Archive for the ‘முமுஷுபடி –’ Category

ஸ்ரீ முமுஷுப்படி சாரார்தம் – த்வய பிரகரணம்–சூரணை-116-184–ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

December 18, 2015

சூரணை-116
புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும் –
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும் –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் –பேற்றுக்கு த்வ்ரிக்கையும் –
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே பரவணனாய்-குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காயும் –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் – திரு மந்த்ரத்திலும் த்வ்யத்திலும் நியதனாகையும் –
ஆசார்ய ப்ரேமம் கனத்து இருக்கையும் – ஆச்சார்யன் பக்கலிலும் -எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய் போருகையும் –
ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையவனாய் இருக்கும் பரம சாத்விகனோடே சஹ வாசஹம் பண்ணுகையும்- வைஷ்ணவ அதிகாரிக்கு அவசய அபேஷிதம்-
மந்திர ராஜம் -திருமந்தரம் -மந்திர ரத்னம் -த்வயம் -திருமந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து -த்வயைக நிஷ்டர் ஆவீர்
மா முனிகள் தினசரியில் -மந்திர ரத்ன அனுசந்தான சந்தத ஸ்ப்ரிதாதரம்-தத் அர்த்ததத்வ நித்யான சன்னத்த புலகோத்கமம் –
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலும் இன்னம் குறுகாதோ –
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏன் மனம் ஏகம் எண்ணும் – கராம பிராப்தி பற்றாமல் பதறுகை
சூரணை-117
இந்த அதிகாரிக்கு ரகஸ்ய த்ரயமும் அனுசந்தேயம் –
சூரணை-118
எல்லா பிரமாணங்களிலும் தேஹத்தாலே பேறு என்கிறது –
திரு மந்த்ரத்திலே ஆத்மாவால் பேறு என்கிறது-
சரம ஸ்லோகத்திலே ஈச்வரனாலே பேறு என்கிறது –
த்வ்யத்தில் பெரிய பிராட்டியாரால் பேறு என்கிறது –
திருமந்த்ரத்துக்கு சேதனனுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் -சுத்த ஆத்மவஸ்துவில் நோக்கு -ஜாதி ஆஸ்ரம விஷயம் ஒன்றுமே சொல்லாதே
என்பதால் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் நோக்கு திருமந்த்ரத்தில் –
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தில் நோக்கு -சரம ச்லோஹத்தில் -இவனுடைய ச்வீகாரமும் மிகையாம் படி தானே கைக் கொண்டு
பிராப்தி பிரதிபந்தகங்களை தள்ளிப் போகட்டுத் தன திருவடிகளிலே சேர்த்து கொள்ளும் ஈச்வரனாலே புருஷார்த்த லாபம்
பேறு பெறுவதற்கு தேகமும் வேணும் ஆத்மாவும் வேணும் ஈஸ்வரனும் வேணும் பிராட்டியும் வேணும் -முக்யமாக வேண்டுவது பிராட்டி யாகையாலே
அவளாலே புருஷார்த்த லாபம் என்று தெரிவிக்கும் த்வயம் மிகச் சிறந்தது என்றதாயிற்று
சூரணை -119
பெரிய பிராட்டியாராலே பேறு ஆகையாவது -இவள் புருஷகாரம் ஆனால் அல்லது
ஈஸ்வரன் கார்யம் செய்யான் என்கை –
சூரணை -120
த்வ்யத்துக்கு அதிகாரி ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடையவன்-
ஆகிஞ்சன்யம் -நோற்ற நோன்பிலேன் -இத்யாதி கைம்முதல் இல்லாமை
அநந்ய கதித்வம் -புகல் ஓன்று இல்லா அடியேன் -களை கண் மற்று இலேன் -வேறு ரஷகனை நெஞ்சாலும் நினையாமை –
சூரணை -121
இவை இரண்டும் பிரபந்த பரித்ரானத்திலே சொன்னோம்-
சூரணை -122
அதில் முற் கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திரு அடிகளை
உபாயமாக பற்றுகிறது –

சூரணை -123
ஸ்ரீ -என்று பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம்-
ஸ்ரீ ரிதி பிரதமம் நாம லஷ்ம்யா
சூரணை -124
ஸ்ரீ யதே ஸ்ரயதே –
ச்ரீஞ் சேவாயாம்–தாது -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -கர்மணி வியுத்பத்தி –ஸ்ரேயதே இதி ஸ்ரீ -கர்த்தரி வியுத்பத்தி
சூரணை-125
இதுக்கு அர்த்தம்-எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபமாய் –
இவள் தனக்கும் அவளை பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும் -என்று –
ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -கர்மணி வியுத்பத்தி –எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறவள்
ஸ்ரேயதே இதி ஸ்ரீ -கர்த்தரி வியுத்பத்தி -இவள் எம்பெருமானை ஆஸ்ரயிக்கிறாள்
சூரணை -126
இப்போது இவளை சொல்லுகிறது  புருஷகாரமாக –
சூரணை -127
நீரிலே நெருப்பு கிளருமா போலே -குளிர்ந்த திரு உள்ளத்திலே -அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்குகாக –
சூரணை -128
இவள் தாயாய் இவள் க்லேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்நியாய்-இனிய விஷயமாய் இருக்கையாலே
கண் அழிவற்ற புருஷகாரம்-
அகில ஜகன் மாதரம் -நெஞ்சார்ந்த அன்பு உண்டே
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -வால்லப்யமும் உண்டே
சூரணை-129
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வருமவனை
பொறுப்பிக்க சொல்ல வேண்டா இறே-
அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான் –
நின்னன்பின் வழி நின்று சிலைபிடித்து எம்பிரான் ஏக -விதேயன் ரசிகன் –
சூரணை -130
மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது –
சூரணை -131
இவளோடு கூடிய வஸ்து வினுடைய உண்மை –
சூரணை -132
ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் -சேதனன் உடைய  அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
சூரணை -133
சேதனனுக்கு இவை இரண்டையும் நினைத்து அஞ்ச வேண்டா –
சூரணை -134
இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது -காலம் பார்க்க வேண்டா -என்கிறது –
சூரணை -135
இவள் சன்னதியால் காகம் தலை பெற்றது –
அதில்லாமையால் ராவணன் முடிந்தான் –
-சூரணை -136
புருஷ கார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால்-தலை எடுக்கும்
குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் –
-சூரணை -137
அவை யாவன -வாத்சல்யமும்-ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும் -சௌலப்யமும் -ஞானமும் சக்தியும் –
சூரணை -138
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம் –
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
சூரணை -139
இங்கு சொன்ன சௌலப்யதுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்
சூரணை -140
இது தான் பாவ்யூஹா விபவங்கள் போல் அன்றிக்கே கண்ணாலே காணலாம் படி இருக்கும் –
சூரணை -141
இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –
சூரணை -142
திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்-வைத்து அஞ்சேல் என்ற கையும் –
கவித்த முடியும்-முகமும் முறுவலும்-ஆசன பத்மத்திலே அழுத்தின திரு அடிகளுமாய் நிற்கிற-நிலையே நமக்கு தஞ்சம் –
சூரணை -143
ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திரு மேனியிலே தோற்றும் –
சூரணை -144
சரனௌ-திரு அடிகளை –
சூரணை -145
இத்தால் சேர்த்தி அழகையும் -உபாய பூர்த்தியையும் -சொல்லுகிறது –
இணைத் தாமரை அடிகள் -பூஜாயாம் பஹூ வசனம் -ஆத்ம நி பஹூ வசனம் –இரண்டுக்கு மேல் மற்று ஒன்றை சஹியாத பூர்த்தி அழகு
சூரணை -146
பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது -திண் கழலாய் இருக்கும் –
சூரணை -147
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை –
சூரணை -148
இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் –குண பிரகாசமுமாய் –சிசுபாலனையும் -அகப்பட திருத்தி சேர்த்து கொள்ளும் திரு மேனியை நினைக்கிறது –
பலபல நாழம் சொல்லி பழித்த சிசுபாலனையும் கூட -சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த –
சூரணை -149
சரணம்-இஷ்ட ப்ராப்திக்கு–அநிஷ்ட நிவாரணத்துக்கு–தப்பாத உபாயமாக –
சூரணை -150
இத்தால் ப்ராப்யம் தானே ப்ராபகம் என்கிறது –
சூரணை -151
கீழ் சொன்ன மூன்றும் ப்ராப்யம் இறே-
சூரணை -152
இவன் செயல் அருதியாலே உபாயம் ஆக்குகிறான் இத்தனை-
பாலையே மருந்து ஆக்குவது போலே –
சூரணை -153
சரனௌ சரணம் -என்கையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தமான உபாயம் -என்கிறது –
சூரணை -154
ப்ரபத்யே -பற்றுகிறேன் –
சூரணை-155
வாசிகமாகவும் -காயிகமாகவும் -பற்றினாலும் பேற்றுக்கு அழிவு இல்லை -இழவு இல்லை –
தத்வ ஜ்ஞானான் முக்தி
சூரணை -156
உபாயம் அவன் ஆகையாலும் -இவை நேரே உபாயம் அல்லாமையாலும் –இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –
சூரணை -157
வர்த்தமான நிர்த்தேசம் -சத்வம் தலை எடுத்து அஞ்சின போது அனுசந்திக்கைகாக –
சூரணை -158
உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும்-கால ஷேபத்துக்கும்-இனிமையாலே விட ஒண்ணாமை யாலும்-நடக்கும் –
சூரணை -159
பேற்றுக்கு பல காலும் வேணும் என்று நினைக்கில் உபாயம் நழுவும் –
சூரணை -160
உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது –
சூரணை -161
ப்ராப்யாந்தரத்துக்கு அன்று என்கை-
சூரணை -162
உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தை பற்றினார் போலே
உபேயாந்தரமான ஐஸ்வர்யா கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்தியை அர்த்திக்கிறது –
சூரணை -163
இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ -என்னில்
சூரணை -164
இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் –
சூரணை -165
ஸ்ரீ மதே-பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ளவனுக்கு –
சூரணை -166
அவன் உபாயமாம் இடத்தில் தான் புருஷ காரமாய் இருக்கும் –
அவன் ப்ராப்யனாம் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் -கைங்கர்ய வர்த்தகையுமாய் -இருக்கும்
சூரணை-167
இதிலே திரு மந்த்ரத்திலே சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –
பூர்வ வாக்யத்தில் சொன்ன நித்ய யோகம் -புருஷகாரத்வ உபயுக்தம் –உத்தர வாக்யத்தில் நித்ய யோகம் -கைங்கர்ய பிரதிசம்பந்திநி யாகைக்கும்
-கைங்கர்யத்தை ஓன்று பத்தாக்கி அவன் திரு உள்ளத்தில் படுதுகைக்காக -என்றவாறு –
சூரணை -168
இளைய பெருமாளை போலே -இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்கை முறை –
சூரணை -169
அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் இச் சேர்த்தியிலே –
சூரணை-170
நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு –
சூரணை -171
இதில் திரு மேனியையும் குணங்களையும் சொல்லும்
சூரணை -172
சேஷித்வத்திலே நோக்கு –
சூரணை -173
ப்ராப்தவிஷயத்தில் கைங்கர்யம் இறே ரசித்து இருப்பது –
சூரணை -174
இந்த சதுர்த்தி கைங்கர்யத்தை பிரகாசிப்பிக்கிறது –
சூரணை -175
கைங்கர்யம் தான் நித்யம் –
சூரணை -176-
நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் –
சூரணை -177
சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு
ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும் –
சூரணை-178
நம-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
சூரணை -179
களை யாவது தனக்கு என்ன பண்ணும் அது –
சூரணை -180
இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் –
சூரணை -181
உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்னும்படியே ஆக வேணும் –
கைங்கர்யம் பண்ணும் அளவில் உனக்கே நாம் ஆட்செய்வோம் -உனக்கும் எங்களுக்குமான இருப்பு தவிர்ந்து உனக்கே உகப்பாக
அடிமை செய்ய வேணும் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -போலே –
சூரணை -182
சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே –
பகவன் முக விகாச ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் -என்கிற பிரதிபத்தியே நடக்கக் கடவது –
சூரணை -183
கைங்கர்ய பிரார்த்தனை போலே -இப் பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு –
சூரணை -184
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு-திரு வாய் மொழி -9-3-4–என்னா நின்றது இறே –
விஷய வைலஷண்யம் அடியாக வரும் ஸ்வ போக்த்ருத்வ புத்தி கந்தல் கழிந்த பரம பதத்திலும் -ஸ்வரூபத்தை அழியாதபடி
சாத்மிப்பிக்கும் பேஷஜமானவனே -என்பதால் பரமபதத்திலும் நமாஸ் உடைய அனுசந்தானத்துக்கு பிரசக்தி உண்டு என்றதாயிற்று –

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி சாரார்தம் -திருமந்திர பிரகரணம்–சூரணை-1-115–ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

December 18, 2015

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

ஒத்து முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —

முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்

———-

ஸ்ரீ பராசர பட்டர் -அஷ்ட ஸ்லோகீ–பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் –
சூரணை-1
முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று –
மோக்தும் இச்சு வ்யுத்பத்தி
சூரணை -2
அதில் பிரதம ரகஸ்யம் திருமந்தரம் –
மந்திர சேஷம் பிரவணத்தை விவரிக்கும் -அத்தை த்வயம் விவரிக்கும் -அத்தை சரம ச்லோஹம் விவரிக்கும் –
மந்தாரம் த்ராயதே -அனுசந்திப்பார்களை ரஷிக்கும் -சப்தத்தாலும் அர்த்தத்தாலும் –அறிவுள்ளவன் -என்று அறிந்த பின்பு
-ஸ்வ தந்த்ரன் பிரமம் போக்க அகாரத்தையும் லுப்த வேற்றுமை உருபையும் நோக்க வேணும் -பரமாத்மாவுக்கு சேஷப்பட்டவன் என்று உணரலாம் –
பிறருக்கும் அடிமை என்கிற பிரமம் போக்க உகாரத்தை நோக்க வேணும் -எம்பெருமானுக்கே உரியவன் என்று உணர்ந்து -இருந்தாலும்
சுய ரஷணத்துக்கு தானே என்ற பிரமம் போக்க நம -நோக்க வேணும் -விஷயாந்தர பற்றுக்களையும் ஆபாச பந்துக்கள் பக்கல் பற்றுதலையும்
விட நாராயணாய- பதம் நோக்க வேணும் -இவ்வளவு அர்த்தங்களையும் காட்டுவதால் இந்த திரு மந்த்ரமே ராஷனம் ஆகும் –
சூரணை -3-
திருமந்த்ரத்தின் உடைய சீரமைக்கு போரும்படி பிரேமத்தோடே பேணி அனுசந்திக்க வேணும் –
ஈரமான நெஞ்சுடன் பிறர் அறியாதபடி -சர்வ வேத சங்க்ரஹமான மந்திர ரத்னம் குஹ்ய தமம் -சீர்மை உணர்ந்து அனுசந்திக்க வேணும்
சூரணை -4
மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது –
மந்த்ரே-தத் தேவதாயாம் ச ததா மந்த்ரே பிரதே குரௌ த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா ச ஹி பிரதம சாதனம் – பிரமாணம்-
சூரணை-5
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –
ஈஸ்வர கைங்கர்யத்தையும்  இழந்து –
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட –
சர்வேஸ்வரன் தன கிருபையாலே -இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி –
தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று –
திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் –
நர நாரணனனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் –என்றபடி தம்மை அறிந்து பிறவிக் கடலைக் கடந்து -இக்கரைப் பட வேணும் என்று
சூரணை-6
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு -நாட்டார் அறியாமையாலே – அத்தை அறிவிக்கைக்காக –
ஆஸ்திகோ தர்ம சீலஸ் வைஷ்ணவச் சுசீ கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே —
தன்னையும் தனது உடைமைகளையும் ஆசார்யனுக்கு என்று கொண்டு –
த்யாஜ்ய உபாதேயம் அறிந்து -பெரியோரைப் பணிந்து -ஞான அனுஷ்டானங்கள் கொண்டு யாதாம்ய ஞானம் உணர்ந்து -ஆசார்ய கைங்கர்யம் உகந்து செய்து
-சமதமாதி ஆத்மகுணங்கள் கொண்டு குருகுல வாசம் செய்து சாஸ்திர விசுவாசம் கொண்டு க்ருதஜ்ஞனாக வர்த்திக்கும் சிஷ்யன்
சூரணை -7
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வய மார்ஜிதம் போலே – திரு மந்தரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –
சாஸ்திரங்கள் -ஞானக் கலைகள் -ஆயாஸ பூர்வகமாக -ஞானம் பெற -திருமந்தரம் அநாயாசமாக ஞானம் கொடுத்து அருளும் –
சூரணை-8
பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் –
திருக் குணங்கள் –திருவவதாரங்கள் -திருமந்த்ரங்கள் அநேகம் என்றவாறு
சூரணை -9
அவை தான-வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –
ஸ்வரூபம் வியாபகம் என்பதை காட்டி அருளும் வியாபக மந்த்ரங்கள் -அவதார குண சேஷ்டிதங்கள் காட்டி அருளும் அவியாபக மந்த்ரங்கள்
சூரணை -10
அவ்யாபகங்களில் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –
நாராயணாய வித்மஹே வாசுதேவாயா தீமஹி தன்னோ விஷ்ணோ ப்ரசோதயாத் –அஷ்டாஷரீ -த்வாதசாஷரீ -ஷடஷரீ
-சூரணை -11
இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-
யதா சர்வேஷூ தேவேஷூ நாஸ்தி நாராயணாத் பர -ததா சர்வேஷூ மந்த்ரேஷூ நாஸ்தி ச அஷ்டாஷர பர -நாராதீய அஷ்டாஷர ப்ரஹ்ம விதியை
பூத்வோர்த்த்வ பாஹூ ரத்யாத்ர சத்ய பூர்வம் ப்ரவீமிவ ஹே புத்ர சிஷ்யா ஸ்ருணுத ந மந்திர உஷ்ட அஷ்டாஷர பர -ஸ்ரீ நாரசிம்ஹ புராணம் –
சூரணை -12
மற்றவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரகமும் அபூர்த்தியும் உண்டு –
அசிஷ்ட பரிக்ரஹம் –நிர்விசேஷ சின்மாத்திர வஸ்துவாதிகள் குத்ருஷ்டிகள் ஆதரிப்பதால் என்றபடி –
வியாப்தியைச் சொல்லி -வியாபிக்கப் படும் பொருள் இனது என்று காட்டி -வியாபிக்கும் விதம் வியாபிப்பததால் பலன் –
வியாபத்தீருப்பவனின் குணங்கள் அனைத்தையும் காட்டும் மந்த்ரம் அன்றோ
நார சப்தம் –வியாபிக்கப் படும் வஸ்துக்களை சொல்லி -நாராயண பஹூ வ்ரீஹி சமாசத்தால் அந்தர்யாமித்வம் சொல்லி
தத் புருஷ சமாசத்தாலே தாரகத்வம் சொல்லிற்று அயன சப்தத்தாலே கரணே வ்யுத்பத்தியால் உபாயத்வமும் கர்மணி வ்யுத்பத்தியால் உபேயத்வமும் சொல்லிற்று –
-சூரணை -13
இத்தை வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –
சூரணை-14
வாச்ய பிரபாவம் போலே அன்று வாசக பிரபாவம் –
சூரணை -15
அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
சங்க சக்ர கதா பாணே த்வாரக நிலயா அச்யுத கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –
கோவிந்தேதி யதாக்ரந்தாத் கிருஷ்ணா நாம் தூர வாஸி நாம் ருணம் பிரவ்ருத்தமீவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி
நாராயண -சாந்த வாசித்த்தில் ஏக தேச கோவிந்த நாமாவின் பெருமை சொல்லி -கைமுதிக நியாயத்தாலே திருமந்தரம் பெருமை சொல்லிற்று
-சூரணை -17
சொல்லும் க்ரமம் ஒழிய சொன்னாலும் தன்ஸ்வரூபம் கெட நில்லாது –
சூரணை -18
இது தான் குலம் தரும் என்கிறபடியே எல்லா அபேஷிதங்களையும் கொடுக்கும் –
சூரணை -19
ஐஸ்வர்ய கைவல்ய பகவ லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றை கொடுக்கும் –
சூரணை -20
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியை போக்கி அவற்றை தலை கட்டி கொடுக்கும் –
சூரணை-21
பிரபத்தியில் இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தை பிறப்பித்து
காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் —
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதமுமாகிய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே-
எனக்கு தேனே பாலே கண்ணலே யமுதே திருமால் இரும் சோலைக் கோனே –
சூரணை -22
மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே -அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்
இதுக்குள்ளே உண்டு
சூரணை -23
அதாவது ஐஞ்சு அர்த்தம்-
திருமந்த்ரத்தில் பிரணவத்தில் சேதன ஸ்வரூபத்தையும் நமாஸ் சாலே விரோதி உபாய ச்வரூபங்களையும் -நாராயண பதத்தால் பரம புருஷன்
ஸ்வரூபத்தையும் சதுர்தியால் புருஷார்த்த ஸ்வரூபத்தையும் பிரதிபாதித்து அர்த்த பஞ்சகம் -சொல்லிற்று –
சூரணை -24
பூர்வாச்சார்யர்கள் இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு -தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –
இதில் அர்த்த ஞானம் பிறந்த பின்பு -பிறந்த பின் மறந்திலேன் -என்கிறபடியே -இத்தை ஒழிய வேறு ஒன்றால்-கால ஷேமம் பண்ணி அறியார்கள்
வேத சாஸ்திரங்கள் அருளிச் செயல்கள் எல்லாம் திருமந்த்ரத்தின் அர்த்தங்களை உள் கொண்டே என்பதால்
-இத்தை ஒழிய வேறு ஒன்றால் கால ஷேபம் செய்ய மாட்டார்கள் –
சூரணை -25
வாசகத்தில் காட்டில் வாச்யத்தில் ஊன்றுக்கைக்கு அடி -ஈச்வரனே உபாயம் உபேயம் என்று நினைத்து இருக்கை

சூரணை -26
இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் —ஸ்வரூபமும்–ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும்-ஸ்வரூபமும் உபாயமும் பலமும்-என்னவுமாம் –
சமுதாய வாக்யார்த்தம் -பிரணவம் நமஸ் -சேஷத்வ பாரதந்த்ர்ய ஸ்வரூபம் -நாராயணாய பிராப்யம் கைங்கர்யம் காட்டும் முதல் யோஜனை
பிரணவத்தால் சேஷத்வம் ஆகிற ஸ்வரூபமும் – நமஸ் சாலே உபாயமும் -நாராயநாயா என்று பலனும் சொலிற்று இரண்டாவது யோஜனை
நமஸ் -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியே உபாயம் -ஸ்வ தந்த்ரம் கழிய வேண்டும் -என்பதால் நமஸ் உபாயம் சொல்லிற்று என்று கொள்ள வேண்டும் –

சூரணை -27
பலம் இருக்கும் படி ப்ரமேய சேகரத்திலும் -அர்சிராதிகதியிலும் சொன்னோம் –
முமுஷுத்வம் உண்டாவது தொடங்கி நலமந்தம் இல்லாதோர் நாட்டில் அத்தாணிச் சேவகம் பெறுவது ஈறாக உள்ள பலன்களை -பலம் இருக்கும் படி என்கிறார்
சூரணை -28
இது தான் எட்டு திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –
நார அயநாயா பிரித்து ஷட் அஷரமாக சொல்வது ஸ்ருதி சித்தம் இல்லையே-
சூரணை -29
மூன்று பதமும் மூன்று அர்த்தத்தை சொல்லுகிறது-
சூரணை -30
அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் கைங்கர்யமும்-
பிரணவம் நமஸ் இரண்டும் -சேஷத்வம் பாரதந்த்ர்யம் இரண்டும் ஸ்வரூபம் காட்ட -நாராயணாய -கைங்கர்யம் காட்டும்
சூரணை -31
இதில் முதல் பதம் பிரணவம்-
அம் என்பதை தவிர்த்து பிரணவம் என்கிறார் -உபதேசத்தால் பெற வேண்டியதால் பிரணவம் என்கிறார்
சூரணை-32
இது அ என்றும் -உ என்றும் -ம என்றும் மூன்று திரு அஷரம்-
சந்தி பெற்ற சம்ஹிதாகாரத்தில் ஓம் ஒரே எழுத்து ஒரே பதம் ஒரே அர்த்தம் -அசம்ஹிதாகாரத்தை பார்த்தால் மூன்று எழுத்துக்கள் மூன்று பதங்கள் மூன்று அர்த்தங்கள்
சூரணை -33
மூன்று தாழி யிலே   தயிரை நிறைத்து கடைந்து வெண்ணெய் திரட்டினா போல்
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது –
சூரணை -34
ஆகையால் இது சகல வேத சாரம் –

சூரணை-35
இதில் அகாரம் சகல சப்தத்துக்கும் காரணமாய்–நாராயண பதத்துக்கு சங்க்ரகஹமாய் இருக்கையாலே
சகல ஜகத்துக்கும் காரணமாய் சர்வ ரஷகனான எம்பெருமானை சொல்லுகிறது –
பிரகிருதி -ஸ்வ பாவம் -சக்தியால் -அதாவது —அகர முதல எழுத்து எல்லாம் -காரணத்வம்-காட்டும் – தாது சக்தியினால் -அவ ரஷணே தாது –ரஷகத்வம் காட்டும்
சூரணை-36
ரஷிக்கை யாவது விரோதியை போக்குகையும்-
சூரணை -37
இவை இரண்டும் சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும்-
சூரணை -38
சம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள் -அபேஷிதம் அன்ன பாநாதிகள் –
முமுஷுகளுக்கு விரோதி -சம்சார சம்பந்தம் -அபேஷிதம் பரம பத ப்ராப்தி
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி -கைங்கர்ய ஹானி -அபேஷிதம் -கைங்கர்ய விருத்தி –
சூரணை -39
ஈஸ்வரனை ஒழிந்தவர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம்
பிரபந்த பரித்ரானத்திலே  சொன்னோம் –
பிராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி ராவணன் பக்கலில் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் கம்சன் பக்கலில் காணலாம்
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி ஹிரண்யன் பக்கலில் காணலாம்
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்திரன் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் -இத்யாதி ஸ்ரீ ஸூ க்திகள்
சூரணை -40
ரஷிக்கும் போது பிராட்டி  சந்நிதி வேண்டுகையாலே -இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம் -ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம் பாட பேதம்-
நாராயணன் என்றாலே ஸ்ரீ சம்பந்தம் -லஷ்மி விசிஷ்டன் எனபது சித்திக்குமே -ஆனாலும் நினைப்பூட்ட விசேஷித்து அருளிச் செய்கிறார் –
சூரணை -41
அத்ர பகவத் சோநாபதி மிஸ்ரர் வாக்யம்-அவன் மார்பு விட்டு பிரியில்
இவ் அஷரம் விட்டு பிரிவது –
சூரணை -42
பர்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும்
விடாதே இருக்கும் மாதாவை போலே–பிரதம சரம பதங்களை விடாதே இருக்கும் இருப்பு –
பிராட்டிக்கு அகாரத்தில் அந்வயம் அர்த்த பலத்தாலே -இவளுக்கு சப்த சக்தியினால் போதகம் மாகாரமே யாகையால் ஜீவ கோடியில்
இவளுக்கு அந்தர்பாவம் குறையற்றது என்று முடிந்து நின்றது -ஈஸ்வர தத்வத்தில் சேர்ந்தவள் என்றால் ஈஸ்வர த்வயம் உண்டாகுமே
சூரணை -43
ஸ்ரீ நந்த கோபரையும் கிருஷ்ணனை யும் விடாத யசோதைப் பிராட்டியை போலே
சூரணை-44
ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவண ஓலை
எழுதுவது -ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே-
சூரணை -45-
ஆக பிரித்து நிலை இல்லை –
சூரணை -46
பிரபையையும் பிரபாவையையும்-புஷ்பத்தையும் மணத்தையும் போலே –
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா –அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
பிர ஸூ நம் புஷ்யந்தீமபி பரிமளர்த்திம்ஜிகதிஷூ -பட்டர் -ஸ்ரீ குண ரத்ன கோசம்
சூரணை -47
ஆக இச் சேர்த்தி உத்தேச்யமாய் விட்டது-
சூரணை -49
சதுர்த்தி ஏறின படி என் ? என்னில்-
சூரணை -50
நாராயண பதத்துக்கு சங்க்ரகமாய் இருக்கையாலே-
சூரணை -51
இத்தால் ஈஸ்வரனுக்கு சேஷம் என்கிறது
சூரணை -52
சேஷத்வம் துக்க ரூபமாக வன்றோ நாட்டில் காண்கிறது என்னில் –
சூரணை -53
அந்த நியமம் இல்லை -உகந்த விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு
சுகமாக காண்கையாலே-
சம்வாஹயாமி சரணாயுத பத்ம தாம் ரௌ-துஷ்யந்தன் சகுந்தலையை பார்த்து –
சூரணை -54
அகாரத்தாலே கல்யாண குணங்களை சொல்லுகையாலே இந்த சேஷத்வமும் குணத்தாலே வந்தது-
சூரணை-55
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் —
சூரணை -56
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை –
சூரணை -57
ஆத்மா அபஹாரமாவது ஸ்வதந்த்ரம் என்கிற நினைவு -ஸ்வதந்த்ரமாம் போது இல்லையே விடும் –
சேஷத்வம் இல்லாத போது-ஸ்வ தந்த்ரன் நினைவு வரும் -இதுவே ஆத்மா அபஹாரம் ஆகும் -எனவே ஸ்வரூபம் இல்லை யாகுமே

சூரணை -58
ஸ்தான பிரமாணத்தாலே உகாரம் அவதாரணர்த்தம்-
ஏகார ஸ்தானத்திலே உகார பிரயோகம் -ததேவாக்நிஸ் தத் வாயுஸ் தத் ஸூ ர்யஸ் தாது சந்த்ரமா -இத்யாதிகள்
சூரணை -59
இத்தால் பிறர்க்கு சேஷம் அன்று என்கிறது-
அயோக வியச்சேதம்-சங்கு வெண்மை நிறம் உடையதே -வெண்மை நிறமே உள்ளது –
அந்ய யோக வியச்சேதம் -வெண்மை நிறம் சங்கில் தவிர வேறு ஒன்றில் இல்லை –
இங்கு அவனுக்கே சேஷப் பட்டவன் என்று அந்ய யோக வியச்சேதம் காட்டப் படுகிறது
சூரணை -60
பெரிய பிராட்டியாருக்கு சேஷம் என்கிறது என்றும் சொல்வார்கள் –
பகவச் சாஸ்த்ரத்தில் உகாரம் லஷ்மி சப்தம் -ஆகையால் ஸ்பஷ்டமாக லஷ்மி சேஷத்வம் அர்த்தம் அனுசந்தேயம்
சூரணை-61
அதிலும் அந்ய சேஷம் கழிகையே பிரதானம் –
சூரணை -62
தேவர்களுக்கு சேஷமான ப்ரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே -ஈஸ்வர சேஷமான
ஆத்ம வஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷம் ஆக்குகை-
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி —
சூரணை -63
பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம் –
சூரணை-64-
மறந்தும் புறம் தொழா மாந்தர் என்கையாலே –
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிரபுர ஹமான்யன்ருணாம்
ந வைஷ்ணவாநாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான்
நமனும் தன் தூதுவரை கூவிச் செவிக்கு -நான்முகன் திருவந்தாதி -68
அடி– அடிகள் -திருவடி -ஸ்வாமிக்கு வாசகம் -மது ஸூ தன பிரபன்னான் என்பத்தை மறந்தும் புறம் தொழா மாந்தர் —
சூரணை -65
இத்தால் தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது-
அந்ய -சேஷத்வம் கழிகை -தனக்கும் தான் சேஷி அல்ல என்கிறது –

சூரணை -66
மகாரம் இருப்பத்தஞ்சாம் அஷரமாய்-ஞான வாசியுமாய் -இருக்கையாலே ஆத்மாவை சொல்லுகிறது –
சூரணை -67
இது தான் சமஷ்டி வாசகம்-
சூரணை -68
ஜாத் ஏக   வசனம்
பத்தர் முக்தர் நித்யர் மூன்று வர்க்க ஆத்மாக்களுக்கும் பகவத் சேஷத்வமே லஷணம்-
சூரணை -69
இத்தால் ஆத்மா ஞாதா என்று தேஹத்தில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று-
சூரணை -70
தேஹத்தில்  வியாவ்ருத்தி தத்வ சேகரத்தில் சொன்னோம்-
சூரணை -71
மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே
சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது –
சூரணை-72
ஆக பிரணவத்தால்- கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திரு மொழி -8-9-3-
என்கிறபடி ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று –
சூரணை -73
இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றது ஆயிற்று –
சூரணை -74
அகாரத்தாலும் மகாரத்தாலும் -ரஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லிற்று –
சதுர்த்தியாலும் உகாரத்தாலும் -ரஷன ஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று –
சூரணை -75
இனி மேல் பிரணவத்தை விவரிக்கிறது –

சூரணை -76
உகாரத்தை விவரிக்கிறது நமஸ்
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம் –
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி -நார பதம் என்றும் சொல்லுவார்கள் –
ரிங் -ஷயே-தாது -நசிக்கக் கூடியது -நர -நசிக்காமல் -நித்தியமாய் -அன் ப்ரத்யயம் சமூஹம் -நார பன்மை –
சூரணை -77
அடைவே விவரியாது ஒழிகிறது விரோதி போய் அனுபவிக்க வேண்டுகையாலே –
சூரணை-78
நமஸ் -ந என்றும் ம என்றும் இரண்டு பதம் –
சூரணை -79
ம -என்கிற இத்தால் தனக்கு உரியன் -என்கிறது–ந -என்று அத்தை தவிர்கிறது
சூரணை -80
நம-என்கிற இத்தால் -தனக்கு உரியன் அன்று -என்கிறது –
சூரணை -81
பிறருக்கு உரியனான அன்று தன வைலஷண்யத்தை காட்டி மீட்கலாம் -தனக்கு என்றும் அன்று யோக்யதையும் கூட அழியும் –
சூரணை -82
இத்தால் விரோதியை கழிக்கிறது
சூரணை -83
விரோதி தான் மூன்று
சூரணை -84
அதாவது–ஸ்வரூப விரோதியும்–உபாய விரோதியும்–ப்ராப்ய விரோதியும்
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதி கம்யம் சிஷித மீஷிதே நபுரத பச்சாத பிஸ்தா நத-பட்டர்
காகாஷி ந்யாயம்-ஓம் நம -நம நம– நாராயண நம – –
சூரணை -85
ஸ்வரூப விரோதி கழிகையாவது-யானே நீ என்னுடைமையும் நீயே என்று இருக்கை-
உபாய விரோதி கழிகையாவது -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று இருக்கை-
ப்ராப்ய விரோதி கழிகையாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை –
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி யொற்றிக் கொண்டு நின்னருளே புரிந்து இருந்தேன் –
-ஆத்மாத்மீயங்கள் இரண்டும் எம்பெருமானுக்கே சேஷம் என்று இருக்கை ஸ்வரூப விரோதி கழிந்த நிலைமை –என்றதாயிற்று –
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை
நின் சாயை அழிவு கண்டாய் -உபாய விரோதி கழிந்த நிலைமை
நிலா தென்றல் புஷ்பம் சந்தானம் போலே வழு விலா அடிமை செய்வது கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன புத்தி கழிந்தமை –
சூரணை -86
ம -என்கை ஸ்வரூப நாசம் -நம-என்கை ஸ்வரூப ஜீவனம் –
சூரணை -87
இது தான் ஸ்வரூபத்தையும் -உபாயத்தையும் -பலத்தையும் -காட்டும் –
சூரணை -88
தொலை வில்லி மங்கலம் தொழும்-என்கையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –
வேம்கடத்து உறைவார்க்கு நம -என்கையாலே -உபாயம் சொல்லிற்று –
அந்தி தொழும் சொல் -என்கையாலே பலம் சொல்லிற்று-
தொழும் இவளை -தொழும் சொல் -அகண்ட நமஸ் -ஸ்வரூப வாசகம் -உகந்து அருளின நிலத்து அளவும் செல்லும் படி –
நம -அகண்ட நமஸ் உபாயம் -ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அறுத்து
பிராப்தி தசையில் -கைங்கர்ய ரசம் அதிசயித்து இருக்கும் நிலையில் -அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -தொழும் சொல் –அகண்ட நமஸ் பல வாசகம் –
சூரணை-89
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும்-அனுசந்தேயம்-
சூரணை -90
இது அகாரத்திலே என்றும் சொல்லுவார்கள்- உகாரத்தில் என்றும் சொல்லுவார்கள் –
பாகவத சேஷத்வம் -சாஷாத் சப்தத்தில் இருந்து கிடைக்காமல் அர்த்த பலத்தாலே கிடைப்பது ஓன்று ஆகையாலே இத்தை எந்த இடத்திலே
அனுசந்தித்தாலும் குறை இல்லை -ஆனாலும் அஹங்காரம் மமகாரங்கள் ஆகிற கந்தல் நன்றாக கழிந்த இடத்திலே
-நமஸ் -சிலே அனுசந்திப்பது மிகவும் பொருந்தும் -என்பதே இவர் திரு உள்ளம் –
சூரணை -91
ஈஸ்வரன் தனக்கே யாக இருக்கும் –அசித்து பிறர்க்கே யாக இருக்கும் –
ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாக இருக்கும் -என்று முற்பட்ட நினைவு –
அங்கன் இன்றிக்கே -அசித்தை போலே -தனக்கே  யாக எனைக் கொள்ள வேணும் -என்கிறது நமசால்-
நமஸ் அர்த்தம் நெஞ்சிலே ஊறின பின்பு -சைதன்யம் அற்ற அசித்துப் போலே -தனக்கு என்று இருக்கை அன்றிக்கே -பரார்த்தமாக
-ஸ்வா ர்த்த பிரதிபத்தி லேசமும் அற்று -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்கிறபடியே
அத்தலைக்கு ரசமாகும் படி விநியோகம் கொள்ள வேணும் என்கிற நினைவே நமஸ் சப்தார்த்த ஞானத்துக்கு பலன் –
சூரணை -92
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
நைச்யம் பாவித்து இறாய்த்து போகத்தை அழிக்க கூடாதே -செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள –
இசைந்து நிற்கை யாயிற்று அத்தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை
சூரணை -93
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் –
சேஷத்வமே எம்பெருமானுடைய தலை தடுமாறின போகத்தை அழிக்க நினைக்கும் ஹேது என்றத்தை கீழே சொல்லி -மேலே சதுர்தியிலும் அது சொல்லப் படும் –
சூரணை -94-
இந் நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன் –
இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்-
இந் நினைவிலே எல்லா சூக்ருதங்களும் உண்டு –
இது இன்றிக்கே இருக்க பண்ணும் யஞ்ஞாதிகளும் ப்ராயச்சித்தாதிகளும் நிஷ் பிரயோஜனங்கள்-
இது தன்னாலே எல்லா பாபங்களும் போம் –
எல்லா பலன்களும் உண்டாம் –
இப் பாரதந்த்ர்யா உணர்சியாலே சம்சார நிவ்ருத்தி முதலாக நித்ய கைங்கர்யம் அளவாக உண்டான சகல பலன்களும் உண்டாகும்

சூரணை-95
நாராயணன் என்றது நாரங்களுக்கு அயநம்  என்ற படி
சூரணை -96
நாரங்கள் ஆவன நித்ய வஸ்துக்களினுடைய திரள் –
நாராணாம் அயனம் -நாராயண -தத் புருஷ சமாசம் -நாரங்களுக்கு அயனம்
நாரா அயனம் யஸ்ய ச -பஹூ வ்ரீஹி சமாசம் -நாரங்களை அயனமாகக் கொண்டவன் -அயனம் -ஆஸ்ரயம்
சூரணை-97
இவை ஆவன
ஞான ஆநந்த அமலத்வாதிகளும் –ஞான சக்தியாதிகளும் – வாத்சல்ய சொவ்சீல்யாதிகளும் –
திரு மேனியும் – காந்தி சொவ்குமார்யாதிகளும் – திவ்ய பூஷணங்களும்- திவ்ய ஆயுதங்களும் –
பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும் – நித்ய சூரிகளும் – சத்ர சாமராதிகளும் –
திரு வாசல் காக்கும் முதலிகளும் – கணாதிபரும்- முக்தரும் –
பரம ஆகாசமும் – பிரகிருதியும் – பத்தாத்மாக்களும் – காலமும் – மஹதாதி விஹாரங்களும் –
அண்டங்களும் –அண்டத்துக்கு உள் பட்ட தேவாதி பதார்த்தங்களும் —
அநித்திய வஸ்துக்கள் எவையுமே இல்லையே -ஸ்வரூபதோ நித்யங்கள் -பிரவாஹதோ நித்யங்கள் –
-சூரணை -98-
அயநம் -என்றது இவற்றுக்கு ஆஸ்ர்யம்  என்றபடி –
சூரணை -99-
அங்கன் இன்றிக்கே இவை தனை ஆஸ்ர்யமாக உடையன் -என்னவுமாம் –
சூரணை -100
இவை இரண்டாலும் பலித்தது பரதவ சௌ லப்யங்கள் –
நாரங்களுக்கு அயனம் -தத் புருஷ சமாசம் -சகல வஸ்துக்களுக்கும் ஆதாரம் -பரத்வம்
நாரங்களை ஆஸ்ரயமாக உடையவன் –அந்தர்யாமி -பஹூவ்ரீஹி சமாசம் -சௌலப்யம் –
சூரணை -101
அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும் -ஆகவுமாம் –
அயன பதம் —ஈயதே அ நே நே த்யயனம்-என்கிற – கரணே வயுத்பத்தியிலும் -எம்பெருமான் உபாயமாக இருப்பவன் என்றும்
–ஈயதே அசௌ இதி அயனம் என்கிற – கர்மணி வ்யுத்பத்தியிலும் -எம்பெருமான் உபேயமாக இருப்பவன்
சூரணை -102
எம்பிரான் எந்தை -என்கையாலே ஈச்வரனே எல்லா உறவு முறையும் என்றும் சொல்லும் –
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றும் முற்றுமாய் -சர்வ பிரகார விசிஷ்டம் சர்வ வித பந்து -நாராயண பதத்தில் சித்தம் -இத்தால் உபேயத்வம் சொல்லிற்று
சூரணை -103
நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காய் இருக்கும் –
நமக்கு ஆபிமுக்யம் உண்டாக்கும் படியை எதிர்பார்த்துக் கொண்டு நம் பக்கலிலே ஊற்றம் உற்று இருக்கையாய் இருக்கும்
சூரணை -104
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்து -சத்தையே பிடித்து –
நோக்கிக் கொண்டு போரும்-
சூரணை -105
ஆய -என்கிற இத்தால் -சென்றால் குடையாம் -என்கிறபடியே எல்லா அடிமைகளும்
செய்ய வேண்டும் என்று அபேஷிக்கிறது-
சூரணை -106
நமஸாலே  தன்னோடு உறவு இல்லை என்று வைத்து கைங்கர்யத்தை பிரார்த்திக்க கூடுமோ என்னில்-
சூரணை -107
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்கிறபடியே கைங்கர்ய பிரார்த்தனை
வந்தேறி அன்று -ஸ்வரூப பிரயுக்தம் –
சூரணை -108
ஆகையால் வழு  இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற பிரார்த்தனையை காட்டுகிறது –
சூரணை-109
கண்ணார கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதல்-என்கிற படி
காண்பதற்கு முன்பு  உறக்கம் இல்லை -கண்டால் -சதா பச்யந்தி -ஆகையால் உறக்கம் இல்லை –
சூரணை -110
பழுதே பல காலும் போயின -என்று இழந்த நாளுக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லை –
சூரணை -111
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்னா நின்றார்கள் இறே-
சூரணை -112
இவ் அடிமை தான் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்கிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் அனுவர்த்திக்கும் –
சூரணை -113
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திரு மந்த்ரம் –
சூரணை -114
இத்தால் ஈஸ்வரன் ஆத்மாக்களுக்கு பதியாய் நின்று ரஷிக்கும் என்கிறது –
-சூரணை -115
ஆக திரு மந்தரத்தால் –
எம்பிரானுக்கே உரியேனான நான்
எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும்
சர்வ சேஷியான நாராயண னுக்கே
எல்லா அடிமைகளும் செய்ய பெறுவேனாக வேணும் –
என்றது ஆயிற்று –

திருமந்திர பிரகரணம் முற்றிற்று –

—————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வார்த்தா மாலாவில் முத்துக்கள் –

October 2, 2015

ரஷ்ய ரஷக சம்பந்தம் -பிதா புத்ர சம்பந்தம் -சேஷ சேஷி சம்பந்தம் -பர்த்ரு பார்யா சம்பந்தம் -ஞாத்ரு ஞேய சம்பந்தம்
-ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் -சரீர சரீரி சம்பந்தம் -ஆதார ஆதேய சம்பந்தம் -போக்த்ரு போகய சம்பந்தம்-

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -பாரதந்த்ர்யம் இருக்கும்படி என் என்று கேட்க -ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சர்வ சக்தியை அண்டை கொண்டு -உபாயத்தில் -கந்தல் அற்று -உபேயத்தில் த்வரை விஞ்சி இருக்கை –பாரதந்த்ர்யம் என்று அருளிச் செய்தார் –

பொன்னைப் புடமிடப்  புடமிட உருச் சிறுகி -ஒளி விஞ்சி -மாற்று எழுமா போலே -சங்கோசம் அற்று -ஞான விகாசம் உண்டானவாறே –
நாய்ச்சிமாருடனே சாம்யம் சொல்லலாய் இறே இருப்பது இத் ஆத்மாவுக்கு என்று -திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் .

அழுக்கு அடைந்த மாணிக்கத்தை நேர் சாணையிலே ஏறிட்டு கடைந்தால் பளபளக்கை வடிவாய் இருக்குமா போலே -அஞ்ஞனான சேதனனுக்கு
திரோதான நிவ்ருத்தியிலே அடியேன் என்கை வடிவாய் இருக்கும்-என்று முதலியாண்டான்-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான்-என்று -இறே -என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸ்ர்க்கு -ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது தானும் பிறரும் தஞ்சம் அன்று –
ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை அனுசந்தித்து பிழைத்தல் –
நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு மேற்பட்டது இல்லை என்று அருளிச் செய்தார்

நாச்சிமாரை ஈஸ்வரனில் காட்டிலும் குறையச் சொல்லும் இடமும் -ஒக்கச் சொல்லும் இடமும் – எழச் சொல்லும் இடமுமாய் இருக்கும்
-இதுக்கு பிரமாணங்கள் -இவன் பிரபத்தி பண்ணும் படியைச் சொல்லும் இடத்தில் -இவள் ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும்
-ஒக்கச் சொல்லுகிற இடத்தில் -ஐகயம் சொல்லுகிறது என்றும் –
எழச் சொல்லும் இடத்தில் சௌலப்யம் சொல்லுகிறது என்றும் பிரபத்தி பண்ணக் கடவன்

உகந்து அருளின இடங்கள் பலவிடமாய் -திருப் போனகம் படைப்பது ஒன்றே யானால் அமுது செய்யப் பண்ணும்படி என் என்று
பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்கள் இரண்டுக்கும் நடுவே –
சர்வ மங்கள விக்ரஹாய -என்று விசேஷண சஹிதமாக உச்சரித்து அமுது செய்து அருளப் பண்ணுவது -என்று அருளிச் செய்தார் –

வஸ்துமான் வஸ்துவை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் —வஸ்து விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
விநியோகம் போகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் – போகம் அபிமதத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
அபிமதம் அநு குணத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் – அநு குணம் பரனுக்கு பாங்காய் இருக்கும் –

வயாக்ரா சிம்ஹங்களோ பாதி உபாய வேஷம் – யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –
வ்யாமோஹம் உபாயம் – முக மலர்த்தி உபேயம் என்று எம்பார் அருளிச் செய்வர் –

திருக் கோட்டியூர் நம்பி பெரிய முதலியாரைப் பார்த்து -உபாய அம்சத்தில் தஞ்சமாக நினைத்து இருப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய
-இது நெடும் காலம் ஸ்வரூப நிரூபணம் பண்ணப் பெற்று வைத்து உபாய நிரூபணமே பண்ண தேடுவதே என்று -விஷண்ணராய் அருள –
ஆகில் உபாயம் வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
அபிரூபையான ஸ்திரீ அழகை மட்டிக்க மட்டிக்க -அபிரூபனாய் ஐஸ்வர்யர்ய வானுமான புருஷன் அந்தரங்கமாக
ஆழம் கால் படுமா போலே -அஞ்ஞனான சேதனன் -அழுக்கு அறுக்க அழுக்கு அறுக்க அவ் வீஸ்வரன்
திரு உள்ளம் அத்ய அசந்னமாய்ப் போரும் காணும் -என்று அருளிச் செய்தார் –

தேவகிப் பிராட்டியார் -திருக் கோட்டியூர் நம்பியின் குமாரத்தி -அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால் -தத் அநு ரூபமான பிரதான அநுபவ விசேஷத்தை அநுபவாந்தரத்துக்கு 
உறுப்பாக்குகையும் அநு பயுக்தம் –உக்தார்த்த ஸ்ரவணம் பண்ணினவனுக்கு உபாயாந்தர த்யாகம் உடம்போடே கூடாது –
ஆச்சார்ய -முக்ய -அனுபவம் கொண்டு பகவத்-அமுக்ய -அனுபவத்துக்கு உபாயம் ஆக்குவது ஒட்டாது-

பொன் நாச்சியார் கூரத் ஆண்டாளுக்கு பிரசாதித்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணவே –
ஸ்வரூப அநு ரூபமான உபாய உபேயாதிகள் உபபன்னமாய் போரும் காணும் -என்று அருளிச் செய்தார்–
ஆசார்ய சேஷத்வ பாரதந்த்ர்யங்களே ஸ்வரூப நிரூபக தர்மம் –
ஆசார்ய அபிமானமே உபாயம் –
ஆசார்யன் உகக்கும் கைங்கர்யமே உபேயம்

மருதூர் நம்பி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் -தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
மூன்று ஜன்மம் திருவடிகளிலே அபராதம் பண்ணின சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான் -அநாதி காலம் திருவடிகளிலே
அபராதம் பண்ணின நான் பெறாது இருக்கை வழக்கோ -என்று அழ -அப்போதே பரமபதத தேற எழுந்து அருளினார் –

சிறியாண்டான் -எம்பெருமானாரின் சிஷ்யர் -கிருமி கண்ட சோழன் இறந்த செய்தியை எம்பெருமானாருக்கு அறிவித்து –
அவரால் -மாறொன்று இல்லா மாருதி -என்று கொண்டாடப் பட்டவர் —தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
திருவேம்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை நினைத்தான் ஆகில் – பழைய நரகங்கள் ஒழிய வேறே எனக்கு
ஒரு நரகம் சிருஷ்டிக்க வேண்டும் —
அன்றிக்கே
என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை உணர்ந்தான் ஆகில் –
பழைய திருநாடு போராது எனக்கு என ஒரு திரு நாடு ஸ்ருஷ்டிக்க வேணும் –

அத்துழாய் பெரிய நம்பி ஆபத் தசையிலே
-நாம் இங்கு நின்றும் கோயில் ஏறப் போனாலோ -என்ன –
நாம் அங்கு போய் பிரக்ருதியை விட்டால் நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிச் சாரும் போது –
நம்பி அகப்பட கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ -என்று பயப்படார்களோ -என்று அருளிச் செய்தார் –

ப்ராப்யாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் சாஸ்திரம் சிலுகிடும் -வருந்தி சண்டை இடும் —
சாதனாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் -பாரதந்த்ர்யம் சிலுகிடும் —
சித்தோ உபாய ச்வீகாரத்தில் கை வைத்தான் ஆகில் ஸ்வரூபம் சிலுகிடும் –

அவித்யை அந்தர்பூதனான சேதனனுக்கு அநுபாவ்யமான போகம் –
அவித்யை நிவ்ருத்தி பூர்வகமான அநுபவேச்சை உடையவனுக்கு அநுபாதேயம் –
அநுபாதேய போகஸித்திக்கு காரணமான கர்ம காரணம் த்ரி விதம் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் -தேகாத்ம அபிமானம் -அந்ய சேஷத்வம் –
அதில் சிறிது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம்-சிர காலத்தோடே கூட அவித்ய நிவ்ருத்தியை பிறப்பிக்க கடவதாய் இருக்கும்
-அல்லாதவை -தேகாத்ம அபிமானம் -அந்ய சேஷத்வம் –அவித்ய வர்த்தகங்களாய் இருக்கும்

எம்பார் வார்த்தை -ஸ்வரூபஞ்ஞன்-இதர விஷய ராக நிவ்ருத்தியும் -விகித விஷய ராக பிரவ்ருத்தியும் -இதர உபாய த்யாகமும் –
சித்தோ உபாய ச்வீகாரமும் –ஹிதபரன் பக்கல் யதா பிரதிபத்தியும் -உள்ளவனாய் இருப்பன்

சிறியாச்சான் கலங்குகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தே -தெளிந்து இருப்பர் –
அடியேன் யோக்யதை இல்லாமையாலே தெளிந்து இருப்பது -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

அமுதனார் சிறியாச்சானை -உம்முடைய அனுஷ்டானம் இருக்கும் படி  இது – நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் அனுஷ்டானத்துக்கு ஒரு பலம் உண்டாகில் அன்றோ உம்முடைய அந்அனுஷ்டானத்துக்கு ஒரு பிரத்யவாயம் உண்டாவது –
வெறும் புடவை தோயாமல் கெடும் -பட்டுப் புடவை தோய்க்கக் கெடும் – என்று இரீர் -என்று அருளிச் செய்தார் –
ஆசார்யர்களில் சிலர் -உம்முடைய அனுஷ்டானம் இருக்கும்படி இது -நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் படியும் உங்கள் படியும் கொண்டு கார்யம் என் -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்தபடியே  யன்றோ -என்று அருளிச் செய்தார் –

நான் ஒரு நூலில் வைத்து சொல் என்றால் சொல்லும் நூலில் மாலைகள் ஒரு முமுஷுக்கு பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கும் என்று
ஆச்சான் பிள்ளை வார்த்தை –

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் –பெரிய பிள்ளையையும் -பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் –
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் -இவள் சோகார்த்தையாக –ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன
அநாதி காலம் பாப வாசனைகளாலே -ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன
கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் -உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ -அவதரிக்க வேண்டுமோ -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
-பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் -சம்பவாமி யுகே யுகே என்றும் – ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் –

ஞானப் பிரதன் ஆசார்யன் – ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் – ஞான விஷயம் -எம்பெருமான் – ஞான பலம் -கைங்கர்யம் –
பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் – சிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதம் அப்ப்ரசாதமாகவும் -அப்பிரசாதம் ஸுப்ரஸாதம் ஆகவும் வேணும் –

ஆசார்ய விஷயத்தில் -கிருதஜ்ஞதை -விஸ்வாசம் -ப்ரேமம் -விஸ்லேஷ பீருவாகை – சம்ச்லேஷ விஷயம் -மங்களா சாசனம் -கதி  சிந்தனை –
அனுபவ இச்சை -இவை இத்தனையும் உடையவன் -ஆத்ம ஜ்ஞானமும் உடையவன் ஆகிறான் –

அர்த்த பிரவணனுக்கு பந்துவும் இல்லை -குருவும் இல்லை – விஷய பிரவணனுக்கு லஜ்ஜையும் இல்லை பயமும் இல்லை –
ஷூத்து நலிந்தவனுக்கு விவேகமும் இல்லை -நியதியும் இல்லை – ஞானிக்கு நித்ரையும் இல்லை சுகமும் இல்லை

அனந்தாழ்வான் எச்சானுக்கு அருளிச் செய்த வார்த்தை -இவ்வாத்மா வாகிற பெண் பிள்ளையை – ஆசார்யனாகிற பிதா -எம்பெருமானாகிற வரனுக்கு
-குரு பரம்பரை யாகிற புருஷகாரத்தை முன்னிட்டு -த்வயம் ஆகிற மந்த்ரத்தை சொல்லி -உதகம் பண்ணிக் கொடுத்தான் –

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -அஹங்காராதிகள் நடையாடிக் கொண்டு போருகிற அடியேனுக்கு –
அக்கரைப்பட வழி உண்டோ என்று கேட்க – அருளிச் செய்த வார்த்தை
-போக்தாவானவன் போக்ய பதார்த்தத்தை குலம் கொண்டே ஸ்வீகரித்து வைத்து -போக காலம் வந்தவாறே –
குலங்கறுத்து மணியை புஜிக்குமா போலே -ஆசார்ய வரணம் பண்ணி -சரணகதனாய் இருப்பான் ஒரு அதிகாரிக்கு
-அஹங்கா ராதிகள் நடையாடிற்றாகிலும் கைவிடாதே ஸ்வீகரித்து –
தீர்ந்த வடியவர் தம்மை  திருத்திப் பணி கொள்ள வல்ல -திருவாய் மொழி -3-5-11-என்கிற படியே இவனுடைய
அஹங்காராதிகள் ஆகிற சேற்றைக் கழுவிப் பொகட்டு -போக்யமான வஸ்துவை போக்தாவான எம்பெருமான் தானே புஜிக்கும் என்று நினைத்து இரீர்
என்று அருளிச் செய்தார் –

எங்கள் ஆழ்வான் -ஆசார்யன் ஆவான் அஹங்காரத்தை விட்டு -அழிச்சாட்டத்தை விட்டு –அழிச்சாட்டம் =ஸ்வ தாந்த்ர்யம் -சண்டித்தனம் -அலமாப்பு –
அந்ய சேஷத்வம் ஆகிற வருத்தம் –அலமாப்பை விட்டு -அகாரார்த்தமான அந்தர்யாமிக்கே அற்று –
அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயித்து -ஆனந்தியாக போருமவன்
-அல்லாதான் ஒருவனுக்கு குடிமகனாய் லோக குருவாய் இருக்க -லோகத்துக்கு அடைய குடிமகன் ஆகா நின்றான்
-பணத்துக்காக அடிமைத் தொழில் புரிகின்றான்

நாராயணனைப் பற்றி நாடு பெறலாய் இருக்க -நாரங்களைப் பற்றி நரக வாசிகளாகா நின்றார்கள் –
எம்பெருமானைப் பற்றி ஏற்றம் பெறலாய் இருக்க -ஏழைகளைப் பற்றி எளிவரவு படா நின்றார்கள் –
ஏழையர் ஆவி உண்ணும் -சேட்டை தன மடி யகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி சீர்மை பெறலாய் இருக்க -சில்வானவரைப் பற்றி சீர் கேடராகா நின்றார்கள்–சில்வானர் -அற்பர்கள் –
ஆசார்யனைப் பற்றி அம்ருத பானம் பண்ணலாய் இருக்க அஞ்ஞ்ரை பற்றி அனர்த்தப் படா நின்றார்கள் –
மந்த்ரத்தைப் பற்றி மாசு அறுக்கலாய் இருக்க -மமதையைப் பற்றி மரியா நின்றார்கள் —மரியா நின்றார்கள் –ஸ்வரூப நாசத்தை அடையா நின்றார்கள் –
வடுக நம்பி -நியந்தாவான ஆசார்யன் சந்நிதியிலே வர்த்தித்தல்-நியமவான் ஆன சிஷ்யன் சந்நிதியிலே வர்த்தித்தல் –செய்யில் அல்லது நியதன் ஆகைக்கு
வழி இல்லை –ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி உள்ளவர் உடன் வர்த்தித்தால் எம்பெருமானே பிரப்யமாயும் பிராபகமாயும் -தாரகமாவும் –
போஷகமாவும் -போக்யமாயும் இருப்பவன் ஆகிறான்-

தான் வைஷ்ணவனாய் அற்றால் தனக்கு தன் ஆசார்யானில் குறைந்து இருப்பான் ஒரு சிஷ்யன் இல்லை -உத்தேச்ய பிரதிபத்தி துல்யமாகையாலே —
ஆகிற படி என் என்னில் -என்னுடைய அஜ்ஞானத்தையும் -அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே -என்னை விஷயீகரித்து -அத்தலைக்கு
ஆக்கினவன் அன்றோ -என்று சிஷ்யன் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
ஆசார்யனும் -என்னுடைய அஞ்ஞானத்தையும் அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே-
விஷய பிரவணன் மரப் பாவை காணிலும் ஆலிங்கனம் பண்ணுமா போலே –
என் பக்கலிலே உட்பட பர தந்த்ரனாய்க் கொண்டு போருகிறான் அன்றோ -பகவத் விஷயத்தில் தனக்கு உண்டான
ஆதர அதிசயம் இருந்தபடி என் -என்று உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

ஆசார்யன் அருளிச் செய்யும் வார்த்தையை ஆப்தம் என்று ஆதரித்தாருக்கு அந்தக்கரணம் விதேயமாகும் –
அந்தக்கரணம் விதேயமான வாறே அந்தர்யாமி பிரசன்னனாம் -அந்தர்யாமி பிரசன்னன் ஆனவாறே –
அந்த பிரகாசமும் அந்தஸ் ஸு கமும் உண்டாம் –
இவை இரண்டும் உண்டானவாறே அந்தர் தோஷமும் அந்தர் துக்கமும் கழியும் –
இவை கழிகிற அளவன்றிக்கே -அந்தமில்லாத ஆனந்தம் உண்டாம் –

சத்ருக்களுக்கு கரைய வேண்டா -ஸ்வாமியுமாய் -ஸ்ரீ ய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –

ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் -ஞான ப்ரதன் -அனுஷ்டான ப்ரதன் -உபாய ப்ரதன் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் -உபாயத்துக்கு முற் பாடர் -உபேயத்துக்குஎல்லை நிலமாய் -இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –
பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை -புருஷகார பூதை -கைங்கர்ய வர்த்தகை -நித்ய ப்ராப்யை -என்று –
ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் -ருசி ஜநகன் -மோஷ ப்ரதன் -உபாய பூதன் -என்று –

ஸ்வபாவ அந்யதா ஞானம் -ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இ றே அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –

ஈச்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங்கன்றை -விதை–சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி –
ததீய அபராதமும் -விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி -கைங்கர்ய அனுவர்த்தமாகிற -மடையாலே –
ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி -அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே –
பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து -விபரீத அங்கீகாரமாகிற மாடும் -சப்தாதி விஷயமாகிற
பேய்க் காற்றும் – புகுராமே -பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி -தளிரும் முறியும்
மொட்டும் செலுந்துமாய் -கொழுந்துமாய்-அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே
பரமை காந்தி-முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை

பரம சேதனனாகிற பசியன் -ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் -சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி –
வேதாந்தமாகிற உரலிலே -உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து -உடம்பாகிற உமி கழித்து -மனனமாகிற அடுக்கலிட்டு –
நிதித்யாசநமாகிற சுளகாலே -விவேகமாகிற கொழி கொழித்து -அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து –
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து -ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி –
சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி -அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து –
சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி -பிரயோஜனாந்தரமாகிற  கல்லற அரித்து,-
பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி – அனுபவமாகிற அடுப்பிலே -விச்லேஷமாகிற அடுப்பை இட்டு –
இருவினையாகிற விறகை மடுத்து -த்வரை யாகிற ஊத்தூதி -ஆற்றாமையாகிற கொதி கொதித்து –
பரமபக்தி யாகிற பொங்கினாலே -சூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு –
அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே –
அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் -முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை-

கலங்குகிறதும் -கலக்குகிறதும் -கலங்கிக் கிடக்கிறதும் –தெளிகிறவனும் -தெளிவிக்கிறவனும் -தெளிந்து இருக்கிறவனும் –
கலங்குகிறான் -சேதனன் – கலக்குகிறது -அசித் – கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –
தெளிகிறான் -சேதனன் – தெளிவிக்கிறான் -ஆசார்யன் – தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் –
ஆகையால் கலங்குகிற தன்னையும் -கலக்குகிற அசித்தையும் – தெளிவிக்கிற ஆசார்யனையும் -தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ராகத் த்வேஷம் கொண்டாடி
அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட -பரிபவப் படுவாரும் தாமேயாம் -பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் –
அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –

இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர -இவர்களைச் சேர விட்டு அருள  என்று –
ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய – ஜகத்தில் ஈச்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –
ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் -அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன -ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –
அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் -த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் -நாம் இவர்களை சேர விடும்படி என
-என்று அருளிச் செய்ய –இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் –
ன்று விண்ணப்பம் செய்ய -ஆண்டான் அருளிச் செய்த படி –
ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் -பார்யா சமனுமாய் -சரீர சமனுமாய் -தர்ம சமனுமாய் இருக்கும் –
அதாவது -சொன்னத்தை செய்கையும் -நினைத்தத்தை செய்கையும் -நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –

அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி – சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன் பர்த்ரு சமனுமாய் -சரீரி சமனுமாய் -தரமி சமனுமாய் -இருக்கக் கடவன் –
அதாவது -ஏவிக் கொள்ளுகையும் -எடுத்து இடுவிக்கையும் -அதாவது அசேதனத்தைக் கொண்டு –
நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் -எடுத்துக் கொள்ளுகையும் -என்று அருளிச் செய்தார் –

ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு ஹித காமனாய் இருக்குமவன் -சிஷ்யனாவான் -சர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –

கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் -எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன -பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி -தஸ்யா மன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –
உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன -அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக  என்று நினைத்து –
அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை-

ஸூக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டுக்கும் தலை -ஆத்ம சமர்ப்பணமும் -ஆத்ம அபஹாரமும் – இவற்றிலும் விஞ்சின ஸூ க்ருத துஷ்க்ருதங்கள் -ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே க்ருதஜ்ஞதையும் -க்ருதக்நதையும் –

தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி -தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி –
உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் -சுழற்றிப் பணி மாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று பின்பழகிய பெருமாள் ஜீயர் விண்ணப்பம் செய்தார் –
இதைக் கேட்டருளி நம்பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் -இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –

அனந்தாழ்வான் -இடம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –என் பக்கலிலே ஹிதம்கேட்டால்
நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று -அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று – அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே -ஸ்ரீ பாதத்துக்கு அடிமை
என்னும் இடம் கண்டேன் -என்று விண்ணப்பம் செய்ய -இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –

பெருமாள் ஆழ்வானைப் பார்த்து -நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக நாயந்தே
அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –
இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன -ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும்
பரம பதம் பெற வேணும் -என்ன -தந்தோம் -என்று திரு உள்ளமாக – இத்தை உடையவர் கேட்டருளி –
காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள -இது என் -என்ன –
நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாதரம் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –
ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை -குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய –
ஸ்ருதி பிரமாண பிரதிபண்ண வ்ருத்தய -அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் -ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் -ஞானப் பிரதானமும் -ஞான வர்த்தகத்வமும் ஆசார்ய  க்ருத்யம் –
புருஷகாரத்வமும் கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் – விரோதி நிவர்தகத்வமும் பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –

அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் -கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –

துக்க அனுபவம் பிரகிருதி–துக்க அநுபவிதா -ஆத்மா–துக்க அசஹை பிராட்டி–துக்க நிவாரகன் ஈஸ்வரன் –

ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம் பிள்ளை இன்றிக்கே இருந்து –
பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு –
அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று – அப்பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து –
வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் -என்று வினவுவர் –
ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் – இதுக்கு ஹேது என் -என்ன –
நான் அவனுக்கு ஒரு நல்வார்த்தை சொன்னேன் காண் -என்ன – அவன் எங்கே நீர் எங்கே –
இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன -ஒருவன் விலங்கிலே கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது –
விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் –
அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –
போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே ஆதரியாதே இருக்க –
முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில் உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய –
அவரும் அப்படியே செய்ய – பிற்றை நாள் அவ ஊரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் –
அதுக்கு பின் ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –

மிளகு ஆழ்வானை  முதலிகள் -நீர் கீழை ஊருக்கு பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு சொல்லுவன் –
அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் –
அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம் பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் —
அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –

நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில்
அனர்த்தப் பட்டோம் இத்தனை இ றே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம்  என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்-

திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது  என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –

அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –
இவை இத்தனையும் உண்டான போது
ஆய்த்து ஈடேற லாவது

பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் எல்லாரையும் அறிய வேண்டாவோ – என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க –
அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப்  போகாது -இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இ றே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார் –

ஆள வந்தார் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் வர்த்திக்கிறவர்கள் –
ஒரு நாள் இருவரும் -ஆற்றுக்கு எழுந்து அருளி ஒருவர் புறப்பட்டு வர -ஆள வந்தார் அருளிச் செய்த வார்த்தை –
அன்றிலினுடைய அவஸ்தை பிறந்த போது காண் ஆத்ம ஞானம் பிறந்தது ஆவது -என்று அருளிச் செய்தார் –

ஆளவந்தார் திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற போது -தெய்வ வாரி யாண்டானை மடத்துக்கு வைத்து –
திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற அளவிலே -சந்நிதியில் முதலிகளைப் பார்த்து –
குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தை எடுத்துக் கொண்டு வாருங்கோள் –
என்று அருளிச் செய்து அருளி-திரு முகத்தைப் பார்த்து அருள -மாசமும் திவசமும் அன்று தானாய் இருந்த படியாலே
ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே என்று  போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க – தெய்வ வாரி யாண்டானுக்கு ஆளவந்தாருடைய
விச்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க – வைத்யர்கள் பலரும் பார்த்த இடத்தில் -விஷய ஸ்ப்ரூஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்று சொல்ல –
உமக்கு எந்த விஷயத்தில் ஸ்ப்ருஹை யாய் இருக்கிறது -என்று கேட்க –
அடியேனுக்கு ஆளவந்தார் விஷயம் ஒழிய வேறேயும் ஒரு விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகில் இவரை அங்கே கொண்டு போங்கள் என்று வைத்யர்கள் சொல்ல -இவரை கட்டணத்திலே கொண்டு போக -ஒருநாளைக்கு ஒரு நாள்
திருமேனி பெருத்து நடக்க வல்லராய் வருகிற அளவிலே -ஆளவந்தாரும் திருவனந்தபுரம் சேவித்து மீண்டு எழுந்து அருளா நிற்க –
தெய்வ வாரி யாண்டானும் தெண்டம் சமர்ப்பித்து எழுந்து இருக்க மாட்டாமல் இருந்தபடியைக் கண்டு –
பெருமாள் ஸ்வ தந்த்ரருமாய் ஸூ ரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரதாழ்வான் வைத்த இடத்தில் இருந்தார் –
நான் ஸ்வ தந்த்ரனும் அன்றிக்கே சூரனும் அன்றிக்கே இருக்கையாலே இறே நாம் வைத்த இடத்தில் இராதே நீர் வந்தது -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
இத்தைக் கேட்டு தெய்வ வாரி யாண்டான் -நாம் வந்து ஸ்வரூப ஹாநி பட்டோம் -என்று சத்தை குலைந்து கிடக்க –
என்னை -ஸ்வ தந்த்ரனுமாக்கி ஸூ ரனுமாக்கி எழுந்து இருக்கிறோம் என்று கிடக்கிறாயோ -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
வைத்த இடத்தே இராதே வந்து ஸ்வரூப ஹாநி பட்டால் போலே – இதுவும் ஒரு ஸ்வரூப ஹாநியாய் ஆய்த்தோ -என்று
பர பர என எழுந்து இருந்து நிற்க – ஆளவந்தாரும் -இதொரு அதிகார  விசேஷம் இருந்தபடி இருந்தபடி என் -என்று உகந்து –
போர இளைத்தாயே -என்று கிருபை பண்ணி -திருவனந்தபுரத்து திருக் கோபுரம் தோன்றுகிறது –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாளை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது -என்று
ஸ்வ ஆசார்யரான ஆளவந்தார் திருவடிகளைக் காட்டி -கூட சேவித்துக் கொண்டு மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் –

அப்பன் என்பவர்-ஆழ்வான் உடைய அந்திம தசையிலே -ஸ்ரீ பாதத்திலே சேவிக்கப் பெற்றிலேன் எனக்கு 
ஹிதாம்சம் அருளிச் செய்ய வேணும் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய-
ஊரையும் ஸ்வாஸ்யத்தையும் விட்டுமேற்கு நோக்கி ஓரடி இட்ட போதே ஹிதாம்சம் அற்றது சொல்ல வேணுமோ என்று அருளிச் செய்தார்

முதலியாண்டான் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே மோஷம் -என்ன -கூரத் ஆழ்வான் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -என்ன –
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே -4-4-2-
ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே ஆகவேணும் -என்ன -ஆழ்வான் -அங்கன் அன்று –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவருடைய அடிப்பாட்டிலே நடக்கிற நமக்கு
எல்லாருக்கும் ஸ்வ அனுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -ஆகவேணும்
என்று அருளிச் செய்தார் -ஆண்டானும் அப்படியாம் என்று மிகவும் ப்ரீதரானார் –

ஈஸ்வரன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்யனை தஞ்சம் என்று இருப்பான் –
ஆசார்யன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்ய வைபவம் சொன்னவனை தஞ்சம் என்று இருப்பான் –

வைஷ்ணவனுக்கு கரண த்ரயத்தாலும் கால ஷேபம் ஏது என்னில் -ஆசார்ய கைங்கர்யம் – பகவத் கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் –
இவை மூன்றும் தன்னில் ஒக்குமோ -என்னில் ஸ்வரூபத்தை உணர்ந்தவன் ஆசார்ய கைங்கர்யமே பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும்
என்று இருக்கும் -ப்ரபாவஜ்ஞன் -சர்வேஸ்வரனுடைய பெருமையை மட்டுமே உணர்ந்தவன் -பகவத் கைங்கர்யமே பிரதானம் என்று இருக்கும் –
உபயத்திலும் உணர்வு இல்லாதான் -உபாய உபேய யாதாம்ய ஞானம் இலோலாதவன் -மூன்றையும் தத் சமம் என்று இருப்பான் –

ஆசார்ய கைங்கர்யம் -தனக்கு பசி விளைந்து உண்கை -பரம போக்யம்-பாகவத கைங்கர்யம் தாய்க்கு சோறு இடுகை -விலக்க ஒண்ணாத கடமை –
பகவத் கைங்கர்யம் -ஒப்பூண் உண்கையும் -பலரில் ஒருவனாக உண்கை – மூப்புக்கு சோறு இடுகையும் -வயசான ஏழை எளியவர்களுக்கு சோறு இடுகை –
என்று வடுக நம்பி அருளிச் செய்வர் –

ஆச்சான் பிள்ளை தேவியார் -மடத்தில் பிள்ளையோடே பிணங்கி -வாரு கோலே போய்க் கிட – என்ன -மடத்தில் பிள்ளையும் –
வாழும் மடத்துக்கு ஒரு வாரு கோலும் வேணும் காணும் – இவ்வார் கோல் தலைக் கடையை விளக்கி –
பஹிரங்க கைங்கர்யம் செய்து -திண்ணையிலே கிடக்கவோ –
திருப் பள்ளி யறையை விளக்கி -அந்தரங்க கைங்கர்யம் செய்து -உள்ளே கிடக்கவோ -என்று விண்ணப்பம் செய்தார் –

பகவத் பிரசாதம் பகவத் ருசியைப் பிறப்பிக்கும்–பகவத் ருசி ஆசார்ய அங்கீகாரத்தை பிறப்பிக்கும்–
ஆசார்ய அங்கீகாரம் ஸ்வீகார ஞானத்தை பிறப்பிக்கும் -எம்பெருமானை உபாயமாக பற்றும் அறிவு –
ஸ்வீகார ஞானம் பகவத் ப்ராப்தியை பிறப்பிக்கும் பகவத் ப்ராப்தி தத் கைங்கர்யத்தை பிறப்பிக்கும்-
தத் கைங்கர்யம் ததீய கைங்கர்யத்தை பிறப்பிக்கும் –

ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் -என்னில் -த்ருஷ்டத்திலே கர்மாதீனம் -அங்கு ஏதேனும் சுருங்கிற்று உண்டாகில் ஆசார்யனை
வெறுத்த போது எம்பெருமானைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – எம்பெருமானை வெறுத்தோம் ஆகில்
ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்

தான் அனுபவிக்கையாவது -அவன் அனுபவிக்கை —அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் செருக்கரைப் போலே
வருந்திப் பெறுவாரும் இரந்து பெறுவாருமாய் இருக்கும் –
செஞ்சொற் கவிகாள் -திருவாய்மொழி -10-7—மங்க ஒட்டு உன் மா மாயம் -10-7-10-
ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -போலே–ஆக பிராப்தாவும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

பகவத்பரர் த்விவிதர் -முமுஷுகள் என்றும் புபுஷுகள் என்றும்–முமுஷுக்கள் தான் த்விவிதர் -பகவத் சரணாகதர்களும் கைவல்யார்த்திகளும்
பகவத் சரணாகதர்கள் த்விவிதர் -உபாசகரும் பிரபன்னரும் –பிரபன்னர் த்விவிதர் -ஆர்த்தரும் த்ருப்தரும்
ஆர்த்த பிரபன்னர் த்விவிதர் -சம்சாரம் அடிக் கொதித்தவர்களும் -பகவத் அனுபவம் பெற்றால் ஒழிய தரிக்க மாட்டாதாரும் –

வ்யதிரிக்தங்களை விட்டு அவனைப் பற்றுகை வைஷ்ணவன் ஆகையாவது –தன்னை விட்டு அவனைப் பற்றுகை ஏகாந்தி யாகை யாவது –
அவனை விட்டு அவனை பற்றுகை பரமை காந்தியாகை யாவது -அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பற்றுதல் –

அம்மங்கி அம்மாள் வார்த்தை –
உடம்பை பற்றி சோறு தேடுவாரும்–உறவு முறை பற்றி சோறு தேடுவாரும்–உடம்பரைப் பற்றி சோறு தேடுவாரும் –
உடம்பர்களைப் பற்றி சோறு தேடுவாரும்–லோகத்தை பற்றி சோறு தேடுவாரும்–உயிரைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனைப் பற்றி சோறு தேடுவாரும்–அவளைப் பற்றி சோறு தேடுவாரும்–அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் பற்றி சோறு தேடுவாரும்–தன்னையும் அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாருமாய்- இறே இருப்பது –

கலக்கத்தோடு கூடின தேற்றம் ப்ரதம அதிகாரிக்கு–தேற்றத்தோடு கூடின கலக்கம் சரம அதிகாரிக்கு –

சர்வேஸ்வரனைப் பற்றுமவர் ஷட் விதர் -அவர்கள் ஆகிறார் -உத்தமன் -உத்தமப்ராயன் -மத்யமன் -மத்யமப்ராயன் -அதமன் -அதம ப்ராயன்
உத்தமன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமானே தனக்கு எல்லா உறவும் என்று இருக்குமவன் –
உத்தமப்ராயன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமான் பக்கல் உபஜீவாம்ச்யதுக்கு விரை கட்டுமவன்
மத்யமன் ஆகிறான் மாதவைஸ்வர்யதுக்கு மஹானான தபசு பண்ணுபவன்-மத்யம ப்ராயன் ஆவான் -மாதவனைப் பெற்றும் வகுத்த வாழ்வு அறியாதவன்
அதமன் ஆவான் -அம்மானைப் பெற்று அன்னத்தை பற்றுமவன்-அதம ப்ராயன் ஆவான் அம்மானைப் பெற்றும் அல்லாதாரை பற்றுமவன் –

கந்தாடை யாண்டான் வார்த்தை -பிரபத்தி நிஷ்டர் மூவர் –சப்த நிஷ்டரும் –அர்த்த நிஷ்டரும் –அபிமான நிஷ்டரும் –

சர்வயோக சந்நியாசி -திரு மழிசைப் பிரான்–சர்வ உபாய சூந்யன் -நம் ஆழ்வார்–உண்டு உபவாசி -திருமங்கை ஆழ்வார்–சர்வ சங்க பரித்யாகி -எம்பெருமானார்

அர்த்த லுப்தன் சம்சாரி–ஜ்ஞான லுப்தன் -ஸ்ரீ வைஷ்ணவன்–கைங்கர்ய லுப்தர் -முக்த நித்யர்–தாஸ்ய  லுப்தர் -எம்பெருமான் –

பக்தருக்கு சோறும் தண்ணீரும் தாரகம் -ஆஜ்ய ஷீராதிகள் போஷக த்ரவ்யம் –ஸ்ரக் சந்தநாதிகள் போக்கியம் –
முமுஷுவுக்கு ஜ்ஞானம் தாரகம் -ஆசார்ய வைபவம் போஷகம் —பகவத் குண அனுசந்தானம் போக்கியம் –
நித்ய முக்தருக்கு மிதுன அனுபவம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் —பகவன் முகோல்லாசம் போக்கியம்-

அஹங்காரம் கழிகை யாவது தேகத்தில் ஆத்ம புத்தி நிவ்ருத்தியும் -தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தி நிவ்ருத்தியும்
-தேஹாந்தர அனுபவத்தில் புருஷார்த்த நிவ்ருத்தியும் –
ஸ்வரூபத்தில் அஹங்காரம் ஆவது -தேஹத்தை அண்டை கொண்டு ஸ்வரூபத்தை உறுமுதல் –
ஸ்வரூபத்தை அண்டை கொண்டு தேகத்தை உறுமுதல் செய்கை -இது கழிகையாவது -அவன் வடிவே வடிவாகையாலே
பர ஸ்வரூபத்துக்கு உள்ளே ஸ்வ ஸ்வரூபம் விளங்குகை –
உபாயத்தில் அஹங்காரம் ஆவது -ஸ்வகத ச்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணுகை –
இது கழிகையாவது -ஸ்வகத ச்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து பரகத
ஸ்வீகாரத்துக்கு விஷயனாகை –
உபேயத்தில் அஹங்காரம் ஆவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை இது கழிகையாவது –
தன் கையாலே தன் மகிரை வகிர்ந்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி கொண்டாட வேண்டாதாப் போலே
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் -என்று இருக்கை .

எம்பெருமான் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்தில் ஈடேறலாம் –
ஸ்ரீ வைஷ்ணவர் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்திலும் இல்லை

ஆண்டாள் வார்த்தை–ஆசார்யன் விஷயத்தில் அபராதம் பண்ணின நாலூரானும் ஈடேறினான் —
பகவத் விஷயத்தில் அபராதம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான்–
பாகவத விஷயத்தில் அபராதம் பண்ணினார் இன்னார் ஈடேறினார் என்று இதுக்கு முன்பு கேட்டு அறிவது இல்லை –

எல்லா வேதங்களையும் -எல்லா சாஸ்திரங்களையும் -எல்லா ஆழ்வார்கள் பிரபந்தங்களையும் -எல்லா ஆசார்யர்கள் பாசுரங்களைப் பார்த்த இடத்தில்
ஒரு வைஷ்ணவனுக்கு நிலை நின்ற ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை –
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதியும் இல்லை

நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாய் இற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெருமக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம்-சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க
மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்

உடலை நெருக்கி உயிர் உடன் உறவு கொண்டாடுவாரைப் போலே காணும் நாரங்களை நெருக்கி நாராயணன் உடன் உறவு கொண்டாடுகை-

ஸ்ரீ வைஷ்ணவர்களை நெகிழ நினைத்தான் ஆகில் -நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதாப் போலேயும்
-மலை முறிந்தால் தாங்க ஒண்ணாதாப் போலேயும் -கடல் உடைந்தால் அடைக்க ஒண்ணாதாப் போலேயும் இதுவும்
அப்ரதி க்ரியமாய் இருப்பது ஓன்று –

நாட்டிலே இருந்து பெருமாளை சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் போருகிறவர்கள் –
ஒருகால் ராகத்வேஷம் கொண்டாடி ஒருவன் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தேற வந்து மற்றவருடைய குற்றங்களை விண்ணப்பம் செய்ய
சேவித்து இருந்தவர்களில் சிலர் -அப்படி சொல்லலாமோ என்ன -ஆச்சான் பிள்ளை -அவர் சொல்லு கிடீர் –
தண்டல் படையினான யமன் -பரிஹர என்றான்-பிராட்டி ந கச்சின் நாபராத்யாதி -யென்றாள் –
ஈஸ்வரன் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி –4-9-2-என்றான் –
ஆழ்வார்கள் -தமர் எவ்வினையர் ஆகிலும் – முதல் திருவந்தாதி -55-என்றார்கள் -இப்படி இருக்க
அவர் குற்றம் இவரை ஒழிய சொல்லுவார் யார் என்று அருளிச் செய்தார் –

சோமாசி யாண்டானுக்கு அப்பிள்ளை அருளிச்செய்தபடி -ஆண்டான் தேவரீர் ஞான வ்ருத் தருமாய் வயோ வ்ருத்தருமாய் -சீல வ்ருத்தருமாய் -ஸ்ரீபாஷ்யம்
திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகராய் -எல்லாவற்றாலும் பெரியவராய் இருந்தீர் –
ஆகிலும் சாத்தி இருக்கிற திருப்பரிவட்டத் தலையிலே பாகவத அபசார
நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும் -என்று அருளிச் செய்தார் –

ஒருவனுக்கு பாகவத சேஷத்வம் ஸ்வரூபம்–பாகவத பிரசாதம் உபாயம் பாகவத கைங்கர்யம் உபேயம் பாகவத அபாசாரம் விரோதி
ஔ பாதிக பாகவத விஷய ராகமும் -நிருபாதிக பாகவத த்வேஷமும்ஒருவனுக்கு நிலை நின்ற தோஷம் –

பிள்ளை வரம் தரும் பெருமாள் தாசர் வார்த்தை –
எம்பெருமான் வெறுக்கும் -மறக்கும் -பொறுக்கும் -ஒறுக்கும் –பிரயோஜனாந்த பரரை கண்டவாறே நம்முடைய ரஷகத்வத்தை
பறித்துக் கொண்டு போவதே என்று வெறுக்கும் -தன்னளவிலே பண்ணின அபசாரத்தை மறக்கும் –
ஆஜ்ஞ்ஞாதி லங்கனத்தை பொறுக்கும் -பாகவத அபசாரத்தை ஒறுக்கும் –

நடாதூர் ஆழ்வான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கையைப் பிடித்துக் கொண்டு போகா நிற்க-
நடுவில் திருவீதியில் ஒரு திருக்குலத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அணுகி வர கைக் கொடுத்து கொண்டு போகிற ஸ்ரீ வைஷ்ணவர்
அவரை ஜாதி நிரூபணம் பண்ணி -கடக்கப் போ – என்ன -ஆழ்வான் அத்தைக் கேட்டு மூர்ச்சித்தார் –
மூர்ச்சை தெளிந்த பின்பு அருகு நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இது என் -என்ன –
திருக் குலத்தில் திரு வவதரித்து இரண்டு ஆற்றுக்கும் நடுவே வர்த்திகப் பெற்ற மஹானுபாவனா பறையன் –
நெடும்காலம் ஆத்மாபஹாரம் பண்ணித்  திரிந்த நான் அன்றோ பறையன் -என்று அருளினார் –
எம்பெருமானாரின் மருமகன் -நடாதூர் அம்மாளின் பாட்டனார்

ஸ்ரீ வைஷ்ணவனுக்குஅடும் சோறு மூன்று -அடாச் சோறு மூன்று
அடாச் சோறாவது -அனுகூலரை நெருக்கி ஜீவிக்கையும் பிரதி கூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கையும் –
சாதனாநதர புத்த்யா கைங்கர்யம் பண்ணி ஜீவிக்கையும்
அனுகூலரை நெருக்குகையாவது -சர்வேஸ்வரன் உயிர் நிலையிலே கோலிட்டடித்த மாத்ரம் -ஆயர் கொழுந்தாய் –திருவாய்மொழி -1-7-3–
பத்தராவியை –பெரிய திருமொழி -7-10-1-/10-1-8–
நாஹமாத்மா ந மாசசே மத் பக்தைஸ் சாது பிரவிநா -மம ப்ராணா ஹி பாண்டவா -என்று உண்டாகையாலே –
இவ்வர்த்தத்தில் வடுக நம்பி வார்த்தை –
பகவத் அபசாரம் -எம்பெருமான் திருமேனியிலே தீங்கு நினைக்கை -பாகவத அபசாரம் -அவன் திரு மார்பிலே -திருக் கண் மலரிலே -கோலிட்டடித்த
மாத்ரம் -யே பிரபன்னா மகாத்மாநஸ் தே மே நயன சம்பத -என்று உண்டாகையாலே –
இவ்வர்த்தத்தில் வானமாமலை யாண்டான் பணிக்கும் படி –
சாத்விகரை நெருக்குகையாவது -மிதுன போக்யமான ஸ்ரீ கௌ ஸ்துபத்தில் கரி இட்டுக் கீறின மாத்ரம்
வகுளாபரண சோமயாஜியார் -தெய்வ வாரி யாண்டானை -எம்பெருமான் இங்கே வந்து அவதரிகைக்கு ஹேது என் என்ன –
பாகவத அபசாரம் பொறாமை என்றார் -ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்க எம்பெருமான் நெஞ்சு உளுக்கும் –
பிரதிகூலர் பக்கல் சாபேஷன் ஆகையாவது -ராஜ மஹிஷி ராஜ சந்நிதியிலே அற்பன்காற் கடையிலே நின்ற மாத்ரம் –

போஜன விரோதி யாவது –
ஒரு வைஷ்ணவன் ஆதரத்தோடே சோறிடப் புக்கால் உண்ணுமவன்-ஆஹார சௌ ஷ்டம் நிரூபிக்கையும் –
இடுமவன் இவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும் —
போஜ்ய விரோதியாவது -இட்டுக் கணக்கு எண்ணும் சோறு
ஸ்வரூப அனுரூபமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் – எ
ன்னது நான் இடுகிறேன் என்கிற போஜனத்தை தவிர்ந்து–
நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2-என்றும் -நல்லதோர் சோறு -திருப்
பல்லாண்டு -8-என்றும் -உண்ணும் சோறு -திருவாய்மொழி -6-7-1–என்றும் இவற்றைப் புஜிக்கை –

ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  அமுது செய்ய பண்ணும் போது-இழவும் இரப்பும் இறுமாப்பும் -சாத்விக கர்வம் –
துணுக்கமும் சோகமும் வாழ்வும் உண்டாக வேணும்-என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளினார் –

பிணச் சோறும் -மணச் சோறும் -விலைச் சோறும் -புகழ்ச் சோறும் -பொருள் சோறும்-எச்சில் சோறும் -ஆறும் த்யாஜ்யம் –
மற்றைச் சோறு இ றே வைஷ்ணவன் உண்ணும்சோறு -என்று திருக்குறுங்குடி ஜீயர் அருளிச் செய்வர் –

தேஹம் திறள் பொறாது -ஸ்வரூபம் தனி பொறாது -பகவத் விஷயத்துக்கு வெளியும்-திறளும் தேட்டமாய் இருக்கும் –
ஷூத்ர விஷயத்துக்கு இருளும் தனிமையும் தேட்டமாய் இருக்கும் –

பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை -இவ்வர்த்தைத்தை ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் –
எங்கனே என்னில் –
வாசுதேவன் வலையுள் அகப்படுதல் -திருவாய்மொழி -5-3-6-
மாதரார் கயற்கண் என்னும் வலையில் அகப்படுதல் -திருமாலை -16-
மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளிலே அகப்படுதல் -நாச்சியார் திருமொழி -9-1-
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -பெரிய திருவந்தாதி -6-3-4-
வானவர்க்கு வன் துணைஅரங்கத்து உறையும் இன் துணையான் -பெரிய திருவந்தாதி -3-7-6-
அவரவர் பணை முலை துணை யா -என்று இருத்தல் –பெரிய திருவந்தாதி 1-1-2-
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -திருவாய்மொழி -1-5-4-
பாவையர் வாய் அமுதத்தை பானம் பண்ணுதல் -பெரிய திருமொழி -1-3-5-
நால் வேதப் பயனை பேணுதல் -திருவாய்மொழி -3-4-6-
மாதரார் வனமுலைப் பயனை பேணுதல் -பெரிய திருமொழி -1-6-1-
ஓன்று இதுவாதல் ஓன்று அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு விதமாக
அருளிச் செய்தார்கள் –

ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் பத்து முகமாக விரோதிக்கும் –
அவை யாவன -ஸ்வா நர்த்தம் -பரா நர்த்தம் -சாஸ்திர விரோதம் -பகவன் நிக்ரஹம் -பாகவத நிக்ரஹம் –
ஆசார்ய நிக்ரஹம் -விரோதி வர்தகத்வம் -ஸ்வரூப விரோதம் -உபாய விரோதம் -உபேய விரோதம் -தேசாந்தர பாவம் –
தேவதாந்தர பரனுக்கு கலாந்தரேணு வாகிலும் பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு -விஷய ப்ரவணனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை -ஆகையால்
ஸ்ரீ வைஷ்ணவன் விஷய பிரவணன் ஆகையாவது -முதலை  முடியோடே விழுங்குமா போலே -என்று ஆச்சான் பிள்ளை –

முமுஷுவுக்கு விஷய ப்ராவண்யமும் தேவதாந்திர பஜனமும் சமாநம் -வெற்றிலையும் சந்தனமுமாய் புக்கு காமனை அர்ச்சிக்கிறதோடு
எருக்கும் தும்பையும் கொண்டு ருத்ரனை அர்ச்சிக்கிறதோடு வாசி இல்லாமையாலே தேவதாந்தரம் தான் இதுக்கு சத்தை –
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் -பெருமாள் திருமொழி -3-3-..
தேவதாந்தர பரனுக்கு அனந்தர ஜன்மத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு யோக்யதை உண்டு –
விஷய பரனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை – ஆகையால் தேவதாந்தர பஜனத்திலும் க்ரூரம் -சௌ சாபேஷன் ஸ்நானம் பண்ணி
வருமா போலும் காண் -வ்ருத்தி ஆசௌம் போன்ற தீட்டு உள்ளவன் -விஷய பிரவணன் பகவத் சந்நிதி நுழைய தக்கவன் அல்லன் –

முமுஷுவுக்கு தேவதாந்தர ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் -மோஷ பிரதிபந்தகம் –
அதில் இரண்டு ப்ராவண்யம் உண்டானால் காலாந்தரத்திலே ஈடேறலாம்–ஒரு பிராவண்யம் பிரதிபந்தகமாகவே விடும் –

அநந்ய பிரயோஜணன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்ரம் அல்லேன் -ஆர்த்த பிரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்கு பாத்ரம் அல்லேன் –
ப்ராமாதிகம் அல்லாமையாலே ஷமைக்கு பாத்ரம் அல்லேன் -உபகாரகன் என்று உகந்தீர்-அனந்யன் என்று இரங்கினீர் அவர்ஜீயன் என்று பொறுத்தீர் –
-என்று ஆச்சான் பிள்ளை நைச்ய அனுசந்தானம் –

முதலியாண்டான் மிளகு ஆழ்வானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
கன்னக் கள்வர் நால்வர் -அவர்களை பரிஹரித்து வர்த்திக்க வேண்டும் —
அவர்கள் ஆர் என்னில் -ஆத்ம அபஹாரி -விபூத்ய அபஹாரி -குணித்வ அபஹாரி -பரதவ அபஹாரி —
ஆத்ம அபஹாரி யாகிறான் -திருமார்பில் கௌஸ்துபத்தை களவு கண்டவன் -எங்கனே என்னில் -ஸ்வ தந்த்ரனாய் இருக்கை –
விபூத்ய அபஹாரி யாகிறான் -ஏகாயநன் -எங்கனே என்னில் மாத்ரு ஹீனன் –குணித்வ அபஹாரி யாகிறான் -மாயாவாதி –
எங்கனே என்னில் நிர்க்குணம் என்கையாலே -பரதவ அபஹாரி யாகிறான் -ருத்ர பரத்வ பிரமாண நிஷ்டன் –
இவர்களுக்கு அஞ்ஞானமும் -அந்யதா ஞானமும் -விபரீத ஞானமும் விஞ்சி இருக்கும் –

அனந்தாழ்வான் நோவு சாத்திக் கிடந்தார் என்று கேட்டருளி திருவேம்கடமுடையான் – அனந்தாழ்வானை அறிந்து வாரும் கோள் -என்று
சில ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு அறிவிக்க -ஆளிட்டு அந்தி தொழுதா னோ என்ன –
திருவேம்கடமுடையான் எழுந்து அருளி வாசலிலே வந்து நிற்க பேசாதே கிடந்தார் –
அனந்தாழ்வான் நான் வர பேசாதே கிடந்தாயீ -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் வரப் பேசாதே யிருந்தேன் ஆகில் அன்றோ
எனக்கு குறை யாவது -என்ன -நாம் உம்மை இதனின்றும் போகச் சொல்லில் செய்வது என் என்ன –
நீர் ஒரு கிழமை முற்பட்டீர் இத்தனை யன்றோ -இருவரும்
திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் இத்தனை -யன்றோ -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமான் இடைச்சி கையிலே கட்டுண்டு இருந்தபடி -ராஜா-அந்தபுரத்திலே மாலையாலே கட்டுண்டு இருந்தால் போலே –

மூன்று வஸ்துவிலே பகவத் வஸ்து வளரும் என்று பணிக்கும்–திரு வனந்தாழ்வான் மடியிலும் -பெரிய திருவடி திரு முதுகிலும்
சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும் -ஜகந நிர்வஹணத்தை மறக்கிறானோ என்று நியமிக்கைகாக
சேனை முதலியார் எழுந்து அருளின வாறே -இந்தாணும் ஐயர் வந்தார் -என்று நாய்ச்சிமார் உள்ளே புக்கருளுவாராம் –

கைகேயி பகவத் அபசாரம் பண்ணினாளே யாகிலும் -தன் மகன் என்றாகிலும் -பாகவத ஸ்நேகம் உண்டாகையாலே முக்தை யானாள் –
சக்ரவர்த்தி பகவத் ஸ்நேகம் பண்ணினானே யாகிலும் முக்தன் ஆகிறிலன் –

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது ரூப ப்ரதான்யம் -சிஹ்ன ப்ரதான்யம் -உக்தி பிரதான்யம் -க்ரியா ப்ரதான்யம் –
சம்பந்த விசேஷ ப்ரதான்யம் -த்யான ப்ரதான்யம் -இவை ஒன்றும் அன்று -பாவ ப்ரதான்யமே ப்ராதான்யம் –
நால்வர் அறிந்த வைஷ்ணத்வம் அன்று -நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே
வைஷ்ணத்வம் -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -திருப்பல்லாண்டு -4-என்ன வேண்டும் –
நாடு வைஷ்ணவன் என்று கை விட வேண்டும் -நகரம் வைஷ்ணவன் என்று கைக் கொள்ள வேண்டும்
-நாடாவது -சம்சாரம் நரகமாவது பரமபதமும் -உகந்து அருளின திவ்ய தேசங்களும் ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –

ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவனுக்கு சரீர விச்லேஷத்து அளவும் மஹா பயமும் மஹா விஸ்வாசமும் அநு வர்திக்கைக்கு காரணம் –
தன்னைப் பார்த்த போது எல்லாம் மஹா பயமும் -எம்பெருமானை பார்த்த போது எல்லாம் மஹா விஸ்வாசமும் —
இரண்டுக்கும் மஹத்தை யாவது -தன்னை அனுசந்தித்த போது சம்சாரத்திலே இருந்தானாகவும் –
இங்கே இருந்தானேயாகிலும் – எம்பெருமானை அனுசந்தித்த போது பரம பதத்தில் இருந்தானாகவும் நினைத்து இருக்கை –

சம்பாஷண சம்பந்தம் -போஜன சம்பந்தம் -அதருஷ்ட சம்பந்தம் -த்ருஷ்ட சம்பந்தம் -இவை பார்த்து செய்ய வேண்டும் -தானிடும் தண்டனுக்கு உகந்திடவும்
தன்னை யிடும் தண்டனுக்கு  குழைந்து  போரவும் -தன் சத்தையை அழிய மாறியாகிலும் தண்டன் கைக்கொள்ள வல்லனாகையும் அதிகாரி க்ருத்யம் –

மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் – அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன
அர்த்தம் ஏது என்று கேட்க -சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான் இருவர் ஆவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும் உடம்பு எடுக்கை பொல்ல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ்வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் -ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –
மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை – ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற
சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம் அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –

தர்சந ரஹஸ்யம் இருக்கும்படி -உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன் உணர்ந்தாலும் நம்மை நோக்கும் என்று கந்தாடை யாண்டான் –

ஆழ்வான் காலத்திலே சந்த்யாவந்தனம் பண்ண எழுந்து அருளாநிற்க -இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அருளிச் செயல் த்வநியைக் கேட்டுக் கொண்டு நிற்க –
கூட எழுந்து அருளினவர்கள் அனுஷ்டானத்துக்கு காலம் தப்புகிறதே -என்ன சந்த்யா வந்தன வைகல்யம் பிறந்தால்
பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளலாம் -பகவத் அனுபவ வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்த சாத்யமன்று -என்று அருளினார் –

அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் கிடக்க -ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் -திருவேம்கடமுடையான் செய்து அருளுகிறது என் –
என்று வெறுக்க -திருவேம்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க -பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே -இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ -நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க -திருவேம்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக்கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே –
நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக -தேவரீரைக் கொண்டு கார்யம் என்
கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன -ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ -தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –

அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று அருளப்பாடு என்றவாறே திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி-

பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க -பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான  செயல் கூடிற்று –
ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –
ஏவம் விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீ ந சங்கல்ப அந்தர்கதர் –

திருமாலையாண்டான் அருளிச் செய்யும்படி -நாம் பகவத் விஷயம் சொல்லிக்கிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அ
து எங்கனே என்னில் -ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் தலையாலே எரு சுமந்து ரஷித்து அதினருகே கூரை கட்டி –
பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால் கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –
அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை – பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும் க்ருதஜர் ஆகாத
சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –

துறை அறிந்து இழிந்து–முகம் அறிந்து கோத்து–விலை அறிந்து பரிமாறி–நினைவு அறிந்து–அடிமை செய்ய வேண்டும் –

ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் -அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் -அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –

அன்ன சாங்கர்யம் –ஜ்ஞான சாங்கர்யம் –கால சாங்கர்யம் –தேச சாங்கர்யம் –போக சாங்கர்யம் –இவை த்யாஜ்யம் -சாங்கர்யம் =கலப்படம்

நடுவில் திருவீதிப் பிள்ளை -சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
-சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –
பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது -ஔ ஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும் அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

திருவேம்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட எழுந்து அருளா நிற்க –
ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட -பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன — அந்த செடியிலே என்ன –
அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி பிரபன்னர் எழுந்தருளின வாறே –
நீர் என்ன நினைத்து விஷம் விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –
பிரபன்னரும் கடித்த பாம்பு பலவானாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு பலவானாகில் திருக் கோனெரியிலெ தீர்த்தமாடி திருவேம்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று
நினைத்து இருந்தேன் என்று விண்ணப்பம் செய்தார் –

ஆழ்வார்கள் மடலூர்ந்தும் நோன்பு நூற்றும் தூது விட்டும் ஸ்வாமிக்கு அசஹ்யமாம்படி செய்கை ஸ்வரூப வ்ருத்தமன்றோ -என்று
எம்பாரை முதலிகள் கேட்க -எம்பாரும் -இவர்கள் செய்வது என் -ஜ்ஞானம் தலை மண்டி யிடும்படி அவனுடைய சௌந்தர்யம்
இப்படி செய்யுமாகில் அது அவன் சௌந்தர்யத்தின் குற்றம் அன்றோ – எங்கனே என்னில் –
சக்கரவர்த்தி வாய் திறப்பதற்கு முன்னே நீங்கள் எல்லாரும் பெருமாளை திருவபிஷேகம் செய்ய வேண்டும் என்பான் என் –
என் பக்கலில் குறை உண்டோ என்ன -நாங்கள் செய்வது என் –
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்தி தே -குணான் குணவதோ தேவ -தேவ கல்பச்ய தீமத -என்று
பிள்ளையைப் பெற்ற உன் குறை யன்றோ என்றார்கள் -என்று அருளி செய்தார் –

சோமாசியாண்டான் -அகளங்க நாட்டாழ்வான் காலத்திலே ஒரு இடையன் பால் களவு கண்டான் என்று கட்டி யடிக்க –
பிள்ளை அத்தைக் கேட்டு மோஹித்து
விழுந்தாராம் –

முலைகள் இல்லையான  யுவதியைப் போலே காணும் ஊமை அல்லாத வைஷ்ணவன் அருளிச் செயலில்
அந்வயியாது ஒழிகை -என்று ஆச்சான் பிள்ளை –

எம்பெருமான் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தாப் போலே வேதங்களும் திருவாய்மொழி யாய் வந்து அவதரித்தன –

பெரிய நம்பியும் -திருக்கோட்டியூர் நம்பியும் -திருமாலை யாண்டானும் கூடி-ஸ்ரீ சந்திர புஷ்கரணிக் கரையிலே திருப்புன்னைக் கீழே எழுந்தருளி இருந்து
தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளி இருக்கும்படியையும்-அவர் அருளிச் செய்த நல் வார்த்தைகளையும் நினைத்து அனுபவித்துக் கொண்டு
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆநந்த மக்னராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற-அளவிலே -திருவரங்க செல்வர் பலி பிரசாதிப்பதாக எழுந்தருளி புறப்பட –
இவர்களுடைய சமாதிபங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டன் இட வேண்டுகையாலே – கூட்டம் கலக்கியார் வந்தார் –
இற்றைக்கு மேல்பட ஸ்ரீ பலி எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டார்கள் –

எம்பெருமானுக்கு இல்லாதது ஒன்றாய் -அவனைப் பெறுகைக்கு பெரு விலையாய் இருக்குமது அஞ்சலியே -இ றே -கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலே
அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடியே இம் முத்ரையாலே அநாத்யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் என்று –

அனந்தாழ்வான் போசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுப் பிரசாதம் கட்டிக் கொண்டு போய் ஒரு இடத்திலே அவிழ்த்தவாறே 
அடைய எறும்பாய் இருந்தது – இத்தைக் கண்டு அனந்தாழ்வான் பயப்பட்டு –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும்ஆவேனே -என்று அருளிச் செய்தவரிலே சிலராய் வர்த்திப்பர்கள் –
இப்படியே கொண்டு போய்த் திருமலையிலே வைத்து வாரும்கோள் -என்று அருளிச் செய்தார் –

நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு -அறிவு நடையாடின போதோடு –சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே 
அநுவர்த்தநத்தோடு -வாசியற மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில்
-அறிவு கலங்கின போது-சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –
அறிவு நடை யாடின போது -திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள்
எம்பெருமான் தன்மையை யார் அறி கிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் -அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –
அநுவர்த்தநத்தில் -அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து -இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே
இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது -இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது ஆவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார் என்கிற இதுவே
பற்றாசாக நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் -அவருக்கு எல்லாம் பரத்வத்திலே யாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலே யாய் இருக்கும் -எங்கனே என்னில்
அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-
அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –
அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் –
சிறிய திருமடல் -72-77- என்றும் –
அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் –
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்குஇழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –
அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –
அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்
அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –
அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –
அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3–என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வார்த்தா மாலையில் -ஸ்ரீ திருமந்த்ரார்த்த வார்த்தை முத்துக்கள் /அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகளும் திரு மந்த்ரார்த்தமும் – – – – – –

October 2, 2015

திருமந்த்ரார்த்த வார்த்தைகள் –

அகாரத்தாலே -சேஷத்வ பிரதிசம்பந்தியைச் சொல்லி —மகாரத்தாலே சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் சொல்லி –
அவதாரணத்தாலே சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹத்வம்–சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –

அகாரத்தாலே -ரஷகனைச் சொல்லி —மகாரத்தாலே -ரஷ்ய வஸ்துவைச்  சொல்லி —சதுர்த்தியாலே -ரஷ்ய ரஷ்ய பாவத்துக்கு
வேண்டும் உறவு சொல்லி -அவதாரணத்தாலே -ரஷ்ய ரஷ்யகங்களினுடைய லஷ்ய லஷணம் சொல்லுகையாலே-உபாயம் சொல்லிற்று –

அகாரத்தாலே பிராப்ய வஸ்துவைச் சொல்லி —மகாரத்தாலே ப்ராப்தாவைச் சொல்லி —சதுர்த்தியாலே பிராப்ய பலமான கைங்கர்யத்தைச் சொல்லி –
அவதாரணத்தாலே -கைங்கர்ய பிரகாரத்தை–சொல்லுகையாலே பிராப்யம் சொல்லிற்று –

பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று–நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி யாலே -புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —ம-என்கிற இத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்கிற இத்தாலே -உபாய ஸ்வரூபம் சொல்லிற்று —ஆகையாலே சகல வேதாந்த ப்ரதிபாத்யமான அர்த்த பஞ்சகம் சொல்லிற்று –

ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி –ஆஸ்ரயமான ஞான ஆனந்த லஷண வஸ்துவை பின்பு சொல்லுகைக்கு ஹேது என் –
என்னில் -அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்களில் காட்டில் –பிரதான நிரூபகம் சேஷத்வம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும் –
தாஸ்ய ரசத்தில் இழிய ஒட்டாத ஆத்ம அனுபவ மாத்ரத்தில் பர்யவசிப்பதொரு அந்தராயம் உண்டாகையாலே தத் பரிஹாரார்த்தமாகவும் –
நெருப்பிலே புக்கு சிலர் வேவாரைக் கண்டால் -அவர்களை இன்னார் என்று பாராதே பற்றி எரிகிற நெருப்பை அவிக்கையிலே யத்னம்
பண்ணுவாரோபாதி -அதாஹ்யமான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் பற்றி-தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை அகற்றுவிக்கையிலே
தாத்பர்யம் ஆகையாலும் -புஷ்பத்துக்கு ஸ்லாக்யதை பரிமளத்திலே-ஆகிறவோபாதி -ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம் இஸ் ஸ்வபாவ
விசேஷத்தாலே ஆகையாலும் -இவ்வோ பிரதான்யத்தை பற்ற-பிரதமத்தில் சேஷத்வத்தை உபாதானம் பண்ணிற்று –

இவ் வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டிய திரு மாங்கல்ய ஸூத்ரம் திரு மந்த்ரம் -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வர் –

சம்சார வர்த்தகமாய இருக்கும் தாலிக் கயிறு–பதினாறு இழையாய் -இரண்டு சரடாய் -இருக்கும் –
கைங்கர்ய வர்த்தகமான மங்கல்ய ஸூத்ரம்–எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் —ஸ்வ ரஷணத்தில் அசக்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியாலும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியாலும் —பலித்த ஈஸ்வரனை நாம் பேணுகையை வெளி இட்டு இருப்பது ஒரு சரடுமாய் இருக்கும் –

பிரமாண -பிரமேய -பிரமாதக்களை சேர அநு சந்திக்கும் படி –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அனந்யார்ஹ சேஷத்வம்-ஏதத் பிரகாசம் -பிரணவம்–அனந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் பொருந்த விட்ட திருவடிகள் –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய சரணத்வம் -ஏதத் பிரகாசம் -நமஸ் ஸூ —அநந்ய சரணத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் அமைத்த திருக்கை –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய போகத்வம் -ஏதத் பிரகாசம் -நாராயண பதம் –அநந்ய போகதவ பிரதி சம்பந்தி -பெருமாள் திரு முறுவல்
இதுக்கு கருத்து -தான் அறிகை -சைதன்யம் அறுகை -சதனாந்தரம் அறுகை-சாத்யாந்தரம் அறுகை-
அதாவது -வேர் அறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை-

திரு மந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்று திருக் குருகை பிரான் பிள்ளான் அநு சந்தித்து அருளுவர் –
திரு மந்த்ரம் பிராப்யம் சொல்லுகிறது என்று -பிள்ளை திரு நறையூர் அரையர் அநு சந்தித்து அருளுவர் —
இவ்வாத்மாவினுடைய அனந்யார்ஹத்வம் சொல்லுகிறது என்று -நஞ்சீயர்  அநு சந்தித்து அருளுவர் —
இவ்வாத்மாவினுடைய பாரதந்த்ர்யம் சொல்லுகிறது என்று-எம்பார் -அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் மூன்று பதத்தாலும் ஞான வைராக்ய பக்திகளை வெளி இடுகிறது என்று முதலியார் அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் மூன்று பதத்தாலும் -அபிஜன வித்யா வருத்தங்களை வெளி இடுகிறது என்று ஆள வந்தார் அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் அர்த்த பஞ்சகத்தையும் சொல்லுகிறது என்று நம்பிள்ளை அநு சந்தித்து அருளுவர் —
பாணிக் க்ரஹணமும் உடன் மண நீரும் சதுர்த்தி கல்வியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்காவல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —
மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும்
நமஸ பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் –
ஸ்வரூபத்தில் உணர்த்தியையும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியையும் -எம்பெருமானைப் பேணுகையும் சொல்லுகிறது என்று
முதலி யாண்டான் அநு சந்தித்து அருளுவர் —-

தாய் மடியிலே கிடந்தது உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையில் அகப்பட்டுக் கூப்பிடுமா போலே தன்னை உணர்ந்த தஸை –
கண்ணை விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப்பயனாய் இருக்குமா போலே –எம்பெருமானை உணர்ந்த தசை –
உபாய தசையிலே எம்பெருமானாலே எம்பெருமானை பெறும் இத்தனை ஒழிய-தம் தாம் நன்மை கொண்டு பெற நினையார் -ஸ்வரூப ஞானம் உடையார் –
இந்த ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்தால்-அகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-ஒருவனுடைய வ்ருத்தத்தை இட்டாதல்-ஜென்மத்தை இட்டாதல் -தண்ணியதாக நினைக்கில் மகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-பிறர் தனக்கு ரஷகர் என்று இருந்தானாகில் உகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-தனக்குத் தான் ரஷகன் என்று நினைத்தபோது நமஸ் ஸுக்கு அர்ஹன் அல்லன் –
-தன் கார்யத்துக்கு தான் கடவன் என்று நினைத்த போது நாராயண பதத்துக்கு அர்ஹன் அல்லன் –
செய்ததொரு கைங்கர்யத்தை தான் உகத்தல் பிறர் உகத்தல் செய்யில் சதுர்த்திக்கு அர்ஹன் அல்லன் –
இவ்வர்த்தம் ஒரு அதிகாரி அறிந்து தவிர்ந்த போது திருமந்த்ரார்தம் கை புகுந்ததாகக் கடவது –
அல்லாத போதை திருமந்த்ரதோட்டை சம்பந்தம் சந்தேஹம் ஆம் இத்தனை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் மேலிட்டதாகில் பிரணவத்தில் பிரதம பதார்த்தை அநு சந்திப்பான் –
இதரர் பக்கலில் சேஷித்வ பிரதிபத்தி நடை யாடிற்றாகில் உகாரராத்தை அநு சந்திப்பான் —
தேவோசஹம் என்று இருந்தானாகில் மகார்த்தத்தை அநு சந்திப்பான் –
ஸ்வ ரஷண விஷயத்தில் கரைந்தான் ஆகில் நமஸ் சப்தார்த்தை அநு சந்திப்பான் –
ஈஸ்வர விபூதிகளோடே காறு காறு என்றானாகில் -நார சப்தார்த்தை அநு சந்திப்பான் —
சப்தாதி விஷயங்களில் போகய புத்தி பிறந்ததாகில் ஆய சப்தார்த்தை அநு சந்திப்பான் –

பிரமாணம் -பத த்ரய யாத்மகமாய் இருக்கும் —பிரமேயம் பாவ த்ரய யாத்மகமாய் இருக்கும் —-அதிகாரி -ஆகார யாத்மகமாய் இருக்கும் –
பிரமாணம் பதத் த்ரய யாத்மகமாகை யாவது -பிரதம பதம் -மத்யம பதம் -த்ருதீய பதம் –
பிரமேயம் பர்வ த்ரய யாத்மகமாகை யாவது -பொருந்த விட்ட திருவடிகளும் -அஞ்சல் என்ற திருக்கையும் —சிவந்த திரு முகமண்டலமும் –
அதிகாரி ஆகார த்ரய யாத்மகமாகை யாவது -அனந்யார்ஹ சேஷ பூதனாய் -அநந்ய சரணானாய் -அநந்ய–போக்யனாய் இருக்கை –
பிரதம பதம் -அனந்யார்ஹ சேஷத்வ பிரகாசகம் —பொருந்த விட்ட திருவடிகள் அனந்யார்ஹதைக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் –
மத்யம பதம் அநந்ய சரணத்வ பிரகாசமாய் இருக்கும் —அஞ்சல் என்ற திருக்கை அநந்ய சரணத்வத்துக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
த்ருதீய பதம் அநந்ய போக்யத்வ பிரகாசமாய் இருக்கும் —-சிவந்த திருமுக மண்டலம் அநந்ய போக்யத்வ பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்-

உத்பத்தியையும் -உடைமையையும் -உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் -உடைமைக்கு உடைமை இல்லாமையையும் –
உத்பத்தி யானவைகளை உடையவனுடைய உயர் நிலையையும் – உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும்
சொல்லுகிறது திரு மந்த்ரம் – -திரு மந்த்ரத்தாலே -திரு அபிஷேகத்தை அநு சந்திப்பான் –

அர்த்த பஞ்சகமும் ரகஸ்ய த்ரயத்தில் சொல்லுகிற படி எங்கனே என்னில் –
திரு மந்த்ரத்தில் -நாராயண பதத்தாலே பர மாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று —
பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —
நம -என்று உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் ஷஷ்ட் யந்தமான மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –

ஸ்வரூபம் சொல்லுகிறது திருமந்தரம்–சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -திரு மந்த்ரம்-ஆத்ம யாதாம்ய பிரதிபாதன பரம் திருமந்தரம்-
பிராப்ய பிரதானம் -திருமந்தரம்

ஆச்சார்ய  அங்கீகாரம் உடையவனுக்கு ஆசார்யன் இரங்கி திரு மந்த்ரத்தில் உபதேசித்த -அர்த்தைத்தை –
பத ஸ -அநு சந்திக்கும்படி சொல்லுகிறது –
ஈஸ்வர சேஷ பூதன் -அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் -விலஷண நிரூபகன் -ததீய பர தந்த்ரன் –
தத் சம்பந்த யுக்தன் -கிங்கர ஸ்வ பாவன் -என்று தன்னை அநு சந்திப்பது –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து
ரஷகத்வ பிரதி சம்பந்தி –பூர்வகமான ரஷ்யத்வம் சொல்லி –
அந்ய சேஷத்வ பிரதி சம்பந்தி -நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹத்வம் சொல்லி –
அசேதன வ்யாவ்ருத்தி பூர்வகமான சேதன வைலஷண்யம் சொல்லி
ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பாரதந்த்ர்யத்தினுடைய எல்லை சொல்லி –
சோபாதிக பந்து –நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தம் சொல்லி –
அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த பிரகாரம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

திருநகரிப் பிள்ளை -பிரதம பதத்தில் -ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வமும் –
சர்வ சேஷித்வமும் -ஜகத் காரணத்வமும் -ஸ்ரீ ய பதித்வமும் -சொல்லுகிறது —எங்கனே என்னில் –
ஆள்கின்றான் ஆழியான் -திருவாய்மொழி -10-1-3-என்றும்
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் -திருவாய் மொழி -1-4-5-என்றும் –
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -திரு நெடும் தாண்டகம் -10-என்றும் –
மூ வுலகும் காவலோன் -திருவாய் மொழி -2-8-5-என்றும் சொல்லுகையாலே–சர்வ ரஷகத்வம் சொல்லிற்று –

நெடியோய்க் கல்லது மடியதோ வுலகு -திரு வாசிரியம் -5-என்றும் –
உலகம் மூன்றுடன் வணங்கு -திருவாசிரியம் -3-என்றும் –
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -திருவாய் மொழி -3-8-1-என்றும் –
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவன் -பெருமாள் திரு மொழி -8-10-என்றும்–
இத்யாதிகளாலே சர்வ சேஷித்வம் சொல்லிற்று –

நாவிக் கமல முதற் கிழங்கே -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதல் -திருவாய் மொழி -8-8-4-என்றும் –
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் மொழி -4-10-1-என்றும் –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய் மொழி -7-5-4-என்றும்–
இத்யாதிகளாலே ஜகத் காரணம் சொல்லிற்று –

திருநாரணன் -திருவாய் மொழி -4-1-1-என்றும் –
திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-என்றும் –
திருமால் -திருவாய் மொழி -8-3-9-என்றும்–இத்யாதிகளாலே ஸ்ரீ ய பதித்வம் சொல்லிற்று – 

தாதர்த்யத்தாலே -ஏறிக் கழிந்த சதுர்த்தி யாலே
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய் –திருவாய்மொழி -5-7-3-என்றும் –
இன்று என்னைப் பொருளாக்கி -திருவாய்மொழி –10-8-9-என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக -பெரிய திருமொழி -8-10-9-என்றும் –
அடியேன் பிறந்தேன் -பெரிய திருமொழி -8-9-8-என்றும்–இத்யாதிகளாலே சேஷத்வம் உதித்தபடி சொல்லிற்று –

த்வதீய பதத்தாலே -ஆத்மாவினுடைய சேஷத்வாந்தர நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வத்தையும் –
ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வத்தையும் சொல்லிற்று -எங்கனே என்னில் –
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் -பெரிய திருமொழி –8-10-5-என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4-என்றும் –
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து -பெரிய திருமொழி –6-3-5-என்றும்-
இத்யாதிகளால் -அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவன் -திருவாய் மொழி -4-10-4-என்றும் –
வானவர் தம்மை யாளுமவன் -திருவாய் மொழி –3-6-4-என்றும் –
நான்முகனும் இந்திரனும் மற்றை யமரரும் எல்லாம் -திருவாய் மொழி –1-9-10-என்றும் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய -திருவாய் மொழி –2-7-12-என்றும் –
இத்யாதிகளாலே -ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வம் சொல்லிற்று –

த்ருதீய பதத்தாலே -ஆத்மாவினுடைய ஞான ஆனந்தத்வமும் -ஞான குணகத்வமும் –
ப்ரக்ருதே பரத்வமும் -நித்யத்வமும் -சொல்லுகிறது -எங்கனே என்னில் –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை -நான்முகன் திருவந்தாதி -54-என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்றும் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-என்றும் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -திருவாய் மொழி -8-8-5-என்றும்–இத்யாதிகளாலே
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வம் சொல்லிற்று –
ஆக பிரதம பதம் சொல்லிற்று ஆய்த்து

மத்யம பதத்தாலே ஆத்மாவினுடைய சாதநாந்தர நிவ்ருத்தியும் -சரீரத்வ சேஷத்வமும் –
ததீய சேஷத்வமும் -பரதந்த்ரனுக்கு அநு ரூபமான ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
வந்து எய்துமாறு அறியேன் -திருவாய் மொழி –7-6-6-என்றும் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -திருவாய் மொழி –5-7-1-என்றும் –
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஒன்றில்லை -திருமாலை -17-என்றும் –
உன்னைக் காணும் மார்க்கம் ஓன்று அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் -திருமாலை -32-என்றும்–
இத்யாதிகளாலே சாதநாந்தர நிவ்ருத்தி சொல்லிற்று –

-உம் உயிர் வீடுடையான் -திருவாய் மொழி -1-2-1-என்றும் –
அடியேன் உள்ளான் -திருவாய் மொழி –8-8-2-என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
என்னுடைய வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் —இத்யாதிகளாலே சரீரத்வ சேஷத்வம் சொல்லிற்று –

பயிலும் திருவுடையார் எவரேலும் -திருவாய் மொழி -3-7-1-என்றும் –
எம்மை யாளும் பரமர் -திருவாய் மொழி –3-7-1- என்றும் –
பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடைய நாதர் -திருவாய் மொழி –3-7-2-என்றும் –
தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1-என்றும் –
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வம் -பெரிய திருமொழி -2-6-4-என்றும் —
இத்யாதிகளாலே ததீய சேஷத்வம் சொல்லிற்று –

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -திருவாய் மொழி –6-2-8-என்றும்
செய்ய சூழ் சுடர் ஞானமாய்-திருவாய் மொழி –3-6-7-என்றும் –
மழுங்காத ஞானமே படையாக -திருவாய் மொழி –3-1-9- என்றும் –
துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -திருவாய் மொழி –3-10-9- என்றும் —இத்யாதிகளாலே சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் -பெரிய திருமொழி -6-7-1-என்றும் –
ஆட் கொள்ள வல்லான் -பெரிய திருமொழி –8-9-6-என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் -திருவாய்மொழி -2-7-7-என்றும் –
அருளி அடிக் கீழ் இருத்தும் -திருவாய்மொழி -8-8-11-என்றும் —இத்யாதிகளாலே சர்வ சக்தித்வம் சொல்லிற்று –

எல்லாம் உலகும் உடைய ஒரு மூர்த்தி -திருவாய்மொழி -5-8-4-என்றும் –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட் செய்வார் மேவிய வுலகும்
மூன்றவை யாட்சி -திருவாய்மொழி –8-1-1- என்றும் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே
யாள்கின்ற வெம்பெருமான் -நாச்சியார் திருமொழி -11-3-என்றும் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -திருவாய்மொழி –1-2-7- என்றும்–
இத்யாதிகளால் அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லிற்று –

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் -திருப்பல்லாண்டு -10-என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -திருவாய்மொழி -7-9-10-என்றும் –
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு -பெரிய திருமொழி -2-8-9-என்றும் –
உயிர்கள் எல்லா வுலகும் வுடையவன் -திருவாய்மொழி -3-2-11-என்றும்–இத்யாதியாலே நிருபாதிக சேஷித்வம் சொல்லிற்று-

ஆக இவற்றாலே -சர்வஞ்ஞத்வம் -சர்வ சக்தித்வம் -அவாப்த சமஸ்த காமத்வம் -பூர்த்தி -நிருபாதிக சேஷத்வம் -பிராப்தி –
சொல்லி ஈஸ்வரனுடைய உபாயத்வம் சொல்லிற்று –

நார சப்தத்தாலே ஈஸ்வரனுடைய சர்வ ஸ்வாமித்வமும் -சர்வ வித பந்துத்வமும் –
சர்வ ஆதாரத்வமும் -சர்வ வித நியந்த்ருத்வமும் சொல்லிற்று -எங்கனே என்னில் –
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் -திரு வாய்மொழி –1-9-1-என்றும் –
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –திருவாய்மொழி -9-6-4-என்றும் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான் -திருவாய்மொழி -8-8-2-என்றும் –
நானுன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை -நான்முகன் திருவந்தாதி -7-என்றும்–
இத்யாதியாலே சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவர் -திருவாய் மொழி -5-1-8-என்றும் –
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -திருவாய்மொழி -7-8-1-என்றும் –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் –
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் அவை யல்ல னாய் -திருவாய்மொழி -3-6-9-என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ வித பந்துத்வம் சொல்லிற்று –

ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1-என்றும் –
நாட்டினான் தெய்வம் எங்கும் -திருமாலை -10-என்றும் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -திருவாய் மொழி -5-2-8- என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ ஆதாரத்வம் சொல்லிற்று –

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய்மொழி -2-9-3-என்றும் –
நீ யோநிகளைப் படையென்று நிறை நான்முகனைப் படைத்தவன் -திருவாய்மொழி -1-5-3-என்றும் –
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் -திருச் சந்த விருத்தம் -109-என்றும் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் -திருவாய்மொழி -6-10-11-என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ நியந்த்ருத்வம் சொல்லிற்று –

இனி சதுர்த்தியாலே –
சேதநருடைய -தேச கால அவஸ்தா பிரகார உசித வ்ருத்ய அபேஷை சொல்லுகிறது -எங்கனே என்னில் –
உள்ள வுலகளவும் யானும் உளன் ஆவன் என்கொலோ -பெரிய திருவந்தாதி -76-என்றும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -திருவாய்மொழி -3-3-1-என்றும் –
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட -நாச்சியார் திருமொழி -4-1-என்றும் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மொடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய்மொழி -8-3-7-என்றும்
சென்றால் குடையாம் முதல் திருவந்தாதி-53-என்றும் –
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29-என்றும்-
அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்றும் –
கூவிப் பணி  கொள்ளாய் -திருவாய்மொழி -8-5-7- என்றும் –
நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே -பெரிய திருமொழி -1-9-1-என்றும் –
இத்யாதிகளாலே வ்ருத்தி அபேஷை சொல்லித் தலைக் கட்டுகிறது –

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிற பாட்டை பிரணவ அர்த்தமாக அனுசந்திப்பது
யானே -திருவாய் மொழி -2-9-9-என்கிற பாட்டை மத்யம பத அர்த்தமாக அனுசந்திப்பது –
எம்பிரான் எந்தை -பெரிய திருமொழி -1-1-6-என்கிற பாட்டை த்ருதீய பத அர்த்தமாக அனுசந்திப்பது —
ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி -3-3-1- என்கிற பாட்டை சதுர்த்தி அர்த்தமாக அனுசந்திப்பது —

அகாரத்தோ விஷ்ணுர் ஜகது தய ரஷா பிரளய க்ருன் மகார்த்தோ ஜீவ்ஸ் தது பகரணம் வைஷ்ணவ மிதம் உகாரோஸ் அனந்யார்ஹம் நியமயதி
சம்பந்த மநயோஸ் த்ரயீ சாரஸ் த்ர்யாத்மா-பிரணவ இமமர்த்தம் சமதிசத் -ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஸ்லோகி முதல் ஸ்லோகம் –

திருமந்தரம் திருமுகப் பாசுரம்-அருளிச் செயல் படி எடுப்பு –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யான சீர்மை -சில எடுத்துக்காட்டுக்கள் ..

November 16, 2012

சிறை இருந்தவள் ஏற்றம் –
தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள்  காரணமாகக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி  மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே —திரு வாய் மொழி –4-8-2-

தூது போனவன் ஏற்றம்
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால்  மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு  நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே –பெரிய திருமொழி  –2-2-3-

ஆச்சார்ய ஹிருதயம் –
திருக் குணங்கள் காட்டும் வரிசை
திருவரங்கம் -சொல்லி -திருமலை -ஆழ்வார் திருநகரி
திரு மால் இரும் சோலை -பின்பு அருளியதற்கு காரணம்
பரத்வம்  குணம் சொல்ல வந்த
வண் பெரு வானகம் உய்ய -திருவரங்கம் சூரணை -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் -சூரணை -160
உறை கோயிலில் பரே  சப்தம் பொலியும் -சூரணை -161
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -சூரணை  -162
திருக்குறுங்குடி -என்னாதே  வைஷ்ணவ வாமனம் -என்பதற்கு காரணம்
மகா பலி இடம் வாமனன்  தாழ  நின்று இரந்தது  போல் நம்பியும்  எம்பெருமானார் இடம் சிஷ்யனாக இருந்ததால் –
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் -என்று இத் திவ்ய தேச திருவாய் மொழி
பலன் சொல்லித் தலைக் கட்டுவதால் –வைஷ்ணவருடைய வாமன ஷேத்ரம் என்று காட்ட
இங்கு லாவண்யம் பூர்ணம் -சமுதாய சோபான லாவண்யம் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த –
என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –
லவணம் -உப்பு உணவில் பயன் படுத்துகையில் முழுமையாய் இருப்பது போல்-
நம்பியின் நிறைந்த சோதி வெள்ளம் -முழுமையாக நிறைந்து இருக்கையாலே – பூர்ணம் என்கிறார் –

நம் பூர்வர்கள் ரகஸ்ய அர்த்தங்களை எங்கு எல்லாம் எடுத்து சொல்ல முடியுமோ
அங்கு எல்லாம் கோடிட்டு காட்டுவர் –
ஈட்டில் நம்பிள்ளை நாலாம் பத்து பிரவேசத்தில் -முதல் மூன்று பத்து  த்வயார்த்தத்தின்
உத்தர வாக்யத்தையும் -அடுத்த மூன்று பத்து பூர்வ வாக்யத்தையும் அனுசந்திப்பதாக காட்டுவர்
முமுஷூ ப்படி -த்வயார்த்தம் -116-சூத்தரத்தில் –
புறம்புண்டான  பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும்
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும்

புறம்புண்டான பற்றுக்களை அடைய -சர்வ தர்மான் -என்கிற பதத்தின் அர்த்தத்தையும் –
வாசனையோடு விடுகையும் -பரித்யஜ்ய -என்கிற பதத்தின் அர்த்தத்தையும் –
எம்பெருமானை -மாம்  என்கிற பதத்தின் அர்த்தத்தையும்-
ஏ-என்கிற ஏகாரத்தாலே  ஏகம்  என்கிற பதத்தின் அர்த்தத்தையும்-
தஞ்சம் -சரண பதத்தின் அர்த்தத்தையும்-
பற்றுகை -வ்ரஜ-பதத்தின் அர்த்தத்தையும்-
அடைவே சொல்லுகையாலே -கருத்தை அருளி இட்டு விளக்கிக் காட்டி அருளுகிறார் –

மன்னு குறுங்குடியாய்–பெரியாழ்வார் திரு மொழி –1 -6 -8
-பிரளய த்திலும் அழியாதபடி வர்திக்கிறவனே-
ஸ்ரீ கிருஷ்ணன் திரு மாளிகையை சாகரம் அழித்தால் போல் அழியாமல்-

பொத்த உரல் –  பெரியாழ்வார் திரு மொழி — 1- 10- 7- –
பொத்துண்ட உரல் -நல்ல உரலானால்  நடுவே தேடுவார் உண்டாய் இருக்குமே என்று ஆய்த்து-
பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது-

ஸ்ரீ பெரியாழ்வார் நான்காம் பத்தில் திருவரங்கம் அனுபவிக்கப் புக
அவதாரிகை மா முனிகள் காட்டும் விதம்
பரத்வாதி குணங்கள் பிரகாசிக்கை –சகலரும் அனுபவிக்கை –
முன் அனுபவித்த திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று –
சகல லோகங்களுக்கும் அதீனம் –பகலிருக்கை –ஸ்ரீயப்பதித்வம் –
விபவ அவதாரத்தை அனுபவித்த அநந்தரம் -மற்றைய திவ்ய தேசங்களை அனுபவித்த அநந்தரம்
அவற்றுக்கு வேர்ப் பற்றான திருவரங்கத்தை அனுபவித்து –
பரத்வதாதிகளில் உண்டான குணங்கள் —
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவன்
வ்யூஹம் –கடலிடம் கொண்ட கடல் வண்ணன்
அந்தர்யாமி -கட்கிலீ
விபவம் -காகுத்தா கண்ணனே
அர்ச்சை -திருவரங்கன் –

உபய விபூதி அதீனம் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –ஆள்கின்ற எம்பெருமான் -நாச்சியார் திரு மொழி -11 -3 –
சகல தேசத்தில் உள்ளாறும் உஜ்ஜீவிக்கை –
வன் பெரு வானகம் உய்ய -அமரர் உய்ய -மண் உய்ய -பெருமாள் திரு மொழி – -1 -10 –
முன்பு அனுபவித்த திவ்ய தேசங்களுக்கு வேர் பற்றான இடம் –
திரு மால் இரும் சோலை –
மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் –  நாச்சியார் திரு மொழி- -4 – 1 –
-என்றும் -பொன்னி சூழ் அரங்க நகருள் முனிவனை -பெரிய திரு மொழி – 9- 9- 2- -என்றும்
திருவரங்கன் அவ்விடம் அழகனாக இருக்கிறான் என்றும்
திருக் கோஷ்டியூர் –
பயின்றது அரங்கம் திருக்கோட்டி -இரண்டாம் திருவந்தாதி – – –
தேனார் திருவரங்கம் தென் கோட்டி -மூன்றாம் திருவந்தாதி –
என்று திருவரங்கம் பெருமானே அங்கு அருள் பாலிக்கிறான் -என்றும்
உகந்து அருளின நிலங்களுக்கு எல்லாம் பகல் இருக்கை –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திருமடல் பாசுரத்தால் அறுதி இட்டு –
சகல தேசத்திலும் ருசி பிறந்தார் எல்லாடும் அனுபவிக்கும்படி –
தென் நாடும் வட  நாடும் தொழ  நின்ற -பெரியாழ்வார் திருமொழி – – 4- 9- 11- –
யாவரும் வந்தடி வணங்க -பெருமாள் திருமொழி – 8- 10-
அனைவருக்கும் ருசி பிறந்து பாடி  தொழுது
ஸ்ரீ ய பதித்வம் –
திருவாளன் இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற -பெரியாழ்வார் திருமொழி – – 4- 9- 10- –
மா முனிகள் இந்த திரு மொழிக்கு அவதாரிகையாக
திருவரங்க மகிமை அருளி -நாம் அனுபவிக்க கொடுத்தருளுகிறார்

மிடறு மிடறு மெழு மெழுத் தோட –வெண்ணெய்  விழுங்கி -பெரியாழ்வார் திருமொழி — -3 -2 -6 – –
ஒதனா பூபாதிகள் அமுது செய்யும் போது குறிக் கொண்டு –
திருப் பவளத்தில்  இட்டு இருக்கும் என்று மெள்ள  மிடற்றுக்கு கீழே இழிச்ச வேணும் இறே
மிடற்றில் அழுத்தாமல் மெழு மெழுத்து உள்ளே ஓடும்படி இறே  இருப்பது –
இலட்டும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்க  வேண்டுமானால்
கல் உண்டோ என்று சோதித்து மெதுவாக கடித்து உண்ண  வேண்டும் –
வெண்ணெய்  ஆகில் வருத்தம் இன்றி மெழு  மெழு  என்று உள்ளே இழியுமே –
கண்ணன் வெண்ணெய்  களவு காண்கையில் திட பதார்த்தம் ஆனால்
அத்தைக்  களவு கண்டு ஓடுகையில் அவசரத்தில் கடித்து முழுங்குவது கடினம்
த்ரவ்ய பதார்த்தமானால் அதைப் பாதுகாப்பாக எடுத்து செல்வது கடினம்
வெண்ணெய்க்கு இவ்விரண்டு தோஷமும் இல்லை -வாயில் அடைத்துக் கொண்டு
செல்லுகையில் பிரயத்தனம் இல்லாமல் முழுங்கி விடலாமே –

ஸ்ரீ வசன பூஷணம் சூரணை – 82-பிராட்டி சக்தியை விட்டாள் -திரௌபதி  லஜ்ஜையை விட்டாள்
சூரணை -81 -பிராட்டிக்கும் திரௌபதி க்கும் வாசி சக்தியும் அசக்தியும் –
பிராட்டி சக்தி  வெளிப்பட்டது எப்போது -ஸீ தோ  பவ -என்று அக்நியை  நியமித்து
திருவடிக்கு இட்ட அக்நியை  தணித்தது அறிவோமே -அதை -தக்தோ பவ -என்று
இலங்கையை எரிக்க விட்டு இருக்கலாமே -திரௌபதி லஜ்ஜையை விட்டது தான்
அரிதான செயல் -எம்பெருமானே வந்து தன்னை ரஷிப்பது தான் ஸ்வரூபம் என்று
அறிந்த பிராட்டி பேரளவு உடையவள் -அப்படி பேரளவு உடையவளாக இல்லாமல் இருந்தும்
பெரும் சபை நடுவே -கண்ணனை விச்வசித்து -லஜ்ஜையை விட்டது மிக  அரிய செயல் –
என்று மா முனிகள் காட்டி அருளுகிறார் –

குலம்  பாழ் படுத்த பெருமான் -பெரியாழ்வார் திருமொழி – -4 -2 -1 –
விபீஷணன் இவர் குலத்தவன் இல்லையே
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை -ஆண்டாள் –
விபீஷணன் பிரகலாதன் இருவரும் நல்ல அரக்கர்கள்
இலங்கை அரக்கர் குலம்  முறுடு தீர்த்த பிரான் -திருவாய்மொழி – – – –
பெருமாள் கைக் கொண்டு அருளின போதே அந்த ஜன்மம் மாறிப் போந்தது இறே -மா முனிகள் ஸ்ரீ ஸூ க்தி
கொன்று திரியும் அரக்கரை குலம்  பாழ் படுத்து –
ஆதலால் இவ்விடத்தில் சொன்ன அரக்கர் ராவணாதி களும் அவர்களை சேர்ந்தவர்களும் –
ஆதலால் குலம்  பாழ் படுத்து -என்னக் குறை  இல்லை –

பரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகை கண் பெறுத்த  பெருமான் -பெரியாழ்வார் திருமொழி -4 -7 -5 –
இந்த லோகத்தை கண் பெறுவித்தவன் -நிர்வாக வஸ்துவாய்ச் சொல்கிறது –
இத்தால் விரோதியான ராவணனை நிரசித்து -அவனாலே நெருக்குண்ட பிராணிகளை
எல்லாம் ரஷிக்கையாலே -இந்த லோகத்துக்கு தானே ரஷகன் என்னும் இடம் அறிவித்தான் -என்கை-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-263 -278–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 16, 2012

இனி இந்த ஸ்லோக அர்த்தத்தில் ருசி ஒருவனுக்கு உண்டாகையில் உள்ள அருமையையும் –
இந்த ஸ்லோகம் தனக்கு இன்னதிலே நோக்கம் என்னுமத்தையும் –
இதில் விஸ்வஸ் உத்பத்தியின் அருமையையும் –
ஈஸ்வரன் தான் முதலிலே இத்தை உபதேசியாமைக்கு ஹேதுவையும் –
வேத புருஷன் உபயாந்தரங்களை  விதிக்கைக்கு ஹேதுவையும் –
உபாயாந்தரங்களை ஸ்வரூபேண த்யஜிக்கும் அளவில் தோஷம் இல்லை என்னுமத்தையும் –
அவை தானே முகாந்தரேண அந்விதங்கள் ஆகையாலே ஸ்வரூபேண த்யக்தங்கள் அன்று என்னும் இடத்தையும் –
பேற்றுக்கு சாதனம் இன்னது என்னுமத்தையும் –
பல சித்திக்கு இவன் பக்கல் வேண்டும் அம்சத்தையும் –
ஈஸ்வரனுக்கு இவனுடைய ஸூக்ருதம் அநிஷ்டம் என்னுமத்தையும் –
இவ் அர்த்தத்தில் ஆஸ்திகயாதிகள் உண்டாய் பிழைத்தல்-இல்லையாகில் நசித்தல் இத்தனை -என்னுமத்தையும் –
வ்யவசாயஹீனன் இதில் அந்வயித்தால் விநாச பர்யந்தமாம் என்னுமத்தையும் –
இதுக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தையும் –
அடைவே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————————————————

சூரணை -263
உய்யக் கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

அவற்றில் பிரதமத்தில் -இதில் ஒருவனுக்கு ருசி பிறக்கையில் உள்ள அருமையை தர்சிப்பிக்கைக்காக
ஓர் ஐதிக்யத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
தத்வ நிர்ணயம் பண்ணின உய்யக் கொண்டார் பக்தி நிஷ்டராய் இருக்கையாலே -அவரை
பிரபத்தி நிஷ்டராம் படி பண்ண வேண்டும் என்று அவருக்கு இந்த ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்த அளவிலே –
அர்த்த ஸ்திதி அழகிதாய்  இருந்தது -ஆகிலும் அத்தை விட்டு இத்தை பற்ற தக்க ருசி எனக்கு இல்லை -என்ன –
வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி பிறந்தது இல்லை -என்று
அவர் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது -என்கை –

—————————————————-

சூரணை -264
இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு –

இனி இந்த ஸ்லோகத்துக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் -தான் ஒரு தலையுமாய் இருக்கிற இந்த இச் சேதனனுக்கு தானே –
நிரபேஷ சாதனமாய் -ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு –
ஸ்வ ப்ராப்தியை பண்ணிக் கொடுக்கும் -ஸ்வாதீன சகல ப்ரவர்த்தகனான ஈஸ்வரனுடைய
ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பர்யம் -என்கை-

————————————————————-

சூரணை -265
இது தான் அநுவாத கோடியிலே-என்று வங்கி புரத்து நம்பி -வார்த்தை –

இனி இதில் விஸ்வாஸ உத்பத்தியில் அருமையை அருளிச் செய்கிறார் –
அதாவது இந்த ஸ்லோக அர்த்தம் தான் அனு வாதத்தினுடைய கோடியிலே -என்று
ஆப்த தமரான வங்கி புரத்து நம்பி அருளிச் செய்யும் வார்த்தை -என்கை –
அனுவாதம் -கூறிய ஒன்றை மீண்டும் கூறுவது -அர்ஜுனனன் அறிந்தவற்றை மீண்டும் கண்ணன் அருளிச் செய்கிறான் –

————————————————————

சூரணை -266
அர்ஜுனன்-கிருஷ்ணனுடைய ஆனை தொழில்களாலும் –
ருஷிகள் வாக்யங்களாலும் –
கிருஷ்ணன் தன் கார்யங்களிலே அதிகரித்துப் போருகையாலும் –
இவனே நமக்கு தஞ்சம் என்று துணிந்த பின்பு –
தன்னைப் பற்றி சொல்லுகையாலே –
அது எத்தாலே -என்ன -அருளி செய்கிறார் –

அதாவது –
இதுக்கு அதிகாரியான அர்ஜுனன் பால்யமே தொடங்கி கிருஷ்ணனுடைய அகடிதகடநா
சாமர்த்திய பிரகாசமான அதி மானுஷ சேஷ்டிதங்களாலும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஸ்ரீரார்ணவ நிகேதன
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
புண்யா த்வாரவதீ யத்ர தத்ராச்தே மது சூதன
சாஷாத் தேவ புராணோ அசௌ சஹி தர்மஸ் சனாதன
யத்ர நாரயனோ தேவ பரமாத்மா சனாதன
தத்ர க்ருத்ச்னம் ஜகத் பார்த்த தீர்த்தாந் யாயதநாநி ச
யே ச வேத விதோவிப்ரா யே சாத்யாத்மா விதோ ஜனா தேவதந்தி
மஹாத்மானம் கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ராம் பரமுச்யதே
புண்யா நாம்பி புண்யா அசசௌ மங்களாணாம் ச மங்களம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நா முத்பத்தி ரபி சாப்யய
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம்  விச்வம் சராசரம் -என்றும்
இத்யாதிகளில் இருந்துள்ள பராவர தத்வ யாதாத்ம்ய வித்துக்களான ருஷிகள் வாக்யங்களாலும் –
பல்யாத்ப்ரப்ருதி புரவாச தசையோடு -வன வாச தசையோடு -வாசியற கிருஷ்ணன்
தன் கார்யத்துக்குக் கடவனாய் நோக்கிக் கொண்டு போருகையாலும் –
இவன் சொல்லுகிற உபாயங்கள் எல்லாம் நமக்கு தஞ்சம் அன்று -இவனே நமக்கு தஞ்சம் –
என்று விச்வசித்த பின்பு -ஆனால் என்னை பற்று -என்று சொல்லுகையாலே -என்கை –

————————————————————–

சூரணை-267-
புறம்பு பிறந்தது எல்லாம் இவன் நெஞ்சை சோதிக்கைக்காக-

இது தன்னை முதலில் உபதேசியாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
அதாவது
யச்சரேய சியான் நிச்சிதம் ப்ருஹூ தன்மே சிஷ்ய ஸ்தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் –
என்ற இவனுக்கு உபாய உபதேசம் பண்ணத் தொடங்கிகிற அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே
உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் -அவ்வளவிலே பர்யவசித்து விடுமோ -அவற்றினுடைய
தோஷத்தாலே இவ் உபாய உபதேசத்துக்கு  அதிகாரி யாமோ -என்று
இவனுடைய ஹ்ருதயத்தை  சோதிக்கைக்காக என்கை –

——————————————————–

சூரணை -268
வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது -கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகாரங்களால் வந்த களிப்பு அற்ற ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக–

ஆனால் இவன் அன்றோ இப்படி ஹ்ருதய சோதன அர்த்தமாக உபாயந்தரங்களை உபதேசித்தவன் –
வேத புருஷன் அவற்றை விதிப்பான் என் -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆப்த தமனான வேத புருஷன் -விஞ்ஞாய  ப்ரஞ்ஞாம் குர்வீத –
ஒமித்யாத்மானம்  த்யாயத ஆத்மானமேவ லோகமுபாசீத
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்யோ  நிதித்யா சிதவ்ய-இத்யாதிகளாலே
உபாயாந்தரங்களை மோஷ சாதனமாக விதித்தது –
பட்டி தின்று திரிகிற பசுவுக்கு இடைஞ்சு வசப்படுகைக்காக கழுத்திலே தடியை கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகார வச்யனாய் களித்து திரிகிற இவனுக்கு –
ஜன்மான் தரசஹஸ்ரேஷூ  தபோ ஞான சமாதிபி -என்கிறபடி
காய க்லேச ரூபமான கர்ம அனுஷ்டானம் -இந்த்ரிய ஜெயம் -முதலான
அரும் தேவைகளாலே செறுப்பு உண்டு அந்த களிப்பு போய் -பகவத் பாரதந்த்ர்யம் ஆகிற
ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக -என்கை –

——————————————————–

சூரணை -269
சந்நியாசி முன்பு உள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்
இவற்றை விட்டால் குற்றம் வாராது –

ஆனால் இப்படி ஸ்வரூப ஞான உதய ஹேதுவான இவற்றை விட்டால் குற்றம் ஆகாதோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
சரம ஆஸ்ரமத்திலே அந்விதன் ஆனவன் பூர்வாஸ்ரம தர்மங்களை விடுமா போலே -அந்ய உபாயங்களினுடைய
ஸ்வரூப விரோதித்வாதிகளாலே -சித்த உபாயத்தில் இழியும் படி இவ்வளவான ஞான பாகம் பிறந்தவன் –
இவ் உபாயந்தரங்களை விட்டால் தோஷம் ஆகாது -என்றபடி –

————————————————————-

சூரணை -270
இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் –

இவை தான் ஆகாரந்தரத்தாலே அன்விதங்கள் ஆகையாலே இவற்றில் இவன் தனக்கு
ஸ்வரூப த்யாகம் இல்லை -என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
சாதனாந்தர பரித்யாக பூர்வகமாக சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணின இவ் அதிகாரி தான் –
கர்ம ஞானாதிகள் ஆகிற  இவை தன்னை ஸ்வரூபேண த்யஜித்து இலன் -என்கை –

———————————————————-

சூரணை-271-
கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –
அது எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்-

நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே-
ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும் –

பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே –
போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான
ருசியிலே அந்தர்பவிக்கும் –

சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே -அத்யந்த
பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-

———————————————————

சூரணை -272
ஒரு பலத்துக்கு அரிய  வழியையும் -எளிய வழியையும் உபதேசிக்கையாலே –
இவை இரண்டும் ஒழிய -பகவத் ப்ரசாதமே உபாயமாகக் கடவது –

பக்தி பிரபத்திகள் இரண்டையும் கழித்தால்
இவன் தனக்கு பல சாதனம் ஆவது எது -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது-
பகவத் ப்ராப்தி ஆகிற ஒரு பலத்துக்கு –
ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
அநேக ஜன்மங்களிலே கர்ம ஞானாதிகள் ஆகிற அங்கங்களாலே சாதிக்கப் படுமதாகையாலே
அரிதாய் இருந்துள்ள பக்தி மார்க்கத்தையும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சக்ரு தனுஷ்டேயம் ஆகையாலே -எளிதாய் இருந்துள்ள பிரபத்தி மார்க்கத்தையும் -உபதேசிக்கையாலே
சாதனா கௌரவ லாகவங்களில் தாத்பர்யம் அன்றிக்கே தத் வயாஜேன பல பிரதானாக
நின்றுள்ள அவனுடைய ப்ரசாதமே பிரதானம் ஆகையாலே –
பக்தி பிரபத்திகள் ஆகிற இவை இரண்டும் ஒழிய
பகவானுடைய  ப்ரசாதமே உபாயமாக கடவது -என்கை –

——————————————————————

சூரணை -273
பேற்றுக்கு வேண்டுவது விலக்காமையும் இரப்பும்-

ஆனாலும் பேற்றுக்கு இவன் பக்கலிலும் ஏதேனும் உண்டாக வேண்டாவோ –
என்ன அருளிச் செய்கிறார்
அதாவது
பலசித்திக்கு சேதனன் பக்கல் உண்டாக வேண்டுவது –
ஸ்வ யத்னத்தாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காது ஒழிகையும் –
அது புருஷார்த்தம் ஆகைக்கு உறுப்பான இரப்பும் -என்கை-

———————————————————————-

சூரணை -274
சக்கரவர்த்தி திரு மகன் பாபத்தோடு வரிலும் அமையும்
இவன் புண்யத்தைப் பொகட்டு வர வேணும் என்றான் –

இங்கன் அன்றிக்கே இவன் பக்கலிலும்  சில ஸூக்ருதம் உண்டானால் ஆகாதோ -என்ன
உபாய பூதனுக்கு அநிஷ்டம் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ராமோ விக்ரகவான் தர்ம -என்கிற சக்கரவர்த்தி திரு மகன் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று பபிஷ்டனான ராவணன் தான் ஆகிலும்
அழைத்து வாரும் -என்கையலே -பாபம் பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கு உடல் அல்லாமையலே
பாபத்தோடு வரிலும் அமையும் -என்றான் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று இவன் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே
பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடலான புண்யத்தை பொகட்டு  வர வேணும் என்றான் -என்கை
ஆகையால் சகாயாந்தர சம்சர்க்க அசஹனான -உபாய பூதனுக்கு இவன் பக்கல் ஸூக்ருதம் அநிஷ்டம் என்று கருத்து –

———————————————————————–

சூரணை -275
ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –

இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய
மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –
அதாவது –
இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய்
இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ –
என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –
என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

———————————————————————–

சூரணை -276
வ்யவாசாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம் -ஆமத்தில் போஜனம் போலே –

வ்யவசாய ஹீனனுக்கு இதில் அந்வயம் விநாசத்துக்கு உடலாம் என்னுமத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது –
இதில் சொல்லுகிற  த்யாக ஸ்வீகாரங்களுக்கு ஈடான வ்யவாசயம் இல்லாதவனுக்கு
இதில் உண்டான அந்வயம் அஜீர்ண தசையில் பண்ணின போஜனம் மரண ஹேதுவாமா போலே
விநாச ஹேதுவாய் பர்யவசிக்கும் -என்கை –

—————————————————————–

சூரணை -277
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் –

இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
செம்மை உடைய திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –நாச்சியார் திரு மொழி –11-10-என்று கரண த்ரயத்தாலும் -செவ்வியராய் –
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாய்க் கொண்டு -கோவிலிலே சாய்ந்து அருளினவர் தாம் –
அர்ஜுன வ்யாஜ்யத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த
யதார்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்கிற வார்த்தையை
பெரிய ஆழ்வார் கேட்டு -தந் நிஷ்டராய் இருபபார்-என்கிறபடி -இவ் அர்த்தத்துக்கு
அதிகாரிகள் இது கேட்டால் இதன் படியே நியதராய் இருக்குமவர்கள் -என்கை –

—————————————————————

சூரணை -278
வார்த்தை அறிபவர் -என்கிற பாட்டும்
அத்தனாகி -என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அநு சந்தேயம் –

இவ் அர்த்த நிஷ்டரான ஆழ்வார்கள் உடைய திவ்ய ஸூக்தி யில் இதுக்கு
அர்த்தமாக அநு சந்திக்க படுமவற்றை அருளி செய்து -இது தன்னை
நிகமிக்கிறார் –

அதாவது-
வார்த்தை அறிபவர் பேர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளி உற்று
மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -திரு வாய் மொழி -7-5-10–என்று –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்ற நல் வார்த்தையை அறியும் அவர்கள்
பரணி கூடு வரிந்தால் போலே -இவ் ஆத்மாவை சூழப் பொதிந்து கிடக்கிற ஜன்மங்களோடும்-
அவை புக்க இடத்தே புகக் கடவதான வ்யாதியோடும் –
அங்கனே ஆகிலும் சிறிது நாள் செல்லாத படி இடி விழுந்தால் போல் வரும் ஜரையோடும் –
அங்கனே ஆகிலும் இருக்க ஒண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான-வினாசமுமாகிற -இவற்றை –
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி -அவை போன்ற அநந்தரம் வரக் கடவதான –
கைவல்யம் -ஆகிற மகா துக்கத்தை சவாசனமாகப் போக்கி –
பாத ரேகை போலே தன் திரு அடிகளின் கீழ் சேரும் படி பண்ணி –
புனராவ்ய வசிதராய் கொண்டு தங்களுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு –
விரோதி நிவர்தகனான ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆள் ஆவாரோ –
என்று நம் ஆழ்வார் அருளிச் செய்த -வார்த்தை அறிபவர் -திரு வாய் மொழி -7-5-10-என்கிற பாட்டும் –

முத்தனார் முகுந்தனார் ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் புகுந்து -நம்முள் மேவினார் -ஏழை நெஞ்சமே
எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று
ஹேய ப்ரத்ய நீகர் ஆகையாலே -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தபூமி பிரதர் ஆனவர் –
சகல தேக வர்திகளான ஆத்மாக்களும் ஞான ஏக ஆகாரதையா ஒத்து -தேவாதி பேதத்தலே
ஒவ்வாமல் இருக்கும் பல வகைப் பட்ட ஜன்மங்களைப் போக்கி –
நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை நித்ய ஸூரிகள் கொள்ளும் அடிமையைக் கொள்ளுகைக்காக
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும்  பிதாவாகவும் –
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவாகவும் -அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமி யாயும் –
இப்படி சர்வ வித பந்துமாய் –
நம்முடைய தண்மையையும்-தம்முடைய பெருமையும் பாராதே -நம்முடைய சர்வ பரத்தையும்
தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக ஹேயமான நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினர் –
அறிவிலியான நெஞ்சே -நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஞ்ஞராயோ -அவன் அஞ்ஞனாயோ
ஹிதத்தை ப்ரவர்த்திப்பைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்கைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று உபகரிக்கும் அவனே இருக்க –
எத்தாலே நீ துக்க சாகரத்தில் கிடக்கிறது -என்று
திரு மழிசைப் பிரான் அருளி செய்த -அத்தனாகி -திரு சந்த விருத்தம் -115- என்கிற பாட்டும்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக அநு சந்தேயம் -என்கை –

—————————————————————-

ஆக -இத்தால் –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் -சர்வ தரமான்-
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் -பரித்யஜ்ய –
அந்த தர்ம த்யாக பூர்வகமாக பற்றும் விஷயத்தின் உடைய சௌலப்யாதி குண யோகத்தையும் -மாம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவினுடைய-சகாய அசஹத்வ லஷணமான நைர பேஷத்தையும் -ஏகம்-
நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் -சரணம்-
அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் -வ்ரஜ –
ஸ்வீக்ருதமான உபாயத்தின் உடைய ஞான சக்த்யாதி குண யோகத்தையும் -அஹம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் -த்வா –
அதிகாரிக்கு விரோதியான பாப சமூகத்தையும் -சர்வ பாபேப்யோ –
அப் பாப விமோசன பிரகாரத்தையும் -மோஷ இஷ்யாமி –
அப் பாப விமோசகனைப் பற்றின அதிகாரி உடைய நைர்பர்யத்தையும்-மா ஸூச -என்று
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-254-262-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 16, 2012

சூரணை -254
மோஷ இஷ்யாமி -முக்தனாம் படி பண்ணக் கடவன் –

அநந்தரம் –
சதுரத்த பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மோஷ இஷ்யாமி-என்று -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்
அதாவது –
இவற்றில் நின்றும் விடப் பட்டவனாம் படி பண்ணக் கடவன் -என்கை-

—————————————

சூரணை -255
ணி-ச்சாலே -நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டு
போம் காண் -என்கிறான் –

அதாவது – இஷ்யாமி -என்கிற ணிச்சாலே ஸ்வயம் கர்த்தா வாகை அன்றிக்கே –
தான் பிரயோஜக கர்த்தாவாய் விடுவிக்கக் கடவேன் -என்கையாலே
நானும் இதுக்கு ஒரு யத்னம் பண்ண வேண்டா –
நீயும் இதுக்கு பிரார்த்திக்க வேண்டா –
நீ என்னை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே -உன்னைக் கண்டு தாமே
பயப்பட்டு -கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு அந்தாதி -54-
என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம் காண்
என்று அருளிச் செய்கிறான் -என்கை-

———————————————————-

சூரணை -256
என்னுடைய நிக்ரஹ பலமாய் வந்தவை
நான் இரங்கினால் கிடக்குமோ -என்கை –

இப்படி அருளிச் செய்ததின் கருத்தை வெளி இடுகிறார் –
அதாவது –
பாபங்கள் ஆகிறன-குப்பையிலே ஆமணக்கு போலே மிடற்றை பிடிப்பது
ஒன்றன்று இறே  -சேதனன் பண்ணின கர்மங்கள் ஷண த்வம்சிகள் ஆகையாலே –
அப்போதே நசித்துப் போம் -அஞ்ஞன் ஆகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போக –
ஸ்வதஸ்  சர்வஞனாய் ஓன்று ஒழியாமல் உணர்ந்து இருந்து ப்ராப்த காலங்களிலே
தப்பாமல் நிறுத்து அனுபவிக்கிற என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -அந்த நிக்ரஹ
பலமாய் வந்தவை -நிக்ரஹத்துக்கு பிரதி கோடியான அனுக்ரஹத்தை நான் பண்ணினால்
அவ் விஷயத்தின் பின்னே கிடக்குமோ -என்கை- இதுக்கு கருத்து என்கிற  படி –

—————————————————————-

சூரணை -257
அநாதி காலம் பாபங்களைக் கண்டு நீ பட்ட பாட்டை
அவை தாம் படும் படி பண்ணுகிறேன் –

தன்னடையே விட்டு போம் என்கிற இடத்தில் அபிப்ராயத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
அநாதியான காலம் எல்லாம் துக்க அவஹமான பாபங்கள் வந்து மேலிடப் புக்கால் –
அவற்றைக் கண்டு நீ நடுங்கின நடுக்கம் எல்லாம் -மத் ஆஸ்ரயண ராஜ குல மகாத்மயம் உடைய –
உன்னைக் கண்டு அவை தான் குடல் கரிந்து நடுங்கும் படி பண்ணக் கடவேன் -என்கை –
அவை தானே விட்டு போம்படி பண்ணுகையாவது-இவை நமக்கு  முன்பு உண்டாய் –
கழிந்தது என்று  தோற்றாத படி போக்கை-அதாகிறது -இவை ஸ்ம்ருதி விஷயம் ஆனாலும் –
தன்னுடைய ஸ்வபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே இவை
நமக்கு வந்தேறி யாய் கழிந்தது என்று இருக்கையும் -ஸ்ம்ருதியாலே துக்கம் அநு வர்த்தியாய் இருக்கையும் –
என்று தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்தது இவ் இடத்திலே அனுசந்தேயம் –

————————————————————

சூரணை -258
இனி உன் கையிலும் உன்னை காட்டித் தாரேன் -என் உடம்பில் அழுக்கை
நானே போக்கிக் கொள்ளேனோ –

மோஷ இஷ்யாமி -என்கிற உத்தமனில் அபிப்ரேதமான
ஓர் அர்த்த விசேஷத்தை இனி அருளிச் செய்கிறார் –
அதாவது —
இத்தனை காலமும் — நம் கார்யத்துக்கு நாம் கடவோம் -என்று நீ திரிகையாலே
தன் கார்யம் தானே செய்து கொள்கிறான் -என்று இருந்த இத்தனை போக்கி –
எனக்கு நீ சரீரிதையா சேஷம் -என்று அறிந்து என் பக்கலிலே நியஸ்த பரனான  பின்பு –
உன்னுடைய பாப விமோசன அர்த்தமான யத்னம் நீ பண்ணிக் கொள் என்று –
உன் கையிலும் உன்னைக் காட்டி தாரேன் –
எனக்கு சரீர பூதனான உன்னுடைய அவித்யா ரூப மாலின்யத்தை
சரீரியான நானே போக்கிக் கொள்ளேனோ என்கை –
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைகாக-

ஆகையால் உன்னுடைய விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும்
பலமாய் இருக்க -ஒன்றைச் சொல்லுவான் என் என்னில் மற்றையது தன்னடையே வருகையாலே
சொல்லிற்று  இல்லை -மாமேவைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய
இவ் உபாயதுக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –
ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் -அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தமாய் இருக்கையாலே -தனித்துச் சொல்ல  வேண்டா இறே –
என்று ஸங்க்ரஹேண ஸ்ரீ யப்பதி படி ரஹஸ்யத்திலும்-விஸ்தரேண -பரந்த படி  தனி சரமங்களிலும் அருளிச் செய்த
சங்கா  பரிகாரங்கள் இவ் இடத்தில் அனுசந்தேயம் –

————————————————

சூரணை-259
மாஸூச -நீ உன் கார்யத்தில் அதிகரியாமையாலும் –
நான் உன் கார்யத்தில் அதிகரித்துப் போருகையலும் –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண்-என்று
அவனுடைய சோக நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கிறான் –

அநந்தரம் –
சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மா ஸூச -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ உன் கார்யத்தில் அதிகரித்து நின்றாய் ஆகில் -நம் கார்யத்துக்கு என் செய்வோம் -என்று
கரைந்து சோகிக்க ப்ராப்தம் –
நான் உன் கார்யத்தில் அதிகரியாது இருந்தேன் ஆகில் -நம் கார்யத்தில் இவன் உதாசீனனாய்
இரா நின்றான் -நாம் எங்கனே உஜ்ஜீவிக்க போகிறோம் -என்று சோகிக்க ப்ராப்தம் –
இங்கன் இன்றிகே யத்ன பலித்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாத படியான
ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து -நீ உன் உடைய ரஷண  கார்யத்தில் அதிகரியாது ஒழிகை யாலும் –
உன்னுடைய ரஷணத்தில் யத்ன பலித்வங்கள் இரண்டும் என்னதாம் படி ஸ்வாமியான நான்
உன் பக்கலில் தடை அறுக்கையாலே-உன்னுடைய ரஷண கார்யத்தில் அதிகரித்து கொண்டு போருகையாலும் –
உனக்கு சோகிகைக்கு  நிமித்தம் இல்லை காண் என்று -முன்பு சோக விசிஷ்டனாய் நின்ற அவனுடைய
சோகத்தின் உடைய நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான் -என்கை

இத்தால் -அஹம் -த்வா-என்கிற பதங்களால் சொல்லப்  பட்ட -ரஷக ரஷ்ய பூதரான –
இவருடைய ஸ்வபாவத்தையும் அனுவதித்துக் கொண்டு சோகாபநோதனம் பண்ணின படியை –
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————-

சூரணை -260
நிவர்தக ஸ்வரூபத்தைச் சொல்லி -நிவர்த்யங்கள் உன்னை வந்து மேலிடாது என்று சொல்லி –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண் -என்கிறான் –

இனிமேல் நிவர்தகனாக தன்னுடையவும் -நிவர்தங்களான பாபங்களின் உடையவும்
ஸ்வபாவங்களைச்  சொல்லி சோகாபநோதனம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அஹம் என்று -சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய்க் கொண்டு -விரோதி நிவர்தகனாய் இருக்கிற –
தன் ஸ்வரூபத்தை சொல்லி –
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று ணி ச்சால் நிவர்த்யங்களான  பாபங்கள் உன்
தன்னைக் கண்டு தானே அஞ்சி ஓடி போம் ஒழிய -என்னையே உபாயமாக ஸூவீகரித்து இருக்கிற உன்னை
வந்து மேலிடாது என்னும் இடம் சொல்லி –
அநந்தரம் -மாஸூச -என்கையாலே –
இப்படி யான பின்பு உனக்கு சோகிக்க நிமித்தம் இல்லை -என்கிறார்-என்கை –

———————————————————

சூரணை -261
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்கிறான்
இத் தலையில் விரோதியைப் போக்குகைக்கு தான் ஒருப்பட்டு நிற்கிற படியை அறிவித்து –
இவனுடைய சோகத்தை போக்குகிறமையை-அபியுக்த யுக்தியை  நிதர்சனம் ஆக்கிக் கொண்டு
அருளிச் செய்கிறார் –

அதாவது –
திரு மழிசை பிரான்-எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே-திரு சந்த விருத்தம் -115- என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வேஸ்வரன் இத்தலையில் விரோதியை போக்கி அடிமை கொள்வதாக ஏன்று கொண்டு
வந்து புகுந்து இருக்கிற படியைச் சொல்லி -இனி எதுக்காக நீ துக்க சாகரத்தில் அழுந்துகிறாய்-என்றால் போலே
ஈஸ்வரனும் இப்போது இத் தலையில் சகல பாபங்களையும் போக்குவதாக தானே ஏறிட்டு கொண்டமையை
அறிவித்து -இனி எதுக்காக சோகிக்கிறாய்-என்று இவனை குறித்து அருளிச் செய்கிறான் -என்கை-

—————————————————————–

சூரணை -262
பாபங்களை நான் பொறுத்து -புண்யம் என்று நினைப்பிடா நிற்க –
நீ சோகிக்க கடவையோ –

இனி இவனுடைய சோகம் மறுவலிடாமல் போக்குகைக்கு உறுப்பானதொரு பகவத் அபிப்ராய
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ செய்த பாபங்கள் நான் முந்துற என்னுடைய ஷமா விஷயமாக்கி –
அவ்வளவும் அன்றிக்கே -பின்னை உன் பக்கல் எனக்கு உண்டான -வாத்சல்யத்தாலே –
செய்த குற்றம் நற்றமாகவே  கொள் -திரு சந்த விருத்தம் -111
செய்தாரேல் நன்றே செய்தார் –பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-
என்கிறபடியே அவை தன்னை பாபமாக நினையாதே
புண்யம் என்று நினைப்பிடா நிற்க இனி நீ சோகிக்க கடவையோ -என்கை-

ஆக
இவ் உத்தர அர்த்தத்தில் அஞ்சு பதத்தாலும் –
நிவர்த்தக ஸ்வரூபத்தையும் –
நிவர்த்திய ஆஸ்ரயத்தையும்-
நிவர்தங்களான பாபங்களையும் –
அவற்றினுடைய நிவ்ருத்தி பிரகாரத்தையும் –
தத் கார்யமான சோக நிவ்ருத்தியையும்-
சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்–சூரணை-236-253-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 15, 2012

சூரணை -236
சரணம் -உபாயமாக

இனி பஞ்சம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம்
அருளிச் செய்கிறார் -உபாயமாக -என்று –

——————————————-

சூரணை -237
இந்த சரண சப்தம்
ரஷிதாவையும்
க்ருஹத்தையும்
உபாயத்தையும்
காட்டக் கடவதே ஆகிலும் இவ் இடத்தில் உபாயத்தையே காட்டுகிறது –
கீழோடு சேர வேண்டுகையாலே –

அர்த்தாந்தரங்களையும் காட்டவற்றாய் இருக்க -இவ் இடத்தில் இது உபாயத்தையே காட்டுகிறமையை –
சஹேதுகமாக அருளிச் செய்கிறார் –
அதாவது
உபாயே க்ருக ரஷித்ரஸ் சப்தஸ் சரண மித்யாயம் வர்த்ததே -என்கிறபடி
சரண சப்தமான இது -ரஷிதாவையும்  க்ருஹத்தையும் உபாயத்தையும்
காட்டக் கடவதே ஆகிலும் -சாம்ப்ரதம் சைஷ உபாயர்த்தைக வாசக -என்கிறபடி –
இந்த ஸ்தலத்திலே உபாயத்தையே காட்டுகிறது –
சர்வ தர்மங்களையும் விட்டு தன்னையே பற்றச் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலே –
கீழோடு சேர வேண்டுகையாலே -என்கை –

—————————————————

சூரணை -238
வ்ரஜ-புத்தி பண்ணு –

இனி ஷஷ்ட பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -வ்ரஜ -என்று –
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -புத்தி பண்ணு -என்று –

——————————————–

சூரணை-239
கத்யர்த்தமாவது புத்த்யர்தமாய் -அத்தியவசி என்ற படி –

அது தன்னை விசதீகரிக்கிறார் –
அதாவது
வ்ரஜக தவ்–என்கிற தாதுவிலே -கத்யர்த்தமாய் -கத்யர்த்தா  புத்த்யர்தா -என்கிற ந்யாயத்தாலே
கத்யர்த்தமாவது புத்யர்த்தமாய் -அத்தியவசி -என்றபடி -என்கை-
இந்த புத்தி ஆகிறது த்யாஜ்யகோடியிலே உத்தீர்ணமாய் -உபாய கோடியிலே அதனு பிரவிஷ்டமாய் –
பிரபகாந்தர பரித்யாக பூர்வமாய் -பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் -சைதன்ய ஹேதுவாய்-
ஸ்வரூப அநு ரூபமாய் -வியபிசார விளம்ப விதுரமாய் -இருப்பதொரு அத்யவசாயாத்மாக ஞான விசேஷம் –
என்று பரந்த படியிலே இவர் அருளிச் செய்த இது இவ் இடத்திலே அநு சந்தேயம் –

———————————————————-

சூரணை-240-
வாசிக காயிகங்களும் இதுக்கு அபேஷிதங்களாய் இருக்கச் செய்தேயும்
ஞானான் மோஷம் ஆகையாலே மானசமான அனுஷ்டானத்தைச் சொல்கிறது –

சாமான்யேன கதி வாசியான இது -மானச வாசக காயிக ரூபமான -கதி த்ரயத்தையும்
காட்டவற்றாய் இருக்க -மானசமான அத்யவசாய மாத்ரத்திலே ஒதுக்குகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்  -திரு வாய் மொழி -6-5-11–என்கிறபடி
கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வீகாரம் அதிகார பூர்த்திக்கு உடலாகையாலே –
வர்ணோக்தி ரூபமான வாசிகமும் –
அஞ்சலியாதி ரூபமான காயிகமும் –
இந்த ஸ்வீகாரத்துக்கு அபேஷிதங்களாய் இருக்க செய்தேயும் -ஞானான் மோஷ –
ஆகையாலே -அவை இரண்டையும் ஒழிய மானசமான அனுஷ்டான மாத்ரத்தைச்
சொல்லுகிறது -என்கை –
ஆக பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————-

சூரணை -241
ஆக -த்யாஜ்யத்தைச் சொல்லி –
த்யாக பிரகாரத்தைச் சொல்லி –
பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி –
உபாய நைரபேஷ்யம்  சொல்லி –
உபாயத்வம் சொல்லி –
உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது –

இனி பூர்வார்த்தத்தால் சொல்லுகிற அர்த்தத்தை அநுவதித்து நிகமிக்கிறார் –
அதாவது –
ஆக பூர்வ அர்த்தத்தால் –
சர்வ தர்மான் -என்று த்யாஜ்யத்தைச் சொல்லி –
பரித்யஜ்ய -என்று த்யாக பிரகாரத்தைச் சொல்லி –
மாம்-என்று பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி –
ஏகம் -என்று உபாய நைரபேஷயம் சொல்லி –
சரணம் -என்று உபாயத்வம்  சொல்லி –
வ்ரஜ -என்று உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது -என்கை

—————————————————

சூரணை -242
அஹம்

அனந்தரம் உத்தர அர்த்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாகக் கோலி-அதில்
பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அஹம் -என்று –

——————————————————-

சூரணை -243
ஸ்வ க்ருத்யத்தை அருளிச் செய்கிறான் –

இவ் உத்தர அர்த்தத்தில் ஈஸ்வரன் செய்து அருளுகிற அம்சத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அதிகாரி க்ருத்யம் இறே பூர்வ அர்த்தத்தில்  சொல்லிற்று –
உபாய பூதனான தன்னுடைய க்ருத்யத்தை அருளிச் செய்கிறது இதிலே இறே-

———————————————-

சூரணை -244
சர்வஞ்ஞானாய் -சர்வ சக்தியாய் -ப்ராப்தனான -நான் –

இனி இப் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -என்கிறபடியே -சர்வத்தையும் அறியுமவனாய் –
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்கிறபடி எல்லா சாமர்த்தத்தையும்
உடையனாய் -சேஷி ஆகையாலே -ப்ராப்தனாய் இருக்கிற நான் -என்கை-

————————————————-

சூரணை -245
இவன் கீழ் நின்ற நிலையும்-
மேல் போக்கடியும் அறிகையும் –
அறிந்தபடி செய்து தலைக் கட்டுகைக்கும் –
ஏகாந்தமான குண விசேஷங்களையும் –
தன் பேறாக செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
பந்த விசேஷத்தையும் காட்டுகிறது –

அல்லாத குணங்கள் எல்லாம் கிடக்க -இந்த குண விசேஷங்களை -இவ் அஹம் சப்தம் –
காட்டுகிற இதுக்கு பிரயோஜனம் அருளிச் செய்கிறார் –
அதாவது
இச் சேதனனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளை பண்ணும் அளவில் –
இவன் பூர்வத்தில் நின்ற நிலையும் –
மேலே போக தக்க வழியும் அறிகைக்கும் –
அறிந்த படி அவற்றை செய்து தலைக் கட்டுகைக்கும் –
தக்கவையாய் இருந்துள்ள-சர்வஞ்ஞ்த்வ சர்வ சக்தித்வங்கள் ஆகிற குண விசேஷங்களையும் —
இவன் கார்யம் செய்யும் இடத்தில் இவனுக்காக அன்றிக்கே தன் பேறாகச் செய்து
தலைக் கட்டுகைக்கு ஈடான சேஷத்வ ரூப பந்த விசேஷத்தையும் –
பிரகாசிப்பிக்கிறது -என்கை –

மாம்-என்கிற இடத்தில் ஆஸ்ரயண த்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்கள் பிரகாசித்தால் போலே –
அஹம்-என்கிற இடத்திலும் கார்ய கரத்வத்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்கள் பிரகாசிக்கும் இறே –
வாத்சல்யாதிகள் -இல்லாத போது ஆஸ்ர்யணம் கூடாது போலே -ஞான சக்த்யாதிகள் இல்லாத போது –
கார்ய கரத்வம் கிடையாமையாலே -இவ் இடத்தில் ஞான பிராப்தியும் சொன்ன இது பூர்த்திக்கும் உப லஷணம்-

————————————————————

சூரணை -246
தனக்காகக் கொண்ட சாரத்திய வேஷத்தை
அவனை இட்டுப் பாராதே -தன்னை இட்டுப் பார்த்து –
அஞ்சின அச்சம் தீர -தானான தன்மையை –
அஹம் -என்று காட்டுகிறான் –

இப் பதத்தில்-மாம் -என்கிற இடத்தில் சாரதியாய் நின்ற பாரதந்த்ர்யத்துக்கு எதிர்த் தட்டான
அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தமையை அருளிச் செய்கிறார் –
அதாவது –
மாம் -என்ற சாரத்திய வேஷத்தோடே நிற்கிற தன்னைப் பற்றிச் சொன்ன போது –
அர்ஜுனன் தன்னுடைய ரஷண அர்த்தமாக ஏறிட்டு கொண்ட சாரத்திய வேஷத்தை –
சர்வதிகனானவன் இப்படி தாழ நின்றது தன் குணத்தாலே இறே -என்று அவனை இட்டுப் பாராதே –
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிறவன் அன்றோ -என்று தன்னை இட்டுப் பார்த்து –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்னா நின்றான் -இது என்னாகக் கடவது -என்று
அஞ்சின அச்சம் தீர ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருதிகனாய்க் கொண்டு –
நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை -அஹம் -என்று
தர்சிப்பிக்கிறான் -என்கை –

———————————————

சூரணை-247
கீழில்  பாரதந்த்ர்யமும் இந்த ஸ்வாதந்த்ர்யத்தின் உடைய எல்லை நிலம் இறே –

ஏதம் பூதனானவன் பரதந்த்ரன் ஆனதும் தனக்கு ஸ்வரூபமாய்  செய்தது அன்று
என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் சாரதியாய் நின்ற பாரதந்தர்யமும் -நினைத்தது செய்யும் அளவில் தனக்கொரு
நிர்வாகர் இல்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்யத்தின் உடைய ஸீமா பூமி இறே -என்கை –

——————————————————–

சூரணை -248
த்வா -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அப்ராப்தனாய்-என்னையே
உபாயமாகப் பற்றி இருக்கிற  உன்னை –

அநந்தரம் த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -த்வா -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
உன் கார்யங்கள் அறிகைக்கு தக்க ஞானம் இல்லாதவனாய் –
அறிந்தாலும் செய்து தலைக் கட்டிக் கொள்கைக்கு சக்தி இல்லாதவனாய் –
அது தான் உண்டானாலும் உன் உடைய ரஷணத்தில் உனக்கு பிராப்தி இல்லாதவனாய் –
இப்படி இருக்கையாலே –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னையே நிரபேஷ உபாயமாக பரிக்ரஹித்து இருக்கிற உன்னை -என்கை –

—————————————————–

சூரணை -249
சர்வ பாபேப்யோ -மத் ப்ராப்தி ப்ராபகங்கள் என்று
யாவை யாவை சில பாபங்களைக் குறித்து அஞ்சுகிறாய்-
அவ்வோ பாபங்கள் எல்லாவற்றிலும் நின்று –

அநந்தரம் த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -சர்வ பாபேப்யோ -என்று –
இதுவும் -பாபமும் -பஹூ வசனமும்- சர்வ சப்தமுமாய் -த்ரி பிரகாரமாய் -இருக்கையாலே –
இம் மூன்றையும் உள் கொண்டு -இப் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
பாபம் ஆகிறது -இஷ்ட விரோதியாயும் அநிஷ்ட ஹேதுவாயும்-இருக்கும் அது ஆகையாலும் –
மோஷ பிரகரணம் ஆகையாலே இவ் இடத்தில் இஷ்ட விரோதிகள் ஆகிற பகவத் லாப
விரோதிகள் ஆகையாலும் –
அதில் ஞான விரோதியும் -ருசி விரோதியும் உபாய விரோதியும்- பண்டே நிவ்ருத்தம் ஆகையாலும் –
இனி உள்ளது ப்ராப்தி விரோதி ஆகையாலே நீ என்னை பிராபிக்கைக்கு பிரதி பந்தகங்கள் என்று
யாவை யாவை சில பாபங்களை உத்தேசித்து பயப்படுகிறாய் –
அந்த அந்த பாபங்கள் எல்லாவற்றிலும் நின்று -என்கை –

—————————————————————–

சூரணை -250
பொய் நின்ற ஞானமும் -பொல்லா ஒழுக்கும் -அழுக்கு உடம்பும் –
என்கிறபடியே
அவித்யா கர்ம வாஸநா ருசி பிரகிருதி சம்பந்தங்களைச் சொல்லுகிறது –

அதில் பஹூ வசன விவஷிதங்களை அருளிச் செய்கிறார் –
அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்று
உத்பத்தி விநாசாதி-யோகத்தாலே -அசத்திய சப்த வாச்யனான அசேதன விசேஷத்தில் ஆத்ம ஞானமும்
அந்த தேக ஆத்ம அபிமானம் அடியான -சாம்சாரிக துஷ்கர்ம ப்ரவர்த்தியும் –
அந்த கர்மம் அடியாக வரக் கடவதான -மாம்ச அஸ்ருகாதி மல ரூப தேக சம்பந்தமும் –
என்று சொல்லுகிறபடியே –
அவித்யையும் -கர்மமும் -வாசனையும் -ருசியும் -பிரகிருதி சம்பந்தமும்
ஆகிற அவற்றைச் சொல்லுகிறது -என்கை –
இவற்றில் அவித்யை ஆவது -ஞான அனுதய ரூபமாயும் -அன்யதா ஞான ரூபமாயும்-
விபரீத ஞான ரூபமாயும் -மூன்று வகைப் பட்ட அஞ்ஞானமும்
கர்மம் ஆவது -புண்ய பாவம் -மோஷத்தைப் பற்ற பாபத்தோபாதி புண்ணியமும் த்யாஜ்யமாம் –
புண்ய பாபே விதூயே -என்னக் கடவது இறே –
வாசனை ஆவது -அஞ்ஞான வாசனையும் -கர்ம வாசனையும் -பிரகிருதி சம்பந்த வாசனையும் –
ருசியும் -விஷய பேகத்தாலே பஹூ விதையாய் இருக்கும் –
பிரகிருதி சம்பந்தம் ஆவது -ஸ்தூல சூஷ்ம ரூபமாய் இருந்துள்ள அசித் சம்பந்தம் –

——————————————————————-

சூரணை -251
தருணச் சேத கண்டூ யநாதிகளை போலே –
பிரகிருதி வாசனையாலே -அநு வர்த்திக்கும் அவை என்ன –

லோகாபவாத பீதியாலும் -கருணையாலும் -கலக்கத்தாலும் -செய்யும் அவை என்ன –
எல்லாவற்றையும் நினைக்கிறது –
இனி சப்த விவஷிதத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
துரும்பு நறுக்குகை -தினவு தின்ற இடம் சொரிகை -தொடக்கமானவை போலே –
அபுத்தி பூர்வகமாக பிரகிருதி வாசனையாலே அநு வர்த்திக்கும் உத்த ராகங்கள் என்ன –
நாம் இவற்றைச் செய்யாத போது -லோகம் நம்மை அபவாதம் சொல்லுமே -என்கிற பயத்தாலும் –
நம்மை கண்டு லௌகிகர் இவற்றைத் தவிருவர்கள் ஆகில் அவர்களுக்கு விநாசம் ஆமே -ஐயோ -என்ற
கிருபையாலும் செய்யும் நித்ய நைமித்திய கர்மங்கள் என்ன –
ரஜஸ் தமஸ் ஸூக்களால் கலங்கி த்யக்த உபாயங்களில் அன்வயித்தல் -புன பிரபத்தி பண்ணுதல் –
செய்யும் அவை என்ன -எல்லாவற்றையும் நினைக்கிறது -என்கை –

—————————————————————–

சூரணை -252
உன்மத்த பிரவ்ருத்திக்கு க்ராம ப்ராப்தி போலே -த்யஜித்த உபாயங்களிலே இவை
அன்விதங்கள் ஆமோ -என்று நினைக்க வேண்டா –

சாதனா புத்த்யா செய்யாதவையும் -வஸ்துகத்யா  சாதனா கோடியிலே அன்வயிக்கும்-
என்னுமத்தை சங்கா பூர்வமாக அருளி செய்கிறார் –
அதாவது –
உந்மாதச்  சித்த விப்ரம-என்கிற படியே சித்த விப்ரமம் பிறந்தான் ஒருவன் –
இன்ன ஊருக்குப் போகிறோம் -என்ற நினைவு இன்றிக்கே ஒரு வழியே போகா நின்றால்-
அவ்வழிக்கு  ஓர் ஊரூடே சம்பந்தம் உண்டாய் இருக்கையாலே அவ்வூரிலே சென்று சேருமா போலே –
சாதனா புத்தி ரஹிதமாக லோகாபவாத பீத்யாதிகளாலே செய்யப் படுகிற இவை –
விட்ட உபாயங்களிலே அன்விதங்கள் ஆமோ -என்று நினைக்க வேண்டா –
அன்விதங்களாயே விடும் என்ற படி –
ஆன்ரூ சம்சய பிரதானராய் அனுஷ்டித்தாலும் ஏறிட்ட கட்டி ஆகாசத்திலே நில்லாதது போலே
அவையும் ஒரு பலத்தோடே சந்திப்பிக்கக் கடவது –
ஆகையால் அவையும் பாப சப்த வாச்யமாகக் கடவது -என்று இறே
தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்கிறார் –

————————————————-

சூரணை -253
கலங்கி உபாய புத்த்யா பிரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும் –

அது தானே ஆகிறது -புன ப்ரபத்திக்கு தோஷம் எது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
சக்ருத் அனுஷ்டானம் ஒழிய புனர் அனுஷ்டானத்தை சஹியாத பிரபத்தி
ஸ்வாபத்தை அறியாதே கலங்கி அநிஷ்ட நிவ்ருத்திகாக வாதல் -இஷ்ட ப்ராப்த்திக்காக வாதல் –
உபய புத்த்யா மீண்டு பண்ணும் பிரபத்தியும் -அத பாதக பீதஸ்த்வம்-என்று
உபாயாந்தரம் போலே பாதக சமம் -என்கை –
——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி- -சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-211-235-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 15, 2012

சூரணை-211
மாம்-சர்வ ரஷகனாய் –
உனக்கு கை ஆளாய் –
உன் இசைவு பார்த்து –
உன் தோஷத்தை போக்யமாக் கொண்டு –
உனக்கு புகலாய்-
நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும் போதும் விடமாட்டாதே ரஷிக்கும்
என்னை –

அநந்தரம்-த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
நம்முடைய ரஷணம் இவன் பண்ணுமோ  -பண்ணானோ -என்று சம்சயிக்க வேண்டாதபடி
சர்வருடைய ரஷணத்தில் தீஷிதனாய் -தன் பெருமையும் நம் சிறுமையும் பார்த்து நம்மோடு
கலப்பற்று இருக்குமோ -என்ன வேண்டாதபடி –
சேநயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய-என்று ஏவிக் கொள்ளலாம் படி உனக்கு கையாளாய் –
உன்னை ரஷிக்கையில் உண்டான நசையால்-ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்கிற படியே
ரஷ்ய பூதனான உன் இசைவு பார்த்து -நம் குற்றம் கண்டு இகழுமோ -என்று அஞ்ச வேண்டாத படி –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்மாதி யாகுலனான -உன் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
அசரண்ய சரண்யன் ஆகையால் ஜலம் ஔஷண்யத்தைப் பஜிக்குமா  போலே அபராத ஷாமணம் பண்ணி
கடிப்பிக்கும் புருஷகார பூதரே -தாமரையாள் ஆகிலும் சித குரைக்குமேல்-என்கிறபடியே
குற்றத்தைக் காட்டி அகற்றும் போதும் விட ஷமண் அன்றிக்கே -என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து ஒருதலை நின்று ரஷிக்கும் என்னை-என்கை-

————————————————————-

சூரணை -212
இத்தால் பர வ்யூஹங்களையும்
தேவதா அந்தர்யாமித்வத்தையும்
தவிர்க்கிறது –

மாம்-என்று விபவ ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப் படுகிறவற்றை
அருளிச் செய்கிறார் –
அதாவது –
என்னை -என்று அவதரித்து
கண்ணுக்கு இலக்காகாய்  அணுகி நிற்கிற தன்னை
வரணி யனாகச் சொன்ன இத்தால் -தேச விப்ரக்ருஷ்டதையாலே -காணவும் கிட்டவும்
ஒண்ணாத படி இருக்கிற பர வ்யூஹங்களையும் –
அசாதாரண விக்ரக யுக்தம் அன்றிக்கே -உபாயாந்தர நிஷ்டருக்கு உத்தேச்யமாய் இருக்கிற
அக்நி இந்த்ராதி தேவத அந்தர்யாமித்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது -என்கை –

—————————————————————–

சூரணை -213
தர்மம் சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே -சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று -என்கையாலே -சாஷாத் தர்மம் தானே என்கிறது –

தர்மங்களை எல்லாம் விட்டு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமான
தொரு அர்த்த விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
தர்ம சம்ஸ்தபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்கிறபடியே –
ஸ்வ ப்ராப்திக்கு உடலான தர்மத்தை ஸ்தாபிக்கப் பிறந்தவன் தானே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று மோஷ சாதனதயா சாஸ்தர சித்தங்களான
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று -என்று சொல்லுகையாலே –
அவை சாஷாத் தர்மங்கள் அன்று –
ஸ்தாப நீயமான சாஷாத் தர்மம் க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்று
சனாதன தர்மமான தானே என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

———————————————————-

சூரணை -214
இத்தால் விட்ட ஸ்தானங்களில் ஏற்றம் சொல்லுகிறது –

இத்தால் என் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
இப்படி சொன்ன இத்தால் கீழ் விட்ட ஸ்தானங்களில் காட்டில் இந்த
சாதனத்துக்கு  உண்டான ஏற்றம் சொல்லுகிறது -என்கை –

——————————————————-

சூரணை -215
அதாவது
சித்தமாய்-பரம் சேதனமாய்-சர்வ சக்தியாய்-
நிர் அபாயமாய்-ப்ராப்தமாய்-சஹாயாந்தர நிர் அபேஷமாய்-இருக்கை –

அது தான்  எது -என்ன-அருளிச் செய்கிறார் –
இத்தால் கீழ் விட்ட சாதனங்களில் காட்டில் இதுக்கு ஏற்றம் ஆவது-
சேதன பிரவ்ருத்தியாலே தன ஸ்வரூப சித்தி யாம்படி இருக்கை அன்றிக்கே –
சனாதன தர்மம் ஆகையாலே -சித்தமாய் –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொல்லுகிற
சர்வஞ்ஞ விஷயம் ஆகையாலே
பரம சேதனமாய் –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியாய்
சேதன சாத்யமாய்
நடுவே அபாயங்கள் புகுருகைக்கு அவகாசம் உண்டாகும் படி இருக்கை அன்றிக்கே
சித்த வஸ்துவாய் இருக்கையாலே
நிர் அபாயமாய்
பர தந்த்ரனான இச் சேதனனுடைய ஸ்வரூபத்துக்கு அப்ராப்தமாய் இராதே
ப்ராப்தமாய் –
கீழ்ச் சொன்ன பரம சேதனத்வாதிகளாலே சஹாயாந்தர நிர் அபேஷமாய் இருக்கை -என்ற படி-

————————————————————–

சூரணை -216
மற்றை உபாயங்கள் சாத்தியங்கள் ஆகையாலே –
ஸ்வரூப சித்தியில் சேதனனை அபேஷித்து இருக்கும் –
அசேதனங்களுமாய்-அசக்தங்களாய் -இருக்கையாலே கார்ய சித்தியிலே
ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் அவற்றுக்கு எதிர் தட்டாய் இருக்கையாலே
இதர நிர பேஷமாய் இருக்கும்-

மற்றை உபாயங்கள் -என்று தொடங்கி- மேல் மூன்று வாக்யத்தாலே
அதாவது –
இத்தை ஒழிந்த உபாயங்கள் சேதன பிரவ்ருத்தியாலே சாதிக்கப் படுமவை யாகையாலே –
தம்முடைய ஸ்வரூப சித்தியில் பிரவ்ருத்தி கரனான சேதனனை அபேஷித்து இருக்கும் –
இவனுக்கு செய்ய வேண்டுமவை அறிகைக்கும்
அது தன்னை செய்து தலைக் கட்டுகைக்கும்
யோக்யதை இல்லாத அசேதனங்களுமாய் -அசக்தங்களுமாய் -இருக்கையாலே
சேதனனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமான கார்யத்தினுடைய சித்தியில் –
பலமத  உபபத்தே -என்கிறபடியே பல பிரதத்வ உப யோகியான சர்வ சக்தித்வாதி
உபபத்தி உடையவனான ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் சித்தத்தவ -பரம சேதனத்வ-சர்வ சக்தித்வங்களாலே அவற்றுக்கு
எதிர் தட்டாய் இருக்கையாலே அந்ய நிர பேஷமாய் இருக்கும் -என்கை –

——————————————————————

சூரணை -217
இதில் வாத்சல்ய -ஸ்வாமித்வ-சௌசீல்ய -சௌலப்யங்கள் -ஆகிற
குண விசேஷங்கள் நேராக பிரகாசிக்கிறது –

இனி இப் பதத்தில் ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான குண விசேஷங்கள் எல்லாம்
பிரகாசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அதாவது
அதர்ம புத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனனுக்கு குற்றம் பாராதே –
அபேஷித்த அர்த்தங்கள் அருளிச் செய்கையாலே -வாத்சல்யம் பிரகாசிக்கிறது –
தன்னுடைய பரத்வத்தை பலகாலம் அருளிச் செய்த அளவன்றிகே அர்ஜுனன்
பிரத்யஷிக்கும் படி பண்ணுகையாலே -ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது –

ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி
இவனோடு கலந்து பிரியமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி
பண்ணுகையாலே -சௌசீல்யம் பிரகாசிக்கிறது –

அப்ராக்ருதமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி பண்ணுகையாலே
சௌலப்யம் பிரகாசிக்கிறது -என்கை-

குண விசேஷங்கள் -என்றது ஆஸ்ரயணதுக்கு அபேஷிதங்கள் ஆனவை என்று
தோற்றுகைக்காக-
நேராக பிரகாசிக்கிறது -என்றது -ஸ்புடமாக பிரகாசிக்கிறது -என்றபடி-

—————————————————–

சூரணை -218
கையும் உழவு கோலும்
பிடித்த சிறு வாய் கயிறும்
சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும்
தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –

இவை எல்லாவற்றிலும் வைத்து கொண்டு மிகவும் அபேஷிதம் சௌலப்யம் ஆகையாலே
அவதார பிரயுக்தமான சௌலப்யத்து அளவு அன்றிகே -சாரத்திய அவஸ்திகனாய் நிற்கிற
சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பத்தமையை அருளிச் செய்கிறார் –
அதாவது –
குதிரைகளை பிரேரித்து நடத்துகைக்காக திருக் கையிலே தரித்த உழவு கோலும்
அவற்றை இடவாய் வலவாய் திருப்புகைக்காகவும்
நிறுத்தருள வேண்டும் இடத்தில் தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறு வாய் கயிறும் –
திருமுடியில் ஓன்று ஆச்சாதியாமல் நிற்க்கையாலே சேநா தூளியாலே புழுதி படைத்த திரு குழலும்
தேர் தடவிய பெருமான் கனை கழல் -திரு வாய் மொழி -3-6-10–என்கிறபடியே
சாத்தின சிறு  சதங்கையும் தானுமாக தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை-என்னை-என்று காட்டுகிறான்-என்கை –
ஆக
த்ருதீய பதார்த்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

———————————————————–

சூரணை -219
ஏகம்–

அநந்தரம் சதுர்த்திய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -ஏகம்-என்று –

———————————————————–

சூரணை -220
இதில் -ஏக -சப்தம் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணத்தைக் காட்டுகிறது –

அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் உபாய விசேஷத்தை சொல்லும் இடங்களில் பல இடங்களிலும் அவதாரண பிரயோகம்
உண்டு ஆகையாலே -உகாரம்-போலே இந்த சப்தமும் -ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணம் ஆகிற
அர்த்தத்தைக் காட்டுகிறது -என்கை-

————————————————————–

சூரணை -221
மாம் ஏவ  யே  ப்ரபத்யந்தே –
தமேவ சாத்யம்-
த்வமே வோபாய பூதோ மே பவ –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-என்றும்
சொல்லுகிறபடியே-

இவ் உபாயத்தை நிர்த்தேசித்த அநந்தரம் அவதாரண பிரயோகம் பண்ணின வசனங்கள்
பலவற்றையும் இதுக்கு உதாரணமாக அருளிச் செய்கிறார் –
அதாவது
மாமேவ யே ப்ரபத்யந்தே -பகவத் கீதை –7-14-என்று என்னையே யாவர் சிலர்
பிரபத்தி பண்ணுகிறார்கள் என்றும் –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -பகவத் கீதை -15-4–என்று
அந்த புருஷனையே பிரபத்தி பன்னுகிறேன் என்றும் –
த்வமே வோபாய பூதோ மே பவ -என்று நீயே எனக்கு உபாயமாக வேணும் என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திரு வாய் மொழி -5-7-10–என்று எனக்கு
உபாயம் தருகிற இடத்தில் -உன் திரு அடிகளையே உபாயமாக தந்தாய் -என்றும்
சொல்லுகிற இவ் இடங்களில் -மாமேவ -தமேவ -த்வமேவ -நின் பாதமே -என்று
ஸ்வீகார வஸ்து நிர்த்தேச அநந்தரம் அவதாரணத்தை சொல்லுகிற பிரகாரத்தில் -என்கை-

———————————————————————-

சூரணை -222
இத்தால் -வ்ரஜ-என்கிற ஸ்வீகாரத்தில்  உபாய பாவத்தைத் தவிர்க்கிறது –

ஏதத்-வ்யாவர்த்தம் எது -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
உபாயாந்தரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் பௌநருக்த்யம் பிரசங்கிக்கை ஆகையாலும் –
தேவதாந்த்ரங்கள் வ்யாவர்த்தமம் அளவில் -மாம்-என்று அசாதாரண ஆகாரத்தைச் சொல்லுகையாலே –
அது கீழே சித்தம் ஆகையாலும் -இந்த அவதாரணத்தால் -வ்ரஜ-என்று மேல் சொல்லுகிற -ஸ்வீகாரத்தில்
உபாய பாவத்தைக் கழிக்கிறது-என்கை –
இந்த ஸ்வீகாரம் தானும் அந்வய வ்யதிரேகத்தாலே சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே
இதன் சாதனத்வம் அவசியம் கழிக்க வேணும் இறே-

———————————————————

சூரணை -223
ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

சூரணை -224
ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்
அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

————————————————————

சூரணை -225
அதுவும் அவனது இன்னருளே –

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –
அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

———————————————————-

சூரணை -226
இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –
அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை-

——————————————————————

சூரணை -227
அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

சூரணை -228
இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –
இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

——————————————————————-

சூரணை -229
கீழ் தானும் பிறருமான நிலையைக் குலைத்தான் –
இங்கு
தானும் இவனுமான நிலையைக் குலைக்கிறான்-

இனி -மாம் -என்கிற பதத்துக்கு கீழும் -இங்கும் -ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச் செய்கிறார் –
அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற இடத்தில் சகல உபாயங்களையும் விடச் சொல்லுகையாலே
பல பிரதானனான தானும் உபாயாந்தரங்களுமாய்  கூடி நிற்கிற நிலையைக் குலைத்தான் –
ஏகம்-என்கிற இடத்தில் ச்வீகாரத்தில் உபாய பாவத்தை கழிகையாலே-உபாய பூதனான தானும்
தான் ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணி நிற்கிற இவனுமான நிலையைக் குலைக்கிறான் -என்கை
உபயாந்தரங்களை பிறர் என்றது -உன்னால் அல்லால் யாவராலும் –திரு வாய் மொழி –5-8-3-என்றால் போலே

———————————————————

சூரணை-230
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –
அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

சூரணை -231
அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

—————————————————

சூரணை -232
மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சூரணை -233
சிற்ற வேண்டா

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –
அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

————————————————————-

சூரணை -234
நிவ்ருத்தி கீழே சொல்லிற்று

இதுதான் இஸ் ஸ்லோகம் தனக்குள்ளே சொல்லிற்று என்கிறார் –
அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி யினுடையவும் நிவ்ருத்தி யினுடையவும்
நிவ்ருத்தியே இவனுக்கு வேண்டுவது என்னும் இடம் கீழே சொல்லிற்று -என்கை –

———————————————————–

சூரணை-235
உபகார ஸ்ம்ருதியும் சைதன்யத்தாலே வந்தது –
உபாயத்தில் அந்தர்பவியாது –

ஆனால் உபகார ஸ்ம்ருதி தான் வேணுமோ -அது உபாயத்தில் முதலிடாதோ-என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது
என்னை தீ மனம் கெடுத்தாய் -திரு வாய் மொழி 2-7-8-
மருத் தொழும் மனமே தந்தாய் – திரு வாய் மொழி -2-7-7
இத்யாதியாலே இவ் உபாய விஷயத்தில் இவன் பண்ணும் உபகார ஸ்ம்ருதியும்
இவனுடைய சைதன்ய பிரயுக்தமாய் வந்தது இத்தனை -இது உண்டாகை யாலே அன்றோ
ஈஸ்வரன் கார்யம் செய்தது என்று உபாயத்தில் உள் புகாது -என்கை
ஆக சதுரத்த பதார்த்தத்தை  அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-199-210 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 14, 2012

சூரணை -199
பரித்யஜ்ய –

அநந்தரம்-த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார்-

———————————————

சூரணை-200
த்யாகம் ஆவது –
உக்த உபாயங்களை அநு சந்தித்து சுக்திகையிலே ரஜதா புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
விபரீத திசா கமனம் பண்ணுவாரைப் போலேயும் –
அநு பாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்கிற புத்தி
விசேஷத்தோடே த்யஜிக்கை –

இதுவும் த்யாகமும் ல்யப்பும் உபசர்க்கமுமாய் -த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே –
அதில் த்யாக வேஷத்தை முந்துற அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் இடத்தில் சொல்லுகிற  த்யாகம் ஆவது -கேவலம் விடுகை அன்று –
கீழ் சொல்லப் பட உபாயங்களின் படியை அநு சந்தித்து –
ரஜதமல்லாத சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
ஸ்வ கார்ய சித்திக்கு உடலான ஒரு திக்கிலே போகக் கோலி தத் விபரீதமான
திக்கை அதுவாக நினைத்து போவாரைப் போலேயும் –
பகவத் ப்ராப்தி உபாய அபேஷரான நாம் -உபாயம் அல்லாதவற்றில் உபாய புத்தி பண்ணினோம்
என்கிற புத்தி விசேஷத்தோடே விடுகை -என்றபடி-

———————————————————————-

சூரணை -201
பரி -என்கிற உபசர்க்கத்தாலே -பாதகதிகளை விடுமா போலே –
ருசி வாசனைகளோடும்
லஜ்ஜையோடும் கூடே
மறுவலிடாத படி விட வேணும் என்கிறது –

இனி உபசர்க்கார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
பரி சாகல்யே -என்று சாகல்ய பரமாக கொள்ளும் அளவில் அது சர்வ -சப்தத்திலே
உக்தம் ஆகையாலே -அபேஷிதம் அல்லாமையாலே -மிகுதிக்கு வாசகமான -பரி-என்கிற இந்த
உபசர்க்கத்தாலே -ப்ரஹ்மஹத்யா -சூராபானம் ஸ்தேயம் குர்வங்கனாமாக -என்கிற பாதகங்கள்
முதலானவற்றை விடும் அளவில் அவற்றில் புனர் அன்வயதுக்கு உருப்பான ருசி வாசனைகளோடு
கூடே -நாம் இதைச் செய்வதே -என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு விடுமா போலே –
அத பாதக பீதஸ் த்வம் -என்று தர்ம தேவை பாதகமாகச் சொன்ன உபாயாந்தரங்களை விடும் அளவில் –
புத்தி பூர்வகமாக அவற்றில் ப்ரவர்த்திக்கைக்கு உறுப்பான ருசியும் –
அபுத்தி பூர்வகமாக மூளுகைக்கு உறுப்பான வாசனையும் ஆகிற அவற்றோடே கூட
பகவத் ஏக சாதன தைக வேஷமான  ஸ்வ ஸ்வரூபத்துக்கு அத்யந்த வ்ருத்தமானவற்றை நாம் செய்வதே –
என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு மீளவும் அவற்றில் அந்வயம் வாராத படி விட வேண்டும் என்று
சொல்லுகிறது -என்கை –

———————————————————————–

சூரணை -202
ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே
உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது

இனி லயப் அர்த்தத்தை அருளி செய்கிறார் –
அதாவது –
பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் –
என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற
நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

—————————————————————

சூரணை -203
சசால சாபஞ்ச முமோச வீர -என்கிறபடியே இவை அநு பாயங்களான மாத்ரம் அன்றிக்கே
கால் கட்டு -என்கிறது –

இப்படி விட்டே பற்ற வேணும் என்கிற அதன் கருத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -யோ வஜ்ர பாதாச நிசன்னி பாதான் ந சுஷுபே சசால சாபஞ்ச முமோச வீர -என்கிற
ஸ்லோகத்தில் -ராவணன் ராம சரங்களால் மிகவும் ஈடு பட்டு நிலை கலங்கிப் போக
பார்த்த அளவிலும் -கையில் வில் இருக்கும் அளவும் பெருமாள் போக ஒட்டாமையாலே –
பின்பு பொகட்ட வில்லு கையில் இருந்த  போது பிரதி பஷ ஜெயத்துக்கு சாதனம்
ஆகாத மாத்ரம் அன்றிக்கே- கச்ச நு ஜாமி-என்று பின்பு பண்ணின அனுமதி -பெருமாள்
அப்போது பண்ணக் காணாமையாலே -போகவும் ஒண்ணாத படி கால் கட்டு ஆனமையை
சொல்லுகிற படியே -உபாயாந்தரங்களான இவற்றிலே -ஈஷத்  அந்வயம் கிடக்கிலும் -இவை-

——————————————————————–

சூரணை-204
சக்கரவர்த்தி போலே இழைக்கைக்கு  உறுப்பு –

இன்னமும் இவற்றில் அந்வயம் இழவுக்கு உடலாம் என்னுமத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது
முன்பே வர பிரதானத்தைப் பண்ணி வைத்து -இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று
ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று -ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற
பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே –
ஆபாசமான உபாயாந்தரங்களில் அன்வயித்து நிற்கை ஆகிறது –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயதோடே கூடி
வாழுகை யாகிற பேற்றை இழைக்கைக்கு உறுப்பாய் விடும் -என்கை-

————————————————————–

சூரணை -205
சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -சிலர் -அதர்மங்கள் புகுரும் –
என்றார்கள் –

இனி இங்கு சொன்ன சர்வ தர்ம பரித்யாகத்தின் கருத்து அறியாதார் சொல்லும்
தூஷணத்தை பரிஹரிக்கைக்காக தத் பஷத்தை உத்ஷேபிக்கிறார் –
அதாவது
த்யாஜ்யமான தர்மம் தான் -இதம் குரு இதம் மாகர்ஷீ -என்று விதி  நிஷேததாத்மகமாய்
இருக்கையாலே -சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -விஹித அனுஷ்டானத்தோபாதி
நிஷித்த பரிஹாரமும் ஒக்கத் தள்ளுண்ணும் அளவில் -அடைத்த கதவைத் திறந்தால்-நிஹீன பதார்த்தங்கள்
புகுருமா போலே -அதர்மங்களான நிஷித்த பிரவ்ருத்திகள் புகுரும் என்று சிலர் சொன்னார்கள்-என்கை-

—————————————————

சூரணை -206
அது கூடாது -அதர்மங்களை செய் -என்று சொல்லாமையாலே –

அத்தை பரிஹரிக்கிறார் –
அதாவது
சர்வ தர்மங்களையும் விடச் சொன்ன இத்தால் அதர்மங்கள் புகுரும் என்கிற இது
சம்பவியாது -தர்மங்களை விடச் சொன்ன மாத்ரம் ஒழிய -அதர்மங்களை செய் -என்று
சொல்லாமையாலே -என்கை –

—————————————————–

சூரணை -207
தன் அடையே சொல்லிற்று ஆகாதோ என்னில் –

அதர்ம நிவ்ருத்தியும் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே அத்தை விடச் சொன்னால் –
அதர்மத்தை செய் என்னும் இடம் அர்த்தாத் உக்தமாகாதோ -என்கிற
பிரதிவாத யுக்தியை அனுவதிக்கிறார் –

————————————————–

சூரணை -208
ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருதியைக் காட்டாமையாலே –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
தர்மங்களை விடச் சொன்ன இத்தால் -அதர்மங்களை செய்-என்னும் இடம் தன்னடையே
சொல்லிற்று ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்யாதி அங்க சஹிதமாய் பிரதானமாய் இருந்துள்ள
விஹித அனுஷ்டானத்தை காட்டுமது ஒழிய -சாமான்யேன அதர்ம நிவ்ருத்தி மாத்ரத்தைக் காட்டாமையாலே -என்கை-

———————————————————

சூரணை -209
காட்டினாலும் அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை –

அதர்ம நிவ்ருத்திக்கு தர்ம சப்த வாச்யத்வம் விசேஷண பூதமான இது தன்னையும்
காட்டாதோ -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
அப்படி காட்டிற்று ஆகிலும் அது இவ் இடத்தில் விவஷிதம் அல்லாமையாலே-அத்தை ஒழிந்த
விஹித அனுஷ்டான ரூப தர்மங்களானவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை -என்கை –

———————————————————–

சூரணை -210
தன்னையும் -ஈஸ்வரனையும் -பலத்தையும் பார்த்தால் அது புகுர வழி இல்லை –

இங்கன் ஒதுக்குகிறது என் கொண்டு -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
அதர்ம அனுஷ்டானம் சேஷிக்கு அநிஷ்டம் ஆகையாலே -அவனுக்கு அதிசயகரமாவது
ஒழிய அநிஷ்டகரனாகை சேராதபடியான ஸ்வரூபத்தை உடைய தன்னைப் பார்த்தாலும் –
சஹாயாந்தர சம்சர்க்க அசஹை ஆகையாலே இத்தலையில் ஸ்வ யத்ன நிவ்ருத்தி ஒழிய
பிரவ்ருத்யம்சத்தில் ஒன்றையும் பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும் –
இவனுடைய பிரவ்ருத்திக்கு பலம் அவனுடைய ப்ரீதி ஆகையாலே தாத்ருசமான பலத்தைப் பார்த்தாலும் –
இம் மூன்றுக்கும் விருத்தங்களான அவை புகுர வழி இல்லை என்கை –
ஆகையால் தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்தியை காட்டிறிற்று ஆகிலும் அத்தை ஒழிந்தவற்றை
சொல்லிற்றாகக்  கொள்ள வேணும் என்று கருத்து –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –