Archive for the ‘Kannan’ Category

ஸ்ரீ கண்ணன் வந்தான்-ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

September 2, 2020

மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டித்
திண்ணமுடன் வேதமதை விரிக்க வேண்டிச்
சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி
இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்–எட்டு காரணங்கள்

1-மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் –நறையூரில் கண்டேன்
பசு வடிவம் பூமி பிரார்த்தனை ஸ்ரீ மத் பாகவதம் -அதுக்காகவே பசு மேய்ப்பவனாக அவதாரம்
கிருஷ்ணன் -கருமை -க்ருஷிக்கு பூமிக்கு ஆனந்தம் தரவே
நல்லவர் இருக்க இருக்க பஞ்சு போல் -தீயவர் இல்லாமல் இருக்கவே -அழித்து அவருக்கும் சுவர்க்கம் நல்கிய பிச்சன்
touch stone -உரை கல் –உடைக்க இரும்பை தங்கமாக்கிய கதை -பூதனா மோக்ஷம் -வதம்

2-மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டி
குலத்தை உத்தரிக்க
யதுகுலம் -யது மஹா ராஜர் தானத்தில் சிறந்த -முதலில் வாங்கியவன் -தானே கொடுத்து –
வேறே யாருக்கும் யது கொடுக்க முடியாதபடி -அபுன பிரார்த்தனை பண்ண வேண்டாத படி -தேசிகன் யாதவாப்யுதம்
அதற்காக வாஸூ தேவ புத்ரன்
நந்தகோபன் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -ஏகார சீமாட்டி திருக்குடந்தை ஆண்டவன் கொண்டாடும் ஆண்டாள் –
திரௌபதி வஸ்திரம்
இஷ்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட் டி
கீதா சாஸ்திரம்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

3-வேதங்கள் சாரம் விளக்கவே அவதாரம்
கர்ம -ஞான -பக்தி -மூன்றையும் -முக்கியம் காட்டி அருளி -ஸ்ரீ கீதை
பக்திக்கு அங்கமாக கர்ம யோகம் -அதில் உள்ளடக்கி ஞான யோகம்
சரணாகதி -சரம ஸ்லோகம் –
நான்கு திருத்தோள்களுடன் அவதாரம்
விஸ்வரூபம் தர்சனம்
கம்ச வதத்துக்குப் பின்பு சதுர் புஜம் கொண்டே –10-வயசு பின்பு 120 வரை –
நவநீதம் -திருடி -கீதை வெண்ணெய் திரும்பி -ஆயர் படியில் எடுத்து குருஷேத்ரம் கொடுத்து

சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அந்தர் அதிகரணம்
பரித்ராணாயா சாதூனாம் -இதுவே முக்கிய காரணம்
மற்றவை -ஆனு ஷங்கிகம் -சங்கல்பம் -கருதும் இடம் பொருது சக்கரக்கையன் அன்றோ
பக்தனுக்கு குணங்கள் லீலைகளைக் காட்டி ஸம்ஸ்லேஷிக்கவே அவதாரம்
மண்ணை -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -அனைத்தும் இவனது
கட்டுண்டான் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
காமம் க்ரோதம் -அவனை மனசில் தவழ விட்டுப் போக்கிக் கொள்ளலாம்
காளியன் -மனஸ்ஸூ -புஜங்கம் சமஸ்க்ருதம் -வளைந்தே போகும் -அவனை கூட்டு நட்டம் இட
வைத்தால் அலை பாயுதே கண்ணா பாடலாம்
கோபிகள் -ஒரே புருஷோத்தமன் அவனே
இதுவே முக்கிய காரணம்

அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
ஸூர்ய வம்சத்தில் சந்திரனாக -சந்திரன் வருத்தம்
ஸூ ர்ய மகன் ஸூ க் ரீவன் -வாலி அப்பா இந்திரன் வருந்த
ரிஷிகள் ஆலிங்கனம் பண்ணாத குறை
கருடன் வருத்தம் -ஆஞ்சநேயர் ஆலிங்கனம் பெற்றார்
இந்திரஜித் -கட்ட -பாசம் விட -ஆலிங்கனம் தானே பண்ணிக்
கொள்ள -தாத்தா அஜன் காட்டியது போல் என்றார் பெருமாள்
ஸூமேரு கோவர்த்தனம் -மலைக்கு வருத்தம்-கொண்டு வந்த ஆஞ்சநேயர் திரும்பி அங்கெ வைக்க –
அணை -கட்ட முடியாமல் திருவடி ஸ்பர்சம் கிட்டாமல்
திருவடி -முத்து மாலை பெற்றாலும் வருத்தம்
ஜாம்பவான் மாமனாராக ஆசை பட்ட குறை —
ராமன் தூது போகாத குறை –இப்படி அஷ்ட குறைகள்

சந்த்ர கோலத்தில் ஆயர் குளத்தில் அச்சித்த பானு ஸூ ர்யான்
இந்திரா மகன் அர்ஜுனன் -கர்ணன் ஸூ ர்ய புத்ரன் கொன்று
ரிஷிகள் கோபிகள்
சீதா தூதன் ஆலிங்கனம் -ருக்மிணி அந்தணர் கருடன் தான் மகிழ்ந்து ஆலிங்கனம்
கோவர்த்தன மலைக்கு கர ஸ்பர்சம் கொடுத்து குறை
ஆஞ்சநேயர் -வெண்ணெய் குரங்குக்கும் கொடுத்து -செவிக்கு -அர்ஜுனன் தேரில் -கீதை வெண்ணெய் கொடுத்தான்
செவிக்கும் உணவு வெண்ணெய் காப்பு ஆஞ்சநேயர் பிரசித்தம் இதனாலே
ஜாம்பவதி திருக்கல்யாணம்

இன்னார் தூதன் என நின்றான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா இதனால் தான் -மறை மூர்த்தி கண்ணா

அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
சேஷ்டிதங்களில் பிரதானம் தனித்து இ பானை உடல் -வெண்ணெய் ஜீவாத்மா
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான்
அனைத்தும் அவன் சொத்து
திருடன் -பாபங்களை திருடி -இது தானே நம் சொத்து
சேஷ்டிதங்களைக் கேட்டவர் பாபங்கள் திருடப்படும்

இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி

ஆச்சார்ய வைபவம் காட்டவே
சாந்தீபினி –64 நாள்களில் 64 கலைகள்
அனைத்தும் கைங்கர்யம் ஆச்சார்யருக்கு -குசேலர் உடன் சமித் கொண்டு வர –
குரு தக்ஷிணை
ருக்மிணி திருக் கல்யாணம் வைபவம் –கூடப்பிறந்த மெய் வாய் கை கண் செவி –
ஜீவன் பரமாத்வை -ப்ரயோஜனாந்தரங்கள்
ஆச்சார்யர் மூலம் பற்றி -அந்தணர் -இத்தைக் காட்டவே
கீதாச்சார்யர் –
ஸ்ரீ லஷ்மீ நாதன் -பதவியை விரும்பி ஸ்ரேஷ்டம்

இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்
அஷ்டமி தேவதை பிரார்த்தனை
நவமி தேவதை ஸ்ரீ ராம நவமி போல்
இருவர் குறை தீர்க்க
கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி பெருமை

ஆவணி ரோஹிணி அஷ்டமி சேர்ந்த ஸ்ரீ ஜெயந்தி -அத்புதம் பாலகம் –

சூட்டு நன் மாலைகள்

வண்ண மாடங்கள்

ஒருத்தி மகனாய்

பஞ்ச க்ருஹங்கள் -சந்திரோதயம் ஆன பின்பு -தேவகி பூர்ண சந்த்யா
சந்திரன் ரிஷப ராசி –செவ்வாய் மகர ராசி-புதன் கன்னி ராசி-குரு கடக ராசி –
சனி துலா ராசி -ரிஷப லக்கினத்தில் -திரு அவதாரம்

ஸ்ரீ வித்யா ராஜ கோபாலனாக சேவை -முண்டாசால் அனைவரையும் மயக்கி
கருணை ரசம் வழிய

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணன்-பிரசித்த – பாடல்கள்

September 2, 2020

மாடு மேய்க்கும் கண்ணா

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன் (இரண்டு முறை)
காய்ச்சின பாலும் தரேன் – கற்கண்டு சீனி தரேன் (மூன்று முறை)
கைநிறைய வெண்ணெய் தரேன் – வெய்யிலிலே போக வேண்டாம் (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்:
காய்ச்சின பாலும் வேண்டாம் – கற்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
யமுனா நதிக்கரையில் எப்பொதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்
கள்ளனுக்குள் கள்ளனொன்று கண்டதுண்டோ சொல்லும்மா
கள்ளன் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்களுண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்
காட்டு மிருகங்களெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
பட்ஷம் உள்ள நந்தகோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்:
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லு
தேடியே நீ வருகையில்
ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)

மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
போக வேண்டும் தாயே (high pitch)

————-

ஆயர்பாடி மாளிகையில்
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ – அவன்
வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
மந்திரத்தில் அவன் மயங்க மயக்கத்திலே இவன்
உறங்க மண்டலமே உறங்குதம்மா தாலேலோ (ஆயர்பாடி)

நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அவன் மோகலீலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கவிட்டால் காசினியே தூங்கவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகை
காண்பதற்கும் போதை முத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

————

சந்தான கோபால மந்திரம்
ஓம் தேவகி ஸுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:

தேவ தேவ ஜகந்நாத கோத்ர விருத்தி கரோ பிரபு :
தேஹிமே தனயம் ஸீக்ரம்
ஆயுஷ் மந்தம் யஷஸ்வினம்

—————–

த்வாரகாபுரி பட்டணமாம்
த்வாரகாபுரி பட்டணமாம்
சதுரங்கதள மேடையாம்
ஸ்வாமி வாசம் பண்ணுகிறார்
ஸப்ர ரஸ மதிலிலே
ரத்னம் பதித்த ஹம்ஸங்களாம்
லட்சுமியோட ஸேவையாம் – நித்ய
மங்களம் புரியும் நீலவர்ண ஸேவையாம்
குஞ்சாலக் குழல் கன்றுகளாம்
கோடி லட்சம் பசுக்களாம்
குடம் குடமாய் பால் சொரியும்
கோபாலனின் வளர்நாட்டிலே
கிருஷ்ணா கிருஷ்ணா என்றே
கிளிகள் கீர்த்தனங்கள் பாடுமாம்
கிருஷ்ணனின் நாமம் சொல்லி
மதி மயங்கி நிற்குமாம்
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
என்றே குயிலினங்கள் கூவுமாம்
கோவிந்தனின் நாமம் சொல்லி
மதி மயங்கி நிற்குமாம்
ஸ்ரீஹரி ஸ்ரீஹரியென்றே மயிலினங்கள் ஆடுமாம்
ஸ்ரீஹரியின் நாமம் சொல்லி மதி மயங்கி ஆடுமாம் (த்வாரகாபுரி…இரண்டு முறை)

—————

கண்ணனோடு ருக்மணியாள்
ராகம்: பைரவி
தாளம்: ஆதி
பல்லவி
கண்ணனோடு ருக்மணியாள் ஆடும் ஊஞ்சல்
இந்தக் கல்யாணக் கிருஷ்ணன் ஆடும் பொன்னூஞ்சல்… எங்கள் (கண்ணனோடு)
அனுபல்லவி
பண்-இசைக்கும்-நாரதர் பாமாலை பாடவும்
பண்மணிகள் பல அரையரங்கினில்… (கண்ணனோடு)
சரணம்-1
வேதமிரண்டிரண்டும் நாற்கால்கள் ஆகவும்
ஓதும் உபநிஷத்தும் கயிறுகள் ஆகவும்
நாதமிழைந்திடும் நாதாந்த மண்டபத்தில்
பாதம் பணிந்திடும் பக்தர்கள் இன்பம் கொள்ள (இரண்டு முறை) (கண்ணனோடு)
சரணம்-2
எண்ணிலடங்கா தேவர் மலர் மாரி பொழியவும்
அன்ன நடை மாதர்கள் வெண்சாமரம் வீசவும்
மண்ணிலுள்ள தொண்டர்கம் மனக்கவலை தீரவும்
கண்கள் செய்த பாக்கியம் என்ன களிப்புறங்கவும்… (இரண்டு முறை) (கண்ணனோடு)

—————-

ஏஹி மூதம் தேஹி க்ருஷ்ணா
ராகம்: எதுகுல காம்போஜி
தாளம்: ஆதி
இயற்றியவர்: நாரயண தீர்த்தர்
பல்லவி
ஏஹி மூதம் தேஹி க்ருஷ்ணா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
மாம்பாஹி கோபாலா பாலா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சரணம்
நந்தகோபா நந்தனாஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
யது நந்தனா பக்த சந்தனா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
களபகர்தீம் தர்ஸ்யா ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
நவகர்ணம் சலயஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
தாவ தாவா மாதவா ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
நவதீதம் ஆஹார ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
பவ்ய நட்டன குரு ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
பலபத்ர சஹித ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
நாரதாதி முனிகேய
க்ருஷ்ணா க்ருஷ்ணா
ஸ்ரீமன் நாராயண தீர்த்த வரத
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சஞ்சல மணிகுண்டல ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சாது சாதுப க்ருத மிஹா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
லோக சாதக ஹிதாய ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
குங்கும பங்கில தேஹா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
பக்த சங்கர சரணாஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சாரு சம்பகனாசி மௌத்திக
க்ருஷ்ணா க்ருஷ்ணா
ஆனந்த சாகரா முரளிதரா
மீரா ப்ரபு ராதே ஸ்யாம வேணுகோபாலா
நந்த யசோதா ஆனந்த கிஷோரா
ஜெய ஜெய கோகில பாலா
ஜெய வேணுகோபாலா…

———

கோகுல கிருஷ்ணா கோகுல கிருஷ்ணா
என்ன உன் லீலையோ?
பால் வெண்ணைய் செய்யும் கோபியர் மீது
என்ன உன் மோகமோ?
(கோகுல)
எத்தனையோ குலமிருந்தும் ஆயர் குலத்தில் பிறந்தாய்
எத்தனையோ செல்வமிருந்தும் வெண்ணெயைத் திருடித் தின்றாய்
உலகைக் காக்க வந்து விட்டு உரலில் கட்டுப் பட்டாய்
ஒன்றுமறியா பிள்ளையைப்போல்பல கள்ளத்தனங்கள் செய்தாய்
(கோகுல)
புல்லாங்குழலை ஊதி ஊதி மனதை மயக்குகின்றாய்
மஞ்சள் ஆடை அணிந்து அழகில் மதனை விஞ்சுகின்றாய்
மயிலிறகைச் சூடும் கிருஷ்ணா, என்னையும் சூடிக் கொள்ளாயோ?
மணி மார்பில் மாலையாகும் பேறு எனக்குத் தாராயோ?
(கோகுல)

———–

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
(அலைபாயுதே)
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
(அலைபாயுதே)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே – உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா – ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு
(அலைபாயுதே)

———

ஆடாது அசங்காது வா கண்ணா…
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே – எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா

ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே – ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே – நீ
(ஆடாது அசங்காது வா)

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே

பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே

பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே

———–

கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் – ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் – ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்…
கண்ணன் வந்தான்…
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்

சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்…
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா

கண்ணா…கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

———

ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி
பல்லவி
ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ….(ஸ்வாகதம்)
அனுபல்லவி
போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா
கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)
சரணம்
முஷ்டிகாசூர சாணுர மல்ல
மல்ல விசாரத குவலாயபீட
மர்த்தன களிங்க நர்த்தன
கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ
ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப
கல்ப ஸதகோடி அஸமபராபவ
தீர முனி ஜன விஹார மதனஸூ
குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ
வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ணனின் திரு நாமங்கள் —

August 15, 2020

ஸ்ரீ ஹரி – இயற்கையின் அதிபர்
ஸ்ரீ கேசவன் – அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.
ஸ்ரீதரன் – இலக்குமியை மார்பில் கொண்டவன்
ஸ்ரீ வாசுதேவன் – அனைத்து உயிர்களில் வசிப்பவன்.
ஸ்ரீ விஷ்ணு – எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.

ஸ்ரீ மாதவன் – பெரும் தவம் செய்பவன்.
ஸ்ரீ மதுசூதனன் – மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ புண்டரீகாட்சன் – தாமரை போன்ற கண்களை உடையவன் (தாமரைக் கண்ணன்)
ஸ்ரீ ஜெனார்தனன் – தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சாத்வதன் – சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல்
இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;

ஸ்ரீ விருபாட்சணன் – “விருசபம்” என்பது “வேதங்களைக்” குறிக்கும், “இச்சணம்” என்பது “கண்ணைக்” குறிக்கும்.
இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள்
என்றோ குறிக்கின்றன என்பதால், கிருஷ்ணணை விருஷபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,
ஸ்ரீ அஜா – எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அஜா என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ தாமோதரன் – தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும்,
சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ ரிஷிகேசன் – “என்றும் மகிழ்ச்சி” என்பதற்கு “ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு “ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும் பொருள்.
இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பது.
ஸ்ரீ மகாபாகு – தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மஹாபாஹு என அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ அதாட்சன் – எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ நாராயணன் – மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பர்
ஸ்ரீ புருசோத்தமன் – ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சர்வன் – அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சத்யன் – கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ ஜிஷ்ணு – தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் ஜிஷ்ணு என அறியப்படுகிறான்.
ஸ்ரீ அனந்தன் – அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.
ஸ்ரீ கோவிந்தன் – கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.[5]
ஸ்ரீ அச்சுதன் – என்றும் நழுவாதவர்
ஸ்ரீ பத்மநாபன் – தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

ஸ்ரீ கிருஷ்ணன் – ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய அமைதி” என்பதைக் குறிக்கும் “ண” ஆகிய
இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான்.
( “க்ருஷ்” என்றால் கீறுதல் என்று பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று பொருள், “ண” என்றால் சுகம் என்று பொருள்.
“கிருஷ்ண” என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).
ஸ்ரீ கீதாச்சார்யன்
ஸ்ரீ அச்சாலன் தற்போதும் உள்ளவர்
ஸ்ரீ அச்சுதன் நழுவாதவர்
ஸ்ரீ அற்புதன் வியக்கத்தக்கவன்

ஸ்ரீ ஆதிதேவன் உண்மையான இறைவன்
ஸ்ரீ ஆதித்தியன் அதிதியின் மகன்
ஸ்ரீ அஜென்மா பிறப்பில்லாதவன்
ஸ்ரீ அஜெயன் பிறப்பையும், இறப்பையும் வென்றவன்
ஸ்ரீ அட்சரன் என்றும் நிலையானவன்

ஸ்ரீ அமிர்தன் மரணம் அற்றவன்
ஸ்ரீ ஆனந்தசாகரன் பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
ஸ்ரீ அனந்தன் அளவிட முடியாதவன்
ஸ்ரீ அனந்தஜித் என்றும் வெற்றியாளன்
ஸ்ரீ அனயன் தலைமை அற்றவர்

ஸ்ரீ அனிருத்தன் தடுத்து நிறுத்த முடியாதவன்
ஸ்ரீ அபாரஜித் வெல்லப்பட முடியாதவன்
ஸ்ரீ அவ்வியக்தன் படிகம் போன்று தூய்மையானவன்
ஸ்ரீ பிகாரி எங்கும் பயணம் செய்பவன்
ஸ்ரீ பாலகோபாலான் அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன்

ஸ்ரீ பாலகிருஷ்ணன் குழந்தை கிருஷ்ணன்
ஸ்ரீ சதுர்புஜன் நான்கு கைகள் கொண்டவன்
ஸ்ரீ தானவேந்திரன் செல்வங்களை அருள்பவன்
ஸ்ரீ தயாளன் இரக்கத்தின் களஞ்சியம்
ஸ்ரீ தயாநிதி இரக்கமுள்ள அருளாளன்

ஸ்ரீ தேவாதிதேவன் தேவர்களின் தலைவர்
ஸ்ரீ தேவகிநந்தன் தேவகியின் மகன்
ஸ்ரீ தேவேஷ்வா அவதார புருஷன்
ஸ்ரீ தர்மாதியட்சர் தரும தேவன்
ஸ்ரீ திரவின் எதிரிகள் அற்றவன்

ஸ்ரீ துவாரகாபதி துவாரகையின் தலைவர்
ஸ்ரீ கோபாலன் ஆவினங்களுடன் விளையாடுபவன்
ஸ்ரீ கோபாலப் பிரியன் ஆவினங்களை நேசிப்பவர்
ஸ்ரீ கோவிந்தன் ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
ஸ்ரீ ஞானேஸ்வரன் அறிவுக் கடவுள்

ஸ்ரீ ஹரி இயற்கையின் அதிபர்
ஸ்ரீ இரண்யகர்பன் “அனைத்தையும் படைப்பவர்”
ஸ்ரீ ரிஷிகேசன் அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர்
ஸ்ரீ ஜெகத்குரு பிரபஞ்சத்திற்கு குரு
ஸ்ரீ ஜெகதீஷ்வரன் பிரபஞ்சத்தின் இறைவன்

ஸ்ரீ ஜெகன்நாதர் பிரபஞ்சத்திற்கு தலைவர்
ஸ்ரீ ஜெனார்தனன் வரங்களை வழங்குபவர்
ஸ்ரீ ஜெயந்தன் அனைத்துப் பகைவர்களை வெல்பவன்
ஸ்ரீ ஜோதிராதித்தியன் சூரியனில் ஒளியாக விளங்குபவர்
ஸ்ரீ கமலநாதன் இலக்குமியின் நாதர்

ஸ்ரீ கமலநயனன் தாமரை வடிவக் கண்களை கொண்டவர்.
ஸ்ரீ கம்சந்தகன் கம்சனை கொன்றவர்
ஸ்ரீ காஞ்சலோசனன் தாமரைக் கண்ணன்
ஸ்ரீ கேசவன் நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர்
ஸ்ரீ கிருட்டிணன் அனைவரையும் கவர்பவன்

ஸ்ரீ இலக்குமி காந்தன் இலக்குமியின் கணவர்
ஸ்ரீ லோகாதியட்சன் மூவுலகின் நாயகன்
ஸ்ரீ மதனன் அன்பிற்கினியவன்
ஸ்ரீ மாதவன் இலக்குமியின் கணவர்
ஸ்ரீ மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர்

ஸ்ரீ மகேந்திரன் இந்திரனுக்குத் தலைவர்
ஸ்ரீ மன்மோகன் தடுமாறத மனம் உடையவன்
ஸ்ரீ மனோகரன் அழகின் அதிபதி
ஸ்ரீ மயூரன் மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன்
ஸ்ரீ மோகனன் வசீகரமானவன்

ஸ்ரீ முரளி புல்லாங்குழலை இசைப்பவன்
ஸ்ரீ முரளிதரன் புல்லாங்குழலை கையில் கொண்டவன்
ஸ்ரீ முரளி மனோகரன் குழல் ஊதி மயக்குபவன்
ஸ்ரீ நந்த குமாரன் நந்தகோபரின் வளர்ப்பு மகன்
ஸ்ரீ நந்த கோபாலன் பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன்

ஸ்ரீ நாராயணன் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவர்
ஸ்ரீ நவநீதசோரன் வெண்ணெய் திருடி உண்பவன்
ஸ்ரீ நிரஞ்சனன் அப்பழுக்கற்றவன்
ஸ்ரீ நிர்குணன் குணங்களைக் கடந்தவன்
ஸ்ரீ பத்மஹஸ்தன் தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன்

ஸ்ரீ பத்மநாபன் தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன்
ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் முற்றான முழுமையான உண்மையானவன்
ஸ்ரீ பரமாத்மா அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன்
ஸ்ரீ பரமபுருஷன் மேலான புருஷன்
ஸ்ரீ பார்த்தசாரதி அருச்சனனின் தேரை ஓட்டியவன்

ஸ்ரீ பிரஜாபதி அனைத்து சீவராசிகளையும் படைத்தவர்
ஸ்ரீ புண்ணியவான் தவத்தால் அடையத்தக்கவன்
ஸ்ரீ புருசோத்தமன் ஜீவாத்மாக்களில் மேலானவன்
ஸ்ரீ ரவி லோசனன் சூரியனைப் போன்ற கண்களை உடையவன்
ஸ்ரீ சகஸ்ராட்சகன் ஆயிரம் கண்களைக் கொண்டவன்

ஸ்ரீ சஹஸ்ர ஜிதன் ஆயிரம் பேர்களை அழித்தவன்
ஸ்ரீ சாட்சி அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன்
ஸ்ரீ சனாதனன் தொன்று தொட்டு விளங்குபவர்
ஸ்ரீ சர்வ ஜனன் அனைத்தும் அறிந்தவர்
ஸ்ரீ சர்வ பாலகன் அனைத்தையும் காப்பவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் அனைத்திற்கும் தலைவர்
ஸ்ரீ சத்திய வசனன் சத்தியம் மட்டும் பேசுபவர்
ஸ்ரீ சத்திய விரதன் உண்மையையே இலக்காகக் கொண்டவர்
ஸ்ரீ சாதனன் அனைத்தறிவுக்கும் கருவியானவன்
ஸ்ரீ ஸ்ரேஷ்டன் மிகவும் புகழ்பெற்றவன்

ஸ்ரீ காந்தன் இலக்குமியின் பிரியமானவன்
ஸ்ரீசியாம் கருநிறத்தவன்
ஸ்ரீ சியாமசுந்தரன் கார்மேக அழகன்
ஸ்ரீ சுதர்சனன் சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன்.
ஸ்ரீ சுமேதா நுட்பமான அறிவினன்

ஸ்ரீ சுரேஷ்வரன் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்
ஸ்ரீ சுவர்க்கபதி சொர்க்கத்தின் தலைவர்
ஸ்ரீ திரிவிக்கிரமன் மூவுலகையும் அளந்தவன்
ஸ்ரீ உபேந்திரன் இந்திரனின் நண்பர்
ஸ்ரீ வைகுந்த நாதன் வைகுந்தத்தில் உறைபவன்

ஸ்ரீ வர்தமானன் அருவமான (உருமற்ற) இறைவன்
ஸ்ரீ வாசுதேவ புத்திரன் வசுதேவரின் மகன்
ஸ்ரீ விஷ்ணு பிரபஞ்சத்தின் இறைவன்
ஸ்ரீ விஸ்வதட்சினன் திறமை மற்றும் ஆளுமை மிக்கவன்
ஸ்ரீ விஸ்வகர்மன் அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர்

ஸ்ரீ விஸ்வமூர்த்தி அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர்
ஸ்ரீ விஸ்வரூபன் பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர்
ஸ்ரீ விஸ்வாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மா
ஸ்ரீ விருசபர்வா அறத்தின் நாயகன்
ஸ்ரீ யாதவேந்திரன் யாதவ குல தலைவர்

ஸ்ரீ யோகி யோகியானவன்
ஸ்ரீ யோகினாம்பதி யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்)
ஸ்ரீ அச்சலன் குழந்தை
ஸ்ரீ அச்சுதன் தவறிழைக்காதவன்
ஸ்ரீ அவ்வியக்தன் தெள்ளத் தெளிவான மனதுடையவன்

ஸ்ரீ பங்கே பிகாரி (வனத்தின் விகாரி என்பதன் திரிபுச் சொல்) பிருந்தாவனக் காடுகளில் விளையாடுவதை நேசிப்பவன்
ஸ்ரீ பிகாரி விளையாட்டை நேசிப்பவன்
ஸ்ரீ பக்தவத்சலன் பக்தர்களை தூக்கி விடுபவர்
ஸ்ரீ பிரஜேஷா விரஜ மக்களின் தலைவன்
ஸ்ரீ சக்கரதாரன் கையில் சக்கரத்தைக் கொண்டவன்.

ஸ்ரீ தாமோதரன் அன்னை யசோதையால் இடுப்பில் கயிறு கட்டப்பட்டவன்.
ஸ்ரீ தீனபந்து துன்பத்திலிருப்போரின் உறவினன்
ஸ்ரீ தீனநாதன் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தருபவர்
ஸ்ரீ துவாரகாதீசன் துவாரகையின் தலைவர்
ஸ்ரீ துவாரகாநாதன் துவாரகையின் தலைவர்

ஸ்ரீ கண்ஷியாம் கார்மேக நிறத்தவன்
ஸ்ரீ கிரிதாரி கோவர்தன மலையை கையால் உயர்த்தி பிடித்தவன்
ஸ்ரீ கோபாலன் இடையன், பசுக்களை காப்பவன், (குறிப்பாக அனைத்து சீவராசிகளை காப்பவர்).
ஸ்ரீ கோபிநாதன் கோபியர் உளம் கவர் கள்வன்
ஸ்ரீ கோவிந்தன் ஆவினங்களை காப்பவர்

ஸ்ரீ கோவிந்தராஜன் இடையர்களின் அரசன்
ஸ்ரீ குருவாயூரப்பன் குருவாயூர் கோயிலில் குடி கொண்டவன்
ஸ்ரீ ஹரி பாவங்களை நீக்குபவர், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுவிப்பவர்.
ஸ்ரீ ஈஸ்வரன் இறைவன்
ஸ்ரீ ருஷீகேசன் உணர்வுகளின் தலைவர்

ஸ்ரீ ஜெகன்நாதர் பிரபஞ்சத்தின் தலைவர்
ஸ்ரீ ஜெனார்தனன் வரம் தருபவர்
ஸ்ரீ காலதேவன் காலத்திற்கு அதிபதி
ஸ்ரீ கல்மஷாஹீனன் பாவமற்றவன்
ஸ்ரீ கண்ணையா பக்தர்களின் சுமைகளை பகிர்ந்து கொள்பவர் அல்லது பக்தர்களிடம் நெருக்கமாக இருப்பவர்

ஸ்ரீ கேசவன் நீண்ட முடியை உடையவன்
ஸ்ரீ மதன மோகனன் தன் அழகால் கலக்கமடையச் செய்பவன்
ஸ்ரீ மாதவன் இலக்குமியின் நாயகன்
ஸ்ரீ மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர்
ஸ்ரீ மணிகண்டன் கௌஸ்துபம் எனும் மணிமாலையை அணிந்தவன்

ஸ்ரீ முராஹரி முரா எனும் அரக்கனை கொன்றவர்
ஸ்ரீ முகிலன் கார்மேக நிறத்தவன்
ஸ்ரீ முகுந்தன் வீடுபேற்றுக்கான ஆன்மீக அறிவொளியை அருள்பவர்.
ஸ்ரீ நந்தகோபாலன் இடையர்களுக்குப் பிரியமானவன்
ஸ்ரீ நந்தலால் நந்தகோபனுக்குப் பிரியமானவன்.

ஸ்ரீ பாண்டுரங்கன் பண்டரிபுரத்து வெள்ளை நிற கிருஷ்ணண்
ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் அனைத்திற்கும் மேலான பிரம்மம்
ஸ்ரீ பரமேஸ்வரன் மேலான ஈஸ்வரன்
ஸ்ரீ பார்த்தசாரதி குரு ஷேத்திரப் போரில் அருச்சுனனுக்கு தேரோட்டியவர்.
ஸ்ரீ பிரதிபாவனன் பாவத்தில் வீழ்ந்தவர்களை தூய்மைப்படுத்துபவர்

ஸ்ரீ இராதாவல்லபவன் ராதையின் அன்பிற்குரியவன்
ஸ்ரீ இராஜகோபாலன் இடையர்களின் அரசன்
ஸ்ரீ ரண்ச்சோதரை அமைதி காக்கும் பொருட்டு போரை மறுத்து துவாரகைக்கு ஓடியவன்
ஸ்ரீ ஸ்யாமசுந்தரன் கருப்பழகன்
ஸ்ரீ சந்தானம் அன்பானவன்

ஸ்ரீ சந்தானசாரதி வானுலக ஆன்மீக தோரோட்டி
ஸ்ரீ சௌரி சூரசேனரின் வழித்தோன்றல்
ஸ்ரீ வாசுதேவன் வசுதேவரின் மகன்
ஸ்ரீ யதுநந்தனன் யதுக்களின் அன்பிற்குரியவன்
ஸ்ரீ யோகீஸ்வரன் யோகிகளின் தலைவர்
ஸ்ரீ யசோதா நந்தனன் யசோதையின் வளர்ப்பு மகன்

——————–

ஓம் கிருஷ்ணாய நமஹ
ஓம் கமலநாதாய நமஹ
ஓம் வாசுதேவாய நாமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
ஓம் யசோதாவத்சலாய நமஹ
ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
ஓம் தேவகீநந்தனாய நமஹ
ஓம் ஸ்ரீசாய நமஹ
ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
ஓம் நவநீத நடனாய நமஹ
ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ
ஓம் மதுராக்குறுதயா நமஹ
ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
ஓம் யோகினே நமஹ
ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ

ஓம் இலாபதயே னம நமஹ
ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
ஓம் யாதவேம்த்ராய நமஹ
ஓம் யதூத்வஹாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
ஓம் கோபாலாய நமஹ
ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ
ஓம் நிரஞ்சனாய நமஹ
ஓம் காமஜனகாய நமஹ
ஓம் கம்ஜலோசனாய நமஹ
ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ
ஓம் துவாரகாநாயகாய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
ஓம் நாராயாணாத்மகாய நமோ
ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
ஓம் மாயினே நமஹ
ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
ஓம் சம்சாரவைரிணே நமஹ
ஓம் கம்சாராயே நமஹ
ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ
ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
ஓம் சத்யபாமாரதாய நமஹ

ஓம் ஜெயினே நமஹ
ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ
ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ

ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
ஓம் பார்த்தசாரதியே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஶ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ
ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் வேதவேத்யாய நமஹ
ஓம் தயாநிதேயே நமஹ
ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
ஓம் பராத்பராய நமஹ

—————

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -1-

May 22, 2020

ஸ்ரீ ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவை கொடுப்பது. அதனால் அடையும் பலன் மோட்சம்..

யதா3த்த2 மாம் மஹாபா4க்3 தச்சிகீர்ஷிதமேவ மே |
ப்ரஹ்மா ப4வோ லோகபாலா: ஸ்வர்வாஸம் மேSபி4காங்க்ஷிண: || 1 ||

ஹே உத்தவா! என்னுடைய விஷயத்தில் என்ன பேசினாயோ அது என்னால் விரும்பபட்டதுதான்
(யது குலத்தின் நாசம், அவதார தோற்றத்தை விட்டு விடுதல்). பிரம்மாவும் சிவனும் மேலும் மற்ற தேவர்களான இந்திரன்
போன்ற லோக பாலகர்களும் நான் வைகுண்டத்துக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மயா நிஷ்பாதி3தம் ஹயத்ர தே3வகார்யமஶேஷத: |
யத3ர்த2மவதீர்ணோSஹமம்ஶேன ப்3ரஹமணார்தித: || 2 ||

பூலோகத்தில் என்னால் தேவ காரியங்களும் குறைவில்லாமல் முடிக்கப்பட்டுவிட்டன.
என்னுடைய ஒரு அம்சமான பலராமனுடன் சேர்ந்து, பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி
எந்தக் காரணத்திற்காக நான் அவதாரம் எடுத்தேனோ அது முடிவடைந்துவிட்டது.

குலம் வை ஶாப நிர்த3க்3த4ம் நங்க்ஷ்யத்யன்யோன்யவிக்3ரஹாத் |
ஸமுத்3ர: ஸப்தமே ஹயேனாம் புரீம் ச ப்லாவயிஷ்யதி || 3 ||

அந்தணர் சாபத்திற்கு ஆளாகிவிட்ட இந்த யதுகுலம் பரஸ்பர சண்டைகளினால் முற்றிலுமாக அழிந்துவிடப்போகின்றது.
இன்றிலிருந்து ஏழாவது நாளில் சமுத்திரமானது இந்த நகரை மூழ்கடிக்கப்போகிறது.

யஹர்யேவாயம் மயா த்யக்தோ லோகோSயம் நஷ்டமங்க3ல: |
ப4விஷ்யத்யசிராத்ஸாதோ4 கலினாபி நிராக்ருத: || 4 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பிறகு இந்த நகரமானது தர்மத்தை இழந்து விடும்.
இது உடனடியாக நடக்கப்போகிறது. பிறகு உலகமானது கலியினால் வியாபிக்கப் போகின்றது.

ந வஸ்தவ்யம் த்வயைவேஹ மயா த்யக்தே மஹீதலே |
ஜனோSப4த்3ர்ரூசிர்ப4த்3ர ப4விஷ்யதி கலௌ யுகே3 || 5 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பின், நீ இங்கே இருக்கத்தகாது.
ஹே உத்தவா! கலியுகத்தில் மக்கள் அதர்மத்தில் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்

த்வம் து ஸர்வம் பரித்யஜ்ய ஸ்னேஹம் ஸ்வஜனப3ந்து4ஷு |
மய்யாவேஶ்ய மன: ஸம்யக்ஸமத்3ருக்3விசரஸ்வ கா3ம் || 6 ||

நீ அனைத்தையும் ( பொருட்களையும், உறவினர்களையும் ) துறந்து விடு, முழுமையாக தியாக செய்துவிடு.
உன்னுடைய உற்றார், உறவினர்களிடம் கொண்டுள்ள பற்றை தியாக செய்து விடு. என்னிடமே மனதை நன்றாக நிலைநிறுத்தி,
எல்லா பிராணிகளிடத்திலும் சமநோக்குடன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிரு.

யதி3த3ம் மனஸா வாசா சக்ஷுர்ப்4யாம் ஶ்ரவணாதி3பி4: |
நஶ்வரம் க்3ருஹ்யமாணம் ச வித்3தி4 மாயாமனோமயம் || 7 ||

யத்3 இத3ம் – நாம் பார்த்து அனுபவிகின்ற இவைகள்
க்3ருஹ்யமாணம் – அனுபவிக்கப்படுகின்றதோ, கிரகிக்கப்படுகின்றதோ
நஶ்வரம் – அழியக்கூடியது
மாயா மனோமயம் – ஜாக்ரத் உலகத்தில் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஈஸ்வரனின் மாயையினால்
தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது.

பும்ஸோSயுக்தஸ்ய நானார்தோ2 ப்4ரம: ஸ கு3ணதோ4ஷபா4க் |
கர்மாகர்மவிகர்மேதி கு3ணதோ3ஷதி4யோ பி4தா3 || 8 ||

பும்ஸஹ – ஜீவனுக்கு;
அயுக்தஸ்ய – சேராதிருப்பவன், ஞானமில்லாதவன், ஆத்ம ஞானத்துடன் இல்லாத ஜீவனுக்கு, அஞானத்துடன் கூடியிருப்பவனுக்கு
நானார்த2: ப்4ரமஹ – அப்ரஹ்மாத்மகமாக ஒன்றுமே இல்லையே
ஸ கு3ணதோ3ஷ பா4க்3 – இது நல்லது, இது கெட்டது என்ற பாகுபாடும் தோன்றுகின்றது
பொருளிடத்தில் குணதோஷம் இருக்கிறதா அல்லது மனதிலிருந்து வருகின்றதா என்று பார்க்கும் போது
இது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது என்று அறியலாம்.
மனதிலிருந்தால் ராக-துவேஷம் என்றும், பொருட்களிலிருந்தால் அதுவே குண-தோஷம் என்றும் அழைக்கப்படுகின்றது.
கு3ணதோ3ஷதி4யஹ – முக்குண வசப்பட்டு
பி4தா3 – கர்ம – செயலில் ஈடுபடுதல்
அகர்ம – செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் இருத்தல்
விகர்ம – செய்யக்கூடாத செயலை தவறாக செய்தல்
புத்தியில் குண-தோஷம் உள்ளவனுக்கு மேலே கூறப்பட்ட செயல் வேறுபாடுகள் தோன்றுகிறது.
செயல்களினால் பாவ-புண்ணியங்களை அடைகின்றோம். இவைகள் சுக-துக்கத்தை கொடுத்துத்தான் தீரும்.
எனவே அதற்கேற்ற உடல் எடுத்தாக வேண்டும். இவ்வாறு பிறப்பு எற்படுகின்றது.
மீண்டும் கர்மம்àபாவ-புண்ணியங்கள்àபிறப்பு இவ்வாறு சம்சார சக்கரத்தில் ஜீவன் சுழன்று கொண்டிருப்பான்

தஸ்மாத3 யுக்தேந்த்3ரியக்3ராமோ யுக்தசித்த இத3ம் ஜகத் |
ஆத்மநீக்ஷஸ்வ விததமாத்மானம் மய்யாதீ4ஶ்வரே || 9 ||

இதில் ஶமஹ (மனக்கட்டுபாடு), த3மஹ – இந்திரியக் கட்டுப்பாடு என்ற சாதனங்களைப் பயன்படுத்தி
ஞானத்தை அடைய வேண்டும் என்று பகவான் கூறுகின்றார்.
தஸ்மாத்3 – ஆகவே, சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும்.
யுக்த இந்திரிய கி3ராமஹ – அனைத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்தியவனாக இரு, உன் வசத்துக்குள் கொண்டு வா.
ஞான இந்திரியங்கள் பிரத்யக்ஷ பிரமாணமாகவும், போகத்தை அனுபவிக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றோம்.
யுக்த சித்த – மனமும் உன் வசத்துக்குள் இருக்க வேண்டும்.
விததம் ஆத்மானாம் – எங்கும் வியாபித்திருக்கின்ற உன்னை
ஆத்மனீக்ஷஸ்வ – உன்னிடத்திலே காண்பாயாக.
மயி அதீ4ஶ்வரே – அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற என்னிடத்திலும் பார்.

கனவில் தோன்றியிருக்கும் அனைத்தும் என்னால் தோற்றுவிக்கப்பட்டது. என்னாலே அழிக்கப்பட்டு,
என்னிடத்திலே லயமடைந்திருக்கின்றது. அதேபோல ஜாக்ரத் அவஸ்தையில் இந்த உலகம் பிரம்மனான என்னால் தோற்றுவிக்கப்பட்டது.
என்னாலே அழிக்கப்படும், என்னிடத்திலே லயமடைகின்ற என்ற உணர்வு பூர்வமான அறிவை அடைய வேண்டும்.

ஞானவிக்ஞான ஸம்யுக்த ஆத்மபூ4த: ஶரீரிணாம் |
ஆத்மானுப4வதுஷ்டாத்மா நாந்தராயைர்விஹன்யஸே || 10 ||

ஞான விக்ஞான ஸம்யுக்த – ஞானத்துடனும், விக்ஞானத்துடனும் (ஞான நிஷ்டையில் இருக்கும் நிலை) இருப்பவன்,
ஞான நிஷ்டையை அடைந்திருக்கும் ஞானியானவன்.
ஆத்மபூ4த ஶரீரிணாம் – சரீரங்களையுடைய எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னையே பார்க்கின்றான்
ஆத்ம அனுப4வ துஷ்ட ஆத்மா – ஆத்ம ஞானமே அனுபவமாக கொண்டதினால், ஆத்ம அபரோக்ஷ ஞானத்தை அடைந்திருப்பதால்
மன திருப்தியை அடைந்திருப்பான் ஞானி
ந விஹன்யஸே அந்தராயஹ – பிராரப்தத்தினால் உனக்கு வரும் கஷ்டங்களினாலும், தடைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பாய் உத்தவா!

தோ3ஷபு3த்3யோ ப4யாதீதோ நிஷேதா4ன்ன நிவர்ததே |
கு3ணபு3த்3த்4யா ச விஹிதம் ந கரோதி யதா2ர்ப4க: || 11 ||

யதா2 அர்ப4கஹ – ஞானியானவன் சிறு குழந்தையைப் போல
உப4யாதீதஹ – இரண்டையும் கடந்தவன், நன்மை-தீமை, தர்ம-அதர்மம் போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டவன்,
இருமையை கடந்தவன்
தோ3ஷ புத்3தி4 – தோஷ புத்தியினால், அதர்மம், கோபம், வெறுப்பு போன்ற தீயகுணங்களுடைய புத்தியிருப்பதால்
நிஷேதா4த் ந நிவர்த்தே – செய்யக்கூடாததை செய்யாமல் விலகுவதில்லை
குணபுத்3த்4யா – குண புத்தியால், நல்லது, தர்மம்
ச விஹிதம் ந கரோதி – செய்ய வேண்டியதை செய்வதும் இல்லை
இவனுக்கு விதி நிஷேதம் எதுவும் கிடையாது

ஸர்வபூ4தஸுஹ்ருச்சா2ந்தோ ஞானவிக்3ஞான நிஶ்சய: |
பஶ்யன்மதா3த்மகம் விஶ்வம் ந விபத்3யேத வை புன: || 12 ||

ஸுஹ்ருத் – நண்பன் – எதிர்ப்பார்ப்பின்றி நட்புடன் பழகுபவன்
ஸர்வபூத – எல்லா ஜீவராசிகளினுடைய மகிழ்ச்சியினால் மகிழ்ந்திருப்பான்–மனம் சாந்தத்துடன் இருப்பான், மனம் மென்மையாக இருக்கும்
ஶாந்தஹ – அவனுடைய மனம் என்றும் அமைதியுடன் இருந்து கொண்டு இருக்கும். அவனுடைய சித்தமும் அமைதியாக இருக்கும்
ஞான விக்ஞான நிஶ்சய – ஞானத்திலும், ஞான நிஷ்டையிலும் உறுதியை அடைந்து விட்டான்.
பஶ்யன் மதா3த்மகம் விஶ்வம் – இந்த உலகத்தை என் ஸ்வரூபமாகவே பார்க்கின்றான்
ந விபத்3யேத வை புன: – இதனால் சம்சாரத்தில் மீண்டும் வீழ்ந்து விட மாட்டான்

ஶ்ரீஶுக உவாச
இத்யாதி3ஷ்டோ ப3க3வதா மஹாபா4க3வதோ ந்ருப |
உத்3த4வ: ப்ரணிபத்யாஹ தத்3 த்வம் ஜிக்3ஞாஸுரச்யுதம் || 13 ||

ஶ்ரீஶுகர் கூறுகிறார்
கிருப – ஹே பரீக்ஷித் ராஜனே!
இதி ஆதி3ஷ்டஹ – இவ்விதம் உபதேசிக்கப்பட்டபின்
மஹாபாகவதஹ – பரமபக்தரான, பக்தர்களுக்குள் மேலானவரான, மோட்சத்தை அடைய விரும்புகின்ற பக்தனான
உத்தவ – உத்தவர்
தத் த்வம் ஜிக்ஞாஸு – ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புபவனாக
ப்ரணிபத்யாஹ அச்யுதம் – அச்சுதனான ஸ்ரீகிருஷ்ண பகவானை பணிவுடன் வணங்கிக் கேட்டார்.

ஶ்ரீஉத்3த4வ உவாச
யோகே3ஶ யோகா3வின்யாஸ யோகா3த்மன்யோக3ஸம்ப4வ |
நி:ஶ்ரேயஸாய மே ப்ரோக்தஸ்த்யாக3: ஸன்னயாஸலக்ஷண: || 14 ||

உத்தவர் கேட்கிறார்
யோகே3ஶ – யோகத்திற்கு தலைவரே! எல்லா சாதனங்களுக்கும் பலனை தருபவரே
யோகவின்யாஸ – சாதகர்களை காப்பாற்றுபவர்; பக்தர்களை ரக்ஷிப்பவர்
யோகா3த்மன் – சாதனங்களின் ஸ்வரூபமாக இருப்பவரே
யோக3ஸம்ப4வ – சாதனங்களின் தோற்றத்திற்கும் காரணமானவரே1
ஸந்ந்யாஸ லக்ஷண – சந்நியாஸ ஸ்வரூபமானது
தியாகஹ – தியாகமானது
நிஶ்ரெயஸாய – மோட்சத்தைப் பற்றி, ஆன்மீக மேன்மைக்காக
மே ப்ரோக்தஹ – எனக்கு உங்களால் உபதேசிக்கப்பட்டது

த்யாகோ3Sயம் துஷ்கரோ பூ4மன்காமானாம் விஷயாத்மபி4: |
ஸதராம் த்வயி ஸர்வாத்மன்னப4க்தைரிதி மே மதி: || 15 ||

பூமன் – எல்லையற்றவரே! பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பவரே!
காமானாம் விஷயாதமபி4: – புலனுகர் இன்பங்களில் பற்றுக் கொண்டு பற்பல விஷயங்களில் சிக்கியுள்ளவர்களால்
அயம் த்யாக3ஹ – இந்த தியாகத்தை செயல்படுத்துவது மிகவும் கடினம்
த்வயி அபக்தைஹி ஸுதராம் – அதிலும் தங்களிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு கண்டிப்பாக மிகவும் கடினம்.
ஸர்வாத்மா – அனைத்துமாக இருக்கின்றவரே!
இதி மே மதி: – இது என்னுடைய கருத்து

ஸோSஹம் ம்மாஹமிதி மூட4மதிர்விகா3ட4ஸ்
த்வன்மாயயா விரசிதாத்மனி ஸானுபந்தே4 |
தத்த்வஞ்தஸா நிக3தி3தம் ப4வதா யதா2ஹம்
ஸம்ஸாத4யாமி ப4க3வன்னனுஶாதி4 ப்4ருத்யம் || 16 ||

ப்4ருத்யம் – உங்கள் சேவகனான எனக்கு
ப4வதா நிக3தி3தம் – உங்களால் உபதேசிக்கப்பட்ட தியாகத்தை
யதா2 அஹம் – எவ்விதம் நான்
அஞ்ஜஸா ஸம்ஸாத4யாமி – உடனடியாக, நன்கு அடையமுடியுமோ
பகவன் அனுஶாதி4 – பகவானே அதை உபதேசித்து அருளுங்கள்
மூ4டமதிஹி – தவறான புத்தியுடையவனாக, அறியாமையுடனும், மோகத்தில் இருக்கின்றேன்
ஸஹ அஹம் – இப்படிபட்ட நான்
அஹம மம இதி = நான் என்னுடையது என்று புத்தியை உடையவனாக, இந்த அனாத்மாவான உடலில்
நான் என்னுடையது என்ற மதிமயக்கத்தில் மூழ்கி இருக்கின்றேன்.
த்வன் மாய்யா விரசித ஆத்மனி – உங்களுடைய மாயையினால் உருவக்கப்பட்ட இந்த சரீரத்தில்
விகா3த4 – மூழ்கி இருக்கின்றேன்
ஸானுப3ந்தே4 – உற்றார்-உறவினர்களிடத்திலும் நான், என்னுடையது என்ற பற்றில் மூழ்கியவனாக இருக்கின்றேன்.

ஸத்யஸ்ய தே ஸ்வத்3ருஶ ஆத்மன ஆத்மனோSன்யம்
வக்தாரமீஶ விபு3தே4ஷ்வபி நானுசக்ஷே |
ஸர்வே விமோஹித்தி4யஸ்தவ மாய்யேமே
ப்3ரஹமாத3யஸ்தனுப்4ருதோ ப3ஹிர்ர்த2பா4வா: || 17 ||

இதில் உத்தவருக்கு பகவானிடத்தல் இருக்கும் சிரத்தையை எடுத்துக் காட்டுகின்றது.
ஈஶ – ஈஶ்வரரே
ஆத்மனஹ – எனக்கு
விபு3தே4ஷ் அபி – தேவர்களுக்குள்ளும் கூட
அன்யம் வக்தாரம் – உங்களைத் தவிர உபதேசிப்பவர் வேறொருவரை
ந அனுசக்ஷே – பார்க்கவில்லை
ஸத்யஸ்ய – என்றும் இருக்கின்ற
ஸ்வத்3ருஶ – சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமாக
ஆதமன – ஆத்ம தத்துவமாக இருக்கின்ற பகவானே
மாயயா – உங்களுடைய வசத்தினால்
ஸர்வே விமோஹித தி4ய – எல்லா ஜீவராசிகளும் ஆத்மா-அனாத்மா விஷயத்தில் மோக வசப்பட்டுள்ள புத்தியை
உடையவர்களாக இருக்கிறார்கள்
தனுப4ருதோ – உடலைத் தாங்கியுள்ள
ப்3ரஹ்மாத4யஹ – பிரம்மா முதலிய எல்லோரும்
ப4ஹிரர்த2பா4வா – எல்லா ஜீவராசிகளும் வெளி விஷயத்தையே பார்க்கும் உணர்வு உடையவர்களாக
இயற்கையாகவே இருக்கிறார்கள். யாருமே உட்புறமாக மனதை திருப்பி விசாரம் செய்வதில்லை

தஸ்மாத்3 ப4வந்தமனவத்3யமனந்தபாரம்
ஸர்வக்3ஞமீஶ்வரமகுண்ட2விகுண்ட2தி4ஷ்ண்யம் |
நிர்விண்ணதீ4ரஹமு ஹே வ்ருஜினாபி4தப்தோ
நாராயணம் நரஸக2ம் ஶரணம் ப்ரபத்3யே || 18 ||
ஶரணம் ப்ரபத்3யே – நான் சரணடைகிறேன்.

தஸ்மாத்3 ப4வந்தம் – ஆகவே உங்களை
அனவத்யம் – குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர், வஞ்சகமற்றவர்
அனந்தபாரம் – காலத்தாலும், தேசத்தாலும் வரையறுக்கப்படாதவர், நித்யமானவர். இது குரு அடைந்துள்ள ஞானத்தை குறிக்கின்றது)
ஸர்வஞம் – அனைத்தையும் அறிந்தவர், ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க தேவையான அனைத்து அறிவையும் கொண்டவர்.
இது பகவானுக்கு பொருந்தாது மற்ற ஸத்குருவிற்கு பொருந்தும்.
ஈஶ்வரம் – பகவானைக் குறிக்கும் போது இது ஸ்துதியாக இருக்கின்றது.
குருவைக் குறிக்கும் போது சாமர்த்தியம் உடையவராக இருப்பதை குறிக்கும்.
மன்னிக்கும் குணமும், பொறுமையும் உடையவர். சிஷயனிடத்தில் இருக்கும் குறைகளை நீக்கி
அரவனைத்து உயர்த்தும் சாமார்த்தியம் உடையவர்
அகுண்ட2விகுண்ட2 த்4ருஷ்ன்யம் – அழிவில்லாத வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவானே!
பிரம்ம நிலையில் குரு இருக்குமிடம் அழியாததாகும். அதாவது பிரம்மனாகவே இருக்கின்றவர்.
நாராயணம் – பகவானை குறிக்கும் போது நீங்கள் நாராயணனாக இருக்கிறீர்கள்.
நாரம் என்ற சொல்லுக்கு மனித சமூகம், அயணம் என்பது இருப்பிடம், லட்சியம் குறிக்கின்றது.
எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கின்ற சாட்சி ஸ்வரூபமாக இருப்பவர்
ஜீவர்கள் அடைய வேண்டிய லட்சியமாக இருப்பவர்
நரஸக2ம் – எல்லா மனிதர்களுக்கும் நண்பராக இருப்பவர், அஜாதசத்ருவாக இருக்கும் தங்களை நான் சரணடைகின்றேன்.
நிர்விண்ணதீ4ரஹம் – நான் துயரமடைந்த மனதுடையவனாக இருக்கின்றேன்
வ்ரஜின அபிதப்தஹ – பாவத்தினால் கூட நான் வாடிக் கொண்டிருக்கின்றேன்.
மனதிலிருக்கும் விருப்பு-வெறுப்பு, பொறாமை போன்ற தீய குணங்களினால் வதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றேன்.

ஶ்ரீப4கவான் உவாச
ப்ராயேண மனுஜா லோகே லோகதத்த்வ்விசக்ஷணா: |
ஸமுத்3த4ரந்தி ஹயாத்மானமாத்மனைவாஶுபா4ஶயாத் || 19 ||

ஶ்ரீபகவான் கூறினார்.
மனிதர்கள் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருவருடைய முன்னேற்றத்திற்கு அவனே தான் காரணமாக இருக்கின்றான்.
ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ப்ராயேண – பொதுவாக எப்பொழுதும்
லோகே மனுஜா – இந்த உலகத்திலுள்ள மனிதர்கள்
லோகதத்த்வ விசக்ஷணா: – இந்த உலகத்திலுள்ள விஷயங்களை, தத்துவங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள்.
அஶுப4 ஆஶயாத் – அவர்களிடத்திலிருக்கும் விஷய, அசுப வாஸனைகளிலிருந்து, எல்லாவித தீய குணங்களிலிருந்து
ஆத்மானாம் ஆத்மனா ஏவ – தன்னை தன்னாலேயே
ஸமுத்3த4ராந்தி – உயர்த்திக் கொள்கிறார்கள்
நிகழ்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான் வருங்காலத்தில் ஊழ்வினையாக வருகின்றது.
எனவே ஆராய்ந்து அறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மனோ கு3ருராத்மைவ புருஷஸ்ய விஶேஷத: |
யத்ப்ரத்யக்ஷானுமானாப்4யாம் ஶ்ரேயோSஸாவனுவிந்ததே || 20 ||

ஆத்மனஹ – ஜீவனான எனக்கு (ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை உடையவன்)
ஆத்மா ஏவ குரு – புத்தியானது குருவைப்போல உள்ளது. எல்லா பிரமாணங்களுக்கும் பின்னால் மனம்
இருந்து கொண்டு இருக்கின்றது. புத்தியானது அறிவைக் கொடுக்கும் பொதுவான பிரமாணமாக இருக்கின்றது.
யத் – எப்படி குருவாக இருப்பது என்றால்
பிரதியக்ஷ, அனுமானம் இவைகளின் மூலமாக தனக்கு தானே நன்மையை தேடிக் கொள்கின்றான்-
குருவினுடைய கிருபையை பணிவு மூலம் அடைய வேண்டும். சாஸ்திரத்தின் கிருபையை அடைய வேண்டும்.
ஆத்ம கிருபையை அடைய வேண்டும். அதாவது நம்மிடத்தில் நமக்கே கிருபையிருக்க வேண்டும்.
ஈஸ்வர, குரு கிருபை அடைந்தவர்களுக்கு இந்த ஆத்ம கிருபை நிச்சயமாக கிடைக்கும்

புருஷத்வே ச மாம் தீ4ரா: ஸாங்க்2ய்யோக3விஷாரதா3: |
ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் || 21 ||

இதில் பகவான் மனிதப்பிறவியின் மதிப்பைக் கூறுகின்றார்.
புருஷத்வே – மனிதனுடைய ஜென்மத்தில்தான்
தீ4ரா: – விவேகமுடையவர்கள்
ஸாங்க்2ய யோக3 – சாங்கியத்திலும், யோகத்திலும்
விஶாரதா3: – தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பதால்
ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் – அனைத்து ஆற்றலும் கொண்ட பரமாத்வான
மாம் ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி – என்னை அடைகின்றார்கள்

ஏகத்3வித்ரிசதுஸ்பாதோ3 ப3ஹுபாத3ஸ்ததா2பத3: |
ப3ஹவ்ய: ஸந்தி புர: ஸ்ருஷ்டாஸ்தாஸாம் மே பௌருஷீ ப்ரியா || 22 ||

படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளில் மனிதப்பிறவிதான் எனக்கு பிடித்தமானது.
ஒரு கால்களுடையவைகள், இரண்டு கால்களுடையவைகள், மூன்று கால்களுடையவைகள், நான்கு கால்களுடையவைகள்,
பல கால்களுடையவைகள், கால்களே இல்லாதவைகள் என பலவகைப்பட்ட படைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
அவைகளிலே எனக்கு மனித சரீரம்தான் பிடித்தமானது

அத்ர மாம் ம்ருக3யந்த்யத்3தா4 யுக்தா ஹேதுபி4ஶ்வரம் |
க்3ருஹயமாணௌர்கு3ர்ணௌர்லிங்கை3ர் க்3ராஹயமனுமானக்த: || 23 ||

மனித சரீரத்திலிருந்து கொண்டு புத்தியின் துணைக்கொண்டு என்னை அறிகின்றார்கள்.
சரியான பிரமாணத்தை பயன்படுத்தி புத்தியில் என்னை அடையும் வழியை அறிகின்றார்கள்.
வெறும் புலன்களைக் கொண்டு என்னை அறியமுடியாது.

அத்ராப்யுதா3ஹரந்தீம்மிதிஹாஸம் புராதனம் |
அவதூ4தஸ்ய ஸ்ம்வாத3ம் யதோ3ரமித்தேஜஸ: || 24 ||

இந்த விஷயமாக மிகப் பழமையான ஒரு இதிகாசத்தை, கதையை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள்.
அது யது மகராஜாவுக்கும், மிகுந்த தேஜஸ்வியான அவதூதருக்கும் இடையே நடந்த உரையாடலாக இருக்கின்றது.

அவதூ4தம் த்3வியம் கஞ்சிச்சரந்தமகுதோப4யம் |
கவிம் நிரீக்ஷ்ய தருணம் யது3: பப்ரச்ச2 த4ர்மவித் || 25 ||

த்3விஜம் – இருபிறப்பாளர் (பிராமணர்), ஞானத்தினால் வேறொரு பிறப்பை எடுத்த
கஞ்சித் சரந்தம் – யாரோ ஒருவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்
அகுதோப4யம் – எதனாலும் பயப்படுத்த முடியாதவர்; எதைக் கண்டும் பயப்படாதவர்
கவிம், தருணம் – ஆத்ம ஞானி, அறிவாளி, இளம் வயதுடையவர்
நிரீக்ஷ்ய – இப்படிப்பட்டவரை பார்த்து
த4ர்மவித் – தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த
யது3: – யது3 என்ற அரசன்
ப்ப்ரச்ச2 – கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்

ஶ்ரீயது3ருவாச
குதோ பு3த்3தி4ரியம் ப்3ரஹ்மன்னகர்து: ஸுவிஶாரதா3 |
யாமாஸாத்3ய ப4வால்லோகம் வித்3வாம்ஶ்சரதி பா3லவத் || 26 ||

யது மகராஜன் கேட்டான்.
அவதூ3தர் – சந்நியாஸ ஆசிரமத்தில் இருக்கும் ஒரு வகையினர். இதற்கு நன்கு அனைத்தையும் துறந்து விடுதல் என்று பொருட்படும்.
அ – அக்ஷரத்வாத் – அழியாத ஞானத்தை உடையவர்
வ – வரேன்யாத் – நாடப்பட வேண்டியவர்
தூ3 – தூ3த சம்சாராத் – சம்சாரத்தை விட்டவர்
த – தத்வமஸி என்ற வாக்கியத்தை உணர்ந்தவர்.
குதஹ இயம் ஸுவிஶாரதா3 புத்3தி4 – எங்கிருந்து இந்த மிகமிக நுட்பமான, ஆழ்ந்த, தெளிவான அறிவை அடைந்தீர்கள்?
ப்ரஹமன் ப4வான் – ஹே பிராம்மணரே, தாங்கள்
யாம் ஆஸாத்3ய – எந்த அறிவை அடைந்து
பா4லவத் சரதி – பாலகனைப் போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
அகர்து – எந்த செயலையும் செய்யாமல், செயல் எதுவும் செய்வதில்லை, இன்பத்திற்காகவும்,
அறிவை அடைவதற்காகவும் எந்தச் செயலும் செய்வதில்லை
லோகம் வித்3வான் – இந்த உலகத்தின் தன்மை நன்கு அறிந்து கொண்டு, இந்த உலகத்திற்கு இன்பத்தை,
சுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது- நிலையற்றது என்று தெரிந்தும் சந்தோஷமாக எப்படி இருக்கின்றீர்கள்.

ப்ராயோ த4ர்மா4ர்த2காமேஷு விவித்ஸாயாம ச மானவா: |
ஹேதுனைவ ஸமீஹந்த ஆயுஷோ யஶஸ: ஶ்ரிய: || 27 ||

ப்ராயஹ – பொதுவாக
தர்ம அர்த்த2 காமேஷு – புருஷார்த்தமான அறம், பொருள், இன்பம் இவைகளை அடைவதற்கு,
புண்ணியத்தை அடைவதற்கான தர்மத்தைக் கடைப்பிடித்தும், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அடைவதிலும்,
சுகத்திற்கு தேவையான பொருட்களை அடைவதிலும் செயல்படுகிறார்கள்
விவித்ஸா – இவைகளை அடைவதற்கு தேவையான அறிவை நாடுகிறார்கள்
மானவா ஹேதுனா ஏவ – மனிதர்கள் இதற்காகவே
ஸமீஹந்த – முயற்சி செய்கிறார்கள்
ஆயுஶஹ, யஶஹ, ஶ்ரியஹ – நீண்ட ஆயுளோடும், புகழோடும், செல்வ செழிப்போடும்
இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

த்வம் து கல்ப: கவிர்த3க்ஷ: ஸுப3கோ3 அம்ருதபா4ஷண: |
ந கர்தா நேஹஸே கிஞ்சிஜ்ஜடோ3ன்மத்தபிஶாசவத் || 28 ||

த்வம் து கல்ப: – நீங்கள் செயல்திறன் படைத்தவர், அறிவு திறன் படைத்தவராக இருக்கிறீர்கள்,
சாஸ்திர ஞானமும் இருக்கிறது, சாமர்த்தியம் கொண்டவர்
ஸுப4க3: – பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறீர்கள்
அம்ருதபா4ஷண – நல்ல பேச்சாற்றல் உடையவராக இருக்கிறீர்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்
பேசும் திறன் உடையவராக இருக்கிறீர்கள்
ந கர்தா – ஆனால் எதையும் செய்வதில்லை
ந ஈஹஸே கிஞ்சித் – எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறீர்கள்
ஜ்ட3ம் – உயிரற்ற பொருள் போலவும்
உன்மத்த – சித்தம் கலங்கியவரைப் போலவும்
பிஶாசவத் – தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போலவும், பிசாசைப் போலவும் இருக்கிறீர்கள்.

ஜனேஷு த3ஹயமானேஷு காமலோப3த3வாக்3னினா |
ந தப்யஸேSக்3னினா முக்தோ க3ங்கா3ம்ப4:ஸ்த2 இவ த்3விப: || 29 ||

கங்கையின் நீருக்குள் இருக்கும் யானையானது சுற்றி எரியும் காட்டு நெருப்பால் பாதிக்கப்படாதது போல
இந்த உலகிலிருக்கும் மனிதர்கள் காமம், லோபம், என்கின்ற காட்டுத் தீயினால் எரிக்கப்படுகிறார்கள்.
காமம், கோபம், மதம், மோஹம், மாத்ஸர்யம் போன்ற துன்பத்தைக் கொடுக்க்க்கூடிய உணர்வுகளால், எண்ணங்கள் –
காட்டு தீக்கு உவமையாக கூறப்படுகிறது-ஆனால் இந்த அக்னியால் எரிக்கப்படாமல் முற்றிலும் விடுபட்டவராக நீங்கள் ஆனந்தமாய நிற்கிறீர்கள்.

த்வம் ஹி ந: ப்ருச்ச2தாம் ப்3ரஹ்மன்னாத்மன்யானந்தகாரணம் |
ப்3ரூஹி ஸ்பர்ஶாவிஹீனஸ்ய ப4வத: கேவலாத்மன: || 30 ||

ஹே பிரம்மனே! கேட்கின்ற எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும்.
உங்களிடத்திலேயே நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கும், எந்த பொருட்களில்லாமல் தனிமையிலே இருந்து கொண்டும்,
சுகம் தரும் விஷயங்களை எதுவும் இல்லாமல் இருந்து கொண்டும் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறீர்கள்.
எங்களுக்குத் தாங்கள் தயவு செய்து உபதேசித்தருள வேண்டும்.

ஶ்ரீபகவான் உவாச
யது3னைவம் மஹாபா4கோ3 ப்3ரஹ்மண்யேன ஸுமேத4ஸா |
ப்ருஷ்ட: ஸபா4ஜித: ப்ராஹ ப்ரஶ்ரயாவனதம் த்3விஜ: || 31 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
ஹே உத்தவா! வேதத்தையும், குருவையும் மதிக்கின்றவரும், புரிந்து கொள்ளும் ஆற்றலமுடைய யது மன்னனால்
பணிவுடனும், பக்தியுடனும் வணங்கிக் கேட்கப்பட்டதும் அவர் கீழ்கண்டவாறு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பகவான் இங்கு குறிப்பால் உணர்ந்து இருக்கின்றார்.

ஶ்ரீப்3ராஹ்மண உவாச
ஸந்தி மே கு3ரவோ ராஜன் ப3ஹவோ பு3த்3த்4யுபஶ்ரிதா: |
யதோ பு3த்3தி4முபாதா3ய முக்தோSடாமீஹ தான்ஶ்ருணு || 32 ||

ஶ்ரீபிராமணர் பதிலளிக்கிறார்.
ஹே அரசே! எனக்கு பல குருமார்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றேன்.
இவர்கள் என்னுடைய புத்தியினால் அடையப் பெற்றவர்கள். அந்த குருமார்களிடம் இருந்து ஞானத்தை அடைந்து
இந்த உலகத்தில் முக்தனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்த குருமார்களை பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக!

ப்ருதி3வீ வாயுராகாஶமாபோSக்3னிஶ்சந்த்3ரமா ரவி: |
கபோதோSஜகர: ஸிந்து4: பதங்கோ3 மது4க்ருத்3க3ஹ: || 33 ||
மது4ஹா ஹரிணோ மீன: பிங்க3லா குர்ரோSர்ப4க: |
குமாரீ ஶரக்ருத்ஸர்ப ஊர்ணனாபி4: ஸுபேஶக்ருத் || 34 ||

இந்த இரண்டு ஸ்லோகங்களில் அவருடைய குருமார்களாக யார் யார் என்று கூறியிருக்கின்றார்.
நிலம், வாயு, ஆகாஶம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா(கபோதஹ), மலைப்பாம்பு (அஜகர), ஸிந்து4-கடல்,
பதங்க3-விட்டிற்பூச்சி, மது4க்ருத்-தேனி, க3ஜ-யானை, மது4ஹா-தேனெடுப்பவன், ஹரிண-மான், மீனஹ-மீன்,
பிங்க3லா-வேசி, குரா-ஒருவிதமான பறவை, அர்ப4கஹ-குழந்தை, குமாரீ-இளம்பெண், ஶரக்ருத்-அம்பு தொடுப்பவன்,
ஸர்பஹ-பாம்பு, ஊர்ணநாபி4-சிலந்தி, ஸுபோஶக்ருத்- குளவி.

ஏதே மே கு3ரவோ ராஜன் சதுர்விஶதிராஶ்ரிதா: |
ஶிக்ஷா வ்ருத்திபி4ரேதேஷாமன்வஶிக்ஷமிஹாத்மன: || 35 ||

அரசே! இந்த 24 குருமார்களிடமிருந்து எந்தெந்த அறிவைப் பெற்றேன் என்பதைச் சொல்கிறேன்.
இவைகளின் செயல்களை கவனித்து படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.

யதோ யதனுஶிக்ஶாமி யதா2 வா நாஹுஷாத்மஜ |
தத்ததா2 புருஷவ்யாக்4ர நிபோ3த4 கத2யாமி தே || 36 ||

எந்த குருவிடமிருந்து எந்த அறிவை நான் கற்றுக் கொண்டேனோ எவ்விதம் கற்றுக் கொண்டேன்.
ஹே நாஹுஶாத்மஜ! யயாதி மகராஜனின் மகனே! யயாதி குலத்தென்றலே!
அதை அவ்விதம் உனக்கு நான் சொல்லப்போகிறேன். வீரபுருஷனே! கவனமாக கேள்.

பூ4தைராக்ரம்யமாணோSபி தீ4ரோ தை3வ வஶானுகை: |
த்த்3வித்3வான்ன சலேன்மார்காதன்வஶிக்ஷம் க்ஷிதேர்வ்ரதம் || 37 ||

இதில் பூமியிடமிருந்து பொறுமை என்ற பண்பைக் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
பொறுமையானது பலமும், சகிப்புத்தன்மையும் கலந்திருக்கும் ஒரு குணம்.

ஶஶ்வத்பரார்த2ஸர்வேஹ: பரார்தை2காந்தஸம்ப4வ: |
ஸாது4: ஶிக்ஷேத பூ4ப்4ருத்தோ நக3ஷிஷ்ய பராத்மதாம் || 38 ||

மரங்களும், மலைகளும் பரோபகார சிந்தனையைக் கற்பிக்கின்றன. பூமியின் எல்லா செயல்களும் பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றன.
இவ்வாறு மலைகள், மரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றது

ப்ராணவ்ருத் த்யைவ ஸந்துஷ்யேன்முனிர் நைவேந்த்3ரிய ப்ரியை: |
ஞானம் யதா2 ந நஶ்யேத நாவகீர்யேத வாங்மன: || 39 ||

புலன்களை சந்தோஷப்படுத்தும் உணவை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. \
நம் அறிவுத்திறன் இழந்துவிடாத அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வாக்கும், மனமும் அறிவையும், சக்தியையும் இழக்காதவாறு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஷயேஷ்வாவிஶன்யோகீ3 நானாத4ர்மேஷு ஸர்வத: |
கு3ணதோ3ஶவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத் || 40 ||

ஒரு மனிதன், சாதகன் விஷயங்களை அனுபவிக்கும் போது, எதிர்நோக்கும் போது
ஆவிஶன் – விஷயங்களை சந்திக்கும் போது
நானாத4ர்மேஷு – விதவிதமான தர்மத்தையுடைய, குணத்தையுடைய விஷயங்கள்
ஸர்வதஹ – எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தாலும்
ஆத்மா – அந்தக் கரணம்
குண-தோஷ வ்யபேதா – அந்தந்த விஷயங்களில் உள்ள இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாமல்
வாயுவத் – காற்றைப் போல
ந விஷஜ்ஜேத – பற்றற்று இருக்க வேண்டும்.
காற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருந்தாலும் எதனுடன் ஒட்டுறவு கொள்வதில்லை.
பிற பொருட்களின் மணத்தை தாங்கிச் சென்றாலும் பிறகு விட்டுவிடுகின்றது.

பார்தி2வேஷ்விஹ தேஹேஷு ப்ரவிஷ்டஸ்தத்3 கு3ணாஶ்ரய: |
கு3ணைர் ந யுஜ்யதே யோகீ3 க3ந்தை4ர்வாயுரிவாத்ம த்3ருக் || 41 ||

இந்த ஸ்தூல சரீரத்தில் நான் என்று அபிமானம் வைக்காமல், இது நான் பயன்படுத்தும் கருவி என்று நினைக்க வேண்டும்.

பார்தி2வேஷு இஹ – பஞ்ச பூதங்களால் உருவான இந்த
தே3ஹேஷு ப்ரவிஷ்டஹ – உடலுக்குள் பிரவேசித்தவர்கள், ஜீவர்கள்
தத்3 குண ஆஶ்ரயஹ – அதனுடைய குணங்களை சார்ந்திருந்தாலும் கூட
க3ந்தை4வாயுஃ இவாதி – காற்று எப்படி வாஸனைகளுடன் எப்படி ஒட்டுவதில்லையோ,
கு3ணைஹி ந யுஜ்யதே யோகீ – யோகியும் நான் என்ற புத்தியை உடல் மீது வைப்பதில்லை
ஆத்ம த்3ருக் – ஆத்மாவை அறிந்த ஞானியும் இதே மாதிரி இருப்பான்
அக்ஞானி உடல் மீது அபிமானம் வைக்கின்றான், சாதகன் அதை ஒரு கருவியாக கருதுகின்றான்.
ஞானிக்கு அதுவே வேடிக்கைப் பொருளாக இருக்கின்றது.

அந்தர்ஹிதஶ்ச ஸ்தி2ர ஜங்க3மேஷு
ப்3ரஹ்மாத்ம பா4வேன ஸமன்வயேன |
வ்யாப்த்யாவ்யவச்சே2த3மஸங்க3மாத்மனோ
முனிர்னப4ஸ்த்வம் விததஸ்ய பா4வயேத் || 42 ||

ஆகாசத்திடமிருந்து ஆத்மாவின் சில லட்சணங்களைக் கண்டு கொண்டார். இதில் ஆத்ம தியானத்தை கூறுகின்றார்.
ஆத்மாவிற்கும், ஆகாசத்திற்கும் பொருந்திவரும் லட்சணங்கள்
அந்தர்யாமி – அனைத்துக்குள்ளும் ஊடுருவி இருப்பது
ப4ரஹ்மன் – பெரியது
வியாபித்தல் – எல்லா இடத்திலும் வியாபித்திருக்கின்றது
பூரணஹ – முழுமையாக இருப்பது
அஸங்காஹ – எதனோடும் ஒட்டாமல் இருப்பது
ஸ்தி2ரஜங்க3மேஷு – அசைவதும், அசையாமல் இருப்பதுமான படைப்புக்கள் அனைத்துக்கும்
அந்தர்ஹிதஹ ச ஆத்மா – உள்ளே வீற்றிருப்பது ஆத்மா;
பிரஹ்மாத்ம பா4வேன – பிரம்ம ஸ்வரூபமாக நான்
ஸமன்வயேன – வெற்றிடம் இல்லாமல் முழுவதுமாக
வ்யாப்த்யா – அனைத்தையும் வியாபிப்பவன்
அவ்யவச்சேதம் – பிளவுப்படாதவன், பூரணமானவன்
அஸங்கம் – எதனுடனும் ஒட்டுதல் இல்லாதது, சம்பந்தப்படாதது
விததஸ்ய ஆத்மா – எங்கும் நிறைந்திருக்கின்ற ஆத்மா
முனி நப4ஸ்த்வம் – ஆகாசத்தின் இந்த லட்சணமாக ஆத்மாவில்
பா4வயேத – இருப்பதாக பாவிக்க வேண்டும்.

தேஜோSப3ன்னமயைர்பா4வைர் மேகா4த்3யைர் வாயுனேரிதை: |
ந ஸ்ப்ருஶ்யதே ந ப4ஸ்த த்3வத்காலஸ்ருஷ்டைர் கு3ணை: புமான் || 43 ||

தேஜோ, ஆப அன்னம் – நீர், நெருப்பு, அன்னம் இவைகளைப் போன்ற பஞ்சபூதங்களை
பா4வைஹி – உருவாக்கப்பட்ட இந்த உடல்
மேகா4த்3யைஹி வாயுனஹ ஈரிதை: – காற்றினால் அலைக்கழிக்கப்படுகின்ற மேகங்கள்
ந ஸ்ப்ருஶ்யதே – ஆகாசத்தில் ஒட்டுவதில்லை
தத்3வத்3 – அதைப்போல
காலஸ்ருஷ்டை கு3ண: – பிராரப்தத்தினால் உருவான உடலினால்
புமான் ந ஸ்ப்ருஶ்யதே – மனிதன் என்று பாதிப்பதில்லை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்வச்ச2: ப்ரக்ருதித: ஸ்னிக்3தோ4 மாது4ர்யஸ்தீர்த2பூ4ர் ந்ருணாம் |
முனி: புனாத்யபாம் மித்ரமீக்ஷோபஸ்பர்ஶகீர்தனை: || 44 ||

நீருக்குள் நான்கு குணங்களை ஞானியிடத்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அவைகள்
ஸ்வச்ச2: ப்ரக்ருதித – .தூய்மையானது இயற்கையில்
ஸ்னிக்3தோ4 – இணைத்து வைக்கும் குணத்தையுடையது, ஒன்றையொன்றுடன் சேர்க்கும் குணம்,
மாது4ர்யஸ் – இயற்கையிலே சுவையென்ற குணத்தையுடையது
தீர்த2பூ3ர் ந்ருணாம் – மனிதர்களை தூய்மைப்படுத்துவது (ஸம்ஸ்கார ரூபமாக நீரை தூய்மைபடுத்துதல் )
ஈக்ஷணம் – புனித நீரை பார்த்தாலே நம்மிடத்திலே உள்ள பாவங்கள் குறையும்
உப ஸ்பர்ஶ – புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ளுதல், நீராடினால் புண்ணிய கிடைக்கும்
கீர்த்தனம் – புனித நீரை புகழ்ந்து பாடுதல்,
இவைகள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. நீரினுடைய குணங்கள் தன்னிடத்திலே கொண்டுள்ள
ஞானி மக்களை தூய்மைப்படுத்துகிறார்.

ப்ரக்ருதித: – ஞானியானவன் முழுமையாக, சுபாவமாக
ஸ்வச்சஹ – தூய்மை அடைந்தவன். குழந்தையைப் போல யாரையும் வஞ்சிக்காத குணமுடையவன்,
தர்மவான்- யாரிடமும் விருப்பு-வெறுப்பு கொள்ளாதவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்
நல்ல ஸம்ஸ்காரத்தினால் நல்லவனாக இருப்பவன் கெட்டவனாக மாறிவிடலாம்.
ஆனால் ஞானத்தினால் தூய்மை அடைந்து இருப்பதால் அவன் எப்பொழுதுமே அப்படியேதான் இருப்பான்.
ஸ்னிக்4த4ஹ – இணைப்பது, நட்புணருவுடையவன், யாரிடமும் வெறுப்பு கொள்ள மாட்டான்
மாது4ர்யஹ – சொல்லிலும், செயலிலும் மென்மையானவன், மற்றவர்களை சொற்களாலும், மனதாலும் துன்புறுத்தமாட்டான்.
தீர்த2பூ4ஹு ந்ருணாம் – மற்றவர்களையும் தூய்மைப்படுத்துகிறான்
அபாம் மித்ரம் – நீருக்கு நண்பனாக இருப்பதால் நீரைப்போல மூன்று விதத்தில் மற்றவர்களை தூய்மைப்படுத்துகிறான்.
ஞானியைப் பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும். அவருடைய ஆசிர்வாததை பெறுவதாலும், தொடுவதாலும், புகழ்வதினாலும் நாம் தூய்மை அடையலாம்.

தேஜஸ்வீ தபஸா தீ3ப்தோ தீ3ப்தோ து3ர்த4ர்ஷோத3ரபா4ஜன: |
ஸர்வப4க்ஷ்யோSபி யுக்தாத்மா நாத3த்தே மலமக்3னிவத் || 45 ||

இனி அக்னியை ஞானியுடன் ஒப்பிட்டு கூறுகின்றார். இதில் நெருப்பினுடைய ஐந்து குணங்களைக் கூறி
அதை ஞானியிடத்து இருக்கும் சில குணங்களோடு ஒப்பிட்டு கூறுகின்றார்.
அக்னியின் 5 குணங்கள்
தேஜஸ்வீ தபஸா = அக்னியிடம் இருக்கும் உஷ்ணத்தன்மை, உஷ்ணத்தால் உருக்கும் தன்மை
தபஸா தீ3ப்தஹ – வெளிச்சம்
து3த4ர்ஷஹ – நெருங்க முடியாது; அருகில் செல்ல முடியாது
உத3ரபா4ஜனஹ – வயிற்றையே பாத்திரமாகக் கொண்டுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் தீயில் எதைப் போட்டாலும் பொசுக்கி விடும்
ஸர்வ ப4க்ஷ அபி மல மத்3னிவத் நாத3த்தே – யாகத்தில் இருக்கும் அக்னியின் போகும் பொருட்கள் நல்லதாக இருந்தாலும்,
கெட்டதாக இருந்தாலும் அதனால் அக்னிக்கு தோஷம் வராது, அசுத்தம் வராது (மலம் அக்னிவத் ந ஆதத்தே)
ஞானியின் லட்சணங்கள்
தேஜஸ்வீ தபஸா = தவத்தால் வைராக்கியம் உடையவர்; வைராக்கியத்தையே காட்டிக் கொள்ள மாட்டார்
தபஸா தீ3ப்தஹ – விவேகம், ஞானத்தினால் ஓளிர்ந்து கொண்டிருப்பவர்
து3த4ர்ஷஹ – சம்சாரம் ஞானியை நெருங்காது; அசுர குணங்கள் இவனை நெருங்காது, தன்னைத் தானே சந்திக்கும் சக்தி உடையவன்
உத3ரபா4ஜனஹ – அபரிக்ரஹம் – தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான்
ஸர்வ ப4க்ஷ்யோ அபி அக்னிவத் – அஸத் ப்ரதிக்ரஹம் தோஷம் – பாவிகளிடம் இருந்து உணவை பெற்றுக் கொண்டால்
வரும் தோஷம் இவருக்கு கிடையாது. அதர்மமான வழியில் சேர்த்து செல்வத்தை பெற்றாலும் தோஷம் வரும்,
தீயவர்கள் கொடுக்கும். உணவும் பாவத்தைக் கொடுக்கும். ஞானிக்கு இப்படிப்பட்ட தோஷங்கள் எதுவும் கிடையாது.

க்வசிச்ச3ன்ன: க்வசித ஸ்பஷ்ட உபாஸ்ய: ஶ்ரேய இச்ச2தாம் |
பு3ங்க்தே ஸ்ர்வத்ர தா3த்ருணாம் த3ஹன்ப்ராகு3த் தராஶுப4ம் || 46 ||

அக்னியின் குணங்கள்
க்வசிச்ச2ன்னஹ – சாம்பலால் மறைக்கப்பட்டிருக்கும் அக்னி
க்வசித ஸ்பஷ்ட – சில இடங்களில் தெளிவாக தெரியும்
உபாஸ்யஹ – வணங்கதக்கது
ஶ்ரேய இச்ச2தாம் – மேன்மையை விரும்புபவர்களால்
தஹன் – எரித்து விடுதல்
ஞானியிடத்து இருக்கும் இந்த குணங்கள்
சில ஞானிகள் தன்னை மறைத்துக் கொள்வார்கள்
சில ஞானிகள் தன்னை உள்ளபடிக் காட்டிக் கொள்வார்கள்
ஞானிகள் வணங்கதக்கவர்கள், யாருக்கு நன்மை வேண்டுமோ அவர்களால் வணங்கத்தக்கவர்கள்
ஞானிக்கும் பிறருடைய பழைய, புதிய, வரப்போகின்ற பாவங்களை எரித்து விடும் சக்தி உடையவர்.
யார் அவரை வணங்குகின்றார்களோ அவர்களுடைய பாவங்களை எரித்து விடுவார்கள்

ஸ்வமாயயா ஸ்ருஷ்டமித3ம் ஸத3ஸல்லக்ஷணம் விபு4: |
ப்ரவிஷ்ட ஈயதே தத்தத் ஸ்வரூபோSக்3னிரிவைதா4ஸி || 47 ||

விபு: – பரமாத்மா, பரம்பொருள்
ஸ்வமாயயா – தன்னிடம் இருக்கின்ற மாயையின் துணைக்கொண்டு
இத3ம் ஸ்ருஷ்டம் – இந்த உலகத்தை படைத்தார்.
ஸத் – புலன்களுக்கு புலப்படுவது, காரியம் – உருவம்
அஸத் – புலன்களுக்கு புலப்படாதது – காரணம் – அருவம்
லக்ஷணம் – தன்மையுடைய
ப்ரவிஷ்டஹ – இந்த உலகத்தினுள் பரமாத்மா நுழைந்திருக்கிறார்
தத் தத் ஸ்வரூப ஈயதே – அந்தந்த உருவமாக இருப்பதாக தோன்றுகின்றது. இந்த உலகமாகவே அவர் இருப்பதாக நினைக்கிறேன்
அக்னி இவ ஏதஸி – அக்னி எந்தப் பொருளோடு சம்பந்தம் வைக்கும்போது அதன் உருவமாக காட்சியளிப்பது போல இருக்கிறது

விஸர்க3த்3யா: ஶ்மஶானாந்தா பா4வா தே3ஹஸ்ய நாத்மன: |
கலானாமிவ சந்த்3ரஸ்ய காலேனாவ்யக்தவர்த்மனா || 48 ||

காலேன – காலத்தினால் இவ்வாறு
கலானாமிவ சந்த்ரஸ்ய – சந்திரனுடைய பகுதிகளாக தோன்றுவது
சந்திரனின் வளர்பிறை; தேய்பிறை இவைகளெல்லாம் நாம் நிலவின் மீது ஏற்றி வைத்திருக்கும் கற்பணையான எண்ணம்.
உண்மையில் நிலவு எப்பொழுதும் முழுமையாகத்தான் இருக்கிறது
அவ்யக்த வர்தமனா – கண்ணுக்கு புலப்படாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல்

தேஹஸ்ய – இந்த உலகினுடைய
விஸர்கா3த3யா – பிறப்பில் ஆரம்பித்து
ஶ்மஶானாந்தா – மயானத்திற்கு செல்லப்படும் வரையில்
பா4வா – வருகின்ற மாற்றங்கள் (இருத்தல், பிறத்தல், வளர்தல்)
ந ஆத்மனஹ – ஆத்மாவாகிய எனக்கல்ல
நம் உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள், மாற்றங்கள் அனைத்தையும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவைகள் ஆத்மாவான எனக்கு ஒரு சம்பந்தமில்லை என்று தியானம் செய்ய வேண்டும்.

காலேன ஹயோக4வேகே3ன பூ4தானாம் ப்ரப4வாப்யயௌ |
நித்யாவபி ந த்3ருஶ்யேதே ஆத்மனோSக்3னேர்யதா3ர்சிஷாம் || 49 ||

காலேன ஹயோக4வேகேன – கால வெள்ளத்தைப் போல
பூதானாம் – எல்லா ஜீவராசிகளின்
ப்ரப4வாப்யௌ – பிறப்பு-இறப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
நித்யா அபி – எப்பொழுதும் இருந்தாலும் கூட
ந ஆத்மத்3ருஶ்யதே – ஆத்மாவுக்கு இது சம்பந்தமில்லை
அக்னேர்யதா2ர்சிஷாம் – அக்னியிலிருந்து புறப்படும் ஜுவாலைகள் தோன்றினாலும் மறைகின்றன.
ஆனால் அக்னிக்கு இதற்கு சம்பந்தமில்லை.

கு3ணைர்கு3ணானுபாத3த்தே யதா2காலம் விமுஞ்சதி |
ந தேஷு யுஜ்யதே யோகீ3 கோ3பி4ர்கா3 இவ கோ3பதி: || 50 ||

கோ3பதி – ஒளிப்பொருந்திய சூரியனுடைய
கோ3பி4ஹ – கிரணங்களின் மூலம்
கா3 இவ – நீரை உறிஞ்சி
யதா2காலம் விமுஞ்சதி – தண்ணீரையே சில காலம் கழித்து மழையாக பொழிகிறது
யோகீ3 – அதுபோல ஒரு சாதகன்
குணைஹி – இந்திரியங்களின் மூலம்
குணான் – விஷயங்களை
உபாத3த்தே – அனுபவிக்கின்றோம்
யதா2 காலம் – சரியான நேரத்தில், தேவையான காலத்தில்
விமுஞ்சதி – விட்டுவிட வேண்டும்
ந தேஷு யுஜ்யதே – தன்னிடத்திலே வைத்திருக்க கூடாது

பு3த்4யதே ஸ்வே ந பே4தே3ன வ்யக்திஸ்த2 இவ தத்3 க3த: |
லக்ஷ்யதே ஸ்தூ2லமதிபி4ராத்மா சாவஸ்தி2தோSர்கவத் || 51 ||

நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பயன்படுத்துகின்ற மனிதர்கள், பொருட்கள் மீது பற்று வைக்கக்கூடாது.
அர்கவத் ஆத்மா – சூரியனைப் போல ஆத்மாவானது
வியக்திஸ்த2 – அந்தந்த உடலில் தனித்தனியான உடலில்
ச அவஸ்தி2தஹ – இருந்து கொண்டிருக்கின்றது
இவ தத்3க3தஹ – அதற்குள் இருப்பது போல தெரிகின்றது
லக்ஷ்யதே – இவ்விதம் கருதப்படுகிறது
ஸ்தூ2லமதி பிஹி – ஸ்தூல புத்தியையுடையவர்கள், சூட்சுமமான அறிவில்லாதவர்கள்,
அனுபவத்தை மட்டும் வைத்து முடிவு செய்பவர்கள்.
ஸ்வே ந பே3தே3ன – தானே ஒவ்வொரு உடலிலும் பிளவுபட்டதாக, ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாக அறிவதில்லை.

நாதிஸ்னேஹ: ப்ரஸங்கோ3 வா கர்தவ்ய: க்வாபி கேனசித் |
குர்வன்விந்தே3த ஸந்தாபம் கபோத இவ தீ3னதீ4: || 52 ||

அதி ஸ்னேஹம் – அதிகமான பற்றுடைய உறவு
ப்ரஸங்கஹ – ஸ்தூலமாக அது இருக்க வேண்டும் என்று அதிகமன பற்றும்
க்வாபி கேனசித் – எந்த மனிதர்களிடனும், பொருட்களிடனும் ஜடப்பொருளான வீடு, இடம், உறவுகள் மீது வைத்திருக்கும்
அதிகமான பற்று வைக்கக்கூடாது.
குர்வன் – அப்படி வைத்தால்
விந்தே3த ஸந்தாபம் – துயரத்தை அடைவாய்
கபோத இவ – புறாவைப் போல
தீ3னதீ4: – அடிமைப்பட்ட மனதையுடையவன்; தாபத்தை அடைவான்
அஶக்தி – யாரும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.
அனபிஷிவங்கஹ – நாமும் யாரையும் சார்ந்திருக்க கூடாது.

கபோத: கஶ்சனாரண்யே க்ருதனீதோ3 வனஸ்பதௌ |
கபோத்யா பா4ர்யா ஸா4த4முவாஸ் கதிசித்ஸமா: || 53 ||

கபோதஹ க்ருதனீடோ3 – காட்டில் ஒரு புறா
கபோத்யா பா4ர்யயா ஸார்த4ம் – மனைவியான பெண் புறாவுடன்
கதிசித்ஸமா: உவாஸ – சிலவருடங்கள் வசித்து வந்தது.

கபோதௌ ஸ்னேஹகு3ணித ஹ்ருதயௌ கு3ஹத4ர்மிணௌ |
த்3ரிஷ்டம் த்3ருஷ்த்யாங்க3மங்கே3ன பு3த்3தி4ம் பு3த்3த்4யா ப3ப3ந்த4து: || 54 ||

நட்பு என்பது மனதளவில் பற்று வைத்திருப்பது.
இரண்டு புறாக்களும் அன்பினால் சேர்ந்துள்ளது. இல்லறத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு புறாக்களுக்கும் இடையே
அன்பு வளர்ந்து கொண்டே வந்தது. பரஸ்பர மரியாதையுடனும் இருவருடைய ஒரே குறிக்கோளையும்,
இப்படிபட்ட ஒரே பண்புகளூடனும் சேர்ந்து வாழ்ந்து வந்தன.

ஶய்யாஸனாடனஸ்தா2ன வார்தா க்ரிடா3ஶனாதி3கம் |
மிது2னீபூ4ய விஶ்ரப்3தௌ4 சேரதுர்வனராஜிஷு || 55 ||

ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஒரே கூட்டில் ஒன்றாக படுத்து உறங்கின.
அமர்ந்திருந்தன, பேசிக் கொண்டிருந்தன, சாப்பிடுவார்கள், சுற்றித்திரிந்தன.

யம் யம் வாஞ்ச2தி ஸா ராஜன் தர்பயந்த்யனுகாம்பிதா |
தம் தம் ஸமனயத்காமம் க்ருச்ச்2ரேணாப்யஜிதேந்த்3ரிய: || 56 ||

ஹே ராஜன்! ஆண்புறாவால் அரவனைக்கப்பட்ட ஆண்புறாவை திருப்திபடுத்திய பெண்புறா எதையெல்லாம் விரும்பியதோ
அவைகளனைத்தும் இந்திரிய சுகத்திற்கு அடிமையாகிவிட்ட ஆண்புறா நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
இதிலிருந்து ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலைக்கு சென்று விட்டன. அதில் தர்ம-அதர்மத்தை விட்டுவிட்டார்கள்.

கபோதீ ப்ரத2மம் க3ர்ப4ம் க்3ருஹணந்தீ கால ஆக3தே |
அண்டா3னி ஸுஷுவே நீடே3 ஸ்தபத்யு: ஸன்னிதௌ4 ஸதீ | 57 ||

உரிய காலத்தில் பெண்புறா கருவுற்று ஆண் புறா இருக்கும்போதே முட்டைகளை போட்டது.

தேஷு காலே வ்யஜாயந்த ரசிதாவயவ ஹரே: |
ஶக்திபி4ர்து3ர்விபா4வ்யாபி4: கோமலாங்க3தனூருஹா: || 58 ||

உரிய காலத்தில் அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்தன. இறைவனின் சக்தியால் உருவாக்கப்பட்ட உடலுறுப்புக்களுடன்
நம்மால் புரிந்து கொள்ளாத வகையில் குஞ்சுகள் தோன்றின. அவைகள் மென்மையான அங்கங்களையும், இறகுகளுமுடையதான இருந்தன.

ப்ரஜா: புபுஶது: ப்ரீதௌ த3ம்பதீ புத்ரவத்ஸலௌ |
ஶ்ருண்வந்தௌ கூஜிதம் தாஸாம் நிர்வ்ருதௌ கலபா4ஷிதை: || 59 ||

புறாத் தம்பதிகள் தம் குஞ்சுகளிடம் மிகுந்த அன்பு கொண்டு மகிழ்ச்சியோடு சீராட்டி வளர்த்தன.
அவைகளின் குரலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்தன.

தாஸாம் பதத்ரை: ஸுஸ்பர்ஶை: கூஜிதைர்முக்3த4சேஷ்டிதை: |
ப்ரத்யுத்3க3மைரதீ3னானாம் பிதரௌ முத3மாபது: || 60 ||

புறா பெற்றோர்கள் தன்னையே சார்ந்துள்ள தம்முடைய குஞ்சுகளினுடைய மென்மையான சிறகுகளை தொட்டுப் பார்த்தும்,
கலகலவென்ற மழலை குரலையும், வேடிக்கையான விளையாட்டையும், தத்தி தத்தி நடந்து வருவதைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தன.

ஸ்னேஹானு ப3த்3த4 ஹ்ருத3யாவன்யோன்யம் விஷ்ணுமாயயா |
விமோஹிதௌ தீ3னதி4யௌ ஶிஶூன்புபுஷது: ப்ரஜா: || 61 ||

ஸ்னேஹம் – பாசம், பற்று; மோஹம் – தீ3ன பா4வம்

ஏக்த3 ஜக்3மதுஸ்தாஸாமன்னர்த2ம் தௌ குடும்பி3னௌ |
பரித: கானனே தஸ்மின்னர்தி2னௌ சேரதுஶிசரம் || 62 ||

ஒரு நாள் அந்த இரண்டு பறவைகள் குஞ்சுகளுக்கு உணவை தேடி கூட்டை விட்டு, காட்டில் வெகுதூரம் சுற்றித் திரிந்தன.

த்3ருஷ்ட்வா தான்லுப்3த4க: கஶ்சித்3யத்3ருச்சா2தோ வனேசர: |
ஜக்3ருஹே ஜாலமாதத்ய சரத: ஸ்வாலயாந்திகே || 63 ||

ஒரு சமயம் வேடன் ஒருவன் தற்செயலாக புறாக்கூடு இருந்த மரத்தின் பக்கமாக வந்தான். அந்தக் குஞ்சுகளை வலைவீசி பிடித்தான்.

கபோதஶ்ச கபோதீ ச ப்ரஜாபோஷே ஸ்தோ3த்ஸுகௌ |
க3தௌ போஶணமாதா3ய ஸ்வனீட3முபஜக்3மது: || 64 ||

அந்த ஆண்-பெண் புறாக்கள், தம் குஞ்சுகளின் பராமரிப்பில் ஆர்வமுடையதாக இருந்து கொண்டு
அவைகளுக்கு உணவை எடுத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பி வந்தன.

கபோதீ ஸ்வாத்ம ஜான்வீக்ஷ்ய பா3லகான் ஜாலஸம்வ்ருதான் |
தானப்4யதா4வத் க்ரோஶந்தீ க்ரோஶதோ ப்4ருஶ து3:கி2தா || 65 ||

வலையில் சிக்கியிருந்த தன் குஞ்சுகளை கண்ட பெண்புறா முனகிக் கொண்டிருக்கும் அவைகளை
மிகவும் துயரத்துடன் அரற்றிக் கொண்டு ஒடிற்று.

ஸாஸக்ருத்ஸ்னேஹகு3ணிதா தீ3னசித்தாஜமாயயா |
ஸ்வயம் சாப3த்4யத ஶிசா ப3த்3தா4ன்பஶ்யந்த்ய பஸ்ம்ருதி: || 66 ||

பாசக் கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டதும் பந்த த்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்புறா, பகவானுடைய மாயையினால்
தன் நினைவு, அறிவை இழந்த துமான பெண்புறா, குஞ்சுகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தானும் வலையில் விழுந்தது.
மோக வலையில் வீழ்ந்து விட்டால் அதுவரை அடைந்த அறிவெல்லாம் நினைவுக்கு வராது.

கபோத: ஸ்வாத்ம ஜான்ப3த்3தா4னாத்மனோSப்யதி4கான் ப்ரியான் |
பா4ர்யாம் சாத்மஸமாம் தீ3னோ வில்லாபாதி து3:கி2த: || 67 ||

தன் உயிருக்கும் மேலான குஞ்சுகளும் தன் உயிருக்கு உயிரான மனைவியும் வலையில் மாட்டிக் கொண்டு விட்டதைப் பார்த்து,
உள்ளம் கலங்கிய ஆண்புறா மிக்க துயரத்துடன் புலம்பத் துவங்கியது.

அஹோ மே பஶ்யதாபாயமல்ப புண்யஸ்ய து3ர்மதே: |
அத்ருப்தஸ்யா க்ருதார்த2ஸ்ய க்3ருஹஸ்த்ரைவர்கி3கோ ஹத: || 68 ||

அய்யோ! எனக்கு வந்த கஷ்டத்தைப் பாருங்கள். நான் அற்பமான புண்ணியத்தை உடையவன். கெட்ட மதியுடையவன்,
அறிவில்லாதவன், வாழ்க்கையில் மனத்திருப்தி ஏற்படவேயில்லை. செய்ய வேண்டியவைகளை செய்யாதவன்.
ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை. இல்லற ஆசிரமத்தில் மூன்று லட்சியங்களான தர்ம-அர்த்த-காமம் இவைகள் அழிந்து போய்விட்டதே

அனுரூபானுகூலா ச யஸ்ய மே பதிதே3வதா
பூ4ன்யே க்3ருஹே மாம் ஸந்த்யஜ்ய புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: || 69 ||

அனுரூபா – ஒரே மாதிரியாக சிந்திப்பவன், என் விருப்பபடி நடப்பவன்
அனுகூலா – எல்லா வகையில் எனக்கு இணையாக இருந்தாள்
ச யஸ்ய மே பதிதே3வதா – மேலும் என்னுடைய மனைவிக்கு நானே இஷ்ட தேவதை
ஸூன்யே க்3ருஹே மாம் ஸந்த்3யஜ்ய – பாழடைந்த கூட்டில் என்னை தவிக்க விட்டுவிட்டு
புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: – நல்ல குஞ்சுகளுடன், அவள் மேலுலகம் செல்லப் போகிறாள்

ஸோSஹம் பூ4ன்யே க்3ருஹே தீ3னோ ம்ருத்தரோ ம்ருதப்ரஜ: |
ஜிஜீவிஷே கிமர்த2ம் வா விது4ரோ து3:க2ஜீவித: || 70 ||

இப்படிபட்ட நான் பாழடைந்த வீட்டில் நான் இப்பொழுது பரிகாபத்திற்குட்பட்டவனாக இருக்கிறேன். மனைவியை பறிகொடுத்தவன்.
குழந்தைகளையும் பறிகொடுத்தவனாக, இனி எதற்காக நான் வாழ வேண்டும் அனாதையாகி விட்டேன். எனது வாழ்க்கையே துயரமாக மாறிவிட்டது.

தாம்ஸ்ததை2வாவ்ருதான்ஶிக்3பி4ர்ம்ருத்யுக்ரஸ்தான்விசேஷ்டத: |
ஸ்வயம் ச க்ருபணா: ஶிக்ஷு பஶ்யன்னப்யபு3தோ4Sபதத் || 71 ||

வலையில் சிக்கிக் கொண்ட புறாக்கள், மரணத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும்,
மதி கேட்டுப் போன ஆண்புறா அறிவை இழந்து வலையில் விழுந்தது.

தம் லப்3த்4வா லுப்3த4க்: க்ரூர்: கபோதம் த்3ருஹமேதி4னம் |
கபோதகான்கபோதீம் ச ஸித்3தா4ர்த2: ப்ரயயௌ த்3ருஹம் || 72 ||

மனைவி குழந்தைகளோடு கூடிய இல்லறத்தில் இருந்த சம்சாரியான அந்த ஆண்புறாவை குரூரமான வேடன்
எடுத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்

ஏவம் குது3ம்ப்3யஶாந்தாத்மா த3வந்த்3வாராம: பத்த்ரிவத் |
புஷ்ணான்குது3ம்ப3ம் க்ருபண: ஸானுப3ந்தோ4Sவஸீத3தி || 73 ||

இவ்வாறுதான் இல்லறத்தில் இருக்கும் மூட மனிதன், மனம், புலன்கள் கட்டுப்பாடு இல்லாதவன் இருமைகளில் மூழ்கியிருப்பவனாக,
புறாக்களைப் போல தன் குடும்பத்தினரின் பராமரித்துக் கொண்டு, சுயநலத்துடன் இருந்து கொண்டு,
குடும்பத்துடன் சேர்ந்து அழிந்து போகிறான். இல்லறத்தில் இருந்து கொண்டு சுயநலவாதியாக இருக்க கூடாது.
மனம் விரிவடைந்திருக்க வேண்டும். தூய்மை அடைந்திருக்க வேண்டும் என்பதுதான் நீதி.

ய: ப்ராப்ய மானுஷம் லோகம் முக்தித்3வாரமபாவ்ருதம் |
க்3ருஹேஷு க2த3வத்ஸக்தஸ்தமாரூட4ச்யுதம் விது3: || 74 ||

இதில் மனிதப்பிறவியின் மகத்துவத்தை கூறுகின்றார்.
மனிதனுடைய உண்மையான இறுதி லட்சியம் எது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.

எவனொருவன் மனித சரீரத்தை அடைந்து, முக்தி அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்றது.
புறாவைப்போல உலகப் பற்றில் ஆழ்ந்திருப்பவர், ஆன்மீக உன்னதப் படிகளில் ஏறி வழுக்கி விழுந்தவர் ஆவார்.
அடைந்த மனித சரீரத்தை வீணாக்கி விட்டவனாக இருக்கிறான்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம உரை -ஸ்ரீ பட்டர் பாஷ்யம் -பிரவேசம் –

March 26, 2019

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே

ஸ்ரீ ரெங்க நாதனுக்குப் ப்ரோஹிதரும்
ஸ்ரீ வத்சாங்கர் எனப்படும் கூரத்தாழ்வானுடைய திருக்குமாரரும்
ஞான லஷ்மீ பொருந்தியவருமான
ஸ்ரீ பராசர பட்டர் எனப்படும் ஸ்வாமி
எனக்கு மேன்மேலும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுத்து அருளட்டும்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

——————-

மானா மேய -பிரமாணங்கள் மூலமே ப்ரமேயம் அறிய முடியும்
பெருமாளைக் காட்டிக் கொடுக்கும் பிரமாணங்கள்
அதைக் காட்டிக்கொடுக்கும் பிரமாதாக்கள்
பல காலம் வாழ வேண்டும்
வேதம் -உப ப்ரஹ்மணம் -இதிஹாசம் புராணங்கள் –
மஹா பாரதம் 125000 ஸ்லோகங்கள் –
பூசல் பட்டோலை-மஹத் -பாரதம் -பெரியதாயும் மஹிமை யுடையதாயும் உண்டே
இதில் இல்லாதது ஒன்றும் இல்லையே
கடைந்து -சாரம் -ஸ்ரீ கீதையும் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும்
ஆனுசாசன பர்வதத்தில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உள்ளது
இரண்டிலும் -கீதையை விட இதுக்கு ஏற்றம்
எப்படி பக்தி பண்ண வேண்டும் -கீதை சொல்லும் –
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -தூ மலர் தூவித் தொழுது
மாயனைப் பாட –பலகாலும் திருப் பாவையில் உண்டே
எத்தை பாட -திரு நாம சங்கீர்த்தனம்
நானும் சொன்னேன் நமரும் சொல்மின் –
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே
திருநாமங்களைக் கோத்து அருளப்பட்டது
தத்வமான அவன் வார்த்தை விட தத்வ தர்சன வார்த்தை ஸ்ரேஷ்டம் -அவனே கீதையில் உண்டே
யுதிஷ்டர் -பீஷ்மர் இடம் ஆறு கேள்விகள் கேட்க
பல வியாக்கியானங்கள் உண்டு
பேர்கள் ஆயிரத்தாய் –தாள்கள் ஆயிரத்தாய்
ஸஹஸ்ர சீர்ஷா– தேவோ நாமம் சஹஸ்ரவான்
பேர் ஆயிரம் கொண்ட பீடுடையான்
ஆயிரம் ஆயிரமான திரு நாமங்கள் உண்டே
நவரத்தினம் அறிந்தவன் கோப்பது போல் –
கேசவா- ஓம் கேசவாய நம -ஆவளியாய் அர்ச்சனைக்கு ஏற்றபடி –

திருநாம சங்கீர்த்தன மஹிமை -திருப்பாவையில்
பேர் பாடி -பல இடங்களிலும் உண்டே

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறிவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

கட்டிப் பொன் போல் அவன் -பணிப் பொன் போல் திரு நாமம்
மாது காதுகனுக்கும் இது சொல்ல அதிகாரம் உண்டே -அம்மே என்று சொல்ல பிராப்தி உண்டே
திருநாமம் சொல்ல சர்வரும் அதிகாரிகள்
அவன் தூரஸ்தானாலும் இது கிட்டி நின்று உதவும்
திரௌபதிக்கு ஆடை சுரந்ததே
வாழ்த்தவும் திருநாமங்கள் வேண்டும்
வசவு செய்யவும் திரு நாமங்கள் வேணுமே
நாமம் சொல்ல யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் -இதுவே பண்ணிக் கொடுக்குமே

திருநாமங்கள் ஒன்றுக்கு ஓன்று சங்கதியும் உண்டு
பர வ்யூஹ விபவ –
அந்தர்யாமிக்கும் அர்ச்சைக்கும் ஸ்பஷ்டமாக இல்லை
அந்தர்யாமி பரத்வத்திலும்
அர்ச்சை விபவத்திலும்
பெருக்காறு போல் விபவங்கள் -அதில் தேங்கின மடுக்கள்
ஐந்தைச் சுருக்கி மூன்றாக்கி
முக்தி அளவும் சேர்த்து -மோக்ஷ பிரதனாக நிகமித்து அருளுகிறார்
கைங்கர்யமாகவும் திரு நாம சங்கீர்த்தனம் –

82- திருநாமங்கள் இரண்டு முறையும்
15- திரு நாமங்கள் மூன்று முறையும்
2 -திரு நாமங்கள் நான்கு முறையும் வரும்–(நிவ்ருத் தாத்மா–பிராணத)

பிரகரணம் படி இவற்றுக்கு அர்த்தங்களை சாதிக்கிறார்

நான்கு தடவை வரும் திரு நாமங்கள்

நிவ்ருத் தாத்மா–231–453–604–780

231-புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்
453-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
604-தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்
780-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

————————-

பிராணத : -66-322-409-956-

66-பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
322-ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்
409-ஸ்ரீ ராம அவதார திரு நாமம்
956-ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமம்

————–

மூன்று தடவை வரும் திரு நாமங்கள்..

1-அச்யுத–101–319-557

101-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
319-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
557-சுத்த ஸ்வரூபி திருநாமம்

———

2-அஜ : 96-206-524

96-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி
206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்
524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்

————-

3-பிராண : 67 -321-408

67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்

——————–

4-பத்ம நாப : 48–198-347-

48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்
347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்

————–

5-மாதவ : 73-169-741-

73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்
741-மாதவ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

————-

6-வீரஹா 168-747-927-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்
747-வீரஹா-கிருஷ்ணாவதார திருநாமம்
927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்

—————

7-ஸ்ரீமான் 22-180-222..

22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்
222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்

—————-

8-வாசுதேவ 333-700-714

333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

———-

9–விஷ்ணு –2-259-663-

2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்
259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்

————-

10-வீர: 168-464-664-

168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்
464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்
664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்

—————-

11-சௌரி : 341-649-650

341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்
649-சௌரி-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
650-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்

——————

12-பாவந : 32-293-817-

32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
293-பாவநா–விஸ்வ ரூபம்-திருநாமம் –
817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –

—————

13.போக்தா -145-502-889-

145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்
502-போக்தா–தர்ம ஸ்வரூபி -திருநாமம்
889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –

———–

14-வஸூ : -105-271-701

105-வஸூ-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –

————–

15-சத்ய :- -107-213-873-

107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்
213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்

———————————

இரண்டு தடவை வரும் திரு நாமங்கள்..

1-அசோக :    -337/537

2-அநக :         -148 /835

3.அநந்த:     -665/889

4..அநல :   -294/716

5- அநிர்தேச்யவபு : -179/662

6.அநிர்விண்ண :   -436/893

7.அநிருத்த:      -187/644

8.அநில:    -236/818

9-அபராஜித :    -721/866

10-அமித விக்ரம :   -519/647

11-அமேயாத்மா:      -103/481

12-அமோக :              -111/156

13-அவ்யய :            -13/900

14-அஸ்த :             -479/481

15-அஷோப்ய :      -807/999

16-ஆதித்ய :           -39/568

17-ஆதி தேவ  :      -335/491

18-ஈஸ்வர:            -36/75

19-உத்பவ :         -374/796

20-க்ருதஜ்ச :     -83/536

21-க்ருதாகம :    -661/795

22-கிருஷ்ண :      -58/554

23-  கர்த்தா            -316/381

24-கஹந:           -383/548

25- காந்த:           -296/760

26-குமுத ;         -595/813

27-குரு :              -211/495

28-கேசவ:         -23/654

29-கோப்தா      -498/600

30-கோபதி        -487/699

31-கோவிந்த ;  -189/543

32-சக்ரீ                -908/885

33-சதுர்வ்யூஹ :  -140/773

34-  சதுராத்மா        -139/775

35-சிவ :                    -27/607

36-சுசி :                    -157/252

37-சுபாங்க :          -593/788

38-சூர :                 -340/650

39-த்யுதிதர:       -276/764

40-த்ருவ :          -55/389

41-தஷ :               -424/917

42-தாதா             -43/951

50- தார:               -339/968

51-துர்த்தர:       -267/720

52-நியம :        -163/869

53-பிரணவ :   -410/957

54-  பிரபு :         -35/300

55-பிரமாணம் -429/959

56-  பிரஜாபதி     -70/199

57-பவந :              -292/817

58-பாநு :             -126/284

59-பீம :              -358/948

60-புண்ய :        -692/925

61-புருஷ :        -14/407

62-புஷகராஷ :   -40/561

63-பூ:              -438/943

64-பூதாத்மா  -8/10

65- மஹா கர்மா–677/793

66-மஹீதர :           -318/370

67-மார்க்க :           -366/398

68-யம :                   -164/870

69-யஜ்ச :                -446/971

70-ருத்த :                -279/352

71-வசுபிரத :         -698/699

72-வசுமநா :        -106/702

73  வாசஸ்பதி :    -218/579

74-வாயு வாஹந :   -332/860

75-விக்ரமீ  :           -76/909

76-விதாதா  :           -44/485

77-விபு:                      -241/883

78-விஸ்வ யோநி    -118/151

79-வேதவித  :          -130/133

80-ஸ்ரீநிவாஸ :         -185/614

81-ஸ்தவிஷ்ட :       -53/437

82-ஸ்ரஷ்டா  :         -595/990

83-ஸதாம் கதி :        -186/451

84-ஸ்ம்வச்தர:         -92/423

85-ஸ்ர்வத்ருக்          -201/577

86-ஸ்ர்வஜ்ஜ :         -454/821

87-  ஸ்வ :                 -732/733

88-ஸ்விதா              -887/969

89-ஸ்ஹிஷ்ணு  :   -146/570

90-ஸாஷி :                 -15/517

91-ஸித்த :              -98/825

92-ஸிம்ம :             -202/489

93-ஸு கத :             -460/890

94-ஸுபர்ண :         -194/859

95-ஸுவர்த :         -456/824

96-ஹரி :                 -360/656

97-ஹவி :               -360/703

98-ஹிரண்ய கர்ப்ப :  -71/412

99-ஹுதபுக் :             -883/889

100-க்ஷாம :             -444/758

———-

நிர்வசனம் விக்ரஹ வாசகம் வியாகரணம் படி -காட்டி
அர்த்தமும் சொல்லி
பொருள் சொல்லும் பொழுது சங்கதி சொல்லி
இவற்றுப் ப்ரமாணங்களையும் காட்டி -சொல்லும் அர்த்தத்துக்குத் தக்க பிரமாணங்கள் காட்டி அருளி –

960 திரு நாமங்கள் ஒரே சொல்
ஏகம் -முக்தானாம் பரமாம் கதிம் -மூன்று பதங்கள் சேர்ந்து ஒரே
குரு குரூ தம
ஆபாச தேஜஸ் ஸ்துதி தர போல் 30 திரு நாமங்கள்
இரண்டாகவும் பிரித்தும் சொல்லலாம் படியும் உண்டு -இது போல் ஆறு திரு நாமங்கள்
ஹரீர் ஹரி –த்ரிபத் தாம போல்

பகவத் குண தர்ப்பணம் -காட்டும் கண்ணாடி -இது
அனந்தாழ்வான் பட்டரை -ராமானுஜரே திரும்பி
ஸ்ரீ ரெங்கராஜன் பெரிய பிராட்டியார்
சுகக்ருத் வருஷம் -இவரும் திரு அவதாரம்
தொட்டாச்சார்யார் -480-வருஷம் முன்பு
கூரத்தாழ்வானுக்கு 90 திரு நக்ஷத்ரங்களுக்கு மேல் இவர் திரு அவதாரம்
பெரிய பெருமாள் ப்ரஸாதம் மூலம் திரு அவதாரம்-இவரும் வேத வியாஸ பட்டரும்

எம்பார் த்வயம் ரக்ஷையாக -சொல்லி வர -வாஸனை வீசுவதை உடையவர் அறிந்து நீரே இவருக்கு ஆச்சார்யராக இருந்து அருளும் விதித்தார்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

பறப்பதின் குட்டி தவழுமோ
சிறு பிராயத்திலேயே பாண்டித்யம்
பட்டர் நிர்வாஹம் திருவாய் மொழியில் விலக்ஷணமாக இருக்குமே
மாதவாச்சார்யரை திருத்தி நஞ்சீயர் ஆக்கி -திருநெடும் தாண்டகத்தில் ஈடுபாடு

அஷ்ட ஸ்லோஹி –முதலில் ரஹஸ்ய த்ரயத்துக்கு இவர் அருளி
ரெங்கநாத அஷ்டகம் அருளி
ஸ்ரீ ரெங்கஜராஜ ஸ்தவம் பூர்வ உத்தர
ஸ்ரீ குணரத்ன கோசம்
மேல் நான்கு கிரந்தங்கள் லுப்தம்
தத்வ ரத்நாகரம்
நித்ய கிரந்தம்
அத்யாத்ம -கண்ட த்வய விவரணம்
லஷ்மீ திருக் கல்யாணம்

மேல் வராஹ புராணம் அந்தரகதமான கைசிக புராணம்
இன்றும் விண்ணப்பம் செய்து பஹு மானம் பட்டர் வம்சத்துக்கு

மை வண்ண -நைவளம் -இரண்டு பாசுரங்களுக்கு இவர் சாதித்த வியாக்யானம்

திருவாய்மொழி தனியன்கள் சாதித்து அருளின் உள்ளார்
திருப்பாவை தனியன் -திருக்கோஷ்டியூரில் இருக்கும் பொழுது சாதித்தார்

திருமஞ்சன கட்டியங்கள் பலவும் மசாதித்து அருளி உள்ளார்

இப்படி 16 கிரந்தங்கள் இவர் அருளிச் செய்துள்ளார்

————-

ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ லஷ்மண முனியான ஸ்ரீ எம்பெருமானார் –இவர்களைத் த்யானிக்கிறேன்

யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை
என் மனம் ஸ்ரீ யாமுனாச்சார்யர் எனப்படும் ஸ்ரீ ஆளவந்தாரால் நிறைந்து இருக்கட்டும் –

ராமமேவாபியாயாம் பத்மாஷம் ப்ரேஷிஷீய —
ஸ்ரீராம மிஸ்ரர் என்னும் ஸ்ரீ மணக்கால் நம்பியையும் ஸ்ரீ புண்டரீகாக்ஷர் எனும் ஸ்ரீ உய்யக் கொண்டாரையும்
நான் பணிவுடன் அணுகுகிறேன்

ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம் ஸ்தௌமி -ப்ரேஷேய-லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்-
நமது பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மந் நாதமுனிகளை வணங்குகிறேன் –
ஸ்ரீ எம்பெருமானின் ஸ்ரீ சடாரி எனப்படும் ஸ்ரீ நம்மாழ்வாரை போற்றுகிறேன்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் திருக்கண் கடாக்ஷம் எனக்குக் கிட்ட வேணும்
அநந்ய கதியான அடியேன் ஸ்ரீதரனான ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் சரண் அடைகிறேன்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

அஸ்மத் குரு ஸமாரம்பாம் -தொடங்கி -ஸ்ரீயப்பதி பர்யந்தம் சொல்லி
ஸ்ரீ விஷ்வக் சேனருக்குத் தனியாக எடுத்து அருளிச் செய்கிறார்

———–

ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி

ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே

கஜானன்
ஜயத்ஸேனன்
ஹரி வக்த்ரன்
கால ப்ரக்ருதி ஸம் ஜ்ஞகன்
என்னும் நான்கு பரிவாரங்களோடு கூடி ஆஜ்ஜையை செலுத்துபவரும்
ஸூத்ரவதி என்னும் பத்னியுடன் கூடியவரும்
ஸ்ரீ ரெங்கராஜருடைய சேனாபதியுமான-சேஷாசனர் -சேஷ அசனர் இவரே –
விஷ்வக் சேனருக்கு ஓம் என்று சொல்லி நமஸ்கரிக்கிறேன்

——–

ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்

நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா

ஸ்ரீ மஹா பாரதம் ஐந்தாவது வேதமாகச் சேர்ந்த நான்கு வேதங்களும்
எவரால் வெளிப்பட்டனவோ -எவருடைய வம்சத்தில் பிறந்தனவோ –
அந்த கிருஷ்ண த்வைபாயன ரூபமாக அவதரித்த
நாராயணற்கு என்னுடைய நமஸ்காரங்கள்

———–

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்

ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே

ஸ்ரீ மத் ராமானுஜ முனிவர் எனப்படும் யதிராஜரை அடுத்து இருப்பதே தனமாகப் பெற்ற
ஸ்ரீ வத்சாங்க மிஸ்ரர் என்னும் ரிஷியிடம் ஜெனித்தவரும்
ஸாஷாத் பெரிய பெருமாளாலேயே பராசர பட்டர் என்று திருநாமம் சாத்தப்பட்டவரும்
ஸ்ரீ ரெங்கநாதன் என்றும் பெயர் பெற்றவருமான இந்த பட்டர் (படர்கையாக தம்மையே சொல்லிக் கொள்கிறார் )
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தை
ஸ்ரீ ரெங்கநாதனாலேயே செய்யப் பெற்று
ஸ்ரீ ரெங்கநாதனுடைய அனுக்ரஹத்தில் உள்ள பெரு அபி நிவேசத்தினால் செய்து அருளுகிறார் –

————

அவை யடக்கம் -விநய யுக்தி

சம்சாரோ அயம் அபண்டிதோ பகவதி ப்ராகேவ பூய கலௌ
பூர்ணம் மன்யதமே ஜானே ஸ்ருதி சிரோ குஹ்யம் ப்ருவே சாஹசாத்
தத்ர ஸ்தோத்ர மிதம் பிரகாசயதி யஸ் துத்யஸ்ஸ யஸ்தா வுபௌ
வியாச காருணிகோ ஹரிஸ்ஸ ததிதம் மௌர்க்யம் சஹேதாம் மம

இந்த ஸம்ஸாரம் -பிறவியின் தொடர்ச்சி பகவத் ஸ்வரூப விஷயத்தில் முன்னமே அறிவில்லாதது –
கலியில் இன்னும் அதிகம்
எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக் கொண்டு இருக்கும் ஜனங்கள் இடத்தில்
வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லுவது ஸாஹஸம்
இந்த விஷயத்தில் இந்த ஸ்தோத்ரத்தை வெளியிட்டவரும்
இதனால் ஸ்துதி செய்யப்படுபவருமாகிய
தயாளுக்களான ஸ்ரீ வியாஸ பகவானும் ஸ்ரீ மன் நாராயணனும்
இப்படிப்பட்ட என்னுடைய அறியாமையைப் பொறுக்கக் கடவர்

பாடின கண்ணனும் பாடப்பட்ட கண்ணனும் பொறுத்து அருளட்டும்

———–

அர்த்தே ஹரௌ ததபிதாயிநி நாம வர்கே
தத் வ்யஞ்ஜகே மயி ச பந்த விசேஷ மேத்ய
ஸேவதவமேத தம்ருதம் ப்ரணிபத்ய யாசே
மத்யஸ்த மத் ஸரிஜநா இஹ மாச பூவன் –

ஸஹஸ்ர நாமத்தின் பொருளாகிய ஸ்ரீ யபதியினிடத்திலும்
அவரைச் சொல்லும் ஸஹஸ்ர நாமங்களினிடத்திலும்
அவற்றுக்கு உரை செய்யும் என்னிடத்தில்
ஒரு வகையாக அன்பு வைத்து
இந்த அமுதத்தை உட்க் கொள்ளுங்கோள்
நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்

யாரும் இந்த விஷயத்தில்
உதாசீனர்களாயும்
விரோதம் உள்ளவர்களாயும்
ஆக வேண்டாம்

————————-

த்யானம் -அதை விட எளிதான -யாகங்கள்-அதை விட எளிதான அர்ச்சனை முன் யுகங்களில்
கலியுகத்தில் இவை செய்ய இயலாதே
இவற்றிலும் எளிதான நாம சங்கீர்த்தனம்
புருஷார்த்தத்தில் வாசி இல்லை -உபாயங்கள் எளிதாக இருந்தாலும் -யத ஆப்நோதி -தத் ஆப்நோதி –
த்வாபரன் அர்ச்சயன் கலவ் கேசவ கீர்த்தனம்
கெடும் இடராயின வெல்லாம் -கேசவா என்ன –

பெருமாள் போல் திரு நாமங்களுக்கும் ரக்ஷகத்வமும் போக்யத்வமும் உண்டே –
துன்பினைத் துடைத்து -தென் புலன் -தவிர்த்து மீளா அர்ச்சிராதி மார்க்கம் தரும் பெருமாளே ரக்ஷகம்
ஸர்வ பூஷண பூஷணார்த்தம் கிமர்த்தம் ந பூஷணாய -ஆபரணங்களால் மறைக்காமல் -நீண்ட உருண்ட திருக்கைகளைக் காட்டி த்ருஷ்ட்டி
நாம பலம் நாமி பலம் -நின் நாமம் கற்ற ஆவலிப்பு -நாமங்களும் ரக்ஷிக்கும்
இச்சுவை தவிர –அச்சுவையும் வேண்டேன் -போக்யத்வமும் உண்டே

நாமங்களுக்கு சாம்யம் மட்டும் இல்லை –ஏற்றமும் உண்டு
உத்தமனை பாடுவது விட உத்தமன் பேர் பாடுவது அன்றோ –

கட்டிப் பொன் போல் அவன் பணிப் பொன் போல் திரு நாமம் -இதுவே யோக்கியதையும் பண்ணிக் கொள்ள வல்லது

—-

அவதாரிகை

இஹ கலு நிகில அபி சேதயமாந பிரமாணத ப்ரமேயம் பரிச்சிந்தன்
தச்சேத ப்ரமேயம் அநு கூலம் தத் உபாதீத
யதா ஸ்ரக் சந்தன கநகாதிகம்
தச் சேத் விபரீதம் அபோஹேத ஷுர கண்ட காதிகம் தத் சேத் அநுபயரூபம் உபேஷேத யதா காஷ்ட லோஷ்டாதிகம்

உலகத்தில் அறிவுள்ளவர்கள் அனைவரும் ப்ரமாணங்களினால் (பிரமாணம் -பிரமை அறிவுக்கு காரணம் )
அது ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம்
ப்ரத்யக்ஷம் நேரில் அறியும் -மெய் வாய் கண் மூக்கு செவி மூலம் அறிபவை
அனுமானம் ஒரு குறியைக் கொண்டு மற்ற ஒன்றை ஊகித்தல்
சப்தமாவது ஸாஸ்த்ரம்-ஆத்மா பரமாத்மாவைப் பற்றி வேதம் ஒன்றாலே அறியலாம் –
அனுமானம் கருதல் அளவை என்றும்
சப்தம் ஆகம அளவை என்றும் சொல்லப்படும்
உவமான பிரமாணம் என்றும் ஓன்று உண்டு

ப்ரமேயங்களை விஷயங்களை கண்டு அறிந்த பிறகு
ப்ரமேயம் என்பது -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும் –
இவற்றில் அர்த்தமும் காமமும் பிரத்யக்ஷம் அனுமானம் கொண்டு அறியலாம்
தர்மம் மோக்ஷம் இரண்டும் ஸாஸ்த்ரத்தினாலேயே அறியப்படுபவை –
இவற்றை அறிந்த பிறகு
அனுகூல விஷயங்களை -புஷ்பம் சந்தனம் பொன் மணி போன்றவற்றை எடுத்துக் கொள்வதும்
பிரதிகூல -கத்தி முள் -போன்ற விஷயங்களைத் தள்ளுவதும்
இரண்டும் இல்லாத கல் கட்டை மண் போன்றவற்றை உதாசீனம் பண்ணுவதும்
அனுபவத்தில் காணப்படுகின்றன

தத்ர ப்ரத்யஷாதி ப்ரமாணாந்தர கோசரயோ அர்த்த காமயோ
அத்யல்பத்வ அநர்த்த கரத்வ- பீபத்ஸ் யத்வ –பங்கு ரத்வ -துக்க மிஸ்ரத்வ –துஸ் ஸ்தானத்வாத்ய
அநந்த தோஷ அநு ஷங்கேண த்யாஜ்யத்வாத்
ஸாஸ்த்ர ப்ரமேயயோ தர்ம பர தத்வயோ
தத் வைபவரீத்யாத் அநந்த மங்கள ஸம் கதத்வாச் ச
ஸாஸ்த்ர ததர்த்தயோர் உபாதேயத்வம் ப்ரக்ருஷ்யதே

இவற்றில் அர்த்தம் காமம்
மிக அல்பமாயும் -தீங்கை விளைவிப்பதாயும் -அஸ்திரமாகவும்
துன்பம் மிக்கதாயும் -கஷ்ட ஸாத்யங்களாயும் எண்ணிறந்த குற்றங்கள் உள்ளனவாயும் இருக்கும்
ஆகையால் விடத்தக்கவை –
தர்மமும் மோக்ஷமும் -ஸாஸ்த்ரம் ஒன்றாலே அறியத் தக்கவை -அளவற்ற மங்களங்களைத் தருமவையாதலால் மிக ஸ்ரேஷ்டமாகும்

அன்றாடம் பாபங்களை சம்பாதித்திக் கொண்டே இருந்தும் பிரத்யக்ஷம் கொண்டு அறிய முடியாதே

————

யதா ஹுர் இதிஹாஸிகா பவ்ராணிகாஸ் ச ஏக கண்டா

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த் ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம் இதி
தத்ர சதுர் தச வித்யா ஸ்தான ப்ரதான பூதஸ்ய வேதஸ்ய 

இதி பிரகாரேண இதிஹாஸ புராணாப் யாமர்தே நிர்ணே தவ்யே புராணேப்ய
இதிஹாஸ உத்கர்ஷே ச விவஷிதே ஸ்ரீ மத் இராமாயண வத் மஹா பாரதம் அபி சரணம்

இவ் விஷயத்தில் இதிஹாசம் அறிந்தவர்களும் புராணம் அறிந்தவர்களும்
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம்
கை தூக்கி உத்கோஷிக்கிறேன்
வேத சாஸ்திரத்துக்கு மேலான சாஸ்திரமும் இல்லை
கேசவனுக்கு மேற்பட்ட தெய்வமும் இல்லை
என்று ஒற்றுமையாகச் சொல்வர்

பதினான்கு வித்யா ஸ்தானங்களாகப் பகுக்கப்பட்ட ஸாஸ்த்ரங்களில் தலைமையாய் உள்ள வேதத்தைப் பற்றி
இதிஹாசத்தாலும் புராணத்தாலும் வேதத்தைப் பூரித்துக் கொள்ள வேண்டும் -அதாவது
வேதத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்
இவையே உப ப்ரஹ்மணங்கள் என்று சொல்லப்படுபவை

வேதங்களுக்கு உப ப்ரஹ்மணம் -ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்
வேதங்களை ஸ்ம்ருதிகள் கொண்டு அறியலாம்
வேதாந்தங்களை இதிஹாஸ புராணங்களாலே அறியலாம்

இதிகாசத்தை முதலில் சொல்லி புராணங்களை பின் சொல்லி இருப்பது அதன் பிரபல்யத்தாலே
அத்தாலே அது முற்பட்டது
ஆகவே ஸ்ரீ மஹா பாரதமானது ஸ்ரீ மத் ராமாயணம் போல்
தத்வ ஞானத்துக்கு இன்றியமையாத ஆதாரமாகும் -சரணம் -தஞ்சமாவது -என்கிறார்

————-

ஸ்ரீ ஸஹஸ்ர நாம அத்தியாயத்தின் சிறப்பு

தத்ர

மஹா பாரத ஸாரத்வாத் ரிஷிபி பரிகாநன
வேதாசார்ய ஸமா ஹாராத் பீஷ்மோத்க்ருஷ்ட மதத்வத
பரிக்ரஹாதிசயதோ கீதாதியைகார்த்தஸ்ஸ ந
ஸஹஸ்ர நாமாத்யாய உபாதேய தமோ மத

1-மகா பாரத சாரத்துவாத்–சாரமானது..

2-ரிஷிபி : பரிகாநதா:பரிகானன=வக்த்ரு வைலக்ஷண்யம்
சநகர்,சனநந்தர் சனத் குமாரர் ,சனத் சுஜாதர், நாரதர் போன்றோர் பாடிய திரு நாமங்களை வியாசர் தொகுத்து அளிக்கிறார்

3-வேதாச்சர்யா சமா ஹாராத்–பரம ஆப்த தமர் வியாசர்..

4-பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:-அனைத்திலும் சிறந்த தர்மம் என்று பீஷ்மர் நினைத்து இருந்த சிறப்பு

5-பரிகிரஹா திசயதோ-விலக்ஷணமான அங்கீ காரம் பெற்றது

6-கீதாத்யை கார்த்தஸ்ஸ ந:-பகவத் கீதை போன்ற பல நூல்கள் உடன் பொருள் பொருத்தம் உடைய சிறப்பு

இந்த ஆறு காரணங்களால் –சஹஸ்ர நாம அத்யாய உபாதேய தமோ மத :

——————

1- ஸஹஸ்ர நாம அத்யாயம் மஹா பாரதத்தில் சாரமானது

மஹா பாரதம் ஹி பரிக்ரஹ விசேஷ அவஸித அவிப்லவ வசந ஸௌஷ்ட வாத்யாத் மகத்வாத்
இதிஹாஸத்வ க்ருதாத் ப்ராபல்யாத், புராணேஷு தாவத் வாயு ப்ரோக்த ஸைவயோ :

மதி மந்தாநம் ஆவித்ய யேநாஸௌ ஶ்ருதி ஸாகராத்| ஜகத்திதாய ஜநிதோ மஹா பாரத சந்த்ரமா: ||”

ஸ்ரீ மஹா பாரதம்
பெரியோர்களால் சிறந்த பிரமாணமாக அங்கீ கரிக்கப் பெற்று
அர்த்தங்களில் மாறுபாடு இன்றி அழகான சொல்லாய் அமைந்து இருப்பதாலும்
இதிஹாசமாய் இருப்பதாலும்
பிரபலமான பிரமாணம் என்று நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது

வ்யாஸ பகவான் தமது புத்தி என்னும் மத்தை வேதம் என்னும் கடலிலே செலுத்திக் கடைந்து
உலகோர் நன்மைக்காக மஹா பாரதம் என்னும் சந்திரனை எடுத்து அளித்தார்
என்று வாயு புராணம் சைவ புராணம் சொல்லும்

கிருஷ்ணனும் -கிருஷ்ண த்வைபாயனார் –கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -மூவரும் கடைந்து
அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -திருவாய் மொழி அருளினார்கள் அன்றோ

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“

மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது
போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்று பவிஷ்யத் புராணத்திலும்

———

மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||

மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-

———

“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம் 

மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்

——–

மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;

கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்

———-

ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“

நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான் என்று ஸ்ரீ மஹா பாரதத்திலும் சொல்லப்படுவதாலும்

—–

இத்யாதி பிஸ் ச
பரஸ் ஸஹஸ்ரைர் வசநை : ப்ரஶஸ்ய மாநத்வாத்,
ஸாங்க ஶ்ருதி ஸ்ம்ருதீ திஹாஸ புராண ஸம்வாதாத்,
“யதி ஹாஸ்தி ததந் யத்ர யந் நேஹாஸ்தி ந தத் க்வசித்“
இதி லௌகிக வைதிக ஸகலார்த நிர்ணய அதி க்ருதத்வேந க்வசித்  அப்ய பக்ஷபாதித் வாச்ச
புராணேப்யோ பல வத்தரம் பஹவோ புத்தி ஶாலி நோ அத்ய வஸஸு: |

மற்றும் உள்ள ஆயிரக்கணக்கான ப்ரமாணங்களால் ஸ்லாகிக்கப் படுவதாலும்

எல்லா அங்கங்களோடே கூடிய ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் முதலிய எல்லா பிரமாணங்களை ஒத்து இருப்பதாலும்

இதில் உள்ளவை தான் மற்று எல்லாவற்றிலும் உள்ளன
இதில் எது இல்லையோ அது வேறு எதிலும் இல்லை என்றும் சொல்லி இருப்பதால்
லௌகிகங்களும் வைதிகங்களுமான எல்லா விஷயங்களையும் ஐயம் திரிபு இன்றி
தெரிவிக்கப் பிரவிருத்திப்பதனாலும்
ஒரு விஷயத்திலும் பக்ஷ பாதம் இல்லாமையாலும்
புராணங்களைக் காட்டிலும் இது சிறந்த பிரமாணம் என்று அநேகம் அறிஞர் நிச்சயித்து இருக்கின்றனர் –

———

இதுவரை மஹா பாரத ஏற்றம் சாத்தி அருளி
அதில் சாரமான ஸஹஸ்ர நாம அத்யாயம் அருளிச் செய்கிறார்

தத்ராபி ஸ்வ ஹ்ருதய பூதே ஆநு ஶாஸநிகே பர்வணி தாந தர்மேஷு
ஸமஸ்த ஶாஸ்த்ரார்த்தே நிஷ் க்ருஷ்ய நிகம்யமாநே, ஸார ஸங்க்ரஹ  ரூபேண
கல்வயம் ஸஹஸ்ர நாம்நாமத்யாயோ அவதாரித: |

இம் மஹா பார்த்ததுக்கு உள்ளம் போன்றதாகிய சாந்தி பர்வத்தில்
தான தர்ம முதலிய எல்லா சாஸ்திரங்களின் பொருள்களையும் சாரமாக எடுத்து முடிக்கும் இடத்தில்
இந்த சஹஸ்ர நாம அத்யாயம் எல்லாவற்றினுடைய சார அம்சங்களின் ஸங்க்ரஹமாக அன்றோ நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது

———–

தஸ்மாத் ப்ராமாண்ய காரண ப்ரகர்ஷேண தத்த்வார்த தாத்பர்ய லிங்கைஶ் ச
அப்ராமாண்ய ப்ர ஶம்ஸாத் யந்ய பரத்வ ஶங்கயோ : ஸுதூர நிரஸ்தத்வேந
பரம ப்ரக்ருஷ்டார்த ப்ரதி பாதகத்வாச் ச அப்யுதய நிஶ்ரேயஸ அர்திநாம் அயமேவ உபாதேய தம:||

இப்படி இது பிரதானமாய் இருப்பதற்கு சிறந்த காரணம் இருப்பதனாலும்
தத்வார்த்தத்தில் இதன் தாத்பர்யத்தை அறிவதற்கு லக்ஷணங்களான
உபக்ரமம் உப சம்ஹாரம் அப்பியாசம் அபூர்வதா பலம் அர்த்தவாதம் உபபத்தி

உபக்ரமம் உப சம்ஹாரம் -தொடக்கம் முடிவு
அப்பியாசம் -மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு
அபூர்வதா -புதிதாக சொல்லப்பட்டு
பலம் -சொல்லப்பட்டு
அர்த்தவாதம் -ஸ்துதித்தும் சொல்லப்பட்டு
உபபத்தி-நியாயங்களைக் கொண்டு சாதித்து

முதலிய ஆறு வகைத் தாத்பர்ய லிங்கங்களும் -அடையாளங்களும் நிரம்பி இருப்பதாலும்
ப்ரமாணமா அல்லவா என்றும்
இந்த விஷயத்துக்காக இது வந்ததா -ஸ்தோத்ரம் முதலிய வேறே விஷயத்துக்காக வந்ததா என்றும்
சங்கிப்பதற்கு சிறிதும் இடம் இல்லை
எல்லாவற்றிலும் சிறந்த விஷயத்தைத் தெரிவிப்பதனால் –அப்யுதய-இம்மையில் எல்லாவித நன்மைகளுக்கும்
நிஶ்ரேயஸ-மோக்ஷத்திற்கும் இதுவே சிறந்த உபாயமாக எடுத்துக் கொள்ளத் தக்கது –

———————————————————

2- ததா ருஷிபி: பரிகாநத: —
ருஷிபி: பரிகீதாநி இத்யேதத் விவரண அவஸர
ஏவைஷ ஹேது ருப உபாதயிஷ்யதே ||

ரிஷிகளினால் ஓதப்பட்டமை
வேதார்த்த தமங்கள் எல்லாவற்றையும் நேராகக் கண்டு அறிந்த சனகர் சனத்குமாரர் நாரதர்
முதலான மஹரிஷிகளினால் இவ் வாயிர நாமங்கள் சொல் பொருள்களின் தத்துவங்களை அறிந்து கீர்த்தனம் செய்யப்பட்டவையே
இந்த நாமங்கள் வேத வ்யாஸ பகவானால் ஸ்தோத்ர ரூபமாகத் தொகுத்துக் கூறப்பட்டு
ஸம்ப்ரதாய வரிசையில் நமக்குக் கிடைத்து இருக்கின்றன –

————

3-கிஞ்ச, வேதாசார்ய ஸமாஹாராத்- பகவாந் ஹி வேதாசார்ய: க்ருஷ்ண த்வைபாயந: பரம ஆப்த தம:,
பகவந் நாராயண அவதாரத்வேந
நிரதிஶய ஜ்ஞாந ஐஶ்வர்யாதி கல்யாண குண கண தயா
நிரஸ்த ஸமஸ்த விப்ரலம்பாதி தோஷ ஸம்பாவநத்வாத்,

கலி பல மந்த அதிகாரி மநுஷ்ய அநு க்ரஹாய
வ்யஸ்த ஸமஸ்த வேதத்வாத்,

வேதார்தயோ :தத்த்வ அநுஷ்டாநயோ :
அஜ்ஞாந ஸம்ஶய விபர்யய பரிஜி ஹீர்ஷயா
ப்ரணீத பஞ்சம வேதத்வாத்,

வியாசர் பகவன் நாமங்களைத் தொகுத்தமை-(ஏழு பெருமைகள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதாச்சார்யராக அவதரித்த மஹரிஷி யாதலின்
அவரது ஞானம் சக்தி முதலிய கல்யாண குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவை
மயக்கம் பிறரை மயங்கச் செய்வது ஊக்கம் இன்மை சொல்லும் திறமை இல்லாமை ஆகிய குற்றங்கள்
ஒரு சிறிதும் அவர் இடத்தில் இருக்கக் கூடும் என்று நினைப்பதற்கே இடம் இல்லாமையால்
அவர் சொல்வன எல்லாமே ப்ரமாணமே
கலி காலத்தில் சக்தி குறைந்த மனிதர்களின் மேல் அனுக்ரஹம் வைத்து வேதங்களை வகுத்து வேதங்களின் முக்கிய விஷயங்களாகிய
தத்வ ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டிலும் அஞ்ஞானம் சம்சயம் விபரீத ஞானம் இவற்றைப்
பரிகரிப்பதற்காக ஐந்தாம் வேதமாகிய மஹா பாரதத்தை அவர் இயற்றி அருளினார்

ஸ்வ வசநேந க்ஷத்த்ரியம் விஶ்வாமித்ரம்
ப்ராஹ்மணீ க்ருத வதோ பகவகதோ வஸிஷ்டஸ்ய நப்த்ருத்வாத்,

வஸிஷ்ட புலஸ்த்ய வர ப்ரதாந லப்த தேவதா பாரமார்த்ய ஜ்ஞாந புராண 
ஸம்ஹிதா கர்த்ருத்வாதி விஷய வர அதிஶயவத்தயா லைங்காதிஷ்வபி
புராணேஷு ப்ரஸித்தஸ்ய பகவத: பராஶரஸ்ய ச அப யத்வாத்,
அநந்ய ஸாதாரண தபஸ் ஸமாதி விஸேஷஶ்ச அஸேஷ பரமர்ஷி பரிஷத் பூஜிதத் வாச்ச| 

மேலும் அவர் ஷத்ரிய ஜாதியில் பிறந்த விச்வாமித்ரரை தமது சொல்லினால் ப்ராமணராகச் செய்த
வஸிஷ்ட பகவானது பிரபவ்வ்த்ரர் -பேரரின் குமாரர் -(வஸிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் )
வசிஷ்டரும் புலஸ்தியரும் வரம் அளித்ததனால் பர தேவதையின் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து
புராண ஸம்ஹிதை செய்வது முதலிய மகிமைகளை அடைந்தவர் என்று லிங்க புராணத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட பராசரருடைய புதல்வர்–மற்றவர்களுக்கு இல்லாத தவம் தியானங்கள் சிறப்பால் மற்ற மஹ ரிஷி சபைகளால் பூஜிக்கப் பெற்றவர்

ஏவம் விதேந அநேந ருஷிபி: பரி கீதாநாமேவ
பகவந் நாம் நாம் அத்ர ஏதத் ஸ்தோத்ர ரூபேண ஸமாஹ்ருதத்வாச் ச அயம் உபாதேய தம:||

மேற்கூறிய ஸநகாதி மஹரிஷிகளால் ஓதப்பட்ட பகவத் திரு நாமங்களையே கொண்டு
ஸ்தோத்ர ரூபமாக இவர் தொகுத்து அருளி இருப்பதாலும் இந்த ஸஹஸ்ர நாம அத்யாயம்
அனுகூலமாகக் கொள்வதில் அனைத்திலும் மிகவும் -ஸ்ரேஷ்டம்

ஜனமேயன் பரீக்ஷித் திருக் குமாரர் -வைசம்பாயனர் இடம் கேட்டு அறிகிறார் -வேத வியாஸர் அருளிச் செய்தவற்றை உபதேசம்
பாகவதம் வேத வியாசர் அருளி -பரிக்ஷித்துக்கு ஸூகாச்சார்யார் உபதேசம்
அதையே மீண்டும் ஸூத பவ்ராணிகர் சனகாதிகளுக்கு உபதேசம் நைமிசாரண்யத்தில்-இப்படி ஒன்றுக்குள் ஓன்று சம்வாதம்

————

4- அபி ச பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:- பீஷ்மோ அபி ஹி (ப்ரத்யாயித) ப்ரதீத தம: |
ததா ஹி, ராஜ தர்மேஷு தர்ம ராஜாய பகவதா வ்யாஸேந

பீஷ்மர் தமது மதமாக ஒப்புக் கொண்டமை(பீஷ்ம வைபவத்துக்கு 10 பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் )
பீஷ்மாச்சார்யரும் மிகவும் ஆப்த தமர் -மிகவும் நம்பத் தக்கவர்
வேத வ்யாஸ பகவானே தர்ம புத்ரரை நோக்கி(ஆளவந்தார் பராசர மஹரிஷியைக் கொண்டாடினார்
-பராசரர் வ்யாசரைக் கொண்டாடினார் -அந்த வ்யாஸர் பீஷ்மரைக் கொண்டாடுகிறார் )

ஶ்ரோதும் இச்சஸி சேத் தர்மாந் நிகிலேந நராதிப |
ப்ரைஹி பீஷ்மம் மஹா பாஹோ வ்ருத்தம் குரு பிதா மஹம் ||
ஸ தே ஸர்வ ரஹஸ்யேஷு ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் |
சேத்தா பாகீரதீ புத்ர: ஸர்வஜ்ஞ: ஸர்வ தத்த்வ வித் ||
ஸாக்ஷாத் ததர்ஶ யோ தேவாந் ஸர்வாந் ஶக்ர புராேக மாந் ||“இத்யாததௌ,

சிறந்த பராக்ரமசாலியான அரசனே- தர்மங்கள் எல்லாவற்றையும் கேட்க விருப்பம் இருந்தால்
கௌரவர்களின் பிதாமஹரும் பெரியவருமான பீஷ்மரிடம் செல்
ஸர்வஞ்ஞரும் -எல்லாவற்றிலும் உண்மை தெரிந்த கங்கா புத்திரர் -ஸூஷ்ம விஷயங்கள்
எல்லாவற்றிலும் உனது மனத்தில் உள்ள சந்தேகங்களை எல்லாம் அறுத்து விடுவர்
அவர் இந்திராதி தேவர்களை நேராகவே கண்டவர்-
அவர் சபையில் பரிசுத்தரான ப்ரஹ்ம ரிஷிகள் எக் காலத்திலும் ச பிரியர்களாக இருந்தனர்

யஸ்ய ப்ரஹ்ம ர்ஷய: புண்யா நித்யமாஸந் ஸபாஸத:|
யஸ்ய ந அவிதிதம் கிம்சித் ஜ்ஞாநம் ஜ்ஜேயேஷு வித்யதே ||
ஸ தே வக்ஷ்யதி தர்மஜ்ஜோ தர்மாந் ஸூக்ஷ்மார்த்த தத்த்வ வித் ||இத்யாததௌ ச, “(சாந்தி பர்வம் )

ஸ்வயம் ச பேவதா
ஶர தல்பகதோ பீஷ்ம: ஶாம்யந்நிவ ஹுதாஶந:|
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர: ததோ மே தத் கதம் மந:||
திவ்யாஸ்த்ராணி மஹா தேஜா யோ தாரயதி புத்திமாந் |
ஸாங்காம்ஶ்ச சதுரோ வேதாம்ஸ் தமஸ்மி மநஸா கதா 😐
ஸ ஹி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப |
வேத்தி தர்ம ப்ருதாம் ஶ்ரேஷ்ட: ததோ மே தத்கதம் மந:||
தஸ்மிந் நஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரம்தரே |
ஜ்ஞாநாந்யல்பீ பவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாம் யஹம் ||“இத்யாததௌ ச,

கிருஷ்ண பகவானும்
பீஷ்மர் சர தல்பத்தில் படுத்து அக்னி ஆறுவது போல் இருக்கிறார்
புருஷ ஸ்ரேஷ்டரான இவர் இப்போது என்னையே த்யானம் செய்கிறார்
ஆதலால் என் மனம் அவர் இடம் சென்றது
சிறந்த சக்தி புத்தி உள்ளவரான அவர் நான்கு வேதங்களையும் வேதாந்தங்களை தம் மனத்தில் வைத்து இருக்கிறார்
நானும் என் மனத்தினால் அவரைச் சேர்ந்து இருக்கிறேன்
பரத ஸ்ரேஷ்டரே -தர்ம அனுஷ்டானம் செய்பவர்களில் சிறந்தவராகிய அவர்
முக்காலமும் அறிந்தவர் என்பதாலேயே அவர் இடம் எனது மனமும் சென்றது
குரு வம்ஸ தலைவராகிய அவர் அஸ்தனமாகி விட்டால் ஞானங்கள் குறைந்து போகும்
ஆதலால் நான் உம்மைத் தூண்டுகிறேன் -என்றும்

“யச்ச த்வம் வக்ஷ்யஸே பீஷ்ம பாண்டவாய அநுப்ருச்சதே |
வேத ப்ரலாபா இவ தே ஸ்தாஸ்யந்தி வஸுதாதலே || “ இத்யாததௌ,

பீஷ்மரைப் பார்த்து
ஓ பீஷ்மரே- அறிய வேண்டும் என்று கேட்க்கும் தர்மராஜருக்கு நீர் என்ன சொல்லப் போகிறீரோ
அவை எல்லாம் வேத வாக்கியங்களை போலவே பூமியிலே நிலை நிற்கப் போகின்றன -என்றும்

“யத்தி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப|
ஸர்வம் தத் ஜ்ஞாந வ்ருத்தஸ்ய தவ பாணாவிவாஹிதம் ||
அஹம் ச த்வா அபிஜாநாமி ஸ்வயம் புருஷ ஸத்தம ||
தபஸாஹி பவாந் ஶக்த: ஸ்ரஷ்டும் லாேகாம்ஶ் சராசராந்-“ இத்யாததௌ ச,

ஓ பரத ஸ்ரேஷ்டரே -பூத பவிஷ்யத் வர்த்தமானங்களை எல்லாம் அறிவில் முதிர்ந்தவராகிய உமக்கு
உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெல்லிக்கனி போல் இருக்கின்றன
புருஷர்களின் சிறந்தவரே -நானும் நேராகவே உம்மை அறிந்து இருக்கிறேன்
நீர் தவத்தினால் சராசரங்கள் அடங்கி இருக்கும் உலகங்களை படைக்கவும் வல்லீர்

“ந கத க்லாநிர் ந தே மூர்ச்சா” இத் யுபக்ரம்ய “ஸத்த்வஸ்தம் ச மநோ நித்யம் தவ பீஷ்ம பவிஷ்யதி |
ரஜஸ் தமோப்யாம் அஸ்ப்ருஷ்டம் கநைர் முக்த இவோடுராட் ||“இத்யாததௌ ச,

உமக்கு களைப்பும் இல்லை மூப்பும் இல்லை மூர்ச்சையும் இல்லை
உமது மனம் எப்போதும் ஸத்வ குணத்திலேயே நிலை பெற்று ரஜோ குணம் தமோ குணம் அற்று
மேகங்களால் விடுபட்ட சந்திரன் போல் இருக்கிறீர் என்றும் சொல்லி இருக்கிறார்

பகவதா நாரதேந ச “க்ருத்ஸ்நாந் ஹி விவிதாந்
தர்மாம்ஶ் சாதுர் வர்ண்யஸ்ய வேத்த்யயம் ||
தச் சீக்ர மநு யுஞ்ஜீத்வம் ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் ||“ இத்யாததௌ ச ப்ரபஞ்ச்ய,

நாரத பகவானும்-நான்கு வர்ணங்களுக்கும் உள்ள பல வகைத் தர்மங்களை எல்லாம் இவர் நன்கு அறிந்தவர்
ஆதலால் உள்ளத்தில் உள்ள சம்சயங்களை விரைவில் இவர் இடம் வினவுங்கோள் என்று தொடங்கி விரிவாகச் சொல்லி

ஏநம் பஹு மஹர்ஷி வ்ருத்த ஸேவா -தீர்க ப்ரஹ்ம சர்ய தபஸ் -ஸமாதி லப்த -ஸர்வ ஸாக்ஷாத் காராதி ப்ரபாவ விஸேஷவத்தயா ப்ரஶஸ்ய,
பர தத்த்வ தர்ம ப்ரவர்த கதயா வராந் விதீர்ய நியுக்தத்வாத், மாதா பித்ரு ஶுஶ்ரூஷண தத் ப்ரஸாத வர லாப ஸௌபாக்யாத், 

பர தத்துவத்தையும்
பர தத்வ ஞானத்தையும்
தர்ம அனுஷ்டானத்தையும்
வெளியிடும்படி வரம் அளித்தார்

பீஷ்மர் மாதா பிதாக்களுக்குப் பணிவிடை செய்து அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த வரத்தையும் பெற்று இருக்கிறார்

ஸ்வயம் ச-தாஹோ மோஹ: ஶ்ரமஶ் ஸைவ க்லமோ க்லாநிஸ் ததா ருஜ:|
தவ ப்ரஸாதாத் கோவிந்த ஸத்யோ வ்யப கதாநி மே ||
யச்ச பூதம் பவிஷ்யச்ச பவஶ்ச்ச பரமச்யுத |
தத் ஸர்வம் அநு பஶ்யாமி பாணௌ பலமிவாஹிதம் ||
வேதா உக்தாஶ் ஸைவ யே தர்மா: வேதாந்த நியதாஶ்ச யே |
தாந் ஸர்வாந் ஸம் ப்ரபஶ்யாமி வரதாநாத் தவாச்யுத ||“ இத்யாததௌ,

அவர் -ஓ கோவிந்தரே உமது அனுக்ரஹத்தினாலே எனக்குத் தாபமும் மயக்கமும் மனச் சோர்வும் ஓய்வும் வாட்டமும் நோய்களுமாகிய எல்லாம் உடனே போய் விட்டன
அச்யுதரே -பூத பவிஷ்ய வர்த்தமானங்களை எல்லாம் அவற்றுக்கு மேம்பட்ட பரம் பொருளையும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்க்கிறேன்-இது தான் ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் ஆழ்வாரைப் போல் ப்ரஹ்மம் சாஷாத்கரித்த பலன்
வேதங்களில் சொல்லப்பட்ட ப்ரவ்ருத்தி தர்மங்களையும் வேதாந்தங்களில் மட்டும் உள்ள விஷயங்களையும்
உமது ப்ரஸாதத்தால் எனது கண் முன் இருக்கின்றன என்றும்
ஜனார்தனாரே -உம்மையே இடைவிடாது த்யானம் செய்ததன் பலனாக எப்போதுமே இளமைப் பருவத்திலேயே இருப்பவனாகி உள்ளேன்
என்றும் தாமே கூறி இருக்கிறார்

“யுவேவ சாஸ்மி ஸம் வ்ருத்த: த்வத் அநுத்யாந ப்ரும்ஹித:|
வக்தும் ஶ்ரேய: ஸமர்தோ அஸ்மி த்வத் ப்ரஸாதாஜ் ஜநார்தந ||“
இத்யாததௌ ச, ப்ரதி ஸம்ஹித யதோக்த ஸ்வ பரமார்த கத்வாச்ச |
ஏவம் விதஸ்ய பீஷ்மஸ்ய “ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ அதி கதமோ மத:” இத்யாதிநா
அதிக தேய தம:||

இப்படி தத்வ ஞானத்தை யதாவாக அறிந்த பீஷ்மர்
இது தான் எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக யான் நினைப்பது என்று தொடங்கி
இந்த ஸஹஸ்ர நாம கீர்த்தனம் தமது மிகவும் சிறந்த தர்மமாகச் சொல்வதானால்
இந்த அத்யாயம் அனுகூலமாக கொள்ளும் அனைத்திலும் சாலச் சிறந்தது என்றதாயிற்று –

———

5-பரிக்ரஹ அதிஶைத :-
பரிக்ரகஹோ ஹி ஸார்வ பௌமோ பகவந் நாம ஸஹஸ்ரஸ்ய |
ஶாஸ்த்ரேஷு தாவத் ஸபா பர்வணி-“தேவோ நாம ஸஹஸ்ரவாந்” இதி பகவாநபி நாம ஸஹஸ்ர ஸம்பந்தேந பூஷ்யதே |

பெரியோர் பலராலும் அங்கீ கரிக்கப் பட்டமை
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் எல்லாரும் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அன்றியும் ஸபா பர்வத்தில் -பகவான் ஆயிரம் நாமங்களை யுடையவர் -என்றும்

ஶ்ரீவிஷ்ணுதர்மே ச
ஸ்ரீ கஜேந்த்ர மோஷேண
“ஸஹஸ்ர ஶுப நாமா நம் ஆதி தேவம் அஜம் விபும்” இதி |

விஷ்ணு தர்மத்தில் கஜேந்திர மோக்ஷ ப்ரகரணத்தில்
ஆயிரம் மங்களகரமான நாமங்களை யுடையவரும் -ஆதி தேவரும் -ஜனநம் இல்லாதவருமான பிரபுவை என்றும்
ஆயிரம் நாமங்களை பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது –

அத்ர ச உபோத்காத பல ஶ்ருத்யோ : குண ப்ரபஞ்சோ த்ருஶ்யதே |
ஆயுர் வேதாதிஷு ச த்ருஷ்டாத்ருஷ்ட ஶாஸ்த்ரேஷு, யதா சரக ஸம் ஹிதாயாம்
“விஷ்ணும் ஸஹஸ்ர மூர்தாநம் சராசர பதிம் விபும் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் வ்யபோஹதி ||

இந்த ஸ்தோத்ரத்தில் ஆரம்பம் முடிவிலும் பலன் சொல்லும் இடத்திலும் இதன் குணங்கள் மிக விரிவாக வெளியிடப்பட்டுள்ளன
வைத்திய ஸாஸ்த்ரம் முதலியவற்றிலும் இதன் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது –
வைத்திய சாஸ்திரமாகிய சரக ஸம்ஹிதையில்
ஆயிரம் தலைகளை யுடையவரும் -சராசரங்களுக்கு ஸ்வாமியும் ஸர்வ வ்யாபியான விஷ்ணுவை
இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் கொண்டு ஸ்துதிப்பதால் எல்லா வித ஜ்வரங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது

இதி| அத்யதேந ச நாநா விப்ர கீர்ண மூலே  மேஹஸ்ய ப்ராயஶ் சித்தே ,
“ஜப்யம் புருஷ ஸூக்தகம்” இத்யாரப்ய “ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம்
பாரதோதிதம்”, 

அவ்வாறே நவீனமான ஒரு வைத்திய நூலும் மேக ரோகத்துக்குப் பிராயச் சித்தம் செல்லுகையில்
புருஷ ஸூக்தம் ஜபிக்க வேண்டும் என்றும் சொல்லி மேல்
ஸஹஸ்ர நாமத்தையும் ஜபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது

யக்ஷ்மண:“ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம் பரிகீர்தயேத்”,
ஜ்வர விஸேஷஸ்ய,
“ஹோமஸ்து பூர்வ வஜ் ஜப்யம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்”,
க்ரஹாதே : “ஆஸத் மதம் மருத் ஸூக்தம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
அந்யத்ர ஸ ஏ வம்விதம் அந்வேஷ்டவ்யம் | ப்ராக்ருதா:கவயோ அபீதம்
ஸர்வ ஜீவ ரக்ஷாத்வேந வர்ணயந்தி | யதாஸ் ஸஹ

க்ஷய ரோகத்துக்கு சிகித்சை சொல்லுவதிலும் ஸஹஸ்ர நாம கீர்த்தனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது
கிரஹ சாந்தி சொல்லும் இடத்திலும் வாயு ஸூக்தமும் ஸஹஸ்ர நாம கீர்த்தனமும் செய்ய வேண்டும் என்றும்
இப்படி அநேக இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதைக் காணலாம்

பட்டபாண: ஸூதிகா க்ருஹ வர்ணநே அவிச்சிந்ந பட்ய மாந நாராயண நாம ஸஹஸ்ரம்” இதி |
லோகே ச க்ரஹண தாரண ஶ்ரவண ஜப ஸம் கீர்தந லேகந வ்யாக்யாந தந் நிஷ்ட பூஜந ப்ரப்ருதிபி:
விஷ-பிஶாச-வ்யாதி-க்ரஹ -து:ஸ்வப்ந-துர் நிமித்தாத் யஶிய உப ஶமநாய,
மஹா பாதகாதி ப்ராயஶ் சித்தாய,

ஐஹிக ஆமுஷ்மிக அப்யுதய ஸித்தயே , ஸம்ஸார॒ க்ரந்தி விஸ்ரம் ஸநாய,
வைஷ்ணவ பரமபத அவாப்தயே , தாதாத் விக பகவத்
குண ஸுதாஸ்வாத ஸுகாய ஆபால மூக மூர்க ஸ்த்ரீ நாஸ்திகைக பேஷஜம்

நிரதிஶய ஶ்ரத்தா பக்தி விஶ்வாஸ பூர்வகம் பரி க்ருஹ்யதே |
ந ஸ ஏவம் வித: பரிக்ரகஹோ வேதாநாமபி; தேஷாம் மூர்காதிபி: அபரிக்ரஹாத்,
குல சரண கோத்ராதி வ்யவஸ்தயா ப்ரதி ஶாகம் பரிக்ரஹ விபாகாச்ச |
ஏவம் பரிக்ரஹ அதிஶயாதப்யஸ்ய உபாதேய தமத்வம் ||

லௌகிகர்களான கவிகளிலும் பட்ட பாண கவி ப்ரஸவ க்ரஹத்தை வர்ணிக்கும் போது
நாராயணனுடைய ஸஹஸ்ர நாம கீர்த்தனம் இடைவிடாமல் செய்கிறார்கள் என்கிறார்

இப்போதும் உலகத்தில் அவ்விதமாக அநேகம் வியாதிகளுக்கும் பாபங்களும் பரிகாரமாக
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணுவதைக் காண்கிறோம்
விஷம் பிசாசம் வியாதி க்ரஹம் தீய கனவு அப சகுனம் முதலான வற்றுக்கு சாந்தி செய்வதற்கும்
மஹா பாதகம் முதலான பாதங்களுக்கு ப்ராயச்சித்திக்கும்
இம்மையிலும் மறுமையிலும் மேன்மைகள் கிடைப்பதற்கும்
ஜனனம் மரணம் என்னும் சம்சார விலங்கை விடுவதற்கும்
அவ் விலங்கை விட்டுப் பரம பதம் அடைவதற்கும்
தத் காலத்தில் பகவத் குணங்கள் என்னும் அமுதை உண்டு ஸூகம் பெறுவதற்கும்
குழந்தைகள் ஊமைகள் பித்தர் பெண்கள் நாஸ்திகர் முதலியோரும் மிக்க சிரத்தை பக்தி நம்பிக்கைகளுடன் இத்தை அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்
இப்படி அங்கீ கரிப்பதற்கு வேதங்களும் இல்லை-மூர்க்கர் வேதங்களை எடுத்துக் கொள்வதும் இல்லை
அந்த அந்த குலம் கோத்ரம் முதலியவற்றுக்கு அந்த அந்த வேத சாகைகள் என்று பிரிக்கப்பட்டு இருப்பதினாலும்
ஒரு சாகையையும் யாவரும் இப்படி கிரகிப்பது இல்லையே

வாஸ்ய பிரபாவம் போல் அல்லவே வாசக பிரபாவம்-

இன்றும் சர்வாதிகாரமாக ஸஹஸ்ர நாம பாராயணம் அனைத்துக்கும் பரிகாரமாக செய்வதைக் கண் கூடாகவே காண்கிறோம்
வேத அத்யயனம் செய்யாதவர்களுக்கு இதுவே கை வந்த மருந்தாகக் காண்கிறோம்

———

6- கீதாத்யைகார்த்தைஶ்ச –
பாரத ஸித்தாந்த பூத பகவத் கீதா நாராயணீய
யாந ஸந்தி அக்ர பூஜ உத்தம அநுஶாஸந ப்ரப்ருதி ப்ரதேஶாந்தர தாத்பர்ய
நிஷ்கர்ஷ ரூபத்வேந தத் ஏகத அர்தத்வாச்ச|

ஸ்ரீ மத் பகவத் கீதை முதலியவற்றுடன் பொருள் ஒற்றுமை
பகவத் கீதை
நாராயணீயம்
யான சந்தி பர்வம்
அக்ர பூஜை
உத்தம தர்ம அநு ஸாஸனம்
முதலான அநேக இடங்களிலும் தாத்பர்யத்தை இது சுருங்கக் கோருவதால் அவற்றோடு பொருள் ஒற்றுமை இதுக்கு உண்டு

—–

ஏவமேபி: ஷட்பிர் ஹேதுபி: ப்ரேக்ஷா பூர்வ காரிணாம்
பரம உபாதேய தயா நிர்ணீதம்,
வ்யாஸ தேவஶ்ரவோ தேவ ஸ்தாந நாரத
வாத்ஸ்ய அஶ்ம ஸுமந்து ப்ரப்ருதிபி:
ஸகல வித்யா தேஶிகை : ப்ரஹ்ம த்ருஶ்வபி: தேவ ப்ரஹ்ம ரிஷிபி:

ஸ்வயம் ச பகவதா ஸர்வேஶ்வரேண கீத உபநிஷதாசார்யேண பூர்வேஷாமபி குருணா
புண்டரீக விலோசநேந ஶ்ரோத்ரு கோடி நிவிஷ்டேந
பீஷ்மாத் ஸ்ருத்வா அநு மோதிதம் ஶ்ரீமந் நாம ஸஹஸ்ராத்யாயம் பகவத் குண தத்த்வ
ப்ரதி பத்தய வ்யாகுர்மஹே ||

இவ்விதம் ஆறு காரணங்களாலும்
விவேகத்தோடு கார்யங்களை அனுஷ்டிப்பார்களுக்கு இது எல்லாவற்றிலும் சிறந்ததாகவே நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
எல்லா வித்யைகளுக்கும் ஆச்சார்யர்களும் ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவருமான
வ்யாஸர் -தேவ வியாஸரஸ் -தேவ ஸ்தானர் -நாரதர் வாத்ஸ்யர் -அஸ்மர்-ஸூமந்து முதலான
தேவ ரிஷிகளாலும் -ப்ரஹ்ம ரிஷிகளாலும் சொல்லப்பட்டதும்-

பைலர் –வைசம்பாயனர் யஜ்ஜா வர்க்யர்- ஜைமினி போல்வாரைக் கொண்டே வேத பிரிவுகளை பிரசாரம் )

இனி ஏழாவது பெருமை -ஸர்வேஸ்வரனான கீதாச்சார்யனும் முன்னோரான குருக்களுக்கும் குருவான தாமரைக் கண்ணனுமான ஸாஷாத் பகவானே கேட்பவரோடே கூட உட்கார்ந்து கேட்டு அருளி-அங்கீ கரித்து அருளிய இந்த ஸஹஸ்ர நாம அத்யாயத்துக்கு
பகவத் குணங்களின் தத்வ ஞானம் உண்டாவதற்காக வியாக்யானம் செய்கிறோம்

மிதிலைச் செல்வி –தன் சரிதை கேட்டான் பெருமாள்
இன்பம் பயக்க எழில் மாதரும் தாமும் -மிதுனமாக திருவாறண் விளையிலே கேட்டு அருளினார்கள் அன்றோ

பகவத் குண தத்த்வ–பகவத் குண தர்ப்பணம் இதனாலே திரு நாமம்
தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அங்கு ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்கள்
அஷ்ட ஸ்லோஹி யில் -ஆறு சொல்லி -ஏழாவது தனியாக
தேஹாத்ம பிரமம் நிவ்ருத்தி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி –மூன்றும் ஓங்காரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நமஸ்
அபந்து -ஆபாச பந்துக்கள் நிவ்ருத்தி நாராயண
விஷய நிவ்ருத்தி ஆய -கைங்கர்ய பிராத்தனை
இப்படி ஆறையும் சொல்லி
நமஸ்ஸில் ஆந்திர அர்த்தமான பாகவத சேஷத்வம் ஏழாவது
அதே போல் இங்கும் பிரதானமாக கண்ணன் தானே அமர்ந்து கேட்டது –

————

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே–1-

யஸ்ய த்விரத வக்த்ராயா பாரி ஷத்யா பரச் சதம்
விக்நம் நிக் நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தாமாஸ்ரயே–2-

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்த நாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

————

தத்ர ப்ராகேவ பௌந:புந்யேந தத்ர தத்ர பர தத்த்வ பரேஷு
ப்ரதேஸேஷு அஸேஷார்த- நிர்ணய ஶ்ரவணாத் துஷ்டம் மந்ய தயா
ஸ்வயமப்ருச்சதே ஜநமேஜயாய பரம ஸௌஹார்தாத் அந்யத் குஹ்ய தமம் க்ராஹயந் ஸ்வயமேவ,

ஶ்ரீவைஶம்பாயந உவாச-

ஶ்ருத்வாதர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஶ:| யுதிஷ்டிர: ஶாந்தநவம் புநரே வாப்ய பாஷத || 1 ||

அதில் முதலிலேயே பலமுறை பரதத்வத்தைச் சொல்லுகிற பல இடங்களிலே விசேஷ அர்த்தங்களை
நிச்சயித்துக் கேட்டுத் திருப்தி யானதாக நினைத்துக் கொண்டு இருப்பதனால் வினவாமல் இருக்கும் ஜனமேஜயருக்கு
அவர் இடம் உள்ள பேர் அன்பினால் மற்றொரு மிக்க ரஹஸ்யத்தைத் தெரிவிப்பதற்காக வைசம்பாயனர் தாமாகவே சொல்லாத தொடங்குகிறார்
ஜனமேஜர் வினவினார் என்று இல்லாமல் வைசம்பாயனர் தானே சொல்லாத தொடங்கினார் என்று தொடங்கி இருப்பதைக் காணலாம்

பூமா வித்யை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசம் -இதே போல்
கண்ணன் -ஆறு அத்யாயம் சொல்லி பக்தி யோகம் பற்றி அர்ஜுனன் கேட்க்காமலேயே 7 அத்யாயம் சொல்லி
மீண்டும் 10 அத்யாயம் சொல்லத் தொடங்கியது போல்
மூவர் அனுபவம்

ஶ்ருத்வேத்யாதி|தர்மாந் ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி சோதநா லக்ஷணாப்யுதயநி:
ஶ்ரேயஸ பலாந் ராஜ மோஷ தாந தர்ம ரூபேண பஹூந் |
அஸேஷேண- கார்த்ஸ்ந்யேந,
யே ச யாவந்த: தாவதஶ்ச இத்யர்த:|
பாவ நாநிச தபஸ் தீர்த ஸேவாதீநி ஶுத்தி கராணி ச |
ஸர்வஶ:—–— ஸர்வ ப்ரகாரம்; பலத:அங்கத: ஸ்வரூபத: அதிகார தஶ்ச |ஶ்ருத்வா யுதிஷ்டிர:-
ஸாக்ஷாத் தர்ம ஸூநு:|ஶாந்தநவம் ஶந்தநோர் கங்காயாம் ஜாதத்வேந அபிஜாத தமம்|

ஸ்ரீ வைசம்பாயனர் உவாஸ –சொல்லலானார்
ஸ்ருத்வா தர்மான் –அப்ய பாஷத
யுதிஷ்ட்ரர் -ராஜ தர்மம் -மோக்ஷ தர்மம் -தான தர்மம் போன்ற ஸாஸ்த்ர விஹிதமான தர்மங்களையும்
தவம் தீர்த்த யாத்திரை முதலிய பாவனார்த்தமானவற்றையும்
அவற்றின் அங்கங்கள் செய்யும் முறை -அதிகாரி ஸ்வரூபம் எல்லாவற்றையும் கேட்டபிறகு
பீஷ்மரை நோக்கித் திரும்பவும் வினவலானார்
கேட்டவர் சாஷாத் தர்ம தேவதையின் புதல்வர்
சொன்னவர் சந்தனுவுக்கு கங்கையிடம் பிறந்தவர்
இருவரும் உத்தம குலத்தில் பிறந்தவர்கள்

புநரே வாப்ய பாஷத –
புநஶ்ச பப்ரச்ச | புந:ப்ருச்சா ச பீஷ்மேண
ஆத்மநீநதயா ஸ்வீக்ருதமதம் ஜ்ஞாதும்;
‘ கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ இத்யநந்தரோக்தே 😐
தச்ச ஸதாசார ப்ராவண்யாத் |
ஸந்தோ ஹ்யாசார்யநிஷ்டாம் அந்விஷ்ய தத் ருசி பரிக்ருஹீத மேவ
தத்த்வம் ஹிதம் ச ரோசயந்தே ; ந து ப்ராமாணிகத்வ மாத்கரண ||1 ||

சாதுக்கள் தம் ஆச்சார்யர் உகந்து அனுஷ்டிப்பதையே அனுஷ்டிப்பார்களே யல்லாமல் பிரமாணத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்
ஆகையால் பீஷ்மர் தமக்கு ஹிதமாகக் கொண்டு இருக்கும் ஆசாரத்தை தெரிந்து கொள்ளும் விருப்பத்தினால் திரும்பவும் வினவலானார்-என்றார்-

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் இருக்க வேண்டுமே
பவத பரமோ மத என்று மேலே வருவதால் இது நன்கு விளங்கும்
யுதிஷ்ட்ரர் சதாசார்யத்தில் ஈடுபட்டவர் ஆதலால் இங்கனம் கேட்கலானார் –

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

பயிலும் சுடர் ஒளி மூர்த்தி- நெடுமாற்கு அடிமை கேட்டு- மதுரகவி நிஷ்டை
திரிபுரா தேவி -உடையவர் காட்டும் பரம் பொருளையே ஆஸ்ரயிப்போம்

தத்ரேதம் ஆதாமேவ உதைரிராம—ப்ரேக்ஷாவத்பிஸ் : ப்ரமாணேந பரிச்ச்த்ய
அநுகூலம் ப்ரமேயம் உபாதேயமிதி | தச்ச த்வைதம் வர்ததே உபாயா உபேயாத்மநா |

விவேகிகள் ப்ரமாணத்தைக் கொண்டு -ப்ரமேயத்தை -விஷயத்தை பகுத்து அறிந்து அதில்
அனுகூலமான ப்ரமேயத்தை ஆதரிப்பார்கள் என்று முன்னமே அவதாரிகையில் சொல்லப் பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றுமே அறிய வேண்டுவது-அதுவே உபாயம் உபேயம் இரண்டாகும்
அப்படிப்பட்ட ப்ரமேயம் உபாயம் உபேயம் என்று இரண்டு வகைப்படும்
உபாயம் -சாதனம் -காரியத்துக்கு இன்றியமையாதது
உபேயமாவது ஸாத்யம் -பயன் –

உபேயம் ச ப்ரிய ப்ரிய தர ப்ரிய தம ரூபேண த்ரைதம்|
உபாயஶ்ச ஹித ஹித தர ஹித தம ரூபேண|
தத்ர உபேயஸ்ய ஜந்ம ருத்தி பரிணாமா நித்யத்வாதய:, சேதந தர்மா: க்லேஶ கர்ம விபாகா ஆஶயாஶ்ச கதோஷா:;
குணாஶ்ச தோஷ அஸம்பேத ருசிரத்வ ஸ்தாவரத்வ பூயஸ்த்வ விஶிஷ்டா:
ஸம்வித ஆநந்வ ஐஶ்வர்ய விபூதி விஸேஷாதய:|
உபாயஸ்ய து வ்ய யாயாஸ பூயஸ்த்வ வ்யபிசாரித்வ பல்கு பலத்வாதகயா தோஷா:|
குணாஶ்ச நியத நிரபாய லகு தர பஹு பலேத்வாதய:|

உபாயம் -ஹிதம் ஹித தரம் ஹித தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயம் -பிரியம் பிரிய தரம் பிரிய தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயத்துக்கு பிறப்பு வளர்ச்சி மாறுபாடு அழிவு போன்ற தர்மங்களும்
கிலேசம் கர்மம் -விபாகம் -அதாவது கர்ம பலங்களான -ஜென்மம் ஆயுள் போகம் முதலியவையும்
ஆசயம் -மனத்தின் கண் உள்ள ஸம்ஸ்காரம் முதலிய சேதனர்களுக்கு உரிய தர்மங்களும் தோஷங்களாகும் –

குணங்களோ -தோஷம் கலவாமல் -ருசிரத்வ -அதாவது அழகு அமைந்து அழிவில்லாது மேம்பாடுடைய-பேர் அறிவு ஆனந்தம் ஐஸ்வர்யம் முதலிய விபூதி விசேஷங்களாம்

உபாயத்துக்கு -பெரும் செலவு செய்வதற்கு அருமை கருதிய பயனைப் பயவாமை- சிறு பயனுடைமை ஆகியவை தோஷங்களாகும்

குணங்களோ பயணித்த தவறாது அளித்தல் -அபாயம் இல்லாமை -செய்வதற்கு எளிமை -மிகு பயன் அளித்தல் போன்றவையும்

ஏவம் வித தோஷ ஹாந குணவத்த்வ தார தம்யேந உபாக உபேயயயோ : தர தம பாவ: உபயத்ராபி ஸம் பவதி |
உத்க்ருஷ்ட தமே உத்க்ருஷ்ட உத்க்ருஷ்ட தரயோ : நிக்ருஷ்டவத் வர்ஜநீயத்வமேவ |

உபாய உபேயங்களில் இப்படிப்பட்ட குண தோஷங்கள் ஏறக்குறைய இருப்பதால் தாரதம்யம் உண்டாகக் கூடும்
குணங்களைக் கொள்ளுதலில் மேல் உள்ளத்தை நோக்க கீழ் உள்ளவை குறைந்தவையாகத் தோன்றும்
ஆதலால் உத்க்ருஷ்ட தமத்தை நோக்க உத்க்ருஷ்ட தரமும் உத்க்ருஷ்டமும் நிஷ்க்ருஷ்டங்கள் போலவே விடத் தக்கவையே யாகும்

அசாரம் -அல்ப சாரஞ்ச -சாரம் -சார தரம்- தள்ளி -சார தமம் கொள்ள வேண்டுமே

தத்ர அநிஷ்டேப்ய: இஷ்டேப்யோ அபி நிக்ருஷ்டேப்ய: நிஷ் க்ருஷ்ய உத் க்ருடதமமுபாதாதும் உபாய உபேயௌ ஹை தாரதம்யேந ப்ரஷ்டவ்யௌ |
தௌ ச விவக்ஷாவஸேந ஷோடா விபஜ்ய ப்ருச்சந் யுதிஷ்டிர உவாச, கிமேகமிதி ஶ்லாேக த்வயேந |

ஆகையால் யுதிஷ்ட்ரர்
அநிஷ்டத்தையும்
இஷ்டத்தில் தாழ்ந்தவையையும் -விலக்கி
மிகச் சிறந்த இஷ்டத்தைக் கைக் கொள்ள விரும்பி
உபாய உபேயங்களைத் தாரதம்யப்படி நன்றாகக் கேட்டுத் தெளிய வேண்டும் என்னும் கருத்துடன்
அவற்றை ஆறு விதமாகப் பிரித்து
இரண்டு ஸ்லோகங்களாலே கேட்க்கிறார் –

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப் யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்ச்சந்த ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இங்கு இரண்டு ஸ்லோகங்களில் ஆறு கேள்விகள்
நாலு ஸ்லோகங்களில் ஆறு அவதார ரஹஸ்யங்கள் கண்ணன் கீதையில்

ரஹஸ்ய சிகாமணி -வராஹ சரம ஸ்லோகம் -இரண்டு ஸ்லோகங்களில் ஐந்து அர்த்தங்கள் -மூவர் அனுபவம் இங்கும்

ஸ்வ ஞானம் -ப்ராப்ய ஞானம் -ப்ராபக ஞானம் -மூன்றுமே முமுஷுவுக்கு வேண்டுமே
ஆத்மாவைத் தெரிந்து கொள்வது என்றாலே தேகத்தை விட வேறுபட்டு -அவனுக்கு சேஷம் –
மற்ற இரண்டு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டு
அவனுக்கு பிரகாரமாய் -சரீரமாய் -சேஷமாய் இருப்பவன் என்று அறிய வேண்டுமே
இவற்றையே தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் என்பர் –

முமுஷுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யங்கள் மூன்று-அவற்றில் சொல்ல வந்ததும் இந்த மூன்றுக்கே
இவை ஒன்றுக்கு ஓன்று தொடர்பு கொண்டவை தானே
ஏதத் அந்யத -ஞானம் உதவாதே
தத்வம் பற்றி ஒரு கேள்வி–முதலில்
ப்ராப்யம் பற்றி ஒரு கேள்வி-அடுத்து –
உபாயம் பற்றி நான்கு கேள்விகள் -இதில் தானே பல வழிகளும் -சங்கைகளும் உண்டு -ஆகவே அநேகம்

ஸித்த ஸாத்ய ஸா ஆலம்பன மூன்று வகை உபாயங்கள் உண்டே -இவை பற்றி நான்கு கேள்விகள்

பவத: பரமோ மத: |லோகே-இவற்றை அனைத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கிமேகம் தைவதம் லோகே பவத: பரமோ மத: | –லோகே ஸாஸ்த்ரத்தில் தத்வம் பற்றிய கேள்வி -ஏகம் ஒப்பற்ற ஒப்பில்லா அப்பன் –
ஒத்தால் மிக்கார் இலையாய மா மாயன் -ஏக தைவதம்

லோகே -கிம் வாப் யேகம் பராயணம்-பவத: பரமோ மத: |-பரமமான உபேயம் -லோகே இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

லோகே-ஸ்துவந்த கம் -பவத: பரமோ மத: |-மூன்றாவது கேள்வி
லோகே-கம் அர்ச்சந்த-பவத: பரமோ மத: | -நான்காவது கேள்வி
ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்
கோ தர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்

———

அவதாரிகை

தத்ர உபாயஸ்ய உபேய அர்தத்வாத், ப்ரதாந பூதம் உபேயம் ப்ருச்சந்
தஸ்ய ச தத்த்வ ஶாஸ்த்ரேஷு பர தத்த்வ பரம ப்ராப்யாத்மநா த்வேதா உபதேஶ தர்ஶநாத்,
பர தத்த்வ ரூபம் ப்ருச்சதி –
யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாऽப்யேகம் பராயணம் |

உபாயத்தை அறிவது உபேயத்தை அடைவதற்கு ஆதலின்
காரணமான உபாயத்தை விட்டு
பிரதானமான உபேயத்தை முதலிலே கேட்கத் தொடங்குகிறார்
அது தத்வ சாஸ்திரங்களில்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு வகை யாகக் கூறப்படும்
அவற்றில் பர தத்வ ரூபமான உபேயத்தை முதலில் வினவுகிறார்
கிமேகம் தைவதம் லோகே

கிமேகமிதி|
லோகே இதி ப்ரதி ப்ரஶ்ந மநுஷஜ்யதே ;
பவத: பரமோ மத:
இதி ச ஸிம்ஹ அவலாேகந ந்யாயேந |
யதார்ஹம் ச விபக்தி: விபரிணமநீயா|
லோக்யதே அநேநேதி லாேகே :,
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி ஶரீரம் ஶாஸ்த்ரம்|
ஏகம் –ப்ரதாநம் -ஸமாதிக ரஹிதம்,
’பரமம் யோ மஹத் தேஜ:’,
’தஸ்ய லாேக ப்ரதாநஸ்ய’ இதி ப்ரதி வசந அநு குண்யாத் |
ந ச அயம் ஸ்வரூப மாத்ர பர:
ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய  அபாவாச்ச;

முதலாவது வினா -கிமேகம் தைவதம் லோகே -சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர் வற்ற கடவுள் யார்
லோகே -என்பது ஸாஸ்த்ரம்
இதனை எல்லாக் கேள்விகளிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
தைவதம் என்பது பிரகாசித்தல் முதலிய வேறே மற்று ஒன்றுக்கு இல்லாத பரமேஸ்வரத் தன்மையுடன் கூடியதும்
தத்வ சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்படுவதும்
உமக்கு மிக்க அபிமதமுமானது -என்பது கருத்து-பர தத்வம் பரஞ்சோதி பரமாத்மா பராயணம் -எல்லாமே நாராயணனே –
மேலே வரும் பவத பரமோ மத -என்பதையும் எல்லா வினாக்களில் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
இது ஸிம்ஹ அவ லோகநம்-சிங்கத்தின் நோக்கு –
இடத்துக்கு ஏற்ப வேற்றுமை உருபை மாற்றிக் கொள்ள வேண்டும் –

ஏகம் -என்றது -எண்ணிக்கையும் தனித் தன்மையும் சொல்ல வரவில்லை -தைவதம் சொல்லவே இவை சித்தம்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -தன்னிகர் அற்றவன் -தைவதம் -ஒளி- விளையாட்டு -பரம ஐஸ்வர்யம் -பல அர்த்தங்கள்
இத்தையே-ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய அபாவாச்ச;–

மாம் ஏகம் -இங்கு ஸ்வீ காரத்தில் உபாய பாவம் தவிர்க்கிறது போல் இங்கும்-

ந ஹி கிம்சித் தைவதம் அஸ்வ ரூபம் அநேகம் வாஅஸ்தி, யேந கஸ்யசித் தைவ ஏகத்வம் விஸேஷ:; ததநுகுண ப்ரதி வசந அபாவாச்ச |
தைவதம்– த்யோதநாதி பரம ஐஶ்வர்ய அஸாதாரண குண சிஹ்நிதம் ,
தத்த்வ ஶாஸ்த்ரேஷு ப்ரதி பாத்யம் பவத:கிம் பரமம் மத மித்யர்த:|
அயம் ச ஶாஸ்த்ரேஷு ஸமயேஷு ச ஸர்வாதிகம் தத்த்வம் அப்யுபேயுஷாம் அபி மாயாத்த யௌபாதிக விவர்த பரிணாம விஸேஷ
நிர்வாஹ்ய ஜ்ஞாந ஶத்யாத்ய ஐஶ்வர்யத்வ ஸ்வாபாவிக ஸர்வ ஐஶ்வர்யத் வாததௌ ஸாமாந்யதோ விஸேஷ தஶ்ச
ஹரி ஹர ஹிரண்ய கர்பாதி தத்த்வ பராவர பாவேந விப்ரதிபத்தி தர்ஶநேந

ஸாஸ்த்ரங்களிலும்-ஸமயேஷு-சம்ப்ரதாயம் -அந்த அந்த மதங்களிலும்
அப்யுபேயுஷாம் அபி –பரதத்வம் ஓன்று உண்டு என்று ஒத்துக் கொள்பவர்களும்
ஸர்வேஸ்வரனுக்கு ஞான சக்தி முதலிய ஐஸ்வர்யங்கள்
மாயையின் சம்பந்தத்தால் என்றும்
இயற்கையால் என்றும்
சந்தேகப்படுவதோடு -விசேஷமாக
ஹரி
ஹர
ஹிரண்ய கர்ப்பாதி
தத்துவங்களில் ஏற்றத் தாழ்வு கருதப்படுதலாகிய சந்தேகமும் இருத்தலால்
இவ்விதம் வினவுதற்குக் காரணமும் ஏற்படுகிறது

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-பற்றிய நமஸ்கார ரூப மங்கள ஸ்லோகம் -வேதார்த்த ஸங்க்ரஹம்

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும் பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தி த்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்-அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவ ப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம் மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லா வகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவ ப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சி யுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————–

2- மோஷே தாவத்
ஸ்வரூப -அவித்யா விஸேஷ -வைஸேஷிேக குணாச்சேத -பரமாத்ம ஸாதர்ம்ய – தத் குண ஸம்க்ராந்தி -தச் சாயா பத்த்தி

ஆநந்தாதி ஸ்வரூப ஆவிர்பாவ மாத்ர –தத் கைஙகர்ய ஆவிர் பாவாதி லக்ஷண
விப்ரதி பத்தி தர்ஶநாத் ஸம்திஹாந: பரமம் உபேயம் ப்ருச்சதி– கிம் வாऽப்யேகம் பராயணமிதி|

பரம ப்ராப்யம் என்னும் உபேயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
பலனைச் சொல்லும் சாஸ்திரங்களில் மோக்ஷ விஷயமாக பல சந்தேகங்கள் உண்டாகிற படியால்
எட்டுவித வேறுபாடுகள் -அந்த சந்தேகம் தெளிதல் பொருட்டு -பரம புருஷார்த்தம் எது என்று வினவுகிறார்
கிம் வா அபி ஏகம் பராயணம் -என்று

தைவதம் பராயணமித்யாதி கிம் அந்யதந்யத் உபதிஶ்ய கத,
உத தத்தத வஸ்தா மாத்ர பேதேந ஏகமேவேதி விவேக்தும் வா அபீதி நிபாத த்வயம்
ஏகம் இதி பூர்வ வத் |

பரம் நிர்தோஷ நிரதிஶய மங்கல ஸ்வபாவதயா உத்க்ருஷ்ட தமம் |
அயநம் ப்ராப்யம் |
ஐஹிக ஆமுஷ்மிகேஷு புருஷ அபி லஷணீ யேஷு கஸ்
பரம புருஷார்தோ பவதோ அபிமத இதி | ஏவமுபேயம் த்விதா ப்ருஷ்டம் |

குற்றம் அற்றுத் தன்னிலும் உயர்ந்தது இல்லாத மங்கள ஸ்வபாவமாய் இருப்பதால்
எல்லாவற்றுக்கும் மேலான பரம புருஷார்த்தம் எது
மனிதர்களால் விரும்பப்படுகிற ஐஹிகம் ஆமுஷ்மிகம் என்கிற இவற்றுள் மேலான பரம புருஷார்த்தம்
இன்னது தான் என்று நீர் கொண்டது எது என்பது கருத்து –

வா-விகற்பம் -இதுவோ அதுவோ
அபி -உம்மைத் தொகை இதுவும் அதுவும்-தத்துவமும் ப்ராப்யமும் ஒன்றா வேறா –

நின் கண் வேட்கை எழுவிப்பேன் -எளிமையாக்கி ஆழ்வார்கள் நமக்கு அருளிச் செய்துள்ளார்

இப்படி உபேயம்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு விதமாகப் பிரித்துக் கேட்கப்பட்டது

———–

ஸ்துவந்த: கம் இத்யர்தேந
கம் அர்சந்த:
ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம்
யாரை -ஸித்த உபாயத்தைப் பற்றிய கேள்வி
லகு உபாய -அலகு உபாய ஸித்த உபாயம் -இரண்டு வகை-ஸ்தோத்ரம் லகு -அர்ச்சனை அலகு உபாயம்
யாரை ஸ்தோத்ரம் பண்ணி-கீர்த்திமை பாடிப் போய் போல் –
ஸாத்ய பத பிரயோகம் இருந்தாலும் இது ஸித்த உபாயம் பற்றியே
ஸாத்ய உபாயம் -இரண்டு வகை -இதில் தர்மம் பற்றிக் கேள்வி -யார் இடத்தில் என்ற வினா இல்லையே
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்–இரண்டு வகை

அதோபாய: தத் தச் சாஸ்த்ரேஷு கர்ம ஜ்ஞாந பக்தி யாேகா நாம்
விகல்ப ஸமுச்சய அங்காங்கி பாவாதி விவாதாத் ஸம்ஶயாநேந ப்ரஷ்டவ்ய:|
ஸ ச ஸித்த: ஸாத்ய: ஸாலம்பந ரூபஶ்ச | 
ஸித்தஸ்து–ஆராத்ய மாநதயா பல ப்ரதா தேவதா |
தாம் ச லகு அலகு உபாய ஸாத்ய தயா-த்வேதா விபஜ்ய ப்ருச்சதி–
ஸ்துவந்த: கம் இத்யர்தேந ஸ்துவந்த:கம்- கம் அர்சந்த: ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம் ||2||

உபாயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
உபாயமாவது
அந்த அந்த சாஸ்திரங்களில் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் என்று சொல்லப் பட்டு
அவை தனித் தனி உபாயம் என்றும்
சேர்ந்து உபாயம் என்றும்
ஒன்றுக்கு ஓன்று அங்க அங்கி முறையில் உபாயம் என்றும்
விவாதம் இருப்பதனால் பின்வரும் வினாக்கள் எழுவது அவஸ்யமாகிறது

உபாயம்

ஸித்த உபாயம்
ஸாத்ய உபாயம்
ஸ ஆலம்பன உபாயம் -என்று மூன்று வகைப்படும் –

அவற்றுள் ஸித்த உபாயமாவது -ஆராதனத்தால் பலனை அளிக்கும் தேவதை
அந்தத் தேவதையை லகு உபாயத்தாலும் குரு உபாயத்தாலும் சாதிக்க வேண்டும்
ஆகையால் ஸித்த உபாயம் லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும் (குண ஸங்கீர்த்தனம் லகு உபாயம் )
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும்(உபாஸன ரூபமான பக்தி அலகு உபாயம் ) இரு வகைப்படும் –
அந்தப்படி இரண்டு வகையாகப் பிரித்து வினவுகிறார் –

கம் ஸ்துவந்த: – குண ஸம்கீர்தந மாத்ரேண ஆராதயந்த:, கமர்சந்த:- உபாஸந ரூபயா பக்த்யா பரமம் பூஜநம் குர்வந்த:|
மாநவா:-மநுஷ்யத்வ மாத்ர பரிகரா:|ஶுபம் – த்விவிதம், அப்யுதயநி:ஶ்ரேயஸ ரூபம் |ப்ராப்நுயு:||

3- லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
(ஸ்துவந்த கம் –)
மூன்றாவது வினா
மனிதர்கள் யாரைத் ஸ்துதித்து -ஐஸ்வர்யம் -முக்தி -என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
ப்ராப்நுயர் மானவா ஸூபம் -என்பதை இங்கும் கூட்டுக

4- அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
கமர்ச்சந்த –ஸூபம்
நான்காவது வினா
மனிதர்கள் யாரை அர்ச்சித்து ஐஸ்வர்யம் முக்தி என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
மானவா -மனிதத் தன்மையை யுடையவர் என்று பொருள்
பகவானை ஸ்துதிக்க மனிதத் தன்மையை போதுமானது என்று கருத்து
ஸூபம் என்பது இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் குறிக்கும் –

————–

5- ஸாத்ய உபாயத்தைப் பற்றிய வினா
பரம ஸாத்ய உபாயம் -மிகச் சிறந்த உபாயம் என்றவாறு
அவதாரிகை
வாக்கினாலும் மனத்தினாலும் சரீரத்தாலும் முறையே செய்யப்படுகிற
ஜபம் த்யானம் அர்ச்சனை முதலியவற்றால் தேவதையை வசப்படுத்தும் முறை ஸாத்ய தர்மம் எனப்படும்
அவற்றுள் சிறந்தது எது என்று வினவுகிறார்
கோ தர்ம —பரமோ மத

அத ஸாத்ய: வாங் மந:காய நிஷ்பாத்ய ஜபத்யா நார்சந ப்ரப்ருதி:
தேவதா வர்ஜநாத்மகோ தர்ம: ; தத்ர பரமம் ப்ருச்சதி –
கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கோ தர்ம இதி |
உக்த லக்ஷணாநாம் ஸர்வ தர்மாணாம் மத்யே பரம: –
நிஸ் துல்யாதிக :,
கோ பவத: அபிமத: – ஸுநிஶ்சித்ய ஆபத் தநவத் ஸ்வீக்ருத: ?

ஐந்தாவது வினா
எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக நீர் -நன்கு நிச்சயித்து -ஆபத்து தனம் போலே கொண்டு இருப்பது எது

———-

6- வாசிக ஜப ஆலம்பனத்தைப் பற்றிய வினா
அவதாரிகை ஸ ஆலம்பனம் -ஆலம்பனத்தோடே கூடியது –
ஆலம்பனம் -பற்றுக் கொம்பு -ஆதாரம் -பிடிப்பு
ஸ்தோத்ரம் -மந்த்ரம் -ஸூப ஆஸ்ரயம் -பகவத் திவ்ய மங்கள விக்ரஹம் போல்வன
கந்தம் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு செய்யப்படும் உபாயமாம்
அவற்றுள் வாசிகமான ஜபம் என்னும் ஸாலம்பன உபாயத்தைப் பற்றி வினவுகிறார்
ஜெபமாவது மந்த்ரம் முதலியவற்றை அதற்கு உரிய நியமங்களுடன் ஆவ்ருத்தி செய்வது

அத ஸாலம்பநேஷு
ஸ்தோத்ர மந்த்ர ஶுபாஶ்ரய கந்த புஷ்பாத் யுபகரணேஷு
வாசிக ஜப ஆலம்பநம் ப்ருச்சதி-
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத் ||3||

கிம் ஜபந்நிதி| நியம விஸேஷவந் மந்த்ராத் யாவர்தநம் ஜப:|
“ஜப்யே நைவது ஸம் ஸித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஸம்ஶய:|
குர்யாத் அந்யத் ந வா குர்யாத் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே ||”,

பிராமணன் மற்றக் கர்மங்களை செய்தாலும் செய்யா விட்டாலும் ஜபம் செய்வதினாலேயே ஸித்தியை அடைகிறான்
இதில் சந்தேகம் இல்லை
இப்படிச் செய்பவன் மைத்ர பிராமணன் என்றும் சொல்லப்படுகிறான் -என்றும்

“த்ரவ்ய யஜ்ஞாத் ஜபோ யஜ்ஜோ விஶிஷ்டோ தஶபிர் குணை :|”,
“யஜ்ஞாநாம் ஜப யஜ்ஜோ அஸ்மி”(10-25)
இதி ஜப ஶ்ரைஷ்ட்யாத் மாநஸ காயிக விஷயௌ ந ப்ருச்ச்கயதே |

த்ரவ்ய யஜ்ஜத்தைக் காட்டிலும் ஜெப யஜ்ஜம் பத்து மடங்கு சிறந்தது என்றும்
மநு வசனம் இருத்தலாலும்-

யஜ்ஜங்களுக்குள் நான் ஜெப யஜ்ஜமாக இருக்கிறேன் -என்று பகவத் வசனம் இருத்தலாலும்
மானஸ
காயிகங்களான
மற்ற இரண்டையும் கேளாமல் வாசிகமான ஜெப யஜ்ஜத்தைப் பற்றிக் கேட்க்கிறார்
கிம் ஜபன்–பந்தநாத்

ஜந்து: – ஜநந தர்மா |
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்–ஜந்மேதி ஜரா மரண கர்ப நிரய யாதநாதி: ஸம்ஸாரஸ்ய கார்ய வர்க : ப்ரதர்ஶ்யதே |
ஸம்ஸார இதி ச அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி பந்த ரூப: காரண வர்க 😐
தாப்யாம் பந்தநம் பரம பத ப்ராப்தி ப்ரதிபந்த:, தஸ்மாத் முச்யதே த|
இதம் ச ஸர்வ பல உப லக்ஷணம், ஜபாதே : ஸகல பல ஸாதநத்வஸ்ய வக்ஷ்ய மாணத்வாத் |

ஆறாவது வினா
மனிதன் எதை ஜபம் செய்வதினால் ஜென்மம் சம்சாரம் ஆகிய இவற்றால் உண்டான
பந்தத்தில் நின்றும் விடுபடுவான்
ஜென்மம் -என்றதனால் –
ஜரை மரணம் கர்ப்ப வாஸம் நரக வாஸம் முதலிய கார்ய வர்க்கங்களும் கொள்ளப்படும்
சம்சாரம் என்றதனால்
அவித்யை பூர்வ கர்மம் அதனால் உண்டான வாஸனை அது பற்றி வரும் அவா
அதன் அடியாக வரும் பிரகிருதி சம்பந்தம் ஆகிய காரண வர்க்கங்களும் கொள்ளப்படும் –

அனந்த கிலேச பாஜனம் -நிரதிசய ஆனந்த ரூபத்துக்கு எதிர் தட்டு
இவை பரமபதம் அடைவதற்குத் தடையாக இருப்பது பற்றி பந்தனம் என்று சொல்லப்பட்டன
முஸ்யதே -என்பதனால்
மோக்ஷம் வரையில் உள்ள இதர பலன்களும் கொள்ளப்படும் –

தத்ர ‘அஸேஷேண, ஸர்வஶ:’ இத் யுபக்ரமேண
‘லோகே மாநவா: ஶுபம்’ இத்யாதி விஸேஷணைஶ்ச கால அதிகாரி
அங்க பல ப்ரகார விஸேஷா அபி ப்ரக்ருஷ்டா: ப்ரஷ்டவ்யதயா ஸூசிதா:||3||

அசேஷேண -எல்லாவற்றோடும் என்றும்
ஸர்வஸ -முழுவதும் -என்றும்
தொடங்கி இருப்பதாலும்
லோகே –ஸாஸ்த்ரங்களில் என்றும்
மானவா ஸூபம் -மனிதர்கள் நன்மைகளைப் பெறுவர் என்றும்
விசேஷித்து கூறி இருப்பதாலும்
காலம்
அங்கம்
பயன்
அதிகாரி –ஆகிய இவற்றுள் உத்தமமானவை எவை என்று கேட்டதாகவும் குறிப்பிக்கப் படுகிறது

இமாம் ஷட் ப்ரஸ்நீம் ப்ரதி ப்ருவாணோ பீஷ்ம உவாச |
அத்ர ப்ராயேண வ்யுத் க்ரமேண ப்ரதி வசநம் க்ரமி கோப நிபந்தநம் ச ப்ரதி வசநம் வக்ஷ்யதே |
தத்ர உபாய த்வார கத்வாத் உபேயஸ்ய ப்ரதமம் தம் ப்ரதி விவக்ஷந்
ஆநந்தர்யாத் தத்ரைவ ஆதராதிஶயாச்ச ஜபாலம்பநம் ப்ரதி வக்தி-

இப்படி உபாயம்
லகு உபாய ஸித்த உபாயம் என்றும்
குரு உபாய ஸித்த உபாயம் என்றும்
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்
நான்கு வகையாகப் பிரித்து வினவப்பட்டமை காண்க

மேலே கூறிய ஆறு வினாக்களுக்கும் பீஷ்மர் விடை அளிக்கலானார்
கேட்ட முறை இல்லாமல் மாறி விடை அளிக்கப் படுகிறது –

இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்

நாராயணனே நமக்கே பறை தருவான் -உபதேசத்துக்காய் ஆசை வளர்க்க உபேயம் முன்னாக
அனுஷ்டானம் கறைவைகள் சொல்லி சரண் அடைந்து சிற்றம் சிறு காலை –
தருவான் பறை -இறைவா நீ தாராய் பறை போல் இங்கும்

ஸ்ரீபீஷ்ம உவாச:

ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஶோத்தமம் |
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேணே புருஶ: ஸததோத்தித: ||–4-

தமேவ சார்ச்சயன் நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |
த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||-5-

ஸ்துவன்-ஜெபத்துக்கு அங்கமாக நாம சங்கீர்த்தனம்
ஸ்துவன் மேலும் வரும் அங்கே வேறே அர்த்தங்கள்

புருஶ:-புண்டரீகாக்ஷன் என்று பாஷ்யம் -தன்னையே நமக்கு நல்கும் கற்பகம் -உதார ஸ்வ பாவன்

———

கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –

ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –

கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்

பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரிய தமமான பலனையும் ஹித தமமான உபாயத்தையும் கேட்கிறார்

——————

1- வாசிக ஜப ஆலம்பந வினாவுக்கு விடை
உபாயத்தைக் கொண்டு உபேயத்தை அடைய வேண்டுமாகையாலே முதலில் உபாய விஷயமான கேள்விக்கு விடை அளிக்கிறார்
அந்த வினாக்களுக்குள் கடைசியில் கேட்ட ஜப ஆலம்பந வினா சமீபத்தில் இருக்கையாலும்
தமக்கும் அதில் மிக விருப்பம் இருக்கையாலும்
அதற்கு முதலில் விடை அளிக்கிறார்
பீஷ்மர் சொல்லலானார் –ஜகத் பிரபும் —-சததோத்தித–

பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ : ஸததோத்தித:||4||

ஜகத் ப்ரபுமிதி|
ஜகதோ ஜங்கம அஜங்கமஸ்ய ப்ரபும் ஸ்வாமிநம் |
யதா மநுஷ்யேப்யோ தேவா: ஐஶ்வர்ய பரிசர்யாப்யாம் அதிகா :
ஏவம் ஏதேஷாம் அபீதி தேவ தேவம் |
அநந்தம்—ஸர்வதோ அநவச்சேத்ய வைபவம் –புருஷோத்தமம்- பரம உதாரம், (அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
நாம ஸஹஸ்ரேண- ஜப ஆலம்பநீ க்ருதேந;

ஸ்துவந் ஸ்துவந்நிதி
“லக்ஷண ஹேத்வோ :” இதி ஹேதௌ ஶத்ரு ப்ரத்யய:|ஸர்வ து:காதிகோ பவேத் இத்யநேந ஸம்பந்த:|
ஸ்தவநம் ஸர்வ துக்க நிவர்தகம் இத்யர்த:|

க ஏவம் ஸ்யாத் ? புருஷ சேதந:|கதம் பூத:?ஸததோத்தித: – நிரந்தரம் உத்யுஞ்ஜாந:|
பகவத் ஸ்துதி சிந்தாத் யவிச்சே தஸ்ய பரம ப்ரிய ஹிதத்வாத்
தத் விச்சேதஸ்ய வைஶ ஸத்வாச்ச ஶ்ரூயதே ஹி –(பிரியமாயும் ஹிதமாயும் இருப்பதால் இடையூறு வந்தால் பெரும் துன்பம் வருமே -குதூகலமாக சொல்ல வேண்டுமே )

“யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந் அத்ருஶ்யே
அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே |
அத ஸோ அபயம் கதோ பவதி |யதா ஹ்யே வைஷ ஏதஸ்மிந் உதர மந்தரம் குருகத |
அத தஸ்ய பயம் பவதி” இத்யாதி |

(அருகில் போக போக பயம் நீங்கி விலக விலக பயம் மிக்கு வருமே
ஆர்வம் தொழ குனிப்பார் அமரரால் தொழப்படுவாரே )

உபப்ருஹ்ம்பதே ச “யந் முஹூர்த க்ஷணம் வா அபி வாஸு தேவோ ந சிந்த்யதே |
ஸாஹாநி: தந் மஹச் சித்ரம் ஸா ப்ராந்தி: ஸா ச விக்ரியா ||”,

“வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:|
ந ஶௌரி சிந்தா விமுக ஜந ஸம்வாஸ வைஶஸம் ||”,

(அக்னி கூண்டுக்குள் இருந்தாலும் தேவலை -சவுரி நினைப்பார் உடன் கூட இருப்பது கடினம்)

“ஏகஸ்மிந் நப் யதி க்ராந்தே முஹூர்தே த்யாந வர்ஜிதே | தஸ் யுபிர் முஷி தேநேவ யுக்த மாக்ரந்தி தும் ப்ருஶம் ||” இதி ச | ஏவம் ஸாத்யேஷு
ஜபஸ் யாலம்பந முக்தம் ||


ஆறாவது கேள்வி ஜெபத்தைப் பற்றியதாகையாலும்
இது அதற்கு விடை யாகையாலும்
ஸ்துவன் என்பதற்கு -ஸா ஆலம்பந உபாயத்துக்கு அங்கமான ஸ்தோத்ரம் -ஜபம் -என்றே பொருள் கொள்ள வேண்டும்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண –என்று சேர்த்துச் சொன்னமையும்
நாம ஸஹஸ்ரேண என்பதற்கு ஜெபத்திற்கு ஆலம்பனமாக ச் செய்யப்பட்டவை என்று
பாஷ்யத்தில் விளக்கம் கூறி இருப்பதும்
ஸ்துவன் என்னும் சொற்களுக்கும் வேறு பொருள் கூறி இருப்பதும் இதனை நன்கு விளக்கும்
ஜபம் என்பது மந்த்ரம் முதலியவற்றை பலமுறை நியமத்துடன் சொல்லுவதாகையாலும்
பொதுவாகையால் ஸ்துதி செய்வது என்று இல்லாமல் இங்கே ஆயிரம் நாமங்களினால் ஸ்துதி செய்வது என்று இருப்பதாலும்
ஜப பரமாகவே பொருள் கொள்ள வேண்டும்

சங்கர பாஷ்யத்திலும் இதனை ஆறாவது வினாவிற்கு விடையாக
ஆயிரம் நாமங்களினால் ஸ்துதித்து என்றே கூறி இருப்பதும் காண்க –

மற்ற விடைகளில் கேள்விகளில் உள்ள சொற்களையே வைத்துக் கூறி இருத்தலாலும்
ஆறாவது கேள்வியில் உள்ள ஜபம் என்ற சொல்லை வைத்து விடை கூறப்படாமையாலும்
விடைகளில் முதலில் உள்ளது இன்ன கேள்விக்கு விடை என்று மூலத்தில் கூறப்படாமையாலும்
பாரிசேஷ நியாயமாக இதனை ஆறாவது கேள்விக்கு விடையாகக் கொண்டனர் போலும் –

எம்பெருமானைத் த்யானித்தலும் ஸ்துதி செய்தலும் இடையூறு இன்றி நடக்குமாகில்
அவை மிக்க பிரியமாகும் ஹிதமாயும் இருக்கும் என்றும்
நடுவில் இடையூறு நேர்ந்து தடைப்படுமாகில் மிக்க வருத்தத்தைத் தரும் என்றும் ஸாஸ்திரங்கள் சொல்லுகின்றன –

இவ்விதம் ஸாத்யமான உபாயங்களுள் ஜபம் என்னும் ஸா ஆலம்பன உபாயம் சொல்லப்பட்டது –

———-

4-சித்த உபாயத்தைப் பற்றிய விடை
அவதாரிகை

அர்சந ஸ்தவ நயோரேவ பரம தர்மத்வேந விவக்ஷி தத்வாத் தர்ம விஷயம்
பஞ்சமம் ப்ரஶ்ந முல்லங்கய ப்ரதமம் அர்சநீய ஸ்தோதவ்ய விஷயௌ
சதுர்த த்ருதீயௌ ப்ரதி வதந் அர்ச்ய தமம் தாவத் ஸ அர்சநா ப்ரகாரம் ஆஹ–

அர்ச்சனையும் ஸ்தோத்ரமுமே பரம தர்மம் என்று சொல்வது பீஷ்மருக்கு விருப்பமாகையாலே
தர்ம விஷயமான ஐந்தாவது கேள்விக்கு விடை கூறாமல்
அர்ச்சனை விஷயமாகவும் ஸ்தோத்ர விஷயமாகவும் உள்ள
நான்காது மூன்றாவது கேள்விகளுக்கு விடை கூறத் தொடங்கி
அர்ச்சிப்பதற்கு மிக்க தகுதி யுடையவன் எவனோ அவனை அர்ச்சிக்கும் முறையோடு சொல்கிறார்

தமேவ ச அர்சயந் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் |
த்யாயம் ஸ்துவந் நமஸ் யம்ஶ்ச யஜமாநஸ்த மேவ ச ||5||

அலகு உபாய -ஸாத்ய ஸித்த வினாவிற்கு விடை
அவதாரிகை
கீழ்ச் சொன்ன ஜெபத்துக்கு எவன் விஷயமோ அவனே அர்ச்சிக்கத் தகுந்தவர்களுக்குள் சிறந்தவன்
என்பதை பல பிரமாணங்கள் காட்டி உறுதி செய்கிறார்
தமேவ அர்ச்சயன் –யஜமான -கிம் அர்ச்சயன் கேள்விக்குப் பதில்

யஜமாநஸ்-மதன் யாஜி -யஜிப்பவன் -என்ற அர்த்தம்
மன் மநா பவ மத் பக்தா மத் யாஜி மாம் நமஸ்குரு -அதே நாலும்
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் இங்கு –

தமேவேதி யஜமாந இத்யந்தேந | உக்த ஜப ஆலம்பந விஷய ஏவ
அர்ச்ய தமோ அபி இத்ய வதாரயதி – தமேவ சேதி|
யதாஹு: — “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும் |
அர்ச்யம் அர்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்து மர்ஹத ||”,

(அக்ர பூஜை கண்ணனே அனைத்தும் நிரம்பியவர் -அர்ச்சிக்கத் தக்கவன் -ஸபா பர்வம்
சஹா தேவன் -இவனைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை)

“தஸ்மாத் பூஜ்ய தமம் நாந்யம் அஹம் மந்யே ஜநார்தநாத்”,
“ப்ரஹ்மாணம் ஶிதி கண்டம் ச யாஶ்சாந்யா தேவதா:ஸ்ம்ருதா:|
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் ||” இத்யாதி;

(அல்ப அஸ்த்ர பலம் மற்றவர்)
“அந்தவத்து பலம் தேஷாம்” (7-23)இதி ச |

புருஷம் – புண்டரீகாக்ஷம்|
அவ்யயம் – ஸதா அநுபவேதி அபி அநுரூப அக்ஷய உத்தர உத்தர குண ஸம்ஸ்தவம் ;
அர்சயந்—தத் பரி சரண ரூபம் பக்தி யோகம் உபாததாந:அதிகாரீ
நித்யம் “மச் சித்தா மத் கத ப்ராணா:போதயந்த பரஸ்பரம் ”(10-9)(திருநெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் இவற்றையே சொல்லும் )
இதி ப்ரக்ரியயா அந்யதா க்ஷணமபி ஸ்தாதுமஶக்நுவந் |

கதமர்சயந் ? பக்த்யா – ஸ்வாமிநி தாஸஸ்ய அநுராக மயீ ஸ்திதி: பக்தி:; தயா இத்தம் பூத:|
புநஶ் ச கதம் ?

த்யாயந்-மாநஸம்-அவிச்சிந்ந அம்ருத தாரா காரம் நிஸ் சேஷ ஸம்ஸார தாப த்ரய நிர்வாபண-பகவத் குண சிந்தநம் குர்வந் |

நான்காவது வினாவுக்கு விடை
செந்தாமரைக் கண்ணரும்-(புருஷன் என்பது மூலம் -புண்டரீகாக்ஷம் என்பது பாஷ்யம் -)
இடை விடாது அனுபவித்தாலும் குறைவு படாதவைகளும்
அவருக்கே உரியவைகளும்
மேன்மேலும் வளருகின்றவைகளுமான திருக் கல்யாண குணங்களை யுடையவருமான பரம புருஷரையே
எக்காலமும் அடிமை பூண்டு
தனக்கு ஸ்வாமி என்னும் ப்ரேமையுடன் பக்தி யோகத்தால் அர்ச்சயன் -உபாஸனை செய்தும்

மனத்தில் இடைவிடாமல் பெருகுகின்ற அம்ருத தாரை போலே ஸூகமாய் இருப்பதும்
சம்சாரத்தினால் யுண்டான ஆத்யாத்மீகம் முதலிய தாப த்ரயங்களையும் அடியோடு போக்குவதுமான பகவத் குணத்தை
த்யாயன் –த்யானம் செய்தும்-

மேலும் வாயாலும் ஸ்துவன் -மனத்தினால் சிந்திக்க -வாயினால் பாடி இங்கு

புநஶ்ச கதம் ? ஸ்துவந்– வாசிகம் ச தாத்ருஶம் ததநுபவ ஜந்ய ஹர்ஷ ப்ரகர்ஷ புலகித ஶரீரம்
பாஷ்ப கத்கத கண்டம் தத் குண ஸம்கீர்தநம் ஸமீம்ஹமாந:|

அந்த தியானத்தினால் யுண்டான சந்தோஷ மிகுதியால் சரீரத்தில் புளகம் அடைந்து
ஆனந்த பாஷ்பத்தால் சொல் எழாமல் தொண்டை தழு தழுத்து அந்தக் குணங்களையே
ஸ்துவன் -ஸங்கீர்த்தனம் செய்தும்

புநஶ்ச கதம்? நமஸ்யந் -அத்யந்தம் ப்ரஹ்வீ பவந் |
பக்தி பராதீநதயா பாஹ்யாந்தர ஸகல கரணை :
நிர் மமத்வாவ நம்ரை : ஆத்மீயை : ஶரீரேண வசஸா ச ஸஹ ஸர்வம் மதீயம்
த்வதீயம் த்வமேவ க்ருஹாணேதி பகவத் பாத பத்மயோ : ஆத்மாநம் அஹம் மாந மலீமஸம் ஸமர்பயந் இத்யர்த:|

ப்ரஹ்வீ பவந்-வணக்குடை தவநெறி -உள்ளே வணக்கம் எண்ணம் வேண்டுமே

பக்தி மேற் கொண்டு -வணக்கமுற்று -மமகாரத்தை ஒழித்து —
தேகம் இந்திரியங்கள் மனம் வாக்கு ஆத்மா ஆகிய என்னுடையவை எல்லாம் உம்முடையவையே தாம்
நீரே அங்கீ கரித்து அருளுக என்று
அஹங்காரத்தால் தோஷப்பட்டு இருந்த தன்னைப் பகவான் திருவடிகளிலே
நமஸ்யன் -சமர்ப்பணம் -செய்தும்

மாம் மதீயம் நிகிலம் சேதன அசேதனாத்மகம் -தேசிகன்
யானும் நீயே என்னுடைமையும் நீயே

புநஶ்ச கதம்? யஜமாந:- தேவ பூஜநமாசரந்;
ஸ்வ விஷயீகார மஹா உபகாரா அநுரூப ப்ரத் யுபகாரா தர்ஶந புவா ஸம்ப்ரமேண
அக்ருத்ரிம பக்த் யுபஹ்ருத ப்ரயத மநோஹர அர்க்ய புஷ்ப
மதுபர்க ப்ரபத்த யௌபசாரிக – ஸாம்ஸ்பர்ஶிக
ஆப்யவஹாரிக ரூப பாேக அநுரூப போக அநு பூர்வ்யா தேவ ஸமாராதநம்

அஸாதாரணம் அத்யந்தம் ஆதரேண குர்வாண இத்யர்த:|

ஏவம் வத்த:ஸர்வ து:காதிகோ பவேதிதி||5||

அவர் தன்னை அங்கீ கரித்த மஹா உபகாரத்துக்குத் தக்கபடி ப்ரத்யுபகாரம் ஒன்றும் காணாமையாலே உண்டான பரபரப்போடும்
பேர் உதவிக் கைம்மாறு செய்ய ஒன்றும் இல்லையே இங்கும் அங்கும் -முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

உண்மையான பக்தியோடும்
சேகரிக்கப் பட்டனவும்
பரிசுத்தமும் ரம்யமுமான அர்க்யம் புஷ்ம் மது பர்க்கம் முதலிய
ஓவ்பசாரிகம் –உபசாரத்துக்கு ஆகவும் –
ஸாம் ஸ்பர்ஸிகம் -தொடுவதற்கு இனிமையான சந்தனம் புஷ் பாதிகள்
அப்யவஹாரிகம் –உள் கொள்ளத் தக்க உணவுப் பொருள்கள்
என்று சொல்லப் பட்டனவும் -அவருடைய போகத்துக்கு ஏற்றனவுமான போக உபகரணங்களைக் கொண்டு
முறைப்படி மிக்க ஆதரவோடு அவருக்குத் திரு வாராதனம் செய்பவன்
எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்

அயமேவ பக்தி யோக : முக்தி மஹாபத: த்ரய்யந்தேஷு சிந்த்யமாந: ப்ரத்யபிஜ்ஞாயதே |
ததா ஹி வர்ணாஶ்ரம தர்மை : ஆராதுபகாரகை :
ஶமதமாதிபி: ஆத்ம குணை : ஸந்நி பத்ய உபகாரகைஶ் ச அங்க ஜாதை :
அபிநிஷ்பாத்யம் வேதந த்யாந த்ருவாநுஸ்ம்ருதி
விகவே ஜாதி பத பர்யாய கோசர ஆந்தர ப்ரதீதி ஸந்ததிபி: சித்த வ்ருத்திபி:
அவ்யவஹித அநவரத ப்ரவாஹ அஸக்ருத் ஆவ்ருத்த ஸ ஆதர ப்ரத்யய ஸம்ஸ்கார ப்ரசய கடித படுதர ப்ரத்யக்ஷ
ஶிரஸ்கம், தத் தத் ஸதாநந்த புருஷ உபகோஸலாதி ஸம்ஜ்ஞக பர வித்யா வ்யவஸ்தித குண உப ஸம்ஹார மர்யாதம்
ப்ரஹ்ம உபாஸநம் பகவாந் பாதராயண:“

இந்த பக்தி யோகமே முக்திக்கு –மஹாபத-ராஜ மார்க்கம் என்று வேதாந்தங்களில் கூறப்படுவதாக் காணப்படுகிறது என்று கூறி
அதற்கு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களில் இருந்தும் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன
பக்தி உபாஸனை ஸேவை -ஒரே பொருள் சொற்கள் -ஸேவா பக்தி உபாஸ்த்தி -நிகண்டு

வர்ணாஸ்ரம தர்மம்
அதனால் ஷாந்தி தமம் சமம் வர வர
அதனால் த்யானம் கிட்டும்
அதனால் மேலே உபாஸனம் -பக்தி -படிக்கட்டு

இந்த உபாஸனம் அடிமையை ருசி யுள்ளதாய் இருக்கும் என்பதும்
பக்திக்கு நாம ஸங்கீர்த்தநாதிகள் சரீர ஸ்தானம் என்பதும்
இந்த பக்தியே சர்வ சாஸ்திர அர்த்தங்களிலும் ஸாரமானதாலும்
பரம ரஹஸ்யம் என்று விளக்கப் பட்டுள்ளன –

தமேவம் வித்வாந்”,“ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”,
“யஜ்ஜேந தாநேந தபஸா அநாஶகேந”,
“ஶாந்தோ தாந்த:”, இத்யாதி த்ரய்யந்த வசநாநி,

“ஸர்வ அபேக்ஷா யஜ்ஞாதி ஶ்ருதே : அஶ்வவத்”,
“ஶம தமாத்யுபேத: ஸ்யாத்”,
“ஆவ்ருத்திர் அஸக்ரு துபதேஶாத்”(ப்ரஹ்ம ஸூத்ர-4-1)
இத்யேவம் ப்ரகார ப்ரஹ்ம ஸூத்ர ந்யாயை : மதித்வா மோக்ஷ ஸாதநம் நிரணைஷீத் ||

வாக்ய காரஶ்ச “வேதநம் உபாஸநம் ஸ்யாத் தத் விஷயே ஶ்ரவணாத்” இதி |
இதமேவ உபாஸநம் விபக்த்ரிமம் பக்தி: இத்யுச்யதே ,நாந்யத் |

உபாஸனமும் பக்தியும் ஒன்றே -மூன்று காரணங்கள் மேல் காட்டுகிறார்

பலமும் -செய்யும் வடிவம் ரூபமும் -விதி வாக்கியம் சோதன வாக்கியம் ஒன்றாக இருப்பதால்

குத:?ஸம்யாேக ரூப சோதநாக்யா விஸேஷாத் | ஜ்ஞாப்யதே
ஹ்யுபாஸநஸ் யேவ பக்தேரபி மோக்ஷ லக்ஷணேந பலேந ஸம்யாேக:|

யதா– “ந ஸம் த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்|
ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்தோ ய ஏநம் விதுரம் ருதாஸ்தே பவந்தி ||”
இதி |ஹ்ருத் இதி பக்தி:; ஶ்ருத் யந்தரேண ஸ்ம்ருதி பிஶ்ச “ந ஸம்த்ருஸே திஷ்டதி” இத்யுபக்ரம்ய
“பக்தயா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஜ்ஞாந ஸ்வரூபம் பரிபஶ்ய தீஹ” இதி ஹ்ருச் சப்த ஸ்தாநே பக்தி பத ப்ரயாேகாத் |

(கண்ணால் பார்க்க முடியாது -மனிதர் ஹ்ருதயத்தால் -பார்த்தவன் அம்ருதத் தன்மை அடைகிறான்
ஹ்ருதயம் -பக்தி உபாசனம் வேறே இடத்திலும் உண்டே)

யதா ச “புருஷஸ் ஸ பர: பார்த பக்தயா லப்யஸ் த்வநந்யயா”,(8-22)
“பக்தயா த்வநந்யயா ஶக்ய:”,
“பக்த்யா மாமபிஜாநாதி”,
“பக்த்யா அவிசிந்நயா முக்தி:” இதி ஆங்கிரஸ ஸ்ம்ருததௌ|

வைஷ்ணவே தர்ம“பரமாத்மநி கோவிந்தே பக்திரவ்யபி சாரிணீ |
ப்ரயச்சதி ந்ருணாம் முக்தி॒ம் மாதே அபூத்–அத்ர ஸம்ஶய:||”,

“யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா: புராணம் புருஷோத்தமம் |
ப்ராப்நுவந்தி ஸதா காமாநிஹ லோகே பரத்ர ச ||

அமாேகாஸ்தே பவிஷ்யந்தி பக்தி மந்தஶ்ச யே நரா:||” இதி ஶ்ரீமதி ராமாயணே |

ஶ்ரீவாமநே , “யேஷாம் விஷ்ணு: ப்ரியோ நித்யம் யே விஷ்ணோ : ஸததம் ப்ரியா:|
ந தே புந:ஸம்பவந்தி தத் பக்தாஸ் தத் பராயணா:||” இதி |

ரூபம் ஸ உபயத்ர புண்டரீகாக்ஷம் ப்ரஹ்மைவ|

ஸோதநா ச உபாஸ்ஸ்வ பஜஸ்வேதி |
உபாஸ்தி பஜதீ ஹி ஸேவா விஸேஷ விஷயௌ|
அத ஏவ நைகண்டுகா :“ஸேவா பக்தி: உபாஸ்தி:” இதி |

லைங்கமார் கண்டே யயோ
“பஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம் பரிகீர்தித:|
தஸ்மாத் ஸேவா புதை : ப்ரோக்தா பக்தி ஶப்தேந பூயஸீ ||” இதி|

உபாஸ்யஸ்ய பகவதோ நிரவத்ய மஹா குணத்வாத் நிஸ் ஸீம ப்ரீதி ரூபம்
நிர் வ்யாஜ ஸ்வாம்யாத் தாஸ்ய ஏக ருசி கர்பம் ச இதமேவ உபாஸநம் விவிச்யத இதி பக்தித்வ வ்யபதேஶ:|

ஏவம் விதம் ப்ரியத்வம் ஆஶ்ரித்ய ஹி
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத் யர்தம்”,(7)
“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”,
“துஷ்யந்தி ச ரமந்தி ச”,
“நாத யோநி ஸஹஸ்ரேஷு”,(விஷ்ணு புராணம் -என்நின்ற யோனியில் பிறந்தாலும் இடைவிடாத பக்தி வேண்டும் )
“யா ப்ரீதி: அவி வேகநாம்”-(விஷயாந்தர பிராவண்யம் லோகம் வைப்பது போல் _-இதி ஶ்லாேக த்வயம்,(முதல் அம்சம் -18-19)

“தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸம்ஸ்தித:”,
“தந் நாம ஸ்மரணோத் பூத புலகோ திதி புங்கவ:”(ப்ரஹ்லாதன் பிரார்த்தனை )

இதி ஶ்ரீவிஷ்ணுதத்த்வே
“ஸேவா பக்திஸ் ஸமாக்யாதா ஜ்ஞாந வாஸந யாக்ருதா | உத்பந்நாயாம் ததஸ் தஸ்யாம் ஸ்நேஹ பாவ: ஸ்வயம் பவேத் ||” இதி |
“பரமாத்மநி யோ ரக்கதா விரக்தோ அபரமாத்மநி |
ஸர்வேஷணா விநிர்முக்: ஸ்ஸ பைக்ஷம் போக்தும் அர்ஹதி” இதி |
“ஸ நோ தேவ: ஶுபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து” (தைத்ரியம் )இத்யாத் யுபாஸந விதிஷு வசநாநி ப்ரவ்ருத்தாநி ||

தாஸ்யைக ருசி கர்ப ஜ்ஞாபகாநி ச “மாமநுஸ்மரந்”, “பார்த அநுசிந்தயந்”,
“க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம்” இத்யாதீநி |
அநுரித்யயம் நிஹீந அர்தோ ஹி ஜ்ஞாப்யதே தஜ்ஜ்ஜை 😐
நிஹீநத்வம் சாஸ்ய ஸ்வாபாவிகம் தாஸ்யம்,
தத் அநுஸந்தாந கர்பம் உபாஸநம் அநு ஸ்மரணம் |

ப்ரீதி சேவா அநு ஸ்ம்ருதி வர வர பிராயச்சித்தம் ஆகும்
அநு ஸ்மரணம் -தொடர்ந்து என்றும் -தாஸ பாவத்துடன் என்றும் இரண்டு அர்த்தங்கள்

பக்தேஶ்ச கீர்தநாதி ஶரீரத்வம்
“ஸததம் கீர்தயந்த:”,
“மந்மநா பவ” இத்யாதௌ வ்யக்தம் |

அஸ்யா ஏவ ஸகல ஶாஸ்த்ரார்த ஸாரத்வேந பரம குஹ்ய தமத்வம் ச
“இதம் து தே குஹ்ய தமம்”,(9)
“யஜ் ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யத்”,
“ஸர்வ குஹ்ய தமம் பூய:” இத்யாததௌ தர்ஶிதம் |
அலம் ப்ரஸஜ்ய ||

மேல் சொன்னால் விரிவடையும் என்று பிரமாணங்களை அருளிச் செய்வதை நிறுத்துகிறார்

————

அஞ்சாவது -அஞ்சும் படி உள்ளதே -மேல் எளிதான உபாயம்
லகு உபாய சித்த ஸாத்ய உபாயம் மேல் பார்ப்போம்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கீதாச்சார்யன் அருளாலே ஆழ்வார்கள் சரணாகதி சொன்னது போல்
கீதையில் அங்க பிரபத்தி மாம் ஏகம் –இத்யாதி அருளிச் செய்தானே

3- லகு உபாய –ஸாத்ய ஸித்த உபாய வினாவிற்கு விடை
இந்த பக்தியானது பல ஜென்மங்களுக்குப் பிறகு ஞானவானாகி என்னை அடைகிறான் என்பது முதலாக
ஸாஸ்த்ரங்களில் சொல்லியபடி அநேகம் ஆயிரம் ஜென்மங்களில் சம்பாதித்த புண்ய பரிபாகத்தால்
எல்லாப் பாபங்களையும் போக்கிக் கொண்டவர்களுக்கும்
நெடுநாள் இடைவிடாமல் உபாஸிப்பதால் மாத்திரம் உறுதிப்படுகிறது
அப்படியானால் ஸாஸ்த்ரத்தில் சொன்ன எந்த உபாயத்தையும் அனுஷ்ட்டிக்கத் திறமை இல்லாத பிராணிகளுக்கு என்ன கதி
என்கிற பயத்தைப் போக்குவதற்காக லகு உபாயத்தைக் காட்டக் கருதி
மூன்றாவது கேள்விக்கு விடை கூறுகிறார்
எல்லா விதத்தாலும் புருஷோத்தமனே ஸ்தோத்ரத்துக்குத் தகுந்தவன் என்கிற அபிப்ராயத்தால்
இதர தேவதைகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தை
அநாதி நிதனம்
விஷ்ணும்
ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம்
ப்ரஹ்மண்யம்
ஸர்வ தர்மஞ்ஞம்
லோகாநாம் கீர்த்தி வர்த்தனம்
லோக நாதம்
மஹத் பூதம்
ஸர்வ பூத பவோத் பவம்
என்கிற பத்து குணங்களால் காட்டுகிறார்
தமேவச –அநாதி நிதனம் — –ஸர்வ துக்காதிகோ பவத்

ஹந்த! இயம் பக்தி:
“பஹூநாம் ஜந்ம நாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யே ”,
“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” இத்யாதி ப்ரகாரேண(தபோ ஞான சதாப்தி நராணாம் ஷீண பாபேந-பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் போகும் விஷ்ணு தர்மம் -பல்லாயிரம் பிறவிகளுக்குப் பின் )
பஹு தர ஜந்ம ஆர்ஜித ஸுக்ருத் பரிபக்வ ஷயாணாம்
தீர்க கால நைரந்தர்ய ஸேவிதா த்ருட பூமி:பவதீதி,
ஶாஸ்த்ரீய ஸர்வ உபாய தரித்ராணாம் ப்ராணிநாம் கா கதிர் இதி பயம் அபநேதும் லகூபாயம் தர்ஶயந்(இதில் இருந்து கீழ் அலகு உபாயத்துக்குப் பதில் -இது மூன்றாம் கேள்வியான லகு உபாயத்துப் பதில்-இயன்றவரை ஸ்தோத்ரம் போதுமே )

ஸ்துவந்ந: கம்’ இதி ததீயம் ப்ரஶ்நம் ப்ரதி வக்தி
தமேவ இத்யாதி ஸர்வ பூத பவோத் பவம் இத்யந்தேந|(ஆறாவது ஸ்லோகம் தொடங்கி ஏழாவது ஸ்லோகம் வரை )

அஸ்யைவ ஸர்வதோ முகம் ஸ்துதி யோக்யத்வம்
அபிப்ரயம் ஸ்தத் அபேக்ஷயாஸ்
அபேக்ஷிக க்ஷுத்ர தேவதாந்தராதி வ்யாவர்தகை : அநாதி நிதநத்வாதிபி: தஶபி: விஶிநஷ்டி –

——–

அநாதி நிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||–6-

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |
லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||–7-(பத்து பெருமைகளைக் கொண்டவனை நித்தியமாக ஸ்தோத்ரம் பண்ணி )

அநாதி நிதநம் —தஸ்மாத் அகலா உபாதிகம் உபகாரிணம் |(முதல் முடிவும் இல்லாமல் காலத்தால் அபரிச்சேதம் )
விஷ்ணும்-அதேஸ உபாதிகம் |(தேசத்தால் பரிச்சேதம் இல்லாதவன்-கரந்து எங்கும் பரந்துளன் )
ஸர்வ லோக மஹேஶ்வரம் — ஸ்தோத்ரு-மநோரத பூரண பர்யாப்த மஹா விபூதிகம்|(நியமன ஸாமர்த்ய-அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
லோக அத் யக்ஷம்-தத் உசித நிருபாதிக அநு ஸந்தாநம் |(உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி )
ப்ரஹ்மண்யம் —-ப்ரஹ்மணோ அநந்த ஶாகாய வேதாய ப்ரபிபாத்ய தயா ஹிதம் ;அத ஏவ உத்காடித ஸ்துதி விஷயம்|(எளிமையாக ஸ்தோத்ரம் பண்ண விஷயம் ஆகிறான் )

ஸர்வ தர்மஜ்ஞம் —அத ஏவ ஸ்வ ஸ்துதி பரம தர்மஜ்ஞம்|
லோகாநாம் கீர்தி வர்தநம் —ஸர்வ லாேக ஆஶ்ரயிணாம் ஸ்தோத்ரு ப்ரப்ருதீநாம் ஆத்மந இவ “யம் ஸ்துவந் ஸ்தவ்ய தாமேதி”
இதி ப்ரகாரேண அஸேஷ லோக வேத ப்ரஶஸ்ய கீர்தி காரணம்|(தனக்கு நிகராக ஸ்தோத்ரம் பண்ணத் தகுதியாக்கி அருளுகிறார் )
லோக நாதம் —-லாேகா நாம் ஸ்வாமிநம்;-அத: ஸ்துத்யாதி ஸர்வ பரிசரண அர்ஹம் |
மஹத் பூதம் –-ஐஶ்வரேண பரம மஹத்த்வேந ஸ்வரூப அநுபந்திநா யுக்தம் ; அத: அக்லேஸேந ஸ்தோத்ர மாத்ரேண ஸ்வாராத்யம் |
மஹாந்தோ ஹி ஸ்வ அநுக்ரஹ ஸம்வாத ஸூசந மாத்ரேண ஹ்ருஷ்டா:, ந பஹு வாஞ்சந்தி |

மூன்றாவது வினாவிற்கு விடை
ஆதியும் அந்தமும் இல்லாதவரும்
எங்கும் வியாபித்து இருப்பவரும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுளும்
எல்லா உலகங்களையும் பிரத்யக்ஷமாகப் பார்ப்பவரும்
வேதங்களால் உரைக்கப் படுபவரும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவரும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவரும்
உலகங்களுக்கு ஸ்வாமியும்
சிறந்த பொருளும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமான
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்

ஆதியந்தம் இல்லாதவர் என்றதனால் -காலத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எங்கும் வியாபித்தவர் என்பதனால் -தேசத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுள் என்பதனால்
ஸ்துதிப்பவருக்கு வேண்டியவற்றை வேண்டியபடி அளிக்கும் ஐஸ்வர்யம் உடையவர் என்றும்
எல்லா உலகங்களையும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பவர் என்றதனால் ஸ்துதிப்பிவனுக்குத் தக்கது இன்னது என்று தாமாகவே சிந்திப்பவர் என்பதும்
வேதங்களால் உரைக்கப் படுபவர் என்பதால் ஸ்தோத்ரம் செய்ய வேண்டிய விஷயம் உள்ளவர் என்றும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவர் என்பதால் தம்மைத் ஸ்துதிப்பது பரம தர்மம் என்று அறிந்தவர் என்பதும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவர் என்பதால் எந்தப் பிராணியும் தன்னை ஸ்தோத்ரம் செய்வதால்
தன்னைப் போலவே இருக்க அருளி புகழச் செய்பவர் என்றும்
உலகங்களுக்கு ஸ்வாமி என்பதால் ஸகல பரிசரணைகளுக்கும் உரியவர் என்றும்
சிறந்த பொருளாக இருப்பவர் என்பதால் ஆராதனைக்கு எளியவர் என்றும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமாக இருப்பவர் என்பதால் அவர்களை அனுக்ரஹிப்பவர் என்றும்
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான் என்பதால் பரிபூர்ண பக்தி யோகம்
அனுஷ்ட்டிக்க இயலாமல் இயன்ற வரை குண சங்கீர்த்தனம் செய்பவன் தாப த்ரயங்கள் நீங்கப் பெற்று

சீதள மடுவைப் போல் இருக்கும் அவன் இடம் நீராடப் பெறுவார் என்பதும் சொல்லிற்று ஆயிற்று –

யத உத்யோகே
“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜநாத்|
அந்யத் குஶல ஸம் ப்ரஶ்நாத் ந சேச்சதி ஜநார்தந:||” இதி|

(தூய நீர் கொண்ட சொம்பு தீர்த்தத்துக்கு மேல் எதிர்பார்க்காமல்
மாலா காரர் –
ஜனங்கள் ஜனியையைப் போக்கும் ஜனார்த்தனன்)

ஸர்வ பூத பவ உத்பவம் – அஸத் வ்யாவ்ருத்தாநாம் ஸத்தா ஹேதும் ;
அத அவர்ஜநீயத்வாத் தேஷாம் அவஶ்யம் அநுக்ரஹீதாரம் ;

ஏவம் பூதம் ஸ்துவந் –(இப்படி பத்து பெருமைகளை யுடைய )
பரிபூர்ண பக்தி யாேகா ஸம்பவே அபி:யதா ததா வா அபி குண ஸம்கீர்தநம் குர்வந் |–

ஸர்வ து:காதிகோ பவேத்–
தாப த்ரய தவ தஹநம்-அதீத்ய நிரதிஶய அநந்த ஶீதல ஹருதம் பகவந்தம் கச்சேத்|(தயரதன் பெற்ற மரகத மணித்தடம் )

அஸ்ய ச யுக்தம் லகு தர ஸ்துதி மாத்ர விஷயத்வம்,(இது பழைய ஸ்துவன் அல்ல -கீழ் ஜபம் -பக்தி யோகம் இங்கு ஸ்துவன் மாத்திரம் )
“த்யாயம் ஸ்துவந் நமஸ்யந்” இத் யநந்த ரோக்த த்யாநாதி ஸஹ சர குரு தர ஸ்தவந வைலக்ஷண்ய ப்ரதீதே :,
அந்யதா புநருக்தி ப்ரஸங்காத், “ஸ்துவந்த: கம்” இதி
ஸ்வதந்த்ர ப்ரஶ்நாந்தர ப்ரயுக்தத்வாத், அநேக
ஶாஸ்த்ராந்தர ஸங்க தத் வாச்ச அவகம்யதே ||6, 7||

(ஸூத்த சத்வம் வேறே =மிஸ்ர தத்துவத்தில் இரண்டைக் கழித்து பெரும் ஸுத்த சத்வத்துக்கு நிகர் சொல்ல முடியாதே
அதே போல் ஸ்தவனம் -கீழ் இரண்டிலும் வேறே -இங்கு லகு ஸ்தோத்ரம் மாத்திரமே

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் நாரணமே
இந்த நாராயணன் -நாராயணன் பரஞ்சோதி இத்யாதி நாராயணன் போல் அல்லவே )

கோ தர்ம இதி பஞ்சமம் ப்ரஶ்நம் பரிஹரதி-

ஸ்துவன் என்பதற்கு இங்கு இயன்றவரை ஸ்தோத்ரம் செய்வதே தகுதியான பொருள் -ஏன் எனில்
இதற்கு முன் ஸ்துவன் என்பது த்யானம் முதலியவற்றுடன் சேர்ந்தே கூறப்பட்டு இருப்பதால்
அத்தை பெரிய ஸ்தோத்ரம் என்றும்
இதனை லகுவான ஸ்தோத்ரம் என்றும் கொள்ள வேண்டும்
இல்லாவிடில் புனர் யுக்தி தோஷமாகும்
மேலும்
ஸ்துவந்த கம் என்பது தனித்த வினாவாகையாலும்
மற்றும் அநேக சாஸ்த்ரங்களோடே ஒத்து இருக்கையாலும் இதுவே பொருத்தமானது –

—————-

4- பரம ஸாத்ய உபாய வினாவிற்கு விடை
அவதாரிகை
தியானித்தல்
ஸ்துதித்தல்
நமஸ்கரித்தல்
முதலிய கைங்கர்யங்களே சிறந்த தர்மம் என்கிறார் –

ஏஶ மே ஸர்வ தர்மாம் தர்மோ அதி கதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சன நர: ஸதா||–8-(இதில் நாலாவது ஸ்தவன் )

ஏஷ மே இதி |ஏஷ-அநந்த ரோக்தோ பகவ தர்சந ஸ்தவநாதி ரூபோ
யதாதிகாரம் குரு லகு பாவேந வ்யவஸ்தித:|

ஸர்வ தர்மாணாம் மத்யே அதிகதமோ மத:| தர்மா: ஹி
1-ஐஹிகா : பஶு புத்ராத் யர்தா:,
2-ஆமுஷ்மிகா :–ஸ்வர்காத் யர்தா:, 3-அஸங்கை : பகவத் ஆராதந போத அநுஷ்டித
இஷ்டா பூர்த பரி கர்மித தத்த்வ ஜ்ஞாந ஸமாதி ஶரீரோ மோக்ஷார்த:,
4-ஸ அநுராக பகவத் ஸ்மரண கீர்தந ப்ரணாமாதி:, தத் அஸாதாரண பரி சரணாத்மா சேதி சதுர்விதா:|
தத்ர அதிக தம இதி தமபா த்ரிப்ய: சதுர்தம் உத்கர்ஷயதி |(அர்த்த பத பிரயோகம் இதில் மட்டும் இல்லையே-ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்ய ரூபமாக ஸ்தோத்ரம்-எனக்கே யாட் செய் -எக்காலத்தும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே   )

ஐந்தாவது வினாவிற்கு விடை
செந்தாமரைக் கண்ணரை ஒரு மனிதன் பக்தியுடன் எக் காலமும் ஸ்தோத்ரங்களால் அர்ச்சிப்பதே
எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று நான் நினைத்து இருக்கிறேன்

1-தர்மங்கள் பசு புத்ரன் முதலான இம்மைப் பயனை அளிப்பதாகவும்
2-ஸ்வர்க்காதிகளான மறுமைப் பயன் அளிப்பதாகவும்
3-பயனையே எதிர்பாராமல் பகவத் ஆராதனம் என்னும் நினைப்புடன் அனுஷ்ட்டிக்கப் படும்
இஷ்டா பூர்த்தாதி -இஷ்டம் -யாகம் முதலியன செய்தல் -பூர்த்தம் -குளம் வெட்டுதல் -தோட்டம் வைத்தல் முதலியன
இவற்றைச் செய்வதால் பரிஷ்கரிக்கப்பட்ட ஸமாதி ரூபமாகிய மோக்ஷத்தை அளிப்பனவாயும்
4-எம்பெருமானை ப்ரீதியோடே நினைப்பது -அவன் குணங்களை ஸ்தோத்ரம் செய்வது -அவனை வணங்குவது
முதலிய ஏகாந்தமாக அவனுக்கு அடிமை செய்வதும்
ஆக நான்கு வகைப்பட்டு இருக்கும்
முதல் மூன்றைக் காட்டிலும் நான்காவதே மிகச் சிறந்தது –

இங்கே எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று கூறுவதால் மற்ற மூன்றைக் காட்டிலும்
எம்பெருமானுக்கு ஏகாந்தமாக அடிமை செய்வதே மிகச் சிறந்தது என்று கூறப்பட்டதாகும் –

ததுப பாதயதி – யத் பக்த்யேதி| யஸ்மாத் பக்த்யாதி குணவாந் தஸ்மா ததிகதம இதி |
பக்த்யா இதி அநுஷ்டாந ஸமயே அபி ப்ரீதி கர்பத்வேந ஸுக உபாதாநத்வ பரம் |
கீதம் ஹி “ஸு ஸுகம் கர்தும்” (9-2)இதி | யுக்தம் ஸைதத் ப்ரிய தம பதிஸ்மரணம் ப்ரியமதி ஸ்மரணம் பிரியம் கரமதி

பக்தியுடன் என்றதால் ஸூ ஸூகம் கர்த்தும் -செய்வதற்கு இனியது -என்று கீதையில் அருளிச் செய்தபடி
அனுஷ்டான சமயத்திலும் பிரீதியுடன் இருத்தலால் இனிதாக அனுஷ்ட்டிக்கத்தக்கது என்கிறது
இதனால் இதற்கும் இதர தேவதைகளின் உபாசனத்துக்கும் வாஸி தெரிவிக்கப்படுகிறது –

ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –

அநேந அஸ்வாமிஷு தேவதாந்தரேஷு
கஷாய பாநவத் விரஸத்வே அபி ஹித புத்த்யா அநுஷ்டீய மாநேப்யோ வ்யாவ்ருத்தி: க்ரியதே |

புண்டரீகாக்ஷம் இதி விஷய அபி ரூப்யேண விகத பயங்கர தத்த்வாந்தர பஜநேப்யோ வ்யாவ்ருத்தி:|
ஸ்வைவரிதி வாங் மாத்ர ஸாத்யத்வேந விஶ்வஜிச் சாந்த்ராயணாதிப்யோ வ்யய ஆயாஸ
பஹுலேப்கயோ வ்யாவ்ருத்தி:|(திருமாலிருஞ்சோலை என்ன–திருமால் வந்து நெஞ்சு நிறையப் புகுவானே )

புண்டரீகாக்ஷன் -செந்தாமரைக் கண்ணன் என்பதனால் சேவிக்கப்படுபவன் மிக அழகாக இருப்பவன் என்றும்
பயங்கர ரூபத்தை யுடைய தேவதாந்த்ரங்களை உபாசிப்பதை விட இங்கு உள்ள ஏற்றம் சொல்லிற்று
ஸ்தோத்ரங்களினால் -என்றதாலும்
ஸ்தோத்ரம் என்பது வாக்கினால் மாத்திரம் செய்யப்படுவது ஆகையால்
விஸ்வ ஜித் சந்த்ராயணம் முதலியவைகளை போல் பொருள் செலவும் மிக மெய் வருத்தமும் இதற்கு வேண்டுவது இல்லை என்பதும்
அர்ச்சிப்பது -என்றதால் ஒரு புருஷ விசேஷத்தை நேராக ஆராதனம் பண்ணுவதே போல் இருப்பதால்
கண்ணுக்கு விஷயமாகாமையால் உண்டாகும் வருத்தமும் இதில் இராது என்றும் தெரிவிக்கப்பட்டது

ததா ஹி பகவாந் வ்யாஸ:
“ஆர்தா விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமாநா:|
ஸம்கீர்த்ய நாராயண ஶப்த மாத்ரம்
விமுக து:க்காஸ் ஸுகிநோ பவந்தி||” இதி |

ஶ்ரீவிஷ்ணுபுராணே “அவஸே நாபி யந்நாம்நி” இத்யாதி |(6-8)

வைஷ்ணவே தர்மே “அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதேவஸ்ய கீர்தநாத் | தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா||”,

“ஶமாய அலம் ஜலம் வஹ்நே : தமஸோ பாஸ்கர உதய:|
ஶாந்தி: கலே : அகௌ கஸ்ய நாம ஸம்கீர்தநம் ஹரே :||”,

“யந் நாம ஸம்கீர்தந கதா விமுச்யதே ”,

“யந் நாம ஸம்கீர்தந கதா மஹா பயாத் விமோக்ஷமாப்நோதி”,

“ஸக்ருதுச் சரிதம் யேந ஹரிரித்ய க்ஷர த்வயம் |
பத்த: பரி கரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி ||”,

“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்ய: ஸமுத் க்ராந்தே : அநந்தரம் |
ப்ராப்நோதி வைஷ்ணவம் ஸ்தாநம் புநரா வ்ருத்தி வர்ஜிதம் ||”,

“அச்யுத அநந்த கோவிந்த நாமோச் சாரண பேஷஜாத் |
நஶ்யந்தி ஸகலா ரோகா : ஸத்யம் ஸத்யம் வதாம் யஹம் ||” இத்யாதி |

அந்யத்ர ச “ஸம்கீர்தயேத் ஜகந் நாதம் வேதம் வா அபி ஸமீரயேத்” இதி ச|

வைஷ்ணவே ஸூக்தே ”ஆஸ்ய ஜாநந்தோ நாம சித் விவக்தந”,

“த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ:”|
அஸ்ய கீரய: – கீர்தயிதார:, த்ருவாஸ: – அபுநராவர்திநோ பவந்தி |

அர்சேதிதி- அஸ்ய தர்மஸ்ய புருஷ விஸேஷ ஸமாராதந ரூபாம் அநதி பரோக்ஷாம் ஹி ஸூசயதி |

கீதம் ச “ப்ரத்யக்ஷாவகமம்” இதி|
ந ஹ்யஸ்ய தபஸ் தீர்தாதிவத் புருஷ ப்ரீணநத்வம் ஶாஸ்த்ர ஆஸ்திக்யைக ஸாத்யம் |(ஸாஸ்த்ர ஆஸ்திக புத்தியால் தாபம் தீர்த்தம் பாவனம் இது அப்படி இல்லையே )

நர இதி ப்ராயேண
ஸர்வ சேதநா நாம் யதா ஸம்பவம் அதிகாரம் ஸூசயதி |

ஏக வசநம் ச மஹா யாேகாதி பஹு ஸஹகாரி நைரபேக்ஷ்ய பரம்

நிந்த்ய குண வ்ருத்த ஜந்ம நாமபி
பக்த்யபி ருசி மாத்ர மஹா குணேந அகுதோ பயம் பஜநீயோ ஹி பகவாந்–(நீசராலும் பக்தியில் விருப்ப மாத்திரத்தாலே பயமோ இல்லாமல் பஜனம் பண்ணலாம் என்று தானே அருளிச் செய்தானே
இந்த ஒரு குணமே போதுமே ஸ்தோத்ரம் பண்ண )

———–

உபநிஷத் -கீதை -அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதியைப் போக்க
ஸ்வ தந்த்ர பிரபத்தி -கத்ய த்ரயம் -ராமானுஜர் அனுஷ்டானம் –
விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஸாத்ய உபாயம் ஒன்றே
ஸித்த உபாயம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் -சொன்னாலும் நாலுமே ஸாத்ய உபாயத்தைப் பற்றியது தான்
ஓன்று நாம் பண்ணும் கிரியை
அதுக்குப் பலம் தரும் பகவான் -கிரியை பலம் தரட்டும் என்று சங்கல்பித்து
த்யானம் அர்ச்சனம் ஸ்தோத்ரம் இவை –
ஸங்கல்பம் பண்ணிய அவனுக்கு முக்யத்வம் கொடுத்து ஸித்த உபாயம்
எந்த செயல்களை செய்து முக்தி -அவற்றுக்கு முக்யத்வம் கொடுத்தால் ஸாத்ய உபாயம் ஆகும்
இந்த வாசியை உணர வேண்டும் –

ஜபம் ஒரு கிரியை
ஸ்தவனம் கிரியை
நான்கு இடங்களிலும் ஸ்துவன் –
ஆலம்பன உபாயம் ஜெபத்துக்கு அங்கம்
த்யாயன் ஸ்துவன் நமஸ்யந்த -இது பக்தி- சார்வே தவநெறி பக்தி யோகம் -மன் மநா பவ இத்யாதி
இவை இரண்டும் பகவானைப் பற்றியவை
அடுத்து
லகு உபாயம் த்யாயனம் நமஸ்காரம் -இல்லாமல் ஸ்தோத்ரம் மாத்திரம் -மூன்றாவது பதில்
அடுத்து நீர் அறிந்த தர்மங்களில்-உபாயங்களில் சிறந்த உபாயம் எது -கேள்வி -கோ தர்ம ஸர்வ தர்மாணாம் -பவத பரமோ மத
சொல்லப்பட்ட மூன்று தர்மங்களில் இல்லை
வேற்றுமை உறுப்புக்கு அர்த்தம் இங்கு -தர்மங்களுக்குள் என்பது இல்லை -தர்மங்களை விட என்று அர்த்தம் கொள்ள வேண்டும் –
கேள்வி ஆறாம் வேற்றுமை உருபில் இருந்தாலும் ஏஷாம் தர்ம -பதில் இருப்பதால் -இப்படியே கொள்ள வேண்டும் –
ப்ரீதி கர்ப்பத்த்வம் இதில் பூர்த்தியாக இருப்பதால் இது சிறப்பு
பக்தி என்றாலே ப்ரீதி தானே என்றால் -யமம் நியமம் தொடங்கி தாரணம் அப்புறம் தான் ப்ரீதி
இங்கு தொடக்கத்திலே ப்ரீதி
கீழ் எல்லாம் எந்தப் பலத்தைக் குறித்தும் பண்ணலாம்
பலம் இங்கு அவனைப் பற்றிய -ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்யமே பலம் -மிகச் சிறப்பு அதனால் தான் –

கதி த்ரய மூலத்வாத் –ஆர்த்தோ இத்யாதி –தேஷாம் பக்தி விசிஷ்யதே -அவர்களுக்குள் ஞானி நித்ய யுக்தாம் ஏக பக்தி விசிஷ்யதே போல்

—————

அத க்ஷிப்ரமேவ பாகீரதீ ப்ரவாஹ நேவ நிர்ணிக்த கல்மஷ ருசி:
பரம தார்மிகோ பவதீதி கீயதே |
குண விஷயே தாவத்
“ஸமோ அஹம் ஸர்வ பூதேஷு”;
வ்ருத்த விஷயேஷு ச “அபி சேத் ஸு துராசார:”;
ஜந்ம விஷயே அபி “மாம் ஹி பார்த வ்யபாஶ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயாேநய:” இத்யாதி |
ந சை தாவதா துராசாராதே : தர்மத்வம் |
“நா விரதோ துஶ் சரிதாத் நா ஶாந்தோ நா ஸமாஹித:”(கட உபநிஷத் ), “அப்ராப்ய: கேஶவோ
ராஜந் இந்த்ரியை : அஜிதை ந்ருணாம்” இத்யேவம் ப்ரகார வசநேப்ய: தஸ்ய
பகவத் அநிஷ்டத்வேந அதர்மத்வா வகமாத் |(இந்திரியங்களை ஜெயிக்காதவர்களால் கேசவனை அடைய முடியாது )

அத ஏவ அநந்தர மாஹ “க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ” இதி |
ஸர்வ ஆஶ்ரமிணாம் அநாஶ்ரமிணஶ்ச விதுராதே :-(3-4-27-மனைவியை இறந்தவனுக்கு அக்னி கார்ய யோக்யதை இல்லையே சங்கை -இருவருக்கும் உண்டே )
“ஶம தமாத் யுபேதஸ் ஸ்யாத்”,
“அந்தரா சாபி து தத் த்ருஷ்டே :” இத்யாதீநி ப்ரஹ்ம ஸூத்ராணி அதிகாரம் நிரணஷத

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

அபி சேத் ஸு துராசாரோ பஜதே மாமநந்யபாக்.–
ஸாதுரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ—৷৷9.30৷৷

மிகவும் தாழ்ந்த ஒழுக்கைத்தை உடையவனாய் இருந்தாலும் -என்னிடம் வேறு பயனை விரும்பாதவனாய்
பக்தி செய்தானாகில் அவன் தலை சிறந்த ஞானிகளோடு சமமானவன் ஆவான் -கொண்டாடத் தக்கவனும் ஆவான் –
ஏன் எனில் அவன் அவன் நன்கு என்னிடத்தில் உறுதியான ஈடுபாடு உடையவன் அன்றோ –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –

மனிதன் என்றதால் ஸகல சேதனரும் அதிகாரிகளே என்றும்
ஒரு மனிதன் -ஒருமையாகச் சொல்லுவதால் ஸஹ காரிகள் பலரும் தேவை உண்டோ என்னும் வருத்தமும் இராது என்பதும்
எக் காலமும் என்பதால் கால நிர்பந்தமும் இல்லை என்பதும் காட்டப்பட்டன
இதனால் அயனம் ருது மாசம் பக்ஷம் நக்ஷத்ரம் முஹூர்த்தம் என்னும் கால விசேஷத்தை அபேக்ஷிக்கும்
மற்றவற்றைக் காட்டிலும் இதுக்கு உண்டான வாசி தெரிவிக்கப்பட்டது

இனி ஜெபிப்பவனுடைய பரிசுத்தியைப் பற்றியும்
அதிகாரியினுடைய தாரதம்யத்தைப் பற்றியும்
ஸங்கீர்த்தனம் முதலிய லகுவாகச் செய்யக்கூடிய உபாயத்தைப் பற்றியும் விசாரித்து இருக்கிறது –

யுக்தஶ்ஸைஷ: ஸர்வ அவஸ்தேநாபி புருஷேண மாதுர் இவ புத்ரேண பரம வத்ஸலஸ்ய ஸர்வ பந்தோ :
நிஸ் ஸர்க ஸுஹ்ருதஶ்ச பகவதோ நாம க்ரஹணாதௌ அப்ரதிஷேத:;
த்ருஷ்டஶ்ச கஜேந்த்ர-க்ருத்ரராஜ வாயஸ-ராவணா வரஜ(ராவணனுக்குத் தம்பி )-கௌஸலே நாகர ஜாந பத(கோசல தேச சராசரங்கள் )-வல்லவீ- மாலாகார ப்ரமுகேஷு |(இப்படி அதிகாரம் இல்லாதவர்களுக்கு த்ருஷ்டாந்தங்கள் -முன் ஜென்ம புண்ய கர்ம வாசனை பதிவுகள் இவர்களுக்கு )
அப ஶூத்ராதி கரணே து அத்ரை வர்ணிகாநாம்
அநக்நி வித்யத்வாத் அக்நி வித்யாங்கேஷு குரூபஸதநாத்(அக்னி வித்யை அங்கமாகக் கொண்ட மஹா உபாசனம் )
யௌபநிஷத ஸம்ஸ்காரா பாவேந வேதாந்த வேத்ய பர வித்யோபார்ஜநே ச அநுபாயத்வாத் அநதிகாரோ ராத்தாந்தித: |
ததீயா பகவத் ஸமாஶ்ரயண அதிகார வ்யவஸ்தா அத்ரை வர்ணிகாநாம்
ஸமுத் ரிக்த ஸத்த்வ தயா முமுக்ஷூணாம அப்ரதிபத்தி ஶ்ரவண மநநாத் யௌபநிஷத ப்ரஹ்ம வித்யாே மஹா பதே ந ப்ரஸித்த அதிகார: |

(நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அனைத்தும் உபதேசம்
பேயாழ்வார் திருமழிசை ஆழ்வாருக்கு உபதேசம்
இந்த இருவரும் மற்றவரை விட ஸ்ரேஷ்டம்)

தேஷ்வேவ  ரஜஸ் தமஸ் ஸம் பேத ஸிதாஸித ஸத்த்வ தயா பலகாம தயா விப்ர லப்தாநாம்
தாத்ருஸோ யதா யோக முபாஸநேஷு ஸ்த்ரீ ஶூத்ர திரஶ்சாம் ச ப்ராசீந
பவ பரம்பரா ப்ரசித ஸம்ஸ்கார படிம்நா ஸுப்த ப்ரபுத்த ந்யாயேந(தூங்கி எழுந்தவன் உணர்வது போல் முன் ஜென்ம புண்ய பலனால் )
ப்ரத் யுத் பந்ந ஜ்ஞாநாம் விதுர தர்ம வ்யாத ப்ரப்ருதீநாம்
ப்ராரப்த கர்ம அநுஶய லேஶ-(ப்ராரப்த கர்மத்தால் இப்பிறவி -பிறவி எடுத்ததுமே அது தொலைந்து போனதே முன் ஜென்ம பதிவால் இப்பொழுது கஜேந்திரன் ஜடாயு இவர்களுக்கு )அந்ருண்யா அநுஜ்ஞாத ஜுகுப்ஸித ஜாதி ஸம்ஸர்காணாம் அபி தத் தஜ் ஜாத்ய ப்ரதிஷித்த ஸாமாந்ய தர்மாங்கேஷு
உபாஸநேஷு துர்வாரோ அதிகார:, அநுத்பாத்ய வித்யத்வாத் |
ந்ய தர்ஶி ச பகவதா சவ்நகேந ”தர்ம வ்யாதா தயோ அப் யந்யே பூர்வாப் யாஸாஜ் ஜுகுப்ஸிதே |
வர்ண அவரத்வே ஸம் ப்ராப்தா: ஸம் ஸித்திம் ஶ்ரமணீ யதா” (சபரியைப் போல் )இதி ||

அநுத் பந்தஜ் ஞாநாநாமபி க்ரம பாவிந்யா முக்ய பக்தே :
உபக்ரம பூத ஸ்மரண-ஸம்கீர்தந -ஶ்ரவணாதி: அப்ரதிஷித்த: |
தர்ம ஸ்மர்தாரோ அபி ஹி அஹிம்ஸா-ஸத்ய-ஶௌச-பரோபகார-
மாதா பித்ரு ஶுஶ்ரூஷண-ஶ்ரேஷ்ட தேவத அநுகூல்யாதிகம் -ஸாமாந்ய தர்மம் ஆசண்டாலம் அநுமந் யந்தே |
ஸ்வயம் ஸம்கீர்தந நிஷதே அபி கீர்தயித்ரு புருஷ அநுவர்தந -அநுமோதந – அமர்ஷண-அவிரோத மாத்ரேண
ஸுதூரோ அபி ஸம்பந்த ஸம்பவ: |(கீர்த்தனம் பண்ணுபவரை அனுவர்த்தித்து-விரோதம் பண்ணாமல் இருந்தாலே -பலன் பெறலாமே )
ஸ்மர்யதே ஹி -”தர்ம : ஶ்ருதோ வா த்ருஷ்டோ வா கதிதோ வா க்ருதோ அபி வா | அநுமோதிதோ வா ராஜேந்த்ர! புநாதி புருஷம் ஸதா ||” இதி |
“ப்ரயோஜயிதா அநுமந்தா கர்தா இதி ச விஸேஷதோ பகவத் தர்மஸ்ய ஸ்பர்ஶ வேதித்வம் |
உத்கோஷித: பூஜிதோ வா த்ருஷ்டோ வா நமிதோ அபி வா | ப்ரஸஹ்ய ஹரதே நரமத பாபம் கோ ந ஸேவேத் ஹரிம் தத: ||”

“கீர்தித: ஸம்ஸ்ம்ருதோ த்யாத: பூஜித: ஸம்ஸ்க்ருதஸ் ததா |
ஐஹிக ஆமுஷ்மிகீம் ரக்ஷாம் கரோதி பகவாந் ஹரி: ||”,
“ஶ்ருண்வந்தி யே வை படதஸ் ததா அந்யே பஶ்யந்தி யே மாமீரயந்தி” இத்யாதி |(விஷ்ணு தர்மம் )
அபி ச இதிஹாஸ புராணாதிஷு ஶ்வபாகாதேரபி பகவத் பஜநாநுமதி: |
வைஷ்ணவே தர்மே – — “நம இத்யேவ யோ ப்ரூயாத் மத் பக்த: ஶ்ரத்தயா அந்வித: |
தஸ்ய அக்ஷயோ பவேல்லோக: ஶ்வபாகஸ்யாபி நாரத ||”
இத்யாதி வசநாநி தத் பஹு மந்தவ்யத்வ நிஶ் ஸ்ரேயஸ ப்ராப்த்யாதி-வ்ருத்தாந்தாஶ்ச ஸாலம்பநா : |
ஏவம் ந கிம்சிதபி ஶாஸ்த்ரம் குப்யேத், வ்யவஸ்தித விஷயத்வாத் |(அதிகாரிகள் வேறே வேறே -சாஸ்திரம் வீணாகாதே )

இனி தேச கால வாசி இல்லாமல் பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்

நரன் ஸதா -அனைவருக்கும் அதிகாரம் -எப்பொழுதும் நாமங்களை சொல்லிக் கூப்பிட கால தேச அபேக்ஷை இல்லையே
ஸதா -தேசத்துக்கும் காலத்துக்கும் -உப லக்ஷணம்

ஸதேதி கால விஸேஷாந் அபேக்ஷத்வம் ;
தேச ஶௌசாதி விஸேஷாந் அபேக்ஷாயா அபி ப்ரதர்ஶந மேதத் |
தேந அயந ர்து மாஸ பஷ நக்ஷத்ர முஹுர்த விஸேஷஸவ்ய பேஷேப்ய: ப்ரகர்ஷ: |

அத்ர ச “சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்தயேத் |
நா ஶௌசம் கீர்தநே தஸ்ய பவித்ரம் பகவாந் ஹரி:||”,(விஷ்ணு தர்மம்)

“ப்ராதர் தேவேதி க்ருஷ்ணேதி கோவிந்தேதி ச ஜல்பதாம் |
மத்யாஹ்மே சாபராஹ்ணே ச யோ அவஸாத: ஸ உச்யதாம் ||(பிரகலாதன் ஜல்பிக்க உபதேசம் )
” இத்யேதாநி ருஷி வசநாநி த்ரஷ்டவ்யாநி |

ந ஹி பகவத: ப்ரயத அப்ரயத அதிகாரி ஸம்ஸர்காத் உபகாத:,
தச் சௌசாதி ஸஹ காரி விரஹாத் தத் அநுக்ரஹா ஸாமர்த்யம் வா;(தூய்மை சஹகரிக்காது -அழுக்கு பாதிக்காது )
ப்ரத்யுத ஸ்வ ஸம்பந்த அயோக்யமபி புநாந: ஸ்வோசிதம் விதாய ஸ்வீகரோதி, பரம பாவநத்வாத் |(தனக்குத் தகுதியாக்கி அழைத்துச் செல்வான் )

அதோ ஹீத முதீர்யதே “நா ஶௌசம் கீர்தநே ” இத்யாதி|(கீர்த்தனம் பண்ணுவதே சுத்தியைக் கொடுக்கும்)

ஸதஸததிகாரி தாரதம்ய ஶாஸ்த்ராணி து உச்சா வசநாம் அதிகாரிணாம் பரஸ்பர ஸங்கரேண தர்ம ஸம் ப்லவோ மா ப்ரஸாங்க்ஷீதிதி |
ஸ்வரூபதோ அல்பீய நாபி ஸங்கீர்தநாதி: பலதோ மஹீயாந் |
யதாஹ — ”ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்” (2-40)இதி |
ந சாஸ்ய தர்மாந்தர வத் அபிக்ரம நாஶ: “நேஹா அபி க்ரம நாஸோ அஸ்தி” இதி வசநாத் |(நாம சங்கீர்த்தனம் தொடங்கி வீணாகப் போகாதே -தப்பாக பண்ணும் பாபமும் இல்லையே )
“ந மே பக்த: ப்ரணஶ்யதி”,
“யம் ப்ரணம்ய ந ஸீததி”,
“ந வாஸு தேவம் ப்ரணிபத்ய ஸீததி”,
“ஜநார்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி” |
ந ச அயதா வித்யநுஷ்டாநாத் ப்ரபல ப்ரதிபக்ஷாத் வா ப்ரத்யவாய:”,
“ப்ரத்யவாயோ ந வித்யதே ” இதி |(நானும் சொன்னேன் -நமரும் உரைமின் -நாராயணா -நாரண -திண்ணம் நாரணனே -சுருக்கிச் சொன்னாலும் பாபங்கள் கிட்டாவே )
ந ச ஏதேஷாம் அர்த வாதத்வம் ஶக்ய ஶங்கம்; அநதி வாதித்வாத் ||(புகழ்ந்து பேசினது இல்லை உண்மையே )

இஹ பகவத் தத்த்வஜ் ஞாந பக்தி ப்ரதிபந்தக பாப நிர்ஹரண ஸத்த்வ ஸம்ருத்த் யாதி க்ரமேண தத் ப்ராப்த் யுபக்ரே உச்யதே |(பக்தி ஆரம்ப விரோதிகளை ஸத்வ குணம் வளர இருக்கும் விரோதிகளை நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொடுக்குமே )
“பத்த: பரிகரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி”,(விஷ்ணு தர்மம் -நாராயணா மணி வண்ணா சொன்னாலே மோக்ஷம் என்றது பகவத் பிரபாவம் சொல்ல வந்ததே )
“யஸ்மிந் ந்யஸ்த மதிர் நயாதி நரகம் ஸ்வர்கோ அபி யச் சிந்தநே விக்நோ யத்ர நிவேஶித தாத்ம மநஸோ
ப்ராஹ்மோ அபி லோகோ அல்பக: |(சத்ய லோகமும் இவனுக்கு அல்பமே )
முக்திம் சேதஸி யஸ் : ஸ்திதோ அமதியாம் பும்ஸாம் ததாதி அவ்யய: கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்திதே ||
” இத்யாததௌ ச |

ந ஸைஷ: பூர்ணாஹுதி ந்யாயஸ்ய விஷய:, தஸ்ய அதிவாத விஷயத்வாத்; ஸம்கீர்தநாதி ப்ரகரணேஷு
ப்ராயேண வாக்ய ஸேஷத்வ- ப்ரார்தநாத் யர்தவாத லிங்க அதர்ஶநாச்ச |
கிஞ்ச ப்ரபல ப்ரமாண விரோதா பாவே அர்தவாத பதாநாம் அபி ஸ்வத: ப்ராமாண்யத: ஸ்வார்த பரித்யாகஶ்ச ஸாஹஸம், அந்யாய்யத்வாத் |

(பூர்ணாஹுதியே பலம் கொடுக்கும்-என்றாலே முன் பலவும் செய்ய வேண்டும் போல் நாம சங்கீர்த்தனமே பலன் கொடுக்கும்
என்றாலும் வேறே ஒன்றும் வேண்டாம் -தொடக்கத்துக்கு வேறே வேண்டாம் –
உடனே முத்தி என்பது இல்லை–மேலே மேலே பக்தி வளர்ந்து முக்தி)

(மேல் பக்தியை விதிக்கும் வலிய உபாயங்களை விதிக்கும் ஸாஸ்த்ரம் வீணாகாது என்பதையும் விளக்குகிறார்)

நநு, குரு தீர்க துஷ்கர தபஸ் ஸமாதி விஸேஷ ரூப மஹா தர்ம ஸாத்ய தத்த்வ ஜ்ஞாந உபக்ரமஸ்ய
வாங்மாத்ர ஸாத்யத்வ வாதோ அப்யதிவாத:, குரு ஶாஸ்த்ர
வையர்த்ய ப்ரஸங்கேந ப்ரமாண விருத்தம் ச |

ததிதம் அவிதித பகவத் ப்ரபாவஸ்யச் சாந்தஸஸ்ய பைஶாசம் |(பகவத் பிரபாவம் அறியாதவன் பேச்சாகும்)
லகீயோ அபி பகவத் ஸங்கீர்தநம் துர் வஹாமபி துரம் தாரயத்யேவ |
குரு ஶாஸ்த்ர அநர்தக்யம், தஸ்ய ஸமர்த அதி காரத்வாத் |
அஸ்ய து ஸத்யஸதி வா ஸாமர்த்யே பகவத ஸாதாரண ருசி ஸமுசித பாக்யவத்  அதிகாரத் வாச்ச |

கரீயஸோ அபி பகவத் ப்ரஸாத ஏவ பலஹேது: லகீயஸி கிம் தண்டவாரித: ?(பலம் கொடுப்பவன் இவனே விதி வாய்க்கின்று காப்பார் யார் )
யதா ச கரீயஸி ப்ரயோக வைபுல்யாத் தேவ: ப்ரஸீததி, ததா லகீயஸ்யபி பாவ ஶுத்தி விஸேஷாத் ப்ரஸீதேத் |(உள்ளத்திலே பாவ ஸூத்தி – அன்பு -ஆசை உடையார்க்கும் உண்டே)

யதோக்தம் – “ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:”,(9)
“பத்ரம் புஷ்பம் பலம் தோயம்”,
“யோ ந வித்தை : ந விபவை : ந வா ஸோபி: ந பூஷணை : |
தோஷ்யதே ஹ்ருதயேநைவ கஸ்தமீஶம் ந பூஜயேத்||”,

வ்யாஸ ஸ்ம்ருதௌ —“தத்யாத் புருஷ ஸூக்தேந ய: புஷ்பாண்யப ஏவ வா | அர்சிதம் ஸ்யாஜ் ஜகதிதம் தேந ஸர்வம் சராசரம் ||”,
வைஷ்ணவை தர்ம் “ப்ருதிவீம் ரத்ந ஸ பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி|
தஸ்யாப் யந்ய மநஸ் கஸ்ய ஸுலபோ ந ஜநார்தந : ||” இத்யாதி |

(எண்ணாயிரத்து எச்சன் -பணக்காரன் -அடியார்களை மதியாமல் இழந்தானே)

பாவ பேத ஏக ஹி தர்ம அதர்ம நிதாநம், ந க்ரியா விஸேஷ: |(எண்ணமே முக்கியம் -செயல்களின் பஹுத்வம் இல்லையே )
யதா ஶ்ரீவிஷ்ணு தத்த்வே “பாவ ஶுத்திர் மநுஷ்யாணாம் ப்ரமாணம் ஸர்வ வஸ்துஷு |
அந்யதாஸ் அலிங்க்யதே காந்தா ஸ்நேஹேநே துஹிதா அந்யதா||”.

ததா, “தபோ ந கல்கோ அத்யயேம் ந கல்க: ஸ்வாபாவிகோ வேத விதிர் ந கல்க: |
ப்ரஸஹ்ய சித்தாஹரணம் ந கல்க: தாந்யேவ பாவோ பஹிதாநி கல்க:||”.(ஆதி பர்வம்)
அந்யத்ர “கங்காதி தீர்தேஷு வஸந்தி
மத்ஸ்யா தேவாலயே பக்ஷி ஸங்காஶ்ச நித்யம் | பாவோஜ் ஜிதாஸ்தே ந பலம் லபந்தே தீர்தாநி புண்யாயதநாஶ் ச முக்யா:||” இதி |(மீன்கள் கங்கையில் -பறவைகள் கோயிலில் இருந்தாலும் பலன் இல்லையே )

உபபந்நம் ஸைதத் ஸர்வஜ்ஞஸ்ய அவாப்த ஸமஸ்த காமஸ்ய
அந பேக்ஷஸ்ய பகவதோ பாவ ஶுத்த்ய ஆராத்யத்வம், ந த்ரவிணகண அர்பணாதிநா ,
“யாதாதத்யேந பண்டித: (தம்)” இதி ந்யாயாத் |
தேஶ கால ஸஹ கார்யாதி வைகல்மய அபி ஸ்வல்பாதபி ஸமக்ராதிவ தேவ: ப்ரஸீதேத் |

ததுக்தம் – “த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஜை : த்ரேதாயாம்
த்வாபரே அர்சயந் | யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸம்கீர்த்ய கேஶவம் ||” இதி |(விஷ்ணு புராணம்)

ததா- “விநிந்தாம் ப்ரதமே பாதே கரிஷ்யந்தி ஹரேர் நரா: (கலியுகத்தில் முதல் பாதத்தில்-90000 வருஷங்களில் ஹரியை நிந்திப்பார்கள்) | யுகாந்தே ச ஹரே நாம நைவ கஶ்சித் க்ரஹீஷ்யதி ||(இறுதியில் சொல்ல முயன்றால் -ஆசைப்பட்டால் -ஆசைப்பட முயன்றால் திருப்தி ஆவான்)
தந்யாஸ்தே புருஷ வ்யாக்ர பவாம் போதாவ மாயிந : |
யத்நே நாபி கலௌ விஷ்ணோ : க்ரஹீஷ்யந்தி
அக்ஷயாத்மந:”. யுஜ்யதே ஸைதத் |

ஸுஶீலோ ஹி ந்ருபதி: பிதராவிவ
க்ருச்ச்ரேஷு கிஞ்சிந் நயாய வ்ருத்தமபி பஹுபகாரிணமிவ அநுக்ருஹ்ணீதே |

அத ஏவ தைவ பித்ர்ய ப்ராயஶ் சித்தாதிஷு
தேஶ காலோபபத்த்யாதிவஶேந அதிநிம் நோந் நதாநாம் அபி ப்ரயோகாணாம்
துல்ய கக்ஷ்யத் வேந மவே விதிஸ் :, ஶிஷ்டைஸ் ததா அநுஷ்டாநம் ச |

(எட்டு வித ஸ்ரார்த்தம் சாஸ்திரத்தில் உண்டே-ஒரே பலன்-ஆபத்துக் காலத்தில்
கையைத் தூக்கி ஒன்றும் பண்ண முடியவில்லை என்று சொன்னாலே போதுமே)

அத ஏவ யதா ஸர்வ ஸ்வ ஸாத்ய ப்ரயோக விஸ்தாரஸ்ய ஸ்தாநே
ஸ்வ அநுபபத்தி க்யாபந மேவ ஆபதி ஶ்ராத்த ப்ரத்யாம் நாநம்,
யதா வா தத் தத் கர்ம தௌஷ் கர்யே தத் தந் மந்த்ர ஜப: இத்யாதி |

எட்டு காரணங்கள் –தர்மே அதிகமத: பீஷ்ம மத-நாம சங்கீர்தன மஹிமை மேல்

ததேவம் ப்ரிய தம விஷய தயா -1-ஸுக க்ரியத்வாத் -2-வ்யய ஆயாஸ ரஹித தயா ஸுகரத்வாத்,
3-அநதி பரோக்ஷ ஆத்ம நாத ப்ரீணந பாவேந ஆகர்ஷகத்வாத்,
4-அதி லாகவே அபி அதி குரு-துர்வஹ -பவ பயோந் மூல நமஹா பலத்வாத்,
5-அப்ரத்யவாய வத்த்வாத், 6-ஸுபிக்ஷாதிகாரி தயா விஶ்வ ஜநீநத்வாத்,
7-தேஶ கால தஶா விஸேஷாதி விஷேப வர்ஜநேந நிர் வ்யாஜத்வாத்,
8-விஷய (பகவத் )ப்ரபாவேந நிஷ் ப்ரத்யூஹத் வாச்ச இத்யேவம் ப்ரகாரேப்யோ ஹேதுப்ய:
பகவத் அஸாதாரண ஸம் கீர்தநாதி தர்மே அதிகமத: பீஷ்ம மத: |

அந்யேஷாம் அபி பரமர்ஷீணாம் “ஸர்வேஷாேம் அபி தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி: |
ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்ம ஶரீரவத்||”,
“கோவிந்த பக்த்யப்யதிகம் ஶ்ரேயஶ் ச அந்யத் ந வித்யதே ” இத்யாதி:தாஹார்ய: || 8 ||

சா ஆலம்பன -6-கேள்வி
அலகு உபாயம்-ஸாத்ய ஸித்த உபாயம் பற்றிய -பக்தி யோகம் பற்றிய -4-கேள்வி
லகு உபாயம் 3-கேள்வி-பத்து பெருமைகளை சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ண –
ஸித்த  உபாயம் -5-கேள்வி-நரன் -அனைவர்க்கும் யோக்யதை உண்டே
இதுவரை உபாய பரமான நான்கு கேள்விகளுக்கும் பதில் பார்த்தோம்

———–

5- பரம ப்ராப்யம் என்னும் உபேய விஷயமான வினாவிற்கு விடை
அவதாரிகை
இதற்கு விடை அளிக்கத் தொடங்கிப் பரம ப்ராப்யம் இன்னது என்பதை விளக்குகிறார்
இதில் சொல்லப்படும் விசேஷணங்கள் ஆறும் பகவத் ஸ்வரூபம் மிகவும் ஆசைப்படும்படி இருக்கும்
என்பதைக் காட்டுவதால் அதுவே பரம புருஷார்த்தம் என்பது விளங்குகின்றது

பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||–9-

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாணாம் ச மங்களம் |

இரண்டாவது வினாவிற்கு விடை
எவர் ஒப்புயர் அற்ற பேர் ஒளியாய் இருப்பாரோ
எவர் தேவர்களையும் ஆள்வதால் சிறந்த பெரும் தவமோ –
தபஸ் -கட்டளை இடுதல் -மஹேஸ்வரன் -என்று பொருள் கூறி இதற்கு ஸ்ருதி ப்ரமாணங்களைக் காட்டி அருள்கிறார்
ஆஜ்ஜா பயதி-என்று கட்டளை இடுகிறார் ஸ்ருதி வாக்கியம் உண்டே –
எவர் அளவற்ற கல்யாண குணங்களாலும் எங்கும் வியாபித்து இருப்பதனாலும்
தம்மைச் சேர்ந்தவரைப் பெருகும்படி செய்வதாலும்
எல்லாவற்றுக்கும் சிறந்த பர ப்ரஹ்மமோ
எவர் பரிசுத்தம் செய்யும் அனைத்தையும் பரிசுத்தப்படுத்து கின்றாரோ
எவர் சிறந்த மங்களுக்கு எல்லாம் மங்களமோ
அவரே எல்லாவற்றுக்கும் முடிவான பரம புருஷார்த்தம்

அத உபேய ப்ரஶ்நம் ப்ரதிவதந் ஸ்ரீ மந் நாம ஸஹஸ்ர ஶ்ரவணாய தர்ம ராஜோ நியுஜ்யதே பரமம் ய: இதி சதுர்பி: |

நான்கு இடத்தில் பரமம் -உயர்வற உயர் நலம் உடையவன் –எவன் –எவன் எவன் -அவன் -துயர் அடி தொழ வேண்டும் போல் இங்கும் நான்கும் பிரஸித்தம்

யார் பேர் ஒளியோ -மிகச் சிறந்த -தன்னைக்காட்டிலும் மேம்பட்டது இல்லாத
தபஸ் -ஈஸ்வர சாமர்த்தியம் –
ப்ரஹ்ம -எங்கும் வியாபித்து பெரிய -தன்னை அண்டியவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கும்
சஹா பராயணம் -இருக்க ய பராயணம் -பிரசித்தம் அன்றோ

தர்ப்பம் கங்கா தீர்த்தம் பவித்ரம் -மஞ்சள் போல்வன மங்களப் பொருள்கள்

தத்ர ப்ரதமேந ஸார்தேந கிம் வா அப்யேகம் பராயணம் இதி த்விதீயம் ப்ரத்யாஹ |(இரண்டாம் கேள்விக்குப் பதில் )

தேஜ ஆதிபி: ந பும்ஸக லிங்கை : ய: இதி ஸமபி வ்யாஹாரேண லிங்க வைரூப்யம் ந ஶக்யம் |(பலர் வந்தனர் லிங்கம் -தேஜஸ் -நபும்ஸக லிங்கம் -சொல் -ய புல்லிங்க சொல் -தப்போ என்று நினைக்க வேண்டாம் -வியாகரணம் படி சரியே )
லிங்க ஸம்க்யாப்யாம் பூர்வம் விஸேஷி தஸ்ய பதஸ்ய
பதாந்தர ஸமபி வ்யாஹாராத், தல் லிங்க ஸம்க்யா விஸேஷேண
அவிஸேஷ்யத் வாச்ச விஸேஷ் யஸ்ய, “வேதா: ப்ரமாணம்“, “தத்த்வம் நாராயண: பர:” இதிவத் |

பரமம் அடைமொழி தேஜஸ்ஸுக்கு உண்டே -வேதா புல்லிங்க பஹு வசனம் பிரமாணம் நபுஸிம்ஹ ஏக வசனம் போல் இங்கும்

ஸர்வதா ஸ்ப்ருஹணீய தமத்வேந பரம புருஷார்த க்யாபகாநி பரம தேஜஸ் த்வாதீநி ஷட் விஸேஷணாநி |(ஆறு விசேஷணங்கள்)
தேஜ: – ஸ்வபாவத ஏவ பாஸ்வரம், அந்ய அவ பாஸகஞ்ச | (இவனுக்கே இயற்கையில் தேஜஸ் மற்ற தேஜஸ் பதார்த்தங்களை ஒளி உடையவையாய் ஆக்குகிறார் )“பரம் ஜ்யோதி ருப ஸம்பத்ய”,(சாந்தோக்யம் )
“தஸ்ய ஆதித்யோ பாம் உபயுஜ்ய பாதி” (ஒளியை இரவல் வாங்கிக் கொண்டு மினுக்கிக் கொண்டு இருக்கிறான் )இதி பாஸ்வரத்வஸ்ய நிஸ் ஸீமத்வம்

மஹதிதி |
பரம் இதி ச ஸம அதி ஶாய்ய ஸம்பவ: |(பரமம் மஹத்–மிகப் பெரியது என்றும் தன்னை விட பெரியது இல்லை என்றும் என்பதால் இரண்டு பத பிரயோகம் )
ஏவம் உத்தரத்ராபி யதா விஸேஷ்யம்  | (தபஸ் ப்ரஹ்மம் பராயணம் என்கிற இடங்களிலும் இதே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஈஷ்டே ஸர்வஸ்யேதி தப: | யதா“யோ தேவேப்ய ஆதபதி”,
“தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம்”,-ஸ்வேதாஸ்வரம்
“ஏஷ ஸர்வேஶ்வர:” (ப்ரஹ்ம தாரண்யம் )இத்யாதி |

அநவச் சிந்ந கல்யாண ஸ்வரூப குணத்வேந -ப்ருஹத்த்வாத், ஸர்வ ஶக்தித்வேந -ஸர்வ ப்ரும்ஹணத்த்வாச்ச ப்ரஹ்ம |(தானும் ப்ரஹ்மம் அண்டினவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கி அருளுகிறவன் )

பவித்ராணாம் மத்யே பரமம் மஹத் பவித்ரம்;
பவித்ரம் –ஶுத்தி விஸேஷ ஹேது: |
ஶுத்திஶ்ச –தோஷ விஸேஷ நிர்மோக: |
தோஷஶ்ச–ரஜஸ் தமஸ் :ப்ராய பரிணாம பேத ஆஸ்பதத்வம் அசேதநஸ்ய;
சேதநஸ்ய து-தத் பரிரம்ப ஸம்பவ: அவித்யா பகவத் அபராத ராக த்வேஷாதி: |
தம் பகவாநேவ ஸமூலகாஷம் கஷதி (வேரோடு பிரதிபந்தகங்களைப் போக்கி அருளுபவர் இவனே )| தஸ்யைவ ஸர்வதா தத் விரோதி ஸ்வபாவத்வாத்|(அகில ஹேய ப்ரத்ய நீகன் இவனே )

பவித்ரமாவது சுத்திக்கு காரணம்
சுத்தி -தோஷ நிவ்ருத்தி
தோஷம் இரண்டு வகைப்படும் –
அவை ரஜோ தமோ குணங்களால் விகாரப்படும் அசேதனத்தின் தோஷமும்
அசேதன சேர்க்கையால் உண்டாகும் அஞ்ஞானம் பகவத் அபராதம் ராக த்வேஷம் முதலிய சேதன தோஷங்கள் ஆக இரண்டும்

ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –ஆதித்ய ஹ்ருதயம் -சூரணை-5-

க்ரோஶந்தி ச ஶாஸ்த்ராணி—”ஏதம் ஹ வா வந தபதி”,(தைத்ரியம் ஆனந்த வல்லி-அறிந்தவன் மோக்ஷம் பற்றி தபிக்க மாட்டான்)
“தத்யதா புஷ்கர பலாச ஆபோ ந ஶ்லிஷ்யந்தே (சாந்தோக்யம் )”“தத் யதா இஷீக தூலம் அக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத”,,(மெய் மேல் வினை முற்றவும் சாரா -தீயில் இட்ட பஞ்சு -தாமரை இலைத் தண்ணீர் போல் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்- பூர்வாகம் உத்தராகம் -)

“தத் ஸுக்ருத துஷ்க்ருதே தூநுதே ”,(கௌஷீகதம்)
“ததா வித்வாந் புண்ய பாபே விதூய”,(முண்டகம்)
“ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஶ்வரஜ்ஞாநாத் விஶுத்தி: பரமா மதா”,(வியாக்யவல்க ஸ்ம்ருதி)

“த்யாயேத் நாராயணம் தேவம் ஸ்நாநாதிஷு ச கர்மஸு |
ப்ராயஶ் சித்திர் ஹி ஸர்வஸ்ய துஷ் க்ருதஸ்யேதி வை ஶ்ருதி: ||”,(த்யானித்தே குளிக்க உள் அழுக்கு போகும்)

“யோ மாம் அஜம் அநாதிம் ச”,(10-3)
“பாவந : ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தந ”,(சபரி வார்த்தை )
“ப்ராயஶ் சித்தாநி அஸேஷாணி” இத்யாதி ப்ராயஶ் சித்த ப்ரகரணம் கார்த்ஸ்ந்யேந |(விஷ்ணு புராணம்-முழுவதுமான இடங்களில் பகவத் சம்பந்தமே பராயணம் )
“யதா அக்நி ருத்த தஶிக: கஷம் தஹதி ஸாநில: | ததா
சித்தஸ்திதோ விஷ்ணு: யோகி நாம் ஸர்வகில்பிஷம்||” இதி |(நெருப்புடன் காற்று சம்பந்தம் போல் சித்தத்தில் பெருமாள் உடன் யோகி சேர அனைத்தும் போகுமே )

அந்யஸ்யாபி தீர்தாதே : பவித்ரத்வம் தத் ஸம்ஶ்லேஷ ஆயத்தம் தர்ஶயதி பரமம் மஹத் இதி விஸேஷணாப்யாம் |(இவன் சம்பந்தத்தால் கங்கா தீர்த்தாதிகள்; பாவனத்வம் -ஆகவே இவனே பரமமும் மஹத்தும் )
ந கலு ஸ்வபாவ மலிநா நாம்
(அ)சேதநா நாம் ததுபஹ தாநாம் வா தேவாதீநாம்
ஸ்வ ஸத்ருஶ வஸ்த்வந்தர ஸோதகத்வம் யுக்திமத் |
அத ஏவ பராஶர ஶௌந காதிபி: ஶுபாஶ்ரய ப்ரகரணாதிஷு தத் ஸம்ஶீலநம் நிஷித்யதே ,(பாபம் போக்குவது சுபம் -தியானத்துக்கு இருப்பிடம் ஆஸ்ரயம் -இவனது திருமேனியே ஸூபாஸ்ரயம் )

தத் அர்ச்சனம் பாத சேவா பாவனத்வம் பிரசித்தம்-மற்ற தேவதாந்த்ரங்கள் தள்ளுபடி ஆகுமே

“அஶுத்தாஸ்மத ஸமஸ்தாஸ்து தேவாத்யா: கர்ம யாேநய:”,க்மராஶந்தி ச ஶாஸ்த்ராணி—(விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம் -மற்றவர்களுக்கு கர்ம வஸ்யத்வம் உண்டே )

“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: | ப்ராணிநா : கர்ம ஜநித ஸம்ஸார வஶவர்திந : ||” இத்யாதிஷு |
தத்ர தேவதாநாம் பாவநத்வம் ததுபாஸந அர்ச்சன பாதோதக ஸேவாதிநா ப்ரஸித்தம்;(விஷ்ணு தர்மம் -தத் அர்ச்சனம் பாத சேவா பாவானத்வம் பிரசித்தம்-சரீர ஆத்ம மனஸ் சுத்திக்கு மூன்று தரம் அவன் சம்பந்த தீர்த்தம் )
தீர்த ஆய தநாத: தத் ஸாமீப்யாத்; யதா கங்காயா: வைஷ்ணவே
“விஷ்ணு வாம பதாங்குஷ்ட விநிஸ் ஸ்ருதஸ்ய ஜலஸ்ய எதந் மஹாத்ம்யம்”இதி;(விஷ்ணு புராணம் கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே பரம பாவனத்வம்-இடது திருவடிக்கட்டை விரல் சம்பந்த தீர்த்தமே கங்கை -)

விஷ்ணோர் ஆயதநம் ஹ் யாப: ஸ ஹ்யபாம் பதிருச்யதே “ இத”ஜல மாத்ரஸ்ய ச |(ஆப முதலில் ஸ்ருஷ்ட்டி பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து தீர்த்தம் -அபாம் பதி அவனுக்கு திரு நாமம் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்)

காலஸ்ய ச ததவதார தத் தைவத்ய தச் சயநோத் தாநவத்த்வாத் த்வாதஶீ ஜயந்தீ ஶ்ரவணாதிவத் தத் ஸம்பந்தாத்|(ஏகாதசி திருவோணம்-நவமி -அஷ்டமி அவன் சம்பந்தத்தால் ஏற்றம் )
ஆத்ம குணாநாம் ஶமாதீநாம் தஜ் ஜ்ஞாந அநு குண்யாத் க்ரியாணாம் ச(சமதமாதி குணங்கள் அவனை அறிய உதவுவதால் ஏற்றம்)
யஜ்ஞ தாந தபஸ் :ஶ்ராத்த ப்ரப்ருதீ நாம ததாராதேத்வாத் |

ப்ராஹ்மணாதி ஜாதே :
தத் பரவேதாத் யயநாதௌ ஸாக்ஷாததிகாராத் ; யதா
“விஷ்ணும் காந்தம் வாஸு தேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வ மாயாத் தத்த்வ தர்ஶீ” இதி |(ப்ராஹ்மணனுக்கு நேராக ஸாஷாத் அதிகாரம் -வேதம் கற்று கற்பிக்க வேண்டுமே )

ஶ்ருதி ஸ்ம்ருத்யாதே : தத் பரத்வாத் தச் சாஸநத் வாச்ச,
“நாராயண பரா வேதா:”,
“ஶ்ருதிஸ் மதீ மமை வாஜ்ஞா” இதி |(விஷ்ணு தர்மம்)
ஆரண்யகே தீர்த யாத்ராயாம், “புண்யா த்வாரவதீ” இத் யுபக்ரம்ய,
“ஆஸ்தே ஹரிர சிந்த்யாத்மா தத்ரைவ மது ஸூதந : | தத் புண்யம் தத் பரம் ப்ரஹ்ம தத் தீர்தம் தத் தபோவநம் ||(வன பர்வம் அவன் சம்பந்தத்தால் துவாரகைக்கு ஏற்றம் )

இதி தத் ஸம்பந்த ஹேதுகம் தேஶஸ்ய பாவநத்வ மபிதாய
“பவித்ரணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யமத |
புண்யாநாமபி புண்யோ அஸௌ” இத்யேவமேவ ஸ்பஷடம் நிகம்யதே ||

பவித்ராணாம் பவித்ரம் என்பதால் இந்த தோஷங்களை வேரோடு களைந்து எறியும் பரம பாவனன் என்கிறது
பரிசுத்தி செய்பவர் என்றதனால் பகவத் சம்பந்தத்தினாலேயே கங்காதி தீர்த்தங்களும் இதர தேவதைகளும் க்ஷேத்ர விசேஷங்கசளும்
கால விசேஷங்களும் பரிசுத்தி கரங்கள் ஆகின்றன
ஆதலால் அவனே பரம பாவனன் என்று பல ஸாஸ்த்ரங்களின் ஆதாரங்களால் விளங்கும்

பவித்ரம் விளக்கி இனி மங்கள விளக்கம்

ஸுரபிஸ் ரகங்கராக ஸுர ஸுந்தரீ ஸுதார ஸாதிப்யோ
நிரஸ்த ஸமஸ்த ஸம்ஸார நிர்மல நிர் மர்யாத ஸ்வ ரஸ
ஸம்வித ஆநந்த ஸாந்த்ராத் ப்ரத்ய காத்ம நஶ்ச அத்யந்தம்
அபிலஷணீ யத்வாத் மங்கலாநாம் ச மங்கலம் |

அத: பரமம் ய: பராயணம்- ப்ராப்யம் | ப்ரபஞ்சயிஷ்யதே சைதத் ||(பின்னால் மேலும் விளக்குவோம் )

ய: ஏவம் ஸ: பரமம் பராயணமிதி விதாய ப்ரதி வக்தவ்யே ய:
பராயணமிதி ஸித்தவதநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்த யதிஶய ப்ரதர்ஶ நார்த: || 9 ||

வாசனை மிகுந்த பூ மாலை சந்தனம் தேவ ஸ்த்ரீ அம்ருத ரசம் முதலியவைகளும்
சம்சார பந்தம் முழுவதும் நீங்கி அதி பரிசுத்தனாகி இயற்கையில் அளவற்ற ஞான ஆனந்த ரூபனாக விளங்கும்
ஜீவாத்மாவைக் காட்டிலும் பரமாத்மா மிகவும் ஆசைப்படும் படி இருத்தலால் அவனே மங்களங்களுக்கு எல்லாம்
சிறந்த மங்களம் என்கிறார்

பரமம் யஸ் பராயணம் என்பது மூலம்
ஸ பராயணம் என்று இல்லாமல் யஸ் பராயணம் என்றது
ஸகல ஸாஸ்த்ரங்களிலும் அவனே பரன் என்பது ப்ரஸித்தம் என்று தோற்றுதற்காகவே –

———————

யார் முழு முதல் கடவுள் கேள்விக்குப் பதில்-ஜகத் காரணத்வம் -அகில காரணம் அத்புத காரணம் நிஷ் காரணம் -ஆதியுகாகமே-ஆதி யுக ஆகமே முதல் யுக தொடக்கத்தில் -நிமித்தம் ஸ்ருஷ்ட்டி லயம் உபாதானம் -ச காரம் ஸஹ காரி-தானோர் வித்து தனி வித்து ஓர் வித்து சதேவ ஆஸீத் ஏக மேவ ஆஸீத் அத்விதீயம் ஆஸீத் -வேர் முதலாய் வித்தாய் -முதல் தனி வித்தேயோ –

பர தத்வ ரூபமான உபேய விஷயமான வினாவிற்கு விடை
(தைவதம் –பாப பயாபஹம் )

தைவதம் தேவதானாம் ச பூதானாம் ய அவ்யய: பிதா ||–10-

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||–11-

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

அத “கிமேகம் தைவதம்” இதி ப்ரதமம் ப்ரஶ்நம் ப்ரதி ப்ரூதே – தைவதமிதி ஸார்தேந |(10 ஸ்லோகம் 11 ஸ்லோகம் முதல் பாதியால்)

ஸ ஏவ தேவதாநாம் விதி ஶிவ ஶத மகாதீநாம் மஹா தைவதம் தத்த்வம் |

குத:? தேஷாமேவ பூதாநாம் ஸத்பாவ பாஜாம் பிதா,
யதஸ் தஸ்யா அர்வாசீந பித்ருப்யோ விஸேஷ: அவ்யய: இதி |(இவனே அழிவில்லா பிதா–பூதா இருப்பை உடையவை ஸத்பாவமே இவனாலேயே-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாதா தாய் தந்தை -எவ் உயிர்க்கும் தாய் தந்தை )

ந ஹி தேந ஸநாதநேந பித்ருமந்த: கதாசிதநாதா:|

பித்ருத்வம் உபபாதயதி யதஸ் ஸர்வாணீதி | யத: நிமித்த காரணாத்| ஸர்வாணி த்ருஹிண த்ருமாவதீநி |
பூதாநி பவந்தி – ஜாயந்தே | யத்யபி ப்ரஹ்ம ஸர்காதுபரி அவாந்தர ஸர்கே
ச ப்ரஹ்மாதி முகேந ஸ்ருஜதி, அதாபி ப்ரதம ஸ்ருஷ்டௌ ந ததேதி ஸூசயதி ஆதியுகாகம இதி |

உபாதான -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
நிமித்த -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்
ஸஹ காரி- ஞான சக்தியாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் –

உபாதாந காரண அபி தமேவாஹ | அந்திமே (கடைசி யுகம் -இல்லாதவற்றைத் தருவித்துக் கொள்ள வேண்டும்) யுக க்ஷயே புந: யஸ்மிந் நேவ தாநி ப்ரலயம் யாந்தி – ப்ரலீயந்தே |
லய: கலு உபாதாநே ஏவ கார்யஸ்ய, யத ஊர்ண அபிதந்த்வாதே : லாலாதௌ |(கடல் அலை சிலந்தி மயில் தோகை –மூன்றும் ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்கு த்ருஷ்டாந்தங்கள்)
ஸ்திதி ப்ரவ்ருத்த்யாதி ஹேதுத்வம் ஸஹ காரி காரணத்வம் ச சகாரேண த்யோத்யதே |(ச காரம் -ரக்ஷணம் அர்த்தமும் -ஸஹ காரி காரணம் -இரண்டும் கொள்ள வேண்டும் -அகில ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே)

ஏவம் லக்ஷணகம் ஹி பர தத்த்வம் ஶ்ரூயதே
“யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ” இத்யாததௌ |(தைத்ரியம் ப்ருகு வல்லி)
ஸூத்ர்யதே ச “ஜந்மாத் யஸ்ய யத:” இதி |

அஸ்ய ஸைவ த்ரிவித காரணத்வம் ச “ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத்” இத்யுதாஹ்ருத்ய(அஷ்டகம்-காடாகவும் மரமாகவும் ப்ரஹ்மமே )
“ப்ரக்ருதிஶ் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்தாநுபமராதாத்”(ப்ரஹ்ம ஸூத்ரம்-1-4-23-ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் -ப்ரதிஜ்ஜைக்கு திருஷ்டாந்தம் இதுவே -ஸமஸ்த ஜகத்துக்கும் ப்ரஹ்மமே காரணம் )இத் யதிகரமண நிரணாயி |

ஏதேந “உபாதாநம் து பகவாந் நிமித்தம் து மஹேஶ்வர:” இதி காரண பேதேந அநபிமத மஹேஶ்வர வாதோ ந வைதிக: |(வேதத்துக்கு ஒத்துக்கொள்ளாத வாதம் )

ந ச ஜகதுபாதாநத்வாத் பகவதி விகாராதி தோஷ ப்ரஸக்தி: |
ஸ்வ ஶரீரதயா பரிக்ருஹீத ப்ரக்ருத் யாத் யேகதேஶ த்வாரகத்வம் பரிணாமாதே :
ஊர்ணநாபி த்ருஷ்டாந்த அவஷ்டம்பேந உபபாதயந்தீ தத்ர பவதீ ஶ்ருதிரேவ பர்யஹா ர்ஷீத் |

(உபாதானம் -மண் மாறி குடம் -இவனோ அவிகாராய -ஸ்வரூபம் மாறாது -பிரகிருதி சரீரம் மாறலாம்
சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப் படுத்த வேண்டும்-சிலந்தி சிலந்தி கூடு த்ருஷ்டாந்தம் போல் )

அத்ராபி விதாதவ்யே யோ தைவதமித் யநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்தி ப்ரதர்ஶந பர: |(ஸஹ வர வேண்டும் இடத்தில் யஸ் எவன் என்று சொல்லி இருப்பது பிரஸித்தம் என்பதால்
இப்படி இருப்பவர் யாரோ -இருப்பது ஸாஸ்த்ர ப்ரஸித்தம் என்றவாறு)

ததா ஹி உபநிஷதாதிஷு பரதத்வஸ்ய லக்ஷண தத்வஸ்தித் யுபாஸந ப்ராப்தி
ப்ரதிபாதந இனம் பர்ய அபர்யவஸாயிஷு ஸதஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை : நிருபபதை :(ஸத அஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை–சொற்கள் பர்யவஸான பர்யந்தம் அர்த்தம் கொள்ள வேண்டுமே-உப பதம் கையில் வஜ்ராயுதம் பிடித்த இந்திரன் என்றாலும் ஸ்ரீ மன் நாராயணனே -இவன் அந்தர்யாமியாய் இருந்தால் தானே இவனுக்கு சத்தை -முக்கியமான வேதாந்த அர்த்தம் -)
பரமாத் யுபபத ஸநாதைஶ்ச ஸாமாந்ய வாசிபி:
நிர்திஶ்ய மாநஸ்ய விதி ஹரி ஶிவாதி விஸேஷ பர்யவஸித ஆ காங்க்ஷாயாம்

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:”,(தத்வம் ஆத்மா ப்ரஹ்மம் தேஜஸ் நான்குக்கும் நாராயண -வேறே யாருக்கும் இல்லை என்பதால் பரம் பத பிரயோகம்)
“த விஷ்ணோ : பரமம் பதம்”,(பிராப்தியும் அவனே)
“யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிம்சித்”,(கட உபநிஷத் -இன்றும் என்றும் நேற்றும் நாளையும் இவனை விட மேம்பட்டது இல்லை)
“புருஷாந்த பரம் கிம்சித்”,(7-7)
“உத்தம : புருஷஸ் த்வந்ய:” (15)இத்யாதிபி: கண்டோக்திபி:,(சேநா தூளித –சாரத்ய வேஷமே மாம் ) ஸ்ருஷ்டி வாக்ய கதி ஸாமாந்யாத்,(வார்த்தைகளின் போக்கே -கதி சாமான்யம்)

(யன் மூல காரணம் –ஸ்ருஷ்டி வாக்கியம் -ப்ரஹ்மம் சத் ஆத்மா -நாராயண ஸ்திதி மஹா உபநிஷத்
ஸூ பால உபநிஷத்துக்கும் அத்தையே தொடர்ந்து சொல்லும்
திவ்யம் தேவன் ஏகம் நாராயணன்)

தத்த்வ பர புருஷ ஸூக்த- உத்தர நாராயண-ப்ரப்ருதி ப்ரபல ப்ரதேஶாந்தர தாத்பர்யாத்,
ஸுபால மைத்ராயணீய மஹா உபநிஷச் சாந்தோக்ய தைத்திரீய ஐதரேய கடவல்லீ ப்ரப்ருதி
பஹு உபநிஷதுத் கோஷோண

ஸாத்விக இதிஹாஸ  புராண ப்ராசுர்யேண தேவதா பாரமார்த்யஜ்ஞ பராஶர பாராஶர்ய ப்ராசேதஸாதி (வால்மீகி போன்றவர்களும்) பரமர்ஷிமதை :

அஸ்யைவ
வேத ஸித்தாந்தத்வே ஸ்வ பரம ஆகம ஸம் ப்ரதிபத்த்யா ரூப ஆயுத வாஹந சாரித்ர விஸேஷாதி ஸாமர்த்யதஶ்ச
கலு பகவதோ நிரங்குச ஐஶ்வர்யம் ததிதர நிகர்ஷஶ்ச புத்திமதாம் ஸ்வத்யவஸாநம் |
தஹர வைஶ்வாந ராத்யதிகரணை : ஸமந்வயாத்யாய ஏவ ஸைவம் அத்யவஸஸு: அஸ்மதாசார்யா இதி ந அதி விஸ்த்ருணீமஹே ||(நம் முன்னோர் ஆச்சார்யர்கள் பலவாறு விளக்கி உள்ளார்கள் -நான் விரிவுக்கு அஞ்சி நிற்கிறேன் )

ததா ச ஸம்சிக்ஷிபு: யாமுநா சார்யா:, “த்வாம் ஶீல ரூப சரிதை :”(15)இத்யாதிநா |

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||ஶ்லோகம் 15 –

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

தாத பாதாஶ்ச (கூரத்தாழ்வானும்- )“தத்த்வார்த தத் பர பரஶ் ஶத வேத வாக்யை :ஸாமர்த்யத:ஸ்ம்ருதி பிரப்யத தாத்ருஶீபி: |
த்வாமேவ தத்த்வ பர ஸாத்விக ஸத் புராணை :  தைவஜ்ஞதீ பிரபி நிஶ்சிநும: பரேஶம்||”,
“ரூபஶ்ரியா பரமயா பரமேண தாம்நா சித்ரைஶ் ச கைஶ்சிதுசிசத: பவதஶ் சரித்ரை : |
சிஹ்நை : அநிஹ்நவபதை : அபரைஶ்ச கைஶ்சித் நிஶ்சிந்வதே த்வயி விபஶ்சித ஈஶித்ருத்வம் ||” இதி ||(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -23)

சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-

எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது

யந் மூல காரணம் அபுத்த்யத ஸ்ருஷ்ட்டி வாக்யை
ப்ரஹ்ம இதி வா சதிதிவ ஆத்மகிரா தவ தத்
நாராயணஸ் த்விதி மஹா உபநிஷத் பிரவீதி
ஸுவ்பாலிகீ ப்ரப்ருதயோபி அநு ஜக்முர் ஏநாம் –25-

ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் உள்ள காரண வாக்யங்களாலே -சத் என்றோ -ப்ரஹ்ம -என்றோ -ஆத்மா -என்றோ
எந்த வஸ்துவானது மூல காரணமாக அறியப்பட்டு இருக்கின்றதோ –
அந்த வ்யக்தி நாராயணனே என்று மஹா உபநிஷத்து ஓதுகின்றது–
இந்த மஹா உபநிஷத்தை ஸூபால உபநிஷத் முதலானவைகளும் பின் செல்லுகின்றன –

—————

அடுத்த ஸ்லோகத்துக்கு அவதாரிகை

ஏவம் ஸுநிர்ணீதயோ : ஸர்வ பரயோ : தத்த்வ ஹிதயோ : ஸர்வ யோக்யம் ஹித விஸேஷம் அவதாரயந் ஶ்ரோதாரம் நிமந்த்ரயதே தஸ்யேதி –

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

தஸ்ய யதோக்த மஹா மஹிம்ந: (கீழ் பரமமான தத்வம் மஹிமையை யுடைய )| லோக ப்ரதாநஸ்ய அஸேஷ ஸேஷிண: |
ஜகந் நாதஸ்ய ஸர்வ நியந்து: |
விஷ்ணோ : (நீக்கமில்லா நிறைந்து )ஸம்பந்திஷு ஸத் ஸ்வபி பஹுஷு ததா வர்ஜந உபாயாந்தரேஷு,
நாம ஸஹஸ்ர மேவ
ஸர்வ பாப பயாபஹம் ஸர்வ ப்ரகாரம் பாபம் தத்தேதுகம் பயம் ச ஸ மூலகாதம் ஹந்யயாத்  இத் ஶம்ஸநார்ஹம் யத்தத் மே மத்த: மதர்தம் வா ஶ்ருணு |(என்னிடத்தில் கேள் -என்றும் எனக்காக கேள் என்றும்-பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார் )
ஸ்வயமேத்ர ஶ்ருண்வத: புநஸ் : ஶ்ரவண நிமிந்த்ரணம் பூபதே இதி ஸம்போதநம் ச வக்து:
ஶ்ரோத்ரு லாபம் அஸ்மிந் விஷயே ஶ்லாக்யம் ஸூசயத: || 12 ||(ராஜா கேள் -ஸஹஸ்ர நாமம் பெருமை அறிந்து -கிடைக்கும் பாக்யம் சொல்ல ஒண்ணாதே) 

முதலாவது வினாவிற்கு விடை
எவர் ப்ரஹ்மாதி தேவர்களுக்கு எல்லாம் மகத்தான தேவதையோ
எவர் பிரம்மாதி பீபிலி வரை எல்லாப் பிராணிகளுக்கும் அழிவற்ற பிதாவோ
எவரிடம் இருந்து எல்லாப் பொருள்களும் யுக ஆரம்பத்தில் ஸ்ருஷ்டி காலத்தில் பிரம்மாவை முதலில் படைத்து அவரைக் கொண்டு
மற்றப் படைப்புகளை நடத்துகிற படியால் நான்முகனையும் நாராயணன் தானே படைக்கிறார் என்று தெரிவிக்கிறார்

இதனால் எம்பெருமான் நிமித்த காரணம் -பிதாவானமை விளக்கப்பட்டது
இவரிடத்தில் இருந்து திரும்பவும் பிரளய காலத்தில் லயம் ஆகின்றதோ
கார்யங்கள் எல்லாம் லயித்து உபாதான காரணத்திலே யாகையாலே இவனே உபாதான காரணம் என்கிறது

மூலத்தில் சகாரம் ஸஹ காரி காரணமும் அவனே என்கிறது –

இப்படிப்பட்ட லக்ஷணம் பொருந்தியவரையே பர தத்வமாக ஸ்ருதிகளும் ஸூத்ரங்களும் சொல்லுகின்றன
அப்படிப்பட்ட உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியும் உலகங்களை நடத்துபவருமாகிய விஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்களும் பாவங்களையும் அவற்றினால் வரும் பயத்தையும் வேரோடு களைகின்றவை
அரசனே அவற்றை என்னிடம் அடுத்து கேள்

என் நன்மைக்காகக் கேள் என்னவுமாம்

இங்கே இந்தக் கொள்கைக்கும்
இதற்கு விரோதமான கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும்
பரத்வ நிர்ணயத்தைப் பற்றி விசாரித்து
பல ஆதாரங்கள் காட்டி நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது

இப்படி ஆறு வினாக்களுக்கும் விடை கூறப்பட்டமை காண்க –

————

தாமே விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கும் அரசரை நோக்கி பீஷ்மர்
அரசனே கேள் என்று மீண்டும் அழைத்தல்
இந்தப் பகவத் விஷயத்தைச் சொல்லுபவருக்கு கேட்பவர் கிடைத்த சிறப்பைச் சொல்கிறது

அத வக்தும் ப்ரதிஜாநீதே யாநீதி –

யாநி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||(பூ பதே ஸ்ரு ணு -காது கொடுத்தால் போதும் -ஆசை ஒன்றே வேண்டும் -யானி –தானி )

இஹ சதுஷ்டயீ ஹி ஶப்தாநாம் ப்ரவத்தி: 1-த்ரவ்ய2-ஜாதி3- குண4-க்ரியா விஷய பேதேந (நான்கையும் குறிக்கும்) |
தத்ர [அ]த்ரவ்யோபாதித்வேந [அ]ஸாதாரண்யேந ச [அ]த்ரவ்ய ஜாதி நிமிதத்வாத் 
ப்ரக்ருஷ்ட குண கர்ம நிமித்தத்வமேவ பகவந் நாம்நாம் ப்ரவீதி கௌணாநி இதி |(த்ரவ்யம் ஜாதி இவற்றை விட குணம் கர்மம் இவற்றால் சிறப்பு)

குணேப்ய: கர்மப் யஶ்ச நிமித்த பூதேப்ய: ஆகதாநி; யௌகிகாநீத்யர்த:|
குண ஶப்த: கர்மணோ அபி ப்ரதர்ஶக: |

பதச் சேர்க்கையால் வந்த அர்த்தம் -யவ்விகிதம்
பங்கஜம் சேற்றில் பிறந்த செந்தாமரை
காளான் நாய் குடையையும் சொல்லலாமே
ரூடி அர்த்தம் -தாமரை பிரஸித்த அர்த்தம்

“[ப்ரஸந்நாத் மாத்மநோ ] ப்ரவதந் நாத்மநோ நாம்நாம் நிருக்தம் குண கர்மணாம்”;
பகவாந் “கௌணாநி மம நாமாநி கீர்திதாநி ச காநிசித்”,பாரதம் 
“நாம கர்மார் தவித் தாத”,பாரதம்-உத்யோக பர்வம் 
“நிருக்தம் கர்மஜாநாம் ச ஶ்ருணுஷ்வ ப்ரயதோ அநக” இத்யாதி வசநாத் |பாரதம்-சாந்தி பர்வம் 

ந ஸைஷாம் யத்ருச்சா ஶப்தத்வம்; விவக்ஷித அவயவ அர்தத்வாத் (அவயவங்கள் அர்த்தம் )ஸாங்கேதிகத்வாச்ச-(அடையாள அர்த்தம் )||(நமக்கு அவன் பெயர் சேஷத்வம் அடியாக கொண்டுள்ளோம் )
விக்யாதாநி(ப்ரஸித்தம் )சந்தோ பாஷயோ : ப்ரவ்ருத்த் யாதீநாம் ப்ரயோக பூயஸ்த்வாத்
தத் அஸாதாரண்யேந ப்ரஸித்தாநி; ரூடாநீத்யர்த: |

யோகாதிநா அர்தாந்தர வ்ருத்தி ஸம்பவே அபி ஏகத்ர நியதத்வம் ஹி நாமத்வம் |(கேசவன் ப்ரஸஸ்த கேஸ பாஸம் கொண்டவன் -சேராமல் திருமால் ஒருவன் இடமே சேரும் ரூடியாக பிரசித்தமாக இருப்பதால்)

ருஷிபிர் : அஸேஷ வேதார்த தர்ஶிபி: ஸநக ஸநத்குமார நாரத ப்ரப்ருதிபி:|

பரிகீதாநி ஏவம் ரூபாணி ஏவம் நிமித்தாநி ஏதத் வாசகாநீதி

பரித: துக்த தேநுவத் அபிநிவிஶ மாநை :(பால் கொடுக்கும் பசு காம்புகள் வழியாக பாலைக் கொடுக்குமா போல்)
ப்ரீத்யா ப்ரயுக்தாநி யாநி நாமாநி தேப்ய: ஏகைக ஸ்மாத் ஏகைகம் மது கரக்ரமேண (தேன் வண்டு போல் சேமித்து )ஸமா ஹ்ருத்ய பகவதா வ்யாஸேந
ஸ்தோத்ர ரூபேண கீர்திதாநி ஸம்ப்ரதாய பாரம்பர்யேண அஸ்மத் பர்யந்தம் ஸம் ப்ராப்தாநி துப்யம் வக்ஷ்யாமி |(ஸம்ப்ரதாய பரம்பரையாக வந்து உணர்ந்து- உனக்கு அறிய கூறுகிறேன்)

கிமர்தம்? பூதயே , பூதி: பவநம் ஸத்தா; அநாதி ஸம்ஸார த்ருஷ்டி விநாஷ்டாத்மந புநருஜ் ஜீவநா யேத்யர்த: ||

சத்தைக்காகவும் உஜ்ஜஜீவனத்துக்காகவும் -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே உழன்று இருக்கும் நமக்காக

ஶ்ரூயதே ஹி ஏவம் ஆத்மந : ஸதஸத்பாவௌ

“அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத், அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது:” இதி |
அபரிமித மஹாத்ம்ய தயா அபரிமித அபிஜ்ஞத்வாத் பகவதோ யத்யபி க்ருத்ஸ்ந நாம க்ரஹண அஸம்பவ:;

பிரபாவம் மஹாத்ம்யம் -அவனைச் சொல்லி முடிக்க முடியாதே -முழுமையாக சொல்லா விட்டாலும் முடிந்த அளவு சொல்கிறேன்

“ஶ்ருதம் ஏதஸ்ய தேவஸ்ய நாம நிர்வசநம் ஶுபம்|
யாவத் தத்ர அபிஜாநேஹம் அப்ரமேயோ ஹி கேஶவ:||”(புரிந்து கொள்ள முடியாமல் -புத்திக்கு அப்பால் பட்டவன் என்று அறியவே சொல்கிறோம் கேட்க்கிறோம்)
இதி ப்ரகாரேண புபூஷதாம் (அறிய ஆசை ஒன்றே வேண்டும் )து விஷ்ணு நாம ஸஹஸ்ரேண ஆத்ம லாபோ பவதீதி த்வந யதி மஹாத்மந இதி |

ஏவ மேஷாம் குண[கர்ம ]நிமித்தத்வாத் ஏதததிகாரிபி: பகவத் குண தஸ்கரா ந வ்யவஹார்யா: |
“அஸ்த்வியம் ஸ குண ப்ரஹ்ம வித்யா அர்வாசீந பலாதிகாரிணாம், நிர்குண வித்யா து முமுக்ஷூணாமேவ ஹி” இதிசேத்,(தாழ்ந்த பலத்துக்கு ச குணம் சொல்லும் பக்ஷவாதிகள் வாதம் பலம் சொல்வதிலேயே நிரஸனம் )
திக் தவாம் பதிரம் ய: அஸ்யா ஏவ “முச்யதே ஜந்து:ஜந்ம ஸம்ஸார பந்தநாத்”,
“யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” இத்யுபாயத்வம் குஷ்யமாணம் ந ஶ்ருணோஷி |

கிம் ச ஸ குண நிர் குணே த்வே ப்ரஹ்மணீ ப்ரஸஜ்யே யாதாம் இத்யத்வைதம் விபத்யதே |(இரண்டு ப்ரஹ்மம் சொல்வதாலேயே அத்வைதம் நிரஸனம் -பொய்யான ச குண உபாஸனம் செய்வதால் பலன் கிட்டுமோ)

“பரமோ மத” இதி,
“அதிகதமோ மத” இதி ஸர்வ ஶாஸ்த்ரார்தாதிக தர ஸார ஸமுத்தார ஏக ப்ரயோஜநாதா அதிக்ருதஸ்ய
அர்வாசீந விஷய த்வோக்தௌ க்வ அந்யத்ர அநர்வாசீந ஸித்தி: அநயோ : வித்யயோ :?(|ச குண உபாசனம் தாழ்ந்த பலனைக் கொடுக்கும் என்றால் பீஷ்மர் அறிந்த வற்றில் இதுவே உயர்ந்தது -வேறே எந்த வித்யை கொடுக்கும் )

ஸ குணா நிர் குணார் தேதி மாச வாசால வோசதா: |
ந விருத்தார்தயோ : யஸ்மாத் உபாய உபேய தயா த்வயோ : ||(வார்த்தைப்பாடு பண்ணாதே -விருத்தமான இரண்டும் உபாயம் உபேயம் ஆகாதே )

மஹாத்மாவான பகவானுக்கு எந்த நாமங்கள் குணங்களாலும் செய்கைகளாலும்
குணம் என்றதால் செயகைகளையும் கொள்ள வேண்டுமே –
வந்தனவாகப் பிரஸித்தி பெற்றனவோ
ரிஷிகளால் நன்றாகக் கீர்த்தனம் செய்யப்பட்டவையோ
ப்ரஸித்தி -இந்த நாமங்கள் வேதங்களிலும் லோகத்திலும் மிகுதியாக வழங்கப் பெற்று பகவானையே குறிப்பன என்ற பிரசித்தி –
வேதார்த்தங்களை உள்ளபடி தரிசிக்க வல்ல ஸநக ஸனத் குமார நாரதாதி ரிஷிகள்
இன்ன திரு நாமம் இன்ன காரணத்தால் வந்தன-இன்ன அர்த்தங்களை சொல்லுகின்றன என்று
கறவைப் பசுக்கள் தம் கன்றுகளுக்கு பாலைத் தாமே விரும்பிக் கொடுப்பது போலே
மனம் உவந்து ஆங்காங்கு திரு நாமங்களை ஸங்கீர்த்தனம் செய்தார்கள்
அவற்றை ஒவ்வோர் இடங்களில் இருந்து ஒவ்வொன்றாக மதுரகர நியாயமாகச் சேர்த்து
ஸ்ரீ வ்யாஸ பகவான் இந்த ஸ்தோத்ர ரூபமாகச் செய்து அருள
அவரிடம் இருந்து பீஷ்மருக்கு கிடைக்கப் பெற்றன –

ஆத்ம உஜ்ஜீவனத்துக்காக என்றமையால்
அநாதி காலமாக ஸம்ஸாரத்தில் அகப்பட்டு அறிவு அழிந்து கிடக்கும் ஆத்மாக்கள் சத்தை பெற்று உஜ்ஜீவிப்பதற்காக உனக்குச் சொல்லுகிறேன் என்றும்
மஹாத்மா என்றதனால்
இப்படிப்பட்ட பரம புருஷனை அறிவதால் ஸத் பாவமும் அறியாமையினால் அஸத் பாவமும் உண்டாவதாக ஸ்ருதிகள் சொல்லுகின்றன
எம்பெருமான் அளவற்ற அறிவுடைய -ஸர்வஞ்ஞன் -யாகையாலும்
அளவற்ற மஹாத்ம்யம் யுடையவராகையாலும்
அவருக்குத் தக்கபடி அவனுடைய திரு நாமங்களை அளவற்ற மஹாத்ம்யம் யுடையவையாய் இருக்குமே
அவற்றை எல்லாம் அறிவது முடியாதாயினும் கேட்ட வரையிலும் தெரிந்து கொண்டு இருக்கிறேன்
அவனுடைய திரு நாமங்களைக் கேட்ட வரையில் ஆத்ம லாபம் யுண்டு -என்றும் கூறினார் என்க

மனஸில் அழுக்கு இருந்தால் -கலக்கம் உண்டாகி -பாதிப்பு ஏற்பட அறிகிறோம் –
உடம்புக்கு கவசம் போல் மனஸ்ஸுக்கு திரு நாம சங்கீர்த்தனம்-

தாய்க்கும் மகனுக்கும் இவருக்கும் –இவர் அடி பணிந்தாருக்கும்-பரம காருண்யத்தால் –
திருநாமங்களை பற்றிக் கேள்வி கேட்க்காமலேயே திரு நாமங்களையும் அருளிச் செய்கிறார்-

பிறகு ஸ குண நிர்க் குண வாதத்தைப் பற்றி விரிவாக விசாரித்து இருக்கிறது –

அபி ச நிர் குணஸ்ய கிம் மூலம் குண ப்ரதீதே:?(ஓன்று மற்று ஒன்றாகத் தோற்றுமா போல் -வெள்ளி முத்துச் சிப்பி -போல் நிர்குண ச குண ப்ரஹ்மம் )
ஸா அவித்யேதி சேத், ஜநி ம்ருதித மோஹாதி பவ தோஷ விஷ மூர்ச்சி தஸ்ய முமூர்ஷோ :
பரம பேஷஜம் ப்ரஹ்மைவ அவித்யா- ப்ர மாத்யதேஷ தோஷ ஆஸ்பதம் (ப்ரஹ்மத்துக்கே அவித்யாதி தோஷம் உண்டு என்பாய் ஆனால் )
அநாக்ராத குண கணிகம் சேதி மநோ ஹரம் இதம் வேத ரஹஸ்யம் |

ப்ரஹ்ம தோஷா ம்ருஷா சேத் (ப்ரஹ்ம தோஷம் பொய்யானால் )தே நைர் குண்யம் ச ம்ருஷா மதம் |
நைர் தோஷ்ய ஸ குணத்வே தே ஸத்யே ஸ்யாதாம் ந சேச்சஸி ||(ப்ரஹ்மத்துக்கு நிர் குணத்வம் என்றாலே நிர்குணத்வமும் பொய்யாகும் அன்றோ-ஸ குணத்வம் சித்தமாகுமே )

(ப்ரஹ்மம் மட்டுமே சத்யம் ஜகத் மித்யா- ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே- ஞானமே ஓன்று- ஞானம் உடையவன் இல்லை என்பாய் ஆனால்
ப்ரஹ்மமே அவித்யா என்றால் ஸ்வரூபமே -போக்கவே முடியாதே
ப்ரஹ்மத்துக்கு அவித்யா என்றால் அத்வைதம் போகுமே)

கோ வா ப்ரஹ்ம அவித்யாம் இமம் உபஹந்யாத்?
அத்வைத வித்யா நிஷ்ட இதி சேத் , இதம் ததோ அபி மநோ ஹரம் யத் பரம் ப்ரஹ்ம பம் ப்ரமீதி
ஸம்ஸாரீ ததுத்தாரயதீதி |
ப்ரஹ்மத்துக்கு அவித்யை யார் போக்குவார் என்றால் அத்வைதம் அறிந்த ஜீவன் போக்குவான் என்பாய் என்றால் -இந்த வாதமும் மநோ ஹராமாய இருக்கும் ப்ரஹ்மம் உழன்று இருக்க ஜீவன் மீட்ப்பார் என்கிறாயே

அபி ச ஸ குண வாக்யம் கஸ்ய ஹேதோ: நிரர்தகம்?
நிர் குண வாக்ய பாத் யத்வாத் இதி சேத், விபரீதம் கஸ்மாந்ந ஸ்யாத்?
ஸம மேவ ஹ்யுபயோ : ப்ராமாண்யம் விராேதஶ்ச |

ஒன்றுக்கு மற்ற ஓன்று விரோதம் என்றால் இரண்டு வாதிகளும் சமமாகும்

அந்யச்ச குணாஶ்சேத் நிஷேத்தவ்யா:, கிம் தபஸ்விந்யா குண ஶ்ருத்யா?
ப்ரதிஷேத்ய குண ப்ரஸஞ்ஜிகா ஸேதி சேத், மா ச பூத் ப்ரதிஷேத்யம் |

குணம் உண்டு என்று ப்ரஸக்தி இருந்தால் தானே இல்லை என்று நிஷேதிக்க
பின்னால் சொன்னதே பிரபலம் -ஆகவே குணம் இல்லை என்பாய் ஆனால்

ந ஹ்ய ப்ரஸக்தம் ப்ரஸஜ்ய ததேவ ப்ரதிஷேதது ஸாஸ்த்ரமிதி காசித் லலாட பட்டே லிபி: |
ப்ரக்ஷால நாத்தி பங்கஸ்ய தூர தஸ் பர்ஸநம் வரம் |

சேறு இருந்தால் தானே நீரால் அலம்ப முடியும்
அதனால் சேற்றைப் பூசிக்கொள்வார் உண்டோ
தூரமாக தள்ளிப் போவதே உசிதம் அன்றோ

நச “பௌர்வாபர்யே பூர்வ தவ்ர்பல்யம் ப்ரக்ருதிவத்” இதி ஸார்வத்ரிகோ ந்யாய: |
ந ஹி ப்ராக்தநம் இஹ அஸ்தீதி ஜ்ஞாநம் ந அஸ்தீதி பரஸ்தாத்த ந ஸப்தோ ஹி நஸ்தி |

ப்ரக்ருதி ஷட்கம் விக்ருதி ஷட்கம் -ஆக 12 அத்தியாயங்கள் பூர்வ மீமாம்ஸை

இல்லை என்றால் இப்போது இல்லை -என்பதே தேறும் முன்பு இருந்தது என்பதை நிஷேதிக்காதே

பவமா நா அபச்சேதே ப்ராக்ருத தர்ம ப்ராப்தவ் ச பூர்வ தவ்ர்பல்ய, பூர்வம் அநுப ம்ருத்ய பரஸ்ய உத்பத்த்ய அஸம்பவாத் |
இஹ து ஸம்பவோ வக்ஷ்யதே |

கச்சம் விட்டால் பிராயச்சித்தம் சொல்லும்
உத்காதா விட்டால் கர்மாவை நிறுத்த வேண்டும் -முதலில் இருந்து பண்ண வேண்டும்
ப்ரதிஹத்தா விட்டால் யாகத்துக்கு உண்டான தக்ஷிணை முழுவதுமே கொடுக்க வேண்டும் –
இருவரும் விட்டால் -இரண்டும் பண்ண முடியாதே
எந்த விதி வாக்கியம் பிரபலம் -பின் சொன்ன வாக்யமே பிரபலம்
இந்த விதியை அத்வைதி கொள்கிறார் இங்கு
இது பொருந்தாது -அநியதம் -நியதம்-இரண்டும் உண்டே-வேதம் அநாதி -அனைத்து வாக்கியங்களும் நித்யம் -முன் பின் என்பதே வராதே

இங்கு விரோதமே இல்லை -ச குண வாக்கியமும் நிர் குண வாக்கியமும் விரோதம் இல்லாதவையே

யதி பரத்வாத் நிர் குண வசநம் குண அம்சம் நிஹ்நுதே, ப்ரஹ்ம ஸ்வரூப அம்சம் அபி
“ஸூந்ய மேவ தத்வம்” இதி வாக்யம் பாததாம், பரத்வாத் |
தத் புத்த ப்ர மூலத்வாத் ந வைதிகம் வஸ்து பாததே இதி சேத், ந, வேதோ அபி
ஹி தே ப்ரஹ்ம ப்ரமூல ஏவேதி கோ விசேஷோ அநயோ : ?

தத்வம் ப்ரஹ்மம் வேதம் முன் சொல்ல புத்தர் பின் சொல்ல -இது அத்தை அளிக்குமோ
ப்ரஹ்மத்தின் பிரமத்தால் வந்தது என்று நீ சொல்வதற்கும் இதுக்கும் வாசி இல்லையே

கிம் ச ப்ரத்யுதே குண ஸாஸ்த்ர மேவ பரம் த்ருஷ்டம்; தேஹாத்ம துர் குண நிதேஷே பர நிர் குண வசந பூர்வம் பகவதி ஹேய குணாந் ப்ரதிஷித்ய
கல்யாண குண விதி பரத்வஸ்ய “அபஹத பாப்மா விஜர:” இத்யாத வுபலம்பாத்|
அபி ச தத்ய- மித்யா விஷய வ்யவஸ்தயா ஸ குண நிர் குண ஶ்ருத்தயோ : பரித்ராணமிதி விப்ரலம்ப: |
பங்க ஏவ ஹி மித்யா விஷயத்வே ப்ரமாணஸ்ய, யதா அலீக கலதவ்க க்ரஹஸ்ய |
ஸ குண நிஷேதோ அபி மித்யா விஷய ஏவ த்வந் மதே இதி, தஸ்ய வா கதம் தத்த்வ விஷயத்வம் இத் யலம் அஸம்பாஷ்ய ஸம்பாஷணேந ||

நல்ல குணங்கள் உண்டு கெட்ட குணங்கள் இல்லை இரண்டுமே உண்மையாகும்-தேக குணம் ஆத்மாவைப் பாதிக்காதது போல் –

அத்ரேயம் தத்த்வ விதாம் வ்யவஸ்தா | ஜ்ஞாந சக்த்யாதி ஶ்ருதி: கல்யாண குண விஷயா, நிர் குண ஶ்ருதி: ராக த்வேஷாதி விஷயேதி;
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”(சாந்தோக்யம் )இத்யாதே: மங்கல விஷயத்வ தர்ஸநாத்,
நிர் குணமிதி ஸாமாந்ய நிஷேதஸ்ய ததந்ய விஷயத்வேந கார்தார்த்ய ஸம்பவாச்ச | (கெட்ட பண்புகள் இல்லை -என்று சுருக்கியே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஏவமேவ பதாஹவநீய-ப்ராஹ்மண பரி வ்ராஜக – ப்ராஹ் மண கௌண்டிந்ய-கோபலீ வர்த -ப்ரப்ருதி ந்யாயோ நிரங்குஸ : |
ததா கலே பாதிகயா தோஷ விஷயோ நிஷேத : குண விஷயோ விதிஶ்வ ஏகஸ்மிந் வாக்யே “அபஹத பாப்மா ” இத்யாதி:,
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”இத்யந்த :;(ஒரே வாக்கியத்தில் ஆறு விஷயங்கள்-கெட்ட குணங்கள் இல்லை என்றும்- இரண்டு குணங்கள் உண்டு என்றும் சொல்லும்)

“யத் ததத் ரேஶ்யம்” இத்யாரப்ய “நித்யம் விபும் ஸர்வகதம்
ஸு ஸூக்ஷ்மம் ததவ்யயம் யத் பூதயோம் பரிபஶ்யந்தி தீரா:” இத்யந்தஶ்ச|(கோத்ரம் இல்லாதவர் அனைவரும் அவரே -எல்லாம் நிறைந்தவர்)

ந சைவம் விதே ந்யாய அபேக்ஷயா விஷய வ்யவஸ்தா , ஸ்தம்போ அஸ்தி கும்போ நாஸ்தீதிவத் |(ஸ்தம்பம் -தூண் இருக்கு -கும்பம் குடம் இல்லை -விருத்தம் இல்லையே-வாக்யங்களுக்கு விஷயங்களே வேறே வேறே தானே )

த்ருஶ்யத்வாதி நிஷேதம் தத் விருத்த மங்கல குண பரம் ஸூத்ர காரோ விவவ்ரே
“அத்ருஶ்யத்வாதி குணகக தர்மோக்தே:” இதி (1-2-22)|

குண உப ஸம்ஹார பாதே ச
சாண்டில்ய- உபகோஸல -தஹர-புருஷ-பர்யங்க வித்யா வேத்யாநாம்
குண ப்ரபந்தாநாம் புத்தி மாத்ர ஸாரத்வம் ஆசங்கய ச பர்ய ஹார்ஷீத்“ஆதராதலோப:” இதி |(ஒரு குணமும் விடக் கூடாது என்பதற்காகவே சொல்லிற்று)

ஸ்பஷ்டம் ச பகவாந் பராஸர: “ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ரு தா குணா:”,
“ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அஸௌ”   இத் யாதவ் இமா மேவ ச வ்யவஸ்தாம் ஆதஸ்தே |(விஷ்ணு புராணம் )

அகில ஹேய ப்ரத்ய நீக
கல்யாணை ஏக குண தானத்வம்
உபய லிங்கமும் உபய விபூதியும் இவனுக்கு உண்டே

——————–

ததா ச
தோஷா வத்யுபதா ஸம்க்யா விருத்தை மங்கலை : குணை : |
பரிபூர்ணம் பரம் ப்ரஹ்ம சாஸ்த்ரை : ஜோகுஷ்ய தேதராம் ||

மங்களமான கல்யாண குணங்களால் நிறைந்து -தோஷங்கள் இல்லாமை -அளவு இல்லாமல் எண்ணிக்கை இல்லாமல் -கோஷிக்கும் இல்லை வாக்கியங்களும் உண்டே

“ஏதம் ஹி ஸர்வாணி வாமாநி அபி ஸம்விஸந்தி”,(வாமாநி-வாமனன் ஸூ கம் நல்ல குணங்கள்)

சீறி அருளாதே -அவன் இடம் எது இருந்தாலும் நல்ல குணமே -அவனை அடைந்து குணங்கள் நல்ல பண்பை அடைகின்றன

“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”(ப்ரஹதாரண்யம் -அடக்கி ஆள்கிறான்)
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”,
“யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்”,(சாந்தோக்யம் -அனைத்தையும் அறிந்து புரிந்தவன்)
“பரா அஸ்ய ஸக்திர் விவிதைவ ஶ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச”,(ஸ்வேதாஸ்ரம்)
“ மாதா பிதா ப்ராதா நிவாஸஶ் ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:”,(ஸூபால)
“ஸர்வ கர்மா ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ:”;(நின்றனர் இருந்தனர் –பிரவிருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம் )
ஆநந்த வல்லயாம் ச “ஜ்ஞாந பல யௌவநாதீநாம் இயத்தா ராஹித்யேந
தத் விஷய ஆநந்தாத் வாங் மநஸ நிவ்ருத்தி: மீமாம்ஸிதா ;

(மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி மேல் மேல் -உபரி உபரி -பிரம்மா ஆனந்தம் வரை சென்று -அவரை கீழே மனுஷ்ய ஆனந்தத்தில் வைத்து
மேல் மேல் சென்றாலும் எட்ட முடியாத ஆனந்தம் அவனது அன்றோ
உயர்வற உயர் நலம் உடையவன் அவன்)

வைஷ்ணவே ச–பகவச் சப்த நிர் வசந ப்ரகரணே “ஸூத்தே மஹா விபூத் யாக்தய” இத்யாதி ச ஸாகல்யேந;(விஷ்ணு புராணம் -ப க வ அன் -குணவான் -இயற்கையில் இவனுக்கே -சாகல்யேந முழுமை இவனுக்கே)
ஸபா பர்வணி பீஷ்ம : “ஜ்ஞாந வ்ருத்தா மயா ராஜந் பஹவ: பர்யுபாஸிதா 😐
தேஷாம் குண வதாம் ஸுவ்ரே : அஹம் குண வதோ குணாந் ||
ஸமா கதாநாம் அஶ் ரௌஷம் பஹூந் பஹு மதாந் ஸதாம்| குணைரந்யாந் அதிக்ரம்ய ஹரி: அர்ச்ய தமோ மத ||”;(அர்ச்சய தமம் இவனே )

கர்ண பர்வணி ஸ:
“வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை :|(ஏத்த ஏத்த எங்கு எய்தும் )
மஹாத்மந: சங்க சக்ர அஸி பாணே : விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸுதேவாத்மஜஸ்ய||”;

ஶ்ரீவாராஹே
“சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ரோ பவேந்நர: காபி விஸூத்த சேசதா : |
ஸ தே குணா நாம யுதைகமம்ஸம் வதேந்ந வா தேவ வர ப்ரஸீத |”;(பெருமை சொல்ல முடியாது என்பதுக்கு கோடி வாய் சதுர்முகன் ஆயுஸ் ஸூத்த மனஸும் வேண்டும்-நீயே ப்ரசாதீத்து அருள வேண்டும் )

மாத்ஸ்யே
“யதா ரத்நாநி ஜலதேர ஸம்க்யேயாநி புத்ரக |
ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸம்க்யேயா மஹாத்மந: ||”;

வைஷ்ணவே தர்மே “ந ஹி தஸ்ய குணாஸ் ஸர்வே ஸர்வைர் முநி கணைரபி |
வக்தும் ஸக்யா வியுக்தஸ்ய ஸத்த்வாத்யை : அகிலைர் குணை : ||” இத்யாதிபி: |
ப்ராயேண ஶ்ரீமத் ராமாயண பாரதாப்யாம் ச |குப்யேயு: |(சங்கரர் பாஸ்கரர் இவரைப் பார்த்து கோபித்துக் கொள்ளும் )

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத் –பர ப்ரஹ்மம் அஞ்ஞானம் அந்தகாரத்தால் சூழப்பட்டு சம்சாரத்தில்
ஆழ்கின்றது என்கிற சங்கர மத அத்வைதிகளையும்
பரோபாத்ய லீடம் விவசம் -பர ப்ரஹ்மம் அசக்தன் -வேறே ஒருவரால் ஆட்டிப் படைக்கப் படுகிறது என்னும் பாசக்கார மதம்
அசுபஸ் யாஸ் பதமிதி -சித் அசித் போலே அசுபங்களால் வருந்து -யாதவ பிரகாசர் மதம் –
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம் -ஸ்ருதிகளில் இல்லாத வற்றையும் -நியாய சாஸ்திரங்களை ஒவ்வாத படியும்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –தமஸ் -குணத்தால் வந்த அஞ்ஞானங்களை போக்கி அருளி
விசிஷ்டாத்வைத ஸ்தாபனம் பண்ணி அருளி வெற்றி கொண்ட ஸ்ரீ யாமுன முனிக்கு மங்களம் –

ந ச “யதோ வாசோ நிவர்தந்தே” இத்யாதி
ப்ரஹ்மணோ அப்ராமாணிகத்வ பரம்; தஸ்ய துச்சத்வ ப்ரஸங்காத்,
“யதோ வாச:”,
ஆநந்தம் ப்ரஹ்மண:” இத்யாதி தர்ம நிர்தேஸ விராேதாத், ததா வாங் மநஸ நிவ்ருத்தி வசநஸ்ய அநுபபத்தே:,
ப்ரஹ்ம ப்ரமாபக ஸாஸ்த்ர வையர்த்ய ப்ரஸக்தே:,

“அதாபதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா” இதி
ப்ரஹ்ம மீமாம்ஸ அந ஆரம்பணீயத்வ ப்ரஸங்காத்,

“வசஸாம் வாச்ய முத்தமம்”,
“ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்”,
“ஸாஸ்த்ர யோநித்வாத்” -(1-1-3 )இத்யாதி வாக்ய ந்யாய வ்யாத கோப ப்ரஸங்காத்,

“ஸைஷா அநந்தஸ்ய மீமாம்ஸா பவதி” இத் யுபக்ரமேண “தே தய சதம்” இத்யாதிநா
சதுர்முக ஆநந்த அநுக்ரம ஸம்ரம்ப விராேதாச்ச |

அத : “ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி” (3-2-21 )இதி ஸூத்ர ந்யாயேந
ஆநந்தே யத்தா ராஹித் பரமேவ மதம் ||(இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாது என்றே சொல்கிறது)

வ்யாஜஹ்நிரே ஸைவம் ஏதத் தாதபாத(தந்தை கூரத்தாழ்வானும் )“ஶ்ருதிஸ் தவாநந்த முகாந் ஹரேர் குணாநியத்தயா மாதுமிவோத்யதா ஸதீ |

உவாச வாஸோ மநஸா ஸஹோசிதாம் நிவ்ருத்தி மேவ த்வவதே: அஸம்பவாத்||” இதி |

அத : “ந யத்ர நாத வித்யந்தே நாம ஜாத்யாதி கல்பநா:” இத்யபி வ்யாக்யாநம் |(கல்பிக்க வேண்டாம் நாதனே -சொன்ன பின்பு நாமம் ஜாதி நிஜம் என்பதையே சொல்லிற்று)

கிம் ச, நாம ஜாத்யாதீநாம் கல்பநா நிஷேதே அகால்பநிக பாரமார்திக நாம ரூபம் ச
பகவத : ப்ரதிபாதிநம் ஸ்யாதிதி த்வம் நிகலபாஸம் த்வமேவ ப்ரயச்சஸி |

நிகலபாஸம்-காலுக்கு நீயே பாசக் கயிற்றை தேடிக்கொள்ளாதே

கதம் ச நாதேதி நாம க்ரஹணம் நாம ப்ரூயாத்| “அஸப்த கோசரஸ்யாபி”இத்யேதேந கதா |
அதோ விஶ்வ விலக்ஷண ஸ்வ அநுரூப நாம கதயா பரிமித வாச்ய வாசக ப்ரதி ஷேத பரம் |
ஸ்பஷ்டம் ப்ரதேஸாந்தரே
“நாம கர்ம ஸ்வரூபாணி ந பரிச்சேத கோசரே | யஸ்யாகில ப்ரமாணாநி ஸ விஷ்ணு: கர்பக: தவ||” இதி |(5 அம்சம்-அளவிட முடியாத அவன் உனது கர்ப்பத்தில் உள்ளான் )

ஆஹ — “நாம ஸு அவயவார்தாநாம் ந ப்ரவத்தி நிமித்தத்வம்,
நிமித்தத்வே அபி ந தத்ர ப்ராமாண்யம் தாத்பர்யாபாவாதிதி |
தததிஸ் தவீய:,ததர்த ப்ரதீதே: ஸ்வதஸ் : ப்ராமாண்யாத், அநபவாதத்வாத்,
“யாநி நாமாநி கௌணாநி”,
“ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்விவக்தந” இத்யாதிநா பகவத் குண ஜ்ஞாபந தாத்பர்யாவகமாச்ச

மந்த்ரவத் ஸாஸ்த்ராந்ர ப்ரமிதி பகவத் குண ஸ்மாரகத்தவ அபி ந குணாபஹார:, ஸுத்ருட ப்ரமாண ஸித்தத்வாத் |
அத ஏவஹ் யத்ர உபோத்கத நிமநயோ : குணாதி ப்ரகர்ஷம் ப்ரதிபாத்ய- ஸுத்ரடய்ய ச மத்யே தத் ஸ்மரணாய நாமாநி விதீயந்தே |
அமீஷு நாம ஸு அந்யதமமபி ஸர்வஸ்மை பலாய கல்பதே |

அவதாரிகையிலே குணங்களை சொல்லி –
மத்யத்தில் நாமங்களை பட்டியல் இட்டு
ஒவ்வொரு நாம சங்கீர்த்தனத்துக்கும் சர்வ பலனும் உண்டு என்று சொல்லி அமைத்துள்ளார்

ஏக தரஸ்ய பகவச் சாஸ்த்ராதிஷு த்வாதச அஷ்ட ஷட க்ஷராதிஷு மூலமூலி மந்த்ர ரூபேண பரிண மய்ய
ஸ்வாதந்த்ர்யேண ஸர்வார்தேஷு விநியோகாத் “நாம சித் விவக்தந” இத்யே கவசந ஸாஞ்ஜஸ்யாச்ச |
உச்சாரண மாத்ரேண உபகாரிணா மபி(சொன்னாலே -கேசவா என்ன இடர் ஆயன எல்லாம் போகுமே )
நிர்வசநேந குண ப்ரகாஸநே ஜடிதி மந:ப்ரஸாத நத்வம் பாவநத்வம் ச,(அர்த்தம் அறிந்து மனஸ்ஸு தூய்மை அடைந்து சாந்தியும் அடையும் )

நாம நிர் வசநாத் யாயேஷு “அஸ்தவ் ஷீத் நாமபி: வ்யாஸ: ஸைஶிஷ்யோ மதுஸூதநம் |
ஏஷாம் நிருக்தம் பகவந் பரமம் வக்து மர்ஹஸி ||
ஸூஶ்ரூஷோ : ஶ்ரத்ததா நஸ்ய ப்ரஜாபதிபதே: ஹரே : |
ஶ்ருத்வா பவேயம் யத் பூத : ஸ்ரச் சந்த்ர இவா மல: ||”.(சாந்தி பர்வம்)

த்ருத ராஷ்ட்ர: – “பூயோ மே புண்டரீகாக்ஷம் ஸம்ஜய ஆசக்ஷ்வ ப்ருச்சதே | நாம கர்மார்த வித்தாத
ப்ராப்நுயாம் புருஷோத்தமம் ||” இத்யாதவ் த்ரஷ்டவ்யம் |
விநியோகஶ்ச ஏஷாம் லிங்கத : உத்யோக- மோக்ஷ தர்மத வைஷ்ணவ தர்ம நிர் வசநாத் யாயேஷு தத் தந் மந்த்ர கல்பேஷு வசநேப்யஶ்ச அகவந்தவ்ய:|| 13 ||

————

உச்சாரண மாத்ரத்தாலேயே உபகரிப்பவைகளாகிலும் அவற்றின் அர்த்தங்களை ஆராய்ந்து குணங்களை வெளியிடுவதனால்
சீக்கிரம் மனம் தெளிவடைந்து பரம பரிசுத்தமாகும் என்பது
நாம நிர்வசன அத்தியாயங்களில் கண்டு கொள்க
இவற்றை உபயோகிக்கும் முறையை
ஸ்ரீ மஹா பாரதம்
உத்யோக பர்வத்திலும்
மோக்ஷ தர்மத்திலும்
வைஷ்ணவ தர்மத்திலும் உள்ள நிர்வசன அத்யாயங்களிலும்
அந்த அந்த மந்த்ர கல்பங்களிலும் உள்ள வசனங்களினால் தெரிந்து கொள்க

————

விஷ்ணோர் நாம ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹான் ரிஷி
ஸந்தோ அனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீ ஸூத-14-

அம்ருதாம் ஸூத் பவோ பீஜம் சக்திர் தேவகி நந்தன
த்ரி ஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்த்தே விநி யுஜ்யதே–15-

இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் பிரப விஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் —

ரிஷிர் நாம் நாம் –விநி யுஜ்யதே

வேத வ்யாஸர் ஸஹஸ்ர நாமத்தைக் கண்டு அறிந்த ரிஷி
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிர் எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் சந்தஸ்ஸில் இது உள்ளது
இதுக்கு பகவான் விஷ்ணு தேவதை -உத்தேசியமான விசேஷம்
அம்ருதாம் ஸூத் பவ -என்பது இம்மந்திரத்துக்கு பீஜம் -ஆதாரம்
தேவகீ நந்தன -என்பது சக்தி –வன்மை
த்ரி ஸாமா -என்பது ஹ்ருதடம் -மையம்
ஸர்வ தோஷ நிவாரணம் என்னும் ப்ரயோஜனத்தில் இம்மந்திரத்துக்கு உபயோகம்

ஆயுதத்துக்கு எக்கு போன்றவை பீஜம்
முனை சக்தி
மையம் ஹ்ருதயம்
சத்ரு வாதம் போன்றவற்றுக்குப் ப்ரயோகம்
இதே போல் மந்திரங்களுக்கும் உண்டே

அஸ்ய  ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ரிஷி அனுஷ்டுப் சந்த

ஸ்ரீ மஹா விஷ்ணு பரமாத்மா ஸ்ரீ மன் நாராயணோ தேவதா

அம்ருதம் ஸூத்பவோ பாநுரிதி பீஜம்
தேவகீ நந்தனஸ் ஸ்ரஷ்டேதி சக்தி
உத்பவ ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
சார்ங்க தந்வா கதா தர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ரஷோப்ய இதி நேத்ரம்
த்ரி ஸாமா ஸாமக ஸாமீதி கவசம்
ஆனந்தம் பர ப்ரஹ்மேதி யோநி
ருது ஸூ தர்சநஸ் கால இதி திக் பந்த
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே ஸ்ரீ சஹஸ்ர நாம ஜபே விநியோக –

———

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1-
யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்-3
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5
யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1

ஸர்வ விக்னம் உபசாந்தி அர்த்தத்துக்கு
வெண் பட்டாடை அணிந்து
எங்கும் நிறைந்து
சந்த்ர வர்ணன் -ஆஹ்லாத கரத்வம்
நான்கு திருத்தோள்கள் உடன் விளங்கி
பிரஸன்ன வதனம் -மதுர வீக்ஷணம் -பேசத் துடிக்கும் அதரம் –
த்யாயேத் -த்யானிப்பாய்
அதுக்கு ஏற்ற ஸூபாஸ்ரய திரு மேனியை வர்ணித்து –
வேப்பன்குடி நீரையோ குடிக்கச் சொல்கிறது
பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார்

——–

யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2

யஸ்ய விரத -யானை முகம் -கஜேந்திர -மங்கள ஸ்லோகம் -விஷ்வக் சேனர் –
நூறு நூறு பிரதானர்கள் கொண்டவர்
வாசல் காப்பார் உடன் கூடிய விஷ்வக் சேனரை ஆஸ்ரயிப்போம்
விக்னங்கள் தொலையவே விஷ்வக் சேனர் ஆராதனம் தொடங்குகிறோம்
முதல் ஸ்ரீ வைஷ்ணவர் இவரே
நம்மாழ்வார் தொண்டர் தொண்டர் சடகோபன் பெருமை கொண்டவர்

———

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்

வ்யாஸம் -கிரந்த கர்த்தா பரம்பரை -வந்தே கிரியா பதம்
வசிஷ்ட நப்தாரம் -பேரனுக்குப் பிள்ளை
ப்ரஹ்மா வசிஷ்டர் தொடங்கி -சக்திக்கு பேரன்-அகல்மஷம் குற்றம் அற்ற -பராசர மகரிஷிக்கு பிள்ளை

———

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம

வ்யாஸாய –நமோ நம -மீண்டும் நமஸ்காரம்
வசிஷ்டர் குலம் -விஷ்ணு அவதாரம் -விஷ்ணு ரூபாயா நம
முக்ய அவதாரம் –
ஸ்வரூப ஆவேச -சக்தி ஆவேச அவதாரங்கள்
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே நம
ப்ரஹ்ம ஞானம் நிதி இவரே

———

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

அவிகாராய -ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் -ரூபத்தாலும் விகாரம் இல்லையே
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை –
தளிர் புரையும் -ஸ ஏகாகி ந ரமேத -கர்மாதீனம் இல்லை கிருபாதீனம் இவை
ஸூத்தாயா
நித்யாய –
பத்த முக்த நித்ய இதர ஸமஸ்த விலக்ஷணன்
பரமாத்மனே -இவன் ஒருவனே
நம
ஸதா ஏக ரூப ரூபாய -ஸ்வரூபம் உருவான -அந்தாம –கண்கள் சிவந்து -விஜூர ப்ரமோத -பக்தர் அதீனம்
விஷ்ணவே -சர்வ ஜிஷ்ணவே -எங்கும் வியாபித்து வெற்றி அளிப்பவன்

——–

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

யஸ்ய ஸ்மரணம் மாத்ரத்தால் ஜென்ம ஸம்ஸார பந்தம் விமுச்யதே
நமஸ் தஸ்மை விஷ்ணவே நம

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

——–

த்யானம்

ஷீரோ தந்வத் பிரதேச சுசி மணி விலஸத் ஸைகதே மௌக்தி நாம்
மாலா க்லுப்தாஸ நஸ்த ஸ்படிக மணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க

சுப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை
ஆனந்தீ நஸ் புநீயாதரி நளின கதா சங்க பாணிர் முகுந்த–

1-ஷீரோ தந்வத் பிரதேச —முகுந்த-

பரிசுத்தமான ரத்னங்களாலே பிரகாசிக்கிற மணல் குன்றுகளை யுடைய திருப்பாற் கடலில்
முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திவ்ய ஆஸனத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்படிக மணி போல் விளங்குகிற முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திரு மேனியை யுடையவரும்
மேலே ஸஞ்சரிக்கிற வெண்மையான அநேக மேகங்களால் வர்ஷிக்கப் பட்ட –பீயூஷ வர்ஷை-அம்ருத தாரைகளாலே ஸந்தோஷிப்பவரும்
சக்ரம் பத்மம் கதை சங்கம் ஆகிய இவைகளைத் திருக் கரங்களில் யுடையவரும்
பக்தர்களுக்கு முகுந்த-போக மோக்ஷங்களை அளிப்பவருமான
ஸ்ரீ மன் நாராயணன் நம்மைப் பரிசுத்தம் ஆக்க வேண்டும்

———

2-பூ பாதவ் யஸ்ய நாபிர் வியத ஸூரா நிலஸ் சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே
கர்ணா வாஸாஸ் சிரோ த்யவ்ர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமப்தி

அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸூர நரகககோ போகி கந்தர்வ தைத்யை
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரி புவந வபுஷம் விஷ்ணும் ஈசம் நமாமி-

பூ பாதவ் யஸ்ய —விஷ்ணும் ஈஸம் நமாமி

யாருக்கு பூமி திருவடிகளோ
ஆகாசம் நாபியோ
வாயு பிராணனோ
சந்த்ர ஸூர்யர்கள் கண்களோ
திசைகள் காதுகளோ
ஸ்வர்க்கம் திருமுடியோ
அக்னி திரு முக மண்டலமோ
கடல் நாபியின் கீழ் பாகமோ –வாஸோயம் என்பது பதம் -இந்தக்கடல் யாருக்கு ஆடையோ
தேவர்கள் மனிதர்கள் பக்ஷிகள் பசுக்கள் பாம்புகள் கந்தர்வர்கள் அஸூரர்கள் இவர்களால்
பலதரப்பட்ட இந்த உலகு எவருடைய உதரத்தில் களிப்புடன் இருக்கின்றதோ
மூன்று புவனங்களையும் திருமேனியாக யுடையவரும்
ஸர்வ ரக்ஷகரான ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

விராட் ஸ்வரூப வர்ணனை -தியானிக்க விஸ்வ ரூபம் -தெரியாத 14 லோகங்களைக் கொண்டு தியானிக்க முடியாதே
கோல மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் தியானிக்க -பரிக்ஷித்துக்கு ஸூகர்-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்

திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் – கடல்: உடை ஆடை – அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்

—————–

3-சாந்தாகாரம் புஜக சயனம் பத்ம நாபம் ஸூரேசம்
விஸ்வா தாரம் ககந ஸத்ருசம் மேக வர்ணம் ஸூப அங்கம்

லஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி ஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோக ஏக நாதம்

சாந்தாகாரம் —–ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தமான ஆகாரத்தை யுடையவரும்
ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவரும்
தாமரை பூத்த திரு நாபியை யுடையவரும்
தேவர்களுக்குத் தலைவரும்
விச்வா தாரம் -விஸ்வத்துக்கு ஆதாரமாக -விஸ்வமே வடிவாக யுடையவரும்
ஆகாசத்தைப் போல் எங்கும் நிரம்பி இருப்பவரும்
நீல மேகம் போன்ற வடிவம் யுடையவரும்
உத்தம லக்ஷணங்கள் பொருந்திய அங்கங்கள் யுடையவரும்
லஷ்மீ பதியும்
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரும்
யோகிபிர் த்யான கம்யம் -யோகிகளால் தியானத்தால் அடையப்படுபவரும் என்றும்
யோகிகளுடைய ஹ்ருதயத்தில் தியானத்தினால் அறியப்படுபவரும்
பிறவியின் பயத்தைப் போக்குபவரும்
ஸகல லோகங்களுக்கும் தலைவருமான
விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்

———-

4– மேகஸ்யாமம் பீத கௌஸேயா வாஸம் ஸ்ரீ வத் சாங்கம் கௌஸ்துப உத்பாஸி தாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோக ஏக நாதம் —

மேகஸ்யாமம் –ஸர்வ லோக ஏக நாதம்
நீல மேகம் போன்ற கரிய திரு மேனியை யுடையவரும்
பீதாம்பரத்தைத் தரித்தவரும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக யுடையவரும்
கௌஸ்துபம் என்னும் மணியினால் பிரகாசிக்கின்ற அங்கத்தை யுடையவரும்
புண்ய புருஷர்களால் சூழப் பட்டவரும்
தாமரை மலர் போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவரும்
ஸர்வ லோகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான
ஸ்ரீ யபதியை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ சங்க சக்ரம் ஸ கிரீட குண்டலம் ஸ பீத வஸ்த்ரம் ஸராஸீ ருஹ ஈஷணம்
ஸ ஹார வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

திவ்ய ஆயுதங்கள்
திவ்ய ஆபரணங்கள்
மஞ்சள் பட்டாடை சாத்தி
ஸ்ரீ கௌஸ்துபம் சாத்தி
விஷ்ணுவை வணங்குவோம்

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீ நமம் புதஸ் யாமம் ஆயாதாஷாம் அலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர் பாஹும் ஸ்ரீ வத் ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யம் ஸஹிதம் கிருஷ்ணம் ஆஸ்ரயே –

தங்க ஸிம்ஹாஸனம்
பாரிஜாத கொடிக்கு கீழே
மேக ஸ்யா மளன்
ஆயாதாஷா -நீண்ட அப் பெரிய வாய திருக் கண்கள்
நான்கு திருத்தோள்கள்
ஸ்ரீ வத்ஸவம் திரு மார்பில்
ருக்மிணி சத்ய பாமை பிராட்டிமார் ஸஹிதம்

————

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்

ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –

கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்

பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது

யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்


ஸூபாஸ்ரியமான பகவத் விக்ரகம் தான் —
குக்ய தமம் ரஹச்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்

தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-

தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –

அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -ஸ்ரீ பெரிய திருமொழி -1-5-10–

இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே –ஸ்ரீ பெரிய திருமொழி –1-2-7-

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-

பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–

வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-

வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–

ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-6–

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-

அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–

தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-

திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–

ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-

பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-

உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

————————–

திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே-பெரியாழ்வார் திருமொழி-4-4-19-

கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும்
பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -பெரியாழ்வார் திருமொழி-4-5-1–

—————————-

பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் பேரும் ஓர் உருவமும்
உளதில்லை இலதில்லை பிணக்கே -ஸ்ரீ திருவாய்மொழி-1-3-4-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற–6 -7 -2 –

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன்மேனியினன் நாராயணன் நங்கள் பிரானே -9-3-1-

ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–

——————–

நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது-ஸ்ரீ முதல் திருவந்தாதி -39-

நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்– ஸ்ரீ இரண்டாம்-73-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-

தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-

தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-

பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -88-

—————–

திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -ஸ்ரீ பெரிய திருவந்தாதி–59-

—————

பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்

—————————————————————————————————————————

திரு நாமத் தொகுப்பு
1—பரத்வ பரமான திரு நாமங்கள் -1-122-

1-1-வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்-1-4-குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –

1-2-சர்வ சேஷித்வம் -5-9-தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்

1-3-தோஷம் தட்டாத பரமாத்மா -10-11-குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன் –

1-4-முக்தர்களுக்கு பரம கதி -12-17-முக்தர்களால் அடையத் தக்கவன் –

1-5-முக்திக்கு உபாயம்-18-19-முக்திக்கு வழி –

1-6-சேதன அசேதன நியாமகன் -20-முக்திக்கு வழி –

1-7-சமஸ்த இதர விலஷணன் -21-65-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்தனும் நியாமகனும் 66-88-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-9-உபாய உபேய ஸ்வரூபி -89-100-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

————————

2—வ்யூஹ நிலை பரமான திரு நாமங்கள் -123-146-
123-128 -ஆறு குணங்கள் –129-138-மூவரின் முத் தொழில்கள் – 139-146-நால்வரின் நான்கு தன்மைகள் –

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

—————————–

விஷ்ணு —————-147-170——–24 திரு நாமங்கள்
ஷாட்குண்யம் ———–171-187———17 திரு நாமங்கள்
ஹம்சாவதாரம் ———-188-194———-7 திரு நாமங்கள்
பத்ம நாபன் ————195-199———-5 திரு நாமங்கள் –
நரசிம்ஹ அவதாரம் ——200-210———11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ————–247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –
வடபத்ரசாயீ —————301–313—–13 திரு நாமங்கள் –
பரசுராமாவதாரம் ———-314-321——-8 திரு நாமங்கள் –
கூர்மாவதாரம் ————-322–332—–11 திரு நாமங்கள் –
வாஸூ தேவன் ————333–344—–12 திரு நாமங்கள் –
திவ்ய மங்கள விக்ரஹம் —-345–350——6 திரு நாமங்கள் –
பகவானின் ஐஸ்வர்யம் ———-351–360——10 திரு நாமங்கள்
ஸ்ரீ லஷ்மீபதி ——————361–384——-24 திரு நாமங்கள்
த்ருவ நாராயணன் ————-385–389——–5 திரு நாமங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் —————380–421——-32 திரு நாமங்கள் –

———————————————————————-

3-1–விஷ்ணு அவதாரம் -147-152-ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –

3-2- வாமன அவதாரம் -153-164-

3-3-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் -165-170-அவதரித்துக் காப்பவன் -இனியவன் –

3-4-பர வ்யூஹ விபவ மூன்றுக்கும் பொதுவான ஞான பலாதி ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது -171-181-

3-5-குணங்களுக்கு ஏற்ற செயல்களைச் சொல்வது -182-186-குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –

3-6- ஹம்சா அவதாரம் -187-194-

3-7- பத்ம நாப அவதாரம் -195-199- -உந்தித் தாமரை யான் –

3-8-ஸ்ரீ நரசிம்ம அவதாரம் -200-210-

3-9-ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் -211-225-

3-10- உபநிஷத் பிரதிபாத்ய விராட் ஸ்வரூபம் -226-247-புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

3-11-சித் அசித் இவைகளாலான ஐஸ்வர்ய பூர்த்தி -248-271-யானே நீ என்னுடைமையும் நீயே —

3-12-விஸ்வரூபம் -272-300-பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –

3-13-ஸ்ரீ வடபத்ர சாயி -301-313-ஆலமா மரத்தின் இல்லை மேல் ஒரு பாலகன் –

3-14-ஸ்ரீ பரசுராம ஆவேச சக்தி அவதாரம் -314-321-பரசுராமரா -அல்லது கோபத்தின் உருவமா –

3-15-ஸ்ரீ கூர்ம அவதாரம் -322-327-அனைத்தையும் தாங்கும் ஆமை –

3-16-ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம் -333-344-ஸ்ரீ பர வாசூதேவனின் குணங்கள் –

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -ரூப வாசகம் -345-350-ஸ்ரீ பர வாசூதேவனின் திருமேனி –

3-18-ஸ்ரீ பர வாசுதேவன் -விபூதி -351-360-ஸ்ரீ பர வாசூதேவனின் – செல்வம் –

3-19-ஸ்ரீ பர வாசுதேவன் -ஸ்ரீ லஷ்மி பதித்வம் -361-379-ஸ்ரீ பர வாசூதேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –

3-20-சேதனர் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-கருவியும் காரணமும் இயக்குமவனும் செய்பவனும் அவனே-

3-22-ஸ்ரீ த்ருவ -385-389-ஸ்ரீ த்ருவனும் நஷத்ர மண்டலமும் –

3-23-ஸ்ரீ ராம அவதார -390-421-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

————————–
ஸ்ரீ கல்கி அவதார——-422-435–13 திரு நாமங்கள்
ஸ்ரீ பகவானின் முயற்சி —-436–452—–17 திரு நாமங்கள் –
ஸ்ரீ நரன் —————–453-456——-4 திரு நாமங்கள் –
அம்ருத மதனம்———457–470—–14 திரு நாமங்கள் –
தர்ம ஸ்வரூபி ———471-528——58 திரு நாமங்கள் –

—————————–

3-24-ஸ்ரீ கல்கி -422-436-

3-25-ஜ்யோதிர் மண்டல பிரவ்ருத்தி தர்ம ப்ரவர்தகன் -437-445-நஷத்ரங்களும் சிம்சூமார சக்கரமும் –

3-26-யஞ்ஞ ஸ்வரூபன் 446-450-

3-27-ஸ்ரீ நர ஸ்ரீ நாராயண -451-457-

3-28- அலை கடல் கடைந்த -458-470-அலைகடல் கடைந்த ஆரமுதம் –

3-29-தர்ம சாஸ்திர -471-502-தர்மத்தின் வடிவம்

3-30-ஸ்ரீ ராம தர்ம ரஷகன் -503-513-தர்மத்தைக் காக்கும் ஸ்ரீ இராமன் –

3-31-பாகவத சாத்வத ரஷகன் -514-519-பாகவதர்களைக் காப்பவன் –

3-32-ஸ்ரீ கூர்ம -520-521-ஸ்ரீ ஆதி சேஷமும் ஸ்ரீ கூர்மமும் –

3-33-ஸ்ரீ அநந்த சாயி -522-523-

3-34-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி -524-528-ஸ்ரீ பிரணவ ஓங்கார வடிவினன் –

——————————–

ஸ்ரீ கபில மூர்த்தி -529-543————————–15 திரு நாமங்கள்
சுத்த சத்வம் -544-562————————––19 திரு நாமங்கள்
மஹ நீய கல்யாண குணங்கள் -563-574—————————12 திரு நாமங்கள்
ஸ்ரீ வியாசர் -575-607——————————————————— 33 திரு நாமங்கள்
சுபத் தன்மை -608-625—————————— 18 திரு நாமங்கள்
ஸ்ரீ அர்ச்சாவதாரம் -626-643————————-18 திரு நாமங்கள்
புண்ய ஷேத்ரங்கள் -644-660——————17 திரு நாமங்கள்
சக்திபரம் -661-696—————————————–36 திரு நாமங்கள்

——————

3-35-ஸ்ரீ கபில -அம்ச அவதாரம் -529-538-

3-36- ஸ்ரீ வராஹ -539-543-

3-37-சுத்த சத்வ ஸ்வரூபி -544-568-மேன்மை சொல்லும் ரஹஸ்யமான திரு நாமங்கள் –

3-38-ஸ்ரீ நாராயண -569-574-

3-39-ஸ்ரீ வியாச -575-589-

3-40-தர்மப்படி பலன் அளிப்பவன் -590-606-

3-41-ஸ்ரீ சம்பந்த மங்கள ப்ரதன் -607-629-ஸ்ரீ யபதியே ஸ்ரீ பர ப்ரஹ்மம்-

3-42-ஸ்ரீ அர்ச்சாவதார -630-696–ஸ்ரீ அர்ச்சாவதாரம் -கண்களுக்கு புலப்படும் சௌலப்யம் /சகதீச அவதாரம்
ஸ்ரீ பர ப்ரஹ்மம் பூஜிக்கத் தக்க நற் பண்புகளை உடையவர் –
ஸ்தோத்ரத்தை ஏற்கும் தகுதி உடையவன் –

——————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786———————90 திரு நாமங்கள்
ஸ்ரீ புத்தாவதாரம் -787-810———————————-24 திரு நாமங்கள்
சாஸ்திர வச்யர்களை அனுக்ரஹித்தல் -811-827——————17 திரு நாமங்கள்
பிற விபவங்கள் ————————————828-837—————–10 திரு நாமங்கள்
அஷ்ட சித்திகள்————————————-838-870—————33 திரு நாமங்கள்

————————————–

4-1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -697-786-( 770-786-அவதாரத்துக்கு காரணமான ஸ்ரீ வ்யூஹம் -)

4-2-ஸ்ரீ புத்த அவதாரம் -787-810-ஸ்ரீ புத்த அவதாரம் -அசூர நிக்ரஹம் –

4-3-சிஷ்ட பரிபாலனம் -811-825-சாத்விகர்களுக்கு அருளுபவன் –

4-4-அனு பிரவேச ரஷணம் -826-838-எண்ணும் எழுத்தும் –

4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் -839-848-ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளுபவன் –

——————————

அஷ்ட சித்திகள்———-838-870———33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்——-871-911——–41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் ——912-945——–34 திரு நாமங்கள்

———————————–

5-1-இமையோர் தலைவன் -849-850-

5-2-யோகியர் தலைவன் -851-854-

5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன்–855-861-ஜீவர்களை ஆளுபவன் –

5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -862-870–தீயவர்களுக்கு யமன்

5-5-சாத்விகர் தலைவன் -871-880–சத்வ குணத்தை வளர்ப்பவன் –

5-6-அர்ச்சிராதி -881-891-நெடும் கால ஆசை அர்ச்சிராதி மார்க்கம் –

5-7-மோஷ ஆநந்தம் தருபவன் -892-911-நலம் அந்தமில்லாத நாடு –

5-8-ஸ்ரீ கஜேந்திர மோஷம் -912-945-

———————————

ஜகத் வியாபாரம் ———————–946-992—————47 திரு நாமங்கள்
திவ்யாயூத தாரீ -993-1000———8- திரு நாமங்கள்

——————————–

6- பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் -946-992-ஸ்ரீ அவதாரத்துக்கும் திரு விளையாடல்களுக்கும் பயன் –
( 971-982-வேள்வியும் பயனும் /983-9920ஸ்ரீ தேவகீ நந்தன் -)

7-திவ்ய ஆயுதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தன் -993-1000-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –

——————————————————————————

1-பரத்வ நிலை–1-122

2–வியூக நிலை–123-144

3-விபவ நிலை-

3-1..ஸ்ரீ விஷ்ணு அவதாரம்–145- 152

3-2..ஸ்ரீ வாமன அவதாரம்–153-164

3-3..துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்–165-170

3-4–பகவத் குணங்கள் பேசும் திரு நாமங்கள்..

3-5..பரம் வியூகம் விபவம் மூன்றுக்கும் பொதுவான ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது–171-181

3-6– குணங்களுக்கு ஏற்ப அவதார செயல்களை சொல்வது–182-186

3-7 –ஸ்ரீ ஹம்ச அவதாரம்–187-194

3-8..ஸ்ரீ பத்ம நாப –ஸ்ரீ விஷ்ணு அவதாரம்-195-199

3-9. ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம்–200-210

3-10 -ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்–211-225

3-11—புருஷ சுத்த உபநிஷத் பிரதி பாதித விராட் ஸ்வரூபம்–226-247

3-12.-சித் அசித் இவைகளால் ஆன ஐஸ்வர்ய பூர்த்தி–.248-271

3-13- எல்லை அற்ற பெருமை காட்டும் விஸ்வ ரூபம்-272-300

3-14–ஸ்ரீ வட பத்ர சாயி பிரளய ஆர்ணவத்தில் ஆல் இலை மேல் துயின்றவன்-301-313

3-15- ஸ்ரீ பரசு ராம -ஆவேச சக்த்ய -அவதாரம்–314-321

3-16—ஸ்ரீ கூர்ம அவதாரம்–322-332

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம்–333-344

3-18–ஸ்ரீ பர வாசுதேவன்-ரூப வாசகம்–345 -350

3-19–ஸ்ரீ பர வாசுதேவன்-விபூதி ( செல்வம் ) வாசகம்–351-360

3-20— ஸ்ரீ பர வாசுதேவன்- லக்ஷ்மி பதித்வம்–361 -379

3-21—சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை–380-384

3-22— நட்சத்திர மண்டலத்துக்கு ஆதாரமான துருவ மூர்த்தி-385-389

3-23— மிருத சஞ்சீவனமான ஸ்ரீ ராம அவதாரம்-390-405

3-24— மேலும் ஸ்ரீ ராம அவதாரம்–406-421-

3-25-1—தர்ம சொரூபி வேத விகித தர்மங்களை தானும் அனுஷ்டித்து பிறரையும் அனுஷ்டிக்க பண்ணுபவன்–423-502

3-25-2- ஸ்ரீ ராமனாய் தர்ம ரக்ஷகன்—503-513

3-25-3—பாகவத (சாத்வத ) ரட்சகன்-514-519-

3-25-4—ஸ்ரீ கூர்ம ரூபி–520-521

3-25-5– ஸ்ரீ அநந்த சாயி–522-523

3-25-6.-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி–524-528

3-25-7—ஸ்ரீ கபில அவதாரமாய் ரட்ஷணம் ( அம்ச அவதாரம்)–529-538

3-25-8– ஸ்ரீ வராஹ அவதாரம்—539-543-

3-25-9- -சுத்த சத்வ சொரூபி பெரு மேன்மை–544 -568

3-25-10– ஸ்ரீ நாராயண விஷயம் அவதாரம்–569-574

3-26– -ஸ்ரீ வியாச அவதாரம் ( வேத சாஸ்திர பிரதாதா )–575-589

3-27- -தருமம் படி பலன் அளிப்பவன்–590-606

3-28-1 -மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் பரத்வம்-607-625

3-28-2 –மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் குண யோகம்-626-629

3-29-1-ஸ்ரீ அர்ச்சா அவதாரம் சேதனருக்கு தன்னை காட்டுவது-630-660

3-29-2.-சகதீசன் -.661-664

3-29-3 -எல்லை அற்ற குண விபூதிமான் -மனசினாலும் செய்கை யாலும் ஆராதிக்க படுகை -665-683

3-29-4- -வாத்சல்ய குண பெருக்கு வாக்காலே ஆராதிக்க படுகை–684-696

4-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்

4-1–ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்-684-786

4-2..ஸ்ரீ புத்த அவதாரம் அசூர நிக்ரகம்-787-810

4-3–தைவ சம்பதுள்ள சிஷ்ட பரி பாலனம் 811-825

4-4–ஜீவன்களை அனுபிரவேசித்து சத் ரட்ஷனம்–826-838

4-5– அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன்/ அவற்றை தருபவன்–839-848

5–ஜீவாத்மாக்களை நிர்வகிக்கும் மேம்பாடு சொல்பவை

5-1-நல்லோர்களை வாழ்ச்சி பெரும் படி செய்யும் திரு நாமங்கள்

5-1-1..நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் 849-850

5-1-2–யோகியர் தலைவன்–851-854

5-1-3–யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் 855-861

5-1-4-துஷ்டர்களை நிக்ரகிப்பவன் 862-870

5-2–சத்வ குணத்தை வளர்ப்பவன் -சாத்விகர் தலைவன்–871-880

5-3–ஸ்ரீஅர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் 881-891

5-4-முக்தருக்கு மோட்ஷா நந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் 892-911

5-5-ஆனைக்கு அன்று அருள் ஈந்தவன்- கஜேந்திர மோட்ஷம்-912-945

6-பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் சொல்பவை -946-992

7-திவ்ய ஆயதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரக யுக்தன் -993 -1000

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள்ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே– திருவாய் மொழி -8-1-10-

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீத கோவிந்தம் –

February 2, 2019

ஸ்ரீ கீத கோவிந்தம்
ஸ்ரீ ஜய தேவர் -அருளிச் செய்தது -ஸ்ரீ போஜ தேவர் -ரமா தேவி குமாரர் -/ பத்மா தேவி மனைவி /
வங்க தேச ராஜா லஷ்மண சேனன் சபை புலவர் இவர்
ஸ்ரீ பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் அருளிச் செய்தது -இவர் பாட -இவர் தர்ம பத்னி பத்மா தேவி ஆடி சமர்ப்பணம்
12-சர்க்கங்கள் -ஒவ் ஒன்றிலும் அஷ்ட பாடல்கள் -ஆகையால் அஷ்ட பதி –
சில சர்க்கங்களில் பல அஷ்டபதிகள் -மொத்தம் -24-அஷ்ட பதிகள் –

யத் கோபீ வத நேந்து மண்டனமபூத் -மங்கள ஸ்லோகம் –
கார் ஒளி வண்ணன் நம் ஹ்ருதயத்திலே என்றும் நித்தியமாக நிலை பெற பிரார்த்தனை இதில்
திங்கள் திரு முகத்து சேயிழையீர் -முதலில் அணியும் கஸ்தூரி -கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
மலராள் தனத்துள்ளான் -மை வண்ண நிறுத்தினன் -யோகிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுக்கும் மை –
நித்யம் கரீச திமிராவில த்ருஷ்டயோ அபி சித்தாஞ்சனநேந பவ தைவ விபூஷி தாஷா
பஸ்யந்தி யுபர் யுபரி சஞ்சரதாம் அத்ருஸ்யம் மாயா நி கூடம் அநபாய மஹா நிதிம் த்வாம் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
சித்தாஞ்சன மிவ ச்யாமாம் -அச்யுத சதகம்
அந்தர் ஜ்யோதி கிமபி -பகவத் த்யான சோபனம்
அந்தர் ஹிதோ நிதி ரசி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
நிதிர் அவ்யய -ஸ்ரீ சஹஸ்ர நாமம்

ராதா மநோ ரம ரமாவர–மங்கள ஸ்லோகம்
ராதையின் திரு உள்ளம் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளால் பூர்ணம் –
ராஸக்ரீடை தனி இடம் -அத்தை பத்மாவதி பதி ஜெயதேவர் கானாம்ருதமாக நமக்கு வழங்கியுள்ளார்

ஸ்ரீ கோபால விலாஸி நீ வலய-மங்கள ஸ்லோகம்
கோபிகள் கை வளையல்கள் போன்ற கண்ணன் திருப்பாதங்கள் –
இவற்றை அநவரதம் சித்தித்து அருளிய ஸ்ரீ கீத கோவிந்தம் -அவர் திருவடி போற்றுவோம்

———————–

ஸ்ரீ கீத கோவிந்தம் -1-
மேகை மேதுரம் அம்பரம் வனபுவ
ராதை இடம் கண்ணனை பசு மேய்த்து திரும்ப கூட்டி வர நியமிக்கிறார்ன் நந்தகோபர் –
பழம் நழுவி பாலில் விழுந்ததே -இவர்கள் லீலைகளுக்கு பல்லாண்டு பாடுவோம் –

முதல் அஷ்டபதி –
பிரளய பயோதி ஜலே
கேசவன் ஜெகதீசன் ஹரி -மீனாய் சத்யவ்ரதன் -பாண்டிய தேசம் -அந்த மஸ்த்ய அவதாரத்துக்கு மங்களம்-

முதல் அஷ்ட பதி -2-
ஷிதி ரதி விபுல தரே தவ திஷ்டதி —ப்ருஷ்டே தரணி தரண கிண சக்ர கரிஷ்டே
கேசவ த்ருத கச்சப ரூப ஜய ஜெகதீச ஹரே —
ஆதி கூர்ம மூர்த்தி –
மலை யாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி –லக்ஷம் யோஜனை -8-லக்ஷம் மைல்கள் பரப்பு திரு முதுகு
ஆமையான கேசவன் –
பரஸ்ய நிஸ்வாச வாத ஊர்மய புவன த்ரயீம் அவ்யாஸூ –மூச்சுக் காற்று நம்மை ரக்ஷிக்கட்டும்

முதல் அஷ்ட பதி -3-
வசதி தசன சிகரே தரணீ தவ லக்நா சசிநி கலங்க கலேவ நிமக்நா கேசவ த்ருத ஸூகர ரூப ஜய ஜெகதீச ஹரே
ஸ்ரீ கோபால வராஹ நாயனாருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -4-
தவ கர கமலவரே நகம் அத்புத
அரி பொங்கி காட்டி அருளிய ஸ்ரீ நரஸிம்ஹ வபூ ஸ்ரீ மானுக்கு மங்களம்
வண்டுகள் மதுபானர்த்தமாக தாமரையின் நுனி பகுதியை பிரிப்பதும் கிழிப்பதும் உண்டு
இங்கு ( கைத் )தாமரையின் நுனியே அன்றோ ஹிரண்யன் மார்பை கிழித்தது

முதல் அஷ்ட பதி -5-
ஸலயஸி விக்ரமணே பலிம்
அத்புத குள்ளன் -ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உபேந்திரனாய் பிறந்து ஓங்கி அளந்த உத்தமனுக்கு மங்களம்
ஹரி பாதோதகம் -ஸ்ரீ பாத அம்ருதமே கங்கா பிரவாகம்

முதல் அஷ்ட பதி -6-
ஷத்ரிய ருதி
கோகுல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவாள் போக்கிய புனிதன் -கார்த்த வீர் யாதிகள் குருதம் – –
குருஷேத்ரம் பக்கலில் மருக்கள் ஏற்படுத்தி அரசர்கள் குருதி -ஸ்யமந்த பஞ்சகம் -இடம் இன்றும் உண்டே –
ஸ்ரீ பரசுராமருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -7-
விதரஸ தீஷூ ரணே
தசரதன் -என்பதால் பத்து ராவணன் தலைகளையும் திக் பாலர்களுக்கு கொடுத்து உகந்த
சக்ரவர்த்தி திருமகனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -8-
வஹஸி வபுஷி விசதே
நீல மேக ஸ்யாமளன் -கலப்பை ஆய்தம் தரித்த ஸ்ரீ பலராமனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -9-
நிந்தசி யஜ்ஞவிதே
கள்ள வேஷம் பூண்டு புறம் புக்கவாறும்-பேச்சில் மயங்கி அசுரர்கள் உடைய
யாக ஸ்ரத்தை அழித்து தேவர்களை ரஷித்த புத்தவதாரத்துக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -10-
ம்லேச்ச நிவஹ நிதநே
கலியுக முடிவில் -சம்பலம் கிராமத்தில் -விஷ்ணு யசஸ் -என்பவருக்கு பிள்ளையாய் –
தேவ தத்தம் என்கிற குதிரை மேல் ஏறி -வால் நக்ஷத்ரம் போன்ற கூரிய வாள் கொண்டு -பகைவர்களை அழித்து –
தர்ம ரக்ஷணம் செய்து அருள அவதரிக்கப் போகும் ஸ்ரீ கல்கி பகவானுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -11-
ஸ்ரீ ஜய தேவ கவே இதம் –வேதான் உத்தரதே —
ஒரே ஸ்லோகத்தில் கீழே சொன்ன தசாவதாரங்களையும் சேர்த்து அருளி –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களைச் செய்து அருளி எம் இடர் தீர்க்கும் எம்பிரான் -உனக்குத் தோற்றோம் –
இப்பாடல்கள் தாமே அவன் திருவடிகளை பிராபிக்கும்

—————————————————

ஸ்ரீ கீதா கோவிந்தம் –
இரண்டாம் அஷ்ட பதி -1-
ஸ்ரித கமலா குச-
ஸ்ரீ யபதி –அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் -தேஜஸ் பரப்பும் திரு மகர குண்டலங்கள் –
வைஜயந்தி மாலைகள் -தரித்து விளங்கும் உனக்கு மங்களங்கள்

இரண்டாம் அஷ்ட பதி -2-
தின மணி மண்டல மண்டிந
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி -ஹிரண்ய மய புருஷ -யோகிகள் ஹ்ருத் புண்டரீகத்தில் பரம ஹம்ஸமாக இருக்கும் உனக்கு பல்லாண்டு –

இரண்டாம் அஷ்ட பதி -3-
காலியவிஷ

இரண்டாம் அஷ்ட பதி -4-
மது முர
ஸ்ரீ ஹயகீரனாக அவதாரம் -மதுகைடபர்களை நிரசித்து வேதங்கள் மிட்டாய் -வேத ஸ்வரூபி வாஹனம்

இரண்டாம் அஷ்ட பதி -5-
அமல கமல தல
சர்வ வ்யாபி -மம மாயா துரத்தயா-மாம் ஏவ -ஆஸ்ரிதர்க்கு தன்னையே தரும் கற்பகம்

இரண்டாம் அஷ்ட பதி -6-
ஜனக ஸூதா

இரண்டாம் அஷ்ட பதி -7-
தவ சரண

இரண்டாம் அஷ்ட பதி -8-/9/10
பத்மா பயோதர/ வசந்தே வாஸந்தீ/ ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம்

——————————–

ஸ்ரீ கீதா கோவிந்தம்
மூன்றாம் அஷ்டபதி -1-
லலித
ராதாவின் ஸஹி வசந்த கால வர்ணனை –
இலவங்கக் கொடி வளர்ந்து பருவமடைய -காற்று அணைக்க காதல் -ஹர்ஷத்தால் ஆட –
தேனை குடித்த வண்டுகள் ரீங்காரம் -குயில்கள் கூவ

மூன்றாம் அஷ்டபதி -2-
விஹரிதி ஹரி ரிஹ
விரஹத்தால் துடிக்க -கண்ணனோ மற்ற கோபிகள் உடன் கொஞ்சிக் குலாவுகிறான்

மூன்றாம் அஷ்டபதி -3-
உன்மத மதன
வகுள மலர்கள் பூத்து குலுங்க -வண்டுகள் மது பானம் பண்ணி களிக்க –
நாம் வாட கண்ணன் மற்றவருடன் குதூகலித்து இருக்க -நாம் தவிக்க

மூன்றாம் அஷ்டபதி -4-
ம்ருகமத –
கஸ்தூரி வாசம் கமழுகிறது -பூ மொட்டுக்கள் -விரஹத்தால் மன்மத அம்புகள் பிளக்கும் நம் ஹ்ருதயம் போலே

மூன்றாம் அஷ்டபதி -5-
மதன மஹீ பதி
மகிளம் பூ சிவந்த தண்டுகள் -மன்மதனின் செங்கோல் போலே –
பாடலம் பூ கொத்து கொத்து அவன் அம்பு போலே -பூங்கொத்துக்கள் அம்புறாத துணி போலே

மூன்றாம் அஷ்டபதி -6-
விகளிஸ் புரததி முக்த
வசந்த கால பூக்கள் காற்றில் ஆடுவது போலே காதலர்கள் மகிழ –
தாழாம் பூக்கள் கூர்மையாக ஹ்ருதயம் பிளப்பது போலே

மூன்றாம் அஷ்டபதி -7-/8/9
மாதவிகா பரிமள / ஸ்புர ததி முக்த /தத விதலித/ உன்மீலன் / அநேக நாரீ/ஸ்ரீ ஜெயதேவ
மல்லிகை பூ நறுமணம் / மா மரம் சுற்றி இளம் கொடி பிணைந்து /

மூன்றாம் அஷ்டபதி -10-
வசந்த கால இனிமை வன வாய்ப்பு குயில் ஓசை . பாத கமலா பக்தியை பெருக்கும் பாடல்கள்

——————–

நாலாம் அஷ்ட பதி –
சந்தன சர்ச்சித
சந்தனம் பூசி மாலைகள் அணிந்து ஒய்யார நடையால் கோபியை வசீகரித்து மகிழ்கிறான்
பீந பயோதர
குழல் ஓசையால் மயங்கி கோபி ஒருத்தி தழுவ
காபி விலாச
தேஜஸ் மிக்கு கண்டவர் தம் மனம் வழங்கும் படி -தாமரை திருமுக மதுவை க்ரஹிக்கும்
வண்டு போலே கண்களால் பருகும் படி
காபி கபோல தல
ரஹஸ்யம் சொல்லுவாள் போலே ஒரு கோபி அருகில் வர அவன் குனிய
ஒரு கோபி அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்
ராதே அவனை போலே இவளும் பொல்லாதவள்
கேலிகலா
கோபி ஒருத்தி உடன் யமுனையில் லீலா ரசம் -அவனை ஆடையைப் பற்றி
இழுத்து செல்கிறாள் என்ன துணிச்சல்
கரதால தால
யமுனைக் கரையே கொண்டாட்டத்தில் திளைத்து இருக்க – ராஸக்ரீடை –
கொலுசுகள் த்வனி எங்கும் ஒலிக்க
அவன் குழல் ஓசைக்கு ஏற்ப வளையல்களை கொண்டு தாளம் தட்ட
ஸ்லிஷ்யதி
ஒருத்தியை அனைத்து -மற்று ஒருத்திக்கு முத்தம் -வேறே ஒருத்தியை கடாக்ஷித்து –
இன்னும் ஒருத்தி இடம் காதலை யாசிக்கும் கள்ளன்
விச்வேஷாம் நித்யோத்ஸங்க ராஸ உல்லாச
ராதே உன்னை தவிக்க விட்டு அவன் மற்ற கோபிகளுடன் கூடிக் களிக்கிறானே
ராதையும் கண்ணனை நெருங்கி -இருவரும் சேர்ந்து நம்மை ரக்ஷிப்பர்-
ஸ்ரீ ஜெயதேவ
இவற்றை பாடியும் கேட்டும் பக்தர்கள் அவனையே பெற்று மகிழ்வார்கள்

———————

சஞ்ச சரதர
குழல் ஓசையிலும் கண் வலையிலும் அகப்பட்டோம் -மயில் பீலி நம்மை அழைக்க –
அவன் கன்னம் உரசும் கர்ண குண்டலங்கள் செய்த பாக்யம் என்ன
சந்த்ரக
மேக ஸ்யாமளன் –
கோப கதம்ப
கோவைப்பழம் போன்ற திரு அதரம்/ ஸ்மிதம் கூற்றம் போலே
விபுல புலக
மெல்ல அசைந்து ஆட -திரு ஆபரணங்களும் அசைய
ஜலதபடல
மணிமய மகர
மகர குண்டலம் பீதாம்பரம் மோஹன ஸ்மிதம்
விசத கதம்ப
கதம்ப மரத்தடியில் ஸ்மிதம்
கண யதி குண க்ராமம்
சேஷ்டிதங்கள் நம் காதலைப் பெருக்குமே
ஸ்ரீ ஜெயதேவ
மதுவை நிரசித்த கண்ணன் திருவடிகள் தியானிக்கும் ஞானிகள் உள்ளம் நிறைந்துள்ளானே –

——————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜய தேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண /ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன / ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ/ தச அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்

July 31, 2018

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கிய அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய
அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங்கையாலே சப்பாணி –1-6-8-

மின்னிடச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை யடைத்தார்க்கு ஒர் கோல் கொண்டு வா -2-6-8-

தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னளங்காரர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-9-

வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-

நந்தன் முதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பரந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே –3-9-11-

கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்று இருந்தானை அங்குத்தைக் கண்டாருளர் –4-1-3-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

——-

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்—-திருப்பாவை 13

———————-

நாச்சியார் திருமொழி

சீதை வாயமுதமுண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று — –2-10-

——————————-

பெருமாள் திருமொழி –

தோடுலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து -2-2-

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னிராமனாய் மாறடர்த்தத்தும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி —-2-3-

மன்னு புகழ் பதிகம் —கண புரத்தென் கரு மணியே –இராகவனே தாலேலோ -8

வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின் மணி கரையலைக்கும் கண புரத்து என் கருமணியே -8-7-

தயரதன் தன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –கண புரத்து என் கரு மணியே -8-9-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன் -8-11-

——————————————————

திருச் சந்த விருத்தம் –

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய் ஞாலம் எழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தவிர நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே –31-

மின்னிறத்த எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன்நிறத் தொரின் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து உடைந்த வாலி தன தனக்கு உதவவந்திராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ –81-

விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்த முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சல் என்ன வேண்டுமே –92-

கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம்மவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –104-

கறுத்து எதிர்ந்த கால நேமி காளனோடு கூட அன்று –வில்லும் வாளும் ஏந்தினாய் –
-குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –106-

காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுந்திரன் மா சினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –107-

———————–

பெரிய திருமொழி

கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி கனை ஒன்றினால் மடிய விலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடுடன் துணித்த பெம்மான் தன்னை -2-10-5-

கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை வவ்விய விடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-

ஆநிரை மேய்த்து அன்று கடலை அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிறை மேகம்
கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-2-

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம் –புள்ளம் பூதம் குடி தானே -5-1-3–

வெற்பால் மாரி பழுதாகி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில்லி ராமனிடம் –புள்ளம் பூதம் குடித்தான் -5-1-4-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவில் நின்றான்
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே -6-10-5-

பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-

முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள்
பெரும் தோள் வாணர்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி
முன் கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8-6-6-

சூரிமையிலாய பேய்முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மையில்லாத தாடகை மாள நினைத்தவர்
மனம் கொண்ட கோயில் –திருமாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-4-

குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-7-

புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள் எரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ -10-9-1-

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

—————————–

திருவாய் மொழி –

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா -1-5-6-

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே -2-5-7-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஓசித்தாய்-4-3-1-

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -6-10-5-

—————————

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானை போர்க்கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்ந்தனவும்
கார்க்கோடு பற்றியான கை–முதல் திருவந்தாதி -27-

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்–இரண்டாம் திருவந்தாதி -15-

——————————————————————————————————————–

ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள் –1-4-8-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்னென்று தானம் விலக்கிய சுக்கிரன்
கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோவச்சோ சங்கமிடத்தானே அச்சோவச்சோ –1-8-7-

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோவச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ –1-8-8-

வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-

மா வலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூ வடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாம் அடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றும் –2-10-7-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை யுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-1-

——————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும் –நாச்சியார் -12-9-

—————

பெரிய திருமொழி

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்
தூய அரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயானிரப்ப-1-5-5-

வண் கையான அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8-5-

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை -படு மத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்
பாரிடத்தை எயிறுகீற விடந்தானை -வளை மருப்பின் எனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை —
எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலை சயனத்தே -2-5-6-

ஆங்கு மா வலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் –திருவயிந்த்ரபுரமே -3-1-5-

ஏனாகி யுலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய் பெருமானை —
ஆனாயனானானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-

திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

துள்ளா வருமான வீழ வாளி துரந்தான் இரந்தான் மா வலி மண் -6-7-3-

விடம் தானுடைய வரவும் வெருவச் செருவில் முனை நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
கிடந்தான் வையம் கேழலகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-2-

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழு உலகும் ஈரடியாகப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-5-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார் ஓளி விசும்பில் ஓரடி வைத்து ஓர் அடிக்கும் எய்தாது
மண் என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-8-

———————————-

திருவாய் மொழி

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் -3-3-8-

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே -3-8-9-

தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா வென்று வென்று கூவிக் கூவி நெஞ்சு உருகிக் கண் பனி சோர நின்றால்-4-7-3-

——————–

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை ஓசித்து
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால் மா வலியை
மாணி யாய்க் கொண்டிலையே மண் –இரண்டாம் திருவந்தாதி -89-

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-

——————————————————

ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்ததுண்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் –1-2-5-

கோளரியின் இன்னுருவம் கொண்ட அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூறுகிறாள்
குடை வாய் மீளவவன் மகளை மெய்ம்மை கொளக் கருதி
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வர காள நன்மேகமவை
கல்லோடு கால் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1-5-2-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு
இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல வெம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த வெங்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் –2-7-7-

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க -3-6-5-

கொம்பினார் பொழில் வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதில் சூழ் செழும் கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று யேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே –4-4-9-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே –5-1-9-

பெரிய திருமொழி

மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத் துரவோன்
உன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நிதி மடுத்து -1-4-8-

தங்காததோர் ஆளறியாட் அவுணன் தன்னை வீட முனிந்தவனால் –சமரில் பங்காக முனைவரோடு அன்பளவிப்
பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-4-

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய்விடைகள் ஏழு அடர்த்துப்
பொன்னம் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி யுக யுகிர் வேலாண்ட நின்மலன்–காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-4-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெஞ்சினத்த அரி
பரி கீறிய அப்பன் வந்துறை கோயில் -வண் புருடோத்தமமே-4-2-7-

திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப்
பொன்னாகத்தானை நக்க அரியுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் -5-9-5-

அரியைப் பரி கீறிய அப்பனை –கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-7-

பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-

வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் ஆப்புண்டு இருந்தவனே–10-6-3-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-

———————–

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்
மேவி அரியுருவமாகி இரணியானதாகம் தெரி யுகிரால் கீண்டான் சினம் –மூன்றாம் திருவந்தாதி -42-

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-

——————————————————

பல / தசாவதார பாசுரங்கள் –

தேவுடை மீனாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் –பெரியாழ்வார் -4-9-9-

அம்புலாவும் மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்கதன்றியும்
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே – திருச்சந்த விருத்தம் -35-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்–பெரிய திருமொழி -2-7-10-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும்
அல்லாவற்றாலுமாய வெந்தை –திரு மணிக் கூடத்தான் -4-5-6-

ஏன மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே -5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை -7-8-10-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய்
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் -8-4-4-

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தாதை கண்ணபுரத்து எம்பெருமான் -8-4-7-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி யூழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ்
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8–6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்
கற்கியுமானான் தன்னை கண்ணபுரத்து அடியான்
கலியன் ஓலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை -9-2-10-

—————————–

திருவாய் மொழி –

ஆனானானாயன் மீனோடு ஏனமும் தானானான் எண்ணில் தானாய சங்கே -1-8-8-

ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ்வெவையும் மூவாத தனி முதலாய் மூ உலகும் காவலோன்
மாவாகிய யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கோடு சக்கரம் வில்
ஒண்மையுடைய யுலகை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து
உலகில் வண்மையுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மையுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே -3-10-1-

மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்கள் நினைக்கும் நெஞ்சுடையேன் -6-4-7-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் –

May 14, 2017

1-ஆழ்வார்கள் பொழுது போக்கு -பகவத் குண அனுபவமே யாத்திரை –
பெரிய திருமலை நம்பியின் திருவாராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஈடு -1–4–8-
எம்பெருமானாருக்கும் திருவாராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஈடு -3–6–8-

ஆவிர்பவத்வ நிப்ருதாபரணம் புரஸ்தாத்
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதாந்த பாதம்
தத்நா நிமந்த முகரேண நிப்த்த தாளம்
நாதஸ்ய நந்த பவநே நவநீத நாட்யம் –ஸ்ரீ கோபால விம்சதி -4-

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்நினைந்து போக்குவார் இப்போது –பெரிய திருவந்தாதி –.86-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வென் நாகத்துன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பொரித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-

முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே –ஆர்த்தி பிரபந்தம் -55-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடன் பணித்து அருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி அவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன் –ஆர்த்தி பிரபந்தம் -28-
——————————–
2-ஏசியே யாயினும் பேசியே போக்குக

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் –பெரிய திருவந்தாதி -2-

அமைக்கும் பொழுதுண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
யேசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –பெரிய திருவந்தாதி -38-

யசோதை ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில் -ஏச்சாகிலும்
அவனைப் பேசாதே இருக்கிற இடம் தப்பு -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

சிறியாத்தான்-என்பவர் பட்டர் இடம் -ராம பிரானுக்கு எல்லா ஏற்றங்களும் உண்டே யாகிலும் -பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைக் கட்டித் தூது போன
கிருஷ்ணனுடைய எளிமை ராமபிரானுக்கு இல்லை -என்றாராம் -அதற்கு பட்டர் -ராமபிரான் சக்கரவர்த்திக்குப் பிள்ளையாக இஷுவாகு வம்சத்தில்
அவதரித்த படியால் அவனைத் தூது போகச் சொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை -என்று பதில் அளித்தாராம் –ஈடு -3–6–8-
இப்படி எளிமைக்கு எல்லை நிலமான கிருஷ்ண அவதாரத்தில் கண்ணபிரான் தன் எளிமையைக் காட்ட எவ்வளவோ செயல்களை
செய்து இருந்தாலும் அவற்றில் எளிமைக்கு எல்லை நிலமான சரித்திரம் -வெண்ணெய் களவு கண்ட சரித்திரம் தானே –
அவாப்த ஸமஸ்த காமனான எம்பெருமான் இடைக் குலத்திலே வந்து பிறந்து வெண்ணெயில் ஆசை கொண்டு அதையும் நேரடியாகக் கேட்டுப் பெறாமலே
திருடி உண்டு -அகப்பட்டுக் கொண்டு -அதற்காக உரலில் கட்டுண்டு அழுது ஏங்கி அவன் ஆடிய கூத்துக்களில் ஆழ்வார்கள் ஆழ்ந்து இருந்தார்கள் –
கிருஷ்ண அவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாயத் திரிந்த நாலு நாளும் யாயிற்று -நம்மாழ்வார் – தமக்கு பிரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –
கீழ் பரத்வத்தை மண் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர் –8–1–3-இருபத்து நாலாயிரப்படி –
——————————————-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப்பவளத்தை உடையவனை -சக்கரவர்த்தி திருமகன் ஆகில்
வெண்ணெய் யுண்ண போட்டார்கள் என்று கருத்து -பெரியவாச்சான் பிள்ளை
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே சிலர் ராஜாவாக்கிச் சீராட்டுகையாலே
வந்து வெண்ணெய் களவு காண ஒண்ணாதே -நாயனார் –

சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே யாங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை யாடின கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே –திரு விருத்தம் -21-
வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து-க்ருத்ரிமத்தாலே புஜிக்கப் போந்து -இவன் கையிலே சிலர் இடினும் அநபிமதமாய் இருந்தது -பெரியவாச்சான் பிள்ளை

பிள்ளை உருவாயத் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த –பெரிய திருமொழி -5–2–3—சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து வெண்ணெய்
அமுது செய்யப் பார்த்தால் இசைவார் இல்லை -அதுக்காகப் பிள்ளை உருவு கொண்டு தயிரை அமுது செய்து -பெரியவாச்சான்பிள்ளை –

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காணேடீ –பெரிய திருமொழி -11–5–4-

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் உண்டான் –நாச்சியார் திருமொழி -12–8-
வெண்ணெய் தனக்கு தாரகமாகக் கொண்டு அது தானும் நேர் கொடு நேர் கிடையாமே களவு கண்டு -புஜிக்கப் புக்கு -அதுவும் தலைக் கட்ட மாட்டாமே ஓர் அபலை
கையிலே அகப்பட்டு -அவள் வர இழுத்து -ஒன்றோடு கட்டக் கட்டுண்டு -சம்சார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவான தான் பிரதிகிரியை பண்ண மாட்டாதே நின்றான் –
—————————————-
வெண்ணெயும் மோரும் –
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓரோர் குடம் தூற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்
நான் இதற்கு எள்கி இவனை நங்காய் -பெரிய திருமொழி —
நின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் யாயிற்று —

மிடறு மெழு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப்படி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற வென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே –பெரியாழ்வார் -3–2–6 –
அதாவது -தொண்டையானது மெழு மெழுக்கும் படியாக வெண்ணெய் விழுங்கி -வாயில் வெண்ணெய் கொப்பளித்தால் போம்
-கையில் வெண்ணெய் கழுவுதல் தலையிலே துடைத்தல் செய்யலாம் -மிடற்றில் மெழு மெழுப்பு -வெளியில் -தெரியாது
-ஆகையால் க்ருத்ரிமம் -களவு -நித்யமாய்ச் செல்லும் இ றே-

தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் –பெரியாழ்வார் -1–4–9-
வெண்ணெய் மீது உள்ள அபிநிவேசத்தால் இவன் திருக் கைகள் விரியும் –
தேன் குழல் உழக்கில் மாவை திணிப்பது போலே -வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1- 8-5-

நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று சொல்லும் படி அன்றோ அவர்களுக்கு மிச்சம் இல்லாத படி உண்டு விடுவானே –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வாடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் –நீ பிறந்த பின்னை –பெரியாழ்வார் -2–2–2-என்றும்
கறந்த பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரான் -2–4–7-என்றும் -உண்டே
தயிரை மோராக்க விட மாட்டேன் -என்று ஆய்ச்சிகள் கையைப் பிடித்துக் கொண்டு தொங்குவானே –
ஆராத வெண்ணெய் விழுங்கி அங்கிருந்த மோரார் குடமுருட்டி –சிறிய திரு மடல் —
கண்ணன் வளருகின்ற இடத்தில் கலப்படம் கூடாதே -சாரமான வெண்ணெய் எடுத்த பின்பு அசாரமான மோரை விரும்பாதது சொல்ல வேண்டுமோ –
பாகவதர் அருகே கழனி மிண்டர் இருந்தால் அஸஹ்யமாமாப் போலே வெண்னெய்க் குடத்து அருகே மோர்க் குடம்
இருந்தது இவனுக்கு அஸஹ்யமாய் இருக்கையாலே உருட்டின படி –
தாமோருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பிருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –பெரிய திருமொழி -10- 5-3-
தயிரையும் நேயையும் முறையும் சேர வைப்பவர்கள் பாகவதர்களோடு அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே இங்கனே தாவா மோரை உருட்டுவான் –
————————————-
வயிற்றினோடு ஆற்றா மகன் –
அவன் காண்மின்- ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் -ஆராத தன்மையனாய் அங்கு ஒரு நாள் ஆய்ப்பாடிச்
சீரார் கலையல்குல் சீரடிச் செந்துவர் வாய் வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு -ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்ச்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு -நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்தனை –
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் யுறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவுற்றுத் தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே -ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் –
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு இடிந்து இங்கு ஆரார் புகுத்துவார் ஐயர் இவர் அல்லால் -நீராம் இது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால் –
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியளாய்ச் சிக்கென வார்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –சிறிய திருமடல்

மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயன் –பெரிய திருமொழி -5–1–4-
அவன் அறியாதோர் இடம் தேடி வைக்குமாய்த்து சாந்துப் பரணியில் தயிரை வைக்குமாய்த்து –பெரியவாச்சான் பிள்ளை –
எங்கேனும் வைக்கிற போது இவன் காண்கிறான் என்று பிறகு பிறகு என்று இவள் பார்க்கும் படி –போரார் வேல் கண் மடவாள் –
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தன் அன்றோ -ஆரப் பொறுத்து இருந்தான் -உண்மையிலே உறங்கியவன் எழுவது போலே சோம்பல் முறித்து
கொட்டாவி விட்டுக் கொண்டு -அவள் திடீர் என்று வந்தாலும் -உறங்கிக் கிடந்தவன் இப்போது தான் எழுகிறான் -என்று அவளுக்குத் தோன்றும் படி இருந்தான் –
தோள்கள் வரை கையிட்டான் என்பதை -எங்கு அறிந்தால் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
இவன் தோள்களில் அணிந்து இருந்த சந்தானம் குடத்தின் விளிம்பில் ஒட்டிக் கொண்டு இருந்தது போலும் -என்றார் –
முன் கிடந்த தானத்தே –களவு கண்டான் என்று சொல்லிலும் -படுக்கையோடேயே எழுந்து இருந்து களவு கண்டது -என்று சொல்லும் படி
கால் போட்ட விடத்தே கால் போட்டு -கை போட்ட விடத்தே கை போட்டுக் கிடந்தபடி –
மாறானது இவன் படுக்கையில் வலிந்து ஈரமாக்கின போதும் கூட உணராதவன் போலே படுத்துக்க கொண்டு இருந்தான் –
நெடும் கயிற்றால் –கண்ணி நுண் சிறுத் தாம்பானாலும் -இவன் திருமேனி ஸ்பர்சத்தாலே பெருமை பொருந்திய கயிறாகையாலே அது நெடும் கயிறாயிற்று –
உரலோடே தீரா வெகுளியளாய்ச் சிக்கென வார்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்-அப்போதும் இவனுக்கு வெண்ணெயைப் பற்றியே திரு உள்ளம்
பெரிய திரு நாளிலே சிறைப் பட்டு இருப்பாரைப் போலே வெண்ணெயும் பெண்களும் ஆழி மோழியாய்ச் செல்கிற அமளியில் நாம் புகுந்து இருப்பதே –

அன்றிக்கே- வயிற்றினோடு ஆற்றாதான்-
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட த் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –பெயர் -91-
உலகை உண்டான் -வயிறு திருப்தி பெற வில்லை -முலை சுவைத்து உண்டான் -இன்னும் திருப்தி பெற வில்லை -வெண்ணெய் எல்லாம் வாரி உண்டான்
ஒன்றிலும் திருப்தி பெற்றிலன் -கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டது ஒன்றினால் திருப்தி பெற்றான் அத்தனை –
இதுக்குப் பிள்ளை உறங்கா வில்லி தாசர் -வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ -என்று பணித்தார் –
————————–
கட்ட வெட்டென்று இருந்தான் —
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு அறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கோத வண்ணா உரை –பொய்கையார் -24-
பிள்ளை திரு நறையூர் அரையர் -உண்பதற்கு முன்னே அகப்பட்டுக்கொண்டான் -வேறே இடங்களில் வெண்ணெய் விழுங்கி -என்று
உண்ட பின்பு அன்றோ யசோதை கோபம் கொண்டு உரலோடு கட்டினாள் என்று அருளிச் செய்யப் படுகிறது -என்ன
பட்டர் -கண்ணன் வெண்ணெய் திருடியது ஒரு நாள் மட்டுமோ -என்றும் -அவனுக்கு இதுவே யன்றோ காரியம் –
ஒரு நாள் உண்பதற்கு முன்பே பிடி பட்டான் -மற்று ஒரு நாள் உண்ட பிறகு பிடி பட்டான் என்று கொள்ளும் –

கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருகு நந்தன் பெற்ற ஆனாயன் -பெரிய திருமொழி -5-5-3-
மஹதா தபஸா என்று சக்ரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று நோம்பி நோற்றுப் பெற்றாப் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது -இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் -என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது –
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மற்று ஆய்ச்சி யோச்சி
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்–பெரிய திருமொழி —
ஸுசீல்யம் ஸுலப்யம் ஆஸ்ரித பாரதந்தர்யம் வெளியிடவே அன்றோ அவதாரம் –
சாமானியன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே வேறு ஒரு ஹேதுவாய்ச் சொல்லி யன்றியே
இது சொல்லியே நம்மைக் கட்டுவதே என்று இசைந்து இருந்தான் யாயிற்று –
நம்மை வெண்ணெய்க் கள்ளன் என்று நினைத்துத் தானே அடிக்கிறார்கள் -நன்றாக அடிக்கட்டும் -என்று அதையே கொண்டு மகிழ்ச்சியோடு இசைந்து இருந்தான் –
களவு கண்டு அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு அழுவதிலே கால ஷேபம் இவனுக்கு –

தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா –பெரிய திருமொழி -7–7-6 –
வாய்க்குப் போந்தார் போந்த படி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில் இதுக்கு வருவது ஓன்று உண்டோ -என்றும்
ஒற்றையிட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்றும் நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தானாய்த்து —
தாயார் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள் –பெரிய திருமொழி -10–5–2-
நல்லது செய்தால் போலே மகிழ்ந்து இருந்தான் –
தொடுவே செய்து இள வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரானையே –திருவாய் -1–7–6-
தூது செய் கண்கள் அன்றோ –
கட்டுண்டவனை காண வந்த பெண்கள் அனைவரும் அடிக்க -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்ந்து இருப்பான்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –திருவாய் -1–7–3-
எல்லாருமே இவனை மத்தாலே ஓரடி அடிப்பார்கள் போலும் -பக்தர்கள் இவனைக் கட்டி அடிக்க அடிக்க நன்கு கடைந்து எடுத்த மாணிக்கம் போலே பிரகாசிப்பான்
கட்டின போது வெட்டென்று இசைந்து இருந்தவன் கட்டி அடித்த போது மேலும் பிரகாசத்தோடே விளங்க சொல்ல வேணுமோ -நம்பிள்ளை –
——————————–
அழுகையும் தொழுகையும் –
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகில் இளம் சிறுத் தாமரைக் கையும்
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–பெருமாள் திருமொழி -7–8-
முழுதும் வெண்ணெய் அளைந்து –தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்றபடி
தொட்டு உண்ணும் -அப்படியே விழுங்கி விட்டால் உடனே தீர்ந்து விடுமே -ஒரு கையில் வைத்து மாரு கை விரலால் குழந்தை இயல்பு போலே உண்ணுவான்
முகில் இளம் சிறுத் தாமரைக் கையும் -செக்கமலத் தளர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்தின் இல்லை போலும் திரு மேனி
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் -அடிக்கவில்லை -அடிக்க ஓங்கினாள் அத்தனையே –
உழந்தாள் நறு நெய் ஆரோ தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மதத்தின் பலம் தாம்பாள் ஒச்சப் பயத்தால் தவழ்ந்தான் –பெரியாழ்வார் -1–2–4-
இங்கும் அடிக்க ஒங்க பயத்தால் அதில் இருந்து தப்ப தவழ்ந்தானாம் கண்ணன்
வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் -கையிலே தயிர் இருந்தால் அகப்பட்டுக் கொள்வோம் என்று அதை இல்லை செய்வதற்காக தயிரை முகத்திலே பூசிக்க கொள்வானாம்
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு –திருவாய் -7–7-2–அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதே
வெண்ணெய் களவு காணப் புக்கு கொண்டியிலே பிடியுண்டு பின்பு அத்தை இல்லை செயகைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே –ஈடு
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் –பெரிய திருமொழி -8–3–5-
அமுது செய்த தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து அத்தை இல்லை செயகைக்காக முகம் ஏங்கும் தடவிக் கொள்கிற இளிம்பனுக்கு –
யன் நாம நாத நவநீத மசூசுரஸ்த்வம் தச்சாத நாய யதிதே மதிராவிரா ஸீத்-
கிம் முக்த திக்தமமு நா கர பல்லவம் தே காத்ரே ப்ரம்ருஜ்ய நிரகா கில நிர் விசங்க –அதி மானுஷ ஸ்தவம் -39-
கரிய திருமேனி –வெளுத்த தயிர் -சிவந்த ஆதாரம் -பகைத்தொடையில் ஆழ்ந்து அனுபவம்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும்-குழந்தை அழுது ஜெயிக்கும் தொண்டர்கள் தொழுது ஜெயிப்பார்கள் -இரண்டையும் செய்தான்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
ஆனந்தோ ப்ரஹ்ம -கண்ணனையே தொல்லை இன்பம் -அபரிச்சின்னனான அவனை யசோதை பரிச்சின்னனாக்கி விட்டாள்-
————————————–
பையவே நிலை
திண்ணக் கலத்துத் திரை யுறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் –பெரியாழ்வார் -2–6–3-
உடையவர்கள் காணுவதற்கு முன்னே கடுகப் போந்து அறியாதவரைப் போலே கிடந்து உறங்கா நிற்கும் –
வெண்ணெய் விழுங்குகிற போதைப் பதற்றத்தில் காட்டில் பதறி உறங்கப் புக்கால் கண் உறங்குமோ -குறு விழிக் கொண்டு
வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே இது என்ன பொய்யுறக்கம் என்று பிடித்துக் கொள்ளுவர்கள் இ றே
வெண்ணெய் -என்ற சப்தம் கேட்டதுமே -நான் அல்லேன் என்று அழத் தொடங்குவானே-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையில் சீற்றம் உண்டு அழு கூத்த வப்பன் –திருவாய் -6–2–11-
ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று என்றார்கள் -அவ்வளவில் நாம் இ றே இதுக்கு இலக்கு -என்று அழப் புக்கான் –மடம் மெழுகுவார் ஆர் -என்ன
அஸ்ரோத்ரியன்-மடையன் – என்றார்கள் -இப்பிறப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ -என்றான் -அது போலே –
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யூன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என் நெஞ்சை யுருக்குங்களே–திருவாய் -5–10–3-
தாய் அடிக்க மனம் வைக்க மாட்டாள் -அச்சுறுத்தவே என்பது கூட தெரியாத பிள்ளை –
உன் தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் –பெரிய திருமொழி -10-4–8-
அந்த கோல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி –பெரிய திருமொழி -8–3–5-என்றபடி -சிறுகோல் -வைக்கோல் -என்பர் அரும் பதக் காரர்
ஓட தயார் -ஆனால் ஓட தைர்யம் இல்லை -பையவே நிலை -நடனம் ஆடுவது போலே -பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே —
உனக்கானால் தம்பியாவது ஓடலாம் -ஆனால் உன்னுடைய இந்த சேஷ்டித்தமானது என்னை இதில் இருந்து தப்ப முடியாமல்
அகப்படுத்திக் கொண்டு நலிகிறதே -என்கிறார் ஆழ்வார் –

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹையங்க வீதம்
த்ருஷ்ட்வா தாமக்ர ஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷம்
ப்ரயா தீஷத் ப்ரசலி தபதோ நாபகச்சன் நதிஷ்டன்
மித்யா கோப சபதி நயநே மீலயன் விச்வ கோப்தா –கோபால விம்சதி –

கோப் யாததே த்வயி க்ருதாகசி தாம தாவத்
யாதே தசாச்ருகலி லாஞ்சன சம்பிரமாஷம்
வக்த்ரம் நிநீய பய பாவ நயா சதிதசய
ச மாம் விமோ ஹயதி பீரபி யத்ப்பிபேதி –ஸ்ரீ மத் பாகவதம் –1–8–31-குந்தி இத்தையே சொல்கிறாள் –
—————————————–
9–ஒளியால் சென்று உண்டான் –
வேலிக்குள் நுழைந்து பயிரை நாசம் செய்யும் பட்டிக் கன்று போலே –
அகம் புக்கு அறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்று –பெரியாழ்வார் -1-6–5-

தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின் கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–3–
திருடக் கற்றான் ஒழிய திருட்டை மறைக்க தெரியவில்லையே இவனுக்கு -இவ்வளவும் உண்டால் வயிறு ஜீரணம் ஆகாதே என்று அன்றோ கவலை –

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு –பெரிய திருமொழி -4–4 -3-
இவனுக்கு நுழைந்து புகுகையாகை இ றே குடிலினுடைய பெருமை –
துன்னு படல் திறந்து புக்கு –பெரிய திரு மடல் –
மேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி அவன் கோல் இட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்
-பல கால் புக்க வழக்கத்தாலே அறியும் என்கை –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தலைவனே –திருவாய் -3–8–3-
வெண்ணெய் தாழி தட்டுப்பாட்டை ஹர்ஷத்தால் வாடைத் திறந்து – பற்களின் ஒளியையே கை விளக்காகக் கொண்டு -சென்று –
உரு யாரந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று –பெரிய திருமொழி –2–10–6-
த்வாந்தாகாரே த்ருத மணி கணிம் ஸ்வாங்கமர்த்த ப்ரதீபம்
காலே கோப்யோ யர்ஹி க்ருஹக்ருத் யேஷூ ஸூவ்யக்ரசித்தா –ஸ்ரீ மத் பாகவதம் -10–8-
யாரேனும் வரக் கண்டால் வாயை மூடிக் கொள்வான் –
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு –பெரியாழ்வார் -2–10–5-
த்ரஸ்யன் முகுந்ததோ நவநீத ஸுர்யாத் நிர்புக்ந காத்ரோ நிப்ருதம் சயான
நிஜானி நிஸ்சப்தசாம் சயாஸ் பத்வாஞ்சலிம் பாலா விபூஷணாதி –யாதவாப்யுதம் -4–29-
தான் உள்ள இடம் சதங்கை போன்ற ஆபரண ஒலியால் அறிவார்கள் என்று ஓசைப்படுத்தாமல் இருக்க அஞ்சலி செய்கிறானே -என்ன மௌக்த்யம்-
————————————–
10–ஏலாப் பொய்கள் உரைப்பான்
கடை வெண்ணெய் உண்டாயை அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன் -பொய்கையார் -22-
நெய் தொடுவுண்டு ஏசும்படி யன்னவசம் செய்யும் எம்மீசர் –திருவிருத்தம் -54-
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து பூமியிலே வந்து அவதரித்துத் தன் பக்கல் ஆசா லேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள
த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் -அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவு கண்டு அமுது செய்து
தன்னை உதவாத சிசுபாலாதிகள் ஏசும்படி இருக்கிறவர் –

ஆழ் கடல் சூழ் வையாகத்தார் ஏசப் பொய் ஆடிப் பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் வேழ் உலகுண்டும் இடமுடைத்தால் சாழலே–பெரிய திருமொழி –11–5–3-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு –பெரிய திருமொழி -4–10–1-என்றபடி பஞ்ச லக்ஷம் குடியில்
இடக்கை வலக்கை வாசி அறியாத இடைச்சிகள் கை எடுத்துக் கூப்பிடும் படி வெண்ணெய் அமுது செய்து –

மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வன் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியார்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–4-
வெள்ளிப் பெரு மலைக் குட்டன் பலராமன் இப்படி தீமைகளை செய்ததே இல்லையே
-இவன் அன்றோ பொய்ந் நம்பி -பொய்யே வடிவெடுத்தவன் / கள்வம் பொதியறை -கள்ளத்தனம் கொண்ட கொள்கலம் –

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் –பெரியாழ்வார் -3–1–1-
புள்ளுவமாவது -மெய் போலே இருக்கும் பொய் -உண்டு இருக்கச் செய்தேயும் உண்டிலேன் என்கையாலே அஸத்யவாதி என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் என்றது -களவுக்கு அத்விதீயன் -என்றபடி
பொய்யே தவழும் -தளர் நடையிட்டுத் திரிகிறவனுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே தவழுகிறதும் க்ருத்ரிமம் என்று தோற்றும் இறே –

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்
இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–81-

பொய்ந் நம்பி -பெயர் சூட்டுகிறார் திருமங்கை ஆழ்வார் -/
மெய் போலும் பொய் வல்லன் –திருவாய் -10–4–5-/ ஏலாப் பொய்கள் உரைப்பான் –நாச்சியார் -14–3-/பொருத்தம் அன்றோ –
————————————-
11—கண்ணபிரான் கற்ற கல்வி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதன் ஓசை கேட்க்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லாம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பு எய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணனோர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் யுன் மகனைக் கூவாய் –பெரியாழ்வார் -2–9–1-

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழண்டு செய்யும் பிரானே –பெரியாழ்வார் -2–4–6-

திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையான்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் –பெரியாழ்வார் -2–9 -3-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போனேன் கண்டே போனேன்
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணையே என்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–2-
நங்காய் என்று ஒருத்தியை அழைத்தவாறே கண்ணபிரான் தீம்புகளை கேட்க்கையில் உள்ள ஆவலினால் பல பெண்கள்
எழுந்து ஓடி வர எல்லோரையும் நோக்கி -வந்து காண்மின்கள் -என்று பன்மை –

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யாய்
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகந்தான் வையார்களே –பெரிய திருமொழி -10–7–10-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்ப கில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே–பெரிய திருமொழி -10–7–8-

உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் –பெரிய திருமொழி -10–4–8-

அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் –நாச்சியார் -3–9-
——————————————-
12–யசோதை இளம் சிங்கம்
ஆகண்ட வாரி பரமந்த்ர மேகதேச்யம் பீதாம்பரம் கமல லோசன பஞ்ச ஹேதி
ப்ரஹ்ம ஸ்தநந்தய மயாசத தேவகீதவாம் ஸ்ரீ ரெங்க காந்த ஸூத காம்யதி காபரைவம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–71-
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து –
மருவு திரு நெற்றியில் சுட்டு யசைதரமணிவாயிடை முத்தம்
தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறுவாய் இடைச் சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –பெருமாள் திருமொழி -75-

தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் என்னும் படி அவளை மகிழ்வித்த அவ்வுரைகள் பல பலவே
பூம் கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண அங்கு அவள் ஆர்க்கப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே –பெரிய திருமொழி -10 -6 -1-
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே கடைந்த போதே நிழலிலே ஒதுங்கிக் களவு கண்டு யாயிற்று அமுது செய்வது –

கும் கும் இதி கிம் ப்ரமதி அம்ப ததி மத்யே
டிம்ப ந நு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப நவநீதம் இதி சம்வததி கிருஷ்னே
மந்த ஹசிதம் ச மாதுரதி ரம்யம் -இப்படி மழலைச் சொற்களால் மயக்கி யன்றோ வெண்ணெய் உண்டான் –

மாத கிம் யதுநாத தேஹி சஷகம் கிம் தேன பாதும் பய
தன் நாஸ்தி யத்ய கதா அஸ்தி வா நிசி நிஸா கா வா அந்தகார உதயே
ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா தேஹீதி மாதுர் முஹு
வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –க்ருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகம்
மாத-அம்மா / கிம் யதுநாத-என்ன கிருஷ்ணா / தேஹி சஷகம்–ஒரு கிண்ணம் தா / கிம் தேன-எதற்கு /பாதும் பய -பால் குடிக்க /
தன் நாஸ்தி யத்ய -அது இப்போது இல்லை / கதா அஸ்தி வா-பின் எப்போது / நிசி-இரவில் தான் / நிஸா கா வா -இரவு எப்போது வரும் /
அந்தகார உதயே -இருட்ட ஆரம்பிக்கும் பொழுது /ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா-இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு இருட்டும் வந்து விட்டதே – தேஹீதி-பாலக் கொடு –
மாதுர் முஹு வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –கள்வனுடைய சாமர்த்திய பேச்சு கேட்க என்ன பாக்யம் செய்தாளோ-

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் -பெரியாழ்வார் -2–2–6 –
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மாற்றாரும் இல்லை –பெரியாழ்வார் -3–3–1-
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் –திருப்பாவை -1-சேஷ்டிதங்களை கண்ணாரக் கண்ட ஹர்ஷத்தினால் மலர்ந்த கண்கள் –
—————————————-
13–தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் –
இப்படி யசோதைக்கு தன்னைக் கட்டவும் அடிக்கவும் ஆகும் படி ஆக்கிக் கொடுத்து அவளை வயிறு விளங்கச் செய்த தாமோதரன் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் –பூதநாதிகள் உயிர் மாளவும்-வெண்ணெய் மாளவும் இறே வளர்ந்தது –
பிரதிகூலர் உயிரும் அனுகூல ஸ்பர்சமுள்ள த்ரவ்யமுமே தாயகமாக வளர்ந்த படி –
பிரதிகூலர் மண்ணுன்னவும் அனுகூலர் கண்ணுன்னவும் இறே வளர்ந்து அருளிற்று –
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் -பெரியாழ்வார் -2–7–5-
சுரும் குறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை –அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே –திருவிருத்தம் -91-
சுரும் குறி வெண்ணெய் –கல்லாக கயிறு உருவி வைத்த உறி யாயிற்று –
வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே வெண்ணெய் களவு கண்டு அமுது செய்தான்
கள்வனை –களவு தன்னை யாயிற்றுக் களவு கண்டது -ஆகையால் -இது சிலர் களவு கொண்டதல்ல –
தெய்வம் கொண்டதோ நாம் தான் வைத்திலமோ என்னும் படி யாயிற்றுக் களவு கண்டது –

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –திருவாய் -6–4–4–ஆழ்வார் தம்முடைய திருமேனியில் கயிறு உறுத்தினால் போலே
-நோவ -என்று அழுத்தி -நஞ்சீயர் பாவம் தெரியும் படி சாதிப்பாராம் –
இவ்வளவு உண்டானாகில் இவன் உடம்புக்கு ஆகாதே என்று அன்பின் மிகுதியால் அன்றோ காட்டுகிறாள்
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் –திருவிருத்தம் -86-
இங்கனே நம்முடைய ஸுசீல்ய ஸுலபயன்கள் நன்கு விலங்காய் பெற்றோமே -அவதார பிரயோஜனம் நிறைவேறப் பெற்றது அன்றோ -என்று திரு முகம் மலர்ந்ததே –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை –திருவாய் -1–7–3-
ஆஸ்ரிதர் கட்டி யடிக்க வடிக்கக் களங்கம் அறக் கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர் பெற்று வருகிறபடி –
கட்டின அளவுக்கு வெட்டென்று இருக்குமவன் கட்டி யடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்லவும் வேணுமோ –
தாம்பால் ஆப்புண்டாலும் -பெரிய திருவந்தாதி -18—என் மகன் இறே -நான் இவனுக்கு நல்லவள் -என்று யசோதைப் பிராட்டி தாம்பினாலே
கட்டினாலும் அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் சம்ச்லேஷ சின்னம் போலே –

தாம்நா சைவோதரே பத்வா ப்ரத்ய பத்நா துலூகலேது
கிருஷ்ணம் அக்லிஷ்ட கர்மாணமாஹ சேதம மர்ஷிதா
யதி சக்நோஷி கச்சத்வமதி சஞ்சல சேஷ்டிதநு
இதயுக்த்வாத நிஜம் கர்ம சாசகார குடும்பு நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6–14-/-15-
கட்டிப் போட்ட பிறகு தன் காரியங்களைச் செய்யச் சென்றால் –பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே –
————————————
14–உன் மாயம் முற்றும் மாயமே
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்புண்டான் –பெரியாழ்வார் -2–1–5-
என் பிள்ளையைக் களவேற்றாதே-உண்டாகில் குண்டியோடு கண்டு பிடித்துக் கட்டிக் கொண்டு வாருங்கோள் என்று முன்பே சொல்லி
வைக்கையாலே தாயாரான தன் முன்னே கட்டோடே அவர்கள் கொண்டு வர -என்பதையே திருடி நெய்க்கு ஆப்பூண்டு -என்கிறார் –
கோம்ய கதாசன ப்ருதக் ப்ருதகுத்ய -க்ருஷ்ண மேத்யை கதைவகதிதும் பிரசுருதாஸ் ததாக –
த்ருஷ்ட்வா ததன்யதே தமேவா நிஜா நத்ருஷ்ட்வா -ஸர்வாச்ச தா நிவவ்ருத்ஸ் வாக்ருஹான் ச லஜ்ஜா –ஸ்ரீ மத் பாகவதம் -10–7–34-
கோபிகள் தனித் தனியே ஒரு கண்ணனை பிடித்து வர யசோதை அருகிலும் கண்ணன் இருப்பதைக் கண்டு வெட்க்கி தங்கள் க்ருஹங்கள் திரும்பினார் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –
பின்னையும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் –

பீடே பீடே நிஷண்ண பாலககலே திஷ்டன் ச கோபாலகோ -யந்த்ராந்த ஸ்தித துக்த பாண்டமபாக்ருஷ்யாச் ஸாத்ய கண்டாரவம்
வந்த்ரோ பாந்த க்ருதாஞ்சலி க்ருதி சிர கம்பம் பிபன் ய பய -பாயாதா கத கோபிகா நயனயோர் கண்டுஷ பூத்கார க்ருத் –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–97-
மணை மேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த தோழன்மார் தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் -பானை அசைய
அறியும் படி கட்டிய மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு ஒலிக்க முடியாதபடி பண்ணி பாலை ஹர்ஷமாக தலையை ஆட்டிக் கொண்டே குடிக்க
-அங்கே வந்த கோபிகை கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்து விட்டு ஓடினானாம் –

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1–8–5–
கள்ளன் என்று சிலுகிட்டவாறே அவர்கள் தங்களோடு கலந்து அமுது செய்தான் என்னுதல் -ஓர் இளிம்பனும் சதிரனும் களவு கண்டார்கள் -என்ற பட்டர் கதையை ஸ்மரிப்பது —
கண்ணன் தன் தோழனுடைய முகத்தில் வெண்ணெய் பூசிவிட்டு ஓடி விடுவானாம் -இழைத்த வாயன் அகப்பட்டுக் கொள்வான் -என்பதே பட்டர் விளக்கம் –

அந்தர் க்ருஹே க்ருஷ்ண மவேஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகா
உலூகலே தாமநிபத்த மேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவ –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–51-
தன் வீட்டில் வெண்ணெய் திருடிய கண்ணனை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டு யசோதையிடம் சொல்ல சென்றவள்
அங்கு உரலோடே கட்டுண்டு கிடப்பதை கண்டு ஆச்சர்யப் பட்டாள்-
உன்னைக் களவிலுரலோடு கட்டி வைத்து உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி அறிவித்த போது அலை யாழி யங்கை
தன்னைப் புணர்ந்தருள் தார் அரங்கா அவள் தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்ற பிள்ளை மற்றார் என்று பேசுகவே –திருவரங்கத்து மாலை
இடுப்பிலும் கண்ணனே -கட்டி வைத்தது தன் குழந்தையாக மாறியது கண்டாள்-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணின பெரு மாயனின் சில மாயங்களைப் பார்த்தோம் –
—————————————
15–கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
உறி வெண்ணெய் தோன்ற உண்டான் -பொய்கையார் -18-களவு வெளிப்படும் படி அன்றோ உண்டான் –
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –பெரியாழ்வார் -1–9 –7-
நல்ல உரலானால் நடுவே தேடுவார் உண்டாய் இருக்கும் என்றாய்த்து பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது –

அநந்யார்ஹம் -அன்றோ பொத்த உரலும் –கண்ணி நுண் சிறுத் தாம்பும்-
உறி யாரந்த நறு வெண்ணெய் ஒலியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –பெரிய திருமொழி -2–10 –6–
மதித்து ஊரிலே மூலை படியே உழற்றிக் கொண்டு இருந்த ஆனையானது யாதிருச்சிகமாகப் பிடிபட்டு ஒரு கம்பத்தில் சேர்த்துக் கட்டுண்டு நிற்குமா போலே
தான் கண்டபடி திரிந்து அவள் கட்டுண்டு கண்ணில் பரப்படையப் பரப்பு மாறும்படி கண்ண நீர் மல்கி பிரதிகிரியை அற்று நின்றவனை
-தன்மையானை –மேன்மை இடு சிவப்பு –இதுவே யாயிற்று இவனுக்கு ஸ்வ பாவம் –

ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா வார்க்க வாய்ப்புண்டு விம்மி யழுதான் –பெரிய திருமொழி -6–7–4-
எம்பெருமானார் -வங்கி புரத்து நம்பி இடம் -எல்லோரையும் நியமிக்கக் கூடிய எம்பெருமானும் கூட யசோதையிடம் அஞ்சி நடுங்கக் கூடுமோ -என்று
சந்தேகம் கொண்டு இருந்தேன் -இன்று சிஷ்யரான உம்மிடத்தில் -கூரத் தாழ்வானுக்கும் ஹனுமத் தாசருக்கும் -திருவாராதன க்ரமம் அருளிச் செய்யும் பொழுது
நீர் பல முறை அணுகி பிரார்த்ததும் சொல்லாமல் இருந்து -இன்று நீர் வந்ததும் அஞ்சி நடுங்கினேன் –
ஆகையால் அது நடந்து இருக்கக் கூடியதே -என்று அறிந்தேன் -என்றாராம் –

மண மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும் புனர் மருதம் இற நடந்த -பெரிய திருமொழி -8–3–4-
பந்தித்த வற்றை அறுத்துக் கொண்டு போக்கை என்ரிக்கே கட்டின குரலையும் இழுத்துக் கொண்டு போய் –
பகதத்தாதிகள் விட்ட அஸ்திரங்கள் ஆகில் இ றே நேரே மார்வைக் காட்டி நிற்பது -பரிவுடையளாய்க் கட்டினத்துக்கு பிரதிகிரியை இல்லை
-ஆகையால் அத்தையும் இழுத்துக் கொடு போய் –பெரியவாச்சான் பிள்ளை –
பிரதிகூலரான துர்யோதனாதிகள் கட்டின கட்டாகில் இ றே அவிழ்த்துக் கொண்டு போக வல்லது -அனுகூலர் கட்டினால்
அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இ றே -பெரியவாச்சான் பிள்ளை -கண்ணி நுண் சிறுத் தாம்பு வியாக்யானம்
செருக்கனான ஸார்வ பவ்மன் அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்டு ஒரு கரு முகை மாலையால் கண்டு உண்டால் அதுக்கு பிரதிகிரியை
பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்த இருப்பும் –
பிறருடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை -நாயனார் –
————————————————
16–எத்திறம் -எத்திறம் -எத்திறம் –
க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம் -எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே –திருவாய் -8–1–3-
கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாய்த் திரிந்த நாலு நாளுமாயிற்று இவர் தமக்கு ப்ரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –
கீழ் பரத்வத்தை மன் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர் —
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்த –திருவிருத்தம் -21-அவதாரம் அன்றோ –

சத்யேவ கவ்ய நிவஹே நிஜதாமநி பூம் நா –பர்யந்த சத்மஸூ கிமர்த்தமஸூ சரஸ் த்வம்
முஷ்ணம்ஸ்ச கிம் வ்யஜகடோ கட சேஷ மக்ரே-கோபி ஜநஸ்ய பரிகாச பதம் கிமாஸீ–அதிமானுஷ ஸ்தவம் -38-

த்வா மன்ய கோப க்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீயமவமா நமம் ருஷ்ய மாணா
ப்ரேம்ணாதா தாம பரிணாம ஜூஷாபபந்த -தாத்ருங் ந தே சரிதமார்யஜ நாஸ் சஹந்தே –அதிமானுஷ ஸ்தவம் -40-

வெண்ணெய் திருடி கட்டுப்பட்டு அடிபட்டு ஏச்சுப் பட்டு -ஆழ்வார்களை மோஹிக்க செய்த செயல்கள் அன்றோ –

பத்துடை யடியவர்களுக்கு எளியவன் பிறருக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1–3–1-
எங்கானும் இது ஒப்பதோர் மாயம் உண்டே –பெரிய திருமொழி -10–5-
அப்படிப்பட்ட மேன்மையுடையவன் இன்று இங்கனே ஓர் அபலை கையாலே கட்டுண்டு அடியுண்டு நோவுபடுவதே என்று அவன் ஸுலபயத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் —
அன்று உண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்பூண்டு இருந்தவன் –
அளந்திட்டவன் காண்மின் –ஆப்பூண்டு இருந்தவன் –
உலகு ஏழ் ஆண்டானவன் காண்மின் -ஆப்பூண்டு இருந்தவன்
கடலை படைத்திட்டவன் -காண்மின் -ஆப்பூண்டு இருந்தவன் –
கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு-கடையா நிற்கச் செய்தே பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்
வெந்தது கொத்தையாக வாயில் இடுமா போலே கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும் படியைச் சொல்கிறது –
களவினில் -ஆப்பூண்டு -அள்ளி எடுத்தவன் ஆசையுடன் வாயில் இடுவதற்கு முன்னமே பிடிபட்டான்
-உரலோடு ஆப்புண்டான் -குறும்பன் நீ வெள்ளையாகில் போய்க் காணாய் -வார்த்தையும் சொல்லி விட்டாள் –

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கி –உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே ஜடப்பொருள் போலவே கிடந்தான் –
ஏங்கிய -இது ஒன்றே குரலுக்கும் இவனுக்கும் வாசி -இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்கும் —
அவள் வாய் வாய் என்றால் எரித்த த்வனி இளைய மாட்டாதே பயப்பட்டு நிற்குமே –
எரிவு எத்திறம் -யாதோ வாசோ நிவர்த்தந்தே -மேன்மை கூட பேசுவதற்கு நிலம் இல்லாத போது -நீர்மையோ நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று –
கோயம் குண கதரகோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பாத கஸ்ய பூமி –
மாத்ராயதி த்வமஸி தாமநி ஸந்நிபத்த தச்சராவிணா முதித சாஷூஷ நிர்ஜராணாம்-
பத்நாசி அந்த ஹ்ருதயம் பகவன் குதஸ்தத் சர்வோஹி வஸ்ய விஷயே விவ்ருணோதி வீர்யம் –அதிமானுஷ ஸ்தவம் -41-
வசப்பட்ட ஆழ்வார்கள் இதயத்தை கட்டி வைத்து அன்றோ உன் திரலைக் காட்டுகிறாய் –
———————————
-17-நம்மாழ்வாரும் நவநீதமும் –
உயிரினால் குறைவில்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் யுண்டானை –திருவாய் -4–8–1-
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுந்த போது செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப் போலே அந்நிய பரதைக்கு உடலாக ஒண்ணாது என்று
எல்லா லோகங்களுக்கும் வேண்டும் சம்விதானம் தன் சங்கல்பத்தாலே செய்து பின்னையாயிற்று வெண்ணெய் அமுது செய்தது –நம்பிள்ளை –
கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பிள்ளைக்கு ஈடாக போஜனாதிகள் பண்ணுமா போலே உள் விழுங்கின
லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான் -நம்பிள்ளை
உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –திருவாய் -1–5-8 –
சம்வாத ரூபமாக வியாக்யானம் அமைத்து அருளின பூர்வாச்சார்யர்களின் மதிக்கு மண் விண் எல்லாம் கூடி விலை போருமோ-
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் போய் கலவாது என் மெய் கலந்தானே –திருவாய் -1–8- -5-
ஆக நம்மாழ்வாரும் நவநீதமும் ஒன்றே அவனுக்கு –
—————————————
18–வண்ணான் தாழியும் தயிர்த் தாழியும் –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –பேயாழ்வார் -91-
இதுக்குப் பிள்ளை யுறங்கா வில்லி தாசர் -வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ –என்று பணித்தார் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திரு மாலே –ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு –பொய்கையார் -93-
உபய விபூதி உக்தனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ -ஓர் இடைச்சி வெண்ணெய் விழுங்குகை —
பிரளயம் கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே உமிழ்ந்து ரஷித்த வயிறு இத்தனை வெண்ணெயாலே
நிறைக்க வேண்டி இருந்ததோ -பின்னை உன் வயிற்றை வண்ணானுக்கு இட மாட்டாயோ -என்கிறார் –
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு –திருச்சந்த விருத்தம் -37-

இந்த வண்ணான் தாழி போன்ற வயிற்றைத் திருப்தி செய்வதற்காகக் கண்ணபிரான் தயிர்த் தாழி ஒன்றில் அகப்பட்டுக் கொண்டான் –
கண்ணனை நான் பார்க்கவே இல்லை என்று போய் சொன்ன தாதி பாண்டன் தானும் மோக்ஷம் பெற்று தயிர்த் தாளிக்கும் மோக்ஷம் பெற்றுத் தந்தானே
ஆபாச தர்மமான ஸத்ய வாக்ய பரிபாலனம் -பற்றி -பெருமாளை காட்டுக்கு போகச் சொல்லி -சக்கரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு –
முன்னமே வரப் பிரதானத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான ஸத்ய தர்மத்தைப் பற்றி நின்று –
ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற -பெருமாளோடே கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே ஆபாசமான
உபாயாந்தரங்களிலே அன்வயித்து நிற்கை யாகிறது -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயத்தோடு கூடி
சலுகை யாகிற பேற்றை இழக்கைக்கு உறுப்பாய் விடும் என்கை –
வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே தொடுப்புண்டு வந்து தம் அகத்தே புகப் படலைத் திருகி வைத்து
மோக்ஷம் தாராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோக்ஷம் பெற்ற ததி பாண்டர் –
நாம ரூபங்களுக்கு உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே இதுக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்கிற
அவன் நிர்பந்தத்துக்காக மோக்ஷம் கொடுக்கப் பெற்ற தயிர் தாழி –
சிந்திக்க நெஞ்சில்லை நாவில்லை நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய்யில்லை வந்திரு போது மொய் மா மலர்ப் பூம்
பக்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நான் முக்தி பெற்றது என் எனோ தயிர்த் தாலியும் –திருவரங்கத்து மாலை -53-
தர்ம சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது -முமுஷுப்படி -213-
————————————–
19–வெண்ணெய் யுண்ட வாயன் அணியரங்கன் –
பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் –ஆவரண ஜலம் போலே பரத்வம் -பாற் கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் -பின்னானார் வணங்கும் சோதி -அன்றோ –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை கண்ணனை -பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால் அவதாரத்தில் பிற்பட்டார்க்கும் உதவுக்கைக்காகக் கிருஷ்ணன்
வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படியாய்த்து இருப்பது —
யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்
பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதிகளாலே ஸூசிஷதராய் வளர்ந்து படிந்த விநயம் எல்லாம் தோற்றும் படியான
சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும் -பட்டர் அருளிச் செய்வர் –
அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச்சியார் -3–9-என்றபடி யசோதையாலே அனுமதிக்கப் பட்ட பின்பு
வெண்ணெயை வாரி வாரி விழுங்குவானே
பெரிய பெருமாளை கிருஷ்ணாவதாரமாக இறே நம் பூர்வாச்சார்யர்கள் அனுசந்திப்பது –
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை -என்றார் இறே திருப் பாண் ஆழ்வார் –
திருப் பவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் ஆய்த்து
ப்ரணத வசதாம் ப்ருதே தாமோதாத்வகர கிண–தழும்பை இன்றும் நாம் பெரிய பெருமாள் திருமேனியில் சேவிக்கலாம் –
சேஷியுடைய திரு விலச்சினை –பணைகளிலே –
தாவினவாறே உடை நழுவத் தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள் -அத்தழும்பு தோன்றாமைக்கு இறே
நம் பெருமாள் கணையம் மேல் சாத்துச் சாத்துகிறது -என்று ஜீயர்
யத் பிருந்தாவன பண்டிதம் ததிரவைர் யத் தாண்டவம் சிஷிதம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1–115-
தயிர் கடையும் ஓசைக்கு ஏற்ப தாண்டவம் செய்து பயிற்சி பெற்ற திருவடிகள் அன்றோ
தத்நா நிமந்த முகரணே நிபத்த தாளம் நாதஸ்ய நந்த பவநே நவநீத நாட்யம் –ஸ்ரீ கோபால விம்சதி -4-
ஆக -பெரிய பெருமாள் திரு மேனியில் வெண்ணெய் உண்ட மொசு மொசுப்பு / திருப் பவளத்திலே வெண்ணெய் மணம்/
திரு வுதரத்திலே கட்டுண்டு இருந்த தழும்பு / திருவடிகளில் நவநீத நாட்யம் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையை நேரிலே சேவித்து அனுபவிக்கலாம் நாமும் இன்றும் –
——————————-
20–புராணங்களில் வெண்ணெய் களவு
ஸ்வல்பே நைவது காலேந ரங்கிநவ் தவ் ததா வ்ரஜேது க்ருஷ்டஜா நு கரௌ விப்ர பபூவது ருபாவபி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6- 10–
இரு பாலகர்களும் தவழ்ந்தனர் –
கரீஷ் பஸ்மை திக்தாங்கவ் ப்ரமமாணா விதஸ்தத ந நிவாரயிதும் ஸேஹே யசோதா தவ் ந ரோஹிணீ-11-
கோமயம் சாம்பல் பூசிக் கொண்டு திரிந்தனர் -யசோதையும் ரோகிணியும் தடுக்க அசக்தர்கள் ஆனார்கள் –
கோவாட மத்யே க்ரீடந்தவ வத்சவாடம் கதவ் புன தத ஹர்ஜாத கோ வத்ஸ புச்சா கர்ஷண தத் பரவ -12–
தொழுவம் சென்று அன்று ஈன்ற கன்றின் வாலை இழுத்தனர் –
யாதா யசோதா தவ் பாலா வேகஸ்தா நசாராவுபவ் -சஸாக நோ வாரயிதும் க்ரீடந்தாவதி சஞ்சலவ் -13-
இரண்டு தீம்பர்களையும் தடுப்பதற்கு யசோதை சக்தி யற்றவள் ஆனாள்
தாம் நா சைவ உதரே பத்தவா ப்ரத்ய பத்தநாது லூகலே -கிருஷ்ணம் அக்லிஷ்ட கர்மாணமாஹ சேதமமர்ஷிதா-14-
தாம்பினால் உரலோடு சேர்த்தி கட்டினாள்
யதி சக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டிதா -இதயுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -14-
சக்தி இருந்தால் இப்போது செல் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு தன் கார்யங்களை செய்யத் தொடங்கினாள்
வெண்ணெய் களவு பற்றி சொல்லாமல் உரலோடு கட்டியதை மட்டும் சொல்லும் ஸ்ரீ விஷ்ணு புராணம் –

தாம் ஸ்தன்யகாம ஆ ஸாத்ய மத்நந்தீம் ஜநநீம் ஹரி -க்ருஹீத்வா ததி மந்த்தானம் ந்யஷேதத் ப்ரீதிமா வஹன்–ஸ்ரீ மத் பாகவதம் -10- 9–4-
முலைப்பால் உண்ண விரும்பி மத்தைப் பிடித்துத் தயிர் கடைய ஒட்டாமல் தடுத்தான் –
தமங்கமா ரூடமபாயயத் ஸ்தனம் ஸ்நேஹஸ் நுதம் சமிதமீ ஷிதீ முகம் –அத்ரூப்தமுத் ஸ்ருஜ்ய ஜவேன சா யயாவுத் சிஸ்யமா நே பவசி தவதிஸ்ரிதே-5-
முலைப்பால் கொடுத்தாள்-அப்பொழுது காய்ச்ச அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிய சடக்கென எழுந்தாள் யசோதை –
சஞ்சாத கோப ஸ்புரிதா ருணாதரம் சந்தஸ்ய தத்பிர்ததி மந்த்த பாஜநம் -பித்வா ம்ருஷாச்ருர்த்ருஷ தச்மநா ரஹோ ஜகாச ஹையங்கவ மந்த்ரங்கத -6-
அதனால் கோபித்து கல் குழவியால் தயிர் கடைந்த பாத்திரத்தை உடைத்து வீட்டினுள்ளே சென்று வெண்ணெயை எடுத்து ஏகாந்தமாக உண்ணத் தலைப்பட்டான்
உத்தார்ய கோபீ ஸூஸ்ருதம் பய புன ப்ரவிஷ்ய சந்த்ருஸ்ய ச தத்ய மத்ரகம் -பக்நம் விலோக்ய ஸ்வஸூ தஸ்ய கர்ம தஜ்ஜஹாஸ தஞ்சாபி ந தத்ர பச்யதி -7-
காய்ந்த பாலை இறக்கி வைத்து வந்த யசோதை தயிர் பாத்திரம் உடைந்து இருக்க கண்டால் -கண்ணனே செய்த கார்யம் என்று சிரித்தாள் –
ஆனாள் அங்கு கண்ணனை காணவில்லை
உலூக லாங்க்ரே ருபரி வ்யவஸ்த்திதம் மர்காய காமம் தததம் சுசிஸ்மிதம் –ஹையங்கம் ஸுர்யவி சங்கிதே க்ஷணம் நிரீஷ்ய பச்சாத் ஸூதமாக மச்சனை -8-
உரலில் மீது அமர்ந்து வெண்ணெயை குரங்குக்கு கொடுத்து திருட்டு தானம் தோன்ற கள்ள விழி விழிக்கும் கண்ணனை கண்டு மெல்ல பின்புறமாக சென்றாள்-
தாமாத்த யஷ்டிம் ப்ரஸமீஷ்ய ஸத்வரஸ் ஸ்தாதோ வருஹ்யாபச சாரா பீதவத் — கோப்யன்வதா வன்ன யமாப யோகி நாம் ஷமம் பிரவேஷ்டும் தபேசரிதம் மன-9-
கையில் கோலுடன் வந்த யசோதை கண்ட பயந்து ஓட -ரிஷிகள் மனம் அணுக முடியாமல் மயங்கும் -அந்த கண்ணனை துரத்திக் கொண்டு ஓடினாள் –
அந்வஞ்சமாநா ஜனனி ப்ருஹச்சலச் சுரோணி பராக்ராந்த கதிஸ் ஸூ மத்யமா -ஜவேன விஸ்ரம்சித கேச பந்த நச்யுத ப்ரஸூநாநுகதி பராம்ருசத் -10-
தலையில் சூடிய புஷபங்கள் அவிழ்ந்து தரையில் விழும் படி வேகமாக ஓடி அவனை பிடித்தாள்-
க்ருதா கசம் தம் ப்ரருந்தமஷிணி கஷந்தமஞ்சன் மஷிணீ ஸ்வ பாணிநா -உத்வீஷமாணம் பயவிஹ்வலே க்ஷணம் ஹஸ்தே க்ருஹீத்வா பிஷ யந்த்ய வாகுரத் -11-
மை கலைந்த கண்களை கசக்கி -அஞ்சி உள்ள கண்ணனை கைகளில் பிடித்து பயமுறுத்தி அடிப்பது போல் கையை ஓங்கினாள்
த்யக்த்வா யஷ்டிம் ஸூதம் பீதம் விஞ்ஞாயார் பகவத் சலா-இயேஷகில தம் பத்த்தும் தாம்நா தத் வீர்ய கோவிதா -12-
கண்ணன் பயந்து இருப்பதை அறிந்து கோலை எறிந்து விட்டு அவனை கயிற்றால் கட்ட எண்ணினாள்-
ந சாந்தர் ந பஹிர் யஸ்ய ந பூர்வம் நாபி சா பரம் -பூர்வாபரம் பஹிச் சாந்தர் ஜகதோ யோ ஜகச்ச ய-13-
தம்மத்வா ஆத்மஜ மவ்யக்தம் மர்த்ய லிங்கமதோஷஜம் -கோபி கோலூகலே தாம் நா ப பந்த ப்ராக்ருதம்யதா -14-
அந்த பராத்பரனை அன்றோ தனது மகனாக நினைத்து கயிற்றினால் உரலோடு கட்டத் தொடங்கினாள்
தத்தாம பத்யமா நஸ்ய ஸ்வார்ப கஸ்ய க்ருதாகச –த்யங்குலோ நம பூத்தேன சந்ததேன் யச்ச கோபிகா -15-
இரண்டு விறல் கிடை நீளம் குறைவாக இருக்க மற்றொரு கயிற்றைக் கொணர்ந்து அத்துடன் சேர்த்தாள்
யதாஸீத் ததாபி ந்யூனம் தே நான்யதபி சந்ததே-ததபி த்யங்குலம் ந்யூனம் யத்யதா தத்த பந்தனம் -16-
இப்படி எத்தனை கயிறுகள் கொண்டு வந்து சேர்த்தாலும் நீளம் பொறாமல் இரண்டு விறல் கிடை நீளம் குறைவாகவே இருந்தது
ஏவம் ஸ்வகேஹதாமாநி யசோதா சந்த தத்யபி -கோபிநாம் விஸ்ம யந்தீ நாம் ஸ்மயந்தீ விஸ்மிதா பவத் -17-
இப்படி வீட்டில் உள்ளா கயிறுகளை இணைத்துக் கொண்டே இருக்க -கோபிகள் இதைக் கண்டு ஆச்சர்யாப் பட்டார்கள் -யசோதையும் ஆச்சர்யம் உற்றாள்-
ஸ்வமாதுஸ் ஸ்வின்ன காத்ராயா விஸ்ரஸ்தகபர ஸ்ரஜ -த்ருஷ்ட்வா பரிச்ரமம் க்ருஷ்ண க்ருபயாஸீத் ஸ்வ பந்தநே -18-
சிரமப்படும் தாயைக் கண்டு மனம் இரங்கி தன்னைக் காட்டும்படி அனுகூலனாக இருந்தான் –
வத்ஸான் மூஞ்சந்க்வசித ஸமயே க்ரோசா சஞ்ஜாத ஹாஸ -ஸ்தேயம் ஸ்வாத்வத்ய தததிபய கல்பிதைஸ் தேயயோகை
மர்கான்போஷயன் விபஜதி ச சேந்நாத்தி பாண்டம் பிநத்தி-த்ரவ்யாலாபே ஸ்வ க்ருஹ குபைதோ யாதியுபக் ரோச்ய தோகான் -10–8–29-
கன்றுகளை அவிழ்த்து விடுகிறான் -தயிர் பால் குடிக்கிறான் -வெண்ணெயை குரங்குகளுக்கு பங்கிட்டு கொடுத்து தானும் உண்டு விட்டு
வெறும் பாத்திரங்களை உடைத்து விடுகிறான் -படுக்கையில் உறங்கும் குழந்தைகளை அழப்பண்ணுகிறான்-
ஹஸ்தாக்ராஹ்யே ரஸயதி விதிம் பீட கோலூ கலாத்யை -சித்ரம் ஹ்யந்திர நிஹி தவயு நச்சிக்ய பாண்டேஷூ தத்வித்
த்வாந்தாகாரே த்ருத மணி கணம் ஸ்வாங்க மர்த்த ப்ரதீபம் -காலே கோப்யோயர்ஹிக் க்ருஹ ரூத்யேஷூ ஸூ வ்யக்ர சித்தா -30-
உரால் மேலே ஏறி உறியில் உள்ளவற்றை உண்ணுகிறான் -எட்டாத போது கல் வீசி ஓட்டை யாக்கி உள்ளவற்றை உண்ணுகிறான் –
தன் திருமேனி ஒளி கொண்டே இருட்டு அறையில் செல்கிறான் -கோபிகள் வீட்டு வேலை செய்யும் பொழுது பல சேஷ்டைகள் செய்கிறான் –
ஆழ்வார்கள் போன்ற அனுபவம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ மத் பாகவதம் இல்லையே –
————————————-
21–இதிஹாசங்களில் வெண்ணெய் களவு
தத ச பாலோ கோவிந்தோ நவநீதம் ததா ஷயம் -க்ராஸமா நஸ்து தத்ரயம் கோபீ பிர் தத்ருசே ததா —
தாம்நா தோலூகலே கிருஷ்ணோ கோபீ பிச்ச நிபந்தித –சபா பர்வம் -52-57
உரலோடு கட்டியதையே சொல்லும் –/ நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி கங்கை காங்கேயன் உத்பத்திகளை பேசி
எச்சில் வாய் பட்டு -பரிசுத்தம் ஆக்க ஹரி வம்சம் –
அசத் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் –வாசம் ஸுரி கதா லாப கங்கயைவ புனீ மஹே-
ஹரி வம்சத்தில் உள்ள வெண்ணெய் களவு விருத்தாந்தம் –
அதி ப்ரஸக்தவ் க்ரீடாயாம் க்ருஷ்ண சங்கர்ஷணவ் முஹு க்வசித் வேஸ்மதி நிர் கத்ய நவநீதம்ச க்ருஹணத–
வேறு க்ருஹத்தில் இருந்து வெண்ணெய் கொண்டு வந்த கிருஷ்ணன் பலராமன்
சமஷோப்ய தக்ரம் பஹுசோ தாரகவ் தாரகைஸ் ச ஹ -அன்வ பூதாம் ததோ ராஜன் கடாம்ச்ச பரி ஜக்னது
மோர் குடத்தை உடைத்தது
ததி பீதவாது தேவேசவ் தான்கடாம்ச்ச பிபேஷது சிக் யஞ்ச பரி ஜக்ராஹ கிருஷ்ணோ தாரக வேஷவான்
உறியில் வைத்த தயிரைக் குடித்தது –
ஹ்ருத்வா சித்வாச கோவிந்த பபவ் ஷீராணி ஸர்வஸ -தச்சிஷ்டம் சைவ தேவேச ஷீதவ் ச சமவாஷிபத் —
பாலை எல்லாம் குடித்து மீதி உள்ளவற்றை தரையில் கொட்டி விட்டான் கோவிந்தன்
பாயசம் ச சமாநீய க்ருஹாதன்யத்ர விஷிபன்–தாராகேப்யஸ் ததா கிருஷ்ணோ ததவ் கிருஷ்ணோ ததவ் ஸ்வம் சமாசரன்-
இன்னும் ஒரு வீட்டில் இருந்து பாயாசம் எடுத்து வந்து தோழர்களுக்கு கொடுத்தான் கண்ணன்
சிக்யாச்ச கடமாதாய ததனாம் தாரக சத்தம –நிர்பித்யாச்சித்ய பூமவ்து நிஷ்பிபேஷ ச கேசவ –
மோர் பாடையை எடுத்து தூர எறிந்தான்
கேசித் வேசமதி நிர்கத்ய சீக்ய ஸ்த் தான் பயசோகடான் -ஆதாய யுகபத் சேர்வான் பய பித்வா முதா ப்ருசம் -அபிஹத்ய தத சேர்வான் நிஷ்பிபேஷ் ஹசன்ஹவி –
ஒரு வீட்டில் புகுந்து எல்லா பாலையும் பர் சமயத்தில் குடித்து மகிழ்ந்தான் –
ஆச்சித்ய சிக்ய மன்யத்ர ததோ தத்நோ கடன் ஷிபன் -யதாகாமம் தத பீத்வா தார கேப்யஸ் ததோ ததவ் —
மற்று ஒரு உறியில் இருந்து தயிர் குடத்தை எடுத்து பருகி தோழர்களுக்கும் கொடுத்தான்
அத வேகான் முத்தா க்ருஷ்ண க்வசி தன்யத்ர வேஸ்மநி -குப்தான் கடாநுபாதாய த்வரிதோத பபஞ்ஜஹ
வேறு வீட்டுக்குள் சென்று குடங்களை எடுத்து உடைத்தான் –
க்வசித் க்ருத கடன் பூர்ணான் பஹு நாதாய வேஸ்மநி -வ்யபஜத் தார கேப்யஸ்து பக்ஷயன் ஸ்வ்யமாபபவ் –
வேறு ஒரு வீட்டில் நெய் குடங்களை எடுத்து வந்து தோழர்கள் உடன் தானும் உண்டான்
அந்யதோ வேஸ்மன சிக்கியாத் கடாம்ஸ் தக் ரஸ்ய பூரகான்–ஆதாயதூய பஹுதா தஸ்மிந் நீவா முஹு ஷிபன் -வ்யஹஸத்விவிதம் ஹாசன் நநர்த ச ச தாரக –
வேறு ஒரு வீட்டில் மோர் குடத்தை போட்டு உடைத்து சிரித்து நாட்டியம் ஆடினான்
தக்ரேஷூ பய ஷிப்ய தகரம்ச பயசி ஷிபன் -பயோ ஜலிஷூ சம்யோஜ்ய க்ருதமக்ளவ் ஜுஹாவச –
மோரில் பாலக் கொட்டியும் பாலில் மோரைக் கொட்டியும் -பாலில் நீரைக் கொட்டியும் நெய்யை நெருப்பில் கொட்டியும் விளையாடினான் –
ஏவமத்யந்ததோ கோப்யோ விநேதுர் விஸ்வரம் ப்ருசம்–கா கதிர் வத பத்ரேதி கோப்யஸ் சர்வாஸ் ததா ப்ருவன் —
கோபிகள் இன்னல்கள் அடைந்து யசோதையிடம் முறையிட்டார்கள்
அத தாப் யோ யதா நஷ்டம் யசோதா தத்த வத்சலம்-சமாச் வாஸ்ய தத சர்வா ஸ்வம் ஸ்வம் வேசம வ்யகாலயத் –
அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து திருப்தி செய்து தாமதம் இல்லம் செல்லும் படி செய்தால் யசோதை
ததோ யசோதா சம்க்ருதா கிருஷ்ணம் கமல லோசனம் –உவாச சிசு ரூபேண சாரந்தம் ஜகாத்தை ப்ரபும்
கோபம் கொண்டு தாமரைக் கண்ணனை நோக்கி யசோதை கூறினாள்
ஏஹி வத்ஸ பிப ஸ்தன்யம் துர்வோடும் மம ஸம்ப்ரதி –தாம் நாசைவ உதரே பத்தவா ப்ரத்ய பத்நாது லூகலே -யதி சக்நோஷி கச்சேதி தமுக்த்வா கர்ம சா கரோத்-
வயிற்றில் கயிற்றைக் கொண்டு கட்டி உரலோடு சேர்த்து நன்றாகக் கட்டி முடிந்தால் போ பார்க்கலாம் -என்று சொல்லி தன் கார்யங்களைச் செய்யத் தொடங்கினாள் –
ஆழ்வார்களை போலே எந்த ரிஷிகளுக்கும் காட்டி அருள வில்லையே –
————————
22–இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது–
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –எல்லாம் -என்னா நிற்க -ஒழியாமல் -என்றது
-வ்யாஸ வால்மீகிகளுக்கு பிரகாசியாதவையும் இவர்க்கு பிரகாசிகையாலே —
பிரகாசியாமைக்கு அடி சத்வ தாரதம்யம் -அதுக்கடி பிரசாத தாரதம்யம் -கர்ம வஸ்யருமாய் அசுத்த ஷேத்ரஞ்ஞருமான ப்ரஹ்மாதிகளுடைய பிரசாதம் இறே ரிஷிகளுக்கு
இவர்க்கு திருமாலால் -திரு மா மக்களால் –பீதாக வாடைப் பிரானாருடைய பிரசாதத்தாலே இ றே —
ரிஷிகளுக்கு போலே புண்யம் என்று ஒரு கையாலே புதைத்து விடுகிற ஞானம் இல்லாமையால் இவர்க்கு முற்றூட்டாக்கிக் கொடுக்கும் இ றே
சகல அர்த்தங்களும் பகவத் ப்ரேமம் உடையார்க்கு இ றே பிரகாசிப்பது –
பொய்கையாழ்வார் -விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -என்றும் –
பேயாழ்வார் -மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றோடு ஆற்றா மகான் -என்றும் –
திருமழிசை ஆழ்வார் -ஆய்ச்சி பாலையுண்டு வெண்ணெய் யுண்டு மண்ணை யுண்டு -என்றும்
நம்மாழ்வார் -மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்பூண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டு அழுத கூத்த வப்பன் -என்றும்
மதுரகவி யாழ்வார்-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பேறு மாயன் -என்றும்
குலசேகர ஆழ்வார் -முழுதும் வெண்ணெய் யளைந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் எழில் கோள் தாம்பு கொண்டு
அடிப்பதற்கு எள்கு நிலையும் -வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -என்றும் –
பெரியாழ்வார் -பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு
ஆர விழுங்கிய அத்தன் -என்றும் -மிடறு மெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கிப் போய் -என்றும்
ஆண்டாள் -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -என்றும்
திருப் பாண் ஆழ்வார் –கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்றும் –
திருமங்கை ஆழ்வார் -உறி யாரந்த நறு வெண்ணெய் ஒலியால் சென்று அங்குண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு
ஆர்க்கத் தறி யாரந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -என்றும்
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் –ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -என்றும்
அனுபவித்தது போலவோ -ஆழம் கால் பட்ட -நம்மாழ்வாரும்
துஞ்சா முனிவரும் இல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவியிடர் கடிவான் இமையோர் தமக்கும்
தஞ்சார் விலாத தனிப் பேரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரித்தால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே –திருவிருத்தம் -98-
சர்வேஸ்வரனாய் ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய் அவாப்த ஸமஸ்த காமநோய் இருக்கிறவன் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே
தனக்குத் தாரகமாய் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி அது தான் தலைக் கட்டப் பெறாதே -வயது கையதாக
அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு பிரதிகிரியை அற்று உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ -நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வாவே –என்பதற்கு ஏற்ப சிறிது பேசிக் களித்தோம் –

——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ கண்ணன் -பெயர் விளக்கம் -ஸ்ரீ வில்லிபுத்தூர் விஞ்சி மூர் ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் /

April 7, 2017

1 -கண்ணன் –கண்ணாக இருப்பவன் –
கண்ணாவான் என்றும் மன்னார் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதி வாய்ச செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற மாதரார் கண்களூடே வாவுமான தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே
உறுப் பொருள் உணர்த்தி விட்டான் –ராமனே கண்ணன் என்னும் பொருளில் கம்பர்
2 – கண்ணே -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப் படும் விஷயமும் அவனே –
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –
3-கண்ணா -நிர்வாஹகன் -கணவன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
களை கண் -மற்றிலேன் -மணியை வானவர் கண்ணனை –எண்ணிலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண் அலால் ஓர் கண்ணிலேன் –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் -உலகத்துயிர் தேவர்கட்டு எல்லாம்
4-கண்ணன் எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாரையும் சீர்மைத்தே
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணன்
5-கண்ணன் -கண் அழகன் –
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் –
தண் பெரு நீர்த்தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் / தகும் கோலத்தாமரைக்கு கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / அணி கொள் செந்தாமரைக் கண்ணன் / தாமரைக்கு கண்ணினன் / கமலத் தடம் பெரும் கண்ணினன் / செய்ய கண்ணினன்
5–கண் -கண்ணோட்டம் -கடாக்ஷம் -இரக்கம் -கருணை -அனுக்ரஹம் -கண்ணோட்டம் அதிகாரம் -திருக் குறளில் -தன்னோடு பயின்றாரைக் கண்டால்
அவர் கூறியன மறுக்க மாட்டாமை -இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாதலின் அப்பெயர் யாயிற்று -பரி மேல் அழகர் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண-ஆபத் சகத்வாதி குண பெரிதமான விசேஷ கடாக்ஷத்தை பண்ணினவன் -வியாக்யானம்
கார்த்தன் கமலக் கண் -நாச் திரு –அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தை பண்ணுமது யாய்த்து திருக் கண்கள் –
6–கண்ணன் –கையாளன்–ஸுசீல்யம் உரு எடுத்த எளியவன் –
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்கு கையாளாகத் தருமவனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை -சர்வேஸ்வரனாய் இருந்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளானவன்
கரிய மேனியன் கண்ணன் –விண்ணோர் இறை –ஆஸ்ரிதற்குக் கையாளாய் உள்ளவன்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —விரஹ வியசனம் தீர்க்கும் ஆச்ரித ஸூ லபன்
8–கண்ணன் -கரிய மேனியன் –
கார் முகில் போலே வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போலே என் அம்மான் கண்ணன்
காரார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்துகே கண்ணபிரானை
காரார்ந்த திரு மேனிக் கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
9–கண்ணன் –களிக்கச் செய்பவன் -ஆனந்திப்பிக்கிறவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை –ஆனந்தாவாஹனனைப் பற்றின எனக்குத் துக்கம் இல்லை
9–கண்ணன் –ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -மாயன் என்னும் பொருளில்
மலியும் சுடர் ஓளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் / கண்ணனை மாயன் தன்னை / கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் –
-எத்திறம் என்னும் படியான குண சேஷ்டிதங்களை யுடையவன் –
10–கண்ணன் -அறிவு அளிப்பவன்
உள்ளொற்றி உள்ளூர் நகப்பருவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண் சாய்பவர் -கண் சாய்பவர்–அறிவு தளர்வார் –
விண்ணருள வந்ததொரு மெல்லமுதம் அன்ன வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
தண் அருளி ஏழ்மை துடைத்து எழு மெய் ஞானக் கண்ணருள் செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் —
ஞானக் கண்ணருள் செய் கண்ணன் –இராம பிரானை கம்பர் -மயர்வற மதி நலம் அருளுபவர் கண்ணன்
இப்படி பல பொருள்கள் உண்டே –

—————————————————-

ஸூகுமாரவ் / மஹா பலவ்–பாழி அம் தோள்-வன்மையும் மென்மையும் உண்டே / சீறி அருளாதே -சீற்றமும் அருளும் உண்டே -/ கதிர் மதியம் போல் முகத்தான் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ / ஆழி யம் கையனே அச்சோ அச்சோ / பரத்வ ஸுலப்யம் -கலந்தவன் அன்றோ –
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண கணன்-சேராச் சேர்த்தி உண்டே –

—————————————————–

சாதாரண -வருஷம் -மா முனிகள் திரு அவதாரத்தால் அசாதாரணம் ஆனதே -தாரணா -எல்லை மீறாமை –
மர்க்கட கிசோர நியாயம்–குரங்கு குரங்குக் குட்டி சுவகத சுவீகாரம் -/ மார்ஜார கிசோர நியாயம் -பூனை பூனைக் குட்டி–பர கத சுவீகாரம்
ப்ரஜாபதிம் த்வோ வேத ப்ரஜாபதிஸ் த்வம் வேதயம் ப்ரஜாபதிர் வேதச புண்யோ பவதி-
யஸ்ய ராமம் ந பஸ்யேத்து யஸ்ய ராமம் ந பஸ்யதி–நிந்தித ச வஸேல் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே
அயம் ஆத்மா –பரமாத்மாவான அழகிய மணவாளன் -/ ப்ரவச நேந மேதயா பஹு நா ஸ்ருதேன–கேவல ஸ்ரவண மனன நிதித்யாஸங்களால்
ந லப்ய–அடைய முடியாதவர் / யம் ஏவ -எந்த ஜீவனை /ஏஷ-இப்பரமாத்மா
வ்ருணுதே–மா முனியை ஆச்சார்யனாகவும் / குகன் அர்ஜுனன் போன்றறோரை தம்பி நண்பன் சஹா என்றும் /
நந்தன் வஸூதேவன் போன்றோரை தந்தையாகவும்
யசோதை தேவகி -தாயாகவும் -அக்ரூரர் மாலாகாராதிகளை வருத்தும் -ஆழ்வார்களாதிகளை எல்லாமாகவும் வரிக்கிறானோ
தேனை -அந்த ஜீவனாலேயே / லப்ய -அடையத் தக்கவனாய் ஆகிறான் / ஏஷ –இவ்வழகிய மணவாளன்
தஸ்ய ஏவ -தன் நிர்ஹேதுக கடாக்ஷத்துக்கு இலக்கான அவனுக்கே
ஸ்வாம் தநூம்-தன் அசாதாரண ஸ்வரூபத்தை -சிஷ்யன் நண்பன் பிள்ளை கணவன் எஜமான் எல்லாமுமாக இருக்கும் தன்மையை
விவ்ருணுதே-பிரகாசிக்கிப்பிக்கிறான் –நாயமாத்மா ஸ்ருதியின் பொருளும் இதுவே –பரம வைதிக சித்தாந்தம் –

ஆச்சார்ய தேவோ பவ –தேவமிவ ஆச்சார்யம் உபாஸீத / என்னை ஒழிய எண்ணில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றம் பருகினான்
மம நாத யதஸ்தி யோஸ்ம் யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ –நிகில ஸ்வ மிதி பிரபுத்ததீ அதவா கின்னு ஸமர்ப்பயாமி -தே –ஆளவந்தார்
ஆட் கொள்வான் ஒத்து என்னுயிர் உண்ட மாயன் –
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ வில்லிபுத்தூர் விஞ்சி மூர் ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளிய -ஆழ்வார்கள் புகழ்ந்த ஸ்ரீ கண்ணன் –

April 7, 2017

திருப்பல்லாண்டு –
1–மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -1-
2–மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் -7-
3–திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந் நாகத் தலை பாய்ந்தவன் -10-

———————————————

பெரியாழ்வார் திருமொழி –
4–வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்க் கண்ணன் -1-1-1-
5–சீருடைப் பிள்ளை திருவோணத்தான் -1–1–3-
6–ஆயர் புத்திரன் அல்ல யரும் தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் -1–1–7-
7–மத்த மா மலை தாங்கிய மைந்தன் –1–1–8-
8–கோதைக் குழலாள் யசோதைக்கு போத்தந்த பேதைக்கு குழவி-1–2–1 —
9—பணைத் தோள் இள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த பிள்ளை -1–2–3-
10—உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண இழந்தாள் எரிவினால ஈர்த்து எழில் மதத்தின் பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான் -1–2–4-
11—பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த பிள்ளை -1- 2-5-
12–மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய வச்சுதன்–1–2–6-
13—இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை பருங்கி பறித்துக் கொண்டு ஓடும் பரமன் -1–2–7-
14—வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போலே தானே விளையாடும் நந்தன் மதலை-1–2–8-
15—பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இருத்த பிள்ளை -1–2–10-
16–நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடிப் போய் வாள் கொள் வளை எயிற்று ஆர் உயிர் வவ்வினான் -1-2-11-
17—மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை -1-2-12-
18–வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்கின்ற கோவலக் குட்டன் -1–2–13-
19–நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டும் நம்பி -1–2–15-
20–வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்தவன் -1–2–16-
21–திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஓளி மணி வண்ணன் -1–2–17-
22–மண்ணும் மலையும் கடலும் உலகு எழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளை -1–2–18-
23—முற்றிலும் தூதையும் முன் கை மேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரி தருவோர்களைப் பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் -1–2–19-
24–அழகிய பைம் பொன்னின் மேல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் -1–2–20-
25–வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணன் -1–3–10-
26–தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்க தவழ்ந்து போய்ப் பொன் முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி அளைந்தவன்-1-4-1-
27–தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான்–1–4–9-
28–மைத்தடம் கண்ணி யசோதை தன் மகன் -1–4–10-
29—மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லோடு கார் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவன் -1–5–2-
30–வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவன் -1–5–4-
31–கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிறக் கன்று -1–5–4-
32–தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லுமானை -1–5–4-
33–மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த
விணை மருத முன்னிய வந்தவரை ஊரு கரத்தினோடு முந்திய வெந்திறலோன்-1–5–5-
34–கானக மா மடுவில் காளி
35–துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவன் —
36—ஆய மறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரமின்றி யழித்து ஆடிய தாளிணையான் -1–5–7-
37—நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதன் -1–5–7-
38–தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதி புகத் தனி ஒரு தேர் கடவித் தாயொடு கூட்டிய யப்பன்
39–சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பற்றிக் கன்று -1–6–5-
40—-மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்தவன் -1-6-6-
41–புகழ்ப் பல தேவன் என்னும் தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் -1–7–5-
42—மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவி யுருவின் தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் -1–7–8-
43–பஞ்சமர் தூதனாய்ப் பாரதம் கை செய்தவன் —
44—நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன் -1–8–3-
45–நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி யவளும் திரு உடம்பில் பூச ஊறிய கூனினை யுள்ளே ஒடுங்க ஏற உருவினான் -1–8–4-
46–கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழல் உற்று மீண்டே இருந்துன்னை நோக்கும் சுழலை பெரிதுடைச் துச்சோதனனை அழல விழித்தான் -1–8–5-
47–பூமிப் பொறை தீர்ப்பான் தேர் ஓக்க ஊர்ந்தான் கார் ஒக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணன் -1–8–6-
48–தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் -1–9–4-
49—பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய வத்தன் -1–9–7-
50–மூத்தவை காண முது மணல் குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழல் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த நின்ற வெம்பிரான்-1-9-8-
51–கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் -1–9–9-
52—மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேய் ஊதி பொய்ச் சூதில் தோற்ற பொறை யுடை மன்னார்க்காய்ப் பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த வத்தூதன்–2–1–2-
53—மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழியப் பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன் நின்றான் -2–1–2-
54–காயு நீர் புக்குக் கடம்பு ஏறிக் காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற வாயன் -2–1–3-
55–இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப் புரட்டியவன் –
56–அந்நாள் ஆய்ச்சியர் பூம் பட்டுக் கொண்ட வரட்டன்-2-1-4-
57–நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க வாப்புண்டான் -2–1–5-
58–துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய வப்பன்-2–1–5-
59—யசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபால கோளரி யத்தன் -2–1–7-
60–கஞ்சனை வஞ்சனையால் வலைப் படுத்தினான் -2-2-3-
61—இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரி செய்தான் -2-2-8-
62–பேய்ப்பால் முலை யுண்ட பித்தன் -2–2–1-
63–மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிறை மேய்த்தான் -2–3–7-
64—ஏர் விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசன் -2–3–10-
65—சகடம் உதைத்திட்ட பற்ப நாபன் -2–3–11-
66–முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரன் -2- 3–12-
67—கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரான் -2-4-4-
68–எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழை கண்டு செய்யும் பிரான் -2–4–5-
69—கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்து கொண்டாடினான் -2–4–7-
70—-பேயின் முலை யுண்ட பிள்ளை மாயச் சகடும் மருதும் இறுத்தவன்-2–5–2-
71—திண்ணக் கலத்துத் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமான் -2–5-3-
72—பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு பொதுக்கோ வாய் கீண்டிட்ட பிள்ளை -2–5–4-
73—கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் -2–5–5-
74—கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை அழிப்பான் நினைந்திட்டு அவ்வாழி யதனால் விழிக்கும் அளவில் வேறு அறுத்தான் -2–5–6-
75—வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏந்தித் தாவிக் கொழுந்தைத் தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டுக் காலிப் பின் போவான் -2- -6–1-
76—-கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடிச் சிறுக் கன்று மேய்ப்பான் -2-6-3-
77—ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் பாரதம் கை எறிந்தான் -2–6–4-
78—பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை ஊர்ந்தான்
79—பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள் செய்த கோலப் பிரான் -2–6–6-
80—-தேனில் இனிய பிரான் –2–7–1-
81—மச்சோடு மாளிகை ஏறி மாதர்கள் தம் மிடம் புக்குக் கச்சோடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வான் -2–7–3-
82—புள்ளினை வாய் பிளந்திட்டான் பொரு கரியின் கொம்பு ஓசித்தான்–2–7–5-
83—கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தான் தெருவின் கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன் -2–7–6-
84—குடங்கள் எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல வெங்கோ மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தன் -2–7–7-
85—சீமாலி கணவனோடு தோழமை கொள்ளவும் வல்லான் சாமாறவனை எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டான் -2–7–8-
87–கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளையரசு -2–8–7-
88—கஞ்சன் கறுக் கொண்டு வஞ்சிப்பதற்கு விடுத்த கரு நிறச் செம்மயிர்ப் பேயைப் பிடித்து முலை யுண்ட பரமன் -2-8-6-/-2–8–7-
89–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதனோசை கேட்க்கும் கண்ண பிரான் -2–9–1-
90—வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி யகம் புக்கு மாற்றமும் தாரான் -2–10–1-
91—வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண்டோய் மரத்தான் –2–10–2-
92—-தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப் படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்தான் -2–10–3-
93—தேனுகனாவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்டு தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆநிரை காத்தான் –2–10–4-
94—-ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடம் தோளினார்
வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான் –2–10–5-
95—தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தின் உள்ளே அவளை யுற நோக்கிக்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் -2-10–6-
96—-தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் பொன்னேய் நெய்யோடு பாலமுது உண்டு ஒரு புள்ளுவன்
பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரான் -3–1–1-
97—வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து மின் போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த அன்பன் -3-1–2-
98—-கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்தான் –3- 1-3-
99—மையார் கண் மடவாய்ச்சியர் மக்களை மையின்மை செய்து அவர் பின் போய்க் கொய்யார்
பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தான் -3–1–4-
100—முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கிக் கப்பாலாயர்கள் காவில் கொணர்ந்த கலத்தோடு
சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல் விம்மி விம்மி அழுகின்ற வப்பன்-3–1–5-
101—கரும்பார் நீள் வயல் காய்க் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பா கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரான் -3-1-6-
102 —-சுரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ் வலை வைத்து திரியுமரம்பன் –3–1–6-
103—சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து சுற்றும் தோழா நின்ற சோதி -3–1–7-
104—பிறர் மக்களை மையம்மை செய்து தோளால் இட்டவரோடு திழைத்துச் சொல்லப் படாதன செய்தான் -3-1–8-
105—காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் மாயன் -3–1–9-
106—தொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தான் -3–1–10-
107—அஞ்சன வண்ணன் ஆயர் கோலக் கொழுந்து -3–2–1-
108—பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரிவான் -3–2–2-
109–நன் மணி மேகலை நான்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதியாடித் திரிவான் -3–2–3-
110—வண்ணக் கருங்குழல் மாதர் வந்தலர் தூற்றிடப் பண்ணிப் பல செய்து ஆய்ப்பாடி எங்கும் திரிவான் -3–2–4-
111–அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்து கூழமை செய்வான் -3–2–5-
112—மிடறு மேலு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் படிறு பல செய்து ஆய்ப்பாடி எங்கும் திரிவான் -3–2–6-
113—வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிடத் துள்ளி விளையாடித் தோழரோடு திரிவான் -3–2–7-
114—பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால் யசோதை அமுதூட்டி எடுத்த இளம் சிங்கம் -3–2–8-
115—குடையும் செருப்பும் கொடாதே கடிய வெங்கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் போக்கிய பிள்ளை –3–2–9-
116—-பேடை மயில் சாயல் பின்னை மணாளன் –3–3–3-
117—பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறு –3–3–5-
118—பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கினான் -3–3–6-
119—கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள வசுரன் தன்னைச் சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தான் -3–3–7-
120—கோவலர் இந்த்ரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டான் -3–3–8-
121—அட்டுக் கவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத் துற்றி மாரிப் புகை புணர்த்த பொருமா கடல் வண்ணன் -3–5–1-
122—செப்பாடுடைய திருமாலவன் –3–5–6-
123—தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தடவரை தங்கு தாமோதரன் -3–5–7-
124—-வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் -3-5 -9-
125—-வான் இள வைரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர் கோன் இள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் -3-6-3-
126—தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க வுழக்கிக் கானகம் படி யுலாவி யுலாவிக் குழலூதின கரும் சிறுக்கன் -3–6-4-
127—செம் பெரும் தடம் கண்ணன் திரல் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் -3–6–6-
128—அருங்கல வுருவினாயர் பெருமான் –3–6–10-
129—மல்லரை யட்டவன்–3–8–1-
130—சாடு இறப் பாய்ந்த பெருமான் –3–8–6-
132—என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ வீயாதாள் தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் –3-9 -1-
133—உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையை சிரைத்திட்டான் -3-9-3-
134—-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன் -3- 9–5-
135—காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் -3–9–7-
136—மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு -3- 9-9-
137—கொலை யானைக் கொம்பு பறித்தான் –4-1-3-
138—-ஆயர் மட மகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றான் -4-1-4-
139—வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்தான் -4-1-5-
140 —-பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லான் பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு
பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்தே இருந்தான் -4-1-6-
141—-வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்தான் -4-1-7-
142—நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் -4–1–8-
143—ஆனாயர் கூடி யமைத்த விழவை அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் –4- 2-4-
144—-கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் -4–2–5-
145—-ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் –4–2–6-
146—-மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன்–4–2–7-
147—–எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் -4–2–10-
148—-உருப்பிணி நங்கை தன்னை மீட்ப்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட வுறைப்பன்–4–3–1-
149—கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் –4–3–2-
150—–மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் –4–3–3-
151—-மா வலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டு அழித்த தனிக் காளை—4—3–4-
152—பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் –4- 3 –5-
153—-பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் —4–3–6-
154—-குருந்தம் ஓன்று ஓசித்தான் –4–4–7-
155—-சாடு இறப் பாய்ந்த தலைவன் –தாமோதரன் –4–6–6-
156—-கண்ணனுக்கு இனிய கரு முகில் வண்ணன் –4—6–7-
157—-செம் பெரும் தாமரைக் கண்ணன் –4–6–8-
158—-தலைப்பு பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் –4- 7–6-
159—-வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி மல் பொருது எழப் பாய்ந்த யரையனை யுதைத்த மால் –4—7–7-
160 —-திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை அருளும் அரி –4–7–8-
161—மாத்வத் தோன் புத்திரன் போய் மறி கடல் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தான் –4–8–1-
162—பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறைப்பன்—4–8–2-
163—–மருமகன் தன் சந்ததியை யுயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தான் –4—8–3-
164—-கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் யுடைய விட்டோசை கேட்டான் –4- 9–3-
165—பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் –4–9–5-
166—-மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட வுயிராளன் –4–9–6-
167—-குன்று எடுத்து ஆ நிரை காத்த வாயன் கோ நிரை மேய்த்தவன் –4–10–9-
168—-கொடுமைக் கஞ்சனைக் கொன்று தன் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தான் -5–1–4-
169—-குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தான் –5–1–4-
170—–வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவன் களிறு அட்ட பிரான் –5–1–9-
171—-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றான் -5- 2-1-
172—தூது சென்றான் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தான் -5–3–5-
173—-மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தான் -5–3–9-
174—-சென்று அங்கு வாணனை யாயிரம் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றான் -5- 3-10-
175—மருப்பு ஓசித்தான் மல் அடர்த்தான் –5-4–7-
176—வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் கொளும் குளிர் முகில் வண்ணன் ஆயர் ஏறு -5–4–11-

————————————

திருப்பாவை
177—கூர் வெல் கொடும் தொழிலான நந்தகோபன் குமரன் -ஏரார்ந்த கண்ணி -யசோதை இளம் சிங்கம் -கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் -1-
178—மாயன் -மன்னு வடமதுரை மைந்தன் -தூய பெரு நீர் யேமுனைத் துறைவன் -ஆயர் குலத்தினில் தோன்றும்
அணி விளக்கு –தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -5-
179—-பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து -6-
180—-மாவாய் பிளந்தான் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் -8-
181—புள்ளின் வாய் கீண்டான் -13-
182—-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் -பங்கயக் கண்ணான் -14-
183—-வல்லானை கொன்றான் மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் மாயன் -15-
184—குத்து விளக்கு ஏறிய கோட்டுக் கால் காட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மேல் ஏறிக் கொத்தலர்
பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் -19-
185—வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகன் -21-
186—பொன்றச் சகடம் உதைத்தான் -கன்று குணிலா எறிந்தான் -குன்று குடையா எடுத்தான் -24-
187—ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான்
தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமால் -25-
188—கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் -27-
189—குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் -28-
190—பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவன் -29-

—————————–

நாச்சியார் திருமொழி –
191—-ஓர் கரி அலர மருப்பினை ஓசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணன் –1– 10-
192—-குதி கொண்டு அரவில் நடித்தான் -3–2–
193—குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல கோ -3–6-
194—கோமள ஆயர் கொழுந்து –3-8-
195—-கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தான் வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலி -3—9-
196—-அணி வாள் நுதல் தேவகி மா மகன் மிகு சீர் வாசுதேவன் தம் கோ மகன் –4–3-
197—-ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தன் -4–4-
198—-ஓடை மா மத யானை யுதைத்தவன் –4–5-
199—மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் –4–6-
200—-அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் –4–7-
201—-ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் –4–8-
202—-அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் -4–10–
203—-மதுரையார் மன்னன் –6–5-
204 —-மருப்பு ஒசித்த மாதவன் -7–1-
205—வட மதுரையார் மன்னன் வாசுதேவன் –7–3-
206—-செங்கண் கருமேனி வாசுதேவன் –7–7-
207—கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப் பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன்
தேசு அழிந்து அண்ணாந்து இருக்கவே அங்கு அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் –11–9-
208—கொந்தளம் ஆக்கிப் பரக்கு அழித்து குறும்பு செய்வானோர் மகன் -12- 3 –
209—நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நாட்டம் பாய்ந்து போர்க் களமாக நிருத்தம் செய்தான் –12-3-
210—-பத்த விலோசனத்து வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்வான் –12-6-
211—கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் பற்றி யுரலிடை ஆப்பும் உண்டான்
காலிகள் உய்ய மழை தடுத்துக் கோவர்த்தனம் கொற்றக் குடையாக ஏந்தி நின்றான் –12-8-
212—-கண்ணன் என்னும் கரும் தெய்வம் –13–1-
213—கோலால் நிரை மேய்த்த ஆயன் –13–2-
214—–கஞ்சைக் காய்ந்த கரு வில்லி —13—3-
215—–ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –13–4–
216—-தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே குழலூதி வருகின்ற நெடுமால் –13-5-
217—-நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -13–6-
218—கொள்ளை கொள்ளிக் குறும்பன் கோவர்த்தனன் –13–8-
219—–அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
220—-பட்டி மேய்ந்தோர் கார் ஏறு -பல தேவர்க்கோர் கீழ்க்கன்று இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடுவான் — 14–1-
221—ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறும் குட்டேறு கோவர்த்தனன் –14–2-
222—–மாலாய்ப் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் ஏலாப் பொய்கள் உரைப்பான் —14-3-
223—-போர்த்த முத்தின் குப்பாயப் புகார் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாடுவான் –14–4-
224—-பீதாக வாடை யுடை தாழப் பெரும் கார் மேகக் கன்றே போல் வீதியார வருவான் –14–5-
225—-தருமம் அறியாக் குறும்பன் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தமிலி-
உருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வான் –14–6-
226—-பொருத்தமுடைய நம்பி புறம் போல் உள்ளும் கரியான் அருத்தித்து தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவான் –14–7-
227—–காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் –14–8-

————————————————————–

பெருமாள் திருமொழி
228—மாவினை வாய் பிளந்து உகந்த மால் -வேலை வண்ணன் என் கண்ணன் –வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏறு –1–4-
229—-ஏறு அடர்த்தான் –2—3-
230—தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் –2–4-
231—–வன் பேய்ச்சி முலையுண்ட வாயன் —3- -4-
232—-தாய் முலைப் பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –6–4-
233—-குன்றினால் குடை கவித்துக் கோலக் குரவை கோத்துக் குடமாடிக் கன்றினால் விள வெறிந்து காலால் காளியன் தலை மிதித்த வென்றி சேர் பிள்ளை —
234—-வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வாண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை சுவைத்து அருள் செய்து வளர்ந்தான் –7–9-
235—-கஞ்சனை நாள் கவர் கரு முகில் எந்தை —7–10-
236—–மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்திய மாய்த்து எல்லையில் பிள்ளை –7- -11-

—————————————————–

திருச் சந்த விருத்தம்
237——இட்டிடைப் பின்னை கேள்வன் -13-
238—-புள்ளின் வாய் பிளந்தான் —19-
239—–பூணி பேணு மாயன் –26-
240—நன்னிறத் தொரின் சொலேழை பின்னை கேள்வன் –33-
241—-கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை –35-
242—-ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளை சாடு உதைத்து ஓர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்து ஆடகக்கை மாதர் வாய் அமுதுண்டான் –36-
243—-காய்த்த நீள் விளங்கனி யுதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன்
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டான் –37-
244–கடங்கலந்த வன்கரி மருப்பு ஓசித்து ஓர் பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற
நாதன் குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ணன் -38–
245—-வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் –39-
246—மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயன் –40-
247—ஆயனாகி யாயர் மங்கை வேய தோள் விரும்பினான் –41-
248—-ஏறு சென்று அடர்த்த வீசன் –42-
249—-வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஓசித்து உருத்தமா கஞ்சனைக் கடிந்த காலன் வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினான் -43–
250—-பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை பற்றி யுற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகன் –52-
251—மோடியோடி லச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு
மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் -53-
252—மரம் கெட நடந்தர்ந்து மத்த யானை மத்தகத்து உரம் கெட புடைத்தோர் கொம்பு ஓசித்து உகந்த உத்தமன் -துரங்கம் வாய் பிளந்தான் –58-
253—-கால நேமி வக்கரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரன் –59-
254—குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பறந்து
வானகமுற வந்த வாணன் யீரைஞ்சூறு தோள்களைத் துணித்தான் –70-
255—வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு இண்ட வாணன் யீரைஞ்சூறு தோள்களைத் துணித்தான் —
முண்ட நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி ஓடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான்-71-
256—வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேநுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த தோள் இல்லை யாக்கினான் –80-
257—-சாடு சாடு பாதன் சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதன் -86-
258—-பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரத்தற்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்ததோர் தெய்வம் –89-
259 —-விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி யாயன்–92-
260—தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்ற முன் பொறுத்தான் –106-
261—-காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் கேசி தேனுகன் நாசமுற்று வீழ நாள் கவர்ந்தான் –107–
———————————————-
திருமாலை –
262—கற்றினம் மேய்த்த வெந்தை –9-
263—-மழைக் கன்று வரை முன் ஏந்தும் மைந்தன் –36-
264—வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற கண்ணன் –45-
————————————–
அமலனாதி பிரான் –
265-கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –10-
——————————-
கண்ணி நுண் சிறுத் தாம்பு –
266-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் -1-
———————————
பெரிய திருமொழி –
267—-இடி கோள் வெங்குரலின விடை யடர்த்தவன்—1- 2–3-
268—பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் -1—3–1-
269—-காளை யாகிக் கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் –1–3–4-
270—-பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திடப் பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் –1–4–5-
271—-தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்தொரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழு முன் அடர்த்த பனி முகில் வண்ணன் எம்பெருமான் –1–4–6-
273—-தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் —1–5–6-
274—–விளங்கனி முனிந்தான் –1–6–7-
275—கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் -1–8–1-
276—வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரான் –1–8–2-
277—–நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் –1–8–3-
278—பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் –1–8–4-
279—-உறி மேல் நறு நெய் அமுதாக உண்டான் —-1–10–4-
280—-மானேய் மட நோக்கி திறத்து எதிர்வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளன் –1–10–7-
281—–வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் –2–2–1-
282—-பின்னோர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் –2—2–3-
283—-பந்து அணைந்த மல் விரலாள்பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன்
விரி புகழ் சேர் நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான் —2–2–4-
284—-வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் பற்றலர்
வீயக்கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் –2–3–1-
285—நந்தனார் களிறு –2–3–2-
286—-வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலை யூடுயிர் செக யுண்ட நாதன் –2–3–3-
287—அந்தமில் வரையால் மழை தடுத்தான் –2–3–4-
288—ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றி யங்கும் என் துணை –2–3–5-
289—–இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றான் –2–3–6-
290—–காண்டாவனம் என்பதோர் காடு அமரர்க்கு அரையனது கண்டவன் நிற்க மூண்டார் அழல் உண்ண முனிந்தவன் முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் -2–4-3-
291—-புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன்னாள் அடு வாள் அமரில் பல மன்னர் படச் சுடர்
ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர் நில மன்னனுமாய் யுலகாண்டான் —2- 4–3-
292—–வென்றி கொள் வாள் அமரில் பாங்காக முனைவரோடு அன்பளவிப் பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவன் — 2–4–4-
293—-புகாராருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்தான் –2–4–7-
294—–புரிவாய் கீண்ட சீரான் போரானைக் கொம்பு ஒசித்த போர் ஏறு புணர் மருதம் இற நடந்த பொற் குன்று –2–5–1-
295—-தொத்தார் சோலைக் காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தான் –2- -5- 2-
296—-அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகன் கன்று மேய்த்து விளையாட வல்லான் -வரை மீ கானில் தடம் பருகு கரு முகில் –2–5–3-
297—–பேய்த் தாயை முலை யுண்ட பிள்ளை பிணை மருப்பில் கரும் களிறு -பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோ –
குடமாடு கூத்தன் கோகுலங்கள் தளராமல் குன்றம் என்திக் காத்தான் –2–5—4-
298——திரி சகடம் பாறி வீழப் பாய்ந்தான் -தூதில் சென்று அப் பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தான் –2–5–5-
299—படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தான் –2—5–6-
300—-ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் —2–5–7-
301—-மருதிடை போனான் –2–5—10-
302—-பஞ்சிச் சிறு கூழை யுருவாகி மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட வண்ணல் முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவன் –2–6–7-
303—-வெம்பு சினத்திடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்தவர் –2—8—3-
304—-மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை யஞ்ச அதன் மருப்பு அன்று வாங்கும் ஆயர் -2–8–4-
305—-அரவம் வெருவ முன நாள் பூம்புனல் பொய்கை புக்கான் –2—9–5-
306—–பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் மறையுடை மால் விடை ஏழு அடர்த்தான் -2–9–9-
307—-உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டான் ஆய்ச்சியர் உரலோடு ஆர்க்கத்
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்—2–10–6-
308—–இருங்கைம் மா கரி முனிந்து பரியைக் கீறி இன விடைகள் ஏழு அடர்த்து மருதம் சாய்த்து வரும் சகடம் இற
யுதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானான் –2—10–7-
309—-பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கிப் பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய்ஏ
திர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் —2–10–8-
310—-ஆயர் பூங்கொடிக்கு வினாவிடை பொருதவன் —3–1–5-
311—-அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் –3–1—8-
312—-வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் –3–1–9-
313—–மௌவல் குழல் யாய்ச்சி மென் தோள் நயந்தான்–3—2—7-
314—–மாவாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்தான் –3—2–8 —
315—–வாடா மருதிடை போகி மல்லரைக் கொன்று ஓக்கலித்திட்டு ஆடல் நன் மா வுடைத்தாயர் ஆ நிரைக் கன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் –3- 3-1—
316—-பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை –3–3–2-
317—-பண்டிவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண்டிசை யோரும் வணங்க விணை மருதூடு நடந்திட்டான் –3–3—3-
318—–வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்பத் தழைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு
அண்டர் காண முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்றது வாடத் திளைத்தமர் செய்து வருவான் –3- 3–4-
319—-உருவக் கரும் குழல் யாய்ச்சி திறத்தின மால் விடை செற்றுத் தெருவில் திளைத்து வருவான் —3–3–5-
320—–மலங்க வரு மழை காப்பான் உய்யப் பருவரை தாங்கி யா நிரை காத்தான் –3–3–6-
321–அஞ்சன மா மலை போலே மேவு சீனத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் –3–3–7–
322—பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழு அடர்த்த —நின்மலன் –3–4–4-
333—வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் –3–4–5-
334—-மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் -3–4–8-
335—ஓ மண்ணளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரையெடுத்த தோளாளா எந்தக்கோர் துணையாளன் ஆகாயே—3–6–5-
336—-போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான் –3–6–6-
337—ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளை யூதி மன்னர் தூதுவனாய் –3–7–4-
338—-பின்னை தன் காதலன் -3–7–7-
339—-இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஓசித்துத் தடந்தாமரைப் பொய்கையை புக்கானிடம் —மணி மாடக் கோயில் –3–8–5-
340—-பண்ணோர் மொழி யாய்ச்சியார் அஞ்ச வஞ்சப் புகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்று அவளாவியோடும் உடனே சுவைத்தானிடம் —மணி மாடக் கோயில் –3–8–6-
341—பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி மேல் அடி வைத்த வம்மானிடம் –3–8–7-
342—துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
விளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம் –3–8–8-
343—-விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா –3—8–9-
344—-பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பெயின் உருவு கொடு மாள யுயிர் யுண்டு
345-திண்மை மிகு மருதோடு நற் சகடம் இறுத்து அருளும் தேவன் –3–9–6-
346-விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த
தயிர் வெண்ணெய் உளங்குளிர வமுது செய்து இவ்வுலகுண்ட காளை–3-9-7-
347-தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தான் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கருமேனி யுடை யம்மான்–3–10–7-
348-கன்றதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் –3–10–8-
349-வஞ்சனையால் வந்தால் தன்னுயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்ட
வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை –3–10–9-
350-வென்று சின விடை ஏழும் படா வடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் -3–10–10-
351-கும்ப மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ கொம்பாதனைப் பறித்து எறிந்த கூத்தன் –4–1–9-
352-காரார்ந்த திருமேனிக் கண்ணன் –4-1–10-
353-பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன்—4–2–2-
354-அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது வெல்லாம் உண்டு கோ நிரை மேய்த்தவை காத்தவன் –4—2–3-
355-பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாகிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை யுதைத்தவன் –4–2–4-
356-சாடு போய் விழத் தாள் நிமிர்த்து ஈசன் தன் படையொடும் கிளையொடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் -4–2–5-
357-அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் –4–2–6-
358-வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை—4–3–7-
359-அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய வேத நல் விளக்கை –4–3–8-
360-களங்கனி வண்ணா கண்ணனே ஏன் தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்தூளூறிய தேனை –4–3–9-
361-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணன் —4–4–1-
362-பொற்றொடித் தோள் மடமைகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை –4–4–2-
363-படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலமை செய்து உழலும் ஐயன் —4–4–3-
364-வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் –4–4–4-
365-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணன் —4–4–1-
366-பொற்றொடித் தோள் மடமைகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை –4–4–2-
367-படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலமை செய்து உழலும் ஐயன் —4–4–3-
368-வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் –4–4–4-
369-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
தூம்புடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த வெந்தை –4–5—1-
370-கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்த —வெந்தை –4–5–2-
371-மாத் தொழில் மடங்கச் சேற்று மருதிற நடந்து வன்தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை –4- 5–3-
372-தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கைம்மா மறுப்பு வாங்கி பூங்குருந்து ஓசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த வெந்தை —4–5–4-
373-படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வாகத்து இருத்தினான் –4–6–5-
374-மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –4–6–6-
375-ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடித்து இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்–4–6–8-
376-குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தான் -4–7–3-
377-கானார் கரி கொம்பது ஒசித்த களிறே –4- 7–4-
378-கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –4–7–7-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்