Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–பகுதி- 2–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

———–

3-வது உருவக வலங்காரம்
4-வது உள்ளுறையுவமம் –
5-வது ஒட்டலங்காரம்.–

——–

114.முக்கியப்பொருளையொப்புடைப்பொருளெனமதித்
திருபெயரொட்டாயிசைப்பதுமுருவகம்.
(எ-ன்) வைத்தமுறையானே யுருவகமென்னு மலங்காரமுணர்–ற்று.

(இ-ள்) உவமேயப்பொருளையு முவமப்பொருளாக வுட்கொண் டிரண்டுபொருளையு மிருபெயரொட்டாக
வொற்றுமைகொளுத்தி யுரைப்ப துருவகமென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையா லிரண்டுபொருளையு மொற்றுமைகொளுத்தா துவமையாத லுவமேயமாத லிரண்டிலொன் றுருவகச்
சொல்லொடுதொக்கு மாட்டேறில்லா துவரு முருவகமு முளவென்றவாறு. மூன்றுதொக்கு வருவனவு முள.
இவற்றிற்கெல்லாஞ் செய்யு ளுருவகவிரியுண் முன்னர்க் காட்டுதும்.

அஃதாக ; உவமையும் பொருளுமென இதன் முதனூலுடையார் கூறவும், இந்நூலுடையார் முக்கியப்பொருளை
முதல்வைத்ததியாதோ வெனின், உவமைபோலாது முக்கியப்பொருளை முதல்வைத் தொப்புமைப் பொருளை
யதன்பின்னர்வைத் தொற்றுமைகொளுத்துவதே யுருவகத்திற்கு மிக்கதோர் அறிகுறி யென்பது தோன்ற வைத்தாரெனக் கொள்க.

115.பொருண்முதலினுமுவமையதாம்புணர்வுழி
யொற்றிடைதோன்றறிரிதலோடொன்றிய
மற்றதற்குறுசொல்விரியாவயினே.
(எ-ன்) உவமைக்கு முருவகத்திற்கு மெய்தியதோ ரைய மறுத்துணர்-ற்று.

(இ-ள்) முக்கியப்பொருண் முன்னு முவமப்பொருள் பின்னுமாக வருவ துருவகத்திற்கு மிக்க வறிகுறியென்றார்;
அவ்வாறன்றிப் பொருண்முதலேவரினு நிலைமொழியாகி யுயிரு மொற்று மீறாய்வரு முவமேயச் சொல்லும்
வருமொழியா யவைமுதலேவரு முவமச்சொல்லுந் தம்மிற் புணருமிடத் தவற்றினிடையி லொற்றுத்
தோன்ற றிரிதலின்றி யவற்றோடு மவ்வுருவகத்திற்குரியசொல்லும் விரியாவிடத் துவமையாம் பகுதியு முள வென்றவாறு.

உதாரணம் :- வாய்ப்பவளம், (வாயென்றபவளம், வாய்பவளமாக. ) குழற்கொன்றை, கொங்கைக்குரும்பை யெனவு மிவை யுருவகம்.
வாய்பவளம், குழல் கொன்றை, கொங்கை குரும்பை யெனவு மிவை யுவமை, “வாய்பவளந், துடிக்கின்றவா” எனவும்,
“குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை” எனவுங் கண்டுகொள்க.
ஒன்றிய வென்றதனால் வதனசந்திரன், கரகமலம், கரபுண்டரீகம் எனவும் நிலைமொழியுவமேயவுயிரீற் றின்
முன்னர் உவமையாய வருமொழி முதல் வல்லெழுத்து முன்ன ரொற்றுமிகா துருவகமா மிடமுமுள. இது உவமவிரியினுள், தலைதடு
மாற்றவுவமையின்கண் பொருண்முதலேவந்து முவமையாயினவாறு கண்டுகொள்க.

116. அதுவே,
தொகையினும்விரியினுந்தொடரிருவகைத்தே.
(எ-ன்) இதுவு மவ்வுருவக மின்னவகைப்படு மென்கின்றது.

(இ-ள்) அவ்வுருவகமென்னு மலங்காரந் தனக்குரியசொற் றொக்கும் விரிந்தும் வருமொழியொடு
தொடர்ந்துநிற்கு மிரண்டுகூறுபாடுடைத் தென்றவாறு.

உம்மை யிரண்டனுண் முதலது சிறப்பும்மையாதலால் அதற்குரியசொற் றொக்குவருதலே சிறப்புடைத்தெனக் கொள்க.
ஏனைய தழிவுசிறப்பும்மை.

117. அடையிடைபுணரினுங்கடிநிலையிலவே.
(எ-ன்) இதுவு மவ் வுருவகந் தொகையினும் விரியினும் புணர்வுழி யெய்துவதோர் வழுவமைப் புணர்ற்று.

(இ-ள்) இரண்டுபொருளையுந் தம்மி லொற்றுமைகொளுத்தும் வழி யிடைப்பட வுவமைக்கண் ணடைச்
சொற்புணர்த்துக்கூறினு முருவகமேயாம் ; நீக்கப்படாதென்றவாறு.

உம்மையான் முதலே யடைபுணரினு நீக்கப்படாதாம் ; எனவே தொகைநிலைவகையானும் அடைச்சொற்புணராமலும்
புணர்ப்பதே சிறப்புடைத் தென்பதாம். இவற்றிற்குச் செய்யுள் வருமாறு :-

முருகவிழளகக்காட்டைமுன்னிடாவல்குற்றேரும்
பருமணிவடத்திற்சேர்த்தபடாமுலைக்களிறுமுந்திப்
புருவவிற்குனித்துநாட்டப்பொருகணையுடக்கிமைந்தர்
செருவிழந்தோடமார்பிற்செஞ்சவேசெலுத்துவாரே. (228)
என்பது தொகையுருவகம். இதனுள் படாமுலை, பொருகணை யென்பன அடை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )

கண்கழுநீராய்க்கரங்கள்காந்தளாய்த்தீங்கிளவி
பண்களாய்ச்செவ்வாய்பதுமமாய்–நண்பனே
வாய்ந்தமடவரற்குமாறன்மணிவரைவா
யீர்ந்தண்பொழிலாமிடம். (229)
இது விரியுருவகம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

118. ஒருதொடர்பினுளிருமையுமுறலுளவே.
(எ-ன்) தொகைவிரியுருவக முணர்-ற்று.

(இ-ள்) தொக்கும் விரிந்தும் வரு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்துவருதலுமுள வென்றவாறு.

பெண்ணாரமுதளித்தபேரின்பத்தீஞ்சுவைபெற்
றுண்ணாநினைவேற்குறுதியெனக்–கண்ணா
லளித்தவருணோக்காமமிர்தினைக்கண்டுள்ளந்
தளிர்த்ததையிங்கார்க்குரைப்பேன்றான். (230)
இது தொகைவிரியுருவகம். துறை – பாங்கியையறிதல்.

கதிர்முலைக்குவடுந்திண்டோட்சயிலமுங்கலவிமுந்நீ
ரெதிர்கொளநிறீஇமத்தாகவிவறலாந்தாம்புபூட்டி
முதிர்பொறிப்புலவர்மாண்பின்முறைமுறைசுழற்றுமாற்றாற்
சதிர்பெறப்பிறந்தவின்பத்தனியமிர்தருந்துநீரார். (231)
திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து. இதனுள்ளு முதலேயு மிடையினு முவமேயத்தினு முவமையினும்
அடைச்சொற் புணர்ந்ததுங் காண்க. (குருகாமான்மியம். )

119. உரைத்தவையினிவரும்விரிக்குறுபொதுவே.
(எ-ன்) இதுவு மத் தொகைவிரிகளா லெய்து மிலக்கண முணர்–ற்று.

(இ-ள்) இங்ஙனமுரைத்த தொகையும் விரியு மேற்கூறப்படு முருவகவிரிக்கு மிக்க பொதுவிலக்கணமாமென்றவாறு.

120. இயைபியைபின்மையேகதேச
மொருபொருள்பலபொருளுருவகஞ்சிறப்பே
விருத்த மவிருத்த நட்புவியனிலை
யேகவங்க மனேகவங்க
மவயவ மவயவி முற்றெனவாய்ந்த
நவையறுசிறப்பினானான்கதன்விரியே.
(எ-ன்) உருவக மென்னு மலங்காரத்தின் விரியிலக்கண முணர்–ற்று.

(இ-ள்) இயைபுருவகமும், இயைபிலுருவகமும், ஏகதேச வுருவகமும், ஒருபொருளுருவகமும், பலபொருளுருவகமும்,
உருவகவுருவகமும், சிறப்புருவகமும், விருத்தவுருவகமும், அவிருத்தவுருவகமும், நட்புருவகமும், வியனிலையுருவகமும்,
ஏகாங்கவுருவகமும், அநேகாங்க வுருவகமும், அவயவவுருவகமும், அவயவியுருவகமும், முற்றுருவகமும்
என ஆராய்ந்த குற்றமற்ற சிறப்பினையுடைய வுருவகவிரி பதினாறா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாம் உருவகமென்னும்பெயரை யதிகாரத்தாற் கூட்டி யுரைத்ததனோடும் எண்ணும்மைத்தொகையும் விரித்துரைக்கப்பட்டது.
நட்பென்பது சமாதானம். இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தன. அல்ல துரையினுங் கொள்க.

அவற்றுள், இயைபுருவக மென்பது ஒரு தொடர்பினுட் பல பொருளையு முருவகஞ்
செய்யுங்காற் றம்முட் காரணகாரிய மியைபுடைத்தாகவைத் துருவகஞ்செய்வது :-

நித்தர்முத்தரிற்புகழ்நிபுணன்பராங்குச
னுத்தமஞானமென்றொளிர்திருப்பாற்கடல்
புரந்தசெந்தமிழ்மறையாயபுத்தமிர்த
நிரந்தரமுலகின்மெய்ந்நெறிநிலைதழைவான்
பூமகளெனும்பெயர்புனைமலர்நிதியொடந்
தாமமாதவனெனுஞ்சங்கநீணிதியினை
யருளுடைமையின்வெளிப்படுத்தருளவுமவை
வருபவர்வருகெனவாழ்வுபெற்றிருப்பவும்
வாழ்நாளதன்கண்வழிபடுசரிதையின்
வீழ்நாள்படாமைவீட்டினையெய்தா
தொல்லையிற்பிறந்திறந்துழல்வோர்
வல்வினையதனில்வலியதொன்றிலையே. (232)
இஃ தியைபுருவகம்.

(இ-ள்) அநந்த கெருட சேனாபதிகளோடும் பரமபதத்து முத்தரும் புகழு மிகவும் வல்லோனாகிய
சீபராங்குசன் றிருஞான மென்றொளிரும் திருப்பாற்கடலளித்த திருவாய்மொழியெனும் புத்தமிர்தம்
எல்லாநாளு முலகின்கண் சீமந் நாராயணனே பரப்பிரமமென்னு முண்மை மார்க்கநிலை தழைக்கும்படி
மலர்மடந்தையெனப் பெயர்புனை பதுமநிதியுடன் கூடிய பரமபதத்தையுடைய மாதவனென்னுஞ் சங்கநீணிதியைத்
தனது திருவுள்ளக் கருணையுண்டானதன்மையால்வெளியிடவு மவை யீருட லேகமாகி முத்திவேண்டினவர்
வருவார் வருகவென்று தம்மினீங்காது வாழ்ந்திருக்கவுந் தமக்குள்ள வாழ்நாள் வீழ்நாள்படாமை
மனோவாக்குக் காயங்களால் அருச்சனைபுரியு மொழுக்கத்தினான் மோக்கத்தினைப் பொருந்தாது
சிறுவரையிற் பிறந்து மிறந்து முழல்வோ ரும்மையி லிழைத்த தீவினைபோல வலியுடையதொன் றில்லை யென்றவாறு.

மலர்நிதி-பதுமநிதி ; சங்கநீணிதி – பாஞ்சசன்னியத்தைத் தரித்த பெரியநிதி ; திருவு மாயோனும்.
இதனுள், திருப்பாற்கடன்முதலாக அடைவே காரணகாரியத்துடனியைந் துருவகமாயினவாறு காண்க.
பா-நேரிசையாசிரியம். திணை-பாடாண்பொதுவியல். துறை-பனுவல் வாழ்த்து.

ஆரவடநீரருவியாமாணிக்கத்
தார்கெழுசீர்த்தேனருவிதானாகப்–பேரழகு
பாரிக்குமாரன்பனிவரைமான்வார்புனைந்து
பூரிக்குங்கொங்கைப்பொருப்பு. (233)
இஃ தியைபிலுருவகம். ஆரவடம் – முத்துவடம். மாணிக்கத்தார் – மாணிக்கமாலை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.

ஏகதேசவுருவக மென்பது ஒரு செய்யுளகத்து ஓரிடத் தொரு பொருளை யுருவகஞ்செய்யுங்கான் மாட்டேறுபெற வுருவகஞ்செய்
தப்பொருளோடு சம்பந்தமுறப் பிறிதோர்பொருளைச் செய்யுளகத்துப் பிறிதோரிடத்து
மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகைநிலைவாய்பாட்டாற் கூறுதல் :-

அறியாமையென்னுமகவிருளைச்சீக்கப்
பிறியாதறிவிருக்கப்பெற்றுங்–குறியாத
தீச்சொற்பயில்வரேசெண்பகமாறன்பவள
வாய்ச்சொற்றிறம்பயிலாமல். (234)
இஃ தேகதேசவுருவகம். இதனுள் அறியாமையென்னு மகவிருளை யென மாட்டேறுபெற வுருவகஞ்செய்ததனோடு
மெதிராகச் சம்பந்தமுற ஞானமாம்விளக்கென மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகை
நிலைவாய்பாட்டா னறிவெனக் கூறியவாறு காண்க.

செண்பகமாறன் பவளவாய்ச்சொல்-திருவாய்மொழி. திறம் – சித்த சித்தீச்சுரத்தை மயக்கமறவிளங்கக்கூறுங்கூறுபாடு.
பயிலாமல் – இடைவிடா துணர்வினாற் சிந்தியாமல்.
இது, உவமேயமு முருவகவுருபுமாகிய இரண்டுதொக்க தொகையுருவகம்.
ஞானவிளக்காவது திருவாய்மொழி ; பிறரறியாமையென்னு மிருட்டறக் கூறிய ஞானமாகிய விளக்கு.
பயில்வரே யென்பது பரசமயவாதியரை. ஏகாரம் – இரக்கத்தின்கட் குறிப்பு. துறை – இதுவுமது.

புன்பனுவனஞ்சம்பொசிக்கின்றபேதையர்பே
ரின்பமுறமெய்யுணர்வாரேனோருந்–தன்பால்
விருந்தருந்தத்தானருணாவீறனார்கூறு
மருந்தருந்தாரந்தோமதித்து. (235)
இதுவுமது. இதனுள் நாவீறனார்கூறு மருந்தென்பது திருவாய் மொழியாகிய மருந்து. மருந்தென்பது – அமிர்தம்.
எனவே திருவாய் மொழியாகிய மருந்தென வுருவகஞ்செய்ததனோடுஞ் சம்பந்தமுறும்படி பிறவியாகிய பிணியைத்
தீர்த்து முத்தியாகிய பேரின்பத்தைத் தரு மருந்தென வுருவகஞ்செய்யா துவமேயமுதலிய
மூன்றினையு மிருவகைத் தொகைநிலைவாய்பாட்டாற் கூறியவாறு காண்க.

மெய்யுணர்வார்-தத்துவத்திரயத்தி னுண்மையுணர்வார். தன்பால் விருந்தருந்த – அம் மூன்றினையும் மயக்கமறவுணர்த்தும்
ஞானமான அமிர்தத்தைத் தமது மெய்யுணர்வா லுவட்டாது புதுவதுபுதுவதாக வுரிசிக்கவும் என்க.
அருந்தாரந்தோ என்ப திரக்கம். மெய்ப்பொருண் மாறன் – உண்மைப்பொருளை யுணர்ந்த மாறன் ; உண்மைப்பொருளாகிய மாறனென்றுமாம்.

மிக்கவரிதாளின்மெய்யன்பினைவித்தித்
தக்கதவந்தினமுந்தான்பொழிந்துட்–புக்கதோர்
ஞானமுருவியபின்னன்முத்தியைவிளைக்கு
மானபரன்காரிதருமன். (236)
இது, உவமையு முருவகவுருபு மாட்டேறில்லாதுவந்து வுருவகம் என்னை? அரிதாளாகிய செய்யின்கண்
அன்பாகிய வித்தை விதைத்துத் தவமாகிய நீரைப்பொழிந்து ஞானமாகிய முளையுருவியபின் முத்தியாகிய
போகத்தை யென மாட்டேறுபெறாதுவந்தமையானுணர்க. ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
இவை யிரண்டுதொக்கது. இவற்றுள் முன்னையது பனுவல்வாழ்த்து.
இது திணை – வாகையைச்சார்ந்த புறத்திணை. துறை-அறக்களவழி.
இவை மூன்று மாட்டேறிலாதுவந்த வுருவகம்.
இவற்றிற்கு “அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” எனவும்,
“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லியினமென்னு, மேமப் புணையைச் சுடும்” எனவும்,
“பவழவாய்ச் செறுவுதன்னு ணித்திலம் பயில வித்திக், குழவிநா றெழுந்து காளைக் கொழுங் கதி ரீன்” றெனவும்,
“அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள், வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்” எனவும்
முந்து நூல்களினும் அடைவே வந்தவாறு காண்க.

ஒருபொருளுருவக மென்பது உயர்திணை அஃறிணை யென்று சொல்லப்பட்ட காட்சிப்பொருளுங்
கருத்துப்பொருளு மொருசெய்யு ளகத்துவந்தா லவற்று ளொருபொருளை யுருவகஞ்செய்தல் :-

பிறப்பாரிறப்பார்பிறப்பாயவேலை
துறப்பானொருபோதுந்தூவார்–சிறப்பாகுஞ்
செய்படைத்ததென்னரங்கர்சேவடிமேன்மானிடராய்க்
கைபடைத்தும்வாழ்ந்தகதை (237)
இஃ தொருபொருளுருவகம். அரங்கன், மானிடர்கை, சேவடி யென்னும் உயர்திணை யஃறிணைகளை
யுருவகஞ்செய்யாது கருத்துப் பொருளாய பிறப்பென்னும் அஃறிணையை யுருவகஞ்செய்தலா னென்றறிக.
திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

பலபொருளுருவக மென்பது அவ்விருபொருளையு மொருசெய்யுளகத் துருவகஞ்செய்தல் :-

தீதற்றமெய்ஞ்ஞானத்தெப்பமுடன்மேதகுநால்
வேதக்கடல்கடந்தவித்தகத்தாற்–கோதற்ற
வந்தாமத்தீவினுட்புக்காழியானாமணியைத்
தந்தானம்பூதூர்வந்தான் (238)
இது பலபொருளுருவகம். அந்தாமத்தீவு-விரசைக்கக்கரையாகிய பரமபதம். திணை-பாடாண்.
துறை-அறுமுறைவாழ்த்தினுண் முனிவனை வாழ்த்தல்.

உருவகவுருவக மென்பது ஒன்றனை முதலே யுருவகஞ்செய் ததனைப் பெயர்த்து முருவகஞ்செய்தல் :-

மத்தம்புரியவிச்சைவாராழியாமிருளென்
சித்தமினித்தேறுமேதேமகிழ்த்தார்–முத்தன்
முகத்தாமரையாமுழுமதியென்செவ்வி
யகத்தாமரையகத்தாக. (239)
இஃ துருவகவுருவகம். இதனுள், மத்தம்-மயக்கம். புரிதல்-தருதல். அவிச்சை-அறியாமை.
அவிச்சையாம் வாராழி யென வுருவகஞ்செய்ததனை மறித்து மிருளென வுருவகஞ்செய்ததும்
முகத்தாமரையா முழுமதி யெனவும் உருவகவுருவகம் வந்தவாறுங் காண்க. துறை – இதுவுமது.

சிறப்புருவக மென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த அடைகளை யுருபித் தவற்றானே யதனை யுருபித்துரைப்பது :-

நாரங்குழலாய்நளினமுகமாய்முகுளங்
கூர்வெம்முலையாய்க்கொடியிடையா–யூர்திரைகள்
வெண்டுகிலதாகிவிளங்குமகிழ்மாறன்
வண்குருகூர்த்தண்பொருநைமாது. (240)
இது சிறப்புருவகம். நாரம்-பாசி. வெம்முலை-விருப்பத்தைத்தரும் முலை. பொருநைமாது-பொருநையாகியபெண். துறை-நதிவாழ்த்து.

விருத்தவுருவக மென்பது ஒருபொருட்குக் கூடாதனபலவுங் கூட்டி யுருவகஞ்செய்வது :-

வேம்பாலிசைந்தசுவைவெவ்விடத்தினோடுதித்த
தாம்பாலதன்றறலின்பாலன்று–பாம்பா
லிமிழ்திரைவாயிற்பிறந்ததென்பதன்றுமாறன்
றமிழ்மறையாஞ்செஞ்சொலமிர்தம். (241)
இது விருத்தவுருவகம். வேம்பு-கைப்பு. கைப்பைத் தனக்குச் சுவையாகவுடைய நஞ்சினோடும் பிறந்ததாம்
பகுதியையுடையதன்று; அறலின்பாலன்று – சலத்தினது மயமாம்பகுதியையுடையதூஉமன்று
பாம்பா…….. தன்று-பாம்பாகிய தாம்பா லாரவாரிக்குந் திரையையுடைய கடலைக் கடையப் பிறந்ததென்று கூறுவதூஉமன்று ;
காரிமாறப் பிரான் றிருப்பவளத்திற் பிறந்த திருவாய்மொழியாகிய வினிய சொல்லின்மயமா மமிர்தமென்றவாறு.

அமிர்திற்கு விடத்தினோடுதிப்பதுமுதலாயதுஞ் சலமயமாவதுஞ் சுபாவம்.
இந்த அமிர்தத்திற் சுவையின்மையால் விருத்தவுருவகமாயிற்று. துறை-பனுவல்வாழ்த்து.

அவிருத்தவுருவக மென்பது ஒருபொருட்குக் கூடுவனவாந்தன்மை பலவுங் கூட்டி யுருவகஞ்செய்வது :-

ஓர்பொழுதுந்துஞ்சாதலமந்துறுதுளித்தாம்
போர்புனைவேலண்ணல்பொருட்கேகிற்–சீர்பெருகுந்
தண்ணார்பசுந்துளபத்தார்மார்பன்றஞ்சைமான்
கண்ணாகியகார்க்கடல். (242)
இது, அவிருத்தவுருவகம். அண்ணல்-அண்மைவிளி. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பகுதி-பொருள்வயிற்பிரிதல். துறை-செலவழுங்குவித்தல்.

நட்புருவக மென்பது ஒருபொருளை நன்றாக வுருவகஞ்செய்து அதனைத் தீங்குதருவதாகக் கூறி
யத்தீங்கு அதனால்வந்ததன்றென்றதற்குப் பிறிதோர்காரணங் கூறுதல் :-

தீங்கிளவியென்றுயிர்க்குந்தெள்ளமிர்தம்வெவ்விடத்துப்
பாங்கிழமைகூர்தலணிமாற–னாங்கைப்
பதித்திருவேதீவினையின்பாங்காயதென்றே
மதித்திருக்குமின்றென்மனம். (243)
இது நட்புருவகம்.

(இ-ள்) இனிய கிளவியென வொலிக்கு மொள்ளிய வமிர்தமானது வெம்மையைச்செய்யும் விடத்தின்
கயப்பா முரிமையை விளைத்தல் நின்னிடத்துண்டாய பாங்கினாலுண்டாயதல்லவென்றுமெனது
தீவினையின் பாங்காயதென்றுஞ் சந்தயமற விசாரியாநின்ற திப்பொழு தென்மன மென்றவாறு.

உயிர்த்தல்-ஒலித்தல். கூர்தல்-விளைதல். பாங்கு-வாரம். பகுதி-பரத்தையிற்பிரிதல்.
துறை-பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில்வேண்டப் புறத்தொழுக்க முண்டென்று வாயின்மறுத்துக்
கடுஞ் சொற்கூறிய விற்பரத்தையுடன் புறத்தொழுக்க மின்றென்றுகூறித் தனதாற்றாமையே வாயிலாகக் கூடியது.

வையம்பரவுமகிழ்மாறன்செவ்வாயுந்
துய்யநயனத்துணைப்போதுஞ்–செய்ய
முகத்தாமரையுடன்கைம்முத்திரையுங்கண்ட
சுகத்தார்க்குமுண்டோதுயர். (244)
இது வியனிலையுருவகம். இதனுள் அவயவி முகத்தாமரை. இதன் கண் ணவயவியுடன் அவயவங்களை யுருவகஞ்செய்து
மற்றையொன்றை யுருவகஞ்செய்யாமையுங் காண்க. துறை-கடவுள்வாழ்த்து. பழிச்சினர்ப் பரவலுமாம்.

ஏகாங்கவுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றினு ளொன்றை யுருவகஞ்செய்வது :-

வியனிலையுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றையு மொரு செய்யுளகத்துக்கூறி யவற்றுட் சிலவுருவகஞ்செய்து
சிலவற்றை யுருவகஞ்செய்யாது அவயவியை யுருவகஞ்செய்வது :-

மாறன்பனிவரைமேல்வாண்முகச்செவ்வாயிவட்கு
வேறன்றிவளெனவேமெய்யுணர்விற்–கூறொன்றக்
காட்டுகின்றதொண்பொற்கனங்குழைமேற்பல்காலு
மோட்டுகின்றகட்காவியுற்று. (245)
இது, ஏகாங்கவுருவகம். ஒருபொருளாவ திதனுண் முகமாகிய அவயவி. இதன்பொரு ளுரையிற் கொள்க. துறை-பாங்கியை யறிதல்.

அநேகாங்கவுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றையு முருவகஞ் செய்வது :-

செங்கைத்தளிர்நயனச்செவ்வேன்மறைப்பவர
மங்கைத்திருமால்வரைமடவாய்–கொங்கைக்
களியானைக்கட்படாநீக்கியோகண்ணுற்
றெளியானைக்காக்குமியல்பு. (246)
இது, அநேகாங்கவுருவகம்.

(இ-ள்) திருமால் சீவரமங்கைவரையில் வாழும் மடப்பத்தை யுடையாய்! பெறுதற்கரிய நின்னோடும்
பேரின்பத்தை யனுபவித்துப் பின்ன ரதுபெறாது வருத்தமிக்கு நின்கண் ணெளியனாவேனைக் கருணை புரிந்து காக்குமியல்பு,
செங்கையாகிய தளிரா னயனமாகிய சிவந்த வேலை மறைத்துக் கொங்கையாகிய களியானையினது
முகபடாத்தினை நீக்கிக் கொல்லும்படியே யவற்றை வெளியில் வைத்ததோ? இஃ தருளுக்குத் தகாதென்றவாறு.

பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக்கண்புதைக்கவருந்தல். எளியானை யென்றது தன்னைப் பிறன்போலக்கூறல்.

கொங்கைக்குவடுங்குழற்காருமேலிருந்த
சங்கைக்கருண்மாயன்றஞ்சைவாய்–மங்கைக்குப்
பொய்யேயுளதென்கைபோற்றாதிலதென்கை
மெய்யேயிடையாம்வெளி. (247)
இதுவுமது. சங்கை – வளம். ஏகார மிரண்டும் எதிர்மறை. இடையாம்வெளி யுளதென்கை பொய்யே யிலதென்கை மெய்யேயெனத்
தேற்றேகாரமாக்கிக் கூட்டினுமாம். பகுதி – இடந்தலைப்பாடு. துறை – மருங்கணைதல்.

அவயவவுருவக மென்பது அவயவமே யுருவகஞ்செய் தவயவியை வாளாது கூறுவது :-

நிறத்தாரைவேலிமையாநீடுறையைநீக்கிப்
புறத்தாயிடரிழைக்கும்போர்மே–லறத்தான்
வருந்தாவிரங்குவதென்மாலரங்கத்தின்பம்
பொருந்தானனத்தாய்புகல். (248)
இது, அவயவவுருவகம்.

(இ-ள்) திருமா லரங்கத்தினிடத் தழகுகுடிகொண்ட முகத்தினை யுடையாய் ! நினது செவ்வரிபரந்த கண்ணாகியவே லிமையாகிய
வுறையை நீக்கி வெளிப்பட்டுத் துன்பத்தைச் செய்யும் பூசன்மேலும் யான் மிகவும் வருந்தும்படி
கலுழ்வதற்குக் காரணம் யாதெனக்கூறுவாயாகவென்றவாறு.

தாரை-கண். உறை-கவிசனை. அற-மிக. வருந்தா-வருந்த. இரங்குதல்-அழுதல். இன்பம்-ஆகுபெயர்.
பகுதி-பொருட்குப்பிரிதல். துறை-கருத்தறிந்தழுத கண்ணீர்துடைத்தல்; என்னை?
பொருள் வயிற்பிரிந்த தலைவன் உள்ளக்குறிப்பினைக் கரந்து பன்னாளும் புதுவதுவாக வுறுப்பினைப்
பாராட்டியதா லிஃதொன்றுடைத்தென அவனது பிரிவையுட்கொண்டழுத கண்ணீராதலின்.

அவயவியுருவக மென்பது அவயவியை யுருவகஞ்செய்து அவயவத்தை வாளாதே கூறுவது :-

முதிராமுலையுமுறுவற்குறிவந்
தெதிர்பாயுங்கண்களுங்கண்டெய்தி–வதனமதிப்
பொற்றொடியைமாறன்பொருப்பிடைவைத்திங்கெதிர்ந்த
வற்புதனேதிண்ணியனாவான். (249)
இஃ தவயவியுருவகம். துறை-பாங்கன்றலைவனைவியத்தல். இதனுள் வதனமதியென்றது அவயவியுருவகம்.

பெண்ணமுதேயங்கையாற்பேரைமால்தண்சிலம்பிற்
றண்ணறும்பூவேங்கைதலைநாட்செய்–கண்ணி
தனைக்கொய்தனமேற்றமரிற்செறிப்பான்
றினைக்கொய்திறம்விளையாதே. (250)
இது மகா அவயவியுருவகம். இதனுள், பெண்ணமுதே யென்றது மகா அவயவியுருவகம்.
தண்ணறும்பூ…….. கண்ணி-குளிர்ந்த நறுவிதாம் பூவாமுன்பே வேங்கை வைத்த அரும்பு.
பகுதி – பகற்குறி. துறை – வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்.

முற்றுருவக மென்பது அவயவ அவயவிகளை யேற்றவிடத்தோடும் பிறவிடத்தினோடு முற்ற வுருவகஞ்செய்வது :-

வட்டவதனமதியுநுதற்பிறையும்
பெட்டநகைநிலவும்பேர்த்தறியாக்–கட்டளகக்
கங்குலின்மேன்மாறன்கனவரைவண்டீரிருந்தா
லிங்கிவளுக்குண்டோவிடை. (251)
இது முற்றுருவகம். பெட்ட – விரும்பப்பட்ட. பேர்த்தறியா – நீக்கியறியாத.
கட்டளகக்கங்குல் – ஐம்பாலாகக் கோலஞ்செய்த குழலாகிய விருட்பிழம்பு. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பகுதி – இடந்தலை. துறை – வண்டகற்றி மருங்கணைதல்.

மண்படர்தாட்டாமரையுமைபடர்கட்காவியையுங்
கொண்டுமுலைக்கோங்கரும்புங்கொண்டதோர்–பெண்கொடியைக்
கண்டனையேனண்பாகழறலைமாறன்சிலம்பில்
வண்டமர்தண்பூஞ்சோலைவாய். (252)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – கழற்றெதிர் மறுத்தல். இதன்பொரு ளுரையிற்கொள்க.

ஆக இயைபுருவக முதலாக முற்றுருவக மீறாகப் பதினாறு மடைவே கண்டுகொள்க.

121.உரைபெறுசிலேடைவேற்றுமையுடனேது
வபநுதியுவமையென்றவற்றொடும்விரவும்.
(எ-ன்) அவ்வுருவகம் என்னும் அலங்காரம் பிறவாய அலங்காரங்களோடும் விரவிவருமென்ப துணர்-ற்று.

(இ-ள்) சிலேடை முதலாக வுவமையீறாகக் கூறப்பட்டவைந்தலங் காரங்களோடும் விரவியும் வருமென்றவாறு.

உரைபெறுசிலேடையென்றதனால் வினைமுதலிய நான்கு காரணத்தா னுவமை பிறப்பதேயன்றி
யிரட்டுறமொழியுஞ் சொற்பொருள் காரணமாகவு முவமை பிறக்கும் என்பதும்,
சிலேடை இக்கூறிய வுருவகத்திற்கும் காரணம், இனிமேல்வரும் பிற அலங்காரட்கட்கு முபகாரங்களாம்
என்பதுந் தோன்ற நின்றதுங் காண்க. இச்சூத்திரஞ் சிங்க நோக்காம்.

அவற்றுட் சிலேடையுருவக மென்பது ஒரு பொருளை யொரு செய்யுளகத் திருபொருள்பயப்பதாகப்
பலவிடத்தினும் புணர்த் திறுதி யினு மிருபொருள்பயப்பதாக வுருவகஞ்செய்வது :-

விற்புடைக்கீழ்மன்னிமிகுநாணிடைதழீஇச்
சுற்றுடைமாண்கோதைத்தொடைசெறியும்–பொற்புடைத்தாம்
பாணிழையாவண்டுலவும்பைந்துளவமாலுறையூர்
மாணிழையார்சேயரிக்கண்வண்டு. (253)
இது செம்மொழிச்சிலேடையுருவகம். கண்ணிற்கும் அம்பிற்குஞ் சிலேடை.

(இ-ள்) (கண்ணின்மேற் செல்லுங்கால்) வில் – புருவம். இஃ துவமப்பேர் புருவத்தின்பரப்பின்கீழ்த் தங்கிப்
பெருத்த நாணிடத்துக் கூடிச் சுற்றுதலுடைய மாட்சிமைக் குழலின்மேல் மாலையை மேனோக்கத்தாற் பொருந்துங்
கண்ணாகிய வண்டெனவும், (அம்பின்மேற் சொல்லுங்கால்) தனுவி னகன்றவிடத்துக்கூடி மிகுந்த நாணுக்குநடுவே
யெய்தி விரலிற் கட்டுதலுடைய விரற்சாடுறத் தனுவிற்குவல்லார் தொடுத்தெய்வதை யெய்தும் அம்பு எனவுங் கொள்க.
பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.

பூங்குமிழ்மீதேறிப்புணர்க்குமதனன்கலைதோய்ந்
தோங்குவனத்தாமரையினுட்பயிலுந்–தேங்குபுனல்
வெள்ளக்குளத்துறைமால்வெற்பினில்வாழ்மெல்லியலார்
வள்ளைக்குழையார்கண்மான். (254)

இது பிரிமொழிச்சிலேடையோடுங்கூடியவுருவகம். கண்ணிற்கும் மானிற்குஞ் சிலேடை.

(இ-ள்) (கண்ணின்மேற் சொல்லுங்கால்) பொலிவையுடைய மூக்கின்மீதேறிக் காமன் புணர்க்கு நல்ல
கலையைக் கற்றுப் பெருத்தெழுந்த தண்ணீரகத்துத் தாமரைபோன்ற முகத்தினுட்டங்கு மிகுந்த புனலையுடைய
திருவெள்ளக்குளத்துறையுந் திருமால்வெற்பில்வாழு மெல்லியலாராகிய வள்ளைக்குழையினையுடையார்கண்ணாகிய
மான் எனவும் (மானின்மேற் சொல்லுங்கால்) பூவினோடுங் கூடிய குமிழாகிய மரத்தினைப் பாய்ந்து,
காமத்தைத் தன்னிடத்தே விளைக்கும் நல்லகலையைப் புணர்ந்து, ஓங்கிவளருங் காட்டின் கண்ணுளவாம்
மரை கண்டு பழகு மெல்லிய வியல்பு மிகுந்த வள்ளைக்கொடியினது குழையைப்பருகுங் குறிப்பினையுடைய மானெனவுங் கொள்க.
இதனுள், கண்மா னென்ப துருவகம். புணர் மதன் என்பதனை மதன் புணர் எனப் பாடமாற்றுக. துறை – இதுவுமது.

மன்பார்குளிர்விக்குமாறன்குடைமதியு
நன்பான்மதியுமதிநாடுங்கான்–முன்பாங்
குடைமதிக்குண்டாவதல்லகுன்றுதன்மைவானத்
தடைமதிக்குண்டாங்குன்றுதல். (255)
இது குணவேற்றுமையுருவகம். வடநூலார் வெதிரேகவுருவக மென்பது மிது. குன்றுதல் – தேய்தல். மை – களங்கம்.
குடைமதி யென்ப துருவகம். திணை – பாடாண். துறை – குடைமங்கலம்.

பேரழகார்காரிதரும்பிள்ளைமாணிக்கநெறி
சீரியமாணிக்கமுறுஞ்செய்கைத்தோ–வாரியர்கா
ளுற்றுளதேற்றத்துவங்களெல்லாமுணர்ந்துணர்த்தக்
கற்றுளதாய்க்காணேன்களித்து. (256)
இதுவுமது. இதனை விலக்குருவக மென்றுங் கூறுவர். துறை – அறுமுறைவாழ்த்தினு ளடங்கும்.

வேகத்தால்வாயுவாம்வெண்ணீர்மைமேதகுகே
ழாகத்தாற்றாரசயிலாதியா–மோகநிலை
காய்ந்தவுணர்வாற்சுகனாங்காசின்றயிந்திரநூ
லாய்ந்துணர்ந்தவானரசிங்கம். (257)

இது, ஏதுவுருவகம். வெண்ணீர்மைமேதகுகேழாகம் – வாலிதாந் தன்மை பெருமையோடு பொருந்துந் திருமேனி.
தாரசயிலாதி – வெள்ளி யாங் கயிலை. மோகநிலை – காமத்தினிலைமை. சுகன் – சுகப்பிரமவிருடி. ஆசின்று – குற்றமின்றி.
அயிந்திரநூல் – ஐந்திரவியாகரணம். வானரசிங்கம் – சிறியதிருவடி. திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

முத்திரைக்கையன்றுமுளரிமலரீதிதுபூந்
தொத்தணிமார்பன்றுசுவணகிரி–பத்தி
திகழானனமன்றிதுதிங்கள்வாச
மகிழ்மாறனன்றிவனாமால். (258)
இது, அபநுதியுருவகம். பத்தி-பரமபத்தி ; அஃதாவது அன்பு. சுவணகிரி – பொன்மலை.
இதனுள் மகிழ்மாறனன்றிவனாமால் என்பது உருவகம். திணையுந் துறையு மிதுவுமது.

விடமனையகட்காவிமெல்லியலாள்சோர்ந்தாள்
குடவரைபுக்கான்வெயிலோன்கொல்வா–ரடல்வேடர்
வேலவனேகங்குல்விருந்தருந்திவைகறைவாய்
மாலுறையூர்க்கெய்தன்மதி. (259)
இஃ துவமையுருவகம். பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கல்; விருந்துவிலக்கென்பதுமிது.
இதனுள், ‘விடமனையகட்காவி’ என்ப துவமையுருவகம். “மையேர்குவளைக்கண்வண்டினம்வாழும்” என்பது மிது.

பொற்பிற்குரியதிருமால்கரிசொன்னபோழ்தினிலச்
சொற்பிற்படச்சென்றுதவியமாயன்றுவரையின்வாய்
வெற்பிற்புடைக்குந்தனவேழமானவிலங்கறுத்தாற்
கற்பிற்குரியவிப்புல்லோதடுத்திடைகாப்பதுவே. (260)
இதுவு முவமவுருவகம். இதனுள் வெற்பிற்புடைக்குந் தனவேழமென இடையி லடையடுத்துவந்தவாறுங் காண்க.
பகுதி – மணஞ்சிறப்புரைத்தல். துறை – அக்கினிசாக்ஷியாகத் தலைவன் றலைவியைக் கைப்பற்றித் தீவலம் செய்து,
வசிட்டனையு மருந்ததியையு மிருவருங்கண்டு மணவறைக்கட் பள்ளியிடத்தாராயகாலைத் தலைவ னருமறைச்சடங்கிற்குப்
படுத்த தருப்பையைநோக்கித் தலைவி காதலையுந் தனதாற்றாமையையு முட்கொண்டுரைத்தல்.

122.ஒழிவறவுருவகமுடனேயுவமையு
மொழிவதற்கடங்காமுறைமையவாகலின்
மொழியப்புகும்யான்மூதுணர்விலனா
லிவற்றினுக்கிதனுளிசைத்தவையொரீஇவரு
மவற்றையுமிவற்றினகப்படவுரைகொளீஇ
முற்றவுணர்த்தியமுறைமையவாக்குதல்
கற்றோரறிவின்காட்சியதாகும்.
(எ-ன்) மேற்சொல்லிய வுருவகமு முவமையு மென்னு மிரண்டிற்கும் புறனடையுணர்–ற்று.

(இ-ள்) உருவகமு மதற்குக் காரணமாகிய வுவமையு மென்னு மிரண்டலங்காரமு முற்றக்கூறுவதற் கடங்கா முறைமையை
யுடைய வாகலானும் அவற்றைக் கூறுவதற்காக முந்து நூலுணர்ந்தோரவையின் கண் புகுதாநின்ற யான்
முதியவுணர்விலனாதலானும் இக் கூறிய விரண்டலங்காரத்திற்கு மிந்நூலுள் யானிசைத்த தொகைவிரிகளைக் கடந்து
வருவனவா முருவக வுவமங்களையுங் கூறியவிவற்று ளகப்படுவதாக வுரை கொளுத்தி முழுதுமுணர்த்திய
முறைமையவாக்குதல் அலங்கார முதலிய விலக்கணங்களோடு மிலக்கியங்களையு முற்றக்கற்றோரறிவினுக் கழகென்றவாறு.

உவமையின்வழி பிறந்த துருவகமாதலி னுவமைக் குரைக்கத் தகுவனவெல்லா முருவகத்திற்கு முரைத்துக்கொள்க.
ஈண்டுருவக முற்கூறியதனா லதிகார மிடையறாதெனக் கொள்க.

கூறியவற்றை யொரீஇயினபோல்வருமவற்றுட் சில வருமாறு :-

காமரதத்தோகைகளிவண்டினமுலவுந்
தாமரைசாராம்பற்றளிநறவுண்–டேமுறுபே
ரின்பத்தினும்பெரிதேயெவ்வுண்மாலைப்பணிந்து
துன்பற்றவர்சேர்சுகம். (261)

இது, பேதத்தை யபேதமாக்கின வாய்பாட்டால்வந்த வுருவகம். இது முதலே உவமேயமு முவமவுருபுந் தொக்க தொகையுருவகம்.
என்னை? கண்ணாகிய வண்டினம் முகமாகிய தாமரை வாயாகிய வாம்பல் பானமாகிய நறவு என்பன
முறையே தொக்கதா லென் றறிக. ஆனால் அவற்றினை யவ்வாறாக்கியதென்னை?
வண்டினம்போன்ற கண்களுலவுந் தாமரைபோன்ற முகத்தி லென்பனவோடு மேனையவுந் தொக்கதாக விரித்துத்
தொகையுவமமாக்கப்பெறாவோவெனின், ஆகாது ; என்னை?
முற்றுவமவாய்பாடாக வுவமமொன்றனையுங் கூறும்வாய்பாடு உவமை யுருவக மென்னு மிரண்டற்கும்.
பொதுவாய்பாடேனு மீண்டு மருட்கை யென்னு மெய்ப்பாட்டுவயத்தனாகிப் புணர்ச்சியை மகிழ்ந்து பேதத்தை யபேதமாக்கி
விதந்துரைத்தானாதலிற் றொகையுருவகமாக வுரைகோடலே யாம்.
காட்சிக்குத் “திருவளர்தாமரை” யென்னு முதற்பாட்டு மருட்கை வயத்தனாகிக் கூறிய இவ்வாய்பாடென்றுணர்க.
அற்றேல், இதனகத்துப் பேதத்தை அபேதமாக்கிய தியாதோவெனின், தாமரை வேறு முகம் வேறாயிருக்கவு
முகத்தைத் தாமரையென்றே பேதமறக் கூறியவாற்றானு மேனையுவமேயத்தினையு மவ்வாறே கூறியவாற்றானு முணர்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சிமகிழ்தல்.

மேலிருந்தவிண்ணோர்வியத்தக்கசெம்மையதாய்ப்
பாலிகையுட்டெள்ளமுதம்பாலிக்குஞ்–சால்புடைய
திங்களைக்கண்டான்மாறன்செம்பொற்றுடரியுள்யார்
தங்களுளங்கோடாதவர். (262)
இது, அபேதத்தைப் பேதமாக்கிய சிலேடை வாய்பாட்டான்வந்த அற்புதவுவமை.
இதனுள் அபேதத்தைப் பேதமாக்குதல் சந்திரனொருவ னன்றி்ப் பிறனொரு சந்திரனின்றாகவுஞ் செம்மையுடையதாய்ப்
பாலிகையுட் டெளிந்த அமிர்தத்தை விளம்புந் திங்களெனப் பேதித்துக் கூறினமையா னறிக.
பாலிகை வள்ளமும் அதரமும் ஆதலாற் சிலேடை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனைவியத்தல். இதுவுந் தொகைநிலையுளடங்கும்.

காவிற்பிறவாக்கனகக்கொடிகமல
வாவிக்கடங்காமடவன்னம்–பூவிற்
பிறவாநறுந்தேறல்பேர்நகர்மால்வெற்பி
லுறவாய்நிறையுண்ணுரு. (263)
இது, சம்பந்தமுள்ளதைச் சம்பந்தமில்லையாக்கி வந்த வுருவகம்.
அன்றியும், காவிலும் வாவியிலும் என்றமையால் விரோதவலங்காரமு மிதனுள் விளைப்பாருமுளர்.
“மலையிடைப் பிறவா மணியே யென்கோ, வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ” என்பனவற்றையும்
விரோத வலங்கார மாக்குமாறுபோல என்றறிக. பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.

கோதிலாப்பொன்னைக்குழைத்துமதன்றூரியக்கோல்
காதலாற்கைப்பற்றிக்காட்கரைமால்-போதங்
குழைந்தருள்பொற்கொம்பிற்குறித்த்தென்கோவின்பந்
தழைந்தருளிக்கொம்பினையேதான். (264)
இது சம்பந்தமில்லாததனைச் சம்பந்தமாக்கிக் கூறிய மோகவுவமை. விகாரவுவமை அதிசயவுவமை எனினுமாம்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

மாயன்குருகாபுரியனையமாதரா
ளாயந்தொழவாழருமையுறிற்–றூய
கனவென்கோகூடிக்குழைந்ததனைக்காமர்
நனவென்கோயாதென்கோநான். (265)
இதனுள், குருகாபுரியனையாளென்பது குருகாபுரி செயற்கையா னன்றி யியற்கையானு முதலே யழகுடையது
போன் றிவளு மியற்கை யான் அழகுடையளென்பது தோன்ற நின்றமையா லிதுவு முவமையு ளோர் பேதம்.
பகுதி – இதுவுமது. துறை – ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றல்.
“பாயும்விடையரன்றில்லையன்னாள்” என்பது மிது.
“வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க, சொல்லே ருழவர் பகை” எனவும்,
“நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே, கல்லார்கட் பட்ட திரு” எனவும்,
இவைபோல்வன பிறவு மிவற்றின்பாற் கூட்டியுணர்க.

திருந்திழையாய்மாறன்றிருவாய்மொழியே
மருந்துபிறவிப்பிணிக்குமாதர்–தரும்பிணிக்கு
வாய்ந்தமருந்தென்பார்மடல். (266)
இது, மாதர்தருங் காமமாகியபிணிக்கென்பது மாதர்தரும் பிணிக்கென மாட்டேறிலாதுவந்த வுருவகம்.
பகுதி – மடல். துறை – உலகின் மேல்வைத்துரைத்தல். பா-இரண்டுவிகற்பத்தால்வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

வழிமதுத்தார்மாறன்மணிவரைமேன்மாதர்
விழியெழுதினாலுமிணைவெற்பெழுதினாலு
மொழியெழுதலாமோமொழி. (267)
இது, மாட்டேறில்லாதுவந்த ஏகாங்கவுருவகம் ; என்னை? முலை யென்பவற்றை யுவமைவாய்பாடுதோன்றக்
கூறினமையா லுபயமுலை யாகிய விணைவெற்பெனக் கோடல்வேண்டுமென் றுணர்க.
பகுதி – இதுவுமது. துறை – எழுதவரிதென்றல். பா-ஒருவிகற்பத்தால்வந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

நாணுநிறையுநறுநுதாஅன்மாணிழையார்
தந்தவெங்காமத்தழல்கதுவவெந்து
தருமடன்மாவேற்றந்தரும். (268)
இஃ தேகதேசவுருவகம். இதனுள், நாணும் நிறையுமாகிய பஞ்சென வுருவகஞ்செய்யாது காமத்தழலென வொன்றையே
யுருவகஞ்செய் தமையா னென்றறிக. பகுதி – இதுவுமது. துறை – நாணழிவுரைத்தல்.
பா-அடிதொறூஉமெ ரூஉத்தொடைபெற்றுவந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

தருமன்றண்ணளியாற்றனதீகையால்
வருணன்கூற்றுயிர்மாற்றலின்வாமனே
யருமையாலழகிற்கணையைந்துடைத்
திருமகன்றிருமாநிலமன்னனே. (269)
என்பதும் ஒருவகையுருவகம் ; என்னை?
தண்ணளியால் மன்னனாகிய தருமன், தனதீகையால் மன்னனாகிய வருணன், உயிர்மாற்றலால்
மன்னனாகிய கூற்று, அருமையால் மன்னனாகிய வாமன், அழகால் மன்னனாகிய காமன் என வுருவகஞ்செய்துணர்க.

மன்னர்மடங்கன்மறையவர்சொன்மாலை
யன்னநடையினார்க்காரமிர்தந்–துன்னும்
பரிசிலர்க்குவானம்பனிமலர்ப்பைந்தா
ரெரிசினவேற்றானையெங்கோ. (270)
என்பதும் கூறிய ஒருவகை யுருவகம்.

வருந்தியீன்றாண்மறந்தொழிந்தாள்வளர்த்தாள்சொற்கேட்டில்கடிந்தாண்
முருந்தின்காறுங்கூழையைமுனிவார்நின்னையென்முனிவார்
பொருந்திற்றன்றாலிதுவென்னாய்பொன்றுமளித்திவ்வுயிரென்னாய்
திருந்துசோலைக்கருங்குயிலேசிலம்பவிருந்துகூவுதியால். (271)
என்றற் றொடக்கத்தன வுருவக இலக்கணம்விளங்கநின்றிலவேனு மதனிடத்து மயக்கிநின்றன கொள்க.
என்னை கொள்ளுமாறெனின், ஈன்ற குயிலாகிய பெண் மறந்தொழிந்த, வளர்த்த காக்கையாகியபெண் இல் கடிந்த,
பெண்குயிலாகியபெண்ணே யெனக் கொள்வதை மயக்கிநின்றமை காண்க.

3-வது உருவகம் முற்றும்

————–

4-வது உள்ளுறையுவமம்

——

123.உணர்வதற்கரிதாமுவமப்போலி
புணர்திறம்வினையேபொருண்மெய்யுருவெனப்
பிறப்பொடுமைந்தாம்பெற்றித்தாகிச்
சிறப்புறுதிணைகளிற்றெய்வதமொழிந்த
கருப்பொருள்களனாக்கட்டுரைபயின்று
முவமையோடெதிருள்ளுறுத்தலுற்றயலா
யுவமச்சொற்றொகலொருதலையாகியு
மன்பினதளவாமகத்திணையிருவயி
னின்பதுன்பத்திசைதிரிந்திசையாத்
துணைவன்றுணைவிதோழிசெவிலி
யிணையெனும்பாங்கன்பாணனென்றிவராற்
கொள்கையின்வரூஉங்குறிப்புரைத்தாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யுள்ளுறையுவமமென்னுமதற்குப் பொதுவிலக்கணமுணர்–ற்று. உவமப்போலியென்று மதற்குப்பெயர்.

(இ-ள்) உணர்வினா லுணர்தற்கரிதாகிய வுள்ளுறையுவமமென்பது முற்கூறிய வெளிப்படையுவமம்போல
வினைபயமெய்யுருவுகாரணமாகத் தோன்றுமவற்றினோடும் பிறப்புங்கூட்டி நிலைக்களனைந்தினோடு
மவ்வவ நிலங்களிற் றெய்வதமொழிந்த கருப்பொரு ணிலைக்களனாகவு மழகிய வுரையுட் பயின்றும்
வெளிப்படையாகவரு முவமப்பொருளோடும் அதற்கெதிராகிய வுமமேயப்பொருள்களை யுள்ளுறுத்துக்கொள்ளும்
படித்தாயு முவமேயம் பாடலுட்பயின்றுவாராது அயலாகியு முவமவுருபு தொகுத லொருதலையாகவுங்
களவு கற்பென்னுங் கைகோளினிருவகையினு மின்ப துன்பங் காட்டுவனவா யிசைதிரிந் திசைப்பனவாய்த்
தலைவன் றலைவி முதலியபெயர்களாற் குறிப்புரையாய்வரு மென்றவாறு.

உணர்வதற்கரிதா மென்பதனால் ஏனையுவமம் புலப்படக்கூறாத வுள்ளுறையுவமத்தைத் தருகின்ற
கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துக் கூடி நிற்குமென்பதாம்.
கொள்கையின்வரூஉமென்பதனால் “கிழவி சொல்லி னவளறி கிளவி, தோழிக் காயி னிலம்பெயர்ந் துரையாது” எனவும்,
“கிழவோற் காயி னுரனொடு கிளக்கும், ஏனோர்க் கெல்லா மிடன்வரை வின்றே” எனவும்,
“கிழவோட் குவம மீரிடத் துரித்தே,” கிழவோற் காயி னிடன்வரை வின்றே” எனவும்,
“தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக், கூறுதற் குரியர் கொள்வழி யான” எனவும்
வருங் கூற்றுக்களோடும் தோழியு முழையரும் தலைவன்கொடுமைகூறும் வழியினும் பிறவழியினுந்
தலைவனூரின்கண்ணுள்ள கருப்பொருள்களானவைசொல்லத் தலைவற்கேயன்றியுந் தலைவிக்கேற்றனவா முவமத்
தன்மைத்தோற்றத்தனவா யுள்ளுறையுவமங்கோடலும்,
பிறவாறு வரு வனவா மவைகளுங் குறிப்புரைத்தாகு மென்பதனானு முய்த்துக் கொள்க.
பிறப்பாவது அவ்வவ நிலங்களி லிழிந்தபிறப்போடுஞ் சார்த்திக் கூறல். உள்ளுறுத்தல் – உள்ளேகுறித்தல்.
ஒருதலை – நிச்சயம். அகத்திணை யிருவயினென்பது இறந்ததுபோற்றலென்னுந் தந்திரவுத்தி,
இசைதிரிந்திசைத்த லென்பது செய்யுட்சொற்கடம்பொருளுணர்த்தாது வேறுபடக்கூறுதல்.
இசையாவது சொல். சொல்லாவது எழுத்தினா லாக்கப்பட்டுப் பொருளறிவுறுத்துமோசையாகலி னிசையென்றார். இஃ தாகுபெயர். என்னை? “இசைதிரிந்திசைப்பினுமிசையுமன்பொருளே, யசைதிரிந்தியலா” என்னும் பொருளியற்சூத்திரத்தா னுணர்க.

இவற்றிற்கெல்லாம் செய்யுள் வருமாறு :-

காமர்பன்மலர்கஞலியபொதும்பர்
மாமரப்பணையின்மதுகரமிழைத்த
முதுநறுந்தேறனொதுமலர்முன்னுபு
கொளத்தகுமரபிற்குன்றவாண
வரைதலின்வரையாதொழுகலினிருவிரு
மாறுபட்டொழுகியமதியினிராகலிற்
றிருமகிழ்மாறன்றிருவருட்கிலக்கா
யொழுகாதவருளத்தொன்றா
மழுகாமதியின்மறுகுவல்யானே. (272)
என்பது வினையுவமப்போலி ; என்னை? மாமரப்பொதும்பரகத்து மது கரங்கள் தமக்குப் பின்னைக்கு
நுகர்வதாக மறைத்துவைப்ப விளைந்த தேனை நொதுமலராராய்ந்து கைப்பற்றிக்கொடுபோங் குன்றவாணனே
யென்றதனாற் களவினோடுங்கூடிய கூட்டத்தை நீட்டித்துப் பின்னரிவளை வரைந்துகொள்ளக்கடவேனென நினைந்த
நினைவு தவறும்படி பருவ முதிர்ந்த விவளையும் பிறர்நயந்து பொன்னணிந்து கொடுபோவ ரதுபோல வென்பவாகலான் ;
உவமைக்குப் பிறிதுபொருள் எதிர்த்துவமஞ்செய்யா தாண்டுப்பிறந்த கருப்பொரு ளவற்றோடு
முள்ளுறுத்துவைத்தலி னிஃ துள்ளுறையுவமமாயிற்று.
அவற்றோடு மிஃது நொதுமலர் கொடுபோரென்னுந் தொழிலோடு மிவளையும் பிறர்கொடுபோவரென்னுந்
தொழி லுவமங்கொள்ளநின்றமையின் வினையுவமப்போலியாயிற்று. அன்றியுங் காமர்பன்மலர் கஞலிய
பொதும்ப ரென்பது நற்றாய் தோழி செவிலி முதலியோர்வைகு மனைக்குவமையாம்.
திணை – குறிஞ்சி. கைகோள் – களவு. கூற்று – தோழி. கேட்போன் – தலைவன். இடம் – முன்னிலை. காலம் – நிகழ்வு.
பயன் – இற்செறிவுரைத்து வரைதல்வேண்டுமென்றது. மெய்ப்பாடு – அச்சத்தைச்சார்ந்த பெருமிதம்.
பகுதி – பகற்குறி. துறை- வருத்தங்கூறி வரைவுகடாதல். காமர் – அழகு. ஒழிந்தனவுமுரையிற் கொள்க.

இறைவறங்கூராவீர்ந்தண்பொய்கைத்
துறைதொறுந்துவன்றதோடவிழ்பன்மலர்
மாந்துபுவயினிறைவெய்தியகவரி
யேந்தெழின்மாடத்தீன்றகன்றுள்ளிப்
படர்வுழிப்படர்வுழிப்பணைமுலைக்குறுங்கண்
மடைதிறந்துவளகமடுநிறைத்தொழுகு
பாற்றடினியினயற்பழிதீர்பேடையைப்
போற்றறுகளிப்பிற்புணர்ந்தவண்மூழ்கிப்
புனிதமுற்றிருசிறைபுலர்த்தியவோதிமந்
தணந்தயற்கழனிச்சாதிப்பெடைகளை
மணந்ததனனந்தலைமள்ளர்தாமுழுத
நாற்றடியதன்கணறுந்தழைபதனழிந்
தூற்றெழுகளங்கவுறுபுனலாடிப்
பண்டுதான்மரீஇயபானிறப்பேடையைக்
கண்டுதான்வளைக்குங்காமருகடல்கெழு
கண்ணகன்ஞாலங்கண்டுகண்ணயப்பான்
விண்ணவர்வியப்பான்மேதகுபடிவத்
தரவணைத்துயின்றருளரங்கத்தமுதி
னுரவுநீர்க்காவிரிக்குறுபுனலூர
புல்லேன்பொதுவுணின்மார்பெனச்
சொல்லேன்புன்மனத்தொடர்புடையேனே. (273)
இதுவும் வினையுவமப்போலி. இதனுள், இறைவறங்கூரா என்பது சிறிதும் வற்றாதவென்றவாறு.
ஈர்ந்தண்பொய்கை – மிகவுங்குளிர்ந்த பொய்கை.
“துறைதொறுந்துவன்ற……………. கவரி” இடந்தோறுநெருங்கின இதழ்விரிந்த தாமரை முதலிய
பலமலரையு முண்டு வயிற்றைநிறைத்தல் பொருந்தின காரான்.
“ஏந்தெழில் . ,………….. தொடர்புடையேனே” எ-து உயர்ந்த அழகையுடைய மாளிகையினிடத் தீன்றகன்ற
குழக்கன்றைநினைந்து செல்லுமிடத்து முறுகின முலைக் குறுங்கண் மடைதிறந்து பள்ளவாவிகளைப் பெருக்கி யோடாநின்ற
பாலாற்றின்பக்கமே குற்றமற்ற தனதுபேடையைப் பாதுகாப்பற்ற களிப்பினோடும்புணர்ந்தப் பாலாற்றினடுமூழ்கிப்
பவித்திரமுற் றிருசிறரும் புலர்த்திய சேவலோதிம மப்பேடையை நீங்கி யயல்வயற் கூட்டப் பெடைகளை
மணந் தக்கழனிநடுவண் மள்ள ருழுத நாற்றடிநனந்தலை நறியதழைக ளழுகி யூற்றிருந்த சேறு மிகுந்த
புனலிடை யாடி முன்னர்த் தான் மணந்த வெண்ணிறப்பேடையைப் புணர்ச்சிகுறித்து வளையும்,
அரவணைத்துயின்ற அரங்கத்தமிர்தி னுரவுநீர்க்காவிரிக்குறுபுன லூரனே !
புல்லேன் பரத்தையர் பொதுவுணின்மார்பெனச் சொல்லேன் புன்மனத்தொடர்புடையே னென்றவாறு.

பொதுவுணல் – பரத்தையர் பலரா யேககாலத் தின்பத்தைப் பொதுவாக அநுபவித்தல்.
இதனுள், பரத்தையரென்பது சொல்லெச்சம். ஒழிந்த அகல முரையிற்கொள்க.

அஃதாக ; இதனையும் வினையுவமப்போலி என்ற தென்னையெனின், தனக்குரிய பேட்டோடும் பாலாற்றினயற்
புணர்ந் ததன்பின்னர் அப் பாலாற்றின் முழுகியசேவ லன்னப்பெடையைநீங்கி யயற்கழனியிடத்து வேற்றுப்
பேடைகள் பலவற்றையும்புணர்ந் ததனள்ளிடை நாற்றடிக் களங்க வுறுபுனலின் முழுகி யக்களங்கப்புனல்
புலராமுன்னம் பண்டு தான் மரீஇய பேடையைவளையு மென்பதனால் நமதகச்சோலையினடுவட் பனிநீராற் பூரித்த
புழுகுசுனையினதய லென்னோடும் பாதுகாப்பற்ற களிப்புடன் உவர்ப்பில்லாவின்பத்தைத் துய்த்துப் பவித்திரமெய்த
வேண்டி முழுகி யீரவாடைகளைந்து நனைந்த குழற்கற்றை புலர்த்தி யெதிர் முகமாகவிருந்த நீ நீங்கி
யெனதுமாளிகைக் கயலே சேரிப்பரத்தையர் பலரையுந்தோய்ந்த வேர்வோடுங் குழம்பிய மான்மதச்சேறு
புலரா முன்னம் வாயில்வேண்டாதுவந் தெனது பள்ளியிடத்தானாகி மணிமேகலையைப்பற்றுதற் கிருகையால்
வளையாநின்றா யென்னும் உவமேய வினை கருப்பொருள்களனாகத் தோன்றிநின்றமையா னென்றுணர்க.

இது திணை – மருதம். கைகோள் – கற்பு. பகுதி – பரத்தையிற் பிரிதல். கூற்று – தலைவி. கேட்போன் – தலைவன்.
இடம் – முன்னிலையாய பள்ளியிடன். காலம் – நிகழ்காலம். பயன் – ஊடறீர்தல்.
மெய்ப்பாடு – வெகுளியைச்சார்ந்த வுவகை. இதற்குத் திணையுட்டிணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை.
துறை – இல்லவைநகுதல் ; அல்லது பரத்தையிற் பிரிந்துவந் தாற்றாமையே
வாயிலாகப் புகுந்த தலைவனா னூடறீர் கின்றாளாய பரத்தைகூற்றுமாம்.

குவளையுங்குமுதமுந்தவளவொண்பதுமமுந்
திசைதிசையோசனைதேங்கமழ்திவ்விய
வசைதீரந்தண்மயிலைவேலிப்
பொய்கையுட்செவ்வியிற்பொதியவிழ்புனிதச்
செய்யதாமரைத்தேறலையளவளா
யுவட்டாதருந்தியுமுருகியசுரும்பதன்
கரைசேர்வெள்ளிடைக்கலித்தநீர்முள்ளியிற்
பாடவிழ்ந்தயற்சுரும்புளர்ந்துணப்பதனழி
பூநறாவுண்டின்புறுபுனலூரன்
றெண்டிரைக்காவிரித்திருவரங்கேசன்
றொண்டர்தந்தொண்டர்தொடர்பினையொரீஇப்
போதம்புறந்தரப்புரைதீரின்னுயிர்க்
கேதங்கொள்ளுநரிதயம்விட்டகலா
தொல்லாப்புலன்வழியுய்க்கும்
புல்லறிவினுட்குடிபுகும்புன்மையனே. (274)
இது பயனுவமப்போலி ; என்னை? பொய்கையுட் பவித்திரச் செய்யதாமரை பருவத்தின் மலர்ந்துகு புதிய தீந்தேறலை
யளவளாயுண் ணத்தெவிட்டா துள்ளமுருகிய சுரும்பு அதன்கரையினில் மலிந்த முள்ளுடை நீர்முள்ளி
முறுக்கவிழ்ந்தபருவத்து வேற்றுச்சுரும்பு பலவுந் துவைத்துண்ணச் செவ்வியிழந்த பழம்பூவிற் சுருங்கிய
தேனையுண் டின்புறுமெனவே தின்புறுதற் கியாவருமுரிய ரென்னும்பய னுள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

திவ்ய – நல்ல. புனிதம் – பவித்திரம். அளவளாய் – உடலுமுயிருங் கலந்து. வெள்ளிடை – வெளி. கலித்தல் – மிகுதல்.
புன்மையன் -அறிவினாற் சிறுமையன். வெளியினிற்கும் நீர்முள்ளி யெனவே வீதியினிற்கும் வேசை என்பதாயிற்று.
ஒழிந்த அகலம் நம்பெருமாள் மும்மணிக்கோவை விரித்துரையுட் காண்க. திணையும் பகுதியு மிதுவுமது. துறை – உழைய ரியற்பழித்தல்.

இனியதெள்ளமிர்தாயெறித்தெழுகிரணப்
பனிமதியகடுழப்பணைநெடும்பொங்கர்ப்
பூந்துணர்ததைஇயபொழிலெழினள்ளிடை
யீர்ந்தண்கோட்டகத்தினமலர்முற்றிய
பொதியவிழ்தாமரைப்பொகுட்டாசனத்து
மதிநலனுறப்புணர்மாண்புடைப்பெடையொடும்
வீற்றிருந்தின்புறுமேன்மையோதிமமொரு
பாற்படுகரைசேர்பன்மரக்காவிற்
குறுகுபுகொடுமுட்டாழைக்கூன்சினை
வெறுநிலத்தடர்தரவிரித்தபாசடைமேற்
றளிநறைமாந்துபுசார்பெடைக்குருகொடு
புணர்தலுநலனுறும்புனன்மலியூரன்
பூமகளிலைகுவாம்பூண்முலைமுகடுழத்
தேமவிழ்பசுந்துழாய்த்திருமணிமார்பன்
றென்னரங்கேசன்றிருவருட்கிலக்கா
முரனுடையோர்களுயிர்த்துணையெனவா
ழில்லறம்பழிபிறங்காதிருந்தில்லி
னகனமர்ந்தானாதுறையுந்
தகவேதுமிலாததவறுளோனே. (275)
இதுவும் பயனுவமப்போலி ; என்னை? இருமனமு மொருமனம் போலப் பேரானந்தமெய்தப் புணர்ந்த பேடையோடும்
பொதியவிழ்ந்த தாமரைப்பொகுட்டி லரசுவீற்றிருந் தின்புறுஞ் சேவலோதிம மப்பேடை யைப்பிரிந்து
வாவிக்கொருபக்கமான கரைசேர் பன்மரக்காவின்புறத்து வளைந்த முள்ளுடைத்தாழை முடச்சினை
வெறுநிலத்துத் தகடுபட விரித்த பாசடைமேலிருந் ததனிடத்துத் துளித்துவிழுந் தேனையுண்ட களிப்பினால்
வெளுத்த சிறையுடைப் பெடைக்குருகைப் புணர்தலு மானந்தமெய்தும் புனன்மலியூரனெனவே
இப் பொற்புடையில்லின்க ணிருந் திக்கற்புடையவளோடு மிருமனமு மொருமனமாகப் புணர்ந்து பேரானந்த மெய்திய
பின்னர் யாம்புடைசூழ அரசுவீற்றிருந்தோன் இவளைநீங்கி எமது மாளிகைக் கயலாய்ப் பொலிவிழந்த
சேரிப்பரத்தையைப் பெண்டன்மைமாத்திர மொத்தலிற் காமபானத்தையுண்ட புத்திப் பிரமையா லுவர்ப்பின்றிப்
புணர்ந்ததனா லின்பமெய்துமூரன் றகுதி யொன்றுமில னென்றுரைத்தபான்மை யுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

இதற்கும் விரித்துரை நம்பெருமாள் மும்மணிக்கோவையுரையுட் காண்க. பகுதி – இதுவுமது.
துறை – தோழி தலைவனை யியற்பழித்தல்.

நீர்நிலைமுற்றியநிழன்மலிசோலையுட்
கார்வழங்காதகாலையுங்கவின்பெற
வேர்முதற்பழுத்துவியன்சினைப்பலவு
வளங்கெழுநாடவெம்மணிபுரைமாண்கவின்
புறந்தருமாயினும்புனிதநின்னின்றா
லரவணைத்துயிலமர்ந்தருளரங்கேசன்
றூநீர்க்காவிரித்துறைபடிந்தல்லதை
யொல்லேன்மலரமளியினுறப்
புல்லேன்பரத்தையர்ப்புணர்ந்தநின்மார்பே. (276)
இது மெய்யுவமப்போலி ; என்னை? கார்வழங்காதகாலையும் நிழன்மலிசோலையுட் பலவு வேர்முதற்பழுத்து
வாட்டமின்றி வளனெய்தினாற்போல நீ யென்னிடத் தருளின்றிப் பரத்தையர்மாட்டுப் பிரிந்தகாலத்தும்
ஆயவெள்ளம் விட்டுநீங்காத எனதுமனையிடத் தில்லறங்கோடாதுநடத்துதற்பொருட் டித்துணைப்போது
முளனானே னென்றதாக வுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையானென்றறிக.
இதற்கு மொழிந்த விரித்துரை மும்மணிக்கோவையுரையுட் காண்க. பகுதி – இதுவுமது. துறை – அணைந்தவழியூடல்.

உலைவினீரழுவத்துறுசிறையதன்க
ணலைகொழித்தலைதொறுமலைதொறுமொத்துண்
டழுங்கஞரெய்தியயாக்கையதாகியுந்
தன்னால்வளர்க்கத்தருசினையதன்மேன்
மன்னாதரவின்வளர்மீன்வைத்தகண்
வாங்காதுய்த்துவளர்புனலூரற்
கேவவிற்பிழையாவின்னிசைப்பாணர்
புதுவதுவாய்வழிபிழைத்திவண்போதரு
மதுநினைந்தருவிருந்தளித்திடற்கந்தோ
மதுமகிழ்மார்பினன்வழுதிநன்னாட்டவர்
குடிஞையைக்காய்திறன்குறிப்பதுமின்றாற்
காதோடுலவுகட்காரிகை
யாதோகறியீங்கினிதமைப்பதுவே. (277)
இதுவே மெய்யுவமப்போலி ; என்னை? அழிவில்லாத நீர்க்கயத்துண் மிக்க சிறையிடத்துத் திரையெடுத் தெற்றுந்
தோறு மெற்றுந்தோறு மதனா லெற் றுண்டு மிகவுந் துன்பமெய்திய யாக்கையோடுங்கூடிய மீன் றன்னால்
வளர்க்குஞ் சினையின்மேல் வைத்தகண்வாங்காது வளர்த்தாற்போல யானுந் தலைவர்பிரிந் தெனக்களித்ததுன்ப
மென்மேனியை வருத்தவு மம்மேனியோடு மில்லின்கணிருந்து மென்னாலோம்பப்படு மில்லற
மோம்புதற்குளனானே னென்ப துள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையா னென்றறிக. இதுவும் பகுதி யது.
துறை – பாணனைப் பழித்தல் ; தலைவிகூற்று. இதற்கும் விரித்துறை கூறவேண்டுவதில்லை.

பன்மலர்கஞலியபழுமரச்சோலையுட்
டன்னிழறுணையாத்தளிர்த்தமௌவலின்மலர்
விரிகதிர்தெறுதலின்வெம்மையுற்றுணங்க
முட்புறக்குடக்கனிமுடப்பலவதனயற்
செங்கிடைமலர்கவின்சிறப்பவுநிழற்று
மொண்புனலூரற்குறுபழிவிளைக்கும்
யாமேதிலமேதிலமெனவெங்கையர்
மாளிகைபயின்றுமதங்கருற்றிலராற்
புவிப்பாவலர்புகழ்புரவலன்மதுர
கவிப்பாவலன்புகழ்கருணையங்கடவுண்
மதுமகிழ்மார்பினன்வண்குருகூரன்
சதுமறைப்பொருளாற்றருதமிழ்மறையினுண்
முதுமொழியுணராமூடமதடைந்த
மனனகமலமிகமறுகுன
ரினமெனலொன்றாயிகழ்பொய்ம்மையனே. (278)
இது நிறமல்லாத பண்புவமைப்போலி. என்னை ? சோலையுட்டன்னிழலே துணையாகத்தளிர்த்த முல்லைக்கொடியின்
மலரானது விரிந்த கதிர்தெறுதலான் வெம்மையுற்றுணங்க முடப்பலவு தனக் கயலாகத்தோன்றின
செங்கிடைமலர்க் கழகுமிக அதற்கு நிழல்செய்யுமது போலத் தலைவனும் தன்னையேதுணையாக
ஆவிதளிராநின்ற விவளுங்காமத்தீயால் வெந்து மேனி வாடத் தனக்கயலாய பரத்தையர்க்குடலு முயிருந் தளிர்ப்ப
நலங்கொடா நின்றா னெனப் பெண் புள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.
பகுதி – இதுவுமது. துறை பாணனொடுவெகுளல். கூற்று – தோழி.

ஒன்றாய்ப்பரந்தவுறுவளிகறங்கலின்
மின்றாழ்பன்மின்மிளிர்விசும்புழுசினை
சுமைமலிந்தொசிதரத்துணர்த்தமென்பூமுகை
பொறிச்சுரும்புளர்தொறுமுளர்தொறும்பொதும்பருண்
முறுக்குடைந்திழிதரூஉமொய்ந்நறுந்தேறல்
பரந்துபன்முகத்தவாய்ப்பவளக்கொடியொடுங்
குரூஉக்கட்பரூஉத்தாட்குடம்புரைசெருத்தற்
கயவாய்மேதிகட்கழுநீருண்
டுயவால்வைந்நுதித்தொடர்நெறிமருப்பிற்
புறக்காழ்வயிரப்பூங்கழைதடிந்துகு
நிறக்காழ்நித்திலநிரந்தரம்வரன்றயல்
வெள்ளிடைநிவந்தமேதகுசுவலினை
யுள்ளுயிர்ப்பெடையையுறைளினிருத்திப்
பாலுணீர்தெரித்துப்பருகுமொண்சேவ
லாலுநீர்ச்சிறைபுக்காய்ந்திரைகொணர்வலென்
றிகந்தயலிடைப்படிந்தெழுமயர்வுயிர்ப்பான்
வாலுகவைப்பெனமறுகுபுகுறுகிவீழ்ந்
தன்மையிற்றவக்குற்றச்சப்பார்வையிற்
புராதனப்பொய்கையுட்புகுபுனலூர
பொருவருதாமரைப்புதல்வனைப்பயந்த
திருமறுமார்பன்றிருவரங்கத்துப்
பொதுநலப்பெண்டிர்பொதுவுணின்மார்ப
மல்லனீர்படிந்தல்லது
புல்லேந்தீண்டலெம்பொன்னடிச்சுவடே. (279)
இதுவும் பண்புவமப்போலி; என்னை? சேவலன்னம் நித்திலங்கள் வெள்ளிடைநிவந்த மேதகுசுவலினை
வாலுகவைப்பெனக்குறுகி யிருத்தற்கு மென்மையில்லாததனோடு மறிவுமயக்கமுற்றதனால் இலச்சையுற்றுத்
தன் பேடையையிருத்திப்போந்த பொய்கையுட் புகாநிற்கு மதுபோல நீயுங் கற்பு நாணு முதலிய
நற்குணங்க ளின்றித் தன முதலியனவெய்தும் பெண்டன்மை மாத்திரமேயுடைய பரத்தையரையு நற்குண
நற்பெண்டிரென்று தோயுமளவிற் பொருண்மேற்சென்று வற்கென்ற துர்க்குணத் தாராதல்கண்டதனோடு
நினது புத்தி மயக்கமுற்றது நினக் கிழிபென நாணி யெம்மனையிடத்துவந்து வாயில் வேண்டா
நின்றா யென்ப துள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

வெள்ளிடை – வெளி. நிவந்தது – உயர்ந்தது. சுவல் – மேடு. வாலு கவைப்பு – மணற் குன்றாகிய விடம்.
தவக்கு – இலச்சை; நாண், கருத்துப் பொருளாய பண்புவமப்போலி.
பகுதி-இதுவுமது. துறை – அணைந்த வழியூடல். இது கூற்று – இற்பரத்தை.

ஓங்கியகுரம்புசாருவளகவயின்வயின்
வீங்கியதிணிதோண்மிடலுடைமள்ளர்
கதைபெய்தாற்றலிற்சுடுமண்பன்முறை
ததைவுறப்படுத்தசால்பிற்றெண்ணீர்
வார்ந்துகுகவர்முழைமதகுபடர்குடுமியிற்
சேர்ந்தசைவறவிருசிறகருமொடுக்கி
மறைபுகுநோக்கின்மனப்பட்டிமையாற்
றுறைபுகுகயலினைச்சோர்புகண்டெடுத்துக்
கூர்வாய்வெண்சிறைக்குரண்டமென்பெடைக்
கார்வாயெனவருத்தியினருத்துபுதுடித்
தயல்வீழ்வதனையற்றம்பார்த்து
மிச்சிலென்றறிந்தும்விழுநெறியொரீஇ
நச்சியுண்புலவுநாற்றத்தோடுஞ்
செங்கால்வெள்ளுகிர்ச்சேவலோதிம
மொருசிறையிருந்தவோவாச்செவ்வி
யிருசிறைப்பேடையேழின்மலர்குறுகு
நளிமலர்ப்பொய்கைநல்வயலூர
திருநெடுமாயன்றிருவரங்கத்துப்
பொருணசைப்பரத்தையர்பொறித்தநின்மார்பிற்
றனக்குறியாநிற்றழுவுபுசிதைவுறின்
மனக்கிடரிழைப்பதுமன்றி
நினக்கிடருறுமானெருங்கலெம்மிடனே. (280)
இது பிறப்புவமப்போலி. என்னை? இழிந்தகுரண்டந் தன் பேடைக் கருத்துங் கயலை யதுவாய்க்கொள்ளத்
துடித் தயலேவீழ்ந்ததனை மிச்சி லென்றறிந்து மறிவினாலுயர்ந்த அன்னம் அதனை யற்றம் பார்த் தெடுத் துண்ட
புலானாற்றத்தோடுந் தன துத்தமப்பேடையுறையுமழகிய சேக்கை யாகிய தாமரைமலரைக் குறுகுமதுபோல
நீயு முயர்ந்த குலத்துட் பிறந்து மிழிந்தகுலத்துளோர் தோய்ந்தகன்ற மிச்சிலாகிய பரத்தையரிடத் தின்பத்தைத் துய்த்து
வேற்றுநாற்றத்தோடு மெமது நன்மனைக்கண் ணெம்மைத் தீண்ட வந்தனை யாதலா லெம்மைத்
தீண்டல் பொருந்தாதெனக் கூறினாளென் றுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையானென்றுணர்க.

பகுதி-இதுவுமது. திணை-பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை-பள்ளி யிடத்தூடல். கூற்று – இதுவும் இற்பரத்தை.

விசும்புதூர்த்தெழுவியன்சினைமாத்தின்
பசும்புறத்தீங்கனிபறீஇநுகர்கடுவன்
புரப்பவர்குறுகுபுபுலம்புறீஇப்பொங்க
ரிரிந்தலம்போதருமீர்ந்தண்சோலையுட்
புளிங்கறிவேட்டபுன்றொழிற்றன்மையர்க்குப்
பழிப்பின்றாகப்பாகுசெய்தட்ட
கோதறுமான்பாற்குழம்புபொற்கலத்தினுட்
பெய்திருந்தாறும்பெற்றியேய்ப்ப
முடவடிப்பலவின்முதிர்பொற்குடக்கனி
வேர்முதற்பழுத்துவிரிந்தபொற்றீஞ்சுளை
பதனழிபான்மைப்பாய்புனலூர
நூற்கடற்பழகியநுண்ணுணர்வுடையோ
ராற்றலிற்பரவுசீரங்கனுக்கமைந்த
பாற்கடன்முற்றப்பருகுதற்கெழுந்த
பேராப்பெரும்பசியாளர்தம்முன்ன
ராராவள்ளத்தமிர்தமைப்பவர்போற்
சிறுவரையின்பத்துறுதுயரிழைத்தற்
கிரத்தலீங்கியல்பன்றாற்
பரத்தையிற்பிரிதனின்பண்பாகும்மே. (281)
இது, “உள்ளுறையுவமமேனையுவமமெனத், தள்ளாதாகுந்திணையுணர் வகையே” என்னு மகத்திணை
யியற்சூத்திரத்தான் உள்ளுறையுவமந்தா னேனையுவமமென்றுகூறும்படி யுவமையு முவமிக்கப்படும் பொருளுமாய்
நின் றுள்ளுறையுவமத்தினைத்தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துநின்றது ; என்னை?
ஆகாயத்தை மூடியெழாநின்ற அகன்ற கொம்பர்மாமரத்திற் செம்மை முற்றாப் பசுத்த வினிய கனியைப் பறித்து
நுகர் கடுவனான தச்சோலையைக் காப்பவர் முடுகத் தனிமையுற்று அத னயற்கொம்பரிற் சுற்றித்திரியுங்
காவினுட் புளிப்பாகினை யுண்ணவேட்ட புன்றொழிற்றன் னையுற்றவர்க் கூட்டுவதாகக் குற்றமில்லையாம் படி
பாகுபடுத்திக் காய்ச்சின எப்பிணியுந் தீர்க்கும் பசுவின்பாற்குழம்பு பொன்னின்கலத்துட் பெய்திருந் தாறுமுறைபோல
முடப்பலவின் வேரிற் குடக்கனி முற்றிப் பழுத்து விரிந்த பொன்போனிறத்தையுடைய வினியசுளை யருந்தும்
பருவத்தருந்தாது செவ்வியழியாநிற்கும் பரந்த புனலூரனே! என்றதற்கு ஊரனே !
நீ யுத்தமநாயகியில்லின்கண் மாலைக்காலத்தினுஞ் செல்லா திளைய செவ்வியுடைய சேரிப்பரத்தையைப் புணர்ந்து
விளையாடாநின்றகாலத் தவள் பொதுமகளாதலின் பிறரப்பரத்தை மாளிகையைக் குறுகத் தனியுற்றுத்
தணந் தப் பரத்தை மாளிகையைச் சுற்றித்திரியு மிவ்வூரிடத் தியானு நின்வரவுபார்த்தென்னை
யலங்கரித்து மிகுந்த காந்தியோடுமிருப்ப நின்வரவுதாழ்ப்பக் கவினழியாநின்ற வென் வருத்தத்தைத்
தீர்ப்பா னொருசேரியினிடத் தென்மாளிகைக்கண்வந்து வாயில்வேண்டாநின்ற யென்னிடத் தின்ப
நின்காதற் கார்த்தியுடையதொன்றல்ல வின்னு மச் சேரிப்பரத்தை மாளிகையிற்பிரித னினக்குக் கடனென்று
காமக்கிழத்தி யுள்ளுறை யுவமங்கூறி னளாதலி னெனவுணர்க.

அன்றியும், “உடனுறை யுவமஞ் சுட்டு நகை சிறப்பெனக், கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னிது சிறப்பென்றவுள்ளுறை.
இச்சிறப்பென்றவுள்ளுறை “விரிகதிர்மண்டில”மென்னு மருதக்கலியுள்ளும் வந்தமை காண்க.
இது சேரிப்பரத்தையிற் புணர்ந்துவந்த தலைவன்வரவுகண்டு காமக்கிழத்தியூடியவாறுகண்டு சென்றுசார்ந்த
தலைவனுட னூடறீர்கின்றாள் கூறியது. ஒழிந்த அகலம் நம்பெருமாள்மும் மணிக்கோவை விரித்துரையுட் காண்க. கோது – ஆகுபெயர்.

மழைதவழ்பலவின்வான்சினைநீழற்
றழைதருமரம்பைதான்பொறையுயிர்ப்ப
விசும்புமிழ்திவலையின்விழுமிதின்முற்றிய
பசுங்காய்மதுரப்பலன்படுகாலை
நிறத்தபாசடைநீள்சினைவாட
விறப்பளித்துலகிற்பிறர்க்குறுபயனா
மடலவிழ்நறைமகிழ்மாலிகைமார்பன்
றுடரிமால்வரைதுறந்தனளாய்த்தொடர்ந்த
வினையேன்பெற்றமெல்லியலொருத்தியுங்
கனைகதிர்வேற்கைக்காளையுங்கடத்திடை
மன்னியதிருவுமாயோனும்போன
முன்னியதுளதெனின்முக்கோற்பகவீர்
மதிபெறவணங்கினன்மகிழ்ந்தே
சதிர்பெறவிளம்புமென்றளர்வகன்றிடவே (282)
(இ-ள்) மேகந்தவழாநின்ற பலவினது பெரியகொம்பர்நீழலில் வளர்ந்த வாழை யீனாநிற்ப முகில்பெய்யுந்
துளியி னன்றாய்விளைந்த பசுங்கா யினிய கனியானபருவத்துப் பசுத்த விலையாகிய நீண்டசினை வாடுதலோடு
மதற் கிறத்தலையுங்கொடுத் துலகின்கட் பிறர்க்கு மிக்க வூதியமாகு மாறனது துடரிமால்
வரையை நீங்கினளாதலிற் றொடர்ந்து போந்த வினையேன்பெற்ற மெல்லியசாயலையுடையாளொருத்தியும்
நெருங்கிய கிரணத்தையுடைய வேற்கைக்காளை யொருவனுமாக விருவரும் விட்டுநீங்காத திருமகளும் மாயோனும்போல,
முக்கோற்பகவீர் சுரத்தினிடத் தெதிர்வரக்கண்டதுளதேல் யான் கூறியவையெல்லாம் புத்தியுட்கொண்டு மகிழ்ந்து
எனது தளர்வுநீங்கச் சதிராக விளம்பும் ; நும்மை வணங்காநின்றே னென்றவாறு.

இதனுள் செய்து என்பது செயவென்னும் வினையெச்சவாய்பாடாக நின்றது.
இச்செய்யுள் நால்வகையுவமப்போலியும் விரவிவந்தவுவமப்போலி. என்னை ?
பலவின்கீழ் வளராநின்ற வாழையீன்ற தாறுபோல நற்றாயால்வளராநின்ற வென்னாற் பெறப்பட்டாள் என வினையுவமைப் போலியும்,
விசும்புமிழ்திவலையிற் றாறுமுற்றியதுபோல வென்னாலு மாயத்தாலும் இளையள் விளைவெய்தினளெனவே மெய்யுவமப்போலியும்,
பசுங்காய்மதுரப்பலன்படுகாலை நிறத்தபாசடை நீள்சினை வாட விறப்பளித் துலகிற் பிறர்க்குறுபயனா மெனவே
அங்ஙன மிளையளாய் விளைவெய்திய தலைவி யிந்திரியகலினம்வந் தின்பத்திற்குரியளாயின காலத்து
எனது மேனிக்கும் வாட்டந்தந் தெனதுயிரையுங் கொல்லாது கொன்றெனக் கொருபயனுமின்றி யயலானான கணவற்கே
யூதியமாயின ளென்றுகொள்ளப் பயவுவமப்போலியும்,
பண்புவமப்போலியும், வினையுவமப்போலியு மிதனோடேகூடி முன்னும் பின்னு மிவ்வண்ணமே
நால்வகை யுவமப்போலியு முள்ளுறுத்துக்கொள்ள நிகழ்ந்தமையா னென்றுணர்க.
பயவுவமப்போலியாவது வினைகாரணமாகப் புலப்படுங் காரியத்தை யுள்ளுறுத்துக் கொள்ளப்படுவதாம்.
அஃ தீண்டுக் கூட்டத்தாற் பிறக்கும் பேரானந்தம். என்னாற் பெறப்பட்டா ளென்மகள் என்பன
அன்பினதிகத்தானு நற்றாயென்றுந் தானென்றும் வேறல்லவாம் ஐக்கியத்தானுங் கூறினாள்.
பாலைக்கலியுள்ளும் “என்மகளொருத்தியு” மெனக் கூறியவாற்றானு முணர்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பின் சென்ற செவிலி முக்கோற்பகவரைவினாதல்.

இதனுள் தலைவி தோழி செவிலி இற்பரத்தை காமக்கிழத்தி உழையர் என்போர்கூற்று வந்தன. ஒழிந்தோர்கூற்றும் வந்தவழிக் காண்க.

4-வது உள்ளுறையுவமம் முற்றும்.

—–

5-வது ஒட்டலங்காரம்.

———–

124.குறித்ததைமறைத்துக்குறிக்கொளநிகர்த்ததை
நுவல்வகைதாமேயொட்டென நுவல்ப.
(எ-ன்) வைத்தமுறையானே ஒட்டென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனாற் குறித்தபொருளை மறைத் ததனைக் கற்று வல்லோ ருட்கொள்ளும்படிக் கதற்கொத்த பிறிதொன்றினை
வெளிப்படையாய்க் கூறுங் கூறுபாடுதாமே யொட்டென்னு மலங்காரமென்று கூறுவர் பெரியோரென்றவாறு.
வெளிப்படையாகவென்பது சொல்லெச்சம்.

(இ-ள்) அதுவே – அச்சொல்

125.அதுவே,
பொரு ளிடஞ் சாதி வினை குணம் பொழுதொடு
மருளறுநெறித்தாய்வருதிறனுடைத்தே.
(எ-ன்) இஃ தவ் வலங்காரத்தின் கூறுபாடுணர் – ற்று.

(இ-ள்) அதுவே – அச்சொல்லப்பட்ட ஒட்டுப் பொருள்முதற் காலமீறாகச் சொல்லப்பட்ட வாறு மிடனாக
மயக்கமற்ற நெறியுடைத்தாய்த் தோன்றுங் கூறுபாடுடைத்தா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு;-

கற்றுணர்ந்தவாய்மைக்கவிப்புலவீர்கண்ணனருள்
பெற்றியன்றசெம்பொருளைப்பேணியே – சுற்றம்
வளைத்தருந்தவாழாதுவந்தயலார்கூண்டு
திளைத்தருந்தவாழ்வார்சிலர். (383)
(இ-ள்) கற்பனவாம் நூல்களைக் கற்றுணர்ந்த வுண்மையோடுங் கூடிய கவிப்புலவீர்காள்!
கண்ணனருளைப்பெற் றதனாலுண்டானவுண்மைநிதியை யழியாதோம்பி யதனை மாதா பிதா முதலிய வுரிமைச்
சுற்றங்க டம்மைவளைத்திருந்து நுகர்வெய்தத் தாமு முடனுண்டு வாழும் வாழ்வெய்தாதே சிலர்
தம்மோ டொருவழியு முறவில்லாத வயலார் களித்தருந்த வாழ்வா ரவரறியாமை தகாதென்றவாறு

இது புலவன் குறித்தபொருளை மறைத் ததனைக் குறிக்கொளற்கதற் கொத்த பிறிதொன்றனை வெளிப்படையாய்க் கூறியது.
குறித்த பொருளாவது கண்ணனருள் பெறுதலாலுண்டான வுண்மைப்பொருளாகிய கல்வியோடுங் கூடிய கவி.
பேணுதல்-வாய்மையிழவாது போற்றுதல். சுற்றம்வளைத்தருந்தவாழாதென்பது ஆன்மாவை யீடேற்று முறுதிச்
சுற்றமான பரமபதநாதனாகிய பிதாவும், பெரியபிராட்டியாகிய மாதாவும், ஆசிரியனும் அதனைக்கேட்டு மகிழ்வெய்த
அவர்களைப்புகழ்ந்தப்பாடலை யவர்களுக்கேகொடுத் திம்மைப்பயனோடு மறுமைப்பயனா முத்தியையும்
பெற்றுப் பேரின்பமெய்தி வாழா தென்றவாறு. சிலர் வந்தயலார் கூண்டுவளைத்தருந்த வாழ்வாரென்பது
முன்பிலவர்களைப்போலக் கவிகளாற்புகழ்தற் கியாதுமியைபில்லாத மானிடராகிய வயலாரை வாய்மையிழந்து
புகழ்வதனை யவர்கேட் டுட்கொண்டு களித்தளித்த கூறை சோறு முதலியன
வுடுத்து முண்டும் வாழ்வா ரிஃதென்ன உலகியற்கை யென்றவாறு.

இது, பொருணிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு; என்னை?
இருவகைப்பொருள் கல்விப்பொருளுஞ் செல்வப்பொருளு மென்பதனாலுணர்க.
ஒட்டென்பதற்கு நுவலாநுவற்சி, பிறிதுமொழிதல், சுட்டு என்பன பரியாயம். திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

உழவுபயன்கொள்வாருயர்நிலத்தினுள்ளாய்
விழைவுபெறவித்தியவித்தல்லா–லழகமையா
வன்பாரில்வித்தியதூஉமால்பொருட்டாற்போர்நிலத்தா
மென்பார்புலவீரெவர். (284)
(இ-ள்) உழவினாற் பயன்கொள்வார் நல்ல கழனியகத்தவாய் மகிழ்வெய்த விதைத்த நல்லவித்துச் சீமன்னாராயணன்
பொருட்டால் விளைந்து களம்புகுமென உலகங்கூறுவதல்லா லுழவினுக்கியாதுஞ் சிறப்பில்லாத வலிய
பாறைநிலத்தில் விதைத்ததும் விளைந்து களம்புகுதுமென்று கூறுவார் புலவீர்காளுலகத் தொருவருமில்லையென்றவாறு.

இதுவுங் குறித்தபொருளை மறைத் ததற்கொத்த பிறிதொன்றனை வெளிப்படையாய்க் கூறியது.
குறித்தபொருளாவது:-தவமாகிய தொழிலாற் றமதுயிர்க்கு முத்தியாகிய வூதியத்தையெய்து மாரியர்கள்
பரவுபகாரத்தாற் பூலோகமாகிய செய்யகத்து நல்ல கழனியாகிய கோயில் முதலிய திருப்பதிகளுள்
விருப்பமுற்றிருத்திய சிறப்புடையுயிர்களே திருமால்பொருட்டாற் பரமபதமெய்துமென் றுலகங்கூறுவதல்லாற்
சிறப்பில்லாத பாறைநிலத்தில் விதைத்த வித்து விளைந்து களம்புகுதாததுபோல மனநலன்யாதுமில்லாத
தறுகண்மையோர்வைகும் பாறையாம் பாலைநிலங்களில் வைகியவுயிர்களறியாமை யேதுவாக
முத்தியைப் பெறுமென்றுகூறுவார்க ளொருவரு முலகின்க ணில்லை யென்றவாறு.

தவம் பெயர்ச்சொல்லெச்சம். உயர்நிலம்-கோயில்முதலிய திருப்பதிகள். விழைவுபெற-விருப்பம்பெற்று.
வித்தியது-நியமித்திருத்தல். வித்து-ஆன்மாக்கள். இது மாட்டேறில்லா வுருவகம்.
வன்பார்-திருப்பதிகளல்லாத பொல்லாதவூர்கள். மால்போர்நிலம் இரண்டுஞ்சிலேடை.
மால்-திருமாலும் அறியாமையும்; அல்லது மேகத்தின்பொருட்டாலென்பதுமொன்று.
போர்நிலம் – சூடுநிற்குங்களமும் பரமபதமும். எல்லா வண்டத்தையு மீன் றகத்திடும் பிரகிருதிக்கு மேற்பட்டகன்ற விரசையையும்
அகத்திருநிலமாதலங் முத்திக்குப் போர்நிலமென்று பெயராயிற்று. போர்த்தல் – மூடுதல்.
இஃது இடநிலைக்களனாகிய ஒட்டு. திணையுந் துறையுமிதுவுமது. ஓம்படை யெனினுமாம்.

வாய்ந்ததமிழ்மாறனருட்புலவீர்மத்திமநோய்க்
கேய்ந்தமருந்தாவின் பாலென்றக்கா–லாய்ந்ததையக்
கற்றாவின்பாலுணர்ந்து கைக்கொளார்மேதியின்பால்
பெற்றார்க்கும்போமோபிணி. (285)
இதனுள் மத்திமநோயென்பது பித்தம். அதற்கு மருந்தாவின் பாலென்றக்கால் என்பது வாகடநூ லதற்கு
ஆவின்பாலே மருந்தென்று கூறியக்காலென்றவாறு. மேதியின்பால் பெற்றார்க்கும் போமோபிணியென்பது
அப்பித்தமாகிய பிணி எருமைப்பாலைப்பெற்றார்க்குத் தீராதென்றவாறு. இது வெளிப்படையாகக்கூறியபொருள்.
குறித்தபொருளாவது, மத்திமநோய்க்கு (என்பது:-பிறர்கூறும் பதி பசு பாச மென்பவற்று ளிடைநின்ற
ஆன்மாவிற்குச் செய்த தீவினையடியாக வெய்தும் பிறவியாகிய பிணிக்கு) நால்வேதத்தின் சாரமாகிய
திருவாய்மொழியென்னு-மாவினிடத்துண்டாகிய வுண்மைஞானமாகிய பாலை யான்மஞானத்தினிடத்துத் தலைப்பெய்யாது,
வேதமார்க்கமல்லாத புன்பனுவலாகிய மேதியினிடத்துண்டான புன்மைஞானமாகியபாலாற் றீராதென்றவாறு.
வாய்ந்தது – உண்டானது. உம்மை-இழிவுசிறப்பு. ஓகாரம் – ஒழியிசை. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது சாதி நிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு. என்னை? ஆவின்பால் மேதியின்பால் என்பவற்றாலவை
நிலைக்களனாகப் புலப்படுதலானென்றறிக. திணை-இதுவுமது. துறை – செவியறிவுறூஉ;
அல்லது பாடாண்சார்ந்தபொதுவியற்பாற் சார்த்திற் பனுவல்வாழ்த்துமாம்.

வளைதவழ்நீர்மண்மேன்மதிப்புலவீரந்தோ
விளைகழனிச்சார்புள்விராய-களைகளைய
வாங்குங்களைக்கோலான்மாநிலத்தார்க்கேலாத
தீங்குபுரிவார்சிலர். (286)
என்பது, சங்கினந்தவழுங் கடல்சூழ்ந்தபூமியினுண்டாய புலவீர்காள் செந்நெல்விளையுங் கழனியிடத்துவிரவுங்களையைக்
களைவதற்குக் கத்தன் கொடுத்துக் கைக்கொண்ட களைகளையுங்கோலாற் களையைக்களையாது
பெரியநிலத்தின்கணுள்ளார்க்குப் பொருந்தாத தீங்காகச் சிலர் தமது கண்ணைக்களையுந் தீயதொழில்
விரும்பிச்செய்வா ரிஃதென்னபேதைமையோ வென்றவாறு.
இது வெளிப்படையாகக்கூறியபொருள் விளை கழனி-சீவியாநின்ற வுடம்பு. உள்-ஆன்மா. சார்பு-இடம்.
விராயகளை- உம்மையிழைத்ததீவினை. களைய – அதனைப்போக்குதற்கு.
வாங்குங்களைக்கோலால்-சீமந்நாராயணன்கொடுப்பக் கைக்கொண்ட மனோவாக்குக் காயங்களால்.
அவனைச் சிந்தித்தும் துதித்தும் கண்டுங் கீர்த்தியைக் கேட்டுந் தாமஞ்சாத்தியும் கோயில்வலம்வந்தும் போதுபோக்காது
முத்தியைவிரும்புவார்புத்திக்குப் பொருந்தாத தீத்தொழில்களை விரும்பிச் செய்து தமக்குள்ளவாழ்நாளை யந்தோ
வவமேபோக்காநின்றா ரினியெங்ஙனமீடேறுவ ரென்றவாறு. இதற்கும் அவரைப்போலெனக் கூட்டுக.
உள்-ஆகுபெயர். அந்தோவென்ப திரக்கத்தின்கட் குறிப்பு.
மாநிலம் – சிலேடை. இது குறித்தபொருள். இது வினைநிலைக்களனாகத் தோன்றியவொட்டு. என்னை?
தீங்குபுரியுந்தொழில் நிலைக்களனாகத் தோன்றுதலா னென்றுணர்க. திணை – இதுவுமது. துறை – வாயுறைவாழ்த்து.

வாழ்ந்தமதிப்புலவீர்மால்வழங்குந்தூயநீர்
வீழ்ந்தநிலத்தியல்பான்மெய்திரிந்தாற்-சூழ்ந்ததனைத்
தேற்றிற்றெளிப்பதல்லாற்சேற்றிற்செறிகளங்க
மாற்றப்படுநெறித்தோமற்று. (287)
என்பது, முற்றவுணர்ந்த மூதறிவாளரோடுங்கூடிவாழ்ந்த மதியையுடைய புலவீர்காள்! மேகம்பெய்யுந் தெளிந்தநீர்
தான் விழுந்தநிலத்தினியல்பா னிறம்வேறுபட்டா லதனைப்போக்குதற் குலகம் விசாரித்தறிந்த தேற்றினா லந்நீர்
தெளிவதன்றிச் சேற்றுநீரா லதற்கடைந்த களங்கத்தை யொருவராலு நீக்கப்படுமார்க்கமுடைத்தன் றென்றவாறு.
இது வெளிப்படையாகக் கூறியபொருள். அது தெளியாததுபோல மாயோனளித்த நற்குணஞ்சிற்றி னங்களை
விரும்பிக்கொண்ட வுறவினதுபெற்றியானுண்மைவேறுபட்டா லெல்ல நூல்களையு மனத்தாலுள்ளி யறிவறிந்தோர்
தெளிந்தஞானத்தாற் பண்டுபோற் றெளிவதன்றிக் கரியசேறுபோற் செறிந்த சிற்றினத்தார் மாசுண்டஞானத்தாற் றேற்றப்படாதென்றவாறு.
ஆதலான் மூதறிவுடையோர்நட்பு விடாது கொள்ளவேண்டு மென்றவாறு. இது குறித்தபொருள்.
இதனுள் மால், நீர் வீழ்ந்த, மெய், தேற்றில், களங்கம் என்பன சிலேடை.
ஆதலா னிது அடைபொதுவாய்ப்பொருள் வேறுபட்டுப் பண்பு நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு; என்னை?
வீழ்ந்த நிலத்தியல்பான் மெய்திரிந்தாலெனக் குணநிலைக்களனாகக் குறித்த பொருடோன்றுதலா னென்றுணர்க.
திணை-இதுவுமது. துறை-ஓம் படை.

நன்புலவீர்கங்குற்கிசைந்ததெலாநாரணனா
லின்புறவாராய்ந்தியற்றுமெஃகற்றே-புன்புலன்பெற்
றீட்டாதவரெவனோவெண்ணியதுதாமுடிக்க
மாட்டாதழுங்குமதி. (288)
என்பது, நல்லறத்தினது பகுதியறிந்த புலவீர்கா ளிரவிற்கு வேண்டுவனவெல்லா நன்பகலே நாரணனருளாற்
புத்திகளித்தியற்றுங் கூரறி விலராகித் தமது மந்தபுத்தியா லவற்றை யியற்றாதிருந்தவர்
அக்கங்குல் வந்தகாலத்துக் கங்குற்குவேண்டுவனவின்றித் தாம் எண்ணியது முடிக்கமாட்டா
தழுங்குகின்ற தென்னபேதைமையோவென்றவாறு. இது வெளிப்படையாய்க்கூறியபொருள்.
அவரைப்போல நிலையாமையோடுங் கூடிய யாக்கை நிலைமைத்தா முயிரோடுங் கூடியிருக்கப்பெற்ற
காலத்திம்மைக்கண்ணே மறுமைப்பயனா முத்தியைப் பெறுதற் கேதுவாம் ஞான நூல்களை யாராய்ந்து
சித்தசித்தீச் சுரங்களையறிந் தவற்றோடும் அன்றறிவாமென்னா தறங்களைப் பயிலாதார் மரணம்
வந்தடுத்தகாலத்தி லெண்ணியிருந்த முத்தியையெய்த வேண்டுவன செய்து முடித்திலமென்றிய
மதூ துவர்கூட்டத்தைக்கண் டழுங்குகின்றமை என்னபேதைமையோ வென்றவாறு.
எனவே முத்தியை யெய்துதற்கு வேண்டுவனயாக்கையிருக்கப் பெற்றபொழுதே பின்னையென்னாது செய்துமுடிக்க வேண்டுமென்பது பயன்.
இதனுள், நல்லறத்தின்பகுதியறிந்தவென்பது சொல்லெச்சம். நன்பகலே யென்பது எதிர்மறையெச்சம்.
இது கால நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு. என்னை?
இரவிற்குவேண்டுவனவெல்லா நன்பகலே யியற்றவேண்டுமென்னுங் காயநிலைக்களனாகக் குறித்தபொருடோன்றுதலா னென்றுணர்க.
திணையுந் துறையு மிதுவுமது. பொழுதொடுமென்னுமும்மையாற் சினைநிலைக்களனாகத் தோன்றும் ஒட்டு முள.
அதற்குச் செய்யுள் வருமாறு:-

எம்பெருமானின்னருள்சேரின்புலவீர்வான்பொருட்குச்
செம்பொனுளதீவிற்செலவுற்றாற்-பம்புதிரைச்
சங்கந்தவழ்கடலைத்தாம்பொடுபாய்கூம்பின்றி
வங்கங்கடந்து றுமோமற்று. (289)
என்பது, புலவீர்காள்! பெரும்பொருட்குப் பொன்விளைதீவிற் செல்ல நினைந்தாற் கப்பல் கயிற்றாற் கட்டப்பட்ட
பாயோடுங்கூடிய பாய்மரமின்றியத் தீவிற் றலைப்படாதென்றவாறு. இது வெளிப்படையாற் கூறியபொருள்.
அதுபோலப் பொன்மயமான பரமபதத்திற் செல்லக் குறித்தவர்கள் மனோ வாக்குக் காயங்களா னினைத்துந் துதித்துந்
தாமஞ்சாத்துவதுமுதலான சரியையின்றி யாண்டுத் தலைப்படாரென்பதாம்.
இது குறித்தபொருள். “கடல்-பிறப்பாயகடல். வங்கம்-ஆன்மா.
தாம்புங் கூம்பும் பாயும் – மனம் வாக்குக் காயம். திணை – இதுவுமது. துறை – வாயுறைவாழ்த்து.

தாந்தனுறையுளெனுந்தண்பொருநையின்வடபால்
வாய்ந்தகிரணமுழுமாணிக்க – மேந்திழாய்
ஞானமுணர்ந்துணர்த்துநன்முத்தியைவிளைக்குந்
தானவனாமீதெவனோதான். (290)
இதனுள், தாந்தனுறையுளெனுந்தண்பொருநையின்வடபால் – செம்பொன் மாடத்திருக்குருகூர்.
கிரணமுழுமாணிக்கம் – காரிமாறப் பிரான். இது அடைவிபரீதப்பட்டுப் பொருள்வேறுபட்டது; என்னை?
“ ஞானமுணர்ந்” தென்பது முதலாயினநான்கும் மாணிக்கத்திற் கில்லை யாதலி னடைவிபரீதமாயிற்று.
இது முதலதுபோலப் பொருணிலைக் களனாகத் தோன்றின ஒட்டு. திணை – இதுவுமது. துறை-செந்துறைப் பாடாண்பாட்டு.

தென்னம்பொதியந்தருபொருநைத்தென்கரையின்
மன்னும்புளிக்கீழ்வளர்தருவொன்-றின்னமிர்தொத்
தான்றசுவைத்தீங்கனியோராயிரமுந்தண்ணளிகூர்ந்
தீன்றளித்ததன்பாலெமக்கு. (291)
இதனுள், மன்னும்புளியென்பது திருப்புளியாழ்வார். திருப்புளிக் கீழ்வளர்தருவாவது காரிமாறப்பிரான்.
இன்னமிர்தொத்தான்றசுவைத் தீங்கனியோராயிரமென்பது திருவாய்மொழியாயிரப்பாடல்.
இதுவும் பொருணிலைக்களனாகத்தோன்றின ஒட்டு; அல்லது சாதிநிலைக்களனாகத் தோன்றிற்றெனினுமான்.
இவை யிரண்டிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. தருவுங் கடவுளாதலிற் றுறை-கடவுள்வாழ்த்துமாம்.
இதுவு முன்னதுபோற் செந்துறைப்பாடாண்பாட்டு. அஃதேலிதன் முன்னர்க் கூறிய வுள்ளுறையுவமத்தினோடும்
ஒட்டென்னு மிதனிடை வேற்றுமை யாதோவெனின், அஃதே! நன்று சொன்னாய்!
உள்ளுறையுவமமென்பது அகத்திணைக்கைகோளிரண்டிற்குமேயுரித்தாய் அகத்திணையைந்தினும்
அவ்வவ நிலங்களிற் றெய்வதமொழிந்த கருப்பொருள்களனாகப் பிறக்குமெனவும், அவ்வுள்ளுறையுவமங்கூறுவார்,
தலைவன் றலைவி செவிலி தோழி பாங்கன் பாணன் ஆக அறுவரெனவும், உள்ளுறையுவமங் கூறுதற் குரியரல்லாதார்,
நற்றாய், தந்தை, தன்னாயத்தார், ஐயன்மாராக நால்வரெனவும்,

அங்ஙனங் கூறுதற்குரியோர் கூறுமிடத்து மருதம் நெய்தலென்னு மீரிடத்தும் மிகுந்தும், குறிஞ்சிக்க ணவ்வளவின்றியும்,
ஒழிந்த நில மிரண்டினு மதனிற் குறைந்தும் வருமெனவும், அங்ஙனங் கூறுமிடத்தும் வெளிப்படக்கூறுமுவமையிடத் துவமேயங்
கேட்போர் மனத்தின்கண்ணும் புலவன்குறித்தவாறே நிகழ்த்துதலின் உள்ளுறையுவமமெனவும்,
மேற் கூறப்படுங் கருப்பொருள்களனாகப் பிறக்கு மிறைச்சிப்பொருளோடுங் கூடாதனவாயும் வருமெனவுணர்க.
இஃதன்னதன்றாய்க் கருப்பொருளிற்பிறக்க வேண்டுமென்னும் யாப்புறவின்றிப் புறத்தினும் புறப்புறத்தினுஞ்சென்று
செய்யுட்செய்யும் புலவன் முதலாயினோர் கூறுங் கூற்றாய்ச் சுட்டென்னும் உள்ளுறையவாய் நடத்தல் வேற்றுமையென்றுணர்க.

அங்ஙனமாதல் “பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ், சால மிகுத்துப் பெயின்”
“நுனிக்கொம்பரேறினாரஃ திறந்தூக்கி, னுயிர்க்கிறுதியாகிவிடும்” எனவும்,
“நெடும்புனலுள்வெல்லு முதலையடும்புனலி, னீங்கினதனைப்பிற”
“கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு, நாவாயு மோடா நிலத்து”
“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா, வேலாண் முகத்த களிறு” எனவும்
திருவள்ளுவர் கூறிய வலியறிதல் இடனறிதல் என்னு மிரண்டினுள்ளும், பிற நூல்களினுங் கண்டு கொள்க.

தண்டியாசிரியர் ஒட்டென்னு மலங்காரத்தினுள் அடையும் பொருளு மயல்படமொழிவதாக
“வெறிகொளினச்சுரும்புமேய்ந்ததோர் காவி” யென்றதில் உள்ளுறையுவமமும்,
அடைவிபரீதப்படப் பொருள் வேறுபடக் “கடைகொலுலகியற்கை” யென்பதிற் கருப்பொருள்களனாகாது ஒட்டுங் கூறினாரெனினும்,
இந்நூலுடையார், “உடனுறையுவமஞ் சுட்டு நகைசிறப்பெனக், கெடலருமரபினுள்ளுறையைந்தே” என
உள்ளுறையை யைந்தாய்ப் பிரித்தமையான் உள்ளுறையுவமம் ஒட்டு இறைச்சியென மூன்றாக்கினார்.
இங்ஙன மாராய்ந்து பிரித்தவிவர் நோக்கமுந் தெள்ளிதினா ராய்ந்து கொள்க.

5-வது ஒட்டலங்காரம் முற்றும்.

————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–பகுதி-1- –ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853
இரண்டாவது
பொருளணியிய லுரை.
1-தன்மையலங்காரம்
2-உவமையலங்காரம்

——

86.பொருளினுஞ்சொல்லினும்புனையுறுசெய்யுட்
கணிபெறப்புணர்த்தலினணியெனும்பெயர்த்தே.
என்பது சூத்திரம்.
இவ்வோத் தென்னுதலிற்றோவெனின், ஒத்த நுதலியதூஉ மோத்தினதுபெயருரைப்பவே விளங்கும்.
ஆயின் இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின்? பொருளணியிய லென்னும் பெயர்த்து ;
பொருளானா மணிக ளுணர்த்தினமையின். ஆயின், இதன்றலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்?
சொல்வான் றொடங்கிய அணி யென்பவற்றிற்குக் காரண மிவையென்பதூஉம் அவை
செய்யுட் கின்ன சிறப்புடைத்தாகப் புணர்த்தலி னிப்பெயர்த்தாயிற் றென்பதூஉ முணர்-ற்று.

(இ-ள்) புலவராற் றொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானுஞ் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால்
அணியென்னும் பெயரை யுடைத்தாயிற் றிவ்வலங்காரமென்றவாறு.

புலவரா லென்பதூஉம் அலங்கார மென்பதூஉஞ் சொல்லெச்சம் அணி யிரண்டனுண் முன்னையது அழகாம்.
பின்னையது பூணாம். எனவே பொருளானுஞ் சொல்லானு மணி யிரண்டென்பதாயிற்று.

87.அவற்றுள்,
புவனம்போற்றியபொருளணிபுகலிற்
றவலரும்பான்மைத்தன்மையுவமை
யுருவகமுள்ளுறையொட்டுல்லேக
மொப்புமைக்கூட்டம்வேற்றுமைதிட்டாந்தந்
தற்குணம்பிரத்தியனீகஞ்சந்தய
மற்புதநிதரிசனந்தற்குறிப்பதிசயஞ்
சிலேடைபின்வருநிலைதீபகநிரனிறை
பூட்டுவிலிறைச்சிப்பொருள்கோள்பொருண்மொழி
யதிகம்வகைமுதலடுக்கிணையெதுகை
விரோதமுபாயம்விசேடஞ்சமாயித
மேதுச்சுவைபரியாயமிலேசந்
தற்பவமசங்கதிதடுமாறுத்தி
புணர்நிலைவேற்றுப்பொருள்வைப்புவிபாவனை
யார்வமொழிநெடுமொழிபரிவருத்தனை
காரணமாலைகாரியமாலை
யேகாவலிபிரதீபம்பிறவணி
முன்னவிலக்கபநுதிநிந்தாத்துதி
புகழ்வதினிகழ்தன்மாறுபடுபுகழ்நிலை
பரிசங்கைகாவியலிங்கம்பரிகர
முறுசுவைவிநோத்திசமுச்சயமுதாத்த
மாசிசங்கரஞ்சங்கீரணமே
பாவிகமெனவறுபானான்காகும்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருளானா மணிகளது பெயருமுறையுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) அங்ஙன மிரண்டுகூற்றவாகிய அணிகளுள் உயர்ந்தோர் முதலெனப் போற்றப்பட்ட பொருளணி
யொன்றனையுங் கூறுமிடத்துத் தன்மை முதலாகப் பாவிகமீறாக அறுபத்துநான்கா மென்றவாறு.

இவற்றிற்கெல்லா மெண்ணும்மை தொக்குநின்றன. என என்பது எண்ணிடைச்சொல் ; என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனால்.
எனவென்ப தனைத் தன்மைமுதலாக வெண்ணிய வெங்கு மொட்டுக.

அஃதாக ; இச்சூத்திரத்துள் சிலேடை, பின்வருநிலை, தீபகம், நிரனிறை முதலிய சொல்லானாமணிகளு மிதனுட்கூறா
நிற்பப் பொருளணியிய லென்ப தென்னையெனின், மிகுதி பொருண்மேலவாதலின் மிக்கவற்றாற் பெயர்கொடுத்தார்;
அஃ தியாவதுபோலவெனின், அங்கராகமாகிய சந்தனத்துடன் குங்கும கற்பூர கத்தூரி கூடினும் பூசியது சந்தனமென்பதுபோலக் கொள்க.

அற்றேல் இவை முறையாயினவாறென்னையோவெனின், இயல்பு விகாரமென விரண்டாகிய வவற்றுள்,
தன்மை யியல்பாகலான் முற்பட்ட முறைமைத்தாக வைக்கப்பட்டது.
உவமையை மூன்றுறுப்படக்கிய பிண்டமாகுந் தொல்காப்பியத்து ளிறுதிநின்ற பொருளகத் தகப்பட்டதாக
அலங்காரத்தினையுங் கூறிய ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரு முவமையென்ப தொன்றாகத் தொகைபெற்று
வினைமுதலிய நான்காய் வகுத்துப் பலவேறு விரிவாய்நின்று விகாரமாயதன்றிப்
பிறவலங் காரங்கட்கு முபகாரமுடைத்தாகலானு மஃதொன்றினையுமே முக்கியமாக்கி யதனுட னுருவகமும்
உள்ளுறையுவமமும் வகுத்துக்கூறிய முதன்மையானும், இதற்குத் தனியே முதனூல்செய்த தெண்டி யாசிரியரும்
அவர் நோக்கமே தாமு முடம்பட்டாராகத் தன்மையின்பின் னுவமையை வைத்தாராகலானும்,
இருவர்நோக்கமு முட்கொண் டிந் நூலுடையா ரவையிரண்டிற்கு மிந்நூல் வழிநூலாகலானுந் தன்மையை முதல்
வைத் ததன்பின்ன ருவமையையு முதல்வைத்தது முறையெனக் கொள்க.
உருவகமும், உவமையும் பொருளும் வேறுபட்டு நில்லா தொன்றென்னும் பான்மைத்தாய மாட்டேற்று முவமையாதலானும்
உள்ளுறை யுவமமும் இசைதிரிந் திசைக்கப்படுவதா யுவமையோ டுவமிக்கப்படும்பொருள் பிறிதோராறு தாராது
அவ்வந்நிலங்களிற் பிறந்த கருப்பொருளோடுஞ் சார்த்தி யுள்ளுறுத்திக்கொள்ளுமுவமை யாதலானும் அவை முறையே வைக்கப்பட்டன.
ஒழிந்த ஒட்டு உல்லேக முதலியனவு முவமையைப் பின்சென்றிருத்தலா னவை வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். உவமையைப் பின்சென்றனவல்லாத அலங்காரங்களையுந் தமக்குப்
பொருந்தின முறையே வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க. அவையு மீண்டுரைப்பிற் பெருகும்.

அஃதாக ; ஆனா லிந்நூலுடையார் முதனூல்களிற் கூறியபடியே வழிநூலிற் சிறிது புடைநூலிலக்கணந் தவறாது கூறப்
புகுந்து மிகவுமிதன் முதனூலாகிய தண்டி கூறிய அணிகளுள் நுட்பமென்னும் அலங்காரத்தைக் குறைத்துப்
பிற முதனூலணிகள் கூறிய அணிகளையுந் திரட்டிக்கூறி, முந்து நூல்களுட் கூறாத பூட்டுவில் இறைச்சிப்பொருள் கோள்
பொருண்மொழி யென்னுமூன்றினோடும் வகைமுதலடுக்கு இணையெதுகை உபாயம் உறுசுவை புகழ்வதினிகழ்த லென்னும்
அலங்காரங்களையுங் கூட்டி அறுபத்துநாலாக மிகுத்ததூஉ மொருவழிக் குன்றக் கூறன் மிகைபடக்கூற லென்னுங்
குற்றமாம்பிறவெனின், ஆகாது ; என்னை? நுட்பமென்பது பரிகரத்து ளடங்குமெனக் குறைத்துச் செய்யுட் கணி
பெறப் புணர்ப்பதெல்லா மணியெனப்படுதலான் முன்னைய மூன்றுஞ் சொல்லிலக்கணத்தினும் பொருளியலினும்
புறத்திணையினுங் கூறியபடியே செய்யுட்கழகாதலி னணியிற்கூட்டி மிகுத்தார் ;
ஏனைய வைந்து மழகெய்துவதா யிலக்கியங்கண்டதற் கிலக்கண மியம்பியதாக்கி மிகுத்தாராகலானென்றுணர்க.
அன்றியும், வழிநூலும் புடைநூலுஞ் செய்தற்கேதுத் தொகுத்தன்முதலிய நான்கினுள்ளு முதலன
விரண்டு மிகவு மேதுவாகலானுங் கூறப்பட்டன. அற்றேல் ஐயமுந் தெரிதரு தேற்றமும் பொதுநீங்குவமையுந்
தெண்டியாசிரிய ருவமவிரியுட் புணர்க்க, அவற்றை யேனையாசிரியர் வேறுவேறணியாகப் புணர்க்க,
இந்நூலுடையார் முதலிரண்டும் பிறர்நோக்கத்தோடுங் கூட்டிப் பிறிதோ ரணியாக்கிப் பின்னையது தெண்டி
நோக்கத்தோடுங் கூட்டிப் புணர்த்ததூஉங் குற்றமாமெனின், குற்றமன்று. இருவர்க்கும் முதலான தொல்காப்பியனார்
“தடுமாறுவமங் கடிவரையின்றே” யென வழுவமைதிவாய் பாட்டாற்கூறினமையானும் அவற்றுள்
உவமவுருபு புணராமையானு முவமையைப் பின்சென்ற பிறிதோரணியாகப் பிறருடம்பட்டது தானுடம்படுதல் என்னுமுத்தியா னுடம்பட்டும்,
ஏனையது “தானே தனக்குவமைதா” னென உவமவாசகம் புணர்ந்தமையானும் “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்றாராதலானும்
பிறர்மதங்களைதலென்னு முத்தியானுங் கூறப்பட்டது. இங்ஙனம் பெயரு முறையுந் தொகையுமாகிய அணிகளை
முதனூலாசிரியர் வகைப்படுத்தியும் விரித்துங் கூறிய நோக்கத்தோடுஞ் சிலவற்றை யிந்நூலுடையார்
தன்கோட்கூறலென்னு முத்தியானுந் தன்குறியிடுதலென்னு முத்தியானும் வகுத்ததன்மேல் விரித்துவகுத்தும்
விரித்ததன்மேல் விரித்ததையும் அவ்வணிகட் குணர்த்தும் பீடிகைமுதலாய வுரைநடைநோக்கங்களா னாங்காங்குக் கண்டுகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும்.

88.வழுவாமரபினெப்பொருளையும்விகாரந்
தழுவாநடைபெறப்புணர்ப்பதுதன்மை.
(எ-ன்) மேனிறுத்தமுறையானே தன்மையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்ற்று.
(இ-ள்) இருதிணையுட்குற்றமில்லாத இலக்கணத்தையுடைய எவ் வகைப்பட்ட பொருள்களையு முவமை முதலிய
விகாரவணிகள்கூடாதே சுபாவநடைபெறப் புலவன் பாடுவது தன்மையென்னு மலங்காரமா மென்றவாறு.

நடை – ஒழுக்கம். குற்றமில்லாத எவ்வகைப்பட்ட பொருளையு மெனவே குற்றமுள்ளவற்றின் சுபாவத்தைப் பாடுவதுந்
தன்மையா மெனினும் அலங்காரத்தின்பாற்கூடாதென்பதாம். வழுவாதமரபென்னும் வினையெதிர் மறுத்த
பெயரெச்சவாய்பாடு செய்யுள்விகாரத்தாற் றொக்கீற்றுயிர்மெய் கோவாமுத்தமென்பதுபோலக் குறைந்துநின்றது.
தழுவா வென்பது மது. விகாரம் ஆகுபெயர்.

89.அதுவே,
ஒண்பொருண்மக்களுயிருளவஃறிணை
சினைவினைபண்பிடமெனவுஞ்சிவணும்.
(எ-ன்) தன்மையின் சிறப்பிலக்கணப்பாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அத் தன்மையென்னுமணி, உயர்திணையிடத்துப்பொருட் டன்மையும் மக்கட்டன்மையும்,
அஃறிணையிடத் துயிருள்ள அஃறிணைத் தன்மையும், உயிரில்லாத அஃறிணைத்தன்மையும்
அப்பொருளின் சினைத்தன்மையும், வினைத்தன்மையும், பண்புத்தன்மையும்,
இடத்தன்மையுமெனத் தனித்தனி புலப்படப் பொருந்துமென்றவாறு.

அதுவே, என்பது “சீர்கூனாதல் நேரடிக்குரித்தே” யென்பதனாற் சீர்கூனாயிற்று.
இவற்றிற்கெல்லா மெண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குவிரிந்தன.
உயிரில்லாஃறிணை யென்பது முயர்திணையென்பது மெதிர்மறையெச்சமாகி விரிந்தன.
இன்னு மவ்விலேசானே யுயிருள வஃறிணையு ளியங்குதிணையும் உயிரில்லவற்றுட் கருத்துப்பொருளுங் கொள்க.

90.அவற்றுள்,
பொருளியல்பாண்பெண்ணெனவிருபுலப்படும்.
(எ-ன்) இதுவும் பொருட்டன்மைக்கோர் பகுதியுணர்ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட வுயர்திணை யஃறிணையுட் பொருட் டன்மை ஆடூஉப்பொருட்டன்மை
மகடூஉப்பொருட்டன்மை என விரு வகைத்தாய்த்தோற்றுமென்றவாறு.

91. அரும்பெறன்மக்கட்டன்மையுமற்றே.
(எ-ன்) இதுவும் உயர்திணைக்கண் மக்கட்டன்மைக்கோர் கூறுபா டுணர்-ற்று.

(இ-ள்) பெறுதற்கரிய மக்கட்டன்மையும் பொருட்டன்மைபோல விருவகைப்படு மென்றவாறு.

அற்று உவமவுருபு. அஃறிணைக் கொருமை பன்மை யென்பதல்லாது ஆண்பெண் ணென்பது சிறப்பின்மையாற் கூறாராயினார் ; என்னை? “ஆண்பெண்பலரெனமுப்பாற்றுயர்திணை”, “ஒன்றேபலவென்றிருபாற் றஃறிணை ” யென்பதனா லறிக.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

செம்பொனாடைசெறிதிருமருங்கின
னம்புயத்தனிமலரலர்ந்தவுந்தியன்
கவுத்துவக்கடவுட்கவினிழன்முழுமணி
பவித்திரத்திருமகள்பதிந்தமார்பினன்
வலம்பயின்முப்புரிநூலொடும்வாடா
திலங்கியவனமாலிகைபுனையிணைப்புய
னிகல்புரிதிகிரிசங்கேந்தியகரத்தினன்
கதிர்மணிமௌலிகவித்தசேகரன்
மதிதவழ்சோலைமலையலங்காரன்
பூதலந்தாயபொன்னடி
காதலித்தவர்வல்வினைகடந்தவரே. (118)
இது ஆடூப்பொருட்டன்மை. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து
உரையிற்கோடலென்பதனா லுரையெழுத வேண்டுவதில்லை. பா – நேரிசையாசிரியப்பா.

கனையிருள்கடிவயிரப்பரல்செறிதமனியப்
புனைகழலொடுவனைபரிபுரப்பூந்தாளினன்
குறங்கிணையொடுமருங்கினைவளைபொலந்துகிலின
னறந்தழைதருமயன்றனையருளலருந்தியன்
கவுத்துவமணிவனமாலிகைகலந்தொளிர்திருப்
பவித்திரமுடன்மலர்மாமகள்பயின்மார்பினன்
வான்றோய்கதிரினிற்றிகிரியைவலனேந்தியு
மீன்றோய்மதியினில்வரிவளையிடனேந்தியு
மகரக்குழைதழைகாதினன்மணிமௌலியன்
சிகரப்பலதலைசேர்திருமலைமேலுறை
செல்வனை,
மனமொழிமெய்களின்வழிபடுபவராய்ப்
புனநறுமலர்பொழிபவர்பாற்
கனவிலுமுறான்கொடுங்கணிச்சியோனே. (119)
கனையிருள் – செறிந்தவிருள். வயிரப்பரல் – வயிரமணி ; உள்ளீடாய தரி.
தமனியப்புனைகழல் – பொன்னாற்புனையப்படும் வீரக்கழல். பூந்தா ளென்றது பொலிவினையுடைய சீபாதம்.
வான்றோய்கதிர்… ஏந்தியும் – வானிடத் தலமரல்பொருந்திய கதிராற்கொண்ட சக்கரத்தை வலத்தே தரித்தும்,
மீன்றோய்….. இடனேந்தியும் – நாண்மீனோடு பொருந்திய மதியாற்கொண்ட வலம்புரியை யிடத்தே பொறுத்து மென்க.
என்னை? வான்றோய் கதிர்போன்ற திகிரியை, மீன்றோய் மதிபோன்ற வலம்புரியை யென வுவமைத்தொகைத்
தொடர்மொழியன்றோவெனின், அன்று ; “இமையாதமுக்கண், மூவரிற் பெற்றவ” ரென்பது போலக் கொள்க.
ஈரிடத்தும் இன் சரியை. ஆல் என்னு முருபு இல்லென மூன்றாவ தைந்தனுருபாய் மயங்கின.
கொண்ட வென்னும் வினையுந் தொக்கது. செல்வனை யென்பது தனிச்சொல். சீபாத முதலியவற்றை யுடையனாகித்
திருமலைமே னிலைபெற்ற திருவுடையானைத் திரிவித கரணங்களாலும் அருச்சனைசெய்பவராய்க்
கைகளா னறுமலர்தூயவரிடத்துக் காலன் நனவினுங் கனவினு மணுகானென்றவாறு.
இது பத்தடியாய்ச் செல்வனை யென்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா.
அலங்காரமுந் திணையுந் துறையு மிதுவு மது.

பூங்கமலக்கோயிலாள்புத்தமிர்தினுட்பிறந்தாள்
வீங்குதுணைமுலையாள்வெண்ணகையா-ளோங்குபுனற்
பொன்னிநடுவுட்பொருண்மார்பகத்தாளென்
சென்னிபிரியாத்திரு. (120)
இது மகடூஉப் பொருட்டன்மை. இதனுள், பொன்னிநடுவுட் பொருள் என்ற திரண்டாற்றிடைக் கண்வளர்ந்த நம்பெருமாள்.
திணை – இதுவுமது. துறை – பெண்பாற்கடவுள்வாழ்த்து.

முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான். (121)
இஃது ஆடூஉ மக்கட்டன்மை. ஆவியை என்பது ஆவிக்கென இரண்டாவது நாலாவதாயிற்று.
திணை – வாகை. துறை – தாபதவாகை ; என்னை?
“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம, லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே”,
“மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே”,
“நிறுத்திய மனத்தினை நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துத னினைவே” என்ற
முறையே தொகைநிலை பொறைநிலை நினைத லென்னு மூன்று மிப்பாட்டினுள்ளே கூறினமையான்
“அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்” என்னுஞ்சூத்திரத்துள்
‘நாலிரு வழக்கிற் றாபதபக்கமு’ மென்னு மெட்டனுள் தவஞ்செய்து யோகம்பயில்வார்க்குரிய விம்மூன்றும் வந்தமையா லெனக்கொள்க.

கூரெயிற்றாருண்கண்ணார்கொம்மையிளமுலையார்
வார்புருவத்தார்திலகவாணுதலார் – காரகத்தெம்
மால்வரையாரெண்ணிறந்தமாதருணின்னாற்குறித்த
கோல்வளையாராரிறைவகூறு. (122)
இது மகடூஉமக்கட்டன்மை. கூரெயிறு – கூரியபல். உண்கண் – மையுண்கண். கொம்மை – திரட்சி. இளமை – மேனிவனப்பு.
வார் புருவம் – நீண்டபுருவம். கோல்வளை – திரண்டவளை. வாணுதல் – ஒளி பொருந்திய நுதல். பகுதி – சேட்படை.
துறை – அறியாள்போன் றவனினைவுகேட்டல்.

வள்ளுகிருந்தோலடியுஞ்செவ்வாயும்வார்சிறைகூர்
புள்ளியுமென்சூட்டுமுறுபொற்பினதா–மொள்ளியரை
மாறிவருவாதியரைவென்றமகிழ்மாறனா
ரேறிவருவெள்ளோதிமம். (123)
இஃது உயிருளதா யியங்கு மஃறிணைத்தன்மை. வள் – கூர்மை. தோலடி – என்பில்லாத அடி. புள்ளி – பொறி.
திணை – பாடாண் பொதுவியல். துறை – அன்னவாழ்த்து. என்னை?
பாலறிமரபிற் பொருநர் கண்ணும் வாகைத்திணையுட்கூறிய சூத்திரம்போல வென்றி கூறாது
அன்னத்தினது தன்மைகூறியதனாலும் வாழ்த்தெல்லாம் பாடாணாதலாலு முணர்க.

பரியரைத்தாய்த்திணிவயிரம்பயின்றுநிலங்கிளைமுதற்றாய்
விரிசினைத்தாய்ப்பசுந்தழைத்தாய்விரைமலர்த்தாய்விழைகனித்தாய்ப்
பெரியகதிரவன்மறைந்தபிழம்பிருட்குமுறங்காது
வரிவளையூர்புனற்குருகூர்மகிழ்மாறர்திருப்புளியே. (124)
இஃது உயிருளதாகி யியங்கா வஃறிணைத்தன்மை. இவையிரண்டுங் கடவுட்டன்மையுடைத்தாயினு
முலகின்கட்டோன்றும் வடிவ மஃறிணைத் தன்மையவாதலி னிங்ஙனம் கூறுவதாயிற்று.
திணை – இதுவுமது. துறை – தாவரவாழ்த்து. பா – தரவுகொச்சகக்கலிப்பா. இருள் – ஆகுபெயர்.

ஆதாரபீடத்தமர்ந்துயர்ந்தபாதசெடி
மீதாயழுந்தமிதித்துநிமிர்தாட்டுணைத்தாய்த்
தாழ்ந்ததுதிக்கையினைத்தாவியிருகைபற்ற
வாழ்ந்தபகுவாயகத்தோங்குநாவின்
வளையெயிற்றுக்கூர்ங்கோட்டுவான்பிடர்வீழ்கற்றை
யுளைவனப்பிற்பாங்கருயர்செவித்தாயொண்கருக்கி
னூழொன்றியசீர்த்தொடூற்றமுறுமாளியின்மே
லாழங்குடைத்தாயதன்மேற்கொளாளியதாய்
நான்றதலைப்போதிகைத்தாநாவீறர்வண்புளிக்கீழ்த்
தோன்றுதிருக்காவணக்கற்றூண். (125)

இஃது உயிரிலஃறிணைத்தன்மை. இது பத்தடியான்வந்த பஃறொடை வெண்பா. திணை – இதுவுமது. துறை – மதலைவாழ்த்து.

நீண்டசெவியுறவினீள்புருவத்திம்பரொளி
கூண்டுபயநோக்கமுங்கைக்கொண்டதாம்–பாண்டவர்தந்
தேர்ப்பாகனானசிறுபுலியூரானுலகங்
காப்பான்றன்மால்வரையாள்கண். (126)
இது சினைத்தன்மை. உபயநோக்கம் – அருணோக்கமு மருணோக்க மும். பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.

கைச்சிரத்தானுந்து திப்பக்கன்றினராகந்திறந்து
பச்சிரத்தமுண்டுயிருண்பான்மைத்தே–வச்சிரத்தாற்
குன்றெறிந்தானும்பரவுங்கோயிலான்பாரதப்போர்க்
கன்றெறிந்தவன்சக்கரம். (127)
இது வினைத்தன்மை. ஆகம் – மார்பு. திறத்தல் – பிளத்தல். பச்சிரத்தம் – குளிர்ந்த ரத்தம்.
அன்று – முற்காலத்து. குவ் வுருபு மயக்கம். திணை – வாகை. துறை – திகிரிவென்றி.

பூரித்துடலம்புளகித்திடப்புலமை
சீரித்துயிர்தளிர்ப்பச்சேர்ந்துருகும்–பாரித்த
முத்தமிழ்மாறன்ஞானமுத்திரைக்கைகண்டுதொழு
முத்தமராய்வாழ்வாருளம். (128)
இது பண்புத்தன்மை. பூரித்தல் – தடித்தல். புளகித்தல் – உரோமஞ் சிலிர்த்தல். புலமை – அறிவின்றன்மை.
சீரித்தல் – இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் – தழைத்தல். சேர்ந்துருகுதல் – பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல்.
பாரித்தல் – விரித்துரைத்தல். முத்தமிழ் – சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி.
உளம் – ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது
முத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடித் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற
பரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப் பரவல்.

உற்றபரமேட்டிமுதலோங்கியவைம்பூதநிலை
பெற்றுளதாய்ச்சோதிப்பிழம்பதாம்–பற்றிலர்பே
ரானந்தமெய்துவதாமாதியிடையென்பவுடன்
றானந்தமில்லான்றலம். (129)
இஃது இடத்தன்மை. பரமேட்டி முதலாய வைம்பூதமாவன :- பரமேட்டி, புமான், விச்சுவம், நிவிர்த்தி, சருவன்.
இது பரமபதமாகிய இடத்தன்மை. திணை – பாடாண்பொதுவியல். துறை – புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. புலவர் – நித்தியசூரியர்.

ஏழாவரணமிசைந்தீர்ந்தண்புனற்பொன்னி
சூழாமணிமாடஞ்சூழ்ந்துளதா–வாழ்மறையோர்
வேதவொலியும்விழாவொலியுங்கூர்தகைத்தா
நாதனரங்கநகர். (130)
இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – நகர் வாழ்த்து.

தேவும்புவனமுந்திரண்டமன்னுயிர்
யாவும்யாவருமிறந்தொடுங்கியஞான்
றொருபெருந்திருமாலுந்தியங்கமலத்
தருள்பகிரண்டகோடிகளெனுமவற்று
ளொன்றயனுலகாதியாயவீரேழி
னயனிலைமேருநடுக்கொள்பூலோக
நவகண்டமதாநாவலந்தீவொடு
முவரொன்றியநீருடைக்கருங்கடலொடு
மேழ்பெருந்தீவுமேழ்பெருங்கடலும்
வாழ்வுடைத்தாகியும்வானவர்வைகு
மேமபூதலமிடையிடுதிகிரிக்
காமர்மால்வரைகடந்தநள்ளிருளா
யண்டபித்தியினகத்தண்டகோளகைக்கீழ்
மண்டுமாழ்புனற்குமேல்வடக்கொடுகுணக்கெதி
ரைம்பதுகோடியோசனைத்தெனவளவை
யும்பரோடிம்பருமுணர்வுறவுணர்வான்
றீதறுபான்மையிற்றெருட்டும்
போதமுற்றோங்கியபுராணசித்தமதே. (131)

இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – பேரண்ட வாழ்த்து.
இதனுள், தே என்றது அன்னியதெய்வங்கள். புவனம் – இருநூற்றொருபத்து நாலு புவனமும்.
யாவும் யாவரும் – அஃறிணைகளும் உயர்திணைகளும்.
மேருநடுக்கொள்பூலோகம் – மேருவைத் தனது மத்திமத்தே தாங்கிக்கொண்ட பூலோகம்.
வானவர் வைகு மேமபூதல மிடையிடுதிகிரிக் காமர்மால்வரை – கடவுளர் அரமகளிரோடு மின்ப மெய்திவைகும்
ஏமபூதலத்தை நல்லதண்ணீர்க்கடற்குந் தனக்கும் நடுவாக வைத்த சக்கரவாளகிரி யென்னு மழகிய பெரிய மலை.
மண்டுமாழ் புனல் – கெர்ப்போதகம். வடக்கொடு குணக்கெதிர் என்பது வடதிசைக்குங் கீழ்த்திசைக்கு மவற்றிற்
கெதிரான தென்றிசைக்கும் மேற்றிசைக்கு மென்பதாம். புராணசித்தம் – ஆகுபெயர். ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
பா – நேரிசையாசிரியம். எனவு மென்னு மும்மை யெச்சவும்மையாதலாற் காலத்தன்மையு முள.

நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல்
வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே–யத்திகிரிச்
செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா
மங்கண்ஞாலம்புகழ்காலம். (132)

இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு.
இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை – பொதுவியல். துறை – பருவவாழ்த்து.

1-தன்மையலங்காரம் முற்றும்.

——-

2-வது உவமையலங்காரம்

—–

92.உவமையின்வகையேயுணருங்காலை
வினைபயனுறுப்புருவென்றநான்கினுந்
தமிதமிநிகழ்ந்துந்தம்மின்விரவியுங்
காதல்சிறப்பேநலன்வலியுடனிழி
போதியவைந்துமுறுநிலைக்களனா
யிருதிணையைம்பாலிவற்றொடுமயங்கியு
முதலொடுசினைகளின்முறைமையிற்பிறழ்ந்து
முதல்சினைவினைகுணமின்றியுமுயர்ந்தும்
பெருமையுஞ்சிறுமையும்பெற்றியிற்சிறந்து
மெண்மெய்ப்பாட்டினெழில்பெறமரீஇ
யகத்தினும்புறத்தினுமமர்தருநெறித்தா
யுரனுடையுரவோருளங்கொளமுதனூல்
வரன்முறைபுணர்க்குமாண்பிற்றாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உவமையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமையென்னு மலங்காரத்தினது கூறுபாட்டை யாராயு மிடத்து வினையும் பயனு முறுப்பு முருவு மென்னு
நான்கும் காரணமாகத் தோன்றுவனவாகியும், அங்ஙனந் தோன்றுவன வொரு பொருளோடொருபொரு ளுவமஞ்செய்யும்
வழி யொன்றேயன்றி யிரண்டு மூன்று விரவுவனவாகியும், காதலுஞ் சிறப்பு நலனும் வலியு மவற்றோடுங் கிழக்கிடும்
பொருளுமாகிய வைந்துந் தமக்கு நிலைக்களனாகியும்,
உயர்திணைக் குயர்திணையு முயர்திணைக் கஃறிணையு மஃறிணைக் கஃறிணையு மஃறிணைக் குயர்திணையு மாண்பாற்
காண்பாலு மாண்பாற்குப் பெண் பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலும் ஒருமைப்பாற்
கொருமைப்பாலு மொருமைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற் கொருமைப்பாலு
மயங்காதும் மயங்கியும், முதற்கு முதலும் முதற்குச் சினையும் சினைக்குச் சினையுஞ் சினைக்கு முதலுமாகப் பிறழாதும் பிறழ்ந்தும்,
முதலுஞ் சினையும் வினையுங் குணனு மின்றியு முவமங் கூறுவனவாகியும், பொருளினுமுவம முயர்ந்து மிறப்பவுயர்வு
மிறப்பவிழிபு முவமிக்குங்கா லின்னாவாகச் செய்யாது கேட்போர் மனங்கொள்ளும்படி சிறப்பிற்றீராவாகிச் சேர்தலியல்பு
சிறந்தும், எட்டு மெய்ப்பாட்டினொடுங் கூடி யழகுபெறு நிலைமைத்தாகி, அகப்பொருளினும் புறப்பொருளினுஞ் சென்று
பொருந்து நெறியை யுடைத்தாய்க் கற்றுவல்ல அறிவுடையோ ரறிவிற்குப் பொருந்த முதனூல் வரலாற்று
முறைமையிற் றிரியாது சேர்க்கப்பெறும் பெருமையை யுடைத்தென்றவாறு.

இதனுள் நான்கினுமென்ற வும்மை யெச்சவும்மையாகலா னவை நான்குமே காரணமாகிய வற்றோடுஞ் சொற்பொருள் காரணமாகவும்
உவமை பிறக்குமென்றவாறு. அவை மேற் கூறப்படும். மயங்கியும் பிறழ்ந்து மென்பது எதிரதுபோற்றுந் தந்திரவுத்தி.
இவற்றிற்கெல்லாம் உதாரணம் உரைநடையானுஞ் செய்யுணடையானும் வருமாறு :-

புலியன்ன மறவனென்பது வினையுவமம். ‘மாரியன்ன வண்மை’ யென்பது பயனுவமம்.
‘துடியன்ன விடை’யென்பது உறுப்புவமம். ‘செவ்வானன்ன மேனி’யென்பது உருவுவமம்.
‘செவ்வானன்னமேனி’ யென்பது வண்ணமொன்றுமே பற்றி யுவமஞ்சென்றது.
“ஊர்ந்ததேறே சேர்ந்தோளுமையே, செவ்வானன்னமேனியவ்வா, னிலங்குபிறையன்ன விலங்குவால்வையெயிற்” றென்பது
வண்ணத்தோடு வடிவும் பற்றி யுவமஞ் சென்றது.

வள்ளைக்கொடிமிசைபாய்மைக்கயல்போல்வார்குழையி
னுள்புக்குலாவருமையுண்கண்ணாய்–புள்ளார்
வகுளாம்புயன்வரைமேல்வான்பிறைக்குன்செங்கை
முகுளாததென்னோமொழி. (133)
இதனுள் வினையு முருவு முறுப்புமாகிய மூன்றுவமையு மொரு பொருட்கண்ணே பிறிதொருபொருளுங்கூடி வந்தவாறு காண்க.
இவை விரவுவமை. பகுதி – நாணநாடல். துறை – பிறைதொழுகென்றல்.

“பாவையன்ன பலராய மாண்கவின்” எ-து மகள்கட்சென்ற காதலுவமைக்கு நிலைக்களனாயிற்று.
‘என்னானை’ யென்பது மது. “முரச முழங்குதானை மூவருங்கூடி, யரசவையிருந்த தோற்றம்போலப்,
பாடல் பற்றிய பயனுடையெழாஅற், கோடியர்தலைவகொண்டதறிந”
எ-து சிறப்பினாற்பெற்ற வுவமமாதலிற் சிறப்புநிலைக்களனாயிற்று. உலகத்து ளியல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு
‘ஓவத்தன்ன விடனுடைவரைப்பின்’ என்புழி அந்நகரின் செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் நல னிலைக்களனாயிற்று.
நலனென்பது அழகு. ‘அரிமா வன்னவணங்குடைத்துப்பிற், திருமாவளவன்றெவ்வர்க்”கென ஒருவன் வலிநிலைக்களனாயிற்று.
“அரவுநுங்குமதியி னுதலொளிகரப்ப”என்றது ஒன்றினிழிபுதோன்ற வுவமித்தலி னிழிபுநிலைக்களனாயிற்று.

குமரனனையானுங்குறமகளன்னாளு
மமரர்குழாமெனக்கூண்டன்பர்–தமரணங்கே
நின்றிறைஞ்சுமாயோனைநின்றவூரங்கிதன்முன்
சென்றிறைஞ்சுவார்நீதிரும்பு. (134)
இதனு ளுயர்திணைக் குயர்திணையும் ஒருமைப்பாற் கொருமைப் பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும்
ஆண்பாலுக் காண்பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் வந்து திணையும் பாலு மயங்கா துவமை யாயிற்று.
பகுதி – உடன்போக்கு. துறை – இயைபெடுத்துரைத்தல். நகரடைந்தமைகூறலுமாம்.

“மகிழ்வார்க்கு மல்லார்க்குந், தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரனீ,”
“கலங்கவிழ்ந்தநாய்கன்போற் களைதுணைபிறிதின்றிப், புலம்பு மென் னிலைகண்டும் போகலனே யென்றியால்”
என்பனவிவை யாண் பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலு மயங்கிவந் துவமை யாயிற்று.

அரிக்குழாமன்னவடலரக்கர்வாவும்
பரிக்குழாந்தேர்க்குழாம்பாயுங்–கரிக்குழா
மோர்வாளிபட்டுருள்வானோங்குசிலைக்கால்வளைகைக்
கார்வானமாலிமையோர்கண். (135)
எனவும்,

பிறைபுரைவெண்கோட்டுப்பிணர்த்தடக்கைவேழத்
திறைபுரந்தபொன்னகருக்கிப்பா–ருறைதருவான்
பூணவாவற்றெனமால்பொற்புருடையாட்கிரங்கும்
வேணவாநெஞ்சேவிடு. (136)
எனவும், வரு மிவற்றுள் உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண் பாற்பன்மையும்
அஃறிணைப் பன்மைச்சினைக் குயர்திணை யொருமை முதலும் மயங்கிவந் துவமையாயிற்று.
வேழத்தையுடையவிறை – ஈண்டிந்திரன். அற்றென – அதுபோலுமென. பூணவா – மனத்துட்பூண்ட ஆசை.
வேணவா – வேட்கைப்பெருக்கம். இவ் விரண்டினுண் முன்னது திணை – வாகைப்பொதுவியல்.
துறை – வில்வென்றி ; அல்லது திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துமாம்.
பின்னது பகுதி – இரவுக்குறி, துறை – அருமைகேட்டழிதல்.

முத்தநகைவெம்முலைபோன்மலைகொடியே
யெய்த்தவிடைநுதலுக்கேந்திழா–யொத்ததுதா
னேற்றுருவங்கொண்டநிலாத்தளிரேகூற்றுருவம்
வேற்றுருவங்கொண்டனையாண்டுமெய் (137)
இதனுள், பன்மைச்சினைக்குப் பன்மைச்சினையும், பன்மைச்சினைக் கொருமைமுதலும்,
ஒருமைச்சினைக் கொருமைமுதலும், ஒருமைச் சினைக்கு ஒருமைச்சினையும், பெண்பாற் காண்பாலும்
மயங்காதும் மயங்கியும்வந் துவமையாயிற்று. இதனுள் முத்தமும் நகையும் முலையும் சாதியேகவசனம்.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயங்கூறல்.

‘கருஞாயிறன்னான்,’ ‘விசும்புதோலுரிப்பனபோல,’ ‘மலைநடந்தனைய,’ ‘அமிர்துபுளித்தாங்கு’
இவை முதலுஞ் சினையும் வினையுங் குணமு மில்லாதன வுவமையாயின.

“கடல்கண்டன்னகண்ணகன்பரப்பின்,” ‘மாரியன்னவண்மைத், தேர்வேளாயைக்காணிய,”
“தெள்ளமிர்தென்னத்திருந்தியதேமொழி,” “ஏறுபோற்பீடுநடை” என்பன உவமையினதுயர்ச்சியாற் பொருட்குயர்ச்சியாயின.

“அவாப்போ லகன்ற வல்குன்மேற் சான்றோ, ருசாப்போல வுண்டே மருங்கு” லென்பன

கழியபெரியவாயினுங் கழியசிறியவாயினுஞ் சிறப்பிற்றீரா வுவமையாயின. சிறப்பிற்றீர்வனவு முவமவொழிபிற் கூறுப.
எண்மெய்ப்பாட்டினும் அகத்தினும் புறத்தினும் வருவன முந்து நூல்களுட் கண்டுகொள்க.
அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் பண்புமுதலாகக் காரண மூன்றென்ப துணர்ந்து
மிந்நூலுடையா ருறுப்பினைக் கூட்டிக் காரண நாலென்பதூஉம் நிலைக்கள னைந்தென்பதூஉம்
மிகைபடக் கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்? ஆகாது ; என்னை?
தெண்டியாசிரியர் “வடிவி னளவின் வண்ணத்தின் வரூஉ” மென்னுஞ் சூத்திர நோக்கி வடிவும்
பண்பினுளடங்குமென் றுட்கொண்டாரேனுமிந் நூலுடையார், உற்றுணரும் பண்பும் கட்புலனாம்பண்பு மெனப்
பண்பினை வேறுபடக் கொண்டார், அங்ஙனங்கோடல் வடிவுபற்றியபண்பு இருளின் கண்ணும் உற்றுணரப்படும் ;
வண்ணமாகிய கட்புலனாம் பண்பு அவ்வாறுணரப்படாதாதலால் வடிவினைக்கூட்டி நாலென்றார்.
அன்றியும், “வினைபய மெய்யுரு வென்ற நான்கே, வகைபெற வந்த வுவமைத் தோற்றம்” எனவு
மிக்கருத்தேபற்றி முதனூல்செய்த ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாருங் கூறினார் ;
இதற் கதுவு முந்து நூலாகலின் அவர்கருத்தே யிந்நூலுடையாரும் உட்கொண்டாரென வுணர்க.

அன்றியும், “விரவியும் வரூஉ மரபின வென்ப,” “சிறப்பே நலனே காதல் வலியோ, டந்நாற் சொல்லு நிலைக்கள னென்ப,”
“கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்,” “முதலுஞ்சினையுமென் றாயிருபொருட்கு, நுதலிய மரபி னுரியவை யுரிய,”
“உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை, “பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக், குறிப்பின் வரூஉ நெறிப்பாடுடைய,”
“பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப” எனவுங் கூறிய சூத்திரங்களானு மேனையவு முணர்க.

93.அதுவே,
நிறைவினுங்குறைவினுநிகழ்த்துதனெறித்தாய்த்
துறைதொறும்பழமையும்புதுமையுந்தோய்ந்து
விரியினுந்தொகையினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவும் அவ் வுவமைக்காவதோர் பொது விலக்கணமுணர்ற்று.

(இ-ள்) அதுவே- அவ்வகைப்பட்ட வுவமை யென்னுமது, நிறைவுவமை குறைவுவமை யெனப் புலவராற் கூறுதலைத்
தனக் கிலக்கண நெறியாகவுடைத்தாய் வினைமுதலாய் நால்வகைப்பட்ட இடந்தோறு முந்து நூற்புலவராற்
கூறப்பட்ட தொன்மைத்தாகியும், அதன்பின்னர் அவ்வவகாலத்துப் புலவராற் புதுவதுபுதுவதாகக் கூறப்பட்டுவரு வனவுமாகப்
பொருத்தமுற்று விரியுவமை தொகையுவமை யென இரு திறத்தினும் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.

விழுமிதினென்று சிறப்பித்தவதனால் இவைநான்கும் இனிமேல் வரும் விரியுவமையனைத்திற்கும் பொதுவாமெனவும்,
இன்னு மவ்விலேசானே அவற்றுள் விரியுவமையுந் தொகையுவமையும் வினைமுதலிய
நான்கினோடு மெட்டாமெனவுங் கொள்க ; என்னை? “நாலிரண் டாகும் பாலுமாருண்டே” என்றாராகலின்.

94.அவற்றுள்,
முக்கியப்பொருட்டிறமுற்றுதனிறைவே.
(எ-ன்) நிறைவுவமையின திலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தி னான்குகூறுபாடு முவமையினு முற்றக் காண்பன நிறைவுவமையா மென்றவாறு.

ஆராவமுதமளித்ததிருப்பாற்கடலு
ணாராயணனாகணைமீது–நேரிழா
யெப்படியேகண்வளராநின்றானெனுமரங்கத்
தப்படியேகண்வளர்வானாம். (138)
இது நிறைவுவமை. இதனுள், திருப்பாற்கடனாத னுவமை. ஆரிய ரிதனைப் பூரணவுவமை யென்ப.
அங்ஙனமாதல், அவன் கண்வளரா நின்றதுபோல விவனுங் கண்வளராநின்றானென வினையுவமையும்,
அவன் றிருமேனி யெப்படியேயிருக்குமென்னும் அப்படியே யிவன் றிருமேனியுமிருக்கு மெனவே வடிவினோடு காந்தியாகிய பண்பும்,
அவனைச் சேவிப்பார்க் கச்சேவை காரணமாக முத்தியாகியகாரியம் பயக்குமது போல விவனைச் சேவிப்பார்க்கு
முத்தியாகியகாரியம் பயக்குமெனப் பயவுவமையும் உவமையாகிய திருப்பாற்கடலிடத்தும் வினைமுதலிய நான்கும்
பூரணமாகி யுவமை யுயர்ந்தபடியுங் காண்க.
எப்படியே கண் வளராநின்றானெனு மென்பது பிரமன்முதலாயினார் புராணங்க ளெப்படியேகூறுமென்பதாம்.
பயவுவமையென்பது ஒன்றன்றொழி லேதுவாகப் பிறக்குங் காரியம். அஃதெச்சமாயிற்று.
நேரிழா யென்பது மகடூஉமுன்னிலை. இரண்டாற்றிடையரங்கத்துத் திருமதிட்குப் பாற் கடனள்ளிடை யாவரண முவமை.
திணை – பாடாண். துறை – கண்படை வாழ்த்து.

பனிமதிக்கிரணம்வியன்களநடுவட்
பரந்துடல்கதுவுபோர்ப்பாய்மா
முனியுறப்பொழியுமிருண்மதமுடுக்க
முரணிழந்திரியல்போம்வேடர்
குனிதிரைத்திருப்பாற்கடலினைக்கடைநாட்
கொதித்தெழுங்கருவிடந்தொடரத்
தனிதனியுலக்கற்றறிவிழந்திரிந்த
தலைமைவானவரையொத்தனரே. (139)
இதுவுமது. இதனுள், திருப்பாற்கடலீன்ற கருவிடந் தொடர்ந்தது வெண்ணிலவு வியன்களநடுவட் பரந்துடல் கதுவிய
போர்ப்பாய்மாப் பொழியு மிருண்மத முடுக்கினதற் குவமை.
முரணிழந் திரியல்போம்வேடரென்பது தனித்தனி யொருவர்க்கொருவ ருதவாது ஓடின
தலைமைவானவரை யொத்தன ரென்றவாறு.

இருண்மத முடுக்கவெனவே பண்பும் வடிவும் வினையுவமையும், அறிவிழந்தெனவே அதனாலாய காரியமாதலாற்
பயனுவமையுமாகிப் பூரணவுவமையாயவாறு காண்க.

95. ஒன்றாதியசிலவொப்பதுகுறைவே.
(எ-ன்) குறைவுவமையாமா றுணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தின்வினைமுதலிய கூறுபாடு நான்கும் ஒவ்வாது அவற்றுள் ஒன்று
முதன் மூன்றொப்பது குறைவுவமையா மென்றவாறு.

இஃது “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்பதன்பாற்படும்.

வாவித்திருக்குருகூர்மாறாநின்வண்டமிழென்
னாவிற்கினிமைநயப்பதாற்–றேவர்
மருந்துநிகரென்றேமதித்துரைப்பன்முற்றப்
பொருந்துவமற்றின்மையினிப்போது. (140)
இஃது ஒன்றொத்த குறைவுவமை.

வெள்ளைப்பிறைக்கோட்டுவெங்கரியைவென்றவிற்
பிள்ளைப்பெருமான்றென்பேரைவாழ்–வள்ளைக்
குழையாரைத்தோய்ந்தகன்றகொற்றவனைக்காய்ந்த
பிழையார்பொறுப்பாற்பிறர். (141)
இஃது இரண்டுபெற்றவுவமை.

பாயுங்கருங்கயல்போற்பாங்கியிவளென்றுமருங்
கேயும்படிதாவினதியற்பாத்–தோயும்
புவிநாவலர்புகழ்மால்புட்குழியாள்செவ்விக்
கவினானனத்துலவுண்கண். (142)
இது தொழில் பண்பு வடிவு மூன்றும்பெற் றொன்று குறைந்த வுவமை.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றேயுலகு”
“மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி” என்பனவும் எடுத்துக்காட்டுவமை எனவும்,
ஒன்றொத்த குறைவுவமை எனவும் படும்.

செய்யகமலமுகஞ்செங்கனிவாய்முத்தநகை
வெய்யகளபமுலைமின்மருங்குன்–மொய்யிழாய்
பையரவப்பாயலான்பாடகத்தான்மால்வரைவாழ்
தையலடிமாந்தளிர். (143)
இதுவுமது. பகுதி – சேட்படை. துறை – தலைவன்பாங்கிக் கவயவங்கூறல். வடநூலார் உலுத்தவுவமை யென்பது மிது.

முந்துநூற் புலவராற் கூறப்பட்டுத் தொன்றுதொட்டுவரு முவமை யாவன :-
‘புலிபோற்பாயுமறவன்,’ ‘மாரியன்னவண்மை,’ ‘துடிபோற் சுருங்கு மருங்குல்,’ ‘பவளம்போன்ற செவ்வாய்,’
‘குறைபடுமதியந்தே யக்குறுமுயறேய்வதேபோல்,’ ‘நஞ்சுமமிர்தமுமேபோல் குணத்த,’
‘கரு மணியம்பாலகத்துப்பதித்தன்ன,’ ‘பொருகயற்கண்’ என்பன முதலியன.

அதன்பின்ன ராகுங்காலங்கடோறும் புலவராற் புதுவதுபுதுவதாகப் புணர்த்தவற்றுட் சில வருமாறு :-

கோழரையகாஞ்சிரைதாம்பழுத்தருகேநிற்பவற்றிற்
குறுகாதாங்குக்
காழிலவாங்கொழுங்கதலிக்கனிகளைச்சேட்சென்றருந்துங்
கவிகண்மார்க்க
மூழிலவாய்ப்படைத்தபொருள்பிறர்க்குதவாவுதலுத்தரைநீத்
துசிதமான
வாழ்வுடையோர்பொன்மனைச்சென்றமிர்தருந்திப்பசிதணிவார்
மார்க்கமானும். (144)

வாசமொருசிறிதின்றாயிணரூழ்த்தசெம்மலர்தம்
மருங்காய்நிற்பப்
பூசல்வரிவண்டினங்கணீளிடைப்போய்வாலிதாம்
பூந்தேன்மாந்த
லாசறக்கற்றுணர்ந்தறியாரவைக்களநீத்தேசெலச்சொல்
பவராய்நுண்ணூல்
காசறக்கற்றவர்கழகத்தடைந்துநலனுணர்பவர்தங்
காட்சிமானும். (145)

உற்றவயக்களிற்றினொடும்பிடியினையாங்கொருபாந்த
ளொருவாய்க்கொள்ளக்
கற்றதுகண்டிருதலைப்புளவற்றிருகைகவர்ந்தெடுப்பக்
கௌவுகாலைப்
பற்குலமுக்கிடருழத்தறீவினைவந்தடியிடுநாட்
பசையதாகப்
பெற்றபொருளினைப்பேணிமுதலுமிழந்திடருறுவோர்
பெற்றிமானும். (146)

உச்சவான்மலைச்சிகரத்துறுகொடிகள்படர்பாங்க
ருடையவாகும்
பச்சைவேய்ங்கழைத்தலையிற்சுழல்வனவாய்த்தோகைநடம்
பயிலுநீர்மை
மொய்ச்சுலாங்குழற்கழைக்காரிகைபாசம்பூண்டகழை
முடிமேனின்றே
விச்சைமேதகப்பவுரிகாட்டுவதாமெனக்கவினும்
விளம்பின்மன்னோ. (147)

காவின்மேற்படுபலவின்கனிகடுவன்கொடுசினைதாழ்
காமர்வல்லி
மாவின்மேற்படர்ந்ததன்மேன்மந்திகடாம்வயிற்றிடையே
மகவைத்தாங்கித்
தாவினாற்றவறுடைத்தாமெனவருவதொடுபோகுந்
தன்மைகூத்த
ரோவில்வான்கழைக்கயிற்றின்முழவுதழீஇயெதிர்நடப்ப
தொப்பதாமே. (148)

வெதிரெதிர்சென்றேபொரவிண்டுகுதழலவ்வெதிரினையும்
வெண்ணீறாக்கி
யெதிர்பொருதற்றிறனறியாச்சந்தனத்தேம்பொதும்பரையு
மெரித்தமார்க்கம்
பிதிரெனவாழ்ந்திடுசிறியார்விளைத்தசினமவர்திருவின்
பெற்றிதேய்த்துச்
சதிருடன்வாழ்ந்திடுதலைமைத்தமர்திருவுந்தொலைத்திடுமத்
தன்மைமானும். (149)

வீங்குபராரைக்கழைகண்முளிந்தனவாயுயிர்த்ததழன்
மிறைசெய்காலை
யோங்குபசுங்கழைக்குலங்கண்மழைக்குலங்கீண்டுகுபுனலா
லொழித்தபான்மை
தீங்குவிளைத்திடுமுதுவருறுமிடரையக்குலத்துட்
சிறுவர்மன்னர்
பாங்குபடைத்துளகருணைமுகத்தவராற்றணித்தருளப்
பான்மைமானும். (150)

கருநிறப்பரூஉக்காழ்க்களங்கனிவகுளக்காமர்தீங்
கனிகண்மாங்கனிகள்
பெருமிதப்பலவின்கனிசுவைத்ததன்பின்
பீடுலாங்காழிலாக்கனியை
யொருமுகப்படவுண்சுகமுறுசுகமாங்
குபயநூல்களைமுறைமுறையே
குருமுகத்துணர்ந்தபின்னர்நான்மறைதேர்
குறிப்பினர்சுகம்பொருவருமே (151)
இவை எட்டும் குருகாமான்மியத்திற் கந்தமாதனச் சுருக்கத்திற் பாட்டு.
இவற்றுள் நால்வகைக்கும் புதுவதா முவமை புணர்த்தவாறு காண்க.

96.உவமையுமுருபுமேதுவும்பொருளுந்
தவலருஞ்சிறப்பிற்றாம்விரிவனவிரி.
(எ-ன்) வைத்தமுறையானே விரியுவமைக் கிலக்கண முணர்ற்று.

(இ-ள்) உவமையும், உவமவுருபும், வினை பய முறுப் புருவென்ற நான்கினு ளொன்றும், உவமேயமும் என்னு நான்கும்
ஒன்றற் குவமங் கூறுமிடத்துத் தொகாது விரிவன விரியுவமையா மென்றவாறு.

தவலருஞ் சிறப்பிற் றாம்விரிவன வென்றதனாற் பெயரு முறையுந் தொகையுஞ் சிதையாமல் வருதல் சிறந்ததென் றுணர்க.
அவையாவன :- பவளம்போலச் செவ்வா யென்புழி, பவளம் உவமையெனவும் உவமான மெனவும் படும்.
போலவென்பது உவமவுருபு. செம்மை யென்பது குணமாகியவேது. வாயென்றது உவமேயமெனப்படும்.
இப்பெயர்-பெயர், இம்முறை முறை, இத்தொகை தொகை யெனக்கொள்க.

கருங்குவளைபோற்கருங்கண்கன்னல்போலின்சொற்
சுருங்குதுடிபோற்சுருங்கு–மருங்குல்
பிடிபோலியங்குநடைப்பெய்வளையைக்கண்டாற்
குடிபோங்குடிபோங்குணம். (152)
இதனுள் உவமைமுதலிய நான்கும் முறையே வந்தவாறு காண்க. அன்றியும், வினை பய முறுப்புரு வென்ற
நான்குவமையு மிதனகத்து வந்தவாறுங் கண்டுகொள்க. அடுக்குத் துணிவின்மேற்று. குணம் – அறிவு.
குடிபோமென்றல் தன்னிலையி னீங்குமென்றல். பகுதி – பாங்கற் கூட்டம். துறை – தலைவன்வியத்தல்.

இலவிதழ்போற்செவ்வாயியற்றமிழ்போலின்சொல்
கலகநமன்போலவடுங்கண்க–டிலகப்
பிறைபோல்வளைநுதலிப்பெண்ணமிர்தைக்கண்டா
லறைபோமறைபோமறிவு. (153)
இதுவுமது. இதனுள்ளும் நான்குவமையும் வந்தவாறுகாண்க. துறை – இதுவுமது.
இதன்கண் ணடுக்குந் துணிவின்மேற்று. அறை போதல் – கீழறுத்தல்.

97.உரைத்தநான்கினுளொன்றிரண்டிடையன
யாப்பினுளிடைப்பட்டெஞ்சலுந்தொகையே.
(எ-ன்) ஏனைத் தொகையுவமையிலக்கணமுணர்ற்று.

(இ-ள்) விரியுவமைக் குவமைமுதலாகச் சொல்லப்பட்ட நான்கனு ளிடைப்பட்டன விரண்டனு ளொன்றேயாயினும்
இரண்டேயாயினும் யாப்பினிடத் திடைப்பட்டுத்தொகுவது தொகையுவமையா மென்றவாறு.

இதனுள், தொகையென்றதல்லது உவமையென்பதுபெற்ற தியாதோவெனின், விரியுவமைக்கு
முதலே யுரைத்த சூத்திரத்தாற் பெற்ற தெனக் கொள்க.

அம்பவளச்செவ்வாயுமாரநிரைவெண்ணகையும்
பைம்பொனசலப்பணைமுலையின்–விம்பமுடன்
கண்டுகளித்தேந்திருமால்காட்கரையார்கன்னலின்சொல்
லுண்டுகளிப்புற்றிலமன்னோ. (154)
இஃ துவமவுருபொன்று மிடையிற் றொக்க தொகையுவமை ; இதனுள் அம்பவளச் செவ்வாய் முதலியவற்றிடையிற்
போலவென்னு முவமவுருபு தொக்கதனாலறிக. நெஞ்சமே யென்னு முன்னிலையு மெழுவாயு மெச்சம்.
மன்னும் ஓவும் அசை. பகுதி – இயற்கை. துறை – கிளவி வேட்டல்.

நீலம்போற்கண்ணுநிறைமதியம்போன்முகமும்
வாலமதிபோனுதலும்வண்டிமிர்பூங்–கோலத்
தொடைத்துளபமாலைத்தொழுமாறன்வெற்பிற்
படைத்துளதேன்மன்னுயிர்நண்பா. (155)
இஃதுவமவேது வென்பதொன் றிடையிற்றொக்க தொகையுவமை.

(இ-ள்) கருங்குவளைபோலக் கரியகண்ணினையும், எல்லாக் கலைகளு நிரம்பின மதிபோன்ற செம்முகத்தினையும்,
பிறைபோல வளைந்த நுதலினையும் வண்டுகளாரவாரிக்கு மழகிய தொடையாகிய துளப மாலிகையையுடைய
மாயோனைத் தொழு மாறன்றுடரிவெற்பிற் றனக் குறுப்பாகப் பெற்றுநிற்ப நீகண்டதுளதே லஃதென் னிலைபெற்ற வுயிரா மென்றவாறு.

இதனுள் நிற்ப நீகண்டது என்னுஞ் சொற்களையும் அஃ தென்னென்னுஞ் சொற்களையு மெச்சமாக நின்றனவாக்கி விரித்துரைக்க.
பகுதி – பாங்கற் கூட்டம். துறை – அவ்விடத்தேகல்.

அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் வினை பய முதலிய வேதுக்கடொகுவதே தொகையுவமையென நோக்கவும்

இந்நூலுடையா ருவமவுருபு தொகுவதுந் தொகையுவமையென்ற தென்னையோவெனின், அஃதே ;
நன்றுசொன்னாய் ! இவையிரண்டிற்கும் முதனூலாகிய தொல்காப்பியத்துள் “உவமைத் தொகையே யுவமவியல” என்பதனாலும்,
அதன்பின்னர் நேமிநாதர் பவணந்தி முதலியோரும் “உவமவுருபிலதுவமத்தொகையே” என்பதனாலுங் கூறப்பட்டது.

பவளவாய்முத்தநகைப்பைந்தொடியீரூழி
யவளவாய்க்கங்குனெடிதாமோ–துவளருவிச்
சோலைமலையார்துணைத்தோளிற்பைந்துளப
மாலைமலையாமயிற்கு. (156)
என்ப திரண் டிடையிற் றொக்க தொகையுவமை ; என்னை? பவளம் போலச் சிவந்த வாயினையு முத்துப்போல
வெளுத்த நகையினையுமென்னு முவமவுருபும் பண்பு மிடையிற் றொக்கதா லென்றுணர்க.
திணை-பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

கறைவேல்விழியிலவிதழிதழ்
நறைநாண்மலரஃதானனம்
புருவஞ்சிலையுருவம்புய
லுருவம்புரிகுழலெனுமது
பொன்னங்கிரிகொங்கைத்துணை
மின்னென்றுரையிடைகண்டிலன்
எனவாங்குக்
கற்றறிவுடையவென்னிறையினைக்கலந்து
ணற்றிருவுறைவிடநண்பா
சொற்றமிழ்மாறன்றுடரிவண்பொழிலே. (157)
இதுவு மிரண்டு தொக்க தொகையுவமை. இஃ தாறடித்தா யொன்றியும் ஒன்றாதும் வரும் வஞ்சித்தளையான்,
எனவாங்கு என்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற குறளடி வஞ்சிப்பா.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

‘இடைப்பட்டெஞ்சலு’மென்ற வும்மையா னிடைப்பட்டுத்தொகாது முதலானும் முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயரானும்
உவமையு முவமவுருபும் விரிந் தீற்றி லிரண்டு தொகுவனவு முளவென்ப தூஉந் தோன்றிநின்றது.

கொடிபோல்வடவரைபோற்கொவ்வைபோற்காமர்
பிடிபோலிளமான்பிணைபோல்–வடிவமைந்த
தென்னாருயிரமார்க்கின்னமிர்தன்றீந்தபிரான்
றன்னாகையன்னாடனக்கு. (158)
(இ-ள்) கொடிபோ னுடங்குகின்ற விடையினையும், வடமலை போலப் பெருத்த முலையினையும், கொவ்வைக்கனி
போலச் சிவந்தவாயினையும், அழகிய பிடிபோன்ற மென்னடையினையும், இளைய மான்பிணை போல
வெருண்ட நோக்கினையு முடைத்தாகிய வடிவா லழகமைந்திருப்ப தொன்று ;
தோழீ யெனக் குயிர்போலச் சிறந்தவனுமாகி யமரர்க்கு முன்னைநா ளமிர்தமீந்தபிரான் றிருநாகையனையாட் கென்றவாறு.

இதனு ளீற்றில் விரித்தவிரண்டுஞ் செய்யுட்கட்டொக்கவாறு காண்க. தோழீ யென்னு முன்னிலை யெச்சமாயிற்று.
பகுதி – சேட்படை. துறை – தோழிக் கவயவங்கூறல்.

இரண்டுமென்ற வும்மை யெச்சமாதலா னீற்றின் மூன்று தொகு வனவுமுள.

அன்னநடைமானோக்கணியிழாய்வார்சுமந்த
பொன்னசலந்தன்னைப்பொறுப்பதாய்–முன்னுதித்த
வெய்யாநடுவறக்கொன்றிட்டதைவைத்தென்னோசெங்
கையான்மறைத்தமையுண்கண். (159)
என்பது, அன்னநடைபோன்ற மென்னடையினையு மானோக்குப் போன்ற வெருண்ட நோக்கினையு மழகிய பூணினையு முடையாய் !
வாரைச் சுமந்த வாய்ப் பொன்மலைபோலப் பணைத்த முலையானவை தம்மைச்சுமப்பதுமாய்த் தாம் பிறந்து பணைப்பதற்கு
முன்னே பிறந்த வுடன்பிறப்பாகிய தேயாநடுவினை முற்றக்கொன்றவற்றைக் கொல்கவென வெளியில்வைத்து
யானுய்யும்படிக் குனதுயிர்போன்ற தோழியைக் காட்டித்தந்த மையுண் கண்களைக் கைகளான் மறைத்த தென்ன பேதைமையோ வென்றவாறு.

உண்கண்களையென் றோர் சொல் லிறுதி யிரண்டாவது தொக்கு விரிந்தது. ஒழிந்த சொல்லெச்சங்களும்
குறிப்பினால் விரித்துரைத்த வாறுங் காண்க. பகுதி – இடந்தலை. துறை – நாணிக்கண்புதைக்க வருந்தல்.

98. இருமையுமொருதொடர்பினுளுறலியல்பே.
(எ-ன்) இன்னு மத் தொகை விரி யுவமைகட் காவதோர் விதியுணர்ற்று.

(இ-ள்) அத்தொகையுவமையும் விரியுவமையு மாகிய விரண்டு தன்மையு மொருசெய்யுளகத்து வருதலுமா மென்றவாறு.
உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது.

மொழியமுதமுற்றாமுலைமுகுளம்வைவேல்
விழிமகிழ்மாறன்றுடரிவெற்பி–லெழின்மயிற்கு
நன்போதவிழ்குழல்கார்நண்பனேசெம்மேனி
பொன்போன்ம்பல்வெண்முத்தம்போன்ம். (160)
என்பது, நண்பனே ! மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ;
இளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ;
சிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.

இதனுள் முன்னையநான்கும் உவம வுருபு மேதுவு முவமேயத்தை முன்னிட்டுத் தொக்கன.
எழின்மயின் முற்றுவமை பின்னையவிரண்டும் விரியுவமை. போலு மென்னு முவமவுருபீற்றினுகரம்,
“செய்யுமெனச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ், செய்யுளு ளும்முந் தாகலு முற்றே, லுயிருமுயிர் மெய்யு மேகலு முளவே”
என்பதனால் முற்றாதலின் உயிர் கெட்டது. “மெல்லெழுத் தியையின் னகார மாகும்” என்பதனால் லகாரம் னகாரமாய்த் திரிந்தும்,
“னகார முன்னர் மகாரங் குறுகும்” என்பதனா லீற்றுமகாரங் குறுகியும்,
“செய்யு ளிறுதிப் போலி மொழிவயின், னகார மகார மீரொற்றாகும்” என்பதனா லீரொற்றுடனிலையாயும்,
மேலே பகரவொற்று வருதலின் செய்யுளிடைப்பட்டும் வந்த முற்றுப் போன்ம் என்றாயிற்று.
“ஐவிரைமாண்பகழியரந்தின்வாய்போன்ம் போன்ம்போன்ம், பின்னுமலர்க்கண்புனல்” எனப் பரிபாடலாகிய
சங்கச் செய்யுளகத்தும் பகர மேலே வருதலாற் செய்யுளிடைப்பட்டும் வந்தமை காண்க. இது தொகைவிரியுவமை.

இன்னும் வேறுபட வருவனவெல்லாந் தொகைவிரியுவமைக்க ணமைக்க.

99.அவைதாம்,
வெளிப்படைகுறிப்பினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவு மவ்விருவகை யுவமையின் கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங் கூறப்பட்ட விரியுவமையுந் தொகையுவமையு மென்னு மிரண்டும்
வெளிப்படையுவமங் குறிப்புவம மென்னு மிரண்டாய் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.

பவளச்செவ்வா யென்புழி இரண்டற்கும் பொதுவாய செம்மைக் குணத்தை வெளிப்படையாகக் கூறினமையான்,
குறிப்பின்றியுவமை கொள்ளப்படுதலானும், பவளவா யெனநின்றவழிப் பவளத்தினையும் வாயினையுங்கூட்டிச்
செம்மைக்குணம்பற்றி யுவமஞ்செய்ததெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது வல்லென்ற பவளத்திற்கும்
மெல்லென்ற விதழிற்குமுள்ளதோரொப்புமைக்குணங்க ளாண்டில்லை யென்பதூஉம்,
பானல்போற் கருங்கண் ணென்புழியும் இரண்டற்கும் பொதுவாய கருமைக்குணத்தை வெளிப்படையாகக் கூறினமையாற்
குறிப்பின்றி யுவமையே கொள்ளப்படுதலானும், பானலுண்கண் ணெனநின்றவழிப் பானலையுங் கண்ணினையுங்கூட்டிக்
கருமைக்குணம்பற்றி யுவமஞ்செய்த தெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது பல விதழினோடும்
பலவல்லியுந் தாதுவுங் கூடிய பரிமளப்போதிற்கும் நீண்டு பிறழ்ந் துலாய்க் குழை மேற்றாய
கண்ணிற்கு முள்ளதோ ரொப்புமைக ளாண்டில்லை யென்பதூஉ முணர்க. பிறவுமன்ன ;
என்னை? “சுட்டிக் கூறா வுவம மாயிற், பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” என்றாராகலிற் கொள்க.

விழுமிதி னடைபெறு மென்றதனால் விழுமிதாய குறிப்புவமையுமுள. அவையு மேற்காட்டுதும்.

பாற்கடல்வெய்யோனிலொளிபாரித்தசோதிவட
நூற்கடலைத்தென்னுரைநன்னூற்கடலாய்–மாற்கடிமை
வாய்ந்தாரீடேறவகுத்தளித்தான்றண்ணளிதாந்
தாந்தாமெனும்வகுளத்தான். (161)
இது விழுமிதாய குறிப்புவமை.

(இ-ள்) உலகின்கண்ணேயிருந்து நோக்குவார்க்குத் திருப்பாற் கடலின்கட்டோன்று முதயதிவாகரனைப்போல
ஒளியைப்பாத்தின சோதிச்சொரூபத்தையுடையான் அவன் யாரெனில் வடமொழியாகிய சுருதிக்கடலைத்
தென்னுரை நூற்கடலாக்கித் திருமாலுக் கடிமையாகத் தோன்றினார் பேரின்பமெய்தப் பாடித்தந்தான்
குளிர்ந்த வண்டுகள் தாந்தாமெனப்பாடித் தேனையுண்ணும் வகுளமாலிகையை யுடையான் ;
அவன் பரமகருணையிருந்தபடியோ ! வென்றவாறு.

இது விழுமிதாய குறிப்புவமையாயது, இதனுள், திருப்பாற் கடலிற்றோன்று முதயதிவாகரன் றனது
செய்யமேனியி லாயிரங்கிரணங் களைப்பரப்பி யுலகத்திருளைத்துரத்தி யுலகினுள்ளார்க்குக் கடபடாதிகளைக் காட்டி
யின்பத்தைப் புரந்தாற்போல விவனும் வெண்டிரைப் பொருநைத்துறை மாடத் திருக்குருகூரினிடத்துச் சிவந்தமேனியோடுந்
தோன்றித் திருவாய்மொழியாகிய வாயிரம் பாடல்களையும் விரித்ததனோடு மன்னவாகனத்தினுந்தோன்றித் தன்னை
மனோவாக்குக் காயங்களாற் றியானித்தும் வாழ்த்தியும் வணங்குவார்மனத்து ளறியாமையாகிய வந்தகாரத்தை நீக்கிப்
பரப்பிரமத்தைக் காட்டித்தருவனென வினையுவமம் பயவுவமம் வடிவுவமம் உறுப்புவம மென்னும் நான்குவமையுங்
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கண்டுகொள்க.

தண்ணளி…… தான் என்பதற்குக் குளிர்மையுடன் கூடியதாய வண்டுகள் பாடித் தேனையுண்ணும்
வகுளமாலிகையை யுடையானெனினுமாம். வெண்டிரைப் பொருநைமாடத் திருக்குருகூரொடும்
அன்ன வாகனமுந் திருப்பாற்கடற்குவமை.

இக்குறிப்புவமை இந்நூலுடையார் யாண்டுப்பெற்றாரெனின்? நலமிகு புலமை நக்கீரர்
“உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங், கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”
எனக் கூறிய முருகாற்றுப்படுத்ததுட் பெற்றாராம்.

வாழ்த்தெல்லாம் பாடாணாதலால் திணை- பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து ;
அன்றியும், வாகையைச் சார்ந்த பொது வியலிற்கூறிய பாடல்வென்றியுமாம்.

மின்பதிந்தகார்மேனிவிண்ணகர்மாலைப்புலவன்
பின்பதிந்துசென்றபெருமானை–முன்பதிந்து
சேவித்தாராளுந்திருநாடுதேவரெனப்
பாவித்தார்க்கெட்டாப்பதம். (162)
இதுவுமது ; என்னை? மின்குடிகொண்ட கார்போலுந் திருமகள் குடிகொண்ட மார்பினோடுங் கூடிய
கரிய திருமேனியையுடையான் எனக் குறிப்புவமை கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
தேவரெனப் பாவித்தார்க் கெட்டாப்பதம் என்பது-கண்டாகன்னனாலறிக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.

100.உவமேயத்தியலுயர்த்தியபின்ன
ருவமப்பொருளியலுயர்த்திமுடித்தலுங்
கவினப்பொருட்குறிற்கடிநிலையிலவே.
(எ-ன்) இஃ தவ்வுமத்திற் கெய்தாத தெய்துவித்தது.

(இ-ள்) முதலே யுவமேயத்தினது பட்டாங்கை யுயர்த்திக்கூறி, அதன்பின்னர் உவமப்பொருளின்பட்டாங்கை யுயர்த்தி
முடித்தலும் அவ் வுவமேயத்திற் குயர்ச்சி குறிப்பினாலுண்டாம்படி பயனிலை தோன்றுமெனி னீக்கப்படா தென்றவாறு. கவின் ஆகுபெயர்.

முத்திரைக்கைம்மாறன்மொழிந்ததிருவாய்மொழியே
சத்தியநூலென்பர்தகைசான்ற–மெய்த்தமிழோர்
மேதினிமேலாரணப்பாமெய்த்திருமாலேபரனென்
றோதியதூஉமாதியினிலுண்டு. (163)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று அவனது
சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப் பூலோகத்துக்கு மேலாய
சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.

எனவே, ஆதியாய்ச் சத்தியலோகந் தொடங்கிப் பரந்த வட மொழியா யுணர்த்திற்றென்று சுருதியாகிய நூலை
மிகச்சிறப்பித்துக் கூறுவானாகித் திருவாய்மொழியாகிய நூலை யுயர்த்திக் கூறாததுபோல வியல்பினாலாய
வுவமங் கூறினாராயினும், மண்ணின்குடத்தோடு பொன்னின்குடத்திற்குண்டாய வேற்றுமைபோல
அந்தணரு மேனை மூவகைக் குலத்தோரு மோதுவதாகவும் பரந்துபோகாதே தமிழ்மொழியா லெவ்வுலகத்தாரும்
பரதத்துவத்தையுணரும் படிக்கு மறைவின்றி யிருட்டற வேதசாரத்தை யெடுத்துக்கூறித் தெருட்டிற்றெனத்
திருவாய்மொழிக் கேற்றமானதோர் பயனிலை குறிப்பினாற் றோன்றினவாறு காண்க.
என்னை? “உவமத் தன்மையு முரித்தென மொழிப, பயனிலை புரிந்த வழக்கத்தான” என
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார் கூறிய விலக்கணத்தானும்,
“பாரி பாரி யென்றுபல வேத்தி-யொருவற் புகழ்வர் செந்நாப்புலவர்-பாரியொருவனு மல்லன்-மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே”
என்னுஞ் சங்கச்செய்யுளாகிய இலக்கியத்தானு முணர்க.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து ; அல்லது வாகைசார்ந்த இயல்வென்றியுமாம். இதுவுங் குறிப்புவமைப்பாற்படும்.

101.பலபொருளொருபொருளொருவயிற்பலவயிற்
போலியில்பொருண்மறுபொருள்விபரீத
மருட்கைதலைதடுமாற்றம்விகாரந்
தடுமாற்றம்மேசமுச்சயமின்சொ
னியமமநியமம்புகழ்நிந்தையுவம
மோகமவயவமவயவிமுற்றே
யேகமாலையந்தாதிபொதுநீங்கலென்
றாகவையைந்தாமதன்விரியே.
(எ-ன்) இதன்முன்னர் உவமையெனத் தொகையா னொன்றாய் நின்றது வினை பய முறுப் புருவென்ற நான்கினோடுங்
கூடி யேதுவைந்தா மெனனுமவை முதலிய வகையின் பாகுபாடுகளெல்லா முணர்த்தி யவற்றினின்றும்
விரிந்த வுவமையினது பெயர்வேறுபாடுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) அதன் விரி – அங்ஙனங் கூடுபடுத்தின வுவமையின் விரி, பலபொருளுவமைமுதலாகப்
பொதுநீங்குவமையீறாக விருபத்தைந்தா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை தொக்கன. போலியென்பதனை யிறுதிவிளக்காக்கி, இருவயினுங் கூட்டி,
உவமமென்பதனை மத்திம தீபமாக்கி, முன்னும் பின்னும் எல்லாவற்றோடுங் கூட்டி யுரைக்க.
என்றென்ப தெண்ணிடைச்சொல் ; “என்று மெனவு மொடுவு மொருவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனா லறிக.
இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தனவாதலாற் பெரும்பான்மையும் தம் பெயருள்ளே இலக்கணமும் புலப்படும்.
அல்லதூஉம் உரையினுங் கொள்க.

அவற்றுள், பலபொருளுவமையென்பது ஒருபொருட்குப் பலபொருளுவமைகாட்டுவது.
பலபொருளுவமையெனப் பொதுப்படக் கூறினமையான், அது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமையும்,
வேறு பலகுழீஇய பலபொருளுவமையுமென விருகூற்றவாம். அவற்றுள், ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை வருமாறு :-

எண்ணிற்கடங்காவிளஞாயிறொன்றியபோற்
கண்ணிற்கடங்காக்கதிர்விரிக்கும்–விண்ணிற்
பரந்தாமமாதவன்பொற்பாதநினைந்தேத்தும்
வரந்தாம்படைத்தார்வசம். (164)
இஃது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை. இதனுள், பரந்தாமம் என்றது பரமபதம்.
வரந்தாம் படைத்தார் வசம் என்பது மாதவன் றிருவடிகளை யிப்பிறப்பிற் சிந்திக்கவும் வாழ்த்தவும்
முற்பிறப்பில் வரம்படைத்தவர்தா மெவர் அவர் கைப்படும்பொருளாமென்றவாறு.

கொடியுமொருபிடியுங்கோளரவுமின்னுந்
துடியும்புரைமருங்குற்றோகை–வடிநெடுங்கண்
ணென்னுயிர்க்குத்தம்பமதாயிந்தளூர்மால்வரைத்தன்
மன்னுயிரைக்காட்டுமதித்து. (165)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று
அவனது சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான
வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப்
பூலோகத்துக்கு மேலாய சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.

இது வேறுபலகுழீஇய பலபொருளுவமை. ஒரு பிடி-ஒருகையை விரன்மடக்கின அளவாம்.
“ஒருபிடிநுசுப்பினாட்கே” எனச் சிந்தாமணியினுங் கூறினமை காண்க. பகுதி – இயற்கை. துறை – பாங்கியையறிதல்.

ஆலம்போற்செவ்வேளயில்போலடுங்காலன்
சூலம்போற்காமன்றொடுத்தியக்கு–நீலம்போற்
கொல்வான்பிறழ்கட்கொடிக்கிடமாமூலமெனச்
செல்வான்கடிகைச்சிலம்பு. (166)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

2. ஒருபொருளுவமை யென்பது பலபொருட் கொருபொருளுவமை காட்டுவது :-

இமிழ்திரைநீர்ஞாலத்திருளிரியவான்றோய்ந்
துமிழ்கதிர்வெண்டிங்களுடனேயெஞ்ஞான்றும்
வலஞ்செய்சுவணவடவரைபோன்மாடம்
பொலஞ்செய்மதிள்கோபுரஞ்சிகரபந்தி
யிலங்குமதிளரங்கத்தெம்பிரான்பல்புகழைப்
பாடினார்பாதந்தனைப்பாடிச்சென்னியின்மேற்
சூடினார்க்குண்டோதுயர். (167)
என்பது பலபொருட் கொருபொருளுவமை. பலபொருள் – செம்பொன் மாட முதலியன. உவமை வடமேருவெனும் ஒன்று.
பா-ஏழடியான் வந்த பலவிகற்பப் பஃறொடைவெண்பா. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

வண்ணவனசமலர்போற்றிருமுகமுங்
கண்ணுமலரடியுங்கைக்கொண்ட–பெண்ணரசைச்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேர்ந்தகன்றென்பாலுரைக்க
வந்தவனேதிண்ணியனாவான். (168)
இதுவும் ஒருபொருளுவமை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனை வியத்தல்.

3. ஒருவயிற்போலி என்பது ஒரு தொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறும்
உவமைச்சொற் புணராது இறுதியி லோருவமைச்சொற் புணர்ப்பது :-

வாவித்திரையெறிந்தநித்திலத்தின்மள்ளரெறி
காவித்திரள்சேர்கமலமலர்–பாவைமார்
வெண்ணகையுண்கண்ணானனம்போன்மெனத்தோன்றுங்
கண்ணபுரத்தானிமையோர்கண். (169)
இஃ தொருவயிற்போலி. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து ; நாடுவாழ்த்துமாம்.
திரையெறிந்த நித்திலத்தினோடு மள்ளர்களை கட்டெறிந்த காவிகளுஞ் சேர் கமலமென்க.
போன்மெனத் தோன்று மென்பது போலத்தோன்று மென்றவாறு. ஒழிந்த அகல முரையிற் கொள்க.

4. பலவயிற்போலி யென்பது ஒருதொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறு முவமைச்சொற் புணர்ப்பது.

பொன்மலைபோலுந்திருமால்புட்குழியாள்பூண்முலைநீர்
மன்னருவிபோலுமணிவடங்கள்–சொன்னதன்மேற்
செக்கர்வான்போலுமெழிற்செம்படாமும்புனைந்தா
ரெய்க்குநூலென்னாமினி. (170)
இது பலவயிற்போலி. எய்க்குநூல் – எய்யாநிற்குநூல். பொன் மலைபோன்ற முலையின்மேற் பொற்பூணையும் பூட்டி
முத்து வடத்தையும் பூட்டிச் செம்படாத்தையு முத்தரீகமாகப்போட்டமையா னினி யிடை யிறுமென்றவாறு.
என்னா மென்பது குறிப்புமொழி. எனவே, இடையைத் தாங்கி வடமுதலியவற்றைத் தாங்கிப் புடைபெயர்த்துத்
தனத்தைப் பரிசித்து மருங்கணைந்தானாம். பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.

5. இல்பொருளுவமையாவது முன்பில்லாததொன்றை யொன்றற் குவமையாக்கி யுரைப்பது :-

உதிக்குங்கருஞாயிறென்றேயுவமை
மதிக்கும்வடமலைமாயோனைத்–துதிக்குந்
திருநாவுடையபிரான்செந்தமிழையோதி
யிருநாவேவாராதிடர். (171)
என்பது இல்பொருளுவமை. என்னை? கருஞாயிறு இல்லாத பொருளாதலால் அதனைக் காளமேகம்போன்ற
திருமேனிக் குவமைகூறினமையா னென்றுணர்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.

சொன்னவாறொன்றுரைக்கக்காணேன்றுணைமேரு
வென்னவாழ்வுற்றவிணைமுலையாண்-மன்னவா
பந்துகழங்கம்மனைகைப்பற்றுகவென்றின்றெனையும்
வந்துதழீஇக்கொண்டாண்மகிழ்ந்து. (172)
இதுவுமது ; இதனுள் துணைமேருவென்றதனால் வடமேரு ஒன்றல்ல தில்லையால் இல்பொருளுவமையாயிற்று.
இவ்வணஞ் சிந்தாமணியினும் “கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே” என
வந்தமையா லிதனது வேறுபாடுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – குறிப்புணர்தல்.

6. மறுபொருளுவமை யென்பது முன்னர்வைத்த பொருட்கு நிகராவதோர் பிறிதொருபொருள் பின்னரு மதன்கண் வைப்பது :-

மாண்குலாமாறாநின்வண்டமிழ்போன்மற்றொருநூல்
காண்கலேனாங்கதுபோற்காண்கலேன்–மீண்டும்
புதல்வற்கருள்புரிந்துபொற்றூணிற்றோன்று
முதல்வற்கிணையாமுதல். 173)
இது மறுபொருளுவமை. திணை – பாடாண். துறை – பனுவல் வாழ்த்தோடு கடவுள்வாழ்த்துமாம்.

7. விபரீதவுவமையென்பது முன்பி லுவமையாகவந்ததனைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்குதல் :-

மென்றோளெனத்திரண்டவேயினங்கள்வெம்முலைக
ளன்றோவெனக்கோங்கரும்புறா–நின்றனவால்
வண்டமிழ்மாறன்றுடரிவண்பொழிலுமின்றெனக்கவ்
வொண்டொடியாய்த்தோற்றமுறும். (174)
இது விபரீதவுவமை. என்னை? “பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு, மருளறு சிறப்பினஃ துவம மாகும்” என்றாராகலின்.
அன்றோ வென்பது அல்லவோவென எதிர்மறையாகி ஆம் என்றாயிற்று. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – பொழில்கண்டுமகிழ்தல்.

8. மருட்கையுவமை யென்பது உவமைகூறுவான் மருட்கை வயத்தனாகி யொருபொருட்குக் கூடாதபண்பினைக்
கூடுவதாகக்கொண்டு அதனை யொன்றிற் குவமையாக்கி யுரைப்பது :-

தாகம்பெறநுகர்தீந்தண்மருந்துகைத்தழலின்
வேகம்பயின்றவிதிபோலு–மோகம்
படையாதமாறன்பனிவரைமேலென்னோய்
துடையாதுநீயுரைக்குஞ்சொல். (175)
இது மருட்கையுவமை. தெண்டியாசிரியர் கூடாவுவமை யென்பது மிது.
தீந்தண்மருந்து – இனிய குளிர்ந்த வமிர்து. கைத் தழலின் வேகம் பயிலுதல் – கயந்து தழல்போலச் சுடுங் கோப மிடைவிடாமை.
பகுதி – இதுவுமது. துறை – பாங்கனைநொந்துகூறல்.

9. தலைதடுமாற்றவுவமை யென்பது மேற்றொட்டு முதலே வந்த வுவமப்பொரு ளிடையினு மீற்றில் வந்த
வுவமேயப்பொருண் முதலினும் இடையினின்ற வுவமவுருபு இறுதியிற் றொக்கதும் விரிந்ததுமாகப் புணர்ப்பது :-

மையமருண்கண்காவிவாய்பவளந்தோளிணைவே
யையவிடைநுண்ணூலகலல்குல்–பையரவங்
கஞ்சத்திருமாதுகாதலிக்குமார்பகத்தான்
றஞ்சைத்திருமான்றனக்கு. (176)

இது தலைதடுமாற்றவுவமை. இவை யுவமவுருபு இறுதியிற் றொக்கது.
“குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை” யென்பது மிது.
மையமருண்கண்-கருமைபொருந்திய மையுண்கண். ஐயவிடை நுண்ணூல்-உண்டில்லையென்று சந்தேகமுற்ற
விடை நுண்ணிய நூல் போலு மென்றவாறு. ஐயவிடை யென்பதற்கு ஐயனே யென
அண்மை விளியா யுவப்பின்கண்ணே மயங்கியதாகக் கூறினானெனினுமாம். பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.

10. விகாரவுவமை யென்பது உவமையாகிய தன்மைப் பொருள் விகாரம் பண்ணியதாக உவமிப்பது :-

தெள்ளமிர்தத்துள்ளாயதீஞ்சுவையைமெய்வேதத்
துள்ளவுணர்வையுணர்வினா–லள்ளி
யெடுத்திசைத்ததொன்றெனலாமின்பொருளான்மாறன்
றொடுத்திசைத்தவுத்தமப்பாச்சொல். (177)
இது விகாரவுவமை. உணர்வை யுணர்வாலள்ளி யென்பது உபநிடதச் சொல்லுளிருந்த ஞானத்தைத்
தனதுண்மைஞானத்தாற் சொல்லைநீக்கித் திரட்டியெடுத் தென்றவாறு. இரும்பை யிரும்பினாலறுத் தென்பது போலக் கொள்க.
சொல்லெனவே சொல்லு மதனுட் பொருளுமாயிற்று. சொல்லு மதனுட்பொருளும் அமிர்தினுள்ள
சுவையையு முபநிடதச் சொல்லினுள்ள வுணர்வையுந் தனது பரம ஞானத்தா லள்ளி யெடுத்துச் சொல்லும்
பொருளுமாகத் தொடுத் திசைத்ததொன் றெனலா மென்க. இது பனுவல்வாழ்த்து.

11. தடுமாறுவம மென்பது ஒருபொருள் ஒருகால் உவமையுமாய் ஒருகாற் பொருளுமாகி யொருதொடர்ச்சிக்கண்ணே தடுமாறிவருவது :-

மெய்வேதம்போன்றதுநின்மெய்த்தமிழ்நின்மெய்த்தமிழ்போன்
மெய்வேதமுங்காட்சிமேயதால்–வையகமெண்
ணாவலவர்காரிதருநாவீறாநின்னிகராம்
பாவலரிங்காரோபகர். (178)

இது தடுமாறுவமை ; என்னை? “தடுமாறுவமங் கடிவரையின்றே” என்றாராகலின்.
தெண்டியாசிரியர் இதரவிதர மென்பது மிது. திணையுந் துறையு மிதுவுமது.

12. சமுச்சயவுவமை யென்பது இதனானேயன்றி யிதனையொப் பதினானு மொக்கும் என்பது :-

வண்ணத்தாலன்றிவடிவாலளவினா
லெண்ணிற்கமலமுகையேய்க்குமே–கண்ணன்
வழியார்துணைமாறன்மால்வரையாய்கன்னன்
மொழியார்துணைமாமுலை. (179)
இது சமுச்சயவுவமை. கண்ணன்வழியார்-கண்ணனே பரதத்துவ மெனநிற்கு மார்க்கத்தினையுடையார்.
துணையென்றது அவர்களான்மாவுக் குறுதித்துணை யென்றவாறு. மாறன் மால்வரையிலுள்ள தலைவனே !
கன்னலினதுபாகுபோலு மொழியையுடையாரென்று நீ சொல்லப் பட்டவ ருபயமுலை செம்மைநிறத்தா லொத்ததன்றி
வடிவினாலு மளவினாலு முள்ளத்தா லுவமைகுறிக்கின்ற செந்தாமரைமுகையை நீ சொன்னபடியே யொக்குமென்றவாறு.

குறிவழிச்சென்ற பாங்கன் தலைவி தனமுங் காண்பனோவெனிற் காண்ப துண்டென்பதற்குச் செய்யுள் :-
“அரனம்பலத்தி, னியலுள வேயிணைச்செப்புவெற்பாநினதீர்ங்கொடிமேல்” என்றதனா லறிக.
மால் வரையாயென்றதனா னில மொன்றென்பதாயிற்று. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.

13. இன்சொலுவமை யென்பது பொருளினு முவமைக்கோர் மிகுதி தோன்றக்கூறி
யுவமேயத்தினு மிகுதியுளவேனு மொப்பதன்றிச் சிறந்ததன்றென்பது :-

ஒன்றாயநின்முகத்ததொண்டமிழ்வேதங்குரவ
னன்றாயுநான்முகத்ததவ்வேத–மென்றாலும்
வண்டமிழ்மாறாவண்டமிழ்மறைக்கொப்பன்றிமறைக்
குண்டெனலாமோவேறுயர்பு. (180)

இஃது இன்சொலுவமை. இதனுள் ஒப்பதன்றியென்பது ஒப்பன்றி யெனச் செய்யுள்விகாரத்தாற் றொக்கது.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

14. நியமவுவமை யென்பது இன்னதற் கின்னதே யுவமை யென்று தேற்றேகாரம்பெறத் துணிந்துசொல்வது :-

வாய்மைமறையேநினதுவாய்ந்ததமிழ்மறையின்
வாய்மைதனக்கிணையாம்வாழ்த்துங்காற்–றாய்முலைப்பா
லுண்ணாதமெய்ஞ்ஞானமோங்கியமாறாகமலக்
கண்ணானேநின்னிணையாங்காண். (181)
இது நியமவுவமை. வாய்மைமறை – மெய்வேதம். திணை – வாகை. துறை – தாபதவாகை.

பைம்பொற்குன்றேபணையிளவனமுலை
யம்புத்துணையேயரிமதருண்கள்
குனிசிலையிரண்டேகொடுநன்புருவம்
பனிமாமதியேபழிதீர்நன்முகங்
கொடியேதளரிடைகொண்மூவேகுழ
லாடரவின்படமாமேகடிதடங்
காந்தளின்றுணைமலர்க்கவினேகையும்
பூந்தளிரன்றேபுடைபெயர்மெல்லடி மாதே,
படர்புகழ்மாறன்பராங்குசன்
றுடரிமால்வரைவளர்தோகையதியலே. (182)
இதுவுமது. பா-பொதுச்சீர் பதினாறும்வந்து நேரிசையாசிரியச் சுரிதகத்தாலிற்ற குறளடிவஞ்சிப்பா.
பணையிளவனமுலை – பெருத்த இளைய அழகிய முலை.
அரிமதருண்கண் – செவ்வரிபரந்து கண்டார்க்கு விருப்பத்தைக்கொடுக்கு மையுண்கண். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.

15. அநியமவுவமை யென்பது நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதுமோருவமை புணர்ப்பது :-

தேன்சுவைக்கொண்டோங்குமகிழ்ச்செல்வாநின்செந்தமிழின்
வான்சுவைக்குவான்சுவைகொள்வான்கனியே–நான்பகர்தற்
கொப்பாகக்கண்டதுமற்றுள்ளிற்சுவைதெவிட்டா
தப்பான்மைத்தானதுமொப்பாம். (183)
இஃது அநியமவுவமை.

(இ-ள்) வண்டுகள் தேனையுண்ணும் பரிமள வகுளமாலிகையையுடைய செல்வனே !
நினது திருவாய்மொழியிலுண்டான சொல்லும் பொருளும் கேட்ட செவிக்கும் ஓதின நாவிற்கும் உற்ற வுணர்விற்கும்
இனிமைதரும் பெரிய வினிமைக்குப் பரமபதத்துள்ளார் மனோ வாக்குக் காயங்களால் இனிமைகொள்ளும்
பரமபதநாதனாகிய அக்காரக்கனியே நான் சொல்லுதற் கொப்பாகக் கண்டது ;
அஃதன்றி வேறுவமை குறிப்பேனாகின் முப்பொறிகளுஞ் சுவை தெவிட்டாத திருவாய் மொழியேபோலப்
பண்ணும் பாடலுமாய் நடைபெறுஞ் சுருதியும் அதற்கொப்பா மென்றவாறு.

அப்பான்மைத்தானதும் என்றது சுருதியை. துறை – பனுவல் வாழ்த்து.

16. புகழுவமை யென்பது உவமையைப் புகழ்ந்துவமிப்பது :-

விண்ணோருயிர்தளிர்ப்பான்வேலைவாயன்றுதித்த
தண்ணாரமிர்தந்தனைநிகர்க்கும்–பண்ணாற்
றிருந்துமறையைத்தமிழ்செய்தேவேசன்வெற்பின்
முருந்துநகையார்மொழி. (184)
இது புகழுவமை. பண்ணாற்றிருந்து மறை – கீதநடைத்தாய்க் குற்றமற்ற மறை ; அது சாமவேதம்.
மறையைத் தமிழ்செய் தேவேச னெனவே வேதந்தமிழ்செய்தபெருமாள் என்னு நாவீறுடையபிரான் என்பதாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சியிறுதிக்கட்டலைமகன் காதற்சிறப்புரைத்தல்.

17. நிந்தையுவமை யென்பது உவமையை இகழ்ந்துவமிப்பது :-

உறைகழித்துக்கைம்மிசைக்கொண்டொண்மறவரோச்சின்
மிறைபுரிவேலொப்பெனினுமேலா–நறையூர்வாழ்
தேந்துளபமால்வரைமேற்றானேதெறுஞ்செயலா
லேந்திழையாள்வன்கண்ணிணை. (185)
இது நிந்தையுவமை. ஒண்மறவர் – கொலைமேற்கொண்டொழுகு மொள்ளிமையுடையமறவர் ஒச்சில் – செலவிடுக்கில்.
மிறைபுரிவேல் – கொலையைவிரும்பும் வேல் ; எடுத்தெறிதலைவிரும்புவார்தொழிலை வேலின்மே லேற்றியது காரண காரிய மயக்கம்.
மறவரோச்சுகிற் கொல்வ தல்லது வன்கண்போற் றானேதெறுஞ்செய லின்றென்பதனால் நிந்தை யுவமையாயிற்று.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.

18. மோகவுவமை யென்பது ஒருபொருளின்மே லெழுந்த வேட்கையாலதற்கு உவமையாகக் குறிக்கப்பட்ட
வதன்மேலும் வேட்கை நிகழ்ந்ததாகக் கூறுதல் :-

அம்பவளமொன்றிருப்பவன்புறுமாதொண்டையெனச்
செம்பதுமத்தேனேநின்செவ்வாயை–விம்பமுநே
ராதற்கதைவிரும்புமாழியான்கோழியூர்க்
காதற்சிறப்புடையேன்கண். (186)
இது மோகவுவமை.

(இ-ள்) ஆழியான் கோழியூர்ச் செய்யபதுமத்தினிடத்து விளைந்த தேன்போலுமொழியையுடையாய் !
நினது சிவந்த வாயை யதற்கொத்த அழகிய பவளமுளதாயிருப்பவும் ஆதொண்டையை யொப்பெனநோக்கி
யன்புறாநிற்கு மஃதன்றி யவ் வாதொண்டை செய்ய வாயினிறத்தோடும் வடிவிற்கு மொப்பதால்
அவ்வாயினையுங் காதலிக்கப்பட்ட சிறப்புடையே னோடுங் கூடிய கண்கள் அவ்வாதொண்டையையும் விரும்பாநின்ற வென்றவாறு.

ஆதற் கென்பது மூன்றாவது நான்காவதாயிற்று. அதையும் என்னு மும்மை விகாரத்தாற்றொக்கது.
விம்பம் – வடிவம். பகுதி – இடந்தலை. துறை – காதற்சிறப்புரைத்தல்.

19. அவயவவுவமை யென்பது அவயவத்தையுவமித் தவயவியை வாளாதே கூறுவது :-

மாதரிலவிதழ்போன்மாண்பிற்றேமாதவனால்
வானோரருந்துமருந்து. (187)
இதனுள், மாதரென்ற தவயவி. இலவித ழென்ற தவயவம். பகுதி – இதுவுமது.
துறை – நலம்புனைந் துரைத்தல். புணர்ச்சிமகிழ்தலுமாம்.

வல்லிக்கொடிமருங்குன்மாதினுக்குமேருமுலை
யல்லிக்கமலமனையதடி–கல்லதர்தீ
சொல்லும்பொழுதரங்கர்தொன்னகர்சேய்த்தாயிழாய்
செல்லும்படிக்கெளிதோசெப்பு. (188)
இதுவும் அவயவவுவமை.

(இ-ள்) வல்லிக்கொடிபோலு மருங்குல் ; வடமேருப்போலு முலை ; அல்லியோடுங் கூடிய தாமரைபோலுந் தாள்கள் ;
பரலோடுங் கூடிய வதரும் அழல்போலச் சுடும்.
சொல்லுங்காலத்தில் அரங்கர்நகரமென்றால் நெடுந்தூர மாகையா லாராய்ந்தணிந்த பூணினையுடையாய் !
நினது மாதினுக் கென்னோடும்வரும்படி யெளியதொன்றல்ல வென்றவாறு. பகுதி – உடன்போக்கு. துறை – அருமையுரைத்தல்.

20. அவயவியுவமை யென்பது அவயவியை யுவமித்து அவயவத்தை வாளாதே கூறுவது :-

பொன்னங்கொடியனையபொற்றொடிதன்றாட்சுவடு
மென்னன்புறத்தோன்றுமிங்கிவைக–ளன்னங்
கடிக்கமலஞ்சேரரங்கர்கானிகராங்காளை
யடிச்சுவடுமாங்கவையேயாம். (189)
இஃது அவயவியுவமை. அரங்கர்கானிகராங் காளை – அரங்கர்புதல்வ னாங் காமன்போல்வானாங் காளையென்பதாம்.
பகுதி – இதுவுமது. துறை – சுவடுகண்டறிதல்.

21. முற்றுவமை யென்பது அவயவ அவயவிகளை யொருசெய்யுளகத் தொக்க வுவமிப்பது :-

பொன்னெடுங்குன்றெனச்செறிந்துபுடைபரந்தபுளகமுலை
மின்னெனலாநுணுகிடையவேய்புரையுந்தடமென்றோட்
குளிர்மதிபோன்மிளிர்வதனக்கோமளப்பூங்கொம்பன்னா
டளிர்புரைமெல்லடிச்சுவடுந்தளர்ந்தனவெய்யோன்மன்னோ
குடதிசைவான்கதிர்சுருக்கிக்கொடித்தேரினொடுமறைந்தா
னடல்புனைவேடுவர்குறுகியற்றம்பார்த்தாறலைப்பார்
பொன்புனைபூண்மணிமார்பிற்புரவலவின்றிருவீரு
நன்குலத்தெம்மில்வைகிநறுந்தேன்செந்தினையருந்தி
மரையதளிற்றுயில்வைகிவைகறைவாய்த்துயிலெழுந்து
விரைகமழ்தார்மகிழ்மாறன்மெய்த்தமிழ்ச்சொற்குருகூரின்
முதிர்திரைப்பாலாழியின்வான்முகடுரிஞ்சுமுதயகிரி
கதிர்வருமுன்சேர்தல்கடன். (190)
இது முற்றுவமை.

(இ-ள்) பொன்மேருவாகிய மலைகளென்னும்படி சிக்கென்று மருங்ககன்ற புளகமுலையினையு மின்னெனத் தகுவதா
நுண்ணிய விடையினையு மூங்கில்போலும் பெரிய மெல்லிய தோளினையு மதிபோல விளங்கு முகத்தினையு முடைத்தாய
பூங்கொம்பன்னாள் தளிர்போன்ற மெல்லிய வடியிரண்டுந் தளர்ந்தன, ஆதித்தனுங் குடதிசைவாய் வானிற் கிரணங்களை
யொடுக்கிக் கொடியையுடைய தேரினோடு மறைந்தான், வெற்றியையுடைய வேடுவர்கள் அற்றம் பார்த்து வழிபறிப்பர்,
இனிப் பொன்னினாற்செய்த பூணினையணியு மார்பினையுடைய மன்னனே !
இற்றைப் போது நீங்களிருவீரு முத்தமகுலமாகிய எங்களில்லின்கண் வதிந்து, நல்லதேனினோடுங் கூடிய
தினைமாவினையுந் துய்த்து, மான்றோலிற் றுயிலமர்ந்து, வைகறையிற் றுயிலெழுந்து,
மணங்கமழாநின்ற வகுள மார்பன் மெய்த்தமிழ் பாராட்டப்பட்ட கீர்த்தியையுடைய குருகாபுரியிடத்துப் பெருத்த
திரையையுடைய திருப்பாற்கடலின்கண் வானின் துச்சியைத் தைவருங் கொடுமுடியையுடைய வுதயகிரியிற்
கதிரோ னுதிக்குமுன்ன மெய்துவதே முறைமை யென்றவாறு.

மன்னும் ஓவும் அசை. பகுதி – இதுவுமது. துறை – நெறிவிலக்கு. பா-வெண்கலிப்பா.

22. ஏகவுவமை யென்பது உவமையும் உவமேயமுந் திணை பான் முதல் சினை பெயர் வினை யென்பன மயங்கா தொன்றாயிருக்கை :-

முற்றவுணர்த்துமுதுகாப்பியம்புணர்ப்பா
னுற்றவர்தங்கண்போன்றுறங்காவா–மிற்பிரிந்தா
னல்லியலார்வந்தனைசெய்நாவீறன்மால்வரைமேன்
மெல்லியலாரின்பவிழி. (191)
என்பது ஏகவுவமை. இதுவும் பூரணவுவமைப்பாற்படும்.

(இ-ள்) நெஞ்சமே ! நன்புலவ ரஞ்சலிசெய்யு நாவீறுடைய பிரான் வண்குருகூரினிடத்து மெல்லிய
சாயலையுடையா ரின்பவிழியானது இனிநாமிவரை யில்லின்கண்வைத்துப் பிரிவோமாகில் அறமுதலிய
நாற்பொருளு மலை கடனாடு முதலிய பதினெட்டு வருணனையு மொழிந்தனவுங் குறைவின்றி யுணர்த்தப்
படுவனவாகும் பெருங்காப்பியம் பாடுதற் குட்கொண்ட புலவர்கண்போலத் துயிலொழிந்ததோடும் துன்பவிழியா மென்றவாறு.

இது, கற்பினு ளில்வாழ்க்கையென்னும் பகுதிக்கண் பிரிந்து சேய்நாட் சென்று வந்து கூடிய தலைமக னவளுறுப்புக்களை
வேட்கை மிகுதியாற் புதுவது புதுவதாகப் பாராட்டத் தலைமக ளிஃதொன்றுடைத்தென வஞ்சியவழிப்
புணர்ச்சியந்தியத்துந் துயிலாததைத் துயின்று துயிலொழிந்தோன் தன்கட் பிரிதற்குறிப்புளதாகக் குறித்த
வேறுபாடெனக் குறிப்பானறிந்த தலைமகன் முன்னிலைப் புறமொழியாகத் தன்னெஞ்சிற் கவள்குறிப்பறிவுறுத்துவான்போல
வினி நின்னிற் பிரியேனெனப் பிரியாத தன்குறிப்பினைத் தலைமகட்கறிவுறுத்தல் கலி யுள்ளும்,
“மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட், பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற்,
றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள், கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ” எனத்
தலைமகன் புணர்ச்சியந்தியத்துக் கனவினரற்றியதனைத் தலைவி துயிலொழிந்திருந்தவன் குறிப்புணர்ந்தனளென்பது முணர்க.
அன்றியும், கற்பினுட் குறிப்பறிவுறுத்த லென்னு மதிகாரத்தின்கண் வள்ளுவரும்
“கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க, ணுரைக்க லுறுவதொன் றுண்டு” என்னுங்
குறட்பாவினுட் டலைவன் றன்பிரியாமைக்குறிப்பினைத் தலைவிக் கறிவுறுத்தவாறுங் காண்க.
இதனுள், தலைவி இஃதொன் றுடைத்தென நாடின் மடனழிந்ததன்றோ வெனின்?
தலைவன்கட் டலைவி விரும்புதலா லதுவுங் கடனாயிற்று. என்னை?
“தன்வயிற்கரத்தலுமவன்வயின் வேட்டலு, மன்னவிடங்களல்வழியெல்லா, மடனொடுநிற்றல்கடனென மொழிப” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னுணர்க. முதுகாப்பியம் புணர்ப்பா னுற்றவர்தங் கண்போன் றுறங்காவா மென்றதனால் தோழி கூற்றன்று ;
தலைவன்கூற்றென வுணர்க ; என்னை? “இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியரென், றவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம்”
என்னுஞ் செய்யுளியற்சூத்திரத்தான், பெருங்காப்பிய வொழுக்கம் அறிவது பெண்டன்மைக் குரிமையன்மையி னுணர்க.
இங்ஙனங்கூறிய விலக்கணங்க ளிறந்தவற்றிற்கு மினிமேல்வருவன வற்றிற்கு மிலக்கணமென வுணர்க.

23. மாலையுவமை யென்பது ஒருபொருட்குப் பலவுவமை வந்தா லவை யொன்றோடொன் றிடைவிடாது
தொடர்ச்சியுடையனவாகப் புணர்த்துக் கடைக்கட் பொருளை வெளிப்படையாகக் கூட்டி முடிப்பது :-

பாற்கடலுண்மால்போலவன்மார்பிற்பைந்தொடிபோற்
கோற்றொடியுட்கொண்டகுணமேபோ–னூற்கடலாய்ந்
தாமாறுணர்ந்தாரறம்பயின்றநாவகலா
பாமாறன்சொன்னதமிழ்ப்பா. (192)
இது மாலையுவமை. அறம்-வேதம். உட்கொண்டகுணம் – கருணை. துறை-பனுவல்வாழ்த்து.

தென்னரங்கனுந்திச்செழுமலர்போலம்மலருண்
மன்னுமயன்போலயன்மனத்து–ணன்மறைபோ
னீங்காதொருபொழிற்கண்ணோவியம்போனின்றதொன்று
பாங்காகக்கண்டனன்வெற்பா. (193)
இதுவுமது.

(இ-ள்) வெற்பனே ! திருவரங்கேச னுந்தித்தாமரைபோலவும் அத்தாமரையுள் வைகும் பிரமனைப்போலவும்
பிரமன்மனத்துட் குடி கொண்ட நல்ல சுருதிபோலவும் ஒருபொழுதும் நீக்கமின்றி நீகூறிய
பொழிற்கண் ணோவியம்போனின்றதொரு பெண்ணுருவத்தைக் காவின தொருபக்கமாகக் கண்டன னென்றவாறு.

ஓவியம்போனின்ற தென்றான் உயிர் நின்னிடத்தும் உடலங்கு மாக நின்றதென்பது தோன்ற.
ஒருபக்கத்தேநின்ற தென்றான் ஆயத்தை நீங்கிநிற்பதுதோன்ற. பகுதி- பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் கண்டமைகூறல்.

24. அந்தாதியுவமை யென்பது ஒரு செய்யுளகத்துப் பல பொருட்குப் பலவுவமை வந்தான் முதலே
யுவமஞ்செய்த வுவமேயப் பொருட்பெயரினை யாகுபெயராதல் அன்மொழித்தொகைப்புறத்துவந்த
பெயராத லாக்கித் துணித்துநிறீஇ யவ்வுவமேயப்பெயரினை யந்தாதித் துவமானப்பெயராக்கி
யுவமவுருபுகொடுத்துப் பின்ன ரதன்மேல்வரு முவமேயப்பொருளோடு புணர்த்து நிகழ்த்துவது :-

குருமணிகுயின்றபொற்குடமெனத்தகைசால்
பருமணிவடந்தோய்ந்தெழுதருபணைமுலை
முலையெனப்பொடித்ததாமரைமுகைமுகைநெகிழ்
பொழுகுதண்ணறவெனவுறுநர்நன்மார்பத்
திழுகுமான்மதமளாயெழுபுனற்சங்கணித்
துறைவளங்கெழீஇயதொன்மைசான்மரபி
னீங்கிதுபுவனம்யாவையுந்தழைத்தற்
கோங்கியவிராமாநுசமுனியிருக்கை
யாங்கதுதருமமோர்படிவமுற்றனைய
பாங்குறுசக்கரபாணிபேர்புனைபதி
மழைகிழித்தெழுந்தபொன்மாளிகைச்சூளிகைத்
தழைதுகிற்கொடித்திரடாமவெண்மதியகட்
டுறுமறுத்துடைத்துவானொரீஇநுடங்கூங்குது
முருகார்மொய்ம்மகிழ்மாறன்
குருகாபுரியெனக்கூறுநன்னகரே. (194)
இஃது அந்தாதியுவமை. இதனுள், பணைமுலை யென்பது பணைத்த முலையினை யுடையாயென
வினைத்தொகைப்புறத்துவந்த வன் மொழித்தொகைப் பெயராய் அண்மைவிளியேற்றுத் துணித்துநிறீஇய வாறும்
முலையென வருபெயரினை யுவமானப்பெயராக்கி, யுவமவுருபு கொடுத்துப் பின்ன ரதன்மேல்வருந் தாமரை
முகையென்னு முவமேயப் பொருளோடும் புணர்த்தலுங் காண்க.
முகை நெகிழ்பு – முகைநெகிழ்ந்து. ஒழுகு தண்ணறவென – ஒழுகு தண்ணறவுபோல.
வுறுநர் – தன்னிடத்திலே பரிசிப்பார். இழுகுமான்மதம் – பூசுங் கத்தூரி.
அளாயெழுபுனற் சங்கணித்துறை – கலந்தோடும் புனலையுடைய திருச்சங்கணித்துறை.
ஈங்கிது வென்றது தமக்கு முன்னானவிடத்தை. ஆங்கது வென்றது தமக்குச் சேய்த்தானவிடத்தை.
ஊங்குது வென்றது இரண்டிற்கும் நடுவான விடத்தை. தாமவெண்மதி – ஒளியையுடைய மதி. ஒழிந்த வகல முரையிற் கொள்க.

அஃதேல், “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” எனத் தொல்காப்பியனா ரிதனைக்கூறி மறுக்கவும்
இங்ஙனங் கூறுமது மாறுகொளக் கூற லென்னுங் குற்றமாம் பிறவெனின், ஆகாது ; என்னை?
அஃ தொருபொருளோ டொருபொருளை யுவமித் ததற் குவமவுருபுகொடுத்துப் பிறிதொருபொருளை யுவமித்தல்.
அதற்குச் செய்யுள், “மதியத் தன்ன வாண்முகம்போலும், பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை” என்பது ;
மதியத்தன்ன வாண்முகத்தை யொக்கும் தாமரை யென்றமையின் அவை யொன்றினோடொன்று பொருந்தாதென்பதுகருதி மறுத்தார்,
இஃதன்னதன்று. என்னை? பருமணிவடந்தோய்ந் தெழுதரு பணைமுலையினையுடையாயெனத் துணித்துக்கூறினமையா னென்றுணர்க.
“ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற், சேர்ந்துடன் செறிந்த குறங்கினள் குறங்கென,
மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவென” என்பதுபோலக் கூறினாரென்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பதிபரிசுரைத்தல். பா-நேரிசையாசிரியப்பா.

25. பொதுநீங்குவமை யென்பது உவமையைக் குறிப்பினானாதல் வெளிப்படையானாதல் கூறி
மறுத்துப் பொருடன்னையே பொருட் குவமையாக்கி யுரைப்பது :-

முற்குணத்தான்மாதர்முலைப்பாலருந்தாத
நற்குணத்தால்வேதமொருநான்கினையுஞ்–சிற்குணத்தா
லோதாதுணர்ந்துணர்த்துமுத்தமமாறற்கிணைபார்
மீதார்மனனேவிளம்பு. (195)
இது குறிப்பால் வந்த பொதுநீங்குவமை. இதனுள், மனனே விளம்பென்பது மரபுவழுவமைதி ; என்னை?
நாவாகியபொறியினது கிரியையை அந்தக்கரணத்தின்மேலேற்றி யதனைக் கூறுக வென்றதனால்.
நாவாகிய பொறிக்குச் சொற்கிளத்தலுஞ் சுவையறிதலுமாகிய இருதிறத்தனவா மவையிரண்டு மந்தக்கரணங்கள்கூடாதே
யதற்குங் கூடாதாதலா னதனை யங்ஙனங் கூறப்பட்டது.
திணை – பாடாண். துறை – “அமரர்கண் முடியு மறுவகை யானு” மென்பதனான் முனிவர்வாழ்த்து.

வாரியைமொண்டுண்டோன்வசிட்டன்முதலாய
சீரியரின்ஞானஞ்செறிந்ததாற்–காரிதருஞ்
சேயேயுடையநங்கைசெம்முலைப்பாலுண்ணாதாய்
நீயேநினக்குநிகர். (196)
இது வெளிப்படையாய்வந்த பொதுநீங்குவமை. துறை – இதுவுமது.

ஆகப் பலபொருளுவமைமுதற் பொதுநீங்குவமையீறாக வுவமவிரி யிருபத்தைந்தும் அடைவே காண்க.

102. சிறப்பினும்வரூஉந்திறமுமொன்றுளதே.
(எ-ன்) இஃதுவமவிரியு ளோதாததாகவொழிந்த தொன்றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைப் பிறிதொருபொருளாகச் சிறப்பித்துச் சொல்லுமிடத் துளவாய்வரூஉங் கூறுபாடு மொன் றுளதென்றவாறு.

சிறப்பென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த பல அடைகளையு முவமித் தவற்றானே யுவமையாக்கி யுரைப்பது.

நுண்டுகிற்கொடிகணுடங்குபுவளங்கெழு
வெண்பொன்மாளிகைசுலாம்வீதிதெண்டிரையெழும்
பாற்கடற்பரப்பதாய்வரிபலபயின்மதிண்
மேற்படநிவந்துவிளங்குகோபுர
மைவாய்ச்சேடன்மண்டலித்தனனாகிப்
பைவாய்த்தலைநிமிர்பான்மையவாகக்
கருங்கடன்மொண்டெழுங்கருவிக்கார்மழை
யொருங்கதனனந்தலையுறப்படிந்ததொடு
மோங்குபொற்கம்பத்துச்சிமேலதனொளி
பாங்குறவுச்சியிற்பதிதருபானு
யோகநித்திரைகொளுமுரவோனுந்தியி
னேகதாட்டாமரைப்பொகுட்டிறைவனைநிகர்
சினகரக்குருகாபுரியினுட்செவ்வியி
னனவரதமுஞ்சராசரங்களாக
வுதிக்குமன்னுயிர்களையுவந்தே
துதிப்பர்நித்தியரெனத்துறவுளோரே. (197)
இது சிறப்புவமை. திணை – இதுவுமது. துறை – சினகர வாழ்த்து.

103. அடையொடுபொருட்கடைபுணர்க்குமஃதிரட்டை.
(எ-ன்) இதுவும் விரியுளோதாத வொழிபுணர்-ற்று.

(இ-ள்) அடையடுத்த முக்கியப்பொருட் கொப்புமை கூறும் ஒப்புடைப்பொருளிடத்து முக்கியப்பொருளி னடை
புலப்படப் புணர்ப்பது மிரட்டையுவமையா மென்றவாறு.

புணர்ப்பது மென்னு மும்மையால் ஒற்றைக்கிளவியும் இரட்டைக் கிளவிவழித்தாகிவருவன கொள்க;
என்னை? “இரட்டைக்கிளவி யிரட்டைவழித்தே” என்றாராகலின். உவமை யென்பது அதிகாரத்தாற் பெற்றது.

நறைமல்கியகொழுங்காவியைப்போனள்ளிரவினுநீ
டுறைமல்கியகண்டுயிலாமையன்பர்க்குரைக்கிலநான்
மறைமல்கியசெந்தமிழ்மாறன்வண்குருகூர்ப்பொருநைத்
துறைமல்குசேவற்சிறையிறைநீங்கிற்றுயரன்னமே. (198)
இஃ திரட்டையுவமை ; நறைமல்கியகாவிபோ லுறைமல்கியகண் ணென்பதா லறிக. மல்குதல் – பெருகுதல்.
உறை – துளி. இறை நீங்கில் – சிறிது நீங்கில். துயரன்னம் – துன்புறுமன்னம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – ஓதிமப்பெடையோடூடியுரைத்தல்.

ஊனூறியவிருகோட்டொருமாவையுறுபுனல்வன்
மீனூறுசெய்வதைத்தீர்த்தபிரான்வடவேங்கடத்திற்
றேனூறிலவிதழைக்கண்டபோழ்திலென்சிந்தையும்பர்
வானூர்மதிமுகத்தாளிதழாகமதித்திடுமே. (199)
இஃது ஒற்றைக்கிளவி யிரட்டைவழித்தாய்வந்த வுவமை ; இதனுள், தேனூறிலவிதழைக்கண்டபோழ்தெனக் கூறிய
வழிப் பானமூறுமித ழென்னாதே இதழென ஒற்றைக்கிளவியாய்க் கூறினமையா னென்றுணர்க.
பின்னர்வந்த விதழ் – அதரம். உம்பர் வானூர் மதிமுகத்தா ளென்பதன்கண்ணு மிவ்வுவமை வந்தவாறு காண்க.
அது, “கருங்கால் வேங்கை வீயுகு துறுக-லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை” என்னுங் பாட்டினுங் காண்க.
முன்னர்வந்ததற்கும் “பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்” என்பதனுட் காண்க.
பகுதி – இடந்தலை. துறை – புனங்கண்டுமகிழ்தல்.

104. உவமையுமுருபுந்தொடர்வழிப்பிறிதுமொன்
றுவமேயப்பொருட்கடைபுணர்ப்பதுமுள.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.

(இ-ள். ) ஒப்புடைப் பொருளொடு புணர்ந்த வுவமவுருபிற்குப் பின்னாகப் பிறிதுமோ ரொப்புடைப்பொருண்
முக்கியப்பொருட் கடையாக முன்னோராற் புணர்க்கப்பட்டுவருவது முளவென்றவாறு.
இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறியதெனவுணர்க.

அம்பனையவேற்கண்ணணங்காலறிவழிந்த
திம்பருனக்கெய்தியதாலெவ்வுளா–னும்பரெலாம்
போற்றவருண்மாலைப்போற்றார்போலாயினையான்
மாற்றமிதற்கென்னுரைக்கேன்மற்று. (200)
அம்பனையவேற்கண்ணென்றவழி யுவமப்பொருளின் துருபின் பின்னர் வேற்கண்ணென வந்தவாறு காண்க.
இதற்கு முன்னோர் கூறிய விலக்கியமாகக் கண்டன யாவையோ வெனின்,
“துப்புறழ் தொண்டைச் செவ்வாய்” எனத் திருத்தக்கமாமுனிகள் கூறிய சிந்தாமணியினும்,
“ஆம்பனாறுந் தேம்பொதி நறுவிரைத்-தாமரைச் செவ்வாய்” என்புழித்
“தேம்பொதிநறுவிரை யாம்பனாறுந் தாமரைச் செவ்வாய்” என இளங்கோவடிகள் பாடிய அந்தி மாலைச்
சிறப்புச்செய்காதையினுங் கண்டவை யென்றுணர்க.
இம்பருனக்கும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன்கழறல்.

105. மரபினும்வருவதோர்மரபுடைத்தென்ப.
(எ-ன்) இதுவு மெய்தாததெய்துவித்தது. இலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலு மாம்.

(இ-ள்) ஒருதொடர்பினு ளொருபொருட்காதல் பலபொருட்காதல் உவமைகூறுமிடத் துவமப்பொரு ளொருகுழுவினு ளொரு
மரபாகப் பலவுவமம்வருவது மரபுவமையா மிலக்கணத்தை யுடைத்தென்று கூறுவர் சான்றோ ரென்றவாறு.

செந்தாமரைவதனஞ்சேதாம்பல்வாய்நயன
நந்தாதசெங்குவளைநாடுங்காற்–கொந்தார்
வகுளம்புனைவார்வரைமயிற்குக்கஞ்ச
முகுளம்புணர்மாமுலை. (201)
இது மரபுவமை ; என்னை? கோடு கொடி நீர் நிலம் என்னும் நால்வகைப்பூக்களுள் நீர்ப்பூவாகிய குழுவுள்,
செம்மையென்னு மோரிலக்கணத்தனவாந் தாமரை யாம்பல் குவளை யென்னும் மூன்றினையும்
முகம் வாய் நயனம் முலை யென நான்கிற்கு மரபுபொருந்துவனவாக வுவமம்புணர்த்தலினெனக் கொள்க.
இதற் கிலக்கியங்கண்டதாவது :
“கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை, யிடையாயார் தெங்கி னனையர்- தலையாயா, ரெண்ணரும்
பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு” என்பதனுள் ஓரினத்தனவாகிய
புறக்காழ்ப் புன்மரமேகூறி யொழிந்தமரங்க ளொப்பன வுளவாயினுங் கூறாராயினாராதலான் மரபுவமையாமென வுணர்க.
துறை – இயல்பிடங் கூறல்.

106.ஒத்ததுவென்றதென்றொருபொருட்குவமை
வைத்தனவாயொருதொடர்பினும்வருமே.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.

(இ-ள்) ஒருபொருட் குவமைகூறுமிடத்து ஒருபொருளை யொத்தது ஒருபொருளை வென்றது என்றிருபொருளைக்
குறித்தனவா யொரு செய்யுளகத்துவருவனவு முவமவிலக்கணத்திற்குக் கூடியும் நீங்கியும் வருமென்றவாறு :-

கூற்றுவன்வேல்போன்றுகுகன்வேலைவென்றுகொலை
யாற்றலுறும்வன்கண்ணமர்விளைப்பத்–தோற்றமுறுங்
கொல்லிப்பாவைக்கிணையாய்நின்றதெவன்கோகனக
வல்லிப்பாவைக்கிணையாவாய். (202)
இஃது ஒத்தது வென்றதென்றல். ஆற்றல் – பெருமை. தோற்றம் – பொலிவு.
கொல்லிப்பாவை – காமுகரைக்கொல்லும் பாவை. கோகனக வல்லிப்பாவை – திருமகள். பகுதி – இயற்கை. துறை – இரந்துபின்னிற்றல்.

தெண்ணறவைவென்றுதிரைத்தெள்ளமிர்தையொத்தமொழிப்
பெண்ணரசேமாதவன்றென்பேரைவாய்த்–தண்ணறும்பூக்
கொய்யாமலாயமுடன்கூடாமலூசலிற்றாள்
வையாமனின்றதென்னோமற்று. (203)
இது வென்ற தொத்த தென்றல். பகுதி – இதுவுமது. துறை – முன்னிலையாக்கல்.

107. ஏதுநுதலியமுதுமொழியினும்வரும்.
(எ-ன்) விரியுவமையினு ளின்னு மோ ரொழிபுணர்-ற்று.

(இ-ள்) அவ்வுவமை யேதுப்பொருளைக்குறித்துமுடித்தற்குப் பிறிதொருபழமொழியினும் வருமென்றவாறு.

பாம்புகடித்ததற்குத்தேளுக்குப்பார்ப்பதுபோ
லாம்புகழ்மால்கச்சியணிவரைவா–யாம்பகட்டா
லோடத்துணிந்தளித்தானுய்த்தநோய்க்கின்றுவெறி
யாடத்துணிந்தானறிவு. (204)

இஃது ஏதுநுதலியமுதுமொழியுவமை ; என்னை?
“நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையு. மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக்,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ, மேது நுதலிய முது மொழி யென்ப” என்றாராகலின்.
இதனுட் குறித்தபொருண்முன்னரொரு முதுமொழியினை வைத்துப் பின்னர்த் தான்குறித்த பொருளை
வெளிப்படையாகவைத்தமையா னெனவுணர்க.
பகட்டாலோடத் துணிந்தளித்தானென்பது யானையைக்கண் டியாங்கள் பயந்தோடா நிற்ப அவ்வியானையையும்
பொருதற்குத்துணிந் திவளுயிரைத் தந்தானென்க. உய்த்தநோய்க்கு-தந்தநோய்க்கு.
வெறியாடத் துணிந்தான் என்பது இகழ்ச்சிக்குறிப்பு. அறிவென்ற தீண்டறியாமை.
“உழுத வுழுத்தஞ் செய் யூர்க்கன்று மேயக், கழுதை செவியறிந் தற்றால்-வழுதியைக், கண்டநங்
கண்ணீ ருகுப்பப் பெரும்பணைத்தோள், கொண்டன மன்னோ பசப்பு” என்பது மிது. துறை – வெறிவிலக்கு.

108. பிசியினும்புலப்படும்பெற்றியதாகும்.
(எ-ன்) இதன்முன்னர் விரியுவமையி னொழிபுகூறி யிதனுட் டொகையுவமையினதொழிபுணர்-ற்று.

பிசியென்பது நற்பொருள் ; என்னெனின்? “பிசியென்ப பொய்யுஞ் சோறும் பேசுநற் பொருளும்” என்பதனா லறிக.

(இ-ள்) பிசியென்ற இலக்கணத்தோடும் புலப்படு மியல்பினையு முடைத் தவ்வுவமை யென்றவாறு.

அஃதாவது உவமேயப் பொருட்குள்ள சினை வினை சார்பு முதலியன வுவமப்பொருட்கண் ணில்லையாயினும்
அவற்றை யதனோடு சார்த்தி யுவமப்பொருளொன்றனையுங்கூற வுவமேயப்பொருளு மேதுவு முவம வுருபும் விரிந்து புலப்படுதலாம்.

வருங்குன்றினைக்கடிந்தெம்மன்னுயிரைத்தந்தா
னிருங்கங்கணக்குன்றிருப்பப்–பெருந்தகைசால்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேய்நீநடித்தருந்த
வந்ததையானோதடுப்பேன்மற்று. (205)
இஃது ஒப்பொடுபுணர்ந்த வுவமத்தானுஞ் சார்பினானும் வந்த பிசியுவமை ; என்னை?
“ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந், தோன்றுவது கிளந்த துணிவி னானு, மென்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
என்றாராகலின். இதனுள், வருங்குன்றினை யென்றது யானையை எனவும், இருங்கங்கணக்குன்றென்றது
சார்போடுந் தோளினை யெனவும் வினையானும் வடிவானும் சார்பானும் உவமவுருபுமுதலியனவு
முவமேயப்பொருளும் புலப்படுவதாயிற்று. ஒழிந்த அகல முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது.
துறை-களிற்றிடையுதவிக் கறத்தொடு நிற்றல்.

109. முக்கியப்பொருட்குமுக்கியப்பொருளுவமை
புணர்ப்பதுமுதன்மைப்புலனெறிவழக்கே.
(எ-ன்) இதுவு மொருவகையா மொழிபுணர்-ற்று.

(இ-ள்) உவமேயப்பொருட் குவமேயப்பொருள்களை யுவமமும் பொருளுமாக்கியச் செய்யுளகத் துரைப்பனவும்
புலவராற்றுவழக்கமா மென்றவாறு. இஃது இலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறல்.

சீதரனேமுத்தனெனுந்தேற்றமுறச்சிந்தையினுட்
பேதமைபோலற்றபிறர்நசையும்–பாதகமாம்
பொன்றாவழுக்காறெனப்போயதுபுலமைக்
கொன்றாப்புறங்கூறலும். (206)
என்பது, நெஞ்சமே ! நாம் சீமந்நாராயணனே யகிலாண்டகோடி பிரமாண்டங்களையுஞ் சத்தாவரணங்களையும் பிரகிருதியையும்
கடந்து மேலாய விரசைக்கக்கரையா முத்தியைத் தருவதற்குரியனென்ப தாரியனா லுணர்ந்து அறிவுபிறந்தபின்னர்
நம்மிடத்து முன்பு நின்ற வறியாமை போல வகன்ற தொழிந்த அர னய னென்னு மிருவரைப்பற்றின பசையும் ;
அதுவுமன்றிப் பாதகத்திற் கேதுவா மழுக்காறகன்றதுபோ லகன்றது அறிவிற்குப்பொருந்தாப் புறங்கூறலும் ;
ஆதலாலினி நா மீடேறினே மென்றவாறாயிற்று.

திணை – பொதுவியல். துறை – முதுகாஞ்சி. எதிர்மறைகளை யுவமமும் பொருளுமாக்கிய திரண்டானும் பெறுதற்கு இலக்கியம்,
“இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங், கழிபே ரிரையான்க ணோய்” என்பதனாலறிக.

110.உருவகநிரனிறையதிசயஞ்சிலேடை
தற்குணந்தற்குறிப்பற்புதம்விரோத
மொப்புமைக்கூட்டமேதுவிலக்குடன்
மெய்ப்படவிரவுமேதகவுடைத்தே.
(எ-ன்) அவ் வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங் கூடி வருமாறு கூறுகின்றது.

(இ-ள்) உருவகமுதலாக விலக்கீறாக மேற்கூறப்படும் பதினோரலங் காரங்களுடன் விரவிவரு மவ்வுவமையலங்கார மென்றவாறு.

மெய்ப்படவிரவும்-பொருள்பெறவிரவு மென்பதாம். மேதகவுடைத்து – பெருமையுடைத்து.

111.இவைதத்தமவிலக்கணங்களிற்றிறம்பா
துவமச்சொற்புணர்ந்திறினஃதுவமை.
(எ-ன்) இஃ தவ்வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங்கூடி வருவதற் கோ ரறிகுறியுணர்-ற்று.

(இ-ள்) இவை-பதினோரலங்காரமும், தனக்குத் தனக்கு விதித்த விலக்கணங்களிற் குன்றா துவமவுருபுடனேகூடி
யுவமையந்தன்மை பெறமுடியுமாயி னவற்றை யவ்வவபெயரானே யுவமையென்று பெயர் கொடுத்து வழங்கப்பெறு மென்றவாறு.

பூந்தண்வகுளாபரணன்புயசயிலம்
வாய்ந்தவருவிவரைமானும்–பாய்ந்ததிரை
தங்கொலிநீர்வையந்தனைச்சூழிருடுரத்தும்
பொங்கொளிசேர்முத்தவடம்பூண்டு. (207)
இஃது உருவகவுவமை. இதனை முதனூல்செய்த தண்டியாசிரியர் உருவகத்தின்கண் ணுவமையுருவக மென்றார்.
அதற்குக் காட்டிய, “மதுமகிழ்ந்த மாதர் வதன மதிய, முதய மதியமே யொக்கும்” என்ற செய்யுளகத்
துருவகவாய்பாடாகவந் துவமவுருபோடிறுதலி னது பொருந்தாதாதலா னிவ ரதனை யுவமையி லுருவகவுவமையென்று
பெயர்கொடுத்ததே பொருத்தமென்றறிக.
பூந்தண் வகுளாபரணன்-பொலிவினையுங் குளிர்மையையுமுடைய மகிழமாலிகையை யாபரண மாகவுடைய மாறன்.
புயசயிலம் – திருப்புயங்களாகிய மலை வாய்ந்த – புலப்படுவதான.
அருவிவரைமானும் – நீரருவியோடுகூடிய வரையை யொக்கும். பாய்ந்ததிரை – பரந்ததிரை.
புயசயிலம் முத்துவடம்பூண்டதால் நீரருவியுடன்கூடிய மலையையொக்குமெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – புயவருணனை.

மலைமதிதேன்மாறன்வரைவேல்விழியாண்
முலைவதனநண்பாமொழி. (208)
இது நிரனிறையுவமை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

புருவநயனம்பொருசிலைவேல்போன்ற
திருமகணின்னோடுவரிற்செல்வா–கருவிளைமென்
பூநீனிறமாயன்புட்குழிசூழ்வாசமலர்க்
காநீர்த்தடமாங்கடம். (209)
இதுவுமது. இவையிரண்டும் பெயரொடுபெயர் நிரனிறையுவமை.
வாசமலர்க்காநீர்த்தடமாம் – பரிமள மலர்ச்சோலையும் வாவியும்போலக் குளிர்மையையுடையவாம் ;
கடம் – சுரம். நின்னொடுவருகி லவளுக்கெனக் கூட்டுக. ஒழிந்த வகல முரையிற் கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – ஆதரங்கூறல்.

காருலாவியகொழும்பொன்மணிமாடவெயிற்பிழம்புகதுவநாளு
மேருமால்வரையெனவேபொலிந்தபனிவரைக்குலங்கள்வேலைநீர்சூழ்
பாருமாடகநகரிற்சிறந்தவிறன்மதன்மகுடபந்திமானும்
வாருலாமுகிழ்முலைமங்கையருமலைமகள்குழுவின்வாழ்வார்மன்னோ. (210)
என்பது குணவதிசயவுவமை. திணை – பாடாண். துறை – நகர வாழ்த்து (குருகாமான்மியம்).

வார்செறிந்துகல்லாரமன்னியகலத்தவாய்த்
தார்செறிந்தவல்லியெழுதற்கிடமாஞ்–சீர்செறிந்த
நற்றிருமால்வைகியதென்னாகைத்தடமானு
முற்றிழையாண்முற்றாமுலை. (211)
இது செம்மொழிச்சிலேடையுவமை. தடத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.

(இ-ள்) தண்ணீர்பொருந்திச் செங்கழுநீரோடுங்கூடி யிடமகன்ற தாய்ப் பூநெருங்கின வல்லிக்கொடிகடோன்றுதற்
காகரமாந் தடத்தை யொக்கும், கச்சினதசத்தடங்கி மாணிக்கப்பூ ணிலைபெற்று மார்பிடத்த வா யொழுங்குசேர்ந்த
தொய்யிலெழுதுதற் கிடம்பெற்றன முற்றிழையா ளிளமுலையென்றவாறு.

பொலிவுகுடிகொண்ட நல்ல திருமால்வைகு மழகிய திருநாகைத் தடத்தை யெனக் கூட்டுக.
தடத்தின்மேற் சொல்லுங்கால், வார் – தண்ணீர். செறிதல் – பொருந்துதல். கல்லாரம் – செங்கழுநீர்.
மன்னி – கூடி. தார் – பூ. செறிதல் – நெருங்குதல். வல்லி – கொடி. எழுதல் – தோன்றுதல்.
இடமாம் – ஆகரமாம். தனத்தின்மேற் சொல்லுங்கால் வார்- கச்சு. செறிதல் – அடங்குதல். கல்லாரம் – மாணிக்கப்பூண்.
மன்னி – நிலைபெற்று. அகலம் – மார்பு. தார் – ஒழுங்கு. செறிதல் – சேர்தல். எழுதல் – எழுதுதல்.
இடமாம் – இடம்பெற்றதாம் என்க. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தலுமாம்.

மான்மதங்கூர்வெங்களபமட்டிக்கமைந்துளவாய்க்
கானிலவாவாரநிழல்கைக்கொண்ட–ஞானமுனி
செஞ்சொற்றமிழ்மலயமேபோலுஞ்சீதரன்வாழ்
தஞ்சைத்திருமான்றனம். (212)
இது பிரிமொழிச்சிலேடையுவமை. இது மலயத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.

(இ-ள்) மயக்கத்தைத்தருங் கடமுண்டான வெம்மையைச்செய்யும் யானையும் பூவிற்றேனும் வைத்ததேனும்
நிறைந்துளவாய்க் காடாய இலவும் ஆச்சாவும் சேர்ந்த மலைப்பக்கங்கள் குளிர்மையைத் தன்னிடத்துக்கொண்ட
தமிழ்மலையை யொக்கும், கத்தூரிமிகுந்த விருப்பத்தைத் தருஞ் சந்தனச்சேற்றைப் பூசப் புளகித் திறுகிய
வலியையுடையவாய்ப் பரிமளநிலைபெற்று முத்தினொளியைத் தன்னிடத்துக்கொண்ட
புன மான்போலும் விழியையுடையாள்தனம் என்றவாறு.
ஞானமுனி செஞ்சொற் றமிழ்மலையை யெனவுஞ் சீதான்வாழ் தஞ்சைத் திருமான்றனமெனவு முன்னும் பின்னுங் கூட்டுக.
கூர் வெங்களபம் – வினைத்தொகை. ஏகாரம் – அசை. பொதியத்தின்மேற்சொல்லுங்கால் மால் – மயக்கம். மதம் – கடாம்.
கூர் – உண்டான. வெம்மை – வெப்பம். களபம் – யானை. மட்டு – பூவிற்றேன். இக்கு – வைத்ததேன் ;
“தேன், றுளியொடுமதுத்துளி”யென்றார் சிந்தாமணியினும். அமைதல் – நிறைதல். உளவாய் – உண்டாய்.
கான் – காடு. இலவு – இலவமரம். ஆ – ஆச்சாமரம். வாரம் – பக்கம். நிழல் – குளிர்மை.
முலைமேற்சொல்லுங்கால். மான்மதம் – கத்தூரி. கூர்தல் – மிகுதல். வெம்மை – விருப்பம். களபம் – சந்தனச்சேறு.
மட்டித்தல் – பூசுதல். மைந்து – வலி. கான் – பரிமளம். நிலவா – நிலைபெற்று. ஆரம் – முத்துவடம்.
நிழல் – ஒளி. கைக்கொண்ட வென்ப திருதலைக்கு மொருபொருள். இது பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

நடுக்கற்றறைவளத்தினன்பொருள்களெல்லா
மிடுக்கற்றுதவுமியல்சான்–றொடுக்கமற
வேய்ந்தமலையமெனவளர்கின்றான்பரன்சீ
ராய்ந்ததமிழ்மகிழ்மாறன். (213)
இஃது இருவகைச்சிலேடையும் விரவி யிரண்டுபொருளைக் கவிநாயகனுக் குவமையாக்கி யவற்றை யிரட்டுறமொழிந்து
மூன்றாவது கவி நாயகன்மேலுஞ் சிலேடை செல்வதாக வவனு மவைபோலிருந்தானென்னு மூன்று
பொருள்பயந்தசிலேடையுவமை. இது பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை.

(இ-ள்) அசைவற்றுப் பக்கப்பாறைகளின் வளத்தோடுங்கூடி நல்ல பொருள்களையெல்லாங் குறைவற்றளிக்கு
மியல்பமைந் தழிவின்றித் தகுதியடைந்த பொதியமலையொப்பெனவும் தழையாநின்றனன்.
மத்திமம் பாராகிய தறைவளத்தோடுங்கூடி நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்கு மியல்பமைந்து
அழிவின்றித் தகவடைந் தழகிய வலையையுடைய கடலை யொப்பெனவுந் தழையாநின்றனன்,
அவன் யாரெனில் உண்மைநூல்களை யோதாதுணர்ந்து பிறர்க்குணர்த்தும் வளத்தினோடுங்கூடி
நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்குந் தகுதியடைந்து பரத்துவ சொரூபரூபகுணவிபூதியாகிய
பொலிவினையாராய்ந்த திருவாய்மொழி யென்னுந் தமிழையுடைய திருமகிழ்மாறன் என்றவாறு.

மலயத்தின்மேற்சொல்லுங்கால், நடுக்கு – அசைவு. அற்று – இன்றி. அறை – பாறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
கடன்மேற்சொல்லுங்கால், நடு – மத்திமம். கற்றறை – பாராகிய தறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
மாறன்மேற் சொல்லுங்கால், நடுக்கற்று-உண்மைநூல்களை யோதாதுணர்ந்து. அறை – உணர்த்தும்.
வளத்தின் – வளத்தோடுங் கூடி என்க. எல்லாம் – முழுதும். இடுக்கு – குறைவு. அற்று – இன்றி.
உதவும் – அளிக்கும். இயல் – இயல்பு. சான்று – அமைந்து. ஒடுக்கம் – அழிவு. அற்று – இல்லையாக, என்க.

இப்பாட்டினுள் “வளத்தி னன்பொருள்களெல்லா மிடுக்கற்றுதவு மியல்சான் றொடுக்கமற வேய்ந்த” வென்னுந்
துணையு மூன்றுபொருட்கு மத்தச்சிலேடை யொன்றாய்நின்றன. அவற்றுள்ளும் பொருளென்பது
பலபொருளொருசொல்லாதலின் மலை முதலிய மூன்றுபொருட்கு முறை முறையே
சந்தனம் அகில் குங்குமம் தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய் தேன் என்பனவும் பிறவும், சங்கு முத்து பவளம் என்பனவும் பிறவும்,
சித் தசித் தீச்சுர மென்பனவுமாம். இதனுள், ஏய்ந்தமலைய மெனநின்ற பெயரெச்சவாய்பாட்டைக் கடலைக்கூறுமிடத்து
ஏய்ந்து என வினையெச்சவாய்பாடாக நிறுத்தி அம் அலையென்பவற்றை இடையில் ஏற்பன வந்தனவாக
வளர்கின்றா னென்னுந் தன்னெச்சமான வினையோடுங் கூட்டுக.
பரன்சீராய்ந்த தமிழ் என்பது காரண காரிய மயக்கம். திணை – பாடாண். துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.

பெற்றாளிகழவளர்த்தாளிடர்செயப்பேர்த்துறவொன்
றற்றாகமெங்குங்கருகியும்வாய்விட்டாற்றுமந்தோ
பொற்றாமரைக்கண்ணன்விண்ணோர்பிரான்புட்குழியில்வஞ்சங்
கற்றார்பொருட்பிரிவுற்றிடைவேனிற்கருங்குயிலே. (214)
இஃது அத்தச்சிலேடையுவமை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – குயின்மேல்வைத்துக்கூறல்.
சொற்பொருள்காரணமாகவும் உவமைபிறக்கும் ; அவை முன்னர்க்காட்டுவது மென்றாம் ; அவை யிவை யெனவுணர்க.

அறிவுடையார்தத்துவநுண்பொருளுரையாய்ந்தறிகழகத்
தறிவொன்றில்லா
வறிதுடையாரடைதரிற்சிற்குணத்தினராய்த்தலைப்படுமவ்
வாழ்வுபோல
வெறிவரிவண்டுளர்நறுமென்சந்தனப்பூம்பொதும்பரிடை
விராயவேனை
முறிபடுதண்சினைவெளிற்றுத்தாருவுமாங்கதிற்கமழு
முதன்மைத்தாமே. (215)
இது தற்குணவுவமை. துறை – பருப்பதவாழ்த்து.

சிலைவணக்குந்திருநுதலார்சிற்றிடையைவணக்கியவச்
சிறுமைநோக்கி
முலைவணக்கஞ்செய்ததுபோன்முதுக்குறைவந்தடைந்துபொறை
முதிரநோன்றா
ணிலைவணக்கங்கொண்டதுகண்டீன்றதாய்சுமந்திறுத
னெறித்தன்றென்றே
தலைவணக்கங்கொண்டுகதிர்நிலமகட்கேசரணமெனச்
சாய்ந்தமன்னோ. (216)
இது தற்குறிப்பேற்றவுவமை. நாடுவாழ்த்து. (இவையிரண்டுங் குருகாமான்மியம். )

கொடிமேல்வளருமிருகுன்றுமுளவென்னும்
படிமேதகப்பணைத்தபாவாய்–வடிவேற்கட்
பொற்றொடிக்கைப்பூமகள்கோன்புத்தூர்வரைமடமான்
சிற்றிடைமேற்கொங்கைத்திரள். (217)
இஃது அற்புதவுவமை ; என்னை? குன்றின்மேற் கொடிவளர்வதல்லது கொடிமேற் குன்று வளர்வதின்று,
ஆதலான் அற்புதவுவமை. அற்புதமென்பது ஆச்சரியம். பகுதி – சேட்படை.
துறை – பாங்கிக் கவயவங்கூறல். பாங்கன் செவ்விசெப்பலுமாம்.

மின்னுமரவும்விளங்கிழாய்நின்னிடையும்
பன்னுதமிழ்மாறன்பனிவரைவா–யுன்னில்
விருத்தமுளவாயிருப்பமெய்யுவமைக்கென்னோ
பொருத்தமுடைத்தென்னும்புவி. (218)
இது விரோதவுவமை. பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந் துரைத்தல்.

எப்பொருளுங்கோதற்றிசைக்குமறையம்மறைபோன்
மெய்ப்பொருளெல்லாஞ்சொலுநின்மெய்த்தமிழு–முப்பொருளு
மாசின்றுணர்த்துமயனயன்போன்மாறாநீ
யாசின்றுணர்த்துமவை. (219)
இஃது ஒப்புமைக்கூட்டவுவமை. எப் பொருளு மென்பன :-
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்பனவாம்.
முப்பொருளும்…… உணர்த்தும் என்பது அங்ஙன முதலிற் கூறிய மறை, அரி அயன் அரனென்னுமவர்
மூன்று பொருளாய் முக்குணமாய் மூன்றுதொழிலா யிருக்குமெனக் கூறியவண்ணமே குற்றமின்றி யுணர்த்து மென்பதாம்.
இன்றியென்னும் வினையெச்சவாய்பாட்டிகரம் இன்று என உகரவீறாயிற்று ; என்னை?
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந், தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே” என்றாராகலின்.
அவற்றை யென்பது அவையென இரண்டாவ திறுதியிற்றொக்கது.
கோதற்றென்பதனைக் கோதறவென்றாக்குக. முன்னது – பனுவல்வாழ்த்து. பின்னது – இயன் மொழிவாழ்த்து.

மாடசூளிகைக்கொழும்பொற்றகட்டமைத்தமுழுமணிவால்
வயிரநீலம்
பாடல்சால்பசுமணிபொன்னிறப்புருடராகமிவை
பத்திவாய்ந்து
கோடலால்வளந்தருசெங்கேழ்கிளர்மாண்செக்கரொடுங்
குறைவொன்றில்லா
வாடகாசலக்குடுமிவளைத்தெழுமிந்திரதனுவொத்
தவிர்வதொன்றே. (220)
இஃ தேதுவுவமை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )

பூரணமாங்கண்மலர்க்கும்புத்திக்குந்தித்திக்குங்
காரணத்ததாமோகடலமிர்தந்–தாரணிமேற்
கன்னியிடத்தார்பரவக்காகோதரத்துவளர்
பொன்னியிடத்தாரமுதைப்போல். (221)
இது விலக்குவமை. துறை – கடவுள்வாழ்த்து.

அளிமருவும்பொற்காவகமணந்துஞ்சங்க
வொளிமருவுநீணிதியுட்கொண்டும்–விளிவில்லா
நன்னரங்கவீடருளநாடாதருளரங்கன்
றென்னரங்கநேர்வரும்புத்தேள். (222)
இதுவும் விலக்குவமை.

(இ-ள்) அளிமருவும் பொற்கா- கொடையைப்பயிலும் பொற்சொரூபமான கற்பகக்கா. மணந்து – குடிபுகுந்து.
சங்கவொளி மருவு நீணிதி – சங்கநிதி. திருவரங்கத்தின்மேற் சொல்லுங்கால். வண்டு பொருந்திய பொலிவையுடைய சோலைகள்.

(மணத்தல்-) பரிமளங்கூர்தல். சங்கவொளிமருவுநீணிதி – பாஞ்சசன்னியத்தைத்தரித்த அன்பர்க்கழியாவைப்பாகிய அரங்கநாதன்.
நன்னர் – நன்மை. வீடு – பரமபதம். நாடாது – ஒவ்வாது ; அப் பரமபதத்தைக்கொடுக்கப் புத்தேள் நினையாது.
திருவரங்கம் பரமபதங்கொடுக்கு நினைவுள்ளதா மாதலாற் புத்தேளைத் திருவரங்கத்துக் குவமைகூறுவது பொருந்தாதென விலக்குக.
நேர் வரும்புத்தேளென்பது இகழ்ச்சிக்குறிப்பு ; எதிர்மறையு ளடங்கும். இங்ஙன முவமையைக் கூறிவிலக்குதலால் விலக்குவமையாயிற்று.

இதனுள்ளுஞ் சிலேடை விரவிற்றேனும் வீடருளநாடாதென்பதனால் விலக்குவமையென்பதே நோக்கம்.
தண்டியாசிரியரும் “குழை பொருது நீண்டு குமிழ்மேன் மறியா, வுழைபொருதென் னுள்ளங்கவரா” வென்னும்
விலக்குவமையினுஞ் சிலேடைவிரவியதூங் காண்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

ஆக உருவகவுவமை முதலாக விலக்குவமை யீறாகப் பதினொன்றும் அடைவே வந்தவாறு காண்க.

112.சிறப்பிற்றீர்ந்தசெய்கையவாகி
யிறப்பவுயர்த்தலிழித்தன்மிகுத்தல்
குறைத்தல்பான்மாறுதல்கொள்கடனிலவே.

(எ-ன்) உவமைக்குக் கூறிய பொதுவிதிச்சூத்திரத்துட் பெருமையுஞ் சிறுமையும் பெற்றியிற்சிறந்து மென்பதற்குச்
சிறப்பிற்றீர்ந்துவருவனவாய்க் கடியப்பட்டன முன்னர்க் கூறப்படுமென்றா மவையிவை யென்ப துணர்-ற்று.

(இ-ள்) ஒன்றினை யுவமிக்குங்காற் சிறப்பினைநீங்கியசெய்கையை யுடையவா யிறப்பவுயர்ந்த வுவமேயத்திற்
கிறப்பவிழிந்த வுவமானத்தினை யுவமித்தலு மிறப்பவிழிந்த வுவமேயத்திற் கிறப்பவுயர்ந்த வுவமானத்தினை
யுவமித்தலு முவமேயவடைக் குவமானவடை மிகப்புணர்த்தலு முவமேயஅடைக் குவமானவடை குறையப் புணர்த்தலும்
ஆண்பாற்குப் பெண்பா லுவமித்தலும் பெண்பாற் காண்பா லுவமித்தலும் ஒருமைப்பாற்குப் பன்மைப்பா லுவமித்தலும்
பன்மைப்பாற் கொருமைப்பா லுவமித்தலும் பெரியோ ராமெனக்கொள்ளுங் கடனிலவா மென்றவாறு.

ஆனையெருத்தமகழ்வான்வெரினேய்க்கும்
பூனையிடியேறுபோன்முழங்கு–மூனை
யயிலரியேறன்னாளிவளிவடன்னாசி
பயிலணிதாராகணமொப்பாம். (223)
இதனுள், இறப்பவிழிந்த அகழ்வான்வெரினை யிறப்பவுயர்ந்த யானையின்முதுகிற் குவமைகூறியதூஉம்,
இறப்பவிழிந்த பூனைமுழக்கிற்கு இறப்பவுயர்ந்த இடியேற்றின்முழக்கை யுவமைகூறியதூஉம், அரியேறாகி
யிறப்பவுயர்ந்த வஃறிணையாண்பாலை யுயர்திணைப் பெண்பாற் குவமைகூறியதூஉம்,
நாசியாபரணமான முத்தினொருமைக்குத் தாரா கணப் பன்மையை யுவமைகூறியதூஉம் வழுவாயிற்று.

பைங்குவளைமுல்லைபனிவண்டுலாங்குமுதந்
திங்களிடத்தாயினபோற்செவ்விதரு–மிங்கிதமே
கற்றமர்கூர்கண்ணகைவாய்காமுறவாழ்வெய்தியவிம்
முற்றிழையாள்சோதிமுகம். (224)
இதனுள், உவமானமான குமுதத்துட் புணர்த்த வண்டிற் குவமேயமின்றி யுவமான அடை மிகுந்து வழுவாயிற்று.

தேனருவிநீரருவியோடேசிறந்துளநற்
றானவடமேருவெனுஞ்சால்பிற்றே–மானனையார்
சித்திரப்பொற்கச்சணிந்துசெய்யமணிவடமு
முத்தவடமும்பூண்முலை. (225)
இதனுள், பொற்கச்சணிந்தென்னு முவமேயவடைக் குவமான வடை குறைந்து வழுவாயிற்று. பொற்கச்சு – பொன்னெழுத்துக்கச்சு.

நமன்மடந்தையன்னானிவனிவன்றன்னாரி
சமனனையளீங்கிவர்க்குத்தையா–லமர்புதல்வ
ரெண்ணிருவர்க்கொப்பாகுமன்றேயமன்சமரிற்
பண்ணமைத்தாங்கேறும்பகடு. (226)
இதனுள் உயர்திணையாண்பாற் குயர்திணைப்பெண்பாலு முயர்திணைப் பெண்பாற் குயர்திணையாண்பாலும்
உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண்பாலொருமையுஞ் சிறப்பிற்றீர்ந்தனவாய் வழக்கின்றாய்க் கூறுதலால் வழுவாயிற்று.

வாலிலாச்சம்புவெனவாழ்மதங்காவந்ததற்குப்
பாலிலாவுண்டிபடையேமான்–மேலுமக்குக்
கூகைக்கறியிலையேகோதிலாத்தேனுடனே
பாகைச்சொரிந்தென்பயன். (227)
இதனுள் இங்ஙனம் வாலிலாச்சம்புவெனப் பழித் துவமைகூறுதல் வழுவன்று. சம்பு – நரி.
பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப் பழித்தல்.

113.பொதுவினுஞ்சிறப்பினும்புணர்ந்துளவாகி
யிதுவழக்கிதுசெயுளெனுமீரிடத்தும்
வெளிப்படைகுறிப்பெனவிழுமியநெறியாற்
கொளப்படுமுவமவுருபினைக்கூறி
னன்ன போல வனைய மான்
வென்ன நேர விறப்ப நிகர்ப்ப
நாட நளிய நடுங்க நந்த
வோட வொன்ற வொடுங்க வொட்டக்
கள்ளக் கருதக்காட்டக் கடுப்ப
வெள்ள விழைய வெதிர வேய்ப்ப
மருள மலைய மாற மதிப்ப
வென்ற வந்த வேர வேய
வாங்க வொப்ப வமர வியையப்
புல்ல வுறழப் புரையப் பொருவ
வனை துணை கெழு வீழ்தழை செத்தற்றணி
யென்றிவைநாற்பானெட்டும்பிறவு
மொன்றியதிறத்தாலொழுகுதலுளவே.
(எ-ன்) இஃ துவமேயத்தினையு முவமானத்தினையு மொப்புமைப் படுத்துங்கா லிடையினு மீற்றினும்
வரு முவமவுருபினை யினைத்தெனக் கூறுத னுதலிற்று.

(இ-ள்) கொள்ளப்படு முவமவுருபினைக்கூறின் என்பது இது வினைப்பாலுவமம் இது பயனிலையுவமம்
இது மெய்ப்பாலுவமம் இஃ துருவினுவமம் என நால்வகைத்தாக மனத்தான் மதித்துக்கொள்ளப் படுதலையுடையவாய்ப்
பொதுவானுஞ் சிறப்பானும் பொருந்துவதுளதாயிது வழக்கிட மிது செய்யுளிடமென விரண்டிடத்தினோடுங்கூடி வெளிப்படை
குறிப்பென வருஞ் சொற்களுக்கு வரையறைகூறின் அவை, அன்ன போல வென்பன முதலாக அற்று அணி யென்பன வீறாக
வெண்ணப்பட்ட நாற்பத்தெட்டும் பிறவுமாகிப் பொருந்துங் கூறுபாட்டா னொழுகலாறுடைத்தா மென்றவாறு.

பிறவுமென்பதனால் எடுத்தோதினவேயன்றி வெல்ல, வென்ற, வியப்ப, ஒத்த, ஒக்கும், தகைய, தகைப்ப, பொற்ப, காய்ந்த,
நோக்க, மருளும், புரையும், துலை என்றற் றொடக்கத்தனவும், ஐந்தாம்வேற்றுமை யுருபாய்வரும்
இன்னும், என, என்னென வரும் எச்சவாய்பாடுகளாய் வருவனவும், பிறவுங் கொள்க.
சொல்லினை யிரண்டு நாலு மயக்கம். இவற்றுட் பலவும் செயவனெச்சமாயவாய்பாட்டான்வந்தனவெனினும் போல
வென்னுஞ்சொல் புலிபோலவந்தானென வினையெச்சவாய்பாட்டான் வினைகொண்டும்,
புலிபோலும்மறவ னென்புழியும் புலிபோன்ற மறவ னென்புழியும் பெயரெச்சவாய்பாட்டாற் பெயர்கொண்டும்,
புலி போன்மறவ னென்புழி யிடைச்சொல்வாய்பாட்டாற் பொதுவாயும் நிற்கும்.

இவ் வோதியவாய்பாடெல்லா நாக்குவமத்திற்கும் பொதுவென்ப தீண்டுக் கூறினார்.
இனிச் சிறப்புவகையா னுரியவாம்வகை, ஒல்காப் புலமைத் தொல்காப்பியனாரும், உவமவியலுள்
“அன்ன வாங்க மான விறப்ப, வென்ன வுறழத் தகைய நோக்கொடு, கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம்,”
“அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்,”
“எள்ள விழையப் புல்லப் பொருவக், கள்ள மதிப்ப வெல்ல வீழ, வென்றாங் கெட்டே பயனிலை யுவமம்,”
“கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய, வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென், றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்,”
“போல மறுப்ப வொப்பக் காய்த்த, நேர வியப்ப நளிய நந்த வென், றொத்துவரு கிளவி யுருவி னுவமம்,”
“தத்த மரபிற் றோன்று மன் பொருளே” என்ற சூத்திரங்களா னுணர்க.

இவற்றுள், அணியென்பது முதலாய சிலவுருபுக ளீறுவிகாரப் பட்டுநிற்பனவு முள.
அஃதேல் அணி, வந்த, துலை என்னு முருபுகள் முன்னோர்கூறிய வுவமவுருபுத்தொகைச்சூத்திரங்களு ளில்லையாலோ வெனின்,
அவை “முலையணிந்த முறுவலாள்” எனவும்,
‘கயல்வந்த கண்ணியர்’ எனவும்,
“தோல்வி, துலையல்லார் கண்ணுங் கொளல்” எனவும் இலக்கியங்களுட் கண்டமையாற் காட்டியதெனக் கொள்க.
ஒழிந்தனவாய் மறைந்த வுவமவுருபுகட்கு மீண் டிலக்கியங் காட்டி லிறப்பப் பெருகும். அவைகட்கும் வந்தவழிக் கண்டுகொள்க.

2-வது உவமையலங்காரம் முற்றும்.

——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–சிறப்புப்பாயிரம்–பொதுவியலுரை –ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சிறப்புப்பாயிரம்

இனிச் சிறப்புப்பாயிரமாவது பதினொருவகைத்தாம். அவை வருமாறு.

60.எல்லைவழிநுதலியபொருள்யாப்பே
நூற்பெயர்நுவல்வோன்பெயர்காரணம்பயன்
காலங்கேட்போர்களனெனப்பதினொரு
பால்புணர்த்துரைப்பதுசிறப்புப்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) எல்லையும், வழியும், நுதலியபொருளும், யாப்பும், நூற்பெயரும், நூனுவல்வோன்பெயரும்,
காரணமும், பயனும், காலமும், கேட்போரும், களனும் என்னும் பதினொருபகுதியாகச் சேர்த்துக் கூறுவது
சிறப்புப்பாயிரமா மென்றவாறு.

புணர்த்துரைப்பதென்ற விதப்பினால், நூல்செய்தோன் வழிபடு தெய்வத்தினையும்,
தெய்வமென்பதும் ஒன்றுளதென் றுண்மையுணர்த்திய அவனது ஞானாசாரியனையும்,
அவன்றாதையையும், குலத்தினையும் பதியினையும், அப்பாயிரத்துட் கூறுவதும் வரலாற்று
முறைமையினான் மரபெனக் கொள்க. எனவே பதினாறென்ப துட்கோள்.

இனிச் சிறப்புப்பாயிரத்தினதிலக்கணஞ் செப்புமாறு :-

61.சிறப்பினதியல்பேதெரியினூனுதலிய
திறப்படுபொருளைத்தன்னகத்தடக்கி
யகவலின்வெள்ளையினறைவதொன்றாகும்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தி னிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) சிறப்புப்பாயிரத் திலக்கணத்தை யாராயுமிடத்துப் புலவனா லுரைக்கப்படும் நூனுதலிய பொருளை
யெல்லாங் குறிப்புரையானன்றி வெளிப்படையாக அடக்குவாய்செய்து ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல்
கூறத்தகுவதொன்றா மென்றவாறு. சிறப்பென்ற தீண்டொன்றற்குரிய தென்பதாம்.

62.கலைகள்யாவையுங்கற்றுரைதெளிந்து
துலைநாச்சமனிற்றுணிநிலைபுரியும்
வாய்மையும்பிறர்க்கவைமயர்வறவளிக்குந்
தூய்மையுஞ்சான்றதுணையிலனெனினு
மொல்காப்பதினெண்ணுறுப்புடைநாற்பொருட்
பல்காப்பியம்பழிப்பறநவம்புணர்க்கவு
முத்தமிழ்க்கல்வியுமுத்தமவாக்கின்
வித்தகக்கவிதையும்வேண்டினனாகிலுந்
தற்புகழ்தலும்பிறன்றன்னையிகழ்தலும்
பொற்பலவாகும்புலனுடையோர்க்கே.
(எ-ன்) நூல்செய்தான் பாயிரஞ்செய்வானல்ல னென்பதுணர்-ற்று.

(இ-ள்) இலக்கண இலக்கியங்களை முற்றப் பாடம்போற்றி யுரையைச் சந்தயமறத் தெளிந்து
துலைநாப்போன்றும் துலாக்கோற்சமன் போன்று மையமுற்றபொருளை யையமறக் கேட்டோர்க்குணர்த்து

மொப்பிலாதானா மெனினும் எழுத்தாகிய வைந்திலக்கணங்களையும் பதினெட்டுறுப்போடு நாற்பொருள்
பயப்பதாய பெருங்காப்பியங்களையுங் குற்றமறப் புதிதாய்ப் பாடல்சான்றவனா மெனினுந் தன்னைப் புகழ்தலும்
பிறனொருவனை யிகழ்தலு முணர்வுடையோர்க் கழகல்ல வென்றவாறு.
இன்னும், “தோன்றாதோற்றித்துறைபலமுடிப்பினுந்தான்றற்புகழ்ந்தறகுதியன்றே” என்பதனாலுங் கொள்க.

63.பன்னருஞ்சிறப்புப்பாயிரம்பகர்வோர்
தன்னுயிர்பேணுஞ்சதிராசிரிய
னொருபுடைகற்றவுயர்மாணாக்கன்
றன்னொடுகற்றதலைமாணாக்க
னுரைகாரணனெனுமுரனுடையோரே.
(எ-ன்) பாயிரஞ் செய்தற்குரியோரை யுணர்-ற்று.

(இ-ள்) கூறுதற்கரிய சிறப்புப்பாயிரங் கூறுதற்குரியோரிந் நால்வரு ளொருவராமென்பது.
அந்நால்வருள்ளு மிப்பாயிரஞ்செய்தா ரிந்நூற் குரைசெய்த திருமேனி யிரத்தினகவிராயனென்றுணர்க.
நூலாசிரியர்க்கு மாணாக்க னென் பதனாலுமாம்.

‘உலகம்யாவையும்………. புலமையோனே’.
(எ-ன்) அலங்காரத்தினது பெருந்தன்மையு மிந்நூற்குச் சிறப்புப் பாயிரமு முணர்ற்று.

உலகம் யாவையு மென்பது முதல் வடவேங்கட மென்னு மத்துணையு மொருதொடர்.
இதனுள், உலகமென்பது “மூன்றுதலையிட்ட முப்பதிற்றெழுத்தி, னிரண்டுதலையிட்ட முதலா………
மெய்யேயுயிரென் றாயீரியல” என்பதனால் உயிர்முதன் மெய்யீற்றுமொழியாயிற்று.

உலகம் யாவையு மென்பது “உயிரிறுசொன்முன்னுயிர்வருவழியு, முயிரிறுசொன்முன்மெய்வருவழியும்………
மென், றாயீரியல புணர்நிலைச் சுட்டே” என்பதனாலும்,
“அவற்றுள், நிறுத்த சொல்லினீறா கெழுத்தொடு, குறித்துவருகிளவி முதலெழுத்தியையப், பெயரொடு
பெயரைப் புணர்க்குங்காலு…………. மூன்றே திரிபிடனொன்றே யியல்பென, வாங்கந்நான்கேமொழிபுணரியல்பே”
என்பதனாலும் இவை உயிர்முதன் மெய்யீற்றுமொழி நிற்ப மெய்ம்முதன் மெய்யீற்றுமொழி வரு மொழியாய்ப் பெயரொடு
பெயரைப் புணர்ப்பதாய் “வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரினியல்பும்முள” என்பதனால்
அல்வழிக்கண் ணிலைமொழியீற்று மகரம் வருமொழி முதல் யகரத்தோடு புணர்ந் தியல்பாயது.

யாவையுமுறு வென்பது “புள்ளியில்லாவெல்லாமெய்யும்,………. ஆயீரியலவுயிர்த்தலாறே” என்பதனால்
அல்வழிக் கண் ணேனையுயிரோ டுருவுதிரிந்துயிர்த்தது. இது எட்டிறந்த பல வகையுட்கூட்டம்.

உறுபய னென்பது “மூன்றாறுருபெண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்” என்பதனால்
வினைத்தொகை வாய்பாட்டு முற்றுகரத்தின்மேல் வருபகர மியல்பாயது.

பயன்விளையென்பது “ணனவல்லினம்வரட்டறவும்பிறவரி, னியல்பு மாகும்வேற்றுமைக்” கென்பதனால்
வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ணிடை யினம்வர னகார மியல்பாயது.

விளைப்பானென்பது “பெயரெச்ச வினையெச்ச வாய்பாடுகளும் பொருண்முடியுமாறறிந்து பகுதி விகுதி யாக்கி
யிடைநிலையும் வேண்டுழித் தந்துமுடிக்க” வென்பதனால் விளைக்கவேண்டி யென்னும் பொருண்மை
தோன்ற விளையென்னும் பகுதியை முதல்வைத்து அதன்மேல் “என்பவும்பிறவும், வினையின்விகுதி” யென்பவற்றால்
பானென்னும் விகுதியை நிறுவிப் “பவ்வமூவிடத்தைம்பாலெதிர்பொழு, திசை வினையிடைநிலை” என்பதனாற்
பகரவிடைநிலையை மிகுத்து முடிக்க

விளைப்பானல கென்பது “புள்ளியீற்றுமுன்னுயிர்தனித்தியலாது, மெய்யொடுஞ்சிவணுமவ்வியல்கெடுத்தே” என்பதனால்
னகரவொற்றியல் பாய்நிற்க வதன்மேல் அகரமேறி முடிந்தது. இதுவுங் கூட்டம்.

அலகிலென்பது “குற்றியலுகரமுமற்றெனமொழிப” என்பதனால் நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம்
புள்ளியீறுபோல வருமொழிமுத லிகரவுயிரேற இடங்கொடுத்தது. இம்மாட்டேற் றொருபுடைச்சேற லென்றுணர்க.
அன்றிக் குற்றியலுகர மழிந்ததெனிற் பொருள் வேறுபடும். அஃதுரையன்றென்க.
இது குறைவுங் கூட்டமு முடனொன்றியது. கருவி-அகக்கருவி. என்னை?
நிலைமொழியீற்றுகரம் வருமொழிமுத லிகரமேற இடங்கொடுத்தலா லென்றுணர்க.

அலகில்சோதியென்பது “அல்வழியெல்லாமுறழெனமொழிப” என்றாராகலின் லகாரம் அல்வழிக்கண் வல்லினம்வர வியல்பாயது.

சோதியணி யென்பது “இ ஈ ஐ வழியவ்வு” மென்பதனால் யகர வுடம்படுமெய் பெற்றது. இது புறப்புறச் செய்கை.

அணிகிள ரென்பது “அல்வழி இ ஐ முன்னராயி, னியல்பு மிகலும் விகற்பமுமாகும்” என்பதனால்
இகரவீற்று வருமொழி முதல் வல்லினம் அல்வழிக்கண் ணியல்பாயது.

கிளர்திரு வென்பது “ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன் முன்வல்லினமியல்” பென்பதனால்
வினைத்தொகைவாய்பாடு மேவல் வினைபோறலின் அல்வழிக்கண் ரகாரமுன் வல்லின மியல்பாயது.

திருவுரு வென்பது “ஏனையுயிர்வழிவவ்வு” மென்பதனால் வகர வுடம்படுமெய் பெற்றது. செய்கை – இதுவும் புறப்புறச்செய்கை.

இனி உலகம் என்பது பலபொருள்குறித்த ஒருசொல்லாயினு மீண்டுச் சிறப்புடையுயிர்கண்மே னின்றது.

உலகம் யாவையு மென்பது “பெயரினாகியதொகையுமாருளவே” என்பதனாலும்,
“காலமுலகமுயிரேயுடம்பே,… பால்பிரிந்திசையா வுயர்திணைமேன” என்பதனாலும்
ஆபல என்பதுபோலப் பிறிதோர்பயனோக்காது உயிர்களோ டமைந்து ஆகிய வென்னும் பண்புத்தொகைவாய்
பாட்டோடும் எல்லாமென்னு மஃறிணைப் பன்மைமுற்றுப் பெயர்ப் பயனிலைக் கொண்டது.
யாவையு மென்னும் பயனிலை தானே யெழுவா யுருபாகி மிகுந்த வென்னும் வினைத்தொகை
முதனிலையாய்த் தன்னெச்சமான வூதியமென்னும் பெயரோடும் வினையெச்சவாய்பா டேற்றது.

அலகில் சோதியென எண்ணையுணர்த்தும்பெயரொடும்புணர்ந் தாகிய வென்னும் பண்புத்தொகை
வாய்பாட்டான் வினையெதிர்மறுத்த பெயரெச்ச வினைக்குறிப்பு, தன்னெச்சமாகிய சோதியென்னும்
பெயரொடு முடிந்தது. “கோளில்பொறியில்”, “கோட்டமில்கட்டுரை” என்பனவுமிது.

சோதியணிகிளர்திருவுரு வென்பது உவமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை யொற்றுமை நயம்
பெற்று மூன்றாவதன்றொகைப் புறத் தும்மைத்தொகையுமுற் றன்மொழித்தொகைப் பெயர்ப்பயனிலை கொண்டது.

உறுபய னென்பது உரிச்சொல்லடையோடுங் கூடிய பண்புப்பெயரெனினுமாம் ;
‘நள்ளிருட்கிடந்தேன்’ என்பதுபோலும். உறுபயன் முத்தி. அணி-கௌத்துவமணி. இவை ஆகுபெயர் ;
என்னை? “அவை தாந், தத்தம்பொருள்வயிற் றம்மொடுசிவணலும்” என்பதனா லறிக.
இனி, “எல்லாத்தொகையுமொருசொன்னடைய” என்பதனால் இம்முத லீரடியுள் உலகம் யாவையு மென்பது
இருமொழித்தொடர்த்தொகைச் சொல்.

உலகம் யாவையு மென்பது முதல் திருவுருவென்ப தீறாயின பன்மொழித்தொடர்த் தொகைச்சொல்.
அவற்றுள்ளும் அலகில் சோதி யணிகிளர்திருவுரு வென்பன அறுவகைத்தொகையு மோ ரள வடிக்கண்ணே யொருங்குதொக்கன.
என்னை? அலகிலவாகிய சோதி களி னொளியைப்போலு மொளியையுடைய வணியையுந் தழையாநின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையானெனத் தொகைதொடர்ந்து நிகழ்ந்தமையா னெனக் கொள்க.
அன்றியும், விளைப்பானென்பதனை யெடுத்தலோசையால் வினைப்பெயராக்கி யிருபெயரொட்டுப்பண்புத் தொகை
வாய்பாட்டான் உறுபயன் விளைப்பானாகிய திருவுருவெனினுமாம். வினைப்பெயர் முற்றாய்ப் பெயர்ப்பெயரே
போல வுருபேற்றலினெனக் கொள்க. இவ்விரண்டிற்கும் விளைப்பான்றிருவுருக் குடிபுகு வடவேங்கட மெனவும்,
விளைப்பானாகிய திருவுருக் குடிபுகும் வடவேங்கடமெனவும் முறையே தொடர்ப்படுத்து முடிக்க.
இச்செய்யுட்குப் புலவீர்கா ளென்னுந் தோன்றாவெழுவாயை முதலேவிரித் துரைநடையொட்டுக.
இவை யிரண்டுமன்றி விளைப்பான் என்பதனைப் படுத்த லோசையால் வினைப்பதமாக்கி,
உயிர்களெல்லா முத்தியை விளைக்கப் படுவா னென்றவ னலகில்சோதி யணிகிளர்திருவுருவெனத்
தன்னெச்சமான பெயர்கொண்ட முற்றாக்குதல் இச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கருத்து.
இம் முற்றிற்கு அதன்பின்னர் அவன் என்னுஞ் சுட்டுப் பெய ரெஞ்சியதாக விரித்து மேல்வரும்
உணர்வுயிரென்பவற்றோடும் புணர்த்து அவன்குடிபுகும் வடவேங்கடமென முடிக்க.

இம் முதலீரடிக்கு மித்துணையும் எழுத்துச் சந்தி முடிவுஞ் சொன் முடிவும் விரித்தனம்.
இங்ஙனம் வகுத்தவற்றுள் இம்முற்றிற்குப் பொருள்கோள் – ஆற்றுநீர். பொருள் – புறப்புறம். திணை – வாகை.
துறை – அருளொடு நீங்கல். என்னை?
“ஒலிகடல்வையகத்து, நலிவு கண்டுநயப்பவிந்தன்று” என்னும் வெண்பாமாலையுள் வாகைத்திணையுளிறுதிச் சூத்திரத்தா னுணர்க.
யாப்பு- குறள்வெண்செந்துறை. அலங்காரம்- ஒருபொருட் கொன்றுபலகுழீஇய பல்பொருளுவமை.
மெய்ப்பாடு – கல்விபற்றிய பெருமிதம். பயன் – ஆதலான் முத்திவேண்டுகில் இக்காயமிருக்கப் பெற்றபொழுதே
இந்திரியங்களையடக்கி, மண் பெண் பொன் என்னும் பற்றினைவிட்டு, மனோ வாக்குக் காயங்களா லவனைச்
சிந்தித்தும் வாழ்த்தியும் வணங்குமின் ; பேரின்பம் பெறலாம் என்பதாம்.

இப்பாயிரச் செய்யுண் முதலீரடியையு மிங்ஙனம் பிரித்துச் சொல்லணிக்கட்காட்டிய பிறிதுபடுபாட்டாக்கியது
பஞ்சாதிகாரவிலக்கண நடைதழீஇய ஒருவகை விரித்துரைகாட்டுதற் கெனக் கொள்க.
இனி ஏனையடிகட்கெல்லாம் இவ்வாறு விரித்துரைப்பி னுரைபெருகுமாதலான் அவற்றிற் கிவற்றிற் சுருங்கக்
கூறுவதையுங் கற்றபெற்றி நற்குணனுடையோர் தெற்றென முற்ற வுய்த்துணர்க.

உணர்வுயிர்………. கவின்பதிநின்று மென்பது அவன் ஆயுவும், ஞானமும்போலத் தன்னுடன்
அளவளா யுத்தமராகிய நித்தர் கூட்டம் விட்டுநீங்காத அழகிய சுவணமயமாம் அந்தாமத்தின்கண்ணு
மவ்வுருநிலை பெற்றிருப்பதோடும் என்றவாறு. உணர்வுயிர்-உம்மைத்தொகை.
கணமகலாத வென்பதற்குக் கணப்பொழுதும் விட்டுநீங்காத வெனினுமாம். என்னை?
“ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்” என்றாராகலின். நித்தர் – அநந்த கெருட சேனாதிபதிமுதலியோர்.
அகலாதபொற்கவின்பதி என்பது “உருபும்வினையுமெதிர்மறுத்துரைப்பினுந்,
திரியாதத்தமீற்றுருபினென்ப” என்பதனால் எச்சப்பெயர் திரிபின்றி முடிந்தது.

உரவுநீர்வளைத்தவொன்பானுள்………. வடவேங்கட மென்பது கடல்சூழ்ந்த பூமியினிடத்துக்
கண்டமொன்பதினுள்ளுந் தென்றிசைக்கட் பரதகண்டத்துள் அந்தாமமாகிய அப் பழம்பழி
பூலோகவைகுண்டமானதென் றுயர்ந்தோர் கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் விசும்பைத் தொடவுயர்ந்த
சோலையையுடைய வடக்கின்கண் வேங்கடமு மென்றவாறு. உரவுநீர் வளைத்த வொன்பானென்பது
அடிப்பட்டபெய ரெஞ்சாது முதனின்று தொடர்ந்த பெயரெச்ச வாய்பாடு தன்னெச்சமான பெயர்கொண்டு முற்றியது.
அடிப்பட்ட பெயரெஞ்சியதாவது உண்டசாத்தன் என்பதற்கு அமுதுண்ட சாத்தன் என்றும்,
உண்டவமுதென்பதற்குச் சாத்தனுண்ட வமுதென்றும் முதலே நின்ற பெயராகிய அமிர்துஞ் சாத்தனும் எஞ்சிநிற்பது.
அஃதீண்டு யாண்டு விரிந்ததெனின்? உரவுநீர் அடிப்பட்டபெயர் ; வளைத்த வென்பது பெயரெச்ச வாய்பாடு ;
ஒன்பான் என்றது தன்னெச்சமான பெயர். ஆதலால் உரவுநீர் வளைத்த என முதலே எஞ்சாது விரிந்தமை காண்க.
இவை வினையெச்சத்திற்குமுள. அவையும் இம்முறையே காண்க.

உரவுநீர் – போக்குவரவு நீர். ஒன்பானுள் என்பது “ஒன்றுமுதலாகப் பத்தூர்ந்துவரூஉ, மெல்லாவெண்ணுஞ்
சொல்லுங்காலை, யானிடைவரினு மானமில்லை, யஃதென்கிளவியாவயிற்கெடுமே, யுய்தல்வேண்டும்பஃகான் மெய்யே”
என்றாராகலின், அஃதென்னுஞ் சொற் கெட்டுப் பகரமெய்நிற்ப வுருபு புணர்ச்சிக்கண் ணிடை ஆன்சாரியை பெற்றது.
ஒன்பானுட் டென்புல என்பது எட்டிறந்த பலவகையுட் டிரிந்ததன்றிரிபு.

கண்டத்துள் என்பது “மஃகான்புள்ளிமுன்னத்தேசாரியை” என்பதனால் அத்துச்சாரியை பெற்று,
“அத்தேவற்றேயாயிருமொழிமே, லொற்று மெய்கெடுதறெற்றென்றற்றே” என்பதனான் மகரங்கெட்டு
“அத்தினகரமகரமுனையில்லை” என்பதனால் அத்துச்சாரியை அகரங் கெட்டது.
அப்பழம்பதி என்பது “வினையெஞ்சுகிளவியு………. சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியு,
ஞாங்கர்க்கிளந்தவல் லெழுத்துமிகுமே” என்பதனாற் பகரமிக்கது. வடவேங்கடம் வேற்றுமைத் தொகை.

இதன் பொழிப்புரை
புலவீர்காள் உயிர்கண்முழுதும் பெறுதற்கரிய முத்தியை விளைக்கப்படுவான் எண்ணிறந்த பலகோடியவா
மிள ஞாயிறுபோன் றொளியையுடைய கௌத்துவமணியையுந் தழையா நின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையான் அவனாயுவும், ஞானமும்போலத் தன்னொடு மளவளாய வுத்தமராகிய நித்தர்
கூட்டந் தனது காந்தியையுங் கருணையையுங்கண்டுங் கருத்துட்கொண்டும் விட்டு நீங்கா தழகிய
சுவணமயமாகிய அந்தாமத்தின்கண்ணும், அகிலபூரணனாகி நிலைபெற்றிருப்பதோடும்
கடல் சூழ்ந்த பூமியின்கண்ணவாங் கண்ட மொன்ப தென்றவற்றுள்ளும் பரதனாற்பெயர்பெற்ற கண்டத்தினுட்
பழம்பதி பூலோக வைகுண்டமானதென வுயர்ந்தோர்கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் என்பதாம்.

அவன் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் எனக் கூட்டுக.
அற்றேல் விளைப்பான்…. திருவுரு என்பது முதலாய வவற்றினிடையிடை பிறபல சொற்றொடர்ந்தவா றென்னையெனின்,
நன்று சொன்னாய் ! “தத்தமெச்சமொடுசிவணுங்குறிப்பி, னெச்சொல்லாயினுமிடைநிலைவரையார்”
என்பதனா லிடையிடையேற்பன அடைச்சொல்லாய்வந்தன.
அஃதாக இங்ஙனந்தொடர்ந்த வவற்றி னிடையிடை பெறுதற்கரியவென்பது முதலாய சொற்கள் கூட்டியுரைத்த
வுரைநடை யாதோவெனின், “சொல்லொடுங்குறிப்பொடுமுடிவுகொளியற்கை, புல்லிய கிளவியெச்சமாகும்” என்றாராகலின்,
கூட்டியுரைக்கப்பட்டது. ஆனாற் சொல்லெச்சங்களேயன்றிக் குறிப்பெச்சமு மிதனுள்ளு முளவோவெனின்,
உள. அஃ தியாண்டுக்குறித்ததெனின், பரமவைகுண்டத்திருப்பவன் அவ னனைத்துலகத்துயிர்கடோறும்
அந்தரியாமியாயிருப்பதோடுங் கைம்மாறின்றியு மிவ்வுலகத்துயிர்கள் பெறுதற்கரிய முத்தியை
யெளிதின் விளைப்பவனாகிப் பரதகண்டத்துட் பழம்பதியெனக்குடிபுகுந்துறையும் வடவேங்கடமெனவே
அவன் பரமகிருபையிருந்தபடியோவெனவும், பரமவைகுண்டத்தினுந் திருமாமணிமண்டபத்தினும்
நித்தர் முத்தரோடுங்கூடிய திருவோலக்கத்திற் குறைவின்றி யிருப்பதோடும்,
வடவேங்கடத்தினுந் தெய்வத்திருமேனியோடுந் தொண்டக்குழாங்கள்
கைதொழக் குடிபுகுந்துநின்ற தென்ன அகடிதகெடித சாமர்த்திய குணமோ வெனவு மீரிடத்துங் குறிப்பெஞ்சிநின்றதெனக் கொள்க.
மெய்ப்பாடு – மருட்கையைச் சார்ந்த பெருமிதம். இவ் வுரைநடையுட் பொழிப்புரை தலைதடுமாறியும்,
பொழிப் பகல நுட்ப மெச்ச மென்னும் நால்வகையுரை நடையும் நிகழ்ந்தமையுங் காண்க.

தெண்டிரை……. ஆயிடை என்பது தெளிந்த திரையார வாரிக்குந் தெற்கின்கட் குமரியும் எல்லையாக
வுடையதென்று கூறப்படுவனவாம்
அவற்றி னடுவிருந்து என்றவாறு ஆயிடை என்பது “நீடவருதல்செய்யுளுளுரித்தே” என்பதனாலும்,
“சுட்டு, நீளின்யகரமுந் தோன்றுதனெறியே” என்பதனாலும் யகரவுடம்படுமெய் தோன்றியது.

அமிழ்தினும்……… மதிக்கும் என்பது தேவர்பானமாகிய வமிர்தினும் பெருத்தசுவையுடைத்தாம்
எழுத்துச் சொற்பொருளென மூன்றுதன்மைத்தாகிய தமிழை யாராயாநிற்கும் அறிவின்றன்மையை
யுடைய பெரியார் நன்குமதிக்கும் என்றவாறு.

முதுமொழித்தெண்டி……… புணர்த்தியலணியையும் என்பது முந்துநூல்களையாராயுந் தெண்டியாசிரியர்
கூறப்பட்ட முதனூலணிகளோடுந் தினமு நவமான பாடலேபாடும் புலவராற்கூறப்பட்டனவா யுலகின்
கண்ணே வழங்குவனவா மணிகள் பலவற்றையும் என்றவாறு.

தனாது நுண்ணுணர்…….. விரித்தும் என்பது தனது நுண்ணிய வறிவுகாரணமாகக் கண்டளித்த
பலவணிகளையுங் கற்றோர் மனத்துட்கொள்ளத் தொகுத்தும், தொகுத்ததனை வகுத்தும், வகுத்தவற்றை விரித்தும் என்பதாம்.
தனாது, மனாது என்பன “ஆறனொருமைக்கதுவு மாதுவும்” என்பதனால் அதுவென்னு மாறனுருபு ஒருமையிடத்து ஆது ஆயிற்று.

பொதுவியல்……… எச்சவியலென வென்பது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென்று
கூறும் படிக்கு என்றவாறு.
இவற்றுள், இயல் என்பதனை நான்கினுங்கூட்டி அணி என்பதனைப் பொருண்முத லிரண்டினுங் கூட்டியுரைக்க.

சதுர்பெற……. சார்பெனலாய் என்பது நால்வகைபெற்றுச் செய்யுளிடம் வழக்கிடமென்னு
மீரிடந்தழுவின சார்புநூலென்பதாக வென்றவாறு.

காரிதந்தருள்……… உரைத்தனன் என்பது அந்நூற்குக் காரியா ருலகின்மன்னுயிர்க ளீடேறப் பெற்றருள்செய்த
நூற்கடலினியற்பெயரால் மாறனலங்கார மென வத் திருநாமத்தின் யவ்வணிக்கணியாகவே யலங்கரித்து
ஞானாசாரியர் குழீஇயதாம் அவையின்கண் ணரங்கேற்றினன் என்றவாறு.

சிற்குணச் சீநிவாதன்……… உணர்வோன் என்பது அவன் யாரெனில்,
சாத்துவிககுணத்தையுடைய சீநிவாதனென்னும் ஞானாசாரிய னினியகருணையால் நன்பொருளாகிய
சித் தசித் தீச்சுரமென்னும் மூன்றினையும் உணர்த்தும் ஞானநூல்களை நாடோறும் பேரானந்த மிகும்படி யாராய்வோன் என்றவாறு.
“வேண்டியகல்வியாண்டுமூன்றிறவா” தென்பதனால் உணர்வோனென நிகழ்வு மெதிர்வும் பெறக் கூறினாரென்றறிக.

பெருநிலம்…….. வருமனகன் என்பது பெரியவுலகினிடத் துயர்ந்தோர் கீர்த்திக்குந் திருக்குருகைப்பெருமாள்
பெற்றருளும் அழுக்கற்றவன் ; புண்ணியன். என்றவாறு.

செழுந்தேன், மருக்கமழ்சீரகத்தார் வணிகன் என்பது வளமையை யுடைய தேனினது பரிமளம்
பரிமளிக்குஞ் சீரகத்தார்புனைந்த வணிகர் குலத்துள்ளான் என்றவாறு.

புகழ்த் திருக்குருகைப்பெருமாள் கவிராயன் என்பது கீர்த்தியையையுடைய திருக்குருகைப்பெருமாள்
கவிராயனென்னுஞ் சிறப்புப்பெயரை யுடையோன் என்றவாறு.

அருட்குணத்துடன்வளர்சடையன் என்பது கருணைக் குணத்துடன் வளராநின்ற சடையன் என்னு மியற்பெயருடையோன் என்பதாம்.

பொருட்டொடர் நவம்புணர் புலமையோன் என்பது பெருங்காப்பியம் புதிதாகப் பாடல்சான்ற
அறிவின்றன்மையையுடையோன் என்றவாறு. ஏகார மீற்றசை.

வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமென்னக் கூறப்படுவனவா மவற்றினடுவிருந்து
தமிழை யாராயு முணர்வுடையோர் நன்குமதிக்குந் தெண்டிமுதனூலணியொடும் புலவர் புணர்த்து
வழங்கு மணியையுந் தனது நுண்ணுணர்வாற் கண்டளித்த பலவணியையுங் கற்றோர்
மனத்துட்கொளத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் நால்வகை யியலா னீரிடம்பொருந்தின சார்பு நூலென்பதாகவும்,
அந்நூற்குக் காரி யார் பெற்றருள் கலைக்கடலியற்பெயரை யணியாகப் புனைந் தாரியர்குழீஇய வவையின் கண் ணரங்கேற்றினன் ;
அவன் யாரெனிற் சிற்குணச் சீனிவாதனின்னருளால் நற்பொருண் மூன்றையு மாராய்வோன்
திருக்குருகைப் பெருமாள்கவிராயன் சடையன் பொருட்டொடர்நவம்புணர் புலமையோ னென்க.

அஃதாக முன்னர்ச் சிறப்புப்பாயிரம் பதினொருவகைப்படுமெனக் கூறிய வப்பதினொன்றும்
இப்பாயிரத்துட்பெற்றவா றெங்ஙனேயோ வெனின்?
வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், முதனூலணியொடு மெனவே வழியும் நுதலிய பொருளும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபல வணியையு மெனவே காரணமும், பயனும்,
பொதுவியல் பொருள்சொல் லணியெச்ச வியலென வெனவே யாப்பும்,
காரிபெற்றருள் கலைக்கடலியற்பெயர்புனைந் தெனவே நூற்பெயரும்,
ஆரியர் அணிற வவைக்களத்துரைத்தன னெனவே கேட்டோரும்,
களனும் திருக்குருகைப்பெருமாள்கவிராயன் சடையனெனவே நூல்செய்தோன்பெயரும்,
காலமும் ஆகப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெற்றவாறு காண்க.

அன்றியும்,
நூல்செய்தோன் வழிபடுதெய்வமும் தெய்வத்து ளிதுவே பரத்துவமென்ன வறிவித்த ஞானாசிரியனும்,
நூல்செய்தோன் பிதாவும், குலனும், பதியும் கூட்டிப் பதினாறென்னுமவையும் இப்பாயிரத்துட் பெற்றவாறு காண்க.

இஃ திருபத்தாறடியான் வந்த நேரிசையாசிரியப்பா. என்னை? “ஈற்றயலடியேயாசிரியமருங்கிற், றோற்றமுச்சீர்த்தாகுமென்ப” என்றாராக
லின். இவ்வாசிரியப்பா முதலீரடியையுங் குறள்வெண்செந்துறை யாக்குதலாற் சொல்லணியுட் சித்திரப்பாவினுட் பிறிதுபடுபாட்டாயது.

64.பாவிற்கணிபோற்பனுவற்றெளிவுணர்ந்தோர்
நாவிற்குவாய்மைபோனாரணனாந்-தேவிற்கு
வாய்ந்தவருள்போலவாய்ந்ததேநூலகத்தா
யேய்ந்தபொருட்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது சிறப்பிற் குவமையுணர்ற்று.

இதனுள், வாய்மை – சத்தியவசனம். கற்றகல்வியைப் பிறர்க்குச் செலச்சொல்லுதலுமாம்.
நூலகத்தா யேய்ந்தபொருட்பாயிரம் என்பதனாற் சிறப்புப்பாயிரம்.
நூலகத்தா யேய்ந்தபொருள் புலவன்கூறிய வவ்வவ நூலுக்குச் சிறந்தபொருள்களா மெனவுணர்க.

பாயிரவுரை முற்றும்

————–

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

ஸ்ரீ :
மாறனலங்காரம்
முதலாவது
பொதுவியலுரை

65.திருப்பாவையென்னத்திருந்தியற்பாத்தந்த
திருப்பாவைவில்லிபுத்தூர்ச்செல்வி-யருட்பார்வை
வாய்ந்ததனாற்செய்யுள்வழக்கென்றிரண்டிடத்தா
லாய்ந்துரைப்பல்செய்யுளணி.—என்பது சூத்திரம்.

இவ் வதிகார மென்னுதலிய வெடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின்,
அதிகார நுதலியதூஉ முன்னர்க்கூறிப்போந்த சிறப்புப்பாயிரத்தானே யுணரப்படும். என்னை?
“தனாதுநுண்ணுணர் வாற்றருபலவணியையும்” என்பதனாலுணர்க.
ஆயின், இவ் வணியதிகாரத்து ளணியிலக்கண மெனைவகையோத்தினானுணர்த்தினாரோ வெனின்,
இனைவகையோத்தினா னுணர்த்தினா ரென்பதூஉம் அச்சிறப்புப் பாயிரத்தானே விளங்கும். என்னை?
“பொதுவியல்பொருள்சொல்லணி யெச்சவியலென” எனக் கூறியதனாலுணர்க.
அஃதாக, இவ் வதிகாரத்தின் முதற்கணோத்தினைப் பொதுவிய லென்ற தென்னையெனின்,
அணி பெறுஞ் செய்யுள்கட்கும், பொதுவான வொருசாரணிக்கும் பொதுவிலக்கண முணர்த்தினமையாற் பொதுவியலென்னும் பெயர்த்தாயிற்று.
இவ்வோத்தினு ளிச்சூத்திர மென்னுதயில்றோவெனின், ஒருசாராசிரியர் வேண்டுஞ் சிறப்புப்பாயிரமுணர்-ற்று. என்னை?
“தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளு, மெய்தவுரைப்பதுந்தற்சிறப்பாகும்.” என முன்னையோர் கூறிய முறையானும்,
“கடவுள்வணக்கமுங்கருதியபொருளுந், திடனுறப்புகல்வதுஞ்சிறப்பென்றாகும்.” என இந் நூலுடையாருங் கூறிய முறையானு முணர்க.
உம்மை இறந்தது தழீஇயிற்று. அன்னவாறாதலிச்சூத்திரத்திற்குப் பொருளுரைப்பவே விளங்கும்.
ஆனா லிச் சூத்திரச் சொற்பொருள் யாதோவெனின், அப் பொருளுரை நான்குவகைப்படும் ;
கருத்துரைத்தலும், கண்ணழித்துரைத்தலும், பொழிப்புத்திரட்டலும், அகலங்கூறலும் என. என்னை?
“உட்கோள்கண்ணழிப்புடன்பொழிப் பகலஞ், சுட்டிக்கூறல்சூத்திரச்சொற்குரை” எனவரும்.
அவற்றுள்ளும், கருத்துரைத்தலாவது சூத்திரத்தினுட்கோளுரைத்தல். என்னை?
“கருத்துரை சூத்திரத்துதிரட்கோள்கழறல்” எனவும், கண்ணழித்துரைத்தலாவது சூத்திரத்திற் சொற்றொறுஞ் சொற்பொருளுரைத்தல். என்னை? “தொகுத்தசொற்றொறுஞ்சொற்பொருளுணர்த்த, லடுத்த கண்ணழிப்பென்பர்கற்றவரே’ எனவும்,
பொழிப்புத்திரட்டலாவது சூத்திரத்திற் பொருளையெல்லாந் தொகுத்துரைத்தல். என்னை?
“ஒலிகெழுசொற் பொருள்களைத் தொகுத்தொருங்கே, பொலிவுறத் திரட்டியுரைப்பது பொழிப்பே” எனவும்,
அகலமாவது சூத்திரத்திற் பொருளைச் செம்மை செய்தற்குக் கடாவும் விடையு முள்ளுறுத்தி விரித்தல். என்னை?
“மனாது றும்யாப்பின்மரீஇயசொற்பொருளை, வினாவினும்விடையினும் விழுப்பொருளாக்கி,
யகற்றுபுவிரித்துரைப்பதுவேயகலம்” எனவும் இந் நூலுடையார் கூறிய சூத்திரங்களானு முணர்க.

இவ்வகையெல்லா மிச்சூத்திரத்தினுட் பெறுமுறை யெங்ஙனேயோ வெனின்,
“திருப்பாவை…….. யருட்பார்வைவாய்ந்தனா” லெனவே கடவுள்வணக்கஞ் சொன்னவாறு.
“செய்யுளணி” யெனவே அதிகாரத்துட் கருதியது சொன்னவாறு. அதிகாரம்-முறைமை. இதனாற் கருத்துரை முற்கூறப்பட்டது.

இனிக் கண்ணழித்துரைக்குமாறு :- திருப்பாவையென்ன வென்பது அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக என்றவாறு.
திருந்தியற் பாத்தந்த வென்பது நிரம்பிய இலக்கணத்தையுடைய பாட்டை யுலக மீடேறப் பாடித்தந்த என்றவாறு.
திருப்பாவை வில்லிபுத்தூர்ச்செல்வி யென்பது திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர்த் திருவுடையாள் என்றவாறு.
அருட்பார்வை வாய்ந்ததனா லென்பது அவளது கருணையோடுங் கூடிய திருக்கண்ணோக்கம் எனக்கே பலித்ததனால் என்றவாறு.
செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா லென்பது செய்யுளென்றும், வழக்கென்றுஞ் சொல்லப்பட்ட இரண்டிடங்களானு மென்றவாறு.
ஆய்ந்துரைப்பல் செய்யுளணி யென்பது (செய்யுளணி யாய்ந்துரைப்பலெனப் பாடமாற்றி) முன்னோர் கூறிய
செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.

அணியென்ப தீண்டணியிலக்கணங்களை. செய்யுட் கழகு கொடுத்தலின் அணியென்றாயிற்று.

இனிப் பொழிப்புத் திரட்டுமாறு :-
அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக நிரம்பிய இலக்கணத்தை யுடைய பாட்டை யுலக மீடேறப்
பாடித்தந்த திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூர்த் திருவுடையாளது
பரம கருணையோடுங் கூடிய திருக்கணோக்கஞ் சிறிது மறிவிலனா மெனக்கே பலித்ததனாற் செய்யுளென்றும்
வழக்கென்றுங் கூறிய விரண்டிடங்களாலு முன்னோர் கூறிய செய்யுளிடனாகத் தோன்று மணி
யிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.

இனி, அகலமாவது விரித்துரையாதலால் இதற்கும் விரித்துரை யீண்டுக்கூறின் உரைபெருகுமாதலா லதனை
யுள்ளுறுத் துய்த்துணர்ந்துகொள்க. அஃதாக ; முன்னோர்கூறிய இலக்கண நூல்க ளெனை வகை
யோத்தினானுணர்த்தினாரெனினு முற்று மொருபாவினாற் கூறவும், இந்நூலுடையார் பொதுவியலொன்றையும் வெண்பாவாற்கூறி
யேனை யியல்கண் மூன்றினையும் ஆசிரியத்தாற்கூறிய தென்னையோவெனின்,
நன்றுசொன்னாய் ! இக் கடாவிற்கு, எதிரது போற்றலென்னு முத்தியாற் பாயிரத்துள்,
“விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு, மதியாலுரைத்ததும் வழங்கன்ஞாபகமா” எனக்கூறிய சூத்திரத்தா னுணர்க.

66.வெண்பாவகவல்விரிகலிப்பாவஞ்சிப்பா
பண்பார்மருட்பாபரிபாட-லொண்பா
வினமென்றாலித்திரண்டாறீராறவாய்ச்சென்
றனமுந்து நூல்கற்றது.
(எ-ன்) முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கண முரைப்பலென்றார்;
செய்யுளுணர்ந்தே அணி யுணரப்படுமாகலான், அணிபெறுஞ்செய்யுளின் பெயரும், முறையும், தொகையு முணர்ற்று.

(இ-ள்) செய்யுளெனத் தொகையா னொன்றாய்நின்ற அது, வெண்பா அகவல் என வகைவரையறை யிரண்டாய்
அவற்றின் மரபு மிக்க கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என நான்கினோடும் விரிவரையறை யாறாய்ச்
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்ற வோசை யுடைத்தாய் விரியொடுநின்ற வாறனுள்
வெண்பா முதலாய நான்கென்னு மொள்ளிய பா இன மெனப் பன்னிரண்டாய் முந்துநூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு.

என்றென்பது எண்ணிடைச்சொல். அதனைப் பா, பாவின மென்னு மெல்லாவற்றினும் பிரித் தேற்றுக. என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்ப வாசலின்.
அது “வினைபகையென்றிரண்டினெச்ச” மென்பதுபோலக் கொள்க. இரண்டாறீராறென்பன நிரனிறை.
ஆயென்ப திறுதிவிளக்கா யீண் டாக்கத்தினைக் காட்டியது. ஒலித்தாயென்ப துடைமைவினைக் குறிப்பு.
“மருட்பாவேனையிருசாரல்லது, தானிதுவென்னுந் தனிநிலையின்றே” என்பதனால் அதற்குச் செப்பலும் அகவலுங் கொள்க.
“பரிபாடல்லேதொகைநிலைவிரியி, னிதுபாவென்னுமியனெறியின்றிப், பொதுவாய்நிற்றற்குமுரித்தெனமொழிப” என்பதனால்
அதற்கு முழுதுமிசையாய்க்கொள்க. இப்பெயர் பெயர் ; இம்முறை முறை ; இத்தொகை தொகை எனக் கொள்க.
இவற்றுள் வெண்பா முதல்வைத்தது தலைதடுமாற்றமெனினுமாம்.
ஆயின் முதலே யணியிலக்கணங் கூறுவலெனப்புகுந் தீண்டுச் செய்யுளிலக்கணங்கூறிய முறையான்
மற்றொன்று விரித்தலென்னுங் குற்றமாமெனின், ஆகாது. என்னை?
எழுத் தசை சீர் தளை யடி தொடை யென்னு மாறுறுப்பின திலக்கணங்களைக் கூறி யவற்றானாய பாவினைத்
தளையானும், அடியானும், தொடையானும், ஓசையானும், பொருளானும் வேறுபட்டமைகூறி
யினங்களையு மவ்வகையே கூறா திவ ரீண்டைக்கே வேண்டுஞ் செய்யுட்களது தொகை வகை மாத்திரமே கூறினமையா னெனக் கொள்க.

67.ஆற்றலணிக்கண்ணவைமுத்தகங்குளகந்
தோற்றுந்தொகையேதொடர்நிலையென்றேற்புடைய
வென்றுமவற்றுளெழுவாய்தனிநின்று
சென்றுபொருண்முற்றுந்திடன்.
(எ-ன்) இதுவும் அங்ஙனம் விரிந்தபாக்க ளணிபெறுதற்பொருட்டுச் சிறப்பிலக்கணத்தா லவற்றிற்கு
மீட்டு மொருவகைப் பெயரு முறையுந் தொகையு முணர்-ற்று.

(இ-ள்) வகையினும் விரியினுங்கூடி யிரண்டா றீராறென்னுஞ் செய்யுட்களாகிய வவை பெருமையுடைய
வணியிலக்கணங்களிடத்து முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலையெனச் செய்யு ணான்காகப்
பொருணோக்கத்தாற் றொகைபெற்று எக் காலத்திற்கும் பொருந்துத லுடையனவாம்.
அந்நான்கனுள் ஆதியாகிய முத்தகச்செய்யு ளொன்றாக நின்று திடனாகச்சென்று புலவன் குறிக்கப்பட்ட
பொருளைப் பயந்து முற்றுப்பெறு மென்றவாறு.
இவற்றுள் முத்தகம், குளகம் என்பன வடமொழிப் பெயர். ஏனையவிரண்டுந் தமிழ்மொழிப் பெயர்.
அவை யங்ஙனமாமாறு மே லறியப்பெறும். நிலையென்பதனை யிரண்டிடத்துங் கூட்டியுரைக்க.
ஆற்றல் – பெருமை. தோற்றுதல் – உண்டாதல். சென்றென்பதனாற் செய்யுளின்கண் ணிகழ்ந்த சொற்பொருளொடு
முற்றாது எஞ்சிநின்ற சொல்லேயாயினும் பொருளேயாயினும் கொணர்ந்து முற்றுவிக்க முற்றுமென்பதூஉங் கொள்க.
எழுவாயென்ப தீண் டிடத்தானாகிய ஆகுபெயர். இச்சூத்திரப் பொருள்கோள் மொழிமாற்றெனக் கொள்க.

இனி முத்தகச்செய்யுட் குதாரணம் வருமாறு :-

பொன்னகர்புகுந்தயாணர்ப்புத்தமிர்தம்
பின்னொருநிலத்துப்பிறிதொருபடிவத்
தொருபகலுறைவதன்றெனவுலகுரைசெய
வருள்புரிகடவுளாணையின்வேட்டமுற்
றிகல்புரிவிலங்கினினந்தொலைத்ததற்பி
னகநகர்புரப்பேனயர்வுயிர்த்தற்குப்
பொலந்தகட்டுருளிப்புரவியூர்தியின்
வலம்பயில்பாகன்வரவுறீஇப்புறநகர்த்
தண்ணிழனாடினன்சார்வுழிமனனே
பெண்ணியல்பெருக்கியப்பேரமிர்தெதிர்தலும்
யாவதிவ்வுருவெனவிடைவிடாதுயவலுங்
காவகத்திஃதொருகவினிலைக்களனென்
றுண்ணிகழுழுவலன்புடனின்றூட்டக்
கண்ணயந்தனவாய்க்காமுறக்காண்டொறும்
புகுமுகம்புரிதலிற்புணர்ச்சிமேற்கொளத்
தொகுபதினொன்றுந்தொடர்பிற்றோற்றி
யொளியுமூறுமுரிசையும்வாசமுங்
களியதாய்மிழற்றோசையுமைம்பொறி
யேககாலத்திலவிதழொன்றினுண்
டாகயாவருமணுகாதமைநலன்
வண்டுழாநெகிழ்ந்துமணமலிசெவ்வித்
தண்டுழாயரங்கன்றடந்துறைப்பொன்னித்
திரைவரன்றெறிநித்திலத்திரணிலவெழும்
விரைமலர்பரப்பிமெல்லணைவிரிபுன்னையி
னேந்தெழிற்சினைகவியெழினியுள்
வாய்ந்தருண்மறையார்மனக்கொள்பவரே. (1)

என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமக ளிவ னெக் குலத்தான்கொல்! எவ்விடத்தான்கொல்!
இன்னு மிப்புணர்ச்சிகூடுங் கொல்! இவ னென்னிடத் தன்புடையான்கொல்!
எனக் கூற்றா லையுற் றுரையாளாயினுங் குறிப்பாலையநிகழும்;
அவற்றைத் தலைமக னுளத்தா னுட்கொண்டு நால்வகையையமுந்தீரக் கூறியது.

(இ-ள்) பொன்னகர்……… உரைசெய-மனனே சுவர்க்கத்துட் குடிபுகுந்த அழகிய புதிய அமிர்தங் குடிபுகுந்த
பின்னர்ப் பொன் மயமல்லாத மற்றொருநிலத்தின்கட் சலமயமல்லாத மற்றொரு வடிவெடுத் தொருகணப்பொழுதுந்
தங்குவதன்றென் றுயர்ந்தோர் கூறாநிற்பவும்; அப்பேரமிர்து-அப் பெருமையையுடைய வமிர்தம்;
அகநகர் புரப்பேன்-அகநகரின்கண் ணிருந் துலகினைப் புரக்கு மரசுரிமையுடையேன்;
அருள்புரிகடவுளாணையின்…… தொலைத்ததற்பின்-என்னிடத் தினியகருணையைச் செய்யும்
பால்வரைதெய்வத்தினேவலான் வேட்டைமேன் மனம்வைத் துலகத்துயிர்கட்கு மாறுபாடிழைக்கும்
ஆளி முதலிய விலங்கின்கூட்டத்தைக் குறைத்தபின்னர் ;
அயர்வுயிர்த்தற்கு…. சார்வுழி-அவற்றைத் தொடர்ந் தோடி யாடின வருத்தம் போக்குதற்குப் பொற்றகடு
பொதிந்த நேமியையுடைய குதிரைபூண்ட தேரோடும் வென்றி விட்டுநீங்காத பாகன் சுவடுபார்த்து
வருவனென வுட்கொண்டு புறநகர்ப்பொதும்பர்க் குளிர்ந்தநிழலைநோக்கி யணுகின காலத்து ;
பெண்ணியல் பெருக்கி யெதிர்தலும் – பெண்ணின திலக்கணத்தைத் தனதாகப் பெருப்பித் தெனதெதிர்நிற்ப ;
யாவதிவ்வுருவென……. காண்டொறும்-மலர்மகள் முதலாயினோருருவினுள் யாதுதா னிவ்வுருவமென
நின்னொடுங்கூடி நீக்கமின்றி யுசாவாநிற்ப வுள்ளேநிகழு மெழுகையுந் தொடர்ந்தவன்பு பால்வரை
கடவுளினன்புடன்கூடி யிக்காவகத் திவ் வுருவ மலர்மகண்முதலாயோர் காந்திகளெல்லாந் திரண் டேகமாகக்
குடியிருப்பதேப ரிடவகைதானென் றுணர்வினு ளொன்றுவிப்ப வந்நிலையே கண்க ளிவ்வுருவினை
விருப்புற் றுட்கொண்ட விருப்பமிகையானே நோக்குந்தொறும் ;
புகுமுகம்புரிதலின்…… அமைநலன்-எனது நோக்கிடமாகப் புகுந்து தன்கண் விரும்பிநோக்குதலால்
யான் புணர்ச்சிமேன் மனம்வைப்பப் புகுமுகம் புரிந்தபின் பொருளிலக்கணந் திரட்டியுரைத்த பொறிநுதல்வெயர்த்தன்
முத லிருகையுமெடுத்த லீறாய பதினொருமெய்ப்பாடு மொன்றன்பின்னொன்று தொடர்புடைத்தாகத் தோற்றிக்
கண்டுற் றுண் டுயிர்த்தலாகிய நான்கோடு மென்மேல்வைத்த கருணையுடைத்தாய் மிழற்றுமோசையு மெனக் கேட்பதுமாக
வைம்புலன்களையு மென தைம்பொறிகளும் ஒரு காலத் திலவமலர்போன்ற வதரமொன்றின்கண் ணுகர்ந் தாக்கமெய்த
விருதலையினும் வழிபடும் யாவரு மணுகாதபடிக் கேகாந்தமாக முழுத்த வின்பத்தை ;
வண்டுழா…….. பொன்னி-சுரும்புக ளாறுதாளி னாலுந் துவைப்ப முகைவிண்டு பரிமளத்தை மிகுப்பதாங்
குளிர்ந்த துளபமாலிகையையுடைய அரங்கேசனது தடந்துறைவாய்ந்த திருக் காவிரியினடத்து ;
திரைவரன்றெறி……….. வாய்ந்தருண் மறை – பெரிய திருமுகத்துறைத்திரைகள்
கொழித்தெறியுந் தரளத் திரணில விருளைத்துரந்து நிமிராநிற்பப் பரிமளப்பூவாகிய மெல்லிய அணையை
விரிக்கும் புன்னையின்கீ ழுயர்ந்த வழகொடுந் தாழ்ந்தசினைக ளாகிய திரையினுட் டோன்றி யளித்த விராசியத்தை ;
யார் மனக் கொள்பவரே-யாமேயறிவதல்ல துலகத்துள் யாவ ரறிவரென்றவாறு.

இதனுள் ; நாடினனென்பது ‘வினையெஞ்சுகிளவியும்வேறுபல்குறிய’ என்பதனால் வினையெச்சத் தனித்தன்மைத் தெரிநிலைமுற்று.
சார்வுழி என்பது கொள்வுழி, செல்வுழி என்பனபோல ஒற்றீற்று வகர வுடம்படு மெய் வந்தது. உயவல் – உசாவல் ;
“யானொன்றுயவுகோவையசிறிது” என்பதனாலறிக. யாவர்மனக்கொள்பவரென்பது யாரென வகரங் கெட்டது.
யாதிவ்வுரு என்பது யாவ திவ்வுரு வென வகர மிகுந்தது. என்னை?
“பலரறிசொன்முன்யாவரென்னும், பெயரிடைவகரங்கெடுதலு மேனை, யொன்றறிசொன்முன்யாதென்வினாவிடை, யொன்றியவகரம் வருதலுமிரண்டு, மருவின்பாத்தியிற்றிரியுமன்பயின்றே” என்றாராகலின். அப்பேரமிர்து என்பது
“வினையெஞ்சுகிளவியு முவமக்கிளவியு, மெனவெ னெச்சமுஞ்சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியும்,
ஞாங்கர்க்கிளந்தவல்லெழுத்துமிகுமே” என்பதனால் வல்லொற்று மிகுந்தது.

இச்செய்யுளின்கண் ணகநகர்புரப்பேனெனவே யா னரசனென்னுங் குலனும், புறநகர்சார்வுழியெனவே
“ஒன்றேவேறேயென்றிருபால்வயி” னென்பதனால் ஒரு நகருள் அகநகரும் புறநகரும் என்னு மிடமும்,
உண்ணிகழுழுவலன்புடனின்றூட்ட வெனவே உழுவலன்பாற் பண்டும் பயின்றுவருகின்ற நட்பு இப் பிறப்பினுங் கூடிற்று ;
இதுபோல இன்னு மிடையிடையே கூட்டநிகழு மென்பதூஉம், அப் பேரமிர்து பெண்ணியல் பெருக்கி யெனவே
நலம்பாராட்டலா லவன் தன்மே லன்புடையா னென்பதூஉந் தலைமக ளுட்கொண்டுணரு மென்பதாம்.
இதனுள், பொன்மயமல்லாத சலமயமல்லாத என்பன முதலாய யாமே யறிவதல்ல தென்பதீறாய சொல்லெச்சங்களும்,
தலைவியுள்ளக்குறிப்பைக் குறித்தானென்னுங் குறிப்பெச்சமும் எஞ்சிநின்று விரிந்து முடிந்த வாறுங் கண்டுகொள்க.

இச் செய்யுள் “அகன்றுபொருள்கிடப்பினு மணுகியநிலையினு… மாட்டெனமொழிப்பாட்டியல்வழக்கின்” என்பதனால்
மாட்டென்னு முறுப்பாற் பொருள்கோள் நிகழ்ந்தவாறுங் காண்க.
இது மருதநிலத்தலைமகன் பாலதாணையின் ஆயத்தைநீங்கிய மருதநிலப் புறநகர்த்தலைவியை யெதிர்ப்பட்டுக்கூடிய
களவொழுக்கக் கந்தருவம். என்னை?
“முதலொடும்புணர்ந்தயாழோர்மேன, தவலருஞ்சிறப்பினைந் நிலம்பெறுமே” என்றாராகலின்.

இனிவருஞ் செய்யுட்கு மிவ்வாறு விரித்துரையெழுதாததற்குஞ் சொற்றொறும் பொரு ளுய்த்துணர்ந்து கொள்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சி மகிழ்தல்.

முயற்சியொன்றின்றாய்நெருநன்முழுநல
னியற்றியதெய்வதமிறவாதிருப்பதொன்
றென்றுணர்ந்துழப்புறினின்றுமாங்கெதிர்தன்
மன்றவென்றுறுதலின்மடந்தையர்குழாமொரீஇ
மடந்தபமாணிழைவணரிணரைம்பா
லிடந்தலைப்பாட்டினெய்தின்பநன்பனுவலைத்
தேரின்பத்தையுஞ்சிறிது நில்லாதே
பேரின்பமதாய்ப்பெருகவுமன்னோ
சிற்றின்பமெனத்தீர்ந்தனராகிச்
சொற்றமிழ்மாறனைத்துதிக்குமெய்த்தொண்டர்
பற்றறுத்துணர்த்தியபாசுர
முற்றிடிலாசங்கையதாமொன்றே. (2)
என்பது இடந்தலைப்பாட்டின் கூட்டத்திறுதிக்கட்டடலைமகன் சொல்லியது.

(இ-ள்) மனனே ! நம்மிடத்து முயற்சி சிறிது மில்லையாகவும் நெருநற்று நமக்குப் பெருத்த வின்பத்தை யுண்டாக்கித்
தந்த தெய்வமான தென்று மிறவாதிருப்பதொன்றாமென்றறிந் தினி நாஞ் சிறிது முயற்சி யுறி னின்று
மத்திருவுரு முதுனாட்கண்டவிடத் தெதிர்தல் சந்தய மில்லையென் றியா முறுதலோடு மிகுளையர்குழாத்தைவிட்டுநீங்கி
நம்மிடத்து வைத்த வேட்கையாற் றன்னிடத்தொன்றிய மடமையுந் தன்னை விட்டுநீங்க மாட்சிமைப்பட்ட அணிகளோடுங்
கடைகுழன்று பூங்கொத்துச்செருகிய குழலினையுடையா ணம்வரவுபார்த்துநின்ற விடத்துத் தலைப்படுதலாலெய்திய வின்பமானது,
நன்பனுவல்களை யாராய்ந்து நமதுண்ணின்ற வின்பத்தைச் சிறிது நிலைபெறாதே பெயர்க்கப்பட்டதா
யவ்வின்பநின்றவிடங்கொண் டாராவின்பமாகப் பெருகா நிற்ப இதனைச் சிறியதாகிய வின்பமென விட்டுநீங்கினராகிச்
செஞ்சொற் றமிழாகிய திருவாய்மொழிபாடிய காரிமாறப்பிரானை வாழ்த்து முண்மைத்தொண்ட ரிவ்வுலகத்து
மகளிரிடத்தெய்து மின்பத்தின்மேல் வைத்த வாசையைவிட்டுப் பரமபதத்தின்பமே தெவிட்டாதவின்பமென
முன்னமுணர்த்திய முதுமொழி யிதுபொழுது விசாரிக்கிற் சந்தயமாவ தொன் றென்றவாறு.

மனனே என்பது தோன்றாவெழுவாய்.
நின்றவென்பது முதலாய சொல்லெச்சங்களையு மாங்காங்கு வருவித்துக்கொள்க.
மன்-ஆக்கம். ஓ- அசை. பகுதி – இடந்தலை. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.

முதல்வனிற்பெறுநூன்முதற்றாயெனலாய்ப்
புதல்வனிற்பிறந்தவழிநூற்பொழிப்புரை
செலச்சொலுங்குரவனிற்றெளிந்தோர்தமக்கவ்
விலக்கணவிலக்கியமீந்தவின்பத்தினு
நயப்படவிரித்துரைநடைதாந்தமது
முயற்சியினுணர்வுழிமுன்னுமின்பத்தினு
முணராநுட்பமுமெச்சமுமொருபுடைப்
புணர்மாணாக்கரிற்புலப்படுமவர்பா
லெய்தியதெவிட்டாவின்பமொன்றெனலாம்
பொய்கையுட்கராமொடுபொருதுநைந்தழைத்த
கடமலைக்குதவியகண்ணன்
வடமலைமடவரல்வாய்ந்தருணலனே. (3)
என்பது பாங்கற்கூட்டத்திறுதிக்கட் டலைமகன் புணர்ச்சிமகிழ்தல்.

(இ-ள்) மனனே ! முதல்வனா லமைத்தருளப்பட்ட முந்து நூல் நற்றாயாக அதற் கொரு புதல்வனைப்போலப்
புலவராலமைக்கப்பட்டுண்டான வழிநூலின்பொழிப்புரை முதலே கேட்போ ருணர்வுட்கொள்ளப் புகலுங்
குரவனாற் றெளியப்பட்டோர்க் கவ் விலக்கண விலக்கியங்கள் புரந்தவின்பத்தினும் நன்குமதிப்பதாக
வந்நூல்கட் காசிரியர் விரித்துரைப்பதாய வுரையினது ஒழுக்கத்தை யவ்வுரைகோளாளர் தமதறிவுடன்
முயற்சியாலுணர்ந்தவிடத்துண்டான இன்பத்தினும் நூல்களிடத் துணரப்படாத வரும்பதநுட்பமும் எச்சமும்
தம்மொடு கற்ற வொருபுடைமாணாக்கராலாராய்ந் தறிவிற்புலப்பட்ட வவர்பா லெய்தி தெவிட்டாவின்பம்போலு மொன்றெனலாம்,
பொற்றாமரையோடையினிடத்துக் கராமொடுபொருது நொந்தழைத்த கடாத்தொடுகூடிய மலைபோன்றயானைக்
கதனுயிர்பிழைப்பான் சென்றுதவிய கண்ணனது வடக்கின்கண் வேங்கடவெற்பினிடத்து மடவரல் தோன்றிநின்றருளிய பேரின்ப மென்றவாறு.

மனனே என்பது தோன்றாவெழுவாய்.
இதனுள், பொழிப்புரை குரவனிற் றெளிந்தோர்க் கந்நூல்களீந்த வின்பத்தினும் என்பது
முயற்சியின்றி யியற்கையிற் றெய்வத்திற்கூடிய இன்பமதாம்.
விரித்துரை தாந் தம் முயற்சியாலுணர்வுழி முன்னுமின்பத்தினு மென்பது சிறிது முயற்சியா னிடந்தலைப்பாட்டினெய்திய
வின்பத்தினு மென்பதாம். நுட்பமு மெச்சமு மொருபுடைமாணாக்கரி னுணர்ந்தவிடத் தெய்திய
தெவிட்டாவின்பமொன்றெனலா மென்பது பாங்கனாற்கூடிய கூட்டத் தெய்திய வின்பமென்பதாம். இவை குறிப்புவமை.

குலனுந்தொன்மையுங்குணனுந்திருவு
நலனும்பருவமுமுருவமுநயந்தோ
ரறம்புரிகொள்கையோடளவளாய்வாழ்நாட்
டிறம்பாக்கற்புடைச்சேயிழைவயிற்றிற்
கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால்
விருப்பமுற்றதனினுமேம்படுநிலத்துறப்
பிறந்தநன்புதல்வர்பீடுடைமுகமலர்
சிறந்தவர்காண்டொறுஞ்செறிபேருவகை
யாங்கவற்றினுமிகுமரும்புமென்மழலை
யோங்கியசெவிப்புலத்துறவருமுவகை
யுவகையிற்கழிந்தபேருவகையதாகு
மவமதிப்பின்றியேழாண்டமைவெய்தலும்
பொற்புடைக்குரவர்தம்பொன்னடிவணங்குபு
கற்பனயாவையுங்கசடறக்கற்றபின்
கல்வியுங்கவியுங்கவின்பெறச்செலச்சொலு
மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும்
பூதலம்புகழப்பொலிந்துநின்றருளிய
சீதரன்குருகாபுரேசன்சிலம்பின் மதுமலர்ச்சோலையுண்மடவரல்
புதுவதுபுதுவதாய்ப்புரிந்தருணலனே. (4)
என்பது பாங்கியிற்கூட்டத் திறுதிக்கட் டலைமகன் கூறியது.

இதனுள், கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால் விருப்பமுற்றது என்பது இயற்கையிற்கூடிய வின்பவிருப்பத்தை.
அதனினு மேம்படும் புதல்வர்பீடுடைமுகமலர் சிறந்தவர்காண்டொறுஞ் செறிபேரு வகை என்பது
இடந்தலைப்பாட்டிற்கூடிய வின்பமகிழ்ச்சியை. ஆங்கவற்றினுமிகு மழலை யோங்கியசெவிப்புலத் துறவருமுவகை யென்பது
பாங்கற்கூட்டத்திறுதிக்கட் கூடிய வின்பமகிழ்ச்சியை. உவகையிற் கழிந்தபேருவகையதாகுங் கல்வியுங் கவியுங்
கவின்பெறச் செலச்சொலு மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும் என்பது பாங்கியிற்கூட்டத்துக்கூடிய புணர்ச்சியை.
பொருவருமென்பதனை நான்கினுங் கூட்டுக.
குணம்-அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. திரு-செல்வம். அளவளாய் – கலந்து.
திறம்பா – அழியா. அவமதிப்பு – கற்கப்படுநூல்களைக் கற்கநினையாமை – இகழ்தல். இன்றி-இல்லாமை.
செலச்சொலல் – கூறும்பொருள்களறிதற்கரியவாயினுங் கேட்போர்க் கெளியவாய் மனத்துட்கொளக் கூறல்.
கவின்பெற – அழகு பெற. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது மாட்டுறுப்பு மெச்சமு மின்றிவந்த முத்தகச்செய்யுள். என்னை?
“மாட்டுமெச்சமுநாட்ட லின்றி, யுடனிலைமொழியினுந்தொடர்நிலைபெறுமே” என்றாராகலின்.
பகுதி – பகற்குறி. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.

தண்டளவுங்கொன்றையும்பைந்தார்தழைப்பவாய்மயிலின்
கண்டழைப்பவண்டுகளிதழைப்ப–நுண்டுளிசோர்
கார்வரவிதென்றயரேல்கண்ணன்குறுங்குடியார்
தேர்வரவிதென்றணங்கேதேர். (5)
இதுவும் மாட்டுறுப்பு மெச்சமுமின்றிவந்து தனிநின்றுமுடிந்த முத்தகச்செய்யுள்.
தார் – பூ. ஆய்மயில் – ஆடாநின்ற மயில்.
வரவு என்பது தொழிற்பெயர்போலநின்று நிகழ்காலங்காட்டுவதோர்வாய்பாடு. நுண்டுளி – அசும்பு. கார் – மழை.
வரவு – வாராநின்றது. அயரேல் – வருந்துவதொழி என்றவாறு. பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – பருவங்காட்டிவற்புறுத்தல்.

நிறையழிகாமக்கடலைநீந்திச்சலாபத்
துறைமுகமுத்தங்கொளவேசூழ்வார்க்–கிறைவளையா
யாய்ந்தபுணையென்பவருண்மாறன்வண்குருகூர்
வாய்ந்தபனைமாமடல். (6)
(இ-ள்) அருண்மாறன் வண்குருகூரிறைவளையாய் ! ஆடவர் நிறையாகிய கரையை யழிக்கப்பட்ட காமமாகிய
புணரியைக் கடந்து மகளிரிடத்தின்பத்துறையைத் தரும் முகத்தில் அதரபானத்தையுட்கொள வழி யேதென்று
விசாரிப்பவர்க்கு வாய்ந்த பனைமாமடலே ஆராய்ந்தறிந்த புணையென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.

இதுவும், ஆடவர்களென்னும் பெயர்ச்சொல்லும், எனக்கு மதுவே குறிப்பென்னுங் குறிப்பும் எஞ்சிநின்று முற்றியதால்
இருவகையெச்சமும் மாட்டுறுப்புங்கூடித் தனிநின்று முற்றின முத்தகம். சலாபத்துறை முகமுத்தங்கொள என்பது சிலேடை.
இது, பாங்கியிற்கூட்டத்துச் சேட்படுக்கப்பட்டானான தலைமக னாண்டுறந்துரைத்தல்.
பகுதி – மடல். துறை – உலகின்மேல்வைத்துரைத்தல். முத்தகமென்பது காரணப் பெயர். முத்தகம் முற்றும்.

இனிக் குளகம் வருமாறு :-

68. குளகம்பலபாட்டொருவினைபேர்கொண்டு
வளர்முலையாய்மூன்றிடத்துமன்னு–மளவை
யுகளகஞ்சாந்தானிகங்காபாலிகத்தோடைந்தின்
மிகல்வகைத்தாநூல்சொல்விதி.
(எ-ன்) முறையே குளகச்செய்யுளின்கூறுபாடுணர்….. ற்று.

(இ-ள்) வளராநின்ற முலையினையுடையாய் ! குளகச் செய்யுளென்பது, பலபாட் டொருவினையேயாதல்
ஒருபெயரேயாதல்கொண்டு, எண்ணினதளவு உகளகம், சாந்தானிகம், காபாலிகம் என்னு மூன்று திறத்தினோடும்,
ஐந்தாயும் அவ்வைந்தினுமிகுங் கூறுபாடுடைத்தாயும் செய்யுளகத்து முதல் இடை கடை யென்னு மூன்றிடத்தும்
நூல் சொன்னவிதியாக நிலைபெறுமென்றவாறு.

வினையென்ற விதப்பால் வினையின்வேறல்லவாம் வினைக்குறிப்பும், பெயரென்ற விதப்பாற் பெயர்ப்பெயரேயன்றி
வினைப்பெயருங் கொள்ளுமென வுணர்க. வினைமுதலிய நான்கோடுந் தானமூன்றோடு முற்றவுதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.
அவற்றுட் சிலவுதாரணங் காட்டுதும் :-

நினைமருவொன்றில்லாஞானாதிகளைப்
புனைவகுளத்தாமப்புயனை–வினையினையே
வென்றானைக்காரிதரும்வித்தகனைப்பாவலன்பின்
சென்றானேநாதனெனத்தேர்ந்து, (7)

வேதமதனைவிளங்குதமிழ்ப்பாப்படுத்திப்
போதந்தழைந்துபுகழ்புண்ணியனை–நாதமுனி
போற்றும்புனிதனையந்தாமம்புகமனனே
தேற்றம்பயின்றேதினம். (8)

இவை யிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாதிகுளகம்.
உகளக குளகமென்பது இரண்டுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.

குன்றமதனைக்குடைகொண்டநீலமணிக்
குன்றமதனைக்குணக்கடலைக்–குன்றமதே
மத்தாகக்கொண்டமிர்தம்வானோர்க்களித்ததரு
மத்தானைத்தேவாய்மதித்து, (9)

வாழ்த்துபரசமயவாதியர்தம்வாய்மதத்தைச்
சாய்த்ததமிழ்மறைப்பாத்தந்தானைக்–கீர்த்திபுனை
பாவேசர்போற்றும்பராங்குசனைமுத்திபெற
நாவேமனத்தானயந்து. (10)

இவையிரண்டும் வினைகொண்டுமுற்றின யுகளகமத்திய குளகம்.
வாழ்த்து என்பது ஏவல்வினை. இவை நான்கும் திணை – பாடாண் ; துறை – ஓம்படை.

காலிருக்கக்கையிருக்கக்கண்ணிருக்கச்சென்னியதன்
மேலிருக்கநாநடுவேவீற்றிருக்க–நாலிருக்கும்
பொய்யாதிருக்கப்புகழ்மாறனைவலஞ்செய்
துய்யாதுமஞ்சலியாதும். (11)

பூவிற்சிறந்தவவன்பொன்னடியைக்கண்டுமலர்
தூவிவணங்கித்துதியாத–பாவிகளோ
டொன்றாகியவுளமேபோனவைபோட்டூதியமா
மின்றாகிலுமுற்றிறைஞ்சு. (12)

இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாந்தியகுளகம்.
இதனுள் மாறனையென்பது மால்தனை எனவும் பொருந்தும்.
இவை யாறிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. திணையுந் துறையு மிதுவு மது.

அடித்தகைத்தலம்பிடித்துவன்கனகனாருயிரைக்
குடித்தகோளரியாயகொற்றவனுமாண்குறளாய்
நடித்துமூவுலகன்றளந்தவனுமைந்நாகந்
துடித்துமூலமென்றழைத்ததற்குதவியசுகத்தோன். (13)

அம்பிகாபதியிரப்பொழித்தவனுமாதரவா
லும்பராரமுதருந்தவைத்தவனுமும்பருளார்
தம்பமாந்தசரதன்றிருமகனெனத்தழைத்தே
கம்பவாரிதியடைத்தருளயோத்திகாவலனும். (14)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டு முற்றிய யுகளமத்திய குளகம.
திணை – பாடாண் ; துறை – கடவுள்வாழ்த்து.

அரியுமயனுமரனுமெனமூன்றாய்த்
தெரியுமவருட்டெளிதற்–குரியபொரு
ளந்தாமத்தானென்றுணர்த்தியடியவர்தஞ்
சிந்தாகுலந்தவிர்த்ததே, (15)

முந்தமதுரகவிக்களித்தமூதுரைசா
லந்தமலரடியையாதிரைநாள்–வந்த
மறையவர்கோன்சென்னியினும்வைத்தெமையாள்செந்தே
னிறைவகுளப்பூங்கண்ணியன். (16)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
கண்ணியைப் புனைந்தவனென்னும் வினையைக் குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானென் றுணர்க. என்னை?
“காலந்தாமேமூன் றெனமொழிப” “இறப்புநிகழ்வுமெதிர்வுமென்றா, வம்முக்காலமுங் குறிப்பொடுங்கொள்ளு,
மெய்ந்நிலையுடையதோன்றலாறே” என்றாராகலின். ஆதலால் வினைக்குறிப்பிற்குங் காலமுண்டெனக் கொள்க.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

முழுக்கலையற்றரைக்கலையுமிழந்தாய்தோகை
முருந்துறுபீலியின்முழுதுமுன்றில்சீக்கு
மொழுக்குறநின்றனையுடையுமஃதேயானா
யுன்விரதமெதுபெயரேதுரைத்தியென்னா
வழுக்கறவேயியங்குயிர்கொல்லாமையாசீ
வகனாகவிறைவன்யாரருகனில்யா
திழுக்கியல்பின்றாந்தனியூர்யாதுசெம்பொ
னெயிலெனவவ்வெயிலெவணென்றிசைத்துமீட்டும் (17)

எப்படிவந்தோன்றியதப்படிவத்தெல்லா
மின்னுயிருண்மையையுணராயியங்கற்பால
வப்படிவத்துயிருளதாயுணர்ந்தாயீசற்
கருத்துமுறையினிலருத்தியறத்திற்கேற்ற
துப்புரவுண்பதுகடனென்றுள்ளாயாகத்
தொழிலிகழ்ந்தாய்சுடர்சொருபாம்வேதமார்க்கந்
தப்பினையெம்மறைகொடுசாதிப்பதென்றே
சமண்மதத்தைப்பழித்தனராயழித்துச்சாய்த்தார் (18)

இவையிரண்டும் வினைப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
திணை – பாடாண். துறை – “அமரர்கண்முடியுமறுவகையானு” மென்றதனால் முனிவர்வாழ்த்து ; பார்ப்பனவாழ்த்துமாம்.

முன்புலகமேழினையுந்தாயதுவுமூதுணர்வா
ரின்புறக்கங்காநதியையீன்றதுவு–நன்பரதன்
கண்டிருப்பவைகியதுங்கான்போயதுமமிர்த
முண்டிருப்பாருட்கொண்டதும், (19)

வெந்தகரியதனைமீட்டுமகவாக்கியது
மந்தச்சிலையினைப்பெண்ணாக்கியதுஞ்–செந்தமிழ்தேர்
நாவலன்பின்போந்ததுவுநன்னீர்த்திருவரங்கங்
காவலன்மாவலவன்கால். (20)

இவையிரண்டும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். என்னை?
“பெயர்நிலைக்கிளவிகாலந்தோன்றா, தொழினிலை யொட்டு மொன்றலங்கடையே” என்றாராகலின்,
இடுகுறியாய்க் கால் எனக் காலமுந் தொழிலுந் தோன்றாதுநின்றவாறு காண்க.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வணக்கம்.
ஒழிந்த ஆதியினும் இடையினும் யுகளககுளகம் வந்தவழிக் கண்டுகொள்க. யுகளககுளகம் முற்றும்.

தொடுத்துமுத்தலைச்சூலவன்படையினைத்துண்டப்
படுத்துவெஞ்சினத்தாடகையுயிர்நமன்பகுவாய்
மடுத்துவேள்விகாத்தெதிர்ந்தபோர்நிருதர்க்குமரணங்
கொடுத்தடுந்தொழிற்கரன்முதலவர்க்குவிண்கொடுத்தே, (21)

கிளைத்துநாகவன்பிடர்மிசைக்கிளர்மராமரமேழ்
துளைத்துவாலிமார்பமுந்துளைத்தடற்கருஞ்சுடுதீ
விளைத்துவேலையுளுருகெழுகோதண்டமேனாள்
வளைத்துவாய்மையோர்வடிவெடுத்தனையதோர்வாளி, (22)

கும்பனைப்பொருநிகும்பனைக்கும்கன்னனைநீ
டம்புராசியிற்குரைத்தெழுபலப்படையதனைச்
செம்பொனாலயம்விருப்புறத்தெசக்கிரீவனைக்கொன்
றெம்பிரான்சனகியைமணந்தாடலெய்தியதும். (23)

இவைமூன்றும் வினைகொண்டுமுற்றிய சாந்தானிகாதிகுளகம். திணை – வாகை. துறை – வில்வென்றி.

அருமறையாய்நள்ளிரவிற்கொடுபோகிவசுதேவராயர்பாடித்
திருநகரத்திடைகரப்பவளர்ந்தவனும்வெண்ணெயினைத்திருடிமேனாட்
பொருவறுகைத்தாமரையாற்செங்கனிவாய்வைத்தவனும்போதனேற
னிருவருங்காண்பதற்கரிதாமந்தாமந்ததிபாண்டற்கெளிதினன்பால், (24)

கொடுத்தவனுமானிரைகாத்தருள்காலைக்
கன்மாரிகுடைகுன்றாகத்
தடுத்தவனுநான்முகத்தோன்கொடுபோய
பல்லுருவின்றன்மையாக
மெடுத்தவனுந்தேவகியீன்றருள்புதல்வன்
றுரோவதியாமின்பக்கொம்பன்
றுடுத்ததுகிலிருஞ்சபையுட்டொலையாமை
யளித்தவனுமுண்மைகூறின், (25)

காண்டகுபொன்முடியுதைத்துக்கஞ்சனைக்கொன்
றுறவோர்முன்கடுஞ்சொற்கூறப்
பூண்டதொழிற்சிசுபாலன்பொன்முடிசக்
கரத்தறுத்துப்புவனம்போற்றப்
பாண்டவற்குத்தூதாகிநூற்றுவர்மு
னுருணெடுந்தேர்ப்பாகனாகி
யாண்டகைமைத்தருமன்முதலவர்க்கவனி
யனைத்துமளித்தவனுமன்னோ. (26)

இவைமூன்றும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின சாந்தானிக மத்தியகுளகம். துறை – கடவுள்வாழ்த்து.

தெள்ளுநான்மறைப்பனுவலுமயனையாதியரும்
வெள்ளிவெண்மதிக்கடவுளுங்கதிருமீன்கணமுந்
தள்ளரும்பொறைமன்னுயிர்க்கணங்களுந்தழங்கு
கொள்ளைவெண்டிரைப்புணரிமொண்டெழநிலைகுலையா, (27)

வாக்கும்பாதமும்பாணியுங்கரணமுமற்று
நீக்கமுற்றமன்னுயிர்கடாமாயையுண்ணெடுங்கற்
றாக்குமாடகத்துகண்மெழுகடைந்தபோற்றயங்கக்
காக்கும்வாய்மையீங்கெனதெனத்திருவருள்கலந்தே, (28)

காலம்யாவையுங்கழிந்தபின்கழிந்தபேருருவின்
ஞாலமுற்றவுண்டுறுபுனனடுவணநயந்தோ
ராலநுண்டளிரெனுமனந்தனிலுலகனைத்தும்
பாலனாகியுள்ளடக்குபுதுயின்றனன்பரிப்பான். (29)

இவைமூன்றும் வினைப்பெயர்கொண்டு முற்றின சாந்தானிகாந்திய குளகம். திணை – பாடாண். துறை – கண்படைநிலை.

(குருகாமான்மியம். )

பரத்துவமுதலாப்பஞ்சவுற்பனனாம்
பரமனெமமிறைவனாமெனல்போல்
வரத்தொடும்புகழும்பஞ்சமாத்தொழிலும்
வழங்கலுமிவன்றிறத்தெனல்போற்
றிரத்தவாம்பஞ்சபூதமுஞ்செனித்த
செய்கையுமிவன்றிறத்தெனல்போற்
கரத்தினிற்பஞ்சாயுதங்களேதரித்த
கருணையங்கடவுளாமெனல்போல், (30)

ஞானமுமழகும்வீரமுந்திருவுநவையிலானந்தமுமெமவே
யானவேனையவாமுலகமென்பவற்றிற்கவையமைதியவலவெனல்போல்
வானுறநிவந்தவெழுநிலத்தமைந்தமாடசூளிகையின்யாப்புறுத்தைம்
பானிறந்தழீஇயதுகிற்கொடிநுடங்குபாங்கரின்வயங்குமெம்மறுகும், (31)

செம்மையின்யாணர்த்திவ்வியமணியாற்
செழும்பொனாற்றிசைதிசையெறிக்கும்
பொம்மலுநிவப்பும்வியலுநீளிடையும்
பொருந்தலினொருமறுகிடைப்புக்
கிம்மறுகெவனிங்கிவற்றுளிம்மாட
மெம்மணிமாடமென்றியாருந்
தம்வயிற்செறிந்தோரிமைப்பருநாட்டந்
தாங்கியுமறிவருந்தகைய. (32)

இவைமூன்றும் பண்பிடனாகத்தோன்றினவுடைமைவினைக்குறிப்புக் கொண்டுமுற்றின சாந்தானிகாந்தியகுளகம்.
சாந்தானிககுளகமென்பது மூன்றுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.
திணை – இதுவுமது. துறை – பரமபதவருணனை.
இவையுள குருகாமான்மியம். ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டுகொள்க. சாந்தானிககுளகம் முற்றும்.

ஆதிப்பரப்பிரமநாராயணனென்றுஞ்
சோதிச்சுடர்மயமாந்தோற்றஞ்சா–னீதிச்
சொருபமுடனுருவந்தோய்ந்துளன்காணென்று
மொருபரந்தாமத்தானென்றும், (33)

பாங்குடையமன்னுயிரொன்றல்லபலவென்று
மாங்கவற்றுணீங்காதவனென்று–மோங்கவற்றை
நித்தியமாமென்றுமுடனித்தியமன்றென்றுமதை
யுய்த்ததுபூதாகியதென்றும், (34)

முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து, (35)

நாமானிடப்பிறவிநன்றென்றுந்தேர்ந்தனமாற்
காமாதிகளாங்களைகளைந்து–பாமாலை
சாத்தியேநெஞ்சேதருமெமக்குமுத்தியென
வேத்தியேயின்புற்றிரு. (36)

இவை நான்கும் வினைகொண்டுமுற்றின காபாலிகாந்தியகுளகம். திணை – பாடாண். துறை – குரவனைவாழ்த்தல்.

இச்சிப்போனிட்டவிணையடிப்போதன்றொருவ
னுச்சிப்போதானதுலகறிந்த–நிச்சயமே
யாய்ந்தாலொருவன்சிரத்தணிந்ததன்றொருவன்
பூந்தாள்கழுவும்புனல், (37)

இளிவந்ததுசெய்திரந்தானொருவன்
வெளிவந்தொருவனதைமீட்டான்–களிவந்த
சித்தமுறத்தன்பெயரேகேளாச்செவியனுக்கு
முத்தியளித்தானோர்முதல், (38)

சேதிப்பதாமொருவன்செய்தொழிலுமேனையவற்
காதிப்புவனமவைகாவல்–கோதற்ற
நற்குணத்தெம்பூமகள்கோனாரணனந்தாமத்தான்
முற்குணத்தானேயெம்முதல், (39)

என்றாய்ந்துணர்ந்துணர்த்தியிங்கெமையீடேற்றினான்
பொன்றாதசெஞ்சொற்புலவீர்கா–ளொன்றாய
தேவின்புறத்தமிழ்செய்தென்குருகூரன்மனம்போல்
வாவுஞ்சிறையோதிமன். (40)

இவை நான்கும் வினைக் குறிப்புக் கொண்டு முற்றின காபாலிகாந்திய குளகம்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

மீனமதாயாமையாய்வெள்ளைவராகமதாய்த்
தானவனைக்கொன்றுமறைதந்தானும்–வானவர்க்காய்
வாங்குதிரைகடைநாண்மந்தரமேற்கொண்டானு
மோங்குமகிலங்கொணர்ந்தானும், (41)

ஆளரியாயாடகனைச்செற்றானும்வாமனமாய்த்
தாளிணையான்மூவுலகுந்தாயானுங்–கோளரிபோன்
மாறுதிரட்காவலரைமாய்த்தமழுவாளியா
யூறுதிரத்தேகுளித்தானும், (42)

அன்றுதனுராமனாகியிருபதுகைக்
குன்றினுயிரைக்குடித்தானும்–வென்றியுடன்
பார்திருத்துநாஞ்சிற்படையானும்பாண்டவர்க்கவ்
வூர்திருத்தமுற்றளித்தானும், (43)

புண்டரிகத்தானைப்புரந்தானுமைந்நீல
கண்டனிரப்பொழியக்கண்டானு–மண்டமினி
மேலிலையிங்கென்னவிழுங்கியவேகோதகத்தோ
ராலிலையின்மீதுதுயின்றான். (44)

இவைநான்கும் வினைப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

மாயோனெடியோன்மதுசூதனன்புவனந்
தாயோன்முகுந்தன்சராசரங்க–ளாயோ
னராரியரியச்சுதனாகணையான்
முராரியழியாமுதல், (45)

மாதவன்கேசவன்வாமனன்கோவிந்தன்
சீதரன்பூமகள்கோன்றேவேசன்–பூதலத்தை
யுண்டோன்விரிசிறைப்புள்ளூர்ந்தோன்பகிரண்டங்
கண்டோனிருதாந்தகன், (46)

மந்தாகினிபிறந்தவார்கழலோனேமியோன்
றந்தாவளமுரைத்தசால்பினோ–னெந்தை
திருமால்வரனுந்திபூத்தோனமரர்
பெருமான்பிரமன்பிதா, (47)

கண்ணன்கருணாகரனமலன்காயாம்பூ
வண்ணன்கடல்வண்ணன்மைவண்ணன்–விண்ணவர்கோன்
றம்பிரானாரணனந்தாமத்தான்வேதாந்த
னெம்பிரான்முத்தனிறை. (48)

இவைநான்கும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம்.
துறை – கடவுள்வாழ்த்து. ஒழிந்தவும் வந்தவழிக் கண்டு கொள்க. காபாலிக்குளகம் முற்றும்.

செம்பினையுருக்கிவாக்கித்திண்ணிதினகழிதூர்த்திட்
டும்பரின்முதலேவெண்பொனுவானமதமைத்தபின்றைப்
பைம்பொனார்செகதிகண்டம்பட்டிகைவகுத்திட்டோர்சா
ரிம்பர்நின்றேறயாளிச்சுருட்படியியற்றிமன்னோ, (49)

பாங்கர்வேதிகைக்குத்தானம்பகுத்தரங்கினுக்குநாப்ப
ணோங்குபொற்சுவர்நிறீஇவித்துருமசாளரஞ்செய்தோவா
வீங்கிருடுணிக்குஞ்செய்யவிழுமணியதனான்மேல்வாய்த்
தாங்குமுத்திரம்வைத்துள்வச்சிரத்துலாந்தகவின்வைத்தே. (50)

பச்சைநன்மணியையீர்ந்தபலகைமேற்பரப்பிநீலத்
தச்சுறுகொடுங்கைமூட்டியதன்புழையகத்தவாக
வச்சிரவளைகளோடிமணிசெய்வேதிகைமாண்டூணத்
துச்சிமேற்பலகைசிற்றுத்திரத்தினோடொன்றச்சேர்த்தே, (51)

வெள்ளிவெண்பலகைநான்குவிரல்வியனீப்பின்றாக
வள்ளுறநிறைத்துவண்பொன்னாணிகளழுத்திக்கையா
லள்ளுபுதிரளுமொண்பொன்னரதனஞாங்கர்மேய்ந்து
தெள்ளிதினேழதாகத்திகழ்நிலம்புணர்த்துமாதோ, (52)

வாரிநீணிலையுமேல்கீழ்மரீஇயநோன்படியுந்தாளுங்
கூர்கபாடமுமொன்றாகக்கொளீயமாண்மணிகடம்மாற்
சீர்கெழுதசும்புசூட்டுஞ்சிமயமோடுயர்ந்துவானு
ளார்தமக்கமைந்ததச்சர்க்கணங்குசெய்வனபொன்மாடம். (53)

இவை ஐந்தும் பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
மேலைந்து முதலிய வெவற்றிற்குங் குளகமென்பன பொதுப்பெயர். திணை – பாடாண். துறை – நகர்வாழ்த்து.

அற்புதமாமன்னுயிரேபிரமமென்று
மலகிலவன்றொன்றெனவுமலகில்யாக்கை
நிற்பனயாதெனிற்புனல்பெய்கடங்கடோறு
நிழற்கதிர்தோன்றியநெறித்தாமென்றுமங்ஙன்
பொற்பனவொன்றிறத்தலுமேனையவும்பொன்றாப்
பொலிவெவனென்றாலவைபோலெனவுமாறிக்
கற்பனைசெய்பவன்றனைநான்பிரமமென்றே
கழறுமிரண்டெவனெனவேகழறிமீட்டும், (54)

நான்பிரமமென்றனைநீபிரமமாகி
னான்முகனையுந்தியிற்பெற்றிடுதிபொன்றா
வான்பிரமமமைத்தபகிரண்டமெல்லாம்
வயிற்றிடைவைத்திடுதிசதுமுகத்தால்வையந்
தான்புரந்தவ்வுலகினைமூவடியிற்றாய
தனுவினனோரணுமயமாந்தனுவுங்கோடி
யூன்பயின்றகுரம்பையைநீத்துலகமெல்லா
மொருங்கெறிக்குஞ்சுடர்மயமாமுருவுங்கோடி, (55)

ஆயிரவாய்ப்பஃறலைப்பாம்பணைமேற்காவ
லறிதுயிலுங்கொண்டிடுதியனந்தனாகி
மாயிருஞாலங்களொருபத்துநாலு
மணிமுடிமேற்றரித்திடுதிவழிந்துநாளுந்
தாயதிரைப்பாற்கடலைத்தயிரேயாக்கிச்
சந்திரனைமந்தரமேற்றறியதாக்கித்
தூயசுவைத்தெள்ளமிர்தநரர்க்கும்விண்மேற்
சுரர்க்களித்ததெனவளிக்குந்தொழிலுங்கோடி, (56)

எண்ணிறந்தநால்வகைத்தோற்றத்துளாய
வெழுவகைத்தாஞ்செனனமுநீயிசைந்துபின்ன
ரெண்ணிறந்தவிடங்கடொறுநிற்பதோடு
மியங்குதியீங்கிவையன்றியேககாலத்
தெண்ணிறந்ததொழில்புரிதியண்டரண்டத்
திவ்வுலகிற்பாதாளத்தின்பதுன்ப
மெண்ணிறந்தவிவர்க்கிவற்றிற்கிசைந்ததென்றென்
றிசைந்ததிறம்வாய்மையதாயிசைப்பதோடும், (57)

இவ்வுடலத்திறத்தியிறந்திடுகாயத்தை
யீமத்தங்கிடுபொழுதிலெரிந்திடாதே
யவ்வுடலத்துடனெழுந்துவருதிகாயத்
தருவருப்பாக்கியமலமூத்திரங்களெய்தாச்
செவ்வியின்வாழ்ந்திடுதிநரைதிரைமூப்பில்லாச்
சிறப்பினொடும்வளிமுதலாச்செறிந்தமூன்றும்
வவ்வுதலற்றீறில்சுகானந்தமேய
வச்சிரகாயம்புணர்ந்தவாழ்வினோடும், (58)

மின்னுயிர்க்குங்கனகன்வினவினபொற்றூணம்
வெடிப்பவுதித்தடித்தகரம்பிடித்தபோல
வுன்னுயிர்கொண்டெனதுகரம்பிடித்ததூணத்
துறுதியிவைமுதலவுனக்குறுதிவதின்றான்
மன்னுயிர்தாமலகிலவாம்வகையுமீசன்
வாழ்வகையுமுணர்ந்திலையுன்மத்தனானா
யின்னுயிர்வேறின்னுயிர்கட்குயிராய்நின்ற
விறைவனும்வேறெனத்தெளிவித்திதஞ்செய்வாரே. (59)

இவையாறும் வினைப்பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம். திணை – பாடாண். துறை – முனிவர்வாழ்த்து.
*”ஆங்கதன்” முதல், “கொண்டமால்வரை” ஈறாக 9-ம் பரனிருப்பான் என வினைமுற்றுக் கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
இவற்றின்மிக்குவருவனவு முள ; அவையும் பெருங்காப்பியங்களினிடத்துக் கண்டுகொள்க. குளகம் முற்றும்.

* ‘ஆங்கதன்’ என்பது குருகாமான்மியம் பரமபத வருணனைச் சருக்கத்து 105-ம் செய்யுள்.
‘கொண்டமால்வரை’ என்பது மேற்படி சருக்கத்து 113-ம் செய்யுள்.

நாவலன்பின்போந்தநறுநீர்த்திருவரங்கங்
காவலன்பொற்றாளாங்கமலத்தே–பாவலர்தம்
பாமாலைசூட்டாதப்பாமாலையையெவனோ
தாமானிடர்க்களிக்குஞ்சால்பு. (60)

புரந்தரனாதியராயபுத்தேளிர்பொற்போதுகடூஉய்
நிரந்தரமேத்தும்படியேதுயின்றதுநெஞ்சத்தன்பு
கரந்தரன்சாபந்துடைத்தோனிருந்ததுதொண்டர்க்கெல்லாம்
வடிந்தரநின்றதரங்கநன்காஞ்சிவடமலையே. (61)

மலைமுழைவைகலும்வைகினராகியுங்
கனிகிழங்கடகுகண்டனமாந்தியு
மூவராயுமுதற்கடவுட்
காவலநீயேகாத்தல்வேண்டுவலே. (62)

வேண்டுவதிங்கின்றெமக்குமெய்க்காவிரியரங்கத்
தாண்டகைதன்வெற்பிலணங்கன்னார்–காண்டகுசீர்ப்
பொன்றாமலர்முகமும்பூண்முலையுங்கண்டனம்யா
மென்றாலினியிதன்மேல்யாது. (63)

என்றாலினியிதன்மேல்யாதுவேண்டுமெனக்குவெள்ளிக்
யன்றாடரவிற்றுயிலரங்கேசனருள்புரிந்து
பொன்றாதசெல்வத்திருமாதுடனுட்புகுந்தனனே. (64)

இவ்வைந்துபாட்டினும் எழுத்து அசை சீர் அடியென்னும் நாலந்தாதியும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
இவற்றுள் “வேண்டுவதிங்” கென்ற வெண்பாவொன்றும் கிளவிவேட்டல். ஒழிந்த நான்குங் கடவுள்வாழ்த்து.
இவை நம்பெருமாள்மும்மணிக்கோவை.

இனிப் பலவடியான்வரும் ஒரு செய்யுளகத்து நாலந்தாதியும் வருமாறு :-

நாவேயுரனுறுநலமிகுமுதற்பொருள்
பொருளுரையாய்தரிற்புகலுமற்றுளதே
யுளதேவண்டிமிருறுமலரோடை
யோடைமால்வரைமூலமென்றுரைசெய
வோடைமால்வரைமூலமென்றுரைசெய
வுரைவிசைத்தடங்காவொல்லையிற்குறுகுபு
புனிற்றாவெனவருள்புரிந்திடர்செகுத்த
வறைபுனலரங்கத்தமுதினையன்றியு
மதித்தொருமுதலையேமகிழ்ந்து
துதிப்பதுமுளதோசுரர்பெருநாவே. (65)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நாலந்தாதியும் வந்தவாறு காண்க.

இன்னு மவ்விலேசானே இறுதிநின்ற சொற்பொருணோக்கத்தான் ஆகுபெயராற் சொற்றொடர் வருவனவுமுள. அதற்குச் செய்யுள் :-

“பரிவதிலீசனைப்பாடி
விரிவதின்மேவலுறுவீர்
பிரிவகையின்றிநன்னீர்தூஉய்ப்
புரிவதுவும்புகைபூவே.” (66)

“மதுவார்தண்ணந்துழாயான்
முதுவேதமுதல்வனுக்
கெதுவேதென்பணியென்னா
ததுவேயாட்செயுமீடே.” (67)

69.உலவாதகேள்வியொருவர்பலராற்
பலவாய்ப்பகர்பாவினமா–யிலகுபொரு
ளெண்பாட்டளவுதொழிலிடங்காலஞ்சினையின்
பண்பாந்தொகைநிலைச்சொற்பா.
(எ-ன்) வைத்த முறையானே தொகைநிலைச்செய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) தொகைநிலைச்செய்யுளென்பது குறையாத கேள்வியினை யுடைய வொருவரானாதல் பலரானாத லுரைக்கப்பட்டுப்
பலபாட்டாய் வருவனவாய், அவை பொருளானும் எண்ணானும் பாட்டானும் அளவானும் தொழிலானும் இடத்தானும்
காலத்தானும் சினையானும் தொகுத்து பெயர்பெற்ற பண்பினையுடையவாமென்றவாறு.

இன் உருபுமயக்கம். உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. உலவாத கேள்வியென்பதனை யிருவரிடத்துங் கூட்டுக.
கேள்வி-கல்வி ஒருவராலுரைக்கப்பட்டன திருவள்ளுவப்பயன். பலராலுரைக்கப்பட்டன – நெடுந்தொகை.
இஃ தெல்லாத் தொகைக்கும் பொது. பொருளாற்றொகுத்த பெயர்பெற்றது புறநானூறு.
எண்ணாற்றொகுத்தபெயர் பெற்றது பதிற்றுப்பத்து. பாட்டாற்றொகுத்தபெயர்பெற்றது கலித்தொகை.
அளவாற்றொகுத்தபெயர் பெற்றது குறுந்தொகை. தொழிலாற்றொகுத்த பெயர்பெற்றது ஐந்திணை.
இடத்தாற்றொகுத்தபெயர்பெற்றது களவழிநாற்பது. காலத்தாற்றொகுத்தபெயர் பெற்றது கார்நாற்பது.
சினையாற்றொகுத்தபெயர்பெற்றது நயனப்பத்துபயோதரப்பத்து.
உம்மை யெச்சவும்மையாகலானிவ் வெட்டுவகையானுமன்றிப் பிறவகையானும் பெயர்பெற்றனவுளவேனும்
அவையும் அறிந்துகொள்க. தொகைநிலைச்செய்யுண் முற்றும்.

70.சொல்லாற்பொருளாற்றொடருந்தொடர்நிலைக
ளெல்லாமவற்றுளெழுத்தசைசீர்–மல்கு
மடிசொற்றொடர்நிலைகளந்தமுதலாம்
படிவைத்தனர்முன்பகுத்து.
(எ-ன்) தொடர்நிலைச்செய்யுளினது கூறுபாடுணர்ற்று.

(இ-ள்) தொடர்நிலைச்செய்யுளென்றுகூறப்படுவன வெல்லாஞ் சொல்லானும் பொருளானுந் தொடரப்படுவனவாம்.
அவ்விரண்டனுள், சொற்றொடர்நிலையைப் பகுத்துக்கூறுமிடத்து நின்றசெய்யுளி னீற்றெழுத்தாதல்,
அசையாதல், சீராதல், அடியாதல் வருஞ்செய்யுட்கு முதலாகத் தொடுக்கும்படியென வுட்கொண்டனர் முற்காலத்துப் புலவரென்றவாறு.

வைத்தனர் – உட்கொண்டனர். இச்சூத்திரப்பொருள்கோள் மட்டுறுப்பு.
எல்லாமென்றதனான் மூன்றாவது சொல்லினாலும் பொருளினாலுந் தொடர்வதுமுளவெனக்கொள்க.
மல்குமென்று சிறப்பித்தவதனால் நான்கும், பலவடியான்வரு மொருசெய்யுளகத்தும் வருவதுளவெனக் கொள்க.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-
இவை முதற்பத்தி லாறாந்திருவாய்மொழியின் முதற்பாட்டும் இரண்டாம்பாட்டும்.
இவற்றுள், பூவென்றசொல்லின் பொருணோக்கத்தாற் சினையைக்கூற முதலையறிவிக்கும் ஆகுபெயரால் அந்தாதித்தவராறுணர்க.
இவை நாலுவேதத்தையும் ஓதாதுணர்ந்த ஞானபூரண ஞானமுத்திரைக்கராம்புயன் றிருவாக்கு. சொற்றொடர்நிலைச்செய்யுண் முற்றும்.

71.பெருங்காப்பியங்காப்பியமெனும்பெற்றித்தாற்
சுருங்காப்பொருட்டொடருஞ்சொல்லிற்–பொருந்தவற்று
ளொன்றும்பலவும்பொருளிற்குறைவுறுமே
லென்றுமதுகாப்பியம்.
(எ-ன்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடு சொல்லுமிடத்துப் பெருங்காப்பியமென்றும் காப்பியமென்றுங்
கூறு மிரண்டியல் பினையுடைத்தாம் ; அங்ஙனம் பொருந்தியவற்றுள் அறமுதலிய பொருள்கள் நான்கினுள்
ஒன்றாயினு மிரண்டாயினுங் குறைவெய்தவரு மெனில் அதனை யெக்காலத்தினுங் காப்பியமென்பதேயா மென்றவாறு.

எனவே நாற்பொருளுங் குறைவின்றிவருவதே பெருங்காப்பிய மென்பதாம்.
சுருங்காப்பொருட்டொடரெனவே பொருட்டொடர் மிகவும் விரிவுடையதென்பதூஉமாயிற்று.

72.வைத்தபெருங்காப்பியநிலையும்வாழ்த்தியல்பார்
மெய்த்தவவையடக்கம்வீறுசான்–முத்திதருந்
தெய்வவணக்கமுடன்செய்பொருளுமுன்வரவாங்
கெய்தவுரைப்பதுதானேய்ந்து.

73.தப்பிலாநாற்பொருளுஞ்சாற்றுவதாய்த்தாரணிமே
லொப்பிலாதான்சரிதையுட்கொண்ட–செப்பமுற
நன்மணமில்வாழ்க்கைநலம்புதல்வர்ப்பேறுபசும்
பொன்மகுடம்வைத்தின்புறல்.

74.அலையாழிமேன்மையருட்புயலின்செய்கை
மலையாறுநாடூரின்வண்மை–தொலையா
விருசுடரின்றோற்றமிருதுவளம்பானம்
பொருபுனல்புக்காடல்பொழில்.

75.மந்திரந்தூதொற்றொடல்வாய்ந்தநிரைகோடல்
புந்தியுறச்சேறல்புறத்திறுத்தல்–வெந்திறல்கூர்
மிக்கவிகல்வென்றிநிலையாமையைமிகுத்தல்
கைக்கிளைகள்கூறுங்கடன்.

76.படலமிலம்பம்பரிச்சேதங்காண்டந்
தொடர்தொடர்பிற்பாடையுரைதோய்ந்துந்–திடமுறச்சொன்
மூன்றுட்கொளலாமுறையிற்சுவைவிறல்கூர்ந்
தான்றவர்மெய்ப்பான்புகல்வதாம்.

இவ்வைந்து பாட்டும் என்னுதலிற்றோவெனின், மேற்சொன்ன பொருட்டொடர்நிலை யிரண்டனுள்ளுங்
காப்பியத்தின் மரபுணர்த்திப் பெருங்காப்பியத்தின்மரபுணர்-ற்று.

(இ-ள்) சொல்லுவானுட்கொண்ட பெருங்காப்பியத்தினிலக்கண முலகமதிக்கப்பட்ட வாழ்த்தியலும் அவையடக்கியலும்
தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் என்னும் நான்கும் பாயிரத்தினு ளவ்வவ் விலக்கண முரைத்தபடியே பொருந்துவனவாய்,
வழுவுதலில்லாத நான்கு பொருளையுங் குறைவறக் கூறப்பெற்று, உலகத் தொத்தாரு மிக்காரு மில்லாத தலைவன்
சரிதையுட்கொண்ட வுண்மையுற்று, நன்மணம், இல்வாழ்க்கை, கலவி, புதல்வர்ப்பேறு, பொன்முடிபொறுத்தின்பமுறுதல்,
கடலை மேகத்தை மலையை யாற்றை நாட்டை நகரத்தை ஆதித்த வுதயத்தைச் சந்திரவுதயத்தைச் சிறுபொழுதைப்
பெரும்பொழுதை வருணனைபுரிதல், வீரபானம், காமபானம், புனல்புக்காடல், பொழில்புக் காடல், மந்திரம்பகர்தல்,
தூதுவிடுதல், ஒற்றாடல், நிரைகோடல், மேற்சேறல், எயிற்புறத்திறுத்தல், செருச்செய்கை, வென்றியெய்தல்,
வென்றவேந்தன் நிலைபெற்றிருப்ப இறந்தவேந்த னிலையாமையை மிகுத்துரைத்தல், ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை,
பெண்பாற்கூற்றுக் கைக்கிளை யென்னு மிவற்றினையும் பாடாண்பகுதி யென்பதனோடுங் கூறுமுறைமையுடன்
படலமென்றாதல் இலம்பகமென்றாதல் பரிச்சேதமென்றாதல் பகுதிப்படுமவற்றை யுட்கொண்ட காண்டங்களோடும்
பொருட்டொடர் புடைத்தா மொருதிறப்பாட்டு மிருதிறப்பாட்டுமாகிய பாப்பாவினத்தோடும்
பாடைவிராயு முரைவிராயு மேற்சொன்ன வுண்மையுடைய முத்தகமுதலிய மூன்று முட்கொள்வனவா முறைமையுடன்
எட்டு மெய்ப்பாடும் மெய்ப்பாட்டுக்குறிப்பு மிகுந்து கல்வி கவியான்மிக்கோர் மதிக்கும்படியுரைப்பதா மென்றவாறு.

இதனுள், வைத்த என்பது உட்கொண்ட எ-று. நிலை–இலக்கணம். இயலு மது. பார்-உயர்ந்தோர் ; இடைநிலைத்தீபகம்.
முன்வரவு-பாயிரம். என்னை? நூற்குமுன்னேவருதலான் முன்வரவென்றாயிற்று.
செய்பொருளு மென்னு மும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட்கிளவி பிற்படக்கிளத்தலாய்நின்றும்மையில்செஞ்சொல்லாய்
முற்படக்கிளந்த வாழ்த்தியல் முதலாய மூன்றினுங் கூட்டி விரித்துரைக்கப்பட்டது. என்னை?
“எஞ்சுபொருட்கிளவிசெஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்கிளத்தல்” என்றாராகலின். நலம் – புணர்ச்சி.
இருதுவும் பானமும் சாதியேகவசனம். புக்காடலென்பதனைப் புனல் பொழி லிரண்டினுங் கூட்டுக.
செப்பமுற – உண்மையுற ; என்பது, செய்து என்பது செய என ஒரு வினையெச்சம் மற்றொருவினையெச்சமாகிநின்றது.
வாய்ந்தநிரைகோடல் என்பது முதலாக் ‘கைக்கிளைகள் கூறுங்கடன்’ என்பதனால் வெட்சிமுதற் பாடாண்டிணையீறாகப்
புறம் புறப்புறம் அகப்புறம் என்னும் மூன்றுகூறாய வெழுதிணையு முறையே கூறியவாறுங் காண்க.
இவ்வாறன்றி, இவற்றி னிடையிடை கரந்தை நொச்சி என்பவற்றையும், இறுதியிற் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை
என்பவற்றையும் கூட்டிப் பன்னிரு படலமாக்கி யவற்றிற்கு இருபது, பதினாலு, இருபத்தொன்று, இருபத்திரண்டு, ஒன்பது,
இருபத்தொன்பது, இருபத்துநாலு, முப்பத்துமூன்று நாற்பத்தெட்டு, முப்பத்தேழு, பத்தொன்பது, முப்பத்தாறு
எனத் திணையுந் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழிநூலுள் ஐயனாரிதர் கூறிய
தூஉம் இவ்வெழுதிணையு ளடங்குமெனக் கொள்க.
தப்பிலா நாற்பொருளுஞ் சாற்றுவதாய் என்பதனாற் கூறிய வுறுப்புக்கள் சிலபல குறையினும்
நாற்பொருளுங் குறையாதனவெல்லாம் பெருங்காப்பியமெனக் கொள்க.
பாடை – திசைச்சொல் ; “சிதைந்தனவரினு மியைந்தனவரையார்” என்பதனால் *பாஷை பாடையாயிற்று.
உரை – செய்யுளின்றி உரைநடை யான் வருவது. அது இளங்கோவடிகள் கூறிய சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.
உம்மையால் உரையிடைவிரவாது வருவதே சிறப்புடைத்தெனக் கொள்க.

77.மன்னியபேர்யாப்பிற்குவைதருப்பம்வான்கவுடம்
பன்னியபாஞ்சாலமெனப்பகுத்து–மின்னிடையாய்
நன்னூன்முழுதுணர்ந்தோர்நாட்டகத்துநாட்டலுறீஇ
முன்னூலுட்கண்டநெறிமூன்று.
(எ-ன்) இதுவு மேற்சொன்ன செய்யுட் கூறுபடுபாகமுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனம் நால்வகைத்தாக நிலைபெற்றபெயரையுடைய செய்யுளனைத்திற்கும் வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு
மூன்று நாட்டினகத்துள்ளாரால் வழங்கும் பாகத்தான் மூன்றாகப் பகுத்து அவ்வவநாட்டினதுபெயரால் நல்ல நூல்களை
முற்றவுணர்ந்தோர் தங்களாற் செய்யப்படுமுந்து நூலகத்து நாட்டுதலையுற்றுக் கண்டமார்க்க மூன்றுளவாமென்றவாறு.

உறீஇ – உற்று. வைதருப்பம் – விதர்ப்பநாட்டது. மின்னிடையாய் என்பது மகடூஉமுன்னிலை.

78.இழுமென்மொழியுமினியபொருளுந்
தழுவுமதுவைதருப்பம்–விழுமியவாஞ்
சொற்கடினத்தோடும்பொருட்கடினந்தோய்ந்தரிதாய்க்
கற்பனசாருங்கவுடங்காண்.
(எ-ன்) வைத்தமுறையானே வைதருப்பபாகமுங் கௌடபாகமும் பாகுபடுமாறுணர்-ற்று.

(இ-ள்) மெல்லென்ற விழுமிய இனியமொழியும், மெல்லென்ற விழுமிய இனிய அறமுதலிய நாற்பொருளும்
பொருந்துவன வைதருப்ப பாகமாமென்றும், விழுமிய சொற்கடினமும் பொருட்கடினமுந்தோய்ந் தரியநடைத்தாய்ப்
புலவனாற்கூறப்படுவது கௌடபாகமாமென்றும் மனத்தாற் கண்டுகொள்க வென்றவாறு.
* பாழ்சை – பிரதிபேதம்.
விழுமியது – முக்கியம். இதனுள் விழுமியவாம் என்பதனை இடைநிலைத்தீபகமாக்கியும்,
காண் என்பதனை யிரண்டிற்கு மிறுதிவிளக் காக்கியும், மனத்தாலென்பதனை யெச்சமாக விரித்தும்,
மென்மையினிமை யென்பவற்றை முன்னையதற்கு முதனிலைத்தீபகமாக்கியுங் கொள்க.
சொற்கடினம் – வல்லினம் வல்லொற்றடுத்து மிகுதல். பொருட் கடினம் – பயங்கரமாகிய பொருள்பயத்தல்.

79.இடையிட்டனவாகுமின்சொற்பொருளாற்
றடையற்றொழுகுவபாஞ்சால–மடைவடைவே
யக்கவிகள்பாடுமவர்க்கங்கவைபெயராய்
மிக்குலகங்கூறும்விதித்து.
(எ-ன்) ஒழிந்த பாஞ்சாலத்தின்பாகுபாடும் அக்கவிகள் பாடு வோர்க்கெய்துங் காரணப்பெயருமாமாறுணர்ற்று.

(இ-ள்) மென்மையுங் கடினமுமாகிய வைதருப்பகௌடங்களோடுங் கூடாதே யிடைநிலைப்பட்டவா மினிய
சொல்லானும் பொருளானுந் தடையின்றி நடைபெற்றொழுகுமது பாஞ்சாலபாகமாம்.
முறை முறையே அக்குணக்கவிகள் பாடுவோர்க்கு மங்கங் கதுவேபெயராக விதித்து
மிக்க பெரியோராற் கூறப்படு மென்றவாறு. அவை வைதருப்ப கவி கவுடகவி பாஞ்சாலகவி என்பனவாம்.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

பதியுமாமுகில்கரிப்படாமுமாய்ப்புன
னதியுமாய்ப்படுகதிர்நான்றவேணியாய்
மதியமாமுளைமதிமதியமாய்த்தமிழ்ப்
பொதியமானதுசிவன்போலுமானதே. (68)

உந்தியங்கமலமேலுதிப்பதாலுரஞ்
சிந்துதெள்ளருவிவெண்ணூலின்செம்மைத்தாய்ப்
பந்திசேர்திசைமுகம்பயிலும்பான்மையாற்
சந்தமால்வரைமறைத்தலைவனொத்ததே. (69)

விண்டுவென்றுரைப்பதால்விண்ணினோங்கியே
பண்டுலகளந்தமெய்ப்படிவங்கூர்ந்தடிக்
கொண்டநீர்பகிரதிக்கோதையொத்ததால்
வண்டுழாய்மலைந்தசெம்மலையுமொத்ததே. (70)
இவைமூன்றும் வைதருப்பபாகம். திணை – பாடாண். துறை – மலைவருணனை.

முப்புரத்தினைச்செகுத்தமுக்கணக்கனிற்சிரித்து
முத்தலைக்கணிச்சியுக்கதாற்
றப்பறப்பொருப்பினைக்குலுக்கிடக்கையைச்செருத்
தலத்துறப்புடைத்துருத்தெழா
நெய்ப்புறத்தினிற்குளித்தவச்சிரத்தினைப்பிடித்து
நெட்டுயிர்ப்புயிர்த்தியக்கவே
குப்புறப்புழைக்கைவெற்பின்மத்தகத்தினைத்துளைத்த
கொப்புளித்தபச்சிரத்தமே. (71)

மத்தகத்தழுத்துவச்சிரத்தினைப்பறித்துயர்த்தி
மத்தவெற்புடற்றிநிற்பதா
னத்தகத்தடக்குமைக்கடற்கடைக்கனற்சினத்த
னச்சுளத்தினுற்றெதிர்ப்பவே
பித்தகத்தழைத்தடற்பொறிப்புலிப்புலத்தினுற்ற
பெற்றமொப்பவட்கியுட்குநீ
டுத்தமச்சுவர்க்கமுற்றகொற்றவற்கிமைப்படுத்த
வொத்தபத்துடைச்சதக்கணே. (72)

புற்புதக்கடக்கவுட்பொருப்புவச்சிரத்தினைப்
புழைக்கையிற்புடைத்தியக்கவே
யுற்றதுக்கிரச்சமர்க்குடக்குமிக்குரத்துரத்
துடைத்ததைப்பறித்துருத்திடா
வற்புதத்தெதிர்த்தியக்கநெட்டடிக்குளுற்றதொற்றை
யக்களிற்றைவிட்டுமுட்டவே
தெற்குவெற்பினைத்துளைத்ததப்புறப்புறக்கொடைத்
திசைக்களிற்றினைத்துளைத்ததே. (73)

முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்

82 மாறனலங்காரம்
இவைமூன்றுங் கௌடபாகம். திணை – தும்பை. இவற்றுள், முப்புரத்தினையென்றது ஏமவெருமை. ஏனையிரண்டும் யானைமறமும் ஏமவெருமையுமாம்.

விரைக்கமலமுறுக்குடைந்ததகட்டகட்டினடுப்பொகுட்டு
வெண்டோட்டும்பர்
நிரைக்கமலத்தினிதிருந்துசூட்டெகினம்பார்ப்பருத்த
நினைத்துநீர்வா
யிரைக்கெழவேசெங்கால்வெள்ளுகிருறுமுன்னிதழுரிஞ்சி
யிழிந்ததீந்தே
னரைக்குடுமிமறைக்கிழவனெருப்பிடைநெய்யுகுப்பனபோ
னான்றமாதோ. (74)

மாதண்டர்புகழ்ந்திடவாழ்ந்தருள்வாமபாகத்து
மழைதோய்வெள்ளி
வேதண்டமிசைப்பவளவேதண்டம்பகிரண்டம்
விழைவுகூர்வான்
மூதண்டமுகடுதொடுமும்மதிளின்முரண்முருக்க
முன்கைக்கொண்ட
கோதண்டவடவரைபோற்பணைத்தகெந்தமாதனமாங்
குன்றொன்றுண்டே. (75)

நெய்த்திருண்டுசுருண்டுகடைகுழன்றறலின்கெழுதகைத்தாய்
நெறித்துநீண்டு
மொய்த்திருக்குங்குழற்காட்டின்முகையவிழ்பூந்துணர்விரையு
முற்றாமுன்ன
ரெய்த்திருக்குமிடைக்கிடர்மேலிடரிழைக்குந்தமர்போலு
மிறுமாந்தொண்பூண்
வைத்திருக்குமுலைமுகட்டிற்பொதிகளபத்தொளிவிரையும்
வளைந்தமன்னோ. (76)

இவை மூன்றும் பாஞ்சாலபாகம். முதற்பாட்டு நாடுவாழ்த்து. இரண்டாவது மலைவருணனை. மூன்றாவது குழல்வருணனை.
இவை யொன்பதுங் குருகாமான்மியம். இவை மூன்றுபாகமும் பலவடியான்வரு மொருசெய்யுளின்கண்ணே
பலவடிதோறும் விரவியும் பேதித்தும் வருவனவு முள. அவையும் மேற்காட்டுதும்.

80.இன்பந்தெளிவுசெறிவுசமனின்னிசையே
நன்சொலுதாரநவின்றவலி–மன்காந்தந்
தையலுய்த்தலில்பொருண்மைசாற்றுஞ்சமாதியுட
னையிரண்டும்வைதருப்பமாம்.
(எ-ன்) எடுத்தமுறையானே வைதருப்பத்திற் கெய்துவனவாங் குணவலங்காரங்கட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்ற்று.

(இ-ள்) இன்பமுந் தெளிவுஞ் செறிவுஞ் சமனிலையு மின்னிசையு முதாரமும் வலியுங் காந்தமு முய்த்தலில்
பொருண்மையுஞ் சமாதி யென்பதோடும் பத்தும் வைதருப்ப குணவலங்காரமாமென்றவாறு.

81.ஏனைக்கவுடமிவையீரைந்தொடுங்கூடா
மானைப்பழித்தமதர்விழியாய்–நூனயந்திங்
கெண்ணியபாஞ்சாலமிவைகட்கிடைப்பட்டு
நண்ணியதோர்சால்புடைத்தாநான்கு.
(எ-ன்) ஒழிந்தனவாங் கௌட பாஞ்சாலங்களும் அக்குணவலங்கார மேற்குங் கூறுபாடுணர்ற்று.

(இ-ள்) ஒழிந்த கௌடமு மிங்ஙன மெண்ணப்பட்ட பத்தி னோடுங்கூடாது நடக்கு மிலக்கணத்தவா மென்றவாறு.
பத்தினோடுங் கூடாதெனவே யும்மை யெச்சமாதலாற் சிலவற்றோடுங் கூடியும் வருமென்பதாம்.
பாஞ்சாலமு மப்பத்தினோடும் வைதருப்ப கௌடங்க ளோடுங் கூடா திடைப்பட்டுநடத்தலைப்பொருந்து
மொழுக்கத்தினை யுடைத்தென்றவாறு. இவைகட்கும் என்னும் உம்மை யிறந்தது தழீஇய எச்சவும்மையாம்.

82.சொல்லாற்பொருளாற்சுவையுறலின்பந்தெளிவு
மொல்காப்பொருள்புலப்பாடொண்செறிவு–நல்லா
யெழுத்தோரினஞ்செறிதலெல்லாவெழுத்தும்
வழுத்தீர்ந்துறல்சமனுமாம்.

83.இன்னிசையதின்னிசையாமேய்ந்தவுதாரங்குறிக்கொள்
சொன்னடையால்வேறுபொருடோன்றலா–நன்னுதாஅல்
வாய்ந்ததொகைமிக்குவருதல்வலிகாந்த
மாய்ந்தொன்றனையுயர்த்தலாம்.

84.செய்யுட்பொருளைத்தெளியவிரித்தற்குரிச்சொல்
லெய்துநடைத்துய்த்தலில்பொருண்மை–தையலா
யோங்குஞ்சமாதியுவமேயத்தின்வினையை
யாங்குவமைக்கேற்றுவதொன்றாம்.
(இவைமூன்றுசூத்திரமு முடனெழுதப்பட்டன. )

(எ-ன்) இவை யின்பமுதற் சமாதியீறாய பத்து மாமாறுணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலு மினிமையுறவருதல் இன்பமாம்.
தெளிவென்பது கவியாற் கருதப்படும்பொருள் கேட்போர்க்குக் குறிப்புமொழியின்றி வெளிப்படைமொழியாகத் தோன்றுவதாம்.
ஒள்ளியசெறிவும், மூவினமாகிய எழுத்து ளோரின மிகுந்து செறியப் பாடுவதாம். ஒள்ளியசெறிவென்றதனால்
எழுத்தானாகிய சொல்லானாய பொருள் செறிதலுங் கொள்க. சமனிலை மூவினமும் விரவப் பாடுவதாம்.
இரட்டை துணிவு. இன்னிசையும் அவ்வவ் செய்யுட்கேற்ற சொன்னடையாற் பாடுவதாம்.
உதாரமும் செய்யுட் சொன்னடையால்வரும் பொருளன்றி யதன் குறிப்பினால் வேறுபொருடோன்றுவதாம்.
வலியும் தொகைநிலைச்சொன் மிக்குவருவதாம். காந்தமும் ஒன்றனை யுயர்த்திப்புகழுங்கா லுலக
நடையிறவாமை யாராய்ந்துயர்த்துவதாம். உய்த்தலில்பொருண்மை கவி தன்னாற்கருதிய செய்யுட்பொருளை
விளங்க விரித்துக் கூறுவதற்குப் பிறிது மொழிபெய்துகூட்டா ததற்குரியசொற்கள் செய்யுளகத்துளவாம்படி பாடுவதாம்.
சமாதி உவமேயத்தின்வினையை யுவமைக்கேற்றுவதோரிலக்கணத்ததா மென்றவாறு.
இதனைச் சாற்றுஞ் சமாதியென்றதனாற் குணவலங்காரங்கள் பத்தினுள்ளு மிதுவே சிறந்த
குணவலங்கார மென்பதூஉ மிஃது மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பதூஉ மாயிற்று.
இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை யிடையிட்டுவந்தன. ஆம் என்பதனைச் சூத்திரந்தோறு மிறுதிவிளக்காகக் கூட்டுக.
நல்லாய், நன்னுதாஅல், தையலாய் என்பன மகடூஉமுன்னிலை. தையலென்பது அண்மைவிளி.

அவற்றுள், சொல்லின்பமாவது அடை சினை முதலென முறைமூன்று மயங்காமை வரும் வண்ணச்சினைச்
சொற்களும் முதலொடு குணமிரண்டடுக்கிவரும் அடைசொற்களுஞ் சினையொடு குணமிரண்டடுக்கி வரும்
அடைசொற்களும் வழக்கிடமுஞ் செய்யுளிடமுமாக விரண்டிறந்தனவா யடைபல வேண்டினவழியேபுணர்ந்த
சொற்களுடன், வழிமோனை முதலியன வரத்தொடுப்பனவாம்.
அவற்றாற் கேட்டோர் பெறு மின்பம் சொல்லின்பம். பொருளாவன :- அறம் பொருள் இன்பம் வீடென்பன.
அப்பொருளால்வரு மின்பமாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங்கட்கு வரு மின்பம்போலக் கவிப்
பொரு ளுட்கொண்டோர்க்குவரு மின்பமாம். னெவே யவ்விரண்டினுள், பொருளணியுள்ளு முக்கியமான
பொருளணி யுடைத்தாய்ப் பாடுவதே பொருளின்பமாம். இனிச் செய்யுள் வருமாறு :-

வெண்டிரைப்புனலறாவியலயல்வயல்விரி
வண்டிமிர்பாசடைக்குவளைமென்பனிமலர்
புறக்கொடைமதிதரப்பொதியவிழ்ந்ததுபோய்ச்
சிறக்கணித்தனவாஞ்சேயிதழ்க்குமுத
முட்டாட்டாமரைமுறுக்குடைநாண்மலர்க்
கட்காமருகடைவாய்வழிந்திழிதா
மேய்தருகயவாய்மேதிகன்றுள்ளுபு
பணைமுலைசுரந்துபனித்தபாற்றடினி
நெடுவெண்டிங்கணிறைமறுத்துடைத்தொளிர்
செந்தளிர்ப்பூஞ்சுனைத்தேமாத்துகுகனி
முடப்பரியரைப்பலாமுட்புறக்குடக்கனி
புறக்காழ்மரகதப்பூகமிடற்றி
னிறக்காழ்திரண்டுநீண்டுதிர்பழுக்காய்
நெட்டிலையரம்பையினீடுபொற்கூன்கனி
புதையிருடுரீஇக்கதிர்பொழிநவமணிக்குவை
சுழித்தெடுத்திரைத்தவாய்த்தூமலர்பலகொடு
பாற்கடல்பொன்னியுட்படிதிருவுருவங்
காண்பதின்முன்னியகாட்சியொன்றெனலாய்த்
துறைதொறுந்துறைதொறுந்துழனியின்வளைக்குந்
திருவரங்கேசனைத்திருமறுமார்பனை
மனத்துறநினைந்தும்வாழ்த்தியும்வணங்குந
ரெக்குலத்தெவரேயாயினு
மக்குணத்தவர்க்கடியேனடியேனே. (77)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நால்வகை யடைசொற்களும் வந்தவாஞ் சொல்லின்பத்தோடும் பொருளின்பமும்
வந்தமையா லிது சொற்பொருளின்பம். இதனு ளீரடை முதலொடுஞ் சினையொடும் புணர்ந்தன வைதருப்பம்.
இரண்டிறந்த மூவடை புணர்ந்தன பரஞ்சாலம். இரண்டு மூன்று மிறந்த பலவடை புணர்ந்தன கௌடச்சொல்லின்பம்.
ஆதலாற் சொல்லின்ப மூன்றுபாகமும் அவற்றோடு மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம்
பொருளின்பமும் பல வடியான்வந்த ஒரு செய்யுளகத்துக் காட்டியவாறு கண்டுகொள்க.
இதனுட் பொருளணியாவது தற்குறிப்பேற்றவுவமை. திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து.

பொன்னசலந்திரண்டிரண்டாம்பொருவமர்தோட்கமலக்கட்
பொலிந்துநின்றா
ரன்னவயற்குருகூரரணிவரைவாழ்மதர்நெடுங்க
ணணியிழாய்கேண்
மின்னிடையார்புறந்தருநாண்மிகுகாமக்கடலாழ்ந்த
மிக்கோர்தங்கண்
மன்னுயிரைத்தரும்புணைதான்மலிதிரைநீர்க்கடலிடத்தார்
மடலென்பாரே. (78)
இது வைதருப்பச்சொல்லின்பம். பகுதி-மடல். துறை-உலகின் மேல்வைத்துரைத்தல்.
இவ்வாறு பொழிப்புமோனையாய்வருத லின்னா தெனவேண்டுவர் கௌடர்.

குயிலாருங்குளிர்பொழிற்றென்குருகேசன்குழகனுயர்
குன்றிற்குன்றாக்
கயிலாயன்களத்தணிந்தகடுவிடமுங்கரத்துழையுங்
கரந்தகண்ணாய்
மயிலாலுமழைதவழ்நும்மணிவரைக்கெம்மணிவரைநின்
மணிப்பூண்மன்னும்
பயிலாரப்பணைமுலைக்கோர்பணைமுலையெப்படியெனுமப்
படியாம்பண்பே. (79)
இது கௌடச்சொல்லின்பம். பகுதி – வன்புறை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.

கடுவேகயலெனக்கரந்தடுங்கண்ணிணை
காமனுங்காமுறுங்காட்சியகாண்முகங்
கிள்ளையின்கிளையுங்கிளைத்தகைக்கிளையுடைக்
கீரமுங்கீர்த்திக்கீரமுங்கீரே
குவடுடைக்குளிர்பொற்குன்றேகுவிமுலை
கூர்புதற்கூன்சிலைகூற்றுயிர்கூட்டுணுங்
கெடலருங்கெழுதகைகெழுமுபுகெழீஇய
கேகயங்கேளொடுங்கேடுறுங்கேழியல்
கைபுனைகைக்கிசைகைக்கிணைகைத்துணை
கொண்டலுட்கொண்டன்னகொண்டையுங்கொடியிடை
கோடாக்கோவலர்கோற்றொடிகோமான்
கௌரவகௌசிகன்கௌசிகங்கௌத்துவ
மணியெனக்கொண்டுமனவீடளித்தோன்
கண்ணன்குறுங்குடிக்கனவரை
மண்ணகத்துறையுளாய்வளர்நிலமகட்கே. (80)
இது ககர வருக்க முற்றுமோனை. இதுவுங் கௌடச்சொல்லின்பம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

கயலெனவேமதர்த்தமர்த்தகருநெடுங்கண்ணிவடனக்கிக்
கன்னிமன்னோ
வயலெனவேயமர்துணையன்றளவளாயமர்துணையென்
றறிந்ததன்பான்
மயலறவேயியற்றமிழ்செய்மகிழ்மாறன்றுடரியின்கண்
மணந்தகாதல்
புயலெனவேபுரைநறுமென்புரிகுழற்குப்புகல்வனினிப்
புகலுமாறே. (81)
இது பாஞ்சாலச்சொல்லின்பம். பகுதி – மதியுடன்படுதல். துறை – குறையுறத்துணிதல்.
“குயிலாரு” மென்பதனையும் பாஞ்சாலச்சொல்லின்ப மெனினு மாம்.

வண்ணமுலைப்பொற்றாமரைமுகுளம்வீறழிந்து
கண்ணெகிழாவண்ணங்கருதியோ–தண்மதியை
மால்வைத்தமாநிதிவண்கோளூரில்வாணுதாஅன்
மேல்வைத்தான்மேனாள்விதி. (82)
இது பொருளின்பம். இதனுண் முலையாகிய பொற்றாமரைமுகை யவிழாதிருப்ப வதன்மேலாகப் பிரமன் மேனாண்
முகமென்று பெயரை யுடைய மதியைவைத்தா னென்னும் பொருளின்பம் வந்தவாறு காண்க.
பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.

மேலைமலைக்கதிர்மறையக்குவிமரையுட்டேனசையான்மீளாவைகிச்
சோலையில்வண்டினந்திறப்பவயற்கழுநீரிடந்தோய்ந்தசுரும்புமாதோ
மாலையிற்றன்மனைபுகுதுமணமகனைவிறலியொடுமதங்கன்பாடிக்
காலையினிற்றுயிலெழுப்பக்கடைதிறந்துபரத்தையிற்போகியகாட்சித்தே. (83)
இதுவுமது. துறை – நாடுவாழ்த்து.

திரகாயத்திரிகருணைக்கிலக்காகுமுணர்வுடையோர்சித்திகாட்டப்
பரகாயத்திடைபுகுந்துமறித்தொருகாயம்புகுமப்பான்மையேய்ப்ப
வுரகாயத்துரிவையுரீஇயொருபரந்தளொருபாந்தளுரிபுக்கூர்ந்து
வரகாயத்தகடுரிஞ்சும்பஃறலையமலைமுழைபோய்வைகுமன்னோ. (84)
இதுவுமது. மலைவருணனை. இவையிரண்டுங் குருகாமான்மியம். இன்பம் முற்றும்.

