மாடு மேய்க்கும் கண்ணா
யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன் (இரண்டு முறை)
காய்ச்சின பாலும் தரேன் – கற்கண்டு சீனி தரேன் (மூன்று முறை)
கைநிறைய வெண்ணெய் தரேன் – வெய்யிலிலே போக வேண்டாம் (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்:
காய்ச்சின பாலும் வேண்டாம் – கற்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
யமுனா நதிக்கரையில் எப்பொதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்
கள்ளனுக்குள் கள்ளனொன்று கண்டதுண்டோ சொல்லும்மா
கள்ளன் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்களுண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்
காட்டு மிருகங்களெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
பட்ஷம் உள்ள நந்தகோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்:
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லு
தேடியே நீ வருகையில்
ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
போக வேண்டும் தாயே (high pitch)
————-
ஆயர்பாடி மாளிகையில்
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ – அவன்
வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ (ஆயர்பாடி)
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
மந்திரத்தில் அவன் மயங்க மயக்கத்திலே இவன்
உறங்க மண்டலமே உறங்குதம்மா தாலேலோ (ஆயர்பாடி)
நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அவன் மோகலீலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)
கண்ணனவன் தூங்கவிட்டால் காசினியே தூங்கவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகை
காண்பதற்கும் போதை முத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)
————
சந்தான கோபால மந்திரம்
ஓம் தேவகி ஸுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகந்நாத கோத்ர விருத்தி கரோ பிரபு :
தேஹிமே தனயம் ஸீக்ரம்
ஆயுஷ் மந்தம் யஷஸ்வினம்
—————–
த்வாரகாபுரி பட்டணமாம்
த்வாரகாபுரி பட்டணமாம்
சதுரங்கதள மேடையாம்
ஸ்வாமி வாசம் பண்ணுகிறார்
ஸப்ர ரஸ மதிலிலே
ரத்னம் பதித்த ஹம்ஸங்களாம்
லட்சுமியோட ஸேவையாம் – நித்ய
மங்களம் புரியும் நீலவர்ண ஸேவையாம்
குஞ்சாலக் குழல் கன்றுகளாம்
கோடி லட்சம் பசுக்களாம்
குடம் குடமாய் பால் சொரியும்
கோபாலனின் வளர்நாட்டிலே
கிருஷ்ணா கிருஷ்ணா என்றே
கிளிகள் கீர்த்தனங்கள் பாடுமாம்
கிருஷ்ணனின் நாமம் சொல்லி
மதி மயங்கி நிற்குமாம்
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
என்றே குயிலினங்கள் கூவுமாம்
கோவிந்தனின் நாமம் சொல்லி
மதி மயங்கி நிற்குமாம்
ஸ்ரீஹரி ஸ்ரீஹரியென்றே மயிலினங்கள் ஆடுமாம்
ஸ்ரீஹரியின் நாமம் சொல்லி மதி மயங்கி ஆடுமாம் (த்வாரகாபுரி…இரண்டு முறை)
—————
கண்ணனோடு ருக்மணியாள்
ராகம்: பைரவி
தாளம்: ஆதி
பல்லவி
கண்ணனோடு ருக்மணியாள் ஆடும் ஊஞ்சல்
இந்தக் கல்யாணக் கிருஷ்ணன் ஆடும் பொன்னூஞ்சல்… எங்கள் (கண்ணனோடு)
அனுபல்லவி
பண்-இசைக்கும்-நாரதர் பாமாலை பாடவும்
பண்மணிகள் பல அரையரங்கினில்… (கண்ணனோடு)
சரணம்-1
வேதமிரண்டிரண்டும் நாற்கால்கள் ஆகவும்
ஓதும் உபநிஷத்தும் கயிறுகள் ஆகவும்
நாதமிழைந்திடும் நாதாந்த மண்டபத்தில்
பாதம் பணிந்திடும் பக்தர்கள் இன்பம் கொள்ள (இரண்டு முறை) (கண்ணனோடு)
சரணம்-2
எண்ணிலடங்கா தேவர் மலர் மாரி பொழியவும்
அன்ன நடை மாதர்கள் வெண்சாமரம் வீசவும்
மண்ணிலுள்ள தொண்டர்கம் மனக்கவலை தீரவும்
கண்கள் செய்த பாக்கியம் என்ன களிப்புறங்கவும்… (இரண்டு முறை) (கண்ணனோடு)
—————-
ஏஹி மூதம் தேஹி க்ருஷ்ணா
ராகம்: எதுகுல காம்போஜி
தாளம்: ஆதி
இயற்றியவர்: நாரயண தீர்த்தர்
பல்லவி
ஏஹி மூதம் தேஹி க்ருஷ்ணா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
மாம்பாஹி கோபாலா பாலா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சரணம்
நந்தகோபா நந்தனாஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
யது நந்தனா பக்த சந்தனா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
களபகர்தீம் தர்ஸ்யா ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
நவகர்ணம் சலயஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
தாவ தாவா மாதவா ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
நவதீதம் ஆஹார ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
பவ்ய நட்டன குரு ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
பலபத்ர சஹித ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
நாரதாதி முனிகேய
க்ருஷ்ணா க்ருஷ்ணா
ஸ்ரீமன் நாராயண தீர்த்த வரத
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சஞ்சல மணிகுண்டல ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சாது சாதுப க்ருத மிஹா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
லோக சாதக ஹிதாய ஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
குங்கும பங்கில தேஹா
க்ருஷ்ணா க்ருஷ்ணா
பக்த சங்கர சரணாஸ்ரீ
க்ருஷ்ணா க்ருஷ்ணா
சாரு சம்பகனாசி மௌத்திக
க்ருஷ்ணா க்ருஷ்ணா
ஆனந்த சாகரா முரளிதரா
மீரா ப்ரபு ராதே ஸ்யாம வேணுகோபாலா
நந்த யசோதா ஆனந்த கிஷோரா
ஜெய ஜெய கோகில பாலா
ஜெய வேணுகோபாலா…
———
கோகுல கிருஷ்ணா கோகுல கிருஷ்ணா
என்ன உன் லீலையோ?
பால் வெண்ணைய் செய்யும் கோபியர் மீது
என்ன உன் மோகமோ?
(கோகுல)
எத்தனையோ குலமிருந்தும் ஆயர் குலத்தில் பிறந்தாய்
எத்தனையோ செல்வமிருந்தும் வெண்ணெயைத் திருடித் தின்றாய்
உலகைக் காக்க வந்து விட்டு உரலில் கட்டுப் பட்டாய்
ஒன்றுமறியா பிள்ளையைப்போல்பல கள்ளத்தனங்கள் செய்தாய்
(கோகுல)
புல்லாங்குழலை ஊதி ஊதி மனதை மயக்குகின்றாய்
மஞ்சள் ஆடை அணிந்து அழகில் மதனை விஞ்சுகின்றாய்
மயிலிறகைச் சூடும் கிருஷ்ணா, என்னையும் சூடிக் கொள்ளாயோ?
மணி மார்பில் மாலையாகும் பேறு எனக்குத் தாராயோ?
(கோகுல)
———–
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
(அலைபாயுதே)
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
(அலைபாயுதே)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே – உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா – ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு
(அலைபாயுதே)
———
ஆடாது அசங்காது வா கண்ணா…
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே – எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா
ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே – ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே – நீ
(ஆடாது அசங்காது வா)
சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே
பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே
பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே
———–
கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் – ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் – ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்…
கண்ணன் வந்தான்…
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்
சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்…
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா
கண்ணா…கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)
———
ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி
பல்லவி
ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ….(ஸ்வாகதம்)
அனுபல்லவி
போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா
கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)
சரணம்
முஷ்டிகாசூர சாணுர மல்ல
மல்ல விசாரத குவலாயபீட
மர்த்தன களிங்க நர்த்தன
கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ
ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப
கல்ப ஸதகோடி அஸமபராபவ
தீர முனி ஜன விஹார மதனஸூ
குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ
வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித
—————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply