தத் த்வம் அஸி விளக்கம்-

தத்துவம் என்றால் தத்+த்வம்=அது நீயே.-அது எது? நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள். -த்வம் என்றால்-தேடி அலைந்துகொண்டிருக்கும் நீ-நீ கடவுள் என்பதே தத்துவம் என்பதன் அர்த்தம்-மஹா வாக்கியங்கள்-என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மஹா வாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மஹா வாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
-1. பிரக்ஞானம் ப்ரஹ்மம் – “பிரக்ஞையே(அறிவுணர்வே) ப்ரஹ்மம்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])
-2. அயம் ஆத்மா ப்ரஹ்மம் – “இந்த ஆத்மா ப்ரஹ்மம்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
-3. தத் த்வம் அஸி – “அது(ப்ரஹ்மம்) நீ” (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)
தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது ‘நீ அதுவாக உளாய்’ என்றும் சொல்லலாம்.
-4. அஹம் ப்ரஹ்மாஸ்மி – “நான் ப்ரஹ்மம்” (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்)
-மேலே கூறப்பட்டுள்ள ப்ரஹ்மம்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் ‘ப்ரஹ்மத்தை’க் குறிக்கிறது தமிழில் கடவுள்,இறைவன் என்பதைக் குறிக்கிறது.
இந்த நான்கு மஹா வாக்கியங்களும் ஆத்மனுக்கும் ப்ரஹ்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது.
-சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் ஸ்வேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேத சாஸ்த்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்து விட்டுத் திரும்பும் வாலிபனிடம் “எதனால் கேள்விக் கேட்கப்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ் வுபதேசத்தை குருவிடம் தெரிந்து கொண்டாயா?”என்று கேட்கிறார்.
இதைத் தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்த முடிவாக இதே மஹா வாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.-ஒன்பது எடுத்துக் காட்டுகளில் சில-“எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகி விடுகின்றனவோ, -மற்றும் அவை அந் நிலையில் ‘நான் இது’என்று எங்ஙனம் அறிய மாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம் பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணு மாத்திரமான ஸூஷ்மப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“ஆலம்பழம் ஒன்றைப் பிளந்தால் அணு வடிவான விதைகள் காணப் படுகின்றன. அவ் விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த ஸூஷ்மப் பொருளிலிருந்தே பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கிறது. எது அணு மாத்திரமான ஸூஷ்மப் பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல் பாகத்தையோ நடுப் பாகத்தையோ அடிப் பாகத்தையோ உண்டு பார்த்தால் அது உப்பாகவே யிருப்பது தெரியும். அதே போல் முக் காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணு மாத்திரமான அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்”-“ஒருவனை கண்ணைக் கட்டி காந்தார தேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அப்பரம் பொருளுடன் ஒன்றுபடலாம். அணு மாத்திரமான் அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்.த

தத் தவம் அஸி-இந்த வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்தாபிக்கிறார் ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில். இதன் பொருள் என்ன என்பதை விளக்க சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது

ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.

தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.

வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.

இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.

இதில் உத்தாலகருடைய மகன் ச்வேத கேது குருகுலவாசம் முடிந்து தந்தையிடம் வருகிறான். அவனைப் பார்க்கும்போது எல்லாம் அறிந்தவான் போல் ஒரு பெருமிதம் காணப்படுகிறது. அதைப் பார்த்து உத்தாலகர் கேட்கிறார்.-எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ (ஏக விக்ஞானேன சர்வ விஞ்ஞானம்) அந்த ஞானத்தை அடைந்தாயா என்று,-அவன் அது என்ன என்று கேட்கிறான் . அவன் தந்தை சொல்ல ஆரம்பிக்கிறார். “ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.-தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.-இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.-ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.“ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்’

சௌம்ய– அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே 
ஆஸீத்– இருந்தது 
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது 
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை

அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.-சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது? 
தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார்.-அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது.-அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ 
அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.-அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)-இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.-அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.-இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ச்வேதகேது மேலும் விளக்கத்தைக் கேட்கவே எட்டு உதாரணங்கள் மூலம் அதை விளக்குகிறார்.ஒவ்வொன்றையும் சொல்லி “ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ” என்று முடிக்கிறார்.

1. ஒரு தேநீயானது பல புஷ்பங்களில் இருந்து தேனை சேகரிக்கிறது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த பின் எந்த மலரிலிருந்து எந்த தேன் வந்தது என்று தெரிவதில்லை. எல்லாம் ஒன்றாகவே ஆகிறது.

அதே போல ஜீவ ராசிகள் எப்படி அயர்ந்த தூக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய தனித் தன்மையை அறிய முடியவில்லையோ அது போல முடிவில் பிரம்மத்தில் லயித்து விடுகின்றன,. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.

அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை. 

2.ஆறுகள் சமுத்திரத்தை அடையும் முன் தனித் தனிப் பெயர்கள் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் கடலில் கலந்ததும் அவைகளின் தனித் தன்மை போய் விடுகிறது. கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி எல்லாமே உப்புக்கடலாக மாறிவிடுகிறது. ஆயினும் அவை ஆவியாகி மறுபடி பூமியில் மழையாக சேரும்போது அவைகள் மறுபடி தனித் தனி உருவம் பெறுகின்றன. அதே போல ஜீவராசிகள் பிரம்மத்தில் ஒடுங்கும்போது தனித் தன்மையை இழந்தாலும் மறுபடி ஸ்ருஷ்டியின்போது பழைய நிலையை அடைகின்றன.

3. இந்த மரம் உயிருள்ளவரை தண்ணீர் குடித்து வாழ்கிறது. வேரில் உறிஞ்சிய தண்ணீர் மரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. ஆனால் அதன் ஒரு கிளையை ஒடித்துவிட்டால் அந்த ஒடிக்கப்பட்ட கிளையானது வாடி விடுகிறது. அதாவது அந்தக் கிளையிலிருந்து ஜீவன் போய்விட்டது. மரம் முழுவதுமே வெட்டப்பட்டால் அது மறுபடி துளிர்ப்பதில்லை.

அதே போல இந்த உடலில் ஆத்மாவானது இருக்கும் வரை உடல் உயிருடன் இருக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் உடல் உயிரற்றதாகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது எது உறங்குவதில்லையோ அதுதான் ஆத்மா. அதன் அந்தராத்மாவாக இருப்பது பிரம்மம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உள்ளது.

ஆனால் ச்வேத்கேதுவின் கேள்வி இதல்ல. ஸத் அல்லது பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி சர்வவ்யாபி என்பதை உணர்ந்தாலும் எப்படி அது உலகமாக நாமரூப வடிவில் தோன்றுகிறது என்பதுதான் அவன் சந்தேகம். அதை மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்

4. ஒரு ஆலம்பழத்தை எடுத்து அதைப் பிளந்தால் சிறிய விதைகளைப் பார்க்கிறோம். அதில் ஒரு விதையை எடுத்துப் பிளந்தால் உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. தந்தை கூறினார். இந்த வெற்றிடம் போல் காணப்படுவதில் இருந்துதான் இந்த பெரிய மரம் வளர்கிறது. அதேபோல உருவம் இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் இந்த பிரபஞ்சம் ஸ்தூல உருவில் தோன்றுகிறது,

5. ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டி உப்பைப் போட்டால் அது கரைந்து விடுகிறது. அதில் உப்பு எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா? அது எங்கும் பரவி உள்ளது, அதை உணரலாமே தவிர பார்க்க முடியாது. அதுபோல் பிரம்மம் எங்கும் பரவியுள்ளதானாலும் அதைக் காண இயலாது. ஏனென்றால் அது சர்வாந்தர்யாமியாக பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கமுடியாததாடாக உள்ளது. ஆனால் எவ்வாறு தண்ணீரில் கரைந்த உப்பைக் காண முடியாவிட்டாலும் அதை சாப்பிட்டால் உணரமுடியுமோ அதைப் போல பிரம்மத்தை வேறுவிதமாக அறிய முடியும். எப்படி என்பதை இன்னும் சில உதாரணங்களுடன் விளக்குகிறார்

6. காந்தார தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனை கொள்ளைக்காரர்கள் அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் கண்களைக் கட்டி அவனை ஒரு மனித சஞ்சாரம் அற்ற ஒரு காட்டில் விட்டுவிடுகின்றனர்.

அவன் நான்குதிசைகளிலும் ஓடி என்னைக் கண்ணில் கட்டி இந்த இடத்தில் விட்டுவிட்டனர் என்று கூவுகிறான். அப்போது அதைக் கேட்ட ஏதோ ஒரு நல்ல வழிப்போக்கன் அவன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். திக்கு திசை தெரியாத அவனிடம் காந்தார தேசத்திற்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்கிறான். அதன்படி அவன் அந்த வழியிலே சென்று தன் இருப்பிடத்தை அடைகிறான்.

அதேபோல நாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இந்த உலகத்தில் இருக்கிறோம்.நம்முடைய ஆசைகளே திருடர்கள். அவைகள் நம் அறிவைக் குருடாக்கி உலகம் என்ற காட்டில் அலைய விடுகின்றன.நம்முடைய அறியாமையே நம் கண்களுக்குபோட்ட கட்டு. வழிப்போக்கன் அந்த மனிதனுக்கு உதவினது போல் நம் குரு நமக்கு அறியாமை என்னும் கண்கட்டை அவிழ்த்து நல்ல வழியைக் காட்டுகிறார்.

இந்த உடலில் உள்ளவரைதான் சம்சாரம். பிரம்மஞானத்தை அடைந்து விட்டால் இந்த உடலை விட்டதும் இறைவனிடம் போய் சேர்ந்து விடுவோம் அதாவது வந்த இடத்திற்கே சென்று விடுவோம். இதன் சாராம்சம் பிரம்மத்தை குருமூலம் தான் அடைய முடியும் என்பது.

7. அடுத்த உதாரணம் இறக்கும் நிலையில் உள்ள மனிதனைப் பற்றியது. அந்த நிலையில் “என்னைத்தெரிகிறதா ,” என்று சுற்றி இருக்கும் உறவினர் கேட்கின்றனர். எதுவரை அவனுக்கு தன்னைப் பற்றியும் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் உணர்வு இருக்கும்?

உத்தாலகர் சொல்கிறார். 
‘ எதுவரை வாக்கு மனதில் ஒடுங்கி மனம் பிராணனில் ஒடுங்கி, பிராணன் அக்னியில் ஒடுங்கி, அக்னியும் பரப்ரம்மத்தில் ஒடுங்கவில்லையோ அதுவரை அவனுக்கு பிரக்ஞை இருக்கும். அதற்குப்பிறகு அவன் ஆத்மா அந்தராத்மாவான பிரம்மத்தில் ஒடுங்குகிறது. அந்த பிரம்மமே எல்லா உயிர்கட்கும் ஆத்மா.”

இதை நாம் நடைமுறையில் காணலாம். மரணத்தருவாயில் முதலில் பேச்சு ஒடுங்குகிறது. மனது நினைத்தாலும் பேச முடிவதில்லை. அடுத்ததாக மனம் பிராணனில் ஒடுங்குகிறது. அதாவது மூச்சு மட்டும் இருக்கிறது. பிறகு பிராணன் அக்னியில் ஒடுங்குகிறது என்றால் பிராணன் போய் விட்டபோதும் உடல் உடனே சில்லிடுவதில்லை. ஏனென்றால் பிராணன அக்னியில் ஒடுங்குகிறது. எப்போது அக்னியும் ஆத்மாவில் ஒடுங்குகிறதோ அப்போதுதான் இறப்பு உறுதியாகிறது. அதாவது உடல் குளிர்ந்து போகிறது.

இதில் ஒரு சந்தேகம் எழலாம் . இது எல்லோருக்கும் உள்ளதுதானே ? ஆனால் பிரம்மத்தில் ஒடுங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிறகு ஏன் சில ஜீவர்கள் மறுபடி பிறக்கிறார்கள் சிலர் பிரம்மத்தை அடைந்து முக்தியடைகிறார்கள் ? என்று. இதற்கு பதில் அடுத்ததாக கூறுகிறார்.

8. ஒருவனை அவன் திருடியதாக சந்தேகித்து அழைத்து வருகிறார்கள். அவனை பழுக்கக் காய்ச்சிய கோடரியையைக் கையில் பிடிக்கச் சொல்கிறார்கள். அவன் குற்றவாளி என்றால் அவன் கையில் வெந்து விடும். அப்போது அவனைக் கொன்றுவிடுவார்கள். அவன் நிரபராதி என்றால் அவன் கைக்கு ஒன்றும் ஆகாது. அப்போது அவனை விடுவித்துவிடுவார்கள்.

இது ஒரு வேத கால தண்டனையைக் குறிக்கிறது. 
இது எப்படி ச்வேதகேதுவின் கேள்விக்கு பதிலாகிறது என்று பார்க்கலாம்.

குற்றம் செய்தவன் கோடரியால் தீய்க்கப் படுவது போல அறியாமையால் உலகப் பற்று கொண்ட ஜீவன் பழுக்கக் காய்ந்த கோடரி போன்ற உலகின் தொடர்பால் பிறப்பு இறப்பு என்று துன்புறுகிறது. ஆனால் எவ்வாறு ஒரு நிரபராதியை அந்தக் கோடரி சுடாதோ அதே போல ஒரு ஞானியை இந்த உலகம் பாதிப்பதில்லை. அதனால் மறுபிறப்பில்லை.

அதுவே நீயாக உளாய்’ என்ற வாக்கியத்தில், ‘அது’ என்ற பரம் பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே ‘நீ’ என்ற பிராணி யினிடத்தில் குடி கொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளி விட்டால், ‘அது’வும், ‘நீ’யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.
ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிஷ்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள ‘நீ’ என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம் பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம் பொருளின் ஒர் அம்சமே. ‘இது’ வும் ‘அது’ வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிஷ்ட என்னும் முன்னொட்டு உள்ளது
மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைதம் வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. ‘தத்துவமஸி’ என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, ‘ஸ ஆத்மாதத்துவமஸி’ என்பதை ‘ஸ ஆத்மா + அதத்துவமஸி’ என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் ‘நீ ‘அதத்’, அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்’ என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் ‘அதத்துவமஸி’ என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும்
சுத்தாத்வைதம் -இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்த அம்சம் கிடையாது. அதனால் ‘தத்துவமஸி’ என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, ‘தத்’ என்பது பரம்பொருள். ‘துவம்’ என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்
துவைதாத்வைதம் -இது நிம்பர்க்கரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள ‘பேதத்தில் அபேதம்’, ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத் துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்
அசிந்த்யபேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதா அபேதம் (ஒற்றுமை வேற்றுமைகள்) நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் ‘அது’வும் ‘நீ’யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, மற்றொன்று முடிவில்லாதது. இதற்கு தகுந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்

பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது?

தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய என்கிறார். அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. இதன் மூலம் மேற்கூறிய மூன்று காரணங்களும் பிரம்மமே என்று ஆகிறது.

வேதார்த்த சங்க்ரஹம்-9

அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான்.

எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ர்த்திகேத்யேவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது.

குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,

.இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.

பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.

இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,

எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை

 .பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.

எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.

பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள்.

எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.

சரி ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

வேதார்த்த சங்க்ரஹம்-10

ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

ராமானுஜரின் விளக்கத்தின்படி,

தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய

பிரம்மம் பலவாக ஆக சங்கல்பித்தது.

ஸ்வாம்ச ஏகதேசாதேவ வியதாதி பூதானி ஸ்ருஷ்ட்வா

தன்னுடைய ஒரு அம்சத்தினாலேயே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களை தோற்றுவித்து,

சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை.

அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.

அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)

இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

இப்போது ஜடவஸ்துக்களின் உளதாம் தன்மை (existence) அவற்றின் உள் பிரம்மம் அந்தர்யாமியாக இருப்பதனால் தான் என்று அறிகிறோம்.

இப்போது புலன் உணர்ச்சி கொண்ட உயிர்களும் உலகத்தில்(sentient) உள்ளவைதானே ? அவைகளுக்கும் பிரம்மமே ஜீவனாக இருக்கிறது அல்லவா? அத்தகைய ஜீவராசிகள் பிரம்மத்தின் உடல்லகவும் பிரம்மமே அவைகளின் உயிராகவும் உபநிஷத் வாக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

‘எது ஜீவாத்மாவின் உள் இருந்துகொண்டு அதை நடத்துகிறதோ, எதை ஜீவாத்மா அறியவில்லையோ,எதற்கு ஜீவாத்மா சரீரமாக உள்ளதோ அதுதான் உண்மையானஆத்மா, அந்தர்யாமியாகவும் நித்யமாகவும் இருக்கிறது. அதுதான் ப்ரஹ்மம்.’(brhd.up. 5.7)

அதனால் எல்லாவற்றிற்கும் பிரம்மமே அந்தராத்மா என்று அறிகிறோம். ‘ப்ரம்மாத்மகானி தானி ஸர்வாணி.’

ஆகையால் தேவர், மனுஷ்யர், யக்ஷர், ராக்ஷசர், பசு, ம்ருகம், பக்ஷி, வ்ருக்ஷம், கோடி, கட்டை, கல், புல், பானை, துணி, முதலிய எல்லா சொற்களும் அதனதன் உருவம், குணம் இவைகளால் அவற்றின் மூலமான பிரம்மத்தையே சுட்டுகின்றன.

இதை எளிதாக விளக்கலாம். இது ஒரு பசு என்று சொல்லும்போது நாம் அதன் உருவத்தை மட்டுமா குறிப்பிடுகிறோம்? அதன் குணங்கள், தன்மை மேலும் அதை ஒரு உயிருள்ள ஜந்துவாக அல்லவா காண்கிறோம்?

அதே போல இவன் தான் ராமசாமி அன்று சொல்லும்போது அவன் உருவம் மட்டுமா நம் மனதில் தோன்றுகிறது? அதற்கு அவன் படமே போதும். அவன் யார் எப்படிப்பட்டவன் என்ற எல்லா விஷயங்களும் நம் மனதிற்கு வருகின்றது. மேலும் அவனுடைய தேகத்தைத் தாண்டி அவன் ஒரு உயிருள்ள மனிதன் என்னும்போது தேகம் மனம் புத்தி எல்லாவற்றிற்கும் மேல் அவன் உயிர் அல்லது ஆன்மா என்பது தானே உண்மை. இல்லாவிட்டால் அவன் என்பது போய் அது என்றாகிவிடுமே.

அதனால் பெயர் உருவம் குணம் மற்ற சம்பந்தங்கள் எல்லாவற்றிற்கும் மேல் ஆன்மா என்பதே முக்கியம் ஆகிறது. அந்த ஆன்மாவிற்குள் அந்தராத்மாவாக இருப்பதே பிரம்மம்.

\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே .

,
‘க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ச ஜகத் தஸ்ய சரீரம். ‘

‘அதனால் பிரம்மம்தான் அகில உலகத்துக்கும் ஆத்மா. அகில உலகமும் பிரம்மத்தின் சரீரம் ‘ ‘த்வம்’ என்னும் சப்தத்தால் கூறப்படும் ‘நீ’ பிரம்மத்தினுடைய படிவமே. இதனால் எல்லாம் பிரம்மத்தையே ஆத்மாவாகக் கொண்டவை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

‘தத் த்வம் அஸி’ என்ற மஹாவாக்கியத்தின் பொருள், நீ என்ற ஜீவன் உன் அந்தராத்மாவான பிரம்மமே என்பது.

இந்த சரீர சரீரி பாவம்அதாவது பிரம்மம் தான் ஆத்மா ஜீவன் , ஜகத் இவை அதன் உடல் என்பதை பின்னும் விவரிக்கிறார் . அதைப் பின்னர் காண்போம்.

வேதார்த்த சங்க்ரஹம் -11

எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது ப்ரம்மமே என்பதனால் எப்படி ஒருவரின் பெயர் அவருடைய உடலை மட்டும் குறிக்காமல அவருடைய ஆத்மாவை குறிக்குமோ அதுபோல எந்தப் பொருளை குறிப்பிட்டாலும் அது பிரம்மத்தையே குறிக்கிறது.

இது எப்படி என்றால் இப்போது ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா போய்விட்டார் என்று சொல்கிறோம். அப்பா என்ற சொல் அவர் உடலை அல்ல அவர் ஆத்மாவைக் குறிக்கிறது என்று தெரிகிறது. அதே போல இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக உள்ள பிரம்மம்தான் எல்லாவற்றினாலும் குறிக்கப்படுகிறது.

‘யஸ்ய ஆத்மா சரீரம்’ என்ற உபநிஷத் வாக்கியமும் இதைத்தான் கூறுகிறது. அதனால் ‘ப்ரம்மாத்மகானி சர்வாணி’ எல்லாவிதமான உயிருல் உயிரில்லாத வஸ்துக்களும் பிரம்மத்திற்கு சரீரமாகவும் பிரம்மமே அவற்றின் ஆத்மாவாகவும் இருக்கிறது. அதனால் சொற்களின் மூலம் அறியப்படுவது எல்லாம் முடிவில் பிரம்மத்தையே சுட்டுகின்றன.

‘.ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்’ என்ற சாந்தோக்ய உபநிஷத் விளக்கத்தில் பிரம்மமே ஜகத்காரணம் என்று பார்த்தோம். அதற்குப்பிறகு ‘ஸந்மூலா: ஸௌம்ய இமா: ஸர்வா: பிரஜா: ஸதாயதனதா: ஸத்ப்ரதிஷ்டா:’ (சாந்தோக்ய-6.8., 4-6), இவை எல்லாம் ஸத், அதாவது பிரம்மத்தில் இருந்து தோன்றின, பிரம்மத்தில் இருக்கின்றன, பிரம்மத்தால் நிலைநிறுத்தப் படுகின்றன , என்ற வாக்கியம் காணலாம். 
எப்படி உடலுக்கு உயிர் காரணமோ , உயிரினால் உடல் வாழ்கிறதோ , உயிர் உடலை தாங்குகிறதோ அதேபோல பிரம்மம் இந்த உலகத்திற்கு உயிர் அல்லது ஆத்மாவாக இருக்கிறது,

எப்படி உடல் உயிரின் உடைமையோ அதே போல உலகம் பிரம்மனின் உடைமை. 
ராமானுஜர் மேலும் சொல்கிறார்

‘ஏதத் ஆத்ம்யம் இதம் ஸர்வம் தத் சத்யம்’ என்ற வாக்கியம் ‘தத் தவம் அஸி’ என்பதற்கு முன்பு காணப்படுகிறது. இதன் பொருள், பிரம்மம் ஜகத் காரணம் என்பதனால் இந்த உலகம் உண்மை ஏனென்றால் பிரம்மமே அதன் அந்தராத்மாவாக இருக்கிறது. பிறகு ‘தத் தவம் அஸி’ அந்த பிரம்மம்தான் உண்மையில் நீ என்று சொல்லப்படுகிறது.

க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ஜகத் தஸ்யசரீரம். அதாவது பிரம்மம் அகில உலகத்திற்கும் ஆத்மாவாக உள்ளது. அகில உலகமும் அதன் சரீரம்.

அதனால் தத் அந்த பிரம்மம் த்வம் அஸி நீதான். எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக் குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

தத் த்வம் அஸி என்பது ஏன் பிரம்மஜீவ ஐக்யத்தைக் குறிப்பதாக இருக்கக் கூடாது? ஏன் சரீர சரீரி பாவத்தை கொண்டுவரவேண்டும்

முதல் ஆறு அத்தியாயங்களும்  த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை, அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம் அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது  தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்

ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம் எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம்வெறும் பெயரளவில்  என்றும் கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில் அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப் பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றன” என்று யோகேஸ்வரன்  உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading