Archive for the ‘பெரிய திரு அந்தாதி –’ Category

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -21-30–

June 29, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)

(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

பதவுரை

அன்று–முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு–அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று
பார் உருவும்–பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும்–அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜல தத்துவமும்
கண் புதைய–மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால்–காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு–கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி
என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று–இப்போது
இங்கு–இவ்விடத்தில்
என் நெஞ்சால்–என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட–நெருக்குப் பட்டுக் கிடக்கின்றன.

சென்று அங்கு வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
வெந் நரகு -என்று அகலுகைக்குப் பேர்
சம்சாரத்துக்கும் பேர்
அறிவார்க்கு நரகமாவது -ஸம்ஸாரம் இறே
(நின் பிரிவிலும் சுடுமோ காடு -உன்னை விட்டுப் பிரிவதே நரகம்
நரகத்தை நகு நெஞ்சே -ஆழ்வார் )

இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட –
நினைவு இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நெருக்குண்டது
(என்னைப் பிடிக்கவே ஊராக வளைத்தான் )

அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்
இன்று இங்கன் நெஞ்சால் இடுக்குண்டது
(அன்று அங்கு) பூமியும் பூமியடையச் சூழ்ந்த ஜலங்களும் மறையும்படி பரம்பின மேகம் போலே ஸ்யாமமான
வடிவை யுடையவனுடைய திருவடிகள் (இன்று இங்கன்) என் நெஞ்சிலே இடுக்குண்டது

(அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் )

அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
தான் நிமிர்த்த
காருருவன்
கால்
அங்கு
சென்று வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட
என்று அந்வயம்

————

நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்

(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

பதவுரை

என் மனத்தே–எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார்–திருமால்-ஸர்வேஸ்வரன் – வந்து சேர்ந்து விட்டார்;-பரிகரங்களோடே வந்து சேர்ந்தார் –
வல் வினையார் தாம்–(இது வரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வல்வினையார் -கொடுமைக்குக் கொடுத்த மதிப்பு / மாலார் பெருமைக்கு கொடுத்த மதிப்பு
வீற்றிருக்கும் இடம் காணாது–(இனி மேலும்) அதிகாரம் செலுத்திக் கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
வீறு கொண்டு வேற்றுமை தோன்ற இருத்தல் வீற்று இருத்தல்
கால் பொத திரிந்து–கால் நோவத் திரிந்து அலைந்ததனால்
மேலால்–முன்பெல்லாம்-அவனை விலக்கி புக ஒட்டாமல் பழுதே போன பல காலம் முன்பு எல்லாம்
தருக்கும்–என்னைத் துன்பப் படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும்–பெருமையோடே-செல்வச் செருக்குடன்
இளைத்து–வருத்தமுற்று
இன நாள்–இப்போது
கத்துவாரம்–கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும்.

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே –
அரவத்து அமளியினோடும் இத்யாதிப்படியே
ஸர்வேஸ்வரன் என் மனஸ்ஸிலே புகுந்தான்

மேலால் தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
பண்டு நம்மை ஹிம்ஸித்துப் போந்த அளவுடைமையோடே கூட வல் வினையார் விஸ்திருதமாக
இருக்கும் இடம் காணாதே இளைத்துக்
கால் தேயும்படி தடுமாறிக் கூப்பிட்டுக்
கொடு திரியும் அத்தனை இறே இன நாள்

தருக்குகை -நெருக்குகையாய்
ஹிம்ஸிக்கை –

என் மனத்தே
மாலார் குடி புகுந்தார்
வல் வினையார் தாம்
மேலால்
தருக்கும் இடம்
பாட்டினொடும்
வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
காலே பொதத் திரிந்து
இன நாள்
கத்துவராம்
என்று அந்வயம்

———

(இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )

(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
நமன் தமர்கள்–யம படர்கள்
இளைக்க பற்றி–பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த–அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய் தந்து மோதாமல்–நாய்களை ஏவி நலியாமற்படி
நல்குவான் நல்காப்பான்–(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யா விட்டாலும் சரி;
தான்–அந்த எம்பெருமான் தான்
எவ் வுயிர்க்கும்–எல்லாப் பிராணிகளுக்கும்
தாய் தந்தை–தாயும் தமப்பனுமாவன்;-ஸ்வா பாவிக பந்துத்வம் இவன் இடம் தானே –
சொன்னேன்–(இவ் வுண்மையை உனக்குச்) சொல்லி விட்டேன்;
இளைப்பாய் இளையாப்பாய்–இனி நீ அநர்த்தப் பட்டாலும் படு; சுகப் பட்டாலும் படு.

இளைப்பாய் இளையாப்பாய்
பற்றுவாய்
பற்றாது ஒழிவாய்

அவனைப் பற்றிலும் பற்று
விஷயத்தைப் பற்றிலும் பற்று

நெஞ்சமே சொன்னேன்
ஈஸ்வரனே சர்வ வித பந்து -என்னும் இடம் ஒருத்தருக்கும் சொல்லுமது அன்று
அத்தை யுனக்குச் சொன்னேன்

இளைக்க நமன் தமர்கள் பற்றி –
பற்றும் போதே இளைக்கும்படிக்கு ஈடாகப் பற்றி

இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்
இளைக்கும் படிக்கு ஈடாக நாய்களை விட்டு மோதாதபடி

நல்குவான் நல்காப்பான்
ரக்ஷிக்கிலும் ரக்ஷிக்கிறான்
ரஷியாது ஒழியிலும் ஒழிகிறான்

தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
ஸர்வ ரக்ஷகனானவன்
ரக்ஷகன் ரக்ஷணத்திலே நெகிழ நின்றான் என்று அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களைகண் மற்று இலேன் -என்னும்படியே –

(வேறே ஒருவரை ரக்ஷகராகப் பற்ற ஒண்ணாது என்னாமல் அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
என்பதால் இவரை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபந்த பரித்ராணத்தில் அருளிச் செய்தார் )

(ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை–நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் —
பெரிய பிள்ளையையும் -(பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் )-
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் –
இவள் சோகார்த்தையாக —

ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன

அநாதி காலம் பாப வாசனைகளாலே –
ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன

கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் –
உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் -)

————–

அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

பதவுரை

தானே தனி தோன்றல்–அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;-
இவர் ஒருவரே கர்மாதீனமாக தோன்றாமல் கிருபாதீனமாக
இச்சா பரிக்ருஹீத பிறப்பில் பல் பிறவி பெருமான் அன்றோ
ஒப்பற்ற அவதாரங்கள் உடையவன் -இதில் ஒப்பற்றவன்
தானே தன் அளப்பு ஒன்று இல்லாதான்–அவனே ஒப்பற்றவன்;அளவு என்பதே அளப்பு -விகாரம்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல்–அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
உள்ளே அந்தர்யாமியாய் இருந்து ஸர்வ நியாமகனாய் இருந்து ரக்ஷிக்காமல் போவானோ
ஸர்வஸ் அஹம் ஹ்ருதய நிவாஸி
(தானே)–இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
இளைக்கில்–(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார்–இவ்வுலகமானது
கீழ் மேல் ஆம்–தலை கீழாக விபரீதமாய் விடும்;
மீண்டு அமைப்பான் ஆனால்–(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப் புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார்–இப் பூமியில் ஆர் தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிட வுரியர்?
அவனது ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே

தானே தனித் தோன்றல்
ஒரு ஹேத் வந்தரத்தாலே-(கர்மத்தால் பிறக்குமவன் அன்றே)
தோன்றுமவன் அல்லன்

தன் அளப்பு ஓன்று இல்லாதான்
உபமான ரஹிதன்

தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அல்லாதார்க்கும் சத்தை அவனே
தச் சப்தம் -அந்தர்யாம் யம்ருத-என்ற ப்ரஸித்தியைப் பற்ற
(சத்தை என்றாலே ஸ்திதி நிவ்ருத்தி பிரவிருத்தி அனைத்துமே இவன் அதீனமே )

தானே இளைக்கில் பார் கீழ் மேலாம்
அவன் ரக்ஷணத்திலே நெகிழ நிற்கில் பூமி அத ரோத்தரையாம் (அதர உத்தரமாகும் )

மீண்டு அமைப்பான் ஆனால்
அவன் தானே திரியட்டும் ரக்ஷிப்பானாகில்

அளக்கிற்பார் பாரின் மேலார்
பூமியில் அவனைப் பரிச்சேதிக்க வல்லார் உண்டோ
(அவனது உபகார பரம்பரைகள் ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே )

———–

பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

பதவுரை

ஆரானும் ஆதானும் செய்ய–யாராவது எதையாவது செய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து–விசாலமான இப் பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே—அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான்–நானோ வென்றால்
சீர் ஆர் மனத்தலை–(எனது) சிறந்த மனத்திலுள்ள
பகவத் குணங்கள் இருக்கும் இடம் சீரார் மனம்
வன் துன்பத்தை–வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால்–நித்ய ஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ண பிரானால்
மாற்றினேன்–நீக்கிக் கொண்டேன்.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே –
எல்லாரும் ஏதேனும் செய்க
பூமிப் பரப்பு எல்லாம் நம்மாலே ஆராய்ந்து திருத்தப் போமோ

சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி
ஸூலபனான கிருஷ்ணனாலே
பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே
தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்
எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

(திருவாசிரியத்திலும் ஓ ஓ உலகின் இயல்பே என்று தொடங்கி
தாம் தப்பினோமே என்று நிகமிக்கிறார் )

வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன்
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே
என்று அந்வயம்

————–

மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –

(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

பதவுரை

ஓர் இருள் தான் அன்ன மாமேனி–இருள் தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியை யுடைய
எம் இறையார்–எம்பெருமான்
தந்த–அளித்த
அருள் என்னும் தண்டால்–க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல் வினையை–கொடிய பாவங்களை
அடித்து–புடைத்து,
கானும் மலையும் புக–(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான்–துரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்–நானும் என் மனமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்
இத் தலையில் குறைவற்றது
பொருந்தாத தலையும் பொருந்திற்று
பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே

தானோர் இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து
மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய
ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து
(மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல்
அவன் அருளாலே போக்கினான் என்றபடி )

வல் வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்
அவன் பிரிவாகிற மஹா பாபத்தைக்
காட்டிலும்
மலையிலும் புகும்படி ஒட்டும்படிக்கு ஈடாக
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –

(மற்றை நம் காமன்கள் மாற்று பிரபல தர விரோதி -கைங்கர்யத்தில் ஸூவ போக்த்ருத்வ புத்தி
இங்கும் நைச்யத்தால் பிரிந்த வல்வினை
பரிமித ஸ்வா தந்தர்யமே ஜீவனுக்கு இசைவது மாத்திரமே )

————–

இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்

(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பதவுரை

நெடியாய்–பகவானே!-த்ரிவிக்ரமனே -சர்வாதிகனே-
செறி கழல் கொள் தான் நிமிர்த்து–செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று–கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரி விக்கிரமாவதாரத்திலே
அடியால் படி சடந்த முத்தோ–திருவடியால் பூமி முழுவதையும் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
ஆமோதம் -முத்தோ
அது அன்றேல்–அல்லது
முடியால் விசும்பு அளந்த முத்தோ–திருவடியால் மேலுலகத்தை யெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம்–அவ் விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
காரணம் அறியோம் -ஸூ கமாக அனுபவிக்கிறோம் அவனது கிருபை அடியாகவே

அடியால் படி கடந்த முத்தோ –
முத்து என்று மவ்க்த்யமாய் -(பிள்ளைத்தனமாய் )
அத்தாலே -லக்ஷணையாலே -அழகாய்
அடியாலே பூமியை அளந்த அழகோ

அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியாலே ஆகாசத்தை அளந்த அழகோ -என்னவுமாம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – திரு விருத்தம்-50-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ———மூன்றாம் திருவந்தாதி —90-

செறி கழல் -என்கையாலே
திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்

நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்

அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ

சிலம்பும் செறி கழலும் (மூன்றாம் திரு –90)-என்று
இதுக்கு உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று
அறிகிறி லோம்
ஆல் ஆச்சர்யம்

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –
திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ
திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ -என்றுமாம்

அடியாலும் முடியாலுமோ என்னுதல்
அவற்றில் உண்டான முத்தாலேயே என்னுதல்

முத்து என்றது
அழகாதல்
முத்துத் தான் ஆதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
நீ யளந்த யன்று
அடியால் படி கடந்த முத்தோ –
அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ
அறிகிலமால்
என்று அந்வயம்

—————

திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்

(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )

(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு கங்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன சமனாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பரஞானம்
முனியே நான் முகனே-பரமபக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பரபக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

பதவுரை

என்றேனும்–எக் காலத்திலும்
கண் கண்ணால்–வெளிக் கண்ணாலே(பெயர் மட்டும் உடைய கண் )
காணாக–காணக் கூடாத
அவ் வுருவை–அப்படிப்பட்ட விலக்ஷணமான திரு வுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல்–நெஞ்சாகிற அகக் கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே–அப்போதே,
ஆழியான் கார் உருவம்–திருவாழியை நிரூபகமாக வுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும்–நமது புறக் கண்ணும் காணப் பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே–நாம் அவ் வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக் கண் மலராத இப்போது மாத்திரமே.

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் –
ஸர்வேஸ்வரன் கறுத்த திருமேனியை நம்முடைய கண் அன்றே காணும்

என்றேனும் கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து
ஒரு நாளும் பகவத் விஷயத்தைக் காணாமையாலே
பீலிக்கண் -என்றவோபாதி
கண் என்று பேரான கண்ணால் காணப் போகாத அவனுடைய திருமேனியை
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணுமாகில் அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்

(கட் கண் -மீமிசையாலே கண் என்று பேராய் இருக்கிற கண் என்றபடி
ஞானம் உண்டால் காணலாம்
இல்லாத போது காணப் போகாது என்றபடி )

இன்றே நாம் காணாது இருப்பதுவும்
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணாத இன்றே நாம் காணாது இருப்பது
உணர்ந்து காணும் அன்று நம் கண் காணும்

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று சொன்னாராகில்
உள் கண் காணாது ஒழிகை யாவது என் என்னில்
பரம பக்தி பிறந்து அவ்வஸ்துவை ஒழியச் செல்லாமை யாதொரு போது பிறக்கும்
அப்போது காணும் நம் கண்
அவ் வஸ்துவை ஒழியச் செல்லும் இன்று காணப் போகாது என்கிறது
கட் கண் என்றது -பீலி போலேயான புறக்கண்

நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண உணர்ந்த
அன்றே நம் கண் காணும்
உணராத இன்றே நாம் காணாது இருப்பதுவும்
என்று அந்வயம்

————

எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

பதவுரை

இணரும் துழாய் அலங்கல் எந்தை–(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன் மேலும் தழைத்தோங்கு கின்ற
திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான்
தனக்கு எளியர்–தனக்கு அடிமைப் பட்டவர்கள்
எவ் வளவர்–(தன் மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன்–தானும் தன்னை அவ் வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு–(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே–நேராக
உணர எளியனே?–அறியக் கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக் கூடியவனல்லனாயினும்)
ஆனால்–ஆகையினாலே
இங்கு–இவ்விடத்தில்
எம்பெருமான்–எம்பெருமான்
எனக்கு–என்னால் வறிந்து
உணர எளியன்–கொள்ளக் கூடியவன்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
ஒருத்தருக்கும் ஈத்ருக் தயா-த்ருஷ்டாந்த தயா –
இயத்தயா-இவ்வளவு என்று
பரிச்சேதித்து – உணரப் போகான்
யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஞ்ஞாதம் விஜாநதாம்
(உபமான ராஹித்யன்
த்ரி வித அபரிச்சேத்யன் அன்றோ )

இணரும் துழாய் அலங்கல் எந்தை –
அபரிச்சின்ன வஸ்துவினுடைய லக்ஷணம்
திருத் தோளில் திருத் துழாய் மாலையை யுடையவனாகை

இணரும்
தன் நிலத்திலும் இவன் தோளில் விகஸியா நிற்கும்
தேவர்கள் தோளில் மாலை வாடாது
சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்

உணரத் தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர்
தனக்கு நல்லவர்கள் உணர எவ் வளவர்-அவ் வளவனாய் நிற்கும்
ப்ரியோ ஹி ஞாநிநோத் யர்த்தம் 7-14-
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் -என்னும்படியே

ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு
தனக்கு நல்லவர்கள் நினைத்த அளவிலே யமைக்கும் ஆகையாலே
என் ஸ்வாமி எனக்கு எளியன் –

(தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:–7-14-

தேஷாம் நித்யயுக்த-அவர்களில் நித்திய யோகம் பூண்டு,
ஏகபக்தி: ஜ்ஞாநீ விஸிஷ்யதே-ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்,
ஹி ஜ்ஞாநிந:-ஏனெனில் ஞானிக்கு,
அஹம் அத்யர்தம் ப்ரிய:-நான் மிகவும் இனியவன்,
ஸ ச மம ப்ரிய:-அவன் எனக்கு மிகவும் இனியன்.

அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்.
ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.

————-

அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

பதவுரை

இங்கு–என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டு போல்–இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால்–என் மேல் வாத்ஸல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனான பெருமானுடைய
சீர்க்கும்–கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது–எனது நெஞ்சு இடம் போராத தாயிருக்கின்றது.
அங்கே–முன்பு விசாலமாக வாழ்ந்த விடத்திலே
வீற்றிருத்தல் இல்லை–(பாவங்கள் இனி) தங்கி யிருக்க முடியாது (ஏனென்றால்)
வல் வினையார் தாம்–கொடிய பாவங்கள்

மடி அடக்கி நிற்பதனில்–துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதை விட
ஈண்டு–இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு–கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல்
பண்டு போல் இங்கு விஸ்திருதமாக இருக்க ஒண்ணாது
வீற்று இருக்க ஒண்ணாது

என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் –
வகுத்த விஷயத்துக்கு இடம் போராது
ஐஸ்வர்ய வாத்ஸல்ய ஸூசகமான கண்களை யுடைய ஸர்வேஸ்வரனுடைய
குணங்களுக்கு என்னுள்ளம் சிறிது

(சீர்க்கும் -குணங்கள் இருக்க இடம் ஒழிய பாபத்துக்கு இடம் இல்லை -என்றபடி
குண ஸ்மரணத்தாலேயே பாபம் போம் என்று தாத்பர்யம் )

அங்கேமடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு
அங்கே ஒரு மூலையிலே ஒதுங்கித் திரிந்தாலோ என்னில்
முதன்மை செய்த வூரிலே புடைவையை ஒதுக்கிக் கொடு திரிவதில்
அங்கு நின்றும் சடக்கெனக் கால் வாங்குகை யன்றோ அழகு

மடி -முந்தானை –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -11-20–

June 29, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

பதவுரை

ஆழாத பாரும் நீ–(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ–ஜல தத்வமும்*;
தீயும் நீ–தேஜஸ் தத்வமும் நீ;
காலும் நீ–வாயு தத்வமும் நீ;
வானும் நீ–ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ–இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாக வுடைய நீ,
சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் -பாராய் நீராய் தீயாய் காலாய் வானாய் நின்ற நீ அன்றோ
நாழால் அமர் முயன்ற–அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கை வைத்த
வல் அரக்கன்–கொடிய இராவணனுடைய
இன் உயிரை–இனிமையான பிராணனை
வாழா வகை–வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல்–கவர்ந்து கொண்டது
நின் வலியே–உனக்கு ஒரு சூரத் தனமோ? –அல்ல.

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –
ராக்ஷஸ ராஜன் என்கிற அபிமானத்தாலே –
பெருமாளோடே எதிரிடுவோம் அல்லோம் -என்னாதே –
யுத்தத்தில் யத்னம் பண்ணி மிடுக்கனான ராவணன் பேணின உயிரை
வாழா வகை உனக்கு ஒரு மிடுக்கோ

அயோக்யன் என்று அகலுமவர்கள்
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒப்பார்கள்
(பிராட்டியைப் போலவே ஒவ்வொரு ஜீவனையும் விரும்பும் அவன் அன்றோ
கிம் கார்யம் சீதையா மம என்னுமவன்
கடிமா மலர்ப்பாவையோடே சாம்ய ஷட்கம் உண்டே )

ஆழாத பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய் நின்ற
விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற
உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ

அக்னிக்கும் ஜலத்துக்கும் சேராதால் போலே
பரஸ்பர வ்ருத்தமான பஞ்ச பூதங்களையும் கொண்டு
கார்யம் கொள்ளும் உனக்கு -என்றபடி –

விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்
அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற உனக்கு
உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேர விடுகை பணியோ என்றுமாம்

————-

கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்

(கீழ் எல்லாம் நெஞ்சைக் கொண்டாடி
இதில் அத்தையே நிந்திக்கிறார்
இரண்டுக்கும் அவனது வை லக்ஷண்யமே ஹேது
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சே காரணம் அன்றோ
வாசனை -மனப் பதிவுகள் தானே காரணம்
விருத்த விபூதிகளைச் சேர்த்தால் போல் அடியேனையும் சேர்த்துக் கொண்டாரே
பெற்ற பேற்றுக்கு மகிழாமல் இழந்த பழுதாய் போன பண்டை நாளுக்கும்
அயோக்கியன் என்று அகன்ற கிலேசமும் )

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆழ் துயரில்–அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான்–என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே-இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீ யன்றோ;
(என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயே யன்றோ.)
போ–அது கிடக்கட்டும்.
உபதேசம் தரினும்-(எம்பெருமானுக்கு நம் பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய்–நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
(உம்மை ஆழ் துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல)
போய் ஒன்று சொல்லி என்-மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாத ப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
(இப்போது முடிவாகச் சொல்கிறேன் கேள்;)-
கண்ணன் தான்–எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே–வாழ்த்துவது தான்-மங்களா சாசனம் பண்ணுவதே
வழக்கு–நியாயம்
(கண்டாய் – முன்னிலையசை)

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
ஆழ் துயர் என்றது –
1-அயோக்யர் என்று அகன்ற கிலேசமாகவுமாம்
2-விஷய ப்ராவண்யம் ஆகவுமாம்

போ என்று சொல்லி என் போ நெஞ்சே
நெஞ்சு நீர் அன்றோ ஆழ் துயரிலே விழும் படி பண்ணினீர் என்று சொல்ல
நீ ஒன்றைச் சொல்ல நான் ஒன்றைச் சொல்லுகிறது என் –
அத்தைப் பொகடு -என்கிறார்

நீ என்றும் காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய்
நீ உபதேசம் தரினும் என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்
ஸர்வேஸ்வரனுக்கு ஐஸ்வர்யமே அன்று காண் விஞ்சி இருப்பது –
நீர்மையும் விஞ்சி இருக்கும் காண் என்று நான் சொன்னாலும்
அழன்று-சீறி – அத்தைக் கொள்ளாய்

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
ஆகில் இனிச் செய்வது என் என்று நெஞ்சு கேட்க
அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க
நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்
அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம்
(அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் )

——————

அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –
(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

பதவுரை

வழக்கொடு மாறுகொள் அன்று–(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;
(அஃது என்னவெனில்)
ஓடு- ஓட்டுவதும் சேர்வதும்- வழக்கு அன்று
மாறுகொள் அன்று-கைம்மாறு கொள்வதும் வழக்கு அன்று
அடியார் வேண்ட–(மேன் மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும்–(மேன் மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ–ஸ்வாமீ!
இழப்பு உண்டே–(அநந்ய ப்ரயோஜனான -என் வேண்டு கோளை நிறைவேற்றுதற்காக)
கஷ்டப்பட வேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட–என்னுடைய வேண்டுகோளுக்காக
யுக்தி மாத்திரத்தாலே பிரார்த்தனை ஒன்றாலே
சரண வரணம் வா -இதுவும் உன்னாலேயே –
அதுவும் அவனது இன்னருள்
எம் ஆள் கொண்டு ஆகிலும்–என்னை அடிமைப் படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால்–எனது கண்களுக்கு
உன் மேனி சாய்–உனது திருமேனியின் ஒளியை
காட்டு–காட்டி யருள வேணும்

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் கண்டு –
(ஓடு வழக்கு அன்று மாறு கொள் வழக்கு அன்று என்று கூட்டி அருளிச் செய்கிறார்
ஓடு என்று ஸம்பந்தமாய் -ஸம்ஸாரிகள் என்று அத்யா ஹரித்துக் கொண்டு
ஸம்ஸாரிகள் முன் நிற்கை என்பது பலித்த தாத்பர்யம் )
1-ஸம்ஸாரியினுடைய முன்னே நிற்கையும் வழக்கு அன்று
2-சாதன அனுஷ்டானம் பண்ணினாரைப் போலே உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் கொள்ளுகையும் வழக்கு அன்று
(ஒன்றும் அறியாத சம்சாரிகள் முன்னே அவதரித்து நிற்கையும்
நீ ஒன்றைச் செய் நான் ஒன்றைத் தருகிறேன் என்கையும்
உனக்கு வழக்கு அன்று பிரயோஜனம் இல்லை என்றபடி )

(வழக்கு ஏது என்று சங்காபிப்ராயம்
அடியார்க்கு அபேஷா மாத்திரத்தாலே கார்யம் செய்கை வழக்கு என்று உத்தரம்
அது காணோம் )
ஆகில் -நீர் சொல்லுகிறது என் என்னில்

அடியாரானவர்கள் வேண்ட ஸ்வாமி இழக்கக் கண்டோம்
(நீ உன்னையே அழிய மாறி கார்யங்கள் செய்தவற்றைக் கண்டோமே )

இறைவ –
நீர் அடியாராக வேணுமே என்ன
என் பக்கலில் உள்ளது அழிந்ததாகிலும்
உன் பக்கலில் உள்ளது அழியாது இறே
உன் ஸ்வாமித்வம் உண்டாக என் சேஷத்வம் தன்னடையே கிடவாதோ

(நான் சொத்து அல்ல என்று வழக்கு பேசினாலும் உன் ஸ்வாமித்வம் இல்லாமல் போகாதே
ஸ்வா பாவிக ஸ்வாமித்வம் உன்னது அன்றோ
ஆகவே வேறே வழியே இல்லை -அடியேன் சொத்தாகவே ஆக வேண்டும் )

இழப்புண்டே
நாட்டு அடியாருக்கு இழப்பு யுண்டாகிலும் உன் அடியார்க்கு இழப்பு உண்டோ
நாட்டு அடியார் -இதர சேஷ பூதர்

எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட
இழப்பு இன்றிக்கே ஒழியும் போது
உமக்கு அடிமையிலே சிறிது அந்வயம் வேணுமே என்ன
என்னுடைய யுக்தி மாத்ரத்தையே பரிபூர்ண கைங்கர்யமாகக் கொண்டு செய்ய வேணும்

என் கண்கள் தம்மாற் காட்டுன் மேனிச்சாய்
செய்ய வேண்டுவது என் என்ன
ஒருத்தன் பட்டினி விட ஒருத்தன் உண்டால் பசி கெடாது இறே –
காத்ரைஸ் சோகாபி கர்சிதை (ஸூந்தர )-என்னும்படியே
தேஹாந்த்ரே தேசாந்தரே (காலாந்தரத்தில் )காண ஒண்ணாது

(காத்ரைஸ் சோகாபி கர்சிதை-துன்பப்பட்ட இந்த அவயங்களோடே
புருஷ வியாக்ரமான பெருமாளைக் காணும் படி வார்த்தை சொல்ல பிராட்டி திருவடி இடம் வார்த்தை
ஞானிகளை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் -மண் பற்றோடு வேர் சூடுமா போலே )

விடாய்த்த கண்களாலே காண வேணும்
உன் மேனிச் சாயை -நிறத்தை
யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு -கண்கள் தனக்கு காட்டு -என்றபடி

————–

காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –

(திவ்யம் ததாமி தே சஷுஸ்ஸூ பஸ்யதே -அவன் தந்த கண்ணைக் கொண்டு அன்றோ
அர்ஜுனன் விஸ்வரூபம் தரிசித்தான்
இந்திரியங்கள் பாம்பு -ஜீவன் அறிவுடையவன் இவற்றில் கை நீட்டுவது போலும்
பூதனையும் தன்னை முடிக்கவே கண்ணன் பெருமை அறியாமல் முயன்றது போல்
அவளோ கண்ணன் இடம் ஈடுபட்டு அழிய
நாமோ விஷயாந்தரங்களில் ஈடுபட்டு ஸ்வரூப நாசம் அடைகிறோம் )

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
பேயார்–பூதனையானவள்,
சாயல் கரியானை–நிறத்தால் கரியனான கண்ண பிரானை
உள் அறியார் ஆய்–உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
(அப் பெருமானைக் கொன்று விட நினைத்து)
பேயார் ஆய்–அறிவு கெட்டவளாய்
முலை கொடுத்தார்–(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
பேயரான பூதனை பேயான படியால் பால் கொடுத்தாள்
ராக்ஷசனான விபீஷணன் நல்லவனாக திருவடி அடைந்தான் அன்றோ –
ஆகவே இரண்டாலும் பிறப்பையும் அனுஷ்டானத்தையும் சொன்னபடி
நீ ஆர்–அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆக வேண்டும்?
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)
தேம்பு ஊண் சுவைத்து–ஆத்மா கெட்டுப் போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும்–(அதனால்) ஊனமடைந்திருக்கிறா யென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
விளையும் அநர்த்தம் அறிந்தும் அன்றோ செய்கிறோம்
போய்–நம்முடைய தாழ்வுக்குத் தகாததான (சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்-பலகாலும் சென்று ஆழ்ந்து
கீழே விஷயாந்தர ப்ரவணராய் பலகாலும் சென்று ஆழ்ந்து அநர்த்தப் பட்டு என்றுமாம்
தீ வினை ஆம் பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி–அநர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே கை நீட்டுவாரைப் போலலே
பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.-அவளை விட தாழ்ந்தவன் என்றவாறு
பேயாக அவள் வஞ்சிக்க மநுஷ்யராய் அன்றோ நாம் அநர்த்தப்படுகிறோம்

சாயல் கரியானை
நிறத்தால் கரியனாய் யுள்ளவனை

உள்ளறியாராய்
ஆழ வநுபவிக்க அறியாராய்
(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் )
ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்

நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே
பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே

தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி
ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து
(வெட்டவும் நினைக்கவும் முடியாது -அநர்த்தத்தை-ஸ்வரூப நாசம் அடையுமே )
அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து
அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார்
உனக்கு அண்ணியளோ பூதனை

(முன்புற்ற நெஞ்சை நீ என்று விளிக்கிறார்
எடுப்பும் சாய்ப்புமாகவே போகும்
தன்னைப் பார்க்க விலகுவார்
அவனைப் பார்க்க அணுகுவார் )

அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் –
ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து)
உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை
அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —

நெஞ்சே போய் –என்று தொடங்கி —
நீட்டல் பார்த்து அவளுக்கு நீ யார் -என்று அன்வயம்

(போய் பதம்
மீண்டும் மீண்டும் சுவைத்து என்றும்
மீண்டும் மீண்டும் பாபர் வாயில் கை நீட்டி என்றும் அந்வயம் )

ஸாஸ்த்ர வஸ்யமான உன்னைப் பார்த்தால்-அறிவு கெட்டு ஈஸ்வரனை அழித்தாள் அவள் –
நீ சாஸ்த்ர வஸ்யமாய் இருக்கச் செய்தேயும் விஷயங்களிலே ஆத்மாவை மூட்டி
நசிப்பிக்கையாலே உனக்கு சமள் அன்று என்றபடி

அன்றியே
தேம் பூண் -ஈஸ்வரனுக்கு அவத்யம் வரும்படி
சுவைத்து -அவனை அணைந்து என்று ஈஸ்வர பரமாகவுமாம்

அப்போது தீ வினையாம் என்று அறிந்து அறிந்து -பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
பாம்பின் வாயிலே கை நீட்டுமா போலே நாம் அவனைக் கிட்டுகை அவத்யம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கிட்டுகிற உனக்கு பூதனை சமளோ -என்றபடி –

————–

(நெஞ்சே )
உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!-அயோக்கியன் என்று அகல நினைக்கும் நெஞ்சே
ஓதம்–கடலானது
ஆர்த்து–கோஷித்துக் கொண்டு
தம் மேனி தாள்–தம்முடைய திருமேனியையும் திருவடியையும் (சிவந்த திருவடிகள் என்றுமாம் )
தடவ–(அலையாகிற கையினாலே) தடவும் படியாக
தாம் கிடந்து–(அக் கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர்வார்–தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப் பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர்–திருக் குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத–கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
துன்பங்களை நினையாமல் சீர் ஓத
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை–அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய் விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர்–(இவ் விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்து கொள்.
(செருப்பு வைத்து திருவடி தொழாமல் நம்முடைய துயர்களை நினைத்துக் கொண்டே
அவனது சீரான குணங்களை அனுபவிக்கப் பாராதே )

பார்த்தோர் -எதிரிதா நெஞ்சே-
அணுகி எதிரிதாப் பார்த்து ஓர்
முன்னிட்டுப் பார்த்து விசாரி

ஆர்த்தோதம் தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர்
கடலானது ஆர்த்துக் கொண்டு தம்முடைய சிவந்த திருவடிகளை வருட
அவசர பிரதீஷனாய்க் கண் வளருகிறவருடைய குணங்களை
(ஆஸ்ரிதர் கிடைப்பாரா என்று எதிர் பார்த்து கண் வளர்கிறான் அன்றோ
சிவந்த கண் -எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் அநாதி காலம்
ஐஸ்வர்யம் வாத்சல்யம் ப்ரேமம் -கண் பூத்துப் போம் படி கிடக்கிறான் )

படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –
தான் படுகிற துயரத்தைப் பொகட்டு அக் குணங்களை ஓத
அவனுடைய பெருமைக்கு அழிவு என்னும் பேச்சில்லை
இத்தை முன்னிட்டு அறிந்து விசாரி –

ஓதம் ஆர்த்துத் தம் மேனியையும் தம்முடைய செம்மேனித் தாளையும் தடவத்
தாம் கிடந்தது கண் வளருகின்ற வருடைய சீரை
படு துயரம் பேர்த்து ஓதப்
பீடு அழிவாம் பேச்சு இல்லை
நெஞ்சே எதிரிதாப் பார்த்து ஓர் –
என்று அந்வயம்

———–

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

பதவுரை

பேராளா–‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால்–திருநாமம் வமானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி-உன்னாலே மார்பால் அணையப்பட்டும்
வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப் படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப் பூமியானது.
நீர் ஏற்பு அரிதே–தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப் பெற முடியாதோ?’
யாம் அறிய–இவ் விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு–நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.

சீரால் பிறந்து
மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா -(ஆரண்ய -66)
சக்கரவர்த்தி தான் தேடின அர்த்தமும் பண்ணின தபஸ்ஸூம் அழிய மாறிப் பெற்றால் போலே யாதல்
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ

(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )

சிறப்பால் வளராது
ஸ்ரீ ஸூ மித்ரையாரும் வசிஷ்டாதிகளும் பேணி வளர்க்க வளர்ந்தால் போலே யாதல்
அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ

பேர் வாமன் ஆக்காக்கால்
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளினவோ பாதியாக வாமனனாக வேணுமோ
ஸ்ரீ யபதி என்ற ஒரு பேர் ஆனால் ஆகாதோ
ஒரு ருஷி பத்னி பக்கலிலே பிறந்து (அதிதி ஆஸ்ரமம் தானே )
பேணுவார் இன்றிக்கே வளர்ந்து
பேரும் வாமனனாகா விட்டால் உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டு
அணைவது உண்பது உமிழ்வதான இந்த பூமி நீர் ஏற்பதாய் பட்டாயோ

பேராளா –
கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ

(உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார் )

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து
நீ இப்படி எளியையாய்
அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை

வேதமும் பேசப் புக்கால்
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் –
சூழ்ந்து -விசாரித்து

(த்வந் நிர்மிதா ஜடரகா சா தவ த்ரி லோகீ கிம் பிஷனாத் இயம் ருதே பவதோ துராபா
மத்யே கதா து ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 16-)

(ஹே தேவ
த்வந் நிர்மிதா –தேவரீரால் படைக்கப் பட்டதும்
ஜடரகா சா தவ –ஒரு கால் தேவரீருடைய திரு வயிற்றிலே கிடந்து ரக்ஷை பெற்றதுமான
இயம் த்ரி லோகீ –இந்த மூ உலகும்
பிஷனாத் ருதே –மகா பலி இடத்தில் யாசிப்பது தவிர மற்ற உபாயத்தினால்
பவதோ துராபா கிம் –தேவரீருக்கு கிடைக்க அரிதோ
யாசித்துப் பெறாமல் ஸ்வா தந்த்ரியத்தினாலேயே பெற முடியாததோ
மத்யே கதா து -இடையில் ஒரு காலத்தில்
ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் –இந்த உலகத்தை பிஷா வ்யாஜத்தினால் மூவடி கொண்டு அளந்து அருளா விடில்
விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—வேதமானது தேவரீருடைய விக்ரமங்களினால்
எங்கனம் மேன்மை பெற்றதாகும் )

————-

அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது

(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-

பதவுரை

எங்கும் சூழ்ந்து–நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு
அரக்கன்–இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய–ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரை வில் ஏந்தினார் தாம்–காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து–(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டினக்கால்–‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப் பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும்–ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர்–திரு வுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தே யிருப்பர்;
பின்னும்–எக் காலத்திலும்
தம் வாய் திறவார்–(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார்.

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் –
எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே
இவர்களை சூழ்ந்து
அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –

வை முக்யம் பண்ணினார் என்று தனி இருப்பிலே பிராட்டிக்கு வாய் திறவார்
பிரஜைகள் குற்றம் செய்யத் தாய்க்கு இறே சொல்லுவது
அவளுக்குச் சொல்லார்
தோன்றா விடுகை -ஆபி முக்யம் பண்ணா விடுகை

சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய தாள்வரை வில்லேந்தினார் தாம்
பார்த்த இடம் எல்லாம் ராம சரம் என்னும்படி சூழ்ந்து
ஒளியை யுடைய மலை போலே இருந்துள்ள ராக்ஷஸனுடைய தலைகள்
இடியும்படி திண்ணிய வில்லை ஏந்திய சர்வ ரக்ஷகர்

சக்தராய் இருக்கச் செய்தே அஸக்தரைப் போலே இருப்பர்
இவர்கள் உபேக்ஷித்தார் என்று பிராட்டிக்கு வாய் திறவார்

ஈஸ்வரன் வெறான் என்றது கீழ்
அடியார் பரமாக்கி அருளிச் செய்கிறார் மேல்

அடியார் சூழ்ந்து வேண்டினக்கால் –
அடியாரானவர்கள் புத்தி பண்ணி உபாஸித்தாலும் தோன்றிற்று இலராகில்
சேஷ பூதன் சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை அன்றோ -என்று வெறார்கள்

பின்னும் வாய் திறவார்
பகவத் குண ஹானி சொல்லுமவர்களுக்கும் வாய் திறவார்

சூழ்ந்து எங்கும் இத்யாதி
ராமாவதாரமாய்த் தோன்றுமவர் நமக்குத் தோன்றிற்று இலர் என்று வெறார்கள் –

———–

உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது

(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்று உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–

பதவுரை

தாம்பால் ஆப்புண்டாலும்–(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டி யடிக்கப் பெற்றாலும்
அத் தழும்பு தான் இளக–அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால்–காளியனாகிய பாம்பினால்
ஆப் புண்டு–கட்டப்பட்டு
பாடு உற்றாலும்–கஷ்டங்களை யடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது–(ஜகத் ஸ்ருஷ்டியில்) சோம்பல் படாமல்
இ பல் உருவை எல்லாம்–இவ் வுலகில் காணப்படுகிற பல பல பிராணிகளை யெல்லாம்.
படர்வித்த–விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா–ஆதி மூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார்–உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு–நீயே சொல்லு.

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் –
என் மகன் இறே -நான் இவனுக்கு நல்லள்-என்று
யசோதைப் பிராட்டி தாம்பாலே கட்டினாலும்
அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ சிஹ்னம் போலே இறே
அத் தழும்பு ஏதும் இல்லாதபடி காளியனாலே படாதது பட்டாலும்

தழும்பு தானிளக-
தழும்பு தான் இல்லாத படி

சோம்பாது இப் பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் தொல்லுருவை யார் அறிவார் சொல்லு
இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே
நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் )
காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே
பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ
நீயே சொல்லு

வடிவை -ஸ்வரூபத்தை

பரிபவம் பண்ணின போதோடு
பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான
உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ –
நீயே சொல்லு

———-

கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

பதவுரை

சூது அறியா நெஞ்சமே–செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
நன்மை தீமை அறியாத மனமே
சொல்லில் குறை இல்லை–பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை;
அஸங்க்யேயமான அளவில்லா கல்யாண குணாத்மகன் அன்றோ
(அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண்–அநாதியான இப் பூமியில்
மா தானைக்கு எல்லாம்–(துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக–பஞ்ச பாண்டவர்களே எதிரிகளாம் படி
ஓர் நிகர் அற்ற என்று சொல்ல விலை துணை அற்றவர்கள் என்றவாறு
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை–இரவு பகலென்னாமல் எக் காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
அஹோ ராத்ர விபாகம் இல்லாத போர் ராவண வதம்
இங்கு இரவில் இல்லை -இரவிலும் தூங்காமல் ரக்ஷத்தவன் இவனே
(மெய்யே காண விரும்பினால்)
காண்டும்–காண்போம்!
நீ காண்–நீ காணலாம்.

சொல்லில் குறையில்லை
பகவத் விஷயத்தைப் பேசப் புக்கால் பேச்சில் குறையில்லை
பேசி முடியாது
எத்தனை பேசினாலும் விஷயத்தைப் பரிச் சேதிக்கப் போதாது என்றபடி
(பேசினார் பிறவி நீத்தார் பேருளார் பெருமை பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே )

சூதறியா நெஞ்சமே
பகவத் விஷயம் நன்று என்றும்
விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும்
விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு
(விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண் மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
(11 அக்ஷவ்ணி அங்கும் 7 அக்ஷவ்ணி இங்கும் )
பழையதாக பூமி நெளியும்படியான மஹா சேனைக்கு எல்லாம் தானே காத்தான் என்னில்
தங்களுக்குத் தோல்வி என்று அவர்கள் இசையார் என்று
பாண்டவர்கள் ஐந்து பேரும் எதிராக

கண் -என்று இடமாய் பூமி
தானை -சேனை

காத்தானைக் காண்டு நீ காண்
காண்போம் என்று காணப் புக்கால்
அவர்கள் பகல் யுத்தம் பண்ணி இரவு உறங்கினாலும்
இரவும் பகலும் உறங்காதே அர்ஜுனன் தோள் பிடிப்பதும் வெல்லும்படி மநோ ரதிப்பதும்
செய்து கொடு நின்று காத்தவனை

காண்டு நீ காண்
காண்போம் என்று காணப் புக்கது உள்ள படியே காணலாம் காண் –

———-

நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி

(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம் )

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

பதவுரை

அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்–அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக் கொண்டு–வாமந ரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான்–(மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று–தானே எங்கும் பரவி
திரு ஆகம்–தனது திருமேனியினாலே-அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்தாலே –
தீண்டிற்று–உலகங்களை யெல்லாம் தீண்டினானென்பதை
காணப் புகில்–ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில்–நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப் படும் அன்றே–வெட்கப்பட வேண்டுமன்றோ-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )

திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)

காணப் புகில்
நாம் பேசில்
அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
மாணி யுருவாகி
நீரேற்று
உலகம்
கொண்ட
சீரான்
திருவாகம்
சென்று
தீண்டிற்று
நாணப் படும் அன்றே
என்று அந்வயம் –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–அவதாரிகை /பாசுரங்கள்- 1-10–

June 28, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

அவதாரிகை

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களையும் விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தன்னை அனுபவிக்கைக்கு அநு கூலமான தேசத்தையும் –
அநுகூலமான ஞான வ்ருத்த தேஹங்களையும் யுடையராய்
ஸதா அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோ பாதி பிராப்தியும் உணர்ந்து
இவ் வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேஹங்களைத் தாம் யுடையராய் இருக்கிறபடியையும்
பிரதிகூலமான சம்சாரத்தில் தாம் இருக்கிறபடியையும் உணர்ந்து
த்வத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்
என்றார் திரு விருத்தத்தில்

(இனி யாம் உறாமை -என்று
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை அவனால் காட்டக்கண்டு
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும்
அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா-என்றார் திரு விருத்தத்தில்)

நூறு பாட்டுக்குமே இதுவே அர்த்தமாக வேணும் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை (1)-என்று உபக்ரமித்து
இது கற்றவர்களுக்குப் பலமாக
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வரு வினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே (100)-என்று
உப ஸம்ஹரிக்கையாலும்

அடியேன் செய்யும் விண்ணப்பம் (1)-என்று உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த (100)-என்று தலைக் கட்டுகையாலும்
அபேக்ஷித்த போதே செய்யப் பெறாமையால் பிறந்த ஆற்றாமையாலே சொல்லிற்றன
நடுவில் பாட்டுக்கள் –

(உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல்
கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்)

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –ஆர்த்தி பூர்த்தி ஆக்கவும்
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக் கட்டவே ஸ்ரீ பீஷ்மர் சர கல்பத்தில் கிடக்க
அவரைக் கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம் சொல்லுவித்தால் போல
(தர்ம புத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே)
ஆழ்வாரை திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே வைத்ததும்

இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய்
விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலை மக்களாக சொல்லுவான் என்

1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருகைக்கு உபகாரகர்கள் என்பதாலும்
(த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற-புருஷகாரம் பண்ணுபவர்கள் )
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – –
பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
(இங்கே உபகாரகர் -புருஷகார பூதர் -அங்கு ப்ராப்யர்)
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை என்றபடி
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத் துணை ஆவார்கள் என்பதால்
அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போதயந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் பக்த்யா நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக் கட்டவும்
ப்ரக்ருதி சம்பந்தம் அறுத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக் கொடா விடில் இவர் தரிக்க மாட்டாரே
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
இது ஸாஸ்த்ர புறம்பானாலும் ஸத்ய ஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து
திருவாசிரியம் அருளிச் செய்தார்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-
அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-
ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –

ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே

ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
(ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே-)

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே )

————————————

நெஞ்சுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னால் போலே
அது இவரையும் கூடாதே முற்பட
என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணும் காண் -என்கிறார் –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

பதவுரை

முயற்சி சுமந்து–எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே-அடிமை செய்வதிலே – உத்ஸாஹம் பூண்டு
எழுந்து–கிளம்பி
முந்துற்ற நெஞ்சே–(அவ் விஷயத்தில் என்னை விட) முற்பட்டிருக்கிற மனமே!
ஸ்ரீ சீதாபிராட்டி முன்னே சென்று பெருமாளை பின்னே வரச் சொன்னாளே -அதே போல் இங்கும்
நீ எம் எம்மொடு கூடி–நீ (தனிப் பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய்–காரியத்தை நடத்த வேணும்;
(நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்ன வென்றால்)
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன்–(அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தை யுடையனான எம்பெருமானுடைய
நல் -வை லக்ஷண்யம் சொல்லியே உவமானம் சொல்ல முயல வேண்டும்
புகழ்–திருக் கல்யாண குணங்களை
நயப்பு உடைய–நயம் உடைய -அன்பு பொதுந்திய
நா ஈன்–நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற-உண்டாக்கப் பட்டதாய் –
(மனஸ்ஸூ சஹகாரி இல்லாமலே நாக்கே பாடுமே ஆழ்வாருக்கு -நெஞ்சுக்கு முன்பே நாக்கு பாடுமே
யானாய்த் தன்னைத் தான் பாடுவான்
என் நாவில் இந்த கவி மற்ற யாருக்கும் கொடுக்ககிலேன்
பாட்டினால் என் நெஞ்சுள் இருந்தமை காட்டினாய் )
தொடை கிளவியுள்–சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே-அழகிய ஸப்த சந்தர்ப்பங்கள் –
பொதிவோம்–அடக்குவோமாக.
(இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.
யதோ வாசோ நிவர்த்தக்கே வேதம் மீண்ட ஒன்றை அடக்க உத்ஸாகத்துடன் முயல்கிறார் )

முயற்றி சுமந்து
அடிமை செய்கையில் ஒருப்பட்டு

ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்

ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )

மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்

ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்

மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்

பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )

எழுந்து
விஸ்திருகமாய் (கிளர்ந்து எழுந்து )

முந்துற்ற நெஞ்சே
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்னும்படியே முற்பட்ட நெஞ்சே

இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –
க்ருதஜ்ஜமாக வேணும் காண்
பார்த்தபடி அழகிது
பிற்பட்ட என்னையும் கூட்டிக் கொண்டு போ

நயப்புடைய
நீரும் நானும் கூடிச் செய்யப் புகுகிறது என் என்ன
அங்குத்தைக்கு அடிமை செய்வோம் என்கிறார் –

நயப்புடைய
என்னால் தன்னைப் பதவிய வின்கவி பாடிய(7-9-10)-என்னுமா போலே
கவிக்கு நயப்புடைமை யாவது
நாயகனுக்கு முன்பு இல்லாத நீர்மை இக் கவியாலே யுண்டாகை

நாவீன்
நீயும் வேண்டா என்கிறார்
உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா
நெஞ்சிலே யூன்றி அனுபவிக்கைக்கு நீ யுண்டாக அமையும்

(பாட்டுப் பாட நீ வேண்டாம்
அவன் நாவில் இருந்து
பாட்டினால் உன்னை என் நெஞ்சில் இருந்தமை காட்டினான்
அனுபவிக்கவே நீ வேண்டும்
மநோ பூர்வ வாக் உத்தரம் அல்லவோ என்னில்
பக்தனுக்கு ந ஸாஸ்த்ரம் நைவ க்ரம )

(மநோ பூர்வ வாக் உத்தர அன்றோ )
நெஞ்சு இன்றிக்கே கவி பாடப் போமோ என்னில்
நெஞ்சுடைய ஸ்தானத்தில் சர்வேஸ்வரன் நின்று கவி பாடுவிக்கும் என்று கருத்து –
(கவி பாடும் சொல்லாமல் பாடுவிக்கும்
அவர் பங்கு முக்கியம் பிரதானம் -நம்மதும் உண்டு அமுக்கியம் )

தொடை கிளவி
அழகிய சந்தர்ப்பத்தை யுடைய சொல்லு
நெஞ்சு கன்றிச் சொல்லாமையாலே சொல்லில் வெட்டிமை இன்றிக்கே இருக்கை

யுள் பொதிவோம்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -என்று வேதங்கள் வாஸ்யத்தை அடைந்து
நிலை நில்லாமையாலே மீளவும்
இங்கு வாஸ்யம் வாசகத்தை விட்டுப் போக மாட்டாது –
(சொல் பொதிகை -சொல்லுக்கு உள்ளே அடக்குகை
யத் கோ சஹஸ்ரம் இத்யாதி -வாக்கிலே உறைகிறான் அன்றோ )

நற் பூவைப்
வாசகத்துக்கு எட்டுமது அன்று என்கிறது
(திருமேனி அழகு ஸ்வரூபத்தின் அளவு அல்லவே )
உபமானம் உபமேயத்துக்குப் போராமையாலே
உபமானத்தையும் சிக்ஷிக்கிறது

பூ வீன்ற வண்ணன்
பூவைப் பூ
காட்டுகிற நிறத்தை யுடையவன்
பூவைப் பூவைக் காட்டுகிற நிறத்தை யுடையவன் என்றுமாம் –
கோ சத்ருஸோ கவய
கவய சத்ரூஸோ கவ் -என்னுமா போலே

(ஈன்ற -பூ வாதல் -வண்ணமாதல்
பூ வண்ணத்தைக் காட்டுதல்
வண்ணம் -பூவைக் காட்டுதல் )

புகழ்
திவ்ய தேஹ குணங்களையும்
திவ்ய ஆத்ம குணங்களையும் –

நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ்
நயப்புடைய நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-

———

(தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிர பத்ரபாய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.)

நாவீன் துடை கிளவி யுள் பொதிவோம் -என்று
வாஸ்யத்தை விளாக்கொலை கொள்ளக் கடவோம் என்ற இவர்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வேதங்கள் நின்ற நிலைக்கும் அவ் வருகே யானார்
மஹ்யம் நமோஸ்து கவயே -என்கிறார்

கவி சொல்லுகையாவது
விஷயத்துக்கு உள்ளதும் சொல்லி
விஷயத்துக்கு இல்லாததும் இட்டுச் சொல்லுகை இறே
உள்ளது ஒன்றும் சொல்லப் போகாத விஷயத்திலே கவி பாடப் புக்க நமக்கு நமஸ் காரம் என்னுமா போலே
முற்பட இவர் புகழ இழிவது என்
இப்பொழுது பழி என்று மீளுகிறது என் என்னில்
இரண்டும் வஸ்து வை லக்ஷண்யத்தாலே
நல்லது கண்டால் எனக்கு என்னக் கடவது
வை லக்ஷண்யத்தை அநுஸந்தியா -அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

பதவுரை

எங்கள் மால் எம் கண்–எங்களிடத்தில்-வேற்றுமை உருபு
மால்–வ்யாமோஹகத்தை யுடைய
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான பெருமானே,
இரண்டாலும் ஸுலப்யம் பரத்வம் இரண்டிலும் அப்ரமேயன் என்றதாயிற்று
புகழ்வோம்–(ஒருவராலும் புகழ்ந்து முடிக்க வொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம்–(அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி யன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய் விடுவோம்;
புகழோம்–(இவ் வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம்–உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
தாழ்ந்த வாக்கு ஸ்பர்சம் இல்லாததால் -ஈனச் சொல்லாலுமாக –நான் கண்ட நல்லது என்றார் அன்றோ
இது வாசிகம் -மேலே மானஸ வியாபாரம்
மதிப்போம்–உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம்–உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆய் விடுவோம்;
மதியோம்–அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம்–அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்;
(ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது
இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத் தான் போகிறோம்.)
நீ சீறல்–நீ கோபங்கொள்ளலாகாது;
பாடுவதால் சீறாதே மேலான அர்த்தம் -பாடாமல் விலகுவதால் சீறாதே ஆழ்ந்த அர்த்தம்
அளியல் நம் பையல் அம்மவோ கொடியவாறே
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே
இவை–புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய்–மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.

புகழ்வோம் பழிப்போம்
அவ் விஷயத்தைப் புகழப் பார்த்தோம் ஆகில் பழித்தோம் ஆவோம்

புகழோம் பழியோம்
புகழ்வோம் என்றதினாலே இவ் வர்த்தம் ஸித்தியாதோ என்னில்
அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால்
அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு என்று சொன்னார்

(நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்–ஸ்ரீ பகவத்கீதை — இரண்டாம் அத்தியாயம் –12-
ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
அத: பரம்-இனி மேலும்,
வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே.
இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.)

இகழ்வோம் மதிப்போம்
நெஞ்சால் நினைத்தோமாகில் அவ் வஸ்துவை இகழ்ந்தோம் ஆவோம்
மன பூர்வோ வாக் உத்தர என்று
மனஸ்ஸாலே நினைத்தை அன்றோ வாக்கு சொல்லுவது என்கிற நியாயத்தாலே
புகழ்வோம் பழிப்போம் -என்கிறத்தாலே ஸித்தியாதோ என்னில்

நெஞ்சாலே நினைத்த பாபங்களுக்கே பிராயச்சித்தம் பண்ண வேண்டும்படியாலே
நினைத்தோம் ஆகிலும் வஸ்துவை அழித்தோம் என்கிறார் –

மதியோம் -இகழோம்
நினைத்திலோம் ஆகில் இகழ்ந்திலோம் ஆவோம்

மற்று
மற்று -என்கிறது
புகழோம் என்கிறதில் காட்டில்
இகழ்வோம் என்றதினுடைய பிரிவைக் காட்டுகிறது
மற்று இகழ்வோம் என்ற படி
(வாக் வியாபாரத்தில் மாறி மானஸ வியாபாரம் என்கிறது )

எங்கள் மால்
இகழப் போகாத படி தம்முடைய பக்கலிலே வ்யாமுக்தனாய்

செங்கண் மால் -எங்கள் மால்
யதா கப்யாஸம் -என்று ஸ்ருதி ஸித்தமாய்
ஐஸ்வர்ய ஸூசகமான கண்ணை யுடையவனாய்
அபரிச்சேத்யனானவன்
என் பக்கலிலே வ்யாமுக்தனானான்

நீ சீறல்
நம் வை லக்ஷண்யத்தை அறியாதே இவர் இழிவதே -என்று
தம் பக்கலிலே சீறினானாகக் கொண்டு
சீறாதே கொள் என்கிறார்

அன்றியே
தாம் புகழப் புக்கவாறே புசியர் உண்ண என்று இலை யகலப் படுக்குமா போலே
தன் குணங்களைக் கேட்கப் பாரிக்கப் புக
தாம் மாறினவாறே சீறினதுக்கு
சீறாதே கொள் -என்றுமாம் –

தீ வினையோம்
நீ யுகந்தபடி பரிமாறப் போகாத பாபியோம்
விஷய வை லக்ஷண்யம் அறியாதே புகழ இழிந்த பாவியோம் என்றுமாம்

எங்கள் மால் கண்டாய் இவை
வை லக்ஷண்யத்தைக் கண்டு இழிவது
அயோக்யன் என்று அகல்வது
இவை எங்களுடைய பிராந்திகள் இறே

————-

இவை பிராந்தியால் அன்றிக்கே புகழ இழிந்து ஞானத்தாலே இறே
ஆனால் அடியிலே நமக்கு நிலம் அன்று -என்று மீள வேண்டாவோ என்ன
அசித் வ்யாவ்ருத்தியாலும்
அர்த்த அனுசந்தானம் பண்ண ஷமன் ஆக்கி வைக்கையாலும்
நன்று தீது என்று அறிவன்
அசித் சம்சர்க்கத்தாலும் பாரதந்தர்யத்தாலும் சாபலத்தாலும்
அனுஷ்டான ஷமன் அன்று

(அனுஷ்டான ஷமன் அன்று ஸ்துதியாமல் இருப்பத்தைச் செய்ய இயலாதவன் ஆனேன்
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார் )

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

பதவுரை

இறையவனே–எம்பெருமானே!
இவை அன்றே நல்ல–உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவை யன்றோ நல்லது;
இவை அன்றே தீய–உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவை யன்றோ கெட்டது;
இவை இவை என்று அறிவனேலும்–(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம்–புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவை யெல்லாம்
என்னால்–என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது–பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என்–(சபலனான) என்னாலே செய்யக் கூடியது என்ன இருக்கிறது?

இவை அன்றே நல்ல
புகழோம் மதியோம் –
மதியோம் இகழோம் –
என்கிற இவை நல்ல

இவை அன்றே தீய
புகழ்வோம் பழிப்போம்
என்கிற இவை பொல்லாது

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்

இவை எல்லாம்
த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா
என்னால் பரிக்ரஹவும் போகாது
த்யஜிக்கவும் போகாது

இறையவனே
பரிக்ரஹவும் த்யஜிக்கவும் இது தன்னரசு நாடோ

என்னால் செயற்பாலது என்
கர்மண்யே வாதி காரஸ்தே மா பலே ஷு கதாசந
மாம் நமஸ்குரு -என்று
நீ அருளிச் செய்ய என்னால் செய்யப்படுவது உண்டோ
நீயே பற்றுவித்து விடுவிக்கிறவனாய் இருக்க
நம்மால் செய்யத் தக்கவை ஒன்றுமே இல்லையே –

(கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி–ஸ்ரீ பகவத்கீதை–2-47

தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.
செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே–18-65

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.)

————

நான் அணையில் (அணைந்து உன்னைப் பாடினால் )அங்குத்தைக்கு அவத் யாவஹம் –
அகலில் அங்குத்தைக்கு நிறம் உண்டாம் என்று
நீர் சொன்னதுக்கு ஸ்தானம் அறிந்திலர்
(ஸ்தானம் -நிலையாய் தியாக ஸ்வீ காரத்தினுடைய மர்மம் அறிந்திலீர் என்றபடி )
பிரயோஜகத்தில் அழகு இது –
(ப்ரயோஜகம் -மேல் எழுப் பார்த்தால் -அகலுகை நல்லது போல் தோற்றும் அத்தனை )
நீர் சொன்னபடியே மாறி நிற்க வேணும்
நீர் அகன்றீ ராகில்-
அதி க்ருத்தாதிகாரம் அவ்விஷயம் என்று நம்மை நம்புவார் இல்லை –
நீர் பற்றினீராகில்-
இவர் பற்றின விஷயம் எல்லார்க்கும் பற்றலாம் என்று நம்மைப் பற்றுகையாலே நமக்கு நிறமுண்டாம் -என்று
அருளிச் செய்ய ஹ்ருஷ்டராகிறார் –

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

பதவுரை

என்ன–என்னுடையவனான
கரும் சோதி கண்ணன்–கறுத்த நிறத்தை யுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல் புரையும் சீலன்–கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சோதிக்கு–மிகப் பெரிய சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று–என்னுடைய நெஞ்சானது அடிமைப் பட்டதனால்
என்னில்–என்னை விட-விசிஷ்ட- நிஷ்க்ருஷ்ட -இரண்டிலும்
மிகு புகழார் யாவரே–மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பின்னையும் எண்ணில்–இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால்–மிக்க புகழுடையவன்-மேலான கீர்த்தி யுடையவன் – தவிர வேறு யாருமில்லை.
(மத்தத் பரம் நாஸ்தி கண்ணன் கீதையில்
இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும் )

என்னின் மிகு புகழார் யாவரே
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் எவர் என்றுமாம்
(ஆத்மா அணு -கீர்த்தியோ விபூவாகி எட்டுத்திக்கிலும் பரவி உள்ளது
என் தன் அளவு என்றால் யானுடைய அன்பு பூதத்தாழ்வார் போல் இங்கும் )

ஆஸ்ரயத்தில் (ஆத்மாவிடத்தில் ) மிஞ்சின புகழை யுடையார் எவர் என்னவுமாம்

என்னில் –
விசிஷ்டத்தில் என்னில் காட்டில் இல்லை என்றும்
நிஸ்க்ருஷ்டத்தில் அணுவான ஆத்மாவிலும் விஞ்சின புகழை யுடையார் யார் என்னுதல் என்றுமாம்

அலாபத்தில் -சீலம் இல்லாச் சிறியனேலும் செய் வினையோ பெரிதால் என்று
சொல்லுமா போலே இறே
பேற்றிலும் சொல்லுவது
(ப்ராப்த அவன் விஷயத்தில்
உண்ணும் போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை சொல்பவர் தானே )

பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால்
ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ

என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று
தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்
அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –

(ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே
இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி )

————–

அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –

(இல்லை என்று அறிந்தவன் இல்லையாகிறான்
உளன் என்று அறிந்தவன் உளன் ஆகிறான்
விலகி இருந்தால் ஸ்வரூப நாசம் ஆகி இருக்கும்
சத்தையைக் கொடுத்து நிறுத்தி வைத்தாய் )

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

பதவுரை

மாய–மாயவனே!-ஆச்சர்ய சக்தி உக்தனே
அம்மா–ஸ்வாமியே!
இரண்டு விழிச் சொற்கள் பரத்வமும் ஸுலப் யமும்
பேசில்–உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே–பெற்ற தாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ–உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ–மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய–மஹத்தான வஞ்சனையை யுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை–(அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ–அமுது செய்த நீ
காட்டும் நெறி–எனக்குக் காட்டின வழிகள்-
விரோதங்களைப் போக்கி கிட்டும்படி -ஞான காரியமாக விலக்க மாட்டாமல் சேர்த்துக் கொண்டாயே
போதரே –புந்தியில் புகுந்து ஆதரம் பெருக வைத்த அழகன் -முதல் படி
அஞ்ஞானத்தால் விலகியது முதல் படி
ஞானத்தால் விலகியது அடுத்த படி
தாவி அன்று -உலகம் -மழைக்கன்று வலையுள் பட்டு -என்றதும் –சிக்கென செங்கண் மாலே போல் -இரண்டாம் படி
இதுவே பெரும் மாயம்
எற்றே ஓ–என்ன ஆச்சர்யமானவை ( என்று உருகுகிறார்.)

பெற்ற தாய் நீயே
பிரஜை யுண்டாக்குகைக்கு நோன்பு நோற்று வயிற்றிலே தரித்தால்
ப்ரஜைக்குப் பாங்காக போஜன சய நாதிகளை நியமித்து
பிறந்தால் அ ஸூசி பிரஸ்ர வாதிகளைத் தொட்டு அளைந்து வளர்த்து
இதினுடைய ஹிதங்களையே சிந்திக்கும் தாயாவாயும் நீயே
(புருஷோத்தம ப்ரவசம் -நம் சம்ப்ரதாயம் )

பிறப்பித்த தந்தை நீ
ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது
உத்பாதகன் பிதாவே இறே
ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே

மற்றையர் யாவாரும் நீ –
ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று
இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே
ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே

(மாதா நாராயண பிதா நாராயண
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே
அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்
உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி
அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி )

பேசில் –
நீ செய்யும் இவை பேசப் போகாது இறே

எற்றேயோ
என்னே

மாய
ஆச்சர்ய சக்தி யுக்தனே
செய்யப் போகாதவையும் செய்யுமவனே
செய்யப் போகாதாவை -என்றது
அயோக்கியன் என்ற என்னை அகலாதபடி பண்ணுகை

மா மாயவளை மாய முலை வாய் வைத்த
மஹானான மாயத்தை யுடைய பூதனை முடிய முலையை வாயிலே வைத்த

நீ யம்மா காட்டும் நெறி எற்றேயோ
அயோக்கியன் என்று அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –

மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
யம்மா
நீ காட்டும் நெறி
எற்றேயோ–என்று அந்வயம்

———–

நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டோமாகில்
மேலுள்ள கார்யம் தாமே ப்ரவர்த்திக்கிறார் என்று
ஈஸ்வரன் இருந்தானாகக் கொண்டு
வெறுத்துச் சொல்கிறார்

(கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப்பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-

பதவுரை

கண்ணனே–எம்பெருமானே!-கிருஷ்ணனாய் அவதரித்த ஸ்வாமியே
இவன் தானே உபாயாந்தரங்களைப் பரக்க அருளிச் செய்து
மேலே சரம ஸ்லோகமும் அருளிச் செய்தான்
நெறி காட்டி நின் பால் நீக்குதியோ–கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி
(இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கை விட்டு விடப் பார்க்கிறாயோ?
(அல்லது)
நின் பால்-கரு மா முறி மேனி காட்டுதியோ–கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற
(உனது மாந்தளிர் பச்சை பசுமை ) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுக்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள்–அநாதி காலமாக
அறியோமை–அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய்–என்ன செய்வதாக திரு வுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய்–தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
மாஸூ ச என்ற வார்த்தை அருளிச் செய்து அருள வேணும்
என் செய்தால்–நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம்–யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

நெறி காட்டி நீக்குதியோ நின் பால்
நெறி காட்டுகை என்றும்
நீக்குகை என்றும்
பர்யாயம்
(தொழுதால் எழலாம் -தொழுகையும் எழுகையும் பர்யாயம் )

மத்யாஜீ மாம் நமஸ்குரு என்ன
அர்ஜுனனுக்கு சோக விஷயமாயிற்றே

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே–18-65-

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.)

நீ உன் கார்யத்தைச் செய் என்பது விட நினைத்தாரை இறே
ஏஷ பந்தா விதர்ப்பாணா மேஷ யாதி ஹி கோஸலவான் (பாரதம் )-என்று
தன்னுடனே கிடந்த தமயந்தியை உடுத்த புடவையில் ஒரு தலையை அறுத்து
வழி இது -இங்கனே போ -என்று விட்டால் போலே இறே
தன் பக்கலிலே ந்யஸ்த பரனானவனை
உன் ஹிதத்துக்கு நீயே கடவை -என்கை

நின் பால் கருமா முறி மேனி காட்டுதியோ
என்றுமாம் –
விவ்ருணுதே –என்னுமா போலே

(நின் பால்–ஹார மத்ய மணி நியாயம் தேகளி தீபம் நியாயம்
ந அயம் ஆத்மா ப்ரவசனே அப்ய -விவ்ருணுதே-தேன லப்ய -அவன் காட்டவே லாபம் )

கரு மா முறி மேனி
அஞ்சனத்தில் புழுதி படைத்த புறவாயை நீக்கி முறித்த முறி போலே
திருமேனி நெய்த்து இருக்கிறபடி –

மா முறி
மாந்தளிர் என்று ஸுகுமார்யத்தைச் சொல்லி

கரு
அதிலே கறுப்பையும் கூட்டி
ஸ்யாமமாய் ஸூ குமாரமான திருமேனியை
(இல் பொருள் உவமை )

காட்டுதியோ
நீயே காட்டி அனுபவிப்புத்தியோ

மேனாள் கரு மா முறி மேனி காட்டுதியோ -என்றுமாம்
பழையதான அசாதாரண மான திவ்ய மங்கள விக்ரஹம்
(மேல் நாள்-ஹார மத்ய மணி நியாயம் தேகளி தீபம் நியாயம் )

மேல் நாள் அறியோமை –
பழையதாக அறியாதே போருகிற என்னை

மேல் நாள் அறியோமை நெறி காட்டி நீக்கிதியோ –
ஒருத்தனுக்கு திங் மோஹம் பிறந்தால்
வழி அறியுமாவன்
நீயேயோ என்னக் கடவதோ
வழி காட்டி விடக் கடவனோ
பதஸ் ஸ்கலிதம் (நல்ல மார்க்கத்தில் இருந்து நழுவும்படி ) என்னும்படி இறே
என்னுடைய அவஸ்தை

(அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —49

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

என் செய்வான் எண்ணினாய்
மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ

கண்ணனே ஈதுரையாய்
மயர்வற மதி நலம் முதலிய நன்மைகளைப் பண்ணினோமே என்ன –
மாஸூச -என்று சொல்லுகையாம் இறே
(ஸூலபனான உன்னைத் தானே நிர்பந்திக்க முடியும் )

என் செய்தால் என் படோம் யாம் —
எல்லா உயர்த்தியையும் செய்து
பரம பதத்திலே கொடு போய் வைத்தால்
நீ தவிர்த்த பிராதி கூல்யத்திலே போய் நில்லேனோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால் –
(பிராதி கூல்யத்திலே போய்-ஸம்ஸாரத்திலேயே -அத்வேஷம் தவிர்த்தாய் முதலில்- த்வேஷிக்கப் போவேன் )

————

அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டான் என்று நின்றது கீழ்
சேர விட்டாலும் பர்வத பரம அணுக்களுடைய சேர்த்தி போலே இறே –
(இதுக்கு பெற்ற தாய் (5)என்ற பாட்டோடே சங்கதி
மானஸ அனுபவ மாத்ரமாயே இருந்தது -பரம அணு போல்
நானோ உன்னை அணைத்து பாஹ்ய சம்ச்லேஷம் -பர்வதம் போல் இது -அங்கு தானே கிட்டும் )

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம் மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

பதவுரை

பூ மேய–தாமரைப் பூவில் பொருந்தி யிருக்கிற
செம் மாதை–*ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து–உனது திரு மார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
அம்ருத மதன காலத்தில் பெண் அமுதம் கொண்ட -லஷ்மீ கல்யாணம் ஆதி அன்றோ
சீதா ருக்மிணி ஆண்டாள் ஸ்ரீனிவாச கல்யாணம் எல்லாம் பின்பே
பார் இடந்த–(பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தி யெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா–ஸ்வாமீ!
ஸ்ரீயபபதியாயும் -ஸ்ரீ பூமா தேவி இடந்து -அம்மா ஸ்வாமி -பரத்வம் ஸுலப்யம் –
விலகவும் மேல் விழவும் இவையே காரணம்
கரு மா மேனி காட்டி -மானஸ அனுபவம் மாத்திரம் -அணைக்க முடியவில்லையே
நின் பாதத்து அருகு–தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே–என்னுடைய நெஞ்ச தானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார்–அந்தரங்கமாகச் சென்று சேர்ந்து விட்டது;
அரு வினையோம்–போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள
யாமே–நாங்கள் மாத்திரம்
சேயோம்–தூரத்திலிருக்கிறோம்.
நெஞ்சினார் -கொண்டாடி -தான் அணைக்க முடியாமல் கொடிய வினையேன்

யாமே அருவினையோம் சேயோம் –
மஹா பாபியாய் இருந்த நாம் துரியோம்
ஸம்ஸாரிக்கு பகவல் லாபம் என்கிறது ஓர் அர்த்தமோ

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
என்னுடைய நெஞ்சினார் பண்ணின உபகாரம் இறே
தன் ஸ்வரூபம் அறியாதே மேல் விழுந்து செய்வது ஓன்று இறே

பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து –
அயோக்யர் என்று பிற்காலிக்கைக்கும் மேல் விழுகைக்கும்
ஹேது சொல்கிறது

1-பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து
என்ற ஸ்ரீ லஷ்மீ பதித்வமும்

2-பாரிடந்த
அதி மானுஷ சேஷ்டித்வமும்

3-அம்மா
என்ற சர்வேஸ்வரத்வமும்

பிற்காலிக்கைக்கும் ஹேது

1-பெரிய பிராட்டியார் திரு மார்பிலே இருக்க நமக்கு இழக்க வேணுமோ என்றும்
2-பார் இடந்த-என்றத்தால் தளர்ந்தார் தாவளம்
(புகல் அற்ற நமக்கு ஒரே புகல் இடம் –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே )என்றும்
3-அம்மா என்று வகுத்தவன் என்றும்
மேல் விழுகைக்கும் இவை தான் ஹேதுக்கள்

அம்மா நின் பாதத்தருகு
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார்

———

நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பதவுரை

பருகலாம் பண்பு உடையீர்–வாய் மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக் குணங்களை யுடையவரே!
பார் அளந்தீர்–(த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமளந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்–பாவிகளான எங்களுடைய கண்களாலே
காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!-நுண்பு-ஸூஷ்மத்தன்மை
நும்மை–உம்மை
அருகும்–கிட்டுவதையும்
சுவடும்–கிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம்–(நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை;
(அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே–உம் விஷயத்திலேயே
அன்பு மிக பெருகும்–(எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என்–இதற்கு என்ன காரணம்?
பேசீர்–நீர் தாம் சொல்ல வேணும்.

அருகும் சுவடும் தெரி யுணரோம்
பன்னீராண்டு கலந்த பிராட்டியைப் போலே
உம்மோடே கலந்து உம்முடைய சுவடு அறிகிறிலோம் –
நீர் வருகைக்குச் சுவடு அறிகிறிலோம் -என்றுமாம்

(அருகும் சுவடும்-
1–நெருக்கமும் அதனால் பெற்ற இனிமையும்
2-அடைவதும் அதுக்கு உபாயமும் என்றுமாம் )

அன்பே பெருகும் மிக இது என் பேசீர் –
ஆகிலும் உமக்கு (உம் விஷயத்தில் ) அன்பு மிகா நின்றது
இதுக்கு அடி சொல்லீர்
(ஆழ்வார் கேள்வி இது பெருமாள் கேள்வி அல்ல -நஞ்சீயர் தெளிவிக்கிறார் )

பருகலாம் பண்புடையீர்
பருகலாம் என்று ஒரு த்ரவ்ய த்ரவ்யத்தைச் சொல்லுமா போலே சொன்னபடி என்
பருகலாம் நீர்மையை யுடையீர் (ஸுலப்யம் நீர் தன்மை உருகும் தன்மை )

பாரளந்தீர்
சொன்ன நீர்மைக்கு உதாஹரணம்

பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்
பாவியோமாய் இருந்த எங்கள் கண்ணால் காணப் போகாத
வை லக்ஷண்யத்தை யுடையீர்

நும்மை நுமக்கு
நும்மை -அருகும் சுவடும் தெரிவுணரோம்
நுமக்கு அன்பே பெருகும் மிக
இது என் பேசீர்
இது ஜீயர் பிள்ளை திரு நறையூர் அரையர் பக்கல் கேட்டதாகப்
பிள்ளை அருளிச் செய்தார் –

(நஞ்சீயர் அருளிச் செய்ததை நம்பிள்ளை அருளிச் செய்ய
பெரியவாச்சான் பிள்ளை ஏடு படுத்தி அருளிச் செய்கிறார் )

(நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும்
நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க–ஆச்சார்ய ஹிருதயம்-228

நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்-
உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க –
உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-
முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –
இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க )

————-

பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
(மாலார்) அவர் தாம்–எம்பெருமானாகிற அப் பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால்–நமக்குக் கிட்ட முடியாதவராயிருக்கும் போது
நொந்து உரைத்து என்–வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி–இன்று முதலாக
எமக்கு ஆதானும் ஆகிடு காண்–நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு–அவ் வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று–“நாங்கள் உமக்கு அடிமைப் பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே–அப் பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு–எதையாவது சிந்தித்துக் கொண்டு கிடப்பாயாக.
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -அவனாகவே நின்றாலும் -போல்
இங்கு யாதானும் -பாவி நீ என்ற நிந்தையாகிலும் -அவன் விஷயமாக ஏதானும்

நுமக்கு அடியோம்
இதுவே போரும் அவன் இரங்குகைக்கு

என்று என்று
அதுக்கும் மேலே
அத்தைப் பலகால் சொல்லுகையும்
திரு உள்ளத்தைப் புண் படுத்துக்கைக்கு உடல்

நொந்து உரைத்தென்
ஆர்த்தோ வா யதி வா திருப்த ஹரி பரேஷாம் சரணாகத பிராணன் பரித்யஜ்ய
ரஷிதவ்ய க்ருதார்த்தமநா (யுத்த )-என்றதுவும்
பொய் போலே

மாலார் தமக்கு
பண்டு (ஸம்ஸ்லேஷித்த தசையில் )இவை எல்லாம் செய்து வர்த்தித்தவருக்கு

(நம்மிடத்திலே முன்பு அடியோம் என்பது
நொந்து உரைப்பது
பல் காட்டுவதாய்ச் செய்து வர்த்தித்தவர்க்கு -என்றபடி )

அவர் தாம் சார்வரியரானால் –
கையாளாய் வர்த்தித்தவர் கிட்ட அரியவரானால்
அவர் செய்வோம் என்று நினைத்த வன்று போலே காணும்
இங்குச் சொன்னவை (நுமக்கு அடியோம் போல் சொன்னவை )எல்லாம் பலிப்பது

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

நெஞ்சே
அவர் தாம் சார்வரியரானால்-சார்வு அரியரானால்-
மாலார் தமக்கு
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென்
எமக்கு இனி -இனி எமக்கு –
யாதானும் ஆகிடு காண்
அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
என்று அந்வயம் –

இந்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ் பொருளை என் சொல்வோம்.
‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை;
அவன் நம்மை அநுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?
“எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்;
அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.
அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.

திருவாய் மொழியிலும் (47-3.) “கூவிக்கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ யென்றென்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத்தக்கது.
எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு நிர்பந்தமில்லை;
கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறாரன்றோ.

ஆண்டாளும் ·“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9) என்றாள்; –
கண்ணபிரான் தனது திரு மார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்திற்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று;
அப்படி அணைத்துக் கொள்ளத் திருவுள்ளமில்லையாகில், என் முகத்தை நேராகப் பார்த்து
‘எனக்கு உன் மேல் அன்பு எள்ளளவுமில்லை, உன்னைக் கை விட்டேன், நீ போ’
என்று வாய் திறந்தொன்று சொல்லி விடட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரியம் என்றாளன்றோ.

உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில்
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தன் பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.

அதுபோல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதை யாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது-
நல்ல படியாகவோ தீய படியாகவோ ஏதேனுமொரு விதமாக நம்மைப் பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே
பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.
நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது
நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

————-

இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
விலக்ஷண அதிகாரம் காண்
மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்

(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –
மூன்றாவது வெறுப்பு )

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

பதவுரை

இரு நால்வர்–அஷ்ட வஸுக்களென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர்–ஏகாதச ருத்ரர்களென்ன
எட்டோடு ஒரு நால்வர்–த்வாதச ஆதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால்–அச்ஸிநீ தேவர்களென்ன
ஆகிய முப்பத்து மூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம்–நாம்
திருமாற்கு–எம்பெருமானைப் பணிவதற்கு
ஆர். எவ்வளவு மனிசர்?–
வணக்கம் ஆர்–நம்முடைய பணிவு தான் எத்தன்மையது!
ஏ பாவம்–அந்தோ!;
நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாமா–நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம்–மிகவும் குற்றமுள்ளவர்களா யிருக்கிறோமிறே.
வீண் ஆசையை யுடையவர்களாய் இருக்கிறோம் அன்றோ

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ டொரு நால்வர் ஓர் இருவர்
அஷ்ட வஸூக்கள்
ஏகாதஸ ருத்ரர்கள்
த்வாதஸ ஆதித்யர்கள்
அஸ்வினிகள்

அல்லால்
இம் மதிப்பர்களை ஒழிய

திரு மாற்கு யாமார் வணக்கமார்
ஸ்ரீ யபதிக்கு நாமார்
அங்கு பரிமாறுவாரார்
நம்முடைய செயல் எது

ஏ பாவம்
அவன் அருகே இருக்க இழக்க வேண்டினது
நம்முடைய பாபம்

(1-அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யராய் இருந்த பாபம் என்றும்
2-அயோக்கியன் விலகிய பாவம் என்றும்
3-பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாத பாவம் என்றுமாம் )

நன்னெஞ்சே
லாபம் அலாபம் இரண்டுக்கும் கூட்டான நெஞ்சே

நாமா மிகவுடையோம் நாழ்–
நாம் நறு வட்டாணித் தனத்தை மிக யுடையோம்
ஸ்ரீ யபதி என்றால் நம் ஸ்வரூபத்தைப் பார்த்து அகல இறே அடுப்பது
ஸ்வரூபத்தைப் பாராதே கிட்டிற்று நம் அளவில் இல்லாமை இறே

நாழ்-
நறு வட்டாணித் தனமாய் (நிரர்த்தமான வாக் ஸாமர்த்யம் )

நாமாகில் நாழ் மிக யுடையோம் –
ஆகையாலே
யாமார் வணக்கமார் -என்று அந்வயம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள்- 1-10–

January 1, 2020

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து –
எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-வாசிக கைங்கர்யத்தில் -உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை
ஆழ்வார் திரு உள்ளம் முந்துற்று -இளைய பெருமாள்
ஸ்ரீ ஸூந்தர காண்டம் – 33-28 “–பிராகேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன -பூர்வஜஸ் அநு யார்த்தே
த்ருமசிரைர் அலங்க்ருத -மரவுரி தரித்து முன்னால் சென்றால் போலே –
அயோத்யா காண்டம் – 21-17 -தீப்தமக்னிம் ஆரண்யம் வ யதி ராம பிரவேக்ஷயதி ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி த்வம் பூர்வமதாரய -என்று
பெருமாள் அக்னி பிரவேசமோ ஆரண்ய பிரவேசமோ பண்ணினால் முன்னால் நான் போவேன் என்றான் சுமத்தரை இடம்-

எழுந்து –
உடனே ஆர்வத்துடன் கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ்விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்பார் மேலே
யதித்வம் பிரஸ்திதோ துர்கம் வனமாத்யைவ ராகவா அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நாதி குசக் அந்தகாந் -என்று
முன்னே சென்று முற்கள் போன்றவற்றை அகற்றுவேன் -என்ற இளைய பெருமாளைப் போலே –

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இயற்றுவாய் எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து கார்யத்தை நடத்த வேண்டும்-கைங்கர்யம் செய்ய தூண்டிய எனக்கு
நன்றிக் கடனாக என்னையும் கூட்டி அன்றோ நீ செய்ய வேண்டும்

இருவரும் கூடி நடத்தவேண்டிய கார்யம் என்னவென்றால்
நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம்பூ வில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –
“கோ சத்ரூஸோ கவ்ய : கவ்ய சத்ரூஸோ கவ் போலே பூவீன்ற வண்ணன் –
அவனது வண்ணம் கொண்ட பூ என்றும் பூவின் வண்ணம் கொண்ட அவன் என்றும்
பூவைப் பூ த்ருஷ்டாந்தம் ஆகாதே ஆகவே நல் பூவைப் பூ என்று விசேஷண விசிஷ்டா பூவைப் பூ

புகழ் –
அப்ராக்ருதம் -ஞான ஆனந்த சுத்த சத்வ மயம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவை அன்றோ –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-அன்பு கொண்ட சொற்களால்
என்னால் தன்னைப் பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு–7-9-10-என்றபடி உயர்வுடைய -என்றபடி

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –
ஈனுதல் -உண்டாக்குதல் –
நெஞ்சின் உதவி இல்லாமல் பாடப்பட்டதால் ஸ்ரமம் இல்லையே –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குண ரத்ன கோசம் –

தைத்ரியம் ஆனந்த வல்லி– “யதோ வவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ
வித்வான் ந பிபேதி குத்ஸநேதி ” என்று மீண்டாலும் ஆழ்வார் முயன்று அவனது குணங்களை அனுபவிக்கிறார்

நாவின்
நாவால் -நெஞ்சின் சஹகார்யம் இல்லாமலும் நானும் வேண்டாமலும் பாட முடியுமே
என்னால் தன்னைத் தானே பாடிக் கொண்டான்

————————————————————————–

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

நற் பூவீன்ற பூவை வண்ணன் புகழை –நயப்புடைய –பொதிவோம் என்றார் கீழ்-
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாக கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால்-உன் தொல் புகழ் மாசூணாதோ –
இந்த நீசன் புகழலாமா –

புகழ்வோம் பழிப்போம்
ஒருவராலும் புகழ்ந்து முடிக்க முடியாத உன்னை-அற்ப ஞானிகளான நாங்கள் புகழ்வோம் ஆகில்-
அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி அன்று ஆதலால்-உன்னை நாங்கள் பழித்தவர்கள் ஆக ஆகி விடுவோம் –
ஆசார ஹீனன் வசிஷ்டர் நல்ல ஆச்சார்ய சீலர் -என்னுமா போலே

புகழோம் பழியோம் –
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு புகழாது இருந்தோம் ஆகில்
உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம் –
மேல் அருளிய அர்த்தத்தையே ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

இகழ்வோம் மதிப்போம்-
மதிப்போம் இகழ்வோம்-
உன்னை சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோம் ஆகில்
உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆகி விடுவோம் –
தைத்ரிய சம்ஹிதை 7-5-3-மன பூர்வோ வாக் உத்தர -நினைத்தாலும் அவனை இகழ்ந்தோமாய் ஆவோம்
புகழ்வோம் பழிப்போம்-கீழே சொன்னதை புனர் யுக்தி தோஷம் இல்லை –

மதியோம் -இகழோம் –
அப்படி நெஞ்சால் நினையாது இருந்தோம் ஆகில்-அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்-
வாயால் புகழா விட்டாலும் நெஞ்சால் நினைப்பதும் இகழ்வாகும்

ஆக-இவற்றை அறிந்து இருந்தும் புகழாமலோ மதியாமலோ இருக்க மாட்டோம்
அப்படி புகழ்ந்தாலும் மதித்தாலும்

மற்று இகழ்வோம் மதிப்போம்
யஸ்ய மதம் அமதம் -இத்யாதி
அமதம் மதம் மதம் அதமம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜ முதஜூகுஷாத் த்ரயி ஸ்துமஹே வயம் நிமிதி தம் ந சக்னுமா–ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் –1-13 –

மற்று எங்கள் மால் செங்கண் மால்-சீறல் நீ தீ வினையோம் –
நீ கோபம் கொள்ளல் ஆகாது –
திரு நா வீறுடைய பிரானான ஆழ்வார் இப்படி அருளிச் செய்ததும்-ஆசை கொண்டு இருந்த எம்பெருமான்-
அந்த ஆசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழியும்படி
ஆழ்வார் நைச்ய அனுசந்தானம் பண்ணி -சொல்லவும் இன்றிக்கே நினைக்கவும் கூடாது -என்ன-
உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்
கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்-அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –

தஸ்ய யதா புண்டரீகம் ஏவம் அஷிணி –சாந்தோக்யம் — 1-6-7-
செங்கண்மால் -பரத்வம்
எங்கள் மால் -ஸுவ்லப்யம்
செங்கண் மால் சீறேல்
எங்கள் மால் சீறேல்

ஆழ்வீர் நினைக்கவும் சொல்லவும் மாட்டீர் என்றீரே
ஏன் அழைக்கிறீர் போம் போம் என்று சீற்றம் தோன்ற திரு முகத்தை மாற வைக்க
அநந்ய கதியான என் மேலே சீறுவதே-என்ன
ஆழ்வீர் நீர் புகழவும் நினைக்கவும் மாட்டேன் என்று சொன்ன இதுக்கு சீறாமலும் இருக்க வேணுமோ -என்று-
எம்பெருமான் திரு உள்ளமாக
தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை –-என்கிறார்
புகழவும் நினைக்கவும் பார்த்தால் என் அந்தராத்மா சீறுகிறது-இல்லையேல் நீர் சீறுகிறீர்-
இந்த பாவத்துக்கு என்ன பண்ணுவேன்-யான் என் செய்வேன் என்கிறார்

எங்கள் மால் கண்டாய் இவை –
இப்படி புகழ நினைப்பதும்-புகழாமல் பின் வாங்குவதும்-மகா பாபிகளான எங்களுடைய பிரமமே யாகும்-
இங்கு -மால் -ஆச்சார்யம்-

—————

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா நிறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

சீறல் நீ -என்று பிரார்த்த ஆழ்வார் இடம்-அது கிடக்கட்டும் -நீர் என்ன தீர்மானம் செய்து உள்ளீர் என்ன –
இவை அன்றே நல்ல–
உன்னை புகழாமையும் சிந்திப்பாமையும் -இவை -அன்றோ நல்லது –

இவை அன்றே தீய –
உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதும் -இவை -அன்றோ கெட்டது –

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இவை என்று அறிவேனேலும்-
ஆகவே இப்பது இப்படிப் பட்டது என்று உண்மையாக-நான் தெரிந்து கொண்டு இருந்தேன் ஆகிலும்

இவை எல்லாம் –
புகழாமையும் மதியாமையும் -புகழ்தலும் மதித்தாலும் -ஆகிய
ஆகிற இவை எல்லாம் –

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா –
என்னாலே-பற்றவும் முடியாது-விடவும் முடியாதே –
அடைப்பு -பரிஹரித்தல்
நீக்கல் -பரித்யஜித்தல்

நிறையவனே என்னால் செயற்பாலது என் –
சபலனான என்னால் செய்யக் கூடியது-என்ன இருக்கிறது -என்னுடைய எண்ணம் ஒன்றும் பலிக்கிறது இல்லை –
என் நா முதல் வந்து புகுந்து நல்லீன் கவி-தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பன் -என்றபடி-
என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ –
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் —
கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை –
கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் – மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

பலம் கேட்க அறியாத குழந்தை -போலே நாம் -பலம் அவனே கொடுப்பான் -பலம் எதிர்பார்க்காமல்-
த்ரிவித தயக்கத்துடன் – கர்மம் செய்வதே கர்தவ்யம் –
தொட்டால் தங்கமாகும் வரம் பெற்ற கதை –

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

என்னால் செயற்பாலது என் –
இவற்றை நீ அருளிச் செய்த பின் என்னால் செயற்பாலது என் -புகழாமல் இருக்கத் தான் முடியுமோ என்னால் –

————————————————————————–

ஹா ஹா -நம்முடைய வாயால் எம்பெருமான் உடைய-திருக் குணங்கள் பாடப் பெற்றோமே-
நம்மில் யார் பாக்கியசாலிகள் -என்கிறார் -இதில் –

என்னில் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று -4-

என்னில் மிகு புகழார் யாவரே -என்றும்-
பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் -என்றும் –
இரட்டித்து சந்தோஷ அதிசயத்தால் அருளிச் செய்கிறார்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –போலே
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு –ஸ்ரீ பூதத்தாழ்வார் -100-
யான் அணுவானாலும் என் புகழ் அவனைப் போலவே விபூவாயிற்றே-

என்னில்-
என்னை விட –

மிகு புகழார் யாவரே –
மிக்க புகழை உடையார் யார் கொல்-

பின்னையும் மற்று எண்ணில்-
மற்று பின்னையும் எண்ணில் –
இன்னமும் ஆராய்ந்து பார்க்கும் அளவில் –

மிகு புகழேன் யான் அல்லால் —
மிக்க புகழை உடையவன் நானே தவிர-வேறு யாரும் இல்லை –

என்ன கருஞ்சோதிக் கண்ணன் –
என்னுடையவனான கறுத்த நிறத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணனும்-

கடல் புரையும் சீலப –
கடல் போன்ற கம்பீர ஸ்வபாவம் உடையவனும் –
தன்னுடைய வடிவை ஆழ்வாருக்கு அனுபவிக்கக் கொடுத்தவனும் –

பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று –
மிகப் பெரும் சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு-என்னுடைய நெஞ்சானது அடிமைப் பட்டதால் –
நைச்ச்ய பாவம் நீங்கி-நெஞ்சு ஆழ்ந்து அவஹாக்கிக்கப் பெற்றதால்-நானே பாக்யசாலி -என்கிறார் –

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்றும் -சீலம் இல்லா சிறியேனேலும் செய் வினையோ பெரிதால் -என்றும் –
தாம் நினைவு வந்தால் –
வடிவு அழகும் போக்யதையும் நெஞ்சையையும் மனத்தையும் மூடி வைக்க விடாமல்
பரவசமாக பிரவர்த்தம் உண்டாக்கப் பண்ணுமே-
யானே தவம் செய்தேன்
என்னில் மிகு புகழார் யாவரே –
எனக்கு ஆரும் நிகர் இல்லையே -பேச வைக்குமே-

ஸுவ்சீல்யம்-மஹதாய் இருந்தாலும் மந்தவர்கள் உடன் நீர் போலே கலப்பவன் அன்றோ
இதனாலே பரஞ்சோதி –
ஈசன் வானவர்க்கு என்பேன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே –

ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்-பண்ணின பிறகு அனுதாபம் காட்டுதலும்
இரண்டும் அவிருத்தம் அல்ல என்று கொள்வது போலே இதனையும் கொள்ள வேண்டும்

————————————————————————–

அசந்நேவ பவதி அசத் ப்ரஹமேதி வேதேசேத் -அஸ்தி ப்ரஹமேதி சேத் வேத சந்தமேநம் ததோ விது–தைத்ரியம் ஆனந்த வல்லி
அவனைப் புகழாமல் நீச பாவனை பாவித்து விலகினால் ஸ்வரூபமே இழக்க நேருமே –
பரம காருண்யத்தால் ஆழ்வாரை மீட்டு அருளியத்துக்கு க்ருதஜ்ஜை அருளிச் செய்கிறார் இதில் –

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

பெற்ற தாய் நீயே –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

பிறப்பித்த தந்தை நீ –
மாதா பாஸ்த்ரா பிது புத்ரா -மாதா பாத்திரம் போலே புத்ரன் பிதுவுக்கே-
உண்டாக்கின பிதாவை போலே-ஹிதமானதையே செய்பவனும் நீயே –

மற்றையார் யாவாரும் நீ –
ஆத்மாவுக்கு நன்மைகள் செய்து-விலஷண ஜென்மத்தைக் கொடுக்கிற
மற்றும் ஆசார்யரும் நீயே-உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்
சரீரம் ஏவ மாதா பிதா ஜனதயா-ச ஹி வித்யாஸ் தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -ஸ்ரீ ஆபஸ்தம்ப ஸூத்ரம் –1-1-6 –

பேசில் –
உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்

எற்றேயோ –
எற்றே ஒ -எனக்கு ஆச்சர்யமானவை-என்று உருகுகிறார் –

மாய –
மாயவனே –

மா மாயவளை மாய-
மகத்தான வஞ்சனை உடையவளான-பூதனையை முடிப்பதற்காக

முலை –
அவளது விஷம் தடவின முலையை –

வாய் வைத்த நீ-
அமுது செய்த நீ –

யம்மா –
ஸ்வாமியே –
அந்த ஆச்சர்ய செயல் போலே-அடியேனுடைய நைச்ச்ய பாவம் மாற்றி
புகழ வைத்து அருளினாயே-உன் பக்கலிலே அவஹாகிக்கும் படி வழி காட்டிற்றே

காட்டும் நெறி –
எனக்குக் காட்டின வழிகள்-

————————————————————————–

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

எம்பெருமான் இடம்-ஸ்வா தந்த்ர்யமும்-நிர்ஹேதுக கிருபா குணம்-இரண்டுமே உண்டே
நெறி காட்டி-நின்பால்- நீக்குதியோ –
கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி
என்னை கை விடப் பார்க்கிறாயோ —

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

தேர்தட்டு வார்த்தையாக சரம ஸ்லோகம் அருளிச் செய்தானே-
நளன் தமயந்திக்கு–ஏஷ பந்தா விதர்பானாம் ஏஷ ஏத்தி ஹி கோசலான் – என்று நெறி காட்டி பின் கை விட்டானே –

நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ -அல்லது –

கரு மா முறி மேனி காட்டுதியோ –
கறுத்த மா மரத்தின் தளிர் போன்ற உனது திரு மேனியை-சேவை சாதிப்பித்து
அனுக்ரஹிக்க நினைக்கிறாயோ –
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ச்ருதேன
யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்—கட உபநிஷத் – 1-2-23-
அனுக்ரஹிக்க திரு உள்ளம் பற்றி இருப்பவர்க்கு பூரணமாக காட்டி அருளுவான்
முறி -என்று தளிர்க்குப் பெயர் -முறிக்கப் படுவது முறி
மா முறி -மாந்தளிர் -அது போல் ஸூகுமாரமாயும்
கரு -ச்யாமளமாயும்-இருக்கிற திருமேனியைக் கட்டி அருளுவாயோ –
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ –

மேனாள் –
மேல் நாள் -அநாதி காலமாக –

அறியோமை –
அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-
அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

என் செய்வான் எண்ணினாய் –
என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறாய்-
மந் மநா பவ இத்யாதி-18-65– என்பாயோ–
சர்வ தர்மான் பரித்யஜ்ய -மாஸூச -18 -66 -என்பாயோ

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–49–

பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்
நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே
நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது

கண்ணனே ஈதுரையாய் –
தேவரீர் உடைய திரு உள்ளம் இன்னது-என்பதை அருளிச் செய்ய வேண்டும் –
மாஸூசா -என்று உனக்கு வார்த்தை -எங்களுக்கு உஜ்ஜீவனம் –

என் செய்தால்–
நீ எமக்கு எந்த நன்மை செய்தாலும் –

என்படோம் யாம் –
1-யாம் எந்த அனர்த்தத்தைத் தான்-அனுபவிக்க மாட்டோம் -நீ எது செய்தாலும் அதன் படி உடன்படத் தக்கவன் அடியேன் –
அன்றிக்கே
2-நன்மை செய்தாலும் யானையை குளிப்பாட்டி-உடனே அது அழுக்கை தலையிலே போட்டுக் கொள்வது போலே-
நீ செய்து அருளும் நன்மையையும் ஏற்றுக் கொண்டு தீமையையும் ஏறிட்டுக் கொள்வேன் -என்றுமாம் –

————————————————————————–

மானஸ சாஷாத்காரமே பெற்றேன் -அவனை நேராக கண்டு ஆலிங்கனம் பெற ஆசைப்பட்ட அடியேனுக்கு
இது மலைக்கும் அணுவுக்கும் உள்ள வாசி அன்றோ -யாமே அரு வினையோம்-என்கிறார் –

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

யாமே அரு வினையோம் –
போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள-நாங்கள் மாத்திரமே –
நெஞ்சுக்கு மட்டும் சேவை-கட் கண்ணால் காண வில்லை
கைகளால் அணைத்து களிக்கும் படியாகவும் சேவை சாதிக்கப் பெற வில்லை –

பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த அம்மா –
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின் பாதத்தருகு -சார்ந்து ஒழிந்தார் –
அருவினையோம் யாமே சேயோம் -என்று அந்வயம்

என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல் –
தான் மாத்ரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –
நல்ல பேறு பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –

நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார்-
உயர் திணை-திருவடிகளில் அழுந்தி ஆழம் கால் பட்டதால்-உயர்த்தி அருளிச் செய்ய வேண்டுமே
அணுக்கர் –
அந்தரங்கர் -சமீபத்தில் உள்ளவர் –
சேயோம் -தூரத்தில் இருக்கிறோம் –

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
பூ மேய –தாமரைப் பூவிலே பொருந்தி இருக்கிற –செம் மாதை
ஹிரண்ய வர்ணனையான-ஸ்ரீ பிராட்டியை —நின் மார்வில் சேர்வித்து –
உனது திரு மார்பிலே சேர்த்து கொண்டவனாயும் -கடல் கடைந்து பெண்ணமுதம் கொண்டானே-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பனாய் இருந்தும் அன்றோ இழந்தேன்-

பாரிடந்த –
பிரளயத்தில் அழுந்திக் கிடந்த பூமியைக்-குத்தி எடுத்தவனுமாய்-இருக்கிற -ஸ்ரீ வராஹாவதார அனுபவம் –
ஸ்ரீ கோல வராஹம் ஒன்றாய் பூமியையையே பிரளயத்தில் இருந்து இடந்து எடுத்த உனக்கு சிறியேனான அடியேனை
சம்சார பிரளயத்தில் இருந்து இடர்ந்து எடுத்து உன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொள்ளுவது அருமையோ-

அம்மா –ஸ்வாமி-

நின் பாதத்தருகு –
தேவரீர் உடைய திருவடிகளின்-சமீபத்திலே –

—————————————————————-

கண்ணால் காணாமல் இருக்கச் செய்தேயும்-கண்ணால் கண்ட விஷயங்களில் போலே
அன்பு அதிகரித்து வருகின்றதே-இதற்க்கு என்ன காரணம்-சொல்லாய் -என்று
அப்பெருமானையே கேட்கிறார் –

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர்-பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்-
நும்மை அருகும் சுவடும் தெரி யுணரோம்-அப்படி இருந்தும்-நுமக்கே அன்பு மிக பெருகும்-இது என் பேசீர் -என்று அந்வயம் –

அருகும்-கிட்டுவதையும்
சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் –
தெரி யுணரோம்- நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை –
அப்படி இருக்கச் செய்தேயும் –

நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக-
உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —

பருகலாம் பண்புடையீர்-
வாய் மடுத்து பானம் பண்ணுவதற்கு உரிய திருக் கல்யாண குணங்களை உடையவரே –
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஓத்தே -2-3-1
பொதுவாக சொன்னாலும் சௌசீல்யம் குணத்தில் நோக்கு–
சாரங்கன் தொல் சீரை ஓவாத உணவாக ஊண்-என்று மேலே அருளிச் செய்கிறபடியால்-
பகவத் குணங்களை உணவாக கொள்கிறவர் –
அப்படிக் காட்டி அருளின இடம் மேலே அருளுகிறார் –

பாரளந்த்தீர்-
திரு விக்ரமனாய் பூமி எல்லாம் அளந்து அருளினவரே –

பாவியேம் கண் காண்பரிய –
பாவிகளான எங்களுடைய கண்களாலே-காண முடியாத வைலஷண்யத்தை உடையவரே –
கருதரிய உயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம் -என்றபடி-
நீ எங்கும் நிறைந்து இருந்தாலும் அருகில் இருப்பதாக தெரிந்து -கொள்ள வில்லை –
நீ அருகில் வந்து சேவை சாதிக்க வில்லை -என்றபடி –
இப்போது அறிந்து கொள்ள வில்லை என்றாலும் மேலும் அறிந்து கொள்ள வழி உண்டோ என்னில்-

சுவடும் தெரிந்து யுணரோம்-
சேவை கிடைக்கும் என்கிற அடையாளமும் இல்லையே
அடியேன் இடம் யோக்யதையும் இல்லை என்னவுமாம்-
சுவடு -யோக்யதை-அடையும் உபாயம் -அடையும் ஸூசகம் என்றுமாம் –

நுண்புடையீர்-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ அயோத்யையில் ஸ்ரீ பெருமாள் உடன் 12 ஆண்டு காலம் இருந்து அனுபவித்தால் போலே
ஆயினும் அன்பு மாதரம் வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறதே-
இது என் பேசீர் -இதுக்கு என்ன காரணம்-நீர் தான் சொல்ல வேணும் –

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் -10 சூர்ணிகை-அருகும் சுவடும் -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம்-
உம்முடைய அருகு வருதல்-உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க
உம்மளவிலே ஸ்நேஹமானது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கு அடி அருளிச் செய்ய வேணும் -என்று
இந்த பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்

பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று
ஸ்ரீ நஞ்சீயர்-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-
நும்மை அருகும் சுவடும் –
நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

————————————————————————–

அந்த எம்பெருமான் நம்மை அனுக்ரஹித்தாலும் அனுக்ரஹிக்கா விடிலும் போகட்டும்
திரு உள்ளம்,ஆன படி செய்யட்டும்-நெஞ்சே-நீ மாத்ரம் அவர் திறத்தில் செய்திடுக-

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

மாலார் அவர் தாம்-
எம்பெருமான் ஆகிற அப்பெரியவர் தாம் –

சார்வரியரானால்-
நமக்கு கிட்ட முடியாதவராய் இருக்கும் பொழுது-ஆர்த்தி உடன் கத்தினாலும் சேவை சாதிக்காமல் இருப்பவன்

மாலார் தமக்கு –-
அவ் வெம்பெருமானை நோககி -ஆஸ்ரிதர் பேரில் வ்யாமோஹமே வடி எடுத்தவர்-என்று பேர் மாத்ரமே கொண்டவர்

நுமக்கு அடியோம் என்று என்று-
நாங்கள் உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று பல தடவை –
ஸக்ருத் உச்சாரணமே பேற்றுக்கு -கிடையாமல் மீண்டும் மீண்டும் சொல்வது அவன் திரு உள்ளத்தை புண்படுத்தும்
ஆர்த்தோ வா யதி வா திருப்தா பரேஷாம் சரணாகத –பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மனா–ஸ்ரீ யுத்த காண்டம் –18-28-

நொந்து உரைத்தென்
வாய் நோவச் சொல்வதில் என்ன பலன்-
நோவு நமக்கு மட்டும் அல்ல -அவனது திரு உள்ளத்துக்கும் தானே

இனி-
இன்று முதலாக

எமக்கினியாதானும் ஆகிடு-
நமக்கு எது வேணுமாகிலும் நடக்கட்டும் –
பசிக்கு உணவு கிடைக்காமல் பின்பு கிடைத்தால் என்ன பயன் –
இங்கே அனுபவத்துக்கு கரையும் பொழுது கிடைக்காமல் அங்கே பெற்று என்ன பயன் –

கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -13-9–

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷம் இவை உதகம் நய மாம் வீர விஸ்ரப்த பாபம் மயி ந வித்யதே–அயோத்யா -27-8-
ஸ்ரீ சீதா பிராட்டி பெருமாளை விட்டு பிரிந்தால் உயிர் வாழகில்லேன் என்றாளே தண்டகாரண்யத்துக்கு எழுந்து அருளும் பொழுது –

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய
பொறாமை கோபம் விட்டு -நான் உம்மை பின் தொடர்ந்தால் தந்தை சொல் கேட்டு போன உம்மைப் போலே
நான் உம்மை தொடர்ந்தேன் என்று உலகம் சொல்வதால் உமக்கு பொறாமையோ –

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷம் இவை உதகம்
வசிஷ்டர் சிஷ்யராக இருந்து இவை உமக்குக் கூடுமோ –
தாகம் தீர்ந்த பின்பு தண்ணீர் குடிப்பார் உண்டோ -கோபமும் பொறாமையும் உமக்குக் கூடாதே –
நய மாம் -அடியேனையும் கூட்டிச் செல்லும்
வீர -நீர் வீரர் அன்றோ
விஸ்ரப்த -அடியேன் சொற்களை விஸ்வசித்து அருளும் -இது வாய் வார்த்தை சொல் அல்ல -மனப் பூர்வகமாக சொன்னதே
பாபம் மயி ந வித்யதே–உம்மை விட்டு பிரிந்தால் உயிர் வாழகில்லேன்

அவர் திறத்தே
அப் பெருமான் விஷயமாகவே

யாதானும் சிந்தித்து இரு-
எதையாவது
நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என் -என்றபடி-
அவர் நெறி காட்டி நீக்கினாலும் நீக்கட்டும்-
கரு மா முறி மேனி காட்டினாலும் காட்டட்டும் நீ அவர் விஷயமாக ஏதாவது சிந்தித்து இரு

பேறும் இழவும் இரண்டும் ஒக்க எண்ணி இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன-
அவனே வேண்டும் என்றது அவனுடைய அனுக்ரஹம் வேண்டும் என்றபடி-
சத்தைக்கு இது எல்லாம் வேண்டா காண்-
அவன் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும்-நம்முடைய சத்தைக்கு அவன் சத்தை இறே காரணம்-
அவன் நம்மை விட்டாலும் நம்மிடம் இருந்து அவன் தன்னைப் பிரித்து போககில்லேனே -அப்ருதக் சித்தம் அன்றோ –

அவனுடைய அனுக்ரஹம் போலே நிக்ரஹமும் நமக்கு அனுசந்தேயமே
நம்மைப் பற்றி எம்பெருமான் திரு உள்ளத்தில் பட்டிருக்க வேண்டும் -அதுவே அபேஷிதம்-
கூவிக் கூவி நெஞ்சுருகி கண் பனி சோர நின்றால் பாவி நீ என்று என்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய்மொழி -4-7-3-
விருப்போ வெருப்போ கண் முன்னே வந்து தோற்றி அருளிச் செய்ய வேணும் என்பதே அருளிச் செய்கிறார்-
ஆண்டாளும்-செம்மை உடைய திரு மார்பில் சேர்த்தானேலும்-
ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோககி விடை தான் தருமேல் மிக நன்றே-

கை விடப் போகிறேன் என்ற சொல்லை யாவது முகம் நோக்கிச் சொல்வான் ஆகில்
அப்போது சேவை யாவது கிடைக்குமே-கண்ணிலே தென் பட்டான் ஆகில்
அப்போது உபாயங்களால் ஸ்வாதீனப் படுத்திக் கொள்ளலாமே
நல்ல அபிப்ராயமோ தீய அபிப்ராயமோ-நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்து அன்றோ உண்டாக வேண்டும்
அந்த நினைவு தானே நமக்கு போதுமானது -என்கிறார்

காண் -முன்னிலை அறை
ஆகிடு ஆகிடுக –

————————————————————————–

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்-
நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-
எதற்காக வீணாக நாக்கை நீட்டி இருக்கிறாய் -என்கிறார் நெஞ்சை பார்த்து-

இதற்கு வேறு படியாகவும் அவதாரிகை உண்டு –

நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலுமாம் கொலோ என்றே –
எம்பெருமான் வடிவு அழகில் சிறிதும் ஈடுபாடு இன்றியே
உப்புச்சாறு கேட்டு -சாவாமைக்கு கடலைக் கடைந்து கொடு-மாவலியைக் கொல்லு இரணியனைக் கொல்லு -என்று-
நிர்பந்திக்கிற பிரயோஜனாந்திர பரர்களுக்கு சேவை கிடைக்குமே ஒழிய-
உம் வடிவு அழகின் அனுபவமே பரம பிரோஜனம் என்று இருக்கும் நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே-
பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-
நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று
இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்னவுமாம்

வள வேழ் உலகம் -1-5- தலை எடுத்து அருளுகிறார் என்றுமாம்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –முதல் திருவந்தாதி –52-
அவர் அஷ்ட வசுக்களை எண்மர் என்றார் இவர்– இரு நால்வர் -என்கிறார்
அவர் ஏகாதச ருத்ரர்களை பதினொருவர் -என்றதை இவர் ஈரைந்தின் மேல் ஒருவர் என்கிறார்
அவர் த்வாதச ஆதித்யர்களை ஈரறுவர் என்றதை இவர் எட்டொரு நால்வர் என்கிறார்
அச்விநீ தேவதைகளை இருவரும் ஓரிருவர் -என்கிறார்கள்–
ஆண்டாளும்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று-20- -என்றாள் இறே-
வேதமும் –
த்ரயஸ் த்ரிம்சத் வைதேவா -என்று பல இடங்களும் ஓதா நின்றது
ஆக-ஆழ்வார் நிச்சய அனுசந்தானமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்கிறார்-
இரு நால்வர்-அஷ்ட வசுக்கள் என்ன– ஈரைந்தின் மேல் ஒருவர் -ஏகாதச ருத்ரர்கள் என்ன –
எட்டோ டொரு நால்வர் -த்வாதச ஆதித்யர்கள் என்ன –ஓர் இருவர் அல்லால் –
அஸ்விநீ தேவர்கள் என்ன-ஆகிய முப்பத்து மூன்று அமரர்கள் தவிர மற்றவர்களான

திரு மாற்கு யாமார் –
நாம் எம்பெருமானை பணிவதற்கு-எவ்வளவு மனிசர் –

வணக்கமார்-
வணக்கம் யார் –
நம்முடைய பணிவு தான் எத்தகையது –
பிறப்பு ஒழுக்கம் இவற்றால் அயோக்யரான நாம்-ரஷ்ய வர்க்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லோம் –
அயோக்யரான நம்முடைய ஆஸ்ரயணம் தான் எங்கனே-
அயோக்யரான நாம் ஆஸ்ரயித்தோம் எனபது அவனுக்கு ஒரு பொருளா –
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாக இருந்து ஏத்த வீற்று இருந்த இது வியப்பே -என்னும்படியாக உள்ள அவனுக்கு
அறிவொன்றும் இல்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டு எண்ணத் தக்கதோ -என்றபடி
வணக்கம் எது -என்னாது–வணக்கம் ஆர் -என்று உயர் திணையாக அருளிச் செய்தது ஒரு வகைக் கவி மரபு

ஏ பாவம் –
அந்தோ –இரு நிலத்தோர் பழி படித்தேன் ஏ பாவமே -திரு நெடும் தாண்டகம்

நன்னெஞ்சே –
நல்ல மனமே –

நாமா மிகவுடையோம் நாழ் –
நாமோ என்றால் ‘குற்றம் உள்ளவர்களாக-இருக்கிறோம் இறே-
புருஷோத்தமனான அவன் முன்னே ஒரு பதார்த்தமாக நிற்பதும்-வணங்கினோம் என்பதும்-எவ்வளவு ஹேய விஷயம் –
நாமாமிக வுடையோம் நாழ்-நாமா -நாமோ என்றபடி
நைச்யம்-பண்ணும் பஷத்தில் – அபராத சஹச்ர பாஜனம்-
வெறுத்து அருளுகிற பஷத்தில்-பிரயோஜனாந்தர பரர்களுக்கே கார்யம் செய்வதாக திரு உள்ளத்தில் சங்கல்பம் கொண்டவர்-
குற்றமாக கொண்ட அநந்ய பிரயோஜனத்வத்தை கொண்ட நாமோ -என்றபடி-
நாழ் -குற்றம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

December 31, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன்
நிர்ஹேதுகமாக ஆழ்வாரைக் கடாக்ஷித்து
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
(கிருபையே காரணம் -கண்டு என்பதால் ஜீவாத்மா விலக்காமல் கிருபைக்கு பாத்ர பூதனாய் )
தன்னை அனுபவிக்கைக்கு அனுகூலமான தேசத்தையும் அனுகூலமான ஞானம் வ்ருத்தம்
உள்ள -தேகத்தையும் காலத்தையும்
இங்கே இல்லாமல்
சதா அனுபவ அனுபவம் பண்ணும் நித்ய ஸூ ரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோபாதி அவன் பக்கல் உண்டான பிராப்தி உண்டாவதை உணர்ந்து
இவ்வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேகங்களை தாம் உடையராய் இருக்கிறபடியும்
பிரதிகூலமான சம்சாரத்தில் இருக்கும் இருப்பையும் உணர்ந்து
தத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தம் போக்கித் தர
இனி யாம் உறாமை -என்று
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும் அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா
என்றார் திரு விருத்தத்தில்

திரு விருத்தத்தில் நூறு பாட்டுக்கும் இதே அர்த்தமாக வேணும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று உப ஸம்ஹரித்து
அடியேன் செய்யும் விண்ணப்பம் உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த என்று தலைக் கட்டுகையாலும்

உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல் கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்
ஆற்றாமையால் சொல்லியவையே நடுவில் உள்ள பாட்டுக்கள்

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
ஸ்ரீ திரு விருத்தம்
இமையோர் தலைவா -விளிக்கிறார்
அவன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் விஸத தமமாகக் காட்டி அருள

நித்ய ஸூரிகள் நித்ய விபூதியில் அனுபவிக்க
நித்ய சம்சாரிகள் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழலும் படியைக் கண்டு –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று நிகமித்து
இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பமே–என்பதைக் காட்டி அருளினார் ஸ்ரீ திருவிருத்தத்தில்-

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக்கட்டவே பீஷ்மர் சர கல்பத்தில் கிடைக்க அவரைக்கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம்-
தர்மபுத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே
திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே
இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய் விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலைமக்களாக சொல்லுவான் என்
1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருக்கைக்கு உபகாரகர்கள் என்பதாலும் த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – -பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
இங்கே உபகாரகர் -புருஷகார பூத்தார் அங்கு ப்ராப்யர்
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை
என்றபடி அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போத யந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத்துணை ஆவார்கள் என்பதால் அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக்கட்டவும்
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அருத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக்க கொடாவிடில் இவர் தரிக்க மாட்டாரே
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
ஸாஸ்த்ரம் புறம்பானாலும் ஸத்யஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் அனுபவித்து திருவாசிரியம் அருளிச் செய்தார்

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –
ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே
ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –

ஸ்ரீ சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்

ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி

ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதைக் கண்டு
ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

திரு விருத்தம் -பர பக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
ஆழ்வாருக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நித்ய ஸூரிகளுக்குப் போலவே இங்கேயே காட்டி அருள
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த ஹர்ஷ அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்வ கீயாம் பகவத் அநுபவே ஸ்போதயாமாச தீவ்ரம் ஆசாம்-
பெரிய த்வரை உடன் அவனையே மடி பிடித்து
ஆர்த்தியை வெளியிட்டு அருளுகிறார் இதில் –

விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம்
தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி–56—

அவனுடைய நிர்ஹேதுக கிருபைக்கு அடி அறிய ஒண்ணாதே-காரணம் எதுவாய் இருந்தால் என்ன-
வாழ்ச்சி நன்றாக இருக்கிறது அத்தனை-என்கிறார் இதில்-

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ
நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-

அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

எம்பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம்-விட்டு நீங்காது அத்தாணிச் சேவகம் செய்யப் பெற்றோம்-
ஆகையாலே கார்யம் கை கூடிற்று –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய
ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-

திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-
குடக்கூத்தாடி-
அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு
நிழலும் அடிதாறும் ஆனோம்

வெந் நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை–60–
வல் வினைகள் அடர்த்தாலும்-தமது அத்யாவசாயம் குலையாமல் இருப்பதை அருளிச் செய்கிறார் இதில்-

நெஞ்சே உனக்கு புதிதாக உபதேசிக்க வேண்டியது இல்லை
அவனை விஸ்வசித்து அவனையே அனுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாய் ஆகில் உகக்கிறேன்
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும்
என்று வெறுத்து இருக்கிறேன் -என்கிறார்

மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே – –22-
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி —-5–
நல் காப்பான் தாய் தந்தை எவ் வுயிர்க்கும் தான் –23-

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

சீறேல் நீ –2-அபராத ஷாமணம்
உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி நீ -53-
நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூசசா –

இவ்வாறு பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –

ஸ்வரூப ஞானம் பெற்று குணக் கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-

அதர்வண வேத சாரமாகும் –

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

December 31, 2019

(பரத்வத்திலே நோக்கு வேதங்களில்
ஸுலப்யத்தில் நோக்கு அருளிச் செயல்கள்
சரீரத்தால் பேறு வேதம் சொல்ல
ஆத்மாவாலும் அவனாலும் பிராட்டியாலும் பேறு –
வேத தாத்பர்யங்களான ரஹஸ்ய த்ரய அர்த்தங்களை சொல்ல வந்ததே அருளிச் செயல்கள்
வேதம் சர்வாதிகாரம் அல்ல
அருளிச் செயல்களோ ரஹஸ்ய த்ரயங்களை சொல்ல வந்தாலும் சர்வாதிகாரம் –

பெரியவர் ஆழ்வார் அருளிச் செய்த ஆழமான அர்த்தங்களை சொல்லும் பெரிய திருவந்தாதி
ஆழ்வார்களுக்கு அங்கி நம்மாழ்வார் -நம்பெருமாள் ஆதாரத்தோடு நம்மாழ்வார் என்று அபிமானிக்கப் பட்டவர்
அர்ச்சா திருமேனி -திரு முத்துச் சட்டையும் கொடுத்து அருளி நம்மாழ்வாருக்கு
நம் சடகோபனைப் பாடினாயோ எஞ்சு விஞ்சிய ஆதாரத்தோடு பேச -சடகோபர் அந்தாதி பிறந்ததே –

நஹ குலபதி வகுளாபிராமம் -ஆளவந்தார் -நம் குலபதி அன்றோ
விப்ரர்களுக்கு கோத்ர ஸூத்ர சரண குலபதிகள் -பராங்குச பரகால யதிவராதிகள்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அன்னையாய் அத்தனாய் நம்மை ஆண்டிடும் -பிரிய ஹித -வேண்டிய பிரியங்களை சொல்லி ஹித உபதேசம்
இன்ப மாரி இவர்
அருள் மாரி அங்கமான கலியன்
ஆதி சேஷன் உறங்கா புளி -5122 வருஷம் பழைய
கருட அம்சம் -மதுரகவி விபவ தசையில் சாஷாத்கரித்து
நாதமுனிகள் யோகம் மூலம் அர்ச்சா திருமேனியை சாஷாத்கரித்து
பவிஷ்யத் ஆச்சார்யர் ஆழ்வாரால் காணப் பட்டு பரகத ஸ்வீ காரம்

விசாகம் நக்ஷத்ரம் இஷ்வாகு குல நக்ஷத்ரம் -யுத்த காண்டம் நான்காம் அதிகாரம் –
அன்று தான் யுத்தம் முடிந்து இலங்கை விட்டு கிளம்பினார்கள்
திருவாய் மொழிப் பிள்ளையும் விசாகம் நக்ஷத்ரம்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி தானே இவரது அருளிச் செயல்கள் –
திருமாலவன் கவி
என் நாவில் புகுந்து தானே தன்னைப்பாடி

விஸ்வம் பரரையே பரிக்கும் பெரியவர் இவரே
நான் பெரியன் —
நீ பெரியை என்பதை யார் அறிவார்
நேமியைக் கேட்டாலும் இப்படியே சொல்வார்கள்

நமோ வாஸ யாச உதித யாச அனு உதித தஸ்யை வச -உதித்திப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுக்கும் -இன்னும் உதிக்கப்படும்
ஸ்ரீ ஸூக்திகளுக்கும் நமஸ் -வேதமே சொல்லும்
அத்ராஷீ -சஹஸ்ர -பார்த்தார் -பண்டை நான் மறை -கண்டு இவர் வாயனவாறே சர்வ உஜ்ஜீவனம் ஆனதே
வேதக் கடல் உப்பு -மேகம் பெருகின சமுத்ராம்பு -ஸர்வதா சர்வ உஜ்ஜீவனம் ஆனதே –
அது தான் தோன்றி –வேதம் தமிழ் செய்த மாறன் -ம்ருத் கடம் போல் அன்றே பொற் குடம்

சடாரி உபநிஷத் உபகான மாத்ர போகா -கண்ணி நுண் தனியன்
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

ருக்கும் 100 ஸூக்தங்கள் -திருவிருத்தம்
யஜுர் -7-காண்டம் -திருவாசிரியம்
முண்டக உபநிஷத் —87-பகுதி என்பர் -அதர்வண வேத சாம்யம் பெரிய திருவந்தாதி
சாம வேதம் -சாகை ஆயிரம் -திருவாய் மொழி

ஓம் நம -திரு விருத்தம்
நாராயணாயா -திரு வாசிரியம்
சரம ஸ்லோகம் -பெரிய திருவந்தாதி -திருவடிகளே மாம் ஏகம் -நெறி காட்டி நீக்குதியோ -கண்ணனாலேயே மனத் துக்கும் மாயத்தேன்
த்வயம் -திருவாய்மொழி -சார ஸங்க்ரஹம் தீர்க்க சரணாகதி

பா மன்னு மாறன் அடி பணிந்த- பராங்குச பாத பக்தரான -ஆழ்வாராலேயே சாஷாத்கரித்து
அருளப் பட்ட எம்பெருமானாரே -வளர்த்த இதத் தாயான –
பூதூரில் வந்து உதித்த புண்ணியனான
இதற்கும் பெருமாள் திருமொழிக்கும் தனியன் சாதித்து அருளி உள்ளார் –
தங்கும் மனம் நீ எனக்குத் தா -இவர் இடமே பிரார்த்தித்துப் பெற வேண்டுமே )

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

இது பெரிய திருவந்தாதி திவ்ய பிரபந்த தனியனாக பெரியோர்களால் அனுசந்தித்துக் கொண்டு போவதாய் இருக்கும்
(தனியனில் பெரிய திருவந்தாதி பற்றி நேராக இல்லையே
முயற்றி பதம் கொண்டே இப்படி -காலக்ஷேபத்தில் சாதித்ததை ஓராண் வழியாக உபதேசித்து அருளிச் செய்வார்கள் )
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே-என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

(நெஞ்சைப் பார்த்து நினைக்கச் சொல்லாமல் கூறச் சொல்கிறார்
எங்கள் குலசேகரன் என்றே கூறு அங்கும் –
எல்லாக் கரணங்களும் மற்றவற்றின் செயல்களையே ஆசைப்படும்
நாம் சொல்லுவோம் இராமானுசன் என்று அவர் நாமங்களையே சொல்லிக் கொண்டு போக வேண்டுமே
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )

முந்துற்ற நெஞ்சே -ஆழ்வாரை ஸமாஸ்ரயணம் செய்ய -என்னைக் காட்டியிலும் -முன் செல்லும் நெஞ்சே
முயற்றி -முயற்றி -என்று உபக்ரமித்து உள்ள இந்த திவ்ய பிரபந்தத்தை
முயற்றி -உத்ஸாகம் ப்ரயத்னம் என்றுமாம் -உத்ஸாகத்தை உள்ளத்தில் தரித்து என்றுமாம்
தரித்து -புத்தியில் தரித்து
உரைத்து-வாயாலே சொல்லி
வந்தித்து -ஆழ்வாரை வணங்கி
வாயார வாழ்த்திச் -வாய் ஓயும் வரை மங்களா ஸாஸனம் பண்ணி
(உரைத்து என்று விஷயம் சொல்லி
அடுத்து வாயார வாழ்த்தி மங்களா ஸாஸனம் பண்ணுவதே பிரதானம்
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )
முருகூரும்-தேன் பெருகும் படியான
சந்த சோலை -சந்தன மரங்களை யுடைய சோலைகளாலே
சூழ் மொய் பூம் பொருநல்-சூழப்பட்டதாய் -நீர் நிறைந்த அழகிய தாமிரபரணி நதியை யுடைய
குருகூரன் மாறன் பேர் கூறு –திரு நகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வாருடைய திரு நாமத்தை அனுசந்தித்துப் போரு

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரை கண்டால் என்னைச் சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -(ஸ்ரீ கண்ணி )–என்கிறபடியே
உத்ஸாஹத்தை யுடைத்தாய்
முயற்றி சுமந்து -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

முயற்றி தரித்து உரைத்து –
ஸ்ரீ பெரிய திருவந்தாதியை அருளிச் செய்ததை காட்டி அருளிய படி

அன்றிக்கே –
முயற்றி (என்று தொடங்கும் ) திவ்ய பிரபந்தத்தை புத்தி ஸ்திதமாம் படி தரித்து
பின்பு
வாஸிகமாக அநு சந்தித்து -என்றுமாம்

உரைத்து –
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே––ஸ்ரீ திருவாய் மொழி-6-8-1-என்றபடி –
ஸ்ரீ ஆழ்வார் போலவே
ஸ்ரீ ராமானுஜர் பிரிவாற்றாமையால் உரைத்தபடி

இட்ட மா மகிழ் மாலை தந்திடில் இந்த மாலையை எல்லாம் செம்பொத்த கொங்கை மேல் செழும்
சந்தனக் குழம்பு பொறுக்குமோ ஆழ்வாரே (ப்ரமாணத்துக்கு ஆகாரம் இல்லை )-என்றால் போலே
என் தசையைச் சொல்லி

வந்தித்து
திருவடி தொழுது

முயற்றி தரித்து உரைத்து வந்தித்து
ஞான முத்திரை -திரு மார்பை சேவித்து –
(சேஷி சேஷ பாவ ) சம்பந்த அனுசந்தானத்தோடே வந்தித்து
பிரபந்த வக்தாவானவை பிரணாமம் பண்ணி

கரு வண்ணம் முதலான அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-3–என்றால் போலே

சகல கலா பூர்ணமான சந்த்ர மண்டலம் போலே இருப்பதாய் –

ஒண் நுதல் (திரு விருத்தம் )-என்ற
ஊர்த்வ புண்ட்ர மண்டிதமான -திரு முக மண்டலத்தையும்

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

ஆட் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்––ஸ்ரீ திருவாய் மொழி-4-10-11-என்றால் போலே

மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முத்ரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது
அநந்தரம் வாயார வாழ்த்தி

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி-12-என்றால் போலேவும்

அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-39—என்றால் போலேவும்

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-84-என்றால் போலேவும்

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-5-என்றால் போலே
வாய் படைத்த பிரயோஜனம் பெற
(திவ்ய தேச யாத்திரைக்கு போவார் இடம் எனக்காகவும் சேவித்து வா என்று இந்தப் பாசுரம் சொல்லுவார்கள் )

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது

சந்த முருகூரும் சோலை சூழ்
முருகூரும் சந்த சோலை சூழ்
ஆரப் பொழில் தென் குருகை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -என்கிறபடியே
மகரந்த ப்ரவாஹத்தை யுடைய சந்தனச் சோலையாலே சூழப்பட்டு இருப்பதாய்

மொய் பூம் பொருநல் -என்கிறபடியே
மொய் பூம் பொருநல் ஆற்றை யுடைய

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் –ஸ்ரீ திரு விருத்தம் -100-
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் –ஸ்ரீ திருவாய் மொழி -4-5-11-

சம்ருத்தமாய் -ஸ ரஸமான -நிர்மல சலிலத்தை யுடைய திருப் பொருநல் தீரமான
திரு நகரி ஆழ்வார் திரு நாமத்தை சத்தை பெறும்படி சொல்லு

சடகோபன் தெரிந்துரைத்த
குருகூர் சடகோபன் -2-5-11–
நான் கூறும் கூற்றாவது இத்தனையே –ஸ்ரீ பெரிய திருவந்தாதி –46-
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்––5-9-11–
நாராயணன் நாமங்களே–5-9-10-
நாமம் பராங்குசமோ –இத்யாதி போலே
நாமம் பராங்குசன் என்னும்படியாக நாமத்தைக் கூறு
நம் மாறன் -என்ற பாடமாகில் -நம்மாழ்வார் என்று கருத்து

குருகூரன் மாறன்
குருகூர் நம் மாறன் (பாட பேதம் )
நம்மாழ்வார் என்றபடி –

பேர் கூறு –-
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே–5-4-5–
நாடு எல்லாம் கை கூப்பும் படி கூறு –
குருகூர் சடகோபன் என்றதுமே கை கூப்பி வணங்குவோம்
எண்டிசையும் அறிய இயம்புகேன் –போலே ப்ரஸித்தமாகக் கூறு

குரு பதாம்புஜம் த்யாயேத் குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத் ச அம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்ச சாரம் –

ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 10, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி–—அதர்வண வேத சாரமாகும் –

குணங்களால் பெருமை எனபது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஸ்ரீ ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட ஸ்ரீ பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
மேலும் பல ஸ்ரீ பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-
அந்த அனுபவம்-அந்த ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார்
இந்த ஸ்ரீ பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –
ஸ்ரீ சித்ர கூடம் சென்று ஸ்ரீ பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்
ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி
ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதை கண்டு ஸ்வரூப அனுரூபமான
பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

———————–

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து –
ஸ்ரீ எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எழுந்து –
கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ்விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்பார் மேலே

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இருவரும் கூடி நடத்தவேண்டிய கார்யம் என்ன வென்றால்
நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம்பூ வில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
ஸ்ரீ எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-அன்பு கொண்ட சொற்களால்

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –ஈனுதல் -உண்டாக்குதல் –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குணரத்ன கோசம் –

————————————————————————–

கால ஷேப அர்த்தமாக-ஸ்ரீ பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்-என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல் வயிற்றான்-
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-ஸ்ரீ எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூக்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
ஸ்ரீ மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

————————————————————————–

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -பாசுர அவதாரிகைகள் தொகுப்பு —

December 2, 2016

முன் உறைத்த திரு விருத்தம் நூறு பாட்டும் -முறையில் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும் –
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
தம் பேரும் ஊரும்-சொல்லாத பிரபந்தங்கள் திருவாசிரியமும் பெரிய திருவந்தாதியும் –
அர்ச்சா மூர்த்தி மங்களாசானமும் இவை இரண்டிலும் இல்லை
கல்லும் கனை கடலும் -கல் திருவேங்கடம் என்று பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருளினாலும்
-திருவேங்கடத்து மங்களாசாசன பாசுரங்கள் –202–கணக்கில் இது இல்லை என்பர்
உட்கண்ணால் காணும் உணர்வு -அந்தர்யாமித்வமே -பிரதானம் இதில் –
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி -பேயாழ்வார் -94-என்றும்
-உணர்வு என்னும் பெரும் பதம் தெரிந்து -பெரிய திருமொழி -1 -1–1-
பெரிய திரு மடல் -பெரிய திருமொழி -பெரிய திருவந்தாதி
-மூன்று பிரபந்தங்கள் -பெரிய -விசேஷணம்

தம் திரு உள்ளத்துக்கு -36 –பாசுரங்களில் -இதில் -23–நேராகவும் -13 –மறைமுகமாகவும் அருளிச் செய்கிறார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -34-யாம் என்று-ஏக கண்டம் கொண்ட ஆழ்வார்களை சேர்த்து அருளுகிறார் -உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்-68-  -73-
ஆழ்வார் -யாமும் என் உடைமையும் -நீ கொண்ட பின் பூரிக்க கேட்க வேண்டுமோ
திரு உள்ளத்துக்கு சொல்வது போலே நமக்கும் உபதேசித்து அருளுகிறார் –எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே -84-என்றும்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனைச் சொல் மாலை எப்பொழுதும் சூட்டு -65-என்றும் -கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் -67-

பரத்வ ஸுலப்யங்கள்-இரண்டும் உள்ளவன்-இவனே சர்வ ஸ்மாத் பரன்– என்பதை
உணரத் தனக்கு எளியவர் எவ்வளவர் அவ்வளவரானால் எனக்கு எளியவன் எம்பெருமான் இங்கு -29-என்றும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை -60-என்றும்
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு -58-என்றும்
இதே போலவே திருமழிசைப் பிரானும் -பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –திருச்சந்த விருத்தம் -101-என்பர் –

Dark Energy -என்று சொல்வதையே -13-பாசுரங்களில் அருளிச் செய்கிறார் -4-14-21–26-34-46-49-63-68-72-73-85-86-
கூர் இருள் தான் -49-என்பர் –
நிகரில் இலகு கார் உருவா நின்னகத்தன்றே புகாரிலகு தாமரையின் பூ -72-என்றும் –கார் கலந்த மேனியான் -86-

திருக் குருகூரில் இன்றும் நம் பெரியவர் -என்றே நம்மாழ்வாரையும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் -என்றும் நம்மாழ்வாரை சொல்லுவார்கள் –
ஆழ்வாருடைய மிகப்பெரிய அவா- த்வரையை– வெளிப்படுத்தியதால் -பெரிய திருவந்தாதி -என்றுமாம் –
த்வரை வளர்ந்து பரிபூர்ண அனுபவ பிரகாசத்துக்கு தயார் பண்ணும் திவ்ய பிரபந்தம் -என்றவாறு –

———————————————————————

தனியன் -எம்பெருமானார் அருளிச் செய்தது –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -ஆழ்வார் பாசுரம் போலே எம்பெருமானாரும் -முந்துற்ற நெஞ்சே -முயற்றி -என்று அருளிச் செய்கிறார் –
என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நாண் மலர் பாதம் அடைந்தது –திருவாய்மொழி -7-3-10-என்றும்
என் நெஞ்சினாரும் அங்கே  ஒழிந்தார் –திருவாய்மொழி -7-3-10-என்றும்
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி -திருவிருத்தம் -30-என்றும்
என் கார் உருவம் காண் தோறும் கண்ணனார் பேர் உரு என்று எம்மைப் பிரிந்து -பெரிய திருவந்தாதி -49-என்றும்
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் –பெரிய திருவந்தாதி -7-
முயற்றி –என்றது -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -போலே
தரித்து உரைத்து -என்றது -என் நிலைமை உரைத்து -திருவாய்மொழி -6–8-1-
வந்தித்து -என்றது –இறங்கி நீர் தொழுது பணியீர்-திருவாய் -6-1-3-என்றும் –கண்ணன் தாள் வாழ்த்துவதாய் கண்டாய் வழக்கு —பெரிய திருவந்தாதி -12-
குருகூரன் மாறன் பேர் கூறு -என்றது எண் திசையும் அறிய இயம்புகேன் -போலே –

—————————————————

திருவிருத்தத்தில் –பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று தொடங்கி
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே -என்று நிகமத்தில்-
அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று தொடங்கி –மாறன் விண்ணப்பம் செய்த –என்று நிகமித்தார்
பாகவத நிஷ்டை -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-
மச்சித்தா மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் -கதயன் தஸ்ய மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –ஸ்ரீ கீதை -10–9-

திருவாசிரியத்தில் அவன் தன் ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி சேஷ்டிதங்களைக் காட்டக் கண்டு அவற்றை அருளிச் செய்து மகிழ்கிறார் –

பெரிய திருவந்தாதி —முயற்றி சுமந்து -தொடங்கி —மொய் கழலே ஏத்த முயல் -என்று நிகமிக்கிறார் –

—————————————————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து -இளைய பெருமாள் தண்டகாரண்யத்துக்கு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முந்துற்று விரைந்தது போலே
ஸுமித்ரிர் பூர்வஜஸ்ய அநு யாத்ரார்த்தே –பவாமஸ்து ஸஹ வைதேஹ்யா கிரி சானுஷூரம்ஸ்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்பதஸ் ச தே —
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாய –அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் —அடி சூடும் அரசு
நாவீன்–என்னால் தன்னைப் பதவிய இன் கவி பாடி
நற்பூவைப்-பூ வீன்ற வண்ணன் புகழ்–பூவைப் பூவை சிஷிக்க வேண்டுமே –

—————————————————-

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

இத்தை ஒட்டியே ஆளவந்தார் –தத்வேன யஸ்ய மஹி மார்ணவ ஸீகராணு–சக்யோ ந மாதுமபி சர்வ பிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய மஹ்யம் நமோஸ்து கவயே நிரபத்ரயாய –ஸ்தோத்ர ரத்னம் -7-

யஸ்ய மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -அவிஞ்ஞாதம் விஜானதாம் விஞாதம் அவிஜா நதாம்-கேனோ உபநிஷத் -2–3

அமதம் மதம் -மத மதா மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம ஸ்துதம் -இதி ரங்கராஜ முத ஜு குஷத் த்ரயீ
-ஸ்துமஹே வயம் கிமதி தம ந சக்நும–ரங்கராஜஸ்த்வம் -1-13-

எங்கள் மால் செங்கண் மால்-தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-6-7–இரண்டு மால் ஸுலப்ய பரத்வங்கள்
சீறல் நீ தீ வினையோம்–சீறி அருளாதே -அறியாத பிள்ளைகளோம் அன்பினால் சிறு பேர் அழைத்தனம் போலே
எங்கள் மால் கண்டாய் இவை -நீயே எங்கள் புகழ்வோம் புகழோம் கண்டு கொள் –

——————————————

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா நிறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

அடியேன் பரதந்த்ரன் அன்றோ
கர்மண்யே வாதிகாரஸ தே மா பலேஷூ கதாசந –ஸ்ரீ கீதை -2-47-
மன்மனாபவ மதபக்தோ மத்யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யசி சத்யம் தே ப்ரதிஜா நே ப் ரியோ அஸி மே–ஸ்ரீ கீதை -18-65-

——————————————————–

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று –4-

என்னின் மிகு புகழார் யாவரே-என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் -என்கிறார் -அவனை பார்க்கும் பொழுது எல்லாம் -மேலும்
சீலமில்லா சிறியேனேலும் செய் வினையோ பெரிதால் -என்பர் -தம்மை பார்க்கும் பொழுது எல்லாம் –
என்ன-கருஞ்சோதிக் கண்ணன்-அவனே காட்டக் கண்டவர் அன்றோ
கடல் புரையும் சீலப்-பெருஞ்சோதிக் -அவன் சீல குணத்துக்கு -கடல் கொஞ்சம் ஒப்புமை-
-அவனோ பெறும் சோதி -நாமோ நீசன் நிறை ஒன்றும் இல்லாதவன்
கென்னஞ்சாள் பெற்று-என் நெஞ்சு அன்றோ அவனுக்கு ஆட்பட்டது-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
-என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே -திருவாய் -3-3-4-

————————————————————-

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய்வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5-

அஸந் நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது -தைத்திரயம் ஆனந்த வல்லி -6-

மாதா பஸ்த் ரா பிது புத்ர –சரீரமேவ மாதாபிதரவ் ஜெநயத-ச ஹி வித்யாதஸ் தம ஜெநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜென்மம் –ஆபஸ்தம்ப ஸூ தரம் -1-1-6-
மற்றையார்-ஆச்சார்யர் என்றபடி / பேசில்எற்றேயோ-மாய-நீ செய்த உபகாரகங்கள் சொல்லி முடிக்கவோ –
அந்த மாயத்தில் ஒன்றை –மாய மா மாயவளை மாய முலை வாய்வைத்த-அதே போலே என் பிரதிபந்தகங்கள்
-நைச்ய பாவம் போக்கி -பிரபந்தம் தொடர அருளினாய் –நீ யம்மா காட்டும் நெறி-

———————————————————————-

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

நெறி காட்டி நீக்குதியோ-நளன் தமயந்திக்கு -ஏஷ பந்தா விதர்பாணாம் ஏஷ யாத ஹி கோசலான் -என்று
விதர்ப தேசம் கோசல தேசம் போக வழி காட்டினால் போலே

நாயாத்மா ப்ரவசனே லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந -யமேவைஷ வ்ருணேத தேந லப்ய-
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -கதோ உபநிஷத் -1-2-23-

கருமா-முறி மேனி -கதிர் பொருக்கி சிஷித்து -மாந்தளிர் -கருமை கூட்டி /
மேனாள் அறியோமை-அநாதியாக ஸ்வரூப ஞானம் சம்பந்தம் ஞானம் இல்லாமல்
அவிவேகக நாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி–பகவன் பவதுர்த்தி நே பத ஸ்கலிதம் மாம் அவலோகயச்யுத–ஸ்தோத்ர ரத்னம் -49-

——————————————————————–

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

ஆழ்வார் தம் இச்சையை வெளியிட்ட அநந்தரம் –அவனே காட்டக் கண்டு ஆழ்வார் திரு உள்ளம் முந்துற்று அவனை அடைந்தது
-என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார்
அணைக்கப் பெறாமல் –தம்மை -யாமே அருவினையோம் சேயோம்-
ஸ்ரீ தேவி அகலகில்லேன் இறையும் என்று இருந்தாலும் – அதற்கு மேலே பூ தேவியும் இருக்க இழக்கவோ –

—————————————————————

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பருகலாம்-பண்புடையீர்பண்பு -ஸுலப் யாதி கல்யாண குணங்கள்
-தேனும் பாலும் நெய்யும் கன்னலும்  அமுதும் ஓத்தே -திருவாய் -2-3–1-அன்றோ
திரு உலகு அளந்து அனைவரையும் தீண்டினீர் –பாரளந்தீர்
இருந்தாலும் ஸூ ஷ்மமாய்–பாவியேம் கண் காண்பரிய-நுண்புடையீர்
நும்மை அருகும் சுவடும் தெரி யுணரோம் –நுமக்கு அன்பே-பெருகும் மிக இது என் பேசீர்-என்று
அன்வயித்து பிள்ளை திரு நறையூர் அரையர் நஞ்சீயருக்கு அருளிச் செய்தார் –

————————————————————————–

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென்
சேஷ பூதன்-சேஷி இடம் மீண்டும் மீண்டும் சம்பந்தம் உணர்த்துவது பிள்ளை அப்பா இடம் நான் உன் பிள்ளை என்று என்று சொல்வது போல் அன்றோ
மாலார்-வ்யாமோஹமே வடிவானவர் அன்றோ –
ஆர்த்தோ வா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத -அரி ப்ராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா-யுத்த -18–28-
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் –எமக்கினி-யாதானும் ஆகிடு காண் –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -நாச் திரு -13–9-
ஈர்ஷ்யா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷ மிவோ தகம்–நய மாம் வீர விஸ் ரப்தே பாபம் மயி ந வித்யதே –அயோத்யா -27-8-
அவர் திறத்தே-யாதானும் சிந்தித்து இரு
-ப்ரஹ்மாத்மகமான வஸ்துவே இல்லையே -அவன் உபேக்ஷித்து நமக்கு அவனைக் காட்டாவிடிலும்–இத்தையே சிந்தித்து கால ஷேபம் பண்ணலாமே –
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே –திருவாய் -4-1-3-
ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே –-நாச் திரு -13-9-

——————————————————————

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

ஏ பாவம்வள வேழ் உலகம் தலையெடுத்து அணுக ஒட்டாமல் பண்ணுவதே
எண்மர் பதினொருவர் ஈரருவர் ஓரிருவர் -முப்பத்து மூவர் –த்ரயஸ் த்ரிம் ஸத்வை தேவா —

—————————————————————-

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

ஜெகதாகாரன் -சர்வ நியாம்யன் –விரோதி நிரசன சீலன் -தன்னையும் மீள வைத்து பாட அருளினதில் வியப்பு இல்லையே –
இதை -பார்த்தால் – வல்லரக்கன் இன்னுயிரை-வாழா வகை வலிதல் நின் வலியே –அது ஒரு விஷயமோ –

—————————————————————-

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்-வள வேழ் உலகம் நிலை உன்னால் அன்றோ என்ன
-நெஞ்சு -முந்துற்ற நெஞ்சே –யாமே சேயோம் என் நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார் -என்றீரே -என்ன
-யார் குற்றம் என்று பார்க்க வேண்டாம் -மேல் உள்ள காலம் எல்லாம் –கண்ணன் தாள்-வாழ்த்துவதே கண்டாய் வழக்கு-

————————————————————————–

வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

ஓடு வழக்கு அன்று மாறுகொள் வழக்கு அன்று -நீ அவதரித்து அனுஷ்டித்துக் காட்டினாலும் சம்சாரிகள் திருந்த மாட்டார்கள்
-தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளார்கள்-
அடியார் வேண்ட-இழக்கவும் காண்டு இறைவ -உன்னை அழிய மாறியும் அடியார்கள் அபேக்ஷித்ங்களை நிறைவேற்றி அருளுகிறாய் –
இறைவா -நீ ஸ்வாமி என்றவாறு -ஆகிலும் —யான் வேண்ட-எம்மை ஆட் கொண்டுஎன் கண்கள்-தம்மாற் உன் மேனிச்சாய்–காட்டாய் –
யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை சோகாபி கர்சிதை ஸம்ஸ்ப்ருசேயம் சகாமாஹம் ததா குரு தயாம் மயி –சுந்தர -40-3-
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -நாச் திரு -13–9
இவ்வுலகில் இவ்வுடம்போடு இப்பொழுதே இவ்வுலக கைங்கர்யம் கொடுத்து அருள வேண்டும் என்கிறார் –

———————————————————————

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

நீ யார் -பூதனை பேயாகி இருந்து செய்த செயலை விட மனுஷ்ய ஜென்மத்தில் இருந்து -அவன் நீல மேக ஸ்யாமளமான
வடிவைக் காட்ட -மீண்டும் வள வேழ் உலகு தடையெடுத்து விலகுவது -அவளிலும் கீழ்ப் பட்டவன் அன்றோ –
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–சப்தாதி விஷயங்களை சுவைப்பார் போலே -இழக்கவோ –

———————————————————-

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண் வளர்வார் சீர்–15-

உறங்குவான் போல் யோகம் செய்து அருளி –ஓதம் ஆர்த்து -தம் திரு மேனி தாள் தடவ -நாம் பாடுவதால் அவத்யம் வராதே –

—————————————————————

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா ராஜ்ஞ்ஞா தசரதே நாசி லப்தோ அம்ருதமிவாமரை -ஆரண்ய -66-3-போலே அல்லவே ஸ்ரீ வாமநவதாரம் –
தன்னை அழிய மாறி ரஷித்த ஸ்ரீ வராஹ ஸ்ரீ வாமன அவதாரம் அனுபவித்து- எத்திறம் -மோகித்து -தெளிந்து அவனையே சொல்லக் சொல்கிறார் –
ஜென்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி சோர் ஜு ந –ஸ்ரீ கீதா -4–9 –
அவனே திவ்யம் என்பான் -அவதார ரகஸ்யம் –அஜாய மாநோ பஹூ தா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோநிம்-புருஷ ஸூ க்தம்–27-

———————————————————

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்–17-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்-வாழ்ந்திடுவர்--எதிர் சூழல் புக்கு -பல அவதாரங்கள் எடுத்து
வந்தாலும் அவஜாநந்தி மாம் மூடா -என்று சம்சாரிகள் அலட்சியம் செய்தாலும் -கவலைப்படாமல் முயன்றோம் என்றே இருப்பவன் அன்றோ
பின்னும் தாம் வாய் திறவாதார் –
ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை
-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்-அறிவிக்க உரியவன் அகப்பட
வாய் திறவாதே-சர்வஜஞன்- விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இ றே -என்று அருளிச் செய்தது இப்பாசுரத்தைக் கொண்டேயாம்
மா முனிகள் வியாக்யானம்
எதிர் சூழல் புக்கு என்றபடியே-தன்னுடைய சீல சௌலப் யாதிகளைக் காட்டி
சம்சாரி சேதனர்களை தப்பாமல் அகப்படுத்திக் கொள்வதாக-வந்து அவதரித்து
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்
நாம் இதற்க்கு உறுப்பாக பெற்றோமே இ றே என்று-அது தானே போக்யமாக விரும்புவர்
அதற்கு மேல்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார் என்கிற
-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே-சேதனர் செய்த குற்றங்களை தன திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப்பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இ றே-
அன்றிக்கே–
சூழ்ந்து எங்கும்-வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய-தாள்வரை வில்லேந்தினார் தாம்-அடியார்-சூழ்ந்து
வேண்டினக்கால் தோன்றாது -விட்டாலும்-வாழ்ந்திடுவர்-அநந்ய பிரயோஜனர்கள் -பெருமாள் சேவை சாதிக்கா விடிலும்
-நாம் சொத்து -அவன் ஸ்வாமி -முறை உணர்ந்து அவன் ஆஜ்ஜை படியே வாழ்ந்திடுவார் -என்றவாறு –

———————————————————————-

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18-

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக-பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் —யசோதை காட்டியதால் வந்த தழும்பு ஒன்றும் இல்லை என்னும் படி அன்றோ காளியன் படுத்திய பாடு
உன் தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–நானும் உனக்கு பழ வடிமை -சேஷி சேஷ -சம்பந்தம் அநாதி அன்றோ –

————————————————————————–

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

குழந்தை பருவ ரக்ஷணம் கீழே சொல்லி வளர்ந்த பின்பு பாண்டவ ரக்ஷணம் -ஸ்ரீ கீதை அருளும் பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் -64-வயசு என்பர்

————————————————————————–

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

நம்மில் அவன் அவா–குளப்படியும் கடல் போன்றதும் அன்றோ –நாணப்படும் அளவு அன்றோ –

————————————————————————–

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

வெந்நரகம் -சம்சாரம் / -வள வேழ் உலகு தலை எடுத்து கூடாமல் இருப்பதுவும் –

————————————————————————–

காலே பொதத்திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே-அரவத்தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

————————————————————————-

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –

————————————————————————-

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

தானே தனித் தோன்றல் -அஜாயமானோ பஹுதா விஜாயதே -இச்சையால் பல அவதாரங்கள்
தன் அளப்பு ஓன்று இல்லாதான்-ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –ஏஷ தை ஆத்மா அந்தர்யாம் யம்ருத-ப்ருந்தாரண்யாகம் -5-7-

————————————————————————–

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான் —25-

வணங்கும் துறைகள் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே–திருவிருத்தம் -96-
ஓ ஓ உலகீனது இயல்வே –திருவாசிரியம் -6-
நாம் தப்பித் பிழைத்தோம் -என்கிறார் இதில் –

————————————————————————–

யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம்மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

இசைவே நம் கர்தவ்யம் -அவன் கிருபை அருள் –இரக்கமே உபாயம் –

————————————————————————–

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

இசைந்து ஒழிந்தோம் என்றதும் அருள் என்னும் தண்டால் பெற்ற அனுபவம் –உடைமையை பெற்ற ஸ்வாமி
– திருமுகம் தேஜஸ் கண்டு அருளிச் செய்கிறார் –அடியால் படி கடந்த முக்தன் –மாணிக் குறள்-முத்து என்றுமாம் –
செறி கழல் -நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் –திருவிருத்தம் -50-திருவடியில் திரு முடியிலும் முத்துக்கள்
உண்டே / சிலம்பும் செறி கழலும் –பேயார்-90-

————————————————————————–

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

பக்தி பரம பக்தியாக பரிணமித்தால் அன்றி ஆழியான் கார் உருவம் காண இயலாதே -மயில்கண் பீலி போலே தானே புறக்கண்-

————————————————————————–

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறுதுறக்கம் -பரிபாடல்
தேஷாம் ஜ்ஞ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே ப்ரியோ ஹி ஜ்ஞானிநோ அத்யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய -ஸ்ரீ கீதா -7-17-
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் –நாச் திரு -11-10-

————————————————————————–

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

————————————————————————–

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

————————————————————————–

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது–32-

தமக்கு அடிமை வேண்டுவார்–ஆச்ரித பாரதந்தர்யம் -காட்டுவானே-கைத்தது உகப்பார் -புளித்தது உகப்பார் என்னுமா போலே
-இத்தை அன்றோ தாமோதரன் வெளிப்படுத்தி அருளினான் –
இப்படி இருந்தும் -எமக்கென்று-தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர்ஏவகாரம்-இவற்றையே என்றவாறு –

————————————————————————–

யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

யாதானும் ஓன்று அறியில் -அனைத்துக்கும் அந்தர்யாமி அன்றோ –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
தன் உகக்கில் என் கொலோ –-தன்னை உகக்கில் அவன் நம்முள்ளும் இருப்பதால் அவனை உகப்பது ஆகும் அன்றோ
இப்படி இருந்தும் -யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான்-அனைத்தும் அவனதாக இருந்தும்
இப்படி யாதானும் அவனுக்கு என்று நேர்ந்தால் -போதுமே
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத் தழுவி
என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ –என்றதுமே
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க கண்கள் ஆயிரத்தாய் –-என்றாரே –

————————————————————————–

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

கிடந்தோர் கிடக்கை -என்றே இறே ஆழங்கால் படுவார்கள் -/ காலாழும்கால் -கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் /
கண் சுழலும் -கண் ஞான இந்திரியங்களுக்கு உப லக்ஷணம்
காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா மயிர்க் கூச்சம் அறா என் தோள்களும் வீழ் ஒழியா
மால் உகளா நிற்கும் என் மனனே –பெரியாழ்வார் -5-3-5-
அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ —திருமாலை -19-
கண்ணனைக் கண்ட கண்கள் பனி  யரும்புதிருமாலோ -திருமாலை -18-

————————————————————————-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என்நெஞ்சு அகலான் -அன்று அம்கை
வன்புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
ஆன்புடையன் அன்றே அவன்–35-

——————————————————————–

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

பரதஸ்ய வச குர்வன் யாசமா நஸ்ய ராகவ ஆத்மாநம்நாதி வர்த்தேதா ஸத்ய தர்ம பராக்ரம–அயோத்யா -111-7-
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூ ஹ்ருசஸைவ ஜனார்த்தன -ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ச கின்னு தஸ்ய ந நிர்ஜிதம்-வனபர்வம் -49–20-

————————————————————————–

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ -பந்தாய விஷய சங்கி முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
ஸ்திரமாக மங்களா சாசனம் பண்ணுவதே கர்த்தவ்யம் என்றவாறு –

————————————————————————–

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

————————————————————————–

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39–

————————————————————————–

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

யஸ் த்வயா ஸஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா-இதி ஜானன் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ –அயோத்யா -30-18-
வாழ்த்தே வலி-அவன் திருக் கல்யாண குணங்களை வாழ்த்துதலில் ஸ்திரமாக இரு –

————————————————————————–

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

வில் விழா -சாணூர முஷ்டிக மல்லர் நிரசனம் –
பூமவ் ஸ்திதஸ்ய ராமஸ்ய ரதஸ் தஸ்ய ச ராக்ஷஸ -ந சமம் யுத்தம் இத்யாஹூர் தேவ கந்தர்வ கின்னரா–யுத்த -102–5-

—————————————————————-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

ரஷ்ய ரக்ஷக பாவம் / கார்ய காரண பாவம் / சரீர சரீரீ பாவம் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத –சாந்தோக்யம் -3-14–1-

——————————————————————-

அவயம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை–43-

யதாவத் கதிதோ தேவைர் ப்ரஹ்மா ப்ராஹா தத ஸூரான்-பரா வரேசம் சரணம் வ்ரஜத் வம ஸூ ரார்த்தனம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9–35-
அவயம் -அபயம் என்றவாறு / கவை -சங்கை / மனத்து உயர வைத்து இருந்து –அவனே ப்ராப்யம் -ப்ராபகம் -தாரகம் -போஷகம் -போக்யம்-
பரிபூர்ணமாகக் கொண்டு மங்களாசாசனம் பண்ணுகை –

——————————————————————–

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

சத்வாத் சஞ்சாயதே ஞானம் ரஜஸோ லோப ஏவ ச -பிரமாத மோஹவ் தமஸோ பவதோ அஞ்ஞான மேவ ச –ஸ்ரீ கீதை -14-17-
மேலைத் தாம் செய்த வினை-முன் செய்த கர்மம் என்றும் -மேலே செய்யப் போகும் கர்மம் -பிரக்ருதியிலே இருப்பதால் -என்றுமாம் –

————————————————————————–

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி-முன்னமே –இங்கு இல்லை -30-என்றும் வானோ மறி கடலே -54-
-இங்கே வினையார் முன் செய்த கர்ம வினைகள்
தொழுது -மனம் காயம் –இறைஞ்சி -வாக்கால் -/ பொன்னடிக்கள் -ப்ராப்யம் -ப்ராபகம் இரண்டும்

————————————————————————–

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

————————————————————————–

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

————————————————————————–

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

————————————————————————

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

————————————————————————–

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மாவாய் பிளந்தார் மனம்–50-

————————————————————————–

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர்–ஆத்மா மனசை ஆண்டு இந்திரியங்களை ஆளாமல் –இவை மனசை ஆள -மனாஸ் ஆத்மாவை ஆளுவது போலே
இன்னதனை த்ரவ்யத்தை அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே -லஞ்சம் கொடுத்து ஆட்சியாளரை ஆளும் கயவர் போலே -என்றவாறு
த்யாயதோ விஷயான் பும்ஸஸ் சங்க ஸ் தேஷூ பஜாயதே -சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ பிஜாயதே –ஸ்ரீ கீதை -2–62-
இன்னம் கெடுப்பாயோ –பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –சிற்றின்பம்

————————————————————————

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண்ணவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பேய் முலை நஞ்சு ஊணாக உண்டான் -பொய்கையார் -11-

———————————————————————

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

ஆரேனுமாகத் தெளிந்தார் கலங்கினார்க்குச் சொல்லக் கடவது இ றே –வ்யாமோஹத்தால் கலங்கின அவனுக்கு அறிவிக்கிறார்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் -ருணம் ப்ரவர்த்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதே-உத்யோக பர்வதம் -47-22–
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்-சித்தத்துக்கு இடை நிற்குமோ சாத்தியம் -என்றார்
காரார் புரவி யேழ் பூண்ட தனி யாழி தேரர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி
அதின் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க – முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –சிறிய திரு மடல்

————————————————————————

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் – கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54

வன் துயரை மருங்கும் கண்டிலமால் -உம்மை தொகை –ஒருங்கிற்றும்

————————————————————————–

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக்கவலை தீர்ப்பார் வரவு –55

ப்ரஜாபதிஸ் த்வம் வேத ப்ரஜாபதிம் த்வோ வேதயம் ப்ரஜாபதிர் வேத ச புண்யோ பவதி —அவனாலே காட்டக் காண வேண்டுமே

————————————————————————–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

————————————————————————–

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

வளை யுகிராளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஓர் உகிரால் பிளவெழ விட்ட குட்டமது
வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே -கலியன் -11–4–4-

————————————————————————–

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

சாவித்ரி சத்யவான் விருத்தாந்தம் போலே –மறப்பின்மை யான் வேண்டும் மாடு -என்று கேட்க்கிறார்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருப்பவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்
பிரகிருதி சம்பந்தம் உடையோருக்கு வருவது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார் -ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்-
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

————————————————————————–

மாடே வரப் பெறுவாராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

———————————————————————–

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60-

————————————————————————

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

சிறியாச்சான் நம்பிள்ளை இடம் -சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் என்று பணித்தானாம் –

————————————————————————–

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

————————————————————————–

பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

வாய்மைத்து –என்பதை வாய்மையின் -என்றோ வாய்மைத்து படி என்றோ கொண்டு -பெருமாள் ராவண வத அநந்தரம்
திருப் பாற் கடல் சென்று சயனித்த படி -அன்றிக்கே இருந்த படி உபமேயம் சொல்லி உவமானம் பின்பு என்றுமாம் –

————————————————————————-

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-

————————————————————————–

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-

———————————————————————–

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர –யுத்த -60-3-

———————————————————————–

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

——————————————————

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-

கல் திரு வேங்கடம் –தம் பாம்பு -நாச் திரு -10-3-ஆதி சேஷன் –
சவ்பரி   ஐம்பது பெண்களோடு கலந்து பொருந்த இடத்தில் தம் மக்களை தனித் தனியே உனக்கு குறை இல்லையே என்று கேட்க
என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னுடனே இருக்கும் இதுவே வெறுப்பு -வேறு ஒரு குறை இல்லை என்று சொன்னால் போலே –
ஆழ்வார் திரு உள்ளம் மற்று வேறு ஓன்று அறியாதாப் போலே ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தான் –

————————————————————————

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

தாதூனாம் இவ சைலேந்தரோ குணா நாமா கரோ மஹான் –கிஷ்கிந்தா -15–21-தாரை பெருமாளை சொன்னால் போலே –

——————————————————————

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-

—————————————————————–

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம்-என்றும் –
ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித-ப்ரஹ்ம மம ஆஸ்ரிதோ ராஜன் -நாஹம் சஞ்சிது பாச்ரித-
வலத்தனன் த்ரி புரம் எரித்தனன் –

—————————————————————–

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

த்ரி மூர்த்தி சாம்யவாதிகள் / த்ரி மூர்த்தி உத்தீர்ண வாதிகள் / த்ரி மூர்த்தி ஐக்கிய வாதிகள் /
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடல் உருவம் ஒத்து நின்ற மூ உருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம் -2-
ஸ்ருஷ்டி ஸ்திதி அந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மகம் ச சம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-66-
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே சம்ப்ரஸூயந்தே –
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதமாவதார -தத் சாம்யத ஸ்தகயிதம் தவ சேத் ஸ்வரூபம் -கிம் தே பரத்வ பி ஸூ நைரிஹ ரங்க தாமன்
-சத்வ ப்ரவர்த்த நக்ருபா பரிபால நாத்யை -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -2–51-
த்ரயோ தேவாஸ் துலயா -த்ரி தயமித மத் வைதம் அதிகம் -த்ரி காதைஸ் மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத -ததன்யத் ப்ரூபங்கீ பரவதிதி சித்தான் தயதி ந –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம்-1-16-

————————————————————————–

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

————————————————————————–

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –74-

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இ றே -அவர் நீர்மை ஏறிப் பாயாத தோர் இடம் தேடி எங்கே கிடந்தோம் –

————————————————————————–

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

————————————————————–

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

கீழே செவியின் வழி புகுந்து —ஸ்ரவணம்–இதில் அந்த ஞானம் சிந்தனை த்யானம் –
அவன் ஸ்வரூபமே விபு -ஆத்மாவின் தர்ம பூத ஞானம் தானே விபு

——————————————————————-

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

————————————————————————–

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78

————————————————————————-

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இ றே –ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -81-இதற்கு மா முனிகள் வியாக்யானம்
ஆழியங்கைப்-பேராயற்கு ஆளாம் பிறப்பு -உண்ணாட்டுத் தேசன்றே-என்கிறபடியே பகவத் விமுக பிரசுரமாகையாலே
புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே -பகவத் ஆநு கூல்ய ஏக போக ரசத்தில் நெருங்கி போக விபூதியாய் –
அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரமபதத்தில் வர்த்திக்கிற தேஜஸை யுடையது இ றே என்கை
பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து –
யத்தூரே மனசோ யதேவ தமச பாரேயதத் யத்புதம் -யத் காலாத் அபசேளிமம் ஸூ ரபுரீ யத் கச்சதோ துர்கதி ஸாயுஜ் யஸ்ய யதேவ
ஸூ திரதவா யத் துர்க்ரஹம் மத்கிராம்-தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதேமாத சமாம் நாசி ஷூ -ஸ்ரீ குண ரத்ன கோசம் -21-
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வா அபி லோகாநாம் காமயே ந த்வயா விநா–அயோத்யா -3-5-
வாஸூதேவ மநோ யஸ்ய ஜபஹோமார்ச்ச நாதி ஷூ தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ரத்வாதிகம் பதலம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6–41-

——————————————————————

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

ஜரா மரண மோஷாயா –ஸ்ரீ கீதை -7-29-/ பிறவித் துயர் அற மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்று இவை மாயத்தோம் -திருவாய் -8-3-2-
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும் -மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும்
சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே –திருவாய் -6-9-10—கைவல்ய பரம் –

——————————————————————–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவைமே யார் தெரிந்து–81-

———————————————————————–

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்
சம்ஜ் ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம நிர்மல மேக ரூபம் சந்த்ருச்யதே வாயபதி கம்யதே வா
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்நிய துக்கம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
தத் கர்ம யன்ன பந்தாய சா வித்யா யா விமுகத்தயே ஆயாசாயா பரம் கர்ம வித்யா அந்நிய சில்பநை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9–41-
வாளா-இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் –குனியாக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வியர்த்தமே இருந்தேன்
கரந்த உருவின்-அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை-அம்மானை ஏத்தாது அயர்த்து-அன்று மாயமானை பின் தொடர்ந்த
பெருமாளுக்கு -இளைய பெருமாளும் இல்லாமல் தனியான இருப்பில் கைங்கர்யம் செய்யாது ஒழிந்தேனே-
ஆழியங்கை -இது ஒன்றே கைகேயி வாங்காமல் இருந்த ஆபரணம் –
பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு
அதின் மேலே எழுந்து அருளினார் என்று ஒருவன் கவி பாடவும் எம்பெருமானார் கேட்டு அருளி மாறியிடுகிற திருவடிகளில்
என் தலையை வைக்கப் பெற்றிலேன் என்று எம்பெருமான் அருளிச் செய்தார் என்பர் –

———————————————————————

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து –83-

———————————————————————

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு–84-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்-தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்  கூப்பாத–மநோ வாக் காயங்கள் -ஆகிய – முக்கரணங்களாலும்
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே–எங்கு சென்றாகிலும் கண்டு -திருவாய் -6-8-5-/ பாழ்த்த விதி-அயோக்கியன் என்று அகலுகை-

——————————————————————

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

மேகங்களோ உரையீர் -திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் -திருவிருத்தம் -32-
உயிர் அளிப்பான் மாகங்கள்எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள் பெற்றதே –

—————————————————————–

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான் சொல் -ஸ்ரீ மத் ராமாயணம் -மேஹா ஸ்யாமம் மஹா பாஹும்
கை கலந்த வாழியான் சொல் -ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ மத் பாகவதம்
பார் கலந்த  வல்வயிற்றான் சீர் கலந்த சொல் -புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் -முகில் வண்ணன் –
சொல் நினைந்து போக்காரேல்--திரு நாமங்களை

——————————————————————

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

திண்ணியதாக இருக்கும் திருவடிகள் என்றவாறு -ரக்ஷணத்திலே தீக்ஷை கொண்டு –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -11-20–திவ்யார்த்த தீபிகை –

October 7, 2014

(நாழாலமர் முயன்ற.) அநந்ய ப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக?
அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வது தான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக் கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்;
எம்பெருமான் அவரை அப்படியே இருக்க வொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டி விட்டான்; இதென்ன அற்புதம்!
நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பர வசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே!
நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய் பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்க வேணுமென்று ஆராய்ந்தார்;

”***- தோ விநாத்ருணாக்ரமபி ***- (அவ் வெம்பெருமானை யொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே,
அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்;
அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து
‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப் போக்கி
வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று,
பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவே மாட்டேன்’ என்று
கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப் பெருமான் என்று
எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு?
இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய் திறக்கப் பண்ணா நின்ற
இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

பதவுரை

ஆழாத பாரும் நீ–(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ–ஜலதத்வமும்*;
தீயும் நீ–தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ–வாயுதத்வமும் நீ;
வானும் நீ–ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ–இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற–அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன்–கொடிய இராவணனுடைய
இன் உயிரை–இனிமையான பிராணனை
வாழா வகை–வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல்–கவர்ந்து கொண்டது
நின்வலியே–உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.

நாழால் அமர் முயன்ற –
வணங்கா முடித்தனம் ஆகிற அஹங்காரத்தால் யுத்தம் செய்வதில் கை வந்த / வல்லரக்கன்-கொடிய ராவணனுடைய -/ 
இன்னுயிரை –
இனிமையான பிராணனை -/ 
வாழா வகை வலிதல்
-வாழ்ந்து இருக்க ஒட்டாமல்
கவர்ந்து கொண்டது/ 
நின் வலியே
-உனக்கு ஒரு சூரத் தனமோ –வலியே -ஏகாரம் -வலி அல்ல என்றபடி

ஆழாத பாரு நீ –நீரில் அழுந்தாது இருக்கிற பூமியும் நீயே /
வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய்
-நீரும் தீயும் காலும் வானும்–ஜல தத்வமும்-தேஜஸ் தத்வமும்-வாயு தத்வமும்-ஆகாச தத்வமும் நீ- / 
நின்ற நீ
-இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாய் நின்ற நீ

விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ
விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்-அவற்றைச் சொல்லும் சப்தங்கள் உன் அளவில் வரும்படி நிற்கிற உனக்கு-
உனக்கே அசாதாரணமாய் உன்னால் அல்லது செல்லாதவர்களை சேர விடுகை ஒரு பணியோ
யஸ்ய பிருத்வி சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்று வேதங்கள் சொல்லக் கூடிய உனக்கு
அருமை என்று-சொல்லக் கூடிவது இல்லையே-

(திருமாலே!,) “ஆழாத பாரும் நீரும் தீயும் காலும் வானும் நீயாய் நின்ற நீ,
நாழலமர் முயன்ற வல்லரக்கனின்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே?” என்று அந்வயம்.

மண் நீர் எரி காற்று ஆகாயம் என்கிற பஞ்ச பூதமுமாய் நிற்கிற நீ என்றதற்குக் கருத்து யாதெனில்;
“விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அநுபவிக்கிற வுனக்கு என்னைச் சேரவிடுகை ஒரு பணியோ;
விபூதி ஸாமாந்யங்களுக்கு நிர்வாஹகனாய் அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற வுனக்கு,
உனக்கே அஸாதாரணமாய் உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேரவிடுகை பணியோ வென்றுமாம்” என்பது
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

மண்ணானது நீரில் கரைந்துவிடும்; நீரானது தீயை அணைத்து விடும்; இப்படி பரஸ்பரம் விருத்த ஸ்வபாவங்களான
பஞ்ச பூதங்களை ஒன்று சேர சரீரமாகக் கொண்டு =
யஸ்ய ப்ருதிவீ சரீரம். யஸ்ய ஆபச் சரீரம்” என்று வேதங்கள் ஓதும்பட நிற்கிறவுனக்கு
அருமை யென்று சொல்லக்கூடிய காரியம் ஒன்றுமே யில்லை என்றவாறு.

ஆனாலும், நீ அருமையான காரியங்களைச் செய்கிறவன் என்று
பாராட்டிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உறுதியைப் போக்கடித்து என்னை வாய் திறக்கப் பண்ணின இக்காரியமொன்றே
அருமையாகப் பாராட்டிச் சொல்லவுரியது;
என் உறுதியைக் காட்டிலும் லகுவான உறுதியையுடையரான இராவணாதிகளைப்
பங்கப்படுத்தினாயென்பதை அருந்தொழிலாகப் பலரும் பாராட்டிச் சொல்லுகிறார்களே, அது பயனற்ற சொல் என்றாராயிற்று.

நாழாலமர்முயன்ற என்றது – வணங்கா முடித்தனமாகிற அஹங்கார தோஷத்தினால் உன்னை எதிரிட்டுச் சண்டை செய்வதாக
ஒருப்பட்டு வந்த என்றபடி அப்படிப்பட்ட வல்லரக்கனுண்டு- பெருமிடுக்கனான இராவணன்,
அவனுடைய தித்திப்பான பிராணனை
அந்த சரீரத்தில் வாழவொட்டாமல் கவர்ந்து கொண்டது உனக்கு மிடுக்கோ?
வலியே என்ற ஏகாரம்- வலியல்ல என்பதைக் காட்டும்.
என்னுடைய உறுதியைப் போக்கினது வலியே யன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்ல காண் என்கை.

———————————————————————

(நீயன்றே யாழ்துயரில்.) கீழ் பத்தாம் பாட்டில் “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன் நெஞ்சே!,
நாமா மிகவுடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்றும் பின் வாங்கப் பார்த்ததை நினைத்துக் கொண்டு.
அப்படியும் நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கஷ்ட காலம்!;
ஏகஸ்மிந்நப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாநவர்ஜிதே- தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திலும் க்ருணாம்”
(எம்பெருமானுடைய சிந்தனை யில்லாமல் ஒரு க்ஷண காலம் கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள்வர் கவர்ந்தால்
எப்படி முட்டிக்கொண்டழுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும் போயின’ என்றும்
‘ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன கழிந்த வந்நாள்கள்’ என்றுங் கதறியழவேண்டும்) என்று சொல்லிக் கிடக்கிறதே;
‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலே யன்றோ நாம் மூழ்கிக் கிடக்க வேண்டியதாகும்;
எம்பெருமான் றானே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது தேறினோம்;
அவன் அருள் செய்யா விடில் ஆழ்துயரில் அழுந்தியே போயிருப்போமே” என்றிப்படியெல்லாம் பலவாறாக வருத்தமுற்று,
‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது காரணம்?’ என்று பார்த்தார்;

மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சு தான் காரணமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே
நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் தோன்றினது நெஞ்சில் குற்றமேயாம் என்று நிச்சயித்து.
அந்த நெஞ்சோடே வாது செய்யத் தொடங்கினார்-

நீயன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய் என்று
அதாவது-
“திருமாற்கு யாமார் வணக்கமா! ஏபாவம்!” என்று சொல்லி அகன்று துன்பக் கடலில் நான் விழுந்தேனாம்படி
என்னைக் கொலை செய்யப் பார்த்து பாவி நீயன்றோ நெஞ்சே! என்றார்.

யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –
மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-

நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி
என்று நியமித்து-
இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-

பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-
இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்

நெஞ்சு விநேதயமாக நின்று  ஸ்வாமி என்ன நியமனம் என்ன-
உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –
அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆழ் துயரில்–அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான்–என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே-இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ;
(என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.)
(உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல
போய் ஒன்று சொல்லி என்–மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
உபதேசம்தரினும்-(எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய்–நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
(உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல)
போய் ஒன்று சொல்லி என்-மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
(இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)-
கண்ணன் தான்–எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே–வாழ்த்துவதுதான்
வழக்கு–நியாயம்
(கண்டாய் – முன்னிலையசை)

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்-நெஞ்சே
ஒ மனமே-அநாதமான துக்க சாகரத்தில்-என்னைக் கொண்டு போய் தள்ளுவதாக
இடைவிடாமல் நின்று-யத்னம் பண்ணினது நீ அன்றோ

நான் இல்லை நீரே உம்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்-என்று நெஞ்சு பதில் சொல்வதாக கொண்டு-
போ என்று சொல்லி என்-
மேன்மேலும் நீ ஓன்று நான் ஓன்று
வாத பிரதிவாதங்கள் போலே சொல்லுவதனால் என்ன பயன் / போ-அது கிடக்கட்டும்

உபதேசம் தரினும்-எம்பெருமானுக்கு நம் பக்கல் வாத்சல்யம் உண்டு என்று உனக்கு நான் உபதேசித்தாலும்-
நீ என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்-நீ என் மேல் கோபம் கொண்டு-என்றைக்கும்
அந்த உபதேசத்தைக் குறிக் கொள்ளுகிறாய் இல்லை-
காழ்த்து-
– கோபித்தல் உறைத்து பேசுதல்-த்ருடமாக நான் உபதேசித்தாலும் –

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு -எம்பெருமான் திருவடிகளை-வாழ்த்துவதே நியாயம்-
கண்டாய் -முன்னிலை அசை –

இதைக் கேட்ட நெஞ்சானது ஆழ்வாரை நோக்கி “ஓய்! என்ன சொன்னீர்? நானா உம்மை ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றது,
ஸாஹஸமாக நீர் இப்படி சொல்லி விடுவது யுக்தமன்று, ‘திருமாற்கு யாமர் வணக்கமார்‘ என்று சொன்ன பாசுரத்தை
மறுபடியும் ஆலோசித்துப் பார்த்து வார்த்தை சொல்லும்“ என்று சொல்லிற்று.

அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே‘ எது நீ ப்ரமாதமாகக் கத்துகிறாய், “யத் மநஸா த்யாயதி, தத் வாசா வத்தி“ என்றும்.
மந, பூர்வோ வாகுத்தர.“ என்றும் ‘நெஞ்சு எதை நினைக்கிறதோ அதை வாய் சொல்லக்கடவது‘ என்று தானே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது,
அனுபவமும் அப்படி தானே யுள்ளது, ஆன பின்பு நீ யில்லாமல் என் வாய் தானே? “திருமாற்கு யாமார் வணக்கமார்“ என்று சொல்லிவிட்டதோ? என்றார்.

இதைக் கேட்ட நெஞ்சானது, “ஆழ்வீர்! நீர் சொன்ன பாசுரத்தை மறுபடியும் சொல்லிப்பாரும்;
“திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னென்சே” என்றன்றோ சொல்லி யிருக்கிறீர்;
நன்னெஞ்சே! என்று என்னை அழைத்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீரே யொழிய உமக்கு நான் யாதொன்றும் சொல்ல வில்லையே;
நீராகவே என்னையழைத்து அயோக்கிதாநூஸந்தாநம் பண்ணிவிட்டு, இப்போது “நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்” என்று
என் தலை மேல் பழி சுமத்துவது என்ன தருமம்!’ என்று சொல்லிற்று.

அது கேட்ட ஆழ்வார், ‘நன்னெஞ்சே! என்று உன்னை நோக்கி நான் சொன்னேனென்பது உண்மையே;
அதை நான் இல்லை செய்ய வரவில்லை; நான் ‘யாமார் வணக்கமார்’ என்ற தப்பாகச் சொன்னால் அதை நீ ஏன் தடுக்கக் கூடாது?’
அதற்கு நீ இசைந்தாயன்றோ; ஆகையாலே “நீயன்றோ ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்” என்று நான் சொல்லுகிறேன்’ என்றார்.

அது கேட்ட நெஞ்சானது, ‘ஆழ்வீர்! பூர்வோத்தர விருத்தமாக நீர் இப்படி வார்த்தை சொல்லுவது உசிதமல்ல;
முதலிலேயே நீர் என்னை யழைத்து “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
உம்மோடே கூடிக் காரியம் செய்யும்படி எனக்குக் கட்டளையிட்டீர்; ‘நான் சொன்னால் அதை நீ தடுப்பதற்கென்ன?’ என்று இப்போது சொல்லுகிறீர்;
நான் போகிற வழிக்கே நீ தலையாட்ட வேண்டியதென்று எனக்கு நீர் முன்னாடியே நியமித்து விட்டு
இப்போது அதற்கு விருத்தமாகச் சொல்லுவது யுக்தமன்று’ என்றது.

அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே! நான் எப்போதும் விருத்தமாக ஒன்றும் சொல்ல மாட்டேன்; “இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
நான் சொன்னது உண்மையே; என்ன காரியத்திற்கு உன்னை நான் உடன்படச் சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
“நயப்புடைய நாவீன் தொடை கிளவியுள்” பொதிவோம் நற்பூவைப் பூவீன்றவண்ணன் புகழ் என்று தானே நான் சொன்னது;
பகவத்குணாநுபவத்திற்கு உசாத் துணையா யிருக்கும் படி உனக்கு நியமித்தேனே யொழிய “திருமாற்குயாமார் வணக்கமார்” என்கிற
அயோக்யதாநுஸந்த்திற்கோ உன்னை நான் துணை கூட்டினது?’ என்றார்;

இதைக் கேட்ட நெஞ்சானது, அதற்கும் ஏதோ மறுமொழி கூறுவதாகத் தொடங்க, அவ்வளவிலே ஆழ்வார்
‘இந்த வாத ப்ரதிவாதங்களுக்கு முடிவு எங்கே? இந்த வீணாண கக்ஷி ப்ரகக்ஷி வார்த்தைகளால் என்ன பயன்?’ என்று
நினைத்து நெஞ்சை நோக்கி, ‘போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே! = போதும் போதும்; நான் ஒன்று சொல்ல நீ ஒன்று சொல்ல
இப்படி மேன் மேலும் வாத ப்ரதிவாதங்களை வளர்த்துக் கொண்டு போவதில் என்ன பலன்? இந்த வீண் பேச்சுகள் ஒழியட்டும் என்கிறார்.

அதற்குமேல் நெஞ்சானது ஆழ்வாரை அடி பணிந்து விநயமுடன் நின்று ‘ஸ்வாமிந்! அடியேன்மீது தேவரீர்க்குச் சீற்றம் வேண்டா;
அடியேன் தேவரீர்க்கு நிதேயனான சேஷ பூதன்; ஆன பின்பு அடியேன் தேவரீர்க்கு உகப்பாக எப்படி நடந்து கொள்ள வேணுமோ
அப்படி உததேசித்தருளீர்; அதன்படியே நடந்து கொள்கிறேன்’ என்ன;

அதற்கு ஆழ்வார். “உபதேசம் தரிநம் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய்= நெயஞபுசே! என் உபதேசத்தை நீ லக்ஷியம் பண்ணுகிறாயோ?
இதுவரை உனக்கு எத்தனையோ உத்தேசங்கள் செய்தாயிற்று. ஒன்றையும் நீ கைக் கொண்டாயில்லை; நீர் என்ன எனக்கு உபதேசிக்கிறது?’
என்று சீறி உதறித் தள்ளி விடுகிறாய்” என்று சொல்ல;

அதற்கு நெஞ்சானது ‘ஸ்வாமி! இதுவரை அடியேன் ஒருநாளும் இப்படி அபசாரப்பட்டதில்லை; பட்டிருந்தாலும் க்ஷமிக்கவேணும்;
இப்போது அடியேனுக்குக் கர்த்தவ்யத்தை ஸ்பஷ்டமாக உபதேசித்தருளீர்’ என்று வேண்ட,

அதற்கு உதபேசிக்கிறார் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு என்று.
நானும் ஒரு நாளும் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலப் பார்க்கலாகாது;
எம்பெருமான் நம்மையே தேடித் திரிவானாயிருக்க. நாம் விமுகராய்ப் பின் வாங்கலாமோ?
அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்கு ப்ராப்பதம் காண் என்றாயிற்று.

காழ்த்து – காழ்த்தலாவது கோபித்தல். உறைப்பாகச் சொல்லுதலுக்கும் பேருண்டு; அப்போது, காழ்த்து உபதேசம் தரினம் –
உனக்க நான் த்ருடமாக உபதேசிமத்தாலும் என்றவாறு. கைக்கொள்ளய் – முன்னிலை யெதிர்மறை வினைமுற்று.

————————————————————

(வழக்கொடு மாறுகொளன்று.) கீழ்ப்பாடடில் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று
திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்;
வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நங்கு கண்டு வாழ்த்த வேணுமே;
அப்படிக்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு;
அது கிடைக்காமல் என்ன வென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி
‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

பதவுரை

வழக்கொடு மாறுகொள் அன்று–(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;
(அஃது என்னவெனில்)
அடியார் வேண்ட–(மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும்–(மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ–ஸ்வாமீ!
இழப்பு உண்டே–(என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட–என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும்–என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால்–எனது கண்களுக்கு
உன்மேனி சாய்–உனது திருமேனியின் ஒளியை
காட்டு–காட்டியருள வேணும்

வழக்கொடு மாறுகொள் அன்று-
இப்போது அடியேன் விஞ்ஞாபிக்கிற விஷயம்-நியாயத்தோடு மாறு பட்டது அன்று–அஃது என் என்னில்-
அடியார் வேண்ட-
மேன் மக்களை நோக்கி கீழோர் ஓன்று பிரார்த்தித்தார்கள் ஆகில் –
சேஷ பூதர் சேஷியை அபேஷிக்க-நம் அடியார்கள் அன்றோ /இழக்கவும் காண்டு-மேன்மக்கள் கஷ்டப் பட்டாகிலும்
கார்யம் செய்வதை உலகில் காண்கிறோம் –
உமக்கு இழப்பு உண்டோ-நீர் மெய்யே அடியரோ -என்ன /
இறைவ
-ஸ்வாமி -/ 
இழப்புண்டே–
என் வேண்டுகோளை நிறை வேற்றுவதற்காக
நீ கஷ்டப் பட வேண்டியது ஏதேனும் உண்டோ-ஒன்றும் இல்லை –

எம்மாட் கொண்டாகிலும் –
எம்மை அடிமை கொண்டாகிலும்-என்னை அடிமை நீரே கொண்ட பின்
எத்தைக் கொண்டு என்ன / யான் வேண்ட-என்னுடைய வேண்டு கோளுக்காக –
ரஷ்ய அபேஷிதம் ப்ரதீஷதே-வாயாலே ஸ்வாமி இறை என்றேனே-உகந்து உம்முடைய அபேஷிதம் என்ன –
என் கண்கள் தம்மாற் -எனது கண்களுக்கு -கண்கள் தமக்கு /
காட்டுன் மேனிச்சாய்
-உனது திரு மேனி ஒளியைக் காட்டி அருள வேணும்-

வழக்கொடுமாறுகொளன்று- அடியேன் பிரார்த்திக்கிற விஷயம் வழக்கோடு மாறுகொண்டதன்று; வழக்காவது நியாயம்;
நியாயத்தோடு மாறுபட்டதன்று; நியாத்திற்கு ஒவ்வாததை அடியேன் விண்ணப்பம் செய்கின்றிலேன்;
நியாயமானதையே சொல்ல வருகின்றேனென்றபடி.

வார்த்தை சொல்லத் தொடங்கும்போதே இன்ன விஷயமென்று சொல்லாமலே
‘அநியாயமாக நான் ஒன்றும் சொல்லவரவில்லை’ என்று ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான், ஆழ்வீர்! நீர் சொல்வது நியாயமோ அநியாயமோ விஷயத்தைக் கேட்டன்றோ நான் தெரிந்து கொள்ள வேண்டும்;
சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லிக் காணீர்’ என்ன;

அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும் என்கிறார். அதாவது-
சேஷபூதரா யுள்ளவர்கள் சேஷியை நோக்கி ஏதாவது அபேக்ஷித்தார்களாகில் சேஷியானவன் தான் நஷ்டப்பட்டாகிலும்
சேஷ பூதர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக் காணா நின்றோம் உலகத்தில்- என்றபடி
(அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும்.)
‘நம்முடைய அடியார்களன்றோ நம்மை வேண்டுகிறார்கள்; இவர்களுக்கு நாம் உயிரை விட்டாகிலும் பரிந்து காரியம் செய்ய வேண்டாவோ’
என்று நெஞ்சு கனிந்து, பொருளையோ உடலையோ உயிரையோ எதையேனும் இழப்பதற்கும் இசைந்து
தங்கள் பேறாகக் காரியஞ் செய்யக் காண்கிறோமிறே என்கை.

இப்படி ஆழ்வார் சொன்னதைக் கேட்ட எம்பெருமான்,
‘ஆழ்வீர்! நன்றாகச் சொன்னீர்; உமக்காக என்னை உயிரிழக்கச் சொல்லுகிறீரோ இப்போது;
வார்த்தை அழகாயிருக்கிறது!’ என்றான்.

எம்பெருமான் இப்படி திருவுள்ளங் கன்றினாற்போல் அருளிச் செய்வதைக் கேட்ட ஆழ்வார் அநுதபித்து
இறைவ! இழப்புண்டே? என்கிறார்.
அதாவது- உலகில் நடக்கிறபடியை ஏதோ நான் எடுத்துக் காட்டினேனே யொழிய,
தேவரீருக்கு இழவு உண்டாக வேணுமென்று அடியேன் சொன்னேன் அல்லேன் ; தேவரீர் எதையும் இழக்க வேண்டா- என்கை.

இது கேட்ட எம்பெருமான், “ஆழ்வீர்! உலகத்தில் தலைவராயுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழந்தாகிலும்
காரியம் செய்கிறார்களென்று எடுத்துக் காட்டின் உம்முடைய கருத்து எனக்குத் தெரியாமை யில்லை; நீர் மறைப்பதில் என்ன பயன்?
உம்முடைய எண்ணப்படி நான் எதை வேணுமானாலும் இழந்து காரியம் செய்யத் தடையில்லை;
“அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லி யிருக்கிறீர்; நீர் மெய்யே அடியாராகிலன்றோ நான் காரியம் செய்வேன்;
நீர் அடியவர் தானோ?’ என்று கேட்டான்.

அதற்கு ஆழ்வார் எம் ஆட்கொண்டாகிலும் என்கிறார்.
நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால்
நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை.

எதைக் கொண்டு உம்மை நான் அடியவராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க;
அதற்கு ஆழ்வார் யான் வேண்ட என்கிறார்.

ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷ்யனுடைய அபேக்ஷயை மாத்திரமன்றோ ரக்ஷகனான நீ எதிர்பார்த்திருப்பது;
நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையே கொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே;
என்னுடைய அடிமைக்கு இசைந்தது தானே உன்னை இறைவனென்றேன்- என்றார்.

அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவுள்ளமுவந்து
‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? சொல்லும்’ என்ன;

என் கண்கள் தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார்.
உனது திருமேனியின் சாயலை என் கண்களுக்குக் காட்ட வேணுமென்னுமிவ்வளவே நான் வேண்டுவது என்றாராயிற்று.

கண்கள் தம்மால்- உருபு மயக்கம்; கண்கள் தமக்கு என்க.
அன்றி, மூன்றாம் வேற்றுமைப் பொருளைக் கொண்டு,
உன் மேனிச்சாயை என் கண்களால் நான் காணும்படி செய் என்றுரைக்கவுமாம்.
சாய் = (சாயா) என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.

இப் பாட்டுக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்கியானத்தில் சிறிது வேறுவகையான பொருள் கொள்ளப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
அப்பொருளை வல்லார் வாய்க் கேட்டுணர்க.

—————————————————————–

(சாயற்கரியானை.) கீழ்ப் பாட்டில் “காட்டு உன் மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்;
அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்;
அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம் பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து
‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடி யன்றோ;
பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்;
அந்தப் பூதனையொடு உனக்கும் உறவுறை உண்டு போலும்’ என்கிறார்.
ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே–

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
பேயார்–பூதனையானவள்,
சாயல் கரியானை–நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய்–உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
(அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து)
பேயார் ஆய்–அறிவுகெட்டவளாய்
முலை கொடுத்தார்–(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
நீ ஆர்–அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்?
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)
தேம்பு ஊண் சுவைத்து–ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும்–(அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
போய்–நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி–அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே
பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.

சாயல் கரியானை-நிறத்தால் கரியனான கண்ணபிரானை / 
உள்ளறியாராய்
-உள்ளே புகுந்து அனுபவிக்க அறியாதவளாய்-
இவன் சாஷாத் பரம புருஷன் நாம் யார் இவனை அழிக்க முயல்வது -உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய் என்றுமாம்

நெஞ்சே –ஒ மனமே -/ பேயார் –மீண்டும் பேயராய்-என்றது ஞான ஹீனராய் –
அறிவு கெட்டவளாய் -பெருமை தோன்ற பேயார்
உவப்பிலும் உயர்விலும் சிறப்பினும் செறலிலும் இழிப்பிலும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல் சூத்ரம்
கோபத்தினால் இந்த இழிவு செயலை விளக்க ஆழ்வார் உயர் திணையில் அருளிச் செய்கிறார்/
முலை கொடுத்தார் –
விஷம் தடவின முலையை-உண்ணக் கொடுத்தாள்

பேயராய்--நீ யார் -அவளுக்கு உறவு முறையில் நீ என்ன ஆகவேண்டும்-
அவளுக்கு முன் பிறந்தாயோ-பின் பிறந்தாயோ –
இப்படி கேட்பது -/ தேம பூண் சுவைத்த-தேம்பு ஊண் சுவைத்து-ஆத்மா கெட்டுப் போம்படியான-
சப்தாதி விஷய போகங்களை நீ அனுபவித்து –ஊன் அறிந்து அறிந்தும் –அதனால் ஊனம் அடைந்து இருக்கிறாய்
என்பதை நன்றாக நீ அறிந்து இருந்தும் –
போய்த்-
தன்னுடைய தாழ்வுக்கு மிகவும் தகாததான சிறந்த-பகவத் விஷயத்தை அனுபவிப்பதே போந்து / தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி –அனர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே-பகவத் அனுபவம் பண்ணி-முடியப் பார்க்கிறாயே

அயோக்யர் நாம் அவனை அனுபவிக்கப் பார்ப்பது அவனுக்கு அவத்யம்
நமக்கும் ஸ்வரூப நாசம் -உணரானால்-அதனால் பூதனைக்கு உறவாக இருக்க வேண்டும் என்கிறார்-
பூதனை கார்யத்தால் அவனுக்கு ஒன்றும் ஆகாதது போலே
இதுவும் அதி சங்கை

பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே-பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை -இறே-
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய சூரிகளோடு ஒக்கும் இறே

பாம்பின் வாய் என்னாமல் பாம்பர் வாய் -என்றது திணை வழுவமைதி
ஆர் -விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்
பார்த்தி முன்னிலை ஒருமை வினைமுற்று
இரா ஈற்றான இந்த வெண்பா முடிவு சந்தஸ பிரயோகம் போலே போற்றத் தக்கது-

பேயார் சாயால் கரியானை உள்ளறியாராய் பேயராய் முலை கொடுத்தார் = பேய்ச்சி முலை கொடுத்த வரலாறு ஐந்தாம் பாட்டினுரையிற் காணத்தக்கது.
“பேய் முலை கொடுத்தது” என்றாவது, “பேய்ச்சி முலை கொடுத்தாள்” என்றாவது சொல்ல வேண்டிருக்க,
பேயார் என்றும் கொடுத்தார் என்றும் பெருமை தோற்றக் கூறியது என்? எனில்;
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்புனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்பது நன்னூற் சூத்திரம்.
ஆழ்வார்க்கு அப் பேய்ச்சியினிடத்துள்ள கோபத்தினாலும் அவளுடைய இழிவை விளக்க வேண்டியும் பேயார் என்றாரென்க;
பெருமைப்படுத்திக் கூறினாரல்லர்.

சாயால் கரியானை என்றது- கரிய சாயலை யுடையனான கண்ணபிரானை என்றபடி. சாய் -(சாயா) என்ற வடசொற் சிதைவு;
நிறம் எனப்பொருள்படுமிங்கு.

உள் அறியாராய் = இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்;
நிறமழகிய பெருமானை நாம் கிட்டி நல்ல எண்ணத்துடன் பக்தியைச் செலுத்தி உள்ளூற அநுபவிக்கலாமென்று ஆசைப்படாதவளாய் என்னுதல்;
(அன்றி.)
உள் அறியாராய் = உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய்; ‘இவன் ஸாக்ஷாத் பரமபுருஷன்;
இவனைத் தொலைக்க நம்மாலாகாது; நாம் தொலைந்திடுவோமேயன்றி இவனைத் தொலைக்க நாமோர்?’ என்று
உண்மையுணராதவளாய் என்னுதல்.

பேயராய் முலை கொடுத்தார் = விவேகமற்றவளாய் முலைகொடுக்கிற வியாஜத்தாலே அப் பெருமானை அழிக்கப்பார்த்தாள் என்கை.
“உள்ளறியாராய்” என்றவளவே போதுமாயிருக்க, மீண்டும் “பேயராய்” என்றது அவளுடைய ஞான ஹீனத் தன்மையை நன்கு விளக்குதற்காகவாம்.

இங்ஙனே பூதனை செய்த செயலைச் சொன்னவுடனே “நீ யார்?” என் கையாலே ‘அந்தப் பூதனைக்கு நீ என்ன ஆக வேண்டும்?
அவளுக்கு நீ முன்னே பிறந்தாயோ? பின்னே பிறந்தாயோ?’ என்று கேட்பதாகப் பொருள்படுகின்றது.

நெஞ்சை நோக்கி நீ யார்? என்று கேட்ட ஆழ்வாரைப் பார்த்து அந்த நெஞ்சானது,
‘ஆழ்வீர்! படுபாவியான பூதனை செய்தாற்போலே நான் என்ன கொடுந் தொழில் செய்து விட்டேன்?
எனக்கு அவளை ஒப்புக் கூற வேண்டிய காரணம் யாது? சொல்லீர்” என்று கேட்க; அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

‘தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய் கைநீட்டல் பார்த்தி’ என்று.
ஊண் என்று இவ்விடத்தில், விஷயாந்தரங்களைச் சொல்லுகிறது. உண்ணப்படுவது ஊண்;
சப்தாதி விஷயங்கள் செவி வாய் கண் முதலிய இந்திரியங்களினால் உண்ணப்படுதல் (அநுபவிக்கப்படுதல்) பற்றி அவை ஊணெனப்படும்.

தேம்புதலாவது நாசமடைதல். தேம்பூண் என்றது- ஆத்மா நசிக்கும்படியான விஷயாந்தரங்கள் என்றபடியாயிற்று.
பகவத் விஷயத்தை அநுபவித்தாலே ஆத்மா ஸத்தை பெறுவதற்கு ஹேது வென்றும்,
மற்ற விஷயங்களை அநுபவித்தல் ஆத்மா நாசமடைவதற்கு ஹேதுவென்றும் உணர்க.
இப்படிப்பட்ட விஷயங்களைச் சுவைக்கையானவது இனிதாக அநுபவித்தல். அப்படி அநுபவிப்பதனாலே உண்டாவது ஊன்;
ஊநம் என்ற வடசொல் ஊனென்று கிடக்கிறது; குறைவு என்று பொருள்;

நெடு நாளாக விஷயாந்தரங்களை அநுபவித்து வருவதனாலே நீ மிகவும் குறைவு அடைந்துவிட்டாய்; (அதாவது) அயோக்யனாய் விட்டாய்;
இந்த அயோக்யதை உனக்குத் தெரியாமையில்லை; நன்கு தெரிந்திருந்தும், உன்னுடைய நிலைமைக்குத் தகாததொரு தப்புக் காரியத்தை
நீ செய்ய நினைப்பது இன்னமும் கெடுதியை விளைத்துக் கொள்ளப் பாம்பின் வாயிலே கை நீட்ட முயல்வது போலிரா நின்றது.
அயோக்யரான நமக்கு எம்பெருமானை யநுபவிக்க ஆசை பிறப்பது தப்பு; அது அப்பெருமானுக்கு அவத்யம்;
நமக்கும் ஸ்வரூப நாசம்- என்று தெளிந்து ஒதுங்கி யிருக்கவேண்டி யிருந்தும் நீ பகவதநுபவத்திற்கு நாக்கை நீட்டிச் செல்லுகிறாயே!
இதை விட வேறு தீவினை யுண்டோ? பாம்புபோலே அநார்த்தத்தை விளைக்க வல்ல தீவினையன்றோ இது.
இந்தப் பாம்பின் வாயிலே கை வைக்கவன்றோ நீ பார்ப்பது. ஆகையாலே பூதனைக்கு நீ உறவாகவே யிருக்க வேண்டுமன்றோ.
பூதனையானவள் தனக்குக் கேடு வரும்படியான காரியத்தை எப்படிச் செய்தாளோ,
அப்படி. நீயும் உனக்குக் கெடுதி விளைவிக்கும்படியான காரியத்தைச் செய்யப் பார்க்கிறாயாகையாலே பூதனையோடு ஒப்பாயன்றோ நீ…

பூதனையின் காரியத்தால் எம்பெருமானுக்கு யாதொரு கேடும் விளையாதது போல,
ஆழ்வாருடைய பகவதநுபவவிருப்பத்தாலும் பகவானுக்கு யாதொரு கெடுதியும் விளையமாட்டாது;
இவருடைய அதிசங்கை மாத்திரமேயுள்ளது- என்பதும் இதில் குறிப்பிடப்படுகிறது.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி:- “பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாளன்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத்தனையாயிறே;
உன்னைப் பார்த்தால் பூதனை நித்யஸூரிகளோடொக்குமிறே.”

“பாம்பின்வாய்” என்னாமல் பாம்பார் வாய் என்றது திணைவழுவமைதி; இங்கு ஆர் விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்.
பார்த்தி = முன்னிலை யொருமை வினைமுற்று.

——————————————————————-

(பார்த்தோரெதிரிதா.) கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண் வளர்வார் சீர்–15-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஓதம்–கடலானது
ஆர்த்து–கோஷித்துக்கொண்டு
தம்மேனி தாள்–தம்முடைய திருமேனியையும் திருவடியையும்
தடவ–(அலையாகிற கையினாலே) தடவும்படியாக
தாம் கிடந்து–(அக்கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர் வார்–தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர்–திருக்குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத–கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை–அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர்–(இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள்.

ஓதம் ஆர்த்து -தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து-தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை-நெஞ்சே –
எதிர் எதிரா பார்த்து ஓர்-படு துயரம் பேர்த்து ஓதப்

பீடு அழிவாம் பேச்சில்லை –என்று அந்வயம்

கங்கையில் நீராடினால்-நாயின் பாபங்கள் தீரும் ஒழிய-கங்கையின் பெருமையில் ஒன்றுமே குறையாதே-அது போலே
உறங்குவான் போலே யோகு செய்த பெருமானை -நம்முடைய ரஷணத்துக்கு சிந்தனை பண்ணிக் கொண்டு இருப்பவனை-
அவனுடைய கல்யாண குணங்களை பேசி பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டாவோ-
எதிர் எதிரா பார்த்து -ஓர்-இவ்விஷயத்தை கண் எதிரே நிற்பதாகக் கொண்டு தெரிந்து கொள் –

நெஞ்சே-ஒ மனமே -/ படு துயரம் பேர்த்து ஓதப்-கொடிய துக்கங்கள் தீரும்படி
நாம் பேசுவதனால் -சம்சார துக்கங்களை பேர்த்து உதறி அவனுடைய கல்யாண குணங்களை ஆனந்தமாக பேச-
தீருவதற்காக -என்றுமாம் –பேர்த்து- எச்சம் திரிபாக கொண்டு

பீடு அழிவாம் பேச்சில்லை —அவனுடைய பெருமைக்கு-அழிவு உண்டாய் விடும் எனபது இல்லை -/ 
ஆர்த்தோதம் தம்மேனி தாள் தடவத் -ஆர்த்து ஓதம் தம்மேனி தாள் தடவ-

பெரிய கோஷத்துடன்-தம்முடைய திரு மேனியையும்-திருவடிகளையும்-அலையாகிற கைகளால் தடவும் படியாக / 
தாம் கிடந்து-
தாம் பள்ளி கொண்டு அருளி –

தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார்-தம்முடைய செந்நிறமான திருக் கண்கள்
வளரப் பெருகின்றவரான-பெருமாளுடைய -/ சீர் –திருக் கல்யாண குணங்களை –

இப்படி எதிர் எதிராக பாசுரங்கள்-நம்முடைய தாழ்ச்சியைப் பார்க்கும் இடத்து அயோக்யானுசந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்
அவனுடைய விலஷணமான போக்யமான குணங்களை பார்க்கும் இடத்து
நம் வாயாலும் பேசி ஆனந்திப்போம் என்பதும்-மாறி மாறி வரும்-
ஒன்றோடு ஓன்று விருத்தம் இல்லை –

ஓதம் ஆர்த்து தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை நெஞ்சே! எதிரிதாப் பார்த்து ஓர்;
படு துயரம் பேர்த்து ஒதப்பீடு அழிவாம் பேச்சு இல்லை என்றும் அந்வயம்.

கடலானது ஆரவாரஞ் செய்துகொண்டு (தனது அலைகளாகிற கைகளாலே) திருவடிகளைத் தடவப்பெற்று இனிதாகத்
திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெருமானுடைய திருக் கல்யானகுணங்களை நெஞ்சே!
நம் கண்முன்னே நிற்பவனாகக் கொண்டு அநுஸந்தானம் செய்;

கங்கையில் நாய் நீராடினால் நாயின் பாவங்கள் தொலையுமே யன்றி, கங்கைக்கு உள்ள பெருமை குறைந்து விடாது;
அதுபோல, எம்பெருமானுடைய குணங்களை நாம் பேச, நமது பாவங்கள் தொலையுமே யன்றி, அவனுடைய பெருமைக்குக் குறைவு
நேரிடுமென்கிற பேச்சுக்கே இடமில்லை காண்;
திருப்பாற்கடலிலே சயனித்துக்கொண்டு . “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” (திருவாய்மொழி 5-4. 11) என்கிறபடியே
நம்முயை ரக்ஷணத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பெருமானுடைய குணங்களை நாம் பேசி
நமது பாவங்களைப் பாற்றிக் கொள்ள வேண்டாவோ? அவனுடைய குணங்கள் நம்மால் மறக்க முடியுமோ?
கண்ணெதிரே நிற்பன போல் தோன்றுகின்றனவன்றோ என்றாராயிற்று.

எதிரிதா = எதிரில் உள்ளது எதிரிது. ஆ – ஆக என்பதன் குறை; எதிரிதாக என்றபடி.
படு துயரம் பேர்த்து ஓத = ஸம்ஸாரத்திலே நாம் படுகிற துக்கங்களை யெல்லாம் உதறிவிட்டு ஆநந்தமாக அக் குணங்களையே
பேசுகிற பக்ஷத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்;
‘நமது துக்கங்கள் தீருவதற்காக’ என்று பொருள் கொள்ளில், போர்த்து என்பதை எச்சத் திரிபாகக் கொள்ள வேண்டும்; போ என்றபடி.

பீடு அழி வுஆம் பேச்சு இல்லை = பீடு என்ற பெருமைக்குப் பெயர்; உயர்ந்தோருடைய குணங்களைத் தாழ்ந்தோர் பேசினால்
உயர்ந்தோருடைய உயர்த்திற்கு அழிவு உண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டிய பிரஸக்தியில்லை யென்றபடி.

செம்மேனிக்கண் = மேனி என்று இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. செந்தாமரையின் நிறம் போன்ற நிறத்தையுடைய திருக்கண் என்றவாறு.
நித்திரை செய்வதைக் கண்வளர்தலென்பர். சீர் என்னுஞ் சொல் பால்பகா அஃறிணைப் பெயராதலால் குணங்கள் என்று பன்மைப் பொருள்படும்;
இரண்டாம் வேற்றுமைத் தொகை யாதலால் குணங்களை என்க.

கீழ்ப்பாட்டில் ‘பகவதநுபவத்திற்கு நாம் அயோக்யர்’ என்று கருதி நெஞ்சைச் சீறி உரைத்தவர்
இப்பாட்டில் “சீர் ஓதப்பீடழிவாம் பேச்சில்லை” என்று உரைத்தல் கூடுமோ? என்று சங்கிக்க வேண்டா;
தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்,
அவனுடைய விலக்ஷணமாய் போக்யமான திருக் குணங்களை நோக்குமிடத்து
‘நம் வாயாலும் இக் குணங்களைச் சிறிது பேசி ஆநந்திப்போம்’ என்று ஒருப்படுவதும்
ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமென்றும் இவை ஒன்றோடொன்று விருத்தமல்ல என்றும் கீழே பன்னி யுரைத்தோம்.

————————————————————————

(சீராற் பிறந்து.) “சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப் பாட்டில்;
அப்படியே அவனுடைய திருக் குணங்களை ஓதத் தொடங்குகிறார்;
ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் இது.

சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார்
ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ –

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

பதவுரை

பேராளா–‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால்–திருநாமம் வமானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி-உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது.
நீர் ஏற்பு அரிதே–தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’
யாம் அறிய–இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு–நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.

சீரால் பிறந்து சிறப்பால் வளராது–
சிறப்புடனே பிறப்பதையும்-சிறப்புடனே வளர்வதையும் செய்யாமல்
சீரும் சிறப்பும் ஒரே பொருள்-
சீரால் சிறப்பால் பிறந்து வளராது
என்றும் அந்வயம் கொண்டு-மிக்க சீருடன் பிறந்து வளர்ந்து
வளராது -இதில் உள்ள எதிர்மறை பிறந்து என்பதிலும் கொண்டு பிறவாது
சீரால் சிறப்பால் பிறவாமலும் வளராமலும்-வாமனன் ஆக ஆனாயே அப்படி ஆகாமல் போனால் -என்றபடி

பேர் வாமன் ஆக்காக்கால்-
திரு நாமமும் வாமனன் என்று-வைத்து கொள்ளாமல் இருந்தக்கால்
பேர் பெரிய -என்றுமாம்-
பெரிய வாமனன் -இதற்க்கு மேற்பட்ட குள்ளன் இல்லை

பேராளா –
1-மஹாநுபாவனான பெருமானே -பெருமை பொருந்தியவனே–
2–பல திரு நாமங்களை உடையவனே -என்றுமாம்

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி-
உன்னாலே மார்பால் அணையப்பட்டும்-வயிற்றிலே வைக்கப்பட்டும்
பின்பு வெளிப்படுத்தப் பட்டும்-இப்படி ஸ்வ அபிமானமாய்  இருந்த
இந்த பூமியானது –

ஸ்ரீ பூமிப் பிராட்டி திவ்ய மகிஷி என்பதால் மார்பாரப் புல்கி
மஹா வராஹத்தில் அண்ட பித்தியில் ஒட்டி கிடந்த பூமியை
கோட்டால் குத்தி எடுத்த பொழுது மார்பார புல்கி என்றுமாம்

நீர் ஏற்பு அரிதே-சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –

கூரத் ஆழ்வான் இந்த பாசுரக் கருத்தை ஸ்ரீ ஸூந்தர பாஹூ  ஸ்த்வத்தில்
ஷிதிரியம் ஜனி சம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரணோத்தரனை ரபி
வநகிரீச தவைவ சதீ கதம் வரத வாமன பிஷண மர்ஹதி -என்று
இந்த பூமியை படைப்பவனும் நீ–துடைப்பவனும் நீ-காப்பவனும் நீ
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனும் நீ
பிறகு வெளி நாடு காண புறப்பட விட்டவனும் நீ
ஆகையால் உனக்கே உடைமையாய் இரா நின்ற பூமியை
நீ பெற வேண்டி பிச்சை பெற்றது எங்கனே

உனக்கு திரு நாமங்கள் பலவாக இருக்க-
இந்த பெரிய வாமனன் மிகப் பெரிய குள்ளன் திரு நாமம் வைத்துக் கொள்ள வேணுமோ
-என்றபடி-

எல்லா விதங்களாலும் உனக்கே அஸாதாரணமாக உரிமைப்பட்டதான இப் பூமியை நீ மாவலியிடமிருந்து பெற வேண்டில்,
அதற்காக யாசகனாக வர வேண்டுமோ? எல்லோரும் கண்டு ஏசும்படியான குள்ள வடிவமெடுத்துக் கொள்ள வேண்டுமோ?
குள்ளனென்றே திருநாமமும் தரிக்க வேண்டுமோ? ஸ்ரீராமனாகப் பிறந்து வளர்ந்த காலத்தும் ஸ்ரீகிருஷ்ணனாகப் பிறந்து வளர்ந்த
காலத்தும் எவ்வளவோ சீராகப் பிறந்து எவ்வளவோ சிறப்பாக வளர்ந்தவனன்றோ நீ;
அப்படியே பிறந்து வளராமலும், ஸ்ரீராமன் ஸ்ரீக்ருஷ்ணன் என்றாற்போலே சிறந்த திருநாமங்களை இட்டுக் கொள்ளாமலும்,
சீரும் சிறப்புமின்றிப் பிறந்து வளர்ந்து பரிஹாஸத்துக்கு ஆஸ்பதமான வாமநனென்ற நாமத்தையும் வஹித்து நின்றது. ஏதுக்கு?
இப்படியானால் நான் பூமியை ஸம்பாதித்துக் கொள்ள முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாதென்றும் திருவுள்ளமோ? என்கிறார்.

இந்தப் பூமி உனக்கே உரிமைப்பட்டதென்பதை மார்பாரப் புல்கி நீ உண்டுமிழ்ந்த என்ற விசேஷணத்தால் விளங்குகின்றார்.
மார்பரப் புல்கி என்றது- பூமிப்பிராட்டி திவ்ய மஹிஷியாயிருப்பது பற்றி யென்க.
பண்டு அண்டபித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை,
வராஹாவதாரம் பண்ணிக் கோட்டாற்குத்தி ஒட்டு விடுவித்தெடுத்தபோது மார்பாரப் புல்கி யெடுத்தானென்னவுமாம்.

இப்பாசுரத்தின் தாம்பரியத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ஸுந்தரபஹுஸ்தவத்தில் அருளிச் செய்துள்ள ச்லோகம்
(க்ஷிதிரியம் ஜநிஸம்ஹருதி பாலகை: நிகிரணோத்கிரணோத்தரனை ரபி- வநகிரீச! தவைவ ஸதீ கதம் வரத வாமந! பிக்ஷணமர் ஹதி?) என்பதாம்;
இப்பூமியைப் படைப்பவனும் நீ; துடைப்பவனும் நீ; காப்பவனும் நீ; பிரளயத்தில் திருவயிற்றில் வைத்து நோக்குபவனும் நீ;
பிறகு வெளிநாடு காணப் புறப்பட விடுமவனும் நீ; ஆகையாலே உனக்கே உடைமையா யிராநின்ற இந்தப் பூமியை
நீ பெற வேண்டிப் பிச்சை யெடுத்தது எங்ஙனே? என்று திருமாலிருஞ்சோலையழகரை நோக்கி விண்ணப்பஞ் செய்த ச்லோகம் இது.

அதிமாநுஷஸ்தவத்திலும் இங்ஙனே ஒரு ச்லோக முண்டு; அதாவது-
த்வந்நிர்மிதா ஜடாகாச தவ த்ரிலோகீ கிம் பிக்ஷணாதியம்ருமே பவதா துராபா?
மத்யே ததாது நவிசக்ரமிஷேஜகச் சேத் த்வத்விக்ரமை: கதமிவ ச்ருதி ரஞ்சி தாஸ்யாத்” என்பதாம்.

கீழ் எடுத்துக் காட்டிய ஸுந்தரபாஹு ஸ்தவச்லோகத்தின் பொருளை இந்த ச்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அடக்கி,
உத்தரார்த்தத்தால் அதற்கு ஸமாதாநமருளிச் செய்கிறார்.

குள்ளவடிவைக் கொண்டு முதலில் யாசித்துப் பிறகு பெரிய வடிவெடுத்து த்ரிவிக்ரமனாக நீ வளர்ந்திராவிடில்
உன்னடைய விக்ரமங்களாலே வேதம் எப்படி அலங்கரிக்கப்படும்;

த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய” என்றும்
“த்ரிர் தேவ; ப்ருதி வீமேஷ ஏதாம்” என்றும்
உலகளந்த சரிகையைப் பேசி வேதம் புனிதமாவதற்காகவே நீ வாமநாவதாரம் செய்வதே யன்றி,
வேறு வழியால் பூமியை மாவலியிடத்தில் நின்றும் மீட்டுக்கொள்ள முடியாமல் செய்தாயல்லை;
பெரும்பாலும் பகவத் பக்தர்களுக்கு உபயோகமில்லாத விஷயங்களையே
(யஜ்ஞயாகம் முதலிய காம்ய கருமங்களையே) விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டு போகிற வேதத்தில் இந்த பவித்திரமான
சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும் என்கை.

வேதத்தில் த்ரிவிக்ரமாவதாரத்தைப் பற்றிச் சொல்லிற்றேயொழிய வாமாவதாரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே;
வாமநனாகப் பிறந்து பிச்சை யெடுப்பானேன் என்ற கேள்விக்கு இது எங்ஙனே ஸமாதாநமாகுமென்னில்; .
“நீளவான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளாலளவிட்ட” ( பெரிய திருமொழி 11-7-2) என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலில்
“நீள்வான் குறளுருவாய்” என்று- த்ரிவிக்ரமனாக நீள்வதற்காகவே குறளுருவெடுத்ததாகச் சொல்லுகையாலே
வாமாநாவதாரம் திர்விக்ரமாவாதாரத்திற்கு சேஷ பூதமாயிற்றாதலால் இது ஸமாதானமாகக் குறையில்லையென்க.

“பேர்வாமனா காக்கால்… பூமிநீரேற்பரிதே?” என்று இங்கு எம்பெருமானை நோக்கி ஆழ்வார்கேட்ட கேள்விக்கே
கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில் மேல் விவரித்த வண்ணம் ஸமாதநமருளிச் செய்தாரென்றுணர்க.

சீரால் பிறந்து சிறப்பால் வளராது = சீர் என்றாலும் சிறப்பு என்றாலும் பொருள் ஒன்றே.
“சீரால் சிறப்பால் பிறந்து வளராது” என்று அந்வயித்து, மிக்க சிறப்புடனே பிறந்து வளராமல் எனப்பொருள் கொள்க.
வளராது என்றவிடத்துள்ள எதிர்மறை, பிறந்து என்றவிடத்தும் கருதத் தக்கது; பிறவாமலும் வளராமலும் என்றவாறு.
“பிறவாமலும் வளராமலும் பேர் வாமனாகக்கால்” என்றால் கருத்து ஒட்டிவர வில்லையே என்று சிலர் மயங்குவர்;
‘சிறப்பால் பிறவாமலும் வளராமலும் வாமநனாக ஆனாயே, அப்படி ஆகாமற்போல்’ என்று விரித்துக் கொள்ள வேண்டுகையாலே
பொருந்தாமை யொன்றுமில்லையென்க.

பேர்வாமனாகாக்கால் = ‘வாமநன்’ எனச் சிதைந்தது. வாமநனென்று பேரிட்டுக் கொண்டு குள்ளனாகாவிடில் என்றபடி.
பேர் என்பதற்குத் திருநாமமென்று பொருள் கொள்ளாமல் ‘பெரிய’ என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
பெரிய வாமனனென்றது- இவனுக்கு மேற்பட்ட குள்ளனில்லை யென்னும்படியான ஒப்பற்ற குள்ளன் என்றபடி.

பேராளா!= பெருமை பொருந்தியவனே! என்றும்,
பல திருநாமங்களையுடையவனே! என்றும் பொருள்படும்.
வாமனனென்று பேரிட்டுக்கொண்டது உன் பெருமைக்குத் தகுமோ? என்றும்,
பேரிட்டுக்கொள்ளப் பல திருநாமங்களிருக்கவும் இந்தத் திருநாமந்தானா உனக்கு அகப்பட்டது? என்றும் கேட்கிறார் போலும்.

————————————————————–

தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகி விட்டால்
லீலா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்–17-

பதவுரை

எங்கும் சூழ்ந்து–நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு
அரக்கன்–இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய–ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரைவில் ஏந்தினார் தாம்–காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து–(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டினக்கால்–‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும்–ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர்–திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும்–எக்காலத்திலும்
தம் வாய் திறவார்–(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக் கொள்ளமாட்டார்.

எங்கும் சூழ்ந்து-அரக்கன் வாள் வரைகள் போல வன் தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்-சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்
அடியார் -த்வம் மே அஹம் மே -வணங்கா முடி தனத்தால் அநாதரவு காட்டி
தோன்றாது விட்டாலும்-வாழ்ந்திடுவர்-பின்னும் தாம் வாய் திறவாதார் -என்று அந்வயம்

சூழ்ந்து –
இந்த லீலா விபூதியிலே வந்து-வளைத்துக் கொண்டு –

அடியார் வேண்டினக்கால்-
ஒ ஜனங்களே-நீங்கள் அடிமைப்பட வேண்டும் என்று விரும்பினால்

தோன்றாது விட்டாலும் –
ஒரு அடியவனாவது அகப்படாமல்-உபேஷிக்கப் பெற்றாலும் –

வாழ்ந்திடுவர்-
திரு உள்ளத்திலே வெறுப்பு இல்லாமல்-உகப்புடன் இருப்பார் –

பின்னும்-
எக் காலத்திலும்

தாம் வாய் திறவாதார் –
பிராட்டிமார் இடத்திலும்-இந்த மனக் குறையை-வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார் –

சூழ்ந்து எங்கும் –
நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு –

அரக்கன்-
ராவணனுடைய

வாள் வரைகள் போல் வன் தலைகள் தாமிடிய-
ஒளி பொருந்திய-மலைகள் போலே வலிதான-தலைகளானவை இற்று விழும்படி

தாள் வரை வில்லேந்தினார் தாம்
காலுரைத்தை உடைத்தாய்-மலை போன்றதான-வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்-

ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே
தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே-சர்வஜஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இறே
என்று அருளிச் செய்தது இப் பாசுரத்தைக் கொண்டேயாம்

மா முனிகள் வியாக்யானம்
எதிர் சூழல் புக்கு என்றபடியே-தன்னுடைய சீல சௌலப் யாதிகளைக் காட்டி
சம்சாரி சேதனர்களை தப்பாமல் அகப்படுத்திக் கொள்வதாக-வந்து அவதரித்து
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்
நாம் இதற்க்கு உறுப்பாக பெற்றோமே இறே என்று-அது தானே போக்யமாக விரும்புவர்
அதற்கு மேல்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார்
என்கிற-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே
சேதனர் செய்த குற்றங்களை தன திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப் பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இறே

அன்றிக்கே
அடியார் சூழ்ந்து வேண்டினக்கால்-
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாமிடியத்-

தாள்வரை வில்லேந்தினார் தாம்-தோன்றாது-விடிலும்-அடியார் தாம் வாழ்ந்திடுவர்-
என்று அந்வயித்து
அவன் திரு உள்ளமான படி ஆகக் கடவது என்று மகிழ்ந்து இருக்கக் கடவர்கள் அடியார்கள் என்றபடி-

ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும்
எங்களுக்கு சேவை சாதியாமல் இருப்பது என்று ஆஷேபிக்கவும்
வாய் திறக்கக் கடவர் அல்லர்

அபேஷிப்பது மாத்ரமே அடியவர்களின் கடைமையே அன்றி
அவனை எதிர்த்து வாய் திறக்க அதிகாரம் இல்லை -என்றபடி

முந்தின யோஜனையில் எம்பெருமான் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று
இதில் சேதனர் உடைய ஸ்வரூபம் சொல்லுகிறது-

(சூழ்ந்தடியார்.) ஆச்ரிதர்களிடத்தில் *எம்பெருமானுக்குள்ள வாத்ஸல்யத்தைப் பேசுகிறார்.
“எங்கும் சூழ்ந்து அரக்கன் வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில்லேந்தினார் தாம் சூழ்ந்து
அடியார் வேண்டினக்கால் (அடியார்) தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர்; பின்னும் வாய் திறவார்” என்று அந்வயம்.

இராவணனது தலைகளை அறுத்துத் தள்ள வலிய வில்லைக் கையிலேந்தி நின்ற இராமபிரானாகிய திருமால் இந்த லீலா விபூதியில்
வந்து சேர்ந்து இங்குள்ள ஸம்ஸாரிகளைச் சூழ்ந்து கொண்டு ‘எனக்கு நீங்கள் அடியாராக வேண்டும்’ என்று அபேக்ஷித்தவளவில்,
“த்வம் மே” என்றால் “அஹம் மே” என்கிற ஸம்ஸாரிகள் வணங்கா முடித் தனத்தினால் அநாதரவு காட்டி அடியவர்களாக ஆகா விட்டாலும்,
அதனால் திருவுள்ளத்தில் சிறிதும் வருத்தங் கொள்ளாமல் “நாம் அபேக்ஷித்தபடியே இந்த ஸம்ஸாரிகளெல்லாரும் அடியவர்களாக
ஆய்விட்ட பக்ஷத்தில் இந்த லீலாவிபூதி ஆளற்று அழிந்துபோய் விடுமன்றோ;
இஃது அழியாதபடி நோக்குவதற்கு இவர்கள் அமைந்தார்கள் என்று தேறி மகிழ்ந்தே செல்வர்;

ஏகாந்தமான ஸங்கதிகளை யெல்லாம் கூசாமல் சொல்லுகைக்குரிய பிரட்டிமாரிடத்திலும் இவ்விஷயத்தைச் சொல்லிக் கொள்ள வாய் திறக்கமாட்டார்;
‘ஸம்ஸாரிகள் என்னை அலக்ஷியம் பண்ணிக் கைவிட்டார்கள்” என்று ஒருபோதும் சொல்ல மாட்டார் என்றதாயிற்று.

ஸ்ரீவசநபூஷத்தில் (மூன்றாம் ப்ரகரணத்தில்- “பிராட்டி, ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதாப் போல,
தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவனல்லன்” என்றருளிச் செய்தபின்
“அறிவிக்க வுரியவனகப்பட வாய் திறவாதே ஸர்வஜ்ஞவிஷயங்களுக்கும் மறைக்குமென்னோநின்றதிறே” என்று அருளிச் செய்தது
இந்தப் பாசுரத்தைக் கொண்டேயாம். அவ்விடத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-
“எதி ர்சூழல் புக்கு’ என்கிறபடியே தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநர்களைத் தப்பாமல்
அகப்படுத்திக் கொள்வதாக வந்தவதரித்துத் தமக்கு அடியார் வேணுமென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலமாய்த் தோன்றாதொழிந்தாலும்
‘இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்; நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமிறே’ என்று அதுதானே போக்யமாக விருப்பர்;
அதுக்கு மேல், அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்களென்று அவர்கள் குற்றத்தைத் தனி யிருப்பிலே
பிராட்டிக்கு மருளிச் செய்யாரென்கிற சூழ்ந்தடியார் என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத் தன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்களுடன்
அறிவிக்கைக்கு ப்ராப்தனான ஸர்வேச்வரனுமுட்படத் தன் திருப்பவளம் திறந்து அருளிச் செய்யாதே,
தானருளிச் செய்யா தொழிந்தாலுமறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா நின்றதிறே.” என்று.

இப் பாட்டை மற்றொரு வகையாகவும் பெரியவாச்சான்பிள்ளை உரைத்தருளினார்;-
“அடியார் சூழ்ந்து வேண்டினக்கால், சூழ்ந்தெங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன்தலைகள் தரமிடியத்
தாள் வரைவில் லேந்தினார் தாம் தோன்றாது விட்டாலும் (அடியார்) வாழ்ந்திடுவர்; பின்னும் தம் வாய் திறவார்” என்று அந்வயித்து,
அடியவர்களா யுள்ளவர்கள் எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டு எமக்கு நீ ஸேவை ஸாதிக்க வேணுமென்று வேண்டிக் கொள்ள
எம்பெருமான் அவர்களுக்கு முகங்காட்டாவிடினும், அவன் திருவுள்ளமானபடியே ஆகக்கடவது’ என்று மகிழ்ந்திருக்கக் கடவர்கள் அடியவர்கள்;
‘ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும் எங்களுக்கு ஸேவை ஸாதியாமலிருப்பது ஏன்?’ என்று ஆக்ஷேபிக்க
வாய் திறக்கவும் கடவரல்லர்; அபேக்ஷிப்பது மாத்திரம் அடியவர்களது கடமையே யன்றி அபேக்ஷித்தபடியே
அவன் காரியஞ் செய்யாவிடில் அவனை யெதிர்த்து வாய் திறக்க இவர்களுக்கு அதிகாரமில்லை- என்று
சேதநர்களின் ஸ்வரூபத்தை சிக்ஷித்தருளிச் செய்வதாக.

முந்தின யோஜநையில் எம்பெருமானுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது;
இந்த யோஜநையில் சேநருடைய ஸ்வரூபம் சொல்லுகிறது.
இரண்டு வகையும் பொருந்தக் குறையில்லை.

சூழ்ந்து எங்கும் = இலங்கை முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்டு என்றபடி.
வாள் என்பதும் வரைகள்போல் என்பதும்- அரக்கனது வன்தலைகட்கு விசேஷணங்கள்;
வாள்- ரத்னங்களிழைத்த கிரீடங்களணிந்திருக்கையாலே ஒளிபொருந்திய என்றபடி.
தாள் வரை வில் = விற்களுக்கு அடிப்பக்கம் உரத்திருக்க வேண்டியது அவசியமாதலால்; தாள்வில் எனப்பட்டது; காலுரமுடைய வில் என்றபடி.
மலை போல் பிறரால் சலிப்பிக்கவும் ஒண்ணாதபடி சிக்கென்றிருத்தல் பற்றி “வரைவில்” எனப்பட்டது.

——————————————————————-

(தாம்பாலாப்புண்டாலும்.)
ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்க மாட்டான் என்றது கீழ்ப் பாட்டில்;
அவ்வளவேயன்று;
ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டு பண்ணினாலும்
அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லை யென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18

பதவுரை

தாம்பால் ஆப்புண்டாலும்–(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக–அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால்–காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு–கட்டப்பட்டு
பாடு உற்றாலும்–கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது–(ஜகத் ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம்–இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த–விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா–ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார்–உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு–நீயே சொல்லு.

நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்-ஊரார்கள் எல்லாரும் காண யுரலோடு
தீரா வெகுளியாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப-ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்
இது அனுகூலர் அன்பினால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு சஹ்யம் –
காளியன் வாலால் கட்டின காய்ப்பு அசஹ்யம்
தாம்பால் ஆப்புண்டாலும் –
யசோதையினால் தாம்பு கொண்டு-அடிக்கப் பெற்றாலும்

அத் தழும்பு தான் இளக-
அத் தாம்பினால் கட்டினத்தால் உண்டான காய்ப்பு-அல்பம் என்னலாம் படி

பாம்பால் ஆப்புண்டு –
காளியன் ஆகிற-பாம்பினால் கட்டப்பட்டு

பாடுற்றாலும் –
கஷ்டங்களை அடைந்தாலும்-சிறிதும் திரு உள்ளம் வருந்தாமல்

சோம்பாது-
ஜகத் சிருஷ்டியிலே சோம்பல் படாமல் -நிக்ரஹிக்க நினையாமல்
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் களிப்போம் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –

இப் பல்லுருவை எல்லாம் –
இவ் வுலகிலே காணப் படுகிற-பல பல பிராணிகளை எல்லாம்

படர்வித்த வித்தா-
விஸ்தாரமாக உண்டாக்கின-ஆதி மூலமே –

உன் தொல்லுருவை யார் அறிவார்
உன்னுடைய ஸ்வரூபத்தை அறிவார் உண்டோ –

சொல்லு –
நீயே சொல்லு

இக்கருத்தை ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில்
சார்வ த்வத்கம் சகல சரிதம் ரங்க தாமன் துராசாபா சேப்யஸ் ச்யான்ன யதி ஜகதாம் சாது மூர்க்கோத்தராணாம்-
நிஸ் தந்த்ராளோஸ் தவ நியமதோ நர்த்து லிங்க ப்ராவாஹா

சர்க்கச்தே மப்ர ப்ருதிஷூ சதா ஜாகார ஜாகடீதி-

சேதனர் மேலே நப்பாசை கொண்டு சிருஷ்டித்து அருளுகிறான்-
சம்சாரிகள் நன்மையே நாடி இருக்கிற உன்னுடைய ஸ்வ பாவம் யாராலும் நிலை காண ஒண்ணாது –

ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்த காலத்து யசோதைப் பிராட்டியாகிற மாதாவானவள் “நீராமிது செய்தீரென்றோ நெடுங்கயிற்றால்,
ஊரார்களெல்லராருங் காண வுரலோடே தீரா வெகுளியனாய்ச் சிக்கன ஆர்த்தடிப்ப, ஆரா வயிற்றினோடாற்றாதான்” (சிறிய திருமடல்) என்றபடி.
வெண்ணெய் களவு கண்ட காரணத்திற்காகக் கண்ணி நுண் சிறுத் தாம்பினால் உரலில் பிணைத்து அடித்துப் பகவானுடைய
திருமேனியில் கஷ்டத்தை யுண்டு பண்ணினாள்;

“தாம்பே கொண்டார்த்த தழும்பு” (முதல் திருவந்தாதி 22) என்றபடி
அவள் தாம்பினால் கட்டினவிடம் காய்ப்புக் காய்த்துக் கிடந்ததென்றும் தெரிகிறது.
இது அநுகூலர் அன்பின் மிகுதியால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு ஸஹ்யம் என்று கொண்டாலும்,
யமுனையில் ஒரு துறையிலிருந்து கொண்டு விஷத்தைக் கக்கி அனைவர்க்கும் கொடுமை புரிந்த காளிய நாகத்தோடு பிணங்க நேர்ந்த போது,
அந்த நாகம் கண்ணபிரானைத் தனது வாலால் கட்டிற்றென்றும், யசோதை கட்டின தாம்பினாலுண்டான காய்ப்பு அற்பமென்னும்படி
காளியன் வாலால் கட்டின காய்ப்பு வலிதாயிருந்த தென்றும் சொல்லப்படுகிறது.

இப்படி அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசியற எல்லாரும் அவனைக் கட்டி யடித்துத் துன்பப் படுத்துவதே
இந்த பிராகிருத லோகத்தின் காரியமாக இருக்கின்றது. இருந்தாலும் எம்பெருமான் தன்னுடைய கிருஷியில் நின்றும் கை வாங்குவதில்லை.
‘நமக்குத் துன்பத்தையே உண்டு பண்ணுகிற இவ் வுலகை அடியோடு ஒழித்திடுவோம்’ என்று நிக்ரஹிக்க நினையாமல்
“சென்று சென்றாகிலுங் கண்டு சன்மங் கழிப்பானெண்ணி ஒன்றியொன்றி யுலகம் படைத்தான்” (திருவாய்மொழி 3-9-10) என்றபடி
என்றைக்காவது ஒருநாள் இவ்வுலகம் சீர்படக் கூடுமென்றே திருவுள்ளம் பற்றிச் சிறிதும் சோம்பலடையாமல் பிரஜைகளைப்
படைக்கின்றானென்று இதனால் சொல்லிற்றாயிற்று.

இப்பாட்டின் கருத்தைக் கூரத்தாழ்வான திருக்குமாரரான ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தரசதகத்தில்-
ஸார்வ! த்வத்கம் ஸகலசரிதம் ரங்கதாமந்! துராசாபாசேப்யஸ் ஸ்யாந்ந யதிஜகதாம் ஜாது மூர்க்கோத்தராணாம்.
நிஸ்தந்த்ராளோஸ் தவநியமதோ நர்த்துலிங்க ப்ரவாஹா ஸர்கஸ்தேமப்ர ப்ருதிஷா ஸதாஜாகரா ஜாகடீதி.” என்ற
ச்லோகத்தால் அநுஸந்தித்தமை அறியத்தக்கது.

தாம்பாலாப்புண்டாலும் = நம்மாலே படைக்கப்படுகிறவர்கள் நம்மையே கயிற்றால் கட்டி நலிகின்றார்களே!;
இப்படிப்பட்ட பாவிகளை நாம் ஏன் ஸ்ருஷ்டிக்க வேணும்; இறகொடிந்த பறவை போலே கரணகளேபரங்களற்று ப்ரளய ஸீமாவில்
மங்கிக் கிடக்கிற சேதந வர்க்கங்கள் அப்படியே மங்கிக் கிடக்கட்டும்; அவற்றுக்குக் கையுங் காலும் உண்டாம்படி நாம் ஸ்ருஷ்டிக்கவே யன்றோ
அந்தக் கையையும் காலையுங் கொண்டு அவை நம்மையே புடைக்கின்றன; அவற்றை அப்படியே மங்கிப் போகும்படி போட்டு வைத்தால்
நம்மைக் கட்டி யடிப்பார் ஆருமில்லையே என்று கருதி எம்பெருமான் வெறுமனிருந்து விடலாம்;
ஆயினும் இந்த சேதநர்கள் பக்கல் உள்ள நப்பாசையானது அப்படி இருக்க வொட்டுகிறதில்லைஎன்று உணர்க.

அத்தழும்புதாளினகப் பாம்பலாப்புண்டு பாடுற்றலும் = காளியன் தனது வாலினால் கண்ணபிரானை அழுந்தக் கட்டி,
திருமேனி தழும்பேறும்படி வருத்தத்தை உண்டுபண்ணினன்; இந்தத் தழும்பின் முன்னே யசோதையின் தாம்பாலாப்புண்ட தழும்பு
அற்பமென்னவேண்டும்படி பாம்பாலாப்புண்ட தழும்பே வலிதாயிருந்ததென்பது விளங்க “அத்தழும்புதானிளக” என்றார்.

பாடு- வருத்தம்
வித்தா = உலகங்கட்கெல்லாம் வித்தாக இருப்பவனே! என்றபடி.
இப்படிப்பட்ட உன்னுடைய ஸ்வரூபத்தை அறியவல்லார் ஆர்? என்றது-
ஸம்ஸாரிகள் உன்னைப் பரிபவித்தாலும் அவர்கள் மேல்
ஆசாபாசம் விட்டு நீங்காமல் நன்மையையே நாடி யிருக்கையாகிற உன்னுடைய ஸ்வரூபம்
ஒருவர்க்கும் நிலை காண வொண்ணாதது என்றபடி.

————————————————————

(சொல்லில் குறையில்லை.)
பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணபிரான் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின் செயல்களை
ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும்.
அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
“மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?
இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள்; என்கிறார்.

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும்  –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

பதவுரை

சூது அறியா நெஞ்சமே–செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
சொல்லில் குறை இல்லை–பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண்–அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம்–(துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக–பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை–இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
(மெய்யே காண விரும்பினால்)
காண்டும்–காண்போம்!
நீ காண்–நீ காணலாம்.

சூதறியா நெஞ்சமே-
செய்ய வேண்டியது-இன்னது என்று அறியாமல் தளும்புகின்ற-மனமே

சூது -உபாயம்
மெய்யான விருப்பமே என்ற எளிய உபாயம் அறியாத மட நெஞ்சமே

சொல்லில் குறையில்லை-
பகவத் விஷயத்தை பேசினால் பேச்சில் குறை இல்லை –
எவ்வளவு பேசினாலும் சொல்லி முடிக்கும் படி அல்லவே எல்லை இல்லா அவனது கல்யாண குணங்கள்
அல்லது
நமக்கு ஒரு குறை இல்லை -நமது குறைகள் நீங்கி விடுமே பேசத் தொடங்கினாலும்
அப்படி கரை காண முடியாத ஒரு குணத்தை எடுத்துக் காட்டுகிறார்

தொல்லைக் கண்
அநாதியான இப்பூமியிலே

மா தானைக்கு எல்லாம் –
துரியோத நாதிகள் உடைய-பெரிய சேனைகளுக்கு எல்லாம் –
மலைபுரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் –

ஓர் ஐவரையே மாறாக –
பஞ்ச பாண்டவர்களே-எதிரிகளாம் படி –

எல்லிப் பகல் என்னாது எப்போதும் –காத்தானைக்
இரவு பகல் என்னாமல்-எக் காலத்திலும்-ரஷித்துக் கொண்டு இருக்கும் பெருமானை –

மெய்யே காண விரும்பினால் –

காண்டும் –
காண்போம் –

நீ காண் –
நீ காணலாம் –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் காத்தானை–எல்லிப் பகல் என்னாது எப்போதும் நீ காண்

சொல்லில் குறையில்லை = இதற்குப் பல வகையாகப் பொருள் கொள்ளலாம்.
பகவத் குணங்களைப் பேசத் தொடங்கினால் அவற்றுக்கு ஓய்வே இல்லை; எவ்வளவு பேசினாலும் குறைவுபடாமல்
மேன் மேலும் பெருகுகின்ற குணங்கள் அவனுக்கு எல்லை யில்லாமலிருப்பதால் நாம் சொல்லி முடிக்கும் படியானவையல்ல
பகவத் குணங்கள் என்று கொள்ளலாம்.

பரமபுருஷனுடைய குணங்களை அயோக்யரான நாம் பேசினால் அவற்றுக்குக் குறைவு நேரிடுமென்பதில்லை என்றும் கொள்ளலாம்.

அவனுடைய குணங்களை நாம் சொல்லத் தொடங்கினோமாகில் நம்முடைய குறைகளெல்லாம் நீங்கிவிடும் என்பதாகவுங் கொள்ளலாம்.

நாம் கற்ற கல்விகளுக்கீடாகக் குறைவில்லாமல் பலபல பாசுரங்களைவிட்டு பகவத் குணங்களைப் பேசிவிடலாம்;
பேச்சில் குறையில்லை;
ஆனால் அந்தக் குணங்கள் எல்லையற்றவை யாதலால் அவற்றைக் கரை காண்பதில் குறை யுண்டு என்பதாகக் கொள்ளுதல் சிறக்கும்.

அப்படி கரை காண முடியாத குணங்களில் ஒரு குணத்தைச் சொல்லிக் காட்டுகிறார்-
பாண்டவ பக்ஷபாதித்வத்தை யருளிச் செய்கிற முகத்தாலே.

சூது அறியா நெஞ்சமே! = சூது என்பதற்குப் பல பொருள்களுண்டு; உபாயம் என்ற பொருள் இங்குக் கொள்ளத்தக்கது.
உபாயமறியாத நெஞ்சே! என்றபடி. எம்பெருமானை நாம் காண வேண்டில்,
மெய்யே காண வேணுமென்று விரும்புகிற பக்ஷத்தில் தவராமல் காண முடியும்;
ஆகையாலே நம்முடைய மெய்யான விருப்பமே அவனைக் காண்பதற்கு உபாயம் என்று தெரிந்து கொண்டு
அந்த வுபாயத்தால் அவனைக் காணலாமாயிக்க அது செய்யாத மட நெஞ்சே! என்கிறாரென்க.

மெய்யே காண வேணுமென்று விரும்பினால் காண்பதற்க எளியனோ அவன்? என்ன;
அவனுடைய எளிமையை எடுத்துக் காட்டுகிறார் மேல்.
தொல்லைக்கண் மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையே மாறாகக் காத்தவனன்றோ அவன்.
தொல்லைக் கண் என்றது அநாதியான இப்பூமியிலே என்றபடி.

“மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்” (பெரியாழ்வார் திருமொழி 2-1-2) என்றபடி
பாண்டவர்கட்கு எதிர்த் தலையில் திரண்ட சேனைகள் பிரபலமாகையால் மாத் தானைக்கெல்லாம் என்கிறார்.
தானை யென்று சேனைக்குப் பெயர்.

ஓர் ஐவரையே மாறாக = பல்லாயிரம் போர்வீரர்கள் திரண்டு கிடக்கிற சேனைகளுக்கெல்லாம்
எதிர்க்கக்ஷியில் பாண்டவர்கள் ஐந்து பேர் மாத்திரமே நின்று வெற்றி பெற்றார்களென்று உலகில் புகழ் கிளம்பும்படி ரக்ஷித்தமை சொல்லுகிறது.
எம்பெருமான்தானே துரியோதனாதியர்க்கு எதிரியாய் நின்று போர் செய்யக் கூடுமாயினும், அப்படி நின்றால் அவர்கள் போர்க்களத்திற்கே
வரமாட்டார்களென்று, தான் ஆயுத மெடுப்பதில்லையென்று ப்ரதிஜ்ஞையும் பண்ணி, பஞ்ச பாண்டவர்களே
போர் புரிந்து வெற்றி பெற்றனரென்று பாரோர் புகழச் செய்து வைத்தனனென்க.

காத்தானைக் காண்டும் நீ காண் = ‘அடியவர்கள் விஷயத்தில் இவ்வளவு பக்ஷபாதம் வைத்து ரக்ஷிப்பதில்
தீக்ஷிதனாயிருப்பவன் எம்பெருமான்’ என்று நாம் தெரிந்து கொண்டோமாயின், இனி நாம் அவøன் காண வேணுமென்று மெய்யே
விரும்ப வேண்டுமென்பதே யுள்ளது. அப்படி காண விரும்புகிற பக்ஷத்தில் கண்டே விடலாம்;
இதை நீ அநுபவத்தில் காண்பாய் என்று ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராய்த்து.

எல்லிப்பகலென்னா தெப்போதும் என்பதை காத்தானை என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்,
காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்.
இரவுபகலென்று பாராமல் ஸர்வ காலத்திலும் பாண்டவர்களை ரக்ஷித்துக் கொண்டிருந்தவனை என்று முந்தின யோஜகையில் பொருளாம்;
நெஞ்சே! அவனை நீ இரவு பகல் வாசியின்றி எப்போதும் காண் என்று பிந்தின யோஜகையில் பொருளாம்.

காண்டும் = தன்மைப் பன்மை வினைமுற்று. காண்போம் என்றபடி.

————————————————————-

(காணப் புகில்.)
ஸ்வத ஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப் படும்.
எம்பெருமானை நாம் சென்று பற்றுகிற பற்று ஸ்வத ஸ்வீகார மெனப்படும்.
அவன் தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகத ஸ்வீகாரமெனப்படும்
இவ்விரண்டுள், எம்பெருமான் தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம்.
“அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளை யுலகாசிரியரும்,

கீழ்ப் பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்;
‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன் தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி
பார்த்திருக்கை யன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப் பாட்டால் வெளியிடுகிறார்.

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

பதவுரை

அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்–அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக்கொண்டு–வாமநரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான்–(மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று–தானே எங்கும் பரவி
திரு ஆகம–தனது திருமேனியினாலே
தீண்டிற்று–உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில்–ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில்–நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப்படும் அன்றே–வெட்கப்பட வேண்டுமன்றோ

காணப் புகில் –
ஆராய்ந்தோம் ஆகில் –

அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-
அறிவை யுடைய நல்ல நெஞ்சே -நான் சொன்னதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாமோ

நாணப்படும் அன்றே –
வெட்கப் பட வேண்டும் அன்றோ –

நாம் பேசில் –
நாம் பேசும் வார்த்தைகளுக்கு –

மாணி யுருவாகிக் கொண்டு-
வாமன ரூபியாய் –

உலகம் நீரேற்ற சீரான் –
மாவலியிடம் சென்று-உலகங்களை நீர் ஏற்றுப் பெற்ற-சீர்மை பொருந்திய திருமால்

திருவாகம் தீண்டிற்றுச்-தனது திரு மேனியினாலே-உலகங்களை எல்லாம்-தீண்டினான் என்பதை –

சென்று –
தானே எங்கும் பரவி -நம்மை வந்து தீண்டி கைக் கொள்ளுகைக்கு சித்தமாய் இருக்க –
அபேஷை இல்லாமல் எல்லார் தலையிலும் திருவடியை கொண்டு வைத்தவன் அவனாய் இருக்க-
நம்முடைய முயற்சி காணத் தக்கது அன்றோ -என்கிறார்

அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-நாணப்படும் அன்றே நாம் பேசில்
-மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம்
தானே-சென்று தீண்டிற்று-இப்படி இருக்க-நாம்-காணப் புகில்-நாம் பேசில்
நாணப்படும் அன்றே-என்று அந்வயித்து

மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்-தானே-சென்று-தன்னுடைய திருவாகத்தால்-உலகத்தை தீண்டின விஷயத்தை
காணப் புகில்-ஆராயும் அளவில்

நாம் பேசில்-அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே-என்றும் அந்வயித்து பொருள் கொள்ளலாம்

யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தச்யைஷ ஆத்மா வ்ருணுதே தநூம் ஸ்வாம்-ஸ்ருதி

சேதனரான நாம் த்ரிவிக்ரம அவதாரம் அறிந்து இருந்தும்-நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே –
கால ஷேபார்த்தம் தான் இவை-அவனுடைய ச்வீகாரமே ரஷகம்-

பிராட்டி அசோகவனத்தில் தரித்து இருக்க-பெருமாள் உடைய திருக் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தது போலே
இந்த சம்சாரத்தில் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் செய்து பொழுது போக்குவது
அவசியம் ஆதலால் அதற்காக பாசுரங்கள் பேசுவது அயுக்தம் இல்லை-

அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் என்பது நெஞ்சை, நோக்கின அண்மை விளி; நெஞ்சே! நீ அறிவு இல்லாத அசேதந வஸ்துவன்றே;
அறிவு கொண்டிருப்பவனன்றோ; உன் அறிவுக்கு என்ன ப்ரயோஜநம்?
நான் ஒன்று சொன்னால் ‘இது தகும், தகாது’ என்பதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாவோ?
“காத்தானைக் காண்டும் நீ காண்” (கீழ்ப்பாட்டு) என்று நான் சொல்லி விட்டால் இதை நன்கு ஆராயாமல் காண முயல்வதுதானோ உனக்குத் தகுதி?
இப்படி யாகில் உன் அறிவுக்குப் பயனில்லையே; உன்னையும் அசேதநரமாகவே எம்பெருமான் படைத்திருக்கலாமே என்கிறார் போலும்.

நாம் காணப்புகில் பேசில் நாணப்படுமென்றே = எம்பெருமானை நாம் காணப் புகுவதும் பேசப் புகுவதும் வெட்கப் படத்தக்க விஷயமன்றோ.
ஏனென்றால், இதைப் பின்னடிகளில் விவரிக்கின்றார்.
எம்பெருமான் குறட் பிரமசாரியாகி மாவலி பக்கல் நீரேற்றுப் பெற்ற காலத்துத்
தானே தனது திருமேனியைக் கொண்டு இவ்வுலகத்தை யெல்லாம் தீண்டினான் என்பது உனக்குத் தெரிந்ததே யன்றோ.
ஆகையாலே நம்மை வந்து தீண்டிக் கைக் கொள்வதற்கு அவன் தானே ஸித்தனாயிருக்க, அதற்கு மாறாக அவனை நாம்
காணப் புகுவதும் பேசப் புகுவதும் தகாத காரியமன்றோ.
ஒருவருடைய அபேக்ஷையுமில்லாமல் எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தான் அவனாயிருக்க.
நம்முடைய முயற்சி நாணத்தக்கதன்றோ என்கிறார்.

“மாணியுருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரானுடைய திருவாகமானது (தானே) சென்று தீண்டிற்று; (இப்படியிருக்க)
நாம் காணப் புகில் நாம் பேசில் நாணப்படுமன்றே” என்றும்,
“மாணியுருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரானானவன் தான் சென்று தன்னுடைய திருவாகத்தாலே உலகத்தைத் தீண்டின
விஷயத்தைக் காணப்புகில் – (ஆராயுமளவில்.) நாம் பேசில் அறிவுகைக் கொண்ட நன்னெஞ்சம் காணப்படுமன்றோ” என்றும்
அந்வயித்துப் பொருள் கொள்ள இடமுண்டு.

(யமேவைஷ வ்ருணுதே தேந லப்ப தஸ்லயஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்) என்ற வேத வாக்கியம் இங்கே நினைக்கத் தக்கது.
இதன் பொருள்:- இந்த எம்பெருமான் தானே எந்த சேதநனை ஸ்வீகரிக்கிறானோ, அந்த சேதநனாலே இவன் அடையத் தக்கவன்;
பரகத ஸ்வீகார நிஷ்டனான அப்படிப்பட்ட சேதநனுக்கே எம்பெருமான் தனது திருமேனியை வ்யக்தமாக ஸேவை ஸாதிப்பிக்கிறாள் என்பதாம்.

தைத்திரீய ஸம்ஹிதையில் முதற் காண்டத்தில் ஆறாவது ப்ரச்நத்திலும் –
ப்ரஜாபதிம் த்வோவேத ப்ரஜாபதிஸ் த்வம் வேத யம் ப்ரஜாபதிர் வேத ஸ புணயோ பவதி”) என்று சொல்லப்பட்டது.
இதன் பொருள் – ஒரு சேதநன் ஸர்வ சேக்ஷியான எம்பெருமானைப் பற்றுகிறான்;எம்பெருமான் ஒரு சேதநனை ஸ்வீகரிக்கிறான்;
(இவ் இருவர்களுள்) எம்பெருமானைப் பற்றுகிறவனைக் காட்டிலும் எம்பெருமானாலே பற்றப் படுகிறவனே புண்ணியனாகிறான் என்பதாம்.

எம்பெருமானே உலகங்களை யெல்லாம் தன் பேறாகச் சென்று தீண்டினான்(த்ரிவிகரமாவதார வ்யாஜத்தாலே) என்று நாம் தெரிந்து கொண்டால்,
அவனை நாம் பற்ற நினைப்பது தகாது; ஆகிலும் நாம் சேதநராகையால் வெறுமனிருக்க நேர்கின்றது;
எதையாவது வாயாலே சொல்லிக் கொண்டிருக்க நேர்கின்றது; அதனால் நாம் காண விரு ம்புவதாகவும் நாம் பற்றுவதாகவும்
ஏதோ போது போக்குக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோமத்தனை.
“நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்றாற் போலே ஆழ்வார்கள் அருளிச் செய்வதும் காலக்ஷே பார்த்தமாகவே யொழிய வேறில்லை.
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம். அசோக வனத்திலே பிராட்டி தரித்திருப்பதற்காகப் பெருமாளுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டிருந்தது
போல இந்த ஸம்ஸாரத்தில் நாம் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் பண்ணிப் போது போக்க வேண்டியது அவசியமாதலால்
அதற்காகப் பாசுரங்கள் பேசுவை அயுக்தமல்ல.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -73-87–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(பூவையுங்காயாவும்) கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே,
போலிகண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில்.
முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம்.
அப்போதுõன் மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ
அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பதவுரை

பூவையும்–பூவைப்பூவையும்
காயாவும்–காயாம் பூவையும்
நீலமும்–கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற–புஷ்பிக்கின்ற
பிரான்–எம்பெருமானுடைய
உருவே என்று–திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன்–அடியேனுடைய
காவி மலர்–செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும்–பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம்–அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி–மிருதுவான உயிரும்
மெய்–சரீரமும்
மிகவே பூரிக்கும்–மிகவும் பருத்து வளர்கின்றது

பூக்கின்ற பூவையும் காயாவும் நீலமும்–புஷ்ப்பிக்கின்ற
பூவைப் பூவையும் -காயம் பூவில் அவாந்தர பேதம் பூவைப் பூ –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை -பெரியாழ்வார் போலே
காயாம்பூவையும்-கரு நெய்தல் பூவையும்

பூக்கின்ற காவி மலர்
புஷ்பிக்கின்ற-செங்கழு நீர் பூவையும்

என்றும் காண் தோறும் –
பார்க்கிற போது எல்லாம்-காண் தோறும் என்னாமல்– என்றும் காண் தோறும் என்றது-
இந்த பிரமம் ஒரு கால் இரு கால் அன்று-பிரமிப்பதும் தெளிவதும் மீண்டும் பிரமிப்பதும் நித்யமாக செல்லும்

பாவியேன் மெல்லாவி
அடியேனுடைய-மிருதுவான உயிரும்-பாக்யவான் -விபரீத லஷணை யால்-
இப்படி அன்பு விளைந்த உள்ளம் கொண்டேனே என்றுமாம்

மெய் மிகவே பூரிக்கும்
சரீரமும்-மிகவும் பருத்து ஊருகின்றன

அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று
அந்த அந்த மலர்கள் எல்லாம்-எம்பெருமானுடைய திரு வுருவமே என்று கொண்டு-

பூவை யென்பது காயாம்பூவில் ஒரு அவாந்தரபேதம்; “மல்லிகைவனமாலை மௌவல்மாலை” (பெரியாழ்வார் திருமொழி) என்றாற்போல.
“காண்தோறும் ” என்னுமளவே போதுமாயிருக்க, “என்றும் காண்தொறும்” என்றதென்னென்னில்;
போலிகண்டு பூரித்தலென்கிற இந்த ப்ரமம் ஒருகாலிருகாலன்று; ஒருதடவை அவற்றைக்கண்டு பூரித்த பின்பு
‘ஓ! நாம் ப்ரமித்தோம்; இவை வெறும் புஷ்பங்களே யொழிய எம்பெருமானது திருவுருவமல்ல” என்று தெளிந்து கொண்டாலும்,
அடுத்த க்ஷணத்தில் இது மறந்து போய், பழைய ப்ரமமே அநுவர்த்திக்கும்;
இப்படியே ப்ரமிப்பதும் தெளிவதும், ப்ரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியம் செல்லுமென்பது தோன்றும்.

“பாவியேன்மெல்லாவி” என்றவிடத்து, “பாவியேன்” என்றது விபரீதலக்ஷணையால் ‘பாக்யசாலியான என்னுடைய’ என்று பொருள்படவுங்கூடும்.
போலியான பொருள்களைக் கண்ட மாத்திரத்திலே ஆவியுமுடனும் பூரிக்கும்படியான பாக்கியம் எனக்கேயிறேயுள்ளது என்றவாறாம்.

“மெல்லாவியும் மெய்யும்” என்னவேண்டுமிடத்து “மெல்லாவிமெய்” என்றது- உம்மைத்தொகை.
பூரிக்கம் வடமொழித் தாதுவடியய்கப் பிறந்த வினைமுற்று.

————————————————————–

(என்றுமொருநான்) கீழப்பாட்டிற் சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும்
அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி,
‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

பதவுரை

ஒரு நாள் ஒழியாமை-ஒருநாளும் தப்பாமல்
என்றும்–எந்நாளும்
யான் இரந்தால்–அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார்–(முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார்–சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார்–தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே–ஓ மனமே!
புவி–நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான்–(அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?

என்றும் ஒரு நாள் ஒழியாமை
என்று ஒரு நாளும் தப்பாமல்

யான் இரந்தால்
அடியேன் பிரார்த்தித்தால்

ஒன்றும் இரங்கார்-
சிறிதும் தயவு செய்கிறார் இல்லை –

உருக்காட்டார் –
தனது திரு மேனியைக் காட்டுகிறார் இல்லை

குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
முன்பு-கோவர்த்தன மலையை ஏந்தி-பசுக்களை ரஷித்த-கோபால கிருஷ்ண பகவான்

நெஞ்சே
ஒ மனமே

புடை தான் பெரிதே புவி
அவருடைய அருள் வெள்ளம் ஏறிப் பாய முடியாத-மிகப் பெரிய மேட்டு நிலமோ –

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இ றே
அவர் நீர்மை ஏறிப் பாயாத தோர் இடம் தேடி-எங்கே கிடந்தோம்

புடை மேடான இடம்
புடை பெரிது -விசாலமானது-விசாலமான இந்த பூமியிலே அவனது அருள் வெள்ளம் பாய ஒண்ணாத
எந்த மூலையிலே கிடந்தோம்-முந்தின  பொருளே சுவை உடைத்து-

நான் ஒழிவில்காலமெல்லாம் அல்லும் பகலும் கதறிக்கதறி வேண்டிக்கொண்டாலும் அப்பெருமான் சிறிதும் நம்மேல்
இரக்கம் காட்டுகின்றாரில்லையே!; அவர்க்கு இயற்கையாக அருள் கிடையாதென்றுதான் நாம் நினைக்கமுடியுமோ?
இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழு நாள் விடாமழை பெய்வித்தகாலத்திலே கோவர்த்தனத்தைக் குடையாகவேந்திநின்ற
கோக்களையும் கோவலரையும் பரிந்து காத்தருளின பரமதயாளுவன்றோ அவர்; அப்படிப்பட்ட பேரருளாளன்
நம்மேல் அருள் செய்கின்றிலனென்றால் இஃது என்ன கொடுமை!.

நெஞ்சே! புடைதான் பெரிதே புவி= இந்த வாக்கியத்தின் ஆழ்பொருளைக் கண்டறிந்து பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்யுமழகு பாரீர்; –
“அவர்க்கு நீர்மையில்லையென்னப்போகாதிறே; அவர்நீர்மை ஏறிப்பாயாததோரிடந்தேடி எங்கே, கிடந்தோம்!.’ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
மேடான இடத்தைப் புடையென்று சொல்வதுண்டாகையாலே, புவி புடை பெரிதே= நாமிருக்குமிடம்
(அவருடைய கருணைப் பெருவெள்ளம் ஏறிப்பாயமுடியாத) மேட்டுநிலமோ? என்றதாயிற்று.

இதற்கு மற்றொருபடியாகவும் பொருள் கொள்ளலாம்; “புடைபெரிது” என்றால் ‘விசாலமானது’ என்று ப்ரஸித்தமாகச்
சொல்லுவதுண்டாகையாலே அப்பொருளையே இங்குங்கொண்டு, ‘இந்தப் பூமி விசாலமன்றோ?” என்றதன் கருத்தாவது-
விசாலமான இந்த நிலவுலகத்திலே எம்பெருமா-னுடைய அருள்வெள்ளம் பாயவொண்ணாத எந்த மூலையிலே கிடந்தோம்! என்றதாகலாம்.
முந்தின பொருளே சுவையுடைத்து.

—————————————————————–

(புவியுமிருவிசும்பும்.) கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான்
“நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ?
‘கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல,
நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலே பேசினதும் மறந்தொழிந்ததோ?
உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய,
ஆழ்வார் அது கேட்டுத் தேறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

பதவுரை

ஊன் பருகு நேமியாய்–(அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும்–இவ்வுலகமும்
இரு விசும்பும்–விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய்–என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன்–நானே பெரியவன்;
நின் அகத்த–உன்னிடத்தேயுள்ளன;
நீ–உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து–என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி–ஒருநாளும் விட்டு நீங்காமல்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்–நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு–இதை நீயே ஆலோசித்துப் பார்.

புவியும்
இவ்வுலகமும்

இருவிசும்பும்
விசாலமான மேல் உலகமும்

நின்னகத்த
உன்னிடத்தே உள்ளன

நீ
உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ

என்செவியின் வழி புகுந்து
எனது காதின் வழியே புகுந்து

என்னுள்ளே –
என் பக்கல் இரா நின்றாய்

அவிவின்றி
அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்

ஆனபின்பு

யான் பெரியன்-
நானே பெரியவன்

நீ பெரியை என்பதனை யார் அறிவார்
நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ

ஊன் பருகு நேமியாய்
அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே

உள்ளு
இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

எம்பெருமானே! கீழுலகங்களும் மேலுகங்களுமாகிய வெல்லாம் உன்னிடத்தேயுள்ளன; அப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிரா
நின்ற நீ என் காது வழியாக என்னுள்ளே புகுந்து பேராமலிருக்கின்றாய்; ஆனாலும் ‘ப்ரஹ்மம்’ என்ற உனக்குப் பேராயிருக்கிறது.
எது எல்லாவற்றிற்காட்டிலும் பெரிதான வஸ்துவோ அது ப்ரஹ்மமென்னத்தகும்;
விபூதிகளைமாத்திரம் வஹித்துக்கொண்டிருக்கிற நீ பெரியவனா? அல்லது, விபூதிகளை வஹிக்கிற வுன்னையுங்கூடச் சேர்த்து
வஹிக்கிற நான் பெரியவனா? என்று ஆராயவேண்டாவோ? இதனை நன்கு ஆராய்ந்தால் நானே மிகப் பெரியவனானவேன்;
என்னுள்ளே ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்கவல்ல உன்னைப் பெரியவனென்று சொல்ல வொண்ணுமோ?
இதனை நீயே ஆராய்ந்து பார்- என்கிறார்.

“யான் பெரியன்” என்று தனி வாக்கியமாகவும் “நீ பெரியையென்பதனை யாரறிவார்” என்று தனிவாக்கியமாகவும் கொண்டு உரைக்கப்பட்டது.
இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே உரைத்தலுமொக்கும்.
‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப்போகாது; நீ தான் ஆராய்ந்து அறியவேணும்’ என்கை.

—————————————————————-

(உள்ளிலுமுள்ளந்தடிக்கும்) கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே
நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில்
உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார்.

உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ச்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-
நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-

ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும் என்கிறார்-
உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

பதவுரை

உலகு அளந்த மூர்த்தி–த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும்–உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம்–எனது நெஞ்சானது
துடிக்கும்–(ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள–பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து–உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
உன்னை மெய்யுற்றால்–(பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
உள்ள உலகு அளவும்–நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன்–நானும் வியாபித்தவனாவேன்;
என் கொலோ–நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை–நீயே சொல்லு.

உள்ளிலும் உள்ளம் தடிக்கும்
உன்னை நெஞ்சிலே அனுசந்தித்த-மாத்ரத்திலே-எனது நெஞ்சானது-சந்தோஷத்தினால் பூரிக்கின்றது

வினைப்படலம் விள்ள
பாபக் கூட்டங்கள்-என்னை விட்டு ஒழிந்து போம்படி

விழித்து
உன்னாலே கடாஷிகப் பெற்று

உன்னை மெய்யுற்றால்
பரம பதத்தில் வந்து-உன்னை உள்ளபடியே-அடைந்து விட்டேனாகில்

உள்ள உலகளவும்
நீ வியாபித்து இருக்கிற உலகு எங்கும்

யானும் உளனாவன்
நானும் வ்யாபித்தேன் ஆவேன்

என்கொலோ உலகளந்த மூர்த்தி உரை
த்ரிவிக்ரம பகவானே-நான் சொல்லும் இது சம்பாவிதம் தானோ-நீ சொல்லு-

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் = பகவத் விஷயாநுஸந்தாநத்தினால் தமக்க உண்டாகிற ஆநந்த மிகுதியை அறிவிப்பதான
அதிசயோகதியாமிது. உள்ளம் தடித்தலாவது நெஞ்சு ஸ்தூலிப்பதாம்.
உருவற்ற நெஞ்சுக்கு ஸ்தூலத்வம் அஸம்பாவிதமாபினும் ஸம்பாவிதம் போலப் பேசுவதன் கருத்து ஆநந்தமிகுதியைக் காட்டுவதேயாம்.
இவ் விருள்தருமாஞாலத்தில் ஒரு மூலையிலே திருப்புளியின் பொந்திலே யிருந்துகொண்டு உன்னை நெஞ்சால் நினைக்கம்
மாத்திரத்திலேயே நெஞ்ச இப்படி பூரிக்கமேயானால், என்னுடைய கரும பாசங்களெல்லாம் அடியோடே தொலைந்தொழியும்படி
பரிபூர்ண கடாக்ஷம் செய்தருளப்பெற்று நலமந்த மில்லதோர் நாட்டிலே வந்து நித்யாநுபவம் பண்ணப்பெற்றால்
பின்னைத் தடிப்பதற்கு இடம் போராதுபோலும்.
ஸ்வரூபத்தாலே உலகத்தையெல்லாம் நீ எப்படிவியாபித்து நிற்கிறாயோ அப்படி நானும்
ஸ்வபாவத்தாலே உலகமெங்கும் வியாபித்து நிற்பேன்போலும் என்கிறார்.
உலகத்தையெல்லாம் பூரிக்கவல்லதாம்படி உடல் தடிக்குமளவு ஆநந்தத்தை அடைந்திடுவேனன்றோ என்றவாறு.

—————————————————————-

(உரைக்கிலோர் சுற்றத்தார்.) எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக
இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

பதவுரை

இரைக்கும் கடல்–கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த–பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய்–ஸ்வாமீ!
உரைக்கில்–ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே–(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு–என் ஆத்மாவுக்கு
ஓர் சொல்–‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை–உதவி செய்யும் துணையும்
உரைப்பு எல்லாம்–மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய்–உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
ஆராய்ந்து சொல்லி-நீ தவிர-தாயாதிகள் என்றும்-பந்துக்கள் என்றும்-சொல்லக் கூடியவர்கள்-எனக்கு ஆரேனும் உண்டோ
வேறு யாரும் இல்லை நானே உளன் என்று உத்தரம் சொல்லி அருளுவான்  போலும்
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்
கோஷிக்கின்ற திருப் பாற் கடலிலே-பள்ளி கொண்டு இரா நின்ற-ஸ்வாமி

உரைப்பெல்லாம்
மற்றும் சொல்லப் படுகிற-எல்லா வகையான துணையும்

நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
உன்னைத் தவிர வேறு ஒருவரையும்-உடையோம் அல்லோம் காண்

எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி யாகும் துணை
எனது ஆத்மாவுக்கு-சர்வ தரமான் பரித்யஜ்ய-என்கிற சரம ஸ்லோஹம் ஆகிற
ஒரே சொல்லே-உதவி செய்யும் துணையாம்
அர்ஜுனனை நோக்கி அருளிய ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோஹம்
விபீஷணனை நோக்கி அருளிய ஸ்ரீ ராமபிரானின் சரம ஸ்லோஹம்
ஸ்ரீ வராஹ நாயனார் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்த-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோஹம்
இதுவே நமக்கு துணை-

“ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது
“உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்;
நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று
உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும்.
இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி.

ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
“ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன
ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை.
ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே –
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம்.
இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான்
ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

——————————————————————-

(துணைநாள் பெருங்கிளையும்.) ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்;
நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக்கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘
பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப்பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்;
நற்குலப்பிறவியே நச்சுத்தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்;
ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமேயன்றி இன்பமாகத் தலைக்கட்டாது;
ஒருகால் இவையெல்லாம் இன்பமயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால்தாழாது
பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

பதவுரை

துணை–ஸ்நேஹிதர்களும்
நாள்–ஆயுஸ்ஸும்
பெரு கிளையும்–பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும்–பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை–பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
(ஆகிய இவை யெல்லாம்)
நாளும்–நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும்–(துக்கத்தை யுண்டு பண்ணாமல்) ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே–நல்மனமே!
(நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்)
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன்==அம்புகள் நாணில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை–இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண்–நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை
ச்நேஹிதர்களும்-ஆயுஸ்ஸூ ம்-பிள்ளைகள் பேரன்கள் என்கிற பெரிய சந்தானமும்
பரம்பரையாக சத்குலமும்-பந்துக்களோடு சேர்ந்து இருப்பதும்

நாளும்-
நாள் தோறும் –

இன்புடைத்தா மேலும் –
துக்கத்தை உண்டு பண்ணாமல்-சந்தோஷத்தை உண்டு பண்ணுவன என்று-வைத்துக் கொண்டாலும்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்-அம்புகள் நாணில் நின்றும் ஒரு காலும் மாறாத படி-
வீரத் தொழில் செய்து கொண்டே இருக்கிற-வில்லை உடைய ஸ்ரீ இராமபிரான் உடைய

தொல்சீரை-
இயற்கையான நற் குணங்களை

நல் நெஞ்சே

ஓவாத ஊணாக வுண்
நித்ய போகமாக அனுபவிக்கக் கடவாய்

மகா வீரனான ஸ்ரீ ராமபிரான் உடைய சரித்ரமே நித்ய போக்யமாகக் கடவது
சோத்ரைவ ஹந்த ஹனுமான் பரமாம் விமுக்திம் புத்யாவதூய சரிதம் தவ சேவதேசௌ -அதிமாநுஷ ஸ்தவம்-
பாவோ நான்யத்ர கச்சதி
– திருவடி போலே-

(கணைநாணில் இத்யாதி.) ஆச்ரித விரோதிகளைக் கிழங்கறக் களைவதே காரியமாகக் கொண்ட இராமபிரான்
ஒருநொடிப்பொழுதும் வில்தொழிலை விட்டிருக்கமாட்டான். அப்படிப்பட்ட மஹாவீரனுடைய சரிதமே நித்ய போக்யமாகக்கடவது என்கை.
ஸோத்ரைவ ஹநச்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதய சரிதம் தவ ஸேவதேஸௌ.” என்று அதிமாநுஸ்தவத்திலே
ஆழ்வானருளிச் செய்தபடி சிறிய திருவடி இன்றைக்கும் ஸ்ரீராம குணாநுபவமே போதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாராய்ந்து.

ஓவாத- ஒரு க்ஷணகாலமும் விட்டு நீங்காத ஊண்- உணவு “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருத” இத்யாதிகளை நினைப்பது.

———————————————————————-

(உண்ணாட்டுத்தேசன்றே.) எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை
யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய
பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேனி போலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்;
எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை;
சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால்
தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று,
பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப்போக்கித்
தொண்டர்குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில்
அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்;
சண்டாளகுலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில்
அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று.
இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷண்த்திலும் ஆசார்ய ஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும்.
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி
உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.

எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பதவுரை

மண் நாட்டில்–இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி–எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும்–எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு–திருவாழியை அழகிய கையிலேயுடைய
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே–பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே–அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை–ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக–ஒரு பொருளாக
மெச்சுமே–விரும்பக்கூடுமோ?

உண்ணாட்டுத் தேசன்றே
பரம பதத்தில் உள்ளதேஜஸ் உடையது அன்றோ

ஊழ் வினையை யஞ்சுமே
அநாதியான பாபங்களை-குறித்து அஞ்ச வேணுமோ-சேஷத்வமாகிய ராஜ குல மகாத்ம்யத்தினால்-
எவ்வகைப் பட்ட பாவத்துக்கும் அஞ்ச வேண்டியது இல்லை

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-
ஸ்வர்க்க லோகத்தை ஒரு பொருளாக-விரும்பக் கூடுமோ
ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் போன்றவை ஓர் பொருளாக நெஞ்சில் படாதே

-மண்ணாட்டில்
இந்த மண் உலகத்தில்

ஆராகி
எப்பிறவியில் பிறந்தவர் ஆயினும்

எவ்விழி விற்றானாலும்
எவ் இழி விற்று ஆனாலும்-எப்படிப் பட்ட இழி தொழில்களை உடையவர்கள் ஆயினும்

ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
திரு வாழியை அழகிய திருக் கையிலே உடைய-ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு
அடிமைப் பட்டவர்களாக-பிறக்கும் பிறவியானது –

உண்ணாட்டுத்தேச = எம்பெருமானைக் கண்ணெடுத்தும் பாராத பாவிகள் நிறைந்த இந்த லீலாவிபூதி புறநாடென்னும்,
பகவத் கைங்கர்ய ரஸிகர்கள் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாயிருக்கிற நித்யவிபூதி உள்நாடென்றும் கொள்ளத்தகும்.
‘ உள்நாட்டுத்தேக” என்றது – பாமபவத்தில் எம்பெருமானுடைய கைங்கரியத்திற்குத் தகுதியாகக் கொள்ளுகிற
தேஹம்போலே சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இழிபிறப்பும் தேஜஸ்கரம் என்றவாறு.

ஊழ்வினையை அஞ்சுகமே?= எம் பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்கையாகிற ராஜகுல மாஹாத்மியத்தாலே
எவ்வகைப்பட்ட பாவத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்றபடி.

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே? = இங்கு ‘விண்ணாடு’ என்ற பிரமன் முதலிய தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது
ப்ரஹ்மாதி தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது. ப்ரஹ்நாதி தேவர்களின் பிறவியிற் காட்டிலும் பகவத் பக்தர்களின் பிறவி சீரியது என்றபடி.
அன்றியே, எம்பெருமானுக்கு அடிமைச்செய்து கொண்டு வாழப்பெறில், ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் முதலிய எப்படிப்பட்ட பதவிகளும்
ஒரு பொருளாகவே நெஞ்சிற்படாது என்றபடியுமாம். பகவானுக்கு அடிமை செய்துகொண்டு இந்நிலத்தில் கிடந்தாலும்
இதுவே பரமபதத்தினும் சிறந்ததாகையால் தேவலோகமும் நரகமாய்த் தோற்றுமென்கை.

—————————————————————-

(பிறப்பிறப்பு.) ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற
ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து
அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில்.
கைங்கர்யம் இல்லாத குறையால் –

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

பதவுரை

பிறப்பு–பிறவியையும்
இறப்பு–மரணத்தையும்
மூப்பு–கிழத்தனத்தையும்
பிணி–வியாதிகளையும்
துறந்து–ஒழிந்து
பின்னும்–அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும்–மிகவும்
இன்பு உடைத்து ஆம் ஏலும்–ஆநந்தமுடையதான கைவல்யமோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல்–உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம்–மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே–துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ?

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
பிறவியையும்
மரணத்தையும்
கிழத்தனத்தையும்
வியாதிகளையும்
ஒழித்து
அவ்வளவோடல்லாமல்

இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் –
மிகவும் ஆனந்தம் உடைத்தான
கைவல்ய மோஷம்
உண்டாவதானாலும்
இறக்கவும் -மிகவும் -அளவில்லாமல் என்கை –

மறப்பெல்லாம்
மறுப்புக்கள் எல்லாம்

ஏதமே என்றல்லால் எண்ணுவனே –
துன்பம் என்றே எண்ணுவனே ஒழிய-வேறு வகையாக எண்ணுவனோ
மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –
உலகு அளந்த பெருமான் உடைய-திருவடிகளை வாழ்த்தப் பெறாத
காலங்களில் உண்டான –ஜரா மரண மோஷாயா மாமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை -7-29-

மோக்ஷம் இருவகைப்படும்; ஸ்வாத்மாவையே அநுபவிப்பது மற்றொரு மோக்ஷம். இதுவே கைவல்யமோக்ஷ மெனப்படும்.
பகவததுபவமோக்ஷமே ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததென்றும் கைவல்யமோக்ஷம் ஹேயமென்றும்
கைவல்யநிலம் பறைச்சேரிபோலே இகழத்தக்க இடமென்றும் ஆரியர் கொள்வர்.
மறுபடியும் பிறப்பில்லாமை, பிணியில்லாமை, கிழத்தனமில்லாமை, இறப்பில்லாமை என்னுமிவை மேற்சொன்ன,
இருவகை மோக்ஷங்களைப் பெற்றவர்களுக்கும் பொதுவாயினும் கைவல்யமோக்ஷத்தில் பகவத் கைங்கரியமில்லாமையாகிற
பெரியதொரு குறை உண்டாகையாலே இக்கைவல்ய மோக்ஷம் ஹேயமா யொழிகின்றது;
இவ்வர்த்தமே இப்பாட்டில் அருளிச்செய்யப்படுகின்றது.

“ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் (7-39) சொல்லியிருப்பதை அடியொற்றி,
“பிறப்பிறப்பு மூப்புப் பணிதுறந்து” எனப்பட்டது. இறக்கவும்- மிகவும்; அளவில்லாமல் என்கை).

———————————————————————

(பகலிரா.) எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில்
என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்;
அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்;
இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்;
இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத்
தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –
உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவைமே யார் தெரிந்து–81- 

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது இரு பொழுதும்
பகல் பொழுது-இராப் பொழுது-என்கிற வாசி இன்றியே எப்போதும்

எம்மை ஆள்வர்
அடியேனை அனுபவியா நின்றான்

இகல் செய்து
வலு கட்டாயப் படுத்தி-
இகல் செய்தல் -யுத்தம் செய்தல்
தம்முடைய குணங்களாலே-எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு-குணத்தாலே ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இ றே

-தகவாத் தொழும்பரிவர்
இவர் தகவாத் தொழும்பர் -இந்த ஆழ்வார் நம்முடைய அருளுக்கு-பாத்ரமாக கடவாத நீசர்-
தொழும்பர்
-அடிமை செய்பவர்-தகவு -தயவுக்கு பெயர்-தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றபடி

சீர்க்கும் துணை இலர்
சீர்மை பொருந்திய துணையை-உடையரும் அல்லர்
மச் சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்-கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்திச -கீதை -10-9-

என்று தெரிந்து ஓரார் –
என்பதை ஊன்றி ஆராதவனாய்

செழும் பரவை மேயார் –
அழகிய திரு பாற் கடலிலே-பொருந்திக் கண் வளர்ந்து அருளும் பெருமான்-

இகல் செய்தல்- யுத்தம் பண்ணுதல்; எம்பெருமான் ஆழ்வாரோடு யுத்தம் பண்ணுகையாவது என்னென்னில்;
தன்னுடைய குணங்களை அநுபவிக்குமாறு நிர்பந்தப்படுத்துதலாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி:-
“தம்முடைய குணங்களாலே எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்; அம்புபட்ட புண்ணுக்கு மருந்தில்லையிறே.”

இவர் தகவாத் தொழும்பர் தொழும்பர், சீர்க்கும் துணையிலர் என்று ஓரார்- ‘தொழும்பர்’ என்று அடிமை செய்பவர்க்குப் பெயர்;
நீசர்களே அடிமைசெய்ய உரியவராதலால் இங்குத் ‘தொழும்ப’ என்றது நீச ரென்றபடி. தகவு என்று தயவுக்குப் பெயர்;
‘தகவன்’ என்றால் ‘தயவுக்கு விஷயமாகக் கூடியவன்’ என்று பொருளாம்;
‘தகவாத் தொழும்பர்’ என்றது- தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றதாயிற்று.

(சீர்க்கும் துணையிலர்.) ‘சீர்க்கும்’ என்றது துணைக்கு அடைமொழி; ‘சீர்மை பொருந்திய’ என்றபடி
பகவத்கீதையிலே (10-9) மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்- கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திசரமந்திச.”
(இதன் பொருள்- நெஞ்சை நமக்கென்றே பறிகொடுத்து, அப்படியே நம்மைப் பிரிந்தால் தரித்திருக்கமாட்டாமல்
பிராணனையும் நம் அதீனஞ்செய்து தாம் தாம் அநுபவித்த நம் குணங்களையெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம் செய்த திவ்ய சேஷ்டிதங்களையுமெடுத்துப் பேசிக்கொண்டு ஆநந்திக்கிறார்கள்.) என்றருளிச் செய்திருப்பதில்,
பகவத் குணங்களை ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளுதலும் ஒரு சிறந்த காரியமாகச் சொல்லப்பட்டுள்ளது;
அப்படி பேசிக்கொள்வதற்குத் தாம் (ஆழ்வார்) துணை அற்றவர் என்கிறார். இப்படியிருக்கச் செய்தேயும் எம்பெருமான் என்னை
உபேக்ஷித்திடாமல் தனது நிர்ஹேதுக கருணையினால் குணாநுபவம் செய்விக்கிறானென்றாராயிற்று.

பரவை- ஸமுத்ரம்.

———————————————————–

(தெரிந்துணர்வு.) ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே!
என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று
பொய்கையாழ்வார் கதறினதுபோலத் தாமும் கதறுகின்றார்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று–முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-
விவேக உணர்ச்சி-சிறிதும் இல்லாமையினாலே-
1-உணர்வு இன்மையால்
2-உணர்வு ஓன்று இன்மையால்
3-தெரிந்து உணர்வு இன்மையால்
என்று மூன்று படியாக யோஜிக்க வேணும்
தேகாத்மா விவேகம் இல்லாமை -உணர்வு இன்மை
சேஷ வஸ்து ஆத்மா என்று அறியாமை -உணர்வு ஓன்று இன்மை
பாகவத சேஷத்வம் அறியாமை -தெரிந்த உணர்வு இன்மை

தீ வினையேன்
மகா பாபியான நான்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கீழ்க் கழிந்த நாள்கள் எல்லாம்-வீணாக இருந்து விட்டேன்

கரந்த உருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த
சிறு மான் உருவத்தை மறைத்து கொண்டு வந்த-அந்த மாரீச மானை பொன் தொடர்ந்து கொன்ற-
அன்பர்கள் ஏவின கார்யத்தை அன்புடன் ஏற்று செய்ய வல்ல பெருமான்
திருக் கல்யாண குணங்களில் ஈடு படாமல்-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட-நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்த எம்பெருமான்
துதிக்க பெறாமல் காலத்தை வீணாக கழித்தேன்

ஆழியங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து
அறு காழி மோதிரத்தை-அழகிய திருக் கையில் அணிந்து இருந்த-ஸ்ரீ ராமபிரானை ஸ்தோத்ரம் செய்யாமல்-அறிவு கெட்டு-
கைகேயி வரத்தில் அகப்படா விட்டது பெருமாள் திருக்கையில் அறு காழி ஒன்றுமே இறே –
பெருமான் மாயமானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது-அடிக்கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு-
அதன் மேலே எழுந்து அருளினார் என்று ஒருவன் கவி பாட எம்பெருமானார் கேட்டருளி-
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே -என்று வித்தராய் அருளினார்-

“உணர்வின்மையால், உணர்வொன்றின்மையால், தெரிந்துணர் வொன்றின்மையால்” என்று மூன்றுபடியாக்கி யோஜிக்கவேணும்.
‘தேஹத்திற் காட்டில் ஆத்மா வேறுபட்டவன்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வின்மையால்’ என்றார்;
‘ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்ட வஸ்து’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வொன்றின்மையால்’ என்றார்;
‘பகவத்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதசேஷத்வம்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதித் ‘தெரிந்துணர்வோன்றின்மையால்’ என்றார்.
ஆக, இப்படிப்பட்ட விவேகவுணர்ச்சிகளில்லாமையினாலே பாவியேன் வாணான் பலவற்றை வீணாளாகக் கழித்தொழிந்தேன்- என்கிறார்.

(கரந்துருவின் இத்யாதி.) அன்பர்கள் ஏவின காரியத்தை அன்புடன் ஏற்றுச் செய்யவல்ல பெருமானுடைய
திருக்குணங்களிலீடுபட்டுத் துதிந்துவாழமே பாழேபோனேனென்கிறார்
மாரீசன் நிஜ ரூபத்தை மறைத்துப் பொன்மான் வடிவுபூண்டு பஞ்சவடியில் வந்து தோன்றினபோது,
1. “பொன்னொத்தமானொன்று புகுந்தினிதுவிளையாடவு நின்னன்பின் வழிநின்று சிலை பிடித்தெம்பிரானேக” (பெரியாழ்வார் திருமொழி 3-10-7)
என்கிறபடியே, பிராட்டியின் முகம் கன்றாமைக்காக அம்மாயமானைப் பிடித்து வருவதாக அதன்பின்னேயெழுந்தருளினவனும்
அறுகாழி மோதிரத்தைத் திருக்கையிலே அணிந்திருந்தவனுமான இராமபிரானைத் துதிக்கப்பெறாமல்
அறிவு கெட்டுக் காலங்களைப் பாழேகழித்தேன்.

“கைகேயிலரத்தில் அகப்படாவிட்டது பெருமான் திருக்கையில் அறுகாழியொன்றுமெயிறே” என்றும்,
“பெருமாள் மாயமானை எய்து மீண்டெழுந்தருளுகிறபோது அடிக்கொதித்து நடக்கமாட்டாமை தளிர்களை முறித்திட்டு
அதன்மேலே எழுந்தருளினாரென்று ஒருவன் கவிபாட எம்பெருமானார் கேட்டருளி
‘மாறியிடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே.” என்று வித்தராயருளினார்” என்றுமுள்ள
வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

“தெரிந்துணர்வு” என்றவிடத்தும் “கரந்துருவின்” என்ற விடத்தும் தொகுத்தல் விகாரம்; தெரிந்த + உணர்வு; காந்த + உருவின்

————————————————————–

(அயர்ப்பாய்.) கீழ்க்கழிந்த காலம்போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள
பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.
யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று
அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-
அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்-

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத்தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நான் வல்வினளை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயர்ப்பாய்–(அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய்
எம்பெருமானை மறந்து கெட்டாலும் கேடு

அயயர்ப்பாய் –
மறவாமல் வாழ்ந்தாலும் வாழ்

நெஞ்சமே சொன்னேன்
ஒ மனமே-நான் உனக்கு சொல்ல வேண்டிய ஹிதத்தைச் சொல்லி வைத்தேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய்
உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்

-செயற்பால வல்லவே
செய்யத் தகாத வற்றையே

செய்கிறுதி நெஞ்சமே
செய்ய முயல்வாய் என்று

யஞ்சினேன்
உன்னைப் பற்றிப் பயப்படுகின்றேன்

மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து
மல்லர்கள் ஆயுளை முடித்த-கண்ணபிரானை-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இரு –

யோக்யதை யில்லாத நாம் எம்பெருமானை நெஞ்சால் நினைப்பதும் வாயால் துதிப்பதும் தலையால் வணங்குவதும்
அவனுக்கு அவத்யம் என்று அயோக்யதாநுஸந்தாகம் பண்ணிப் பின்வாங்குதலில் ஆழ்வாருடைய திருவுள்ளம் அடிக்கடி ஊன்றுகிற வழக்கமுண்டே;
அப்படி இன்னமும் உண்டாகப்பெறில் பகவத்குணாது பலம் முட்டுப்படுமேயென்று அஞ்சி நெஞ்சை நோக்கி,
ஓ நெஞ்சே! அயோக்யனென்று பின்வாங்குகையிலே மறுபடியும் நீ இறங்கி விடுவாயோவென்று நான் மிகவும் அஞ்சுகின்றேன்.
இனி நீ அப்படி ஒருகாலும் செய்யலாகாது; இப்போது நாம் பகவத் குணானுபவம் செய்துகொண்டிருப்பதுபோலவே
எப்போதும் செய்தும் கொண்டிருப்பதான் நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான வழியாம்.
மல்லர்களை மடித்த கண்ணபிரானை வாழ்த்துவதே நமக்குப் பணி; என்பேச்சை நீ ஆதரித்துக் கேட்பாயென்று நம்பி
நான் இதை உனக்குச் சொன்னேன்; இந்த உபதேசத்தை நீ ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்தது வாழ்தியேல் வாழ்ந்திடு;
மறந்தொழிந்து கெட்டுப்போதியேல் போயிடு- என்றாராயிற்று.

செயற்பால- செய்யக்கூடியவை; செயற்பால அல்ல- செய்யக்கூடாதவை; அயோக்யதாநுஸந்தாகட்பண்ணிப் பின்வாங்குதல் முதலியன.
செய்கிறுதி அஞ்சினேன் = செய்வாயென்று பயப்படுகின்றேனென்கை.

———————————————————————-

(வாழ்த்தியவண்டியை.) இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று
நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்
அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில்.
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-
எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.

வாழ்த்தி யவனடியைப்
அப்பெருமானுடைய-திருவடியை மங்களா சாசனம்  பண்ணி

பூ புனைந்து
அத்திருவடிகளிலே புஷ்பங்களைச் சாத்தி

நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு
உன் தலையை வணக்கு-இரண்டு கையையும் கொண்டு அஞ்சலி பண்ணு

என்றால்
என்று சொன்னால்

கூப்பாத -பாழ்த்த விதி
அப்படி செய்யாத-பாழும் விதியை உடைய
கூப்பாத -நிகழ காலத்து நிலைமையை சொல்லுகிறது அன்று
எதிர் காலத்தில் நேரக் கூடிய நிலைமையை சங்கித்துச் சொல்லுகிறபடி

எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
என்னுடைய மனமே-அந்த சர்வேஸ்வரனை-எங்கே இருக்கிறாய் என்று சொல்லி அழைத்து-துதியாமல் –

தங்க ஆம் ஏலும்
தரித்து இருக்கக் கூடுமாகில்-தங்க தான் ஆம் ஏலும் -தான் -அசைச்சொல்

தங்கு
தரித்திரு –

வாய்ப்படைத்தது பயன்படும்படி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தியும்,
கைபடைத்தது பயன்படும்படி அந்தத் திருவடிகளிலே பூக்களைப் பணிமாறியும்,
தலை ஸபலமாம்படி அதனை அத்திருவடிகளிலே வணக்கியும் அஞ்ஜலி பண்ணு என்று நன்மையாகச் சொன்னால்
அப்படி செய்யாதேயிருந்தும், “எங்கே காண்கேன் ஈன்துழாயம்மான் தன்னையான்” என்று அலற்றாமலிருந்தும்
உயிர்தரித்திருக்கவல்லையெல், நெஞ்சே! உன் இஷ்டப்படியே இருந்திடு.
ஸத்தை பெற்றிருக்கைக்காக இத்தனையும் செய்து தீர வேண்டியதேயாம் என்று குறிப்பித்தவாறு.

“இருகை கூப்பென்றால் கூப்பாத” என்றது நிகழ் காலத்திய நிலைமையைச் சொல்லுகிறதன்று;
எதிர்காலத்தில் நேரக்கூடிய நிலைமையைச் சங்கித்துச் சொல்லுகிறபடி.
அவனடியை வாழ்த்தாமலும் பூப்புனையாமலும் தலையைத் தாழ்த்தாமலும் இருகை கூப்பாமலும் ஸத்தை பெற்றிருக்க முடியாமையைச் சொன்னபடி.

“தங்கத்தானாமேலும்” என்றவிடத்து, தான்- அசை. தங்கு நல்- ஸத்தைப்பெறுதல்

——————————————————————–

(தங்கா முயற்றியவாய்.) இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே;
சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப்பொருள்களாக
மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார்
அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி,
ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து
இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார்.

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே -ஸ்ரீ திரு விருத்தம்–32—வைகல் பூம் கழிவாய் -6-1-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -ஸ்ரீ திரு விருத்தம்-38–சொன்னால் விரோதம் இது -3-9-

இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளையுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால்வேலைவாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத்தவம் செய்திட்டன கொல்–எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த்
தங்கா முயற்றிய ஆய்-மாறாத முயற்சியை உடையவனாய்க் கொண்டு

தாழ் விசும்பின் மீது பாய்ந்து
விசாலமான ஆகாசத்தின் மேலே-சஞ்சரித்து

எங்கே புக்கு
எந்த தேசத்திலே போய்

எத்தவம் செய்திட்டன கொல் –
எவ்விதமான தபஸை செய்தனவோ-அறியேன் –

பொங்கோதத்
கிளர்ந்த அலைகளை யுடைத்தாய் –

தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும்-
குளிர்ந்த அழகிய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்
அத்தை விட்டு கண்ணபிரானாக வந்து தோன்றினான்

என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார் –
என் கண்ணபிரான் இடத்தில் உள்ள-நல்ல திரு மேனி நிறத்தை கொள்ளை கொண்டு இருக்கிற-மேகங்கள்-

“பால்வேலையாய்” =‘வேலா’ என்ற வடசொல் கடற்கரைக்குப்பெயர்;
அது தமிழில் ‘வேலை’ என ஐயீறாகி ஆகு பெயரால் கடலை உணர்த்திற்கு; ஆகவே, பால்வேலை- க்ஷீரஸாகரம்.
“பால் வேலை நாயகன் வளரு மென்னுடைய கண்ணன்” என்றது-
‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ண நிகேதக:- நாகபர்யங்கம் உத் ஸ்ருஜ்ய ஆகதோ மதுராம் புரீம்” என்ற
பிரமாணத்தின்படியே திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளுதலை விட்டிட்டுக் கண்ணபிரானாக வந்து தோன்றின எம்பெருமானென்றபடி.

——————————————————————–

(கார்கலந்தமேனியான்.) உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்கவேணுமென்கிறார்.
பகவத் குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு;
அப்படி பாவங்களைத் தொலைத்துக் கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா;
பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக;
ஒவ்வொருவனும் போதை போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும்.
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது
ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார்.

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக்குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ்வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல்வயிற்றான்
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை  யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூ க்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

இப்படி ஏன் சொல்ல வேண்டும்? உலகத்தில் ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியோ போதுபோக்குகிறான்?
இல்லை; சூடாடிப் போதுபோக்குவபார் சிலரும், சதுரங்கம் பொதுபோது போக்குவார் சிலரும்,
உண்டியே உடையே உகந்தோடிப் போது போக்குவார் சிலருமாய் இப்படி பலவகைகளாலே போது போக்குவாரைக் காணா நின்றோமே;
குணாநுபவத்தாலே போது போக்குவாராக ஒருவரையுங் கண்டிலோமே; ஆழ்வாரொருவரேயன்றோ அப்படிப்பட்டவர்;
இப்படியிருக்க “என்னினைந்து போக்குவர் இப்போது” என்று குணாநுபவத்தாலன்றிப் போது போக்க முடியாதென்று
இவர் எப்படி சொல்லலாம்?- என்று கேள்வி பிற்கும். இதற்கு நாம் என்ன ஸமாதானம் சொல்வல்லோம்;
உலகத்தில் தம்முடைய ஸ்வபாவத்தையே பிறர்க்கும் ஸ்வபாவமாக நினைத்துக்கொள்ளுதல் பெரியோர்களின் இயல்பு;
பரமைகாந்திகளாய்ப் பரம வைதிகர்ளான அந்தணர்கள் இரவில் சயனிக்கும்போது தம் மனைவியரை விளித்து,
‘அடீ! சொம்பிலே ஜலம் வையாதே. கவிழ்த்துவை’ என்று சொல்லுவார்களாம்; இப்படிச் சொல்லுவதன் கருத்து அறிவீர்களே!
இரவிலே கண்ணன் வந்தால் பொம்மைக் கொள்ள கொள்ள நினைத்து அதனருகே வருந்த அதை யெடுக்கப் பார்க்கும் போது
கையலம்பாமல் சொம்பைத் தொடலாகாததென்று தீர்த்தம் தேடுவானாம்; தீர்த்தம் கிடைத்தால் கையை அலம்பிக் கொண்டு
செம்மை எடுத்துக்கொண்டு போய்விடுவானாம்; தீர்த்தம் கிடையாவிடில் அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று
ஆசாரம் கொண்டாடி வெறுமனே போய்விடுவானாம்.
இதற்காகவே ‘சொம்பிலே ஜலமின்றிக் கவிழ்த்துவை’ என்று புராதநவைதிகர்கள் திட்டம் செய்வார்களாம்.
தங்களுடை ஆசாரமே கள்ளர்க்கும் உள்ளதாக அவர்கள் நினைப்பதுபோல், ஆல்வாரும் பகவத் குணாநுபவத்தாலன்றி
மற்றொருதனாலும் தமக்குப் போது போக்க அரிதாயிருக்குமியல்வவயே எல்லார்க்கும் உளதாக நினைத்து
மிக அற்புதமாகவும் அழகாகவும் இப்பாசுரம் அருளிச் செய்கிறாரென்றுணர்க.

‘கார்கலந்த மேனியான் சீர்கலந்த சொல், கைகலந்தவாழியான் சீர்கலந்த சொல், பார்கலந்த வல்வயிற்றான் சீர்கலந்து சொல்
பாம்பணையான் சீர்கலந்த சொல்” என்று இங்ஙனே யோஜித்து உபர்யஸித்தல் அழகு;
( கார் கலந்த மேனியான் சீர்கலந்தசொல்.) இராமபிரானைச் சொல்லும்போது** =மேகச்யாமம் மஹாபாஹும்” என்று முன்னே
நீலமேகவடிவுடைபவ னென்கையாலே, கார் கலந்த மேனியானென்று இராமபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீராமாயணம் என்றபடி.

(கைலந்தவாழியான் சீர்கலந்த சொல்.) ***- ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகநாதா!” என்று கண்ணபிரான் திருவவதரிக்கும்போது
\கையும் திவ்யாயுதமுமாக திருவவதரித்தனனாதலால் கைகலந்தவாழியனென்று கண்ணபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீபாசுவதம், ஸ்ரீமஹாபாரதம், ஹரிவம்சம் முதலியனவென்க.

(பார்கலந்தவல்லவயிற்றான் சீர் கலந்த சொல்.) பிரளயகாலத்திலே எம்பெருமான் உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள்ளே
வைத்துக் காத்தருளினபடியைப் பேசுகிற புராணங்கள்.

(பாம்பணையான் சீர் கலந்த சொல்.) பாம்பனையாளென்று அரவணைமேற் பள்ளிகொள்ளும் அணியரங்கநாதனைச் சொல்லுகிறது;
அவனுடைய சீர்கலந்த சொல்- திருவாய்மொழி; “வான் திகழுஞ் சோலைமதிளரங்கர் வான்புகழ்லோன்ற தமிழ் மறைகாளியதரமும்”
(திருவாய் மொழியின் தனியன்) என்கிறபடியே திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று
நம் ஆசாரியர்கள் அருளிச் செய்கையாலே பாம்பனையான் சீர்கலந்த சொல்- திருவாய் மொழியாம்;

ஆக, ஸ்ரீராமாயண பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக் கொண்டும்,
திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களைக் கொண்டும் பாவத்தைப் போக்கிக் கொள்ளார்களாகில் போகட்டும்;
போதைப் போக்குவதற்கு இவையொழிய வேறொன்றும் ஸாதநமல்ல என்றாராயிற்று.

————————————————————————–

இப்போதும்.) முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்ததுபோலவே
முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார்.
பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்;
அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ,
கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே!
உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ
மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்-
“நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே.
அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும்,
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம்மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய்கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக்காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

ஸ்ரீபட்டர் “எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறவிதைத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீரங்கராஜஸ்தலத்தில்
பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்ப மஸஹந்நிவ- ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு அநுஸந்தேயம்.

‘எப்போதும்’ என்பதை நான் காமடியிலே கூட்டி உரைக்கவுமாம் ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று.

“மொய்கழலே ஏத்து” என்னாதே “ஏத்த முயல்” என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரை காண்பதென்பது இல்லை,
ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்யோக நிலைமையை எப்போதுமிருக்கும் என்பது காட்டப்பட்டதாம்.
ஆளவந்தாரும் “ஸ்தா ஸ்திதா. நோத்யமதோதிசோதே” என்றருளிச் செய்ததை ஸ்மரிப்பது.

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

சொற்சுவையாலும் பொருட்சுவையாலும் மிகச் சிறந்த இந் திவ்வியப் பிரபந்தம் ஒருவாறு வியாக்கியானித்துத் தலைக்கட்டப்பட்டதாய்த்து.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்