Archive for the ‘Krishnan kathai amutham’ Category

ஶ்ரீ உத்தவ கீதை – அத்தியாயம் – 4

March 23, 2021

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஶ்ரீ பகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து.
வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும்.
உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழு நம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

————

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |
கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக
உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
வெளிப் பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள்
என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

———–

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |
நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3

மனோரத2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில்
கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள் தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள் தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது,
பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ – தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4யாயதோ வா மனோரதஹ விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ பொய்யானவை
ததா3 அவ்விதம்
கு3ணைஹி‘ இந்திரியங்களால்
பேதாத்மதீஹி பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல, உண்மையானதல்ல

————–

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும்.
உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். ’
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ – பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன் அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்
ப்ரவ்ருத்தம் கர்ம நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்
த்யஜேத் விட்டுவிடு, துறந்துவிட்டு
நிவிருத்தம் கர்ம ஸேவேத ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனை, ஜபம், தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.
சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.
மத்பரஹ அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.

——————

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |
மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5

யமஹ – விலக்குதல்
நியமஹ – பின்பற்றுதல்
நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்
க்ரியாயோகம் – தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்
யமம் – அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்

யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஶாந்தம் – மனவமைதி அடைந்தவரும்,
மத்3 அபி4க்3ஞம் – என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்
மத்3 ஆத்மகம் – என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி
உபாஸீத் – சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

————

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3: |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.

1. அமானி கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2. அமத்ஸரஹ பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்டூ பார்ப்பதால் வருவது பொறாமை.
தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது.

3. த3தஹ திற்மையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன்.
எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4. நிர்மமஹ மமகாரம் இல்லாதிருப்பவன்

5. த்3ருட4ஸௌஹ்ருத3: – எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6. அஸத்வரஹ நிதானமாக செயல்படுபவன்; அவசரஅவசரமாக எதையும் செய்யாதவன்

7. அர்த2ஜிக்3ஞாஸு வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8. அனஸூயு: எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9. அமோக4வாக் பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்,

————-

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |
உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது.
இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும்.
தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

————-

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |
யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்ன,
அது எதைக் குறிக்கின்றது என்று விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப் பொருளையும்,
உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும்.
அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது.
இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.

பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார்.
அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும்.
ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம்.
கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம். இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக் தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை,
அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும்.
மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது.
வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது
அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

—————

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |
அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால்
இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.

நிரோத4ம் – அணைந்து விடுதல்
உத்பத்தி – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு – சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ – மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம் – விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
ஆத4த்த – எடுத்து கொள்கிறது
அந்த:பிரவிஷ்ட – எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலாத ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

——————-

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |
ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ – சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ – யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா – ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

—————–

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |
ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)
ஆத்மஸ்தம் – இந்த உடலுக்குள் இருக்கின்ற
கேவலம் – இரண்டற்றதான
ஆத்மானம் – ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம ய – புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம் – அழியாத, மேலான
ஏதத்3 வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3 – நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம் – இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து
ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

————–

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |
தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் – அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி – மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி – ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் கொடுக்கின்றது

—————-

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

இதில் ஆத்மஞான்த்தின் பலன் கூறப்படுகின்றது

வைஶாரதீ – திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி – மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறாத அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: – எப்படி அக்னி
யதா3த்மம் – அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் – எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

—————

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |
நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: – இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 – பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் – தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக – – இந்த உலகம்
கால – காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம – கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் – இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

——————-

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |
தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

மன்யஸே – இவ்வாறு நீ கருதினால்
ஸர்வபா3வானாம் – நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்
யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 – பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது
(ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறீக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம்.
இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.

தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் – நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: – எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே – இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

————-

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |
காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

அங்க3 இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத் – எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

————

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |
போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம்.
எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம்.
இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

———-

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |
ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||

இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறீதளவு கூட காணப்படவில்லை.
அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்க;ப்படுகிறார்கள் என்பதும் இல்லை.
அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற
இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

————

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S
தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை
அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக எப்படி மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

————–

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |
ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும்.
எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்கமுடியும்.

—————

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |
ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

ஶ்ருதம் ச சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4 போட்டி
அஸூய பொறாமை
அத்ய அழிவுக்குட்பட்டது
அவ்யயை: தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் போன்ற குறையுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும்.
நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது.
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது

———

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.

அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |
தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற
மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

———–

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |
பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான்.
அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

————–

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |
க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

ஹ்ருத்3யவேஷத்3ருக் மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்
ஸ்வபுண்ய உபசிதே அவனுடைய புண்ணியத்திற்கேற்ப
ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்
தே3வீனாம் மத்4யே விஹரன் தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்
க3ந்த4ர்வ உபகீ3யதே கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

———–

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |
க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது
தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான்.
அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

———-

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |
க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

————-

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |
காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |
நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)
லுப்3த4ஹ பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்
ஸ்த்ரைணஹ உடலின்பத்திலே ஆசையுள்ளவன்
பூதவிஹிம்ஸக:ஹ எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன்,
இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை,
அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

————

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |
ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக
மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

—————-

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |
தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும்
உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள்.
அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

————

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

கு3ணாஹா – உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)
ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ – இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன
அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே – அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம்.
மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம்.
நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

————–

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன: |
நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள்.
பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன. எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ
அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

————–

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |
ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல்
குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும்.
பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும்.
எவனொருவன் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ
அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

————-

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |
இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

குண மாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள்.
காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும்
பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

————-

உத்3த4வ உவாச:
கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

உத்தவர் கேட்கிறார்:
விபோ4 பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும்
அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?
மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

————–

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |
கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்?
எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்?
கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

————-

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |
நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.
கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே!
ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 4-அத்தியாயம் -19–ஸ்ரீ ப்ருது மஹா ராஜரின் அவச மேத யாகம்-

November 8, 2020

மைத்ரேய உவாச
அதா²தீ³க்ஷத ராஜா து ஹயமேத⁴ஶதேன ஸ꞉ .
ப்³ரஹ்மாவர்தே மனோ꞉ க்ஷேத்ரே யத்ர ப்ராசீ ஸரஸ்வதீ .. 1..

தத³பி⁴ப்ரேத்ய ப⁴க³வான் கர்மாதிஶயமாத்மன꞉ .
ஶதக்ரதுர்ன மம்ருʼஷே ப்ருʼதோ²ர்யஜ்ஞமஹோத்ஸவம் .. 2..

யத்ர யஜ்ஞபதி꞉ ஸாக்ஷாத்³ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .
அன்வபூ⁴யத ஸர்வாத்மா ஸர்வலோககு³ரு꞉ ப்ரபு⁴꞉ .. 3..

அன்விதோ ப்³ரஹ்மஶர்வாப்⁴யாம்ʼ லோகபாலை꞉ ஸஹானுகை³꞉ .
உபகீ³யமானோ க³ந்த⁴ர்வைர்முனிபி⁴ஶ்சாப்ஸரோக³ணை꞉ .. 4..

ஸித்³தா⁴ வித்³யாத⁴ரா தை³த்யா தா³னவா கு³ஹ்யகாத³ய꞉ .
ஸுநந்த³னந்த³ப்ரமுகா²꞉ பார்ஷத³ப்ரவரா ஹரே꞉ .. 5..

கபிலோ நாரதோ³ த³த்தோ யோகே³ஶா꞉ ஸனகாத³ய꞉ .
தமன்வீயுர்பா⁴க³வதா யே ச தத்ஸேவனோத்ஸுகா꞉ .. 6..

யத்ர த⁴ர்மது³கா⁴ பூ⁴மி꞉ ஸர்வகாமது³கா⁴ ஸதீ .
தோ³க்³தி⁴ ஸ்மாபீ⁴ப்ஸிதானர்தா²ன் யஜமானஸ்ய பா⁴ரத .. 7..

ஊஹு꞉ ஸர்வரஸான் நத்³ய꞉ க்ஷீரத³த்⁴யன்னகோ³ரஸான் .
தரவோ பூ⁴ரி வர்ஷ்மாண꞉ ப்ராஸூயந்த மது⁴ச்யுத꞉ .. 8..

ஸிந்த⁴வோ ரத்னநிகரான் கி³ரயோ(அ)ன்னம்ʼ சதுர்வித⁴ம் .
உபாயனமுபாஜஹ்ரு꞉ ஸர்வே லோகா꞉ ஸபாலகா꞉ .. 9..

இதி சாதோ⁴க்ஷஜேஶஸ்ய ப்ருʼதோ²ஸ்து பரமோத³யம் .
அஸூயன் ப⁴க³வானிந்த்³ர꞉ ப்ரதிகா⁴தமசீகரத் .. 10..

சரமேணாஶ்வமேதே⁴ன யஜமானே யஜுஷ்பதிம் .
வைன்யே யஜ்ஞபஶும்ʼ ஸ்பர்த⁴ன்னபோவாஹ திரோஹித꞉ .. 11..

தமத்ரிர்ப⁴க³வானைக்ஷத்த்வரமாணம்ʼ விஹாயஸா .
ஆமுக்தமிவ பாக²ண்ட³ம்ʼ யோ(அ)த⁴ர்மே த⁴ர்மவிப்⁴ரம꞉ .. 12..

அத்ரிணா சோதி³தோ ஹந்தும்ʼ ப்ருʼது²புத்ரோ மஹாரத²꞉ .
அன்வதா⁴வத ஸங்க்ருத்³த⁴ஸ்திஷ்ட² திஷ்டே²தி சாப்³ரவீத் .. 13..

தம்ʼ தாத்³ருʼஶாக்ருʼதிம்ʼ வீக்ஷ்ய மேனே த⁴ர்மம்ʼ ஶரீரிணம் .
ஜடிலம்ʼ ப⁴ஸ்மனா(ஆ)ச்ச²ன்னம்ʼ தஸ்மை பா³ணம்ʼ ந முஞ்சதி .. 14..

வதா⁴ந்நிவ்ருʼத்தம்ʼ தம்ʼ பூ⁴யோ ஹந்தவே(அ)த்ரிரசோத³யத் .
ஜஹி யஜ்ஞஹனம்ʼ தாத மஹேந்த்³ரம்ʼ விபு³தா⁴த⁴மம் .. 15..

ஏவம்ʼ வைன்யஸுத꞉ ப்ரோக்தஸ்த்வரமாணம்ʼ விஹாயஸா .
அன்வத்³ரவத³பி⁴க்ருத்³தோ⁴ ராவணம்ʼ க்³ருʼத்⁴ரராடி³வ .. 16..

ஸோ(அ)ஶ்வம்ʼ ரூபம்ʼ ச தத்³தி⁴த்வா தஸ்மா அந்தர்ஹித꞉ ஸ்வராட் .
வீர꞉ ஸ்வபஶுமாதா³ய பிதுர்யஜ்ஞமுபேயிவான் .. 17..

தத்தஸ்ய சாத்³பு⁴தம்ʼ கர்ம விசக்ஷ்ய பரமர்ஷய꞉ .
நாமதே⁴யம்ʼ த³து³ஸ்தஸ்மை விஜிதாஶ்வ இதி ப்ரபோ⁴ .. 18..

உபஸ்ருʼஜ்ய தமஸ்தீவ்ரம்ʼ ஜஹாராஶ்வம்ʼ புனர்ஹரி꞉ .
சஷால யூபதஶ்ச²ன்னோ ஹிரண்யரஶனம்ʼ விபு⁴꞉ .. 19..

அத்ரி꞉ ஸந்த³ர்ஶயாமாஸ த்வரமாணம்ʼ விஹாயஸா .
கபாலக²ட்வாங்க³த⁴ரம்ʼ வீரோ நைனமபா³த⁴த .. 20..

அத்ரிணா சோதி³தஸ்தஸ்மை ஸந்த³தே⁴ விஶிக²ம்ʼ ருஷா .
ஸோ(அ)ஶ்வம்ʼ ரூபம்ʼ ச தத்³தி⁴த்வா தஸ்தா²வந்தர்ஹித꞉ ஸ்வராட் .. 21..

வீரஶ்சாஶ்வமுபாதா³ய பித்ருʼயஜ்ஞமதா²வ்ரஜத் .
தத³வத்³யம்ʼ ஹரே ரூபம்ʼ ஜக்³ருʼஹுர்ஜ்ஞானது³ர்ப³லா꞉ .. 22..

யானி ரூபாணி ஜக்³ருʼஹே இந்த்³ரோ ஹயஜிஹீர்ஷயா .
தானி பாபஸ்ய க²ண்டா³னி லிங்க³ம்ʼ க²ண்ட³மிஹோச்யதே .. 23..

ஏவமிந்த்³ரே ஹரத்யஶ்வம்ʼ வைன்யயஜ்ஞஜிகா⁴ம்ʼஸயா .
தத்³க்³ருʼஹீதவிஸ்ருʼஷ்டேஷு பாக²ண்டே³ஷு மதிர்ந்ருʼணாம் .. 24..

த⁴ர்ம இத்யுபத⁴ர்மேஷு நக்³நரக்தபடாதி³ஷு .
ப்ராயேண ஸஜ்ஜதே ப்⁴ராந்த்யா பேஶலேஷு ச வாக்³மிஷு .. 25..

தத³பி⁴ஜ்ஞாய ப⁴க³வான் ப்ருʼது²꞉ ப்ருʼது²பராக்ரம꞉ .
இந்த்³ராய குபிதோ பா³ணமாத³த்தோத்³யதகார்முக꞉ .. 26..

தம்ருʼத்விஜ꞉ ஶக்ரவதா⁴பி⁴ஸந்தி⁴தம்ʼ
விசக்ஷ்ய து³ஷ்ப்ரேக்ஷ்யமஸஹ்யரம்ʼஹஸம் .
நிவாரயாமாஸுரஹோ மஹாமதே
ந யுஜ்யதே(அ)த்ரான்யவத⁴꞉ ப்ரசோதி³தாத் .. 27..

வயம்ʼ மருத்வந்தமிஹார்த²நாஶனம்ʼ
ஹ்வயாமஹே த்வச்ச்²ரவஸா ஹதத்விஷம் .
அயாதயாமோபஹவைரனந்தரம்ʼ
ப்ரஸஹ்ய ராஜன் ஜுஹவாம தே(அ)ஹிதம் .. 28..

இத்யாமந்த்ர்ய க்ரதுபதிம்ʼ விது³ராஸ்யர்த்விஜோ ருஷா .
ஸ்ருக்³க⁴ஸ்தான் ஜுஹ்வதோ(அ)ப்⁴யேத்ய ஸ்வயம்பூ⁴꞉ ப்ரத்யஷேத⁴த .. 29..

ந வத்⁴யோ ப⁴வதாமிந்த்³ரோ யத்³யஜ்ஞோ ப⁴க³வத்தனு꞉ .
யம்ʼ ஜிகா⁴ம்ʼஸத² யஜ்ஞேன யஸ்யேஷ்டாஸ்தனவ꞉ ஸுரா꞉ .. 30..

ததி³த³ம்ʼ பஶ்யத மஹத்³த⁴ர்மவ்யதிகரம்ʼ த்³விஜா꞉ .
இந்த்³ரேணானுஷ்டி²தம்ʼ ராஜ்ஞ꞉ கர்மைதத்³விஜிகா⁴ம்ʼஸதா .. 31..

ப்ருʼது²கீர்தே꞉ ப்ருʼதோ²ர்பூ⁴யாத்தர்ஹ்யேகோனஶதக்ரது꞉ .
அலம்ʼ தே க்ரதுபி⁴꞉ ஸ்விஷ்டைர்யத்³ப⁴வான் மோக்ஷத⁴ர்மவித் .. 32..

நைவாத்மனே மஹேந்த்³ராய ரோஷமாஹர்துமர்ஹஸி .
உபா⁴வபி ஹி ப⁴த்³ரம்ʼ தே உத்தமஶ்லோகவிக்³ரஹௌ .. 33..

மாஸ்மின் மஹாராஜ க்ருʼதா²꞉ ஸ்ம சிந்தாம்ʼ
நிஶாமயாஸ்மத்³வச ஆத்³ருʼதாத்மா .
யத்³த்⁴யாயதோ தை³வஹதம்ʼ நு கர்தும்ʼ
மனோ(அ)திருஷ்டம்ʼ விஶதே தமோ(அ)ந்த⁴ம் .. 34..

க்ரதுர்விரமதாமேஷ தே³வேஷு து³ரவக்³ரஹ꞉ .
த⁴ர்மவ்யதிகரோ யத்ர பாக²ண்டை³ரிந்த்³ரநிர்மிதை꞉ .. 35..

ஏபி⁴ரிந்த்³ரோபஸம்ʼஸ்ருʼஷ்டை꞉ பாக²ண்டை³ர்ஹாரிபி⁴ர்ஜனம் .
ஹ்ரியமாணம்ʼ விசக்ஷ்வைனம்ʼ யஸ்தே யஜ்ஞத்⁴ருக³ஶ்வமுட் .. 36..

ப⁴வான் பரித்ராதுமிஹாவதீர்ணோ
த⁴ர்மம்ʼ ஜனானாம்ʼ ஸமயானுரூபம் .
வேனாபசாராத³வலுப்தமத்³ய தத்³தே³ஹதோ
விஷ்ணுகலாஸி வைன்ய .. 37..

ஸ த்வம்ʼ விம்ருʼஶ்யாஸ்ய ப⁴வம்ʼ ப்ரஜாபதே
ஸங்கல்பனம்ʼ விஶ்வஸ்ருʼஜாம்ʼ பிபீப்ருʼஹி .
ஐந்த்³ரீம்ʼ ச மாயாமுபத⁴ர்மமாதரம்ʼ
ப்ரசண்ட³பாக²ண்ட³பத²ம்ʼ ப்ரபோ⁴ ஜஹி .. 38..

மைத்ரேய உவாச
இத்த²ம்ʼ ஸ லோககு³ருணா ஸமாதி³ஷ்டோ விஶாம்பதி꞉ .
ததா² ச க்ருʼத்வா வாத்ஸல்யம்ʼ மகோ⁴னாபி ச ஸந்த³தே⁴ .. 39..

க்ருʼதாவப்⁴ருʼத²ஸ்னானாய ப்ருʼத²வே பூ⁴ரிகர்மணே .
வரான் த³து³ஸ்தே வரதா³ யே தத்³ப³ர்ஹிஷி தர்பிதா꞉ .. 40..

விப்ரா꞉ ஸத்யாஶிஷஸ்துஷ்டா꞉ ஶ்ரத்³த⁴யா லப்³த⁴த³க்ஷிணா꞉ .
ஆஶிஷோ யுயுஜு꞉ க்ஷத்தராதி³ராஜாய ஸத்க்ருʼதா꞉ .. 41..

த்வயா(ஆ)ஹூதா மஹாபா³ஹோ ஸர்வ ஏவ ஸமாக³தா꞉ .
பூஜிதா தா³னமாநாப்⁴யாம்ʼ பித்ருʼதே³வர்ஷிமானவா꞉ .. 42..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ப்ருʼது²விஜயே ஏகோனவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 19..

———————————–

ப்ருது 1௦௦ அஸ்வமேத யாகங்கள் செய்ய விரும்பி சரஸ்வதி நதிக்கரையை தேர்ந்தெடுத்து யாகத்தை ஆரம்பித்தார்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் எல்லா தேவ இனத்தைச் சேர்ந்தவரும் ரிஷிகளும் பாகவதர்களும் அங்கு குழுமினர்.
மலைகள் கடல் இவைகளில் இருந்து ரத்தினங்களும் மற்றப் பொருள்களும் வந்து சேர்ந்தன.
பூமியிலிருந்து யாகத்திற்குத் தேவையான எல்லா திரவியங்களும் கிடைத்தன

இவ்வாறு ப்ருது மகாராஜா 99 யாகங்கள் செய்து முடித்தபின் இந்திரன் , அவர் நூறு யாகங்கள் செய்து முடித்தால்
தன் பதவிக்கு தகுதியாவார் என்ற பொறாமையால் இடையூறு .விளைவிக்க எண்ணி ,
வெவ்வேறு வேடம் கொண்டு யாகக் குதிரையை அபகரித்தான்.

ஒவ்வொரு முறையும் ப்ருதுவின் மகன் இந்திரனை வில்லும் கையுமாகத் துரத்தியதால் இந்திரன் குதிரையையும்
தன் வேடங்களையும் விட்டு மறைந்தான். இந்திரனின் வெவ்வேறு வேடங்களே வேத விரோத மதங்களாயின.

இதனால் கோபம் கொண்ட ப்ருது இந்திரனைக் கொல்ல நிச்சயிக்க ரித்விக்குகள் தடுத்து யாக பூமியில் வதம் செய்வது
கூடாதென்று கூறி மந்திரம் மூலம் அவனை வரவழைத்து யாகாக்னியில் ஆஹுதி செய்ய முயன்றனர்.

அப்போது பிரம்ம தேவர் அவர்களைத் தடுத்து , இந்திரன் தேவர்களின் பிரதிநிதி என்றும் ,
ஆகூதிக்கும் ருசிக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் அம்சமான யக்ஞன் என்பவனே அப்போதுள்ள இந்திரன் என்றும் கூறி
அவனை வதம் செய்வது தகாது என்றார்.

மேலும் ப்ருது 99 யாகங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தெய்வ ஆக்ஞை என்று கூறினார்.
அதன்படி ப்ருது யாகத்தை நிறுத்திக் கொண்டு புரோகிதர்களுக்கு தக்கபடி சம்பாவனை செய்து அவர்கள் ஆசியைப் பெற்றுக் கொண்டார்

—————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம்-33–

November 7, 2020

இவ்விதம் கபிலருடைய உபதேசத்தைக் கேட்ட தேவஹுதி அஞ்ஞானம் நீங்கியவளாய் கபிலரைத் துதித்தாள்.

“ தங்கள் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மாவாலும் பார்க்கப்படாத சிருஷ்டியின் முதல் காரணமாகிய தாங்கள் சகல உலகத்தையும் தன் உந்தியுள் வைத்தவர். அப்படிப்பட்டவர் என் வயிற்றில் எவ்விதம் தோன்றினீர் என்பது ஆச்சரியம்.
ஆனாலும் ஒரு சிறு குழந்தை வடிவில் ஆலிலை மீது இந்த பிரபஞ்சங்களை வயிற்றில் அடக்கி கால் கட்டைவிரலை வாயில் வைத்துத் தோன்றின மாயத்தின் முன் இது ஒன்றுமேயில்லை அல்லவா?

துஷ்டநிக்ர்ஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றிற்காக வராஹரூபம் போன்ற பல சரீரங்களை எடுத்துக்கொள்கிறீர்களே அது போன்ற இதுவும் ஒன்று என்று அறிகிறேன்.எவருடைய நாமஸ்மரணம், கதாஸ்ரவணம், முதலியவற்றாலும், சாஷ்டாங்கமாக வணங்குவதாலும், ஒருமுறையாவது தியானிப்பதாலும் சண்டாளனும் பூஜிக்கத்தகுந்தவன் ஆகிறானோ அவரை நேரில் காணும் பாக்கியம் ஏற்பட்டால் அதன் மகிமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

நான் வேதங்களின் சாரமானவரும், பரப்ரம்மமும், பரமபுருஷனும், ஒருமுகப்பட்ட மனதால் தியானிக்கத் தகுந்தவரும், கபிலராக வந்த விஷ்ணுவும் ஆன தங்களை வணங்குகிறேன்.”

கபிலர் கூறினார்.

“தாயே நான் கூறிய இந்த மார்க்கம் அனுஷ்டிப்பதற்கு எளியது. அதில் நிலை பெற்று சீக்கிரமே நீ முக்திநிலை அடையப் போகிறாய். “

மைத்ரேயர் கூறினார்.

இவாறு தேவஹூதிக்கு ஆத்மா மார்க்கத்தைக் காட்டிவிட்டு கபிலர் அவள் அனுமதி பெற்று அவ்விடம் நீங்கினார். தேவஹூதியும் அவரால் உபதேசிக்கப்பட்ட யோகத்தை அனுசரித்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்த அந்த ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஆழ்ந்தாள்.

முதலில் கணவனைப் பிரிந்து புத்திரனால் மனம் தேறியிருந்த தேவஹூதி புத்திரனும் சென்றபின் சிலகாலம் வ்யாகுலத்தில் ஆழ்ந்தாலும் நாளடைவில் மனம் தேறி ஜீவபாவம் நீங்கி க்லேசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த நிலை எய்தினாள். இவ்வாறு நாளடைவில் நிரந்தர சமாதியில் நிலைத்து பகவானுடைய பாதத்தை அடைந்தாள்.

அவள் எந்த இடத்தில் சித்தி அடைந்தாளோ அது சித்திபதம் என்ற பெயருடன் ஒரு புண்யக்ஷேத்திரமாயிற்று.

கபிலர் தாயிடம் இருந்து அனுமதி பெற்று வடகிழக்கு திசை நோக்கிச்சென்றார். சித்தர் சாரணர் கந்தர்வர் முனிவர்கள் அப்சர கணங்கள் முதலியவர்களால் துதிக்கப்பட்டு சமுத்ரராஜனால் இடமளிக்கப்பெற்று மூவுலகையும் காப்பதற்காக இன்னும் யோகநிஷ்டையில் இருக்கிறார்.

எவன் ஆத்மயோகமாகிய இந்த கபிலோபதேசத்தை ச்ரத்தையுடன் கேட்கின்றானோ அல்லது பிறருக்கு அன்புடன் கூறுகின்றானோ அவன் பகவானிடம் நிலைத்த புத்தியுள்ளவனாக ஆகி பகவானை அடைகிறான் என்று கூறி மைத்ரேயர் கபிலாவதாரத்தை முடிக்கிறார்.

ராமாயணத்தில் ஸகரனுடைய குமாரர்கள் யாகக்குதிரையைத் தேடி பாதாளத்திற்கு வந்த போது அங்கு கபிலர் அருகில் அதைக் கண்டு கபிலரைத் திருடன் என்றெண்ணி அவமதித்து அவர் சாபத்திற்காளாகி சாம்பலானார்கள். பின்னர் ஸகரனின் பேரனான அம்சுமான் அங்கு வந்து அவரை வணங்கி தன் பித்ருக்களுக்கு நற்கதி கிடைக்குமாறு செய்கிறான்.

—————

ஏவம்ʼ நிஶம்ய கபிலஸ்ய வசோ ஜனித்ரீ
ஸா கர்த³மஸ்ய த³யிதா கில தே³வஹூதி꞉ .
விஸ்ரஸ்தமோஹபடலா தமபி⁴ப்ரணம்ய
துஷ்டாவ தத்த்வவிஷயாங்கிதஸித்³தி⁴பூ⁴மிம் .. 1..

தே³வஹூதிருவாச
அதா²ப்யஜோ(அ)ந்த꞉ஸலிலே ஶயானம்ʼ
பூ⁴தேந்த்³ரியார்தா²த்மமயம்ʼ வபுஸ்தே .
கு³ணப்ரவாஹம்ʼ ஸத³ஶேஷபீ³ஜம்ʼ
த³த்⁴யௌ ஸ்வயம்ʼ யஜ்ஜட²ராப்³ஜஜாத꞉ .. 2..

ஸ ஏவ விஶ்வஸ்ய ப⁴வான் வித⁴த்தே
கு³ணப்ரவாஹேண விப⁴க்தவீர்ய꞉ .
ஸர்கா³த்³யனீஹோ(அ)விததா²பி⁴ஸந்தி⁴-
ராத்மேஶ்வரோ(அ)தர்க்யஸஹஸ்ரஶக்தி꞉ .. 3..

ஸ த்வம்ʼ ப்⁴ருʼதோ மே ஜட²ரேண நாத²
கத²ம்ʼ நு யஸ்யோத³ர ஏததா³ஸீத் .
விஶ்வம்ʼ யுகா³ந்தே வடபத்ர ஏக꞉
ஶேதே ஸ்ம மாயாஶிஶுரங்க்⁴ரிபான꞉ .. 4..

த்வம்ʼ தே³ஹதந்த்ர꞉ ப்ரஶமாய பாப்மனாம்ʼ
நிதே³ஶபா⁴ஜாம்ʼ ச விபோ⁴ விபூ⁴தயே .
யதா²வதாராஸ்தவ ஸூகராத³ய-
ஸ்ததா²யமப்யாத்மபதோ²பலப்³த⁴யே .. 5..

யந்நாமதே⁴யஶ்ரவணானுகீர்தனா-
த்³யத்ப்ரஹ்வணாத்³யத்ஸ்மரணாத³பி க்வசித் .
ஶ்வாதோ³(அ)பி ஸத்³ய꞉ ஸவனாய கல்பதே
குத꞉ புனஸ்தே ப⁴க³வன் நு த³ர்ஶனாத் .. 6..

அஹோ ப³த ஶ்வபசோ(அ)தோ க³ரீயான்
யஜ்ஜிஹ்வாக்³ரே வர்ததே நாம துப்⁴யம் .
தேபுஸ்தபஸ்தே ஜுஹுவு꞉ ஸஸ்னுரார்யா
ப்³ரஹ்மானூசுர்நாம க்³ருʼணந்தி யே தே .. 7..

தம்ʼ த்வாமஹம்ʼ ப்³ரஹ்ம பரம்ʼ புமாம்ʼஸம்ʼ
ப்ரத்யக்ஸ்ரோதஸ்யாத்மனி ஸம்ʼவிபா⁴வ்யம் .
ஸ்வதேஜஸா த்⁴வஸ்தகு³ணப்ரவாஹம்ʼ
வந்தே³ விஷ்ணும்ʼ கபிலம்ʼ வேத³க³ர்ப⁴ம் .. 8..

மைத்ரேய உவாச
ஈடி³தோ ப⁴க³வானேவம்ʼ கபிலாக்²ய꞉ பர꞉ புமான் .
வாசா விக்லவயேத்யாஹ மாதரம்ʼ மாத்ருʼவத்ஸல꞉ .. 9..

கபில உவாச
மார்கே³ணானேன மாதஸ்தே ஸுஸேவ்யேனோதி³தேன மே .
ஆஸ்தி²தேன பராம்ʼ காஷ்டா²மசிராத³வரோத்ஸ்யஸி .. 10..

ஶ்ரத்³த⁴த்ஸ்வைதன்மதம்ʼ மஹ்யம்ʼ ஜுஷ்டம்ʼ யத்³ப்³ரஹ்மவாதி³பி⁴꞉ .
யேன மாமப⁴வம்ʼ யாயா ம்ருʼத்யும்ருʼச்ச²ந்த்யதத்³வித³꞉ .. 11..

மைத்ரேய உவாச
இதி ப்ரத³ர்ஶ்ய ப⁴க³வான் ஸதீம்ʼ தாமாத்மனோ க³திம் .
ஸ்வமாத்ரா ப்³ரஹ்மவாதி³ன்யா கபிலோ(அ)னுமதோ யயௌ .. 12..

ஸா சாபி தனயோக்தேன யோகா³தே³ஶேன யோக³யுக் .
தஸ்மிந்நாஶ்ரம ஆபீடே³ ஸரஸ்வத்யா꞉ ஸமாஹிதா .. 13..

அபீ⁴க்ஷ்ணாவகா³ஹகபிஶான் ஜடிலான் குடிலாலகான் .
ஆத்மானம்ʼ சோக்³ரதபஸா பி³ப்⁴ரதீ சீரிணம்ʼ க்ருʼஶம் .. 14..

ப்ரஜாபதே꞉ கர்த³மஸ்ய தபோயோக³விஜ்ருʼம்பி⁴தம் .
ஸ்வகா³ர்ஹஸ்த்²யமனௌபம்யம்ʼ ப்ரார்த்²யம்ʼ வைமானிகைரபி .. 15..

பய꞉பே²னனிபா⁴꞉ ஶய்யா தா³ந்தா ருக்மபரிச்ச²தா³꞉ .
ஆஸனானி ச ஹைமானி ஸுஸ்பர்ஶாஸ்தரணானி ச .. 16..

ஸ்வச்ச²ஸ்ப²டிககுட்³யேஷு மஹாமாரகதேஷு ச .
ரத்னப்ரதீ³பா ஆபா⁴ந்தி லலநாரத்னஸம்ʼயுதா꞉ .. 17..

க்³ருʼஹோத்³யானம்ʼ குஸுமிதை ரம்யம்ʼ ப³ஹ்வமரத்³ருமை꞉ .
கூஜத்³விஹங்க³மிது²னம்ʼ கா³யன் மத்தமது⁴வ்ரதம் .. 18..

யத்ர ப்ரவிஷ்டமாத்மானம்ʼ விபு³தா⁴னுசரா ஜகு³꞉ .
வாப்யாமுத்பலக³ந்தி⁴ன்யாம்ʼ கர்த³மேனோபலாலிதம் .. 19..

ஹித்வா ததீ³ப்ஸிததமமப்யாக²ண்ட³லயோஷிதாம் .
கிஞ்சிச்சகார வத³னம்ʼ புத்ரவிஶ்லேஷணாதுரா .. 20..

வனம்ʼ ப்ரவ்ரஜிதே பத்யாவபத்யவிரஹாதுரா .
ஜ்ஞாததத்த்வாப்யபூ⁴ந்நஷ்டே வத்ஸே கௌ³ரிவ வத்ஸலா .. 21..

தமேவ த்⁴யாயதீ தே³வமபத்யம்ʼ கபிலம்ʼ ஹரிம் .
ப³பூ⁴வாசிரதோ வத்ஸ நி꞉ஸ்ப்ருʼஹா தாத்³ருʼஶே க்³ருʼஹே .. 22..

த்⁴யாயதீ ப⁴க³வத்³ரூபம்ʼ யதா³ஹ த்⁴யானகோ³சரம் .
ஸுத꞉ ப்ரஸன்னவத³னம்ʼ ஸமஸ்தவ்யஸ்தசிந்தயா .. 23..

ப⁴க்திப்ரவாஹயோகே³ன வைராக்³யேண ப³லீயஸா .
யுக்தானுஷ்டா²னஜாதேன ஜ்ஞானேன ப்³ரஹ்மஹேதுனா .. 24..

விஶுத்³தே⁴ன ததா³(ஆ)த்மானமாத்மனா விஶ்வதோமுக²ம் .
ஸ்வானுபூ⁴த்யா திரோபூ⁴தமாயாகு³ணவிஶேஷணம் .. 25..

ப்³ரஹ்மண்யவஸ்தி²தமதிர்ப⁴க³வத்யாத்மஸம்ʼஶ்ரயே .
நிவ்ருʼத்தஜீவாபத்தித்வாத்க்ஷீணக்லேஶாப்தநிர்வ்ருʼதி꞉ .. 26..

நித்யாரூட⁴ஸமாதி⁴த்வாத்பராவ்ருʼத்தகு³ணப்⁴ரமா .
ந ஸஸ்மார ததா³(ஆ)த்மானம்ʼ ஸ்வப்னே த்³ருʼஷ்டமிவோத்தி²த꞉ .. 27..

தத்³தே³ஹ꞉ பரத꞉ போஷோ(அ)ப்யக்ருʼஶஶ்சாத்⁴யஸம்ப⁴வாத் .
ப³பௌ⁴ மலைரவச்ச²ன்ன꞉ ஸதூ⁴ம இவ பாவக꞉ .. 28..

ஸ்வாங்க³ம்ʼ தபோயோக³மயம்ʼ முக்தகேஶம்ʼ க³தாம்ப³ரம் .
தை³வகு³ப்தம்ʼ ந பு³பு³தே⁴ வாஸுதே³வப்ரவிஷ்டதீ⁴꞉ .. 29..

ஏவம்ʼ ஸா கபிலோக்தேன மார்கே³ணாசிரத꞉ பரம் .
ஆத்மானம்ʼ ப்³ரஹ்மநிர்வாணம்ʼ ப⁴க³வந்தமவாப ஹ .. 30..

தத்³வீராஸீத்புண்யதமம்ʼ க்ஷேத்ரம்ʼ த்ரைலோக்யவிஶ்ருதம்ʼ .
நாம்னா ஸித்³த⁴பத³ம்ʼ யத்ர ஸா ஸம்ʼஸித்³தி⁴முபேயுஷீ .. 31..

தஸ்யாஸ்தத்³யோக³விது⁴தமார்த்யம்ʼ மர்த்யமபூ⁴த்ஸரித் .
ஸ்ரோதஸாம்ʼ ப்ரவரா ஸௌம்ய ஸித்³தி⁴தா³ ஸித்³த⁴ஸேவிதா .. 32..

கபிலோ(அ)பி மஹாயோகீ³ ப⁴க³வான் பிதுராஶ்ரமாத் .
மாதரம்ʼ ஸமனுஜ்ஞாப்ய ப்ராகு³தீ³சீம்ʼ தி³ஶம்ʼ யயௌ .. 33..

ஸித்³த⁴சாரணக³ந்த⁴ர்வைர்முனிபி⁴ஶ்சாப்ஸரோக³ணை꞉ .
ஸ்தூயமான꞉ ஸமுத்³ரேண த³த்தார்ஹணநிகேதன꞉ .. 34..

ஆஸ்தே யோக³ம்ʼ ஸமாஸ்தா²ய ஸாங்க்²யாசார்யைரபி⁴ஷ்டுத꞉ .
த்ரயாணாமபி லோகாநாமுபஶாந்த்யை ஸமாஹித꞉ .. 35..

ஏதன்னிக³தி³தம்ʼ தாத யத்ப்ருʼஷ்டோ(அ)ஹம்ʼ தவானக⁴ .
கபிலஸ்ய ச ஸம்ʼவாதோ³ தே³வஹூத்யாஶ்ச பாவன꞉ .. 36..

ய இத³மனுஶ்ருʼணோதி யோ(அ)பி⁴த⁴த்தே
கபிலமுனேர்மதமாத்மயோக³கு³ஹ்யம்ʼ .
ப⁴க³வதி க்ருʼததீ⁴꞉ ஸுபர்ணகேதா-
வுபலப⁴தே ப⁴க³வத்பதா³ரவிந்த³ம் .. 37..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே வையாஸக்யாமஷ்டாத³ஶஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே
த்ரயஸ்த்ரிம்ʼஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 33..

.. இதி த்ருʼதீயஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 10-ஸ்ருஷ்ட்டி வைவித்யம் -படைப்புகளின் விவரணம் –

September 18, 2020

வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்

வைகுண்ட வர்தித பலோ அத பவத் பிரசாதா
தம்போஐ யோநிர ஸ்ருஜத் கில ஜீவ தேஹாந்
ஸ்தாஸ் நூநி பூருஹ மயாநி ததா திரஸ் சாம்
ஜாதிம் மநுஷ்ய நிவஹா நபி தேவ பேதாந் —-1 –

ஸ்ரீ வைகுண்ட நாதா உனது திரு அருளால் பிரம தேவன் மிகுந்த சக்தியை அடைந்து பல ஜீவ ராசிகளையும்
மரம் செடி கொடி பறவை மிருகம் முதலியவற்றையும் மனிதர்களையும் தேவர்களையும்
தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்காதிகளையும் படைத்தாராமே –

——————

மித்யாக்ரஹ அஸ்மி மதி ராக விகோப பீதி
ரஜ்ஞாந வ்ருத்தி மிதி பஞ்ச விதாம் ச ஸ்ருஷ்ட்வா
உத்தாம தாமச பதார்த விதாந அதூந
ஸ்தேந த்வதீய சரண ஸ்மரணம் விஸூத்த்யை –2-

அறிவு மயக்கம் அஹங்காரம் மமகாரம் ஆசை கோபம் பயம் முதலான பஞ்ச அஞ்ஞான கார்யங்களை உண்டு பண்ணினார்
தமோ குணமான கார்யங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார்
அத் துயரம் விலக உனது திருவடிகளைத் த்யானம் செய்தாராம்-(விஸூத்த்யை–தூய்மை ஆக்கிக் கொள்ள )

——————

தாவத் ச சர்ஜ மனஸா சனகம் சநந்தம் பூயஸ் ஸநாதன முனிம் ச ஸனத் குமாரம்
தே ஸ்ருஷ்டி கர்மணி து தேந நியுஜ்ய மாநாச த்வத் பாத பக்தி ரசிகா ஜக்ருஹுர் ந வாணீம் –3-

சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் ஆகியோரை மனத்தினால் படைத்தார் –
ஸ்ருஷ்டியில் ஈடுபடும் படி அவர்களுக்கு ஆணை இட்டார்
ஆனால் அவர்கள் தங்கள் சேவையில் நாட்டம் கொண்டு ப்ரம்மாவின் வாக்கை ஏற்க வில்லை –

(சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் -இந்த நால்வர் தான் ஜய விஜயர்களுக்கு சாபம் கொடுத்தவர்கள்)

——————-

தாவத் ப்ரகோப முதிதம் ப்ரதி ருந்ததோ அஸ்ய ப்ரூ மத்யதோ அஐநி ம்ருடோ பவத் ஏக தேச
நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சே த்யாதவ் ருரோத கில தேந ச ருத்ர நாமா –4-

அப்போது பிரம்மாவுக்கு கோபம் உண்டாயிற்று -அதை அடக்கினார் –
அப்போது அவருடைய புருவங்களின் நடுவில் இருந்து ஸ்ரீ ருத்ரன் தோன்றினார்
அவர் பிரம்மனிடம் தனக்கு பெயரையும் இருப்பிடங்களையும் வேண்டினார்-ருததீ ருத்ரர் -அழுததால் ருத்ரர்

——————–

ஏகாதஸாஹ் வய தயா ச விபின்ன ரூபம் ருத்ரம் விதாய தயிதா வனிதாஸ் ச தத்வா
தாவந்த்ய தத்த ச பதாநி பவத் ப்ரணுந்ந ப்ராஹ ப்ரஜா விரச நாய ச சாதரம் தம் –5-

உன்னால் ஏவப்பட்ட படி அந்த பிரம தேவன் ருத்ரனுக்கு பதினோரு பெயர்களையும் பதினோரு மனைவி மார்களையும்
தனித் தனி இருப்பிடங்களையும் அளித்தார்
பின்பு உயிர்களைப் படைக்கும் படி அன்புடன் கட்டளை இட்டார் –

————–

ருத்ராபி ஸ்ருஷ்ட பயதா க்ருதி ருத்ர சம்க சம் பூர்ய மாண புவன த்ரய பீத சேதா
மா மா ப்ரஜா ஸ்ருஜ தபஸ் சர மங்கலாயே த்யா சஷ்ட தம் கமல பூர் பவதீரி தாத்மா –6–

ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் பயங்கரமான உருவங்களுடன் மூ வுலகிலும் நிரம்பியதைக் கண்டு பயந்தார்
பிறகு ருத்ரனைப் படைக்க வேண்டாம் -உலக நலத்திற்காக தவம் செய் என்று சொன்னார்-

——————

தஸ்யாத சர்க ரஸி கஸ்ய மரீசி ரத்ரிஸ் தத்ராங்கரா க்ரது முனி புலஹ புலஸ்த்ய
அங்காத ஜாயத ப்ருகுஸ் ச வசிஷ்ட தஷவ் ஸ்ரீ நாரதஸ் ச பகவன் பவ தங்க்ரி தாஸ –7-

பிரமன் தனது ஸ்ருஷ்டியில் ஈடுபட்டார் -அவரது உடலில் இருந்து ஒன்பது பிரஜாபதிகளும்
உனது திருவடியில் பற்று உடைய ஸ்ரீ நாரத முனிவரும் உண்டானார்கள்
மரீசி அத்ரி அங்கிரஸ் க்ரது புலகர் புலஸ்த்யர் பிருகு வசிஷ்டர் தக்ஷன் ஸ்ரீ நாரதர்
ஆகியவர்கள் உண்டானார்கள்

—————

தர்மாதி காநபி ஸ்ருஜந்நத கர்தமம் ச வாணீம் விதாய விதி ரங்கஜ சம்குலோ அபூத்
த்வத் போதிதைஸ் சனக தக்ஷ முகைஸ் தநூஜை ருத் போதிதஸ் ச விர ராமோ தமோ விமுஞ்சன் –8-

அங்கஜசம் -மன்மதன்-

பிறகு பிரமதேவர் தர்மம் முதலியவைகளையும் கர்த்தமரையும் படைத்தார் -சரஸ்வதியைப் படைத்து காமத்தை அடைந்தார்
தாங்கள் ஸநகாதிகளை ஏவி அறிவுரை கூறச் செய்தீர்-அதனால் பிரம்மதேவரின் அஞ்ஞானம் விலகியது
வேதம் புராணங்களையும் வெளியிட்டு தனது புதல்வர்களுக்குக் கற்பித்தார்

————————-

வேதாந் புராண நிவஹா நபி ஸர்வ வித்யா குர்வன் நிஜாநந கணாச் சதுரா நநோ அசவ்
புத்ரேஷு தேஷு வினிதாய ச சர்க வ்ருத்தி மப் ரானுவம் ஸ்தவ பதாம் புஜம் ஆஸ்ரிதோ பூத் –9-

பிறகு அவர் நான்கு வேதங்களையும் அங்கங்களையும் புராணங்களையும் வித்யைகளையும் எல்லாக் கலைகளையும்
வெளியிட்டு அவற்றை தனது புத்ரர்களுக்கு உபதேசம் செய்தார் -ஆனாலும் ஸ்ருஷ்ட்டி வளர்ச்சி அடையவில்லை
தங்களுடைய திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்தார்

உலகம் ஒரு நாளில் படைக்கப்பட வில்லை
மீண்டும் மீண்டும் தடைகள் வர
மீண்டும் மீண்டும் சரண் அடைந்து
அவற்றை விலக்க பிரார்த்திக்கிறார்

—————

ஜாநந் நுபாய மத தேஹ மஜோ விபஜ்ய ஸ்ரீ பும்ஸ பாவமப ஜன்மனு தத்வ தூப்யாம்
தாப்யாம் ச மாநுஷ குலாநி விவர்தயம் ஸ்த்வம் கோவிந்த மாருத புரேச நிருந்தி ரோகாந் –10-

அதன் பிறகு ஸ்ருஷ்டிக்க வழியைக் கண்டார் -தனது சரீரத்தைப் பிரித்துக் கொண்டு
ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையைப் படைத்தார்
அந்தத் தம்பதிகள் மூலம் ஸ்ருஷ்டியைப் பெறுகச் செய்த தாங்கள் அடியேனது ரோகங்களைப் போக்கி அருள வேண்டும்
என்று வேண்ட ஸ்ரீ அப்பனும் அங்கீ கரித்து அருளினார்

முதலில் தோன்றிய ஆணும் பெண்ணும் -ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையை-இவர்களே
கீழே முனிவர்கள் உண்டே என்னில்
இவர்கள் தான் மனிதர்கள்
ரிஷிகள் தனி தானே

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை –

September 11, 2020

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா -ஸ்ரீ தசாவதார ஸ்லோகம் –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப் பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

————————————————————————————————-

ஸ்ரீ கிரீடா வல்லபன் -அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் -லீலைகளுக்காகவே அவதாரம்
அவதாரமே லீலை
கோகுல லீலை
பிருந்தாவன லீலை
வடமதுரை லீலை
விவாக லீலை
ஸ்ரீத்வராகா லீலை
மஹா பாரத லீலை
யது குல திலகம்

——————-

வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அவன் -கிறிக் கொண்டு -உள்ளம் புகுந்து –
விசித்ரமான லீலைகள் -அநேக லீலைகள் –
கீதா சாஸ்திரம் யுத்த களத்திலே அருளிச் செய்த லீலை
ஓர் நகையுடன் உண்மை உரைக்க அடி சேர்ந்த விஜயனுக்கு -லோகத்துக்காக கீத உபநிஷத் –
ரதி-சாரதி –
மோக்ஷ பிரதத்வத்திலும் லீலை -ததி பாண்டவனுக்கும் தயிர் தாழிக்கும்
சரணாகதி சரம ஸ்லோகமும் லீலையாக அருளி
பவந்தி லீலா -ஆளவந்தார்
பூதனாவுக்கும் மோக்ஷம் பால்யத்திலே
கண்டா கர்ணனுக்கும்
கைலாசம் புத்ர வரம் -கள்வா
கிருஷ்ணாஸ்ரய -நாதன் -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி – மாம் -அஹம் –
ஜன்ம கர்ம மே திவ்யம்

—————

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-

ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –

—————

திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-

இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள்

—————–

வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6-

பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி -அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

————–

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-

இவள் கண்ட அநந்தரம்-அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூஸ்சை கொடுத்து காட்ட கூடும் -இறே
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –
ஆச்சர்ய சக்தன் என்று இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள்

—————

திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-

அசாதாரண விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பூர்ணனானவன் திருவவதரித்த பிரகாரம்-

திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க உலோபளாலநங்களோடே அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

திருக் கையாலே பிடித்து திருப்பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல்

————–

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

————-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான-தானும் மதலையாய் இருக்கச் செய்தே –
அத்தனை பேரும் ஒருதலை – தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த இள யானை போலே
தானே பிரதானனாய் விளையாடும் -இப்படி திரியா நிற்க செய்தே -ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவன்-

—————-

மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

திரு ஆழியும் -கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -நிரந்தரமாக
வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான சேர்த்தியை ஒரோ தசைகளிலே இவன் தான்
இவளுக்கும் காட்டக் கூடும் இறே

————–

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு -இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –
அண்டத்தையும் அண்டாந்த வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கினவன் –

—————

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக முன்னே பூமியை இருப்பிடமாக
உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து -தன்னை பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து -பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே -பருவம் நிரம்புவதுக்கு முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –
லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

———–

மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

—————–

மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான –
நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

——————–

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-

மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே -என்கிறபடியே கம்சன் முதலான
துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி -அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
ஜானாதுமாவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –
போய் -வீங்கு இருள்வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே அந்த செறிந்த இருளிலே பெற்ற
தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதரா நிற்க திரு ஆய்ப்பாடியிலே போய் –

—————-

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-

இருந்ததே குடியாக உஜ்ஜீவிக்கும்படி -இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து -அது தானே உனக்கு மிகவும்
தேஜஸ்சாம்படி இருப்பானாய்-வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

————–

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-

அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின் அழகை உடையவன்
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

—————–

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-

கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருண்டு இருக்கிற திரு மேனியை உடையவனே –
அஞ்சனம் -மை மைப்படி மேனி இறே
கன்றுகளின் பின்னே போகிற போதை நடையின் த்வநியையும் -திரு மேனியின் குறு வெயிர்ப்பும்
அலைந்த திருக் குழல்களும் -திருக் கையில் பிடித்த பொற் கோலுமான ஆயர் குலத்தை உடையவனாய் –
அவர்களுக்கு முன்னோடி கார்யம் பார்க்கும் தலைவன் ஆனவனை –
அன்றிக்கே –
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே
அவர்களுக்கு நோவு வந்தால் -முதல் தன் முகம் வாடும்படி இருக்கையாலே
கொழுந்து -என்கிறதாகவுமாம் -ஆயர் கொழுந்தாய்-என்றார் இறே ஆழ்வார்

———–

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –
தேவகிப் பிராட்டிக்கு அஷ்ட கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் –
கால நேமியோடே சம்பந்தம் உடையராய் -ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே
வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க -தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை
கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது
இழந்தவள் தன் வயிற்றில் அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் –அங்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -இங்கு ஸ்வாமித்வம்
தேவகி பிராட்டியார் வயிற்றில் ஸ்ரீ கிருஷ்ண எழுந்து அருளி இருந்த இருப்பு போலே இறே
பூடுறை ஸ்ரீ கோயிலில் ஸ்ரீ அழகர் எழுந்து அருளி இருந்த இருப்பும் இவர்க்கு-

——————————-

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நாரணன் நம்பி திரு வோணத்தான்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் சித்தம் பிரியாத திருவின் வடிவு ஒக்கும் தேவகி தன் வயிற்றில்
சிக்கனே இருட்டில் வசுதேவன் தம் மகனாய் வந்து பிறந்த அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் கோவலர் குட்டன் நந்தன் மதலை மைத் தடம் கண்ணி யசோதை
வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தாய் போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து
திண் கொள் அசுரரை தேய தந்த களிறு போல் தானே விளையாடும் ஆய்ச்சி மகனாக வளரும்
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் பேதை குழவி
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள்
ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் உய்ய இவ் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆச்சார்யர்களும் —

September 9, 2020

கடவுளே -அருளிச் செயலில் சப்த பிரயோகம் கண்ணனையே –

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே -ஸ்ரீ பெரிய திருமொழி–4-6-5-

கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய்
சர்வாதிகனான நீயே
சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-
கண்ணன் அனுபவத்திலேயே மண்டி இருப்பார்களே

——————

ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் ஸ்ரீ கண்ணனும் -ஸ்ரீ கிடாம்பி வெங்கடேசன் ஸ்வாமிகள் –

கிடந்தது பூமி எடுத்தது குன்றம் கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா
காணாக் கண் கேளாச் செவி -சேர்ந்தே அனுபவம்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது –பேய் முலை நஞ்சூணாக உண்டான்
பூதனா நிரசனத்துடன் அனுபவம் தொடங்கும்
புள்ளின் வாய் கீண்டானும் -மருதிடை போய் மண் அளந்த மால்
கடை வெண்ணெய் உண்டாய் –
அறியும் உலகு எல்லாம் -உவணம் ஊர்ந்தாய்-பரத்வ ஸூசகம் –
தாம்பின் தழும்பு ஸுவ்லப்யம் பறை சாற்றும் –
கண்டு பற்றுகைக்கு ஸுவ்லப்யம்-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு -களவாடிய செயலைக் காட்டி
குரல் ஓவாது ஏங்கி அயலார் காண இருந்த ஓங்காத வண்ணா உரை
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த
செங்கண் அவன் -நிரை நிரை அணி –10 சேஷ்டிதங்களை ஒரே பாசுரத்தில் அனுபவம்
தோள் கார்யங்கள் -62–
மருதினூடு போய் -பூம் குறுந்தம் சாய்த்து -மண மருவ மால் விடை ஏழு செற்று –
ஏழு உலகம் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவ பொங்கு அணையான் தோள்
87-இனி யார் புகுவார் எழு நரக வாசல்
கலியும் கெடும் கண்டு கொண்மின் போல்
ஓர் அடியும் -சாடு உதைத்த –கேசவனை -ஈர் அடியும் காணலாம் –
கேசவனை மாயவனையே மனத்து வை -100 நிகமனம்

——————

*ஸ்ரீ பூதத்தாழ்வாரும் கண்ணனும்* *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* ஸ்ரீ க்ருஷ்ணானுபவத் தொடர்

ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதாரம் -ஆவணி ரோஹிணி -கிமு 3102-125 ஆண்டுகள்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
ஸூகாதிகளும் முதல் ஆழ்வாரும் பரத்வத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் –
காலத்தால் முன்னால் -பக்தியில் முதிர்ந்த முதல் ஆழ்வார்கள்

அத்புதம் பாலகம் -பரத்வம் தோன்றவே அவதாரம்
அம்புஜ அக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதாயுதம் –
செய்ய சுடர் ஆழி
அன்பே விஷயமான திருவந்தாதி
வேணு கோபாலன் ஷேத்ராதிபதி
ஆயனர் -திருவிக்ரமன் -பரத்வம் பொலிய இருக்கும் திவ்ய தேசம்
முத்துக்கள் சேரும் கடல் மல்லை
கடல் மல்லைக் கிடக்கும் கரும்பு –
கிருபா சாகரம் கடல் மல்லை பூதத்தாழ்வார்-இதுவே நிரூபகம்
கடல் மல்லை தல சாயனத்து உறைவார் -அவனுக்கும் இதுவே நிரூபகம்
கதையின் பெரும் பொருளும் கண்ணா -நின் பேரே-இதயம்-64-
இதிஹாச புராணங்கள் கண்ணனையே சொல்லும்
திரு நாம சங்கீர்த்தனமே சார தமம் –
வேதைஸ் சேர்வை அஹம் ஏவ போல் –
இருந்தவையே ஏத்தில் – கதையின் திருமொழியாய் நின்ற திரு மாலே
உன்னைப் பரு மொழியால் காணப் பணி -ஸதா பஸ்யந்தி பண்ணப் பண்ணி அருள்

———————

பேயாழ்வார் அனுபவித்த கண்ணன் -ஸ்ரீ உ வே M A மதுஸுதனன் ஸ்வாமி-

ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்
பரத்வத்தில் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய கேள்வன் –
குறும்பு யோசித்த கோபாலகனே பாற் கடலிலும் வேங்கடத்திலும் பனி விசும்பிலும் மனத்துள்ளும்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -முதல் நாயகி தாயார் பாசுரம் -மல் போன்ற நீண்ட தோள் மால் கிடந்த
கண்ணனே -மேகங்களைக் காணிலும்
அடைந்தது அரவணை மேல் -ஐவர்க்காய் –பேய்ச்சி பால் உண்ட பிரான் யசோதை மத்துக்கு அஞ்சி
அஞ்சாதவன் பீஷ்மாதிகளுக்கு-ப்ரஹ்மாஸ்திரத்துக்கும் அஞ்சாதவன் மத்துக்கு பீதனானான்
அவர்களும் வில்லை போய்ட்டு மத்தைக் கையில் கொண்டு இருந்தால் வென்று இருப்பார்கள்
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் ஆய்ச்சியால் வெண்ணெய் உண்டு ஆப்புண்டவன்
அம்மனே -இது இவருடைய எத்திறம் இருந்தபடி
மண்ணுண்டும் -பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் உண்டு -வயிற்றினொடு ஆற்றா மகன்
திருமழிசை மூன்றும் அருளிச் செய்தது போல் இவரும்
வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ -வண்ணான் சாலில் எவ்வளவு போட்டாலும் ரொம்பாதே
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் -மகனாம் –
லோக பிதா பித்ரனைத் தேர்ந்து எடுத்து பிதாவாகக் கொண்டான் வேதம் காடகம்
மகன் தன் காதல் மகனை -அநிருத்தனுக்காக வாணனை கர வனம் அழித்து
திரு வேங்கடத்திலும் ஊன்றி-
அவனே திருவல்லிக் கேணியான்
கண்ணனாகவே திருவேங்கடத்தானை அனுபவிப்பார் பெரும்பாலும்
அவர் திருவவதாரம் -வேங்கட கிருஷ்ணனே அவர் மனத்தில் இருந்து அனுபவிப்பிக்கிறான்

உம்பர் கோமானே உறங்காது -கண்ணனை எழுப்ப -ஆண்டாளும்
பேயாழ்வார் சந்நிதியில் கண்ணன் எழுந்து அருளி சேர்ந்தே சேவை திருவல்லிக் கேணியில்

————-

திருமழிசைப்பிரானும் கண்ணனும் ஸ்ரீகோயில் தேவராஜன் ஸ்வாமி

கோயில் ப்ராதான்யம் போல் கண்ணன் ப்ராதான்யம்
பன்னிரு ஆழ்வார்களும் மங்களா சாசனம் கண்ணனுக்கும் கோயிலுக்கும்
ஒரு பிறவியில் இரு பிறவி இருவரும்
யது குலம் கோப குலம்
ரிஷி குமாரராக பிறந்து பிரம்பு அறுத்தவனால் வளர்க்கப்பட்டு
அக்ர பூஜை சாம்யம்
கூனி -கூன் போக்கி பால் கொடுத்த தம்பதிக்கு இளமை
மன்னு திரு மழிசை -மன்னு வடமதுரை
கால நேமி
காசி ராஜன்
பவ்ண்ட்ர வாசுதேவன் இவர் மட்டுமே அனுபவம்
ஆதி ஆதி ஆதியான -முக்காரணங்களும் –ஆயனாய மாயம் என்ன மாயமே–35- –
சிசுபாலாதிகளும் அகப்பட உஜ்ஜீவிக்கும் படி –
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ –36-
சர்வ நியாமகன் நியமிக்கப் படுவதே
குரூரமான முலைகள் குரூரமான பால் –
விஷப்பாலை குடித்ததுக்கு கோபிகள் வாய் அமுதம் பரிகாரம்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் மாயன் -கபிஸ்தலம்

——————

ஸ்ரீ குலசேகராழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் ராமானுஜன் ஸ்வாமி

வால்மிகி பகவானும் குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் பூர்ண அனுபவம்
முகுந்தா மாலை தனி பிரபந்தம்
ஸ்ரீ ரெங்க யாத்ரா தினே தினே –
தோய்த்த தயிர் -அரங்கன் -அடியார் -பெரிய பெருமாளும் கண்ணனே –
ஊடல்-வாஸூ தேவா உன் வரவு பார்த்தேன்
ஒன்பது பெண்களை வஞ்சித்தது
தேவகி புலம்பிய புலம்பல்
தொல்லை இன்பத்து இறுதி காணும்படி அழுகையும் அஞ்சின நோக்கும் -தொழுத கையும் –
எழில் கொள் தாம்பு -அசேதனமும் எழில் இவன் சம்பந்தத்தால்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே

——————

பெரியாழ்வாரின் க்ருஷ்ணானுபவம் – விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா அம்மங்கார்

வண்ண மாடங்கள் கண்ணன் கேசவன் நம்பி
கண்ணன் கேசவன் கிலேச நாசகன்
ஏகோ ப்ரஹ்ம ஆனந்தம் -நம்பி -ஸமஸ்த கல்யாண குண சாகரம்
பண்புடைப் பாலகன் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மாயன் -ஆத்ம மாயயா-பாதக் கமலங்கள் காணீரே -மாம் ஏகம் சாதனம் வ்ரஜ –
திண் கழல் அன்றோ
பரம் பரனே ஆடுக செங்கீரை -அங்கே அவாக்ய அநாதர-
மன்னு குறுங்குடி திரு வெள்ளறை கண்ணபுரம் அவனே இங்கும்
அந்தமில் பேர் இன்பத்தை சிற்றின்பமாக்கி அன்றோ ஆய்ப்பாடியில்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
அரு மருந்து பிறவிக்கும் போகம் குறையாமைக்கும்
பந்தம் அறுப்பதற்கும் போகம் வளர்க்கைக்கும்
பத்து மஞ்சள் -பூசி பாவை மாருடன் பாடியில்
பாதம் நண்ணாத நாள் பட்டினி நாள்
உபவாச திவசம் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் –
மாயன் மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே

——————

ஸ்வாமி நம்மாழ்வாரும் கண்ணனும்–ஸ்ரீ உ வே பள்ளிகரணை திருமாலை நடாதூர் சேஷாத்ரி ஸ்வாமி–

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பராசராதிகள் போல் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி
திருவரங்கம் த்ரித விபூதி போல் தத்வ த்ரயங்களை விட இது தனி தத்வம்
ஆராமங்களில் ராஜ நீதி –
ஸ்ரவணம் –தாஸ்யம் -நவவித பக்தி
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இதிலே ஆழ்வார் ஊன்றி
சேமம் குருகையோ –நாரணமோ -அத்விதீயம்
பூ பாரம் -மண்ணில் பாரம் நீக்க -தர்ம ஸம்ஸ்தானம் -ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கவே
சாஷாத் தர்மம் இவனே காட்டவே அவதார நோக்கம்
எத்திறம் மூ ஆறு மாதம் மோகித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
திருவாய்மொழி என்னும் தேன்
ஒரு நீராக ஆக்கினான்
கரண கலக்கத்தை -ஒருபடிப்படுத்த கண்ணன்
சீலமில்லா சிறியன்–சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மடலூர ஒருப்பட -கண்ணன் வந்து கலவாமையால்
பேர் அருள் -கண்ணன்
கோபிமார் ஆகாரம் ஏறிட்டு மின்னிடை மடவார்
குரவை முதலான கோலச் செயல்கள்
கிருஷி பூ வாசகம் -கிருஷ்ணன் பூமிக்கு சுகம் திவ்ய தேசங்கள் -அர்ச்சாவதாரமே தாரகாதிகள்
கண்ணன் அடி இணையில் காதல்-சுருங்க செப்பி -உபதேசம் நிகமனம்
அத்தனை பதிகங்களில் கண்ணன் -கேட்ப்பார் கேசவன் கீர்த்தி அன்றி மற்றும் கேட்ப்பாரோ

———————

ஸ்ரீ மதுரகவியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே தென்திருப்பேரை பார்த்தசாரதி ஸ்வாமி

தேவு மற்று அறியேன் என்பவரும்
முதலிலே ஆழங்கால் பட்டு
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட பெரு மாயன் என் அப்பனில்
எடுத்துக் கழிக்கவும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் விளக்க கிருஷ்ண அனுபவம்
எத்திறம் என்று ஆழ்வார் ஆழங்கால் பட்ட இதுவே ஆழ்வார் திரு உள்ளத்துக்கு நெருக்கமாக இருக்குமே

———————-

திருப் பாணாழ்வார் அனுபவிக்கும் கண்ணன் -பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி-

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போல்
லோக சாரங்க முனிவரால் எழுந்து அருளப் பண்ணி -முனி வாகன போகம்
ராமனாகவும் நரசிம்மனாகவும் உலகு அளந்தவனாகவும் பாடி -தப்பைச் செய்தோம்-கண்ணனே இவன்
கோவலன் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் -ஆயர்களுக்கு நாயகன்
கொண்டல் வண்ணன் -முகில் வண்ணன் -தானே இவன் சீதள காள மேகம் பட்டர் –
மின்னல் இந்த்ரியா -பெரிய பிராட்டியார் -பூஷா மணி இந்திர தனுஸ் வானவில் -தயா ரசம் விஞ்சி –
மேகம் கீழே வருமோ இவனோ கோவலனாய் அண்டர் கோனாய் நமக்காக
அவதார பிரயோஜனம் கோவலனாகைக்கும் அண்டர் கோன் ஆகைக்கும் வெண்ணெய் உண்ணவுமே
வெண்ணெய் உண்டது எனது உள்ளத்தைக் கவரவே என்கிறார்
வெண்ணெய் உண்டது அப்யாசம் இதுக்காகவே
அணி அரங்கன் இவனே தான் என்கிறார்
அபேச்சேத நியாயம் -இறுதி சொன்னதே கொள்ளத் தக்கது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் -கண்ணனை அரங்கமாலை என்று நிகமிக்கிறார் –

——–

ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி

மதுர வாறே -மழைக்கு அன்று வரையை ஏந்திய ஆறே திருவரங்கத்தில்
பண்டு அவன் செய்த க்ரீடை தான் கிருஷ்ணாவதாரம் -பெரியாழ்வார்
பிரபந்த தாத்பர்யம் உபக்ரம உப சம்ஹாரம்
திருமாலையில் –அச்யுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
கண்ணனை அரங்க மாலை உபஸம்ஹாரம்
தனியனிலும் கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் பாடப் பெற்றதாகவே
கற்றினம் மேய்த்த கழலிணை ஆழ்வாரும்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உபத்தி
கன்றுகளை மேய்த்து இனிது உகப்பவன்
பட்டரும் பிருந்தாவனம் பண்டிதன் இவனே பெண்களையும் வெண்ணெயும் ஒளித்து வைத்தாலும்
அறிய வல்ல பண்டிதன்
தாண்டவம் கற்றதும் தயிர் கடையும் ஓசைக்கு ஆடிக் கற்றுக் கொண்டான்
மொசு மொசுப்பு எல்லாம் இன்றும் காணலாம்
கார் ஒளி வண்ணனே கண்ணனே
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
காக்கும் இயல்பினன் கண்ணபிரான்
கோயில் சாந்து அழியாத திரு மார்பு
ஆமைத்தாலி அச்சுத்தாலி புலி நகம் பஞ்சாயுத மாலை-
கவள மால் யானையைக் கொன்ற கண்ணனை
திருப்பள்ளி எழுச்சியிலும்
ப்ரஹ்மாதிகள்
அயோத்தி அம் அரசே
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும்
இதுக்கு எல்லாம் அசையாமல்
துகில் உடுத்து ஏறினாய் கண்ணனை அருளிச் செய்தே நிகமிக்கிறார் –
சூழ் புனல் அரங்கா -ரசம் இழக்கப் போகிறாய்
துடி இடையர் சுரி குழல்-துகில் உடுத்து ஏறுகிறார்களே
பள்ளி எழுந்து அருளாய் -கேட்டதும் பதறி எழுந்தானாம்

——————

திரு மங்கை ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

பிடி தோறும் நெய் போல் அடி தோறும் அர்ச்சையிலே இருந்தாலும் –
காதில் கடிப்பிட்டு ஊடல்
பிள்ளைத் தமிழ் பதிகங்கள்
எங்கேனும் இது ஒப்பதோர் மாயம் உண்டோ
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -பசு நிரை மேய்ப்பு உவத்தி
நீரூட்டி -தடம் பருகு கரு முகிலை
சொல்லுண்டான் காணேடீ –சாழலே
பார்த்த சாரதி அனுபவம் பெரிய திருமொழி பதிகங்கள் தோறும் கலியன்
4-10-5-/ஆழியால் அங்கு மறைத்து /6-5-9-/9-9-8 /10-/11-காணேடீ
ஆஸ்ரித ரக்ஷணம் ஆழங்கால் பட்டு அனுபவம்
ஆஸ்ரித பக்ஷபாதன் தெளிவாகக் காட்டி
பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பண்ணினவை –
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்தைக் காண மாட்டான் அன்றோ

———-

கீதாச்சார்யரும் ஜெகதாச்சார்யரும் – திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர்
ஈஸ்வரனும் ஆச்சார்ய பதவியை ஆசைப்பட்டு இருக்கும்
அவதார சம்பந்தமும் அருளிச் செயல் சம்பந்தமும் உண்டு
அநந்தன் பிரதம ரூபம் -பார்த்த சாரதியே -என்றும் உண்டே
பலராமாநுஜனே இளையாழ்வார்
எம்பெருமானார் -அவரோ நீர் -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கேட்ட ஐதிக்யம்-பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம்
லோக ரக்ஷணத்தில் பாரிப்பு மிக்கு
சமிதோதிதய சங்கர கர்வம் அடக்கி பாணாசுரன் சங்கர பாஸ்கர இத்யாதி –
யாதவ பிரகாச–உஜ்ஜீவனம் -யது குலம் உத்தரிக்க – –
ஸ்ருதோ அபார்த்தான் -அபார்த்தங்கள் நிரசித்து ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் -மூன்று சாம்யங்கள் தேசிகன் –

அருளிச் செயல் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ கீதா பாஷ்யம் சம்பந்தமும் உண்டே
செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் அருளிச் செய்து –
அவதார ரஹஸ்ய ஞானம் -சம்பவாமி ஆத்ம மாயயா -அஜஹத் ஸ்வபாவம் -மாயம் சங்கல்பம் இச்சையால் –
எத்திறம் என்று மொஹித்த மாறன் அடி பணிந்தவர் ஸ்ரீ கீதா பாஷ்யம்
சாதுநாம் -ஸ்வாமி வியாக்யானம் மிக ரசமாய் இருக்குமே
கம்பீர -மதுர –
யுக்த லக்ஷண தர்ம சீல -வைதிக அக்ரேஸர் -நம்மாழ்வார் நிலையையே விளக்கி வியாக்யானம்
தொழுது எழு என் மனனே
என் சொல்லிச் சொல்லுகேன் நான்
வெண்ணெய் உண்ணும் ஈனச் சொல்லே
உண்டோ கண்கள் துஞ்சுதல்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
முக்கிய பிரயோஜனம் சாது சம்ரக்ஷணமே மற்றவை ஆனு ஷங்கிகம் -சங்கல்பத்தாலே அவையை செய்ய வல்லவன் அன்றோ
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்தது போல் இங்கு அவதரித்து
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினாயே
மழுங்காத ஞானமே படையாக இருந்து இருந்தால் –சோதி மறைந்து இருக்குமே
கரஸ்த கமலம் பாதயோஸ் அர்ச்சிக்கவே அழைக்கவே அந்தர்யாமியாய் அறிந்து அவதரித்து
அரை குலைய தலை குலைய வந்த த்வரைக்கு நமஸ்காரம்

கண்ணன் ஸ்ரீ ஸூக்திகளை கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவத்தின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே வியாக்யானம்

————–

ஆழ்வானும் கண்ணனும் -ஆழ்வானும் கண்ணனும் …. ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
மொழியைக் கடக்கும்
சிஷ்ய ஆச்சார்ய பூர்த்தி
உபய காவேரி மத்யத்தில் விண்ணப்பிக்கவோ -மேதா விலாசம் -பாவஜேன கிருதஞ்ஜேனே தர்மஜ்ஜேன–
உமது ரூபத்தில் ஆளவந்தார்-ராமானுஜர்
அதி மானுஷ ஸ்தவம் -துயரறு சுடர் அடி -எத்திறம் மோஹித்து -ஆழ்வான்
கேள்விகள் -பால்ய உசித சேஷ்டிதங்கள் ஆகிற -நெருப்பு பொறியில் விழுவார்கள்
தயரதன் பெற்ற மணி தடாகத்தில் புக்கு அழுத்துவது போல்
கம்ச பீதியால் போனது எதனால்
பஞ்சியன்ன மெல்லடியால் சகட நிரஸனம் –
யோக அப்யாஸத்தால் கூட பிடிக்க முடியாத நீ வெண்ணெய் களவு -பிடிபட்டு அடி பட்டு என்ன நீர்மை
ஒளித்து வைத்த வெண்ணெய் மட்டுமே களவு கண்டு
திருமேனியில் பூசி -மறைக்க சாதனம் -என்ன மதி உடைமை
நிர் பயனாக இருந்து -என்ன நீர்மை
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
வெண்ணெய் போல் ஹிருதயம் வெண்மை உருகும் உயர்ந்த ஸ்தானம்
நீர் பண்டமா -சொல்ல முடியாமல்
மோர் குடத்தை உருட்டி
ஆர்ய ஜன -ஆழ்வார் போல்வாரை மோஹிக்க செய்வதற்கே
தாமத்தால் இல்லாமல் பிரேமத்தால் கட்டி வைத்து
கனைத்து இளம் -அத்தாணிச் சேவகத்தில் பொதுவான தர்மங்கள் நழுவும்
ஜீயர் புரம் -எழுந்து அருள -உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவும்
உரலில் கட்டி வைப்பதே ஸூ வ ஸ்தானம்
பின்பே ஆக்களைப் பார்க்கப் போகிறாள்

———————–

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் கீதாசார்யனும் லோகாசார்யரும் .. Sri U Ve Aththangi Srinivasacharyar
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் ஆறாம் நாள் -மூலம் நக்ஷத்ரம்
ஸ்ரீ கண்ணனாகவே ஸ்ரீ தேவப்பெருமாள் சேவை
அவரே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராக
ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
இவரும் ஸ்ரீ லோகாச்சார்யார்
பிள்ளை என்று புகழப் படுபவர்கள்
ப்ரஹ்மசர்யம் -பரிஷத் விஷயம்
சத் பிராதா
பிராமண ரக்ஷணம் இருவரும் அஷ்டாதச ரஹஸ்யம் அஷ்டாதச அத்யாய ஸ்ரீ கீதை உபநிஷத்
ப்ரமேய ரக்ஷணம் இருவரும்
ராம பிரியன் -அரங்கன் ஜோதிஷ்குடி
தன்னுடைச் சோதி தனியாகவே இருவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் ஜோதிஷ்குடி
ஸ்ரீ கீதா பாஷ்யம் யதி புனர் அவதாரம் ஆதி சேஷனே -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் இவற்றுக்கு

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ண திரு நாமங்கள் –

September 8, 2020

ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரேறே போற்றி
ஓம் அரவிந்த லோசனா போற்றி
ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆபத்சகாயனே போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
ஓம் ஊழி முதல்வனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
ஓம் எண் குணத்தானே போற்றி
ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
ஓம் எழில் மிகுதேவா போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
ஓம் கிரிதர கோபாலனே போற்றி
ஓம் கீதையின் நாயகனே போற்றி
ஓம் குசேலர் நண்பனே போற்றி
ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
ஓம் கோபியர் தலைவனே போற்றி
ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
ஓம் கோகுல பாலகனே போற்றி
ஓம் கோவிந்த ராஜனே போற்றி
ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
ஓம் சாந்த குணசீலனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
ஓம் துவாரகை மன்னனே போற்றி
ஓம் தேவகி செல்வனே போற்றி
ஓம் நந்த கோபாலனே போற்றி
ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
ஓம் நவநீத சோரனே போற்றி
ஓம் நான்மறை பிரியனே போற்றி
ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பக்த வத்சலனே போற்றி
ஓம் பலராமர் சோதரனே போற்றி
ஓம் பவள வாயனே போற்றி
ஓம் பத்ம நாபனே போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துாதனே போற்றி
ஓம் பாண்டு ரங்கனே போற்றி
ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்ணை உண்டவனே போற்றி
ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மீராவின் வாழ்வே போற்றி
ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் யமுனைத் துறைவனே போற்றி
ஓம் யசோதை செய்தவமே போற்றி
ஓம் யதுகுலத் திலகமே போற்றி
ஓம் ராதையின் நாயகனே போற்றி
ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேணு கோபாலனே போற்றி
ஓம் வைகுண்ட வாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி
ஓம் க்லீம் கிருஷ்ணாய க்லீம்

———–

1. சந்தான கோபால கிருஷ்ணன்:
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்:
தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன்:
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி:
கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன்
(வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்:
கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதனகோபாலன்:
அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி:
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணன் வந்தான்-ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

September 2, 2020

மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டித்
திண்ணமுடன் வேதமதை விரிக்க வேண்டிச்
சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி
இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்–எட்டு காரணங்கள்

1-மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் –நறையூரில் கண்டேன்
பசு வடிவம் பூமி பிரார்த்தனை ஸ்ரீ மத் பாகவதம் -அதுக்காகவே பசு மேய்ப்பவனாக அவதாரம்
கிருஷ்ணன் -கருமை -க்ருஷிக்கு பூமிக்கு ஆனந்தம் தரவே
நல்லவர் இருக்க இருக்க பஞ்சு போல் -தீயவர் இல்லாமல் இருக்கவே -அழித்து அவருக்கும் சுவர்க்கம் நல்கிய பிச்சன்
touch stone -உரை கல் –உடைக்க இரும்பை தங்கமாக்கிய கதை -பூதனா மோக்ஷம் -வதம்

2-மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டி
குலத்தை உத்தரிக்க
யதுகுலம் -யது மஹா ராஜர் தானத்தில் சிறந்த -முதலில் வாங்கியவன் -தானே கொடுத்து –
வேறே யாருக்கும் யது கொடுக்க முடியாதபடி -அபுன பிரார்த்தனை பண்ண வேண்டாத படி -தேசிகன் யாதவாப்யுதம்
அதற்காக வாஸூ தேவ புத்ரன்
நந்தகோபன் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -ஏகார சீமாட்டி திருக்குடந்தை ஆண்டவன் கொண்டாடும் ஆண்டாள் –
திரௌபதி வஸ்திரம்
இஷ்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட் டி
கீதா சாஸ்திரம்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

3-வேதங்கள் சாரம் விளக்கவே அவதாரம்
கர்ம -ஞான -பக்தி -மூன்றையும் -முக்கியம் காட்டி அருளி -ஸ்ரீ கீதை
பக்திக்கு அங்கமாக கர்ம யோகம் -அதில் உள்ளடக்கி ஞான யோகம்
சரணாகதி -சரம ஸ்லோகம் –
நான்கு திருத்தோள்களுடன் அவதாரம்
விஸ்வரூபம் தர்சனம்
கம்ச வதத்துக்குப் பின்பு சதுர் புஜம் கொண்டே –10-வயசு பின்பு 120 வரை –
நவநீதம் -திருடி -கீதை வெண்ணெய் திரும்பி -ஆயர் படியில் எடுத்து குருஷேத்ரம் கொடுத்து

சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அந்தர் அதிகரணம்
பரித்ராணாயா சாதூனாம் -இதுவே முக்கிய காரணம்
மற்றவை -ஆனு ஷங்கிகம் -சங்கல்பம் -கருதும் இடம் பொருது சக்கரக்கையன் அன்றோ
பக்தனுக்கு குணங்கள் லீலைகளைக் காட்டி ஸம்ஸ்லேஷிக்கவே அவதாரம்
மண்ணை -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -அனைத்தும் இவனது
கட்டுண்டான் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
காமம் க்ரோதம் -அவனை மனசில் தவழ விட்டுப் போக்கிக் கொள்ளலாம்
காளியன் -மனஸ்ஸூ -புஜங்கம் சமஸ்க்ருதம் -வளைந்தே போகும் -அவனை கூட்டு நட்டம் இட
வைத்தால் அலை பாயுதே கண்ணா பாடலாம்
கோபிகள் -ஒரே புருஷோத்தமன் அவனே
இதுவே முக்கிய காரணம்

அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
ஸூர்ய வம்சத்தில் சந்திரனாக -சந்திரன் வருத்தம்
ஸூ ர்ய மகன் ஸூ க் ரீவன் -வாலி அப்பா இந்திரன் வருந்த
ரிஷிகள் ஆலிங்கனம் பண்ணாத குறை
கருடன் வருத்தம் -ஆஞ்சநேயர் ஆலிங்கனம் பெற்றார்
இந்திரஜித் -கட்ட -பாசம் விட -ஆலிங்கனம் தானே பண்ணிக்
கொள்ள -தாத்தா அஜன் காட்டியது போல் என்றார் பெருமாள்
ஸூமேரு கோவர்த்தனம் -மலைக்கு வருத்தம்-கொண்டு வந்த ஆஞ்சநேயர் திரும்பி அங்கெ வைக்க –
அணை -கட்ட முடியாமல் திருவடி ஸ்பர்சம் கிட்டாமல்
திருவடி -முத்து மாலை பெற்றாலும் வருத்தம்
ஜாம்பவான் மாமனாராக ஆசை பட்ட குறை —
ராமன் தூது போகாத குறை –இப்படி அஷ்ட குறைகள்

சந்த்ர கோலத்தில் ஆயர் குளத்தில் அச்சித்த பானு ஸூ ர்யான்
இந்திரா மகன் அர்ஜுனன் -கர்ணன் ஸூ ர்ய புத்ரன் கொன்று
ரிஷிகள் கோபிகள்
சீதா தூதன் ஆலிங்கனம் -ருக்மிணி அந்தணர் கருடன் தான் மகிழ்ந்து ஆலிங்கனம்
கோவர்த்தன மலைக்கு கர ஸ்பர்சம் கொடுத்து குறை
ஆஞ்சநேயர் -வெண்ணெய் குரங்குக்கும் கொடுத்து -செவிக்கு -அர்ஜுனன் தேரில் -கீதை வெண்ணெய் கொடுத்தான்
செவிக்கும் உணவு வெண்ணெய் காப்பு ஆஞ்சநேயர் பிரசித்தம் இதனாலே
ஜாம்பவதி திருக்கல்யாணம்

இன்னார் தூதன் என நின்றான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா இதனால் தான் -மறை மூர்த்தி கண்ணா

அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
சேஷ்டிதங்களில் பிரதானம் தனித்து இ பானை உடல் -வெண்ணெய் ஜீவாத்மா
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான்
அனைத்தும் அவன் சொத்து
திருடன் -பாபங்களை திருடி -இது தானே நம் சொத்து
சேஷ்டிதங்களைக் கேட்டவர் பாபங்கள் திருடப்படும்

இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி

ஆச்சார்ய வைபவம் காட்டவே
சாந்தீபினி –64 நாள்களில் 64 கலைகள்
அனைத்தும் கைங்கர்யம் ஆச்சார்யருக்கு -குசேலர் உடன் சமித் கொண்டு வர –
குரு தக்ஷிணை
ருக்மிணி திருக் கல்யாணம் வைபவம் –கூடப்பிறந்த மெய் வாய் கை கண் செவி –
ஜீவன் பரமாத்வை -ப்ரயோஜனாந்தரங்கள்
ஆச்சார்யர் மூலம் பற்றி -அந்தணர் -இத்தைக் காட்டவே
கீதாச்சார்யர் –
ஸ்ரீ லஷ்மீ நாதன் -பதவியை விரும்பி ஸ்ரேஷ்டம்

இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்
அஷ்டமி தேவதை பிரார்த்தனை
நவமி தேவதை ஸ்ரீ ராம நவமி போல்
இருவர் குறை தீர்க்க
கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி பெருமை

ஆவணி ரோஹிணி அஷ்டமி சேர்ந்த ஸ்ரீ ஜெயந்தி -அத்புதம் பாலகம் –

சூட்டு நன் மாலைகள்

வண்ண மாடங்கள்

ஒருத்தி மகனாய்

பஞ்ச க்ருஹங்கள் -சந்திரோதயம் ஆன பின்பு -தேவகி பூர்ண சந்த்யா
சந்திரன் ரிஷப ராசி –செவ்வாய் மகர ராசி-புதன் கன்னி ராசி-குரு கடக ராசி –
சனி துலா ராசி -ரிஷப லக்கினத்தில் -திரு அவதாரம்

ஸ்ரீ வித்யா ராஜ கோபாலனாக சேவை -முண்டாசால் அனைவரையும் மயக்கி
கருணை ரசம் வழிய

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ணனின் திரு நாமங்கள் —

August 15, 2020

ஸ்ரீ ஹரி – இயற்கையின் அதிபர்
ஸ்ரீ கேசவன் – அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.
ஸ்ரீதரன் – இலக்குமியை மார்பில் கொண்டவன்
ஸ்ரீ வாசுதேவன் – அனைத்து உயிர்களில் வசிப்பவன்.
ஸ்ரீ விஷ்ணு – எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.

ஸ்ரீ மாதவன் – பெரும் தவம் செய்பவன்.
ஸ்ரீ மதுசூதனன் – மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ புண்டரீகாட்சன் – தாமரை போன்ற கண்களை உடையவன் (தாமரைக் கண்ணன்)
ஸ்ரீ ஜெனார்தனன் – தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சாத்வதன் – சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல்
இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;

ஸ்ரீ விருபாட்சணன் – “விருசபம்” என்பது “வேதங்களைக்” குறிக்கும், “இச்சணம்” என்பது “கண்ணைக்” குறிக்கும்.
இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள்
என்றோ குறிக்கின்றன என்பதால், கிருஷ்ணணை விருஷபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,
ஸ்ரீ அஜா – எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அஜா என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ தாமோதரன் – தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும்,
சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ ரிஷிகேசன் – “என்றும் மகிழ்ச்சி” என்பதற்கு “ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு “ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும் பொருள்.
இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பது.
ஸ்ரீ மகாபாகு – தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மஹாபாஹு என அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ அதாட்சன் – எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ நாராயணன் – மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பர்
ஸ்ரீ புருசோத்தமன் – ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சர்வன் – அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சத்யன் – கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ ஜிஷ்ணு – தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் ஜிஷ்ணு என அறியப்படுகிறான்.
ஸ்ரீ அனந்தன் – அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.
ஸ்ரீ கோவிந்தன் – கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.[5]
ஸ்ரீ அச்சுதன் – என்றும் நழுவாதவர்
ஸ்ரீ பத்மநாபன் – தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

ஸ்ரீ கிருஷ்ணன் – ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய அமைதி” என்பதைக் குறிக்கும் “ண” ஆகிய
இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான்.
( “க்ருஷ்” என்றால் கீறுதல் என்று பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று பொருள், “ண” என்றால் சுகம் என்று பொருள்.
“கிருஷ்ண” என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).
ஸ்ரீ கீதாச்சார்யன்
ஸ்ரீ அச்சாலன் தற்போதும் உள்ளவர்
ஸ்ரீ அச்சுதன் நழுவாதவர்
ஸ்ரீ அற்புதன் வியக்கத்தக்கவன்

ஸ்ரீ ஆதிதேவன் உண்மையான இறைவன்
ஸ்ரீ ஆதித்தியன் அதிதியின் மகன்
ஸ்ரீ அஜென்மா பிறப்பில்லாதவன்
ஸ்ரீ அஜெயன் பிறப்பையும், இறப்பையும் வென்றவன்
ஸ்ரீ அட்சரன் என்றும் நிலையானவன்

ஸ்ரீ அமிர்தன் மரணம் அற்றவன்
ஸ்ரீ ஆனந்தசாகரன் பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
ஸ்ரீ அனந்தன் அளவிட முடியாதவன்
ஸ்ரீ அனந்தஜித் என்றும் வெற்றியாளன்
ஸ்ரீ அனயன் தலைமை அற்றவர்

ஸ்ரீ அனிருத்தன் தடுத்து நிறுத்த முடியாதவன்
ஸ்ரீ அபாரஜித் வெல்லப்பட முடியாதவன்
ஸ்ரீ அவ்வியக்தன் படிகம் போன்று தூய்மையானவன்
ஸ்ரீ பிகாரி எங்கும் பயணம் செய்பவன்
ஸ்ரீ பாலகோபாலான் அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன்

ஸ்ரீ பாலகிருஷ்ணன் குழந்தை கிருஷ்ணன்
ஸ்ரீ சதுர்புஜன் நான்கு கைகள் கொண்டவன்
ஸ்ரீ தானவேந்திரன் செல்வங்களை அருள்பவன்
ஸ்ரீ தயாளன் இரக்கத்தின் களஞ்சியம்
ஸ்ரீ தயாநிதி இரக்கமுள்ள அருளாளன்

ஸ்ரீ தேவாதிதேவன் தேவர்களின் தலைவர்
ஸ்ரீ தேவகிநந்தன் தேவகியின் மகன்
ஸ்ரீ தேவேஷ்வா அவதார புருஷன்
ஸ்ரீ தர்மாதியட்சர் தரும தேவன்
ஸ்ரீ திரவின் எதிரிகள் அற்றவன்

ஸ்ரீ துவாரகாபதி துவாரகையின் தலைவர்
ஸ்ரீ கோபாலன் ஆவினங்களுடன் விளையாடுபவன்
ஸ்ரீ கோபாலப் பிரியன் ஆவினங்களை நேசிப்பவர்
ஸ்ரீ கோவிந்தன் ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
ஸ்ரீ ஞானேஸ்வரன் அறிவுக் கடவுள்

ஸ்ரீ ஹரி இயற்கையின் அதிபர்
ஸ்ரீ இரண்யகர்பன் “அனைத்தையும் படைப்பவர்”
ஸ்ரீ ரிஷிகேசன் அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர்
ஸ்ரீ ஜெகத்குரு பிரபஞ்சத்திற்கு குரு
ஸ்ரீ ஜெகதீஷ்வரன் பிரபஞ்சத்தின் இறைவன்

ஸ்ரீ ஜெகன்நாதர் பிரபஞ்சத்திற்கு தலைவர்
ஸ்ரீ ஜெனார்தனன் வரங்களை வழங்குபவர்
ஸ்ரீ ஜெயந்தன் அனைத்துப் பகைவர்களை வெல்பவன்
ஸ்ரீ ஜோதிராதித்தியன் சூரியனில் ஒளியாக விளங்குபவர்
ஸ்ரீ கமலநாதன் இலக்குமியின் நாதர்

ஸ்ரீ கமலநயனன் தாமரை வடிவக் கண்களை கொண்டவர்.
ஸ்ரீ கம்சந்தகன் கம்சனை கொன்றவர்
ஸ்ரீ காஞ்சலோசனன் தாமரைக் கண்ணன்
ஸ்ரீ கேசவன் நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர்
ஸ்ரீ கிருட்டிணன் அனைவரையும் கவர்பவன்

ஸ்ரீ இலக்குமி காந்தன் இலக்குமியின் கணவர்
ஸ்ரீ லோகாதியட்சன் மூவுலகின் நாயகன்
ஸ்ரீ மதனன் அன்பிற்கினியவன்
ஸ்ரீ மாதவன் இலக்குமியின் கணவர்
ஸ்ரீ மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர்

ஸ்ரீ மகேந்திரன் இந்திரனுக்குத் தலைவர்
ஸ்ரீ மன்மோகன் தடுமாறத மனம் உடையவன்
ஸ்ரீ மனோகரன் அழகின் அதிபதி
ஸ்ரீ மயூரன் மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன்
ஸ்ரீ மோகனன் வசீகரமானவன்

ஸ்ரீ முரளி புல்லாங்குழலை இசைப்பவன்
ஸ்ரீ முரளிதரன் புல்லாங்குழலை கையில் கொண்டவன்
ஸ்ரீ முரளி மனோகரன் குழல் ஊதி மயக்குபவன்
ஸ்ரீ நந்த குமாரன் நந்தகோபரின் வளர்ப்பு மகன்
ஸ்ரீ நந்த கோபாலன் பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன்

ஸ்ரீ நாராயணன் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவர்
ஸ்ரீ நவநீதசோரன் வெண்ணெய் திருடி உண்பவன்
ஸ்ரீ நிரஞ்சனன் அப்பழுக்கற்றவன்
ஸ்ரீ நிர்குணன் குணங்களைக் கடந்தவன்
ஸ்ரீ பத்மஹஸ்தன் தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன்

ஸ்ரீ பத்மநாபன் தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன்
ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் முற்றான முழுமையான உண்மையானவன்
ஸ்ரீ பரமாத்மா அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன்
ஸ்ரீ பரமபுருஷன் மேலான புருஷன்
ஸ்ரீ பார்த்தசாரதி அருச்சனனின் தேரை ஓட்டியவன்

ஸ்ரீ பிரஜாபதி அனைத்து சீவராசிகளையும் படைத்தவர்
ஸ்ரீ புண்ணியவான் தவத்தால் அடையத்தக்கவன்
ஸ்ரீ புருசோத்தமன் ஜீவாத்மாக்களில் மேலானவன்
ஸ்ரீ ரவி லோசனன் சூரியனைப் போன்ற கண்களை உடையவன்
ஸ்ரீ சகஸ்ராட்சகன் ஆயிரம் கண்களைக் கொண்டவன்

ஸ்ரீ சஹஸ்ர ஜிதன் ஆயிரம் பேர்களை அழித்தவன்
ஸ்ரீ சாட்சி அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன்
ஸ்ரீ சனாதனன் தொன்று தொட்டு விளங்குபவர்
ஸ்ரீ சர்வ ஜனன் அனைத்தும் அறிந்தவர்
ஸ்ரீ சர்வ பாலகன் அனைத்தையும் காப்பவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் அனைத்திற்கும் தலைவர்
ஸ்ரீ சத்திய வசனன் சத்தியம் மட்டும் பேசுபவர்
ஸ்ரீ சத்திய விரதன் உண்மையையே இலக்காகக் கொண்டவர்
ஸ்ரீ சாதனன் அனைத்தறிவுக்கும் கருவியானவன்
ஸ்ரீ ஸ்ரேஷ்டன் மிகவும் புகழ்பெற்றவன்

ஸ்ரீ காந்தன் இலக்குமியின் பிரியமானவன்
ஸ்ரீசியாம் கருநிறத்தவன்
ஸ்ரீ சியாமசுந்தரன் கார்மேக அழகன்
ஸ்ரீ சுதர்சனன் சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன்.
ஸ்ரீ சுமேதா நுட்பமான அறிவினன்

ஸ்ரீ சுரேஷ்வரன் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்
ஸ்ரீ சுவர்க்கபதி சொர்க்கத்தின் தலைவர்
ஸ்ரீ திரிவிக்கிரமன் மூவுலகையும் அளந்தவன்
ஸ்ரீ உபேந்திரன் இந்திரனின் நண்பர்
ஸ்ரீ வைகுந்த நாதன் வைகுந்தத்தில் உறைபவன்

ஸ்ரீ வர்தமானன் அருவமான (உருமற்ற) இறைவன்
ஸ்ரீ வாசுதேவ புத்திரன் வசுதேவரின் மகன்
ஸ்ரீ விஷ்ணு பிரபஞ்சத்தின் இறைவன்
ஸ்ரீ விஸ்வதட்சினன் திறமை மற்றும் ஆளுமை மிக்கவன்
ஸ்ரீ விஸ்வகர்மன் அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர்

ஸ்ரீ விஸ்வமூர்த்தி அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர்
ஸ்ரீ விஸ்வரூபன் பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர்
ஸ்ரீ விஸ்வாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மா
ஸ்ரீ விருசபர்வா அறத்தின் நாயகன்
ஸ்ரீ யாதவேந்திரன் யாதவ குல தலைவர்

ஸ்ரீ யோகி யோகியானவன்
ஸ்ரீ யோகினாம்பதி யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்)
ஸ்ரீ அச்சலன் குழந்தை
ஸ்ரீ அச்சுதன் தவறிழைக்காதவன்
ஸ்ரீ அவ்வியக்தன் தெள்ளத் தெளிவான மனதுடையவன்

ஸ்ரீ பங்கே பிகாரி (வனத்தின் விகாரி என்பதன் திரிபுச் சொல்) பிருந்தாவனக் காடுகளில் விளையாடுவதை நேசிப்பவன்
ஸ்ரீ பிகாரி விளையாட்டை நேசிப்பவன்
ஸ்ரீ பக்தவத்சலன் பக்தர்களை தூக்கி விடுபவர்
ஸ்ரீ பிரஜேஷா விரஜ மக்களின் தலைவன்
ஸ்ரீ சக்கரதாரன் கையில் சக்கரத்தைக் கொண்டவன்.

ஸ்ரீ தாமோதரன் அன்னை யசோதையால் இடுப்பில் கயிறு கட்டப்பட்டவன்.
ஸ்ரீ தீனபந்து துன்பத்திலிருப்போரின் உறவினன்
ஸ்ரீ தீனநாதன் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தருபவர்
ஸ்ரீ துவாரகாதீசன் துவாரகையின் தலைவர்
ஸ்ரீ துவாரகாநாதன் துவாரகையின் தலைவர்

ஸ்ரீ கண்ஷியாம் கார்மேக நிறத்தவன்
ஸ்ரீ கிரிதாரி கோவர்தன மலையை கையால் உயர்த்தி பிடித்தவன்
ஸ்ரீ கோபாலன் இடையன், பசுக்களை காப்பவன், (குறிப்பாக அனைத்து சீவராசிகளை காப்பவர்).
ஸ்ரீ கோபிநாதன் கோபியர் உளம் கவர் கள்வன்
ஸ்ரீ கோவிந்தன் ஆவினங்களை காப்பவர்

ஸ்ரீ கோவிந்தராஜன் இடையர்களின் அரசன்
ஸ்ரீ குருவாயூரப்பன் குருவாயூர் கோயிலில் குடி கொண்டவன்
ஸ்ரீ ஹரி பாவங்களை நீக்குபவர், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுவிப்பவர்.
ஸ்ரீ ஈஸ்வரன் இறைவன்
ஸ்ரீ ருஷீகேசன் உணர்வுகளின் தலைவர்

ஸ்ரீ ஜெகன்நாதர் பிரபஞ்சத்தின் தலைவர்
ஸ்ரீ ஜெனார்தனன் வரம் தருபவர்
ஸ்ரீ காலதேவன் காலத்திற்கு அதிபதி
ஸ்ரீ கல்மஷாஹீனன் பாவமற்றவன்
ஸ்ரீ கண்ணையா பக்தர்களின் சுமைகளை பகிர்ந்து கொள்பவர் அல்லது பக்தர்களிடம் நெருக்கமாக இருப்பவர்

ஸ்ரீ கேசவன் நீண்ட முடியை உடையவன்
ஸ்ரீ மதன மோகனன் தன் அழகால் கலக்கமடையச் செய்பவன்
ஸ்ரீ மாதவன் இலக்குமியின் நாயகன்
ஸ்ரீ மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர்
ஸ்ரீ மணிகண்டன் கௌஸ்துபம் எனும் மணிமாலையை அணிந்தவன்

ஸ்ரீ முராஹரி முரா எனும் அரக்கனை கொன்றவர்
ஸ்ரீ முகிலன் கார்மேக நிறத்தவன்
ஸ்ரீ முகுந்தன் வீடுபேற்றுக்கான ஆன்மீக அறிவொளியை அருள்பவர்.
ஸ்ரீ நந்தகோபாலன் இடையர்களுக்குப் பிரியமானவன்
ஸ்ரீ நந்தலால் நந்தகோபனுக்குப் பிரியமானவன்.

ஸ்ரீ பாண்டுரங்கன் பண்டரிபுரத்து வெள்ளை நிற கிருஷ்ணண்
ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் அனைத்திற்கும் மேலான பிரம்மம்
ஸ்ரீ பரமேஸ்வரன் மேலான ஈஸ்வரன்
ஸ்ரீ பார்த்தசாரதி குரு ஷேத்திரப் போரில் அருச்சுனனுக்கு தேரோட்டியவர்.
ஸ்ரீ பிரதிபாவனன் பாவத்தில் வீழ்ந்தவர்களை தூய்மைப்படுத்துபவர்

ஸ்ரீ இராதாவல்லபவன் ராதையின் அன்பிற்குரியவன்
ஸ்ரீ இராஜகோபாலன் இடையர்களின் அரசன்
ஸ்ரீ ரண்ச்சோதரை அமைதி காக்கும் பொருட்டு போரை மறுத்து துவாரகைக்கு ஓடியவன்
ஸ்ரீ ஸ்யாமசுந்தரன் கருப்பழகன்
ஸ்ரீ சந்தானம் அன்பானவன்

ஸ்ரீ சந்தானசாரதி வானுலக ஆன்மீக தோரோட்டி
ஸ்ரீ சௌரி சூரசேனரின் வழித்தோன்றல்
ஸ்ரீ வாசுதேவன் வசுதேவரின் மகன்
ஸ்ரீ யதுநந்தனன் யதுக்களின் அன்பிற்குரியவன்
ஸ்ரீ யோகீஸ்வரன் யோகிகளின் தலைவர்
ஸ்ரீ யசோதா நந்தனன் யசோதையின் வளர்ப்பு மகன்

——————–

ஓம் கிருஷ்ணாய நமஹ
ஓம் கமலநாதாய நமஹ
ஓம் வாசுதேவாய நாமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
ஓம் யசோதாவத்சலாய நமஹ
ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
ஓம் தேவகீநந்தனாய நமஹ
ஓம் ஸ்ரீசாய நமஹ
ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
ஓம் நவநீத நடனாய நமஹ
ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ
ஓம் மதுராக்குறுதயா நமஹ
ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
ஓம் யோகினே நமஹ
ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ

ஓம் இலாபதயே னம நமஹ
ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
ஓம் யாதவேம்த்ராய நமஹ
ஓம் யதூத்வஹாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
ஓம் கோபாலாய நமஹ
ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ
ஓம் நிரஞ்சனாய நமஹ
ஓம் காமஜனகாய நமஹ
ஓம் கம்ஜலோசனாய நமஹ
ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ
ஓம் துவாரகாநாயகாய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
ஓம் நாராயாணாத்மகாய நமோ
ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
ஓம் மாயினே நமஹ
ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
ஓம் சம்சாரவைரிணே நமஹ
ஓம் கம்சாராயே நமஹ
ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ
ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
ஓம் சத்யபாமாரதாய நமஹ

ஓம் ஜெயினே நமஹ
ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ
ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ

ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
ஓம் பார்த்தசாரதியே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஶ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ
ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் வேதவேத்யாய நமஹ
ஓம் தயாநிதேயே நமஹ
ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
ஓம் பராத்பராய நமஹ

—————

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்–

August 12, 2020

சர்க்கம் -பிரதி சர்க்கம் -வம்சம்-மன் வந்த்ரங்கள் -வம்ச அநு -கிளைக் கதைகள் -புராண பஞ்ச லக்ஷணங்கள்
புராதனம் -அபி நவம் -புராணம்

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்னம் சதுர்புஜம்
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

ரமாபதி பதாம் போஜ பரிஸ்புரித மானஸம்
ஸேநாபதிம் அஹம் வந்தே விச்வக்ஷேனம் நிரந்தரம்
ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸர்வமங்களா!!
ஜனக: சங்கரோ தேவ: தம்வந்தே குஞ்ஜராரனனம்

பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்ய விக்ரஹம்
ஸ்ரீமத் போதேந்த்ர யோகேந்த்ர தேஸீகேந்த்ரம் உபாஸ்மஹே!
ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ ஸுக ஸௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத அர்ஜுன வஷிஷ்ட விபீஷனாதீன் புன்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி!!

ஜந்மாத்யஸ்ய யதோன்வயா திதரத ச்சார்தேஷ் ஸ்வபிந்ஞ: ஸ்வராட்
தேநே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஷூரய:
தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்நா ஸ்வேத ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி

தர்ம ப்ரோஜ்ஜித கைதவோ த்ர பரமோ நிர்மத்ஸராநாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவ மத்ர வஸ்து ஸிவதம் தாபத்ர யோன்மூலனம்
ஸ்ரீமத் பாகவதே மஹா முனிக்ருதே கிம் வா பரைரீஸ்வர:
ஸத்யோ ஹ்ருத் ய வ்ருத்யதே (அ)த்ரக்ருதிபி: ஶூஶ்ரூஷிபி ஸ்தத்க்ஷ்ணாத்

நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:

யம் பிரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம் த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவ
புத்ரேதி தன்மய தயா தரவோ பிநேது ஸ்தம் சர்வ பூதஹ்ருதயம் முநிமானதோஸ்மி!!

ய:ஸ்வாது பாவ மகில ஸ்ருதிசாரம் ஏகமத்யாத்ம தீப மதி திதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயா(ஆ)ஹ புராண குஹ்யம் தம் வ்யாஸ ஶூநும் உபயாமி குரூம் முனீநாம்

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்

கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தநாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

நம: பங்கஜ நாபாய நம : பங்கஜ மாலினே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே

ஸ்ரீமத் பாகவதாக்யோ யம் பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி
ஸ்வீக்ருதோ ஸி மயாநாத முக்தை யர்தம் பவசாகரே

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதி கஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காம வர்ஷத்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நிஸ்ஸேஷ தாபான் பிரதிஷது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீ

நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரநாஸநம்
ப்ரணாமோ துக்க ஸமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்!!

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

ஸ்ரீ ஹரயே நம: ஸ்ரீ ஹரயே நம: ஸ்ரீ ஹரயே நம:

—————————

கடன், சத்ரு பயம், வியாதி முதலிய கஷ்டங்களைப் போக்கி, பிரிந்த சொந்தங்களைத் திரும்பவும்
ஒன்று சேர்க்கவைக்கும் அற்புத ஸ்லோகம் இது…

காயந்தி தே விசதகர்ம க்ருஹேஷு தேவ்யோ
ராக்ஞாம் ஸ்வ சத்ருவதமாத்ம விமோக்ஷணம் ச
கோப்யஸ்ச குஞ்சரபதேர் ஜனகாத்மஜாயா:
பித்ரோஸ்ச லப்த சரணா முனயோ வயம் ச–உத்தவர் ஸ்ரீபகவானை வேண்டுவதாக அமைகிறது இந்த ஸ்லோகம்.

சங்கசூடன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றப் பட்ட கோபிகைகள் தங்களை எப்படி கானம் செய் கின்றனரோ
மேலும், கஜேந்திரன் எனும் யானையைத் தாங்கள் காத்தது,
ஸ்ரீராமாவதாரத்தில் சீதையைக் காப்பாற்றியது,
வசுதேவர்- தேவகியை கம்சனின் கொடுமையில் இருந்து காப்பாற்றியது ஆகியவற்றைச் சொல்லி,
தங்களைச் சரணடைந்த நாங்களும் முனிவர்களும் எப்படித் துதிக்கிறோமோ…
அதே போன்று, ஜராசந்தனால் சிறையில் அடைக்கப் பட்ட அரசர்களின் மனைவிகள் தங்களின் குழந்தைகளை
(கண்ணனின் புகழ் பாடி) சீராட்டும்போது, அவர்களின் தந்தையரை ஸ்ரீபகவான் விடுவித்துக் காப்பாற்றுவார்.

—————–

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும்.
அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால், அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
இதையே பாகவதத்தில்
நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:
என்ற ஸ்லோகத்தில் காணலாம். ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும்.

ப்ரம்மாவும் நாரதரும், விதுரரும் மைத்ரேயரும் யுதிஷ்டிரனும் நாரதரும், கிருஷ்ணனும் உத்தவரும், பரிமாறிக்கொண்ட
சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன்.
பாக்யவான் நான். சாஸ்வதமான ஹரியை எனக்குக் காட்டிவிட்டீர்களே. வேறு என்ன வேண்டும்?
என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த தக்ஷகன் என்கிற சர்ப்பம் தீண்டி மரணம் அடைந்தாலும்
துளியும் வருத்தமோ, கவலையோ இல்லை என்றான்.. அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார்.
அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து
கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.

thiruvonum.wordpress.com/2019/09/08/——ஸ்ரீ பாகவத புராண ஏற்றம் —

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்