யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
——-
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–
அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –
சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்
நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்
பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-
பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-
பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்
—————-
இனி மேலே கத்யமாகவே அருளிச் செய்கிறார் –
3–அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல
(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)
உலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் புரியும்படி நற் பொருளை நிலை நிறுத்து வதற்காக வேதக் கூட்டங்Thaliaதலை எனப்படும் உப நிஷத்துக்களில் நின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப் படுகிறது
ஜீவாத்மா அதன் மெய் நிலை பரமாத்மா அதன் மெய் நிலை இவற்றை அறிந்து வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்து அந்தப் பரம புருஷானின் இரு திருவடிthyaanaத்யானம் அர்ச்சனம் வணக்கம் இவைகளை அவனுடைய உகப்புக்காகச் செய்து அவனை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும் –
உபநிஷத்துக்களின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப்படுகிறது –
யாதாத்ம்ய ஞானமும் – வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப் பிடித்து பரம புருஷனின் திருவடித் தாமரைகளில் த்யானம் அர்ச்சனம் நமஸ்காரம் இவற்றை பகவத் ப்ரீதி அர்த்தமாகக் -கைங்கர்ய பரமாக -அவன் உகப்புக்காகச் செய்து இத்தையே ஸ்வயம் பிரயோஜனமாகக் கொள்ள வேண்டும்
அஸ்ய ஜீவாத்மநோ அநாத் யவித்யா ஸஞ்சித புண்ய பாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ ப்ரவேஸ க்ருத தத் தத் ஆத்மாபிமான ஜெனித அவர்ஜனீய பவபய வித்வம்ஸநாய தேஹாதி வ்யதி ரிக்த ஸ்வரூப -தத் ஸ்வ பாவ -தத் அந்தர்யாமி பரமாத்ம -தத் ஸ்வபாவ -தத் உபாஸன-தத் பல பூதாத்ம ஸ்வரூப ஆபிர்பாவ பூர்வக அனவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே ப்ரவ்ருத்தம் வேதாந்த வாக்ய ஜாதம்
தத்வமஸி
அயமாத்மா ப்ரஹ்ம
ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மான் அந்தரோ யமயதி ஸதே ஆத்ம அந்தர்யாம் யம்ருத
ஏஷ –ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண
தமேதம் வேத அநு வசனனேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேந தாநேந தபஸா நஸகேந
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
தமேவம் வித்வானம் ருதமிஹ பவதி நான்யப்பந்தா அயனாய வித்யதே –
இத்யாதிகம்
இந்த ஜீவாத்மா உடன் தோன்றிய அசேதனப் பொருள்கள் அதன் ஆரம்பம் இல்லாத் தொடர்புகள் -புண்ய பாபங்கள் -அதன் அடியான ஜன்மங்கள் -ப்ரம்மா முதல் தேவர் மனிதர் விலங்கு ஸ்தாவரம் முதலான நான்கு விதப் பிறப்புக்கள்
அதனால் ஏற்பட்ட அந்தந்த சரீரங்களையே ஆத்மாவாக நினைத்து அதனால் ஏற்பட்ட பிறவிச் சுழல் பயத்தைப் போக்கி -உடலின் நின்றும் வேறுபட்ட ஆத்மா அதன் மெய் நிலை அதன் மெய்க்குணம் -அதற்க்கு உள்ளுறைவானாயுள்ள பரமாத்மா -அதன் மெய்நிலை குணம் இவற்றையும் அறிasthmஆத்ம மெய் நிலை எய்தி குறைவற்ற ப்ரஹ்மானந்தம் அடைதல் எனச் சொல்ல வந்தது வேதாந்தம்
ஆப்நோதி -ப்ரஹ்மத்தை அடைகிறான் -ஆனால் ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்ற அத்வைதிகளின் கொள்கை தவறாகக் கூறுகிறது
————–
4–ஜீவாத்மந ஸ்வரூபம்
தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷ ரூப நாநாவித பேத ரஹிதம்
ஞான ஆனந்த ஏக குணம்
தஸ்யை தஸ்ய கர்ம க்ருத தேவாதி பேத வித்வஸ்தே ஸ்வரூப பேதோ வாசா மகோசர ஸ்வ சம்வேத்ய
ஞான ஸ்வரூபம் இத்யேதாவ தேவ நிர்தேஸ்யம் தச்ச ஸர்வேஷாம் ஆத்மாநாம் சமாநம்
(மோக்ஷ தசையில் ஸ்வரூப பேதம் மட்டுமே இருக்கும் -எல்லா ஆத்மாக்களும் சமம் -தேவாதி பேத ஆகாரங்கள் போன பின்பும் வெவ்வேறே ஜீவன்)
(ஸ்வ சம்வேத்ய-ஸ்வயம் வேத்ய -ஸ்வயம் ப்ரகாஸம்)
ஜீவாத்ம மெய் நிலை–தேவ மனித விலங்கு ஸ்தாவரம் என்ற நான்கு பிறப்புகளில் தான் ஏற்று இருக்கும் அசேதன பொருளின் வேறுபாட்டுக்கு ஏற்ப பற்பல விதமாய் இருக்கும்
குணம் ஞானமும் ஆனந்தமும் எப்பொழுதும் கொண்டிருக்கும் -அந்த அப்படிப்பட்ட ஜீவாத்மாக்களுக்கு வினைகளால் ஏற்பட்ட புண்ய பாபங்களுக்கு ஏற்ப தேவர் முதலிய உருவ வேறுபாடு சொற்களுக்கு அடங்காது –
தானே அறியப்படுவது
ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமுமே மெய் நிலை என்பது வெளிப்படை -இதனால் ஆத்மாக்கள் அனைத்தும் ஒருபடித்தானவை –
——
5-ஏவம் வித சித் அசித்தாத்மக பிரபஞ்சஸ்ய -(ஸ்ருஷ்டிக்கப்பட்ட ) உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தன ஏக ஹேது பூத
ஸமஸ்த ஹேய பிரத்ய நீக தயா-அநந்த கல்யாணைக தான தயாஸ(ஏக தான தயா அனைத்துக்கும் ஏக ஆஸ்ரயம் இவனே )-(இரண்டாலும் விலக்ஷணன் )
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
சர்வாத்ம
பர ப்ரஹ்ம
பரஞ்சோதி
பரமாத்மா
சதாதி சப்த பேதைர் நிகில வேதாந்த வேத்யோ பகவான் நாராயண புருஷோத்தம
இத் யந்தர்யாமி ஸ்வரூபம்
(ஸ்வரூபம் விளக்கி மேல் ஸ்வ பாவம்)
தஸ்ய ச வைபவ ப்ரதிபாதன பரா பேத ஸ்ருதய
ஸ்வ இதர ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாதாந்தர ஆத்ம தயா நிகில நியமனம்
தத் சக்தி -ததம்ச -தத் விபூதி -தத் ரூப -தத் சரீர -தத் தனு -ப்ரப்ருதிஸ் சப்தை தத் சாமாநாதி கரண்யேந ச ப்ரதிபாத யந்தி
(சக்தி ரூபம் -அகிலம் ஜகத்
அம்சம் -அம்சாதிகரணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம் -branch office போல்
விபூதி -விபூதிமான்
ரூப -சரீர -தனு)
இவ்வாறு சேதன அசேதன பொருள்கள் கலந்த பிரபஞ்சத்தின் படைப்பு காப்பு அழிப்பு ஆகிய பிறவிச் சூழலில் தள்ளும் தாழ்ந்த குணங்களுக்கு எதிர்த்தட்டாக முடிவற்ற குணங்களுக்கும் ஆனந்தத்திற்கும் இருப்பிடமாய்
தன்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பொருள்களிலும் சிறந்தவனாய்
அளவற்ற நற்குணங்கள் கூட்டங்கள் உள்ளவனாய்
ஸர்வாத்ம
பர ப்ரஹ்மம்
பரஞ்சோதி
பரதத்வம்
பரமாத்மா
ஸத்
என்று பலவகையான சொற்களால் எல்லா வேதங்களாலும் குறிப்பிடப் படுபவனாய் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீSakthiசக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவனாய் ஈர் ஏழு பதினான்கு உலகுகளையும் பரமபதத்தையும் உடையவன்
நாராயணன் புருஷோத்தமன் என்னும் சொற்களால் அறியப்படுபவன்
இப்படிப்பட்ட சிறப்புகளால் கூறப்படுவது ஜீவாத்மா பரமாத்மாவை வேறு படுத்திக் கூறும் வேதங்களுக்கு ஒத்து இருக்கும்
அவ்வாறே அந்த சக்தி -அந்த அம்சம் -அந்தச் செல்வம் -அந்த உருவம் அந்த உடல் என்று கூறும் சொற்கள் ஸாமா நாதி கரண்யத்தால் அவனுடைய ஆளுமையையே குறிக்கின்றன
ஆகவே எல்லாச் சொற்களும் அவனுடைய பெருமையைக் கூறுகின்றன என்பதில் முரண் இல்லை
————
6-தஸ்ய வைபவ ப்ரதிபாதன பராணாம் ஏஷாம் சாமாநாதி கரண்ய அதீநாம்
(ப்ரஹ்மம் வைபவம் காட்டும் சாமானாதிகார பரமான ஸ்ருதி வாக்கியங்கள் -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சேஷ சேஷி -நியந்தரு நியாம்ய சரீரி சரீர- ஆதார ஆதியே பாவம்-ஒன்றும் ஒன்றியே இருக்கும்-
ஒன்றும் தேவும் யாதும் இல்லா அன்று –)
விவரணே ப்ரவ்ருத்தா கேசந(அநாதரணீயம் -ஐக்யம் சொல்லி மேல் மேல் )
நிர்விசேஷ ஞான மாத்ரமேவ ப்ரஹ்ம–(சின் மாத்ர -ஒன்றை விலக்க மாத்ர பத பிரயோகம் -சித் ஏவ -வேறே ஒன்றை விலக்கும்
சித் -ஞானம் ஒன்றே -ஞாதா -ஜேயமும் இல்லை )தச்ச நித்ய முக்த ஸ்வ பிரகாசம் அபி
தத்வமஸ்யாதி சாமாநாதி கரண் யவகத ஜீவ ஐக்யம்(தத் ஸப்த வாசியான ப்ரஹ்மம்- த்வம் ஸப்த வாசியான ஸம்ஸாரி ஜீவன் உடன் ஐக்யம் )
ப்ரஹ்மைவ அஞ்ஞம் முச்யதேச (அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம் ப்ரஹ்மமே ப்ரஹ்மம் ஏவ பத்த ஜீவன் முக்த ஜீவன் ) நிர் விசேஷ சின்மாத்ராதி ரேகி
ஈஸ ஈஸிதவ்ய (பதார்த்த தாரதம்யங்களுக்கு உப லக்ஷணம் )அநந்த விகல்ப ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஜகத் மித்யா(கயிறு பாம்பு யாதாத்ம்ய ஞானத்தால் அறிவது போல் இதம் ப்ரஹ்மம்-ஞான நிவர்த்ய பதார்த்தம் மித்யா -ஞான மாத்திரம் மோக்ஷம் அவர் பக்ஷம் )
கஸ்சித் பத்த கஸ்சித் முக்த இதீயம் வ்யவஸ்தா ந வித்யதே(பந்தப்படுவதும் விடுபடுவதும் மித்யா-வ்யவஸ்தையும் மித்யா )
இத பூர்வம் கேசந முக்தா இத்யயம் அர்த்தோ மித்யா
ஏகமேவ சரீரம் ஜீவவத் நிர் ஜீவாநி தாராணி சரீராணி(ஓன்று மட்டுமே ஜீவன் உள்ள சரீரம் -மற்றவை ஜீவன் இல்லா சரீரங்கள்-நாநாவித தோற்றம் வாசனையால் -அநாதி )
தச்ச சரீரம் கிமிதி ந வ்யவஸ்திதம் ஆசார்யோ ஞானஸ் யோபதேஷ்டா மித்யா -ப்ரமாதா மித்யா –
ஸாஸ்த்ரம் ச மித்யா -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் ச மித்யா-
ஏதத் சர்வம் மித்யா- பூதேநைவ சாஸ்த்ரேணாவகதம் -இதி வர்ணயந்தி(இப்படி சிலர் வியாக்யானம் பண்ணுகிறார்கள் )
(ஞானம் -ஆச்சார்யன் இரண்டு இருக்க முடியாதே
ஞானத்துக்கு ஆஸ்ரயமான ஆச்சார்யன் -அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமான சிஷ்யன்-
ப்ரமாதா ப்ரமாணம் ப்ரமேயம் அனைத்தும் மித்யா-தத்வமஸி வாக்கியமும் ப்ரஹ்ம வ்யா வ்ருத்தி அதுவும் மித்யா )
அந்தப் பரமாத்மாவின் பெருமையைக் கூறுவதையே பொருளாக யுடைய ஸாமாநாதி கர்ணயத்தை விவரிக்க வந்த சிலர்
ப்ரஹ்மம் என்பது குணம் ரூபம் விபூதிகள் அற்ற தன்னொளி கொண்டது மட்டும் -அதற்கு நித்யர்கள் முக்தர்களைப் போல தன்னொளி கொண்டு இருந்தாலும் தத்வமஸி என்ற ஸாமாநாதி கரண்யத்தால் சொன்ன
ப்ரஹ்ம ஜீவ ஒருமை -ப்ரஹ்மமே அறியாமை நிறைந்தது -பிறவிச் சூழலில் கட்டுப்படுகிறது -அதினின்றும் விடுபடுகிறது -என்று பொருள் படுகிறது
குணங்கள் அற்ற ஞானம் மட்டுமே ப்ரஹ்மமானால் -ஆள்பவன் -ஆளப்படுபவன் -பிரபஞ்சம் முதலிய அநேக பிரிவுகளை யுடைய யுலகம் எல்லாம் பொய்
கட்டுப் பட்டவன் விடு பட்டவன் என்ற ஒழுங்கு இல்லை
இதற்கு முன் சிலர் முக்தி அடைந்தார்கள் iஎன்பது இல்லை
ஒரே சரீரத்தில் மட்டும் ஜீவன் இருக்கிறது -மற்றவை ஜீவன் அற்றவை -அந்த ஜீவனுடைய உடல் எது என்பது வரையறுக்கப் படவில்லை –
ஞானத்தை உபதேசிக்கும் ஆச்சார்யனும் அதை அறியும் சீடனும் பொய் -அறிய முயலுபவனும் பொய் -ஸாஸ்த்ரங்களும் அதனால் கிடைக்கும் அறிவும் பொய்
இது இவ்வாறு இருப்பது பொய்யான ஸாஸ்திரத்தாலேயே அறியப்படுகிறது -என்று வர்ணிக்கின்றனர்
——————–
அத பாஸ்கர பஷ சங்க்க்ஷேபம்
7-அபரே து–அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணோ பேதாமபி ப்ரஹ்ம -ஏதேனைவ ஐக்யாவ போதேந முச்யதே
நாநாவித அமல ரூப பரிணாம ஆஸ்பதம் ச இதி வ்யவஸ்திதா
(ப்ரஹ்மம் நிர் விசேஷம் அல்ல -ஜகத்தும் -மித்யை அல்ல -சத்யம் என்பர்-உபாதி -கல்பித்து -புண்ய பாப கர்மாவே உபாதி இவையும் சத்யம் மித்யை அல்ல
உபாதியால் ப்ரஹ்மமே பரிணாமம் அடைந்து அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமாகி நாநா விதமாக தோன்றுகிறது என்பர்-ஏகமேவ அத்விதீயமாக இருக்க -உபாதி -ஸ்வா பாவிக தர்மத்துக்கு விபாகம் உண்டாக்கும் -முக்த தசையில் ஐக்யம் என்பர் -)
பாஸ்கரர் கொள்கைக்குச் சுருக்கம்
மற்றும் சிலர் -பாவங்கள் ஒட்டாத நற் குணங்களை யுடையது ப்ரஹ்மம் -என்று வேதம் சொல்லும் என்றாலும் -கூட உயிர் ப்ரஹ்ம பலன்கள் தொடர்பு முதலியவற்றோடு கட்டுப்படுதல் விடுபடுதல் முதலான பலவித குறைகளுடன் கூடி பரிணாமத்தை அடைகிறது என்று கூறுகிறார்கள்
பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவற்றைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாக இருப்பினும் பொருள் ஒன்றைக் கொள்வதாக ஸாமா நாதி கரணம் என்று வடமொழி இலக்கணத்துக்கு தமிழ் இலக்கணத்தில் அன் மொழித் தொகைக்கு நெருங்கியது –
————
அத யாதவ பிரகாச பஷ சங்க்க்ஷேபம்
8–அந்யே புந ஐக்யாவ போத யாதாத்ம்யம் வர்ணயந்த
ஸ்வாபவிக நிரதிசய அபரிமித உதார குண சாகரம் ப்ரஹ்மைவ -ஸூர நர திர்யக் ஸ்தாவர -நாரகி ஸ்வர்க்ய பவர்கி –
சேதனைக ஸ்வபாவம்– ஸ்வபாவதோ விலக்ஷணம் அவிலக்ஷணஞ்ச வியதாதி நாநாவித பரிணாம
ஆஸ்பதம்ச இதி ப்ரத்யவதிஷ்டந்தே
(நாரகி ஸ்வர்க்ய பவர்கி –நரகம்-ஸ்தான விசேஷம் இல்லை -நரக அனுபவம் செய்யும் ஆத்மா -நாரகி
பாப பல ரூப துக்க அனுபவம் செய்பவனாகவும் -புண்ய பல ரூப இன்ப அனுபவம் செய்பவனாகவும்
அபவர்க்கி -இதுவும் ஸ்தான விசேஷம் இல்லை -அனுபவத்தை சொன்னவாறு
ப்ரஹ்மமே ஸ்வரூபேண பரிணாமம் அடைகின்றது என்பர் )
யாதவ பிரகாசர் கொள்கைச் சுருக்கம்
வேறு சிலர் -தத்வமஸி போன்ற வாக்யங்கள் கலத்தலை எவ்வாறு உள்ளபடி சொல்வதாக வர்ணிக்கிறார்கள் என்றால்
இயற்கையாகவே ஒப்புயர்வற்ற அளவற்ற மேன்மையான குணங்களின் கடலாக இருக்கும் ப்ரஹ்மமே மனித விலங்கு ஸ்தாவர -நரகில் உழலும் -ஸ்வர்க்கத்தில் மகிழும் -முக்தியடைந்த அறிவின் தன்மையை அடைகிறது
இயற்கையாகவே சிறந்த தாழ்ந்த ஆகாயம் முதலானவைகளாக மாறுதலை அடைகிறது -என்று கூறுகிறார்கள் –
—————
அத சங்கர பஷ ப்ரதிஷேபம்
9–தத்ர பிரதம பக்ஷே ஸ்ருத்யர்த்த பர்யா லோசன பரா-துஷ் பரிஹராந் தோஷாந் உதாஹரந்தி
பிரகிருத பராமர்சி தச் ஸப்தாவக தஸ்ய ப்ரஹ்மண ஸ்வ சங்கல்ப கிருத ஜகத் உதய விபவ லயாதய
(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் வாக்கியம் )தத் ஐஷ்த பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாரம்ய
சந் மூலா (ஸத் ப்ரஹ்மமே மூலமாகக் கொண்டு )ஸோம்யேமாஸ் சர்வாஸ் ப்ரஜாஸ் சதாயதநாஸ் (ஆயதனம் இருப்பிடம் )சத் பிரதிஷ்டாஸ் (அதிலேயே லயம் )இத்யாதிபிஸ் பதைஸ்
ப்ரதிபாதிதாத் சம்பந்தி தயா பிரகாரணாந்தர நிர்திஷ்டா(இதே போல் வேறே பிரகரணங்களிலும் உண்டே )
சர்வஞ்ஞதா -சர்வ சக்தித்வ-(ஸங்கல்ப மாத்ரத்தால் செய்யும் சக்தி )சர்வேஸ்வரத்வ (நியந்த்ருத்வம் )-சர்வ பிரகாரத்வ -(சரீர சரீரீ பாவம் )சமாப்யதிக நிவ்ருத்தி -சத்ய காமத்வ -ஸத்ய ஸங்கல்பத்வ –
சர்வ அவபாசகத்வாத் (இவன் அதீனத்தாலே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள் )யநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா
அபஹதபாப்மா இத்யாதி அநேக வாக்யாவகத் நிரஸ்த நிகில தோஷதா ச சர்வே தஸ்மிந் பக்ஷே விஹன்யந்தோ –(நிர்விசேஷ ப்ரஹ்மம் ஸித்திக்காதே )
சங்கரர் கொள்கை சுருக்கம்
வேதப் பொருள்களை முன்னும் பின்னும் நன்கு ஆராய்ந்தவர்கள் –ஆளவந்தார் போன்றோர் -அந்த முதல் பக்ஷத்தில் உள்ள விலக்க முடியாத குற்றங்களை கீழ்க் கண்டவாறு எடுத்துக் காட்டுகிறார்கள்
இந்த இடத்தில் தத் என்று குறிப்பிடப் படும் சொல் ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அந்தப் ப்ரஹ்மம் தானே செய்ய விரும்பியதாக உலகங்களின் தோற்றம் பாதுகாப்பு அழிவு முதலியவை ஆகின்றன –
நான் பலவாக ஆவேன் -என்று அது நினைத்தது -எனத் தொடங்கி -எல்லாம் அந்த ஸத் -தை ஆதாரமாகக் கொண்டவை அதனிடமே நிலை பெறுபவை -என்று பல சொற்களால் சுட்டிக் காட்டப்படும் -தத் -அது என்ற பதம் இவ்விடத்தில் அதனுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் அறியும் தன்மை யுடையது
எதையும் செய்யும் ஆற்றல் உடையது
எல்லாவற்றையும் ஆளும் தன்மை படைத்தது
எல்லாவற்றையும் சூழ்ந்து உள்ளது
தனக்கு ஒப்பும் மிக்கும் அற்றது
தன் ஒளியால் பிரகாசிப்பது போன்ற ஒப்பு மிக்கும் அற்ற -அளவற்ற கல்யாண குணங்களை யுடையது என்பது விளங்குவதாலும்
பாபங்கள் சிறிதும் அற்றது என்று பல இடங்களிலும் தாழ்ந்த குணங்கள் இன்மையைக் காட்டுவதாலும்
மேற்கூறிய பக்ஷம் அழிக்கப் படுகிறது –
ஸர்வ வேதாந்தப் ப்ரத்யயம் -ஸர்வ ஸாகாப் ப்ரத்யயம்
ஜகத் அஜகத் ஜகதா ஜகத் -விட்ட விடா விட்டு விடா
ஒன்றும் தேவும் -ஈடு வியாக்யானம் ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -ஸ்ருதி விளக்கம் உண்டு –
———–
10-அத ஸ்யாத் -(மேல் அத்வைதிகள் வாதம் )-உபக்ரமேபி (ப்ரகரண ஆரம்பத்தில் )ஏக விஞ்ஞாநேந-சர்வ விஞ்ஞான முகேன காரணஸ்யைவ சத்யதாம் ப்ரதிஜ்ஜாய(இது அனுப பன்னம் என்று சொல்ல மூன்று த்ருஷ்டாந்தங்கள்-ம்ருத் பண்டம் -நாம ரூபங்கள் அசத்தியம்-அழியுமே – மண் என்பதே ஸத்யம் -ஸ்வரூப மாத்ரம் ஸத்யம்- இதர ஸர்வம் மித்யா )
தஸ்ய காரண பூதஸ்யைவ சத்யதாம் விகார பூதஸ்ய ச அசத்தியதாம் ம்ருத் திருஷ்டாந்தேந தர்சியித்வா ஸத்ய பூதஸ்யைவ ப்ரஹ்மண
சதேவ ஸோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதி(சத்தாகவே இருந்தது விஜாதீயம் இல்லை -ஒன்றாகவே இருந்தது ஏகமேவ -சஜாதீயம் இல்லை -அத்விதீயம் ஸூவ கத பேதமும் இல்லை )
சஜாதீய விஜாதீய நிகில பேத நிரசநேன–நிர்விசேஷ தைவ ப்ரதிபாதிதா –
ஏதச் சோதகாநி ப்ரகாராணந்தர வாக்ய அந்யபி
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
விஞ்ஞானம் -ஆனந்தம் -இத்யாதீனி சர்வ விசேஷ ப்ரத்யநீகைககாரதாம் போதயந்தி
ந ச ஏகாகார அவபோதநேபி பதாநாம் பர்யாயதா ஏகத்வேபி வஸ்துன சர்வ விசேஷ ப்ரத்ய
நிகாகாரத்வோபஸ்தாபநேந சர்வபதானாம் அர்த்வத்வாத் இதி
(ஞான ஸ்வரூபம்-ஸ்வயம் பிரகாசம் சேதனம் ஸஜாதீயம் -விஜாதீயம் அசேதனம் -ஸ்வ கத குணங்கள்-விசேஷணங்கள் இத்யாதி அனைத்துமே மித்யா
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-சத்யம் ப்ரஹ்மம் ஞானம் ப்ரஹ்மம் அநந்தம் ப்ரஹ்மம் -மூன்று ப்ரஹ்மம் ஆகும் என்பர் ஏகத்வம் போகும்
வேறுபட்டது என்று சொல்லவே வந்தது -என்பர்-விசேஷணமாகக் கொள்ளாமல் ஸ்வரூப பரமாகக் கொண்டு வியாக்யானம் செய்வர் –
நிர்விகாரம் சத்யம் -அஜடம் வேறுபட்டது -அளவு பட்டவையில் வேறு பட்டது -என்பர் )
(நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரவத்யம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
கள -அவயவம்- அவயவங்கள் இல்லாமல் -அதனால் கார்யங்கள் செய்யாமல் -ப்ரவ்ருத்தி இல்லாமல்-குணங்கள் இல்லாமல்
நிரவத்யம் -நிரஞ்சனம்-கர்ம சம்பந்தமும் பலமும் அற்ற குறை இல்லாமல் -திர்யக் கர்ம சம்பந்தம் இல்லாமல் கர்ம பல சம்பந்தம் மட்டுமே கொண்டது -)
அது அவ்வாறு அல்ல
துவங்குகையிலேயே எந்த ஒன்றை அறிவதால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -அதைக் காரணமாகக் கொண்டு உறுதிப்பட்டு காரணப் பொருள் ஒன்றே உண்மை -அதின் நின்றும் வெளிப்படும் கார்யப் பொருள்கள் உண்மையல்ல -என்பதை
மண் -அதின் நின்றும் செய்யப்படும் குடம் காரணத்தைக் உண்மையானது ப்ரஹ்மம் மட்டுமே –
குழந்தாய் அந்த மெய்ப்பொருள் மட்டுமே முதலில் இருந்தது -தனியாக இருந்தது -இரண்டாவது ஒன்றும் இல்லை -என்று ஸஜாதீய பேதம் -ஒருபடிப்பட்ட மாறுபாடுகள் -பல தென்னை மரங்கள் இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மரத்தை மற்றைய தென்னை மரங்களில் நின்றும் வேறுபடுத்துவது –
விஜாதீய மாறுபாடான வேறுபாடு -பல மரங்கள் இருப்பினும் மா மரங்கள் இல்லை புளிய மரங்கள் உள்ள தோப்பு என்னுமா போல்
ஸ்வகத பேதம் -ஒரு பொருளின் உறுப்புக்கள் தம்முள் மாறுபடுவது -தலை கால் கண் போன்று அடிமரம் வேர் பூ போன்று -அனைத்து பேதங்களையும் நீக்கும் முகமாய் அது நிர் விசேஷம் குணங்கள் அற்றது என்று கூறப்பட்டு இருக்கிறது
இது போன்ற ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லும் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்பதற்கு ப்ரஹ்மம் அஸத்யம் அற்றது அஞ்ஞானம் அற்றது அளவுபட்டது அன்று என்றும்
அவ யவம் அற்றது செயல் அற்றது குணம் அற்றது எதிலும் ஒட்டாதது என்றும்
அறிவு நிறைந்தது ஆனந்தம் உள்ளது போன்ற குணங்களைக் கூறும் பதங்களுக்கு எதிரிடையானது என்றும் பொருள் கூறப்பட்டு இருக்கிறது
இவ்வாறு கூறுகையில் நற் குணங்களைச் சொல்லி அதற்க்கு எதிரிடையான குணம் இல்லை என்று கூறுவதால் ஒரு பொருள் பன் மொழி ஆவதால் அவற்றைத் திரும்பத் திரும்பிச் சொல்லும் குற்றம் ஏற்படுகிறது
ஒரு முறை சொன்னால் நிறைவேறுமே என்ற வினாவிற்கு
பொருள் ஒன்றேயாயினும் குணங்கள் பலபட்டவை யாதலாலும் அவை யாவும் தனித் தனியே மறுக்கப் பட்டதாகிறது என்று அத்வைதிகள் ஸமாதானம் சொல்லுகிறார்கள்
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஸ்ருதி வாக்யங்கள் காரண வாக்யங்கள் என்றும் சோதக வாக்யங்கள் -அதன் குணங்களை ஆராயும் வாக்யங்கள் -என்றும் இருவகைப்பட்டு இருக்கும் –
———–
11-நைததேவம் (அவ்வாறு அல்ல )-ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞானம் ஸர்வஸ்ய மித்யாத்வே ஸர்வஸ்ய ஞாதவ்ய
ஸ்யாபாவாது நசேத்ஸ்யதி ஸத்ய மித்யாத்வயோ ஏகதா ப்ரஸக்திர்வா
அபிது ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிக்ஞா ஸர்வஸ்ய ததாத்மகத்வே நைவ சத்யத்வே சித்யதி –
(ஏவம் அஸ்தி விஞ்ஞானேந ஸர்வம் நாஸ்தி விஞ்ஞானேந அல்லவேஏக விஞ்ஞாநேன-கரண த்ருதியீ அல்ல -அபேதே த்ருதியீ -ஒன்றை அறிவதில் மற்றவற்றை அறிவது எல்லாம் அடங்கி இருக்கும் என்றவாறு )
இது இவ்வாறு இல்லை -ஒன்றை அறிந்து கொண்டு அந்த ஞானத்தினால் மற்ற ஒன்றுமே இல்லை என்று சொல்லப்படும் மற்றப் பொருள்களை எவ்வாறு அறிய முடியும் –
அல்லது உண்மை என்றே சொல்லும் பொய் என்ற சொல்லும் ஒரே பொருளைக் கொண்டு இருக்க வேண்டும் –
மாறாக இவ் வுலகம் உயிர் பொருள்களும் அவனுக்கு உடல் என்று கொண்டால் -உடல் உயிர் இவை தனித்தனியே இயங்காதவை யாகையால் -இவ்வுயிரை அறிவதால் அவ்வுடலை அறிந்ததாகும்
மீமாம்ஸம் அத்வைதத்தை உண்மையற்றது என்ற ஓலம் -அஸத்யப் பிரலாyenakkuஎனக் குறிப்பிடுகிறது –
————
12-அயமர்த்த-ஸ்வேத கேதும் ப்ரத்யாஹ
ஸ்தப்தோசி உததம ஆதேசம் பிராஷ்ய இதி
பரிபூர்ண இவ லஷ்யஸே தானாச்சார்யான் பிரதி தமப்ய ஆதேசம் ப்ருஷ்ட்வானசி
இதி ஆதிஸ்யதே அநேநேத்ய ஆதேச ஆதேச பிரசாசனம்
(ஆதேசம்-உபதேச விஷயம் -அத்வைத மதத்தில் -ஞானத்துக்கு விஷயம் மித்யை -ஞான பின்னம் ஜேயம்-
ஞான மாத்ரம் ஸத்யம் என்பர் -அறியப்படும் விஷயம் இல்லையே
ப்ரஹ்மம் தவிர மற்றவை மித்யை என்பதே உபதேச விஷயம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வமஸி -நீ த்வம் அல்ல -அந்த தத் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
அந்த விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்டாயா –
ஏக விஞ்ஞானம் -இதர ஸர்வம் மித்யை
நாமோ ஆவேசம் -உபதேச அர்த்தம் இல்லை -ஆதேச கர்த்தா-சர்வ நியந்த்ருத்வம்-பகவத் பரமாகவே நாம் அர்த்தம் -அவர்கள் கர்மணி –
நியமனம் ஏஷ ஆவேச -ஏஷ உபதேச -இரண்டும் சுருதி சொல்லும்
ஆ உப இரண்டும் -உபதேச பலம் சிஷ்யனுக்கு
(சதேவ -காரண ஸ்ருதி -ஸத்தில் இருந்தே உருவானது -ப்ரஹ்மம் ஒன்றும் மட்டுமே காரண அவஸ்தையில் -மற்றவை இதில் ஒன்றி –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூப ரஹிதம்-ஏகமேவ -அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -அத்விதீயம் லோகத்தில் காண்பது போல் அல்லவே -ஸகல இதர விலக்ஷணம்-ஸர்வ ஸரீரத்வம் -ஸர்வ கல்யாண குணாத்மகம் அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -)
(அக்ரே இதற்கு முன்னால் -பூர்வ காலீத்வம் -சதேவ -ஸத் ஒரே பதார்த்தமாக இருந்து -அதுவே உபாதான காரணம்
சர்வஞ்ஞத்வ குண விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஏகமேவ -அதுவே நிமித்தமும் உபாதானமும் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
லோகத்தில் இது போல் இல்லையே என்ன இது அத்விதீயம்)
ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத இத்யாதிபிரை ததாச மாநவம் வச
பிரசாசிதாரம் ஸர்வேஷாம் இத்யாதி அத்ராபி ஏகமேவ இதி ஜகதுபாதாநதாம் ப்ரதிபாத்ய அத்விதீய –
பதேந அதிஷ்டாத்ரந்தர நிவாரணாத் அஸ்யைவ ப்ரதிபாத்யநே
அத -தம் பிரசாசிதாரம் ஜகத் உபாதான பூதமபி ப்ருஷ்ட்வானசி -யேந ஸ்ருதேந மதேந அஸ்ருதம மதம விஞ்ஞாதம்
ஸ்ருதம் மதம் விஞ்ஞாதம் பவதி -இத்யுக்தம் ஸ்யாத் -நிகில ஜகத் உதய விபவ விலயாதி காரண பூதம் ஸர்வஞ்ஞத்வ –
சத்ய காமத்வ-ஸத்ய ஸங்கல்பத்வாத்ய-அபரிமித உதார குண சாகரம் கிம் ப்ரஹ்ம த்வயா ஸ்ருதம் –இதி ஹார்த்தோபாவ —
ஸ்வேத கேதுவை -அவருடைய தந்தை வினவினார்
எல்லாம் அறிந்தவன் போல் காணப் படுகிறாயே –
அந்தக் கட்டளையின் -ஆதேசத்தின் -பொருளைக் கேட்டு அறிந்தாயா –
முழுமையாக்கும் இலக்கோடு உன்னுடைய ஆசானிடம் இருந்து அந்தக் கட்டளைப் பொருளை அறிந்து இருக்கிறாயா –
பரமாத்மாவால் நியமிக்கப் படுகிறது என்பதால் அதனை கட்டளை என்கிறோம் -ஆதேசம் என்றால் மீற முடியாத ஏவல்
அந்தப் பரமாத்மாவின் கட்டளைப் படி -ஹே கார்க்கி ஸூர்ய ஸந்த்ரர்கள் நிலை பெற்று இருக்கிறார்கள் -என்று ஒரே பொருளைக் கொள்ள வேண்டும்
அப்படியே மநு ஸ்ம்ருதியிலும் -எப்பொருளையும் உள்ளிருந்து நியமிப்பவன் என்று கூறப்பட்டு இருக்கிறது –
இங்கும் -ஸத் வாக்யத்திலும் -உலகின் உத்பத்திக் காரணம் ஒன்றே என்று காட்டி -இப்படி உள் புகுந்து நியமிப்பது வேறில்லை என்பதையும் எவன் உலகைப் படைப்பவனாய் இருப்பானோ –
எவனை அறிந்தால் -த்யானித்தால் -அறியப்படாதது அறியப்பட்டதாகவும் -கேட்கப்படாதது கேட்கப்பட்டதாகவும் ஆகுமோ -அவனை அறிந்தாயா என்பதே சரியான பொருளாகும் –
உலகின் படைத்தல் -காத்தல் -அழித்தல் -இவற்றுக்குக் காரணமானவனாயும் -எல்லாவற்றையும் அறிந்தவனாயும் -எந்த விருப்பங்களும் இல்லாதவனாயும் -எச் செயலையும் செய்ய வல்லவனாய் இருப்பவனாயும் –
ஆகிற குணக்கடலாய் இருப்பவனாகிய ப்ரஹ்மத்தை அறிந்து இருக்கிறாயா -கேட்டு இருக்கிறாயா -என்பதே அவருடைய மனப் பூர்வமான எண்ணம் –
————-
13–தஸ்ய நிகில காரணதயா காரணமேவ நாநா சமஸ்த்தான விசேஷ ஸம்ஸ்திதம் கார்யம் இதயுச்யத இதி காரண பூத
ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரக ப்ரஹ்ம விஞ்ஞாநேன கார்ய பூதம் அகிலம் ஜகத் விஞ்ஞாதம் பவதீதி ஹ்ருதி நிதாய –
யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம்-ஸியாத் இதி புத்ரம் பரதி ப்ருஷ்டவான் பிதா —
ஸ்வேத கேதுவின் கேள்வியும் உத்தாலகர் பதிலும்
அந்தப் ப்ரஹ்மம் உலகின் காரணமாகவும் பற்பல சிறப்பான நிலை வேறுபாடுகளை உடையதாகவும் இருப்பதால் உலகி காரணம் என்றும் கார்யம் என்றும் சொல்லப்படுகிறது –
சேதன அசேதனப் பொருள்களை உடலாக யுடைய கட்புலனாகாத காரணமான அவனை அறிவதால் கார்யமான பூத உலகை முழுமையாக அறிந்ததாகும் என்னும் கருத்தை மனத்தில் கொண்டு –
எதை அறிந்தால் கேட்கப்படாதது கேட்கப் பட்டதாகவும் அறியப்படாதது அறியப்பட்டதாகுமோ அதை அறிந்தாயா என்று தந்தை வினவினார்-
———-
14–ததேதத் சகலஸ்ய வஸ்து ஜாதஸ்ய ஏக காரணத்வம் பித்ரு ஹ்ருதி நிஹித மஜானன் புத்ர பரஸ்பர விலக்ஷணேஷு
அந்யஸ்ய ஞானேந ததந்ய ஞானஸ்ய கடமானதாம் புத்தா பரிசோத யதி –கதந்நு பகவஸ் ச ஆதேச இதி –
முன் சொல்லப்பட்ட ஒன்றை அறிவது எல்லாப் பொருள்களையும் அறிவதாகும் என்று ஒரே காரணமாய் இருக்கும் தன்மையை தந்தை மனதில் கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மகன்-ஒரே பொருளை அறிவதால் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடுடைய எண்ணற்ற பொருள்களை அறியும் நிலை எவ்வாறு ஏற்படும் என எண்ணி -அந்தக் கட்டளை எவ்வாறு உள்ளது தந்தையே -எனத் திருப்பிக் கேட்க்கிறான்
——–
15–பரிசோதித புந ததேவ ஹ்ருதி நிஹிதம் ஞானானந்த அமலத்வ ஏக ஸ்வரூபம் அபரிச்சேத்ய மஹாத்ம்யம் –
ஸத்ய சங்கல்பத்வ மிஸ்ரை அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணைர் ஜுஷ்டம் அதிகார ஸ்வரூபம்
பரம் ப்ரஹ்மைவ நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரம் -ஸ்வ லீலையைவ ஸ்வ சங்கல்பேந –
அநந்த விசித்ர ஸ்திரத் ரஸ ரூப ஜகத் சமஸ்த்தானம் ஸ்வாம் சேநாவஸ்தி தமிதி தத் ஞானேந அந்யஸ்ய
நிகிலஸ்ய ஞாததாம் ப்ருவன் லோக த்ருஷ்டம் கார்ய காரணயோர் அநந்யத்வம் தர்சயிதும் த்ருஷ்டாந்தமாஹ
இவ்வாறு வினவப்பட்ட தந்தை தனது மனக்கிடக்கையைத் தெளிவாகக் காட்டுவதற்காக -அளவிடற்கு அரிய ஞானம் மகிழ்ச்சி தூய்மை நிலை பெற்ற செயல்பாடுடைமை ஒப்பற்ற அளவற்ற நற் குணங்கள் தொகுப்பாய் மாறுபடாத உருவமுடைமை இவற்றுடன் கூடிய கட் புலனாகாத பிரிக்க இயலாப் பண்புள்ள ப்ரஹ்மமே தன் விளையாட்டில் தன் விருப்பப்படி அளவற்ற பலவகைப்பட்ட நிற்பன நடப்பன யாகிய பற்பல உயிர்களை தன் அம்சமாகப் படைக்கிறது என்ற அந்த அறிவினால் மற்றப் பொருள்களுடைய அறிவும் ஏற்படும் -என்பதை உலகியல் கார்ய காரண தொடர்பால் உணர்த்துகிறார் –
———-
16–யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத் வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்
ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி ஏகமேவ ம்ருத் த்ரவ்யம் ஸ்வ ஏக தேசேந நாநா வியவஹாராஸ் பதத்வாய-
யதா கட சரா வாதி நாநா ஸமஸ்த்தாநா அவஸ்தா ரூப விகாரபந்நம் நாநா நாமதேயமபி ம்ருத்திகா சமஸ்த்தான விசேக்ஷத்வாத்
ம்ருத் த்ரவ்யமேவேதி வியவஸ்திதம் நவாஸ்த வந்தரம் இதி யதா ம்ருத் பிண்ட விஞ்ஞாநேன தத் சமஸ்த்தான விசேஷ
கட சராவாதி ரூபம் சர்வம் விஞ்ஞாதம் ஏவ பவ்தீத்யார்த்தா
குழந்தாய் -ஒரே மண்ணுருண்டையால் மற்று எல்லாம் மண்ணாலே ஆனது என்ற அறிவு ஏற்படுகிறது –
அது பல உருக்களாக மாறுபடும் போது பல பெயரிட்டு அழைக்கப் பட்டாலும் மண் என்னும் ஒரு பொருளே உண்மையாகிறது –
ஒரே மண் கட்டி அதன் ஒரு பகுதியால் பற்பல உருவங்கள் உள்ளதாகப் பேசப்படுகிறது
எப்படி குடம் வாணாய் போன்ற பல உருவ நிலை வேறுபாடுகளை உடைய வடிவ மாறுபாடுகளும் பற்பல பெயர்களையும் தன் நிலை வேறுபாட்டால் மண் கட்டி பெற்றாலும் மண் என்றே பேசப்படுகிறதோ -அந்த பற்பல பெயர்கள் அதற்கு நிலை வேறுபாட்டால் மட்டுமே ஏற்பட்டதோ -அப்படிப்பட்ட மண்ணுருண்டையை அறிவதால் அதன் பல வடிவ நிலை வேறுபாடுகளை குடம் வாணாய் என்று அறிந்ததாகும் என்பதே பொருள் –
———————
17–ததஸ் க்ருத்ஸ்ரஸ்ய ஜகதோ ப்ரஹ்ம ஏக காரண தாம ஜாநந் புத்ர ப்ருச்சதி -பகவாம்ஸ் த்வமேவ மே தத் ப்ரவீது-
இதி ததஸ் சர்வஞ்ஞம் சர்வசக்தி ப்ரஹ்ம ஏவ சர்வ காரணம் இத் யுபதிசந் சஹோவாச
சதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
இதி அக்ர இதம் இதி ஜகந் நிர்திஷ்டம்
அக்ர இதிச ஸ்ருஷ்டே பூர்வ கால தஸ்மிந் காலே ஜகத் சதாத்மகதாம்
சத் ஏவ இதி ப்ரதிபாத்ய தது ஸ்ருஷ்ட்டி காலே அப்யவிசிஷ்டம் இதி க்ருத்வா
ஏக மேவ இதி ஸ்தாபந் நஸ்ய ஜகத்-ததா நீம விபக்த நாம ரூபதாம் ப்ரதிபாத்ய தத் ப்ரதிபாத்தேநேந
ஏவ சதோ ஜகத் உபாதானத்வம் ப்ரதிபாதிதம் இதி ஸ்வ வ்யதிரிக்த நிமித்த காரணம் அத்விதீய பதேந ப்ரதிஷித்தம் இதி —
ஸத் -என்பது தான் ஜகத் காரணமாகிறது என்பதன் விளக்கம்
அளவில் அடங்கா உலகிற்கு ப்ரஹ்மமே ஒரே காரணமாகும் என்பதை அறிந்தால் மற்றவை எல்லாம் அறிந்ததாகும் என்பதை அறியாத மகன் -தேவரீரே எனக்கு அதைக் கற்ப்பிப்பீராக -என்று கேட்டான் –
அவர் -எல்லாம் அறிந்த -எல்லாம் வல்ல -ப்ரஹ்மமே உலகிற்கும் எல்லாக் காரணமும் ஆகிறது என்று உபதேசிக்கும் முகமாய்
ஒளி பொருந்திய முகமுடையவனே -அறிவுள்ள அறிவற்றவைகளால் நிறைந் த இவ்வுலகு படைப்புக்கு முன் -பிரளய காலத்தில் காரணப் பொருளாகிய ப்ரஹ்மத்துடன் வேறுபாடு இன்றி -கட் புலனாகாத நிலையில்-ஒன்றி பிறிது ஓன்று இல்லாமல் இருந்தது -என்றார்
அவ்வாறு காரணப் பொருளாகவே ஒன்றி இருந்ததால் -ஸதேவ -ஸத் ஆகவே -என்று குறிப்பிட்டு –
பிறகு படைப்புக் காலத்தில் அப் ப்ரஹ்மம் வெளிப்படையாக மட்டுமே இருந்ததால் ஏக மேவ -என்று கூறினார் –
இப்படிப் பின்பு பல உருவங்களோடு படைக்கப்பட்ட உலகிற்கு அந்த ஸத் என்பதே முதல் பொருள் ஆகையால் அதை ஒழிந்த வேறு ஒரு காரணம் இல்லை என்பதற்காக அத்விதீயம் என்னும் பதத்தால் நிலை நிறுத்துகிறார்
உபாதான காரணம்-மூலப்பொருள் -சித் அசித் விஸிஷ்ட பிரம்மா -அணு நிலையில் சேதன அசேதனப் பொருள்களுடன் சேர்ந்த ப்ரஹ்மம்
நிமித்த காரணம்-செய்வோன் -ஸூஷ்ம ப்ரஹ்மம் -அவற்றின் உயிராய் -உள்ளுறையும் -கட் புலனாகா செய்வோன் ப்ரஹ்மம்
ஸஹ காரி காரணம் -செய் கருவி -அதன் ஞான சக்திகள் -ப்ரஹ்மத்தின் -அறிவும் திறனும்
———–
18–தமாதேசம பிராஷ்யோ யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி -இதி ஆதாவேவ பிரசாசிதைவை ஜகத் உபாதானம் இதி
ஹ்ருதி நிஹிதம் இதாநீ மபிவ்யக்தம் ஏததேவோப பாதயதி–ஸ்வயமேவ ஜகத் உபாதானம் -ஜகந் நிமித்தம் ச சத்
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய –இதி ததேதத் ஸச் சப்த வாஸ்யம் பரம் ப்ரஹ்ம -சர்வஞ்ஞம்-சர்வசக்தி -ஸத்யஸங்கல்பம் –
அவாப்த ஸமஸ்த காமமபி லீலார்த்தம் -விசித்ர அநந்த சித் அசிந் மிஸ்ர ஜகத் ரூபேண காமேவ பஹுஸ்யாம் தளர்த்த ப்ரஜாயேய –
இதி ஸ்வயமேவ சங்கல்ப்ய ஸ்வாம்ஸைக தேசாதேவ வியதாதி பூதாநி ஸ்ருஷ்ட்வா புநரபி ஸைவ ஸச் சப்தா பிஹிதா பரா தேவதா
ஏவம் ஐஷத ஹந்தாஹா மிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்ம அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகர வாணி இதி –
அநேந ஜீவேந ஆத்மநா இதி ஜீவஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாத்ய ப்ரஹ்மாத்மக ஜீவ அநு ப்ரவேசாதேவ க்ருதஸ்நஸ்ய
அசித் வஸ்துநோ நாம ரூப பாத்தகம் இதிச தர்சயதி
பண்புடைப் ப்ரஹ்மத்தின் இருவகைக் காரணப் பொருத்தமும்
அது பல பெயர் உரு உடுப்பதன் விளக்கமும்
அந்தக் கட்டளையை அறிந்தால் கேட்க்கப் படாதது கேட்கப் பட்டதாகும் -என்று முன்பு நன்கு தீர்மானிக்கப் பட்ட உலகின் மூலப் பொருளையே தன் மனத்தில் கொண்டுள்ளார் என்பதை இங்கே வெளிப்படுத்துகிறார் –
உலகிற்கு மூலப் பொருள் காரணமான அந்த -ஸத் -செயலாற்ற நினைத்து
நான் பலவாக ஆகக் கடவேன் -பிரஜைகளைப் படைப்பேன் – என்று முனைந்தது
அப்படிப்பட்ட -ஸத் -என்பதால் விளக்கப்படும் பர ப்ரஹ்மம் தான் –
எல்லாம் அறிவதாகவும் –
எல்லாம் வல்லதாகவும் –
உண்மையான வினைத் திட்பம் யுடையதாகவும் –
வேறு பலன் எதையும் எதிர்பாராததாகவும்
அவா வற்று இருந்தும் தன் விளையாட்டு மகிழ்ச்சிக்காக மட்டுமே பல்வேறு வகைப்பட்ட எண்ணற்ற சேதன அசேதன பொருள்களோடு கூடிய உலகமாகத் தானே ஆவேன் என்று முடிவெடுத்து
தன் அம்சத்தில் ஒரு பகுதி -சேதன அசேதன பொருள்களை யுடைய தன் உடலின் ஒரு பகுதி -யால்
ஆகாயம் முதலான பூதங்களைப் படைத்தது
மீண்டும் அந்த ஸத் -நிலம் நீர் நெருப்பு என்பது போன்ற தேவதைகளாகி -பூதங்களாக ஜீவாத்மாக்களின் உட் புகுந்து
அவற்றுக்குப் பெயரும் உருவும் யுடையவைகளாக ஆக்குவேன் என்றது
ஜீவாத்மாக்கள் என்றதனால் ஜீவர்கள் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக யுடையவர்கள் என்பது காட்டப்படுகிறது –
ஜீவனை யுடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தினால் மட்டுமே எல்லா சேதனப் பொருள்களும் இருப்பைப் பெறுகின்றன –
இதனாலேயே எல்லாப் பொருள்களும் பெயர்களையும் குருக்களையும் அடைகின்றன –
————-
19–ஏதத் யுக்தம் பவதி (இவ்வாறு சொல்லப்பட்டது சாரம் )ஜீவாத்மாது ப்ரஹ்மண-சரீர தயா பிரகாரத்வாத் ப்ரஹ்மாத்மக
யஸ்ய ஆத்மா சரீரம் -இதி ஸ்ருத் யந்தராத்-ஏவம் பூதஸ்ய ஜீவஸ்ய சரீரதயா பிரகார பூதாநி
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த்தாநாநி வஸ்தூநி இதி ப்ரஹ்மாத்ம ஏகாநி தாநி ஸர்வாணி
அத தேவோ மனுஷ்ய யஷோ ராக்ஷஸ பஸூ ம்ருக பஷீ வ்ருஷோ லதா காஷ்டம் சிலா த்ருணம் கட பட இத்யாதயஸ்
சர்வே ப்ரக்ருதி ப்ரத்யய யோகேந அபிதாய கதயா பிரசித்தா ஸப்தா லோகே தத் த்ரவ்ய வாஸ்ய தயா பிரதீயமான
தத் தத் சமஸ்தான வஸ்து முகேந தத் அபிமாநி ஜீவ –
தத் அந்தர்யாமிப் பரமாத்மா பர்யந்தம் ஸங்காதஸ் யைவ வாசக –இதி –
இதை விவரிப்போம்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிரிக்க முடியாத உறவுடையதாக -ப்ரஹ்மத்துக்கு உடலாகிறது –
எதற்கு ஆத்மா உடலோ என்று வேதத்தில் கூறப்படுகிறது –
இப்படிப்பட்ட ப்ரஹமத்திற்கு ஜீவாத்மா உடலாய் இருப்பதால் -தேவன் மனிதன் போன்ற ஜீவாத்மாவின் உடலாகும் பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மத்திற்கும் உடலாகின்றன –
இவ்வுருக்கள் தேவர்கள் மனிதர்கள் யக்ஷர்கள் ராக்ஷஸர்கள் பசுக்கள் விலங்குகள் பறவைகள் மரங்கள் கொடிகள் கட்டை பாறைகள் புல் குடம் ஆடை என்று எல்லாம் பகுதி விகுதிகளால் குறிக்கப்படும் சொற்களாகி –
அவை சுட்டும் பொருளுக்கு உருவமாகி
அதனுள் உறையும் ஜீவாத்மாவையும்
அதை உடலாகக் கொண்ட பரமாத்மா வரை சுட்டிக் காட்டும் சொற்கள் ஆகின்றன –
ப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியும் உறவு -விசேஷணம்
அப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியாத உறவு -பிரகாரத்வம்
—————–
தத்வமஸி -ஸ்ருத்யர்த்தம்
20–ஏவம் சமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மகப் பிரபஞ்சஸ்ய சதுபாதாநதா -சந் நிமித்தா சத் ஆதாரதா –
சந் நியம்யதா-ஸச் சேஷதாதி சர்வம்ச -சந் மூலா ஸோம்யேமா சர்வா பிரஜா ஸதாயதநா சத் பிரதிஷ்டா -இத்யாதிநா
விஸ்தரேண ப்ரதிபாத்ய கார்ய காரண பாவாதி முகேந
ஏததாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம்
இதி க்ருத்ஸ் நஸ்ய ஜகத்தை ப்ரஹ்மாத்மகத்வம் ஏவ சத்யம் இதி ப்ரதிபாத்ய க்ருத்ஸ் நஸ்ய ஜகத ச ஏவமாத்மா க்ருத்ஸ்நம்
சஜகது தஸ்ய சரீரம் தஸ்மாத் த்வம் சப்த வாஸ்யமபி ஜீவ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிஜ்ஞாதம்-
தத் த்வமாய் -இதி ஜீவ விசேஷ உப ஸம்ஹ்ருதம் -ஏதத் யுக்தம் பவதி
ஐதாத்ம்யம் இதம் சர்வம் -இதி சேதன அசேதன பிரபஞ்சம்
இதம் சர்வம்
இதி நிர்திஸ்ய-தஸ்ய பிரபஞ்சஸ்ய ஏஷ ஆத்மா இதி ப்ரதிபாதித பிரபஞ்ச உத்தேசேந
ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாதிதம் இத்யர்த்த —
(ஞானம் எல்லாம் அனுஷ்டான பர்யந்தமாக ஆக வேண்டும் அன்றோ -உபாசனத்துக்காக அளிக்கப்பட ஞானம் )
இவ்வாறு சேதன அசேதன பொருள்களின் திரளான பிரபஞ்சத்தின் ஆத்மாவான -ஸத்தையையே சொல்லுகிறது
ஸத்தாய் பொருள் காரணமாக யுடையதாயும் -அதுவே ஆக்குவோனாகவும் –அதனாலே தாங்கப்பட்டதாயும் -நிலை நிறுத்தப் பட்டதாயும் -அதனாலே ஏவப் படுவதாயும் -அதற்கு அடிமைப் பட்டதாயும் -இப்படி எல்லாவிதத் தொடர்புடையதாயும் -உள்ள அந்த ஸத்தை
குழந்தாய்
அதையே மூலமாக உடையவை யாவையும் மக்களும் அதையே இருப்பிடமாகக் கொண்டவை -அதிலேயே நிலை பெற்று இருப்பவை என்று பரக்கச் சொல்லி –
காரண கார்ய தொடர்பால் இங்குள்ள முழுமையான உலகு யாவையும் இதையே ஆத்மாவாகக் கொண்டு இருக்கின்றன –
அதுவே உண்மை என்று கூறி -இது ஒன்றே ஆத்மா உலகு முழுவதும் அதனுடைய உடல் –
உரையாடிக் கொண்டு இருக்கும் ஸ்வேத கேதுவைச் சுட்டிக் காட்டி –
அதனால் அது என்று குறிக்கப்படும் ஸத் உனக்கும் ஆத்மாவாக -நீ அதனின்றும் பிரிக்க முடியாத தொடர்புடையவனாக -பிரகாரமாக -இருக்கிறாய் என்பதை
தத்வமஸி என்று
உத்தாலகர் நிறுவுகிறார் –
———–
21–தத் இதம் ப்ரஹமாத் மகத்வம் கிம் ஆத்ம சரீர பாவேந –
உத ஸ்வரூபேண –
இதி விவேச நீயம்-ஸ்வரூபேண திசேத் ப்ரஹ்மண-ஸத்ய ஸங்கல்பத்வாதய
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத் யுபக்ரம அவகதா பாதிதா பவந்தி
சரீராத்ம பாவேந ச ததாத்மகத்வம் ஸ்ருத் யந்தராத் விசேஷதோ அவகதம் அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம்
சர்வாத்மா இதி பிரசாசி த்ருத்வ ரூபாத்மவேந ஸர்வேஷாம் ஜனாநாம்
ஆத்மா சர்வம் சாஸ்ய சரீரம் இதி விசேஷதோ ஞாயதே ப்ரஹமாத் மகத்வம்
ய ஆத்ம திஷ்டந் ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மா அந்தர்யாம் யம்ருத-இதிச –
அத்ராபி அநேந ஜீவேநாத்மநா இதி இதமேவ ஞாயத இதி பூர்வமே வோக்தம் —
(சரீராத்மா -என்பதால் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூபேணே இல்லை-ஸ்வரூபத்தால் ஒன்றானால் ஸ்ருதி வாக்கியங்கள் பாதகம் ஆகுமே )
இந்தப் ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பது எப்படி –
உடலுக்குள் உயிராய் உறைந்து இருக்கிறதா
அல்லது அதுவே மாறுபட்டு இந்த உருவாக ஆகியதா -என்று ஆராய்வோம் –
அது தானே மாறியது என்று கொண்டால் ப்ரஹ்மமானது -நான் பலவாக ஆகக் கடவேன்-மக்களைப் படைப்பேன் -என்று மெய்யான வினைத்திட்பம் கொண்டு அதனால் அது வினையாற்றியது எனத் துவக்கத்தில் சொல்லியது தவறாக ஆகும்
மாறாக உடை உயிர்த் தொடர்பு எனில் -அந்தப் ப்ரஹ்மத்தின் பொருள்களில் உள்ளுறையும் தன்மை மறைப் பொருள்களால் சிறப்பாக அறியப்பட்டு இருக்கிறது
உயிரிகளின் உள்ளுறைந்து ஆள்பவன் -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாகிறான் -என்றும்
நன்கு நிலை நிறுத்தப் பட்டவனாய் எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து ஏவுகிறவனாய் இருக்கிறான் என்றும்
உள் நுழைந்து என்றும்
எல்லாவற்றுக்கும் ஆத்மா -என்றும்
எல்லா மக்களுக்கும் ஆத்மா -எல்லாம் அவனுடைசிறப்பாக அறியப்படும் ய உடல் -என்றும்
ப்ரஹ்மத்தின் உயிர் நிலைத் தொடர்பு சிறப்பாக அறியப்படும்
மேலும் ஆத்மாவில் ஆத்மாவாய் உள்ளிருந்து எவன் ஆள்கிறானோ -அந்த ஆத்மாவின் உள்ளுறைபவன் இனிமையானவர் -என்று
எல்லாம் சொல்லப்படுகின்றன
மேலும் இதே உபநிஷத்தில் -புறப்பாடு இன்று எல்லா உயிர்களிலும் என்றும் முன்பே சொல்லப்பட்டு இருக்கிறது –
——–
22–அத -ஸர்வஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம சரீரத்வாத் சர்வ சரீரம் சர்வ பிரகாரம் சர்வை சப்தை
ப்ரஹ்மைவாபி தீயத இதி-ததுத்வம் -இதி சாமாநாதி கரண்யே ந ஜீவ சரீரதயா ஜீவ பிரகாரம் ப்ரஹ்மை வாபிஹிதம் –
ஏவமபிஹிதே சதி அயமர்த்தோ ஞாயதே த்வம் இதிய பூர்வம் தேஹஸ் யாதிஷ்டாத்ருதயா பிரதித ச பரமாத்ம சரீரதயா
பரமாத்ம பிரகார பூத பரமாத்மா பர்யந்த ப்ருதக் ஸ்திதி -ப்ரவ்ருத்தி –அநர்ஹ—அத –த்வம்-இதி சப்த
தத் பிரகார விசிஷ்டம் தத் அந்தர்யாமிணமே வாசஷ்டே இதி அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வியகரவாணி –
இதி ப்ரஹ்மாத்மகதயைவ ஜீவஸ்ய சரீரிண ஸ்வ நாம பாக்த்வாத்
தது த்வம் இதி சாமா நாதி கரண ப்ரவ்ருத்தயோர் த்வயோரபி பதயோ ப்ரஹ்மைவ வாஸ்யம் -தத்ர -தது- பதம் –
ஜகத் காரண பூதம்-சர்வ கல்யாண குணாகரம் -நிரவத்யம்-நிர்விகாரமா சஷ்டே த்வம் இதிச -ததேவ ப்ரஹ்ம ஜீவ அந்தர்யாமி
ரூபேண ஸ்வ சரீர ஜீவ பிரகார விசிஷ்டமாசஷ்டே ததேவம் ப்ரவ்ருத்தி நிமித்த பேதேந ஏகாஸ்மின் ப்ரஹ்மணயேவ ததுத்வம் –
இதி த்வயோ பதயோர் வ்ருத்திருக்தா-ப்ரஹ்மணோ நிரவத்யத்வம் நிர்விகாரத்வம்
சர்வ கல்யாண குணாகரத்வம் ஜகத் காரணத்வம் ச அபாதிதம் –
தத்வமஸி -என்ற ஸ்ருதியின் பொருளை நிலை நிறுத்தல்
பிறகு ப்ரஹ்மத்திற்கு சேதன அசேதன வஸ்துக்கள் யாவும் உடலாய் -எல்லா வகையிலும் பிரிவற்ற தொடர்புடையதாய் இருப்பதால் எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்று கொள்ள முடியும்
அவ்வாறே அது -தது -நீ த்வம் -என்று ஸாமாநாதி கரண்யத்தால் -ஒரு பொருள் பன் மொழியால் -உயிரை உடலாக உயிருடன் பிரிவற்ற ப்ரஹ்மத்தையே காட்டுகிறது –
இவ்வாறு கூறப்படுவதால் கீழ்க்கண்ட விளக்கம் இதற்குப் பொருளாகக் கிடைக்கிறது
த்வம் -நீ -என்பதால் -எவன் முன்பே உடலுள் இருந்து ஏவுபவனாய் தோன்றுகிறானோ -இங்கு ஸ்வேத கேதுவின் ஆன்மா -அவன் பரமாத்மாவிற்கு உடலாதலால் -பரமாத்மாவின் நின்றும் பிரித்த நிலையற்றவனாய் -அவனைப் பிரிந்து இயங்க இயலாதவனாய் இருப்பதால் -அவனுடன் பிரிக்க இயலா தொடர்புடைமையால் அவனுள் இருக்கும் பரமாத்மாவையே இச்சொல் காட்டுகிறது
அது நீ -என்பது ஒரு பொருள் பன் மொழியால் பரமாத்மாவையே இரு சொற்களும் காட்டுகின்றன –
அது -தது -என்னும் பதம் உலகின் காரணமாய் -நற் குணங்கள் யாவும் கொண்டதாய் -இழி குணங்கள் அற்றதாய் -மாறுபாடு அடையாததாய் -இருக்கும் நிலையைக் காட்டுகிறது –
நீ-த்வம் -என்பதனால் -அதற்கு உடலாய் பிரிவற்ற நிலையை யுடைய ஜீவாத்மாவின் உயிராய் உள்ள பரமாத்மாவைக் காட்டுகிறது –
அதனால் அது என்னும் சொல் பொருள் காட்டும் தன்மையால் -ப்ரவ்ருத்தி நிமித்தம் -நீ என்னும் சொல்லுடன் ஒருபடிப்பட்டது
ஆகவே அது நீ என்னும் இரு சொற்களும் குறையற்றதும் மாறுபாடற்றதும் -நற் பண்புகள் யாவும் நிறைந்ததும் -உலகிற்குக் காரணமானதுமான ப்ரஹ்மமே என்று நிரூபிக்கப் பட்டது
ஸாமாநாதி கரணம்
பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவைகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாய் இருந்தாலும் பொருள் ஒன்றாகக் கொள்வது ஸாமாநாதி கரணம் என்று பெயர் –
————
23-அஸ்ருத வேதாந்தா புருஷா (சதாச்சார்ய உபதேசம் ஸ்ரவணம் பண்ணாதார்- )சர்வே பதார்த்தம் சர்வே ஜீவாத் மனஸ் ச ப்ரஹ்மாத்மகா இதி ந பஸ்யந்தி
சர்வ ஸப்தாநாம் ச கேவலஷு தத் தத் பதார்த்ததேஷூ வாஸ்யைக தேசேஷூ வாஸ்ய பர்யவஸாநம் மன்யந்தே
ஸ்ருத வேதாந்தஸ்து (கற்றார் அதயேவ நான்மறையாளர் ஆவார்)வேதாந்த வாக்ய ஸ்ரவணேன ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா
ச ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் சர்வ ஸப்தாநாம் தத் தத் பிரகார ஸம்ஸ்திதா ப்ரஹ்ம வாசித்வம் ச ஜாநந்தி —
(வாசக அர்த்தம் ப்ரஹ்மம் வரை பர்யவசிக்கும்-ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா-வேதத்தின் உட் பொருள் நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -பிரதான பரதந்தர அர்தம் )
வேதாந்தத்தைக் கேட்டு அறியாதவர்கள் ஆகையால் -பாமர மக்கள் எல்லாப் பொருள்களும் அதற்கு அபிமானியான ஜீவாத்மாவும் -அதை உடலாகக் கொண்ட பரமாத்மாவைக் காட்டும் என்று அறியார்கள்
அதனால் அவர்கள் சொற்கள் -அதனதனால் குறிப்பிடப்படும் பொருட்களை மட்டும் தனிப்பட்டுக் குறிக்கின்றன என்று கொள்கிறார்கள் –
வேதாந்தத்தைக் கேட்டு அறிந்தவர்கள் அதன் பயனாக பொருள்கள் ப்ரஹ்மத்தின் செயல் என்றும் ப்ரஹ்மத்தை உள்ளுறை பவனாக உடையது என்றும்
அதனால் சொற்கள் யாவும் அதனால் கொள்ளப்படும் பொருளையும் அதனுடன் பிரிவற்ற நிலையை யுடைய பரமாத்மாவையும் காட்டும் என்று அறிகிறார்கள்
———-
24–நந் வேவம் கவாதி ஸப்தாநாம் தத் தத் பதார்த்த வாசிதயா வ்யுத்பத்திர் பாதிதா ஸ்யாத்
நைவம் சர்வே ஸப்தா அசிஜ் ஜீவ விசிஷ்ட்ட பரமாத்மநோ வாசகர் இத்யுக்தம் நாம ரூபே வ்யாகரவாணி இத்யத்ர
தத்ர லௌகிகாஸ்து புருஷா சப்தம் வ்யவஹரந்தஸ் சப்த வாஸ்யே பிரதாநாம் சஸ்ய பரமாத்மன ப்ரத்யஷாத் யபரிசேத்யவாத்
வாஸ்யைகதேச பூதே வாஸ்ய சமாப்தி பர்யவசாதே வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி பூர்யதே –
ஏகமேவ வைதிகாஸ் ஸப்தா சர்வே பரமாத்மா பர்யந்தாந் ஸ்வார்த்தாந் போத யந்தி —
அப்படி என்றால் பசு முதலிய சொற்கள் அந்த அந்த பொருட்களைக் குறிப்பதாகத் தானே உலகில் காணப்படுகிறது
அது அப்படி யல்ல –
பெயர் உருக்களைக் கொடுக்கக் கடவேன் என்று பரமாத்மா உள் நுழைந்து ஆக்குவதால் எல்லாச் சொற்களும் -சேதன அசேதன பொருட்களை உடலாகக் கொண்டு உள்ளுறையும் பரமாத்மாவைத் தான் காட்டுகின்றன –
ஆயினும் உலகில் உள்ள மாந்தர்கள் வழக்கில் உள்ள சொற்களைக் குறிக்கும் ஒரு பகுதியான கட் புலனாகும் பொருளை மட்டுமே கொண்டு கட் புலனாகாத ஜீவ பரமாத்மாக்களை நீக்கி
இதனாலேயே அச் சொற்களின் பொருள் முடிந்ததாகக் கருதுகிறார்கள்
இவ்வாறு மெய்ப்பொருள் அறியும் திறன் வேதாந்தஞானத்தாலேயே கிடைக்கும்
இவ்வாறே வேதச் சொற்கள் யாவையுமே பரமாத்மா வரையிலான பொருளைக் காட்டுகின்றன –
——-
25-வைதிகா ஏவ சர்வ ஸப்தா ஆதவ் வேதாதேவோத்ருத் யோத்ருத்ய பரேண ஏவ ப்ரஹ்மணா சர்வபதாதீந் பூர்வவத்
ஸ்ருஷ்ட்வா தேஷு பரமாத்ம பர்யந்தேஷு பூர்வவத் நாம தயா ப்ரயுக்தா ததாஹ மனு -1-21-
ஸர்வேஷாம் நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக் வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே இதி
சமஸ்தா சமஸ்தாநாநி ரூபாணீதி யாவது ஆஹ ச–பகவான் பராசர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய ஏவாதவ் தேவதீநாம் சகாரச -இதி ஸ்ருதிஸ் ச
ஸூர்ய சந்த்ர மசவ் ததா யதா பூர்வகமகல்பயத்-இதி
ஸூர்யாதீந் பூர்வவத் பரிகல்ப்ய நாமாநி ச பூர்வச் சகரேத் யர்த்த —
ஏவம் ஜகத் ப்ராஹ்மண ஓர் அநந்யத்வம் பிரபஞ்சிதம் -தேந ஏகேந ஞாநேந ஸர்வஸ்ய ஞாததா உபபாதிதா பவதி –
ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரியதா ப்ரதிபாதநேந ததாத் மகத்யைவ் சத்யத்வம் நான்யதேதி தத் சத்யம் –
இத் யுக்தம் யதா த்ருஷ்டாந்தே ஸர்வஸ்ய ம்ருத் விகாரஸ்ய ம்ருதாத்மநைவ சத்யத்வம் –
(தேவதாதிகரணம் இத்தையே விளக்கும்)
சொற்கள் யாவும் வேதத்தில் உள்ளவையே
ஏன் எனில் –
வேதத்தில் இருந்தே சொற்களைப் பொறுக்கி எடுத்து அதற்கு ஏற்ப முன் கல்பத்தில் இருந்தபடியே பிரம்மா படைத்தான் என்பதனால் அவைகள் பரமாத்மா வரை காட்டி பொருள் முடியும்
அப்படியே மனுவும் கூறுகிறார்
அந்தப் பகவான் பொருட்களுக்கு பலவகையான பெயர்களையும் உருக்களையும் முன்பு இருந்த படியே வேதச் சொற்களுக்கு ஏற்ப தனித் தனியாகப் படைத்தான் -1-21-
பராசரரும்
பெயரும் உருவம் யுடையதாயும் உயிர்களாலும் பொருட்களாலும் நிறைந்த உலகுகளை -பிரபஞ்சத்தை -தேவர்கள் முதலான வகைகளையும் -தத் தமக்குறிய செயல்களையும் வேதச் சொற்களைக் கொண்டே -அந்தப் ப்ரம்மா முதலில் படைத்தான் -என்கிறார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
வேதமும்
முதலில் ஸூர்ய ஸந்த்ரர்களை -முன் -பூர்வ கல்பத்தில் -இருந்தபடியே பரமாத்மா படைத்தான் -என்கிறது
ஸூர்யன் முதலானவர்களும் முன்பு இருந்தபடியே படைக்கப்பட்டு அதன்படியே பெயரிடப் பட்டனர் என்று அறியலாம்
இவ்வாறே உலகும் ப்ரஹ்மமும் வேறுபட்டு இராமை நிரூபிக்கப் பட்டது-அதனால் ஒன்றை அறிவதால் மற்ற ஓன்று தானே அறியப் பட்டதாகிறது -எப்பொருளும் பரமாத்மாவின் செயல் என்று சொல்லப்படுவதால் -அதை ஆத்மாவாகக் கொண்டிருப்பதால் மட்டுமே அப் பொருளுக்கு இருப்பு -சத்யத்வம்-வஸ்துத்வம் -ஏற்படுகிறது-இவ் விருப்பு கொண்ட -அது உண்மை -உள்ளது -என்று கூறப்படுகிறது
அதையே இந்த எடுத்துக் காட்டால் இப்பொருள்கள் மண்ணின் மாறுபாட்டால் ஏற்படுபவை யாதலின் மண் என இருப்பது உண்மையே எனப் பேசப் படுகிறது
————-
26–சோதக வாக்ய அந்யபி (பரிசுத்தமாக ஸ்வரூபத்தை நிரூபிக்கும் வாக்கியங்கள் )நிரவத்யம் சர்வ கல்யாண குணாகரம் பரம் ப்ரஹ்ம சோதயந்தி
பண்புரைக்கும் சொற் தொடர்களும் -சோதக வாக்யம் -கூட குற்றமற்ற நற் பண்புகள் யாவும் கடலென நிறைந்துள்ள பரப் ப்ரஹ்மத்தையே ஆய்ந்து அமைகின்றன
———-
27–சர்வப் ப்ரத்யநீக ஆகாரதா போதநேபி தத் ப்ரத்யநீக ஆகாரதாயாம் பேதஸ்ய அவர்ஜனீயத்வாந்ந நிர்விசேஷத்வ ஸித்தி–
எல்லாக் குணங்களுக்கும் எதிர்த் தட்டான நிலையைச் சொன்னாலும் -அந்தவந்த மாறுதல்களைச் சொல்வதால் வெவ்வேறு பொருள்கள் கூறப்பட்டு விடும் -அதாவது குணங்கள் அற்றது என்பது விலக்கப்படும்
——–
அத்வைதப் பொருள்
ஒரு பொருளுக்கு இடப்படும் அடைமொழி அதை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டும்
அவ்வாறே ப்ரஹ்மமும் -ஸத்யம் ஞானம் அநந்தம் -என்று குறிக்கப் படுகிறது
இதை அடைமொழிகள் என்று கொண்டால் ப்ரஹ்மமும் இவ்வடை மொழிகளுடைய ஒரு பொருள் என்று தோன்றுவதால் -அதனால் ப்ரஹ்மத்தின் இருப்பும் பண்புகளும் ஏற்படுவதால் அத்வைதிகள் இதை ஏற்பதில்லை
ஏன் எனில் அவர்கள் கருத்துப்படி ப்ரஹ்மம் குணமற்றது இருப்பற்றது உருவமற்றது
ஆகவே அவர்கள் இந்த மூன்று சொற்களுக்கும் பின்வருமாறு பொருள் கொண்டனர்
ஸத்யம் -அஸத்யம் அற்றது -இருப்பில்லாமை இல்லாதது
ஞானம் -அஞ்ஞானம் இல்லாதது -அறிவின்மை இல்லாதது
அநந்தம் -அளவு இல்லாதது
இதற்கு அபாவம் -இன்மை -என்பதே பொருளாவதால் மூன்று தனித் தன்மையான இன்மைகள் தேவையில்லை
இவ்வாறு கொள்வதால்
ப்ரஹ்மத்திற்குத் தனி உருவமும் குணங்களும் இல்லை என்றும்
அது ஞானம் மட்டுமே என்றும் கொள்கின்றனர்
விஸிஷ்டாத்வைதப் பொருள்
இங்கு இம் மூன்று பதங்களுக்கும் பின்வருமாறு பொருள் கொள்ளப் படுகிறது
1-ஸத்யம் –நிருபாதிக சத்தாயோதி -தன இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாதது -என்றும்
நிர் விகார ஆஸ்பதம் -என்றும் மாறுபாடு அற்றது -என்றும்
மற்றைய உயிருள்-உயிரல் -பொருள்கள் பரமாத்மாவின் விருப்படி மாறுபாடு அடைபவை
2- ஞானம் -முக்காலங்களிலும் -எந்நிலையிலும் -அசங்குசித -குறைவடையாத அறிவு
ஆத்மாவுக்கும் ஞானம் குணமானாலும் -அது நித்யமானாலும் -குறைவுடையதாய் இருக்கும்
பத்தனுக்கு -எப்போதும் குறைபட்டது
முக்தனுக்கு -முன்பு குறைபட்டது
நித்யனுக்கு -பரமாத்மாவின் நினைவால் மட்டும் குறைவு படாது இருப்பது
3- அநந்தம் –அபரிச்சேத்ய -அளவிறந்தது -அளவு படுதல் இல்லாதது
இடம் காலம் பொருள்களால் -மூன்றாலும் அளவு படாதது
பரமாத்மா தவிர்ந்த மற்றவை இம்மூன்று வகையாலும் அளவு பட்டவை
அதாவது ப்ரஹ்மம்
தன் இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாமலும்
என்றும் மாறுபாடு இல்லாமலும்
எக்காலத்தும் எந்நிலையிலும் குறைவடையாத ஞானத்தோடும்
இடம் காலம் பொருள்கள் எனும் மூன்று வகையாலும் அளவிட முடியாததாகவும் இருக்கிறது
————
28–நநு-
ஞான மாத்திரம் ப்ரஹமேதி ப்ரதிபாதிதே நிர் விசேஷ ஞான மாத்திரம் ப்ரஹமேதி நிஸ் ஸீயதே —
நைவம் ஸ்வரூப நிரூபண தர்ம ஸப்தா ஹி தர்ம முகேந ஸ்வரூபம் அபி ப்ரதிபாத யந்தி கவாதி சப்தவத்-ததாஹ ஸூத்ரகார
தத் குண சாரத்வாத் வ்யபதேச -ப்ராஞ்ஞவது -இதி
( ஞான குண சாரத்வாத் ஆத்மநோ ஞானம் இதி வியபதேச-யதா ப்ராஞ்ஜேந ப்ரஹ்மணா விபஸ்சிதா–யஸ் சர்வஞ்ஞ சர்வவித் –
இதி சர்வஞ்ஞ ஏவ ஞான குண சாரத்வாத் சத்யம் ஞானம் இதி வியபதிஸ்யதே )
யாவதாத்ம பாவித்வாச்ச ந தோஷ இதி ஞாநேந தர்மேன ஸ்வரூபம் அபி நிரூபிதம் நது ஞான மாத்ரம் ப்ரஹமேதி கதம்
இதமவகம்யத இதி சேத்-யஸ் சர்வஞ்ஞ ஸர்வவிது-இதி ஞாத்ருவத்வஸ்ருதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
விஞாதாரம் அரே கேந விஜாநீயாத் –இத்யாதி ஸ்ருதி சதா சமதிகதமிதம்-ஞானஸ்ய தர்ம மாத்ரவாத் தர்ம மாத்ரஸ்ய
ஏகஸ்ய வஸ்துத்வ ப்ரதிபாதாந நுப பத்தேஸ் ச
அத ஸத்ய ஞாநாதி பதாநிஸ் வார்த்த பூத ஞானாதி விசிஷ்டமேவ ப்ரஹ்ம ப்ரதிபாத யந்தி —
ப்ரஹ்மத்திற்கு பண்புகள் இல்லை என்பதை மறுத்தல்
மாறாக ஞானம் மட்டுமே ப்ரஹ்மம் எனில்
அடையற்ற ஞானமே ப்ரஹ்மம் என்று நிச்சயிக்கப் படும்
அறிவதும் அறியப்படுவதும் வேறு இல்லை என்றதாகும் –
அவ்வாறு இல்லை –
ஒரு பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்தும் அடைமொழிகள் அப்பொருளுக்கு உரிய பண்பு செயல் ஆகியவற்றால் அதை மற்றவற்றின் நின்றும் பிரித்துக் காட்டும் –
எடுத்துக் காட்டாக -பசு முதலியவை -மற்றைய நாலு கால் பிராணிகளின் நின்றும் அதன் பசுத்தன்மை-கோ தன்மை -அதை வேறு படுத்துகிறது –
இதைக் கூறும் இடத்து ப்ரஹ்ம ஸூத்ர காரரும் -எந்தக்குணம் ஒரு பொருளில் விஞ்சி இருக்குமோ அந்தக்குணத்தை யிட்டே அப்பொருளை அழைக்கலாம் என்கிறார்
ஞானத்தையே பண்பாக உடையதாதலின் ஆத்மாவுக்கு ஞானம் என்றே பெயர்
பரமாத்மா -வாலறிவன் -ஆனந்தம் -பரமாத்மா –
மேலும் எந்தக் குணம் ஒரு பொருள் உள்ள மட்டும் அதை விட்டு பிரியாமல் இருக்குமோ அதே குணத்தையிட்டு அதைக் குறிப்பதில் தவறில்லை –
அதனால் ஞானம் என்னும் பண்பினால் அதை யுடைய பரமாத்மாவும் குறிக்கப் படும்
அந்த ஞானமே பரமாத்மா என்பதில்லை -எப்படி எனில்
ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -எல்லாவற்றையும் அறிகிறான் -எல்லா விதத்தாலும் அறிகிறான் –
———–
29–தத் தவம் இதி த்வயயோர் அபி பதயோ -ஸ்வார்த்த ப்ரஹாணேந நிர்விசேஷ வஸ்து ஸ்வரூப உபஸ்தான
பரத்வே முக்கியார்த்த பரித்யாகச்ச-
நநு
ஐக்ய தாத்பர்ய நிஸ்ஸயாத் ந லக்ஷணா தோஷா ஸோயம் தேவ தத்த இதிவத் –
யதா ஸோ அயம் -இத்யத்ர ச இதி சப்தேன தேசாந்தர காலாந்தர சம்மந்தீ புருஷ பிரதீயதே
அயம் இதி ச சந்நிகித தேச வர்த்தமான கால சம்மந்தீ தயோ சாமாநாதி கரணேந ஐக்யம் பிரதீயதே
தத்ர ஏகஸ்ய யுகபாத் விருத்த தேச கால சம்பந்திதயா பிரதீதீர்ந கடத இதி த்வயோர் அபி பதயோ
ஸ்வரூப மாத்ரோப ஸ்தாபந பரத்வம் ஸ்வரூபஸ்ய ச ஐக்யம் ப்ரதிபாத்யதே இதி சேத் –
(தத் தவம் அஸி -அஹம் ப்ரஹ்மாஸ்மி -இது வரை நான் என்று பிரமித்தது இல்லை -இதுவே அத்வைதி வாதம்
கங்கா கோ சாலை லக்ஷணையால் கங்கைக் கரையில் –
இரண்டு பதங்களுக்கும் லக்ஷணையால் அமுக்கிய வாதம் கொள்ளக் கூடாதே)
(ஞானம் த்வி விதம்-முதலில் இந்திரியங்கள் மூலம் அறிந்த ஞானம் ஓன்று
ஸ்ம்ருதி -இந்திரிய ஸஹ காரம் வேண்டாம் இதுக்கு -ஸம்ஸ்காரம் -மனப் பதிவு ஒன்றுமே வேண்டும்
அனுபவம் பற்றிய நினைவு -ப்ரத்யக்ஷம் -விஷய சம்யோகத்தால் வந்தது
தேவ தத்தன் ஸகா தேவ தத்தா அயம் தேவ தத்தா -)
தத்வமஸி என்னும் வாக்கியத்திற்கு அத்வைதிகள் சொல்லும் பொருளுக்கு மறுப்பு
அது நீ -தத் த்வம் என்ற இரண்டு சொற்கள் அவை உண்மையாகக் குறிப்பிடும் பொருளை விட்டு -நேராகக் ஆட்டும் பொருளை மட்டும் கொண்டு அவை குணங்கள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் எனக் கொண்டால் அதன் மெய்ப் பொருளைத் தள்ள வேண்டி வரும்
மாறாக அத்வைதிகள் கூறுவது போல் -குணம் இன்மையால் இரண்டும் ஒன்றே என்று கொண்டால் இலக்கணை மீறும் குற்றம் ஆகிறது
எடுத்துக் காட்டாக
இவரே அந்த தேவதத்தன் என்று கூறுகையில்
இவர் என்பதனால் அப்பொழுது அவ்விடத்தில் காணப்படுபவரும்
அந்த என்பதனால் பிறிதொரு சமயத்தில் வேறொரு இடத்தில் காணப்பட்ட வரும் ஒருவரே என்பதாகிறது –
இங்கு தேவதத்தன் என்பவருக்கு கடந்த கால இடத் தொடர்புகளும் நிகழ் கால இடத் தொடர்புகளும் முக்கியமாகக் கொள்ளப் படாமல் தேவ தத்தன் என்னும் நபரே முக்கியமாகக் கொள்வது போல் பொருள் கொண்டு விட வேண்டும் என்பது அத்வைதிகள் முடிவு
இதம் ரஜதம் -ஒளி மிக்க பொருளைக் கண்ட வுடன் அது வெள்ளி என்று தோன்றுகிறது
அருகில் சென்று பார்த்த போது -ந இதம் ரஜதம் -இது வெள்ளி அல்ல சிப்பி -என்று முடிவாகிறது –
முதலில் அறிவு பாதிக்கப் பட்டு இருந்தது –
பிறகு மெய்யறிவு உண்டாகி அது இல்லை என்றதாயிற்று
இலக்கணைக் குற்றம் –எடுத்துக் காட்டு-மஞ்சாக்ரோதை -கட்டில்கள் சத்தம் போடுகின்றன -என்பதில் கட்டில்கள் என்பதற்கு அதில் அமர்ந்து இருக்கும் மனிதர்களை யென்றே கொள்ள வேண்டும் –
ஏன் எனில் தனியாகக் கட்டில்களுக்கு ஒலி எழுப்பும் திறனில்லை –
தச மத்வம் அஸி -அந்தப் பத்தாவது ஆள் நீ
————-
30–நைத வேதம்
சோயம் தேவதத்த-இத்யத்ராபி லக்ஷணா கந்தோ ந வித்யதே விரோத பாவாத் –
ஏகஸ்ய பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தோ ந விருத்த தேசாந்தர ஸ்திதி பூதா சந்நிஹித தேச ஸ்திதி வர்த்ததே
அத பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தி தயா ஐக்ய ப்ரதிபாதனம விருத்தம் தேச த்வய விரோதஸ் ச கால பேதேந பரிஹ்ருத
லக்ஷணாயாம் அபி ந த்வயோர் அபி பதயோர் லக்ஷணா ஸமாச்ரயணம் ஏகேநைவ லஷிதேந விரோதி பரிஹாராத் –
லக்ஷணாபாவ ஏவ உத்த தேசாந்தர சம்பந்தி தயா பூதஸ்யைவ அந்ய தேச சம்பந்தி தயா வர்த்தமானத்வா விரோதாத்
ஏவ மாத்ராபி ஜகத் காரண பூதஸ்யைவ பரஸ்ய ப்ரஹ்மண
ஜீவ அந்தர்யாமி தயா ஜீவாத்ம த்வம விருத்தமிதி ப்ரதிபாதிதம் -யதா பூதயோர் அபி ஹி த்வயோர் ஐக்யம்
சாமாநாதி கரண்யேந பிரதீயதே -தத் பரிந்யாகேந ஸ்வரூப மாத்ர ஐக்யம் ந சாமநாதி கரண்யஸ்யார்த்தா
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மிந் நர்த்தே வ்ருத்திஸ் சாமாநாதி கரண்யம் (பதாஞ்சலி அருளிய லக்ஷணம் )-இதி ஹி
தத்வித ததா பூதயோர் ஏவ ஐக்யம் உபபாதிதம் அஸ்மாபி –
அது அவ்வாறு அல்ல
இவர் அந்த தேவதத்தன் என்பதில் இலக்கணைக் குற்றம் வராது -ஏன் எனில் இவர் அந்த என்ற சொற்களுக்கு மாறுபட்ட பொருளைக் குறிக்காமையால் ஒரு நபருக்கு -பொருளுக்கு -கடந்த காலத்தில் வேறொரு இடத்துடன் உள்ள தொடர்பு -நிகழ் காலத்தில் கண் முன் காணும் இடத்துடன் உள்ள தொடர்புக்கு மாறுபாடுடையதன்று
ஒருவருக்கு இரு வேறு பீடத்துடன் உள்ள தொடர்பின் கால மாறுபாட்டால் சமன் செய்யப்படுகிறது
இலக்கணையாகக் கொண்டாலும் இரண்டு பாதங்களும் இலக்கணையால் சுட்டிக் காட்டப்படும் ஒரே பொருளினால் அவ்விரண்டு சொற்களும் ஒன்றேயாக ஒரு பொருளுடையவையாக ஆகமாட்டா
இங்கு கடந்த காலத்தில் வேறோர் இடத்தில் தொடர்புடையதாக இருந்தமையும்
தற் சமயம் இங்கு காணப்படுதலும் ஒரு நபருக்கு இலக்கணைக் குற்றமாக முடியாது
அதே போல் உலகின் காரணமாய் இருக்கும் தன்மை யுடைய ப்ரஹ்மம் -தத் -ஆத்மாவின் உள்ளுறையாய் விளங்கி -அந்த ஆத்மாவின் நின்றும் வேறுபட்ட ஒரு ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அவ்வாறு அந்த இரண்டு குணமுள்ள ப்ரஹ்மமும் ஒன்றே என்பதால் ஸாமாநாதி கரணம் –சமன் செய்து பொருள் கோடல் -கிடைக்கிறது
இப்படிக் கொள்வதைத் தவிர்த்து -தத் த்வம் -அது நீ என்ற இரு சொற்களும் தம் தம் பொருளைக் குறிக்காது –
தம்மின்றும் வேறுபட்ட ஒரே ஆத்மா -பரமாத்மா =ஜீவாத்மா -என்ற பொருளைத் தர இயலாது
வேறுபட்ட பொருள் காட்டும் இரு சொற்கள் தத் தம் நேர் பொருளை விட்டு ஒரே பொருளை -வஸ்துவை அடை மொழியினால் காட்டுதல் ஸாமா நாதி கரணமாகும் -சமன் செய்து பொருள் கோடலாகும் –
இதனால் இரு சொற்களாலும் ஒரே பொருள் -வஸ்து -குறிக்கப்படும் என்றே அறியப்பட்டது
இலக்கணை யாவது ஒரு சொல் தனக்குரிய நேர் பொருளைத் தவிர்த்து பழக்கத்தினாலோ -பண்பு மிகுதியினாலோ -அதினிலும் வேறுபட்ட ஒரு பொருளைக் கொள்வது
எடுத்துக் காட்டு
உலக வழக்கில் கம்பி நீட்டினான் என்று கூறுகையில் ஒரு கொல்லன் உலோகத்தைக் கம்பியாக நீட்டுவதைக் கொள்ளாது -ஒருவன் தப்பி ஓடி விட்டான் -என்பதையே கொள்கிறோம் –
இங்கு அது என்ற சொல் தொலைவில் இருக்கும் ஒன்றைக் காட்டும் –
நீ என்பது அண்மையில் கண் முன்னே காணப்படும் ஒருவனைக் குறிக்கும்
இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பிட வேண்டுமானால் அவை இரண்டும் தத் தம் அடைமொழிகளால் மட்டும் காட்ட இயலும் –
இல்லை எனில் அது நீ என்ற இரண்டு சொல் ஒரு பொருள் பன் மொழி -ஆ -பசு -போலாகும்
அவ்வாறு கொள்வது தவறு –
அவற்றுக்கு அடை -விசேஷணம் -உண்டு என்றால் ப்ரஹ்மத்திற்குப் பண்புகள் உண்டு என்று ஏற்பட்டு தமது பண்பற்ற ப்ரஹ்மம் என்ற கொள்கை மாறுபடும் என்பதால் அத்வைதிகள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் –
———
31–உபக்ரம விரோத உப சம்ஹாரே வாக்ய தாத்பர்ய நிஸ்ஸயஸ் ச ந கடதே உபக்ரமே ஹி
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத்யாதிநா
ஸத்ய ஸங்கல்பத்வம் ஜகத் ஏக காரணத்வம் அப்யுக்தம் தத் விரோதி ச அவித்யாஸ்ரயத்வாதி ப்ரஹ்மண
(ஸப்தம் -வாக்ய சேஷம் -அது பிரகரண சேஷம் – -அது ஸாஸ்த்ர சேஷம் –
லிங்கம் அடையாளங்கள் -1-உபக்ரமம் உபஸம்ஹாரம்-இதுவே பிரதானம் -2-அப்பியாசம் -3-அபூர்வ வத் -4-பலம் -5-அர்த்தவாதம் -6-உபபத்தி ஆறும் உண்டே
சரீராத்மா பாவத்துக்கு உபக்ரமம் உப சம்ஹாரம் ஏகார்த்தம்)
துவக்கத்தில் சொன்ன பொருளும் முடிவில் கொண்ட பொருளும் ஒன்றே என்பது முடியாது –
துவக்கத்தில் அது நினைத்தது பலவாகக் கடவேன் மக்களைப் படைப்பேன் என்று உண்மையான வினைத்திட்பம் கொண்டு இருந்ததே உலகிற்குக் காரணமாயிற்று என்பது வெளிப்படை
அதற்கு மாறாகக் கொண்டால் அந்த ப்ரஹ்மத்திற்கு மக்களைப் படைக்கும் திறனும் அதற்கான ஞானமும் இல்லை
அது அஞ்ஞானத்திற்கு இருப்பிடமானது என்றதாகும்
அத்வைதிகள் அறிவே ஞானமே ப்ரஹ்மம் என்று முதற் கொள்கையாய் கொண்டுள்ளனர்
அவித்யை என்பதனாலேயே அது தன்னை மற்றை உயிர்களாக நினைத்து மயங்குகிறது
அந்த மயக்கமே இந்தப் பொய்யான உலகு உண்மை போல் தோன்றும் காரணம் என்பது அவர்கள் முடிவு
உலகைப் படைக்கும் அறிவு ப்ரஹ்மத்திற்கு இல்லை என்றால் ப்ரஹ்மமே ஞானம் என்று கொண்டது பொருந்தாது
அதாவது அவர்களே தங்கள் முதற் கொள்கைக்கும் முடிவான இருப்புக்கும் மாறுபடுகின்றனர்-
———-
32–அபி ச அர்த்த பேத தத் சம்சர்க்க விசேஷ போதந க்ருத பத வாக்ய ஸ்வரூப லப்த பிராமண பாவஸ்ய சப்தஸ்ய
நிர் விசேஷ வஸ்து போதநா சாமர்த்யாத்ந நிர்விசேஷ வஸ்து நி சப்த பிரமாணம்
நிர் விசேஷ இத்யாதி சப்தாஸ்து கேந சித் விசேஷேண விஸிஷ்டதயா அபஹதஸ்ய வஸ்துநோ வஸ்த்வந்தராவகத விசேஷ
நிர்சேஷதக தயா போதகா இதரதா தேஷாமப்யநவ போதகத்வமேவ ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண பதஸ்யை அநேக விசேஷ
கர்பிதத்வாத் அநேக பதார்த்த சம்சர்க்க போதகதவாச்ச வாக்யஸ்ய-
(சப்தம் ப்ரக்ருதி ப்ரத்யாத்மகம் பகுதி விகுதி சேர்ந்தே இருக்கும் -பேத ப்ரதிபாத்யம் ஆகவே இருக்குமே -கடம் -வேறே ஒன்றை வியாவர்த்திக்கைக்காக சொல்கிறது-ஆத்மா ப்ரஹ்மம் -ஞான மாத்திரம் -ஞாத்ருத்வாதி விசேஷணங்கள் இல்லாமல் –
ஞானம் சப்தத்தால் வஸ்து நிர்த்தேசம் என்பர்)
மேலும் ஒவ்வொரு சொல்லும் பகுதி விகுதியாய் நின்று ஒரு குறிப்பிட்ட பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது
அவ்வாறே பல சொற்களின் தொடையான சொல் தொடரும் தனக்கென ஒரு தனித்த பொருளையே காட்டும்
அவைகள் எக்காலத்தும் பண்புகள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் திறன் அற்றவை இவ்வாறு பொருள் காட்டும் தன்மையே நமக்குக் கொள்ளத் தக்கது
பண்புகள் அற்றது என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும்
சொற்கள் யாவும் தத் தமக்குரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும்
அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்புற்ற பொருள் என்று எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது
உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம்
அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –
————–
33–அத ஸ்யாத் -நாஸ்மாபி நிர்விசேஷ ஸ்வயம் பிரகாசேசே வஸ்துநி சப்த பிரமாண மித்யுச்யதே
ஸ்வதஸ் சித்தஸ்ய பிராமணன – பேக்ஷத்வாத் சர்வை சப்தை தது பராக விஷேஷா ஞாத்ருத்வாதய சர்வே நிவர்த்தயந்தே
சர்வேஷு விஷே சேஷு வஸ்து மாத்ரம் அநவச் சிந்நம் ஸ்வயம் பிரகாசம் ஸ்வத ஏவாவதிஷ்டதே -இதி –
பண்புகள் அற்ற ப்ரஹ்மத்தின் தன்னொனிர் தன்மை என்னும் வாதத்திற்கு மறுப்பு
அது அவ்வாறாயின் -நாங்கள் ப்ரஹ்மத்திற்கு சொற்கள் -ஸப்தம் -சாட்சி பிரமாணம்-என்று சொல்லவில்லை –
ப்ரஹ்மம் தானே வெளிப்படும் பொருள் என்பதால் அதனைப் பிற -சொற்கள் முதலியன -காட்டிக் கொடுக்க முடியாது –
ஸாஸ்த்ரங்களின் எல்லாச் சொற்களும் தங்களுக்குள்ள சிறப்பான போல் கூறும் தன்மையால் குணம் அற்ற ப்ரஹ்மத்தின் மீது ஏற்பட்டு இருக்கும் பண்புகள் யாவையும் விலக்குகின்றன என்கிறார்கள்
அது அவ்வாறு அல்ல -எந்தச் சொல்லால் அப்பொருள் -ப்ரஹ்மம் -சுட்டிக் காட்டப்பட்டு அதன் பண்புகள் விலக்கப் படுகின்றன –
ஞானம் மட்டும் என்ற சொல்லாலா
அதுவும் கூட பண்பு உள்ள பொருளையே காட்டுகிறது –
அச்சொல்லின் பகுதி விகுதிகளால் அது தனக்கு உரிய பொருள் கூறும் தன்மையால் பண்புகள் உள்ள பொருளையே காட்டுகிறது –
ஞா -அறிதல் என்ற பொருள் படுதலால் செய்கையைக் காட்டி -அதனால் செய்பவனையும் -செய்யப்படும் தொழிலையும் காட்டும் –
தி -இது பெண் பால் ஒருமை விகுதி
ப்ரஹ்மம் தானாகவே காட்டிக் கொடுக்கிறது என்றாலும் அதன் நிலைச் சிறப்பால் பண்பற்ற பொருளைக் காட்ட முடியாது
இங்கு ஞப் தே என்பதால் பிறர் துணை யன்றி இயற்கையாகவே ஞானமுடையது ப்ரஹ்மம் என்பது பெறப்படுகிறது –
———-
34–நைததேவம்
கேந சப்தேந தத் வஸ்து நிர்திஸ்ய தத் கதா விசேஷா நிரஸ்யந்தே –
ஞாப்தி மாத்ர சப்தேந -இதி சேத் –
ஸோபி ச விசேஷ மேவ வஸ்து அவலம்பதே ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண விசேஷ கர்ப்பித தத்வாத தஸ்ய –
ஞா -அவ போதநே இதி ச கர்மக-ச கர்த்ருதுக கிரியா விசேஷ க்ரியாந்தர வ்யாவர்த்தக-ஸ்வபாவ விசேஷஸ் ச
ப்ரக்ருதயா அவகம்யதே ப்ரத்யயேந லிங்க சங்க்யாதயா-
ஸ்வத ஸித்தாவபி ஏதத் ஸ்வபாவ விசேஷ விரஹே ஸித்திரே வநஸ்யாத் –
அந்ய சாதந ஸ்வ பாவதயா ஹி ஞப்தே ஸ்வதஸ் சித்தருஸ்யதே–
(ஞா -அவ போதநே-அறிதல் -ஏதாவது ஒன்றைப் பற்றியே இருக்க வேண்டும் -யார் அறிகிறான் -யாரை அறிகிறான் எதை அறிகிறான் கேள்வி வருமே
மாத்திரம் சப்தம் இவற்றை விவரிக்காதே -லிங்கம் அடையாளம் –)
பண்புகள் அற்றது -என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும் –
சொற்கள் யாவும் தத் தமக்கு உரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும் -அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்பற்ற பொருள் என்ற எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது –
உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம் -அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது –
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –
—————
35–ப்ரஹ்ம ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஸர்வதா ஸ்வயமேவ ப்ரகாஸதே சேத் ந தஸ்மிந் அந்ய தர்மாத் யாச சம்பவதி –
ந ஹிரஜ்ஜூ ஸ்வரூபே அவபா சமாநே சர்ப்பத்வாதி அத்யஸ்யதே அத ஏவ ஹி பவத்பி
ஆச்சாதிகா அவித்யா -(ஆச்சாதிகா அவித்யா – பொருளை மட்டும் மறைத்தல் -விசேஷகா அவித்யா -பண்புகளை மறைத்தல் –
என்று இரண்டு வகை அவித்யா உண்டே – ) அப்யுபகம்யதே ததஸ் ச ஸாஸ்த்ரீய நிவர்த்தக ஞானஸ்ய ப்ரஹ்மணி திரோஹிதாம்ஸோ
விஷய அந்யதா தஸ்ய நிவர்த்திகத்வம் ச ந ஸ்யாத் -அதிஷ்டாநாதிரேகி ரஜ்ஜூத்வ ப்ரகாஸதேந ஹி சர்ப்பத்வம் பாத்யதே –
ஏகஸ்சேத் விசேஷோ ஞான மாத்ரே வஸ்துநி சப்தேந அபிதீயதே ச ச ப்ரஹ்ம விசேஷணம் பவதி இதி சர்வ ஸ்ருதி ப்ரதிபாதித
சர்வ விசேஷண விசிஷ்டம் ப்ரஹ்ம பவதி அத பிரமாணிகாநாம் ந கேநாபி ப்ரமாணே ந நிர்விசேஷ வஸ்து ஸித்தி —
(ஞானம் அந்நயாதீன ஸ்வயம் பிரகாசம்-ஸ்வ தர்மம் – -தன்னுடைய சம்பந்தத்தால் பிரகாசம் அற்ற சேதனப் பொருள்களை பிரகாசிக்கும்
ஒரு பொருளை விஷயீகரித்தால் தானே ஸ்வயம் பிரகாசம் ஆகும் –
நிர்விசேஷ வஸ்துவுக்கு ஸ்வயம் ப்ரகாஸத்வம் சாதிக்க முடியாதே
ஸ்வயம் பிரகாச வஸ்து மேல் பிரமம் உண்டாகவே முடியாதே)
(நான் வேடுவன் -நான் ப்ரம்மத்துக்கு விஷயம் அல்லவே -வேடுவன் தப்பாக அறிவதில் தானே பிரமம் ஆகலாம்
ஸ்வயம் பிரகாச வஸ்து பிரமத்துக்கு விஷயம் ஆகவே முடியாதே)
———–
36 —நிர்விகல்பக ப்ரத்யஷேபி ச விசேஷமேவ வஸ்து பிரதீயதே -அந்ய தா ச விகல்பகே ஸோயமிதி–
பூர்வாவகத பிரகார விஸிஷ்ட ப்ரத்யயா நுபபத்தே-
வஸ்து ஸமஸ்த்தாந விஷய ரூபத்வாத் கோத்வாதே -நிர்விகல்பக தசாயாமபி ச சமஸ்தானமேவ வஸ்து இத்தம்-இதி பிரதீயதே
த்விதீயாதி ப்ரத்யயேஷு தஸ்யைவ சமஸ்தாந விசேஷஸ்ய அநேக வஸ்து நிஷ்டதா மாத்ரம் பிரதீயதே சமஸ்தாந ரூப
பிரகாரக்யஸ்ய பதார்த்தஸ்ய அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து விசேஷணத்வம்
த்விதீயாதி ப்ரத்யயாவகம்ய மிதி த்விதீயாதி ப்ரத்யயா ச விகல்பகா இதயுச்யந்தே –
பண்புகள் அற்ற மெய்ப்பொருட் காட்சி
பண்புகள் அற்ற பொருளைக் காட்ட முடியும் என்பதை மறுத்தல்
சிறப்புத் தன்மைகள் அற்ற மெய்ப்பொருள் காண் முறையும் -ஏதோ ஒரு பண்புடன் கூடிய பொருளையே காட்டும் –
இல்லையெனில் ஸ விகல்ப ஞானத்தில் சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறையில் -இவன் அதே தேவதத்தன் -என்று சொல்லும் போது முன்பு தேவதத்தனும் பின்பு அவனுடைய பண்புகளும் அறியப்பட்டன என்பது தவறாகும்
ஒருபடிப்பட்டதான பண்புகள் ஏதோ இருப்பதால் மட்டும் இவ்விதம் சொல்ல முடியும் –
ஒரு பிராணி அதன் உருவ அமைப்பு பண்புகள் முதலியவற்றால் -பசு -என்று அறியப்பட்டு பின்னர் அதைப்போன்ற பல பிராணிகளைக் காண்கையில் அவைகளும் பசுவே -என்று அறியப்படுகின்றன –
இரண்டாம் முறை அதே உருவ அமைப்புக் கொண்ட பல பொருள்கள் பார்க்கப்படுகின்றன –
இவ்வாறு உருவ அமைப்பு ஒற்றுமை கொண்ட பல பொருள்கள் சிறப்புக் குணமுடையதாய் இருத்தல் இரண்டாவது நோக்குதலில் ஆரியப் படுவதால் அது சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறை எனப்படுகிறது
ப்ருதக் ஸித்தம் –விசேஷணம் பிரிக்கப் படக் கூடியது
அப்ருதக் ஸித்தம் –குணம் -பிரகாரம் -பிரிவற்றது
நிர் விகல்பம் -ஒரு பொருளை மற்றவற்றில் நின்றும் பிரித்து அறிதல்
ஸ விகல்பம் -அதே போன்று பல பொருள்களை அறிதல்
ப்ரஹ்மத்தின் தனிப்பட்ட பண்புகள் உயர்வற உயர் நலம் உடைய நற் குணக்கடல்
தன்னை அடைந்தோரையும் அவ்வாறு ஆக்கும் வல்லமை படைத்தது
2-பசு என்னும் விலங்கு மற்ற விலங்கு வகைகளின் நின்றும் மாறுபடுவதை முதலாவதாகவும்
பல பசுக்கள் தமக்குள்ள சில வித்யாசங்களுடன் இருத்தலை அதன் பிறகும் அறிய முடியும்
3-இவன் அதே தேவ தத்தன் என்பது ப்ரத்யபிஞ்ஞா-நினைவு கூறுதல் –
————-
37–அத ஏவ ஏகஸ்ய பதார்த்தஸ்ய பின்னா பின்ன ரூபேண விருத்தம் வ்யத்யாத்மகத்வம் ப்ரத்யுக்தம் சமஸ்தானஸ்ய ஸம்ஸ்தானீன
பிரகாரதயா பதார்த்தாந்தரத்வம் பிரகாரத்வா -தேவ ப்ருதக் சித்யநர் ஹத்வம் -ப்ருதக் அநு பலம்பஸ் சேதிநத்வயாத் மகத்வ ஸித்தி –
பிறகு இந்த ஒன்றான பொருளின் மாறுபாடுள்ள மாறுபாடற்ற தன்மைகள் அவை உடைமை இன்மையாலேயே அறியப்படுகின்றன –
ஒரு அமைப்பும் அதை உடைய பொருளும் பிரிக்க முடியாமையால் ஓன்று மற்ற ஒன்றுக்கு அடையாகிறது-ஒன்றாகவே காணப்பட்டாலும் ஒரு பொருளும் அதன் அமைப்பும் தனித்து இயங்காமல் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டதாகும் -அதனால் ஸ விசேஷத்வம் பண்பு உடைமை வெளிப்படும்
எடுத்துக் காட்டு -குடமும் நிறமும்
———–
38–அபி ச நிர்விசேஷ வஸ்து வாதிநா ஸ்வயம் பிரகாச வஸ்துநி ததுபராக விசேஷா சர்வைஸ் சப்தை நிஷித்யந்தே
இதிவததா கே தே ஸப்தா நிஷேதகா -இதி வக்தவ்யம்-
வசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி விகார நாம தேயயோ வாசாரம் பண மாத்ரத்வாத்
யத் தத்ர காரண தயா உப லஷ்யதே வஸ்து மாத்ரம் ததேவ சத்யம் அந்யத சத்யமிதி இயம் ஸ்ருதிர் வததி இதி சேத்
நைததுப பத்யதே ஏகஸ்மின் விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதீதி ப்ரதிஞ்ஞாதே அந்ய ஞாநேந அந்ய ஞாநா சம்பவம்
மந்வாநஸ்ய ஏகமேவ வஸ்து விகாரத்ய வஸ்தா விசேஷண பாரமார்த்திகே நைவ நாநா ரூபமவஸ்திதம் சேத்
தத்ர ஏகஸ்மின் விஞ்ஞாதே தஸ்மாத் விலக்ஷண சமஸ்தானாந்தர மபி ததேவ வஸ்து இதி தத்ர த்ருஷ்டாந்தோயம் நிதர்சித–
நாத்ர கஸ்யசித் விசேஷஸ்ய நிஷேதக கோபி சப்த த்ருச்யதே வாசாரம்பண மிதி வாசா வ்யவஹாரேண-ஆரப்யதே இதி ஆரம்பணம் —
பிண்ட ரூபேண ஸம்ஸ்திதாயா ம்ருத்தி காயா நாமச அந்யத் வியவஹாரஸ் ச அந்ய கட சராவாதி ரூபேண அவஸ்தி தாயா
தஸ்யா ஏவ ம்ருத்திகாயா அந்யாநி நாமாநி வியவஹாரஸ் ஸ அந்யாத்ருசா தாதாபி ஸர்வத்ர ம்ருத்தி காத்ர வ்யமேகமேவ
நாநா சமஸ்தான நாநா நாமதேயாப்யாம் நாநா வ்யவஹாரேண ச ஆரப்யத இதி ஏததேவ சத்யம் -இத்யநேந
அந்ய ஞாநேந அந்ய ஞான சம்பவோ நிதர்சித நாத்ர கிஞ்சித் வஸ்து நிஷித் யத–இதி பூர்வமேவ அயமர்த்த பிரபஞ்சித —
இங்கும் பொருள் குணங்கள் அற்றது என்று வாதிப்போர் கனமற்ற அப்பொருளின் மேல் ஏற்றிச் சொல்லப்படும் அடைகளினால் அதன் குணங்கள் விலக்கப் படுகின்றன என்று கூறும் நிலையில் தானே ஒளிரும் ப்ரஹ்மத்தில் அதில் ஏறிட்டுச் சொல்லப்படும் சொற்களால் அதன் குணங்கள் விலக்கப்படுகின்றன என்று கொண்டால் அவ்வாறு கூறப்படும் சொற்கள் யாவை என்று கேட்க்கிறோம்
மண்ணுருண்டை எடுத்துக் காட்டில் அது ஒன்றே உண்மை -அதனால் உண்டாகும் குடம் வாணாய் என்பவை உலகியலியல் பெயரிட்டு அழைப்பதற்கு மட்டுமே -என்று விடை அளிக்கப்படுகிறது –
ஏன் எனில் எந்தப் பொருளின் நின்றும் மற்றவை உருவாகின்றனவோ அப் பொருள் மட்டுமே உண்மை என்று கொள்வது நில்லாது -எப்படி என்றால் –
எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -என்று கேட்கப்பட்டு இருப்பதால் ஒரே பொருள் -மாறுபாடு அடைந்து பல பொருள்களாக ஆகையில் -அந்த முதல் பொருளை அறிவதனால் அதன் மாறுபாடான மற்றப் பொருள்களையும் அறிய முடியும் என்று தான் பொருள் படும்
இங்கு எதிர்மறைச் சொற்கள் ஏதும் இல்லாமையாலே இவ்வாறு இல்லை என்று கொள்வது முடியாது
வாசம் -பேச்சு வழக்கில் ஆரம்பம் துவக்கப்படுத்தல் -அழைக்கப் படுதல் -மற்றையப் பொருள்களின் நின்றும் வேறுபடுத்தி என்பதற்காக பிண்டமாக இருந்த மண் பிண்டம் என்றும் மாறுதல் அடைகையில் குடம் வாணாய் என்றும் ஒவ்வொரு உருவுக்கும் தனிப்பெயர்களாக வருகின்றன –
இப்படி மண்ணின் நின்றும் வேறுபட்ட அமைப்பை யுடையவை யாயினும் இப்பொருட்கள் யாவ்ய்ம் மண்ணாலேயே ஆகி இருப்பதால் வை மண் என்பதும் உண்மை –
அவர் வேறுபொருட்களால் ஆக்கப்பட்டதல்ல என்றே ஆசானால் விளக்கப் படுகிறது -பிற பொருட்கள் எதுவும் இல்லை என்று எங்கும் கூறப்பட வில்லை
ஒரு பொருள் தான் இருக்கும் நிலையின் நின்றும் மாறுபட்டு மற்ற ஒரு நிலையை அடைவது விகாரம் எனப்படும் –
(ஏக பதார்த்த விஞ்ஞானம் காரண கார்ய பாவத்தால் சர்வ விஞ்ஞானம் என்பது அல்ல
ஏக விஞ்ஞானத்தில் அடங்கிய சர்வ விஞ்ஞானம் என்கிறார்
ஏக விஞ்ஞான பின்ன சர்வ விஞ்ஞானம் -அபி –
ஏகம் ம்ருத் பிண்டம் -ஸர்வ குடம் மடக்கு போல்வன-இவையும் ம்ருத் பண்டம் போல் ஸத்யம் தானே )
39–அபி ச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இத்யாதிநா ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய மித்யாத்வம் ப்ரதிஞ்ஞாதம் சேத்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந –இத்யாதி த்ருஷ்டாந்த -ஸாத்யவிகலஸ்யாத் -ரஜ்ஜூ சர்ப்பாதிவத் ம்ருத்திகா விகாரஸ்ய
கட சராவத இதர சத்யத்வம் ஸ்வேத கேதோ ஸூஸ்ரூஷோ பிரமானாந்தரேண யுக்தயா ச அசித்தமிதி ஏததபிசிஷாத இஷிதமிதிசேத்
யதா இதி த்ருஷ்டாந்த தயா உபாதானம் ந கடதே-
இங்கும் எந்த ஒன்றைக் கேட்டால் கேட்கப்படாத மற்றவை கேட்டதாக ஆகுமோ -என்பதால் -வரஹ்மம் தவிர்த்த மற்றைப் பொருள்களின் இன்மை தெரிவிக்கப் படுகிறது என்று மாயா வாதிகள் கூறுவார்களானால் -எந்த மண்ணுருண்டையை அறிந்தால் குழந்தாய் மற்றவையும் அறிந்ததாகும் -என்ற எடுத்துக் காட்டால் அவர்கள் கூற்று பயன் அற்றதாகிறது
அதற்கு மாறாக பொய் என்று நன்கு அறியப்பட்ட கயிற்றில் பாம்பைக் காணுதல் போன்ற எடுத்துக் கட்டைத் தவிர்த்து மண்ணுருண்டையின் விகாரங்களே குடம் சாருவும் போன்றவை என்று காட்டப்பட்டு இருப்பதால் -அவை மண்ணாலேயே நிறைந்தவை -அவை யாவும் பொய் என்பது மறுக்கப் படுகிறது –
———-
40–சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இத்யத்ர
சதேவ -ஏகமேவ -இதி அவதாரண த்வயேந-அத்விதீயம் -இத்யநேந-சந் மாத்ராதிரேகி -சஜாதீய -விஜாதீயா —
சர்வே விசேஷா நிஷித்யந்த இதி பிரதீயதே இதி சேத்
நைவ தேவம் -கார்ய காரண பாவா வஸ்தாத் வயாவஸ்தி தஸ்ய ஏகஸ்ய வஸ்துந ஏகா வஸ்தஸ்ய ஞாநேந அவசித்தாந்தர
அவஸ்தி தஸ்யாபி வஸ்த்வ ஐக்யேந ஞாததாம் த்ருஷ்டாந்தேந தர்சாயித்வா
ஸ்வேத கேதோரா பிரஞ்ஞாதம் ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரணத்வம் வக்தும்
சதேவ சோம்யேதம்–இத்யாரப்தம்-இதமக்ர சதேவா ஸீத் -இதி அக்ர இதி கால விசேஷ இதம் சப்த வாச்யச்ய பிரபஞ்சஸ்ய
சதா பத்தி ரூபம் க்ரியாம் சத்த்ரவ்யதாம் ச வததி
ஏகமேவ இதிச அஸ்ய நாநா நாம ரூப விகார ப்ரஹாணம்-ஏதஸ்மிந் ப்ரதிபாதிதே அஸ்ய ஜகத-சதுபாதநதா பிரதி பாதிதா பவதி-
அந் யாத்ரா உபாதான காரணஸ்ய ஸ்வ வ்யாதிரிக்தா திஷ்டாத்ரா பேஷா தர்சநேபி சர்வ விலக்ஷணத்வா தஸ்ய
சர்வஞ்ஞஸ்ய ப்ரஹ்மண சர்வசக்தி யோகோ ந விருத்த இதி
அத்விதீய-பதம் அதிஷ்டாத்ரந்தரம் நிவாரயதி சர்வ சக்தி யுக்தத் வாதேவ ப்ரஹ்மண-காஸ்சந ஸ்ருதய ப்ரஹ்மம் உபாதான காரணத்வம்
ப்ரதிபாத்ய நிமித்த காரணம் அபி ததேவேதி ப்ரதிபாத யந்தி யதேயம் ஸ்ருதி —
(ஜகத் காரணம் ப்ரஹ்மமே அறியாத ஸ்வேத கேதுவுக்கு அறிவிக்கும் வாக்யமே இந்த சுருதி வாக்கியம்)
சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்-என்ற வாக்கியத்தில் -சதேவ-ஏகமேவ –என்ற இரு தெற்று ஏகாரங்களும் -அத்விதீயம்-இரண்டாவது அற்றது -என்பதாலும் -மற்ற எவையும் அற்ற -ஸத் -அதனுடன் ஒருபடிப்பட்ட-அதினின்றும் மாறுபட்ட -மற்ற குணங்கள் யாவற்றையும் விலக்குகிறது என்று கூறுவதாகவும் கொள்ள முடியாது –
செயல் விளைவு தொடர்பினால் ஒரே பொருளின் இரு வேறுபட்ட இரு நிலைகளில் ஒன்றை அறிவதால் மற்றது தானே அறியப்படும் என்பதைக் காட்ட
இந்த எடுத்துக் காட்டை ப்ரஹ்மம் ஒன்றே இவ்வுலகு அனைத்திற்கும் காரணம் என்பதை ஸ்வேத கேதுவிடம் -குழந்தாய் ஸத் ஒன்றே இருந்தது என்று தொடங்கி முதலில் ஸத் என்றே இருந்தது என்று கூறுகிறார்முதலில் என்பது ஒரு காலச் சிறப்பு -பிரளய நிலை –
இதம் என்பதற்குப் பொருள் இப்பிரபஞ்சம் -அதாவது படைப்புக்கு முன் இவ்வுலகு எல்லாம் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருந்த நிலையையும் -ஸத் என்ற பெயருடனேயே இருந்ததையும் கூறுகிறது –
ஓன்றே என்பதால் இப்பொழுது காணப்படும் பற்பல பெயர்களும் உருவங்களும் அற்றும் இருந்தது என்று கூறி
இந்த உலகிற்கு அந்த ஸத் என்பதே மூலப்பொருள் காரணமாகவும் அதினின்றும் வேறுபட்ட ஒரு செய்வோன் எனும் நிமித்த காரணம் இன்றியும்
அதுவே தன்னுடைய எல்லாம் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாத் திறமைகளும் கை வரப் பெற்ற தன்மையால் அது ஒன்றாகவே -மற்றத் துணை ஏதும் இன்றி-உலகைப் படைத்தது என்பதைக் குறிக்க அத்விதீயம் -இரண்டாவது அற்றது – என்று கூறுகிறது –
எல்லாத் திறன்களும் இயற்கையாகவே உடையவன் என்பதால் ப்ரஹ்மமே மூலப்பொருளும் செய்வோனும் ஆயிற்று என்று கூறி சில ஸ்ருதிகளில் ப்ரஹ்மத்தை மூலப் பொருள் காரணமாகச் சொல்லி பிறகு செய்வோனாகவும் கூறப்படுவதையும் எடுத்துக் காட்டுகிறது
உலகில் மூலப்பொருள் ஒரு போதும் செய்வோன் ஆக முடியாது – இந்த வரையறை ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாது – ஏன் எனில் அது எல்லாத் திறன்களும் யுடையது
ஸதா பத்தி -ஸத் ஆபத்தி -உயிருள் -உயிரில் பொருள்களுடன் எப்போதும் கூடியிருக்கும் கட் புலனாகா நிலை –
———-
41-அந்யாஸ் ச ஸ்ருதய ப்ரஹ்மணோ நிமித்த காரணதாம நுக்ஞாய–தஸ்யைவ உபாதானதா தி கதமிதி பரிச்சோத்ய
சர்வசக்தி யுக்தத்வாத் உபாதான காரணம் ததிதரா சேஷோபகரணம் ச ப்ரஹ்மைவ இதி பரி ஹரந்தி
கிம் ஸ்வித்தனம்-க உ சவ்ருஷ ஆஸீத் –யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு-மனிஷினோ
மனசா ப்ருச்சேதேது தது யதத்ய திஷ்டத் புவநாநி தாரயந்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்மம் ச வ்ருஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு மணீஷிநோ மனசாவிப்ரவீமி
வ ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயந் இதி சாமான்யதோ த்ருஷ்டேந விரோத மா சங்க்ய ப்ரஹ்மண
சர்வ விலக்ஷணத்வேந பரிகார யுக்த
வேறு சில ஸ்ருதிகள் ப்ரஹ்மத்தை செய்வோனாகவும் கொண்டு இதற்கு மூலப்பொருள் எது என ஆராய முற்பட்டு ப்ரஹ்மத்திற்கு திறமைகளும் உண்டு என அறுதியிட்டு அதனால் மூலப்பொருளாகவும் அதுவே ஆயிற்று என நிறுவின
ஞானிகளே இந்த பிரபஞ்சம் என்னும் மாளிகையை உருவாக்கியவர் யார் -அதற்கு மரம் எக்காட்டின் நின்றும் எடுக்கப் பட்டது -எந்த மரம் உபயோகிக்கப் பட்டது
ப்ரஹ்மாகிற காட்டில் ப்ரஹ்மமாகிற மரத்தால் இந்த மாளிகை ஆயிற்று
ஞானிகளே -நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -ப்ரஹ்மம் உள் நுழைந்து யாவற்றையும் தாங்கிக் கொண்டு இருக்கிறது -பொதுவாக ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட மூலப் பொருள்கள் செய்வோன் காரணமாக ப்ரஹ்மம் இருக்க முடியுமோ-என்ற ஐயத்தை நீக்குகிறது –
———
42–அத சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் இத்யத்ராபி அக்ரே இத்யாத்யநேக விசேஷ ப்ரஹ்மண ப்ரதிபாதிதா-
பவதமிமத விசேஷ நிஷேத வாஸீ கோபி சப்த ந த்ருச்யதே ப்ரத்யுத ஜகத் ப்ரஹ்மணோ கார்ய காரண பாவ ஞாபநாய
அக்ர இதி கால விசேஷ சப்தாவ ஆஸீத் இதி கிரியா விசேஷ ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா
ச நிமித்த உபாதானயோர் பேத நிரசநேந தஸ்யைவ ப்ரஹ்மண சர்வ சக்தி யோகஸ்சேதி
அப்ரஞ்ஞாதா சஹஸ்ரஸோ விசேஷா ஏவ ப்ரதிபாதிதா
பிறகு -குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது என்ற இந்தவிடத்திலும் முதலில் போன்ற அடைமொழிகளால் ப்ரஹ்மம் நிரூபிக்கப் படுகிறது –
உங்கள் கருத்துப்படி ப்ரஹ்மத்தைக் குணங்கள் அற்றது என்று சொல்லி விளக்கும் சொற்கள் ஏதும் காணப்பட வில்லை -நேர் மாறாக ப்ரஹ்மத்திற்கும் உலகிற்கும் கார்ய காரணத் தொடர்பு உண்டு என்பதை முதலில் என்ற காலம் காட்டும் சொற்களாலும் –
இருந்தது என்ற சொற் சிறப்பாலும் உலகிற்கு மூலப் பொருளாகவும் செய்வோனாகவும் இருந்தது என்று கூறி -கார்ய காரணத்திற்கு உரிய மூலப்பொருள் செய்வோன் எனும் காரணங்களின் வேறு பாட்டை மறுத்து எல்லா சக்தியும் கைவரப் பெற்ற அந்த ப்ரஹ்மமே இரண்டுமாயிற்று என்று கூறி நாம் அறியாத ஆயிரக்கணக்கான சிறப்புகள் ப்ரஹ்மத்திடம் உள்ளன என்று நிரூபித்து இருக்கிறது
—————-
43–யதோ வாஸ்தக கார்ய காரண பாவாதி ஞாபநே ப்ரவ்ருத்தம் -அத ஏவ
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் -இதயாரப்ய அசத் கார்ய வாத நிஷேதஸ் ச க்ரியதே குதஸ்து கலுஸோம் யைவம் ஸியாத்
இதி பிராகஸத உத்பத்தி அஹேதுகா இத்யர்த்த ததேவ உபபாதயதி கதம்ம் சதஸ் சஜ்ஜாயதே
இதி அசத உப பந்நம் அசதாத்மகமேவ பவதி இத்யர்த்த யதாம்ருத உத் பந்நம் கடாதிகம் ம்ருதாத் மகம் –
சத உத்பத்திர் நாம வ்யவஹார விசேஷ ஹேது பூத அவஸ்தா விசேஷ யோக —
இங்கு கார்ய காரணத் தொடர்பைச் சுட்டிக் காட்ட வேண்டிய உண்மையான காரணம் என்ன என்னில்
இன்மையே முதலில் இருந்தது என்று துவங்கும் இன்மை வாதத்தை மறுத்து -குழந்தாய் இவ்வாறும் சிலர் சொல்லுகிறார்கள் இன்மையினின்றும் இன்மை தான் வர முடியும் என்று கூறுகிறார் –
எப்படி மண்ணின் நின்றும் பண்ணப்பட்ட குடம் முதலியவை மண்ணாகவே இருக்கின்றனவோ அப்படி அவற்றிற்கு பேச்சு வழக்கில் குறிக்கப் படுவதற்கு பெயர்கள் அம்மண்ணின் வேறுபட்ட நிலையில் ஏற்படுகின்றன என்று விளக்குகிறார் –
————
44–ஏதத் யுக்தம் பவதி -ஏகமேவ காரண பூத த்ரவ்யம் அவஸ்தாந்தர யோகேந கார்யமித்யுச்யத இதி
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம் தது அஸத்கார்யவாதே ந சேத்ஸ்யதி -ததாஹி நிமித்த சமாவாய்ய
சமாவாயி ப்ரப்ருதிபிஸ் காரணை அவயவ்யாக்யம் கார்யம் த்ரவ்யாந்தரமேவ ஆரப்யத இதி காரண பூதாத் வஸ்துந கார்யஸ்ய
வஸ்த்வந்த்ரத்வாத் ந தத் ஞாநேன அஸ்ய ஞாததா கதமபி சம்பவநீதி–கதம் அவயவி த்ரவ்யாந்தரம் நிரஸ்யதே
இதி சேத் காரணகதா வஸ்தாந்தர யோகஸ்ய த்ரயாந்தரோத்பத்திவாதிந சம்பிரதி பந்நஸ்யைவ ஏகத்துவ நாமாந்தர
வ்யவஹாராதே ரூப பாதகத்வாத் த்ரவ்யாந்தரா தர்சினாஸ் ச –
இதி காரணமேவ அவஸ்தாந்தரா பந்நம் கார்யம் இத்யுச்ய தே இத்யுக்தம் –
இதை விளக்குவோம் –
காரணமாகும் முதற் பொருள் -அதன் நிலை மாறு பாட்டால் -பிரிதொரு பொருளாக -காரியப் பொருளாக -மாறுகிறது –
அதனால் அக்காரணப் பொருளை நன்கு அறிவதன் மூலம் அதனடியாகப் பிறக்கும் கார்யப் பொருட்கள் அறியப்பட்டனவாகும் என்பது நிரூபிக்கப் படுகிறது –
முதற் பொருளான காரணப் பொருளே பொய்யானது எனில் அதினின்றும் கார்யாப் பொருட்கள் ஏதும் பிறப்பதில்லை
இங்கு ஒரு செயலுக்கு -உலகு படைத்த – செய்வோநின் அதன் இன்றியமையாக் காரணம்
பிரிக்க இயலும் காரணம் முதலியவை இன்மை என்பதினின்றும் எவ்வாறு உண்டாக முடியும்
பல உறுப்புக்களின் சேர்க்கையினாலேயே ஒரு முழுப்பொருள் உருவாகும் அந்நிலையில் அவ்வுறுப்புக்கள் அப்பொருள்களுக்குக் காரணமாகின்றன
உதாரணம் -நூலும் துணியும்
முழுமையான நிரையில் உறுப்புக்களின் தனிப் ர் பெய மறைந்து முழுப் பொருளின நிலைக்கும் ஆகவே காரணத்தை -உறுப்புக்களை -அறிவதால் -கார்ய முழுப்பொருள் அறியப்படும்
இன்மை என்பதின் நின்றே உலகு தோன்றியது என்னும் வைசேஷிகர்கள் கொள்கை இதனால் மறுக்கப் படுகிறது
அவர்கள் கொள்கைப்படி நூலே துணியாக மாறுகிறது என்று கொள்ளப் படும்
———
அசத் கார்ய வைசேஷிக வாத நிரசனம் –
45–நநு -நிரதிஷ்டானப்ரமா சம்பவ ஞாபநாய அஸத்கார்ய வாத நிராச க்ரியதே -ததாஹி -ஏகம் சித்ரூபம் சத்யமேவ
அவித்யாச்சாதிதம் ஜகாத் ரூபேண விவர்த்ததே இதி அவித்யாஸ்ரயத்வாய மூல காரணம் சத்யமித்யப் யுபகந்தவ்யம்
இதி அஸத்கார்யவாத நிராச
நை ததேவம் -ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த முகேந சத்காரியவாதஸ்யைவ ப்ரஸக்தத்வாத்
இத்யுக்தம் பவத் பக்ஷே நிரதிஷ்டான ப்ரமா சம்பவஸ்ய துரூப பாதத்வாச் சா யஸ்ய ஹி சேதநகதோ தோஷ
பாரமார்த்திக தோஷாஸ் ரயத்வம் ச பாரமார்த்திகம் தஸ்ய பாரமார்த்திக தோஷேண யுக்தஸ்ய
அபாரமார்த்திக கந்தர்வ நகராதி தர்சனம் உபபந்நம்
யஸ்யது தோஷஸ் ச அபாரமார்த்திக்க தோஷாஸ்ரயத்வம் ச அபாரமார்த்திகம் தஸ்ய அபாரமார்த்திகே
நாப்யாஸ்ரயேண தத் உப பந்நம் இதி பவத்பஷே நநிரதிஷ்டான ப்ரமா சம்பவ —
அல்ல -ஆதாரப் பொருள் ஒன்றி இன்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் -என்ற இன்மை வாதம் -அத்வைதிகள் வைசேஷிகரோடு வாதிக்கையில் -மறுத்தல் செய்யப்படுகிறது
அவ்வாறே குணங்கள் ஏதுமற்ற ஞானம் ஓன்று மட்டும் -அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு உலகின் உருவில் காண்கிறது எனில்
அந்த அஞ்ஞானத்திற்கு ஆதாரமானது அந்த ஞானம் -ப்ரஹ்மம் -என்பதால் இன்மை வாதம் மறுக்கப் படுகிறது –
அவ்வாறு எனில் ஒன்றை அறிவதால் மற்ற எல்லாவற்றை அறிந்ததாகும் என்று கூறு முகத்தான் -உண்டு -என்னும் வாதமே சொல்ல வந்தது என்பதே சரி –
உங்கள் பக்கத்தில் ஆதாரமின்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் எண்டு நிரூபிப்பது கடினம்
எந்தக் கொள்கையில் ஆதாரம் உண்மையானதாகவும் அதற்கு ஏற்பட்ட குறையும் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பும் உண்மையானதாகவும் கொள்ளப்படுகிறதோ –அங்கு தான் அக்குறை பட்டால் -கந்தர்வ நகரம் -வானத்தில் மேகங்களின் அமைப்பு நகரம் போல் தோற்றுதல் – போன்ற பொய்த் தோற்றங்கள் உண்டாக முடியும் என்று அறிகிறோம் –
எங்கு குறைபாடும் பொய்யோ -அதற்கு ஆதாரமும் பொய்யோ – அங்கு பொய்யான பொருள்களில் பொய்த் தொடர்பால் -பொய்த் தோற்றம் ஆதாரம் இன்மையால் உங்கள் வாதத்தின் படி தோன்ற இயலாது –
————–
46–சோத கேஷ்வபி -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி ஷு சாமாநாதி காரண்ய வ்யுத்பத்தி ஸித்தாநேக குண விசிஷ்டை கர்தாபிதாநம்
அவிருத்தமிதி சர்வ குண விசிஷ்டம் ப்ரஹ்ம அபிதீயத இதி பூர்வமேவோக்தம் –
ப்ரஹ்மத்தின் குணங்களை ஆய்ந்து தெரிவிக்கும் வேத வாக்யங்களான -பரமாத்மா மட்டற்ற மகிழ்வே வடிவானது -ஸத்யம் ஞானம் -அநந்தம் –ஆனந்தோ ப்ரஹ்ம -என்றவைகளில் ஸமாநாதி கரண்யத்தால் பல அடைமொழிகளால் கூறப்படும் பரமாத்மா நற் குணங்கள் யாவும் யுடையவன் -என்பது முன்பே நிரூபிக்கப் பட்டு விட்டது –
—————
47–அதாத ஆதேஸோ நேதி நேதி இதி பஹுதா நிஷேதோ த்ருஸ்யத இதி சேத் கிமத்ர நிஷித்யத இதி வக்தவ்யம்
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் சா மூர்த்த மேவச இதி மூர்த்தா மூர்த்தாத்மக பிரபஞ்ச ஸர்வோபி நிஷித்யத
இதி சேத் ப்ரஹ்மணோ ரூபதயா அப்ரஞ்ஞாதம் சர்வம் ரூபதயா உபதிஸ்ய புநஸ்ததேவ நிஷேத்தும யுக்தம் –
ப்ரஷால நாத்தி பங்கஸ்ய தூரதஸ்பர்சனம் வரம் இதி நியாயாத் கஸ்தர்ஹி நிஷேதக வாக்யார்த்த
ஸூத்ரகார ஸ்வயமேவ வததி -ப்ருகிருதை தாவத்வம் ஹி பிரதிஷே ததிததோ பரவீதி ச பூய –
இதி உத்தரத்ர அத நாமதேயம் சத்யஸ்ய சத்யமிதி பிராணாவை சத்யம் தேஷா மேஷ சத்யம்
இத்யாதிநா குண கணஸ்ய ப்ரதிபாதிதத்வாத் பூர்வ பிரகிருதை தாவந் மாத்ரம் ந பவதி ப்ரஹ்மேதி ப்ரஹ்மணா
ஏதாவாந் மாத்ரதா ப்ரதிஷித்யதே இதி ஸூத்ரஸ் யார்த்த–
ஆகையால் பிறகு கட்டளை இல்லை இல்லை என்று பலவிடங்களிலும் மறுக்கும் சொற்கள் காணப்படுகின்றனவே என்பீராகில் அவை எதை மறுக்கின்றன என்ற கேள்வி வரும் –
உருவமுள்ளது -கடினமானது -உருவமற்றது -கடினமற்றது -என்ற இரு உருக்கள் ப்ரஹ்மத்திற்கு உள்ளன என்று கடினமற்ற தன்மையுடைய ப்ரஹ்மத்தின் உருக்கள் மறுக்கப் படுகின்றனதா எனில் -இப் பிரபஞ்சத்திலுள்ள கடின கடினமற்ற பொருட்களுக்கு ப்ரஹ்மம் உயிராய் இருக்கிறது என்று கூறி பிறகு அப் பொருட்களே இல்லை -பொய் – என்று மறுப்பது சரியல்ல -கால் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சேற்றை மிதித்துச் செல்ல வேண்டும் என்பது போல் -இது நீதிக்குப் புறம்பானது அப்படியானால் அந்த மறுப்புகளுக்குப் பொருள் என்ன –
ஸூத்ரகாரர் -வ்யாஸர் – சொல்வது போல் ப்ரஹ்மம் காணப்படும் உலகின் அளவு மட்டுமே என்பதை அக்கட்டளை மறுக்கிறது
இவற்றின் பெயர்கள் உண்மை -உயிர்கள் உண்மை -இவற்றின் உள்ளிருக்கும் ப்ரஹ்மமும் உண்மை என்று மேலும் ஸூத்ரகாரர் கூறி ப்ரஹ்மத்தின் குணங்களை நிரூபித்தால் உலகளவு மட்டுமே ப்ரஹ்மம் என்பது மறுக்கப் படுகிறது –
———
48–நேஹா நா நாஸ்தி கிஞ்சன -இத்யாதிநா நாநாத்வ பிரதிஷேத ஏவ த்ருச்யதே இதி சேத்
அத்ராபி உத்ரத்ர ஸர்வஸ்ய வஸி ச்ரவஸ்யேசாந -இதி ஸத்ய ஸங்கல்பத்வ சர்வேஸ்வரத்வ ப்ரதிபாதநாத்
சேதன அசேதன வஸ்து சரீர ஈஸ்வர இதி ஸர்வ ப்ரகார ஸம்ஸ்தித சர்வேஸ்வர ச ஏக ஏவேதி தத் ப்ரத்யநீக
ப்ரஹ்மாத்மக நாநாத்வம் பிரதி ஷித்தம்–ந பவதபி மதம் சர்வாஸூ ஏவம் பிரகாராஸூ ஸ்ருதிஷு இயமேவஸ்திதி —
இதி நக்வசிதபி ப்ராஹ்மண ச விசேஷத்வ நிஷேத வாஸி கோபி சப்தோ த்ருச்யதே –
இவ்வாறு பல சிறிதும் இல்லை -போன்று பலவாக இருப்பதை விளக்கும் சொற்கள் காணப்படுகிறதே என்பீராகில் அங்கும் இவ் வாக்கியத்தைத் தொடர்ந்து
எல்லோருக்கும் வசப்பட்டவன் எல்லோரையும் வசப்படுத்துவோனாகவும் என்று மெய்யான செயல் திறன் உடையவனாகவும் -எல்லாவற்றுக்கும் தலைவனாகவும் சொல்லப்படுவதால் உயிருள் உயிரில் பொருள்களை உடலாக உடைய தனிப்பெரும் தலைவன் அவன் ஒருவனே என்று கூறி அதற்கு எதிர்த் தட்டான அவனை நீங்கிய பல் பொருட்கள் இருப்பதாகக் கொள்வதைத் தான் மறுக்கிறது -உங்கள் கூற்றை அல்ல –
இவ்வாறே மற்ற வேதங்களிலும் இடங்களிலும் பொருள் கொள்ள வேண்டும்
இதனால் ப்ரஹ்மத்திற்கு குணம் ஏதும் இல்லை என்று கூறும் சொற்கள் ஏதும் வேதங்களில் இல்லை –
———
49–அபிச நிர்விசேஷ ஞான மாத்ரம் ப்ரஹ்மம் தச்ச ஆச்சாதிகா அவித்யா திரோஹித ஸ்வ ஸ்வரூபம்
ஸ்வகத நாநாத்வம் பச்யதி -இத்யயமர்த்தோம -ந கடதே-
திரேதாநம் நாம பிரகாச நிவாரணம் -ஸ்வ ஸ்வ ஸ்வரூபாதிரேகி பிரகாச தர்மா நப்யுபகமேந பிரகாசஸ்யைவ
ஸ்வரூபத்வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச பர்யாயம் ஞானம் நித்யம் ச ச பிரகாச -அவித்யா திரோஹித –
இதி பாலிச பாஷிதமிதம்-அவித்யா பிரகாச திரோஹித்த இதி பிரகாச உத்பத்தி பிரதிபந்தோவா வித்யமாநஸ்ய விநாஸோவா ?
பிரகாசஸ்யா நுத்பாத்யத் வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச நித்யோ நிர்விகாரஸ் திஷ்டதி -இதி சேத்
சத்யாயாமப்ய வித்யாயாம் ப்ரஹ்மணி ந கிஞ்சித திரோஹிதம் இதி நாநாத்வம் பாஸ்யதி
இதி பவதாமயம் வ்யவஹார சத்ஸூ அநிர்வசநீய ஏவ —
மேலும் குணங்கள் சிறுதும் அற்ற ஞானம் மட்டுமேயாக உள்ள ப்ரஹ்மம் தன்னைச் சூழும் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு தன்னிடத்தில் இல்லாதவற்றை பலவாகப் பார்க்கிறது என்பது பொருந்தாது-
மறைப்பது என்பது ஒளியைத் தடுப்பது -அதினின்றும் -ப்ரஹ்மத்தின் நின்றும் -வேறுபட்ட ஒளியை மறைப்பது என்பதை -ஒளி ப்ரஹ்மத்தின் நின்றும் பிரிக்க முடியாத ஓர் அங்கம் -அத்வைதிகள் ஒத்துக் கொள்ளாததால் மறைப்பு என்பது ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு அது அழிந்து விடும் என்பதாகிறது
இங்கு ஒளி என்பது -ஒரு பொருள் பன் மொழியால் -ஞானம் -அது என்றும் அழியாதது -அந்த ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது எனக் கூறுதல் அறியாப் பிள்ளைப் பேச்சு
அவ்வாறே அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது என்றால் -ஞானம் தோன்றுவதற்கு தடையாகிறதா -அன்றி முன்புள்ளது அழிக்கப் பட்டதா -ஞானம் நித்யம் -என்றும் உள்ளது -ஆக்க முடியாது என்பதால் அதன் அழிவு என்று கொள்ள வேண்டும் -ஞானம் என்றும் மாறு படாதது எனில் அஞ்ஞானம் அதை ஏறிட முடியாது -அதன் ஒளி மறைக்கப்படுவது இல்லை -அதனால் ப்ரஹ்மம் தானே பலவாறாகக் காண்கிறது என்னும் உங்கள் கூற்றை சான்றோர்கள் ஏற்க மாட்டார்கள் –
————–
இதுக்கு அத்வைதி வாதம்
50–நநு ச பவதாபி விஞ்ஞான ஆத்மா அப்யுப கந்தவ்ய -ச ச ஸ்வயம் பிரகாச –
தஸ்ய தேவாதி ஸ்வரூபாத்மாபிமாநே ஸ்வரூப பிரகாச திரேதாந மவஸ்யாஸ் ரயணீயம்-ஸ்வரூப ப்ரகாசே சதி
ஸ்வாத்மநி ஆகாராந்தராத்யசா யோகாதி அதோ பவதஸ்ச சமாநோ யம் தோஷ மிஞ்ச அஸ்மாக மேகஸ்மிந்நேவ ஆத்மநி
பவதுதீரிதும் துர்கடத்வம் வாதம் ஆத்மானந்த் யாப்யுபகமாத் சர்வேஷ்வயம் தோஷ பரிஹரணீய–
அன்று உங்கள் பக்கத்தில் நீங்கள் ஆத்மாவை விஞ்ஞான மயம் என்று கொள்கிறீர்கள் -அதுவும் தானே ஒளிருவது –அதற்கு தேவன் முதலான உடல்களில் இருந்து கொண்டு அவ்வுடலே தானாக மயங்கும் ஞான மறைப்பு ஏற்படுகிறது
தனக்குள் ஞானம் என்றும் குன்றாதவனாயின் ஆத்மா அது புகுந்து இருக்கும் உடலின் தன்மைகளை ஏறிட்டுக் கொள்ள முடியாது –
அது எங்கள் கொள்கைக்கு ஈடான குற்றமே -மேலும் நாங்கள் ஒரே ஆத்மா என்று கொண்டு இருப்பதால் இக்குறை அதன் மீது மட்டும் காணப்படும் -மாறாக உங்கள் கொள்கையில் அவை பலவாகையால் குறைகளும் பலவாக -அதிகமாக உள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்
இதை எவ்வாறு மறுப்பீர்கள் -என்று அத்வைதி கிடக்கிறார் –
————-
இதுக்கு உத்தரம்
51—அதிர உச்யதே -ஸ்வ பாவத-மல ப்ரத்யநீக அநந்த ஞானாந்த ஏகம் ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக -அதிசய அபரிமித உதார குண சாகரம்
நிமிஷ காஷ்டா கலா முஹுர்த்தாதி பரார்த்த பர்யந்த -அபரிமித வியவச்சேத ஸ்வரூப சர்வ உத்பத்தி ஸ்திதி விநாசாதி
சர்வ பரிணாம நிமித்த பூத கால க்ருத பரிணாமாஸ்ப்ருஷ்ட அநந்த மஹா விபூதி -ஸ்வ லீலா பரிகர ஸ்வ அம்ச பூத
அநந்த பத்த முக்த நாநாவித சேதன தத் போக்கிய பூத அநந்த விசித்ர விதித்த பரிணாமாஸ்பத சேதநே தர வஸ்து ஜாத
அந்தர்யாமித்வ க்ருத சர்வ சரீரத்வ சர்வ பிரகார வஸ்தாநாவஸ்திதம் பரம் ப்ரஹ்ம ச வேத்யம் தத் சாஷாத்கார ஷம
பகவத் த்வைபாயன -பராசர -வாலமீகி -மநு -யாஜ்ஞவால்க்ய -கௌதம–ஆபஸ்தம்ப -பரப்ருதி முனி கண பிரணீத-
வித்யர்த்தவாத மந்தரூப -வேத மூல -இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரோ உப ப்ரும்ஹண பரமார்த்த பூத அநாதி நிதந –
அவிச்சின்ன ஸம்ப்ரதாய -ருக் யஜுஸ் -சாம -அதர்வண ரூப அநந்த சாகம் வேதம்ச அப்யுகச்சதாமஸ்மாகம் கிம் நசேத்ஸ்யதி –
அது விளக்கப்படுகிறது
இயற்கையாகவே அழுக்குகளின் எதிர்த் தட்டாயும் -(மயக்கம் -ஞானம் -துக்கம் -ஆனந்தம் )அளவற்ற ஞான ஆனந்தத்தை தன் குணமாகவும் -இயற்கையாகவே உயர்வற உயர்ந்து -அளவற்று -ஈகையின் கடலாய் -நிமிடம் காஷ்டை கலை முஹூர்த்தம் பரார்த்தம் ஈறான காலக் கணக்குகளால் சிறிதும் அளவிட முடியாத நிலை யுடையனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல் காத்தல் அழித்தல் -இடையில் தோன்றும் வேறுபாடுகளுக்குக் காரணமான காலத்தின் தொடர்பு சிறிதும் அற்றவனாய் -அளவற்ற பெரும் செல்வம் யுடையவனாய் –
தனது விளையாட்டிற்கான தனது சாயலான அளவற்ற பக்த முக்த பலவித உயிர்ப் பொருள்களுடைய மகிழ்ச்சிக்கும் அவற்றுக்குத் தேவையான பொருள்களுக்கும் இடமும்
பலவகைப்பட்ட வேறுபட்ட உயிர் உயிரல் பொருள்களின் உள் நுழைந்து ஏவுகிறவனாய் -அவை யாவற்றையும் தனது உடலாகக் கொண்டு எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து விளங்குவது பர ப்ரஹ்மம் –
அதே நேராகக் கண்டு உணர்ந்த வ்யாஸர் வால்மிகி மநு யஜ்ஜ வல்க்யர் கௌதமர் ஆபஸ்தம்பர் போன்ற முனிவர்களால் இதிஹாஸங்கள் புராணங்கள் தர்ம ஸாஸ்த்ர துணை நூல்கள் போன்று உண்மையான வடிவான என்றும் நிலை பெற்ற ரிக் யஜுர் ஸாம அதர்வணம் ஆகிய பல சாகைகளை உள்ளடக்கிய வேதங்களையே மெய்யாகக் கொண்டும் தொடர்பு அறாத சான்றோர் நெறி ஒழுக்கம் எங்களுக்கு எது நிலைக்காமல் போகும் –
—————
52-யதோக்தம் -பாகவதர் த்வைபாயநேந -மஹா பாராதே
யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்
த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அஷர ஏவச-ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த -அஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வ அந்ய
காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந
அவ்யக்தாதி விசேஷாந்தம் பரிணாமர்த்தி சம்யுதம்-கிரீடா ஹரேரிதம் சர்வம் சாரம் இத்யாவதார்யதாம்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாவ்யய–கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் –
இதி கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே இதி கிருஷ்ணஸ்ய சேஷ பூதம் இத்யர்த்த –
பகவதா பராசரேண-அப்யேவம் யுக்தம்
ஸூத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி ஸ வ்த்யதே –
மைத்ரேய -பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் ய சேஷத-
பகவத் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி -ஏவமேஷ மஹா சப்தோ-மைத்ரேய பகவான் இதி பரம ப்ரஹ்ம பூதஸ்ய
வாஸூ தேவஸ்ய நாந்யக -தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமந்வித -சப்தோயம் நோநசாரேண -த்வந் யத்ரஹ்யுபசாரத-
ஏவம் பிரகாரம் அமலம் நித்யம் வியாபகம் அஷயம்-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்யம் பரமபதம்
கலா முஹுர்த்தாதி மயஸ் ச காலோ நயத்வியூதே-பரிணாம ஹேது -கிரீடதோபாலகஸ் ஏவ சேஷ்டா -தஸ்ய நிசாமய -இத்யாதி மநூநாபி
பிரசாசி தாரம் ஸர்வேஷாம் அணீ யாம்சம் அணீயசாம் -இத்யாதி யுக்தம் யாஜ்ஞ வால்க்யேந அபி
ஷேத்ரஞ்ஞஸ் யேஸ்வர ஞாநாத் வி ஸூத்தி -பரமா மதா-இத்யாதி
ஆபஸ்தம்பேநாபி பூ பிராணிநஸ் சர்வ குஹாசயஸ்ய இதி சர்வே பிராணிந குஹாசயஸ் ச பரமாத்மந
பூ புரம் சரீரம் இத்யர்த்த பிராணிந இதி ஜீவாத்மக பூத ஸங்காத —
மேலும் கிருஷ்ண த்வைபாயனர்-வ்யாஸர் -மஹா பாரதத்தில் எவன் என்னை முதலும் முடிவும் அற்றவனாக உலகின் தனிப்பெரும் தலைவனாக அறிகிறானோ-ஸ்ரீ கீதை -15-16-17-என்று கூறுகிறார்
அழியும் ஷரன் என்னும் பத்தாத்மாவும் அழிவற்ற அஷரன் என்னும் முக்தாத்மாவும் புகழ் பெற்றவர்கள் என்றும்
இவர்களில் ஷர புருஷன் எல்லா பிராணிகளும் குடியிருப்பவன் அக்ஷர புருஷன் அத்தொடர்வு அற்றவன் என்றும்
இவர்களின் நின்றும் வேறு பட்டவனான தலை சிறந்த புருஷன் ஒருவன் இருக்கிறான்
அவன் காலத்தை மாறுபாடு அடையச் செய்பவனாயும்
தான் காலத்தால் மாறுபடுத்த முடியாதவனாகவும் இருக்கிறான் என்றும்
பரமாத்மாவின் அந்த சிறந்த இடமானது காலத்தின் இயல்பு செல்லாததாகவும் -அதனுடன் ஒப்பிடுகையில் இந்த்ர லோகம் முதலியவை நரகங்கள் என்னும் படி இருக்கும்
இவைகள் மூலப் பிரகிருதி தொடங்கி மஹான் போன்ற மாற்றங்களை யடைந்து வளர்ச்சி தாழ்ச்சி யாகிற மாறுபாடுகளை யுடைத்தாய் இருக்கும்
கிருஷ்ணன் இடத்திலேயே இவ்வுலகங்கள் தோன்றுகின்றன
கிருஷ்ணனுக்காகவே இவ்வுயிர்களும் உலகுகளும் படைக்கப் பட்டு இருக்கின்றன என்றும்
கிருஷ்ணனுக்காகவே செய்யப்பட்டது -என்றும்
ஸாஸ்திரங்களில் சொல்லப்படுவதால் இவை யாவும் கிருஷ்னனுக்கே அடிமைத் தொழில் பூண்டவை
பகவான் பராசரரும் -தூய்மையானவனாயும் பெரும் செல்வம் உள்ளவனாகவும் பர ப்ரஹ்மம் சொல்லப்படுகிறது
மைத்ரேயா எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாய் இருப்பவனே பகவான் என்ற சொல்லால் குறிக்கப் படுபவன்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம்-அதாவது தன்னைத் தவிர பிற அனைத்தையும் -ஆன்மாக்கள் உட்பட தன் உடைமையாகப் பெற்று இருத்தல் -வீர்யம் தேஜஸ் ஆகிய குணங்களை யுடையவன் பகவான் என்ற சொல்லால் குறிக்கப்படுபவன்
தீக்குணங்கள் சிறிதும் அற்றவன் –
இந்த சிறந்த சொல்லல் குறிக்கப் படுபவன்
வாஸூ தேவன் ஆகிற பர ப்ரஹ்மத்தைத் தவிர மற்ற ஒருவர் இல்லை
பூஜிக்கத் தகுந்த சிலருக்கு உபசாரமாக இச்சொல் உயர் அடைமொழியாக வழங்கப் படுகிறது
அழுக்குகள் அற்ற என்றும் உள்ள எங்கும் இருப்பவனான விஷ்ணுவிற்கு மட்டுமே இப்பதம் பொருந்தும்
கலை முஹூர்த்தம் என்னும் அளவுகளை அளக்கப்படும் காலம் -இந்தப் பரமபதத்தில் மாறுபாடு அற்றது
பாலகன் விளையாடுவது போன்ற இந்த கிருஷ்ணனைப் பார் என்று கூறுகிறார்
மநுவும் எல்லோரையும் உள்ளிருந்து ஆள்பவன் அணுவான பொருள்களுக்குள்ளும் நிறைந்து இருப்பவன் என்று கூறுகிறார்
யஞ்ஞ வல்கியரும் ஜீவாத்மாவுக்குள் உள்ளுறைபவன் ஈஸ்வரன் என்ற ஞானத்தால் மேலான தூய்மை ஏற்படுகிறது என்று கூறுகிறார்
ஆபஸ் தம்பரும் புரம் எனப்படும் ஜீவாத்மாக்களின் ஹிருதயக் குகையில் இருப்பவன் -பரமாத்மா -என்று கூறுகிறார்
இதனால் எல்லாப் பிராணிகளிலும் வசிக்கிறேன் பரமாத்மா என்று அறியப்படுகிறது –
—————
53–நநு ச கிம் அநேந ஆடம்பரேண-சோத்யம் து ந பரிஹ்ருதம்
உச்யதே -ஏவம் அப்யுகச்சதாம் அஸ்மாகம் ஆத்ம தர்ம பூதஸ்ய சைதன்யஸ்ய ஸ்பாவிகஸ்யாபி கர்மணா
பாரமார்த்திகம் சங்கோசம் விகாசம் ச ப்ருபதாம்-ஸர்வமிதம் பரிஹ்ருதம்
பவதஸ்து பிரகாச ஏவ ஸ்வரூபமிதி பிரகாசோ ந தர்ம பூத தஸ்ய சங்கோஸோ -விகாசோ வா ந அப்யுகம்யதே
பிரகாச பிரஸ்ர அநுத் பத்திமேவ திரோதாந பூதா கர்மதயா குர்வந்தி-அவித்யா சேத் திரோதாநம் திரோதாந பூதயா தயா
ஸ்வரூப பிரகாச பூத நாச பூர்வமேவ யுக்த அஸ்மாகம் து அவித்யா ரூபேண கர்மணா ஸ்வரூப
நித்ய தர்ம பூத ஞான பிரகாச சங்குசித தேந தேவாதி ஸ்வரூப ஆத்ம அபிமாநோ பவதீதி விசேஷ —
இப்படிப் பல வகையான ஆடம்பர வர்ணனை எதற்கு -மறுப்புக்குப் பதில் ஏதும் இல்லையே ஏன் என்று கேட்பீராகில் முன்பு விளக்கப்பட்ட கொள்கைகளைக் கைக்கொள்ளும் எங்களுக்கு ஆத்மாவும் அதினின்றும் பிரிவற்ற குணமான ஞானமும் தன்னடையாக தன் வினைப்பயனாய் சுருக்கம் விரிவு ஆகியவற்றை அடைகிறது என்பதால் மேற் சொன்னவை யாவும் பதில் அளிக்கப் படுகிறது –
தங்களால் சொல்லப்படுகிற பொருளே ஒளிரும் -ஒளிர்வது அதன் குணமல்ல -அதற்கு குறை நிறைகள் ஏற்படுவதில்லை என்று தங்கள் சொல்வதனால் மறைப்பு என்பது அஞ்ஞானத்தால் ஆத்மாவே அழிக்கப் படுகிறது என்று பொருள் ஆகிறது –
இதற்கு மாறாக அதன் இயல்பான ஞானம் குன்றும் போது அவ் வாத்மா தன்னை யறியாது ஆத்மாவும் உடலும் ஓன்று என்று மயங்குகிறது
ஆனாலும் ஆத்மாவின் தான் எனும் தனித்தன்மை அழிவதே இல்லை –
———
54–யதோக்தம் -அவித்யா கர்ம சமஞாந்யா-த்ருதீய சக்திரிஷ்யதே–
யயாக்ஷேத்ர சக்திஸ் சா வேஷ்டித அந்ரூப சர்வகா -சம்சார தாபந் அகிலாந் அவாப்நோத்யதி சந்ததாத்தயா திரோஹித
த்வாச் சா சக்தி ஷேத்ரஞ்ஞ சம்ஜிதா சர்வ பூதே ஷுபூ பாலா தாரதம்யே நவர்த்ததே –
இதிநா ஷேத்ரஞ்ஞாம் ஸ்வ தர்ம பூத ஞாநஸ்ய கர்ம சம்ஞயா அவித்யயா சங்கோசம் விகாசம் ச தர்சயதி-
எவ்வாறு எனில் -ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது போல் -மேலான ஸக்தியான ஆத்மா மற்ற ஒரு ஸக்தியான ப்ரக்ருதி மூன்றாவது ஸக்தியான வினைப் பயன் என்பவை மூன்றும் விஷ்ணுவின் சக்திகள்
இந்த ஆத்மாவின் சக்தியால் எல்லாப் பிராணிகளும் சூழப்பட்டு இருக்கின்றன -இதனால் சூழப்பட்ட ஆத்மா பிறப்புச் சூழலில் கட்டுண்டு உழலுகிறான் -எல்லா உயிர்களிலும் இச்சக்தி ஏற்றத் தாழ்வுகளுடன் -வினைகளுக்கு ஏற்ப -விளங்குகிறது
இதனால் ஆத்மாவின் இயல்பான குணமான ஞானம் -குறைவு நிறைவு அடைந்ததாகக் காணப்படுகிறது –
————
55–அபி ச -ஆச்சாதிகா அவித்யா ஸ்ருதிபிஸ் ச ஐக்ய உபதேச பலாச் ச ப்ரஹ்ம ஸ்வரூப திரோதாந ஹேது தோஷ ரூபா
ஆஸ்ரீயதே தஸ்யாஸ் ச மித்யா ரூபத்வேந பிரபஞ்ச வத்-ஸ்வ தர்சன மூல தோஷாபேஷத் வாத் ந சா மித்யா தர்சன மூல
தோஷஸ்யாதிதி ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத்
தஸ்யாஸ் ச அநாதித்வேபி மித்யா ரூபத்வாதேவ-ப்ரஹ்ம த்ருஸ்யத்வேந ஏவ அநாதத்வாத் தத் தர்சன மூல
பரமார்த்த தோஷா நப்யுபகமாச் ச ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத் தஸ்ய நித்யத்வாத் நிர்மோஷ ஏவ ப்ரஸஜ்யதே
உங்கள் கொள்கையின் படி அஞ்ஞானத்தால் சூழப்பட்டு ப்ரஹ்மம் தன்னைப் பலவாகக் கண்டு திகைக்கிறது
இதற்கு வேதங்களில் வரும் அபேத வாக்கியங்களை-(எடுத்துக் காட்டு -கயிறு -பாம்பு -) துணை கொள்கிறீர்கள் –
அதாவது பொய்யான பிரபஞ்சம் எனப்படுவது -பொய்யான அல்லது இல்லாத அஞ்ஞானம் என்பதைக் கொண்டே நிரூபிக்கப் பட வேண்டும்
அப்படியானால் பொய்யான அஞ்ஞானத்தை வேறு எதைக் கொண்டு நிரூபிப்பது
இந்த அஞ்ஞானம் -அவித்யை -என்பது மிகப் பழமையானது -அதற்கு இன்மை என்பது கிடையாது என வாதிட்டால் அதன் பழமை ப்ரஹ்மத்துடன் ஓன்று எனக் கொள்ள வேண்டும்
அந்நிலையில் இந்த அஞ்ஞானத்திற்கு ப்ரஹ்மமே காரணமாகும் –
ஆகவே ப்ரஹ்மம் இருக்கும் வரை அஞ்ஞானம் இருக்கும்
ஆகவே அஞ்ஞானம் அழிய ப்ரஹ்மமும் அழிய வேண்டும் -இது ஏற்புடையது அல்ல –
ஆகவே அஞ்ஞானம் அழிக்க முடியாத ஓன்று என்றும்
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்ட இரண்டாவது என்றும் ஒப்புக் கொள்ள வேண்டும் –
——-
56–அத ஏவ -இதம் அபி நிரஸ்தம் –
ஏக மேவ சரீரம் ஜீவவத் -நிரஜீவாநி இதராணி சரீராணி -யதா ஸ்வப்ந த்ருஷ்ட-நாநாவித சரீராணாம் நிர்ஜீவத்வம்-
தத்ர ஸ்வப்நே த்ருஷ்டு சரீரம் ஏவ ஜீவவத் -தஸ்ய ஸ்வப்ந வேலாயாம் த்ருஸ்ய பூத நாநாவித அநந்த சரீராணாம் நிர்ஜீவத்வமேவ –
அநேந கேநைவ அந்யேஷாம் ஜீவாநாம் சரீராணாம் ச பரிகல்பிதத்வாத் ஜீவா மித்யா பூதா இதி ப்ரஹ்மண-
ஸ்வ ஸ்வரூப வ்யதிரிக்தஸ்ய ஜீவ பாவஸ்ய சர்வ சரீராணாம் ச கல்பிதத்வாத் ஏகஸ்மிந்நபி சரீரே சரீராவத்
ஜீவ பாவஸ்ய ச மித்யா ரூபத்வாத் ஸர்வாணி சரீராணி மித்யா ரூபாணி தத்ர ஜீவ பாவஸ்ய மித்யா ரூப
இதி ஏகஸ்ய சரீரஸ்ய தத்ர ஜீவ ஸத்பாவஸ்ய ச ந கஸ்சித் விசேஷ அஸ்மாகம் து ஸ்வப்நேரு த்ருஷ்ருஸ் சரீரஸ்ய
தஸ்மிந் ஆத்ம ஸத்பாஸ்ய ச ப்ரபோத வேலாயாமபாதி தத்வாத் அந்யேஷாம் சரீராணாம் தத் கத ஜீவாநாம்
ச பாதி தத்வாத் தே சர்வே மித்யா பூதா ஸ்வ சரீர மேகம் தஸ்மிந் ஜீவ பாவஸ்ய பரமாத்த இதி விசேஷ —
(சரீரத்தில் ஒரே ஜீவன் -மற்றவை நிர்ஜீவ -அவற்றுக்கும் ப்ரவ்ருத்தி உண்டே -ஸுபரி 50 சரீரம் எடுத்தாலும் ஒரே ஜீவன் தானே –
சுக துக்க அனுபவம் எவ்வாறு –
தர்ம பூத ஞானம் இரண்டாவது ஒத்துக் கொள்ள மாட்டார்களே அத்வைதி –
ஸ்வப்னம் நித்யம் -ஒரே ஜீவன் -மற்றவை நிர் ஜீவன் உள்ள சரீரம் –
தர்ம பூத ஞானம் கொண்டே இவற்றை நிர்வஹிக்க முடியும்)
இக்காரணத்தாலேயே கீழ் வரும் ஒரே உடல் வாதமும் மறுக்கப் படுகிறது
ஒரே உடல் மட்டும் உயிருடன் கூடியிருக்கிறது -மற்றவை உயிர் அற்றவர்கள் -கனவில் பலரைக் கண்டாலும் அவர்கள் உயிர் அற்று பொய்யாகவும் அங்கு கனவு காண்பவன் ஒருவனே உயிருடன் இருப்பது போல் அவனால் கனவு காணப்படும் பல பிராணிகள் உயிர் அற்றவை
இவ்வாறு கனவில் தோன்றும் உயிர்களும் உடல்களும் கனவு காண்பவனுடைய கற்பனையே -யாவும் பொய்யானவை என்பது போல் ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே -கற்பனையே -என்று சொன்னால் உலகில் ஒரு ஜீவாத்மாவும் அதன் உடலும் பொய்யாகத் தானே ஆகும்
அதனால் ஒரே உடலில் மட்டும் உயிர் இருக்கிறது என்ற உங்கள் கொள்கை எவ்வகையிலும் சிறப்புப் பெற்றதல்ல
கனவு காணும் உடலும் உயிரும் பாதிக்கப் பட்டவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப் படாதேவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டவை யாகவும் இருப்பதால் கனவு காண்பவன்
அவனுடைய உடல் உயிர் ஆகியவை உண்மை என்று சொல்லும் எங்கள் கொள்கையே சிறப்பாகும்
———–
57–அபி ச கேநவா அவித்யா நிவ்ருத்தி ? சா ச கீத்ருஸீ-இதி விவேச நீயம்-
ஐக்ய ஞானம் நிவர்த்தகம் -நிவ்ருத்திஸ் ச அநிர் வசநீய ப்ரத்யநீக ஆகாரா இதி சேத் அநிர் வசநீய ப்ரத்ய நீகம் நிர்வசநீயம்-
தச்ச சத்வா ? அசத்வா ? த்வி ரூபம் வா ? கோட்யந்தரம் ந வித்யதே –
ப்ரஹ்ம வ்யதிரேகேண ஏததத்ப்யுகபமே புநரப்ய வித்யா ந நிவ்ருத்தா ஸ்யாத் ப்ரஹ்ம ஏவ சேந் நிவ்ருத்தி
ததுப்ராகப்ய விசிஷ்டமிதி வேதாந்த ஞாநாத் பூர்வ மேவ நிவ்ருத்திஸ்யாத் ஐக்ய ஞானம் நிவர்த்தகம்
ததபாவாத் சம்சார இதி வாத தர்சனம் விஹந்யேத –
(சத்தான ப்ரஹ்மமோ அசத்தான முயல் கொம்பு-ஆகாசத் தாமரை -மலடி மகன் – போல்வன துக்கம் தராதே
அநிர் வசன நீயமான மற்றவையே துக்கம் தருமவை
ப்ரஹ்மத்தை நிரூபிக்கும் பிரமாணங்களும் மித்யை என்றால் -ஸர்வ சூன்ய வாதிகளுக்கு ஒப்பர் ஆவாரே
அனைத்தும் அந்த அந்த தேச காலத்தில் சத்தியமே -அலைகள் இப்பொழுது இல்லை என்றாலும் முன்பு இருந்தது மித்யை அல்லவே )
அறியாமையின் நின்றும் நீங்குதல் எவ்விதம் இருக்கும் -அது எவ்வாறு காணப்படும் -என்பது ஆராயத் தக்கது
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலத்தல் -நீக்கம் -என்னும் விடுதலை நிலை சொற்களுக்கு அப்பால் பட்ட நிலைக்கு எதிர்த்தட்டானது எனில் சொற்களால் விவரிக்கப் படுகிறது என்றதாகும்
அப்படியாயின் அது உயிர்ப்பொருளா உயிரல் பொருளா -இரண்டும் கலந்ததா -பலபடிப்பட்டதா என அறிய முடியாதது
ப்ரஹ்மம் தவிர்ந்த மற்ற ஓன்று ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலக்கின்றது எனின் ப்ரஹ்மத்தின் நின்று வேறு பட்ட ஓன்று உள்ளது என ஒத்துக் கொள்ள வேண்டும் –
அப்போதும் அத்வைதம் நில்லாது
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டு ஒன்று இருக்குமாயின் அது அறியாமை யுடனேயே கூடி இருக்க வேண்டும் -அதாவது அறியாமை அழியவில்லை என்றாகும்
மாறாக நீக்கம் என்பது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறுபட்டது அல்ல என்று கொண்டால் அது தான் ஓன்று என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்பும் இருப்பது -எனவே நீங்கும் அறிவு என்று ஓன்று கிடையாது என்பதாகவும் நீங்கும் அறிவு கிட்டா விட்டால் பிறவிச் சுழலே என்ற கூற்றுக்கு விரோதமாகவும் ஆகிறது
அவ்வாறு அன்றி நீக்கம் உண்மை யல்ல என்று கொண்டால் அது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறு பட்டதா அல்லவா எனக் கேள்வி வரும்
அப்படி யானால் முன்பே கூறியது போல் அதற்கு வேறொரு அஞ்ஞானம் துணை வேண்டும் -ஆகவே எந் நிலையிலும் அஞ்ஞானத்துக்கு நீக்கம் இல்லை என ஆகிறது –
———–
58–கிஞ்ச நிவர்த்தக ஞாநஸ்யாப்ய வித்யா ரூபாத்வாத் -தந் நிவர்த்தக ஞானம் ஸ்வேத ஸமஸ்த பேதம் நிவர்த்ய
க்ஷணிகத்வாதேவ ஸ்வயமேவ விநஸ்யதி -தாவாநல விஷ நாசந விஷாந்தரவத் இதி சேத் ந –
நிவர்த்தக ஞாநஸ்ய ப்ரஹ்ம வ்யாதிரிக்தத்வேந தத் ஸ்வரூப தத் உத்பத்தி விநாசாநாம் மித்யா ரூபத்வாத்
தத் விநாச ரூபா அவித்யா திஷ்டத்யேவேதி தத் விநாச தர்சனஸ்ய நிவர்த்தகம் மந்தவ்யமேவ –
தாவாக்ந்யா தீநாமபி பூர்வா வஸ்தா விரோதி பரிணாம பரம்பரையா அவ்ரஜ நீயைவ —
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை பொய் எனக் கொண்டால் வேத ஸாஸ்த்ரங்களால் ஏற்படும் -சான்றுகளால் ஏற்படும் -அறிவும் பொய்யாகும்
மற்ற ஒன்றான கட் புலனாதலால் ஏற்படும் அறிவும் என்றும் அழிவதில்லை
ஆகவே அஞ்ஞானம் தோன்ற வழியில்லை
இவ்விரண்டில் எந்த ஞானத்தால் -இந்த அஞ்ஞானத்தின் நின்றும் விடுதலை கிடைக்கிறது என ஆராய்வோம்
இந்த விடுதலை ஞானம் எல்லா அஞ்ஞானங்களையும் ஒரே கணத்தில் நீக்கி -தானும் அழிந்து விடுகிறது
காட்டுத்தீ விஷ முறிவு மருந்து போல் தன் தொழில் முடிந்தவுடன் தானும் அழிந்து விடுகிறது என்பீராயின் அது அவ்வாறு அல்ல
இந்த விடுதலை அறிவும் ப்ரஹ்மத்தின் நின்று மாறுபட்டு இருப்பதால் அதன் நிலை தோற்றம் அழிவு ஆகியவையும் பொய்யானவையே
ஏன் எனில் -அந்த விடுதலை அறிவு அழிந்த பின்பு அது அழிந்தது என்று கொள்ள வேண்டுமாகையால் அவ்வழிவு மெய் என்றதாகிறது
எடுத்துக் காட்டிய காட்டுது தீயும் விஷ முறிவும் தங்களது முந்தைய நிலையின் நின்றும் வேறுபட்டு வேறொரு நிலையை அடைந்து இருக்கின்றனவே ஒழிய அவைகளுக்கு அழிவு ஏற்படவில்லை
பிரமாண ஜன்ய ஞானம் –சான்றுகளால் ஏற்படும் அறிவு
ஸ்வரூப ஜன்ய ஞானம் –கட் புலனாதலால் ஏற்படும் அறிவு
அஞ்ஞானம் அவித்யை -பல் பொருள் காட்சி -பொய் யறிவு -பிறவிச் சூழல் -நீங்க வேண்டிய அறிவு
————–
59–அபி ச சிந் மாத்ர ப்ரஹ்ம வ்யதிரிக்த க்ருத்ஸ்ந நிஷேத விஷய ஞாநஸ்ய கோயம் ஞாதா ?
அத்யாச ரூப இதி சேத் -ந தஸ்ய நிஷேத்யதாயா நிவர்த்தக ஞாந கரமத்வாத் தத் கர்த்ருத்வ அநுப பத்தே
ப்ரஹ்ம ஸ்வரூபமேவ இதி சேத் ந ப்ரஹ்மண-நிவர்த்தக ஞானம் பிரதி ஞாத்ருத்வம் கிம் ஸ்வரூபம் உத அத்யஸ்தம் ?
அத்யஸ்தம் சேத் அத்யத்யாச தந் மூல அவித்யாந்தரம் ச நிவர்த்தக ஞான விஷய தயா திஷ்டத்யேவ -தந் நிவர்த்தகாந்தராப்யுபகமே தஸ்யாபி த்ரி ரூபதயா அநவஸ்த்தைவ
ஸர்வஸ்ய ஹி ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே ஞானத்வமேவ ஹீயதே -கஸ்ய சித் கஞ்சன அர்தவிஸேஷம் ப்ரதி ஸித்தி ரூபத்வாத்
ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே பவதாம் ஸ்வரூப பூத ஞானவத் நிவர்த்தக ஞானமபி அநிவர்த்தகம் ஸ்யாத்
ப்ரஹ்ம ஸ்வரூபஸ் யைவ ஞாத்ருத்வாத் யப் யுபகமே அஸ்மதீய பக்ஷ ஏத பரி க்ருஹீதஸ்யாத்
நிவர்த்தக ஞான ஸ்வரூப ஞாத்ருத்வம் ச ஸ்வநிவர்த் யந்தர்கதம் –இதி வசனம்
பூதல வ்யதிரிக்தம் க்ருத்ஸ்னம் சின்னம் தேவ தத்தேன –இத் யஸ்யாமேவ சேதன க்ரியாயாம் அஸ்யா சேதன க்ரியாயா சேத்ருத்வஸ்ய ச சேத் யாந்தர் பாவ வசனவத் உபஹாஸ்யம்
மேலும் ப்ரஹ்மம் ஞானமே வடிவானது -அது நீங்கிய யாவையும் பொய்யே என்றால் அறிபவன் என்பவன் யார் –
அந்த ப்ரஹ்மம் தானே ஜீவாத்மாவில் ஏறிட்டுக் கொள்கிறது எனில் -அவ்வாறு இருக்க முடியாது
ஏன் எனில் இந்த விடுதலை அறிவுக்கு அறிபவனாக எழுவாயாக -அவன் இருக்க முடியாது -ப்ரஹ்மத்தின் நின்றும் அவன் வேறுபடாமையால் –
ப்ரஹ்மமே இவ் வறிவைப் பெறுகிறது என்பதுவும் சரியில்லை -ஏன் எனில் இவ் வறிவு ப்ரஹ்மத்துக்கு இயல்பானதா அல்லது அதன் மேல் ஏற்றிச் சொல்லப் பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இயலாது –
அது இயல்பானது எனில் அஞ்ஞானம் வர வழியில்லை –
ஏறிடப் பட்டது எனில் ப்ரஹ்மத்திடம் அதின் மேல் ஏறிடப் பட்ட அஞ்ஞானமும் அதனால் நான் அறிகிறேன் -என்ற நினைவும் இருக்கும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை யாதலால் இவை எப்பொழுதும் ப்ரஹ்மத்துடன் இருக்கும் –
இந்நிலையில் இவ்விரண்டும் வேறொரு ஞானத்தால் போக்கப்படும் எனில் அதற்கு காரணமானவன் யார்
அவ்வறிவு எத்தகையது
அதனால் அறியப்படுவது எது
என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது
இதற்கு மாறாக அறிதல் என்பது ப்ரஹ்மத்திற்கு இயல்பாகவே இருக்கிறது எனில் நீங்கள் எங்களுடைய கொள்கைகளை ஒத்துக் கொண்டதாக ஆகிறது
இந்த விடுதலை ஞானத்தால் எவை எல்லாம் அழிக்கப் படுமோ அதில் அந்த ஞானமும் அடங்கி யுள்ளது என்று கூறுவது நகைப்புக்கு இடமாகும்
இந்த பூமியைத் தவிர எல்லாவற்றையும் தேவதத்தன் தோண்டினான் என்ற கூற்றில் அவன் தோண்டக் கூடிய பூமியை விட்டு விட்டு தேவதத்தன் முடியாத பிறவற்றைத் தோண்டியதாக தோண்டினான் என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் கொள்வது போல் –
——–
60–அபி ச நிகில பேத நிவர்த்தகம் இதம் ஐக்ய ஞானம் கேந ஜாதம் இதி விவேசநீயம் ஸ்ருத்யைவ இதி சேத்
ந தஸ்யா ப்ரஹ்ம வ்யதிரக்த்தாயா அவித்ய பரிகல்பிதத்வாத் பிரபஞ்ச பாதக ஞான உத்பாதகத்வம் ந சம்பவதி –
ததாஹி துஷ்ட காரண ஜன்யமபி ரஜ்ஜூ சர்ப்ப ஞானம் துஷ்ட காரண ஜன்யேந -ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப –
இதி ஞாநேன நபாத்யதே ரஜ்ஜூ சர்ப்பயே வர்த்தமநே -கேநசித் ப்ராந்தேந புருஷேண ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப
இதி யுக்தேபி அயம் பிராந்த இதி ஞானதே சதி தத் வசனம் ரஜ்ஜூ சர்ப்ப ஞானஸ்ய பாதகம் ந பவதி –
பயம்ச ந நவர்த்ததே-ப்ரயோஜனவத் ஸ்ரவண வேலாயாமே வஹி ப்ரஹ்ம வ்யதிரிக்தத்வேந
ஸ்ருதே ரபி பிராந்தி மூலத்தவம் ஞாதம் இதி
(ஞானம் ஒருவருக்கு உண்டாக வேணுமே
ஞானம் போல் ஞானம் பெற்ற ஜீவனும் அழியும் -நிவர்த்தகம் யாருக்கு -நிவர்த்தக ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே)
இந்த ஜீவாத்மாவிற்கு உலகம் பரமாத்மாவினின்றும் வேறு பட்டு தோன்றும் அறிவைத் தவிர்த்து தான் ப்ரஹ்மத்துடன் ஒன்றிய ஓன்று என்ற அறிவு எதனால் ஏற்படுகிறது என ஆராய்வோம்
வேதத்தால் ஏற்படுகிறது என்றும் கொள்ள முடியாது –
ஏன் எனில்
வேதம் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டது -அதனால் அது பொய் -அவித்யா -அதினின்றும் ப்ரபஞ்சம் பொய் என்றும் அறிவு ஏற்பட வாய்ப்பில்லை
எப்படி எனில்
பொய்யறிவினால் உண்டான கயிற்றில் பாம்பைக் காண்பதை மற்றொரு பொய்யறிவினால் உண்டான இது கயிறு இறே -பாம்பு அல்ல -என்ற எண்ணத்தினால் போக்கடிக்க முடியாதது போல் கயிற்றைப் பாம்பு என மயங்கி அச்சம் கொண்ட ஒருவனுக்கு அவனைப் போன்றே மயங்கிய அறிவுடைய ஒருவனால் வழங்கப்படும் பாம்பல்ல -கயிறு தான் -என்ற அறிவுரை முந்தையனவால் –
இவனும் நம் போல் மயங்கியவன் -இவனுடைய அறிவு கொள்ளத்தக்கது அல்ல என்ற எண்ணத்தால் -அவனுக்கு முன்பு தோன்றிய பாம்பு என்ற அறிவும் அதனடியாகப் பிறந்த பயமும் மாறாதது போல்
உலகம் பல படித்தானது என்று ஞானம் அழிவதற்காக வேதம் சொல்லும் சொற்களும் கேட்க்கப்படுகையிலேயே
இவை ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டன -ஆகவே மயக்கத்தை ஊட்டுவன என்ற அறிவு மாறாது
கிஞ்ச -நிவர்த்தக ஞானஸ்ய ஞாது தத் சாமக்ரீ பூத சாஸ்த்ரஸ்ய ச ப்ரஹ்ம வ்யதிரிக்த தயா யதி பாத்யத்வமுச்யதே
ஹந்த ஹந்த தர்ஹி பிரபஞ்ச நிவ்ருத்தே மித்யாத்வ மாபததீதி பிரபஞ்சஸ்ய ஸத்ய தாஸ்யாத்-
ஸ்வப்னந த்ருஷ்ட புருஷ வாக்யாவகத பித்ராதி மரணஸ்ய மித்யாத்வே ந பித்ராதி சத்யதாவத் –கிஞ்ச தத்வமஸ்யாதி வாக்யம் ந பிரபஞ்சஸ்ய பாதகம் பிராந்தி மூலத்வாத் ப்ராந்தப்ர யுக்த ரஜ்ஜூ சர்ப்ப பாதக வாக்யவத்–
எந்த தெளிவுறுத்தும் அறிவும் அதை யுடையவனும் அதை அறிவதற்குத் துணையான கருவிகளும் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டவை யாகையால் பொய் என்று கொள்ளப் படுகின்றனவோ அவ்வறிவு எவ்வாறு உண்டாக முடியும்
அதனால் ப்ரபஞ்சம் பொய் என்று காட்டும் அறிவே பொய்யாவதால் பிரபஞ்சம் மெய்யே என்றாகி விடும்
எடுத்துக் காட்டாகக் கனவில் ஒருவன் தனது தந்தையின் இறப்பை ஒருவர் மூலம் அறிந்து பிறகு விழித்த போது தந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு கனவில் வந்த நிகழ்ச்சி பொய் -பொய்யான தகவலால் உண்மை மாறுபடுவது இல்லை என்று அறிகிறான்
இவ்வாறே
தத்வமஸி -போன்ற சொற்களும் ப்ரபஞ்சத்தின் உண்மையை மறுப்பது இல்லை
அவைகளும் பொய்யான ஸ்ருதியால் சொல்லப்படுவதால்
ந நுச ஸ்வப்நே கஸ்மின் சித்பயே வருத்தமாநே ஸ்வப்நசாயாமேவ் -அயம் ஸ்வப்ந –
இதி ஞாதேஸ்தி பூர்வ பய நிவ்ருத்தி த்ருஷ்ட்வா தத்வ தத்ராபி சம்பவதி இதி நைவம் ஸ்வப்ந வேலாயாமேவ
ஸோ பி ஸ்வப்ந -இதி ஞாதே சாதி புனர் பய நிவ்ருத்திரேவ த்ருஷ்டேதி ந கஸ்சித் விசேஷ ஸ்ரவண
வேலாயாமேவ ஸோ அபி ஸ்வப்ந இதி ஞாத மேவேத் யுக்தம் —
இல்லை எனில் கனவு காண்கையில் ஏற்பட்ட பயத்தை ஒருவன் தன் கனவில் தோன்றியது உண்மை யல்ல என்ற எண்ணத்தைக் கனவிலேயே கொண்டாலும் இரண்டாவதும் கணவாகையாலே கொள்ளத் தக்கதல்ல என்ற உணர்வால் அச்சம் விலகாது
அது போல் இச்சொற்களைக் கேட்பதால் மட்டும் ப்ரபஞ்சம் பொய் என்ற அறிவு எப்படி ஏற்படும் –
—————
61–யதபி சேத முக்தம் -ப்ராந்தி பரிகல்பிதத்வேந மித்யா ரூபமபி சாஸ்திரம் – சத் அத்விதீயம் ப்ரஹ்ம –
இதி போதாயதி-தஸ்ய சதோ ப்ரஹ்மணோ விஷயஸ்ய பஸ்ஸாத் ந பாத ந தர்சந நாத் ப்ரஹ்ம ஸூஸ்திதமேவ
இதி ததயுக்தம் -ஸூந்ய மேவ தத்வம் -இதி வாக்யேந தஸ்யாபி பாதிதத்வாத் இதம் ப்ராந்தி மூலம் வாக்யம்
இதி சேத் -சத் அத்விதீயம் ப்ரஹ்ம -இதி வாக்யமபி ப்ராந்தி மூலமிதி த்வயைவ யுக்தம் பஸ்ஸாத்த
ந பாத்தா தர்சனம் து சர்வ ஸூந்ய வாக்ய ஸ்யைவவேதி விசேஷ –
மயக்கத்தோடு கூடி இருந்தும் பொய் அவித்யை வடிவமாயினும் ஸாஸ்த்ரம் போதிக்கிற ப்ரஹ்மம் தவிர்த்த ஏதும் இல்லை -என்ற கொள்கை பிறகு அதற்கு மாறுபட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை யாதலால் அது ஏற்புடையதே
ஆயினும் இன்மையே சூன்யமே மெய்ப்பொருள் என்றும் ஒரு சொல் அதற்குப் பின் மாத்யமிக புத்த சமயிகளால் சொல்லப் பட்டு இருப்பதால் அது உண்மையாக முடியாது அவ்வாறு அல்ல
மாத்யமிகர் வாக்கியம் மயக்கத்துடன் கூடியது என்பீராயின் நீங்களும் ஸாஸ்த்ரம் மயக்கத்துடன் கூடியது என்றே கொள்கிறீர்கள்
ஒரு பொருள் இருக்கிறது என்று சொல்லி பிறகு அது இல்லாத போது அது இல்லை என்று எடுத்துக் கழிக்கும் சொல் வலுவானது
அதன் படி இன்மையே மெய்ப்பொருள் என்பது வலுவுடையதாகிறது
———-
62–சர்வ ஸூந்ய வாதிந ப்ரஹ்ம வ்யதிரிக்த வஸ்து மித்யாத்வ வாதிநஸ் ச ஸ்வ பஷ சாதனா பிரமாண பாரமார்த்யா
நப்யுபகமேந அபியுக்தை பாதாநதிகார ஏவ ப்ரதிபாதித –ஸர்வதாசது பாயாநாம் பாதமார்க்க ப்ரவர்த்ததே
அதி காரோ அநுபாயத்வாத் ந பாதே ஸூந்ய வாதிந இதி –
(ந சத் ந அஸத் ந ஸத்அஸத் -மாத்மிகன்-ஸர்வ சூன்ய வாதம் கண்டிக்க விரும்பாமல் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் -பிரசன்ன பவுத்தர் )
(விஷ நிவ்ருத்தி மருந்து விஷத்தை நிவர்த்தித்து தானும் நிவர்த்தியாவது போல்
ஞானம் அவித்யயை நிவர்த்தத்த பின்பு தானும் அழிந்து -ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் என்பர்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டதா கேள்வி வராதே -)
யாவும் இன்மையே என்பருக்கும்
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே என்போர்க்கும்
தங்கள் வாதத்தை நிலை நிறுத்தக் காட்டுகின்ற சான்றுகள் யாவும் பொய்யாகவும்
யாவும் பாதிக்கப் பட்டவை யாகவும் ஆகி விடுகின்றன
உண்மையான சான்று உடையவர்களுக்கே வாதத்தில் -வாதம் செய்வதில் -எப்பொழுதும் அதிகாரம் உண்டு
யாவும் பொய் என்பவர்களுக்கு வாதத்தை அதிகாரம் இல்லை -என்றவாறு
(குமாரில பட்டர் சொன்னது )
———–
63–அபி ச ப்ரத்யக்ஷ த்ருஷ்டஸ்ய பிரபஞ்சஸ்ய மித்யாத்வம் கேந ப்ரமாணேந சாத்யதே-
ப்ரத்யக்ஷஸ்ய தோஷ மூலத்வேந அந்யதா ஸித்தி சம்பவாத் -நிர்தோஷம் சாஸ்திரம் அநந்யதா சித்தம் ப்ரத்யக்ஷஸ்ய பாதகம்
இதி சேத் கேந தோஷேண ஜாதம் ப்ரத்யக்ஷம் அநந்த பேத விஷயம் இதி வக்தவ்யம் –
அநாதி பேத வாசநாக்ய தோஷ ஜாதம் ப்ரத்யக்ஷம் இதி சேத் -ஹந்த-தர்ஹி அநேந ஏவ தோஷேண ஜாதம் ஸாஸ்த்ரம பீதி
ஏக தோஷ மூலத்வாத் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ -ந பாத்ய பாதக பாவ ஸித்தி
ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம்
சாஸ்திரம் து பிரத்யஷாத் யபரிச்சேத்ய சர்வாந்தராத்மத்வ சத்யத்வாத் அநந்த விசேஷேண விஸிஷ்ட ப்ரஹ்ம ஸ்வரூப
தத் உபாஸநாத் யாராதன பிரகார -தத் பிராப்தி பூர்வக தத் பிரசாத லப்ய பல விசேஷ ததநிஷ் கரண மூல நிக்ரஹ விசேஷ விஷயம் –
இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத
அநதி நிதன -அவிச்சின்ன பாட ஸம்ப்ரதாயதாத் யநேக குண விஸிஷ்டஸ்ய சாஸ்த்ரஸ்ய பலீயஸ்த்வம் வததா ப்ரத்யக்ஷ
பாரமார்த்ய மவஸ்யம் அப்யுப கந்தவ்யம் இதி அலமநேந ஸ்ருதி சத விததிவாத வேக பராஹத
குத்ருஷ்ட்டி துஷ்ட யுக்தி ஜால தூல நிரசநேன இத் யுபகம்யதே —
(யாருக்கு உண்டாகிறது என்று கொண்டால் கூட நிவர்த்தக ஞானம் எதனால் உண்டாகிறது -அடுத்த கேள்வி
ப்ரத்யக்ஷத்தாலயா ஸ்ருதியாலாயா கேள்வி வருமே-ஸ்வயம் பிரகாசம் இல்லையே –
ஆகவே ப்ரமாணத்தால் தானே உண்டாகி இருக்க வேண்டும்
இதுக்கு ஸ்ருதி பிரமாணம் சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐக்யம் போதக வாக்கியங்கள் என்பர்
ப்ரத்யக்ஷத்தால் பலவாக காண்கிறோமே என்னில்-தேக வாசனை -இந்திரியங்கள் குறையே காரணம் என்பர்-ஸ்ருதி ஒருவர் சொல்ல காதால் நாம் கேட்க்கிறோமே அதுவும் மித்யை -துஷ்ட இந்திரிய பலம் அர்த்த பிரதிபத்தி புத்தி மாறலாம் -ஸாஸ்த்ரம் நிர்தோஷமாக இருந்தாலும்- ஸ்வ பாவ தோஷங்கள் உண்டாகும் அன்றோ-ப்ரத்யக்ஷத்துக்கும் தோஷம் சொல்லக் கூடாது என்பதே நம் சம்ப்ரதாயம் -ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம் -இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத-)
(பேதம் ப்ரத்யக்ஷம் நிரூபிக்கும் அபேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம்
சரீராத்மா பாவம் ஒன்றே சுருதி விஷயம் ஆகும் -பிரதிதந்தரம் நம் சம்பிரதாயத்துக்கு)
மேலும் நமக்குக் கண் கூடாய் இருக்கும் இப்பிரபஞ்சத்தின் பொய்மையை எந்த ப்ரமாணங்களைக் கொடு நிரூபிக்க முடியும்
நாம் நேரே காணும் இவ்வுலகில் காணப்படும் பல வேறுபாடுகள் குறைபாடுகளுக்கு நாம் தக்க காரணம் காட்ட முடியும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை -மற்றவை யாவும் பொய்யே என்று கூடும் ஸாஸ்த்ரத்தின் கூற்று நாம் நேரில் காண்பதை விட வலிது எனில் எக்குறை பாட்டால் நாம் காணும் பல் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறதே
மோக்ஷம் அடைய 32 ப்ரஹ்ம வித்யைகளைக் கூறுகிறதே
அப்படியாயின் அதுவும் உலகியலோடு ஒத்த குறைபாடுள்ள தாகையால் அதன் கருத்து நேரில் கட் புலனாவதை எவ்வாறு வெல்லும்
ஆகாயம் காற்று போன்ற பஞ்ச பூதங்களும்
அவைகளால் விளைந்த ஒலி தொடு உணர்வு போன்றவைகளும்
மனிதர்கள் முதலான பல் வேறு உடல் அமைப்புக் கொண்ட பிராணிகளும் கண்களால் காணப் படுகின்றன -உணரப் படுகின்றன
எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்கல் உண்மையாக இருத்தல் போன்ற எண்ணற்ற நற் குணங்களோடு கூடிய பரமாத்ம நிலையும்
அதை ஆராதனம் மூலம் கொடை நல்லறம் ஆகியவை செய்து வழி பட்டு அதன் கருணையால் கிடைக்கும் வீடு பேறு போன்ற நான்கு பேறுகளும்
ப்ரஹ்மத்துக்கு உகப்பு அல்லாததைச் செய்து அதனால் வரும் கேடுகளும் தண்டனைகளும் ஸாஸ்த்ரங்களால் விளக்கப் படுகின்றன
ஆகவே இவை இரண்டும் வெவ்வேறு வகையான பொருள்களைக் கூறுவன வாகையால் ஒன்றால் மற்ற ஒன்றை எவ்வாறு பாதிக்கப் படும்
மேலும் கட் புலனாவது என்ற சான்றை நீங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
காதுகளால் கேட்டு
மனத்தில் நிறுத்திக் கொள்வதால் தான் ஸாஸ்த்ரங்கள் உள்ளவை என்ற நிலையைப் பெறுகின்றன
முதலும் முடிவும் அற்று தொடர்பு அறாது உபதேசத்தால் வந்த பல நலன்களோடு கூடிய ஸாஸ்த்ரம் வலுவுள்ளது என்று ஒப்பிய உங்களால் கண் கூடாகத் தெரியும் உலகமும் ஒத்துக் கொள்ளப் பட வேண்டும் –
முடிவாக நேர் அற்ற நோக்கு உடையோரால் அவர்களால் வாதிக்கப்படும் உக்திகளால் செப்பிடு வித்தை போல் காணப்படும் இப்பொய்மை வாதமாகிற பஞ்சு பல வேத வாக்யங்களால் நன்கு விளக்கப்பட்ட புயல் காற்றால் அடித்துச் செல்லப்படும் எனக் கூறி அமைகிறேன்
—————–
பாஸ்கர மத கண்டனம்
64–த்விதீயே து பக்ஷே உபாதை ப்ரஹ்ம வ்யதிரிக்த -வஸ்த்வாந்தராந் ப்யுபகமாத் ப்ரஹ்மண்யேவா உபாததி
சமசர்க்காத் ஓவ்பாதிகாஸ் சர்வே தோஷா ப்ரஹ்மண்யேவாபவேயு
ததஸ் ச அபஹதபாப் மத்வாதி நிர்தோஷ ஸ்ருத யஸ் சர்வா விஹந்யந்தே -யதா கடாகாசதே
பரிச்சின்னதயா மஹா ஆகாசாத் வை லக்ஷண்யம் பரஸ்பர பேதஸ் ச த்ருச்யதே -தத்ரஸ்தா தோஷாவா குணா வா
அநவச் சிந்நே மஹா ஆகாஸே ந சம்பந்யந்தே -ஏவம் உபாதை க்ருத பேத வ்யவஸ்தித ஜீவ கதா தோஷா
அநு பஹிதே பரே ப்ரஹ்மணி ந சம்பந் யந்தே இதி சேத் நைததுபத்யதே நிரவயவஸ்ய ஆகாசஸ்ய அநவச் சேத் யஸ்ய கடாதிபி –
சேதா சம்பவாத் -தேநை வாகாசேந கடாதயஸ் ஸம்யுக்தா இதி ப்ராஹ்மண உபாயச்சேத் யத்வாத் ப்ரஹ்ம ஏவ உபாதி ஸம்யுக்தம் ஸ்யாத் –
கட ஸம்யுக்தாகா ச பிரதேச அந்யஸ் மாதாகாச ப்ரதேசாத் பித்யதே-இதி சேத் ஆகாசஸ்யை கஸ்யைவ பிரதேச பேதேநே
கடாதி ஸம்யோகாத்-கடாதவ் கச்சதி தஸ்ய ச பிரதேசஸ்ய அநியம இதி ப்ரஹ்மண்யேவ
உபாதி ஸம்சர்க்க ஷணே ஷணே பந்தோ மேஷஸ் ச பவதீதி சந்த பரிஹஸந்தி–
(உபாதி சம்சர்க்கம் -ப்ரஹ்மத்துக்கு அபஹத பாப்மத்வாதிகள் சுருதி விருத்தம்
அபரிச்சின்ன ஆகாசம் -நடுவில் கடம் வைத்தால் கடாகாசம் -தோற்ற -இதன் குறைகள் மஹா ஆகாசத்தில் காணப்பட வில்லை
ஜீவர்கள் கடாகாசம் போல் -சேதிக்க முடியாதே -ஆகாசம் ஸூஷ்மம் -கடம் ஸ்தூலம் சேதிக்க முடியாதே -அதே போல் ப்ரஹ்மம் ஸூசமம் -உபாதி – ஸ்தூலம்
கர்மாக்கள் தர்ம பூத ஞான த்வாரா ஆத்மாவில் -ப்ரஹ்மத்துக்கு சங்குசித ஞானம் இல்லையே-விகார அநர்ஹம் -)
பாஸ்கரர் கொள்கைக்கு மறுப்பு
இரண்டாவது மதத்திலும் சூழலின் தாக்கம் -ப்ரஹ்மம் தவிர்த்த வேறு பொருள்கள் -ஒப்புக் கொள்ளப் படாமையால் ப்ரஹ்மத்தின் இடத்திலேயே சூழலின் தாக்கத்தால் வரக்கூடிய எல்லாக் குறைபாடுகளும் ப்ரஹ்மத்திலேயே ஏற்படுகின்றன
அதனால் பாபமற்ற தன்மை முதலான குறைகள் அற்றதாகப் ப்ரஹ்மத்தைக் கூறும் மறை வாக்கியங்கள் அழிக்கப்படும் -பொருள் அற்றவை யாகும் –
அவ்வாறே குடத்தினுள் உள்ள வெளி அளவு பட்டதாகவும் மற்றைப் பெரு வெளி அளவு படாததாகவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டுத் தோன்றுகின்றன
அதனால் அளவு பட்ட வெளியின் நிறை குறைகள் பெரு வெளியின் தொடர்பு அற்றவை யாகின்றன
அது போலவே சூழலின் தாக்கத்தால் ஜீவனிடம் தோன்றும் குறை நிறைகள் ப்ரஹ்மத்தின் தொடர்பு அற்றது என்பீராகில் அது கொள்ளத் தக்கது அல்ல
அவயவங்கள் அற்ற பெரு வெளி குடம் போன்றவற்றால் பிளவு படுத்தக் கூடியது அல்ல
அது எப்போதும் குடத்தின் வெளியோடு கூடியே இருக்கும்
அது போல் ப்ரஹ்மமும் அவயவங்கள் அற்றதால் பிளக்கப்பட முடியாதலால் ஜீவனுடைய நிறை குறைகளையும் கொண்டு இருக்கும் –
குடத்தின் உள்ளிருக்கும் சிறு வெளியும் அது தவிர்த்த கூடத்திற்கு வெளியில் உள்ள பெரு வெளி எனக் கருதப் படுகிறது என்பது போல் இங்கும் கொள்ளலாம் எனில்
ஒரே வெளி குடத்தின் தொடர்பால் இரண்டாகக் கருதப் படுகையில் அக்குடம் உருண்டு செல்கையில் அதற்கு ஒவ்வோர் நிலையிலும் வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் தொடர்பும் தொடர்பின்மையும் ஏற்படுகிறது
இதனால் குடத்திலுள்ள சிறு வெளி இது என்று பிரித்துக் காண இயலாது
அதே போல் ப்ரஹ்மத்தின் எப்பகுதி சூழலை தயக்கத்துடன் தொடர்புடையது எப்பகுதி தொடர்பு அற்றது எனப் பிரித்துக் காண முடியாது
ஆகவே ஜீவனுக்கு உள்ள குறை நிறைகள் ப்ரஹ்மத்திலும் காணப்பட வேண்டும்
அதாவது உடல் புலன்கள் தொடர்பால் வரும் கட்டும் அது நீங்கினால் வரும் வீடும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நகைப்புக்கு இடமான நிலை ஏற்படும் –
உபாதி -சூழலின் தாக்கம் -அருகில் உள்ள ஒரு பொருளின் தொடர்பால் மற்றதில் ஏற்படும் மாறுதல்
எடுத்துக் காட்டு -வெள்ளை நிறப்பொருள் அருகில் உள்ள செம்பருத்திப் பூவினால் சிவப்பாகக் காணப்படுதல்
————–
65–நிரவயவஸ் யாகாசஸ் யைவ ஸ்ரோத்ர இந்த்ரியத்வேபி இந்திரிய வ்யவஸ்தாவத்
ப்ரஹ்மண்யபி வ்யவஸ்தா உபபத்யதே இதி சேத்
ந வாயு விசேஷ ஸம்ஸ் க்ருத கர்ண பிரதேச ஸம்யுக்தஸ்யைவ ஆகாச பிரதேசஸ்ய ஸஸ்ய இந்த்ரியத்வாத்
தஸ்ய ச பிரதேசாந்த்ராத் பேதா நியமேபி இந்திரிய வ்யவஸ்தா உபபத்யதே-
ஆகாசஸ்யது ஸர்வேஷாம் சரீரேஷு கச்சத்ஸூ அநியமேந சர்வ பிரதேச ஸம்யோக இதி
ப்ரஹ்மண்யாபி உபாதி ஸம்யோக பிரதேசா நியம ஏவ —
(ஆகாசம் -சப்த குணகம் -காதில் நுழைந்து -ஸ்தோத்திரிய இந்திரியம் உணரும் -ஸம்யுக்த-ஸம்யோக)
அவயமற்ற ஆகாயம் செவிப்புலன் எனப்படுவது போல் ப்ரஹ்மத்திற்கும் புலன்கள் அற்று கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஏற்படலாம் எனில்
அது இயலாது
காற்றுடன் தொடர்புடையதாய் காதின் உள்ளிருக்கும் சிறு வெளி ஒலிகளை அறியக் காரணமாவதால் செவிப்புலன் எனப் பெயர் பெறுகிறது
அதை ஒழிந்த ஆகாயம் இவ்வாறு பகுதிகளாக பிரிக்கப்படாதது
மேலும் ஆகாயத்திற்கு காது மட்டும் அன்றி உடலின் எல்லாப் பகுதிகளுடன் தொடர்பு இருக்கிறது
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆகாயப் பகுதி ஒரு குறிப்பிட்ட புலனுடன் எப்பொழுதும் தொடர்பு கொண்டு இருக்கிறது என வரை யறுக்க முடியாது
ஆயினும் அது உடல்களின் தொடர்பால் எப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருப்பதால் அத் தொடர்பு நிலையுடையதாய் இருக்கிறது
இந்த செவிப் புலன் வெளியை மற்ற வெளியின் நின்றும் தனியாக பிரிக்கவோ குறிப்பிடவோ முடியாது
இவ்வாறு ப்ரஹ்மத்திற்குக் கொண்டால் ப்ரஹ்மம் எப்பொழுதும் சூழலின் தயக்கத்தோடு தொடர்பு யுடையதாக மட்டுமே இருக்க முடியும் –
66–ஆகாசஸ்ய ஸ்வரூபேண ஏவ ஸ்ரோத்ரிந்த் ரியத்வம் அப்யுபகம்யாமபி இந்திரிய வ்யவஸ்தா யுக்தா பரமார்த்த
தஸ்து ஆகாச நஸ்ர இந்திரியம் –
வைகாரிகாத் அஹங்காராத் ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஹி வைதிகா யதோக்தம்
செவிப்புலன் என்பது ஆகாயத்தின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்ற உங்கள் கருத்தை ஒத்துக் கொண்டு அதற்கு மேற்கூறியபடி பதில் அளித்தோம்
உண்மையில் ஆகாயம் செவிப்புலன் அல்ல
வைகாரிகம் போன்ற அஹங்காரங்களில் நின்றும் பதினோரு இந்திரியங்கள் உண்டாகின்றன என்பது வைதிகர்கள் கருத்து
உங்கள் கருத்து அதற்கு முரணானது –
பகவதா பராசரரேண-
தைஜசாநி இந்த்ரியாண்யாஹு -தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி அயமர்த்த வைகாரிக தேஜச பூதாதி இதி த்ரிவிதோ அகங்கார -ச ச க்ரமாத் சாத்விக ராஜஸ தமசஸ் ச
தத்ர தாமஸாத் பூதாதே ஆகாசாதீநி பூதாநி ஜாயந்தே இதி ஸ்ருஷ்ட்டி க்ரம முக்த்வா -தைஜஸாத் ராஜஸ அஹங்காராத்
ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஸ்வ மத முச்யதே -தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி தேவா இந்திரியாணி ஏவம் ஆஹங்காரி காணாம்—இந்திரியாணாம் பூதைஸ் சாப்யாயநம் மஹா பாராதே உச்யதே
பராசரர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
தைஜஸத்தின் நின்றும் -அதாவது ராஜஸ அகங்காரத்தின் நின்றும் -புலன்கள் உண்டாயின என்று சிலர் சொல்லுவர்
ஆயின் அவை பதினொன்றும் வைகாரிகத்தின் நின்றும் -அதாவது ஸாத்விக அஹங்காரத்தின் நின்றும் -உண்டாயின என்றும்
அதனால் அவற்றுக்கு வைகாரிகங்கள் என்று பெஅர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம்
இதன் பொருள் -வைகாரிகம் தைஜஸம் பூதாதி என்பவை மூன்று அஹங்காரங்கள்
இவைகள் முறையே ஸாத்விக ராஜஸ தாமஸங்களாகும்
இவற்றில் தாமஸ த்தின் நின்றும் ஆகாயம் முதலிய பூதங்கள் பிறக்கின்றன என்று படைப்பின் ஒழுங்கைக் கூறுகையில்
தைஜஸமாகிற ராஜஸ அகங்காரத்தின் நின்றும் பதினோரு புலன்கள் பிறக்கின்றன என்றும் கூறி
தனது கொள்கையாக புலன்கள் வைகாரிகத்தின் நின்றும் பிறக்கின்றன என்று நிறுவுகிறார்
தேவா என்பது புலன்கள்
இதையே அஹங்காரத்தின் நின்று புலன்கள் தோன்றி பஞ்ச பூதங்களால் வளர்க்கப் படுகின்றன என்று மஹா பாரதமும் சொல்கிறது –
பவ்தீகத்வேபி இந்திரியாணாம் ஆகாசாதி பூத விகாரத்வதேவ ஆகாசாதி பூத பரிணாம விசேஷா –
வ்யவஸ்திதா ஏவ சரீரவத் புருஷானாம் இந்திரியாணி பவந்தி இதி -ப்ரஹ்மணி அச்சேத்யே நிரவயவே-
நிர்விகாரேது அநியமேந அநந்த ஹேயோபாதி ஸம் சேர்க்க தோஷா துஷ் பரிஹர ஏவ இதி –
ஸ்ரத்ருதாநாநாமேவ அயம் பஷ இதி ஸாஸ்த்ர விதோ ந பஹுமந்யந்தே –
ஸ்வரூப பரிணாம அப்யுகமாத் அதிகார ஸ்ருதி பாத்யதே நிரவத்யதா ச ப்ரஹ்மண-சக்தி பரிணாம –
இதி சேத் கேயம் சக்திரித் யுச்யதே ? கிம் ப்ரஹ்ம பரிணாம ரூபா ? உத ப்ரஹ்மணோ அநந்யா கா அபி ?
இதி உபய பக்ஷே அபி ஸ்வரூப பரிணாம அவர்ஜனீய ஏவ —
பஞ்ச பூதங்களைப் பிறப்பிக்கிற பூதாதியின் மாறுபாடான இந்தப் புலன்கள் ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களின் துணையால் உடலை அடைந்து செயல்படுகின்றன என அறியப்பட்டது
மாறாக ப்ரஹ்மத்தின் பொறிகள் அற்ற மாறு பாடற்ற தன்மை பொறிகளின் தொடர்பால் பழுது படுகிறது என்னும் வாதம் சான்றோர்கள் முன்பு பாஸ்கரர் கொள்கையாக வைக்கப் படுகிறது
ப்ரஹ்மமே மாறுபாடு அடைந்து இவ்வாறாகிறது என்பீராகில் அதன் மேற்கூறிய தன்மைகள் பாதிக்கப்படும்
அவ்வாறு அன்றி தன் ஆற்றலால் ப்ரஹ்மம் மாறுபடுகிறது என்றால் அவ்வாற்றல் என்பது என்ன
அது ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டதா –
எவ்வாறு
இக் கேள்விகளுக்கு பதில் எதுவானாலும் ப்ரஹ்மத்தின் நிரையில் மாறுபாடு தோன்றுவதை ஒத்துக் கொள்ள முடியாது
ஏன் என்றால்
இவர்களுடைய ப்ரஹ்மத்துக்குத் தனியான குணங்கள் ஏதுமில்லை
ப்ரஹ்மம் தவிர்த்து மற்ற எப்பொருளும் இல்லை -என்னும் கொள்கையை இவர்களே மறுக்க நேரிடும் –
—————
யாதவ பிரகாச பக்ஷம் மறுப்பு
67–த்ருதீயே அபி பக்ஷே ஜீவ ப்ரஹ்மணோ பேதவதபேதஸ்ய சாப்யுபகமாத்-தஸ்ய ச தத் பாவாத்
ஸுவ்பரி பேதவத் ஸ்வ அவதார பேதவச் ச ஸர்வஸ்ய ஈஸ்வர பேதத்வாத் சர்வே ஜீவ கதா தோஷா தஸ்யைவ ஸ்யு —
(இவரும் பரிணாம வாதி -கீழ் உபாதியால் பரிணாமம் -இவர்கள் ஸ்வரூபத்தால் பரிணாமம் என்கிறார்கள்
நாமோ ஸ்வ பாவ -சரீரம் மாத்திரம் பரிணாமம்)
மூன்றாவது கொள்கை -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் வேறுபாடின்மையையும் ஒருங்கே ஒத்துக் கொள்கிறது
ப்ரஹ்மத்துக்கு ஜீவ பாவத்தில் ஸுவ்பரி முனிவரின் ஈடுபாடு போன்றும் -(உயிர் ஒன்றாய் இருக்கச் செய்தே பல உடல்களைக் கொள்ள முடிவது போல் ஆகும் என்றவாறு )
ஈஸ்வரனுக்கு தன் அவதாரங்களில் ஈடுபாடு போன்றும்
(ஏற்பட்டு ப்ரஹ்மத்துடன் ஒன்றியவுடன் அது நீங்கி விடுகிறது ) தோன்றும் யாவையும் ப்ரஹ்மத்தின் வேறுபாடுகளே
இவ்வாறு கூறினால் ஜீவனுக்குள்ள குறைபாடுகள் ப்ரஹ்மத்திற்கும் ஏற்படும்
இதற்கு முன் கூறிய பாஸ்கரர் மற்றும் யாதவப் பிரகாசர் கொள்கைகளின் படி ஈஸ்வரனும் பிரபஞ்சமும் உண்மை
முற் கூற்றில் ஈஸ்வரனுக்கு உயிரல் பொருட்களின் தொடர்பால் ஜீவன் என்ற ப்ரமை ஏற்படுகிறது என்றும்
இரண்டாவதில் ஈஸ்வரனே ஜீவனாகவும் அசேதனமாகவும் மாறுகிறது என்றும் கொள்ளப் பட்டு இருக்கிறது
ராமானுஜர் அக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறார் –
—————
68–ஏகத் யுக்தம் பவதி –
ஈஸ்வர ஸ்வரூபேண ஏவ ஸூர நர திர்யக் ஸ்தாவராதி பேதேந அவஸ்தித இதி ஹி ததாத்மகத்வ வர்ணனம் க்ரியதே ?
ததா சதி ஏக ம்ருத் பிண்டாரப்த கட சராவாதி கதாந் யுதகாஹரணாதீதி சர்வ கார்யாணி யதா தஸ்ய ஏவ பவந்தி
ஏவம் சர்வ ஜீவ கத ஸூக துக்காதி சர்வம் ஈஸ்வர கதமேவ ஸ்யாத் இதி கட கரகாதி சமஸ்தாநா நுப யுக்த
ம்ருத்ரவ்யம் யதா கார்யாந்தராநந் விதம் ஏவ மேவ ஸூர பஸூ மனுஜாதி-ஜீவத்வ அநுப யுக்தேஸ்வர
சர்வஞ்ஞ ஸத்ய ஸங்கல்பத்வாதி குணாகர இதி சேத் சத்யம் -ச ஏவ ஈஸ்வர ஏகாநாம் சேந கல்யாண குணாகரக
ச ஏவ ச அந்யே நாம் சேந ஹேய குணாகர இத்யுக்தம் த்வயோரம் சயோ ஈஸ்வரத்வா விசேஷாத் —
(கடத்தால் தீர்த்தம் கொண்டு வரலாம்
ம்ருத் பண்டத்தால் முடியாதே
காரிய பதார்த்த குணங்கள் எல்லாம் காரணத்தில் இருக்க வேண்டியது இல்லையே
ஜீவ இன்ப துன்பங்கள் ஈஸ்வரனுக்கு இருக்க வேண்டியது இல்லை
ஆகார பேதம் -பிண்ட ஆகாரம் குட அகாரம்
ப்ரஹ்மம் நிர் அவயவம் -ஸ்வரூபமே பரிமாணம் என்பர் -ஆகவே இந்த த்ருஷ்டாந்தம் இதுக்கு சரி இல்லை என்பர்)
இத்தை விளக்குவோம்
ஈஸ்வரன் தானாகவே தேவ மனித மிருக ஸ்தாவரங்களாக பரிணாம அடைகிறான் என்றும்
அதே ப்ரஹ்மம் ஆத்மாவையும் இருக்கிறது என்றும் சொல்லப் படுகிறது
அப்படி என்றால் ஒரே மண் உருண்டையால் ஆன குடம் வாணை ஆகியவற்றுக்குள்ள நீர் கொணரும் தன்மை அந்த மண் உருண்டைக்கும் காரியமாக வேண்டும்
அதே போல் எல்லா ஜீவ காரியங்களும் அதன் இன்ப துன்பங்களும் ஈஸ்வரனுக்கு ஏற்பட வேண்டும்
ஆனால் ஈஸ்வரன் குறைபாடு அற்றவன் என்று வேதம் சொல்லி இருப்பதால் இக் கருத்து ஒப்புக் கொள்ளத் தக்க தல்ல
த்வாவம் ஸவ்யவஸ்திதவ் இதி சேத் கஸ்தேந லாப ? ஏகஸ்யைவ ஏகாநாம்சேந நித்ய துக்கித்வாத் அம்சாந்தரேண
ஸூகித்வமபி ந ஈஸ்வரத்வாய கல்பதே-யதா தேவதத்தஸ்ய ஏகஸ்மிந் ஹஸ்தே சந்தந பங்காநுலேப-
கேயூர கடக அங்குலீயக அலங்கார ஏதஸ்யை வாந் யஸ்மிந் ஹஸ்தே முத்கராபிகாத காலாநலஜ் வாலாநு பிரவே சஸ்ஸ
தத்வதேவ ஈஸ்வரஸ்ய ஸ்யாத் இதி ப்ரஹ்ம ஞான பஷாதபி பாபீயாநயம் பேதாபேத பஷ அபரிமித துக்கஸ்ய
பாரமார்த்திகத்வாத் ஸம்ஸாரிணாம் அநந்தத்வேந துஸ்தரத்வாச் ச தஸ்மாத் விலக்ஷனோயம் ஜீவாம் ச-
இதி சேத் ஆகதோ சி தர்ஹி மதீயம் பந்தாநம்
ஈஸ்வரஸ்ய ஸ்வரூபேண தாதாம்ய வர்ணநே ஸ்யாத் அயம் தோஷ ஆத்ம சரீர பாவேந து தாதாம்ய ப்ரதிபாதநே
நகஸ்சித் தோஷ -ப்ரத்யுத நிகில புவந நியமநாதி மஹாந் குண கண ப்ரதிபாதிதோபவதி சாமநாதி கரண்யம் ச முக்ய வ்ருத்தம்
இக்குறையை நீக்கும் முகமாய் ப்ரஹ்மம் இரண்டு பகுதிகளாய் -ஜீவனாக ஆவதாகவும் ப்ரஹ்மமாக ஆதலுமாக இருப்பதாகக் கொள்வீர்களாயின் அதனாலும் பயன் ஏதும் இல்லை
அவ்வாறு கொள்வதால் ஒரு பகுதி எப்போதும் துயரத்துடனும் மற்றொரு பகுதி எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் ஒன்றுக்கு ஓன்று கலவாததாயும் உள்ளது என்றதாகும்
இது ஈஸ்வரத் தத்துவத்துக்கு முரணானது
எப்படி தேவ தத்தன் என்று ஒரே மனிதனுக்கு ஒரு கையில் சந்தனக்காப்பு அணிவித்து அணிகள் பூண்டு இருத்தலும்
மற்றொரு கையில் உலக்கையால் இடித்தலும் தீயில் நுழைத்தலும் ஏற்படின் அவன் நிலை எவ்வாறு இருக்குமோ
அது போலவே ஒரு பக்கத்தில் அளவற்ற இன்பம் கிடைத்தாலும் உடலின் மறு பகுதி துன்புறும் போது அந்த இன்பம் நிலை நிற்காமல் போவது போலே ஈஸ்வரனுக்கு நீங்காத துயரமே உணர்வாகும்
இக்கொள்கை சங்கரரின் ப்ரஹ்ம அஞ்ஞானக் கொள்கையினின்றும் மாறுபட்ட பேதாபேதம் -பிரிவு பட்டும் பிரிவு ப்டாதுமாய் இருப்பது என்ற நிலையைக் கொள்வதால் உலகியலாரின் துன்பங்கள் யாவும் அளவற்றதாய் ப்ரஹ்மத்துக்கு ஏற்படும்
அவ்வாறு இன்றி இந்நிலையைத் தவிர்க்க ஈஸ்வரனின் ப்ரஹ்மப் பகுதி வேறு ஜீவப்பகுதி வேறு என்பீராயின் நீங்கள் எங்கள் கொள்கையைக் கைக்கொள்வீர்கள்
இக்கொள்கைகள் ஈச்வரனுடன் ஆத்மா உயிர் ஒன்றிய நிலையில் உள்ளது என்று கொள்வதால் இக்குற்றங்கள் ஏற்படுகின்றன
அஃதன்றி ஈசன் உயிராகவும் ஜீவாத்மா அதன் உடலாகவும் மாறி ஒரு நிலையில் இருக்கின்றன என்ற எங்கள் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்னும் கொள்கையைக் கொண்டால் இக்குற்றங்கள் யாவும் வாராது
மாறாக அண்டங்கள் யாவையும் ஆட்சி செலுத்தும் சிறப்பான கல்யாண குணங்களே வெளிப்படும்
இதனால் ஸாமா நாதி கரணமும் நன்கு பொருந்தும் –
——–
69–அபிச ஏகஸ்ய வஸ்துநோஹி பிந்நாபிந்நத்வம் விருத்தத்வாத் ந சம்பவதீதி யுக்தம்
கடஸ்ய படாதி பிந்நத்வே சதி தஸ்ய தஸ்மிந் ந பவா -அபிந்நத்வே சதி தஸ்ய ச பாவ -இதி ஏகஸ்மிந்தேசே ச ஏகஸ்ய ஹி
பதார்த்தஸ்ய யுகபத ஸத்பாவ-அ சத் பாவச் ச விருத்த ஜாதயாத்மநா பாவ வ்யக்தாத்மநா ச அபாவ இதி சேத்
ஜாதே முண்டேந வ்யக்தயா சா பேத சதி கண்டே முண்டஸ் யாபி ஸத்பாவ பிரசங்க கண்டேந சஜாதேஸ்ய பிந்நத்வே
ஸத்பாவ பிந்நத்வே அசத் பாவ அஸ்வே மஹிஷதஸ்யேவேதி விராதோ துஷ் பரிகார ஏவ
மேலும் ஒரே பொருளில் குறையும் நிறையும் இருத்தலும் -இன்மையும் இருக்கிறது என்பது ஒவ்வாதது –
குடத்தில் துணியின் தொடர்பின்மையால் துணியின்மை என்ற நிலை ஏற்படுகிறது
ஆயின் அவ்வாறில்லை என்று மறுக்கப்படுமானால் குடமும் துணியும் ஒரே பொருள் என்ற கிடைக்கும்
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் இருப்பும் இன்மையும் ஏற்பட முடியாது –
தொகுப்புக்கு ஜாதிக்கு -இருக்கும் குணங்கள் உறுப்புக்கு இல்லை எனில் தொகுத்துப் பார்க்கும் நிலையும் பகுத்துப் பார்க்கும் நிலையும் -ஜாதி வேறு -வ்யக்தி வேறு -என்று அறிந்தால் அன்றி கொம்புள்ளதும் மோழையும் ஓன்று எனவாகும்
கோமனுள்ளத்து எனில் தொகுப்புடன் ஜாதியுடன் -பிரிவற்ற தன்மையும் மோழை எனில் தொகுப்பினின்றும் ஜாதியினின்றும் பிரிவுறுதலும் தோன்றும்
ஆகவே பிரிவின்மையும் பிரிவும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்பது தவறான பாதமாகும்
குதிரையும் எருமையும் -கால்நடைகள் என்ற தொகுப்பில் இருந்தாலும் -அவைகள் தனித்த குணங்கள் உள்ளவை யாதலால் ஒரே ஜாதியில் பேதாபேதம் உண்டு என்று கொள்வதால் இரண்டும் ஒன்றாக ஆக முடியாது
ஜாதி -ஒரே ஒருபடித்தான அமைப்பும் பண்புகளும் உள்ள பொருள்களின் தொகுப்பு
வியக்தி -மேற்படி தொகுப்பில் உள்ள ஒரு பொருள் -தொகுப்பின் உறுப்பு
————–
70–ஜாத்யாதே வஸ்து சமஸ்தாந தயா வஸ்துந பிரகாரத்வாத் -பிரகாரப் பிரகாரினோச் ச பதார்த்தாந்தரத்வம்
பிரகாரஸ்ய ப்ருதக் சித்ய நர்ஹத்வம்-ப்ருதக் கநு பலம் பஸ் ச தஸ்ய ச சமஸ்தாநஸ்ய ச
அநேக வஸ்துஷு பிரகார தயா அவஸ்திதிஸ் ச இத்யாதி பூர்வமேவ யுக்தம் –
ஒருபடித்தான உருவ குண அமைப்புடைய பொருள்களின் தொகுப்பு ஜாதி எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரகார பிரகாரி சம்பந்தம் உடையன எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரிவும் பிரிவற்ற தன்மையும் -பேத அபேத -உடையன என்று கூறுதல் தகாது
ஒரு பொருள் அதன் ஜாதியினின்றும் தனித்துப் பேசப்படுகையில் இந்த வாதம் பயன் அற்றது
இது முன்பே விளப்பட்டுள்ளது
பிரகாரம் -ஒரு பொருளினின்றும் வேறுபட்டதாயும்
அதினின்றும் தனித்து இயங்கும் தன்மை அற்றதாயும்
அப்பொருளை சிறப்பான அடையாகவும் இருத்தல்
பிரகாரி -அப்பண்பை யுடையது
உதாரணம் -நீலத்துணி என்னும் பொருளுக்கு நீலம் பிரகாரம் –
———————-
71–சோயம் இதி புத்தி பிரகார ஐக்யாத் அயமபி தண்டீ இதி புத்தி வத் -அயமேவ சஜாத்யாதி பிரகாரோ வஸ்துநோ பேத
இத் யுச்யதே தத் யோக ஏவ வஸ்துந பிந்நம் இதி வ்யவஹார ஹேது ரித்யர்த்த ச ச வஸ்து நோ பேத வ்யவஹார ஹேது
ஸ்வஸ்ய சம்வேதந வத் யதா சம்வேதநம் வஸ்துநோ வ்யவஹார ஹேது -ஸ்வஸ்ய வ்யவஹார ஹேதுஸ் ச பவதி –
அத ஏவ சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் பேத க்ராஹி இத்யாதிவாதா நிரஸ்தா ஜாத்யாதி சம்ஸ்தி ததஸ்யைவ
சமஸ்தாந ரூப ஜாத்யாதே பிரதியோக்ய பேஷயா பேத வ்யவஹார ஹேதுத்வாச் ச ஸ்வரூப பரிணாம தோஷஸ் ச
பூர்வமே வோக்த இதி மதாந்தரக் கண்டநாக்ய பூர்வ பாக ஸமாப்த —
அவனே இவன் என்ற அறிவு -பண்பு ஒருபடிப்பட்டு இருத்தலால் இவனும் தடியை யுடையவன் என்று அறிகிறது
இந்த ஜாதிப் பண்பினால் பொருள்களுள் பேதம் ஏற்படுகிறது
இவ்வாறு உலகில் காணப்படும் பொருள்கள் யாவும் ஜாதிவாரியாகப் பிரிக்கப் பட்டு இருப்பது கண் கூடு
ஒரு பொருளை அறிய ஜாதி காரணமாகிறது
ஞானம் தன் இருப்பையும் காட்டி -மற்றப் பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையுடன் காட்ட காரணமாகிறது –
ஒரு பொருளைப் பார்க்கையில் அப்பொருளை மட்டும் அறிவு அறிகிறது
அதன் அமைப்பு பண்புகளை அறிவதில்லை என்ற அத்வைதியின் வாதம் தள்ளப்படுகிறது
ஜாதிப் பிரிவுகள் உள்ள பொருள்களைத் தான் கண் அறிகிறது
பார்க்கப்படும் பொருள்களின் அமைப்பைக் கொண்டே அதின் ஜாதியும் -அது மற்றதின் நின்றும் வேறுபட்டது என்ற அறிவும் ஏற்படுகிறது –
இதனாலேயே ப்ரஹ்மம் தானே பரிணாமம் அடைகிறது என்பது மறுக்கப் பட்டது –
இத்துடன் பிற கொள்கை மறுப்பு என்னும் முதற் பகுதி முற்றுப் பெறுகிறது
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –