞ்சே –
உனக்கு இந்த ஸ்வ பாவம் நித்யம் ஆயிடுக –

நாம் இப்படி சொல்ல காரணம் என்ன வென்றால்

பழுதின்றி
முறைப்படி
குருகுல வாசம் செய்து
ஆச்சார்யர் மூலமாகவே கற்று

மந்திரங்கள் கற்பனவும்
பகவத் மந்த்ரங்களை அப்யசிக்கின்றனவும்

மாலடியே கை தொழுவான்
சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுவதற்க்கே யாம் –

ஆனபின்பு

அந்தரம் ஒன்றில்லை அடை
நாம் ஆறி இருக்க அவகாசம் இல்லை
அப் பெருமானை விரைவிலே சென்று கிட்டு
திரு உள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்
நெஞ்சு உடனே அனுகூலிக்கவே வாழி நெஞ்சே என்கிறார்

———————————————————————————————————————————————————————————–

அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் –59-

————————————————————————————

அடைந்த
அடியே பிடித்து பற்றிக் கிடக்கிற

அருவினையோடு
போக்குவதற்கு அருமையான பழ வினைகளும்

அல்லல்
அந்த பழ வினைகளின் பயனாக வரும் மனத் துன்பங்களும்

நோய்
சரீர வியாதிகளும்

பாவம்
இப்போது செய்கிற பாவங்களும்

மிடைந்தவை-
இப்படி பலவகையாக ஆத்மாவை தெரியாதபடி
மூடிக் கிடகின்றவை

மீண்டு ஒழிய வேண்டில்-
வாசனையோடு விட்டு நீங்க வேண்டுமானால்

நுடங்கிடையை
மெல்லிய இடையை உடைய பிராட்டியை
நமஸ் சிறையில் வைத்து நநமேயம் என்று இருந்த

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய
முன் இரு காலத்தில்
இலங்கா புரியில் சிறை வைத்த இராவணன்
உடைய மிடுக்கு அழியும்படி

முன்னொரு நாள் தன் விலங்கை வைத்தான் சரண்
முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீ ராமனாக திருஅவதரித்து
திருக்கையிலே எடுத்து பிடித்தவனான
பெருமானே உபாயமாவான் –

இத்தால்
எம்பெருமானுக்கு போக்யமாய் உள்ள ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று செருக்கு உற்று இருக்குமவர்கள்
ராவணன் பட்ட பாடு படுவார்கள்
என்னும் இடமும்
ஆத்மவஸ்து அவனுடையது என்று அனுகூலித்து இருக்குமவர்களுக்கு வரும் விரோதிகளை
பிராட்டியின் துயரத்தை பரிஹரித்து அருளினது போலே
பரிஹரித்து அருளுவான் என்னும் இடமும் தெரிவிக்கப் பட்டன-

—————————————————————————————————————————————————————————–

சரணாம் மறை பயந்த தாமரை யானோடும்
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த உலகு –60-

—————————————————————————–

சரணாம் மறை
சரண் ஆம் மறை –
எல்லார்க்கும் ஹிதம் உரைக்கும் வேதத்தை

பயந்த தாமரை யானோடும்
எம்பெருமான் இடத்தில் நின்றும் தான் அடைந்து
நாட்டில் உள்ளவர்களுக்காக வெளிப்படுத்தின
பிரமனோடு கூட

மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-
மரணம் அடையும் தன்மையை உடைய
நித்தியமான ஸ்வரூபத்தை உடைய
ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும்

அரணாய
அரண் ஆய -ரஷகமான விதங்களை

பேராழி கொண்ட பிரான் அன்றி
பெரிய திரு ஆழியை திருக்கையில் கொண்ட
எம்பெருமான் அறிவனே அல்லது

மற்று அறியாது ஓராழி சூழ்ந்த உலகு
அவனிலும் வேறான
கடல் சூழ்ந்த இவ் உலகில் உள்ளார்
அறியமாட்டார்கள் –

பலனை அனுபவிப்பனும் எம்பெருமானே
அதற்கு உபாய அனுஷ்டானம் செய்பவனும் அவனே
ஸ்வாமியின் கார்யமே ஒழிய சொத்தின் கார்யம் அல்லவே
பரம புருஷ ஜ்ஞாநினம் லப்த்வா -ஸ்ரீ பாஷ்யம்
இந்த அர்த்தம் வேதாந்த சித்தம் என்று காட்டி அருள சரணா மறை பயந்த -என்கிறார்

அரணாய -சிலர் தப்பாக எம்பெருமானுக்கு விசேஷணம் என்பர்
இது அரணானவற்றை இரண்டாம் வேற்றுமை தொகை-

ஆழி சூழ்ந்த உலகமானது மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய் இருக்கிற
பேராழி கொண்ட பிரானை அன்றி மற்றது ஒன்றையும் அறியாது -என்றும் பொருள் சொல்லலாமே என்றாராம் ஒருவர்
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்து இருப்பதால்
இப்பொருள் இணங்காது என்று கொண்டு
நஞ்சீயர் -உலகம் எனபது உயந்தோர் மாட்டே என்பதால்
சிறந்த மகா ஞானிகள் என்று கொண்டு இந்த அர்த்தத்தை இசைந்தாராம்
இதைக் கேட்ட பட்டர்
இங்கு ஓராழி சூழ்ந்த விசேஷணம் இருப்பதால்
கடலால் சூழப் பட்ட மகான்கள் என்று சொல்லப் போகாது
அதனால்
கடல் சூழ்ந்த இவ் உலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது
பேராழி கொண்ட பிரானே அறிவான் என்றே பொருள் கொள்ள வேணும் என்று
உபபாதித்து உரைத்து அருளினாராம்
இங்கனே நிர்வஹித்து பட்டர் அருளிச் செய்த போது
நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டு இருந்தார்கள்
ஆனாலும் ஒரு கால் இதனை நஞ்சீயர் மறந்து விட
நம்பிள்ளை நினைவு படுத்தி அருளினார் -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து உள்ளார்-

———————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-41-50–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு –41-

—————————————————————————–

எம்பெருமான் உடைய வாத்சல்ய குணத்தில் ஈடுபட்டு பேசுகிறார்

என்னெஞ்சே -என்றும்
எனது மனமே எப்போதும்
புறனுரையே யாயினும் –
மேலுக்கு சொல்லுகிற வார்த்தையாய் இருந்தாலும்
மித்ர பாவேனசம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –
நமது ஆபி முக்யத்தை மாத்ரமே பார்த்து
உறங்குகிற குழந்தையை அனைத்துக் கொண்டு கிடக்கும் தாயை போலே
தான் அறிந்த சம்பந்தமே காரணமாக
நம்மை விடாமல்
சத்தையை நோக்கிக் கொண்டு துணையாக போருமவன்
நன்மை என்று பேரிடலாவது தீமை உண்டா என்று பார்த்து
ஸூ க்ருதங்களை ஏறிட்டு
மடிமாங்காய் இட்டு கார்யம் செய்பவன்

பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித்து இரு
சக்கரபாணி எம்பெருமான் விஷயமாக
பேசும் பேச்சையே
அனுசந்தித்துக் கொண்டு இரு

அப்படி இருந்தால்

இன்று முதலாக
இன்று தொடங்கி

குன்றனைய குற்றம் செய்யினும்
மலை போன்ற பெருத்த குற்றங்களைச் செய்தாலும்

குணம் கொள்ளும்
அவற்றை எல்லாம் எம்பெருமான் குணமாகவே
திரு உள்ளம் பற்றுவன்

என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார்
அக்ருத ஸூ க்ருதகஸ் ஸூ துஷ்க்ருதா சுபகுண லவலேச தேசாதிக
அசுபகுண பரஸ் சஹஸ்ரா வ்ருத வரதமுருதயம் கதிம் த்வாம் வ்ருனே -ஸ்ரீ வராத ராஜ சத்வம் -92-
குற்றங்களை குணமாக கொண்டால் பிராந்தன்
பிரேமத்தின் கனத்தால் வரும் பிரமை எல்லாம் அடிக் கழஞ்சு பெருமே
ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம் -என்றானே
நோன்பு நோற்கை
காமன் காலில் விழுதல்
மடலூர்கை
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு
அன்பு கடந்த பிரேமம்
தோஷம் காணாது இருப்பதே அஞ்ஞானம்
கண்டு குணமாக கொள்வது வாத்சல்யம்
பக்த வத்சலன் -பட்டர் பாஷ்யம் -ஓர் அடியான் கிடைக்கப் பெற்ற பெருமையினால்
மற்றது ஒன்றிலும் ஆசை கொள்ளாது எல்லாவற்றையும் மறந்து இருக்கை –
சஹாஸ்ராம்சு -சர்வதோமுகமான ஞானம் உடையவன்
அவிஞ்ஞாதா -அடியார்கள் குற்றங்களை அறியாதவன்
தோஷ அதர்சித்வம் -ப்ரீதியின் பிரதம பர்வம்
தோஷ போக்யத்வம் -ப்ரீதியின் சரம பர்வம்
தோஷங்களை காணா விடில் ஷமிக்க பிரசக்தி தானும் இல்லை இ றே
எம்பெருமான் உடைய பிரணய ரசம் இருகரையையும் அழியப் புக்கால்
அணையிட்டும்
ஆணையிட்டும்
தடுக்க வல்லார் இல்லை கிடீர்
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தட்டும்
அவனுடைய கல்யாண குணபிரசரம் ஒரு தட்டுமாய் இருக்கும் -என்று பிள்ளான் அருளிச் செய்யும்

தோஷ போக்யத்வத்தை மங்க ஒட்டு உன் மா மாயை

தன் கன்றின் உடம்பில் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ –
எம்பெருமான் உடைய தோஷ போக்யத்வ குணத்தை சாக்ரஹமாக இல்லை செய்யுமவர்கள்
நிர்க்குண ப்ரஹ்மவாதி கோடியிலே அந்தர்பவிக்கை அழகிது
என்று எண்ணுவார் இடரைக் களைவான் -பிள்ளை பணிக்கும் –

————————————————————————————————————————————————————————————-

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் -திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

————————————————————————————

 

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
மூவருடன் கலந்து பரிமாறும் போது
குற்றங்களை குணமாக கொள்ளுவதற்கு அடி சொல்லிற்று இத்தால் –

பாலோதம் சிந்தப்
திருப்பாற் கடலிலே
சிறு திவலைகள் ஆனவை சிதறி
விழுந்து ஸூ கப்படுத்த

பட நாகணைக் கிடந்த
படம் எடுத்த பாம்பணையில் பள்ளி கொண்ட

மாலோத வண்ணர் மனம்
பெரிய கடல் போன்ற வடிவை உடையனான
எம்பெருமானது

திருமகள் மேல்
பெரிய பிராட்டியார் மேல்
காதல் கொண்ட திரு உள்ளமானது

திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
பெரிய பிராட்டி ஒருத்தியின் மேலே
அற்றுத் தீர்ந்து இருக்கிற விதம் என்னோ

தீர்ந்தவாறு என் கொல் -மூவரிடம் அன்வயித்து
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
மண் மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
ஆய மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பாராம்

சௌபரி-மாந்தாதா உடைய 50 பெண்கள் உடன் பரிமாரினது போலே
பட்டர் நிர்வாஹம்
திருமகள் உடன் கலந்து பரிமாறும் பொழுது
மற்ற பிராட்டிமார்கள் போகத்துக்கு உபகரணமாய் இருப்பார்கள்
பெரிய பிராட்டியார் அவர்களை தம்முடைய அவயவங்களாகக் கொண்டு -தோள்கள் முலைகள் போலே -ரமிப்பிபார்

அற்றுத் தீருகை ஒன்றிலே ஆழம் கால் பட்டு இருக்கை
தாமரைக் கண்களுக்கே அற்றுத் தீர்ந்தும் -திருவாய்மொழி-

————————————————————————————————————————————————————————————————————-

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் -புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாந்தொழா நிற்பார் தமர்–43-

————————————————————–

பிராட்டிமார்கள் புருஷகார பலத்தால்
குற்றங்களை குணமாக கொள்வான்
ஸ்வரூபத்துக்கு சேர கிஞ்சித்கார கைங்கர்யங்களில் அன்வயிக்கலாம்
அப்படி அன்வயிக்கவே
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தீமைகள் தொலைந்து
மனஸை பற்றிய அஜ்ஞ்ஞானம் விஷய ராகம்
தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுப் போம்
இவற்றுக்கு மூல காரணமான துஷ் கருமங்களும் கிட்டாதபடி தொலைந்து போம்

தனமாய தானே கைகூடும்
நன்மைகள் கைகூடும்
ஸ்வரூப அனுரூபமான செல்வம் ஆகிய
பரமபக்தி போல்வன தனக்குத் தானே வந்து கைபுகுரும்
நின்னையே தாள் வேண்டி நீள் செல்வம் வேண்டாத அடியவர்கள் –

புனமேய பூந்துழாயான்-
சர்வ ரஷகன் -தனிமாலை இட்டு

அடிக்கே போதொடு நீரேந்தி தாந்தொழா நிற்பார் தமர்
திருவடிகளிலே
திருவாராதன உபகரணங்கள் கொண்டு பணிமாற-

—————————————————————————————————————————————————————————

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-

—————————————————————————————

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே  தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் –
ஆஸ்ரிதர் உகந்த ரூப
நாமங்களையே கொண்டு தன்னை அமைத்து
அர்ச்சாவதார ரூபியாய் அடிமை கொள்வான்
தமருகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே  அவ்வண்ணம் ஆழியானாம

தமருகந்தது எவ்வண்ணம் தப்பான பாடம்

எந்த குணங்களையோ -சேஷ்டிதங்களையோ

அனுசந்தித்து அநவரத பாவனை பண்ணுகிறார்களோ
அவற்றையே கொண்டு இருப்பான்
அர்ச்சாவதார சௌலப்யம் காட்டி அருளுகிறார் –
எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தி அருளா நிற்க
சில பிள்ளைகள் காலாலே மணலிலே கீறி உம்முடைய பெருமாள் என்று காட்ட
பாத்தரத்தை வைத்து தண்டனிட்டு அருளினார்
கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள்
திருவீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து
பெரிய திருப் பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையாலே முகந்து எடுக்க
தத்காலத்திலே மாதுகரத்துக்கு எழுந்து அருளிய உடையவர்
அவ்விடத்திலே அது கேட்டருளி
தெண்டனிட்டு
அவர்களுடைய பிரசாதத்தை பாத்ரத்தில் ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்

எங்கள் ஆழ்வான் – திருக் குருகைப் பிரான் பிள்ளான் சிஷ்யர் –
அவர் பாடே ஆயர் தேவு சென்று நாவற் பழம் வேண்ட
நீ யார் என்று அவர் கேட்க
ஜீயர் மகனான ஆயர் தேவு என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களை குடி இருக்க ஓட்டுகிறிலன் என்றார்
நஞ்சீயர் திரு வாராதன பெருமாள்- ஆயர் தேவு-சலங்கை  அழகியார்

——————————————————————————————————————————————————————————-

ஆமே யமரர்க்கு அறிய அது நிற்க
நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

——————————————————————————————–

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான்
அந்த எம்பெருமான் உடைய குணங்களை
தேவர்களால் அறிய முடியாது
எம்பெருமான் திருவருளால் தெளியக் காண வல்ல
நாமே அறிய வல்லோம்
அன்றிக்கே
தேவர்களாலும் அறிய மாட்டாத பொழுது
நாமோ அறியக் கடவோம்
என்று நைச்யம் பாராட்டி அருளிச் செய்கிறார் என்றுமாம்-

ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்த்த குழவியாய் வாளரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் –மூன்றாம் திருவந்தாதி -77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்டவரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து -நான்முகன் திருவந்தாதி -44-

இக்கதை இதிஹாச புராணங்களில் இருப்பதாக தெரியவில்லை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி
சக்கரத்தால் தலை கொண்டாய் -என்றும்
எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –
இவையும் ஆழ்வார்களால் மாத்ரம் அருளிச் செய்யப் படுபவை-

———————————————————————————————————————————————————————–

பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர -புண் புரிந்த
வாகத்தான் தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46

————————————————————————————————

பிரமனுக்கு அருள் புரிந்தமை கீழே சொல்லி
இதில் ருத்ரனுக்கு அருள் புரிந்து அருளியதை காட்டி அருளுகிறார்
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர
-புண் புரிந்த வாகத்தான்
தனது நகத்தால் கீறி புண் படுத்திக் கொண்டவன்
தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார்
தாள் பணிபவர் உபய விபூதியையும் ஆள்வார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்ணூடே -திருவாய்மொழி பாசுரம் போலே

————————————————————————————————————————————————————————————–

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் –47-

——————————————————————————————–

எம்பெருமான் தாள் பணிதல்
யாருக்கு கைகூடும் என்ன
இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவர்களுக்கே என்கிறார்
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
அடக்கி ஆளுதல் அறிய விஷயம் காட்ட
மதக் களிறு என்கிறார்
யானை நீர் நிலைகளில் புக்கு முதலை வாயில் அகப்படுமே
விஷயாந்தரங்கள் -நீர் நிலைகள்
வாரி –நீர்
நீர் விடாயை பிறப்பிப்பது போலே
விஷயாந்தரங்களும் விடாயை பிறப்பிக்கும்

மீண்டும் சேரி திரியாமல் செந்நிறீஇ -என்றது
பலாத் காரம் செய்தாகிலும் அடக்கி ஆள வேணும்

கூரியமெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போல்வாரே
திருவடிகளை காண்பர்-

———————————————————————————————————————————————————–

கழல் ஓன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும்
செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்–48-

————————————————————————–

கழல் ஓன்று எடுத்து
ஒரு சேவடியை மேல் உலகங்களிலே
செல்ல நீட்டி

ஒரு கை சுற்றி
ஒரு திருக்கையாலே நமுசி பிரக்ருதிகளை
சுழற்றி எரிந்து
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே –

ஓர் கை மேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும் செருவாழி ஏந்தினான்
மற்றொரு திருக்கையிலே
இவனுக்கு என்ன நேரிடுமோ என்று தவிக்கிற தேவர்களும்
பிரதிகூலரான அசுரர்களும் அஞ்சும்படியாக
எதிரிகள் மேலே அழலை உமிழ்கின்ற யுத்த
சாதனமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமான் உடைய

சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ்
திருவடிகளில் சென்று கிட்டும்படியாக
பொருந்துவாயாக
இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்-

—————————————————————————————————————————————————————————————–

மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் -முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49-

——————————————————————————————

மகிழ் அலகு ஒன்றே போல்
மகிழம் விதையே
காணி ஸ்தானத்திலும்
கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்பது போலே

மாறும் பல் யாக்கை
மாறி மாறி பல வகையான சரீரங்கள்

நெகிழ
தன்னடையே விட்டு நீங்கும்படி

முயல்கிற்பார்க்கு அல்லால் –
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது –
கூடாத கார்யம்

————————————————————————————————————————————————————-

அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் -பெரியனாய்
மாற்றாது வீற்று இருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது –50-

—————————————————————————————–

விஷயாந்தரங்களில் பற்று அற்று
அன்புடன் அவனை ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு
அவனை காண்பதில் அருமை இல்லை என்கிறார்
ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும்
விஷயாந்தரங்களில் போக ஒண்ணாத படி அடக்கி
பகவத் ஆராதனைக்கு உரிய நல்ல மலர்களை சேகரித்து கொண்டு
மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்
மாவலியின் மதம் ஒழித்த பெருமானை
கண்டு அனுபவிப்பது எளிதாகும்

———————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்