ஏவொன்றுடக்கியிருபதுகைக்கார்வயிரத்
தூவொன்றுடலந்துளைபடுத்த–காவொன்
றரங்கத்தானல்லாதனைத்துயிருங்காத்தற்
கிரங்கத்தானல்லாரெவர். (85)
இது வைதருப்பத்தெளிவு. இதற்குச் சொல்லின்முடிவாற் பொருடோன்றும். துறை – கடவுள்வாழ்த்து.

தேனேமுளைமதியஞ்செந்தழல்பாரிப்பவிருந்
தேனேயயலார்சிரிப்பவே–தேனே
யிறைவகுளத்தாமரையோவெய்தார்வேளெய்து
குறைவகுளத்தாமரையோகூறு. (86)
இது சொல்லாற் கவியருமையும் நோக்குடைப்பொருள்கோளுந் தோன்றத் தொடுத்தமையாற் கௌடத்தெளிவு.

(இ-ள்) தேன்போலும் இனிய மொழியையுடையாய் ! இளம்பிறை யானது தழலைவிரிப்பவும் அயலார்சிரிப்பவும்
இத்துணைப்போதும் உயிரைத் தாங்கியிருந்தேனே ! இங்ஙனமிருந்த வெனது துன்பமிகுதியும் நாண்டுறந்ததுங் கண்டு
தேனையொழுக்காநின்ற வகுளத்தாமத்தை யுடையோர் அந்தோ மேவுகிலர் ;
இனிக் காமனெய்து குறைந்துபோவன குளத்தின்கட் டாமரையொன்றேயோ, ஓடையிற் காவியும் ஆவியு மல்லவோ கூறுவாயாக ; என்றவாறு.

ஏகார நான்கினுண் முன்னது விளி. இரண்டாவது திரக்கத்தின்கட் குறிப்பு. பின்னைய விரண்டு மீற்றசை.
தாமரையோவென்னு மோகாரம் ஒழியிசை. திணை – பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை – துன்பு மிகுதி தோழிக்குரைத்தல்.

உள்ளத்துணர்வெனுங்கண்ணுட்கொண்டுகாண்பதற்குங்
கள்ளக்கருங்கண்கலுழ்வனகண்–டெள்ளிப்
பிரியாரையுந்திருமால்பேர்நகரார்தூற்றத்
தரியாதென்னுள்ளந்தளர்ந்து. (87)
(இ-ள்) எனதகத்தே யறிவென்னுங் கண்ணானது நங்காதலருட னென்னையு முட்கொண்டு காணாநிற்பதற்குப் புறத்தே தாமுங்காணாத
உடன்போக்கு. துறை – பூத்தருபுணர்ச்சிக் கறத்தொடு நிற்றல். இவ்வாறு மெல்லினவண்ணத்தால்
மெல்லெழுத்துச் செறிந்துவருதல் விரும்பாது வல்லினவண்ணத்தால் வல்லெழுத்துச்செறிந்த
சொல்லோடும் வற்கெனத் தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

புட்குழியுத்தமர்புட்கொடியத்தர்பொருப்பின்மடக்குயிலே
கட்டழல்கக்குகுழிச்சிறுகட்கரடத்ரிகடத்தொருமா
விட்புலமுற்றவிருப்பமிகுத்ததொர்வெற்றியனைக்குறுகா
வுட்குறவெற்றினனற்றதுதிக்கையொடுற்றமருப்பிணையே. (89)
என்பது, புட்குழியென்னுந்திருப்பதியின்கண் ணுத்தமர், கருடக்கொடி யுயர்த்த சுவாமியார்
பொருப்பிடத்து மடப்பத்தையுடைய குயிலே ! மிக்க அழலைக்கக்குங் குழிந்த சிறுகண்களையு முள்ளத்தறுகண்மையையுங்
கவுளின்கண் மதத்தினையு முடையதோர் யானை, விண்ணோரனை வரும் விருப்பத்தை மிகுப்பதோர்
வெற்றியையுடையானொருவனைப் பாயும்படிக்குக் குறுகினகாலத் ததனுள்ளமுட்க வவ னதனை வாளாலெறிதலு
மதன் றுதிக்கையுந் துதிக்கைபற்றிய விருகோடு முடனே யற்ற வென்றவாறு.

இங்ஙனம் வல்லிசைவண்ணத்தால் வந்தவாறு கண்டுகொள்க. அஃதே லிதன்முதனூல் செய்த தெண்டியாசிரியர்
“செறிவெனப்படுவது நெகிழிசையின்மை” யென வைதருப்பச் செறிவிற்குக்கூறியதனை விரும்பாது
ஒருதிறத்தெழுத்தானே நெகிழத்தொடுப்பதே கௌடச்செறி வெனவேண்டிய திந்நூலுடையாருட்கொண்டு
மிங்ஙனம் வற்கெனத் தொடுத்தன் முதனூலோடும் வழிநூன் மாறுகொளக்கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்,
நன்றுசொன்னாய் ! அவர்தாமே “விரவத் தொடுப்பது சமநிலையாகும்” என்பதற்குச்
“சோகமெவன்கொலிதழி பொன்றூக்கின” என்பதனுள் மூவினமும் விரவத்தொடுத்ததனை வைதருப்பச்சமநிலையெனவும்,
விரவுதலுள்ளும் வல்லெழுத்துச்செறிய இடர்த்திறத்தைத்துறபொற்றொடிநீயிடித்துத்தடித்துச்,
சுடர்க்கொடித் திக்கனைத்துந்தடுமாறத்துளிக்குமைக்கார்’ என வற்கெனத் தொடுப்பதே கௌடச்சமநிலையெனவும்
காட்டினமையானும் இவ்வண்ணங் கூறாக்கால் வைதருப்பச் செறிவிற்கும் வைதருப்பச் சமநிலைக்கும்
வேற்றுமையின்மையானு மிச்செறிவிற்கு மோசையே நோக்கமென்பதனாவிருப்பத்தா லென்னை வஞ்சித்த கள்ளத்தையுடைய
விக்கண்களழு வதனைக்கண்டு எம்மையிகழ்ந்து பிரியாதவரையுந் திருமால் திருப்பேர் நகரின்கணுள்ளார்
பிரிந்தாரென்று தூற்றுமதனைக்கேட்டுத் தளர்ந்தவென்னுள்ளம் ஒருவழிப்பட்டுநில்லாதென்றவாறு.

இது பாஞ்சாலத்தெளிவு. என்னை? வைதருப்பத்தெளிவுபோல வெளிப்படையுமன்றிக் கௌடத்தெளிவுபோல
நுண்ணிதாய்க் குறிப்பினாற் கொள்வதுமன்றி யிடைப்பட்டநீர்மைத்தாய்வந்தமையா னெனக் கொள்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். தெளிவுமுற்றும்.

வண்ணமைந்நிறவண்ணன்விண்ணினு
மண்ணினும்முறைவார்
கண்ணன்விண்ணகர்மஞ்ஞைவிம்மிய
கண்ணகன்வரையோ
ரண்ணலிம்மலர்கொண்மினென்னவு
மன்னையங்ஙனம்யா
னெண்ணவொண்ணுதன்முன்னின்முன்னருள்
கென்னமுன்னினளே. (88)
என்பது, அன்னாய் ! அழகிய மேகம்போன்ற திருமேனியையுடையான், சுவர்க்கத்தினும் பூமியினு முறைவார்
கண்ணினுள்ளான் அவனது திரு விண்ணகரத்து மயில்கள் அகவும் இடமகன்ற மலைப்பக்கத் தொரு பெரியோன்
யாங்கள் விளையாடும் வண்டன்மாளிகை முன்றிற்கண் வந்து நுமது வண்டலம்பாவைக்கணிய விம்மாலையை
வாங்கிக்கொண்மினென்று கூற, அங்ஙனம் வந்து கூறியதற்குச் செய்யவேண்டுவதென்னென் றியா னெண்ணாநிற்ப,
நம தொளிபொருந்தின நுதலினையுடையாள் முன்னாள் அதனை யருள்கென வவன்முன்னேசென்று அதனை வாங்கினள் ;
இஃ தியானறிந்தபடி யென்றவாறு.

முன்னில்-இன்முன் ; அஃது முன்றிலென இலக்கணப்போலியாயும் வரும். முன்னிலெனவே வண்டன்மாளிகையும்
வண்டலம் பாவையுங் கூட்டியுரைக்கப்பட்டன. இது வைதருப்பச்செறிவு. என்னை?
மெல்லினமாகியவெழுத்துச்செறிய மெல்லினவண்ணமுற் றவ்வெழுத்தானாய சொற்கள் செறியச் செறித்தமையி னெனக்கொள்க.
பகுதி -பிறவினமுஞ் சிறிது விரவுவதே முறையென்றுணர்க. இவற்றுள் முன்னையது பகுதி – நடுங்கநாடல் ; துறையுமது.
இது பகுதி – உடன் போக்கு. துறை – பதிபரிசுரைத்தல். இவைமூன்றும் எழுத்துச்செறிவு.

மறைமுரசந்தாமமகிழ்வழுதிநாடர்
துறைபொருநைவெற்பூர்துடரி–யுறைகுருகை
யஞ்சம்பராங்குசம்வெள்ளானைகொடியாணைமா
பஞ்சகலியாணன்பரி. (91)
என்பது, வழுதிவளநாடர் துறை – பொருநை ; வெற்பும் ஊரும் – துடரியும் உறையுளாங் குருகாபுரியும் ;
பரி – பஞ்சகலியாணன் ; மா – வெள்ளானை ; ஆணை – சீபராங்குசம் ; கொடி – அன்னம் ; தாமம் – மகிழ் ; முரசு வேதம் என்றவாறு.

இதனுள் வழுதிவளநாடர் என்பது மத்திமதீபம். அதுவே நாடுந் திருநாமமுமாம். வெற்பூர் – நிரனிறை.
பரி மா ஆணை கொடி விதலை யாப்பும், தாமம் மகிழ், முரசு மறை என மொழிமாற்றுமாகத் தசாங்க மென்னுஞ்
சின்னங்களாகிய பல்பொருட் செறிவோடும் பல பொருள் கோளுஞ் செறிதலா னிது பொருட்செறிவு. துறை – தசாங்கவாழ்த்து.

மறந்தாங்கித்தெவ்வடுவைந்நுதிதாங்கியிருட்பிழம்புமடியச்செந்தீ
நிறந்தாங்கியிடங்கரின்வெண்ணிணந்தாங்கியனைத்துலகுநியதிகாக்குந்
திறந்தாங்கியொளிர்திகிரிப்படைதாங்கித்திருவடிபொற்சென்னிதாங்கி
யறந்தாங்கிவளம்புகழ்வாரறந்தாங்கியவரெனுமிவ்வங்கண்ஞாலம். (92)

தழற்பாணிகறைகெழுவச்சிரபாணிமிளிர்படிகத்தாமம்வேய்ந்த
நிழற்பாணிவிழைந்தகமண்டலபாணிமுதலெவர்க்குநிபனேயாய்வேய்ங்
குழற்பாணிகொடுதொறுவின்குழுவழைத்தமழைமுகில்பார்குளிர்ப்பானீன்ற
கழற்பாணிதனைப்புகழ்சக்கரபாணியனைத்துயிர்க்குங்களைகணாவான். (93)

இவையிரண்டும் ஒருவகைச் சொற்செறிவு. இங்ஙனம் வந்த சொற்செறிவும் பொருட்செறிவும் மூன்றுநெறியார்க்கு மொக்கும்.
துறை – செந்துறைப்பாடாண் பாட்டு. செறிவு முற்றும்.

விழியுங்களபமுலையும்புன்மூரலும்வேயுமுந்திச்
சுழியும்முரோமவொழுங்குங்கண்டேம்வண்டுசூழ்ந்துசெந்தேன்
வழியுந்திருமகிழ்மாலைப்பிரான்வெற்பில்வல்லிசெவ்வாய்
மொழியுந்துணைநெஞ்சமேசெவிக்கேயென்றுமூழ்குவதே. (94)
இது வைதருப்பச்சமனிலை. துறை – கிளவிவேட்டல்.

பனிப்பிறைப்பற்றுளைக்கட்செவித்துத்திப்பணாடவிமேற்
குனித்தபொற்சிற்றடிச்சித்திரக்கார்குருகேசன்வெற்பிற்
றுனித்தழற்கட்களிற்றைக்கொடுஞ்சீயந்துரத்திருள்வாய்த்
தனித்துறற்குய்த்துணர்த்துங்கதிர்வேலவன்றாழ்குழலே. (95)
இது கௌடச்சமனிலை. சூத்திரத்துள் நிலையென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தனித்துறற்கு – கங்குலின் கட்டனித்துக் குறிவழிவருதற்கு. உய்த்துணர்த்தும் – என்னுள்ளங் கொள்ளச் செலச்சொல்லி யுணர்த்தாநிற்கும்.
கதிர்வேலவன் – ஒளியையுடைய வேலவன். தாழ்குழலே – தாழ்ந்தகுழலினையுடையாய்.
யான் இதற்குச் செய்யவேண்டுவ தென்னென்றவாறு. பணாடவி – ஆகுபெயர். பகுதி – இரவிற்குறி. துறை – இரவுவரவுணர்த்தல்.

இடிக்குங்கடகளிற்றான்சடகோபனியலிசையாய்
வடிக்குந்தமிழ்மறைபாடியமாறன்மணிவரைமே
னடிக்குங்களிமயிலேவருந்தேனுமர்நல்வரைப்பூங்
கொடிக்குங்கொழுகொம்பராமெமர்மாடக்கொடிக்கழையே. (96)
இது பாஞ்சாலச் சமனிலை. பகுதி – இயற்கை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.
இவற்றுள் மூவினமும் விரவிவந்தவாறு காண்க. மூன்றனுண் முதற்பாட்டும் மூன்றாம் பாட்டும் கிளவிமணிமாலை. சமனிலை முற்றும்.

எழுகாதலினாலிருகாவியுணீ
ரொழுகாமதியாலுலைவாய்–மெழுகா
யுருகாதணையாருயிர்காவலர்பே
ரருளாளருமாமவர். (97)
இதனுள், இருகாவியுணீர் – இரண்டுகண்ணு ணீர். ஒழுகா என்றது ஒழுகவென்பத னெதிர்மறை.
உருகாதணையாரென்பது வினையெதிர் மறுத்தவினையெச்சம், அணையாரென்னும் வினைகொண்டது.
பேரருளாளருமாமென்னு மும்மையால் உயிர்காவலருமாம் என்னு மும்மை விரிக்க.
உயிர்காவலருமாய்ப் பேரருளாளருமாக, உருகு மென் காதல் கண்டு முருகியணைகின்றில ராதலா லிஃ தென்வினையன்றோ வென்றவாறு.

திணை- பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – நிலவுகண்டழுங்கல். இது தூங்கிசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையால் வைதருப்ப வின்னிசை. என்னை?
“இயற்சீர்வெண்டளையான்வரும்யாப்பைத், தூங்கிசைச்செப்ப லென்மனார்புலவர்.” என்றதனா லறிக.
இவ்வாறு விரும்பா தேந்திசைச்செப்பலோசைத்தாய்த்தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

குஞ்சரமாமெய்ததுவன்கோதண்டங்கூடாமல்
வெஞ்சரம்பாய்வித்தனரால்வேட்டைதான்–வஞ்சகமே
யாங்கடவார்பூம்புனமீங்காரிவரென்றேயறியேம்
வேங்கடவாணன்சிலம்பின்மேல். (98)
என்பது, வேங்கடவாணன்வரையிடத் திவ ரெய்ததுங் குஞ்சரமாம் ; வில்லுமின்றியே தழையே வில்லாக வெம்மையைச்
செய்யும்வாளியைப் பாய்வித்தனராகையா லிவர் வேட்டைமேலிட்டுவந்தது தான் வஞ்சமே யாம் ;
அதுவுமன்றி, நமது பொலிவையுடைய புனத்தைவிட்டுநீங்கு கின்றிலரால், இவர் யாரென்றும் வந்தகாரணம் யாதென்றுந் தெளிகில மென்றவாறு.

பகுதி – இருவருமுளவழி யவன்வரவுணர்தல். துறை – ஐயுறுதல். இஃ தேந்திசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையாற் கௌடவின்னிசை. என்னை?
“வெண்சீர்வெண்டளையான்வரும்யாப்பை, யேந்திசைச்செப்ப லென்மனார்புலவர்” என்பதனாலறிக.

மானபரனீந்தமணியாழிகைக்கொடுத்துச்
சானகிதன்னாவிதளிர்ப்பித்தான்–மீன
நெளிதரங்கவேலைநெறிகடந்துதேவர்
களிபுரந்தசேயெமதுகண். (99)
என்பது, பெருமையுடைய பரமனாகிய இரகுநாதன் கொடுத்த மாணிக்கத் திருவாழியைக் கொடுத்துச் சனகராசன்
புதல்வி திவ்வியான்மாவைத் தழைப்பித்தான் ; அவன் யாரெனின்,
மீன்களையுடைத்தாய் நெளிக்கப் பட்ட திரையையுடைய சமுத்திரத்தி னெல்லையைக்கடந்து தேவர்க் கெல்லாங்
களிப்பைக்கொடுத்த அஞ்சனைபெற்ற புதல்வன், எனக்கென்னுறுப்பிற்சிறந்த கண் ணென்றவாறு.

இஃ தொழுகிசைச் செப்பலோசைத்தாயே வந்தமையாற் பாஞ்சால வின்னிசை. என்னை?
“வெண்சீரொன்றலுமியற்சீர்விகற்பமு, மொன்றியயாப்பேயொழுகிசைச்செப்பல்” என்பதனா லறிக.
இம்மூன்று விகற்பமு மூன்று நெறியார்க்கு மொக்கு மென்பாரு முளர். திணை – பொதுவியல். துறை – தூதுவென்றி.

நாட்டங்களிபற்றநாவுநசைபற்ற
வேட்டிற்பலர்கையிணைபற்றத்–தோட்டிலஞ்சிக்
கன்புற்றமுத்தர்பெருமானடிபரவி
யின்புற்றவர்க்கடிமையாம். (100)
இவ்வாறு வரும் பொய்ந்நிலப்பட்ட வின்னாவிசை மூன்றுநெறியாரும் வேண்டாரெனக்கொள்க.
தெண்டியாசிரியர் ஒழுகிசையென்பது மிது. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல். இன்னிசை முற்றும்.

மண்ணோர்தொழுஞ்சேறைமாயோன்மணிமார்பிற்
பெண்ணோர்மனுகுலமாம்பெற்றியாய்–விண்ணோர்
மருந்துதலைப்பெய்திருப்பமம்மர்கூர்நஞ்ச
மருந்துதலைச்செய்பவரிங்கார். (101)
என்பது, உலகின்கண்ணுள்ளார்வணங்குந் திருச்சேறையின்கண் மாதவன் றிருமார்பிலிருக்குந் திருமகள்
மனுகுலத்துட் டோன்றிய தொன்றா மியல்பினையுடையாய் !
விண்ணிற் றேவர்பானமாகிய அமிர்தமானது தம்மிடத்தே தமதாகவிருப்ப அதனையு மருந்தி மருந்து
பிறிதில்லாப் பெரும்பிணியைத்தரும் நஞ்சையு முண்ணாநிற்பவ ரிவ் வுலகின்கண் யாவர்தா மென்றவாறு.

பகுதி – பரத்தையிற்பிரிவு. துறை – நினைவறிகண்புதை. இது வைதருப்பவுதாரம். என்னை?
தம்மிடத்திலே பெறுதற்கரிய அமிர்த மெளிதாயெய்தியிருப்ப வதனை யுண்ணாநின்றவர் அயலேயிருக்கு
நஞ்சினையுஞ் சென்றுண்ண விரும்புவா ருலகின்கண்ணில்லையால், அதுபோல நின்னிடத் துவட்டா வின்பந்துய்க்கின்ற
யான் பிறரிடத் துவர்ப்புடைத்தா மின்பந் துய்யேனென்பது குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமை யினானெனக் கொள்க.

நாதன்மகிழ்மாறனன்பனுவல்கற்றுணர்ந்து
போதந்தழைந்தபுனிதர்தாம்–வேதம்
விதித்தவொருமூன்றின்மெய்ம்மையுணர்வான்
மதித்தொருநூலோதார்மறித்து. (102)
இதுவும் வைதருப்ப வுதாரம். என்னை? மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணர
வேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கொள்க.
வேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை – உண்மை.
உணர்வான் – உணரவேண்டி. மதித்து – உட்கொண்டு. மறித்து – மீண்டும். திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

காழில்கனியுண்கடுவன்களங்கனியை
யூழிற்பருகியுருகுதிரு–மூழிக்
களத்தாதியைமதங்காகாமக்குழவி
வளத்தாரிடந்தேடுவாய். (103)
என்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே ! பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய அரம்பைக்
கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய
களங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக்
காமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.

காழ் – கொட்டை. ஊழில் – ஊழ்வினையாலேயெனினுமாம். இது கௌடவுதாரம். என்னை?
‘காழல் கனியுண் கடுவன் களங்கனியை யூழிற்பருகியுருகு திருமூழிக்கள’ மெனவே யக்கடுவன்போல,
உத்தமமாகிய விவளோடும் உள்ளும் புறம்பும் ஒருநீர்மைத்தா மென்மையோடும் உவர்ப்பில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன்,
இழிந்த வியற்கையை யுடையராய்ப் புறம்பு பொருணசைக்காய்ச் சிறிதுநெகிழ்ந் துண்ணெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே
யுவர்த்த சிற்றின்பத்தைத் துய்த் தவ்வின்ப மீட்டுந்துய்ப்பா னவர்சேரிவிட்டு நீங்கானாயினானென வுள்ளுறையுவமங்
குறிப்பிற் கொள்ளக்கிடந்தமையானும், காமக்குழவி வளத்தாரிட மெனவே யிஃது எமது காதற்புதல்வன்
என்னுஞ் செல்வத்தையுடைய மனையென்பதூஉம், யாம் புதல்வற்பயந்த மூப்புடையே மென்பதூஉம்,
இன்னும் அவ்விலேசானே யெம்மிடத் தவர்பெறு மின்பம் எமக் கவர்கொளுத்தக்கொண் டியாங்கொடுக்கு மியற்கை
யின்பமே யல்லாது பலரையுந்தோய்ந் தவரவர்கொளுத்தக் கொண்ட பல விகற்பமாகிய செயற்கையின்ப
மெம்மிடத்தில்லையே யென்னுங் கூற்று மாகக் குறிப்புங் கூற்றுங் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமையானே
யிவ்வாறு வேண்டுவர் கௌடரெனக்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பாணனொடு கூறல். கூற்று – தோழிகூற்று.

நாம்பிரமமென்றேநவில்வாருமன்னுயிர்க
டாம்பிரமத்தொன்றுமெனுஞ்சார்பாரு–மாம்பிரம
நாரணனோவென்பாருநாவீறுடையபிரா
னாரணப்பாக்கற்றுணராதார். (104)
என்பது, பேரானந்தச் சிற்குணாதிகச் சுடர்ச்சொரூப ரூபப் பரத்துவ மென்னும் பரமபதநாதன்,
அநிருத்தனாகி யுந்தியந்தாமரைப் பொகுட்டிற் பலகோடியண்டங்களைப் படைத்துப் பலகோடி யண்டந்தோறும்
பலகோடி பிரமாதிகளைப்படைத் தழிவிலதா யலகிறந்த வணுக்கடோறும் திவ்வியாத்ம சொரூப வியத்தியுடன்
சருவபூத பூரண காரணனாகி மீனாவ தாரமுதலாய வவதாரங்களாலும் அம்சாவதாரங்களாலுங் காவல்பூண்டு
வாழ்நாளுட் டன்னால், லீலைக்காக அமைத்த வவையனைத்து மழிந்துந் தானழியா தேகோதகத்தின்
மே லோராலிளந்தளிரு ளடங்கும் பச்சைக்குழவியாகியும் பல்லாயிரகோடி யண்டமாகியவற்றை யகத்திட்டு மறித்தும்
புறத்திட்டுக் காவல்பூண்டு விளையாடு மகடிதகெடா சாமர்த்திய குணங்களு ளொருகுணமுமின்றி யிருவினைத் தளைப்பட்டு
மல மூத்திராதிகளாலாய பாண்டத்தோடு மிறந்தும் பிறந்து முழலு முத்தியறியா மூடராகி நரம்பிரமமென்றே
நாக்குத் தடுமாறாது நவிலு மொரு சார்பாரும், கற்றறி நூல் பல கற்றனராகித் தத்துவமுணர்ந்தும்
பற்றறச் சாலோகமுதலிய மூன்று மெய்தி யிருவராயிருந் தீறில்பேரின்ப மொருவராமெனத் துய்க்குஞ் சுகரநந்தத்தைக்
கெடுத்துக் கூடாததனைக் கூடுவதாக்கிச் சூனியப்படுத்தி மன்னுயிர் பிரமத்தோடு மொன்றாமென்று நாயனடிமைத்திறம்
நழுவிய மூடரா மொருசார்பாரும், ஆதியு மந்தமு மருமறை யரியென வோதிய பொருளுரைக் குடையதை யறிந்தும்
அகிலாண்டகோடி பிரமாண்டநாயகனென முத்திதருவதாம் பிரமம் சீமந் நாராயணனோவென்றையுறு முழுமூடரும்
ஒருநான்மறைத்துணி வோதாதுணர்ந்த நாவீறுடையபிரான்கூறிய திருவாய்மொழியைக்கற் றுண்மைப்பொருளுணரா மூவகைமூட ரென்றவாறு.

ஆரணத்தின்வழிவந்த நூலாதலாற் றிருவாய்மொழிக் காரணப்பா வென்ப தாகுபெயர்.
அல்லதூஉந் தமிழ்வேதமென்றும் அதற்குப் பெயர். ஆரணப்பாக் கற்றுணராதா ரெனவே யதனைக் கற்றுணர்ந்தா ரவை
கூறாரென்னுங் கூற்று மெஞ்சிநிற்பதூஉங் காண்க. இங்ஙனங் கூறிய மூன்றும் வேதத்தின்வழிவந்த திருவாய்மொழியாகிய
பனுவற்றுணிவன் றென்பதூஉம் அதனைக் குரவரா லுணர்ந்தோர்மதமும் அம் மூன்றினையுந் தள்ளின மதமே
யென்னுமவையுங் குறிப்பெச்சம். இக் கூற்றுங் குறிப்பும் புலவனாலறியலாம்.
இங்ஙனமாகிய சொன்னடை கொண்டு வேறுபொருடோன்றலா லிதுவுங் கௌடவுதாரம். திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

சினமென்பதையறியாதவர்தினமும்புகழ்மாறன்
செஞ்சொற்றமிழ்மறைபாடியசெல்வன்குருகையுளார்
முனமன்பினதளவொன்றியமுறையான்மலரணைமேன்
முடுகும்பரிசமொடிங்கிதமொழியென்பதுபெறவே

தனமின்றெனினுலகத்தெவர்தனியின்பமது றுவார்
தாமென்றபினளகத்துறுதனிவண்டொடுநின்பான்
மனமொன்றியபெடையேவலியுளதென்றனரன்றே
மறையென்றதையுணராதவென்மனதேகொடியதுவே. (105)

என்பது, தோழீஇ! வெகுளியென்பதை மனத்தினாலுங் குறித்தறியாத சுத்தசாத்துவிககுணனுடையோர் வாழ்த்துங் காரிமாறப்பிரான்,
செஞ்சொலாகிய தமிழ்மறையைப்பாடிய செல்வத்தையுடையோன் குருகைமா நகரினிடத்து நம்மிறைவர்
பொருண்மேற்பிரியுமுன்னர் இருவர்க்கும் புணர்ச்சிமேற்சென்ற வுள்ளத்தின்பினதளவும் யாக்கையின்களிப்பு
மேகாந்தமு மிடையாமமும் ஒன்றாகப் பொருந்திய வியல்பான் மலராலலங்கரிக்கப்பட்ட அமளியிடத்து
முடுகிய பரிசத்தோடு நலம்பாராட்ட லென்னு முரைபோற் பிரிதனிமித்தமென்பதாக,
என்னோடுந் ‘திருவே ! மகளிரிடத்துத் தனமென்பன வில்லையாகி னுலகத்துள்ள வாடவருள் யாவர்தா மொப்பற்ற
வின்பத்தை யெய்துமவர்க’ ளென்றன ரதன்பின்ன ரளகத் தரும்பவிழ்ந்தகாலைத் தேனையுண்ண
வந் ததனிடத்துறைவதாந் தனிச்சுரும்போடும் நினதிடத் தொருமனப்பட்ட பெடையே மனவலியுடைய தென்றனரன்றே;
அவையிரண்டையும் மிக்க தொனியென் றுட்கொளாத வெனது மனதே கொடியதென்றவாறு.

இது பாஞ்சாலவுதாரம். என்னை? தனமென்ப திரட்டுறமொழிதலாய் நடுவணை யெய்தாதவர்க் கிருதலையுமெய்தா;
பொருள்வயிற்போக வேண்டு மென்பதனை யுணர்த்தியதாகவும், நின்பான் மனமொன்றிய பெடையே வலியுளதென்றதனால்
நீவைத்து நீங்கியபெடை நின்னையின்றி யாற்றாமையாற் றானிறக்கி னீயு மிறப்பையென்று நினதுயிரைப் போற்றித்
தனதுயிரைப் பிடித்திருந்த மனவலியுடைத் தென்பதா யது போலத் தாம்பிரிந்தகாலத் தியானு மாற்றாமையா லிறவாது
தம் முயிரையும் போற்றி இல்லறங்காத்திருத்தல்வேண்டுமென்பதூஉ முணர்த்தியதாகக் குறிப்பினாற்
பிறபொருள் கொள்ளக்கிடந்தமையா னென்றறிக.
இதனுள் அளவும் என்னு மும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தோழீஇ என்னு முன்னிலைப்பெயரு மெஞ்சிநின்றதுங் காண்க. பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். இவற்றை மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பாருமுளர்.
அவை பொருந்தாவென வுணர்க. உதாரம் முற்றும்.

மன்னிலங்கைமூதூர்வழியோதிறந்ததொன்னார்
பொன்னகர்செல்வாயிற்புதவன்றோ–தென்னரங்கன்
மைந்நீரசெம்பவளவால்வளையவண்டரள
முந்நீரணைகட்டுமுன். (106)

என்பது, அழகிய திருவரங்கத்தையுடைய மாயோன் கடலைக் கரை கட்டின முற்காலத்து இராவணனாகிய
நிருதர்கோன திலங்கையாகிய பழையநகர்க்குச் செல்லும் வழியோ திறந்தது?
தென்னரங்கேசனது பாணத்தா லிறந்த சத்துருக்களாகிய அரக்கர்செல்லும் வீரசொர்க்க வாயிலின்கட் கதவல்லவோ திறந்த தென்றவாறு.

எனவே வழியுங் கதவுந் திறந்த தென்பதாம். மைந்நீர செம்பவள வால்வளைய வண்டாள முந்நீரை யெனக் கூட்டுக
இது வைதருப்பவலி. என்னை? இருளி னீர்மையுடைத்தாய்ச் சிவந்த பவளத்தைப் பெற்ற வெளுத்த வளையைப்பெற்ற
அதனிடமாக வளவியதரளத்தைப் பெற்ற முந்நீரை யூடறுத்துக் கடலை யணைகட்டின முற்காலத்தெனவே
வேற்றுமைத்தொகை இருபெயரொட்டுப்பண்புத்தொகை வினைத்தொகைகளை முன்னிட்டுப் பெயருடைமைப்
பொருளாய் நின்று கருகும்நீர்மை யுடையநீரையெனப் பெயர்மே லேறியவிடத்து மிப்பொருளையுடையதாயிருந்த
திப்பொரு ளென்னுமிடத்து மிடைநின்ற வுடைமைவினைக் குறிப்புங் காலம்பெற்ற வினைக்குறிப்புமாகிய
சொற்க ளிடையிடை பல விடத்துந் தொக்கதோடும் பிறசொற்களுந் தொகைமிக்கு விரிதலானும் எனக்கொள்க.
திணை – உழிஞை. துறை – புறத்திறை.

வன்கேழற்பன்றியாய்வான்பிறைக்கோட்டாழ்புனலாழ்
கொன்கேழ்கிளர்தாழ்குழல்களிப்ப–முன்கொணர்ந்த
வெம்பிரான்சங்காழியேந்தினானெவ்வுளார்
தம்பிரான்றாளேசரண். (107)

என்பது, வலியகேழலாகிய பன்றியாய் வானின்கட் பிறைபோன்ற கோட்டாலே யாழ்ந்த புனலின்
கட் டாழ்ந்த நிறங்கிளருந் தாழ்ந்த குழலினையுடைய பூமிதேவியானவ ளுள்ளங்களிப்ப முன்னாட் புறத்தே
கொண்டுவந்த எம்முடைய பிரான் சங்கையு மாழியையுங் கைகளிலேந்தினான் எவ்வுளார்க்குந் தம்பிரான்;
அவனது திருவடிகளே சரணாமென்றவாறு.
கொன் – பயனில்சொல். இது கௌடவலி; என்னை? இதனுளிருதிறப் பண்புத்தொகை முதலாகத் தொகையாறு
முடைமைவினைக் குறிப்பும் பிறசொற்றொகைகளு மிகவருதலா னெனக்கொள்க. துறை- கடவுள் வணக்கம்.

பொற்றொடிவேற்கண்கள்புடைசிறந்தாட்கெஞ்ஞான்று
முற்றவுடலுயிரீங்கொன்றென்றே–சொற்றனவாற்
றோடலர்தார்மாறன் றுடரியினெஞ்சேயிவளைக்
கூடலெளிதென்றேகுறி. (108)

என்பது பாஞ்சாலவலி. என்னை? பொற்றொடியெனவே வேற்றுமைத் தொகைப்புறத்துவந்த அன்மொழித்தொகையும்,
வேற்கண்ணெனவே யுவமைத்தொகையும், புடைசிறந்தாட்கெனவே வேற்றுமைத்தொகையும்,
உடலுயிரெனவே யும்மைத்தொகையும், தோடலர்தாரெனவே வினைத்தொகையும் வந்து பண்புத்தொகையொன்றுமே வராது,
பெயர் வினைச்சொற்களு முளவாய், முன்னவைபோலச் சுருங்காது மிகாது மிடைநிலைப் பட்டமையா னென்றுணர்க.
பகுதி – பாங்கியிற்கூட்டம். துறை – பாங்கியையறிதல். வலி முற்றும்.

ஆவிக்குறுதுணைப்பெண்ணாரமுதைப்போலுரைத்த
நாவிற்கினிமைநயப்பதோ–மூவுலகுந்
தாய்க்கொண்டதாளரங்கர்தண்ணளிசார்விண்ணவர்தாம்
வாய்க்கொண்டுயிர்வாழ்மருந்து. (109)

என்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச்
சொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ? பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டி
யளந்துகொண்ட தாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார்
வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.

ஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால்
இது வைதருப்ப காந்தம். பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

திங்கள்வெண்கதிரும்பானுவின்கதிருஞ்சிறிதும்வைகலுநுழைந்தறியாப்
பொங்கர்மல்கியபூஞ்சோலைநள்ளிடையிற்புதையிருளிரிதரமடவா
ரெங்குமேந்தியசெஞ்சுடர்களாலுரகனேந்தெழின்மவுலியாயிரத்துந்
தங்குபன்மணிகள்பரப்பிவைத்தொளிர்பாதாலமீதெனப்பொலிதருமால். (110)
இதுவுமது. (குருகாமான்மியம். ) திணை – பாடாண். துறை – விளக்கு நிலை.

தென்னனந்தைமால்வரைமேற்சேயிழைவன்கட்கூற்ற
முன்னிலுயிருண்ணுமெனமுன்னுற்றோ–மன்னுயிருண்
கூற்றுருவமக்களுருக்கொண்டோர்விழிக்கெதிரே
தோற்றுவருங்கொள்ளாத்துணிவு. (111)
இது கௌடகாந்தம். பகுதி – இயற்கை. துறை – தகையணங் குறுத்தல்.

பூட்டியுழுங்கருமேதியரிதாளிற்கருங்குவளைப்போதுமேயத்
தீட்டியநாவினைக்குறுக்கிச்சிறைவண்டின்பண்ணமுதைச்செவியாலுண்டு
மோட்டுமுது முலைக்கண்மடைதிறந்தொழுகும்பாலமுதமுழங்கியாம்பற்
காட்டுவரம்புடையப்பவயற்கழனியடைத்துழவருழுங்காட்சித்தொன்றே. (112)
இது பாஞ்சாலகாந்தம். துறை – நாடுவாழ்த்து.

(குருகாமான்மியம்). காந்தம் முற்றும்.

ஆழிப்படைக்கையருளாளன்மிக்கதிரு
மூழிக்களத்துறையுமூவர்கோ–னூழிதொறும்
வித்தகனேகாரிதருமெய்ஞ்ஞானமுத்திரைக்கை
யுத்தமனேகாக்கவுனை. (113)
திணை – பாடாண். துறை – புறநிலைவாழ்த்து.

இறையேதிருமால்வீடென்பது மந்தாம
மறையேபனுவலெனவைக்கு–நிறைகூர்
கரையற்றபோதக்கடன்மாறனுண்மை
யுரைகற்றுணர்ந்தாருளம். (114)

திணை – பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து. இவையிரண்டும் உய்த்தலில்பொருண்மை.
இவை மூன்றுநெறியார்க்குமொக்கும். உய்த்தலில்பொருண்மை முற்றும்.

கூண்டுகுமுதமலர்சிரிக்கக்கோகனக
மீண்டிதழ்ச்செங்கைகுவிக்குமெல்லிதா–னீண்டுகமா
மென்றாலிறையரங்கத்தேந்தல்பொருட்கேக
லொன்றாலுமாகாதுனக்கு. (115)
சிரித்தல் – மலர்தல். ஏந்தல் அண்மைவிளி. இதனுள், சிரிக்க வெனவும் கைகுவிக்கவெனவு முக்கியப்பொருளாகிய
வாயினதுகிரியையும், கையினதுகிரியையும் ஒப்புடைப்பொருளாகிய குமுதத்தினுங் கமலத்தினும்
புணர்த்து ரைத்தமையாற் சமாதி யெனக்கொள்க. பகுதி- பொருள்வயிற்பிரிதல். துறை – செலவழுங்குவித்தல்.

ஆரப்பொழிற்கோங்கரும்புதினமாக
வாரைப்பொருதெழுந்தவண்மைசேர்–பேரைக்
குழைக்காதரென்றொருகாற்கூறாதோவென்றிக்
கழைக்கார்முகன்காகளம். (116)
இது சிலேடைவாய்பாட்டால் வந்த சமாதி.

சந்தனப்பொழிலகத்துநின்ற கோங்கரும்பு வைகலும் மேகத்தினிடத் துண்டாகிய தண்ணீரைத் துழாயெழும் எனவும்,
ஆகத்தினிடத்துக் கட்டின கச்சினைப் பொருதெழு மெனவும் முலையினது கிரியையைக் கோங்கினதரும்பிடத்துப் புணர்த்தவாறு காண்க.
மாகம், ஆகம் எனப் பிரிமொழிச்சிலேடையும், வாரையெனச் செம்மொழிச் சிலேடையுங் கொள்க.
இவை மூன்றுநெறியார்க்கு மொக்கும். சமாதி முற்றும்.

ஆக இன்பமுதற் சமாதியீறாகக் குணவலங்காரம் பத்தும் அடைவே வந்தவாறு காண்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – குயிலொடுவெறுத்துக்கூறல்.

85.செய்யுட்குணங்களொழிவறவேசெப்புவதும்
பொய்யில்புலமையுறாப்புன்கவியேற்–கெய்துமதோ
சொற்றவற்றாற்சொல்லாதவற்றினையுஞ்சொல்லியவா
முற்றுவித்தல்கற்றோர்முறை.

(எ-ன்) சொல்லிய குணவலங்காரங்கட் கொழி புணர்ற்று.
(இ-ள்) செய்யுட்களின் குணவலங்காரங்களை யொழிவற முற்ற வுணர்த்துவதும் பொய்யென்பதில்லாத
அறிவின்றன்மைபொருந்தாத புன்சொற்கவியேற்கு மெளிதா யெய்தப்பெறுந்தன்மைத்தொன்றோ?
ஆகையா லிங்ஙனஞ் சொல்லப்படுங் குணங்களோடுஞ் சொல்லாதொழிந்த வக்குணங்களையுஞ் சொல்லியனவாக
முற்றுவித்தல் கற்றுணர்ந்த சான்றோர்கட னென்றவாறு.

இங்ஙனம் கூறவேண்டும்நோக்கம் யாதோவெனின், செறிவென்று சொல்லப்படுவதும்
எழுத்துச் செறிவும் சொற்செறிவும் பொருட் செறிவுஞ் செறிந்து வேறுவேறு ஒலித்துநடக்கும் என்று கூறியவற்றுள்
எழுத்துச் செறிவும் வண்ணமு மூன்றுநெறியார்க்கும் வேறுவேறாக்கி, யொருவகைச் சொற்செறிவு மவையல்லாத
பொருட்செறிவு மூன்றுநெறி யார்க்கும் பொதுவாகக் கூறினாரெனினும்
மெய்க ளுடனிலைமயக்கமின்றி யேனைமயக்கமாக வண்ணமும் பொதுவாவனவு முள. அது வருமாறு :-

மயர்வறமதிநலனருளியநறைகமழ்மலர்மகள்புணர்பவன்மே
லுயர்வறவுயர்நலனெனமுதிர்தமிழ்மறையுரைமகிழ்முனிவரைவாழ்
புயல்புரைகுழன்மதிபுரைநுதல்வடவரைபுரைபுணரிளமுலைசேர்
கயல்புரைவிழியெனதுயிரெவணினதுயிர்கவல்வகையெவன்மயிலே. (117)

இது அராகந்தொடுத்த அடியோடும் பிறிதடியும்படத் தொடர்ந் தோடினமையான் முடுகுவண்ணம் ;
“முடுகுவண்ண, மடியிறந்தோடிய வதனோரற்றே” என்றாராகலின். இவ்வண்ணமு மூன்றுநெறியார்க்கும் ஒக்கும்.
ஒழிந்தனவற்றுள்ளு மிவ்வண்ணம் பாகுபடுமென்னு நோக்கத்தாற் கூறப்பட்டது.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். பகுதி – உடன்போக்கு. துறை – செவிலிதேடல்.
பொதுவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொதுப்பாயிரம்–ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று.
இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால்
இது எழுதப்பட்ட மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில்
மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
பேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர்.
பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.

அணிகள்
அணிகள் (மாறன் அலங்காரம்-64 அணிகள்)
இதில் அணி மற்றும் அணி வகைகளாக மொத்தம் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அசங்கதி 2
அதிகம் 1
அபநுதி 4
அற்புதம் 2
ஆசி 2
ஆர்வமொழி 1
இணையெதுகை 2
இலேசம் 1
இறைச்சிப்பொருன் 1
உதாத்தம் 9
உபாயம் 1
உருவகம் 26
உல்லேகம் 4
உவமை 46
உள்ளுறை 5
உறுசுவை 1
ஏகாவளி 1
ஏது 24
ஒட்டு 6
ஒப்புமை 2
காரணமாலை 1
காரியமாலை 1
காவியலிங்கம் 1
சங்கரம் 1
சங்கீரணம் 1
சந்தயம் 3
சமாயுதம் 1
சமுச்சயம் 2
சிலேடை 18
சுவை 18
தடுமாறுத்தி 1
தற்குணம் 1
தற்குறிப்பேற்றம் 2
தற்பவம் 1
தன்மை 12
திட்டாந்தம் 1
தீபகம் 18
நிந்தாத்துதி 1
நிரல்நிறை 13
நெடுமொழி 1
பரிகாரம் 4
பரிசங்கை 2
பரியாயம் 1
பரிவர்த்தனை 1
பாவிகம் 1
பிரத்தியனீகம் 1
பிரதீபம் 1
பிறவணி 1
புகழ்வதின் இகழ்தல் 1
புணர்நிலை 2
பொருள்மொழி 1
மாறுபடு புகழ்நிலை 1
மின்வருநிலை 3
முன்னவிலக்கு 21
வகைமுதலடுக்கு 1
விசேடம் 6
விதர்சனம் 2
விநோத்தி 1
விபாவனை 4
விரோதம் 7
விற்பூட்டு 1
வேற்றுப்பொருள் வைப்பு 8
வேற்றுமை 5

——–

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று.
இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார்.
பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய
நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர்.
இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது–

அணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல்
தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது.
இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.

————

சிறப்புப்பாயிரம்

உலகம்யாவையுமுறுபயன்விளைப்பா
னலகில்சோதியணிகிளர்திருவுரு
வுணர்வுயிரெனக்கலந்துத்தமர்நித்தர்
கணமகலாதபொற்கவின்பதிநின்று
முரவுநீர்வளைத்தவொன்பானுட்டென்புலப்
பரதகண்டத்துட்பழம்பதியெனப்புகும்
விண்டொடநிவந்தபொழில்வடவேங்கடந்
தெண்டிரைகறங்குதென்குமரியென்றாயிடை
யமிழ்தினும்வான்சுவைத்தாகியமும்மைத்
தமிழ்தெரிபுலமைச்சான்றோர்மதிக்கு
முதுமொழித்தண்டிமுதனூலணியொடும்
புதுமொழிப்புலவர்புணர்த்தியவணியையுந்
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையு
மனாதுறத்தொகுத்தும்வகுத்தும்விரித்தும்
பொதுவியல்பொருள்சொல்லணியெச்சவியலெனச்
சதுர்பெறவிரண்டிடந்தழீஇயசார்பெனலாய்க்
காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்
தாரியர்துவன்றவவைக்களத்துரைத்தனன்
சிற்குணச்சீநிவாதனின்னருளா
னற்பொருண்மூன்றையுநலனுறவுணர்வோன்
பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமா
ளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்
திருக்குருகைப்பெருமாள்கவிராய
னருட்குணத்துடன்வளர்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே.–என்பது பாயிரம் :-

எந்நூலுரைப்பினுமந் நூற்குப் பாயிரமுரைத்தே நூலுரைக்கவென்பதுமரபு.
என்னை? “ஆயிரமுகத்தாலகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.” என முன்னோர்கூறிய முறைமையானும்,
இந்நூலுடையாரும் “பொற்புறவிழுமியபொருள்பல புணர்க்கினுந், தற்சிறப்புளதே தந்திரமென்ப.” என்பதனானுமுணர்க.
இப் பாயிரத்துக்குப் பொருண் மேற்காட்டுதும்.

1.புறவுரைமுகவுரைபுனைந்து ரைதந்துரை
பதிகநூன்முகமணிந்துரைபாயிரம்.
(இதன்பொருள்) இவையேழும் பாயிரத்திற்குக் காரணப்பெயரா மென்றவாறு.

2.புறவுரையேயதுகேட்டென்னைபயனெனின்
மாயிருஞாலத்தவர்மதித்தமைத்த
பாயிரமில்லாப்பனுவல்கேட்கிற்
காணாக்கடலிடைக்கலைஞரில்கலத்தரின்
மாணாக்கன்றன்மதிபெரிதிடர்ப்படும்.
(என்னுதலிற்றோவெனின்) பாயிரமில்லாப் பனுவல் கேட்போன் மதியிடர்ப்படுதற் குவமையுணர்த்து தனுதலிற்று.

(இதன்பொருள்) முந்து நூல் செய்தற்காசிரியர் மனத்தினாலுட் கொண்டு விதித்ததாம்
பாயிரமில்லாத நூல்கேட்பானாகிற் கேட்ட மாணாக்கன்மதி முன்பு கண்டறியாத கடலிடத்து
மீகானில்லா வங்கத்திற் செல்பவர் மதிபோல மிகவுமயக்கமெய்து மென்றவாறு;
என்பதாற் பாயிரங் கேட்டல் பயனுடைத்தாயிற்று.

3.பொதுச்சிறப்பெனவதுபுகலிருவகைத்தே.
(எ-ன்) பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று,

இ-ள்) பாயிரமென்ன வொன்றாய் நின்றவது
பொதுவுஞ் சிறப்புமென முந்துநூல் கூறியதா மிரண்டுகூறுபாடுடைத்தென்றவாறு.

4.அவற்றுள்,
போக்கறுபனுவலுட்புகல்பொருளல்லா
தாக்கமுற்றனைத்தினுமமைவதுபொதுவே.
(எ-ன்) முறையானே பொதுப்பாயிரத்தியல்புணர்ற்று.

(இ-ள்) அவ்விரண்டனுட் புலவராற் கூறப்பட்ட குற்றமற்ற நூல்களுட் கூறப்படும் பொருளல்லாத
புறப்பொருளாயெல்லாநூன் முகத்து மின்றியமையா தாக்கம்பெற்றமைவது பொதுப்பாயிரமா மென்றவாறு.
அமைதல் வெளிப்படாது மறைந்துமறைந்து நடத்தல்.
எல்லா நூன்முகத்தும் பொதுவாக மறைந்து நடத்தலிற் பொதுவெனக் காரணப்பெயராயிற்று.

5.அதுவே,
நுண்ணூனுவல்வோனுவல்வதனியற்கை
கொள்வோன்குறிப்பிற்கொள்கடன்றன்னொடுந்
தெள்ளிதினைந்தெனச்செப்பினர்புலவர்.
(எ-ன்) பொதுப்பாயிரத்தின் கூடுபாடுணர்ற்று.

(இ-ள்) அப்பொதுப்பாயிரம் நுண்ணியநூலின்மரபும், நுவல் வோன்மரபும், நூல்நுவல்வதன்மரபும்,
கொள்வோன்மரபும், அம்மாணாக்கனுள்ளக் குறிப்பினாற் கொள்வதன் மரபு தன்னொடு மைந்தென்று
தெள்ளியதாய்க் கூறினர் முந்து நூலாசிரியரென்றவாறு. ஏகாரமீற்றசை.
தெள்ளிதினைந்தெனச் செப்பினரென்று சிறப்பித்தவதனால் “ஈரிரண்டென்ப பொதுவின்றொகையே” என்போர்
சுருங்கக் கூறிய நோக்கமே நீக்கி யைந்தென்போர் நோக்கமே யுட்கொண்டாரென்பதாயிற்று.

6.அவற்றுள்,
உத்தமநூன்மரபுணர்த்துங்காலை
முத்திறத்தொன்றாய்ப்பாயிரமுதலுபு
நாற்பொருணலனுறநவில்வனவாகிச்
சூத்திரமோத்துப்படலமென்றுரைபெறு
முறுப்புடைப்பிண்டத்தொடுமமைந்தஃகாக்
காண்டிகைவிருத்தியிற்காட்சிதந்தீரைங்
குற்றமொன்றின்றிக்குழகொடுமெண்ணான்
குத்தியிற்சிறந்ததென்றுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே நூன்மரபுணர்ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வைந்தனுள்ளு முத்தமநூலின திலக்கணத்தை யறிவிக்குமிடத்து
முத்திறத்தொன்றென்பது முதலாக வெண்ணான்குத்தியீறாகப் பன்னிரண்டுகூற்றதாய்ச் சிறந்ததென்று
மேனாட் கற்று வல்லோருரைத்தன ரென்றவாறு.
எனவே, இந்நூலுடையார்க்கு மங்ஙனமுரைப்பதே கருத்தென்பதாயிற்று.
பிண்டத்தொடு மமைந்தெனவே மகாபிண்டமு மொன்றுளதாகப் பன்மூன்றுண்டென வுணர்க.
இவை பன்மூன்றும் மேற்காட்டும் வகைச்சூத்திரங்களாலுணர்க.

7. முத்திறத்தொன்றென்பனமுதல்வழிசார்பே.
(எ-ன்) தொகைச்சூத்திரத்தினுண் முதலே நூல்கண்
மூன்று கூற்றினுளொன்றாமென்றா ரவையிவையென் றவற்றின் பெயரு முறையுந் தொகையுமுணர்ற்று.

(இ-ள்) நூல்கண் மூன்று கூற்றினுளொன்றென்பன முதனூல் வழிநூல் சார்பு நூலென மூன்றுகூற்றனவாமென்றவாறு.
நூலென்பதனை யதிகார முறையான் மூன்றினும் விரித்துரைக்க.

8. முதல்வனிற்சிறந்ததுமுதனூலாகும்.
(எ-ன்) முறையானே முதனூலாமாறுணர்ற்று.

(இ-ள்) முதல்வனான் மொழிவதா யழிவிலாதே சிறப்பெய்தியது முந்து நூலாமென்றவாறு.
அன்றியும் முதல்வன் றனதில்லாளுக்குரைத்ததாய்ச் சிறப்பெய்தி வருவதெனினுமாம்.
அதற்கு அரி அயன் அரன் எனுமிவர் பூமிதேவி காயத்திரி உமாதேவி என்பவர்க்குரைத்ததாய் எனக்கூறுக.
இன்னும் அவ்விலேசானே இல்லென்பதனை யுவமவுருபாக்கி முதல்வனைப்போலப்
பழமைத்தா யழிவில்லாதே சிறப்பெய்தி வருவதெனினுமாம். அது கருதியேயாம்.

9.விழுமியமுதனூல்விதித்தவற்றினொடும்
பழுதறச்சான்றோர்படைத்தவுந்தழீஇ
வழுவின்றாய்வரல்வழி நூலாகும்.
(எ-ன்) வழி நூலாமாறுணர்ற்று.

(இ-ள்) முக்கியமான முதனூல் கூறிய விலக்கணங்களோடுங் குற்றமறக் கற்று வல்லோரால் விதித்து
வழங்கிவருமி லக்கணங்களோடும் பொருந்தி முறைவழுவுதலின்றிப் புலவராலமைக்கப்பட்டு வருவது வழி நூலாமென்றவாறு.
வழி-பின்.

10.இவ்வகைப்பனுவலோடொத்திழுக்கின்றாய்ச்
செவ்விதிற்சிறிது திரிவதுசார்பே.
(எ-ன்) சார்புநூலாமாறுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனமிரண்டு திறத்தவாகப் பகுத்துக் கூறப்பட்ட நூல்களிரண்டோடுமொரு தன்மைத்தாகவொத்து
அவற்றோடு மூன்றாவதோர் புலவ னிலக்கணமிழுக்கா தழகிதாகச் சிறிது வேறுபட விரிப்பது சார்பு நூலாமென்றவாறு.
இம் மூன்றனுளொன்றாய்வருவது நூலென்றறிக.

11.அதன்வழிநடைபெறுமதுநால்வகைத்தே.
(எ-ன்) வழிநூலினைத்தெனவுணர்-ற்று.

(இ-ள்) இறந்ததுபோற்ற லென்னுமுத்தியான், முதல்வனிற் சிறந்த முதனூலின்வழியொழுகலாறுடைய
வழி நூலானது நால்வகைப் படுமென்றவாறு. அதை முன்னர்க்காட்டுதும்.

12.தொகுத்தலும்விரித்தலுந்தொகைவகைவிரியிற்
பகுத்தலுமொழிபெயர்த்தலுமெனும்பான்மைய.
(எ-ன்) மேற்காட்டப்படுமென்ற நால்வகை யாப்பிற்கும் பெயரு முறையுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலுந் தொகுத்துச் செய்ததனை
விரித்துச் செய்தலு மிருவகையையுந் தொகைவகைவிரியாகப் பகுத்துச் செய்தலும் வடமொழியைத்
தமிழ் மொழியாகப் பெயர்த்துச் செய்தலுமெனப் பெரியோராற் கூறப்படும் பான்மையையுடைய அந்நால்வகையுமென்றவாறு.

13.பாயிரமுன்பின்பகர்நெறியினிலுறும்.
(எ-ன்) தொகைச்சூத்திரத்துட் பாயிரமுதலுபுவென்றா ரவை யிரண்டு முணருமாறுணர்ற்று.

(இ-ள்) பொதுவுஞ்சிறப்புமெனக் கூறிய பாயிரங்களினிலக்கணங்க ளிந்நூன்முகத்து முன்னரும் பின்னருங்
கூறு மிருவகைச் சூத்திரங்களா னறியப்பெறு மென்றவாறு. எனவே வேறெடுத்துக் கூறப்படுவதில்லை யென்பதாம்.

14.அறம்பொருளின்பம்வீடவைபகர்நாற்பொருள்.
(எ-ன்) நாற்பொருணலனுற நவில்வனவாகியென்றா ரவையிவை யென்பதுணர்-ற்று.

(இ-ள்) அந்நூல்கள் பகருநாற்பொருள் அறனும் பொருளுமின்பமும் வீடுபேறுமாமென்றவாறு.

15.நூலினொருபொருணுதலியதொன்றாய்ச்
சில்வகையெழுத்திற்செறிந்திடும்யாப்பாய்ப்
பலதிறப்பயன்றெரிவுடையதோர்பண்பாய்ப்
படிமக்கலத்துட்படுநிழல்பொருவ
வொண்மையுநுண்மையுமுறுவதுசூத்திரம்.
(எ-ன்) நூல்கட்கங்கமாகிய சூத்திரங்களினிலக்கணமுணர்-ற்று.

(இ-ள்) மேற்றொகுத்தன்முதலாய நால்வகையாப்பிற்றாம் நூலினுளொரு பொருளைக் குறித்ததொன்றாகிச்
சில்வகையெழுத்தினா லகல் வின்றியடங்கிய யாப்பா யுரைக்குங்காற் பலவகைத்தாய
பொருள்களெல்லாந் தன்னகத்தடக்கி யாராயப்படுவதோர் பண்புடைத்தாகி யாடி
சிறிதாயினும் அகன்ற பொருள்களின் வடிவை யகத்தடக்கியறிவித்தாற் போல
நுண்ணிய பொருண்மையோடு விளக்கமுடைத்தாய் மிகுவது சூத்திரமாமென்றவாறு.

16.அதுவே,
மாட்டுறுப்பரிமாநோக்கந்தவளைப்
பாய்த்தாற்றொழுக்குப்பருந்தின்வீழ்வொடு
நிரனிறைவிளக்கெனும்பொருள்கோணிலைத்தே.
(எ-ன்) சூத்திரங்களின் பொருள்கோணிலையுணர்ற்று.

(இ-ள்) அச்சூத்திரம் மாட்டுறுப்புமுதலாகத் தீபகமீறாகக் கூறப்பட்ட வேழு பொருள்கோணிலையை யுடைத்தென்றவாறு.
நிலைமை யுடைத்தென்றதனா லொழிந்தபொருள்கோளான் வருவனவுங்கொள்க.

17.ஓத்தெனப்படுவதோரினப்பொருளைக்
கோத்தொருநெறிபடக்கூறுவதாகும்.
(எ-ன்) இஃதோத்திலக்கணமுணர்ற்று.

(இ-ள்) மேலோத்தெனக்கூறப்பட்டது ஓரினமாகியபொருள் களையிதற்கிஃதியைபுடைத்தென்ன நேரினமணிகளை
வடத்திற்கோத்தாற் போல அடைவிலேசேர்த்தோரியலாகிய நடைபெறக் கூறுவதாமென்றவாறு.
அது வேற்றுமையோத்து, வேற்றுமைமயங்கியல், விளிமரபென முறையே வேற்றுமையாயினும்
வேறுவேறியலாக்கி யொரோரின மாகவுரைத்தவாற்றா னுணர்க.

18.படலமென்பது பன்னெறிப்பொருளாற்
புடைபடவிரவியபொது மொழித்தொடர்பே.
(எ-ன்) படலமென்பதனிலக்கணமுணர்ற்று.

(இ-ள்) படலமென்று கூறப்படுவது பலவேறு நடைபெற்று வருபொருளா லிடம்பெற்று
விரவிய பொதுமொழித்தாய்வருந் தொடர்புடைத்தாமென்றவாறு.

19.அவையொருமூன்றுமடக்குதல்பிண்டம்.
(எ-ன்) பிண்டமாமாறுணர்ற்று.

(இ-ள்) மேற்கூறிய சூத்திர மோத்துப் படல மென்னுமூன்றுறுப்பையு மகத்தடக்குவது பிண்டமாமென்றவாறு.
அம்மூன்றினையு முறுப்பெனவே பிண்டமென்ப துறுப்புடையவயவியென்பது பெற்றாம்.
அவையாவன : தொல்காப்பியமென்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம்.
ஒழிந்த விரண்டும் ஓத்தும் சூத்திரமுமாம்.

20.மிகத்தெளிவுடையவகத்தியமதுபோன்
முத்தமிழுட்கொளுமூன்றுபிண்டமுமுறுப்
பொத்தொருங்குட்கொளலுறின்மகாபிண்டம்.
(எ-ன்) மகாபிண்டமாமாறுணர்ற்று.

(இ-ள்) மிகவுமுந்து நூல்களையாராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனாற் கூறப்பட்ட வகத்தியமென்னு
நூல்போல இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னு மூன்று பிண்டத்தினையுந் தனக்குறுப்பாகப் பொருந்தும்படி
முழுதுமுட்கொண் டொருநூலாக நிற்றல்பொருந்தின் மகாபிண்டமாமென்றவாறு.

21.உற்றதுபதப்பொருளுதாரணமூன்றுடன்
கற்றவர்வினாவிடைகாட்டுதல்காண்டிகை.
(எ-ன்) வைத்தமுறையானே காண்டிகையாமாறுணர்ற்று.

(இ-ள்) நூல்களைக் கற்றுணர்ந்த வாசிரியர் சூத்திரத்துட்கூறக் கருதியதுணர்த்தலுஞ் சூத்திரத்துட்
சொற்றொறும் பொருளுணர்த்தலு மதற்குதாரண முணர்த்தலு மென்னு மிம்மூன்றுடன்
கடாவுங் கடாயதற் கெதிர்மொழியுங் காட்டுதல் காண்டிகையாமென்றவாறு. வினாவல்-கடாவல், விடை – அதற்கெதிர்மொழி.

22.ஒன்றியசூத்திரத்துட்பொருளன்றியு
மின்றியமையாதனபுணர்த்திசைத்தவைந்
துறுப்புடனிருதிறத்துரையிடனாகமெய்ந்
நிறுத்தியதொன்றெனநிகழ்த்துதல்விருத்தி.
(எ-ன்) முறையானேவிருத்தியாமாறுணர்ற்று.

(இ-ள்) புலவனாற்கூறக்கருதிய பொருளினைக் கூறுதற்குப் பொருந்திய சூத்திரத்துட் சொல்லோடும் பொருளன்றி
யெஞ்சிநின்றவற்றையு மிவ்விடத்திற் கிஃதின்றியமையாதென்பனவற்றையு மவ்விடத்திற் கொணர்ந்து
பொருத்திச் சொல்லப்பட்ட காண்டிகையுறுப்பாகியவைந் தோடுங்கூட்டி யதற்குத் தன்னூலிடனாகவும்,
பிறநூலிடனாகவுமுண்மை நிலைநிறுத்தப்படுவதொன்றாய் நடத்துதல் விருத்தியாமென்றவாறு.
உறுப்பைந்தாவன. கருத்துமுதல் விடையீறாகக் கூறியவைந் தென்றறிக.
இருதிறத்துரையிடனாகவென்பது தன்னூல் பிறநூலென்னுமிரண்டிடனாகவென்றறிக.

23.பொருளிலகூறன்மருணிலைத்தாத
லின்னாச்சொற்பெறல்வெளிறுபட்டிழிதன்
மொழிந்ததைமொழி தன்முரண்கொளமொழிதல்
குறைபடக்கூறன்மிகைபடவிளம்பல்
சந்தவின்பந்தழுவுதலின்மை
யெதிர்மறுத்துணர்த்தலென்றிவையுளப்படக்
கூறினரீரைங்குற்றநூற்கே.
(எ-ன்) மேலதிகாரப்பட்ட முறையே யீரைங் குற்றமுமுணர்ற்று.

(இ-ள்) பொருளிலகூறலென்பது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக்கொப்பின்றிப் பயனில்லாதனகூறல்.
மருணிலைத்தாத லென்பது கேட்போர்க்குப் பொருள்விளங்காமன் மருளுதற்கிடனாதல்.
இன்னாச்சொற் பெறலென்பது கேட்போர்க்கின்னா யாப்பிற்றாயிருத்தல்.
வெளிறுபட்டிழித லென்பது குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல்.
மொழிந்ததை மொழிதலென்பது ஒருகாற்கூறியதனைப் பின்னுங் கூறல்.
முரண்கொள மொழிதலென்பது முதலே கூறியபொருளோடு மாறுகொள்ளுமாறு பின்னர்க்கூறல்
குறைபடக்கூறலென்பது முதலே யதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல்.
மிகைபடவிளம்பலென்பது அதிகரித்த பொருளன்றிப் பிறபொருளுங்கூறல்.
சந்தவின்பந் தழுவுதலின்மை யென்பது எடுத்த யாப்பிற்கிணங்குமோசையின்றிக் கூறுதல்.
எதிர்மறுத்துணர்த்தலென்பது எதிர்மறுத்துணர்த்தலுங் குற்றமாமென்றவாறு.
அஃதாவது
பாவஞ்செய்தானிரயம்புகுமெனக் கருதிக்கூறுவான் தவஞ்செய்தான் சுவர்க்கம்புகுமென்றல்.
இவ்வாறு கூறிற் சுவர்க்கம் புகுமென்னும் பொருடோன்றி நிரயம்புகுமென்னும் பொருடோன்றாமையிற் குற்றமாயிற்று.
என்னை? “எதிர்மறுத்துண ரினித்திறத்தவுமவையே” என்னுமரபியற் சூத்திரத்தானுணர்க.

24-அழகெனத்தகுவதரிறபநாடி
னகலாநடைத்தாயாழமது டைத்தாய்ப்
பொருள்புலப்பாட்டிற்பொருணலன்சொன்னல
னோசையினிமையோடூதியம்பயத்த
லுலகமலையாமையுதாரணம்புணர்த்த
னவிறொறும்புதுவதுவாய்நயனளிப்பதி
னீரைந்தாமெனவியம்பினர்புலவர்.
(எ-ன்) ஈரைந்தழகுமுணர்-ற்று.

(இ-ள்) நூலுக்கழகெனும்படிக்குத் தகுவது குற்றமற வாராயிற் சூத்திரஞ்சில்வகையெழுத்தாற்
செறிந் திறப்பவகலாதநடைத்தா யாழ்ந்த பொருளுடைத்தா யிலக்கணவான்களுக்குப் பொருள் புலப்படுவதாய்ப்
பொருணலனுஞ் சொன்னலனு மோசையினிமையுமுடைத்தாய்க் கற்றோர்க்குப் பயன்றருவதா யுலகத்தோடு
மாறுபடுதலின்றி யுதாரணம் புணர்ப்பதாய்க் கற்குந்தொறும் புதுவதா யின்பமளிப்பதோடு மீரைந்தென்று கூறினர் புலவரென்றவாறு.

25.உள்ளுறுத்தமைத்தவுத்திவகையுணர்த்தி
னுள்ளியதுணர்த்தலுரைமுறைவைப்பே
தொகைபெறநாட்டல்வகைபெறக்காட்டல்
விரிந்தவையிவையெனவிழுமிதிற்கூட்டல்
தொகுத்தமொழியின்வகுத்தனகோடன்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றே
பலபொருட்கேற்பினல்லவைகோடன்
மொழிந்தபொருளோடொன்றவைத்தன்
மொழிந்தனமென்றன்மொழிவாமென்ற
லிறந்ததுகாத்தலெதிரதுபோற்றன்
மொழியாததனைமுட்டின்றிமுடித்தல்
வந்ததுகொண்டுவாராததுமுடித்தல்
வாராததுகொண்டுவந்ததுமுடித்தல்
பிறன்கோட்கூறறன்கோட்கூறல்
பிறனுடம்பட்டது தானுடம்படுத
லறியாதுடன்படலாணைகூற
றன்குறியிடுதறந்துகொணர்ந்துரைத்தன்
மறுதலைசிதைத்துத்தன்றுணிபுரைத்தன்
மாட்டெறிந்தொழிதலிரட்டுறமொழித
லொன்றினமுடித்தறன்னினமுடித்தன்
மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூற
லுய்த்துக்கொண்டுணர்தலினுரனுடையனவாய்த்
தீபகவகையாற்சிறப்புறக்கூறல்
சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்தலென்
றமைத்ததினகப்படவமையாதனவுஞ்
சுருங்கக்கூறியதொடர்பினைநாடி
யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே.
(எ-ன்) மேலதிகாரம்பாரித்த பன்னிரண்டினு ளிறுதிநின்ற தந்திரவுத்தியாமாறுணர்-ற்று.

(இ-ள்) உள்ளியதுணர்த்தன் முதலாகச் சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தலீறாகச் சொல்லப்பட்ட
முப்பத்திரண்டு மத்தன் மையபிறவுந் தந்திரவுத்திகளாம்.
அவற்றையு மிதனுட்கூறியதாகப் பிறர்க்குணர்த்துத லறிவுடையோர்க்கு முறைமையாமென்றவாறு.
தந்திரமெனினு நூலெனினுமொக்கு மென்றவாறு உத்தியென்பது வடமொழிச் சிதைவு.
அஃதாவது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடுகாட்டுவது.
உள்ளுறு…… யுணர்த்தினென்பது முந்துநூல் செய்த ஆசிரியர் நூற் கின்றியமையாச் சிறப்பென்பதாகக
கருதியமைக்கப்பட்ட தந்திரவுத்தியினது கூறுபாடுணர்த்தினென்றவாறு.

உள்ளியதுணர்த்தலென்பது சூத்திரத்திற் சொற்றசொற்குக் கூறிய வடைவே பொருளுணர்த்துவதன்றி
யிதன்கருத் திஃதெனவுணர்த்தல்.
அஃதாவது எழுத்தெனப்படுப என்னுஞ்சூத்திரத்தினுள் எழுத்தினைத் தென்றறிவித்தலை நுதலிற்றென்றல்.

உரைமுறைவைப் பென்பது நூலுண் முன்னம் பலபொருளை யதிகரித்தவழிப் பின்னுமவற்றை யம்முறையேவிரித்தல்.
அஃதாவது உயர்திணை யஃறிணையென வதிகரித்து ஆடூஉவறிசொன் மகடூஉவறி சொல்
என்னுஞ்சூத்திரங்களா னிறுத்தமுறைபிறழா துயர்திணையை முற்கூறல்.
இன்னுமிதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துளோதாததன் காரியமாயின
வழியதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தலுமாம்.
அஃதாவது ஏழாவதுயிர் மயங்கியலில் “அகரவிறுதிப்பெயர்நிலைமுன்ன” ரென்னுஞ் சூத்திரத்திற் கசதபத் தோன்றினெனக்கூறி,
வினையெஞ்சுகிளவியுமென்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றிலரேனும் அதிகாரமுறைமையினால் வல்லெழுத்து வரும்வழி யெனவுரைத்தல்.

தொகைபெறநாட்டலென்பது வகைபெறக் கூறல் வேண்டுமாயினு மதனைத் தொகுத்துக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய் முப்பஃதென்ப” என்றாற்போல்வன.
இன்னும் பலசூத்திரத்தாற்கூறிய பொருளை யித்துணையுங்கூறப்பட்ட திஃதெனக் கூறலுமாம்.
அஃதாவது “தூக்கியல்வகையேயாங்கெனமொழிப” என்பதனாற்கொள்க.

வகைபெறக்காட்டலென்பது தொகைபெறக் கூறியவற்றை வகைபெறக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய்முப்பஃதென்ப” எனத் தொகுத்தவற்றை
அ இ உ எ ஒ என்றும் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றும் வகுத்தல்.
அன்றியும் “ஒளகாரவிறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரெனமொழிப”
“னகாரவிறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யெனமொழிப” என்பனவுமாம்.

விரிந்தவையிவையென விழுமிதிற் கூட்டலென்பது, தொகுத்தும் வகுத்துங் காட்டியவற்றை யிறப்ப
விரியாமல் விழுமியவாக விரித்து முடித்தல்.
அஃதாவது “உயிர்மெய்யாய்தமுயிரளபொற்றள, பஃகிய இ உ ஐ ஒள மஃகான், றனிநிலைபத்துஞ்சார்பெழுத்தாகும்” என்னு
மதனுட் சார்பெழுத்தெனத் தொகையாலொன்றும் வகையாற்பத்து மாகியவற்றை
“உயிர்மெய்யிரட்டு நூற்றெட்டு” என்னுஞ் சூத்திரத்தான் “ஒன்றொழிமுந்நூற்றெழுபானென்ப” என விரித்ததன்
மேலும் உயிர் மெய்க்குறில் உயிர்மெய்ந்நெடில் உயிர்மெய்யகரமெனவும் வல்லினம் மெல்லினம் இடையினம்
எனவும் இறப்பவிரியாமல் விழுமிதாய்க்கூட்டல்.

தொகுத்த……. கோடலென்பது “றெட்டெழுத்திம்பரும்…… வல்லாறூர்ந்தே” என்னுஞ் சூத்திரத்தாற்
பிறிதுமோர்பொருள் வகுத்துக் காட்டல்.
அஃதாவது “குற்றியலுகரமுறைப்பெயர்….. முதலும்” என்னுஞ் சூத்திரத்தான் மொழி
முதற் குற்றுகரமுங்கோடல். சொல்லின் முடிவினப் பொருண்முடித்த லென்பது மது.

முந்துமொழிந்ததன்றலை தடுமாற்றே யென்பது முற்படவதிகரித்த பொருளை யம்முறையிற்கூறாது முறைபிறழக்கூறுதல்.
அதனை யங்ஙனங் கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும்.
அது புள்ளிமயங்கியலுள் “ஞகாரையொற்றிய” என்ற சூத்திரத்தினுள் ஞகார வீறுகூறி யதன் பின்னர்
ணகாரவீறுகூறாதே வருஞ்சூத்திரத்தினுள் “நகரவிறுதியுமதனோரற்றே” என முடிபொப்புமை நோக்கிக் கூறியதாற் கண்டுகொள்க.

பலபொருட்… கோடலென்பது ஒருவகைப்பொருள் பலபொருட் கேற்குமாயினு மவற்றுணல்லதனைக் கோடல்.
அஃதாவது மெய்ப்பாட்டியலுள் அகத்திற்குரியவாகப் புகுமுகம்புரிதன் முதலாகக் கையறவுரைத்த லீறாகக் கூறிய
அறுநான்கு மெய்ப்பாடும் அகத்தினுள் இரு வகைக் கைகோளுள்ளுங் களவினுள் முறையேவந்து கற்பினுளம்
முறையே வரப்பெறாமையி னவைகளவிற்கே யுரித்தென விதந்து கூறலானறிக.
அன்றியும் ஒரு சூத்திரம் பலபொருட்கேற்குமாயினு மதற்குணல்லதனைப் பொருளாகக்கோடலுமாம்.
அஃதாவது “வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது” என்பதற்குக் கல்வி வேண்டிய ஆண்டிறவாது
அக் கல்வியெல்லா மூன்றுபாதத்தைக் கடவாதென்றதனாலறிக. அன்றி ஓதற்பிரிதற் காண்டு மூன்றென்பது பொருந்தாது.
அன்றியும் “இலனென்னுமெவ்வமுரையாமையீதல், குலனுடையான்கண்ணேயுள” என்பதனுட் பலபொருடோன்றியவிடத்து
முதலேகண்ட விரண்டு கிரிகையுமன்றி யிரப்போனின்னு மொருவர்பால் யானொன்று மில னென்னு மான
பங்கங்கூறாம லிரக்கப்படுவோ னீகையெனப் பொருள் கோடலுமாம்.

மொழிந்த பொருளோடொன்றவைத்த லென்பது சூத்திரத்துப் பொருள் பலபடத் தோன்றுமாயினு
முற்பட்ட சூத்திர யாப்பிற்கேற்பப் பொருளுரைத்தல். அஃதாவது
“இலனென்னுமெவ்வமுரையாமை” என்னுங் குறளுக்கு முன்னருத்திக்கேற்பக் கூறிய பொருளன்றி
“நல்லா றெனினுங்கொளறீதுமேலுலக, மில்லெனினுமீதலேநன்று” என்னு மேலிற் குறளிற் பொருள்கட்கொன்ற
வும்மையைவிரித்து இலனென்னு மெவ்வமுரையாமையு மீகையுங் குலனுடையான் கண்ணேயுள எனவுரைத்தல் கொள்க.

மொழிந்தனமென்றலென்பது பலபொருள்களையும் அதிகரித்த வற்றுட் சிலபொருளை மேற்கூறப்பட்டனவென்றல்.
“அஃதாவது மாத்திரை யளவு மெழுத்தியல்வகையு, மேற்கிளந்தன்ன” வென்றதனாற் கொள்க.

மொழிவாமென்றலென்பது சில பொருளைக் கூறி யவற்றுள் ஒன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென்றல்.
அஃதாவது “குற்றியலிகரநிற்றல் வேண்டும்” என்ற சூத்திரத்தில் ஒருமொழிக் குற்றியலிகரங்கூறி
அதன் பின்னர் இருமொழிக்கண்ணுங் குற்றியலிகரம் வருமென்பதற்கு “புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே” என்னுஞ் சூத்திரத்தின்
“உணரக் கூறின் முன்னர்த்தோன்று” மெனக்குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படுமென்றத னாலுணர்க.

இறந்தது காத்தலென்பது மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருஞ்சூத்திரத்தானமைத்தலாம்.
அஃதாவது முதனூலுக்குச் சூத்திரங் கூறிய பின்னர் “வழியெனப்படுவததன் வழித்தாகும்” என்று
வழி நூற்குக்கூறிய சூத்திரத்தில் வழிநூலானாய பயன் கூறாது மேல்வருஞ் சூத்திரங்களாயவவற்றின்கண்
“வழியினெறியே நால்வகைத்தாகும்” என்ற பின்னர் அதனாலாயபய னதனிற்கூறாது
“தொகுத்தல் விரித்தல்” என்னுஞ்சூத்திரத்தா லதனாலாயபயன் கூறல் இறந்தது காத்தலாயிற்று.

எதிரது போற்றலென்பது முன்பு கூறிய சூத்திரத்தானே மேல் வருஞ் சூத்திரப் பொருளையும் பாதுகாத்தமைத்தல்.
அஃதாவது நூன் மரபினுள் “உட்பெறுபுள்ளியுருவாகும்மே” எனப்பகரத்தோடு மகரத்திடை வரிவடிவிற் கிலக்கணங் கூறப்
புகுந்து மேல்வருஞ் சூத்திரத்தின் “மெய்யினியற்கை புள்ளியொடுநிலையல்” என்றதனால்
மெய்களிற்கூடிப் புறத்திற் பெறும்புள்ளியோ டுள்ளாற்பெறும்புள்ளியும் மகரத்திற்கு வரிவடிவாமெனக் கோடல் எதிரது போற்றலாயவாறு காண்க.
“அற்புதஞ்சிலேடை” யென்னும் பொருளணியியற் சூத்திரமுமிது.

மொழியாததனைமுட்டின்றி முடித்தலென்பது சூத்திரத்தின் கண்ணேயெடுத்தோதாத பொருளை முட்டுப்படாம லுரையினான் முடித்தல்.
அஃதாவது “அரையளபுகுறுகன்மகரமுடைத்தே, யிசையிட னருகுந்தெரியுங்காலை” என்பதனாற்கொள்க.
என்னை? அரையளவாகிய வெல்லையிற்குறுகிக் கான்மாத்திரையவாதலை மகரமெய்யுடைத் தஃதி யாண்டோவெனின்
வேறோரெழுத்தின தோசையின் கண்ணதுதான் சிறுபான்மையவாகிவரு மாராயுங்காலத்தென்பதனாலாயிற்று.
என்னை? கான்மாத்திரையென்பது சூத்திரத்தின் கண்ணவாய்ச்சொல்லி முடியாததனை யுரையினான் முட்டின்றி முடித்தலானெனக்கொள்க.
இக் கருத்தினானே “சூத்திரத்திற் பொருளன்றியும் யாப்புற, வின்றியமையா தியைபவை யெல்லா,
மொன்ற வுரைப்ப துரையெனப்படுமே” யென்றோதுவாராயிற்று.

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதும், வாராதது கொண்டு வந்தது முடித்தலென்பதுமான
ஒருங்கெண்ணப்பட்ட விரண்டிற்கும் ஒரோவொன்றாகப்பகுத்து இலக்கணங்கூறிய விரண்டனுள்
பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்ததனைக் கொண்டு முன்னர்க்கூறிய சூத்திரத்துள்
வருமிலக்கணத்திற்கு வாராததனைக் கூட்டிமுடித்தலும், முன்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வாராததனைக் கொண்டு பின்னர்க் கூறிய
சூத்திரத்துள் வருமிலக்கணத்திற்கு வந்ததனைக்கூட்டி முடித்தலுமாம்.

அவையாவன : “கூறியவுறுப்பிற் சிலகுறைந்தியலினும், வேறுபாடின்றென விளம்பினர்புலவர்” எனவும்,
“அறமுதனான்கினுங் குறைபாடுடையது, காப்பியமென்று கருதப்படுமே” எனவும் பொதுவியலுட் கூறிய சூத்திரங்களானுணர்க.
என்னை? அறமுதனான்கினுங் குறைபாடுடையது காப்பியமெனவே, பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்தது கொண்டு
அறமுதனான்கு மொழித் தல்லா தவுறுப்பிற் குறைவதே பெருங்காப்பியமென்று முடித்தலானுங்,
கூறியவுறுப்பிற் சில குறைந்தியலினு மெனவே முன்னர்க் கூறிய சூத்திரத்தினுள் வாராத அறமுதனான்கின்
ஒன்றும் பலவுங் குறைபாடுடையது முறுப்பிற் சில குறைதலுங் காப்பியமென்று வாராததனைக் கொண்டு வந்ததனோடு
முடித்தலானுமென அடைவே கண்டுகொள்க. இவை தம்மிற்றாமாறாடினுமிழுக்காது.

பிறன்கோட்கூறலென்பது பிறநூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல்.
அஃதாவது “வேற்றுமைதானேயேழெனமொழிப” என்றல். எனவே, தன் கோட்பாடன்றென்பதாயிற்று.

தன்கோட்கூறலென்பது பிற நூலாசிரியன் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுதல்.
அஃதாவது “விளிகொள்வதன்கண் விளியோடெட்டே” என்றல்.

பிறனுடம்பட்டது தானுடம்படுத லென்பது பிறநூலாசிரிய னுடம்பட்டதற்குத் தானுமுடம்படல்.
அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமென்றார் பாணினியா ரஃதிவர்க்கு முடம்பாடு என்றல்.
அஃது இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதுமாம்.
அதற்குதாரணம் – எயிலையிழைத்தான், மறத்தைக் குறைத்தான், நூலைக் கற்கும் என அடைவேகாண்க.

அறியாதுடம்படல் என்பது தானறியாதவற்றைப் பிற பெரியோர் கூறியவாற்றானுடம்படல்.
அஃதாவது ஏழாநரக மித்தன்மைத்தெனச் சான்றோர் கூறியவழித் தனக்கது புலப்படாததாயினுந் தானதற்குடம் படல்.
இது வழி நூலாசிரியர்க்குமுரித்து.

ஆணைகூறலென்பது ஒருபொருளைக் கூறும்வழி யேதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற்கூறல்.
அது வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறியவழி அவர் விளியை முதல்வேற்றுமையிலடக்கினார்.
அதற்குத் திரிபு கூறாதே யதனை யெட்டாம் வேற்றுமை யென்றாலும் ஆண்டுக் கடாவப் படாமை.

தன்குறியிடுத லென்பது உலகின்கண் வழக்கின்றி யாசிரியன்றன் குறியிடல். அஃதாவது உயர்திணை அஃறிணையென்பன.

தந்துகொணர்ந்துரைத்த லென்பது முன்னராயினும் பின்னராயினு நின்ற சூத்திரச் சொல்லை யிடைநின்ற சூத்திரத்திற்
கொணர்ந்து புணர்த்துரைத்தல். அஃதாவது
“நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழி யீற்றுங், குற்றியலுகரம்வல்லா றூர்ந்தே” என்பதனில் முன்னின்ற சூத்திரத்தில்
நிற்றல்வேண்டுமென்ற சொல்லைக் கொணர்ந்து புணர்த்துரைத்தல்.

மறுதலை சிதைத்துத்தன்றுணிபுரைத்த லென்பது நெட்டெழுத் தேழளபெடையென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்தது.
அது அஅஅ என நின்றதல்லவென அவர் மறுதலையைச் சிதைத்து வேறோரெழுத்தென்று கூறல்.

மாட்டெறிந்தொழித லென்பது முன் னொரு பொருட்கிலக்கணங் கூறிப் பின்னர்வருவது மதுபோலுமென்றல்.
அஃதாவது ஏழாவ துயிர்மயங்கியலில் “உகரவிறுதியகரவியற்றே” என்றல்.

இரட்டுறமொழித லென்பது ஒருவகையானின்ற தொடர்ச்சொல்லாதல் ஒரு சொல்லாதல் ஒரு செய்யுளகத்துப்
பலபொருளை மொழிவதா மென்றவாறு. அஃதாவது
“வந்தவரவென்னையெனவாட்கண்மடவாய் கேள், சிந்தை நலிகின்ற திருநீர்க்குமரியாட,
வந்திலதனாய பயனென்னை மொழி கென்றாண், முந்திநலிகின்ற முதுமூப்பொழியுமென்றான்” என்பதனாலறிக. என்னை?
திருநீர்க்குமரியாடவெனவே அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னைப் புணரவந்தேனென்பதனை மறைத்தனவாகவும்,
பொலிந்த தீர்த்தநீராகிய குமரியாற்றை யாடவந்தேனென வெளிப்படையாகவுஞ் செம்மொழியாக விரட்டுறமொழிதலாலும்,
அதனாலாய பயன்யாதென அக்காலத் திம்மூப்பு நீங்குமென அத்தச்சிலேடையாகவுங் கொள்ளக்கிடந்தமையாலு மெனக் கொள்க.

ஒன்றினமுடித்த லென்பது ஒன்றற்கிலக்கணங்கூறியவிடத்துக் கூறாது தொக்குநின்ற ஒழிபிற்கு மதுதானே விதியாகமுடித்தல்.
அஃதாவது “புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாது, மெய்யொடுஞ் சிவணுமவ்வியல் கெடுத்தே” என்னும் சூத்திரத்தானுணர்க.
என்னை? இயல்பல்லாத புள்ளிமுன் னுயிர்வந்தாலும் அவ்விதி கொள்கவென முடித்தல்
உதாரணம் :- ஆலடை, ஆலாடை எனவும், அதனை எனவும், நாடுரி எனவும் வரும்.

தன்னினமுடித்த லென்பது ஒருவகையுட்சிலவற்றிற் கிலக்கணங் கூறியவிடத்துச் சொல்லாதொழிந்தனவாய்த் தொக்கதற்கும்
ஆட்சியுங் காரணமும்பற்றி யச்சூத்திரத்தினிடத் ததற்கும் வேறோரிலக்கணங் கூறிமுடித்தல்.
அஃதாவது “அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு” என்னுஞ் சூத்திரத்தானுணர்க. என்னை?
குற்றெழுத்தென்றவற்றுண் மூன்றனைச் சுட்டென்னுங் குறியவென்று கூறியவிடத்து எகரமும் வினாப்பொருளு ணர்த்துமென முடித்தல்.

மாட்டுறுப்பினவாமனக்கொளக் கூறலென்பது ஒரு சூத்திரத்துப் பொருள்கொள்ளுங்கா லகன்று பொருள்கிடப்பனவும்,
அணுகிக்கிடப் பனவுமான விருவகையையும் பொருண்முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தல். என்னை?
“அகன்று பொருள்கிடப்பினும்… மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்றாராகலின்.
மனக்கொளவென்பது கேட்டோர் மனத்துட் கொளவென்பதாம். இதற்குச் சூத்திரம்
“வடவேங்கடந்தென்குமரி…………… படிமையோனே” என்பதெனக்கொள்க.
அதற் கிளம்பூரணருரையன்றி நச்சினார்க்கினிய ரெழுதின வுரையைக் கண்டுகொள்க. அவற்றை யீண்டுரைப்பிற் பெருகும்.

உய்த்துக்கொண்டுணர்த லென்பது ஒரு சூத்திரத்தானொன்றற் கிலக்கணங்கூறியவழி யதற்குப் பொருந்தாமையுளதாகத்
தோன்றின் அதனையு மதற்குப் பொருந்தினவழியாகக் கூட்டுதல். அஃதாவது
ஏழாவ துயிர்மயங்கியலிற் “பனியெனவரூஉங்காலவேற்றுமைக், கத்து மின்னுஞ் சாரியையாகும்” என்பதன்கண்ணுணர்க.
என்னை? பனியத்துக்கொண்டான், பனியின்கட்சென்றான், பனியிற்சென்றான் என வரும்.
அவற்றுள் இன்பெற்றுழி முன்னர்க்கூறிய நாழிக்காயம், உரியக் காயம் என்பதுபோல
வல்லெழுத்து மிகாது வீழ்க்க என்பதற்குப் பொருந்த வுய்த்துணர்தல்.

தீபகவகையாற் சிறப்புக்கூறலென்பது குணந் தொழில் சாதி பொருள் என்னு நான்கனுள் ஒன்றைக்குறித்தவொருசெல்
செய்யுளிடத்து முதலிடைகடையென்னு மூன்றிடத்தினுள் ஓரிடத்தாகி யாதியினின்ற தந்தத்தளவுமோடவும் இடைநின்றது முன்னும்பின்னுமோடவும்,
இறுதிநின்ற திடையு முதலுமோடவுங் கவின்பெறக் கூறுதல். என்னை?
“குணந்தொழில் சாதி பொருள்குறித்தொரு சொல், லொருவயினின்றும் பலவயிற்பொருடரிற், றீபகஞ்செய்யுண்மூவிடத்தியலும்”
என்பது அணியியலாகலினுணர்க. அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.

சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்த லென்பது
“பெயர்வினையும்மை சொற்பிரிப்பென வொழியிசை, யெதிர்மறையிசையெனுஞ்சொல் லொழிபொன்பது” மென்னுஞ்
சொல்லெச்சங்களைக்கண்டு ஆங்காங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடலாம்.
அன்றியும் தொல்காப்பியர் நோக்கம் பற்றிப் பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்டவெனினுமாம்.
அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவையும் வந்துழிக் கண்டுகொள்க.

“என், றமைத்ததினகப்படவமையாதனவுஞ், சுருங்கக் கூறிய தொடர்பினைநாடி, யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே” என்பது,
(என்றென்பது-எண்ணிடைச்சொல். ) ஆதலா லங்ஙனங்கூறிய முப்பத்திரண்டாக அமைத்ததி னமையாதனவாமவற்றையுஞ்
சுருங்கக் கூறலென்னு மழகுநோக்கியும், முன்னோர் தந்திரவுத்தி முப்பத்திரண்டெனக் கொண்ட வரையறை
யிகவாமைக்கூறியதாகநோக்கி மிதனகத்தமைந்தனவாக வுணர்த்துதல் அறிவுடையோர்க்கு முறைமை யென்றவாறு.
அமையாதனவாவன பலவுள. அவற்றுள்ளுஞ் சில வருமாறு. வேண்டாது கூறிவேண்டியது முடித்தல், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி
வகுத்தல், பொருளிடையிடுதல் என்பன.
அவையாவன :- “ஏனையுயிரேயுயர் திணைமருங்கிற், றாம்விளிகொள்ளாவென்மனார்புலவர்” என்னுஞ் சூத்திரத்தானும்,
“அளபெடைமிகூஉமிகரவிறுபெய, ரியற்கையவாகுஞ் செயற்கையவென்ப” என்னுஞ் சூத்திரத்தானும்,
“ஒருமைசுட்டிய பெயர்நிலைக்கிளவி, பன்மைக்காகுமிடனுமாருண்டே” என்னுஞ் சூத்திரத்தானு முணர்க.

இவற்றுள் முன்னைய விரண்டும் விளிமரபு. மற்றையது எச்சவியல்.
அவற்றொடும் “ஆற்றொழுக்கரிமாநோக்கந்தவளைப், பாய்த்துப்பருந்தின் வீழ்ச்சிநிரனிறை” யென்பனவு
மொருசாராசிரிய ருத்தியுளமைத்தாரெனக் குறித்ததாம்.
அன்றியும், ஒன்றற்கிலக்கணங்கூறும்வழி யொருசூத்திரத்துட் பலவுத்திவருவனவு முளவென்னுநோக்கத்தாற் கூறியதூஉமாம்.
அதற்குதாரணம் :- “எல்லாமொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்யினுருவு கொளல்வரையார்” என்பதனாலுமுணர்க.
என்னை? மூவகைப்பட்ட மொழிக்கு முயிர்முதன் மொழிவருமிடத்து இடை யுடம்படுமெய்யாகிய வடிவுகோடல் நீக்காரென்புழி
யுடம்படுமெய் யென்றாரல்ல தவை யிவையெனக் கூறா ரவற்றை யுரையிற்கோடலென்று மவை யகரமும், வகரமும் எனவும்,
அவற்றுள் இ ஈ ஐ வழியவ்வும் அல்லனவருவழி வகரமும் வரும் எனக்கோடலானும் ஒன்றினமுடித்த
லென்னுமுத்தியான் விகாரப்பட்ட மொழிக்கண்ணு முடம்படுமெய் கொள்ளப்படுமெனக் கூறியதற் குதாரணம்
மரவடி, ஆயிருதிணையெனவும் இரண்டுத்திவந்தவாற்றானறிக. தந்திரவுத்திமுற்றும்.

26.அடிவரையுளவாயடிவரையிலவாம்
பாட்டினும்பாவின்றெழுகிளவியினுங்
காட்டியவெழுநிலத்தனவாய்க்கழறிய
பொருளொடுகலந்துபுரைதீரொலிசெறிந்
தெண்ணத்தகைசாலீராறடிநிமிர்
பண்ணத்தியினும்பயில்வனவாகும்.
(எ-ன்) இதுவும் அந்நூலிற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) குறளடி முதலாய வைவகையடியானும் வரையறையுள வாம்பாட்டினாலும், அடிவரையறையிலவாம் பாட்டினாலும் பாவின்றி
யொழுகலாறுடைய பலசொற்றொடராலுங் கற்றோர்காட்டப்பட்ட வெழு நிலத்தெழுந்த செய்யுணடைத்தாயும்
அவற்றுட்பாட்டிற்குக் கூறிய பொருளோடுங்கூடிக் குற்றமற்ற ஓசைசெறியப்பட்டுப் புலவரானெண்ணும் படிக்குத் தலைமை
சான்ற பன்னிரண்டெனலாய நாற்சீரடியின் மிகுந்துங் குறைந்தும் வரும் பாவினத்தோடும் பயில்வனவாம் நூல்களென்றவாறு.
எழுநிலமாவன:- பாட்டும், நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்புமொழியும்.
அவற்றுள் அடிவரையுளபாட்டாவன :- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என்பன.
அடிவரையிலவாவன:- நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி யெனக்கொள்க.
என்னை? “எழுநிலத்தெழுந்த செய்யுட்டெரியி, னடிவரையில்லனவாறெனமொழிப” எனவும்,
“அவை தாம், நூலினான உரையினான, நொடியொடு புணர்ந்த பிசியினான, வேது நுதலிய முதுமொழியான,
மறைமொழி கிளந்த மந்திரத்தான, கூற்றிடை வைத்த குறிப்பினான” என்பவற்றானு முணர்க.
அன்றியும் இவற்றிற்கு முன்னர்ப் பாட்டுரைநூலேயென்னுஞ் சூத்திரத்தானுமுணர்க. எழு நிலத்தெழுந்த வென்பது வரையறைப் பண்புப்பெயர்.
பண்ணத்தி யென்பது பாவினம். பண்ணைத்தோற்றுவிக்கையாற் பண்ணத்தியென்று பெயராயிற்று.
இவை இளம்பூரணர் முதலாயினாரொருசா ராசிரியர் நோக்கம். நச்சினார்க்கினியர் நோக்கமுமுணர்ந்துகொள்க.

27.விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு
மதியாலுரைத்ததும்வழங்கன்ஞாபகமா
விரிந்தநூல்களுள்வேறுவேறினமாய்த்
தெரிந்தவியல்களைச்செம்மையிற்றமிதமி
வெள்ளையினகவலின்விளம்பலுமரபே.
(எ-ன்) இதுவும் அந்நூற்குக் கூறிக் கூறாத வொழி பெதிரது போற்றலென்னுமுத்தியாற் கூறுதனுதலிற்று.

(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட விலக்கண நூல்களை அகவலின் வெள்ளையி னறைகவென்று முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை, ஆசிரியவிருத்த மென்னும் பாவினத்தாற்
பின் பிலக்கண நூல்செய்தோ ரிலக்கணங்களைக் கூறியதுங் கற்றோராலெடுக்கப்பட் லெடுக்கப்பட் டுலகின்கண்ணே
வழங்குதன்ஞாபகமாக விரிந்த நூல்களுள்ளும் பலவேறினமாக வாராய்ந்து பிரிக்கப்படும் பலவியல்களுள்ளுமோரியலை
முதலே வெண்பாவிற்கூறி, யதன்பின்னர்வரு மேனையியல் களையகவலானு மழகிதாய்த் தமிதமிகூறுவது மரபாமென்றவாறு.
அவை யாப்பருங்கலக்காரிகை, கயாகர நிகண்டு, சூடாமணி நிகண்டென்க.
இலக்கணமு மென்றவும்மை யெச்சவும்மையாதலாற் கதைதொடர்ந்த விலக்கியங்களுள்ளும்
வேறுவேறு பாவாகத் தமிதமிகூறலு மரபென்றவாறு. அவை சிலப்பதிகாரத்துள் மங்கலவாழ்த்துக்காதை மயங்கிசைக் கொச்சகக்கலியினும்,
அந்திமாலைச் சிறப்புச்செய்காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை இவை நிலைமண்டிலவாசிரியத்தும்,
கனாத்திறமுரைத்த காதை கலிவெண்பாவிலும் வந்தவாறுகாண்க. ஒழிந்தனவு மிவ்வாறுவந்தமை யாங்காங்குக் காண்க.

28. இருவகைநூன்மரபிவையெனமொழிப
(எ-ன்) இதுவும் அந்நூலினைத் தொகைவகைவிரிப்படுத்தி யொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) நூலெனத் தொகையா னொன்றாய்நின்றவது இலக்கண விலக்கியமென வகையானிரண்டாம்.
நூலினது விரியின்மரபிவையெனக் கூறுவர் அகத்தியன் முதலிய தொல்லாசிரியரென்றவாறு. நூன்மரபு முற்றும்.

29. புரப்போன்மரபினைப்புகலுங்காலைக்
குலனுங்குணனுங்குரவரைப்பேணு
நலனுங்கடவுளைநயத்தலுங்கருணையும்
புலனவித்தொழுகலும்பொறையுந்தோற்றமு
முலகியலறிந்துயிர்க்குறுதிகோடலுங்
கற்றவர்காமுறவாழ்தலுங்காந்தியு
மதிநிகர்கல்வியுங்கதிர்நிகர்வனவாம்
வாய்மையுந்தூய்மையும்வழுவுதலின்றாய்
வாடாக்கற்பகமணமலிபொற்பூக்
கோடாச்செங்கேற்கொற்றவனிதியறை
வான்சுவைமருந்தாயிரவாய்ச்சேடனிற்
கற்றனயாவுங்கழகத்துதவும்
பெற்றியன்மறந்தும்பிறன்பழிகூறான்
சதிருடையேனெனத்தற்புகழ்ந்தறியான்
முதுமொழியிலக்கணவிலக்கியமுறையே
புதுமொழிபுணர்க்கும்புலமையோனே.
(எ-ன்) வைத்தமுறையானே நுவல்வோன்றன்மையுணர்-ற்று.

(இ-ள்) நுவல்வோன் – நூனுவல்வோன், எனவே ஆசிரியனாம். நூனுவல்வோனிலக்கணத்தைக் கூறுமிடத்துக்
குலமுதல் தூய்மை யீறாகவெண்ணப்பட்ட பதினாலினுள்ளு மொன்றும் வழுவுதலிலனுமாகிக்,
கற்பகமணமலிபொற்பூமுதலிய மூன்றனையுஞ் சேடனையுமொப்பவனுமாகிக், கற்றனகழகத்துதவும்பெற்றி,
பிறன்பழிகூறாமை, தற்புகழாமை மூன்று முடையனுமாகி, முந்து நூல்கூறியபடியே யிலக்கண விலக்கியமிரண்டும்
புதுமொழியாகப் புணர்க்கும் புலமையுமுடையோனாமென்றவாறு.
முதுமொழி – முந்து நூல். கற்பகமணமலி பொற்பூமுதலிய மூன்றுஞ், சேடனு மூவமையாதற்கேது முறையே மேற்காட்டுதும்.
இது பொழிப்புரை. ஒழிந்தவகல முரையிற் கொள்க.

30-ஆய்ந்தமைவுடையகல்வியுங்கவியும்
வாய்ந்ததற்குவமைமணமலிபொற்பூ.
(எ-ன்) முறையே மேற்காட்டுதுமென்ற நான்கனுள் மணமலி பொற்பூவை யொத்ததற்கேது வுணர்-ற்று.

(இ-ள்) வாடாதபொற்பூ முந்துநூல்களை யாராய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமெய்தியதற் குவமையாமென்றவாறு.
வாடாக்கற்பக மென்பது சூத்திரத்தில்லையாலோவெனின், தந்துகொணர்ந்துரைத்த லென்னுமுத்தியாற் கூறப்பட்டது.
அமைவு – நிறைவு. பொற்பூ – கல்வி. மணம் – கவியெனக் கொள்க.

31–அறன்றருபலபொருளான்றமைவுடைமையும்
பிறர்நிதியறையிற்பெருகியசெல்வமு
மளப்பருந்தன்மையுமவரவர்தாந்தினங்
கொளக்குறைவில்லதுகொற்றீவனிதியறை.
(எ-ன்) கொற்றவனிதியறையொத்தற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) அறத்தினாலுண்டாக்கப்பட்ட பலபொருள்களுநிறைவெய்துதலும், பிறர்நிதியறையினும் பெருகிய
செல்வவளனு, மொருவராலளத்தற்கரிய பெற்றியும், வறியோர்தாமே தினமும்வேண்டுவன தினமுங் கொள்ளா
நிற்கக் குறைவில்லாமையுஞ் செங்கோற்கொற்றவனிதியறைக் குண்டாய குறியென்ற வாறு.
எனவே, இவனுளத்து அறமுதலிய நாற்பொருளாங்கல்வி நிறைவுடைமை பிற ராராய்வின் மேம்பட்ட கல்வி
நிறைவுடைமை யெனவும், இவன் கல்விநிறைவுடைமை யளத்தற்கரியதென்பதூஉம், பிறரிவனிடத்து வித்தையைக்
கொள்ளக் கொள்ளக் குறையா தென்பதூஉ முய்த்துவமைகொள்ள நின்றமையுணர்க. இவை குறிப்புவமை.

32.உண்ணத்தெவிட்டாவுரிசையுமஃகா
வண்மையுந்தண்மையும்பயப்பதுமருந்தே.
(எ-ன்) வான்சுவைமருந்தொத்தற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) அமிர்தமானது தன்னையுண்பவ ருண்ணவுண்ணத் தெவிட்டாவினிமையும், வற்றாவளமையும், குளிர்ச்சியும்
பயப்பதாமென்றவாறு. எனவே, அவன் கல்வியுங் கவியுங் கேட்போர் செவியாலுட் கொள்ள வுவட்டாதென்பது
மக்கல்விகவி கொள்வார்கொள்ளுந்தோறுங் குறைவின்றி நிறைவெய்துந்தன்மையாயிருக்குமென்பது
முவமையாலுய்த்துக் கொள்ள நின்றவா றுணர்க. அலங்க மிதுவு மது.

33.பாயிரந்தோய்ந்து பருப்பொருளின்றி
நுண்பொருள்பயக்குநூல்பலவாங்காங்
குலப்பின்மாணாக்கர்க்கோர்பகன்மயர்வறச்
செலச்சொலற்குவமையாயிரவாய்ச்சேடன்.
(எ-ன்) ஆயிரவாய்ச்சேட னுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) சிறப்புப்பாயிரத்தோடுங்கூடிப் பருப்பொருளின்றி நுண்ணிய பொருள்களைக் கூறுவனவாம்
பல நூற்பொருள்களைக் குறைவில்லாத மாணாக்கர்பலர்க்கு மொருகாலத் தொருங் கிருடீரச் செலச்
சொல்லுதற் காயிரவாய்ச்சேட னுவமையா மென்றவாறு. இவர் கற்கப்படுவோர்.

34.மடியழுக்காறுவஞ்சகம்வெகுளி
யுணராததையுணர்ந்ததின்மேற்கோட
றம்மைப்புகழ்வதிற்றான்பிறரிகழ்தல்
கற்றவர்புனைந்தகவியினுட்சார்ந்த
குற்றமொன்றுளதேற்குணனமைத்தறியான்
செவ்வியின்மலர்ந்துநாறாச்செம்மலர்
வெவ்விடவரவுதன்வாய்க்கொள்விழுமணி
பொதுமகள்பாற்கொளப்பொருந்தியபோகஞ்
சிறியவன்றன்பாற்செறிதருபொருளெனுங்
கல்வியனாரியனாங்கடனிலனே.
(எ-ன்) கற்கப்படாதோர்குண முணர்-ற்று.

(இ-ள்) மடிமுதலாகக் கூறப்பட்ட நான்குங் கல்லாமைமேற் கொண்டொழுகலுந் தம்மைப்புகழ்வதோடும்
பிறர் குற்றமற்ற கல்வியையுங் கவியையு மிகழ்தலுங் கற்றோராற்புணர்க்கப்பட்ட செய்யுட்கண்ணுஞ் சார்ந்த குற்றஞ்
சிறிதுளவாமெனி லதனைக் குணனாகவமையாதது முடையனாகி யவற்றோடு நாறாச்செம்மலர் முதலிய நான்கும்
போலும் கல்வியையுடையவ னாரியனாங்கடனில னென்றவாறு.
கடன் – முறை. நாறாச் செம்மலர் முதலிய நான்குமொப்பென்பதற்கேது மேற்காட்டுதும். தம்மையென்னும் பன்மை யிழிபின்கண் மயங்கிற்று.

35.பல்காற்சொல்லியுந்தெற்றெனப்பயன்கொள
நல்காவாக்கதுநாறாமலரே.
(எ-ன்) நாறாச்செம்மல ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) ஒருசெய்யுளுக்குப்பொருள் பலகாற்கூறியுங் கேட்போ ருள்ளத்துத் துணிவுறச் செலச்சொல்லாவாக்கிற்குப்
பருவத்து மலர்ந்தும் பரிமளமெய்தாத மல ருவமையாமென்றவாறு. பருவத்தின் மலர்ந்து பரிமளமெய்தாத மலர் – முருக்கமலர்.

36.உகுமெனிற்கோடலல்லது வந்துகொள்
பகுதியின்றாகும்பாம்பின்வாய்மணியே.
(எ-ன்) பாம்பின்வாய்மணி யொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) பாம்பின்வாய்மணி பாம்பு தானேயுகுக்குமெனிற்கொள்வதல்லது இப்பொழுது வேண்டுமென விரும்பினோர்
விரும்பினபடியே யக்காலத்திற் கொள்ளும்பகுதி யில்லையாமென்றவாறு.
எனவே, அதுபோலவ் வாசிரியரிடத்திற் கல்வியுமவர்தாமேதரிற் கொள்வதல்லது கற்க விரும்புமாணாக்கர்க்கு விரும்பிய
காலத்து விரும்பினபடியே கொள்ளும் பகுதியின்றென்ப துய்த்துணரநின்றவாறு காண்க.

37.பொருளளவையில்வரும்பொதுமகணலனே.
(எ-ன்) பொதுமகளிடத்துநல மொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) பொருட்பரத்தையரிடத் துண்டானநலன் புமான்கள் கொடுத்த பொருளின தளவெவ்வள வவ்வளவைக்கொப்ப
வெய்து மென்றவாறு. எனவே, அவ்வின்பம்போல வவ்வாசிரியனிடத்துண்டான கல்வியு மாணாக்கர்கொடுத்த
பொருளளவைக்கொப்பக் கொள்ளப்படுமென வுய்த்துணரநின்றவாறு காண்க.

38–அறத்தமர்பசித்துழந்தலமரவுலகிற்
பிறர்க்குணவெதிர்செலும்பேதைகைப்பொருளே.
(எ-ன்) சிறியவன்பாற் செறிதருபொரு ளொப்பென்பதற்கேதுவுணர்ற்று.

(இ-ள்) பேதையரிடத்துண்டான பெரும்பொருளின்ப துன்பத்திற்குரியரா யுதவுந் தமராயுள்ளார் மிகவும்
பசித்துத் துன்பமுற்று மறுக்கமெய்தவும் அவர்க்குதவாது துன்பமுறுகாலத்துச் சிறிது முதவுதலில்லாத
வேதிலாருண்ணும்படிக் கவர்பசிக் கவர்கேட்குமுன்னெதிர் கொள்ளுமென்றவாறு.
எனவே, அப்பொருள்போல வவ்வாசிரியரிடத்துக் கல்வியுந் தம்மை வழிபடு மாணாக்கர்க்கெய்தாது
வழி படாமாணாக்கர்க் கெய்துவதொன்றாமென வுய்த்துணரநின்றவாறு
காண்க. இவை மூன்று சூத்திரமுங் குறிப்புவமை. இவர் கற்கப்படாதோர்.

39.புரத்தலினியல்பேபுகலுங்காலை
யதற்கமையாண்டின்மாணாக்கனையெதிருபு
கடவுளைவாழ்த்திக்காலமுமிடனுந்
திடனுறக்குறித்துமங்கலத் திசைநோக்கி
யிருந்துனக்கிவையியல்பென்னவுள்ளுறுத்தித்
திருந்தியசிந்தையிற்செம்முகமலர்ந்து
நுவலத்தகுநூனுதலியதிறத்தினைத்
தவலருஞ்சிறப்பிற்றான்முதற்கொளுத்திப்
பொழிப்பாதியவாய்ப்புகன்றவாய்மையின்
விடத்தகுவெகுளியின்விரைவிலனாகி
நாளுநாளுநவிறொறுநவிறொறு
மஞ்சிறைப்பறவையினணைந்துறத்தழுவியும்
வெஞ்சிறைப்படுபுனன்மீன்போனோக்கியு
மகன்றனனாமெனினாமைபோன்றுன்னியும்
புனிற்றாவெனவவன்புலந்தனின்முன்னியுங்
கொளத்தகுமுணர்வின்குறியறிந்தனனாத்
தானெனலாக்கியதன்மைகண்டுலகம்
வேட்டைவாளியின்விழுமியனெனமனக்
கோட்டமொன்றின்றிக்கொடுக்குமதென்ப.
(எ-ன்) நூனுவல்வத னியல்புணர்-ற்று.

(இ-ள்) நூனுவல்வத னிலக்கணத்தைக் கூறுமிடத்துக் கல்வி தொடங்க நூலமைத்தவையாண் டேழாண்டென்னும்
பருவத்தினற் காலத்தோடு மதி திதி முதலிய நாற்காலமுங் கழகமுந் திடனாகக் குறித்துக் குணதிசை வடதிசையென்னு
மங்கலத்திசைகளைநோக்கி யிருந்து வழிபடுகடவுளை வாழ்த்தி வித்தைகொள்ளுமிடத்தியல்பு நினக்கிவையென
வவன்கருத்துறப்படுத்தித் தன்னோடொன்றிய சிந்தையொடு முகமலர்ந்து முதலே கூறத்தகு நூல்கருதிய
கூறுபாட்டைக் கெடுதலில்லாத சிறப்புவிதியாற் கருத்துறப்படுத்தி விடத்தகும் வெகுளிபோல விரைவுமிலனாகிக்
கொளத்தகுமுணர்வின் குறியையறிந்து பொழிப்பகல நுட்ப மென்னு முரைநடையா னாளுநாளும்
நவிலுந்தோறு நவிலுந்தோறும் பறவைபோலணைத்துத் தழுவியு மீன்போனோக்கியும் விட்டு நீங்கிய காலத்தும்
ஆமைபோன் றுளத்தானினைந்து மீன்றணிமைப் போதினிலா போலவனிருக்கும் புலத்துச் சென்றுந் தானென்றுஞ்
சொல்லப்படுவதாகிய பெற்றிமையைக் கண்டு பெரியோர் வேட்டைவாளியின் விழுமியனென்று கூறும்படிக்
கழுக்காறின்றிக் கொடுப்பதாமென்றவாறு.
இச்சூத்திரத்திற்கிங்ஙன மாட்டுறுப்பாகப் புணர்த்தலிந் நூலாசிரியர் கருத்தென்றுணர்க.

40.ஆரியன்றிருமகனையுறல்கடிந்த
கூரியமுதன்மைமாணாக்கன்குலமகன்
றன்மகன்மன்மகன்மந்திரத்தலைவ
னன்மகனிருநிதிநனிதமிபுரப்போ
னருத்தியின்வழிபடுபவனுரைநுழைந்துகொள்
கருத்தினனிவர்கள்கற்கப்படுவோர்.
(எ-ன்) இனிக்கொள்வோர் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரு மென விருவகையர்.
அவருள்ளுங் கற்பிக்கப்படுவோரெண்மர். அவ ரிவரென்பதுணர்-ற்று.

(இ-ள்) எண்மருட் கூரியமுதன்மைமாணாக்கனாவான்- தன்னொடு மொருங்கு கற்ற வொருபுடை
மாணாக்கருட்சேட்டன். இருநிதிநனிதமிபுரப்போன் பிறமாணாக்கர்க்குப் பங்கென்னாது தனியே கொடுப்போன்.

41.பளிங்குடனோதிமம்பரவைகொண்மூவெனத்
தெளிந்தநுண்ணுணர்வுறுந்தெள்ளியோரே.
(எ-ன்) அவர்தன்மையுணர்ற்று.

(இ-ள்) இதற்குரை வேண்டுவதில்லை. இவைநாலு மவர்க் குவமை யாதற் கேது மேற்காட்டுதும்.

42.அழுக்கின்றாதலடுத்தவைதனதாக்
கோடலென்றிரண்டும்பளிங்கின்குணமே.
(எ-ன்) பளிங் கவர்குணத்திற் குவமையாதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) நின்மலமாய் விளங்குதலுடன் அடுத்த பொருள்களின் குணங்களைத் தனதுகுணமாகக் கொண்டிருத்த
லென்னுமிரண்டும் பளிங்கின் குணமா மென்றவாறு.
எனவே, அதுபோலக் களங்கமற்று விளங்கிய நுண்ணுணர்வா லாசிரியன்கொடுத்த பலவேறு வகைப்பட்ட
கல்விகளையெல்லா முணர்விலூட்டிக் கற்ற கல்வியைப் புறத்தே தோற்றுவிப்பனென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.

43.நீர்தெரித்தமிர்துணுநீர்மையினோதிம
மோரிருபான்மைக்குவமையதாகும்.
(எ-ன்) அன்னம் அவரறிவிற் குவமையாதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) பாலையும் புனலையுங் கலந்துவைத்தாற் புனலைநீக்கிப் பாலைப் பருகுந்தன்மை
யிரண்டினா லோதிம மவரிடத்துண்டானவோ ரிரண்டு பகுதிக் குவமையாமென்றவாறு.
எனவே, அதுபோல வவரும் பலவேறு வகைப்பட்ட கல்வியுள் அசாரத்தை நீக்கிச் சாரமான கல்வியை
யுட்கொள்வரென் றுவமையுய்த்துணர நின்றவாறு காண்க.

44.பகிரதிமுதலியபன்னதியுட்புக
வுகுதலின்றாய்த்தன்னுட்கொளுமுவாவே.
(எ-ன்) பரவை யுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) கடல், கங்கைமுதலாகிய பல நதிகளும் தன்னுட்புகா நிற்பவு மவற்றைப் புறத்தே கக்குதலின்றித்
தன்னகத் தடக்கிக்கொள்ளு மென்றவாறு. எனவே, அக்கடல்போல வவருணர்வும் ஆசிரியன் அறிவிக்க
வுட்கொண்ட வெல்லாக்கல்வியையும் புறத்தே தப்பவிடா துட்கொள்ளுமென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

45.படிந்துவாறுத்துணப்படுபுனல்யாண்டும்
படர்ந்து பஃறுளியிற்பயன்றருமுகிலே.
(எ-ன்) கொண்மூ வுவமையென்பதற் கேது வுணர்-ற்று.

(இ-ள்) மேகஞ் சமுத்திரத்திற்படிந்து உவரறுத்துண்டு விளைவெய்திய புனலை யுலகமெங்கு
மாங்காங்குச் சென்று பலதுளியாகப் பெய் துலகத்திற்குப் பயனாமென்றவாறு. உலகம் சொல்லெச்சம்,
எனவே, அதுபோல அவர் தம்மாசிரியனிடத்து அதிகரிக்கப்பட்ட வவற்றுள் அசாரநீக்கிச் சாரமுட்கொண்டு
பரிபாலிக்கப்பட்ட தம்மிடத்துக் கல்வியையு முலகின்கண் வரைதலின்றி யாவர்மாட்டுங்கொடுப்பரென
வுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க. இவை நான்கிற்குங் குறிப்புவமை முன்புபோலக் கொள்க.

இனிக் கற்பிக்கப்படாதோ ரொருபன்மூவர். அவர்தாம்,

46.காமுகன்களியன்கடுஞ்சொலன்சினத்தன்
மடியன்றடுமாறுளத்தன்மறவியன்
றுயில்வோன்பிணக்கன்சோரன்பொய்யன்
மானவன்பிணியின்மரீஇயவனிவர்க்குநற்
றானமதாயினுஞ்சாற்றார்நூலே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க்கு வரையறை கூறுதனுதலிற்று.

(இ-ள்) காமுகன் முதலாகப் பிணியின்மரீ இயவ னீறாகப் பதின்மூன்று பெயர்க்குங் கல்வியீத னற்றானமென்று
நூல்கள் கூறிற்றாயினுஞ் சான்றோர் பெருநூ லுணர்த்தாரென்றவாறு.
பெருநூலென்ப தாட்சி பற்றிய சொல்லெச்சம். இவர் தன்மையாவன :-

47.ஆடுபந்துறுசுவரளந்தறிமுகவை
கோடின்றாங்குளனெனுங்குறியோரே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க் குவமை யுணர்ற்று.

(இ-ள்) ஆடும் பந்து றுசுவரு மொருபதார்த்தத்தை யளந்தறி முகவையுங் கரையில்லாத
வேரியு முவமையா மிலக்கணத்தை யுடையரா மென்றவாறு. இவைநான்கு முவமையாதற் கேது மேற்காட்டுதும்.

48.ஓரிடத்துறுகுளகமைத்தறவுண்ணா
தவணவணிறைவற்றலமருமாடே.
(எ-ன்) ஆடுவமையாதற் கேது வுணர்ற்று.

(இ-ள்) ஆடு நுகரிடத்து மிகுதியாகவுண்டான குழையை நிறைய வுண்ணாது சிறிதருந்தியதனாற்
பசியடங்கா தாங்காங்குத் தெருமந்து திரியுமென்றவாறு.
எனவே, அதுபோல வவரு மொருசா ராசாரிய னிடத்துக் கற்கத்துடங்கிய முக்கியமான வொருநூலையாயினு
மவனிடத்துத் தெற்றென முற்றக்கல்லாது பல நூல்களையும் பலரிடத்துங் கற்கத்தொடங்கிச் சிறிதுசிறிது
கற்றுக் கல்விமுற்றா துழல்வரென்றுவமையுய்த்துணரநின்றவாறு காண்க.

49.எற்றியபந்தினையெதிர்செலவிடுத்தொரு
பற்றறநிற்பதுசுவரின்பண்பே.
(எ-ன்) பந்துறுசுவ ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) ஒருவர் கையாலெற்றியபந்தினைத் தன்மெய்யிற்பரிசித்ததனை யெற்றியவரெதிர் செலவிடுத்துத்
தானப்பந்தோடு பரிசித்திருக்கும் பற்றின்றி நிற்பது சுவரின் குணமாமென்றவாறு.
எனவே, அதுபோ லவரு மாசாரியன் றமது மனத்திலே பற்றவுரைக்கப்பட்ட கல்வியையு மனப்பற்றின்றி
வறியமனதாயிருப்பரென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

50.அளந்தகத்தடக்கியபொருள்களையாங்கவண்
முற்றப்புறத்துகன்முகவையின்குணமே.
(எ-ன்) முகவை யொப்பென்பதற் கேது வுணர்-ற்று.

(இ-ள்) அளந்தறிவதாகிய பதார்த்தங்களை யொருவர்பெய்யத் தன்னகத் தடங்கியபொருள்களை
முழுதும் புறத்தே யுகுவது முகவையின்குணமா மென்றவாறு. முகவை நாழிமுதலியனவாம்.
முற்றவும், புறத்துகலும் என்பனவாய்த் தொக்கவும்மை யெச்சவும்மை யாதலாற்
சில பொருள்களா யகத்தடக்கப்பட்டவற்று ளுகுங்காற்சிறி துள்ளே பற்றுவனவு முளவென்றாயிற்று.
அவை எள் பயறு உழுந்து நெல் அரிசி முதலியனவன்றிப் பால் தயிர் நெய் முதலியவாம்.
எனவே, அவரிடத்துஞ் சிறி தாசாரியனுரைத்தவற்றுட் பற்றுவ துளதென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

51.பயஞ்சிறிதடக்கலிற்பயனிரம்பாதாங்
கொழும்புனல்புகுந்தகோடின்றாங்குளனே.
(எ-ன்) கோடின்றாங்குள னுவமையாதற் கேது வுணர்ற்று.

(இ-ள்) கோடின்றாங்குள மாரியாற்பெய்யப்பட்டுப் புகுந்தபுனலைப் புறம்போகவிட்டுச் சிறிது
புனலடக்குவதா லுண்பார்க்கும் போகங் கொள்வார்க்கும் பயனிரம்பாவாமென்றவாறு.
எனவே, அதுபோ லவருந் தம்மிடத் தாசாரிய னளிக்கப்பட்ட கல்வியை முற்றப்பற்றா துணர்வு சிறிதாகலின்,
புறம்போகவிட்டுக் கல்வியிற்சிறியரெனப்பட்டாராய்த் தமக்கும் பிறர்க்கு மினிமைப்பயனிரம்பாத
புன்புலவராவரென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.
இவை நான்கு சூத்திரத்தானு முன்பு போலக் குறிப்புவமை கொள்க.
இவ்விருவர்க்கும் “அன்னங்கிளியே நன்னிறநெய்யரி, யானையானே றென்றிவைபோலக், கூறிக்கொள்பகுணனுடையோரே” எனவும்,
“அன்னமாவே மண்ணொடுகிளியே, யில்லிக்குடமாடெருமைநெய்யரி, யன்னர்தலையிடை கடைமாணாக்கர்” எனவும்
முன்னோர் கூறிய சூத்திரங்களானு முவமை யுய்த்துணர்ந்து கொள்க.

52.குரங்கெறிவிளங்காய்கொள்பவர்போல்வார்
பழம்பகைமறைத்துப்பணிபவராகிக்
கூடாவொழுக்கிற்கொள்பவர்கல்விச்
சால்பிலராகித்தலைமைவந்தடுத்தோர்
கரந்தங்கொருவரைக்கற்கவிட்டுணர்வான்
வருபவர்தமக்கும்வழங்கார்நூலே.
(எ-ன்) இதுவுங் கற்பிக்கப்படாதோருட் கூறாதொழிந்தோரை யுணர்ற்று.

(இ-ள்) கொள்வதற்கரிய விளங்கனியை யுண்ணவிரும்பி, அவ்விளவி லிருக்குங் குரங்கைக் கற்கொண்டெறிந்து
அக்குரங்கெறியும் விளங்கனியைக் கொள்பவரைப்போல வுபாயத்தாற் கல்விகோடற்கு வருவார்க்கும்,
பழம்பகையைத் தோன்றாதுமறைத்ததற்குக் கூடாவொழுக்கத்தினோடும் புறத்துற்ற நட்பினராகியும் நிலத்தில் வீழ்ந்து
பணிதன் முதலியன செய்து முபாயமாகக் கல்விகோடற்கு வருவார்க்கும், கல்வியாற் பூரணமிலராயும்
அறிவிலாதாராற் சிறப்பெய்தினோர் பிற சான்றோருழை யுடையார்முன் னில்லார்போலேக் கற்றும்
வெளிப்பட வந்துநின்று கல்லாது மாண்பிறந்தமானத்தாற் பிறரை யவரிடத்துக் கரந்துவிட்டவரேவலால்
வருவார்க்கும் சான்றோர் நூற்பொருள் வழங்காரென்றவாறு. வழங்குதல் வித்தைகொடுத்தல்.
நூல்-ஆகுபெயர். அவை இலக்கண விலக்கியம்

இனிக் களங்கடியப்படுவார் பலர். அவ ரிவரெனல்,

53.ஆசாரமில்லாரழுக்காறுள்ளார்நகுவார்
கூசாதுமற்றொன்றுகூறுவார்–தேசிகன்சொற்
கற்றொன்றுறாதார்கழகத்துறிலிருந்தா
ரெற்றென்றுரையாதிரார்.
என்பதனா லுணர்க. எற்றென்பது கையாற்புடைத்தலுங் காலாலுதைத்தலுமாம்.

இனிக் கோடன்மரபு வருமாறு :-

54.கொள்வோன்கொள்கடன்கூறுங்காலைக்
கடையாமத்திடையெழுந்துளகடன்கழித்
தாரியன்மாளிகைவாயில்சென்றெய்திக்
காலமுமிடனுங்கருதுபுநின்றாங்
கெவணெவணோக்கினனவணுளனாகி
வணக்கமுமொடுக்கமும்வாய்ந்தயனிற்ப
வருகவென்றழைத்தலுமருகுசென்றிறைஞ்சலு
மருத்தியினிருத்தியென்றறைதலுமிருந்தாங்
குரையெனவுரைத்துரைத்துரனுறத்தோய்தரப்
பொழிப்பேயகலநுட்பமெச்சமெனப்
பழிப்பின்றாமுரைபகர்தலுந்தெற்றென
வுணர்ந்தபின்பொழிகெனவொழிதலுமவன்றிறத்
தோவாதுதவுவதொல்லும்வகையா
னேவாதியற்றியவின்பமெய்தியபின்
பகலினுமிரவினும்பயின்றுபின்முன்ன
ரகலானாகியவன்பினனாதலுந்
துயில்வுழித்தைவருந்துணைத்தாளினைத்துறந்
தொல்லையிற்றுயின்றேழுந்தொழுகுதலன்றே.

இவற்றானுணர்க.
இதற்குரை வேண்டுவதில்லை.
“எத்திறனாசானுவக்கு மத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே” என்பதுங்கூட்டி யுணர்க.

55.கேட்டவைகேட்டவைநிரந்தரம்பாடம்
போற்றலினேட்டிற்றானேபொறித்தலு
முரைநுழைந்துணர்ந்தவொண்பொருளையுள்ளுறுத்தலு
மயலற்றொருபுடைபயின்மாணாக்கரி
னையமெய்தியதையமகற்றலு
மெய்யுணர்வினிலுறப்பிறர்க்கவைவிளம்பலு
மெய்தியதிழவாததற்கிலக்கணமே.
(எ-ன்) கற்றகல்வி யிழவாததற் குபாயமுணர்ற்று.

இதன்பொருள் வெளிப்படை. இதனுள் உரைநுழைதலென்பது உரைமுகத்து நுண்ணிதா யாசிரியன்
காட்டக்கண்ட அரும்பதங்களை மனத்தான் மறவாது தரித்தல். இவ்வாறுகோடலால் மாணாக்கன் முற்ற வுணர்ந்தானாமாறு.
“ஆசானுரைத்ததமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றிலனாகும்,”
“அவ்வினையாளரொடுபயில்வகையொருகால்-செவ்விதினுரைப்பவவ்விருகாலு-மையறுபுலமை மாண்புநனி யுடைத்தே”
என்னுஞ் சூத்திரங்களானு முணர்க.

56.தோய்ந்தவையன்றியுந்தோயாதவற்றை
யாய்ந்தெழுகாலத்ததன்பயனெனலாய்
விழுமியதிறத்தினுள்விழுமியதொன்றாஞ்
சொல்லொடுசொல்லினைத்தொடுத்தலுந்தொலையாக்
கல்வியிற்பயிறலுங்கடனாகும்மே.

(எ-ன்) முன்னர் நூனுவல்வோனாகிய வாசிரியன் வாடாக்கற்பக மணமலிபொற்பூப்போல
வாய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமுடைய னாதல்வேண்டுமென்றா ரவ்வாரியன்போல
மாணாக்கனுங் கல்வியுங் கவியுமுடையனாதற் குபாய முணர்-ற்று.

(இ-ள்) கற்றநூலன்றிக் கல்லாதவற்றையு மாராயுங்காலத்துக் கல்வியாலாய விழுமிய கூறுபாட்டையுடைய
கலை பலவற்றுள்ளும் விழுமிய பயனென் றுலகங்கூறப்படுவதாஞ் சத்தங்களைத்தொடுத்துச்
சாதிப்பதூஉம் தொலையாக் கல்வியுடன் சாதித்துவருவதூஉ முறையா மென்றவாறு.

57.பாவினையொலிபெறப்படனஞ்செய்திடு
நாவினனாகிநாற்கவிப்புலவோர்
புதுமொழிபுணர்ப்புழிப்பொறிப்பவனாகியு
மனப்படுமொருபொருண்மதித்தவரொருமொழி
யெடுத்ததற்கியைபுறவெதிரெதிர்பன்மொழி
தொடுப்பதும்பெயர்வினைகோப்புணப்பிறிதடி
தொடுப்பதுந்தொடைபலதொடர்ந்தொருபாவாய்
முடிப்பதுங்குறிக்கொளன்முதற்காரணமே.
(எ-ன்) சத்தஞ்சாதித்தற்கு முதற்காரண முணர்ற்று.

(இ-ள்) புலவர்பலரும் பாடிய பாப் பாவினங்களை யவ்வவபாவிற் கமைத்த வொலிமுறையே
படனஞ்செய்திடும் வாக்கினனாகியும், அந் நாற்கவிப்புலவர் புதுமொழிபுணர்ப்புழி யவர்க்குப் பட்டோலை
பொறிப்பவனாகியும், ஒருபொருளைக் குறித்தவர் முதலேயோர் சொல்லையடுத்தலு மதன்மேற் பன்மொழி
யவ்வடிக்குப் பொருந்தக் கொளுவுதலும், அதன் மேற் பலவடியையுந் தொடுத்தலும்,
அடிதொடர்ந்தா லொருதொடையினாதல் பலதொடையினாதல் ஒருபாவாக்கிப் பெயராதல் வினைபாதல்
கோப்புண முற்றமுடிப்பது முதலாயினவற்றை மனத்துட் குறிக்கொளலுஞ் சத்தந்தொடுத்தற்கு
முதற்காரணமா மென்றவாறு. ஒழிந்த வகலமுரையிற்கொள்க.

58.சொற்பொருளணிநலன்றோயாதாயினு
மடியாதெடுத்தடிமடக்குதலின்றா
யாப்பினதுறுப்பிழுக்காதிறுதியில்வினை
கோப்புணமுடித்தலதன்முதற்குறியே.
(எ-ன்) இதுவும் அச்சத்தஞ்சாதித்தற்கு முதற்குறி யுணர்ற்று.

குறியாவ திலக்கணம். உறுப்பு – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யென்னு மாறுறுப்பும்.
நலனென்பது கேட்டோர்க்கின்பங் கொடுத்தல். தோயாதது – கூடாதது. ஒழிந்த அகல முரையிற்கொள்க.

59.அருமணிநிரல்வைத்தன்னசொன்னல
னொளியதனுட்சிறந்தன்னபொருணல
னழகதற்காங்கமைந்தன்னவணிநல
னுரனுடைப்பழம்பாட்டுணர்வுழியுணர்ந்தோர்
வரனுடைப்பாட்டுணர்வாய்மையின்வருமே.
(எ-ன்) அங்ஙன முன்னர்க்கூறிய முதற்குறிப்பும் குறிக்கொள்பவன் கூறுஞ் சத்தங்களினிடத்துச்
சொன்னலனும் பொருணலனு மவ் விரண்டினாலுமான வணிநலனு மெய்துதற் குபாய முணர்-ற்று.

உரனுடைப்பழம்பாட்டென்பன சங்கச்செய்யுள். ஒழிந்த அகல முரையிற்கொள்க.

பொதுப்பாயிர முற்றும்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -61-70–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 21, 2022

அவதாரிகை

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன்
ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்
வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று
அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை

வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து
அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும்
(தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

வியாக்யானம்

வாசகம் செய்வது நம் பரமே
அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க
அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ

தொல்லை வானவர் தம் நாயகன்
நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று
பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லிற்று

மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது

நாயகர் எல்லாம் தொழுமவன்
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற
ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும்
குழற் குத்தும் சோராத படி

இரண்டே யடியால் தாயவன்
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்

இப்படி
1-ஸூரி போக்யனுமாய்
2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்
3-நிருபாதிக பந்துவுமானவன்
4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக

ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று
இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு
ஆவிர் பவித்தது

நம்மிறையே
நமக்கு ஸ்வாமி யானவன்

நம் இறை வந்து தோன்றிற்று
வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்

இத்தால்
பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை
ஸூஹ்ருத்துக்கள்
ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி
ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று
இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார்
அநு பாஷித்த இத்தைக் கொண்டு
பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்
இவர் தம்மைத் தாம் உணர்ந்தால்
பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே
அங்கு புக்கு
எத்திறம் -என்கிறார்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

என் தான்
பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன

தொல்லை வானவர்
நித்ய ஸூரிகள் உண்டு
யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்

தம் நாயகன்
அவர்களுக்கு நிர்வாஹகனானவன்

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்

வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு
வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு
வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே
ய தோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )

அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை
தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள்
அது தன்னிலும் இழியப் போகாமையாலே
அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்

ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-

அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,
அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,
அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல்,
அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,
வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக),
மந்யந்தே-கருதுகின்றனர்.

என்றும் சொல்லும் அத்தனை

இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே

தொல்லை வானவர் தம் நாயகன்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்

நாயகர் எல்லாம் தொழுமவன்
இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள்
சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்
பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே
பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று
இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி

இரண்டே யடியால் தாயவன்
மூன்று அடியை இரந்து
இரண்டு அடிக்காக்கி
ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக
இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன்
காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன்
இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே

ஆய்க்குலமாய்
ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்
பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று
அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே
அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க
ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்

ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-என்றபடியே
தன்னைப் பற்றினாரும்
பழையாரும்
பிறவாதாருமாம் படி இருக்கிறவன்
வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப்போமோ

வந்து தோன்றிற்று நம்மிறையே
ஆவிறர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே

இரண்டே அடியால் தாயவனான நம்மிறை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியாகத் தன் தாய்க்குச் சொன்ன தோழிமார்களை
ஒன்றும் அறியாச் சிறுமியனாய் நம்மிறை வெறும் பரனேயோ
வெறும் ஸூலபனேயோ
அதுகள் தான் அவனுக்கு எவ்வளவு என்று கேட்டவனான தனக்கு
நம்மிறையோடீ
அவர் வாக் கோசரத்துபய ஸ்வ பார்
அதுகள் எங்களால் தான் அளவிட்டுப் பேசத் தகுமோ – என்று
அவர்களாய்த் தாம் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ
அவன் பர ஸானத்தைக் கேளாய்

தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம்
நித்ய நிர்வாஹக சேஷி யானவன்
சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்

இப்படிப்
பரனே
ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன்
பூ லோக
உபரித லோகங்களில்
ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி
க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியாள் அளந்து கொண்டவன்

இப்படியான நம்மிறையே

அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று –
இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்

இவனுடைய
1- பரத்வ
2-ஸுசீல்ய
3-ஸுலப்யங்கள்
வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

———————

அவதாரிகை

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது
தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே
(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே
ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் )
ஆர்த்தரான இவருக்கு
ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை
கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்டா தோழி
புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும்
இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும்
நிலை நின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே
நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும்
அவள் ஒரு பெண் அன்றோ
இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது
ஓ ஒரு கொடுமையே

இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்

அறையோ என நின்றதிரும்
இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி
நிலை நின்று கோஷியா நிற்கும்

கருங்கடல்
இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில்
கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது

ஈங்கிவள் தன் நிறையோ
இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது

வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
பிரபல விரோதி யுண்டாய்
ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி
ரஷிக்கை சக்யம் அன்று

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

முறையோ என்று
க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி

1-ஸ்ரம ஹரமாய்
2-தர்ச நீயமாய்
3-உதாரமான வடிவை யுடைய நீ
இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று
தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு
விளித்து யுரைத்தாள் யாயிற்று

இது செவிலி இரங்கல் யாகவுமாம் –
(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )

இத்தால்
அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால்
இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம்
ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத்
தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து
அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார்
அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள்
என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும்
சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய
தசையைக் காட்டாச் செய்தேயும்
புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும்
ஏக தேசமும் இரங்குகிறது இல்லை
பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே

அறையோ என நின்றதிரும்
இங்கனே வெளியில் புறப்படாயோ என்று
அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –

கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என
நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே
அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்
இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது
இவ்வவஸ்தையில் இவள் நிறை
அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே
இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு
உன்னருளால் அன்றி இல்லையே
அத்தால் அவ்வவஸ்தை யானானாள்

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

——————-

அவதாரிகை

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு
ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே
ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின
ஸூஹ்ருத்துக்களைக் குறித்து

அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி
ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து
சமாதானம் பண்ணின பாசுரத்தை

தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு
இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் விழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம்
இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்

அது சீற்றத்தாலோ என்னில்

வானாடமரும் குளிர் விழிய
நித்ய விபூதியிலே இருந்து
நித்ய அனுபவம் பண்ணி
நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன

இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும்
குளிர்த்தி மாறாது இருக்கை –

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால்
மிகுத்துத் தோன்றா நின்றன –

தாமிவையோ
இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே
உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன

(ஸ்ம்ருதி -நினைவு மட்டும்
அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது
அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது )

கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்
(சுவையன் திருவின் மணாளன் )

திருமால்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே
சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே
ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு

எண்ணம் புகுந்து
தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து

அடியேனோடு
தனக்கே சேஷமான என்னோடே கூட
(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )

இக்காலம் இருக்கின்றதே
க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று
தோழிக்கு
இயற் பட மொழிந்ததாயிற்று

இத்தால்
வண்ணம் சிவந்துள என்கையாலே
ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த
ராகம் ஸூசிதமாயிற்று

வானாடு இத்யாதியாலே
அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும்
இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று

(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது
என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

முறையோ என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே
இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்
பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது

ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே
அத்தலையில் ஆற்றாமை
ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும்
வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை

வானாடமரும் குளிர் விழிய
ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது
வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்

அமருகையாவது
இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை
தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
குளிர்ந்து
மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற
அலர்ந்தால் போலே யாயிற்று
திருக்கண்கள் இருப்பது

தாமிவையோ
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோம்
அவை தான் இருக்கும் படி இதுவோ

கண்ணன் திருமால்
திருமால் கண்ணன்
ஸ்ரீ யபதி யாகையாலே
ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
அழகிய திரு முகத்தோடு வந்து
குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு

எண்ணம் புகுந்து
மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே
எண்ணம் புகுந்து என்றாய்
என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு

அடியேனோடு
ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்
அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது
ஜீவா ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது
அது ஜீவா ஸ்வரூப பரமோ என்னில்
ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் -என்றும் யுண்டு
ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே

இக்காலம்
இப்பேற்றுக்கு வரவாறு முன்நாள் அறிந்திலேன் கிடீர்

இருக்கின்றதே
நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும்
பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது
ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது
ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே
ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்
அந்நோக்குக்கு இலக்கான தலைமகள்
ஹ்ருஷ்டையாய்
தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய்
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று

அதுக்கும் மேலே

வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
இவை திருக்கண் மலர்கள்
வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய்
ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள
கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய்
அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது


இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி

கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8-
ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில்
அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது

அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது
அநு பாவ்யமாய் இருக்கிறது
ப்ரத்யக்ஷமாய்த் தானே
இங்கும் ஓ என்பது அன்விதம்

—————

அவதாரிகை

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து
இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன

விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே
தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்
இத்தனை யன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது)
திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும்
(அப் பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் கடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது)
திருநாமங்களாகிய சொற்களைச் சொல்லுதல் செய்கிறோம்.

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்
வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே
(ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே )
ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு
ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்

யாமுமவா
யாமும் அவா
அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ
அல்ல என்றபடி

ஆனால் உம்முடைய அளவு என் என்னில்
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும்
பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு (துன்பப்பட்டு )-

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே

திருநாமம் சொல் கற்றனமே
பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி

இப்பாட்டு
கலந்து பிரிந்த நாயகி
கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான்
தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று
பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-

திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14-

என்றதாய்க் கொண்டு
திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு
நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன்
அத்தாலே அன்றோ என்கிறார் –

வியாக்யானம்

இருக்கார் மொழியால்
இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்
பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே
அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்
ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே

அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற
அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று
இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது

ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால்
எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்
உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள்
இவ்வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே
எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே

நெறி இழுக்காமை
பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே

உலகளந்த திருத் தாளிணை
இவை அறியவுமாம்
அறியாது ஒழியவுமாம்
என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை
இவை அறியாதே இருக்கச் செய்தேயும்
தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே

நிலத் தேவர் வணங்குவர்
ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்
விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே
பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்

யாமும்
அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்

அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
கனிந்த பழம் இல்லாத போது
காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப்
உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்

திருநாமம் சொல் கற்றனமே
அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்
நமோ நாராயணாய என்பது
அத்தை உச்சரித்தேன்
அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

—————

அவதாரிகை

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே
எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்
கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று
பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு

(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்
உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல் )

இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே )
அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை

தலைவி நோக்கின் வாசி கண்டு
தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி
(பிரளய காலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று

ஒரோ கரும முற்றுப் பயின்று
தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே
பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்

செவியொடு உசாவி
மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை
ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்
நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த
ஈஸ்வரனுடைய திருவடிகளிலே

உற்றமுறாதும்
உற்றும் உறாதும்
கிட்டினார் கண் போலேயும்
கிட்டாதார் கண் போலேயும்

அதாவது
உகப்பும்
செல்லாமையும்
தோற்றி இருக்கை

நாயகனைக் கண்ட உகப்பும்
இவனை ஒழியச் செல்லாமையும்
தோற்றும்படி
பார்வையிலே அறியலாய் இருக்கை

மிளிர்ந்த கண்ணாய்
உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி
கண் என்று பேராய்

எம்மை உண்கின்றவே
நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள்
கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று

இத்தால்

கற்றுப் பிணை -இத்யாதியாலே
இவ்வாழ்வாருடைய ஞானம்
ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய
ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே
ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும்
ஸ்வரூப விரோதிகளிலும்
புருஷார்த்த விரோதிகளிலும்
சாதனா விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி

செவியொடு உசாவி -என்கையாலே
இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு
நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே
சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )

உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது

மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று

எம்மை யுண்கின்றனவே -என்கையாலே
இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை
வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன்
ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப்
பாங்கனுக்குச் சொல்லுகிறான்

வியாக்யானம் –

கற்றுப் பிணை
கன்றான மான்
முக்தமான மானினுடைய

மலர் கண்ணின்
மலர் போலே இருக்கிற கண் என்னுதல்
விகஸிதமான கண் என்னுதல்

குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று

ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி
ஒரோ கார்யத்திலே யுற்று
அதிலே நெருங்கி
அத்தைச் செவியோடே உசாவி
ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே
ஒன்றிலே துணிந்து
அதிலே நெருங்கி
அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே
இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே
கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து
அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது

உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்
மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது
அந்நோக்கிலே பரவசனாய்
இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்

எம்மை உண்கின்றவே
கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது

இத்தால்
ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால்
கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால்
ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது
பின்னை ஞான கார்யம் அன்றோ
கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில்
அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது
இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே
ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே

செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வண்ணம் சிவத்தில்
அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன்
அவன் நோக்கின் வாசியை
செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த
தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்

ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்
தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய்
ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்

செவியொடு உசாவி
அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும்
அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய

உற்றமுறாதும்
கிட்டின அவளாயும்
கிட்டாத அவளாயும்

மிளிர்ந்த கண்ணாய்
கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்

எம்மை
என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு

உண்கின்றவே
எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

—————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர்
நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது
விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று
தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை

தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன்
தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து
உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெருமான் தனது எம்பெருமானுடைய
காவிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும்
அதி நித்தரையும்
யோக விரோதியாம் என்று துறந்து
யுக்தாஹார விஹாரராய்
யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு
நிரந்தர த்யான தத் பரரான
ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு
நிரந்தர அனுபாவ்யமாய்
மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்
(ஆழ்வாரது கண்கள் )

எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் )
ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும்
தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய்
அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்
அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே
நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்

அருவினையேன் உயிராயின
நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு
அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான
எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின

காவிகளே
ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே
காவி என்னாலானவை

கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
என்று அந்வயம்

இத்தால்
ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது
அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான
நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய்
ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்மவஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய்
அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே
ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய்
இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில்
தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு
இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன

எரி நீர் வளி வான் மண்ணாகிய
காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்
அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்

வெம்பெருமான்
அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி

தனது வைகுந்த மன்னாள்
மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே
ஒரு நாளும் அழியாததாய்
அவனுக்கு அஸாதரணமாய்
அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்

கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே
பிரதான அவயவமாய்
என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய்
பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன

ஆறு வினையேன்
ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் –

—————

அவதாரிகை

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை
போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை
தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல –
தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகள் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னாள்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
நைல்யத்தாலே நெய்தலையும்
கூர்மையாலும் ஒளியாலும் வேலையும்
குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்

மற்றும்
கண்ணுக்கு ஒப்பான
வாள்
அம்பு
வடி
மான் விழி
முதலான பலவற்றையும் வென்று

அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே
பலவற்றையும் வென்று என்னவுமாம்

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல
இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்
விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்

பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே
இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்

கோவிந்தன்
வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ
பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்

வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற
அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )

கண்களாய துணை மலரே
கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை

இவற்றுக்கு -என்று
அத்யாஹரித்து
ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று
அவயம்

இத்தால்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே
ஆழ்வாருடைய ஞானமானது
ராக ஹேதுவான ரஜஸ்ஸையும்
கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும்
லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து
(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே
முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )

இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி
பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி

தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே
இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்
(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )
ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும்
பாரதந்தர்யமும் (பேடை)
ஸூசிதமாயிற்று

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று
அலர் மேல் மங்கையைச் சொல்லி
அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்
ஆஸ்ரிதற்கும் துணையான
விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்

வியாக்யானம் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்
விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே
ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால்
எல்லாம் கூட ஒப்பாகவற்றோ
மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது

விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே
பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை

இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு

சிவப்பாலே செங்கழுநீரை வென்று
கருமையாலே நெய்தலை வென்று
ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று
மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று
அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன

ஆவியின் தன்மை அளவுள்ள
இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே
இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன
இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்

அசுரைச் செற்றமாவியம்புள் வல்ல மாதவன்
அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து
மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய்
விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய்
இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்

மாதவன்
கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே
ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்

கோவிந்தன்
அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்

வேங்கடம் சேர்
அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி
திருமலையிலே வந்து ஸூலபனானவன்

தூவியம் பேடை யன்னாள்
கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான
தூவியம் பேடை யுண்டு
அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை
அத்தோடு ஒத்து உள்ளவள்

அன்றிக்கே
தூவியம் பேடை -என்று
பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய்
அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்

கருட வாஹனன்
ஸ்ரீ லஷ்மீ பதி
என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில்
ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து
அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி
பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை

கண்களாய துணை மலரே
கண் என்கிற வியபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று

கண்களாய துணை மலரின் பாரிப்பு
காவியும் என்று தொடங்கி
ஆவியின் அளவுள்ள பாரிப்பு
என்று அந்வயம்

இத்தால்
திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற
ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை
பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று
அருளிச் செய்த படியே
இவ்வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்
இந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய்
இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று
அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
கறுப்பாலே நெய்தலையும்
தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும்
ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும்
மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று
பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல
ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர்
கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும்
திருவேங்கடம் சேர்ந்தவனும்
அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய்
தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு
அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய

கண்களாய துணை மலரே
ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே

என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத
பலவிதரண உத்ஸாஹம் உள்ளது

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில்
கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

————–

அவதாரிகை

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால்
பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க
யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை
காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை
தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழை பந்தர்–மநோஹரமான தழைகளார் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாகவும்
மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை
கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே
கொம்புகள் சிக்கனைத் தூக்கி
மலர்ந்தே வியானவில்லை

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்
அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே
சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய

பொருகடல்
செறிந்த கடல் என்னவுமாம்

தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே
அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான
ஸ்வ பாவத்தை யுடையவளே

(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி
அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே
நித்யம் நிரதிசய போக்யம் -கீழ்
அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழல்பவர் அன்றோ )

கலந்தார் வர வெதிர் கொண்டு
தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி

வன் கொன்றைகள்
நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத
வன்மையை யுடைய கொன்றைகள்

கார்த்தனவே –
கருவடைந்து அரும்பின இத்தனை
மலர்ந்தன வில்லை என்றதாயிற்று

வன் கொன்றை என்று
அரும்பின சிக்கனவைச் சொல்லி
மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )

இத்தால்
விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை
ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே
(கொன்றைப்பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு
உஸாத் துணையாக ஆசைப்பட்டவர்
விளம்ப அஷமதையாலே சிதிலராக
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது

இதில்
வன் கொன்றை -என்கையாலே
ஸ்த்தாவர பிராயராய்
அஞ்ஞரான சரீரிகளுடைய
தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )

புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே
இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி

மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் )
வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே )
யுண்டான போக்ய வஸ்துக்களை
ஸூசித்தப்படி

தண்டுற நாற்றி -என்கையாலே
(கிளையில் பொருந்தி )
இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி
(கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )

மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே
கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில்
அதிசயித்தது இல்லை என்றபடி
அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது

பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று
உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி

கார்த்தனவே -என்கையாலே
ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

ஸ்வாபதேசம்
இத்தால்
அவனுடைய குண ஞானத்தாலும்
இக்கலையை அவகாஹித்த படியாலும்
போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று
பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகள்
கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய்
அக்காலமும் வந்து
அவையும் பூக்கவும்
அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர
அத்தைக் கண்ட தோழி
அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –
காலம் தாமும் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே
தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை
வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே
தூக்கின அளவே காண்

மலர்ந்தே ஒழிந்தில
மலர உபக்ரமித்தனை
இன்னும் மலர்ந்தது இல்லை
அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார்
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு
நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு
இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே
உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது
என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள்
கார்த்திக் கொண்டே நின்றன காண்

கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ
அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

—————–

அவதாரிகை

இப்படி ஆஸ்வாஸ கறாரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே
அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே
சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள்
இவ்வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று
ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த
தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து
கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது
சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர
புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே

இதுக்கு வன்மையாவது
பிரிந்தாரை நலிகை

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து
தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன்
பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ

வாரேற்றி இள முலையாய்
வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே

ஏற்றுகை -முடிகை
(
வருந்தேல் உன்வளைத் திறமே
உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று
கிலேசிக்க வேண்டுவது இல்லை
அவன் அருளும் என்றதாயிற்று –

இத்தால்

காரேற் றிருள் -என்று
(மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு )
பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து

செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று
அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே
கழிந்தமை சொல்லி

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று
அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று
யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி
மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று

வாரேற்றி இள முலையாய் –என்கையாலே
இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி

வருந்தேல் உன் வளைத் திறமே -என்று
இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில்
பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா

சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து
அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று
ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய
போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே
தலைமகள் நோவு பட
இத்தைக் கண்ட தோழியானவள்
ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

வியாக்யானம்

காரேற் றிருள்
இருளான கார் ஏறானது
கறுத்த வ்ருஷபமானது

செகிலேற்றின சுடருக்கு உளைந்து
ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது

வெல்வான் போரேற்று எதிர்ந்தது
நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ
நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து
போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது

புன் தலைமாலை
புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது
ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது

நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய
(இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று
பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது )
ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை
ஸந்த்யை தான் அல்லது காண் இது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப்போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது

மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு
பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு
ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ
கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே
உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்

உன்வளைத் திறமே
வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே
வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

——————–

அவதாரிகை
இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும்
விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே
வந்த ஆர்த்தியை
இரவின் நெடுமைக்கு இரங்கின
தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய்
எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின

தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான
மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து
வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு ராத்ரி மிக்கு நாளாயும்
மாஸமாயும்
ஆண்டாயும்
ஊழியாயும்
வந்து ஒழிய

எம்மைஉளைவான் புகுந்து
எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி

இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இந்த ஒரு ராத்ரியானது
ஆயிரம் கல்பம் ஆகா நின்றன

ஆயிரம் என்றது
அநந்தம் என்றதாகவுமாம் –

இத்தால்
வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு

ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும்
விபூதியையும்
பூஷணத்தையும்
ஒப்பனையையும் யுடைய
ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை

வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே
ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாகக்

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

காலமானது
அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி
அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –

அவதாரிகை –

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும்
என்னும் அபேக்ஷையால் உண்டான
த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து
வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்
அன்றிக்கே
வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே

எங்கள் வானவனார் முடிமேல்
த்ரிபாத் விபூதியை யுடையராய்
திவ்ய ஆயுதங்களும்
சாத்தின மாலைகளுமான
அழகேயாய் இருக்கிறவர்
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான

தளைவாய்
தொடை வாய்ப்புள்ள
அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே

நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக
விவரணமாம் படியாக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று
அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று
அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று

அது நிற்க
அத்தைக் கடக்க நிறுத்தி
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்
அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது

எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது
அநேகம் ஊழிகளாய் இரா நின்றன

மிக வந்து
ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்

ஸ்வா பதேசம்
இத்தால்
பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21-
அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும்
என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப்பாசுரத்தில்

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்
வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய்
எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு நாழிகையே வந்து
நாளாயும்
திங்களாயும்
ஆண்டையும்
ஊழியாயும்
மிகவும் வளர்ந்து நிற்குமே

எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு
நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது
எங்கனே நான் தரிக்கும் படி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -51-60–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 12, 2022

அவதாரிகை

தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்
அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை
கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய –
கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –
நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

பதவுரை

கடல்–கடலானது
மலை–மந்தர பர்வதத்தை
மத்து ஆ கொண்டு-மத்தாகக்கொண்டு
அரவால்–வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய–(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம்–அற்புத சக்தி வாய்ந்த
பிரான்–எம்பெருமான்
அலை கண்டு–(தன்னை) அலைத்து
கொண்ட–(தன்னிடத்தினின்று) எடுத்துக் கொண்ட
அமுதம்–அமிர்தத்தை
கொள்ளாது–(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ–பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலை கொண்டு–ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து–பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து–நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று)
விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,–(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை
மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
இச்சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை

பரதர் என்று
நுளை யருக்குப் பேர்

வேரித் துழாய் துணையா
மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது
திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை
நலிகைக்கு உறுப்பாகை

துலை கொண்டு
ஒத்து எதிர் ஏறி
துலைத்தல் -முடித்தலாய்
இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –

தாயம் கிளர்ந்து
ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே
மேல் எழுந்து

கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே

அழைக்கின்றதே
அவஷ்டம்ப (பற்றுக்கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து
அழைக்கும் கணக்கிலே
அதி கோஷம் பண்ணா நின்றது என்று
தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –

இத்தால்

மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே
ஸம்ஸார சாகர மத்யத்திலே
நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி
ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே
நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2-
நூற்றும்படி யாக்கி
அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை
ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –

பரதர் இத்யாதியாலே
எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது
தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது

வேரித் துழாய் இத்யாதியாலே
பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது
ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே
ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே
இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது –
பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே
க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-
அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர
அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில்
தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்
இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்
அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம்
பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்

சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31-
இத்தை ஸா வேஷ -என்று திருத்தி
கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே
அத்தை பட்டர் கேட்டு அருளி

அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று
இவ்வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும்
அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்

அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம் –

மலை கொண்டு மத்தா
ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே
மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி

அரவால்
ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே
அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு
பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்

சுழற்றிய
அஜ்ஜலத்தை பிரமிப்பித்தான்

மாயப்பிரான்
அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்
அன்றிக்கே
தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்

அலை கண்டு கொண்ட
அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே
ஒருவரால்

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு
அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு
அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி
எனக்கு உபகரித்தவன் –

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு
தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது
இக்கடலானது
அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை

வேரித் துழாய் துணையாத்
இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்
ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்

வேரித் துழாய் துணையா-என்று
அவ்வளவு அன்றிக்கே
ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்

துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று
அந்யாயப் படுகிறாள்

சங்கு எல்லாம் தன்னதேயாய்
பரதர் தன் தம்பிமார்களாய்
இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு
தன தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு
வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்
தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –

——————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத் பூதர்
அனுபவ யோக்ய தசையிலே அனுபவிக்கப் பெற்றிலோம்
ஆசந்ந ரானார் நித்ய அனுபவம் பண்ணப் பெறா நின்றார்கள்
நமக்கு அவனோடு உண்டான அசாதாரண சம்பந்தமும் அகிஞ்சித் கரமாயிற்றே -என்று
இவர் ஈடுபடுகிறாராக நினைத்து
நிதர்சன முகத்தாலே ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்தை ஸூசிப்பித்து ஆற்றின பிரகாரத்தை
காலம் கண்டு கலங்கின தலை மகள் ஆற்றாமையை
தோழி காலம் மறைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-

பாசுரம் -52–அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே –
கால மயக்கு –
அந்தாமத் தன்பு -2-5-

பதவுரை

அழைக்கும்–(அன்போடு) அழைக்கிற
கரும் கடல்–(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வெண் திரை கை–(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய்–எடுத்துக் கொண்டு போக,
விண்வாய்–ஆகாயத்திலே
புலம்பி அழைத்து–(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும்–(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின் மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை–தாமரை மலரில் வாழ்பவளும் மழை போலக் குளிர்ந்த கண்களை யுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற00(அப்பாற் கடலினிடையிற் பள்ளி கொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,
(அது கண்டு)
மண் மாதர்–பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய்–ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர்–மழையாகிய கண்ணீரானது
திருமால் கொடியான் என்று–திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது–பெருகுகிறது.

வியாக்யானம்

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்-மழைக் கண் மடந்தை யரவணை ஏற
பிறந்த அகவாசி தோன்ற ஆதரித்து அழைப்பாரைப் போலே அழைப்பதாய்
தன்னுள் அகவாயில் கண் வளருகிற ஸர்வேஸ்வரன் திருமேனியின் நிழலீட்டாலே
ஸ்யாமளமான கடலானது
தன்னுடைய வெளுத்த திரக் கைகளாலே எடுத்துக் கொண்டு போகப் போய்
தாமரைப்பூ இடத்திலே இருக்கிற
மழை போலே அத்யுதாரமான கண்ணை யுடையளாய்
மடப்பம் முதலான ஸ்த்ரீத்வ குணத்தாலே பூர்ணையாய் இருக்கிற பெரிய பிராட்டியார்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏற

குளிர்ந்த கண் -என்றுமாம்

மண் மாதர்
பூமியாகிய பிராட்டி யானவள்

விண் வாய் அழைத்து புலம்பி
தானும் கிட்டு அனுபவிக்கப் பெறாத இழவாலே
ஆகாசத்திலே மேக த்வனி முகத்தால் புலம்பி அழைத்து

முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
பூமிக்கு முலையாய் இருக்கிற மலை மேல் நின்றும்
ஆறுகளாகிற பிரவாகத்தை யுடைத்ததாய்க் கொண்டு

மழைக் கண்ண நீர்
வர்ஷமான கண்ண நீரானது

திருமால் கொடியேன் என்று வார்கின்றதே
பெரிய பிராட்டியாருக்குப் பிச்சானாவான் கொடியனாய் இருந்தான் என்று
வடியா நின்றது என்று
உத் ப்ரேக்ஷையாலே காலத்தை மயக்கி உரைத்தாளாயிற்று –

இத்தால்

இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருதுக்கள்
நித்ய அநபாயினி யான பிராட்டியாரோடு ஒத்த போகத்தை யுடைய
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு
க்ஷண விஸ்லேஷத்தில் அதிசய ஆர்த்தி பிறக்கும்படி அன்றோ
(இது நாலாவது நிர்வாகம் –
கீழ் பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் மூன்று பார்த்தோமே )
அத் தலையில்
வை லக்ஷண்யமும்
ஸ்வா தந்தர்யமும் இருக்கும்படி
நீர் அவன் செய்தது கண்டு ஆறி இருக்கை காணும் பிராப்தம் என்று
இவரை ஆஸ்வஸிப்பித்ததாயிற்று

பூமி பக்கல் யுண்டான இந்த உத் ப்ரேக்ஷை
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்துக்கு ஸூசகம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன்
கார் காலத்திலே வருகிறோம் என்று போனானாய்
காலமும் வந்து
வர்ஷிப்பதும் செய்யா நின்றது என்று தலைமகள் தளர
தோழியானவள்
அக்காலம் அன்று காண் இது –
பெரிய பிராட்டியார் ஸர்வேஸ்வரனையும் கொண்டு திருவனந்த ஆழ்வான் மேலே
ஸம்ஸ்லேஷ அர்த்தமாக ப்ரவேசிக்க
அத்தைக்கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
இப்பரிமாற்றத்துக்கு நான் கூட்டு அன்றிக்கே ஒழிவதே -என்று அழுகிற கண்ணநீர் காண் இது
நீ நினைக்கிற வர்ஷம் அல்ல காண் இது -என்று
இங்கனே காலத்தை மயக்கி தரிப்பிக்கிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

அழைக்கும்
போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் இங்கே யுண்டாய் இருக்க
போக்தாக்களாய் இருக்கிற நீங்கள் வாரிகளோ என்று
அழைக்கிறாப் போலே யாயிற்று
கடல் கோஷிக்கிற படி

கருங்கடல் வெண் திரைக்கே
நீர்ச்சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழ் கறுத்து அவகாசம் யுண்டாய் மேல் திரைந்து காட்டின பொது வெளுத்து இருக்கும் இறே
அபாமபி சுக்லம் -என்று ஜலத்துக்கு ஸ்வ பாவம் வெளுப்பே யாகிலும்
அந்நீர்ச் சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழே கறுத்து மேலே

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

மண் மாதர் விண் வாய் அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –
வாய் -இடம்
ஸ்வாவதாரத்தில் அவன் பிரிவைப் பொறாத மண் மகளுக்காக
இவ்வாகாசத்தை தனக்கு இடமாகக் கொண்ட மேகங்கள்
வேங்கடவனைத் தன் முழக்கத்தால் அழைத்ததாயிற்று
அதுக்கு அவன் வாராமையாலே
அவனுக்கு இருப்பிடமாகிற முலையில் நின்றும் அவன் கேட்கத் தன் சீர் முழக்கத்தால்
தான் அவன் கொடுமைகளைப் புலம்பிக் கொண்டு மழையாகிற தன் கண்ணீர்கள்
ஆறுகளாய்ப் பெருக அழா நின்றதே
மழை -மேகம்
வார்கின்றதே -பெருகா நின்றதே –

—————–

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய
ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே
நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் )
தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை
தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின
செவிலி முதலானார்க்கு
கட்டுவிச்சி நோய் நாடி
பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

பாசுரம் 53-வார் ஆயின முலையாள் இவள் –
கட்டுவிச்சி கூறுதல்-
வைகுந்தா மணி வண்ணனே -2-6-

பதவுரை

வாரா ஆயின முலையான–கச்சுப் பொருந்திய தனத்தை யுடையவளான
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
இது–இந்த நோயானது
வானோர் தலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய்–தேவாதி தேவனான திருமாலினது தகுதியான
திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
(இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;)
தெய்வம்–திய்வமான
தண்–குளிர்ந்த
அம்–அழகிய
துழாய் தார் ஆயினும்–(அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும்–(அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும்–குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும்–கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும்–(அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று
பருவத்தைச் சொல்லுகையாலே
இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி

ஆனால் யாராலே வந்த நோய் என்னில்

வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்
நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்
கிலேச பலம் இன்றியே
போக பலமான நோயாய் இருக்கும்

இத்தால்
நோய் முதலும்
நோயும்
நாடினாள் ஆயிற்று
மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்
நோய் திவ்யமானவோ பாதி
பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்

அவனோட்டை ஸ்பர்சத்தாலே
அப்ராக்ருதமாய்
செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான
பூ வாகிலுமாம்

தழை யாயினும்
அதனுடைய விகாஸத்தை யுடைத்தான
இலைத் தழை யாகிலுமாம்

தண் கொம்பதாயினும்
அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான
அதின் கிளை யாகிலுமாம்

கீழ் வேராயினும்
இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான
மூலம் ஆகிலுமாம்

நின்ற மண்ணாயினும்
அந்தத் திருத்துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்

கொண்டு வீசுமினே
நீங்கள் ஸ்வீ கரித்து
அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று
ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –

இத்தால்

வாராயின முலையாள் இவள் -என்கையாலே
இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது
சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது
(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )

வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே
ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள்
பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது

ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

தெய்வ நல் நோயிது-என்கையாலே
இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும்
போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே
இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே
என்னும் இடம் தோற்று கிறது

அதாவது
தெய்வத் தண் அம் துழாய்-என்று
ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி

தாராயினும் -என்று
ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது
(பூம் கொத்து -தலையால் தாங்க
நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )

தழை யாயினும் -என்று
அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –
(மதுரகவி ஆழ்வார் போல்வார் )

தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது
( கிளைஞ்சர்-உறவினர்)

கீழ் வேராயினும் -என்று
இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான
தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே
இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படியானவரைக் காட்டுகிறது
(நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் )

நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது

கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே
உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று

யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி
தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று
பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே

(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே
பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது
காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்
இம்மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி
பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி
நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல
கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ
இவள் பருவம் இருக்கிற படி

வாராயின முலையாள் இவள்
வாராலே யான முலை
வாராலே தாங்கப்பட்ட முலையை

—————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய்
மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார்
இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி
இந்நோய் முதலையும்
இந்நோய் ஸ்வரூபத்தையும்
இத்துக்கு இதுதான் தணிவு என்னுமத்தையும்
அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க
அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள்
அவளை நிராகரித்து
இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வியாக்யானம் –

வாராயின முலையாள் இவள்
இம்முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக
அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்
அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்
இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு
இவளும் பொற்கொடி இறே
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே
தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு
மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று
முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி

இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்
வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன்
அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து
வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன

தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
என்கிறாள்
தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ்விகல்பம்

துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற
தேவ தேவ சாந்நித்யத்தாலே
பரிமளத்தாலும்
கோமளதையாலும்
அழகியதும் குளிர்ந்ததுமான
பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே
கண் விழிப்பள் என்றபடி

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவர் ஆர்த்தியை சமிப்பிக்கும் இடத்தில்
ஸாரஞ்ஞரான கடகராலே சமிப்பிக்க வேணும் என்று நினைத்து
அவர்களை அபேக்ஷித்த பிரகாரத்தை
வண்டுகளைத் தூதாக நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே போக விடுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

பாசுரம்-54-வீசும் சிறகால் பறத்தீர் –
வண்டு விடு தூது –
கேசவன் தமர் -2-7-

பதவுரை

நெய்–(திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு–கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி–(பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும்–(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய
எம் ஈசர்–எமது தலைவரும்
விண்ணோர் பிரானார்–(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ்–குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும்–எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே–ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்தீர்–வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்ல வல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது–(அவர் வீற்றிருக்கு மிடமான பரம பதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது)
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்
படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போக வேணும்.

வீசும் சிறகால் பறத்தீர்
அவன் தன்னைப் போலே கால் கொண்டு நடக்க வேண்டாதே
எழ வீசுகிற சிறகாலே ஆகாசத்திலே போவுதீர்

விண்ணாடு நுங்கட்கு எளிது
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாஸே பஷிணாம் கதி -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -என்கிறபடியே
பக்ஷ பலமுடைய உங்களுக்கு பரம வ்யோம ஸப்த வாஸ்யனான திருநாடு
செல்லுகிறது எளிதாய் இருக்கும்
ஆகையால் போகைக்கு உறுப்பாகச் செய்ய வேண்டுவது இல்லை

பேசும்படி யன்ன பேசியும் போவது
அங்குச் சொல்லும்படியான அந்த வார்த்தைகளை நான் கேட்டு ஆஸ்வஸித்து
இருக்கும் படி எனக்குச் சொல்லியும் போக வேணும் –

நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர்
நெய்யைக் களவிலே அமுது செய்தயாராக ஏசும்படியான அந்தச் செயலை அனுஷ்ட்டித்து
அத்தாலே எத்திறம் -1-3-1- என்று
நான் ஈடுபடும்படி எனக்கு ஸ்வாமி யானவர் –

விண்ணோர் பிரானார்-
நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போகத்தை உபகரிக்கிறவருடைய

மாசின் மலரடிக் கீழ் –
ஹேய ப்ரதிபடமாய்
நிரதிசய போக்யமான
திருவடிகளின் கீழே

எம்மை சேர்விக்கும் வண்டுகளே
என்னைச் சேர விடுவதாக உத் யுக்தங்களான வண்டுகளே
பேசும்படி அன்ன பேசியும் போவது -என்று அந்வயம்

இத்தால்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது-என்கையாலே
ஸாரஞ்ஞரான கடகருடைய ஞான அனுஷ்டான ரூபமான பக்ஷ த்யவத்தாலே
நிரந்தர பகவத் அனுபவத்தில் யுண்டான உச்ச்ரித கதியாய் இருப்பார்க்கு
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்னும் கணக்கிலே
போக பூமி எளிது என்னும் படி தோற்றுகிறது

பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கையாலே
அப்படிப்பட்ட கடகருடைய கடிப்பிக்கைக்கு ஈடான வார்த்தை
இவ்வதிகாரிக்கு ஆஸ்வாஸ கரம் என்றபடி

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்-என்கையாலே
ஈஸ்வரனுடைய
நீர்மையும்
மேன்மையும்
இச்சேதனனுக்கு நிரந்தர உஜ்ஜீவன ஹேது என்றபடி –

மாசின் மலரடி-என்கையாலே
ஆஸ்ரித விஷயத்திலே தாரதம்யம் ஆகிற மாசு இல்லாமையும்
ஆஸ்ரித லாபத்திலே விகாஸத்தையும் சொன்னபடி

அடிக் கீழ் -எம்மை -என்கையாலே
இரண்டு தலைக்கும் சம்பந்தம் ஸ்வ ஸ்வாமி பாவம் என்றபடி

சேர்விக்கும் வண்டுகளே-என்கையாலே
தன் வாங் மாதுர்யத்தாலே சேர விடுகை ஆச்சார்ய க்ருத்யம் என்றதாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றாளே
வீச வேண்டுவது இல்லை
இவளுடைய யுக்தி மாத்திரத்திலே உணர்ந்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்
உணர்ந்தால் புஜித்து அல்லது தரிக்க ஒண்ணாது இறே
மோஹம் தானே நன்றாய் விழுந்தது
அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்
இங்கு நின்றும் ஓர் ஆள் விட்டு வரவு பார்த்து தரித்தல் செய்ய வேண்டும்படி யாயிற்று
அங்கு நின்றும் ஒருவரை வரக்கண்டது இல்லை
தன் பரிகரத்தில் கால் நடை தந்து போக வல்லார் இல்லை யாயிற்று –
இனித் தன பரிசரத்திலே வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுமத்தனை
என்று தூது விடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

அவதாரிகை

அப்படி சிலர் சிரஸா தரித்து வந்து உடம்பைத் தடவவே கண் விழித்தாளாய்
ஸ்வ ஆச்சார்யர்களைக் கண்டு
ஞான கர்மங்கள் ஆகிற சிறகால் எம்மை வீசும் வண்டுகளே
அச்சிறகால் எம்மை விண்ணாடு சேர்விக்கும் வண்டுகளே
பரத்தில் சேர்விக்கும் வண்டுகளே
விண்ணாடு உங்களுக்கு எளிது -நீங்கள் பரத்திலே தூது போங்கோள்
போவதும் அங்கே நீங்கள் பேசும்படி என்ன
அத்தை ஏன் முன்னே பேசியும் போக வேணும் -என்று அவர்களைத் தூது விடுகிறாள் –

வியாக்யானம்

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது
இதுக்கு அர்த்தமும்
அந்வயமும்
சொன்னதாயிற்று

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக் கீழ் –
சிசுபாலாதிகள் ஏசும்படி களவால் நெய் அமுது செய்ய
அத்தால்
பிரகடித ஸுசீல்ய வாத்சல்யாதிகளால் என்னைத் தாம் அடிமை கொண்டு
எண்ணில் ப்ரீத்தியையும் விளைத்து
எம் ஈஸரானவர் விண்ணோர் பிரானாரே
இத்தாலும்

மாசின் மலரடிக் கீழ்
ஸுர்யாதி தோஷ ராஹித்யத்தால் ஜகத் ஆதரணீயரானவருடைய திருவடி மலர்களுக்கு
என் தலை கீழ் பீடமாம்படி என்னைச் சேர்த்து விடும் வண்டுகள் நீங்கள் அன்றோ
இப்போதே நமக்காகத் தூது போங்கோள் -என்கிறாள்
எம்மை சேர்விக்கும் வண்டுகளே

———————————

அவதாரிகை

இப்படி நிரவதிகமாக இவருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த பக்தி வைலக்ஷண்யத்தைக் கண்ட
அன்புடையார் ஸ்லாகித்து யுரைத்த பாசுரத்தை
தலைவியை நலம் பாராட்டின (கிளவித் )தலைமகன் வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ –
நலம் பாராட்டுதல்-
சார்வே தவ நெறி -10-4-

பதவுரை

வண்டுகளோ–வண்டுகளே!
வம்மின்–வாருங்கள்;
நீர் பூ–நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ–நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ–மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு–(தேனைக்) குடித்து
களித்து–களிப்படைந்து
உழல்வீர்க்கு–(எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம்–(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய்–ஒப்பற்ற வொரு வராஹ மூர்த்தியாய்
நண் துகள் ஆடி–பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம்–பரமபதத்தை
அன்னாள்–ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய்–கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல்–பரிமளம்போல
விண்டு–மலர்ந்து மணம் வீசி
கள் வாரும்–தேன் பெருகப்பெற்ற
மலர்–பூக்கள்
தும் வியல் இடத்து–உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ–இருக்கின்றனவோ?

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
பூவின் வாசியும்
மணத்தின் வாசியும்
தேனின் வாசியும்
அறியும் நீங்கள் -புறம்பு யுண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு
நான் சொல்லுகிற வார்த்தை கேட்க்கும்படி வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு
எளிதாக ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத நீர்ப் பூக்களிலும்
எல்லார்க்கும் கிட்டலாம்படியான நிலத்தில் பூக்களிலும்
உயர்ந்த சாகைகள் நிற்கிற மரத்தில் பூக்களிலும்
உண்டான வாசியை அறிந்து புஜித்துக் களித்து
அத்தாலே
நிரதிசய ஆநந்திகளாய் எங்கும் ஓக்க ஸஞ்சரிக்கிற உங்களுக்கு

ஓன்று உரைக்கியம்
நீங்கள் கண்ட வாசி போல் அன்றியே
அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருபத்தொரு வை லக்ஷண்யம் சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமாய் இருபத்தொரு வராஹமாய்
அன்றியே
வராஹ ஜாதியோடே வேறுபாடு இல்லாதபடியான ஜாதி ஐக்யத்தை யுடையனாய்
(மானமிலா பன்றியாய் -அபிமானம் இல்லாத உப மானம் இல்லாத -இப்படி இரண்டு போல் இங்கும் )

மண்டுகளாடி
மண்ணினுடைய துகளை ஆசினவனுடைய
அதாவது
துகள் என்று
ஏக தேசமாய்
மஹா வராஹத்தினுடைய திரு வயிற்றுக்கு பிரளய ஆர்ணவ கதையான பூமி
ஒரு கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை
(திரு எயிற்றுக்கு -கோரைப்பல்லுக்கு என்றுமாம் )

வைகுந்த மன்னாள்
இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம்
போலே இருக்கிறவளுடைய

குழல்வாய் விரை போல்
புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே
ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே
(கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )

விண்டு
எங்கும் ஒக்கப் பரம்பி

கள் வாரும்
மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்

மலருளவோ நும் வியலிடத்தே
நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ

இத்தால்
வண்டுகளோ வம்மின்
இவ்வாழ்வாருடைய வை லக்ஷண்யத்தை அன்பரானவர்கள்
பகவத் அனுபவ தத் பரராய்த் திரிகிற ஸாரஞ்ஞரைப் பார்த்து

(பகவத் ப்ராவண்யம் – மொட்டு-பல்லவம் -பிரமம்
பாகவத சமாஹம் -மலர்ந்து -மத்யமம்
ஆச்சார்யர் அபிமானம் – பழுத்தால் போல்
சரமபர்வ நிலை அன்றோ
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் திரிந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனால் போல் )

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்
ஷீராப்தி சாயியான வ்யூஹ ஸ்தலத்தின் விகாஸத்தையும்
பூதல வர்த்தியான அவதாராதி வை லக்ஷண்யத்தையும்
நாநா சாகைகளின் முடியிலே காணும் படியாய் நித்ய போக்யமான
பர தசையில் (வேதாந்த விழுப்பொருள் தானே பர வாஸூதேவன் )வை லக்ஷண்யத்தையும்
நிரந்தர அனுபவம் பண்ணி ஆநந்திகளாய்
ஸர்வ லோகங்களிலும் காம சாரிகளாய்த் திரிகிற உங்களுக்கு ஓன்று சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய அழிவற்ற தேசம் போலே
ஆஹ்லாத கரரான இவருடைய
தூராத் கந்தோ வாதி -தைத்ரியம் -2 ப்ரச்னம் -என்கிற கணக்கிலே
இவ் விகாஸமும்
யசஸ் ஸுரப்யமும்
(எண் திசையும் அறிய இயம்பிய கீர்த்தி அன்றோ ஆழ்வாரது )
நீங்கள் அனுபவித்த பகவத் சம்பந்திகளில் யுண்டோ என்று
ஸ்லா கித்து உரைத்தார் ஆயிற்று –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தூதுக்கு வந்து –
பிரிய நினைத்து –
பிரிந்தால் வரும் தனையும் இவள் ஆறி ஜீவித்து இருக்கைக்காக
இப்படி இருக்கிறவன் அகலான் -என்று அவள் நெஞ்சிலே படுகைக்காக
நலம் பாராட்டு என்று ஒரு கிளவியாய்
அவளைக் கொண்டாடுகிறான்

குலே மஹதி ஸம்பூதே -அயோத்யா -26-21-என்று
பெருமாளும் கொண்டாடினார் இறே

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
வண்டுகாள் வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
மூன்று வகையாதல்
நாலுவகை யாதல் சொல்லக் கடவது இறே
நிலப்பூவும் கொடிப்பூவும் என்று நிலத்திலே இரண்டாக்கி
மற்றை இரண்டையும் கூட்டி
நாலாகச் சொல்லுவாரும் உண்டு
நல்ல மலர்ப் பொழில் நாலும் நுழையீர்காள் -என்னக் கடவது இறே
பூ யுள்ள இடம் எங்கும் புக்கு
மதுபானம் பண்ணிக் கழித்து
அதுவே யாத்ரையாகத் திரிகிற உங்களுக்கு நல்லதொரு வார்த்தை சொல்லுகிறேன் வாருங்கோள்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமான மஹா வராஹமாய் பூமியைத் தன்

—————————————-

அவதாரிகை

இப்படி அன்பர் ஸ்லாகிக்கும் படி பகவத் விஷயத்தில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே இவருடைய அனுபவ அலாபத்தாலே
வந்த கிலேசம் தீரும்படி
ஸர்வேஸ்வரன் ஒரு முகத்தாலே ஸம்ஸ்லேஷத்தை ப்ரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பிக்க
பார்ஸ்வஸ்த்தரனானவர் தம்முடைய முன்புத்தை ஆர்த்தி கண்டு கலங்கின
ஸூஹ்ருத்துக்களை ஆஸ்வஸிப்பித்த பாசுரத்தை
தன் ஆற்றாமைக்குக் கலங்கி இருந்த தோழியைக் குறித்துத்
தலைவி இரவிடத்துத் தலைமகன் கலந்தமையைத்
தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

பாசுரம் -56-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த –
தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –
கண்கள் சிவந்து -8-8-

பதவுரை

வியல்–விசாலமான
இடம்–உலகங்களை
உண்ட–திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்–பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த–(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்–சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று–உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தும்–வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்–(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி–வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து–ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்–அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்–அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனிய தேன் துளிகளை
புயலுடை நீர்மையினால்–மழை துளித்தல் போலத் துளிக்குந் தன்மை யுடையதாய்
என்–என்னுடைய
புலன்–அவயவங்களிலும்
கலன்–ஆபரணங்களிலும்
தடவிற்று–ஸ்பர்சித்தது

வியாக்யானம்

வியலிடம் உண்ட பிரானார்
விஸ்த்ருதமான தேசத்துக்கு பிரளய ஆபத்து வர
வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகர் ஆனவர்

விடுத்த திரு அருளால்
அவர் நம்மளவில் வர விட்ட சம்பத்தான அருளாலே

உயலிடம் பெற்று உய்ந்தும்
உய்கைக்கு அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தோம்

அஞ்சலம்
இனி வாடை தொடக்கமான வற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லை

தோழி
இன்னாமைக்குத் தளர்ந்த வுனக்கும் ஒக்கும் இறே பேறு

ஓர் தண் தென்றல் வந்து
நாட்டில் தென்றலோடு கூட்டலாவது ஓன்று இன்றியே
அத்விதீயமாய்
நம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி அதி சீத ஸ்பர்சமாய்
நம் பக்கல் ப்ரேமத்தாலே தாக்ஷிண்யத்தை
யுடைத்தான தென்றலானது
தன் வரத்துத் தானே ஆஸ்வாஸ கரமாம் படி வந்து

அயலிடை யாரும் அறிந்திலர்
தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே
நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து

(நேராக நாயகன் கலந்தமை சொல்ல வில்லை
ஓர் தண் தென்றல் வந்து என்று உகந்து உரைத்ததே நாயகனுடைய வரவைச் ஸூசிப்பிக்கிறாள் )

தோழி அசல் அறியில் செய்வது என் -என்று
துணுக்கு என்ன

அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை
என்கிறார்

மேல் செய்வது என் என்று கேட்க
அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
அழகிய பூந்தாரை யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை யுடைத்தாய்க் கொண்டு
என்னுடைய இந்திரியங்களை ஸ்பர்சித்து ஆஸ்வஸிப்பித்தது

அன்றியே
பொலன் கலன் என்ற
பாடமான போது
பொன்னாலே சமைத்த கலன் என்று சொல்லுவர்

இத்தால்

ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக கிருபையாலே
நமக்கு உஜ்ஜீவிக்கக் குறையில்லை

பிராணஸ்ய பிராண -என்கிறபடியே
நமக்கு ஆஸ் வாஸ கரனானவன் –
லௌகிகரான ஒருவர் அறிவுக்கும் விஷயம் ஆகாத படி
தன்னுடைய நிரதிசய போக்யதையையும் பிரகாசிப்பித்து
தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி
தம்முடைய கரணங்களையும்
ஞானாதி குண அலங்காரங்களையும்
தான் விரும்பினான்

(புலன் கலனே -இந்திரியங்கள் -ஆபரணங்கள் -என்று கொண்டு
பிரித்து அருளிச் செய்கிறார் )

நமக்கு இனி அஞ்ச வேண்டுவது இல்லை என்று
ஸூஹ்ருத் பூதரை ஆஸ்வஸி ப்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத் தலை மகளைக் கண்ட தோழி
இவளுடைய ஆற்றாமை இருந்த படி இதுவாய் இருந்தது
நாயகனையோ வரக் காண்கிறிலோம்
இனி இவள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே என்று நோவு பட
இத்தைக் கண்ட தலைமகள்
ஸந்நிதியில் யாத்ருச்சிகமாக ஒரு ஸம்ஸ்லேஷம் விருத்தமாயிற்று காண்
நீ அஞ்ச வேண்டா காண் -என்று
தலைமகள் தான் தோழிக்கு விருத்தமான ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறாள்

வியாக்யானம்

இது யுண்டாம் போது நம் பக்கலிலே ஒரு கைம்முதல் வேணும்
அதுவும் இன்னது என்று அறிகிறிலோமே என்ன

வியலிடம் யுண்ட பிரானார்
பிரளயத்தில் பூமிக்குள்ள கைம்முதலே இறே நமக்கு யுள்ளது என்கிறாள்
ஆபத்தே காண் வேண்டுவது அவன் அருளுக்கு –
பிரளய ஆபத்தில் அவன் வயிற்றிலே வைத்து நோக்குகிற போது
பூமிக்காக ஏதேனும் கைம்முதல் யுண்டோ
அப்போது பூமிக்கு யுண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கு யுண்டு போலே காணும்

பிரானார்
உபகாரமே காண் அவர் பக்கல் உள்ளது
அவர் பண்ணும் கிருபைக்குப் பாத்ரபூதராம் இத்தனையே காணும் இத்தலைக்கு வேண்டுவது
அவர் பண்ணும் இது ஒரு ஸஹ காரியை அபேக்ஷியாது இறே

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிற வர்கள்
தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது என் என்று கேட்க
வங்கி புரத்து நம்பி இருந்தவர்
மூடோ யமல்ப மதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –98-93-என்கிற
க்ஷத்ர பந்துவின் வாக்கியம் அன்றோ என்ன
அது ஒண்ணாது காண்
ப்ரணதே-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -98-93-என்று ஓன்று யுண்டு
அதிலே ஸர்வஞ்ஞன் அறிய நிர்மமனாய் விழ வேணும் இறே
நம் தலையிலே ஏதேனும் ஒரு அம்சம் ஒதுங்கில் செய்து தலைக் கட்டுகையில் யுள்ள அருமையாலே
அது இழவோடே தலைக்கட்டும்படியாய் இருக்கும் காண்
இத்தலையிலே ஒரு அம்சம் ஒதுங்கில் அது அப்ரதி ஷேதத்தில் ஒதுங்கும் அத்தனை அல்லது
உபாயத்துக்கு ஸஹ காரியாகாது
நீ உபாயமாக வேணும் என்கிற ஸ்வீ காரம் அவஸ்ய அபேக்ஷிதமாய் இருக்கச் செய்தே
அத்தலையிலே உபாய பாவமாம்படி இறே இருப்பது
இவன் பக்கலிலே பரமபக்தி பர்யந்தமாக விளைந்தால்
அது ஸ்வரூப ப்ரயுக்தமான வகையில் அந்வயிக்கும் அத்தனை அல்லது
ஸ்வ தந்திரமாய் நின்று பல பிரதமாக மாட்டாதாய் இறே இருப்பது

ஆனால் பின்னை நினைத்து இருக்க வேண்டுவது என் என்ன
காளியனுடைய வார்த்தையை நினைத்து இருக்கும் அத்தனை -என்று அருளிச் செய்தார்

ஸோ அஹம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-7-
திருமேனியில் என்னுடைய உடலை இட்டுச் சுற்றி பிராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தனாகாத நான்

தேவ தேவ ச
பிராதி கூல்ய நிவ்ருத்தியே

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும்
விசேஷ பலத்தைப் பெற்று உஜ்ஜீவித்தோம்
தன் உஜ்ஜீவனமே தன் தோழிமார்க்கு எல்லாம் ஆகையாலே இந்த பஹு வசனம்

அஞ்சலம் தோழி
நீ இவ்வாடை கூடகமானவற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லையடி

ஓர் தண் தென்றல் வந்து அயலிடை யாரும் அறிந்திலர்
அயல் இடத்தாரும் அறியாத படி தன் வரவே எனக்கு ஆஸ் வாஸ கரமாம்படி
குளிர்ந்த தென்றல் வந்தபடி

வந்தது என் செய்தது என்ன

அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
என்கிறாள்
அழகிய பூந்தராய் யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை உடையதாய்க் கொண்டு தடவிற்று
என் கண் முதலான இந்த்ரியங்களையும் அணி கலன்களையும்
அது செய்து போந்துள்ள ஸூகத்தை
நான் ஏது என்று சொல்லுவேனடி

—————————————

அவதாரிகை

இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு
ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த
பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை
தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின
பாங்கனுக்குத் தலைமகன்
கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-

பாசுரம் -57-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –
தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –
முடியானே மூவுலகும் -3-8-

பதவுரை

புலம் குண்டலம்–அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த–தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை–(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு–(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று–(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக் கொண்டு
வேல் வழிக்கின்றன–வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன்–எம்பெருமானுடைய
கையால்–திருக் கைகளால்
மலக்குண்டு–கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த–(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல் போன்று–அலை கிளரப் பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று–அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார்–(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும்–எவரும்
எம்மை–எம்மை
கழறலர்–(ஒருத்தியின் கண் பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.

வியாக்யானம்

புலக் குண்டலப்
புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய
புலப்படுத்தல் -காணப்படுதல்

பொலக் குண்டலம் என்று பாடமாய்
பொற் குண்டலம் என்றுமாம்

புண்டரீகத்த
குண்டலத்தை யுடைய
புண்டரீகம் என்கையாலே
செவ்வியும்
அழகும்
மணமும் யுடைமையால்
புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது

போர்க் கெண்டை
அப்புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே
கண்ணைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு
அதாவது
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே
பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால்
விலக்கப் பட்டால் போன்றன என்கை

உலாகின்று
உலவா நின்று கொண்டு
விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே
உலவா நின்றன என்னலாய் இருக்கை

வேல் விழிக்கின்றன
வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே
க்ரூர்யம் மாறாதன என்கை

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு
அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே
அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி

கலக்குண்ட நான்று கண்டார்
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண்
என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது
அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே
இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை

நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை

எம்மை யாரும் கழறலரே
இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே
விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும்
வாசி அறிவாராகில்
(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து )
நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –

இத்தால்

இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப்
பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது
எங்கனே என்னில்

புலக் குண்டலம் என்று
கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது
(ஸ்ரோதவ்யா
ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )

குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )

போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில்
பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும்
ஆராய்ச்சியைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து
ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது

வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது
பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும்
சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )

கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று
(பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )

அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான
பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று
(மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )

மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்
கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும்
கழியப் பெரிதால் -7-3-6- என்றும்
சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –

அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகாரணமாம் அளவன்றியே
பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –

(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே
ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி
நாமும் உருகுகிறோமே
காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )

நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய
பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

என்று இருப்பார்கள் போலே காணும்
பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம
அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது

——–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய்
அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்
அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட
நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன
ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1-
தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே
பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு
வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று

அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி
அதுக்கு

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்

அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு

அ வற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்

கலங்கிற்றோ என்ன

அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ்வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய்
நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று

இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்
விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-என்று அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர்
ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு
விளம்பம் என் என்று தளும்ப

அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை

தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து
உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி
தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –
தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –
திண்ணன் வீடு -2-2-

பதவுரை

ஒன்றே–ஒரு திருவடியிடமே
ஆயிற்று–பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது;
மற்றொரு திருவடி
முழுதாயிற்று–(பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர்–உலகுங்செல்ல வல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய்–ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரே இல்லா–(தன்னிலும்) மேற்பட்டவரை யுடையவனல்லாதவனும்
நிழல் தர–நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும்–ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது–வியாபித்தது
நீண்ட அண்டத்து–அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன்–சேற்றில் மலர்ந்த செவ்வி மாறாத செந்தாமரை மலர் போன்ற
திருக்கண்களை யுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ–இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?

வியாக்யானம்

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று
ஒரு அடித்தலமே பூமி அடையாத தானாயிற்று

ஒரு கழல் போய்
ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்

நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக
ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது

ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –
ஒருவன் திருவடியை விளக்க –
ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே
அவர்களுக்குள் கொடுத்தது

நீண்ட வண்டத்து
அபரிச்சின்னமாய்
பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான
பரமபதத்திலே

உழறலர் ஞான சுடர் விளக்காய்
உழன்று சஞ்சரிப்பதால்
அலர்ந்து
விகஸிதமான
ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்

இத்தாலே
ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -4-1-8-என்கிற
கணக்கிலே ஸகல வியாபார மூலமாய்
ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும்
ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும்
என்றும் சொல்லிற்று ஆயிற்று

உயர்ந்தோரே இல்லா
தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்

இத்தாலே
உயர்வற உயர்நலம் யுடையவன் -1-1-1- என்னும்படி
ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து
யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே
வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி

அழறலர் தாமரைக் கண்ணன்
இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்
அழறு என்று அளறு
நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி

என்னோ விங்களக்கின்றதே
இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன்
ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி
ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு
இவ்விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ

அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே
நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று
அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று
உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று
அவனுடைய ஸம்பந்தத்தையும்
ஸக்தியையும்
பிரகாசிப்பித்து
ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்

இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்
அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன்
அழறு -சேறு

என்னோ விங்களக்கின்றதே –
எந்தப்பிரகாரமாக இங்கு அளந்தானோ
அளப்பது நின்ற இடம் ஒழியவாம்
நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை
ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது
இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான்
சொல்லாய் நீ தான் தோழி –

—————-

அவதாரிகை

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே
இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
நொந்து யுரைத்த பாசுரத்தை
இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –

பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –
இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –
முந்நீர் ஞாலம் -3-2-

பதவுரை

வல்வினையேன்–கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை–முல்லை யரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல் வரிசையை யுடைய
சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களை யுடையவளாகிய இப்பெண்பிள்ளை
(என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய–“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி–கற்பங்களினும்
அம்–அழகிய (நீண்ட)
கங்குல்–இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்–அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக
(என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்–உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்-மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்–என்று வாய்விட்டுச் சொல்லி யலற்றுகிறாள்.

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில்
அழகிய கங்குலானவை

கங்குலுக்கு அழகாவது
கல்பத்திலும் நெடிதாய் இருக்கை

அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அழகிய குளிர்ந்த திருத்துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே
நீளிய வாயுள்ளன

காதலுக்கு முடிவு காணாதவோ பாதி
கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை
(கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்
உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான
பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே
லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி

மது சூதன்
அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த
நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்

என்னும்
1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்
2-ரக்ஷகத்வத்தையும்
3-விரோதி நிவர்த்தகத்வத்தையும்
வாய் விட்டுச் சொல்லா நிற்கும்

வல் வினையேன்
கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத
மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்

தளம் என்று முல்லை
முல்லை யரும்பின அளவான பெருமையையும்
நீட்சியையும் யுடைத்தான முறுவலையும்
(போக்யதையில் நீட்சி )

இங்கு முறுவல் என்பது
தந்த பங்க்தியை

செய்ய வாய்
முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்

தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள்
என்னும் -என்று கீழோடே அந்வயம்

இத்தால்
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க
விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே
ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்று

தளப் பெரும் இத்யாதியாலே
1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு)
(அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )
2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )
3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது
(முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே
அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார்
அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே
இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்
அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க
போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே
இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று
அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை
அளக்கலாமாகில் வந்து தோற்றானோ
அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான

ஊழி யங்கங்குல்
ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது
ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன

அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை
பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா
பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும்
நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே
இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை
அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்
அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ
கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்
ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்
சம்பந்தம் இல்லாமையே
விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது

வல்வினையேன்
இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை
அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ
மத பாபம் ஏவ -என்கிறாள்
இவள் படுகிற

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்

வல்வினையேன்
வலியதான வெவ்வினையால் இறே
நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று
தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான்
இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
தளவு என்று முல்லை
அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்
சிவந்த திருவதரத்தை யுடையவன்
அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல
முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே
இதுக்கு அந்வயம் –

—————

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட
பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே
அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க
நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை

(ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்
இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார்
அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது
மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி )

தலைவி ஈடுபாடு கண்ட தோழி
அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –
தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
அறுக்கும் வினையாயின -9-8-

பதவுரை

முலையோ–ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில–மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல்–அடர்ந்த மென்மையான தலை மயிர்கள்
குறிய–(முடிகூடாமல்) குட்டையாய் யுள்ளன;
கலையோ–ஆடையோ வென்னில்
அரை இல்லை–இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ–நாக்கோவென்னில்
குழறும்–(திருத்தமாக வார்த்தை சொல்ல மாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது.
கண்–கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என–கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப் பொருளோ வென்று சொல்லும்படி
மிளிரும்–(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்.–‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ?
என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள் பரமே–(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை
முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறது

மொய் பூம் குழல் குறிய
செறிந்த பூவை யுடைத்தான குழல்
பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய
முடி கூடின வில்லை

கலையோ அரையில்லை
பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று

நாவோ குழறும்
நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
கடல் சூழ்ந்த பூமியும்
மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ
என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்

இவள் பரமே
இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –

நாயகனை வசீகரித்து
முலை அழகாலே யாதல்
மயிர் முடி அழகாலே யாதல்
உடை அழகாலே யாதல்
உக்தி சாதுர்யத்தால் யாதல்
ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க

(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல்
கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே
இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )

முலையும் அரும்பாதே
குழலும் முடி கூடாதே
பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே
சொல்லும் மழலையாய்
கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு
இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல்
என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று

பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே
பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று

இத்தால்

பரிவரானவர்கள் –
பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ்வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று
பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது

முலையானது
போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது
பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி

குழல் குறிய -என்று
முடி அழகில்லை என்றபடியாலே
நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே
தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி

உடை அழகில்லை என்கையாலே
பந்த பரிகரஸ் தஸ்ய -ஹர்யஷ்டகம் -என்னுமா போலே
யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி

(ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-

த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன்,
ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,
யதந்த: ச-முயற்சி புரிவோராகவும்,
நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய்,
நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால்
வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது;
எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை
பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள் )

மிளிரும் கண் -என்கையாலே
ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய
ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி

இவள் பரமே -என்கையாலே
கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு
சாதனம் இல்லாமல்
த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று
வ்யதிரேகம் சொன்னபடி

பெருமான் மலை -இத்யாதியாலே
அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1-என்கிறபடியே
அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போகஸ்த்தானம் என்றதாயிற்று
(கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளே
ப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ
அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்

வியாக்யானம்

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்
முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல
முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால்
இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல

கலையோ அரையில்லை
தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான்
திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை

நாவோ குழறும்
சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி
அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே
அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க
எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி
இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று

இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம் –

முலையோ முழு முற்றும் போந்தில
முழு முற்றும் –
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்

கலையோ அரையில்லை
கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்

நாவோ குழறும்
நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ
என்னும்படியான கண் பார்வையள்-

இவள் பரமே பெருமான்மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –
என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய்
அப்போது சொல்லும் வாக்யமாவிது

இவள் பரமே
இவளுக்குத் தக்கதோ

இத்தால்
அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும்
பிரிவில் அத்யாவசன்னதையும்
ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று
இதுக்கு வல் வினையேன் என்று
நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -41-50–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 2, 2022

அவதாரிகை

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே
அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய்
நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இவ்வாறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்-பிரகாரத்தையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்றும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இந் நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்

இவ்வாறு வெம்மை
இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது

ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம்
அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை
அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்
உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி
பெரிய திருவடியை நடத்துகிறவன்

அருள் அருளாத இந் நாள்
தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே

மன்றில் நிறை பழி தூற்றி
மன்றிலே நிறைந்த பழியை
அயலாரை இட்டுத் தூற்றுவித்து

நின்று
போகாமல் நின்று

எம்மை
பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை

வன் காற்று அடுமே–
பலவானான வாடைக் காற்றானது
அடியா நின்றது என்கிறாள்

இத்தால்
பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள்
தண்ணீர்ப் பந்தல் என்னும்படி
பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு
லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே
இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று
இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று
நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி
சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே
என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று
இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை

புன்வாடை
மந்தமாருதம்

இது கண்டறிதும்
இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம்
அனுபவித்தோம் இறே

இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்
பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல
வாடை
லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்

ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே
வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப்
பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான
அருளும் மறுத்த படி

வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35-
அல்லாதாராபாதி –
பெருமாள் –

மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே

————————–

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான அளவிலே
ஈஸ்வரன்
தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை
பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து
அருளுகிறார் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –
தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின-

வியாக்யானம்

வன் காற்றறைய
வலிய காற்றானது
சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க

வொருங்கே மறிந்து
ஓர் இடத்திலே சேரப் புரிந்து

கிடந்தலர்ந்த
கிடைப்பாட்டிலே விகஸிதமான

மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில்
மார்த்தவத்தை யுடைய

கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே

பொலிந்தன
அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –

இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது
அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத
சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )

ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை

கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை

மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்
கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)

கமலத் தடம் என்று
நிறத்தாலும்
குளிர்த்தியாலும்
பரப்பாலும்
போக்யமாய் இருக்கை

பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப்
போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –
(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )

மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்
என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று
தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே
ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்
என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து

விண்ணும் மண்ணும் -என்றும்
பாட பேதம் சொல்லுவார்

தன் பால் பணிந்த என் பால்
தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து

தன்பால் என்ற
பாடமான போது
தன்னிடத்து என்றும் சொல்லுவர்

எம்பிரான் தடக் கண்களே
த்ரை விக்ரம அபதானத்தாலே
அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய
பெரிய திருக்கண்கள்

இப்பாட்டு
நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட
நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –

—-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று
இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வியாக்யானம்

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன
மென் கால் கமலமாவது
மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான
மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது

இதிலே வன் காற்றாவது
அது தான்
தன்னைப் பாராதே
அறைவது

ஒருங்கே
ஏகதோமுகமாக

மறிந்து கிடந்தது அலர்ந்த
மற்றை அருகே புரியில்
தரமிலோபம்

மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே

—————————-

அவதாரிகை
இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்
அவ் வழியாலே
அவயாந்தர சோபையையும்
வடிவழகையும்
அனுசந்தித்து
இவ்வாழ்வாருக்கும்
அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும்
பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்

இது
நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால்
சொல்லப் பட்டதாகவுமாம் –

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –
தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –
உயர்வற உயர் நலம் -1-1-

பதவுரை

கண்ணும்–திருக்கண்களும்
செந்தாமரை–செந்தாமரைப் பூவையொப்ப
கையும்–திருக்கைகளும்
அவை–அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ–திருவடிகளும்
மதி விகற்பால்–ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து–ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு–அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே–அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது–எம்பெருமானுடைய
எழில் நிறம்–அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று–நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் யவர்க்கும்–அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ–(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

கண்ணும் செம் தாமரை
நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும்
வாத்சல்யத்துக்கும்
ஸூ சகமான திருக் கண்களும் தாமரை

கையும் அவை அடியோ அவையே
திருக்கைகளுக்கும்
திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை

ஓ -என்ற அசை
தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –
(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று
திருமேனி நிறம்
நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி

மதி விகற்பால்
மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்

விண்ணும் கடந்தும்
மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள்
வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து

உம்பர் அப்பால் மிக்கு
மேலுண்டான ஸநகாதிகள்
ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்

மற்று எப்பால் யவர்க்கும்
இவர்களில் வியாவ்ருத்தராய்
எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்

எண்ணும் இடத்ததுவோ
தங்கள் (மதி )வைஷம்யங்களாலே
பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ

எம்பிரானது எழில் நிறமே –
இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய
ஸுந்தர்ய சோபை யானது

ஆக
உபய விபூதியிலும்
இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை

நோக்கின அக்கண் வழியே
திருமேனியில் அழகை அடைய அனுபவித்து
இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால்
ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

வியாக்யானம்

கண்ணும் செந்தாமரை
நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று

முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன

கையும் அவையே
நோக்கின அநந்தரம்
ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே
அணைத்த கைகளும் தாமரை

அடியோ அவையே
ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும்
துறையான திருவடிகளும் அவையே

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

—————-

அவதாரிகை

இப்படி அபரிச்சேத்யம் என்று சொல்லப் போமோ
ஈஸ்வரனுடைய ரூப வேஷ நாம விக்ரஹங்களை நிஷ்கர்ஷித்து
அவ்வவ ஸாஸ்த்ர சமயங்களிலே நிற்கிறவர்கள்
சொல்லுகிறார்கள் அன்றோ என்னில்
அவர்களும் அவன் பெருமையை முடியக் காணப் பெற்றார் இல்லை என்கிறார்

இதுவும்
தலைவி தலைமகன் பெருமையை யுரைத்தல் யாகிற கிளவியாம்

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-
துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –
பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால்
சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய
வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறம் தான் மிகைத்துத் தோற்றும்படியான ஒப்பனையும்

அன்றியே
நிறத்தோடு சேருகையாலே உயர்த்தி பெற்ற
ஒப்பனையும் என்றுமாம்

பேருமுருவமும்
இவ்வழகிலே அகப் பட்டார் பாசுரமிட்டு ஸ்துதிக்கைக்கு ஈடான திரு நாமங்களும்
இவ்வழகுக்கு ஆஸ்ரயமான விக்ரஹங்களும்

இவை இவை என்று
கால பேதத்தாலும்
குண பேதத்தாலும் உண்டான
அதிகாரி பேதத்தாலே
தத் தத் நியதமாக அநு சந்தேயமான ரூபாதி பேதங்களை நிஷ்கர்ஷித்து

அற முயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம மார்க்கத்தாலே முயன்று பெற்ற ஞானத்தை யுடையரான
வைதிக ஸாஸ்த்ர ஸமய நிஷ்டரானவர்கள் ஸ்ரோத்தாக்களுக்குப் பாசுரம் இட்டுப் பேசிலும்

அற முயல்
மிகவும் முயல் என்றுமாம்

அங்கு அங்கு எல்லாம்
அந்த அந்த
ரூப
வேஷ
நாம
விக்ரஹங்கள் எல்லாவற்றிலும்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
அவற்றிலே சிறக்க உயர்ந்து வருகின்ற ஞானமாகிற
தீபத்தாலே விளக்கத்தைப் பெற்று நின்றது ஒழிய

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
ஒரு பிரகாரத்தையும் பரிச்சேதிக்கப் பெறும் படி
யத்னம் பண்ணினார் இல்லை

எம்பிரான் பெருமையே
இவை எல்லாவற்றையும் எனக்கு ப்ரகாசிப்பித்த மஹா உபகாரகனுடைய
நிரதிசய மஹாத்ம்யத்தை -என்று
தமக்கு அவன் அருளாலே
இவ் வபரிச்சித்த மஹாத்ம்யம் பிரகாசித்த படியை
அருளிச் செய்தார் யாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
இவ்வாசிகளும் யுண்டாய்ச்
சிலர் அறிந்தார் களுமாய்
அவர்களுக்கு அறியாதாரில் காட்டில் ஓர் ஏற்றம் யுண்டாய்ப் போரா நிற்க
எப்பால் எவர்க்கும் எண்ணும் இடத்து -என்றத்துக்குக்
கருத்து என் என்னில்
அவர்கள் அறிந்தாரான நிலை இது அன்றோ என்று
அதுக்கு உத்தரம் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை

இதம் இத்தம் என்று
தத் தத் ஸமய நிஷ்டர்களால் அறியலாகாதோ என்ன
வாசா சொன்ன மாத்ரமே
அங்கனே அறியப் போகாது என்று அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறத்துக்கு மேல் தோன்றும்
ஓர் ஓர் அழகும்

பேரும்
திருநாமங்களும்

உருவமும்
திவ்ய மங்கள விக்ரஹங்களும்

இவை இவை என்று
பேர்கள் இவை
உருவங்கள் இவை
என்று தனித் தனியே நிஷ்கர்ஷித்து

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம த்வய லீதரிநாப நிவிஷ்டராய்
த்வே வித்யே வேதீ தவ்ய-முண்டக -1-1-4-
என்னப்பட்ட
பரோக்ஷ அபரோக்ஷ ஞானாவாந்தர பெத்த நிஷ்கர்ஷண ப்ரவ்ருத்தர்கள்
சிஷ்யர்களுக்கு ஸப்தத்தால் நிரூபித்துச் சொல்லிலும்

அங்கு அங்கு எல்லாம்
அங்கு அங்காகப் பேசும் இடங்கள் எல்லாம்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி
விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய்
பர ப்ரகாசமுமாய்
ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார்
என்றும்
எங்கும்
இல்லையே

சரி -எத்தை -என்ன
எம்பிரான் பெருமையே
இத்தை எல்லாம் எனக்கு அறிவித்து
என்னை அடிமை கொண்டு உபகரித்தவனுடைய
ஸர்வ உத்க்ருஷ்ட ஸ்வரூபாதிகளை ஒன்றும் பெற முயல்வார் இல்லை
என்று அந்வயம்

—————————-

அவதாரிகை

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –

இவர் திரு உள்ளமானது
ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று
ஹ்ருஷ்டராகா நின்றீர்
சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது
நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று
திரு உள்ளத்துக்கு கருத்தாக

அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண்
என்று அருளிச் செய்கிறார் –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்-
தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
ஊனில் வாழ் உயிரே -2-3-

பதவுரை

மட நெஞ்சமே–பேதை நெஞ்சமே!
பெரும் கேழலார்–(பிரளய வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹா வராஹ ரூபியானவனர்
இ அகாலம்–(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம்–தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம்–பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல்–நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார்–ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர்–(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே–வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம்–(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
(அப்படிப்பட்ட நமக்கு)
சூழ் பிறப்பு–விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே–அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு–சொல்லாய்;
வாழி–(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.

வியாக்யானம்

பெரும் கேழலார்
பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு
அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி
மஹா வராஹமானவர்
ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய –
(தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி
ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே
விகஸிதமான கண் அழகு இருந்தபடி

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார்
அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே
நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே
ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்

இவ்வகாலம்
இக்காலத்தில்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
இக்கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே
அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ

பிரளய ஆர்ணவமும்
ஸம்ஸார ஆர்ணவமுமான
ஆபத்தின் வாசி போரும் இறே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும்
நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசி

தொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் )
இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே
பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான
வாழ்வு யுடையோம் ஆவோம்

வாழ்வு என்று
அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )

சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
நம்மைச் சூழ்ந்த பிறப்பும்
நம் பரிசரங்களிலே வரவற்றோ

சொல்லு
பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு
ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா
சொல்லிக் காண் –

வாழி
உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக

(ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும்
கருவிலே திருவுடையார் அன்றோ )

மட நெஞ்சமே
ஒடுக்கமுடைய நெஞ்சமே
உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று
திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று

இப்பாட்டு
கிளவியாம் இடத்து
நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து
உரைத்தது ஆகவுமாம்
அவ்விடத்து
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம்
பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை
ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப்
பெற்றுக் கொடு நின்றேன்
இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

வியாக்யானம்

பெரும் கேழலார் 
ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்
மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-
ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
ஸ்புட பத்ம லோசன

நம் மேல்
குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே
நம் சிறுமை பாராதே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –

ஒருங்கே
நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால்
அதுவும் அரிதாம் படியாயிற்று
த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-
இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது
அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம்
நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில்
நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய

பிறழ
மிகுதியைச் சொல்லவுமாம்
கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்

வைத்தார்
இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை
ஆகிலும் ஒரு

இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

வியாக்யானம்

பெற்றதாயிற்று
அப்போது மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்
இக்காலத்தில்
நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்
ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும்
வரும் நன்மை யுடையாரும் யுண்டோ

தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும்
யோனிகள் தோறும் பிறப்பும்
நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ

சொல்லு வாழி மட நெஞ்சமே
உன் அதிசங்கை நீங்கி
அவனோடே வாழக் கடவாய்
எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

—————————————————

அவதாரிகை

இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு
பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம்மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில்
அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் தாறும் திரிகின்றதே -46-

பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –
நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –
அருள் பெறுவார் அடியார் -10-6-

பதவுரை

மடம் நெஞ்சம் என்றும்–பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும்–நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி–ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார்–மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும்–அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
(ஏனெனில்)
அ பொன் பெயரோன்–அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம்–பெரிய மார்பை
கீண்ட–எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது–பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ்–திருவடிகளிலே
விட–(யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது)
போய்–விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய்–உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து–(தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும்–இன்று வரையில்
திரிகின்றது–(அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும்
மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்

தமது என்றும்
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே
கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்

ஓர் கருமம் கருதி
இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே
அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து

விட நெஞ்சை உற்றார்
நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்

விடவோ அமையும்
அந்த அறுதிப்பாட்டைத் தவிர அமையும்

ஓ -என்று
இழவைக் காட்டுகிறது

நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ
(அருகிலே உள்ளார் உண்டோ )
தவிருகிறது என் என்னில்

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்
பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய
அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை
அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போகவிட

இத்தால்
ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும்
அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே
நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படி

போய்த் திட நெஞ்சமாய்
விட்டதே பற்றாசாக
விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய்
த்ருட அத்யவசாய யுக்தமாய்

இவ்விடத்தில்
நெஞ்சு என்றது
வியவசாயத்தை

எம்மை நீத்து
கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு

இன்று தாறும் திரிகின்றதே –
இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய்
அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –

இத்தால்
தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி
பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை
அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் –
ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்
அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது
என்று நெஞ்சைக் கொண்டாடினார்
இப்போது
நெஞ்சை இன்னாதாகிறார்
அது என் என்னில்

ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ்வாசைக்கு இரை இட்டு
இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று
இன்னாதாகிறார் –

இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே
ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே
பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று
நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே

அவனை உபாயம் என்கிறது
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி
நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே

அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே
அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை

இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே
தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே

ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன
இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும்
தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது

அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே
இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே
இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –

இன்று தாறும் தாறும் திரிகின்றதே

வியாக்யானம்
மட நெஞ்சம் என்றும் தமது என்றும்
நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று
சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன்
இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே
இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி
சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்

அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது
பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே
அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று

அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில்
அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று
இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்று

எம்மை நீத்து
என்னை ஸந்யசித்தது

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே
ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே
தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இந்நெஞ்சையே அவர் வரவுக்கு தூது திடீர் என்றவர்களுக்கு
இதில் ஸ்வ பாவத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்
தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்
நெஞ்சு தான் தங்களது என்றும்
அத்யவசித்து
இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்
அந்த நினைவை விடத்தக்கதே

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால்
அகன்ற மார்வை விதாரணம் செய்த
மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட

போய்திட நெஞ்சமாய்
சடக்கெனப் போய்
என்னை விடுமத்திலும்
அவரையே தொடர்வதிலும்
அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்

எம்மை நீத்து
என்னை நிராகரித்து

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
தோளில் இட்ட திருத்துழாய் தாரும்
தானுமாய்
அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே

ஆகையால் ஆர்க்கும் தன் நரேஞ்சு என்று தூது விடலாகாது என்று –

————–

அவதாரிகை

இப்படி மானஸ அனுபவம் நடக்க
பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு
இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை
வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது
வளை இழந்த தலை மகளைக் கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

பாசுரம் -47-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –
பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –
நாங்கள் வரி வளை -8-2-

பதவுரை

வட மாருதம்–வாடைக் காற்று
திரிகின்றது–உலாவுகிறது;
திங்கள்–(குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம் தீ–கொடிய நெருப்பை
முகந்து சொரிகின்றது–வாரி யிறைக்கின்றது:
அதுவும் அது–முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன்–கண்ண பிரானுடைய
விண் ஊர்–பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே–இடைவிடாது தொழுது அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம்–(கையிலணிந்துள்ள) சங்கு வளை.
சரிகின்றது–கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு–(அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
(ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)
முழு மெய்யும்–உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?–(இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம் பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு–மென்மையான தன்மையை யுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல்–யாதாய் முடியுமோ.

வியாக்யானம்
திரிகின்றது வடமாருதம்
வாடைக்காற்று உலவா நின்றது –
கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே

திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது
பூர்ண சந்த்ரனானது
லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு
முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது

அதுவுமது ,
முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே

கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்
கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64-
பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது

சரிகின்றன -என்றும்
சொல்லுவர்

தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்
முழு மதியாலும்
வாடையாலும்
யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில்
அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி
பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –

என்னாம் கொல் என் மெல்லியற்கே
ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய்
எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ
என்று வெறுத்தாள் ஆயிற்று –

இத்தால்
வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே
ஆஸ்வாஸ கரருமாய்
ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு
லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும்
பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படி

கண்ணன் -இத்யாதியாலே
ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான
மினுக்கமும் குலைந்து
(கை வளையும் மேகலையும் காணேன் )
அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே
அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது

என்னாம் கொல் -இத்யாதியாலே
தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று
ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத்தாயார்
பாதகங்களின் பெருமையையும்
இவள் மார்த்வத்தையும் அநு சந்தித்து
என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள்

வியாக்யானம்

திரிகின்றது வட மாருதம்
மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –
நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –

அன்றிக்கே
வாடையானது குளிரக் கடவது இறே
அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –

திங்கள் இத்யாதி
இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று
சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்

வெம் தீ
நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது

முகந்து சொரிகின்றது
அங்குக் குறைவற்றுக் கிடந்த படி

அதுவுமது
வாடையோ பாதியும்
சந்திரனோ பாதியும்
பாதகமாவன சில யுண்டு இறே
ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள்

குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே
விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப்
பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது

என்னாம் கொல் என் மெல்லியற்க்கே
ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –

———————————–

அவதாரிகை

இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட
பார்ஸ்வஸ்தரானவர்கள்
பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ
உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு
ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று
இவரை ஆஸ்வஸிப்பிக்க
அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு -பல்லிக்குரல் கேட்டதை –
தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9–

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செல்கைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது
புண்னிலே கிளர்ந்து
அவ்விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது
லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி

இத்தால்
அல்ப ஞான சக்திகனான நான்
லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று

ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்
இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான
ஜன்ம
வித்யா
விருத்தங்களை யுடைய என்னாலும்

தன்னைச்
அத்யந்த விலக்ஷணமாய்
அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை

சொல்லிய சூழல்
சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது
தத்வமான தான் சொல்லுமதிலும்
தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை

(வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –
காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் –
மண் குடம் போல் அல்லவே பொன் குடம்
ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமே )

திருமால்
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே
ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –

அவன் கவி
அவனுடைய கவி
ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி
கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை

யாது கற்றேன்
அது நான் கற்றேன் அத்தனை
என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல
பின்னுருச் சொன்னேன் அத்தனை –

ஆனால் என்
நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய்
லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு
ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும்
தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே

பண்டு பண்டே-
இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று
தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து
பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி
அருளிச் செய்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது
இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே
அங்கன் இன்றிக்கே
நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம்
மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்

ஆழ்வீர் நீர் வாரீர்
உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர்
நமக்காகவே இருக்கிறீர் அத்தனை
நாமும் ரசித்து
நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் –
அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க

ஆனால் தட்டு என்
நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்
ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை
விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கை
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது
ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –
இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிருமி
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே
முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது

குருவில் மிளிர்ந்தது
அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து
உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது –
பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே
புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது

ஆங்கே
அந்தக் கிரந்தியிலே

செல்லிய செல் கைத்து
செல்லுகிற செல்கையை யுடைத்து
நடக்கிற யாத்திரையை யுடைத்து
உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும்
இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே
அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக்கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி

செண்டேறுகை யாவது
ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை
நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –

உலகை என் காணும்
லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ
இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை

ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல
அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்

இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே
பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும்
அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே –
இது இன்று முதலோ –

———–

அவதாரிகை

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர்
தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை
ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
முற்காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இந்தப் பரந்த இருள் போலே நாங்கள்
கண்டதுவும் இல்லை
அறிவதும் இல்லை
கேட்பதுவும் இல்லை

காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்
கறுத்த வண்ணத்தை யுடையவனாய்
வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால்
ஸர்வ சேஷியானவன்
(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ )

காள வண்ண வண்டு -என்று
வண்டின் நிறம் ஆகவுமாம்

மதுசூதனன்
மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்

தாமோதரன்
ஆஸ்ரித பவ்யனானவன்

உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே
பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்
அநந்தரத்திலே உமிழ்ந்தும்
ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு
ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே

(மண்ணேர் அன்ன
நேர் அழகு
அன்ன -நிகரான )

கடாய -என்று
நடத்துதலாய் நிர்வஹிக்கை
அதாவது ரஷிக்கை

அன்றியே
கடாய் என்று
கடத்தலாய்
அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –

இத்தால்
முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே
ஸ்ரவணத்துக்கும்
மனனத்துக்கும்
அபரோஷிக்கைக்கும்
விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –

காள -என்று தொடங்கி
மண்ணேர் அன்ன ஒண் நுதலே -என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண )
போக்யத்தையும் -(வண்டுந்துழாய் )
சேஷித்வத்தையும் -(பெருமான் )
விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் )
சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன்
ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி

ஒள்ளிய நுதலுக்கு
மண்ணேர் ஒத்தது என்கையாலே
ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம்
நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்
பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்
முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு
இது காதாசித்கமுமாய்
அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான
ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே
தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல்
தோழி வார்த்தை யாதல் –

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான்
மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே
இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே

வீங்கிருள் காண்டும்
முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது –
இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்
நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை –
முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள்
ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன
இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34
ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே
நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே
மே த்ருஷ்டி
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு

மே ராமம்
இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று

அத்யாபி ந நிவர்த்ததே
கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே
ந த்வா பஸ்யாமி
பெருமாளைக் காணப் பெறா விட்டால்
அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்
கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே

நத்வா பஸ்யாமி -என்கையாலே

போக்குமவன்
தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்
அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி
கடாய
கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே
கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

———————

அவதாரிகை

இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு
தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர்
ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை

பொருள் வயிற் பிரிந்து
வினை முற்றி
மீண்ட தலைமகன்
தலை மகள் ஆற்றாமை நினைத்து
பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல்
அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம் )

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்வித்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை
அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்

விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும்
நம்முடைய தேரானது
சடக்கெனக் கிட்ட வேண்டும்

வலவ கடா கின்று
தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக

கடாவுக்கா இன்று என்று
இன்று நடந்துக்க என்றுமாம்

தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய
தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில்
வெளுத்த முத்து வாசிகை போலே

மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே
பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான
அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே
நண்ணுதல் வேண்டும்
என்று அந்வயம்

இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து
இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்
தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை
த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –

இவ்விடத்தில்
மா மலைக்கே -என்கிற இடம்
ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமை க்கு பொருந்தி இருக்குமே )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே
போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி
இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான்
வினை முற்றி மீண்ட தலைமகன்
பதினாலு ஆண்டும் கூடப்போன

நம் அவ்வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு
நம் அவ்வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று
அப்பெருமலை எல்லாம்
அம்மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று
என்று அந்வயம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -31-40–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 25, 2022

அவதாரிகை
பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில்
ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க
நம்மாலே செய்யலாமோ என்று
அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து

திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார்
சில உதார ஸ்வ பாவரைக் கண்டு
இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை
மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால்
அனுமதி பண்ணக் காணகிறிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே
தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால்
அது தான் செய்யக்கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான பொன்னும்
மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசை
வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி

மின் மிளிரிய
மின்னைப் ப்ரகாசிப்பவனாய்
போவான் வழிக் கொண்ட
போகைக்கு வழிப்பட்ட

மேகங்களே
உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை

போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று
அன்வயம்

இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்
இசையைக் கண்டிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நம்முடைய அபேக்ஷை தோன்ற
சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால்
அனுமதி பண்ணக் கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான ஸ்வரூபமும்
மஹார்க்கமான குண ரத்னங்களும்
ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே
ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய
வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10-
அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய்
உஜ்வலமான தீப்தியை யுடையரான
(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் )
உதார ஸ்வா பாவமானவர்கள்
(எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் )
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இசையிலம் -என்ற ஒரு பாடம்
இசைவலம் -என்ற ஒரு பாடம்

இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை
ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்

அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
இசைகிறவன வில்லை
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே

வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை
என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று
நான் கால் கட்டினால்
அத்தைச் செய்கிறவன வில்லை

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்ந்தால்
திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள்
அப்படி என் தலையிலே உங்கள் காலை
நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும்
பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே
என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து
அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்
அங்கன்

———–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி
வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று
பரமபத நிலையன் அளவும் சென்றபடியால்
ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை
பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப்
(முக்தர்களை )போலி கண்டு யுரைத்த
(ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே )
தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-

பதவுரை

மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

வியாக்யானம்

மேகங்களோ
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -திருவாய் -4-4-9- என்கிறபடியே
பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே
ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள்

உரையீர்
நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறி லீர்

வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில்
திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்
ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான
உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு
எப்பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது
உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்

உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
பிராணிகளை ரஷிக்கைக்காகப்
பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து

நன்னீர்கள் சுமந்து
ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான
ஜல ஸம்ருத்தியைத் தரித்து

நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே
ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே
ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –

இத்தால்
ஸாம்யா பன்னரைக் குறித்து
உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து
மறு மாற்றம் பெறாமையாலே

பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத
நெறி
நன்னெறி
தீதில் நன்னெறி )

ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து
சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து
ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே
பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று
பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது
நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று
விஷண்ணரானமை தோற்றுகிறது –

(மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தாபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ
உபாயம் என்றால் உழைப்பு இல்லை
கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை
இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே – )

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

————

அவதாரிகை
இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை
நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி
பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் –
தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறாளும் இறையோனும் -4-8-

பதவுரை

அரவு அணையீர்–ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும்–பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும்–மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி
(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.
(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
மாமை–மேனி நிறத்தை
சிதைக்கின்றது–அழிப்பதானது
ஈங்கு–‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும்–புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ–அவதாரமோ?
(அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்கு
உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம்–அறிகின்றிலோம்

வியாக்யானம்

அருளார் திருச் சக்கரத்தால்
ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே
பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே

அகல் விசும்பும் நிலனும்
பரந்த விசும்பும் நிலனும்

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி
ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற் புதீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்

இவள் மாமை சிதைக்கின்றதே –
இவளுக்கு இடம் கொடாமல்
இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –

இத்தால்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
ஸங்கல்ப மயமான திருவாழியாலே
விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே
நித்ய விபூதியில்
அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே
அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே
இருளார் வினை )

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார்
ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
இந்த விபூதியிலும்
அந்த விபூதியிலும்
அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ
(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )

இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை
அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும்
விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும்
அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி

அரவணையீர் -என்கையாலே
அந்த விபூதியில் உள்ளவரோடு
நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது

இவள் மாமை சிதைக்கின்றதே -என்கையாலே
அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது

இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன
ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும்
அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன,
பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,
பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.

காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய்
திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் –
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்

அருளார் திருச்சக்கரத்து
உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம்
நீர் செய்ய முடியாமல் இருந்ததோ
வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ
உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது
இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ
நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ

ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ
அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது
ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று
அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான்
ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்

பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே
அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே
அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – -ஸஹ தர்ம சாரிணி அன்றோ
ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ
லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்

இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்
உன்னை விட்டாலும்
லஷ்மணனை விட்டாலும்
உயிரை விட்டாலும்
ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்
எவர்களை –
ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு
அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்
கர்ப்ப பூதாஸ் தபோ -உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்
தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே
ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்
கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை
ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள் –

விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில்
சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும்
யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன்
அதே அர்த்தம் இங்கும்
மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன்
பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே
ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன்
ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்

இந்த ராமர் விரதம் அறிவாள்
அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம்
சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல
யாரேனும் யாகிலும் ரஷிப்பேன்
இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ

லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ
பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்
ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ
ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்

ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள்
பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள்
தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்

இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல்
அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி
ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான்
சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும்
திருச்சக்கரத்தான்
ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும்
அநாயாசேந ரஷிக்கும் சக்தன்
இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான்
தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –

உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன்
அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்

அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –
நிலனும்
லீலா விபூதியும்
அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில்
உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில்
அங்கு அதிசங்கை உண்டே
நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்
பிராக பாவத்தால் அங்கு
இங்கு ப்ரத்வம்ச பாவம்
அழகைக் காட்டி அங்கு
‘இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்

அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே
இவள் மாமை சிதைக்கின்றது
யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ
அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே
பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர்
இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே
உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே

ஸ்ரீ கீதை -10-39- ஸ்லோகத்தில் லோக்கத்துக்கு பீஜம் நான்
என்னைத் தவிர்த்து யாரும் எங்கும் இல்லையே –

உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க
உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே
இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே

உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ
நெருப்பினால் நனைக்க முடியுமோ

திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ

இனி திரௌபதி பரிபவம்
இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல
சா அஹம்
கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன்
நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன்
இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்

என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்
புருஷோத்தமன் அன்றோ ‘
உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ
சரணாகதை நான்
நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி
அருளார் திருச்சக்கரத்தால் இங்கு

சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோ

துவாரகா நிலையா –
பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே
அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ

அச்யுத –
சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்

கோவிந்தா
பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ
குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே

புண்டரீகாஷ
விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ
ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால்
கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ

மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –
மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை

தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம்
இவர்களைக் கூப்பிடவில்லையே

ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி
அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக
இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே

தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில

தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பார்த்தா இருக்க
இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார்
பண்டே உபதேசம் பெற்றாளே
ஸ்மர்தவ்ய பகவான் ஹரி -பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்
குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல்
ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -ஆழ்வார்

பிரார்த்தனா மதி சரணாகதி
உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம்
இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – திரு விருத்தம் 75-

நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்

அரவணையீர்
இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே
உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர்
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி
உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ
யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே
சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே

இவளை சிதைக்கின்றது
இவளை நோவுபட வைத்து
பகுதியாக தான் காண முடியும்
ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று
பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்

——————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
வியாக்யானம்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள
திருவாழியாலே
அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது
நமக்கு ஒரு புருஷார்த்தமோ
என்று அநாதரித்த படியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரஷ்ய வஸ்து பஹிர் பூதை
இவள் என்று நினைத்தீரோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
இப்போதும் வாய்த்த படுக்கையிலே
கண் வளரா நின்றீர்

இவள் மாமை சிதைக்கின்றதே
இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே
நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –

————-

அவதாரிகை
இப்படி அவசன்னரான இவர்
பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து
அது கூடாமையாலே
பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு
கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற
நாயகியைக் கண்டு
தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம்
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி
ஆழி என்று கூடல் வட்டம்
கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று
அந்த ஆழியை வெறுத்து

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடும்
தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற
மேனாணிப்போடும்

சீரடி என்று
சிவந்த அடி -என்றுமாம்
சீறடி -என்றும் சொல்வர்

மாலே
பெரியவனே
இவள் ஆவி அழித்த பெருமை
பெரிய நீ காணத் தகும் என்று கருத்து

அன்றியே
மாலே உனது தண்டார்-தண் தார் -என்று
மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே
உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –

உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற
குளிர்ந்த
தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு
அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு

தார் என்று
மாலை ஆகவுமாம்

பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல்
கிலேசிக்கிற

கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்

மாதின் திறத்து
கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்

அறியேன் செயற் பால் அதுவே
செய்யத் தக்கது அறிகிறிலேன்

இவளைப் பதைப்பிக்கிற நீயே
பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்
சிதைக்கின்ற தாழி என்று
தன் கையில் வியாபாரம்
ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி

ஆழியை சீறி -என்று
ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று
அனுபாதேயத்வ புத்தி பிறந்தால்
அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில்
இவ்வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது

அதாவது
ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்

மாலே -என்று
விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும்
ஞான சக்தியாதியாயும் யுள்ள
குணங்களின் பெருமை சொல்லுகிறது –

(மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள்
அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் )

உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று
இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும்
விஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –

அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல்
ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறது

மாதின் திறத்து -என்று
ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி

அறியேன் செயற் பால் அதுவே -என்று
ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு
ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும்
ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே
அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே
இது தான்
அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க
அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரவு தாழ்த்து
ஆற்றாமை மீதூர்ந்து
பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே
கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்
ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே

ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம்
ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1-
தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய்
ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய்
அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும்
இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது
அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே
ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை
கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ்வாற்றாமை

வ்யதிதாம் -ஆரண்ய -29-1-
இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை

அநிந்திதாம்
அத்தலையால் வரில் வரும் அத்தனை
அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்

வ்யபேத ஹர்ஷாம்
சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே
இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ –

——–

அவதாரிகை
இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு
அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு
ஸந்நிஹிதமான அளவிலே
ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு
அனுசந்தித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு
பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண்
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது

பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று
தன்னிடத்து வாய்ந்த பிறைப்பிள்ளை என்றுமாம்

பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று
பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்

ஓக்கலாவது –
சுற்றம்

பகல் என்று
ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்

இத்தால்
மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று
தோற்றுவித்ததாயிற்று

உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல்
எல்லை நடந்து
தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து
சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி

சோல்வான் புகுந்து
கொள்ளுவதாகப் புகுந்து

இது வோர் பனி வாடை
முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே
பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –

துழா கின்றதே
துழாகின்றது

சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
பால்வாய் -என்று தொடங்கி
மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே
அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால்
தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி
மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற
பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்
மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த
விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )

உலகளந்த என்று மேலுக்கு
அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு
போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே
ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும்
குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது
தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது

இதுவோர் பனிவாடை
இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ
இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது

துழா கின்றதே
இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று
துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்
இத்தால்
சந்த்ர உதயம்
அத்தால் வந்த பரிச்சேதம்
இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே
இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால்
நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது
பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்
இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்
தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள்
என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்

ஆர்க்கு என்ன
உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு
என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே
அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்
இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி

இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்

மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும்
கண் விழிக்கவும் பெற்றாள்
இத்தை அபஹரிக்குமதாய்

புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே
பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை
இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு
இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று
அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

———–

அவதாரிகை
இப்படி கால சந்நிதியிலும்
போக ஸந்நிதி இல்லாமையாலே
மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய
ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை
இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி
தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்

தம் தண் தராது பெயரா
தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின
இவ்வளவிலும்

ஈங்கு இவள்
இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று

இரங்கார்
பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்

அம்மனோ
என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே
பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க
இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது

நெடிய இருள் இறே என்றும்
இருள் பொறுக்க மாட்டாள் என்றும்
துக்கம் கனவிது என்றும்
இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க
இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –

இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு
மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த
கால தைர்க்யம் விஞ்சின அளவிலும்
இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர்
அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்

தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று
கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர்
இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என்
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

(கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –
காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி –
அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழ்
ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று
அதுக்கும் மேலே
இருளும் வந்து தோற்றிற்று

வியாக்யானம்
துழா
இதுக்குத் தேடிப்பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ
ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு

நெடும் சூழ் இருள் என்று
எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று
ஒரு பேரையிட்டு
தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே

ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில்
அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே

வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்
தன் தண் தராது பெயரா
வழி போவாரை யடைய
நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே

ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது
பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி

அங்கன் அன்றிக்கே
வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான
லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்
அது அங்கன் அன்றிக்கே
இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே
அழித்தார் இத்தனை
அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது
நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று
ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால்
போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை
அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு
ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து
ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல்
இருளும் ராத்திரியும் இவளை
நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்
இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று
திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும்
முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்

தம் தண் தராது பெயரா
தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும்
இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்

ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல்
அத்யா பன்னை யானவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வலுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று

இரங்கார்
இரக்கத்தைப் பானு கிறிலர்

அம்மனோ
புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது
இந்தக்கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய
கொடுமைகள் இருந்தபடி என்

ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

———

அவதாரிகை
இப்படி ஆப்தரான இவ்வாழ்வார்
பகவத் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நவையான பக்தி தசையைத்
தம்முடைய ஞான தசையாலே அநு சந்தித்து
துர்க்கதமான ஸம்ஸார மார்க்கத்தில் இந்த ப்ரேம தசையானது நடந்ததாகை
அரிது என்று நொந்த பிரகாரத்தை
புணர்ந்ததுடன் போன தலைமகளுடைய கரத்தருமை நினைந்து
நற்றாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –
நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து துழாவி -4-4-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்
இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்துபோன
சூழ்கடம்–பரந்த பாலை நிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைய வீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

வியாக்யானம்

கொடும் காற் சிலையர்
கொடிதான கோலை யுடைத்தான சிலையை யுடையவர்கள்
கோடுதல்-வளைதல்
கால் என்று சிலைக்கோடி
கோடிய காற் சிலையர் -என்றுமாம்

நிரை கோள் உழவர்
நிரை கொள்ளுகையை உழவாக யுடையவர்கள்
நிரை என்று -காலித்திரள்
உழவானது -இதுவே க்ருஷியாய் இருக்கை

கொலையில் வெய்ய கடுங்கால்
மாற்றார் எதிர்ப்பட்ட விடத்து கொலைத் தொழிலில் வெவ்வியரான கடிய காலை யுடையவர்கள்
அதாவது
சீக்ர காமிகளாய் எதிரிகளை அழியச் செய்கை

விளைஞர்
இந்த ஸுர்யாதிகளுக்கு ஈடான
பருவத்தின் இளமையை யுடையவர்கள்

துடி படுங்கவ் வைத்து
இவர்கள் பறை அறைவால் யுண்டான ஆரவாரத்தை யுடைத்து

அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணனுடைய ஸர்வ சமாஸ்ரயணீயமாய்
நிரதிசய போக்யமான திருவடிகளைக் கீர்த்த நாதி முகத்தாலே
ஆஸ்ரயித்துப் பெறப்பட்ட

தொடுங்கால் ஓசியும் இடை
தொடும் அளவில் முறியும் என்னும்படி
மெல்லிதான இடையை யுடைய

இள மான்
பருவத்தாலும்
தனிமையால் யுண்டான நோக்காலும்
முக்தமான மான் போலே இருக்கிறவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடக்கிற சூழ்ச்சியை யுடைய வழியானது

சூழ்ச்சியாவது
வெம்மையால் துயரை விளைத்தல் –

இத்தால்
இளமான் -என்று
பருவத்தையும்
ஸ்த்ரீத்வத்தையும் சொல்லுகையாலே
அபி நவையாய்
தாஸ்ய ப்ரீதி ரூபையான பக்தியை ஸூசிப்பித்த படி

தொடுங்கால் ஓசியும் இடை -என்கையாலே
பக்தி கார்யமான வைராக்யத்தின் முதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது
அன்றியே
அந்நிய ஸ்பர்சம் யுண்டாகில்
மத்யே அவிச்சின்னமாம் படி யான
பக்தியின் மேன்மை சொல்லிற்றாகவுமாம்

நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-என்கையாலே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான ஸமாதிபிர் நராணாம் ஷீண பாபாநாம்
கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்கைக்கு உடலான அருமை தோற்றுகிறது

சென்ற சூழ் கடமே –என்று
இந்த பக்தி வர்த்திக்கிறது
ஸம்ஸார காந்தார மார்க்கத்திலே என்றபடி

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய-என்று
இம் மார்க்கத்தினுடைய விரோதி பூயஸ்தையைச் சொல்லுகிறது –
இவ் விடத்து பக்திக்கு விரோதிகளாவன விஷய அர்த்திகளான இந்திரியங்கள்

கொடுங்கால் சிலையார் என்கையாலே
பாதக ஸாதனத்தினுடைய ஸாமர்த்யத்தைச் சொன்னபடி

இதில்
கால் கொடுத்தலாவது
அபிராப்த விஷய அவகாஹநம் ஆகிற வக்ர கதி

கொடுமையான போது
இந்த்ரியங்களினுடைய அநர்த்தா வஹத்வம்

நிரை கோள் உழவர் -என்று
இந்த்ரியங்களுக்குப் பிரதி நியதமாய்க் கொண்டு நிரை நிரையான
ஸப்தாதி விஷயங்களை
கிரஹிக்கையே வ்ருத்தியாய் இருக்கை

கொலையில் வெய்ய-என்கையாலே
இச் சேதனனை பகவத் விஷயத்தை விஸ்லேஷிப்பித்து நலியும் இடத்தில்
க்ரூரங்களாய் இருக்கை

கடுங்கால் என்று
சீக்ர காரிகளாய் இருக்கை

இளைஞர்-என்று
நலியும் இடத்தில் சக்தி குன்றாது இருக்கை

துடி படுங் கவ்வைத்து-என்கையாலே
பலவா திந்த்ரியக்ராவோ வித்வாம் ஸமபி கர்ஷதி -என்று
பறை அறைவாரைப் போலே உண்டான பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது

ஆக
இந்திரிய பலாக்ராந்தமான ஸம்ஸார மார்க்கத்திலே
பகவத் பக்தி தசையானது நடக்க அரிது என்னும் இடத்துக்கு
நொந்து அருளிச் செய்தார் ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாதே
ஆற்றாமை மிகுகையாலே தனி வழியே புறப்பட்டு குரூரமான காட்டிலே
துஷ்ட ஸத்வங்களும் –
துர்த்வனிகளும்
துர்க்கதியுமான
தேசத்திலே போனாளாய்
அவளைத் திருத்தாயார் படுக்கையிலே காணாமையாலே
எல்லாப் படியாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே போன இவள் என் செய்கிறாளோ என்று
இவள் போன வழியைப் பார்த்து சோகிக்கிறாள்
திருக்கோளூரிலே புக்க பெண் பிள்ளையுடைய திருத்தாயாரைப் போலே
ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே அவளிலும் இவளுக்கு சோகம் அதிசயித்து இருக்கும் –
அன்றிக்கே
புணர்ந்ததுடன் போக்கிலே இவளுக்கு இரங்குகிறாள் ஆகவுமாம்
இவளுடைய ஸுகுமார்யத்தையும்
இவள் தான் ஸ்லாக்யையாய் இருக்கிற பொடியையும்
வழியில் அருமையையும்
அது தனக்கு ஓர் எல்லை இன்றிக்கே இருக்கிற பொடியையும் சொல்லிக் கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
கொடும் காற் சிலையர்
அவ்வழி தான் இருக்கிற படியைச் சொல்லுகிறது

கொடும் காற் சிலையர்
கொடிதான காலை யுடைத்தான சிலையை யுடையராய் இருப்பர்கள்
எப்போதும் ஓக்கக் கால் வளைந்த படியே இருந்துள்ள வில்லை யுடையராய் இருப்பர்கள்
பர ஹிம்ஸா த்வரையாலே போஜன சமயத்தோடு நித்ரா சமயத்தோடு வாசியற
எப்போதும் ஓக்க நாண் ஏறிட்ட படியேயாய் இருக்குமாயிற்று வில்லு

இப்படி ஏறிட்ட நாணி இழிய விடாதே இருந்துள்ள வில்லைக் கொண்டு இவர்கள்
கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்
நிரை கோள் உழவர்
நிரை கோள் உண்டு -கோ க்ரஹணம்
அதுவே யாத்ரையாய் இருப்பர்கள்
ரக்ஷகனாய் இருக்குமவன் கோ ப்ராஹ்மண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-25-
ஹிதனாய் இருக்குமா போலே
இவர்கள் இவற்றின் ஹிம்சையே தங்களுக்கு வெள்ளாண்மை யாய் இருப்பர்கள்

கொடுங்கால்
நான் ஏறிடுகையாலே வளைந்து இருக்கை

சிலையர்
அது நிரூபகமாய் இறுக்கியபடி
அவன் கையும் திருவாழியுமாய் இருக்கிறாப் போலே இறே
எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கும் இறே -பெரிய திரு -87-
அவன் பர ரக்ஷகனாய் இறே இருப்பது
நா ஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா -அயோத்யா -60-20-என்னுமா போலே
பயம் கெட்டு இருக்கிறது அன்று இறே இங்கு

என்னும்படி நாயகனும் தொடக் கூசும்படியான இடையாள்
மிகவும் இளமை யுள்ளவள்
இளமான் போல் காதராஷி யானவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடந்து போன பெரும் காடு இவ்வகையாக ஆயிற்று
அதிலே இப்படி போனாள் என்று சோகிக்கிறாள் –

——–

அவதாரிகை
இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர்
ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்
ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து
நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே
நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை
தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட –
தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் –
தலைவனைப் பிரிந்த தலைவி போலி
கண்டு மகிழ்தல் -சொன்னால் விரோதம் இது -3-9-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இந்த பூ லோகமும் ஊர்த்வ லோகமும் ஆச்சர்யப்பட்டு அசையும்படியாக
குடமாடி -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்தாடியும்
வுலகளந்த-லோகங்களை த்ரிவிக்ரம அவதாரத்தில் ஆக்ரமித்தும்
நடமாடிய பிரான் உரு ஒத்தன -சஞ்சரித்த சர்வேஸ்வரனுடைய திரு மேனியோடே சாம்யம் உடைத்தாய் இருக்கின்றன
இது -இதற்குக் காரணம்
கடமாயினகள் கழித்து -தேவ பித்ரு ருஷி ருணங்கள் நிறைவேற்றி
தன் கால் வன்மையால் -தனது காலின் உரத்தினால்
பல நாள் தடமாயின -அநேக காலம் தடாகம் என்ற பேர் பெற்றவைகளில்
புக்கு நீர் நிலை நின்ற தவம் கொல்-பிரவேசித்து ஜலத்தில் சிரகாலம் வாஸம் பண்ணின தபஸ்ஸாய் இருக்கலாம்

வியாக்யானம்

கடமாயினகள் கழித்து
தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து

தன் கால் வன்மையால்
தான் நின்ற அடி யுரத்தாலே

பல நாள்
அநந்த காலம்
பலம் பெறும் அளவும் என்றபடி

தடமாயின புக்கு
அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து

நீர் நிலை நின்ற
நீரிலே நித்ய வாஸம் பண்ணின

தவமிது கொல்
இது தபஸ்ஸாகக் கூடும் இறே

குடமாடி
பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம்
காணும்படி குடக் கூத்தாடி

யிம் மண்ணும் விண்ணும் குலுங்க
இந்த பூமியோடு
தேவ லோகத்தோடு
வாசி யற
தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக

இது கீழோடே சேரவுமாம்

வுலகளந்த நடமாடிய
அளக்கிற இடத்திலே
அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை

பெருமான்
அந்நிய சேஷத்வத்தையும்
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும்
கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய

பெருமான் உரு
ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே
பெருமை சொல்லுவதாக நிறம்

ஒத்தன நீலங்களே
நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன

ஆக
இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே
நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று

(திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள்
தவம் க்ஷேத்ர வாசமே )

இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –
தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே

இத்தால்
யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே
அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே
சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை

அதில் கடமாயின கழித்து -என்கையாலே
கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம் -என்கிறபடியே
இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது

தன் கால் வன்மையால் -என்கையாலே
வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி

பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே
சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே
வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி
(நீராடப் போதுவீர் -)

நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை

தவமிது கொல் -என்கையாலே
அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி
அவிசேஷிதமாய் இருக்கை

குடமாடி இத்யாதியாலே
கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே
வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது

உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே
ஸாம்யா பன்னரானவர்கள்
புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே
கீழ்ச் சொல்லிற்று

இப்பாட்டில்
பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார்
அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே
ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்
இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்

நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –

ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும்
முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு

குருகைக் காவல் அப்பனை
ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க
எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று
இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு
ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே
இச்சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்

அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன
நான் உனக்கு அது சொல்லுகிறேன்
நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்

ஆவது என் என்னில்
ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன்
அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே
விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி

இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்
சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று
இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன
இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –

குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி
நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்

நீலங்களே
கரு நெய்தல் பூக்கள்

——–

அவதாரிகை
இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்
இதுக்கு அடியான
பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து
அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது
ஏழையர் ஆவி -யில் போலே
உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் –
தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-

பதவுரை

நீலம்–நீலமணி மயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.

வியாக்யானம்
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல
நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே

பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி
அழகு விஞ்சி

எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்
கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்

இத்தால்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல்
முந்நீர் ஆனால் போலே
அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு
தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி

விசும்புக்கும் பிரான்
வெளி நாடான நித்ய விபூதிக்கும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே
தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்
முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே
நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே
தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்

கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான
திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்

எம்பிரான்
இக் கண் அழகையும்
வடிவு அழகையும்
காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய

கண்ணின் கோலங்களே –
கண்களின் அழகுகள் ஆனவை
அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்
தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள்
நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து
எமக்கு எல்லா விடத்தவும்
என்று அந்வயம்

இப்பாட்டு
கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத்
தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே
இவ்வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே
ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு
இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது
என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து
அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய்
ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்
அத்தாலே அணைக்கக் கணிசித்துக்
கைக்கு எட்டாமையாலே நோவு பாடவும்
அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய்
நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

நீல இத்யாதி
ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8-
பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது
அதன் மேலே இறே கண் அழகு
விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது
கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்
ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8-
இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை
நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்
நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்
ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8-
அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை
வடிவு அழகும்
ஆனு கூல்யமும்
போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை
ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே

ஸம்பன்ன
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை

ஸம்பன்ன ப்ரஸூத
இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை

பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்
இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன
ஓன்று உண்டு
ஜனகாத்மஜே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே
தேவரீரும் உண்டு

எமக்கு எல்லா விடத்தவும்
இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே
நமக்கே இறே பாதகம் ஆகிறது
கண்டு அனுபவிக்க இழிந்தால்
ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது

முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –

எம் பிரான்
இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்

ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று
அந்வயம்
திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

———-

அவதாரிகை
இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர்
நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி
ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று
ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாத்திரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள்
உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று
பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது
அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க

புய்த்தால்-வாங்குதல்
போக என்றபடி

இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது
மேனாணிப்பாலும்
புகர் யுடைமையாலும்

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன
திரளாகப் பரந்த
நீல நிறத்தை யுடைத்தான
ராத்திரிகள் ஆகிற
ஆனை கள் எல்லாம் எதிர்பட்டன

கங்குழைக் களிறு என்றது
இருட்சியாலும்
திரட்சியாலும்

நேரிழையீர்
தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே
மெல்லிய ஆபரணம் என்றுமாம்

ஞால பொன் மாதின் மணாளன்
ஞால மாதினுக்கும்
பொன் மாதினுக்கும்
மணாளன்

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து
திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி
தகுதியாகச் சூட்டி என்றுமாம்

என்னைமார்
என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி

எம்மை நோக்குவது என்று கொலோ
எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று
வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய -என்கையாலே
ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி
(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது

ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி
ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே
அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது

என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே
பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது

என்று கொலோ -என்கையாலே
தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று

(விருப்பமே நாம் செய்ய வேண்டியது
அடைவிப்பவன் அவனே
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

இவ்விடத்தில்
நேரிழையீர் என்று
ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே
பகலும் கழிந்து ராத்திரியுமாய்
அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு
நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்

இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே
தோழி வார்த்தை யாதல்
இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக
வீர பத்நீ இறே
அவன் இருப்பில் புக்கிருந்து
த்வம் நீச -ஸூந்தர -21-16-என்னுமவள்
ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே
வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்
பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்
பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று
ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே
ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே
குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான
கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன
தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு
இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –

நிறைந்தன நேரிழையீர்
இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க
நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று
அதாவது என் எண்ணில்
மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே

இழை -என்று
ஆபரணமாய்
விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்

ஞால பொன் மாதின் மணாளன்
குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று
இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன்
ஒரு ரக்ஷகனும் வேணும் இறே
ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும்
அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு
ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்

மணாளன்
இக்குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -21-30–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 17, 2022

அவதாரிகை

இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக
(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே
(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )
நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-
ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது

(ஏழு ரிஷபங்கள் அடக்கி
நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்
துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும் )

என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க
ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )
மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை -ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் )
(ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார் –

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி -எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
முதல் பாசுரம் இதுவும் இறுதி பாசுரமும் தாமான தன்மை —
அகத்துறை சொல்ல வேண்டாம் என்றும் சொல்வர் சிலர் –

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்ய ஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள் தோறும் கடைந்து)
சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையை யுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற மகளான
நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்
(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )

மாலைக்கு நன்மை யாவது
அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை
அனுரூபமாய்
புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )

சூட்டு -திருமுடி சாத்தாய்
மாலை -தோளுக்கு விடுவதாகவும்
(மூன்று முடிக்கு உரிய அரசு
பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே
வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்
அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்

தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது
த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்
(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் (

ஏந்தி
பாரதந்தர்யத்தால்
யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )

விண்ணோர்கள்
பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்

நன்னீர் ஆட்டி
அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )

அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய்
சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே
(வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு -இத்யாதி
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )

அங்கு
அந்த நித்ய விபூதியில்

விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு
அங்கே சென்ற பின்பு
போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )

ஓர் மாயையினால்
அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான
தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே
மாயா வாயுனம் ஞானம்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து

இமிலேற்று வன் கூன் கூட்டிடை ஆடின கூத்து
ககுத்துக்களை யுடைய எருதுகளின்
வலித்தாய்
வளைந்த கொம்புகளின் நடுவே
வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –
பிரபலரான கோப குலத்தில் பிறந்த
நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது
(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே
தயிர் பால் சம்சாரி
வெண்ணெய் முமுஷு
நெய் முக்தன் )
இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து
முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி
ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து –
ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக

உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –
அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி
நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை
பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்

சம்சாரம் கழித்து –
உண்டியே உடையே உகந்து திரியாமல்
அவஸ்தையைக் கழித்து
ஆகதோ பரமபதம் புகப் பெறாமல்
ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க
இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் –
எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே

அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து
கோட்டிடை இத்யாதி-
ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்
அவஸ்தா சப்தகம் போக்கி
கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள்
பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்

அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே
நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்

பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்
ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை -அடலாயர் கொம்பு
அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் -கொம்புக்கு இரண்டும் உண்டே
இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்
என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று

————–

அவதாரிகை

இப்படி ஈஸ்வரனுக்கு அபிமத விஷயராய் இருக்கிற இவர் பக்கலிலே
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த வித்வத் அபிமானி ஜனங்களைக் குறித்து
உங்கள் படிகள் பரஸ்பர அசங்கதங்களாய் இருந்தன வென்று
பார்ஸ்வத்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
மதி யுடன்படுவதற்குக் களிறு வினவி வந்து
குறையுற்ற தலைமகனை
தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல்குரவும் செல்வமும் -6-3-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்)
தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன–கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது
உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்த மில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமை மிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான்புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைத்தது?

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை
கைக்குப் பரிகரம் ஆயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை
நாட்டுக்கு வார்த்தை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே யானை போந்ததோ
என்று வினவா நிற்பது

ஐயர் ,
ஐயர் -இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது

புள் ளூரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன
பெரிய திருவடியை மேற்கொண்டு
எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற
ஈஸ்வரனுடைய விபூதியிலே
எக் காலத்திலும் நடை யாடாததான

தம்மிற் கூடாதன
தன்னில் தான் சேர்த்தி அற்றன

வம்பார் வினாச் சொல்லவோ
நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ

வம்பார் வினா -என்று
புதுமையால் மிக்க வினா என்னலுமாம்

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களைப் பெரிய புனத்திலே உடையவர்கள் வைத்தது –

(இந்திரியங்கள் -தந்தியான யானை
ஞானம் என்ற அம்பு கொண்டு அடக்கப் பார்த்தோம் –
கையிலே இருக்கும் தழையை வில்லாகக் கொண்டு அடக்கவோ )

இத்தால்
கொம்பார் தழை கை -என்கையாலே
விஷய ப்ரவாஹங்கள்
கை விட்டதில்லை -என்றபடி

சிறு நாண் எறிவிலம் -என்கையாலே
ப்ரணவ தநுர் விஷ்பாரித ஸ்வர
மாத்ரமும் இல்லை என்றபடி –

(பிரணவம் தனுஷ் -ப்ரஹ்மம் லஷ்யம் -ஞானம் கொண்டு விட வேண்டுமே
ஆத்மா அம்பு -மூன்று மாத்திரை உள் அட வாங்கி விட வேண்டுமே
மூன்றரை மாத்திரை ஸ்வரமும் இல்லையே
ஸ்வரூப ஞானத்துக்கு பிரணவ தனுஸ் வேணுமே )

வேட்டை கொண்டாடு-என்கையாலே
ஸம்ஸார அந்தகாரத்திலே -பாலைவனத்தில் –
துஷ்ட ஸத்வமான
ராக த்வேஷ
லோப மோஹாதிகளுடைய
நிரஸனத்திலே ஒருப்பட்டோம் நாங்கள் என்கிற கொண்டாட்டமே உள்ளது என்றபடி

அம்பார் களிறு வினவுவது -என்கையாலே
ஞான சர வித்தமாய் இருக்கச் செய்தே
இந்த்ரிய தந்தியானது விஷய அடாவீ வித்ருதமாயிற்று
என்று தத் அநுயானம் பண்ணிற்று என்கிறது

(தத் அநுயானம் பண்ணிற்று -இந்திரியங்கள் போன வழியிலே போகிறோமே
சதுர் தந்து -நான்கு கொம்பு உள்ள மிருகங்கள் -ராமாயணம் சொல்லுமே
சம்சாரம் மரம் தலை கீழ் -படைக்கும் பிரம்மா மேல் இருப்பதால்
இத்தை வெட்டிச் சாய்க்க
அஸங்கம்-பற்றின்மை வைத்தே வெட்ட வேண்டும் -திடமான வைராக்யம் வேணும் )

ஐயர் ,-என்று
ஞாத்ருத்வ உத்கர்ஷத்தாலே வந்த கௌரவ்யதை இருந்தபடி என்கிறது

புள் ளூரும் கள்வர் –
வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய்
(வேதம் நான்காய் -வேதம் தந்தவனும்
வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே )
யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-
முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன –
ஸ்வாதந்த்ர கடினையான பூமியிலே ஒரு காலத்திலும் நடையாடாதே
பரஸ்பர சங்கதி அற்று ப்ரயோஜன பர்யவசாயி அன்றியிலே

வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
அபி நவமான ப்ரஸ்னத்துக்கு பிரதி வசனம் பண்ணுகைக்காகவோ
ஈஸ்வரன் தனக்கு போக சக்திக்கு உறுப்பாகத் திருத்தி நோக்குகின்ற
இத் தேசத்திலே
(புனம் காத்து -நம்மைத் திருத்தி – இசைவித்து நின் கண் வேட்க்கை எழுவிக்க )
தனக்கு நிர்தேச காரிகளாய் இருக்கிற எங்களை நியமித்து வைத்தது என்று
ஞாத்ருத்வ ஆபாஸத்தாலே துர் அபிமானிகளான புருஷர்களைத் திருத்துக்கைக்காக
பார்ஸ்வத்தரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன ஹித வசனத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –
அவதாரிகை
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே ஈடு பட்டு இருக்கிற படியைக் கண்ட பாகவதர்கள்
தடுமாறுகிற படியைச் சொல்லுகிறது
கலந்து பிரிந்த தலைமகள் தோழிமாருடனே புனம் நோக்கி இருந்த இடத்தே
கையிலே தழையைக் கொண்டு சென்று
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்க அவனை நிஷேதிப்பாரைப் போலே
இடம் கொடுத்து வார்த்தை சொல்லுகிறாள் –

வியாக்யானம்
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் சுண்ணாம்பு என்பாரைப் போலே
தழையை முறித்துப் பிடித்துக் கொண்டு இவர்கள் இருந்த புனத்தே சென்று
இங்கனே ஓர் ஆனை அம்போடே போந்ததோ என்று கேட்டான்
கொம்பார் தழை கை
கையிலே தழையைக் கொண்டு சென்றான் தன் ஆற்றாமையை அறிவிக்கைக்காக –
நீர் ஒன்றை நினைத்து இருந்தீர்
அது விபரீத பலத்தைப் பலியா நின்றது
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே உங்களைப் பிரிந்து நான் உறாவினேன் -என்கைக்காகக் கொடு நின்றான் இவன் –
அது உன் கையிலே ஸ்பர்சத்தாலே தளிரும் முறியுமாய் சத சாகமாகா நின்றது
பாவியேன் உம்முடைய ஆற்றாமை காட்டுகைக்காகக் கொடு வந்தீராகில் கொம்பிலே காட்ட மாட்டு கிறீலிரே –
பிறர் இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் உள்ளது
உம்முடைய கைப்பட்டாருக்கு வாட்டம் யுண்டோ
கொம்பாய் உம்முடைய கையிலே இருந்தோம் அல்லோம்
கொடியாய் உம்முடைய தோளில் அணைந்தோம் அல்லோம்
நாங்கள் என்ன இருப்பு இருக்கிறோம் தான் –

வேட்டை கொண்டாடு
வேட்டைக்குப் போந்தானாக வாயிற்றுச் சொல்லுகிறது
வில்லோ என்றவாறே தழையைக் காட்டா நின்றான்
கையைப் பார்த்தவாறே நாண் தோய்ந்த தழும்பும் கூட இன்றியே இரா நின்றது

சிறு நாண் எறிவிலம்
இப்போது கையிலே வில் இல்லாமையே அன்றிக்கே முன்பு விற் பிடித்த தழும்பு கூடக் கண்டிலோமீ
இவர்கள் தான் வீர பத்னிகள் யாகையாலே கையைக் கண்டபோதே அறிவார்கள் ஆயிற்று
அன்றியே
சிறு நாண் எய்யப்படுவதான வில்லை யுடையீர் அல்லீர் என்று

ஒரு கதிர் போகில் ஜகத் உப ஸம்ஹாரமாம் படி யன்றோ எங்கள் நிலை

இவ்வான் புனம்
அவனுடைய உபய விபூதியோ பாதியும் பரப்புப் போராதோ எங்கள் புனம்
எங்களுக்குக் கிட்டாருக்குத் தான் உத்தரம் சொல்லுகைக்கு அவசரம் யுண்டோ
எங்கள் கார்யமே போரும் காணும் என்கிறார்கள்

இத்தால்
ஸம்ஸார ஜன்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது
பகவத் பிரவணர் படியைக் காண்கையே இறே –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி கண்ணனுக்கு அபிமத விஷயமாய் இருக்கிற இவரில்
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த ஆபாஸ வித்வஜ் ஜனங்களைக் குறித்து
உங்கள் படி பரஸ்பர அசங்க தங்களாய் இருந்தன என்று ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
உடன் படுத்தக்
களிறு வினவ வந்து குறையுற்ற தலைவனைத் தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வியாக்யானம்
ஒரு வியாஜத்தால் அபிமத விஷயத்தைக் கிட்டுவாரைப் போலே தளிருள்ள தழையை முறித்துப் பிடித்து
இங்கு ஓர் ஆனை போந்ததோ என்று வினவிக் கொண்டு நின்றான்
அவனைப் பரிஹஸித்துக் கொண்டு சொல்லுகிறாள் –

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரமாயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே சிறு நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே ஓர் யானை வந்ததோ
என்று வினவப் பாரித்தது

ஐயர்
இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இரா நின்றது

புள்ளூரும் கள்வர் தம் பாரகத்து என்றும் ஆடாதனர்
புள்ளூர்ந்து வஞ்சித்துத் திரிகிற ஈசுவரனுடைய விபூதியில் நடையாடுமது அல்ல

தம்மில் கூடாதன
தம்மில் தான் சேர்ந்தன அல்ல

வம்பார் வினாச் சொல்லவோ
ஆரோ கேட்ட உடனே நிஷ் பிரயோஜனமாக மறு மாற்றம் சொல்லவோ

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களை இந்தப் பெரிய புனத்திலே வைத்தது
நமக்குள்ள சேஷிகள் –

————-

அவதாரிகை
இப்படி ஹித வசனம் கேட்டுத் திருந்தின ஞாதாக்கள்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சம் துவக்குண்டு சொல்லுகிற பாசுரத்தை
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைமகன் குறைவற உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே -தலைவன் குறை யுற உரைத்தல் –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப்புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப் புனத்தினருகிலே வழிச்
செல்லுகிற பாவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியை யுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் காடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனமோ
உங்கள் வேலிக்குள்ளே அகப்பட்டுத் திருத்துண்டு
விளைந்து கிடக்கிற புனமோ

புனத் தயலே வழி போகும்
அப்புனத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
அகப்பட்டால் தப்ப மாட்டாத பாபத்தைப் பண்ணின என்னுடைய நெஞ்சமோ

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நீளமான பிறவி அழகை யுடைய
உங்கள் காவலுக்கு விஷயம் சொல்ல வேணும்
புனம் விட்டு அகலாதவோ பாதி
என் நெஞ்சம் விட்டு அகலுகிறிலீர் என்று கருத்து

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை
சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

(கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –73-)

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக விபூதியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய்,
திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீராய் இருக்கை

இவையோ நும் இயல்வுகளே
பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று
தன் குறையற யுரைத்தானாயிற்று

இத்தால்
புனமோ என்று
உம்முடைய அநந்ய சாதனத்வாதி மர்யாதைக்கு உட்பட்டு போக
உன்முகமாம் படி திருத்துண்ட இவ்விபூதி ப்ரதேசமோ என்றபடி

புனத்தயலே என்று தொடங்கி
இதனுடைய பரிசர வர்த்தியான சாதன சரணியாலே நடக்கும்
எங்கள் நெஞ்சோ என்றபடி –

(மனசால் தியானித்து -உபாயாந்தரங்கள் ஆகிய வழியிலே
புனம் -சிந்தை அற்று -நெஞ்சு -சிந்தனை அன்றோ
அஜடமாய் இருந்தால் தானே கார்யகரம் ஆகும் )

இவ்விடத்தில் அருவினை -என்றது
விடமாட்டாத பாவ பந்தத்தை

மகளிர் என்று தொடங்கி
பாரதந்த்ர ஏக நிரூ பணீயமான ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடைய
உங்களுக்கு நியாம்யம் ஏது என்று அருளிச் செய்ய வேணும் என்றபடி

புண்டரீகம் இத்யாதி
ஸ்வாமித்வ
வாத்ஸல்ய
ஸூ சகமான கண் அழகை யுடையவனாய்
(செவ்வரியோடும் அந்த நீண்ட பெரியவாய கண்கள் இவற்றைக்காட்டுமே )
உத்துங்க லளிதனான கிருஷ்ணனுடைய அப்ராக்ருத பரம வ்யோம வாசிகளான
ஸாத்ய தேவர்களுடைய சங்கத்தோடே சாத்ருஸ்யம் சொல்லலாம்படி
விண்ணுளாரிலும் சீரியராய் வைத்து
மார்க்க அந்தர காமிகளையும் வர வலித்துக் கொள்ளும்படியான
வியாபார வை லக்ஷண்யம் இருந்தபடி என் என்று
திருந்தின விலக்ஷணர் பண்ணின நிந்தா ஸ்துதியை அருளிச் செய்தாராயிற்று –

(நிந்தா ஸ்துதி -நேராக ஸ்தோத்ரம் பண்ணவில்லையே –
கிளைவித் தலைமகன் ஆழ்வாரைப் புகழ்ந்த படி )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இவனை நோக்கி இவர்கள் சில வக்ர யுக்திகளைச் சொல்ல
இவன் தானும் இவர்களைச் சில வக்ர உக்திகளைச் சொன்னான்
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான் புனத்தே -என்றார்கள்
அழகிது -இது சொல்ல ஒண்ணாதாகில் நீங்கள் பூனம் நோக்கி இருக்கிறி கோளோ
வழி போவார் மனம் நோக்கி இருக்கிறி கோளோ -என்கிறான் –

வியாக்யானம்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-என்னக் கடவது இறே இவர்களை

இவையோ நும் இயல்வுகளே
நான் உங்களை இங்கன் அன்று நினைத்து இருந்த படி
நாநா பவநம் பெற்று அநேக சரீர பரிக்ரஹத்தைப் பண்ணி அனுபவிக்கக் கோலி வர
உள்ள நெஞ்சையும் கூடக் கைக்கொண்டு வாய் திறவாதே இருப்பதே
அழகிதாக போதயந்த பரஸ்பரம் -கீதை -10-9- பண்ண வந்தேன்

இதுக்கு ஸ்வாபதேசம்
ஆழ்வார் பகவத் அலாபத்தாலே வந்த ஆற்றாமையுடனே
நல்லார் நவில் குருகூர் நகரான் –திரு விருத்தம் -100- என்கிற படியே
ஸத்வ நிஷ்டர்கள் அடங்கலும் திரண்டு படுகாடு கிடைக்கும் படி இருக்கிற இருப்பைக் கண்ட
அவர்களுடைய சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமாகிற படியைச் சொல்கிறது –

தென் ஆனாய்
நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்
பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்
வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததுக்கு

நம்பிள்ளை ஈட்டில்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்
மச்சிலே
பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க
ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
சீலாதி குணம் அளவு இல்லையே
குண வித்தர் படி

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்டியுள்ள ஹித வசனத்தைக் கேட்டுத் திருத்தப்பட்ட பரம ஏகாந்தி பண்ணும் நிந்தா ஸ்துதியைப்
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைவன் குறை யுரைத்த பாசுரத்தாலே
காட்டுகிறார் இதில்

வியாக்யானம்
புனமோ
இது உங்கள் வேலிக்குள் அகப்பட்ட புனமோ என்பது ஹர்ஷ யுக்தி இங்கு

புனத் தயலே வழி போகும்
உங்கள் புனத்திலே புகுந்தோம் அல்லோமே
புணத்துக்கு அருகே அல்லது வழி இல்லை இறே நமக்கு
புணத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
ஈஷத் அநு ரக்தரிலும் அநு ரக்திக்க்கும் படியான பாபத்தைப் பண்ணின என் மனம் தான்

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நிலமான பிறவியையுடைய
உங்கள் காவலுக்கு உட்பட்ட புனம் தானோ சொல்லுங்கோள்

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்தினுடைய அழகிய ஸ்ரீ யை யுடைத்தான வனத்தோடே ஒரு போலியே சொல்லும்படியான
கண்களை யுடைய

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக பூமியான நாட்டிலே
நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,
நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீர் களாய் இருக்கிறீகோளே

இவையோ நும் இயல்வுகளே
ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய்
ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே
உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த
ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்

புனம் -இவர்கள் இருக்கும் தேசம்
யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று –

———-

அவதாரிகை
இப்படி பாகவதர் ஈடுபடும்படியான இவருடைய வை லக்ஷண்யம்
பகவத் ப்ராவண்ய அதிசயம் ஆகையால்
அந்த ப்ராவண்ய அனுரூபமாக பிராப்தி சித்தி யாகையாலே
தமக்குப் பிறந்த ஸைதில்யத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரத்தைத்
தலைமகன் பிரிவு ஆற்றாளாய் தலைவி ஈடுபாடு கண்ட தோழி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(நாட்டைத் திருத்தவும்
நச்சுப் பொய்கை யாகாமைக்கும்
ஆர்த்தி அதிகார பூர்த்திக்காகவே ஆழ்வாரை இங்கே வைத்து இருந்தார் )

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-

பதவுரை

இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல்மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்ததன மலையினால்
இனம் நிரைகாத்த–பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் = (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்
ஸ்வா பாவிகமாய் பிறர் அறியாத படியான காதல் நோயைக் கொண்டு
ஆர்த்தி அதிசயத்தாலே யாதாயாதம் பண்ணா நிற்பனவாய்
(யாதாயாதம் பண்ணா நிற்பனவாய் -உலாவி-கண்கள் உலவுவதாக இங்கு –
ஆழ்வார் உலவுவதாக மேலே சொல்வார் )

ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,
ஒரோ சிறாங்கை போலே பெருத்து நீண்ட கயலானது நிரம்பின கயத்திலே பாயுமா போலே
கண்ணீர் வெள்ளத்திலே அலமருகிற கண்களோடும்

கண்கள் தன்னோடும் என்றும் சொல்வர்

குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி
கண்டதொரு மலையாலே
பெரு மழையில் ஈடுபடாமல்
கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய

கள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு
மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட –

என் னான்கொல் எம் கோல வளைக்கே
கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

கோல் வளை -என்று
மழுக்கான வளை என்றபடி
(அழகிய வளை என்றும் வளைந்த வளை என்றும் )

என்னாம் கொல் என்று
கண் கலக்கமும்
நெஞ்சு அழிவுமான
அளவன்றியிலே இனி ஏதாய் முடியுமோ என்று
வளைக்கும் அஞ்சி உரைத்தாள் யாயிற்று

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் எம் கோல் வளை -என்று
அந்வயமாகவுமாம்
(உலாவும் இங்கு ஆழ்வாருக்கு )

இத்தால்
ஸ்வாபாவிக ஆகாரமாய் –
ஸ்வ ஸம் வேத்யமான பக்தி யோகத்தை யுடைத்தாய்க் கொண்டு –
ஒரு நிலை நில்லாமல் வியாபரிப்பதாய்-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி தர்சநீய ஸம் ஸ்தானத்தை உடைத்தாய்
ஆர்த்தி ஜெனிதமான அஸ்ரு வெள்ளத்திலே அலமருகிற பாஹ்ய கரணத்தோடும்

ஆர்த்த விஷயத்தில் யரும் தொழில் செய்து நோக்க வல்லனாய்
த்வராயை நம -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-57-என்னும்படி
அதி த்வரித காமியானவனுடைய
அதிசயித போக்யமான மாலை அழகை அனுபவிக்கையிலே
அபி நிவிஷ்டமான அந்தக் கரணத்தோடும்

ஈடுபடுகிற இவர் கையிலே
நமக்குத் தஞ்சமான
(ஆழ்வார் இடம் உள்ள பாரதந்தர்யமே நமக்குத் தஞ்சம் )
பாரதந்தர்ய லக்ஷணம் பிரியப்படுகிறதோ என்று நொந்த
ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை அருளிச் செய்தார் யாயிற்று

(சீதாபிராட்டி இளைய பெருமாள் இடம் -என்னை நான் அழித்துக் கொள்ள முடியாது
என்று பாரதந்தர்யம் காட்டி அருளினாள் அன்றோ )

இங்கும் வஞ்ச நோய் கொண்டு உலாவும் என்று ஆழ்வாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
வியாக்யானம்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு

கண்டதோர் மாலையாலே மஹா மேக வர்ஷத்திலே அகப்படுவனவான கோ ஸமூஹங்களைக் காத்தவனுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனுமானவனுடைய
மது ஸ்யந்தியான திருத்துழாயின் கொய்தல் வாய்ந்த மலர் மேல் அபி நிவிஷ்டமான மனத்தோடும்
நோய் கொண்டு உலாவும் என்று அந்வயம்

என் னான்கொல் எம் கோல வளைக்கே –
அழகிய கையும் வளையுமான
என் மக்களுக்கு ஏதாய் முடியுமோ –

—————–

இப்படி ஸூஹ்ருத்துக்களும் ஈடுபடும்படி ஈஸ்வரனுடைய போக்யதையிலே ஈடுபட்டவர்
அந்த போக்யதையினுடைய அதி ப்ரவ்ருத்தியை
அவன் உகந்த திருத்துழாயிலே ஈடுபட்ட தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
எங்கள் கையிலே
கோல் வளை படியாக

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன்
லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
பிரபலரான லோக பாலாதி தேவர்களுக்கும் நிர்வாஹகனான ப்ரஹ்மாவுக்கும்
அசாதாரண ஸ்வாமி யானவன்

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும்
நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இந்த மேன்மையாலே நம்மை அடிமை கொண்ட ஸர்வேஸ்வரன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7- என்கிறபடியே
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைத்தான திருத்துழாயானது

என் செய்யாது இனி நால் நிலத்தே –
குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று நாலு வகைப்பட்ட பூமியிலே
இனி எது செய்யாது என்றதாயிற்று
(பாலை -ஐந்தாவது -மக்கள் வாழ மாட்டார்கள் அன்றோ )

எம் கோல் வளை -என்று
தலைமகளைச் சொல்லிற்று ஆயிற்று

தலைமகள் ஈடுபாட்டுக்கு
தோழி ஆற்றாது உரைத்தலாகவுமாம்

இத்தால்
எம் கோல் வளை இத்யாதி
நம் கையிலே மினுங்கித் தோற்றுகிற பாரதந்தர்ய லக்ஷணம் அடியாக
உபய விபூதியையும் நிர்வஹிக்கிற
பகவத் சங்கல்பத்தை அநு விதானம் பண்ணி
ஆறி இருக்க ஒட்டாதபடி த்வரையை விளைக்கையாலே
பகவத் ஆஜ்ஜா பங்கத்தைப் பண்ணுவதாய் இரா நின்றது

நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்
அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய
அதி பிரவிருத்தி யானது
இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று

(பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான-
ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி -புருஷ -ஸ்தூல ரூப -காலம் -இப்படி நான்கும் –
அந்திம ஷட்கம் ஸங்க்ரஹ ஸ்லோகம்-இப்பத பிரயோகங்கள் உண்டே
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.)

அன்றியே
எம் கோல் வளை -என்று
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஆழ்வாருடைய ஸ்வரூபத்தை உத்தேசித்து பார்ஸ்வத்சரான
ஸூஹ்ருத்துக்கள் சொன்ன வார்த்தை யாகவுமாம்

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஸர்வேஸ்வரன் அபலையானவள் நிமித்தமாகத் தன்னுடைய ஆஜ்ஜையை நெகிழப் பண்ணா நின்றான்
அவன் நினைவு அறிந்து கார்யம் செய்யும் திருத்துழாய் எத்தைச் செய்யாது என்னுதல்
அன்றிக்கே
உபக்ரமத்தில் அவனுடைய ஆஜ்ஜையையும் கூட அழிக்கிற இது
இனி எல்லாம் செய்தது அன்றோ என்று
இத் திரு துழாய் தன்னையே சொல்லிற்றாதால்
திருத் தாயார் வார்த்தை யாகவுமாம்

வியாக்யானம்
எங்கோல் வளை முதலா
எனக்கு எல்லா வழியாலும் உஜ்ஜீவன ஹேதுவான இவள் நிமித்தமாக
பகவத் ஸ்பர்சம்
க்லேசமாகப் புக்கது
இவளைத் தொடங்கிக் கிடீர்

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-மூன்றாம் திரு அந்தாதி -27-என்னக் கடவது இறே

அவஸ்யம் அநு போக்த்வயம் -என்கிறபடியே
அனுபவ விநாஸ்யமான பாபத்தைப் பண்ணின
பகவத் ப்ரத்யாஸன்னரில் அப் பாப பலம் அனுபவித்தார் யார்

அவன் தானும்
ந மே பக்த ப்ரணஸ்யதி-ஸ்ரீ கீதை -9-31-என்றான் இறே

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –
இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –
என்னையே நினைந்து பிரதி பந்தகங்கள் போக்கப் பெற்று என்னை அடைகிறான் –
ரஜஸ் தமஸ் ஒழித்து துராசாரம் போகும் -என்னை பற்றி நினைத்தவனுக்கு -கிரமத்தால் பக்தன் ஆவான்
இதை நீயே ப்ரதிஞ்ஜை பண்ணப் போகிறாய் –
நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –
அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் –
மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை
மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி
மத் கதா ஸ்ரவணா ப்ரீதி -கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –

ந வாஸூ தேவ பக்தா நாம சுபம் வித்யதே க்வசித் -ஸ்ரீ ஸஹஸ்ரநாம அத்யாயம்
ஸர்வேஸ்வரன் பக்கலிலே ப்ரேமத்தைப் பண்ணி இருக்கையும்
பொல்லாங்குகள் உண்டாகுகையும்
அக்னி நாஸிஞ்சேத் -போலே கூடாதது ஓன்று இறே

இவன்
தான் போக்கிக் கொள்ளப் பார்த்தல்
அவனுக்கு அசத்தி உண்டாதல் செய்யில் இறே
இது உண்டாவது

ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய ஸீததி –என்றும்
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந-என்றும் -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-இத்யாதியாலே கண்டோம்

சர்வ பிரகாரங்களாலும் தோஷமே யாகிலும் ஞானத்துக்கு மேல் அவ்வருக்கு நன்மை இல்லையாகிலும்
பக்தி நெருப்பு இவன் இடம் இல்லை யாகிலும்
இனி இவனை நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ண வேண்டுகிறது என்ன ஹேது கொண்டு என் என்னில்
ப்ரபாவாத் பரமாத்மந -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-
இத் தோஷங்களோடே பகவத் விஷயத்திலேயும் கை வைக்கும்
பின்னை இத்தையே-தோஷத்தையே- பார்த்து இருக்கும் அத்தனை போக்கி இவனைக் குறைய நினைத்ததாகில்
பகவத் ப்ரபாவத்தைக் குறைய நினைத்தானாம் இத்தனை –
எலி எலும்பனான இவனைப் பார்த்து குறைய நினைக்கிறது
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்து இவனை நிர்தோஷனாகப் பிரதிபத்தி பண்ணுகிறது –
புரா -பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு இறே தோஷம் இருப்பது

பின்பு அவன் பக்கலில் நெஞ்சு வைக்கவும் பொல்லாங்கு உண்டாகையும் கூடாது
அவன் தானும் ஷிப்ரம் பவதி என்றான் இறே
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்
சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை
நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்
இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க

தாசரும் தனது தன்மை அறிந்தவர்
எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்க்களே என்ன

என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்
பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

என் கோல் வளை
எனது ஜீவனம் அழித்தோ தனது ஸ்வாதந்த்ரம் நடத்தப் பார்ப்பது
இளைத்து கை வளை இழந்த ஆழ்வார் அழகு -மிக்கு இருக்குமே
ஆகிலும் இக் குறையும் வராதே இவர் இருக்க வேண்டும்
அம்ருத சாகரத்தில் ஆழ்ந்து அங்கு -சம்சாரம் அப்படி இல்லையே

உண்ணும் சோறு –கண்கள் நீர் மல்கி இருப்பவரையே நமக்குப் பிடிக்கும் -இப்படி இருந்தாலும்
அவனை அன்றி வேறே ஒன்றை நினையாத -ஏங்குதலே அழகு
கண் எச்சில் படாமைக்கு இவை வேண்டாம் -த்ருஷ்ட்டி தோஷம் வரக் கூடாது
தாயார் ஆகையால் இப்படித்தானே நினைப்பாள்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு பார்ப்பது அழகு தான் இருந்தாலும்

தன்னை அழிய மாறி ஆஸ்ரித வத்ஸலனான கண்ணன் கூட இப்படி பண்ணுவானோ
தனது ஆணையை அழித்து
அகர்மவஸ்யனாய்
தேவகி வயிற்றில் பிறந்து வந்து சொல்கிறான்
ஜாதோசி தேவ தேவ
ஜாதோஹம் -அவன் சொன்னதைத் திரும்பி ரிஷிகள்

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
ஈரக்கையால் தடவி ரக்ஷிக்கும் செங்கோல்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற திருவரங்கச் செல்வனார்
ஆணை -அதுக்கு வளைவு -உண்டாக்கலாமோ
திருத் துழாய் ஆணையை வளைத்து விடடாதே
ரஷ்ய வர்க்கத்தில் ஒருத்தி விட்டாலும் ஸர்வ ரக்ஷகத்வம் கொத்தை ஆகுமே –
அதுதானே ராம ராஜ்ஜியம்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவரை இழந்தால் -இனிக் கிடையாது என்னில்
உபய விபூதியும் இழந்தது ஆகுமே அவனுக்கு

பக்தி பிரியர் என்பார் ஒருவர்
இவர் விரகம் அனுசந்தித்து
ஆழ்வீர் என் பட்டீர் என்று திரிவாராம்
வியாசர் -சம்சார வாசனை கனத்து புத்ர வியோகத்தில் மலையில் இருந்து விழுந்து சாயா சுகரை வைத்து தரித்தார்
பகவத் விஷயத்தில் இழிவாருக்கு-இவர் திருவாய் மொழி கொண்டே
கதிர் பொருக்கி தர்ம வீர்ய ஞானம் பெற்றவர்கள் போல் இல்லாமல்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அத்தால் கூட தானே செங்கோல் -கூட வளைவிப்பானோ

திறல் சேர் அமரர்
சம்சாரிகள் ஸூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டார்கள்
நித்ய ஸூரிகள் அவனை அனுபவித்து -மேலும் அனுபவிக்க நிரந்தரமாக திறமை கொண்டவர்கள்
சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க போக்த்ருத்வ சக்தி உடையவர்கள்
விஷ்வக்சேனருக்கும் கோன்
தேவர்கள் கோன் ப்ரஹ்மாதிகளுக்கும் கோன்
உகக்கும் துழாய்
ராஜ குலா மஹாத்ம்யம்

இவன் தான் செங்கோல் வளைத்தாவது ஆழ்வாரை துன்பம் கொடுக்க சங்கல்பிக்க
திருத்துழாயும் சஹகரித்து
ஒரு பிரபு ஆயிரம் காசு கொண்டு வரச் சொல்ல இவன் மூன்று மடங்கு பண்ணி அவன் ப்ரீதிக்கு விஷயம் ஆக்குமே
அழியாத விபூதியையும் அளிக்கப் பார்க்கும் இது லீலா விபூதியை அளிக்க சொல்ல வேணுமோ

சீதா பிராட்டி துக்கம் கண்டு-தெப்பம் முழுகினால் போல் துன்பம்
புருஷகாரம் செய்து நம்மை சேர்ப்பிக்க இவளும் துக்கம் பட்டால்
காலத்தின் கொடுமை என்ன சொல்வது திருவடி வார்த்தை சுந்தர காண்டம்
காலம் என்பது -கால சக்கரத்தாய் -அழிக்கிற வஸ்துவில் நான் காலம் என்றானே கீதாச்சார்யன்
அகால தேசத்திலும் துன்பம் கொடுக்கும் காலம் அவன் தானே
நீர்மைக்கு அவ்வருக்காய் இருப்பார் இப்பாட்டு படா நின்றால் என் செய்யாது

இவளோ முடியா நின்றாள்
இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்
திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை
காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது

இத்தால் சொல்லிற்று
நான்கு நிலமும் -வாசி இல்லாமல் ஏக ரூபமாய் துன்பம்
நெடியானே என்று கிடைக்கும் நெஞ்சமே
காணக் கருதும் கண்ணும்
பாஹ்ய அந்தக்கரணம் அனைத்தும் ஈடுபட்டதுக்கு பிரமாணம்

ஆற்றாமை கைவிஞ்சி இருப்பு கண்ட பாகவதர்கள்
இவர் ஸம்ஸாரிகளுடைய அன்ன பானாதிகளால் தரிக்குமவர் அல்லராய் இரா நின்றார்
தம்முடைய உத்தேச்யம் கைப் புக்கு இருக்கிறது இல்லை
இனி இவ் விருப்பு அவருக்கு எவ்வளவாகக் கடவதோ
இவர் ஜீவிப்பாரோ ஜீவியாரோ என்று சம்ஸயம் பண்ண வேண்டும்படியான தசை
விளைந்த படியைச் சொல்லிற்று கீழ்

இதில் இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி எனக்கு அதி போக்யமும்
எங்கோன் உகக்குமதுமான இத்திருத்துழாய்
ஸர்வ ரக்ஷகனும் ஸர்வாதிகாரி நிர்வாஹகனுமானவனதான
பெண்ணீர்மை ஈடழிக்க வல்ல திவ்ய ஆஜ்ஜையினுடைய ஸர்வ தேசா க்ரமணத்தை விஜ் ரும்பியா நின்றதே
இனி இந்நான்னிலத்து இது எத்தைச் செய்யாதது என்று
அதின் கொடுமைகளிலும்
போக்யதையிலும் தலைமகள் ஈடுபடுகிறாள்

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
என்னுடைய கையில் வளை முதல் கொண்டு

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனுடைய லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
ஆஜ்ஜையினுடைய தேச சதுஷ்டய வ்யாபனத்தை சத சாகமாக விளைவியா நின்றதே

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
சமர்த்தகளான லோக பாலாதி தேவர்களுக்கு நிர்வாஹகானான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யான

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூ ரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இம்மாலை போலே எங்களை அடிமை கொண்டவன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7-என்னும்படி
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைய திருத்துழாயானது

என் செய்யாது இனி
என்னை எந்தப்பாடு படுத்தாது –
உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ

நால் நிலத்தே –
பாலை மருதம் நெய்தல் குறிஞ்சி என்றுள்ள நாலு வகையான நிலத்திலுள்ள
தன்னை ஆசைப்பட்டாரையும் கழல் வளை ஆக்காமல் விடுமோ –
அவளவள் தோழிமார்களையும் தாய்மார்களையும் அங்கனே புலம்பப் பண்ணாமல் விடுமோ
என்று தலைமகள் அவசன்னை யாகிறாள் –

————–

அவதாரிகை
இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர்
இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும்
அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து
உடன் போன தலைமகன்
நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடம் தலைப்பெய்தமை சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-

பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-

பதவுரை

நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

வியாக்யானம்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து
சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து

வேனிலம் செல்வன்
கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்

சுவைத் துமிழ் பாலை
பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை

கடந்த பொன்னே
நெருப்பிலே நடப்பாரைப் போலே
இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே
ஒளி விடுகிறவனே

கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்
இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே
பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து
கால் பொருந்தி அனுபவிக்கும் படியான

கண்ணன் வெக்காவுதம்
ஆஸ்ரித ஸுலப்யத்தாலே
சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது
அடுத்து அணித்தாயிற்று

பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற
சோலை அவ்விடத்தது –

எப் பாலைக்கும் சேமத்ததே —
இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்

இத்தால்
நானிலம் என்று தொடங்கி
சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும்
தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி

கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே
பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்

(செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்
கிரணம் -சங்கல்பம்
ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்
குணம் -அடியேன்
வைபவம் -கைங்கர்யம்
சார அம்சம் புஜித்து )

பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு
அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட
ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து

அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு
நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி
நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான
ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம்
அதூர வர்த்தியாய்
அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றது

இது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற
ஷேம கரமான புகலிடம் என்கிற
அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –

————-

அவதாரிகை
இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும்
அனுகூலித்த படியை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே
முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு
உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக்காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

வியாக்யானம்

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது

செருவாரும் நட்பாகுவர் என்று
அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம் பெற
தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி

வையம் சொல்லும் ,மெய்யே
நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்

எங்கனே என்னில்
பண்டு எல்லாம் மறை கூய்
முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –
அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று
தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன்
இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்
சேமம் என்று தொடங்கி
நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில்

முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே
அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று
அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே
வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

ஸ்ரீ கீதை -8-12- உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –
அங்கன் அன்றிக்கே
ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே
இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் –
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம்
இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –

செருவாரும் நட்பாகுவர் என்று
முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம்பெற
பழகினும்

வையம் சொல்லும் ,மெய்யே
லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே
எங்கனே என்னில்

பண்டு எல்லாம் மறை கூய்
முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து
அவ்வாடையே இப்போதாக வந்ததாய்

தண் என்றதே
ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

—————-

அவதாரிகை
இப்படி பாவநா ஸித்தமான
பகவத் அங்கீ காரமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே

பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு
ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை
வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி
நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள்வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-

பதவுரை

வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

வியாக்யானம்

தண் அம் துழாய் வளை கொள்வது
அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும்
அழகும் யுடைத்தான
திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –

நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
இதில் ஒரு துவக்கற்று
பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம்
உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது
நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது

வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான
கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே

அருளாய்
நீ அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று
இரங்கி உரைத்தார் யாயிற்று

இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
சீதள ஸ்வ பாவராய்
தர்ச நீயரான
பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்
ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்

வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது
ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்
(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே
என்கையை ஸூ சிப்பிக்கிறது

அருளாய்-என்று
ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற
நீ இரங்கக் காண்கிறிலோம் –

எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும்
இரங்காது இருந்த விஷயங்கள்
முற் காலத்திலும் யுளவோ
இல்லை என்றபடி

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
திரௌபதி
ஸ்ரீ கஜேந்திரன்
தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே
இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –
அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது
தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது
இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –
லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே
அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே
அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்
அவ்வளவு அல்ல இறே இது
ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய்
ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது
ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை
ஆக
ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –

வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்
இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு
ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்

இதுவான பின்பு
பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய்
அண்ணியனுமாய்
இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்
ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று
இருக்குமது இல்லை இறே நீருக்கு

திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ
இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ
எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்
மயர்வற மதிநலம் அருளின பின்பு
தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி
த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே
அப்படியேயோ
அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
இப்படி பாவநா ஸித்த பகவல் லாபமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே
ஆர்த்திக்கு உறுப்பாய்
அரங்கா அருளாய் -முன்போல் இன்னம் பாதிப்பது உண்டோ -என்று கூப்பிடுகிறார் –
இப்பாசுரத்தில்

வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது
அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது
என் வளையைக் கொள்வது பிராப்தம்
நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு
எடுப்பதாகா உலவா நின்றது –

வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான
ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே

அருளாய்
அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –

————

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும்
நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து
வெறுக்கிற பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும்
அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர் குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வன்னப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய் வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்த கதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன–மின்னல்போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

வியாக்யானம்
இன்னன்ன தூது
இப்படிப்பட்ட தூது
நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான
பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ

எம்மை
கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய
நம்மை அன்றோ
(வீசும் சிறகால் பரப்பீர் )

ஆள் அற்ற பட்டு
வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ
அபேக்ஷிக்கிறது

இரந்தாள்
அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று

இவள்
தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ
அபேக்ஷித்தது

என்று
1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்
2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்
3-தன் ஆள் அறுதியாலும்
4-தன் பெண்மை பாராதே
நம்மை இரந்தாள் என்று நினைத்து

அன்னன்ன சொல்லாப்
அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது

பெடையொடும் போய் வரும்
ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்
நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே
ஸ்யா மளத்வ
ஹிரண்மயத்வங்கள்
கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்

பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?
பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற
ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ
முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று
ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிப் பிறப்பால் வந்த சீர்மை

அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி
குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி
1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே
நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று
தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே

ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு
யாதாயாதம் பண்ணா நின்றார்கள்

உபாஸ்யத்வ
போக்யத்வ
ப்ரகாஸகத்வமாம் படி
வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில்
பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ –
இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்

(நீலம் உண்ட மின்னன்ன மேனி
உபாஸ்யத்வம்
போக்யத்வம்
ப்ரகாஸகத்வம்
மூன்றுமே உண்டே )

ஸ்வ பாவ ஸுத்தியும்
ஸ்ரைஷ்ட்யமும்
அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே
அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம்
அருளக் கண்டது இல்லை
அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க
ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று

அன்னன்ன சொல்லாப்
அந்த அன்னமானது சொல்லுமது அல்ல

பெடையொடும் போய் வரும்
தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்
போய்வருமது யுண்டாயும்
என் தசையை இவை சொல்லா
என்று அந்வயம்

சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்
நீலம் –இத்யாதியாலே

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான்
நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய்
குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்

உலகில் பெண் தூது செல்லா
பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது
அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல

அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிச் சீர்மையாவது
அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை
அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ
அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு
என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

————–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு
சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை
நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி
வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-

பதவுரை

அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப் பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்-

வியாக்யானம் –

அன்னம் செல்வீரும்
பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்

வண்டானம் செல்வீரும்
அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்

அன்னம்
வண்டானம்
என்கிற ஒருமை
சொல்லீர் என்கிற பன்மையாலே
ஜாதி பரம் –

தொழுது இரந்தேன்
பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண
யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே
வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்

யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே
வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு
பூர்வ பாவியாம் இறே

ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
உங்களில் குண பிரதான பாவம் இல்லை
முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது

ஏது என்ன
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த
சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9-
ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்

நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்

ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்
ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகாரமாக நெஞ்சைக் காண்கையும்
அரிது என்றபடி

என்னைச் சொல்லி
என்னோடு யுண்டான
சம்பந்தத்தையும்
பூர்த்தியையும்
தனிமையும் தோன்றச் சொல்லி

அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே
அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி
இன்னமும் போகாது ஒழிவதே

அவர் என்று
உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள்
தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்

இதுவோ தகவு
ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம்
இருக்கும்படி இதுவோ

என்று இசைமின்களே –
இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்
சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –

இத்தால்
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்
கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து
நடையாலும்
பேச்சாலும்
புத்தி யோகத்தால்
ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும்
பிரதான
புருஷ
அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான
உங்களைக் குறித்து என்றபடி –

தொழுது இரந்தேன்-என்கையாலே
த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும்
ஓர் அளவில் நில்லாது என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்று
ஆர்த்தியினுடைய அதிசயத்தாலே
முற்பட அறிவிக்கையை வேண்டுவது
பிரதான நியமமும் இல்லை -என்றபடி

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால்
என் அவஸ்தையை அறிவித்து

இதுவோ தகவு என்று இசைமின்களே –
இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே
இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே
நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்

அதாவது
அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே
அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில்
விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி

கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி
மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –

(சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்
ஏது செய்ய முடியாது என்றவாறு )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து
அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே
யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச
திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே –

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம்
தூது விடவும்
இரக்கவும் செய்து
தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து
இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று
அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி
உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

வியாக்யானம்
அன்னம் செல்வீரும்
அன்னமாய்ப் போமவர்களும்

வண்டானம் செல்வீரும்
குருகாய் போமவர்களும்

தொழுது இரந்தேன்
கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள்
முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே
நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து
சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு
ரமண சீலமானவராய்
எனக்கும் காரண பூதரானவராய்
அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்

அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்
காணப்பெற்றால்

என்னை சொல்லி
எனது இவ்வாற்றாமையை
அவருக்கு அறிவித்து

அவர் இடை
என்னோடு கலந்து என்னைப் பிரிந்த
என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும்
புருஷ ரிஷபரிடை

நீர் இன்னும் செல்லீரோ
இன்னம் அவகாஹியா நின்றீரோ

இதுவோ தகவு என்று
அவனுடைய அருளும் இவ்வளவேயோ
என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ
என்னா நின்றாள்

என்று இசைமின்களே –
என்றுமாகச் சொல்லி
என் நெஞ்சுக்கும்
அவருக்கும்
நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -11-20–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 3, 2022

அவதாரிகை
இப்படி இவருடைய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டு
பகவத் அனுபவ அர்த்தமாகவும்

(இசைவித்து உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
நின் கண் வேட்க்கை ஏழுவிப்பேன்
அனுபவத்துக்கும் -உம்மை ப்ரீதி காரித கைங்கர்யத்துக்கும்
இவற்றை ருசி காற்றிய ஆழ்வார் அருளிச் செயல்கள் உண்டே )

தேசாந்தரத்திலே பாகவத விஸ்லேஷம் பொறாத படியான
இவருடைய ஞான வை லக்ஷண்யம் கண்ட அன்புடையார் சொன்ன பாசுரத்தை
பொருள் வயிற் பிரியலுற்ற
தலைமகன் பிரிவாற்றாத தலைமகள் வேறுபாடு கண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

(விலக்ஷண ஞானம் பாகவத ஸம்ஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம்
கண்ணபுரம் ஓன்று உடையோருக்கு வேறு ஒருவருக்கு உரியேனோ ஞானம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -விலக்ஷண ஞானம்
கேட்டு அல்லிக் கமலக் கண்ணன் ஆவான் அன்றோ )

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-

பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு
தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-

பதவுரை

யாம் இன்று காண்கின்றன–நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன–(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய்–எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு–அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ–பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என–என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க
(அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன–எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன–தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை–கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி–(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
(பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு
வந்து பேர்கின்ற–(என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ–இது என்ன வியப்பு!.

உரை
அரியன யாமின்று காண்கின்றன
நாட்டில் அரிதாய் இரா நின்றதீ
நாங்கள் இன்று காண்கின்றன

கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே
நிரதிசய போக்ய பூதை யானவளே
(கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )

பெரியன காதம் பொருட்கோ பிரிவென
அதி தூரங்களான காதங்களில் பொருளுக்காகவோ நினைத்தது

ஞாலம் எய்தற்குரியன
ஸர்வ லோகத்தையும் தன் வசம் ஆக்கத் தக்கவையாய்

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
ஆற்றாமையால் வந்த அஸ்ரு பிந்துக்களாகிய முத்துக்களையும்
பயப்பாகிற அழகிய பொன்னையும் ஏந்தி

ஒரோ குடங்கைப் பெரியன
தனித் தனியே ஒரு சிறாங்கை போலே பெருத்து இருப்பன

கெண்டைக் குலம்
1-குளிர்த்தியாலும்
2-மிளிர்தலாலும்
3-ஓடுதலாளாலும்
கெண்டையோடே சமமான குலம் என்னும்படி

இவை
இக் கண்களானவையோ

வந்து பேர்கின்றவே
என் முன்னே வந்து உலவா நோன்றன


இது என்ன ஆச்சர்யமோ
அரியன யாம் இன்று காண்கின்றன என்று அந்வயம்

இத்தால்
அரியன யாம் இன்று காண்கின்றன -என்று
இவருடைய ஞான வை லக்ஷண்யம் ஓரு இடத்திலும் காண அரிது என்றபடி

(மாதா பிதா -ஆளவந்தார்
ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம்
ஜகத் காரணம் ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமே
வாஸா -விவகாரத்துக்கு பரிணாமம் ரூபம் நாமம்
ஸர்வம் ப்ரஹ்மம்
நிர்ஹேதுக கிருபா விசேஷத்தாலே மதிநலம் அருளப்பெற்றவர் அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-)

கண்ணன் விண் -என்கையாலே
பரமபதமும் ஓர் மாயையினால் போந்த கிருஷ்ணனது என்றபடி

விண் அனையாய்
பரம வ்யோமம் போலே
1-அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
2-அப்ராக்ருதத்வத்தையும்
3-ஆனந்தாவஹத்வத்தையும் -உடையவர் என்றபடி –
(எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் பக்த அம்ருதம் தொண்டர்க்கு அமுதம் அன்றோ )

பெரியன காதம் பொருட்கோ பிரிவென -என்று
புருஷார்த்த ஸித்த்யர்த்தமாக தேசாந்தர கமனம் பண்ண வேணுமோ என்றபடி

ஞாலம் எய்தற் குரியன -என்கையாலே
ஸமஸ்த விபூதியையும் விளாக்குலை கொள்ளும்படியாய் இருக்கை
(சூழ்ந்து அதனில் பெரிய அவா அன்றோ இவரது )

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி -என்கையாலே
விலக்ஷணமான நித்ய முக்த்தாகாரத்தையும்
ஹிரண்மயமான ஈஸ்வர விக்ரஹத்தையும்
தன்னுள்ளே பிரகாஸிப்பிக்கை

(சர்வஞ்ஞத்வமும் இவருக்கு உண்டு என்றபடி
கண்ணுள்ளானே இவனும்
அனைவரும் பிரதிபலிப்பார்களே )

ஒரோ குடங்கைப் பெரியன -என்கையாலே
ஏவம்விதமான மஹாத்ம்யத்தை யுடைத்ததே யாகிலும்
அன்பர்களுக்கு சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி இருக்கை

கெண்டைக் குலம் -என்கையாலே
ஸ்ரீ நாயனாபமாய்
பிரளய ஆபத் சஹமான பிரதம அவதாரத்திலே
அவஹாகித்தமை தோற்றி இருக்கை

இவை-என்கையாலே
ஞானத்தை அபரோஷித்து அனுபவிக்கலாம் படி இருக்கை

வந்து -என்று
ஆசையுடையோர் சென்று அனுபவிக்கை அன்றிக்கே
தானே வந்து
ஆசையையும் அவர்களுக்கு உண்டாக்கும் என்கை

பேர்கின்றவே-என்று
அதற்கு அடியான பரம்புதலை ஸ்வ பாவமாக யுடைத்தாய் இருக்கும் என்றபடி

இவ் விடத்து
இவையோ பேர்கின்றவே என்று
பன்மை
ஞானத்தின் வ்ருத்தி பேதத்தை நினைக்கிறது

இப்படி அன்புடையவரான பாகவதருடைய
ஸ்லாகா வசனத்தை வெளியிட்டு அருளினார் ஆயிற்று –

———

தாத்பர்யம்
இப்பாசுரத்தில் பாகவத விஸ்லேஷம் ஒரு ஷணமும் பிரியாமையை ஸஹியாத ஆழ்வாரைக்
கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தனம் அர்த்தமாக பிரிந்த நாயகனைக் கண்ட
நாயகியின் அவஸ்தையைக் கண்டு உரைத்த நாயகன் பாசுரமாய் இருக்கிறது

அத்யந்த போக்யமாய் உள்ள ஓ நாயகியே
நான் இன்றைக்கு ஒருநாளும் காணாத அத்புதம் கண்டேன்
சிலர் என்னிடத்தில் பொருளின் பொருட்டு பிரிவதைச் சொல்ல
நான் அவர்களை நிஷேதியாமல் இருக்க
நானும் பிரிந்தேன் என்று எண்ணி அவ்வளவிலேயே
நெடுதூரம் பிரிந்த நாயகி போல் படுகிறாய்
நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன்
உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி
கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து
ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல்
நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே
இது என்ன ஆச்சர்யம்

——————————

நம்பிள்ளை ஈடு அவதாரிகை

தலைமகளோடே கலந்து பரிமாறா நிற்கச் செய்தே
நடுவே போது போக்காக
நாட்டிலிலே சிலரைச் சிலர் பொருளுக்காகப் பிரிவர் காண் -என்று ப்ரசங்கித்தார்கள்
அத்தை இவன் கேட்டு
நாம் பிரிந்தோம் அல்லாமாகில்
நமக்கு இது குற்றமாகப் புகா நின்றதோ என்று
இத்தை நிஷேதியாதே அனுமதி பண்ணினான்
இத்தை இவன் அனுமதி பண்ணின போதே பிரிய நினைத்து அன்றோ செய்தது என்று விக்ருதையாக
அத்தைக் கண்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்
அரியன
இவை சால அரியவாய் இருந்தன
ஸம்போக மத்யே பிரிவை நினைக்கை சால அரியது ஓன்று இறே
இப்பெரிய திருநாளிலே இது ஒரு திரு ஏகாதசி எங்கே தேடி எடுத்தி கோள் -என்று பட்டர் அருளிச் செய்தார்
நீ நினைத்த ஸாஹஸத்தை நாம் போய் அனுஷ்ட்டித்தாலும் கிடையாதது ஒன்றாய் இருந்ததே
இது சாலப் பெறுவதற்கு அரிதாய் இருந்ததீ

யாம்
உன்னாலே உன்மஸ்தக போகங்களையும் புக்கு அனுபவிக்கிற நான்

இன்று காண்கின்றன
நீ அதிசங்கை பண்ணுகிற இப்பிரிவுக்கு முன்பேயும் சில பிரிவுகள் உண்டு இறே
அவற்றிலும் கண்டிலோமீ இவை
இத்தை ஐந்தாம் பிரிவு என்னக் கடவது இறே
அநந்தரம் வார்த்தை இறே

கண்ணன் விண்ணனையாய்
ஒரு தேச விசேஷங்களிலே
ஸமஸ்த போகங்களையும் பெற்று புஜிக்கிறான் ஒருவன் ஒன்றேயாய்
அது தான் அகஞ்சுரிப்பட்டு மற்றவை இன்றிக்கே இருக்குமத்தை நினைக்கும் அன்று அன்றோ
உன்னோடே கூடினவன்று ஓர் இடத்தை நினைப்பது
தேவ தாவத் ஸர்வார்த்த ஸித்திஸ் ஸ்யாத் -என்கிறபடியே ஸ்வத யுண்டாயிற்று அது
ஒரு நாளும் அழியக் கடவது அன்றிக்கே இருந்துள்ள அபஹத பாப்மத்வாதிகளை உடையவோடு ஓக்கத் தானும்
அபஹத பாப்மத்வாதிகளைப் பெற்று அனுபவிக்கிறவன்
இவற்றுக்குத் திரோதானம் பண்ணக் கடவதான ஸம்ஸாரத்தை ஸ்மரிக்குமோ

பெரியன காதம்
அஸங்கயேயமான காதமாகப் புக்கதாயிற்று
பிரிவைப் பிரசங்கித்தவாறே காதல் நெடிதாகப் புக்கது

பொருட்கோ பிரிவென
ஷூத்ர ப்ரயோஜனங்களுக்காகச் சிலரைச் சிலர் பிரிவார் காண் என்று இங்கனே சிலர் பிரசங்கித்தார்கள் போலே
இவனும் அத்தைக் கேட்டான் போலே
பொருள் அதிகாரத்தைக் கிழித்துப் பொகடப் போகாதே இவனால்
போய்ப் படைக்கும் பெரும் பொருளை த்யாஜ்யம் என்று இருந்தானாகில்

———————————

இப்படி பாகவதர்
ஸ்லாகிக்கைக்கு அடியான பகவத் ப்ராவண்யத்தாலே
தத் விஷயத்திலே அபி நிவிஷ்டமாய்
தன் திரு உள்ளம் கைகழிந்த படியாலே பிறந்த ஸைதில்யத்தை
தலைவி தன் ஆற்றாமை கூறிய பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை -தலைவன் பிரியப் பெற்ற தலைவி
தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –மாசறு சோதி -5-3–

பதவுரை

மணி மாமை–(எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது–விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை–விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது–மேன் மேல் பரவா நின்றது;
கங்குல்–இராப் போது
ஊழிகளே–அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே–இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து–(கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன்–எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற–ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார்–(எனது) நல்ல மனம்
தந்து போன–(தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே–ஒப்பற்ற செல்வங்களாம்.

பேர்கின்றது மணியாமை
நன்றான மாமை நிறமானது வேறுபடா நின்றது

மாமை -என்று
ஸ்த்ரீகளுடைய நல் தோலின் நிறம்

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது
மேன்மேலும் கிளர்ந்து செறிந்த வை வரண்யமானது பரவா நின்றது

கங்குலூழிகளே
ஒரு இராத்ரி அநேக கல்பங்களாகப் பரிணயியா நின்றது

இதெல்லா மினவே
இவை எல்லாம் இப்படியே யானது

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன்
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டு
எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய

தண்ணம் துழாய்
ஸ்ரம ஹரமாய்
தர்ச நீயமான
திருத் துழாயிலே

சார்கின்ற நன்னெஞ்சினார்
அபி நிவேசித்துப் போருகிற ஸ்நேஹோத்தரமான நெஞ்சினார்
அத் தலையில் ஆஸக்தி யடியான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்லுகிறாள்

தந்து போன தனி வளமே—
போகிற தசையில் நமக்குத் தந்து போன நிரதிசய ஐஸ்வர்யம்
என்று பாங்கியைக் குறித்துத் தன் ஆற்றாமை சொன்னாள் ஆகவுமாம் –

இத்தால்
பகவத் விஷயத்தில் இவர் நெஞ்சு
அபி நிவிஷ்டமாய்ச் சென்றதடியாக

பேர்கின்றது மணியாமை -என்று
ஸ்வா பாவிகமான ஸ்வரூப ஆகாரமும் குலையும்படியாய்

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது -என்று
அபி நிவேச விகாரங்கள் அபி விருத்தமாய்
ப்ரசரிக்கும் படியாய்

கங்குலூழிகளே -என்று
மோஹ அந்தகாரம் நடக்கும் காலமானது
விளம்ப அஷமத்வத்தாலே கல்ப கோடியாய்
ப்ரதிபாதியா நின்றது

(பக்தி பாரவஸ்யத்தாலே இவருக்கு
நமக்கு அஞ்ஞானத்தாலே
காலைப் பூசலும் மாலைப் பூசலும் உண்டே
இரவாக ஆளவந்தார் நிர்வாகம்
முற்கூற்றில் இருந்து பிற்கூற்றாக வந்தமை எம்பெருமானார் )

இதெல்லா மினவே-
இது எல்லாம் இப்படி யானது

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் -என்று
விரோதி ஸமர்த்தமான திருவாழியையும்

தெம்பெருமான்
ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்தையும்

கண்ணன்
ஆஸ்ரித பவ்யத்தையும் யுடையனான
கிருஷ்ணனுடைய

தண்ணம் துழாய்
நிரதிசய போக்யதா ஸூசகமான மாலை அழகிலே

சார்கின்ற நன்னெஞ்சினார்
அநு ரக்தமான நெஞ்சானது

தந்து போன தனி வளமே
தந்து போன அத்விதீயமான ஸம்பத்து இறே என்று
அனுசந்தித்தார் ஆயிற்று

ஸூஹ்ருத் பூதரை நோக்கி அருளிச் செய்தார் ஆகவுமாம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தமாக இருக்குமோ பாதி
பகவத் விஸ்லேஷமும் பாகவத விஸ்லேஷ பர்யந்தமாகவே இருக்கும் இறே
ஆகையாலே
தடாவிய அம்பிலே -பாசுரம் -6-
இவருக்குக் கீழ்ப் பிறந்த பகவத் விஸ்லேஷமானது
இப்பாட்டு அளவும் வர
பாகவத விஸ்லேஷமும்
காதாசித்கமாக ஸம்ஸ்லேஷம் உண்டாயிற்றாகில்

அவர்களோடே கூட அவனை அனுபவிக்கப் பெறாமையாலே
2-3-1-முதல் பாட்டில் அனுபவமும் போனதே
ஆர்த்தி உடன் தலைக்கட்டிற்றே

(அவர்கள் விஸ்லேஷிக்கில் செய்வது என் எனது அதிசங்கையாய்ச் சென்றது
அது தானும் போய்
11- அரியன யாம் பாசுரத்தில்
பாகவத விஸ்லேஷம் பற்றி அதி சங்கை சொல்லி
இதில் பகவத் விஸ்லேஷ ஆற்றாமை வந்ததால்
கீழே பாகவதர்கள் பிரிந்து போக மாட்டோம் என்று சொல்லி

வரிகளுக்கு நடுவில் உள்ள அர்த்தம்
முதல் பாட்டில் பிறந்த பகவத் ஸம்ஸ்லேஷம் அபி நிவேசம் மீண்டும் தலை எடுக்கிறது இதில்
இங்கனம் அல்லை யாகில் இரண்டும் புருஷார்த்தம் ஆகாவே
பூஜ்யம் ஓன்று இரண்டையும் கொண்டே binary கணிதம்
அது போல் அல்லவே இங்கு

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாமல் விடாமல் இருக்கும்
பகவத் சம்ச்லேஷம் ஏற்பட்டு பாகவத சம்ச்லேஷம் விரும்பலாம்
அடியாருக்கு ஆட்படுத்தி அருள் என்று பிரார்த்திக்கலாம்
என் அப்பனில் -என்று சொல்லி மேல்
முடிவில் உண்டான பாகவத ஸம்ஸ்லேஷம் இல்லாத அன்று
கீழ் உண்டான பகவத் ஸம்ஸ்லேஷமும் போவதற்கு ஹேது
இந்த பகவத் ஸம்ஸ்லேஷம் தான் -பாகவதர்கள் உடன் கூடின அன்று தான்-அல்லது ஒன்றாய்த் தலைக் கட்டாதே
அது போன அன்றே இதுவும் போகுமே
main switch போட்டு தான் ஒன்றை உபயோகிக்கலாம் -சார்ந்தே இருக்கும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று இவர்கள் உடன் கூடி
அவனை அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த பகவத் சம்ஸ்லேஷமும் குலைந்து போனதே )

(நம்பிள்ளை ஈட்டில் -ஊனில் வாழ் உயிரிலே -2-3- 1/10/11 பாசுரங்களையும் சேர்த்து –
களிப்பும் கவரவும் அற்று விளக்கி உள்ளார்)

(ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7-

அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

(பகவத் ஸம்ஸ்லேஷம் பெற்று ஏக ரஸமாகக் கலந்து –
குலைந்து
ஆற்றாமை யுடன் தலைக்கட்டிற்றே ‘களித்தேனே’ என்றவர்,

மீண்டும், ‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்
‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.
மாயப்பிரான் தானே–மாயப்பிரான் அடியார்கள் – பாகவத ஸம்ஸ்லேஷம் அளிக்க வேண்டும்

குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–என்று பலன் சொல்லித் தலைக்காட்டுகிறார்

குழாங்களாய் –
என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி,
குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.

அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

(ஆடுகை -அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி )

அவனைப் பிரிந்த பிரிவு தோற்றாத படி
ஸ்மரிப்பித்து
ஆஸ்வசிப்பித்தி
போந்த இவர்கள் போய் நின்ற வாறே -இவர்கள் விலகினால் -பழைய பகவத் விஸ்லேஷமும் கிட்டும்
பத்து மாதம் பிரிந்த சீதை
திருவடி கண்டு மகிழ்ந்து
திரு கணையாழி கண்டு அவனையே கண்டது போல் மகிழ்ந்து
போன பின்பு பிறந்த ஆற்றாமை போல் இங்கும் இருந்தது
கணையாழி கையிலே இருந்தாலும் நோவு பட்டாள்
அன்றோ அங்கு

வியாக்யானம்

அனுகூல பதார்த்தங்களும் இப்பொழுது அவனை நினைவூட்ட -அவை நலிய
உன்னாலே தானே வந்தது என்று தோழியைக் கோபித்து
பின்னும்
இவளை வெறுப்பது என்
அவள் சொல்ல மெய் என்று கைக் கொண்ட நெஞ்சு அன்றோ என்று அத்தோடு கிலாய்க்கிறாள்
அவள் குண கீர்த்தனம் பண்ண அத்தை மெய் என்று நினைத்தது நெஞ்சின் குற்றமே என்று கிலாய்க்கிறாள்

கிட்டின போது நிறமானது மேலே மேலே ஒளி வீச
ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்கு யோக்கியமான இவள் நிறம்
அவன் போன போது அத்தைக் கொண்டு ஜீவித்தோம்
அதுவும் மாறிற்றே
இளைய பெருமாள் சுக்ரீவனுக்கு பெருமாள் பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமையை சொன்னது
சுந்தர காண்ட ஸ்லோகம் –
வார்த்தை செவியில் பட பிரபை குறையத் தொடங்கிற்று
பெருமாள் அளவு அல்ல சுக்ரீவனுக்கு
செய்தியைக் கேட்டவுடன் இவனுக்கு அத்யர்த்தம் ஆனதே
பிராட்டி உடன் கூடியவாறே பெருமாளுக்குப் போகும்
இவனுக்கு கூடவும் வேணும்
பெருமாளுக்கு வர்ணமும் வர வேண்டும்
தான் ராஜ்ஜியம் மனைவி இழந்த போதும் பெற்ற இழவை பெருமாள் திரு உள்ளத்தில் போட்ட
பின்பு முகம் வெளுத்து இருந்ததே
பின்பு இளைய பெருமாள் பிராட்டி பிரிவால் பெருமாள் பட்ட பாட்டை சொல்லக் கேட்டு
கிரகத்தால் பீடிக்கப்பட்ட அம்சுமான் -சந்திரன் போலே ஆனதாம்
காண்கிற போதே ஹர்ஷம் மேலே மேலே யாமா போல் இங்கு நிறம் போகிற படி
இவை போனதும் இருள் சூழ்ந்து கொண்டதே
விஷம் போலே ஒரே யாத்ரி அநேக கல்பங்களாக உருக்கொண்டதே
இவை எல்லாம் –
சந்திரன் அன்றில் தென்றல் போல் அனைத்தும்
என் நெஞ்சினார் கொடுத்துப்போன இவை
கலந்து பிரிந்தவர் தந்தது அல்ல
அவரோடே கூட போன நெஞ்சினார் கொடுத்த
சந்தான சாபம் போல் வைத்துப் போனதே
யுகாவாதாரை ஆண்மையால் அழிக்கும்
உகந்தாரையும் அழகாலே அழிக்கும்
கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டான்

சக்கரம் பிடித்த கண்ணன்
மறைத்துப் போக சொன்ன தேவகி -இங்கு கம்சன் போல்வார் இல்லையே
காணில் முடிப்பான் அவன்
காணாத போது முடிவார் இவர் போல்வார்
தோளில் சாத்தின துழாயில் ஈடுபட்ட நல் நெஞ்சு அங்கெ சார்ந்தது
நாம் கண்டது அடங்கலும் பகையாக்கிக் கொண்டு இங்கே இருந்தோம்
என்னைப் போல் இல்லாமல் நெஞ்சு துணிந்தார்
துணிந்தாருக்கு அல்லது பேறு இல்லையே –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம ருஷி வேத வியாசர் பக்கலில் சென்று
ப்ரஹ்ம பிராப்தி உபாயம் பிரார்த்தித்த அளவிலே
எனக்கு ஞானம் மட்டுமே உண்டு
எனது சிஷ்யர் ஜனகனுக்கு சால அத்யவசாயம் உண்டு என்று சொல்ல
அவன் இடம் கேட்ட இடத்து
விவசாயம் -திட அத்யாவஸ்யம் தவிர வேறே ஒன்றும் இல்லை -மோக்ஷ தர்மம் ஸ்லோகம்
துணிவைத் தவிர வேறே உபாயம் இல்லையே
நாம் பழிக்கு பயந்து இருந்தோம்
அது மேல் விழுந்து வாழ்ந்து போனார்

நல் நெஞ்சினார்
பாரதம் சாந்தி பர்வ–334-47-என்று
துணிவே ஒழிய வஸ்துவை லபிக்கைக்கு ஒரு விரகு இல்லை காண் என்றான் இறே
நாம் பழிக்கு இறாய்த்து நின்று கிலேசப்படா நின்றோம்
அவர் மேல் விழுந்து வாழ்ந்து போனார்
தம் தாம் வயிற்றிலே பிறந்தார்களே யாகிலும் பகவத் ப்ரத்யா ஸந்தரை கௌரவிக்க வேணும் இறே

தந்து போன
சிலர் ஜீவிக்கப் புக்கால்
பித்ராதிகளை அழைத்து வாழ்விக்க கடவர்கள் இறே

தனி வளம்
அவர் நமக்கு வைத்துப் போன ஒப்பில்லாத ஸம்பத்து
அதாகிறது
அவர் தாம் வந்தாலும் இது போக்க ஒண்ணாதே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
கண்ணன் கலந்த போது உள்ளம் பத்து ஆர்க்கும் இல்லையே
இப்போது உனக்கு என்ன குறையாய் இப்படிப் படா நின்றாய்
எதைத் தந்து போயிற்று உன்னெஞ்சில் அவனில் என்று ஊரார் கேட்கச் சொல்கிறாள்
பேர்கின்றத்திலே –

வியாக்யானம்
மணியாமை
மணி மாமையாவது
ஸ்த்ரீக்கு யவ்வன ப்ராதுர் பாவத்தில் உள்ள ஒளி பெற்ற நிறம்
அது போயிற்று

பேர்கின்றது
அது வேறுபடா நின்றது
அந்நிறம் போன இடம் பாழ் கிடவாமே

பிறங்கி யள்ளல் பயலை
மேல் மேல் வளர்ந்து வருகிற வை வர்ணமானது

ஊர்கின்றது
பரவா நின்றது

கங்குலூழிகளே
ஒரு ராத்ரி அநேக கல்பங்களாக பரிணமியா நின்றது

இதெல்லா மினவே
இத்தோடு என்னில் உள்ளது எல்லாம் இப்படியே யாயிற்று

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான்
அன்று கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்

கண்ணன்
எனக்கு அதி பவ்யமானவன்
இப்போது தன் பிரிவால் என்னை ஈர்கின்றான் -வதியா நின்றான்
அப்போது அத்யந்த அனுகூலமான தானும்
தன் பரிகரமும்
தன் சம்பந்தமும்
இப்போது அதி ப்ரதிகூலமாய் என்னைக் கொல்ல வேணுமோ
அவனுடைய

தண்ணம் துழாய் ஈர்கின்ற
அவன் பிரதிகூலித்த இப்போது
அவன் சாத்திக் கொண்டு இருக்கும் குளிர்ந்த திருத்துழாயைப் பெற ஆசைப்படா நின்றார் பாருங்கோள்

சார்கின்ற நன்னெஞ்சினார்
இந்நெஞ்சு இப்படி ஸ்வ தந்திரமான பின்பு என்னால் தான்
என் நெஞ்சினார் என்ன வேண்டிற்று

தந்து போன தனி வளமே
என் நெஞ்சு தான் என்னை விட்டுப் போம் போது எனக்குத் தந்த
அத்விதீய ஸம்பத்தானது இது என்கிறார் –
தந்து போன தனி வளமே என்று –

—-

தாத்பர்யம்
தம்முடைய திரு உள்ளம்
பகவத் ப்ராவண்யம் அடைந்து அத்தாலே
பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிட்டாத-அஸஹ்யமாய் -பிறந்த ஸைதில்யம்
நாயகன் விரஹம் -நாயகி -சேர்ந்த நாயகன் இங்கு
கையும் திருவாழியுமாக சேவை சாதிக்க
அவன் சாத்தி அருளிய திருத்துழாயை ஆசைப்பட்டு அவன் பின்னே நெஞ்சு போக
தேக சவுந்தர்யாதிகள் அழிந்து
அது போனதால் இது வந்ததால் கொடுத்துப் போனதாக சொல்கிறார்
சூர்யன் இருளை பரிசாகக் கொடுத்து போனது போல்
சரீரம் வெளுத்து வைவர்ணயம் அடைந்தது
மற்றும் உண்டான தென்றல் முதலியவையும் பாதிக்க
இப் பாதகங்கள் எல்லாம்
ஒரு இரவு பல கல்பங்களாக பெருகத் தொடங்கிற்றே
நெஞ்சுடன் ஸஹவாசத்துக்கு நான் பெற்ற பலனே இது

———————

அவதாரிகை

இப்படி பகவத் லாபம் அடியான ஆர்த்தி அதிசயத்தாலே
தம்முடைய விவேகமும் குலைந்து (பகல் மறைந்து )
மோஹ அந்தகாரமும் விஞ்சி
ஸ்வ பாக ஸைதில்யமும் பிறந்து
விளம்ப அஷமதை அடியாக ரக்ஷக அபேக்ஷை பிறந்த ஆகாரத்தை
பிரிவாற்றாத் தலைமகள்
இருளாலும் வாடையாலும் ஈடுபட்ட உரைத்த பாசுரத்தாலே
அனுசந்தித்து அருளுகிறார்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய-இத்யாதியாலே –

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-

பதவுரை

தனி வளர்–ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல்–(தனது ஒளியாகிய) அரசாட்சியை
நடாவு–(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு–உஷ்ணத்துக்கு வாய் ஸ்தானமான வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய–ஒழிய
பனி வளர் செங்கோல் இருள்–(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும்–பூமி முழுவதும்
வீற்றிந்தது–அரசு வீற்றிருந்தது;
இனி–இனி மேல்,
நுனி வளர் காதல்–துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை–(தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு–அளைந்து வருகிற
தண் வாடை–குளிர்ந்த காற்றை
தடிந்து–தண்டித்து (அழித்து)
வளை–(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை
காப்பவர்–கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர்–யாருளர்?
(எவருமில்லை.)
ஊழிகள்–(கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை–என்னை
ஈர்வன–பிளக்குந்தன்மையுடையன.

உரை

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி
அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான
தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய்
உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
விரஹி ஜனங்களுக்கு நடுக்கத்தை வளர்கிற நிலையை யுடைத்தான
அந்தகாரமானது
லோகம் அடையத் தன்னுள்ளே யாக்கிக் கொண்டு
தன் பெருமை தோற்றும் படி இருந்தது

பனித்தல்
துளிர்த்தலும்
குளிர்த்தியுமாய்

துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதான காதலுக்கு விஷயமான திருத்துழாயை
அளைந்து வருகிற குளிர்ந்த வாடையைத் துணித்து

இனி வளை காப்பவர் ஆர்
ரக்ஷக ஸந்நிதி இன்றியே
பாதக ஸந்நிதி யுண்டான பின்பு
கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்

எனை வூழிகள் ஈர்வனனே
கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன
ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து

1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –

(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )

இத்தால்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
இவருடைய அனுபவ அலாப கிலேசத்தால் ஆதித்ய பிரகாசம் போலே
அத்விதீயமாய் அபி வ்ருத்தமாம் படி ஈஸ்வர ஆஜ்ஜை நடத்துவதால்
பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசனத்தாலே பிரதாப உத்தரமான விவேகத்தை யுடைய
ஸ்வரூபமும் (அனுபவ அலாப கிலேசத்தாலே ) அஸத் ஸமமாம் படி

(யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

(சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)

(ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -83-)

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அபிமத அலாபம் அடியான ஆந்த்யத்தை (அறியாமையை ) வர்த்திப்பிக்கிற
பெருமையை யுடைத்தான
மோஹ அந்தகாரமானது
ஈசேஸீ தவ்ய விபாகமறத் திரோதானம் பண்ணுகையாலே தானேயாய் விட்டது

துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு
ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற
சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி

இனி வளை காப்பவர் ஆர்
பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை
இனிக் கழலாமல் நோக்குபவர் யார்

(கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் )

எனை வூழிகள் ஈர்வனனே
விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும்
அழிக்கத் தேடா நின்றது
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ராத்திரியும் மற்றும் ஸ்மாரக பதார்த்தங்கள் எல்லாம் பாதகமாம் படியைச் சொல்லிற்று இறே கீழ்
இதில் அந்த ராத்ரி தானே அற இருண்டு
பாதக பதார்த்தங்களும் தனித்தனியே வந்து நலிய
அவற்றின் கையிலே நோவுபட்டு
இவற்றின் படி இதுவான பின்பு இனி நான் சத்தை கொண்டு ஜீவிக்கை என்று
ஓன்று உண்டோ என்று நோவு படுகிறாள்

வியாக்யானம்
வீற்று இருந்தது பார் முழுதும்
பனியை விஜ்ரும்பிக்க வற்றான சக்தி யுள்ள தமஸ்ஸானது லோகம் எங்கும்
தானே தானாய் ஸ்திரப்ரதிஷ்டித்தமாயிற்று

இதுக்கு மேலே
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதாக காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற
குளிர்ந்த வாடையால் ஸோஷிதையாய் க்ருசையானேன்

இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படியான பின்பு கை கழலத் தேடுகிற வளை கழலாத படி பண்ணுவார் யார்
இக் கங்குலும் எத்தனை கல்பமாய் என்னைப் பாதியா நின்றதே என்கிறாள் தலைமகள்
இவளை என்கிறாள் தோழி
இப்படி இருவகையால்
ஞான சூன்யரோடும் அஞ்ஞரோடும் இருப்பு அஸஹ்யமாய்
அவனைப் பிரிகையாலே அனுகூலரும் பாதகராவாரும் விடுவாருமாய் நோவு படுகிறாள் –

———

தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை –
காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு
வருந்திய நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்

பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி
தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து சர்வ பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க
அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்

இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இருள் மண்டிற்று
குளிர் நடுங்க தொடங்கிற்று
இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்
நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று என்னை நலிந்தது
இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே
நாயகனோ வரவில்லை
எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்

————-

அவதாரிகை
இப்படி பகவத் அலாபத்தாலே ஈடுபட்டவருடைய ஞான வை லக்ஷண்யத்தைக் கண்டு
கொண்டாடுகிறவர் பாசுரத்தை
தலைவி கண் அழகு கண்டு வியந்த தலைவன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-

பதவுரை

ஈர்வனவேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர்மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ–கண்களோ?

வியாக்யானம்

ஈர்வன வேலும் அஞ்சேலும்
கூரிய பார்வையாலே எதிரியை அழிக்கையாலே வேல்களாயும்
நீர்மையின் மிகுதியாலே செல்லாமை தோற்றுகையாலே சேல்களாயும் இருக்கிற இவை

வேல் என்கையாலே
நாயக அநுராக ஜனகமாய்க் கொண்டு ஈடுபடுத்தும் என்றபடி

சேல் என்கையாலே
பிரிவில் தரியாமை தோற்றுகிறது

ஆக உபய அநுராகமும் பிரகாசித்ததாயிற்று

ஈர்வன வேலும் அஞ்சேலும் -என்று
பாதகத்வ
போக்யத்வங்கள் இரண்டும் உண்டான படி

உயிர் மேல் மிளிர்ந்து
பிராணனை வசீகரிப்பதாக ப்ரவர்த்தியா நின்று கொண்டு

இவை
கீழ்ச் சொன்ன ஆகாரங்கள்
அபரோஷிக்கும்படியான இவை


இவற்றினுடைய வைச்சித்ர் யத்துக்கு ஆச்சர்யப்பட்ட படி

பேர்வனவோ அல்ல
உயிர் மேல் மிளிர்தல் தவிருமோ என்னில் தவிரா

அதுக்கும் மேலே
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்யமான ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையை யுடைய சரங்கள் ஆகிற
தாமரை நீலம் தொடக்கமான வற்றின் யுடைய மகத்தான பிரபையை
அனுபவியா நின்று கொண்டு காமுகதையை ஜநிபிப்பபவனாய் யுள்ளன

பேர் ஒளியே சோர்வன -என்று
ஒளியை பிரஸரிப்பன என்றுமாம்

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியுடைய ஸர்வேஸ்வரனதாய்
பரம வ்யோம ஸப்த வாஸ்யமான ஸ்ரீ வைகுண்டத்தையும்
தான் இட்ட வழக்காகக் கணிசியா நின்றன

இச் செழும் கயலே
தர்ச நீயமான ஸம்ஸ்தானத்திலே கயல்கள் என்று சொல்லலாம் படி இருக்கிற இவை

தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயேவ நிர்மிதா -பால-1-27-என்கிறபடியே
திவ்ய ஆகாரைகளான உங்களுடைய கண்ணாய் இருக்கின்றனவோ என்று
வியந்து உரைத்தலாய் இருக்கிறது

இது பாங்கியுடன் தன்னைப் புனத்திடைக் கண்டு மதி யுடன்படுத்த தலைவன்
குறை நயந்து உரைத்தல் ஆகவுமாம் –

இத்தால்
இவருடைய ஞான வை லக்ஷண்யம்
ஈர்வன வேலும் அஞ்சேலும்
வேல் என்றும்
சேல் என்றும் சொல்லுகையாலே
கூர்மையும்
நீர்மையும் தோற்றிற்று

ஈர்தலும் அழகும் சொல்லுகையாலே
எதிரிகளை வித்தராக்கி உகப்பிக்கும் என்றதாயிற்று

உயிர் மேல் மிளிர்ந்து -என்கையாலே
சேதனர் பக்கல் பூர்ண விஷயீ காரம் தோற்றிற்று

இவையோ பேர்வனவோ அல்ல -என்கையாலே
இந்த விஷயீ காரத்துக்கு குலைத்தல் இல்லாமை தோற்றிற்று

(ததீய சேஷத்வத்தைக் குலைக்க முடியாதே
மதுரகவி ஆழ்வார் பெற்று மகிழ்ந்தமை கண்டோமே )

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன -என்கையாலே
போக்ய விஷயத்தில் பக்தி காமரான திவ்ய புருஷர்களுடைய
ஸதா பஸ்யந்தி என்று இலக்குத் தப்பாத கிரணங்களுடைய பெரிய ப்ரகாஸத்தையும்
தன்னதாக்கிக் கொண்டமை தோற்றிற்று

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன -என்கையாலே
நித்ய விபூதியையும் ஸ்வா தீனமாகக் கணிசிக்கும் என்றதாயிற்று

(பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றாரே )

இச் செழும் கயலே-என்று
லீலா விபூதியில் அவதார அனுபவத்திலும் அவகாடம் என்றதாயிற்று

தைவம் அந் நீர கண்ணோ -என்று
நித்ய ஸூரி ஸமானரான வோபாதி ஞானமும்
லோக விஸஜாதீயமாய் இரா நின்றது என்று விஸ்மிதரான
அந்யர் பாசுரத்தை வெளியிட்டார் ஆயிற்று –

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நாயகனானவன் தலைமகளோடே கலந்து பிரிகிற சமயத்திலே
தன் ஈடுபாட்டாலும்
தனக்குத் தாரண அர்த்தமாகவும்
மேல் பிரிந்தால் இவன் தம்மை ஒழியவும் ஜீவிக்க வல்லன் என்று
அவள் நெஞ்சில் படாமைக்காகவும் அவள் அழகைக் கொண்டாடுகிறான் –

வியாக்யானம்
ஈர்வன வேலும்
ஈர்வனவான வேல் போலவும்
அஞ்சேலும்
அழகிய சேல் போலவும் இருக்கிற
இவை கண்ணோ
ஸ்வ கார்யம் செய்து தலைக்கட்ட வற்றாய் இருக்கையும்
தர்ச நீயமாய் இருக்கையும்
பற்ற வேலைச் சொல்லுகிறது
இரண்டாலும் செய்கிறது பின் அழியாமே நின்று கார்யம் செய்ய வற்றாய் இருக்கை –

உயிர் மேல்
அவ்வேல் போலே தோல் புரையே போமவை யல்ல
அசேத்யமாயும்
அதாஹ்யமாயும்
இருக்குமதிலே யாயிற்று வியாபரிப்பது

உயிர் மேல் மிளிர்ந்து
குத்தின வேலைப் புரித்து யுடைத்தால் போலே

இவையோ பேர்வனவோ அல்ல
பறித்துக் குத்த ஒண்ணாதே
அவ்விடம் தன்னிலே இடம் காணும் அத்தனை –

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
ஈர்வன வேலும் சேலும் என்று விசேஷித்தால் போலே
நாட்டில் காமன் தான் ஒப்பாகப் போராமை அவனையும் விசேஷிக்கிறதாயிற்று
அப்ராக்ருத ஸ்வ பாவனுமாய்
விலக்ஷணமாய் இருப்பான் ஒரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி பகவத அலாபத்தாலே நோவு படுகிற இவள் கண் அழகு கண்டு
விஸ்மயப் படும் நாயகனாய் ஈடுபடும்
தோழியினுடைய பாசுரத்தாலே
ஸ்வ ஞானத்தின் அழகில் நம்மை ஈடுபடுத்துகிறார்

வியாக்யானம்
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல
தன் கண்களுக்கு லஷ்யனான என்னை
வேதிப்பது கொண்டு வேலுமாய்
என்னைத் தன்னில் அநு ரக்தனாக்கி ஆகர்ஷிக்க வல்ல அழகிய மத்ஸ்யங்களுமாய்
என் ப்ராணன்கள் மேல் விழுந்து கார்ய க்ரூரத்தால் தன்னால் இவையே என்னவான
இவை நின்று வசீகரியாமல் தவிர்வன வல்ல


இது என்ன இதன் வசீகரண சக்தி என்று ஆச்சர்யப்படுகிற படி –

இவ்வளவோ இதன் கார்யம்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்ய ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையுள்ள காமனதான சரங்களினுடைய
மஹத்தான பிரபையைத் தன் ஒளியாலே அபஹரியா நின்றன

இவ்வளவில் தான் நிற்பதோ இவற்றின் சக்தி
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியை யுடையவளாய்
நம்மில் விளையாடும் ஸ்வாமியுடைய விண்ணில் வியாபித்ததாய்
அதில் தன் போன்ற கண்களைத் தேடா நின்றன

இச் செழும் கயலே
தர்ச நீய ஸம்ஸ்தானத்தால் கயல்களே என்று சொல்லலான இவை

தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயையே என்னலானதாய்
என்னை அந்ய பரன் ஆகாமல் பலாத்கரிப்பதான கண் தானோ
இவள் கண் தான் இவள் தோழிக்கும் இப்படி ஆகர்ஷகமாய் இருக்கிற படி –

————

தாத்பர்யம்

ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக்கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை –
நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்
அழகிய இரண்டு மத்ஸ்யம் போலே யும்
மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு
இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு
நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக்கொண்டு வந்தார்கள்
அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்

—————

அவதாரிகை –

இப்படி ஆழ்வாருடைய ஞான வை லக்ஷண்யத்திலே வித்தரானவர்கள்
இவர் ஞானத்தை ஸ்லாகிக்கச் செய்தே
அந்ய பரதை தோன்ற வர்த்திப்பார் சிலரைக் குறித்து
அவர்கள் ஹ்ருதய சோதன அர்த்தமாக
பார்ஸ்வஸ்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை

புனத்திடைக் களிறு வினவ வந்த கண் அழகைக் கொண்டாடின தலைவனைக் குறித்து
தோழி (பேச வந்த தலைமகன் )கருத்து அறிந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(ஆக இவர் இது தோழி பாசுரம் என்றே திரு உள்ளம் கொள்கிறார் )

(கயிறு வினவ வந்த கோஷ்ட்டி வேறே
ஆழ்வார் ஞானம் பேசும் கோஷ்ட்டி வேறே
உபாயாந்தர கோஷ்ட்டி அயலோர்
ஆழ்வார் இடம் அவர்களை இழுத்து பிரபன்னர் கூட்டத்தில் சேர்க்க எண்ணி
பார்ஸ்த்வத்த ஸூஹ் ருத்துகள் பாசுரத்தை என்றபடி )

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

பதவுரை

களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.

வியாக்யானம்

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
உங்கள் கண்கள் கயல் போலே இரா நின்றன என்று கொண்டாடி
கயிற்றை எங்கே என்று தேடி நில்லா நின்றீர்கள்
களிறு வினவினார் காணா விட்டால் போக அன்றோ அடுப்பது –
கண்ணைக் கொண்டாடுகைக்கும்
போகாமே நிற்கைக்கும்
என்ன சேர்த்தி யுண்டு
களிறு வினவி கயலோ நும் கண்கள் என்றார் என்று அந்வயம்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
புறம்புள்ளார் அறிவிலும் இது என்ன சேரா வார்த்தை
களிறு வினவி வந்தவருக்குக் கண் கொண்டு கார்யம் என் என்று
அயலோர் நினைப்பர் என்று கருத்து

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன்
பெரும் கடலை மண்டி யுண்டு கண்டவிடம் எங்கும் தூறலோடும் துளியோடும் திரிகிற
காள மேகம் போலே குளிர்ந்த திரு நிறத்தை யுடைய

புன வேங்கடத்து
புனல் சூழ்ந்த திருமலையிலே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–
நியமனத்தின் படியிலே கொல்லைக்கு அழிவு வாராமல் நோக்கிக் கொண்டு
போருகிற நாள்களும் பல பல யுண்டு
ஆண்டு தோறும் பல பல நாள்களும் காக்கின்றோம்

எம்மொடும் பயலோ இலீர்
எங்களுடன் பயிர்க்கூட்டு இல்லை
பயல் என்று
பாகமாய்
கூட்டுப் பயிர் இல்லை என்றபடி
ஆதலால் நிற்கிற இதுவும் மிகை என்றதாயிற்று –

இத்தால்
கயலோ நும கண்கள் என்று
எங்கள் தர்சனத்தையும் கொண்டாட நின்றீர்

(பிரபத்தி நிஷ்டை தானே எம்பெருமானார் தர்சனம் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
த்வமேவ உபாய பூதோ மே பவ
அத்யவசாயம் கொண்டாடுவது )

களிறு வினவி -என்கையாலே
ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா வந்தம் ப்ரமாதினம்
ஞான அங்குசேந க்ருஹ்ணீயாத் வஸ்ய இந்திரிய தந்தினம் -சுக்ர நீதி -1-98-என்று
காடு பாய்ந்து திரிகிற கடக் களிற்றைத் தேரோட்டி விட்டுப் பிடிக்க நினைப்பாரைப் போலே
இந்த்ரிய அநுதா வனத்திலே தேட்டமாய் இரா நின்றது –

(உபாயாந்தர நிஷ்டர்
இந்திரியங்கள் திரிய ஞானம் என்றும் அங்குசன் கொண்டு நாம் கட்டுப்படுத்த வேண்டும் இவர்களுக்கு
ஆழ்வார் ஹ்ருஷீகேசன் இடம் விட்டார் அன்றோ
கீதாச்சார்யன் அருள் கொண்டு அருளியவற்றையே அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினார் )

நிற்றீர் -என்கையாலே
இங்கு உண்டானது புறம்பு போக மாட்டு கிறிலீர் -என்றபடி

அயலோர் -என்று
இம் மர்யாதைக்குப் புறம்பானவர்கள் என்றபடி –
அதாவது
ஆழ்வார் ஞான வை லக்ஷண்யத்துக்குப் புறம்பாய்
ஸ்வ ஞானத்தாலே இந்த்ரிய வஸீ கரணம் பண்ணத் தேடும் உபாஸகரை நினைத்த படி

அறியிலும் -என்கையாலே
தேவாநாம் குஹ்யமான இந்த ஞான அநு ப்ரவேஸம்
உபாயாந்தர நிஷ்டர் அறியாமல் மறைக்கப்படும் ரஹஸ்யம் என்றதாயிற்று –

ஈது என்ன வார்த்தை -என்கையாலே
இந்த்ரிய வஸீ காரத்துக்குத் தான் யத்னம் பண்ணுகையும்
அநந்ய ஸாதனருடைய ஞானத்தை ஸ்லாகிக்கைக்கும்
ஏக அதிகாரிக்குச் சேராது என்றபடி

(ஞானத்தால் தானே இருவருக்கும் இந்திரிய வஸ்யத்தை செய்ய வேண்டும்
தர்ம வீர்ய ஞானத்தால் ரிஷிகள்
அருளின பக்தி ஆழ்வாருக்கு -அவனது ஞானத்தால் அவனே செய்து அருளுவான் அன்றோ )

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் -என்கையாலே
இந்த ஞான நிஷ்டருக்கு
1-உபாய பூதனானவனுடைய உள் நீர்மையால் உண்டான பூர்த்தியையும்
2-ஜல ஸ்தல விபாகம் இல்லாத உபகாரகத்வத்தையும்
3-ஸர்வ ஸந்நிதியையும்
4-தர்ச நீயமான விக்ரஹ யோகத்தையும் சொல்லிற்று

வேங்கடத்து என்று
உபாய பூதனானவன் உத்துங்கன் அன்றியே
ஸர்வ ஸூ லபனான அர்ச்சாவதார யுக்தன் -என்றதாயிற்று

புன வேங்கடத்து -என்கையாலே
அர்ச்சாவதார ஸ்தலமே போக ஸ்தானம் என்றபடி

எம்மொடும் பயலோ இலீர் -என்று
ஏவம் வித போக பாக்த்வம் உபாயாந்தர நிஷ்டருக்கு இல்லை என்றபடி

கொல்லை காக்கின்ற -என்று
இந்த போக ஸ்தானத்துக்கு ரக்ஷை இந்த அநந்ய ஸாதனருடைய நித்ய ஸந்நிதி என்றபடி

நாளும் பல பலவே–என்று
இவ்வதிகாரிகளுக்குப் போக அந்வயம் தத் தத் கால உசிதமாய்க் கொண்டு
அவிச்சின்னமாய் நடக்கும் என்றதாயிற்று –

கொல்லை என்று
வரம்பு அறுதியைக் காட்டுகையாலே அர்வாசீன போகம் போலே பரிச்சின்னம் அன்றியிலே
இருக்கும் என்றதாயிற்று (கொல்லை எல்லை என்றபடி )

ஆக
இப்படி ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்திலே அவகாடரானவர்கள்
உபாயாந்தர ஆகாங்ஷை யுடையாரையும் திருத்தி
உள்ளே புகுர விடும் பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைவனானவன்
பிற்றை நாள் தலை மகளும் தோழி மாரும் கூடப் புனம் நோக்கி இருந்த இடத்தே சென்று
தன் ஆயாஸத்தை ஆவிஷ்கரித்து
ஆற்றாமையைச் சொல்ல அத்தைக் கேட்ட தோழிமார் வார்த்தையாகச் செல்லுகிறது

வியாக்யானம்
கயலோ
இங்கனே ஓர் ஆனை போந்ததோ என்று சொல்லுவதாக மநோ ரதித்துக் கொடு போன அவன்
அவர்களோடே கிட்டிக் கண்ணுக்கு இலக்கனவாறே
சொல்லுவதும் அறியாதபடி கலங்கி கண்ணை ப்ரஸ்னம் பண்ணத் தொடங்கினான்

கண்கள் கயலோ என்றான்
இது ஒரு வ்யாஹத பாஷணம் இருந்தபடி என் என்ன

இங்கு ஒரு வ்யாஹதீ இல்லையீ -இதுக்கு சம்பாவனையும் இல்லையீ என்கைக்காக
கயலோ நும் கண்கள் என்கிறான்

இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் பண்ணி வ்ரீளை யாலே கவிழ்ந்து இருந்தார்கள்
அநந்தரம் தப்பினோம் ஆகாதே என்று வாஸனை கை கொடுத்து களிறு வினவத் தொடங்கினான்

திரியட்டும் இவன் இந்த அசங்கத பாஷணம் பண்ணத் தொடங்கினான் என்று அறிந்து
கேளாமைக்காக முகத்தை மாற வைத்தார்கள்

பின்னை அதுவும் கூடச் சொல்ல மாட்டாதே
ஸ்தப்தனாய் நின்றான்

தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து தரிக்க வந்தவனை முடிய நிஷேத வசனத்தைப் பண்ணினால்
பின்னை அவனுடைய ஸ்வரூப ஸ்திதி இல்லையே
என்றதுக்காக நேரே முகத்தைப் பார்த்து
பாவீ நீ இது என் சொன்னாய் -என்கிறார்கள்
இவன் தன்னை உளனாக்கிக் கொண்டு நின்று வார்த்தை சொல்ல வேணும் என்று

அயலோர் அறியிலும்
நாங்கள் அறிந்தோம் என்கை
நீர் தான் இதுக்கு முன் கண்டு அறியாதார் ஒருவராய் இரா நின்றீர்
நாங்கள் தனியே இருந்த இடத்தே இது என் சொன்னீர் என்கிறார்கள்
நாங்கள் இருக்கிற இடத்திலே வந்து அசங்கத பாஷணங்களைப் பண்ணா நின்றாள்
இவ்வார்த்தையில் உள்மானம் புற மானம் அறியாதார் என் நினைத்து இருப்பார்கள்

அறியிலும்
உள்ளுள்ளார் குமிழி நீர் உண்ணா நிற்க
புறம்பு உள்ளாருக்கு அறிய ஒண்ணாது இறே
ஆனாலும் பாஷிக தோஷமாய் வருமாதுவும் பரிஹரிக்க வேணும் இறே

ஈது என்ன வார்த்தை
அனந்விதமுமாய்
அபார்த்தமுமாய்
இரா நின்றதீ
முன்னிலை வார்த்தைக்கும் பின்னில் வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லாமையாலே
அசங்கத பாஷணமாய் இரா நின்றதே
முன்பே அற்ற எங்களை
இப்போது அறுகைக்குச் சொல்லுகிறது ஆகையாலே ப்ரயோஜன சூன்யமாய் இரா நின்றதே

அன்றிக்கே
அடிக்கழஞ்சு பெறும் சீரிய வார்த்தையாய் இருந்ததீ

இத்தால்
தங்களுடைய ஈடுபாடும்
நிஷேதமும்
இரண்டும் தோற்றச் சொல்லுகிறார்கள்

ஈது என்ன வார்த்தை
என்று வார்த்தையைக் கொண்டாடுகிறார்கள்

அயலோர் அறியிலும் என்று
உள்ளீட்டைக் கொண்டாடுகிறார்கள்

கடல் கவர்ந்த
உம்மை முன்பு கண்டு அறியோம்
எல்லா

———-

பேராமலே நின்றான்
இவள் அவன் பாவஜ்ஜையாய்
அதுக்குத் தானும் உள்பட்டாளாய்
இது என்ன வார்த்தை என்று இவள் சொல்லி
என்தான் முன் உன்னோடு நமக்கு அந்வயம் இல்லையோ -என்னும்படியான அவன் பாவத்தை
நாங்கள் புனத்தில் பண்ணும் பயிரில் உமக்கு அந்வயம் இல்லையே என்று அந்யதா கரித்துச் சொல்ல
ஆகில் நீங்கள் இங்கே நிற்பான் என் என்று அவனும் கேட்க
இக்கொல்லை காக்க நாள் தோறும் வந்து நிற்பன் நான்
உமக்கு என்னில் இப்படிகள் தகுமோ -என்கிறான்
கயலோ நும கண்கள் -என்கிற இதில்

வியாக்யானம் –
கயலோ நும் கண்கள் என்று
களிறு வேட்டைக்கு வந்தவரைப் போலே உன் கண்கள் கயல் போல் இரா நின்றது என்று கொண்டு

களிறு வினவி நிற்றீர்
களிறு எங்கே என்று தேடி நில்லா நின்றீர்
உறவு என்ன உமக்கு என்னோடு என்று இவளுக்கு ஸ்வ கதம்
இப்படி இவள் சொல்ல என் தான் என்னும்படி அவன் சில சொன்னான்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
என்கிறாள்
அயலார் அறியும்படி வரிலும் வரும்
இது என்ன அசங்கத பாஷிதத்தைச் சொல்லா நின்றீர் என்று அபிப்ராயம்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8- என்பதான
சுத்தாந்த சித்தாந்திகள் அன்றே அயலார்
மாதவர் இவரே
ஏவம் பூதன் என் கணவன் என்னுமத்தை ஸூ சிப்பிக்கிறாள்
நீர் யாரோ என்பதானதாய்

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
பெரும் கடல் மண்டி யுண்டு எங்கும் வர்ஷிக்கலான சஞ்சாரம் உள்ள காள மேகம் போலே
குளிர்ந்த நிறத்தை யுடையவனுடைய வேங்கடத்தில் உள்ள புனத்தில் என்னோடு உமக்கு
கூட்டுப் பயிரும் இல்லையே
உமக்கு என்னோடு என்ன சம்பந்தம் என்றபடி

இங்கே வந்து நிற்பது நீ நம்மை ஆசைப்பட்டு அன்றோ என்னப் புக
கொல்லை காக்கின்ற
என்கிறாள்
நாங்கள் இங்கே வந்து நிற்பது கொல்லை காக்கைக்காவே காண்
என் உன் ரஷ்ய ரஷாக பாவத்துக்கு நான் இல்லை என்று தான் நீ இல்லை என்று தான்
குறை சொல்ல வல்லையே
நாளும் பல பலவே–

———–

அவதாரிகை
இப்படி ஆழ்வாருடைய வை லக்ஷண்யம் கண்டு ஸம்ஸ்லிஷ்டரான பாகவதருடைய
ஸம்ஸ்லேஷ தசையிலும் விஸ்லேஷ தசையிலும்
காலத்தினுடைய அத்யல்பத்வாதி மஹத்வங்கள் அடியாகத் தம்முடைய ஸைதில்யத்தைத்
தம்முடைய ஸூஹ் ருத்துக்களுக்கு அருளிச் செய்த பாசுரத்தை
தலைவி தன் பாங்கியருடன் வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பதவுரை

கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.

பல பல ஊழி கள் ஆயிடும்
பல அவாந்தர கல்பத்தை யுடைத்தான பல மஹா கல்பமாகா நிற்கும்

அன்றியோர் நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அந்தக் கல்பம் தான் தன் அவயவ ஏக தேசமான ஒரு நாழிகையைப் பல பலவாக
கலா ரூபத்தாலும்ம காஷ்டா ரூபத்தாலுமாகக் கூறிட்ட கூற்றிலே ஏக தேசமாகா நிற்கும்

கண்ணன் விண் அனையாய்
கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ ந யத் விபூதே பரிணாம ஹேது என்னும்படி
அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல நாள் அன்பர் கூடிலும் காலம் அத்யல்பமாகையாலே யாம் மெலியா நின்றோம்
பல பல நாள் அன்பர் நீங்கிலும் நாடோறும் காலம் அதி மஹத்தாகையாலே யாம் மெலியா நின்றோம்

ஆகையால்
இப்பாய் இருளே பல பல சூழல் உடைத்து
இந்தப் பாய்ந்த இருள் சிறுமைக்கும் பெருமைக்கும் பல விரல் யுடைத்தாய் இரா நின்றது

அம்ம வாழி
அம்ம -இது ஒரு வாழ்வு இருந்தபடியே என்று ஆச்சர்யப்படுகிறாள்

இத்தால்
இப்பாய் இருள் என்று
மோஹ அந்தகார ஜனகமான இக்காலமானது என்றபடி

பல பல இத்யாதி
இங்கும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ தசைகளில் கால அத்யல்ப அதி மஹத்வங்களைச் சொல்லுகிறது

விண் அனையாய் -என்று
க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —
அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்;
பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்கையாலே
இக்காலத்தினுடைய உபய வித பரிணாமம் ஸைதில்யாவஹம் என்றபடி

அம்ம வாழி -என்று
தான் நினைத்த வடிவைக் கொள்ளவற்றே என்று ஆச்சரியப்பட்டார் ஆயிற்று –

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் ஆழ்வார்
பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –
தோழியுடன் கூடி பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்
பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது
தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி
சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வகாலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்
அந்த இரவே வாழட்டும்

——————————————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத தலை மகள்
அவனை ஒழியத் தனக்கு காலம் சென்றிட அரிதாகிற படியைத் தோழியைப் பார்த்து சொல்லுகிறாள் ஆதல்

அன்றிக்கே
ஸம்ஸ்லேஷ அநந்தரத்திலே பாங்கிமாரும் தானுமாய் இருக்கிற இருப்பு உண்டு இறே
அதிலே இராத்ரியிலே போகம் விருத்தமான படி என் என்று கேட்க
வ்ருத்தமான படியைச் சொல்லுகைக்கு போகத்துக்குக் காலம் உண்டாயிற்றோ
பிரிவில் காலம் நெடுகுமா போலே இறே கூடினால் காலம் குறுகும் படி -என்கிறாள் ஆகவுமாம்

இதிலே இவை இரண்டுமே உண்டு
ஒன்றைப் பிரதானமாக்கி ஒன்றை ஆனு ஷங்கிகமாகக் கொள்ளும் அத்தனை இறே

புணர்ந்து நீங்கின தலைமகனைச் சிறைப்புறத்திலே கண்டு தோழி என்றோரு பேரையிட்டு
அவனை ஒழிய தனக்கு உண்டான செல்லாமையை அவன் நெஞ்சிலே படுத்துகிறாளாய் இருக்கிறது

இத்தால்
ஒரு நாளும் பிரிவின்றிக்கே நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணுகையில் தனக்கு கருத்து என்னும்
இடம் தோற்றச் சொல்லுகிறாள் –

(தேஷாம் சதத யுக்தாநாம் –ததாமி புத்தி யோகம் —
எப்போதும் கூடி இருக்க வேணும் என்று விரும்புவனுக்கு என்று கொள்கிறோம் )

இப் பாசுரம் தோழி வார்த்தை யாகவுமாம்
இவளைக் காட்டில் இவள் தோழியானவள் அவன் படி அறிந்து இருக்கும் இறே –

அயோத்யா மக்களைக் கூட்டி வந்த பரதாழ்வானுக்கு குகப்பெருமாள் இளைய பெருமாள் சரித்ரத்தைக் கூறினான்
யாரைப்பற்றி யார் இடம் பேசுவது –
ஆச சஷே-கூறினான்
குகோ ககன கோசர-காட்டு வாழ் சாதி
மனசுக்கும் கூட அகோசரமான விஷயத்தை வாயாலே பேசினான்
அத -இதுக்கு முன்னால்
முன்பு இவன் கைகேயி
பெருமாளுக்கு நல்லான் என்று அறிந்த பின்பு சின்னான்
ஸத் பாவம்
லஷ்மனோ லஷ்மி வர்த்தந
பெருமாள் திருவடிகளில் அதிப்ராவண்யமே இவனுக்கு ஸத் பாவம்
லஷ்மணஸ்ய
கடலைக் கையாலே இறைக்கக் கோலுவாரைப் போல் தலைக்கட்டு
பரதாய குக
யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்று விவஸ்தையே இல்லையே
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரோதா
ஸ்ரீ குகப்பெருமாள் வக்தா
அப்ரமேயா பரதா
இளைய பெருமாளை பிரகாரம் அறிந்தேன் என்று பேசத்தொடங்கினான்
இவனது பிரபாவம் புத்திக்கு எட்டாதே
காட்டிலே சுத்தி திரிந்த குகன்
பிரிந்தால் தானே சுகம் என்று சொல்லி பிரிந்த பெருமாள் –
பின்பு குகன் மரத்தில் அடியில் தலையை மடுத்து இருந்தவன் பெருமாளுக்கு நல்லான் என்றவனைக் கண்டவன் எழுந்து பேசுகிறான்
நம்பியும் நாயகனை ஒக்கின்றான்
தவம் வேடம் தலைக் கொண்டான் -பேச முடியாதே
காட்டில் உள்ளவற்றை தனித்தனியே பதார்த்தங்களை அறிநதால் போல் இளைய பெருமாள் குணம், முழுவதும் அறிந்து பேசுகிறான்
அன்றிக்கே
எங்கே பிறந்து வளர்ந்தவன் ஆறு வார்த்தை சொல்கிறான் என்று ரிஷி கொண்டாடுகிறான்
காட்டிலே பிறந்து மரங்களை அறிந்தவன்
இவனோடு ஓக்க பிறந்தவனைப் பற்றி சொல்கிறான்
இன்னார் சொல்ல இன்னார் கேட்க என்னும் நியதி இல்லையே
தேசிகர் சொல்லும் அத்தனை
கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே அன்றோ

பல பல ஊழி கள் ஆயிடும் —
எண்ணிறந்த அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –

அன்றி –இத்தை ஒழிய –
யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் –
இதனுடைய பரப்புக்கு எல்லை இல்லாதவோ பாதி
ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில்
ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே
உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி–
போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி

கண்ணன் விண் அனையாய்-
தலை மகள் வார்த்தை ஆன போது
அகால காலத்தில் உள்ளார் பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..

தோழி வார்த்தை ஆன போது
பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
நீ நித்ய விபூதி போல் அன்றோ அழிய விடமாட்டான்
முக்தருக்கு லீலா விபூதி ததீயதத் ஆகாரத்தால் த்யாஜ்யமாக இருக்காது
கர்ம நிபந்தமான ஸ்ம்ருதி இல்லாமல் ததீயத்வ ஆகாரம்
தாதார்த்தம் -அவன் பிரயோஜனத்துக்காகவே அறிந்து சேஷத்வத்திலேயே அந்வயித்ததே

சம ஸுகம் துக்கம் உண்டே தோழிக்கும்
சுக்ரீவர் மஹாராஜர் பெருமாள் இடம் கண்டோமே

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,
நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —

தன் வார்த்தை –
கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )
ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் ,
பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்

கூடின எல்லா நாளுக்கும் ஒக்கும்

தோழி வார்த்தை- ,
நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்
அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –
குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் –

சம்போகத்துக்குக் காலமே இல்லையே
நீங்கிலும்
நீங்க மாட்டான்
அப்படியே நீக்கினாலும் ஸம்ஸ்லேஷ வர்த்தகத்துக்காக பிரிந்தான் அன்றோ

இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி-
அன்பர் பிரிகையாலே –

பல பல சூழல் உடைத்து-
விசித்திர சக்தன் அவன் என்று இருந்தோம்
காலத்துக்கு இப்படியா
நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே,
கலவிக்கு முன்னிலையாய் ,
விஸ்லேஷத்தில் வந்தால் –
சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று
அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்

அம்ம .
அம்மே என்ற படி-

ஒரு சொல்லாக்கிச் சொல்லலாம்
அன்றிக்கே
அம்ம
ஹிம்சிக்க பதார்த்தம் போல் வெறுத்து பேசுகிறாள்

வாழி-
தன் வார்த்தை யான போதைக்கு —
வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —

தோழி வார்த்தை யான போது —
இவ் அவசாதம் நீங்கிடுக-
நீயும் வாழ்ந்து இவளையும் வாழ வைக்க மாட்டாயோ
ஆயுஷ்மன் -ஜடாயு என்றால் போல் இந்த இருளும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்றவாறு

இப்பாய் இருளே –
பரந்த இருளே முன்னிலை யாக –
கடல் கண்ணால்பார்த்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதது போல் இந்த இருளும்

இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-
காலக்ருத பரிணாமாதிகள்
வியதிரிக்தருக்கு அர்த்த காமங்களுக்கு உறுப்பாகும்
ஆழ்வாருக்கு எப்போதுமே பகவத் தசையில் ஆழ்வதற்கே உறுப்பாகும்
பக்தியின் சிறப்பு

தோழி வார்த்தையான போது
ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப்பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி

ஆசையாக சுமந்திரன் நின்றானே
இரண்டு நாள் நின்றாலும்
பலப்பல நாள் அங்கேயே இருந்தான் என்று ஸ்லோகம்
ஐயருக்கு போர பழைய நாள் போந்தீர்
ஆய்ச்சிமாரையும் அயோத்யா மக்களையும் ரக்ஷித்து போம் என்று விடை கொடுக்க நின்றான்
திவசம் பஹுன் -காலம் நெடுங்கிய படி
அதே போல் இங்கும்
குகப்பெருமாள் உடன் தானே நிற்கிறான் -ஆனால் காலம் நெடுக வேண்டுவான் என்
பகவத் ஸம்ஸ்லேஷம் இல்லாத பாகவத ஸம்ஸ்லேஷம் மட்டுமே போதாதே

நினைவு படுத்த கூட இவர் இருக்க ஆற்றாமை தானே விஞ்சும்
பிரிவாற்றாமையால் தானே அவனும் -ஸ்ம்ருதிக்கு உத்போதகர் அவன் தானே

ஸ்ரீ குஹப்பெருமாளோடே நின்றானாகில் இவனுக்கு காலம் நெடுகுவான் என் என்று பிள்ளை கேட்டருள
ஸம்ருத்திக்கு உத்போதகர் உண்டானால் காலம் நெடுகும் அத்தனை இறே என்று ஜீயர் அருளிச் செய்தார்

ஆசயா யதி மாம் ராம புந சப்தா பயேதிதி -அயோத்யா -59-3-
ஸூமந்த்ரா நீ போ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுவாரோ என்றாகிலும் நின்றான் அன்றோ –

————

ஸ்ரீ பெரிய பரகாலன் ஸ்வாமி வியாக்யானம்

கீழ்ப்பட்ட காலம் எல்லாம் உன்னைப் பிரியாது இருந்தவன் இப்போது அத்யல்ப காலம் உன்னைப் பிரியவே
உன் முன்னே வந்து நிற்கப் பெற்றவனை இங்கனே சொல்லி விடவோ என்று சொன்ன உயிர்த் தோழியை
கண்ணனுக்கு விண் போலே அதி ப்ரியை யானவளே என்று ஸம்போதித்து
கேளடீ பல பல நாள் அன்பர் கூடிலும்
ஒரு நாழிகையை ஆயிரமாக விபஜித்தால் அதில் ஒரு பாகமாய்ப் போமடீ

அங்கன் அன்றியே
நீங்கிலும்
பிரியிலும் பிரிந்த ஒரு க்ஷணமும் பல பல கல்பமாய் விடும் காண்
இது அன்புடையார் ஸ்வ பாவம் இருக்கும் படி

பா ஸ்வ பாவமிடீ
நாங்கள் பிரிந்த காலம் அதி மஹத்தாகையாலே மெலியா நின்றோம்
இப்படிப் பிறந்த இருள் என்னைச் சூழ்கைக்கு பல விரகு யுடைத்தாய் இருந்தது

அம்ம
சிறு பெண்ணே
என்னோடே நீயும் அவசன்னை யாகா நின்றாய்

உன் அவஸாதம்
வாழி
நீங்கி நன்றாய் இருக்க வேணும் என்கிறாள்

அவன் கீழ் களிறு வினவி நின்றதுவும் என்னைப் பிரிந்து இருக்க மாட்டாமையால் இறே
அத்தால் அவனைத் தன் போல்வனாக்கிக் கூட்டிக் கொண்டு
யாம் -என்கிறது –

———————————

அவதாரிகை
இப்படி அபிமதரான பாகவதருடைய விஸ்லேஷ தசையில் அவர்கள் பக்கல் தமக்கு ஆஸ்வாஸ ஜனகமான
மநோ ரத ஸரணியைக் குலையாது ஒழிய வேணும் என்று
ஸம்ஸார ஆர்ணவத்தை அபரோக்ஷித்து உரைத்த பாசுரத்தைத்
தலைவன் பிரிந்து போன நேர் வழி தூரல் என்று
கடலை நோக்கி இரந்த தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

பதவுரை

இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற
நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக-

உரை

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு
இருள் பரம்பினால் போலே இருக்கிற கறுத்த நீர்த் திரையைக் கொண்டு

மா நீர் -என்று
பெரிய நீர் என்றுமாம்

வாழியரோ

இருள் பிரிந்தார்
என் பக்கல் அன்புடையவர் யாகையாலே
அயல் அறிய ஒண்ணாது என்று இருளிலே பிரிந்து போனவருடைய

தேர் வழி தூறல் ,
எனக்குக் கண்டு தரிக்கைக்கு உடலான நேர் வழியைத் தூராது ஒழிய வேணும்

அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக்
கருவாகச் சமைத்த ஆதித்யன் ப்ரபையை உமிழுமாப் போலே

இருள் விரி சோதி பெருமாள் உறையும்
இருண்டு விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற

எறி கடலே–
எறிதல் -கொந்தளித்தல்

எறிகிற கடலே -வாழியரோ
வாழியரோ என்று தேர் வழி தூராமைக்கு வாழ்த்துகிறாள் –

இத்தால்
எறி கடலே என்று
பாத்ய பாதக பாவத்தாலே கொந்தளிக்கிற ஸம்ஸார ஆர்ணவத்தைக் காட்டுகிறது

அரவணை மேல் என்று தொடங்கி
பகவத் சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
தமக்கு விருத்தாசரணம் பண்ணாமைக்கு உறவு சொல்கிறாள்

இருள் பிரிந்தார் அன்பர் என்று
இருள் தரும் மா ஞாலமான -திருவாய் -10-6-1-ஜகத்திலே
ஸ்நிக்த பந்துக்களான
பாகவதர் விஸ்லேஷித்தார் என்றபடி –

மச் சித்தா மத்கத ப்ராணா –ஸ்ரீ கீதை -10-9- இத்யாதியாலே
துணைத் தேட்டமாய் இருப்பது இத் தேசத்திலே இறே

தேர் வழி தூரல் -என்கையாலே
ஸாம் சாரிக கோலா ஹலம் மேலிட்டால் தத் விஷய மநோ ரத ஸரணியும் குலையும்
என்று நினைத்துக் குலையாமையை அபேக்ஷித்த படி

இருள் விரிந்தால் அன்ன -இத்யாதி
மோஹ அந்தகார பிரசரத்தைப் பண்ணும் வாஸநா கல்லோலம் சைத்தில்ய ஹேது என்றபடி

வாழியரோ என்று
தம் ஆற்றாமையாலே இம் மநோ ரத ஸரணியைக் குலையாமைக்காக பாதகரை வாழ்த்துமா போலே
மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை
தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று
சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல்
விஸ்லேஷ துக்கம் அறியாய்
இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்
அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தலைமகன் கலந்து பிரிந்து போனானாய்
இவளும் தேர்க்கால் சுவட்டைத் தனக்குத் தாரகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாளாய்
இனித்தான் பிரிந்தார் இரங்கும் நிலம் நெய்தல் நிலமாகையாலே கடற்கரை யாய் இருக்கும் இறே
அத்தேர் சுவட்டை அலை வந்து அழிக்கப் புக
அத்தை அழியாதே கொள் -என்று அதின் காலிலே விழுந்து கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
இருள் பரம்பினால் போலே இருக்கிற பெரிய நீர்த் திரைகள் ஆகிற கையைக் கொண்டு
அபாம் அபி -சுக்லம் என்று கொண்டு காலத்துக்கு குணம் வெளுப்பாகச் சொல்லா நிற்கச் செய்தே
மா நீர் -என்றதைக் கொண்டாயிற்று இருட்சியைச் சொல்லிற்று
பரப்பாலும் நீர்ச் செறிவாலும் கறுத்துத் தோற்றும் இறே
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு தேர் வழி தூரல் -என்னவாயிற்று உபக்ரமித்தது
கடல் மலை போலே நடுவே வந்து அத்தை அழிக்கில் செய்வது என் என்று
வாழியரோ என்று
அதின் காலிலே விழுந்து சரணம் புக்கு அத்தை நியமிக்கிறாள்
தன்னைப் புரிந்தவன் செய்ததைத் தானும் செய்கிறாள்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா -யுத்த -21-1-

விஸ்லேஷத்தில் அவர்களோடு சம்பந்தம் உள்ளது ஓன்று கொண்டாகிலும் தரிக்க வேண்டும்படியாக
இவருக்குப் பிறந்த தஸா விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸோபி ரேணுர் ந லஷ்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-8-31-

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்பாட்டின் வகுப்பு இப்படி –
கண்ணன் விண்ணனையாய் -பல பல நாள் அன்பர் கூடிலும் ஒரு நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அன்றி
நீங்கிலும் யாம் மெலிதும் பல பல ஊழிகள் ஆயிடும்
அன்பர் யாம் மெலிதும் பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-
என்று
தன்னோடு ஸம்ஸ்லிஷ்டனான தன் தலைமகன் அவ்விருளிலே தானே ஒரு கார்யத்துக்காகப் பிரிந்தவனாய்
கடற்கரையிலே தேர் ஏறிப்போக அதின் மார்கம் அழியும் படி தரங்க விஜ்ரும்பணமுள்ள கடலைத்
தன் தலைவன் வர்ணத்தாலும் ஸம்பந்தத்தாலும் உள்ள ஸ்நே ஹத்தைப் புரஸ்கரித்து
அதின் மார்க்கத்தை அழியாமைக்காகப் பிரார்த்திக்கிறாள்
பிரிவில் கடலும் தத் வியாபாரமும் துஸ் ஸஹமாய்
இருள் விரிந்தால் -என்று இதில் –

வியாக்யானம்
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு –
இருள் பரம்பினால் போலே இருக்கிற உன்னுடைய மஹா ஜலமயமனான அலைகளைக் கொண்டு

இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி
அன்பானவன் இந்த அந்தகாரத்தில் பிரிந்தவனாய்த் தேர் ஏறிப் போம் வழியை

தூரல் ,
அழியாதே கொள்ளாய்

எத்தால் நம்மை நீ இப்படிப் பிரார்த்திப்பது என்ன
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–
என்கிறாள்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக் கருவாக உண்டாக்கின
அதி நீல ஆதித்யனுடைய ப்ரபையை உமிழுமா போலே
இருள் போலே விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன் நித்ய வாஸம்
பண்ணுகிறானே உன்னில் என் கணவனவன் அவநதான தேர் மார்க்கத்தை
தூரல்
அலைகளை வீசி எறியும் கடலே
வாழியரோ -என்று
தேர் வழி தூராமைக்குச் சொல்லுகிறாள் ஆயிற்று –

——————

அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹரான இவருக்கு அனுபவ யோக்ய காலத்தில்
ப்ராப்ய அலாப்ய நிபந்தனமான ஆர்த்தியைக் கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூஹ்ருத்துக்களான பாகவதர் சொன்ன பாசுரத்தை
கார் காலம் கண்டு அழிந்த தலைவி ஆற்றாமை கண்டா பாங்கி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

பதவுரை

கடல்கொண்ட–கடலளவினதான
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல்தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)

உரை

கடல் கொண்டு எழுந்தது வானம்
ஆகாசமானது கடலைக் கிரஹித்துக் கொண்டு கிளம்பிற்று என்னலாய்

அன்றி-அவ் வானத்தை
அன்றி அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கோபித்து

கடல் -சென்று – கொண்டு ஒழிந்த அதனால்
கடல் தான் சென்று கொண்டு விட்டது என்னலாய் இருக்கையாலே

இது
இந்த அவஸ்தை

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ

புயல் காலம் கொலோ
கார் காலமோ

காரிகை கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும்
அழகு வடிவு கொண்டால் போலே இருக்கிற இவள்
திரை கொள்ளும் படியான கண்களிலே
நீராலே அருவியைப் பண்ணா நின்றாள் என்று
காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்தாள் யாயிற்று

காரிகைக்கு -என்ற
பாடமான போது
இவர் கண்ண நீர் அருவி செய்யா நின்றது என்றபடி

மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ-என்று
எல்லாவற்றுக்கும் முடியும் காலமோ
நமக்கு என்று வந்த கார் காலமோ என்கையாலே
ஆற்றுதலுக்கு உறுப்பான கால மயக்கம் அன்று –

இத்தால்
கடல் கொண்டு எழுந்தது வானம் -என்று
பரம வ்யோமமானது ஸம்ஸார ஸாகரத்தைக் கபளீ கரித்தது -என்னலாய்
அவ்வானத்தை என்று
(அசித் சித் வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே )

அன்றியே
இஸ் ஸம்ஸார சாஹரம் தான் பரம வ்யாமத்தோடே ஏகீ பவித்தது என்னலாம் படி இருக்கையாலே

(சூழ் விசும்பு அணி முகில் இப்பாட்டுக்கு விரிவு
சம்சாரம் முக்தனுக்குத் தானே தொலையும் )

கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபி சாப்யய-என்று
அவன் தான் விபூதி த்வயத்தையும் உப ஸம்ஹரிப்பதாக
(மண்ணும் விண்ணும் -பரமபதத்தைச் சொல்ல வில்லை )
கால அகால யதாம் அஹம் -ஸ்ரீ கீதை -10-30- என்கிறவன் தானாம்படியாக ஒரு காலம் வந்ததோ
இவருடைய ஸைதில்யம் இருந்தபடியோ
இரண்டு விபூதியும் அழியுமா போலே இருந்தது என்று சங்கா வஹமாய் இருக்கை

புயல் காலம் கொலோ -என்று
இவருடைய ப்ராப்ய த்வரையை அறிக்கைக்காக (அறிவிக்கைக்காக ) வந்து
ஆர்த்தியை ஜனிப்பிக்கிற தொரு கால விசேஷமோ

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –
பாரதந்தர்யத்தை அனுசந்தித்து இருக்கப் ப்ராப்தமாய் இருக்க
அபரிச்சின்னமான ஞானத்துக்குக் காலுஷ்யம் பிறந்து நடவா இருந்தது என்று
சிதிலராய்ச் சொன்ன பாசுரமாய் இருந்தது –

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இது போய் பகவத் விஷயத்திலே மூட்டும் இறே
இதுவும் ஒரு கால மயக்கமாய் இருக்கிறது
இவர் தமக்குப் பல இடங்களிலும் வருமாயிற்று கால மயக்கு
அவற்றுக்கு எல்லாம் மூல ஹேதுக்கள் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -1-என்ற
அநந்தரமே தொடங்கி பகவல் லாபத்தோடே செல்ல வேண்டி இருக்க
அது கிடையாமல் பிறந்த ஆற்றாமையைப் பார்ஸ்வஸ்த்தருக்கு ஆஸ்வசிப்பித்தும்
ஜீவிப்பிக்கிறது பரமாய் இருக்கும் இறே
ஆகையால் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்துப் போனானாய்
அக்காலமும் வந்து அவன் வாராமையால் பிறந்த ஆற்றாமை

கண்ணன் இத்யாதி
சர்வேஸ்வரனுடைய
பூமி அந்தரிக்ஷம் ஸ்வர்க்காதிகள் அடைய -பிரளயம காலமோ
வர்ஷா காலமோ
இரண்டாலும் உனக்கு இழவு இல்லை
அஸத் ஸமமாய்க் கிடக்கும்
உண்டது உருக்காட்டாமல் அவன் இருப்பானே
தான் உளனாக உண்டாக்குமவன் -உன்னையும் உண்டாக்கி விடுவானே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹ மானை யான தலை மகளுடைய போக யோக்கியமான காலத்தில்
அவன் வாராமையாலே
வந்த ஆர்த்தி அதிசயத்தாலே புறப்படும் கண்ணீர் வெள்ளத்தைக் கண்ட இவள் தாயார்
அத்தைச் சொல்லிக் கொண்டு இக்காலம் பிரளய காலமேயோ வர்ஷா காலம் தானோ என்று
தானும் ஏங்கி அவசன்னை யாகிறாள்
இப்பாசுரத்தில் –

வியாக்யானம்
கடல் கொண்டு எழுந்தது வானம்
மேகமானது கடலை அடி மண்டியோடே பருகினதாய் எழும்பிற்று

அவ் வானத்தை அன்றி சென்று
அன்றி -அவ்வானத்தைத் தான் கபளீ கரித்து அன்று விடாததாய்ச் சென்று
ஸ்வயம் விஜ்ரும்பித்து எழும்பினதாய்

கடல் கொண்டு ஒழிந்த
கடலானது அவ்வானத்தைக் கபளீ கரித்துக் கொண்டு
ஸ்வயம் அதி மஹத்தாய் எழுந்தது ஆயிற்று

அதனால் இது
அந்தக்காரணத்தாலே இக்காலம்

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ
கிருஷ்ணம் பூமி ஆகாச சமுத்ரங்களை வயிற்றிலே வைத்துக் கொண்டு விஜ்ரும்பித்த மஹா ப்ரளயமோ

புயல் காலம் கொலோ
மேகங்களே விஜ்ரும்பித்து எழும்பி வர்ஷிக்கும் காலம் தானோ


இது என்ன காலமாயிற்று

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
காரிகை -இவ்வவஸ்தை பொறுக்க மாட்டாத அபலையான சீர்மை யுள்ளவள் –

கடல் கொண்ட கண்
கடலைத் தோற்பித்த கண்
அது யுடையவள்
அக்கண்ணீர் அருவிகளையே சொரியா நின்றாள் என்று அவசன்னை யாகிறாள்
இது கால மயக்குத்துறை –

——————-

அவதாரிகை
இப்படி அனுபவ யோக்ய கால தர்சனத்தாலே ஈடுபட்ட இவருக்கு ஈஸ்வரன் சடக்கென
அனுக்ரஹம் பண்ணாதே
விளம்பிக்கிறபடியைக் கண்டு ஸூஹ்ருத்துகள் ஈடுபட்டு உரைத்த பாசுரத்தை
கார் காலத்தில் ஈடுபட்ட தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
பாங்கி பழிக்கு இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற்
பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு-கோபத்துக்கு வர்ணம்
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
அதிமாத்ர ப்ராவண்யத்தைப் பழி என்கிறார்கள்
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

உரை

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகு பார்த்து இருக்கும் பெண் பிறந்தாரில் தங்கள் பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று

இன்னே
இப்படியே

கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை வர்ஷித்துக் கொண்டு அணிந்து ஏறி

அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்

வாழியரோ சாரிகை புள்ளர்
இவ்வளவிலும் தம்முடைய வைபவத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ண இருக்கிற இவர்

சாரிகை புள்ளார்
ஆ பன்னர் இருந்த இடத்தில் சடக்கென வருகைக்கு ஈடான பரிகரத்தை யுடையவர்

சாரிகை என்று
மண்டல ஆகார கதியைச் சொல்லுகிறது
தர்ச நீய கதியான புள் என்றபடி
(சிறப்பான நடத்தை ஆச்சாரம் அனுஷ்டானம் வேதம் தானே சொல்லும் )

ஆர்ந்து அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை

இறை கூய் அருளார்
ஏக தேசமும் அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்
கொடுக்கும் போதை ஸாந்த்வ வாதமும் தேட்டமாய் இருக்கிற படி

(இறை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை
இங்கு ஏகதேசம் )

சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –
என்னுடைய மித பாஷிணி யானவளுக்கு
ஊரார் கை வகுத்து உறும்படியான பழியாய்ப் ;பலித்தது

கை ஏறும் பழி என்று
கை எடுத்து உரைக்கவுமாம் –

இத்தால்
காரிகையார் -என்று
ஸ்த்ரீத்வத்தைச் சொல்லுகையாலே பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-ஸூந்தர –37-62- என்று இருக்கும் ஸ்வரூபத்தைச் சொன்னபடி

நிறை காப்பவர் யார் -என்று
இந்த ஸ்வரூப பூர்த்தியை யாராலே நோக்கலாம் என்று அபிப்ராயம்

கார் கொண்டு என்று தொடங்கி
ஸ்மாரக முகத்தாலே ஆகர்ஷகமான விக்ரஹத்தையும்
அனுபாவ்யமான குண அபி வர்ஷத்தையும் ஆவிஷ் கரித்து

இப்படி அனுபவ யோக்ய அவஸ்தையானது அபி முகமாய் த்வரிப்பிக்கச் செய்தேயும்
மங்களா ஸாஸனம் பண்ணும்படி
தர்ச நீயமான வாஹன வை லக்ஷண்யத்தை யுடையவர்
போக்யமாய் ஸ்ரம ஹரமான தம்முடைய ப்ரஸாதத்தை ஸ்நிக்த கம்பீரமான திரு மிடற்று ஓசையாலே
அழைத்து ஏக தேசமும் கொடுத்து அருளுகிறீலீர்

என் சின் மொழிக்கு
என்று இதனுடைய அபேக்ஷையில் புனர் வசனம் மிகையாம் படி ஸக்ருத் யுக்த அதிகாரிகளால்
எங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான அவருக்கு என்றபடி
(ஸக்ருத் ஏவ யுக்தி த்வயம் பிரபத்தி ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ இவர்
மாறன் சொல் வேராக வீடு )

சேரி இத்யாதி
இந்த ஸ்ரேணி யிலுள்ள சாத்விக ஜனம் கை எடுத்துக் கூப்பிடும்படி பழியாய்
பரிணமித்தது என்றார் ஆயிற்று –

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தோழியானவள் காலத்தை மயக்கி இவளை ஆஸ்வசிப்பித்து வார்த்தை சொல்லா நிற்க
அவ்வளவில் பிரிந்து தனி இருப்பாரைக் காலத்தை மயக்கி தரிப்பிப்பார் யுண்டாகில் தரிப்பிப்புயுங்கோள் என்று
வாய் பற்றிக் கொண்டு வந்து தோற்றின சில மேகங்கள்
அவற்றின் உத்யோகத்தைக் கண்ட திருத்தாயார் வார்த்தையாகாச் செல்லுகிறது

வியாக்யானம்
காரிகையார் உண்டு -அபலைகள்
அவர்களுடைய நிறையுண்டு -அடக்கம்
அத்தை ஆர் தான் அறியாதபடி நோக்குகிறார்கள்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் என்று

கார் கொண்டு
புறம்பு கறுப்பு
அகவாயில் கறுப்பு புறம்பு பொசித்துத் தோற்றிற்று என்னலாய் இருக்கை
இன்னே
இதனுடைய ஒருப்பாடு இருந்தபடி கண்டோ உமக்கு இப்படி -என்னும் அத்தனை போக்கிப்
பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லையே

மாரிகை ஏறி
ரண உத்யதா நாம் கிஷ்கிந்தா -28-21-என்னும்படி
கையும் அணியும் வகுத்துக் கொண்டு

அறை இடும் காலத்தும்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் -என்று அறையோ அறை -என்னா நின்றதாயிற்று
தேந நாதேந மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர -பால -1-68-

அவன் ரக்ஷகன் நாம் ரஷ்யம் என்று ஆச்சார்ய உபதேச மாத்திரம் அறிந்து ஆறி இருக்கலாய் –
க்ரமத்தாலே பெறுவோம் என்று இருக்கலாம்
இவருக்கு அனுபவ பூர்வகமாக அறிந்து -கிருபா குண ஞானம் பிறந்து
இரக்கமே உபாயம் -அதுக்கு நான் ஆள் என்று உணர்ந்த பின்பு க்ரம பிராப்தி என்று ஆறி இருக்காமல் -துடிப்பாரே
பேற்றுக்குத் த்வரிக்க வேணுமே
வழி அல்லா வழி மேல் விழுந்து அடைய த்வரிப்பது குற்றம் அன்றே
ஸாஸ்த்ரங்கள் விதித்தாலும் செஞ்சே தீர கங்கணம் கொண்டு – வாஸனை பலத்தாலும் கவனக்குறைவால் -பிராமாதிகமாகவும்
அபிராப்த விஷயங்களில் புத்தி பூர்வகமாக குற்றம் நாம் செய்வது போல் பகவத் விஷயத்தில்
ஞானாதிக்யத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறலாம்
பத்தி மேலீட்டால் தெரிந்தே செய்தாலும் குறை இல்லையே
குணாதி விஷயத்தில் விஷய வை லக்ஷண்யம் பண்ண வைக்கும்
ஷூத்ர விஷயம் அல்பம் அஸ்திரம் அப்ராப்யம் -இதிலே மேல் விழுந்து
இது அநந்தமாயும் ஸ்திரமாயும் ப்ராப்த விஷயமுமாய் அதுக்கும் மேலே குணாதி விஷயமுமாய் –
ஆக நான்காலும் இருக்க கைமுதிக நியாயத்தால் செய்வதிலே குறை இல்லையே

இத்தால் சொல்லிற்றாயிற்று என் என்னில்
ஷூத்ர விஷய ப்ராவண்யத்தோ பாதி பகவத் விஷயத்துக்கு குற்றம் உண்டாகிலும்
விட மாட்டாத படியான இவருடைய ப்ராவண்ய அதிசயம் சொல்லுகிறது –

பகவத் விஷயத்தில் குற்றமே சொன்னாலும் விட மாட்டார்
கடியன் கொடியின் நெடிய மால் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பர் அன்றோ

———————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி வர்ஷா காலத்திலேயே அத்யாவசன்னையாகும் தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
இவள் தாயார் ஊரார் சொல்லும் பழிக்கு இரங்கி அவசன்னை யாகிறாள் இப்பாட்டில் –

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகைக் கண்டு உகக்கும் பெண்களுடைய பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று

கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி
இன்னே –
இப்படியே
கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை மேல் மேல் வர்ஷித்திக் கொண்டு
அணி அணியாக ஏறி

அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்

வாழியரோ
என்று சிலராலே தமக்கு மங்களத்தை ஆஸாஸிப்பித்திக் கொண்டு

சாரிகை புள்ளார்
மண்டல ஆகார கதியால் ஸாரி விடும் புள்ளுடையவருடைய

அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை

இறை கூய் அருளார்
ஈஷத்தாகிலும் மனமுற்று அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்

என் சின் மொழிக்கே –
என் மகளாய்
மித பாஷிணியான இவளுக்கு

சேரி –
ஊரார்

கை ஏறும் பழியாய் விளைந்தது
கை வகுத்து ஏறும்படியான பழியாய்ப் பலித்தது

அவனில் பிரவணை யானாய் உனக்கு இத்தனையும் வேணும் காணும் -என்னும்படி
ஓர் அவதி அற்றுத் தூற்றுவார்களே என்று அவசன்னை யாகிறாள்
இது இவள் பசி வளர்க்கப் பட்டினி இடா நின்றவன் என்று அறிந்தும்
சிலருக்கு அவனில் ப்ராவண்யத்தைத் தவிர்க்கவாய்
சேரியர்க்கே பழியாய்த் தன் குலத்துக்குப் பழியாய் விளைந்தது என்னா நின்றாள் –

————

அவதாரிகை
இப்படி நோவு படுகிற இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கைக்காக
ஈஸ்வரன் அநந்ய ஸாத்யன் -என்று அறியாதே இவர் பக்கல் பரிவாலே உண்டான கலக்கத்தாலே
ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -அயோத்யா காண்டம் -2-52-என்னுமா போலேயும்
நாய்ச்சியார் காமன் காலிலே விழுந்தால் போலேயும்
பகவத் விபூதி பூதரான தேவதாந்தர அனுவர்த்தனத்தாலே யாகிலும் இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கலாமோ
என்று ப்ரவர்த்தித்த பரிவரைக் குறித்து
இவருடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கும் ஸ ப்ரஹ்மசாரியான ஸூஹ்ருத்துக்கள் விலக்கின பாசுரத்தை
தலை மகள் ஈடுபாட்டுக்கு நிதானம் அறியாதே வெறி யாடலுற்ற தாயாரைக் குறித்து
இவள் பிரகிருதி அறிந்த தோழி வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–

பதவுரை

சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லாவுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழிகொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்-

வியாக்யானம்

சின்மொழி நோயோ
வாய் விட்டு வார்த்தை சொல்லவும் மாட்டாத இவளுடைய நோய்


நோயின் முதிர்த்திக்கு ஈடுபட்ட படி

கழி பெருந்தெய்வம்
மிகவும் பெரிய ஈஸ்வரன் அடியாக வந்தது

இன்ன-இந்நோய் இது என்று
இந்த நோய் இப்படிப்பட்டது என்று
ஸ்வரூப பிரகாரங்களைப் பரிச்சேதித்து

இன்மொழி கேட்கும்
இல்லாத மொழியைக் கேட்கப்படுவதான

இளந்தெய்வம் அன்று இது
இது அர்வாஸீன (தாழ்ந்த )தேவதை அன்று

வேல! நில் நீ
முருகனே -நீ வெறி யாடுகிற வேலனே -கடக்க நில்லு

என் மொழி கேண்மின்
இவள் பிரகிருதி அறிந்த என்னுடைய வார்த்தையை கேளுங்கோள்
ப்ரக்ருதி அறியாதே அசம்பாவிதத்தைச் சொல்லுகிற
கட்டு விச்சி
வேலன்
தொடக்கமானவர் வார்த்தையைக் கேளாதே என்று கருத்து –

என்னம்மனை மீர் !
மெய் சொல்லுகைக்கு அடியான பந்தமும்
ப்ரக்ருதி அனுகுணமாகப் பிரவர்த்திப்பிக்கும் வாத்சல்யத்தையும் யுடைய நீங்கள்

உலகு ஏழும் உண்டான் சொல் மொழி
ஸப்த லோகத்தையும் தனது வயிற்றிலே வைத்து நோக்கினவன் திரு நாமத்தைச் சொல்லுகை

மாலை யம் தண் யம் துழாய்
மாலா ரூபமாய்
தர்ச நீயமுமாய்க் குளிர்ந்த திருத்துழாய்

கொண்டு சூட்டுமினே –
சொன்மொழியைக் கொண்டு
திருத்துழாயைச் சூட்டுமின் என்று நேர் நிரல் நிறை
இந்நோய்க்கு பகவன் நாமமாகிற மந்த்ரத்தை உச்சரித்து
ப்ரஸாதமாகிற பசு மருந்தை சிரஸா வஹியுங்கோள்
என்றதாயிற்று –

இத்தால்
சின்மொழி நோய் -என்று
ஸ்வ காரியத்தில் ஸக்ருத் வசனமும் ஒழிய அறியாதவள் என்றபடி –

நோயாவது
அனுபவ அபி நிவேச ரூபமான பக்தி யோகம்

கழி பெருந்தெய்வம் -என்று
ஸமாப்யதிக ரஹித ஸர்வேஸ்வரன் என்றபடி
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ )

இந்நோய் இது என்று-இத்யாதியாலே
இந்த ஆர்த்தி ஏவம் விதம் என்று பர்ச்சேதிக்கலாம் படி
அஸத்ய ப்ரலாப ஸ்ரவண விஷயமான அர்வாஸீன தேவதைகளுக்கு ஸாத்யம் அன்று
ஆகையாலே
வேல நில் நீ -என்று
தேவதாந்த்ர அந்வயம் நிற்கப்படுவதாக என்றபடி

பிரதமத்திலே பகவத் சம்பந்தம் உடையோருக்கு அவதானித்துக் கழிக்க வேண்டுவது
தேவதாந்த்ர சம்பந்தம் ஓன்று இறே
பின்பு இறே
ஆர்த்தி பரிஹாரமும்
போக ஸித்தியும்

(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் )

என் மொழி கேண்மின் -என்று
ஆர்த்தி பரிஹாரம் -ஆப்த உபதேச மூலம் என்றபடி

என்னம்மனை மீர் ! -என்று
பிதா புத்ர ஸம்வாதம் போலே மூப்பு இளமையால் வரும் தாரதம்யம் இன்றியே
அறிவுடையார் உபதேஷ்டாக்கள் என்றபடி

உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று
நாம உச்சாரண பேஷ ஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே
ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி

மாலை யம் தண் யம் துழாய் -என்று
போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை
சமிப்பிக்கும் என்றதாயிற்று

கொண்டு சூட்டுமினே –என்கையாலே
போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி
அத்தாலே
நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே
ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே

ஆகையால்
உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும்
போக்ய அந்வயமும்
விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

———-

ஸ்ரீ நம்பிள்ளை -ஈடு
அவதாரிகை
காலமும் போய் மர முதிர்ந்து மேகங்களுமாகக் கை வளர்ந்து
நாயகனும் வாராமையாலே இவள் மோஹங்கதையாக
இத்தைக்கண்ட தாயார் தொடக்கமான பந்து வர்க்கமும் போய் அறிவு இழந்து
இவளுக்கு இது ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாக நினைத்து
பாஹ்ய ஆகமங்களைத் த்ருஷ்டியாகக் கொண்டு தேவதாந்தர ஸ்பர்சமுடையாரை
சிகித் சகரராய்க் கொண்டு சிகிச் ஸஹையிலே இழிய
இவள் பிரக்ருதியை அறிந்த தோழி யானவள்
இவர்கள் இவளை இழக்கும்படி வ்யாபரியா நின்றார்கள்
அவன் வந்திலனேயாகிலும் நாம் இவள் சத்தியை நோக்கி இட்டு வைப்போம் என்று பார்த்து
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து -திருவாய் -4-6-8-என்கிறபடியே
வேதத்தைத் த்ருஷ்டியாகக் கொண்டு வேத தனரைத் தேசிகராய்க் கொண்டு
வேதாந்த வேத்யமான பரதத்வம் அடியாக வந்தது என்று புத்தி பண்ணி
இக்குடிக்கு அனுரூபமாகப் பரிஹரிக்கப் பாருங்கோள் என்று
பரிஹாரத்தைச் சொல்லி இவள் வெறி யாட்டத்தை விலக்குகிறாள்

வியாக்யானம்
சின் மொழி
கீழ்ச் சொன்ன தசா விசேஷம் தன்னையே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
சில கற்ப்பித்தவை சொல்லுமது ஒழியத் தானாக ஒன்றும் சொல்ல மாட்டாத படியன்றோ இவள் பருவம்
இப்பாவைக்கு வந்தது அவனடியாக வேண்டாவோ

சின்மொழி நோயோ
இவள் கொண்ட நோய் அறிந்து ஸர்வேஸ்வரன் அடியாக வந்தது என்னுதல்

அன்றிக்கே
சின் மொழி நோய் கழி பெரும் தெய்வம் ஓ
என்னவுமாம்
இவள் இந்நோய் கொள்ள பாக்யம் பண்ணுவதே
இது என்ன ஆச்சார்யமோ
நாம் இந்நோயைக் கொள்ளாதே
இதுக்குப் பரிஹாரம் பண்ணுவதாகப் புகுந்து அவிக்ருதிகளாய் இருப்பதே என்று
ஓ என்னவுமாம்

கழி பெரும் தெய்வம்
இவளுடைய இந்நோய் கழியப் பெரிதான பரதேவதை அடியாக வந்தது
இந்த்ராதிகளில் காட்டில் ப்ரஹ்மாதிகள் யுடைய ஐஸ்வர்யத்துக்கு ஏற்றம் உண்டே யாகிலும்
இருவருக்கும் ஷேத்ரஞ்ஞத்வம் அவிசிஷ்டம் இறே
சேஷித்வ ப்ரயுக்தமான இதர விஸஜாதியை யுள்ளது அவன் ஒருவனுக்கும்
ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ ஷேத்ரஞ்ஞத்வங்கள் இங்கு உள்ளார் எல்லாருக்கும் ஒக்கும் இறே

கழி பெரும் தெய்வம்
அவ்வருகு இல்லாத தத்வம்
பதிம் விஸ்வஸ்ய -தைத்ரியம்
பதிம் பதீ நாம் -ஸ்வேதாஸ்
தமீஸ் வரணாம் பரமம் மஹேஸ்வரம் -ஸ்வேதாஸ்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தைத்ரியம்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .