Archive for the ‘Boothath Aazlvaar’ Category

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே -அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே-நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை
உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்-நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்-

————

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே -அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று –இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே – அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –
இப்படி நினைக்குமவர்கள் -இவ்வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-

———————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய
விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய பரம உத்தேச்யமாக
பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல-

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய
லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று சஞ்சிதமான தனம் யுண்டு
என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர் முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –
சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –
இத்தை அன்றோ-உண்ணும் சோற்றில் முற் கூறும்-துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்ன நோற்ற விதி கொலோ-முகில் வண்ணன் மாயம் கொலோ –
நான் பண்ணின ஸூ க்ருதமோ -இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –

————–

இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டா இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
சர்வேஸ்வரன் –தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-
மால்-சர்வாதிகன் -பிச்சன்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே -இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –

———

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47–

ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

————-

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் -கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –
எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

வேதங்களையும் யுண்டாக்கினாய்- அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும்
எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்
மாலே-திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று-

—————–

நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு-அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம்-

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில்
புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –
அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை பாகனாபிமன்னராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கொண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

————

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

——————————

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ்வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

——————

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-
தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

————–

அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும்
ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –
இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இறே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு
அறிய ஒண்ணாது இருக்கும் படி என்பர் –இவர் இந்த நாட்டிலும் இல்லையே-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-
இதுக்கு மித்ர பாவம் அமையும் –இவ்விஷயத்தில் ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்-

—————–

நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

அனவரதம் அனுசந்தித்து ஸ்வீகார மாத்ரத்தையே பற்றி – மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே
நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————–

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37–

ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இறே –
அதற்குப் புறம்பான பின்பு அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –

————-

ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும்
நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார்

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –
நமக்கு என்றும் ஸ்ரீ யபதியானவனே ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லுகையே ஒத்து ஆவது

—————–

விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே-சகல வேத சஙக்ரஹமான
திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு பற்றப் பாருங்கோள்-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு
அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத் பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-

————-

இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக்
கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே
அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும்
அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்-அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி

———–

சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்-
ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –விலக்காமை-

—————–

ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும்

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள்-
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது- உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————–

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ -அடியே துடங்கி
இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய வேறு புண்ய பாபங்கள் இல்லை
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன்

————-

அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன்-தானே கோபத்தின் வழக்காய் முடித்து வில் இருக்கச் செய்தேயும் கோபத்தால் கொன்றான் –
நின்றதும் வேங்கடமே –அவதாரத்துக்கு பிற்பாடர் ஆனவர்கள் இழக்க ஒண்ணாது என்று அவர்கள் விரோதியைப்
போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –
வந்து –தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –

——-

கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26-

படி யமரர் வாழும் பதி –பூஸூரரான வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற திரு மலை –அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை-

———————-

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்—-27-

கரை கட்டா காவேரி போலே சர்வாதிகான-சர்வேஸ்வரனை
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் தேடி ஓடா நின்ற நெஞ்சு-

————-

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப்
போவது வருவதாக ஒண்ணாது என்று திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே -அது தன்னிலும்
திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே

————————

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி-கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 21, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —
அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –
அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது
கீழில் திருவந்தாதியில் அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-இவர்
தம் மனசின் யுள்ளே அனுசந்தித்து அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது
ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –
உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் -இப்படியாகக் கூடுமோ என்னில்
சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-

சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால் அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-
சாதனம் தம் தலையில் இன்றியிலே அவனே யாகையாலே இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ
ஸ்ரீ குருகைக் காவலப்பன் பக்கலிலே ஸ்ரீ பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்
த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஸ்ரீ ஜைமினியும் -ஸ்ரீ வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம் ஸ்ரீ ஜைமினியும்
ஸ்ரீ வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே -அப்படியேயாய் இருக்கிறது –

அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –
ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –
அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் -எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

————————————————————————–

ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து -பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –
அதாவது -வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ஸ்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது -பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –
கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-

ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பை அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய் அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க
ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –
அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –
ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-

இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய் அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் -குணாதிக விஷயம் ஆகையாலும் -த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –

நன்புருகி-
நன்பு என்கிறது ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-
அன்றிக்கே
நன்பு -என்கிறது ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-நித்தியமாய் -ஸ்ரீ ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –

உருகி என்கிறது –
அசேத்யமாய்-அதாஹ்யமாய் -அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவத்ரவ்யம் பட்டது பட்டது –
நித்யவஸ்து உருகுகையாவது என் என்னில் அவ்விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
ஸ்ரீ பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல் ஸ்ரீ எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –
ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து -விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரமபக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ்வளவிலே ஸ்ரீ பகவத் பிரசாத லப்தமான பரஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –
விளக்கேற்றினேன் –
அவ்வழியாலே அடிமை செய்கிறேன்-
நாரணற்கு-
சர்வ சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான் –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் -காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக் கடவது இறே
என்னளவிலேயாய்ப் போகை அன்றியே -நாட்டார்க்கும் எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப்பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –

இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரஸ்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

———————–

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் கீழ் பாசுரத்தில் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-

விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –
பண்டு கன்றாலே விளவின் காயை விழ விட்டவனே –
கன்றையும் விளாவாயும் வந்த அஸூரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –

என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
இன்று ஆஸ்ரயித்த அளவன்று உன் பக்கல் ஸ்நேஹம் –இத்தை அகம் சுரிப்படுத்த வேணும் -தரமி அழியப் புகா நின்றது –
ஸ்நேஹோ மே பரம -உத்தர -40-16-
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே -ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையில் குருக்கத்திப் பூவில் திரு அவதாரம் -அயோநிஜர்
பூதம் -உண்மை -ஆத்மா -ஞாநீத் ஆத்மைவ மே மதம் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்
ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –ஸ்ரீ கோயில்–ஸ்ரீ திருமலை-ஸ்ரீ திருக்கடல்மலை -ஸ்ரீ திருக்கோவலூர்

————————————————————————–

அன்பே தகழி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக்கடல் மலை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கன் புகழ் உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலதில் வாழியே

————————————————————————–

ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்-
என் பிறவி தீர இறைஞ்சினேன் –
என் பிறவியாவது –இவர் தாம் -இது கண்டால் நல் நெஞ்சே -இப்பிறவி யாவது -66–என்று அருளிச் செய்த படியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -பல் பிறவியில் படிந்து -பிறவிப் பெரும் கடலிலே -உடலாழி பிறவியிலே புக்கு ஒழிகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள் தீரும் படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னங்கழலை இறைஞ்சினேன் -என்கிறது
இறைஞ்சுகை -பஜிக்கை –அதாவது சேவிக்கை-என்றபடி –
பொன்னங்கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -என்னுமா போலே
ஸ்ரீ பூதத் திருவடிகளுடைய பொன்னங்கழலுக்கு ஆன ஜென்மம் கழலும் இறே
இனி அவர் உபகாரகத்வ வைபவம் சொல்லுகிறது –

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் –நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை

அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான
ஸ்ரீ கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் ஸ்ரீ பூதத்தாரையும்-உடைத்தாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இறே
ஸ்ரீ மா மயிலை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
ஸ்ரீ கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இ றே

கடல் மலை பூதத்தார் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு –கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -ஸ்ரீ கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் ஸ்ரீ பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று

————————————————————————–

அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி உக்தனானவன் ஜகத்துக்கு சேஷி என்றார் –
இவர் அவ் உபய விபூதியையும் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து பக்தி பரவசராய் கவி பாடுகிறார் –
அவருக்கு இந்த பக்தி இல்லையோ என்னில் -உண்டு
காரண கார்ய ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்து பிறந்த ஞானம் அவரது-அது பக்வமாய்
பக்தி ரூபாபன்ன மான படி இவரது-
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஞ்ஞராய் இறே பரிமாறுவது –

அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-

————————————————————————–

ஜகத் வைசித்ரி யினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று அனுசந்திக்கிறார் -விசித்ரம் ஆக்கினான்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

வியாக்யானம் –

அன்பே தகளியா –
வையம் தகளியா என்று வையத்தை தம்முடைய
பக்தியிலே அனுசந்தித்து பக்தியை தகளியாக கொள்ளுகிறார் –
தைல வர்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணுமே –

ஆர்வமே நெய்யாக –
அதடியாக பிறந்த அபிநிவேசமே நெய்யாக –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –

இன்புருகு சிந்தை இடு திரியா –
விஷயத்தின் உடைய ரஸ்யதையாலே சிதிலமான ஹ்ருதயம் திரியாக –
நன்புருகி –
நன்பு என்று ஞானம்
தத் குண சாரத்வாத் -என்கிறபடி ஞாதாவைக் காட்டுகிறது –
அதாஹ்ய என்கிற ஆத்மா
இந்த பக்திக்கு அனுரூபமான சம்பந்தத்தை உடையவருக்கு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
பர பக்தி ஆகிற விளக்கு ஏற்றினேன்
நாரணற்கு-ஞானத் தமிழ் புரிந்தேன் நான் –
பரபக்தி பரவசனாய் கவி பாடுகிற நான் –

———————-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே
ஸ்ரீ சர்வாதிகனே
நெடியானே
அபரிச்சேத்யனானவனே
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே-
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய்
ஐஸ்வர்ய சூசகமான திருத் துழாய் மாலையை உடையையாய்

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே
பண்டு கன்றாலே விளங்காயை வீழ விட்டவனே
கண்ணனே
என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
என் ஆஸ்ரயத்தின் அளவன்று
உன் பக்கல் ஸ்நேஹம்
இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்

ஆல்-ஆச்சர்யம் –

—————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே –ஐப்பசி -அவிட்டத்தில்-
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

——————————————————————————————

ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற ஸ்ரீ பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி பஜித்தேன் என்கிறது –
இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தா ருமாய் -நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை ஸ்ரீ பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் -நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான ஸ்ரீ கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் ஸ்ரீ பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இறே
ஸ்ரீ மா மயிலை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
ஸ்ரீ கச்சிக் கிடந்தவனூர் ஸ்ரீ கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே-

கடல் மலை பூதத்தார் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு -ஸ்ரீ கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -ஸ்ரீ கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் ஸ்ரீ பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்
அவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை
நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –
பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் ஸ்ரீ பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை
தலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் -பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே
பரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு -பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு
பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –
பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஸ்ரீ ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –
சம்ஸ்லேஷத்தில் ஸூ கித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பரபக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –
நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணி கருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஸ்ரீ ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –
இனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –
ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –
ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யன் வார்த்தை
சம்ஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே பராசர வசனம் –

———————————–

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன்
என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பரபக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது -மேல் சொல்லுகிற
நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் –
அந்த விஷய வைலக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது
மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு உறுப்பான நெய்யாகவும் –
விஷய வைலக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த
ப்ரேம அவஸ்தைகளுக்கு வாய்த்தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பரஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –
ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணகமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால் அத்யந்த விலக்ஷணமான
ஆத்ம வஸ்துவானது பகவத் குணாஸ்வாத ரசத்தாலே-த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
ஸ்ரீ பகவத் தத்வ யாதாம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை லோக உபகாரகமாகப் பண்ணின நான்-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஸ்ரீ ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் -பேசித் தலைக் கட்டி யல்லது
தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் -சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –
அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஸ்ரீ ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் -சூடுதற்கவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று பர பக்தியால்
உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இறே –

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது –
ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் –
ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்
பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே -அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை –
சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யனும் அருளிச் செய்தது –
காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இறே அதுக்கு பாஷ்யம் –
ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இறே ஸ்ரீ திருவடியும் –
ஆகையால் பார்ப்பக்த்யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –
உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று பர பக்த் யவஸ்தையில் காரணமான நெஞ்சும் உருகும்
பர ஞான அவஸ்தையில் கரணமான நெஞ்சும் -கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

——————-

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் கீழ் பாசுரத்தில் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய் –
ஸ்ரீ பரமபத வாசிகளான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –
இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அஸூரா விஷ்டமாய் நின்ற
விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே
உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –
அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் -அந்த வியாமோஹம் ப்ரேரிக்க
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யாநாய இருக்குமவனாய்
இந்நிலையில் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே -எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

——————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் என்னை ஆளுடை அப்பன் எம்பிரான் இத்யாதி -போன்ற பாசுரங்கள் —

March 21, 2019

என்னை ஆளுடை அப்பன் -மன்னாதன் —

என்னை ஆளுடை எம்பிரான் -9-10-6- -திருக்குறுங்குடி எம்பெருமான் -திருமங்கை ஆழ்வார்

———————————–

எந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆள் செய்கின்றோம் –திருப்பல்லாண்டு -6-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எனக்குத்தான் என்பார் –பெரியாழ்வார் திருமொழி -1-1-2–

எந்தம் பிரானார் எழில் திரு மார்வற்கு -1-3-3–

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-1-6-11–

எம்பெருமான் வாராவச்சோ வச்சோ -1-8-1-/4-

எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1-9-2-/8-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய –1-9-10-

எண்ணற்க்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு விடுவன் -2-3-2–

சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-3-4-

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் -2-3-5-

சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திருவாயர் பாடிப்பிரானே -2-3-7–

துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே 2-3-8–

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2-4-1-

இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2-4-2 —

சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-4-5–

தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-3 -/5-

கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-6-

தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் -2-7-1-

ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் -2-7-8-

எம்பிரான் காப்பிட வாராய் -2-8-3–

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி –2-9-1-

வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3-1-1-

பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் -3-1-7-

ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகலந்தான் என் மகளை பண்ணறையாய் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-10–

எம்பிரான் வன்மையைப் பாடிப்பற-3-9-1-

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7–

ஆயிரம் பைந்தலையை அனந்த சயனன் ஆளும் மலை -4-3-10-

நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே–4-4-9-

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்மண்ணை நரகம் புகாள்-4-6-4-

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4-9-2-

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அமருமூர் அணி அரங்கமே -4-9-3-

புது நாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் -4-9-4-

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழு உலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10-

என்னுடைய இன்னமுதே ஏழு உலகும் உடையாய் என்னப்பா –4-10-7-

அடிமை என்னும் அக்கோயின்மையாலே அங்கு அங்கே யவை போதரும் கண்டாய்-5-1-4-

இருக்கு எச்சுச் சாம வேத நாண் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5-1-6-

எம்பிரான் என்னை ஆளுடைத்தேனே ஏழையேன் இடரைக் களையாயே-5-1-9-

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -5-2-1-

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–

சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் -5-2-4-

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் -5-2-6-

பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் தொடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய் 5-3-3-

அன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் இன்று வந்து இங்கு
உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே -5-3-9-

திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் –5-3-10-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வெற்றி பெரும் பதம் ஆகின்றதால் -5-4-2-

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -5-4-3-

என்னப்பா என்னிருடீ கேசா என்னுயிர்க் காவலனே –5-4-5-

என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே -5-4-5-

உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-

———————————————

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாதிப் பறை கொண்டு ஈம பெரும் சம்மணம் –திருப்பாவை -27-

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

சென்று இறைஞ்சி அங்கு அப் பறை கொண்ட வாற்றை -30-

————————-

அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே
சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி -1-3-

ஆழி சங்குத்தமற்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-

பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் -1-9-

புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-10-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய -5-10-

இம்மைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி -6-8-

என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே -8-6-

வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -9-7-

பண மாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே -10-6-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் -10-7-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -11-3-

கொங்கைத் தலமிவை நோக்கிக் கண்ணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -13-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைப் பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

———————————————–

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே -3-6-

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே 3-7-

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -3-8 –

எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பக்கமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே -4-5-

செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -4-10-

வித்துவக் கோட்டம்மா நீ கொண்டு ஆளாயாகிலும் உன் குரை கழலே கூறுவேனே -5-2-

வித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-5-4-

எந்தையே என் தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கனத்து எழில் கவர் ஏறே -7-3-

எண்டிசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ -8-2-

எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ-8-3-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே-8-10-

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-

————————————-

என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-

ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே -35-

சரந்துரந்த உம்பராளி எம்பிரான்-73-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -78-

வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81-

ஆழியான் தன் திறத்தோர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்தே -84-

நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம்மீசனே -107-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

————————————————–

அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –திருமாலை -6-

தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண் என் அம்மான் -18-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே -30-

எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே-37-

—————————————————-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

————————————–

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-

திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆள் கொண்டதே -5-

—————————-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்—பெரிய திருமொழி -1-1-6-

எந்தை எம்மடிகள் எம்பெருமான் –வதரி யாச்சிரமத்துள்ளானே -1-4-7–

சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -1-2-10-

இடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-4-

திரு வேங்கடவா நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டு அருளே -1-9-1-
திருவேங்கட மா மலை என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-2-
குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-3-
திருவேங்கடவா அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-4-
திரு வேங்கட மா மலை என் அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-5-
திரு வேங்கடவா அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-6-
பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-7-
குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-8-
கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-9-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உள்ளானே-1-10-6-

வேங்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-1-
வேங்கடத்து அறவன் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-2-
வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமீசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-3-
வேங்கட மலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-
வேங்கடம் மேவி நின்று அருள் அங்கண் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-5-
வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-6-
வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே 2-1-7-
வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-
தாமரையோனும் ஈசனும் அமரர் காணும் நின்றேதும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-9-

எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-1-
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-4-
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-6-
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-7-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-2-

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய் எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இட வெந்தை பிரானை -2-7-10-

மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –அணி யாலி யம்மானே -3-5-4-

நிலையாளா நின் வணங்க வேண்டாயேயாயினும் என் முலையாள வொருநாள் உன்னகலத்து ஆளாயே
சிலையாளா மரம் எய்த திரு மெய்யா மலையாளா நீ யாள வலையாள மாட்டோமே-3-6-9-

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-

தேவா திரு வெள்ளக்குளத்துள் உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே 4-7-9-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும்மடியோம் -4-9-1-
தேசம் அரிய உமக்கே யாளாய்த் திரிகின்றோமுக்கு -4-9-4-
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் எழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல் -4-9-9-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -4-10-9-

அறிவது அரியான் அனைத்துலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமரும் இடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-2-

கூற்று ஏருருவின் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-
கலை வாழ் பிணையோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் –கூடலூரே -5-2-8-

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–திரு வெள்ளறை நின்றானே -5-3-1-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே -5-3-4-
பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே -5-3-9-

வானவர் தம் உயிர் ஆளன் ஒலி திரை நீர்ப் பவ்வம் கொண்ட திருவாளன் -5-5-1-
மெய்ய மலை யாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் எழு எய்த வென்றிச் சிலையாளன் -5-5-2-
பூ மேல் மாது ஆளன் குடமாடி மது சூதன் மன்னார்க்காய் முன்னம் சென்ற தூது ஆளன் -5-5-6-
பேர் ஆளன் பேர் அல்லால் பேசாள் இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தார் ஆளன்
தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன்-5-5-7-
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன்-5-5-8-

தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கு பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-8-

அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயன் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-9-

நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-1/2/3/4/5/6/7/8–
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-9-

தன் தாள் அடைவரேல் அடிமை யாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே -5-9-1-
செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -5-9-4-
நக்க அரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே -5-9-5-
நலம் கொள் நான் மறை வல்லார்கள் ஒத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப் பேர் மருவி நான் வாழ்ந்தவாறே -5-9-6-
தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே -5-9-7-
தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-8-
திருப் பேர்ச் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தார் சிந்தை யாளி என் சிந்தையானே -5-9-9-

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-1-
விண்ணவர் அமுதுண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-2-
நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற வம்பது வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-3-
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-4-
ஓர் எழுத்துரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-5-
சீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-6-
இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-7-
உனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-8-
உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான் மறையாகி உம்பராதல் செய் மூவுரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-9-

சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் உன்னை என் மனத்தகத்தே
திரும்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே -6-3-2-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடீ மது சூதனே உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே -6-3-9-

நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-ஒன்பது பாசுரங்களிலும்-கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர்
வானவர்க்கு இன்னரசர் ஆவரே-6-4-10-

ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்–திரு நறையூர் மணி மாடம் -6-6-1-
ஈசன் எந்தை இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-
பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான் பால்
செல்லகிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3-
துகில் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-4-
தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த் தான் ஆயனாயினான் சரண் என்று உய்வீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-7-
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் திணித்தான் திருவடி நும்
சென்னி வைப்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-1-

திருமாலை எம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே 6-8-2-

திரு நறையூர்– திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1-/ அடி இணையே அடை நெஞ்சே 6-9-2-/3-/
குரை கழலே அடை நெஞ்சே 6-9-4-
இவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே 6-9-5-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6-
திரு நறையூர் –தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7-
திரு நறையூர் மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையாரே நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8-
திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-9-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன்
நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை –கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே -7-1-1-
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே -7-1-2-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே -7-1-5-
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1–6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உத்தமம் இல்லை துயரே -7-1-10-

உள்ளே நின்றுருகி நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் நள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-
நாடேன்உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-2-
நன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -7-2-3-
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப்
போகல் ஓட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஓட்டேன்
அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப்ப பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-9-

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -7-3-3-
அரங்கம் ஆளி என்னாளி விண்ணாளி-7-3-4-
காதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே -7-3-8-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த வக்காவலைப் பிழைத்து குடி போந்து உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-8-

உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர்ச் சல சயனத்து ஐவார்
அரவணை மேல் உறையமலா வருளாயே -7-9-8 —
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெருமால் வரை யுருவா பிற உருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே -7-9-9-

கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-1-
கரி வெருவ மருப்பு ஓசித்தார்க்கு இழந்தேன் என் கன வளையே-2-
செங்கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே -3-
புனர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே -4-
தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே -5-
யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -6-
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -7-
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே -8-
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -9-
கண்ண புரத்து எம்மடிகளை திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் -8-6-10-

எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -4-
அஞ்சேல் என்று அடியேனை ஆள் கொள்ள வல்லானை –வயலாலி மைந்தனையே -6-

உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால்வேதம் கண்ட கண்ண புரத்துறை அம்மானே -8-10-1-
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை மற்று எல்லாம்
பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே -3-
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை அம்மானே -9-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை அம்மானை கொண்ட சீர்த்த தொண்டன் கலியன் ஒலி மாலை -10-

அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-9–

என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –அழகாய புல்லாணியே -9-3-1-
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் –புல்லாணியே -2-
ஏது செய்தால் மறக்கேன் –புல்லாணியே -3-
மங்கை நல்லாய் தொழுதும் எழு –புல்லாணியே -4-
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு –புல்லாணியே -5-
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு மா மலர் பாத நாளும் பணிவோம் என் தொழுதும் எழு –புல்லாணியே -6-
பரவி நெஞ்சே தொழுதும் எழு –புல்லாணியே -7-
நாம் தொழுதும் எழு –புல்லாணியே -8-
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி நமக்கே நலமாதலில்–புல்லாணியே -9-

பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் -9-4-

முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-10-1-
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முந்நீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-

இண்டையும் புனலும் கொண்டு இடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் குடிக் கடவுள் தம் கோயில் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-2-
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –மாலிருஞ்சோலை -9-8-9-

வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி
தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ -9-9-6-
திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாழ் நுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -7-
திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே -8-
திருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொலோ என் நன்னுதலே -9-

எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாத
அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே-9-10-1–
என்னை ஆளுடை எம்பிரான் -நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -6-
அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்–திருக் கோட்டியூரானே -8-

பொன்னை மா மணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை
எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
பத்தராவியைப் பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை
மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்கே காண்டுமே -8-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை -10-

நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ -11-2-9-

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -6-
முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப் பெற்றோமே -9-

ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது நம்மை ஆளும் அரசே-11-4-3-
அந்தரம் ஏழு னூடு செல யுய்த்த பாதமது நம்மை ஆளும் அரசே –5-
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயாராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -6-
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்தவது நம்மை யாளும் அரசே -8-

திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிக்களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே-11-6-4-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களை பேசீர்களே –5-
உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல்
கைம் மணி வண்ணன் தன் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9-

தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாகக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு
அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -11-7-9-

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே
மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

———————-

இரும்பு அகன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமை பூண்டு உய்ந்து போனேன் –திருக் குறும் தாண்டகம் -4-
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்து ஒளி மரகதம் முழங்கு ஒளி முகில் வண்ணா
என் அத்த நின்னடிமை யல்லால் யாதும் ஒன்றும் இலேனே -10-
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் -11-
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை -20-

————————————–

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –திரு நெடும் தாண்டகம் -1-
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் -5-
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -6-/-7 –
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு
இதுவோ நன்மை எண்ண நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே -17-
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன் பேரோதும்
பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -20-
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
கண்டேன் கன மகரக் குலை இரண்டும் நான்கு தோளும்-22-
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே -24-
என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு —
புனல் அரங்கமூர் என்று போயினாரே -25-
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-

———————————————–

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –திருவாய் மொழி -1-1-1-

உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கி -1-2-8-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறிலா வண் புகழ் நாரணன் திண் கழல் சென்றே -10-

நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே -1-3-7-
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே -8-

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -1-4-2-
நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –9-

பரிவதில் யீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே -1-6-1-
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யுமீடே -2-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே -7-
கழிமின் தொண்டீர்கள் கழித்து தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே -8-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-8-10-

நெற்றியில் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்-1-9-10-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு
நுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-1-10-3-
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் –7–

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி -2-1-7-

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -3-
பரமன் பவித்ரன் சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-9-

தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -2-5-8-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கு ஏத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -2-6-3-
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் கழித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –4-
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -5-
உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான்-6-

வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-
தேவும் தன்னையும் பாடி யாடத்திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் காய்த்து
எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே -4-
ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -6-
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -7-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -8-

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-2-9-6-
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-

மாலிருஞ்சோலை பதியது வேத்தி எழுவது பயனே -2-10-2-
மாலிருஞ்சோலை வல முறை எய்தி மருவுதல் வலமே-7-
மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -8-

சொல்லாய் யான் உன்னைத் சார்வதோர் சூழ்ச்சியே -3-2-3-

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -8-

ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே -3-4-4-

எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்துள்ளீரே -3-5-1 –
வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற -8-
தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -10-

அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொள் கண்களே -3-6-10–

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை தோளுமோர் நன்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை -3-7-2-
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பனை -7-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -3-9-1-
ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான்கிலேன்-7 –

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே-3-10-8-

தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2-
நின் பூம் தண் மாலை நெடும் முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே -6-
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -6-
உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–7-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை -4-5-1-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-
தண் தாமரை சுமக்கும் பாத்தப்பெருமாள்ச சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே -8-
குடமாடியை வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-9-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -10-
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து நோய் தீர்ந்த வழுவாத தோள் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-4-6-11-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் -4-7-11-

ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறு ஆளும் தனியுடம்பன் -4-8-1–
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன்- 4-8-2-

கடல் வண்ணா அடியேனை பாண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே -4-9-3-
வெறித் துளப முடியானே வினையேனை யுனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என் ஆரமுதே கூய் அருளாயே -4-9-6-

கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் ஆடு புட் கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே -4-10-7-
உறுவது ஆவது –திருக் குருகூர் அதனுள் கூறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே -10-
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -11-

என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-
தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் -9-
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -10-

பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே -5-3-4-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழிக் கண் புரைய மூடிற்றால் -5-4-6-
கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -5-5-10–

எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே –6-

எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே -5-8-2-
நால் தோள் எந்தாய் யுனது அருளே பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –9-

திரு வல்ல வாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியின் இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -5-9-5–

அது விது வுது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் -5-10-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற வந்தாதி -5-10-11-

திரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பனியீர் அடியேன் திறமே -6-1-2-
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எலக் சேற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே–10-

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்-6-2-10–

பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்குடித் திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே -2-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே -8-
திரு விண்ணகர்ச் சேர்ந்த வைப்பான் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -10-

மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு இவ்வுலகம் நிகரே -6-4-2-

வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-
தொலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே –6-6-9-
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-10-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர்கள் மல்கி -6-7-1-
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் அவள் சேர் திருக் கோளூருக்கே-6-7-10-

முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே 6-8-1-

கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -9-
அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும் சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -10-

திலதம் உலக்குக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே -4-
திருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-

எண்ணிலாப் பெரு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே யமுதே யப்பனே என்னை ஆள்வானே -7-1-1-

கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திட் கொடி மதிள் சூழ்
திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே -7-2-3-
முடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகு ஆளியே என்னும் -10-

கொண்ட என் காதலுக்கு உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்-7-3-8-

வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -7-5-10-

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -7-6-5-

என்னை ஆளும் கண்ணா இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை -7-8-8-

என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப் பல வின் கவி சொன்ன உதவிக்கே -7-9-9-

இன்பம் பயக்க எழில் மாதர் மாதரும் தானும் இவ்வேழு உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –7-10-1-
திரு வாறன் விளை மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொலோ -2-
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -6-
அன்றி மற்று ஓன்று இலன் சரண் என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -8-
திருவாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனையே -9-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே -10-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆள் செய்வார் -8-1-1-
எங்கு வந்துறுகோ என்னை ஆள்வானே ஏழு உலகங்களும் நீயே -8-1-6-
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -11-

கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே -8-3-2-
ஆளும் ஆளார் அலையும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -3-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -9-

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -8-5-6-
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -7-

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

இருந்தான் கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாதவோர் ஐவரைத் தேய்ந்தற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு
அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து -8-

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே -9-1-1-

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி
வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -9-2-1-
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -2-
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -3-
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி -4-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே -7-
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -10-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப்
பாம்பணைப் புள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே -9-3-9-

அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை
குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே -9-4-10-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே -9-6-1-
தென் காட்கரை என்னப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே -2-
ஆள் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால் கோள் குறைபட்டது என்னாருயிர் கோள் உண்டே -7-
தென் காட்கரை என் அப்பருக்கு ஆள் அன்றே பட்டது என்னாருயிர் பட்டதே -8-

நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-
நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -7–
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை
என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -8-
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய் -9-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட காலை மாலை கமல மலரிட்டு நீர் வேலை மோதும்
மதிள் சூழ் திருக் கண்ண புரத்து ஆலின் மேல் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி –9-
குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே -11-

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே -10-1-4-
திருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே -7-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே -11-

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வார் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே -10-2-6–
வயல் அணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -7-
எழில் அணி அனந்த புரம் படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -8-
செறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே -9-
அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்
நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -10-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -10-3-6–

என்றும் திரு மெய்யம் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருவினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே -10-4-2-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -3-
பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி
மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே -7-

ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே -10-5-4–
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -5-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -7-

தேன் ஏறு மலர்த்துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5–
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியாருக்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே -10-

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மாலிருஞ்சோலை வஞ்சக கள்வன் மா மாயன் மாயாக் கவியாய் வந்து
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை யுண்டு தானே யாகி நிறைந்தானே -10-7-1-
திருமாலிருஞ்சோலை யானேயாகித் செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து
ஊழி யூழி தலை யளிக்கும் திருமால் என்னை ஆளுமால் -6-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையில் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே -10-8-3-
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே -7-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-
குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே -11-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

எனக்கு ஆராவமுதாய எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-10-10-6-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழாயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -11-

—————————————————

அரி வுருவும் ஆளுருவுமாகி –முதல் திருவந்தாதி -31-

திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90-

முத்தீ மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இரையாவான் எங்கள் பிரான்–96-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ -97-

எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-

திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே -20-

திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -59-

திருமலை மேல் எந்தைக்கு -63-

வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான்முகன் -4-

நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -14-

அவன் என்னை ஆளி -30-

எம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -58-

பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவன் கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ கன்கறிந்தேன் நான் -96-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம் பிரான் –திருவிருத்தம் -39-

எப்பால் யவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரான் எழில் நிறமே -43-

எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-54-

இரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே -61-

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே -86-

அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே -89-

ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-

கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று–பெரிய திருவந்தாதி -3-

உண்ணாட்டுத் தேசு அன்றே உள் வினையை அஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே
மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவு உற்றானாலும் ஆளி யம் கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு -79-

தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடித்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்

அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் காலத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –இந்நிலைமை எல்லாம் அறிவித்தால்
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -பெரிய திருமடல்-

அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–இராமானுச நூற்றந்தாதி -51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆள வந்த கற்பகம் -53-

ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசனை -90-

உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -107-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

நான்கு பாசுரங்கள் பர உபதேசம் -இதில் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அடுத்ததில் இஷ்ட ப்ராப்திக்கும் உபதேசம்

இவை இரண்டும் ஆஸ்திக புத்தி உள்ளவர்
அடுத்ததில் நாஸ்திகர் சாரு வாகர் -லோகாயுதம் -உபதேசம்
அடுத்ததில் தம்மை ஒத்த முமுஷுக்களுக்கு உபதேசம்

அடுத்த ஆறும் தான் பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

————–

பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது –
ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!-இதனால் ஆஸ்திக புத்தி உள்ளவர்களே என்றவாறு
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்-வேதைக சமைதி கம்யன் அன்றோ
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியை யெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சி செய்யுங்கள்.-உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்மின் என்றவாறு

ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான பல வகைப் பட்ட சாஸ்த்ரங்களாலும் யதாவாக அறுதியிடப் பட்டு இருக்குமவனாய்
கறுத்த கடலாலே சூழப் பட்டு இருக்கிற இந்த பூமியை எல்லாம் அளந்து கொண்ட ஸுலப்யத்தை யுடையவனுடைய
சிவந்த திருவடிகளை சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு பொறுக்க ஒண்ணாத நரகங்களில் சென்று கிட்டாத படி யாக
பாப பலமான நரகம் வரில் செய்வது என் -என்று அஞ்சி அறிவு கலங்குகிற நீங்கள் பின்னைச் செய்கிறோம் என்று
ஆறி இராமல் ஒரு க்ஷணம் ஆகிலும் முற்பட ஆஸ்ரயிக்க உத்ஸாஹியுங்கோள்-

(பரம காருணிகர் ஆகையாலே ஸம்ஸாரிகள் இழந்து போகலாகாது என்று நான்கு பாட்டால அவர்களுக்கு உபதேசிக்கிறார்
அளந்தான் –யாதோ வாஸோ நிவர்த்தந்தே -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஒரு மிடறாக அளத்ததற்கு அரியவன் என்று அளக்கப்பட்டவன்
யஸ்யா மதம் தஸ்ய மதம்
வேதா ஹமேதம் புருஷம் மஹாந்தம்
ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
இவனை வணங்குவதே தக்கது என்று உபதேசிக்கிறார் இதில் -)

————————————————————————————————

சேவடி வணங்கி அநிஷ்ட நிவ்ருத்தி கீழ்
இதில் திரு நாமம் ஏத்தி இஷ்ட பிராப்தி பெற உபதேசம்

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட ப்ராப்திக்கும் இது தானே –ரக்ஷணத்துக்கும்- இதற்காகவே கொடி கட்டி சேவை சாதிக்கிறான்

திரு நாம சங்கீர்த்தனம் -உபாயமாக சொல்லி ப்ரயோஜனாந்தரங்களைப் பெற சாமான்ய ஆஸ்ரிதர்களைக் கூட்டி மேலே உயர்த்தி
மேல் 94- பாசுரத்தில் தம்மைப் போன்றவர்களுக்கு உபதேசம்

அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் –
ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்-

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேஸ்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று
என் போல்வார் பிரார்த்திக்குக் கிடக்குமதாய்-நிரதிசய ஸூ குமாரமான திருவடிகளாலே(பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளாலே )
அவன் நினைத்த வஞ்சனம் அவனோடேயாம்படி ஏற்கவே கம்சனை உதைத்து முடித்து அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று
ப்ரஹ்மாதி தேவர்கள் -தேவராலே எங்கள் குடியிருப்புப் பெற்றோம் -என்று
வாய் விட்டுப் புகழும் படியான ஸ்வ பாவத்தை யுடையனாய்

ரக்ஷணத்துக்கு கட்டின கொடி மேல் -கருடத்வஜன் என்னும் படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய்
தன் பக்கல் ஓரடி வர நின்றவர்களை நெடுக நினைத்து நினைத்து கொண்டு இருக்கும்
ஸ்வபாவனுடைய திரு நாமங்களையே சொல்லி வாய் விட்டுப் புகழுங்கோள் –

இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற
சகல புருஷார்த்தங்களையும் ஏத்தின வாய் மூடுவதுக்கு முன்னே சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

(படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் -9-2-2-
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் அளித்து ரக்ஷிப்பவன் இவனே என்று
ஸூ பர்ணோ அஸி கருத்மான் -வேதாத்மா விஹகேஸ்வரனை கொடி கட்டிக் கொண்டு இருப்பவன்
சேவல் அம் கொடியோய்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோனே
புள்ளின் நிவந்து ஓங்கி உயர் கொடிச் சேவலோய்
அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும்–என்று பரிபாடல் கோஷிக்குமே
ஆசிய ஜா நந்தோ நாம சித்த விவக்தந
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்
கைவல்யம் பகவந்தம் ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி
ப்ரயோஜனாந்தர பரர்களும் இவனையே ஸ்துதிக்க வேண்டும் என்கிறார் ஆயிற்று–)

—————————————————————————————————–

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருக்கிறோம் நீங்கள் நம்பினாலும் இல்லா விட்டாலும்
உண்மை நிலை -நரகமும் போவீர்கள் -அங்கு யமபடர் நலிவர்கள் என்ன
எங்களுக்கோ -பிரதிபந்தகங்கள் மிக்கு உள்ளனவே என்ன
அவற்றைப் போக்க பரிகரம் உள்ளவன் –
முன்னமே சிறு பாலகனாய் இருக்கச் செய்தே பூதனா தொடக்கமாக கேசி பர்யந்தமாக
ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினவன் அன்றோ
அவனை ஏத்துங்கோள் -என்று உபதேசிக்கிறார் இதில்

குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே –
நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடு நரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காண வொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்கு மேலும்
செய்கை–(அங்கு யம படர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரக வேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியை யுடைய சங்கைத் திருக் கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின் வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவி யிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

குரூரமான நரகம் முதலிலே கண் கொண்டு காண ஒண்ணாத படி சால வெவ்விதாக இருக்கும் –
பின்னும் கர்ம அனுகுணமாக -சேவதக்குவார் போலே புகுந்து -என்கிறபடியே –
யம படர் பண்ணைக் கடவ நெளிவுகள் மிகவும் துஸ் ஸஹமாய் இருக்கும் -என்று
அவற்றை அனுசந்தித்து நரக தரிசனமும் -அவர்கள் பண்ணும் நலிவும் வந்து கிட்டு வதுக்கு முன்னே எதிரிகளை முடிக்கும்
கூரிய த்வனியை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய்

கேசியினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டவனாய்
பூதனையினுடைய முலையில் நச்சுப் பாலை யுண்டு அவளை முடித்துப் பொகட்டவனை -மேல் எழ அன்றிக்கே
ச மனசமாக உறைத்து நின்று ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

வடி சங்கம் -அழகிய சங்கம் -என்றுமாம் –

(தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவதக்குவார்(சே தாக்குவார் -காளைக்கு காயடிப்பார் ) போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திருமொழி -1-6-3-
நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு என மொழிவதற்கு அங்கி -1-6-4-
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்
வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த –விரி புகழான் -திருவாய் -4-8-8-
கூந்தல் -கேசி
கூந்தல் எரி சினம் கொன்றாய் –பரிபாடல்
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய் படுத்திட்டு -கலித்தொகை
கூந்தன் மா கொன்று குடமாடிக் கோவலனாய் -முத்தொள்ளாயிரம்
இப்படி விரோதிகளை நிரஸனம் பண்ணி அருளியது போல் உங்கள் நரக பயத்தையும் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்
நாஸ்திகர்கள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவதற்கு உபாயம் நரக பயத்தை அனுசந்திக்கை என்றபடி -)

——————————————————————————————–

தம் போல்வார் -அர்ச்சாவதாரங்களில் மண்டி இருப்பதற்குத் தக்க
திருப்பாடகம் ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்தி இருப்பவர்கள் அன்றோ
பாடு பெருமை -அகம் -பெருமை தோற்ற வீற்று இருப்பவன் –
இவர் படியைக் காட்டி முமுஷுக்களுக்கு உபதேசம்

என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய்
நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் –

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆஸ்ரயியுங்கோள்.

பூமியாதிகளான சகல லோகங்களையும் ஒன்றும் பிரி கதிர் படாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கும் ஸ்வ பாவனாய்
அத்தாலே வந்த ஹர்ஷம் நிழலிட்டுத் தோற்றும் படி இருக்கிற வர்ஷூகவலாஹகம் போன்ற வடிவை யுடையவனாய்
பிடித்த பிடியே பிணமாம் படி பிடித்துத் தன்னுடன் பொருந்தாத ஹிரண்யனுடைய மார்பை இரண்டு கூறாகப் பிளந்து பொகட்டு
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான (பூம்)திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
(இந்திரன் சிறுவன் அன்றோ )எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

(தான் நமஸ்கரித்துக் காட்டிக் குழந்தைகளை பழக்கி வைக்கும் தாய் போல் முமுஷுக்களாய் இருப்பவருக்கு நமஸ்கரித்துக் காட்டி அருளுகிறார் –
வள வேழ் உலகில் போல் அகலாமல் தொழுமின்
ஒரு பொருள் புறப்பாடு இன்றி திரு வயிற்றில் வைத்து ரஷித்த சர்வாதிகன் இவனே
உளம் தொட்டு –பெரியாழ்வார் -1-6-9- அவனுக்கும் நெஞ்சில் ஈரப்பசை உண்டோ என்று தேடுமவன் –
பாடகம் –பாடு அகம் -பெருமை தோற்ற வீற்று இருக்கும் திவ்ய தேசம்
பூம் பாடகம் -இனிமை
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -ஸர்வ ரக்ஷகத்வம்
பொருந்தாதான் மார்பு இடந்து -ஸ்வா பாவிக -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் )

—————————————————————————————————

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் சேய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்-கால உபலஷிதமான சகல -சேதன அசேதனங்களை ஸூஷ்ம மாகக் கொண்டவன்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையும் உண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்தி கிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்-பூதத்தாழ்வார் இன்றும் இவ்வாறே சேவை காஞ்சியில்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

முன்னம் சேய் ஊழியான்
ஊழி பெயர்த்தான்
உலகு ஏத்தும் ஆழியான்
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்
அத்தி ஊரான்
என் நெஞ்சமேயான் –
என் சென்னியான் -என்று அந்வய க்ரமம்

சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்கிறபடியே
ஸ்ருஷ்டே பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகக் கால உபலஷிதமான
ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவனாய் இப்படி ஸ்ருஷ்டித்த அளவிலே
தன்னை வழி படாதே இவை அதி பிரவ்ருத்தமானவாறே கால சேஷமாம் படி இவற்றை சம்ஹரித்தவனாய்
(பெரியவாச்சான் பிள்ளை ஸ்ருஷ்ட்டி பரமாக மட்டுமே அருளிச் செய்கிறார்)

ஸ்ருஷ்டமான ஜகத்தை ரஷிக்கைக்காக -லோகத்தில் உள்ளவர்கள் இருந்ததே குடியாக ஏத்தி ஆஸ்ரயிக்கும் படி –

திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளினவனாய் -அங்கு நின்றும்
நரசிம்ஹ ரூபியாய் வந்து அவதரித்து -ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய -தன் உக்ரமான வடிவைக் கண்டும் இளகாத படி
கடினமான ஹிருதயத்தைக் கிழித்துப் பொகட்டவனாய் -சிறுக்கன் விரோதி போகப் பெறுகையாலே -நீல மணி போலே இருந்து
குளிர்ந்த வடிவை யுடையனாய் –

அக் காலத்தின் பிற்பாடாரையும் ரஷிக்கைக்காகத் திருவத்தி யூரிலே வந்து நின்று அருளின
நீர்மையில் ஏற்றத்தை யுடையவன் —

(தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்ட ராமானுஜன் அடியார்களான நம் போல்வாரை அருளவே )

இடவகைகள் இகழ்ந்திட்டு என்கிறபடியே
இந்தத் திருப் பாற் கடல் திரு வத்தியூர் ஆகிற இடங்களை உபேக்ஷித்து –
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி
என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

(ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்)

(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
பஹுஸ்யாம் ப்ரஜாயேயத்
த்ரி பாதூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யேஹாபவாத் புந
ததோ விஷ்வங் வயக்ராமத் சாஸநா நஸேந அபி
ந ச ராக்ஷஸ சேஷ்டித
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத் பரன் மிகத் தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் -)

ஆழ்வார் திருவடி என்று அனுசந்திக்கவே நம்முள்ளும் இருப்பதை உணர்வோம் -அவன் வியாப்தி எங்கும் உண்டே –

அத்தை நாம் உணர்ந்து ஆஸ்ரயிக்கவே நமக்கும் பேறு ஸித்தம் என்று

——————————————————————————————————

உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர்
என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப் பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

(எங்கள் பிரான் ஆகைக்காக அவன் சாதிக்கும் பட்டியல்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்– தேவாதி தேவன் ஆனவன்
முத்தீ மறையாவான் -வேதைக சமைதி காம்யன் ஆனான்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -வ்யூஹ வாஸூ தேவன் ஆனான்
புள்ளை யூர்வான் -கருட வாஹனானான்
அத்தி யூரான் -திவ்ய தேசங்கள் தோறும் சேவை சாதிக்கிறான்
தத் -அவ்வளவு பெரியவன்
த்வம் -இவ்வளவு எளியன்
அஸி -ஆகிறான்
ஸ்ரீ ரெங்க நாதன் மம நாதன்
அரங்கமாளி என்னை ஆளி
ஆஸி)

பெரிய திருவடியை -மேற்கொண்டு -நடத்துமவனாய் -அணிய பட்ட மாணிக்கங்களும்-அழகிய பொறிகளும் சேர்ந்து இருக்கிற
திரு வனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -மோக்ஷ ப்ரதிபாதங்களான வேதாந்த பாகங்களாலே
பிரதி பாதிக்கப் படுமவனாய் -பெரிய கடலில் பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை
ஈஸ்வரனாக அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரனான எம்பருமான் இப்படி உபய விபூதி உக்தனாய்
வேதாந்த வேத்யனான தன் பெருமை பாராதே எங்களுக்கு உபகாரம் பண்ணுமவனாய்க் கொண்டு திருவத்தியூரிலே வந்து அருளினான் –

(முத்தீ மறை -கர்ம காண்டம் சர்வ கர்ம ஆராதணீயன் –
வேதாந்தம் -முத்தி மறை -மோக்ஷ பிரதன் வேதாந்த சித்தம் அன்றோ
ஆக இரண்டையும் சொன்னவாறு -இரண்டும் சேர்ந்தே வேதங்கள்)

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று -என்கை

முத்தீ மறையாவான் -என்ற பாடமான போது
த்ரேதாக்னியைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே
ஸமாராத்யத்தயா ப்ரதிபாதிக்கப் படுமவன் என்று பொருளாகக் கடவது –

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-
ஓடும் புள்ளேறி -திருவாய் -1-8-1-
நாகத்தின் மேல் துயில்வான் -அமி தவ்ஜா பர்யங்க தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே –கௌஷீதகி
முத்தீ மறை யாவான் -என்று முத்தி மறையாவான் என்றும் –
வேதத்து மறை நீ -பரிபாடல்
கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேண அபிபத் ஸஹ -ருக் மண்டலம் -இவன் உள்ளே இருந்ததாலே நீல கண்டன் ஆலஹால விஷம் உண்ண முடிந்தது பாத்திரம் போல் அன்றோ ருத்ரனும் –
எங்கள் பிரான் அத்தியூரான் -எங்கள் என்று -கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் -2-7-1- -சம்பந்த சம்பந்திகளையும் கூட்டிச் சொல்கிறார்
அனைவரையும் உபகரித்து அருளவே ஸ்ரீ ஹஸ்தகிரியில் நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்கிறார் – )

———————————————————————————————–

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திரு குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் –

(எங்கள் பிரான் ஆவதற்காகவே -நின்ற திருக்கோலம் –
பரத்வமும் சயன திருக்கோலம் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸுலப்ய சவுந்தர்யங்களையும் காட்டி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று உள்ளான்-

அங்கு நின்று எழுதி வாங்கிக் கொண்டு அத்தை திடப்படுத்த இங்கே சயனம் என்றுமாம் )

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே யுடையவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அவர்களுக்கு போக்யமான சிவந்த திருக் கண்களை யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனாய்
ஆஸ்திரிதரான எங்களுக்கு ஸ்வாமி யான நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களையும்-திரு மூக்கையும் யுடையவனாய் அனுபவ ஜெனித ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு
ஏத்துகைக்கு ஆயிரம் வாயையும் யுடையனுமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளினாய் –

(நீ ஒவ்வொன்றிலும் சேர்த்து வியாக்யானம்
எங்கள் பெருமான்நீ
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் நீ
திரு மார்பா நீ –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் நீ
குட மூக்கில் கோயிலாகக் கொண்டாய் நீ

(திருமார்பா-பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் -புருஷகாரம் நமக்கு உபாய உபேயங்களுக்கு -நித்ய முக்தர்களுக்கு கைங்கர்ய விருத்திக்கே)

(எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக்குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ
திரு மார்பா -வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி -ஸ்ரீ குணரத்ன கோசம் -44-
ஹ்ரீஸ் ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ )

——————————————————————————————————-

தம்மை விஷயீ கரித்த சர்வேஸ்வரனுடைய அகடி தகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை
முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

(அர்ச்சை நிலைகளால் அடிமை கொண்டது கீழ் இரண்டு பாசுரங்களில்
விபவ சேஷ்டிதங்களைக் காட்டி அடிமை கொண்டான் என்கிறார் இதில்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸ ஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும் படியான
குழவி ஆய்–சிறு குழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப் பட்ட மிகச் சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட் கொண்டது (என்ன ஆச்சரியம்)

இடையனாய் வந்து பிறந்து அருளி -ஜாதி உசிதமாக ஐஸ்வர்ய செருக்காலே குடம் எடுத்துக் கூத்தாடி –
அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப் பொருந்திக் கொண்டு
என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் –
சிலர் எடுத்துக் கொண்டு சீராட்டி வளர்க்க வேண்டி இருக்கிற முக்த சிஸூவான வடிவை யுடையனாய்க் கொண்டு
தான் வளர்ந்து -அத் தசையிலே திரு வயிற்றுக்கு உள்ளே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்தது சகல லோகங்களையும் –
கொண்ட வடிவின் சிறுமையையும் -உண்ட லோகத்தின் பெருமையையும் -அது தான் திரு வயிற்றிலே
ஒரு புடையில் அடங்கின படியையும் -இது ஒரு ஆச்சர்யம் இருக்கும் படியே என்று விஸ்மிதராய் அனுபவிக்கிறார் –

(ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச ராக்ஷஸ
அஹம் வோ பாந்தவ ஜாத நைதச் சிந்த யமிதோன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
பாலனாய் ஏழு உலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் -திருவாய் -4-2-1-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் படி யாதுமில் குழவி -8-7-10-
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)

——————————————————————————————-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கார்யம் செய்து -இவற்றை பெற்று பின் ஒரு காலமாவது
அநந்ய ப்ரயோஜனர் ஆவார் என்னும் நப்பாசையில் அன்றோ செய்து அருளுகிறார்)

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–சேஷத்வ ஞானத்தால் -அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும் படியாக,(வாசிகம் -காயிகம் இரண்டாலும் )
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக் கழலை யுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

ஈஸ்வரோஹம் என்று காளமூதித் திரிகிற துர்மானிகளான ப்ரஹ்மாதி தேவர்கள் தாங்கள் துர்மானத்தையும் –
ஊதின காளத்தையும் பொகட்டு – எங்களுக்கு வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரனே –
எங்கள் பக்கல் கிருபை பண்ணி அருள வேணும் -என்று அர்த்தித்துக் கொண்டு
அவன் சேஷியாயும் தங்கள் சேஷ பூதருமான முறையிலே நின்று –
அழகிய புஷ்பங்களை அக்ரமமாகப் பணி மாறிக் கொண்டு ஆஸ்ரயிக்க –

த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தான சிவந்த திருவடிகளை யுடையனாய் -ஐஸ்வர்ய ஸூசகமான
சிவந்த திருக் கண்களை யுடையனான சர்வாதிகனான சர்வேஸ்வரன் –

அந்த தேவர்கள் விஷயத்தை மதகு திறந்து பாய்கிற வியாமோஹத்தை யுடையனாய்க் கொண்டு –
ஸ்ரீ வாமன ரூபியாய் வந்து திரு அவதரித்து அருளி லோகம் அடங்க விழுங்கும் படி
முசிவற வளர்ந்த வடிவை யுடையனாய்க் கொண்டு பூமியை அளந்து கொண்டான் —

முறை நின்று –
பர்யாயமாய் நின்று என்றுமாம் –

(இந்திரன் இடம் மால் -மகாபலி இடமும் மால் நம் அனைவர் இடமும் மால் -எங்கும் மால்

இதனால் தான் அடுத்த பாசுரத்தில் -என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –அவன் அன்பால் இவர் அன்பு பெருக்கெடுக்குமே –
வ்யாமோஹம் -தப்புக்களைப் பார்க்காமல் ஓத்தே இல்லாத அதிகாரிகள் கொண்ட காதல்)

(அகில ஜகத் ஸ்வாமிந் -அஸ்மத் ஸ்வாமின்
கள்வா எம்மையும் ஏழு உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா–வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் –திருவாய் -2-2-10-
ஈஸ்வரோஹம் –
தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம்
பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர –
மா வலியை மண் கொண்டான் மால் என்று கொண்டு தாழ விட்டு வாத்சல்யம் காட்டி அருளினான் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும்
மா வடிவில் மண் கொண்டான் என்று கொண்டு மிகப்பெரிய வடிவைக் கொண்டு உலகு அனைத்தையும் தீண்டினான் என்பர் ஸ்ரீ அப்பிள்ளை
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெரும்மம் எய்து பெற்றியோய் -திருச்சந்த -109-)

———————————————————————————–

(சுருக்குவாரை இன்றி சுருக்கினாயே –
ஓங்கி உலகு அளந்தவன் போல் மிகப் பெரியதான அன்பை
வாமன் போல் சுருக்கி அருள வேணும் என்கிறார்)

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வ ஸ்மாத் பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத் தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில் அடங்கி நிற்பதன்று.

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் -விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய்(கண்ணன் ரக்ஷகன் )-

பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –

இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
அஸூரா விஷ்டமாய் நின்ற விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே

உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –

(இது வரை ஆறும் பரத்வ பரமான வியாக்யானம்
இனி ஆறும் ஸுலப்ய பரமான வியாக்யானம்)

அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் –
அந்த வியாமோஹம் ப்ரேரிக்க ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யனாய் இருக்குமவனாய்

இந்நிலையில் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

(விபுவான ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தையும் விஞ்சிற்று)

(பிரார்த்தனை அவ்யக்தம் -பிரார்த்தனா கர்ப்ப பிரபத்தி
தேவரீர் அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும் -திருமந்திரம் ஓம் நமோ நாராயனுக்காக -மட்டுமே உள்ளது
பிரார்த்தனாய சதுர்த்தி போல் இங்கும்)

(கொள் கொம்பு மூடப் படர்ந்தது போலே என்னுடைய அன்பானது என் ஸ்வரூபத்தையும் விஞ்சி பெருகி
தளர்ச்சியை யுண்டாக்கி உன்னை அனுபவிக்க ஒட்டாமல் தடுக்கிறதே
அவ்வன்பை அடியேன் பொறுக்கும் அளவு சுருக்கி அருள வேண்டும் -என்கிறார் –
அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே கண்ணனே -என்றும் அந்வயம் கொள்ளலாம்
தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம்
மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்-

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
ரக்ஷணத்துக்கு அசாதாரண தனி மாலை சாத்திக்கொண்டு இருப்பானே
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
சித்தமும் செவ்வை நில்லாது–பத்திமைக்கு அன்பு யுடையனாவதே பணியாய் எந்தாய் -திருக்குறும் தாண்டகம் -10-

ஆக அன்பே தகளியாக -என்று தொடங்கி
மேன் மேலாகப் பெருகி வந்த அன்பை அளவு படுத்தித் தந்து
அனுபவிப்பிக்க அருள வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் தலைக் கட்டி அருளுகிறார் -)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று
பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –
இப்போது -ஸூப்ரபாதா ச மே நிசா –என்னும்படி –
இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –
பகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –
ஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி
சர்வத்தையும் நியமித்துக் கொண்டு
உபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –

இந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்ன தீ கம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே
காணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்
இந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –

வடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய
பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான
வடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்

வான் திகழும் -என்றது
மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –

ஊன் திகழும் என்றது
சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் —
சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

—————————————————————————————-

வெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக் கண்களை யுடையவளும்
மா மலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டு வைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

(அடிக் கோலி–இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து_

நாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –
வடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான
பெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே
செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு
அனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே –

அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு
இறையும் அகலகில்லேன் -என்னும் படி
கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-

ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான
அவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும்
அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற அனுபவிக்கைக்கு அநு குணமாக –
இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி
போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள் போல் அன்றிக்கே
திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இறே –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

——————————————————————————————-

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே
முன்பு (74-பாசுரத்தில் )செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி –
நாம் இவ் விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று
கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன்  எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

அவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி
(யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ )இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை

அபரி பூர்ணானமாம் படியாக ப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே –
கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –
இப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க –

அது செய்யாத அளவன்றிக்கே-
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது
பண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து –
நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும் சிறிதாகிலும் தாராதோ -என்று
அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –

1-விஷய கௌரவத்தையும்-2- சொல்லின் பொல்லாங்கையும் -3-பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து
என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –

பின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் –
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் –
அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

சென்ற வரம் –
அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை (அருள் கீழ் இங்கு சிறப்பான சொல் மா ஸூச வார்த்தை )- அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –
மறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே
சொல்லுகிற வார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்

இத்தால்
அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ –
சர்வஜ்ஞனை இறே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

——————————————————————————–

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய் கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து –
அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை
ந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் –
அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட
மிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –
அத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை –

சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை யுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் –
பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே –
சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே
அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி நிரதிசய போக்யமான அம்ருதம் –

மூர்க்கத்தவனை என்ற பாடமான போது –
மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

——————————————————————————————-

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திரு வாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நித்ய போக்யமான அம்ருதம் என்றும் –
சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் –
நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –
அஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை
அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து
இதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் –
ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்
மத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட விலஷணனான சர்வேஸ்வரனை

ஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே
அமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்
இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர் மமனாய் விழுந்தேன் –

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

——————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ –
சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால் (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநாநுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

அவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு –
சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல பிரயோஜனாந்தர பரரான கவிகள் –
செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க
அத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ –

இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின
தபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும்
ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை
அதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த்தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று ஏத்தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

—————————————————————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக  கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

ஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் –
கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு
நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்

அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்
ஆன பின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று
அளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-
பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் -)

——————————————————————————————–

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை —
வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் -(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை
சர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு
அழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற
என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ)

மற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய
அனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித் தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி
தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று
கிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத
அரணை யுடைத்தான கலங்காப் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –
இத்தால்
பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று என்ற படி –

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

—————————————————————————————————-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மைப் பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்
விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம்

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

மிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து
தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு

இப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் (குண லேசம் என்றது இது இவன் சொத்து அல்லவே )கிடக்கையாலே நீர்மையை
யுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்
தீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்
நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –

உன்னை ஆஸ்ரயித்த வாஸூதேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்
கார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு –

கதவுகை -சீறுகை
அதவுகை – நெருக்குகை –

கதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது –
கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது

பதவி என்றது –
பதவி என்று வழியாய்
கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————————————–

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது
சொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

ஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் –
ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி
ஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று
இருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி –

அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
பூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில்
கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-

உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக் கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழி யானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

பரிவின் கனத்தாலே ப்ரிதி கூலர் மேலே விஷத்தை உமிழா நின்றுள்ள பயங்கரமான வாயை யுடைய திரு வனந்த ஆழ்வான்
மேலே சாய்ந்து அருளக் கடவ ஸுகுமார்யத்தில் பிரதானனானவன் –

காடுமோடையுமான திக்குகளோடு கூடின பூமியை அளக்கைக்காகப் புஷப ஹாஸ ஸூ குமாரமான திருவடிகளை
வளர்த்து அருளின காலத்தில்

இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதை போது பிறந்த
விஜயத்தை அனுசந்தித்த ஹர்ஷத்திலே பிரதி கூலர் மண்ணுண்ணவும்-
அனுகூலர் கொந்தளிக்கவும் ஒருபடிப் பட்டு நின்று முழங்க –

திரு வாழி யானது அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் அற்று நெருப்பை உமிழா நின்று கொண்டு
சத்ருக்களான நமுசி பிரபிருதிகளை வாய் வாய் என்று முடங்கப் பண்ணிற்று –

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து –
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற  அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

குரங்குகளானவை -ரிஷிகள் ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே உணருமா போலே காலம் அறிந்து உணர்ந்து போய்ப்
பரப்பு மாறாப் பூத்த சுனைகளிலே -ரிஷிகள் அகமர்ஷணம் பண்ணுமா போலே சென்று புக்கு

(தலை முழுகி ஸ்நானம் கால் தரையில் இருக்க வேண்டும்)

அவ்விடத்தில் கழிய அலருதல் கடு மொட்டாதல் அன்றிக்கே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு ஜாதி உசிதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி
ஸ்துதிக்குக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் –

மனஸ்ஸே நீயும் பிற்காலியாதே போது -போந்த அநந்தரம்
திரு வேங்கடமுடையானுடைய சீலாதி குணங்களுக்கு வாசகமான-திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு –
நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனான திரு வேங்கடமுடையானுடைய பூப் போலே
அது ஸூ குமாரமான திருவடிகளுக்கே சென்று கிட்டும் படி
செவ்விப் பூக்களை அழகு பெறச் சாத்தி ஆஸ்ரயிக்கப் பார்–(மணி வேங்கடம் மோனைக்குச் சேரும் )

அன்றிக்கே
சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் -(அணி வேங்கடம்)
வேங்கடவன் மலர் அடிக்கே செல்லப் போதும் அணி என்றுமாம் -(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -_

————————————————————————————————

சர்வ ஸமாஸ்ரயணீயன் (தேவர்கள் அரசர்கள் திர்யக்குகள் மூன்று பாசுரங்களில் )ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

(துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்)

(துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்)

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

பிறையோடு ஒத்து இருந்துள்ள கொம்புகளையும்-அழகிய கண்களையும் யுடைத்தான -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –
தறையில் ஒரு பூ விழாத படி முதலை வாயிலே நின்றும் மெள்ள விடுவித்து அருளின
சர்வேஸ்வரனான என் நாயகனானுக்கு(பாகவதரின் அவயவங்களும் உத்தேச்யம் )

அடிமை செய்கையிலே அத்யவசித்த நான் முதலும் -நடுவும் -அந்தியுமான -சர்வ காலங்களிலும் ஏதேனுமாகக் கிட்டின பூக்களை
அடைவு கெடப் பணிமாறி இன்ன திரு நாமம் என்ற ஒரு நியதி அற குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமத்தையும் அனுசந்தித்துக் கொண்டு சொல்லி நிற்பன் –

(அத்யவசித்த-மாநஸம் –பணிமாறி-காயிகம் -அனுசந்தித்து-வாசிகம்0

அன்றிக்கே
சேர்ந்த பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும்-சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை
நிரசித்த படியாகவுமாம் –
அப்போது நம் விரோதியை நிரசித்த படிக்கு த்ருஷ்டாந்தம்

மற்றப் போது மற்றுள்ள ஆஸ்ரித விஷயத்தில் வத்சலனாய் –
அவர்கள் ஆபத்தை நீக்கும் படிக்கு த்ருஷ்டாந்தம் –

(ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார்)

————————————————————————————————-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூ ஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் -(ஸூஹ்ருத தேவதை நம்பெருமாளே தானே )

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

(ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே )

இவ்வாத்மாவை ஸ்வரூப அனுரூபமாகத் திருவடிகளிலே அடிமை கொள்ளுகைக்கு உரிய என்னுடைய நிருபாதிக சேஷி யானவனே –
சகல ஜென்மங்களிலும் -அது தன்னில் -எல்லா அவஸ்தைகளிலும் உன் திருவடிகளிலே வாசிக கைங்கர்யம் பண்ணுகை யாகிற
இப் பேற்றுக்கு அடியான தபஸ்ஸைப் பண்ணினேன் நானே –

பண்ணின அந்த தபஸ்ஸாலே பலிக்கும் பலத்தைப் பெற்றுடையேனும் நானே —
அந்த தபஸ் பலமாக வந்த லக்ஷண லஷ்யங்களில் குறைவற்று இருக்கும் பெருமையை யுடையதாய் –
சர்வாதிகாரமாய் –
அத்யந்த விலக்ஷணமான திராவிட சந்தர்ப்பங்களை
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் நானே –

திராவிட சாஸ்திரத்தில் என் தன்னை அவகாஹித்தார் இல்லை என்னும் படி அதில் தேசிகனாய் இருப்பான் ஒருத்தன் –
அவ்வளவு இன்றிக்கே –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-என்று
பாங்கான நிலத்திலே இருந்து பாடி யாடி அடிமை செய்யக் கடவ நித்ய முக்தரைப் போலே அன்றிக்கே
இங்கே இருந்து கவி பாடப் பெறுகையாலே அவர்களிலும் மிகவும் நல்லனாய் இருப்பான் ஒருவன் –

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப் பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

———————————————————————————————–

பெரும் நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானை யானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

திருமலையிலே திரு அருவிகள் பெருக்கு எடுக்குமா போல மேன்மேல் எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனையானது
எல்லா அளவிலும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வல்ல ஸ்லாக்யமான பிடிக்கு –
நான் இங்குத்தைக்குச் செய்யக் கடவ பணிவிடைகளைக் கற்பிக்க லாகாதோ -என்று
விநயம் தோற்ற முன்னே வந்து நின்று

இரண்டு கண்ணேறி அதுக்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இளையதாய் இருக்கிற மூங்கில் குருத்தைச்
செவ்வி குன்றாத படி -சாவதானமாக வாங்கி அருகில் மலை முழைஞ்சுகளில் கூட்டிலே
நிறைந்து இருக்கிற தேனில் மூங்கில் குறுத்தும் தேனும் தன்னிலே ஒன்றி ஒரு நீராம்படி தோய்த்து
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்று அது அநாதரித்து நிற்க –

இத்தனையும் அங்கீ கரிக்க வேணும் என்று சாதாரமாகக் கொடுக்கும் சிறப்பை யுடைத்தான திருவேங்கடம் -கிடீர் –
மேகத்தோடு சத்ருசமாகச் சேர்ந்த வடிவை யுடையவன் வர்த்திக்கிற மலை –

(இப்பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப்பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ்வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

——————————————————————————————————

இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ் வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

நல்ல ஆகரத்தில் உண்டான சந்தனக் குழம்பும் அங்குத்தைக்கு சத்ருசமாம் படி அடைவே எடுத்து பெரு விலையனான
ஆபரணங்களும் திரு வரைக்குத் தகுதியான நல்ல பரிவட்டங்களும் -பரிமளம் மிக்கு இருப்பதாய் -கண்ணுக்கு ஆகர்ஷகமான
வெளுத்த நிறத்தை உடைத்தான மல்லிகையும் ஆகிற இவற்றை தர்ச நீயமாம் படி நிரைய அடைவே எடுத்துக் கொண்டு

இவை அழிந்து கிடக்கிற ஆதி காலத்திலே காரணமாய்க் கொண்டு நின்றவனாய் –
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே
வாயார ஸ்தோத்ரம் பண்ணி
தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

—————————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

எனக்கு முன்னே பதறி விழுகிற நல்ல நெஞ்சே -நாம் விமுகரான திசையிலும் நம்மை நோக்கி இப்போது தன்னது பேறாக
அடிமை கொள்ளக் கடவ புருஷோத்தமனுடைய யோக்யர் அயோக்யர் என்று தரம் வையாதே எல்லாருக்கும் பற்றலாம் படியான
நன்மையை யுடைய திருவடிகள் சாலச் சீரியது ஓன்று கிடாய் –

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

வாயாலே ஸ்துதித்து தலையாலே வணங்கி
அவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களையும்
சர்வ காலத்திலும் எங்கும் பிரசித்தமாம் படி சொல்லுகை யாகிற தபஸ்ஸூ –
ஸூ ஸூகம் கர்த்தும்-என்னும் படி அத்யந்தம் சரசமாய் இருப்பது ஓன்று ஆகையால் மிகவும் சீரியது கிடாய் –

திரு நாமம் சொல்லுகையைத் தவம் என்கிறது ஈஸ்வரன் கருத்தாலே-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

———————————————————————————————-

இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து (த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்யமான திருவடிகளை –
க்ருஹீத்வா தர்ம பாநீயம்–என்கிறபடியே
பகவத் பக்தியாலே உருகி விழுந்த தர்ம மயமான கங்கா ஜலத்தைப் பணி மாறி –
அவனுடைய எல்லாத் திரு நாமங்களையும் வாய் படைத்த பிரயோஜனம் பெறச் சொல்லித்
தன்னுடைய சிவந்த அழகிய கைகள் அடங்கலும் உத்பத்தி பிரயோஜனம் பெற்றுப் பூர்ணமாம் படி யாக விளக்கினான் –

திருவடிகளை விளக்கப் பெற்ற பின்பு பகவன் நாம சங்கீர்த்தம் ஆகிற இனிய தபஸ்ஸைக் குறைவற அனுஷ்ட்டித்துச்
சதுர்முகன் ஒருவனுமே அது பலத்தோடே வியாப்தமாகப் பெற்றான் –

இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடைத் தவ நெறி -என்னக் கடவது இறே –

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

———————————————————————————————-

ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் என்கிறார் –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்—பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

தாயாரான ஸ்ரீ கௌசல்யையார் பின் தொடர்ந்து நின்று -ஏக புத்ரையான நான் உன்னைப் பிறந்தால் -தரித்து இருக்க வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க-அத்தைக் கேளானுமாய் –

அதுக்கு மேலே நீண்டு சுற்றுடைத்தான தோளை யுடையாளாய் –
அழகிய பூவை இருப்பிடமாக யுடையாள் ஆகையால் நிரதிசய ஸூ குமாரையான பிராட்டியானவள் தான்
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -என்கிறபடியே
முற்பட்டு நின்று -கரு முகை மாலையைச் செவ்வி பெறுத்த வென்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூகுமாரமான திரு மேனி கொண்டு காடு ஏறப் போகிற இன்று உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் -என்று பிரார்த்தியா நிற்க–அத்தையும் கேளாதானாய் –

தானோ என்றால் -ஸ்ரீ ராமாயணம் என்கிற பிரபந்தத்துக்கு நேரே பிரதிபாத்யனாய்க் கொண்டு நின்று-தோளை யுடையனாய் –

ஸுகுமார்யத்தில் வந்தால் தன்னை எண்ணினால் -பின்னை இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாத படி-பிரதானனுமாய் இருக்க –

இவை இத்தனையும் (மூன்றையும்)பாராமல் -காட்டில் மிறுக்கையும் கடைக் கணியாமல்-காடு ஏறப் போன
சக்கரவர்த்தி திருமகனுடைய அந்த ஸ்வ பாவம் எல்லா வற்றுக்கும் ஸ்ரீ மானனானவன்-

தான் அளந்து கொண்ட பரப்பை யுடையதான பூமி ஒப்பாகப் போரும் –
அதாவது
1-மாத்ரு வசனத்தை மறுத்துப் -2-பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -3-தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
4-போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு

இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
1-அனுகூல அக்ரேசரரான ஸூ ரிகள் வயிற்று எரிச்சலையும்
2-தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -3-காடுமோடையுமான அளக்கிற பூமியினுடைய கொடுமையையும் –
4-ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல்
ஆஸ்ரிதரான இந்திரன் பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக்(இதிலும் சாம்யம் -வேண்டித் தேவர்கள் இரக்க செய்த செயல்கள் )
கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆன படியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற் காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

தேவர் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாகப் பண்ணக் கடவ கைங்கர்யத்தில் அத்யாவசாய புரஸ்சரமாக (அடிமைத்தனம் இவ்வளவு வியாக்யானம் )நேர் பட்டேன் –
அந்தக் கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியாய் -அழகிய தாமரைப் பூ போலே நிரதிசய போக்யமாய் இருக்கிற
அந்த திருவடிகளை மனஸ்ஸாலே அனுசந்தித்தேன் –

நினைத்த மாத்திரத்திலே பெருகி வருகிற ப்ரேமத்தை யுடையேனாய்
வகுத்த சேஷியான தேவருடைய சிவந்த திருவடிகளின் மேலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தினேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

பூர்ணமான திருவடிகளின் அழகைக் கண்டு அனுபவித்தவர்களுக்கு -இதுக்கும் அடியான வடிவு அழகை ஓன்று ஒழியாத படி
முழு நோக்குச் செய்து அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ-என் பட்டார்களோ -என்கை –

அன்றிக்கே –
ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர் ஆகிறார் சேஷ பூதரான தாமாய் -நான் திருவடிகளின் அழகைக் கண்டு ஈடுபட்டபடி கண்டால்
முன்பு இவ் வடிவு அழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றார்கள் என் பட்டார்களோ -என்றுமாம் –

ஆர்ந்த வடிக் கோலம் -இத்யாதி –
திரு உலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வாபாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ என்றுமாம் –

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று
திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன் என்னவுமாம் –

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

ஒரு நினைவற்று இருக்கச் செய்தே நின்றதொரு திருவடிகள் பூமிப பரப்பை அடங்கலும் புறம் தோற்றாதே தன் கீழே
அடங்கும் படி அளந்து கொள்ள -அபிமதம் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே முசிவற வளர்ந்த திருத் தோளானது
திக்குகள் எல்லா வற்றையும் சென்று அளந்து கொண்டது என்று விவஷிதர் சொல்லா நின்றார்கள்-

இந்திரன் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு திருவடிகளில் வந்து விழுந்த அன்று
ஸ்ரமஹரமான கருத்த நிறமும் இரப்பிலே தகண்
ஏறின ப்ரஹ்மச்சாரி வேஷமும் உடையனாய்க் கொண்டு மகாபலியை சர்வ ஸ்வ அபகாரம் பண்ணின கிருத்ரிமனே
உன்னை அழிய மாறி மஹா பாலி பக்கலிலே கிடந்த பூமியை மீட்டுக் கொண்ட செயல் உன்னிடத்தில் தங்கள் பரத்தைப் பொகட்டு நியஸ்த பரராய் உன்னை விஸ்வசித்து இருந்த ஆஸ்ரிதர் ஆணவர்னர்கள் நிர்ப்பரராய் மார்பிலே கை வைத்து உறங்கும்படி பெற்ற பேறு அன்று
அவர்களுக்கு வைத்த தண்ணீர் பந்தல் என்றபடி
த்ரிவிக்ரம வடிவுடன் செய்த செயல் இது
தன்னது என்ன -அவன் பக்கலிலே இரந்ததாயாய்-வஞ்சித்தாயாய்ச செய்தது
இந்திரன் ஒருத்தனுக்குச் செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும் -தூது போம் -சாரத்யம் பண்ணும் –
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து உறங்கும் படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

——————————————————————————————————

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

ருஷபங்களுடைய வளர்ந்த கழுத்துக்களும் கொம்புகளும் முறியும்படிக்கு ஈடாக நப்பின்னை பிராட்டி பக்கலிலே உண்டான
ஆசையைப் பின் சென்று -அந்த ருஷபங்களுடைய கழுத்தைத் திருத்திப் பொகட்டவனாய் தன்னோடு ஒத்த நல்ல பருவத்தை யுடைய
இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தலைவனாகையாலே வந்த செருக்கை யுடையவனான கிருஷ்ணன்
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு சத்ருவாய் இருக்குமவன் என்று ஆஸ்ரயித்தேன் –

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் –
அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் –
இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ)

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறி பட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறி யிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக் கையாலே கீறியெடுத்து அளித்த–

ஒண் குருதி -அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள் அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ருஷபங்கள் ஏழையும் ஜெயித்துப் திருகிப் பொகட்ட என் ஸ்வாமியான கிருஷ்ணன் –
நெருப்புப் போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத வடிவை யுடையனாய் –
செருக்குப் போக்கு வீடாக ருஷபத்தை மேற்கொண்டு நடத்தக் கடவனுமான ருத்ரன் முன்பு
தலை யறுக்கிற இடத்தில் அனுமதி பண்ணி இருந்து
பின்பு குபிதனாய்க் கொண்டு ப்ரஹ்மா -கபாலீ த்வம் பவிஷ்யசீ –என்று சபிக்க

சாப உபஹதனாய்க் கையும் தலையோடுமாய்க் கொண்டு இரந்து திரியும்படி மறுபாடு உருவப்பட்ட வந்தேறியான சாபத்தை
கழுகும் பருந்தும் பாறு -என்கிற பஷி விசேஷமான அவை மேல் விழுந்து ஜீவித்த தலையோடு வாயளவும் நிறைந்து
ஸ்புடிதம் பஹுதா யாதம்-என்னும்படி –
சில்லுச் சில்லாக வெடித்துப் போம் படி குவிந்த அழகிய திருக் கையாலே
திரு மேனியில் ஒரு பிரதேசத்தைக் கீறி வாங்கித் தெறித்த -அழகிய ரத்தத்தால் கையில் நின்றும் தவிழ்ந்து போம்படி கண்ட
இவ்வர்த்தத்தைச் சொல்ல இழி யில் ஒரு மஹா பாரதத்தோடு ஒக்கும் –

ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –
அங்கை என்றது பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கை என்றபடி –

ஒண் குருதி -என்றது
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திரு மேனியில் நின்றும்
உண்டானதாகையாலே அடிக் கழஞ்சு பெற்ற குருதி -என்றபடி –

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பரு மொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –
உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –

உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை
இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

கதையும் திரு மொழியுமாய் நின்ற என்கிற இடத்தில்
கதை என்று இதிஹாசாதிகளையே சொல்லிற்று ஆகவுமாம் –

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப் பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

—————————————————————————————————–

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன்)

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

ந நமேயம் (வணங்க லில் அரக்கர் )என்னும் படி -ஸ்வாதந்தர்யத்தால் -தலை வணக்கம் அற்ற நான் உன்னுடைய அழகிய திருமேனியைக் கண்டு
ஆழம் கால் பட்டு வேறு அற்ற மரம் போலே (சேஷத்வ )ஸ்வரூப அனுரூபமாக விழுந்தேன் –

அடிமை செய்யா விடில் தரிக்க ஒண்ணாத ப்ரேமத்தை உடையனாய்க் கொண்டு வகுத்த சேஷியான உன்னுடைய சிவந்த
திருவடிகளின் மேலே எடுத்துக் கை நீட்டக் கண்ட கையாலே அழகிய தாமரைப் பூக்களை அழகு பெறச் சாத்தினேன் –

எழுந்து அருளா நின்றால்-முன்னே சேவித்து -முன்புள்ள அழகைக் கண்டு களித்து
உன்னை ஸ்தோத்ரம் பண்ணிப் புக்கு அருளுகிற இடத்திலே
பின்புள்ள அழகைக் கண்டு கால் வாங்க மாட்டாதே அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸம்ருத்தி இப்படி மாறாதே
செல்ல வேணும் என்று புகழ்ந்து மங்களா சாசனம் பண்ணி
இப்படி அனுபவித்து வாழுகை ஆகிற இப்புருஷார்த்தத்தில் வியவஸ்த்தினன் ஆனேன் –

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

அங்கன் இன்றிக்கே –
புகலிடம் -என்கிறது –
அவதார சமாப்தியிலே போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய்
அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்கிறபடியே –
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் -என்னுமதிலே அத்யவசித்தேன் என்னவுமாம் –
இது திரு மலை நம்பி நிர்வாஹம்-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————————————

பகவத் ப்ராவண்யம் பெற்ற அளவு அமையும் -(அன்பால் பைங்கமலம் திருவடிகளில் சாத்தினேன் -என்றாரே கீழே )
அத்தை விட அநர்த்தா வஹமான விஷயாந்தரங்களில் -தோஷத்தை அனுசந்தித்து அருசி பிறக்கையே வேண்டுவது என்கிறார் –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப் பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

*நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடே ஒரு மிடறான நல்ல நெஞ்சே –
இது நிலை நிற்கும் –
போக்யமாய் இருக்கும் -என்று நாட்டார் பிரமிக்கிற ஆகாரம் இன்றிக்கே –
பகவத் பிரசாதத்தாலே தரிசிக்கும் அளவில் அத்ருஷ்ட தோஷ துஷ்டமான இந்த சம்சாரம் ஆகிறது –
அல்ப அஸ்திரத்தவாதி தோஷ தூஷிதமான இவ்வாகாரத்தோடே கூடின இதுவே கிடாய்

முன்பு அநாதியான காலம் எல்லாம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே
நாம் மாறுபாடுருவ துக்க அனுபவம் பண்ணிப் போந்தது இது கிடாய் –

வகுத்த சேஷியான நாராயணனுடைய குணாதிகளுக்கு (ஆதி -சேஷ்டிதங்கள் )வாசகமான திரு நாமங்களை -நிரந்தரமாகச் சொல்லி
சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய பர்யந்தத்திலும் பிரவேசியாமைக்கு காரணமும்
அஸ்திரத்தவாதி (ஆதி அல்பம் )தோஷங்களால் த்யாஜ்யம் என்னும் ஆகாரம் பிரத்யஷிக்கலாம் படி இருக்கிற இஜ் ஜன்ம சம்பந்தம் கிடாய் –

மேல் எழத் தோற்றுகின்ற நன்மையில் பசை இல்லை –
தோஷமே வேஷம் என்று இத்தைத் தப்பாத படி காண வல்லை யாகில்
நாம் சொன்னது ஒக்கும் என்னும் இடத்தைக் கண்டு கொள்ளு –

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————————–

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய  மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறு கிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

நிர்ஹேதுகமாக அவனாலே அங்கீ க்ருதனான நான் இந்திரிய த்வாரா விட்டு நீட்டிக் காண்கை யன்றிக்கே
ஸ்வப்ன கல்பமாய் –
அதிலும் விசத தமமான ஸ்வ அனுபவ தசையில்
அழகிய திரு மேனியைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

அப்படிப்பட்ட அழகை யுடையவன் திருக் கையிலே பிரதி பக்ஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள
தேஜோ ரூபமான திரு வாழியைக் கண்டேன் –

துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும்
துரத்தி விட்டுப் பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் –
துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும் செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளியவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

——————————————————————————————-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் –
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

பெரு மிடுக்கராய்-ஒளி விடுகிற எயிற்றை உடையருமாய் சாயுதருமான ஆசூர பிரக்ருதிகள் நசிக்கும் படியாகவும்
தான் நெருங்கின இடத்திலும் பிரிந்து-திரிந்து – போகாத படி கடி நோத்தரமாய்-ஒளி விடுகிற மந்த்ர பர்வதம் மத்தாகவும்
நெடும் போது இடவாய் வலவாய் சுற்றிக் கடைகிற அளவிலும் -அற்றுப் போகாதபடியான மிடுக்கையும்
மலையோடு தேய்ப் புண்கையாலே வந்த ஒளியையும் உடைய வாஸூகியாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றிக்
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக கடலைக் கடைந்து அருளினவன் சர்வர்க்கும் வேர்ப் பற்றான

தன் திறத்தில் நலிய வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்ட
சர்வ சேஷி கிடீர் –

இத்தால் தம் விரோதியைப் போக்கித் தம்மை எழுதிக் கொண்ட படி சொல்லுகிறது –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப்பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

——————————————————————————————————-

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூ மண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப் பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

சர்வத்துக்கும் ஸ்வாமி களாக முடி சூடி -பரப்பை யுடைத்தான பூமியை -சிறியதை பெரியது நலியாத படி ரக்ஷித்து
நம் கண் வட்டத்தில் குதிரை முதுகே படை வீடாக நடத்திச் செல்கின்ற ராஜாக்களும் -போக்யதை பொருந்தி இருந்துள்ள சிவந்த
தாமரைப் பூவைத் திரு நாபியிலே யுடையனாய் -(பூ புஷ்ப்பம் என்றும் இனிமை -போக்யதை என்றும் )

அத்தாலே சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுடைய சிவந்த திருவடிகளிலே
ஜென்மங்கள் தோறும் குளிர்ந்த தாமரைப் பூ முதலான புஷபங்களைச் சாத்தி ஆராதித்த
ஆஸ்ரிதர் கிடீர் -ஏய்ந்தாருடைய (ப்ரஹ்மாதிகளுடைய )தமர் கிடீர் -என்னுதல் –
செங்கமலப் பூ மேவும் நாபியான் -என்னவுமாம் –

பூ வேகும் செங்கமல நாபியான் -என்று பாடமான போது -(எதுகைக்கு இது பொருந்தும் )
பூக்கள் தள்ளும் படியான (வெட்கப்பட்டு ஒதுங்கும் படி )செவ்வியை யுடைய
கமலத்தை நாபியிலே உடையவன் என்று பொருளாகக் கடவது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

(ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

——————————————————————————————————–

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி
ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ

இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம் )

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு -பெருமாள் கோதண்ட பாணி சக்ரவர்த்தி திரு மகன் –இருப்பிட மென்பர்.

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —
தஞ்சை மா மாணிக் கோயில் -திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதானமான பரம பதத்தோடே கூட என்னலாம் படியான கோவில்
திருத் தண் கால் -ஸ்ரீ வைஷ்ணவர் தங்களுக்கு சர்வ ஸ்வம்மாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் -ஆஸ்ரிதரான புண்டரீகாதிகள் தங்களுக்கு உத்தேச்யமாக அனுசந்தித்து இருக்கும்
தறைக் கிடைக் கிடக்கும் திருக் கடல் மல்லை -எங்கள் மூவரோடும் ஓக்க நெருங்கின திருக் கோவலூர்
அரணான மதில்களை யுடைத்தாய் திரு மழிசைப் பிரான் உகந்த திருக் குடந்தை –

ஆகிற இவ்வோ திவ்ய தேசங்கள் எல்லாம்
பிரதி பக்ஷத்தை எய்து விழ விட வல்ல என் ஸ்வாமி யான தசாரதாத் மஜனுக்கு வாசஸ் ஸ்தானமாக
அறிவுடையார் சொல்லா நின்றார்கள்-

ஏ வல்ல வெந்தை-
எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி -என்றபடி –

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.